Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 452

பாகிஸ்தான் : பொது அறிவு வினாடி வினா 15

ங்க பரிவாரத்திற்கு எதிராக யார், என்ன பேசினாலும் அவர்களுக்குக் கிடைக்கும் பதில்களில் முதன்மையானது ”பாகிஸ்தானுக்குப் போ” என்பதுதான்.

சங்க பரிவாரத்தின் அட்ராசிட்டி தாங்க முடியாமல், “தேச விரோதி” பட்டமும், “சமூக விரோதி”பட்டமும் பெற்றாலும் பரவாயில்லை என ஒருவேளை நீங்கள் பொங்கியெழ நேர்ந்து, அதன் காரணமாக நீங்கள் சங்க பரிவாரத்தால் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டால்?

பாகிஸ்தானில் வாழ அந்நாட்டைப் பற்றி சிறிதேனும் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா ? இந்த வினாடி வினாவை முயற்சித்துப் பாருங்களேன் !

கேள்விகள்:

பாகிஸ்தான் : பொது அறிவு வினாடி வினா

  1. பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ பெயர் என்ன?
  2. 21 கோடி மக்கள் தொகையைக் கொண்ட பாகிஸ்தான் உலகநாடுகளில் எத்தனையாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு?
  3. பரப்பளவில் 33-வது பெரிய நாடான பாகிஸ்தானின் கடற்கரை நீளம் என்ன?
  4. பாகிஸ்தான் கடற்பரப்பில் கீழ்க்கண்ட கடல் பிரிவுகளில் ஒன்றுக்கு தொடர்பில்லை
  5. கீழ்க்கண்ட நாடுகளில் ஒரு நாடு மட்டும் பாகிஸ்தானின் எல்லையை குறுகிய தூரத்தில் தொடுகிறது!
  6. பாகிஸ்தானின் தலைநகரம் எது?
  7. பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ நிர்வாக மொழி எது? பாகிஸ்தானின் தேசிய மொழி என்பது தனி.
  8. பாகிஸ்தான் மக்கள் தொகையில் 44.7% கொண்ட தேசிய இனம் எது?
  9. பாகிஸ்தான் தன்னை இசுலாமியக் குடியரசாக பிரகடனம் செய்த ஆண்டு எது?
  10. 2017 சென்சஸ் கணக்கீட்டின் படி பாகிஸ்தான் மக்கள் தொகை என்ன?
  11. பாகிஸ்தான் அரசு மற்றும் முசுலீம் மதவெறியின் கொடுமை காரணமாக வங்கதேசம் பிரிந்து சென்ற ஆண்டு எது?
  12. உலக நாடுகளின் நிலையான இராணுவத்தில் பாகிஸ்தான் இராணுவம் எத்தனையாவது பெரிய இராணுவம்?
  13. கீழ்க்கண்டவற்றில் எது தவறு?
  14. பாகிஸ்தானின் தலையான பிரச்சினை எது?
  15. பாகிஸ்தான் எனும் வார்த்தையின் உருது மற்றும் பெர்சிய மொழியின் பொருள் என்ன?
  16. பாகிஸ்தானின் தேசியக் கவிஞர் யார்?
  17. பாகிஸ்தான் மக்கள் அதிகம் அருந்தும் பானம் எது?
  18. பாகிஸ்தானின் தேசிய விளையாட்டு எது?

பதிலளிக்க:

– வினவு செய்திப் பிரிவு

இந்தியாவின் பழங்கால பிரசவக் கொடுமைகள்

இந்திய மாதா – காதரீன் மேயோ

காதரீன் மேயோ எழுதிய இந்திய மாதா என்ற புத்தகம் 1928 இல் வெளியிடப்பட்டது. அமெரிக்கப் பெண்மணியான அவர் இந்தியாவை சுற்றிப் பார்த்து, தான் பார்த்ததையும் , கேட்டதையும் புத்தகமாய் எழுதி வெளியிட்டார். இந்தியத் துணைக்கண்டத்தின் பார்ப்பனிய முகத்தை புத்தகம் தொட்டுக் காட்டியதால் உலகம் அதிர்ச்சியுற்றது. அதில் அப்போது நடப்பில் இருந்த மகப்பேறு முறைகள் குறித்து அறியும் போது யாராலும் அதிர்ச்சியுறாமல் இருக்க முடியாது.

1. பிரசவம் என்பது ஒரு தீட்டு சம்பந்தப்பட்ட நிகழ்வு. வழக்கம் போல தீட்டால் ஏற்படும் கொடுமைகள் அனைத்தும் நடந்தன.

2. பிரசவம் பார்ப்பது மருத்துவச்சி என்ற ஒரு தனி சாதி பெண்கள். தீண்டப்படாத சாதியினர்.

3. பிரசவம் ஒரு தீட்டான நிகழ்வாய் இருப்பதால், அது ஒரு தனியான, ஒதுக்குப்புறமான, உபயோகமற்ற, வெளிச்சமும் காற்று வசதியும் அற்ற ஒரு அறையில் தான் நடக்கும். தீட்டு காரணமாய் பெரும்பாலும் பழைய அழுக்கான துணிகளே பயன்படுத்தப்படும்.

4. பிரசவம் பார்க்கும் மருத்துவச்சிகள் பாரம்பரியமாக தாங்கள் கேள்விப்பட்ட முறைகளையும், அப்போது தங்களுக்கு உதிக்கும் திடீர் யோசனைகளையும் பயன்படுத்தியே பிரசவம் பார்த்தனர்.

5. வலி வந்து நேரமாகி விட்டால் தங்கள் கைகளை உள்ளே விட்டு சிசுவின் கையோ காலோ எது கிடைக்கிறதோ அதைப் பிடித்து வெளியில் இழுப்பர். ஒருவரால் முடியாவிட்டால் இரண்டு மருத்துவச்சிகள் முயல்வர். நிச்சயம் இரண்டு உயிர்களில் ஏதாவது ஒன்றாவது போய் விடும்.

6. வலி வந்து தாமதமாகி விட்டால் பெண்ணை சுவர் ஓரமாய் நிறுத்தி வைத்து மருத்துவச்சி ஓடி வந்து பெண்ணின் வயிற்றில் முட்டுவர். அல்லது கைகளால் குத்துவர்.

காதரீன் மேயோ

7. பிரசவம் முடியும் வரையிலும் பெண்ணுக்கு எந்த ஆகாரமும் இல்லை. வலி நான்கு நாட்கள் இருந்தாலும் ஆகாரம் இல்லை.

8. பிரசவம் சீக்கிரம் நடக்க தேளைக் கொண்டு கொட்ட விடுவது, பாம்புத் தோலைக் காட்டி பயப்படுத்துவது போன்ற கொடுமைகளும் நடந்துள்ளன. சில சமயங்களில் பெண்ணை தலைகீழாக குலுக்குவதும் உண்டு.

9. தீட்டு காரணமாய் பிரசவம் அன்னியர் கண் படாமல் இருட்டறையில் ஒரு மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தான் நடக்கும். மூடிய அறையில் புகை நிறைந்திருக்கும் சமயத்தில் அன்னியர் யாராவது பார்த்து விட்டார்கள் என்ற சந்தேகம் எழுந்தால் மருத்துவச்சி உடனே சில துர்நாற்றம் தரும் புகையை உண்டாக்குவாள். துர்நாற்றம் தீட்டை போக்கி விடும்.

10. பிரசவத்தில் பெண்ணின் உயிர் போய் விடும் என்ற சந்தேகம் வந்தால் அந்த பெண்ணின் கண்களில் மிளகாய் தூள் நிரப்பப்படும். இறந்த பின் அவள் பேயாக மாறி வழி கண்டுபிடித்து வந்து பழி வாங்கலைத் தடுக்கவே இந்த முறை.

11. அதே போன்று பேயாய் மாறி பழி வாங்கலைத் தடுக்க பெண்ணின் கைகளை தரையில் வைத்து ஆணியடித்தலும் உண்டு. சற்று பிழைக்க வாய்ப்புள்ள பெண்களும் இதனால் இறந்து போயிருப்பார்.

12. தொப்புள் கொடி அறுக்க இரும்புத் தகடோ, கண்ணாடித் துண்டோ , மூங்கில் கழியோ உபயோகப் படுத்தப்படும்.

காதரீன் மேயோ எழுதிய இந்திய மாதா நூல்.

13. அறுபட்ட தொப்புள் மீது சாம்பலோ, சாணியோ, மண்ணோ தடவப்படும்.

மருத்துவம் வளர்ச்சியுறாத காலத்தில் உலகம் முழுதும் பிரசவங்கள் பாதுகாப்பாய் நடந்திருக்க வாய்ப்பில்லை. அரை குறை வைத்தியங்களே நடந்திருக்கும். ஆனால் இந்தியாவில் பிரசவம் ஒரு தீட்டு சம்பந்தப்பட்ட நிகழ்வாய் இருந்ததால் உலகில் எந்த பகுதியிலும் அனுபவிக்காத கொடுமைகளை இங்கே பெண்கள் அனுபவித்துள்ளனர்.

இதில் தீட்டு இல்லாதிருந்திருந்தால், சமூகத்தின் பொது அக்கறை இதில் இருந்திருக்கும். குறைந்தபட்சம் ஒரு வெளிச்சமுள்ள காற்றோட்டமுள்ள இடத்திலாவது பிரசவம் நடக்க வேண்டும் என்ற அறிவாவது பெற்றிருப்பர். தீட்டு பிரசவம் குறித்த ஒரு பொது அறிவை வளர விடாமல் தடுத்துவிட்டது.

சாதியத்தையும், பார்ப்பனியத்தையும், தீட்டையும், இந்து மதத்தையும் பிரித்துப் பார்ப்பது முடியாத ஒன்று.

– மூன்று வருடங்கள் முன்பு எழுதியது.

எங்கள் குடும்பங்களில் பிரசவித்த பெண்ணுக்கு தண்ணீர் தர மாட்டார்கள்.

தாகம் எடுத்து உயிர் போவதாய் இருந்தாலும் தர மாட்டார்கள். ஒரு கால் டம்ளர் தண்ணீர் மட்டும் போனால் போகிறதென்று தருவார்கள். இந்த பத்தியம் இரண்டு வாரங்களுக்கு இருக்கும். சுத்தமற்ற தண்ணீர் குடித்தால் நோய் வரும் என்பதற்காக ஆரம்பத்தில் தவிர்த்திருப்பார்களோ என்னவோ. ஆனால் கடைசியில் அது ஒரு சடங்காகவோ கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய ஒன்றாகவோ மாறி விட்டது .

முதல் குழந்தை பெற்ற போது ( 90 களில் ) தண்ணீர் தாகத்தால் என் பெரிய அக்கா பட்ட துன்பத்தை நேரில் பார்த்திருக்கிறேன். முதல் இரண்டு வாரங்கள். மிகப் பெரிய அவஸ்தை. ஒரு நாளைக்கு மீறிப் போனால் ஒரு டம்ளர் தண்ணீர் தான் கிடைக்கும்.

நாட்கள் கழிந்த பின் அவளிடம் மெதுவாய் கேட்டேன், எப்படி சமாளித்தாய் என்று. அம்மா குளிக்க வைக்கும் போது தலையோடு தண்ணீர் ஊற்றுவாள். அப்போது அதில் கொஞ்சம் தெரியாமல் குடித்துக் கொள்வேன் என்று சொன்னாள்.

நன்றி: ஃபேஸ்புக்கில் – துணைத் தளபதி மார்கோஸ்

தருமபுரி : பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியாதான் முதலிடம். பெண்கள் மீதான குற்றங்களுக்கு வேடிக்கை பார்க்காமல் ஒன்றுபட்டு போராடுவோம்! என்ற கோரிக்கைகளோடு, பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரத் தாக்குதலுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம், பெண்கள் விடுதலை முன்னணியின் சார்பில் கடந்த 04.08.2018 அன்று, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் டெம்போ நிறுத்தம் அருகில் நடைபெற்றது.

தோழர் பழனியம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் ஜானகிராமன் ஆகியோர் பங்கேற்று உரை யாற்றினர்.

முன்னணியாளர்கள் தமது உரையில், ”காஷ்மீரில் 8 வயது ஆசிபா , அயனாவரத்தில் 11 வயது சிறுமி, புதுக்கோட்டையில் 17 வயது சிறுமி, அரியானாவில் வேலை கேட்டு சென்ற இளம்பெண் என சிறுமிகளையும், பெண்களையும் 10, 20, 40 பேர் சேர்ந்து குதறும் கொடூரம் தினந்தோறும் நடக்கிறது. செய்திகளைக் கேட்டாலே நெஞ்சம் பதறுகிறது.

எந்த மிருகமும் கூட்டு வல்லுறவில் ஈடுபடுவதில்லை. அவற்றை விடவும் மோசமானவனாக மனிதன் தாழ்ந்து போகக் காரணம் என்ன? 20 வயது கூட நிரம்பாத இளைஞனும், 60 வயதைத் தாண்டிய கிழவனும் சேர்ந்து சூறையாடுகிறார்களே யார் இவர்கள்? ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? எந்தக் கேள்விக்கும் பதில் தேடாமல், குழந்தைகளையும், பெற்றவர்களையும் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி விளம்பரம் போடுவது அயோக்கியத் தனமில்லையா?

பெண்கள் வாழத்தகுதியற்ற நாடுகளில் இந்தியா தான் முதலிடம் என்பதற்கு இந்த சம்பவங்களை விட வேறு சாட்சி என்ன வேண்டும்? எச்ச ராஜா கும்பல் இது பற்றி வாய் திறக்க மறுப்பது ஏன்? கோவிலுக்குள் வைத்து வல்லுறவு செய்யும் இந்துமத வெறியர்கள், பாவமன்னிப்பு கேட்க சென்ற பெண்ணைச் சீரழிக்கும் பாதிரிகள், ஒடுக்கப்பட்ட பெண்களைச் சூறையாடும் ஆதிக்க சாதிவெறிக் கும்பல் என ஆணாதிக்க, காமவெறி நிரம்பி வழியும் மூளைகளைத்தான் சாதி, மதங்கள் உருவாக்கி வருகின்றன. பெண்கள் என்றாலே நுகர்ந்து தள்ள வேண்டிய இன்பம் தரும் பண்டம் என்ற வெறியை உருவாக்கும் இன்டர்நெட், ஸ்மார்ட் போன் வடிவத்தில் சனியன் சட்டைப்பையில் உட்கார்ந்திருக்கிறது.

ஆபாசச் சீரழிவுகளைத் தடுக்க மறுக்கும் அரசிடம், சாராயக் கடைகளை நடத்தும் அரசிடம் கெஞ்சிக் கூத்தாடினால் என்ன நடக்கும்? வீதி, வீதிக்கு, வாசலுக்கு வாசல் சி.சி.டி.வி. கேமரா வைக்கச் சொல்லுவான்.

வீதியில் கேமரா வைப்பதால் சிந்தனை சீரழிவதைத் தடுக்க முடியுமா? கேப்பையில் நெய் வடிகிறது என்பதை நம்பும் கேனைகளாக எத்தனை நாட்களுக்கு இருக்கப் போகிறோம்? சாராய போதையில் தன்னை மறந்து, இண்டர்நெட் காம வெறியில் திளைத்து சமூகத்தின் கேடுகளாக மாறுவது நின்றுவிட்டால், எல்லாரும் சிந்திக்க ஆரம்பித்தால் என்ன நடக்கும்? கார்ப்பரேட் கம்பெனிகள் அடிக்கும் கொள்ளையை, காவிக்கூட்டம் நடத்தும் கலவரங்களைக் கேள்வி கேட்கும் திறன் மக்களின் மூளைகளுக்கு வந்துவிடும். அப்படி நடந்து விடாமல் தடுக்கத்தான் எல்லா அசிங்கங்களையும் அரசே பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.

பெண்களை இழிவுபடுத்தி சிதைக்கும் ஆணாதிக்கத்தை, பாலியல் வக்கிரத்தை உருவாக்கிப் பரப்பும் சாதி – மத பிற்போக்கினையும், நுகர்வு வெறியை – காமவெறியைத் தாண்டிவிடும் ஆபாசக் குப்பைகளையும் ஒழிக்காமல், எந்த வீட்டிலும் தாய், மகள், மனைவி, சகோதரி என யாரையும் பாதுகாக்க முடியாது. வலுவான சட்டம், கடுமையான தண்டனை எதுவும் நிரந்தரத் தீர்வாகாது என்பதை உணர்வோம்!

பிற்போக்கு, ஆபாசக் குப்பைகளை ஒழித்து, பெண்ணை சக மனுசியாக மதிக்கும் புதிய வகைப்பட்ட, சமத்துவமான பண்பாட்டை உருவாக்க, அனைவரும் போராட்டக்களத்தில் கரம் கோர்ப்போம்! பல இலட்சம் பேர் கூடிய மெரீனா போராட்டத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். பல மாதம், வருடம் என்று நீண்ட எல்லாப் போராட்டங்களிலும் பெண்கள் பாதுகாப்பாகவே இருந்தார்கள். ஆம், போராட்டங்களே பெண்களை, சமூகத்தைப் பாதுகாக்கும். வாருங்கள் போராடுவோம்!” என அறைகூவல் விடுத்தனர்.

தகவல் :
பெண்கள் விடுதலை முன்னணி, தமிழ்நாடு.

நூல் அறிமுகம் : சம்பிரதாயங்கள் சரியா ?

ர்த்தம் தெரியாமல் இந்த உலகத்தில் பல காரியங்களை நாம் செய்து கொண்டிருக்கிறோம். அர்த்தம் இல்லாமலும் பல காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறோம்.

பூனை குறுக்கே வந்துவிட்டது என்பதற்காக புறப்பட்ட பயணத்தைத் தள்ளி வைக்கிறவர்கள் உண்டு. பல்லி விழுந்து விட்டது என்பதற்காக பஞ்சாங்கத்தைப் புரட்டிக் கொண்டிருக்கிறவர்கள் உண்டு.

பகுத்தறிவு சிந்தித்துச் செயல்பட வைக்கும். என்ன செய்கிறோம் என்பதை தெளிய வைக்கும். ஏன் செய்கிறோம் என்பதையும் புரிய வைக்கும்.

அளவுக்கு மீறின சகுன நம்பிக்கைகள் இருக்கிறது பாருங்கள்… அதோடு பயமும் சேர்ந்து கொள்ளுமானால் அவ்வளவுதான். மனிதனின் மனநிலை பாதிக்கப்படும். இது மனவியல் நிபுணர்களின் கருத்து.

ஒருத்தருக்கு ஏழாம் நம்பர்தான் ராசியான நம்பராம். ஏழாம் தேதிதான் எந்தக் காரியத்தையும் ஆரம்பிப்பார். ஏழு எழுத்து வருகிற மாதிரி பெயரை மாற்றி வைத்துக் கொண்டார். ஏழு மணிக்குத்தான் தினமும் எழுந்திருப்பார். ஏழாம் நம்பர் வீட்டில்தான் குடியிருப்பார். கல்யாணம்கூட ஏழாம் தேதிதான் பண்ணிக் கொண்டார்.

அவர் ஒருநாள் குதிரைப் பந்தயத்துக்குப் போனார். குதிரைகளின் பெயரையெல்லாம் பார்த்தார். ஒரு குதிரையின் பெயர் ஏழு எழுத்தில் இருந்தது. ஏழுதானே இவருக்கு அதிர்ஷ்ட நம்பர். அதனால் உடனே அந்தக் குதிரையின் மேல் பணத்தைக் கட்டினார். பந்தயம் நடந்தது. அவர் சொன்னார் சோகமாக: நான் பணம் கட்டின அந்தக் குதிரை ஏழாவதா வந்து சேர்ந்தது!

இப்படி சகுணங்களும், மூட நம்பிக்கைகளும், சம்பிரதாயங்களும் நம்மைக் கோமாளிகளாக்கி விடுகின்றன. அப்படி ஆகிவிடக் கூடாது என்கிற நல்லெண்ணத்தில் அருமை நண்பர் மஞ்சை வசந்தன் அவர்கள் சம்பிரதாயங்கள் பற்றி அரிய செய்திகள் பலவற்றை இந்த நூலிலே ஆய்வு செய்து தந்திருக்கிறார்.       – தென்கச்சி கோ. சுவாமிநாதன்

செவ்வாய், வெள்ளி, புதன், சனி கிழமைகளின் எண்ணெய்த் தேய்க்கும் சம்பிரதாயத்தில் தொடங்கி, ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு விளக்கு செல்வது வரை 100 வாழ்வியல் நடப்புகளை அக்குவேறு ஆணிவேராகப் பிய்த்து எடுக்கிறார் நூலாசிரியர். மரத்துப் போய்விட்ட மனிதத் தோல்களுக்கு தகுந்த தார்க்குச்சிகளும் இதில் உண்டு.
– கலி.பூங்குன்றன்

முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக அதை அப்படியே ஏற்றுக்கொள்வதும் தவறு; முன்னோர்கள் சொன்னவை அனைத்தும் மூடத்தனமானவை என்று ஏற்றி எறிவதும் தவறு. எதையும் ஏன் என்று ஆராய்ந்து சரியென்றால் மட்டும் ஏற்க வேண்டும் என்பதே அறிவிற்கு அழகு.  மரபுவழியாக எவ்வளவோ செயல்களைக் காரணம் புரியாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றி வருகிறார்கள். சரியா? தேவையா? பயன் என்ன? பாதிப்பு என்ன? என்பதை ஆராய்வது இல்லை.

‘முன்னோர்கள் செய்தார்கள் நாமும் செய்ய வேண்டும்.’ முடிவு எளிதாகிவிடுகிறது. அம்முடிவின்படி பொருள் விரையம், பொழுது விரையம், உழைப்பு விரையம் என்பதையெல்லாங்கூட பொருட்படுத்தாமல் எப்படியும் செய்து முடிக்கின்றனர். காரணம் புரியாமல் கடமையாகச் செய்யப்படுவதால், அது அர்த்தமற்ற சடங்காக மட்டுமே அமைந்து போகிறது. பல பயித்தியக்காரச் செயல்களாகக் கூட பரிணாமம் பெற்று விடுகின்றன.
– மஞ்சை வசந்தன்

***

பார்ப்பன இந்துமதம் உருவாக்கி வளர்த்த சம்பிரதாயம், சடங்குகளும், தற்போது, ஹீலர் பாஸ்கர் வகையறாக்கள் பரப்பிவரும் இலுமினாட்டி சதிக்கருத்துகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டும் மூடநம்பிக்கைகள் என்ற வகைப்படுத்தலில் ஒன்று சேர்கின்றன.

மரபுவழியாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த பழக்கவழக்கங்களே மிகவும் சரியானதென்றும்; நவீன அறிவியலை மறுதலித்து, இயற்கைக்குத் திரும்புதல் என்ற பெயரில் ஹீலர் பாஸ்கர் மற்றும் பாரிசாலன் வகையறாக்கள் வைக்கின்ற வியாக்யானங்கள் அபத்தமானவை என்பதை புரிந்துகொள்வதற்கும் இந்நூல் உதவி புரியும்.

இன்றும் நம் மக்கள் அன்றாட வேலை தொட்டு, குடியிருக்கும் வீடு வரை எண்ணிறந்த முட்டாள்தனங்களை பின்பற்றி வருகின்றனர். அதற்காகவே பெரும் பணத்தையும் செலவழிக்கின்றனர். இவற்றை எதிர்த்தும், அம்பலப்படுத்தியும் மக்களிடையே பிரச்சாரம் செய்து  விழிப்பூட்டுவதற்கும் இந்நூல் உதவும்.

  • வினவு செய்திப் பிரிவு

நூல்: சம்பிரதாயங்கள் சரியா
ஆசிரியர்: மஞ்சை வசந்தன்

வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,
பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை – 600 007. பேச: 044 – 2661 8161.

பக்கங்கள்: 114
விலை: ரூ.70

சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)

மோடியின் மன் கி பாத் – செட்டப்பை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் வேலை நீக்கம் !

3
ராஜினாமா செய்த பத்திரிகையாளர்கள்: (இடமிருந்து) மிலிந்த் கொண்டேகர், புன்ய பிரசுன் பாஜ்பாய் மற்றும் அபிசார் சர்மா.

மிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி ஊடக முதலாளிகளும், பத்திரிகையாளர்களும் நரேந்திர மோடியுடன் ஒரு ரகசிய சந்திப்பை நிகழ்த்திவிட்டு திரும்பியிருக்கின்றனர்.

‘முதல்வர், ஆளுநர், பிரதமர் போன்றோரை பத்திரிகையாளர்கள் இப்படி சந்திப்பது நடைமுறையில் இருப்பதுதான். சமீபத்தில் கூட தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தை சில பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். அது ஒன்றும் பிரஸ் மீட் அல்ல. அதிகாரப்பூர்வமற்ற சந்திப்புதான். பிரதமர் உடனான சந்திப்பும் அத்தகையதே’ என்று டெல்லி சென்று வந்த பத்திரிகையாளர்கள் சொல்லி வருகின்றனர்.

இது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு என்றால், புகைப்படங்கள் வெளியானது எப்படி? அதிகாரப்பூர்வமான சந்திப்பு என்றால், புகைப்படங்களை பிரதமர் அலுவலக அமைச்சகம் வெளியிடாமல், பா.ஜ.க-வினர் வழியாக ரகசியமாக பகிரப்படுவது எதனால்? மேலும், பிரதமருடன் பத்திரிகையாளர்கள் ‘அதிகாரப்பூர்வமற்ற’ வகையில் பேசுவதற்கு என்ன இருக்கிறது? ட்விட்டரில் யாராவது தங்களை பாராட்டினால் கூட அதை பகிர்ந்து பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழ் பத்திரிகையாளர்கள், பிரதமரை சந்தித்ததைப் பற்றி ஏன் ஒரு வரி கூட எழுதவில்லை? ஏன் ஒரு புகைப்படத்தைக் கூட வெளியிடவில்லை? ஊடக முதலாளிகள் கூட, பிரதமர் உடனான சந்திப்பு குறித்து தத்தமது ஊடகங்களில் புகைப்படம் வெளியிட்டுக் கொள்ளாதது ஏன்?

ஆகவே, இந்த சந்திப்பில் வெளிப்படையாக என்ன பேசப்பட்டது என்பதற்கு அப்பால், தமிழக ஊடக மனநிலையை தங்களுக்கு இசைவாக மாற்றி அமைக்கும் மறைமுகமான நோக்கம் இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால், ‘பிரதமரே கூப்பிட்டுவிட்டார்’ என்று நினைக்கலாம். மோடி என்ன மோடுமுட்டியா? இந்த சந்திப்பை எப்படி அறுவடை செய்து கொள்ள வேண்டும்? இதன் விளைவு என்னவாக இருக்க வேண்டும் என்பதை திட்டமிடாமலா நாடாளுமன்ற கட்டடத்துக்கு அழைத்து ராஜ உபசாரம் செய்வார்?

பொதுவாக ‘தமிழ்நாடு வட இந்தியா போல் அல்ல… நாங்கல்லாம் வேற மாதிரி’ என்ற பெருமிதம் இங்கே பலருக்கு இருக்கிறது. ஆனால் ஊடகத் துறையை பொருத்தவரை வட இந்தியாவில் ஒலிக்கும் குரல்கள் நம்பிக்கை தருவதாக இருக்கின்றன. அப்படி மோடி அரசின் பொய்களுக்கு எதிராக உண்மைகளை வெளிக்கொண்டு வந்த மூன்று பத்திரிகையாளர்கள் இப்போது வேலை இழப்புக்கு ஆளாகியிருக்கின்றனர்.

ABP News Network (கொல்கத்தாவைச் சேர்ந்த ஆனந்த பஜார் நிறுவனத்தின் டி.வி) நிர்வாக ஆசிரியர் மிலிந்த் கொண்டேகர், அதே தொலைக்காட்சியின் மூத்த மற்றும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நெறியாளர் புன்ய பிரசுன் பாஜ்பாய் ஆகியோர் ராஜினாமா செய்திருக்கின்றனர்.  மற்றொரு நெறியாளர் அபிசார் சர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டிருக்கிறார். என்ன நடந்தது?

ஜூன் 20

மோடி நடத்தும் மன் கி பாத் நிகழ்ச்சி. சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சில விவசாயிகள் அதில் பங்கேற்றனர். அதில் சந்திரமணி கவுசிக் என்ற பெண்ணும் ஒருவர். ‘’நான் என்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டுக் கொண்டிருந்தபோது 15 ஆயிரத்தில் 20 ஆயிரம் ரூபாய் எனக்கு கிடைக்கும். அது எதற்குமே போதாது. பிறகு எங்கள் கிராமத்தை சேர்ந்த சில பெண்கள் ஒன்று சேர்ந்து சீத்தாப்பழம் பயிரிட்டோம். அதில் முன்பு கிடைத்ததை விட இரண்டு மடங்கு வருமானம் கிடைத்தது’’ என்று பேசினார்.

ஜூலை 8

ஏ.பி.பி. நியூஸ் தொலைக்காட்சியில் நாள்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் பிரைம் டைம் நிகழ்ச்சி, ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’. இதன் நெறியாளர் புன்ய பிரசுன் பாஜ்பாய். இந்நிகழ்ச்சியில், நெல் பயிரில் இருந்து சீத்தாப்பழ விவசாயத்துக்கு மாறிய பிறகு தன் வருமானம் இரட்டிப்பாகி விட்டது என்று பேசும்படி தனக்கு அதிகாரிகள் பயிற்சி அளித்ததாக சந்திரமணி கவுசிக் ஏ.பி.பி. செய்தி தொலைக்காட்சிக்கு பேசியிருந்தார். இதை வைத்து அன்றைய நிகழ்ச்சியை நடத்தினார் பாஜ்பாய்.

ஜூலை 9

மோடி அரசின் பொய், பித்தலாட்டம் அம்பலமாவது இது முதல்முறையல்ல என்றாலும், ‘இவ்வளவு அற்பமான பொய்களையும் சொல்லக்கூடியவர்கள்’ என்ற வகையில் இது இந்தி பேசும் மாநிலங்களில் பரபரப்பானது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த விவாதத்தின் இணைப்பை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டதும் இது மேலும் சூடு பிடித்தது.

‘’அந்தப் பெண் ஒரு பெட்டி நிறைய சீத்தாப் பழங்களை கொண்டு வந்தது கேமராவில் பதிவாகியிருக்கிறது. பிறகு ஏன் இப்படி ஊடகம் முழு பொய் சொல்கிறது?” என்று கொதித்தார் நிர்மலா சீத்தாராமன். குற்றச்சாட்டையே பதிலாக சொல்லும் இந்த மேதமை பா.ஜ.க.வினரின் அடிப்படைப் பண்பு.

ஆனால் வழக்கம்போல் பா.ஜ.க. அமைச்சர்கள் இதை கடுமையாக மறுத்தார்கள். ‘’அந்தப் பெண் ஒரு பெட்டி நிறைய சீத்தாப் பழங்களை கொண்டு வந்தது கேமராவில் பதிவாகியிருக்கிறது. பிறகு ஏன் இப்படி ஊடகம் முழு பொய் சொல்கிறது?” என்று கொதித்தார் நிர்மலா சீத்தாராமன். குற்றச்சாட்டையே பதிலாக சொல்லும் இந்த மேதமை பா.ஜ.க.வினரின் அடிப்படைப் பண்பு. தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர்  ’’எதிர்க்கட்சிகளின் பொய்யான அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஊடகங்கள் ஒத்து ஊதுவது அவமானம்” என்று பொங்கினார்.

ஜூலை 10

அமைச்சர்களின் இந்த அதிரடிக்குப் பிறகு ஏ.பி.பி. நியூஸ் மீண்டும் தன்னுடைய செய்தியாளரை சந்திரமணி கவுசிக்கின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது. அவர் பயிற்சி அளித்து பேச வைக்கப்பட்டார் என்பதை கிராமவாசிகளின் பேட்டிகள் மற்றும் வருமானம் இரட்டிப்பு பொய் குறித்த புள்ளி விவரங்களுடன் மீண்டும் ஒரு செய்தித் தொகுப்பை ஒளிபரப்பியது. ’’நாங்கள் பொய் செய்தி வெளியிட்டதாக கூறுவோருக்கு இதுவே எங்கள் பதில்” என்று அந்த செய்தித் தொகுப்பின் இணைப்பை பகிர்ந்து கொண்டது. இதன்பிறகு வெறிப்பிடித்ததுபோல் மாறியது பா.ஜ.க. கும்பல். ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் சமயத்தில் ஏ.பி.பி. நியூஸ் நெட்வொர்க்கின் ட்விட்டர் அக்கவுண்ட் முடக்கப்பட்டது. அந்நிகழ்ச்சி வரும் நேரத்தில் டி.வி. திரை கருப்பானது.

‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் சமயத்தில் ஏ.பி.பி. நியூஸ் நெட்வொர்க் முடக்கப்பட்டது.

ஜூலை 17

’செயற்கைக்கோள் வழியே ஒளிபரப்பாகும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியையே தொந்தரவு செய்யும் அளவுக்கு வலிமைப்படைத்தவர்களுக்கு நன்றி” என்று ட்விட் செய்தார் பாஜ்பாய். ஆனாலும் தொலைக்காட்சி திரை கறுப்பாக மாறுவது  நிற்கவில்லை.

ஜூலை 23

பாஜ்பாயின் இந்த ட்விட் அரசியலும், கவித்துவமும் நிறைந்தது.

‘’நீங்கள் தொலைக்காட்சி திரையை கறுப்பாக்குங்கள். ஆனால், நாங்கள் அதை ஒரு கரும்பலகையாக்கி, அதிகாரத்துக்கு எதிரான உண்மையை எழுதுவோம்”

ஜூலை 30

‘தி பிரிண்ட்’ இணையதள பத்திரிகையாளர் குமார் அன்சுமன், ‘’ ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ நிகழ்ச்சியை தடுக்கிறார்கள் என்ற செய்தியை ஆரம்பத்தில் நான் நம்பவில்லை. இதோ ஆதாரம். இதற்கு ‘டாடா ஸ்கை’ நிறுவனத்தின் பதில் என்ன?” என்று கேட்டு‘டாடா ஸ்கை’ நிறுவனத்தை டேக் செய்தார். பலர் இதை பின்பற்றி எழுதினார்கள். இதற்குப் பதில் அளித்த டாடா ஸ்கை ‘’எங்கள் தரப்பில் பிரச்னை இல்லை. ஏ.பி.பி. நியூஸின் ஒளிபரப்பு பிரிவில் ஏதேனும் சிக்கல் இருக்கக்கூடும்” என்று பதில் சொன்னது. ஏர்டெல் டி.டி.ஹெச். சேவையை டேக் செய்து கேட்கப்பட்ட இதே கேள்விக்கும் அந்நிறுவனம் இதே பதிலைதான் சொன்னது.

‘’நீங்கள் தொலைக்காட்சி திரையை கறுப்பாக்குங்கள். ஆனால், நாங்கள் அதை ஒரு கரும்பலகையாக்கி, அதிகாரத்துக்கு எதிரான உண்மையை எழுதுவோம்”

ஆகஸ்ட் 2

ராஜ்தீப் சர்தேசாய், ‘’கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் டி.வி. திரை மின்னல் அடித்தது போல வந்து வந்து போகிறது அல்லது முழுவதுமாக கருப்பாகிறது. அரசு அதிகாரத்தை ஊடகங்களை ஒடுக்குவதற்கு பயன்படுத்தும் இந்த போக்கு மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இதுகுறித்து வாய்திறந்து பேச ஒருவரும் தயார் இல்லை – ஏ.பி.பி. நியூஸ் சேனல் தரப்பிலும் கூட” என்று ட்விட் செய்தார்.

இதே நாளில்தான் ஏ.பி.பி. நியூஸ் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர் மிலிந்த் கொண்டேகர், தனது 14 ஆண்டு கால பணியில் இருந்து ராஜினாமா செய்தார். அடுத்த நாள் நெறியாளர் புன்ய பிரசுன் பாஜ்பாய் ராஜினாமா செய்தார். அபிசார் சர்மா என்ற மற்றொரு பத்திரிகையாளர் நீண்ட விடுப்பில் அனுப்பப்பட்டார்.

இதில் அபிசார் சர்மா எங்கிருந்து வந்தார்? அவர் என்ன செய்தார்?

ஜூலை 30

ஏ.பி.பி. தொலைக்காட்சியின் மற்றொரு நெறியாளர் அபிசார் சர்மா ’ஆஜ் கி படி கபர்’ என்ற தன்னுடைய விவாத நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார். ஜூலை 29-ஆம் தேதி உ.பி. மாநிலம் சுல்தான்பூரில் கூட்டம் நிறைந்த ஓர் உணவகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்து ஒருவர் 3 பேரை சுட்டுவிட்டார். அன்றைய நாளில் நரேந்திரமோடி உ.பி-யில்தான் இருந்தார். ’’உ.பி.யின் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவது குறித்து மோடி பேசுகிறார். பல்லாயிரம் கோடி முதலீடுகள் பற்றி பேசுகிறார். ஆனால், அவர் இதை பேசிக்கொண்டிருக்கும் போதுதான், அதே உ.பி.யில் பட்டப்பகலில் சுல்தான்பூரில் ஒரு ஹோட்டலில் துப்பாக்கி சூடு நடந்து மூன்று பேர் சுடப்பட்டார்கள்” என்று தன் நிகழ்ச்சியில் பேசினார் அபிசேக்.

உடனே, ஏ.பி.பி. தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக இயக்குனர் அடிதிப் சர்க்கார்  கடும் கோபத்துடன் தன் அறையில் இருந்து வெளியில்  வந்தார். ’’சுல்தான்பூர் துப்பாக்கிச் சூட்டுக்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம்? உடனே நிகழ்ச்சியில் இருந்து அபிசார் சர்மா வெளியேற்றப்பட வேண்டும்” என்று செய்தித் தளத்தில் நின்றபடி கத்தினார். ’’லைவ் நிகழ்ச்சியில் இருந்து நெறியாளரை வெளியேற்ற இயலாது” என அவரிடம் மிலிந்த் கொண்டேகர் போராடி அழைத்துச் சென்றார்.

இதன்பிறகு மிலிந்த் கொண்டேகருக்கு அழுத்தம் மேலும் அதிகமானது. புன்ய பிரசுன் பாஜ்பாய், அபிசார் சர்மா ஆகிய இருவரையும் வேலையை விட்டு நீக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது. ஆனால், இதற்கு  மிலிந்த் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக அவர் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பாஜ்பாய் ராஜினாமா செய்தார். அபிசார் சர்மா நீண்ட விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார்.

ஜூலை 31

டெல்லி இந்தி அகாடமி என்ற அமைப்பு தன்னை இந்த ஆண்டின் சிறந்த பத்திரிகையாளர் என கௌரவப்படுத்திருக்கிறது என்பதை எழுதிய அபிசார் சர்மா, அந்த அமைப்புக்கு தான் எழுதிய பதிலையும் வெளியிட்டார்.

‘’என்னுடைய பார்வையில் இதழியல் என்பது ஒரு தரப்புதான். ஆம்… அது எதிர்த்தரப்பு. அதிகாரத்துக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும் இடையிலான இந்த சண்டையில் நடுநிலை என்பது பொருளற்றது. அதிகாரத்தில் இருப்பவர்கள் கேள்வி கேட்கப்பட வேண்டும். பதில் சொல்லும் கடமை அவர்களுக்கு இருக்கிறது. கேள்விகளுக்கு அஞ்சுகிற; கேள்வி கேட்போரின் குரல்களை ஒடுக்குற நபர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது நடுநிலை என்பது கேலிக்கூத்தானது. இந்தச் சூழலில் நடுநிலையாக செயல்பட்டால், அது பலவீனமானவர்களை மேலும் பலவீனப்படுத்தி, வலிமையானவர்கள் தப்பிக்க வழிவகுக்கும். ஊடகங்களை ஒழித்துக்கட்ட கங்கனம் கட்டிக்கொண்டு திரியும் ஓர் அரசு அதிகாரத்தில் இருக்கும் இந்நாட்களில் என்னுடைய கருத்து மேலும் பொருத்தமானதாக இருக்கிறது. அதிகாரம் என்பது பொறுப்புணர்வுடன் இணைந்திருக்க வேண்டியது என்பதை அதிகாரத்தில் உள்ளோர் உணர்ந்துகொள்ள வேண்டும்”

.பி.பி. – ஆனந்த பஜார் பத்திரிகை குழுமத்தை சேர்ந்த தொலைக்காட்சி. ஆனந்த பஜார், முன்னணி பெங்காலி நாளிதழ். இதே குழுமத்தில் இருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிகையான ‘தி டெலிகிராஃப்’, மோடி அரசின் மீது கூர்மையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறது. ஏ.பி.பி. தொலைக்காட்சிக்கு இப்படி ஒரு இமேஜ் இல்லை என்றபோதிலும், பா.ஜ.க.வினர், ஊடகங்களை தங்கள் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம். கௌரி லங்கேஷ் படுகொலைக்கு முன்பே இந்த ஊடகத் தணிக்கை தொடங்கிவிட்ட நிலையில், தேர்தல் நெருங்கிவரும் வேளையில் மனநோயாளியின் பதற்றத்துடன் ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கிறது மோடி அரசு.

மனநோயாளியின் பதற்றத்துடன் ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கிறது மோடி அரசு.

ஏ.பி.பி. தொலைக்காட்சியின் மூன்று பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பது முக்கியமானது. அவர்கள் பம்மி பதுங்கவில்லை. ஓடி ஒழியவில்லை. நேரடியாக, தங்கள் ஊடகங்கள் வழியாகவே அதை எதிர்கொண்டிருக்கிறார்கள். எதற்கு எடுத்தாலும், ‘வட இந்தியாவை ஒப்பிடும்போது தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை’ என்று சொல்வது தமிழ் ஊடக உலகின் வழக்கம். ஊடக கருத்து சுதந்திர தாக்குதலை எதிர்கொள்ளும் இந்த விஷயத்தில் வட இந்திய பத்திரிகையாளர்கள் பல படிகள் முன் நிற்கின்றனர். மிகவும் சுய மரியாதையுடன், ஊடக நெறிகளில் இருந்து விலகாது தங்கள் பணியை செய்துள்ளனர்.

அதிகாரத் தாழ்வாரங்களில் இருந்து அழுத்தம் வருகிறது என்று தெரிந்த அடுத்த நொடியே படுகேவலமான முறையில் அடிபணிந்து செல்வது தமிழ் ஊடக வழக்கம். கோவையில் இயக்குனர் அமீர் கலந்துகொண்ட விவாத நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் அடாவடி, அதை அப்படியே ஒளிபரப்பியதால் புதிய தலைமுறை மீது வழக்கு, அரசு கேபிளில் சேனலின் வரிசை மாற்றம்… என்ற நிலை ஏற்பட்டபோது, ‘தமிழ்நாடு அரசின் அடக்குமுறை’ என நாள் முழுவதும் புதிய தலைமுறையில் செய்தி வெளியிட்டார்கள். ‘பரவாயில்லையே’ என நினைத்தால், அடுத்த சில நாட்களுக்கு எடப்பாடி காலடியில் வைத்த கேமராவை எடுக்கவே இல்லை. எடப்பாடி ஆய் போனால் கூட லைவ். இரண்டு நாட்களுக்கு முன்பு ஓவராக சவுண்ட் விட்டு, அடுத்த நாள் வீரமாக சென்று காலில் விழுவதற்கு இவர்கள் வெட்கப்படுவதே இல்லை.

‘’என்னுடைய பார்வையில் இதழியல் என்பது ஒரு தரப்புதான். ஆம்… அது எதிர்த்தரப்பு. அதிகாரத்துக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும் இடையிலான இந்த சண்டையில் நடுநிலை என்பது பொருளற்றது. அதிகாரத்தில் இருப்பவர்கள் கேள்வி கேட்கப்பட வேண்டும். பதில் சொல்லும் கடமை அவர்களுக்கு இருக்கிறது. கேள்விகளுக்கு அஞ்சுகிற; கேள்வி கேட்போரின் குரல்களை ஒடுக்குற நபர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது நடுநிலை என்பது கேலிக்கூத்தானது. – அபிசார் சர்மா

அதே புதிய தலைமுறையில் சபரிமலை அய்யப்பன் கோயில் விவகாரத்தில் ஒரு கவிதையை சொன்னதற்காக கார்த்திகேயன் என்ற நெறியாளர் மீது பா.ஜ.க., இந்து முன்னணி கும்பல் மோசமான தாக்குதலை செய்தது. ’அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று வெளிப்படையாக நிர்பந்தித்தது. கருத்து சுதந்திரத்துக்கு எதிரான வெளிப்படையாக இந்த மிரட்டலை எதிர்த்துக் கேட்க, தண்டிக்க எந்த ஒரு குரலும் எழவில்லை. ’தமிழ் ஊடகங்களில் நக்சல் ஊடுருவல்’ என்று போகிற இடம் எல்லாம் சொல்லிவருகிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். எஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த சம்பவத்தின்போது, ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் சார்பாக சேகரிடம் மன்னிப்புக் கேட்ட எலைட் லிபரல் பத்திரிகையாளர்கள், இந்த நக்சல் குற்றச்சாட்டு குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை.

ஏ.பி.பி. நியூஸ் தொலைக்காட்சியில் இருந்து பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் இந்நிகழ்வு வட இந்தியாவுடன் முடியப்போவது இல்லை. தங்களுக்கு இணக்கமாக செயல்படாத அனைத்து பத்திரிகையாளர்கள் மீதும் இந்த அடக்குமுறை நீட்டிக்கப்படும். தமிழ் ஊடக முதலாளிகள் மோடியின் கண்ணசைவுக்காக காத்திருக்கும் நிலையில், ராஜாவை விஞ்சிய ராஜ விசுவாசத்துடன், உத்தரவுகளை நிறைவேற்ற தயங்க மாட்டார்கள். தேர்தல் நெருங்கும் வேலையில் இங்கே வெட்டி வீழ்த்துவதற்கான புதிய இலக்குகள் உருவாக்கப்படலாம்.  ஆகவே, தங்களையும், தங்கள் துறையையும் காவி இருள் சூழ்ந்து வருகிறது என்ற உண்மையை உணர்ந்து சுய மரியாதையுடன் வினையாற்ற வேண்டியது ஊடகவியலாளர்களின் கடமை.

– வழுதி

மேலும்:

பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்கள் இலுமினாட்டிகளை எப்படி சமைக்கிறார்கள் ?

பாரி சாலன் இலுமினாட்டிகளை எப்படி கண்டு பிடிக்கிறார் ? பாகம் 1

தங்களது புரிதலுக்கு அப்பாற்பட்ட, தங்களது அறிவிற்கு அப்பாற்பட்ட, தங்களது நம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு தரவையோ, ஆதாரத்தையோ, சம்பவத்தையோ எதிர்கொள்ளும் போது அவர்களது மனம் தங்களுக்கு தெரிந்த தகவல்களை வைத்து ஒரு படிவத்தை உருவாக்கிக்கொள்கிறது. அதாவது மலைபாம்பு சந்திரனை விழுங்கிவிடுகிறது.

ங்களிடம் வந்து உலகம் உண்மையில் உருண்டையானது அல்ல. மாறாக அது தட்டையானது. இந்த உண்மையை உலகில் உள்ள எல்லா அரசாங்கங்களும் சேர்ந்து நம்மிடமிருந்து மறைக்கிறார்கள் என்று ஒருவர் மிக சீரியசாக சொன்னால் நீங்கள் அவர் சொல்வதை நம்புவீர்களா?. சரி இது பரவாயில்லை.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஹிட்லர் உள்ளிட்ட முக்கிய நாஜி தலைவர்கள் தப்பி நிலவுக்கு சென்று விட்டார்கள். அவர்கள் இன்னமும் நிலவில் வசித்து வருகிறார்கள் என்று ஒருவர் உங்களிடம் வந்து சொன்னால் அவர் சொல்வதை நம்புவீர்களா? சரி வெளிநாடுகளை விடுங்கள்.

நேதாஜி விமானா விபத்தில் சாகவேயில்லை. அவர் ரஷ்யா சிறையில் அடைத்து வைக்கப்பட்டு அங்கேயே இறந்தார். நேரு உள்ளிட்ட இந்திய தலைவர்களுக்கு இது தெரியும் என்று ஒருவர் பல ஆதாரங்களை காட்டி சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

“நேதாஜி விமானா விபத்தில் சாகவேயில்லை. அவர் ரஷ்யா சிறையில் அடைத்து வைக்கப்பட்டு அங்கேயே இறந்தார். நேரு உள்ளிட்ட இந்திய தலைவர்களுக்கு இது தெரியும் என்று ஒருவர் பல ஆதாரங்களை காட்டி சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?”

சரி தமிழக அளவில் வருவோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கப்பட்ட நாட்களுக்கு முன்பே இறந்துவிட்டார். அவரது கால்கள் வெட்டி எடுக்கப்பட்ட நிலையில்தான் அவர் புதைக்கப்பட்டார் என்று ஒருவர் பல ஆதாரங்களோடு சொன்னால் அவர் சொல்வதை நம்புவீர்களா?

சிலர் மேல் சொன்ன எல்லாவற்றையும் நம்புவார்கள். சிலர் ஒன்றிரண்டை, சிலர் எதையுமே நம்பமாட்டார்கள். மேல் சொன்னவை எல்லாம் சதி ஆலோசனை கோட்பாடுகள்(conspiracy theories) என்று சொல்லப்படும் மறைக்கப்பட்ட/திரிக்கப்பட்ட ரகசிய உண்மைகள் என்று பலராலும் நம்பப்படும்/பரப்பப்படும் கோட்பாடுகளுக்கான உதாரணங்கள்.

இவையில்லாமல் பல்லி வம்ச அரசாட்சி. வேற்றுகிரக வாசிகளின் வந்து போவது, ஸ்டான்லி குப்பிரிக் நிலவு கால்பதிப்பு என்று எண்ணற்ற அதிரி புதிரியான சதியாலோசனை கோட்பாடுகள் காற்றில் உலவுகின்றன.

மற்ற விலங்குகளை விட மனிதர்கள் பலவகையிலும் மேம்பட்ட அறிவுத்திறனை பெற்றிருக்கிறார்கள். இந்த மேம்பட்ட அறிவுத்திறனே, நம்மை உணவு சங்கிலியில் உயரத்தில் வைத்து மற்ற எல்லா ஜீவராசிகளையும் கட்டுப்படுத்தும் ஆற்றலை தந்திருக்கிறது.

மனிதர்களின் அறிவுத்திறன் பல்வேறு தளங்களில், பல்வேறு நிலைகளில் இயங்குகிறது. அதில் நமக்கிருக்கும் ஒரு முக்கியமான திறன் நமக்கு கிடைக்கும் எக்கச்சக்கமான தரவுகளை, தகவல்களை பெற்று, பகுத்து, சேமித்து பின்பு தேவையான நேரங்களில் அதை பயன்படுத்திக்கொள்ளும் சாமர்த்தியம். நாம் ஒவ்வொரு நாளும் ஏராளமான தரவுகளை, அனுபவங்களை, உணர்வுகளை சேமிக்கிறோம். இவையெல்லாவற்றையும் மூளை பெற்று, பகுத்து, சேமிக்க, பின்பு அதை விரைவாக தேவையான பொழுது எடுத்து பயன்படுத்த, நாம் பரிணாமத்தில் ஒரு திறனை(skill) வளர்த்து கொண்டிருக்கிறோம்.

கணினி எப்படி எல்லா தரவுகளையும் 0 மற்றும் 1 என்று சேமித்து வைத்து பயன்படுத்துகிறதோ அதே போல நமது மூளையும் எல்லா தகவல்களையும் பெற்று ஒரு படிவமமாக(pattern) சேமித்து வைத்துக் கொள்கிறது. நாம் எல்லா தகவல்களையும் படிமமாகவே பெறுகிறோம், படிவமாகவே சேமித்து வைக்கிறோம். ஒரு படிவமாக இருக்கும் எல்லாமும் நமக்கு இனிமையாக ரசனைக்குரியதாக இருக்கிறது.

உதாரணத்திற்கு ஏராளமான மரங்களுக்கிடையில் நீங்கள் சம்மந்தமில்லாமல் எங்கோ நின்று கொண்டிருக்கும் ஒரு புகைப்படமும், புகைப்படத்தின் ஒரு ஓரத்தில் நீங்கள் நிற்க உங்களுக்கு பின் வரிசையாக மரங்களிருக்கும் வகையில் படம் பிடிக்கப்பட்ட ஒரு புகைப்படமும் இருந்தால் உங்களுக்கு எது பிடிக்கும்? இரண்டாவதுதான் இல்லையா? ஏனென்றால் இரண்டாவதில் ஒரு pattern இருக்கிறது.

இரண்டாவதை உங்கள் மூளை அணுகுவது எளிதாகவும், இனிமையாகவும் இருக்கிறது. அதனால் உங்களுக்கு அது பிடித்து போகிறது. நீங்கள் கிட்டார் எடுத்து வாசித்தால் உங்களுக்கே மூளை வெடித்து சிதறுவதை போல கொடூரமாக உள்ளது. ஆனால் கிட்டார் தெரிந்தவர் வாசித்தால் இனிமையாக இருக்கிறது. ஏனென்றால் அவரது மீட்டலில் ஒரு pattern இருக்கிறது. ஒருவகையில் எல்லா கலை வடிவங்களும் செயற்கையாக படிவங்களை உருவாக்குபவையே.

இந்நிலையில் நிஜவாழ்வில், நிஜ உலகில் நடப்பவை எல்லாம் நமது மூளையின் புரிதலுக்கு உட்பட்டேதான் நடக்குமா? நம்மால் எல்லா தரவுகளையும், தகவல்களையும் ஒரு படிவமாக்க முடியுமா? ஒரு படிவத்திற்குள் அடங்காத ஒரு தகவலை, ஒரு நிகழ்வை, ஒரு உணர்ச்சியை நமது மூளை எப்படி அணுகும்?

தெரியாத விஷயங்களை அறிவியல் ‘x’ என்று பெயரிட்டு தனக்கு தெரியாது என்று அறிவித்து விடுகிறது. ஆனால் அதுபோன்ற இயல்பு நமது மூளைக்கு கிடையாது.

நிஜவாழ்வில், நிஜ உலகில் நடப்பவை எல்லாம் நமது மூளையின் புரிதலுக்கு உட்பட்டேதான் நடக்குமா? நம்மால் எல்லா தரவுகளையும், தகவல்களையும் ஒரு படிவமாக்க முடியுமா? ஒரு படிவத்திற்குள் அடங்காத ஒரு தகவலை, ஒரு நிகழ்வை, ஒரு உணர்ச்சியை நமது மூளை எப்படி அணுகும்?

வானில் அது பாட்டுக்கு போய் கொண்டிருக்கும் மேகங்களை பார்த்து ஆடு மாடுகளை வரைய கூடியது நமது மனம்/மூளை. அதாவது படிவமற்ற மேகங்களை நமக்கு தெரிந்த உருவங்கள் மூலமாக ஒரு படிவமாக்கி உள்வாங்கி கொள்ளும் திறன்/இயல்பு நமக்கிருக்கிறது. இதன் மூலமாகவே நாம் கருணையற்ற சமரசமற்ற காலத்தின் போக்கை நாம் கொஞ்சமாவது தைரியத்தோடு அணுகுகிறோம். அதாவது எல்லாமும் எனது கட்டுப்பாட்டில், எனது புரிதலுக்குள் தான் இருக்கிறது என்னும் நம்பிக்கையில்.

இந்த நம்பிக்கை சவாலுக்கு உள்ளாகும்போது, இந்த நம்பிக்கை சோதனைக்கு உட்படும்போது என்னாகும்? நமது மூளை செயற்கையான படிவங்களை உருவாக்கி அந்த நம்பிக்கையை தற்காத்துக் கொள்ளும்.

சூரியகிரகணம் என்பது மலைபாம்பு சூரியனை விழுங்குவது என்னும் புரிதலை முன்வைத்து ஆதி கால மனிதர்கள் கிரகணத்தை குறித்து ஒரு படிவத்தை உருவாக்கியது இதன் அடிப்படையிலேயே. சதியாலோசனை கோட்பாடுகளை நம்புவர்களை இதன் பின்னணியிதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

எம்.ஜி.ஆர் தங்கம் பஸ்பம் சாப்பிடுவாப்ல. அதுலதான் எதோ கோளாறாகி செத்தாப்ல என்னும் ரீதியில் பேசும் சதியாலோசனை கோட்பாளர்களிடம் அப்படியா ஜி கேக்கவே அதிர்ச்சியா இருக்கு..டீக்கு காசு குடுத்துடுங்க கிளம்பலாம் என்று அவர்களை கையாளலாம். அவர்கள் குழந்தைகள். சுவாரஸ்யமானவர்கள்.

தங்களது புரிதலுக்கு அப்பாற்பட்ட, தங்களது அறிவிற்கு அப்பாற்பட்ட, தங்களது நம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு தரவையோ, ஆதாரத்தையோ, சம்பவத்தையோ எதிர்கொள்ளும் போது அவர்களது மனம் தங்களுக்கு தெரிந்த தகவல்களை வைத்து ஒரு படிவத்தை உருவாக்கிக் கொள்கிறது. அதாவது மலைபாம்பு சந்திரனை விழுங்கி விடுகிறது.

சரி. கழுதை மேய்க்கிற பையனுக்கு இவளோ அறிவா என்று பொறாமை படாமல் நாம் விலகி செல்லலாம் என்றால் அதில் ஒரு சிக்கலிருக்கிறது. அதாவது எம்.ஜி.ஆர் தங்கம் பஸ்பம் சாப்பிடுவாப்ல. அவரு அதுலதான் எதோ கோளாறாகி செத்தாப்ல என்னும் ரீதியில் பேசும் சதியாலோசனை கோட்பாளர்களிடம் அப்படியா ஜி கேக்கவே அதிர்ச்சியா இருக்கு..டீக்கு காசு குடுத்துடுங்க கிளம்பலாம் என்று அவர்களை கையாளலாம். அவர்கள் குழந்தைகள். சுவாரஸ்யமானவர்கள்.

ஆனால் காலநிலை மாற்றம் – climate change என்பது பொய், நோய் தடுப்பூசி போடவே கூடாது, actually (உண்மையில்) பெரியாரே ஒரு இலுமினாட்டி guy (ஆள்) என்னும் ரீதியில் conspiracy theory – (சதிக்கோட்பாடு)ஐ நம்பும், பரப்பும் ஆட்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

ஏன் என்றால் அவர்களால் உயிரிழப்புகள் தொடங்கி சமூக குழப்பம் முதல் பல ஆபத்தான சிக்கல்கள் உருவாகும். இந்நிலையில்தான் நாம் அவர்களை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

சதி ஆலோசனை கோட்பாளர்களை பற்றி மனநல நிபுணர்கள் உலகம் முழுவதும் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். பாரி சாலன் என்பவர் தனி ஆள் கிடையாது. தோப்பு.

தொடர்புடைய கட்டுரைகள்:

திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் !

பிரசவகால மரணங்கள் : இலுமினாட்டி பைத்தியங்களுக்கு பதில் !

*****

110010001111

ந்த எண்களில் உங்களால் ஒரு pattern (படிவம்) இருப்பதை கவனிக்கமுடிகிறதா? கவனித்து வையுங்கள்…

அமெரிக்க மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஏதாவது ஒரு சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களாக இருக்கிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் சொல்லுகின்றன.

1890 முதல் 2010 வரை New York times (நியூயார்க்  டைம்ஸ்) மற்றும் Chicago tribune (சிகாகோ டிரிபியூன்) பத்திரிகைகளுக்கு வந்த 100,000-க்கு மேற்பட்ட கடிதங்களை ஆய்வுக்கு உட்படுத்தியபோது ஒன்று அல்லது அதற்கு மேலான சதி ஆலோசனை கோட்பாடுகளை வலியுறுத்திய கடிதங்களின் சதவிகிதம் மிகவும் consistent -ஆக (தொடர்ச்சியாக) எல்லா காலங்களிலும் இருந்திருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

உலகளவில் முன்னணியில் உள்ள சதிக் கோட்பாடுகள்……!

அதாவது எல்லா காலங்களிலும் சதியாலோசனை கோட்பாடுகளில் மனிதர்களின் மனங்கள் ஈர்ப்பு கொண்டே இருந்திருக்கிறது. சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களை வடிகட்டிய முட்டாள்கள், கோமாளிகள் என்று அறிவியலாளர்கள் ஏளனம் செய்து ஒதுக்கிவிட்டு கடந்து சென்ற காலம் முடிவுக்கு வந்திருக்கிறது.

அமெரிக்க மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஏதாவது ஒரு சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களாக இருக்கிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் சொல்லுகின்றன.

தகவல் தொழில்நுட்பம் நினைத்து பார்க்கமுடியாத வளர்ச்சியை அடைந்திருக்கும் இந்த காலத்தில் நல்லவையோ, கெட்டவையோ, உண்மையோ, பொய்யோ தகவல் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் பரவுகிறது. இது சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களுக்கும், பரப்புவர்களுக்கும் முன்னெப்போதும் இல்லாத வலிமையை அளித்திருக்கிறது.

அதாவது தடுப்பூசிகள் உண்மையில் நோயை தடுக்க போடப்படுபவை அல்ல மாறாக அவை நோயை பரப்பவே போடப்படுகின்றன என்கின்ற சதியாலோசனை கோட்பாளர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தகவலை அவர்களிடம் இருக்கும் குதர்க்கமான கோமாளித்தனமான தரவுகளை வைத்து விளக்கி, ஊடகங்களில் பரப்பி ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுவதை தடுத்து பின்னாட்களில் அந்த குழந்தைகளை நோயில் தள்ளி வெற்றிகரமாக சாகடிக்க முடியும்.

இதன் பின்னணியில்தான் மனநல நிபுணர்களும், மூளை நிபுணர்களும் இந்த சதி ஆலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களை குறித்தும், அதை பரப்புகிறவர்கள் குறித்தும் தீவிரமான ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்கள். சதி ஆலோசனை கோட்பாடுகள் எதனால் உருவாகின்றன? அல்லது சதியாலோசனை கோட்பாடுகளை ஏன் உருவாக்குகிறார்கள்? மனிதர்களுக்கு சில இயல்பான psychological (உளவியல்) தேவையும், அவசியமும் உள்ளன. அவற்றில் சில முக்கியமான தேவைகளாக கீழ் உள்ளவைகளை மனோதத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

1) எல்லாவற்றையும் புரிந்துகொள்ளவும், தீர்க்கமான விடையை அடையவும் ஏற்படும் முனைப்பு (Desire for understanding and certainty)
2) எல்லாவற்றையும் கட்டுக்குள் வைக்கவும், பாதுகாப்பாக உணரவும் ஏற்படும் முனைப்பு (Desire to control and security)
3) சமூகத்தில் சிறப்பு அந்தஸ்தை கோரும் / பெறும் முனைப்பு (Desire to maintain a self image)

இந்தத் தேவையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் அடைய முயற்சிக்கிறார்கள்.

அறிவியல் சார்பு, இறையியல் சார்பு, மதம் சார்பு, சாதி சார்பு, தத்துவ நிலைப்பாடுகள் சார்பு, கலைகள் சார்பு என்று பலவகையான சார்புகளை கொண்டு நாம் நமது மனதின் அடிப்படை தேவைகளை அணுகுகிறோம். அதில் ஒரு சார்புதான் சதியாலோசனை கோட்பாடுகள் மீதான நம்பிக்கை சார்ந்த சார்பு.

உலகில் நடக்கின்ற எல்லா நிகழ்வுகளையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. உதாரணத்திற்கு நீங்கள் ஒவ்வொரு முறை பிரியாணி செய்யும் போதும் அடிபிடித்து விடுகிறது. தொடர்ந்து 10 முறை இதுவே நடக்கிறது. உடனே உங்கள் மனம் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்கத் துடிக்கும் இல்லையா?

நீங்கள் தர்க்கபூர்வமானவர் என்றால் இனிமேல் இந்த பாத்திரத்தில் இனி பிரியாணியே செய்யக் கூடாது. இதில் செய்தாலே அடிபிடிக்கிறது என்று ஒரு காரணத்தை கண்டுபிடித்தவுடன் உங்கள் மனம் அமைதி அடையும்.

நீங்கள் மத நம்பிக்கையுள்ளவர் என்றால் கோவிலுக்கு போய் மாசக்கணக்கில் ஆகிறது. மொதல்ல வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போகணும். மனசே சரியில்ல. எப்ப பிரியாணி செஞ்சாலும் அடிபிடிக்கிறது என்று ஒரு விடையை அடைவீர்கள்.

கோமாளி ரஜினியின் பாபா முத்திரையை மாபெரும் இலுமினாட்டி சதியாக கப்சா விடும் நாம் தமிழர் சீமான்!

சீமானின் தம்பி என்றால் நம்ம பெரும்பாட்டனும் பெரும்பாட்டியும் நல்லா கருப்படிச்ச மண்பானையில் பிரியாணி செஞ்சு சாப்டாங்க. பிரியாணி அடிபிடிக்காம வந்துச்சு. உடம்பும் நல்லா இருந்துச்சு. எப்போ தமிழன் திராவிடத்திடம் மண்டியிட்டானோ அப்பவே அலுமினியம் டபரா வெள்ளையா இருக்குனு மண்சட்டிய கைவிட்டுட்டான். இப்போ பிரியாணி முரட்டுத்தனமா அடிபிடிக்குது என்று ஒரு விடையை கண்டுபிடிப்பார்கள்.

இதுவே பாரிசாலன் வீட்டில் பிரியாணி கருகியிருந்தால் அலுமினிய டபராவை இரண்டாம் உலகப்போரில் sausage வேக வைக்க ஜெர்மனிய சிப்பாய்கள் பயன்படுத்தியதைப் பார்த்த இலுமினாட்டிகள் இப்படியே போனால் எவர் சில்வர் வியாபாரம் படுத்துவிடும் என்று பிளான் பண்ணி நல்லவர் ஹிட்லரை வீழ்த்தி அலுமினியம் டபரா தொழில்நுட்பத்தையும் திருடி உலகம் முழுவதும் விற்று லாபம் பார்த்தார்கள் என்றும் இதற்கு இலுமினாட்டி பெரியாரும் உடந்தை. அதற்கு சாட்சிதான் பெரியாருடைய அலுமினிய மூத்திர சட்டி என்று தனது வீட்டில் பிரியாணி கருகியதற்கான விடையை கண்டுபிடித்திருப்பார்.

பிரியாணி அடிபிடித்தாலும் பாரிசாலனிடம் அதற்கொரு இலுமினாட்டி விளக்கம் உண்டு!

உண்மையில் அந்த பிரியாணி கருகியதற்கு மேல் சொன்ன எந்த காரணமுமே இல்லாமல் வேறொரு காரணம் இருந்திருக்கலாம். அல்லது காரணமே இல்லாத ஒரு random occurrence (தற்செயலான நிகழ்வு)ஆக இருந்திருக்கலாம்.

ஆனால் அதை நம் மனம் ஏற்காது. ஒரு நிகழ்வின்/சம்பவத்தின் காரண காரியத்தை புரிந்துகொள்வதின்/விடைகாண்பதின் மூலமே நமக்கு ஒரு நிலைத்தன்மை கிடைக்கிறது. அதனால் தான் நாம் அடுத்த பத்து ஆண்டுகளில் நாம் செய்ய வேண்டியதை திட்டமிட முடிகிறது.

நமது புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு சம்பவம் நடக்கும் பொழுது உதாரணத்திற்கு மலேஷியா விமானம் காணாமல் போனதை போன்ற ஒரு சம்பவம் நடக்கையில், தங்களுக்கு அதற்கான விடை தெரியவில்லை அல்லது அது தங்களுது புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயம் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், அந்த உண்மையை சந்திக்கும் தைரியம் இல்லாதவர்கள் பாரிசலானின் பிரியாணி டபரா தியரி போன்ற கோமாளித்தனமான கோட்பாடுகளை உருவாக்குகிறார்கள் அல்லது நம்பத் தொடங்கிக்கிறார்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்:

பாட்டி வைத்தியத்திற்கும் பாதுகாப்பான மகப்பேற்றிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை !

   ஹீலர் பாஸ்கர் கைது – மற்ற மூடர்களை என்ன செய்யலாம் ?

நாம் எல்லாமும் நமது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்னும் நம்பிக்கையில்தான் ஒரு சமூக ஒழுங்கோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். செல்லூர் ராஜு தெர்மாகோல் அறிவியலை அடுத்த எலேக்‌ஷன் வரைதான் முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதால்தான் நம்மால் நிம்மதியாக தூங்க போக முடிகிறது. ஏனென்றால் தேர்தல் ஓட்டு என்னும் கட்டுப்பாடு(control) நம்மிடம் உள்ளது.

செல்லூர் ராஜு நிரந்தர மந்திரி. நம்மால் அவரை ஒன்றுமே செய்யமுடியாது என்ற நிலையில் நம் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சியையும், கையறு நிலையையும், பயத்தையும் யோசித்து பாருங்கள்.

அதிகாரம்/கட்டுப்பாடு(control) நமக்கு தைரியத்தையும் நம்பிக்கையும் சமூக ஒழுங்கையும் அளிக்கிறது. control இல்லாத போது நாம் பயம் கொள்கிறோம். இந்த பயம் நம்மை பீடித்து கொள்ளும் போது நாம் ஒரு சதியாலோசனை கோட்பாடுகளை நம்ப தொடங்குகிறோம்.

அதாவது அதிகாரம்/கட்டுப்பாடு(control) நமக்கு தைரியத்தையும் நம்பிக்கையும் சமூக ஒழுங்கையும் அளிக்கிறது. control இல்லாத போது நாம் பயம் கொள்கிறோம். இந்த பயம் நம்மை பீடித்து கொள்ளும் போது நாம் ஒரு சதியாலோசனை கோட்பாடுகளை நம்ப தொடங்குகிறோம்.

உதாரணத்திற்கு ஒருவர் பிறப்பு தொட்டு சாதியை பயின்று வருகிறார். தான் ஒரு மிகவும் கண்ணியமான, கம்பீரமான, கலாச்சாரமிக்க உயர் சாதி பார்ப்பன இந்து என்று தன்னை கருதி கொள்கிறார். திடீரென்று ஒரு பெரியவர் வந்து அவரை ஓத்தா ஒம்ம ஒய்யால என்று திட்டி அவரது நம்பிக்கையை கழட்டி தோரணம் கட்டுகிறார்.

அதுவரை அந்த உயர் சாதி இந்து தனது கட்டுப்பாட்டில் இருப்பதாய் நினைத்து கொண்டிருந்த அவரது நம்பிக்கைகள், வாழ்வுமுறை எல்லாவற்றையும் அடித்து நொறுக்கின்றார். இந்நிலையில் அந்த சாதி ஹிந்துவிடம் ஜி மேட்டர் தெரியுமா அந்த கிழவன் இலுமினாட்டி ஜி என்று ஒருவர் வந்து சொன்னால் அவர் உடனடியாக அதை நம்ப தொடங்குவதோடு தான் இழந்த கட்டுப்பாட்டை திரும்ப மீட்டுக் கொள்வார்.

அதாவது தனக்கு ஒரு சிக்கல் நேரும்போது, ஒரு குழப்பம் ஏற்படும்போது, பயம் தோன்றும்போது, வெற்றிடம் ஏற்படும்போது மனிதர்கள் சாதியாலோசனை கோட்பாடுகளுக்கு ஆளாகிறார்கள். For some people conspiracy theories act as a defensive mechanisms against their insecurities and limitations.

பெரியாரை இழிவுபடுத்துவதையும் பாரிசாலனின் இலுமினாட்டி உடான்ஸ் கிரமமே செய்கிறது!

இறுதியாக, கிளு கிளுப்பு சம்மந்தப்பட்டது. பிறருக்கு தெரியாத விஷயம் எனக்கு தெரியும் என்பது ஒரு கிளுகிளுப்பான விஷயம். இதற்கு ஆட்படாத மனிதர்களே கிடையாது நான் உட்பட. இதன் அடிப்படையில்தான் கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஸ்டீபன் ஹூக்கிங்சின் பின்னணியே தெரியாமல் எனக்கு அவரை ரொம்ப நல்லா தெரியும் என்னும் தோரணையில் அவருக்கு இரங்கல் கவிதை எழுதினார்.

பாய்ஸ் படத்தில் செந்தில் பேசுவதாய் சுஜாதா ஒரு வசனம் எழுதி இருப்பார். “data is knowledge” (தகவல்தான் அறிவு). சதியாலோசனை கோட்பாடுகளை பரப்புவர்களை கவனித்தால் பேசும்பொழுது “உங்களுக்கு இது தெரியுமா” என்று தொடர்ந்து கேட்டு ஒரு வரி தகவல்களாக சொல்லி கொண்டே இருப்பார்கள்.

தனக்கு ஒரு சிக்கல் நேரும்போது, ஒரு குழப்பம் ஏற்படும்போது, பயம் தோன்றும்போது, வெற்றிடம் ஏற்படும்போது மனிதர்கள் சாதியாலோசனை கோட்பாடுகளுக்கு ஆளாகிறார்கள்.

அதன் பொருள் உனக்கு தெரியாத தகவல் எனக்கு தெரிந்திருக்கிறது அதனால் நான்தான் லபுக்குதாஸ் என்னும் தோரணை மற்றும் உனக்கு தெரியாததை நான் தெரிந்து வைத்திருக்கிறேன் எனவே தயவு செய்து என்னை மதித்து ஏற்று கொள்ளுங்கள் என்ற ஏக்கம், இவையிரண்டையும் நீங்கள் கவனிக்கலாம்.

சில மனநல ஆய்வுகள் narcissism – சுயமோகி( a person who has an excessive interest in or admiration of themselves – எவரொருவர் தம்மைப் பற்றி அபரிதமான அக்கறை அல்லது பெருமிதங்களை கொண்டுள்ளாரோ) என்னும் மன நோய்க்கும் சதியாலோசனை கோட்பாடுகளை பரப்புவர்களுக்கும், நம்புவர்களுக்கும் இருக்கும் தொடர்பை குறித்து நிறுவுகின்றன.

தங்களை மற்றவர்கள் கவனிக்க வேண்டும், தாங்கள் மற்றவர்களுக்கு தெரியாத தகவல்களை கண்டடைந்து வைத்திருக்கிறோம், தாங்கள் அறிவிலிகளை வழி நடத்தும் பொறுப்பிலிருக்கிறோம், உலகில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் முழுவதுமாய் புரிந்து கொள்ளும் ஆற்றலோடு இருக்கிறோம், தான் தன்னை போன்றே சதியாலோசனை கோட்பாடுகளை நம்புவர்களோடு ஒரு குழுவாகிருக்கிறோம் என்கின்ற மிக ஆழமான விருப்பமும், ஏக்கமுமே அவர்களை சதியாலோசனை கோட்பாடுகளை நோக்கி தள்ளுகிறது.

மனித மனங்களுக்கு சதியாலோசனை கோட்பாடுகள் ஏன் தேவைப்படுகிறது என்பதை பற்றி நமக்கு இப்பொழுது ஒரு புரிதலிருக்கும். சதியாலோசனை கோட்பாடுகள் எப்படி தர்க்கரீதியான வலிமையை பெறுகிறது? சதியாலோசனை கோட்பாடுகளை நம்பவேண்டிய நிலை ஏன் நம்மில் சிலருக்கு ஏற்படுகிறது? என்பதை பற்றியும் பாரிசலானையும் ஹீலர் பாஸ்கரையும் எப்படி டீல் செய்யவேண்டும் என்பதையும் அடுத்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

( தொடரும் )

ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.
நன்றி : தி டைம்ஸ் தமிழ்

பசுக்காவல் கும்பல் வன்முறை : கட்டுப்படுத்தும் வழியென்ன ?

0
ராஜ், சமூக அரசியல் விமர்சகர்.

நாடெங்கிலும் பசுப்பாதுகாவலர்களின் கும்பல் வன்முறை அதிகரித்துள்ளது. அது பற்றிய செய்திகள் அன்றாடம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஓர் முசுலீம் அல்லது தலித் ஒரு மாட்டை அழைத்துக் கொண்டு வெளியே வந்தால் அவர் மறுபடியும் வீடு திரும்ப முடிவதில்லை. அவர் மீது கும்பல் வன்முறை உடனடியாக ஏவப்பட்டு மிகவும் கொடூரமாக கொல்லப்படுகிறார்.

ஒரு பசுவையும், முசுலீமையும் ஒன்றாக பார்த்த மாத்திரத்தில் கொல்லப்படுவதால் பசு தொடர்பாக – பசுவை வளர்ப்பது, பால் கறப்பது, உழவுப் பயன்பாடு என்று – எந்த உரிமை கோரலும் ஓர் முசுலீமுக்கு எதார்த்தத்தில் மறுக்கப்படுகின்ற கால நிலைமையை நாம் அடைந்திருக்கிறோம். சமீபத்திய ஒரு புள்ளிவிவரத்தின்படி 2010 -லிருந்து எடுக்கப்பட்ட கணக்கீட்டில் 98% பசுக்காவல் கும்பல் வன்முறை கடந்த நான்காண்டுகளில் நடைபெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. அவற்றில் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 86% பேர் முசுலீம்கள். இது குறித்த செய்திகள் உரிய ஊடக கவனம் பெற்றாலும் இந்த பிரச்சினை அதனோடு சம்பந்தப்பட்ட அரசியலிலிருந்து தொடர்பறுத்து சித்தரிக்கப்படவும், விவாதிக்கவும் படுகிறது.

” 2010 -லிருந்து எடுக்கப்பட்ட கணக்கீட்டில் 98% பசுக்காவல் கும்பல் வன்முறை கடந்த நான்காண்டுகளில் நடைபெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. அவற்றில் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 86% பேர் முசுலீம்கள்.”

மோடி அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மான உரையிலும் இந்த பிரச்சினையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பினார். ‘படா … படா… ஹே’ என்று மோடி பதிலளித்துக் கொண்டிருந்த அந்த பின்னிரவில் தான் ரக்பர்கான் ராஜஸ்தானின் ஆல்வாரில் அடித்துக் கொல்லப்பட்டார். தனது பேச்சில் பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் கும்பல் வன்முறை பற்றி எந்த பதிலும் மோடி வழங்கவில்லை. இந்தத் தாக்குதல் சம்பவங்கள் உள்ளார்ந்து ஆழமான அரசியல் நெருக்கடி மற்றும் அமைப்பு நெருக்கடி பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன. இவை அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறவில்லை என்பது நாம் மேலே பார்த்த கணக்கெடுப்பு விவரத்திலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.

இச்சம்பவங்கள் ஏன் ஒரு அரசியல் நெருக்கடி பற்றிய புரிதலை கொண்டிருக்கிறதென்றால் இவை ஒரு அரசியல் அனுசரணையுடன் நடைபெறுவதால் தான் சொல்ல முடிகிறது. ரக்பர்கான் குற்றுயிராக்கப்பட்ட பிறகு அவரை ஏற்றி சென்ற வாகனத்தை வழியில் நிறுத்திய போலீசார் சாவகாசமாக தேனீர் அருந்தியுள்ளனர். ரக்பர்கான் கொல்லப்பட வேண்டியவர் என்ற கருத்து போலீசுக்கு இருந்துள்ளதை இது காட்டுகிறது.

கடந்த ஏப்ரலில் இதே ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் அடித்துக் கொல்லப்பட்ட பெக்லூகான் தனது மரண வாக்குமூலத்தில் பெயர் குறிப்பிட்ட நபர்கள் இப்போது ஜாமீனில் வெளியே இருக்கின்றனர். கோவை கலவரச் சூழலில் நாம் பார்த்தது போன்று இந்துத்துவ (பசுப்பாதுகாப்பு) கும்பலுக்கும் போலீசுக்குமிடையே ஆழமான நெருக்கம் வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. அல்லது இந்துத்துவத்தின் நேரடி ஆதிக்கத்துக்கு கட்டுப்பட்டு போலீஸ் இயங்குகிறது என்றும் புரிந்து கொள்ளலாம்.

“ரக்பர்கான் குற்றுயிராக்கப்பட்ட பிறகு அவரை ஏற்றி சென்ற வாகனத்தை வழியில் நிறுத்திய போலீசார் சாவகாசமாக தேனீர் அருந்தியுள்ளனர். ரக்பர்கான் கொல்லப்பட வேண்டியவர் என்ற கருத்து போலீசுக்கு இருந்துள்ளதை இது காட்டுகிறது.”

இரண்டாவது இந்த சம்பவத்தை எதிர்கொள்வது பற்றிய அரசு, அதிகாரத் தரப்பு புரிதல் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. பசுப்பாதுகாப்பாளர்களின் கும்பல் வன்முறையை தடுக்கும் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கேட்டுக் கொண்டதற்கு முன்பு வரையிலும் ‘அது மாநில விவகாரம்; சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது மாநில அரசுகளின் கடமை’ என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி வந்தார். இந்துத்துவ வன்முறை நடவடிக்கைகள் நாடு தழுவிய கவன ஈர்ப்பை பெறுவது பற்றிய எச்சரிக்கை உணர்வு அது. தமது இருப்பையும், அதிகாரத்தையும் உறுதி செய்ய சமூக முனைவாக்கத்தின் அவசியத்தை நன்குணர்ந்தவர்கள் அவர்கள்.

தலைமை நீதிபதியின் அறிவிப்புக்கு பின்னர் இரண்டு உயர்நிலைக் குழுக்களை அமைத்துள்ளது மத்திய அரசு. அதன்படி ஒன்றின் தலைவராக ராஜ்நாத் சிங்கும், இன்னொன்றின் தலைவராக மத்திய உள்துறை செயலாளரும் இருப்பார்கள். இந்த இரண்டு குழுக்களும் இந்த தாக்குதல் சம்பவங்களை ஆராய்ந்து, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் பரிந்துரைத்து தத்தமது அறிக்கையை அமைச்சரவை குழு ஒன்றுக்கு அளிக்கும். அந்த குழு இரு அறிக்கைகளையும் சரிபார்த்து புதிதாக ஒரு அறிக்கையை தயாரித்து பிரதமருக்கு சமர்ப்பிக்கும் என்பது தான் ஏற்பாடு.

எவ்வளவு சுற்றி வளைத்து, முற்றிலும் மனமில்லாமல் பசுக் காவல் என்ற இந்துத்துவ வன்முறை வெறியாட்டத்துக்கு ஒரு ‘தீர்வை’ யோசித்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. இத்தனைக்கும் இந்த சம்பவங்கள் ஒரு அமைப்பு நெருக்கடியை புறநிலையில் புதிதாக தோற்றுவித்திருக்கிறது. பசுப்பாதுகாப்பு என்ற இந்துத்துவ நிகழ்ச்சி நிரல் முதற்கொண்டு குழந்தை கடத்தல் என்ற வதந்திக்கான எதிர்வினை வரையிலும் கும்பல் வன்முறை கையாளப்படுவது இந்திய சட்டநெறிகளின் செயலாக்கத்துக்கு பெருஞ்சவாலாக உருவெடுத்துள்ளது. தலைமை நீதிபதியின் திடீர் கவலை கூட இதை கருத்தில் கொண்டதாக நம்ப முடிகிறது. உண்மையில் இந்த கும்பல் வன்முறையை கட்டுப்படுத்த தனிச்சட்டம் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது. அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான ஒரு பிரச்சினைக்கு நிர்வாக ரீதியான ஒரு தீர்வை வழங்கும் பாசாங்கை தான் தலைமை நீதிபதியின் பரிந்துரை முன்வைக்கிறது. மேலும் இது போலி நிறைவை பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கும் தந்திரத்தையும் கொண்டுள்ளது.

பசுவின் பெயரால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து, அகமதாபாத்தில் நடைபற்ற ஆர்ப்பாட்டம்.

பசுக்காவல் வன்முறை கும்பல் தமது செயல்பாட்டில் முழுக்க உடன்பட்டு அதில் ஈடுபடுகிறது. தமது செயல்பாட்டின் மீது எள்ளளவும் குற்றவுணர்ச்சி அடைய வாய்ப்பில்லாத சித்தாந்த போதை ஊட்டப்பட்டுள்ளது. ஆழமான முசுலீம் வெறுப்பு அதன் இயக்குவிசை. எனவே சட்டங்களை அடுக்குவதல்ல; அரசியல் உறுதிப்பாடு மிக்க நடவடிக்கைகள் தான் முக்கியத்தேவையாகின்றன.

ஏற்கனவே இருக்கும் சட்டங்களின் மூலமே கூட இந்த கும்பல் வன்முறையை கட்டுப்படுத்த முடியும் என்று கருதுகிறார்கள் விருந்தா க்ரோவர் போன்ற மனித உரிமைகள் சார்ந்த முன்னணி வழக்கறிஞர்கள். ஆனால் அதற்கு போலீசை இந்துத்துவ நச்சுநீக்கம் செய்வது முன்நிபந்தனையாக இருக்கிறது. இந்துத்துவ நச்சுநீக்கப் பணியும், மோடியை அப்புறப்படுத்துவதும் வேறுவேறு செயல்பாடுகளா என்ன?

  • ராஜ்.

(சமூக அரசியல் விமர்சகர்)

மகன், மகள், தாயுடன் திருப்பூர் விவசாயி முத்துச்சாமி தற்கொலை !

திருப்பூர் தாராபுரம் அருகே குண்டடம் வண்ணாம்பட்டியை சேர்ந்த விவசாயி முத்துச்சாமி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 11 வயதில் ராஜலட்சுமி என்ற மகளும், 4 வயதில் மாணிக்க சத்திய மூர்த்தி என்ற மகனும் உள்ளனர்.

முத்துச்சாமி தனது குடும்பத்தினருடன் தாராபுரம் அருகே உள்ள கெத்தல்ரேவ் என்ற கிராமத்தில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்திருக்கின்றார். அங்கேயே குடிசை வீடு போட்டு குடும்பத்துடன் விவசாயத்தை பார்த்து வந்திருக்கின்றனர். உதவிக்காக தனது தந்தை வேலுச்சாமி மற்றும் தாயர் மயிலாத்தாள் ஆகியோரையும் உடன் வைத்து விவசாயம் செய்து வந்திருக்கிறார்.

 விவசாயி தற்கொலை
பத்திரிகைகளில் வெளியான செய்தி

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விவசாயம் பொய்த்து போகவே, அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி விவசாயம் செய்திருக்கிறார். மீண்டும் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாத நிலையில் விவசாயத்தில் கடுமையான நட்டம் ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக முத்துச்சாமியின் மனைவி செல்வி திருப்பூர் அருகே உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் வங்கி மற்றும் தனி நபர்களிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை தொடர்ந்து நீடித்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் மிகுந்த மன உளைச்சலில் முத்துச்சாமி இருந்திருக்கிறார். இதன் காரணமாக குடும்பத்திற்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு கடன்காரர்கள் வந்து கடனை கேட்டு நெருக்கும் போது அவமானம் தாங்க முடியாமல், முத்துச்சாமியின் மனைவி செல்வி தனது பெற்றோர் வசிக்கும் ரங்கபாளையம் கிராமத்திற்கு சென்றிருக்கிறார்.

இதையடுத்து முத்துச்சாமி தனது தாய், தந்தை மற்றும் குழந்தைகளுடன் கெத்தல்ரேவ் என்ற கிராமத்திலேயே வசித்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் நெருக்கடி தாங்க முடியாத நிலையில் குடும்பத்தினருடன் ஊரை விட்டு வெளியேறி விடலாம் என பேசியிருக்கின்றனர்.

 விவசாயி தற்கொலை
குடும்பத்தோடு தற்கொலை – புகைப்படம் மங்கலாக்கப்பட்டுள்ளது)

இந்நிலையில் நேற்று இரவு வயதின் காரணமாக நடமாட முடியாத தந்தை வேலுச்சாமியை மட்டும் விட்டு விட்டு, அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்த தனது மகள் ராஜலட்சுமி, மகன் மாணிக்க சத்தியமூர்த்தி ஆகியோரை முத்துச்சாமி வீட்டிற்குள்ளே தூக்கிட்டுள்ளார்.

அதன் பின்னர் தனது தாய் மயிலாத்தாளுடன் தானும் வீட்டிற்கு வெளியில் இருந்த வேப்பமரத்தில் ஏணியை போட்டு ஏறி, அதில் தூக்கு கயிற்றை மாட்டி அதிலிருந்து குதித்து இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

இன்று அதிகாலையில் முத்துச்சாமியின் தந்தை வேலுச்சாமி எழுந்து பார்த்த போது தனது மனைவி, மகன், பேரன், பேத்தி ஆகியோர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து அழுது ஊரை கூட்டியிருக்கிறார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு வந்த போலீசார் பிரேதங்களை கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கிராமமே சோகத்தில் மூழ்கி இருக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகள் மக்களின் பணத்தை ஆட்டையைப் போட்டு விட்டு வெளிநாடுகளில் உல்லாசமாக திரிகின்றனர். வழியனுப்பி வைத்த ஆட்சியாளர்கள் விமானத்தில் போய் நலம் விசாரித்து வருகின்றனர்.

டாடா, அதானி, அம்பானிகள் போன்ற முதலாளிகள் பல்வேறு சலுகைகள் பெயரில் மக்கள் சொத்தை மானியமாக பெற்றுக் கொண்டு இலாபம் குவிக்கையில், சாதாரண ஏழை விவசாயிகள் தூக்கிட்டுச் சாவதுதான் விதியா? ஒரு குடும்பமே இப்படி தமது வாழ்க்கையை அழிப்பது அவர்களுடைய தோல்வியா? இல்லை உழைத்து வாழ்வதற்கு கூட இந்த நாட்டில் வழி இல்லை எனும் நிலை ஏற்படுத்திய இந்த அரசமைப்பின் தோல்வியா?

தகவல்: மக்கள் அதிகாரம், திருப்பூர்.
தொடர்புக்கு: 99658 86810

அம்பேத்கர் சட்டக் கல்லூரியை மூடாதே ! மாணவர் – பெற்றோர் உரை | காணொளி

சட்டக் கல்வியின் இன்றைய நிலை என்ன? என்ற தலைப்பில் 27.07.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தில் “சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியை மூடாதே !” என்ற தலைப்பில் சட்டக்கல்லூரி மாணவர் விஜயகுமார், வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் நாகராஜின் தந்தை ஆகியோர் ஆற்றிய உரையாற்றினார்.

சட்டக்கல்லூரி மாணவர் விஜயகுமார், வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் நாகரஜின் தந்தை

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியை மூடாதே ! சட்டக்கல்லூரி மாணவர் விஜயகுமார் உரை !

சென்னை சட்டக்கல்லூரி என்பது தமிழகம் முழுவதிலிருந்து வரும் மாணவர்களில் திறமையான மாணவர்களைத் தெரிவு செய்து இக்கல்லூரி வாய்ப்பு வழங்குகிறது. மேலும் நீதிமன்ற வளாகத்திலேயே அமைந்துள்ள ஒரே கல்லூரி. பல நீதிபதிகளை உருவாக்கிய பாரம்பரியம்மிக்க கல்லூரி. இக்கல்லூரியை இடம்மாற்றம் செய்ய நினைக்கிறது அரசு.

மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கல்லூரி கட்டிவிட்டதால் இனி இங்கு சட்டக்கல்லூரி இயங்க வாய்ப்பில்லை என சிலர் கூறுகின்றனர். ஆனால் இதே கல்லூரி செங்கல்பட்டிற்கு மாற்றப்பட்டது மீண்டும் இங்கு திரும்பி வரவழைக்கப்பட்டு தற்போதுவரை இயங்கி வருகிறது. செங்கல்பட்டிற்கென தற்போது ஒரு சட்டக்கல்லூரியையும் உருவாக்கி தந்துள்ள வரலாறு உள்ளது.

அதே போல தொடர்ந்து கல்லூரி இதே வளாகத்தில் இயங்கும். அதற்கு மாணவர்கள், வழக்கறிஞர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையை தனது உரையில் வெளிப்படுத்தினார் மாணவர் விஜயகுமார்.

நீதிமன்றத்தை இடம் மாற்றலாமா ? வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் உரை

ட்டக்கல்லூரியை இடம் மாற்ற இவர்கள் சொல்லும் காரணங்களில் ஒன்று மாணவர்களிடையே நடந்த ஒரு மோதல் சம்பவம். எனில் நீதிமன்ற வளாகத்துக்குள்ளாக 160 ஆண்டுகளில் நடக்காத ஒரு நிகழ்வு வழக்கறிஞர்கள், நீதிபதிகள் தாக்கப்பட்டது எனில், நீதிமன்றத்தை இடம் மாற்றிவிடலாமா ? என்ற கேள்வியுடன் தொடங்கி ஏன் சட்டக் கல்லூரியை இடம் மாற்றக்கூடாது என்பதையும் மாணவர்களிடம் தற்போது உள்ள விழிப்புணர்வையும் விளக்கிப் பேசினார் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார்.

சட்டக்கல்லூரி மாணவர் நாகராஜின் தந்தை ஆற்றிய உரை !

ழை எளிய மக்களை வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும் உருவாக்கிய வரலாறு உள்ள இந்த சட்டக்கல்லூரியை இங்கிருந்து யாரைக் கேட்டு இடம் மாற்றுகிறார்கள்.

அரசு இக்கல்லூரியை மாற்ற கூறும் காரணங்களை இங்கு உள்ள வழக்கறிஞர்கள், மாணவர்களிடம் விவாதித்திருக்க வேண்டும் என்பதையும். காஞ்சிபுரத்திலும், திருவள்ளூரிலும் புதிதாக கட்டப்படுள்ள கல்லூரியை நேரில் பார்த்து அதன் அனுபவத்தில் இருந்து மாணவர்களுக்கு அங்கு படிப்பது எவ்வளவு சிரமமாக இருக்கும் என்பதையும் விளக்கிப் பேசினார்.

யூ-டியூப் காணொளி:

ஃபேஸ்புக் காணொளி:

பாருங்கள் ! பகிருங்கள் !

  • வினவு களச் செய்தியாளர்

இந்திய இராணுவத்தின் கொலை – ஆட்கடத்தலை அம்பலப்படுத்துகிறார் அதிகாரி தரம்வீர் சிங் !

இராணுவ ஆட்சி - மாதிரி படம் (நன்றி பிடிஐ)

சாம் இராணுவப் பிரிவைச் சேர்ந்த இராணுவ அதிகாரி தரம்வீர் சிங் மணிப்பூர் உயர்நீதி மன்றத்தில் அளித்துள்ள வாக்குமூலத்தில் தனது படையணியைச் சேர்ந்த இராணுவ நுண்ணறிவுப் பிரிவினர் போலி மோதல் படுகொலைகளிலும், சூறையாடல்களிலும், ஆட்கடத்தலிலும் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவத்தைச் சேர்ந்த ’3 படையணி நுண்ணறிவுப் பிரிவினை’ச் சேர்ந்தவர் லெப்டினண்ட் கர்னல் தரம்வீர் சிங். இவரை அவருடன் வேலை பார்க்கும் லெப்டினண்ட் கர்னல் நந்தா, மேஜர் ரத்தோர் ஆகியோர் உள்ளிட்டு ஆயுதமேந்திய இராணுவத்தினர் கடத்தியதாகக் கூறி அவரது மனைவி மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவின்படி லெப்டினண்ட் கர்னல் தரம்வீர் சிங் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தரம்வீர் சிங்
தனது கணவர் தரம்வீர் சிங்கை இராணுவத்தின் சட்டவிரோத காவலில் இருந்து மீட்க ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த ரஞ்சு சிங் மற்றும் அவர்களது குழந்தைகள்

தாம் இராணுவத்தினராலேயே கடத்தப்பட்டது குறித்து வாக்குமூலம் ஒன்றை அளித்தார் தரம்வீர் சிங். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் நகல் ஒன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு கிடைத்துள்ளது. அந்த வாக்குமூலத்தில், கடந்த ஜூலை 1, 2018 அன்று காலையில், லெப்டினன்ட் கர்னல் நந்தா, மேஜர் ரத்தோர் ஆகியோருடன் ஆயுதமேந்திய இராணுவத்தினர் சிலரும் சேர்ந்து மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள தமது குடியிருப்பிலிருந்து தம்மைக் கடத்திக் கொண்டு போய் வீட்டுச்சிறை வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றம், தரம்வீர் சிங்கை ஆஜர்படுத்த உத்தரவிட்ட பின்னர்தான் அதாவது கடத்தப்பட்டு 5 நாட்களுக்குப் பின்னர்தான் அவரை கோர்ட்டில் நேர்நிலைப்படுத்தியிருக்கின்றனர் அவரைக் கடத்திய இராணுவ அதிகாரிகள்.

தனது வாக்குமூலத்தில், சில மூத்த அதிகாரிகள் செய்த தவறுகளை மேலிடத்திற்கு தாம் புகாரளித்ததற்கு பழி வாங்கும் விதமாக, தமக்கு எதிராக அவர்கள் திட்டமிட்டு நடத்திய பிரச்சாரத்தில் தாம் பாதிப்படைந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார் தரம்வீர் சிங்.

மேலும் தமது வாக்குமூலத்தில், அசாமில் கடந்த 2016-ம் ஆண்டு இராணுவத்தால் நடத்தப்பட்ட போலி மோதல் கொலைகளைப் பற்றியும், கொள்ளைகளைப் பற்றியும் தெரிவித்துள்ளார். நாகலாந்தின் திமாபூர் பகுதியிலிருந்து அப்பாவி இளைஞர்களை கடத்தி வந்து போலி மோதல் மூலம் இராணுவ நுண்ணறிவுப் படையின் ஒரு பிரிவு ரங்கபஹர் கண்டோன்மண்ட் அருகே அவர்களை கொலை செய்ததையும், அவர்கள் நடத்திய சூறையாடல்கள் குறித்தும் கடந்த செப்டெம்பர் 9, 2016 அன்று தாம் புகார் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய கட்டுரைகள்:
சட்டீஸ்கர்: 20 அப்பாவி மக்களை கொலை செய்த இந்திய இராணுவம்!
காஷ்மீர் மக்களின் கண்களை பறிக்கும் இராணுவம்

மேலிடத்திலிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகவும், தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியின் காரணமாகவும் தாம் அந்த புகாரைத் திரும்பப் பெற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த அதிகாரப் பூர்வமான 13 பக்க புகார் கடிதத்தினை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றத்தில் அனுமதியும் கோரியுள்ளார்.

தரம்வீர் சிங்கின் வாக்குமூலம், கடந்த 2010, 2011 ஆண்டுகளில், இராணுவத்தின் ”3 படையணி நுண்ணறிவுப் பிரிவின்” ஒரு குழுவினர் நடத்திய மூன்று போலி மோதல் கொலைகள் குறித்தும் ஒரு சூறையாடல் சம்பவம் குறித்தும் குற்றம்சாட்டுகிறது.

அவரது வாக்குமூலத்தில், கடந்த மார்ச் 10, 2010-ல் பிஜம் நவோபி, ஆர்.கே.ரோனெல், ப்ரேம் ஆகிய 3 மணிப்பூர் இளைஞர்கள், நாகலாந்தில் உள்ள திமாபூரில் அவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டிலிருந்து இராணுவத்தின் ”3 படையணி நுண்ணறிவுப் பிரிவினால்” கடத்தப்பட்டு, இராணுவ உணவு விடுதிக்குப் பின்புறத்தில் வைத்து கொல்லப்பட்டனர் என்பதை விரிவாக பதிவு செய்துள்ளார். அச்சமயத்தில் வந்த ஊடகங்களின் தகவல்களின்படி, மார்ச் 17, 2010 அன்று அசாமின் கார்பி அங்லாங் காவல் நிலையத்துக்கு உட்பட்ட லக்கிஜன் பகுதியில் அம்மூவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

இது தொடர்பாக ஒரு வழக்கு கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேஜர் டி. ரவி கிரண் என்பவர்தான் இது குறித்து முதன்முதலில் கடந்த மார்ச் 12, 2010 அன்று பொது ஆணை அலுவலருக்கு கடிதம் எழுதியவர். அவர் எழுதிய கடிதத்தில் மூன்று மணிப்பூர் இளைஞர்கள், இராணுவத்தின் நுண்ணறிவு கண்காணிப்புப் பிரிவினரால் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தரம்வீர் சிங்
மனைவி குழந்தைகளுடன் தரம்வீர் சிங்

தமது வாக்குமூலத்தில் இதைப் போன்ற மற்றுமொரு சம்பவத்தை விவரிக்கிறார் தரம்வீர் சிங். மணிப்பூரைச் சேர்ந்த புனித டாமினிக் கல்லூரி மாணவர் சதீஷ் மற்றும் அவரது நண்பரும் அதே குழுவினரால் பிப்ரவரி 5, 2010 அன்று ஷில்லாங்கிலிருந்து கடத்தப்பட்டு மசிம்பூர் காடுகளில் வைத்து கொல்லப்பட்டனர். பிப்ரவரி 23 அன்று சதீஷின் பெற்றோர் தமது மகன் காணாமல் போனது குறித்து மணிப்பூர் டிஜிபியிடம் புகார் அளித்திருக்கிறார். ஆனால் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை

திமாபூரில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்த மக்கள் விடுதலைப் படையின் போராளி ஜித்தேஷ்வர் சர்மா என்ற ஜிப்சி மற்றும் அவரது நண்பர் ஒருவரையும் இழுத்துச் சென்று படுகொலை செய்துள்ளது இதே பிரிவு. அவர்களது உடல்களை அப்பிரிவின் உணவு விடுதிக்குப் பின்னால் புதைத்துள்ளனர். அப்பிரிவைச் சேர்ந்த சிலருக்கு புதைக்கப்பட்ட சரியான இடம் தெரியும் என்றும் அந்த வாக்குமூலத்தில் தரம்வீர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நுண்ணறிவுக் குழுவைச் சேர்ந்தவர்களே, ஒரு பெண்ணையும் அவரது குழந்தையையும் திமாபூரிலிருந்து கடத்தி ஒரு கோடி வரை அவரது குடும்பத்தாருடன் பேரம் பேசி பிணையத் தொகையாகப் பெற்றுள்ளனர் என்பதையும் அந்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். அவருக்கும் அவரது குடும்பத்தாரின் உயிருக்கும் ஆபத்து உள்ள்ளதாகவும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தரம்வீர் சிங் கடத்தப்பட்டதாகக் கூறுவதை ஆதரமற்றதாகக் கூறி இராணுவம் மறுத்துள்ளது. அவர் பணிக்காக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாகக் கூறியிருக்கிறது இராணுவம். தரம்வீர் சிங்கோ விடுமுறையில் குடும்பத்தோடு மணிப்பூரின் இம்பாலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொலை கொள்ளை ஆட்கடத்தல் குறித்து உள்ளூர் இராணுவ செய்தித் தொடர்பாளரிடம் கருத்துக் கேட்கப்பட்ட போது, நீதிமன்ற விசாரணையில் இவ்வழக்கு இருப்பதனால், இது குறித்து கருத்து தெரிவிக்க தமக்கு அதிகாரம் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் கொலைகளையும், கடத்தி பணம் பறிக்கும் இழிவையும், கொள்ளைகளையும் இராணுவத்திலிருந்தபடியே சட்ட வரைமுறைக்கு உட்பட்டு புகாரளித்த ஒரு இராணுவ அதிகாரியையே இவ்வளவு உளவியல்ரீதியாக சித்திரவதை செய்துள்ளனர். அவரைக் கடத்திச் சென்று அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளது இராணுவம். ஒரு லெப்டினண்ட் கர்னல் பதவியிலுள்ள இராணுவ அதிகாரிக்கே இதுதான் கதியென்றால், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சாதாரண மக்களின் நிலை என்னவென்பதை புரிந்து கொள்ள முடியும்.

– வினவு செய்திப் பிரிவு

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் வெளிவந்த செய்திப் பதிவின் தமிழாக்கம்.

ஆங்கில மோகத்திற்கு பலியிடப்படும் அறிவுத்திறன் – ஒரு கள ஆய்வு !

8

மீபத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் ஒன்றில் பேச நேர்ந்தது. அதன் உள்ளடக்கம் ஒன்றும் தனிச் சிறப்பானதல்ல, ஓரிரு நிமிட இணைய உலாவலில் கிடைக்கும் ஆலோசனைகளை மட்டுமே கொடுத்தோம். அவற்றை எளிமையாகவும் பயன்பாட்டுக்கு உகந்த வகையிலும் தரவேண்டும் என்பதால் அந்த உரைகளை ஆங்கிலத்தில் மட்டுமே தர முடியாது என வாதிட்டு அதனை ஆற்றுப்படுத்துனர் தரப்பின் சார்பாக செயல்படுத்தி விட்டோம்.

“மத்தவங்க எல்லாம் நெறைய சொன்னாங்க (ஆங்கிலத்தில்), அதை கேட்டுட்டு போய் நம்ம பிள்ளைக்கு சொல்ல முடியலையேன்னு கஷ்டமா இருந்தது. நீங்க தமிழ்ல பேசினதுக்கு நன்றி சொல்லிட்டு போக வந்தோம்”

நிகழ்ச்சி முடிந்து நீண்ட நேரம் பல பெற்றோர்களை சந்திக்க வேண்டியிருந்தது. சற்றேறக்குறைய 45 நிமிடங்களுக்கு ஒரு தம்பதி மட்டும் காத்திருந்தார்கள். வழமையாக அப்படி காத்திருப்பவர்கள் சற்றே பெரிய பிரச்சினையை விவாதிக்க வைத்திருப்பார்கள் என்பது எங்கள் அனுமானம். ஆனால் அவர்களை சந்தித்தபோது அந்த ஊகம் அடிப்படையற்றதாகிவிட்டது. அவர்கள் சொன்னது இதைத்தான் “மத்தவங்க எல்லாம் நெறைய சொன்னாங்க (ஆங்கிலத்தில்), அதை கேட்டுட்டு போய் நம்ம பிள்ளைக்கு சொல்ல முடியலையேன்னு கஷ்டமா இருந்தது. நீங்க தமிழ்ல பேசினதுக்கு நன்றி சொல்லிட்டு போக வந்தோம்”.

ஆங்கில மொழி
ஆங்கில மொழியில் நடத்தபடும் பாடங்கள் புரிகிறதா இல்லையா என்பதைவிட பிள்ளைகள் ஆங்கிலத்துல நாலு வார்த்தைகள் பேசினாலே கெளரவம் என நினைக்கும் பெற்றோர்கள் தான் இங்கு அதிகம்

சில மாதங்களுக்கு முன்னால் பதட்டநோய் அறிகுறியோடு 14 வயது மாணவர் ஒருவர் வந்தார். காலை 5.30 மணிக்கு ஆரம்பிக்கும் அவர் அன்றாடப் பணிகள் இரவு 8.30 வரை நீள்கிறது. காலை விளையாட்டுப் பயிற்சி, மாலை இரண்டு டியூஷன்கள். எதற்காக இரண்டு டியூஷன் என்று கேட்டேன். ஒன்றில் வீட்டுப் பாடங்களை முடிப்பேன் இரண்டாவது டியூஷனில் கணக்கையும் அறிவியலையும் ”தமிழில்” சொல்லிக் கொடுப்பார்கள் என்றார். அதாவது ஆங்கிலத்திலேயே பாடம் நடத்தப்படும் பள்ளியில் பெரும் பணம் கட்டி படிக்கும் மாணவர் அந்த பாடங்களை புரிந்து கொள்ள தமிழில் விளக்கும் டியூஷனுக்கு கூடுதலாக செலவளிக்கிறார்.

ஒரு உபரித் தகவல், சென்னையில் வீட்டுக்கே வந்து பாடம் நடத்தும் ஆசிரியருக்கு ஒருமணிநேர ஊதியம் 500 ரூபாய். அந்த வேலைக்கு வருடத்துக்கு 60 ஆயிரம் என ஒரே பேக்கேஜ் வாங்கும் ஆசிரியர்கள் உண்டு.

அதாவது ஆங்கிலத்திலேயே பாடம் நடத்தப்படும் பள்ளியில் பெரும் பணம் கட்டி படிக்கும் மாணவர் அந்த பாடங்களை புரிந்து கொள்ள தமிழில் விளக்கும் டியூஷனுக்கு கூடுதலாக செலவளிக்கிறார்.

ஆற்றுப்படுத்துனர்கள் மற்றும் உளவியல்சார் வேலைகளில் இருப்போருக்கான பயிலரங்கங்களில் அடிக்கடி பங்கேற்க வேண்டியிருக்கும். அங்கெல்லாம் கூட ஆங்கில உரைகளின் போது ஒரு கடுமையான இறுக்கத்தை காண இயலும். அதையே தமிழில் நடத்துகையில் பார்வையாளர்களது பங்கேற்பு பிரம்மிக்க வைப்பதாக இருக்கும். அப்படியான நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் எல்லோரும் தமிழ் வழியில் கற்றவர்கள் அல்ல. பல தருணங்களில் ஓரிருவர் தவிர ஏனையோர் ஆங்கில வழியில் படித்தவர்களாகவே இருப்பார்கள்.

அனுபவ ரீதியாக மதிப்பிடுகையில், வீட்டு உரையாடலை ஆங்கிலத்தில் நடத்தும் நபர்கள் மற்றும் தமிழ் தெரியாமல் ஆங்கிலத்திலேயே உரையாட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் மட்டுமே ஆங்கில உரைகளின் போதும் பாடங்களின் போதும் சிரமமில்லாமல் கவனிக்கிறார்கள் (பல உயர் மத்தியதர வர்க்க வீடுகளில் பேச்சு மொழி ஆங்கிலமாக இருக்கிறது). பெருநகரங்களில் கூட இந்தப் பிரிவு மக்கள் அதிகபட்சம் 10% விழுக்காட்டுக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்களது அடியொற்றியே பெரும்பாலான கல்வி நிலையங்கள் செயல்படுகின்றன.

ஆங்கிலத்தின் மீதான பிடிவாதமான மோகம் (அப்சஷன்) ஒரு மதத்தைப் போல நம்மை பீடித்திருக்கிறது. அதற்காக எதையும் தியாகம் செய்யும் மனநிலையில்தான் பெரும்பான்மை பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

“ஒன்பது வருசமா அங்க படிக்கிறான், இன்னும் ஒழுங்கா இங்கிலீஷ் பேச வரல. இந்த வருசம் ஸ்கூலை மாத்திரலாம்னு இருக்கேன்” என சலித்துக் கொண்டார் ஒரு நண்பர். அவர் ஒரு பள்ளி ஆசிரியர் என்பது உபரித் தகவல்.

இந்த ஆங்கில பக்தி எப்படியெல்லாம் அறிவுத் திறனை சிதைக்கிறது?

ஆங்கில வழிக்கல்வி
ஆங்கில வழிக்கல்வி நம் பிஞ்சுகளின் அறிவை வளர்க்குமா ? சிதைக்குமா?

முதலில் அது வகுப்பறையை உயிரோட்டமற்ற இடமாக மாற்றுகிறது. கற்பித்தல் என்பது தெரிந்தவற்றில் இருந்து தெரியாதவற்றை நோக்கி மாணவர்களை அழைத்துச் செல்லும் பணி. ஒரு ஆசிரியர் தனக்கு தரப்பட்ட பாடத்தின் மீது மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படும்படியான சூழலை உருவாக்கினாலே போதும். மற்றவற்றை ஒரு மாணவனே கூட தேடிக் கண்டடைய எல்லா வாய்ப்புக்களும் இன்று கிடைக்கின்றது. அந்த ஆர்வத்தை உருவாக்க எளிமையான மொழிநடையும், உதாரணங்களும் கூடவே துடிப்பான உரையாடல்களும் தேவை. இந்த மூன்றையும் சிதைப்பது ஆங்கிலத்தில் பேசவேண்டும் எனும் கட்டாய சூழல் (அது தமிழில் பேசும்போதும் நிகழலாம் என்றாலும் கட்டாய ஆங்கிலம் அதனை மூர்க்கமாக செய்கிறது).

மொழியை எளிமையாக்க முடியாமல் ஆசிரியர் உபதேசிப்பதைப் போல பாடம் நடத்துகிறார், தமிழ் உரையாடல் சூழலில் வளர்ந்த மாணவர்கள் அதனை புரிந்துகொள்ள இயலாமல் ஆர்வமிழக்கிறார்கள். மாணவர்கள்  எளிதில் கவனம் சிதறும் இயல்பு கொண்டவர்கள் என்பதால் அவர்கள் குறும்பு செய்யவோ அல்லது வேறு யோசனைக்கு செல்லவோ நேர்கிறது. இது அதிகரிக்கையில் ஆசிரியர் ஆர்வமிழக்கிறார். என் பார்வையில் இதுவே பள்ளி ஒழுங்கீனத்தின் (பாடத்தை கவனிக்காதிருப்பது, வகுப்பு நேரத்தில் சேட்டைகள் செய்வது உள்ளிட்ட) ஆரம்ப காரணி. மேலும் ஆங்கிலத்தில் பேச வேண்டியிருப்பதால் ஆசிரியர் தமது அறிவின் பரப்பை ஆங்கில மொழித்திறன் எனும் குறுகிய எல்லைக்குள் அடக்க வேண்டியிருக்கிறது. இதனால் உதாரணங்களை அவர் தவிர்க்க நேரலாம். எதிர்திசையில் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்க இயலாமல் போகிறது.

மொழியை எளிமையாக்க முடியாமல் ஆசிரியர் உபதேசிப்பதைப் போல பாடம் நடத்துகிறார், தமிழ் உரையாடல் சூழலில் வளர்ந்த மாணவர்கள் அதனை புரிந்துகொள்ள இயலாமல் ஆர்வமிழக்கிறார்கள்.

பல சமயங்களில் பாடத்தில் சந்தேகம் என்பது முழு பாடத்தையுமே மீண்டும் கேட்பதாக இருப்பதை பார்த்திருக்கிறேன்.

ஆண்டு விழாக்களில் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பது பாட்டு, நடனம் மற்றும் மைம் போன்ற உரையாடல் அவசியமற்ற நிகழ்ச்சிகளில் மட்டும்தான். காரணம் ஆங்கில உரையாடல்கள் தேவைப்படும் நாடகங்கள் அவர்களுக்கு சிரமமாக இருக்கிறது (எலைட் பள்ளிகளையும் சேர்த்தே சொல்கிறேன்). இன்னுமொரு காரணி அவர்களை நாம் சிந்திக்க விடுவதில்லை, ஆகவே (நடனம் போன்ற) பயிற்சி மட்டுமே தேவைப்படும் பிற வாய்ப்புக்களை மட்டும் தெரிவு செய்கிறார்கள்.

ஜி.ஹெச்.க்யூ, இ.பி.க்யூ போன்ற உளவியல் சார் மதிப்பீட்டுக்கான கேள்வித் தாள்களை நிரப்ப அனேகமாக எல்லா மாணவர்களும் தடுமாறுகிறார்கள் (இதிலும் எலைட் பள்ளி மாணவர்கள் அடக்கம்). ஆங்கில ஞானத்தை நோக்கி தவமிருக்கும் பெற்றோரும் பள்ளிகளும் வளர்க்கும் பிள்ளைகளின் நிலை இது.

ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் எனும் கட்டாயம் உள்ள பள்ளிகளில் நாம் கேட்கும் வார்த்தைகள் மிக சுவாரஸ்யமாக இருக்கும். ஹேய் கம்டா, கோடா, கிவ்டா ஆகியவை சில உதாரணங்கள். ஒருமுறை மாணவர் ஒருவர் ’’ஹி இஸ் கிண்டலிங் மீ’’ என சக மாணவர் மீது குற்றம் சாட்டினார்.

தனியார் பள்ளிகளில் ஒரு சர்வே நடத்திப் பாருங்கள். பெரும்பான்மையானவர்கள் தமிழ் சிரமமாக இருக்கிறது என்பார்கள். எந்த மொழியில் பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறார்களோ அதே மொழியை  ஒரு பாடமாகக் கற்பது சிரமமாக இருக்கிறது அவர்களுக்கு. இந்த முரண்பாடு நமது கல்வியமைப்பின் பெரும் தோல்வி!

கணக்கும் ஆங்கிலமும் சிரமமாக இருக்கிறது என்று சொல்லும் மாணவர்களைத்தான் இருபதாண்டுகளுக்கு முன்பு பார்த்திருக்கிறோம். இப்போது தனியார் பள்ளிகளில் ஒரு சர்வே நடத்திப் பாருங்கள். பெரும்பான்மையானவர்கள் தமிழ் சிரமமாக இருக்கிறது என்பார்கள். எந்த மொழியில் தங்களுக்கு பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறார்களோ அதே மொழியை  ஒரு பாடமாகக் கற்பது சிரமமாக இருக்கிறது அவர்களுக்கு. இந்த முரண்பாடு நமது கல்வியமைப்பின் பெரும் தோல்வியின் சிறிய அறிகுறி.தமிழ் எளிதாக இருக்கிறது என்று சொன்ன ஒரேயொரு மாணவரைத்தான் கடந்த ஓராண்டில் சந்தித்திருக்கிறேன். அவர் ஒரு ஆங்கிலோ இந்தியன் மாணவர்

தமிழ் வழிக்கல்வி
பொதுவாக செய்திகள் வாசிப்பதிலும் ஆங்கிலமே அறிவு என்கின்றனர்.

இங்கே வழக்கமான கற்றல் நடைமுறை என்பது கேள்விகளையும், அதற்கான பதில்களையும் மனப்பாடம் செய்ய வைத்து இந்த கேள்விக்கு இந்த பதில் எழுத வேண்டும் என்பதாக இருக்கிறது. ஆரம்ப வகுப்புக்களில் மாணவர்களை தேர்வுக்கு தயாரிக்க இந்த வழிமுறையே எல்லா இடங்களிலும் பின்பற்றப்படுகிறது. அது 12-ம் வகுப்புவரை தொடர்கிறது. எதற்காக ஒன்றாம் வகுப்பிலேயே வாக்கியங்களை எழுதும்படியான பாடத்திட்டத்தை நம் நாட்டில் வைத்திருக்கிறோம் என்பது புரியவில்லை. அதைக்கூட ஒரு ஆசிரியரால் சமாளிக்க முடியும். ஆனால் அதோடு சேர்த்து மாணவனுக்கு பரிச்சயமில்லாத ஒரு மொழியையும் அவர் கற்றுத்தர வேண்டியிருப்பதால் அவர்களுக்கு இதைத்தவிர வேறு வாய்ப்பில்லை.

சர்வதேச பாடத்திட்டத்தில் பெரும்பாலும் மனப்பாடம் செய்து பதில் எழுத இயலாது, பதிலை நீங்கள் பரிந்துரைக்கப்படும் புத்தகங்களில் இருந்து படித்து அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே அதில் பயிலும் தன் மகனுக்கு பதிலை கண்டுபிடித்து – எழுதித்தந்து – பிறகு சொல்லிக் கொடுக்க தனி ஆசிரியரை நியமித்திருக்கிறார் ஒரு தொழிலதிபர்

ஏன் அரசுப் பாடத்திட்டத்துக்கு தனியார் பதிப்பக புத்தகங்களை வாங்குகிறீர்கள்? என்று ஒரு பள்ளி ஒருங்கிணைப்பாளரை கேட்டேன். அரசு புத்தகங்களை வாங்கினா “இதை படிக்கனும்னா நாங்க கவர்மெண்ட் ஸ்கூல்லயே பையனை சேர்த்துருவோமே” ,ன்னு பெற்றோர்கள் குறைபட்டுக்குறாங்க என்கிறார் அவர். இந்த காரணத்துக்காவே கூடுதல் பாடங்கள் தனியார் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஹிந்தி அதில் முக்கியமானது. சென்ற ஆண்டுக்கான எங்கள் ஆய்வறிக்கையில் ஆற்றுப்படுத்துனர் சேவையை 35% எட்டாம் வகுப்பு மாணவர்கள் நாடியிருக்கிறார்கள்.

அடுத்த பெரும் எண்ணிக்கை ஏழாம் வகுப்பினர். இந்த எண்ணிக்கை ஒன்பதாம் வகுப்பில் 7.3% சதவிகிதமாக வீழ்கிறது, காரணம் ஹிந்தியும் கணினி அறிவியலும் 9, 10 வகுப்புக்களுக்கு கிடையாது. 10 மற்றும் 11-ம் வகுப்புக்களில் ஆற்றுப்படுத்துனரை நாடுவோர் எண்ணிக்கை மீண்டும் 22% ஆக உயர்கிறது- காரணம் பொதுத்தேர்வு அழுத்தம் மற்றும் பதின்பருவ குழப்பங்கள். ஆக பாடச்சுமையானது அவர்களது மனநலத்தில் தாக்கம் செலுத்துவது கண்கூடாக தெரிகிறது.  இது 2000 மாணவர்கள் உள்ள ஒரு பள்ளியின் தரவு, பொதுவான சூழல் இதைவிட குறைவாகவோ அல்லது அதிகமாகமான சிக்கலுடையதாக இருக்கலாம்.

அல்லேலூயா கும்பல்கள் இயேசு வருவார் என வெறித்தனமாக நம்புவதைப் போல நாமும் ஆங்கில வழியில் படிப்பையே ஒரே மீட்பராக கருதும்படிக்கு தயாரிக்கப்பட்டிருக்கிறோம். அந்த முரட்டு நம்பிக்கைக்காக நாம் மிகப்பெரிய விலையை கொடுத்துக்  கொண்டிருக்கிறோம்.

அரசுப்பள்ளிகளில் இருக்கும் ஆங்கிலவழி வகுப்புக்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்பது தெரியவில்லை. அல்லேலூயா கும்பல்கள் இயேசு வருவார் என வெறித்தனமாக நம்புவதைப் போல நாமும் ஆங்கில வழியில் படிப்பையே ஒரே மீட்பராக கருதும்படிக்கு தயாரிக்கப்பட்டிருக்கிறோம். அந்த முரட்டு நம்பிக்கைக்காக நாம் மிகப்பெரிய விலையை கொடுத்துக்  கொண்டிருக்கிறோம். அதில் பல ஒருக்காலும் மீளப்பெற இயலாதவை.

ஆங்கில வழியின் மூலம் நாம் பெருந்தொகையான மாணவர்களையும் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் நாம் வெவ்வேறு வழிகளில் தண்டிக்கிறோம். ஓரளவு கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் அவர்களுக்கான சிறப்பு பயிற்சியில் தமிழை சிறப்பாக கற்பதை எங்கள் தரவுகளில் இருந்து அறிய முடிகிறது. காரணம் அதில் சொற்களை சேர்த்து வார்த்தையை உருவாக்குவது எளிது. தமிழில் அறிவு என்பதை அ -றி -வு என கோர்த்து எழுதுவது எளிது. ஆனால் ஆங்கிலத்தில் knowledge என எழுத்துக்களின் தொகுப்பை நீங்கள் மனப்பாடம் செய்ய வேண்டும். தமிழில் அப்படியல்ல, நீங்கள் கேட்பதை அப்படியே எழுத்தாக்க முடியும். கற்பதற்க்கு எளிய மொழியை புறந்தள்ளுவதன் மூலம் நாம் (பெரும்பாலான) மாணவர்களின் கற்றலை இரட்டை சுமையாக்குகிறோம்.

ஆங்கிலத்தில் பேசுவதும் எழுதுவதும் அதி அத்தியாவசியம் என நீங்கள் நம்பினாலும்கூட அதனை நாளுக்கு ஒரு மணிநேர பயிற்சியின் மூலம் சிறப்பாக செய்ய வைக்க இயலும். ”கடுமையான பயிற்சி, இலகுவான சண்டை” என்பது ராணுவ முகாம்களில் சொல்லப்படும் வாக்கியம். அதனை நாம் கல்வியில் செயல்படுத்துகிறோம். அதனால் பள்ளிக்கூடங்கள் போர்க்களங்களாக மாறியிருக்கிறது.

– வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

ஹீலர் பாஸ்கர் கைது – மற்ற மூடர்களை என்ன செய்யலாம் ?

‘இயற்கை வாழ்வியல்’ எனும் கோமாளித்தனத்தால் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால்  ரத்தப் போக்கு ஏற்பட்டு திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண் கிருத்திகா கடந்த ஜூலை (2018) இறுதியில் உயிரிழந்தார்.

இந்த மூடத்தனம் குறித்து மருத்துவர்கள் உள்ளிட்டு பலரும் எச்சரித்து வந்த நிலையில், கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் நிஷ்டை என்ற கோஷ்டியினர் வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கு பயிற்சியளிக்கும் நிகழ்ச்சி ஒன்றை ஆகஸ்ட் 26 -ம் தேதி நடத்த உள்ளதாக அறிவித்து விளம்பரங்கள் செய்திருந்தது.

healer bashkar
கிருத்திகா உயிரிழந்த பிறகும் ஹீலர் பாஸ்கரால் இப்படி ஒரு விளம்பரம் தைரியமாக கொடுக்க முடிகிறது என்றால்?

மேற்படி அமைப்பு ஹீலர் பாஸ்கரால் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‘வீட்டிலேயே பிரசவம்’ விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் இதைப் பற்றி அவரது கருத்தை அறிந்து கொள்ள ஊடகங்கள் முயன்ற போது பேட்டியளிக்க மறுத்துள்ளார் பாஸ்கர்.

எனினும், இது பற்றி தமிழக டி.ஜி.பி, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தன்னிடம் நேரில் வந்து விளக்கம் கேட்டால் மட்டுமே உரிய விளக்கம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாஸ்கரின் மோசடி விளம்பரம் குறித்து ஜான்சன் என்பவர் கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அரசின் சுகாதாரத்துறையும் விளம்பரம் குறித்த தகவல் அறிந்து விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

நிஷ்டை கோஷ்டி குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் இந்த விளம்பரம் குறித்து ஆய்வு செய்து இருப்பதாகவும், அவர்கள் குறித்து முழு தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கோவை மண்டல சுகாதாரத்துறை இணை இயக்குர் பானுமதி அறிவித்தார்.

விசாரணையின் போது இலவசமாக பிரசவம் பார்க்கப் பயிற்சி தருவதாக கூறி ஒவ்வொரு நபரிடமும் தலா 5 ஆயிரம் ரூபாய் நன்கொடை வசூலித்துள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து ஹீலர் பாஸ்கர்(42) மீதும் அவரது அலுவலக மேலாளர் சீனிவாசன்(32) என்பவரின் மீதும் சட்டப்பிரிவு 420 மற்றும் 511 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணைக்காக கைது செய்துள்ளனர் போலீசார்.

தொடர்புடைய கட்டுரைகள்:

திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் !

பிரசவகால மரணங்கள் : இலுமினாட்டி பைத்தியங்களுக்கு பதில் !

பாட்டி வைத்தியத்திற்கும் பாதுகாப்பான மகப்பேற்றிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை !

கைது செய்யப்பட்டிருப்பதாலேயே பாஸ்கரோ பாரி சாலனோ திருந்தி விடப்போவதில்லை; தங்கள் சதிக் கோட்பாடுகளைப் பிரச்சாரம் செய்யாமல் இருக்கப் போவதுமில்லை. இந்தக் கைதை தங்களது செய்ல்பாடுகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாக கம்பெனியின் சந்தையை விரிவு படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

இப்போதே பாஸ்கர் – பாரி ஆதரவு வாட்சப் குழுமங்களில் இவர்களின் கைதுகளுக்குப் பின் உள்ள சர்வதேச இலுமினாட்டி வலைப்பின்னலின் தொடர்பு குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருவதை கவனிக்க முடிகிறது.

மேலும், அறிவியலுக்குப் புறம்பான மூடத்தனங்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்குமான அடிப்படை எங்கே இருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதே கோவையில் சிங்காநல்லூர் பகுதியில் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் நோயுற்ற வயதான பெண்மணி ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் ‘இயேசு வந்து காப்பாற்றுவார்’ என நம்பி வீட்டைப் பூட்டிக் கொண்டு ஜெபித்துள்ளனர் பெந்தேகோஸ்தே சபையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர். பின்னர் அந்தப் பெண்மணி இறந்த பின்னும் மேலும் சில வாரங்களுக்கு வீட்டைத் திறக்காமல், சாப்பிடாமல் தொடர்ந்து ஜெபித்து வந்துள்ளனர்.

பின்னர் அக்கம் பக்கத்தவர்கள் துர்நாற்றம் வருவதை அறிந்து காவல்துறைக்கு தகவல் அளித்து கதவை உடைத்துத் திறந்த பார்த்தால் குழந்தைகள் உட்பட அக்குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் எலும்பும் தோலுமாக உயிருக்குப் போராடிய நிலையில் அழுகிய பிணத்தோடு வழிபாடு செய்து வந்தது தெரிய வந்தது .

அப்போது காவல் துறையினரிடம் ‘தங்களது ஜெபத்தால் இயேசு இறங்கி வந்து மரித்துப் போன தங்கள் தாயை உயிர்ப்பித்து தந்து விடுவார்’ என நம்பியே தொடர்ந்து ஜெபித்ததாக அக்குடும்பத்தினர் தெரிவித்தனர். இச்செய்தி அப்போதே பத்திரிகைகளில் வெளியானது.

superstitions in religionசமீபத்தில் தில்லியில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த 11 பேர் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட செய்தி பத்திரிகைகளில் வெளியானது. இன்னும் அந்த தற்கொலைகளுக்கு என்ன காரணம் என்பதை போலீசார் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருவதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும், அக்குடும்பத்தினர் ஏதோவொரு இந்து மதப் பிரிவையோ சாமியாரையோ பின்பற்றி வந்தனர் என்பதும், குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட விதத்தில் தற்கொலை செய்து கொண்டால் மோட்சம் கிடைக்கும் என அங்கிருந்த டைரிகளில் எழுதி வைக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் வெளியானது.

காசியில் செத்தால் மோட்சம் என்பதற்காக அங்கே சாவதற்காகவே செல்வோர் எத்தனை பேர்? அனாதைப் பிணங்களைச் சுமந்து கங்கை நதி மாசடைந்திருப்பது குறித்து எத்தனை ஆய்வுகள் வெளியாகியுள்ளன? இன்னும் பாரசீகத்தில் ஐ.எஸ் எனும் காட்டுமிராண்டிக் கூட்டம் இசுலாத்தின் பெயரில் எண்ணிறந்த கொடூரங்களை நிகழ்த்தி வருகிறது.

தொடர்புடைய கட்டுரை:

ஆன்மீகத்தால் அச்சுறுத்துகிறார்  செந்தமிழன்!

ஆக, மூடத்தனங்களுக்கு ஹீலர் பாஸ்கர், பாரி சாலன் போன்ற ஒரு சில தனிநபர்கள் மட்டும் காரணமல்ல.

அறிவியலுக்குப் புறம்பான பிற்போக்குத்தனமான சிந்தனை முறையும் அந்த சிந்தனை முறை நீடித்து நிற்பதற்கான சமூகச் சூழலும் தான் ஹீலர் பாஸ்கர் பாரி சாலன் போன்றோரை உற்பத்தி செய்கின்றது.

இவர்கள் மூடத்தனங்களுக்கு பலியாகும் அளவுக்கு பலவீனமாய் உள்ள மக்களைப் பயன்படுத்திக் கொள்ளும் குற்றவாளிகள் எனும் வகையில் இவர்கள் தண்டனைக்குரியவர்கள் ஆகிறார்கள். இந்தியாவில் மதம், சடங்கு பெயரில் ஏற்கனவே இருக்கும் மூடநம்பிக்கைகள் உலகமய – இணைய காலத்தில் வேறு அவதாரங்கள் எடுக்கின்றன. இவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பது, இவர்களது பயிற்சி முகாம்களை அம்பலப்படுத்துவது, மக்களிடம் பிரச்சாரம் செய்வது அனைத்தும் இடையறாமல் செய்ய வேண்டியிருக்கிறது.

அறிவியலுக்குப் புறம்பான மூடத்தனங்களை எள்ளி நகையாடும் நிலைக்கு சமூகம் வளரும் போது இவர்கள் வெறும் காமெடியன்களாக புறக்கணிக்கப்பட்டும் சிறுமைப்பட்டும் போவார்கள். அவ்வாறான ஒரு சமூக சூழலை உண்டாக்கப் போராடுவதும், அதற்காகப் பிரச்சாரம் செய்வதும் நம் அனைவரின் கடமையும் ஆகிறது.

  • சாக்கியன்

தொடர்புடைய செய்திகள் :

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கு – பயிற்சி முடித்த மாணவர்கள் கோரிக்கை

க்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் பார்ப்பன எதிர்ப்பு சாதித்தீண்டாமை எதிர்ப்பில் அக்கறையுள்ள ஜனநாயக சக்திகள் பலரது தொடர் போராட்டங்களின் பலனாக, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 36,000 கோயில்களில் தகுதியும் பயிற்சியும் பெற்ற எந்தசாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கப்படலாம் என்ற அரசாணை தி.மு.க.வின் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் கடந்த 2006 இல் பிறப்பிக்கப்பட்டது.

இவ்வுத்தரவைத் தொடர்ந்து, பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை, ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும்; சென்னை மற்றும் திருவரங்கத்தில் வைணவ அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியும் தொடங்கப்பட்டது.

இப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த 34 மாணவர்களும்; பிற்பட்ட சாதியைச் சார்ந்த 76 மாணவர்களும்; மிகவும் பிற்பட்ட சாதியைச் சேர்ந்த 55 மாணவர்களும்; இதர சாதியைச் சேர்ந்த 42 மாணவர்களும் என மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர்.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கலாம் என்ற அரசாணையை எதிர்த்து, மதுரை ஆதி சைவ சிவாச்சாரியர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதை சாக்காக வைத்து பயிற்சி முடித்த மாணவர்களுக்கும் பணி நியமனம் இதுவரை மறுக்கப்பட்டு வந்ததோடு, 2007-2008 கல்வியாண்டிற்குப் பிறகு அரசின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளும் மூடப்பட்டன.

இந்நிலையில், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் மாரிச்சாமி என்பவர் மதுரை அருகேயுள்ள இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அய்யப்பன் கோயிலில் அர்ச்சகராக பணி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர் என்பதைத் தாண்டி, அரசின் போட்டித் தேர்வில் பங்கேற்று அதிலும் தனது திறமையை நிரூபித்த பின்னர்தான் இந்தப் பணியும் வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், தகுதியின் பெயரில் பார்ப்பனரல்லாத பிற்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக பணி நியமனம் பெற்றிருக்கிறார், என்பதுதான் இங்கே கவனிக்கத்தக்கது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களில் முன்னுரிமை அடிப்படையில், மாரிச்சாமியுடன் ஒன்றாக பயிற்சி முடித்த 205 மாணவர்களுக்கும் உடனடியாக பணிநியமனம் வழங்க வேண்டுமென்றும் மூடப்பட்ட அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறக்கக்கோரியும் கடந்த 02.08.18 அன்று இந்து அறநிலையத்துறை ஆணையரை சந்தித்து மனு அளித்தனர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்.

இதற்கு முன்னதாக, இதே கோரிக்கைகளுடன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க.வின் செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களையும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள். இவ்விரு சந்திப்புகளிலும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.

***

அர்ச்சகர் பயிற்சி முடித்து அரசின் தகுதிச் சான்றிதழைக் கையில் வைத்திருந்தும் நேரடி நியமனம் கிடையாது. டி.என்.பி.எஸ்.சி. மூலமாக போட்டித்தேர்வில் பங்கேற்று நேர்முகத்தேர்வை எதிர்கொண்டுதான் வேலை பெறமுடியும் என்கிறார், இந்து அறநிலையத்துறை ஆணையர். இந்து அறநிலையத்துறை சார்பாக செய்தித்தாளில் வெளியிடப்படும் விளம்பரத்தைப் பார்த்தோ, எந்தக் கோயிலில் காலியிடம் இருக்கிறதோ அங்குள்ள செயல் அலுவலரை அணுகியோ வேலைவாய்ப்புக்கு தனியே விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.

அரசின் மோசடியை அம்பலப்படுத்துகிறார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர், ரங்கநாதன்.

தமிழகத்தில் நிலவும் சாதித்தீண்டாமை, கருவறைத்தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தின் வரலாற்றை சுருங்கச்சொல்கிறார், வழக்கறிஞர் பொற்கொடி.

பாருங்கள், பகிருங்கள்!

 

அகண்ட பாரத கனவும் 40 லட்சம் அஸ்ஸாமிய அகதிகளும் ! மு.வி. நந்தினி

bangladeshi

மு.வி.நந்தினிமுதல் உலகப்போருக்குப் பின் 1920-1939 வரை யூதர்கள் குறித்து நாசி ஹிட்லர் செய்த பரப்புரைகள் ஜெர்மானியர்களை இனப் படுகொலையாளர்களாக  தயார்படுத்தின. யூதர்கள் ஜெர்மனி நாட்டிற்க்கு அந்நியமானவர்கள் என்ற ஹிட்லர்,  முதல் உலகப் போரில் தோல்வியை சந்தித்ததற்கும் ஜெர்மானியர்கள் எதிர்கொண்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் யூதர்களே காரணம் என்கிற ‘சதிக் கோட்பாட்டை’ முன்வைத்தார். ‘நம்மிடையே கலந்திருக்கும் யூதர்களை வெளியேற்றுதல்’ என துவங்கிய பிரச்சாரம், லட்சக்கணக்கான யூதர்களை படுகொலை செய்ததில் வந்து முடிந்தது.

Hitler
அடால்ஃப் ஹிட்லர்

வரலாறு மீண்டும் மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளில் மட்டுமல்ல இப்போது இந்தியாவிலும் திரும்பியிருக்கிறது.  அனைத்து பிரச்சினைகளுக்கும் யூதர்களே காரணம் என சதிக்கோட்பாட்டை உருவாக்கிய ஹிட்லரைப் போல இன்று ட்ரம்பும் மோடியும் முஸ்லிம்களை கை காட்டுகிறார்கள். படுகொலை முகாம்களுக்குள் அனுப்பப்படும் முன் பெற்றோரிடமிருந்து குழந்தைகளை பிரித்து தனித்தனியாக அடைத்த நாசிக்களின் பாதையை, நாகரீக நாடு எனச் சொல்லப்படும் அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் பின்பற்றுகிறார். அகதிகளாக வரும் அந்நியர்கள் (முஸ்லிம்கள்) நாட்டின் பாதுகாப்புக்கு  அச்சுறுத்தலாக இருப்பதாக  ஹிட்லரின் சதிக்கோட்பாட்டை மோடி அரசு வாசிக்கிறது. 40 லட்சம் மக்களை அந்நியர்கள் என சொல்லி அஸ்ஸாமிலிருந்து விரட்டியடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது இந்த அரசு.

அஸ்ஸாமிய அகதிகள்
ஹிமாந்த பிஸ்வ சர்மா

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் வரைவு அறிக்கை சமீபத்தில் வெளியானது. அருகில் உள்ள வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக அஸ்ஸாமிற்க்குள் குடியேறுவதைத் தடுக்க ‘அஸ்ஸாம் ஒப்பந்தம்’ இந்திய அரசால் 1951-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

இதன்படி பாகிஸ்தானிலிருந்து பிரிந்து பங்களாதேஷ் என்ற தனிநாடு உருவானதற்கு முன் அதாவது, 1971 மார்ச் 24-ஆம் தேதி வரை அஸ்ஸாமில் பிறந்தவர்கள், பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே ‘குடிமக்கள்’. அதன் பின் வந்தவர்கள் அந்நியர்கள்.  அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் கணக்கெடுக்கும் பணி  2014-2016 வரை நடைபெற்றது. இந்த பதிவேட்டின் வரைவில் அஸ்ஸாமில் வசிக்கும் 2.89 கோடி பேர் இடம் பெற்றுள்ளனர். 40 லட்சம் பேர் விடுபட்டுள்ளனர். இதில் 2 லட்சம் பேருக்கு மட்டுமே, தக்க சான்றிதழ் கொடுத்து குடிமக்கள் பதிவேட்டில் மீண்டும் இணைத்துக் கொள்ள வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. மீதியுள்ளவர்கள் அகதி முகாம்களுக்கு அனுப்பப்பட்டு தங்களுடைய ‘சொந்த’ நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்கிறது அரசு.

அனைத்து பிரச்சினைகளுக்கும் யூதர்களே காரணம் என சதிக்கோட்பாட்டை உருவாக்கிய ஹிட்லரைப் போல இன்று ட்ரம்பும் மோடியும் முஸ்லிம்களை கை காட்டுகிறார்கள்.

1971 மார்ச் 24-ஆம் தேதிக்குப் பின் அஸ்ஸாமில் குடியேறிய பக்கத்து மாநிலமான மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களும் அந்நியர்களாக கருதப்படுவார்கள். ஒரே நாடுதான் ஆனால், அந்நியர்! சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தில் குடிமக்கள்-அந்நியர் என்பது மட்டுமே பிரச்சினையில்லை. இந்துத்துவ மோடி அரசுக்கு முஸ்லீம்களின் மீதுள்ள வெறுப்பு மிக முக்கிய காரணம். இந்த வெறுப்பு நாசி ஹிட்லரின் யூத வெறுப்பை ஒத்துள்ளது.

அகண்ட பாரதம்
ஒரு முஸ்லீம் என்பதால் “ D-voter ” எனும் சந்தேக வாக்காளர் நிலைக்கு தள்ளப்பட்ட கிஸ்மத் அலி பல சட்ட போராட்டங்களுக்கு பின்னர் தான் நாட்டின் குடியுரிமை பெற்றார்

தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் லோத் இப்படி சொல்கிறார், “சட்ட விரோதமாக குடியேறியிருக்கும் பங்களாதேஷிலிருந்து வந்தவர்களும் ரொஹிங்கியாக்களுக்கும் வெளியேறாவிட்டால் அவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும். பங்களாதேஷ் பிரிவினையின் போது  அஸ்ஸாமுக்குள் 40 லட்சம் பேர் ஊடுருவி சட்ட விரோதமாக தங்கி விட்டனர். இந்தியாவை அழிக்கும் ‘சதி’யின் ஒரு பகுதியாக  இவர்கள் ஊடுருவியிருக்கிறார்கள் ”. ஜெர்மன் தேசியத்தை முன்னெடுத்து ‘யூதர்களின் சதி’யை பிரச்சாரமாக்கி மக்களை கொன்றொழித்த நாசியின் தொனி தெரிகிறதல்லவா?

சட்ட விரோதமாக குடியேறியிருக்கும் பங்களாதேஷிலிருந்து வந்தவர்களும் ரொஹிங்கியாக்களுக்கும் வெளியேறாவிட்டால் அவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும்.

“நீங்கள் மனித உரிமை குறித்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அஸ்ஸாம் மக்களுக்கு மனித உரிமை தேவையில்லையா? இந்த நாட்டு மக்களுக்கு எந்த உரிமையும் வேண்டாமா? சட்டவிரோதமாக எல்லையில் ஊடுருவிக் கொண்டிருந்தால் இந்த நாடு எப்படி இயங்கும்? சட்ட விரோதமாக குடியேறுகிறவர்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு தேச பாதுகாப்புக்கானது; ஊடுருவல்காரர்களை தடுக்கக் கூடியது” என்கிறார் மோடியின் கோயபல்ஸ் அமித் ஷா.

துணை ராணுவப் படையின் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற கிராம மக்கள்.

அஸ்ஸாம் மாநிலத்தில் ’பங்களாதேஷ் குடியேறிகள், அந்நியர்கள், ஆபத்தானர்கள்’ என்கிற பிரச்சாரத்தை முன்னெடுத்து ஆட்சிக்கு வந்தது பாஜக. அஸ்ஸாம் ஜிகாதி முஸ்லிம்களின் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸிலிருந்து பிரிந்து 11 எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் தஞ்சம் புகுந்த ஹிமாந்த பிஸ்வ சர்மா சட்டப்பேரவை தேர்தலின் போது பிரச்சாரம் செய்தார்.

மண்ணின் மைந்தர்களுக்கு முஸ்லிம்களால் ஆபத்து என தொடர்ந்த பிரச்சாரம் பாஜகவை ஆட்சியில் அமர்த்தியது.  முதலில் வைஷ்ணவ மடங்களுக்குச் சொந்தமான நிலத்தை  ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி இஸ்லாமிய அகதிகளை விரட்டியது அஸ்ஸாம் அரசு.  2017 செப்டம்பர் மாதம் கசிரங்கா சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்ததாகக் கூறி 200 கட்டடங்களை இடித்துத் தள்ளினார்கள்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்திய போது  துணை ராணுவப் படையின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகினர். வனப்பகுதி ஆக்கிரமிப்புக்குள்ளானதல்ல என்றும், கசிரங்கா சரணாலயத்தின் விஸ்தரிப்புக்காக மாநில அரசு சமீபத்தில்தான் அப்பகுதியை கேட்டிருந்தது என்றும் ஆதரங்களோடு செய்தி வெளியானது. ஆனாலும் அம்மாநில அரசு ‘பங்களாதேஷ்’ குடியேறிகள் என்ற பதங்களைப் பயன்படுத்தி ஏழைகளை குறிப்பாக, இஸ்லாமியர்களை விரட்டத் தொடங்கியது. அஸ்ஸாமிலிருந்து பங்களாதேஷிகளை துடைத்தெடுக்கும்வரை இந்தப் பணி தொடரும் என அம்மாநில நிதியமைச்சர் அறைகூவல் விடுக்கிறார்.

இந்துத்துவ கும்பலுக்கும் ஆட்சியைப் பிடிப்பது மட்டும் இலக்கு அல்ல, மதவாதமும்,முஸ்லீம்கள் நீக்கப்பட்ட ‘இந்து தேசிய அகண்ட பாரதமே’ அவர்களுடைய இறுதி இலக்கு.

வங்கதேச முஸ்லிம் அகதிகள் விரட்டப்பட வேண்டியவர்களா?
முசுலீம் மக்களை ஐ.எஸ்.ஐ ஏஜெண்டு – அகதி என்று மிரட்டுவதற்கான துருப்புச் சீட்டுதான் இந்த அகதி பிரச்சாரம்.
– கண்ணை மறைக்கும் காவிப் புழுதி தொடர் கட்டுரை

2016-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தத்தில் இஸ்லாமிய அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் சிறுபான்மையினராக வசித்த இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், கிறித்துவர்கள் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறுகிறவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள். இவர்கள் ஆறு ஆண்டுகள் இந்தியாவில் வசித்தால் இந்திய குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். அதாவது, பாகிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக நுழைந்த ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் கழித்து இந்திய அரசே அவர்களுக்கு குடியுரிமை கொடுத்துவிடும்.

bangladeshi refugees in india
2014 – ல் அஸ்ஸாமின் பாக்‌ஷா மாவட்டத்தில் கிழக்கு வங்காளத்தை சார்ந்த முஸ்லீம்களின் வீடுகளை போடோ இராணுவம் கொளுத்தியது. எங்கு போவதென்று தெரியாமல் குடும்பத்துடன் செல்லும் முஸ்லீம்கள்.

இது பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்துக்களுக்கும் பொருந்தும். இந்த கரிசனம் மியான்மரில் சிறுபான்மையினராக உள்ள ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கு இல்லை. முஸ்லிம்களின் மீதுள்ள இந்த வெறுப்புதான் ஹிட்லரின் யூத வெறுப்புடன் ஒத்துள்ளது.

2014 பாஜக தேர்தல் அறிக்கையில் ‘இடருக்குள்ளாகும் அனைத்து இந்துக்களின் தாய்வீடாக இந்தியா திகழும்’ என தெரிவிக்கப்பட்டிருந்ததை இங்கே நினைவு கூறலாம். இந்து தேசியத்தை முன்வைத்து தயாராகிக் கொண்டிருக்கும் அகண்ட பாரத செயல்திட்டத்தின் ஒருபகுதியாகத்தான் அஸ்ஸாம் தேசிய கணக்கெடுப்பு வரைவு அட்டவணையில் 40 லட்சம் மக்கள் விடுபட்டுள்ளதை பார்க்க வேண்டும். 40 ஆண்டுகளுக்கும் மேலாக அஸ்ஸாமிய மக்களோடும் மொழியோடும் கலந்துவிட்ட  பங்களாதேஷிலிருந்து குடியேறிய முஸ்லிம்களை விரட்டுவது மதவெறியின் உச்சம்.

சட்டபூர்வமாகிறது இந்து ராஷ்டிரம்!

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014 கட்டுரை

‘1930களில் நாசிக்களின் யூதவெறுப்பு யூதர்களுக்கு இடர்பாடுகளைத் தருவதாகவே இருந்தது. அதன்பின்பே இனப்படுகொலைகளை செய்தனர்.  இனவாத யூதஎதிர்ப்பு என்பது ‘இறுதி தீர்வை நோக்கியே(அதாவது கொன்றொழித்தல்) அன்றி, நாசி ஆட்சி இறுதி தீர்வு அல்ல’  என வரலாற்று ஆய்வாளர்கள் நாசி ஆரிய இனவாதத்தின் நோக்கத்தை எடுத்துரைக்கிறார்கள். இந்துத்துவ கும்பலுக்கும் ஆட்சியைப் பிடிப்பது மட்டும் இலக்கு அல்ல, மதவாதமும்,முஸ்லீம்கள் நீக்கப்பட்ட ‘இந்து தேசிய அகண்ட பாரதமே’ அவர்களுடைய இறுதி இலக்கு.

  • மு.வி.நந்தினி

கட்டுரைக்கு உதவியவை:
The Roots of Hitler’s Hate
BJP is Using Citizenship Act Amendment to Reinforce and Spread Hindutva in Assam
THE CITIZENSHIP (AMENDMENT) BILL, 2015

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.

அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடம் மாற்றுவது யாருக்காக ? | என்.ஜி.ஆர். பிரசாத் | ரகுமான் | நளினி | காணொளி

சென்னை – அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பில், கடந்த ஜூலை 27 அன்று, சென்னை உயர்நீதிமன்ற பார்கவுன்சில் அரங்கத்தில் ”சட்டக்கல்வியின் இன்றைய நிலை” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத், ஊடகவியலாலர் ரகுமான், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நளினி ஆகியோர் ஆற்றிய உரையின் சாரம் மற்றும் காணொளி.

என்.ஜி.ஆர். பிரசாத் , ரகுமான் , நளினி
மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத், ஊடகவியலாளர் ரகுமான், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நளினி

மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் பேசுகையில், சட்டக் கல்லூரியை இடம் மாற்றுவதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது அரசு. அதற்கு எதிராக நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. சாலை வசதியோ, தங்கும் விடுதி வசதியோ இல்லாமல் இருக்கும் புதிய கல்லூரி வளாகத்திற்கு பேருந்து வசதியும் கிடையாது. ஆனால் இவை அனைத்து வசதிகளும் இருக்கும் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை மூடக் காத்திருக்கிறது அரசு. இதற்கு சட்டப் போராட்டம் மட்டுமே தீர்வல்ல, வீதியில் மாணவர்களும் , வழக்கறிஞர்களும் வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என்று கூறினார்.

அடுத்ததாகப் பேசிய ஊடகவியலாளர் ரகுமான், சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் அவர்களின் வாழ்நாள் முழுக்க வாதாடத் தடை விதித்தது வெள்ளைக்கார அரசு. பின்னர் லார்ட் வாலீஸ் எனப்படும் வெள்ளைக்கார நீதிபதி அத்தடையை நீக்கினார். அவர் நினைவாக தமது மகனுக்கு வாலீஸ்வரன் எனப் பெயர்சூட்டினார் வ.உ.சி. அன்றைய வெள்ளைக்கார அரசு எவ்வாறு இந்தியர்கள் மீது வாழ்நாள் தடை விதித்ததோ அதே சூழல்தான் இங்கு நிலவுகிறது.

சமூகப் பிரச்சினைக்கு சட்டக் கல்லூரி மாணவர்கள் போராடுகிறார்கள் என்பதைத் தடுக்கும் பொருட்டுதான் இப்போது கல்லூரியை ஆளரவமற்ற இடத்திற்கு மாற்றத் திட்டமிடுகிறது அரசு. சட்டக் கல்வியை வியாபாரமாக்குவதும் இதற்கு பின்னால் மறைந்திருக்கும் மற்றொரு சதி. இந்திய சட்ட சேவைக்கான சந்தை சுமார் 8 இலட்சம் கோடிக்கான மதிப்புடையது என அனுமானிக்கப்படுகிறது. இந்த பெரும் சந்தையை கார்ப்பரேட்மயமாக்குவதற்கான திட்டத்தின் ஒரு பகுதிதான் தற்போதைய சட்டக் கல்லூரி இடமாற்றம். இதனை போராட்டக்களத்தில் தான் தடுத்து நிறுத்த முடியும். என்று பேசினார்.

அடுத்ததாகப் பேசிய வழக்கறிஞர் நளினி, சட்டக் கல்லூரி இடம் மாற்றத்திற்கு எதிரான மாணவர்களின் குரலுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு, நீதிபதி கிருபாகரன் பொங்கி எழுந்து நீங்களும் அவர்களுக்கு ஆதரவா என்று கேட்கிறார். அந்த சட்டக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டவர், “புதுப்பாக்கம் அரசு சட்டக் கல்லூரி வளாகத்திற்கு வந்து பாருங்கள். கொஞ்சம் சிரமம் இருக்கும் என்றாலும் மிகவும் நல்ல இடம் அது” என்றார். இது வருத்தத்திற்கு உரியது. மாணவர்கள் போராடுவதோடு இல்லாமல், வழக்கறிஞர்களும் இணைந்து இப்பிரச்சினைக்காக போராட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

யூ-டியூப் காணொளி:

முகநூல் காணொளி:

பாருங்கள் ! பகிருங்கள் !

  • வினவு களச் செய்தியாளர்