திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் காவிரி உரிமை மீட்பு பிரச்சார நடைபயணக் குழுத் தோழர்களை வரவேற்கும் விதமாக இன்று (26-04-2018) மாலை 5.00 மணியளவில் திருவாரூர் தைலம்மை திரையரங்கம் எதிரில் வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது மக்கள் அதிகாரம். விவசாய சங்கப் பிரதிநிதிகளும் ஜனநாயக சக்திகளும் இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றவிருக்கின்றனர்.
**
‘’காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது!’’ என்ற முழக்கத்தின் கீழ், வருகிற ஏப்.28 அன்று சென்னை தாம்பரம் மார்க்கெட் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர் மக்கள் அதிகாரம் அமைப்பினர்.
மக்கள் அதிகாரத்தின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் தலைமையில் நடைபெறும் இப்பொதுக்கூட்டத்தில், தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் தியாகு; தன்னாட்சி தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு ஆழி செந்தில்நாதன்; தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தஞ்சை புண்ணியமூர்த்தி; காவிரி விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த திருவாரூர் ஜி.வரதாஜன் மற்றும் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.
பெண் பத்திரிக்கையாளர்களைப் பற்றி பா.ஜ.க பிரமுகர் எஸ்.வி. சேகர் வன்மத்துடன் அவதூறு பொழிந்தார். அதை பகிர்ந்தேன், படிக்கவில்லை, மன்னிக்க என்று நாடகமாடினார். இதை எதிர்த்து பத்திரிகையாளர்கள் போராடினார்கள். சிலர் பா.ஜ.க அலுவலகத்தில் மனுக் கொடுத்தார்கள். சிலர் அதைத் தாண்டி சேகர் வீட்டின் முன்பு நியாயம் கேட்டு போராடினார்கள். கூடவே அந்த வீட்டுக் கதவின் மீது இரண்டு கற்களை வீசினார்கள். #savetamiljournos
உடனே மேட்டுக்குடி ஆங்கில பத்திரிகையாளர்கள் சிலருக்கு கோபம் வந்து விட்டது. எப்படி ஒரு பத்த்திரிகையாளர் தனது தொழில் அறத்தை மீறலாம் என்று துள்ளினார்கள். தங்களது கோழைத்தனத்தையே மற்றவரிடம் எதிர்பார்க்கும் இந்த காரியவாதிகள்தான், உண்மையில் ஜெயலலிதா போன்ற ஒடுக்குமுறையாளர்களை இதயத்தில் வைத்து போற்றுபவர்கள்.
இடையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்களை வேலை நீக்கம் செய்வதற்கு ஒரு தொலைக்காட்சி நிர்வாகம் முயல்வதாக செய்தி வந்திருக்கிறது.
பா.ஜ.க தூண்டுதலில், தொலைக்காட்சி நிர்வாகங்கள் அப்படி நீக்கினால் தமிழ் சூழலில் ஒரு பத்திரிகையாளர் மக்கள் நலனோடும், முற்போக்கு பார்வையோடும் செயல்படுவதற்கான இடமே இருக்காது என்பது உண்மை.
தமிழ் பத்திரிகையாளர்களை காப்பாற்ற வேண்டும் என்று ஃபேஸ்புக்கில் பத்திரிகையாளர்களும், பல்வேறு ஜனநாயக சக்திகளும் #savetamiljournos குரல் கொடுத்து வருகின்றனர். அவற்றில் சில இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன.
*****
Kavin Malar
உரக்கச் சொல்வோம்…
“முதல் கல்லை நாம் எறிந்திருக்கிறோம்”. காலணியை முதலில் கழற்றி எறிந்தது ஒரு பெண் பத்திரிகையாளர்தான். கண்ணில் பொங்கும் நீருடன் அந்தக் காரியத்தைச் செய்தார் அவர். அந்தக் கண்ணீரைவிட பலருக்கு கல்தான் பெரிதாகிவிட்டது.
சொல்லடியைவிட கல்லடி பெரிதல்ல தோழர்களே!
Divya Bharathi
காவேரி நியூஸ் சேனலின் இந்த கம்பீரமான அறிவிப்பு பெரும் நம்பிக்கை தருகிறது. மனதார அந்த நிர்வாகத்தை நான் பாராட்டுகிறேன். இதுவே ஊடக அறம்.❤
பெரும் டீவி சேனல்கள் காவேரி நியுஸ் சேனலிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளட்டும்.
பொறுக்கிகளுக்கு எதிராக இது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதை விடுத்து தங்கள் ஊழியர்களை பழிவாங்கும் முயற்சியில் இறங்கும் பெரும் டீவி சேனல்களை நினைக்கையில் கேவலமாக இருக்கிறது. ஊடக நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அந்த சேனல்களை ஒட்டுமொத்தமாக நாம் புறக்கணிப்போம்.
மு.வி.நந்தினி
வேளாண் குடும்பப் பின்னணியில்(பெரும்பாலும்) பிறந்து அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிக்குப் போகாத தலைமுறையில் முதல் ஆளாக கல்லூரிக்குள் நுழைந்து, ஊடகப்பணி என்றால் என்னவென்று தெரியாத பெற்றோரிடம் விளக்கம் கொடுத்து, பத்து ஊடகங்களின் வாசலில் காத்திருந்து, ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்காக இரவு 11 மணி வரை உழைத்து, ஆமாம் திறமையால் மட்டுமெ முன்னேறி, ஏகப்பட்ட ஒடுக்குமுறைகளை சகித்து, வேலையிழந்து, மீண்டும் வேலைகிடைத்து முழுமையாக இல்லாவிட்டாலும் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் சமூகத்துக்கா எழுதும் பெண் பத்திரிகையாளர்க(ஆண்களும்தான்)ளை படுத்தால்தான் பிழைக்க முடியும் என அவதூறு செய்தால் சுரணையில்லாமல் இருப்பார்களா?
kural
கல் எறிவது யார்?
பத்திரிகையாளர் லட்சுமி சுப்ரமணியனின் கேள்விக்கு பதிலாக கன்னத்தை தட்டிய ஆளுநரின் சீரழிந்த செயலுக்கு கடுமையன கண்டனம் எழுந்தது. மன்னிப்புக் கேட்டார் ஆளுநர். ஒரு பெண் தன் பணியிடத்தில் தன் விருப்பமில்லாமல் பெண் என்பதற்காகவே ஒரு ஆணால் சீண்டலுக்கு உள்ளாவது தண்டனைக்குரிய குற்றம். மேதகு ஆளுநர் என்ற காரணத்துக்காக மன்னிப்பு கேட்டவுடன் இந்த விவகாரம் கைவிடப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர், புதிய தலைமுறை செய்தியாளரை பாலியல் சீண்டல் பேச்சுக்களை உதிர்த்தபோதும் இதேதான் நடந்தது. ’வருத்தம்’ மட்டுமே தெரிவித்தார் அவர். இதுவே தாரளவாத பத்திரிகையாளர்கள் பின்பற்றும் கொள்கைகளைக் கொண்ட நாடுகளில் நடந்திருந்தால் தொடர்புடையவர்கள் பதவி விலகலுக்கு உள்ளாகி இருப்பார்கள்.
பாலின சமத்துவம் காலில் போட்டு மிதிக்கப்படும் இந்நாட்டில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிரான பாலியல் ரீதியிலான ஒடுக்குமுறைகள் இரண்டாம்பட்சமான பிரச்னையாகவே எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஒருவேளை, அடுத்தடுத்த நடந்த இந்த இரண்டு பிரச்னைகளையும் பத்திரிகையாளர்கள் மிகத் தீவிரமான எதிர்வினை ஆற்றியிருந்தால், ஆளுநரே மன்னிப்புக் கேட்ட பின்பும், ஆளுநரை நியமித்த பாஜக அரசின் விசுவாசிகள் பெண் பத்திரிகையாளர்களை இத்தனை மோசமாக அவதூறு செய்திருக்க மாட்டார்கள் என்கிற முடிவுக்கு நாம் வரவேண்டியிருக்கிறது.
பத்திரிகையாளர் லட்சுமி சுப்ரமணியனிடன் ஆளுநர் மன்னிப்பு கேட்டபின் ட்விட்டரில் அவருக்கு எதிராக மிகக் கீழ்த்தரமான பதிவுகள் போடப்பட்டன. பொதுவெளியில் இயங்கும் பெண்கள் பொதுமகளீராகவே இருக்கக்கூடும் என்கிற பழமைவாதிகளின் குரலாக அவை ஒலித்தன. இதையெல்லாம் பாஜகவின் ட்ரோல் படை செய்துகொண்டிருந்தது. இந்த ட்ரோல்கள் குரலை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் சினிமா அரசியல் பிரபலமாக அறியப்பட்ட எஸ். வி. சேகர் அகமகிழ்ந்து பகிர்கிறார். (மன்னிப்பு கடித்தத்தில் படிக்காமல் பகிர்ந்துவிட்டேன் என்று சொல்வதை அவர் பகிர்ந்திருந்த மூவர்ணகொடியே காட்டிக்கொடுத்துவிடுகிறது).
பத்திரிகையாளரின் கன்னத்தை தொட்டதற்காக ஆளுநர் தன் கையை கழுவ வேண்டும் என்கிற சாதிய மனோநிலையுடன் தொடங்கும் அந்தப் பதிவு பெண் ஊடகவியலாளர் படுக்கையை பகிர்ந்துகொள்ளாமல் முன்னேற முடியாது என சங்கராச்சாரியின் கருத்தை குமட்டி எடுத்து முடிகிறது. இந்தப் பதிவு சில மணி துளிகளிலேயே கடும் கண்டனத்துக்கு உள்ளாகி, தன் முகநூல் கணக்கையே முடக்கிவிட்டுப் போய்விட்டார் எஸ். வி. சேகர். ‘குரல்’ அமைப்பு எஸ். வி. சேகர் கைது செய்யப்பட வேண்டும் என முதல் முழக்கத்தை எழுப்பியது. பல பத்திரிகையாளர்கள் இதே கருத்தை காட்டத்துடன் வெளிப்படுத்தினர். இந்த நிலையில் பல பத்திரிகையாளர் அமைப்புகள் ஒருங்கிணைந்து பாஜக தலைமையகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்றும் எஸ்.வி. சேகருக்கு எதிராக புகார் கொடுப்பதென்றும் முடிவெடுக்கின்றன.
மத்திய அரசிலும் மாநில அரசிலும் எஸ். வி. சேகர் ‘செல்வாக்கு’ குறித்து ஊடகவியலாளர்கள் அறியாமல் இருக்க முடியாது. அவரை கைது செய்ய வேண்டும் என்கிற குரலைக்கூட அழுத்தமாக வைக்காமல் அடையாள போராட்டங்களை நடத்திவிட்டு சில ஊடக அமைப்பினர் திரும்பினர். அரசியல்பாதிகள், சமூக ஊடகங்களில் இயங்குகிறவர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர் என பல தளங்களில் இயங்கும் பெண்களை ஒட்டுமொத்தமாக வீட்டுக்குள் அடைந்துகொள்ளுங்கள் என்கிற சித்தாந்தத்துடன் அவதூறு செய்யும் பாஜக-சங் பரிவார கும்பலின் மீதான ஒட்டுமொத்த கோபத்தின் விளைவாக எஸ். வி. சேகரின் வீட்டு முன் சில பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
பேருந்திலோ, அலுவலகத்திலோ பாலியல் சீண்டலுக்கும் அவதூறு சொற்களுக்கும் உள்ளாகும் பெண்கள் இ.பி.கோ சட்டங்களை சிந்திப்பதில்லை. செருப்பை கழற்றி அடிப்பது தான் நடைமுறை. தன்மானமுள்ள செயல். எஸ்.வி.சேகர் வீட்டின்முன் கல் எறியப்பட்டதும் இப்படித்தான் இயல்பாக நடந்தது. அழுதுகொண்டே ஒரு பெண் பத்திரிகையாளர் தான் செருப்பை கழற்றி எறிந்தார். எவருக்கும் காயம் ஏற்படாதபட்சத்தில் இந்தப் போராட்டங்களில் என்ன தவறு இருக்க முடியும்? எஸ். வி. சேகர் வீட்டுக்கு வெளியே எவரும் இல்லை என்பதை அறிந்துதான், தங்களுடைய கடுமையான எதிர்வினையை தெரிவிக்க இரும்பு கேட்டின் மீது கல்லெறிகிறார்கள் போராட்டக்காரர்கள். இரும்பு கேட்டுக்கேகூட வலிக்காதபோது சில லிபரல் ஊடகவாதிகள் அறம் அறுந்துவிட்டதாக கதறுவது எஸ். வி. சேகர் கும்பலுக்குத்தான் சாதகமாக உள்ளது.
போராடுவதுகூட தெரியாமல் போராடி யாருடைய மனதும் புண்படக்கூடாது என்கிற தெளிவுடன் இவர்கள் நடந்துகொள்வது எப்போதும் சங் பரிவார் கும்பலுக்கு ஆதரவாகவே இருந்துள்ளது. இப்போதும்கூட இரும்பு கேட்டுக்குக்கூட வலிக்காத நியாமான உணர்வை ‘வன்முறை’யாக சித்தரித்து அவதூறு பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். சிறு அமைப்புகள் ஊடகங்களாக செயல்படுகின்றன. இந்த சிறு ஊடகங்கள் செய்யும் பணியை, பெரும் ஊடகங்களில் முதலாளிகளுக்கு பயந்துகொண்டே பணியாற்றுகிறவர்களால் செய்ய முடியாது. நிதர்சனம் இப்படியிருக்க, சிறு ஊடகங்களில் பத்திரிகையாளர்கள் அல்ல என்று சொல்வதன் மூலம் ‘தூய்மைவாதம்’ இங்கே கட்டமைக்கப்படுவதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த தூய்மைவாதம் பார்ப்பனியத்தை ஒத்தது!
ஜல்லிக்கட்டில் நடந்த ‘வன்முறை’, ஐபிஎல் போராட்டத்தில் நடந்த ‘வன்முறை’, பத்திரிகையாளர் போராட்டத்தில் நடந்த ‘வன்முறை’ என போராட்டக் களங்களில் நடப்பைகளை ‘வன்முறை’ யாக சித்தரித்து காட்டிக்கொடுப்பவர்கள் கூடவே இருக்கிறவர்கள் என்னும்போது இத்தனை நாளும் நீங்கள் பேசிய ‘அறங்கள்’ வீழ்ந்துவிடுகின்றன. ஒடுக்கும் அரசுக்கோ அவதூறுகளை ஓயாது செய்யும் பரிவார கும்பலுக்கோ நீங்கள்தான் குறிப்புகளை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். சகோதரத்துவ முரண்பாடுகளுடன் இதைத் தெரியாமல் செய்கிறீர்களா? அல்லது கும்பல்களுக்கு செய்தி சொல்கிறவர்களாக இருக்கப்போகிறீர்களா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
– குரல்
Journo’s voices for the masses
Kavin Malar
டிவிட்டரில் எஸ்.வி.சேகரிடம் மன்னிப்பு கேட்ட சில ஆங்கில ஊடகவியலாளர்களின் செயல் புல்லரிக்க வைக்கிறது. சேகர் போன்றவர்களிடம் மன்னிப்பு கேட்பதன்மூலம் எதை நிறுவுகிறார்கள் இவர்கள்? சக பத்திரிகையாளர்களுக்கு குரல் கொடுக்க வக்கற்றவர்கள் எதிரியிடம் சரணடைவது கல்லெறிந்தோரின் மீது வீசப்படும் சேறுதான். கல்லெறிந்த 30 பேரில் ஒருவர் கூட மன்னிப்பு கேட்கத் தயாரில்லாதபோது ஒட்டு மொத்த பத்திரிகையாளர்களுக்கும் தங்களை பிரதிநிதிகளாக உங்களை நீங்களே எப்படி கருதிக்கொண்டீர்கள்?
பத்திரிகையாளர்கள் சார்பாக மன்னிப்பு கேட்கும் அதிகாரம் உங்களுக்கு இருப்பதாக எப்படி நீங்கள் எண்ணிக்கொள்கிறீர்கள்?
Arul Ezhilan
ஒரு வெறிநாய் தெருவில் வருகிற போகிறவர்களையெல்லாம் கடிக்குமாம், விரட்டுமாம். அதற்கு பயந்துகொண்டு வெளியே வராமலா இருக்க முடியும்? அந்த வெறிநாயை என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் நம் ஊடகத் தோழர்கள் செய்திருக்கிறார்கள்.
தங்கள் சுயமரியாதைக்காகவும், தங்கள் ஊடகப்பணியின் மாண்பைக் காக்கவும் நம் ஊடகத் தோழர்கள் போராடி இருக்கிறார்கள்.இந்துத்துவாக் கும்பலின் அழுத்தங்களுக்கும், அதிகாரத்துக்கும் பணிந்து, ஊடக முதலாளிகள் போராடிய ஊடகத் தோழர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் துணிவார்களேயானால், அவர்களுக்கு நாம் ஒன்றை அழுத்தமாகச் சொல்லிக் கொள்வோம்.
“மக்கள் போராடியவர்கள் பக்கம் இருக்கிறார்கள்!”
#savetamiljournos
Kavin Malar
ஆங்கில ஊடகங்களில் பணிபுரிவோர்தான் இத்தகைய மன்னிப்பு கேட்டுள்ளனர். சேகரின் வீட்டின் முன்பு நடந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வந்தோரில் ஒரேயொரு ஆங்கில ஊடகவியலாளர் கூட இல்லை. ஒரேயொரு பார்ப்பனர்கூட இல்லை. யார் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் இங்கே ஆங்கில தமிழ் ஊடகங்களுக்கிடையே இருக்கும் பாரதூர வேறுபாடுகள் வெளிப்படையானவை. அவற்றை வெகுகாலத்திற்கு மறைக்க முடியாது. இது குறித்து இங்கு பொதுவாக யாரும் பேசுவதும் இல்லை, ஒரு சிலரைத் தவிர. சிலர் கேட்கிறார்கள். ஏன் இப்படி பதிவுகளை போடவேண்டும்? நம் ஒற்றுமை குலையுமில்லையா என்கின்றனர். என்ன ஒற்றுமை வாழ்கிறது இங்கே..அது குலைவதற்கு? சிலவற்றை உடைத்துப்பேச வேண்டிய கட்டாயத்திற்கு இந்தப் போராட்டம் நம்மைத் தள்ளியிருக்கிறது.
மகிழ்நன் பா.ம
எஸ்.வி.சேகர் வீட்டில் கல்லுட்டது ரவுடித்தனம்னு நியூஸ்18 தமிழ் ஊடகத்தை மிரட்டி பார்க்குது காவி கும்பல்….
இறந்து போய்விட்ட பெரியாரின் சிலை மீது கைவைப்பேன் என்று சொன்ன கும்பலுக்கெதிராக, அவர் விதைத்த சுயமரியாதையோடு கொதித்த தமிழ்ச்சமூகம்,
களத்திலும், தங்கள் வேலையினூடாகவும் வினையாற்றும் ஊடகவியலாளர்களை காக்க இந்த #savetamiljournos எனும் ஹேஷ் டேக்கின் கீழ் பதிவு செய்யுங்கள்…
பணி பாதுகாப்பு தொழிலாளர்களின் உரிமை, அதை மோடி கும்பலோ, மோடியின் அல்லக்கைகளோ பறிப்பதை நாம் அனுமதிக்க கூடாது…..
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை
அன்புடையீர் வணக்கம்,
ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாக ஊடகங்கள் உள்ளன. பல கடினமான சூழ்நிலைகளைக் கடந்துதான் பலரும் இந்த துறையில் பணியாற்றிவருகின்றனர்.
இந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர், ஊடகவியலாளர்களைக் குறித்து செய்திருந்த பதிவும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளும் மிகவும் வருத்தமளிக்கின்றன.
எஸ்.வி.சேகர் செய்திருந்த பதிவு, பெண் ஊடகவியலாளர்கள் பணிக்காகவும், சம்பளத்திற்காகவும், பணி உயர்வுக்காகவும் தங்கள் சுயமரியாதையையும், கௌரவத்தையும் இழப்பவர்கள் என்றும், ஊடக உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளை பெண் பித்தர்கள் என்றும் ஒட்டுமொத்தமாக சித்தரிக்கிறது. இது ஊடகப் பணியாளர்கள் மட்டுமின்றி அனைவரையும் கோபம் கொள்ளச் செய்திருக்கிறது.
ஒரு புதிய வாய்ப்பு திறக்கப்பட்டிருப்பதன் காரணமாக எராளமான புதிய இளைஞர்கள், பெண் பணியாளர்கள் அதிலும் முதல் தலைமுறையைச் சேர்ந்த பலர் இந்தப் பணிக்கு வந்திருக்கின்றனர். இரவு-பகல் பாராமல் கடினமான பணியைச் செய்துகொண்டுள்ளனர். அவர்களைக் குறித்து இத்தகைய அவதூறுக் கருத்தைப் பரப்புவது, குடும்ப வாழ்க்கையிலும், சமூகத்தின் முன்னிலையிலும் கூனிக் குறுகச் செய்திடும் உள்நோக்கம் கொண்டது. இதன் மூலம் துணிச்சலான, தவறுகளைத் தட்டிக் கேட்கும், ஊடகப் பணியாளர்களை அச்சுறுத்த விரும்புகின்றனர்.
ஊடகத்துறையினரை இழிவுப்படுத்தி, மிரட்டி பணியவைக்கச் செய்யும் இந்த அறுவெறுப்பான பதிவுக்கு எதிராக ஊடக நிறுவனங்களே புகாரளித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருக்க வேண்டும். இப்போதும் கூட பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா, தமிழ்நாடு மகளிர் ஆணையம் ஆகியோரிடம் ஊடக நிறுவனங்களே புகார் அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
காவல்துறையும் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவதுடன், கைதும் செய்திருக்க வேண்டும். இவையெல்லாம் நடக்காத நிலையிலேயே ஊடகத்தில் பணியாற்றுவோர் போராட்டத்திற்கு தள்ளப்பட்டனர்.
தற்போது, போராட்டத்தைக் காரணம் காட்டி, எஸ்.வி.சேகரை தப்பவைக்கும் நோக்கத்துடன் பாஜகவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். ஊடக நிறுவனங்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடுமையான நெருக்கடியைக் கொடுத்துவருவதாக அறிகிறோம். ஆளுங்கட்சி தனது அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தியும், விளம்பர வருவாய் என்கிற ஆசை காட்டியும், ஊடகப் பணியாளர்களை பழிவாங்குவதற்கு நிர்ப்பந்திப்பதையும், அதற்கு நிறுவனங்கள் பணிய வற்புறுத்தப்படுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மோசமான பிரச்சனையாகப் பார்க்கிறது.
ஏற்கனவே கடந்த காலங்களில் பாஜகவை எதிர்த்து கருத்து தெரிவித்ததற்காக சில ஊடகவியலாளர்கள் பழிவாங்கப்பட்டது, சில ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியதும் அனைவரும் அறிந்ததே. எத்தகைய தவறு செய்தாலும் தாங்கள் ஆளுங்கட்சி என்பதால் – எந்த நியாயமான விமர்சனமும் ஊடகங்களில் வந்துவிடக் கூடாது என்பதே இவர்களின் நோக்கமாக இருக்கிறது.
அவர்களுடைய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் பத்திரிக்கை நிர்வாகங்கள் நடந்துகொண்டால் அது ஊடக சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் விடப்பட்ட அச்சுறுத்தலாகவே அமையும்.
எஸ்.வி.சேகர் எழுதியதைப் போன்ற கீழ்த்தரமான பேச்சுக்களை தினமும் அள்ளி வீசுவோரைத் தப்புவிக்கவும், யாரும் எதிர்க்குரல் எழுப்பக் கூடாது என்பதற்குமாகவே இத்தகைய நிர்ப்பந்தங்கள் கொடுக்கப்படுவதாக நாங்கள் கருதுகிறோம். பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தங்கள் பணி காரணமாக அச்சுறுத்தலை எதிர்கொள்கிறபோது, நிறுவனங்கள் உடன்நின்று பாதுகாக்க வேண்டுமென அன்புடன் வலியுறுத்துகிறோம்.
– கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
Radhika Sudhakar
பார்ப்பன இந்திய இந்து சேகருக்கும் அவர் மீது மென்மை காட்டக் கூடியவர்களுக்கும் ஒரு கேள்வி. ஆண்களே தவறாக நடந்து கொண்டாலும் பெண்களின் ஒழுங்கீனம் என வர்ணிக்கும் சேகரின் இந்து மத ‘முற்போக்கு’ கண்டும் அறிவுத்திறமையை கண்டும் வியந்தேன். என் கேள்வி ஒன்று தான். சில காலம் முன்பு வரை அனைத்து ஆண் ஊடகர்களின் நண்பராக காட்டிக்கொண்ட சேகர், சில காலம் முன்பு, மிக பழங்காலம் அல்ல, சில காலம் தான், அவர் துறையை சார்ந்த பார்ப்பனரின் மனைவி பாடகி சுசித்ரா ஒரு மிகப்பெரிய அநீதி தன் துறை ஆண்கள் மூலமாக நடந்து வருவதாகவும் தான் சந்தித்து வருவதாகவும் பொது வெளியில் கூறினார்.
அப்பொழுது அவர் வாய் எங்கே சென்றது ? அவர் துறை தானே அது ? மிக வெளிப்படையான குற்றச்சாட்டு தானே அது! அப்பொழுது என்ன செய்தார் சேகர்? அவரது துறையே மூடி மறைத்த ஒன்றுக்கு அவரும் உடந்தையாக இருந்துவிட்டு இன்று பெண்களின் நடத்தையைப் பற்றி பேச இவர்களுக்கெல்லாம் என்ன அருகதை இருக்கின்றது? ஆனால் ஒரு பார்ப்பனரல்லாத பெண் ஊடகரிடத்தில் ஆளுநரின் சகிக்க முடியாத செயல்பாடு குறித்துக் கண்டித்ததும், அந்த செயல்பாடு கணடனத்திற்கு வந்தவுடன் ஊடக பெண்களின் நடத்தை பற்றி கேவலமாக பேசி ஆனந்தப்பட்டார் !
அப்பொழுது பார்ப்பன பெண்கள் தங்களை இதில் ஒரு பகுதியாக குறிப்பிட்டதாக பார்க்கவில்லையா? தன் துறையில் ஆண்கள் மீது எழுந்த குற்றச்சாட்டிற்கு சேகரோ அல்லது இன்று கல் எறிந்துவிட்டார்கள் என்று ஆத்திரப்படும் ஊடகத்துறை பார்ப்பன பெண்களோ என்ன செய்துவிட்டார்கள்? இரும்பு கதவின் மீது கல் எரிந்தது போன்ற மென்மையான செயல்பாடு அல்ல சுசித்ரா சந்தித்தது அல்லது ஆளுநர் செயல்பட்டது.
கதவின் மீது விட்டெறியப்பட்ட கல் பலகாலமாக கட்டமைத்த சாதியையும் அதன் ஆணாதிக்கம் மீதும் விட்டெறிந்த கல். பிராமணர்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்படாத ரௌடிகள் என்பதை தெரிந்தே வீசப்பட்ட கல். பிராமணர்கள் தங்களை எந்த சட்டத்திற்கும் உட்படாதவர்களாக நினைத்துக் கொண்டவர்கள் என்ற எண்ணத்தை உடைக்க வீசப்பட்ட கல். பார்ப்பனரல்லாதோரின் கோபத்தை வெளிப்படுத்திய கல் அது.
அதை பிராமண ஊடகப் பெண்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது ஊடகத்துறையில் நிலவும் சாதிய மற்றும் பெண்ணுரிமை குறித்த பார்ப்பன பெண்களின் பார்வையும் அதில் உள்ள வேறுபாட்டையும் தான் வெளிப்படுத்தியுள்ளது. பெண்கள் எல்லோரும் ஒன்று அல்ல, அவர்களின் உரிமைப் போரும் ஒன்று அல்ல சாதிய சமூகத்தில் என்பது மீண்டும் நிரூபித்துள்ளது. கணிசமாக பெருகிவரும் பெண் ஊடகத்தார் பற்றி வரலாற்றில் இதுவும் ஒரு சம்பவம் இனி இது எப்படி உருவெடுத்தாலும் கூட. கல்வித் புலத்தில் இயங்கிய எட்வர்ட் செய்ட் டும் கல்லெறிந்தவர் தான் இசுரேலியா ராணுவத்தினரை நோக்கி. இந்திய இராணுவத்தினரின் மீது கல்லெறியும் பலரும் மாணவர்கள் தான், காசுமீரத்தில். எனினும் , காசுமீரத்தின் உரிமை மறுக்கும் பக்குவம் எல்லோருக்கும் அமைவது கிடையாது.
எஸ் வி சேகர் வீட்டில் கல் எறிந்ததாகக் கூறப்படும் 30 பத்திரிக்கையாளர்களையும் வேலையை விட்டு நீக்க அழுத்தம் தரப்படுவதாக அறிகிறேன். இது கண்டிக்கத்தக்கது. குஜராத் கலவரம் செய்தவன் ஆட்சியில் கல்விட்டு எறிவதெல்லாம் தவறே இல்லை. #savetamiljournos
மு.வி.நந்தினி
#savetamiljounos பிரபலமாக இருக்கும் ஒருவர் பெண் பத்திரிகையாளர்களை வாய்ப்புக்காக படுக்கிறவர்கள் என பகிரங்கமாக பதிவுசெய்கிறார். அவருக்கு எதிராக போராடிய பத்திரிகையாளர்கள் அவருடைய கேட்டின் மீது செருப்பு வீசுகிறார்கள். சூடுசுரணையுள்ள பத்திரிகையாளர்கள் சக பத்திரிகையாளர்களின் உணர்வினை புரிந்துகொண்டு ஒதுங்கியிருப்பார்கள். ஒருசிலர் ஓடிவந்து ‘காட்டிக்கொடுத்து’ தங்களது சுயத்தை காட்டியிருக்கிறார்கள். இவர்களுக்காக ஒரு காலத்தில் ஆதரவாக இருந்தோம் என்று நினைக்கிறபோது அருவருப்பாக உள்ளது.
Kuttima Nasi is with Ameen Korky.
பத்திரிக்கை சுதந்திரமும்,
ஊடகவியலார்களின் பாதுகாப்பும்;
s.v சேகரின் பத்திரிக்கையாளர்களின் பார்வையை பற்றிய ஆபாச பேச்சில்,வழக்கு பதிந்து கைது செய்யும் நடவடிக்கை அரசு மேற்கொள்ளும் வேலையில்!
sv.சேகருக்கு முன்ஜாமீன் வாங்குவதில் காட்டும் முணைப்பும்,சேகர் தலைமறைவு என்ற செய்திகளும் நம்மை மறக்கடிக்க செய்யும் நிகழ்வு.
பத்திரிக்கையாளரின் பாதுகாப்பும்! நலனும்!
சேகரின் பேச்சை கண்டித்து அவரின் வீட்டு முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்களின் மீது வழக்கு புணையபடுவதும்! பணி நீக்கவும் நிர்பந்தபடுத்தப்படுவதாகவும் தகவல் கசிந்துள்ளது!
வெறுமனே மக்கள் பிரச்சனையை ஊடகங்களையும்!ஊடகவியாளர்களையும் குறைசொல்வதற்கும் எந்த அளவு உரிமை உள்ளதோ அதே அளவு அவர்களை பாதுகாப்பதிலும் உள்ளது.மக்களுக்கான பொறுப்பு!
இந்த பாதுகாப்பை கருதியே அவர்கள் அலுவலகத்திற்கு வேலை செய்வதோடு நின்றுவிடுகின்றனா்.
கோவையில் அனைத்து பாத்திரிக்கை நிருபர்களும்,ஊடகவியாளர்களும்.கண்டனத்தை பதிவு செய்கின்றனா்.
பாசிசம் எத்துறையில் வஞ்சித்தாலும் நீதிக்கேட்டு போராட வேண்டிய நிலையில் தமிழகம்! இப்பொழுது,பத்திரிக்கை துறையிலும் பாசிசத்தின் கருப்பாடுகள், கயமைத்தனத்தை கட்டு அவிழ்பதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
முற்போக்கு எழுத்தாளர்களும், ஊடகவியலார்களும் ஒன்றுபட்டு நலன் காக்க வேண்டும் மக்களும், ஒன்று இணைய வேண்டும்!
மு.வி.நந்தினி
#savetamiljournos பத்திரிகையாளர்கள் எஸ். வீ. சேகர் வீட்டு கேட்டின் மீது கல்லெறிந்ததற்காக பத்திரிகையாளர் மு. குணசேகரன் கண்டனம் தெரிவித்திருக்கும் ட்விட்டர் பதிவில் இந்துத்துவ ட்ரோல்கள் கடுமையாக எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட பலர் நியூஸ் 18 ஊடக நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பேசிவருகின்றனர். ஆனால், முற்போக்கு முகாமிலிருந்து ஒரு ஆதரவும் இல்லை. போராடிய பத்திரிகையாளர்கள் தங்கள் சொந்தக் காரணத்துக்காகத்தான் போராடினார்கள் என திராவிட, தமிழ்தேசிய உணர்வாளர்கள் நினைத்து அமைதி காக்கிறார்களா?
#savetamiljournos நீங்கள் நாலு பேருடன் படுத்தால்தான் ஊடகத்தில் பணியாற்ற முடியும் என ஒரு கழிசடை பதிவு போடுகிறது. அதை ரசித்து, தேசியகொடி பறக்க பகிர்கிறார் பிரபலமாகவும் ஒரு கட்சியின் முகமாகவும் இருக்கும் எஸ். வி. சேகர். மூன்றாம் தரமான இந்தச் செயல்பாட்டுக்கு மனுகொடுத்து யாருக்கும் வலிக்காமல் போராட்டம் நடத்துவது ஒரு சில பத்திரிகையாளர்களின் போராட்ட உத்தியாக இருக்கலாம். கழிசடை பதிவை அங்கீகரித்து வெளியிட்டவருக்கு சுரணையுடன் எதிர்வினையாற்றுவதும் ஒரு சில பத்திரிகையாளர்களின் உரிமை. அவர்கள் எதிர்வினைக்கு என்ன எதிர்வினை வரும் என்பதை அறிந்தேதான் செய்திருப்பார்கள். உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருந்துவிடுங்கள். உங்களுக்கேன் காட்டிக்கொடுக்கிற வேலை?
30 பத்திரிகையாளர்கள் பணி நீக்க முயற்சி? : எமர்ஜென்ஸியா நடக்கிறது?
ஊடகப் பெண்கள் குறித்து மிகக் கீழ்த்தரமான அவதூறு பரப்பியவருக்கு எதிராக போராடிய பத்திரிகையாளர்கள் கூண்டோடு பணிநீக்கம் செய்வது, ஊடக வரலாற்றில் கரும்புள்ளியாக அமைந்துவிடும். எஸ். வி. சேகர் வீட்டின் முன்கேட்டுக்கே வலிக்காத செருப்பு வீச்சுக்கெல்லாம், பணிநீக்கம் என்றால் இங்கே என்ன அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியா நடக்கிறது?
போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை பணி நீக்கம் செய்ய முயற்சி :
அ. மார்க்ஸ் கண்டனம்
போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை பணி நீக்கம் செய்ய முயற்சிகள் நடந்துவருவதாக எழுத்தாளரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான அ. மார்க்ஸ் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
“எஸ்.வி.சேகரின் ஆபாசப் பதிவை எதிர்த்த பத்திரிகையாளர்களின் போராட்டத்தை முன்வைத்து இங்குள்ள ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க வினர் சென்னையிலுள்ள முற்போக்குச் சிந்தனையுடன் கூடிய பத்திரிகையாளர்கள் எல்லோரையும் கூண்டோடு பழி வாங்கி ஒழித்துக் கட்ட தீவிரமாக முயல்கின்றனர்.
இன்று வழக்குத் தொடர்ப்பட்டுள்ள 30 பத்திரிகையாளர்களையும் பணி நீக்கம் செய்ய அந்தந்த நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.
சற்று முன் கிடைத்த செய்தியின்படி நியூஸ் 18 தொலைக் காட்சியைச் சேர்ந்த இரண்டு முக்கிய பத்திரிகையாளர்களைத் தற்போது கட்டாய விடுப்பில் அனுபப வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுவதாகத் தெரிகிறது.
அந்தத் தொலைக் காட்சியில் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரையும் நீக்க வேண்டும் எனவும் அழுத்தம் கொடுப்பதாகத் தெரிகிறது.
ஏற்கனவே சன் டிவி வீரபாண்டியன் இப்படிச் சங்கிகளின் அழுத்தத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் ஓடிவிட்டன.
இம்மி ஆதரவைக்கூடத் தமிழகத்தில் திரட்ட இயலாத சங்கக் கும்பல்கள் சேகர், ராஜா போன்ற ஆபாசப் பேச்சாளன்களை ஆட்டு வித்து மேற்கொள்ளும் இப்படியான ஆபாசத் தாக்குதல்களை நாம் கண்டு கொள்ளாமல் விட்டுக் கொண்டே போவோமானால் எதிர்காலத்தில் நாம் இன்னும் பல இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.
பத்திரிகையாளர்களிலேயே உள்ள சில இந்துத்துவ ஆதரவாளர்கள் இளம் தமிழகம், FITE போன்ற அமைப்பினர் அன்றைய பிரச்சினையின்போது ஊடுருவியதாகச் செய்தி பரப்பி வருவதும் கண்டிக்கத்தக்கது. இன்று வழக்குத் தொடரப்பட்டுள்ளவர்களில் ஒருவரான தோழர் பரிமளா போராட்டத்தில் கலந்து கொள்வற்காக அன்று அங்கு செல்லவில்லை. மகேஸ்வரி எனும் பத்திரிகையாளரைச் சந்திக்கச் சென்ற அவரையும் காவல்துறை வழக்கில் சேர்த்துள்ளது அதை வைத்து பரிமளா சார்ந்துள்ள இந்த இயக்கங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு பத்திரிகையாளர்களின் போராட்டத்தையே கொச்சைப் படுத்திச் சில பத்திரிகையாளர்களே பதிவிடுவது அழகல்ல.
இப்போது ஆபாச வெறிப் பதிவாளன் சேகருக்கு anticipatory bail பெறுவதற்கான முயற்சிகள் படு தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதே நேரத்தில் ஆபாசச் சொற்களால் தாக்கப்பட்ட தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மேல் கடும் சட்டங்களின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டு அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.
சன் டி.வி. வீரபாண்டியனுக்கு நேர்ந்த கதி மற்ற பத்திரிகையாளர்களுக்கும் நேரக் கூடாது.
இது தொடர்பாக ஒட்டுமொத்தமான கண்டனக் குரல்களை நாம் எழுப்ப வேண்டும்” என தனது பதிவின் மூலம் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு: தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் நல சம்மேளனம் தலைவர் ரவிச்சந்திரன் நேர்காணல்!
சர்வதேச சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணை விலைக்கேற்ப ஒவ்வொரு நாட்டிலும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதை ஒட்டி அன்றாடம் விலையை தீர்மானிப்பது என இந்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இதனால் அன்றாடம் எரிபொருள் விலை உயர்வினால் மக்களின் துன்பதுயரங்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.77.43. இது கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்சமாகும். கடந்த 2013 செப்டம்பர் 14-ம் தேதி பெட்ரோல் விலை ரூ.79.55 ஆக இருந்துள்ளது. இதுவே வரலாறு காணாத உயர்வாகும்.
அதை நோக்கி பெட்ரோல் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரியில் இருந்து தற்போது வரை ரூ.4.94 அதிகரித்துள்ளது. ஏற்கனவே வரலாறு காணாத உச்சத்தை தொட்டு விட்ட டீசல் விலை முதல் முறையாக ரூ.70ஐ நெருங்கயிருக்கிறது. ஒரு லிட்டர் டீசலின் இன்றைய விலை ரூ.69.56. கடந்த ஜனவரி 1ம் தேதி டீசல் விலை ரூ.62.90 என இருந்த நிலையில், இதுவரை ரூ.6.66 உயர்ந்துள்ளது.
ஒரு மாதத்தில் டீசல்- ரூ.3 அளவிலும், பெட்ரோல் ரூ.2.30 அளவிலும் அதிகரித்துள்ளது. கண்ணுக்கு தெரியாமல் சிறிய அளவில் தினமும் கூடி பெரிய அளவில் விலை உயர்ந்து வருகிறது. “ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பிறகு அனைத்து பொருட்களும் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்” பெட்ரோல் – டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களைத்தான் அதிகம் பாதிக்கும். இவர்களைப் பற்றி அரசுக்கு கவலையும் இல்லை.
தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் நல சம்மேளனம் தலைவர் ரவிச்சந்திரன்
பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்காக, இவற்றின் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து விட்டது நிதியமைச்சகம். வேண்டுமானால் மாநிலங்கள் தங்கள் வாட் வரியை குறைக்கலாம் என்று கூறி நழுவிக்கொண்டது.
எரிபொருள் விலை உயர்வு குறித்து இதுகுறித்து தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் நல சம்மேளனம் தலைவர் ரவிச்சந்திரன் தொலைபேசி மூலம் வினவு தளத்திற்கு அளித்த நேர்காணல்:
வரலாறு காணாத இந்த பெட்ரோல் டீசல் எண்ணெய் விலையேற்றத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
மத்திய அரசின் இந்த விலையேற்றத்தால் எங்கள் தொழிலாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சுமார் நான்கு லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். இது மத்திய அரசின் கையாலாகாதத் தன்மையால் நேர்ந்த விளைவு. ஜி.எஸ்.டி வரி விதிப்பின் போதே நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம். தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வை சொல்லி டீசல் விலையை உயர்த்தியிருக்கிறார்கள்.. இதையே காங்கிரசு அரசு செய்யும்போது எதிர்த்த பிஜேபி இப்போது உயர்த்தும் வேலையைச் செய்கிறது. இது எங்களுக்கும், எங்கள் தொழிலாளர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோவ் பாய்சன் (மெல்லக் கொல்லும் மருந்து) என்று தான் பார்க்கிறோம்.
விலை உயர்வு எந்த வகையில் உங்கள் தொழிலை பாதிக்கிறது?
இது எங்களை மட்டும் பாதிக்கக் கூடியது இல்லை. நாட்டு மக்கள் பிரச்சனை என்றுதான் பார்க்கிறோம். தற்போது இருக்கக்கூடிய லாரிகளுக்கு டிரைவர்கள் பற்றாக்குறையாக உள்ளது. கிட்டத்தட்ட நாற்பது சதவீத லாரிகள் ஓட்டுனர்கள் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது ஒருபுறமிருக்க டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் உயர்வு, டயர் விலையேற்றம், இன்சுரன்ஸ் பிரிமியம் தொகை அதிகரித்திருப்பது, டோல்கேட் கட்டணம் என்று செலவு அதிகரிக்கிறது.
நாளுக்கு நாள் ‘வாழ்வாதார சுமைகள்’ கூடிக்கொண்டே போகிறது எங்களால குடும்பம் நடத்த முடியல. விவசாயிகள் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தற்கொலை பண்ணிகிறாங்க. இந்த விவசாயத்துக்கு நிகரான தொழில் எங்களோடது. இதனால், நாங்கள் செத்து பிழைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
நீங்கள் சந்திக்கும் குறிப்பான பிரச்சனை வேறு என்ன?
எப்பொழுதுமே கடன் பெரும் பிரச்சனையா இருக்கு. நாங்கள் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனைக்கூட கட்ட முடியவில்லை. கட்டாதபட்சத்தில் வண்டியை பறிமுதல் செய்து கொள்கிறார்கள். மேற்கொண்டு இருக்கும் தொகையை வசூலிக்க வழக்கும் போட்டு விடுகிறார்கள். எங்களுக்கு கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்கள் தேதி போடாமல், தொகையை குறிப்பிடாமல் வெறும் கையெழுத்து மட்டும் வாங்கிக்கொள்கிறார்கள். நாங்களும் அந்த நிலைமையில் அதனையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பணம் கிடைத்தால் போதும் என்ற சூழல்தான் உள்ளது.
வாங்கிய கடனை கட்டவில்லை என்றால் 138 செக் மோசடி வழக்கு போட்டு விடுகிறார்கள். இந்நிலையில் பிள்ளைகளை படிக்க வைக்கக் கல்விக் கடன் கூட பெறமுடிவதில்லை. இந்த பிரச்சனையால மனமுடைந்த உரிமையாளர்கள் பலபேர் தற்கொலை பண்ணி இறந்திருக்காங்க. இது வெளியில் தெரிவது இல்லை. காரணம் நாங்கள் இந்த பிரச்சனையில் இருப்பதால் யாரும் முன் வந்து கடன் கொடுக்க மாட்டார்கள் என்ற அச்சத்தில் இதனை வெளியில் சொல்வது கிடையாது. வாழ்க்கையே கேள்விகுறியாக மாறிக்கொண்டிருக்கிறது.
எண்ணெய் விலையேற்றம் என்பது சர்வதேச அளவில் தீர்மானிக்கப்படுகிற ஒன்று. எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் போது இந்தியாவில் மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும்?
கார்ப்பரேட்களின் லாபத்துக்கு தான் வழி திறந்து விடுகிறது மோடி அரசு. விலையை நிர்மாணிக்கும் பொறுப்பை அரசே செய்திருக்க வேண்டும். அப்படியில்லாமல் ‘தினமும் விலையை நிர்ணயித்துக் கொள்ள’ எண்ணெய் நிறுவனங்களிடம் விட்டு விட்டது. இவர்கள் மொத்த மக்களையும் சுரண்டுகிறார்கள். எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் லாபத்தைத் தான் பார்ப்பார்கள்.
பொருளாதாரத்துக்கு அவமானம் என்கிறீர்கள். ஆனால் வரி விதிப்பின் மூலம் அரசுக்கு வருவாய் வருவதால் இதுதான் வளர்ச்சி என்கிறார்களே?
எது வளர்ச்சி? 70 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டது எப்படி வளர்ச்சி ஆகும்? இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மக்களை பாதிக்கக் கூடியது எவ்வாறு வளர்ச்சி ஆகும்? சரக்கு போக்குவரத்து கடல் வழியோ, வான் வழியோ நடைபெறவில்லை. லாரிகளில் தான் ஏற்றி செல்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது.
கோயம்பேடு காய்கறி சந்தையில் விவசாய விளைபொருட்களை இறக்கக் காத்திருக்கும் லாரிகள் (மாதிரிப் படம்)
விவசாயத்தை எடுத்துக் கொள்வோம். விவசாயத்திற்கு தேவையான இடு பொருட்கள், உரம் உள்ளிட்ட அனைத்தும் லாரிகளில் தான் கொண்டு செல்கிறோம். அதற்கு ஏற்றவாறு வாடகையை நாங்கள் உயர்த்தினால், விவசாயிக்கு இடுபொருட்களின் விலை உயரும். பிறகு விவசாயம் எப்படி செய்ய முடியும்? விவசாய உற்பத்தி முற்றிலும் முடங்கி விடும்.
அப்படியே உற்பத்தி நடந்தாலும் விளைந்த பொருட்களை சந்தைக்கு ஏற்றி செல்லும் வாடகையை கணக்கில் கொண்டு தான் விவாசாயிடம் இருந்து கொள்முதல் செய்வார்கள். இதனால் விவசாயி உற்பத்தி செய்த பொருட்கள் விலை கடுமையாக குறைந்து விடுகிறது. நீங்கள் எந்த வகையில் பார்த்தாலும் விவசாயம் கடுமையான வீழ்ச்சியடையும். மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாவார்கள்.
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கலால் வரியை குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக உள்ளது. ஆனால் முடியாது என்கிறது அரசு. இதற்கு என்ன தீர்வு என்று நினைக்கிறீர்கள்?
விவசாயத்துக்கு அடுத்தபடியா தரை வழிப்போக்குவரத்து தான் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பா இருக்கு. இப்போ இதோட இயக்கத்தையே நிறுத்தக் கூடியதா இருக்கு அரசின் கொள்கை. தற்போது எண்ணெய் நிறுவனங்கள் விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற அதிகாரத்தை அவர்களிடமிருந்து பறித்து அரசே விலையை தீர்மானிக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை எண்ணெய் விலை தீர்மானிப்பதை நிரந்தரமாக்க வேண்டும்.
அதே அரசு விபத்து தடுப்பு என்ற பெயரில் படிக்காத தொழிலாளிக்கு ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்கிறது. ஏற்கனவே ஓட்டுனர் பற்றாகுறையால் தொழில் திண்டாடுகிறது, நசிவடைகிறது. இச்சூழலில் ஆண்டுக்கு நான்கு லட்சம் கனரக வாகனங்கள் தயாரிக்கப்படுகிறது. அதற்கு அனைத்து வகையான வரியையும் வங்கிக் கொண்டு உற்பத்திக்கு அனுமதியளிக்கிறது அரசு. ஆனால் சாலை மேம்பாட்டை கைவிட்டு விடுகிறது. அந்த வாகனங்கள் செல்வதற்குரிய கட்டமைப்பை ஏற்படுத்துவதில்லை. இதனாலேயே விபத்து ஏற்படுகிறது. அரசுக்கு எதிலெல்லாம் வருமானம் கிடைக்கிறதோ அதற்கு எந்த தடையும் இல்லாமல் அனுமதிக்கிறது. அந்த வகையில் குறைந்தபட்சம் கலால் வரி, வாட் வரியை குறைக்க முன்வருவதில்லை. இந்த தவறான கொள்கையை கைவிட வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமியின் ‘சீரிய’ ஆட்சியில் ஆளுநரின் பங்கும் ‘மகத்தானது’. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு மாவட்டங்களுக்கு “ஆய்வு” மேற்கொள்ளச் செல்கிறார். காவல்துறை அதிகாரிகளை அழைத்து சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்கிறார். மாவட்ட ஆட்சியர்களோடு நிர்வாகம் பற்றி பேசுகிறார். இதை எதிர்த்து கருப்புக் கொடி ஆர்பாட்டம் செய்பவர்களின் மேல் “சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று இப்போது அறிவித்துள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அதிகார வரம்பு என்ன, அதில் அரசியல் சாசன சட்டப்படி கவர்னரின் செயல்பாடுகள் என்ன? போன்றவை பா.ஜ.க-வின் அடிமைகளான ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் இணையருக்கு தெரியாமல் இருக்காது. ஆனால் அத்து மீறும் ஆளுநர் குறித்து அவர்கள் ஆத்திரமாவதற்கு பதில் ஆளுநரின் ஆய்வுப் பணியினால் என்ன பிரச்சினை என்று கேட்கிறார்கள். இந்த மானக்கேட்டிற்கு ”அம்மாவின்” ஆட்சியே பரவாயில்லை என்று திமுக பேச்சாளர்களே சொல்லும் நிலையை ஏற்படுத்தி ”புரட்சித்” தலைவியை புனிதத் தலைவியாக்கியுள்ளனர் அன்னாரின் விழுதுகள்.
போகட்டும். ஆளுநர் ஆட்சியாளராக மாறி வந்த நிகழ்ச்சிப் போக்கு அதன் தர்க்கப்பூர்வ எல்லையை அடைய வேண்டுமல்லவா? தற்போது ‘விபச்சார புரோக்கர் நிர்மலா தேவியின்’ வாயில் விழுந்ததன் மூலம் அந்த உச்சநிலையையும் எய்தி முழுமையடைந்துள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். ”கவர்னர் தாத்தா இல்லை” என்று நிர்மலாதேவி வழங்கிய சான்றிதழின் பொருள் அவரது ‘களச்செயல்பாடுகள்’ குறித்து சொல்லப்பட்டதா என்பது நமக்குத் தெரியாது. இது குறித்து விசாரிக்கும் இந்தியாவின் ஸ்காட்லாந்து யார்டான தமிழக போலீசாரும் அதை கண்டு பிடிக்கப் போவதில்லை என்பது ஊரறிந்த விசயம்.
இதற்கிடையே தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மையில்லை என்று செய்தியாளர் சந்திப்பில் அடித்துக் கூறிவிட்ட ஆளுநர், அதை நிரூபிக்க தானே முன்வந்து விசாரணைக் கமிசன் ஒன்றையும் நியமித்துள்ளார். இந்த விசாரணைக் கமிசன் ஆளுநரின் யோக்கியதைக்கு ஒரு நற்சான்றுப் பத்திரத்தைத் தயாரித்து அதைத் தனது விசாரணையின் முடிவில் அறிக்கையாக ஆளுநரிடமே சமர்பிக்கும் தன்மீதான பிராதைத் தானே விசாரிப்பது இயற்கை நீதிக்கு எதிரானது என்பது தமிழ் சினிமா நாட்டாமைகளே ஒப்புக்கொள்ளும் எளிய நியாயம்.
ஆனால், தமிழ்ச் செய்தித் தொலைக்காட்சிகளின் எட்டரை மணி பஞ்சாயத்தார் இதில் உள்ள சட்ட நுணுக்கங்களையும், தர்க்க நியாயங்களையும் விரிவாகப் பேசி முட்டைக்கு விக்கு போட்டுக் கொண்டிருந்தது தனிக் கதை.
தமிழகத்தில் மோடிக்கு அடுத்து மிக அதிகம் வெறுக்கப்படும் நபர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடிக்க எஸ்.வி. சேகர் மற்றும் ஹெச்.ராஜா ஆகியோரோடு போட்டியில் இறங்கியுள்ளார் ஆளுநர். எனினும், ”ஆட்சி” எனும் பெயரில் நடந்து கொண்டிருக்கும் அலோங்கோல நாடகத்தில் எதையும் தாங்கிக் கொள்ளும் ஜென் நிலைக்கு சிலர் சென்று விட்டதையும் நாம் கணக்கில் கொள்ளத் தான் வேண்டும். “இவர்கள் ஒழுங்காக இல்லாத நிலையில் ஆளுநராவது ஆய்வு கீய்வுன்னு ஏதோ செய்யறாருங்களே” என அப்பிராணியாய்ச் சிந்திக்கின்றனர். மெய் உலகில் இவ்வாறு சிந்திப்பவர்கள் வெகு சிலர் தான் என்றாலும் மெய் நிகர் உலகின் சிந்தனைப் போக்கை அறிந்து கொள்ளவே இந்த கருத்துக் கணிப்பு.
பதில்களில் மூன்றை தெரிவு செய்யலாம்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் எந்தச் செயல் மிகக் கீழ்த்தரமானது?
அதிகாரத்திற்குப் புறம்பாக ஆட்சி நிர்வாகத்தில் தலையிடுவது
பல்கலைக்கழகங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களை துணை வேந்தர்களாக நியமிப்பது
தன் மேலான புகாரைத் தானே விசாரிப்பது
பாலியல் குற்றச்சாட்டு
கருப்புக் கொடி காட்டுபவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவித்திருப்பது.
நேரடி மானியத் திட்டம் : ரேஷன் அரிசிக்கும் வந்தது ஆபத்து !
”ரேஷனைக் காப்பாற்றுவோம்!”- ஜார்கண்டு மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களிடம் வேர்விட்டிருக்கும் இந்த முழக்கமும் இதனை முன்னிறுத்தி அம்மக்கள் நடத்தத் தொடங்கியிருக்கும் போராட்டமும் அம்மாநிலத்தைத் தாண்டியும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அரிசிக்கும் கோதுமைக்கும் வழங்கப்படும் மானியத்தைக் கைவிடச் சொல்லி உலக வர்த்தகக் கழகம் இந்திய அரசை நிர்பந்தித்து வரும் வேளையில், நேரடி மானியம் என்ற குறுக்கு வழியில் உலக வர்த்தகக் கழகத்தின் நாட்டாண்மையை இந்திய அரசு நடைமுறைப்படுத்தத் துணிந்திருக்கும் வேளையில், ஜார்கண்டு பழங்குடியின மக்கள் முன்வைத்திருக்கும் முழக்கமும் போராட்டமும் இந்தியாவெங்குமே பொருந்தக்கூடியதாக, உழைக்கும் மக்களின் உணவு உரிமையைப் பாதுகாக்கக்கூடியதாக உள்ளது.
சமையல் எரிவாயு விநியோகத்தில் நாடுதழுவிய அளவில் புகுத்தப்பட்டிருக்கும் நேரடி மானியத் திட்டத்தை – வங்கிக் கணக்கில் மானியத்தைப் போடும் திட்டத்தை – ரேஷன் பொருள் விநியோகத்திலும் புகுத்தத் திட்டமிட்டுள்ள மோடி அரசு, பாண்டிச்சேரி, சண்டிகர் உள்ளிட்ட தனது அதிகாரத்துக்குட்பட்ட யூனியன் பிரதேசங்களிலும், ஆந்திரா, ஜார்கண்டு ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளிலும் பரிசோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தி வருகிறது. மற்ற பகுதிகளைவிட, ஜார்கண்டு மாநிலத்தில், அதன் தலைநகர் ராஞ்சிக்கு அருகே அமைந்துள்ள நாக்ரி வட்டாரத்தில்தான் பெரிய அளவில் இப்பரிசோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. ஏறத்தாழ 12,500 ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு, அவர்கள் ரேஷன் கடையில் சந்தை விலையில் அரிசியையும், கோதுமையையும் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
நாக்ரி வட்டாரத்தில் வசித்து வரும் இந்த 12,500 குடும்பங்களுள் ஆகப் பெரும்பான்மையினர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். விவசாயம், ஆடு, மாடு மேய்த்தல் மற்றும் கட்டிட வேலை, வெல்டிங் உள்ளிட்ட உதிரித் தொழில்கள்தான் இவர்களின் வருமானத்திற்கு அடிப்படை. இக்குடும்பங்கள் அனைத்திற்கும் அக்டோபர் 2017-க்கு முன்பு வரை அந்த்யோதயா உணவு விநியோகச் சிறப்புத் திட்டத்தின் கீழ் மாதமொன்றுக்கு 35 கிலோ அரிசி, கிலோ ஒரு ரூபாய் விலையில் வழங்கப்பட்டு வந்தது. முப்பந்தைந்து ரூபாயும், முப்பந்தைந்து கிலோ அரிசியைத் தூக்கிச் சுமந்து வரும் தெம்பும் இருந்துவிட்டால், அரிசியை வீட்டிற்குக் கொண்டுவந்துவிட முடியும்.
நேரடி உணவு மானியத் திட்டத்தின் கீழ் இந்த 35 கிலோ அரிசியை வாங்குவதற்கு, ஒரு கிலோ அரிசி ரூ.32.60 என்ற விலையில் 1,141 ரூபாயை எடுத்துச் செல்ல வேண்டும். இந்த 1,141 ரூபாயில் 1,106 ரூபாயை ஜார்கண்டு மாநில அரசு குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் போட்டுவிடும். அந்த 1,106 ரூபாயோடு 35 ரூபாயைச் சேர்த்து எடுத்துக்கொண்டு போய் அரிசி வாங்கிவர வேண்டும்.
”அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் 1,106 ரூபாயைப் போட்டுவிட்ட தகவல், ஒவ்வொருவருக்கும் அவர்களது கைபேசிக்குக் குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும். அத்தகவல் வந்த உடனேயே வங்கிக்குப் போய் பணத்தை எடுத்துக்கொண்டு, ரேஷன் கடைக்குப் போய் அரிசியை வாங்கிவிடலாம்” என மாநில அரசு கூறிவருகிறது. கேட்பதற்கு வெண்ணெயை வெட்டுவது போலச் சுலபமாகத் தெரியும் இந்தத் திட்டம், நடைமுறையில் அரிசி வாங்குவதைக் குதிரைக் கொம்பாக மாற்றிவிட்டதோடு, குடும்ப அட்டைகளை இழக்கும் நிலைக்கு அப்பழங்குடியின மக்களைக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.
முதலாவதாக, வங்கிக் கணக்கில் பணம் சேர்ந்துவிட்ட தகவல் பெரும்பாலும் யாருக்குமே வருவதில்லை. இந்த விவரத்தை வங்கிக்கு நேரடியாகப் போய்தான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. நாக்ரி வட்டாரத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு வங்கிக்குப் போய்திரும்புவது என்பது வெளியூருக்குப் போய்வருவது போன்றது. ஒரு முறை வங்கிக்குச் சென்று திரும்ப நாற்பது ரூபாய் கையில் இருக்க வேண்டும்.
வங்கிக் கணக்கில் பணம் விழுந்துவிட்டாலும், அதனைச் சொந்தப் பணம் போல நினைத்த மாத்திரத்தில் எடுத்துவிட முடியாது. முதலாவதாக, ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், ரேஷன் அட்டை எனப் பல ஆதாரங்களையும் சான்றாவணங்களையும் பழங்குடியின மக்கள் வைத்திருக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்று இல்லாவிட்டாலும், மறந்து வீட்டில் வைத்துவிட்டிருந்தாலும் பணத்தை எடுக்கமுடியாது.
இதற்கு அப்பால், பணத்தை எடுக்கப் போகும் நாளன்று வங்கியில் மின்சாரம் நின்றுபோகாமல் இருக்க வேண்டும். மின்சாரம் இருந்தாலும், இணைய தள சேவை தடையின்றிக் கிடைக்க வேண்டும். பணத்தை எடுக்கும் முன் அட்டைதாரரின் கைவிரல் ரேகை பெறப்படும். அந்த ரேகைப் பதிவும் ஆதார் அட்டைக்கு அளித்த ரேகைப் பதிவும் ஒத்துப் போக வேண்டும். இதில் ஏதாவது ஒன்று கோளாறு ஆனாலும் பணத்தை எடுக்க இன்னொரு நாள் போக வேண்டும். இப்படி மானியப் பணத்தை எடுப்பது என்பது ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி மந்திரவாதியின் உயிரை எடுக்கப் போகும் சாகசப் பயணமாக மாறிவிட்டது.
சேட்டே கிராமத்தைச் சேர்ந்த ஜமுனா, ஒவ்வொரு மாதமும் மூன்று முறை – இரண்டு முறை பணம் வந்துவிட்டதா என விசாரிப்பதற்கு, மூன்றாவது முறை பணத்தை எடுப்பதற்கு – வங்கிக்குச் செல்ல வேண்டியிருப்பதாகக் கூறுகிறார். வங்கிக்குச் சென்று திரும்பும் நாட்களில் ஜமுனா கூலி வேலைக்குச் செல்ல முடியாது. அந்த மூன்று நாட்களுக்கும் சேர்த்து அவருக்கு 450 ரூபாய் கூலியிழப்பு ஏற்படுகிறது. ரேஷன் கடைக்குச் செல்லும் தினத்தையும் கணக்கில் சேர்த்தால் கூலியிழப்பு 600 ரூபாயாகிறது. வங்கிக்குச் சென்றுவர போக்குவரத்துச் செலவு 128 ரூபாய், பணத்தை எடுப்பதற்குச் சேவைக் கட்டணம் 40 ரூபாய் என ஆக மொத்தம் 168 ரூபாயைக் கையிலிருந்து செலவழிக்கிறார். கைக்குக் கிடைக்கும் 1,106 ரூபாய் மானியத்தில் கூலியிழப்பையும் சேர்த்து 768 ரூபாய் போக, அவருக்குக் கிடைக்கும் உண்மையான மானியம் 338 ரூபாய்தான். ஒரு ரூபாய் விலையில் வாங்கி வந்த ரேஷன் அரிசி, நேரடி மானியத் திட்டத்திற்குப் பிறகு ஜமுனாவிற்கு ஏறத்தாழ 23 ரூபாயாகிவிட்டது.
நாக்ரி பகுதியில் அக்.2017 மாதம் தொடங்கி நேரடி மானியத் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. பிப்.2018 முடியவுள்ள ஐந்து மாதங்களில் ஒரேயொரு மாதம் தவிர, மற்ற மாதங்களுக்குரிய மானியத் தொகை ஜமுனாவிற்குக் கிடைத்துவிட்டது. ஆனால், பெரும்பாலோருக்கு ஜமுனாவிற்குக் கிடைத்த ‘அதிருஷ்டம்’ வாய்க்கவில்லை.
ஹல்ஹூ கிராமத்தைச் சேர்ந்த பெர்காவ் ஓரேனுக்குச் சேர வேண்டிய மானியத் தொகை வேறொருவரின் வங்கிக் கணக்கிற்குச் செல்கிறது. ஜனவரி 2018-க்குப் பிறகு அந்த மானியத் தொகையும் வரவேயில்லை.
புத்னி ஓரேனுக்கு டிசம்பர் 2017-க்குப் பிறகு மானியத் தொகை வரவேயில்லை. 32 ரூபாய் கொடுத்து ரேஷன் அரிசியை வாங்க முடியாத வறுமையில் வாடும் அவரது குடும்பம், வெளிச்சந்தையில் 19 ரூபாய்க்கு நொய்யரிசி வாங்கிப் பசியாறுகிறது.
வங்கிக்கு அலையமுடியாத நிலையில் உள்ள 78 வயது முதியவர் விநாயக் முண்டா நவம்பர் 2017-க்குப் பிறகு ரேஷன் அரிசி வாங்குவதையே கைவிட்டுவிட்டார். அவருக்கு இப்பொழுது புத்னி ஓரேன் குடும்பம்தான் கஞ்சி ஊற்றுகிறது.
உணவு உரிமைக்கான இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பு ஜனவரி 2018-இல் நாக்ரி வட்டாரத்தைச் சேர்ந்த 13 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து நடத்திய ஆய்வில், ஜனவரி உள்ளிட்டு நான்கு மாதம் வர வேண்டிய மானியத் தொகையில் ஆகப் பெரும்பாலோருக்கு இரண்டு மாதம் மட்டுமே மானியத் தொகை வந்திருப்பது தெரிய வந்தது.
மானியத் தொகை கிடைக்கப் பெறாதவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளன. கடன் வாங்கியோ அல்லது வேறு வழிகளில் 1,141 ரூபாயைப் புரட்டியோ 35 கிலோ அரிசியை வாங்கிவிட வேண்டும். இல்லையென்றால், தமது குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் அநியாயத்தை எதிர்கொள்ள வேண்டும்.
சப்ரோன் கிராமத்தைச் சேர்ந்த பப்லு கச்சாப் தனது குடும்ப அட்டையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு ரூபாய் ரேஷன் அரிசியை, 32 ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றிருக்கிறார். சிங்பூர் கிராமத்தைச் சேர்ந்த டேனியல் திர்கி, ஜமுனா திர்கி உள்ளிட்ட பலருக்கு ரேஷன் அட்டையை ரத்து செய்யும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ள முதியவரான ஜோசப் கெர்கெட்டாவிற்கு மானிய அரிசி மறுக்கப்பட்டதன் காரணமாகத் தெருவில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
343 குடும்ப அட்டைகள் பதியப்பட்டுள்ள வந்தேயா கிராம நியாயவிலைக் கடையில், ஜனவரி மாத்தில் வெறும் 200 குடும்ப அட்டைகளுக்குத்தான் மானிய அரிசி விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை ஒவ்வொரு மாதத்திலும் படிப்படியாகக் குறைந்துவருவதாகக் குறிப்பிடும் அக்கடையின் நிர்வாகி அஸ்கர் அன்சாரி, ”இதைத்தான் இந்த அரசு விரும்புகிறதா?” எனக் கேள்வி எழுப்புகிறார்.
இந்தக் கேள்விக்கு ஆம் என்பதைத் தவிர வேறொரு பதிலில்லை. ஆனால், ஆளுங்கட்சியான பா.ஜ.க.வும் அதிகார வர்க்கமும் மானியம் கிடைப்பதில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளைக் களைந்துவிட்டால், நேரடி மானியத் திட்டம் போல யோக்கியமான திட்டம் வேறில்லை எனக் காதில் பூச்சுற்ற முயலுகிறார்கள்.
ரேஷன் பொருள் விநியோகத்தில் ஒட்டகம் என்றோ மூக்கை நுழைத்துவிட்டது. முதலில் ஏழைகளைக் காட்டி, அனைவருக்கும் மானிய விலையில் உணவுப் பொருள் விநியோகம் செய்ய வேண்டிய அரசின் சட்டபூர்வக் கடமையை ரத்து செய்தார்கள். அடுத்து, நேரடி மானியத் திட்டம் என்ற பெயரில் ரேஷன் விநியோக முறையிலிருந்து ஏழைகளையும் அப்புறப்படுத்திவிட்டு, ரேஷன் கடைகளையே மூடிவிடும் முடிவை நோக்கி நகர்ந்து செல்கிறார்கள். இந்த உண்மையை மூடிமறைப்பதற்காகவே ரேஷன் பொருள் விநியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுப்பதற்காகவே வங்கியில் மானியப் பணம் போடப்படுகிறது எனக் கதையளக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் நோக்கம் முறைகேடுகளை ஒழிப்பதல்ல; மாறாக, உணவுப் பொருட்களைச் சந்தை விலைக்கு வாங்குவதற்குப் பொதுமக்களைத் தயார்படுத்தும் சூழ்ச்சியாகும்.
சமையல் எரிவாயு உருளை விநியோகத்தில் இதுதானே நடந்து வருகிறது. முதலில் சமையல் எரிவாயு உருளையின் விலையைச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்பத் தீர்மானிக்கும் உரிமையை ஆயில் கம்பெனிகளின் அதிகாரிகளிடம் தூக்கிக் கொடுத்தது, மைய அரசு. அதனைத் தொடர்ந்து, நேரடி மானியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் உருளையைச் சந்தையின் விலைக்கு வாங்குவதற்குத் தயார்படுத்தப்பட்டனர். அதன் பிறகு, எரிவாயு உருளையின் விலையை மாதாமாதம் இரண்டு ரூபாய், நான்கு ரூபாய் என உயர்த்திக்கொண்டே போய் மானியத்தைப் படிப்படியாக வெட்டியதோடு, மார்ச் 2018-க்குள் எரிவாயு உருளைக்கு வழங்கும் மானியத்தை முற்றிலுமாக நிறுத்திவிடவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலைதான் கூடிய விரைவிலேயே உணவுப் பொருள் விநியோகத்திலும் வரவிருக்கிறது. ஜார்கண்டு மாநில பா.ஜ.க. முதல்வர் ரகுபார் தாஸ், ”ரேஷன் கடைகளைப் படிப்படியாக மூடிவிட்டு, பொதுமக்களைச் சந்தையிலேயே உணவுப் பொருட்களை வாங்கத் தயார்படுத்த வேண்டும்” என அரசு விழாவில் வெளிப்படையாகவே பேசி, இந்தச் சூழ்ச்சியைப் பச்சையாகவே உடைத்துப்போட்டுவிட்டார்.
உணவுப் பொருட்களுக்கு மானியத்தைக் கைவிடுவது என்பது ஏழைகளுக்கு எதிரான போர் மட்டுமல்ல. அரிசி, கோதுமை உள்ளிட்ட விவசாயப் பொருட்களுக்குக் குறைந்தபட்ச விலையைத் தீர்மானித்து, அதன் கீழ் கொள்முதல் செய்யும் அரசின் பொறுப்பை முற்றிலுமாகக் கைகழுவிவிட்டு, விளைபொருட்களுக்கு விலையைத் தீர்மானிப்பதையும், அதனைக் கொள்முதல் செய்வதையும் முழுமையாக வர்த்தகச் சூதாடிகளிடம் ஒப்படைப்பதாகும்.
விவசாய விளைபொருட்களுக்கு இலாபம் தரத்தக்க விலை கிடைக்காமல் விவசாயிகள் நட்டமடைந்து வரும் வேளையில், வேலையில்லாத் திண்டாட்டமும் வேலையிழப்பும் அதிகரித்து வரும் வேளையில், குறைந்தபட்ச கூலிக்கும் வாழ்க்கைச் செலவுகளுக்கும் இடையே பெரும் வேறுபாடு இருந்துவரும் வேளையில், உணவுப் பொருட்களை மானிய விலையில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிப்பதை ரத்து செய்வது ஏழைகளைப் பட்டினியில் தள்ளுவதற்கு ஒப்பானதாகும்.
தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பல்வேறு வரித் தள்ளுபடிகள், மானியங்கள், குறைந்த வட்டியில் வங்கிக் கடன், கடன் தள்ளுபடி என விதவிதமாகச் சலுகைகளை வாரிவழங்கும் அரசும் அதிகார வர்க்கமும் ஏழைகளுக்குத் தரப்படும் உணவு மானியத்தை அடியோடு ரத்து செய்து, அவர்களின் வயிற்றில் அடிக்கத் துணிகிறது. சேமநல அரசு என்ற சல்லாத் துணியையும் களைந்துவிட்டு, பொதுமக்களின் எதிரியாக நம் முன் நிற்கிறது.
இந்தச் சதித்தனத்தை எதிர்த்துதான், இந்திய மக்களின் உணவு உரிமையை நிலைநாட்டும் பொருட்டுத்தான் ஜார்கண்டு மாநிலப் பழங்குடியின மக்கள் ரேஷனைக் காப்பாற்றுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்துப் போராடத் தொடங்கியிருக்கின்றனர். இதன் முதல்கட்டமாக, கடந்த பிப்ரவரி இறுதியில் ஜார்கண்டு மாநிலத் தலைநகர் ராஞ்சியில் முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தி முடித்துள்ளனர்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Paypal
$0.5
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமலேயே மரத்தடியில்கூட வகுப்புகளை நடத்திவிட முடியும், பயிற்சிபெற்ற ஆசிரியர் இருந்தால். ஆனால், தமிழக அரசோ ஆசிரியர்களே இல்லாமல் வகுப்புகளை நடத்தும் சாதனையைச் செய்துவருகிறது. ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்றில்லாமல், மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய மேநிலை மற்றும் பத்தாம் வகுப்புகளும்கூட ஆசிரியரே இல்லாமல் நடத்தப்படுவதை தலித் விடுதலை இயக்கம், சமக்கல்வி இயக்கம் ஆகிய அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன.
தலித் விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் கருப்பையா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்திப் பள்ளிக் கல்வித்துறையிடமிருந்து பெற்ற அறிக்கையின்படி, 884 உயர்நிலைப் பள்ளிகளும், 34 மேநிலைப் பள்ளிகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கி வருகின்றன.
தலைமை ஆசிரியர் நியமனம் தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, இந்தப் பணியிடங்களை நிரப்ப மறுத்து வருகிறது, தமிழக அரசு. எதிர்வரும் மாதங்களில் 425 தலைமை ஆசிரியர்கள் பணிஓய்வு பெற இருப்பதால், தலைமை ஆசிரியர் இல்லாமல் இயங்கும் உயர்நிலை/மேநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை விரைவிலேயே 1,500-ஐத் தொட்டுவிடும் எனக் கூறுகிறது, பள்ளிக்கல்வித்துறை அறிக்கை.
தலைமை ஆசிரியர் மட்டுமின்றி, மேநிலை வகுப்புகளில் வேதியியல் துறையில் 421, பொருளாதாரத் துறையில் 370, வணிகவியலில் 215, இயற்பியலில் 156, தமிழ் புலத்தில் 284, மற்ற துறைகளில் 194 என மொத்தமாக 1,640 பயிற்சிபெற்ற முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் நான்கு ஆண்டுகளாக காலியாக உள்ளன.
உயர்நிலைப் பள்ளிகளை எடுத்துக்கொண்டால், அறிவியல் புலத்தில் 773, சமூகவியலில் 521, கணிதத்தில் 490, தமிழில் 349, ஆங்கிலத்தில் 272 உள்ளிட்டு 2,405 பயிற்சிபெற்ற ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. எதிர்வரும் மே மாதத்தில் ஓய்வுபெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை 10,000-ஐத் தொடும்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், பள்ளிக் கல்வித்துறை, தொடக்கக் கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, அரசு பழங்குடியின உறைவிடப் பள்ளி, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள் என ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளின் கீழ் இயக்கப்படுகின்றன. இவற்றுள் மேற்கண்ட காலிப் பணியிடங்கள் அனைத்தும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில் மட்டுமே உள்ளன. மற்ற துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களையும் கணக்கில் கொண்டால், இந்த எண்ணிக்கை இன்னும் ஒரு மடங்கோ இரண்டு மடங்கோ அதிகமாக இருப்பது நிச்சயம்.
ஏழை-ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குழந்தைகள்தான் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து தமிழ்வழியில் படித்து வரும் நிலையில், ஆசிரியர்களை நியமிக்காமல் புறக்கணிப்பது அவர்களின் கல்வியுரிமையைப் பறிக்கும் சமூக அநீதி ஆகும். நவீன காலத்து மனுதர்மம் ஆகும்.
ஒருபுறம் அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத அவலம். இன்னொருபுறமோ நீட் தேர்வுக்கு 412 பயிற்சி மையங்களை அமைத்தல், 3,000 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் திறன் வகுப்புகளைத் தொடங்குதல், அடுத்த கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ.-க்கு இணையான புதிய பாடத்திட்டம் என அதிரடியான அறிவிப்புகள்.
”பில்டிங் ஸ்டிராங்கு, பேஸ்மெண்டு வீக்கு” என்ற வடிவேலுவின் நகைச்சுவையைத் தமிழக அரசின் இந்த பில்ட்-அப்புகள் நினைவுபடுத்துவதோடு, ஆசிரியரைப் போடக் கேட்டால், ”ஸ்மார்ட் கிளாஸ் அறிவிப்பை” வெளியிடும் எடப்பாடி அரசின் ‘அக்கறை’, ”ரொட்டி கிடைக்கவில்லையா, கேக் சாப்பிடுங்கள்” என எகத்தாளமாகக் கூறிய பிரெஞ்சு ராணியின் திமிரோடும் ஒத்துப் போகிறது.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Paypal
$0.5
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
உலக பாட்டாளி வர்க்க ஆசான் மாமேதை தோழர் லெனின் 149 -ஆவது பிறந்த நாள் விழாவை புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் கொண்டாடி வருகின்றன.
ம.க.இ.க., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து வேலூர் இராணிப்பேட்டையிலும்; ம.க.இ.க., பு.மா.இ.மு. அமைப்புகளின் சார்பில் மதுரையிலும் தெருமுனைக்கூட்டங்களை நடத்தின. கடலூரில் பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு., ஆகிய அமைப்புகள் இணைந்து நகரின் முக்கிய பகுதிகளின் வழியே இருசக்கர பேரணி நடத்தினர்.
லெனின் பிறந்த நாள் விழா என்பது இந்த உலகில் உழைக்கும் தொழிலாளர்களான பெரும்பான்மை மக்கள் எப்படி நல் வாழ்க்கை வாழ்வது என்கின்ற சிந்தனையை நினைவு கூர்வதாகும்.
நம்நாட்டில் சிறிய தொழில்கள் குடிசைத் தொழில்கள் இருந்த இடம் தெரியாமல் போகின்றன. விவசாயம் அழிவு நோக்கி செல்கிறது. ஏதாவது டெக்ஸ்டைல் கடையில் வேலைக்கு போகலாம் என்றால் அங்கே நாள் முழுவதும் நின்றாக வேண்டுமென்ற கொடுமை. ஆட்டோ ஓட்டி பிழைத்து கொள்ளலாம் என்றால் போலீசு தொல்லை.
பெரும்பான்மை மக்களுடைய வாழ்க்கை இப்படி அவலமும் இன்னலும் நிறைந்திருக்க, இன்னொரு புறம் அம்பானி 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வீடு கட்டுகிறார். அவருடைய அந்த வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் உலகின் வறுமைக்கான சான்றாக விளங்கும் ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவி தெரிகிறது. இது தான் இன்றைய உலகத்தைக் காட்டும் கண்ணாடி . முதலாளிகளுக்கு 6 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது, நீரோ மோடி, லலித் மோடி, விஜய் மல்லையா போன்றவர்கள் கோடிக்கணக்கில் அரசு வங்கியில் கடன் வாங்கி விட்டு வெளிநாடு தப்பியோடுகின்றனர்.
கூடங்குளம், மீத்தேன், நியூட்ரினோ, சாகர்மாலா, ஸ்டெர்லைட் போன்ற அழிவு திட்டங்கள் தமிழகத்தின் மீது வன்மத்தோடு திணிக்கப்படுகின்றது. இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தனித்தனியாக போராட முடியுமா அல்லது ஓட்டு சீட்டு மூலம் தீர்த்து விட முடியுமா? முடியவே முடியாது!
நாட்டை பாசிச அபாயம் சூழந்திருக்கும் இந்த வேளையில், நாடு முழுவதும் உள்ள அரசு நிறுவனங்களை காவி கும்பல்களால் நிரப்பப்படும் இந்த காலத்தில் அதை முறியடிக்க லெனின் நமக்குத் தேவைப்படுகிறார். ஆசான் லெனின் காட்டிய வழியில் சோசலிசம் படைக்க, தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள வேண்டுமென்ற அறைகூவலோடு, லெனின் பிறந்தநாள் விழா நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
“தூத்துக்குடியில் யார் வாழ்வது ? ஸ்டெர்லைட்டா…? மக்களா…?” என்ற முழக்கத்தை முன்வைத்து 23.04.2018 அன்று காலை மக்கள் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை “ஸ்டெர்லைட் எதிர்ப்பு அனைத்து கிராம மக்கள் கூட்டமைப்பு” ஒருங்கிணைத்தது. மடத்தூர் பகுதியில் தொடங்கிய இப்பேரணியின் இறுதி நிகழ்வாக சிப்காட் அலுவலகத்திலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திலும் அனைத்து கிராமக்கள் சார்பாக மனு கொடுக்கப்பட்டது.
1 of 14
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
*****
கொடுக்கப்பட்ட மனுவில் உள்ள விவரங்கள் பின்வருமாறு:
ஸ்டெர்லைட் எதிர்ப்பு அனைத்து கிராம மக்கள் கூட்டமைப்பு தொடர்புக்கு:9944246063,6380010462,9003553557
நாள்.23.04.2018
பெறுநர் :
1.மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் அவர்கள்
மாசு கட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி.
2.துணை இயக்குநர் அவர்கள்
சிப்காட், தூத்துக்குடி.
அய்யா,
பொருள்:ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி, தூத்துக்குடி சிப்காட்டை விட்டு வெளியேற்றக் கோரி மனு
கடந்த 1996-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் துவங்கப்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனத்தால் சிப்காட்டைச் சுற்றியுள்ள சுமார் 15 கிராம மக்களுக்கும், தூத்துக்குடி நகர் மக்களுக்கும் தொடர்ந்து புற்றுநோய், கர்பப்பை சிதைவு, மலட்டுத்தன்மை, சிறுநீரகக் கோளாறு, தோல் நோய்கள், ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
மேற்படி பாதிப்புகளால் நூற்றுக்கணக்கனோர் இறந்து விட்டனர்.எங்கள் கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக பிறக்கும் குழந்தைகள் பல்வேறு பாதிப்புகளுடன் பிறக்கின்றன.இதனால் எங்கள் சந்ததிகள் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் நிறுவனத்தால் எங்கள் கிராமங்களின் நிலத்தடி நீர் முற்றிலும் நாசமாகி விட்டது. விவசாயம் நலிவடைந்து விட்டது. இனியும் ஸ்டெர்லைட் நிறுவனம் சிப்காட்டில் செயல்பட்டால் நாங்கள் அனைவரும் ஊரைக் காலி செய்து, சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் சூழல் ஏற்படும்.
கடந்த 2010-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நிறுவனம் அரசுக்குச் செலுத்த வேண்டிய 738 கோடி ரூபாய் சுங்க வரியைக் கட்டாமல் ஏய்த்திருப்பது கண்டறியப்பட்டு ஸ்டெர்லைட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நிர்வாகி வரதராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் மேலாகக் கள்ளத்தனமான முறையில் தாமிரம், கந்தக அமிலம் ஆகியவற்றை ஸ்டெர்லைட் உற்பத்தி செய்து கள்ளச் சந்தையில் விற்றுவருகிறது.1994-ஆம் ஆண்டு தொடங்கி 2004-ஆம் ஆண்டு வரை ஸ்டெர்லைட்டில் நடந்துள்ள வாயுக்கசிவு உள்ளிட்ட விபத்துக்களில் சிக்கி 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்; 139 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
2007-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி இந்தியாவில் தாமிர உற்பத்தி 9.97 இலட்சம் டன்னாகும். இந்தியாவின் மொத்த தேவை ஆண்டிற்கு 4 இலட்சம் டன்கள்தான். ஏற்றுமதி நோக்கத்திற்காகவே உள்நாட்டுத் தேவையைவிட அதிகரித்த அளவில் தாமிர உற்பத்தி நடந்து வருகிறது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டால் இந்தியாவில் தாமிர தட்டுப்பாடு ஏற்படும் எனச் சொல்வதற்கு எந்தவொரு அடிப்படையும் கிடையாது.
வெளிநாடுகளிலிருந்து மூலப் பொருளை இறக்குமதி செய்து, உற்பத்தி பொருளில் பெரும்பகுதி வெளிநாடுகளுக்கே ஏற்றுமதியாகும் தொழில் இங்கு இயங்க வேண்டிய அவசியம் என்ன? 2011-12ல் செய்த ரூ 19,051 கோடி மதிப்பிலான தாமிரப் பொருட்களின் விற்பனைக்கு ரூ 16,094 கோடி மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட தாமிர அடர் கரைசலை மூலப்பொருளாக பயன்படுத்தியிருக்கிறது ஸ்டெர்லைட்.
சுற்றுச் சூழலையும் மக்கள் உடல்நலனையும் பாதிக்கும் தொழிற்சாலைகளை வளரும் நாடுகளுக்கு இடம் மாற்றி அவற்றின் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து பயன்படுத்துவதுதான் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தந்திரமாக இருக்கிறது. பல பத்தாண்டுகள் முன்னேற்றம் காணாத, பாதுகாப்பற்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நடத்தப்படும் உற்பத்தியில் வெளியாகும் கழிவுப் பொருட்களை சுத்திகரிக்க செலவழிக்காமல் வெளி விடுவதன் மூலம் ஏற்றுமதி பொருளின் விலை குறைவாக பராமரிக்கப்படுகிறது.
தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது கந்தக டை ஆக்சைடுடன், நச்சு வாயுக்களும் வெளியாகின்றன. 1 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. காற்றில் கலக்கும் துகள்கள் காற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் கழிவுநீரில் உள்ள காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் நீரை நேரடியாக நச்சுப்படுத்துகின்றன. ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. திடக்கழிவுகள் கொட்டப்படும் நிலங்கள் மீட்க முடியாதபடி பாழாகின்றன.
எனவே, பணக்கார நாட்டு மக்கள் சுகாதாரமாய் வாழ தமிழகத்தின் ஏழை மக்கள் பலிகடா ஆக்கப்படுகிறோம். இனியும் இந்நிலை நீடிக்கக் கூடாது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 1.8.1994 அன்று வழங்கிய அனுமதி கடிதத்தில் ‘‘சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால்தான் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும், தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் அமைக்கப்பட வேண்டும்’’ என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
ஆனால் 1997-ம் ஆண்டு இயங்க ஆரம்பித்த ஸ்டெர்லைட் ஆலை மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கிமீ தொலைவில் அமைக்கப்பட்டிருந்தது; ஆலையைச் சுற்றி பசுமை வளையமும் ஏற்படுத்தப்படவில்லை.
21.9.2004 முனைவர் தியாகராசன் தலைமையிலான குழு ஸ்டெர்லைட்டின் இயக்கத்தை ஆய்வு செய்து விதிமுறை மீறல்களை பட்டியலிட்டது. இரு உருளைவடிவ தாங்கு உலைகளையும், கழிவுகளை தூய்மை செய்யும் ஓர் உலையையும், ஒரு ஆனோடு உலையையும், ஒரு ஆக்சிஜன் பிரிவையும், ஒரு கந்தக அமிலப் பிரிவையும், ஒரு காஸ்டர் பிரிவையும், ஒரு கன்வெர்டரையும் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். இரண்டு பாஸ்பரஸ் அமில பிரிவுகளும், சுத்திகரிப்பு மற்றும் தொடர்ச்சியான காஸ்டர் ராட் உருவாக்கும் பிரிவும் கட்டப்பட்டு வருவதாகவும் அதற்கும் அனுமதி பெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது.
28.9.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எலிப் தர்மராவ், பால்வசந்தகுமார் தலைமையிலான அமர்வு Writ Pétitions No. 15501 to 15503 of 1996.
5769 of 19 7& 16861 of 1998 வழக்குகளில் “ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூட ஆணை” பிறப்பித்தது. மேற்படி தீர்ப்பில் “ஸ்டெர்லைட் ஆலை வந்தீவு கிராமத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் கசுவார் கிராமத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், கரைச்சல்லி, விளங்குசல்லி கிராமங்களிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த நான்கு கிராமங்களும் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள 21 தீவுகளில் அடங்குபவை. இதனால் 1995-ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்த அனுமதி கடிதத்தின் நிபந்தனைகளை ஸ்டெர்லைட் மீறியிருக்கிறது தெளிவாகிறது.”
“இந்த நான்கு தீவுகளையும் சேர்த்து 21 தீவுகளை கொண்டுள்ள மன்னார் வளைகுடா வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 35(1)ன் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் பிரிவு 35(4)ன் கீழ் மன்னார் வளைகுடாவை ஒரு கடல்சார் தேசிய பூங்காவாகவும் அறிவிக்கலாம்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
“மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி என்பதில் சந்தேகமில்லை. எனவே இந்தப் பகுதியில் உயிர்வாழ் ஆதாரங்களை பாதுகாப்பதற்காக தொழிற்சாலைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. மத்திய அரசு அத்தகைய உத்தரவை பிறப்பித்ததும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை சிப்காட் தொழில் வளாகத்திலிருந்து இடம் மாற்ற ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்று தீர்ப்பளித்திருந்தது உயர்நீதி மன்றம்.
கடந்த 2013-ல் CIVIL APPEAL Nos. 2776-2783 OF 2013ன் வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை ரத்து செய்த உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் பத்தி 42-ல்
“By this judgment, we have only set aside the directions of the High Court in the impugned common judgment and we make it clear that this judgment will not stand in the way of the TNPCB issuing directions to the appellant-company, including a direction for closure of the plant, for the protection of environment in accordance with law.” என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
எனவே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட உச்சநீதிமன்றத் தீர்ப்பு தடையாக இல்லை.
மேலும் ஸ்டெர்லை ஆலை தொடர்ந்து சிப்காட்டில் இயங்குவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் ஸ்டெர்லைட்டின் தொழில் வளாகம் அமைக்கும் முயற்சி விவசாயிகளின் கடும் எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து 1.5.1994-ல் தடை செய்யப்பட்டது.
இந்திய அரசியல் சட்டத்தின் சரத்து 21-ன் படி மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டியது அரசின் அரசியல் சட்டக் கடமையாகும்.
ஆகவே, மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து,தூத்துக்குடி மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கு,பொது அமைதியை சீர்குலைத்துவரும் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் கு.வி.ந.பிரிவு.133-ன் கீழ் நிரந்தரமாக மூடி,தூத்துக்குடி சிப்காட்டை விட்டு உடனே வெளியேற்ற வேண்டுகிறோம்.
இவண் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு அனைத்து கிராம மக்கள் கூட்டமைப்பு
தொடர்புக்கு : 99442 46063,63800 10462,90035 53557.
தமிழக பட்ஜெட்டில் கரும்புக் கொள்முதல் விலையை நிர்ணயிப்பது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய நடைமுறை, குப்புறத் தள்ளிவிட்ட குதிரை குழியும் பறித்த பழமொழியை நினைவுபடுத்துகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சர்க்கரை அரவைப் பருவம் தொடங்கும் முன்பாக, கரும்புக்கான கொள்முதல் விலையை (Fair and Remunerative Price) மைய அரசு அறிவிக்கும். சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தமிழகம், மகாராஷ்டிரா, உ.பி., உள்ளிட்ட மாநில அரசுகள், தங்களது மாநில நிலைமைகளுக்கு ஏற்ப கரும்புக்கான பரிந்துரை விலையை நிர்ணயித்து, அதனை மைய அரசு அறிவிக்கும் கொள்முதல் விலையோடு கூட்டி, கரும்புக்கான இறுதிக் கொள்முதல் விலையைத் தீர்மானித்து வந்தன.
கரும்பு விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாகவே கரும்புக்கான கொள்முதல் விலையை டன் ஒன்றுக்குக் குறைந்தபட்சமாக ரூ.4,000/- என நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரிவரும் நிலையில், மைய அரசோ இந்த ஆண்டுக்கு வெறும் 2,550/- ரூபாய்தான் கொள்முதல் விலையாக அறிவித்திருக்கிறது. தமிழக அரசு பரிந்துரை விலையுடன் சேர்த்து 3,200/- ரூபாய் கொள்முதல் விலையாக நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பா.ஜ.க.வின் பினாமி எடப்பாடி கும்பல் இந்த ஆண்டு முதல் பரிந்துரை விலையை நிர்ணயிக்கும் முறையைக் கைவிட்டு, கரும்புக்கான கொள்முதல் விலையைத் தீர்மானிப்பதில் ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரைகளைச் செயல்படுத்தவுள்ளதாக பட்ஜெட்டில் அறிவித்துத் தமிழகக் கரும்பு விவசாயிகளின் தலையில் இரட்டை இடியை இறக்கியிருக்கிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு பரிந்துரை விலையுடன் சேர்த்து நிர்ணயிக்கப்பட்டிருந்த கொள்முதல் விலைக்கே (ரூ.2,750/-) கரும்பை ஆலைகளுக்கு விற்க வேண்டிய நிலைக்குத் தமிழக விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
கரும்பு உள்ளிட்டு விவசாய விளைபொருட்களுக்கான கொள்முதல் விலையை எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்திருக்கும் பரிந்துரையின்படி தீர்மானிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிவரும் வேளையில் தமிழக அரசோ தனியார் சர்க்கரை ஆலை அதிபர்களின் நலன்களை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரைகளுக்கு ஏற்ப கரும்புக் கொள்முதல் விலையைத் தீர்மானிக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, மகாராஷ்டிரா, உ.பி., கர்நாடகா ஆகிய மாநிலங்களும் பரிந்துரை விலை நிர்ணயிப்பதைக் கைவிட்டு, விவசாயிகளை வஞ்சிக்கும் புதிய நடைமுறைக்கு மாறிவிட்டன.
எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்திருக்கும் பரிந்துரையின்படி கரும்பின் கொள்முதல் விலையைத் தீர்மானித்தால், விவசாயிகளுக்கு (டன் ஒன்றுக்கு) ரூ.4,970 வரை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. விவசாயிகளோ அதனைவிட ஆயிரம் ரூபாய் குறைவாகவே கொள்முதல் விலையை நிர்ணயிக்கக் கோரிவருகிறார்கள். சர்க்கரை ஆலைகள் அடையும் இலாபத்தில் பங்கு என்ற மயக்கு வார்த்தைகளை முன்னிறுத்தும் ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரை இந்த இரண்டு விலைகளுக்கும் பக்கத்தில்கூட வரப் போவதில்லை.
ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன்
ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரைப்படி மாநில அரசுகள் கரும்புக்குப் பரிந்துரை விலையை நிர்ணயிக்கக் கூடாது. சர்க்கரை ஆலைகள் மைய அரசு நிர்ணயிக்கும் கொள்முதல் விலையை மட்டும் முதல் கட்டமாக வழங்க வேண்டும். அதன் பின், அந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரையை விற்றுக் கிடைக்கும் மொத்த வருமானத்தில் 70 சதவீதத்தை விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கரும்பின் அளவுக்கு இணையான விகிதத்தில் பிரித்து, அந்தத் தொகையை இரண்டாவது கட்டமாக வழங்க வேண்டும்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2016-17 ஆம் ஆண்டில் ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரைப்படி கரும்புக்கான கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.3,100/- எனக் கணக்கிடப்பட்டது. இதில் அந்த ஆண்டிற்கு மைய அரசு நிர்ணயம் செய்த நியாய விலை 2,395/- போக, சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் தமது இலாபத்திலிருந்து விவசாயிகளுக்குப் பகிர்ந்து அளிக்க வேண்டிய தொகை ரூ.705/-. இலாபப் பகிர்வுடன் சேர்த்து நிர்ணயிக்கப்பட்ட கொள்முதல் விலை, விவசாயிகள் கோரிவரும் கொள்முதல் விலையைவிட ரூ.900/- குறைவு என்பது ஒருபுறமிருக்க, இதனையும் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் ஒரே தவணையில் விவசாயிகளிடம் அளிக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. தனக்கு மூன்று தவணைகளில் சர்க்கரை ஆலைகள் ரூ.2,700/-ஐத் தந்திருப்பதாகவும், இன்னும் நானூறு ரூபாய் நிலுவையில் இருப்பதாகவும் கூறுகிறார், மாலேகான் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயி பாட்டீல்.
இந்த நானூறு ரூபாய் நிலுவை விவசாயிகளின் கைக்கு எப்போது கிடைக்கும் என்பது ஒருபுறமிருக்க, இலாபப் பகிர்வு அடிப்படையில் கணக்கிடப்படும் கொள்முதல் விலை ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டே போகும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.
மகாராஷ்டிராவில் 2013-ஆம் ஆண்டிலேயே ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. ஆனால், 2014-15 ஆம் ஆண்டில் இப்பரிந்துரையின்படி விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகங்கள் தர வேண்டிய மொத்தக் கொள்முதல் தொகை, மைய அரசு அந்த ஆண்டிற்கு நிர்ணயித்த நியாய விலையைவிடக் குறைவாக இருந்ததால், அது கைவிடப்பட்டது. அதற்கடுத்த ஆண்டில் சந்தையில் சர்க்கரை விலை கூடி ஆலைகளின் வருமானம் அதிகரித்தாலும், ஆலை நிர்வாகங்கள் நட்டக்கணக்குக் காட்டி, மைய அரசு நிர்ணயம் செய்த நியாய விலைக்கு மேல் ஒரு பைசாகூடத் தர மறுத்துவிட்டன.
பரிந்துரை விலையை நிர்ணயிக்கும் மாநில அரசுகளின் உரிமையை மட்டும் ரங்கராஜன் கமிட்டி ரத்து செய்யவில்லை. 1966-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்க்கரை கட்டுப்பாடு சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்துவிட்டது. குறிப்பாக, ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரைகளை மைய அரசு ஏற்றுக்கொண்ட பிறகு, மைய அரசு அறிவிக்கும் கொள்முதல் விலையை கரும்பை விவசாயிகளிடமிருந்து வாங்கிக்கொண்ட 15 நாட்களுக்குள் தந்துவிட வேண்டும் என்ற விதியைத் தனியார் ஆலை நிர்வாகங்கள் மதிப்பதேயில்லை. மாநில அரசுகள் பரிந்துரை விலை நிர்ணயிப்பதைக் கைவிடுவதற்கு முன்பே, அவற்றால் நிர்ணயிக்கப்பட்ட பரிந்துரை விலையைத் தரவும் மறுத்தன.
2014 -15 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளிவிவரப்படி நாடெங்கிலுமுள்ள சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய நிலுவை 20,100 கோடி ரூபாயாகும். தமிழகத்தில் கடந்த நான்காண்டுகளில் 24 தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்குத் தர வேண்டிய நிலுவை ரூ.1,347/- கோடி ரூபாய். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் தர வேண்டிய நிலுவை 236/- கோடி ரூபாய். விவசாயக் கடனைக் கட்டத் தவறும் விவசாயிகளை அவமானப்படுத்தி, அவர்களின் சொத்துக்களை அடாவடித்தனமாகப் பறிமுதல் செய்யும் அதிகாரவர்க்கம், விவசாயிகளின் பணத்தை ஏப்பம்விட்டுள்ள எந்த ஆலை முதலாளியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யத் துணிந்திருக்கிறது? மாறாக, பரிந்துரை விலை நிர்ணயம் செய்யும் உரிமையைக் கைகழுவித் தனியார் ஆலைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறது.
இதுவொருபுறமிருக்க, சர்க்கரையையும் அதன் துணை விளைபொருட்களையும் விற்றுத் தனியார் சர்க்கரை ஆலைகள் அடையும் இலாபத்தைக் கணக்கிடும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கிறதா? விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் கரும்பை எடை போடுவதிலேயே தில்லுமுல்லுகள் செய்து, அவர்களை ஏமாற்றி வரும் ஆலை நிர்வாகங்களுக்கு விற்பனையைக் குறைத்துக்காட்டி நட்டக் கணக்கு எழுதுவது எம்மாத்திரம்? விவசாயிகளுக்கு ஆலைகள் தர வேண்டிய நிலுவையையே பெற்றுத்தர துப்பில்லாத அரசு, ஆலைகள் அடையும் இலாபத்தில் ஒரு பகுதியை பெற்றுத் தந்துவிடுவார்கள் என நம்பமுடியுமா?
விவசாயிகள் உற்பத்தி செய்யும் கரும்பை, ஆலை முதலாளிகள் சந்தை விலைக்கு, அதாவது தாமே நிர்ணயிக்கும் விலைக்கு வாங்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். பரிந்துரை விலையை நிர்ணயிக்கும் மாநில அரசுகளின் உரிமையை ரங்கராஜன் கமிட்டி ரத்து செய்திருப்பதும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் அதனைக் கைவிட்டிருப்பதும் ஆலை முதலாளிகளின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் முதல் அடியாகும்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Paypal
$0.5
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
பட்டை தீட்டப்படாத வைரத்தை இறக்குமதி செய்து, அதனைப் பட்டை தீட்டி ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் இன்று இந்தியா சர்வதேச அளவில் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. அதேசமயம், இந்த வைர இறக்குமதி – ஏற்றுமதி வர்த்தகம்தான் கருப்புப் பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்திச் செல்வதற்கு முக்கியமான வழியாகவும் இருந்துவருவதை மைய அரசின் தணிக்கைத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் சுட்டிக் காட்டியுள்ளன.
செயற்கை வைரத்தைப் பட்டை தீட்டும் தொழிலில் குஜராத் மாநிலம்தான் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பதோடு, பா.ஜ.க.வின் அஸ்திவாரத் தூண்களுள் ஒன்றான பனியாக்கள்தான் இந்தத் தொழிலில் முழு ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். சர்வதேச அளவில் வைர வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்துவந்த யூத மதத்தினரை இன்று இந்து பனியாக்கள் பின்தள்ளிவிட்டதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
இதிலிருந்து இந்தியாவின் வைர வியாபாரத்தில் நடந்துவரும் முறைகேடுகள், அதன் மூலம் உருவாகும் கருப்புப் பணம் மற்றும் கடத்தல் ஆகியவற்றின் கேந்திரமாக நரேந்திர மோடியின் குஜராத் இருப்பதை யாரும் ஊகிக்க முடியும். குஜராத்தில் பிறந்த, ஜெயின் மதத்தைச் சேர்ந்த பனியாவான நிரவ் மோடி திடீர் தொழில் அதிபராக உருவானதை இந்தப் பின்னணியில் இருந்து பார்த்தால், அவரது வளர்ச்சியை யாரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
இதுவொருபுறமிருக்க, மோடி அரசால் பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, நிரவ் மோடி 90 கோடி ருபாய் ரொக்கப் பணத்தை பஞ்சாப் நேஷனல் வங்கியில் செலுத்தி வெள்ளையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி நிரவ் மோடி மீது சி.பி.ஐ.யில் மோசடி புகார் தெரிவிப்பதற்கு ஆறு நாட்கள் முன்பு நடந்த டாவோஸ் மாநாட்டில், அவர் தொழிலதிபர் என்ற போர்வையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் குரூப் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு மோடியின் நெருங்கிய வட்டாரப் பிள்ளையாக இருந்திருக்கிறார்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Paypal
$0.5
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுக்கு அருகில் உள்ள வெம்பாக்கம் பகுதியில், டி.வி.எஸ். குழுமத்தை சேர்ந்த ஆக்சில்ஸ் இந்தியா (Axles India) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டி.வி.எஸ். அய்யங்கார் குழுமத்தைப் போலவே, தன்னிடம் பணியாற்றும் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்துவதும் அதன் உழைப்புச் சுரண்டலும் ‘பாரம்பரிய’மானது.
காண்ட்ராக்ட் தொழிலாளர்களை தொடர்ந்து இரண்டு ஷிப்ட் பார்க்குமாறு கட்டாயப்படுத்துவது; மறுத்தால் பழிவாங்குவது என, இக்கும்பலின் தொடர் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட காண்டிராக்ட் தொழிலாளர்கள் கடந்த 2009-ஆம் ஆண்டு சங்கமாக அணி திரண்டனர். காண்டிராக்ட் தொழிலாளர்கள் மத்தியில் செயல்பட்டுவரும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் துணையோடு, நிர்வாகத்தின் அடக்குமுறை – அடாவடித்தனத்தை எதிர்த்து நின்றனர்.
நேற்றுவரை அடங்கிப்போன தொழிலாளர்கள், இன்று நேருக்குநேர் நின்று நிர்வாகத்தை எதிர்த்துக் கேள்விகேட்பதை அக்கும்பலால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
முன்னணியாளர்கள் பலர் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள். சங்கத்தில் செயல்படும் தொழிலாளர்களுக்கு ஒரு அளவுகோல்; சங்கத்தைச் சேராதவர்களுக்கு ஒரு அளவுகோல் என்று பல்வேறு வகைகளில் முன்னணியாளர்கள் பழிவாங்கப்பட்டார்கள். இன்றளவும் தொடர்கிறது.
இந்நிறுவனம் அமைந்துள்ள பகுதிக்கு அருகிலுள்ள நமண்டி பகுதியில் இருந்து கணிசமான அளவு தொழிலாளர்கள் இங்கு காண்ட்ராக்ட் முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.
தொடர்ந்து 16 மணிநேரத்திற்கு மேலாக, இரண்டு ஷிப்ட் சேர்த்து பார்க்குமாறு தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதால் பல்வேறு உடல்ரீதியிலான பிரச்சினைகளை சந்திக்க நேரிடுவதாக நிர்வாகத்திடம் முறையிட்டனர் அத்தொழிலாளர்கள்.
“முன்ன எல்லாம் எதுவும் சொல்லாமல் வேலை செஞ்சிகிட்டு இருந்தீங்க… இப்பல்லாம் லீவு வேனும்னு கேக்குறீங்க… சேர்க்கை சரியில்லாம போச்சு..” எனத் திமிர்த்தனமாக பதிலளித்தது நிர்வாகம்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவர்களது சொந்த ஊரான நமண்டியில் தொழிலாளிகள் இணைந்து நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அதற்காக விடுப்பு எடுத்துள்ளனர்.
ஊரில் நடைபெறும் ஒரு பொது நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் கலந்து கொள்வதைக்கூட சகித்துக்கொள்ள முடியாமல், “ எங்களுக்கு எதிராக சதித்திட்டம் போடுறீங்களா..’’ என அத்தொழிலாளர்களை அழைத்து மிரட்டியது நிர்வாகம். அதோடு மட்டுமில்லாமல், இதுகுறித்து விசாரிக்க ஹெச்.ஆர்.களைக் கொண்டு ஒரு ‘விசாரணைக் கமிசனே’ அமைத்துவிட்டது.
இது தொழிலாளர்களின் சுயமரியாதையை சீண்டிப் பார்க்கும் நடவடிக்கை என கண்டித்தது பு.ஜ.தொ.மு. “ஊரில் நடக்கும் விவகாரங்கள் எங்கள் சொந்த விசயம். தொழிற்சாலைக்குள் நாங்கள் ஏதும் தவறாக நடந்தால் தான் விசாரனை நடத்த வேண்டும்” எனத் தமக்கேயுரிய தன்மானத்துடன் எதிர்த்து நின்றனர் தொழிலாளர்கள்.
இதனால் ஆத்திரம் தலைக்கேறிய, ஆக்சில்ஸ் இந்தியா நிர்வாகம் ஏப்ரல்-23 அன்று காலை, பணிக்கு வந்த தொழிலாளர்களை வாயிலிலே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியது.
நிர்வாகத்தின் தொடர் அடக்குமுறையால் வெகுண்டெழுந்த தொழிலாளர்கள், காண்டிராக்ட் தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளர்கள் என வேறுபாடின்றி தங்கள் குடும்பத்தினருடன் இன்று காலையில் அணிதிரண்டனர். ஆலைக்கதவை மறித்துக் கொண்டு முற்றுகையிட்டனர். இத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக பு.ஜ.தொ.மு. தோழர்களும் போராட்டக் களத்தில் உடனிருந்தனர்.
”காண்டிராக்ட் தொழிலாளர்களை பணியமர்த்தும் பொழுது, அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரதொழிலாளியாக்க வேண்டும். தொழிலாளர்களை கூடுதல் நேரம் பணி செய்ய சொல்லிக் கட்டாயப்படுத்தக்கூடாது” என்பது உள்ளிட்ட தமது கோரிக்கைகளை கண்டன முழக்கங்களாக ஆலை வளாகம் அதிர முழங்கினர்.
தொழிலாளர்களின் உறுதியைக் கண்டு அஞ்சிய நிர்வாகம், தற்காலிகமாகப் பின்வாங்கியது. ’பேசித்தீர்த்துக்கொள்ளலாம்’ என்று நைச்சியமாக சமாதானம் பேசி தொழிலாளர்களை ஆலைக்குள்ளே அழைத்துச் சென்றுள்ளது நிர்வாகம்.
‘’ஆலைக்கு வெளியில் கூட தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்துவிடக்கூடாது’’ – என்று நிர்வாகம் நினைப்பதும்; அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றதைக்கூட விசாரணைக் கமிசன் வைத்து விசாரிக்கத்தக்க கிரிமினல் குற்றமாகச் சித்தரிப்பதும்; அதற்காகத் தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவதும், தொழிலாளர்களுக்கு உணர்த்தும் செய்தி இது ஒன்றுதான்,
‘’உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!’’
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளுர் மாவட்டம் ( மேற்கு ), 94453 68009.
“அண்மையில் வெளியான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில், தமிழர்களுக்கிருந்த கடைசி நம்பிக்கையும் இற்று வீழ்ந்தது. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களின் நிலத்தடி நீரைக் கணக்கில் எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், கர்நாடகத்தில் உள்ள நிலத்தடி நீரைக் கருத்தில் கொள்ளாதது ஏன்? பெங்களூரு நகரவாழ் மக்களின் குடிநீருக்கான தேவை குறித்துக் கவலைப்படுகிற உச்சநீதிமன்றம், பெருநகர் சென்னைவாழ் மக்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதது ஏன்? பாதிப்பானது, தமிழர்களுக்குத்தான் என்கிற நிலையில் யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது எனத் தீர்ப்பில் கூறியது ஏன்?
உச்சநீதிமன்றத்தின் இத்தகைய ஓரவஞ்சனையான அணுகுமுறைகளையும்; கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி குறித்த காலவரம்புக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தவிர்க்க முயலும் இந்திய அரசின் தமிழர்விரோத நிலைப்பாட்டையும்; நடுவர்மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை அளித்த இடைக்கால – இறுதித் தீர்ப்புகளை ஒருபோதும் ஏற்காத – மதிக்காத கர்நாடக அரசின் அடாவடிப் போக்குகளையும் விடுதலைச் சிறுத்தை கட்சியின் ரவிக்குமார் இந்நூலின்வழி உரிய ஆதாரங்களோடு அம்பலப்படுத்துகிறார்.”
காவிரிச் சிக்கல் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு என்ற வரம்போடு நின்றுவிடாமல், காவிரிக்கும் தமிழகத்திற்குமான தொன்மையைப் பறைச்சாற்றும் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் காவிரி குறித்த பதிவுகள் தொடங்கி, காவிரி பிரச்சினையின் சுருக்கமான வரலாறு; காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு; தமிழகத்தின் நிலத்தடி நீர் குறித்த நிலவரம்; நிலத்தடி நீர் குறித்த உச்சநீதிமன்றத்தின் தப்புக் கணக்கு; நம்பகமற்ற வடகிழக்கு பருவமழை; விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலைகள்; எண்ணெய்வயல்களாக்கப்படும் நெல்வயல்கள் குறித்து என விரிந்த பார்வையில் அதே நேரம் மிகவும் சுருக்கமாகவும் இச்சிக்கலை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். உரிய நேரத்தில் அரிய முயற்சி.
நூல்:கானலால் நிறையும் காவிரி
உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு குறித்த ஒரு விமர்சனப் பார்வை ஆசிரியர்: முனைவர் ரவிக்குமார். பதிப்பகம்: மணற்கேணி பதிப்பகம், 79, மருத்துவக்கல்லூரி முதல் வாசல் எதிரில், மருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613004.
manarkeni@gmail.com
பக்கங்கள்: 104 விலை: ரூ.120.00
சென்னையில் கிடைக்குமிடம்: கீழைக்காற்று
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி 10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 2. தொ.பே : 044-2841 2367
”தாயின் உலகத்தில் ஊக்கத்துடன் பயணம் செய்யுங்கள். புதிய மனிதனாகவும் வாழ்க்கையின் பொருளை உணர்ந்தவராகவும் திரும்புவீர்கள்”
-வினவு தளத்தில் ஏப்ரல் 21,2011 ஆம் ஆண்டு வெளியான மார்க்சிம் கார்க்கியின் தாய் நாவலின் நூல் அறிமுக வாசகத்தின் காட்சி உணர்வை நேரில் அனுபவித்தோம்.
சென்னையில் 22.4.2018 ஞாயிறு அன்று கொல்கத்தாவைச் சேர்ந்த செளவிக் சன்ஸ்கிருதிக் சக்ரா மேடை நாடகக் குழு நடத்திய “தாய்” மேடை நாடகம் பார்வையாளர்களை கட்டிப் போட்டது. நாடகக் காட்சிகள் ஜாரிச ரசியாவை நம் கண் முன்னே நிறுத்தியது.1917 நவம்பர் புரட்சிக்கு முன் நடந்த போராட்ட காலத்தின் வலியை ரத்தமும் சதையுமாகக் காட்டியது. நாடகம் வங்க மொழியில் நடத்தப்பட்டாலும் மொழி ஒரு தடையாக இருக்கவில்லை. இரு முறை திரைக்கதை சுருக்கத்தை தமிழில் கூறினார்கள்.
கெளதம் முகர்ஜி வயது 73. செளவிக்சன்ஸ்கிருதிக் சக்ரா மேடை நாடகக் குழுவின் அமைப்பாளர். 1978-ம் ஆண்டிலிருந்து 2500 முறை இந்நாடகத்தை இந்தியா முழுக்க மேடையேற்றியிருக்கிறார். இவரே தாய் நாவலின் நீலோவ்னா தாயாக பெண் பாத்திரம் ஏற்று நடிக்கிறார். பாத்திரத்தைப் போலவே இன்றும் பாட்டாளி வர்க்க உணர்வோடு நம்மிடையே வாழ்கிறார்.
அவருடன் இணைந்து பத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள். பாவெல், சக தோழி சாஷா, சக தோழர்களான அந்திரேய, பியோதர்மாசின், கூ செவ் சகோதர்கள், சமோய்லவ், புகின், சோமவ் எல்லாரும் தாய் நீலோவ்னவை மட்டுமல்ல நம்மையும் போராட்டத்தில் இழுக்கிறார்கள்.
அப்போராட்டத்தில் குறுக்கே மறிக்கும் கசடுகளை கண்டு வெறுப்பும் போராட்ட வெற்றியின் களிப்பும் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. மேடை அமைப்பும் பின்னணி இசையும் ஒளிக் கலவையும் உயிருள்ள தொழிலாளர்கள ஓராயிரம்பேர் போராட்டத்துடன் இணைந்துக் கொள்வதற்காக தூரத்தில் வருவது போன்ற உணர்வை ஊட்டியது.
நடிகர்களே தொழில் நுட்ப கலைஞர்களாக ஒலி,ஒளி,மேடையை நிர்மாணித்து நடித்து முடிந்ததும் மேடையை பிரிக்கும் தொழிலாளர்களாக பணியாற்றினார்கள்.
பார்வையாளர்களிடம் குழந்தைகள்போல் நெருங்கி தங்கள் நடிப்பு பற்றி குறை நிறைகளைக் கேட்கிறார்கள். அற்புதங்களை நிகழ்த்தும் சாகச கலைஞர்கள் இவர்கள்.
இருள் சூழ்ந்த இன்றைய நிலையில் ஜனநாயக வெளியை உருவாக்க கலை இலக்கிய தளத்தில் எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி கடுமையாக உழைக்கிறார்கள். வெல்க அவர்கள் பணி!
இந்நாடகம் தமிழ்நாடு மக்கள் கலை இலைக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் நிகழ்த்தப்பட்டது.
1 of 6
நாடகத்தை பார்க்க வந்திருந்தவர்கள்.
நாடகத்தை பார்க்க வந்திருந்தவர்கள்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
4) ‘‘மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு அதன் முன்னாள் காலனிய எஜமானரான பிரான்சிடமிருந்து முற்றிலும் விடுதலை பெறவில்லை. நாட்டின் நிகழ்ச்சிநிரல் வெளிப்புற சக்திகளால் தீர்மானிக்கப்படுகிறது’’ என்கிறார் 22 வயதான அன்னே பெர்டில் டுய்ஸ்ஸிட் வோபியண்ட் என்ற மாணவி.
1969-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாங்கி பல்கலைக்கழகம், அறிவியல் ஆராய்ச்சி, சட்டம், விவசாயம், சுதந்திரக் கலைகள், பொருளாதாரம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி போன்ற துறைகளில் படிப்புகளை வழங்குகிறது.
தோள்களில் முதுகுப் பையுடன் ஊதா நிற சட்டை அணிந்துள்ள ‘ஙய் பகோம்’ (Ngai Pacome), அவரது நாட்டின் அவல நிலையை விவரிக்கும் போதும் புன்னகைக்கிறார்.
“நாட்டின் சில பகுதிகளில், நிலைமை சோகமாகவும் துயரமானதாகவும் இருக்கிறது” என்று 23 வயதான, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் பாங்கி பல்கலைக்கழக முதுகலை மாணவர் கூறுகிறார்.
2005-2008 காலகட்டத்தில் அதிபர் ஃபாஸ்டின் அர்சேன்ஞ் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார்.
”நிகழ்ந்துவரும் வன்முறை காரணமாக நாட்டில் பொருளாதார செயல்பாடே முற்றிலும் இல்லை. இது எனக்கு மிகவும் கவலையைத் தருகிறது, இங்குள்ள அனைத்து மாணவர்களும் தங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள்” என்கிறார் பகோம்.
ஏன் இந்நிலை என்பது புரிந்துகொள்ள கடினமாக இல்லை. 2013 மார்ச்சில் செலேகா என்ற ஆயுதக் குழுவினர் ஆட்சிக்கவிழ்ப்பில் அதிபர் ஃபிரான்கிஸ் போஸைசை நீக்கியதிலிருந்து மத்திய ஆப்பிரிக்க குடியரசு அராஜகத்திற்கு நெருக்கமான நிலையில் இருக்கிறது. இரத்தம் தோய்ந்த கைப்பற்றுதல் நடவடிக்கை, பழிவாங்கும் தாக்குதல்கள், இன அழிப்பு மற்றும் வெகுஜன இடப்பெயர்வுகள் உள்ளிட்ட வன்முறையின் கொடூரமான செயல்களால் விளைந்தது.
‘‘மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு அதன் முன்னாள் காலனிய எஜமானரான பிரான்சிடமிருந்து முற்றிலும் விடுதலை பெறவில்லை. நாட்டின் நிகழ்ச்சிநிரல் வெளிப்புற சக்திகளால் தீர்மானிக்கப்படுகிறது’’ என்கிறார் 22 வயதான அன்னே பெர்டில் டுய்ஸ்ஸிட் வோபியண்ட் என்ற மாணவி.
நாட்டை 2013-ஆம் ஆண்டு முதல் அச்சுறுத்தி வந்த வன்முறைகளுக்கு 2016-ஆம் ஆண்டில் நடந்த தேர்தல் சிறு ஆறுதலை தந்தது. தலைநகர் பாங்கிக்கு வெளியில் புதிய அரசாங்கத்திற்கு அதிகாரமில்லை. நாட்டில் 80 சதவீதத்திற்கும் மேல் ஆயுதக்குழுக்களின் கட்டுபாட்டில் உள்ளன. அவை வரிகள் வசூலித்தல் உள்ளிட்ட தேசிய அரசாங்கத்திற்கு இணையான நிர்வாகங்களை இயக்கி வருகிறார்கள்.
நாட்டில் நடக்கும் மோதல்கள், கல்வி மற்றும் சமூக உள்கட்டமைப்புகளை நாசப்படுத்தியுள்ளன; மற்ற பாதுகாப்பு முன்னுரிமைகளுக்கு இடையில் பொதுக் கல்விக்கு நிதி ஒதுக்க அரசாங்கம் போராடுகிறது.
இந்த உள்நாட்டுப் போரால் விளைந்த முக்கிய சேதங்களில் ஒன்றாக கல்வி உள்ளது. இது நாட்டின் இளைஞர்களின் மீது மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் மக்கட்தொகையில் சுமார் 75 சதவீதத்தினர் 35 வயதிற்கும் குறைவானவர்கள். இளைஞர் வேலையின்மை வீதம் 12.5% என மதிப்பிடப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் ஆயுதக்குழுக்கள் இயங்கி வருவதையொட்டி இதனால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர்.
பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறைந்திருக்கலாம்; ஆனால் அதன் முகப்பிற்குப் பின்னால் வேளாண்மை மற்றும் விவசாய நுட்பங்களை கணிசமாக ஆராய்ச்சி செய்துவருகிறது.
மலாவி, சாட் மற்றும் நைஜர் போன்ற மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே, மத்திய ஆப்பிரிக்க குடியரசில் உயர் கல்வியில் நுழையும் மாணவர்கள் விகிதம் இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவானதாகும். இதற்கு நேர்மாறாக, உலகளாவிய சராசரி 26% ஆகும்.
பல்கலைக்கழகங்களில் நுழையும் நற்பேறு கொண்ட சிறுபான்மை மத்திய ஆப்பிரிக்கர்களுக்கும் கூட நிலவும் இடையறாத போர் மற்றும் நெருக்கடியினாலும், ஆசிரியர் பற்றாக்குறையினாலும் வகுப்புகள் பெரும்பாலும் தள்ளிவைக்கப்படுகின்றன அல்லது ரத்து செய்யப்படுகின்றன.
கிருஸ்தவ – முஸ்லீம் இனங்களுக்கு இடையிலான இடைவிடாத பதட்டத்தின் காரணமாக பாங்கியை விட்டுத் தப்பிச் சென்ற நண்பர்கள் பெரும்பாலான மாணவர்களுக்கு இருக்கிறார்கள்.
மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் பட்டப்படிப்பை முடிக்க இருமடங்கு காலமாவதாக சில மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
‘‘நான் எனது சட்ட முதுகலை படிப்பை முடிக்க விரும்புகிறேன். ஆனால் இங்கு போதிய தகுதியுள்ள ஆசிரியர்கள் இல்லை. அதனால் நான் காத்திருக்க வேண்டும்’’ என்கிறார் ஃபியர் பெபனிசிங்கோ என்ற மாணவர்.
அறிவியல் மற்றும் மருத்துவத் துறை கட்டிடங்கள் கைவிடப்பட்ட தொழிற்சாலையைப் போல் காட்சியளிக்கின்றன.
தலைநகர் பாங்கி முழுவதும் மின்சாரம் மற்றும் நீர் பற்றாக்குறையால் அவதியுறும்போது இத்தொந்தரவுகளுக்கு பல்கலைக்கழகம் விதிவிலக்கல்ல. இந்த வசதி, வளங்களின் பற்றாக்குறையையும் தாண்டி தொழில்நுட்ப துறையிலுள்ள வகுப்பறைகளின் சன்னல்கள் பெரும்பாலும் உடைந்துள்ளன. சுவர்கள் பெயர்ந்துள்ளன, வண்ணப் பூச்சுகள் உரிந்து சிதிலமடைந்துள்ளன.
‘‘இங்கே படிப்பது சித்திரவதையைப் போன்றது’’ என்கிறார் 18 வயதான மாணவி பெனிசியா டொய்னா. இங்குள்ள நிலைமைகள் இளைஞர்களை இங்கிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கின்றன என்கிறார்.
படிப்பதற்கு அல்லது வேலைக்காக வேறு இடத்திற்குச் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தால் போக விரும்புவதாக 22 வயதான டயானே நகோப் கூறுகிறார்.
இந்த உள்நாட்டுப் போருக்கு முன்னரே நாட்டின் கல்விநிலை மோசமாக தானிருந்தது. ஆனால், 2013-ஆம் ஆண்டிற்குப் பிறகு கல்வி பெறும் வாய்ப்பே மிக மோசமாகிவிட்டது.
யுனிசெஃபின் கணக்கீட்டின் படி மத்திய ஆப்பிரிக்க குடியரசில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் கல்வியறிவற்றவர்கள்.
ஒரு அரசியல்வாதியாகி தனது நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை கொண்டுவர விரும்புவதாக சொல்கிறார் 23 வயதான ஙய் பகோம்.
‘‘தலைநகருக்கு வெளியில் உள்ள நகரங்கள் கிராமங்களில் கிளர்ச்சியாளர்கள் பள்ளி, கல்லூரிகளைக் கைப்பற்றி வைத்துள்ளனர். அமைதிப்படையினரும் கூட பள்ளி கட்டிடங்களை தங்களுக்கான முகாம்கள் அல்லது தளங்களாகப் பயன்படுத்துகின்றனர் அல்லது பள்ளி விளையாட்டுத்திடல்களில் தங்கள் படைதளத்தை அமைத்துள்ளனர்’’ என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.
நாட்டில் உறுதியற்ற தன்மை தொடர்வதால் மாணவர்களின் வகுப்புகள் தொடர்ச்சியாக ஒத்திவைப்பு மற்றும் ரத்து செய்யப்படுகின்றன.
மிகப் பெரிய கல்வி நெருக்கடி உட்பட நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் இருந்த போதிலும் நாட்டை விட்டு போகமாட்டேன் என்கிறார் பகோம். “என்ன இருந்தாலும் இது எங்களுடைய வீடு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை நான் படிப்பதற்கு வேறு இடத்திற்குப் போனாலும், நான் திரும்பி வர வேண்டும், வந்து இந்த இடத்தை சரி செய்ய வேண்டும்” என்கிறார் பகோம்.
தொடர்ச்சியான நெருக்கடி இருந்தபோதிலும், பல மாணவர்கள் தங்கள் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கை கொண்டுள்ளனர்.