ஜூன் 21 அன்று ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணாவிடம், ‘புல்டோசர் நீதி’-க்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கடிதம் எழுதியுள்ளனர்.
அரசியலமைப்பு நடத்தைக் குழுவின், 90 முன்னாள் அரசு ஊழியர்கள் உத்தரப்பிரதேசத்தில் “சட்டவிரோதமாக காவலில் வைத்தல், குடியிருப்புகளை புல்டோசர் கொண்டு இடித்தல் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான போலீசின் வன்முறை” ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று அக்கடித்தத்தில் கூறியுள்ளனர்.
“எந்தவொரு எதிர்ப்பையும் மிருகத்தனமாக அடக்குவதற்கு” தேசிய பாதுகாப்புச் சட்டம் 1980, உத்தரப்பிரதேச குண்டர்கள் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1986 ஆகியவற்றை செயல்படுத்த “வெளிப்படையான வழிகாட்டுதல்கள்” உள்ளன என்று முன்னாள் அரசு ஊழியர்கள் கூறினர்.
“இந்தக் கொள்கையானது அரசாங்கத்தின் உயர் மட்டத்தின் அனுமதியைப் பெற்றுள்ளது. உள்ளூர் மட்ட அதிகாரிகள், போலீசுகாரகள் இந்த அதிகாரத்தை தன்னிச்சையாகப் பயன்படுத்துவதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் என்றாலும், உண்மையான குற்றம் அரசியல் நிர்வாகத்தின் உயர் மட்டங்களில் உள்ளது” என்று கடிதம் கூறுகிறது.
“மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், சட்டப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கவோ அல்லது அரசாங்கத்தை விமர்சிக்கவோ அல்லது சட்டப்பூர்வ வழிமுறைகளை பயன்படுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தவோ துணிந்த குடிமக்களுக்கு மிருகத்தனமான தண்டனையை வழங்குகிறது இந்த ‘புல்டோசர் நீதி’. தற்போது பல இந்திய மாநிலங்கள் விதிவிலக்காக இல்லாமல் புல்டோசர் நீதி வழக்கங்கப்பட்டு வருகிறது” என்று கூறுகிறது.
பிரச்சினை இனி உள்ளூர் மட்டத்தில் போலீசுத்துறை, நிர்வாகத்தின் ‘அதிகப்படியான செயல்கள்’ அல்ல, ஆனால் சட்டத்தின் ஆட்சி, ‘முறையான செயல்முறை’, ‘குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி’ என்று கருதப்பட வேண்டும் என்பதே உண்மை. இந்து தற்போது தலைகீழாக மாற்றப்படுகிறது” என்கின்றனர்.
“பிரயாக்ராஜ், கான்பூரில், சஹாரன்பூர் மற்றும் கணிசமான முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட பல நகரங்களில் ஒரு மாதிரியைப் பின்பற்றுகிறது. அரசியல் ரீதியாக வழிநடத்தப்படுகிறது” என்று அவர்கள் கூறினர்.
இக்கடித்தத்தில் கையெழுத்திட்டவர்களில் முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை, முன்னாள் வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங், முன்னாள் இந்தியக் போலீசுத்துறை (ஐ.பி.எஸ்) அதிகாரிகள் ஜூலியோ ரிபெய்ரோ, அவினாஷ் மோகனானி, மேக்ஸ்வெல் பெரேரா மற்றும் ஏ.கே. சமந்தா மற்றும் முன்னாள் சமூக நீதித்துறை செயலாளர் அனிதா அக்னிஹோத்ரி உள்ளிட்ட 90 பேர் இதில் அடங்குவர்.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் முன்னாள் நீதிபதிகள் மற்றும் முன்னணி வழக்கறிஞர்கள் சிலர் ஜூன் 14 அன்று தலைமை நீதிபதிக்கு அனுப்பிய மனுவை முன்னாள் அரசு ஊழியர்கள் ஆதரித்தனர். உத்தரப்பிரதேசத்தில் சமீபத்திய செயல்களை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.
ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பினால் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை இடித்ததை எதிர்த்து நீதிபதிகள் போபண்ணா மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ரிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் “எல்லாம் நியாயமாக இருக்க வேண்டும்” என்றும், சட்டத்தின் கீழ் உரிய நடைமுறைகளை அதிகாரிகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியது.
“இந்த பிரச்சினையில் உயர் மட்டத்தில் உள்ள நீதித்துறை தலையிடாவிட்டால், கடந்த எழுபத்திரண்டு ஆண்டுகளாக மிகவும் கவனமாகவும் நுணுக்கமாகவும் கட்டப்பட்ட அரசியலமைப்பு நிர்வாகத்தின் முழு கட்டிடமும் இடிந்து விழும்” என்று கூறினார்கள்.
காவி – கார்ப்பரேட் பாசிசம் என்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கும் குறைந்த பட்ச ஜனநாயக விழுமியங்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்குமே எதிரானது. ‘புல்டோசர் நீதி’ என்பது முஸ்லீம் மக்களை இந்நாட்டில் எதிர்ப்பு குரலெழுப்பக் கூடாது என்ற ஓர் பாசிச நடவடிக்கை. அமைதியாய் இரு! அடிமையாய் இரு! அதைத்தாண்டி உரிமை என்று பேசினால் ஒடுக்கப்படுவாய்! நசுக்கப்படுவாய்! உன் வீடுகள் இடிக்கப்பட்டு சொந்த நாட்டிற்குளேயே அகதிகளாக்கப்படுவாய்! என்பதே யோகி அரசு நமக்கு கூறும் ‘புல்டோசர் நீதி’யின் சாரம்.
இது ஏதோ முஸ்லீம் மக்களுக்கு மட்டும் நடைபெறுகிறது என்று கண்டுகொள்ளாமல் விட்டால், நாளை காவி – கார்ப்பரேட் பாசிசம் கோலோச்சும் போது ‘காவி புல்டோசர்கள்’ நம் வீட்டு கதவுகளையும் தட்டும்.
2021-ம் ஆண்டு அசாம் போலீசுத்துறை, 51 பேரைக் கொன்றுள்ளது என்று அம்மாநில அரசு கடந்த ஜூன் 21 அன்று கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆரிப் ஜவாடர் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு தொடர்பாக பதில் அளிக்க உள்துறை அமைச்சகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, “2021 மே முதல் மே 31, 2022 வரை – போலீசு விசாரணை – போலீசு காவலின்போது 51 இறப்புகள் மற்றும் 139 பேருக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் மாநிலத்தின் 31 மாவட்டங்களில் தொடர்புடையவை” என்று அசாம் அரசு வாக்குமூலம் அளித்துள்ளது.
***
அசாமில், போலீசின் துப்பாக்கிச் சூடு அதிகரிப்பு குறித்து சுதந்திரமான விசாரணையை நடத்தப்பட வேண்டும் என்று கடந்த டிசம்பரில் வழக்கறிஞர் ஜவாடர் கோரிக்கை விடுத்தார். மே 2021 முதல் டிசம்பர் 2021 வரை இதுபோன்ற 80-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளதாக ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டினார். இந்த காலகட்டத்தில் “போலி என்கவுண்டர்களில்” 28 பேர் கொல்லப்பட்டனர். 48 பேர் படுகாயமடைந்தனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
“என்கவுண்டர் நடந்தபோது, பாதிக்கப்பட்ட அனைவரும் நிராயுதபாணிகளாகவும் கைவிலங்கிடப்பட்டவர்களாகவும் இருந்தனர்” என்று ஜவாடர் தனது மனுவில் கூறினார். போலீசுத்துறையினருக்கு “கொலை செய்வதற்கான உரிமம் இல்லை” என்றும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் என்பது குற்றவாளிகளைக் கைது செய்து அவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், அவர்களைக் கொல்வதற்கு அல்ல என்றும் வழக்கறிஞர் ஜவாடர் கூறினார்.
“இதுபோன்ற என்கவுண்டர் கொலைகள், பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் வாழ்க்கைக்கான உரிமையைப் பறிக்கிறது. இது ‘சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறை’ தவிர மறுக்க முடியாது” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் மனித உரிமை நீதிமன்றங்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும், என்கவுண்டர்களில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரினார்.
***
அசாம் அரசு கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 31 மாவட்டங்களில் 161 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போலீசுத்துறையின் நடவடிக்கையால் இறப்பு அல்லது காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த ஜூன் 21 அன்று நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இந்த போலீசுத்துறையின் குற்றங்கள் தொடர்பாக கடந்த மார்ச் 15 அன்று, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மாநில சட்டசபையில் போலீசுத்துறை நடவடிக்கையை ஆதரித்து பேசினார். கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 30% குறைந்துள்ளது; இது குற்றவாளிகளுக்கு எதிரான போலீசுத்துறையின் கடுமையான நடவடிக்கைகள் செயல்படுவதை காட்டுகிறது என்றார்.
“என்கவுண்டர்களுக்காக நாங்கள் பலமுறை சபையில் விமர்சிக்கப்படுகிறோம். போலீசார் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். ஆனால், அப்படி சட்டத்திற்கு உட்பட்டு செயல்படும்போது, பலாத்காரம் செய்தவருக்கு அனுதாபம் காட்ட வேண்டுமா என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்” என்று சர்மா கூறினார்.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிஜூஷ் ஹசாரிகா, அசாம் சட்டமன்றத்தில், போலீசு காவலில் இருந்து தப்பிக்க முயன்றபோது குற்றம் சாட்டப்பட்டவர்கள் இறப்பது மாநிலத்தில் புதிதல்ல என்று கூறினார். அசாம் போலீசுத்துறையின் கையேட்டில் என்கவுண்டர் என்ற வார்த்தையே இல்லை. “ஒரு குற்றவாளி தப்பிக்க அல்லது போலீசுத்துறையைத் தாக்க முயன்றால், அவர்கள் காயமடையலாம் அல்லது கொல்லப்படலாம்” என்று ஹசாரிகா கூறினார்.
அசாம் போலீசுத்துறைக்கு அம்மாநில அரசு எல்லையற்ற சுதந்திரம் வழங்கி இருக்கிறது என்பது இந்த காவல் கொலைகள் மூலம் அம்பலமாகிறது. இந்த காவல் கொலைகளை ஆதரித்து பேசும் அம்மாநில முதல்வர் சர்மா உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசு எந்திரமும் காவி – கார்ப்பரேட் பாசிச குற்றவாளிகளின் கூடாரமாக மாறிவருகிறது என்பதற்கு இந்த போலி என்கவுண்டர்கள் ஓர் துலக்கமான சான்று.
பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு, “இது வெறும் முன்னோட்டம்தான்; காசி, மதுரா என தங்களுக்கு அடுத்தடுத்த இலக்குகள் உள்ளன” என்று வெளிப்படையாக அறிவித்தார்கள் காவி பாசிஸ்டுகள். இன்று அதை நோக்கிச் செயலுக்குப் போய்விட்டார்கள். “இந்துக் கோயில்களை இடித்துக் கட்டப்பட்டவை” என பல புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு, அடுத்தடுத்து இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள், இஸ்லாமிய மன்னர்கள் கட்டிய நினைவுச் சின்னங்கள் குறிவைக்கப்படுகின்றன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள தாஜ்மஹால், காசி – ஞானவாபி மசூதி, மதுரா – சாகி ஈத்கா பள்ளிவாசல்; டெல்லியில் உள்ள குதுப்மினார் கோபுரம், மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள ஜாமியா மசூதி மற்றும் கர்நாடகா மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள ஜாமியா மசூதி, மங்களூருவில் உள்ள மாலாஜி ஜீம்மா மசூதி ஆகியவை முதற்கட்டமாக குறிவைக்கப்பட்டுள்ளன.
‘தாஜ்மஹால்’ இல்லையாம், ‘தேஜோ மஹாலயா’-வாம்!
யமுனை ஆற்றங்கரையில், வெள்ளை பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது ஷாஜகான், தனது காதலி மும்தாஜ்-ன் நினைவாக கட்டியதாகும். ஆனால், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பரிவாரங்களோ ‘தேஜோ மஹாலயா’ என்ற சிவன் கோயில்தான் தாஜ்மஹால் என்ற கதையை நீண்ட காலமாகப் பாடிவருகிறார்கள்.
‘தாஜ்மஹால் ஒரு சிவன் கோயில்’ என 2000 ஆம் ஆண்டில்தான் முதன்முதலாக, பின்.ஓக் என்பவரால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்பு 2005 ஆம் ஆண்டில் அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும் 2015 ஆம் ஆண்டில் ஆக்ரா நீதிமன்றத்திலும் சிலரால் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
2017 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்றபின், மாநில சுற்றுலா கையேட்டிலிருந்து தாஜ்மஹாலை நீக்கி தனது வெறுப்பை வெளிக்காட்டினார்கள் காவிகள். “தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது, அதற்கு இந்திய வரலாற்றில் இடமளிக்கக் கூடாது; அதை இடித்துவிட்டு மீண்டும் இந்துக் கோயில் கட்ட வேண்டும் அல்லது தேஜோ மஹால், ராம் மஹால் என பெயர் மாற்றி இந்துக் கோயிலாக அறிவிக்க வேண்டும்” – என அம்மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களால் வெளிப்படையாக பேசப்பட்டது.
இந்நிலையில், அயோத்தி மாவட்ட பா.ஜ.க. ஊடகப் பொறுப்பாளரான ரஜ்னீஷ் சிங், கடந்த மே மாதத் தொடக்கத்தில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், தாஜ்மஹால் பற்றிய ‘உண்மையை’ கண்டறிய, அதற்குள் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளை சோதனையிட்டுப் பார்க்கவேண்டும் என்று கேட்டிருந்தார். இம்மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. ஆனால், இவ்வழக்கின் மூலம் ‘தேஜோ மஹாலயா’ என்ற வரலாற்றுப் பொய்யை மீண்டும் விவாதப் பொருளாக்கிவிட்டார்கள் காவி பாசிஸ்டுகள்.
ஞானவாபி மசூதிக்குள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘சிவலிங்கம்’, உண்மையில் ஒரு செயற்கை நீரூற்று.
நீதிமன்றம் அம்மனுவை தள்ளுபடிசெய்வதற்கு ஒருநாள் முன்பு, பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரும் ஜெய்ப்பூர் சமஸ்தானத்தின் அரசன், இரண்டாம் மான் சிங்-இன் பேத்தியுமான தியா குமாரி, “தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ள நிலம் எனது முன்னோர்களான ஜெய்ப்பூர் அரச குடும்பத்துக்கு சொந்தமானது. முகலாயப் பேரரசர் ஷாஜகான் இந்நிலத்தை எங்களிடமிருந்து ஆக்கிரமித்துவிட்டார்” என்று பேட்டியளித்திருந்தார்.
***
தாஜ்மஹாலைப் போலவே, மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள ஜாமியா மசூதியும் சிவன் கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது என கிளம்பியிருக்கிறது காவி கும்பல். இம்மசூதி, 19 ஆம் நூற்றாண்டில் போபாலின் முதல் பெண் நவாப்-ஆன குத்துஸியா பேகம் என்பவரால் கட்டப்பட்டது. ஆனால், இம்மசூதி சிவன் கோயிலை இடித்துவிட்டுக் கட்டப்பட்டதென்றும், அங்கு சென்று கள ஆய்வு நடத்த வேண்டுமென்றும் கோரி மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சரிடம் ‘சன்ஸ்கிரித் பச்சாவ் மன்சின்’ என்ற அமைப்பு மனு அளித்துள்ளது.
ஞானவாபி மசூதிக்கு அடியில், காசி கோயில்?
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள மிகப் பழையான மசூதி ஆகும். பாபர் மசூதிக்கு முன்பாகவே, ஞானவாபி மசூதியை குறிவைக்கும் திட்டம் காவிகளுக்கு இருந்துவந்திருக்கிறது. இம்மசூதி உள்ள இடத்தில்தான் பழைய காசி விஸ்வநாதர் கோயில் இருந்ததாகவும் அவுரங்கசிப் ஆண்டபோது, காசி கோயில் இடிக்கப்பட்டு ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாகவும் காவிகளால் தொடர் பிரச்சாரமே மேற்கொள்ளப்பட்டுள்ளது; இன்றுள்ள காசி கோயில், மசூதி கட்டிய பிறகு, புதிதாக கட்டப்பட்டது என அவர்களால் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, 1991 ஆம் ஆண்டே வி.எச்.பி.யால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
ஞானவாபி மசூதிக்கு அடியில், பழைய காசி கோயில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும் தொல்லியல் துறை ஆய்வின் மூலம் அதைக் கண்டுபிடிக்க வேண்டுமெனவும் கூறி, 2019 ஆம் ஆண்டு, விஜய் சங்கர் ரஸ்தோகி என்ற சங்கி, வாராணாசி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு (2021) மீண்டும் இந்துத்துவ அமைப்பொன்றின் சார்பில் ஞானவாபி மசூதி குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. விஸ்வ வேத சனாதன சங்கத்தைச் சேர்ந்த ஐந்து பெண்கள், ஞானவாபி மசூதியில் வெளிப்புறச் சுவறொன்றில் சிருங்கார கௌரி, விநாயகர், அனுமன் உள்ளிட்ட இந்து தெய்வங்களின் சிலைகள் இருப்பதாகவும், நாள் தோறும் அங்கு சென்று வழிபாடு நடத்துவதற்கு இந்து பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி, வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில், இந்து தெய்வங்களின் சிலைகள் மற்றும் இந்து அடையாளங்களை கண்டறிவதற்காக, வளாகத்திற்குள் சென்று ஆய்வு நடத்தவும் அதை வீடியோவில் பதிவு செய்யவும் உத்தரவிட்டது நீதிமன்றம்.
இந்த ஆய்வில், மசூதியின் வளாகத்தில் ‘சிவலிங்கம்’ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுக் குழுவினால் தெரிவிக்கப்பட்டது. காவி கும்பல் உடனடியாக இதை பிரச்சாரமாக்கியது. உண்மையில் அது மசூதிக்கு வழிபட வருபவர்கள், தங்கள் கைகால்களை சுத்தப்படுத்திக் கொள்ளும் இடத்தில் அமைந்துள்ள ‘செயற்கை நீரூற்று’ என மசூதி நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிருங்கார கௌரி உள்ளிட்ட இந்து தெய்வங்களின் சிலைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதோ, மசூதியின் மேற்கு வெளிப்புறச் சுவரில்; வழக்கு தொடுக்கப்பட்டதோ, அச்சிலைகளை வழிபடுவதற்கு அனுமதி வேண்டி; ஆனால், சம்மந்தமே இல்லாமல் மசூதிக்குள் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரா: ‘கிருஷ்ணன் கோயில் ஆக்கிரமிப்பு’
மதுராவில் உள்ள சாகி ஈத்கா மசூதி, அவுரங்கசிப் காலத்தில் கிருஷ்ணர் கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாகவும், அம்மசூதியை இடித்துவிட்டு மீண்டும் அதை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது காவி கும்பல். இதையொட்டி இதற்கு முன்னரும் பல வழக்குகள் தொடரப்பட்டு, அவை நீதிமன்றத்தால் இரத்துசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் தற்பொழுது தொடுத்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
சாகி ஈத்கா மசூதி, கேதவ் தேவ் என்ற கிருஷ்ணன் கோயிலை ஒட்டி அமைந்துள்ளது. ஆகவே பல ஆண்டுகளாக, இந்துத்துவவாதிகளால் இம்மசூதி கிருஷ்ணன் கோயிலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாக பொய் பிரச்சாரம் செய்துவரப்படுகிறது.
1968 ஆம் ஆண்டு, கேதவ் தேவ் கோயில் நிர்வாகத்திற்கும் சாகி ஈத்கா மசூதி நிர்வாகத்திற்கும் இடையே மதச் சொத்துக்கள் விவகாரம் தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டது; இதன்படி, அவரவர் வழிபாட்டுத் தலங்கள் அவரவருக்குச் சொந்தம் என்ற ஒத்த முடிவு ஏற்பட்டது. ஆனால், அதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, தற்போது காவி கும்பல் மதுரா விவகாரத்தை மீண்டும் சர்ச்சையாக்கியுள்ளது.
டெல்லி குதுப்மினாரை மீட்கக் கோரி, அனுமன் சாலிசா பாடி போராட்டம் நடத்தும் சங் பரிவார அமைப்புகள்.
இவ்வழக்கு ஒரு பக்கம் விசாரணையிலிருக்கும்போதே, முகலாய மன்னன் அவுரங்கசிப் உத்தரவின் பேரால் கிருஷ்ணன் கோயில் இடிக்கப்பட்டபோது, கோயிலில் இருந்த பொன் வேய்ந்த சிலைகள் கொல்லையடிக்கப்பட்டு, ஆக்ராவில் உள்ள பேகம் சாஹிபா மசூதிக்கு கீழே புதைத்திருப்பதாகவும் அதை மீட்க வேண்டுமெனவும் கோரி, சங்கி ஒருவரால் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
“அம்மசூதியின் படிக்கட்டுகளின் கீழே இந்துதெய்வங்களின் சிலை உள்ளதால், அதை மிதித்துக் கொண்டு செல்லக்கூடாது; அது இந்துதெய்வங்களை அவமதிப்பது போன்றதாகும்; ஆகவே இம்மசூதிக்கு பொதுமக்கள் செல்வதை தடைவிதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
குதுப்மினார்: ‘விஷ்ணு கொடிமரம்’ அல்லது ‘சூரிய கோபுரம்’
தாஜ்மஹாலைப் போன்ற மிகப் பழைமையான (13 ஆம் நூற்றாண்டு) கட்டிடம் டெல்லியில் அமைந்துள்ள குதுப்மினார். இஸ்லாமிய மன்னன் குத்புதீன் ஐபக்கால் கட்டப்பட்ட மிக உயர்ந்த செங்கல் கோபுரம் இது. ஆனால், இது ‘குதுப்மினார்’ அல்ல, ‘விஷ்ணு கோபுரம்’ என்று ஒரு கதையை தோற்றுவித்திருக்கின்றன வி.எச்.பி. உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகள். மேலும் குதுப்மினாருக்கு உள்ளே இருக்கும் இந்தியாவின் முதல் மசூதியான குவாத்-உல்-இஸ்லாம் என்ற மசூதி 27 இந்து மற்றும் சமணக் கோயில்களை இடித்துக் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கிறார்கள்.
பல சங்கப் பரிவார அமைப்புகள் ஒன்றிணைந்து, கடந்த மே 10 ஆம் தேதி, குதுப்மினாரை ‘விஷ்ணு கொடிமரம்’ என பெயர் மாற்றக் கோரியும், குவாத்-உல்-இஸ்லாம் என்ற மசூதியை இடித்துவிட்டு மீண்டும் இந்துக் கோயில்களைக் கட்டித்தர வேண்டும் என்று கோரியும் அனுமன் சாலிசா பாடி போராட்டம் நடத்தியுள்ளன.
குதும்பினார் விஷயத்தில், முன்னாள் தொல்லியல் துறை அதிகாரியும் சங்கியுமான தரம்வீர் சர்மா என்பவர் சற்று வேறுபட்டு கூவுகிறார். குதுப்மினாரை குத்புதீன் ஐபக் கட்டவில்லையென்றும், அது ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்து மன்னன் விக்ரமாதித்யாவால் கட்டப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார். சூரியன் இடம் மாறும் திசையை அறிய கட்டியதால், அதன் பெயர் ‘சூரிய கோபுரம்’ என்கிறார்.
கர்நாடகா: வடக்கே அவுரங்கசிப், தெற்கே திப்பு சுல்தான்
டெல்லி, உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் மட்டுமல்லாது கர்நாடகாவிலும் மசூதிகளை குறிவைத்துக் கொண்டிருக்கிறது காவி கும்பல். கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டணம் ஜாமியா மசூதியானது கி.பி. 1782 ஆம் ஆண்டு திப்பு சுல்தானால் கட்டப்பட்ட மசூதியாகும். இது தற்போது இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மே 14 ஆம் தேதி, ‘நரேந்திர மோடி விச்சார் மஞ்ச்’ என்ற அமைப்பு, “இம்மசூதி உள்ள இடத்தில், முன்பு ஆஞ்சநேயர் கோயில் இருந்தது; அதை இடித்துவிட்டுத்தான் திப்பு சுல்தான் ஜாமியா மசூதியை கட்டியுள்ளார். எனவே இந்துக்கள் மீண்டும் அந்த இடத்தில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று மாண்டியா மாவட்ட துணை ஆணையரிடம் மனு அளித்துள்ளது.
ஆஞ்சநேயர் கோயிலை மீட்கக் கோரி வி.எச்.பி. மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர், ஜூன் 4 ஆம் தேதி ‘ஸ்ரீரங்கப்பட்டணம் சலோ’ என்ற பெயரில், பேரணி ஒன்றை அறிவித்து நடத்தினர். இப்பேரணியின் முடிவில், ஜாமியா மசூதிக்குள் சென்று பூஜைகள் செய்யப்போவதாக அறிவித்தனர். மதவெறி நோக்கம் கொண்ட இப்பேரணியை தொடக்கத்திலேயே தடுக்காமல், மசூதியை நோக்கி வரும் வரை வேடிக்கைப் பார்த்து, பாதி பேரணியில் தடுத்து நிறுத்தியது கர்நாடக காவல்துறை.
ஜாமியா மசூதிக்குள், இஸ்லாமியர்கள் நடத்தும் மதரசாப் பள்ளி ஒன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அங்கு பயிலும் மாணவர்கள், அங்குள்ள இந்து அடையாளங்களை சேதப்படுத்துவதாகக் கூறி, அம்மதரசாவை ஒருமாதத்திற்குள் காலி செய்யவேண்டும் என்று அரசுக்கு கெடுவிதித்துள்ளது வி.எச்.பி. அவ்வாறு காலி செய்யவில்லையென்றால் தாங்களே காலி செய்வோம் என்றும் மிரட்டியுள்ளார்கள்.
இம்மசூதி மட்டுமல்லாமல் மங்களூருவில் உள்ள மலாலி ஜீம்மா மசூதியும் காவிகளின் இலக்காகியிருக்கிறது. கடந்த மே மாத இறுதியில், இம்மசூதியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றது; அப்போது இந்து கோயில் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக பரப்பிவிடப்பட்ட வதந்தியை அடுத்து, வி.எச்.பி. உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகள் “மசூதிக்குள் ஆய்வு செய்ய வேண்டும்” என்று பிரச்சினையாக்கத் தொடங்கினர்.
***
‘வரலாற்றுச் சான்றுகளை’ தயாரிக்கும் வரலாற்றுப் புரட்டல்வாதிகள்
இஸ்லாமிய மன்னர்கள் கட்டிய மசூதிகள், நினைவுச் சின்னங்கள் அனைத்துமே இந்துக் கோயில்களை இடித்துவிட்டு கட்டப்பட்டவைதான் என்று கூறும் காவி கும்பல், தனது பொய்-புரட்டுகளை வைத்தே மதவெறிக் கலவரங்களை நடத்திவருகிறது. ஆனால், தாங்கள் கூறும் கூற்றுகளுக்கெல்லாம் ‘தொல்லியல் ஆதாரங்கள்’, ‘வரலாற்றுச் சான்றுகள்’ போன்றவைகள் இருப்பதாக கதையளிக்கிறார்கள் காவிகள்; உண்மையில் அப்படிச் சிலவற்றைக் காட்டவும் செய்கிறார்கள். அவையெல்லாம் சங்கப் பரிவாரத்தைச் சேர்ந்த புரட்டல்வாத அறிவுஜீவிகளால், தோற்றுவிக்கப்பட்ட ‘ஆதாரங்கள்’.
‘ஆஞ்சநேயர் கோயிலை’ மீட்கக்கோரி, கர்நாடகா ஜாமியா மசூதியை முற்றுகையிடுவதற்காக பேரணியாகச் சென்ற வி.எச்.பி.
சான்றாக, தாஜ்மஹாலை ‘தேஜோ மஹால்’ ஆக்கியவர் பி.என்.ஓக் என்ற புரட்டல்வாதி. இவர் ஒரு வரலாற்றுப் பேராசியர் மற்றும் கடைந்தெடுத்த சங்கி ஆவர். 1989 ஆம் ஆண்டு, தாஜ்மஹால்: ஓர் உண்மை கதை (Taj Mahal : The True Story), தாஜ்மஹால் ஒரு கோயில் அரண்மனை (Taj Mahal is a Temple palace) ஆகிய புரட்டல்வாத நூல்களை வெளியிட்டார். 2000 ஆம் ஆண்டில் முதன்முறையாக தாஜ்மஹாலை ஆராயச் சொல்லி வழக்கு போட்டவர் இவர்தான். ஷாஜகானுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே ‘தேஜோ மஹால்’ என்ற சிவன் கோயில் கட்டப்பட்டுவிட்டது என்றும் ‘தேஜோ மஹால்’ என்பதன் திரிபே தாஜ்மஹால் என்று ஆனதாகவும் இவர் கூறுகிறார்.
இவர் ஆர்.எஸ்.எஸ். உடைய ‘அகண்ட பாரத’ பிரச்சாரத்தையும் தாண்டி, ‘அகில பாரத’ பிரச்சாரத்தை மேற்கொண்ட முரட்டுச் சங்கி. ஐரோப்பியாவில் இருக்கும் வாடிகன் சிட்டி, சவுதி அரேபியாவின் கப்பா மெக்கா, இலண்டனில் இருக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் அபே ஆகியவை ஒரு காலத்தில் இந்து கோயில்களாக இருந்ததாகச் சொல்கிறார் இவர். இக்கூற்றிலிருந்தே இவரது ‘வரலாற்று ஆய்வை’ நாம் வியப்போம்.
பழைமை வாய்ந்த மசூதிகளெல்லாம் இந்து கோயில்களை இடித்துவிட்டு கட்டப்பட்டவை என்று சித்தரிக்கும் நூல்களுள் ஒன்று, “இந்து கோயில்கள் : அவற்றுக்கு என்ன ஆனது?” (Hindu Temples : What happened to them) என்ற நூல். சீதா ராம் கோயல், அருண் ஷோரி, ஹர்ஷ் நரேன், ஜெய் துபாஷி மற்றும் ராம் ஸ்வரூப் ஆகியோர் இணைந்து இந்நூலை எழுதியுள்ளனர். இவர்கள் அனைவரும் தீவிர இந்துத்துவ எழுத்தாளர்கள் ஆவர்.
இவர்கள் எழுதிய மேற்கண்ட நூலில், சுமார் 1800-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய கட்டிடங்கள், அழிக்கப்பட்ட இந்துக் கோயில்களின் பொருட்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவற்றுள் பாபர் மசூதி, ஞானவாபி, குதும்பினார் ஆகியவையும் அடக்கம்.
நூல்களைத் தாண்டி, தாங்கள் கடத்தவரும் வரலாற்றுப் புரட்டுகளை திரைப்படங்களாகவும் கொண்டுவந்து வெகுமக்களை மதவெறியூட்டுகிறார்கள் காவி பாசிஸ்டுகள். அதற்கு பொறுத்தமான சான்று, அண்மையில் வெளிவந்த ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம். ‘வரலாற்று உண்மையை’ அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்ற பெயரில், ஒட்டுமொத்த காஷ்மீர் முஸ்லீம்களையும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளாகவும் இந்துக்களுக்கு எதிரானவர்களாகவும் காட்டும் வரலாற்று மோசடி இத்திரைப்படத்தில் அரங்கேற்றப்பட்டது. பண்டிட்டுகள் கொடூரமாக கொல்லப்படுவதாகக் காட்டும் காட்சிகளை, நம்மை இரத்தம் கொப்பளிக்க வைப்பவையாகவும் ‘முஸ்லீம்களை பழிதீர்க்க வேண்டும்’ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கக் கூடியதாகவும் அமைத்திருப்பார் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி. அதுதான் அவரது நோக்கம்.
இந்த சங்கப் பரிவாரப் பிரச்சார பீரங்கியின் அடுத்தப் படமாக தயாராகிக் கொண்டிருப்பது ‘டெல்லி ஃபைல்ஸ்’. விவேக் அக்னிஹோத்ரி சென்னை வந்திருந்தபோது, “முகலாயர்கள் ஆட்சி தொடங்கி ஆங்கிலேயர் ஆட்சிவரை டெல்லியை எப்படியெல்லாம் அழித்தார்கள் என்பது டெல்லி ஃபைல்ஸ் படத்தின் கதைக்களமாக அமையும்” என்று தெரிவித்திருந்தார்.
டெல்லியை ஆண்ட சுல்தான்கள் ‘இந்துக் கோயில்களை இடித்துச் சேதப்படுத்தினார்கள்’ என்ற கருப்பொருளுக்கு சில வரலாற்றுச் சம்பவங்களை எடுத்துவைத்துக் கொண்டு, அவற்றை மிகைப்படுத்தி, திரித்து, போலியாக சேர்த்து பேசக் கூடிய படமாக ‘டெல்லி ஃபைல்ஸ்’ இருக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம். இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் வன்முறையை ஏவுவுதற்கான தலைசிறந்த பிரச்சாரக் கருவியாக இது செயல்படும்.
காவி பாசிஸ்டுகளின் கையாளாக நீதிமன்றங்கள்
“இந்துக் கோயில்களை இடித்துவிட்டு கட்டப்பட்ட மசூதியை மீட்க வேண்டும்” என்று கூறி நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்வது காவிகளுக்கு இது முதல்முறையல்ல. பல ஆண்டுகளாக அவர்கள் செய்துவருவதுதான். ஆனால், 1991 ஆம் ஆண்டிற்குப் பிறகு, அவ்வாறு தொடுத்த வழக்குகள் பெரும்பாலும் விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்பட்டதில்லை; காரணம், 1991 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் ஆகும்.
1991-இல் பாபர் மசூதியைக் குறிவைத்து இராம ஜென்ம பூமி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது, இதே போன்ற பிரச்சினை நாட்டின் பிற பகுதிகளிலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில், அப்போதைய நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசால் இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
இச்சட்டத்தின் பிரிவு 4, ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் அப்படியே பராமரிக்கப்பட வேண்டுமெனவும்; ஒரு மத வழிப்பாட்டுத் தலம், முன்னொரு காலத்தில் வேறொரு மத வழிபாட்டுத் தலமாக இருந்து, அதை இடித்துவிட்டு தற்போதைய மத வழிபாட்டுத் தலம் கட்டப்பட்டதாகக் கூறி, அதை பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் உரிமை கோர முடியாது என்றும் சொல்கிறது. இச்சட்டத்தில், பாபர் மசூதிக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2020 ஆம் ஆண்டு, இச்சட்டப்பிரிவை நீக்கக்கோரி விஷ்வ பத்ர பூஜாரி புரோஹித் மகாசபை சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போதுவரை, இச்சட்டம் நடைமுறையிலேயே உள்ளது. இப்படியிருக்க ஞானவாபி, மதுரா வழக்குகளை நீதிமன்றங்கள் விசாரணைக்கு எடுத்திருக்கின்றன. இது சட்டத்தைக் காக்கும் நிறுவனமாக கருதப்படும் நீதிமன்றங்களே செய்த சட்டவிரோத நடவடிக்கைகளாகும்.
உச்சமாக, மசூதியின் வெளிப்புறச் சுவரில் உள்ள சிலைகளை வழிபடுவதற்கு அனுமதி வேண்டி தொடரப்பட்ட வழக்கில், மசூதிக்கு உள்ளே சென்று ஆய்வு நடத்த வழக்கறிஞர் அஜய் மிஸ்ரா தலைமையில் ஒரு குழுவை நியமித்து உத்தரவிட்டது வாரணாசி சிவில் நீதிமன்றம். 1991 வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தைச் சுட்டிக்காட்டி, ஆய்வுக் குழு அமைத்த வாரணாசி சிவில் நீதிமன்றத்தின் உத்தரவை இரத்து செய்யக்கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது மசூதி நிர்வாகம்; ஆனால், அலகாபாத் உயர்நீதிமன்றம் மசூதி நிர்வாகத் தரப்பின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோதும், ஆய்வுக்குத் தடை விதிக்கப்படவில்லை; மாறாக, இவ்வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரிக்கும் என நழுவிக் கொண்டது உச்சநீதிமன்றம். இதற்கிடையில், மசூதிக்குள் ஆய்வு நடைபெற்று, நீரூற்றை ‘சிவலிங்கம்’ கண்டுபிடிக்கப்பட்டதாக போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன; ‘சிவலிங்கம்’ கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு சீல்வைக்கச் சொல்லி, பாதுகாப்புக்காக சி.ஆர்.பி.எஃப். படைகளை குவித்து முஸ்லீம் மக்களை அச்சுறுத்தியது வாரணாசி நீதிமன்றம்.
மசூதி நிர்வாகத்தின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட், “ஒரு வழிபாட்டுத் தலத்தின் மதத்தன்மையை கண்டறிவாதாலேயே அதை 1991 வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறுவதாக கருதமுடியாது” என்று கருத்து தெரிவித்திருந்தார். ‘இந்துக்களின் நம்பிக்கை’ என்பதாலேயே பாபர் மசூதியில் இராமன் கோயில் கட்ட அனுமதி கொடுத்த மனுநீதி மன்றமல்லவா உச்சநீதிமன்றம், அதனிடம் நாம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும்.
‘தேஜோ மஹாலயா என்பதுதான் தாஜ்மஹால்’ சங் பரிவார புரட்டல்வாதி பி.என்.ஓக் எழுதிய நூல்.
ஞானவாபி, மதுரா விவகாரங்களில் காவிகளின் மனுக்களை விசாரணைக்கு எடுத்து கொண்டே போதே, வழிபாட்டுத் தலங்கள் சட்டம் என்பது கழிப்பறை காகிதமாக்கப்பட்டுவிட்டது; காவிகளின் விருப்பத்திற்கேற்ப அக்காகிதமும் இனி கிழித்தெறியப்படலாம்.
எதிர்கொள்வோம்!
“இந்துக் கோயில்களை மீட்போம்” எனக் கிளம்பியிருக்கும் இந்நடவடிக்கையானது, இராம ஜென்ம பூமி இயக்கத்திற்குப் பின், காவி பாசிஸ்டுகள் கையிலெடுத்துள்ள இன்னொரு கரசேவை இயக்கமாகும். ஆர்.எஸ்.எஸ்-இன் வரலாற்றில், இராம ஜென்ம பூமி இயக்கம் என்பது முக்கியமானதாகும். இந்த இயக்கத்தை ஒட்டி நடத்தப்பட்ட இரதயாத்திரை கலவரங்களில்தான், நாடு முழுவதும் சுமார் 2,000 பேர்கள் வரை கொல்லப்பட்டார்கள். கொடிய பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தனக்கு மக்கள் மத்தியில் வலுவானதொரு அடித்தளத்தை அமைத்துக் கொண்டதும் இந்த இயக்கத்தின்போதுதான்.
“ராமர் கோயில் பிரச்சினையைக் கையிலெடுத்த பின் ஆர்.எஸ்.எஸ். செழித்து ஓங்கியது. 1979-க்கும் 1989-க்கும் இடையிலான பத்தாண்டுகளில் ஸ்வயம்சேவக்குகளின் எண்ணிக்கை 10 லட்சத்திலிருந்து 18 லட்சமாக உயர்ந்தது. ஷாகாக்களின் எண்ணிக்கை 25,000 ஆக உயர்ந்தது மட்டுமன்றி 18,880 நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பரவியது. அதற்கு 38 முன்னணி அமைப்புகள் இருந்தன. 50 லட்சம் பேர் அதன் நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர். இதே கால கட்டத்தில் தென்னிந்தியாவில் வியக்கதகு வளர்ச்சியை அடைந்தது ஆர்.எஸ்.எஸ். கேரளாவில் இருக்கும் 14 மாவட்டங்களில் 12-இல் 3,000 தினசரி ஷாக்காக்களும் 900 வாராந்திரக் கூட்டங்களும் நடத்தப்பட்டன” (ஏ.ஜி. நூரானி எழுதிய, “ஆர்.எஸ்.எஸ். : இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்” என்ற நூலிலிருந்து)
எனினும், அன்றைக்கும் இன்றைக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. அன்று ஆர்.எஸ்.எஸ். தனது அடித்தளத்தை மக்கள் மத்தியில் வலுப்படுத்தி, விரிவுபடுத்திக் கொள்ளும் கட்டத்தில் இருந்தது. இன்றோ, ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான அமைப்புகள் புற்றீசல் போல பெருகி, எண்ணிலடங்காதவையாக வளர்ந்துள்ளன. குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு இனப்படுகொலையை நடத்தி முன்னோட்டம் பார்த்திருக்கிறது. ‘இந்துத்துவத்தின் சோதனைச் சாலை’ என்று ஒரு காலத்தில் குஜராத் மாநிலத்தை மட்டுமே குறிப்பிட்டு வந்தோம்; இன்றோ உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், அசாம், திரிபுரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகம் என தனது அடித்தளங்களை பல்வேறு மாநிலங்களிலும் வலுப்படுத்தி வைத்துள்ளது ஆர்.எஸ்.எஸ்.
அன்று பாபர் மசூதி என்ற ஒரு இடத்தை குறிவைத்து, நாடு முழுக்க மதவெறியூட்டியது ஆர்.எஸ்.எஸ். தற்போது, மதவெறி குண்டுகள் நாடு முழுக்க பல்வேறு இடங்களில் புதைக்கப்படுகின்றன.
மேலும் காவி பாசிஸ்டுகளே அறிவித்ததைப் போல, 1992-இல் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு, இரதயாத்திரைக் கலவரங்கள் ஆகியவை ஒரு ‘முன்னோட்டம்’தான். கொடிய இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்கான முன்னோட்டம் அது.
இன்று, ஆர்.எஸ்.எஸ். அதிகார பீடத்தில் அமர்ந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் சிறுபான்மை மக்கள், ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்து கொண்டிருக்கின்றன; பெயரளவிலான போலி ஜனநாயகக் கட்டமைப்புகளும் படிப்படியாக ஒழித்துக் கட்டப்பட்டு, இந்துராஷ்டிரம் நிறுவப்பட்டுக் கொண்டிருக்கும் காட்சிகளை கண்முன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
“நாட்டிலுள்ள எல்லா இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். இருக்கிறது, குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள் என எல்லோரும் ஆர்.எஸ்.எஸ்.தான்” என சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வெளிப்படையாக பேசினார் கர்நாடக அரசவைத்தலைவர் விஷ்வேஸ்வர் ஹெக்டே.
இது முந்தையவைகளைக் காட்டிலும் கொடூரமான பாசிச ஒடுக்குமுறைகளும், இனப்படுகொலைகளும் நாடுமுழுவதும் தலைவிரித்தாடப்போகும் காலகட்டமாக இருக்கப் போகிறது.
ஆனால், நம்மிடம் அச்சப்படுவதற்கு மட்டுமே விசயங்கள் இல்லை; பாசிச அபாயம் முறியடிக்கப்பட முடியாதது அல்ல. ஆர்.எஸ்.எஸ். வெகுமக்களை இந்துமதவெறியின் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கும்போதே, புரட்சிகர நெருக்கடிக்கான சூழலும் கனிந்துகொண்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
கொரோனா பொருளாதார முடக்கம், உக்ரைன் – இரஷ்யப் போர் ஆகியவை தனியார்மய – தாராளமயக் கொள்கைகளின் தோல்வியை உலக அளவில் விரைவுபடுத்தியுள்ளன; இலங்கையைப் போலவே பல்வேறு நாடுகளிலும் பணவீக்கமும், கடன் நெருக்கடிகளும் தீவிரமாகி வருகிறது. நமது நாட்டில்கூட பணவீக்கமும் வேலையில்லாத் திண்டாட்டமும் மிகப்பெரிய பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன; அரசி, பருப்பு, சமையல் எண்ணெய், பெட்ரோல்-டீசல் என அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்து வருகின்றன. (இந்த நெருக்கடி, மக்கள் எழுச்சிக்கு வித்திட்டுவிடக்கூடாது என்ற அச்சம் காரணமாகவே மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையை சொற்பமாகக் குறைத்து நாடகமாடியுள்ளது)
பீகாரில் அரசுத் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களே வீதிக்கு வந்து போராடியது, இரயில்களைக் கொளுத்தியது ஆகியவை வேலையின்மையின் தீவிரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டின. ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், ஷாகீன்பாக் போராட்டம், டெல்லிச் சலோ என காவி-கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டச் சூழல் கனிந்து வருகிறது. இவ்வர்க்கப் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதும் வளர்த்தெடுப்பதும்தான் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தும் வழி.
வினீத் குமார் ராவத் Zomato நிறுவனத்தில் டெலிவரி வேலை செய்துவருகிறார். கடந்த ஜூன் 18 அன்று ஆஷியானா பகுதியின் செக்டார் எச் பகுதியில் உணவு டெலிவரி செய்ய அஜய் சிங்கின் வீட்டுக் கதவைத் தட்டினார் ராவத். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் வீட்டில் வசிப்பவர்கள் அவரது கைகளில் இருந்து உணவை வாங்க மறுத்துவிட்டனர்.
ராவத் தனக்கு நேர்ந்த கொடுமையை போலீசுக்கு அளித்த புகாரிலும் வீடியோவிலும் கூறுகிறார். கதவைத் திறந்த ஒருவர் அவரது பெயரையும் சாதியையும் கேட்டார். ராவத் தனது பெயரைச் சொன்னதும் அவர் முகத்தில் புகையிலையை துப்பியுள்ளார்.
“அஜய்யின் சகோதரர் அபய் சிங் கதவைத் திறந்தார். அவர் நான் ஒரு பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதை அறிந்து சாதிரீதியாக அவதூறு செய்தார். அபய் ஆர்டரைப் பெற மறுத்து, பசியின் (பட்டியலிடப்பட்ட சாதி) கையிலிருந்து உணவை எடுக்க மாட்டோம் என்று வாங்குவாதத்தில் ஈடுபட்டனர்” என்று ராவத் தனக்கு நேர்ந்த சாதிய கொடுமையை விவரிக்கிறார்.
உணவு ஆர்டரை என்னிடம் இருந்து வாங்க விருப்பவில்லை என்றால், அந்த ஆடரை ரத்து செய்யுமாறு அஜய்யிடம் ராவத் கேட்டுக் கொண்டார். சாதிவெறியுடன் இருந்த அஜய், ராவத் மீது புகையிலையை துப்பியது மட்டுமல்லாமல், சாதி ரீதியாக கேவலப்படுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் 10 முதல் 12 பேர் அஜய் வீட்டில் இருந்து வெளியே வந்து ராவத்தை அடிக்க ஆரம்பித்தனர். அவர்கள் தடி மற்றும் கம்பியால் தாக்கியதாக ராவத் கூறுகிறார்.
தடியால் தாக்கியபோது, ராவத் ஹெல்மெட் அணிந்திருந்ததால் ராவத் தலைப்பகுதியில் காயம் ஏற்படவில்லை. ஆனால், ராவத் அந்த சாதிவெறி பிடித்த கும்பலால் மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார் என்பது உடலில் ஏற்பட்டிருக்கும் காயங்கள் மூலம் நாம் உணரமுடியும். ராவத் கடந்த நான்கு வருடங்களாக டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார். இது போன்ற ஒரு சம்பவத்தை கடந்த காலத்தில் நான் சந்தித்ததே இல்லை என்று கூறுகிறார்.
ராவத்தின் புகாரின் பேரில், அபய் சிங் மற்றும் 10-12 குற்றவாளிகள் மீது வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், 147, 148, 323 மற்றும் 504 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
கடந்த 2019-ம் ஆண்டு Zomato தொழிலாளி இதுபோன்ற ஓர் சாதி ரீதியான அடக்குமுறையை சந்தித்துள்ளார்.
ஜூலை 30, 2019 அன்று, மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரைச் சேர்ந்த அமித் சுக்லா, டெலிவரி செய்ப்வர் “இந்து அல்லாதவர்” என்பதால், தனது ஆர்டரை ரத்து செய்தது பற்றி ட்வீட் செய்தார். டெலிவரி பாயை மாற்றவும், பணத்தைத் திருப்பித் தரவும் Zomato மறுத்துவிட்டதாகவும் அவர் புகார் கூறினார்.
படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல், தன் வயிற்று பிழைப்புக்காகவும், தன் குடும்ப வறுமையை போக்கவும், வெயிலியும் மழையிலிலும் உணவு ஆடர்களை டெலிவரி செய்துவருகின்றனர். நவீன கொத்தடிமைகளாக இருக்கும் இவர்கள், ஒருபக்கம் டெலிவரி நிறுவனங்களால் குறைந்த சம்பளத்திற்கு வேலைசெய்து தனது இளமையை இழக்கின்றனர். மறுபுறம், சாதிவெறியர்களால் தாக்குதலுக்குள்ளாகிறார்கள்.
நவீன கொத்தடிமைகளாக இருக்கும் இத்தகையை டெலிவரி தொழிலாளர்கள் புரட்சிகர சங்கமாய் இணைந்து தனது உரிமைக்காகப் போராடுவதே அவர்களின் உடனடிக் கடமையாக இருக்க முடியும்.
ரோனா வில்சன், வரவர ராவ் மற்றும் ஹனி பாபு ஆகியோருக்கு சொந்தமான மின்னனு சாதனங்களை புனே போலீசுத்துறை ஹேக் செய்து போலியான ஆதாரங்களை உள்நுழைத்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட சைபர் செக்யூரிட்டி நிறுவனம் கூறியுள்ளது. இச்செய்தியை அமெரிக்காவில் உள்ள வயர்டு பத்திரிகை தெரிவித்துள்ளது.
வில்சன், ராவ் மற்றும் பாபு ஆகியோர் 2018-ம் ஆண்டு புனே அருகே உள்ள பீமா கோரேகான் கிராமத்தில் சாதி வன்முறையைத் தூண்ட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. பீமா கோரேகான் வழக்கில் வழக்கறிஞர்கள், ஆர்வலர்கள் உட்பட 16 பேரை கைது செய்தது புனே போலீசு.
கடந்த பிப்ரவரி 2021-ல், அமெரிக்காவைச் சேர்ந்த டிஜிட்டல் தடயவியல் நிறுவனமான அர்செனல் கன்சல்டிங் என்ற நிறுவனம், வில்சனின் மடிக்கணினிக்குள் ஊடுருவி malware-ஐ (ஒரு கணினி அமைப்பை சீர்குலைக்கவும், சேதப்படுத்தவும் அல்லது அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெறவும் வடிவமைக்கப்பட்ட மென்பொருள்) பயன்படுத்தியதாகவும், அதில் குறைந்தது 10 குற்றஞ்சாட்டக்கூடிய கடிதங்களை பதிவேற்றம் செய்ததாகவும் கூறியது.
துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளின் அவசியத்தைப் பற்றி விவாதிக்கும் ஒரு மாவோயிஸ்ட் போராளிக்கு எழுதப்பட்ட கடிதம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சொல்லி ஓர் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு எழுதிய கடிதம் ஆகியவை இதில் அடங்கும்.
ஹேக்கிங்கை நடத்திய குழுக்களில் ஒன்று, வில்சனின் சாதனத்தில் ஆவணங்களை வைத்ததாகக் கூறப்படுகிறது. இப்போது, பீமா கோரேகான் வழக்கில் நெருக்கமாக தொடர்புடைய புனே போலீசு அதிகாரி ஒருவர் ஹேக்கிங்குடன் தொடர்புடையவர் என்று வயர்டு தெரிவித்துள்ளது.
முன்னாள் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஹனி பாபு, கவிஞர் வரவர ராவ் மற்றும் ஆர்வலர் ரோனா வில்சன்.
2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் வில்சன், ராவ் மற்றும் பாபு ஆகியோரின் மின்னஞ்சல் கணக்குகளில் மீட்பு மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர். இந்த மீட்பு மின்னஞ்சலில் புனே போலீசுத்துறை அதிகாரியின் பெயர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீட்பு மின்னஞ்சல் முகவரி, குற்றம் சாட்டப்பட்ட ஆண்கள் தங்கள் கடவுச்சொற்களை மாற்றினால், அவர்களின் கணக்குகளை மீண்டும் அணுக போலீசுத்துறை அதிகாரியை அனுமதித்தது என்று சென்டினல்ஒன் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மின்னஞ்சல் சேவை வழங்குநரின் பாதுகாப்பு ஆய்வாளர், ஏப்ரல் 2018-ல் வில்சனின் கணக்கில் phishing (கடவுச்சொற்கள் மற்றும் கிரெடிட் கார்டு எண்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்த தனிநபர்களைத் தூண்டுவதற்காக புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்களில் மின்னஞ்சல்களை அனுப்பும் ஒரு மோசடி நடைமுறை) மின்னஞ்சலைப் பெற்றபோது, புனே போலீசுத்துறையுடன் இணைக்கப்பட்ட மீட்பு மின்னஞ்சல் சேர்க்கப்பட்டது என்று கூறினார்.
வில்சன் கைது செய்யப்படுவதற்கு குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பு பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களுக்கு phishing மின்னஞ்சல்களை அனுப்ப ஆர்வலரின் மின்னஞ்சல் கணக்கு பயன்படுத்தப்பட்டது. மேலும், “இவர்கள் பயங்கரவாதிகளைப் பின்தொடர்வதில்லை. மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களைப் பின்தொடர்கின்றனர். அது சரியல்ல” என்று ஆய்வாளர் கூறினார்.
டொராண்டோ பல்கலைக்கழகத்தின் குடிமக்கள் ஆய்வகத்தின் பாதுகாப்பு ஆய்வாளரான ஜான் ஸ்காட்-ரெயில்டன், புனே போலீசுத்துறை பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரிகளுக்கான பின்னொட்டான pune@ic.in என முடிவடையும் மின்னஞ்சல் ஐடியுடன் மீட்பு தொலைபேசி எண் இணைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
சிட்டிசன் ஆய்வகத்தின் பாதுகாப்பு ஆய்வாளர், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனலில் உள்ள மற்றவர்களுடன் சேர்ந்து, டிசம்பரில் வில்சனின் தொலைபேசி பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் அவர் கைது செய்யப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டதாக அறிவித்தார். அதே போலீசுத்துறை அதிகாரியின் ஹேக் செய்யப்பட்ட கணக்குகளுடன் இணைக்கப்பட்ட மீட்பு மின்னஞ்சல் முகவரியுடன் மீட்பு ஃபோன் எண் இணைக்கப்பட்டுள்ளதாக ஸ்காட்-ரயில்டன் கூறியதாக வயர்டு செய்தி வெளியிட்டுள்ளது.
பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் நிரபராதிகள். போலீசு அவர்களை குற்றவாளியாக சித்தரிப்பதற்கு மின்னனு சாதனங்களை ஹேக் செய்து தரவுகளை பதிவேற்றம் செய்துள்ளது. இது ஒரு சைபர் கிரைம். இந்த சைபர் கிரைமின் குற்றவாளிகள் புனே போலீசுத்துறை அதிகாரிகள்.
போலியாக குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் பாபு மற்றும் வில்சன் உட்பட 12 பேர் தற்போது சிறையில் உள்ளனர். ராவ் அடுத்த மாதம் முடிவடையும் தற்காலிக மருத்துவ ஜாமீனில் வெளியே இருக்கிறார், அதே நேரத்தில் வழக்கறிஞர்- ஆர்வலர் சுதா பரத்வாஜ் டிசம்பரில் வழக்கமான ஜாமீன் பெற்றார். பழங்குடியினர் உரிமை ஆர்வலர் பாதிரியார் ஸ்டான் ஸ்வாமி, மும்பையில் விசாரணைக்காக காத்திருந்தபோது ஜூலை 5 அன்று இறந்தார்.
முற்போக்காளர்களையும், சமூக ஆர்வலர்களையும், புரட்சியாளர்களையும் குற்றவாளிகளாக சித்தரித்து, கைது-சிறை-சித்திரவதை செய்வதற்காகவே இருக்கிறது போலீசுத்துறை என்பது இந்த சம்பவத்தில் அம்பலமாகிறது. தான் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கைது செய்து சித்தரவை செய்யமுடியும் என்ற கட்டற்ற அதிகாரத்தை இந்த கிருமினல் போலீசுத்துறை பெற்றுள்ளது.
ஒட்டுமொத்த அரசு எந்திரமே காவி-கார்ப்பரேட் பாசிச கும்பலாக மாறிவருகிறது என்பதற்கு புனே போலீசுத்துறையால் சைபர் கிரைம் செய்யப்பட்டு 16 நிரபராதிகள் மீது ஜோடிக்கப்பட்ட பீமா கொரேகான் வழக்கு ஓர் துலக்கமான சான்று.
கடந்த மே 18, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள். 2009 ஆம் ஆண்டு, சிங்கள இராணுவத்தால் புலிகளோடு சேர்த்து, ஈழத் தமிழ் மக்களும் கொடிய இனப்படுகொலைக்கு உள்ளான நாள். மறக்க முடியாத “மே” அது. 13 ஆண்டுகள் கழித்து, இந்த ஆண்டு மே மாதமும் இலங்கை உழைக்கும் மக்களின் வரலாற்றில் குறித்துவைத்துக் கொள்ள வேண்டிய நாளாக அமைந்திருக்கிறது. முந்தைய மே, மாளாத துயரத்தின் வடு. இன்றைய மே துளிர்விடும் புதிய நம்பிக்கையாக இருக்கிறது.
எந்த மஹிந்த இராஜபக்சே, சிங்களப் பேரினவாதத்துக்கு தலைமை தாங்கி இலட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களை இறுதிப் போரில் கொன்றொழித்தானோ, அதே இராஜபக்சேவை இன்று ஆட்சியைத் துறந்தோடிவிட்டு, மறைந்து வாழும்படி செய்துவிட்டார்கள் சிங்கள உழைக்கும் மக்கள்.
இனவெறி-மதவெறியை ஒழித்துக் கட்டிவிட்டு, ஒரு புதிய ஜனநாயக இலங்கையை படைக்க விரும்பிய அனைத்து இலங்கை புரட்சிகர-ஜனநாயக சக்திகளுக்கும் பெருமகிழ்ச்சியை வழங்கியிருக்கிறது இனம் கடந்த உழைக்கும் மக்களின் பேரெழுச்சி.
“இலங்கையில் இன முரண்பாடுதான் பிரதான முரண்பாடு. சிங்களவர்கள் மத்தியில் ஜனநாயக சக்திகளே கிடையாது. அனைவரும் ஈழத்தமிழருக்கு பகையாளிகள். சிங்களவர்கள் எக்காலத்திலும் தமிழர்களோடு இணையவே மாட்டார்கள். தமிழர்களும் எக்காலத்திலும் சிங்களவர்களோடு இணைய முடியாது” – என்று கூறிவந்த தமிழினவாதிகளின் வாயில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது மூவின மக்களின் வர்க்க ஒற்றுமை.
இந்தச் சூழலில், தனித் தமிழீழக் கோரிக்கை இலங்கை மற்றும் இங்குள்ள தமிழினவாதிகளால் முன்னைக் காட்டிலும் தீவிரமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. (கவனமாக ‘விவாதம்’ என்ற வரம்போடு நிறுத்திக் கொண்டுவிட்டார்கள். அதற்கான காரணத்தை நாம் கடைசியில் விளக்குவோம்.)
ஆனால் இப்பொழுதுகூட வர்க்க ஒற்றுமையை மறுக்கின்ற, வெறுக்கின்ற அவர்களது இழிந்த இனவாதக் கண்ணோட்டத்தை விட்டொழித்தபாடில்லை. இச்சூழலில் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்டிருக்கிற அநீதியான இனப்படுகொலைக்கு நீதி வழங்கவும் அவர்களது தன்னுரிமைக் கோரிக்கையை வென்றெடுக்கவும் எந்த பாதையில் செல்ல வேண்டியிருக்கிறது என்பதை நாமும் பேச வேண்டியிருக்கிறது.
***
1980கள் முதல் புதிய ஜனநாயகம் இதழும் எமது தோழமை அமைப்புகளும் ஏற்கெனவே இதுகுறித்து தொடர்ச்சியாக பேசி வந்திருக்கின்றன. அப்பொழுதெல்லாம் அவை தமிழினவாதிகளால் வெறுத்து ஒதுக்கப்பட்டிருக்கின்றன; எம்மையும் எமது தோழமை அமைப்புகளையும் தமிழீழத்தின் எதிரிகளாகவும் அவர்கள் சித்தரித்தார்கள். ஆனால் நமது நிலைப்பாடுகள் எவ்வளவு சரியானவை என்பதை இலங்கையின் வர்க்கப் போராட்டம் பறைசாற்றிவிட்டது.
2013 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழில், “ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்” என்று தலைப்பிட்ட கட்டுரையில், ஈழம் தொடர்பான பு.ஜ. மற்றும் பு.ஜ. தோழமை அமைப்புகளின் நிலைப்பாட்டை சுருக்கமாக விளக்கியிருப்போம். பொருத்தம் கருதி, அக்கட்டுரையின் ஒருபகுதியை இங்கு நீண்ட மேற்கோளாகத் தருகிறோம் :
“ஈழ இனச் சிக்கலுக்குத் தமிழீழத் தனியரசுதான் எல்லா நிலைகளிலும் எப்போதும் ஒரே தீர்வு என்று கூறுவதைத்தான் ம.க.இ.க.-வினர் ஏற்றுக்கொள்ளவில்லையே தவிர, தமிழீழத் தனியரசுக்கு எதிரானவர்கள் என்பது உண்மையில்லை. இது நாம் இப்போது எடுக்கும் முடிவல்ல. முன்பே எழுதியிருப்பதுதான். “அப்படியானால், தமிழீழத் தனியரசுக்காக ஏன் போராடவில்லை, இனிமேலாவது அதற்காகப் போராடுவீர்களா” என்று கேட்டு ம.க.இ.க.-வை மடக்குவதாக எண்ணிக் கொண்டு தமிழினவாதிகள் வாதாடக் கூடும்.
தமிழீழத் தனியரசு என்ற கோரிக்கைக்காக இரண்டு காரணங்களுக்காக ம.க.இ.க.-வினர் போராடவில்லை. தமிழினவாதிகளின் பார்வையில் தமிழீழத் தனியரசு என்பதுதான் ஈழ இனச் சிக்கலுக்கு ஒரே கோரிக்கை, ஒரே தீர்வு; அதனால்தான் அதை மட்டுமே முன் வைக்க வேண்டும் என்கிறார்கள். அது குட்டி முதலாளிய வர்க்கத்தின் பகுத்தறிவுக்குப் புறம்பான, குறுந்தேசிய இனவாதப் பார்வையிலானது.
ம.க.இ.க. வினரின் பார்வையில் – இதுதான் அறிவியல்பூர்வமானது, பாட்டாளி வர்க்கப் பார்வையிலானது – தமிழீழத் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியதாக ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமைக் கோரிக்கையையும், அதற்கான போராட்டத்தையும் நாம் முன்னெடுக்கிறோம்.
பிரிந்து போகும் உரிமையை ஒதுக்கிவிட்டு, மறுத்துவிட்டு வெறுமனே தன்னுரிமைக்காக ம.க.இ.க.வினர் நிற்கவில்லை. ஆகவேதான் தமிழீழத் தனியரசு என்ற கோரிக்கையைத் தனியே முன்வைத்துப் போராட வேண்டியதன் அவசியம் இல்லை.
தமிழீழத் தனியரசு கோரிக்கையை மட்டுமே முன்வைத்து, அதையே இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்கிறார்கள், தமிழினவாதிகள். பொதுவுடைமையாளர்களான ம.க.இ.க.வினர் அவ்வாறு செய்ய முடியாது, செய்யக் கூடாது, செய்யவுமில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில், ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்கும் பெருந்தேசிய இனத்துக்கும், அதன் பரந்துபட்ட மக்களுக்கும் கூட எதிரானதுதான் அந்நாட்டை ஆளும் பாசிச அரசு. அதற்கு எதிராக ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தனித்தனிப் பொதுவுடைமைக் கட்சி வைத்து, தனித்தனித் திட்டமும் இலக்கும் வைத்துப் புரட்சி செய்வது; அவ்வாறான தனித்தனி புரட்சிகளில் தேசிய இனங்கள் வெற்றிபெற்று, தனித்தனியே சோசலிசத்தைக் கட்டியமைத்த பின்னரோ, அதற்கு முன்னரோ ஐக்கியப்படுவது என்று பேசுவது மார்க்சிய – லெனினியப் பார்வையே கிடையாது.
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையை நினைவுகூர்ந்து, பேரணியாகச் செல்லும் சிங்கள் மக்கள். இடம், காலிமுகத்திடல் மைதானம்.
அந்நாட்டை ஆளும் பாசிச அரசுக்கு எதிராக ஒரே புரட்சிகரப் பொதுவுடைமைக் கட்சியைக் கட்டுவது; அக்கட்சி, எல்லா தேசிய இனங்களுக்கும் சமவுரிமையை மட்டுமல்ல, ஒடுக்கப்படும் தேசிய இனத்துக்குப் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை உறுதிப்படுத்துவது; அக்கட்சி ஒடுக்கும் (சிங்களத்) தேசிய இனத்தவரிடையே ஈழத் தமிழர் தன்னுரிமையையும், ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் தேசிய இனத்தவரிடையே ஐக்கியத்தையும் பிரச்சாரம் செய்து, அதன் மூலம் அந்நாட்டுப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் தேசிய இனங்களை ஐக்கியப்படுத்திப் புதிய ஜனநாயகப் புரட்சியை முடிப்பதுதான் அக்கட்சியின் இலக்காகவும் திட்டமாகவும் இருக்கும் என்பதுதான் மார்க்சிய – லெனினியப் பார்வை.
இந்த மார்க்சிய-லெனினியப் பார்வையை மறுப்பதற்காகத் தமிழினவாதிகள் பலவாறு புளுகித் திரிகிறார்கள். “சிங்களப் பெருந்தேசிய இனத்து மக்களுக்கும் அவர்களை ஆளும் பாசிச அரசுக்கும் வேறுபாடே கிடையாது; பகை முரண்பாடும் கிடையாது; பெருந்தேசிய இனத்து மக்கள் அனைவரும் ஒடுக்கப்படும் சிறுபான்மை தேசிய இன மக்களுக்கு எதிரானவர்கள்; இலங்கையின் இரு தேசிய இனப் பாட்டாளி மக்களும் ஐக்கியப்பட மாட்டார்கள்; இலங்கையில் ஈழத் தமிழ் தேசிய இன மக்களின் தன்னுரிமையை ஏற்கும் அமைப்புகள் எதுவும் சிங்களவர் மத்தியில் கிடையாது” ஆகிய தமிழினவாதிகளின் கருத்துக்களைப் பொதுவுடைமையாளர்களான ம.க.இ.க.வினர் ஏற்கவில்லை. ஏனென்றால், தமிழினவாதிகள் கூறிவரும் மேற்கண்ட கருத்துகளில் உண்மையில்லை.
இந்தியாவின் ஈழ ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்றுவதற்கான போராட்டத்தில், நோக்கில் சிங்களவரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டு நின்றிருக்கிறார்கள். 1983-இல் இருந்து தொடர்ந்து நடந்து வந்த ஈழப்போர் காரணமாக இலங்கையில் அரசியல், பொருளாதார நெருக்கடிகள் முற்றியபோது சிங்கள, தமிழ் மக்கள் அமைதியை வேண்டி நின்றபோது அதையே முன்வைத்து அந்நாட்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டார், சந்திரிகா குமாரதுங்கே. அவரைத் தேர்ந்தெடுத்து அமைதி, போர்நிறுத்தம், பேச்சு வார்த்தையை ஆதரித்ததில் சிங்களரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டிருந்தார்கள். சிங்கள இன வெறியர்களினால் அம்முயற்சி சிதறடிக்கப்பட்டது வேறு விடயம். 2004 சுனாமியின் பேரழிவுகளை எதிர்கொள்வதில் சிங்களவரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டிருந்தார்கள்.
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசனின் மனைவியாகிய சிங்களப் பெண்ணைப் போன்று தமிழ்த் தேசிய இன மக்களின் தன்னுரிமையை ஏற்கும் சிங்களவர்களும், சிங்களவர் மற்றும் ஈழத் தமிழர்களைக் கொண்ட குழுக்களும் அங்குண்டு. தமிழ்த் தேசிய இன மக்களின் மனித உரிமைக்காகவும் இலங்கைப் பாசிச அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடிக் கொல்லப்பட்டவர்களும் பத்திரிகையாளர்களும் மனித உரிமைப் போராளிகளும் சிங்களவரிடையே உண்டு. ஈழ விடுதலைப் போராட்டங்கள் நடந்த அதே காலகட்டத்தில், இலங்கைப் பாசிச அரசால் ஈழத் தமிழர்கள் மட்டும் கொன்று குவிக்கப்படவில்லை. பல்லாயிரம் சிங்கள இளைஞர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான வெள்ளை வேன் வேட்டை இன்னமும் தொடர்கிறது. 75,000 சிங்கள இளைஞர்கள் இந்தக் காலத்தில் காணாமல் போயிருக்கிறார்கள் என்று சர்வதேச மனித உரிமை அமைப்பு இலங்கைப் பாசிச அரசுக்கு எதிராகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது.
ஆகவே, அரசியல் காரணங்களுக்காக சிங்களவரும் ஈழத் தமிழரும் ஐக்கியப்படுவது சாத்தியமே இல்லாதது அல்ல.”
***
ஆம், “சாத்தியமே இல்லாதது அல்ல” என்று அன்று நாம் கூறினோம். இன்று சாத்தியப்பட்டிருப்பதை கண்ணெதிரே பார்க்கிறோம்.
“கோத்தபய பதவி விலக வேண்டும்; போராட்டக்காரர்களைத் தாக்கிய மஹிந்த தண்டிக்கப்பட வேண்டும்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இச்சூழலில், சிங்கள-தமிழ் மக்களின் பொது எதிரியான இராஜபக்சே கும்பலுக்கு எதிரான போராட்டத்தில், தமிழினப் படுகொலைக் குற்றத்திற்கும் சேர்த்து அக்கும்பல் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும்; தமிழ் மக்களின் தன்னுரிமை கோரிக்கையும் வலுவாக இணைக்கப்பட வேண்டும். இக்கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்கள் அரசியல் போராட்டங்களை நடத்துவதற்கு உகந்த தருணம் இது. நிச்சயம் அவை சிங்கள உழைக்கும் மக்களின் பேராதரவைப் பெறும்.
ஆனால் நிலைமை வேறுமாதிரியாக உள்ளது. சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய தென்னிலங்கையில்தான் போராட்டங்கள் வீச்சாக நடந்துவருகின்றன. தமிழர்கள் அடர்த்தியாக வாழும் வடக்கு-கிழக்கு பகுதிகளில், தொடக்கம் முதலே பெருமளவில் மக்கள் போராட்டங்களைக் காண முடியவில்லை.
இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. மின்வெட்டு, எரிபொருள் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை தமிழ் மக்கள் நீண்ட காலமாக அனுபவித்து வருவதால், அதற்கு பழகிவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். மேலும், தமிழ் மக்கள் அடர்த்தியாக வாழக்கூடிய வடக்கு-கிழக்கு பகுதிகளில்தான் பெருமளவு இலங்கை இராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது. இனப்படுகொலைக்கு பிறகு அம்மக்கள் மத்தியில், அரசை எதிர்த்த போராட்டங்களில் பங்குபெற ஒருவித அச்சம் நிலவுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இவைகளை முதன்மையான காரணங்களாக நம்மால் கருதமுடியாது.
தமிழ் மக்களிடையே இயங்குகிற செல்வாக்கு பெற்ற அரசியல் அமைப்புகள் – சிறுகுழுக்களாக உள்ள புரட்சிகர-ஜனநாயக அமைப்புகள் விதிவிலக்காக இருக்கலாம் – எவையும் அம்மக்களை போராடுவதற்கு திரட்டவில்லை; அவ்வாறு செய்வதற்கு விரும்பவும் இல்லை என்பதுதான் முதன்மைக் காரணம். குறிப்பாக தமிழின அமைப்புகளையே சொல்கிறோம்.
இப்போது மட்டுமல்ல, இலங்கை வரலாற்றிலேயே, இத்தமிழினவாத அமைப்புகள் ஒருநாளும் இருதேசிய இனத்து உழைக்கும் மக்களின் பொதுக்கோரிக்கைகளுக்காக, தமிழர்களைத் திரட்டிப் போராடியதில்லை. இனப் பிரச்சினையை மட்டுமே, அதுவும் தங்களது குறுகிய இனவாதக் கண்ணோட்டத்திலும் பிழைப்புவாத நோக்கங்களுக்காகவும் மட்டுமே முன்வைத்து களமாடியுள்ளார்கள்.
இன, மத முரண்பாடுகளைக் கடந்து உழைக்கும் வர்க்கமாக மக்கள் போராடிவரும் இச்சூழலிலும், தமிழினவாதிகள் பேசுவதை அறிந்தால் நம்மால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது.
2009 ஆம் ஆண்டு வெளியான புதிய ஜனநாயகம் வெளியீடு.
திருக்குமரன் என்ற தமிழினவாதி தமிழ் யூடியூப் சானலுக்கு தான் அளித்த பேட்டியொன்றில், “சிங்களர்கள் மூன்றுவேளை சோற்றுக்காக போராடுகிறார்கள். அவர்களால் மூன்று வேளை சோறில்லாமலும் ஏசி இல்லாமலும் இருக்க முடியாது. தமிழர்களுக்காக என்றாவது, சிங்களவர்கள் போராடியிருக்கிறார்களா, எனவே தமிழ் மக்கள் அவர்களை நம்பக்கூடாது” என்று பேசுகிறார். தோழர்களே, இது ஈனப் புத்திகொண்ட ஒருவரது பேச்சுமட்டுமல்ல. பல தமிழ்த்தேசியவாதிகள் இதே அலைவரிசையில் பயணிப்பதை நாம் எடுத்துக் காட்ட முடியும்.
“(வடக்கில்) நாங்கள் உணவுக்காக போராடவில்லை, நீதிக்காக போராடுகிறோம்” என்று தமிழ்த்தேசியவாதிகளால் நடத்தப்படும் “தமிழ் கார்டியன்” (Tamil Guardian) என்ற இணையப் பத்திரிகை எழுதிருந்தது.
அதேபோல, “தமிழ்நெட்” (Tamilnet) என்ற மற்றொரு இணையப் பத்திரிகையின் ஆசிரியர் இவ்வாறு எழுதுகிறார் : “இலங்கைத் தீவில் எழுந்திருக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில், சிங்கள தேசத்தோடு ஈழத்தமிழ்தேசம் ஒருகுடையின் கீழ் அணிவகுப்பது முற்றிலும் பொருத்தமற்றது” … “இன அழிப்பு ஒற்றையாட்சி அரசின் பொருளாதாரத்தைக் காப்பதற்காக, இன அழிப்புத் தேசத்தோடு ஒருகுடையின் கீழ் ஈழத்தமிழர் அணிதிரள்வதென்பது, இன அழிப்பு மறுப்புக்கு ஒப்பாகிவிடும்”
மேற்கண்ட இணையதளங்கள் மட்டுமல்ல, “கூர்மை” (Koormai), “ஈழப்பார்வை” (Eeelamview) என தமிழினவாதிகள் நடத்துகின்ற பெரும்பாலான இணையதளங்கள் மற்றும் வலைப்பூக்கள் ஆகியவை சுருதியும் இலயமும் மாறாமால் ஒரேமாதிரி வாசிக்கின்றன.
“1990களிலிருந்தே இலங்கையில் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டவர்கள் தமிழர்கள்தான். தமிழர்களாகிய நாம் 20 ஆண்டுகளுக்கு மேலாக இதனை அனுபவித்து வருகிறோம். சிங்கள மக்கள் இப்பொழுதுதான் இதை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று இனவாத நஞ்சைக் கக்குகிறார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிவஞானம் சிறீதரன்.
இவர்கள் சொல்லும் “சோத்துப் பிரச்சினை” சிங்களவர்களுக்கு மட்டுமல்ல, தமிழினத்துப் பாட்டாளிகளுக்கும்தான். பொருளாதர நெருக்கடி வெடித்ததிலிருந்து, இதுவரை 73 தமிழர்கள் இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்கள் (ஜூன் 01 வரையான கணக்கீடு). ஆனால் “சோத்துப் பிரச்சினை” தமிழர்களுக்கு பெரிதல்லவாம், இதற்காக எக்காரணம் கொண்டும் சிங்களவர்களோடு சேர்ந்துவிடாதீர்கள் என்று உயிர்போக கத்துகிறார்கள் இனவாதிகள்.
இந்த இனவாதக் கூச்சலுக்கு ஒரு “வர்க்க உள்ளடக்கம்” உள்ளது தோழர்களே. அதுதான் மேட்டுக்குடி வர்க்கத் திமிர். “தமிழன்” என்ற இனத்தோல் போர்த்துக் கொண்டு, தமிழின பாட்டாளியிடம் இனவாத ஊளையிடுகின்றன இந்த மேட்டுக்குடி நரிகள்.
இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழினவாதிகள் நேரடியாக பேசுகிறார்கள் என்றால், தமிழ்நாட்டு தமிழினவாதிகளோ அதையே மென்மையாகவும் பகிரங்கமாக வெளியில் தெரியாத வண்ணமும் பேசுகிறார்கள். இவர்களில் யாரும், சிங்கள பேரினவாத பாசிஸ்டுகளான இராஜபக்சேக்களுக்கு எதிராகவோ, பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க வேண்டியோ போராடிவரும் பெரும்பான்மை சிங்களவர்களோடு தமிழர்களும் இணைந்து போராடவேண்டும் என்று கோரவில்லை. மாறாக, இப்பொழுதும் தமிழர்கள் சிங்களவர்களோடு இணைந்து போராடமுடியாது என்று பேசிவருகிறார்கள்.
சரி, தமிழர்களுக்கு “சோத்துப் பிரச்சினை” பெரிதல்ல, தனி ஈழப் பிரச்சினையைத்தான் பேசவேண்டும் என்று கதைப்பவர்கள், இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு அதற்காகவேணும் தமிழ்மக்களைத் திரட்டி போராடியிருக்கலாமே, ஏன் செய்யவில்லை.
இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விசயம் என்னவென்றால், சிங்களர்களும் தமிழர்களும் ஒன்றிணைந்து போராட விடமால், இனவாத வேலியிட்டு தடுப்பதன் மூலம் சிங்கள ஆளும் வர்க்கத்தையும் அரசுக் கட்டமைப்பையும் பாதுகாப்பதே இந்த கும்பல்கள்தான்.
தமிழன் பிணங்களை வைத்து நாடாளுமன்ற பதவி சுகம் காணவும், புலம்பெயர் ஈழத்தமிழர்களிடம் நிதி வசூலித்துப் பொறுக்கித் திண்பதற்காகவும் “இனவாதம்” அவர்களுக்கு தேவைப்படுகிறது. இதற்கு உலைவைக்கும் “வர்க்க ஒற்றுமை” அதனால்தான் அவர்களுக்கு கசக்கிறது.
சிங்களப் பேரினவெறியோ, குறுந்தேசிய தமிழினவாதமோ, இனி நீண்டகாலம் இனவாத அரசியலுக்கு உழைக்கும் மக்களை பலியாக்க முடியாது. வர்க்கப் போராட்டச் சூறாவளியில், இந்த ‘அற்பப் பதர்கள்’ தாக்குப்பிடிக்க முடியாது.
“சிங்களர்களை இப்போதுதான் புரிந்துகொள்ள முடிந்தது” என்று வியக்கிறார்கள் தமிழ் மக்கள். முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு சிங்களர்களும் நினைவேந்துகிறார்கள். தற்போது சிங்கள-தமிழ் உழைக்கும் மக்களிடையே ஐக்கியமானதொரு சூழல் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இனியும் இன உரிமைப் போர்வையில், தமிழினவாதிகள் முன்வைக்கும் “பிளவு அரசியல்” எடுபடாது.
இனவாத அரசியல் தலைமைகளிடம் தமிழ் மக்கள் சரணடைந்து கிடக்கப் போவதில்லை. தென்னிலங்கை மக்களுடன் ஒன்றிணைந்து போராடுவதற்காக, வடக்குப் பகுதியின் மாணவர் அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் முயற்சிகள் மேற்கொண்டுவருவதாக கிடைக்கும் செய்திகள் நமக்கு நம்பிக்கையூட்டுகிறது.
சிங்கள-தமிழ் மக்களின் ஒன்றுபட்ட வர்க்கப் போராட்டமே, ஏகாதிபத்திய மேலாதிக்கத்திலிருந்தும் சுரண்டலிலிருந்தும் இலங்கையை விடுவிப்பதோடு, தமிழ் மக்களுக்கும் தன்னுரிமையைப் பெற்றுத்தரும்.
“அக்னிபாத்” கடந்த 4 நாட்களாக இந்தியா முழுவதும் பேசப்படும் ஒரு வார்த்தைதான் இது. இதுகுறித்து செய்தி ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தங்களில் மூலம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. மேலும், ஒன்றிய அரசு இந்த திட்டத்தை அறிவித்தது முதல் பீகார் மாநிலத்தில் பல ஆயிரம் இளைஞர்கள் போராடி வருகிறனர். மேலும் பல்வேறு இடங்களில் ரயில் எரிப்பு சம்பவங்களும் நடந்துள்ளன.
பீகாரில் தொடங்கிய இந்த போராட்டம் அரியான, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், டெல்லி, தெலுங்கான போன்ற மாநிலங்களுங்களும் பரவின. தற்போது நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் மற்றும் ஓட்டு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வழக்கம்போல ஒன்றிய அரசின் இந்த திட்டத்திற்கு ஆதரவாக சங் பரிவார கும்பல் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. தமிழகத்தில் தினமல‘ம்’ர் நாளிதழ், நடுநிலை சங்கி சமஸ் ஆகியோர் தனது அடிமை சேவகத்தை செய்து வருகின்றனர்.
நிரந்தர வேலை பறிபோகிறது, ஓய்வூதியம் கிடையாது, படித்த இளைஞர்களின் வேலை இல்லாத் திண்டாட்டத்தை இது உருவாக்கும் என்பதை தாண்டி இந்த ஆளும் வர்க்க ஊடகம் இந்த திட்டத்தின் உள்நோக்கத்தை கூற மறுக்கிறது. அக்னிபாத் என்ற திட்டம் இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கிறது என்பதையும் தாண்டி ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் தனது கொள்கையை நிலைநாட்டும் விதமாக அறிவித்துள்ளது.
கொரோனா காலகட்டங்களில் சுமார் இரண்டரை ஆண்டுகள் பாதுகாப்புத் துறைக்கு ஒன்றிய அரசு ஆள்சேர்ப்பு செய்யவில்லை. இந்த வேலையை நம்பி இருந்த சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் 23 வயதை கடந்து ராணுவத்தில் சேருவதற்கான தகுதியை இழந்துவிட்டனர். இதைத்தொடர்ந்து ராணுவத்தின் ஆட்சேர்ப்புக்கான வயது உச்ச வரம்பை 23-ஆக அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், நிரந்தரமாக ராணுவ வீரராக செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த இளைஞர்களுக்கு பேரிடியாக வந்து இறங்கி இருக்கிறது அக்னிபாத்.
ராணுவ வேலையை நம்பி இருந்த இளைஞர்களின் வாழ்க்கையில் இந்த ஒன்றிய அரசு மணல் அள்ளிபோட்டுவிட்டது என்பதால் தற்போது இளைஞர்கள் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணுவத்தை தனியார்மயம்படுத்துவது, செலவினங்களை குறைப்பது மட்டும் இந்த திட்டத்தின் நோக்கம் அல்ல. மாறாக இந்தியாவில் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை நிலைநிறுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டமாக இந்த அக்னிபாத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது ஒன்றிய அரசு. இந்த திட்டத்தின் மூலம் காவிகளின் செல்வாக்கை ராணுவத்தில் அதிகப்படுத்துவது மற்றும் முழுக்க முழுக்க ராணுவத்துறையை கார்ப்பரேட்களின் நலனுக்காக திறந்து விடுவது ஆகியவைதான் இதன் நோக்கம்.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை அடுத்தடுத்து தனியார்மயமாக்கி, மிக வேகமாக கார்ப்பரேட் சேவையை செய்துவரும் இந்த பாஜக அரசு ராணுவத்தையும் தனியார்மயமாக்கும் வேலையில் தற்போது உச்ச நிலையை அடைந்துள்ளது.
பாதுகாப்பு துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு, ராணுவ தளவாட உற்பத்தியில் 74 சதவீத அந்நிய முதலீடு போன்றவற்றின் மூலம் ராணுவத்தை தனியார்மயமாக்கும் வேலைகளை கடந்த 2014-ம் ஆண்டு முதல் பா.ஜ.க கும்பல் செய்து கொண்டுதான் வருகிறது. அதனுடைய அடுத்தகட்ட நகர்வாகதான் இந்த அக்னிபாத் என்ற திட்டத்தை தற்போது அறிவித்து செயல்படுத்த தொடங்கியுள்ளது.
அக்னிபாத் திட்டத்தின் படி, 4 ஆண்டுகளில் 6 மாதம் பயிற்சியுடன் கூடிய வேலை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஆண்டில் மாதத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் ஊதியம் என்றும் 4 ஆண்டுகள் முடியும் தருவாயில் 40 ஆயிரமாக மாத ஊதியம் அதிகரித்து இருக்கும் என்று ராணுவத்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த சம்பளத்தில் கிட்டத்தட்ட 25% வரை மாதம் தோறும் பிடித்தம் செய்து விட்டு 4 ஆண்டுகள் முடியும் தருவாயில் எந்தவிதமான வரியும் வசூலிக்காமல் 11 லட்சம் முதல் 13 லட்சம் ரூபாய் வரை மொத்தமாக கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறிவருகிறது ஆளும் பா.ஜ.க அரசு.
இந்த பணத்தை வைத்து சுய தொழில் செய்து கொள்ளலாம் என்றும் வாழ்க்கைக்கு பயன்படுமாறு வேறு விதமாகவும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் கூறுகிறது. இந்த திட்டத்தின் மூலம் குறைவான அளவில் மட்டுமே ஆள் சேர்க்கும் ஒன்றிய அரசு, அடுத்தடுத்த ஆண்டுகளில் நிரந்தரமாக ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்வதை நிறுத்திவிட்டு முப்படைகளிலும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் மட்டுமே ஆட்களை தேர்வு செய்வார்கள் என்பது அவர்களுடைய கடந்த கால செயல்களின் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.
அரசின் மூலம் குத்தகைக்கு, ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் இந்த ஒன்றிய அரசு இனிவரும் காலங்களில் முப்படைகளுக்கும் ஒப்பந்த முறையில் ஆட்களை தேர்வு செய்வதை தனியாருக்கு கொடுக்கும். ரயில்வே, வங்கி, அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தற்போது தனியார் கட்டுப்பாட்டின்கீழ் ஒப்பந்த முறையில் ஊழியர்கள் பணீயாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த காலங்களில் அரசின் மூலம் ஒப்பந்த ஊழியர்களாக இருந்தனர். அதன்பிறகுதான் இன்று தனியார் துறை மூலம் அவர்கள் ஒப்பந்த ஊழியர்களாக நியமிக்கப்பட்டு வேலை செய்து வருகிறார்கள். அதுபோலதான் இன்று அரசின் மூலம் குத்தகைக்கு எடுக்கப்படும் இந்த அக்னிவீரர்கள் நாளை உள்நாட்டு தரகு முதலாளிகளின் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்களகவோ அல்லது வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பபெனிகளின் ஒப்பந்த ஊழியர்களாகவோ இருப்பார்கள் என்பது நிதர்சன உண்மை.
ராணுவ தளவாட தயாரிப்பு, பாதுகாப்பு கவசங்கள் மற்றும் உணவு ஆகியற்றை வழங்கும் உரிமையை தனியார் நிறுவனத்திற்கு கொடுத்ததன் மூலம் கொள்ளை இலாபம் சம்பாதித்து வருகின்றன அந்த தனியார் நிறுவனங்கள். தற்போது ராணுவ வீரர்களையும் தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தத்திற்கு எடுத்தால் மேலும் தனது இலாபத்தை செலுமைபடுத்தும் என்பது உறுதியாகிறது. இந்தியாவில் தேசபக்தியை குத்தகைக்கு எடுத்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல், ராணுவத்தை காரணம் காட்டியே ஆட்சிக்கு வந்தது. தற்போது அந்த ராணுவத்தையே தனியார்மயமாக்குவதன் மூலம் அவர்களின் தேச பக்தி நாடகம் மேலும் அம்பலப்பட்டு நிற்கிறது.
அக்னிபாத் – ராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் அடியாட்படையாக மாற்றும் திட்டம்
ஆர்.எஸ்.எஸ் தோற்றுவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை பல்வேறு கிளை அமைப்புகளாக பிரிந்து கொண்டு தன்னை சமூக நல அமைப்புகள் காட்டிக்கொண்டு உழைக்கும் மக்களை சாதி மற்றும் மதத்தின் பெயரால் பல்வேறு சூழ்ச்சிகளை செய்துகொண்டு பிரித்து வருகிறது. மேலும் சாகா என்ற பெயரில் தொண்டர்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் சட்டவிரோதமாக ஆயுதப் பயிற்சிகளை இன்று வரையும் வழங்கி வருகிறது.
இதேபோல் இந்துத்துவ சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்களும் அவர்களின் அடியாட்களும் நீதித்துறை, உளவுத்துறை, மருத்துவத் துறை, கல்வித் துறை, விளையாட்டுத்துறை மற்றும் அரசின் பல நிர்வாக அமைப்புகளில் இன்று நுழைந்துள்ளனர். மேலும் ஊடகத்துறையில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தும் சக்தியாக அவர்கள் மாறிவிட்டனர். மறைந்த ராணுவ தளபதி பிபின் ராவத் போன்றவர்கள் ராணுவத்தின் உயர் பொறுப்புகளில் நுழைந்து தனது இந்துத்துவ சித்தாந்தத்திற்கு ஏற்ற வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
அடிமட்ட அளவில் வேலை செய்யும் ராணுவ வீரர்கள் பெரும்பாலும் தற்போது வரை இல்லை என்பதால் அதை நிறைவு செய்யும் விதமாகவும் ராணுவத்தை தனது கட்டுப்பாட்டுல் முழுமையாக கொண்டுவரும் நோக்கத்தில்தான் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்மூலம் 4 ஆண்டுகளுக்கு சாக தொண்டர்களை ராணுவத்தில் களம் இறக்கிவிட்டால் அவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி வழங்கப்படும். மேலும் இந்துத்து சித்தாந்தம் கொண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துகொள்ள முடியும்.
இனிவரும் காலங்களில் இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்காக இந்துத்துவவாதிகள் மிக மூர்க்கமான வேலைகளில் ஈடுபடுவார்கள். அதற்கு எதிராக உழைக்கும் மக்கள் களத்தில் இறங்கி போராட வேண்டிய சூழல் வரும். அரசுக்கு எதிராக போராடும் அம்மக்களை ஒடுக்கவும் அவர்களை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரவும் இந்த அக்னிபாத் வீரர்களை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மிக சரியாக பயன்படுத்திக் கொள்ளும்.
இந்துராஷ்டிரம் அமைக்க அடுத்த கட்ட நகர்வாகவும் தனியார்மய கொள்கையின் தீவிர வடிவமாகவும் இருக்கும் இந்த அக்னிபாத் திட்டத்தை அக்னி கொண்டு எரிக்காமல் வேறு எப்படி தடுக்க முடியும்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட 75% ராணுவ வீரர்களுக்கு வேலை கிடைக்காமல் போகும் அக்னிபாத் ராணுவ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 17 அன்று 72 மணிநேரத்திற்குள் இத்திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்று பல்வேறு அமைப்பினர் விடுத்துள்ள பாரத் பந்த் அழைப்பை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இப்போராட்ட அறிவிப்பால் ஜூன் 20 அன்று 500-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 181 மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 348 பயணிகள் ரயில்கள் உட்பட 529 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நொய்டாவில், கௌதம் புத்த நகர் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி-குருகிராம் விரைவுச் சாலையில் பாதுகாப்புப் படையினரால் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. அரியானாவில், ஆயுதப்படை பணிக்கான காத்திருப்பவர்கள் சாலைகளை மறித்து, அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று முழக்கமிட்டனர். ரோஹ்தக் மாவட்டத்தில் சாலைகளில் போராட்டம் நடத்தினர். அரியானாவில் உள்ள அம்பாலா, ரேவாரி, சோனிபட் மற்றும் பஞ்சாபின் லூதியானா, ஜலந்தர், அமிர்தசரஸ் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரயில் பெட்டிகள் எரிக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்ற பீகார் போன்ற மாநிலங்களில் போராட்டங்களைத் திரட்டுவதற்கு சமூக ஊடக தளங்கள் (வாட்ஸ்அப்) பயன்படுத்தப்படுகிறது. இதனால், அக்னிபாத் திட்டம் குறித்து போலியான செய்திகளை பரப்பியதற்காக 35 வாட்ஸ்அப் குழுக்களுக்கு மத்திய அரசு கடந்த ஜூன் 19 அன்று தடை விதித்தது.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்களை பங்கேற்க தூண்டியதாக ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில் உள்ள நரசராவ்பேட்டை நகரில் உள்ள பயிற்சி நிறுவன உரிமையாளரை தெலுங்கானா போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பயிற்சி நிறுவன உரிமையாளர் அவுலா சுப்பா ராவ், நூற்றுக்கணக்கான ராணுவ ஆர்வலர்களை உள்ளடக்கிய ஹக்கிம்பேட் ராணுவ வீரர்கள் என்ற வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி, அனைத்து உறுப்பினர்களுக்கும் போராட்டங்களில் பங்கேற்குமாறு செய்திகளை அனுப்பியதாக குற்றம்சாட்டப்படுள்ளார்.
நாடுதழுவிய பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில், அக்னிபாத் திட்டத்தை 4 ஆண்டு காலத்திற்கு திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. தீ வைப்பு, வன்முறைப் போராட்டங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பணியமர்த்தப்பட மாட்டார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்று எழுத்துப்பூர்வ உறுதிமொழியை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அந்த உறுதிமொழி போலீசுத்துறையால் சரிபார்க்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
“இந்த சீர்திருத்தம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இந்த சீர்திருத்தத்தின் மூலம் இளமையையும் அனுபவத்தையும் கொண்டு வர விரும்புகிறோம்” என்று ராணுவ விவகாரத் துறையின் கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி தெரிவித்தார்.
“அக்னிவீர் தொகுதி எண் 1 பதிவு செயல்முறை ஜூன் 24 முதல் தொடங்கும் மற்றும் ஜூலை 24 முதல் கட்டம் 1 ஆன்லைன் தேர்வு செயல்முறை தொடங்கும். முதல் தொகுதி டிசம்பரில் பதிவு செய்யப்பட்டு, டிசம்பர் 30-ம் தேதிக்குள் பயிற்சி தொடங்கும்” என்று ஏர் மார்ஷல் எஸ்கே ஜா கூறினார்.
நாடுதழுவிய அளவில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் மத்திய அரசு திமிர்தனமாக அக்னிபாத் திட்டத்தை வாபஸ் பெற முடியாது என்று கூறியுள்ளது. தங்கள் வேலைவாய்ப்புக்காக போராடும் இளைஞர்களை குற்றவாளிகள் என்றும், போராடியவர்களுக்கு பணி வழங்க இயலாது என்றும் மிரட்டுகிறது. போர் வீரர்களாக மாற நினைத்த இளைஞர்களை போராட்டக்களத்திற்கு அழைத்து சென்றுள்ளது இந்த காவி பாசிச மோடி அரசு.
சுமார் முப்பதாண்டுகளுக்கும் மேலாக, உலகை கேள்விக்கிடமற்ற முறையில் மேலாதிக்கம் செய்துவந்த அமெரிக்க மேல்நிலை வல்லரசின் ஒற்றைத்துருவ உலக ஒழுங்கு இன்று ஆட்டங்கண்டு வருகிறது. ஒருபக்கம் அமெரிக்காவின் மேலாதிக்க கருவியான புதிய தாராளவாதக் கொள்கை உலகெங்கும் படுதோல்வியைச் சந்தித்து வருகின்றது. மறுபக்கம் அமெரிக்காவின் ஒற்றைத்துருவ மேலாதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் இரஷ்யாவும் சீனாவும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு முகாம்களுக்கு இடையிலான போட்டாபோட்டிதான் இன்றைய சர்வதேச அரசியல் -பொருளாதார நிகழ்வுப் போக்காக உள்ளது.
இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என தெற்காசிய நாடுகளில் அண்மைக் காலமாக ஏற்பட்டுவரும் அரசியல் – பொருளாதார நெருக்கடிகளுக்குப் பின் மறைந்திருப்பதும் இந்த இரு முகாம்களுக்கு இடையிலான மேலாதிக்கப் போட்டிதான். குறிப்பாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டா போட்டிதான்.
சீனா இன்று உலகின் மிகப்பெரிய உற்பத்தி குவிமையமாக வளர்ந்துள்ளது. மலிவு விலையில் பல்வேறு நாடுகளுக்கு தனது பொருட்களை ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறது. தனது வர்த்தக மேலாதிக்கத்தை மென்மேலும் விரிவுபடுத்துவதற்காக “புதிய பட்டுப்பாதைத் திட்டத்தை” தொடங்கியுள்ளது. இந்த புதிய பட்டுப்பாதைத் திட்டம் கடல்வழியாகவும் தரைமார்க்கமாகவும் ஆசியா முதல் ஐரோப்பா வரை உலகின் பலநாடுகளை இணைக்கிறது. இது அமெரிக்க மேலாதிக்கத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. சீனாவின் இப்புதிய பட்டுப்பாதைத் திட்டத்திற்கு எதிராக பைடன் தலைமையிலான அரசு “பில்ட் பேக் பெட்டர் வொர்ல்ட்” (Build Back Better World) திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
தெற்காசியாவில் சீனாவினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி, இராணுவ ரீதியான பல நெருக்கடிகளையும் சீனாவுக்கு கொடுத்துவருகிறது அமெரிக்கா; மேலும் ஒரே சீனக் கொள்கையின்கீழ் (One China Policy) தைவானை தன்னுடன் இணைத்துக் கொள்ளவிருப்பதாக சீனா அறிவித்ததை அடுத்து, தைவானுக்கு இராணுவ உதவி என்ற பெயரில் தன்னுடைய படைகளை அந்நாட்டில் குவித்து வருகிறது. இந்தியா இரஷ்யாவுடன் வர்த்தக உறவைப் பேணுவதால் குவாட் கூட்டணி பலவீனப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஜப்பானை இணைத்துக் கொண்டு ஆசியாவில் நேட்டோ படைகளை விரிவுபடுத்துவதற்காக துடித்துக் கொண்டுள்ளது அமெரிக்கா.
வெளியிலிருந்து கொடுக்கும் நெருக்கடிகள் ஒருபுறம் எனில், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அந்நாட்டின் இரஷ்ய-சீன ஆதரவு ஆளும் வர்க்க கட்சிகளை தூக்கியெறிந்துவிட்டு தன்னுடைய பொம்மையாட்சியினை நிறுவுவதற்காக பொருளாதார நெருக்கடிகளைத் தோற்றுவிப்பது, ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளை மேற்கொள்வது போன்ற வேலைகளில் அமெரிக்கா இறங்கியது. தற்போது அதில் வெற்றியும் பெற்றுள்ளது. இலங்கையில் மஹிந்த இராஜபக்சேவின் ஆட்சியினையும் பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சியினையும் கவிழ்த்துவிட்டு தனது பொம்மைகளான இரணில் மற்றும் சபாஷ் ஷரீப் ஆட்சியை கொண்டுவந்துள்ளது.
‘பயங்கரவாதத்தை ஒழிப்பது’ என்ற பெயரில், சுமார் 20 ஆண்டுகாலாமாக உள்நாட்டுப் போரை நடத்தி ஆப்கானை சீரழித்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். கடந்த ஆண்டு அக்டோபரில் நேட்டோ – அமெரிக்க படைகள் வெளியேற்றத்திற்கு பின்பு, ஆப்கானில் இடைக்கால அரசமைத்துள்ள தலிபான்கள் சீனா மற்றும் இரஷ்யாவுடன் அரசியல்-பொருளாதார உறவுகளைத் தொடங்கியுள்ளனர். சீனா தனது புதிய பட்டுப்பாதைத் திட்டத்தில் ஆப்கானையும் இணைத்துக் கொள்ளவிருக்கிறது. மேலும் தலிபான் அரசுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களையும் சீனா போட்டுள்ளது.
மத்தியா ஆசியாவில் புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த (Geo-Political Importance) ஆப்கானை சீனாவுக்கு தாரைவார்க்க விரும்பாத அமெரிக்கா, சர்வதேச பொருளாதாரத் தடைகளின் மூலம் வெளியிலிருந்து தலிபான் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆப்கான் மத்திய வங்கிக்கு சொந்தமான டாலர் கையிருப்பை முடக்கிவைத்துள்ளது. ஏற்கெனவே வறட்சியின் காரணமாக உணவு உற்பத்தி குறைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் நிதிமுடக்கமும் சேர்ந்துகொள்ள இன்னொரு சோமாலியாவாக மாறியுள்ளது ஆப்கான்.
அண்மைக்காலமாக தெற்காசியாவில் நடைபெறும் இந்த அரசியல் போக்குகளைப் புரிந்துகொள்வதானது, இப்பிராந்தியத்தில் வாழ்கின்ற உழைக்கும் மக்கள் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள நெருக்கடிகளுக்கான காரணங்களை இனங்காணவும் மேலாதிக்கவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து குரலெழுப்பவும் உதவும்.
இலங்கை
ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த மக்கள் எழுச்சியின் அழுத்தம் காரணமாக பதவியை துறந்தோடியுள்ளார் மஹிந்த இராஜபக்சே. ஐம்பது நாட்களைக் கடந்த நிலையில், காலி முகத்திடலில் கூடிய மக்கள் பெருந்திரளோ, அதிபராக உள்ள கோத்தபயவும் பதவியை துறக்க வேண்டும்; மக்கள் மீது தாக்குதலை கட்டவிழ்த்துவிட்ட மஹிந்த மற்றும் அவரது குண்டர் படையைச் சேர்ந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளது.
நெருக்கடியிலிருந்து மீட்க வந்த தேவதூதராக முன்னிறுத்தபட்டு பிரதமராகியுள்ள இரணில் விக்ரமசிங்க, ‘பொருளாதார மீட்பு முயற்சி’ என்ற பெயரில் ஐ.எம்.எஃப்.யிடம் நாட்டை அடகுவைப்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். அப்படியே அடகுவைத்து, குறிப்பிட்ட அளவு கடன்பெற்றாலும் உடனடியாக ஒரு ‘மாயவித்தையை’ நிகழ்த்திக் காட்ட முடியாத அளவிற்கு நெருக்கடியின் பரிணாமம் மிகத்தீவிரமாக உள்ளது.
இலங்கை தற்போது சந்தித்துள்ள பொருளாதார நெருக்கடி – அதாவது அந்நிய செலாவணி பற்றாக்குறை, கடன் நெருக்கடி ஆகியவை ஏதேச்சையான நிகழ்வுகளின் தொகுப்பு அல்ல. ஆளும் வர்க்க பத்திரிகைகள் பிரச்சாரம் செய்ததைப் போல, அனைத்தும் கொரோனா பொதுமுடக்கத்திலிருந்து தொடங்கவில்லை.
இன்றைய நெருக்கடிக்கு அடிப்படைக் காரணம் 1970கள் முதலே, அந்நாடு ஐ.எம்.எஃப் மற்றும் உலக வங்கிக்கு அடகுவைக்கப்பட்டதும்; அதன் தொடர்ச்சியாக, 1990கள் தொடங்கி இலங்கையில் அதிதீவிரமாக அமல்படுத்தப்பட்ட மறுகாலனியாக்க கொள்கைகளுமே. கொரோனா பொதுமுடக்கம் உலக வர்த்தகச் சங்கிலியில் ஏற்படுத்திய தேக்கமானது, மறுகாலனியாக்க கொள்கையின் திவால்நிலையை துரிதப்படுத்திவிட்டது, அவ்வளவுதான்.
அதேநேரம், இலங்கையில் இராஜபக்சே கும்பலின் தீவிர சீன சாய்வுப் போக்கைத் தடுத்து நிறுத்துவதற்காக, அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் அந்நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தியதும் நடந்தேறியது.
இப்போக்கைப் பற்றி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கை கடன் நெருக்கடி தொடர்பாக வெளியான பு.ஜ. கட்டுரையில் விளக்கியிருந்தோம். (தலைப்பு: கடன்சுமைக் கடலில் தத்தளிக்கும் இலங்கை: நெருக்கடியைத் தீவிரமாக்கி ஆதிக்க செலுத்தத் துடிக்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள்)
“தமது உலக மேலாதிக்க போர்த்தந்திர திட்டத்துக்கு ஒத்துழைக்காத கோத்தபய அரசின் சீன ஆதரவு நடவடிக்கைகள், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளுக்கு எரிச்சலூட்டுகிறது. இதனால், கோத்தபய அரசை எச்சரித்து, மிரட்டிப் பணிய வைக்கும் நோக்கத்துடன், இலங்கைக்கு வழங்கி வந்த ஜி.எஸ்.பி. (பொது விருப்பத் தேர்வு ஒழுங்கமைப்பு − generalized system of preference) என்ற வரிச் சலுகையை நீக்கப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.” – மேற்சொன்ன கட்டுரை.
தனது அடிவருடி இரணில் விக்ரமசிங்கவை பதவியில் அமர்த்தியுள்ளதன் மூலம் இலங்கையை மேலாதிக்கம் செய்வதற்கான சதுரங்க ஆட்டத்தில், இப்பொழுது காயை வெற்றிகரமாக முன்நகர்த்தியுள்ளன அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள்.
தெற்காசியாவில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மேலாதிக்கப் போட்டியில், இலங்கை பகடைக்காயக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
000
மஹிந்த இராஜபக்சே தலைமையிலான ஆட்சியில், ‘உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது’ என்ற பெயரில் திருப்பிச் செலுத்த முடியாத அளவிற்கான கடன்கள் சீனாவிடமிருந்து வாங்கிக் குவிக்கப்பட்டன. ‘இக்கடனுதவி’ சீன மேலாதிக்கத்திற்கான கருவியாக அமைந்தது. சான்றாக, சிலவற்றை குறிப்பிடலாம்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்டுவதற்கு சீன வங்கியிடமிருந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், அத்துறைமுகத்தை “சீனா மெச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ்” (China Merchants Port Holdings) என்ற சீன அரசு நிறுவனத்திற்கு விற்றுவிட்டது மஹிந்த அரசு. மேலும் துறைமுகத்தைச் சுற்றியுள்ள 15,000 ஏக்கர் நிலத்தையும் 99 ஆண்டுகள் குத்தகைக்கு விட்டுள்ளது.
கொழும்புவை ஒட்டியுள்ள கடல் பகுதியில், 269 ஹெக்டேர் வரை மண்ணைப் பரப்பி சமப்படுத்தி “கொழும்பு துறைமுக நகரம்” (Colombo Port City) என்ற பிரம்மாண்டமான, அரசுக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சுயேட்சை நகரம் ஒன்றை இலங்கை அரசு உருவாக்க இருக்கிறது.
இத்திட்டத்திற்கான கட்டுமானப்பணிகளை 1.4 பில்லியன் மதிப்பில் சீனத் துறைமுக கட்டுமான நிறுவனம் (China Harbour Engineering Company) மேற்கொண்டுவருகிறது. இக்கட்டுமானப்பணிக்கு சன்மானமாக, சீரமைக்கப்படும் நிலப்பரப்பில் 116 ஹெக்டேரை அச்சீன நிறுவனத்திற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விட்டது மஹிந்த அரசு. உலக வர்த்தகத்தில் மேலாண்மை செலுத்துவதற்காக கட்டமைக்கப்பட்டுவரும் தனது பட்டுப்பாதைத் திட்டத்தில், இந்த கொழும்பு துறைமுக நகரத்தை இணைத்துக் கொள்ள திட்டமிடுகிறது சீனா.
இப்படி சீனாவிற்கு இலங்கையை அடகுவைத்த மஹிந்த-கோத்தபய அரசு, மறுமுனையில் சீனாவுக்கு எதிரான இதர நாட்டு ஆளும் வர்க்கங்களின் மூலதன நுழைவை கட்டுப்படுத்தவும் முயற்சித்தது.
“அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் மற்றும் இந்திய மேலாதிக்கவாதிகளின் விசுவாசிகளான மைத்ரிபால சிறிசேனா – ரணில் விக்கிரமசிங்க அரசு, கடந்த 2019−ம் ஆண்டு மே மாதம் இலங்கை – இந்தியா – ஜப்பான் ஆகிய முத்தரப்பு நாடுகள் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் ‘‘கிழக்கு சரக்குப் பெட்டக முனையம்’’ கட்டுவதற்காக திட்டத்தைப் போட்டுக் கொண்டது. ஆனால், ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் அத்திட்டத்தை கோத்தபய அரசு ரத்து செய்தது.” – மேற்சொன்ன கட்டுரை.
மஹிந்த-கோத்தபய அரசின் இத்தீவிர சீன சாய்வுப் போக்கைத் தடுத்து, தனது மேலாதிக்க நோக்கத்திற்கு பணியவைப்பதற்காக அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் இலங்கையின் அந்நிய செலாவணி நெருக்கடியை தீவிரமாக்கின. மறுகாலனியாக்கக் கொள்கைகள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அந்நாட்டின் பொருளாதாரமே அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டது. இந்த குடுமிதான் இராஜபக்சேக்களை பணியவைப்பதற்கான கருவியாக வாய்த்தது.
பொருளாதார நெருக்கடியை ஒட்டி வெகுஜன முதலாளித்துவ பத்திரிகைகள் எழுதியதைப் போல, இலங்கையின் பொருளாதாரம் சுற்றுலாவை மட்டுமே முதன்மைப் படுத்தி இயங்கவில்லை. ஆயத்த ஆடைகள், பீங்கான் பொருட்கள், இரப்பர் ஆகியவை இலங்கையின் ஜி.டி.பி.யில் முக்கிய பங்குவகிக்கூடிய உற்பத்தித் தொழில்கள். இவைகள் ஏற்றுமதிக்காகவே உற்பத்தி செய்யப்படுபவை.
இலங்கையின் சந்தை – அதாவது அந்நாட்டின் இந்த உற்பத்திப் பொருட்களை மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்யக்கூடிய முதல் இரண்டு நாடுகள் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனுமே. எனவேதான் வழக்கமாக வழங்கிவரும் இறக்குமதி வரிச் சலுகையை (ஜி.எஸ்.பி) ஐரோப்பிய யூனியன் இரத்துசெய்தமை, அந்நிய செலாவணி நெருக்கடியைத் தீவிரமாக்கியது.
இருப்பினும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் அழுத்தத்திற்கு மஹிந்த-கோத்தபய அரசு தொடக்கத்திலேயே பணிந்துவிடவில்லை.
‘‘பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய சர்வதேச நாணய நிதியத்தை (ஐ.எம்.எஃப்) அணுகுமாறு ஆளுங்கட்சிக்கு யோசனை கூறுகிறார், முன்னாள் பிரதமரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரம சிங்கே. சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கிடைக்க முடியும்; ஆனால், சமூக மட்டத்தில் பல பிரச்சினைகள் தோற்றம் பெறும். நாணய நிதியத்தின் நிபந்தனைகள் தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. ஆகையால் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என்று இதற்கு பதிலளித்திருக்கிறார் மத்திய வங்கி ஆளுநர் கப்ரால்.” – மேற்சொன்ன கட்டுரை. (‘நிதியமைச்சர்’ என்று தவறாக இருந்ததை, ‘மத்திய வங்கி ஆளுநர்’ என்று திருத்தி சரிப்படுத்தியுள்ளோம்.)
ஆனால், கடைசிவரை இராஜபக்சே கும்பல் தன்னுடைய நிலையை தொடரமுடியவில்லை. ஏப்ரல் மாதம் முதலாக, பிரதமரும் அதிபரும் பதவிவிலகவேண்டும் எனக்கோரி மக்கள் போராட்டம் தீவிரமானது. அந்நிய செலாவணி பற்றாக்குறையை எதிர்கொள்ள, ஐ.எம்.எஃப்-ஐ விட்டால் வேறு வழியில்லை என்ற நிலையிலும் தங்களுடைய பதவியை காப்பாற்றிக் கொள்ளவதற்காகவும் அமெரிக்காவிடமே சரணடந்தது இராஜபக்சே கும்பல்.
இவ்விசயம் குறித்து “புரட்சிகரக் கட்சிக்காக ஏங்கும் இலங்கை” என்ற தலைப்பில், பு.ஜ. சார்பாக வினவு தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையில் சுருக்கமாக விளக்கியிருந்தோம்.
“பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக, ஐ.எம்.எஃப்.யிடம் கடன் வாங்க வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் யோசனையை தொடக்கத்தில் ஏற்காத மஹிந்த ராஜபக்சே, பின்னர் தானே ஐ.எம்.எஃப்.யிடம் பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அமைத்தார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த சீன விசுவாசியும் ராஜபக்சேவின் நெருங்கிய நண்பருமான அஜித் நிவார்டு கப்ரால் வெளியேற்றப்பட்டு முன்னாள் ஐ.எம்.எஃப் நிர்வாகியான நந்தலால் வீரசிங்கே ஆளுநராக நியமிக்கப்பட்டார். நீக்கப்பட்ட அஜித் நிவார்டு கப்ரால் ஐ.எம்.எஃப்.யிடம் கடன் வாங்குவதை கடுமையாக எதிர்த்தவர்; சீனாவிடம் கடன் பெறுவதை ஊக்குவித்தவர் ஆவார்.
“குடும்ப ஆட்சி”, “ஊழல் ஆட்சி” என்று மக்கள் மத்தியில் தமக்குள்ள அவப்பெயரை போக்குவதற்காக, ‘பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள’ என்ற பெயரில் ஏப்ரல் 18 அன்று அமைச்சரவையை புதுப்பித்தார் மஹிந்த. இதற்குமுன் அமைச்சர்களாக இருந்த சமல் ராஜபக்சே, மஹிந்தவின் மகன் நமல் ராஜபக்சே உள்ளிட்ட ராஜபக்சே குடும்பத்தினர் நீக்கப்பட்டு 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவையை அமைத்தார்.
நாடாளுமன்றக் கூட்டத்தில், ஐ.எம்.எஃப்.யிடம் கடன்பெற தாமதித்தது தவறுதான் என்றும் தம்முடைய சில தவறான முடிவுகள் காரணமாகவே நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் சரணடைந்தார் மஹிந்த.
ஆனால், இந்த நாடகங்கள் எதையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. பிரதமரும் அதிபரும் பதவி விலகக் கோரிய போராட்டங்கள் தொடர்ந்த படியே இருந்தன.
சரணடைந்தாலும், ஆள்வதற்குரிய தார்மீக ஆதரவை மக்களிடம் இழந்துவிட்டபடியாலும் முழுமையாக ராஜபக்சே கும்பலை நம்பத் தயாராக இல்லாததாலும் அமெரிக்காவும் ராஜபக்சேவுக்கு உதவவில்லை. ஐ.எம்.எஃப் உடன் நடந்த பேச்சுவார்த்தையில், 300 முதல் 600 மில்லியன் டாலர்கள் வரை தருவதாக ஒப்புக் கொண்டாலும் ராஜபக்சே பதவி விலகி ஓடும் வரை நிதியை விடுவிக்கவில்லை. இதன் மூலம் நெருக்கடியை மென்மேலும் தீவிரப்படுத்தியது அமெரிக்கா.” – மேற்கூறிய கட்டுரை.
000
தற்போது, அமெரிக்காவின் திட்டப்படி அனைத்தும் இனிதே முடிந்து, அமெரிக்க அடிவருடியான இரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். அவரை பதவியில் அமர்த்திய அடுத்த சில நொடிகளிலேயே பங்குச் சந்தைகள் திடீர் ஏற்றத்தை சந்தித்தன; இலங்கைக்கு 5 பில்லியன் டாலர்களை தருவதாக ஒப்புக்கொண்டிருந்த ஜப்பான், உடனடியாக 2 பில்லியன் டாலர்களை விடுவித்தது. அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக 600 மில்லியன் டாலர்களை இலங்கைக்கு வழங்க உலக வங்கி ஒப்புதல் தந்துள்ளது. இவற்றையெல்லாம் சொல்லி, ‘மாற்றங்களைக் கொண்டுவரும் அரசியல் ஞானி’ என்று இரணிலை மெச்சிப் புகழ்கின்றன ஆளும் வர்க்க ஊடகங்கள்.
அமெரிக்கா தலைமையிலான ஏகாபத்தியங்கள், தற்போது அடுத்தகட்ட நகர்வில் உள்ளன. ஒன்று இரணிலின் ஆட்சியை உறுப்படுத்துவது. இரண்டாவது, மக்கள் போராட்டங்களை மெல்ல மெல்ல வடியவைப்பது.
தன்னுடைய கட்சியில் தான் மட்டுமே எம்.பி.யாக – அதுவும் நியமன எம்.பி.யாக உள்ளார் இரணில். இந்நிலையில், ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டுமென்றால் குதிரை பேரங்களின் மூலம் பிற கட்சி எம்.பி.க்களை அவர் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக திரட்டுவது அவசியமாக உள்ளது. இம்முயற்சியில் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கிறது.
மே 20 ஆம் தேதி அளவில், இரணில் தலைமையிலான அரசாங்கத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 13 நபர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவற்றுள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த ஹரின், மனுச நாணயக்கார ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர்களது கட்சி அறிவித்துள்ளது. “அமைச்சரவையில் அங்கம் வகிப்பதில்லை” என்ற கட்சியின் முடிவை மீறி அவர்கள் செயல்பட்டுள்ளார்கள் என்கிறார் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. இதே காரணத்திற்காக, இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி செல்வா ஆகியோர் மீதும் அவர்களது கட்சி நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.
அரசாங்கத்தில் இணையவில்லை என்றாலும் பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக, பிரதமராக பதவியேற்றுள்ள இரணிலின் நடவடிக்கைகளுக்கு ‘வெளியிலிருந்து ஆதரவு தெரிவிப்போம்’ என்பதுதான் அனைத்து எதிர்க்கட்சிகளது நிலைப்பாடாக உள்ளது. அதாவது, நாட்டை ஐ.எம்.எஃப்.யிடம் அடகுவைக்கும் முயற்சிக்கு இந்த துரோகிகள் அனைவரும் உடந்தை.
இருப்பினும், கோத்தபயவை அதிபராக வைத்துக் கொண்டு, இரணிலின் ஆட்சி தொடர்வதை மக்கள் விரும்பவில்லை; இரணில், இராஜபக்சேக்களை மறைமுகமாக பாதுகாக்கிறார் என்று கருதுகிறார்கள்.
எனவேதான் நேரடியாக ஆட்சியில் பங்கெடுத்துக் கொள்ள அஞ்சி, பொதுத்தேர்தலை கோருகிறார்கள் எதிர்க்கட்சிகள். இழுபறிகளும் குதிரை பேரங்களும் முடிய இன்னும் சில நாட்கள் ஆகலாம்.
The bulldozer that demolishes the homes of Islamists today;
Tomorrow will crush the lives of all people!
Let’s get on the field against saffron fascist bulldozers!
Let us stand shoulder to shoulder in support of the affected Islamic people!
Press release
Last Friday (June 10), Islamists across India fought for the arrest of Nupur Sharma, a BJP spokesman who had angered Muslims by uttering poisonous remarks about the Prophet Muhammad.
A BJP spokesman who disturbing law and order has not been arrested yet. However, the BJP state governments launched a vicious attack on the people who fought for his arrest. Two have been shot dead in Jharkhand and Yogi police crackdown heavy attack on fighting Muslims in Uttar Pradesh. The government has announced that the houses of Afrin Fatima, one of the student leaders of JNU University, will be demolished. The houses of many have also been demolished.
The last refuge for helpless people will be called law and court. The houses of the Islamic people are being demolished in the name of that law.
The media reported that “the house of the perpetrator of the violence was demolished; The houses of the masterminds of the violence are being demolished ”. All the while justifying this unjust attack on the Islamic people.
The bulldozer that is smashing Islamic homes will smash the homes of all those who question against Modi tomorrow. It destroys the lives of others just as it destroys the lives of Muslims.
Let’s mobilize people against saffron-corporate fascism!
Let’s get on the field against saffron fascist bulldozers!
We will stand shoulder to shoulder in support of the affected Islamic people!
With Comradeship, Comrade Marudhu,
Spokesperson, Makkal Athikaram,
Tamil Nadu – Puducherry, 99623 66321.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து குஜராத் 2002 படுகொலை தொடர்பான உள்ளடக்கத்தை நீக்கிவிட்டது.
கோவிட்-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு “பாடநூல் பகுத்தறிவு” பயிற்சியின் ஒரு பகுதியாக 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து குஜராத் கலவரங்கள் பற்றிய உள்ளடக்கத்தை NCERT கைவிட்டுள்ளது.
“நக்சலைட் இயக்கத்தின்” வரலாறு குறித்த புத்தகத்தின் பக்கம் 105 மற்றும் “எமர்ஜென்சி தொடர்பான சர்ச்சைகள்” என்ற தலைப்பில் 113-117 பக்கங்களும் கைவிடப்பட்டுள்ளன.
கடந்த 2002 குஜராத் கலவரம் கோத்ராவில் ஒரு ரயில் பெட்டியில் இருந்த 58 இந்து யாத்ரீகர்கள் (கரசேவகர்கள்) எரித்துக் கொல்லப்பட்டதை அடுத்து வெடித்தது, இது பல மாதங்களாக நீடித்த பெரிய அளவிலான வன்முறைக்கு வழிவகுத்தது. அடுத்த சில மாதங்களில், 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர், 200-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர் மற்றும் கிட்டத்தட்ட 2,500 பேர் காயமடைந்தனர், அவர்களில் பெரும்பாலோர் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
பல்வேறு அறிஞர்கள், அமைப்புகள், முற்போக்காளர்கள் குஜராத் படுகொலையை முஸ்லீம் மக்களுக்கு எதிரான ஓர் ‘இனப்படுகொலை’ என்று கூறி, இந்த கொலைக்கு மோடி தலைமையிலான குஜராத் மாநில அரசும் உடந்தையாக இருந்துள்ளது என்று கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தனர். இருப்பினும், கடந்த 2012-ம் ஆண்டில், குஜராத் படுகொலையை பற்றி விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அரசின் உடந்தை மற்றும் மோடியின் பங்கு பற்றிய குற்றச்சாட்டுகளை நிராகரித்தது.
தற்போது குஜராத் கலவரம் தொடர்பான உள்ளடக்கத்தை 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தி நீக்குவது தொடர்பாக NCERT-ன் குறிப்பில், நீக்குதல்கள் என்பது பகுத்தறிவு செயல்முறையின் ஒரு பகுதியாகும். கோவிட்-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் மீதான உள்ளடக்கச் சுமையைக் குறைக்க வேண்டியது அவசியம். தேசிய கல்விக் கொள்கை-2020 இதையே வலியுறுத்துகிறது. இந்தப் பின்னணியில், அனைத்து வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களை பகுத்தறிவுபடுத்தும் முயற்சியை என்.சி.இ.ஆர்.டி மேற்கொண்டுள்ளது.
“குஜராத் கலவரம், அரசு இயந்திரம் மதவெறிக்கு ஆளாகிறது என்பதைக் காட்டுகிறது. குஜராத்தைப் போலவே, அரசியல் நோக்கங்களுக்காக மத உணர்வுகளைப் பயன்படுத்துவதில் உள்ள ஆபத்துகள் குறித்து நம்மை எச்சரிக்கின்றன. இது ஜனநாயக அரசியலுக்கு அச்சுறுத்தலாக உள்ளது” என்று நீக்கப்பட்ட பத்திகளில் ஒன்று கூறுகிறது.
அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், “(குஜராத்) முதலமைச்சருக்கு அவர் சொன்ன ஒரு செய்தி, அவர் ‘ராஜ தர்மத்தை’பின்பற்ற வேண்டும் என்பதுதான். “ஒரு ஆட்சியாளர் தனது குடிமக்களிடையே சாதி, மதம் மற்றும் மதத்தின் அடிப்படையில் எந்த பாகுபாடும் காட்டக் கூடாது” என்று வாஜ்பாய் கூறியதாக அது மேற்கோளிட்டுள்ளது.
குஜராத் கலவரத்தை பற்றிய உண்மைகளில் சிலவற்றை மட்டுமே பாடத்திட்டத்தில் இருந்து வந்தது. அதுவும் தற்போது காவி பாசிஸ்டுகளால் பொருத்துக்கொள்ள முடியவில்லை போலும். தனக்கு சாதகமான வரலாறுகளை தவிர மற்ற வரலாறுகளை முற்றிலும் மாற்றியமைக்கும் வேலையில் இறங்கியுள்ளது சங் பரிவார கும்பல். வீரம், தியாகம், பகுத்தறிவு பாடங்களை நீக்கிவிட்டு, புராணக்குப்பைகளையும், சாதிய பாகுபாடும் பெண்ணடிமை தனம் நிறைந்த பாடங்களை திணித்து வருகிறது.
சங் பரிவார கும்பலின் குஜராத் கலவரம், கோத்ரா ரயில் எறிப்பு, முஸ்லீம் மக்கள் மீதான கலவரங்களை, காவி பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை மாணவர்கள் இளைஞர்களுக்கு திரைகிழித்து காட்டவேண்டும். சங் பரிவாரத்திற்கு எதிரான பகுத்தறிவு, புரட்சிகர, கம்யூனிச சிந்தனைகளை மாணவர்கள் இளைஞர்கள் மனதில் விதைக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
பி.பி.சி இணையதளத்தில் “கடன் செயலி மோசடி : கடன் வாங்கி விட்டு உயிர் பயத்தில் வாழும் இந்தியர்கள்’’ என்ற தலைப்பில் ஜூன் 9, அன்று ஒரு செய்தி வெளியிட்டிருந்தனர். அதில், பூனேவில் உள்ள ராஜ் என்பவர் ஆன்லைன் செயலியைப் பயன்படுத்தி கடந்த மார்ச் மாதம் உடனடிக் கடன் பெற்றுள்ளார். அதற்காக அவர்கள் சொல்லும் ஒரு செயலியை அவர் தனது செல்பேசியில் தரவிறக்கம் செய்துள்ளார். அவர்கள் கேட்கும் தன்னுடைய அடையாள ஆவணங்களையும், அவர்கள் கேட்கும் அனைத்திற்கும் அனுமதி அளித்து உள்ளார். அதன் பின்னர், ரூ.5,000 கடன் கேட்டுள்ளார். அவர் கேட்ட தொகையில் 70% தான் கிடைத்துள்ளது. மீதம் 30% “பிராசஸிங்’’ கட்டணம் என அவர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். இருப்பினும், உடனடியாகப் பணம் கிடைத்துள்ளது.
அதன் பின்னர் 3 நாட்களில் உடனடியாக மூன்று மடங்கு பணத்தைக் கட்ட வேண்டும் என்று அந்தக் கடன் செயலி நிறுவனத்திலிருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், உங்களது குடும்பத்தைத் தொடர்பு கொள்வோம் அல்லது நீங்கள் வேலை செய்யுமிடத்தைத் தொடர்பு கொள்வோம். இது உங்களது கௌரவத்துக்கு இழுக்காக அமையும்.
மேலும், நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் உங்களைக் கருப்புப் பட்டியலில் வைக்குமாறு கோருவோம். எனவே, இந்த எச்சரிக்கைகளை உணர்ந்து உடனடியாகக் கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்துங்கள் என்று அக்கும்பலால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், உன் தொலைபேசித் தொடர்பில் உள்ள அனைவருக்கும் உன் மனைவியின் போட்டோவை ஆபாசமாக மாற்றி அனுப்புவோம் என மிரட்டத் தொடங்கியுள்ளனர்.
இவற்றைக் கண்டு பீதியடைந்த அவர் போலீசுத் துறையிடம் செல்லவும் பயந்துள்ளார். ஏனென்றால், அவர்கள் கூறும் செயலியை அவர் தனது செல்பேசியில் தரவிறக்கம் செய்யும் போதே, அவருடைய அனைத்துத் தரவுகளையும் (தொடர்பு எண்கள், கேலரி ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்கள்) இந்தக் கடன் வழங்கும் மோசடி கும்பல் தரவிறக்கம் செய்து கொண்டது. அவற்றை வைத்து அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து மிரட்ட முடியும்.
ஒரு செயலியில் இருந்து வாங்கிய கடனை திருப்பி தருமாறு மிரட்டல்விடும் நேரத்தில், வேறு ஒரு செயலி கடன் தருவதாக அவரிடம் விளம்பரம் செய்யும். அதிலும் கடன் பெற்று முன்பு கடன் வாங்கிய செயலிக்கு கட்டணம் செலுத்தியுள்ளார் ராஜ். அப்படி பல செயலிகளில் கடன் வாங்க வைத்து கூடுதல் பணம் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது போலி கடன் செயலில் மாஃபியா கும்பல்.
இப்போது அவரது கடன் தொகையானது, ரூ. 35,000 அளவுக்கு அதிகரித்துள்ளது. தன் மனைவியின் நகைகளை விற்று கடன்களை அடைத்துள்ளார். ஆனாலும் மிரட்டல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. “அவர்கள் என்னை உயிரோடு விடமாட்டார்கள்’’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறார் ராஜ்.
இதேபோன்ற போலி கடன் செயலியால் பாதிக்கப்பட்ட சந்தீப் கோர்கோன்கர் என்பவருக்கு மிரட்டல் விடுத்த கடன் செயலி கும்பல், அவரது புகைப்படங்களை நிர்வாணமாக மார்ஃபிங் செய்து 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு பகிர்ந்துள்ளது. இதனால் மன உலைச்சளுக்கு ஆளான சந்தீப் கடந்த மே 7 அன்று தற்கொலை செய்து கொண்டார். இதேபோல், செங்கல்பட்டு – மதுராந்தகம் அருகே ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கிய வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இப்படி எத்தனை பேர் பலியாகியுள்ளார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
இத்தகைய கடன் மோசடி செயலிகள் தற்போது புற்றீசல்கள் போலப் பெருகிவிட்டன. கடந்த ஜனவரி 1, 2020 முதல் மார்ச் 31, 2021 வரை இந்திய ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில், 600 சட்ட விரோத கடன் செயலிகள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, மாகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து மட்டும் இத்தகைய மோசடி நிறுவனங்களைப் பற்றி 572 புகார்கள் ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளன.
போலி கடன் வழங்கும் செயலிகளைக் கட்டுப்படுத்த முடியாத இந்திய அரசானது, இது போன்ற போலி செயலிகளை “கூகுள் பிளேஸ்டோர்”-லிருந்து நீக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு அறிவுறுத்தியது. இதன்படி கடந்த ஆண்டில் 500 செயலிகளுக்கு மேல் கூகுள் நிறுவனமும் நீக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்தது. ஆனாலும், மோசடி செயலிகள் புதுப்புது பெயர்களில் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன.
ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகள் மட்டுமல்லாது, ஆன்லைன் சூதாட்டம் (ரம்மி), ஆபாச இணையதளங்கள், மாணவர்கள் – இளைஞர்களை அடிமையாக்கும் ஆன்லைன் வீடியோ கேம்கள் முதலானவற்றால் இன்று ஒட்டுமொத்த சமுதாயமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு சீரழிந்துக் கொண்டிருக்கிறது. இதனால் பல குடும்பங்கள் வீதியில் நிற்கின்றன. பல குடும்பங்கள் அவமானத்தால் தற்கொலை செய்து கொள்கின்றன.
ஆன்லைன் சூதாட்டத் தடைக்கான அவசரச் சட்டம் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டது. உடனே ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் இதற்கெதிராக வழக்கு தொடுத்தன. இதை விசாரித்த உயர் நீதிமன்றமும் “ஆன்லைன் ரம்மி என்பது ஒரு சூதாட்டம் அல்ல; அது ஒரு திறன் சார்ந்த விளையாட்டு; இதைத் தடுக்க முடியாது; ஒழுங்குபடுத்தத்தான் முடியும்’’ என்று கூறி ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என தீர்ப்பு அளித்தது.
மக்களிடம் இத்தகைய மோசடி செயலிகள், சூதாட்டங்களுக்கு எதிரான பொதுக்கருத்தும் குமுறலும் தீவிரமடையும்போது, அவற்றைத் தடுப்பதைப் போன்ற தோற்றத்தை அரசாங்கம் ஏற்படுத்துகிறது. ஆனால், கொல்லைப்புறமாக அதே மோசடி நிறுவனங்களை அரவணைத்துக் கொள்கிறது என்பதையே இத்தீர்ப்பு நிரூபித்துக் காட்டுகிறது.
இணைய தளத்தின் வழியாகப் பணப் பரிவர்த்தனை நடப்பதென்பது, தகவல் தொழில்நுட்பத் துறையில் நிகழ்ந்துள்ள ஒரு புதிய பாய்ச்சலின் விளைவாகும். இது, மூலதனம் வெகுவிரைவாக சுழல்வதற்கு வாய்ப்பை வழங்குகிறது. முதலாளித்துவ நிறுவனங்கள் இத்தகைய முறையில், பண பரிவர்த்தனை மட்டுமின்றி கடன் வழங்கவும் செய்கின்றன. இதில் யார் நேர்மையானவர், யார் போலி என்று கண்காணித்து கட்டுப்படுத்தும் அதிகாரம் இந்திய அரசாங்கத்துக்கு இல்லை. ஏற்கெனவே இருந்த பெயரளவிலான கட்டுப்பாடுகளும் தாராளமயத்துக்குப் பின்னர் கைவிடப்பட்டுள்ளன. இதனால், இவற்றைச் சாதகமாக்கிக் கொண்டு புற்றீசல்போல் பல்வேறு மோசடி நிறுவனங்கள் உருவாகி மக்களை ஏமாற்றி வருகின்றன.
அரசு வங்கிகளில் திரட்டப்பட்டுள்ள நமது சேமிப்புகளை எடுத்து, தனியார் முதலாளிகளுக்குக் கடன் கொடுத்து சேவை செய்வதுதான் தனியார்மயம் – தாராளமயம். பெரும் கடன்களை திருப்பிச் செலுத்தாமல் வாராகடன்களாக மாற்றி வருகின்றனர் கார்ப்பரேட் முதலாளிகள். பின்னர், இந்த வாராக்கடனைகளை வசூலிக்க இயலாது என்று தள்ளுபடி செய்கிறது அரசு.
தேக்குப் பண்ணைத் திட்டம், இறால் பண்ணைத் திட்டம், ஈமு கோழித் திட்டம் என்ற பெயரில் மோசடிகள் தொடர்ந்தாலும், இணையத்தில் ஆபாசக் காணொளிகள் ஏராளமாக நிரம்பி வழிந்து சமுதாயத்தைச் சீரழித்தாலும் அவற்றையெல்லாம் தடுக்க முடியாத இந்திய அரசாங்கம், கடன் வழங்கும் மோசடி நிறுவனங்களை மட்டும் எப்படி தடுக்கும்?
ஏகாதிபத்திய சார்பு, தனியார் ஏகபோக முதலாளித்துவக் கொள்ளைக்கு ஆதரவு என்பதற்குப் பதிலாக, மக்கள் நலனையும் கொண்ட ஒரு அரசாங்கம்தான் நமக்குத் தேவை. ஆன்லைன் மோசடிகளையும் சூதாட்டங்களையும் தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்ட அரசாங்கம்தான் நமக்குத் தேவை. மோசடிகளையும் தில்லு முல்லுகளையும் கொள்ளையையும் உழைக்கும் மக்களின் நேரடிக் கண்காணிப்பில் வைத்து இயங்கக் கூடிய ஒரு மக்கள் அரசாங்கம்தான் நமக்குத் தேவை. அத்தகைய மக்கள் அரசாங்கத்தை நிறுவுவதற்கு, தனியார்மய – தாராளமயத்துக்கு எதிரான ஒரு புரட்சிப் போரில் உழைக்கும் மக்கள் இறங்குவதே இன்றைய முதல் தேவை.
இனவெறி பாசிஸ்டு மஹிந்த இராஜபக்சே பதவி விலகி, இரணில் அரியணை ஏறியிருப்பதன் மூலம் இலங்கை ஆட்சி மாற்றத்தை சந்தித்திருக்கிறது. எனினும் சீனாவிடம் நாட்டை அடகுகொடுத்த மஹிந்தவுக்கு, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் மற்றும் இந்திய ஆளும் வர்க்கங்களின் விசுவாச அடிமையான இரணில் எந்தவகையிலும் ஒரு மாற்று அல்ல.
ஐ.எம்.எஃப். – உலக வங்கியிடன் கடன்பெறுவதன் மூலம் அந்நிய செலாவணி நெருக்கடியை தீர்ப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார் இரணில். ஆனால், ஐ.எம்.எஃப். கொடுக்கும் கடன்களின் மூலம் நெருக்கடியை நிரந்தமாகத் தீர்த்துவிட முடியாது. 1950 ஆம் ஆண்டு ஐ.எம்.எஃப்-ல் இலங்கை உறுப்பினரானதில் இருந்து இதுவரை 16 முறை கடன்கள் வாங்கபட்டுள்ளன. தற்போது முயற்சித்துக் கொண்டிருப்பது 17 வது முறையாக கடன் பெறுவதற்கு.
ஒவ்வொரு முறை கடன் வாங்கும்போதும், “மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியை வெட்டு, வரிகள்-கட்டணங்களை உயர்த்து, அரசுத்துறைகளை தனியார்மயமாக்கு” – என ஐ.எம்.எஃப். விதித்த நிபந்தனைகள் இலங்கையை மென்மேலும் தீவிர மறுகாலனியாக்கத்துக்கே தள்ளியுள்ளன. இந்த முறை பெறப்போகும் கடனுக்காக, ஐ.எம்.எஃப். விதிக்கும் நிபந்தைகளை நிறைவேற்றத் தயாராக இருக்கிறார் இரணில். இது நெருக்கடியைத் தீர்ப்பதற்கான வழியில்லை, அதை நிரந்தரமாக்குவதற்கான வழி.
000
“தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம்” என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டதும், அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் ஓர் அங்கமாகவும்தான் இலங்கையில் பொருளாதார நெருக்கடி வெடித்திருக்கிறது என்று நாம் சொல்கிறோம். எனில், பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டெடுக்கும் வழி பற்றி பேச வேண்டுமானால், தவிர்க்கவியலாமல் நாம் மேற்கூறிய இரண்டு விசயங்களையும் தொடாமல் பேச முடியாது.
இலங்கை பிரிட்டிஷ் காலனியாக இருந்த காலந்தொட்டே, ஏகாதிபத்திய சுரண்டல்முறைக்கு ஏற்பதான் நாட்டின் பொருளாதாரம் கட்டியமைக்கப்பட்டு வந்துள்ளது. அதிகார மாற்றத்திற்கு பின், நிலவிய கொஞ்ச நஞ்ச தற்சார்பு பொருளாதாரமும் மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதன் போக்கில் புதைகுழிக்கு அனுப்பப்பட்டது.
சிறு-குறு வணிகம், விவசாயம் ஆகிய தேசிய உற்பத்தி துறைகள் புறக்கணிக்கப்பட்டு, உலகச் சந்தைக்கு வேண்டிய பொருட்களை உற்பத்தி செய்துகொடுக்கும் தொழிற்சாலையாக இலங்கையின் பொருளாதாரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விளைவு, இன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களைக்கூட அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சான்றாக, இலங்கையின் முதன்மை உற்பத்திப் பொருட்களான தேயிலை, இரப்பர், பீங்கான் பொருட்கள், ஆயத்த ஆடைகள் ஆகியவை ஏகாதிபத்திய நாடுகளின் தேவைக்காகவே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் வரும் அந்நிய செலாவணியை நம்பித்தான் இலங்கையின் பொருளாதாரமே இயங்குகிறது. இதைவிட்டால், சுற்றுலாத்துறை. உள்நாட்டுச் சந்தைக்கான உற்பத்தி என்பதே காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கொரோனா பொதுமுடக்கமானது, உற்பத்தி துறை மற்றும் ஏற்றுமதியிலும், சுற்றுலாத்துறையிலும் ஏற்படுத்திய பாதிப்பே பொருளாதார நெருக்கடியாக வெடித்துள்ளது.
இலங்கை உற்பத்தித் துறையின் ஏகாதிபத்திய சார்ப்புத் தன்மையே, சீனாவின் பக்கம் சாயும் இலங்கையை தடுப்பதற்கு அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களுக்கு உதவின. அதாவது இலங்கைப் பொருளாதாரத்தின் குடுமி ஏகாதிபத்தியங்களிடம் உள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவைதான் இலங்கையின் ஏற்றுமதிச் சந்தையில் முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன என்று குறிப்பிட்டிருந்தோம். ஆக, பொருளாதார மற்றும் வர்த்தகத் தடைகளை விதிப்பது, வர்த்தகச் சலுகைகளை இரத்துசெய்வது போன்ற நடவடிக்கைகளின் மூலம் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களால் இலங்கையின் பொருளாதாரத்தில் ஒரு நிலைகுலைவை ஏற்படுத்த முடியும். ஜி.எஸ்.பி. வரிச்சலுகைகளை இரத்துசெய்ததன் மூலம் ஐரோப்பிய யூனியன் அதைத்தான் செய்திருக்கிறது.
இந்த அடிமை நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தற்சார்பு பொருளாதாரத்தைக் கட்டியமைத்துக் கொள்வதே இலங்கைக்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும். ஆனால், ஒரு நீண்டகாலப் போக்கில் ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்திற்கு ஏற்ப கட்டமைக்கப்பட்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை, திடுமென ஒரு மாயவித்தையின் மூலம் மாற்றிவிடவும் முடியாது.
இன்றைய நிலைமையிலிருந்துப் பார்த்தால் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியவாசியப் பொருட்களை இறக்குமதி செய்யாமல் உணவுப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது; பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை இறக்குமதி செய்யவில்லையெனில், பொதுபோக்குவரத்தை இயக்குவது, மின் உற்பத்தியை மேற்கொள்வது ஆகியவை சாத்தியமில்லை; தொழிற்சாலைகளை இயக்குவதற்கு மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். இவற்றுக்கெல்லாம் அந்நிய செலாவணி – டாலர்கள் தேவை.
ஐ.எம்.எஃப். கொடுக்கும் கடனுதவிகளோ அல்லது இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட அந்நிய நாடுகளின் கடனுதவிகளோ – அனைத்தும் மேலாதிக்க நோக்கத்திற்காக, நிபந்தனையின் பெயரில் வழங்கபடுபவையே அன்றி, மனிதநேயத்தால் அல்ல.
அப்படி இருக்க, அந்நிய செலாவணி நெருக்கடியைச் சமாளிக்க அந்நாடுகளது நிபந்தைகளை ஏற்றுக் கொண்டு கடனுதவி பெறுவது, மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்வதாகவே இருக்கும். ஒடுக்கப்படும் நாடுகளுக்கு நிபந்தையில்லாமல் உதவுவதற்கு, முன்பு சோவியத் யூனியன் மற்றும் சோசலிச சீனா இருந்ததைப் போல, இன்று உலகில் ஒரு சோசலிச முகாமும் இல்லாத சூழல்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்கிற இந்த அரசமைப்பை வைத்துக் கொண்டே, ஒரு தேசியப் பொருளாதாரத்தை கட்டியமைப்பதும் சாத்தியமில்லை. ஐ.எம்.எஃப், உலக வங்கி மற்றும் பிற ஏகாதிபத்திய நாடுகள் தங்களது மேலாதிக்க நோக்கத்திற்காக வழங்கிய கடன்களை நிபந்தனை இல்லாமல் இரத்துசெய்ய வேண்டும்; அந்நாடுகளுடனான சமத்துவமற்ற அரசியல்-பொருளாதார உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும்; புரட்சியின் மூலம் நிலவுகின்ற ஏகாதிபத்திய சார்பு அரசாங்கத்தை தூக்கியெறிந்துவிட்டு, புரட்சிகர அரசாங்கத்தை நிறுவுவதன் மூலம் மட்டுமே அதை சாதிக்க முடியும். வேறு எளிதான தீர்வுகளோ, இடைக்கால தீர்வுகளோ எதுவும் இல்லை.
புரட்சிகர அரசாங்கம் நிறுவப்பட்டு அது தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைத்து வலுப்படுத்துவதற்கு நிச்சயம் சில காலம் ஆகும். அதுவரை இலங்கைக்கு பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் உதவுவது, சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் கடைமையாகும்.
உலகெங்கினும், அது தேச விடுதலைப் போராட்டமாக இருந்தாலும் சரி, ஜனநாயக அல்லது சோசலிசப் புரட்சிகளாக இருந்தாலும் சரி, சாரத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் அனைத்தும் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவு இல்லாமல் வெற்றி காணமுடியாது என்பது பொதுவிதி. இவ்விதி இலங்கைக்கும் பொருந்தும்.
குறைந்தபட்சம் தெற்காசிய பிராந்தியாத்தில் உள்ள நாடுகளின் உழைக்கும் மக்களாவது, இலங்கையின் புரட்சிகர அரசாங்கத்திற்கு நிபந்தனையில்லாமல் உதவும்படி தங்கள் நாட்டு அரசுகளுக்கு அழுத்தம் கொடுப்பதும், அதே நேரம் தங்கள் நாட்டு ஆளும் வர்க்கங்கள் இலங்கையின் மீது மேலாதிக்கம் செய்வதற்கு எதிராக குரலெழுப்புவதும் வேண்டும். குறிப்பாக, இந்தியாவில் உள்ள புரட்சிகர சக்திகளுக்கு இலங்கை விசயத்தில் கூடுதல் பொறுப்பு உள்ளது. உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர் இலங்கையர்களும் தங்கள் தாய்நாட்டின் விடுதலைக்காக, புரட்சிகர அரசாங்கத்தை ஆதரித்து குரல் எழுப்ப வேண்டும்.
000
மேற்கூறியவைகளை எல்லாம் நாம் கற்பனையில் பேசிக் கொண்டிருக்க முடியாது, இதனை சாதிக்க வேண்டுமென்று சொன்னால், அதற்கு உள்நாட்டில் (இலங்கை) மக்களை புரட்சிப் போராட்டங்களுக்கு அணிதிரட்டி, அதிகாரத்தை நிறுவும் வகையிலான வல்லமை மிக்க புரட்சிகரக் கட்சி இருப்பது அவசியமாகும்.
வருத்தத்திற்கு உரிய விசயம் என்னவென்றால், இலங்கை முழுக்க அனைத்து தரப்பு மக்களும் அரசாங்கத்தை எதிர்த்து வீதிக்கு வந்துள்ளார்கள்; ஆளும் வர்க்கம் பல்லாண்டுகாலமாக உருவாக்கி வைத்த, இன-மத பேதங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டு வர்க்க ஒற்றுமையோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள்; இராஜபக்சே ஏவிய குண்டர்களின் வன்முறைத் தாக்குதலுக்கு, அதேபாணியில் பதிலளித்துள்ளார்கள்; இவ்வாறு புரட்சிகர நெருக்கடியும் மக்கள் எழுச்சியும் இருந்தபோதும், அது ஒரு புரட்சியைத் தோற்றுவிக்க முடியவில்லை.
காரணம், இலங்கையில் மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிகரக் கட்சியொன்று இல்லாத நிலைதான். உலகெங்கும்கூட இன்றைக்கு அதுதான் நிலைமை.
பொருளாதார நெருக்கடி, மக்களின் வாழ்நிலையை மிகப்பெரிய அளவில் கேள்விக்குள்ளாக்கியுள்ளது; ஆளும் கட்சி உள்ளிட்டு அனைத்து ஓட்டுக் கட்சிகளின் மீதும் மக்கள் நம்பிக்கையின்மையையும் கோபத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், மக்களை அணிதிரட்டி அரசியல் படுத்தக்கூடிய புரட்சிகரக் கட்சியொன்று இல்லாமல், நெருக்கடிக்கான அரசியல் பொருளாதார காரணத்தையோ, தீர்வுகளையோ மக்கள் தன்னெழுச்சியாக உணர்ந்துகொண்டுவிட முடியாது.
உழைக்கும் மக்களின் முன்னணிப் படையான புரட்சிகரக் கட்சி இல்லாது போனால், அது தன்னெழுச்சியான மக்கள்திரள் போராட்டங்களில் தலையிட்டு செல்வாக்கு செலுத்துமளவிற்கான மக்கள் அடித்தளம் கொண்ட கட்சியாக இல்லாது போனால், எத்தகைய புரட்சிகர நெருக்கடி வெடித்தாலும் அது ஆளும் வர்க்கங்களுக்கு எந்தவகையிலும் ஊறுவிளைவிக்காது.
மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் ஓர் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரலாம், சில சலுகைகளைப் பெற்றுத்தரலாம், ஆளும் வர்க்கங்களை தற்காலிகமாக தங்கள் திட்டங்களிலிருந்து பின்வாங்க வைக்கலாம் – ஆனால், ஆடுகளத்தை தீர்மானிப்பது அவர்களாகவே இருப்பார்கள். துனிசியா, எகிப்து, லிபியா, ஏமன் போன்ற நாடுகளில் சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக வெடித்த ‘அரபு வசந்தத்தின்’ தோல்விகள் நமக்கு கூறும் பாடமும் அதுதான்.
இலங்கையின் மக்கள் எழுச்சி எவ்வளவு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தபோதும், “இராஜபக்சே கும்பல் பதவி விலக வேண்டும்” என்ற கோரிக்கைக்கு அப்பால் செல்லவில்லை. தற்போது தொடரும் போராட்டங்களில்கூட கோத்தபயவும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையே முதன்மையாக இருக்கிறது. மக்கள் எழுச்சி கொடுத்த நெருக்கடியை, சீன ஆதரவு இராஜபக்சே கும்பலை தூக்கியெறிந்துவிட்டு, தனது பொம்மை ஆட்சியை கொண்டுவர நினைத்த அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களே சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன என்பதுதான் துயரம்.
ஆகவே, இலங்கையில் உள்ள புரட்சிகர-ஜனநாயக சக்திகள், நாட்டுப் பற்றாளர்கள் அனைவரும் இந்த தருணத்தில் கவனம் செலுத்த வேண்டியது, தங்கள் நாட்டு உழைக்கும் மக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய முன்னணிப் படையை – மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிகர கட்சியை கட்டியமைக்கும் பணியைப் பற்றித்தான். அதுவொன்றுதான் ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து இலங்கையை விடுவிக்கும் மந்திரக்கோல்!
இசுலாமியர்களை தனிமைப்படுத்தித் தாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.
இசுலாமிய மக்கள் இறைத்தூதராகக் கருதும் முகமது நபியை இழிவுபடுத்திப் பேசி, ஒட்டுமொத்த இசுலாமிய சமூகத்தையும் வீதிக்கு அழைத்துவந்துவிட்டார்கள் காவி பாசிஸ்டுகள். இவ்விவகாரத்தில், உலக இசுலாமிய நாடுகள் அனைத்தும் மோடி அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றன.
எதிர்ப்புகளின் அழுத்தம் காரணமாக, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் நூபுர் ஷர்மா, கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதே கருத்தை டிவிட்டரில் பதிவிட்ட பா.ஜ.க டெல்லி ஊடகப் பிரிவின் தலைவர் நவீன் குமார் ஜிண்டால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
ஜீன் 5-ம் தேதி அன்று கத்தார், ஈரான், குவைத் ஆகிய நாடுகள், இந்திய தூதர்களை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்ததோடு, மோடியை பொதுமன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளன. மேலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி உள்ளிட்டு 15 நாடுகள் மோடி அரசுக்கு வெளிப்படையாக தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
ஆனால், இசுலாமிய அரசுகளின் கண்டனங்கள் எவையும் உள்நாட்டில் இசுலாமியர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க செலுத்தி வரும் ஒடுக்குமுறையை தற்காலிகமாகக் கூட நிறுத்திவிடவில்லை. மாறாக, டெல்லி, உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் என பல மாநிலங்களிலும் மோடி அரசை எதிர்த்துப் போராடும் இசுலாமியர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன.
ஜூன் 3-ம் தேதி கான்பூரில் நடைபெற்ற கடையடைப்பு மற்றும் அமைதிப் பேரணியின்போது, “இசுலாமியர்கள் கல்லை விட்டெறிந்து, கலவரம் செய்தார்கள்” என்றுகூறி, காத்திருந்த வெறிநாயாய் போராட்டத்தின் மீது பாய்ந்து குதறியது உ.பி. போலீசு; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவுசெய்து, 50-க்கு மேற்பட்ட அப்பாவி இசுலாமியர்களை சிறைவைத்துள்ளது.
கேமராவில் பதிவான போராட்டக்காரர்களின் முகத்தை, நகரம் முழுவதும் “கலவரக்காரர்கள்” என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது உ.பி போலீசு. “கலவரக்காரர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளை, சொத்து பறிமுதல் சட்டத்தின்கீழ் இடிப்போம்” என்று அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.
ஜார்க்கண்டில் நடைபெற்ற போராட்டத்தில், போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; 10 பேர் படுகாயமுற்றிருக்கிறார்கள். போரில் எதிரிகளை அணுகுவதைப்போல, இசுலாமியர்களை அணுகுகிறது மோடி அரசு.
பா.ஜ.க.வை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் ஓட்டுக் கட்சிகளோ, இசுலாமிய நாடுகள் கண்டனம் தெரிவிக்கத் தொடங்கிய பிறகே, சம்பிரதாய அறிக்கைகள் விட ஆரம்பித்தார்கள். அதுவரை கள்ள மவுனம் காத்தார்கள்.
‘இசுலாமியர்கள் மட்டும் போராடுகிறார்கள்’, ‘இசுலாமிய நாடுகள் மட்டும்தான் கண்டனம் தெரிவிக்கின்றன’ என்று காவிகள் அம்மக்களை தனிமைப்படுத்தித் தாக்குதவற்கு அவர்கள் செய்துகொடுத்திருக்கும் வசதி அது. ஓட்டுப் பொறுக்குவதற்காக பா.ஜ.க.வை எதிர்த்து ஏகவசனம் பேசும் கட்சிகளின் உண்மை நிலைப்பாடு இதுதான் என்பது ஒவ்வொரு முறையும் அம்பலமாகிக் கொண்டிருக்கிறது.
இசுலாமியர்களை தனிமைப்படுத்தி ஒடுக்கும் காவி பாசிஸ்டுகளின் உத்தியை தவிடுபொடியாக்க வேண்டுமானால், மோடி அரசின் அரசியல்-பொருளாதாரத் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களையும் போராடும் இசுலாமியர்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கச் செய்ய வேண்டும். அக்கடமை புரட்சிகர-ஜனநாயக இயக்கங்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.