இன்று மதியம் மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு | நேரலை | Live streaming
மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணி குறித்து விளக்கம் அளிக்க மக்கள் அதிகாரத்தின் சார்பில் நடத்தப்படும் பத்திரிகையாளர் சந்திப்பு. 03-07-2018, செவ்வாய்க்கிழமை, காலை 12:30 மணி. வினவு நேரலை !
பொய் வழக்குகளுக்கு எதிராக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கலகம் !
வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து ஒத்துழைக்க மறுத்து, போலீசு விசாரணையில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கலகம் புரிந்திருக்கிறார். போலீசின் பொய்வழக்குகளுக்கு எதிராக ஒரு விடாப்பிடியான போராட்டத்தையே நடத்தியுள்ளார்.
மக்கள் அதிகாரத்திற்கு எதிராக புகார் கொடுக்குமாறு மீனவ சங்க பிரதிநிதிகளை மிரட்டிய போலீசு !
மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மக்கள் அதிகாரத்தின் மீதும், வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன் ஆகிய இருவர் மீதும் கொடுத்த புகார்மனு போலீசின் மிரட்டலால் கொடுக்கப்பட்டது – மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி
தருமபுரி : 8 வழிச்சாலையை எதிர்த்துப் பிரச்சாரம் | மக்கள் அதிகாரம் 8 தோழர்கள் சிறை
சேலம் 8 வழிச்சாலை குறித்து மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் அதிகாரம் தோழர்களை, வன்முறைக்கு தூண்டியதாகவும், மக்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் பொய் வழக்கு போட்டு கைது செய்தது போலீசு. பத்திரிகைகள் மூலமாகவும் இந்த அவதூறுகளைப் பரப்புகிறது போலீசு!
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு : ஜூலை – 1 மணப்பாறையில் இரங்கல் கூட்டம் !
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் வரும் ஜூலை 1,2018 அன்று (ஞாயிற்றுக் கிழமை) மணப்பாறையில் இரங்கல் கூட்டம் நடைபெறவுள்ளது !
ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிராக மதுரையில் கருத்தரங்கம் ! வினவு நேரலை
ஸ்டெர்லைட் படுகொலையைக் கண்டித்தும், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மற்றும் போராடிய மக்கள் மீதான கைது மற்றும் அடக்குமுறையைக் கண்டித்தும் ”ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பினர்” இன்று (29-04-2018) மாலை 4.30 மணியளவில் மதுரையில் கருத்தரங்கம் !
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : கோவை மக்கள் அதிகாரம் இரங்கல் கூட்டம் !
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர்த் தியாகம் புரிந்த 13 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவையில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கோவை சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : விழுப்புரம் மக்கள் அதிகாரம் இரங்கல் கூட்டம் !
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளுக்கு விழுப்புரம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் இரங்கல் கூட்டம் கடந்த 23.06.2018 அன்று நடத்தப்பட்டது. அதன் செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்!
வாஞ்சிநாதன் கைது : சிதம்பரம் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது பல்வேறு பொய்வழக்குகள் ஜோடித்து அவரை தமிழக போலீசு கைது செய்ததைக் கண்டித்து நேற்று (26-06-2018) சிதம்பரம் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பா.ஜ.க + மதுரை ரயில்வே போலீசால் புனையப்பட்ட பொய்வழக்கு முறியடிப்பு
இரயிலில் பிரச்சாரம் செய்ததற்காக பி.ஜே.பி. கும்பலின் தூண்டுதலின் பேரில் பொய்வழக்கில் கைது செய்த மதுரை ஆர்.பி.எஃப். போலீசின் சதியை முறியடித்திருக்கிறார்கள், மணப்பாறை மக்கள் அதிகாரம் தோழர்கள்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : தியாகிகளுக்கு கடலூரில் இரங்கல் கூட்டம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் களப்பலியான தியாகிகளுக்கு கடலூர் மக்கள் அதிகாரம் சார்பில் 24.06.2018 ஞாயிறு அன்று கடலூர் டவுன் ஹாலில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதன் செய்தி - புகைப்படங்களின் தொகுப்பு!
தஞ்சையில் கார்ல் மார்க்ஸ் 200-வது பிறந்தநாள் கருத்தரங்கம் ! அனைவரும் வருக !
கடுமையாக உழைத்தால் முன்னேறலாம் என்கிறார்கள். 12, 14 மணிநேரம் உழைப்பவன்தான் நிரந்தரக் கடனில் உழல்கிறான். ஏன் இந்த முரண்பாடு? விடை காண தஞ்சைக்கு வாருங்கள் ! மாமேதை கார்ல் மார்க்ஸ் 200வது பிறந்தநாள் கருத்தரங்கம். நாள்: 30.06.2018, மாலை 5.30மணி. இடம் : பெசண்ட் அரங்கம், தஞ்சாவூர்
தொடரும் மக்கள் அதிகாரம் மீதான அடக்குமுறைகள் | வழக்கு நிதி தாரீர் !
"போலீசின் துப்பாக்கியும் சிறையும் எம்மை அச்சுறுத்தியதில்லை. ஆனால் நிதி நெருக்கடிதான் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நாங்கள் நிதிக்கு எங்கே போவது உங்களைத் தவிர." மக்கள் அதிகாரம் வழக்கு நிதி கோரிக்கை!
ஜெயங்கொண்டம் மக்கள் அதிகாரம் தோழர் கதிரவன் தேசத் துரோக வழக்கில் கைது !
ஓ.என்.ஜி.சி.-க்கு எதிராக பிரசுரம் கொடுத்தார் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினார் என்று, தோழர் கதிரவனை 153(a),124(a) உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து சிறையிலடைத்துள்ளது, அடிமை எடப்பாடி அரசு.
நள்ளிரவில் ரெய்டு | நெற்றியில் கைத்துப்பாக்கி | இரவில் சித்திரவதை | மக்கள் அதிகாரம் மீது போலீசின் வெறியாட்டம்...
55 வயதான பரமனை கடத்திச் சென்று, கண்ணில் துணியைக்கட்டி ஒரு காட்டில் இறக்கிவிட்டு துப்பாக்கியை கையால் தொட்டுப் பார்க்கச்சொல்லி “டேய் அவுசாரி மவனே இந்தத் துப்பாக்கியிலதான் உன்னை சுடப்போறோம், எங்கடா குருசாமி” என்று ’விசாரித்திருக்கிறது.’, போலீசு.
























