Thursday, July 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 190

உழவர் படை ஒன்று நீ கட்டிடு ! || தருமபுரி மக்கள் அதிகாரம் பாடல் !!

ந்தியாவை ஆளும் காவி – கார்ப்பரேட் பாசிச ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல், வேளாண் திருத்தச் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து கார்ப்பரேட்டுகளிடம் விவசாயத்தை தாரைவார்ப்பதையும், பணமாக்கல் திட்டம் மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதையும், பெட்ரோல் – டீசல் வரி மூலம் மக்களைச் சுரண்டுவதையும், கல்வியில் காவி கருத்துக்களை புகுத்துவதையும், காவிக் குண்டர்கள் மூலம் கலவரங்கள் நடத்தப்படுவதையும், மக்களை சாதியாகவும், மதமாகவும் பிரிப்பதையும் எதிர்த்து அனைவரும் காவி – கார்ப்பரேட் பாசிசக் கும்பலை எதிர்த்துப் போரிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய உழைக்கும் மக்களுக்கு அறைகூவல் விடுக்கும் விதமாக, “உழவர் படை ஒன்று கட்டிடு; காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்திடு” எனற இந்தப் பாடலை தருமபுரி மாவட்டம், மக்கள் அதிகாரம் அமைப்பின் புரட்சிகர கலைக்குழுவைச் சேர்ந்த தோழர்கள் பாடல் காணொலியை தயாரித்துள்ளனர்.
பாடல் வரிகள்
வேளாண் சட்டத்தை வீழ்த்திட போரிட்ட
விவசாயிகள் கொடுத்த உயிருக்கு பழிதீர்க்க
உழவர் படை ஒன்று நீ கட்டிடு
காவி – கார்ப்பரேட் பாசிசம் வீழ்த்திடு
உ.பி. விவசாயிகளை கார் ஏற்றி கொன்றானே
காவிகள் கூட நின்னு போலீசும் சுட்டானே
டெல்லி போராட்டத்தில் கலவரம் செய்தானே
கலவரம் செய்ய துணை ராணுவம் நின்றானே
உழவர் படை ஒன்று நீ கட்டிடு
காவி – கார்ப்பரேட் பாசிசம் வீழ்த்திடு
கருப்பு பணம் ஒழிப்பேன்னு கதையளந்து விட்டானே
பணமாக்கும் திட்டமின்னு பொதுத்துறையை விற்றானே
ரயில்வே தொலைத்தொடர்பை கூவி அவன் கொடுத்தானே
மக்களது பொது சொத்தை ஏலத்தில் விட்டானே
உழவர் படை ஒன்று நீ கட்டிடு
காவி – கார்ப்பரேட் பாசிசம் வீழ்த்திடு
பெட்ரோல், டீசல் விலை மக்கள் பணம் கருகுது
தினமாயிரம் கோடி அதானி பை நிறையுது
நம்ம ஏர் இண்டியா டாடா கை மாறுது
ஒரு வேளை உணவின்றி நம் வயிறு காயுது
உழவர் படை ஒன்று நீ கட்டிடு
காவி – கார்ப்பரேட் பாசிசம் வீழ்த்திடு
கல்வியில் காவியை கண்ணெதிரே கலக்குறான்
காட்டிக் கொடுத்த சாவர்க்கரை தியாகியின்னு திரிக்கிறான்
சாதியின்னு மதமின்னு மக்களைதான் பிரிக்கிறான்
காவிப்படை கட்டி அவன் கலவரத்தை நடத்துறான்
உழவர் படை ஒன்று நீ கட்டிடு
காவி – கார்ப்பரேட் பாசிசம் வீழ்த்திடு

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக மாற்றத்திற்கான புரட்சிகர பாடல்களை தொடர்ந்து கொண்டுவர நிதி கொடுத்து ஆதரவு தாருங்கள்!
வங்கி விவரங்கள் :
Gopinath.P
A/C 6720415617.
Indian Bank Pennagaram Branch
IFSC NO : IDIB000P076.
பாடல் – இசை
புரட்சிகர கலைக்குழு,
மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம்.
செல் : 9790138614
வீடியோ ஆக்கம்
வினவு

புதிய ஜனநாயகம் நவம்பர் – 2021 அச்சு இதழ் !

37-ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம் !
ன்பார்ந்த வாசகத் தோழர்களே,
அனைவருக்கும், எமது 104-வது நவம்பர் ரஷ்ய சோசலிஷப் புரட்சி நாள் வாழ்த்துக்கள். இத்துடன் உங்களின் பேராதரவோடு புதிய ஜனநாயகம் இதழ், தனது 37-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சமூகப் பிரச்சினைகளை மா-லெ கண்ணோட்டத்தில் அணுகி, ஆழமாகவும் காத்திரமாகவும் சோசலிச, கம்யூனிச இலட்சிய உனர்வூட்டும் வகையிலும் எழுதி வருகிறது, புதிய ஜனநாயகம். நமது ஏட்டின் அவசியம், இன்றைய அரசியல் சூழலில் முக்கியத் தேவையாக உள்ளது.
மேலேறித் தாக்குதல் தொடுத்துவரும் காவி – கார்ப்பரேட் பாசிசம், கிட்டத்தட்ட எல்லா முதலாளித்துவப் பத்திரிகைகலையும் சுதந்திர ஊடகங்களையும் மிரட்டியும் இன்னபிற வழிகளின் மூலமும் “ஒருவழிக்கு” கொண்டு வருவதில் வெற்றியடைந்து வருகிறது. பல்வேறு கருப்புச் சட்டங்களைப் போட்டு ஏற்கெனவே அரைகுறையாக இருக்கும் ஊடகச் சுதந்திரத்தையும் வெட்டிச் சுருக்கிக் கொண்டே வருகிறது.
இத்தகைய சூழலில்தான், கடும் பொருளாதாரச் சுமைகளுக்கிடையிலும் முறையாக மாதந்தோறும் புதிய ஜனநாயகம் ஏட்டைக் கொண்டு வருகிறோம். புரட்சிகரப் போராட்டத்தில் மக்களின் அறிவாயுதமாக, புதிய ஜனநாயகம் தொடர்ந்து வெளிவர வாசகர்கள் நன்கொடை தந்தும் சந்தா செலுத்தியும் ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
– ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.
புதிய ஜனநாயகம் : நவம்பர் – 2021 அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் – நவம்பர் 2021 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. இதழை வாங்குவதற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !
தொடர்பு விவரங்கள் :
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561
வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam

Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.
புதிய ஜனநாயகம் இதழுக்கு சந்தாக்கள் சேகரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளோம். ஆண்டு சந்தா என்ற அடிப்படையில் ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம். அஞ்சல் மூலம் இதழ் கோருகின்ற வாசகர்கள், எமது அலுவலக எண்ணிற்கு ஜி−பே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்−ஐ) எமது அலுவலக எண்ணிற்கு (94446 32561) வாட்ஸ்−அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஜி−பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561
தொடர்பு விவரங்கள் :
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
நவம்பர் மாத இதழில் வெளியான கட்டுரைகள் குறித்த விவரம் :
♦ இல்லம் தேடிவரும் கல்வி: கல்வியில் நடத்தப்படும் ‘கரசேவை’!
♦ உ.பி. – லக்கிம்பூர் கேரி வன்முறை : விவசாயிகள் போராட்டத்தை இரத்தச் சேற்றில் மூழ்கடுக்க காவி பாசிஸ்டுகள் செய்யும் சதி!
♦ இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாகும் அசாம்!
♦ பல இலட்சம் கோடி மதிப்புள்ள ஏர் இந்தியாவை டாடாவுக்கு தானமாக கொடுத்தார் ‘வள்ளல்’ மோடி!
♦ கெய்ர்ன் வழக்கு : இந்திய இறையாண்மையை செல்லாக்காச்சாக்கிய மோடி!
♦ “பண்டோரா ஆவணங்கள்” : கருப்புப் பண மாஃபியாக்களின் பிறப்பிடம் உலக முதலாளித்துவம் !
♦ தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி !
♦ தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி ! – மீண்டும் உறுதிப்படுத்துகிறது மணியரசன் கும்பல்!
♦ ஏன் சோசலிசம்? – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
♦ ம.க.இ.க-வின் “உப்பிட்டவரை” ஆவணப்படத் திரையிடல் மற்றும் கருத்துரை நிகழ்வு!
♦ கலா உத்சவ் : சமஸ்கிருத திணிப்பில் ‘சமூகநீதி’ ஆட்சி – பு.மா.இ.மு. கண்டனம்!
– நிர்வாகி.

எதிர்த்துக் கேட்டால் ஊபா : பாசிஸ்டுகளின் சோதனைக் களமாகும் திரிபுரா || மக்கள் அதிகாரம்

PP Letter head
பத்திரிகை செய்தி
06.11.2021
திரிபுரா : பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக துணை நின்றால் ஊபா சட்டம் !
காவி பாசிஸ்டுகளின் இந்துத்துவ சோதனைச்சாலையானது திரிபுரா!
திரிபுரா மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து உண்மை அறியும் குழுவில் இருந்த இரண்டு வழக்கறிஞர்கள் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திரிபுரா மாநிலத்தில் நடைபெற்று வரும் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறை குறித்து பி.யூ.சி.எல் சார்பில் உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதில் உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஹஸ்மி, ஸ்ரீவட்சவ், என்.சி.எச்.ஆர்.ஓ அமைப்பின் அன்சார் இந்தோரி, சி.பி.ஐ. (எம்.எல்) வழக்குரைஞர் முகேஷ் ஆகியோர் அப்பணியில் ஈடுபட்டனர்.
இக்குழுவினர் திரிபுரா வன்முறை தொடர்பாக டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியுள்ளனர்.அதனை தங்களது முகநூலில் நேரடியாக ஒளிபரப்பும் செய்து உள்ளார்கள்.
படிக்க :
திரிபுராவில் இந்துவெறி குண்டர்களின் வெறியாட்டம் !
திரிபுரா : பாஜக முதல்வரின் கூமுட்டைதனத்தை விமர்சித்த மருத்துவர் பணிநீக்கம் !
“அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் உள்ள பொய்யான கருத்துக்களை உடனடியாக சமூகவலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும்” என்று திரிபுரா மாநிலம் மேற்கு அகர்தலா போலீஸ் ஸ்டேஷனில் இருந்து இரு வழக்கறிஞர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும் ஊபா உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .
திரிபுராவில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவற்றைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதற்கான அரச பயங்கரவாதமே இந்த வழக்கு.
எல்லா முனைகளிலும் பாசிச ஆட்சியை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு எதிராக வெற்றுச் சொல்லாடல்களும் வீன் பேச்சுக்களும் ஒருபோதும் பயன் தரப்போவதில்லை. பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை எந்த அளவுக்கு கட்டி முன்னேறுகிறோமோ அந்த அளவுக்கு பாசிஸ்டுகளை வீழ்த்தமுடியும் என்பதுதான் உண்மை. அதற்கான முன்னெடுப்புகளே நம்முடைய தலையாய கடமையாக இருக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை

வரலாற்றுப் பார்வையில் ஷெல்லியும் பாரதியும் || நா. வானமாமலை

1
தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) || நா. வானமாமலை – பாகம் – 16
முதல் பாகம் ……………………………………………………………………………………….. முந்தைய பாகம்
நா. வானமாமலை
கவிஞர்கள் ஷெல்லியும் பாரதியும்
ட் (ode) என்பது ஆங்கிலக் கவிதை உருவங்களில் ஒன்று. கடல், காற்று, வானம்பாடி, நைட்டிங்கேல், (பறவை) முதலியவற்றை முன்னிலையாகப் புகழ்ந்து, தமது உணர்ச்சிகளையும், சிந்தனைகளையும் வெளியிடுவதற்கு இவ்வுருவத்தை ஆங்கிலக் கவிஞர்கள் கையாண்டுள்ளார்கள்.
ஷெல்லியின் மேல் காற்றிற்கு’ (To the westwind) கீட்ஸின் ‘நைட்டிங்கேலுக்கு’ என்ற முன்னிலைப் பனுவல்கள் ஆங்கில இலக்கியத்தின் அழகுமிக்க படைப்புகள்.
இச்சிறு கட்டுரையில் ஷெல்லியின் மேல் காற்றை’யும், பாரதியின் காற்று’ என்ற கவிதையையும் ஒப்பு நோக்கி இருவரும் ஒரே பொருளைக் கவிதைப் பொருளாகக் கையாண்டிருக்கும் முறையைக் கவனிப்போம்.
ஷெல்லி 1792 முதல் 1822 வரை வாழ்ந்தவன். இங்கிலாந்தில் முதலாளி வர்க்கம் வளர்ச்சி பெற்ற காலத்தில் பாடியவன், வளர்ச்சி பெறும் காலத்தில் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்துப் போராடக் கையாண்ட தத்துவங்களிலும், கோஷங்களிலும் நெஞ்சைப் பறி கொடுத்தவன். சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவம் என்ற உயர்ந்த லட்சியங்களில் நம்பிக்கை கொண்டவன், நிலப்பிரபுத்துவம் மக்களின் ஆன்மாக்களை அழுத்தி வதைக்கிறது என்று எண்ணி அதன் விடுதலைக்காகப் போராட எண்ணியவன். சுதந்திரம் என்ற அருவமான லட்சியத்தை வழிபட்டவன். இம்மூன்று கொள்கைகளின் அடிப்படையில் உலகத்தைப் படைக்க ஆர்வம் கொண்டவன். இவ்வாறான இளமைச் சிந்தனைகளில் கவிதைச் சிறகுகளால் பறந்து கண்ட புதிய கற்பனை உலகை நனவாக்கப் பேராசை கண்டவன்.
படிக்க :
ஆயுதம் செய்யுங்கள் – நீங்களே ஏந்துங்கள் !
தீபாவளி – நமக்கு தீராவலி | நவம்பர் 7 – கொண்டாடுவோம் நமது புரட்சியை | கவிதைகள்
ஆனால் கற்பனை மட்டும் லட்சியத்தை அடைய உதவுவது இல்லை. முதலாளித்துவ சித்தாந்தங்களின் போலித்தன்மையை அவன் எளிதில் உணர்ந்தான். இனிய சொற்களுக்குப் பின்னே மறைந்திருக்கும் வஞ்சகத்தை ஷெல்லியின் கூர்மையான அறிவு அறிந்து கொண்டது. மனிதர்களை லாப வெறிக்கு அடிமையாக்குவதற்குப் புதிய அடிமைத் தளைகளை அவர்கள் தங்களது சித்தாந்தங்கள் மூலம் உருவாக்கி வருவதை ஷெல்லி கண்டான். கோஷங்களுக்கும் செயல்களுக்கும் இடையே இருந்த முரண்பாட்டை ஷெல்லி உணர்ந்தான்.
அவன் கனவுகளின் ஒளி மழுங்கியது. அவனது கற்பனைச் சிறகுகள் ஒடிந்தன. வெள்ளம் போல் பாய்ந்த உணர்ச்சி வெள்ளம் வற்றி வறண்டது. அவனது உள்ளத்தில் எழுதி அழகு பார்த்து வந்த புதிய உலகம் என்னும் கோலச் சித்திரம் வர்ணம் இழந்து அலங்கோலமாக மாறிற்று. அவனது இதயம் வெடித்து ரத்தம் பீறிட்டது. சோகம் அவனை ஆட்கொண்டது. இச்சோகம் தனி மனிதனின் சோகமல்ல. சமுதாய சோகத்தின் பிம்பமே அது. அவனது ஆகாயக் கோட்டைகள் சரிந்ததினால் ஏமாற்றமும் துன்பமும் அவன் மனதை வாட்டின.
இம் மன நிலையில் அவன் இத்தாலிக்குச் சென்றான். ஆர்னோ என்னும் சிற்றூரில் தங்கினான். அங்கு அவனுடைய ஒரே மகன் இறந்து போனான். புத்திர சோகம் மேலிட்டது. கனவுகள் கலைந்ததால் ஏற்பட்ட சோகமும், சொந்த இழப்பால் தோன்றிய சோகமும் இணைந்து ஷெல்லியின் உள்ளத்தை நிரப்பிற்று. கவிதை ஊற்று தூர்ந்து விட்டது.
இந்நிலையில் மேல் காற்று அடிக்க ஆரம்பித்தது. இலையுதிர் காலத்தில் உதிர்ந்த இலைகளை இது சிதற அடித்தது. வெறியாட்டக்காரனது மந்திர சக்தியின் முன்பு விழுந்தடித்து ஓடும் பிசாசுகளைப் போல அவை ஓடின. இறகு கொண்ட விதைகளைத் தாங்கிச் சென்று ஈரமான தரையின்மேல் காற்று விட்டுவிட்டது. அவை முளைத்தன. இவ்வாறு இயற்கையின் அழிவு சக்தியாகவும், ஆக்க சக்தியாகவும் மேற் காற்று செயல்படுவதை ஷெல்லி கண்டான்.
“Wild spirit which art
moving every where Destroyer and preserver
hear oh here!”
பூமியில் மட்டுமின்றி வானத்திலும் மேல்காற்று தனது அழிவு ஆற்றலைப் புலப்படுத்தியது. வானத்தில் காணப்படும் மேகங்களை, கடலிலும் வானத்திலும் இருந்து உதிர்ந்த இலைகளாகக் கவிஞன் கூறுகிறான். அவற்றை பூமியின் இலைகளைச் சிதறிப்படிது போலவே மேல் காற்று அலைக்கழிக்கிறது.
ஷெல்லி
கள்வெறியோடு, தெய்வ வெறியாடும் தேவராட்டியின் கூந்தலைப் போல அவை பறந்து பரட்டையாகத் தோன்றுகின்றன. சாகின்ற ஆண்டின் சமரகீதமாக மேல் காற்று சங்கம் ஊதுகின்றது. இருளினின்றும், ஈரத்தை உறிஞ்சி மேகமாக்கி மழை பொழியவும் மின்னல் வெட்டவும் மேல் காற்று செயல் புரிகின்றது. இச்செயல்களில் மேல் காற்றின் அழிக்கும் சக்தியைக் கவிஞன் உணர்கிறான்.
இவ்வாறே கவிஞன் மாறி மாறி பல காட்சிகளை நம் கண் முன் கொணர்ந்து காற்றின் அழிவுச் சக்தியையும், உணர்வில் பதிய வைக்கிறான்.
ஆனால் காற்றின் முழு வலிமையையும் கண்ணால் கண்டு விடமுடியாது என்று எண்ணிய கவிஞன் தானே இலையாகி, மேகமாகி, கடலாகி, காற்றாகி, ஆற்றாக அனுபவிக்க ஆசைப்படுகிறான். இவ்வாறு உலகின் துன்பங்களிலிருந்து விடுபட்டு காற்றின் மீது ஏறித் திரிய ஆசைப்படும் கவிஞன், காற்றின் வலிமையால் தனது உள்ளத்தில் வலுவேற வேண்டும் என்று விரும்புகிறான்.
இளமையில் காற்றைப் போலவே ஷெல்லி எவருக்கும் அடங்காத தன்மை பெற்றிருந்தான். அதனைப் போலவே தனது கவிதைக்கு ஆற்றல் உண்டு என நம்பியிருந்தான். தன் பாட்டினால் இவ்வையத்தை மாற்றி விடலாம் என்று கனவு கண்டான். இக் கனவுகள் கலைந்த பின் தோன்றிய ஏமாற்றம், வாழ்க்கையின் மீது அவனுக்குச் சலிப்பைத் தோற்றுவித்தது. தனது வலிமையின்மையை நினைக்க அவனுக்குச் சோர்வு தோன்றியது.
இந்நிலையில் காற்றின் வலிமையை அவன் காண்கிறான். தன் வலிமையின்மையையும், சோர்வையும், சலிப்பையும், நம்பிக்கையின்மையையும் போக்கித் தனது சொற்களில் வலிமை பெய்யுமாறு காற்றை வேண்டிக்கொள்கிறான். இலைகளைத் துளிர்க்கச் செய்யும் காற்று தனது உள்ளத்தையும் புதுப்பிக்க வேண்டும்.
உதிர்ந்து விட்ட இலைகளை உலகெங்கும் பரப்பும் காற்று தனது வலுவிழந்த சிந்தனைகளை உலகெங்கும் பரப்ப வேண்டும். இலைகள் மண்ணோடு சேர்ந்து புதிய செடிகளுக்கு உரமாவது போல தனது சிந்தனைகளைப் புதிய உலகம் தோன்ற வழிகோல வேண்டும். தனது குரலைக் காற்று தனது வீணையாக மீட்டி, உலகெங்கும் அதன் நாதம் பரவச் செய்ய வேண்டும். தற்போது நீறு பூத்த அனல் போன்று செயல் வலிமை குன்றிக் கிடக்கும் தனது சிந்தனைகளைக் காற்று சுவாலை விட்டெரியச் செய்து, மாந்தர் மனங்களில் இருளை ஓட்டி ஒளிவீசச் செய்ய வேண்டும்.
“Scatter as from an
unextinguished hearth
Ashes and sparks, my words
among man kind”
இச்சிந்தனைகள் அவனுடைய சோர்வைப் போக்குகின்றன. இருண்ட பனிக்காலம் என்றும் நீடித்து விடாது. அது மறைந்து வசந்த காலம் தோன்றத்தானே செய்யும்? கவிஞனுக்கு நம்பிக்கை பிறக்கிறது. தனது குறிக்கோள் நிறைவேறும் என்ற உற்சாகம் தோன்றுகிறது. புதிய உலகத்தைப் பற்றிய கனவுச் சித்திரங்கள் மறுபடி அவன் உள்ளத்தில் எழுகின்றன.
……………..oh wind,
If winter comes can spring
be far behind?’
என்ற கேள்வியோடு பாட்டை முடிக்கிறான் ஷெல்லி.
ஷெல்லியின் கவிதைகளில் பாரதிக்கு ஈடுபாடு அதிகம். தன்னை அவன் பெருமையாக ஷெல்லிதாசன்’ என்று பெயரிட்டு அழைத்துக் கொண்டதுண்டு. ஷெல்லியின் சமூக உணர்வும், மனிதாபிமானமும், புரட்சி மனப்பான்மையும், பாரதியின் உள்ளத்தைக் கவர்ந்தன. ஷெல்லியின் சொல்லாட்சியும், உவமைச் சிறப்பும், உள்ளத்தை அள்ளும் கவிதாவேகமும், சிந்தனைச் சிறப்பும், தூய்மையான உணர்ச்சிகளும், பாரதிக்கு ஷெல்லியின் மீது பெருமதிப்பை உண்டாக்கின.
இந்திய நாட்டின் சூழ்நிலையில், தேசிய எழுச்சி தோற்றுவாய்க் கட்டத்தில் சிறு ஊற்றாகத் தோன்றிய காலத்தில் அதன் வளர்ச்சியைத் தீர்க்கதரிசனமாகக் கண்ட பாரதி, ஷெல்லியின் ‘சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம்’ என்ற கோஷங்கள், வளர்ச்சிக்கேற்ற கோஷங்கள் என உணர்ந்தான்.
பாரதியின் வாழ்க்கை நிலையும், சுதந்திர இயக்கத்தின் ஆரம்பகால வேதனைகளும், பாரதியின் மனத்தில் வேதனையை உண்டாக்கின. ஆயினும் அவன் மக்கள் உணர்வோடு ஒன்றி நின்றதால் ஷெல்லியைப் போலச் சோர்வடையவில்லை. ‘என் நெஞ்சில் ரத்தம் பீறிடுகிறது.’ என்று எழுதவுமில்லை .
ஷெல்லியின் மேல் காற்று’ என்ற கவிதைதான் பாரதியின் ‘காற்று’ என்னும் வசன கவிதைக்குக் கருவாக இருந்தது என்பதில் ஐயமில்லை. அவற்றில் காணப்படும் கருத்து ஒற்றுமை இதனை வலியுறுத்தும்.
ஆனால் பாரதியின் ஆழ்ந்த மனிதாபிமானமும் தன்னம்பிக்கையும், கொள்கைப் பற்றும் ஷெல்லியின் கவிதையில் அவ்வளவு முனைப்பாகக் காணப்படவில்லை.
இனி ‘காற்று’ என்னும் வசன கவிதையின் சிந்தனைப் போக்கைச் சுருக்கமாக அறிந்து கொண்டு பாரதிக்கும் ஷெல்லிக்கும் உள்ள ஒற்றுமையையும், வேற்றுமையையும் ஆராய்வோம். அவற்றின் அடிப்படையில் பாரதியின் தனித்தன்மை எது எனக் காண முயலுவோம்.
பாரதி கதை சொல்லத் தொடங்குகிறான். வீட்டு மேடையின் ஒரு பந்தலில் இரு கையிறுகள். கந்தன் வள்ளியம்மை என்பவை அவற்றின் பெயர்கள். இவை ஒன்றையொன்று நெருங்கித் தழுவிக் கொள்ளு கின்றன. காற்று நிற்கிறது. அசைவு நிற்கிறது. கவிஞன் முன் சோதி ரூபமாக வாயு தேவன் தோன்றுகிறான். கவிஞனுடைய கேள்விகளுக்கு விடை கூறுகிறான்.
‘நான் விழிக்கச் செய்கிறேன்’, அசையச் செய்கிறேன் நான் சக்தி குமாரன்.
இக்கதையில் பாரதி காற்றின் ஆக்க சக்தியைப் புகழ்கிறான். ஆக்க சக்தியைக் காதலாக உருவம் கொடுக்கிறான். ஆக்க சக்தியின் சிறப்பான அம்சம் காதல். அது படைப்பின் அடிப்படை, ஷெல்லி விதை முளைப்பது காற்றின் ஆக்க சக்தியென்றான். பாரதி காற்றின் காதலில், காற்றின் ஆக்க சக்தியைப் புலப்படுத்துகிறான்.
ஷெல்லியும் கடலின் அடியில் காற்றுப் புகுந்து அழிவு செய்வதைக் கூறுகிறான். பாரதி இதனையும் ஒரு காட்சியாக மாற்றிக் கூறுகிறான்.
நடு கடல், தனி கப்பல்
வானமே, சினந்து வருவது போன்ற புயல் காற்று,
அலைகள் சாரி வீசுகின்றன, நீர்த்தூளி படுகின்றன.
அவை மோதி வெடிக்கின்றன. சூறையாடுகின்றன,
கப்பல் நிர்த்தனஞ் செய்கிறது;
மின் வேகத்தில் ஏற்றப்படுகின்றது.
பாறையில் மோதிவிட்டது.
ஹதம்!
இரு நூறு உயிர்கள் அழிந்தன!!
கப்பல் விபத்திலிருந்து யுக முடிவிற்கு அழைத்துச் செல்கிறான் பாரதி,
‘ஊழி முடிவும் இப்படித்தான் இருக்கும்
உலகம் ஒரே நீராகி விடும். தீ நீர்
சக்தி காற்றாகி விடுவாள்,
சிவன் வெளியிலே யிருப்பான்.’
இவ்விரண்டு கதைகள் கூறி பாரதி ஷெல்லியின் முடிவுக்கே வருகிறான்.
‘காற்றே யுக முடிவு செய்கின்றான்,
காற்றே காக்கின்றான்,’
ஷெல்லியின் சொற்கள் இவை:
“Destroyer and Preserver
hear oh hear
இந்நடுநாயகச் சிந்தனையிலிருந்து கிளைகளாகப் பிரிந்து தன்னுடைய தத்துவம் முழுவதையும் உதாரணங்கள் மூலம் பாரதி வெளிப்படுத்துகிறான்,
பாரதிசாக்தேயன், சக்தி அவன் அதிதேவதை, புராதனக் கிரேக்கர்களின் இயற்கை வணக்கம் அவனுடைய மதத்தில் ஒரே அம்சம், இதனால் பெருங்கடலைக் கலக்கும் காற்றின் வலிமையையும் மேகங்களை மோத விடும் காற்றின் ஆற்றலையும் பாரதி கண்டு வியப்புற்று காற்றினை வணங்குகிறான்.
‘காற்றுக்குக் காதில்லை.
அவன் செவிடன்.
காதுடையவன் இப்படி இறைச்சலிடுவானா?
காதுடையவன் மேகங்களை ஒன்றொடொன்று மோதவிட்டு,
இடி இடிக்கச் சொல்லி வேடிக்கைப் பார்ப்பானா?
காதுடையவன் கடலைக் கலக்கி விளையாடுவானா?
காற்றை, ஒலியை, வலிமையை வணங்குகிறோம்.’
பாலைவனத்தில், ஒட்டகக் கூட்டங்களும், மனிதர்களும், புழுக்கள் போல் காற்றின் வலிமையால் மணலில் புதையுண்டு சாகின்றனர்.
‘அவன் செயல்கள் கொடியன’
என்று காற்றின் அழிக்கும் ஆற்றலைப் பற்றி தன் கருத்தைப் பாரதி கூறுகிறான். இனி புராணக் கதைகளில் வரும் காற்றின் பரம்பரையைக் கூறுகிறான்.
‘வீமனும் அனுமானும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும்.
உயிருடையன வெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம்’
காற்றே உயிர் என்ற சித்தர் கருத்தை இங்கு பாரதி வலியுறுத்துகிறான்.
இவ்வளவும் படர்க்கையாகக் கவிக் கூற்றாகக் கூறி அந்தக் கவிஞன் இனி முன்னிலையாகக் காற்றினிடம் பேச்சு தொடங்குகிறான். இது ஷெல்லியின் ‘ஓட்’ என்ற முன்னிலைப்பனுவலை ஒத்திருக்கிறது. ஷெல்லி காற்றின் ஆற்றலின் முன் செயலற்றிருக்கிறான். அது விரும்பினால் தான் அதன் மீது பறக்க முடியும். அதன் கருணையால் தான் அவனது சிந்தனைத் தீப்பொறிகள் உலக மக்களிடையே பரவி சுவாலை விட்டு எரிய முடியும், ஆனால் பாரதி காற்றிற்குக் கட்டளை இடுகிறான். காற்றிற்கு வணக்கமும் செலுத்துகிறான். வேத ரிஷிகளின் வணக்க முறையையும், தற்கால விஞ்ஞானிகளின் இயற்கையை வெல்லும் தன்னம்பிக்கையையும், பாரதி இணைக்க முயலுகிறான்.
‘காற்றே வா!
எமது உயிர் நெருப்பை நீடித்து
நல்லொளித் தருமாறு நன்றாக வீசு,
பேய் போல வீசி அதனை அவித்து விடாதே!
மெதுவாக நல்ல நயத்துடன் வீசிக் கொண்டிரு.
உனக்குப் பாட்டுக்கள் பாடுகிறோம்.
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.
உன்னை வழி படுகிறோம்’
காற்று உலகிலுள்ள அழுக்கைப் போக்குகின்றான். அது போல உள்ளத்திலுள்ள அழுக்கையும் சுத்தம் செய்கிறான். அவன் வரும் இடத்தை மாந்தர் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
படிக்க :
இலக்கியம் : ஒரு அப்பாவிப் பெண் அச்சத்தை துறக்கிறாள் !
நாவல் அறிமுகம்: சடையன்குளம்
காற்று நொய்ந்தவற்றை அழித்து விடுவான். வலிமையுள்ள வற்றை மேலும் வலுப்படுத்துவான். அவனைப் பயன்படுத்த மனிதப் படைப்புகள் வலிமையாக இருக்கவேண்டும்.
‘ஆதலால் மானிடரே வாருங்கள்
வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம்
கதவுகளை வலிமையுறச் செய்வோம்
உடலை உறுதி கொள்ளப் பழகு வோம்.
உயிரை வலிமையுற நிறுத்து வோம்
உள்ளத்தை உறுதி செய்வோம்
இங்ஙனம் செய்தால் காற்று
நமக்குத் தோழனாக வருவான்.’
இவ்வாறு காற்றைத் தோழமை கொள்ளும் வழியைப் பாரதி நமக்கு உபதேசிக்கிறான்.
காற்று மழையைக் கொண்டு வருகிறான். தமிழன் நனைகிறான். தங்க நல்ல வீடு இல்லை .
‘நனைவதால் ஜுரம் உண்டாகிறது. நாள்தோறும் சிலர் இறந்து போகிறார்கள். மிஞ்சியிருக்கும் மூடர் விதிவசம் என்கிறார்கள்.’
நோய் வருவது விதியினால் என்று சொல்லும் சாத்திரங்களைப் பாரதி பாடுகிறான்.
‘உண்மையான சாத்திரங்களை வளர்க்காமல் இருப்பனவற்றையும் மறந்துவிட்டுத் தமிழ்நாட்டுப் பார்ப்பார்ப் பொய்க் கவிதைகளை மூடரிடம் காட்டி வயிறு வளர்க்கிறார்கள்.’
அசைவனைத்தும் காற்றின் செயல். வையகத்தின் உயிர் காற்று. அதனைப் பாரதி போற்றுகிறான். மீண்டும் வேத ரிஷிகளின் பாணியில் பாரதி காற்றை வணங்குகிறான்.
‘காற்றின் செயல்களை யெல்லாம் பரவுகின்றோம்.
உயிரை வணங்குகின்றோம்.
உயிர் வாழ்க!’
உயிர் மாயையல்ல. உயிர் உண்மை அதனை வாழ்த்துகிறான் பாரதி. பாரதி கவிதைகளின் ஜீவநாதம் இது. ஷெல்லியில் இது தெளிவாக ஒலிக்கவில்லை.
புலவர்களே; காலையில் எழுந்தவுடன்
உயிர்களை யெல்லாம் போற்று வோம்.’
இவ்வாறு முத்தாய்ப்பு வைக்கிறான் பாரதி.
இரு கவிஞர்களின் ஒற்றுமைகளையும் மேலே கண்டோம். உயிர் மீது பாரதி கொண்டிருந்த பெரும் பற்று ஷெல்லியின் கவிதையில் இல்லை. இப்பற்றுதான் பாரதியை மனித வர்க்கத்தின் வருங்காலத்தில் நம்பிக்கை கொள்ளச் செய்தது. காற்றை அடக்கியாளும் மனோவலிமையை அவனுக்கு அளித்தது. ஷெல்லியோ தனது காய்ந்த உள்ளம் தளிர்க்க காற்றைத் துணை செய்யக் கோருகின்றான். பாரதியோ,
‘தென்னையின் காற்று சலசல
வென்றிடச் செய்து வரும் காற்றே!
உன்னைக் குதிரை கொண்டு ஏறித்தரியும் வீர்
உள்ளம் படைத்து விட்டோம்.’
என்று பாரதி பெருமையோடு பேசுகிறான்.
(தொடரும்)
« முந்தைய பாகம் ……………………………………………………………………………… அடுத்த பாகம் »
தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

கலை என்பது கலைக்காக அல்ல, மக்களுக்காக… | தோழர் கதிரவன் | வீடியோ

துரையில் கடந்த அக்டோபர் 22-ம் தேதி ம.க.இ.க-வின் உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய ம.க.இ.க தோழர் கதிரவன் அவர்கள், “கலை இலக்கியங்கள் எதேனும் ஓர் வர்க்கத்தை சார்ந்துதான் இருக்கிறது. வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கலை இங்கு இல்லை. கலை என்பதே மக்களுக்காகத்தான், கலை கலைக்கானது அல்ல. “நடுநிலை இலக்கியம்”; “நடுநிலை பத்திரிகை”; “நடுநிலை கருத்து” என்பது ஏதும் கிடையாது.
ஆளும் வர்க்கத்திற்கான இலக்கியங்களைப் போராடி முறியடிக்க வேண்டும். உப்பிட்டவரை போன்ற கலை இலக்கியங்கள் அதிகம் வெளிவரவேண்டும் என்றால் மக்களின் அவலங்களை தெரிந்து கொள்ள மக்களிடம் செல்ல வேண்டும். மக்களின் வாழ்க்கை அவலங்களை கலை இலக்கிய வடிவில் செம்மையாக வெளிப்படுத்த வேண்டும் என்றால் புரட்சியகர இயங்கங்களில் இருந்தால் மட்டுமே முடியும்.
கூலி தொழிலாளர்களிடம் சாதி பாகுப்பாட்டையும், பெண் அடிமைத்தனத்தையும் பரப்புகிறார்கள். அனைத்து உழைக்கும் மக்களுக்கான விடுதலை என்பது போராட்டத்தின் மூலமாகத்தான் நிகழும். அப்போராட்டத்தை தட்டியெழுப்ப கலை இலக்கியத்தை பயன்படுத்துவோம்” என்பதை உணர்த்தி உரையாற்றினார்.
தோழரின் உரையை காணொலி வடிவில் பதிவு செய்கிறோம்.

 

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

என் வீட்டில் உப்பு இப்போது சிவப்பு நிறமாக தெரிகிறது … | தோழர் ஸ்ரீரசா | வீடியோ

துரையில் கடந்த அக்டோபர் 22-ம் தேதி  ம.க.இ.க-வின் உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தோழர் ஸ்ரீரசா அவர்கள், உப்பளத்தொழிலாளர்களின் வாழ்க்கை அவலத்தை இந்த ஆவணப்படம் சிறப்பாக பதிவு செய்திருப்பதாகக் கூறினார்.   மேலும், இது போன்ற உழைக்கும் மக்களின் அவலங்களை வெளிகொண்டுவரும் ஆவணப்படங்களை எடுப்பது என்பது ஒரு புரட்சிகர இயக்கத்திற்கு மிகவும் அவசியம் என்பதை உணர்த்தி உரையாற்றினார். தோழரின் உரையை காணொலி வடிவில் பதிவு செய்கிறோம்.

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

மனித நேயத்தை பரப்பிய இராமலிங்க அடிகளார் || நா. வானமாமலை

0
தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) || நா. வானமாமலை – பாகம் – 15
முதல் பாகம் ……………………………………………………………………………………….. முந்தைய பாகம்
நா. வானமாமலை
இராமலிங்கரின் மனிதநேயம்
ராமலிங்க அடிகளாரைப் பாரதி தமிழ் நாட்டின் சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை என்று அழைக்கிறார். ஆனால், சைவப் பெரியார்கள் அவரைச் சைவ சித்தாந்தி எனச் சித்திரித்துக் காட்டுகின்றனர். ஆறுமுக நாவலர் போன்ற சித்தாந்திகள் நாக்கில் நரம்பின்றி இராமலிங்க அடிகளாரைப் பற்றித் திட்டியதும் அவரது அருட் பாவை மருட்பா வென்றதும் இன்று அவர்களுக்கு மறந்து போய் விட்டது. இன்று வள்ளலார் விழாக்கள் சைவ சமயவாதிகளாலேயே, சைவ சமயத் தத்துவச் சார்போடு கொண்டாடப் படுகிறது.
பாரதி சமூகச் சீர்த்திருத்தவாதி, சமரச ஞானி, மனிதாபிமானி என்று வள்ளலாரைப் போற்றினார். இவையனைத்தையும் மறைத்து சைவ சித்தாந்த சிறைக்குள் அடிகளாரை அடைத்துப் பூட்டிவிடச் சிலர் முயலுகிறார்கள்.
இராமலிங்கரின் உண்மை வரலாறு நமக்குத் தெரியாது. அவரது வாழ்நாளிலேயே பல அற்புதங்களை நிகழ்த்தியதாக அவரது சீடர்கள் எழுதி வைத்துவிட்டார்கள். அவரது பாடல்களிலிருந்தும், நம்பத் தகுந்த ஆதாரங்களிலிருந்தும் அவர் இளமையில் தமிழறிவு மிக்கவராயிருந்தாரென்று தெரிகிறது. அவரது பாடல்கள் ஆறு திருமுறைகளாகக் தொகுக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் முதல் ஐந்து அவரது சைவ சமயப் பற்றைக் காட்டுகின்றன. அவை பிற மதங்களின் மீது அவருக்கிருந்த குரோதத்தையும் காட்டுகின்றன. ஆனால் மனித வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்த அடிகளார் மனிதரது துன்ப துயரங்களை உணர்ந்தார். மனமுருகினார். அவற்றைப் போக்க எண்ணினார். முக்கியமாகத் தாது வருஷப் பஞ்சம் அவர் உள்ளத்தை விசாலமாக்கியது. சாவும், துன்பமும் அவரை மனிதாபிமானியாக்கியது. இந்நிலையை ஆறாம் திருமுறை சித்தரிக்கிறது.
படிக்க :
தில்லைக் கோவிலை மீட்கப் போராடிய சிவனடியார் ஆறுமுகசாமி மறைந்தார்
தில்லைக் கோயில் தீர்ப்பு: பார்ப்பன “காப்” பஞ்சாயத்து!
உலகில் மனிதனுக்கு வரும் துன்பங்களை எதிர்த்து நிற்க மனிதர் ஒன்றுபட வேண்டுமென இராமலிங்கர் விரும்பினார். அதை விட்டு சமயக் காழ்ப்புகளிலும், சாதி வேறுபாடுகளிலும் உழலும் மனிதர்களைப் பார்த்து அவர் மனம் இரங்கினார். எல்லா உயிர்களையும் நேசிக்கக் கற்று கொள்ளுதலே தலைமையான அறமெனப் போதித்தார். இரக்கம் செயலில் தோன்ற வேண்டுமென உபதேசித்தார்! இதனையே ‘சுத்த சமரச சன்மார்க்க நெறி’யெனப் பெயரிட்டழைத்தார்.
சாதி, சமயம், மொழி வேறுபாடு , தேச வேறுபாடு ஆகிய பிரிவினை யாவும் கடந்த மனித நேசத்தை நிலை நிறுத்த, மனிதர் அனைவரையும் அறைகூவி அழைத்தார். இதற்கென ஒரு நிறுவனமும் அமைத்தார். அதற்குச் சுத்த சமரச சன்மார்க்க சபை என்று பெயரிட்டார்.
கடவுள் நம்பிக்கையுடையவராதலால் தமது புதிய நெறியைக் கடவுள் கட்டளையால் தோன்றியதெனக் கருதினார். மனித குலத்தைப் பிளவுபடுத்தும் சாதி, சமயங்களை அவருக்கு முன்னர் சித்தர்கள் கடுமையாகக் கண்டித்தார்கள். அவர்களுடைய பாடல்களில் ஈடுபட்ட வள்ளலாரும், அவர்கள் வழியிலே முன்னேறி, மனிதன் ‘சுக நிலை’ அடைய வழிகாட்டுகிறார்.
‘பேருற்ற உலகிலுறு
சமய மத நெறி யெலாம்
பேய் பிடிப்புற்ற பிச்சுப்
பிள்ளை விளையாட் டென
உணர்ந்திடாது மிக்க பல
போருற்றிறந்து வீண்
போயினார் இன்றும் வீண்
போகாதபடி விரைந்தே
புனித முறு சுத்த சன்மார்க்க
நெறி காட்டி
பொழிளினை உணர்த்தி யெல்லாம்
ஒருற்ற சுக நிலை
அடைந்திடப் புரிதி நீ.
‘பன்னெறிச் சமயங்கள்
மதங்கள் என்றிடுமோர்
பவ நெறி இதுவரை
பரவிய தனால்
சென் னெறி யறிந்திலர்
இறந் திறந்துல கோர்
செறி யிருளடைந்தனர்
ஆதலின் இனி நீ
புன்னெறி தவிர்த் தொரு
பொது நெறி எனும் வான்
புத்த முதருள் கின்ற
சுத்த சன்மார்க்க
தன் னெறி செலுத்துக
வென்ற என்னரசே
தனி நடராஜ வென்
சற்குரு மணியே!’
இப்பாடல்கள் எழுந்த காலம் எது? சைவ மடங்கள், நாவலர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை முதலிய சைவ சமயப் பிரச்சாரகர்கள் மூலம் மதப் பிடிப்பை ஏற்படுத்தித் தத்துவ ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்த காலம். கம்ப இராமாயணத்தை வைணவ சமயச் சார்புடையது என்று படிக்கக் கூடாதென்று கட்டளை பிறப்பித்த காலம். தமிழை வளர்ப்பதாகத் தம்பட்டமடித்துக் கொண்டு, மதப் பூசல்களை விசிறி விட்டகாலம். இப்பூசல்களால் பிரிந்து மோதிக் கொண்டிருந்த மக்கட் பிரிவினரின் மீது நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை சைவ மடங்களும் வைணவ மடங்களும் ஏற்படுத்திக் கொள்ள முற்பட்ட காலம். இக்காலத்தில் சமரசத்தையும், ஒற்றுமையையும் மடத்தலைவர்கள் விரும்பவில்லை.
அப்பொழுதுதான் சைவ சித்தாந்தியான வள்ளலார் மனிதாபிமானத்தினால் உந்தப்பட்டு சமரசவாதியனார். சாதி, சமய பிரிவுகளால் பிரிந்து போரிட்ட மனிதரை மனித நேயத்தால் ஒன்றுபட அழைத்தார். சிவனை வழிபடும் சைவ மதத் தலைவர்கள், சிவனை வழிபட உலகினர் அனைவரையும் ஒன்றுபட அழைத்த இராமலிங்கரை வெறுத்தனர். மதச் சழக்குகளைச் சாடி மக்களை ஒன்று பட அழைத்த அடிகளாரை, தயை தாட்சண்ணியமின்றித் தாக்க நாவலர் போன்ற சைவப் பெருந்தலைகளை ஏவி விட்டனர்.
சைவ மதத் தலைவர்கள் சிதம்பரத்தில் நடராஜனை வழி படலாமென்றார்கள். நடராஜ நடனத்துக்கு எவருக்கும் விளங்காத முறையில் சித்தாந்த விளக்கம் கொடுக்க முனைந்தார்கள். அவரை வழிபடுவதே கன்ம மலங்களை ஒழித்து இன்ப நெறி காணும் வழியென்று போதித்தார்கள்.
ஆனால் கடவுள் வழிபாட்டில் மடத் தலைவர் வழியில் இராமலிங்கர் செல்லவில்லை. பேதமின்றி மனிதர் மீது அன்பு செய்கின்றவர்கள் உள்ளமே நடராஜர் ஆடுகின்ற அரங்கம் என்று பாடுகிறார். ‘மனிதனே நடமாடும் கோயில்’ என்ற விவேகானந்தரின் பேச்சோடு இராமலிங்கரின் இப்பாடலை ஒப்பிடலாம்.
‘எத்துணையும் பேத முறாது
எவ்வுயிரும் தம் முயிர் போல் எண்ணியுள்ளே,
ஒத்துரிமை யுரியவராய் உவக்
கின்றார் யாவர் அவருளந்தான்
சித்துருவாய் எம் பெருமான் நடம்
புரியுமிட மென நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக் கேவல்
புரித்திட வென் சிந்தை மிக விழைந்த தாலோ’
நாயன்மார்கள், சிவனடியார்கள் என்ற சாதியைச் சார்ந்தவ ராயினும் அவரடிக்கு ஏவல் பூண்டு ஒழுக விழைத்தார்கள்.
‘ஆவுரித்துத் தின்று ழலும் புலையரேனும்
கங்கை வார் சடைக் கரந்தார்கள் பாராகில்
அவர் கண்டீர் யாம் வணங்கும் அடிகளாரே’
ஆனால் சிவனடியார் என்ற சமய முத்திரை அவருக்கு இருத்தல் வேண்டும். இதுபோன்ற கருத்துடைய பிள்ளைப் பெருமாளையங்கார் பாடல் ஒன்றுள்ளது. அரவணைக் கிடந்தானுடைப் அன்பருக்குத் தாம் அடிமையெனக் கவிஞர் தம்மை யழைத்துக் கொள்கிறார். இவை யிரண்டிலும் சமயத்தில் சாதி மறைவதைக் காண்கிறோம். ஆனால் சமயம் பிரிவினை வலுப்படுத்துவதையும் காண்கிறோம்.
இராமலிங்கரின் மேற்கண்ட பாடலைப் பார்த்தால் மனித நேயத்தை அவர் போற்றுகிறார் என்பது புலனாகும். எவ்வித பேதமும் பாராட்டாமல் உயிர்களைத் தம்முயிர் போல் நேசித்து தம்மோடு சமமான உரிமையளித்து மகிழ்ச்சியடைபவர்களது உள்ளமே நடராஜன் நிருத்தமாகும் அரங்கம் என்று அடிகளார் கூறுகிறார். மேலும் அவர்களை ‘வித்தகர் சிறந்தவர் என்று போற்றுகிறார். அவர்கள் அடிபணிந்து அவர்கள் வழியில் தாமும் செல்ல விழைவதாகக் கூறுகிறார். இப்பாட்டில் அவ்வித்தகருக்கு சமய முத்திரை இல்லை. அவர் கடவுள் வழிபாட்டுக் கொள்கையுடையவராக இருத்தல் அவசியமில்லை.
மனிதர் எல்லோரையும், செல்வம் பற்றியோ, உயர்வு தாழ்வு பாராட்டாமல் நேசிப்பவர்கள் எல்லோருக்கும் சம உரிமைகள் அளிக்க உடன்படுவார்கள். இத்தகைய மனித உறவில் பெருமகிழ்ச்சி யடைவார்கள். அவர்கள் உள்ளத்தில் அறிவுருவமாய் நடராஜப் பெருமான் நடனம் புரிகிறான் எனப் பாடுகிறார். அடிகளாரது மனித நேயத்தின் உச்ச நிலையை இப்பாடல் காட்டுகிறது.
இவ்வாறு மனித நேயமுடையவர்கள் பிறருக்கு இடர் நேர்ந்த போது, அவர்களுடைய உணர்வோடு ஒன்றி எவ்வாறு அவற்றை உணர்வார்கள் என்பதைத் தம்மையே உதாரணமாகக் கொண்டு இராமலிங்கர் சில பாடல்களில் கூறுகிறார்.
‘எளியவரை வலி யாரடித்த போதையோ,
என் மனம் கலங்கிய கலக்கம்
தெளிய நானுரைக்க வல்லவனல் லேன்
திருவுள மறிபுமே எந்தாய்!
களியரைக் கொண்டு பயந்தவென் பயந்தான்
கடலினும் பெரியது கண்டாய்
அளியர் பாற் கொடியர் செய்த வெங்கொடுமை
அறிந்த வெனன்டுக்கா மாற்றிவார்?’
எளியாரை வலியார் வாட்டும் கொடுமையைக் கண்டு இராமலிங்கரது மனம் கலங்கியது. செல்வச் செருக்கினால் பிறரைக் கொடுமைப் படுத்தும் செயல்களைக் கண்டு அவர் பயந்தார், இரக்கப்படத் தக்கவர்களைக் கொடியவர் படுத்தும் பாட்டைக் கண்டு அவர் உள்ளம் நடுங்கினார். இவ்வாறு எளியவரைச் செல்வர் அடக்கியாளும் கொடுமைகளைக் கண்டு அடிகளார் மனம் நொந்தார்.
கொடுமைகளைக் கண்டு மனம் நைந்த இராமலிங்கர் போரில் ஆயிரக் கணக்கான மக்களைச் சாகடிக்கும் பெருங் கொடுமையைச் சகிப்பாரோ? அவ்வாட்சியாரை ஆதரிப்பாரா? போர் வெறி கொண்டு மக்களைக் கொலை புரிந்த செய்தியைக் கேட்கும் பொழுதெல்லாம் அவர் உள்ளம் நடுங்கியது.
‘மறை முடி வயங்கும் ஒரு தணித் தகைமை
வள்ளலே உலகரசாள் வோர்
உறையுறுவார் கொண்டு ஒருவரை யொருவர்
உயிரறச் செய்தனர் எனவே
தறையுச் சிறியேன் கேட்ட போதெல்லாம்
தளர்ந்து நடுங்கி நின்றயர்ந்தேன்
இறையுமிவ் வுலகில் கொலை யெனில் எந்தாய்
என்னுள் நடுங்கி வதியல்பே’
மனிதருக்குத் துன்பமும் சாவும் நேரும் பொழுதெல்லாம் உள்ளம் கரைவதோடு நின்று விடாமல் துன்பத்தைத் துடைக்க தமக்கு வலிமையளிக்க வேண்டுமென இறைவனை வேண்டுகிறார்.
‘உண்ணாடி உயிர் களுறும் துயர் தவிர்த்தல் வேண்டும்’
அச்சா நான் வேண்டுதல் கேட்டரள் புரிதல் வேண்டும்’
ஆநந்த நிலைகளெல்லா மறிந்தடைதல் வேண்டும்
எனையடுத்தார் நமக் கெல்லாம் இன்புதரல் வேண்டும்
இச் சாதி சமய விகற் பங்களெல்லாம் தவிர்த்தே
எவ்வுலகுஞ் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்.
தமக்கென்று எதுவும் வேண்டாமல், மனிதருக் கெல்லாம் இன்பம் அருள வேண்டுமென தாம் வழிபடு கடவுளை அடிகளார் வேண்டுகிறார்.
மனிதருக்கு இழைக்கப்படும் கொடுமைகள் ஒழிவதற்கு கொடுமைக்குக் காரணமாக இருக்கும் ஆட்சி ஒழிய வேண்டும். மனித ரெல்லோரும் அன்பால் ஒன்றுபட்டு வாழ்வதற்கு ஆதாரமாக அமையும் ஒரு அருள் ஆட்சி வேண்டும் என்று வள்ளலார் விரும்புகிறார். கொடுமை புரிவோர் ஆட்சி பீடத்தில் இருந்த காலத்தில் இதனைப் பாடுகிறார். மனிதருக்கு நல்லவை புரியும் நல்லவர் ஆட்சி வரட்டும் என்று அழைக்கிறார். இது உலக முழுவதிலுமிருந்த பலாத்கார அரசாங்க அமைப்பைக் குறிப்பதாகும். அவையாவும் உலகமெங்கும் மனிதருக்கு நலம் புரியும் ஆட்சி மலர வேண்டும்.
‘கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக!
அழிள்நயந்த நன்மார்க்கர் ஆள்க – தெருள் நயந்த
நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைத்து
எல்லோரும் வாழ்க இசைந்து”
இது ஓர் கனவு. எளியவர் துயரம் கண்டு உருகிய தலைசிறந்த கவிஞர்களெல்லோரும் இத்தகைய கனவுகள் கண்டனர். அக்கனவுகள் கவிதை வடிவம் பெற்றன. அக்கவிதைகள் துயரப்படும் எளிய மக்களுக்குப் போராடும் உற்சாகத்தையளித்தன.
ஆயினும் அவர்கள் நினைத்ததெல்லாம் பெற நன்மார்க்கர் ஆட்சி தோன்ற வேண்டும் என்றும் அவ்வாட்சியில் மக்கள் இசைந்து எல்லோரும் இன்புற்று வாழ்வர்கள் என்றும் இராமலிங்கர் நம்பினார்.
பாரதி, மனிதன் வருங்காலத்தில் இன்ப நிலை பெறுவான் என்று கூறுமிடத்தில் எல்லாம் இன்ப நிலையை அமர நிலையென்றே கூறுகிறார். இராமலிங்கரும் மனிதர் வானவர் ஆவார்கள் என்று நம்பினார்.
‘மலங் கழித்து உலகவர் வானவாரயினர்
வலம் பெறு சுத்த சன்மார்க்கம் சிறந்தது.
பலம் பெரு மனிதர்கள் பண்புளராயினர்
என்னுளத்து அருட் பெருஞ் சோதியார் எய்தவே.
அண்டமும் அகிலமும் அருளர சாட்சியைக்
கொண்டன ஒங்கின குறை யெலாந் தீர்ந்தன.
பண்டங்கள் பலித்தன பரிந்தென் னுள்ளத்தில்
எண்டரும் அருட் பெருஞ் சோதியார் எய்தவே.
மதித்த சமய வழக் கெல்லா மாய்ந்தது.
வருணாச் சிரமம் எனும் மயக்கமும் சாய்ந்தது
கொதித்த லோகாசாரக் கொதிப் பெலாம் ஒழிந்தது.
கொலையும், களவும் மற்றைப் புலையும் அழிந்தது.
இத்தகைய உலகம் தோன்ற வேண்டுமென இராமலிங்கர் கனவு காண்கிறார்.
படிக்க :
இந்தியாவின் இழிவு – படிக்க வேண்டிய அருந்ததி ராய் கட்டுரை
பார்ப்பனியத்திடம் சரணடைந்த இஸ்லாம் !!
சாதி சமய சண்டைகள் மலிந்திருந்த காலத்தில் இராமலிங்கர் அவற்றை எதிர்த்துச் சாடி சமரசத்தைப் போதித்தார். ஏழை எளியவருக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டு மனம் குமுறி அவற்றை நீக்கத் தமக்கு வலிமையளிக்க நடராஜனை வேண்டினார். பாரதியின் வல்லமை தாராயோ?’ என்ற வேண்டுகோள் இக்கருத்தினடியாகப் பிறந்த தென்றே தோன்றுகிறது.
போர் ஒழிந்து அமைதி நிலவ வேண்டுமென வள்ளலார் விரும்பினார். மக்கள் துயர் தீர்ந்து இன்பமுற்றுவாழ வேண்டும் என்று விரும்பினார், உலகம் வாழத் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் நல்லவர்களின் உள்ளமே கோயில் என்றும், அவர்கள் வழியைப் பின்பற்றுவதே சன்மார்க்கம் என்றும் நமக்குப் போதித்தார். இதனைக் கண்டு பாரதியார் இராமலிங்கத்தைத் தமது ஆசானாக ஏற்றுக் கொண்டார்.
கருத்துக்களில் மட்டுமின்றி பாட்டு உருவங்களில் கூட பாரதி இராமலிங்கரைப் பின்பற்றினார். இன்றும் மனிதாபிமானத்துக்கும் சமூகச் சீர்த்திருத்தத்திற்கும் இராமலிங்கர் வழிகாட்டியாகத் திகழ்கிறார். சமாதானம், சுதந்திரம், சோஷலிசம் என்னும் கோஷங்களை முழங்கிக்கொண்டு புத்துலகை நோக்கி முன்னேறும் முற்போக்கு மனித குலத்திற்கு இராமலிங்கரது திருமுறைப் பாடல்கள் பல்லாண்டு கூறுகின்றன.
(தொடரும்)
« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »
தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பறிபோகும் கூலித் தொழிலாளர்களின் உரிமைகள் | லஜபதிராய் | வீடியோ

துரையில் கடந்த அக்டோபர் 22-ம் தேதி  ம.க.இ.க-வின் உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் வழக்கறிஞர் தோழர் லஜபதிராய் அவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் வாழ்நிலை பற்றியும், பெண் தொழிலாளர்களுக்கான கூலியில் பாகுபாடுகள் நீடிப்பது பற்றியும், அனைத்தும் கார்ப்பரேட்மயப் படுத்தப்படுவது பற்றியும் எடுத்துரைத்து, இவ்விசயங்களை உப்பிட்டவரை ஆவணப்படம் தன்னளவில் மக்களுக்குக் கடத்த முயற்சித்திருப்பதை சுட்டிக்காட்டி வாழ்த்திப் பேசினார். அவரது கருத்துரையை காணொலி வடிவில் வழங்குகிறோம்.

காணொலியைப் பாருங்கள் ! பகிருங்கள் !!

ரூ. 63,500 கோடியை ஏப்பம் விட்ட வீடியோகானை ரூ. 300 கோடியில் முழுங்கப் பார்க்கும் வேதாந்தா !

 

திவால் சட்டத்தின் (IBC) மூலம் பொதுத்துறை வங்கிகளை கொள்ளையடிக்கும் முதலாளிகள் !  – பாகம் 2

பாகம்  1
63,500 கோடியை விடியோக்கானும் வேதாந்தாவும் ஏப்பம் விட்ட கதை !
ஜூன், 2021-ல் பொருளாதாரப் பத்திரிகைகளில் ஒரு செய்தி பேசுபொருள் ஆனது. அது, வேதாந்தா குழுமத்தை சேர்ந்த ட்வின் ஸ்டார் நிறுவனம், திவாலாகி ஏலத்திற்கு வந்துள்ள வீடியோகான் நிறுவனத்தை ஏலத்தில் எடுத்துள்ளது என்ற செய்தி. வீடியோகான் நிறுவனத்தின் மொத்தக் கடன் தொகையில் வெறும் 5 சதவீதத் தொகைக்கு அந்நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது ட்வின் ஸ்டார் நிறுவனம்.
உதாரணமாக, வீடியோகான் நிறுவனம் வங்கிகளிடம் ரூ.100 கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் விட்டுவிட்டது என்று வைத்துக்கொள்வோம். கடன் கொடுத்த வங்கிகள் அந்நிறுவனத்தை திவால் என அறிவித்து ஏலத்தின் மூலம் கடன் தொகையை வசூலிக்கும். ஏலத்தில் ரூ.5 கோடிக்கு வீடியோகான் நிறுவனத்தை வேதாந்தா வாங்குகிறது எனக் கொண்டால் கடன் கொடுத்த வங்கிகளுக்கு ரூ.95 கோடி நட்டம்.
வீடியோகான் வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் ரூ.63,500 கோடி. அதில், ரூ.3000 கோடி ஏலத் தோகைக்கு வீடியோகான் நிறுவனத்தை வேதாந்தா வாங்கியுள்ளது. வங்கிகள், தங்களிடம் வாங்கிய ரூ.63,500 கோடி கடன் தொகைக்கு பதிலாக அதில் 5% மட்டும், ஏலத்தொகையான ரூ.3000 கோடியை மட்டும், திருப்பிச் செலுத்தினால் போதும் என்று ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டனர். இவ்வாறு கொடுத்த கடனை விட குறைவான தொகையை திரும்ப பெறுவதை ‘hair cut’ என்கின்றனர்.
படிக்க :
இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி : தனியார்மயமாக்கும் மோடி அரசு !
இல்லம் தேடி வரும் ஆர்.எஸ்.எஸ்-ன் கல்விக்கொள்கை !
ட்வின் ஸ்டார் நிறுவனம் ஏலத் தொகையான ரூ.3000 கோடியையும் உடனே வங்கிகளிடம் கொடுத்துவிடாது. ரொக்கமாக ரூ.500 கோடி மட்டுமே கொடுக்கும். மீதி தொகைக்கு கடன் பத்திரங்களை வழங்கும். வங்கிகள் அந்த கடன் பத்திரங்களுக்கு உண்டான வட்டியை ட்வின் ஸ்டார் நிறுவனத்திடமிருந்து வசூல் செய்ய வேண்டும். சில ஆண்டுகள் கழித்து அசல் தொகையை ட்வின் ஸ்டார் நிறுவனம் வங்கிகளுக்கு செலுத்தும்.
வீடியோகான் வழக்கு பற்றி மேலும் தகவல்களை தெரிந்துக் கொள்ளும்போதுதான், இவர்கள் என்ன என்ன கூத்துகள் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
2016-ஆம் ஆண்டு Insolvency and Bankruptcy Code (IBC) என்ற கூறப்படும் திவால் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இச்சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு, கடனை திருப்பிச் செலுத்தாத நிறுவனங்களிடமிருந்து வங்கிகள் கடன் தொகையை வசூல் செய்ய பல சட்டங்களும் விதிகளும் இருந்தன. இச்சட்டங்கள் கடனை வசூலிக்க அவை எதுவும் பெரிதாக பயன்படவில்லை என்று காரணத்தை முன்வைத்தே IBC கொண்டுவரப்பட்டது.
IBC நடைமுறைப்படி, ஒரு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு கடன் தவணைகளை கட்டவில்லையென்றால் கடன் கொடுத்த வங்கிகள் அந்த நிறுவனத்துக்கு எதிராக தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயத்தில் (National Company Law Tribunal-NCLT) திவால் சட்ட நடைமுறைக்காக முறையீடு செய்வார்கள். NCLT-ல் வழக்கு ஏற்கப்பட்ட உடன் இதற்கென தீர்வு காணும் நிபுணர் ஒருவர் (resolution professional) பணியமர்த்தப்படுவார். ஏல நடைமுறை முடியும்வரை திவால்-ஆன நிறுவனத்தை நடத்துவதும் ஏலத்தினை நடத்துவதும் இந்த தீர்வு காணும் நிபுணரின் வேலை.
திவால்-ஆன நிறுவனம் இந்த தீர்வு காணும் நிபுணரால் ஏலம் விடப்பட்டு, ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகையை கடன் கொடுத்த வங்கிகள் பங்கிட்டுக் கொள்ளும். இந்த ஏல நடைமுறை வழக்கு பதிவு செய்த 180 நாட்களில் முடிந்துவிட வேண்டும். ஆனால், பெரும்பாலான வழக்குகள் அவ்வாறு முடிவது கிடையாது. திவால் சட்டம் அமலுக்கு வந்த உடன் கடனை செலுத்தாத 12 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயத்துக்கு, ரிசர்வ் வங்கி பட்டியலை அனுப்பியது. அந்தப் பட்டியலில் வீடியோகானும் இடம் பிடித்திருந்தது.
வீடியோகான் நிறுவனம் முறைகேடான வழிகளில் கடனைப் பெற்றுள்ளது. உதாரணமாக, ICICI வங்கித் தலைவர் சந்தா கோச்சர் வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் கொடுக்க லஞ்சம் வாங்கியதாக புகார்கள் எழுந்தன. இதன் விளைவாக சந்தா கோச்சார், ICICI வங்கியின் தலைவர் பதவியிலிருந்தே விலகனார். அதேபோல், வெளிநாடுகளில் எண்ணெய் கிணறுகளில் முதலீடு செய்ய வேண்டிய பணத்தை வீடியோகான் நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக வேறு வேலைகளுக்கு திருப்பிவிட்டதாகவும் புகார்கள் உள்ளன.
வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத்
2018-ஆம் ஆண்டு நிலவரப்படி, வீடியோகான் குழுமத்தை சேர்ந்த வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடன் ரூ.20 ஆயிரம் கோடி என்றே பேசப்பட்டது. பிறகு, வீடியோகான் குழுமத்தை சேர்ந்த 15 நிறுவனங்கள் கடனை கட்டாமல் திவால் சட்ட நடைமுறையில் இருப்பதை கருத்தில் கொண்டு, தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயம் இந்த 15 நிறுவனங்களையும் ஒரே வழக்காக மாற்றியது. 2020-ம் ஆண்டில், மேலே கூறிய 15 நிறுவனங்களில் 13 நிறுவனங்கள் தர வேண்டிய கடன் தொகை முழுவதையும், தான் திருப்பி செலுத்திவிடுவதாகவும், இந்த நிறுவனங்களை கடனிலிருந்து மீட்க தன்னிடம் திட்டம் இருப்பதாகவும் வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத் மனு தாக்கல் செய்தார்.
ஆங்கிலத்தில் “The devil is in the details” என்று கூறுவார்கள். அதாவது, முக்கியமான தகவல்கள் நுட்பமான தரவுகளில் உள்ளது என்று சொல்லலாம். இது திவால் நடைமுறையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களுக்கு பொருந்தும். தூத் முழுமையாக கடனை திருப்பி செலுத்துவதாக சொன்னதன் உள்நோக்கம் கடனை உடனே செலுத்திவிடுவது என்ற அர்த்தத்தில் இல்லை. அவர் கடனைத் திருப்பி செலுத்துவதற்காக சமர்ப்பித்த திட்டப்படி, 10 முதல் 15 ஆண்டுகளில் கடன்களை திருப்பி செலுத்திவிடுவதாக கூறியுள்ளார். அதாவது, கடன் காட்டாமல் திவால் என்று அறிவிக்கப்பட்ட நிறுவனங்களை தன்னிடமே நம்பி கொடுத்துவிட்டால் ஒரு 10-15 ஆண்டுகளில் கடனை திருப்பி செலுத்திவிடுவதாக தூத் கூறுகிறார். “நாதஸ் திருந்திவிட்டதாக நாதஸ்சே சொன்னது”தான் நமக்கு ஞாபகம் வருகிறது.
வீடியோகான் எந்தெந்த வங்கிகளிடமிருந்து கடன் வாங்கியிருந்தது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதிகமான கடனாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India)-விடமிருந்து ரூ.11,000 கோடி வாங்கியுள்ளது. IDBI வங்கியிடமிருந்து சுமார் ரூ.9900 கோடி வாங்கியுள்ளது. வீடியோகான் குழுமத்தை சேர்ந்த வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் மட்டும் 54 வங்கிகளிடமிருந்து சுமார் ரூ.59,000 கோடிகளை கடன்களாக வாங்கி உள்ளது.
ICICI வங்கி சுமார் ரூ. 4700 கோடி கடன் வழங்கி உள்ளது; இந்த கடனை சந்தா கோச்சார் முறைகேடாக வழங்கி, அதற்கு வழக்குகள் நடந்து கொண்டிருப்பதாக ஏற்கெனவே பார்த்துள்ளோம். மகாராஷ்டிராவை சேர்ந்த லத்தூர் கூட்டுறவு வங்கி வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ.33 லட்சம் கடன் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோகான் நிறுவனத்தில் வேலை பார்த்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள மற்றும் இதர பாக்கிகள் ரூ.2.1 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்னொரு சுவாரஸ்யமான தகவல். வீடியோகான் குழுமத்தை சேர்ந்த வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதே குழுமத்தை சேர்ந்த வீடியோகான் டெலிகாம் நிறுவனத்திடமிருந்தே ரூ. 1786 கோடி கடன் வாங்கி உள்ளது.
வேணுகோபால் தூத்தின் திட்டம் நிராகரிக்கப்பட்டு வீடியோகான் குழுமத்தின் 13 நிறுவனங்கள் ஏலத்திற்கு விடப்பட்டன. ஏலம் விடும்பொழுது ஏலம் கோரும் நிறுவனம் ஏலத் தொகை மற்றும் அதைச் செலுத்துவதற்கான திட்டம் போன்ற விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். உதாரணத்திற்கு, ரூ.100 கோடி கடனிலிருக்கும் ஒரு நிறுவனம் ஏலத்திற்கு வருகிறது என்று வைத்துக் கொள்வோம். ஏலம் எடுக்கும் ஒரு நிறுவனம் ரூ.50 கோடியை உடனே செலுத்துவதாக திட்டம் சமர்ப்பிக்கலாம். இன்னொரு நிறுவனம் ரூ.100 கோடியை 5 ஆண்டுகளில் செலுத்துவதாக திட்டம் சமர்ப்பிக்கலாம். இப்படி சமர்ப்பிக்கப்படும் திட்டங்களை பரிசீலித்து, சரியான ஏலத் தொகைக்கானத் திட்டத்தை கடன் வழங்கிய வங்கிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு முடிவு செய்யும்.
வேதாந்த நிறுவனத்தின் அனில் அகர்வால்
திவாலான நிறுவனத்தை ஏலம் விடுவதற்கு முன்னதாகவே அதன் சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் எவ்வளவு நிதி திரட்ட முடியும் என்று மதிப்பீடு செய்வார்கள். ஏலம் கோருபவர்கள் மதிப்பீட்டுத் தொகையைவிட குறைவாக கோரினால், குறைந்தபட்சம் மதிப்பீடு தொகையாவது வங்கிகளுக்கு கிடைக்க, திவாலான நிறுவனத்தின் சொத்துக்கள் விற்பனை செய்யப்படும். ஏலம் கோருபவர்களுக்கு மதிப்பீடு தொகை தெரிந்தால் அந்த தொகையைவிட சிறிய அளவு தொகைக்கு ஏலம் கேட்பார்கள். இதனால் வங்கிகள் பாதிப்படையும் என்பதால் மதிப்பீடு செய்யப்பட்ட தொகை ரகசியமாக வைத்திருப்பார்கள்.
வீடியோகான் விஷயத்தில், ட்வின் ஸ்டார் நிறுவனம் ஏலம் கோரிய தொகையானது அந்நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்தால் கிடைக்கும் தொகையை ஒட்டி இருந்தது. இரகசியமாக வைக்கப்பட வேண்டிய மதிப்பீட்டுத் தொகை ட்வின் ஸ்டார் நிறுவனத்திற்கு கசிந்திருப்பதாக சந்தேகங்கள் எழும்பின. வீடியோகான் நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் ரூ.2568.13 கோடி திரட்ட முடியும் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ட்வின் ஸ்டார் நிறுவனம் ஏலம் கோரி வென்ற தொகை ரூ.2962.03 கோடி. இது ஆச்சர்யமாக இருப்பதாக தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயமே கூறியது.
மேற்சொன்ன நடைமுறைகளின் மூலம் ஏலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களில் சிறந்த திட்டத்தை கடன் கொடுத்த வங்கிகளின் குழு தேர்வு செய்து, அதனை தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயத்திடம் சமர்பிக்கும். தீர்ப்பாயம் ஒப்புதல் வழங்கினால் திவால்-ஆன நிறுவனம் ஏலத்தை வென்றவரிடம் ஒப்படைக்கப்படும். ஏற்கனவே சொன்னதைபோல, ட்வின் ஸ்டார் நிறுவனம் சுமார் ரூ.3000 கோடிக்கு ஏலத்தை வென்றது. ஏலத் தொகை பிரித்து விற்பனை செய்தால் கிடைக்கும் தொகை அளவே உள்ளது என்றெல்லாம் சொல்லிவிட்டு தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயம் ட்வின் ஸ்டார் நிறுவனத்தின் திட்டத்துக்கு ஜூன் 2021-இல் ஒப்புதல் அளித்தது.
கடன் கொடுத்த வங்கிகளில் சில, இந்தத் திட்டத்தில் தாங்கள் பாதிக்கப்படுவதாக தேசிய நிறுவனங்கள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (NCLAT – National Company Law Appellate Tribunal) வழக்கு தொடுத்தன. இந்த வழக்கின் மூலம் பல தகவல்கள் வெளிவந்தன. ட்வின் ஸ்டார் நிறுவனம் ரூ.3000 கோடியையும் பணமாக தராது என்றும், வெறும் ரூ.500 கோடியைத் தான் தரப்போகிறது என்றும் முன்பே கூறியிருந்தோம். இந்த ரூ.500 கோடியையும் எப்படி கட்டப்போகிறார்கள் என்பதுதான் மிக முக்கியம்.
வீடியோகான் நிறுவனத்தை ஏலத்தில் வென்றதின் மூலம் அந்நிறுவனத்தின் கையிருப்பில் உள்ள ரூ.200 கோடியை தனதாக்கியுள்ள ட்வின் ஸ்டார் நிறுவனம் மீதமுள்ள ரூ.300 கோடியைதான் முதலீடு செய்யும். இந்த ரூ.300 கோடியையும், 25 மாதங்களுக்குள் தருவது என்பதுதான் ஒப்புக்கொள்ளப்பட்டத் திட்டம். ஆக, ரூ.63,500 கோடி கடனிலிருக்கும் ஒரு நிறுவனத்தை வெறும் ரூ.300 கோடிக்கு, அதுவும் 25 மாதங்களுக்குள் தருவதாகக் கூறி, ட்வின் ஸ்டார் நிறுவனம் ஏலத்தை வென்றுள்ளது.
மீதமுள்ள ரூ.2,500 கோடிக்கு 6 வருடங்களில் முதிர்ச்சி அடையக்கூடிய கடன் பத்திரங்களாக கொடுப்பதாக ட்வின் ஸ்டார் கூறியுள்ளது. இதிலும் ஒரு முக்கிய தகவல் உள்ளது, இந்தக் கடன் பத்திரங்களுக்கு ட்வின் ஸ்டார் கொடுப்பதாக சொன்ன வட்டி 6.65%. அரசு நிறுவனங்கள் நிதிச் சந்தைகளில் தாங்கள் வாங்கும் கடனுக்கு இதைவிட அதிக வட்டி கொடுக்கின்றன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு ஜூலை 2021-இல் தேசிய நிறுவனங்கள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம், தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயம் கொடுத்த ஒப்புதலுக்கு இடைக்கால தடை விதித்தது.
படிக்க :
நூறு நாள் வேலைத் திட்டம் உண்மையில் பலனளிக்கிறதா ?
ஃபேப் இந்தியாவின் தீபாவளி விளம்பரம் : ‘விளம்பர ஜிகாத்’ என்கிறது பாஜக !
வீடியோகான் நிறுவனங்களை வாங்குவதன் மூலம், வேதாந்தா நிறுவனம் ரவ்வா எண்ணெய் கிணறுகளை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற தகவலும், பிரித்து விற்பனை செய்தால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்று மதிப்பீடு செய்ததில் வீடியோகான் நிறுவனத்தின் பிரேசில் சொத்துக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விடுபட்டது பற்றியும் இந்த கட்டுரை விரிவாக பேசவில்லை என்றாலும் அவையும் பேசப்பட வேண்டிய விஷயங்கள்.
கிட்டத்தட்ட இதே அளவு கடன் கொண்ட மக்களுக்கு சேவை செய்யும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் சுமார் ரூ.1 லட்சம் கோடிக்கு எந்த வித சலுகையும் வழங்கப்படுவது இல்லை. வீடியோகான் நிறுவனத்தை எந்தவித கடனும் இல்லாமல் ட்வின் ஸ்டார் நிறுவனத்திற்கு இலவசமாக கொடுப்பதுபோல் தமிழ்நாடு மின்சார வாரியத்தை புதிய அரசுக்கு கடன் இல்லாமல் ஏன் கொடுக்கக் கூடாது? வீடியோகான் நிறுவனம் கடன் காட்டாமல் போனதற்கு இதற்கு முன் இருந்த நிர்வாகம்தான் காரணம் என்றால் தமிழ்நாடு மின்சார வாரிய கடனிற்கும் முந்தய அரசுதான் காரணம் என்று சொல்லலாமே?
ரூ.63,500 கோடிக்கு முடி வெட்டிக்கொள்ளத் தயங்காத பொதுத்துறை வங்கிகள், கொரோனா ஊரடங்கு சமயத்தில் சிறு நிறுவனங்களுக்கும், தொழில் முனைவோருக்கும், வீட்டு கடன் வாங்கியவர்களுக்கும் வட்டியை மட்டுமல்ல, வட்டிக்கான வட்டியை கூட தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் வாதிட்டன. அவ்வாறு தள்ளுபடி அளித்தால் வங்கித் துறையே கவிழ்ந்துவிடும் என்றெல்லாம் முதலாளித்துவ அறிவு கூலிப்படைகள் பத்திரிகைகளில் எழுதினர். ஆனால், முதலாளிகளிக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தில் ‘முடி வெட்டிக்கொள்ள’ இவர்கள் தயங்குவதில்லை.
கதை தொடரும்…
அருண், ராஜன்

உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி || பாகம் 1 || வீடியோ

டந்த அக்டோபர் 22-ம் தேதி மதுரையில் ம.க.இ.க-வின் உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. அக் கருத்தரங்கில் மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் குருசாமி வரவேற்புரையாற்றினார். “சமூக பிரச்சனைகளில் இருந்து தான் மட்டும் எப்படி தப்பிப்பது என மக்களில் ஒவ்வொருவரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நமது அனைத்து பிரச்சனைக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்ளையே காரணம் என்பதை இந்த ஆவணப்படம் சொல்கிறது” என்று தனது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.
அடுத்தாக, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் கூட்டத்திற்குத் தலைமையேற்று, தலைமையுரையாற்றினர். தனது உரையில், “கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்ற அடிப்படையில் ம.க.இ.க தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. நாம் பல்வேறு கலை வடிவங்களில் மக்களுக்கான அரசியலை எடுத்துச் செல்கிறோம் என்பதை தமிழக மக்கள் அறிவார்கள்.
ம.க.இ.க. கடந்துவந்த  பாதையில், பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு, தமிழ் மக்கள் இசை விழா, விடுதலைப் போரின் வீர மரபு எனும் மாபெரும் நிகழ்ச்சி, தில்லை நடராசர் கோவிலில் தமிழில் பாடும் போராட்டம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக்கும் போராட்டம் என பல முன்னனி போராட்டங்களை ம.க.இ.க. நடத்தியுள்ளது.

படிக்க :

ஆவணப்படம் : “உப்பிட்டவரை…” || ம.க.இ.க.

விழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது ?

ஆவணப்படங்களை பொருத்தவரை, 2015-ம் ஆண்டு டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டத்தை மக்கள் அதிகாரம் உக்கிரமாக எடுத்து நடத்தியது. டாஸ்மாக் கடை உடைப்பு, கைது, சிறை என்று தமிழகத்தின் பல பகுதிகளில் போராடி வந்த  தருணத்தில், “அம்மாவின் மரணதேசம்” என்ற ஆவணப்படம் கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக்கால் சீரழிந்த கிராமங்களை மையப்படுத்தி ம.க.இ.க தயாரித்து வெளியிட்டது.
அதே போல, 2017-ம் ஆண்டு, குமரியைத் தாக்கிய ஒக்கிப் புயலின் காரணமாகவும், இந்திய அரசும், தமிழக அரசும் மீனவர்களை அலட்சியப்படுத்தியதன் காரணமாகவும் நிகழ்ந்த துயரச் சம்பவங்களை படம்பிடித்து வெளிகொணரும் விதமாக அமைந்தது, ஒக்கிப்புயல் ஆவணப்படம்.
தற்போது 2021-ல் உப்பிட்டவரை என்ற இந்த ஆவணப்படம் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கை அவலங்களை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அரசியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் மக்களிடம் அரசியலைக் கொண்டு செல்வதே மிகவும் முக்கியமானது அந்த வகையில் அமைந்ததுதான் இந்த ஆவணப்படம்.
இந்த ஆவணப்படத்திற்கான உழைத்த தோழர்கள் அனைவரும் அர்பணிப்புடன் செயல்பட்டனர். இதே போன்ற பல கலைவடிவங்களில் மக்களின் அவலங்களை கொண்டுவரவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டவேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாக நான் பார்க்கிறேன்”. என்று தன் தலைமை உரையை நிறைவு செய்தார்.
தோழர்கள் இருவரின் உரையை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்.

காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !!

திரிபுரா : முஸ்லீம்கள் மீதான சங் பரிவாரின் தாக்குதல்களை முறியடிப்போம் | மக்கள் அதிகாரம்

PP Letter head
31.10.3021
திரிபுராவில் நடத்தப்பட்ட முஸ்லீம் மக்கள் மீதான
திட்டமிட்ட தாக்குதல்களை முறியடிப்போம்!
பத்திரிகை செய்தி !
ந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த வண்ணம் உள்ளன. இதில் முஸ்லீம் மக்களின் வீடுகளும், அவர்களின் வழிபாட்டுத் தலங்களும் பெரியளவில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
திரிபுராவின் 42 லட்சம் மக்கள் தொகையில் 9 சதவிதத்திற்கும் குறைவானவர்களே முஸ்லீம் மக்கள்.
“திரிபுராவின் பெரும்பான்மையான மக்கள் தற்போதைய வங்கதேசத்தில் இருந்து வந்த இந்து அகதிகள் என்றாலும், இதற்கு முன் வங்கதேசத்தில் மத வன்முறைகள் நடந்தபோது இங்கு எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை” என்று திரிபுராவைச் சேர்ந்த எழுத்தாளர் பிகாச் சவுத்ரி கூறுவதில் இருந்து திட்டமிட்ட ஒரு வன்முறை என்பது தெரிய வருகிறது.
படிக்க :
ஒன்றரை ஆண்டுகளாக மோசமான நிலையில் பென்னாகரம் பேருந்து நிலையம் || மக்கள் அதிகாரம்
முல்லைப் பெரியாறு அணை மீதான பொய்ப் பிரச்சாரம் || மக்கள் அதிகாரம் கண்டனம்
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடந்த தாக்குதலுக்கு எதிர்வினை என்ற பெயரில் விசுவ இந்து பரிசத் 3,500 பேர் கொண்ட மிகப்பெரிய பேரணி நடத்தி கலவரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்து மதவாத சக்திகளுக்கு ஆதரவாக போலீசு செயல்படுவதை பல வீடியோக்கள் மூலம் அறிய முடிகிறது. இந்து மதவெறியர்களும், போலீசும் இணைந்து நடத்திய முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.
திரிபுராவில் மட்டுமல்ல நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் மீது கலவரங்கள் நடத்தப்படும்போது எதிர்க் கட்சிகள் அமைதியாக இருப்பது என்பதை தாண்டி எதுவும் செய்ய முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. காவி –  கார்ப்பரேட் பாசிச சக்திகள் அரசின் அனைத்து நிர்வாக துறைகளிலும் ஊடுருவி இருப்பதைப் போலவே அனைத்து சாதி மத சங்கங்களையும் கைப்பற்றியுள்ளது.
அதன் மூலமாக மட்டுமே நாடு முழுவதும் சிறுபான்மை மக்களின் மீதான தாக்குதல்களை எவ்வித எதிர்ப்புமின்றி நடத்த முடிகிறது. இந்த மோடி – அமித்ஷா,  ஆர்.எஸ்.எஸ்.- பாஜக பாசிச கும்பலை தேர்தல் மூலமாக வீழ்த்த முடியாது.
காவி – கார்ப்பரேட் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை வலுவாகக் கட்டியமைக்க, பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் திரட்ட வேண்டும். அதன் மூலமாக மட்டுமே இந்த ஆர்.எஸ்.எஸ். – பாஜக – வி.ஹெச்.பி பாசிசக் கும்பலை ஒழித்துக் கட்ட முடியும்.

தோழமையுடன்,
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

இல்லம் தேடி வரும் ஆர்.எஸ்.எஸ்-ன் கல்விக்கொள்கை !

மிழகத்தில் 27.10.2021 அன்று ரூ.200 கோடி மதிப்பீட்டில் “இல்லம் தேடிக் கல்வி” என்ற திட்டத்தை ஸ்டாலின் துவக்கி வைத்திருக்கிறார். இத்திட்டத்தின் நோக்கமாக கூறப்படுவது கொரோனா நோய் தொற்றினால் பள்ளிக் குழந்தைகளின் கற்றலில் ஏற்பட்டுள்ள இடைவெளியை சரி செய்யவும், இடைநிற்றலைத் தவிர்க்கவும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் (சர்வ சிக்ஷா அபியான் – SSA) சார்பில் தன்னார்வலர்களைக் கொண்டு மாலை 5 முதல் 7 மணிக்குள் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவற்றின் மூலம் கல்வி கற்றுக் கொடுப்பது என்று அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டம் முதல் கட்டமாக விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி, மதுரை, கன்னியாகுமாரி ஆகிய 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது 6 மாத காலம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 86,550 பேர் தன்னார்வலர்களாக பணிபுரிய விண்ணப்பித்துள்ளார்கள். மேலும், தன்னார்வலர்களாக பணிபுரிய வருபவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.1000 தருவது பற்றி ஆலோசித்து வருவதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் தமிழக அரசின் சாதனையாக அரசு சார்பிலும், திமுக-வினர் சார்பிலும் காட்டப்படும் அதே சமயத்தில் கணிசமான அளவில் பள்ளி ஆசிரியர்களிடமிருந்து இது புதிய கல்விக் கொள்கையிலிருக்கும் அம்சங்களில் ஒன்று என்றும், அரசு பள்ளிகளை பலவீனபடுத்தக் கூடியது என்றும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. மேலும், திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும் இது ஆர்.எஸ்.எஸ்.-ன் கல்விக் கொள்கையை பரப்புவதே என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இதை எதிர்த்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
படிக்க :
கலா உத்சவ் : சமஸ்கிருத திணிப்பில் ‘சமூகநீதி’ ஆட்சி || பு.மா.இ.மு கண்டன அறிக்கை
கல்வியை மேம்படுத்த தனியார்மயத்தை ஒழிப்பதே ஒரே வழி !
இது ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்திருக்கும் புதிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சமாக இருக்கும் திட்டம் தான் என்ற குற்றச்சாட்டுக்கு, திமுக-வின் செய்தித் தொடர்பாளர் இராஜீவ் காந்தி வியக்கத்தகு ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு மாநில அரசுதான் ரூ. 200 கோடி செலவழிக்க இருப்பதாகவும், ஒன்றிய அரசிடமிருந்து இதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் கூறி, அதனடிப்படையில் இது புதிய கல்விக் கொள்கையின் அம்சம் அல்ல என்று விளக்கமளிக்கிறார்.
புதியக் கல்விக் கொள்கையின் அங்கமா இல்லையா என்பதை, பணம் யாரிடமிருந்து செலவழிக்கப்படுகிறது என்பதிலிருந்து முடிவு செய்ய முடியும்? திட்டத்தின் மூலக் கருத்து புதிய கல்விக் கொள்கையோடு ஒத்துப் போகிறது என்பதிலிருந்துதானே முடிவு செய்ய முடியும். இதற்கான பதிலை சொல்லாமல் மழுப்புகிறது, திமுக. இல்லம் தேடி  வரும் கல்வி எனும் இத்திட்டமே ஆர்.எஸ்.எஸ்.-ன் நிகழ்ச்சிநிரல் தான் என்பது குறித்து விரிவாகப் பார்ப்பதற்கு முன்னர், இத்திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனுக்காக இதைச் செய்ததாக திமுக முன் வைக்கும் வாதத்திற்கு பதிலளித்து விடுவோம்.
இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக மாநில அரசின் நிதியிலிருந்து 200 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதன் மூலம் தாம் அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகக் காட்டிக் கொள்கிறது திமுக அரசு. உண்மையில் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி நிலைமை என்ன, என்பதிலிருந்து திமுக, அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தான்  இதைச் செய்திருக்கிறதா என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள 37,579 அரசுப் பள்ளிகளில் 45,93,422 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 2.27 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஆனால் வெறும் 12,382 தனியார் பள்ளிகளில், 64,15,398 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 2.53 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்த ஒப்பீட்டில் இருந்து அரசு பள்ளிகளின் மோசமான நிலைமையை புரிந்து கொள்ள முடியும். (இதில் அரசு உதவி பெறும் பள்ளிகள் சேர்க்கப்படவில்லை)
இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றுப் பேரிடரால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவின் காரணமாக, சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளை நோக்கி வந்துள்ளனர்.
அரசுப் பள்ளிக்கூடங்களில் ஏற்கெனவே மாணவர்களுக்குப் போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலையில், அதிகரித்துள்ள மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஆசிரியர்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல், அதற்குப் பணம் செலவழிக்காமல், புதிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சத்தை மட்டும் நடைமுறைப்படுத்த ரூ. 200 கோடி மாநில அரசு நிதியை ஒதுக்கியிருப்பது மிகப்பெரிய துரோகம். 
மேலும்  ஆசிரியர் பட்டயப் பயிற்சி படித்து முடித்து வேலைக்காக காத்துக்கிடக்கும் பல இலட்சம் இளைஞர்களுக்கு இனி அரசு ஆசிரியர் பணி கிடையாது என்பதையே இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசு நமக்குத் தெரிவிக்கிறது. ஏற்கெனவே, புதிய கல்விக்கொள்கை 2019-ன் வரைவிறிக்கையில்  ஆசிரியர்கள் காண்ட்ராக்ட் அடிப்படையில்தான் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருப்பதை நாம் இங்கு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது.
இது தவிர கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார பின்னடைவின் காரணமாக, ஏழை மாணவர்களின் இடைநிற்றலும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் தமிழக அரசு மாணவர்களை எவ்வாறு பள்ளிக்கு மீண்டும் கொண்டுவருவது குறித்து ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும்.
அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, புதிதாக இணைந்துள்ள மாணவர்களை தக்கவைக்கவும், கல்வியை விட்டு வெளியேறும் மாணவர்களை தடுத்து நிறுத்தவும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து புதிய நியமனங்களையும் செய்திருக்க வேண்டும்.
ஆனால், திமுக அரசோ, ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஒருசேர வகுப்பறைகளிலிருந்து வெளியேற்றும் வேலையைச் செய்திருக்கிறது. வகுப்பறைக்கு வெளியில் மாணவர்களை தள்ளி ஆசிரியர்கள் இடத்தில் தன்னார்வலர்களை நிரப்புகிறது. பள்ளிக் கல்வியின் அறிவியல் அடிப்படையை இது தகர்க்கிறது. ஆர்.எஸ்.எஸ். கல்விக் கொள்கையின் நோக்கமும் அதுதான்.
முறையாக பி.எட், எம்.எட், ஆசிரியர் பட்டயப்படிப்பு படித்தவர்கள்  மாணவர்களுக்கு பாடம் எடுத்தே கற்றல் குறைபாடு நிகழ்கிறது எனில், இத்திட்டதின் படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 12 வகுப்பு படித்தவர் போதுமென்றும் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு பட்டபடிப்பு படித்திருந்தால் போதும் என்றும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி பயின்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை எனும்போது கற்றல் குறைபாட்டை இது அதிகரிக்குமே தவிர ஒருபோதும் குறைக்காது.
மேலும், தன்னார்வலர்களை எவ்வாறு அளவிடுகிறீர்கள், அவர்கள் என்ன கற்றுத் தருகிறார்கள் என்று எவ்வாறு கண்காணிப்பீர்கள்..? பள்ளிக்கு வெளியே நிகழும் கல்வி மூலம் குழந்தைகளின் பாதுகாப்பு எவ்வாறு உறுதி செய்யப்படும், ஒரு சில மணிநேரத்தில் என்ன கற்றுக்கொடுப்பீர்கள் ? ஆகிய கேள்விகளுக்குத் தெளிவான பதில் எதுவும் திமுக-விடம் இல்லை.
அகஸ்தியா நிறுவன தலைவர்
ஆர்.எஸ்.எஸ். கும்பல் தன்னார்வளர்களாக மக்களிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் போய்ச் சேர இது வழிவகுக்கும் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலும் கேலிக் கூத்தானதாகவே திமுக தரப்பிடமிருந்து வருகிறது. பெரும்பாலும் பெண்களைச் சேர்த்துள்ளார்களாம். மாற்றுத் திறனாளிகளுக்கும் முன்னுரிமை கொடுத்திருக்கிறார்களாம். இதெல்லாம் ஒரு பதில் என்று கூறுகிறார்கள். திருடனை எப்படிக் கண்டுபிடிப்பாய் என்ற கேட்டால், முகத்தில் மருவும், கீறலும் இல்லாதவன் திருடன் இல்லை என முடிவு செய்வேன் என்று பதிலளிக்கிறது திமுக.
அரசு கல்வி நிறுவனங்களை ஒழித்துக் கட்டி கல்வியை முழுக்க முழுக்க தனியார்மயமாக்கும் வகையிலும், அதேசமயம் தனது இந்துராஷ்டிர கனவிற்கேற்ப இந்துத்துவ நஞ்சை விதைத்து மறுவார்ப்பு செய்யும் வகையிலும் காவி – கார்ப்பரேட்-ன் வீரிய ஒட்டுரகமாகத்தான் ஆர்.எஸ்.எஸ் – பாஜக புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்துள்ளது.
தமிழகத்தில் எடப்பாடி ஆட்சிக்காலத்தில் இக்கல்விக் கொள்கையின் அம்சங்களை நடைமுறைப்படுத்தும் விதமாக ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட Agastya International Foundation என்ற பன்னாட்டுத் தொண்டு நிறுவனத்திற்கு 12 மாவட்டங்களில் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. இதற்கு அப்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அன்றைய எதிர்க்கட்சியான தி.மு.க-வும் இதை எதிர்த்தது.
தேர்தலுக்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்த ‘திராவிட ஸ்டாலின்’ அரசு ஆட்சிக்கு வந்தபின் செப்டம்பரில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களை இணையவழியில்  நடத்த அனுமதி வழங்கியதோடு, அந்நிறுனத்திற்கு “ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என்று மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சுற்றறிக்கையும் அனுப்பியது. மேலும், 18 மாவட்டங்களில் அறிவியல் ஆய்வு மையங்களை அமைக்கவும் அந்நிறுவனத்திற்கு அனுமதியளித்தது.
அந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாகத்தான் தற்போதைய இந்த ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டத்தையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது.
மோடி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கை – 2020-ல் குறிப்பிடப்பட்டிருக்கும், பள்ளிக் கல்வி குறித்தான கருத்துக்களில் பக்கம் 8-ல் உள்ள (தமிழ் – பக்கம் 13) “அடிப்படை எழுத்தறிவும் எண்ணறிவும் : கற்றலுக்கு தேவையான அவசர மற்றும் அவசியமான முன் நிபந்தனைகள்” என்னும் தலைப்பு மற்றும் பக்கம் 10-ல் உள்ள (தமிழ் – பக்கம் 15) “இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல் மற்றும் அனைவருக்குமான கல்வியை உறுதி செய்தல்” ஆகிய தலைப்புகளின் கீழ் இந்தப் பிரச்சனைகளை கலைவதற்கான வழிமுறைகளாக சொல்லப்பட்டவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழக அரசின் “இல்லம் தேடி கல்வி” திட்டத்தின் நோக்கமும் புதிய கல்விக் கொள்கையின் நோக்கமும் இதுதான் என்பது அப்பட்டமாகத் தெரியவரும்.
இதையே, பயிற்சி பெற்ற உள்ளூர் சமூக தன்னார்வலர்கள் பங்கேற்பதை எளிமைப்படுத்துவதன் மூலம் கற்றல் குறிபாட்டை சரி செய்ய இயலும் என்பதாகக் கூறுகிறது ஆர்.எஸ்.எஸ் கல்விக் கொள்கை அறிக்கை. ஆர்.எஸ்.எஸ். கல்விக் கொள்கை –> புதிய கல்விக் கொள்கை –> வீடு தேடிவரும் கல்வி என்ற கோட்பாடு இங்கு தெளிவாகிறது. 
இத்திட்டங்களில் குறிப்பிடப்படும் தன்னார்வலர்கள் என்பவர்கள் யார்? அந்த தன்னார்வலர்களாக நியமிக்கப்படுவார்கள் அவர்கள் என்ன கற்றுத் தருவார்கள்? மேற்குறிப்பிட்ட அகஸ்தியா இண்டர்நேசனல் போல தயார் மாநிலம் முழுவதும் தயார்நிலையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சேவை அமைப்புகளும், அதனைச் சேர்ந்த ஸ்வயம்சேவக்குகளும் அதிகாரப் பூர்வமாக இளம் பிஞ்சுகளைச் சென்றடைவார்கள். 
இதைத் தான் திராவிட மாடல் கல்வி என்கிறார் ஸ்டாலின். இதை குலக்கல்வி என்று வேண்டுமானால் அழைக்கலாம்.
ஏற்கனவே, தமிழகத்திற்கென புதிய கல்விக் கொள்கையை வகுப்பதற்கு புதிய வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும் என சட்டப்பேர்வையில் திமுக தெரிவித்திருந்தது.  தற்போதைய இல்லம் தேடி வரும் கல்வி முறையைப் பார்க்கும் போதே, அமைக்கப்படப்போகும் குழுவின் இலட்சணம் தெரிந்துவிடும். அவை வழங்கப் போகும் பரிந்துரைகளை ஆர்.எஸ்.எஸ்.-ன் கல்விக்கொள்கைகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். .
ஏன் அவ்வாறு கூறுகிறோம் எனில், கடந்த மே மாதம் அப்போதைய ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு ‘கலந்து கொள்ளாதது குறித்து பேசிய பள்ளிக் கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “இது புறக்கணிப்பல்ல” “கலந்து கொள்ளாமைதான்” “இதை வைத்து நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை, அவர்களுடன் நாங்கள் சண்டையிட விரும்பவில்லை” புதிய கல்விக் கொள்கையில் “திருத்தம் வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.
தேர்தலுக்கு முன்பு புதிய கல்விக் கொள்கையை முற்று முழுதாக நிராகரிக்க வேண்டும் என்று அறிக்கை விட்ட தி.மு.க ஆட்சிக்கு வந்தபின்பு அதில் திருத்தம் வேண்டும் என்ற நிலைப்பாட்டை நோக்கி நகர்ந்துள்ளது மட்டுமல்லாமல் அதை அமல்படுத்தியும் வருகிறது.
அகஸ்தியா நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பியபோது அன்பில் மகேஷ் பொய்யாமொழி “மாணவர்களிடத்தில் அவர்கள் கொள்கையை திணிப்பதை அனுமதிக்க மாட்டோம்” என்று தி.மு.க. தொண்டனும் காறி உமிழத்தக்க வகையிலான பதிலைக் கூறினார்.
மேலும், அதிமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு மேல் அதிகாரம் கொண்டவராக ஆணையர் என்ற பதவியில் ஐ‌.ஏ‌.எஸ். அதிகாரிகளை நியமித்தது. ஆர்.எஸ்.எஸ் கல்விக் கொள்கையின் மிக முக்கியமான அம்சங்களில் இதுவும் ஒன்று. ஆசிரியர்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து பள்ளி கல்வி ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு செல்வதை இது குறிக்கிறது.
ஆனால், ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலினோ, எடப்பாடி செய்ததற்கு ஒருபடி மேலே சென்று பள்ளிக் கல்வி இயக்குனர் என்ற பதவியையே காலிசெய்து அனைத்து அதிகாரங்களையும் பள்ளி கல்வித்துறை ஆணையர் கைகளில் குவித்து இந்துராஷ்டிரத்திற்கு சிவப்புக் கம்பளத்தை விரித்துள்ளார்.
தமிழக பள்ளி கல்வித்துறையின் சார்பில் சமீபத்தில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் “கலா உத்சவ்” என்ற பெயரில் பார்ப்பனிய பண்பாட்டை குழந்தைகளிடம் விதைக்கும் போட்டிகளை நடத்த ஆணையிட்டுள்ளது.
படிக்க :
புதிய கல்விக் கொள்கையை கமுக்கமாக அனுமதிக்கும் தி.மு.க !
திமுக அரசு பட்ஜெட்டும் அரசுப் பள்ளிகளின் நிலைமையும் || சிறப்புக் கட்டுரை
அடுத்து புதிய கல்விக் கொள்கையின் படி 3,5,8,10 ஆகிய வகுப்புகளுக்கு நவம்பர் 12-ல் அடைவுத் தேர்வு (NAS Exam – National Achievement Survey) வைப்பதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் கல்விக் கொள்கையில் பிரிவு 4.41-ல், “நாட்டில் கற்றல் விளைவுகளின் சாதனைகளை கண்காணித்தல் மற்றும் பள்ளி வாரியங்களை மதிப்பீட்டு முறைகளை மாற்ற ஊக்குவித்து உதவுதல், மாணவர்களுக்கான விதிமுறைகள், தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதலை அமைப்பதற்கான அடிப்படை நோக்கங்களை பூர்த்தி செய்கிறது”  என NAS பற்றி புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சி‌.பி‌.எஸ்‌.இ.-ன் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கைகளால் வடிக்கப்பட்டு ஒன்றிய பாசிச அரசால் திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கையை அந்தப் பெயரை மட்டும் எடுத்துவிட்டு வெவ்வேறு பெயர்களில் நடைமுறைப்படுத்தி வருகிறது திமுக. வெட்கமில்லாமல், திராவிட மாடல் என்றும் இதனைப் பீற்றிக் கொள்கிறது.
இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால் சமூக நீதி, சமத்துவம் என்று வாய்ச்சவாடல் அடித்துக்கொண்டு ஆட்சியைப் பிடித்துவிட்டு, தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ்.-இன் ஏஜெண்டாக பொறுப்பேற்று புதிய கல்விக் கொள்கையின் ஒவ்வொரு அம்சங்களையும் தி.மு.க செயல்படுத்தி வருகின்றது என்பதை இனியும் யாராலும் மறுக்க இயலாது.
ஆர்.எஸ்.எஸ். கும்பலுடன் தி.மு.க பல்வேறு தளங்களில் சமரசமாகச் சென்று கொண்டிருக்கிறது. அதில் முக்கியமானவை மட்டுமல்ல அபாயகரமானவையும் தான், பள்ளிக் கல்வித்துறையில் அரங்கேறி வரும் இந்த மாற்றங்கள் !

தேவா
செய்தி ஆதாரம்: Hindu Tamil

சிலப்பதிகாரத்தில் தமிழ்நாட்டின் வர்க்க முரண் வரலாறு || நா. வானமாமலை

0
தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 14
முதல் பாகம் ……………………………………………………………………………………….. முந்தைய பாகம்
நா. வானமாமலை
சிலப்பதிகாரம் பற்றி இளங்கோ
சிலப்பதிகாரம் பற்றிப் பல திறனாய்வுக் கட்டுரைகள் வந்துள்ளன. நூல்கள் பலவும் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை காவியத்தின் நோக்கைக் குறிப்பிடுகின்றன.
‘அரைசியல் பிழைத் தோர்க்கு
அறங் கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக்
குயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உறுந்து
வந்நூட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு
காரணமாகச்
சிலப்பதிகாரம் என்னும்
பெயரால்
நாட்டுதும் யாமோர்
பாட்டுடைச் செய்யுள்’
– என்ற பதிகச் செய்யுளின் பகுதியைக் காவியத்தின் நோக்கமாகச் சில திறனாய்வாளர் கொள்கின்றனர்.
“அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாவது”, பாண்டியன் நெடுஞ்செழியன் அழிவையும், கொடுங்கோல் அரசன் தலைநகரான மதுரையின் அழிவையும் குறிப்பிடுகிறது. “உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்துதல்”, வஞ்சிக் காண்டத்தில் விவரிக்கப்படுகிறது. “ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்” என்பது கண்ணகி, கோவலன் பழம் பிறப்பை மதுராபதி அறிவிப்பதைக் குறிக்கிறது.
படிக்க :
♦ பெண்ணுரிமைக்கு எதிரான ஆரியர் கொள்கை !
♦ ஆரியர் நிறுவிய எந்த வல்லரசும் விந்தியத்திற்குக் கீழே வந்ததில்லை !
இவையாவும் கதையின் நீதி நோக்கங்கள் என்பது உண்மையே. ஆனால் இம்மூன்று நோக்கங்களும் காவியத்தின் பொது நோக்கு என்று சுருக்கிக் கூறிவிட முடியாது. இவ்வடிகள் பதிகத்துள் காணப்படுகின்றன. பதிகம் பாடியவர் இளங்கோவடிகளல்ல. சாத்தனார் என்று சிலர் கூறுவர்.
ஆனால் பதிகத்தில்,
‘அவனுழை யிருந்த தண்டமிழ்ச் சாத்தான்
யானறிகுவன் அது பட்ட தென்றுறைப்பேன்’
என்னும் அடிகள், சாத்தனார் இளங்கோவடிகளுக்குக் கண்ணகிக் கதையைக் கூறினாரென்று கூறுகின்றன. சாத்தனார் தண்டமிழ்ச் சாத்தான் எனச் சிறப்பிக்கப்படுகிறார். அவர் தன்னைத்தான் இவ்வாறு சிறப்பித்துக்கொண்டார் என்பது பொருத்தமுடையதல்ல. எனவே பதிகம் பாடியவர் சாத்தனார் அல்ல என்பது தெளிவு.
பதிகத்தின் இறுதி அடிகளில்,
‘இவ்வாறைந்தும்,
உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
உரைசாலடிகள் அருள மதுரைக்
கூல கிரணிகன் சாத்தன் கேட்டனன்
இது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென்’
– ‘அடிகள்’ என்று இளங்கோ அழைக்கப்படுவதிலிருந்தும் சாத்தன் கேட்டனன்’ என்று சொல்லப்படுவதிலிருந்தும், இவ்விருவரும் பதிகம் பாடியவர்களல்லர், என்ற முடிவுக்கு நாம் வரலாம்.
எனவே, பதிகம் பாடிய யாரோ ஒரு புலவர் மேற்கூறிய மூன்று கருத்துக்களுமே காவியத்தின் நடுநாயகக் கருத்துக்கள் என்று கருதினார் என்ற முடிவுக்குத்தான் நாம் வரமுடியும். இக் கருத்துக்களையே சிலப்பதிகார ஆசிரியரின் கருத்துக்கள் என்று கூறுவோர், சான்றுகள் எதுவுமின்றியே அவ்வாறு கூறுகின்றனர். காவிய ஆசிரியரின் நோக்கமென்ன? இம்மூன்று கருத்துக்களை மட்டும்தான் வலியுறுத்த விரும்பி இக்காவியத்தைப் பாடினாரா? என்ற வினாக்களுக்கு நாம் விடைகாண முயலுவோம்.
நூலின் முடிவில் நூற்கட்டுரை என்ற பகுதியில் பதினெட்டு அடிகளில் நூலின் குறிக்கோள் விளக்கப்படுகிறது. அவ்வடிகள் முழுவதையும் கீழே தருவோம்.
நூற்கட்டுரை,
குமரி வேங்கடங் குண குட கடலா
மண்டினி மருங்கிற் றண்டமிழ் வரைப்பிற்
செந்தமிழ், கொடுந்தமிழ் என்றிரு பகுதியின்
ஐந்திணை மருங்கின் அறம் பொருளின்பம்
மக்கள் தேவரென விரு சார்க்கும் (5)
ஒத்த மரபின் ஒழுக் கொடு புணர
எழுத்தொடு புணர்ந்த சொல்லகத் தெழுபொருளை
இழுக்கா யாப்பின் அகனும், புறனும்
அவற்று வழிப்படு உஞ் செவ்வி சிறந் தோங்கிய
பாடலும் எழாலும் பண்ணும் பாணியும் (10)
அரங்கு விலக்கே ஆடப் பெற்றனைத்தும்

ஒருங்குடன் தழீஇ உடம்படக் கிடந்த
வரியுங் குரவையுஞ் சேதமு மென்றிவை.
தெரியுறு வகையாற், செந்தமிழியற்கையில்
ஆடி நின் நிழலில் நீடிருங்குன்றம் (15)
காட்டு வார்போற் கருத்து வெளிப்படுத்து
மணிமேகலை மேல் உரைபொருள் முற்றிய
சிலப் பதிகாரம் முற்றும்.
முதலிரண்டடிகளில் தமிழகத்தின் எல்லை கூறப்படுகிறது. அரசியல் பிரிவுகளாக மூன்று முடிமன்னர்கள் ஆண்ட மூன்று மண்டலங்களாகத் தமிழகம் பிரிந்திருந்த போதிலும் தமிழ் நாட்டுப் பண்பாட்டு முறையில் ஒன்றே என்பது ஆசிரியர் கருத்து. மூன்று முதல் ஆறடிகளில் தமிழகத்தின் பண்பாட்டின் இயல்பை விளக்கிக் கூறுகிறார்.
வழக்கு வேறுபாட்டால் இருவகையாக இருந்த தமிழ் மொழி வழங்கிய பகுதிகளை, ‘செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிரு பகுதி’ என்று கூறுகிறார். இவ்விரு பகுதிகளிலும் மக்கள் வாழ்க்கை ஐந்து வகைப்பட்டது. மக்கள் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற ஐவகை நிலங்களில் வாழ்ந்தார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கை வசதிகளை வெவ்வேறு வழிகளில் தங்கள் தொழில்கள் மூலம் பெற்றார்கள்.
குறிஞ்சி நில மக்கள் நாகரிகத்தின் தொடக்கக் கட்டத்தில் இருந்தார்கள். ஆண்கள் வேட்டையாடினார்கள், பெண்கள் அவரை, சாமை, தினை முதலியன பயிர் செய்தார்கள். வேட்டையாடும் தொழிலால் நாடோடியாகத் திரிந்த மக்கள் இனம் நிலைகொள்ளப் பெண்கள் உழைப்பு காரணமாயிற்று. ஆரம்ப நாகரிகம் பெண்கள் வளர்த்த நாகரிகமே.
அதையடுத்த நிலங்களில் அதற்கடுத்தக் கட்டத்திலுள்ள முல்லை நாகரிகம் தோன்றி நிலை கொண்டிருந்தது. ஆடுமாடுகளைப் பழக்கி ஆப்பயன்’ மூலம் வாழ்க்கை நடத்திய ஆயர் அங்கு வாழ்ந்து ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்கினார்கள். ஆற்றோரங்களில் ‘உழவுப் பயன்’ மூலம் தலை சிறந்த நாகரிகம் தலையெடுத்தது. அது வளர்ச்சியுறவே தேவைக்கு எஞ்சிய தானியங்கள் கிடைத்தன. நிலவுடைமைச் சமுதாயம் தோன்றிற்று.
அதனோடு வர்க்கப் பிரிவினையும் தோன்றிற்று. நில உடைமையாளர் அரசியல் ஆதிக்கம் பெற்றனர். குறிஞ்சி நிலத்தாரையும், முல்லை நிலத்தாரையும், போராலும், உறவு முறையாலும் தங்கள் வசப்படுத்தினார்கள். மூவேந்தர் முடியரசுகள் நிலைப் பெற்றன. அரசு நிலைப்பெற்ற பின்னர் வாணியம் தலை தூக்கியது. கடல் வழியாக வேற்று நாடுகளோடு வாணிபத் தொடர்பு பெருகிற்று. பல்வேறு தொழில் செய்தவர்களிடையே இருந்து முக்கியமாகக் கடற்கரையில் வாழ்ந்த பரதவர், உமணர் போன்ற சாதியாரிடையிருந்து வணிகர் வர்க்கம் தோன்றிற்று. வணிகர் பெரும் பொருளீட்டினர். அரசர் குடிக்குச் சமமான செல்வாக்குப் பெற்றது.
சிலப்பதிகாரக் காலத்தில் அரசர் ஆதிக்கம் ஓங்கி நின்றது. மூன்று மண்டலங்கள் தனித்து அரசியல் பகுதிகளாகப் பிரிந்தன. குறிஞ்சி நில மக்களும், முல்லை நில மக்களும், பாலை நில மக்களும், நெய்தல் நில மக்களும் தனித்தனியான பண்பாடுகளை இன்னும் பின்பற்றி வந்தனர். நிலவுடைமையாளர் ஆதிக்கத்திலிருந்தனர். நிலவுடைமைச் சமுதாயத்தின் பண்பாடு மற்றைப் பண்பாடுகளை இணைக்க முயன்றது. கலையிலும், இலக்கியத்திலும் நிலவுடைமையாளர்களது செல்வாக்கு ஓங்கியிருந்தது.
இந்நிலையில் செல்வாக்குப் பெற்று வந்த பெருங்குடி வணிகர்கள் நிலவுடைமை ஆதிக்கத்தால் தங்கள் வாணிபத்தைக் கட்டுக்கடங்கி நடத்த வேண்டியதாக இருந்தது. மூன்று அரசியல் பிரிவுகள் அவர்களுக்கு விலங்காக இருந்தன. உள் நாட்டிலும் அரசன் தங்கள் அரசியல் செல்வாக்குக்கு உட்பட்டு தங்கள் வாணிபத்துக்கு உதவி செய்ய வேண்டுமென்று அவர்களது தேவையும் விருப்பமுமாக இருந்தது.
இவ்விருப்பத்தையும் தேவையையும் நிறைவேற்றிக்கொள்ள அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள மக்களைத் தங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாகத் திரட்ட முயன்றார்கள். இதனை நிறைவேற்றப் பல்வேறு வகையில் முயன்றார்கள். தமிழ் நாடு முழுவதிலும் சைன, பௌத்த மதங்களைப் பரப்பி இதனைச் சாதிக்க முயன்றார்கள். இலக்கியத்தின் மூலமும் அவர்களது கருத்தைப் பரப்ப முயன்றார்கள்.
தமிழ் நாடு ஒரே நாடு என்ற கருத்து அவர்களது நலன்களுக்கு ஒத்திருந்தது போலவே மூன்று மண்டலங்களிலுமுள்ள தமிழ் மக்களுடைய நலன்களுக்கும் ஒத்திருந்தது. மக்களது பொருளாதார வாழ்வுக்கு அது ஒரு முன்னேற்றப் பாதையைக் காட்டிற்று. ஆகவே மக்களை ஒரே கருத்தின் அடிப்படையிலும், பண்பாட்டின் அடிப்படையிலும் ‘ஒரே தமிழ்நாடு’ என்ற கருத்தைப் பரப்பினர். ஐவகை நிலங்களின் தனித்தனியான பண்பாட்டு அம்சங்களையும், தங்களது பண்பாட்டின் தலைமையில் இணைக்க முயன்றனர். நிலவுடைமைச் சமுதாயம் ஈன்ற நாகரிகத்தின் சிறப்பான அம்சங்களைப் பாதுகாத்து முன்னேற்றமான பல அம்சங்களை அதனோடு இணைத்தனர். நிலவுடைமை வர்க்கத்தை எதிர்க்க இம் முயற்சிகளனைத்தையும், இணைக்க முயன்றனர். மக்களை இவ்வாறு ஒற்றுமைப் படுத்தியதோடல்லாமல், அவர்கள் வணங்கும் தேவர்களை ஒருவருக்கொருவர் உருவாக்கினர். மக்களுக்கும், தேவருக்கும் பொதுவான ஒரு நீதியை உருவாக்க முயன்றனர்.
“ஐந்திணை மருங்கின் அறம் பொருளின்பம்
மக்கள் தேவ ரென விருசார்க்கும்
ஒத்த மரபின் ஒழுக்கொடு; புணர’
ஐந்திணை மக்களுக்கும் வேறு வேறான ஒழுக்கத்தை, யாவருக்கும் ஒத்த மரபான ஒழுக்கமாக உயர்த்த நடந்த முயற்சியைச் சிலப்பதிகாரம் வரவேற்றுப் போற்றுகிறது. இந்த ஒற்றுமை இயக்கத்துக்கு காவிய முறையில் வாழ்த்துக் கூறுகிறது. ஐவகை நிலங்களிலுமுள்ள கலையை ஒன்றுபடுத்த முயலுகிறது.
ஐவகை நிலங்களில் முளைத்தெழுந்த ஆடல் பாடல்களை ஒன்றுபடுத்தும் முயற்சிக்கு அவர்கள் ஆக்கமளித்தனர். தமிழ் நாடு முழுவதற்கும் ஒரே கலையை, பல்வேறு வேறுபாடுகளையும் உள்ளடக்கி, உருவாக்கும் முயற்சியை வரவேற்றனர்.
படிக்க :
♦ 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி
♦ நூல் அறிமுகம் : இந்திய சமூகத்தில் மதம்
வரலாற்றில் மிகச் சிறந்த, ஒரு காலகட்டத்தின் கண்ணாடியாக வாழ்க்கையின் பிரதிபலிப்பாக வாழ்க்கையை முன்னேற்றமான முறையில் மாற்ற முயலும் முயற்சிகளின் கலையுருவமாகச் சிலப்பதிகாரம் திகழ்கிறது. இப்படித்தான் காவியம் அமைந்திருக்கிறது என்று இளங்கோவடிகள் கூறுகிறார்.
ஐந்திணை மக்களது வாழ்க்கையிலிருந்து ஒழுக்கம் தோன்றுகிறது. அதனை அகம் புறம் என்று பிரித்து இலக்கியம் அமைக்கிறது. இவ்வொழுக்கத்தின் வழிப்பட்டதே ஆடல், பாடல் பாணி, அரங்கு விலக்கு வரி குரவை என்ற கலைகளனைத்தும், இவையனைத்தையும் தான் பண்பாடு என்று கூறுகிறோம். தமிழ் நாட்டின் பண்பாட்டை மலையைக் கண்ணாடியில் காண்பது போல இக்காவியம் காட்டுகிறது. மணிமேகலை என்ற காவியம் இதே பண்பாட்டைத் தொடர்ந்து விளங்குகிறது. இக்காவியத்தின் நோக்கம் பற்றி இளங்கோவடிகளின் கருத்து இதுதான்.
ஆடி நன் நிழலின் நீடிருங் குன்றம்
காட்டுவார் போற் கருத்து வெளிப் படுத்து
மணி மேகலை மேல் உரைப் பொருள் முற்றிய
சிலப்பதிகாரம் முற்றும்.’
– இப்பொது நோக்கம் நிறைவேறக் காவியத் தலைவி கண்ணகி கருவியாகிறாள். புகார் காண்டத்தில் பெருங்குடி வணிகரின் செல்வச் சிறப்புக் கூறப்படுகிறது.
செல்வம்,
‘உரை சால் சிறப்பின் அரசு விழை திருவிற்
பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்
முழுங்கு கடல் ஞாலமுழுவதும் வரினும்
வழங்கத் தவா அ வளத்த தாகி
அரும் பொருள் தரூஉம் விருந்திற்றே எம்
ஒருங்கு தொக் கன்ன உடைப்பெரும் பண்டம்,
கலத்தினுங் காலினுந் தருவனரீட்டக்
குலத்திற்குன்றாக் கொழுங் கொடிச் செல்வர்.’
வணிகர் ஈட்டிய செல்வத்திலிருந்துதான் நாட்டில் அறனும் இன்பமும் நிலைக்கின்றன. நாட்டில் அறம் பொருள் இன்பம் என்ற மூவகைப்பட்ட வாழ்க்கைக்கும், வணிகர் முயற்சியே அடிப்படை யானது. ஆகவே அவர்கள் மக்களுள் தலைமை பெற்றனர்.
கண்ணகி, பிறந்த நகரை விட்டு கணவனோடு மதுரை செல்லும் வழியில் மருத நிலவாழ்க்கை வருணிக்கப்படுகிறது. பாலை நிலத்தில் எயினர் குடியில் கண்ணகி தங்கி அவர்களது தெய்வ வழிபாட்டைக் கண்டு சொல்லுகிறாள். மதுரையையடுத்த ஆயர் சேரியில் மாதரி கண்ணகிக்கு அடைக்கலம் அளிக்கிறாள். இவ்வாறு பலவகைப்பட்ட மக்களது வாழ்க்கையோடும், கண்ணகியின் வாழ்க்கைத் தொடர்பு படுத்தப்படுகிறது. அவர்களது வாழ்க்கையும், கலையும் அறிமுகப் படுத்தப்படுகின்றன.
கடைசியில் மதுரையில் உண்மையை நிலைநாட்ட வேண்டி வழக்குரைத்து, சிலம்பை உடைத்துத் தன் கூற்றை நிரூபிக்கிறாள். நாடு தாண்டி நாடு வந்து வாணிபம் செய்யும் உரிமையை மறுத்த பாண்டியனது தலைநகரைத் தீக்கிரையாக்குகிறாள். அப்பொழுது அந்நகர மக்கள் நகரத்தைத் தீக்கிரையாக்குவது கொடுமை என்று கூறவில்லை . இது அறச் செயல் என்றே கூறுகிறார்கள்.
‘வரு விருந் தோம்பி
மனையற முட்டாப்
பெருமனைக் கிழத்தியர்
பெரு மகிழ் வெய்தி
இலங்கு பூண் மார்பிற்
கணவனை இழந்து
சிலம்பின் வென்ற
சேயிழை நங்கை
கொங் கைப் பூசல்
கொடிதோ வன்றெனப்
பொங்கேரி வானவன்
தொழுதனர் ஏத்தினர்.’
தாங்கள் துன்பமுறும்பொழுது, கண்ணகியின் கொள்கை, நியாயம் என்பதை உணர்ந்து அவர்கள் நகரம் பற்றி எரிவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்கள்; அக்கினிக் கடவுளை வணங்குகிறார்கள்.
அறத்திற்காகப் போராடி உயிர் நீத்த கண்ணகியை சேர நாட்டின் குறவர்கள் போற்றுகிறார்கள். அவர்களது வாழ்க்கையும், பண்பாடும் காவியத்தோடு தொடர்புபடுத்தப்படுகிறது. வீரபத்தினிக்குக் கோவில் கட்டி வழிபட்ட சேரன் செங்குட்டுவனது வெற்றி வஞ்சிக் காண்டத்தில் கூறப்படுகிறது. இவ்வாறு அக்காலத்திய தமிழ் நாட்டு வாழ்க்கையின் கண்ணாடியாகச் சிலப்பதிகாரம் விளங்குகிறது.
பதிகத்தில் கூறிய மூன்று நோக்கங்களும், இப் பொது நோக்கத்துக்கு உட்பட்டவையே, அவற்றை மட்டும் காவியத்தின் நோக்கமாகக் கொள்வது காவியத்தின் முழுமையான நோக்கத்தைக் காண்பதாகாது. காவியத்தின் முழுமையான நோக்கம் தமிழகத்தின் வாழ்க்கை முழுவதையும், சித்திரமாகத் தீட்டிக் காட்டுவதே ஆகும். சிலப்பதிகாரத்தைப் பற்றி இளங்கோவடிகள் கருத்து இதுவே.

 

(தொடரும்)
« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »
தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

நைட்டி : தேசங்கள் கடந்த பெண்களின் பொது உடை || சிந்துஜா

“கோடை காலம் நம்மை சோம்பேறியாக்குகிறது என்பது நம் கற்பனை அல்ல. அது அறிவியல் சார்ந்தது” என்று சொல்கிறது, கடந்த 2018-ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்த “Wear your nightie out” என்ற கட்டுரை. அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் நமது உற்பத்தித்திறன் மற்றும் மனநிலையின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நமது இரவுநேரத் தூக்கம் என்பது நம் மனதையும் உடலையும் தளர்வுபடுத்தி, குளிர்விப்பதற்காகத் தான். அந்த வகையில் நமது உடல் நலன் சார்ந்த விசயத்தில் நமது இரவு உடைகள் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நமது நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு வெளியே சென்று வந்தவுடன் இரவு ஆடைகளை மாற்றுவது இயல்பாகவே இல்லங்களில் நடக்கும் ஒன்று.
ஆண்கள் என்றால் லுங்கி, ஷார்ட்ஸ் போன்ற உடைகளையும், பெண்கள் நைட்டியையும் பெரும்பாலும் அணிகின்றனர்.  இதில் ஆண்கள் இந்த இரவுநேர உடைகளை அணிந்து கொண்டு பகலில் வெளியில் செல்வது மிகவும் இயல்பான ஒன்றாகக் கடந்து செல்லக்கூடிய விசயமாக இருக்கிறது. ஆனால் பெண்கள் பகல் நேரத்தில் நைட்டி அணிந்து வெளியே செல்வது என்பது எப்போதுமே ஏற்புடையதாக இருந்திருக்கிறதா ? ஏன் பெண்களுக்கு மட்டும் இந்த ஓரவஞ்சனை காட்டுகிறது சமூகம் ? அதைப் பார்க்கலாம்.
நைட்டி உடலுக்கு எந்த வடிவத்தையும் கொடுக்காத  ஒரு நீண்ட ஆடை. தேவை சார்ந்து அதன் வடிவமைப்பில் பல புதுமைகள் பிரதிபலிக்கும். நைட்டி எனும் உடை அதன் வடிவங்களை சார்ந்தது அல்ல, அது அதன் செயல்பாடு சார்ந்தது.
படிக்க :
பெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் !!
ஆதார் : மாட்டுக்கு சூடு ! மனுசனை உளவு பார் !!
நைட்டி, பெண்களின் உடல்நலன் மற்றும் காலநிலை தேவையின் விளைபொருள். பெண்களைப் பொருத்தவரையில் நைட்டி வெப்பமான  சூழ்நிலையை கையாளும் ஓர் கருவி என்கின்றனர் ஆராய்ச்சியாளர்களான ஹாவுரத் மற்றும் ஹாப்மேன். ஆண்களுக்கும் லுங்கி அதைப் போன்றதுதான். ஆகையால் பெண்கள், தங்கள் நைட்டியுடன் வெளியே செல்வதை  சோம்பேறித்தனமாகவோ அல்லது தரக் குறைவானதாகவோ நினைக்க ஓன்றுமில்லை.
நைட்டியை தரக் குறைவான ஆடையாகப் பார்க்கும் பார்வை ஏதோ இருபதாம் நூற்றாண்டு மக்களிடமிருந்ததாக கருதத் தேவையில்லை. இன்றுவரையில் அப்படித்தான் நைட்டி மீதான பார்வை சமூகத்தில் இருக்கிறது.  சில சமீபத்திய சம்பவங்களைப் பார்க்கலாம்.
இந்தியாவில் 2012-ல் பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளி, குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு சில விதிகளை வகுத்தது. அதில் ஓன்று, பெற்றோர்கள் தங்களது  குழந்தைகளை நைட்டியுடன் வந்து பள்ளியில் விடக்கூடாது என்பது. இதே போன்று 2013-ல் சென்னையில்  உள்ள ஒரு பள்ளியிலும் விதிக்கப்பட்டது.
வீட்டு வேலைகளுக்கு மத்தியில் குழந்தைகளைப் பள்ளியில் விட்டுவிட்டு, அடுத்து தனது அலுவலக வேலைக்கு ஓடுவதுதான் பெரும்பாலான பெண்களின் நிலை. அப்படி இருக்கையில், அவர்களுக்கு ஏற்ற உடைகளில் தான் பள்ளிக்கு வர இயலும். ஆகையால் நைட்டி தவிர்க்க முடியாத ஆடையாக அவர்களுக்கு இருக்கிறது. பெற்றோர்களின் எதிர்ப்புக்குப் பிறகு அந்தக் கல்வி நிறுவனங்கள் தங்களது விதிகளை தளர்த்திக் கொண்டன.
தமிழ்நாட்டில் பெண்கள் நைட்டியில் அனைத்து வேலைகளையும் செய்கின்றனர். வீட்டின் வாயிலில் நின்று அக்கம் பக்கத்தினருடன் பேசுவதில் தொடங்கி மளிகைக் கடை, கடைவீதி, பள்ளிகளில் குழந்தைகளை கொண்டுசெல்வது என எல்லா இடங்களிலும் தயக்கமின்றி நைட்டி அணிகின்றனர். அந்த அளவிற்கு நைட்டி செளகரியமான ஒரு ஆடையாக நடுத்தர பெண்களுக்கு இருக்கிறது.
தமிழ்நாடு தொழில்மயமான பிறகு தொடர்ச்சியாக பெண்கள் பணிக்குச் செல்வது என்பது பெருநகரங்கள் முதல் சிறு நகரங்கள் வரை பரவலாக இருக்கிறது. இங்கே பெண்கள் நைட்டி அணிவது இன்னும் சகஜமானதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை எனும்போது, பிற மாநிலங்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை.
2012-ம் ஆண்டு ஆந்திராவில் உள்ள தோகலப்பள்ளி என்னும் கிராமத்தில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இரவு உடை அணிந்த பெண்களுக்கு ரூ. 2000 அபராதம் விதித்தது தலைப்பு செய்தியாகியது. இந்த விதிகளை கடைப்பிடிப்பவர்களுக்கு 1,000 ரூபாய் ‘பரிசு’ தொகையும் கூட அந்த கிராமம் ஒதுக்கியது என்பது தான் மேலும் கேலிக்கூத்தானது. இதே போன்று நவி மும்பையில்,   கோதிவாலியை கிராமத்தில், புடவை அணிந்த பெண்கள் மட்டுமே மகிளா மண்டல உறுப்பினர்களாக இடம்பெறலாம் என 2014-ல் கிராம சபையில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், பொது இடங்களில் நைட்டி அணிந்தால், பெண்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று நோட்டீஸ் போட்டுப்பட்டதிருந்தது. பொதுமக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த அறிவிப்பை தயங்கியபடியே திரும்பப் பெற்றாலும், அங்கே நைட்டியைப் பற்றிய பார்வை கேலிக்குரியதாகவும், அவமானகரமானதாகவும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
உடைகள் தொடர்பான மேற்கணட வகையான தடைகள் அபத்தமாகத் தோன்றுகிறதா? அல்லது கவுன்சில் கூறுவது போல், நைட்டிகள் தேவையற்ற வகையில் கவனத்தை ஈர்த்து, பெண்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துமா?
சரி அப்படி பெண்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தும் என்றால், ஆண்கள் இரவு உடையான கைலியை பகலில் அணிந்து வந்தாலும் அது அவர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துவதில்லையே ஏன் ? இந்த தடைகள் எல்லாம் பெண்கள் ஆடைக்கு மட்டும் தானா? ஆகிய கேள்விகள் எழுகின்றன.
இந்தியாவில் பெண்களுக்கு நைட்டி என்றால் ஆண்களுக்கு லுங்கி அல்லது ஷாட்ஸ் . இவற்றை அணிந்து ஆண்கள் பகலில் வெளியே செல்லக்கூடாது என்று யாரும் சொல்வதில்லை. ஒருவேளை ”நைட்டி” என்பதன் தமிழ் அர்த்தத்தின்படி இரவில் உடுத்தும் உடை என்பதால் அதை பகலில் பெண்கள் உடுத்துவது தவறாகத் தெரிகிறதோ என்னவோ ?
மும்பையில் உள்ள ‘தானே’-யில் 45 வயதுமிக்க பெண் ஒருவர் “ஆட்டோமொபைல் பார்க்கிங்” நடத்தி வருகிறார். அவர் காலை, மாலை இருவேளையும் பணிபுரியும் போது அணியும் உடை 2 நைட்டிகளே ! காலையில் வீட்டு வேலை, சமையல் செய்யும் போது ஒரு நைட்டியும், வெளியில் போகும் போது நைட்டியுடன் துப்பட்டாவையும் அணிந்து கொள்வார். இது காலையில் அணியும் உடை. இரவில் பணி தொடங்கும் போது குடிகாரர்களின் வக்கிரப் பார்வை, ஸ்டண்ட் பைக்கர்களால் ஏற்படும் இடையூறுகளில் இருந்து விலகியிருக்க, நைட்டியுடன்  ஒரு வெள்ளை நிற லேப் கோட்டையும் அணிந்து கொள்வார். “ஆனால் அது அவ்வளவு செளகரியத்தை தருவதில்லை” என்றும் குறிப்பிடுகிறார் சுஷ்மா.
ஆண்களின் மனதில் நைட்டியானது, பெண்களின் ஒரு இயல்பான, வசதியான உடை என்பதெல்லாம் எடுத்த எடுப்பில் தோன்றுவதில்லை. மாறாக அந்த உடை ஒரு பாலியல் உணர்ச்சி தூண்டும் உடையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. இதற்கான அடிப்படையான காரணம், பெண்களை பாலியல் பண்டமாக மட்டும் பார்க்கும் நுகர்வு சிந்தனையே. அவர்களும் ஆண்களைப் போன்ற உயிர்கள்தான் என்பதோ, அவர்கள் தங்களது சவுகரியத்திற்கு உகந்த உடைகளை உடுத்திக் கொள்வது அவர்களது உரிமை என்பதோ அவர்கள் மனதில் படுவதில்லை.
இங்கு, பாலியல் தூண்டல் முதல் அனைத்துப் பழிகளும் பெண்ணின் மீதே சுமத்தப்படுகின்றன. பெண்களை ஆபாசமாகவும் வக்கிரமாகவும் பார்க்கும் ஆண்களின் தவறான பார்வை, இயற்கையான பாலுணர்வாக, தவிர்க்கமுடியாததாக, எதார்த்தமானதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. “ஒரு ஆண் ஒரு பெண்ணை அப்படிப் பார்ப்பது இயல்புதானே” என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது.
ஆனால் ஒரு ஆண் இரவு உடையை (லுங்கி, ஷார்ட்ஸ்) அணிந்துவரும் போது, அது பெண்களுக்குப் பாலியல் தூண்டலாக இருப்பதில்லையே, ஏன்? இதனை இந்தச் சமூகத்தின் பார்வையில் சுருக்கமாகச் சொல்கிறார் உளவியலாளர் டாக்டர் மம்தா ஷா, “ லுங்கி நித்தியமானது, ஆனால் நைட்டி தடைசெய்யப்பட்டது”
படிக்க :
பிரா அணிவதும் அணியாததும் யாருடைய பிரச்சினை ? || சிந்துஜா
புடவை கடந்து வந்த பாதையும் அது சார்ந்த போராட்டங்களும் ! || சிந்துஜா
இந்தியாவில் நைட்டி ஒரு கனமான விவாதத்தை எழுப்பியிருக்கிறது என்றே சொல்லலாம்.  திரைப்படத் தயாரிப்பாளர் பரோமிதா வோரா, “ஆடை குறித்த தமது விருப்பு வெறுப்புகளையும், செளகரியங்களையும் பாலினம், சாதி, வர்க்கம் கடந்து பொதுவெளியிலும், தனிப்பட்ட முறையிலும் பேசுவது அவரவர் உரிமை” என்கிறார். ”ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு பெண் தனக்கு வசதியாக இருப்பதையோ, செளகரியத்தை உணர்வதையோ செய்யும்போது, பொதுவெளியில் உள்ளவர்கள் அவளை அசௌகரியத்திற்கு ஆளாக்குகிறார்கள்”, என்கிறார் வோஹ்ரா.
1982-ம் ஆண்டு ஆர்த் என்ற இந்தித் திரைப்படத்தில் காஃப்தான் உடையணிந்த ஷபானா ஆஸ்மியின் படம்தான், காட்டன் நைட்டிகள் பிரபலமான காலகட்டத்தில் மிகவும் பேசப்பட்ட படம். அந்தப் படத்தில், தனது அடையாளத்தைக் கண்டறியும் பாதையில் பயணிக்கும் விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை சித்தரித்திருக்கிறார் வோஹ்ரா.
இன்றளவும் பெரும்பாலான தமிழ்ப் படங்களில், நைட்டியை இழிவான ஒன்றாக சித்தரிக்கும் காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. பொதுவாகவே பெண்ணின் உடையை இழிவானதாகவும், ‘ஆண்மைக்கு’ எதிரானதாகவும் சித்தரிக்கும் போக்கு இருக்கிறது. அதில் நைட்டிக்கு கூடுதல் பங்கும் இருக்கிறது.
சமீபத்தில் நடிகர் சித்தார்த் நடித்த “சிவப்பு மஞ்சள் பச்சை” படத்தில் ஜிவியை கைது செய்து நைட்டியுடன் அழைத்து வருவார் சித்தார்த். ஒருவனை அவமானப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவதைக் காட்டியிருப்பார் அந்தப்பட இயக்குனர். ஆண் சமுகத்தில் பெண்களின் உடை அவமானச் சின்னமாக இருக்கிறது என்பதை சித்தார்த்தின் அம்மா கேட்கும் காட்சி பாராட்டுக்குரியது. ஆனால் சமூகம் ஆடையில் ஒரு வித பேதத்தை கையாண்டு கொண்டு தான் இயங்கி கொண்டிருக்கிறது என்பதுதான் எதார்த்தமாக இருக்கிறது.
அதனை உடைக்கவே ஆடைகள் குறித்து நாம் பேசத் தயங்குகிற இத்தகைய கட்டுரைகளை எழுத வேண்டியது இருக்கிறது.
பெங்களூரைச் சேர்ந்த பேஷன் ஒப்பனையாளர் மற்றும் நடன இயக்குனரான பிரசாத் பிடாபா, “ஒரு ஆடை பிரபலமடைவதற்குக் காரணம் அது அணிபவருக்கு ஏற்படுத்து சௌகரியம் தான்” என்று கூறுகிறார்.  இந்த செளகரியம் தான் நைட்டியை எல்லா இடத்திற்கும் பயணிக்க வைத்தது.
விக்டோரியன் காலத்தில் வசதி படைத்த வீட்டுப் பெண்கள் இரவில் துங்குவதற்காக  வடிவமைப்பட்ட ஆடையான நைட்டி, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இந்தியாவிற்குள் வந்தது. 18-ம் நூற்றாண்டின் பின்பகுதியில் இந்தியாவிற்குள் இந்த உடை வந்திருக்கக்கூடும் என்றாலும் அது பெரும்பாலும் மேட்டுக்குடி வர்க்கத்தின் உடையாக மட்டுமே இருந்தது. 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 21-ம் நாற்றாண்டிலும் தான் நைட்டி எல்லோருக்குமான உடையாக மாறியது.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், குறிப்பாக 1970-களில் தான் மேக்ஸி மற்றும் கஃப்தான் ஆகிய இரவு நேர உடைகள், இந்திய சந்தையில் இடம் பிடித்தன. நாள் முழுக்க புடவையை உடுத்தியவர்களுக்கு இவ்வுடைகள் இரவில் விடியலை தந்தன. பின் விசைத்தறி மற்றும் வெகுஜன உற்பத்தி, மலிவான பருத்தி வருகையால்  சந்தையில் வெற்றி பெற்றது நைட்டி. நகர்ப்புறப் பெண்கள் அதிக அளவில் வேலைக்குச் செல்லத் துவங்கியதும் ஒரு காரணம்.
மெல்லிய சில்க், பாலிஸ்டர் துணியிலிருந்து பருத்திக்கு இடம் பெயர்ந்தது. அதன் பின் மார்பகத்தை மறைக்க டபுள் ஃபிரில் அறிமுகப்படுத்தப்பட்டது. (இன்றைய நாட்களில் பில்ட்-இன் துப்பட்டாக்களுடன் கூடிய மேக்சிகள் கூட கிடைக்கின்றன.) வசதி படைத்தவர்களிடமிருந்து இந்த ஆடை சாதாரண எளிய மக்களின் கைகளுக்கு விலை அடக்கமாகவும் கிடைத்தது. இப்படித் தான் வட இந்தியாவில் 1980-களில்  குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள கிராம மக்களின்  அன்றாட வாழ்வில் படிப்படியாக இடம் பிடிக்கத் துவங்கியது.
கேரளாவில் நைட்டிகளில் புதிய டிசைன்களை அறிமுகப்படுத்தி இன்று 100 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கும் “நைட்டி பென்னி”யைப் பற்றி பார்க்கலாம்.
“மலையாளிகள் வளைகுடா நாடுகளுக்குச் சென்று தங்கி வேலை பார்த்து வந்தனர். வளைகுடா நாடுகளின் வளர்ச்சியின் காரணமாக, ஆண்கள் வேலைக்கு ஊர் சென்று திரும்புகையில் தங்கள் மனைவிகளுக்கு நைட்டிகளை வாங்கி கொண்டு வந்தபோது, ​​நைட்டீகள் கேராளாவில் காலூன்றியது,” என்று பென்னி கூறுகிறார். மேலும் கேரளாவில் மற்ற மாநிலம் போல் இல்லாமல் செண்டு முண்டு என்று இரண்டு வகை துணிகளை உடுத்திக் கொண்டனர். ரவிக்கையும் , பாவாடையும் விட மிக செளகரியமான உடையாக நைட்டி, அங்குள்ள வசதிப்படைத்தவர்கள் முதல் ஏழை மக்கள் வரை அனைவர் வாழ்விலும் தடம்பதித்ததது. ஒரு கால கட்டத்திற்கு பின் நைட்டி நடுத்தர மக்களின் அங்கமாகவே மாறியது.
கோரளாவில் பிறவோமில் உள்ள ஒரு நைட்டி தயாரிப்பு நிறுவனத்தில் ரூ. 3,000 முதலீடு செய்தார் பென்னி. இது ஒரு மாதத்திற்கு 50 முதல் 100 நைட்டிகளை மட்டுமே உற்பத்தி செய்தது. பென்னி இதை அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள கடைகளுக்கு விற்க பேருந்துகளில் எடுத்துக்கொண்டு செல்வார், இதனால் ‘நைட்டி பென்னி’ என்ற புனைப் பெயரையையும் பெற்றார். பின்னர் 1988-ல்  ஒரு சிறு நிறுவனத்தை நிறுவி நைட்டியை பிரபலப்படுத்தினார்.
பின்னர் அவரது மனைவி 2006-ம் ஆண்டு அவருடன் வியாபாரத்தில் இணைந்தார். அதன் பின்னர் நைட்டிகளுக்கு, ஜிப், கொக்கிகள், சரிகைகள், பாக்கெட்டுகள் நிறைந்த டிசைனர் எட்ஜ் கொடுத்தார். அவற்றை விளம்பரப்படுத்த லட்சுமி கோபாலசுவாமி மற்றும் கனிஹா போன்ற பெண் நடிகர்கள் முலம் விளம்பரப்படுத்தி பிராண்ட் அம்பாஸிடராக களமிறக்கினார்.
இப்போது அவரது N’Style என்ற நிறுவனம் நாளொன்றுக்கு சுமார் 10000 ஆயிரம் நைட்டியை உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாறி உள்ளது. தற்போது அந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார் 100 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
ஆடையில் புதுப்புது மாற்றங்கள் தேவையை சார்ந்தே இயங்குகிறது. ஃபிரில்ஸ் இல்லாத தயாரிப்பு இப்போது மகப்பேறு மற்றும் உணவு செய்யும் போது உடுத்தும் உடைகள் என புதிய வளர்ச்சியை கண்டுள்ளது.  முஸ்லீம் பெண்களால் நீளமான நைட்டிகள் விரும்பப்படுகின்றன. இளைய வயதினர் ஏ-லைன் டிசைன்களை விரும்புகிறார்கள்,” என்று பென்னி கூறுகிறார்.
பெண்களின் உலகில் உடைகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆனாலும் மக்கள், அதன் மீதான தங்கள் மதிப்பீடுகளை பாலினம், சாதி மற்றும் வர்க்கம் சார்ந்து முடிவு செய்கிறார்கள். ஒரு ஆணும் பெண்ணும் என்ன அணிய வேண்டும் என்பதற்கான வேறுபட்ட பாலின-சார்பு தரநிலைகள் பாலின ஆடை உளவியலின் ஒரு பகுதியாகும். பெண்களை ஒடுக்குவதற்கான, அவமதிப்பதற்கான கருத்தியல்கள் ஆடை சார்ந்து உருவாக்கப்படுகின்றன. மேலும் ஆடை சார்ந்து திறமை குறைந்தவர்களாக மதிப்பிடுவதும் பாலின ஆடை உளவியலின் ஒரு பகுதியே ஆகும்.
ஆணோ, பெண்ணோ ஆடைத் தேர்வு என்பது சம்பந்தப்பட்ட நபரின் உரிமையாக இருக்க வேண்டும். ஒரு பாலினத்தவருக்கு வசதியான ஆடை, மற்ற பாலினத்தவருக்கு பாலியல் தூண்டலை ஏற்படுத்துகிறது எனில், பிரச்சினை அவர்களது பார்வையில் இருக்கிறது. இந்தச் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் – பெண்களை வெறும் போகப் பொருளாக, உடைமையாகப் பார்க்கும் –  ஆணாதிக்க சிந்தனையில் இருந்து அது வருகிறது. அதனை மாற்ற முயலுங்கள்.
படிக்க :
பெண்கள் மீது தொடரும் சாதிய மற்றும் மூலதனத்தின் சுரண்டல் !
லாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் !
ஆங்கிலத்தில் “Confirmation bias” என்று சொல்வார்கள். ஒரு விசயத்தை தமது கண்ணோட்டத்திற்கு ஏற்றவாறு மட்டும் பார்ப்பது. பிறரது பார்வையில் இருந்து அதனைப் பார்க்கத் தவறுவது. ஜனநாயகமற்ற தன்மையின் வெளிப்பாடு அது. ஆடை விசயத்தில் நமது சமூகத்தில் அது பெரும்பாலும் நீடிக்கிறது.
ஒரு நாடு, ஒரு ஆரோக்கியமான சமூகமாக இயங்க இத்தகைய மனநிலையை மாற்றுவதற்கு நாம் உழைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் அவமானத்தை இயல்பாக்கும் விதத்தில்தான் நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். குற்றவாளிகள் அங்கே எதார்த்தமானவர்களாக அடையாளமிடப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளியாக்கப்படுகிறார்கள்.
இந்தியாவின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ற ஆடையாக பெரும்பாலான பெண்கள் அணியும் ஆடையாகவும் பெண்ணின் விருப்பத் தேர்வாகவும் இந்த நைட்டி விளங்குகிறது. ஆனால் இங்குதான் நைட்டி ஷேமிங்கும் அதிமாக இருப்பதை பார்க்க முடிகிறது.
பிறர் விரும்பினாலும் விரும்பவில்லை என்றாலும் நைட்டி, பெண்களின் உடையில் ஏற்பட்ட சுதந்திரச் சின்னம். இந்தியா ஒரு பன்முக தன்மை கொண்ட நாடு. தேசத்தின் பிற பகுதியில் வெவ்வேறு கலாச்சாரம், ஆடை என இருந்தாலும் இந்தியா முழுக்க பெண்கள் விரும்பும் ஆடையாக இருப்பதால், நைட்டியை பெண்களின் தேசிய ஆடை என்றும் அழைக்கலாம்.
சிந்துஜா
சமூக ஆர்வலர்
disclaimer

கல்வியை மேம்படுத்த தனியார்மயத்தை ஒழிப்பதே ஒரே வழி !

0

ருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான தகுதி தேர்வான நீட் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களால் சேரமுடிவதில்லை என்பது கண்கூடு.

அனிதா போன்ற மாணவ – மாணவிகளின் மரணங்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5% இட ஒதுக்கீட்டை வழங்கும் சட்டத்தை கொண்டு வருவதற்கு காரணமாக இருந்தன. அதனை நிறைவேற்றுவதற்கும்கூட கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட வேண்டிய நிலைமையே தமிழ்நாட்டில் இருந்தது. சட்டமன்றத் தேர்தலை கணக்கில் கொண்டு அந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது.

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவிற்கு நீட் தேர்வு ஒரு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. இதற்கு முதல் காரணம், நீட் தேர்வு, ஒரு போட்டித் தேர்வு என்ற முறையிலேயே நடத்தப்படுகிறது. போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கான பயிற்சியை யாரால் தொடர்ச்சியாக எடுக்க முடிகிறதோ, அவர்களால் மட்டுமே இத்தகைய போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற முடியும்.

படிக்க :

வாட்சப் பல்கலை சாக்கடையில் பிறக்கும் போலி வரலாற்று புழுக்கள் !

புதிய கல்விக் கொள்கையை கமுக்கமாக அனுமதிக்கும் தி.மு.க !

அரசுப் பள்ளி மாணவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் ஏழை எளிய மாணவர்களே. ஆகவே இந்த போட்டித் தேர்வு முறையில் அவர்கள் ஓரங்கட்டப் படுகிறார்கள்.

இரண்டாவதாக, இத்தேர்வுகளில் சி.பி.எஸ்.ஈ பாடத் திட்டத்திலிருந்து கேட்கப்படும் தேர்வுக் கேள்விகள் முக்கியக் காரணமாகின்றன. அரசுப் பள்ளிகளில் உரிய பாடங்களை நடத்துவதற்கே ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும்பட்சத்தில் எங்கிருந்து சி.பி.எஸ்.ஈ பாடத் திட்டத்தை நடத்துவது?

வசதி படைத்தவர்கள், தனியார் பள்ளிகளிலும் பயிற்சி மையங்களில் பணத்தை கொட்டி தமது பிள்ளைகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். ஏழை மாணவர்களுக்கு அரசுப் பள்ளிக்கூடம்தான் ஒரே வழி. ஆனால் இந்த அரசுப் பள்ளிக்கூடங்களின் நிலைமை என்னவாக இருக்கிறது ?

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான் ஆரம்பகால விதி. ஆனால் அந்த விதி தற்போது பின்பற்றப்படுவதில்லை. இந்த விதி ஏற்படுத்தப்பட்ட ஆரம்ப காலங்களில், அரசும் போதுமான ஆசிரியர்களை நியமித்தது.

ஆசிரியர்களும் கல்வியை சேவை மனப்பான்மையோடு அணுகி மாணவர்களுக்கு கல்வி கற்பித்தனர்.  தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் இருந்து பல விஞ்ஞானிகளும் பல்வேறு நிபுணர்களும் மருத்துவர்களும், தொழில்நுட்ப அறிஞர்களும் உருவாகினர்.

இந்த விதி கொண்டுவரப்பட்டு 33 ஆண்டுகளுக்குப் பிறகு அரசாணை எண் 525 (27.12.1997)-ன் படி 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என மாற்றி அமைக்கப்பட்டது. கல்வியில் தனியார்மயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட காலங்களில், திட்டமிட்டு அரசுப் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டன. இதனால் ஆசிரியர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்தது.

அதுவே இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, ஆரம்பப் பள்ளிகளிலும் தொடக்கப்பள்ளிகளிலும் பல இடங்களில் ஒரே ஆசிரியர் 3 முதல் 5 வகுப்புகளுக்கு அனைத்து பாடங்களையும் எடுக்க வேண்டிய அவல நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இது மாணவர்களின் கற்றல் திறனை குறைத்து விட்டது. ஆற்றலில் பின்தங்கிய மாணவர்களின் இடைநிற்றலுக்கு காரணமாக இருக்கிறது. இது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையையும் குறைத்து விட்டது.

கல்வியில் தனியார்மயத்தை கொண்டு வந்த ஆட்சியாளர்கள், அரசுப் பள்ளிகளின் மீதான அக்கறையை அறவே கைவிட்டனர். அதற்கு இதுக்கும் நிதியை சரமாரியாக குறைத்தனர். உலக மேலாதிக்க கந்துவட்டிக்காரனான உலகவங்கியின் உத்தரவின்படி, கல்விக்காக அரசு ஒதுக்கும்  நிதி 6 சதவிகிதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டது.

இதன் காரணமாக அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதற்கும் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதற்குமான நிதி குறைக்கப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டது. போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், அவர்களது கல்வித் திறன் ஒப்பீட்டளவில் குறைந்தது. ஆனால் தனியார் பள்ளிக்கூடங்களில் பணம் கட்டிப் படிக்கும் மாணவர்களுக்கு குறைந்தபட்சம் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு கல்வி பயின்றனர்.

இத்தகைய வேறுபாடும் ஏற்றத்தாழ்வும் ஏற்பட்டதற்கு கல்வி தனியார்மயமாக்கப்பட்டது ஒரு முக்கியக் காரணம். அதோடு, அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, கேந்திர வித்தியாலயா, நவோதயா பள்ளி என பாகுபடுத்தி அரசு நிதி ஒதுக்குவதும், அரசு பள்ளி மாணவர்களிடையே மேலும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியை உண்டாக்குகிறது. அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரமும், சிறப்பு கேந்திரா – நவோதயா பள்ளி மாணவர்களுக்கு பதினோராயிரமும் அரசால் செலவழிக்கப்படுகிறது எனில், இதில் நிலவும் பாகுபாட்டை புரிந்துகொள்ள முடியும்.

தற்போது 2020 – 2021 காலகட்டத்தில் கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார தாக்கம், பல்வேறு நடுத்தரவர்க்க மக்களை அரசுப் பள்ளிகளை நோக்கித் தள்ளியிருக்கிறது. இதனால் இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஆனால் அரசு பள்ளிகளிலோ அதே அளவுக்குத் தான் ஆசிரியர்களின் எண்ணிக்கை நீடிக்கிறது.

ஆசிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்தாமல் தரமான கல்விச் சேவை வழங்குவது என்பது சாத்தியமற்றது. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும் முடியாது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நிதி ஒதுக்காமல், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்காமல், “இல்லம் தேடி கல்வி” என்ற பெயரில் தன்னார்வலர்களை ஈடுபடுத்தி அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றலை மேம்படுத்தப் போவதாக கூறுகிறார், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி.

முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்களே மாணவர்களின் கற்றல் திறனை வளர்ப்பதில் குறைபாடு நீடிக்கும்போது, நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கான கற்றல் திறனை ஆசிரியர்களால் தர இயலாத போது தன்னார்வலர்களால் எப்படி தர முடியும்?

தவிர, இல்லம் தேடி கல்வி என்பது சங்க பரிவாரக் கும்பல் முன்வைத்த புதிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கம் தான் என்பதும், அதன் மூலம் மாணவர்களின் மனதில் தன்னார்வலர்கள் என்ற பெயரில் இந்துத்துவ விசத்தைப் பரப்ப ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு நல்வாய்ப்பாகவே இது அமையும்.

நிலைமை இப்படி இருக்க, “அரசு பள்ளிகளை வறுமையின் அடையாளமாக இல்லாமல் பெருமையின் அடையாளமாக மாற்றுவோம்” என்ற வெற்றுச் சவடால் முழக்கம் வேறு அடித்துக் கொள்கிறார்கள் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள்.  வாயில் வடை சுடுவதில் மோடிக்கு அடுத்தபடியாக தேர்ச்சி அடைந்தவர்கள் இவர்களாகத் தான் இருக்க முடியும்.

அரசுப் பள்ளிகளுக்கு போதுமான ஆசிரியர்களை நியமிப்பது முதல், பெஞ்சு, மேஜை, கட்டிடம், பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பை அரசுதான் உருவாக்க  முடியும். அரசு இதனைச் செய்வதற்கு நிதி ஒதுக்காமலோ, அல்லது அந்த நிதியை வீடு தேடி கல்வி போன்ற திட்டங்களுக்கு மடைமாற்றியோ விடுகிறது.

இருப்பினும் மாணவர்களின் வருகை குறைவைக் காரணம் காட்டி பள்ளிகளை மூடுவதற்கான அரசு தரப்பு சதிகளை முறியடிக்க,  பல்வேறு அர்ப்பணிப்புணர்வு கொண்ட ஆசிரியர்களும் தங்களால் இயன்ற முயற்சியை மேற்கொள்கின்ற்னர். இதனடிப்படையில், சென்னை அம்பத்தூர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், ராமநாதபுரம் திருவொற்றியூர் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், சென்னை மதரஸா பள்ளி ஆசிரியர்கள், புதுக்கோட்டை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என பலரும், புரவலர்கள் மூலம் பெறும் உதவியைக் கொண்டு பள்ளிக்குத் தேவையான பெஞ்ச், மேஜை போன்ற தேவைகளையும், மாணவர்களுக்கான இலவச காலை உணவு உட்பட பல முயற்சிகளின் மூலம், மாணவர்களின் இடைநிற்றலை தடுத்து மேலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கப் போராடி வருகின்றனர்.

படிக்க :

தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் !

மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்

இதை ஏன் அரசால் செய்ய முடியாது ? அரசால் நிச்சயம் செய்ய முடியும். ஆனால் அதைச் செய்வதற்கு எந்த அரசிற்கும் மனமில்லை. காரணம், தனியார்மயம் தாராளமயத்தை நடைமுறைப்படுத்துவதில்  பங்குதாரர்களாக, அது மக்களை அடிக்கும் கொள்ளையின் கூட்டாளிகளாக, அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் மாறிவிட்டனர்.

மீறி, தனியார்மய தாராளமயத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அரசுப் பள்ளி, அரசு மருத்துவமனை என மக்களின் அடிப்படைத் தேவைகளை சேவையாக வழங்கினால், அந்த அரசைக் கலைப்பதற்கும் தயாராக இருக்கிறது ஏகாதிபத்தியங்களும் அதன் அடியாள் நிறுவனங்களும்.

கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை அரசுக் கட்டுப்பாட்டில் எடுத்து சேவையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடினால் மட்டுமே ஏழை மாணவர்கள் கல்வியிலும் வாழ்விலும் உயர்ந்து வர முடியுமே தவிர, அவ்வப்போது நம்மை சமாளிக்க கொடுக்கப்படும் சலுகைகளால் அல்ல.

கதிரவன்