Sunday, August 3, 2025
முகப்பு பதிவு பக்கம் 161

தீட்சிதப் பார்ப்பனர்களின் குடுமிக்கு அஞ்சுவதுதான் திராவிட மாடலா?

டந்த 2014-ம் ஆண்டு, தில்லைக் கோயில் தீட்சிதர்களுக்கே சொந்தம் என தீர்ப்பளித்தது உச்சிக்குடுமி மன்றம். அதனையடுத்து 40 ஏக்கர் பரப்பளவுள்ள கோயிலும், சுமார் 2,700 ஏக்கர் நிலமும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளும் கோயில் அர்ச்சகர்களான தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் போய்விட்டது. அதன் பிறகு தில்லைக் கோயிலில் கேட்பாரற்று கொட்டமடித்து வந்தது தீட்சிதக் கும்பல்.

இதற்கிடையில் கொரோனாவை காரணம் காட்டி பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபடும் உரிமையை தடுத்து நிறுத்திய தீட்சிதக் கும்பல், கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபடும் உரிமையை ஒன்றுகூடி தீர்மானம் போட்டு தடுத்து வந்தது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி  மாதம் பட்டியல் சமூகத்தைs சேர்ந்த ஜெயசீலா என்ற பெண், தீட்சிதக் கும்பலை புறந்தள்ளிவிட்டு கனகசபை மீது ஏறி வழிபட சென்றபோது, தீட்சிதக் கும்பல் அவரை சூழ்ந்துக்கொண்டது. ‘பறைச்சி’ என்று சாதி பெயரை சொல்லி இழிவாக திட்டி, அவரை தாக்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி கடும் எதிர்ப்புக்குள்ளாகியது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு முற்போக்கு மற்றும் ஜனநாயக அமைப்புகள் தீட்சிதர்களை கண்டித்து போராட்டம் நடத்தினர். தீட்சிதக் கும்பலை எதிர்த்து உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. முற்போக்கு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் தொடர் போராட்டத்தின் விளைவாகதான் உயர்நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசும் அரசாணை வெளியிட்டது. கனசபை மீதேறி வழிபடும் உரிமை மீண்டும் நிலைநாட்டப்பட்டது.


படிக்க : தில்லையில் தொடரும் தீட்சிதர் ஆதிக்கம் : தன்மானத் தமிழன் இனியும் சகிக்க மாட்டான் !


தீட்சிதர்கள் வசம் உள்ள கோயில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக  தொடர்ந்து புகார்கள் வரவே, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கோயிலில் ஆய்வு நடத்த வருவதாக தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதற்கு பதில் அளித்த தீட்சிதக் கும்பல் உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி, கோயில் நிர்வாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது என வாதிட்டு ஆய்வுக்கு உடன்பட மறுத்தது.

இந்து சமய அறநிலையத் துறைச் சட்டம் 1959, சட்டப்பிரிவு 23 மற்றும் 28-இன் படி ஆய்வு செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு என்பது அரசின் வாதம். ஆனால் எந்த சட்டமும் தங்களைக் கட்டுப்படுத்தாது என்பது பார்ப்பனர்கள் தங்களுக்குத் தாங்களே எழுதி வைத்துக் கொண்ட சட்டம். இந்த சட்டத்தை மாற்ற எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது என்பது அவாளின் எழுதப்படாத விதி!

தில்லை கோயில் தீட்சிதர்கள் ஆய்வுக்கு உடன்பட மறுத்து இந்து சமய அறநிலையத்துறைக்கு பதில் நோட்டீஸ் அனுப்பியதால், அதிகாரிகள் ஆய்வு செய்ய செல்வதற்கு முதல் நாளே இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தில்லைக் கோயிலுக்குச் சென்றார். ஆனால், அவர் சட்டப்படி நடக்க வேண்டும் என தீட்சிதர்களை எச்சரிக்கை செய்ய செல்லவில்லை, மாறாக, பவ்யமாக கோயிலில் சாமி தரிசனம் செய்து, பிரசாதம் வாங்கிக் கொண்டு, அடக்க ஒடுக்கமாக தரையில் அமர்ந்து தீட்சிதர்களுடன் பேசிவிட்டு வந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தில்லைக் கோயிலுக்கு ஆய்வுக்காக சென்றனர். தீட்சிதக் கும்பலோ அதிகாரிகளை ஆய்வு செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியது. இரண்டு நாட்கள் ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகள், தீட்சிதர்கள் ஆய்வுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்று கூறி வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதைப் போல, கோயிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பி வந்துவிட்டனர்.

இதுவே சாதாரண உழைக்கும் மக்கள் பிரிவினர் யாராவது தீட்சிதர்களைப் போல அதிகாரிகளைத் தடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுக்கிறார்கள் என்று போலீசு என்ற ஏவல் நாய் அவர்கள்மீது பாய்ந்து குதறியிருக்கும். ‘சட்டத்தின் ஆட்சி’ நிலைநாட்டப்பட்டிருக்கும்.

தீட்சிதர்கள் ஆய்வுக்கு ஒத்துழைக்க மறுத்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சேகர் பாபு, இந்து சமய அறநிலையத்துறையின் நோக்கம் கோயிலைக் கைப்பற்றுவதல்ல என்றும் ஆய்வு மட்டும் செய்து கொள்கிறோம் என்றும் கெஞ்சினார். அதற்கு ஒத்துழைப்பு தருவதுதான் நீதி, மனுநீதி, மனுதர்மம் என்று பார்ப்பான் காலில் படுத்தேவிட்டார்.

எந்த மனுநீதியை எதிர்த்து ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் போராடிக் கொண்டு இருக்கிறதோ, அந்த மனு நீதியின் படி நடந்து கொள்ளுங்கள் என்று கெஞ்சுகிறார் சேகர்பாபு. ஆனால், இந்தக் கெஞ்சலை எல்லாம் மயிரளவும் மதிக்கவில்லை தீட்சிதக் கும்பல்.

இதனை சேகர்பாபுக்கும் தீட்சிதர்களுக்கும் இடையேயுள்ள பிரச்சினை என்றோ; அல்லது, இந்து சமய அறநிலையத்துறைக்கும் பார்ப்பனர்களுக்குமான பிரச்சினை என்றோ சுருக்கிப் பார்த்துவிட முடியாது. இது பார்ப்பனியத்திற்கும் நீண்ட நெடிய பார்ப்பனிய எதிர்ப்பு மரபைக் கொண்ட தமிழக மக்களுக்கும் இடையேயான போராட்டம். இதில் தமிழக மக்களின் உரிமையை பார்ப்பனியத்திடம் அடகு வைக்க எந்தக் கொம்பனுக்கும் உரிமை கிடையாது.

தில்லை கோயில் விவகாரத்தில் மட்டுமல்ல, இதற்கு முன்னால் நடந்த தருமபுர ஆதினப் பல்லக்கு தூக்கும் பிரச்சினை உள்ளிட்ட பார்ப்பனர்களுக்கு எதிரான எல்லா பிரச்சினைகளிலும் தி.மு.க. அரசானது அவர்களிடம் மண்டியிட்டுதான் கிடக்கிறது.

***

தில்லைக் கோயில்மீது பொதுமக்கள் இதற்கு முன்பு கொடுத்த புகாருக்கே நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசுக்கு துப்பில்லை. அதிகாரிகளை ஆய்வு செய்யவிடாமல் தடுத்து திருப்பி அனுப்பியது தீட்சிதக் கும்பல். ஆனால், தற்போது மீண்டும் புகார் மனுக்களை கொடுக்க சொல்கிறார்கள் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள். தீட்சிதக் கும்பலின்மீது சட்டத்தை நிலைநாட்டும் தி.மு.க. அரசின் யோக்கியதை இதுதான். இதுவே சாதாரண மக்கள் என்றால் தி.மு.க. அரசு சட்டத்தை எப்படி நிலைநாட்டிருக்கும்?

சென்னை வடபழனி முருகன் கோயிலில் ஐந்து தலைமுறைகளாக பூ கட்டி வியாபாரம் செய்யும் பெண்கள் மீண்டும் தங்களுக்கு பழைய இடத்திலேயே வியாபாரம் செய்ய அனுமதி வழங்குமாறும், அங்கே நின்று கொண்டே கூட தாங்கள் வியாபாரம் செய்து கொள்கிறோம் என்றும் கோரிக்கை வைத்தபோது, “நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்கிற ஆள் நான் கிடையாது. இப்போது இப்படி சொல்வீர்கள், பிறகு பெட்டி வைத்து ஆக்கிரமிப்பு செய்து விடுவீர்கள்” என்று அவர்களிடம் திமிர்த்தனமாக பேசினார் சேகர்பாபு.

உழைக்கும் மக்கள் சிறிய பெட்டி வைத்து வியாபாரம் செய்வதைக்கூட ஆக்கிரமிப்பு என்று சீறும் சேகர்பாபு, பெரும்பாண்மை உழைக்கும் மக்களுக்கு சொந்தமான கோயிலையும், கோயில் சொத்துக்களையும் ஆக்கிரமிப்பு செய்துள்ள தீட்சிதக் பார்ப்பனக் கும்பலிடம் கெஞ்சுகிறார்.


படிக்க : பெண் பக்தையை தாக்கிய தீட்சிதனின் பார்ப்பனக் கொழுப்பு !


ராஜா அண்ணாமலைபுரத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக உழைக்கும் மக்கள் வாழ்ந்த வீடுகளை பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடித்துத் தள்ளியது தி.மு.க. அரசு. அதனை உயர்நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தினோம் என்று நியாயப்படுத்தியது. இப்படி வீடுகளை இடிப்பதை தமிழக அரசானது சட்டத்தை நிலைநாட்டுகிறது என்று யாராவது கருதினால், நம்முடைய கேள்வி இதுதான். அதே சட்டம் தில்லைக் கோயிலின் உள்ளே பாய மறுப்பதேன்?

தில்லை கோயிலுக்குள் நுழைந்து முறைகேடுகள் ஏதாவது நடந்துள்ளதா என்று ஆய்வு நடத்தக்கூட வக்கற்று, தீட்சிதக் கும்பலுக்கு அடிப்பணிந்துப் போயுள்ள தி.மு.க.வைதான், பா.ஜ.க.வை வீழ்த்தும் ஆயுதம் என தி.மு.க. அடிவருடிகள் உயர்த்திப் பிடிக்கின்றனர். முட்டு கொடுப்பதற்கும் ஒரு எல்லை உண்டு, அதையும் மீறிவிட்டார்கள் நம்முடைய தி.மு.க. அடிவருடிகள்.

தி.மு.க. என்பது தி.க. அல்ல. இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது என்கிறார் மதிமாறன். அனைத்து மதநம்பிக்கையுள்ள மக்களையும் அனுசரித்துப் போவது தான் தி.மு.க. என்கிறார். யாருடன் அனுசரித்துப் போவது.

இந்த அரசு ‘திராவிட ஆன்மிக அரசு’ என்கிறார் சேகர்பாபு. திராவிடத்தோடு ஆன்மிகமாம். அரவணைப்பு அதிகமாகிவிட்டது போல. சந்தர்ப்பவாதிகளிடம் இதைத் தவிர நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். தீட்சிதப் பார்ப்பனர்களின் கொட்டத்தை அடக்க வேண்டுமானால், புரட்சிகர ஜனநாயக இயக்கங்களின் சமரசமற்ற களப்போராட்டத்தால் மட்டுமே முடியும்.


சங்கர்

Our revolutionary greetings to the working people of Sri Lanka!

On July 9, the hearts of the revolutionary forces around the world are full of joy after seeing the uprising of the working people of Sri Lanka. The stomachs of the fascists around the world, like the Rajapaksa gang, would have churned on thinking about their future.

On 09-07-2022, on the occasion of the 90th day of the Galle Face protest, the protestors had given a call for a nationwide protest. Based on that, as part of the nationwide protest held on July 9, tens of thousands of people gathered and besieged the Presidential Secretariat. They have kept it under their control till now. At the same time, Prime Minister Ranil Wickremesinghe’s house in Colombo was also besieged by the people and was set on fire. Gotabaya escaped from the Presidential Secretariat with the help of the army. His whereabouts is still unknown.

The events that took place at the time of the capture of the Presidential Secretariat and Gotabaya’s official residence, the Allari Palace, were soothing.

People who entered the Allari Palace enjoyed jumping and swimming in the swimming pool. They went inside the kitchen and ate the stored food. They sat on chairs. They tried lying on the luxurious bed. It is important that the people who displayed their triumph in this way did not damage any of the property there.

Moreover, the people recovered the currency notes (1.78 crore Sri Lankan Rupees) stashed in the house of Gotabaya and handed it to the security units. It is a whack to the propaganda of the ruling classes which portrayed the struggling masses as aimless, violent and anarchic tyrants.


Also Read : Sri Lankan people longing for a Revolutionary Party !


Gotabaya Rajapaksa has officially announced that he will be resigning on the 13th due to the pressure created by the popular uprising. Moreover, Ranil Wickremesinghe has also announced that he will also resign to assist the formation of an all-party government. The ministers who had taken charge under his leadership have been announcing their resignations one by one.

On 05-07-2022, ahead of the 90th day of the Galle Face protest, the protestors had issued a six-point action plan. The primary demand was that the Gotabaya-Ranil government should resign. Sri Lankan people have achieved this through the uprising.

Just as the working people and revolutionary forces of countries like England, Australia and the Netherlands participated in demonstrations in support of the Sri Lankan people’s uprising and welcomed it, we are also heartily welcoming it. We extend our heartfelt greetings to the working people of Sri Lanka and the revolutionary forces there.

***

However, decisive victory in the revolutionary struggle can be accomplished only through the seizure of political power. In that aspect, the working people of Sri Lanka are at a critical juncture of ensuring their success.

Sri Lanka is shaking due to the popular uprising. At the same time, hegemonic vultures including the US, India and China are encircling Sri Lanka. They are preparing an alternative plan to sustain their hegemony.

The US has demanded to work quickly to identify and implement solutions that will achieve long-term economic stability and address the Sri Lankan people’s discontent.

The International Monetary Fund has said that it was continuously and closely monitoring Sri Lanka’s economic progress and is ready to assist Sri Lanka.

Indiscriminate firing is being carried out on the struggling people. Journalists covering the protests have been severely beaten up by the police. Army Chief appeals to the protesting people to come forward to cooperate with the police and the army in order to establish ‘peace’.

We must make note that the political power is still under the control of the ruling classes. On one hand, the ruling classes are oppressing the struggling people with the police and the army. While on the other hand, they are trying to save the existing State structure that serves them by disguising in the name ofall-party government’ and ‘elections’.

The revolution has to move forward in the direction of establishing the political power of the working people by overcoming these oppositions, recognizing the autonomy of the nationalities, abolishing imperialist plunder and building a self-reliant economy. In the meantime, the diversions, manipulations and phony solutions of the ruling classes have to be exposed and defeated. This duty belongs to the Sri Lankan revolutionary forces.

In that way, the new democratic Marxist-Leninist party operating in Sri Lanka has conducted various opinion campaigns among the people. The party and its mass gatherings have participated in mass protests in support of the Galle Face declaration. We welcome the party’s continuous efforts to involve the Tamil people of the Northern Province in this movement.


Also Read : Sri Lanka reeling under debt : Western imperialists desperate to dominate by intensifying the crisis!


The recolonizational policies of privatization-liberalization-globalization advocated by the ruling classes had miserably failed. A path towards socialism is the only path of deliverance for the people of Sri Lanka. In order to move towards that direction, the working class must focus on conquering the political power.

Another ‘saviour’ may be proposed by the ruling classes, as Ranil was proposed as an alternative to Mahinda. The working people must reject such bogus solutions. An interim government dominated by the revolutionary classes including workers and peasants should be formed immediately. Then only the struggle can further advance.

The Galle Face declaration issued on 05-07-2022 has made demands including an ‘interim government’ and a ‘new Constitution with people’s participation’. The active intervention of the revolutionary forces is necessary to overcome the distractions of the ruling classes and to fight for the firm implementation of this declaration.


Editorial Team,
New Democracy.
10.07.2022

கும்பகோணத்தில் இளந்தம்பதியினர் ஆணவப்படுகொலை: சிறப்புச் சட்டம் தீர்வாகுமா?

கும்பகோணம் அருகே சாதி மாறி காதலித்து திருமணம் செய்துகொண்ட மோகன்-சரண்யா என்ற இளந்தம்பதியினர், விருந்துக்கு அழைக்கப்பட்டு கொடூரமான முறையில் பட்டப்பகலிலேயே ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.

தமிழ்நாட்டில் இதுபோன்ற ஆணவப்படுகொலைகள் தொடர்ச்சியாக நடந்துகொண்டு இருந்தாலும், இப்படுகொலை சற்று வேறுபட்டதாக இருக்கிறது. கொலை செய்தது, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சரண்யாவின் அண்ணன். கொலையுண்டது ஆதிக்கசாதியைச் சேர்ந்த மோகன். ஆதலால், ஆதிக்கசாதி வெறியர்களைப் போல ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் சாதிமாறி திருமணம் செய்தால் சுயசாதி பெருமைக்காக படுகொலை செய்யும் கலாச்சாரம் வளர்ந்து வருகிறதா என்ற பொருளில் பல விவாதங்கள் எழுகின்றன.

***

கும்பகோணம் மாவட்டம், துலுக்கவேலி ஆண்டவர் நகரை சேர்ந்த சேகர் – தேன்மொழி தம்பதியினருக்கு ஒரே மகள் சரண்யா. இவருக்கு சக்திவேல், சரவணன், சதிஷ் மூன்று சகோதரர்கள். இவர்கள் மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சரண்யா பி.எஸ்.சி நர்சிங் முடித்துவிட்டு சில ஆண்டுகள் சென்னையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.

சரண்யாவின் மூத்த அண்ணன் சக்திவேல், அவருடைய மனைவியின் தம்பியான ரஞ்சித்துக்கும் சரண்யாவுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என பேச்சை துவங்கியுள்ளார்.


படிக்க : சேலம் : மல்லி குந்தம் பகுதி பாமக-வின் சாதிவெறியால் ஒடுக்கப்படும் ஆசிரியர் !


“ரஞ்சித்தின் சேர்க்கை மற்றும் நடத்தை சரியில்லை. அவனைத் திருமணம் செய்துகொண்டால் நீ நல்ல வாழ்க்கை வாழ முடியாது”, என சரண்யாவிடம் சகோதரர்களான சரவணன் மற்றும் சதீஷ் அறிவுறுத்தியிருக்கின்றனர். சரண்யாவும் ரஞ்சித்தின் மோசமான நடவடிக்கை தெரியவந்து ஒதுங்கியிருக்கிறார்.

இந்நிலையில், சரண்யா தன்னுடைய தாயை மனநல சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சரண்யாவின் தாய், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில்தான் மோகனின் தாயும் மனநல சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவரின் தாயாரும் மருத்துவமனையில் அருகருகே அனுமதிக்கப்பட்டு இருந்ததால், மோகனும் சரண்யாவும் அறிமுகமாகி நாளடைவில் காதலித்து வந்துள்ளனர்.

சரண்யாவின் காதலுக்கு சக்திவேல் எதிர்ப்பு தெரிவிக்கவே, சரண்யா மற்றும் மோகன் கடந்த 9-ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். சரண்யாவின் உணர்வுகளைப் புரிந்துக்கொண்ட அவருடைய பெற்றோர் மற்றும் சகோதரர்களான சரவணன் மற்றும் சதீஷ், திருமணத்திற்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து உள்ளனர். சக்திவேலின் மனைவி, “உன் தங்கையால் தான் என் தம்பி வாழ்க்கை இழந்து நிற்கிறான்”, என்று சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் சக்திவேல், சரண்யாமீது கடுங்கோபத்தில் இருந்துள்ளார்.

சில நாட்களுக்குப் பிறகு, சக்திவேல் சரண்யாவை தொலைபேசி மூலமாக அழைத்து. “நீங்கள் திருமணம் செய்துகொண்டதால் எங்களுக்கு எந்த கோபமும் இல்லை. உன் பெயரில் நகையை அடகு வைத்திருக்கிறோம். நீ வந்தால்தான் மீட்க முடியும். அதை மீட்டுக் கொடுத்துவிட்டு சென்று விடு. இருவருக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்”, என கூறி அழைத்துள்ளார்.

சரண்யாவும் மோகனும் கும்பகோணம் வந்து நகைகளை மீட்டு சக்திவேலிடம் ஒப்படைத்துவிட்டு, துலுக்கவேலியில் உள்ள தாய் வீட்டிற்கு விருந்துக்கு சென்றுள்ளனர். இச்சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சக்திவேல் மற்றும் ரஞ்சித், மோகன் மற்றும் சரண்யாவை ஓட ஓட வெட்டிக் கொன்றுள்ளனர். பட்டப்பகலிலேயே நடந்த இக்கொடூரக் கொலையை தடுப்பதற்கோ, சம்பந்தப்பட்ட நபர்களை காப்பாற்றுவதற்கோ யாரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பலர் கண்முன்னாலேயே இந்த கோரச்சம்பவம் நடந்தேறியுள்ளது.

***

சரண்யா மற்றும் மோகன் படுகொலை செய்யப்பட்ட பின் ஆதிக்கசாதி வெறியர்கள் எல்லாம் “மோகன் சரண்யாவுக்கு நீதிவேண்டும்” (#justice_for_mohan_saranya) என்ற பெயரில் டிவிட்டரில் பொங்கி எழுந்து, “நாங்கள் செய்தால் ஆணவப்படுகொலை என்றால் தலித்துகள் செய்யும் படுகொலைக்கு என்ன பெயர்?”, “சாதிக்கு ஒரு நீதியா!”, “போராளிகள் எல்லாம் கண்டனம் தெரிவிக்க மறுப்பது ஏன்?”, என தங்கள் வியாக்கியானங்களைப் பேசுகின்றனர்.

ஆதிக்கசாதி இளைஞர் தலித் பெண்ணை திருமணம் செய்தாலோ அல்லது ஆதிக்க சாதி  பெண்ணை தலித் இளைஞர் திருமணம் செய்தாலோ ஆதிக்க சாதிவெறியர்களால் ஒடுக்கப்பட்ட  சாதியை சேர்ந்தவர் அல்லது தம்பதியர் இருவரும் படுகொலை செய்யப்படுவார்கள். இதுவரை நடைபெற்ற சாதிவெறி ஆணவப்படுகொலைகள் யாவும் பெரும்பாலும் மேற்கூறியவாறே நடந்துள்ளன.

விதிவிலக்காக ஒடுக்கப்பட்ட  சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்குள்ளேயும் சாதிவெறி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. உதாரணத்திற்கு, 2019 இல் தூத்துக்குடியில் பேச்சியம்மாள் – சோலைராஜ் என்ற பள்ளர், பறையர் சாதியைச் சேர்ந்த இணையர்கள் திருமணம் செய்துகொண்ட காரணத்திற்காக பள்ளர் சாதியை சேர்ந்த உறவினர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். ஆதிக்கசாதி வெறியர்கள் கூறுவதைப் போல், அப்படுகொலையை சாதிவெறிப் படுகொலை இல்லை என்று யாரும் மறுத்து பேசவில்லை.

ஆனால், சரண்யாவின் குடும்பமானது சாதி மாறி திருமணம் செய்து கொள்வதை பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொள்ளும் குடும்பம் அல்ல என்பதற்கு சரியான சான்று, சரண்யாவின் தம்பி சதீஷ், வன்னிய சாதிப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளதை அக்குடும்பமானது ஏற்றுக்கொண்டுதான் உள்ளது. ஆக சாதி மாறி திருமணம் செய்ததற்காக இப்படுகொலை செய்யப்படவில்லை என திட்டவட்டமாக தெரியவருகிறது.

அப்படியென்றால், இப்படுகொலைக்கு என்ன காரணம்? சரண்யாவின் அண்ணன் சக்திவேல் மற்றும் ரஞ்சித்தின் ஆணாதிக்க வெறிதான். சரண்யாவையும் மோகனையும் கொலை செய்வதற்கு இருவருக்குமே காரணங்கள் இருந்தன. தான் கைக்காட்டிய தனது மச்சினன் ரஞ்சித்தை திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது சக்திவேலின் பிரச்சினை. ரஞ்சித்துக்கோ தன்னை ஒதுக்கிவிட்டு இன்னொருவனை திருமணம் செய்துகொண்டு விட்டாள் என்பது பிரச்சினை. இருவருமே சரண்யா என்ற பெண்ணின் சுய விருப்பங்களையும் தெரிவுகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த ஆணாதிக்கவெறியின் உச்சக்கட்டமே சரண்யா மோகன் படுகொலை.

இந்த ஆணாதிக்கப் படுகொலையும், ஆணவப் படுகொலை என்ற வரம்பிற்குள்தான் வருகிறது. ஆணவப் படுகொலை என்றால் வெறும் சாதிவெறி ஆணவப் படுகொலை மட்டும் கிடையாது. ஆணவம் என்ற வரம்பிற்குள் சாதி, ஆணாதிக்கம், வர்க்கம், அந்தஸ்து, பாலினம், இனம், மொழி, தொழில் மற்றும் எல்லை போன்றவைகளும் வருகின்றன. எனவே இப்படுகொலையை ஆணாதிக்க ஆணவப் படுகொலை என்று நாம் கூறுகிறோம். சாதி ஒழிப்பு முன்னணி தோழர் ரமணி, எவிடென்ஸ் கதிர் ஆகியோரும் இப்படுகொலையை ஆணாதிக்க ஆணவப்படுகொலை என்றே குறிப்பிடுகின்றனர்.

***

சமூகத்தில் இதுபோன்ற ஆணவப்படுகொலைகள் தொடர்ச்சியாக நடந்துகொண்டு இருக்கின்றன. எனவே இப்படுகொலைகளை தடுக்க, ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என முற்போக்கு மற்றும் ஜனநாயக இயக்கங்கள் எல்லாம் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கின்றன.

சட்டம் இயற்றப்பட்டால், இப்பிரச்சினையானது தீர்ந்துவிடும் என்ற அடிப்படையில் இவ்வமைப்புகள் எல்லாம் பேசுகின்றன. ஏற்கெனவே உள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை இந்த அரசானது பயன்படுத்தி பிரச்சனைகளை கையாண்ட விதத்தை பார்த்தாலே இச்சட்டங்களின் யோக்கியதைகளை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும்.

சான்றாக சங்கர்-கௌசல்யா ஆணவப்படுகொலையில், கௌசல்யா கண் முன்னாலேயே சங்கர் துடிதுடிக்க கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அப்படுகொலைக்கு முக்கிய காரணமான கௌசல்யாவின் பெற்றோர்களான சின்னசாமி மற்றும் அற்புதம்மாள் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

சங்கர் கௌசல்யா வழக்கானது, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல இந்த அரசுக் கட்டமைப்பானது இதுபோன்ற ஆணவப்படுகொலை வழக்குகளில் தன்னுடைய “நீதியை” நிலைநாட்டியதற்கு ஒரு சான்று.

படிக்க : கும்பகோணம் : சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட காதல் தம்பதிகள் சாதி ஆணவப்படுகொலை !

ஆகவே, சங்கர்-கௌசல்யா மற்றும் தற்போது கொல்லப்பட்ட மோகன்-சரண்யா ஆகியோரது ஆணவப் படுகொலைகளுக்கு மையக் காரணமானது, ஈராயிரம் ஆண்டுகளாய் மக்கள் மத்தியில் புரையோடிப்போயுள்ள சாதிவெறி மற்றும் ஆணாதிக்க வெறி மனநிலையே.

இப்பிரச்சினைகளுக்கு எல்லாம் மூலக்காரணமான சமூகக் கட்டமைப்பை மாற்றாமல், எவ்வளவு சட்டங்கள் இயற்றப்பட்டாலும் அவை எல்லாம் வெறும் கழிவறைக் காகிதங்களே.

மக்களிடையே சாதிவெறி மற்றும் ஆணாதிக்க சிந்தனையை தீவிரப்படுத்தும் விதமாக ஆதிக்கசாதி மற்றும் மதவெறி அமைப்புகள் எல்லாம் தீவிரமாக வேலை செய்துக் கொண்டிருக்கின்றன. இதனிடையே ஆதிக்கசாதி அமைப்புகளால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு போராடுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் சில அமைப்புகளால் சுயசாதி பெருமை ஊட்டப்படுவது எல்லாம் கொடுமையிலும் கொடுமை.

இவ்வமைப்புகள் எல்லாம் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும், பெரும்பான்மை உழைக்கும் மக்களின் சாதிவெறி மற்றும் ஆணாதிக்க மனநிலையை மாற்றியமைக்க முற்போக்கு மற்றும் ஜனநாயக இயக்கங்கள் என்ன செய்துள்ளன என்ற கேள்வி எழுகிறது.

பெரும்பாண்மை உழைக்கும் மக்களிடம் பிற்போக்கு சாதிவெறி மற்றும் ஆணாதிக்க பண்பாட்டை முறியடித்து, புதிய முற்போக்கு பண்பாட்டை நிறுவ, முற்போக்கு, ஜனநாயக அமைப்புகள் அனைத்தும், சாதி மறுப்பு திருமணங்கள், சாதிவெறி மற்றும் ஆணாதிக்க கொடுமைகளுக்கு எதிரான பிரச்சாரங்கள், போராட்டங்களை தீவிரமாக முன்னெடுக்கவேண்டும். இவைதான் இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான தொடக்கமாக அமையுமே ஒழிய, சிறப்புச் சட்டங்களால் அல்ல.


குயிலி

விக்ரம்  திரைப்பட வசூல் : மக்கள் அளித்த பணம் கவர்ச்சிக்கா? கருத்துக்கா?

மல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பல நட்சத்திர பட்டாளங்களின் தேர்ந்த நடிப்பு, சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு ஆகியவை தன்பால் மக்களை கவர்ந்திழுத்ததில் கொஞ்சமும் ஆச்சரியமில்லைதான்.

இங்கிலீஷ் படம் மாதிரி இருக்கு! அனியோட மியூசிக் சூப்பரா இருக்கு! சூர்யா வேற லெவல்! இப்படி வகை வகையான விமர்சனங்கள், ரசிகர்களின் குதூகலிப்புகள், இவையெல்லாம் தயாரிப்பாளர் கமலஹாசனின் கல்லாவை நிரப்பி இருக்கிறது.

தன்னுடைய கடன்களை எல்லாம் அடைத்து விடுவேன் என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் கமல். நாளே நாட்களில் தனக்கு இதன்மூலம் 75 கோடி ரூபாய் ஷேர் வந்திருப்பதாக விநியோகஸ்தர் உதயநிதி கூறுகிறார். பாகுபலி வசூலை தாண்டி  400 கோடி வரை வசூலிக்கும் என்றும் கூறுகிறார்கள். இது அனைத்தும் மக்களின் பணம் என்று சிலாகிக்கிறார் கமல்ஹாசன்.

இவ்வளவு தேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், திரைக்கதை, வசனம் இருந்தாலும் கூட இத்திரைப்படம் தான் சொல்ல வரும் கருத்தை பார்வையாளர்களுக்கு கடத்திச் செல்ல முடியவில்லை. ஏன் அப்படி சொல்கிறோம் என்றால் படம் பார்த்த ஒருவர் கூட வெளியில் வந்து போதை பொருள் பற்றியோ அதை ஒழிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியோ பேசவில்லை. ஒரு சினிமாவாக நடிப்பு இசை இயக்கம் இன்னபிறவற்றில் விக்ரம் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் கருத்தளவில் என்ன செய்தது என்றால், பூஜ்ஜியம்தான்.


படிக்க : முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் !


இது என்ன ஒரு பைத்தியக்காரத்தனம். ஒரு சினிமாவை அனைத்தும் கலந்த கலவையாகத் தான் பார்க்க முடியுமே ஒழிய, கருத்து என்கிற ஒற்றை தளத்தில் மட்டும் அணுகக்கூடாது என்று சிலர் சொல்லக்கூடும். ஒரு கலை பிரச்சாரமாகாது என்பதே இவர்களின் வாதம்.

ஒரு பிரச்சாரமே கலையாக மாறும் அற்புதத்தை எமது தோழர்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். அண்மையில், மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் காவி –  கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! என்கிற தலைப்பில் நாங்கள் பேருந்துகளில் நோட்டீஸ் விநியோகித்து நிதி வசூல் செய்தோம். அரசு பள்ளியை மீட்பது நம் கடமை என்கிற இந்த பிரச்சாரம் சொகுசுப் பேருந்துகளை விட சாதாரண உழைக்கும் மக்கள் பயணிக்கும் டவுண் பஸ்களில் மக்களை வெகுவாக சென்றடைந்தது. பேருந்து கட்டணம் போக டீ குடிக்கவோ, பிள்ளைகளுக்கு பண்டம் வாங்க வைத்திருந்த பணத்தையோ நமது உண்டியலில் போட்டார்கள் மக்கள்.

உழைக்கும் மக்கள் தமது கூலியில் இது தனக்கு, இது விக்ரமுக்கு என ஒதுக்கியதாக கமல் கூறினார். அது வெறும் ஒரு நாள் கூத்துதான். ரசிகனின் நாடி பார்த்து, அவன் இதயத்து நரம்பின் ரசனை அறிந்து 50 சீன்களில் 50 முறை அட! போட வைத்தால் போதும். அவன் சட்டைப்பை பணம் தயாரிப்பாளரின் கல்லாவுக்கு வந்துவிடும் மாயம் நடந்து விடும். ஆனால், நம்முடைய பிரச்சாரம் மக்களின் வாழ்க்கை முழுவதும் உடன் வரக்கூடியது. அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு சொல்ல முயல்வது. அவர்களது பிள்ளைகளின் இருண்ட எதிர்காலத்தின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சக் கூடியது.

இது ஒன்றும் மிகையானது அல்ல. நோட்டீஸ் பெற்றுக் கொண்ட ஒரு அம்மா கண்டிப்பாக உங்க நம்பருக்கு போன் பண்ணுவேன் எடுக்கணும், ஆமா! என உரிமையோடு கேட்டதில் அவரின் பிரச்சினைகளை நமது பிரச்சாரம் தொட்டு விட்டதை உணர்ந்தோம். பிரச்சாரத்தில் பேருந்துக்கு கீழே நின்று நோட்டீஸ் வாங்கிய பெரியவர், தன் மகளின் பி.எஸ்.சி நர்சிங் படிப்புக்கு 2 இலட்சத்து 90 ஆயிரம் கல்விக் கடன் வாங்கியது இன்று வட்டியோடு 9 இலட்சம் ஆகிவிட்டது என்றும், தன்னால் அவ்வளவு பணம் கட்ட முடியாது. தற்போதுதான் நீதிமன்றம் போய்விட்டு வருகிறேன் உங்களது பிரச்சாரம் கேட்டு இங்கே நிற்கிறேன் என்று கூறிவிட்டு கண்ணீர் வடித்தார். நமது தொடர்பு எண்ணை வாங்கிக் கொண்டு சென்றவர், சில நாள் கழித்து மீண்டும் நம்மை தொடர்பு கொண்டார். நான் அன்று பேருந்து நிலையத்தில் சிந்திய கண்ணீர் எனது வேதனைக்கு சிந்தியதல்ல. இப்படிப்பட்ட பிரச்சினையை பேசவும் இங்கே உங்களை போன்ற ஆட்கள் இருக்கிறார்களே என்று நினைத்ததால் வந்த கண்ணீர் அது என்று விளக்கம் கூறினார்.

மாணவர்கள் கைகொடுத்து வாழ்த்தினார்கள். பள்ளி மாணவர்கள் காசு இல்லை என்றாலும் நோட்டீசைக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.


படிக்க : திரை விமர்சனம் : வசூலுக்காக அரசியல் நியாயம் பேசும் சர்கார் !


தன் கிராமத்தில் இருக்கும் பணக்கார வீட்டு பையன் மேல்படிப்புக்காக கனிமொழி வரை சிபாரிசுக்குப் போய் அமைச்சர் கீதாஜீவனிடம் ஒரு இலட்சம் வரை பணம் கொடுத்து குறிப்பிட்ட கல்லூரியில் சேர்ந்து இருக்கிறார். நாமெல்லாம் அப்படி போய் படிக்க முடியுமா என்று ஒரு பெரியவர் ஆதங்கத்தோடு நம்மிடம் கேட்டார். இப்படியாக மக்கள் தமது எண்ணங்களை, உணர்வுகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்கள். நம்முடைய பிரச்சாரம் அவ்வாறிருக்க அவர்களைத் தூண்டியது.

நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மக்களை சென்றடைகிறது. மக்களின் எதிரி யார் என்பதை சுட்டிக்காட்டுகிறது. கயவர்களை ஒன்றுமே செய்யமுடியாது என்கிற அவர்களின் கற்பிதங்களை புரட்டிப் போடுகிறது. வாழ்வின் மீது புதிய நம்பிக்கையை பாய்ச்சுகிறது. நட்பு, நம்பிக்கை, அழுகை, உரிமை என ஏதோ ஒரு வகையில் நம்மிடம் அவர்கள் நெருக்கமாகிறார்கள். நம்முடைய பிரச்சாரம், கலையாக மாறும் தருணம் இதுவே.

பல கோடிகள் செலவில் எடுக்கப்பட்ட விக்ரம் திரைப்படம் மேலும் பல கோடிகள் மக்களிடமிருந்து வசூலிக்கிறது. ஒரு மயிரளவு மாற்றத்தைக் கூட மக்கள் வாழ்வில் ஏற்படுத்தவில்லை. ஆனால் நம்முடைய மலிவான காகிதத்தாள் பிரச்சாரமும், அதன் கருத்தும் மக்களின் வாழ்க்கைப் பாதையையே திசைதிருப்பும் வல்லமையோடு இருப்பதை, மக்களுடனான நமது அனுபவத்தில் நம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.

அரசு அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து விவசாய நிலத்தை நாசமாக்கும் உப்பள நிறுவனங்கள்!

வானம் பார்த்த பூமி’ என்று அறியப்படும் இராமநாதபுர மாவட்டம், கடலாடி வட்டத்தில் உள்ளது மடத்தாகுளம் கிராமம். வறட்சியாலும் இலாபகரமற்ற தொழிலாக மாறிப்போனதாலும், கிராமத்திலுள்ள பாதிக்கும் மேற்பட்ட மக்கள் விவசாயத்தைவிட்டே வெளியேறி, விவசாயம் அல்லாத கூலி வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர். மீதமுள்ள மக்கள் தங்களது நிலத்தை கைவிட மனமில்லாமல், கடும் நெருக்கடியிலும் விவசாயப் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். விவசாயத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு நீராதாரமாக விளங்குவது கண்மாய்கள்தான்.

கடலாடி வட்டத்தில் மடத்தாகுளம், சிறுமடத்தான்குளம், உப்புத்தண்ணீர், வெள்ளாள, பரதன்குளம், பாடுவனேந்தல், தெற்கு ஊரணி உள்ளிட்ட கண்மாய்கள் உள்ளன.

மழைக்காலங்களில் இக்கண்மாய்களில் சேகரிக்கப்படும் நீரைக் கொண்டுதான் சுமார் 200 ஏக்கர் அளவில் பருத்தி, கம்பு, கேழ்வரகு, சோளம், நெல், கடலை போன்ற பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. விவசாயம் மட்டுமல்லாது குடிநீர், கால்நடைகளை பராமரிப்பது உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இக்கண்மாய்கள்தான் பூர்த்தி செய்கின்றன.

இவ்வாறு விவசாயத்துக்கும் மக்களது வாழ்வாதாரத்துக்கும் உயிராதாரமாக விளங்குகின்ற கண்மாய்களை அரசு அதிகாரிகளின் துணையோடு சில உப்பள நிறுவனங்கள் ஆக்கிரமித்து, அழித்து நாசம் செய்து வருகின்றன.

உப்பள நிறுவனங்கள் கண்மாயை ஆக்கிரமித்துள்ள பகுதியைப் பார்வையிடும் போலீசு அதிகாரிகள். ஒரு கண் துடைப்பு நாடகம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கடலாடி வட்டத்தில் கால்பதித்த வேலவன், கெம்பேப் ஆல்கலிஸ் லிமிடெட், பார்வதி சால்ட், அபிசேக் சால்ட் உள்ளிட்ட தனியார் உப்பள நிறுவனங்கள், மடத்தாகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலுள்ள புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து, உப்பள உற்பத்தியில் ஈடுபட்டுவருகின்றன. தொடக்கத்தில், புறம்போக்கு இடங்களில் உப்பளங்களை அமைத்ததால் மக்கள் மத்தியில் பெரிதளவில் எதிர்ப்பு கிளம்பவில்லை.


படிக்க : ஆவணப்படம் : “உப்பிட்டவரை…” | ம.க.இ.க.


‘இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்ட கதை’யாக, கொஞ்சங்கொஞ்சமாக கண்மாய்களையும் ஆக்கிரமிக்கத் தொடங்கின உப்பள நிறுவனங்கள்.

2018-ல் வேலவன் நிறுவனம் பொக்லைன், ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு மடத்தாகுளம் கண்மாய்க்குள் உப்பளம் அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டது. அரசு அதிகாரிகளின் துணையோடு ஊருக்கு சொந்தமான கண்மாயையே தனது பெயருக்கு பட்டா போட்டது அப்போதுதான் மக்களுக்கு தெரியவந்தது. அதே ஆண்டில், கெம்பேப் ஆல்கலிஸ் நிறுவனமோ, உப்பளங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரினை கண்மாய்க்குள் கொட்டியது.

கண்மாய்களில் உப்பள கழிவுகள் கொட்டப்படுவதால் நீர் உபயோகிக்க முடியாத அளவுக்கு உப்பு நீராக மாறுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதோடு, மழைநீரை சேமிக்க முடியாமல், விவசாயம் அழியும் சூழலுக்கு தள்ளப்படும் என அஞ்சிய கிராம மக்கள், இந்நிறுவனங்களை எதிர்த்து 03.12.2018 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அப்போது, கண்மாய்களில் உப்பளம் அமைப்பதிலிருந்து அந்நிறுவனங்கள் தற்காலிகமாக பின்வாங்கின.

ஜூன் 2021-ம் ஆண்டில் மீண்டும் கண்மாய்களை ஆக்கிரமிக்கும் வேலைகளில் ஈடுபட தொடங்கின. அதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மீண்டும் மனுகொடுத்துள்ளனர்.

இரண்டு மாதத்துக்கு பிறகு, கிராம மக்களால் ஊராட்சி மன்றக் கூட்டம் கூட்டப்பட்டு, கண்மாயில் உப்பளம் அமைப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில் நீதிமன்றத்தில் வழக்கும் போடப்பட்டது. அக்டோபர் மாதம் 11-ம் தேதி இராமநாதபுரம் பணிமனை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மனுவிற்கு மேல் மனு கொடுத்தும் அதிகாரிகளால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பல ஆண்டுகாலம் மனுகொடுத்தும் பலனில்லை. ஊருக்குள் பந்தல் அமைத்து தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மடத்தாக்குளம் கிராம மக்கள்.

அரசு அதிகாரிகள் உப்பள நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் உண்டு. அரசு அதிகாரிகள் மற்றும் பெரிய குளத்தைச் சேர்ந்த இரண்டு ஆதிக்க சாதி வெறியர்களின் உதவியோடுதான் இத்தனியார் உப்பள நிறுவனங்கள், கிராம மக்களை மிரட்டி 900 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்தன. போலீசு உள்ளிட்ட அதிகாரவர்க்கம், உப்பள முதலாளிகளிடமிருந்து பணம் பெற்றுகொண்டு, அந்நிறுனங்களுக்கு ஆதரவளிக்கிறது என்கிறார்கள் ஊர் மக்கள்.

எனவே, இந்நிறுவனங்களுக்கு எதிராக கிராம மக்கள் அளிக்கும் புகாரை திசைதிருப்பி அம்மக்கள்மீதே பழியைப் போட்டு குற்றவாளியாக்குகிறது அதிகார வர்க்கம். மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அவர்களைப் பிளவுப்படுத்தும் வேலையையும் சேர்த்து செய்துவருகிறது.

அதற்கு சிறந்த உதாரணம், “நான்கு தனியார் நிறுவனங்கள் 900 எக்கர் பரப்பிற்குள் வரும் நீர்பிடிப்புகளை உப்பள நிறுவனங்கள் தங்களின் பயன்பாட்டிற்காக வைத்திருந்தது உண்மைதான். அவர்கள் ஆக்கிரமித்திருந்த நிலத்தை அளவீடு செய்து ஆக்கிரப்பை அகற்றிவிட்டோம்” என்று கூறும் அதிகார வர்க்கம், “தனியார் நிறுவனங்கள் உப்பள உற்பத்தியில் ஈடுபடுவதை ஒட்டுமொத்த கிராம மக்களும் எதிர்க்கவில்லை. அக்கிராமத்தில் இருக்கும் 25 குடும்பங்கள்தான் கண்மாய் பகுதியின் 25 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து உப்பளங்களை நடத்திவருகின்றன. அதை மூடிமறைக்கதான் தனியார் உப்பளங்கள்மீது பழியை சுமத்துகின்றன” என மக்கள் மீது பழியை போடுகிறது.

25 குடும்பங்கள் உப்பளங்களை நடத்திவருவது உண்மைதான். முறைப்படி குத்தகைக்கு எடுத்து நடத்திவரும் அவர்கள், தனியார் நிறுவனங்களைபோல் கண்மாய்களில் உப்பளங்களை அமைக்கவோ, கழிவுநீரை கொட்டவோ இல்லை.


படிக்க : உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி || பாகம் 1 || வீடியோ


2021-ம் ஆண்டில் இருந்து உப்பள நிறுவனத்திற்கு எதிராக தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் மடத்தாகுளம் கிராம மக்கள். கடந்தாண்டு நவம்பரில், கடலாடி வட்டாச்சியர் சேகர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைப்பெற்றது. அதில் கெம்பேப் நிறுவனத்தால் வெளியேற்றப்படும் கழிவு நீரை மடத்தாகுளம் கண்மாயில் கொட்டக்கூடாது என்றும் கண்மாயை கையாளும் உரிமை ஊர் மக்களுக்குதான் உள்ளது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தீர்மானத்தை இந்நிறுவனம் மயிரளவும் மதிக்கவில்லை.

மாவட்ட ஆட்சியர், தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், முதலமைச்சர் தனிப்பிரிவு ஆகியவற்றுக்கு பலமுறை மனுக்களை அனுப்பியுள்ளனர் கிராம மக்கள். ஆனால், அரசு அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், கடந்தாண்டு தங்களின் வாழ்வாதாரத்தை மீட்க மண் மீட்பு இயக்கம் என்ற தொடங்கி ஊருக்குள் பந்தல் அமைத்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மண் மீட்பு இயக்கத்தினர், ஊர் மக்கள் உள்ளிட்டோர்மீது பல பொய் வழக்குகளை ஜோடித்து வருவதோடு, தனக்கு எதிரானவர்களைக் கூலிப்படையினரை வைத்து கொலையும் செய்துவருகிறது உப்பள நிறுவனங்கள்.

சில ஆண்டுகள் முன்பு, விளைநிலங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து வரும் உப்பள நிறுவனங்களுக்கு எதிராக புகாரளித்த துரைப்பாண்டி, தோமஸ், அந்தோணி ஆகியோரை உப்பள நிறுவனங்கள் கூலிப்படையை வைத்து கொன்றது.

உப்பள நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்மாயிலேயே தங்கி, சமைத்து சாப்பிட்டு போராடும் கிராம மக்கள்.

இதேபோல, கடந்த மார்ச் மாதம், ஊர் செயலாளர் டேவிட் ராஜாவை கொலை செய்யும் நோக்கத்தோடு சென்ற கூலிப்படை டேவிட் ராஜா என்று நினைத்து அவரது அண்ணன் அற்புதக்கனியை அறிவாளால் சரமாரியாக வெட்டியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் படுகாயங்களுடன் உயிர்பிழைத்தார்.

கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகள்மீது புகார் அளித்தும், போலீசு தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. மாறாக, உப்பளத்தின் குடிசையை கூலிப்படையை வைத்து அவர்களே எரித்துவிட்டு 12-ம் வகுப்பு படிக்கும் அற்புதக்கனியின் மகன்மீது பொய் வழக்கு பதிந்துள்ளது. இதேபோல பலர் மீது பொய் வழக்குகளைப் போட்டு சித்திரவதை செய்துவருகிறது.

மண் மீட்பு இயக்கத்தின் தலைவர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 6 பேரை உப்பள நிறுவனப் பொருட்களைச் சேதப்படுத்தியதாக பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது. மண்மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளரின் தம்பியின் திருமணம் நெருங்கிவரும் வேளையில் போலீசு திட்டமிட்டு அவரை கைது செய்தது.

சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு பிணை வழங்கக்கோரி, மாரியூர் வி.ஏ.ஓ. அதிகாரி பூப்பாண்டியனை கிராம மக்கள் சந்திக்க சென்றனர். அவர்களிடம் பூப்பாண்டியன், “முதலில் போராட்டப் பந்தலை பிரித்துவிட்டு வாருங்கள். பின்னர் பிணை வழங்க கையெழுத்துடுகிறேன்” என திமிர்தனமாக பேசியுள்ளார். தாசில்தார் முருகவேல் என்பவரோ, “போராட்டத்தை கைவிடுமாறு எழுதிதாருங்கள்” என நிர்பந்தித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஜாமீனில் வெளியே வரமுடியாதபடி அடுத்தடுத்து ஐந்து வழக்குகளைப் போட்டு சிறையில் தள்ளியுள்ளது போலீசு. சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தங்களை பார்க்க வருபவர்களிடம், “இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் சரி, நாங்கள் சிறையில் இருக்க தயாராக இருக்கிறோம். எங்களைப் பற்றி கவலைப்படாமல் நீங்கள் போராட்டத்தை தொடருங்கள்”, என்று கூறியிருக்கிறார்கள். இவர்களது வார்த்தைகள் தங்களுக்கு ஓர் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்தது என்கிறார்கள் ஊர் மக்கள்.


படிக்க : என் வீட்டில் உப்பு இப்போது சிவப்பு நிறமாக தெரிகிறது … | தோழர் ஸ்ரீரசா | வீடியோ


மனு அளித்து ஓய்ந்தவர்கள்; களப்போராட்டத்தில்!

அதிகாரவர்க்க பலத்தோடு, தங்களின் வாழ்வாதாரமான கண்மாய்களை அழித்துவரும் தனியார் உப்பள நிறுவனங்களை, மனுகொடுப்பதன் மூலம் இம்மியும் அசைக்கமுடியாது என எதார்த்தத்தில் புரிந்துக்கொண்ட மடத்தாகுளம் கிராம மக்கள் களப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம், 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தீப்பந்தங்களோடு கண்மாய்குள் குடியேறின. ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கேயே தங்கி போராட்டம் நடத்தினார்கள். “பச்சிளங்குழந்தைகளோடு கண்மாயில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களை சந்திக்கவராத தாசில்தார், வி.ஏ.ஓ. அதிகாரிகள், உப்பள நிறுவன முதலாளிகளின் பணத்திற்கு விலைபோகின்றனர்” என்கிறார்கள் போராடும் மக்கள்.

உப்பள முதலாளிகளின் கொலைமிரட்டலுக்கும், போலீசின் பொய் வழக்குகளுக்கும் அஞ்சாது துணிவோடு போராடும் உழைக்கும் மக்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம்! அவர்களுக்கு கரம் கொடுப்போம்!

புதிய ஜனநாயகம்,
களச் செய்தியாளர், நெல்லை.

இலங்கை மக்கள் எழுச்சி : உலகம் முழுவதும் உள்ள பாசிஸ்டுகளுக்கு பீதியூட்டும் போராட்டம்! | வீடியோ

ஜூலை காலிமுகத்திடல் பகுதியில் மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அதன் 90வது நாள் நிறைவடைகிறது. அதையடுத்து நாடுமுழுவதும் ஒரு போராட்டத்தை நடத்தவேண்டும் என்று காலிமுகம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அறைகூவல் விடுக்கிறார்கள்.

அதனையடுத்து, இலங்கை முழுவதும் ஓர் பேரெழுச்சி ஏற்பட்டது. அதில் குறிப்பாக அதிபரின் செயலகத்தை பெருந்திரளான மக்கள் சென்று கைப்பற்றினார்கள். அங்கிருக்கும் நீச்சல் குளத்தில் மக்கள் விளையாடுகிறார்கள். அங்கிருக்கும் நாற்காலிகளிலும் கட்டில்களிலும் அமர்ந்து ஓய்வெடுக்கிறார்கள். அங்கிருக்கும் உணவு பொருட்களை எடுத்து சமைத்து சாப்பிடுகிறார்கள்.

அங்கு நிறைய பதுங்கு அறைகள், ரகசிய அறைகள் எல்லாம் இருக்கின்றன. அதில் ஒருஇடத்தில் கிட்டத்தட்ட 1.78 கோடி ரூபாய் ரொக்கப்பணம் இருந்திருக்கிறது. அந்தப்பணத்தையெல்லாம் முறையாக எடுத்து போலீசுத்துறையிடம் ஒப்படைந்துள்ளார்கள்.

இந்த போராட்டம் என்பது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய புரட்சிகர சக்திகளுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. அதேபோல உலகம் முழுவதும் இருக்கக்கூடிய வலதுசாரி பாசிஸ்டுகளுக்கு ஓர் பீதியை ஏற்படுத்தக்கூடிய போராட்டமாகவும் இது அமைந்துள்ளது. மேலும் பல்வேறு விவரங்களுடன் இலங்கை மக்களின் எழுச்சிக்கு இக்காணொலியில் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

தமிழா, இலங்கையை பார் – வர்க்க உணர்வு கொள்!

தமிழா, இலங்கையை பார் – வர்க்க உணர்வு கொள்!

இலங்கையில் அனைத்து உழைக்கும் மக்களும் இணைந்து நடத்திய போராட்டம் இறுதி கட்டத்தை அடைந்தது. போலீசு, இராணுவம் மக்களுடன் கலந்தது. கோத்தபய ராஜபக்சே மக்களின் போராட்டத்தை கண்டு தப்பி ஓடினார். இலங்கையின் சர்வாதிகார ராஜபக்சே அரசு வீழ்த்தப்பட்டது. தமிழா, இலங்கையை பார் வர்க்க உணர்வு கொள்!

இலங்கை உழைக்கும் மக்களுக்கு எமது புரட்சிகர வாழ்த்துகள்!

நேற்றைய நாள் (09.07.2022) அரங்கேறிய, இலங்கை உழைக்கும் மக்களின் பேரெழுச்சி நடவடிக்கையைப் பார்த்து, உலகெங்கிலும் உள்ள புரட்சிகர சக்திகளின் இதயங்கள் பெருமகிழ்ச்சியால் நிறைந்திருக்கின்றன. ராஜபக்சே கும்பலை ஒத்த உலகெங்கிலும் உள்ள பாசிஸ்டுகளுக்கோ தங்கள் எதிர்காலத்தை நினைத்து வயிறு கலங்கியிருக்கும்.

09.07.2022 அன்று காலிமுகத்திடல் போராட்டம் 90-வது நாளை எட்டுவதை ஒட்டி, நாடு தழுவிய போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தார்கள் போராட்டக்காரர்கள். அதனடிப்படையில் நேற்று நடைபெற்ற நாடு தழுவிய போராட்டத்தின் ஒருபகுதியாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அதிபர் செயலகத்தை முற்றுகையிட்டு கைப்பற்றியுள்ளனர். தற்போது வரை அதை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதே நேரத்தில் கொழும்பில் இருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடும் மக்களால் முற்றுகையிடப்பட்டது. அவரது வீடு தீவைத்து கொளுத்தப்பட்டிருக்கிறது. அதிபர் செயலகத்திலிருந்து, ராணுவத்தின் உதவியுடன் தப்பியோடிவிட்டார் கோத்தபய. தற்போதுவரை எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.

அதிபர் செயலகத்தையும் கோத்தபயவின் அதிகாரப்பூர்வ இல்லமான அலரி மாளிகையையும் கைப்பற்றிய தருணத்தில் நடந்த நிகழ்வுகள் நெகிழ்ச்சிக்குரியவை.

அலரி மாளிகைக்குள் நுழைந்த மக்கள் அங்கிருந்த நீச்சல் குளத்தில் குதித்து நீந்தி மகிழ்ந்தனர். உணவகத்திற்கு சென்று சேமித்து வைத்திருந்த உணவை உண்டு பசியாறினர். நாற்காலிகளில் அமர்ந்து பார்த்தனர். சொகுசுக் கட்டிலில் படுத்துக் களைப்பாறினர். இவ்வாறெல்லாம் தங்கள் வெற்றிக்களிப்பை வெளிப்படுத்திய மக்கள், அங்கிருந்த எந்தப் பொருட்களையும் சேதப்படுத்தவில்லை என்பது முக்கியமானது.

மேலும் கோத்தபய-வின் இல்லத்தில் கட்டுக்கட்டாக பதுக்கிவைக்கப்படிருந்த ரூபாய் நோட்டுகளை (1.78 கோடி) கைப்பற்றிய மக்கள், அதை போலீசு உயர் அதிகாரியிடம் ஒப்படைத்திருக்கின்றனர். இது போராடும் மக்களை இலட்சியமற்ற வன்முறையாளர்களாகவும் அராஜகப் பேர்வழிகளாகவும் சித்தரிக்கும் ஆளும் வர்க்கங்களின் பிரச்சாரத்திற்கு கிடைத்த செருப்படி.


படிக்க : இலங்கையில் மக்கள் எழுச்சி! தேவை, புரட்சிகர கட்சி! | வெளியீடு அறிமுகவுரை


மக்கள் எழுச்சியின் அழுத்தம் காரணமாக, கோத்தபய ராஜபக்சே வரும் 13-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக பதவி விலக உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு உதவியாக தானும் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார் ரணில் விக்ரமசிங்க. அவர் தலைமையில் பொறுப்பேற்றிருந்த அமைச்சர்களும் ஒவ்வொருவராக தங்களது பதவி விலகலை அறிவித்து வருகிறார்கள்.

கடந்த 05.07.2022 ஆம் தேதி காலி முகத்திடல் போராட்டத்தின் 90-வது நாளை முன்னிட்டு ஆறு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய பிரகடனத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு ஒரு அறைகூவல் விடுத்தார்கள் போராட்டக்காரர்கள். அதில் முதன்மையான கோரிக்கை, கோத்தபய – ரணில் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதே. நேற்றைய பேரெழுச்சியின் மூலம் இலங்கை மக்கள் இதை சாதித்துள்ளார்கள்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து போன்ற நாடுகளின் உழைக்கும் மக்கள் இலங்கை மக்கள் பேரழுச்சிக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

இப்புரட்சிகர நடவடிக்கையை உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களும் புரட்சிகர சக்திகளும் ஆரவாரத்தோடு வரவேற்பதைப் போல, நாமும் நெஞ்சார வரவேற்கிறோம். இலங்கை உழைக்கும் மக்களுக்கும் அங்குள்ள புரட்சிகர சக்திகளுக்கும் எமது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

***

எனினும் புரட்சிப் போராட்டத்தில் தீர்மானகரமான வெற்றி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலமே முழுமையடைகிறது. அந்த வகையில் இலங்கை உழைக்கும் மக்கள் தங்கள் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான முக்கியமான தருணத்தில் உள்ளார்கள்.

மக்கள் பேரெழுச்சியால் இலங்கை குலுங்கிக் கொண்டிருக்கும் அதேநேரத்தில் அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்டு மேலாதிக்க வெறிபிடித்த கழுகுகள் இலங்கையை சுற்றி வட்டமடித்து வருகின்றன. அவர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கான மாற்றுத் திட்டத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“மக்களது அதிருப்தியை போக்குவதற்கு, நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் தீர்வுகளை அடைய விரைவாக முன்வரவேண்டும்” என்று அறைகூவியுள்ளது அமெரிக்கா.

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை தாங்கள் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது சர்வதேச நாணய நிதியம்.

போராடும் மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்படுகின்றன. மக்கள் போராட்டங்களை காட்சிப்படுத்திக் கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கின்றனர். ‘அமைதியை நிலைநாட்ட’ போலீசு மற்றும் ராணுவத்தினருக்கு ஒத்துழைக்க முன்வருமாறு போராடும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார், ராணுவத் தளபதி.

அரசியல் அதிகாரம் தற்போதும் ஆளும் வர்க்கங்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருபுறம் போராடும் மக்களை போலீசு மற்றும் ராணுவத்தை வைத்து ஒடுக்கிக் கொண்டே, மறுபுறம் மீண்டும் ‘அனைத்துக் கட்சி அரசாங்கம்’, ‘தேர்தல்’ என்ற பெயரில் தங்களுக்கு சேவைசெய்யும் அரசுக்கட்டமைப்பை காப்பாற்றிக் கொள்வதற்கு எத்தனிக்கின்றன ஆளும் வர்க்கங்கள்.

இந்த எத்தனிப்புகளை முறியடித்து உழைக்கும் மக்கள் தங்களது சொந்த அரசியல் அதிகாரத்தை நிறுவிக் கொள்ளும் திசையில்.. தேசிய இனங்களின் தன்னுரிமையை அங்கீகரிக்கும் வகையிலான, ஏகாதிபத்திய சூறையாடலை ஒழித்துக் கட்டி தற்சார்பு பொருளாதாரத்தைக் கட்டும் வகையிலான அரசியல் அதிகாரத்தை நிறுவும் திசையில் இப்பேரெழுச்சி முன்செல்ல வேண்டியுள்ளது. இதற்கிடையில் ஆளும் வர்க்கங்களின் திசைதிருப்பல்கள், சூழ்ச்சிகள் மற்றும் அவர்கள் மக்கள் முன்வைக்கும் போலித் தீர்வுகளை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டியுள்ளது. இக்கடமை இலங்கை புரட்சிகர சக்திகளுக்கு உரித்தானதாகும்.


படிக்க : இலங்கையின் விடுதலைக்குத் தேவை மக்கள் அடித்தளம் கொண்ட ஒரு புரட்சிகரக் கட்சி!


அந்தவகையில், இலங்கையில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிய கட்சியானது மக்களிடம் பல்வேறு கருத்துப் பிரச்சாரங்களை நடத்தியுள்ளது. காலி முகத்திடல் பிரகடனத்தை ஆதரித்து மக்கள் போராட்டங்களில் அக்கட்சியும் அதன் மக்கள் திரள் அரங்குகளும் பங்கேற்றுள்ளன. வடமாகாணத்தில் உள்ள தமிழ் மக்களை இப்பேரெழுச்சியில் இணைப்பதற்கு அக்கட்சி தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துவருவதை நாம் வரவேற்கிறோம்.

ஆளும் வர்க்கங்கள் முன்வைத்த தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் எனும் மறுகாலனியாக்க கொள்கை தோற்று திவாலாகிவிட்டது. சோசலிசத்தை நோக்கிய பாதையொன்றுதான் இலங்கை மக்களுக்கு விடிவைத் தரும் ஒரே பாதை. அதை நோக்கி முன்னேற வேண்டுமானால் உழைக்கும் வர்க்கம் அரசியலதிகாரத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும்.

மஹிந்தாவுக்கு பதில் ரணில் மாற்றாக முன்வைக்கப்பட்டதைப் போல, வேறொரு ‘மீட்பரை’ ஆளும் வர்க்கங்கள் முன்வைக்கக் கூடும். அதை உழைக்கும் மக்கள் புறந்தள்ள வேண்டும். தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டு புரட்சிகர வர்க்கங்கள் ஆதிக்கம் செலுத்தும் வகையில் உடனடியாக ஒரு இடைக்கால அரசமைக்கப்பட வேண்டும். அதிலிருந்தே அடுத்தடுத்த நகர்வுகளுக்கு முன்னேற முடியும்.

05.07.2022 அன்று வெளியிடப்பட்ட காலிமுகத்திடல் பிரகடனமே ‘இடைக்கால அரசு’, ‘மக்கள் பங்கேற்புடன் புதிய அரசியலமைப்பு’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது. ஆளும் வர்க்கங்களின் திசைதிருப்பல்களை முறியடித்து, இப்பிரகடனத்தை உறுதியாக அமல்படுத்தப் போராடுவதில் புரட்சிகர சக்திகளின் ஊக்கமான தலையீடு அவசியமாகிறது.


ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.
10.07.2022

New Democracy – July 2022 | Magazine

ஜூலை ஆங்கில இதழ்

New Democracy July – 2022 Printed issue has now published. We ask readers and comrades to buy, read and support.

New Democracy (Puthiya Jananayagam) July – 2022

List of Articles Present in this Issue :

♦ Perarivalan released; Release all, including Nalini, Murugan, Santhan! – Makkal Athikaram Press Release

♦ Sri Lanka, Pakistan, Afghanistan, Dice in the Fight for Hegemony of US-Chaina in South Asia (Part 1)

♦ The uprising of the working people that shook Sri Lanka!

♦ The Path to Autonomy of Eelam Tamils: Ethnicism or Class Struggle?

♦ A Revolutionaray Party with a mass base: The need of the hour for Sri Lankan Liberation

♦ Let’s get on the field against saffron fascist bulldozers! Let’s give a shoulder to the Islamic people!

♦ Russia – Ukraine War: America’s Proxy War and the Danger of a World War

♦ Communal attacks during Hindu festivals: The next leap of saffron terrorism!

To get Free e-magazine, mail us : puthiyajananayagam@gmail.com

To Get the Magazine by Post :
Contribution : Rs. 25
Pay through G-Pay : 94446 32561
Make Payment and send your address details along with Payment receipt to our email : puthiyajananayagam@gmail.com

சங் பரிவார கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் நீதித்துறை!

ளிய மக்களின் கடைசி நம்பிக்கை நீதித்துறைதான் என்று நடுத்தர வர்க்க குட்டி முதலாளித்துவ அறிஞர்கள் ஒரு சித்திரத்தை தீட்டி வைத்திருந்தனர். ஆனால் அந்த சித்திரம் தற்போது அதன் வண்ணங்களை இழந்து சிதைந்துவிட்டது. அதை அந்த குட்டி முதலாளித்துவ அறிஞர்களே கண்டுகொண்டனர். நீதித்துறை இனிமேலும் யாருக்கும் நம்பிக்கையாக இல்லை. இதை நீதித்துறை மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்த நபரான ஏ.ஜி.நூரானியே தனது “ஆர்.எஸ்.எஸ் : இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்” என்னும் புத்தகத்தில் இப்படியாக சொல்கிறார். “மதப்பெரும்பான்மை பாராளுமன்றத்தில் அரசியல் பெரும்பான்மை பெற்று கட்டுக்கடங்காத அரசு அதிகாரத்தைச் செலுத்தி வருகிறது. அரசியலமைப்பு சட்டமும், நீதிமன்ற தலையீடும் ஓரளவுக்குதான் இதைத் தடுக்க முடியும்”.

தற்போது கடந்த ஏழு நாட்களாக நடந்துவரும் நிகழ்வுகள் நீதித்துறையின் அவலத்தை அப்பட்டமாக காட்டுவதாக இருக்கிறது. நூபுர் ஷர்மாவின் வெறுப்பு பேச்சு விவகாரத்தின்போது பதியப்பட்ட அதே பிரிவுகளின்கீழ் தான் முகமது ஜுபைர் மீதும் வழக்கு பதியப்படுகிறது. ஆனால், இருவருக்கும் வெவ்வேறு வகையில் நீதித்துறை நடந்து கொள்கிறது. இது பாசிஸ்டுகளின் ஆட்சியின்கீழ் நீதித்துறை என்னவாக இருக்கிறது என்பதை துல்லியமாக காட்டுகிறது.‌

ஆல்ட் நீயுஸ் (ALT NEWS) என்னும் நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டிருப்பதற்கு “இந்து யுவ வாகினி” (இந்த அமைப்பு யோகியால் உத்தரப்பிரதேசத்தில் தொடங்கப்பட்டது) அமைப்பின் மாநிலத் தலைவர் விகாஸ் அகிர் என்பவருடன் தொடர்பில் உள்ள அநாமதேய, நம்பகத்தன்மையற்ற சமூக ஊடக கணக்குகளின் வலைப்பின்னல் மூலம் ஓராண்டிற்கு மேலாக பிரச்சாரம் செய்யப்பட்டதுதான் காரணம் என்ற உண்மை The Wire என்ற பத்திரிகை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆல்ட் நீயுஸ் என்ற உண்மை சரிபார்ப்பு இணையதளத்தின் இணை நிறுவனரான முகமது ஜுபைர் மீது கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டார். 2018-ம் ஆண்டு ஜுபைர் போட்ட ஒரு டிவீட்டை காரணமாக காட்டி, அவர் சாதி மதம் போன்றவற்றின் பெயரில் இரு வேறு சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் நோக்கத்துடன் செயல்பட்டார் என்றும், ஒரு மதத்தைச் சேர்ந்த வழிபாட்டு தலத்திற்கு அவமதிப்பு அல்லது அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டதாகவும் சொல்லி அவரை டெல்லி போலீஸ் இந்திய தண்டனைச் சட்டம் 153A, 295 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.


படிக்க : இந்து ராஷ்டிரத்தை அடித்து நொறுக்குவோம்!


முகமது ஜுபைர் ட்டிவீட் செய்திருந்தது “கிஸ்ஸி சே நா கெஹ்னா” என்னும் இந்தி நகைச்சுவை திரைப்படத்தின் ஸ்கிரீன் ஷாட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

2020-ம் ஆண்டின் ஒரு வழக்கிற்கு முகமது ஜுபைர் கைது செய்யப்படாமல் இருக்க உயர்நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கியுள்ளது. அப்படி கைது செய்யப்படாமல் இருக்க பாதுகாப்பு வழங்கப்பட்ட ஒரு வழக்கிற்கான விசாரணைக்கு டெல்லி போலீசால் அழைத்துச் செல்லப்பட்டு, வேறு ஒரு வழக்கின்கீழ் கைது செய்யப்படுகிறார் ஜீபைர்.

ஜூன் 29-ம் தேதி முகமது ஜுபைர்க்கு பிணை வழங்குவது பற்றிய விசாரணையில், “புகார் அளித்த நபர் ஒரு அநாமதேய நபர் அல்ல. அவர் பற்றிய விவரங்கள் இங்கே இருக்கிறது. அந்த விவரங்கள் இல்லாமல் யாராலும் டிவிட்டர் கணக்குகளை வைத்திருக்க முடியாது” என்று வாதாடினார் ஜீபைர்க்கு எதிராக வழக்காடிய வழக்குரைஞர். எந்தவொரு தகவலும் இல்லாமல் ஆயிரக்கணக்கான தானியங்கி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி இயக்க முடியும் என்ற எளிய உண்மை கூடத் தெரியாத அளவிற்கு இந்த வழக்குரைஞர் “அப்பாவியாக” இருக்கிறார்.

ஆனால், அந்த புகார் அளித்த டிவிட்டர் கணக்கு பற்றிய விவரங்களை அளிக்குமாறு ஜூன் 29-ம் தேதி மாலைதான் டெல்லி போலீஸ் டிவிட்டர் நிறுவனத்திற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. வழக்கை விசாரித்துவரும் டெல்லி போலீஸாருக்கே தெரியாத “தகவல்கள்” பற்றி நீதிமன்றத்தில் பேசுகிறார் இந்த வழக்குரைஞர்.

இதற்கிடையில், இந்த ட்விட்டர் கணக்கு பற்றிய ஆய்வு செய்த The Wire என்னும் பத்திரிகை அகிர் (விகாஸ் அகிர்) என்ற அந்த டிவிட்டர் கணக்குடன் இணைப்பில் இருக்கும் 757 கணக்குகளை கண்டறிந்துள்ளனர்.

இந்த அகிர் என்ற கணக்குடன் இணைப்பில் இருக்கும் 757 கணக்குகளின் நோக்கமே முகமது ஜுபைர் மற்றும் பிரதிக் சின்ஹா (இவர்கள் இருவரும் ஆல்ட் நீயுஸ் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர்கள்) இருவரும் பதிவு செய்துள்ள பழைய டிவீட்டுகளை முன்னிலைப்படுத்துதல் மற்றும் தவறாக சித்தரித்தல் மூலமாக இந்த இரண்டு பத்திரிகையாளர்களையும் “இந்து விரோதிகளாக” பொதுவெளியில் கட்டமைப்பதுதான். இந்த 757 கணக்குகளில் ஜீபைர் மீது புகார் அளித்த டிவிட்டர் கணக்கின் 8 பிரதி கணக்குகளும் அடங்கும். இந்த 8 பிரதி கணக்குகளும் ஒரே மாதிரியான முகப்பு படங்கள், டிவீட்டுகள், பயனர் பெயர்களை கொண்டிருக்கிறது. இந்த இரண்டு ஆல்ட் நீயுஸ் நிறுவன பத்திரிகையாளர்களை குறிவைத்து இணையவெளியில் தாக்க ஓரே வழிமுறைகள் கையாளப்பட்டிருக்கிறது.

#Arrest Zubair போன்ற ஹேஷ்டேக்குகளை பரப்ப 18,364 கணக்குகளை கொண்ட வலைப்பின்னல் செயல்பட்டிருக்கிறது. இந்த கணக்குகளில் பெரும்பாலான கணக்குகள்  Bots எனப்படும் தானியங்கி சமூகவலைதள கணக்குகளுக்கு உண்டான குணங்களை கொண்டுள்ளது கண்டறியப்பட்டது. அதாவது இந்த கணக்குகள் மனிதர்களால் நடத்தப்படும் போலிக் கணக்குகள் அல்ல. Bots என்பது சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பிரச்சாரம் செய்ய பயன்படுத்தப்படும் கணிணியால் உருவாக்கப்படும் தானியங்கி போலிக் கணக்குகளாகும். இதன் மூலம் அதில் 62% அதாவது 11,380 கணக்குகள் Tekfog செயலியின் தொகுதியாகும்.

பாஜக-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயல்பாட்டாளர்களால் மட்டுமே பயன்படுத்த முடிந்த Tekfog செயலி, எந்த அளவு பாசிசத்தின் பிரச்சார நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது, அது எந்த அளவு சமூகக் கேடானது மற்றும் தனிநபர் அந்தரங்கத்தை மீறக் கூடியது என்பதை வினவு தளத்தில் ஏற்கனவே எழுதியிருக்கிறோம்.

இன்று இந்தியாவில் நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு நெருக்கமாக இருக்கும் நபரால் இவையெல்லாம் செய்யப்படுகிறது. முகமது ஜுபைர்க்கு பிணை வழங்கக் கூடாது என்று வாதாடுவது இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் என்பதை பார்க்கும்போது இது ஆளும் பாஜக கும்பலால் திட்டமிட்டு புனையப்பட்ட வழக்கு என்பது தெளிவு.

கடந்த மே மாத இறுதியில், பாஜக-வின் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா என்பவர் முகமது நபிக்கு எதிராக ஆட்சேபத்தற்குரிய கருத்துகளை தொலைக்காட்சி விவாதத்தில் தெரிவித்தார்.

அவர் மீதும் இதே 153A, 295 பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் போடப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னரும் நூபுர் ஷர்மாவிற்கு டெல்லி போலீஸார் பாதுகாப்பு வழங்கியது.


படிக்க : டெக் ஃபாக் செயலி : காவி பாசிஸ்டுகளின் பிடியில் டிஜிட்டல் உலகு !


கடந்த ஜீலை ஒன்றாம் தேதி “நூபுர் ஷர்மாவின் வார்த்தைகள் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது. நூபுர் ஷர்மா தான் ஒட்டுமொத்த நாடும் பற்றி எரிவதற்கு தனியாளாக காரணம். அவருக்கு எதிராக பல முதல் தகவல் அறிக்கைகள் இருந்தும் அவரை ஏன் டெல்லி போலீசுத்துறை கைது செய்யவில்லை?” என்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த்.

“நூபுர் ஷர்மா தனது முகமது நபிகள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்திற்காக ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் நடந்து கொண்ட விதம், அதன்பிறகு அவர் தன்னை ஒரு வழக்கறிஞர் என்று சொல்லிக் கொள்வது எல்லாம் வெட்கக் கேடானது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பின்னரும் ஒருவர் கைது செய்யப்படாமல் இருப்பது அவருடைய செல்வாக்கை காட்டுகிறது. அவர் தன் பின்னணியில் அதிகாரம் இருப்பதால் பொறுப்பற்ற வார்த்தைகளை சொல்லலாம் என்று நினைக்கிறார்” என்றெல்லாம் நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜே.பி.பார்திவாலா ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு நூபுர் ஷர்மாவை கண்டித்தது.

இப்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறிமாறி நூபுர் ஷர்மாவை கண்டிப்பதால், கடந்த நாட்களில் நடந்த சமூக பதற்ற நிலை சரியாகிவிடுமா? இல்லை அவரை மன்னிப்பு கேட்க வற்புறுத்துவதால் இங்கே என்ன நடந்துவிடப் போகிறது? முகமது ஜுபைர் மீது Tekfog என்னும் சட்ட விரோத, சமூக விரோத செயலி ஒன்றின் மூலம் புனையப்பட்ட வழக்கில் கடுமையாக நடந்துகொண்ட நீதித்துறை, ஏன் நூபுர் ஷர்மாவிடம் கடினமான வார்த்தைகளால் கெஞ்சிக் கொண்டிருக்கிறது? தவறு செய்யாதவராக இருந்தாலும் சிறுபான்மையினர் தண்டிக்கப்படுவார்கள், தவறு செய்திருந்தாலும் பாசிச அடிவருடிகள் விடுவிக்கப்படுவார்கள் இதுதான் பாசிஸ்டுகளின் ஆட்சி. உச்ச நீதிமன்றத்தின் இந்த “கண்டிப்பு” பாசிஸ்டுகளின் ஆட்சியின்கீழ் நீதித்துறையின் கையாளத்தனத்தை காட்டுவதாக இருக்கிறது. தனக்கு இந்த நாட்டில் இருக்கும் கடைசி துளி நம்பகத்தன்மையும் பறிபோய்விடும் என்ற அச்சத்தால் நீதித்துறை போடும் அரிதாரம் தான் இந்த “கண்டிப்பு”.

இந்த கண்டிப்பை நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சிகள் வரவேற்றாலும், இந்த உச்ச நீதிமன்றம் நீதிபதிகளை சமூக ஊடகங்களில் உள்ள சிலர் குறிவைத்து தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தனிநபர் தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்த நீதிபதி ஜே.பி. பார்திவாலா “சட்டம் உண்மையில் என்ன நினைக்கிறது என்று சிந்திப்பதற்கு பதிலாக சமூக ஊடகங்கள் என்ன நினைக்கும் என்று யோசிக்கும் இந்த நிலை சட்டத்தின் ஆட்சிக்கு தீங்கானது” என்றார்.

மேலும் கூறிய அவர், “இந்தியா போன்ற நாட்டை முழுமையான முதிர்ச்சி பெற்ற வரையறைக்கப்பட்ட சனநாயக நாடு என்று சொல்ல முடியாது. சமூக ஊடகங்கள் அடிக்கடி, முழுவதும் சட்டம் அரசியலமைப்பு சம்பந்தமான பிரச்சினைகளை அரசியலாக்கவே முடுக்கிவிடப் படுகிறது. அதனால் சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களை கட்டுப்படுத்த நெறிமுறைகள் வேண்டும்” என்கிறார்.

அவரின் இந்த கூற்றுக்கு ஆதரவாக பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு பற்றியும் பேசுகிறார். “அது வெறும் நிலப்பிரச்சினை ஆனால் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டபோது அது அரசியல் சர்ச்சையை அடைந்துவிட்டது” என்கிறார்.

ஆனால், சமூக ஊடகங்களில் நீதிபதி பார்திவாலா மற்றும் சூர்ய காந்த் ஆகியோரை குறிவைத்து இழிவுபடுத்தியது இந்து மதவாத சக்திகளுக்கு சொந்தமான கணக்குகள்தான் என்று MakTooB நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளை சமூக ஊடகங்களில் தனிநபர் தாக்குதலுக்கு இலக்காக்குவது இந்து மதவாதிகள் என்ற உண்மை நீதிபதி பார்திவாலாவிற்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், அவர் பொதுவாகவே பேசுகிறார். சமூக ஊடகங்களில் தனது தனிநபர் கண்ணியத்தை சீர்குலைப்பவர்களை குறிப்பிட்டக் கூட பேசாதவர், மின்னணு ஊடகங்களுக்கான நெறிமுறைகள் வகுப்பது பற்றி பாடம் எடுக்கிறார். தன் கண்ணியத்தை சிதைப்பவர்கள் இந்து மதவாதிகள் தான் என்றும் அதை அவர்கள் சமூக ஊடகங்களில் தான் செய்கிறார்கள் என்றும் தெரிந்த பின்பும் அவர் “மின்னணு ஊடகங்களுக்கான நெறிமுறைகள் பற்றி பேசுகிறார். மேலும், போகிற போக்கில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு “வெறும் இடம் பிரச்சினை” என்கிறார். கரசேவையின் போது மதவாதிகளால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் இவர் கண்களுக்கு ஏனோ தெரியவில்லை. அவர் தெரிந்து கொள்ளவும் விரும்பமாட்டார். ஏனெனில் அதுதான் அவருக்கு நல்லது என்று தெரியும். “இந்தியா ஒரு முதிர்ச்சி பெறாத சனநாயக நாடு” என்று கூட இவரால் சொல்ல முடிகிறது ஆனால் தன்னை சமூக ஊடகங்களில் தனிநபர் தாக்குதலுக்கு இலக்காக்குவது இந்து மதவாதிகள்தான் என்று சொல்ல முடியவில்லை.

மேலும், ஜீலை இரண்டாம் தேதி முகமது ஜுபைர்க்கு பிணை வழங்குவது பற்றிய வழக்கில் நீதிபதி தீர்ப்பை வாசிக்கும் முன்பே, “ஜீபைர்க்கு பிணை மறுக்கப்பட்டதாகவும் அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்படப் போவதாகவும்” செய்தி ஊடகங்கள் செய்தியை வெளியிட்டது. அந்த செய்தி டெல்லி போலீஸ் துணை ஆணையர் கே.பி.எஸ். மல்ஹோத்ரா சொன்னதாகவும் ஊடகங்கள் மேற்கோள் காட்டுகிறது.


படிக்க : பாசிச அரங்கேற்றத்தைப் பறைச்சாற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா!


இதைக்குறித்த பேசும்போது, “குற்றவியல் நீதித்துறை இதைவிட கீழாக சீரழிந்து போக முடியாது” என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியே சொல்கிறார்.

இப்படியாக  நீதித்துறை பாசிஸ்டுகள் ஆட்சியின் ஒரு உறுப்பாக மட்டுமே இருக்கிறது என கடந்த ஏழு நாட்களில் அம்பலப்பட்டுவிட்டது.

“எனவே, இப்போதிருக்கும் அரசாங்கம் இந்தியாவை ஒரு இந்து நாடாக பிரகடனப்படுத்தும் வகையில் ஓர் அரசியல் சட்டத்திருத்தத்தை (அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படும் என்று தெரிந்தும்) செய்ய வேண்டிய தேவையில்லை. அது ஓர் இந்து நாட்டை ஆள்வதை போன்றே ஆட்சி செய்தால்போதும். இதைத்தான் மோடி குஜராத்திலும், 2014 முதல் இந்தியாவிலும் செய்கிறார்” என்று “ஆர்.எஸ்.எஸ் : இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்” என்ற தனது புத்தகத்தில் ஏ.ஜி.நூரானி தெரிவிக்கிறார்.

அதனால் இந்துத்துவ ஆட்சியை நடத்த, இருக்கின்ற கட்டமைப்பையே பயன்படுத்திக் கொள்கிறார்கள் பாசிஸ்டுகள். எந்தவொரு பெரிய சீர்திருத்தமும் செய்யாமல் பாசிஸ்டுகளின் கைக்கருவியாக மாறிப்போகும் அளவுக்கு நீதித்துறை இருந்திருக்கிறது என்பதை நாம் இதிலிருந்து தெரிந்து கொள்கிறோம். இந்திய நீதித்துறை அதன் துன்பவியல் நாடகத்தின் உச்சச் காட்சியை நடித்துக் கொண்டிருக்திறது.


மக்கள் அதிகாரம், நெல்லை மண்டலம்.
செய்தி ஆதாரம் : BBC Tamil, Thewire, maktoobmedia, thewire2,
thewire 3

மோடி அரசை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த விவசாயிகள் சங்கம்!

0

ம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) விவசாயிகள் சங்கம், கடந்த ஆண்டு டிசம்பர் 9 அன்று மூன்று வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நிறைவடையும்போது விவசாயிகளுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு முழுமையாக மறுத்துவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளது.

ஜூலை 3 அன்று உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் நடைபெற்ற SKM உடன் தொடர்புடைய அனைத்து விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற தேசிய கூட்டத்தில் விவசாயிகள் இயக்கம் தொடர்பான மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

SKM வெளியிட்ட அறிக்கையில், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான (MSP) குழு அமைக்கப்படவில்லை என்றும், போராட்டத்தின் போது விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை என்றும் கூறியுள்ளது. விவசாயிகளின் மிகப்பெரிய கோரிக்கையான MSP மீதான சட்டரீதியான உத்தரவாதத்தை பரிசீலிக்க அரசாங்கம் தயாராக இல்லை என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது.


படிக்க : வேளாண் சட்டங்கள் வாபஸ் : மோடியை பணியவைத்த விவசாயிகள் போராட்டம்!


அரசாங்கத்தின் இந்த “துரோகத்திற்கு” எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஜூலை 18-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் முதல் ஜூலை 31-ம் தேதி வரை – ஷஹீத் உதம் சிங்கின் தியாக தினமான ஜூலை 31 வரை – மாவட்ட அளவில் ‘துரோகத்திற்கு எதிரான போராட்டம், கூட்டங்கள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படும் என்று SKM தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சாரத்தின் முடிவில், ஜூலை 31 அன்று, நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளிலும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சக்கா ஜாம் (சாலை மறியல் போராட்டம்) நடத்தப்படும் என்றும் SKM அறிவித்துள்ளது.

லக்கிம்பூர் கேரி படுகொலை

“தேச விரோத, இளைஞர்கள், விவசாயிகளுக்கு எதிரான”அக்னிபாத் ராணுவ ஆள்சேர்ப்புத் திட்டத்துக்கு எதிராக விவசாய அமைப்புகள் வேலையற்ற இளைஞர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களைத் திரட்டுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

“அக்னிபத் திட்டத்தை அம்பலப்படுத்தும் வகையில், ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 14 வரை நாடு முழுவதும் ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ மாநாடுகள் ஏற்பாடு செய்யப்படும், இதில் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் வேலையற்ற இளைஞர்களும் அழைக்கப்படுவார்கள்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

லக்கிம்பூர் கேரியில் கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவின் வருகைக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட வன்முறையில் நான்கு விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தவன்முறையில் விவசாயிகளை கார் ஏற்றி கொலை செய்த, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கில் முக்கிய குற்றவாளியாவார். வரும் சுதந்திர தினத்தன்று, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரி, ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 20 வரை லக்கிம்பூர் கேரியில் 75 மணி நேர தர்ணா நடத்த திட்டமிட்டிருப்பதாக SKM விவசாயிகளின் சங்கம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


படிக்க : விவசாயிகள் போராட்டம் வெற்றி : சாதனையும் கற்றுக்கொள்ள வேண்டியவையும்!


ஆயிரக்கணக்கான விவசாயிகளின் ஓராண்டுக்களுக்கு மேலான வீரம் செறிந்த போராட்டத்தின் விளைவாக, மூன்று வேளாண் சட்டங்களை நடைமுறைபடுத்தாமல் பின்வாங்கியது மோடி அரசு. ஆனால், ஆறு மாதங்களை கடந்தும்தான் அளித்த குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான வாக்குறுதி மற்றும் போராட்டத்தின் போது விவசாயிகளின் மீதான வழக்குகளை ரத்து செய்யும் வாக்குறுதி ஆகியவற்றை நிறைவேற்றவில்லை.

தொடர்ந்து இந்திய விவசாயிகளை வஞ்சித்துவரும் மோடி அரசை எதிர்த்து நாடுமுழுவதும் போராட்டங்கள் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. விவசாயத்தையும் விவசாயிகளையும் கார்ப்பரேட் கழுகளிடமிருந்து காப்பாற்ற களமிறங்கி போராடுவது நம் அனைவரின் கடமையாகும்.

சந்துரு

அதிகரிக்கும் காற்றுமாசு: இந்தியர்கள் ஐந்தாண்டு ஆயுளை இழக்கும் அபாயம்!

0

நாட்டில் காற்று மாசுபாட்டின் அளவு காரணமாக இந்தியர்கள் ஐந்தாண்டு ஆயுளை இழக்கநேரிடும் என்று ஏர் குவாலிட்டி லைஃப் இன்டெக்ஸ் (ஏக்யுஎல்ஐ) அறிக்கை கூறியுள்ளது.

இந்த ஆண்டு AQLI, சிகாகோ பல்கலைக்கழகத்தில் (EPIC) உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இது காற்று மாசுபாட்டின் ஸ்னாப்ஷாட்டை வழங்குகிறது. உலகம் முழுவதும் PM2.5-ல் உள்ள நுண்ணிய துகள்களின் அளவை அடிப்படையாகக் கொண்டது ஒரு பெரிய காற்று மாசுபடுத்தியாகும்.

2.5 மைக்ரோமீட்டர் (µm)-க்கும் குறைவான இந்த உள்ளிழுக்கக்கூடிய துகள்கள் உலக சுகாதார அமைப்பின் (WHO) படி, இருதய, சுவாச நோய்கள் மற்றும் நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்திற்கு பங்களிப்பதாக அறியப்படுகிறது.

இந்த ஆண்டு AQLI அறிக்கையின்படி (2020-ம் ஆண்டின் தரவுகளின் அடிப்படையில்), உலகிலேயே அதிக மாசுபட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 1998 முதல், இந்தியாவின் சராசரி வருடாந்திர துகள் மாசுபாடு 61.4 சதவீதம் அதிகரித்துள்ளது (தற்போது, ​​இந்தியாவில் சராசரி PM2.5 அளவுகள் ஒரு கன மீட்டருக்கு 55.8 μg/m3 மைக்ரோகிராம் ஆகும்). 2013 முதல், உலகின் மாசு அதிகரிப்பில் 44 சதவீதம் இந்தியா பங்களித்துள்ளது.


படிக்க : வாரணாசி : அதிகரித்து வரும் காற்றுமாசு – மோடியின் தூய்மை இந்தியா !


காற்று மாசுபாடு சராசரி இந்திய ஆயுட்காலம் ஐந்தாண்டுகள் குறைக்கிறது என்று அறிக்கை கூறுகிறது. வட இந்தியாவின் இந்தோ-கங்கை சமவெளிகளில், தற்போதைய மாசு நிலைகள் நீடித்தால், 510 மில்லியன் மக்கள் – இந்தியாவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 40 சதவீதம் – சராசரியாக 7.6 ஆண்டுகள் ஆயுட்காலம் இழக்க நேரிடும். எனவே, துகள் மாசுபாடு, இந்தியாவில் மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று ஜூன் 14 அன்று வெளியிடப்பட்ட அறிக்கை கூறியது.

இந்தியாவில் காற்று மாசுபாடு பற்றி நாம் ஏற்கனவே அறிந்த பலவற்றை இந்த அறிக்கை வலுப்படுத்துகிறது என்று கொள்கை ஆராய்ச்சி மையத்தின் சக ஊழியர் பார்கவ் கிருஷ்ணா கூறினார். “காற்று மாசுபாட்டின் வெளிப்பாடு சமூகத்தில் இருக்கும் பாதிப்புகளை எவ்வாறு அதிகரிக்கிறது என்பதை ஆராய்வது முக்கியம்” என்று அவர் கூறினார்.

தற்போது, ​​மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (MoEFCC-ன் கீழ் மாசுக் கட்டுப்பாட்டுக்கான இந்தியாவின் உச்ச சட்டப்பூர்வ அமைப்பு) வளிமண்டலத்தில் PM2.5-க்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வரம்பாக ஆண்டு சராசரியாக 40μg/m3 என பரிந்துரைக்கிறது.

உதாரணமாக, 2019-ம் ஆண்டில், MoEFCC தேசிய சுத்தமான காற்றுத் திட்டத்தை (NCAP) 132 நகரங்களில் 2017 உடன் ஒப்பிடுகையில், 2024-ம் ஆண்டளவில் PM2.5 மாசுபாட்டை 20-30 சதவீதம் குறைக்க சுத்தமான காற்று செயல் திட்டங்களைத் தயாரிக்கத் தொடங்கியது. இருப்பினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட NCAP அறிக்கையின்படி, 2019-ம் ஆண்டு முதல் 132 நகரங்களில் காற்று மாசு அளவுகளில் முன்னேற்றம் இல்லை. 2021-ல் இதே பட்டியல், காசியாபாத், டெல்லி மற்றும் நொய்டா உட்பட 2019 முதல் 10 மிகவும் மாசுபட்ட நகரங்கள் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளன.


படிக்க : அதிக காற்று மாசுபாடு : இந்தியாவுக்கு மூன்றாம் இடம் !!


கிருஷ்ணா உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள், நாட்டில் காற்று மாசுபாட்டைச் சமாளிக்க, புவியியல் மற்றும் காற்று மாசுபாட்டின் அளவுகளில் பங்கு வகிக்கும் பிற காரணிகளை மனதில் வைத்து, “காற்று வீசும்” அணுகுமுறையை உருவாக்க வேண்டியதன் அவசியத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

காற்று மாசு உழைக்கும் மக்களினால்தான் ஏற்படுகிறது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது அரசும், அரசு சார்பான ஊடகங்களும். ஆனால், காற்று மாசுவிற்கு அடிப்படை காரணம் முதலாளிகளின் பகாசுர தொழிற்சாலைகள்தான். இந்த தொழிற்சாலைகள் தனது மாசு கட்டுப்பாட்டை சரியாக நடைமுறைபடுத்தாமல் இருப்பதன் விளைவே தொடர்ந்து காற்று மாசு அதிகரிக்க காரணம். முதலாளித்துவத்தை ஒழிக்காமல் காற்று மாசுபடுவதை தடுக்க முடியாது.

புகழ்


Alt News இணையதளத்தை முடக்கத் துடிக்கும் சங் பரிவார கும்பல்!

1

Alt News மற்றும் அதன் தாய் அமைப்பான Pravda Media Foundation, தாங்கள் வெளிநாட்டு நிதியைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

“நாங்கள் நன்கொடைகளைப் பெறும் எங்கள் கட்டணத் தளம் வெளிநாட்டு மூலங்களிலிருந்து நிதியைப் பெறுவதை அனுமதிக்காது, மேலும் நாங்கள் இந்திய வங்கிக் கணக்குகளிலிருந்து மட்டுமே நன்கொடைகளைப் பெற்றுள்ளோம்” என்று அறிக்கை கூறுகிறது. “இதன் மூலம் சேகரிக்கப்படும் அனைத்து நன்கொடைகளும் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்குச் செல்லும்”

AltNews அறிக்கையானது சில “ஆதாரம்” அடிப்படையிலான செய்தி அறிக்கைகளுக்கு பதிலளித்தது, போலீசுத்துறை இணை நிறுவனர் முகமது ஜுபைரின் கணக்கிற்கு நேரடியாக நன்கொடைகள் செல்வதைக் கண்டறிந்தது. “அமைப்புடன் தொடர்புடைய நபர்கள் தங்கள் தனிப்பட்ட கணக்குகளில் நிதி பெற்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் தவறானது. ஏனெனில் நிறுவனத்துடன் தொடர்புடைய நபர்கள் மாதாந்திர ஊதியம் மட்டுமே பெறுவார்கள்.


படிக்க : தி கேரவன் பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடும் காஷ்மீர் போலீசு !


ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், “நாங்கள் செய்யும் மிக முக்கியமான பணியை முடக்குவதற்கான முயற்சியாகும், எங்களை முடக்கும் இந்த முயற்சியை எதிர்த்துப் போராடுவோம்” என்று அமைப்பு கூறியுள்ளது.

ஜூலை 2-ம் தேதியன்று, டெல்லி போலீசுத்துறை கிரிமினல் சதி, சாட்சியங்களை அழித்தல் மற்றும் வெளிநாட்டு நன்கொடைகள் (ஒழுங்குமுறை) சட்டத்தின் 35-வது பிரிவின்கீழ் ஜுபைருக்கு எதிரான எஃப்.ஐ.ஆரில் குற்றங்களைச் சேர்த்தது. இந்தக் குற்றச்சாட்டுகள் அமலாக்க இயக்குனரகம் விசாரணையில் நுழைய அனுமதிக்கின்றன.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 (மதம், இனம், பிறந்த இடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் 295 (மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்) ஆகியவற்றின்கீழ் ஜூன் 27 அன்று பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டார்.

1983-ல் தயாரிக்கப்பட்ட கிஸ்ஸி சே நா கெஹ்னா திரைப்படத்தின் ஸ்கிரீன்ஷாட்டைக் கொண்ட 2018 ட்வீட் தொடர்பாக ஜுபைர் கைது செய்யப்பட்டார். @balajikijaiin என்ற ஹேண்டில் மூலம் (அநாமதேய கணக்கு மூலம்) புகார் ட்வீட் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டது. இந்தக் கணக்கு இப்போது நீண்ட காலமாக உள்ளது. ஆனால் தி வயர் நடத்திய விசாரணையில், குஜராத்தில் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (BJYM) இணை ஒருங்கிணைப்பாளர், இந்து யுவ வாஹினியின் (HYV) மாநிலத் தலைவர் விகாஷ் அஹிருடன் இணைக்கப்பட்ட அநாமதேய மற்றும் நம்பகத்தன்மையற்ற கணக்குகளின் வலைப்பின்னலின் பல ஆண்டுகால பிரச்சாரத்தின் உச்சக்கட்டம் இந்த கைது என்று குற்றம்சாட்டுகிறது.


படிக்க : காவி அரசால் தொடர்ந்து ஒடுக்கப்படும் காஷ்மீர் பத்திரிகையாளர்கள் !


சங் பரிவார கும்பலின் போலி செய்திகளை அம்பலப்படுத்தும் ஆல்ட் நியூஸ் என்ற இணையதளத்தின் பத்திரிகையாளர் பொய் குற்றச்சாட்டுகளின் கீழ் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நாடுமுழுவதும் கண்டனங்களை எழுப்பியது. இந்நிலையில் ஆல்ட் நியூஸ் இணைய தளத்தின் மீது அவதூறுகளை பரப்பி வருகிறது சங் பரிவார கும்பல். போலி கணக்குகளை பயன்படுத்தி குற்றச்சாட்டுகளை உருவாக்கும் வேலையை செவ்வனே செய்துவருகிறது. வெளியிநாட்டில் இருந்து பணம் வாங்குவதாக குற்றம் சாட்டிவருகிறது. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது Alt News அமைப்பான Pravda Media Foundation.

திட்டமிட்டு பொய் செய்திகளை பரப்புவதையும், அதை அம்பலப்படுத்துபவர்களுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை பரப்புவதையும் தனது வேலையாக வைத்திருக்கும் சங் பரிவார ட்ரோக்களை நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டியது அவசியம்.

புகழ்

மத்தியப்பிரதேசம் : ஆதிக்க சாதிவெறிக்கு ஆதரவாக செயல்படும் அரசு எந்திரம்!

0

த்தியப்பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பியாரி சஹாரியா. இவருடைய கணவர் அர்ஜூன் சஹாரியா. இவர்கள் பழங்குடியின மக்கள் பிரிவை சார்ந்தவர்கள். நிலமற்ற இவர்களுக்கு அரசு நலத் திட்டத்தின் கீழ் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலத்தில் இவர்கள் விவசாயம் செய்ய ஆரம்பித்தது ஊரில் உள்ள ஆதிக்க சாதியினருக்கு பிடிக்கவில்லை. அதனால் தொடர்ச்சியாக இந்தப் பழங்குடிகளை மிரட்டி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் நிலத்தை அபகரித்துக் கொண்டனர். இது சம்பந்தமாக வருவாய்த் துறையில் புகார் கொடுத்து நிலத்தை மீண்டும் மீட்டுள்ளனர் பழங்குடி மக்கள். இருந்தும் தொடர்ச்சியாக மிரட்டியும் அச்சுறுத்தியும் வந்துள்ளனர்.

இதற்காக போலீசுத்துறையில் புகார் கொடுத்தும் ஆதிக்க சாதியினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில்தான் கடந்த ஜூலை 2 அன்று அர்ஜூன் சஹாரியா நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஆதிக்க சாதியினை சேர்ந்த மூன்று நபர்கள் டிராக்டரில் வேகமாக வந்துள்ளனர். பதறி போய் அர்ஜுன் நிலத்திற்கு செல்ல அங்கு ராம்பியாரி சஹாரியா தீப்பிடித்து எரிந்த நிலையில் கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அர்ஜுன். தற்போது அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் ராம்பியாரி சஹாரியா.


படிக்க : ஸ்டான் சுவாமி நினைவுநாள்: பாசிச அரசை எதிர்த்து சிறையில் போராட்டம்!


பழங்குடிப் பெண்ணை தீவைத்து எரித்ததோடு மட்டுமல்லாமல் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போட்டு மகிழ்ந்துள்ளனர். இதை சாதாரணமாக பார்க்க முடியாது ஏனென்றால், இது மற்றவர்களுக்கு கொடுக்கப்படும் எச்சரிக்கை. மிரட்டல் விடுத்தபோதே புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அரசு எந்திரம்தான் முதல் குற்றவாளி.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் பற்றிய உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறையே இந்த விஷயத்தில் எப்படி உள்ளது என்பதை கீழே பாருங்கள்.

தொடக்க விசாரண நடத்தப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், கைது கட்டாயமல்ல.

குற்றஞ்சாட்டப்பட்டவர் அரசு ஊழியராக இருந்தால், அவன்/அவளின் நியமன நிர்வாகத்தின் அனுமதியின் பெற்ற பின்னரே கைது செய்ய வேண்டும்.

அரசு ஊழியராக இல்லாத பட்சத்தில் அவன்/அவள் மூத்த போலீசுத்துறை கண்காணிப்பாளின் அனுமதியோடு மட்டுமே கைது செய்யப்படலாம்.

கைது செய்வதற்கு முன்கூட்டியே பிணை வழங்கப்படுவது இல்லை என்று இந்த சட்டத்தின் பிரிவு 18 கூறினாலும், இந்திய உச்ச நீதிமன்றம், கைதுக்கு முன்னரே பிணை பெறுவதை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் உச்ச நீதிமன்றம் கூறும்போது, தேசிய குற்றப் பதிவுகள் துறையின் 2015-ம் ஆண்டு தரவுகளின் படி, சுமார் 15-16 சதவீத வழக்குகள் 2015-ம் ஆண்டு விசாரணைகள் மற்றும் நீதிமன்றத்திற்கு வெளியே பேசி முடிக்கப்பட்டுள்ளதாகவும். 75 சதவீதத்திற்கு மேலான வழக்குகள் விடுதலை / திரும்ப பெறுதல் அல்லது வழக்குகளை பேசி முடிப்பதில் நிறைவு பெற்றுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த தரவுகள் எல்லாம் காட்டும் எதார்த்த உண்மை ஆதிக்க சாதியினர் எந்த அளவிற்கு மிரட்டி வழக்குகளை திரும்பப்பெற வைக்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. இந்த விஷயங்கள் நீதிமன்றத்திற்கு தெரிந்தாலும் அதையெல்லாம் மறைத்துவிட்டு ஆதிக்கசாதி வெறியர்களை காப்பாற்றும் விதமாக தன்னுடைய வழிகாட்டுதலையும் பார்வையையும் வழங்கியுள்ளது.


படிக்க : இந்து ராஷ்டிரத்தை அடித்து நொறுக்குவோம்!


இந்த அரசின் உச்சபட்ச நீதி கிடைக்கும் இடம் என மார்தட்டிக் கொள்ளும் உச்ச நீதிமன்றம் இப்படி சாதி ஆதிக்கவாதிகளின் திமிர்த்தனத்தை பாதுகாப்பதாகதான் உள்ளது.

இதுபோக, இந்த பிரச்சினை நடந்துள்ள மத்தியப்பிரதேச மாநிலம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் புல்டோசர் அரசியலின் தொடக்கப் புள்ளி. இஸ்லாமிய மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டு ஒட்டுமொத்த மத்தியப்பிரதேச அரசு நிர்வாகமும் களத்தில் நிற்கிறது. இந்த காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலின் ஆட்சியின்கீழ்  தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கும் உரிமை கிடைக்கப்போவதில்லை.

ஆகவே, இந்த காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலை களத்தில் இறங்கி முறியடிப்போம்.

ரவி

முஸ்லீம் மக்களை ஒடுக்கும் உ.பி காவி போலீசுப்படை!

0

டந்த மாதம் உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூரில் போராட்டங்கள் வெடித்ததை அடுத்து காவலில் இருந்தபோது சீருடை அணிந்த காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோவில் காணப்பட்ட எட்டு முஸ்லீம் ஆண்கள் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கட்சித் தலைவர் நவீன் ஜிண்டால் ஆகியோரின் முஹம்மது நபி பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக மாறி, இந்த வழக்கு தொடர்பாக 80-க்கும் மேற்பட்ட எஃப்.ஐ.ஆர் (முதல் தகவல் அறிக்கை)களுக்கு வழிவகுத்தது.

கைது செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் விடுதலை உத்தரவு வந்தது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 169-ன் படி ஆதாரங்கள் இல்லாதது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஜூலை 3 அன்று சிறையில் இருந்து ஆண்கள் வெளியேறினர்.


படிக்க : முஸ்லீம் மக்களை ஒடுக்கும் ‘புல்டோசர் நீதி’ – முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம்


நபிகள் நாயகத்தைப் பற்றிய பாஜக தலைவர்களின் கருத்துக்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக 85 பேர் மீது பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் அவர்களின் பெயர்கள் இனி இடம்பெறாது என்பதாகும்.

கைது செய்யப்பட்டவர்களில், இப்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களில் முகமது அலியும் அடங்குவார், அவர் தாக்குதலில் அவரது கை முறிந்தது. முகமது ஆரிப், அவரது சகோதரர் முகமது ஆசிப்பும் கைது செய்யப்பட்டுள்ளார், அவரது சகோதரர் வீடு திரும்பியதை உறுதிப்படுத்தினார்.

“இது ஏழைகளை நசுக்குவதாகும். என் சகோதரனை விடுவிக்கும் முயற்சியில் நாங்கள் கடனில் சிக்கினோம். ஒரு குடும்பம் எப்படி வாழப் போகிறது? அவர்களுக்கு உணவளிப்பவர் சிறையில் அடைக்கப்பட்டு, மற்றவர் ஒவ்வொரு பைசாவையும் அவரை விடுவிப்பதற்காகச் செலவிடும்போது அவர்கள் என்ன சாப்பிடுவார்கள்?

குற்றம் சாட்டப்பட்ட சார்பு-போனோவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள் குழுவின் உறுப்பினர் வழக்கறிஞர் சலீம் கான், நிரபராதிகள் சிறையில் அடைக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது என்று கூறினார்.

கைது செய்யப்பட்ட பிறகு, வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பலரின் குடும்பங்களுக்கு காரணம் காட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆசிப்பின் குடும்பத்துக்கும் இதுபோன்ற ஒரு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஜூன் 12 அன்று, ஒரு போலீஸ் ஸ்டேஷனில் இரண்டு போலீஸ்காரர்கள் அந்த ஆண்களை லத்தியால் தாக்குவதை ஒரு வைரல் வீடியோ காட்டுகிறது.

பாஜக எம்எல்ஏ ஷலப் மணி திரிபாதி – முன்னாள் பத்திரிகையாளர் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகராக இருந்தவர் – ‘கலவரக்காரர்களுக்கு திரும்பப் பரிசு’ என்ற தலைப்புடன் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து போலீசார் கேள்வி எழுப்பியதாகவும், அது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. “அந்த விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது” என்று போலீசுத்துறை கண்காணிப்பாளர் (நகரம்) ராஜேஷ் குமார் தெரிவித்தார்.


படிக்க : ‘புல்லி பாய்-சுல்லி டீல்ஸ்’: முஸ்லீம் பெண்களை இழிவுபடுத்திய குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கிய ‘அ’நீதிமன்றம்!


உ.பி அதிகாரிகள் சில போராட்டக்காரர்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினர், அவர்கள் வன்முறையை “திட்டமிட்டவர்கள்” என்று குற்றம் சாட்டினர். போலீசு நிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட முஸ்லீம் இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பாக NHRC-க்கு புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அதன் நிலை தெரியவில்லை.

சங் பரிவார கும்பல், முஸ்லீம் மக்கள் தனது உரிமைக்காக போராடினால் தாக்குதல் தொடுக்கும்; போலீசுத்துறை, பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களை குற்றவாளிகளாக சித்தரித்து அவர்களின் வீடுகளை இடிப்பது மட்டுமல்லாமல், போலீசு நிலையத்தில் வைத்து கொடூரமாக சித்திரவதை செய்யும். முஸ்லீம் மக்களுக்களை இந்த நாட்டில் வாழவே விடாம துரத்தும் காவி – கார்ப்பரேட் பாசிச தகற்தெரிய உழைக்கும் மக்கள் ஒன்றிணைய வேண்டியது அவசியம்.

சந்துரு