Thursday, August 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 166

இலங்கையின் விடுதலைக்குத் தேவை மக்கள் அடித்தளம் கொண்ட ஒரு புரட்சிகரக் கட்சி!

னவெறி பாசிஸ்டு மஹிந்த இராஜபக்சே பதவி விலகி, இரணில் அரியணை ஏறியிருப்பதன் மூலம் இலங்கை ஆட்சி மாற்றத்தை சந்தித்திருக்கிறது. எனினும் சீனாவிடம் நாட்டை அடகுகொடுத்த மஹிந்தவுக்கு, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் மற்றும் இந்திய ஆளும் வர்க்கங்களின் விசுவாச அடிமையான இரணில் எந்தவகையிலும் ஒரு மாற்று அல்ல.
ஐ.எம்.எஃப். – உலக வங்கியிடன் கடன்பெறுவதன் மூலம் அந்நிய செலாவணி நெருக்கடியை தீர்ப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார் இரணில். ஆனால், ஐ.எம்.எஃப். கொடுக்கும் கடன்களின் மூலம் நெருக்கடியை நிரந்தமாகத் தீர்த்துவிட முடியாது. 1950 ஆம் ஆண்டு ஐ.எம்.எஃப்-ல் இலங்கை உறுப்பினரானதில் இருந்து இதுவரை 16 முறை கடன்கள் வாங்கபட்டுள்ளன. தற்போது முயற்சித்துக் கொண்டிருப்பது 17 வது முறையாக கடன் பெறுவதற்கு.
ஒவ்வொரு முறை கடன் வாங்கும்போதும், “மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியை வெட்டு, வரிகள்-கட்டணங்களை உயர்த்து, அரசுத்துறைகளை தனியார்மயமாக்கு” – என ஐ.எம்.எஃப். விதித்த நிபந்தனைகள் இலங்கையை மென்மேலும் தீவிர மறுகாலனியாக்கத்துக்கே தள்ளியுள்ளன. இந்த முறை பெறப்போகும் கடனுக்காக, ஐ.எம்.எஃப். விதிக்கும் நிபந்தைகளை நிறைவேற்றத் தயாராக இருக்கிறார் இரணில். இது நெருக்கடியைத் தீர்ப்பதற்கான வழியில்லை, அதை நிரந்தரமாக்குவதற்கான வழி.
000
“தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம்” என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டதும், அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் ஓர் அங்கமாகவும்தான் இலங்கையில் பொருளாதார நெருக்கடி வெடித்திருக்கிறது என்று நாம் சொல்கிறோம். எனில், பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டெடுக்கும் வழி பற்றி பேச வேண்டுமானால், தவிர்க்கவியலாமல் நாம் மேற்கூறிய இரண்டு விசயங்களையும் தொடாமல் பேச முடியாது.
படிக்க :
♦ புரட்சிகர கட்சிக்காக ஏங்கும் இலங்கை மக்கள் போராட்டம் !
♦ இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும் ! | தோழர் வெற்றிவேல் செழியன் | வீடியோ
இலங்கை பிரிட்டிஷ் காலனியாக இருந்த காலந்தொட்டே, ஏகாதிபத்திய சுரண்டல்முறைக்கு ஏற்பதான் நாட்டின் பொருளாதாரம் கட்டியமைக்கப்பட்டு வந்துள்ளது. அதிகார மாற்றத்திற்கு பின், நிலவிய கொஞ்ச நஞ்ச தற்சார்பு பொருளாதாரமும் மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதன் போக்கில் புதைகுழிக்கு அனுப்பப்பட்டது.
சிறு-குறு வணிகம், விவசாயம் ஆகிய தேசிய உற்பத்தி துறைகள் புறக்கணிக்கப்பட்டு, உலகச் சந்தைக்கு வேண்டிய பொருட்களை உற்பத்தி செய்துகொடுக்கும் தொழிற்சாலையாக இலங்கையின் பொருளாதாரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விளைவு, இன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களைக்கூட அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சான்றாக, இலங்கையின் முதன்மை உற்பத்திப் பொருட்களான தேயிலை, இரப்பர், பீங்கான் பொருட்கள், ஆயத்த ஆடைகள் ஆகியவை ஏகாதிபத்திய நாடுகளின் தேவைக்காகவே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் வரும் அந்நிய செலாவணியை நம்பித்தான் இலங்கையின் பொருளாதாரமே இயங்குகிறது. இதைவிட்டால், சுற்றுலாத்துறை. உள்நாட்டுச் சந்தைக்கான உற்பத்தி என்பதே காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கொரோனா பொதுமுடக்கமானது, உற்பத்தி துறை மற்றும் ஏற்றுமதியிலும், சுற்றுலாத்துறையிலும் ஏற்படுத்திய பாதிப்பே பொருளாதார நெருக்கடியாக வெடித்துள்ளது.
இலங்கை உற்பத்தித் துறையின் ஏகாதிபத்திய சார்ப்புத் தன்மையே, சீனாவின் பக்கம் சாயும் இலங்கையை தடுப்பதற்கு அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களுக்கு உதவின. அதாவது இலங்கைப் பொருளாதாரத்தின் குடுமி ஏகாதிபத்தியங்களிடம் உள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவைதான் இலங்கையின் ஏற்றுமதிச் சந்தையில் முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன என்று குறிப்பிட்டிருந்தோம். ஆக, பொருளாதார மற்றும் வர்த்தகத் தடைகளை விதிப்பது, வர்த்தகச் சலுகைகளை இரத்துசெய்வது போன்ற நடவடிக்கைகளின் மூலம் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களால் இலங்கையின் பொருளாதாரத்தில் ஒரு நிலைகுலைவை ஏற்படுத்த முடியும். ஜி.எஸ்.பி. வரிச்சலுகைகளை இரத்துசெய்ததன் மூலம் ஐரோப்பிய யூனியன் அதைத்தான் செய்திருக்கிறது.
இந்த அடிமை நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தற்சார்பு பொருளாதாரத்தைக் கட்டியமைத்துக் கொள்வதே இலங்கைக்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும். ஆனால், ஒரு நீண்டகாலப் போக்கில் ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்திற்கு ஏற்ப கட்டமைக்கப்பட்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை, திடுமென ஒரு மாயவித்தையின் மூலம் மாற்றிவிடவும் முடியாது.
இன்றைய நிலைமையிலிருந்துப் பார்த்தால் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியவாசியப் பொருட்களை இறக்குமதி செய்யாமல் உணவுப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது; பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை இறக்குமதி செய்யவில்லையெனில், பொதுபோக்குவரத்தை இயக்குவது, மின் உற்பத்தியை மேற்கொள்வது ஆகியவை சாத்தியமில்லை; தொழிற்சாலைகளை இயக்குவதற்கு மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். இவற்றுக்கெல்லாம் அந்நிய செலாவணி – டாலர்கள் தேவை.
ஐ.எம்.எஃப். கொடுக்கும் கடனுதவிகளோ அல்லது இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட அந்நிய நாடுகளின் கடனுதவிகளோ – அனைத்தும் மேலாதிக்க நோக்கத்திற்காக, நிபந்தனையின் பெயரில் வழங்கபடுபவையே அன்றி, மனிதநேயத்தால் அல்ல.
அப்படி இருக்க, அந்நிய செலாவணி நெருக்கடியைச் சமாளிக்க அந்நாடுகளது நிபந்தைகளை ஏற்றுக் கொண்டு கடனுதவி பெறுவது, மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்வதாகவே இருக்கும். ஒடுக்கப்படும் நாடுகளுக்கு நிபந்தையில்லாமல் உதவுவதற்கு, முன்பு சோவியத் யூனியன் மற்றும் சோசலிச சீனா இருந்ததைப் போல, இன்று உலகில் ஒரு சோசலிச முகாமும் இல்லாத சூழல்.
 இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்கிற இந்த அரசமைப்பை வைத்துக் கொண்டே, ஒரு தேசியப் பொருளாதாரத்தை கட்டியமைப்பதும் சாத்தியமில்லை. ஐ.எம்.எஃப், உலக வங்கி மற்றும் பிற ஏகாதிபத்திய நாடுகள் தங்களது மேலாதிக்க நோக்கத்திற்காக வழங்கிய கடன்களை நிபந்தனை இல்லாமல் இரத்துசெய்ய வேண்டும்; அந்நாடுகளுடனான சமத்துவமற்ற அரசியல்-பொருளாதார உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும்; புரட்சியின் மூலம் நிலவுகின்ற ஏகாதிபத்திய சார்பு அரசாங்கத்தை தூக்கியெறிந்துவிட்டு, புரட்சிகர அரசாங்கத்தை நிறுவுவதன் மூலம் மட்டுமே அதை சாதிக்க முடியும். வேறு எளிதான தீர்வுகளோ, இடைக்கால தீர்வுகளோ எதுவும் இல்லை.
புரட்சிகர அரசாங்கம் நிறுவப்பட்டு அது தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைத்து வலுப்படுத்துவதற்கு நிச்சயம் சில காலம் ஆகும். அதுவரை இலங்கைக்கு பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் உதவுவது, சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் கடைமையாகும்.
உலகெங்கினும், அது தேச விடுதலைப் போராட்டமாக இருந்தாலும் சரி, ஜனநாயக அல்லது சோசலிசப் புரட்சிகளாக இருந்தாலும் சரி, சாரத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் அனைத்தும் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவு இல்லாமல் வெற்றி காணமுடியாது என்பது பொதுவிதி. இவ்விதி இலங்கைக்கும் பொருந்தும்.
குறைந்தபட்சம் தெற்காசிய பிராந்தியாத்தில் உள்ள நாடுகளின் உழைக்கும் மக்களாவது, இலங்கையின் புரட்சிகர அரசாங்கத்திற்கு நிபந்தனையில்லாமல் உதவும்படி தங்கள் நாட்டு அரசுகளுக்கு அழுத்தம் கொடுப்பதும், அதே நேரம் தங்கள் நாட்டு ஆளும் வர்க்கங்கள் இலங்கையின் மீது மேலாதிக்கம் செய்வதற்கு எதிராக குரலெழுப்புவதும் வேண்டும். குறிப்பாக, இந்தியாவில் உள்ள புரட்சிகர சக்திகளுக்கு இலங்கை விசயத்தில் கூடுதல் பொறுப்பு உள்ளது. உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர் இலங்கையர்களும் தங்கள் தாய்நாட்டின் விடுதலைக்காக, புரட்சிகர அரசாங்கத்தை ஆதரித்து குரல் எழுப்ப வேண்டும்.
000
மேற்கூறியவைகளை எல்லாம் நாம் கற்பனையில் பேசிக் கொண்டிருக்க முடியாது, இதனை சாதிக்க வேண்டுமென்று சொன்னால், அதற்கு உள்நாட்டில் (இலங்கை) மக்களை புரட்சிப் போராட்டங்களுக்கு அணிதிரட்டி, அதிகாரத்தை நிறுவும் வகையிலான வல்லமை மிக்க புரட்சிகரக் கட்சி இருப்பது அவசியமாகும்.
வருத்தத்திற்கு உரிய விசயம் என்னவென்றால், இலங்கை முழுக்க அனைத்து தரப்பு மக்களும் அரசாங்கத்தை எதிர்த்து வீதிக்கு வந்துள்ளார்கள்; ஆளும் வர்க்கம் பல்லாண்டுகாலமாக உருவாக்கி வைத்த, இன-மத பேதங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டு வர்க்க ஒற்றுமையோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள்; இராஜபக்சே ஏவிய குண்டர்களின் வன்முறைத் தாக்குதலுக்கு, அதேபாணியில் பதிலளித்துள்ளார்கள்; இவ்வாறு புரட்சிகர நெருக்கடியும் மக்கள் எழுச்சியும் இருந்தபோதும், அது ஒரு புரட்சியைத் தோற்றுவிக்க முடியவில்லை.
காரணம், இலங்கையில் மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிகரக் கட்சியொன்று இல்லாத நிலைதான். உலகெங்கும்கூட இன்றைக்கு அதுதான் நிலைமை.
பொருளாதார நெருக்கடி, மக்களின் வாழ்நிலையை மிகப்பெரிய அளவில் கேள்விக்குள்ளாக்கியுள்ளது; ஆளும் கட்சி உள்ளிட்டு அனைத்து ஓட்டுக் கட்சிகளின் மீதும் மக்கள் நம்பிக்கையின்மையையும் கோபத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், மக்களை அணிதிரட்டி அரசியல் படுத்தக்கூடிய புரட்சிகரக் கட்சியொன்று இல்லாமல், நெருக்கடிக்கான அரசியல் பொருளாதார காரணத்தையோ, தீர்வுகளையோ மக்கள் தன்னெழுச்சியாக உணர்ந்துகொண்டுவிட முடியாது.
உழைக்கும் மக்களின் முன்னணிப் படையான புரட்சிகரக் கட்சி இல்லாது போனால், அது தன்னெழுச்சியான மக்கள்திரள் போராட்டங்களில் தலையிட்டு செல்வாக்கு செலுத்துமளவிற்கான மக்கள் அடித்தளம் கொண்ட கட்சியாக இல்லாது போனால், எத்தகைய புரட்சிகர நெருக்கடி வெடித்தாலும் அது ஆளும் வர்க்கங்களுக்கு எந்தவகையிலும் ஊறுவிளைவிக்காது.
படிக்க :
♦ இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும் ! பாசிஸ்டுகள் வீழ்வர் ! மக்களே வெல்வர் ! | மக்கள் அதிகாரம்
♦ இலங்கை – இந்தியா மின் உற்பத்தி ஒப்பந்தம் : ஆதரவா? ஆதிக்கமா?
மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் ஓர் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரலாம், சில சலுகைகளைப் பெற்றுத்தரலாம், ஆளும் வர்க்கங்களை தற்காலிகமாக தங்கள் திட்டங்களிலிருந்து பின்வாங்க வைக்கலாம் – ஆனால், ஆடுகளத்தை தீர்மானிப்பது அவர்களாகவே இருப்பார்கள். துனிசியா, எகிப்து, லிபியா, ஏமன் போன்ற நாடுகளில் சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக வெடித்த ‘அரபு வசந்தத்தின்’ தோல்விகள் நமக்கு கூறும் பாடமும் அதுதான்.
இலங்கையின் மக்கள் எழுச்சி எவ்வளவு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தபோதும், “இராஜபக்சே கும்பல் பதவி விலக வேண்டும்” என்ற கோரிக்கைக்கு அப்பால் செல்லவில்லை. தற்போது தொடரும் போராட்டங்களில்கூட கோத்தபயவும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையே முதன்மையாக இருக்கிறது. மக்கள் எழுச்சி கொடுத்த நெருக்கடியை, சீன ஆதரவு இராஜபக்சே கும்பலை தூக்கியெறிந்துவிட்டு, தனது பொம்மை ஆட்சியை கொண்டுவர நினைத்த அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களே சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன என்பதுதான் துயரம்.
ஆகவே, இலங்கையில் உள்ள புரட்சிகர-ஜனநாயக சக்திகள், நாட்டுப் பற்றாளர்கள் அனைவரும் இந்த தருணத்தில் கவனம் செலுத்த வேண்டியது, தங்கள் நாட்டு உழைக்கும் மக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய முன்னணிப் படையை – மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிகர கட்சியை கட்டியமைக்கும் பணியைப் பற்றித்தான். அதுவொன்றுதான் ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து இலங்கையை விடுவிக்கும் மந்திரக்கோல்!

சந்திரசேகர்

இசுலாமியர்களை தனிமைப்படுத்தித் தாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.

சுலாமியர்களை தனிமைப்படுத்தித் தாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.
இசுலாமிய மக்கள் இறைத்தூதராகக் கருதும் முகமது நபியை இழிவுபடுத்திப் பேசி, ஒட்டுமொத்த இசுலாமிய சமூகத்தையும் வீதிக்கு அழைத்துவந்துவிட்டார்கள் காவி பாசிஸ்டுகள். இவ்விவகாரத்தில், உலக இசுலாமிய நாடுகள் அனைத்தும் மோடி அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றன.
எதிர்ப்புகளின் அழுத்தம் காரணமாக, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் நூபுர் ஷர்மா, கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதே கருத்தை டிவிட்டரில் பதிவிட்ட பா.ஜ.க டெல்லி ஊடகப் பிரிவின் தலைவர் நவீன் குமார் ஜிண்டால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
ஜீன் 5-ம் தேதி அன்று கத்தார், ஈரான், குவைத் ஆகிய நாடுகள், இந்திய தூதர்களை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்ததோடு, மோடியை பொதுமன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளன. மேலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி உள்ளிட்டு 15 நாடுகள் மோடி அரசுக்கு வெளிப்படையாக தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
படிக்க :
♦ புதிய ஜனநாயகம் – ஜூன் 2022 | அச்சு இதழ்
♦ யோகி ஆதித்யநாத்-ஐ எதிர்த்து சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டாலே கைது !
ஆனால், இசுலாமிய அரசுகளின் கண்டனங்கள் எவையும் உள்நாட்டில் இசுலாமியர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க செலுத்தி வரும் ஒடுக்குமுறையை தற்காலிகமாகக் கூட நிறுத்திவிடவில்லை. மாறாக, டெல்லி, உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் என பல மாநிலங்களிலும் மோடி அரசை எதிர்த்துப் போராடும் இசுலாமியர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன.
ஜூன் 3-ம் தேதி கான்பூரில் நடைபெற்ற கடையடைப்பு மற்றும் அமைதிப் பேரணியின்போது, “இசுலாமியர்கள் கல்லை விட்டெறிந்து, கலவரம் செய்தார்கள்” என்றுகூறி, காத்திருந்த வெறிநாயாய் போராட்டத்தின் மீது பாய்ந்து குதறியது உ.பி. போலீசு; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவுசெய்து, 50-க்கு மேற்பட்ட அப்பாவி இசுலாமியர்களை சிறைவைத்துள்ளது.
கேமராவில் பதிவான போராட்டக்காரர்களின் முகத்தை, நகரம் முழுவதும் “கலவரக்காரர்கள்” என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது உ.பி போலீசு. “கலவரக்காரர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளை, சொத்து பறிமுதல் சட்டத்தின்கீழ் இடிப்போம்” என்று அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.
ஜார்க்கண்டில் நடைபெற்ற போராட்டத்தில், போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; 10 பேர் படுகாயமுற்றிருக்கிறார்கள். போரில் எதிரிகளை அணுகுவதைப்போல, இசுலாமியர்களை அணுகுகிறது மோடி அரசு.
பா.ஜ.க.வை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் ஓட்டுக் கட்சிகளோ, இசுலாமிய நாடுகள் கண்டனம் தெரிவிக்கத் தொடங்கிய பிறகே, சம்பிரதாய அறிக்கைகள் விட ஆரம்பித்தார்கள். அதுவரை கள்ள மவுனம் காத்தார்கள்.
‘இசுலாமியர்கள் மட்டும் போராடுகிறார்கள்’, ‘இசுலாமிய நாடுகள் மட்டும்தான் கண்டனம் தெரிவிக்கின்றன’ என்று காவிகள் அம்மக்களை தனிமைப்படுத்தித் தாக்குதவற்கு அவர்கள் செய்துகொடுத்திருக்கும் வசதி அது. ஓட்டுப் பொறுக்குவதற்காக பா.ஜ.க.வை எதிர்த்து ஏகவசனம் பேசும் கட்சிகளின் உண்மை நிலைப்பாடு இதுதான் என்பது ஒவ்வொரு முறையும் அம்பலமாகிக் கொண்டிருக்கிறது.
இசுலாமியர்களை தனிமைப்படுத்தி ஒடுக்கும் காவி பாசிஸ்டுகளின் உத்தியை தவிடுபொடியாக்க வேண்டுமானால், மோடி அரசின் அரசியல்-பொருளாதாரத் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களையும் போராடும் இசுலாமியர்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கச் செய்ய வேண்டும். அக்கடமை புரட்சிகர-ஜனநாயக இயக்கங்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயகம் – ஜூன் 2022 | அச்சு இதழ்

ஜூன் இதழ்
புதிய ஜனநாயகத்தின் ஜூன் – 2022 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா- ரூ.240
இரண்டாண்டு சந்தா- ரூ.480
ஐந்தாண்டு சந்தா- ரூ.1,200
புதிய ஜனநாயகம் – ஜூன் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561
வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.
***
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :
தலையங்கம்இசுலாமியர்களை தனிமைப்படுத்தித் தாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.
♦ சிறப்புக் கட்டுரை : இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! (பாகம்-1)
♦ சிறப்புக் கட்டுரை : இலங்கையை குலுக்கிய உழைக்கும் மக்களின் பேரெழுச்சி !
♦ சிறப்புக் கட்டுரை : ஈழத் தமிழ் மக்களின் தன்னுரிமைக்கான வழி இனவாதமா? வர்க்கப் போராட்டமா?
♦ சிறப்புக் கட்டுரை : இலங்கையின் விடுதலைக்குத் தேவை மக்கள் அடித்தளம் கொண்ட ஒரு புரட்சிகரக் கட்சி!
♦ காசி முதல் கர்நாடகா வரை: தொடங்கியது இந்து ராஷ்டிரத்திற்கான கரசேவை!
தவறாமல் வாங்கிப் படியுங்கள் !! சந்தா செலுத்துங்கள் !

உ.பி : முஸ்லீம் மக்களை சித்திரவதை செய்யும் காவி போலீசு !

0
டந்த ஜூன் 10 அன்று இஸ்லாத்திற்கு எதிரான பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களின் கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றது. அதை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் கைதுகளும் பிற போலீஸ் நடவடிக்கைகளும் அரங்கேறியது.
ஜூன் 11 அன்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வெளிவந்தது. அது அதிகம் பகிரப்பட்டது. அதில், போலீஸ் காவலில் சில இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்டதை காட்சிப்படுத்தியது. வீடியோ சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி போலீசு நிலையத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
வீடியோவில் காணப்பட்டவர்களின் உறவினர்கள் அந்த வீடியோ உண்மையில் சஹரன்பூரிலிருந்து வந்ததாகக் கூறுகிறார்கள். இந்தக் கூற்றுக்களை போலீசுத்துறை தொடர்ந்து மறுத்து வந்த போதிலும் – வீடியோ சித்தரிப்பது போல – காவலில் தங்கள் உறவினர்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
படிக்க :
♦ யோகி ஆதித்யநாத்-ஐ எதிர்த்து சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டாலே கைது !
♦ உ.பி.யில் அரங்கேறும் பாசிசம் : காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த களமிறங்குவோம்! | வீடியோ
காவலில் வைத்து தாக்கப்பட்டவர்களில் ஒருவர் சஹாரன்பூரில் உள்ள பீர்காலியில் வசிக்கும் முகமது அலி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அலி போலீசுக்காவலில் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும், துன்புறுத்தப்பட்டதாகவும் அலியின் தாயார் கூறினார்.
வீடியோவில் உள்ள மற்றொரு நபர் முகமது சைஃப். சைஃப்பின் சகோதரி, “சிறையில் அவரை சந்தித்தபோது, ​​அவரது கைகள் வீங்கியிருப்பதையும், கால்களில் காயங்கள் இருந்ததையும் பார்த்தோம். அவர்களுக்கு தண்ணீர் மற்றும் சிகிச்சை மறுக்கப்படுகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த வைரலான வீடியோ கடந்த ஜூன் 11 அன்று ட்விட்டரில் வெளிவந்தது. இதை உத்தரப்பிரதேசத்தில் உள்ள தேவரியாவின் பா.ஜ.க எம்.எல்.ஏ ஷலப் திரிபாதி பகிர்ந்துள்ளார். இவர் உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தின் எம்.எல்.ஏ.வும் முன்னாள் ஊடக ஆலோசகராகவும் உள்ளார். தனது ட்விட்டர் பதிவு போலீசுத்துறையின் நடவடிக்கை போராட்டக்காரர்களுக்கு “எதிர்வினை பரிசு” என்று விவரிக்கிறது.

“ஒவ்வொரு உண்மையான இந்தியரும் குற்றவாளிகள், கலவரக்காரர்கள் மற்றும் தேசவிரோதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கொண்டாடிக்கொண்டே இருப்பேன்” என்று கூறுகிறார் திரிபாதி. திரிபாதியின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
போராட்டக்காரர்கள் மீது போலீசுத்துறை நடவடிக்கைக்கு ஆதரவு கருத்துக்களை கூறுவது திரிபாதி மட்டும் அல்ல. கடந்த ஜூன் 10 அன்று நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து, ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் மிருத்யுஞ்சய் குமார் ட்விட்டரில், “ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு சனிக்கிழமை வரும் என்பதை நினைவில் வையுங்கள்” என்று எழுதி, புல்டோசர் மூலம் கட்டிடத்தை இடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.
ஜூன் 10 அன்று நடந்த போராட்டங்கள் தொடர்பாக உத்தரப்பிரதேச போலீசுத்துறை சஹாரன்பூரில் இருந்து 80-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளது. மேலும் உத்தரப்பிரதேசம் முழுவதும் மொத்தம் 13 எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு முஸ்லீம் ஆண்களின் – முஸ்ஸாமில் மற்றும் 17 வயதான அப்துல் வக்கீர் – வீடுகள் கடந்த ஜூன் 11 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட ஒரு நாள் கழித்து இடிக்கப்பட்டன.
படிக்க :
♦ காவி பாசிச புல்டோசர்களுக்கு எதிராக களத்தில் இறங்குவோம் ! இஸ்லாமிய மக்களுக்கு தோள் கொடுப்போம் ! | மக்கள் அதிகாரம்
♦ ‘இந்தியா இந்துக்களுக்கே சொந்தம்’ – காவி பயங்கரவாதி பிரக்யா சிங் !
அப்துல்லின் சகோதரர் குல்பஹர், “போலீசு வரும்போது வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்தனர். ‘உன் சகோதரனைக் கூப்பிடு, இல்லையேல் உன் வீட்டின் மீது புல்டோசர் ஓட்டப்படும்’ என்று போலீசு மிரட்டியது. அவர் அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, சம்பவ இடத்துக்கு அதிகமான போலீஸ் வாகனங்கள் வந்தன. புல்டோசர் வந்து எங்கள் வீட்டை இடிக்க தொடங்கியது.” என்றார். அவர்களது சகோதரி, “அவர்கள் தாங்களாகவே முடிவெடுத்து நடவடிக்கை எடுக்கிறார்கள்” என்றார்.
எதிர்த்து பேசினாலோ, உரிமைக்காக போராடினாலோ இனி கொடுரமாக ஒடுக்கப்படுவாய் என்பதையே இந்த பாசிச அரசுகள் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல் மூலமும், அவர்களின் வீடுகள் இடிக்கப்படுவதன் மூலமும் நமக்கு உணர்த்துகிறது.
காவி – கார்ப்பரேட் பாசிச அரசு எந்திரத்தால் (புல்டோசரால்) ஒடுக்கப்படும் முஸ்லீம் மக்களுக்கு ஆதாரவாக அரணமைத்து நிற்க வேண்டியது நம் அனைவரின் கடமை. காவி புல்டோசர்களை நிர்மூலமாக்க பாசிச எதிர்ப்பு படையாய் களமிறங்குவோம்.

காளி

மாதிரிப் பள்ளிகளில் மெரிட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை : காசு இல்லாதவனுக்கு கல்வி இல்லை !

0
மிழகத்தில் மத்திய அரசு நிதி உதவியுடன் 32 மாவட்டங்களில் அரசு நடத்திவரும் மாதிரிப் பள்ளிகள் இயங்கி வருகிறது. வரும் 2022-23 கல்வியாண்டு முதல் அரசு நடத்திவரும் மாதிரிப் பள்ளிகளில், 9 முதல் 12-ம் வகுப்பு வரை மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
10-ம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர் 9-ம் வகுப்பிற்கான ஊரக திறனாய்வுத் தேர்வு – TRUST தேர்வு – மதிப்பெண்கள், 9-ம் வகுப்பிற்கான சேர்க்கப்படும் மாணவர் 8-ம் வகுப்பில் தேசிய வருவாய் வழித்திறன் தேர்வு – NMMS தேர்வு – மதிப்பெண்கள், 11-ம் வகுப்பிற்கான சேர்க்கப்படும் மாணவர் 10-ம் வகுப்பிற்கான NTSE தேர்வு மதிப்பெண் மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் ஆகிய பட்டியலின் அடிப்படையிலேயே சேர்க்கை நடத்தப்படும். இதில், மாணவர்கள் மெரிட் அடிப்படையில் சேர்க்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மாதிரிப் பள்ளிகளில் பயிற்சி தேர்வுகள் என்ற பெயரில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு தயார் படுத்துகிறோம் என்கிறார்கள். மாதிரிப் பள்ளிகள் 32 மாவட்டங்களில் மிகக் குறைவுவான அளவில்தான் உள்ளன. அப்படி என்றால், மற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரும் படிப்பதற்கு தகுதியற்றவர்களா?
படிக்க :
♦ மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் EWS 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் துணைவேந்தர் குமார் !
♦ ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனி ஆக்கப்படும் கல்வி | ம.க.இ.க ஆவணப்படம்
கோச்சிங் சென்டர் – மார்க் – மெரிட் – நுழைவுத்தேர்வு போன்றவற்றின் அடிப்படையில் மட்டுமே மாணவர்களை தயார்படுத்தம் நடைமுறைக்காக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் பலன் என்னவோ தனியார் பள்ளிகளுக்கும், கோச்சிங் சென்டர்களுக்கும்தான் சென்றடையப்போகிறது என்பதே உண்மை.
உதாரணமாக, நீட் தேர்வு அறிவித்தவுடன் தனியார் கோச்சிங் சென்டர்கள் புற்றீசல்போல முளைத்தன; ஆதிக்கம் செலுத்தின. இன்று விளம்பரங்களைபோட்டு பெற்றோர்களை கவர்ந்து இழுக்கின்றன. பல ஆயிரக்கணக்கான கோடிகளை பெற்றோர்களிடமிருந்து பிடுங்கி கொண்டிருக்கின்றன. இதேபோல, பல தனியார் பள்ளிகள் ஆரம்பத்திலிருந்தே நீட் கோச்சிங் தருகிறோம் என்று சொல்லி பல இலட்சங்களை பெற்றோர்களிடமிருந்து பிடுங்கிக் கொள்கின்றன.
தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வில் கோச்சிங் நடத்தப்படுகிறது. தற்போது மாதிரிப் பள்ளிகளில் மெரிட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்கிறது தமிழக அரசு. இதன்மூலம், தனியார் பள்ளிகளை போலவும் கோச்சிங் சென்டர்களைப் போலவும் அரசுப் பள்ளிகளை மாற்றியமைத்து ஒட்டுமொத்த பள்ளி கட்டமைப்பையே “காசு இருந்தால்தான் கல்வி” என்ற அடிப்படையில் மாற்றியமைக்க வழி அமைத்துக் கொடுக்கிறது அரசு. இதையேதான் புதிய கல்விக் கொள்கையும் வலியுறுத்துகிறது.
மற்றொருபுறம், தரமான உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்க அம்பானிக்கும் அதானிக்கும் வழி அமைத்து கொடுத்து மக்களை கொள்ளை அடிக்க ரூட்டு போட்டும் கொடுக்கிறது புதிய கல்விக் கொள்கை. இதில், உழைக்கும் – ஏழை – பின்தங்கிய மாணவர்கள் கல்வியில் இருந்தே வெளியேற்றப்படும் அபாயம்தான் உள்ளது.
***
இன்னொருபுறம், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அரசே நிதியளித்து வருகிறது. இதன்மூலம் தனியார் கல்விதான் சிறந்த கல்வி என்ற தோற்றத்தை அரசே ஏற்படுத்திவிட்டது.
எல்.கே.ஜி – யு.கே.ஜி போன்ற மழலை வகுப்புகளை தொடர்ந்து நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளது திமுக அரசு. ஆனால், அதற்கு முன்பு ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதனால் 2321 எல்.கே.ஜி – யு.கே.ஜி அரசுப் பள்ளி ஆசிரியர்களை இடை நிலைப் பள்ளிக்கு மாற்றுகிறோம் என்றது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்தவுடன் பின் வாங்கிக் கொண்டது. இப்போது எல்.கே.ஜி – யு.கே.ஜி-க்கு ஆசிரியர்கள் வேண்டும் இடை நிலைப் பள்ளிக்கு ஆசிரியர்கள் வேண்டும் என்ன செய்ய போகிறது தமிழக அரசு.
படிக்க :
♦ 2,381 அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் மூடல் : தனியார் பள்ளிகளை வளர்க்க திமுக அரசு செய்யும் சதி!
♦ “பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’ | புமாஇமு
இதுபோக, கொரோனா காலகட்டம் முடிந்து தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிக்கு வந்துள்ளனர். இவர்களுக்கான கூடுதல் ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் அதிகரித்துள்ள இந்த இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு ஏற்றார்போல் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். இதையெல்லாம் ஏறெடுத்துக் கூடப் பார்க்காத தமிழக அரசுதான் இன்று ரூ.150 கோடி செலவில் மத்திய அரசின் நிதி உதவியுடன் புதிதாக 25 மாதிரிப் பள்ளிகளை அமைக்கப் போகிறோம் என்கிறார்கள்.
பெரும்பாலான உழைக்கும் மக்களின் வீட்டுப் பிள்ளைகள் கல்வியில் இருந்து வெளியேற்றப்படுவதுதான் இவர்களைப் பொறுத்தவரை தகுதி தரம். கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்த தேசபக்தர்கள் உழைக்கும் மக்களின் வீட்டு பிள்ளைகளையும் தரம் உயர்த்த போகிறோம் என நாடகமாடுகிறார்கள்.
கல்வி தனியார்மயமாக்களையும், அதை தீவிரப்படுத்தும் புதிய கல்விக் கொள்கையையும் முறியடிக்க ஆசிரியர்கள் – மாணவர்கள் – பெற்றோர்கள் ஓர் கூட்டமைப்பாக இணைந்து களமிறங்க வேண்டியது அவசியம்.

ரவி

கும்பகோணம் : சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட காதல் தம்பதிகள் சாதி ஆணவப்படுகொலை !

கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி என்ற பகுதியில் சாதி மாறி காதலித்து திருமணம் செய்துகொண்ட மோகன் மற்றும் சரண்யா என்ற காதல் தம்பதியை கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சோழபுரம் துலுக்க வேலியை சேர்ந்த சேகர் மற்றும் தேன்மொழி தம்பதியினருக்கு சக்திவேல், சதீஷ் மற்றும் சரவணன் என்ற மூன்று மகன்களும், சரண்யா (23) என்ற மகளும் உள்ளனர். சேகர் தம்பதியினரின் மூன்று மகன்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது.
அவரது ஒரே மகளான சரண்யா நர்சிங் படிப்பு முடித்துவிட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். சமீபத்தில் சரண்யாவின் தாயாரான தேன்மொழி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
படிக்க :
பள்ளி மாணவனை தீயில் தள்ளிய சாதிவெறி | பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த போலீசு !
சாவர்க்கர் ஒரு அதிதீவிர சாதிவெறியர் : இந்துத்துவ ஆவணங்களிலிருந்து ஆதாரம் !
திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூர் சின்ன தெருவை சேர்ந்த மோகன் என்பவரின் தாயாரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்த சமயத்தில் மோகன், சரண்யா இருவருக்கும் இடையே மருத்துவமனையில் பழக்கம் ஏற்பட்டு அவர்கள் காதலித்து வந்தனர்.
சரண்யா தனது காதல் குறித்து தனது பெற்றோரிடம் சம்மதம் வாங்கி திருமணம் செய்து கொள்ளலாம் என்று போராடியுள்ளார். சரண்யா காதலிப்பது தெரிந்தவுடன் சரண்யாவின் அண்ணனான சக்திவேல் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து உள்ளார்.
நிலைமை கை மீறிப் போனதை உணர்ந்து இனிமேலும் தாமதிக்க முடியாது என்பதால் மோகனும், சரண்யாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து, படுகொலை நடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு சென்னையில் திருமணம் செய்து கொண்டனர்.
மோகன் மற்றும் சரண்யா இருவரையும் சக்திவேல் சோழபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு விருந்திற்கு அழைத்துள்ளனர். இதை நம்பி சென்ற மோகன் மற்றும் சரண்யா மதிய உணவு சாப்பிட்ட பின்பு, சென்னைக்கு கிளம்பலாம் என்று வீட்டை விட்டு வெளியே வந்தபோது மோகன் மற்றும் சரண்யாவை துரத்திச் சென்று படுகொலை செய்துள்ளனர். இந்த படுபாதக கொலையை செய்தவர் சரண்யாவின் அண்ணன் சக்திவேலும், அவரது மைத்துனர் ரஞ்சித் என்பவருமே. குற்றவாளிகளான சக்திவேல் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரும் போலீசில் சரணடைந்துள்ளனர்.
2018-ல் உச்சநீதிமன்றம் “ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்காகவும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும், அந்தக் குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை தண்டிப்பதற்காகவும், நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும்” என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோகன் மற்றும் சரண்யாவின் படுகொலை என்பது இந்தியாவில் சாதிவெறி, மதவெறி, பார்ப்பனிய ஆணாதிக்க வெறியில் எவ்வாறு ஊறிப்போய் உள்ளது என்பதையே நமக்கு உணர்த்துகிறது. குறிப்பாக, ஆணவப்படுகொலை என்றாலே சாதி மாறி காதலித்தால் நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக பையன் ஒடுக்கப்பட்ட சாதியாகவும், பெண் ஆதிக்க சாதியாக இருந்தால் நிச்சயம் அந்தப் படுகொலை ஒரு சாதி ஆதிக்க ஆணவப்படுகொலை என்ற முடிவுக்கு நாம் வந்துவிடமுடியும்.
ஆனால் மோகன் மற்றும் சரண்யாவின் விஷயத்தில் மோகன் செங்குந்த முதலியார் சாதியை சேர்ந்தவர், சரண்யா பட்டியலின வகுப்பை சேர்ந்தவர். எப்படி பையன் உயர் சாதியாக இருந்தும் ஏன் இந்த படுகொலை நடந்துள்ளது என்பதை நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
படிக்க :
கூகுள் நிறுவனத்தில் சாதிய ஒடுக்குமுறை ! சாதிய – இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைவோம் !
சமூக நீதியிலும் சாதி தீண்டாமை !
மோகன் மற்றும் சரண்யா தம்பதியரின் படுகொலைக்கு முதன்மையான காரணியாக ஆணாதிக்க வெறிதான் இருக்க முடியும். அதாவது பார்ப்பன மனு தர்மத்தின் படி, இந்த சமூகத்தில் பெண்களுக்கு ஜனநாயகமும் இல்லை, எந்த உரிமையும் இல்லை. ஒரு பெண் சுயமாகதான் யாரை காதலிக்க வேண்டும், தான் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கும் அதிகாரம் அவளுக்கு கிடையாது. அவள் குடும்பத்தில் உள்ள ஆண்கள் யாரை கை காட்டுகிறார்களோ? அவரைத்தான் அந்தப்பெண் திருமணம் செய்ய முடியும்.
இவ்வாறு ஆணாதிக்கம், சாதி வெறிபிடித்த மனநோயாளிகள் அதிக அளவில் உளாவிவரும் இந்த சமூகத்தில் உச்சநீதிமன்றத்திலோ? அல்லது நாடாளுமன்றத்திலோ? எத்தனை எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் சாதிவெறி படுகொலைகளும், ஆணாதிக்க வெறியும் ஒழிய போவதில்லை. ஜனநாயகம் என்பதே துளியும் இல்லாத இந்த சமூகத்தில் ஒரு பெண்  சுதந்திரமாக தாம் விரும்பிய வரை கை பிடிக்க முடியாது.
சாதி வெறியையோ? ஆணாதிக்க சிந்தனையையோ? இந்த சமூக அமைப்பை மாற்றாமல் எதுவும் இங்கு மாறாது. வர்க்க விடுதலையே சாதியை ஒழிக்கும் !

இர.துணைவேந்தன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு, தமிழ்நாடு.
94448 36642.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் EWS 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் துணைவேந்தர் குமார் !

0
துரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முது அறிவியல் உயிரிதொழில்நுட்பவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை கடைபிடிக்கப்படும் என்றும், 10 சதவீதம் இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்றும் ஆன்லைன் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுபோன்ற நிகழ்வு இதற்கு முன்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்துள்ளது. முதுநிலைப் படிப்பில் 10 சதவீத உயர்வகுப்பு ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என அறிவித்தார்கள். இதை எதிர்த்து அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பலரும் மனு போட்டார்கள்.
அதை விசாரித்த உயர்நீதிமன்றம் அண்ணா பல்கலைக்கழகம் என்பது தமிழக அரசின் நிதியால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை கொண்டுள்ளது. மத்திய அரசு சில படிப்புகளுக்கு நிதி உதவி தருகிறது என்பதற்காகவே அதன் இட ஒதுக்கீடு கொள்கையை தமிழக பல்கலைக்கழகங்களில் நடைமுறைப்படுத்த முடியாது. தமிழகத்தில் வழக்கமாக நடைமுறையில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீடே தொடரும் என அறிவித்தார்கள். அதை தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் 10 சதவீத இட ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டது.
படிக்க :
♦ மதுரை காமராஜர் பல்கலையில் ஒப்பந்த ஊழியர்கள் 135 பேர் பணி நீக்கம் !
♦ மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அடுத்த RSS துணைவேந்தர் யார்? 
அப்படி என்றால் இந்த நீதிமன்ற உத்தரவை கூட மதிக்காமல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செயல்படும் அளவுக்கு அவருக்கு துணிச்சலை கொடுத்தது யார்? பாசிச உளவாளி ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங் பரிவாரக் கும்பல்தான்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தரை நியமிப்பது ஆளுநர்தான். அந்த அடிப்படையில் தொடர்ச்சியாக ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நபர்களை துணைவேந்தராக நியமித்து வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க-வின் சித்தாந்தத்தை தமிழகத்தில் காலூன்ற வைப்பதற்கு அரும்பாடு படுகிறார். அதுமட்டுமல்லாமல் இந்தத் துணைவேந்தர்களை வைத்து இன்னொரு அதிகார மையத்தை உருவாக்கி தமிழகத்திற்கு கட்டுப்படாமல் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை போன்றவற்றை நடைமுறைப்படுத்தி விட முயற்சிக்கிறார்கள்.
அதனால்தான் இவர்கள் தாங்களே சொல்லிக் கொள்ளும் சட்ட திட்டங்களுக்கு கூட கட்டுப்படாமல் மீண்டும் மீண்டும் மத்திய அரசு கொண்டுவந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த நினைக்கிறார்கள்.
பல்லக்குத் தூக்கும் பிரச்சினையில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பிற்போக்கு கும்பலிடம் பணிந்தது திராவிட மாடல் அரசு; அதைத்தொடர்ந்து சிதம்பரம் தீட்சிதர் கும்பலிடம் தனது கையாலாகாத தனத்தை வெளிப்படுத்திக் கொண்டது. இவை இந்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு மேலும் துணிச்சலைத் தருகிறது.
ஆகவே, காவி – கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளுக்கு துணைபோகும் துணைவேந்தர் குமார் போன்றவர்களை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டியது அவசியம். பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், ஜனநாயக முற்போக்கு சக்திகள் உடனடியாக இதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். பாசிஸ்டுகள் எதிர்க் கருத்தை கண்டு அஞ்சுபவர்கள் அதனால் நாம் துணிச்சலாக ஒன்றுபட்டு எதிர்த்து களமாடுவோம்.

ரவி

தோழர் தேவ முருகன் அவர்களுக்கு சிவப்பஞ்சலி !

தோழர் தேவ முருகனை நீங்கள் பார்த்ததுண்டா? அவருடன் பழகியதுண்டா?
பாத்திரம் கழுவி கொண்டிருப்பார், அடுத்து சில நிமிடங்களில் வாசல் சுத்தம் கொண்டிருப்பார், அடுத்த முறை பார்க்கும் பொழுது சாம்பார் வாளியை தூக்கிக் கொண்டு அனைவருக்கும் சாம்பார் ஊற்றி கொண்டிருப்பார். யாராவது யாரையாவது தோழரே இட்லி வேண்டுமென்று என்று கூறினால், உடனே ஓடிப்போய் இட்லி எடுத்துக் கொண்டுவந்து வைப்பார். போதுமா என்பார். கூட்டம் முடிந்து எல்லோரும் கிளம்பிய பிறகு அவர் சேர் எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டிருப்பார். அறையை சுத்தம் செய்வார்.
யாரைப் பார்த்தாலும் நலமாய் இருக்கிறீர்களா? எப்படி அமைப்பு வேலை செய்கிறீர்கள் என்றபடி கட்டியணைப்பார். ஏறத்தாழ 55 வயதை கடந்த ஒருவர், அரசு அதிகாரத்தில் – அதிகாரியாக இருக்கும் ஒருவர், இப்படியெல்லாம் ஓடியாடி நமக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் என்ன?
தன்னை எங்கேயும் எப்பொழுதும் அமைப்பின் உடனேயே, அமைப்பின் மூலமாகவே தன்னை அறிமுகம் செய்து கொள்வார். அமைப்பிலே பொறுப்பில் இருக்க வேண்டும் என்று ஒருபோதும் அவர் விரும்பியதில்லை. ஒரு புரட்சிகர அமைப்புக்கு, சரியான பாதையில் செல்லும் அமைப்புக்கு, தன்னால் என்ன முடியுமோ அதை செய்ய வேண்டும் என்பதை மட்டும் அவர் உறுதியாக இருந்தார்.
இவருடன் பணியாற்றும் அதிகாரிகளுக்கு எத்தனை பேருக்கு இது போன்று சமூக உணர்வுகள் இருக்கும்?
ஒரு அமைப்பிலே குறிப்பிட்ட காலம் வேலை செய்த உடனேயே தலைக்கனம் வந்துவிடுகிறது. தன்னை விட்டால் யாருமில்லை; தான் மட்டுமே அறிவாளி என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், தேவ முருகன் அரசு அதிகாரியாக இருந்த பொழுதும் அவர் காட்டிய பணிவு யாருக்காக? எதற்காக? புரட்சிக்காக, புரட்சிகர அமைப்புக்காக என்பதைத் தாண்டி எதுவும் இல்லை.
ஒவ்வொரு தோழரையும் அவர் அழைத்து பாசமாகவும் பரிவுடனும் பேசுவதை நீங்கள் யாராவது கேட்டதுண்டா? அவருடன் பேசி முடித்தவுடன் எங்கள் சோர்வு காணாமல் போகும், விரக்தி வீசியெறியப்படும். அந்த பாசத்தையும் நேசத்தையும் இனி நாங்கள் எங்கே யாரிடம் போய் காண்போம்? அது உழைக்கும் மக்களின் மீதான புரட்சியின் மீதான பாசம்.
நான் தான் பெரியவன், நான் இத்தனை ஆண்டுகாலம் இந்த அமைப்பினை வேலை செய்தேன். நான் அதைச் செய்வேன். இதைச் செய்தேன் என்றெல்லாம் ஜம்பம் பேசியவர்கள் எல்லாம் தேவ முருகனின் அர்ப்பணிப்புக்கும் பணிவுக்கும் முன் தூசியாக போய்விடுகிறார்கள்.
உதவி என்றவுடன் தேவ முருகனை கேட்கலாம் என்று இனிமேல் நாங்கள் ஒருபோதும் சொல்ல முடியாது.
அமைப்பிலேயே எப்பொறுப்பும் வகிக்காத இதுபோன்ற தோழர்கள் அமைப்பின் முகமாக பலருடனும் விவாதித்து, அமைப்பின் கொள்கையை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதுவே எமக்குப் பெருமையான ஒன்றாகும்.
அமைப்பின் பிளவுக்கு பிறகும் இது சரியான அரசியல் என ஏற்றுக்கொண்டு நம்முடன் உறுதியாக நின்றார். தோழர் தேவ முருகனின் அர்ப்பணிப்பையும் பணிவையும் கடும் உழைப்பையும் நாம் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
சிவப்பஞ்சலி
தோழர் தேவ முருகன் !
மருது

கோவை மலுமிச்சம்பட்டி : 15 வருட கால மனு கொடுக்கும் போராட்டம் ! கற்றுக்கொடுத்தது களப்போராட்டமே !

கோவை மாவட்டம், மதுக்கரை வட்டத்தில் உள்ள மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வீடு மற்றும் வீட்டுமனை பட்டா வேண்டி மூன்றாவது நாளாக பந்தல்(டெண்ட்) அமைத்து இரவு பகலுமாக போராடி வருகின்றனர்.
ஜேஜே நகர், அன்பு நகர், பிரகாஸ் நகர், அவ்வை நகர், மதுரை வீரன் கோவில் போன்ற பகுதியை சேர்ந்த 80 குடும்பத்திற்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வீடு இல்லாமல் 15 வருடத்திற்கும் மேலாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
வாடகை கட்ட முடியாமல் பல்வேறு இன்னல்களை அனுபவித்த மக்கள் கடந்த 15 வருட காலமாக கலெக்டர் மற்றும் தாசில்தாரிடம் மனு கொடுத்து வந்துள்ளனர். கடந்த 3 வருடமாக தொடர்ச்சியாகவே கலெக்டர், தாசில்தார், பஞ்சாயத்து அலுவலகம் என மாறி மாறி மனுவை கொடுத்து வந்துள்ளனர். அரசு, வீடு ஒதுக்கும் போது உங்களில் 36 பேருக்கு முன்னுரிமை கொடுப்பதாக துணை தாசில்தார் கூறினார். அதன்பின் வீடு கேட்டு செல்லும் மக்களை பல வருடங்களாக அலைக்கழித்து வருகின்றனர் அதிகாரிகள்.
படிக்க :
♦ சேலம் மாவட்டம் – வடகுமரை தலித் மக்களின் ஆலய நுழைவுப் போராட்டம் ! அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் ஆதரிப்போம் !
♦ தாளவாடி வனப்பகுதி : பழங்குடி மக்களை அச்சுறுத்தும் புலிகள் காப்பகமும் – கார்ப்பரேட் நலனும் !
இந்த மாதம் 06.06.2022 அன்று கலெக்டரிடம் மனுவை கொடுக்க சென்றுள்ளனர். அங்கு தாசில்தாரிடம் கலெக்டர் முன்னிலையில் மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது. CM CELL-க்கும் மனு தொடர்ச்சியாக அனுப்பி வைக்கப்படுள்ளது. இதுவரை அனுப்பிய மனுவிற்கு யாரும் எந்த பதிலும் தெரிவிக்காததால் போராட்டமே ஒரேவழி என 12.06.2022 இரவு முதல் காலியான பகுதியில் சாலை அமைத்து போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
எந்த அரசியல் ஓட்டுக் கட்சிகளும் நேரில் வரவில்லை. தாசில்தாரும் போலீசும் மட்டுமே வந்து போராட்டத்தை கைவிட வேண்டுமென கூறியுள்ளனர். வீடு மற்றும் வீட்டுமனை பட்டா வேண்டி போரடியவர்களில் வீட்டுமனை பட்டா வேண்டி போரடிய மக்களை மட்டும் மிரட்டி போராட்டத்திலிருந்து கலைத்துள்ளனர் அதிகாரிகள்.
பயன்பாட்டில் இல்லாத நிலம் ஒன்றில் தங்களுக்கான இடத்தை அளவிட்டு பந்தல்களை அமைத்து போராடி இரண்டு நாட்களாக வருகின்றனர். வீடு வழங்கும் வரை இங்கேயே குழந்தைகளுடன் போராட்டம் தொடரும் என மக்கள் அறிவித்துள்ளனர்.
***
ஆண்கள் கட்டிட வேலைகளுக்கும், பெண்கள் நூறு நாள் வேலைக்கும் மேலும் அன்றாட கூலி வேலைகளுக்கும் சென்றுதான் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இதில் மாதம் ரூ.3500 முதல் ரூ.6000 வரை வாடகை செலுத்துகின்றனர். வருமானத்தில் பாதிக்குமேல் வாடகைக்கே செல்கிறது குழந்தைகளை படிக்க வைத்து குடும்பத்தை பராமரிப்பது என்பது சிரமமாக உள்ளது என்கின்றனர்.
மனு கொடுக்க சென்ற மக்களிடம் “நாங்களே வாடகை வீட்டில்தான் இருக்கிறோம் உங்களுக்கென்ன” என அதிகார திமிரோடு கூறியிருக்கின்றனர் கலெக்டர், தாசில்தார். மனு கொடுத்த பெண் ஒருவர் கூறுகையில், “நான் கொடுத்த பெட்டிசன எனக்கு பொட்டலமா கட்டி கொடுத்தாங்க டீக்கடை அன்னாச்சி, இனிமேல் பெட்டிசன் கொடுப்பதாக இல்லை கடைசியாக உட்கார்ந்து போராட உள்ளோம்” என்றார்.
இதுவரை நடந்த அ.தி.மு.க, தி.மு.க ஆட்சியில் 4 முறை அரசால் இலவச வீடு வழங்கப்பட்டுள்ளது. அதில், ஆளுங்கட்சிக்கு ஆதரவான நபர்கள் நிலத்தை சுருட்டி கொள்ளவதே அரங்கேறியிருக்கிறது. பலர் 2-3 வீடுகள் கட்டி வைத்திருக்கின்றனர், அதை வாடகைக்கு விடுவதும், பின்னால் விற்று கொள்ளலாம் என கருதும் வசதி படைத்தவர்களுக்கே நிலத்தை தாரைவார்த்து வந்திருக்கிறது அரசு.
இவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலே, அரசு நல வாரிய குடியிருப்பு சார்பில் அப்பார்ட்மெண்ட் கட்டிவைத்து அழகு பார்க்கிறது அரசு. 1 இலட்சம் முதல் 2 இலட்சம் வரை பணம் கொடுத்தால் மட்டுமே அப்பார்ட்மெண்டில் வீடு வழங்குவோம் என அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். தினந்தோறும் கூலிக்கு வேலை செய்து வாடகை கொடுத்து வாழ்வதற்கு கூட வழியில்லாமல் இருக்கும் உழைக்கும் மக்களுக்கு இந்த இலட்ச ரூபாய் லஞ்சம் சாத்தியமா? எட்டாக்கனி தான். அதை தெரிந்தே பணம் படைத்தவர்களுக்கே நிலம், பணம் இல்லாதவர்களுக்கு ஒரு துண்டு நிலத்தை கூட கொடுக்க மாட்டோம் என மறுக்கிறது அரசு.
15 வருடமாக மாறி மாறி ஓட்டு போட்டு ஏமாந்தது தான் மிச்சம் இதுவரை எங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. “ஓட்டுக்காக மட்டும் குழந்தை காலுல கூட விழுந்தாங்க ஆனா எங்களுக்கு ஒரு பிரச்சினைனா பார்க்கக் கூட வர மாட்டாங்க” என்று ஓட்டு கட்சிகள் மீதான அவநம்பிக்கையை வெளிபடுத்துகின்றனர்.
***
வாடகை வீட்டில் இருந்த பெண் ஒருவர் கூறுகையில், “குழந்தைகளுடன் இருக்கிறேன் இரவில் பாம்பு என் மீது ஏறி செல்கிறது, 3 முறை பாம்பை பிடித்திருக்கிறோம். கடந்த மாதம் கூட பக்கத்து வீட்டு பெண்ணை கட்டு விரியன் பாம்பு கடிச்சு இறந்துட்டாங்க” என்கிறார்.
“தூத்துக்குடியில 13 பேத்த தான் சுட்டாங்க எங்கல்ல 15 பேத்த வேனும்ன சுட்டு கொல்லுங்க எங்க ஜனத்துக்காக செத்தாலும் பரவாயில்ல எங்களுக்கு நிலம் கொடுங்க” என்கிறார் போராடும் பெண் ஒருவர்.
வீட்டில் வசிப்பவர்களை காலிச்செய்யுங்கள் இல்லையென்றல் “புல்டோசர்களை விட்டு காலி பன்னிடுவோம்” என்று அதிகாரிகள் மிரட்டியுள்ளனர்.
இனி மனுகொடுத்த பலனில்லை உட்கார்ந்து போராடியே தீர வேண்டும் என்ற முடிவுக்கு தங்களது சொந்த அனுபவங்களில் இருந்து உணர்ந்து பின்னரே களத்தில் உறுதியாக போராட தொடங்கியுள்ளனர்.
***
பத்தாண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்த அதிமுக-வும் சரி நேரில் மனு கொடுப்பதை “CM CELL”ற்கு என நவீனமாக்கியிருக்கும் திமுக-வும் சரி மக்களை நம்பவைத்து கழுத்தறுத்திருப்பதுதான் இந்த ஆட்சியாளர்களின் யோக்கியதை.
படிக்க :
♦ மறுகாலனியாக்க சுரண்டலுக்கு நவீன பண்ணை அடிமைகளாக மாற்றப்படும் செவிலியர்கள் !
♦ மதுரை : தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தூய்மைப் பணியாளர்கள் !
பட்டியலின மக்களுக்கு இலவசமாக கிடைக்க வேண்டிய பஞ்சமி நிலத்தை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கூறுப்போட்டு விற்று பணம் பார்த்து கொழுத்து வருகின்றனர். தங்களுக்கு கிடைக்க வேண்டிய பஞ்சமி நிலத்தை போராடிதான் பட்டியலின சமூகம் பெற வேண்டியுள்ளது.
மலுமிச்சம்பட்டியின் இந்த வீடு மற்றும் வீட்டுமனை பட்டா வேண்டிய போராட்டத்தை உழைக்கும் மக்களாகிய நாம் ஆதரித்தாக வேண்டும். கோவை சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் இப்போராட்டதை வெற்றி பெற செய்வதே கடமையாகும்!
கோவை மாவட்டம்,
வினவு களச் செய்தியாளர்.

அதிகார வெறிபிடித்த சதிகார கும்பல் வெளியேற்றப்பட்டது! | SOC – CPI (ML) பத்திரிகை செய்தி

2
13.06.2022
அதிகார வெறிபிடித்த சதிகார கும்பல் வெளியேற்றப்பட்டது!
ஐக்கியமும் புத்தார்வமும் அமைப்பில் கரைபுரண்டோடுகிறது!
பத்திரிகை செய்தி
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, தோழர்களே!
1981-லிருந்து மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க. (மா-லெ) தமிழ்நாடு-இன் செயலாளராக இருந்தவரும், கடந்த 2021-இல் நடந்த மா.அ.க.வின் 10-வது பிளீனத்தில் பொறுப்புகள் பறிக்கப்பட்டவருமான முன்னாள் செயலரும் அவரது ரசிகர்கள் அடங்கிய சிறு கும்பலும் கோஷ்டிவாத, பிளவுவாத, சதிகாரச் செயல்பாடுகளின் காரணமாக, கடந்த 03.06.2022 அன்று அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தகுதிகளிலிருந்தும் நீக்கப்பட்டு, எமது அமைப்பிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சிலர் வெளியேற்றப்பட்ட இந்நிகழ்வானது, கம்யூனிச இயக்கங்களில் நடக்கும் வழமையான ஒழுங்கு நடவடிக்கைகளைப் போன்றதொரு நிகழ்வல்ல. இந்தியப் புரட்சிகர இயக்கத்தைப் பீடித்திருக்கும் வலது சந்தர்ப்பவாத – நவீன அராஜகவாதத்தின் ஒரு பகுதியாக, எமது அமைப்பிற்குள் இரகசியமாக பதுங்கியிருந்து பிளவுவாத, கோஷ்டிவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்னாள் செயலர் தலைமையிலான கும்பல் அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட இந்நிகழ்வானது புரட்சிகர சக்திகளுக்கும், தோழர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் பேருற்சாகம் தருகின்ற செய்தியாகும்.
000
எமது அமைப்பில் 2020-இல் நடந்த பிளவுக்கும் பின்னடைவுக்கும் வலது திசைவிலகலே காரணம் என்று கடந்த 2021-இல் நடந்த 10-வது பிளீனம் தெளிவாக வரையறுத்தது. தாங்கள் தனிமைப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாக, முன்னாள் செயலர் மற்றும் அவரது ரசிகர்களைக் கொண்ட இக்கும்பல், பிளீனத்தில் பெரும்பான்மைக் கருத்தை ஆதரிப்பதாக நாடகமாடி அமைப்பிற்குள் இரகசியமாக பதுங்கியிருந்தது.
ஆனால் 10-வது பிளீனத்திற்குப் பின்னர், இந்தக் கும்பல் வலது திசைவிலகலுக்கு எதிரான போராட்டத்திற்கு தொடர்ந்து இடையூறுகள் செய்தது; பிரபலம் தேடும் பிரச்சார வேலைமுறையை முன்தள்ளியது; இதன் மூலம் ஆளும் வர்க்க நிகழ்ச்சிநிரலுக்குப் பின்னே புரட்சிகர சக்திகளை இழுத்துவிட்டு சீரழிக்கும் போக்கை உயர்த்திப் பிடித்தது; புதிய தலைமைக் கமிட்டி மேற்கொண்ட முன்னேற்றகரமான வேலைகளுக்கு இந்த கும்பல் தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டது; தனக்கு உடன்பாடில்லாத சுற்றறிக்கைகளை அணிகளுக்குச் சுற்றுக்குவிடாமல் முடக்கி வைத்து, தலைமைக் கமிட்டி செயலிழந்து நிற்பதாக அவதூறுப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டது.
தலைமைக் கமிட்டியின் அற்பமான  தவறுகளை ஊதிப்பெருக்கி, அணிகள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி, மாநில அமைப்புக் கமிட்டியை ஒழித்துக் கட்டிவிடலாம் என்று மனப்பால் குடித்தது. இருப்பினும், தொடர்ந்து பலவாறாக இந்த கும்பல் மேற்கொண்ட கீழ்த்தரமான நடவடிக்கைகள் அனைத்தும் அணிகளின் பேராதரவோடு தவிடு பொடியாகின.
தமிழக மக்கள் மத்தியில் புரட்சிகர அரசியலைப் பரப்புவதில் முன்னுதாரணமாகத் திகழ்ந்த எமது அமைப்பின் அரசியில் ஏடு, அமைப்பில் ஏற்பட்ட பிளவின் காரணமாக கடந்த ஜனவரி 2021-க்குப் பின்னர் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், புதிய இளந்தோழர்களை வளர்த்தெடுத்து ஆகஸ்டு 2021 முதலாக எமது அமைப்பின் அரசியல் ஏட்டை மீண்டும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். இதுமட்டுமல்ல, முன்னாள் செயலர் பொறுப்பிலிருந்த காலத்தில் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக முடக்கப்பட்ட, “புரட்சிப் புயல்’’ எனும் எமது அமைப்பின் அரசியல் – சித்தாந்தப் பத்திரிகையை காலாண்டிதழாக மீண்டும் வெளியிட்டு வருகிறோம். அகில இந்தியக் கட்சியைக் கட்டும் நோக்கத்துடன் எமது அமைப்பின் நிலைப்பாடுகளை பிற மாநில தோழர்கள், உழைக்கும் மக்கள் அறியும் வகையில், ஆங்கிலத்தில் எமது அரசியல் ஏட்டைக் கொண்டுவருகிறோம். இவற்றையெல்லாம் இந்த கும்பலால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
இந்நிலையில், இந்த கும்பல் அமைப்பிற்குள் கோஷ்டி கட்டிக்கொண்டும், இரகசிய வலைப்பின்னலை அமைத்துக் கொண்டும் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியாகின. 10-வது பிளீனத்தின் தீர்மானத்திற்கு எதிராக, எமது அமைப்பு வலது திசைவிலகல் அடையவில்லை என்றும், செயல்தந்திரப் பிரச்சினையில் மாற்றுக் கருத்து உள்ளதாகவும் கூறி இக்கும்பல் உட்கட்சி விவாதத்திற்கு ஒரு அறிக்கையை வைத்தது. அதை உற்சாகத்துடன் வரவேற்று. ஆரோக்கியமான உட்கட்சி விவாதத்தை மா.அ.க. நடத்தியது.
இச்சூழலில், இந்தக் கும்பல் மீது நடவடிக்கை எடுப்பதென்பது, உட்கட்சி விவாதத்தின் நோக்கத்தை சீரழித்துவிடும், இந்தக் கும்பல் இதனைக் காரணம் காட்டி தப்பித்துவிடும் என்று மா.அ.க. உணர்ந்தது. ஏப்ரல் 09, 10 தேதிகளில் உட்கட்சி விவாதத்திற்கான சிறப்புக் கூட்டத்தை நடத்தி முடிக்கும்வரை பொறுமை காத்தது.
இந்த உட்கட்சி விவாதக் கூட்டத்தில் தமக்கு அதிக ஆதரவு வேண்டும் என்பதற்காக ஓட்டுக்கட்சிகள் பாணியில் கோஷ்டி கட்டிக்கொண்டும், பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் கொல்லைப்புறமாக உயர்த்திக் கொண்டும் இந்த கும்பல் கலந்து கொண்டது. இருப்பினும், இச்சிறப்புக் கூட்டத்தில், எமது அமைப்பு வலது திசைவிலகல் அடைந்துள்ளது என்ற 10-வது பிளீனத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டை 75 சதவிகித அணிகள் உயர்த்திப் பிடித்தனர். மேலும், முன்னாள் செயலர் கும்பல் முன்வைத்த நம்பூதிரித்தனமான வாதங்கள் அனைத்தும் அரசியல் – சித்தாந்த ரீதியாக அம்பலப்பட்டுத் தோற்றுப்போயின. இந்த கும்பலை ஆதரித்த சில பிரதிநிதிகளும்கூட, இக்கூட்டத்தில் நடந்த விவாதத்தின் ஊடாக தங்களது கருத்துகளை மாற்றிக்கொண்டு 10-வது பிளீன முடிவை உயர்த்திப் பிடித்தனர்.
படிக்க :
வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் ! SOC – CPI (ML) 10-வது பிளீன அறிக்கை !
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் || SOC, CPI(ML) செயல்தந்திரம்
ஆனால், இந்தக் கும்பல் தமது பொறுப்பிலுள்ள அணிகளிடம் இக்கூட்டத்தின் முடிவுகளை தீர்மானித்தபடி விளக்குவதற்கு மாறாக, சிறப்புக் கூட்டம் தொடர்பாக அவதூறுகளைச் செய்தது. இந்தச் சூழலில், முன்னாள் செயலர் கும்பல், 28-05-2022 தேதியிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையில், மா.அ.க.வைக் கலைத்துவிட்டதாகவும், விரைவில் ஒரு பிளீனத்தை நடத்தி புதிய தலைமையை நிறுவிக்கொண்டு இயங்கப் போவதாகவும் குறிப்பிட்டு, “தற்காலிக அமைப்புக் கமிட்டி” என்று இந்த கும்பல் தங்களுக்குத் தாங்களே நாமகரணம் சூட்டிக்கொண்டுள்ளது. அமைப்பு இரகசியங்களை வெளிப்படுத்தும் வகையில் சில ஊழியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இந்த அறிக்கையில் அவதூறு செய்துள்ளது.
தாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறும் அமைப்பு விதிகளைக் கிடப்பில் போட்டுவிட்டு, பிளீனத்தில் அணிகளால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைமைக் கமிட்டியை, அணிகளுக்கே தெரியாமல் கலைத்துவிட்டதாக இந்த கும்பல் அறிவித்துள்ளது. இதுதான் இந்த கும்பலுடைய ஜனநாயக மத்தியத்துவத்தின் மகிமை!
அணிகளை குரு – சிஷ்யன் பாணியில் இயக்கி நாட்டாமை செய்துகொண்டு, அணிகளின் ஜனநாயக உரிமையைக் கடுகளவும் மதிக்காத இந்த குட்டி முதலாளித்துவ அராஜகவாத கும்பல்தான், தங்களை ஆதரிக்குமாறு அணிகளுக்கு அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறது.
000
எமது அமைப்பின் தலைமையிலான தொழிற்சங்க அரங்கின் முக்கியப் பிரமுகராக இருந்த திருவாளர் வி.வி. என்பவரது ஊழல் – முறைகேடுகள் குறித்து, ஜனவரி 2021-இல் நடந்த 10-வது பிளீனத்தில் நடந்த பரிசீலனைக்குப் பின்னர், இப்பிரச்சினையைத் தாராளவாதமாக அணுகி, வி.வி.யின் ஊழல் – முறைகேடுகளை மூடிமறைக்க முயற்சித்த முன்னாள் செயலர், அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார். மேலும், இனி அவரை மா.அ.க.வுக்குத் தெரிவு செய்யக் கூடாது என்று பிளீனம் முடிவெடுத்தது.
அப்போது தன்னை அப்பாவியாகக் காட்டிக்கொண்டு நாடகமாடிய இந்த ஆஷாடபூதி, 10-வது பிளீனத்தில் தெரிவு செய்யப்பட்ட புதிய மா.அ.க.வைத் தாக்கித் தகர்த்துவிட்டு, மீண்டும் செயலராகத் தன்னை அமர்த்திக் கொள்ளும் சதிகார நோக்கத்துடன் கட்சிக்குள் கட்சி கட்டும் கீழ்த்தரமான வேலைகளில் இறங்கியுள்ளார் என்பது இப்போது நிரூபணமாகிறது.
தன்னைவிட்டால், இந்த அமைப்பைத் தலைமை தாங்கி வழிநடத்துவதற்கு யாருமில்லை என்ற இறுமாப்பில் திளைத்திருந்த அதிகாரவெறி பிடித்த இந்தப் பேர்வழி, புதிய மா.அ.க.வானது, 10-வது பிளீனத்தில் தீர்மானிக்கப்பட்ட கடமைகளை அணிகளின் பேராதரவுடன் நிறைவேற்றி, புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளதைக் கண்டு அரண்டு போயுள்ளார்.
ஒரு கம்யூனிஸ்டுக்கு உரித்தான நேர்மை என்பது அறவே இல்லாத இந்த நபர், தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக எந்தக் கேவலமான வேலையிலும் இறங்குவதற்குத் தயங்கமாட்டார் என்பதை மேற்கூறிய அவரது நடவடிக்கைகளே நிரூபித்துக் காட்டிவிட்டன.
முன்னாள் செயலர் மற்றும் அவரது ரசிகர்களின் கோஷ்டி கட்டும் கீழ்த்தரமான நடவடிக்கைகள் அம்பலமானதும், அவர் மீதும் அவரது பொறுப்பிலுள்ள குழுக்கள் மீதும் எச்சரிக்கை விடுக்கும் ஒழுங்கு நடவடிக்கையை மா.அ.க. மேற்கொண்டது. ஆனாலும், அவரும் அவரது ரசிகர்களும் தமது தவறுகளைச் சுயபரிசீலனை செய்து தம்மைத் திருத்திக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக, தமது கோஷ்டிவாத நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தினர்.
மேலும், 2012-க்குப் பிறகு அமைப்பின் நிதியறிக்கையை முன்னாள் செயலர் இதுவரை சமர்ப்பிக்கவில்லை. அவரது நிதி அராஜகத்தை மா.அ.க. விமர்சித்ததோடு, அவரது துண்டுச்சீட்டு கணக்குகளை முறைப்படுத்திக் கொடுத்து உதவியது. ஆனாலும், முன்னாள் செயலர் 2019 முதல் 2020 வரையிலான கணக்குகள் என்ற பெயரில், வரவுக்கும் செலவுக்கும் இருப்புக்கும் தொடர்பில்லாமல் ஒரு எண் கணிதப் பட்டியலைத் தயாரித்து, இவ்வளவுதான் கணக்கு என்று கொடுத்துள்ளார்.
இதனை நிதியறிக்கையாக யாரும் ஏற்க மாட்டார்கள் என்று நன்கறிந்திருந்த போதிலும், அமைப்பின் நிதியறிக்கையை முறையாகப் பராமரிக்காமல் இருந்துள்ள பாரிய தவறுக்காக எவ்வித பதற்றமோ, சுயவிமர்சனமோ இல்லாமல், அமைப்பையும் அணிகளையும் அவர் அலட்சியப்படுத்தினார். இதனைக் கடுமையாக விமர்சித்த மா.அ.க. அவருக்குக் காலக்கெடு விதித்து, நிதியறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட பின்னரும், இன்றுவரை அவர் நிதியறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை.
இது மட்டுமின்றி, இன்னமும் தொகுக்கப்படாத 11 ஆண்டுகால அனுபவத் தொகுப்பறிக்கையை, புதிய மா.அ.க. தொகுத்து வைத்துவிட்டால், அணிகள் மத்தியில் தமது தில்லுமுல்லுகளும் தகிடுதத்தங்களும் அம்பலமாகிப் போய்விடுமே என்று முன்னாள் செயலரும் அவரது ரசிகர்களும் பீதியடைந்தனர்.
புதிய மா.அ.க.வானது, ஊழியர்களின் தவறுகளுக்கு எதிராக கறாரான, பாரபட்சமற்ற அணுகுமுறையைக் கையாண்டு, முன்னாள் செயலரின் ரசிகர்களான சிலர் மீது அவர்களது தவறுகளின் தன்மைக்கேற்ப, அடுத்தடுத்து ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதைக்கண்டு பீதியடைந்த இக்கும்பல், அடுத்தகட்டமாக தங்கள் மீதும் இத்தகைய ஒழுங்கு நடவடிக்கைகள் வரும் என்று அஞ்சி, தாங்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்பாகவே அமைப்பை விட்டு வெளியேறும் இந்தக் கேலிக்கூத்தை அரங்கேற்றியுள்ளது.
000
முன்னாள் செயலரின் ரசிகர்கள் கூடாரத்தின் ஒரு பிரிவான தருமபுரி மாவட்ட அமைப்புக் கமிட்டியினர், கோஷ்டி கட்டிக்கொண்டு மா.அ.க.வுக்கு எதிராக அவதூறுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தங்கள் மாவட்டப் பகுதியை, தனி சமஸ்தானமாகக் கருதிக்கொண்டு மேல்கமிட்டியின் முடிவுகளைச் செயல்படுத்த மறுத்தனர். மேல்கமிட்டியை மதிக்காமல், அதன் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாமல், அமைப்பின் சுற்றறிக்கைகளைக்கூட அணிகளுக்குக் கொடுக்காமல், பத்திரிகை விற்பனைத் தொகையைப் பல மாதங்களாகச் செலுத்தாமல், தன்னிச்சையாகவும் தான்தோன்றித்தனமாகவும் செயல்பட்டனர்.
இவர்கள் மீது மாநிலக் கமிட்டி எழுத்துப்பூர்வமாக வைத்த விமர்சனங்கள் எதற்குமே பதிலளிக்காமல், அவதூறுகள் செய்தும், அணிகளை மிரட்டியும் தமது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள இவர்கள் கீழ்த்தரமாக செயல்பட்டனர். ஊளைச்சதை அமைப்புக்கு இலக்கணப் பொருத்தமாகத் திகழும் இந்த கும்பல், அரசியல் முன்முயற்சியின்றி சோம்பிக் கிடப்பது, தனிநபர் பிரச்சினைகளில் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து செய்வது, கட்சி கட்டும் வேலைகள் அனைத்தையும் புறக்கணிப்பது என்பதாக தமது காலத்தைக் கழித்து வருகிறது.
மேலும், மா.அ.க.வைக் கலைத்துவிட்டதாக முன்னாள் செயலர் கும்பல் வெளியிட்டிருக்கும் 28-05-2022 தேதியிட்ட அறிக்கைக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தமது மாவட்ட அணிகளிடம் இந்த கும்பல் பொய்ப் பிரச்சாரம் செய்து கொண்டே, மற்றொருபுறம், இந்த அறிக்கைக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிற மாவட்டப் பகுதிகளில் உள்ள அணிகளுக்கு இதனை வினியோகம் செய்து வருகிறது.
வேடிக்கை என்னவென்றால், முன்னாள் செயலரின் இரசிகர் கூடாரத்திலுள்ள பலர், எமது அமைப்பின் 10-வது பிளீனத்தின்போது, முன்னாள் செயலர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து, அவரது கட்சித் தகுதியை நீக்கம் செய்யக் கோரினர். இப்போது இவர்கள் வெட்கமின்றி முன்னாள் செயலரின் பின்னே திரண்டு சந்தர்ப்பவாத கோஷ்டிகானம் இசைக்கின்றனர்.
000
ஜனநாயக மத்தியத்துவத்தை வழுவாமல் பின்பற்றி, பொறுமையாகவும் நெளிவுசுழிவாகவும், நோயாளியைக் காப்பாற்றி நோயைக் குணப்படுத்தும் அணுகுமுறையைக் கையாண்டு இக்கும்பலின் தவறுகளை மா.அ.க. தொடர்ந்து சுட்டிக்காட்டி விமர்சித்து வந்துள்ளது. விமர்சன – சுயவிமர்சனத்தின் மூலம் திருத்தியமைக்க தொடர்ந்து முயற்சித்தது. ஆனாலும், இக்கும்பல் அனைத்தையும் அலட்சியப்படுத்தி, அமைப்பு முடிவுகளுக்குக் கட்டுப்பட மறுத்து, தமது திரைமறைவு சதிகளைத் தொடர்ந்து கொண்டிருந்தது.
இந்த கும்பல் மீது மாநிலக் கமிட்டி முறையாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தயாரிப்பு வேலைகளில் இருந்தபோதுதான், இந்தக் கும்பல் 28-05-2022 தேதியிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டு மா.அ.க.வைக் கலைத்துவிட்டதாக அறிவித்து அணிகளிடம் இரகசியப் பிரச்சாரம் செய்து வந்தது.
இவ்வாறு அமைப்பைப் பிளவுபடுத்திக் கலைக்கும் வகையில் அராஜகவாத, சதிகார நோக்கத்துடன் அறிக்கையை வெளியிட்டுள்ள முன்னாள் செயலர், அவரது சதித் திட்டங்களுக்கு வலதுகரமாக இருந்து செயல்படுத்திய A குழுவினர், அவரது ரசிகர் கூடாரமான தருமபுரி மாவட்ட அமைப்புக் கமிட்டி ஆகியோரை அமைப்பில் இருந்து நீக்கியுள்ளோம்.
1981-இலிருந்து 40 ஆண்டு காலமாக இந்த அமைப்பின் செயலாளராக இருந்து அமைப்பை வழிநடத்தியவர், இன்று தரம்தாழ்ந்து கோஷ்டி கட்டிக்கொண்டு தனக்கு ஆதரவாக கையளவேயான சில ரசிகர்களைக் கொண்ட சிறு கும்பலாகச் சீரழிந்து போயுள்ளார். அவர் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த பல ஊழியர்கள் அவரது கீழ்த்தரமான, கேவலமான நடவடிக்கைகளைக் கண்டு காறி உமிழ்கின்றனர். இக்கும்பல் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிமுட்டாள்தனத்தையும் அபத்தங்களையும் அற்பத்தனங்களையும் சாடி பல பகுதிகளில் எமது புரட்சிகர அணிகள் இவர்களை விரட்டியடித்துள்ளனர். மாநிலக் கமிட்டியின் இந்த முடிவை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அணிகள் பலரும் வரவேற்றுள்ளனர். புரட்சிகர சக்திகள், உழைக்கும் மக்களின் ஆதரவை இழந்துவிட்ட முன்னாள் செயலரும் அவரது ரசிகர் பட்டாளமும் விரைவில் அரசியல் அனாதைகளாகப்போவது திண்ணம்!
எமது அமைப்பில் கடந்த 2020-லிருந்து அடுத்தடுத்து வெளியேறிய, அல்லது வெளியேற்றப்பட்ட சீர்குலைவுவாதிகளுக்கும் தற்போது வெளியேற்றப்பட்டுள்ள அதிகாரவெறி பிடித்த இச்சதிகார கும்பலுக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது. முன்னவை அனைத்தும் தனிநபர் முரண்பாடுகளை முன்வைத்து சீர்குலைவில் ஈடுபட்ட அராஜகவாத கும்பல் என்றால், தற்போதைய நிகழ்வானது கோஷ்டிவாதத்தை அடிப்படையாகக் கொண்டு பிளவுவாதத்தில் ஈடுபடும் அராஜகவாத கும்பலாகும். இவை தனித்தனி நிகழ்வுகளாக இருந்தாலும், இவை அனைத்துக்கும் அடிப்படையாக இருப்பது வலது சந்தர்ப்பவாதத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன அராஜகவாத சித்தாந்தம்தான்.
000
அதிகாரவெறி பிடித்த இச்சதிகார கும்பல் எமது அமைப்பின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தகுதிகளிலிருந்தும் நீக்கப்பட்டு, இந்த அமைப்பிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டு அமைப்பு மேலும் தூய்மை அடைந்துள்ளதையும், இனி மேற்கொள்ள வேண்டிய கடமைகளைப் பற்றி விளக்கியும் மாநில அமைப்புக் கமிட்டி 03.06.2022 அன்று, “அமைப்பிற்குள் இரகசியமாக பதுங்கியிருந்த முன்னாள் செயலாளர் தலைமையிலான வலது சந்தர்ப்பவாத – நவீன அராஜகவாத கும்பல் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது!” என்ற தலைப்பிட்ட சுற்றறிக்கையை வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட அமைப்புக் கமிட்டிகள், மாவட்ட யூனிட்டுகள், மாவட்டப் பொறுப்பாளர்கள், மக்கள் திரள் அரங்குகளின் பிராக்சன்கள் மற்றும் மாநிலக் கமிட்டியின் நேரடிப் பொறுப்பிலுள்ள செயற்பாட்டுக் கமிட்டிகள் அனைத்தும் பங்கேற்ற இந்தச் சுற்றறிக்கை மீதான விளக்கக் கூட்டம் 06.06.2022 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அனைத்து தோழர்களும் இந்தக் கும்பலைக் அமைப்பிலிருந்து வெளியேற்றி, அமைப்பைத் தூய்மைப்படுத்தியுள்ளதை இனிப்புகள் வழங்கி பேருற்சாகத்துடன் கொண்டாடினர். இப்பிளவுவாத அதிகாரவெறி கொண்ட சதிகார கும்பலை உழைக்கும் மக்களிடமும் அனைத்து புரட்சிகர – ஜனநாயக சக்திகளிடமும் அம்பலப்படுத்தித் தனிமைப்படுத்தி முடமாக்க உறுதியேற்றனர்.
நக்சல்பாரி புரட்சிகர இயக்கம் இத்தகைய சில்லறைத்தனமான அற்பவாதிகளின் சலசலப்புகளைக் கண்டு ஒருபோதும் பீதியடைந்ததில்லை. சோர்வும் விரக்தியுமடைந்து துவண்டு போனதுமில்லை. எவ்வித அமைப்புக் கண்ணோட்டமும் இல்லாத, கட்டுப்பாட்டை விரும்பாத, குட்டி முதலாளிய தனிநபர்வாதத்தைக் கொண்ட இந்த நவீன அராஜகவாத, பிளவுவாத, சதிகார கும்பலை உழைக்கும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி முடக்காமல் எமது பணிகள் ஓயப்போவதுமில்லை.
இது, திரிபுவாத – நவீன திரிபுவாத சித்தாந்தங்களை நிராகரித்த மகத்தான நக்சல்பாரி எழுச்சியின் 55-வது ஆண்டு; மா.அ.க. என்ற எமது அமைப்பு தொடங்கப்பட்டதன் 45-வது ஆண்டு. பாட்டாளி வர்க்க விரோத சிந்தாந்தங்களுக்கு எதிரான விடாப்பிடியான போராட்டத்தில், காலில் தைத்த கோஷ்டிவாத – அராஜகவாத முள்ளைப் பிடுங்கி எறிந்துவிட்டு, ஆயிரமாயிரம் தியாகிகளின் உதிரத்தால் சிவந்த நக்சல்பாரி புரட்சிப் பாதையில் உறுதியுடன் எமது பயணத்தைத் தொடர்கிறோம். எமது அமைப்பின் மீது எல்லையற்ற நம்பிக்கை வைத்துள்ள அனைத்து புரட்சிகர – ஜனநாயக சக்திகளும், வர்க்க உணர்வு கொண்ட உழைக்கும் மக்களும் தொடர்ந்து எமது புரட்சிப் பணிகளுக்குத் தோள்கொடுத்து ஆதரவளிக்குமாறு தோழமையுடன் கோருகிறோம்.

♦ எமது அமைப்பு வலது திசைவிலகல் அடைந்துள்ளதை அடையாளப்படுத்திய 10-வது பிளீனம், எமது அமைப்பின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும்!

♦ வலது திசைவிலகலுக்குக் காரணமான வலது சந்தர்ப்பவாத – நவீன அராஜகவாதத்தைக் கண்டறிந்த 2022 ஏப்ரல் 9-10  தேதிகளில் நடந்த உட்கட்சி விவாத சிறப்புக் கூட்டமும்,  அதனைத் தொடர்ந்து 2022 ஜூன் மாதத்தில் முன்னாள் செயலர் கும்பல் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டிருப்பதும் வலது திசைவிலகலை முறியடித்து, போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டும் எமது போராட்டத்தில் இரண்டாவது வெற்றியாகும்!
♦ வலது சந்தர்ப்பவாத – நவீன அராஜகவாதக் கும்பல் அமைப்பிலிருந்து துடைத்தொழிக்கப்பட்டதை உற்சாகத்துடன் வரவேற்போம்!
♦ மார்க்சிய – லெனினிய – மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடித்து, எஃகுறுதிமிக்க போல்ஷ்விக் பாணியிலான கட்சியைக் கட்டியமைப்போம்!
♦ காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தி பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சி ஓங்குக!
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) நீடுழி வாழ்க!
புரட்சிகர வாழ்த்துகள்!
★ ★ ★
13.6.2022                                                                                 மாநில அமைப்புக் கமிட்டி,
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
(மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்),
தமிழ்நாடு.

 

உ.பி.யில் அரங்கேறும் பாசிசம் : காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த களமிறங்குவோம்! | வீடியோ

ந்துமதவெறியர்கள் இன்று ராமநவமி, அனுமன் ஜெயந்தி, சிவராத்திரி என்ற பெயரில் முஸ்லீம் மக்கள் வாழும் குடியிருப்புக்குள் புகுந்தும், மசூதிகளின் வாயில்களிலும் கலவரங்களை நடத்துகிறார்கள். இவர்களின் வீடுகள் எங்காவது இடிக்கப்பட்டுள்ளதா? இல்லை. ஆனால், இஸ்லாமிய மக்களின் வீடுகள் திட்டமிட்டு இடிக்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் ஜூன் 12-ம் தேதி வீட்டை இடப்பதற்கு அறிவிப்பு கொடுத்ததாக கூறிவிட்டு, அன்றே வந்து இடித்து தரைமட்டமாக்கிவிட்டார்கள் போலீசும், உ.பி அரசும்.
முஸ்லீம் என்ற ஒரு தோற்றம் போது உங்களை தாக்குவதற்கும் கொலை செய்வதற்கும் என்ற பாசிசம் சரவாதிகாரம் தான் இன்று உ.பி.யி அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
இஸ்லாமிய மக்களின் வீடுகளை இடிக்கும் இந்த காவி புல்டோசர் நாளை இந்து மக்களை நோக்கியும், உழைக்கும் மக்களை நோக்கியும் வரும். எனவே நாடு முழுவதும் பரவி வரும் காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த களத்தில் இறக்கும்வோம் வாருங்கள் ! என்று அறைகூவி அழைக்கிறார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் ரவி அவர்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை வாரியம் முடிவு ! | மக்கள் அதிகாரம் கண்டனம்

13.06.2022
மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை வாரியம் முடிவு !
தமிழகத்துக்கு துரோகம் செய்யும் பாசிச மோடி அரசை முறியடிப்போம் !
பத்திரிகை செய்தி
இம்மாதம் (ஜூன்) 17-ம் தேதி நடைபெற உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டத்தில் தமிழகத்திற்கு எதிராக, மேகதாது அணை குறித்து விவாதிப்பதற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது என்பது தமிழகத்துக்கு ஒன்றிய அரசு செய்த மாபெரும் துரோகமாகும்.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, கே.ஆர்.எஸ்., மற்றும் கபிணி அணைகளில் இருந்து தமிழகத்தின் எல்லையான பிலிகுண்டுக்கு மாதாந்திர அடிப்படையில் 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும்.
இந்த தண்ணீரை தேக்க வேண்டுமானால் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதியளிக்கக் கூடாது என தமிழக அரசு 50 ஆண்டுகளாக போராடி வருகிறது.
மேகேதாட்டுவில் அணை கட்ட உரிமை இல்லாத கர்நாடக அரசு வைத்த வாதத்தின் அடிப்படையில், அதனை நிகழ்ச்சிநிரலில் சேர்த்து விவாதிக்கலாம் என்று ஒன்றிய அரசு முடிவு செய்தது கடும் கண்டனத்துக்குரியது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் மேகேதாட்டு தொடர்பான எந்த விவாதமும் நடைபெறக் கூடாது. அவ்வாறு நடைபெறும் விவாதம் தமிழகத்தின் உரிமையை அடகு வைப்பதாகும். ஆகவே, ஒன்றிய அரசு மேகேதாட்டு தொடர்பான விவாதத்தை நடத்தக் கூடாது என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தமிழ் இனத்துக்கும் தமிழகத்துக்கும் தொடர்ந்து துரோகத்தையும் வஞ்சத்தையும் விளைவித்து வரும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – பாசிச மோடி அரசுக்கு எதிராக தமிழ்நாடு ஓரணியாய் நின்று போராட வேண்டிய தருணம் இது.
2018-ல் காவிரி நீர் உரிமைக்காக மோடியை விரட்டியடித்த தமிழ்நாடு, மீண்டும் அந்த களத்திற்கு வந்தால் மட்டுமே காவிரி நதிநீர் உரிமையை காப்பாற்ற முடியும்.
தோழமையுடன்,
தோழர் குருசாமி,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனி ஆக்கப்படும் கல்வி | ம.க.இ.க ஆவணப்படம்

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைந்து”
ஒரு தலைமுறையில் பெரும் கல்வி அறிவானது எழுதலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும் என்று கல்வியின் அவசியத்தை தீர்க்கமாக வலியுறுத்துகிறார் திருவள்ளுவர்.
அதுமட்டுமல்ல, இன்று உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள் பலர், மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு கல்வி எவ்வளவு அவசியம் என்பதை பற்றி பல்வேறு இடங்களிலும் குறிப்பிடுகிறார்கள். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த கல்வி இன்று தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வியை ஓர் கடை சரக்காக மாற்றிவிட்டன. ஏழை, நடுத்தர மாணவர்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டு, எப்படி அவர்களுக்கு கல்வி எட்டாக்கனியாக மாற்றப்படுகிறது என்பதை பற்றியான ஒரு காணொலிதான் இந்த ஆவணப்படம்.
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
தயாரிப்பு – வீடியோ ஆக்கம் : ம.க.இ.க
உதவி : புரட்சிகர மாணவர் –  இளைஞர் முன்னணி, மாநில ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்நாடு.
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
தமிழ்நாடு – புதுவை.
9791653200

காவி பாசிச புல்டோசர்களுக்கு எதிராக களத்தில் இறங்குவோம் ! இஸ்லாமிய மக்களுக்கு தோள் கொடுப்போம் ! | மக்கள் அதிகாரம்

13.06.2022
இன்று இஸ்லாமியர்களின் வீடுகளை இடிக்கும் புல்டோசர்;
நாளை மக்கள் அனைவரின் வாழ்வையும் நொறுக்கும்!
காவி பாசிச புல்டோசர்களுக்கு எதிராக களத்தில் இறங்குவோம்!
பாதிக்கப்படும் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக தோளோடு தோள் கொடுப்போம்!
பத்திரிகை செய்தி
முகமது நபி மீதான நச்சுக் கருத்தை கூறியதன் மூலம் முஸ்லீம் மக்களை ஆத்திரத்திற்கு உள்ளாக்கிய பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவை கைது செய்ய வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 10) அன்று இந்தியா முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் போராடினார்கள்.
சட்டம் ஒழுங்கிற்கு சீர்குலைவை ஏற்படுத்திய பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் கைது செய்யப்படவில்லை. ஆனால், அவரை கைது செய்ய வேண்டும் என்று போராடிய மக்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியது பா.ஜ.க மாநில அரசுகள். ஜார்க்கண்டில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் போராடிய முஸ்லீம் மக்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ள யோகியின் போலீசு. ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் தலைவர்களில் ஒருவரான அஃப்ரின் பாத்திமா உள்ளிட்டோரின் வீடுகள் இடிக்கப்பட உள்ளதாக அரசு அறிவிதுள்ளது. பலரின் வீடுகளும் இடிக்கப்பட்டிருக்கின்றன.
ஆதரவற்ற மக்களின் கடைசி புகலிடம் சட்டம், நீதிமன்றம் என்பார்கள். அந்த சட்டத்தின் பெயராலேயே இஸ்லாமிய மக்களின் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
ஊடகங்களோ “வன்முறையை தூண்டியவரின் வீடு இடிக்கப்பட்டது; வன்முறைக்கு மூளையாக செயல்பட்டவர் வீடுகள் இடிக்கப்படுகின்றன” என்றெல்லாம் பேசி இஸ்லாமிய மக்களின் மீதான இந்த அநியாய தாக்குதலை நியாயப்படுத்துகின்றன.
இஸ்லாமிய வீடுகளை நொறுக்கிக் கொண்டிருக்கும் புல்டோசர் நாளை மோடிக்கு எதிராக கேள்வி கேட்கும் அனைவரின் வீடுகளையும் நொறுக்கும். இஸ்லாமியர்களின் வாழ்வு அழித்தது போலவே மற்றவர்களது வாழ்வையும் அழிக்கும்.
காவி –  கார்ப்பரேட் பாசிசத்துக்கு எதிராக மக்களை அணி திரட்டுவோம் !
காவி பாசிச புல்டோசர்களுக்கு எதிராக களத்தில் இறங்குவோம் !
பாதிக்கப்படும் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக தோளோடு தோள் கொடுப்போம்!

தோழமையுடன்,
தோழர் மருது
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321.

நூபுர் ஷர்மா கருத்துக்கு எதிரான போராட்டம் : இஸ்லாமியர்களின் வீடுகள் இடிப்பு !

முகமது நபியை இழிவுப்படுத்தி பேசிய பா.ஜ.க நூபுர் ஷர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மக்கள் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களை மையமாக வைத்து இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை மூர்க்கமாக கட்டவிழ்த்துவிட்டுள்ளது இந்துத்துவ கும்பலும், காவி போலிசும்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக உ.பி சஹாரன்பூர் மற்றும் கான்பூரில் தொழுகை முடித்து இஸ்லாமிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் பல இடங்களில் நடைபெற்ற போராட்டத்தை வன்முறைகளமாக மாற்றியதாக 64 அப்பாவி முஸ்லீம் மக்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது காவி போலீசு. மேலும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீது பல வழக்குகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. ‘வன்முறை கட்டுக்குள் கொண்டுவர’ போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் புகைப்படங்களை ‘கலவரக்காரர்கள்’ என பேனர் அடித்து மாநிலத்தின் பல இடங்களில் ஒட்டியுள்ளதோடு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்திருந்தது உ.பி அரசு. இதனை தற்போது அமல்படுத்த தொடங்கிவிட்டது.
படிக்க :
♦ ராம நவமி வன்முறை : பாசிசம் தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது !
♦ டெல்லி ஜஹாங்கீர்புரி முஸ்லிம் மக்களின் வீடுகள் இடிப்பு : இந்துராஷ்டிரத்திற்கான பாதை செப்பனிடப்படுகிறது !
‘போராட்டக் கலவரத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள்’ என காவி போலீசால் அடையாளம் காட்டப்படும் நபர்கள் மட்டுமல்லாது போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் வீடுகளையும் குறிவைத்து இடித்து வருகிறது யோகி அரசு. முஸ்லீம்களின் வீடுகளை புல்டோசரைக் கொண்டு இடித்து தள்ளும் வீடியோ காட்சியினை உ.பி போலீசு வக்கீரமாக வெளியிட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு, வழக்கு, சிறை, சொத்து பறிமுதல் என போராடும் இஸ்லாமியர்களை காவி போலீசு ஒடுக்குவது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் இந்துத்துவ காவி குண்டர்படை முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தை மூர்க்கமாக கட்டவீழ்த்துவிட்டுள்ளது.
போராட்டம் நடந்த அன்றிரவு, கடைக்கு சென்று திரும்பிய வழியில், ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டவாறு வந்த 30-க்கும் மேற்பட்ட காவி குண்டர் படையினரால், “போராட்டத்தில் ஏன் கலந்துகொண்டீர்கள்” என கேட்டு இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.
‘அன்று நடைபெற்ற போராட்டத்தில் தாங்கள் கலந்து கொள்ளவில்லை’ என்று அந்த முஸ்லீம் இளைஞர்கள் பலமுறை கூறியும் கேட்காமல் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்துமதவெறி ஏற்றப்பட்ட அக்குண்டர்களுக்கு, ‘போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்’ ‘கலந்துகொள்ளாதவர்கள்’ என்பது தேவையே இல்லையே! முஸ்லீம் என்ற ஒன்றே போதுமே!
காவிகளின் தாக்குதலுக்குள்ளான ஜீஷான் (24), “நாங்கள் கடைக்கு சென்று திரும்பிய வழியில் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்தை எழுப்பி வந்த கும்பல், எங்களை பார்த்ததும் ‘அவர்களை பிடியுங்கள்.. விரட்டி பிடியுங்கள்’ என கூச்சலிட்டு கொண்டு துரத்த ஆரம்பித்தார்கள்” என்கிறார் பயம் நீங்கா குரலில்.
“அவர்கள் 30-க்கும் அதிகமாக இருந்தனர். ஒவ்வொருவரின் கையிலும் கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்தனர். எங்களை பார்த்ததும் சூழ்ந்துக் கொண்ட அவர்கள், எங்கள் பெயர்களை கேட்டு அடிக்க ஆரம்பித்தார்கள். நாங்கள் வலி தாங்காமல் சுருண்டு விழும் வரை சரமாரியாக தாக்கினார்கள்” என்கிறார்.
காவி குண்டர்களால் தாக்கப்பட்டபோது தனது இருசக்கர வாகனம் போலீசு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கும் ஜீஷான், “எங்களை தாக்கிய கும்பல் மீது புகார் அளிக்க சென்றபோது போலீசார் புகாரை எடுத்துக் கொள்ளவில்லை. மீண்டும் போலீசு நிலையத்திற்கு சென்று புகார் அளித்து எங்களது இருசக்கர வாகனத்தை பெற்று வரலாம் என்று சென்றபோது, நாங்கள் செல்லும் வழியில் பஞ்ரங் தள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது. அதனால் புகார் அளிக்கவோ எங்களது வாகனத்தை மீட்கவோ செல்லவில்லை” என்கிறார்.
படிக்க :
♦ டெல்லி ஜஹாங்கீர்புரி : முஸ்லீம் மக்களின் வீடுகள் காவி அரசால் இடிப்பு | கேலிச்சித்திரங்கள்
♦ ம.பி : முஸ்லீம் என்று சந்தேகித்து மாற்றுத்திறனாளி முதியவரை அடித்தே கொன்ற பாஜக குண்டர்!
எதிர்ப்பாராத நேரத்தில் கும்பல் தாக்குதலுக்கு உள்ளான இந்த முஸ்லீம் இளைஞர்களை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்கி, தனது சொந்த நாட்டிலேயே இனி சுதந்திரமாக நடமாட முடியாது என்ற அச்சத்திலேயே வைத்திருப்பதுதான் காவி கும்பலின் எதிர்ப்பார்ப்பு.
இவர்கள் இருவர் மட்டுமல்ல இந்துத்துவ அமைப்புகளால் நடத்தப்பட்ட பல வன்முறைகளாலும் இந்து பண்டிகை என்ற பெயரில் நடத்தப்பட்ட கலவரங்களாலும் பாதிப்புக்குள்ளான இஸ்லாமியர்கள் நிலையும் இதுவே.
தற்போது அடுத்தக்கட்டமாக, இஸ்லாமியர்களின் இறைத்தூதராக கருதும் முகமது நபி குறித்து திட்டமிட்டு இழிவுப்படுத்தி, முஸ்லீம்களை ‘அவர்களுக்காக போராடுபவர்களாக’ தனிமைப்படுத்தி, போலீசை கொண்டும் காவி குண்டர்களைக் கொண்டும் ஒடுக்கி அச்சுறுத்தி வருவதென்பது இந்துத்துவத்தின் அஜெண்டா. அதுதான் தற்போது அமலாகிக் கொண்டிருக்கிறது.

வேம்பு