அசாமைப் போல் கர்நாடகத்திலும் குடியேறிகள் தடுப்பு முகாம் !
அசாமில் உள்ளதுபோல கர்நாடகத்தில் அடுத்து ‘சட்ட விரோத குடியேற்றிகளை’ வெளியேற்ற தடுப்பு முகாம் அமைக்கப்படும் என பேசியுள்ளார் மத்திய உள்துறை இணை அமைச்சர்.
ஆதார் மேனியா : ஆதார் இல்லாமல் சாகக் கூட முடியாதா ?
அந்த பி.எஃப் அதிகாரி "இறந்தவருக்கு ஆதார் இல்லையா? பான் இல்லையா" என்றார். "வேலை பார்த்தது ஆபிஸ் பாய். அவருக்கு பான் கார்டு எல்லாம் எப்படி மேடம்?" என்றேன்.
கவுரி லங்கேஷ் , கல்புர்கி படுகொலை : ரப்பர் தோட்டத்தில் பயிற்சி எடுத்த சனாதன் சன்ஸ்தா !
தர்மஸ்தலம் செல்லும் வழியில் 25 ஏக்கரில் அமைந்துள்ள ஆனந்தின் ரப்பர் தோட்டத்தில்தான் தங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்பில் கைதான பலரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
குஜராத் : மோடி ஆட்சியில் ஆர்.டி.ஐ. செயல்பாட்டாளரைக் கொன்ற பாஜக எம்பி !
குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் நடத்திய பாஜக முன்னாள் எம்.பி. தினு போகா சோலன்கியை, ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார் செயல்பாட்டாளரான அமித் ஜெத்வா.
தண்ணீர் திருட்டு ! ஆழ்துளைக் குழாய்களை அடித்து உடைத்த மக்கள் போராட்டம் !
ஒரு திருட்டு கும்பல் தண்ணீர் எடுப்பதைத் தடுக்கவே மக்கள் ”குழாய்களை உடைக்கும் போராட்டத்தை” நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றானபோது மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற நாசகரத் திட்டங்களை அரசே அமல்படுத்துவதை வேறு எவ்வாறு தடுத்து நிறுத்துவது?
காவிக் கும்பல் வன்முறைகளுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் !
"அமெரிக்க வரலாற்றில் நடந்த அவமானகரமான கும்பல் வன்முறைகளைக் கண்ட எங்களுக்கு, இந்தியாவில் இப்போது நிகழும் வன்முறைகளைக் காண்பது சீற்றம் வரப்போதுமானதாக உள்ளது."
அசோக் லேலண்ட் : அநியாயமான வேலைநாள் பறிப்பும் சம்பள வெட்டும் !
ஒரு நாள் சம்பளவெட்டு மூலம் 50 இலட்சம் ரூபாய்க்கு மேல் ஊதிய செலவு நிர்வாகத்திற்கு இலாபமாகும் என்றாலும் மற்றொரு பக்கம் 6 நாள் உற்பத்தியை 5 நாட்களில் செய்யவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
ஐந்து மாதங்களாக சம்பளம் தராமல் வஞ்சிக்கப்படும் பி.எஸ்.என்.எல். ஒப்பந்தத் தொழிலாளர்கள் !
மிகக் குறைந்த சம்பளமே வழங்கப்படும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் அவர்களின் குடும்பங்கள் பட்டினியாக கிடைக்கிறது.
ஒரு வரிச்செய்திகள் – 03/07/2019
உள்ளாட்சி தேர்தல் விவகாரம்.. மோடி தமிழக வருகை.. அமெரிக்கா மிரட்டல்.. செம்மொழி தமிழாய்வு நிறுவனம்.. தில்லை நடராசர் கோவில் காணிக்கை... மற்றும் பல செய்திகள்..
மலை முழுங்கி கார்ப்பரேட் திருடர்களைக் காப்பாற்றும் ரிசர்வ் வங்கி !
வங்கிகள் வழங்கிய கடன்களில் 30 வாடிக்கையாளர்கள் மட்டும் சுமார் ரூ. 8.42 லட்சம் கோடிகளைப் பெற்றுள்ளனர். மொத்த வங்கிக் கடன்களின் மதிப்பில் 10சதவீதத்தை வெறும் முப்பதே வாடிக்கையாளர்கள் பெற்றுள்ளனர்.
மேற்கு வங்கம் : தொடர்கிறது காவிக் குண்டர்களின் ‘ஜெய் ஸ்ரீராம்’ தாக்குதல்கள் !
மீன்பிடிக்கச் சென்ற முசுலீம் இளைஞர்களை, கால்நடைகளைத் திருட வந்தவர்கள் எனக்கூறி பாஜக ஆதரவாளர்கள் என்ற போர்வையில் காவிக் குண்டர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
முசுலீம் பெண்களைக் கும்பல் வல்லுறவு செய்யுங்கள் : பாஜக தலைவியின் அறைகூவல் !
“முசுலீம்களுக்கு ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது. இந்து சகோதரர்கள் 10 பேர் சேர்ந்து ஒரு குழு அமைத்து, அவர்களுடைய அம்மாக்கள், சகோதரிகளை கூட்டு வல்லுறவு செய்ய வேண்டும். பிறகு, அவர்களை நடுத்தெருவில் தூக்கிலிட வேண்டும்”
கும்பல் வன்முறைக்கு எதிராக சட்டம் இயற்றக்கோரி முசுலீம்கள் போராட்டம் !
கும்பல் வன்முறைக்கு எதிராக சட்டம் இயற்றக்கோரி, இலட்சத்துக்கும் அதிமான முசுலீம்கள் மாலேகானில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் : தி. நகர் பணிமனை ஊழியர்கள் கருத்து !
”உயர் அதிகாரிகளுக்கு ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் எங்களை போன்ற கீழ்நிலை ஊழியர்களுக்கு தான் சம்பளம் வழங்கப்படவில்லை.”
ஒரு வரிச் செய்திகள் – 01/07/2019
போக்குவரத்து தொழிலாளிகள் வேலை நிறுத்தம்.. அதலபாதாளத்தில் நிலத்தடி நீர்.. ஜி.எஸ்.டி. மூன்றாம் ஆண்டு... தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்... உள்ளிட்ட செய்திகள் !

























