Friday, October 31, 2025
முகப்பு பதிவு பக்கம் 400

மதுரை 1939-ம் ஆண்டு கோவில் நுழைவு : சாந்துப் பட்டருக்கு சாணி ஊற்றிய பார்ப்பனர்கள் !

மதுரைக் கோவில் நுழைவும் ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்ட சாந்து பட்டரின் குடும்பமும்

1939ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி காலை ஐந்து ஒடுக்கப்பட்டவர்களையும் ஒரு நாடாரையும் அழைத்துக்கொண்டு தமிழ்நாடு அரிஜன சேவா சங்கத்தைச் சேர்ந்த இரண்டு மேல் ஜாதி அதிகாரிகள் மீனாட்சியம்மன் திருக்கோவிலுக்குள் நுழைந்தனர். கோவிலின் நிர்வாக அதிகாரி ஆர்.எஸ். நாயுடுவும் பிற ஊழியர்களும் அவர்களை வரவேற்று மீனாட்சி சன்னதிக்கு அழைத்துச் சென்று சாமியைக் கும்பிட வைத்தனர்.

மதுரைக் கோவில் நுழைவின்போது எடுக்கப்பட்ட படம்.

அதற்கு அடுத்த நாள் , ஜூலை 9ஆம் தேதி முத்து சுப்பர் பட்டர் என்பவர் காலை வழிபாட்டை முடித்துவிட்டு , மாலையில் கதவுகளைத் திறக்க மறுத்தார். சுத்தீகரண சடங்குகளைச் செய்யாமல் கோவில் கதவுகளைத் திறக்க முடியாது என்று கூறினார். சாவிகளைப் பெற நிர்வாக அதிகாரி செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

சாந்து பட்டர் என்ற சாமிநாத பட்டர்.

வெளியூருக்குச் சென்றிருந்த சாந்து பட்டர் என்பவர் அன்று இரவு ஊர் திரும்பினார். அடுத்த நாள் காலையில் கோவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. இதற்குப் பிறகு பூஜைக்கு வராத பட்டர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

கிட்டத்தட்ட சாந்து பட்டரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் நீக்கப்பட்டனர். திருநெல்வேலியிலிருந்து பட்டர்கள் அழைத்துவரப்பட்டு பூஜைகள் நடந்தன.

1939லிருந்து 1945வரை இந்த பட்டர்கள் கோவிலிலிருந்து நீங்கியிருந்தனர். இது தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டு, முடிவில் சமரச ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, ‘சுத்தீரகணச் சடங்கு ஏதும் செய்யப்பட மாட்டாது.

சாந்து பட்டர் வசித்த வீட்டில் இருந்த கல்வெட்டு.

நிர்வாக அதிகாரியின் உத்தரவே இறுதியானது’ போன்ற நிபந்தனைகளை ஏற்று 1945ல் பட்டர்கள் திரும்பவும் கோவிலுக்குள் வந்தபோது, அவர்களுக்கு நிர்வாகத்திலும் கோவிலுக்குள் தங்கள் நிலையிலும் பழைய செல்வாக்குக் கிடைக்கவில்லை. ஆனால், சாந்து பட்டரின் குடும்பம் ஒதுக்கிவைக்கப்பட்டது.

சி.ஜே. ஃபுல்லர் எழுதிய Servants of the Goddess: The Priests of a South Indian Temple புத்தகத்தில் சாந்து பட்டரைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஆனால், அவரது புகைப்படம் இல்லை.

அவரது சந்ததிகளைத் தேடிப்பிடித்து, சாந்து பட்டர் என்ற சாமிநாதபட்டரின் புகைப்படத்தைக் கண்டெடுத்தேன். அவரது புகைப்படம் வெளியாவது இதுவே முதல் முறையென நினைக்கிறேன்.

இது தொடர்பாக பிபிசி தமிழ் வெளியிட்டிருக்கும் கட்டுரையை
வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டும்

தலித்துகளை தடுக்க பூட்டப்பட்ட கோயில் பூட்டுகள் உடைக்கப்பட்ட வரலாறு

(கட்டுரையில் இருந்து..
“கோவில் நுழைவுக்குப் பிறகு எங்கள் சமூகத்திடமிருந்தே பல கொடுமைகளை அனுபவித்தோம். என் அப்பா கோவிலிலிருந்து வீடு திரும்பும்போது அவர் மீது சாணியைக் கரைத்து ஊற்றுவார்கள். திடீரென ஆட்கள் அடிப்பார்கள். சுந்தரமும் (தற்போது மதுரை சென்ட்ரல் சினிமாவின் உரிமையாளர்) ஆறுமுகமும் (அன்சாரி வாசக சாலையை நடத்தியவர்) அப்போது என் தந்தைக்கு பாதுகாப்பாக இருந்தார்கள்….

ஆலயப் பிரவேசம் நடந்ததற்கு அடுத்த நாள், ஜூலை 9ஆம் தேதியன்று முத்து சுப்பர் பட்டர் என்ற பூசகர், காலை வழிபாட்டை முடித்துவிட்டு, கோவிலின் கதவுகளை மூடிவிட்டு மாலையில் திறக்க மறுத்துவிட்டார். கோவிலைச் சுத்தப்படுத்தும் சடங்குகளைச் செய்த பிறகே கோவிலைத் திறக்க முடியும் என்று சொல்லிவிட்டார். நிர்வாக அதிகாரியால் அவரிடமிருந்து சாவிகளைக் கைப்பற்ற முடியவில்லை. அதே நாளில் கோவிலின் சாவியை வைத்திருந்த மற்றொரு பட்டரான சாமிநாதபட்டர் வெளியூருக்குச் சென்றிருந்தார்.)

நன்றி: Muralidharan Kasi Viswanathan

நூல் அறிமுகம் : பொது உடைமைக் கல்வி முறை | குரூப்ஸ்காயா

ல்வி முறையும், கல்வி நிலையங்களும் சமூக பொருளாதார – பண்பாட்டு அமைப்பின் வெளிப்பாடாக அமைகின்றன; அதே வேளையில் குறிப்பிட்ட சமூக – பொருளாதார – பண்பாட்டு அமைப்பினைக் காப்பாற்றுகின்றவையாகவோ அல்லது சிதைக்கின்றவையாகவோ இயங்குகின்றன. இந்த எடுகோளின் அடிப்படையில் நோக்கினால் பொது உடைமையாளர்கள் முன்மொழியும் புதிய சமூக – பொருளாதார – பண்பாட்டு அமைப்பு முற்றிலும் புதியதொரு கல்வி முறையைக் கோருகின்றது. எந்த புதியதொரு முறையும் தானாகவே தோன்றிவிடாது. குறிப்பிட்ட சமூக நடைமுறைத் தேவையினை உணரும் இயக்கங்களால், மனிதர்களால் வளர்த்தெடுக்கப்படுகிறது.

இந்த வகையில் சோவியத் ஒன்றியத்தில் சோசலிச (சமூக உடைமை) முறையைக் கட்டியெழுப்புவதற்கு நடைபெற்ற வர்க்கப் போராட்டங்களின் ஒரு பகுதியாகத் தொழிலாளர் – உழவர்களிடையே புதிய கல்வி இயக்கம் எழுந்தது. இந்த இயக்கத்தைக் கட்டியெழுப்பியும், வளர்த்தும், மார்க்சிய – லெனினிய அடிப்படைகளைப் புதிய சூழல் தேவைக்கேற்ப கையாண்டும் படைப்பாற்றல் மிக்க தலைவராகக் குரூப்ஸ்காயா விளங்கினார். அவருடைய எழுத்துக்கள் பொது உடைமைக் கல்வி முறையை உருவாக்கும் நடைமுறையின் முதல் அனுபவங்கள் ஆகும். அவருடைய சில கட்டுரைகளைத் தொகுத்து நூலாக அளிக்கின்றோம். கற்றல் – கற்பித்தல் குறித்து மார்க்சிய – லெனினிய நோக்கில் ஆராயவும் ஒழுங்கமைத்து கொள்ள விரும்புவோருக்கு இவ்வெளியீடு மகிழ்ச்சி அளிக்கும். (நூலின் பதிப்புரையிலிருந்து)

நாடெழ்த கான்ஸ்தாந்தி நோவ்னா குரூப்ஸ்காயா (1869 – 1939) ரஷ்ய புரட்சியாளர்களுள் ஒருவர்; எழுத்தாளர்; கல்வியாளர். அவர் ரஷ்ய சமூக – ஜனநாயகக் கட்சியின் போல்சுவிக் குழு செயல்பாட்டுத் தலைவர்; சோவியத் ஒன்றிய போல்சுவிக் பொது உடைமைக் கட்சியின் மையக் குழு உறுப்பினர். குருப்ஸ்காயா புரட்சிக்கு முன் பல தொழிலாளர் குழுக்களுக்குக் கல்வி போதித்தார்; புரட்சிக்குப் பின் கம்சோல் என்றழைக்கப்பட்ட பொதுஉடைமை இளைஞர் சங்கத்தையும், இளம் தன்னார்வத் தொண்டர் படையினையும் கட்டியெழுப்பியவர். அவர் 1929 முதல் 1939 வரை சோவியத் ஒன்றியத்தின் இணை கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். இவை எல்லாவற்றையும் விட குரூப்ஸ்காயா தோழர் லெனினின் ஆலோசகரும், இணையரும் என்பதால் உலகெங்கும் நன்கு அறியப்பட்டவர்.

புரட்சிக்கு முன்னும், புரட்சிக்குப் பின்னும் தொழிலாளர்களிடையேயும் உழவர்களிடையேயும் குரூப்ஸ்காயா கல்வி போதித்தார்; கல்வி இயக்கத்தை முன்னெடுத்தார். அவர் தொழிலாளர்களும், உழவர்களும் கல்வி பெறுதல் வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நோக்கினார். அதனால் கல்வியின் உள்ளடக்கத்திலும், போதனை முறையிலும் தீவிரமான மாற்றத்தைக் கொண்டு வந்தார். மார்க்சிய அடிப்படைகளைப் புதிய கல்வி முறையை – பொதுஉடைமை கல்விமுறையை உருவாக்குவதற்கு வளமான முறையில் பயன்படுத்தியுள்ளார்.

படிக்க:
புதிய கல்விக் கொள்கையல்ல – கல்வி மறுப்புக் கொள்கை !
வாழ்க்கையைப் புரிய வைப்பதுதான் கல்வி – நூல் அறிமுகம்

குரூப்ஸ்காயா 1917 முதல் 1936 வரை எழுதிய சில கட்டுரைகள், ஆற்றிய சில சொற்பொழிவுகள் ஆகியவற்றை கொண்டது ‘கம்யூனிஸ முறையில் இளைஞர்களைப் பயிற்றி வளர்த்தல்’ என்ற நூல். இந்நூலை மாஸ்கோ புரோகிரஸ் பதிப்பகம் 1960-களில் வெளியிட்டிருக்கலாம். வெளியிட்ட ஆண்டும், மொழிபெயர்ப்பாளர் பெயரும் நூலில் இல்லை. இந்நூலிலிருந்து எட்டுக் கட்டுரைகளைத் தொகுத்து ‘பொது உடைமைக் கல்வி முறை’ என்னும் நூலாக வெளியிடுகின்றோம்.

இத்தொகுப்பு நூலின் வாயிலாக மாக்சிய – லெனினியத்திற்கு குரூப்ஸ்காயா அளித்த சிறு பங்களிப்பையாவது நாம் அறிந்து கொள்ள முடியும்; அத்துடன் இந்நூல் மார்க்சிய லெனினிய நோக்கில் கற்றலையும் கற்பித்தலையும் முறைப்படுத்திக் கொள்ள சிறந்த வழிகாட்டுதலையும் வழங்குகிறது. (நூலின் அறிமுக உரையிலிருந்து, பக்.9-10)

புத்தகங்களிலிருந்து மட்டும்தான் அறிவு பெற முடியும் என்ற முடிவுக்கு நாம் எப்படியோ வந்துள்ளோம். வாழ்க்கையை எவ்வாறு பின்பற்றுவது, எவ்வாறு அதைக் கூர்ந்து நோக்கி ஆராய்வது, புதிய முறையில் வாழ்வது என்பது நமக்கோ, முன்னோடித் தலைவர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ தெரிவதில்லை. ஆயினும் வாழ்க்கை என்றால் என்ன எனக் காட்டும் சுற்றுப்பயணங்களும் விளையாட்டுக்களும் உள்ளன. பள்ளிக்கு அப்பாற்பட்ட நமது வேலைகளில், வெளியிடங்களுக்குச் செல்லுவது போன்ற சமயங்களில் இயற்கை, மக்கள், வாழ்க்கை ஆகியவற்றை ஆராய வேண்டும். இதை நாம் கற்றுக் கொடுக்கவில்லை. நமது குழுக்கள் பெரும்பாலும் விளையாட்டு அல்லது நாடக மேடை சம்பந்தப்பட்ட செயல்களில் மட்டுமே ஈடுபடுகின்றன. (நூலிலிருந்து பக்கம் – 75)

பள்ளிக்கு அப்பால் செய்யும் வேலை மிகவும் முக்கியமானது. குழந்தைகளைச் சரியாக வளர்க்கவும், அவர்களின் சிறப்பான வளர்ச்சிக்குத் தேவையான வாய்ப்புகளை உண்டாக்கவும் அது உதவுகிறது. அவர்களது முன்முயற்சிக்கு நாம் ஆதரவு தர வேண்டும், அவர்கள் ஆக்க வேலைகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகளைத் தரவேண்டும், அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். பெற்றோர் அடிக்கடி குழந்தைகளுக்குச் செல்லம் கொடுக்கிறார்கள்.

சினிமாக்களுக்கும் திரையரங்குகளுக்கும் அடிக்கடி செல்ல அவர்களை அனுமதிக்கிறார்கள். சினிமா குழந்தைகளைப் பதற்றப்படுத்துகிறது. அவர்களைக் கவனியுங்கள், ஒரு சினிமா படத்தைப் பார்த்தபிறகு அவர்கள் பெரும்பாலும் தம் தாயாருடன் முரட்டுத்தனமாகப் பேசுவதையும், தங்கள் வகுப்பு சகாக்களுடன் சண்டையிடுவதையும் நீங்கள் காணலாம். சிறுவர்கள் புரிந்து கொள்ளும், கண்டு மகிழும் சினிமாக்களை, அவர்களது கண்ணோட்டத்தை விரிவுபடுத்தும் சினிமாக்களை, அவர்களுக்குக் காட்ட வேண்டும். வயது வந்தோருக்கான படங்களைப் பார்க்கும் சிறுவர்கள் பெரும்பாலும் அவற்றைப் புரிந்து கொள்வதில்லை. ஆயினும் அவர்கள் நடிகர்களைப் பாவனை செய்ய முயலுகிறார்கள். சாப்ளின் நடித்த பட மொன்றில் மூக்கு திருகப்படுவதைக் கண்ட குழந்தைகள் திருப்புளியால் அவ்வாறு தாங்களும் செய்ய முயன்றதாகக் கேள்விப்பட்டேன். முக்கியமானது என்ன வென்றால் அவர்கள் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும், நாம் அவர்கள் எண்ணங்களைச் சரியான பாதையில் திருப்பிவிட வேண்டும்.

சிறுவர்களின் தொழில் நுணுக்கக் குழுக்களைப் பரந்த முறையில் நாம் விரிவடையச் செய்ய வேண்டும், தொழிற்சாலைகள், மின்சார நிலையங்கள் போன்றவற்றுக்கு சென்று பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். சிறுவர்கள் நாம் விரும்பியதைச் செய்வதற்கான வேலை அறைகள் ஒவ்வொரு கலாசார மாளிகையிலும் இருக்க வேண்டும்.

தங்களது பெற்றோர்கள் தொடக்கிய வேலைகளைத் தாங்கள் தொடர்ந்து செய்யும் வகையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும். தந்தையார் ஆரம்பித்தவற்றைக் குழந்தைகள் நிறைவேற்ற வேண்டுமென லெனின் விரும்பினார். மேலும் நன்கு போராட நம் குழந்தைகள் கற்றுக் கொள்ளுவார்கள், அவர்கள் வெற்றி பெறுவார்கள் என அவர் கூறுவது வழக்கம்.

குழந்தைகளுக்குத் தேவையான பயிற்சியை அளிப்பதிலும், அவர்கள் குணநலன்களை வளர்ப்பதிலும், உபயோகமாக இருக்க அவர்கள் கொண்டுள்ள விருப்பத்தை அதிகரிப்பதிலும், அவர்களைச் சமூக ஊழியர்களாயும் கூட்டத்தினராயும் கொண்டு வருவதிலும் மேலும் அதிக கவனம் செலுத்துங்கள். பலதிறன் பெற்றவர்களாக அவர்கள் வளர்ச்சியுற முயற்சி செய்யுங்கள்.- ‘வாஜாத்தீய்’ சஞ்சிகை, இதழ் 6,1937. (நூலிலிருந்து பக்கம் 77-78)

நூல்: பொது உடைமை கல்வி முறை
ஆசிரியர்: குரூப்ஸ்காயா

வெளியீடு: முகம் பதிப்பகம்,
20/37, 13-வது தெரு, அய்யர் மனைப்பிரிவு, சிங்காநல்லூர், கோவை – 643 005.
பேச: 0422 – 2593938
மின்னஞ்சல்:mugambooks@gmail.com

பக்கங்கள்: 112
விலை: ரூ.70.00

இதர மின் நூல்கள் (e books)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

உலகின் மிகப்பெரிய தண்டனை | அ.முத்துலிங்கம்

தண்டனை | அ.முத்துலிங்கம்

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
விமானத்தில் ஒரு முறை பறந்து கொண்டிருந்தபோது அது பாதி வழியில் பழுதாகி மேலே பறக்க முடியாமல் கீழே அகப்பட்ட விமான நிலையம் ஒன்றில் இறங்கியது. முதலில் இரண்டு மணித்தியாலத்தில் விமானம்  சரியாகிவிடும் என்று சொன்னார்கள். பின்னர் ஆறு மணி நேரம் என்றார்கள். பழுது பார்க்கப்பட்ட விமானத்தில் ஏறி மூன்று மணிநேரம் ஓடுதரையில் காத்திருந்த பின்னர் மீண்டும் இறக்கப்பட்டோம். ஒரு முழு நாள் ஆனது.

விமானக் கம்பெனி பயணிகளுக்கு தங்க இடமும் உணவும் ஏற்பாடு செய்து, ஒரு புது விமானம் வருகிறது காத்திருங்கள் என்றது. எல்லா பயணியரும் கோபத்தின் உச்சிக்கு போய் பழுதுபட்ட விமானத்தில் மீண்டும் பறப்பதற்கு  தயாராக இருந்தார்கள். காத்திருப்பது ஒருவருக்குமே பிடிப்பதில்லை. அது பெரிய தண்டனை.

மாதிரிப் படம்

ஆப்பிரிக்காவில் வேலை கிடைத்து நான் அங்கே போனபோது நடந்த ஒரு சம்பவம். அந்த நாட்டில் அப்பொழுது கிட்டத்தட்ட மூன்று வருடங்களைக் கழித்து விட்டேன். எங்கள் வீடு காட்டுப் பகுதியில் நாலு தூண்களுக்கு மேல் தனியாக நின்றது. நான் வேலை செய்த கம்பனி காட்டு மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. கம்பெனியில் கணிசமான அரசாங்க முதலீடு இருந்தபடியால் அது ஒரு முற்று முழுதான அரசாங்க நிறுவனமாக மாறுவதற்கு முயன்று கொண்டிருந்தது.

ஒருநாள் பின்னேரம் ஏழுமணியளவில் நான் வெளிவராந்தாவில் உட்கார்ந்து ஓய்வெடுத்தேன். மனைவியும் பிள்ளைகளும் உள்ளே இருந்தார்கள். வெளியே எரிந்த மின்விளக்கை அணைத்திருந்தேன். ஏனென்றால் ஆப்பிரிக்காவின் அத்தனை பூச்சிகளும் என்னைச் சுற்றி மொய்த்துவிடும். காடு எழுப்பும் ஒலி நேரத்துக்கு நேரம் மாறுபடும். ஆறு மணிக்கு ஒரு சத்தம், ஏழு மணிக்கு ஒரு சத்தம், நடு இரவு ஒரு சத்தம் என்று வித்தியாசமாக இருக்கும். அந்த ஒலிகளை தனித்தனியாக இனம் பிரித்து இது இன்ன பூச்சியின் சத்தம், இது இன்ன பறவையின் சத்தம், இது இன்ன மிருகத்தின் சத்தம் என்று ஊகிப்பது எனக்கு பிடித்த விளையாட்டு. அதைத்தான் செய்து கொண்டிருந்தேன்.

அப்பொழுது பார்த்து திடீரென்று ஒரு வாகனம் வந்து நின்றது. அந்த நேரத்தில் ஒருவரும் காட்டுக்கு அண்மையில் இருக்கும் என் வீட்டிற்கு  வருவது கிடையாது. அது அரசாங்க முத்திரை பதித்த வாகனமாயிருந்தபடியால் ஆச்சரியம் இன்னும் கூடியது. சீருடை அணிந்த சேவகன் ஒருவன் வந்து ஒரு தந்தியை கொடுத்து விட்டு போனான். வழக்கமாக இப்படி, இந்த நேரத்தில்  தந்தி விநியோகிப்பதில்லை. இது விபரீதமாகப் பட்டது. ஏதோ முக்கியமான சமாச்சாரம் என்று நினைத்துக்கொண்டு உறையை பிரிப்பதற்காக வீட்டின் உள்ளே போனேன். மின்விளக்கு வெளிச்சத்தில் என் கை உதறுவதைக் கண்டேன். என் மனைவி மகளைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு என் பக்கத்தில் நின்றாள். என் மகன் காலைப் பிடித்துக்கொண்டு கீழே நின்றான். ஒரு சொல் ஒருவரும் பேசாவிட்டாலும் அந்த தந்திக்குள் எங்கள் வாழ்க்கையை மாற்றப் போகும் ஏதோ வார்த்தைகள் இருப்பது அந்தக் கணம் எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

மாதிரிப் படம்

அந்த நாட்டு ஜனாதிபதியின் அரண்மனையிலிருந்து தந்தி வந்திருந்தது. மூன்றே மூன்று வார்த்தைகள்தான். ‘அரண்மனைக்கு உடனே வரவும்.’ என் முகம் எப்படி மாறிப் போனது என்பது எனக்கு தெரியாது. ஆனால் மனைவியின் கண்களில் முன்னெப்பொழுதும் தோன்றாத பீதி தெரிந்தது. என்ன என்ன என்று கேட்டார். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. நிச்சயமாக அரசமாளிகை இரவு விருந்துக்கு என்னை கூப்பிடவில்லை. தங்க மாலை போட்டு விருது வழங்கவும் அழைக்கவில்லை. என்னைப் போன்றவர்களுக்கு ஜனாதிபதியிடமிருந்து தந்தி வந்தால் அதன் பொருள் ஒன்றுதான். நீங்கள் சிறைக்கு செல்கிறீர்கள். அல்லது நாடு கடத்தப் படுகிறீர்கள். நான் என்ன நடந்திருக்கும், எதற்காக இந்த தந்தியை அனுப்பியிருக்கிறார்கள் என்று மூளையை ஆசுவாசப்படுத்தி யோசிக்க ஆரம்பித்தேன்.

எங்கள் கம்பனிக்கு ஒரு தலைமையதிகாரி இருந்தார். என்னிலும் பார்க்க இருபது வயது கூடியவர். அஞ்சா நெஞ்சர். நுட்பமாகச் சிந்தித்து செயலாற்ற தெரிந்தவர். தொடர்ந்து 12 மணி நேரம் களைக்காமல் வேலை செய்யக்கூடியவர் ஆனால் அதே சமயம் கேளிக்கை பிரியர். நான் கம்பெனியில் சேர்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக தன் வேலைகளை எல்லாம் என் பக்கம் தள்ளிவிட்டு கம்பெனி விசயமாக பயணம் செய்வதை தன் முழுநேர கடமையாக மாற்றினார். மாதத்தில் இருபது நாட்கள் அவர் வெளிநாட்டில் சுற்றினார். அந்த நாட்களில் அவர் வேலையையும் நான்தான் பார்க்க வேண்டும்.

ஒரு வாரத்திற்கு முன்பு ஜனாதிபதிக்கு வேண்டிய ஒருவர் அவரிடமிருந்து ஒரு கடிதத்தை கொண்டு வந்தார். கையெழுத்து இல்லாத, தட்டச்சு செய்த இரண்டு வரிக் கடிதம். அதை நீட்டி ஒரு காரியம் ஆகவேண்டுமென்று சொன்னார். அவர் கேட்டது கம்பனி விதிகளுக்கு அப்பாற்பட்டது ஆகவே நான் மறுத்து விட்டேன். என்னுடன் வேலை செய்தவர்கள் அவர் பலம் வாய்ந்தவர் என்றும், அவரைப் பகைக்க கூடாது என்றும் அறிவுறுத்தினர். நான் அதை உதாசீனம் செய்தேன். அப்பொழுது எனக்கு வயது இப்பொழுது இருக்கும் வயதில் சரி பாதி. மூளையும் சரி பாதி. ‘கோழியும் அவங்கட, புழுங்கலும் அவங்கட’ என்பதை நான் நினைத்துப் பார்க்கவில்லை. அதன் விளைவுதான் இந்த தந்தி என்பது ஊகிக்கக் கூடியதாக இருந்தது.

படிக்க:
♦ கிழங்கு கிண்டியபோது கிடைத்த ரத்தினக் கல் | அ.முத்துலிங்கம்
♦ ஓட்டை விழுந்த வெண்ணெய்க் கட்டி | அ.முத்துலிங்கம்

மனைவி இப்பவே புறப்பட வேண்டுமா என்று கேட்டார். தந்தியின் வாசகம் மிகத் தெளிவாக இருந்தது. அரண்மனைக்கு உடனே வரவும். அரண்மனை மூன்று மணி தூரத்தில் இருந்தது. காட்டுப் பாதையில் இரவில் தனியாக பிரயாணம் செய்ய வேண்டும். இப்பொழுது புறப்பட்டால் இரவு ஒரு மணிக்கு அரண்மனை போய்ச் சேரலாம். ஜனாதிபதி என்னை எதிர்பார்த்து அந்த நேரம் காத்திருக்கப் போகிறாரா? அடுத்த நாள் காலை நாலு மணிக்கு புறப்படுவதென தீர்மானித்தேன்.

நான் அன்றிரவு தூங்கவில்லை. புறப்படுவதற்கு முன்னர் மனைவி என்னென்ன செய்ய வேண்டுமென்று பட்டியலிட்டேன். என்னை சிறையில் அடைத்தார்கள் என்றால் எந்த வழக்கறிஞரை தொடர்பு கொள்ளவேண்டும், அவரிடம் என்ன விவரங்கள் சொல்லவேண்டும் போன்ற குறிப்புகளை எழுதினேன். என்னை நாடு கடத்தினால் எந்த தூதரகத்தை அணுகவேண்டும் போன்ற விவரங்களையும் குறித்து வைத்தேன். என்ன என்ன சாமான்களை சூட்கேசுகளில் அடைக்கவேண்டும் என்ற முடிவை அவரிடமே விட்டு விட்டேன்.

அடுத்த நாள் அதிகாலை நாலு மணிக்கு புறப்பட்டு சரியாக ஏழு மணிக்கு அரண்மனை வாசலை அடைந்தேன். காவல் காக்கும் ராணுவ வீரர்கள் என்னையும் தந்தியையும்  பார்த்த பின்னர் உள்ளே விட்டார்கள்.  அரண்மனை இன்னும் திறக்கப் படவில்லை. வெளியே காணப்பட்ட பளிங்கு இருக்கை ஒன்றில் அமர்ந்து காத்திருக்கத் தொடங்கினேன். எட்டு மணிக்கு அரண்மனை சுறுசுறுப்பானது. ஜனாதிபதியின் அந்தரங்கக் காரியதரிசி வந்தாள். முப்பது வயது மதிக்கத்தக்க பெண். கழுத்து நீண்டு, தலை நிமிர்ந்து நாடியும் செவியும் ஒரே நேர்கோட்டில் இருந்தன. அவளிடம் என் தந்தியை காட்டினேன். அவள் அதைப் படிக்கவில்லை. ஆழப் புதையும் கம்பளம் விரித்த ஓர் ஆடம்பரமான அறையைக் காட்டி அங்கே தங்கச் சொன்னாள். ஜனாதிபதி வந்ததும் முதல் ஆளாக என்னை அழைப்பார் என்று நினைத்தேன். இன்னும் பலர் ஒவ்வொருவராக வந்து வெவ்வேறு ஆசனங்களில் அமர்ந்துகொண்டார்கள். சிலர் உள்ளே போனார்கள். சிலர் வெளியே வந்தார்கள். இரண்டு வெளிநாட்டு தூதுவர்கள் வந்து அவர்களும் காத்திருந்தார்கள். தொழிலதிபர்கள் மாத்திரம் உடனுக்குடன் உள்ளே போய் வெளியே வந்தார்கள். ஆட்கள் போவதும் வருவதுமாய் ஒரு ரயில்வே ஸ்டேசன் போல அந்த அறை அமளியுடன் காணப்பட்டது. என்னை ஒருவரும் அழைக்கவில்லை. அதே சொகுசு நாற்காலியில், அதே இடத்தில், அதே உடல் வளைவுகளுடன் நான் காத்திருந்தேன்.

எனக்கு பாத்ரூமுக்கு வந்தது, நான் போகவில்லை. சரியாக அந்த நேரம் பார்த்து அழைக்கப்பட்டால் நான் என்ன செய்வது. தண்ணீர் தாகமெடுத்தது. சற்று தள்ளி கேட்டுக்கு வெளியே ஒரு கடையில் குளிர்பானம் விற்றார்கள். சிலர் போய் குடித்துவிட்டு வந்தார்கள். நான் குடிக்கவில்லை. எனக்கு பசித்தது. சிறைக்கூடத்தில் என்ன உணவு தருவார்கள் என்று யோசனை போனது. அன்று அந்த நாற்காலியில் உட்கார்ந்து என் மனம் யோசித்த அவ்வளவையும் எழுதினால் அது பெரிய நாவலாக விரிந்திருக்கும். ஓர் அரண்மனையில் ஜனாதிபதியை சந்திக்க காத்திருக்கும் ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை.

மறுபடியும் அந்தரங்க காரியதரிசியிடம் சென்றேன். அவள் எனக்கு வட்டமான பின்பக்கத்தை காட்டிக்கொண்டு நின்றாள். உடம்பை ஒட்டிப் பிடித்த கட்டையான ஸ்கேர்ட். உயரமான சப்பாத்து. அவளிடம் கை கொடுக்கும்போது சிலர் இடது கையினால் வலது முழங்கையை தொட்டுக் கொண்டு கொடுத்தார்கள். பழுதுபட்ட திசைகாட்டி முள்போல அவள் சுழன்று கொண்டு வேலை செய்தாள். எங்கே நடமாடுகிறாள் என்பதை அவளின் சப்பாத்தின் ஒலியை வைத்து சொல்லி விடலாம். அந்த ஒலியில் அதிகாரம் இருந்தது. கழுத்திலே மெல்லிய ஸ்கார்ஃபை பூப்போல கட்டியிருந்தாள். ஒரு தோடம்பழத்தை உரித்து நடுவிலே ஓட்டைபோட்டு உறிஞ்சிக்கொண்டிருந்தாள். என்ன தண்டனை கிடைத்தாலும் பரவாயில்லை, ஒரு நிமிடம்கூட இனிமேல் தங்கமுடியாது என்று எனக்கு தோன்றியது.  அவளிடம் நான் வாய் திறக்கக்கூட இல்லை. என்னைப் பார்த்ததும் தோடம்பழத்தில் புதைந்திருந்த சொண்டை வெளியே எடுத்து ‘ஜனாதிபதிக்கு நீங்கள் வந்திருப்பது தெரியும். அவர் அழைப்பார்’ என்றாள். சொண்டு மறுபடியும் தோடம்பழத்திற்குள் போய்விட்டது.

Administrative-Punishment-a-painting by Jan Komsk

என்ன நடக்கிறது இங்கே? சிறைக்கூடத்தை தயார் செய்கிறார்களா அல்லது பிளேன் டிக்கட் ஏற்பாடு செய்கிறார்களா? என்னை முதலில் அனுப்பிவிட்டு பின்னர் மனைவியையும் பிள்ளைகளையும் அனுப்புவார்களா? இதற்கெல்லாம் ஒரு முறை இருக்கவேண்டுமே? அப்பொழுது பார்த்து இரண்டு பொலீஸ்காரர்கள் வந்தார்கள். நான் என்னை தயார்படுத்திக் கொண்டேன். அவர்கள் இருவரும் ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி காரியதரிசியிடம் போய் பேசிவிட்டு என்னை நோக்கி வந்தார்கள். ஒரு நிமிடம் தாமதமாகியிருந்தால் நான் எழும்பி கைகளை நீட்டியிருப்பேன். அவர்கள் என்னை கவனிக்கவில்லை, வந்த மாதிரியே வெளியே போனார்கள். சுவர்க்கடிகாரத்தை பார்த்தேன், அது ஏழுதரம் அடித்தது.  நான் கண் விழித்தபோது எனக்கு முன்னால் இரண்டு கறுத்த வழுவழுப்பான தொடைகள் தெரிந்தன. காரியதரிசிப் பெண் என்னை குனிந்து பார்த்து ‘நீங்கள் போகலாம்’ என்றாள். நான் ஒன்றுமே கேள்வி கேட்கவில்லை. உடனே எழுந்து புறப்பட்டேன்.

மூன்று வார்த்தைகளில் வரச் சொன்னார்கள், இரண்டு வார்த்தைகளில் வீட்டுக்கு போகச் சொன்னார்கள். நான் காத்திருந்த இந்த 12 மணித்தியாலத்தில் என்னைக் கூப்பிட்டு விசாரிக்க வேண்டிய பிரச்சினைக்கு என்ன நடந்தது. தானாகவே தீர்ந்து விட்டதா?  ஜனாதிபதியின் உணவருந்தும் வேளை நெருங்கிவிட்டதால் என்னை போகச் சொல்லி  மறுபடியும் நாளை வரச் சொல்வார்களா? திரும்பிப் போகும் வழியெல்லாம் இதைத்தான் யோசித்தேன். இரண்டு வருட சிறைத் தண்டனை அனுபவிக்கவும் நான் தயாராக இருந்தேன் ஆனால் இந்தக் காத்திருத்தல் மட்டும் வேண்டாம்.

சரியாக இரவு 10 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். நான் பார்த்த காட்சி என்னைத் திடுக்கிட வைத்தது. இரண்டு சூட்கேசுகள் நிறைய அடைக்கப்பட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மனைவி பயண ஆடைகள் தரித்து புறப்பட தயாராக இருந்தார். என் குழந்தைகளும் நல்ல ஆடைகள் உடுத்திக் காணப்பட்டனர். மகள் பொம்மையை கட்டிப்பிடித்தபடி வாசலிலேயே தூங்கி விட்டாள். என்னுடைய மகன் பள்ளிப் புத்தகங்களையும் நோட்டுப் புத்தகங்களையும் ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி கயிற்றினால் கட்டி முக்காலி போலச் செய்து அதற்கு மேல் உட்கார்ந்திருந்தான். கறுப்பு கால்சட்டை, வெள்ளை  சேர்ட் அணிந்து ஏதோ பள்ளிக்கூடம் போகப் புறப்பட்டது போல அமைதியாக இருந்தான். அவனுடைய முதல் கேள்வி ‘கே.எல்.எம் பிளேனிலா பறக்கப் போகிறோம்?’ நான் இல்லை என்றேன். மனைவி சூட்கேசுகளை உள்ளே வைக்கட்டா என்றார். ஓம் என்றேன். பிள்ளைகளின் உடுப்பை களையட்டா? ஓம் என்றேன். சப்பாத்துகளை கழற்றட்டா? ஓம் என்றேன்.

அவர்கள் காத்திருந்த அந்த 12 மணி நேரத்தைப் பற்றி யோசித்தேன். மனைவி காலையிலேயே சூட்கேசுகளை அடுக்கி வாசலிலே வைத்து விட்டதாகச்  சொன்னார். அன்று வீட்டிலே சமைக்கவில்லை. முதல்நாள் மிச்சமிருந்த உணவை சாப்பிட்டிருந்தார்கள். எந்த நிமிடமும் ஒரு பொலீஸ் வண்டி வரக்கூடும் என்று எதிர்பார்த்ததாகச் சொன்னார்கள். வீட்டினுள் தொட்டியில் வளர்த்த பூக்கன்றுகளுக்கு கடைசித் தரமாக நிறையத் தண்ணீர் ஊற்றி அது தரையில் ஓடிக்கொண்டிருந்தது.. அவர்கள் அனுபவித்த வேதனையை நினைத்த போது பெரும் துயரம் எழுந்து என்னை மூடியது.

நோர்மன் மெய்லர் எழுதிய The Executioner’s Song என்ற புத்தகம் ஒரு கொலையாளியின் கதையை சொல்கிறது. . கரி கில்மோர் என்பவன் ஒரு ஹோட்டல் மனேஜரை கொலை செய்து விடுகிறான். அவனுக்கு அமெரிக்க நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கிறது. கொலையாளியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்பதுதான் தீர்ப்பு. நாலு பேர் துப்பாக்கிகளை தூக்கி குறிவைத்து சுடத் தயாராகி, கட்டளைக்காக காத்திருக்கிறார்கள். அப்பொழுது கரி கில்மோர் சொல்கிறான் ‘Let’s do it.’ ‘இதை முடித்துவிடுவோம்’ என்கிறான். இறப்பதிலும் பார்க்க காத்திருப்பது அவனுக்கு கூடிய தண்டனையாகப் படுகிறது.

நான் என் வாழ்க்கையில் மேற்கொண்ட அநேகவிதமான பயணங்களிலிருந்தும், வசித்த நாடுகளிலிருந்தும், சந்தித்த மனிதர்களிலிருந்தும் பல விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். அவற்றிலே நான் கண்ட உண்மை என ஒன்றிருக்கிறது. தண்டனைகளில் ஆகக் கொடுமையானது காத்திருக்க வைப்பதுதான். என்ன நடக்கப்போகிறது என்பது தெரியாமல் காத்திருக்க வைப்பது இன்னும் கொடூரமானது. ஜனாதிபதிகளுக்கு அது தெரியும்.

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

மோடி நாட்டுக்கு நல்லது செய்கிறார் ! ரஜினி பாராட்டு – கருத்துக் கணிப்பு

டிகர் ரஜினியை யாரும் சந்தித்து நேர்காணல் எடுக்க முடியாது. அப்படி எடுக்க வேண்டுமென்றால் அவர் படம் சமீபத்தில் வெளிவந்திருப்பது ஒரு நிபந்தனை. நேர்காணல் மட்டுமல்ல ரஜினியின் பத்திரிகை செய்திகளுமே கூட படங்களுக்கான முன்னோட்ட விளம்பரத்திற்காக மட்டுமே வரும். காலாவிற்காக தூத்துக்குடி சென்றவர் பிறகு காலியானது நேற்றைய கதை!

படிக்க:
♦ 2.0 : ரஜினி + ஷங்கரின் சிட்டுக்குருவி செல்பேசி லேகியம் !
♦ யார் அந்த ஏழு பேர் ? ரஜினியை குஜினியாக்கிய தமிழ் ஃபேஸ்புக்

லைக்கா சுபாஷ்கரன் மற்றும் இயக்குநர் ஷங்கரின் 2.0 படத்திற்காக திருவாளர் ரஜினிகாந்த் இந்தியா டுடே ஆங்கில ஊடகத்திற்காக மனமிறங்கி நேர்காணல் அருளியிருக்கிறார். 2.0 படம் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாயிருப்பதால் இந்த நேர்காணல் வாய்ப்பு அகில இந்திய ஊடகம் ஒன்றிற்கு கிடைத்திருக்கிறது. அந்த நேர்காணல் செய்திகளை தமிழ் ஊடகங்கள் ஒரே மாதிரி டெம்பிளேட்டில் வெளியிட்டிருக்கின்றன.

உள்ள நல்லாத்தானே பேசுனாரு, இங்க வந்து இப்படி சொல்லிட்டாப்புலயே ! – மோடி மைண்ட் வாய்ஸ்

அதில் மோடியை ரஜினி பாராட்டுவதாக மட்டும் முன்னிலைப்படுத்தப் படுகிறது. தமிழகத்தில் வரும் தேர்தலில் பாஜக தலைமையில் ஒரு கூட்டணி அமைய வேண்டும்; அதில் ரஜினி இடம்பெறவேண்டும் என அமித்ஷா – மோடி, குருமூர்த்தி முதல் தமிழிசை, பொன்னார் வரை பெரும் திட்டமே தீட்டியிருக்கிறார்கள். அதை சாத்தியப்படுத்துவதற்காகவே ஊடகங்களும் மேற்கண்ட நேர்காணல் செய்தியை விமர்சனமின்றி அப்படியே ஒரே மாதிரியாக வெளியிட்டிருக்கின்றன.

அந்த நேர்காணலில் அவர் பல விசயங்களைப் பேசியிருக்கிறார். அனைத்தும் பாஜகவிற்கு உடன்பாடானவைதான்.

நடிப்பை பிழைப்பிற்காக ஆரம்பித்தாலும் தற்போது பொழுது போக்கு, மகிழ்ச்சிக்காக நடிக்கிறேன். நடிப்பிறகு சிவாஜியும், சிகரெட் பிடிக்கும் ஸ்டைலுக்கு சத்ருஹன் சின்ஹாவும் முன்மாதிரிகள். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு கற்ற பாடம் “அனைத்துமே ஒரு விளையாட்டுதான்”. எம்.ஜி.ஆர் நல்லவர். ஜெயலலிதா ஒரு மாபெரும் தலைவர். அவரது ஆட்சியைப் பற்றி இப்போது பேசவில்லை என்றாலும் ஒரு தனி மனுஷியாக அவர் இங்கே வாழ்ந்து ஆட்சி செய்திருப்பது ஒரு வரலாற்று சாதனை.

தமிழர்கள் கடின உழைப்பாளிகள், அறிவார்ந்த மக்கள். ஆனால், தாங்கள் யார் என்பதை அவர்கள் தற்போது மறந்து போயிருக்கின்றனர். நல்ல தலைமைதான் தமிழகத்தின் தற்போதைய தேவை. இங்கு தலைமைக்கான வெற்றிடம் இருக்கிறது. மக்களிடம் இருந்து வாக்குகளை மட்டும் பெறுவதை நோக்கமாக கொள்ளாமல், அவர்களுக்கு தேவையானது என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். நான் இன்னும் முழுமையாக அரசியல் பணிகளில் ஈடுபடவில்லை. அரசியலுக்கு வந்தால் தனித்துவமாக, மாற்று அரசியலை உருவாக்க விரும்புகிறேன்.

படிக்க:
♦ நான்தாம்பா ரஜினிகாந்த்! | துரை.சண்முகம்
♦ டிவிட்டரில் வறுபடும் ரஜினி ! ஆன்மீக அரசியல் சும்மா அலறுதில்ல !

பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறார். அதற்காகவே கடினமாக முயற்சித்து பல்வேறு செயல்களை செய்கிறார். மக்களுக்கு சிறந்தவற்றை கொடுக்க முயற்சிக்கிறார்.

இந்தியா டுடே ஆசிரியர் குழுவுடன் ரஜினி

இவையெல்லாம் அவர் அருளிய முத்துக்கள். மேலும் சபரிமலையில் நீதிமன்றத் தீர்ப்பு என்பது பக்தர்கள் விசயத்தில் தலையிடுவதாக இருக்கக் கூடாது என்றும் கூறியிருக்கிறார். இந்த நேர்காணலை இந்தியா டுடே அச்சு இதழின் அட்டைப் படக்கட்டுரையாகவும் வெளியிட்டிருக்கிறார்கள். அதன் தலைப்பு “ அரசியல் உலகம் அபாயகரமானது”.

உண்மைதான். ரஜினி போன்றவர்களும் நுழையும் பலவீனம் இருப்பதால் அரசியல் உலகம் அபாயகரமானதுதான்.

தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவுகிறது. மோடி நல்லவர். ஜெயலலிதா நல்லவர். அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ரஜினியின் அரசியல் நுழைவு எப்படி இருக்கும் என்பது வெள்ளிடை மலை.

இன்றைய கேள்வி:

இந்தியா டுடே நேர்காணலில் நடிகர் ரஜினி பிரதமர் மோடியை பாராட்டியிருப்பதற்கு காரணம்  என்ன?

♠ மோடியின் 2.0தான் ரஜினி
♠ பாஜக-வுக்கு முட்டுக்கொடுக்க
♠ மோடியின் பிரச்சாரக்
♠ ரெய்டு பயம்
♠ 2.0-க்கு ஓசி விளம்பரம்

(பதில்களில் மூன்றை தெரிவு செய்யலாம்)

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

ட்விட்டரில் வாக்களிக்க:

நீதிபதி லோயா மரணம் : மீண்டும் விசாரணை தேவை – முன்னாள் நீதிபதி ஏ.பி.ஷா

சொராபுதீன் போலி மோதல் கொலை வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் ஹரிகிஷன் லோயாவின் சந்தேக மரணம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.பி.ஷா கருத்து தெரிவித்துள்ளார்.  நீதித்துறையிலிருந்து நீதிபதி லோயாவின் குடும்பத்திற்கு ஆதரவாக வந்திருக்கும் ஒரே ஆதரவு குரல் ஏ.பி. ஷா-வினுடையது.

சொராபுதீன் போலி மோதல் கொலை வழக்கில், அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தனர். இந்த வழக்கின் நீதிபதியாக இருந்த லோயா, மர்மமான முறையில் டிசம்பர் 2014-ம் ஆண்டு நாக்பூரில் கொல்லப்பட்டார். மாரடைப்பால் மரணமடைந்ததாக போலீசு தரப்பு தெரிவித்த நிலையில், நீதிபதியின் குடும்பம் இந்த மரணத்தில் சந்தேகத்தைக் கிளப்பியது.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.பி.ஷா

நீதிபதி லோயா மரணமடைவதற்கு சில வாரங்களுக்கு முன், தங்களுக்கு சாதகமான தீர்ப்பைத் தர, லோயாவிற்கு குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பு ரூ. 100 கோடியை லஞ்சமாக தர முயன்றதும் தெரியவந்தது. லோயாவின் மரணத்தின் பின்னணியில் இந்த விஷயத்தையும் கவனத்தில் கொண்டு விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.பி.ஷா.

“அதிகாரிகள் தரப்பில் நீதிபதி லோயா, மாரடைப்பால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறி, தாண்டே என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து இன்னொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே அவர் இறந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள். உறவினர்களுக்கு விஷயத்தை சொல்லாமலே உடற்கூராய்வு வரை சென்றிருக்கிறார்கள். உறவுக்காரர் என நீதிபதி லோயா குடும்பத்துக்கு தொடர்பே இல்லாத ஒருவர் கையெழுத்திட்டிருக்கிறார். மருத்துவராக உள்ள லோயாவின் சகோதரி, நீதிபதியின் சட்டையில் ரத்தத் துளிகள் இருந்ததாக தெரிவிக்கிறார். மூன்று நாட்களுக்கு கழித்து, குடும்பத்தாரிடம் கொடுக்கப்பட்ட செல்போனில் அத்தனை தகவல்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன.

படிக்க:
♦ நீதிபதி லோயா பிரேதப்பரிசோதனை அறிக்கையில் உள்ள ஓட்டைகள் !
♦ பாஜக – மோடி – அமித்ஷா – நீதிபதி லோயா மர்ம மரணம் ?

சொராபுதீன் என்கவுண்டர் வழக்கிலிருந்து விலகிக் கொள்ளும்படி அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் அழிக்கப்பட்டிருப்பதாக நீதிபதியின் குடும்பம் தெரிவிக்கிறது. நீதிபதி முக்கிய அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்கை விசாரித்துக் கொண்டிருப்பதை அவருடைய குடும்பம் அறிந்திருந்தது. நீதிபதிக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் முக்கிய பொறுப்பிலிருந்த ஒருவரிடமிருந்து அழுத்தம் வந்ததையும் குடும்பம் அறிந்திருக்கிறது. அதுகுறித்து நீதிபதி லோயா மிகுந்த மன அழுத்ததில் இருந்ததையும் அவருடைய குடும்பம் நினைவுபடுத்துகிறது. அதோடு, நீதிபதிக்கு லஞ்சம் தர முயன்ற விஷயமும் தெரியவந்துள்ளது. மும்பையில் நிலம் அல்லது ஃபிளாட் வேண்டுமா என அவரிடம் கேட்கப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இவர்களின் அழுத்ததுக்கு பணியாமல், நீதிபதி பொறுப்பை உதரிவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பி விவசாயம் செய்ய வந்துவிடப் போவதாக தன்னுடைய தந்தையிடம் லோயா தெரிவித்திருக்கிறார். இத்தனை விஷயங்களையும் அறிந்த நீதிபதி லோயாவின் மகன், தன் தந்தையின் மரணத்தை விசாரிக்க வேண்டும் என கடிதம் எழுதுகிறார்.

இயற்கையாக மரணித்ததாகச் சொல்லப்படும் நீதிபதி லோயா

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தாமாக முன்வந்து இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு இதுகுறித்து விசாரிக்கலாமா கூடாதா என்பது பற்றி முடிவெடுக்க வேண்டும். இந்த லஞ்ச புகார் விசாரிக்கப்படவில்லை எனில், அது நீதித்துறைக்கு மிகப்பெரும் களங்கமாக அமையும்” என தி வயர் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் நீதிபதி ஏ.பி. ஷா.

“நீதிபதி லோயா குறித்து விசாரித்தேன். அவர் ’மிக நேர்மையானவர்’ என பெயர் பெற்றவர். அவர் மாவட்ட நீதிமன்றத்தின் மூத்த உறுப்பினர். அவருடைய மரணம் குறித்து அவர் குடும்பத்தார் எழுப்புகிற சந்தேகங்களை விசாரிக்காவிட்டால், கீழ்நிலையில் இருக்கிற நீதிபதிகளுக்கு அதுதவறான செய்தியையே தரும். சமீபத்தில் நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் பல சம்பவங்கள் நடந்துவருகின்றன. அவற்றில் விசாரணைக்கான முகாந்திரங்கள் உள்ளன. அவற்றை விசாரிப்பது, தொடர்புடையவர்களுக்கு எதிரான களங்கத்தை துடைக்கவும்கூட உதவலாம்.

லோயா லெவலுக்கு போக வேணாம் என அமித்ஷாவிற்கு ஆலோசனை கொடுக்கிறாரோ மோடிஜி?

மேலும், நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நீதிபதி லோயா குடும்பத்தாரின் குற்றச்சாட்டின் மீது நான் கருத்து சொல்லவில்லை. ஆனால், அவர்களின் குற்றச்சாட்டின் மீது நிச்சயம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என சொல்கிறேன்.  விசாரணை நடத்தப்பட போதுமான காரணங்கள் உள்ளன. நீதித்துறையை, நாட்டின் மிக உயர்ந்த அமைப்பாக கருதுகிறேன். அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் குடும்பம், குற்றச்சாட்டை எழுப்பும்போது, நிச்சயம் அது விசாரிக்கப்பட வேண்டும்” என்கிறார் நீதிபதி ஏ.பி. ஷா.

படிக்க:
♦ சொராபுதீன் கொலை வழக்கையே கொன்ற அமித் ஷா- மோடி கும்பல்
♦ கொலைகார அமித் ஷா விடுதலை !

நீதிபதியின் சந்தேக மரணம் குறித்து விசாரிக்க கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், நவம்பர் 26-ம் தேதி, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிமன்றத்தில் நீதிபதி லோயா மரணத்தை விசாரிக்கக்கோரும் மனு ஒன்றை வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு, எஸ்.பி. சுக்ரே மற்றும் எஸ்.எம். மோதக் ஆகியோரின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ‘எங்கள் முன் அல்ல’ எனக்கூறி மனுவை விசாரிக்க மறுத்துவிட்டனர்.

அந்த மனு, பி.என். தேஷ்முக் மற்றும் சொப்னா ஜோஷி அடங்கிய அமர்வு முன்  28-ம் தேதி விசாரணைக்கு அனுப்பப்பட்டது. நீதிபதி சொப்னா ஜோஷி இந்த மனு விசாரணையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார்.

நீதிபதி ஒருவரின் மரணத்தை விசாரிப்பதற்குக்கூட திராணியற்ற ‘உயர்ந்த’ அமைப்பாகத்தான் இந்திய நீதிமன்றங்கள் இருக்கின்றன. சக நீதிபதிகளே, மூத்த நீதிபதி ஒருவரின் மரணத்தை விசாரிக்கத் தயாராக இல்லை.  ’இந்துத்துவ’ காவி கும்பல் ஆபத்தானது, பயங்கரமானது என்பதற்கு நீதித்துறையில் நடந்திருக்கும் இந்தக் கொலை மிகச்சிறந்த சான்று.

மேலும் படிக்க:
♦ Exclusive: Justice A.P. Shah Says ‘Suspicious Death’ of Sohrabuddin Case Judge Needs Probe
♦ B.H. Loya’s Death: Another High Court Judge Withdraws From the Case

ஆய்வுக்குழு கிடக்கட்டும் ! ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று ! மக்கள் அதிகாரம்

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா . . . கொட்டப் பாக்குக்கு விலை சொல்லும் அகர்வால் ஆய்வுக்குழு !

நாள் : 1.12.2018

ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக ஆய்வுக்குழுவின் அறிக்கையானது, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் “தமிழக அரசும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், ஆலையினை மூடுவதற்கு முன்பாக ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் கருத்துக் கேட்கவில்லை; இது இயற்கை நீதிக்கு எதிரானது; ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குப் போதுமான காரணங்கள் இல்லை எனக் கூறி சில நிபந்தனைகளுடன் ஆலையை இயங்க அனுமதிக்கலாம்” எனப் பரிந்துரைத்துள்ளது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆய்வுக்குழு அமைப்பது தொடர்பாக வழங்கப்பட்ட உத்திரவில் “ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உண்மையானதா அல்லது மக்களின் கற்பனையா” என ஆய்வு செய்திடுமாறு கூறியுள்ளது. அதன்படி ஆய்வுக்குழுவானது

* தூத்துக்குடிக்குச் சென்று, பாதிக்கப்பட்ட, போராடும் மக்கள் பிரிவினரை சந்தித்திருக்க வேண்டும்.
* ஒவ்வோர் ஊரிலும் தேர்தலில் வாக்களிப்பது போல் மக்களிடம் மருத்துவ முகாம்களை நடத்தியிருக்க வேண்டும்.
* ஸ்டெர்லைட் ஆலைக்குள்ளும், சுற்று வட்டாரங்களிலும் நிலத்தடி நீர், மண் ஆகியவற்றைப் பரிசோதித்திருக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்யுமாறு மக்கள் அதிகாரம் சார்பிலும், பிற பொது நல ஆர்வலர்கள் சார்பிலும் ஆய்வுக் குழு முன் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்பதற்குப் பதிலாக நீதிமன்றங்களில் வழக்கு விசாரணையைக் கேட்பது போல, ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அரசுத் தரப்பு வழக்குறைஞர்களின் வாதங்களை நாட்கணக்கில் ஆய்வுக்குழு கேட்டது. இச்சூழலிலும் தூத்துக்குடியைச் சேர்ந்த நான்கரை லட்சம் மக்கள் தனித்தனியாக ஸ்டெர்லைட் வேண்டாம் எனக் கையெழுத்திட்ட மனுக்கள் ஆய்வுக்குழுவிடம் அளிக்கப்பட்டன.

ஆய்வுக்குழு விசாரணையில் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட சுற்றுச் சூழல் பாதிப்புகள், நிலத்தடி நீர் ஆய்வுகள், காற்று மாசு ஆய்வுகள் என வலுவான ஆதாரங்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்டன.

ஆர்சனிக், காரீயம் உள்ளிட்ட நச்சுத்தன்மை கொண்ட அபாயகரமான கழிவுகளைக் கையாளுவதற்கான சட்டப்பூர்வ அனுமதியை ஐந்து ஆண்டுகளாகப் பெறாமல் சட்ட விரோதமாக ஆலை இயங்கியதும், பல லட்சம் டன் தாமிரக் கழிவுகளை உப்பாறு ஆற்றுப் படுகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கேட்பாறின்றிக் கொட்டி வைத்திருந்ததும் என ஸ்டெர்லைட் ஆலையின் சட்ட விதிமுறை மீறல்கள் பட்டியலிடப்பட்டன. இவற்றில் பல, சுற்றுச் சூழல் சட்டங்களின்படி கிரிமினல் குற்றங்களாகும்.

இவை போன்ற காரணங்களுக்காகத்தான் உச்ச நீதிமன்றம் 2013-ம் ஆண்டு ரூ.100 கோடி அபராதத் தொகையினை ஸ்டெர்லைட் ஆலைக்கு விதித்தது. தவறு செய்பவனை ஒருமுறை மன்னிக்கலாம். மக்களின் உயிர்களைப்பற்றி கவலைப்படாமல், சுற்றுசூழலை தொடர்ந்து நாசமாக்கும் சீரியல் கில்லர் ஸ்டெர்லைட்டை மன்னிக்கலாமா? இந்நிலையில் நிபந்தனைகளோடு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கலாம் என வேதாந்தாவிற்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக வழங்கிய ஆய்வுக்குழுவின் பரிந்துரையை ஏற்க முடியாது.

தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை ’நிரந்தரமாக மூடும் அரசாணையை’ப் பிறப்பித்தபோதே மக்கள் அதிகாரம் உள்ளிட்ட போராடும் அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும், சட்ட வல்லுநர்களும் இந்த அரசாணை பலவீனமானது, நீதிமன்றத்தில் நிற்காது என ஆட்சேபம் தெரிவித்தனர். தமிழக அமைச்சர்களோ உலக நீதிமன்றம் வரை செல்வோம் என சவடால் அடித்தனர். இப்போதோ வாய் மூடி கள்ள மவுனம் சாதிக்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசு துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானதால் தமிழக மக்களின் கடுமையான எதிர்ப்பினால் வேறு வழியின்றி எடப்பாடி அரசு ஆலையை மூடியது.

படிக்க:
♦ தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக் குழு அறிக்கை – ஸ்டெர்லைட் திறக்கப்படுவதற்கு முன்னோட்டமா ?
♦ ஆய்வுக்குழு முன் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்ட ஸ்டெர்லைட் | காணொளி

டெல்லிக்கு எப்போதும் தமிழ்நாடு என்றால் ஓரவஞ்சனையாக செயல்படுவது வாடிக்கை. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இவ்வழக்கின் தொடக்கம் முதலே ஸ்டெர்லைட் ஆலைக்கு சார்பான வகையிலேயே நடக்கின்றது. கமிஷன் போட்டு குற்றத்தை மறைப்பது போல் ஆய்வுக்குழு போட்டு ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பில்லை எனத் தீர்ப்பளிக்கப் பார்க்கிறது. வழக்கின் தரப்பினர்களாக உள்ள பொது நல ஆர்வலர்களுக்குக் கூட ஆய்வுக்குழு அறிக்கையைத் தர மறுக்கின்றது. இது ஏதோ ஸ்டெர்லைட் ஆலை – தமிழக அரசுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் பிரச்சினை போல அரசுத் தரப்பினை மட்டும்தான் விசாரணையில் கேட்போம் என்கின்றது.

எனவே தமிழக அரசு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் – உச்ச நீதி மன்றம் என செக்குமாடு போல் சுற்றுவதில் என்ன பயன்? கடைசியில் உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டது; தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சொல்லி விட்டது; நாங்கள் என்ன செய்வது எனக் கைவிரித்திடும் நாடகத்தை தமிழக அரசு நடத்திடவா?

ஸ்டெர்லைட் ஆலையால் எந்த பாதிப்பும் இல்லை என தினம் தோறும் நாளிதழ்களில் வேதாந்தா நிறுவனம் விளம்பரம் கொடுத்து வருகிறது. மேலும் பணத்தை வாரி இறைத்து உள்ளுர் விவசாய சங்கத்தினர், லாரி உரிமையாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள், காண்டராக்டர்கள், ஆகியோரை வைத்து ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க  மாவட்ட நிர்வாத்திடம் மனு கொடுக்க வைத்து மக்களிடம் எதிர்ப்பு இல்லை என காட்ட முயல்கிறது. அதற்கு எடப்பாடி அரசு துணை போகிறது. போலீசு மூலம் அச்சுறுத்தி கிராம மக்களை தூண்டிவிட்டார்கள், மூளைச்சலவை செய்தார்கள் என புகார் மனு அளிப்பது, இவ்வாறு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பெரும் சதி அரங்கேறி வந்தது அனைவரும் அறிந்ததே.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆய்வுக் குழு தலைவர்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றால்  ஏன் கொள்கை முடிவு எடுக்க மறுக்கிறது. ஆலை வேண்டாம் என  மக்கள் பேசுவதற்கும், போராடுவதற்கும், ஏன் போலீசு அனுமதி மறுக்கிறது? 

தருண் அகர்வால் குழுவில் சொல்லப்பட்ட முழுமையான தகவல்களை தமிழக மக்களுக்கு குறிப்பாக தூத்துக்குடி மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

தமிழக அமைச்சரவையை உடனடியாகக் கூட்டி, தாமிர உருக்காலையால் ஏற்படும் சிக்கல்கள், ஸ்டெர்லைட் ஆலை உருவாக்கிய பாதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழக மண்ணில் தாமிர உருக்காலைக்கு அனுமதி இல்லை எனக் கொள்கை முடிவெடுத்து அதை சட்டமன்றத்தில் சிறப்பு சட்டமாக நிறைவேற்ற வேண்டும்.

தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக ஊர்கள் தோறும் பணத்தை இறைத்து தனக்கு ஆதரவு உள்ளதாக கைக்கூலிகள் மூலம் ஸ்டெர்லைட் ஆலையின் மோசடி நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது எனப் பேசுவதற்கும் போராடுவதற்கும் அனுமதிக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தாவின் அகர்வால், மோடி அரசின் கூட்டாளி. மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனம். ஸ்டெர்லைட் ஆலை அவர்களுக்கு தங்க முட்டையிடும் வாத்து.  ஸ்டெர்லைட்டைத் திறப்பதற்கு என்ன விலையும் கொடுப்பார்கள். எடப்பாடி அரசாங்கம் போன்ற அடிமை அரசாங்கம் தானாக அசைந்து கொடுக்காது. நாம்தான் அதனை அசைக்க வேண்டும். தூத்துக்குடி மக்களோடு தமிழக மக்கள் ஒன்று சேர்ந்து வேதாந்தாவை விரட்ட வேண்டும்.

நாசகார ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக மண்ணில் மீண்டும் இயங்க அனுமதிக்கக் கூடாது.  கூடவே கூடாது. எத்தகைய தியாகத்திற்கும் அர்ப்பணிப்பான போராட்டத்திற்கும் தயாராவோம்!

ஸ்டெர்லைட்டை திறக்கச்சொல்கிறது ஆய்வுக்குழு !
14 பேர் உயிர்த் தியாகம் வீணாகலாமா?
ஆய்வுக்குழு, பசுமைத் தீர்ப்பாயம் கிடக்கட்டும் . . .

தமிழக அரசே,
தனிச்சட்டம் இயற்று ! ஸ்டெர்லைட்டை விரட்டு!

தோழமையுடன்
வழக்கறிஞர் . சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்

இப்பத்திரிகை செய்தியை பி.டி.எஃ.ப் கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.

இருள் படிந்த இடையறாத் துன்பம் கலந்த வாழ்வு

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 31

மாக்சிம் கார்க்கி
வன் வந்து சென்ற நாலாவது நாளன்று அவள் அவனுடைய வீட்டுக்குக் குடி போனாள். அவளது இரண்டு பெட்டிகளோடு அவள் ஏறிச் சென்ற வண்டி அந்தத் தொழிலாளர் குடியிருப்பை விட்டு வெளிவந்து, ஊருக்குப் புறம்பேயுள்ள வெம்பரப்புக்கு வந்து சேர்ந்தது. உடனே அவள் பின்னால் திரும்பிப் பார்த்தாள். எங்கே இருள் படிந்த இடையறாத் துன்பம் கலந்த வாழ்வை அவள் அனுபவித்தாளோ, எங்கே புதிய இன்பங்களும் துன்பங்களும் நிறைந்த வாழ்வுக்கு ஆளாகி, நாட்களை அவள் மின்னல் வேகத்தில் கழித்தாளோ அங்கிருந்து, அந்த இடத்தைவிட்டு நிரந்தரமாக, ஒரேயடியாகப் பிரிந்து விலகிச் செல்வது போன்று அவள் திடீரென்று உணர்ந்தாள்.

கரி படர்ந்த பூமியின் மேல் ஆகாயத்தை நோக்கி புகைபோக்கிகளை உயர நீட்டிக்கொண்டு கருஞ்சிவப்புச் சிலந்தியைப் போல நின்றது தொழிற்சாலை. அதைச் சுற்றிலும் தொழிலாளர்களின் மாடியற்ற ஒற்றைத்தள வீடுகள் மொய்த்துச் சூழ்ந்திருந்தன. அவை சிறிதும் பெரிதுமாக நிறம் வெளிறிக் குழம்பிப்போய், சேற்றுப் பிரதேசத்தை அடுத்து நின்றன. அந்த வீடுகள் தமது ஒளியற்ற சிறுசிறு ஜன்னல்கள் மூலம் அடுத்தடுத்த வீடுகளைப் பரிதாபகரமாகப் பார்த்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது. அந்த வீடுகளுக்கு மேலாக, தொழிற்சாலையைப் போலவே கருஞ்சிவப்பாகத் தோன்றும். தேவாலயம் உயர்ந்து நின்றது. அதனுடைய ஊசிக் கோபுரம் புகை போக்கிகளின் உயரத்தை விட குட்டையாயிருந்தது.

பெருமூச்செறிந்து கொண்டே தனது கழுத்தை இறுக்கி திணறச் செய்வதுபோலத் தோன்றி தனது ரவிக்கையின் காலரைத் தளர்த்திவிட்டுக் கொண்டாள் தாய்.

“போ இப்படி!” என்று முனகிக்கொண்டே வண்டிக்காரன் குதிரையின் கடிவாளத்தைப் பற்றி இழுத்தான். அவன் ஒரு கோணக்கால் மனிதன். குட்டையானவன், வயதை நிதானிக்க முடியாத தோற்றமுடையவன். அவனது தலையிலும் முகத்திலும் வெளிறிய மயிர்கள் சில காணப்பட்டன. கண்களில் வர்ண ஜாலம் எதுவுமே இல்லை. அவன் வண்டிக்குப் பக்கமாக நடந்து வரும்போது அசைந்து அசைந்து நடந்தான். வலப்புறம் போவதோ, இடப்புறம் போவதோ, அவனுக்கு எல்லாம் ஒன்றுதான் என்று தெளிவாகத் தெரிந்தது.

“சீக்கிரம் போ” என்று உணர்ச்சியற்ற குரலில் குதிரையை விரட்டிக் கொண்டே, தனது கோணல் கால்களைத் தூக்கித் தூக்கி வைத்து நடந்தான். அவனது பூட்சுகளில் சேறு ஒட்டி அப்பிக் காய்ந்து போயிருந்தது. தாய் சுற்றுமுற்றும் பார்த்தாள். அவளது இதயத்தைப் போலவே வயல்வெளிகள் அனைத்தும் வெறிச்சோடிக் கிடந்தன.

கொதிக்கும் மணல் வெளியில், குதிரை தலையை ஆட்டிக்கொண்டு கால்களை கனமாக ஊன்றி நடந்தது. மணல் சரசரத்தது; அந்த லொடக்கு வண்டி கிரீச்சிட்டது. வண்டிச் சக்கரத்தால் ஏற்படும் ஒலி புழுதியுடன் பின்தங்கிவிட்டது…..

நிகலாய் இவானவிச் நகரின் ஒரு கோடியில் ஒரு அமைதி நிறைந்த தெருவில் குடியிருந்தான். பழங்காலக் கட்டிடமான ஒரு இரண்டடுக்கு மாடி அருகில், பச்சை வர்ணம் அடிக்கப் பெற்ற சிறு பகுதியில் அவனது வாசஸ்தலம் இருந்தது. அந்தப் பகுதிக்கு முன்னால் ஒரு சிறு தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்திலுள்ள பன்னீர் பூ மரக்கிளைகளும், வேல மரக்கிளைகளும் வெள்ளிய இலைகள் செறிந்த இளம் பாப்ளார் மரக்கிளைகளும் அந்தப் பகுதியிலிருந்த மூன்று அறைகளின் ஜன்னல்களிலேயும் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தன. அறைகளுக்குள்ளே எல்லாம் சுத்தமாகவும் அமைதியாகவும் இருந்தன. மோன நிழல்கள் தரைமீது நடுநடுங்கும் கோலங்களைத் தீட்டிக் கொண்டிருந்தன. சுவரோரங்களில் புத்தக அலமாரிகள் வரிசையாக இருந்தன. அவற்றுக்கு மேல் சிந்தனை வயப்பட்டவர்கள் மாதிரித் தோன்றும் சிலரின் உருவப் படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன.

“இந்த இடம் உங்களுக்கு வசதியானதுதானே?” என்று கேட்டுக்கொண்டே நிகலாய் தாயை ஒரு சிறு அறைக்குள் அழைத்துக்கொண்டு சென்றான். அந்த அறையிலுள்ள ஒரு ஜன்னல் தோட்டத்தை நோக்கியிருந்தது. இன்னொரு ஜன்னல் புல் மண்டிக்கிடந்த முற்றத்தை நோக்கியிருந்தது. அந்த அறையின் சுவரோரங்களிலும் புத்தக அலமாரிகள் இருந்தன்.

”நான் சமையல் கட்டிலேயே இருந்து விடுகிறேன், சமையல்கட்டே வெளிச்சமாகவும் சுத்தமாகவும் நன்றாகவும் இருக்கிறதே…..” என்றாள் தாய்.

அவளது வார்த்தைகள் அவனைப் பயமுறுத்துவது போலிருந்தது. அதன் பிறகு அவன் அவளிடம் எப்படியெல்லாமோ சுற்றி வளைத்துப் பேசி, அவளை அந்த அறையில் வசிக்கச் சம்மதிக்கச் செய்த பிறகுதான், அவனது முகம் பிரகாசமடைந்தது.

அந்த மூன்று அறைகளிலுமே ஒரு விசித்திரமான சூழ்நிலை நிரம்பித் தோன்றியது. அங்கு நல்ல காற்றோட்டம் இருந்தது. சுவாசிப்பது லகுவாயிருந்தது. எனினும் அந்த அறையில் யாருமே உரத்த குரலில் பேசுவதற்குத் தயங்குவார்கள். சுவர்களில் தொங்கிக்கொண்டு குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருக்கும் அந்தச் சித்திரங்களிலுள்ள மனிதர்களின் அமைதி நிறைந்த சிந்தனையைக் கலைப்பது அசம்பாவிதமானது போலத் தோன்றியது.

“இந்தச் செடிகளுக்கெல்லாம் தண்ணீர் விட வேண்டும்” என்று ஜன்னல்களிலிருந்த பூந்தொட்டிகளின் மண்ணைத் தொட்டுப் பார்த்துவிட்டுச் சொன்னாள் தாய்.

”ஆமாம்” என்று வீட்டுக்காரன் தனது குற்றத்தை உணருபவன் போலச் சொன்னான். “எனக்கு அவையெல்லாம் ரொம்பப் பிடித்தமானவை. ஆனால் எனக்கு இதற்கெல்லாம் நேரமே இருப்பதில்லை.”

தனது விசாலமான அந்த வீட்டில்கூட நிகலாய் மிகவும் பதனமாகவும் நிதானமாகவும் யாரோ ஒரு அன்னியன் மாதிரி நடமாடித் திரிவதைத் தாய் கண்டாள். அவன் அந்த அறையிலுள்ள பல பொருள்களையும் குனிந்து உற்றுப் பார்த்தான்.

அப்படிப் பார்க்கும்போது தன் வலது கையின் மெல்லிய விரல்களால் தனது மூக்குக் கண்ணாடியைச் சரி செய்து கொண்டும், கண்களைச் சுருக்கிக் கூர்மையாக்கிக்கொண்டும் தனக்கு அக்கறையுள்ள பொருள்களைப் பார்த்தான். சில சமயங்களில் அவன் ஒரு சாமானைத் தன் முகத்தருகே கொண்டு போய்க் கண்களால் தொட்டு உணர்வதுபோலப் பார்த்தான். தாயைப் போலவே அவனும் அந்த அறைக்கு முதன் முதல் வந்திருப்பவன் போலவும், அதனால் அங்குள்ள பொருள்களெல்லாம் அவனுக்குப் புதியனவாக, பழக்கமற்றதாக இருப்பது போலவும் தோன்றியது. இந்த நிலைமை தாயின் மனநிலையைத் தளர்த்தி ஆசுவாசப்படுத்தியது. அவள் நிகலாயைத் தொடர்ந்து அந்த இடத்தை முழுதும் சுற்றிப்பார்த்தாள். எங்கு என்ன இருக்கிறது என்று கண்டறிந்தாள். அவனது பழக்க வழக்கங்களைக் கேட்டறிந்தாள். அவன் ஏதோ ஒரு குற்றவாளியைப் போல் கள்ளக் குரலில் பதிலளித்தான். அவன் பதில் சொல்லிய பாவனையானது, ஒரு காரியத்தை எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படி செய்யாமல் ஆனால் வேறுமாதிரியாகச் செய்யவும் தெரியாதவன் சொல்வது போலத் தொனித்தது.

அவள் பூஞ்செடிகளுக்குத் தண்ணீர் விட்டாள்: பியானோ வாத்தியத்தின்மீது சிதறிக் கிடந்த இசை அமைப்புத் தாள்களை ஒழுங்காக அடுக்கி வைத்தாள். தேநீர்ப் பாத்திரத்தின் மீது பார்வையைச் செலுத்தியவாறு பேசினாள்:

“இந்தப் பாத்திரத்தை விளக்க வேண்டும்.”

அவன் அந்த மங்கிப்போன பாத்திரத்தைத் தொட்டுத் தடவிப் பார்த்தான், தன் விரலை முகத்தருகே கொண்டுபோய்க் கவனித்தான். தாய் லேசாகச் சிரித்துக்கொண்டாள்.

அன்றிரவு அவள் படுக்கைக்குச் செல்லும்போது அன்றைய தினத்தின் சம்பவங்களை நினைத்துப் பார்த்தாள். தலையைத் தலையணையிலிருந்து உயர்த்தி, வியப்போடு சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டாள். வேறொருவருடைய வீட்டில் இரவைக் கழிப்பது என்பது அவளது வாழ்க்கையிலேயே இதுதான் முதல் தடவை. எனினும் அவளுக்கு அதனால் எந்தவிதச் சிரம உணர்ச்சியும் தோன்றவில்லை. அவள் நிகலாயைப் பற்றி அக்கறையோடு நினைத்துப் பார்த்தாள். அவனது வாழ்வை, முடிந்தவரை மேன்மையுடையதாக்கி, அவனது வாழ்க்கையின் மென்மையும் கதகதப்பும் சேருவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் அவளுக்கு ஒரு உணர்வு தோன்றியது. அவனது லாவகமின்மை, வேடிக்கையான சாமர்த்தியமின்மை மற்ற மனிதர்களிடமிருந்து மாறுபட்ட அவனது விசித்திர நடத்தை, ஞான ஒளி வீசும். எனினும் குழந்தை நோக்குக் கொண்ட அவனது பிரகாசமான கண்கள் முதலியவெல்லாம் அவளது இதயத்தைத் தொட்டுவிட்டன.

படிக்க:
நீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா ?
தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக் குழு அறிக்கை – ஸ்டெர்லைட் திறக்கப்படுவதற்கு முன்னோட்டமா ?

பிறகு அவள் மனம் அவளது மகன்பால் திரும்பியது, மீண்டும் மே தின வைபவத்தின் சம்பவங்கள் அவள் கண் முன் நிழலாடிச் சென்றன. எனினும் அந்தச் சம்பவத்தின் நினைவுச் சித்திரத்தில் இப்போது ஒரு புதிய அர்த்தமும், புதிய குரலும் அவளுக்குத் தொனித்தன. அன்றைய தினத்தைப் போலவே, அந்த தினத்தைப் பற்றிய சோக உணர்ச்சியிலும் ஏதோ ஒரு விசேஷத் தன்மை இருந்தது என்றாலும் அந்தச் சோக உணர்ச்சி முஷ்டியால் ஓங்கிக் குத்தித் தரையிலே மோதி விழச் செய்யும் உணர்ச்சிபோல் இல்லை. அந்த உணர்ச்சி இதயத்துக்குள் பன்மடங்கு வேதனையோடு துளைத்துத் துருவிப் புகுந்து, கோப உணர்ச்சியை மெது மெதுவாகத் தூண்டி, முதுகை நிமிர்த்தி நேராக நிற்கச் செய்யும் உணர்ச்சியாக இருந்தது.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

மாவோவின் சீனாவில் மக்களை பட்டினியில் தள்ளிய முதலாளித்துவ பாதையாளர்கள்

சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் ஃபிரட் எங்ஸ்ட் – உடன் ஓர் நேர்காணல் | பாகம் – 3

ஒனுர்கன் உல்கர்: பல வளரும் நாடுகள் சந்தை அடிப்படையிலான சீர்திருத்தங்களை மேற்கொண்டன. ஆனால், இன்று சீனா மட்டுமே வெற்றிக்கதையாகப் பேசப்படுகிறது. சர்வதேச நிதி நிறுவனங்களால் கூவி விற்கப்பட்ட மற்ற மாதிரிகள் முடங்கி விட்டன. இதன் முக்கிய காரணம் என்ன?

ஃபிரட் எங்ஸ்ட்: இது சுவாரசியமானது. வளர்ச்சி என்பதைப் பற்றி முதலாளித்துவப் பொருளாதார இயலாளர்களுக்கு ஒரு முழுமையான பார்வையே இல்லை. மூன்றாம் நாடுகள் வளர முடியாததற்குக் காரணம் ஏகாதிபத்தியம்தான். சீனாவால் வளர முடிந்ததற்கான ஒரே காரணம், இந்த ஏகாதிபத்திய சகாப்தத்திலும் தனது இறையாண்மையை சீனாவால் பாதுகாத்துக் கொள்ள முடிந்ததுதான்.

மாவோ காலத்தில் போடப்பட்ட பொருளாதார அடித்தளம் ஒரு சுயாதிபத்தியத்தியம் உள்ள முதலாளித்துவ வளர்ச்சிக்கு வழிகோலியது. இன்றைக்கும் உலக நாடுகளைப் பாருங்கள். அந்நிய படைகள் காலூன்றாத நாடு ஒன்று உண்டா? ரஷ்யாவும் சீனாவும் மட்டுமே அப்படியிருக்கின்றன. இந்தியாவை ஓரளவுக்குச் சொல்லலாம்.

ஒனுர்கன் உல்கர்: மாவோவிற்குப் பிந்தைய சீனாவில் உழைப்பு ஒரு பண்டமாக்கப்பட்டதனால் விளைந்த உள்நாட்டு முரண்பாடுகளைப் பற்றிக் கூறுங்கள். சீனாவின் புதிய உழைக்கும் வர்க்கத்தின், குறிப்பாகப் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்நிலை மற்றும் வேலைநிலைமைகள் இந்தப் பொருளாதார மாதிரியின் நிலைத்ததன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளனவா?

ஃபிரட் எங்ஸ்ட்: இந்த இடத்தில் மாவோ சகாப்தம் அளித்த மற்றுமொரு பெரிய பலன் குறித்துச் சொல்ல வேண்டும். இதை அறிஞர்கள் காண மறுக்கிறார்கள். மற்ற பல நாடுகளில் மிகவும் மலிவான உழைப்பு கிடைக்கிறது. இருந்தும் அதனை அந்நாடுகளால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இது சீனாவால் மட்டும் எப்படி முடிகிறது? இந்தப் புதிருக்கு மேற்கத்திய அறிஞர்களும் ஊடகங்களும் அளிக்கும் விளக்கங்கள் பொருத்தமானவையாக இல்லை.

நான் பிலிப்பைன்ஸைப் பார்க்கும் வரை எனக்கும் இது புதிராகத் தான் இருந்தது. அங்கே மூன்று முறை போயிருக்கிறேன். மக்களிடம் பேசி அந்நாட்டின் சமூக எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தேன். பிலிப்பைன்சிற்கும் சீனாவிற்கும் முக்கியமான வேறுபாடு நிலச்சீர்திருத்தம் தான். நிலச்சீர்திருத்தம் காரணமாக சீனாவில் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பங்கு நிலம் கிடைத்தது. சீனாவின் மலிவான உழைப்பை புரிந்து கொள்வதற்கான சாவி இங்கேதான் இருக்கிறது.

சீனாவின் குறைந்தபட்ச ஊதியத்துக்கும் பிலிப்பைன்சின் குறைந்தபட்ச ஊதியத்துக்கும் இடையில் பெரிய வேறுபாடு இல்லை. ஆனால், இந்த ஊதியத்தைப் பெறுகின்ற பிலிப்பைன்ஸ் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். சீனாவிலோ நல்லபடியாக வாழ்கிறார்கள்.

ஏனென்றால், சீனாவில் கிராமத்திலிருந்து நகரத்திற்குப் புலம்பெயரும் தொழிலாளி முழுக்க முழுக்க தனது சம்பளத்தை மட்டும் நம்பி இருப்பதில்லை. அவர்களுக்குக் கிராமத்தில் நிலம் இருக்கிறது. ஒரு தொழிலாளி குழந்தைப் பருவத்திலிருந்து இளைஞனாக வளர்வதும், முதியவர்களைப் பராமரிப்பதும் கிராமப்புறங்களிலேயே நடந்து விடுவதால், உழைக்கும் வர்க்கத்தின் மறுஉற்பத்தி கிராமப்புறத்திலேயே நடந்து முடிந்து விடுகிறது.

ஆனால், ஒரு நிலமற்ற விவசாயி நகர்ப்புறத்திற்கு வந்தால், மேற்கண்ட செலவுகளெல்லாம் நகர விலைவாசியின் அடிப்படையில் செய்ய வேண்டி இருக்கும். செலவு அதிகமாகும்.

படிக்க :
♦ சோசலிசம்: முதலாளிகளின் கொடுங்கனவு ! பாட்டாளிகளின் கலங்கரை விளக்கம் !!
♦ விஞ்ஞானிகள் அறிக்கை : நவீன முதலாளித்துவம் ஒழியாமல் உலகைக் காப்பாற்ற முடியாது !

சீனாவின் கிராமப்புறத்தில் 80 வயதானவர்கள் கூட விவசாய வேலை செய்கிறார்கள். அவர்கள் சொந்த வீடு, நிலம், வருமானம் என்று இளைய தலைமுறைக்குப் பாரமாக இல்லாமல் தன்னிறைவாக இருக்கிறார்கள். இதனால்தான் சீனாவில் மலிவான உழைப்பு கிடைக்கிறது. இதைச் சாத்தியமாக்கியது 1949-இன் சீனப் புரட்சியே.

இன்று சீனாவில் ஊதியம் (உழைப்பின் விலை) அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்குக் காரணம் நகரமயமாக்கம். அரசும், ரியல் எஸ்டேட் சூதாடிகளும் பல்வேறு தொழில் திட்டங்களுக்காக நிலத்தைக் கட்டாயமாகக் கையகப்படுத்தி விவசாயிகளை நிலங்களிலிருந்து அப்புறப்படுத்துகிறார்கள். விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பறித்த பின்னர், நகரமயமாக்கப்பட்ட சூழலில் அவர்களால் முந்தைய சம்பளத்தை நம்பி உயிர்வாழ முடியாது. ஊதியத்தை உயர்த்தித்தான் ஆகவேண்டும்.

சோசலிச சீனா சமூகத்தின் சேவைத்துறைகள்.

ஒனுர்கன் உல்கர்: மாவோவின் சீனத்தில் எல்லா அடிப்படை சேவைகளும் கிட்டத்தட்ட இலவசமாகக் கிடைத்த போதிலும், அந்த சேவைகள் தரமற்றவையாக இருந்தன என்று முதலாளித்துவ அறிஞர்கள் குறை கூறுகிறார்கள். அந்த சேவைகள் எப்படி இருந்தன?

ஃபிரட் எங்ஸ்ட்: ஒரு சிறு திருத்தம். எல்லாமே இலவசமில்லை. சில சேவைகள் நகரவாசிகளுக்கு மட்டுமே கிடைத்தன. கிராமப்பற மக்களுக்குக் கிடைக்கவில்லை. வீடு முற்றிலுமாக இலவசமில்லை. குறைந்த வாடகை இருந்தது. கல்வி கிட்டத்தட்ட இலவசம்தான். நூல்கள் மட்டும் விலைக்கு – குறைந்த விலைதான். இதனால்தான் மாவோ காலத்தின் நிகர உள்நாட்டு உற்பத்தியை (GDP) பின்னாளில் கணக்கிட்டபோது அது குறைவாக இருந்தது. ஏனென்றால், இலவச சேவைகள் உற்பத்திக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.

தரம் இப்போது இருக்கும் அளவுக்கு இல்லைதான். ஆனால், அப்போது என்ன சாத்தியம் என்பதை வைத்துப் பார்க்குமிடத்து, அவை அளப்பரியவை. எடுத்துக் காட்டாக, கிராமப்புறங்களுக்கான வெறுங்கால் மருத்துவர்கள்! இது வெற்றிகரமான சேவை என்று உலகம் முழுவதிலும் அங்கீகரிக்கப்பட்டது.

ஒனுர்கன் உல்கர்: ஐ.நா.வின் சுகாதார அமைப்புகூட இதை மூன்றாம் உலக நாடுகளுக்குச் சிபாரிசு செய்தது.

ஃபிரட் எங்ஸ்ட்: ஆமாம். அது பெரிய ஆச்சரியம்தான். வெறுங்கால் மருத்துவர்களின் சேவை மருத்துவமனை மருத்துவர்களின் சேவை அளவுக்கு உயர்வானது இல்லைதான். அன்று தொலைதூர கிராமங்களில் வாழ்ந்த மக்களுக்கு மருத்துவமனைகள் எட்டாதவையாக இருந்தன. அத்தகைய நிலையில் வெறுங்கால் மருத்துவர்களுடைய சேவையின் தரத்தைக் குறை கூறுவது அபத்தமானது.

மாவோவின் கொள்கைகள் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தின. மக்களின் சராசரி ஆயுட்காலம் பன்மடங்கு அதிகரித்தது. மூன்றாம் உலக நாடுகளை மட்டுமல்ல, எந்த உலக நாட்டை ஒப்பிட்ட போதும் வளர்ச்சி விகிதம் மிக அதிகமாக இருந்தது.

அவர் காலத்தின் மூன்று கடினமான வருடங்களில் கூட இறப்பு விகிதம் 2.5 விழுக்காடாகத்தான் இருந்தது. இந்தியாவைப் பொருத்தவரை இதுதான் மிக இயல்பான இறப்பு விகிதம்.

மாவோ சகாப்தத்தைக் குறை கூறுவதற்குப் பல பொய்கள் கூற வேண்டியிருக்கிறது. இயற்கை விஞ்ஞானத்தில், இயற்பியல், வேதியியல் போன்றவற்றில் நமக்கு சோதனைக்கூடங்கள் இருக்கின்றன. புறவய உண்மைகளை உள்ளது உள்ளபடி நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால், சமூக அறிவியலில், புறவய உண்மையைத் திரிப்பது எளிது. நாம் நமது நலன்களுக்குத் தகுந்தாற்போலத்தான் புறவுலகைப் பார்க்கிறோம்.

மூன்று கடினமான வருடங்களும் உட்கட்சிப் போராட்டமும்

ஒனுர்கன் உல்கர்: மாவோ ஒரு சர்வாதிகாரி என்றும் அவர் தனது கற்பனாவாத நோக்கங்களுக்காகப் பல பத்து இலட்சக்கணக்கான சீனர்களைப் பலியிட்டார் என்றும் மேற்கத்திய அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தக் கூற்றை நியாயப்படுத்த மீப்பெரும் முன்னோக்கிய பாய்ச்சலுக்குப் பின் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தைக் கூறுகின்றனர். இதைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள். மாவோ அந்த அளவுக்கு கற்பனாவாதியா?

ஃபிரட் எங்ஸ்ட்: கற்பனாவாதம் என்ற சொல்லை என்ன பொருளில் அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவர் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், உடனே, அவரைக் கிறுக்கு என்றோ கற்பனாவாதி என்றோ சொல்லிவிடலாம். கற்பனாவாதம் என்பதற்கு என்ன வரையறை? என்ன இலக்கணம்? அவர்களைப் பொருத்தவரை மார்க்சியமே கற்பனாவாதம்தான்.

மாவோ மக்களைக் கொன்று குவித்தார் என்பது உண்மைக்குப் புறம்பானது. இதை நிரூபிக்கப் பல உதாரணங்கள் இருக்கின்றன. உட்கட்சிப் போராட்டத்தின் போது – பலருடைய நோக்கத்துக்கும் விருப்பத்துக்கும் மாறாக – யாரையும் தீர்த்துக்கட்ட மாவோ விரும்பவில்லை. சிறை வைக்கலாம். ஆனால் மரண தண்டனை கூடாது. ஏனென்றால், “முடிவு தவறென்றால், அதைச் சரிசெய்யவே முடியாது” என்று வலியுறுத்திய மிகச் சிலரில் அவரும் ஒருவர். புரட்சியின்போது ஏற்பட்ட அனைத்து இறப்புகளுக்கும் அவர் மேல் பழி போடுகிறார்கள். திரும்பத் திரும்பச் சொல்லப்படும் இந்தக் கூற்றுகள் நகைப்புக்குரியவை. கட்சியில் யாரேனும் ஒருவரைத் தீர்த்துக்கட்டுமாறு அவர் உத்தரவிட்டார் என்றோ, இரகசியமாகக் கொலை செய்ய உத்தரவிட்டார் என்றோ ஒரு சான்றைக்கூட யாராலும் காட்ட முடியாது.

மாவோவின் கொள்கைகளைக் குறை கூற முடியும் என்று ஏதேனும் ஒரு காலம் இருக்குமென்றால், அது மூன்று கடினமான வருடங்கள் தான். அப்போது மக்கள் இறந்ததற்கான காரணம் பட்டினி. இந்த பிரச்சனையில், சிறிது உள்ளே நுழைந்து பார்த்தால், மாவோ ஏன் சிலரை முதலாளித்துவ பாதையினர் என்று கூறினார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். தங்களுடைய நலனைக் காப்பாற்றிக் கொள்ள உதவுமென்றால், எத்தனை மக்கள் செத்தாலும் அதைப் பற்றி முதலாளித்துவ வர்க்கத்தினர் கவலைப்படமாட்டார்கள் – ட்ரம்ப்பைப் போல. முற்றிலும் ஏகாதிபத்திய நோக்கங்களுக்காக சிரியா மீது குண்டு மழை பொழியுமாறு மிகவும் அலட்சியமாக டிரம்ப் உத்தரவிடுகிறார்.

ஜனநாயகம், சுதந்திரம் என்ற பெயரில் இந்தப் படுகொலைகளை அவர்கள் செய்கிறார்கள். அன்று சீனத்தில் இது போன்றவர்கள் கட்சியிலும், தலைமைப் பொறுப்பிலும் இருந்தார்கள். இந்த முதலாளித்துவப் பாதையினரால்தான் அந்த மூன்று கடினமான வருடங்கள் ஏற்பட்டன.

முதலில், 1950-களின் தொடக்கத்தில், அவர்கள் கூட்டுப் பண்ணைககள் உருவாக்குவதை எதிர்த்தார்கள். கூட்டுப்பண்ணைகள் வெற்றியடைந்தவுடனே, அவற்றை மேலும் தீவிரப்படுத்த விரும்பினார்கள்.

இதுதான் கம்யூனிசக் காற்று அல்லது மிகைப்படுத்தல் காற்று என்பதற்கான பின்புலம். அவர்கள் ஏன் அதைத் தீவிரப்படுத்தினார்கள்? ஏனென்றால், தனி விவசாயிகளிடம் இருந்து தானியத்தைக் கொள்முதல் செய்வதைவிடக் கூட்டுப் பண்ணைகளிடம் இருந்து திரட்டு வது எளிது. அதனால்தான் கம்யூனிசக் காற்று என்பதை அவர்கள் தீவிரப்படுத்தினார்கள். ஏனெனில், விவசாயிகளின் உபரியைக் கைப்பற்றுவதற்கு இதுதான் எளிய வழி என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள். இதனால் எத்தனை விவசாயிகள் பட்டினி கிடந்து சாவார்கள் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இதுதான் இக்கட்டுநிலை தோன்றியதற்கான காரணம்.

ஒனுர்கன் உல்கர்: இன்று அதிகாரப்பூர்வ வரலாற்றில் இதைப் பற்றி ஒன்றும் இல்லை. ஆனால், உண்மையில் லியு ஷோ சி, டெங், பெங் ஜென், தாவ் சூ (Liu Shoqi, Deng, Peng Zhen, Tao Zhu) போன்றவர்கள் தான் இந்த கம்யூனிசக் காற்றை முழுமூச்சுடன் முன்தள்ளியவர்கள் இல்லையா?

ஃபிரட் எங்ஸ்ட்: ஆமாம். அவர்கள் தான் அதை வலியுறுத்தினார்கள். அவர்களின் பாதையை மாவோ கடுமையாக விமர்சித்தார். ஆனால், மாவோ சிறுபான்மையாக இருந்தார். விவசாயிகளின் நலன்களில் அவர்களுக்கு அக்கறை இல்லாததைக் கண்டு மாவோ அதிர்ந்தார்.

1958-இல் எல்லா இடங்களிலும் அமோக விளைச்சல். ஆனால், 59-ல் ஹெனானிலும் அன்ஹூயிலும் இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டன. தானிய உற்பத்தி குறைந்தது. ஆனால், உள்ளூர் அதிகாரிகள் பற்றாக்குறையைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. விவசாயிகள் விளைச்சலில் பாதியைத் தர மறுக்கிறார்கள் என்று அவர்கள் சொன்னார்கள்.

படிக்க:
♦ ”கம்யூனிச” சீனா எதிர்கொள்ளும் புதிய எதிரி : கம்யூனிசம் !
♦ அமெரிக்க வர்த்தகப் போரை சீனா எதிர் கொள்வது எப்படி ?

அப்படி அவர்கள் தராமல் பதுக்கி வைத்தால் என்ன செய்வீர்கள்? இரண்டு வழிகள் உள்ளன. முதலாளித்துவப் பாதையினர் என்ன ஆனாலும் தானியத்தைக் கைப்பற்று என்பார்கள். “விவசாயிகள் தானியத்தை மறைக்கிறார்கள் என்றால், நாம் அவர்களைப் பகைத்துக் கொண்டோம்” என்று பொருள் என்பது மாவோவின் பார்வை. “நமது கணக்குப்பதிவுக்கான அலகாகப் பெரிய கம்யூனை வைத்துக் கொள்ளக் கூடாது. அளவைக் குறைக்க வேண்டும்” என்றார் மாவோ. கம்யூனுக்கு கீழே இரண்டு அலகுகள் கொண்ட மூன்றடுக்கு உடைமை முறையை அவர் வலியுறுத்தினார்.

லியு ஷோ சி, டெங் சியாபெங், ஜாவோ ஜியாங் (Zhao Ziyang) போன்றவர்கள் கம்யூன் அலகை வலியுறுத்தினார்கள். “நீங்கள் இவ்வாறு செய்தால்,மக்களைப் பட்டினி போடுவீர்கள்” என்றார் மாவோ. இதை உறுதி செய்வதற்கான ஆதாரமாக மெமோக்கள் உள்ளன.

இந்த நிகழ்வுக்குப் பிறகுதான் கட்சியில் இவர்கள் எந்தளவுக்கு ஆழமாக வேரூன்றியிருக்கிறார்கள் என்பதை மாவோ புரிந்து கொண்டார்.
மூன்று கடினமான வருடங்களுக்குப் பிறகு இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்கு அவர்கள் என்ன தீர்வை முன்வைத்தார்கள் என்பதை யூகிக்க முடிகிறதா? கூட்டுப் பண்ணைகளைக் கலைக்கச் சொன்னார்கள்.

அவர்கள் 1950-களின் ஆரம்பத்தில் கூட்டுப் பண்ணைகளை எதிர்த்தார்கள். பிறகு கம்யூனிசக் காற்று கொள்கையை கொண்டு வந்தார்கள். பஞ்சத்திற்கு பிறகு மறுபடியும் கூட்டுப்பண்ணைகளை ஒழிப்பதை வலியுறுத்தினார்கள். முதலாளித்துவப் பாதையாளர் என்போர் இவர்கள்தான்.

மக்களின் இறப்புகளுக்கு, குறிப்பாக சிச்சுவானில் (Sichuan) நடந்தவைகளுக்கு, அவர்கள் மாவோவின் மீது பழி சுமத்தினார்கள். ஆனால், சிச்சுவான் பஞ்சம் தானியப் பற்றாக்குறையால் உருவானதல்ல. அங்கே நல்ல விளைச்சல்தான். டெங் சியாபெங் சிச்சுவான்காரர் தான். டெங்தான் அப்பகுதியின் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் லீ ஜிங்க்வானுக்கு (Li Jingquan) அங்கிருந்த தானியத்தை நகரத்திற்கு அனுப்புமாறு கட்டளையிட்டதாகச் சிலர் கூறுகின்றனர். சிச்சுவான் விவசாயிகள் பட்டினி கிடப்பார்கள் என்று லீ எச்சரித்திருக்கிறார்.

பெய்ஜிங் நகரத்தின் மக்கள் இறப்பதைவிட சிச்சுவான் மக்கள் இறப்பது பரவாயில்லை என்று நான் நினைக்கிறேன் என்ற ரீதியில் டெங் பதில் கூறினாராம். இது போன்ற தலைவர்களின் கொள்கைகளால்தான் 1960-61 இல் மக்களுக்கு மிகக் கொடூரமான துன்பங்கள் நேரிட்டன. 1989-இல் டெங்கினால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்த்த பிறகு, டியானன்மென் சதுக்கப் படுகொலையைப் பார்த்த பிறகு, டெங் இவ்வாறு சொல்லியிருப்பார் என்று என்னால் நம்ப முடிகிறது.

-தொடரும்
– புதிய ஜனநாயகம், நவம்பர் 2018

இத்தொடரின் முந்தைய இரண்டு பாகங்கள்:

♦ சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் – ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஒரு நேர்காணல்
♦ அறிவின் சொந்தக்காரர்களை கண்டுபிடித்து எழுந்த தேசம் !

மின்னூல்:

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

 

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

மோடியின் அரை உண்மைகளும் முழு பொய்களும்

பிரதமர் நரேந்திர மோடி 2017-ம் ஆண்டில் தொடர்ச்சியாக கூறிய வரலாற்று சிறப்புமிக்க கூற்றுகள் பெரும்பாலும் முழு பொய்களாலும் – அரை உண்மைகளாலும் நிறைந்தவையே. அதற்கான சான்றுகள் இதோ..

1. இந்தியாவின் முதல் மெட்ரோவில் பயணம் செய்தவர்களில் முன்னாள் பிரதமர் வாஜ்பேயி-யும் ஒருவர்:

கல்கத்தா மெட்ரோ சேவையை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கும் இந்திராகாந்தி.

டெல்லி மெஜந்தா மெட்ரோ வழித்தடத்தை டிசம்பர் 25-ம் தேதி துவக்கி வைத்த பிரதமர் மோடி, 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் மெட்ரோ சேவையான டெல்லி மெட்ரோவில் பயணம் செய்தவர்களில் முன்னாள் பிரதமர் வாஜ்பேயி-யும் ஒருவர் என்று பேசினார். இது தவறு.

இந்தியாவின் முதல் மெட்ரோ சேவையாக அடிக்கல் நாட்டப்பட்ட கல்கத்தா மெட்ரோ 1972-ம் ஆண்டு இந்திராகாந்தியால் தொடங்கப்பட்டு 1984-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. டெல்லி மெட்ரோ இந்தியாவின் இரண்டாவது மெட்ரோ சேவை.

2. முன்னாள் பிரதமர் மன்மோகனும் பாகிஸ்தான் ஹை-கமிசனரும் மணி சங்கர் ஐயர் இல்லத்தில் சந்தித்ததையும், குஜராத் தேர்தலையும் இணைத்து பேசியது:

குஜராத் தேர்தலை முன்னிறுத்தி நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி தீபக் கபூர் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் ஐயரின் இல்லத்தில் பாகிஸ்தான் ஹை-கமிசனரிடம் சதியாலோசனை செய்ததாக மோடி கூறினார். அந்த சந்திப்பையும் குஜராத் தேர்தலையும் இணைத்து அவர் பேசியது ஒரு புயலையே கிளப்பி விட்டது.

குஜராத் தேர்தல் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று அந்த சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் இராணுவ தளபதி தீபக் கபூர் கூறியிருந்தார். தேர்தல் முடிவுக்கு பிறகு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் குடியரசுத்தலைவர் வி.பி.அமித் அன்சாரி ஆகியோரது அர்பணிப்பு உணர்வை பிரதமர் சந்தேகிக்கவில்லை என்று மேலவைத் தலைவரும் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி விளக்கம் கொடுத்தார்.

3. நேரடி மானிய பரிமாற்ற திட்டத்தை நாங்கள்தான் துவக்கினோம்:

நேரடி மானிய பரிமாற்ற திட்டத்தை தன்னுடைய அரசுதான் தொடங்கியதாக கர்நாடகாவில் நடத்திய ஒரு பேரணியில் பேசும்போது மோடி கூறினார். இதன் மூலம் இடைத்தரகர்களை அகற்றி 57,000 கோடி ரூபாய் வரை தன்னுடைய அரசு மிச்ச்சப்படுத்தியதாக கூறினார்.

ஆனால் இந்த கூற்றும் சறுக்கி விட்டது. நேரடி நன்மைகள் பரிமாற்ற திட்டமானது 2013-ம் ஆண்டே தொடங்கப்பட்டு விட்டது. 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இத்திட்டம் அமலுக்கு வருவதாக அந்த ஆண்டு வரவு செலவு அறிக்கையில் மத்திய அரசு குறிப்பிட்டது. மேலும் இத்திட்டமானது நடப்பாண்டு வரை வளர்ந்து வருவதை பிரதமர் அலுவலகம், 2017-ம் ஆண்டில் குறிப்பிட்டு இருந்தது.

4. காங்கிரசையும் முகலாயர்களையும் பற்றி மணி சங்கர் அய்யர் பேசியதை திரித்தது:

குஜராத் தேர்தலுக்கு முன்னதாக, பிரதம மந்திரி நரேந்திர மோடியின் மற்றுமொரு பொய்யான கூற்று வெளிவந்தது. காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யர், காங்கிரசு கட்சியை முகலாய வம்சத்துடன் ஒப்பிட்டதாக மோடி தவறாக கூறினார். புகழ் பெற்ற காங்கிரசு தலைவர்கள் கூட கட்சிதான் குடும்பம், குடும்பம்தான் கட்சி என்பதை ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள் என்று மோடி தனக்கே உரிய சிறப்புடன் திரித்துக் கூறினார்.

ஆயினும், ஐயரின் கூற்று தவறாக திரிக்கப்பட்டது அம்பலமானது. மோடியும், சில வெகுஜன ஊடகங்களும் திரித்து கூறுவது போல காங்கிரசு தலைவராக இராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதை அவுரங்கசீப் அரசாட்சியுடன் அவர் ஒப்பீடு செய்யவில்லை. உண்மையில், முகலாயர்களின் வம்ச ஆட்சியையும் காங்கிரசு கட்சிக்குள் தலைவரை தேர்ந்தெடுக்க நடக்கும் தேர்தல் ஜனநாயக நடைமுறை ஆகியவற்றிற்கும் இடையேயான வேறுபாட்டையே அவர் கோடிட்டு காட்டியிருந்தார்.

5.  உபியில் ஈகைத் திருநாளின் போது தீபாவளியை விட அதிகமான மின்சாரம் வழங்கப்பட்டது:

சமாஜ்வாடி கட்சி தலைமையிலான உபி அரசு தீபாவளிக்கு வழங்கியதை விட ஈகைத் திருநாளில் அதிக அளவு மின்சாரத்தை வழங்கியதாக உத்திரப்பிரதேச உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக நடந்த பேரணி ஒன்றில் மோடி கொளுத்தி போட்டார். ரமலானின் போது வழங்கப்படும் மின்சாரம் தீபாவளியின் போதும் வழங்கப்பட வேண்டும் அதில் பாகுபாடு எதுவும் காட்டக்கூடாது என்று கூறினார்.

ஆனால் அதிகாரபூர்வமான இணையதளத்திலுள்ள தகவல்கள் இந்த கூற்றை தவறாக்கி விட்டன. 2016, ஜூலை 6 –ம் தேதி ஈகைத்திருநாளின் போது 13,500 மெகா வாட் மின்சாரம் வழங்கப்பட்டது . அதே நேரத்தில் 2016, நவம்பர், 28-ம் தேதி தீபாவளி பண்டிகையின் போது ஐந்து நாட்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் 15,400 மெகா வாட் மின்சாரம் வழங்கப்பட்டது. தீபாவளி சமயத்தில் மின்சாரப் பற்றாக்குறை நிகழவில்லை. மேலும் ஈகைத் திருநாளை விட அதிக அளவு மின்சாரமும் வழங்கப்பட்டிருப்பதை புள்ளி விவரங்கள் அம்பலப்படுத்துகின்றன.

6. கான்பூர் இரயில் விபத்தும் ஐ.எஸ்.ஐ தொடர்பும்

கான்பூரிலுள்ள புகார்யாவுக்கு (Pukhraya) அருகே 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தூர்-பாட்னா தொடர் வண்டி தடம் புரண்டதில் 14 பெட்டிகள் கவிழ்ந்து 150 பேர்கள் பலியானார்கள். உபி உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக நடைப்பெற்ற பேரணி ஒன்றில் பேசிய மோடி, தொடர்வண்டி தடம் புரண்டதற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ தான் காரணம் என்று அடித்துவிட்டார். பின்னர் உபி போலிஸ் டி.ஜி.பி ஜாவீத் அகமதாலும் இரயில்வே பொது மேலாளராலும் இந்த பலூன் உடைக்கப்பட்டது. ஐ.எஸ்.ஐ-க்கும் தொடர் வண்டி விபத்துக்கும் இடையேயான தொடர்புக்கு ஆதாரம் எதுவுமில்லை என்று உபி போலீசு பதிவு செய்தது.

7. உபி மாநிலம் குற்றங்களில் முதலிடம்:

ஒவ்வொரு நாளும் 24 பாலியல் வன்முறைகள், 21 முறை பாலியல் வன்முறை முயற்சிகள், 13 கொலைகள், 33 ஆட்கடத்தல்கள், 19 கலவரங்கள் மற்றும் 136 கொள்ளைகள் என உத்திரபிரதேசத்தில்தான் நாட்டிலேயே அதிக அளவு குற்றங்கள் நடந்ததாக அங்கு நடந்த தேர்தல் பேரணி ஒன்றில் மோடி கூறினார்.

ஆயினும் ஒரு சிறு உண்மையே மோடியின் பொய்யை அம்பலப்படுத்தி விடுகிறது. தேசிய குற்ற பதிவுகள் ஆணையத்தின் படி 100,000 நபர்களுக்கு எத்தனை குற்றங்கள் நடக்கின்றன என்று தான் பதிவு செய்யப்படுகிறதே தவிர நாள் அடிப்படையில் அல்ல. பெரிய மாநிலங்களில் அதிக குற்றங்கள் பதிவு செய்யப்பட்டாலும் சிறிய மாநிலங்களை அதோடு ஒப்பிட இலட்சம் பேரில் எத்தனை குற்றங்கள் நடக்கின்றன என்று கணக்கிடுவதுதான் சிறந்தது. ஆணையத்தின் 2015-ம் ஆண்டு அறிக்கையின் படி மோடி கூறியது பொய் என்பது அம்பலமானது. ஆணையத்தின் கணக்கீட்டின் படி ஒருநாள் குற்றங்கள் என்று கணக்கிட்டாலும் உபியை விடவும் வேறு மாநிலங்களில் குற்ற எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. [அந்த மாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சிதான் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது]

8. பருவ மழை பொய்த்ததால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க காப்பீடு திட்டத்தை தொடங்கியது:

இயற்கை காரணங்களுக்காக பயிர்கள் பாதிக்கப்பட்டால் விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கும் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தை நாங்கள்தான் தொடங்கினோம். இது போன்ற காப்பீடு திட்டத்தை இதற்கு முன்பு யாரேனும் கண்டதுண்டா? என்று உத்திரபிரதேசத்தில் பாரபங்கியில் நடைபெற்ற ஒரு பேரணியில் மோடி பேசினார்.

மோடியின் கூற்று தவறாக இருந்தது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையின் படி அதற்கு முன்னரும் வானிலை அடிப்படையிலான காப்பீடுத் திட்டம் (Weather-Based Crop Insurance Scheme) இருந்தது. இந்த திட்டம் 2003-ம் ஆண்டு காரிஃப் (Kharif) பருவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகபடியான மழை, வறட்சி மற்றும் பனியால் ஏற்படும் பாதிப்புகளுக்காக இந்த காப்பீடு வழங்கப்பட்டது.

9. தலித்துகளுக்கு எதிராக உ.பியில் அதிகபடியான வன்முறைகள்:

இந்தியாவில் எங்கேனும் தலித்துக்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகம் நிகழ்கிறது என்றால் அது உபிதான் என்று பாரபங்கியில் 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த ஒரு பேரணியில் மோடி கூறினார். ஹிந்துஸ்தான் டைம்ஸின் படி மோடியின் கூற்று தவறு. தேசிய குற்ற தகவல்கள் ஆணையத்தின் படி குற்றங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சம் பேருக்கு எத்தனை என்றுதான் கணக்கிடப்படும். மாறாக எத்தனை குற்றங்கள் பதிவு செய்யப்பட்டது என்ற அடிப்படையில் அல்ல.

உபியில் தலித்துகளுக்கு எதிராக ஒரு இலட்சத்திற்கு 20 குற்றங்கள் நடக்கின்றன. ஆனால் ஆணையத்தின் தகவலின் படி உபியை விட 11 மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிராக குற்றங்கள் மோசமாக நடக்கின்றன. ஒரு இலட்சத்திற்கு 57 குற்றங்கள் என பாஜக ஆளும் இராஜஸ்தான்தான் தலித்துக்களுக்கு எதிரான குற்றங்களில் முதலிடத்தில் இருக்கிறது.

10. இளநீர் விற்பனை மற்றும் உருளைக்கிழங்கு தயாரிப்பு ஆலை தொடங்க இருப்பதாக இராகுல் காந்தி கூறினார்:

இளநீரை இலண்டனில் விற்பனை செய்ய மணிப்பூர் விவசாயிகளுக்கு உதவி செய்வதாக காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி கூறியதாக உ.பியில் 2017-ம் ஆண்டு மார்ச் மதத்தில் நடைபெற்ற ஒரு பேரணியில் மோடி கூறினார். மேலும் விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் ஆலை அமைத்து கொடுப்பதாகவும் இராகுல் காந்தி கூறியதாக மோடி கூறினார்.

படிக்க:
காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம் | வில்லவன்
சபரிமலைத் தீர்ப்பு : எது மத உரிமை ? வழிபடும் உரிமையா தடுக்கும் உரிமையா ? தோழர் மருதையன்

ஆனால் இராகுல் காந்தி இளநீரையோ அல்லது தேங்காயையோ குறிப்பிடவில்லை மாறாக அன்னாசி பழச்சாற்றைதான் குறிப்பிட்டார். அதே போல உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் ஆலை அமைப்பதாக கூறவில்லை மாறாக உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் ஆலையைதான் இராகுல் காந்தி குறிப்பிட்டார்.

தமிழாக்கம்:
நன்றி: altnews

2.0 : ரஜினி + ஷங்கரின் சிட்டுக்குருவி செல்பேசி லேகியம் !

23

ஜினி + ஷங்கர் + சுபாஷ்கரன் கூட்டணியில் வெளிவந்திருக்கும் 2.0 கதை என்ன? தத்துவம், உணர்ச்சி, டெக்னாலாஜியின் பார்வையில் செதுக்க முயற்சிப்போம்.

தத்துவம் 1: இயற்கையோடு செயற்கை போட்டி போட்டால் பூமி அழியும். கொஞ்சம் பாத்துச் செய்யுங்க!
தத்துவம் 2: ஆன்மீக அமைதியில்லாமல் அறிவியலின் தொழில்நுட்பத்தை வைத்து மட்டும் நிம்மதியை என்ஜாய் பண்ண முடியாது.

உணர்ச்சி 1: பீட்சா சாப்பிட்டுக் கொண்டே, தூதுவளை தோசையின் மகிமையை சொல்லிக் கொண்டே, இருக்கையை மீறி வரும் கீழ் வாயுவை கொஞ்சம் பாடிலாங்வேஜில் சரி செய்து கொண்டே, எதிரில் இருக்கும் அழகான பெண்ணை ஜொள்ளிக் கொண்டே, இடது கையிலிருக்கும் செல்பேசியை துழாவிக் கொண்டே இருக்குதடா இந்த உலகம்!

உணர்ச்சி 2: “சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து….” பாடலை டிக்டாக்கில் ஒரு அல்ட்ரா மாடர்ன் யுவதி பாடும் போது அதை லயிக்கிறீர்கள். அந்நேரம் ஓரக்கண் திசையில் ஒரு குயில் பறக்கிறது. அப்போது நீங்கள் கேட்பது பாடலா, பார்ப்பது பெண்ணா, கவனிப்பது குயிலா என்றால் அதுதான் இதுதான் எதுதான் எனும் உணர்ச்சி வருமே அதே!

டெக்னாலஜி 1: அவரவருக்கு அருளப்பட்ட பீட்டர் ஞான ஆங்கிலத்தில் விக்கிப்பீடியாவில் கொஞ்சம் ஹோமிபாபா, நிறைய சலீம் அலி, தம்மாத் துண்டு ஈர்ப்புவிசை – மின்காந்த விசை – வலிமையான அணுவிசை – பலவீனமான அணு விசை, இமயமலை பாபா – துறவிகளின் ஆரா அனைத்தையும் ஒரு காக்டெயில் குலுக்கலில் பிரசவித்தால் நீயும் ஒரு சயிண்டிஸ்ட்.

டெக்னாலஜி 2: படையெடுக்கும் ஈக்கள் – வௌவால்கள் – தேனிக்கள் – டயனோசர்களை செல்பேசிகளாக மாற்றி, ஸ்டார் வார்ஸ், டிரான்ஸ்ஃபார்மர், ஓநாய் மனிதர்கள், மார்வெல் ஸ்டூடியோவின் அயர்ன் மேன் இன்னபிற காமிஸ் படங்கள், உக்ரேன் ஆடை விளக்கு நடனங்களை ஆங்காங்கே கிராபிக்சில் ஏதோ நம்மளால முடிஞ்ச மட்டும் கோத்து ஒரு கதை சொல்ல முயன்றால் எத்தனை கோடி ரூபாய் செலவாகும்?

இனி மரபுவழியில் கதை கேட்டு கதை கேட்டு சதை போட்ட நாட்டிற்கு கதையெனும் வதையை சொல்வோம்.

பனித்துளியில் இருக்குதடா உலகமென இயற்கையோடு இயைந்து வாழும் பேறு பெற்றவர் பக்‌ஷி ராஜன். அவர் செத்துப் பிறந்தபோது இதயத்தைக் குத்திக் காப்பாற்றியது ஒரு சிட்டுக் குருவி. இது தற்செயலாக நடந்தது என்றாலும் பறவைகளோடு தனது வாழ்வை பிணைத்துக் கொள்கிறார் பக்‌ஷி. அது பொறுக்கவில்லை தொழில்நுட்பத்திற்கு. இந்தியாவில் 96-ம் ஆண்டில் வந்த செல்பேசிகளின் டவர்களும், கதிர்வீச்சுக்களும் பறவைகளின் மூளையில் இருக்கும் திறனை அழிக்கிறது. ஆத்திரமடைந்த பக்‌ஷி அமைச்சர், முதலாளிகள், அதிகாரிகள் என துரத்தி துரத்திப் பார்த்து வகுப்பெடுக்கிறார். தெருவில் ஆர்ப்பாட்டம் செய்கிறார். அனைவரும் சிட்டுக் குருவிகளுக்காக செல்பேசிகளை விட முடியாது என்கின்றனர்.

மனமுடைந்து தூக்கில் தொங்கியவர் தனது “ஆரா” சக்தியை வைத்து செல்பேசி வைத்திருக்கும் மக்களை பழிவாங்குகிறார்.

வசீகரனான ரஜினி விஞ்ஞானியாக நடித்து முந்தைய படத்தில் கழட்டி விடப்பட்ட சிட்டி எனும் எந்திரத்தை மீண்டும் ஒக்குப் போட்டு பக்‌ஷியை அழிக்கிறார். நிலாவாக நடித்த எமிஜாக்சன் எடுபிடி வேலை செய்யும் எந்திரமாக உதவுகிறார். செல்பேசி விற்பவர், தொலைத் தொடர்பு அதிபர், தொலைத் தொடர்பு அமைச்சர் ஆகியோரைக் கொல்லும் பக்‌ஷியை இறுதியில் சிட்டியின் 2.0 வெர்ஷனும், மைக்ரோ 3.0 வெர்ஷனும் இணைந்து அழிக்கிறார்கள். அனைவரும் நலம்.

சினிமா விமர்சன மரபில் கிளைமேக்சை தவிர்த்து விட்டு இறுதியில் ஹீரோ என்ன செய்தார் மீதிக் கதை என்ன? என்று சொல்வதை மரபாக வைத்திருக்கிறார்கள். முழுசா சொல்லி விட்டால் திரையரங்கிற்கு ரசிகர்கள் வரமாட்டார்கள் எனும் அறமாம் இது. வணிக சினிமாவின் ஆதாயங்களை ஏற்றுக் கொண்ட ஊடகங்களில் ஆஸ்தான வித்வான்களாக விமர்சனக் கடை விரித்திருப்போர் மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களில் லைக்ஸ் போதையால் வாயால் வடை போடுவோரும் கூட மேற்கண்ட மரபை கடைபிடிக்க முடியாத ஒரு சோகம் இப்படத்தில் இருக்கிறது.

சாம்பார் ஜெமினி கணேசன் காலத்தில் ஒரு பாத்திரம் அறிமுகமாகும் போது அவரது பின்னணி, நடப்பு, குண விசேசம் அனைத்தும் முதலிலேயே சொல்வார்கள். இடையில் இயக்குநர் வீ சேகர் படங்களிலும் இது தொடர்ந்தது. ’முன்னுரை’ காட்சியில் பாயாசம் பண்றோம் என்று சொல்லிவிட்டு, அடுத்த காட்சியில் பாயாசத்தை செய்முறைக் குறிப்போடு செய்து காட்டி, அதற்கடுத்த காட்சியில் அதே பாயாசத்தால் சண்டை வருவதைக் காட்டுவார்கள். இந்த சண்டை அறிவிப்பு அந்த ’பண்றோம்’ காட்சியிலேயே சொல்லப்பட்டு விடும்.

இன்று ஆன்ட்ராய்டு காலத்தில் வந்திருக்கும் ஷங்கரின் படத்தில் கூட அதே பாயாசம்தான். கதை என்ன, அடுத்து வரும் காட்சிகள் என்ன, உரையாடல்கள் என்ன, என்பதை, “இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?” எனக் கேள்வி கேட்டுவிட்டு, முதல் எழுத்து ஹா,  கடைசி எழுத்து கி, இரண்டு க்ளூக்களையும் வைத்து சொல்லுங்கள் என சன் + விஜய் தொகுப்பாளர்கள் சிணுங்கிக் கொண்டு உதவுவது போல படத்தின் காட்சிகள் எடுத்துக் கொடுக்கின்றன.

திரையரங்கின் ஹை-டெசிபல் ஒலிகளையும், கண் பறிக்கும் கிராபிக்ஸ் ஒளியையும் இது உதவியா உபத்திரவமா எனக் கேட்டால், “சிட்டுக்குருவி லேகியம்னு வந்தா கண் காதுகளை தானம் பண்ணாம மருந்து கிடைக்குமா?”-வென அவை கேலி செய்யும்.

முதல் காட்சியில் விஞ்ஞானி வசீகரனைக் காண ரோபோட்டிக்ஸ் மாணவர்கள் வருகிறார்கள். ஜெமினி கணேசன் காலத்தில் கல்லூரி படிப்பும், 80-களில் ஐ.ஏ.எஸ்-சும், சேரனின் ஆட்டோகிராஃப் காலத்தில் விளம்பரக் கம்பெனி வேலையாகவும், 96 படத்தில் புகைப்படக் கலைஞனாவும் தமிழ் நாயகர்கள் மாடர்னாக காட்டிக் கொண்டார்கள். தற்போது இந்த வேலைகள் கிடைக்குமளவு பொருளாதாரம் இங்கும் எங்கும் இல்லை என்பதால் ரோபோட்டிக்ஸ் படிப்பை பந்தாவாக காட்டுகிறார்கள் போலும்.

இனி அடுத்து என்ன? நாசா காஃபி ஷாப்பில் விஜய் செட்டி நாட்டு முட்டை தோசையை சாப்பிட்டுக் கொண்டு அடுத்த நாள் ராக்கெட்டில் பறப்பாரோ? இத்தகைய செயற்கைத்தனமே நமக்கு கிராபிக்சை விஞ்சிய ஒரு எரிச்சலை ஊட்டுகிறது.

இரண்டாவது காட்சியில் பக்‌ஷி ராஜனின் சக்திப்படி செல்பேசிகள் திடீரென்று கைகளை விட்டு வானத்தில் பறந்து போகின்றன. இதை ஓரிரண்டு காட்டி விட்டு போவார்கள் என்று பார்த்தால் இந்த செல் பறப்பு சேட்டு வீட்டில், செட்டு வீட்டில், ஓடும் காரில், நிற்கும் ரயிலில், வயல் பரப்பில், வரவேற்பறையில், தெருவோரத்தில், ட்ரெயினில், மூத்திரச் சந்து…. ஸ்… ஸப்பா… எப்படா முடியுமென அலுப்பூட்டுகிறது.

இரண்டு மணி நேரத்தில் பக்‌ஷி ராஜன் கிராபிக்சாக வரும்போதெல்லாம் எப்படியும் பத்து பதினைந்து நிமிடம் கொத்தப்படும் விருதுநகர் புரோட்டாக்களாக துண்டு துண்டாகிறோம். நாம் சாப்பிட இருக்கும் கொத்து புரோட்டாவை ரசிக்கலாம். நாமே கொத்தப்படும் புரோட்டாவாக மாறும்போது இங்கு ரசிக்க மட்டுமல்ல, அழவும் முடியவில்லை.

மெட்டுக்காக ஒரு பாட்டு எழுதலாம். கிராபிக்சுக்காக ஒரு கதை எழுதினால்?

சிட்டுக்குருவியை சென்டிமெண்டுக்காகவும், செல்பேசியை கிராபிக்சுக்காகவும் இழுத்து வந்து விட்டு இடையில் 2ஜி வழக்கின் விவரங்களை ஆடிட்டர் குருமூர்த்தியின் பார்வையில் இறக்கிவிடுகிறார்கள்.

செல்பேசி காணாமல் போனதால் தொழில் படுத்துவிட்டது என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரின் வாயிலில் பல முதலாளிகள் காத்திருக்கின்றனர். ஒருவர் மட்டும் அதிகாரத் தோரணையில் நேரடியாக உள்ளே நுழைகிறார். வெளியே அமர்ந்திருப்பவர் இது 2ஜி என பொறுமிவிட்டு ஊழல் கதையை நினைவுபடுத்துகிறார். உள்ளே ஆ.ராசாவைப் போல வேட்டி கட்டிய தமிழர் ஒருவர் மந்திரியாய் செல்பேசி சேவையை மக்கள்மயமாக்கியதைக் கூறுகிறார். வந்த முதலாளியோ அவர் இந்தப் பிரச்சினையை தீர்க்காவிட்டால் அடுத்த விக்கிலீக்சில் நீதான் அம்பலம் என எச்சரிக்கை விடுத்துப் போகிறார்.

விக்கிலீக்ஸ் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அசாஞ்சேயும், ஸ்னோடனும் துணிவாக தம் உயிரை பணயம் வைத்து நடத்தும் ஒரு போராட்டம். அதனால்தான் அவர்களை கைது செய்து தண்டிப்பதற்கு அமெரிக்க அரசு துடிக்கிறது. அதை ஏதோ ஒரு ஏர்டெல் முதலாளியின் கைங்கரியம் என்று காட்டுவதற்கு பணமதிப்பழிப்பை நியாயப்படுத்தி எழுதிய ஒரு ஆன்மாவும், ரோட்டில் எச்சில் துப்பும் அப்பாவிகளை எண்ணெய்க் கொப்பறையில் போட்டு வறுக்கலாம் என படமெடுத்த மற்றொரு ஆன்மாவும் தேவைப்படுகிறது. அவ்வகையில் படத்தின் இயக்குநர் மற்றும் வசனகர்த்தா இருவரம் “மேட் ஃபார் ஈச் அதர்”தான்.

2ஜி வழக்கில் ஒன்னே முக்கால் இலட்சம் கோடி ஊழல் என எடுத்துவிட்ட ஸ்லீப்பர் செல்கள் அனைத்தும் பாஜகவுடையவை என வரலாறு நிரூபித்திருக்கிறது. அலைக்கற்றை ஊழல் என்பதை விட அது அரசின் கொள்கை முடிவு என்பதே சரி. அந்த வகையில் அதை தனியார்மயத்தின் தவறாக ஏற்கமறுத்து ஒரு பலிகடாவை காங்கிரசு கட்சியினர் மற்றும் ப.சிதம்பரம் தேடினர். ஆனாலும் ஆ.ராசா 2ஜி வழக்கிலிருந்து விடுதலையாகி புத்தகம் போட்ட பிறகும் குருமூர்த்தி வாயால் இதைப் பேசுவதற்கு ஒரு ஆழமான பாஜக மனம் வேண்டும். அது ஷங்கருக்கும், ஜெயமோகனுக்கும் இயல்பாகவே இருக்கிறது. ஜென்டில்மேனோ, விஷ்ணுபுரமோ இரு வேறு படைப்பு மனங்களின் உற்பத்தியல்ல.

ஒரு காட்சியில் பக்‌ஷிராஜன் அமைச்சரை பழிவாங்குவதற்கு இரண்டு கோடி மதிப்புள்ள அவரது வைரம் பதித்த செல்போனை, கண்ணாடியை உடைத்து அனுப்புகிறார். அதில் வரும் ’UnKnown’ அழைப்பை, உன்னி கிருஷ்ணன் அழைப்பு என்கிறாராம் அமைச்சர். இதை உதவியாளரான மயில்சாமி திருத்துகிறாராம். இப்படி அமைச்சர்கள் என்றால் அவர்களுக்கு அ, ஆ கூட எழுதத் தெரியாது என காட்டுவதிலேயே இவர்களின் மேட்டிமைத் திமிர் தெரிகிறது. சரி இவர்களின் யோக்கியதை என்ன?

வேற்றுகிரகங்களிலிருந்து எதுனாச்சும் வருதான்னு கண்காணிக்க ஒரு ஆய்வு மையத்தை 1964-ல் ஹோமி பாபா திறந்து வெச்சாராம். அதுல பாசிட்டிவ் சிக்னல் அனுப்பி திரும்ப பாசிட்டிவ் சிக்னல் வருதான்னு இரகசியமாக கண்காணிக்கிறார்களாம். இதை லேண்ட்லைனில் “நான் சொல்றது கான்பிடன்சியலான விசயமுன்னு” டாக்டர் சாம் சொல்றார். ரஜினி இன்னொரு லேண்ட் லைனில் அந்த ரகசியத்தை கேக்குறார். இதுக்கு அமைச்சரின் ‘உன்னிகிருஷ்ணன்’ அழைப்பே பரவாயில்லை!

சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற தொலைத்தொடர்பு அமைச்சரை சந்திக்கிறார் பக்‌ஷி ராஜன். அப்போது ஜெயமோகனும், ஷங்கரும் விக்கிபீடியாவில் ஆள் போட்டு படித்த அரைகுறை விவரங்களைக் கொட்டுகிறார். அதாவது செல்பேசி டவர் அதிகமானதால் வேடந்தாங்கலில் பறவைகள் வரத்து குறைகிறது, முட்டை வலுவாக இல்லாமல் உடையுது, 50 கிராம் எடை உள்ள ஆர்டிக் தேசத்து பறவை 12,000 கி.மீட்டர் பறந்து வேடந்தாங்கல் வருகிறது அதுவும் ஜிபிஎஸ் ட்ராக்கிங், மேப் இல்லாமல். டவர்களின் கதிர்வீச்சால் பறவைகளுக்கு மட்டுல்ல, மனிதர்களுக்கும் மன அழுத்தம், மனச்சிதைவு, சிக்கல் அனைத்தும் வருகிறது என ஸ்ஸ்…..அப்பா………..

ஆகவே வெட்டிப் பேச்சுக்கு பயன்படும் செல்பேசி டவர்களில் 40% குறைப்போம் என்கிறார் பக்‌ஷிராஜன். அதற்கு ஆதாரமாய் அமெரிக்காவில் நான்கு நிறுவனங்கள், சீனாவில் மூன்று நிறுவனங்கள் மட்டும் செல்பேசி சேவை வழங்கும்போது இங்கு மட்டும் பத்து நிறுவனங்கள் தேவையா அதைக் குறை என ஆ.ராசாவிற்கு வகுப்பு எடுக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

அய்யா, செல்பேசி டவர்களும், அவற்றின் கதிர்வீச்சு அலைக்கற்றை அலைவரிசைகளும் பயன்படுத்தப்படும் செல்பேசிகளின் எண்ணிக்கையை வைத்தே அதிகரிக்கிறதே அன்றி அதிக எண்ணிக்கை நிறுவனங்களால் அல்ல. பத்து பெட்டிக்கடைகள் ஒரு சூப்பர் மார்கெட்டுக்கு ஈடாகாது.

அதை நியாப்படுத்த அமைச்சர் சிட்டுக்குருவிகளை வறுத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் என்கிறாராம். இப்படி மனோரமாவின் விதவை நெற்றியை நோக்கி வீசப்படும் சிவப்புச்சாயத்தை தடுக்கும் விஜயகாந்துகள் இயக்குநர் ஷங்கர், எழுத்தாளர் ஜெயமோகன்களால் வில்லனாக்கப்படுவது அயோக்கியத்தனமில்லையா?

படிக்க:
திரை விமர்சனம் : வசூலுக்காக அரசியல் நியாயம் பேசும் சர்கார் !
காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம் | வில்லவன்

செல்பேசிகளை பறிகொடுத்துவிட்டு புகார்கொடுக்கும் போது ஒரு பெரியவர் ரேடியேசனால் ஓசோன் படலம் ஓட்டையாவதாகச் சொல்கிறார். அருகாமையில் உள்ளவரோ ஏதோ ட்ரைனேஜ் ஓட்டை மாறி சொல்ற என்கிறார். ஓசோன் ஓட்டையை அடைக்கும் வேலைகளுக்கு ஷங்கர், ஜெயமோகன், ரஜினி பிள்ளைகள், பேரன் பேத்திகள் பேஷாக அமெரிக்காவின் நாசாவிற்குப் போவார்கள். ஆனால் பாதாளச் சாக்காடை அடைப்பிற்கு இவர்களுக்குத் தெரிந்த ஒரு குடும்பம் கூட தனது பிள்ளையை அனுப்புவதாக ஒரு கவிதை கூட எழுதாது. இதெல்லாம் இயல்பாக இவாளிடம் எழுவதை கனம் பொதுஜனம் அழுத்தமாய் குறித்துக் கொள்ள வேண்டும்.

உள்துறை அமைச்சரோடு கூட்டம் நடக்கிறது. படத்தில் இரண்டாவது வில்லனாக வரும் இளைய விஞ்ஞானி பார்ப்பதற்கு 6 பேக் ரிச் பாயாக இருப்பவர் செல்பேசி காணாமல் போவதற்கு தீவிரவாதிகள் காரணம் என்கிறார். இன்னொருவர் கடவுளின் கோபம் என்கிறார். உடனே ரஜினி “என்ன பிரச்சினைன்னு நமக்குத் தெரியலேன்னா உடனே கடவுள் மேலயும், தீவிரவாதிங்க மேலயும் பழிபோடுறது நம்ம வழக்கம்” என்கிறார். அப்ப தூத்துக்குடி சமூக விரோதி யார்? இல்லே நீங்கதான் யார், எங்கிருந்து வாறீங்க?

படத்தின் வசனங்களில் த்..தூ (ள்) கிளப்புகிறார் ஜெயமோகன்.

நிலாவிடம் சும்மா புகை விட்டேன், பார்பி குட்டி, என் செல்லம், நைட்டுக்கு ரசத்தை வைச்சு உருளைக்கிழங்கு வறுத்துடு போதும், புராஜக்ட் மானேஜருக்கும் அந்த பலாக்காய் ஆஷாவுக்கும் செம டீலிங், நாளைக்கு மகாவீர் ஜெயந்தின்றதால இன்னைக்கு நைட்டே சரக்க வாங்கி வெச்சுரு, வட போச்சே, நாலு பேருக்கு உதவினா எதுவுமே தப்பில்லை, மனுசனுக்கு சினிமா, டிவி, சாப்பாடு, காசு நாலும்தான் முக்கியம், இது கல்லில்லை செல்லு, சிட்டி-(ரோபோ)யை தயார் செய்றதை ஏதோ இரண்டு இட்லி வடை பார்சல் மாறி சொல்றீங்க, டெலிகாம் மினிஸ்டர் வாயில பூந்திருச்சு, எனக்கு எங்க பூரும்னு தெரியலை, செல் இல்லாத வாழ்க்கை நடுவில கொஞ்ச பக்கத்தை காணோம் மாறி…. போதுமா மக்களே?

இதில் ஜெயமோகனது மேட்டுக்குடி கண்ணோட்டம் தன்னையறியாமல் ஆங்காங்கே வெண்முரசு போல கொட்டுகிறது. செல்பேசியை சங்கிலியில் கட்டி வைத்திருக்கும் இளைஞரைப் பார்த்து மற்றவர் “என்ன ரயில்வே ஸ்டேசன் டம்ளர் மாறி கட்டி வெச்சிருக்கிற” என்கிறார். இதெல்லாம் மக்கள் இயல்பாக பேசுவதற்காக என்று நியாயப்படுத்தலாம். மெரினா பீச்சுல வாக்கிங் போற மயிலாப்பூர் மாமா, பாக்சர் நாய கட்டி வெச்சிருக்கிற மாறி என்று சொல்லாமல் டம்ளர், டிரைனேஜ் என்று எழுதுவதற்கு ஒரு கனமான மனம் வேண்டும்.

மேலும் செல்பேசிகளை பயன்படுத்தும் மக்களை எவ்வளவு இழிவுபடுத்த வேண்டுமோ அவ்வளவு படுத்த வேண்டியிருப்பதால் அவை முர்டோச் டி.வி கம்பெனிகளின் பிரச்சாரமாய்க் கொட்டுகின்றன. சூழலியல் பிரச்சினையில் ஏகாதிபத்தியங்களது பங்கை மறுத்து விட்டு ஏழை நாடுகளை குற்றம் சாட்டும் கனவான்களது பார்வைக்கு ஈடானது இப்படத்தின் படைப்பாளிகளது பார்வை.

அன்றாடம் வேலைக்கு போகும் மக்களைப் பொறுத்தவரை செல்பேசி என்பது தனது வேலை, வருமானம், கடன் அனைத்திற்கான கருவியாக பயன்படுகிறது. இன்னொருபுறம் நடுத்தர வர்க்கம் அதை வெட்டியாக பயன்படுத்துவதோட கூடவே மக்கள் அரசியல்மயமாவதும் நடக்கிறது. மோடி எதிர்ப்போ, கஜா புயல் பாதிப்போ, தன்னார்வலர்களின் நிவாரணப் பணிகளோ, கோவனின் பாடலோ அனைத்தும் உடனுக்குடன் பரவுவது ஆளும் வர்க்கத்திற்கே எரிச்சலை ஊட்டுகிறது. அத்தகைய எரிச்சலைத்தான் இங்கே வசனங்களாக, காட்சிகளாக காட்டி கதை சொல்கிறார்கள். வாட்சப் வதந்தியைக் காட்டி மோடி எதிர்ப்பை குறை சொல்வதும், பன்னாட்டு நிறுவனங்களின் குற்றங்களை மறைக்க மக்களை குற்றம் சொல்வதும் வேறு வேறு அல்ல.

படத்தில் யாருக்கும் நடிப்பிற்கு வேலையில்லை. ரஜினியின் கால்களும் உடலும் ஒருசேர நடிக்கும் காட்சியை நாம் உண்மையிலேயே இங்கு காண இயலாது. ஆகவே ரசிகர்களும் படையப்பா, பாட்சா மாறி வராது என அதே  பல்லவியைப் பாடிவிட்டு புலம்பலை கெத்தாக காட்டுகின்றனர். எமி ஜாக்சன் ஒரு ரோபோவிற்குரிய உடலமைப்பை பெற்றிருப்பதால் பிரச்சினை இல்லை. ரஜினி – அக்‌ஷய் குமாரின் அமைப்பை கணினி வரைகலை பார்த்துக் கொள்கிறது. மேலும் அடுத்து என்ன நடக்கும் என்ற ட்விஸ்ட்டை முன் காட்சியின் உணர்ச்சியிலேயே அனைவரும் செயற்கையாக காட்டுவதால் நாம் பார்ப்பது படமா, பாட்டியிடம் சுட்ட வடைக் கதையா என்று குழப்பம் வருகிறது.

இந்தபடத்திற்கான படைப்பு அவஸ்தையில் விக்கிபீடியாவிற்கு பெரும் பங்கிருக்கிறது. அந்த அளவுக்கு என்னவெல்லாம் சுட வேண்டுமோ அத்தனையையும் ஓசியில் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள். கிராவிட்டி, புளூட்டான், புரோட்டான், பறவையியல் அறிஞர் சலீம் அலி, அணுசக்தி அறிஞர் ஹோமி பாபா இவை போக கூடுதலாக ஜெயமோகன் கைங்கரியத்தால் ’ஐந்தாவது எனர்ஜி’யான ‘ஆரா’ எனும் பார்ப்பனர் புரட்டு ஒன்றையும் எடுத்து விடுகிறார்கள். மொத்தத்தில் சிட்டுக்குருவி லேகியத்தை விற்கும் சேலம் சிவராஜரைக் கொண்டு இயக்கச் சொல்லியிருந்தால் கூட படம் ஒருமாறி தேறியிருக்கலாம்.

படத்தில் ரஜினி பேசும் பஞ்ச் டயலாக் இல்லையில்லை, வார்த்தை ‘டாட்’. ’மகிழ்ச்சி’. அநேகமாக இப்படத்துடன் ரஜினியின் இமேஜுக்கும் ‘டாட்’தான்.

தமிழ் சினிமாவில் பறந்து விழும் கார்களை பரிதாபத்துடன் பார்த்திருக்கிறோம். அந்த பரிதாப கார்களின் தலைநகரம் சென்னை சிந்தாரிப்பேட்டை. பழைய இருசக்கர, நான்கு சக்கர வாகன உதிரிபாகங்களின் சொர்க்கம்.

படிக்க:
எந்திரன்: படமா? படையெடுப்பா??
லைக்காவின் மோசடி பணத்தில் கொழிக்கும் கமல் – ரஜினி – காலாக்கள் !

சிந்தாரிப்பேட்டையில் குவிந்து கிடக்கும் உதிரி பாகங்களை கொஞ்சம் வகைப்படுத்தி கொலுவாக வைத்தீர்கள் என்றால் அங்கிருந்து 2.0 படத்தின் டைட்டில் ஆரம்பிக்கிறது. லைக்கா புரொடக்சனில் ஆரம்பித்து, தயாரிப்பாளர் சுபாஷ்கரண் வரைக்கும் இந்த போல்ட் நட் படையெடுப்பே படத்தின் கதை  டைட்டா லூசா, என்னவென்பதைத் தெரிவித்து விடுகிறது.

சுபாஷ்கரண் பெயர் போன பிறகு பக்‌ஷிராஜா மாலை இருட்டில் நம்மாழ்வரின் திருவாய் மொழியைப் பாடிக்கொண்டே செல்பேசி டவர் ஒன்றில் தொங்குகிறார். இந்த கொடூரக் காட்சியோடு இயக்குநர் ஷங்கர் பெயரைப் போடுகிறார்கள். பொருத்தமான குறியீடுதான். என்ன இருந்தாலும் ரசிகர்களுக்கு இப்படி ஒரு எச்சரிக்கையை கொடுக்கும் ஒரு நல்ல உள்ளம் இயக்குநர் ஷங்கரைத் தவிர யாருக்கு வரும்?

வரலாறு : முகலாயர்கள் இந்தியர்கள் இல்லையா ?

“நன்மை, கருணை மற்றும் நான்” என்கிற பழைய பி.பி.சி நகைச்சுவை நாடகத்தில் ஒரு காட்சி நினவுக்கு வருகிறது. அந்த நாடகத்தில் ஒரு தந்தை தனது பிள்ளைகள் இயேசு மற்றும் சாண்டா கிளாசின் மேல்  கொண்டிருக்கும் அளவுகடந்த உற்சாகத்தை இந்தியத்தன்மை என விளித்து இகழ்வார். இன்றைய காலகட்டத்தில் கூர்மையடைந்து வரும் மேலாதிக்க மனப்போக்கை வெளிப்படுத்திக் காட்டும் நுட்பமான பகடி அது.

என்றாலும் இன்றைய சூழலில் அந்த தந்தையே திகைத்துப் போகக் கூடிய கேள்வி ஒன்று உள்ளது; முகலாயர்களை என்னவென்பது? இத்தனைக்கும் அவர் பகடி செய்த இந்திய அரசியலின் ஒரு அங்கம் முகலாயர்கள். ஆனால்,  எந்தளவுக்கு உலகத்தில் உள்ள நல்லவைகள் மற்றும் மேன்மையானவைகளின் கருவறையாக  இந்தியா கருதப்படுகின்றதோ அதே அளவுக்கு முகலாயர்கள் வெளிநாட்டினராகவே கருதப்படுகின்றனர்.

உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே பரந்து விரிந்து கிடக்கும் ஃபெர்கானா பள்ளத்தாக்கில் பாபர் பிறந்தார் என்பது உண்மை தான். அவரது வழித்தோன்றல்களால் நிறுவப்பட்ட பாபரின் ஓவியங்களிலும் கூட இடுங்கிய கண்களோடும், அரைகுறை தாடியோடும் தான் காட்சியளிக்கிறார். பின்னாட்களில் அவரால் கைப்பற்றப்படப் போகும் இந்திய சமவெளிக்குச் சொந்தமான எந்த அடையாளங்களும் அந்த ஓவியங்களில் தெரிவதில்லை.

பாபர்

பாபரும் சரி அவரது சகாக்களான பிரபுக்களும் சரி, ஹிந்துஸ்தானத்தில் வாழ வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்கள் அல்ல.

தன்னுடைய மத்திய ஆசிய தளபதிகளின் நம்பிக்கையைப் பெறுவதற்காகவும் அவர்களைக் கொண்டு மாற்று மத நம்பிக்கை கொண்ட நிலப்பரப்பை ஆள்வதற்காகவும் ஒருவிதமான ஒழுக்கவாத கட்டுப்பாட்டை நிறுவும் விதமாக பாபர் தனது குடிப்பழக்கத்தை நிறுத்திக் கொண்டார் என்பதும் தனது மதுக் கோப்பைகளை உடைத்துப் போட்டார் என்பதும் உண்மை. அதே போல் தனது சொந்த ஊரில் விளையும் ஒருவகையான தர்பூசணிப் பழங்கள் வண்டிகளில் வந்து இறங்கியதைக் கண்டு பாபர் கண்ணீர் வடித்துள்ளார். அவரைப் பொறுத்தவரை இந்தப் பழங்கள் கிடைக்காமல் போனது மதுவருந்த முடியாமல் போனதற்கு இணையான சோகம்.

தனது சுயசரிதையில், ”மற்றவர்கள் மனம் வருந்திய பின் மது குடிப்பதில்லை என சங்கல்பம் செய்கின்றனர்.. நானோ மது குடிப்பதில்லை என சங்கல்பம் செய்தபின் மனம் வருந்தினேன்” என எழுதியுள்ளார் பாபர். ஆனால், வெறுமனே குடிப்பதற்கோ உண்பதற்கோ மாத்திரம் பாபர் இந்தியாவுக்கு வரவில்லை; இங்கேயே தங்கும் முடிவில் வந்து சேர்ந்தார். இங்கே எப்படி வாழ்ந்தார் என்பது அவரின் வழித்தோன்றல்களின் கையில்தான் இருந்தது. பாபர் இந்திய நிலப்பரப்பைக் கைப்பற்றிய ஐந்தாண்டுகளில் இறந்து போனார்; அவரது வாரிசுகளோ மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செலுத்தினர்.

படிக்க :
♦ வரலாறு : ஷாஜகானை விஞ்சிய இந்து முஸ்லீம் காதலர்கள் !
♦ இசுலாமிய மன்னர்கள் மதவெறியர்கள் என்றால் இந்து மன்னர்கள் …?

அந்த வெற்றியின் இரகசியத்தை அவர்களின் முகங்களில் இருந்தே கூட புரிந்து கொள்ளலாம். பாபரில் இருந்து அவுரங்கசீப் வரையிலான ஆறு முகலாய மன்னர்களின் படங்களை வரிசையாக வைத்துப் பாருங்கள்; நீங்கள் மிகத் தெளிவான வரலாற்று ரீதியிலான மாற்றங்களை அந்தப் படங்களில் பார்ப்பீர்கள். அவர்களுடைய பூர்வீக இடுங்கிய கண்களை மெல்ல மெல்ல இழந்து வாதுமைக் கொட்டை போன்ற கண்களைப் பெற்றனர். மூக்கு நீண்டு தனது வடிவத்தை மாற்றிக் கொண்டது. முகத்தில் வளரும் மயிர்கள் தடிமனாகவும் அடர்த்தியாகவும் ஆகின.

இதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. முதலிரண்டு முகலாய மன்னர்களான பாபர் மற்றும் ஹுமாயுன் ஆகியோர் தான் மத்திய ஆசிய தாய்க்குப் பிறந்தவர்கள். அக்பர் மற்றும் அவுரங்கசீப் பெர்சிய பெண்களுக்குப் பிறந்தவர்கள். ஜஹாங்கீர் மற்றும் ஷாஜகான் ஆகியோர் ராஜபுத்திர பெண்களுக்குப் பிறந்தனர். தலைமுறைகள் செல்லச் செல்ல அவர்களின் அங்க லட்சணங்கள் மட்டும் மாறவில்லை; அவர்களின் உணவுப் பழக்கமும் மொழியும் கூட மாறின.

பாபர், ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கிர், ஷாஜஹான் மற்றும் ஔரங்கசீப் (இடமிருந்து வலமாக)

உதாரணமாக பாபர் தனது சுயசரிதையை தற்போது அழிந்து போய் விட்ட சாகதாய் எனும் துருக்கிய மொழி ஒன்றில் எழுதியுள்ளார். அதில் அந்த ஊர் தர்பூசணியைப் பற்றி நிறைய குறிப்பிடுகிறார். அவரது எள்ளுப் பேரன் ஜஹாங்கிர் தனது சுயசரிதையில் மாம்பழங்களைப் பற்றி நிறைய எழுதியுள்ளார். ஜஹாங்கீரின் சுயசரிதையான ஜஹாங்கீர்நாமா-வை ஹிந்துஸ்தானி கலந்த பெர்சிய மொழியில் எழுதியுள்ளார். காபூலுக்கு ஒருமுறை சென்ற ஜஹாங்கீர், அங்கே பாபர்நாமாவின் சில பக்கங்களைப் புரட்டி விட்டு அதைப் படிக்க முடிந்ததற்காக பெருமிதப்பட்டுக் கொள்கிறார். “என்னதான் நான் ஹிந்துஸ்தானத்தில் வளர்ந்திருந்தாலும், துருக்கிய மொழியை எழுதுவதையும் படிப்பதையும் இன்னும் மறக்கவில்லை” எனக் குறிப்பிடுகிறார் ஜஹாங்கீர்.

ஜஹாங்கிரின் வாரிசுக்கோ தனது பூர்வீக மொழியைப் பற்றி எந்த அக்கறையோ ஆர்வமோ கிடையாது. அதே போல் கடைசி முகலாய மன்னனான பகதூர் ஷா ஜாபர் இந்த துணைக்கண்டத்திலேயே உருவான உருது மொழியில்தான் புலமை பெற்றிருந்தார்.  அதே போல் இந்தியாவின் பண்டிகைகளும் முகலாய நாட்காட்டியில் முக்கிய இடங்களைப் பிடித்தன.  காஷ்மீரத்தைச் சேர்ந்த படகுகளையும், ஆற்றங்கரைகளையும், வீட்டுக் கூரைகளையும் தீபாவளிப் பண்டிகை நாளன்று விளக்குகளால் அலங்கரிக்க அக்பர் உத்தரவிட்டதைக் குறித்து அக்பர்நாமாவில் குறிப்புகள் உள்ளன.

அதேபோல் ஜஹாங்கிரின் ஓவியம் ஒன்றில் அவர் “ஏழ்மையை” ஒழிப்பதாக காட்டப்பட்டுள்ளது. அதில் ஏழ்மையின் குறியீடாக ஒரு வயதான மனிதர் வருகிறார் – அவரது பெயர் “தாலிதார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தாலிதார் என்பது இந்துக்கள் நம்பும் தரித்திராதேவி என்பதில் இருந்து உருவகம் செய்யபப்ட்டது. அதாவது தீபாவளி சமயத்தில் சிறீதேவியான லட்சுமியை வீட்டுக்கு அழைப்பதும், தரித்திரத்தை விரட்டுவது என்பதும் ஒரு நம்பிக்கை.

மற்றொரு ஓவியம் முகலாய பேரரசர் எந்தளவுக்கு இந்து நடைமுறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதை தெளிவாக விளக்குகிறது. அந்த ஓவியத்தில் பேரரசர் ஜஹாங்கீர் மேல்சட்டை அணியாமல், வெறும் கோவணம் போல் ஒன்றைக் கட்டிக் கொண்டு பத்மாசனத்தில் ஒரு இந்து துறவியைப் போல் அமர்ந்துள்ளார். இதைப் பற்றி சொல்லும் போது வரலாற்றாசிரியர் எப்பா கோச், “ஒரு இசுலாமிய மன்னனைக் குறித்த கற்பனை எந்தளவுக்கு இந்தியத்தன்மையோடு (தீவிரமானதும் கூட) இருக்க முடியும் என்பதற்கு இந்த ஓவியமே உச்சபட்ச அடையாளம்” என்கிறார்.

ஜஹாங்கீர்

எனினும், கோச்சின் சொந்த வார்த்தைகளிலேயே ஏன் ஜஹாங்கீரின் அரசு அடிப்படையிலேயே வெளியாருடையது எனக் கருதப்பட்டது என்பதற்கான சிறிய குறிப்பு உள்ளது. அவர்  “இந்திய” என்கிற வார்த்தைக்கு எதிராக “அந்நிய” என்கிற வார்த்தையை வைக்கவில்லை; மாறாக “இசுலாமிய” என்கிற வார்த்தையை வைக்கிறார். முகலாயர்கள் மாம்பழங்களை இரசித்திருக்கலாம்; தீபாவளி, தசரா, சிவராத்திரி, ராக்கி போன்ற படிகைகளைக் கொண்டாடி இருக்கலாம்; அவர்களின் உடலில் மத்திய ஆசிய இரத்தத்தை விட ராஜபுத்திர ரத்தமே அதிகம் ஓடியிருக்கலாம் – ஆனால் அவர்கள் ஒருநாளும் இந்துக்கள் ஆகிவிடமாட்டார்கள்.

படிக்க:
♦ ஹைதர் அலி – மன்னர் குலம் சாராத மாவீரன் !
♦ அல் – கராவ்யின் : உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் !

“நன்மை, கருணை மற்றும் நான்” நாடகத்தில் வரும் தந்தையைப் போல் சொல்வதானால்… “இதைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பாரேன்”: தாஜ்மகாலை உடைத்து நொறுக்க வேண்டும் என்கிற அரசியலுக்கு ஃபெர்கானாவின் மேல் எந்த ஆத்திரமோ துவேஷமோ கிடையாது. சொல்லப் போனால், வெகு சில இந்தியர்களுக்குத் தான் அப்படி ஒரு நகரம் இருப்பதே தெரிந்திருக்கும். எனவே முகலாயர்களின் பூர்வீக நாட்டின் மீது எந்த வெறுப்பும் இல்லை; மாறாக அவர்களின் மதம்தான் சிக்கல் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அவர்கள் தங்களுக்குப் பின் இந்தியாவின் அடையாளமாக கலை, கலாச்சாரம், கட்டிடங்கள், உணவு என நிறைய விட்டுச் சென்றிருக்கலாம்; ஆனால், அவர்களது “இந்தியத்தன்மை” எப்போதும் சந்தேகிக்கப்பட்டு விவாதிக்கப்படும்; பல்வேறு நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு, கட்டிடங்கள் இடிக்கப்படுவதன் மூலம் முகலாயர்களுக்குப் பாடம் புகட்டுப்படுவதற்குக் காரணம் அவர்களின் “இசுலாமியத்தன்மை”.

நவீன இந்தியாவின் மாபெரும் துயரம் என்பது நமது கடந்த காலத்திற்கு நிகழ்கால அரசியலின் மேல் இருக்கும் பிடிமானம் தான். ஆனால், இது போன்ற சின்னத்தனங்கள்தான் இந்தியனாக இருப்பதற்கான அடையாளமோ?

தமிழாக்கம்:

கட்டுரையாளர் : பார்வதி சர்மா
நன்றி  :
 scroll.in

இறைச்சித் தொழிலை அழிக்கும் பாஜக ! இறைச்சி சங்கத்தின் அன்வர் பாஷா நேர்காணல்

டந்த 17-ம் தேதி (17.11.2018) அன்றுதான் இந்த ‘நாய்க்கறி’ செய்தி வெளிவந்தது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ராஜஸ்தான் ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ஆட்டுக்கறியை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை அழைத்திருக்கின்றனர். அதற்குள் அது நாய்க்கறி என்று சொல்லி வதந்தியை பரப்பினர்.

அதன் உண்மைத்தன்மையை அறியாமல்  ஊடகங்களும் அப்படியே வாந்தியெடுத்தன. அதனை பார்த்த/படித்த வாசகர்களும் வாட்சப் வாயிலாக பகிர ஒரே பரபரப்பானது.  கைப்பற்றிய இறைச்சியை கால்நடை மருத்துவமனைக்கு  சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் அந்த கறியை ஆர்டர் செய்த ஷகிலா என்பவரும் அது நாய்க்கறி இல்லை, ஆட்டு இறைச்சிதான் என்பதை ஆதாரங்களுடன் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்தார். முசுலீம்கள் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் பொதுப்புத்தியால் முதலில் அதனை யாரும் நம்பவில்லை.  இறுதியில் சோதனைக்கு சென்ற இடத்தில் இது ஆட்டு இறைச்சிதான் என்று ஊர்ஜிதமானது. பிறகு அந்த இறைச்சியில் அனுப்புநர் முகவரி தெளிவாக இல்லை, இறைச்சி கெட்டுப் போய் இருந்தது, மீன் பெயரில் வந்தது என்று பல்வேறு காரணங்களை சொல்லி சமாளித்து, தற்பொழுது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி சில்லறை வியாபரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்வர் பாஷா குரோஷி அவர்களிடம் எடுத்த நேர்காணல்.

ஆடு மாட்டிறைச்சிக்கு எதிராக தொடர்ச்சியான வதந்திகள் வருவதன் பின்னணி என்ன? தற்பொழுது நடந்ததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“மனிதர்களுக்கு காய்ச்சல் என்றால் என்ன செய்வார்கள். மருத்துவமனைக்கு சென்று ரத்தப் பரிசோதனை செய்து பார்த்த பிறகுதான் அது என்ன காய்ச்சல் என்று தெரிய வரும். அதுபோல பறிமுதல் செய்த இறைச்சியை கால்நடை ஆய்வகங்களுக்கு அனுப்பி சோதனை செய்த பின்னரே அதிகாரிகள் முடிவை அறிவித்திருக்க வேண்டும். அப்படி செய்யாதது முதலில் தவறு. கண்டிக்கத்தக்கது.

சென்னை ஆட்டிறைச்சி கோழி இறைச்சி சில்லறை வியாபரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்வர் பாஷா குரோஷி

அந்த பெட்டியில் ஃப்ரம் அட்ரஸ் இல்லை என்று சொல்கிறார்கள், எனில், நாம் ஒரு நபருக்கு கொரியர் அனுப்புகிறோம். அதில் ஃப்ரம் அட்ரஸ் இல்லை என்றால், கொரியர் நிறுவனம் ஏன் ஃப்ரம் அட்ரஸ் இல்லை என்று கேட்பது வழக்கம். அப்படி ரயிலில் அனுப்பும்போது புக் செய்த ரயில்வே நிர்வாகம் ஏன் அதை கவனிக்கவில்லை? அரசு இறைச்சிக் கூடத்தில் இருந்து அனுப்பியவை அல்ல என்கிறார்கள். இறைச்சிக் கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் சோதனை செய்வது வழக்கம். ஏற்றுமதி செய்யக்கூடிய அளவில் ஒரு கடை உள்ளது என்றால் அது அதிகாரிகளுக்கு தெரியாமலா இருக்கும்? ஏன் இதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

இறைச்சிக்கு எதிராக இதுபோன்று வருவது புதிதல்ல. ஏறக்குறைய பல ஆண்டுகளாக இந்த சர்ச்சை இருந்து வருகிறது. எனக்கு சினிமா பார்க்கும் பழக்கம் அதிகம் என்பதால் நான் பார்த்த பல படங்களில் கொலை, கொடுஞ்செயல் செய்வது எல்லாம் முசுலீமாகத்தான் காட்டி வருகிறார்கள். அதிலே இதுவும் ஒருவகைதான். இன்னொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ்-ஸினுடைய அழுத்தம் இருக்கத்தான் செய்கிறது. மாடுதான் அவர்களுடைய பகவானாக இருக்கிறது. மற்றதில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.”

தமிழகத்தில் ஆட்டிறைச்சி கிடைக்கும்போது வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியதன் தேவை என்ன?

தமிழகத்தில் இன்றைக்கு ஆடு மிகவும் பற்றாக்குறையாகி விட்டது. கிராமத்தில் இருந்தவர்கள் எல்லாம் படித்து விட்டு நகரத்தை நோக்கி வந்துவிட்டதால் ஆடு வளர்ப்பும் குறைந்துவிட்டது. மேலும் விலையும் அதிகம். ஆனால் கறி சுவையாக இருக்கும். அதேபோல ஹைதராபாத், மகாரஷ்டிரா, குண்டூர், கூடூர், பெங்களூர் போன்ற இடங்களில் உள்ள ஆடுகள் கொஞ்சம் தரமானதாக இருக்கும். அங்கேயும் விலை அதிகம்.

படிக்க :
♦ ஆட்டுக்கறிய நாய்க்கறின்னு கூவுனவன் எவன்டா ?
♦ தென்னிந்தியாவின் உணவு இட்லி தோசையா – இறைச்சியா ? மு.வி.நந்தினி

ஆனால், ராஜஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆட்டிறைச்சியின் விலை மிகவும் குறைவாக இருக்கும். இந்தத் தொழிலில் மார்வாடிகள் உட்பட எல்லா ஜாதியினரும் இருக்கிறார்கள். ஆனால் அங்கே யாரும் சாப்பிடுவதில்லை. அதனால் வெறும் 300 ரூபாய்க்கு அனுப்பி விடுகிறார்கள். இது இன்னும்கூட விலை குறைவாக இருக்கும். அதனால் வாங்குகிறார்கள்.

மேலும், ஐந்து நட்சத்திர ஓட்டலில் சாப்பிடுபவர்கள் கேட்பது லெக் பீஸ்தான். அதுவும் 500 ரூபாய்க்கு கேட்கிறார்கள். எங்களுக்கு கிடைப்பதே அந்த விலைக்குத்தான் எனும்போது எப்படி அது கட்டுப்படியாகும். ஆக ராஜஸ்தான் ஆடு குறைந்த விலைக்கு கிடைக்கிறது. அவர்களுக்கு லெக் பீஸ் கொடுத்து விட்டு அதன் சதைக்கறி, மார்பு கண்டம், இடுப்பு பகுதிகளை மற்ற உணவகங்களுக்கு தருவார்கள். நட்சத்திர ஓட்டலில் சாப்பிடுபவர்களுக்கு உள்ளூர் கறியின் சுவை என்ன என்பதெல்லாம் தெரியாது. அவர்களுக்கு தேவை லெக் பீஸ். அதைக் கொடுத்தால் சாப்பிட்டுவிட்டு செல்வார்கள். அவ்வளவுதான்.

ராஜஸ்தான் ஆட்டையே உயிரோடு வாங்கி வந்தால் பிரச்சினையில்லை. அதனை வெட்டி ஐஸ் பெட்டியில் வைத்து அனுப்பி விடுகிறார்கள். அங்கிருந்து வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகிறது. அதற்குள் அது கெட்டு  விடுகிறது. அதனால்தான் அந்த மாதிரி தெரிகிறது. மற்றபடி நாய்க்கறியை வாங்கி போடுமளவிற்கு மோசமான மனிதர்கள் இல்லை. வெறுமனே வாலைப் பார்த்து சொல்வது மிகமிக தவறு.

அதேபோல் இறைச்சி இறக்குமதி செய்பவர்களும் இறைச்சிக்கடைகள் அரசால் அனுமதிக்கப்பட்டவையா, அதன் தரம், இறைச்சி கூடத்தின் அனுபவம் எல்லாவற்றையும் கவனித்து வாங்க வேண்டும். இல்லையெனில் தொழில் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதை உணரவேண்டும்.

ஒருவேளை அதிகாரிகள் இதனை பறிமுதல் செய்யாமல் இருந்திருந்தால் இந்த இறைச்சி விற்பனையாகி இருக்கும்தானே?

மனமுவந்து எப்படி செய்ய முடியும்? இறைச்சி கெட்டுவிட்டது என்று தெரிந்தாலே கொடுக்க மாட்டோம். கறிக்கு ஒரு தன்மை இருக்கிறது. ஆட்டுக்கறி, மாட்டுக்கறியை பத்து மணி நேரம் சூடு பண்ணினாலும் எந்த பிரச்சனையும் இல்லை. சூடு பண்ணித்தான் விற்க முடியும். மத்தக் கறியை அவ்வாறு சூடு பண்ணினால் கெட்ட வாடை அடிக்கும். அதிலிருந்து இது எந்தமாதிரியான கறி என்பதை கண்டுபிடித்து விடலாம்.

எல்லா உணவகங்களுக்கும்  அதிகாரிகள் ஆய்வுக்கு வருகிறார்கள். அதில் நல்லதா, கெட்டதா என்பதை கண்டுபிடித்து விட முடியும். அதனால் கெட்டப் பெயர் வியாபரிகளுக்குத்தான். ஆக தொழிலில் நீண்டகால லாபத்தைத்தான் எதிர்பார்க்க முடியும். ஒருவேளை நீங்கள் சாப்பிடும் உணவு கெட்டுப் போனதாகவோ, வேறு கறி மாதிரி தெரிந்தால் நீங்கள் தாரளமாக புகார் அளிக்கலாமே!

சென்னையில் இருக்கும் நடைமுறை என்ன? எப்படி எல்லா இடங்களுக்கும் கறி கொண்டு செல்லப்படுகிறது?

சென்னையில் மொத்தம் மூன்று ஸ்லாடர் ஹவுஸ் (இறைச்சிக் கூடங்கள்) இருக்கின்றன. பெரம்பூர், வில்லிவாக்கம், சைதாபேட்டை ஆகிய இடத்தில் உள்ளன. இதனை நம்பி 2000 மட்டன் ஸ்டால்கள், 6000 தொழிலாளிகள் இருக்கின்றார்கள். அதுபோக தனிக்கடைகளாக நீலாங்கரை, குன்றத்தூர், போரூர், ஆகிய இடங்களில் இருக்கின்றது.

சென்னை சிட்டி லிமிட்டில் உள்ள பெரம்பூர் இறைச்சிக் கூடத்தில் சாதாரண நாட்களில் 1,500 ஆடுகளும், ஞாயிற்றுக் கிழமையில் 4,000 ஆடுகளும் வெட்டப்படும். இங்கிருந்து 300 மட்டன் ஸ்டால்கள் கறிவாங்கிச் சென்று விற்பனை செய்வார்கள்..

இறைச்சிக்கூடத்தில் உயிருள்ள ஆட்டை வெட்டுவதற்கு முன் எதாவது நோய் தொற்றியுள்ளதா என்று கால்நடை மருத்துவர்கள் சோதனை செய்வார்கள். அதன்பிறகே அறுப்பதற்கு அனுமதி வழங்குவார்கள். ஆட்டின் தொடையில் அதிகாரிகள் முத்திரை குத்திய பிறகே அவை வெளியே கொண்டு வரப்படும். இதுதான் நடைமுறை. அந்தக்கறி 100% தரமானது. இதனோடு ஒப்பிடும்போது ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட கறி தரமானதாக இருக்காது. அதற்கான காரணத்தை முன்னதாகவே சொல்லியிருப்பேன்.

அதேபோல் நம்மூரிலேயே சிலர் தனியாக கடைவைத்து வெள்ளாடு, செம்மறிஆடு வாங்கி வந்து அறுக்கிறார்கள். அது முழுக்க முழுக்க இல்லீகல். மருத்துவரின் ஒப்புதல் இல்லாமல் அறுக்கக் கூடாது. இருந்தாலும் கடைகள் தனியாக வைப்பதற்கு காரணம் போதுமான இறைச்சிக்கூடம் இல்லை. பெரம்பூர் ஆடுதொட்டி நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. அந்த காலத்தில் இருந்தே செயல்பட்டு வருகிறது. அப்புறம் வில்லிவாக்கம், சைதாபேட்டையில் இருக்கிறது. இது மட்டும் போதாது. நிறைய இறைச்சிக் கூடங்கள் அரசு சார்பாக திறக்க வேண்டும். அப்பொழுதுதான் தரமான கறி பஞ்சமில்லாமல் மக்களுக்கு கிடைக்கும். ஆனால், அரசு அதை ஏன் செய்ய மறுக்கிறது என்று தெரியவில்லை. நான் இதற்காக பல முயற்சியை எடுத்து விட்டேன். ஒன்றும் நடக்கவில்லை.

தற்போது பரவிய இந்த நாய்க்கறி வதந்தியால் விற்பனை பாதிக்கப்பட்டதா?

ஆமாம். மகாவீர் ஜெயந்தி, மகாவீர் நிர்வாண் டே என்று மொத்தம் 16 நாட்கள் ஸ்லாடர் ஹவுசுக்கு லீவு. இந்நாளில் ஆடு வெட்டக்கூடாது. வெட்டிய கறியும் விற்கக்கூடாது என்று தடை இருக்கிறது. இதனால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது.

கிருத்திகை, புரட்டாசின்னு வரும் நாட்களில் வீட்டில் செய்ய மாட்டார்கள். ஆனால் கடையில் வந்து சாப்பிடுவார்கள். இன்னொரு பக்கம், இன்றைக்கு ஆன்லைன் பிசினஸ் வந்து விட்டது. நல்லது கெட்டது என்றால் வீட்டில் சமைப்பது இல்லை. ஆர்டர் கொடுத்து பக்கெட்  பிரியாணி வாங்கிக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். இதனால் கறி விற்பனையும் குறைந்து வருகிறது.

முன்பெல்லாம் தீபாவளிக்கு இரவு முழுவதும் கடை இருக்கும். இப்பொழுது இல்லை.   இந்த மாதிரி சமயத்தில் வதந்தி பரவினால் எப்படி விற்பனையாகும். சாப்பிடும்போது அந்த சிந்தனைதானே வரும். இந்த பிரச்சனைக்கு பிறகு 20% வரை விற்பனை குறைந்து விட்டது.

ஆடுகளை வெளியூரில் இருந்து கொண்டு வருவதற்கு எதாவது தடைகள் இருக்கிறதா?

தமிழகத்திற்குள் எதுவும் இல்லை. ஆனால் வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு வர சிரமம் இருக்கிறது. குண்டூர் ஆட்டின் கறி நன்றாக இருக்கும்.  ஆனால் இதனை கொண்டு வர பத்து இடத்தில் மாமூல் கொடுக்க வேண்டும்.  உதாரணமாக ஒரு லாரியில் அதிகபட்சம் 230 ஆடுகள் கொண்டு வரலாம். அப்படி கொண்டு வரும்போது செக் போஸ்டில் இருப்பவர்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டும்.

விலங்குகள் நல வாரியம் பிடித்தால், தண்ணீர் காட்டினியான்னு கேட்டு மிரட்டுவாங்க. காட்டிட்டோம்னு சொன்னா, எதுக்கு அதிக ஆடு ஏத்துனன்னு கேட்பாங்க. இதனாலதான் பிரச்சனையே. இந்த பிரச்சனைய தவிர்க்கக்கூட ரயில் மூலமா கொண்டு வருவாங்க. இதுலயும் மாமூல் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது.

சரி! இப்ப கொண்டு வந்த இறைச்சிப் பெட்டியில மீன் என்று குறிப்பிட்டு இருந்ததா சொல்றாங்களே?

நீங்க ஏர்போர்ட்டுக்கு போனிங்கன்னா வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் பொருளுக்கு ஏற்ற மாதிரி வரி வசூலிப்பாங்க. அதுபோல இங்க மீனுக்கு ஒரு வரி, மட்டனுக்கு அதிக வரின்னு வாங்குறாங்க. அதனை தவிர்க்கத்தான் இந்த மாதிரி எழுதி வருகிறது. எனவே இந்த தொழிலில் இருக்கின்ற நடைமுறை பிரச்சனைகளை எல்லாம் களைய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பிரச்சினையால் மக்களுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை எப்படி சரி செய்ய போகிறீர்கள்?

எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. எங்களைப் பொருத்தவரையில் நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு நேர்மையாக இருக்கிறோம். இந்த விஷயத்தில் ரயில்வே, கார்ப்பரேசன் சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அனைவரும் கூட்டாக சேர்ந்து நடந்த தவறு குறித்து பேட்டி அளிக்க வேண்டும். அதன்மூலம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற குழப்பத்தை போக்க வேண்டும். இது அவர்களின் கடமை.

தொடர்ந்து மாட்டிறைச்சிக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்பிஜேபி எதிர்ப்பு தெரிவித்து வருகிறதே?

அப்படியானால் குஜராத், ராஜஸ்தானில் இவர்கள் ஆட்சிதானே. ஆடு-மாடு வெட்டுவதை ஏன் இவர்கள் தடை செய்யவில்லை? ஏனெனில், குஜராத், ராஜஸ்தான் மார்வாடிகள்தான் இந்த தொழிலில் இருக்கிறார்கள். முசுலீம் பெயரில் கடை இருக்கும். ஆனால் உரிமையாளர் ஒரு மார்வாடியாக இருப்பார். இங்கிருந்து இறைச்சியை டன் கணக்கில் ஏற்றுமதி செய்கிறார்கள். அதை ஏன் தடை செய்யவில்லை. இவர்களோட ஆட்களுக்கு லாபம் எந்த விதத்திலும் பாதித்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அவ்வளவுதான்.

படிக்க :
♦ விரைவில் பிரியாணிக்கு தடை – மோடி அரசு அடக்குமுறை
♦ குஜராத்தில் சிக்கிய நான்-வெஜ் பிராமின் !

மேலும், அசைவம் சாப்பிடக்கூடாது, மிருகத்தனமானவர்களா மாறிவிடுவார்கள் என்கிறார்கள். இந்தக் கருத்து முட்டள்தனமானது. எந்த உணவையும் சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கதிகமாக எதை உட்கொண்டாலும் ஆபத்துதான். எனக்கு தெரிந்து வீட்டில் அசைவம் சாப்பிடவில்லை என்றால் கடைகளில் வந்து சாப்பிடுகிறார்கள். சைவத்தில் இருந்து அசைவத்துக்கு மாறியவர்கள்தான் அதிகம். மனிதனே மனிதனை சாப்பிடும் (ஒருவனை ஒருவன் ஏமாற்றும்) காலத்தில் இருக்கிறோம், எனும்போது கறி சாப்பிடக்கூடாது என்பது தப்பு. இந்த விஷயத்தில் அரசியல் சதி-அதிகாரிகளின் சதி இருப்பதாகத்தான் பார்க்கிறேன்.

இனி வரும் காலத்தில் இறைச்சித் தொழில் சுமூகமாக நடக்குமா?

பிஜேபி – ஆர்.எஸ்.எஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தொழில் செய்ய முடியாது. இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதன் மூலம் அரசுக்கு  பெரும் இழப்பு ஏற்படும்.

காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம் | வில்லவன்

0

வில்லவன்
சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையில் ஒரு தோழரோடு உரையாடுகையில் அவர் குறிப்பிட்டார் “இது செத்துக்கொண்டிருக்கும் நகரம், இங்கு செட்டில் ஆவது குறித்து சிந்திக்காதீர்கள்”. அவை ஏதோ விரக்தியில் வெளிப்பட்ட வார்த்தைகள் அல்ல. பழைய தஞ்சாவூரை வேட்டையாட பல்வேறு பெருந்திட்டங்கள் காத்திருக்கின்றன.

நிலக்கரி, மீத்தேன், பாறை எரிவாயு, பெட்ரோல் என பல அகழ்வுத் தொழில்கள் முற்றுகையிடவிருக்கின்றன. மன்னார்குடி – முத்துப்பேட்டைக்கு இடையே உள்ள எங்கள் கிராமம் எப்போது வேண்டுமானாலும் நிலக்கரி அகழ்வுப் பணிகளுக்கு கைப்பற்றப்படலாம் (பத்திரப்பதிவின் போது அந்த எச்சரிக்கை தரப்படுகிறது). மீத்தேன், ஷேல் கேஸ், பெட்ரோல் வெயிட்டிங் லிஸ்ட் ஊர்கள் தனி.

தஞ்சை டெல்டா பன்னெடுங்காலமாக வளமான பூமிதான். ஆனால் அங்கிருந்த பெரும்பான்மை உழைக்கும் மக்கள் வறுமையில்தான் இருந்தார்கள். உழைப்பதைத்தவிர வேறெதையும் அறியாமல் வாழ விதிக்கப்பட்டவர்கள் அவர்கள். முப்போகம் விளையும் காவிரி வடிநிலத்தில்தான் என் அப்பாவும் மற்றவர்களும் மார்கழி மாதத்தின் பசியை வெறும் முருங்கைக்கீரையைத் தின்று சமாளித்திருக்கிறார்கள். என் ஒன்றுவிட்ட சகோதரர்களும் சகோதரிகளும் பாதி இடிந்த வீட்டில் பல வருடகாலம் வாழ்ந்திருக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்பு சன்ன அரிசியில் சமைக்கப்பட்ட சாதத்தை எந்த உறவுக்காரர்கள் வீட்டிலும் சாப்பிட்டதாக நினைவில்லை. ஐ.ஆர்.20 அரிசியே அப்போது அரசு வேலையில் இருப்போர் வீடுகளில்தான் இருக்கும். அதிகம் தண்ணீர் கலக்காத காபி டீ முதல் அழுது வடியாத குண்டு பல்புகள் வரையான அல்பமான தேவைகள்கூட கடந்த சில ஆண்டுகளில்தான் சாத்தியமானது.

தஞ்சாவூரின் வளமும் அந்த மக்களின் உழைப்பும் எல்லா காலத்திலும் மிக சொற்பமானவர்களை மட்டுமே வசதியோடு வைத்திருந்தது. சமீபகாலத்தில் பரவலாக கிடைத்திருக்கும் மிகச்சொற்ப வசதிகளும்கூட வெளியூர், வெளிநாடுகளில் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் ஆட்களால் கிடைத்ததுதான். இன்னமும் விவசாயத்தை நம்பி வாழும் எங்கள் உறவுக்காரர்கள் வீடுகளில் தரித்திரம் மட்டும்தான் சவுகர்யமாக இருக்கிறது. வளைகுடா வேலைகளும் திருப்பூர் வேலைகளும் இல்லாவிட்டால் தஞ்சையில் பட்டினிச் சாவுகள்கூட தினசரி செய்தியாக இருந்திருக்கும். நேர்மையாக சொன்னால் விவசாயம் தஞ்சை மக்களை காப்பாற்றவில்லை மாறாக மக்கள்தான் வெளியே வேலைக்குப் போய் விவசாயத்தை காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

கஜா புயலுக்கு அடுத்தடுத்த நாட்களில் தொலைக்காட்சிகளில் பேசிய விவசாயிகளில் பலரும் ஆயிரக்கணக்கில் செலவிட்டு உரம் போட்டதாக சொல்லித்தான் அழுதார்கள். அவ்வப்போது பசுமை விகடன் வாசிக்கும் மத்தியதர வர்க்கம் விவசாயம் ஒரு இலாபகரமான தொழில் என்பதாக கற்பனை செய்துகொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் உண்மையில் அடுத்த வெள்ளாமைக்கான கடனை இப்போதே பலர் வாங்கியிருப்பார்கள். தஞ்சாவூரில் இத்தனை குடிசைகள் இருக்கும் செய்தி தஞ்சையில் வசிக்கும் பல நகரவாசிகளுக்கே இப்போதுதான் தெரிந்திருக்கும். உங்கள் கிராமங்களில் இருந்து பாலை கொண்டுவருகிறோம் எனும் பழைய ஆரோக்யா பால் விளம்பரத்தை நீங்கள் பார்த்திருக்கக்கூடும், அதே கிராமங்கள்தான் இப்போது யாரேனும் தன்னார்வலர்கள் பால் கொண்டு வருகிறார்களா என காத்திருக்கிறார்கள்.

படிக்க:
மாற்று ஊடகத்திற்கான தேவை – வில்லவன்
நாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் !

புயல் அபாயம் உள்ள கடற்கரைப் பகுதிகளில் எதற்கு தென்னை விவசாயம் என அதி புத்திசாலித்தனமான கேள்விகளையும் ஆங்காங்கே கேட்க நேர்கிறது. எதை விதைப்பது என்பதை விவசாயிகள் தெரிவு செய்யும் காலமெல்லாம் மலையேறிவிட்டது. பட்டுக்கோட்டையை தாண்டி காவிரித் தண்ணீர் பாய்வதெல்லாம் அதிசயமாக நடக்கும் சம்பவம். அதனை நம்பி நெல்லோ கரும்போ நடுவது தற்கொலை முயற்சி. தண்ணீர் இல்லாவிட்டாலும் பிழைத்துக்கொள்ளும் பயிர்களை நோக்கி மக்கள் தள்ளப்பட்டார்கள் என்பதுதான் யதார்த்தம். பெரும்பான்மை மாற்றுப் பயிர்களை அரசுதான் பரிந்துரை செய்கிறது (காவிரி நீரை பெற்றுத்தர முடியாத கையாலாகாத்தனத்தை மறைக்க). பாமாயில் உற்பத்திக்காக எண்ணைப் பனை விளைவிக்கச்சொல்லி அரசு ஊக்குவித்தது. நம்பி பலரும் நட்டார்கள், பிறகு அம்முயற்சி அப்படியே கைவிடப்பட்டது. நட்டவர்கள் நட்டாற்றில் நின்றார்கள் (மரங்களை அப்புறப்படுத்தி பிறகு அதே வயலில் சிறு பயிர்களை நட நீங்கள் மீண்டும் கணிசமாக செலவிட வேண்டியிருக்கும், பிறகு ஓரளவு விளைச்சலைக் காண நீங்கள் இரண்டொரு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்).

வெளியே வேலை பார்த்து எதற்கு அவர்கள் விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்?

தென்னை விவசாயி ராஜேந்திரன் : வங்கி கடன், சிங்கப்பூர் உழைப்பு, தொழிலாளி சேமிப்பு – அத்தனையும் அழிந்தது !

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது (மேலும் சில காரணிகளும் இருக்கலாம்). நிலத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் பிடிப்பு முதல் காரணம். அதுதான் அவர்களை நிலத்தை சும்மா போட்டுவைக்க விடாமல் தடுக்கிறது. திருப்பூரில் குடியேறிய என் நண்பரின் மனைவி, வீட்டில் சில காய்கறிச் செடிகளை விளைவித்தார். கத்திரியில் பூச்சி அடித்துவிட்டது. உடனே பூச்சி மருந்து வாங்கி வரச்சொல்லி நண்பரை நச்சரித்தார். இந்த நாலு கத்திரியில் என்ன கிடைக்குமென்று இப்படி மெனக்கெடுகிறீர்கள் எனக் கேட்டேன். அவருக்கு சரியாக பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஒன்று புரிந்தது, அவரால் தன் பயிர்கள் நாசமாவதை பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. அதன் பலன்களுக்கும் செலவுக்கும் ஒத்துப்போகுமா என்பதைக்கூட அவர் கணக்கிட முயலவில்லை. அவருக்கு அவர் செடிகள் வீணாகிவிடக்கூடாது அவ்வளவே. மழை பொய்த்து, ஆறு வறண்ட காலங்களில் லாரியில் தண்ணீர் வாங்கி நெல்லுக்கு பாய்ச்சிய விவசாயிகளை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். வெறுமனே இலாப நட்டக் கணக்குப் பார்த்தால் முக்கால்வாசி விவசாயிகள் பயிர்தொழிலைவிட்டு என்றைக்கோ ஓடியிருக்க வேண்டும்.

இந்த பிணைப்பை ஓரளவுக்கு அர்த்தமுடையதாக்க பல விவசாயிகள் வெளிநாடுகளில் கடுமையாக உழைத்து, அந்தப் பணத்தை தென்னை போன்ற நீண்டகால பணப்பயிர்களில் முதலீடு செய்கிறார்கள். பத்து வருடங்கள் பெரிய வருவாய் இருக்காது என்றாலும்கூட வேலை செய்ய முடியாமல் ஓய்ந்துபோய் ஊருக்கு வரும்போது தம் வயலில் (தோப்பில்) கொஞ்சம் உழைத்து ஓரளவுவேனும் சம்பாதிக்கலாம் எனும் நம்பிக்கையில் அப்படி செய்தவர்கள் ஏராளம். பணப்பயிர்கள் முதலில் பயிரிடுவோருக்கு ஓரளவு இலாபம் கொடுக்கும். அதை நம்பி தென்னை பயிரிட்டவர்கள் ஏராளம். பாதுகாப்பற்ற எதிர்காலம், வங்கி முதலீட்டில் இலாபமின்மை மற்றும் பெரிய முதலீடுகளை செய்ய இயலாமை ஆகிய களச்சூழல் வெளியே வேலைக்குப் போன விவசாயிகளையும் வயலை நோக்கி தள்ளுகிறது.

தென்னையும் உத்திரவாதமான முதலீடல்ல, சில ஆண்டுகளுக்கு முன்னால் விலை வீழ்ச்சி மற்றும் வண்டு தாக்குதல் ஆகியவை அவ்விவசாயிகளை மரணத்தை நோக்கி விரட்டியது (பலர் எண்ணிக்கொண்டிருப்பதைப் போல தென்னையை நட்டுவிட்டு வானத்தைப் பார்த்து காயை எண்ண முடியாது. உரம் போட, மருந்து தெளிக்கவெல்லாம் வருடா வருடம் ஆயிரக்கணக்கில் அழ வேண்டும்). ஆகவே பெரும் பணம் சம்பாதிக்காத டெல்டாவில் வயல் உள்ள ஒரு குடிமகன் தமது ஓய்வுகால முதலீட்டை தம் நிலத்தில்தான் போட்டாகவேண்டும். அதுமட்டும்தான் அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை.

படிக்க:
காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? நேரடி ரிப்போர்ட்
விவசாயியை வாழவிடு – மக்கள் அதிகாரம் மாநாட்டுத் தீர்மானங்கள் !!

டெல்டா இப்போது ஒரு மரண முற்றுகையில் இருக்கிறது. அதன் எதிர்பாரா தாக்குதல்களில் ஒன்றுதான் இந்தப்புயல். சூனியமாகவிருக்கும் பல இலட்சக்கணக்கான மக்களின் எதிர்காலத்தை கொஞ்சம் முன்கூட்டியே வர வைத்திருக்கிறது இப்புயல். வீடு கட்டுவது என்பது சாதாரண மனிதனின் வாழ்நாள் கனவு. இப்போது வீடிழந்த மக்கள் பலருக்கும் அது வாழ்நாள் கனவாகவே இருக்கப்போகிறது. இழந்த தோப்புக்களும் படகுகளும் அவர்களுக்கு கடைசியாக இருந்த மூலதனம். அதனை கஜா நசுக்கி வீசியிருக்கிறது. அவர்கள் எல்லோரும் தம் வாழ்வை பூஜ்ஜியத்தில் இருந்து துவங்க வேண்டும். ஆனால் தினசரி வாழ்வு முன்னெப்போதும் இல்லாத வகையில் செலவு மிக்கதாக இருக்கிறது. பத்து நாள் ஆகியும் இன்றுவரை உணவுக்கு கையேந்துகிறது டெல்டா.

இரக்கம் சில காலம் மட்டுமே வாழக்கூடிய உணர்வு. டெல்டாவின் தேவையில் ஓரிரு சதவிகிதத்தைகூட அதனால் பூர்த்தி செய்ய இயலாது. பழைய தஞ்சாவூர் மாவட்டம் ஜீவித்திருக்க தேவையானவற்றின் பட்டியல் மிக பிரம்மாண்டமானது.

கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுத்த நிலையில், மழையில் நனைந்த நெல் முளைத்தது.

♦ விளை பொருளுக்கான நியாயமான விலை (அரசு நெல் கொள்முதல் மையங்கள் சாக்குப் பைகள் இல்லை எனும் காரணத்தால் நெல்லை வாங்க மறுக்கும் கதைகள்கூட இங்கே சாதாரணம்)

♦ உத்திரவாதமான தண்ணீர் பாசனம் (காவிரி நீரை பெறுவது மட்டும் பிரச்சினை அல்ல. பெங்களூர் முதல் திருச்சி – தஞ்சை வரையுள்ள பல பெரு நகரங்களின் சாக்கடை சங்கமிக்கும் இடம் காவிரி. திருப்பூர் ஈரோடு சாயக்கழிவுகளின் புகலிடமும் காவிரிதான்),

♦ சுற்றுச்சூழல் அபாயங்கள் அதிகரிக்கின்றன, அவற்றை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் (அனேக கிராமங்களில் மக்களை தங்கவைக்க போதுமான அவசரகால இடங்கள்கூட இல்லை)

♦ இனி அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கும் புயல்களை எதிர்கொள்ளத்தக்க கான்கிரீட் வீடுகள், மக்களின் பெருமளவு பணத்தை விழுங்கும் கல்வியை இலவசமாக்குதல் (புயலால் பாதிக்கப்பட்ட பலரும் எப்படிப் பிள்ளையை படிக்க வைப்பேன் என்றே அழுதார்கள். கடந்த கால் நூற்றாண்டில் தஞ்சை பகுதியில் ஓரளவு வசதியான வாழ்வை பெற்றவர்கள் படித்து வேலைக்கு சென்றவர் மட்டும்தான். ஆகவே எப்படியாவது பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்துவிட வேண்டும் எனும் பெருவிருப்பம் மாவட்டமெங்கும் மக்களிடையே வியாபித்திருக்கிறது. கல்வியும் மருத்துவமும்தான் மக்களின் பெருமளவு சேமிப்பைத் தின்கின்றன)

சம்பா பயிர் கருகியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட தஞ்சை ஆலக்குடியைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம். (கோப்புப் படம்)

♦ விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச வேலை உத்திரவாதம் (அடுத்த சில மாதங்களுக்கு விவசாய வேலை என்பது இங்கே சாத்தியம் இல்லை).

♦ மக்கள் மீதும் சூழல் மீதும் கொஞ்சமும் இரக்கம் காட்டாத பெருந்திட்டங்களை நிராகரிக்கும் உரிமை.

இவையெல்லாம் நம்மில் பலருக்கு நகைப்புக்குரிய கோரிக்கையாக தோன்றக்கூடும். ஆனால் இவற்றை முழுமையாக செய்யாவிட்டால் இந்த மண் சோமாலியாவைப்போல மாறுவதைத் தடுக்கவே முடியாது. மக்களை ஒருவேளை சோற்றுக்கு சாலையில் ஓடவிட்டதில் மேற்சொன்ன எல்லாவற்றுக்கும் ஓரளவு பங்கிருக்கிறது. அந்த மண்ணின் மீது அக்கறையிருப்பவர்கள் இவை எல்லாவற்றுக்காவும் பேசியாக வேண்டும். இல்லாவிட்டால் நாம் நிரந்தர நிவாரண முகாம்களை அமைத்து கொடையாளர்களை தேடி அலைய வேண்டியிருக்கும்.

வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

பூங்கொடிகள் வலிமையானவர்கள் !

ந்த வருடத்தில் நான் சந்தித்த இரண்டாவது பூங்கொடி இவர். முதல் பூங்கொடி, தோழர் முகிலனின் இணையர். சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் வண்டிகளில் பெண்கள் பெட்டியில் இவரை நீங்கள் பார்க்கலாம். ‘கடல..பட்டாணி சுண்டல் பத்து ரூபாஎன விற்றுக் கொண்டிருப்பார். எப்போதாவது அவரிடம் ஒரு பாக்கெட் சுண்டல் வாங்கினால் இனாமாகக் கொஞ்சம் புன்னகையைப் பெறலாம். பல நாள் இடைவெளிவிட்டுச் சந்தித்தால்எப்படி இருக்கிங்க?’ என்று பரஸ்பரம் கேட்டுக் கொள்வோம். எங்களது அதிக பட்ச உரையாடல் அவ்வளவுதான். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு இரவு பயணத்தில் அவருடன் ஆர அமரப்பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

எங்கே?” என்றார்.

புகைப்படம் எடுக்க வெளியூர் பயணம்என்றேன்.

இந்த வேளையில வெளியூருக்கா? வீட்டுல அப்பா அம்மா ஏதும் சொல்லமாட்டாங்களா?” என்று அடுத்த கேள்வி.

இல்ல. அப்பாதான் எனக்கு பக்கபலமே!” என்றேன்.

! எத்தனை வயசு இப்போ?”

“28!”

நீங்க ஒரே பொண்ணா?”

இல்ல. குட்டி தம்பி இருக்கான்!”

ம்ம்ம். உங்க வயசுல எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு பிள்ளைங்க இருந்துச்சு! ரொம்ப சின்ன வயசுலயே கல்யாணம் செய்துட்டாங்க. இப்போ பெரிய பையன் ஏழாவது படிக்கிறான். படிப்ப விட்டது எவ்வளவு தப்புனு இப்ப நினைச்சு பார்க்கறேன்

இரண்டு பிள்ளைங்களா? உங்களப் பாத்தா ரெண்டு பிள்ளைங்களுக்கு அம்மான்னு நம்பவே முடியல! இப்போ என்ன வயசாகுது உங்களுக்கு?”

“33!”

அப்போ நான் உங்கள பூங்கொடி அக்கானே கூப்பிடலாம்!” ( சிரித்தபடி)

! கூப்பிடலாமே” (அவரும் சிரிக்கிறார்)

லவ் மேரேஜ்தானே? அழகா சிரிக்கறிங்க லவ் மேரேஜாதான் இருக்கும்!”

ஏன்டா நீங்க வேற! நானே டைவர்ஸ்க்கு கோர்ட்டுக்கு அலைஞ்சிட்டு இருக்கேன்..”

அத்தனை மகிழ்ச்சியான முகத்தின் வாழ்க்கை எத்தனை உயிர்ப்பானதாக இருக்கும் என்று அவரைப் பார்க்கும்போதெல்லாம் மனதுக்குள் மகிழ்ந்துகொண்ட எனக்கு அவரது அந்த பதில் எதிர்பார்க்காததாகவே இருந்தது.

ஏன்க்கா..!”

அந்த மனுசன் ஒரே குடிம்மா!. நாந்தான் குடும்பத்த காப்பாத்தியாகனும். இதுல நைட்ல இப்படி சுண்டல் வித்துட்டு வீட்டுக்குப் போனா, ‘எவன பாத்துட்டு வரன்னு சந்தேகப்படுது வேற. நம்மால முடியல! ரெண்டு புள்ள பெத்தாச்சு. இனிமே நா யாரப் பாத்து என்ன செய்யப்போறேன்?”

அப்போ.. பிள்ளைங்கள யாரு பாத்துக்கறாங்க?”

அம்மாதான்!”

அப்போ! உங்க வருமானம் தான் குடும்பத்துக்கா?”

ம்ம்ம். பிள்ளைங்க படிப்பு.. அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, அவங்களப் பாத்துக்கனும். எல்லாத்துக்கும் என் வருமானம்தான்!”

தாலி இல்லையா, இனி வீட்டுப் பக்கமே வராதே!நா உங்களுக்கு வேற வேல பாத்துத் தரவா?”

பத்தாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். எனக்கு என்ன வேல கெடைக்கப் போவுது?”

பத்தாவது படிச்சிருக்கிங்க!. அதெல்லாம் கெடைக்கும்..! தேடவா? சூப்பரா.. மனசுக்கு பிடிச்ச மாதிரி

(சிரிக்கிறார்..)

எங்கக்கா நீங்க எறங்கனும்?”

மவுண்டுடா…!..ஹ்ம்ம்ம்.உங்ககிட்ட இன்னிக்கு பேசுனது மனசுக்கு தெம்பா இருக்கு

அதெல்லாம் இல்ல. நீங்கதான் தெம்பானவங்க. உங்ககிட்டதான் நான்லாம் கத்துக்கனும்!”

யாரு..என்கிட்டயா?” என்றுவிட்டு சட்டென இரண்டு கன்னங்களிலும் முத்தமிட்டுவிட்டு தன் சுண்டல் பையைத் தூக்கிக் கொண்டு நகர்ந்தார். மவுண்ட் ரயில் நிலையம் வந்திருந்தது.

நா வரேன்!..” என்று உரக்கக் கூறிக்கொண்டே சென்றது ரயிலின் சத்தத்துக்கிடையே கேட்டது.

படிக்க:
பெண் : வலியும் வலிமையும் – புதிய கலாச்சாரம் மின்னூல் !
பெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை

இங்கு எத்தனையோ போராட்டங்களுக்கு அடித்தளமாக ஒரு பெண்ணாக நாம் செய்ய வேண்டிய முக்கியப் பணி ஒன்று இருக்கிறது. அது நம் அருகிலிருக்கும் மற்றொரு பெண்ணை வலிமையாக்குவது. துரோகங்கள், சண்டைகள், சிக்கல்கள், சச்சரவுகள், புறங்கூறுதல் என சில்லரை விஷயங்களைக் கடந்து எவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தாலும் ஒரு பெண்ணாக வலிமையுடன் மற்றொரு பெண்ணுக்காக நாம் அறத்துடன் நிற்பது. அது நீங்கள் அறியாத பல வகைகளில் பூமியை உய்யச் செய்திருக்கும். பூங்கொடி அக்கா அவளது எத்தனையோ புன்னகைகளில் என்னை வலிமையாக்கியிருக்கிறாள். அன்பின் வெளிப்பாடு அருகில் இருப்பவர்களை வலிமையாக உணரச் செய்யும். வலிமைதான் வாழ்க்கை.

பூங்கொடிகள் வலிமையானவர்கள்!

முகநூலில்: Aishwarya Govindarajan

வெட்கமற்ற பிறவிகள்கூடக் கண்ணீர் சிந்துவார்கள்

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 30 (தொடர்ச்சி)

மாக்சிம் கார்க்கி
“பாடுங்கள், அம்மா, என் அருமை அம்மா!” என்று கத்தினான் ஹஹோல். “அதுதான் வாழ்க்கை!”

அவன் முதலில் தானே பாடத் தொடங்கினான். அவனது குரல் பிற சப்தங்களையெல்லாம் விழுங்கி விம்மி ஒலித்தது. தாய் அவனைத் தொடர்ந்து சென்றாள். திடீரென அவள் தடுமாறினாள். கால் தவறி ஆழங்காணாத பாதாளக் குழிக்குள் விழுந்தாள். அந்தப் பிலத்தின் சூன்யத்தில் பயங்கரக் குரல்கள் கூச்சலிட்டு அவளை வரவேற்றன …..

மேலெல்லாம் நடுங்கிக் குளிர அவள் திடுக்கிட்டு எழுந்தாள். அவளது இதயத்தை ஒரு கனமான முரட்டுக் கை அழுத்திப் பிடித்து. கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கி முறுக்கிப் பிழிவதில் ஆனந்தம் காண்பதுபோல் தோன்றியது. ஆலைச்சங்கு இடைவிடாது அலறி முனகி, தொழிலாளர்களை அறைகூவி அழைத்துக்கொண்டிருந்தது. அது இரண்டாவது சங்கு என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். அந்த அறை முழுவதிலும் புத்தகங்கள் இறைந்து கிடந்தன; எல்லாம் நிலைகுலைந்து தலைகீழாய்க் கிடந்தன. தரையில் சேறுபடிந்த பூட்ஸ் கால்களின் தடங்கள் காணப்பட்டன.

அவள் எழுந்தாள்; முகங்கை கழுவவோ, பிரார்த்தனையில் ஈடுபடவோ எண்ணாமல், அங்குள்ள பொருள்களை எடுத்து அடுக்கி, அறையைச் சுத்தம் செய்வதில் முனைந்தாள். சமையலறையில் கிடந்த கம்பின் மீது – கொடியின் சிறு பகுதி இன்னும் ஒட்டிக்கிடந்த அந்தக் கம்பின் மீது – அவள் பார்வை விழுந்தது. அவள் அதைக் குனிந்து எடுத்து, அடுப்பில் வைக்கப் போனாள். ஆனால் திடீரென வேறொரு எண்ணம் தோன்றவும் அவள் பெருமூச்சு விட்டவாறே அதில் தொங்கிய கொடித் துணியை அகற்றி, அதை ஒழுங்காக மடித்து, தனது பைக்குள் வைத்துக் கொண்டாள். அவள் அந்தக் கம்பை முழங்காலில் கொடுத்து முறித்து அடுப்புக்குள் எறிந்தாள். பிறகு ஜன்னல்களையும் தரையையும் தண்ணீர் விட்டுக் கழுவினாள். தேநீர்ப் பாத்திரத்தைக் கொதிக்க வைத்துவிட்டு உடை உடுத்திக்கொண்டாள். பின்னர் அவள் சமையலறையில் இருந்த ஜன்னல் அருகே அமர்ந்தாள். அவள் மனத்தில் அதே கேள்வி மீண்டும் எழுந்தது.

“இனி என்ன?”

தான் தனது காலைப் பிரார்த்தனையைச் சொல்லவில்லை என்பது ஞாபகம் வந்தவுடன் அவள் அங்கிருந்து எழுந்து விக்ரகங்களை நோக்கி வந்தாள். அவற்றின் முன்னே சில கணங்கள் நின்றாள். பிறகு மீண்டும் உட்கார்ந்தாள். அவள் இதயம் ஒரே சூன்ய வெளியாக வெறிச்சோடிக் கிடந்தது. நேற்றைய தினத்தில் தெருக்களிலே உற்சாக வெறியோடு கத்திச் சென்ற ஜனங்கள், இன்று தங்கள் தங்கள் வீடுகளுக்குள்ளே அடைந்து முடங்கிக்கிடந்து, இயற்கைக்கு மீறிய சம்பவங்களைப் பற்றி அமைதியாகச் சிந்தித்துக் கொண்டிருப்பதைப்போல, அதிசய மோனம் நிலவிக்கொண்டிருந்தது.

திடீரென அவள் தனது இளமைக் காலத்தில் கண்ட ஒரு விஷயத்தை நினைவு கூர்ந்தாள்; சவுசாய்லவ் குடும்பத்தினருக்குச் சொந்தமான பண்ணையில் பழம் பூங்காவனம். பூங்காவனத்தில் ஒரு பெரிய தடாகம். தடாகம் முழுவதிலும் நீரல்லிப்பூக்கள் நிறைந்து பூத்திருந்தன. இலையுதிர் காலத்தின் மப்பும் மந்தாரமுமான ஒரு நாளன்று அவள் அந்தக் தடாகக்கரை வழியாக நடந்து சென்றாள். செல்லும்போது அந்தத் தடாகத்தின் மத்தியில் ஒரு படகு நிற்பதைக் கண்டாள். குளம் கருநீலமாக இருண்டு நிச்சலனமாக இருந்தது. அந்தப் படகு அந்தக் கரிய நீர்த்தடத்தின் மீது, பழுப்பிலைகளின் கூட்ட அலங்காரத்தோடு ஒட்டிக் கிடப்பதாகத் தோன்றியது. காய்ந்து கருகிப்போன அந்த இலைகளுக்கு மத்தியில், அசைவற்ற மோன நீர்த்தடாகத்தில், தன்னந்தனியாக, துடுப்புக்களோ மனிதத் துணையோ இன்றி ஸ்தம்பித்துக் கிடந்த அந்தப் படகிலிருந்து ஏதோ ஒரு இனந்தெரியாத துக்கத்தின் சோகம் தோன்றுவதாக அவளுக்குத் தெரிந்தது. வெகுநேரம் வரையிலும் அவள் கரையருகிலேயே நின்றாள்; யார் அந்தப் படகை தடாகத்தின் மத்தியில் தள்ளிவிட்டார்கள். எதற்காகத் தள்ளிவிட்டார்கள் என்பதை எண்ணி எண்ணி அதிசயித்தாள். அன்று மாலையில் அவள் ஒரு விஷயம் கேள்விப்பட்டாள். அந்தப் பண்ணை நிலத்தில் வேலை பார்த்து வந்த ஒருவனின் மனைவி, குடுகுடுவென்று நடையும், சிக்குப் பிடித்த சிகையும் கொண்ட ஒரு சிறு பெண். அந்தக் குளத்தில் மூழ்கி இறந்துவிட்டதாக யாரோ சொன்னார்கள்.

தாய் தன் கரத்தால் நெற்றியை வழித்துவிட்டுக் கொண்டாள். அவளது மனத்தில் அன்றைய தினத்துக்கு முந்தின நாளன்று நடந்த சம்பவங்களின் நினைவுகளிடையே எண்ணற்ற சிந்தனைகள். நடுநடுங்கி மிதந்து சென்றன. வெகுநேரம் வரையிலும் அவள் அந்தச் சிந்தனைகளால் திக்பிரமையுற்று அமர்ந்திருந்தாள். அவளது கண்கள் குளிர்ந்து போய்விட்ட தேநீர்க் கோப்பையின் மீது நிலைகுத்திப் பதிந்து நின்றன. அதே சமயத்தில் தனது கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கக்கூடிய யாராவது ஒரு படாடோபமற்ற புத்திபடைத்த மனிதனைக் காணவேண்டும்; கண்டு கேட்க வேண்டும் என்ற ஆவல் பெருகிக்கொண்டிருந்தது.

அவளது ஏக்கம் நிறைந்த ஆவலுக்குப் பதிலளிப்பது போல், நிகலாய் இவானவிச் மத்தியானத்துக்கு மேல் வந்து சேர்ந்தான். என்றாலும் அவனைக் கண்டதும் அவளுக்குத் திடீரென ஒரு திகிலுணர்ச்சி ஏற்பட்டது. எனவே அவன் செலுத்திய வணக்கத்துக்குக்கூடப் பதில் கூறாமல், அமைதியாகச் சொன்னாள்;

“நீங்கள் ஏன் வந்துவிட்டீர்கள்! இப்படிச் செய்வது ஒரு பெரிய முட்டாள்தனம். நீங்கள் இங்கிருப்பதைக் கண்டால் அவர்கள் உங்களையும் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள்!”

அவன் அவளது கையைப் பற்றி இறுக அழுத்தினான், தனது மூக்குக்கண்ணாடியைச் சரி செய்துகொண்டு, அவள் பக்கமாக நெருங்கிக் குனிந்து விறுவிறுவெனப் பேசினான்: ”பாவெல், அந்திரேய், நான் – எங்கள் மூவருக்குள்ளும் ஒரு ஒப்பந்தம். அவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டால், மறுநாளே நான் உங்களை இங்கிருந்து நகருக்குக் கொண்டு போய்விடுவது என்பது எங்கள் ஏற்பாடு” என்றான். அவனது குரல் பெருந்தன்மை நிறைந்ததாகவும், அவளது நலத்தில் அக்கறை கொண்டதாகவும் இருந்தது. ”சரி இங்கு ஏதாவது சோதனை நடந்ததா?”

”ஆமாம். அவர்கள் எல்லாவற்றையும் வெட்கமோ மனச்சாட்சியோ இன்றி உலைத்துக் கலைத்து எறிந்துவிட்டுப் போனார்கள்” என்றாள் அவள்.

“அவர்கள் எதற்காக வெட்கப்பட வேண்டும்?” என்று தன் தோளைக் குலுக்கிக்கொண்டு கேட்டான் நிகலாய். பிறகு அவள் என் நகருக்கு வீடு மாற்றிக்கொண்டு செல்ல வேண்டும் என்பதை விளக்கிச் சொன்னான்.

அவனது நட்பும் பரிவும் கலந்த நயவுரையை அவள் காது கொடுத்துக் கேட்டாள். லேசாகப் புன்னகை புரிந்து கொண்டான். அவன் கூறும் காரணங்களை அவள் புரிந்துகொள்ளாவிட்டாலும், அவள் மனத்தில் எழும்பிய அன்பு கனிந்த நம்பிக்கையைக் கண்டு அவளே வியந்து கொண்டாள்.

“பாஷாவின் விருப்பம் அதுவானால், உங்களை நான் ஏதும் சிரமத்துக்கு ஆளாக்காது இருந்தால்…..” என்றாள் அவள்.

“அதைப் பற்றி கவலையே வேண்டாம்” என்று குறுக்கிட்டான் அவன். “நான் தன்னந்தனியாகத்தான் வாழ்கிறேன். எப்போதாவது என் சகோதரி மட்டும் என்னைப் பார்க்க வருவாள்.”

”நான் சும்மா வந்து இருந்து கொண்டு உங்கள் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது” என்றாள் அவள்.

“விருப்பம் இருந்தால், அங்கு வேலை தேடிக்கொள்ளலாம்” என்றான் நிகலாய்.

வேலை என்ற எண்ணம். தனது மகனும் அந்திரேயும் பிற தோழர்களும் செய்யும் வேலையோடு எப்படியோ பிணைப்புற்றிருப்பதாக அவள் உணர்ந்தாள். அவள் நிகலாய்க்குப் பக்கமாக நெருங்கிச் சென்று அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தாள்.

”உண்மையாகவா? உங்களால் தேடித்தர முடியுமா?” என்று கேட்டாள்.

”என் வீட்டில் அதிகமான வேலை ஒன்றும் இருக்காது. நான்தான் பிரம்மச்சாரி ஆயிற்றே…”

‘நான் அதைப் பற்றி நினைக்கவில்லை – வீட்டு வேலையைப் பற்றியல்ல!” என்று மெதுவாகச் சொன்னாள் அவள்.

அவள் பெருமூச்செறிந்தாள்; தான் சொன்னதை அவன் புரிந்து கொள்ளாமல் போனதால் மனம் நொந்தாள். அவனோ அவளருகே குனிந்து பார்த்தவாறு புன்னகை புரிந்தான். சிந்தனை வயப்பட்டவனாகப் பேசினான்.

படிக்க:
நீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா ?
சபரிமலைத் தீர்ப்பு : எது மத உரிமை ? வழிபடும் உரிமையா தடுக்கும் உரிமையா ? தோழர் மருதையன்

”நீங்கள் மட்டும் பாவெலைப் பார்ப்பதற்கு அனுமதி பெற்று அவனைச் சந்தித்து தமக்காக ஒரு பத்திரிகை வெளியிட வேண்டும் என்று நம்மைக் கேட்டுக்கொண்ட அந்த விவசாயிகளின் முகவரிகளை அவனிடமிருந்து எப்படியாவது தெரிந்துகொண்டு வரமுடிந்தால்…..”

“எனக்கே அவர்களைத் தெரியும்” என்று உவகையோடு கூறினாள் அவள். ‘நான் அவர்களைக் கண்டுபிடித்து, நீங்கள் என்ன செய்யச் சொல்கிறீர்களோ, அத்தனையும் செய்கிறேன். நான்தான் அவர்களுக்குச் சட்ட விரோதமான புத்தகங்களைக் கொடுத்து உதவுகிறேன் என்று எவரும் என்னைச் சந்தேகப்படமாட்டார்கள். கடவுள் கிருபையால் நான் தொழிற்சாலைக்குள்ளே கூடப் பிரசுரங்களைக் கொண்டு போகவில்லையா?”

தன் முதுகிலே ஒரு மூட்டையும் கையிலே ஒரு தடிக்கம்பும் தாங்கி, கிராமங்களையும், காட்டுப் பிரதேசங்களையும், சாலை வழிகளையும் கடந்து நடந்து திரிய வேண்டும் என்று ஒரு ஆவல் அவள் மனத்தில் திடீரென எழுந்தது.

”இந்த வேலைக்கு என்னை ஏற்பாடு செய்யுங்கள். உங்களை மிகவும் கேட்டுக்கொள்கிறேன். எல்லா பிரதேசத்திலுள்ள சகல ரோட்டு பாதைகளிலும் நான் செல்லுவேன். கோடையிலும் குளிர்காலத்திலும் – நான் சாகிற வரையில் – ஒரு காம யாத்திரிகளைப் போலச் சுற்றித் திரிகிறேன். எனக்கு இது ஒரு மோசமான வேலையென்று நினைக்கிறீர்களா?”

வீடு வாசலற்ற ஒரு தேசாந்திரியாக வீடு வீடாய், கிராமத்துக் குடிசை வாயில்களில் சென்று கிறிஸ்துவின் பெயரைச் சொல்லிப் பிச்சையெடுக்கின்ற ஒரு யாத்திரைவாசியாகத் தன்னைக் கற்பனை பண்ணிப் பார்த்ததால் ஏற்பட்ட சோக உணர்ச்சி அவள் இதயத்தில் நிரம்பி நின்றது.

நிகலாய் அவளது கரத்தை லேசாகப் பற்றிப்பிடித்து, தனது கதகதப்பான கையால் அதைத் தட்டிக்கொடுத்தான். பிறகு அவன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னான்.

“சரி, அதைப்பற்றி நாம் பின்னர் பேசிக்கொள்ளலாம்.

“நம்முடைய குழந்தைகள், நமது இதயத்தின் அன்புருவங்களான நம் குழந்தைகள், தங்களது வாழ்வையும் ஆசைகளையும் துறந்து, சுயநலத்தைப் பற்றிய எண்ணம் சிறிதுகூட இல்லாமல் பாடுபட்டுச் சாகும்போது நான் ஒரு தாய், சும்மா இருக்க முடியுமா?”

நிகலாயின் முகம் வெளுத்தது.

”இந்த மாதிரி வார்த்தைகளை நான் இதற்கு முன்பு கேட்டதேயில்லை” என்று அவளது முகத்தையே பரிவு கலந்த பார்வையோடு நோக்கியவாறே அமைதியாகச் சொன்னான் அவன்.

“நான் வேறு என்னத்தைச் சொல்ல?” என்று தன் தலையைச் சோகத்தோடு அசைத்துக்கொண்டும், கைகளை வெறுமனே ஆட்டிக் கொண்டும் கேட்டாள் அவள். “என் நெஞ்சுக்குள்ளே துடிதுடிக்கும் இந்தத் தாயின் இதயத் துடிப்பை எடுத்துக் கூறுவதற்கு மட்டும் எனக்கு வார்த்தைகள் இருந்தால் …”

அவள் எழுந்தாள். உத்வேகம் நிறைந்த எத்தனையோ சொற்கள் அவளது தலைக்குள்ளே பின்னி முடைந்து குறுகுறுப்பதால் அவளது இதயத்தில் ஏற்பட்ட பெரும் பலத்தினால் அவள் எழுந்து நின்றாள்.

“அந்த வார்த்தைகளைக் கேட்டு ஒவ்வொருவரும் அழுவார்கள். கடை கெட்டவர்கள்கூட, வெட்கமற்ற பிறவிகள்கூடக் கண்ணீர் சிந்துவார்கள்!”

நிகலாவும் எழுந்தான். மீண்டும் ஒருமுறை கடிகாரத்தைப் பார்த்தான்.

“சரி, அப்படியென்றால் இதற்கு ஒத்துக்கொள்கிறீர்கள். நகருக்கு – என் இடத்துக்கு – வருகிறீர்கள், இல்லையா?

அவள் தலையசைத்தாள்.

“சரி, எப்போ? கூடிய சீக்கிரத்தில், சரிதானே” என்று பரிவோடு கூறினான் அவன். “நீங்கள் வருகிற வரையில் எனக்குக் கவலைதான்.”

அவள் அவனை வியப்புடன் பார்த்தாள். அவள் அவனுக்கு என்ன வேண்டும்? அவள் முன் தலைகுனிந்தவாறு குழப்பமான புன்னகை செய்தவாறு, கரிய கோட்டணிந்து, சமீப நோக்குடன் கூனி நின்று கொண்டிருந்தான் அவன். அவனது தோற்றம் அவனது இயற்கைக்கு முரண்பட்டுத் தோன்றியது.

“உங்களிடம் ஏதாவது பணம் காசு இருக்கிறதா?” என்று கண்களைத் தாழ்த்திக்கொண்டு கேட்டான் அவன்.

”இல்லை.”

உடனே அவன் தன் பைக்குள் கையைவிட்டு, தன் மணிப்பர்சை எடுத்து, அதைத் திறந்து பணத்தை எடுத்து நீட்டினான்.

“இதோ, இதைத் தயைசெய்து பெற்றுக்கொள்ளுங்கள்” என்றான்.

தாய்க்குத் தன்னையறியாமலேயே இளஞ்சிரிப்பு வந்தது. அவள் தலையை அசைத்துவிட்டுச் சொன்னாள்;

தன் முதுகிலே ஒரு மூட்டையும் கையிலே ஒரு தடிக்கம்பும் தாங்கி, கிராமங்களையும், காட்டுப் பிரதேசங்களையும், சாலை வழிகளையும் கடந்து நடந்து திரிய வேண்டும் என்று ஒரு ஆவல் அவள் மனத்தில் திடீரென எழுந்தது.

“உங்களிடம் எல்லாமே புதுமாதிரியாகத்தான் தோன்றுகிறது. பணம்கூட உங்களுக்கு ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. சிலர் அந்தப் பணத்துக்காகத் தங்கள் ஆத்மாக்களையே விற்றுவிடுகிறார்கள். ஆனால் உங்களுக்கோ அது ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே நீங்கள் பணத்தை வைத்திருக்க ஒப்புவதுபோலத் தோன்றுகிறது.”

நிகலாய் மெதுவாகச் சிரித்தான்.

“பணமா, அது ஒரு நச்சுப்பிடித்த பொருள். வாங்குவதானாலும் சரி, கொடுப்பதானாலும் சரி. மனத்துக்கே பிடிப்பதில்லை. அவன் அவள் கையைப் பற்றி அதை லேசாகப் பிசைந்தான். பிறகு மீண்டும் சொன்னான்:

“சீக்கிரம் கிளம்பிவிடுங்கள்!”

பிறகு அவன் வழக்கம் போலவே அமைதியாகச் சென்றான். அவன் செல்வதை அவள் வாசல் வரை சென்று பார்த்தாள். அப்போது தனக்குள் நினைத்துக் கொண்டாள்.

“எவ்வளவு அன்பான மனம்! ஆனால் அவன் எனக்காகப் பரிதாபப்படவே இல்லை.”

இந்த எண்ணம் அவளுக்குப் பிடிக்கவில்லையா, அல்லது அதிசயத்தைத் தந்ததா என்பதை அவளால் உணரக்கூட முடியவில்லை.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்