Sunday, August 10, 2025
முகப்பு பதிவு பக்கம் 167

உ.பி.யில் அரங்கேறும் பாசிசம் : காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த களமிறங்குவோம்! | வீடியோ

ந்துமதவெறியர்கள் இன்று ராமநவமி, அனுமன் ஜெயந்தி, சிவராத்திரி என்ற பெயரில் முஸ்லீம் மக்கள் வாழும் குடியிருப்புக்குள் புகுந்தும், மசூதிகளின் வாயில்களிலும் கலவரங்களை நடத்துகிறார்கள். இவர்களின் வீடுகள் எங்காவது இடிக்கப்பட்டுள்ளதா? இல்லை. ஆனால், இஸ்லாமிய மக்களின் வீடுகள் திட்டமிட்டு இடிக்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் ஜூன் 12-ம் தேதி வீட்டை இடப்பதற்கு அறிவிப்பு கொடுத்ததாக கூறிவிட்டு, அன்றே வந்து இடித்து தரைமட்டமாக்கிவிட்டார்கள் போலீசும், உ.பி அரசும்.
முஸ்லீம் என்ற ஒரு தோற்றம் போது உங்களை தாக்குவதற்கும் கொலை செய்வதற்கும் என்ற பாசிசம் சரவாதிகாரம் தான் இன்று உ.பி.யி அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
இஸ்லாமிய மக்களின் வீடுகளை இடிக்கும் இந்த காவி புல்டோசர் நாளை இந்து மக்களை நோக்கியும், உழைக்கும் மக்களை நோக்கியும் வரும். எனவே நாடு முழுவதும் பரவி வரும் காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த களத்தில் இறக்கும்வோம் வாருங்கள் ! என்று அறைகூவி அழைக்கிறார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் ரவி அவர்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை வாரியம் முடிவு ! | மக்கள் அதிகாரம் கண்டனம்

13.06.2022
மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை வாரியம் முடிவு !
தமிழகத்துக்கு துரோகம் செய்யும் பாசிச மோடி அரசை முறியடிப்போம் !
பத்திரிகை செய்தி
இம்மாதம் (ஜூன்) 17-ம் தேதி நடைபெற உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டத்தில் தமிழகத்திற்கு எதிராக, மேகதாது அணை குறித்து விவாதிப்பதற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது என்பது தமிழகத்துக்கு ஒன்றிய அரசு செய்த மாபெரும் துரோகமாகும்.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, கே.ஆர்.எஸ்., மற்றும் கபிணி அணைகளில் இருந்து தமிழகத்தின் எல்லையான பிலிகுண்டுக்கு மாதாந்திர அடிப்படையில் 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும்.
இந்த தண்ணீரை தேக்க வேண்டுமானால் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதியளிக்கக் கூடாது என தமிழக அரசு 50 ஆண்டுகளாக போராடி வருகிறது.
மேகேதாட்டுவில் அணை கட்ட உரிமை இல்லாத கர்நாடக அரசு வைத்த வாதத்தின் அடிப்படையில், அதனை நிகழ்ச்சிநிரலில் சேர்த்து விவாதிக்கலாம் என்று ஒன்றிய அரசு முடிவு செய்தது கடும் கண்டனத்துக்குரியது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் மேகேதாட்டு தொடர்பான எந்த விவாதமும் நடைபெறக் கூடாது. அவ்வாறு நடைபெறும் விவாதம் தமிழகத்தின் உரிமையை அடகு வைப்பதாகும். ஆகவே, ஒன்றிய அரசு மேகேதாட்டு தொடர்பான விவாதத்தை நடத்தக் கூடாது என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தமிழ் இனத்துக்கும் தமிழகத்துக்கும் தொடர்ந்து துரோகத்தையும் வஞ்சத்தையும் விளைவித்து வரும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க – பாசிச மோடி அரசுக்கு எதிராக தமிழ்நாடு ஓரணியாய் நின்று போராட வேண்டிய தருணம் இது.
2018-ல் காவிரி நீர் உரிமைக்காக மோடியை விரட்டியடித்த தமிழ்நாடு, மீண்டும் அந்த களத்திற்கு வந்தால் மட்டுமே காவிரி நதிநீர் உரிமையை காப்பாற்ற முடியும்.
தோழமையுடன்,
தோழர் குருசாமி,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனி ஆக்கப்படும் கல்வி | ம.க.இ.க ஆவணப்படம்

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைந்து”
ஒரு தலைமுறையில் பெரும் கல்வி அறிவானது எழுதலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும் என்று கல்வியின் அவசியத்தை தீர்க்கமாக வலியுறுத்துகிறார் திருவள்ளுவர்.
அதுமட்டுமல்ல, இன்று உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள் பலர், மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு கல்வி எவ்வளவு அவசியம் என்பதை பற்றி பல்வேறு இடங்களிலும் குறிப்பிடுகிறார்கள். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த கல்வி இன்று தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வியை ஓர் கடை சரக்காக மாற்றிவிட்டன. ஏழை, நடுத்தர மாணவர்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டு, எப்படி அவர்களுக்கு கல்வி எட்டாக்கனியாக மாற்றப்படுகிறது என்பதை பற்றியான ஒரு காணொலிதான் இந்த ஆவணப்படம்.
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
தயாரிப்பு – வீடியோ ஆக்கம் : ம.க.இ.க
உதவி : புரட்சிகர மாணவர் –  இளைஞர் முன்னணி, மாநில ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்நாடு.
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
தமிழ்நாடு – புதுவை.
9791653200

காவி பாசிச புல்டோசர்களுக்கு எதிராக களத்தில் இறங்குவோம் ! இஸ்லாமிய மக்களுக்கு தோள் கொடுப்போம் ! | மக்கள் அதிகாரம்

13.06.2022
இன்று இஸ்லாமியர்களின் வீடுகளை இடிக்கும் புல்டோசர்;
நாளை மக்கள் அனைவரின் வாழ்வையும் நொறுக்கும்!
காவி பாசிச புல்டோசர்களுக்கு எதிராக களத்தில் இறங்குவோம்!
பாதிக்கப்படும் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக தோளோடு தோள் கொடுப்போம்!
பத்திரிகை செய்தி
முகமது நபி மீதான நச்சுக் கருத்தை கூறியதன் மூலம் முஸ்லீம் மக்களை ஆத்திரத்திற்கு உள்ளாக்கிய பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவை கைது செய்ய வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 10) அன்று இந்தியா முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் போராடினார்கள்.
சட்டம் ஒழுங்கிற்கு சீர்குலைவை ஏற்படுத்திய பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் கைது செய்யப்படவில்லை. ஆனால், அவரை கைது செய்ய வேண்டும் என்று போராடிய மக்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியது பா.ஜ.க மாநில அரசுகள். ஜார்க்கண்டில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் போராடிய முஸ்லீம் மக்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ள யோகியின் போலீசு. ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் தலைவர்களில் ஒருவரான அஃப்ரின் பாத்திமா உள்ளிட்டோரின் வீடுகள் இடிக்கப்பட உள்ளதாக அரசு அறிவிதுள்ளது. பலரின் வீடுகளும் இடிக்கப்பட்டிருக்கின்றன.
ஆதரவற்ற மக்களின் கடைசி புகலிடம் சட்டம், நீதிமன்றம் என்பார்கள். அந்த சட்டத்தின் பெயராலேயே இஸ்லாமிய மக்களின் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
ஊடகங்களோ “வன்முறையை தூண்டியவரின் வீடு இடிக்கப்பட்டது; வன்முறைக்கு மூளையாக செயல்பட்டவர் வீடுகள் இடிக்கப்படுகின்றன” என்றெல்லாம் பேசி இஸ்லாமிய மக்களின் மீதான இந்த அநியாய தாக்குதலை நியாயப்படுத்துகின்றன.
இஸ்லாமிய வீடுகளை நொறுக்கிக் கொண்டிருக்கும் புல்டோசர் நாளை மோடிக்கு எதிராக கேள்வி கேட்கும் அனைவரின் வீடுகளையும் நொறுக்கும். இஸ்லாமியர்களின் வாழ்வு அழித்தது போலவே மற்றவர்களது வாழ்வையும் அழிக்கும்.
காவி –  கார்ப்பரேட் பாசிசத்துக்கு எதிராக மக்களை அணி திரட்டுவோம் !
காவி பாசிச புல்டோசர்களுக்கு எதிராக களத்தில் இறங்குவோம் !
பாதிக்கப்படும் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக தோளோடு தோள் கொடுப்போம்!

தோழமையுடன்,
தோழர் மருது
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321.

நூபுர் ஷர்மா கருத்துக்கு எதிரான போராட்டம் : இஸ்லாமியர்களின் வீடுகள் இடிப்பு !

முகமது நபியை இழிவுப்படுத்தி பேசிய பா.ஜ.க நூபுர் ஷர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மக்கள் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களை மையமாக வைத்து இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை மூர்க்கமாக கட்டவிழ்த்துவிட்டுள்ளது இந்துத்துவ கும்பலும், காவி போலிசும்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக உ.பி சஹாரன்பூர் மற்றும் கான்பூரில் தொழுகை முடித்து இஸ்லாமிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் பல இடங்களில் நடைபெற்ற போராட்டத்தை வன்முறைகளமாக மாற்றியதாக 64 அப்பாவி முஸ்லீம் மக்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது காவி போலீசு. மேலும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீது பல வழக்குகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. ‘வன்முறை கட்டுக்குள் கொண்டுவர’ போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் புகைப்படங்களை ‘கலவரக்காரர்கள்’ என பேனர் அடித்து மாநிலத்தின் பல இடங்களில் ஒட்டியுள்ளதோடு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்திருந்தது உ.பி அரசு. இதனை தற்போது அமல்படுத்த தொடங்கிவிட்டது.
படிக்க :
♦ ராம நவமி வன்முறை : பாசிசம் தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது !
♦ டெல்லி ஜஹாங்கீர்புரி முஸ்லிம் மக்களின் வீடுகள் இடிப்பு : இந்துராஷ்டிரத்திற்கான பாதை செப்பனிடப்படுகிறது !
‘போராட்டக் கலவரத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள்’ என காவி போலீசால் அடையாளம் காட்டப்படும் நபர்கள் மட்டுமல்லாது போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் வீடுகளையும் குறிவைத்து இடித்து வருகிறது யோகி அரசு. முஸ்லீம்களின் வீடுகளை புல்டோசரைக் கொண்டு இடித்து தள்ளும் வீடியோ காட்சியினை உ.பி போலீசு வக்கீரமாக வெளியிட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு, வழக்கு, சிறை, சொத்து பறிமுதல் என போராடும் இஸ்லாமியர்களை காவி போலீசு ஒடுக்குவது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் இந்துத்துவ காவி குண்டர்படை முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தை மூர்க்கமாக கட்டவீழ்த்துவிட்டுள்ளது.
போராட்டம் நடந்த அன்றிரவு, கடைக்கு சென்று திரும்பிய வழியில், ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டவாறு வந்த 30-க்கும் மேற்பட்ட காவி குண்டர் படையினரால், “போராட்டத்தில் ஏன் கலந்துகொண்டீர்கள்” என கேட்டு இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.
‘அன்று நடைபெற்ற போராட்டத்தில் தாங்கள் கலந்து கொள்ளவில்லை’ என்று அந்த முஸ்லீம் இளைஞர்கள் பலமுறை கூறியும் கேட்காமல் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்துமதவெறி ஏற்றப்பட்ட அக்குண்டர்களுக்கு, ‘போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்’ ‘கலந்துகொள்ளாதவர்கள்’ என்பது தேவையே இல்லையே! முஸ்லீம் என்ற ஒன்றே போதுமே!
காவிகளின் தாக்குதலுக்குள்ளான ஜீஷான் (24), “நாங்கள் கடைக்கு சென்று திரும்பிய வழியில் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்தை எழுப்பி வந்த கும்பல், எங்களை பார்த்ததும் ‘அவர்களை பிடியுங்கள்.. விரட்டி பிடியுங்கள்’ என கூச்சலிட்டு கொண்டு துரத்த ஆரம்பித்தார்கள்” என்கிறார் பயம் நீங்கா குரலில்.
“அவர்கள் 30-க்கும் அதிகமாக இருந்தனர். ஒவ்வொருவரின் கையிலும் கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்தனர். எங்களை பார்த்ததும் சூழ்ந்துக் கொண்ட அவர்கள், எங்கள் பெயர்களை கேட்டு அடிக்க ஆரம்பித்தார்கள். நாங்கள் வலி தாங்காமல் சுருண்டு விழும் வரை சரமாரியாக தாக்கினார்கள்” என்கிறார்.
காவி குண்டர்களால் தாக்கப்பட்டபோது தனது இருசக்கர வாகனம் போலீசு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கும் ஜீஷான், “எங்களை தாக்கிய கும்பல் மீது புகார் அளிக்க சென்றபோது போலீசார் புகாரை எடுத்துக் கொள்ளவில்லை. மீண்டும் போலீசு நிலையத்திற்கு சென்று புகார் அளித்து எங்களது இருசக்கர வாகனத்தை பெற்று வரலாம் என்று சென்றபோது, நாங்கள் செல்லும் வழியில் பஞ்ரங் தள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தது. அதனால் புகார் அளிக்கவோ எங்களது வாகனத்தை மீட்கவோ செல்லவில்லை” என்கிறார்.
படிக்க :
♦ டெல்லி ஜஹாங்கீர்புரி : முஸ்லீம் மக்களின் வீடுகள் காவி அரசால் இடிப்பு | கேலிச்சித்திரங்கள்
♦ ம.பி : முஸ்லீம் என்று சந்தேகித்து மாற்றுத்திறனாளி முதியவரை அடித்தே கொன்ற பாஜக குண்டர்!
எதிர்ப்பாராத நேரத்தில் கும்பல் தாக்குதலுக்கு உள்ளான இந்த முஸ்லீம் இளைஞர்களை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்கி, தனது சொந்த நாட்டிலேயே இனி சுதந்திரமாக நடமாட முடியாது என்ற அச்சத்திலேயே வைத்திருப்பதுதான் காவி கும்பலின் எதிர்ப்பார்ப்பு.
இவர்கள் இருவர் மட்டுமல்ல இந்துத்துவ அமைப்புகளால் நடத்தப்பட்ட பல வன்முறைகளாலும் இந்து பண்டிகை என்ற பெயரில் நடத்தப்பட்ட கலவரங்களாலும் பாதிப்புக்குள்ளான இஸ்லாமியர்கள் நிலையும் இதுவே.
தற்போது அடுத்தக்கட்டமாக, இஸ்லாமியர்களின் இறைத்தூதராக கருதும் முகமது நபி குறித்து திட்டமிட்டு இழிவுப்படுத்தி, முஸ்லீம்களை ‘அவர்களுக்காக போராடுபவர்களாக’ தனிமைப்படுத்தி, போலீசை கொண்டும் காவி குண்டர்களைக் கொண்டும் ஒடுக்கி அச்சுறுத்தி வருவதென்பது இந்துத்துவத்தின் அஜெண்டா. அதுதான் தற்போது அமலாகிக் கொண்டிருக்கிறது.

வேம்பு

தேவதாசி முறையை நவீனமயமாக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு !

1
தொழிலை வைத்து யாரையும் பிரித்து பார்க்க முடியாது. பாலியல் தொழில் என்பதும் ஒரு தொழிலே. சட்டத்தின்படி பாலியல் தொழிலாளிகள், அவர்களின் குழந்தைகள் மரியாதையுடனும் கண்ணியத்துடன், சமமாக நடத்தப்பட வேண்டும். விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் 18 வயதிற்கு மேற்பட்டோரை போலீசுத்துறை தொந்தரவு செய்யவோ, கிரிமினல் நடவடிக்கை எடுக்கவோக் கூடாது என்று கடந்த மே மாத இறுதியில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இது ஏதோ முற்போக்கானது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஜனநாயக சக்திகள் வரவேற்கின்றனர். ஆனால், காமவெறிக் கொண்ட மிருகங்களுக்கு பெண்களை மேலும் இறையாக்க, பாலியல் சுரண்டலை தொழிலாக அடையாளப்படுத்தி இருப்பதே இந்த தீர்ப்பாகும். இதை தொழில் என்று சொல்வதே வெட்கக்கேடான விஷயம்தான்.
காலம் காலமாக பெண்கள் ஆணாதிக்க சமூகத்தால் உடல் ரீதியாக சுரண்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், அதை நிறுவனமயமாக்க துடிக்கிறது நீதிமன்றம். பெண்கள் குடும்ப வறுமையின் காரணமாக விருப்பம் இல்லாமலும், வலுகட்டாயமாகவும் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் என்பது கொஞ்ச நஞ்சம் அல்ல.
படிக்க :
♦ அரியானா : உச்சநீதிமன்ற ஆசியோடு விரட்டியடிக்கப்படும் தொழிலாளர்கள் !
♦ ஸ்டெர்லைட் திறப்பை நீட்டிக்க உச்சநீதிமன்றம் செல்லும் வேதாந்தா : என்ன செய்யப் போகிறது தமிழக அரசு ?
ஆணின் இஷ்டபடி நடந்துக்கொள்ள வேண்டும். அவன் என்ன சொன்னாலும் அப்படியே செய்ய வேண்டும். சில சமயம் அவர்களை அடித்து துன்புறுத்தி உடலுறவில் ஈடுபடுத்துவார்கள். கூட்டுப் பாலியல் துன்புறுதலுக்கும் ஆளாக்கபடுவார்கள். வித விதாமான உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்துவார்கள். பல நேரங்களில் அவர்களை இச்சைக்கு பயன்படுத்தி கொண்டு காசு கொடுக்காமல் விரட்டியடிப்பார்கள்.   இவ்வாறு பல வகையில் சித்திரவதை கொடுமைகளை அனுபவித்து துரத்தியடிக்கப்படும் இவர்கள் உடல் ரீதியாக சுரண்டப்படுவது மட்டும் அல்லாமல் பல்வேறு பல்வினை நோய்களுக்கும் ஆளாக்கபடுகின்றனர்.
இவை மட்டுமின்றி பாலியல் படங்களில் நடிக்கும் பெண்கள் மீதும் ஏராளமான பாலியல் வக்கிரங்களும் தொடுக்கப்படுகின்றன. உலகளவில் பெரும் சந்தையை கைபற்றி இருக்கும் இத்தகைய பாலியல் படங்களில் நடிக்கும் பெண்களின் உடலை பலியாக்கி கொழுத்து கொண்டிருக்கின்றனர் இடைத்தரகர்கள்.
சமீபத்தில் விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த சாம் வின்செண்ட் மற்றும் சரவணன் என்ற இரண்டு போலீசு அதிகாரிகளும், மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்கள் என்ற பெயரில் 5 பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்துள்ளனர். விபச்சார தடுப்பு பிரிவில் நியமிக்கப்பட்ட போலீசு அதிகாரிகளே விபச்சாரத்தை நடத்தி வருவது என்பது போலீசு உதவி இல்லாமல் பாலியல் தொழில் எங்கும் நடைபெற முடியாது என்பதை நமக்கு காட்டுகிறது.
பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபட வைத்து பணம் சம்பாரிக்கும் இடைதரகரிடம் லஞ்சம் வாங்கி கொண்டு பெரும்பாலும் அதிகாரிகள் இதை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். பல நேரங்களில் இந்த அதிகாரிகளே பெண்களை தன்னுடைய இச்சைக்கு பயன்படுத்தி கொள்ளும் கொடூரங்களும் அரங்கேறுகின்றன.
விஜய் ஆண்டனி நடித்த திமிரு பிடித்தவன் படத்தில் வரும் ஒரு காட்சியில், பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண்ணிடம் கதாநாயகன் அறிவுரை சொல்லுவான். அதில் “நீங்கலாம் உங்கள அழிச்சிகிட்டு இந்தமாறி தப்புபன்ற ஆளுக்கு தீனி போடுறதால்தான் இரவில் கூடப் பாதுகாப்பா  பெண்கள் தனியாக நடந்து செல்ல முடிகிறது. இதுவும் ஒரு சமூக சேவைதான்” என்று பாலியல் தொழிலை புனிதப்படுத்தி பேசியிருப்பான்.
இங்கு கூட சில ஆட்கள் பாலியல் தொழில் இருப்பதால்தான் பாலியல் வன்கொடுமைகள் குறைவாக நடக்கிறதென்று ஞாயவாதம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அப்படி வியாக்கியானம் பேசும் நபர்களின் பேச்சுக்கு பின்னால் ஒளிந்து இருப்பது பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டும் வக்கிரப் புத்திதான். பெண்களை நுகர்வு பொருட்கள் ஆக்கி விதவிதமான முறையில் பாலியல் உறவுகளை வைத்துக் கொள்ள தூண்டும் முதலாளித்துவமும், பெண் என்றால் காமத்திற்கானவள் என்று போதிக்கும் பார்ப்பனிய – ஆணாதிக்க சமூக கட்டமைப்பும் இருக்கும் வரை பாலியல் வன்கொடுமைகள் குறைய வழியேதுமில்லை.
2011-ஆம் ஆண்டே பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், உத்தரவை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை. எனவே 2021-ஆம் ஆண்டு உடனடியாக, பாலியல் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் ரேஷன் அட்டை வழங்க வேண்டுமென மீண்டும் உத்தரவு பிறப்பித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பாலியல் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் வேலையை  தொடங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை வழங்குவது மூலம் முறைப்படி அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட அரசு அங்கீரம் வழங்கியுள்ளது.
பண்டைய காலத்தில் இந்துமத கோவில்களுக்கு நேர்த்திக் கடனாக விடப்படும் பெண்களை தேவதாசி என்று அடையாளப்படுத்தி அவர்களுக்கு கோவிலில் இடம் ஒதுக்கி அடைத்து வைத்து பிராமணன், கோவில் தர்மகர்தா, அரசன், அமைச்சர், குறுநில மன்னன் மற்றும் பிற ஆதிக்கச்சாதி ஆண்கள் முதலானோர்க்கு காமக்கிழதியாக பணியாற்ற வைத்திருந்தது அன்றைய ஆளும் வர்க்கம். அதையேதான் இப்போது பெண்களின் வறுமையை பயன்படுத்தி கொண்டு அவர்களை பாலியல் தொழிலுக்குள் தள்ளி அவர்களுக்கு அடையாள அட்டை கொடுத்து அரசின் அங்கீகாரத்தோடு அவர்கள் சுரண்டப்படுவதற்கான வழியை திறந்து விட்டுள்ளது நீதிமன்றம்.
இப்போது பாலியல் தொழிலாளர்கள் நிலையை பற்றி கவலை கொள்ளும் நீதிமன்றம் இந்த நிலைக்கு அவர்கள் வரக்காரணம் என்ன என்பதை பற்றி ஒருபோதும் யோசிப்பதில்லை. அவர்கள் பாலியல் சுரண்டலுக்குள் மேலும் தள்ளும் வழியைதான் நீதிமன்றம் ஏற்படுத்தியுள்ளது.
இந்த அரசு செய்ய வேண்டியது என்ன? பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை மீட்டெடுத்து உளவியல் ரீதியாக பயிற்சி அளிப்பது, அவர்களுக்கு கல்வி, வேலை மற்றும் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை செய்து தருவது போன்ற நடவடிக்கைகள் மூலம் அவர்களை பாலியல் தொழில் என்னும் புதைகுழியில் இருந்து மீட்டெடுப்பதற்கான வேலையைதான் அரசு செய்ய வேண்டும்.
படிக்க :
♦ கேடி ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் : மோடியின் கிரிமினல் பிள்ளைகளை பாதுகாக்கும் உச்ச நீதிமன்றம்!
♦ காலி நாற்காலிகளுக்கு பயந்தோடிய மோடி : விசாரிக்க கமிட்டி போட்ட உச்சநீதிமன்றம்
ஆனால், அரசோ பாலியல் தொழிலை நிறுவனமயமாக்குவதன் மூலம் பெண்கள் மற்றும் மாணவிகளை கடத்தி வந்து வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடவைத்து பணம் சம்பாரிக்கும் முதலைகளின் பசிக்கு மேலும் தீனி போட்டுள்ளது. இனி அதிகப்படியான பெண்களை பாலியல் தொழிலை நோக்கி தள்ளப்படும் சூழ்நிலைக்குதான் இந்நீதிமன்ற தீர்ப்பு அடிகோளியுள்ளது.
மாணவிகளை ஆடையோடு தொட்டால் அது பாலியல் குற்றமல்ல, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவனுக்கு தண்டனையாக 6 மாதத்துக்கு அம்மாவட்ட பெண்களின் துணியை இலவசமாக துவைத்து தரவேண்டும், பாலியல் தொந்தரவு செய்தவனை அண்ணா என்று அழைத்து ராக்கி கட்ட வேண்டும் என பாலியல் குற்றங்களுக்கு தொடர்ச்சியாக கீழ்த்தரமான தீர்ப்புகளை வழங்கி வருகின்றன நீதிமன்றங்கள். அந்த வரிசையில் பாலியல் சுரண்டலை தொழிலாக அடையாளப்படுத்தும் இத்தீர்ப்பு என்பது நீதிமன்றத்தின் ஆணாதிக்க தன்மையை நமக்கு திரைமறைவின்றி அம்பலபடுத்தி காட்டுகிறது.

பாரி

பேரறிவாளன் விடுதலை: “சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியா”?

0
ராஜீவ் காந்தி கொலையில் ஜோடிக்கப்பட்ட ஒரு பொய் வழக்கிற்காக கிட்டத்தட்ட 31 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பிறகு கடந்த மே 18 அன்று உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பேரறிவாளனின் விடுதலை “சட்ட போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி என்றும், தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதி 142 அடிப்படையில் திராவிட மாடல் சாதித்துக் காட்டிவிட்டது” என்றும் இந்தப் போலி ஜனநாயக சட்ட மாயையை நம்பும் அறிவுஜீவிகளும், தி.மு.க-வினரும், திராவிட மாடலுக்கு காவடி தூக்கும் கழக முத்துமணிகளும் சிலாகித்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால், பேரறிவாளன் விடுதலை என்பது நீண்ட களப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. அதை மறைத்துவிட்டு தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியும் அவர்களின் சட்ட போரட்டமும்தான் காரணம் என்று கூறுவதன் மூலம் 31 ஆண்டுகால புரட்சிகர – ஜனநாயக சக்திகளின் போராட்டத்தையும், தோழர் செங்கொடியின் உயிர் தியாகத்தையும், அற்புதம்மாளின் போராட்டத்தையும் இந்த பிழைப்புவாத ஓட்டுப்பொறுக்கி கட்சிகள் குழி தோண்டி புதைக்கின்றன. இந்த துரோகத்திற்கு முதலாளித்துவ வேசி ஊடகங்களும் காவடி எடுக்கின்றன.
படிக்க :
பேரறிவாளன் தூக்கு – சிபிஐயின் பொய் பித்தலாட்டம் அம்பலம் !
ராஜீவ் கொலை வழக்கில் எழுவரை விடுதலை செய் ! சீர்காழி மக்கள் அதிகாரம் தோழர்களை மிரட்டும் போலீசு !
“ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது” என்று அரசியலமைப்பு சட்டம் சொல்லும் இதே நாட்டில்தான் 31 ஆண்டுகளாக ஒரு நிரபராதி சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார். அவருடன் கைதானவர்கள் இன்னும் அனுபவித்து வருகின்றனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் மட்டுமல்ல இந்தியாவில் சிறையில் அடைக்கபட்டிருப்பவர்களில் 69.05 சதவிகிதம் பேர் குற்றம் நிரூபிக்கப்படாமல்தான் பல ஆண்டுகளாக சிறையில் சித்திரவதை அனுபவித்து வருகின்றனர்.
தாமதமாக வழங்கப்படும் ஒவ்வொரு நீதியும் அநீதி என்பார்கள். அப்படி பேரறிவாளனுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு வக்காலத்து வாங்கும் இவர்கள் உணர்த்த வருவது “சட்டத்தின் ஆட்சி” வெங்காயத்தைதான். ஆனால், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இவர்களின் சட்டத்தின் ஆட்சியை பார்ப்பதற்கு பேரறிவாளன் வழக்கை பார்த்தாலே போதும். அப்படி பார்த்தாலே தெரியும், இந்த விடுதலை சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியா? இல்லை புரட்சிகர – ஜனநாயக சக்திகள் நடத்திய நீண்ட நெடிய களப் போராட்டங்களின் நிர்ப்பந்தத்தால் கிடைத்த வெற்றியா? என்று.
000
செங்கொடி
இனி வழக்கின் சட்ட வியாக்கியானத்தை பார்ப்போம். ராஜீவ் காந்தி கொலையின்போது உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்ட “இந்தியா பாதுகாப்பற்ற நாடு” என்ற பிம்பத்தை உடைப்பதற்காக தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் வேட்டையாடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முதன்மையான குற்றவாளிகள் எல்லாம் தலைமறைவாகிவிட, குற்றத்துக்கு நேரடியாக தொடர்பே இல்லாத பேரறிவாளன் உள்ளிட்ட அப்பாவிகளுக்கு மரண தண்டனையும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
ஆனால் வழக்கு விசாரணை உண்மையான குற்றவாளிகளை நோக்கி துளி கூட நகரவில்லை என்பதையும், தண்டனை வழங்கப்பட்டவர்கள் யாவரும் நிரபராதிகள் என்பதையும் வழக்கை விசாரித்த அதிகாரிகளே பல இடங்களில் வெளிபடுத்தியுள்ளனர்.
“தானு வெடிக்கச் செய்த அந்த வெடிக்குண்டினைத் தயாரித்த நபர் யார் என்று கண்டறிய முடியவில்லை” என்று 2005-ஆம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி ஜூனியர் விகடனுக்கும், அதே ஆண்டு ஆகஸ்டு 10-ம் தேதி குமுதத்திற்கும் அளித்த பேட்டியில் புலனாய்வு குழுவிற்கு தலைமை வகித்த கே.இரகோத்தமன் ஒப்புக்கொண்டார்.
சிவராசனுக்கு மின்கலங்கள்(பேட்டரி) வாங்கிக்கொடுத்ததை ஒப்புக்கொண்ட பேரறிவாளன், அதன் பயன்பாடு குறித்தும் இராஜிவ் காந்தியின் படுகொலை குறித்தும் தனக்கு ஏதும் தெரியாது என்று அந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். பேரறிவாளனின் வாக்குமூலத்தில் ஒரு பாதியை மட்டுமே பதிவு செய்ததாகவும் மீதியை விட்டுவிட்டதாகவும் புலனாய்வு அதிகாரியான தியாகராஜன் உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
“பேரறிவாளனின் பங்கு குறித்து சி.பி.ஐ-க்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால், சதியில் அவருக்கு தொடர்பில்லை என்பது இராஜீவ் கொலை விசாரணையின் அடுத்தடுத்த கட்டங்களில் உறுதியானது” என்று தியாகராஜன் கூறியதாக ’தி ஹிந்து’ பத்திரிகை தெரிவித்தது.
சுபா, தாணு மற்றும் தன்னைத் தவிர வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரியாது என்று 1991-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி புலிகளின் முக்கிய பொறுப்பில் இருந்த பொட்டு அம்மனுக்கு சிவராசன் அனுப்பிய தந்தித் தகவலை சான்றாக அவர் கூறினார். “வெறுமனே மின்கலங்களை வாங்கிக் கொடுத்தது இராஜீவ் கொலை சதிக்குற்றத்தில் ஈடுபட்டதாக ஆகாது” என்று அவர் மேலும் கூறியிருந்தார். சதியில் பேரறிவாளனுக்கு தொடர்பில்லை என்பதற்கு அந்த தந்தியே சாட்சியாக இருக்கிறது.
ஆனால், பணியிலிருந்து ஓய்வு பெற்று நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்பதனை காரணம் காட்டி பேரறிவாளனுக்காக புலனாய்வு அதிகாரி தியாகராஜன் அளித்த வாக்குமூலத்தை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. ஆனால், இதே உச்சநீதிமன்றம்தான் பாபர் மசூதி  இறுதித் தீர்ப்பில் இல்லாத ராம் லல்லாவை (குழந்தை ராமர்) சாட்சியாக எடுத்துக்கொண்டு, சதிகார அத்வானியையும் பாபர் மசூதியை இடித்த கரசேவகர்களையும் நிரபராதி என்று விடுவித்தது.
இதுதான் சட்டப் போராட்டத்தின் யோக்கியதை. சாட்சிகள், ஞாயம் யார் பக்கம் இருக்கின்றது என்பது முக்கியம் இல்லை. சட்டத்தை யார் வியாக்கியானம் செய்து நன்றாக வாதிடுகிறார்களோ அவர்களுக்குத்தான் சட்டத்தின் ஆட்சி படி நீதி. உலக வரலாற்றில் போர்க்களங்களுக்கு அடுத்து நீதிமன்ற வளாகங்களில்தான் சில மாபெரும் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கின்றன. அப்படி பேரறிவாளனுக்கு  இழைக்கப்பட்ட மாபெரும் அநீதிதான் இரண்டு ஆயுள் தண்டனைகளுக்கு சமமான காலத்திற்கு அவரை சிறையில் அடைத்து வைத்திருந்தது.
பேரறிவாளனின் விடுதலை நமக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சி தரக்கூடியதுதான். ஆனால், ஆங்கிலேய காலத்தில் இருந்து நிலவுகின்ற அரசு கட்டமைப்பே இப்படி பெரும்பான்மையான உழைக்கும் மக்களை ஒடுக்கும் கருவியாகதான் உள்ளது என்பதை பேரறிவாளன் வழக்கின் மூலம் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
தற்பொழுது ஆளுகின்ற பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் இந்து ராஷ்டிர ஆட்சிகாகவும், தனது எஜமானர்களான கார்ப்பரேட் முதலாளித்துவ வர்க்கத்திற்காகவும் நாட்டையே மறுகாலனியாக்க பாசிச நடவடிக்கைக்கு இட்டு சென்று கொண்டிருக்கின்றது. அதற்கு ஏற்றாற்போல் சட்டங்களையும் அரசு கட்டமைப்புகளையும் பாசிச மயப்படுத்துவதை நோக்கி வீச்சாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது மோடி அரசு.
படிக்க :
பேரறிவாளன் விடுதலை ; நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய் ! | மக்கள் அதிகாரம்
சிறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன் – 27 ஆண்டுகள் சிறையில் !
குறிப்பாக, இந்த பாசிச நடவடிக்கையை எதிர்த்து குரல்கொடுக்கும் புரட்சிகர – ஜனநாயக சக்திகளை ஒடுக்குவதற்காக குற்றவியல் திருத்தச் சட்டத்தை முற்றிலுமாக மாற்றியமைத்து தனக்கு எதிரான குரல்களை ஒடுக்க துடித்துக் கொண்டிருக்கின்றது.
இந்தப் பாசிச நடவடிக்கையை துளியும் கருத்திலும் பரிசீலனைக்கு உட்படுத்தாமல், செத்த பிணத்துக்கு பாலூட்டுவதுபோல் அழுகி உளுத்து பாசிசமயமாகி கொண்டிருக்கும் இந்த கட்டமைப்புக்கு காவடி தூக்கி கொண்டிருக்கின்றனர் பணம் திரட்டுகின்ற அற்பவாத சமரசவாதிகள்.
இந்த முதலாளி வர்க்கத்தினர் குழப்பிய குட்டையில் மீன் பிடிப்பது சுலபம் என்று  இவர்கள் நம்புவது மட்டுமில்லாமல், உழைக்கும் மக்களையும் நம்ப வைக்கின்றனர். இத்தகைய சமரசப் பேர்வழிகளை நம்பி நமக்கு ஒரு போதும் விடியல் பிறக்காது என்பது உறுதி. நமக்கான விடியலை பாசிச எதிர்ப்பு களப்போராட்டங்கள் மூலம் நாம்தான் வென்றெடுக்க வேண்டும்.

கதிர்

இந்தியாவின் உண்மை வரலாறுகளை அழிக்க துடிக்கும் காவி பாசிஸ்டுகள் !

0
ந்தியாவில் உள்ள பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள், பாண்டியர்கள் – சோழர்கள் போன்ற பல பேரரசுகளை புறக்கணித்து, முகலாயர்களின் வரலாற்றை மட்டுமே பதிவு செய்ய முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன் 10 அன்று தெரிவித்தார்.
“நான் வரலாற்றாசிரியர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். எங்களிடம் பல பேரரசுகள் உள்ளன. ஆனால், வரலாற்றாசிரியர்கள் முகலாயர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தி அவர்களைப் பற்றியே அதிகம் எழுதியுள்ளனர். பாண்டியப் பேரரசு 800 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அஹோம் பேரரசு 650 ஆண்டுகள் அஸ்ஸாமை ஆண்டது. பல்லவப் பேரரசு 600 ஆண்டுகள் ஆட்சி செய்தது. சோழர்கள் 600 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்” என்றார்.
“மௌரியர்கள் முழு நாட்டையும் – ஆப்கானிஸ்தான் முதல் இலங்கை வரை 550 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். சத்வஹனர்கள் 500 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். குப்தர்கள் 400 ஆண்டுகள் ஆட்சி செய்தனர் மற்றும் (குப்த பேரரசர்) சமுத்திரகுப்தர் முதல் முறையாக ஐக்கிய இந்தியாவை பார்வையிட்டு முழு நாட்டிலும் ஒரு பேரரசை நிறுவினார். ஆனால் அவற்றைப் பற்றிய குறிப்புப் புத்தகம் இல்லை” என்றார்.
படிக்க :
♦ கர்நாடகா : 10-ம் வகுப்பு பாடத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஹெட்கேவாரை புகுத்தும் காவிகள் !
♦ பல்கலை பாடத்தில் சாவர்க்கர், கோல்வால்கர் நூல்களை அனுமதிப்பது ஜனநாயகமா ?
இந்தப் பேரரசுகளைப் பற்றி குறிப்புப் புத்தகங்கள் எழுதப்பட வேண்டும் என்றும், அவை எழுதப்பட்டால், தவறு என்று நாங்கள் நம்பும் வரலாறு படிப்படியாக மறைந்து உண்மை வெளிவரும் என்றும் உள்துறை அமைச்சர் கூறினார்.
வரலாறு என்பது வெற்றி தோல்வியின் அடிப்படையில் எழுதப்படவில்லை என்றும், எந்த ஒரு நிகழ்வின் முடிவின் அடிப்படையில் எழுதப்பட்டது என்றும் ஷா கூறினார். “வரலாற்றை அதன் உண்மையான வடிவத்தில் முன்வைக்க சமூகம் முன்முயற்சி எடுக்க வேண்டும். உண்மையை எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது. நாங்கள் இப்போது சுதந்திரமாக இருக்கிறோம். நம் வரலாற்றை நாமே எழுதலாம்” என்றார்.
மத்திய உள்துறை அமைச்சரின் வரலாற்றை மாற்றி எழுதுவது குறித்த கருத்துக்கள், கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தின் “காவிமயமாக்கல்” என்ற அடிப்படையில் வெளிபடுகிறது.
மாவீரன் பகத்சிங்
உதாரணமாக, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கர்நாடக அரசு 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல் பாடப்புத்தகங்களையும், 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான கன்னட மொழி பாடப்புத்தகங்களையும் திருத்தியுள்ளது. புரட்சிகர மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங், மைசூர் ஆட்சியாளர் திப்பு சுல்தான், லிங்காயத் சமூக சீர்திருத்தவாதி பசவண்ணா, திராவிட இயக்க முன்னோடி பெரியார் மற்றும் சீர்திருத்தவாதி நாராயண குரு ஆகியோர் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பண்டைய இந்தியா பற்றிய ஆர்.எஸ்.சர்மாவின் புத்தகமும், இடைக்கால இந்தியா குறித்த இர்ஃபான் ஹபீப்பின் புத்தகமும் கைவிடப்பட்டன. இருப்பினும், அதிகம் அறியப்படாத சங்க பரிவார சார்புடைய ஆசிரியர்களின் புத்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவாரின் உரை 10-ம் வகுப்பு திருத்தப்பட்ட கன்னட பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம், குஜராத் அரசு 2022-2023-ம் கல்வியாண்டு முதல் மாநிலம் முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பகவத் கீதையை பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்ற முடிவு செய்தது.
படிக்க :
♦ சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இருந்து ஜனநாயகம், பன்மைத்துவம் மதச்சார்பின்மை உள்ளிட்ட பகுதிகள் நீக்கம்!
♦ உத்தரகாண்ட் : பள்ளி பாடத்திட்டத்தில் புகுத்தப்படும் பகவத் கீதை !
உண்மை வரலாறுகளை காவிமயமாக்குவதற்கு அமித்ஷா அறைகூவல் விடுக்கிறார். வீரம், தியாகம், பகுத்தறிவு போன்றவையெல்லாம் கோழைகளுக்கும், காவி பாசிஸ்டுகளுக்கு கசக்கதானே செய்யும். பள்ளி – கல்லூரி பாடப்புத்தகங்களில் புராண குப்பைகளை, இந்து மதவெறி தலைவர்களை திணிப்பதன் மூலம், மாணவர்களை இந்து மதவெறியார்களாக மாற்ற துடிக்கிறது காவிக்கும்பல்.
அமித்ஷாவின் இந்த வரலாற்றை காவிமயமாக்கும் மிரட்டலை, வரலாற்று ஆசிரியர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். ஆரியர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இந்திய வரலாற்று முடிச்சுகளுக்குள் எப்படி தங்களை இணைத்துக்கொண்டார்கள்? என்பதை எல்லாம் வரலாற்று ஆய்வுகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது.
உண்மை வரலாற்றை அழித்து அறிவியலுக்கு எதிரான புராணக் குப்பைகளை, சாதிய – மத வருணாசிரம குப்பைகளை, காவி – கார்ப்பரேட் மோடி அரசு, பள்ளி – கல்லூரி பாடத்திட்டங்களில் திணிப்பதை, ஆசிரியர்கள் – பெற்றோர்கள் – மாணவர்கள் – வரலாற்று ஆய்வாளர்கள் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து முறியடிப்போம்.

காளி

‘இந்தியா இந்துக்களுக்கே சொந்தம்’ – காவி பயங்கரவாதி பிரக்யா சிங் !

0
மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி – பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி – பிரக்யா சிங் தாக்கூர் கடந்த ஜூன் 9 அன்று, முஹம்மது நபியை அவதூறு செய்ததற்கான இடைநீக்கம் செய்யப்பட்ட கட்சியின் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.
செய்தியாளர்களிடம் காவி பயங்கரவாதி பிரக்யா, “இது இந்தியா, இது இந்துக்களுக்கு சொந்தமானது, சனாதன தர்மம் இங்கேயே இருக்கும். அதை உயிருடன் வைத்திருப்பது எங்கள் பொறுப்பு, நாங்கள் அதை செய்வோம். இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் எப்பொழுதும் அப்படித்தான் (நுபுர் சர்மாவிற்கு எதிரான கருத்து) செய்திருக்கிறார்கள். கமலேஷ் திவாரி ஏதோ சொல்ல கொன்றுவிட்டனர். வேறொருவர் (நுபுர் ஷர்மா) ஏதோ சொன்னார், அவர்களுக்கும் கொலை மிரட்டல் வந்தது. நமது தெய்வங்களை சிதைத்து திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் இதை பல ஆண்டுகளாக செய்து வருகிறார்கள். இது அவர்களின் மனநிலையை காட்டுகிறது.” என்றார்.
நூபுர் ஷர்மாவைத் தவிர, மற்றொரு பாஜக தலைவரான நவீன் ஜிண்டாலும் முகமது நபியைப் பற்றி அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது, இது இந்தியாவில் மட்டுமல்ல, வளைகுடா நாடுகளிலும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இதனால் நுபர் சர்மாவை இடைநீக்கம் செய்து ஜிண்டாலை வெளியேற்றியது பாஜக.
படிக்க :
♦ மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு !
♦ மாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் !
முஹம்மது நபிக்கு எதிரான கருத்துக்களுக்காக தண்டிக்கப்பட்ட இந்துத்துவா தலைவர் கமலேஷ் திவாரி – அக்டோபர் 18, 2019 அன்று உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே படுகொலை செய்யப்பட்டார்.
திவாரியின் கொலைக்கு முஸ்லீம் மதகுருமார்கள் மீது போலீசுத்துறை குற்றம் சுமத்தியது – ஆனால், அவரது கொலைக்கு உள்ளூர் பாஜக தலைவர்கள் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆதித்யநாத் அரசாங்கம்தான் காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அதன் பின்னர்தான் திவாரி கொலை வழக்கு ஒரு கூர்மையான திருப்பு முனையை எடுத்தது. திவாரியின் தாயும் மருமகனும், தாத்தேரியில் வசிக்கும் உள்ளூர் பாஜக தலைவர் சிவக்குமார் குப்தா, ‘கோயில் தகராறு’பிரச்சினையில் திவாரியைக் கொலை செய்ய சதி செய்ததாகக் கூறினர்.
சிவக்குமார் குப்தா ஒரு “மாஃபியா” என்றும், அவர் மீது சுமார் 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர். திவாரி, தான் கொல்லப்படுவதற்கு முன்பு முகநூல் நேரலை வீடியோவில், பாஜக தலைவர்கள் தன்னை கொலை செய்ய சதி செய்வதாக கூறியிருந்தார். ஆதித்யநாத் அரசு பொறுப்பேற்றவுடன், அவரது பாதுகாப்பு அகற்றப்பட்டது என்றும் அவர் கூறினார்.
மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி – பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி – பிரக்யா சிங் தாக்கூர்
கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளின்படி, திவாரி கொலை செய்யப்பட்ட அன்று காலையில் காவி நிற குர்தா அணிந்த இருவர் திவாரியின் இல்லத்தை நோக்கி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. திவாரியின் வீட்டிற்கு அவரைக் கொல்வதற்காக வந்த இருவர் டீ குடித்துவிட்டு, அவரைக் குத்திக் கொல்லும் முன் சுமார் 30 நிமிடம் அவருடன் அரட்டையடித்திருக்கிறார்கள். இதை வைத்து பார்க்கும் போது, கொலையாளிகள் திவாரிக்கு தெரிந்தவர்கள் என்றும் அவருடைய சக இந்துத்துவவாதிகளகவும் இருக்கலாம் என்றும் போலீசு கூறியது.
ஆனால், தன் சொந்த கட்சிக்காரர்களையே கொலை செய்து அரசியல் செய்யும் வரலாறு கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யான காவி பயங்கரவாதி பிரக்யா, கமலேஷ் திவாரியை ஏதோ முஸ்லீம் மக்கள்தான் கொன்று விட்டார்கள் என்று மதவெறியை தொடர்ந்து கிளப்பி வருகிறார்.
பிரக்யா இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவது இதுமுதல் முறையல்ல. நவம்பர் 2019-ல், காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவை ‘தேசபக்தர்’ என்று பிரக்யா குறிப்பிட்டார். இது அவரது அறிக்கையை எதிர்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்ததால் நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.
மே 2019-ல் கூட, லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, ​​பிரக்யா “நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர், அப்படித்தான் இருப்பார். அவரை பயங்கரவாதி என்று கூறுபவர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு இந்தத் தேர்தலில் தகுந்த பதில் அளிக்கப்படும்” என்றார்.
2008-ம் ஆண்டு செப்டம்பரில் மாலேகானில் ஒரு மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பில், 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் பிரக்யா சிங் தாக்கூர் மிக முக்கிய குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், மோடி அரசு ஆட்சி அரியணையில் ஏறியது, மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். பிரக்யா சிங்-க்கும் பிணை வழங்கப்பட்டுவிட்டது.
படிக்க :
♦ சாதியப் படிநிலையை ஏற்றுக்கொள் : பிரக்யா சிங் முதல் சிறைச்சாலை வரை !
♦ பயங்கரவாதி பிரக்யாசிங் கோட்சே விவகாரம் | பாஜக-வின் இரட்டை வேடம் !
இந்த காவி பயங்கரவாதி, இன்னொரு காவி பயங்கரவாதியை ஆதரிப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இவர்கள் இந்தியா இந்துக்களுக்கு மட்டும் தான் சொந்தம் என்று கூறி முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரங்களை திட்டமிட்டு செய்து வருகின்றனர். இந்து ராஷ்டிரத்திற்காக இவர்கள் செய்யும் படுகொலைகள் ஏராளம். மாலேகான் குண்டுவெடிப்பு, கொத்தரா ரயில் எரிப்பு, குஜராத் படுகொலை, முசாபர் நகர் கலவரம், கோவை கலவரம் என நாடு முழுவதும் முஸ்லீம் சிறுபான்மை மக்களை படுகொலை செய்வதே இவர்களின் முழுநேரப்பணி. மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்ததும் காவி பயங்கரவாதிகளின் அடிதளம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
முஸ்லீம் சிறுபான்மை மக்களை காவி பயங்கரவாதிகளிடமிருந்து மீட்க, நாடு முழுவதும் பரவி வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தின் அடித்தளங்களை தகர்க்க, பாசிச எதிர்ப்பு படையாய் களமிறங்குவோம்.

சந்துரு

மோடியின் 8 ஆண்டுகால ‘சாதனை’, நாட்டு மக்களுக்கு தீராத வேதனை !

1
ளர்ச்சி என்ற முழக்கத்தை பிரச்சாரம் செய்து, குஜாராத் மாடல் வளர்ச்சியை முன்னிறுத்தி, 2014-ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு. அடுத்து நடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின் போதும் பா.ஜ.க வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்புக்கு வந்தது. மோடி பொறுப்பேற்று கொண்ட 8 ஆண்டு காலம் நிறைவை ஒட்டி, நாடு முழுவதும் சாதனைகளை பட்டியலிட்டு பா.ஜ.க.வினரும், ஊடகங்களும் தொடர்ச்சியாக பிராச்சாரம் செய்து வருகின்றனர்.
000
5 டிரில்லியன் பொருளாதரத்தை எட்டி பிடிப்பதாக கூறியது மோடி அரசு; அதனை நிறைவேற்றியதா? இந்த ஆண்டு ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 8.7 சதவீதம் அதிகரித்துள்ளோம் என்று கூறுகின்றனர். ஆனால், உண்மைநிலை என்ன? 2019-ம் நிதியாண்டில் ரூ.147.36 இலட்சம் கோடி, 2020-ம் நிதி ஆண்டில் ரூ.135.58 இலட்சம் கோடி. 2021-ம் நிதி ஆண்டில் ரூ.145.16 இலட்சம் கோடி ஆகும். சென்ற ஆண்டு 2019-ல் ஜி.டி.பி வளர்ச்சி மைனஸ் -6.6 சதவீதம் ஆகும். இந்த வீழ்ச்சி அடைந்த அடித்தளத்தோடு, 2020-2021 ஆண்டு வளர்ச்சியை கணக்கிட்டால் உண்மையான வளர்ச்சி என்பது ரூ.2.2 இலட்சம் கோடி. அதாவது உண்மையான வளர்ச்சி விகிதம் 1.52 சதவீதம் மட்டுமே.
படிக்க :
♦ சிலிண்டர் விலை உயர்வு : உழைக்கும் மக்களின் அடுப்பை அணைக்கும் மோடி அரசு | கேலிச்சித்திரம்
♦ எல்.ஐ.சி.யின் பங்குகளை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யும் மோடி அரசு !
மோடி அரசின் 8 ஆண்டுகளையும் ஒப்பிட்டு பார்த்தால் ஜி.டி.பி சராசரி வளர்ச்சி என்பது 7.5 சதவீதத்திலிருந்து 4.5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 5 டிரில்லியன் பொருளாதாரம் சாதிப்போம் என்று கூறிய மோடி அரசு 3 டிரில்லியன் கூட எட்டவில்லை என்பதுதான் உண்மை. இந்த புள்ளிவிவரங்களில் நாம் உண்மையான வளர்ச்சியை காண முடியாது. மாறாக, நாட்டில் பட்டினிக் கிடப்பவர்களின் எண்ணிக்கைஅதிகரித்து இருப்பதாகதான் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மக்களின் சுமையை அதிகப்படுத்தும் விலைவாசி உயர்வு :
அன்றாடம் மக்கள் உட்கொள்ளும் உணவு பொருள்களின் விலை, கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ச்சியாக அதிகரித்துகொண்டு வருகிறது. உருளைகிழங்கு 65 சதவீதம், வெங்காயம் 69 சதவீதம், பால் 25 சதவீதம், உப்பு 28 சதவீதம், தக்காளி 155 சதவீதம், சமையல் எண்ணெய் 23 சதவீதம் என உணவு பொருள்களின் கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டும் விலைவாசி உயரும் என ஆர்.பி.ஐ கவர்னர் அறிவிப்பு செய்துள்ளார்.
பெட்ரோலிய வரிகள் மூலம் மட்டுமே, கடந்த 4 ஆண்டுகளில் பா.ஜ.க அரசாங்கம் மக்களிடம் இருந்து கொள்ளையடித்த தொகை ரூ.18.23 இலட்சம் கோடி. உணவு தானியங்களின் உற்பத்தி 22 சதவீதமும், பருப்பு வகைகள் உற்பத்தி 49 சதவீதமும் அதிகரித்துள்ளன. உற்பத்தி அதிகரித்த போதிலும், பொருள்களை வாங்கி நுகரும் வகையில் மக்கள் கையில் பணம் இல்லை என்பதுதான் உண்மைநிலை.
மக்களின் வருமானம் அனைத்தும் வரி என்ற பெயரில் மோடி அரசு கஜானாவிற்கு சென்றுவிடுகிறது. விலைவாசி ஆண்டுதோறும் கடுமையாக உயர்ந்து கொண்டு இருக்கிறது. தொழிலாளர்களின், விவசாயிகளின் வருமானம் தேக்க நிலையில் உள்ளது அல்லது வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கிறது.
தொழிலாளர்களின் வருமானம் கடந்த இரு ஆண்டுகளில் 0.3 சதவீதம் மற்றும் 1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. விவசாயம் சாராத கிராமப்புற தொழிலாளர்கள் ஊதியம் 1 சதவீதம் அதிகரித்து, பின்னர் 0.3 சதவீதம் குறைந்துள்ளது.
000
ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் என பிராச்சாரம் செய்தது பா.ஜ.க.
புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கவில்லை என்பது மட்டும் அல்ல, ஏற்கெனவே உள்ள வேலைவாய்ப்புகளையும் ஒழித்து கட்டியுள்ளது மோடி அரசு. கடந்த 5 ஆண்டுகளில் 40.9 கோடியாக இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 40.3 கோடியாக குறைந்துள்ளது.
பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில், எட்டாயிரம் ரயில்வே பணிகளுக்கு 1.25 கோடி பேர் விண்ணபித்துள்ளனர். நகர்புறத்தில் 9 கோடி (23 சதவீதம்) பேருக்கு வேலையில்லை.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 2019-ம் ஆண்டு 7.8 கோடி பேர் இணைந்துள்ளனர். தற்போது இத்திட்டத்தில் 10.62 கோடி வேலையாட்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. உயர்கல்வி படித்த இளைஞர்கள் பலர் பதிவு செய்யும் நிலைமை அதிகரித்து உள்ளது. ஒரு நாள் ஊதியம் 209, அதுவும் ஆண்டுக்கு 50 நாட்கள் மட்டுமே முழுமையான வேலைகள் கிடக்கிறது. சமீபத்தில், படித்த படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்று படித்த கல்லூரி வாசலில் டீக்கடை நடத்தும் அவலநிலைதான் மோடி ஆட்சியில் உள்ளது.
000
“என் வாழ்க்கையில் எல்லாமே 130 கோடி மக்கள்தான். என்னுடைய வாழ்வு என்பது அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு. எனது எட்டு ஆண்டு ஆட்சி நிறைவு செய்கிற இந்த தருணத்தில் ஏழைகளுடைய கவுரவத்திற்காகவும், மரியாதைக்காகவும் தொடர்ந்து இந்த வாழ்வு அர்ப்பணிக்கப்படும்” என்று மோடி கூறியுள்ளார்.
ஆனால், உண்மையில் நடந்தது என்ன? கடந்த 8 ஆண்டுகளில் மோடி அரசின் சாதனைகள் இந்துத்துவா கருத்தியல் சித்தாந்தத்தை வேகமாக அமல்படுத்தும் வகையில், ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியது, குடியுரிமை சட்டத்திருத்தம், முத்தாலாக் தடைச்சட்டம், காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கம், இஸ்லாமியர்களுக்கு எதிரான தனது இந்துத்துவா கொள்கைகளை வேகமாக அமல்படுத்தி வருகிறது மோடி அரசு.
மறுபுறம், கார்ப்பரேட்களுக்கு பல்வேறு சலுகைகளை வார் வழங்கி வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை பணமாக்கல் திட்டத்தின் மூலம் தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி வருகிறது. கடந்த 7 ஆண்டுகளில் கார்ப்பரேட்களுக்கு ரூ.13 இலட்சம் கோடி தள்ளுபடி செய்துள்ளது. ரூ.6.5 இலட்சம் கோடி வரி சலுகைகள் அளித்துள்ளது. அதானி, அம்பானி, டாடா போன்ற பெரும் முதலாளிகளுக்கு, சுரங்கம், தொலைத்தொடர்பு, மின்சாரம், விமானப் போக்குவரத்து போன்ற மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
படிக்க :
♦ மோடிக்கு எதிரான கருத்து கொண்ட மாணவர்களை சல்லடைபோட்டு தேடும் ஐ.எஸ்.பி நிர்வாகம் !
♦ புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வை புரட்டிப் போட்ட பாசிச மோடி அரசு !
மோடி அரசு கடந்த எட்டு ஆண்டுகளில் கார்ப்பரேட் முதலாளிகள் வளர்ச்சி அடைந்துள்ளனர். மோடியின் பொருளாதர கொள்கையின் தோல்விகளை மறைப்பதற்கும், கார்ப்பரேட்கள் மக்கள் சொத்தை கொள்ளையடிப்பதற்கும் வழிவகை செய்வதற்கு, தினந்தோறும் இந்துத்துவ கருத்துகளை பிரச்சாரம் செய்து, திட்டமிட்ட இந்துமதவெறி கலவரங்களை நடத்தி வருகின்றனர்.
காவி – கார்ப்பரேட் இரண்டையும் ஒழித்து கட்டாமல் மக்களுக்கான வளர்ச்சி என்பதெல்லாம் சாத்தியம் இல்லை. அதிகரித்து வரும் மோடி அரசின் பொருளாதர தாக்குதல்களையும், காவி பாசிச தாக்குதல்களையும் மோதி வீழ்த்த தாயாராவோம்.
தங்கபாலு

மறுகாலனியாக்க சுரண்டலுக்கு நவீன பண்ணை அடிமைகளாக மாற்றப்படும் செவிலியர்கள் !

கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் செவிலியர்களை “தேவதைகளாக” “கடவுளாக போற்றிய“ அரசு இன்று அவர்களை கைது செய்து, வழக்கு பதிவு செய்து, தான் ஒரு வன்முறை கருவி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
கடந்த ஜுன் 7-ம் தேதி அன்று “மருத்துவ பணியாளர் தேர்வு” (MEDICAL SERVICES RECRUITMENT BOARD EXAM – MRB) எழுதி ஒப்பந்த முறையில் 7 ஆண்டுகளாக வேலை செய்துவரும் செவிலியர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதியிலிருந்து அணிதிரண்டு வந்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.
இதில், ஒரு பகுதியாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்திற்கு முன்பு 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த முறையை ரத்து செய்துவிட்டு தங்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும். ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் போன்ற அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து “திராவிட மாடல் ஆட்சியில்” மூன்றாவது முறையாக ஏதேனும் “விடியல்” வந்துவிடாத என செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுப்பட்ட ஒரு மூத்த பெண் செவிலியர், அரசு கொடுக்கும் அற்பக் கூலியை வைத்துக்கொண்டு இன்று இருக்கும் விலைவாசி உயர்வில், எங்கள் வாழ்க்கையை எப்படி நடத்துவது என்றே தெரியவில்லை. என் பிள்ளைகளின் படிப்பு செலவு, வீட்டுப் பராமரிப்பு செலவு, போக்குவரத்து செலவு என எதையுமே என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை. கடன் வாங்கிதான் இவற்றை தீர்க்க முடியும் என்ற நிலைமை உள்ளது. அந்த கடனும் இப்பொழுது என் கழுத்தை நெருக்குகிறது என கலங்கினார்.
படிக்க :
♦ கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய செவிலியர்களை கைவிடும் தமிழக அரசு !
♦ உயிர்காக்கும் செவிலியர்களின் போராட்டம் வெல்லட்டும் !
மற்றொரு பெண் செவிலியர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனைவரும் இளங்கலை, முதுகலை என்று செவிலியர் படிப்பில் உயர் படிப்பை முடித்தவர்கள். எங்கள் தகுதிக்கு இந்த அரசு கொடுக்கும் மரியாதை இது தானா? என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.
செவிலியர்களின் போராட்டத்தை கண்டு அஞ்சிய தி.மு.க அரசு போராட்டத்தை ஒடுக்குவதற்காக 200-க்கும் மேற்பட்ட காக்கி குண்டர்களை இறக்கிவிட்டது. செவிலியர்களை – கைது செய்து – வலுக்கட்டாயமாக தூக்கி வேனில் ஏற்றியது. போராட்டத்தை முடித்துக் கொள்ள மறுத்த செவிலியர்கள் காக்கி ரவுடிகளால் தரதர வென்று அடித்து இழுத்து செல்லப்பட்டனர். இதனால் இரண்டு செவிலியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
495 செவிலியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது போலீசுத்துறை. இத்தகைய மோசமான ஒடுக்குமுறையை செவிலியர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுவிட்டு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே பத்து பதினைந்து ஆண்டுகளாக நீங்கள் உழைத்து விட்டீர்கள், தேவையில்லாமல் வெயிலில் போராடி உடம்பை வருத்திக் கொள்ளாதீர்கள் என அறிவுரை வழங்கியுள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு மூலம் பதினோராயிரம்  செவிலியர்களை பணிக்கு எடுத்தது தமிழக அரசு. இவர்களுக்கு பணி வழங்கும் போதே ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுப்பதாகவும், இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் நிரந்தர (காலமுறை ஊதிய முறைக்கு) பணிக்கு மாற்றுவதாகவும் கூறியது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு செவிலியர்களை ஏமாற்றி வந்தது.
எம்.ஆர்.பி என்ற தேர்வு முறை வருவதற்கு முன்பு, அரசு கல்லூரியில் படித்த மாணவர்களை நேரடியாக வேலைக்கு எடுத்து வந்தார்கள். இதற்காக தனி தேர்வுகள் எதுவும் கிடையாது. சுகாதாரத்துறையில் ஏற்படும் ஆள் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய “எமெர்ஜென்சிக்காக” அரசாணை 230-ன் படி ஒப்பந்தம் செய்து பணிக்கு எடுப்பார்கள்.
பிறகு 101A விதிகளின் படி அவர்கள் நிரந்தர பணியாளராக அமர்த்தப்படுவர். இதுதான் 2013-க்கு முன்பு வரை இருந்த நடைமுறை. எம்.ஆர்.பி தேர்வு என்பது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தது.
தற்போது ஆளும் ‘விடியல்’ அரசும், இந்த 230 அரசாணையைத்தான் பிரதானப்படுத்துகிறது. ஆனால் போராடும் செவிலியர்கள், G.O 191 1st February 1962 Public Services (A) அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் (Time to Scale) என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பதை பிரதானப்படுத்துகிறார்கள்.
000
மறுகாலனியாக்க சூறையாடலுக்காக மருத்துவத்துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதிகளை வெட்டி சுருக்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த அரசு, அதில் ஒரு உச்சகட்ட நடவடிக்கையாக MRB தேர்வு முறை கொண்டு வந்தது (இதில் நீட் போன்ற தேர்வுகளும் அடங்கும்). இதன் நோக்கம் அரசு மருத்துவமனையின்  உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமல்ல அதில் வேலைபார்க்கும் செவிலியர்களும் மருத்துவர்களும் கூட சரி இல்லை என்ற பிம்பத்தை ஏற்படுத்த ஆளும் வர்க்கம் நினைக்கிறது. இதன் மூலம் மருத்துவத்தை தனியார் – கார்ப்பரேட் – முதலாளிகளின் இலாப வேட்டைக்காக மடை மாற்றி விடுகின்றது.
தற்போது செவிலியர்களை, அரசு மருத்துவமனை வேலைகளுக்கு எடுப்பதில்லை. உற்பத்தி தொழில்களில் ஒப்பந்த தொழிலாளர்களை ஈடுபடுத்தி ஒட்ட சுரண்டுவதுபோல மருத்துவத் துறையிலும் ஒப்பந்த முறையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டு சுரண்டபடுகிறார்கள்.
அரசு ஊழியராக நியமித்தால் அடிப்படை ஊதியமாக மட்டும் மாதம் ரூ.19,000 மேல் கொடுக்க வேண்டியிருக்கும். ஆகவே, தொகுப்பூதியம் (கான்ட்ராக்ட்) அடிப்படையில்  செவிலியர்களை வேலைக்கு அமர்த்துவதால் அவர்களுக்கு மாதம் ரூ.7,000; ரூ.10,000  என்ற  அடிமாட்டு கூலி கொடுத்தால் போதும். சில ஆண்டுகள் வேலை செய்தால் அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இவர்களும் வேலை செய்ய துவங்குகிறார்கள். அதன் பிறகு செவிலியர்களின் நிலை தூண்டியலில் சிக்கிய புழுவின் கதையாகி விடுகிறது.
தனியார்மய கொள்கைகள் காரணமாக – கார்ப்பரேட்டுகளின் இலாபவெறிக்காக – அரசு மருத்துவமனைகளை அரசாங்கம் பாராமுகமாக கைவிட்டாலும், அவை ஓரளவு இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு அர்ப்பணிப்புடன் பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவர்கள் தான் முதன்மையான காரணம். இது நிதர்சனமான உண்மை என்பதை கொரோனா பெரும் தொற்றும் நமக்கு நிரூபித்ததுள்ளது.

படிக்க :

♦ டெல்லி ஜிப்மர் : பணியிலிருக்கும் செவிலியர்கள் மலையாளம் பேசக் கூடாதாம் !

♦ போலீசின் மிரட்டலுக்கு அஞ்சாமல் போராடும் ஒப்பந்த செவிலியர்கள் !

இந்தியாவின் மொத்த மருத்துவ சந்தையின் மதிப்பு 2015-ம் ஆண்டில் 100 பில்லியன் டாலரிலிருந்து 2020-ம் ஆண்டில் அதாவது ஐந்தாண்டுகளில் 280 பில்லியன் டாலராக இருக்கும் எனவும் அதன் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 22.9 சதவீதமாக இருக்குமென்றும் கணிக்கப்பட்டது. இந்திய மருத்துவ சந்தையை பன்னாட்டு ஏகபோக நிதி மூலதன கும்பல்களுக்கு சுறையடுவதற்கான காரணத்தை இந்த ஒரு புள்ளி விவரமே போதும்.
மருத்துவ துறையில் தனியார்மய தாராளமய கொள்கை திணிக்கப்படுவதால் பாதிக்கப்படும் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பட்ட மக்களையும் ஓரணியில் அணிதிரட்டி இந்த தனியார்மய – தாராளமய கொள்கையை எதிர்த்து போராடுவது மட்டுமே நமக்கான முழுதும் முற்றான தீர்வாக அமையும்.
கதிர்
வினவு களச்செய்தியாளர்

ஆரவல்லி மலைத்தொடரை அழிக்கும் சட்டவிரோத சுரங்கங்கள் !

0
ரவல்லி – உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்று – டெல்லியில் இருந்து தென்மேற்கில் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இருப்பினும், இந்த பழைய மலைகள் சட்டவிரோத சுரங்கங்களின் காரணமாக படிப்படியாக மறைந்து வருகின்றன.
2002-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ஆரவல்லி பகுதி முழுவதும் சுரங்க நடவடிக்கைகளுக்கு தடை விதித்த போதிலும், கடந்த ஆண்டில் பல சட்டவிரோத சுரங்கங்கள் இயங்கியுள்ளது. அரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தில் உள்ள ஆரவல்லிகளின் பந்தலா மலைகளில், 2021-2022-ம் ஆண்டில் (மலையேறுபவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் செல்லாத) எட்டு மாத கால இடைவெளியில் 30 முதல் 40 அடி வரை குன்றுகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.
“ஏழு முதல் எட்டு மாதங்களில், ஒரு முழு மலையும் அழிக்கப்பட்டு, தின்று பல மீட்டர்கள் பின்னால் தள்ளப்பட்டது” என்று ஆரவல்லி பச்சாவ் இயக்கத்தின் நிறுவனர் – நீலம் அலுவாலியா மற்றும் இயக்கத்தின் மற்றொரு உறுப்பினரான ஜோதி ராகவன் கூறினார்.
படிக்க :
♦ ஆரவல்லியை கூறுபோட்டு விற்கும் பா.ஜ.க !
♦ அரியானா : உச்சநீதிமன்ற ஆசியோடு விரட்டியடிக்கப்படும் தொழிலாளர்கள் !
வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன், குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (NGT) ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது ஆரவல்லி பச்சாவ் இயக்கம். கடந்த ஆண்டில் சட்டவிரோத சுரங்கம் தொடர்பான புகார்களுக்கு போலீசுத்துறை உள்ளிட்ட உள்ளூர் அதிகாரிகள் பதிலளிக்கவில்லை, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இயக்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த மே 23 அன்று, ஆரவல்லி மலைத்தொடரில் சட்டவிரோத சுரங்கத்தை கண்காணிக்கவும் தடுக்கவும் தவறியதற்காக அரியானா மற்றும் மத்திய அரசுகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டித்தது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தங்கள் பதில்களை தாக்கல் செய்யுமாறு பல அரசுத் துறைகளுக்கு உச்ச பசுமை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அரியானா வனத்துறை, சுரங்கம் மற்றும் புவியியல் துறை மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை அடங்கும்.
அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள கோட்டா கண்டேவ்லா கிராமத்திற்கு அருகில் சட்டவிரோத சுரங்கம். புகைப்படம்: ஆரவல்லி பச்சாவோ குடிமக்கள் இயக்கம்
ஆரவல்லி மலைத்தொடர், இலையுதிர் காடுகள் மற்றும் புதர்க்காடுகளை உள்ளடக்கியது, ராஜஸ்தான், அரியானா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் மலைத்தொடர் விரவிக்கிடக்கிறது. 2018-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்திய குழுவின் (CEC) அறிக்கை, ராஜஸ்தானில் 1968-ம் ஆண்டு முதல் சட்டவிரோத சுரங்கங்கலால் ஆரவல்லி மலைத்தொடரின் 25 சதவீத மலைகளை இழந்துள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளது.
அலுவாலியாவின் கூற்றுப்படி, உச்ச நீதிமன்றத்தால் 2002 தடை செய்யப்பட்டபோதிலும் அப்பகுதியில் சுரங்கத் தடையை அமல்படுத்துவதற்கான “அரசியல் மற்றும் நிர்வாக விருப்பமின்மை” என்பதே அது தடையின்றி தொடர்வதற்குக் காரணம். ஆரவல்லியில் சுரங்கம் தோண்டுவதில் நிர்வாக அக்கறையின்மை புதிதல்ல. இந்த சட்டவிரோத சுரங்கங்கள் உள்ளூர் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது.
ஜனவரி 2022-ல், அரியானாவின் பிவானி மாவட்டத்தின் தாதம் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். அக்டோபர் 2021-ல், அப்பகுதியில் உள்ள சட்டவிரோத சுரங்கங்கள் குறித்து உள்ளூர் போலீசு நிலையத்தில் உள்ளூர்வாசிகள் புகார் அளித்துள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்ட துறைகள் – மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உட்பட – எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
படிக்க :
♦ கவுத்தி – வேடியப்பன் மலை : கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் போராட்டம்!
♦ தாளவாடி வனப்பகுதி : பழங்குடி மக்களை அச்சுறுத்தும் புலிகள் காப்பகமும் – கார்ப்பரேட் நலனும் !
டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தை இயற்கை எழில் கொஞ்சும் இடமாக காண்பிக்கும் ஆரவல்லி மலைத்தொடர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவிக்கிடக்கிறது. இந்த மலைத்தொடரில் சட்டவிரோதமான சுரங்கங்கள் தோண்டப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டவிரோத சுரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதிலிருந்தே, அரசின் அனைத்து துறைகளும் கூட்டு சேர்ந்துகொண்டு மலைத்தொடரை கொள்ளையடித்து அழித்துக் கொண்டிருக்கின்றன என்பது தெளிவாக தெரிகிறது.
சட்டவிரோத சுரங்கங்களிடமிருந்தும், அதற்கு துணைபோகும் அரசிடமிருந்தும் ஆரவல்லி மலைத்தொடரை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

புகழ்

தி கேரவன் பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடும் காஷ்மீர் போலீசு !

0

தி கேரவன் பத்திரிகையுடன் தொடர்புடைய மல்டிமீடியா பத்திரிகையாளர் ஷாஹித் தந்த்ரே, கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக தன்னையும் அவரது குடும்பத்தினரையும் ஜம்மு & காஷ்மீர் போலீசுத்துறை தொடர்ந்து மிரட்டல் விட்டு அச்சுறுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஜூன் 8, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி கேரவன் பத்திரிக்கை நிறுவனத்தின் வேலைக்காக ஜனவரி மாதம் ஸ்ரீநகருக்குச் சென்றதிலிருந்து தற்போது வரை காஷ்மீர் போலீசுத்துறை தன்னைப் பின்தொடர்ந்து வருவதாகக் கூறுகிறார்.

காஷ்மீரில் 370-வது பிரிவை அமல்படுத்திய பிறகு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீதான அரசின் ஒடுக்குமுறைகள் தொடர்ப்பான முதல் கட்டுரையை பிப்ரவரி 1-ம் தேதியும், ஜம்மு&காஷ்மீரில் “தேசியவாத எதிர்ப்புகளில்” இந்திய இராணுவத்தின் பங்கை ஆராய்ந்தது தொடர்பான இரண்டாவது கட்டுரையை ஜூன் 1-ம் தேதியும் பத்திரிகையாளர் ஷாஹித் தந்த்ரே தயாரித்து வெளியிட்டார்.

படிக்க :

♦ காவி அரசால் தொடர்ந்து ஒடுக்கப்படும் காஷ்மீர் பத்திரிகையாளர்கள் !

♦ காஷ்மீர் வாலா பத்திரிகையாளர் அப்துல் ஆலா கைது !

குறிப்பாக இந்த இரண்டு கட்டுரைகள் தொடர்பாக விசாரிக்க தான், காஷ்மீரில் உள்ள போலீசு நிலையங்களுக்கு தந்த்ரேயும் அவரது தந்தையும் பலமுறை அழைக்கப்பட்டதாகக் கூறுகிறார். போலீசு அதிகாரி, காஷ்மீரில் தந்த்ரே தனது தொழிலை செய்ய விரும்பினால், அவர் முன் மூன்று வழிகள் இருப்பதாகக் கூறினார்.

ஒன்று, அரசாங்கத்திற்கு எதிராக எதையும் எழுதமாட்டேன் என்று அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் கொடுத்தால் தந்த்ரே காஷ்மீரில் தங்கலாம். இரண்டு, அவர் காஷ்மீரில் தங்கி, “அதிருப்தி அடையும் அரசாங்கத்தின்” எழுத்துக்களைத் தொடரலாம். இந்த வழக்கில் அவர் “சுடப்படுவார் அல்லது சிறைக்கு அனுப்பப்படுவார்.” மூன்று, அவர் “உடனடியாக” காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும். என்று போலீசுத்துறை தந்த்ரேவுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. இருப்பினும் பிப்ரவரி 7-ம் தேதி காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு சென்றதாக தந்த்ரே கூறுகிறார்.

ஏப்ரல் 10-ம் தேதி, காஷ்மீர் பத்திரிகையாளர் ஆசிப் சுல்தான், மற்றொரு வழக்கில் ஜாமீன் பெற்ற பிறகு, பொதுப் பாதுகாப்புச் சட்டம் (பிஎஸ்ஏ) பதிவு செய்யப்பட்டதைப் பற்றி தந்திரே ட்வீட் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, ஸ்ரீநகரில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரியிடமிருந்து தனக்கு அழைப்பு வந்தது, இந்த பிரச்சினை பற்றி ஏன் ட்வீட் செய்தீர்கள் என்று கேட்டதாக தந்த்ரே கூறுகிறார். “இது ஐரோப்பா இல்லை” என்றும், “காஷ்மீர் ஒரு போலீஸ் மாநிலம்” என்றும், திருமணம் செய்துகொள்வதே நல்லது என்றும் அவருக்கு மீண்டும் ஒருமுறை கூறப்பட்டது.

தி கேரவன் பத்திரிகையுடன் தொடர்புடைய மல்டிமீடியா பத்திரிகையாளர் ஷாஹித் தந்த்ரே

பத்திரிகை நடைமுறைக்கு ஏற்ப, ஜே & கே போலீஸ், உளவுத்துறை அதிகாரிகள், கவர்னர் அலுவலகம் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுக்கு தனது அறிக்கையின் ஒரு பகுதியாக கேள்வித்தாள்களை அனுப்பியதாக தந்த்ரே கூறுகிறார்.

இருப்பினும், போலீசு தன்னையும், குடும்பத்தினரையும் “தொடர்ந்து” துன்புறுத்தி வருவதாக தந்த்ரே கூறுகிறார்; அவர் எங்கிருக்கிறார் என்று விசாரிப்பதற்காக காஷ்மீர் போலீசுத்துறையினரால் அவரது தந்தைக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் கட்டுரைகளில் மேற்கோள் காட்டிய ஆதாரங்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துமாறு அதிகாரிகளால் பலமுறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 4-ம் தேதி, தந்த்ரே-வைப் பற்றி விசாரிக்க அவரது தந்தை காஷ்மீரில் உள்ள ரெங்ரெத் போலீசுத்துறையால் அழைக்கப்பட்டார். அவரது தந்தை, தனது மகன் டெல்லியில் பணியில் இருப்பதாக பதிலளித்தார். அதைத் தொடர்ந்து, ஜூன் 5-ம் தேதி, ஒரு துணைக் போலீசு கண்காணிப்பாளர் தந்தைக்கு போன் செய்து, “தந்த்ரே காஷ்மீருக்கு வருவாரா அல்லது டெல்லிக்கு தேடுதல் குழுவை அனுப்ப வேண்டுமா என்பதை இன்னும் அரை மணி நேரத்தில் சொல்லுங்கள்” என்று மிரட்டியுள்ளார்.

தனக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) நிலுவையில் உள்ளதா? என்பதை வெளிப்படுத்துமாறு உயர் அதிகாரிகளை தனது கடிதத்தில் கேட்டுள்ளார் தந்த்ரே. எப்.ஐ.ஆ.ரின் நகலை கேட்ட அவர், சட்டப்படி தனக்கு உரிய நோட்டீஸ் அனுப்பப்பட்டால் விசாரணைக்கு உட்படுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். போலீசு அதிகாரிகளிடமிருந்து கடிதங்கள் பெறப்பட்டதற்கான எந்த தகவலும் தனக்கு கிடைக்கவில்லை என்று தந்த்ரே கூறுகிறார்.

படிக்க :

♦ முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் !

♦ காஷ்மீர் : கருத்துரிமையை கல்லறைக்கு அனுப்பும் காவி பாசிசம் !

காவி பயங்கரவாதிகள் பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதையும் கொலை செய்வதையும் பார்த்திருப்போம். ஆனால் காஷ்மீர் போலீசுத்துறையே காவிக் குண்டர் படையாக மாறி வருகிறது. தி கேரவன் பத்திரிகையாளரை துன்புறுத்தியது மட்டுமல்லாது சிறையில் அடைப்போம் அல்லது சுட்டுக்கொல்வோம் என்று மிரட்டல் விடுகிறது காவி போலீசுப்படை.

மோடி ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் கேலிக்கூத்தாக மாறிவரும் நிலையில், மத்திய மாநில அரசு எந்திரங்களும் காவி பாசிஸ்டுகளின் கூடாரமாக மாறிவருகிறது. குறிப்பான காஷ்மீரில் பத்திரிகையாளர்கள் மீது தொடர்ந்து அரச வன்முறை ஏவப்பட்டு வருகிறது. அரசின் உண்மையான பாசிச முகத்தை அமபலப்படுத்தும் முற்போக்கு பத்திரிகையாளர்களை காவி – கார்ப்பரேட் பாசிச அரசின் கொடுங்கரங்களில் இருந்து பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.


காளி

2,381 அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் மூடல் : தனியார் பள்ளிகளை வளர்க்க திமுக அரசு செய்யும் சதி!

0
08.06.2022
2,381 அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் மூடல்!
அங்கன்வாடி மையங்களிலேயே தொடர கல்வித்துறை முடிவு!
அரசுப் பள்ளிகளை ஒழித்துக் கட்டி தனியார் பள்ளிகளை வளர்க்க திமுக அரசு செய்யும் சதி!
அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் 2019-ல் தொடங்கப்பட்டன. 3-4 வயது குழந்தைகள் எல்.கே.ஜி வகுப்பிலும், 4-5 வயது குழந்தைகள் யு.கே.ஜி வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர்.
இதில், தற்போது 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் வரை படித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில்தான் பள்ளிக் கல்வித்துறையின் மேற்கண்ட உத்தரவு வந்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகள் கூறும்போது, ‘‘ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையுடன் இணைந்து 3 ஆண்டு சோதனை முயற்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. கொரோனா பரவலுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதால், ஆசிரியர்கள், கட்டிடங்களின் தேவை அதிகரித்துள்ளது.
இதையடுத்து, மழலையர் வகுப்புகளை அங்கன்வாடி மையங்களிலேயே தொடர முடிவானது. அதற்கேற்ப மழலையர் வகுப்புக்கு தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 2,381 ஆசிரியர்கள் மீண்டும் அரசுப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். எனவே, இனி மழலையர் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை அங்கன்வாடி மையங்கள் மூலமாகவே நடத்தப்படும்’ ’எனக் கூறியுள்ளனர்.
படிக்க :
♦ “பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’ | புமாஇமு
♦ பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அரசியல் பேச தடை உத்தரவு ! | புமாஇமு கண்டனம்
இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மூன்று ஆண்டுகளுக்கு சோதனை முயற்சிதான் இந்த திட்டம் என்கிறார்கள். ஆனால், இந்த மழலையர் பள்ளிகளை தொடங்கும்போது அரசு சொன்ன விஷயம் என்னவென்றால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது அதை அதிகப்படுத்ததான் இந்தத் திட்டம் என்றார்கள்.
இந்த திட்டத்தை முழுமையாக அமல்படுத்த விடாமல் அரசே தடையாக இருந்ததையும் மீறி சில தலைமை ஆசிரியர்கள் தங்கள் சொந்த முயற்சியில் பலரிடமும் நிதி திரட்டி ஆசிரியர்களை அமர்த்தி இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். இந்த திட்டம் செயல்பட்டதன் விளைவாக மாணவர் சேர்க்கை அரசுப் பள்ளிகளில் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இதை பல்வேறு தலைமை ஆசிரியர்களும் தங்கள் சொந்த நடைமுறையில் நிரூபித்துள்ளனர்.
திரு வீரமணி, தலைமையாசிரியர், (மாநில நல்லாசிரிய விருதாளர்) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கெரிகேப்பள்ளி, ஊற்றங்கரை கிருஷ்ணகிரி அவர்கள் கூறும்போது, “எங்கள் பள்ளி தொடக்கப்பள்ளி, இங்கு மழலையர் வகுப்பு தொடங்க அரசு அனுமதி வழங்கவில்லை. என் சொந்த முயற்சியில், விருப்பத்தின் பேரில் மழலையர் வகுப்புகளைத் துவக்கினேன். 2018-ல் 28 என்ற மாணவர் எண்ணிக்கை இன்று 150 ஆகியுள்ளது! தேவையான அனைத்து நிதி, கற்பித்தல் வசதிகளையும் அரசின் உதவியின்றி நாங்களே செய்து கொள்கிறோம்” என பதிவு செய்துள்ளார்.
திரு குணசேகரன், தலைமை ஆசிரியர், அரசு தொடக்கப் பள்ளி, மாயனூர், கரூர் அவர்கள் கூறும்போது, “எங்கள் பள்ளியிலும் மழலையர் வகுப்பு ஆரம்பிக்க விரும்பி அரசு அதிகாரிகளிடம் அனுமதி கேட்டால் எந்த பதிலும் இல்லை. பெற்றோர்கள் அரசு மழழையர் பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப விருப்பமுடன் இருக்கின்றனர். எல்லா ஏற்பாடுகளையும் நாங்களே செய்து கொள்கிறோம். அனுமதி மட்டும் தாருங்கள் என்றால், சட்ட விதிகள் இல்லை என்கின்றனர். அது மட்டுமல்ல, ஏதாவது குழந்தைகளுக்குப் பிரச்சினை என்றால், நீங்கள் தான் பொறுப்பு என்றும் அச்சமூட்டுகின்றனர். ஆயினும் ஆரம்பித்துவிட்டோம். மழலையர் வகுப்பு ஆரம்பித்த பிறகுதான் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்துள்ளது. குறைந்த பட்சம் அனுமதி மட்டுமாவது வழங்கவே இவ்வளவு தயக்கம் காட்டினால், அரசுப் பள்ளிகளில் மாணவர்களை எப்படி தக்க வைக்க முடியும்? எனக் கேட்கிறார்.
இதைப்போல இன்னும் பல உதாரணங்களை இங்கு குறிப்பிட முடியும்? இப்படி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்தி உள்ள இந்த திட்டத்தை ஏன் இந்த அரசு மூன்று ஆண்டுடன் நிறுத்திக் கொள்கிறது? போட்டுக்கொண்ட திட்டம் வெற்றி என்றபோதும் ஏன் தொடரவில்லை?
இதற்கும் அதிகாரிகள் காரணம் கூறாமல் இல்லை. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது கட்டிடங்கள் இல்லை ஆசிரியர் இல்லை அதனால் இந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டு; இதில் உள்ள ஆசிரியர்களை நடுநிலைப் பள்ளிகளில் பணியமர்த்த போவதாகவும் கூறுகிறார்கள்.
மாணவர்கள் அதிகமாக சேர்கிறார்கள் என்றால் அதற்கேற்ற கட்டமைப்பை உருவாக்க வேண்டியதை பற்றிப் பேசாமல் நழுவிச் செல்வதையே வேலையாக வைத்துள்ளது அரசு. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, 25 சதவீத மாணவர்களுக்கு அரசே பணம் வழங்கி தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறது. இதை கணக்கிட்டால் ஒவ்வொரு வருடமும் ரூ.100 கோடிக்கும் மேல் வருகிறது. இந்தப் பணத்தை வருட வருடம் முறையாக அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பிற்கு செலவு செய்திருந்தால் இன்று நிலைமை எப்படி இருந்திருக்கும். ஆதலால் அரசின் நோக்கம் இப்போது நமக்கு தெளிவாகத் தெரிகிறது.
இந்த புறக்கணிப்பின் பின்னால் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கொள்கையும் அதற்கேற்றபடி அரசுப் பள்ளிகளை கைகழுவும் திட்டமும் அடங்கியுள்ளது.
இதை மறைத்துக் கொண்டு பல்வேறு காரணங்களைச் சொல்லி மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருவதற்கு திமுக அரசும் விதிவிலக்கு அல்ல.
2019-க்கு முன்பு வரை எந்த அரசுப் பள்ளியிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் இல்லை. இந்த சூழலில்தான் பல்வேறு தனியார் பள்ளிகளும் பிளே ஸ்கூல் மற்றும் கிண்டர் கார்டன் போன்ற மழலையர் வகுப்புகளை ஆரம்பித்து பெற்றோர்களை கவர்ந்து இழுத்தன. இதிலிருந்து பார்க்கும் பெற்றோர்களுக்கு அரசுப் பள்ளிகளுக்கு போவதற்கு மனம் வரவில்லை.
அடுத்தடுத்து மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்வதற்கும் இந்த எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் அடிப்படையாக அமைந்தன. இதிலிருந்துதான் ஒட்டுமொத்த அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைய ஆரம்பித்தது.
படிக்க :
♦ தொழில்நுட்ப கல்வி கட்டணங்களை உயர்த்தும் ஏ.ஐ.சி.டி.இ | புமாஇமு கண்டனம்
♦ அண்ணா பல்கலையில் சான்றிதழ் கட்டண உயர்வு : கல்வி என்ன கடைச்சரக்கா? | புமாஇமு
இதை பல்வேறு ஆசிரியர்களும் கல்வியாளர்களும் கண்டு கொண்டதால்தான் இந்தத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும்; அரசுப் பள்ளிகளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசு ஒத்துழைக்காத போதும் செயல்பட்டனர்.
ஆனால், இன்று சமூகநலத் துறை அதிகாரிகள் “இந்த ஆசிரியர்கள்; தலைமையாசிரியர்கள் ஒத்துழைக்காததால் தான் இந்த திட்டம் கைவிடப்படுகிறது” என்று எளிமையாக பொய்யான பழி சுமத்தி விட்டு தங்களின் தனியார்மய நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிக்கின்றனர்.
ஏற்கனவே சமூகநலத் துறையின் கீழ் செயல்படும் அங்கன்வாடிகளில் பழைய முறையிலேயே பயிற்சி தரப்படும் என்ற அறிவிப்பு எல்லாம் பெற்றோர்களை மீண்டும் தனியாருக்கு போகச் சொல்லும் அறிவிப்புதான்.
தனியார் பள்ளிகளிலிருந்து மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு போய்விடக் கூடாது என்பதற்காகவே உடனடியாக கட்டணத்தை கட்டச் சொல்லி நெருக்கடி தருகிறார்கள். மாற்றுச் சான்றிதழ் தரமாட்டேன் என நெருக்கடி கொடுக்கிறார்கள். இந்த அறிவிப்பானது தனியார் பள்ளிகளுக்கு வரப்பிரசாதமாகவே அமையும்.
பெற்றோர்களின் வருமானத்தை தனியார் பள்ளிகள் கொள்ளையடிக்க போவதை தடுக்க வேண்டுமென்றால், மாணவர்களின் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் இந்த தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் கொள்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தையும் முறியடிக்க வேண்டிய தேவை நம்முன் உள்ளது.

இவண்,
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
94448 36642.

சத்தீஸ்கர் அரசு : காடுகளை அழிக்க காத்திருக்கும் கழுகு !

0
த்தீஸ்கர் மாநில வனத்துறை, அங்குள்ள பர்சா ஈஸ்ட் கென்டே பாசன் (PEKB) நிலக்கரிச் சுரங்கத்தில் இரண்டாம் கட்டச் சுரங்கத்திற்காக மரங்களை வெட்டத் தொடங்கியது. பல்லுயிர் பெருக்கம் நிறைந்த ஹஸ்டியோ அரந்த் பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிராக கிராம மக்கள் மே 30 அன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கிராம மக்கள் போராட்டம் காரணமாக மரம் வெட்டுவது நிறுத்தப்பட்டது. சுமார் 250 மரங்கள் வெட்டப்பட்டதாக கிராம மக்கள் கூறினாலும், 50-60 மரங்கள் வெட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு மார்ச் மாதம், சுர்குஜா மாவட்டத்தில் PEKB கட்டம்-II நிலக்கரி சுரங்கத்திற்காக வன நிலத்தை காடு அல்லாத பயன்பாட்டிற்கு மாநில அரசு இறுதி அனுமதி வழங்கியது.
வனத் துறையினர் மே 30 அன்று காலை காட்பர்ரா கிராமத்தை ஒட்டியுள்ள பெண்ட்ராமர் வனப்பகுதியில் மரங்களை வெட்டத் தொடங்கினர். அப்போது பல கிராம மக்கள் மரங்களை வெட்ட எதிரிப்பு தெரிவித்து சம்பவ இடத்தில் ஒன்று கூடினர். போராட்டம் காரணமாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை தவிர்க்கும் வகையிலும், மரம் வெட்டுவது நிறுத்தப்பட்டு, கிராம மக்கள் சமாதானப்படுத்தப்பட்டனர்.
PEKB சுரங்கத்தின் இரண்டாம் கட்டத்திற்கான அனுமதி போலியான கிராம சபை ஒப்புதல் ஆவணங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக காட்பர்ரா கிராமங்களின் சர்பஞ்ச் ஜைனந்தன் போர்ட் கூறினார்.
படிக்க :
♦ சத்தீஸ்கர் : மாவோயிஸ்ட் பெயரில் மீண்டும் ஓர் போலி என்கவுண்டர் !
♦ சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு 2022 : 180 நாடுகளில் இந்தியா கடைசி இடம் !
“PEKB நிலை II-க்கான கிராம சபை 2019-ல் நடைபெற்றது. அந்த நேரத்தில் காட்பர்ரா கிராமவாசிகளுக்கு அதிகாரப்பூர்வ தகவல் வழங்கப்படவில்லை. உண்மையில், அந்த கிராம சபையின் வருகைப் பதிவேட்டில் 2019-ம் ஆண்டுக்கு முன்னர் இறந்த கிராமத்தைச் சேர்ந்த மூவரின் கையொப்பங்கள் உள்ளன. அந்த கிராம சபை முற்றிலும் போலியானது. ஆனால் அதன் அடிப்படையில் சுரங்கத் தொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.
“கடந்த ஏப்ரல் மாதம், பர்சா நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்காக வனத்துறை மரம் வெட்டத் தொடங்கியது, அதுவும் கிராம மக்களால் முறியடிக்கப்பட்டது. பழங்குடியினரின் நலனை மாநில அரசு புறக்கணிக்கிறது” என்று பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக போராடி வரும் சிபிஏ சுக்லா கூறினார்.
சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட ஹஸ்டியோ அராண்ட் பகுதியில் சுரங்கம் தோண்டினால் 1,70,000 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டு, குடியிருப்புகளுக்குள் யானைகள் நடமாட வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.
மே 2022 நிலவரப்படி, ICFRE மற்றும் Wildlife Institute of India (WII) ஆகியவற்றின் இரண்டு ஆய்வுகள் வெளிவந்துள்ளன. சுரங்கம் சந்தேகத்திற்கு இடமின்றி பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை இருவரும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது சத்தீஸ்கரில் யானைகள் குறைவாக இருந்தாலும், காடுகளை அழிப்பதன் காரணமாக யானைகளின் நடமாட்டம் நகர்ப்புறங்களுக்கு பரவ வழிவகுக்கும், இந்த ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன.
அதிகாரிகளின் கூற்றுப்படி, 2007-ல் RVUNL-க்கு ஒதுக்கப்பட்ட PEKB பிளாக்கில் 762 ஹெக்டேர் நிலத்தில் முதல் கட்ட சுரங்கம் 2013-ல் தொடங்கப்பட்டு நிறைவடைந்துள்ளது. பார்சா தொகுதி 2015-ல் ஒதுக்கப்பட்டது.
இந்த திட்டத்தால் தங்களின் நிலம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கிராம மக்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த பிரச்சினையில் நீண்டகாலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த காலங்களில் இப்பகுதியில் சுரங்கத்திற்கு எதிராக சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் ஆர்வளர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். கடந்த அக்டோபர் 2021-ல், “சட்டவிரோதமாக” நிலம் கையகப்படுத்தியதாகக் குற்றம் சாட்டி, பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சுமார் 350 பேர் ராய்ப்பூருக்கு 300 கி.மீ நீள அணிவகுப்பு நடத்தினர்.
கடந்த மே 24 அன்று, RRVUNL CMD சர்மா, “சத்தீஸ்கரில் இருந்து நிலக்கரியைப் பெறத் தவறினால் ராஜஸ்தான் கடுமையான மின் நெருக்கடியில் மூழ்கும். ஆர்வலர்கள் உள்ளூர் மக்களை “தவறாக வழிநடத்துகிறார்கள்”. சுரங்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக சத்தீஸ்கரில் 8 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் நடப்படும். வேலை வாய்ப்புகள், கல்வி ஆகியவற்றில் உள்ளூர் மக்கள் பயனடைந்துள்ளனர். சர்குஜாவில் “100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை”விரைவில் கட்டப்படும்” என்று கூறினார்.
படிக்க :
♦ சத்தீஸ்கர் : உள்ளூர் மோதலை முஸ்லீம் வெறுப்பாக மாற்றும் காவிக் குண்டர்கள் !
♦ சத்தீஸ்கர் : போலீசு முகாமிற்கு எதிராக பழங்குடி கிராமங்கள் போராட்டம் !
இயற்கை வளங்களை அழிக்கத்துடிக்கும் அதிகாரிகளின் நடவடிக்கையை கிராம மக்களது போராட்டம் தடுத்து நிறுத்தியுள்ளது. காடுகள், மலைகள், நீர்நிலைகள் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபவெறிக்காக இந்திய அரசினால் அழிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு சத்தீஸ்கர் மாநிலம் ஓர் சான்று. நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்டும் சத்தீஸ்கர் அரசை எதிர்த்து போராடும் கிராம மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ஆதரவு கரம் நீட்டுவோம்.

சந்துரு