Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 799

விபச்சாரத்தை ஏன் அங்கீகரிக்க கூடாது? – கேள்வி பதில்!

கேள்வி:
பாலியல் தொழில் செய்யும் பெண்கள் மட்டும் இல்லையென்றால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிடும், சிறு பெண் குழந்தைகளை கூட கற்பழித்து சாக்கடையில் வீசுவது அதிகரிக்கும் என்பது என் எண்ணம், நம் இந்திய கலாசாரத்திற்கு அப்பாற்பட்டு மேற்கத்திய நாடுகளை போல் நம் அரசு பாலியல் தொழிலை ஏன் ஒரு குடிசை தொழிலாக கொண்டு வரக்கூடாது?இதனால் வேலைக்கு போகுமிடங்களிலும் பொது இடங்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவது குறையுமே?

– சத்யா
___________________________________________

அன்புள்ள சத்யா,

இந்திய கலாச்சாரம் விபச்சாரத்தை பகிரங்கமாகவே ஏற்கிறது. சீதை, கண்ணகி, முதலான ‘கற்புக்கரசிகள்’ போற்றப்படும் இந்நாட்டில்தான் தேவதாசி என்ற உலகிலேயே மூத்த விபச்சார நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்து மதக் கோவில்களுக்கு நேர்த்திக்கடனாக விடப்படும் அபலைப் பெண்கள் தங்களை அழகுபடுத்தி, ஆடல், பாடல் கலைகளை கற்றுத் தேர்ந்து, அரசர்கள், குறுநில மன்னர்கள், அமைச்சர்கள், தளபதிகள், பார்ப்பனப் புரோகிதர்கள் முதலான அன்றைய ஆளும் வர்க்கத்தினருக்கு காமக்கிழத்தியாக பணி புரிய வேண்டும். இந்த முறை சென்ற நூற்றாண்டு வரை கூட புழக்கத்தில் இருந்தது.

தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று திராவிட இயக்கம் போராடிய போது அதை காங்கிரசு தலைவர் சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் எதிர்த்தது வரலாறு. தேவதாசி குடும்பத்தில் இருந்து வந்த மூவலூர் ராமாமிருதம் அம்மையார்தான் இந்த தேவதாசி ஒழிப்பு இயக்கத்தில் பெரியார் ஆதரவுடன் முன்னணி பங்கு வகித்தார். 1999களில் கூட ஒரிசாவின் பூரி ஜகன்னாதர் கோவில் இருந்த கடைசி தேவதாசி மறைந்து விட்டாலும் தேவதாசி முறையை தொடர வேண்டும் என்று இந்துத்வவாதிகள் பேசி வந்தனர். அப்போதைய புதிய கலாச்சார இதழில் இது குறித்த விரிவான கட்டுரை வந்திருக்கிறது. வினவிலும் வெளியிடுகிறோம்.

இன்றும் இந்தியாவின் பல பகுதிகளில் ஏழை மற்றும் ‘கீழ்’சாதிப்பெண்களை பொட்டுக்கட்டி விடும் சடங்கு மூலம் கிராமங்களுக்கு ‘பொது மகளீரா’க்கும் முறை அமலில் இருக்கிறது. இங்கும் ஊர்த் தெய்வத்திற்கு நேர்ந்து விடப்படும் அபலைப் பெண்கள் கிராமத்து ஆதிக்க வர்க்க ஆண்களின் காமக்கிழத்திகளாக பணி புரிய வேண்டும். இது கீழ்மட்ட அளவில் உள்ள தேவதாசி முறை என்றும் கூறலாம்.

இந்துமதப் புராணங்களிலும் தேவலோக அழகிகளான ரம்பா, ஊர்வசி, மேனகையின் ‘வரலாற்று’ பாத்திரங்களையும், முக்கியமாக முனிவர்கள் தவமிருந்து பவர் பெறும் நேரத்தில் அவர்களை முடக்கும் சல்லாபக் கதைகளையும் அறிவோம். வாத்ஸ்யாயனரின் காமசூத்திரம், அச்சில் ஏற்ற முடியாத ஆதி சங்கரனின் சௌந்தர்ய லஹரி, அஜந்தா – கஜுராகோ சிற்பங்கள் போன்றவையும் சேர்ந்ததுதான் இந்தியக் கலாச்சாரம்.

அடுத்து சூத்திரன் என்ற நான்காம் வருண மக்களுக்கு இந்து மதம் கூறுகின்ற பொருளைப் பார்ப்போம். படிதாண்டிய மேல் வருண – சாதிப் பெண்களுக்கும், கீழ் வருண – சாதி ஆண்களுக்கும் பிறப்பவர்களே சூத்திரர் அதாவது வேசிமகன் என்று பார்ப்பனியம் வரையறுத்தது. இப்படி தன் சொந்த நாட்டின் பெரும்பான்மை ஆண்களையும், பெண்களையும் ஒழுக்கம் கெட்டு சோரம் போனவர்கள், வேசி மக்கள் என்று வரையறுத்து நடத்திய கலாச்சாரம்தான் இந்தியக் கலாச்சாரம். அதை இந்துமதக் கலாச்சாரம், பாரதக் கலாச்சாரம், பார்ப்பனியப் பண்பாடு என்றும் சொல்லலாம். இது குறித்து அம்பேத்கரும், பெரியாரும் எழுதியவற்றை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்.

முழு நாட்டு மக்களையும் வேசி மக்கள் என்று தூற்றியதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் உலகெங்கும் எல்லாக் கலாச்சாரங்களிலும் விபச்சாரம் இருந்திருக்கிறது. விபச்சாரத்தை வெறும் ஒழுக்கம் குறித்த பிரச்சினையாகப் பார்க்காமல் அதை சமூக பொருளுற்பத்தி வரலாற்றில் வைத்துப் புரிந்து கொண்டால் பல கேள்விகளுக்கு விடை தெரியும்.

இயற்கையை மட்டும் சார்ந்து, சொத்துடமை பிரிவினைகள் ஏதுமற்ற ஆதிகாலப் புராதானப் பொதுவுடமை சமூகம் தாய்வழிச் சமூகமாக இயங்கியது. இங்கு வாழ்ந்த இனக்குழு சமூகத்தின் மக்கள் குறிப்பிட்ட பெண்ணின் மக்கள் என்று அறியப்பட்டார்கள். பெண்ணே சமூகக் குழுக்களின் தலைவியாகவும் இருந்தாள். இயற்கையான வேட்டையிலிருந்து, திட்டமிட்ட வேட்டை, கால்நடை, பயிர் என்று பொருளுற்பத்தி மாறியதும் சொத்துடமைகள் தோன்றி வர்க்கங்கள் எனும் சமூகப் பிளவுகள் தோன்றுகின்றன. ஆணுக்குரியது, பெண்ணுக்குரியது என்று பாலின ரீதியில் வேலைப்பிரிவினையும் தோன்றுகின்றன.

பிறகுதான் மனித உறவுகள் சொத்துடமையின் நீட்சியாக பரிணமிக்கின்றன. அதாவது தனக்குரிய நிலம், கால்நடைகள், அடிமைகள் முதலான சொத்துக்களை காக்கும் வாரிசுரிமை தவிர்க்கவியலாமல் தோன்றுகிறது. இப்படித்தான் தாய்வழிச் சமூகத்திலிருந்து தந்தை வழிச் சமூகம் பிறக்கிறது. இந்தப் பெண்ணிற்கு பிறந்த மக்கள் என்பதிலிருந்து இந்த ஆணுக்கு பிறந்த வாரிசுகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இதில் எந்த ஆணுக்கு பிறந்தவர்கள் என்பதுதான் முக்கியமே ஒழிய எந்தப் பெண்ணுக்கு பிறந்தவர்கள் என்பது முக்கியமல்ல. குடும்பத்தின் தோற்றம் இப்படித்தான் இருந்தது என்பதை பலரும் நம்ப மாட்டார்கள். ஒரு ஆண்டை அல்லது முதலாளி அவனது சொத்துக்களை பாதுக்காப்பதற்கு குடும்பம் எனும் ஒரு தார மணமுறையே பொருத்தமாக இருக்கிறது என்பதும் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

“ஒருவனுக்கு ஒருத்தி” என்று அழைக்கப்படும் “ஒருத்திக்கு ஒருவன்” என்ற நன்னெறியின் பொருள் இதுதான். அதாவது ஒரு பெண்ணுக்கு ஒருவன் மட்டுமே இருக்க முடியும். அப்போதுதான் வாரிசுரிமைச் சிக்கல் இருக்காது. ஆனால் ஒரு ஆணுக்கு எத்தனை பெண் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இது அடிமைகளுக்கும், ஆளப்படும் வர்க்கத்தினருக்கும் சாத்தியமுமில்லை, தேவையுமில்லை. பாலியல் வாழ்வில் மனித சமூகம் உருவாக்கிய சுதந்திரக்காதல் என்பது ஒடுக்கப்படும் வர்க்கத்தினரிடையேதான் ஓரளவுக்கு இருந்தது எனலாம். இன்றும் கூட அப்படித்தான்.

சொத்துடமையின் படிக்கட்டுகளில் மேலே செல்லச் செல்ல குடும்பத்தில் இருக்கும் பாலியல் வாழ்க்கை நிர்ப்பந்தம் காரணமாகவே நீடிக்கிறது. ஊருக்கும், சொத்துடமையின் வாரிசு பிரச்சினைக்காக மட்டுமே திருமணங்கள், குடும்பங்கள் தேவைப்பட்டன. ஊருக்கு “கற்பு”, ஆசைக்கு விபச்சாரம் என்பது ஆண்டைகளின் இயல்பாக மாறியது. அதே போன்று ஆண்டைகளின் அந்தப்புரத்தில் அடைபட்டுக்கிடந்த பெண்களும் இரகசியமாக உறவு வைத்துக் கொண்டார்கள். இப்படி சொத்துடமை காரணமாக உருவாகிய குடும்பம் தன்னளவிலேயே போலித்தனத்தையும் சேர்த்து உருவாக்கியிருந்தது. இதைத்தான் ஆசான் ஏங்கெல்ஸ் கற்பும், விபச்சாரமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்று அழைக்கிறார். இலக்கணத்தில் இரண்டு எதிர்மறைகள் சேர்ந்து உடன்பாட்டுப்பொருள் ஆவது போல இரண்டு விபச்சாரங்கள் சேர்ந்து ஒரு கற்பாக மாறுகின்றன என்று கூறிய ஃபூரியேவின் மேற்கோளையும் ஏங்கெல்ஸ் காட்டுகிறார்.

இழப்பதற்கு ஏதுமற்ற வர்க்கங்களில் மட்டும்தான் உண்மையான காதலும், வெளிப்படையான உறவும் சாத்தியமாயிருந்தன. அதனால் அங்கே காதல் தோல்வியுறும் போது பிரிவினை என்பது சிரமமாக இருக்கவில்லை. ஆனால் சொத்துடமை வர்க்கங்களில் வாரிசுரிமையை ரத்து செய்ய முடியாது என்பதால் காதல் பொய்த்துப் போனாலும் குடும்ப வாழ்க்கையை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருந்தது. இன்று உலகமெங்கும் உள்ள அநேக குடும்பங்கள் இந்த அச்சில்தான் சுற்றி வருகிறது என்பது நாம் விரும்பாவிட்டாலும் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்.

இன்று எல்லா வர்க்கங்களிலும் இந்தக் ‘குடும்பத்தின்’ செல்வாக்குதான் நீடிக்கிறது. அந்த வகையில் இன்றைய குடும்பங்களின் சொத்தடைமைத் தன்மையே ‘கள்ள உறவுக்கு’ ஒரு முக்கியமான காரணமாக இருக்கின்றது. இந்த கள்ளஉறவுகளைத் தாண்டி அதிகாரத்தில் இருக்கும் ஆண்களுக்கு, விபச்சாரம் தேவையான பாலியல் வக்கிரங்களை நிறைவேற்றுகிறது. அதனாலேயே இன்று பல நாடுகளில் விபச்சாரம் நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசின் ஆதரவோடு செயல்படுகிறது.

மேட்டுக்குடி வர்க்கங்களின் இன்பநாட்டத் தேவைகள் அவர்களது பணத்திமிர் காரணமாக எல்லா துறைகளிலும், எல்லா உணர்ச்சிகளிலும் அளவிறந்து காணப்படுவது போலவே பாலியல் விசயத்திலும் நடைபெறுகிறது. இதுவும் இன்றல்ல, நேற்றல்ல வரலாற்றின் ஆரம்ப காலத்தில் இருந்தே தொடர்கிறது. நமது பண்ணையார்களும், மிட்டா மிராசுதார்களும், ஜமீன்தார்களும் சட்டப்பூர்வமாகவும், மறைமுகமாகவும் பல மனைவிமார்களோடு வாழ்ந்தார்கள். மைனர் என்ற பெயரில் அவர்களது வக்கிரங்கள் இயல்பானதென்று நியாயப்படுத்தப்பட்டன. இது போக ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களையும் குறிப்பாக அவர்களுக்கு மணமானால் முதலிரவில் பண்ணையாரை திருப்தி படுத்த வேண்டும் என்ற கொடுமை இந்தியாவின் பல பகுதிகளில் இருந்திருக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கங்களால் இந்தக் கொடுமைகள் நிறுத்தப்பட்டன.

ஆக விபச்சாரம் உள்ளிட்டு பல்வேறு பாலியல் வக்கிரங்களின் ஊற்றுமூலம் மேட்டுக்குடியினர்தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அடுத்து இன்று பாலியல் வக்கிரங்கள் ஏன் அதிகம் நடைபெறுகின்றது என்பதை பார்க்கலாம். அப்படி அதிகம் நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் விபச்சாரத்தை சட்டபூர்வமாக மாற்றலாம் என்பது உங்களது கருத்து. ஆனால் பாலியல் வன்முறைகளின் மூலத்தை விபச்சாரத்தால் அழித்துவிட முடியாது. சொல்லப் போனால் பாலியல் வன்முறைகளின் மூலம்தான் விபச்சாரத்தையே தோற்றுவிக்கிறது, நடத்தி வருகிறது.

பாலியல் உணர்வு என்பது மனிதன் உள்ளிட்ட எல்லா விலங்கினத்திற்கும் உள்ள இயற்கையான உயிரியல் உணர்ச்சிதான். ஆனால் அந்த விலங்கின உணர்ச்சியிலிருந்து காதல், ரசனை, தேர்வு, என்ற நாகரீக கட்டத்திற்கு மனிதன் மாறிவிட்டான். இந்த நாகரீகம் விலங்கினங்களுக்கு கிடையாது. அதாவது நமது காதலில் விலங்குணர்ச்சி உள்ளதோடு மனிதனது நேசம், ரசனை என்ற சிந்தனைரீதியான பண்பாட்டு அம்சமும் கலந்திருக்கிறது. அதே நேரம் இந்த விலங்குணர்ச்சியும், கலாச்சார உணர்ச்சியும் கலந்த காதலில் விலங்குணர்ச்சியை மட்டும் துண்டித்து வெறியோடு வளர வைக்க முதலாளித்துவ சமூக அமைப்பின் சூத்திரதாரிகள் தொடர்ந்து செயல்படுகிறார்கள்.

அவர்களின் நோக்கம் பணம் மட்டுமே. இன்று எண்ணிறந்த வகைகளில் பாலியல் தொழில் என்பது ஆபாசப்படங்கள், செய்திகள், சினிமாக்கள், சேனல்கள், கருவிகள், கடைகள், நடனங்கள் என்று செல்பேசி முதல் இணையம் வரை பரவிக் கிடக்கின்றது. சுற்றுலா என்றாலே அது விபச்சாரச் சுற்றுலாதான் எனும் அளவுக்கு மாறிவிட்டது. முக்கியமாக மேற்குலகின் வக்கிர நபர்களுக்கான விபச்சார விடுதிகளாக கீழை நாடுகளின் சுற்றுலா நகரங்கள் மாறிவிட்டன.

மேலும் நேரடி பாலியல் வக்கிரங்களைத் தாண்டி சராசரியான செய்தி, விளம்பரம், பாடல், புகைப்படம், மொழி என அனைத்தும் பாலுணர்வைத் தூண்டும் விதத்தில் திட்டமிட்டு மாற்றப்பட்டிருக்கின்றன. இவை பாலுணர்வின் வாடிக்கையாளர்களாகக் கருதப்படும் ஆண்களைக் குறிவைத்தே தயாரிக்கப்படுகின்றன. சராசரி பெண்ணுடல் என்பது சக மனித இனம் என்பதைத் தாண்டி எப்போதும் நுகர்வதற்குரிய ஒரு பண்டமாக நம் மனங்களில் திணிக்கப்பட்டிருக்கிறது. அழகு, அலங்காரம், நடை, உடை, பாவனை சகலமும் இதைச் சுற்றியே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவைகளை எற்றுக்கொள்ளுமளவு பெண்களும் மெல்ல மெல்ல மாற்றப்பட்டு வருகிறார்கள்.

சரி, இத்தகைய பிரம்மாண்டமான பாலியல் தொழில் வலைப்பின்னல் மனிதர்களின் பாலுணர்வுக்கு போதிய ‘தீனி’ போட்டு ஆற்றுப்படுத்தலை செய்திருக்கிறதா? இல்லை. அப்படி முடியாது என்பது இதன் நோக்கத்திலும், இயல்பிலும் உள்ளதைக் கொண்டு புரிந்து கொள்ளலாம். கலாச்சாரத்திலிருந்து துண்டிக்கப்பட்ட பாலுணர்வு வெறி என்பது ஒரு போதும் அடங்காது. அதனாலேயே பழையமுறைகள் சலித்துப்போய் புதிது புதிதாக தேடும் வெறி தூண்டப்படுகிறது. விபச்சாரத்தில் கூட பெண்கள், விதவிதமான தேசிய இனப்பெண்கள், கன்னி கழியாத பெண்கள், பல வயது பெண்கள், என்று போய் தற்போது குழந்தைகள் வரை வந்து நிற்கிறது. எனினும் இந்த வேட்டை இத்தோடு நின்றுவிடாது. வேறு வேறு விதங்களில், முறைகளில் தொடரும்.

8 எம். எம் எனும் ஹாலிவுட் படத்தில் ஒரு பணக்காரனது திருப்திக்காக ஒரு அப்பாவி இளம் பெண்ணை வன்புணர்ச்சி செய்து பின்னர் உண்மையாகவே கொலை செய்து அதை படமெடுத்து (SNUFF FILM) அவனுக்கு காட்டுகிறார்கள். அப்போதுதான் அவனது உணர்ச்சி திருப்தி அடைகிறது. அதற்காக அவன் பெரும் பணத்தை செலவழிக்கவும் தயாராக இருக்கிறான். இது உண்மையா, பொய்யா என்று பார்ப்பதை விட இவை போன்றவற்றை சாத்தியப்படுத்தும் வழிகளில்தான் பாலியல் வக்கிரங்கள் பெரும் பணத்தை அள்ள முடியும்.

மனிதர்களின் மறு உற்பத்திக்கென்று இயல்பான முறைகளில் இருக்கும் உடலுறுவு பின்னர் பாலுணர்வு வெறிக்காக விதவிதமாக மாற்றப்பட்டு ஓதப்படுகிறது. அவையெல்லாம் அறியாதவர்கள் இன்பத்தை முற்றிலும் அறியாதவர்கள், நுகராதவர்கள் என்று பொதுக்கருத்தை உருவாக்கி மிரட்டுகிறார்கள். பதற்றம் கொள்ள வைக்கிறார்கள். குழந்தைகள் விளையாடும் வீடியோ கேம்களில் இரத்தம் தெறிக்க கொலை செய்யும் விளையாட்டுக்கள் போல வன்புணர்ச்சி செய்யும் ரேப் விளையாட்டுக்களும் வந்துவிட்டன. ஆனால் இவை விளையாட்டோடு நிற்காமல் அந்த பிஞ்சு மனங்களில் ஊடுறுவி என்றாவது வினையாற்றாமல் போய்விடுமா என்ன?

முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் இத்தகைய சமூக சூழலே பாலியல் வக்கிரங்களுக்கும், வன்முறைகளுக்கும் அடிப்படையான காரணம். விபச்சாரத்தை சட்டபூர்வமாக மாற்றுவதன் மூலமாக இவற்றை ஒழித்துவிட முடியாது. அதனால்தான் விபச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பாலியல் கேளிக்கைகள் சட்டப்பூர்வமாகவே நிறைந்திருக்கும் அமெரிக்காவில் கூட பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் குறைந்து விடவில்லை. உண்மையில் இந்த வன்முறைகள் அமெரிக்காவிலேதான் அதிகம். வளர்ச்சியடைந்த மேற்குல நாடுகளிலும் கிட்டத்தட்ட அதே நிலைமை.

பொருளாதாரத்தில் வளராத ஏழை நாடுகளிலும் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பதற்கு மேற்கண்ட சமூகச்சூழலே காரணம். இந்தியாவில் “கற்பு – விபச்சாரம்” இரண்டையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக வைத்திருக்கும் பார்ப்பனியப் பண்பாடு இரண்டு முறைகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றது. அதில் ஒன்று சமூக ரீதியாக இங்கு சுதந்திரக் காதல் சாத்தியமற்ற நிலை. சாதி, மதம் விட்டு காதலிப்பது இன்றும் கூட இங்கு போராட்டம்தான். எதிர்பாலினத்தவரை பார்ப்பது, சகஜமாக பழகுவது கூட இங்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. இதன் எதிர்மறையாக பாலியல் வக்கிரங்கள் வளருவதற்குரிய பொருத்தமான சமூக நிலைமையை பார்ப்பனியம் வழங்குகிறது.

மேலும் சாதி, மதம், ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம் நிறைந்திருக்கும் நமது நாட்டில் ஒரு பெண் காதலிப்பது என்பது இத்தனை தடைகளை தாண்டித்தான் முடியுமென்பதால் உண்மையில் பெண்களுக்கு இங்கே தேர்வு செய்யும் உரிமை இல்லை. இருப்பதாக சொல்லப்பட்டிருப்பதும் கூட சமூக விளைவுகளை கருத்தில் கொண்டு வேறு வழியின்றி தேர்வு செய்யும் சமரச நிலைமையே. இது எரிகின்ற கொள்ளியில் எண்ணெய் வார்ப்பது போல காரணமாகிறது.

சொத்துடமை தோற்றுவித்திருக்கும் வாரிசுரிமைக் குடும்பம்தான் நம்நாட்டிலும் செல்வாக்கோடு செலுத்துகிறது. இவையனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் பாலியல் பிரச்சினைகளில் ஒரு மனிதனின் தனித்துவ விருப்பமும், அதற்கு சமூகம் விதித்திருக்கும் தடைகளும் ஒரு முரண்பாட்டை வீரியத்துடன் உருவாக்குகின்றன. அந்த முரண்பாட்டின் பிரச்சினைகளோடுதான் நாமனைவரும் வாழ்கிறோம்.

நேர்மறையில் இந்த முரண்பாட்டினை சமூக விழுமியங்களோடு, சமூக நோக்கிலான வாழ்வோடு கடந்து செல்ல வேண்டும் என்று நாம் கூறுகிறோம். ஆனால் முதலாளித்துவ அமைப்போ இந்த முரண்பாட்டை கேடாக பயன்படுத்தி வெறியை வளர்த்து காசு பார்க்கிறது. இதை ஒழிக்காமல் பாலியல் வன்முறைகளையும், நமது குழந்தைகளையும் பாதுகாக்க முடியாது. அதற்கு விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குவதும் பலனளிக்காது.

அடுத்து எந்த நிலையிலும் நாம் விபச்சாரத்தை ஏற்க இயலாது. ஏனெனில் மனிதனின் அகவய தேவையை பண்பாட்டு தரத்துடன் நிறைவேற்றும் பாலியலை ஒரு தொழிலாக செய்வது என்பது மனித சாரத்திற்கு எதிரானது. இன்று ஏழ்மை, மறுகாலனியாக்க நெருக்கடிகள், மேற்குலகின் முதலாளிகள் மற்றும் அவர்களது இராணுவத் துருப்புகளுக்காக நம்மைப் போன்ற ஏழை நாட்டு பெண்கள் வேறு வழியின்றி விபச்சாரத்திற்குள் தள்ளப்படுகின்றனர்.

பணக்காரர்களின் வக்கிரங்களுக்கான மேட்டுக்குடி விபச்சாரத்தைத் தாண்டி உழைக்கும் வர்க்க ஆண்களும் கீழ்தட்டு விபச்சாரத்தை நாடி செல்கின்றனர். உதிரித் தொழில்களில் அதிக உடலுழைப்பை செலவழித்து இறுதியில் தமது மனித சாரத்தை பறி கொடுக்கும் இந்த மனிதர்கள் ஒரு இயந்திரம் போல தமது கேளிக்கைகளை நாடுமாறு அவர்களது பணிச்சூழல் கோருகிறது. புகை, போதை வஸ்து, பான்பராக், மது, விபச்சாரம் அனைத்தும் இவர்களை மேலும் கடினமாக உழைப்பதற்கு ஒரு வகையில் உதவுகிறது. இவர்கள் எவரும் வக்கிரங்களுக்காக விபச்சாரத்திற்கு செல்வதில்லை. இவர்களது கொடுமையான வாழ்க்கைச் சூழலை மாற்றி அவர்களும் மனைவி, குழந்தைகளோடு ஒரு இனிமையான வாழ்க்கையை நடத்த முடியும் என்று செய்தால் இவர்கள் ஏன் விபச்சாரத்திற்கு போக வேண்டும்?

காதலில் காமம் இருக்கிறது. காமவெறியில் வெறும் விலங்குணர்ச்சி மட்டுமே இருக்கிறது. ஒரு ஆணோ, பெண்ணோ காதலுடன் முத்தமிடுவது வேறு, காமவெறியுடன் மிருகம் போல கடிப்பது வேறு!

காதல் சாத்தியப்படும் போது காமவெறிக்கு தேவை இல்லை. ஆனால் காமவெறி இல்லாமல் முதலாளித்துவ பாலியல் நிறுவனங்கள் தொழில் நடத்த முடியாது.

ஆகவே பாலியல் வன்முறைகளை ஒழிக்க வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையாக இருக்கும் இந்த அநீதியான சமூக அமைப்பை நாம் மாற்றுவதற்கு முன்வரவேண்டும். ஏற்றத்தாழ்வு மறைந்து போகும் ஒரு சமூக அமைப்பில் சுதந்திரக் காதல் பூத்துக் குலுங்கும். அங்கே மனிதர்கள் மட்டுமே இருப்பார்கள். விலங்குகளுக்கு வேலை இல்லை.

__________________________________________________________

தொடர்புடைய பதிவுகள்

கவுன்சிலருக்கு மல்லையா பீரு! மினிஸ்டருக்கு மங்காத்தா பாரு!

15

குந்திக்கினு கொறிக்கிறவன்
ஓடிக்கினு பேசுறவன்
அட்ச்சிகினு தூங்குறவன்
அம்சமா லபக்குறவன்
நெட்டுல நோண்டுறவன்
வினவுல பொருமுறவன்
அல்லா மாம்சும்
மறக்காம ஓட்டு போடுங்கப்பு!

வரப்போறது
உங்காட்சி, எங்காட்சி இல்லடே!
உள்ளாட்சி தேர்தல்!

சரிலே,
அது என்னடே
ஆட்சியில உள்ளாட்சி, வெளியாட்சி
ஓபனாட்சி, குளோசுடு ஆட்சி…ன்னு
பிரிச்சு விளையாடுதீக!

கட்டிங் மேட்டருல
வட்டம்னா என்ன,
மாவட்டம்னா என்ன,
கோட்டையின்னா என்ன
இல்ல செங்கோட்டையின்னாதான் என்னடே?

உறைய மாத்தி
கலரை மாத்தி
டேஸ்ட மாத்தி
எப்புடி அட்ச்சாலும்
சாராயம் சாராயம்தாம்லே,
கூமுட்டையில ஏதுடா குல்சா முட்டை!

ஏலே, மக்கா!
வைட்டமின் ‘ப’
ஆயிரத்துல ஆரம்பிச்சா கவுன்சிலரு
‘எல்லுல’ போனா எம்.எல்.ஏ
‘சி’யிலு முடிஞ்சா எம்.பி
ஹவாலாவுல டீலீங்னா லோக்கல் மினிஸ்டர்
சுவிஸ்ஸுக்கு கை மாத்துனா சென்ட்ரல் மினிஸ்டர்
உலகவங்கியோட டைரக்டா பேசுனா பிரைம் மினிஸ்டர்
கூட்டிப் பெருக்கிப் பாத்தா
சில்லறைங்களுக்கு உள்ளாட்சி
நோட்டுக்கு மத்த ஆட்சி!
கவுன்சிலருக்கு மல்லையா பீரு!
மினிஸ்டருக்கு மங்காத்தா பாரு!

___________________

ரிங்கப்பு, மேட்டருக்கு வா!
நிர்மலா பெரியசாமி எபக்டுல சொன்னா,
” தமிழகத்தில் தி.மு.க தனித்துப் போட்டி
கலைஞர் அறிவிப்பு, உடன்பிறப்புகள் உற்சாகம்”

ஏலேய் வீணாப்போன உடன்பிறப்புகளா!
எங்கனயிருந்து நைனா ஜாலி?
இதென்ன மாயாஜால் மங்காத்தா ஷோவா?
இல்ல மாகாபலிபுரம் மிட்நைட் டான்சா?

தில்லிக் குளுருல கனிமொழிக்கு அப்பீட்டு
சப்பாத்தி துன்னு ராசாவுக்கு சீதபேதி ரிப்பீட்டு
சேலத்து சிங்கம் வீரபாண்டி ஆறுமுகம்
ஏட்டையா கஸ்டடியில,
விழுப்புரத்து பொன்முடி சப் இன்ஸ்பெக்ட்டரு பாக்கட்டுல
கே.கே.எஸ்.எஸ்.ஆர் ரிமாண்டுக்குன்னு
டுடேயா, டுமாரோவான்னு வெயிட்டிங்!
பொங்கலூர் பழனிச்சாமி RAC யில புக்கிங்!
பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி ஆட்டமெல்லாம் குளோசாகி
பல்லி ஊறும் பாளைச்சிறையில் குடிமுழுக
அஞ்சா நெஞ்சன் அஞ்சி அஞ்சி எஸ்ஸாக
எங்கனயிருந்துடே உற்சாகம்?

கட்சியில ஒரு கோடிப்பேருங்குறான்
ஊருக்கொரு சிங்கம், தளபதி, நாட்டாமைங்குறான்
ஆனா அம்மா அடிச்ச அடியில
ஜட்டியக் காணோம், ஜாக்கியக் காணோம்னு ஓடுறான்
பொண்டாட்டி புள்ளகளை பாத்து அழுவுறான்
களி தின்னு விக்கலுல நெளியுறான்
மாஜிஸ்ரேட்டு முன்னாடி கதறுறான்
மீடியாவக் கண்டா ஒளியுறான்
மீறிக்கேட்டா புலம்புறான்

இத விடுடா,
அம்மா அரஸ்ட்டுல அண்டம் கிடுகிடுங்க
ரப்பர் ஸ்டாம்ப் பிரதிபா பட்டீல் பாட்டியண்ட
காப்பாத்து, காப்பாத்துன்னு முறையிடுறான்.
வீராதி வீரன்னு ரீல்விட்டுகிணு
கைப்புள்ளயாட்டம் ராஷ்டிரபதி பவனுல
புகார் கொடுக்குறவன
இன்னுமா இந்த ஊர் உலகம் நம்புது!

ஆனது ஆச்சு, ஆட்சியும் போச்சு
வாரிசு சான்சும் ஜஸ்ட் மிஸ்ஸிங்ன்னு
தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின்
ஊரு ஊரா புண்ணிய ஷேத்திரம் போறமேரி
வேலூர், கடலூர், திருச்சி, மதுரை, பாளைன்னு
உடன்பிறப்பு மேஸ்திரிகளை ஜெயில்ல பாத்தாரு,
ஆறுதலை ஏதோ கொஞ்சம் கொடுத்தாரு
விட்டா சேலம் சிவராஜ வைத்தியர் கணக்கா
ஓரே நாளுல மூணு ஜெயிலுக்கு போனாலும் தீராதுன்னு
போங்கடா போக்கத்தவனுகளான்னு
பாடி செக்கப்புக்கு இலண்டனுக்கு பறந்தாரு

இப்ப வெயிட்டான பாடியோட
உள்ளாட்சி தேர்தலுல பேசுதாறு
“கட்சியப் பாத்து போடாதீங்க,
ஆளப்பாத்து போடுங்கன்னு” புலம்புராறு!
அடுத்து யார் அரஸ்ட், யார் ரிமாண்டு,
எந்த ஸ்டேசன், எந்த ஏட்டுன்னு
இன்னும் எம்புட்டு நாளு அலையறது!

_______________________

னிமொழியை காங்கிரசு கண்டுக்கிலைனு
காங்கிரசை கலைஞர் கண்டுக்கல
ஆ வூன்னா காங்கிரசு தனித்துப் போட்டியினு
மைக் மாமா இளங்கோவன் கானா பாட்டு பாடி
கட்சிய கொன்னுட்டான்னு
கதர்க்காரனுவக துக்கப் படுறானுவ

சத்தியமூர்த்தி பவனுல
வேட்டியக் கிழிச்சது போக
இருக்குற துணிய வச்சு
கோமணம் கட்டுற பயலுவ
இப்போ உள்ளாட்சித் தேர்தலுல
தனித்துப் போட்டின்னு சொல்லிகிட்டு
அதுக்கு 12 வேட்டி கோஷ்டி தலங்கள போட்டு
கமிட்டி அமைச்சுருக்கானுக!
இன்னா தெகிரியம்!
டெபாசிட்டே தேறாத
தொப்பைத் தலையனுகளுக்கு
தெனாவட்ட பாத்தியாடே?

_____________________________

“சரக்கடிச்சுட்டு சட்டமன்றம் வாறான்னு”
அம்மா எகிற
“நீதான் கூட இருந்து ஊத்திக் கொடுத்தியா”ன்னு கேப்டன் திமிற
அது முந்தா நேத்து காமடி
“ஏதோ சீட்ட பாத்துப் போட்டுக்குடும்மா”ன்னு
போயஸ் தோட்டுத்துல காத்திருந்து
ஜாக்பாட்டு அடிச்சாரு நம்ம காப்டன்
இது நேத்து காமடி

அது கேப்டனுக்கு பம்பர் பிரைசுன்னா
அம்மாவுக்கு ராப்பிச்சைக்கு கொட்டுற சோறுதான்
பெறவு பிச்சைக்காரன் பிரியாணிக்கு அடிபோட
அம்மா பீச்சாங்கையால அடிச்சு விரட்ட

ஊர்மேய்ஞ்சு உடம்பு வளர்த்த
ஜல்லிக்கட்டு காளை கணக்கா
நம்ம காப்டன்  ஓடுறாரு, ஓடுறாரு,
நான்ஸ்டாப் ரன்னிங்குதான்.
பார்சிலானோவுல
காளைச்சண்டையை முடிச்சுக்கிட்டாலும்
நம்ம கேப்டன் காளை
மப்போட மிரண்டு புறண்டு ஓடுறதை நிறுத்துமாலே?

_______________________________

ப்பாலிக்கா நம்ம கேப்டனுக்கு
சிவப்பு வாளியில
காமரேடுங்க தண்ணி காட்டுனாங்களாம்!
அவுக கதையைக் கேட்டீகன்னா
அழுவுற புள்ளயும் வியுந்து வியுந்து சியிக்கும்!

காவிக்காரனை எதிர்க்கணும்னா
கதர்க்காரனோட கூட்டு!
கருப்பு சிவப்பு ஊழலை ஓய்க்கணும்னா
போயஸ்தோட்டுத்துல எச்சலை விருந்து
அம்மா அதிகாரத்தை வீய்த்தணும்னா
கோபலாபுரத்துல ஆறிப்போன டீ!

பதிவுலகுல வட போச்சேன்னு
மொக்கைங்க பேசுறமேரி
நம்ம காம்ரேடுங்களும் அம்மாகிட்ட
படாதபாடு பட்டாச்சு!
அப்பாவாச்சும் புத்தி வந்துச்சாடே?

பார் கேப்டன் ஒரு காலத்துல
சிவப்பு மல்லி படத்துல,
சிவப்பு சொக்கா போட்டுகினு,
சிவப்பு கண்ண உருட்டி உருட்டி
சிவப்பு டயலாக் உட்டவராச்சேன்னு
டாஸ் கேப்பிடல் படிச்ச நம்ம
மார்க்சிஸ்ட் மாமாக்கமாரு
வந்தவரைக்கும் ஆதாயம்ணு
கூட்டணியாம்!

இதுல கேப்டன்
கண்டிசனா தா.பாண்டியன் மாமாவும்
வரணும்னு உத்தரவு போட
அதுக்கென்ன, செஞ்சுட்டாப் போச்சுன்னு
காம்ரேடுங்க ஒத்துக்கிணாங்களாம்!
பட்சே
அம்மையிண்ட முந்தானையை விட்டு
ஒருபோதும் இறங்காம் பாடில்லான்னு
அச்சன் தா.பா பேக் சைடு பெவிகால் தடவி
அவிடே அரை சீட்டு, கால் சீட்டு கிடைச்சாலும் மதின்னு
வெல் செட்டில்டாம்!
ஏலேய் ஆஃபாயில் அபிஷ்டுங்களா
சீக்கிரம் புரட்சி வர்ரது மாதிரி தெரியிதுடே!

சரிடே
புல்சே புண்ணாக்காட்டம்
ரொம்ப சிரிக்காதலே!

நெக்ஸ்ட் அயிட்டம்
பெரியார் சொன்ன ‘கண்ணீர்த்துளி’ சோகம்லே!

___________________________

“யாருக்காக, இது யாருக்காக,
இந்த மாளிகை வசந்த மாளிகை”ன்னு
சால்வை போட்ட சிவாஜி கெட்டப்புல
நம்ம வைகோ அண்ணே வாராறுலே!
எங்கனயும் சேர முடியாது,
எவிடயும் அடைய முடியாது,
இதுதாம்லே ரியாலிட்டி.
ஆனா அதைக்கூட கொஞ்சம்
ரோசமா நம்ம அண்ணன்
தனிச்சுப் போட்டின்னு
அடைகாக்குற பொந்துக் கோழி மேரி
பினாத்தும் போது
சிரிக்கவும் முடியல,
அழவும் முடியல,
உனக்கு எப்புடிலே?

___________________

ல்லாக் கட்சிக்காரனும் அத்துவிட்ட
இந்த காவிக் கட்சிப் பயலுவ
கோயம்புத்தூர் கவுண்டர் கட்சிக்காரனோட
கூட்டாம்டே!
காவிப்பயலுவ பாய கொல்லணும்பான்
கவுண்டர் பயலுவ சக்கிலியரை ஒழிக்கணும்பான்
இரண்டு பயலுவகளையும்
வளத்து விட்டது அய்யா கட்சியும், அம்மா கட்சியும்தான்!
இல்லேன்னா இவனுகளை எவன் மதிப்பாம்டே?

___________________

“அடங்க மறு, அத்து மீறு, திருப்பி அடி”
“எளிய மனிதனுக்கு அதிகாரம்,
கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்”னு
எதுகை மோனை எபக்டுல
ஒரு காலத்துல முழங்குன
நம்ம தம்பி திருமாவும்
ஃபீல்டுலதாம்டே இருக்காரு!
காங்கிரசு எருமையையே
கண்டுக்காத கலைஞரு
காய்ஞ்சு போன சிறுத்தைக் குட்டிக்கா
பால் குடுப்பாறு!
பாய்சன் குடுக்காம இருந்தா சரி!

என்ன செய்ய?
அரசியல்னு ஆயிப்போச்சு
இப்ப போய் புழப்ப மாத்த முடியுமா?
தம்பி திருமாவும் யாராவது
கூட்டணி வையுங்கய்யான்னு
குய்யா முய்யான்னு கத்துராறு
மாம்பழத்துக்கிட்டயும் தூது விடுராறு

மாம்பயத்தை கடிச்சு துன்ன
அவன் கட்சியிலேயே ஆளு இல்லைன்னு ஆயாச்சு,
பெறவு
வெம்பிப்போன மாம்யத்தை
கைக்காசு போட்டு
தின்னு பேதியாக
எவனும் தயாரில்ல!
ஆனா பாத்துக்கிடுங்க
தைலாபுரம் லாக்கரு
ரொம்பித்தான் வழியிது
வழியிறத கொஞ்சம்
நக்கலாம்ணு
சில பயலுவ அங்கனயும்
கிடக்கான் பாத்துக்கிடுங்க!

பெறவு நம்ம எஸ்.ஆர்.எம்
பச்சமுத்து கட்சியும்
அல்லா ஊர்லயும் போட்டியிடுதாம்!
காலேஜ், சொத்து பத்தை காப்பத்தருதக்கு
இதவிட்ட ஏதுடே வழி?

இதுதாம்டே உள்ளாட்சி தேர்தலு லைவ்!

அல்லா கட்சிக்காரனும்
அம்மாவாசை நல்ல நேரத்தை விட்டா கிடைக்காதுன்னுட்டு
மனு தாக்கல் செய்ஞ்சுருக்கான்!
ஒரே நாளுல 66,000 மனுக்களாம்!
நம்ம நேரம் எம்புட்டு கெட்டுப்போச்சு, பாத்தியாலே?

அது கிடக்கட்டும்
பல கிராமத்துல
ஆலமர, அரச மர பஞ்சாயத்து பெரிசுங்கள கூட்டி
பதவிகளை ஏலம் விடுறாய்ங்களாம்!
இதுனால ஜனநாயகம் கெட்டுப் போச்சுன்னு
நம்ம அண்ணா ஹசாரே அம்பிங்க
வருத்தப் படுதானுங்களாம்!

ஏலே போக்கத்த மூதிகளா
இதத்தாம்லே ராலேகான் சித்தியில
அண்ணா பண்ணிக்கீராறு
அவரு காட்டுத ஆளுதாம்லே
அங்கன பிரசிடண்டு!
மருமக உடைச்சா பொன்குடம்
மாமியார் உடைச்சா மண்குடாமாலே!

சரிலே
கடைசியில ஒன்னு சொல்லுதேன்!
திருப்பதி போய் முடிய வழிச்சு
அடிக்கிற மொட்டையும்
உள்ளாட்சி தேர்தலுல
வேகாத வெயிலுல நின்னு
வோட்டு போட்டு உனக்கு நீனே
அட்ச்சுக்கிற பட்டை நாமமும்
நல்லா மேச்சாகுதுலே!

போய் புள்ளி குட்டிகளை படிக்க வைக்க,
போராடுற வழியப் பாருலே!

________________________________________________________

– காளமேகம் அண்ணாச்சி
_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

அமைச்சரா, ரவுடியா? ஜகத்ரட்சகனின் பாரத் பல்கலை மாணவர் போராட்டம்!

திடீர் பணக்காரன், ரவுடி ஜகத்ரட்சகனின் பாரத் பல்கலைக்கழகத்தில்  உரிமைக்காக மாணவர்கள் போராட்டம்!

மொழிவாரி மாணவர்களின் பிரச்சினையாக  மாற்றி, அடியாட்களை வைத்து மாணவர்களை அடக்கும் பல்கலை நிர்வாகம் !

– ஒரு நேரடி ரிப்போர்ட்

 சமீப காலமாக  பாரத் பல்கலைக் கழகத்தில் நடந்து வரும் பல பிரச்சினைகளால் அங்கு வேலை செய்யும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதன் விளைவே மாணவர்களின் இப்போராட்டம். ரவுடிகளும், பொறுக்கிகளும் கல்வி நிறுவனங்களை நடத்தினால் என்னவாகும் என்பதற்கு இப்பொழுது இப்பல்கலையில் நடந்து வரும் நிகழ்வுகளே ஒரு சிறந்த உதாரணம்.

பெரும்பாலும் இது போன்ற தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள் தங்களுக்கென்று சில அல்லக்கைகளையும், ஆட்காட்டிகளையும் வைத்துக்கொண்டு ஆவர்த்தனம் செய்வர். ஆனால் இங்கோ அல்லக்கைகளும் ஆட்காட்டிகளும் மட்டுமே சேர்ந்து ஒரு பல்கலைக்கழகத்தை  நடத்தி வருகின்றனர் என்பதுதான் உண்மை. வளாகத்தில் எங்கு எந்த மூலைக்குச் சென்றாலும் இந்த /ஆ க்களைப் பார்க்கலாம். இப்பல்கலையில் உள்ள அனைத்து உயர் பதவிகளிலும் தங்கள் உறவினர்களை வைத்தே பல்கலையை நடத்தி வருகின்றார் கொள்ளையனான ஜகத்ரட்சகன்.

பல்கலைக்கழகம் என்ற பெயரில் இயங்கி வந்தாலும் மிகச்சிறிய அளவிலான இட வசதியை மட்டுமே கொண்டுள்ள இங்கு உள்கட்டமைப்பு என்பது பெயரளவிலேயே இருப்பது அங்குள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள்  மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் என்று ஏறத்தாழ பத்தாயிரம் பேர் இருக்கும் அங்கு குறைந்தபட்சம் தாகத்தை போக்குவதற்குத் தேவையான தண்ணீர் வசதிகூட இல்லை என்பது கொடுமையின் உச்சகட்டம்.

பல துறைகளைக் கொண்டு இயங்கி வரும் பல்கலைக்கழகம் என்று இவர்களின் வலைத்தளத்தில் சொல்லப்பட்டாலும் இவற்றில் பல பெயரளவில் மட்டுமே உள்ளது. மேலும் அவையாவும் மிகக் குறைவான கட்டிடங்களிலேயே அடங்கிவிடுகிறது. அங்குள்ள அனைத்து உபகரணங்களும் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக வாங்கப்பட்டு இயங்காத, அரதப் பழசான நிலையிலேயே உள்ளது. புதிய துறைகள் தொடங்கப்பட்டாலும் அதற்கான உபகரணங்கள் எதுவும் இல்லாமல் மாணவர்களை வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவும் செய்முறைப்பயிற்சி இல்லாமல் அவர்களை வேலையில்லாப் பட்டதாரிகளாக்கும் நிலையே இங்கு நீடித்து வருகிறது. இதன்முலம் ஒட்டுமொத்தமாக இப்பல்கலையில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம்  சூனியமாகிப் போய்விடுகிறது. இம்மாணவர்கள் நேர்முகத்தேர்வுக்குச் சென்றால்  பாரத் பல்கலை என்று பார்த்த மாத்திரத்தில் வெளியேற்றப்படும் அவலநிலையும் உள்ளது.

இந்நிலையில்  தங்களுக்கு பள்ளி வளாகத்திலேயே இந்த ஆண்டு முதல் நேர்முகத்தேர்வு வேண்டும் என்று மாணவர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதுவரை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் முகநூலின்(ஃபேஸ்புக்) மூலம் மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்த மாணவர்கள் முடிவு செய்தனர். திட்டமிட்ட படி நான்காம் ஆண்டு மாணவர்கள் 27.9.2011 அன்று வகுப்பிற்கு செல்லாமல் பல்கலையின் விளையாட்டுத் திடலில் உள்ளிருப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.சமாதானம் பேச வந்த டீன் (Dean) காசி விஸ்வலிங்கம் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு டிகிரி தான் தரமுடியுமே தவிர வேலை வாங்கித்தர முடியாது என்று திமிர்த்தனமாக பதில் அளித்துள்ளார். இதனால் மேலும் கோபமடைந்த மாணவர்கள் தங்களுக்கு முடிவு தெரியும் வரை போராட்டம் ஒயாது என்று முடிவு செய்து போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கீழ் மட்டத்தில் உள்ள பல்கலையின்  நிர்வாகத்தினர் சமாதானப்படுத்தியும் சமாதானமாகாத நிலையில் பல்கலையின் தாளாளரும் ஜகத்தின் மகனுமான சந்தீப் ஆனந்த் வந்தால் மட்டும் தான் பேசுவோம் என்று மாணவர்கள் கறாராகக் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த பல்கலையின் தேர்வு இயக்குனரும் பொறுக்கியுமான PJK என்கிற PremJeyaKumar நிர்வாகத்திற்குச் சாதகமான சில தமிழ் மாணவர்களை வைத்து போராட்டத்தை அடக்க முற்பட்டிருக்கிறான், மேலும் அதிகமாக வடமாநிலத்திலிருந்து வந்து படிக்கும் மாணவர்களை தமிழ் மாணவர்கள் மற்றும் வெளியிலிருந்து வந்த ரவுடிகளையும் வைத்து அடிக்க வைத்திருக்கிறார். இதில் வட மாநிலத்து மாணவர்கள் பலர் ரத்தம் சொட்ட சொட்ட அடிபட பதிலுக்கு அவர்களும் அடித்துள்ளனர். சரியாக இதை எதிர்பார்த்துக் காத்திருந்த  ரவுடி PJK இப்பிரச்சினையை தமிழ் மற்றும் வட இந்திய மாணவர்களுக்கான பிரச்சினையாக மாற்றி போலிசுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். பொதுவிலும் பிரச்சினை அவ்வாறாகவே சென்றுள்ளது / மடைமாற்றப்பட்டுள்ளது.

இது போன்ற கருங்காலித்தனத்தை நிர்வாகத்தின் சொந்தக்காரனும் ஆட்காட்டியுமான அடையார் செந்திலும் செய்துள்ளார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் தங்களுடைய அதிகார பலத்தினாலும்  அடாவடித்தனத்தினாலும் இப்பரச்சினையை மொழிகளுக்கிடையேயான பிரச்சினையாக மாற்றியுள்ளது நிர்வாகம். இதற்கிடையில் எட்டு மணியானபோதும் மாணவர்கள் அனைவரும் பல்கலை வளாகத்திலேயே அடைக்கப்படிருந்தனர். அதற்குப் பிறகு வெளியே வந்த மாணவர்கள் அனைவரும் இரவு  பத்து மணியளவில் கல்லூரியில் இருந்து தாம்பரத்தில் உள்ள கேம்ப் ரோடு வரை அணிவகுத்துச் சென்றிருக்கின்றனர். சாயங்காலத்திலிருந்து நூற்றுக்கணக்கான போலிசும் அங்கு குவிக்கப்பட்டிருக்கிறது. முடிவு தெரியும் வரை மாணவர்களும் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இப்பல்கலையின் ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரி பல்கலை அலுவலகத்தின் வாயில் முன்பு நின்ற போது அது  தவறு என்றும், கை நீட்டி சம்பளம் வாங்குகிற நன்றி விசுவாசம் கூட இல்லையா என ஒருமையில் சந்தீப் ஆனந்த் திட்டியதும் யாராலும் மறக்க முடியாத ஒன்றாகும். சுய மரியாதை, தன்மானம் உள்ள எவராலும் இதைக் கேட்டு அமைதியாக இருக்க முடியாதாயினும் தங்களின் வாழ்நிலையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு உள்ளுக்குள் புழுங்கியும், வாய் மூடி மவுனிகளாகவும் இருக்கின்றனர். அற்ப சம்பளத்திற்குக் கூட வேலை செய்யத் தயாராக, படித்த வேலையில்லாப் பட்டதாரிகள் அதிகமிருக்கிறார்கள் என்பதையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் இவர்கள், இதை வைத்தே அனைவரின் வாயையும் மூடிவிடுகிரார்கள்.

மத்திய அரசாலும் பல்கலைக் கழக மானியக் குழுவினாலும் பல்கலைக்கழகத்திற்கான தகுதியை இழந்துவிட்ட இப்பல்கலைக்கழகத்தின் சமீப கால அடாவடித்தனங்கள், மாநிலத்திலும் மத்தியிலும் அவர்களுக்கிருக்கிற அரசியல் ரீதியான செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு இவர்கள் போடும் ஆட்டம் போன்றவை அளவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.மாணவர்களின் இப்போராட்டம் வெல்ல ஆசிரியர்களும் சேர்ந்து பங்கு கொண்டால் போராட்டம் மேலும் வலுவடையும். போராடும் மாணவர்கள் வெற்றபெற நமது ஆதரவை தெரிவிப்போம்.

__________________________________________________________________

– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை
__________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

அண்ணா ஹசாரே – கார்ப்பரேட் மீடியா கண்டெடுத்த கோமாளி!

 “நூறு கோடிக்கு மேல் மக்கட்தொகை கொண்ட இந்த நாட்டில் ஊடகங்களுக்கு பத்து நாட்கள் வேறு செய்தியே கிடைக்கவில்லை. எங்கள் சானல் வழியாகத்தான் அண்ணா ஹசாரே மக்களிடம் பேசுகிறார் என்றெல்லாம்கூடத் தொலைக்காட்சிகள் சொல்லிக்கொண்டன. முதலில் இதுவே மிகப்பெரியதொரு ஊழல். ஊடகங்களுக்கு உரிமம் கொடுத்திருப்பது செய்திகள் தருவதற்கு; யாருக்காகவோ பிரச்சாரம் செய்வதற்கு அல்ல. பிரச்சாரம் செய்வது என்றே கொண்டாலும், எல்லா சானல்களும் அதைச் செய்யக் காரணம் டி. ஆர்.பி ரேட்டிங்க்தான். அதுதான் விசயம் என்றால் நீலப்படங்களைப் போட்டு சம்பாதிக்க வேண்டியதுதானே”  அருந்ததி ராய் (ஜன் லோக்பால் குறித்த பேட்டி, சி.என்.என். ஐ.பி.என் தொலைக்காட்சி)

கடுமையான வார்த்தைகளாகத் தோன்றினாலும் நூற்றுக்கு நூறு உண்மைதான். ராம் லீலா மைதானத்தின் மேடையில் அண்ணா ஹசாரே போராடிக் கொண்டிருந்தார். அதாவது சாப்பிடாமல் படுத்துக் கொண்டிருந்தார். ஊர்ப்புறங்களில் ராப்பகலாக சைக்கிள் மிதிக்கும் சைக்கிள் வீரர் நிகழ்ச்சியையே பெரிய சைஸில் நடத்தியது போலிருந்த இந்தப் போராட்டத்தில், கொட்டு அடித்து நோட்டீஸ் கொடுக்கும் நபரின் பாத்திரத்தை கிரண் பேடியும் அருண் கேஜ்ரிவாலும் செய்தனர். ஓயாமல் தேசியக்கொடியை ஆட்டிக் கொண்டிருந்த கிரண் பேடி, “நம்முடைய அண்ணா நன்றாக இருக்கிறார்” என்று அவ்வப்போது  அறிவித்துக் கொண்டிருந்தார். மைதானத்தில் கூடியிருந்த கூட்டம், ஐஸ் கிரீம், பாப்கார்ன், நொறுக்குத்தீனியைத் தின்றபடியே, “அண்ணா நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று கூறி தேசியக்கொடியை ஆட்டிக் கொண்டிருந்தார்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சிக்கொடி, அரசியலையே வெறுக்கும் நடுத்தரவர்க்க அற்பர்களுக்கு தேசியக் கொடி போலிருக்கிறது!

ஜன் லோக்பால் மசோதாவை அரசு நிறைவேற்றவில்லையென்றால், “உணவைத் துறப்பேன்” என்று ஹசாரே ஒருபுறம் எச்சரிக்க, “மசோதாவை நிறைவேற்றவில்லையென்றால் நான் உடையைத் துறப்பேன்” என்று அரசை எச்சரித்தார் விளம்பர நடிகை சலீனா வாலி. ஏர்டெல், டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களோ தங்களது வருமானத்தையே துறந்து, “ஊழலுக்கு எதிராகப் பேசுங்க பேசுங்க பேசிகிட்டே இருங்க, யாரும் காசு தர வேணாம்” என்று அறிவித்தன. இப்படி பல வகையறாக்களின் ஆதரவையும் பெற்றிருந்த ஹசாரே, அவர் யாரை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தாரோ அந்த அரசாங்கத்தின் ஆதரவையும் பெற்றிருந்தார் என்பதுதான் வியப்புக்குரிய செய்தி.

ஆகஸ்டு 16  ஆம் தேதியன்று தடையை மீறப்போவதாக சொன்ன ஹசாரேயைக் கைது செய்து திகார் சிறையில் வைத்தது அரசு. ஏதேனும் ஒரு பங்களாவில் வைக்காமல் திகாரில் வைப்பதா என்ற விமரிசனங்கள் எழவே, திகார் சிறையையே பங்களாவாக மாற்றிக் கொடுத்தது அரசு. அதன்பின் 15 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஹசாரே உத்தரவிட்டதன் அடிப்படையில், ராம் லீலா மைதானத்தை சுத்தம் செய்து, தண்ணி தெளித்து, மேடை மைக் செட் ஏற்பாடு செய்து கொடுத்து, லத்திக் கம்பு இல்லாத போலீசுக்காரர்களை காவலுக்கும் நிறுத்தி, இறுதியாக  ஹசாரேயை அழைத்து வந்து மேற்படி போராட்டக்களத்தில் இறக்கியும் விட்டது அரசு. இதெல்லாம் அரசாங்கம் சொந்த செலவில் தனக்கே வைத்துக்கொண்ட சூனியமா, அல்லது வேறு ஏதேனும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக திட்டமிட்டு வழங்கிய மானியமா என்பது குறித்து காங்கிரசு கட்சிக்குள்ளேயே நடைபெற்று வரும் தீவிரமான விவாதம் இன்னும் முடிவடையவில்லை. இருந்தபோதிலும் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துவிட்டது  ஹசாரேவுக்கு வெற்றி என்று அறிவிக்கப்பட்டும் விட்டது.

என்ன வெற்றி, என்ன கோரிக்கைகள் நிறைவேறின என்று கேட்டால், தீவிர ஹசாரே ஆதரவாளர்களுக்குக் கூட விவரம் தெரியவில்லை. ஊழலை ஒழிப்பதற்கு ஜன் லோக்பால் என்றொரு மசோதாவை ஹசாரே கொண்டு வந்ததாகவும், முதலில் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த அரசு கடைசியில் வேறுவழியில்லாமல் ஏற்றுக் கொண்டுவிட்டதென்றும் பதிலளிக்கிறார்கள். இது உண்மையல்ல. லோக்பால் மசோதா தயாரிப்பது தொடர்பாக எங்களையும் கலந்து பேச வேண்டும் என்று துவக்கத்தில் அண்ணா ஹசாரே குழுவினர் கோரினர். அவர்களைக் கலந்து பேசிய ஐ.மு.கூட்டணி அரசு, முடிவில் பல் இல்லாத ஒரு லோக்பால் மசோதாவைக் கொண்டு வந்தது. இதை வைத்து ஊழலை ஒழிக்க முடியாது என்று கூறிய ஹசாரே குழுவினர், ஜன் லோக்பால் என்றொரு மசோதாவைத் தயாரித்தனர். பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரையும் அதன் விசாரணை வரம்புக்குள் கொண்டு வந்தனர். “எங்கள் மசோதாவை அப்படியே ஏற்றுக் கொண்டு ஆகஸ்டு 30க்குள் நிறைவேற்றவில்லையேல் போர்தான்”  அதாவது பட்டினிப் போர்  என்று அறிவித்தார் ஹசாரே.

தொலைக்காட்சி ஊடகங்களால் ஊதி உப்ப வைக்கப்பட்டிருந்த தனது ஆளுமையைக் கண்டு தனக்கே பயம் ஏற்படும்போது இந்த அரசாங்கம் மட்டும் நம்மைக்கண்டு எப்படி அஞ்சாமலிருக்க முடியும் என்று எண்ணிய அந்த அசட்டுக் கோமாளி, தனக்கு எதிரில் சூயிங்கத்தை மென்று ஊதி பலூன் விட்டுக் கொண்டிருந்த இளைஞர் படையிடம், “அமைச்சர் வீட்டை முற்றுகையிடுங்கள், எம்பிக்களை கெரோ செய்யுங்கள்” என்று ஆணையிட்டார். அவர்கள் ஐஸ்கிரீம் வண்டிகள் மற்றும் பாவ் பாஜி கடைகளைத் தவிர வேறு எதையும் கெரோ செய்து அனுபவமில்லாதவர்கள் என்பது புரிந்தவுடன்,  ஹசாரே குழுவினர் இறங்கி வந்தனர்.

“மாநிலங்களில் லோக்பால், கீழ்நிலை அதிகார வர்க்கத்தை லோக்பால் சட்டத்தின் கீழ் கொண்டுவருதல், அரசு அலுவலகங்களில் என்னென்ன வேலை எத்தனை நாட்களில் முடியும் என்று அட்டை எழுதிக் கட்டுதல்”  என்ற மூன்று விசயங்களை மட்டும் ஏற்பதாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் போதும்” என்று ரொம்பவும் தரைமட்டத்துக்கு இறங்கி வந்தனர். அரசு அதற்கும் பணியாததால் பாரதிய ஜனதாவின் காலில் விழுந்து ஆதரவு கேட்டனர். அதற்குப் பின்னர் ‘சும்மனாச்சிக்கும்’ ஒரு விவாதம் மட்டுமே நடத்தி விட்டு, மற்றதையெல்லாம் நிலைக்குழு பார்த்துக் கொள்ளும் என்று கூறிவிட்டது நாடாளுமன்றம்.

குப்புற விழுந்த ஹசாரேவைத் தூக்கி நிறுத்தி கையில் பெயர் வெட்டி தயாராக  வைத்திருந்த கோப்பையைக் கொடுத்து, “வெற்றி வெற்றி” என்று வடிவேலு பாணியில் சத்தமாகக் கத்திவிட்டு, 12 நாள் கூத்தை முடிவுக்குக் கொண்டு வந்தன தொலைக்காட்சிகள். இதுதான் இந்த 12 நாள் பாரதப் போரின் கதைச்சுருக்கம்.

ஊடக முதலாளிகள் நினைத்தால் தாங்கள் எண்ணிய வண்ணம் இந்த தேசத்தின் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கலாம், தாங்கள் விரும்பும் நபரை தேசத்தின் நாயகனாக்கலாம், வெறுக்கும் நபரையோ கட்சியையோ தனிமைப்படுத்தலாம் என்பதற்கு ஹசாரே நாடகம் ஒரு சான்று. ஊழல் ஒழிப்புதான் நாட்டின் தலையாய பிரச்சினை என்றும், அதனைச் சாதிப்பதற்கு ஹசாரேயைப் போன்ற நல்லொழுக்க நாட்டாமைகளே நமக்குத் தேவை என்றும் ஒரு பொதுக்கருத்தை உருவாக்கிய தொலைக்காட்சிகளில் முதன்மையானது டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான டைம்ஸ் நவ் தொலைக்காட்சி. இந்த டைம்ஸ் குழுமத்தினர்தான் சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களின்போது, அரசியல் பிரமுகர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு, அவர்களைப் போற்றிப் புகழும் செய்திகளை வெளியிட்டு பின்னர் பிடிபட்டவர்கள்: பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, அந்த நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி காணும் என்ற பொய்க்கருத்தைத் தனது வாசகர்களிடையே  பரப்பி, அந்நிறுவனங்களின் பங்குகளை வாங்க வைத்து  அவர்களை போண்டியாக்கியவர்களும் இதனை ஒட்டி “செபி” யிடம் பிடிபட்டவர்களும் இந்த யோக்கியர்கள்தான்.

இப்பேர்ப்பட்ட  யோக்கியர்கள் திடீரென்று ஒரு ‘மாபெரும்’ ஊழல் ஒழிப்பு இயக்கத்தை ஸ்பான்சர் செய்கிறார்கள் எனும்போது சந்தேகப்படவேண்டியிருக்கிறது. குறிப்பாக அலைக்கற்றை ஊழலின் நீதிமன்ற விசாரணையில் அம்பானி, டாடா, மன்மோகன் போன்றோரைக் குறித்த செய்திகள் அடுத்தடுத்து அம்பலத்துக்கு வந்து கொண்டிருந்த சூழ்நிலையில்தான், குறிப்பான அந்த விவகாரத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரசியல்வாதிகளின் ஊழலை முன்னிலைப்படுத்துகின்ற ஹசாரே பிரபலப்படுத்தப் பட்டிருக்கிறார்.

தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் பொதுச்சொத்துகளும், இயற்கை வளங்களும், பொதுத்துறைகளும் சட்டபூர்வமாகவே தரகுமுதலாளிகளுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் தாரை வார்க்கப்படும் காலத்தில் இருக்கிறோம். கல்வி, மருத்துவம் முதல் சாலைகள் வரையிலான அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டு, அவர்கள் அடிக்கும் கொள்ளைகள் அனைத்தும் சட்டபூர்வமாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சட்டபூர்வ ஊழலான மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டங்களை முதன்மைப் படுத்துவதற்குப் பதிலாக,  சட்டவிரோத ஊழலை ஒழிப்பதே முதற்கடமை என்று சித்தரிப்பதன் மூலம் தொந்திரவற்ற சேவையை பன்னாட்டு முதலாளிகளுக்கு அளிக்க முன்வருமாறு நம்மை அழைக்கிறார் ஹசாரே.

ஊழல் என்பது இந்திய அரசியல் இதுவரை அறிந்திராத பிரச்சினை அல்ல. ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைதான் இது. இந்திய அரசியலில் இந்திராவுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணும், ராஜீவுக்கு எதிராக வி.பி.சிங்கும்  இதனை எழுப்பியிருக்கின்றனர். இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஊழல் எதிர்ப்பின் ஆதாயத்தை ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான் அறுவடை செய்துகொண்டது. தற்போது, ஹசாரே என்ற காந்திக் குல்லாய் அணிந்த இந்துத்துவவாதிக்கு கூட்டம் சேர்க்கும் வேலையை எல்லா இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் தான் செய்திருக்கிறது. இதனை கோவிந்தாசார்யாவின் கூற்றே உறுதி செய்திருக்கிறது. 2ஜி, காமன்வெல்த் போன்ற ஊழல்களைக் குறிப்பிட்டுப் பேசிய ஹசாரே தவறிக்கூட எடியூரப்பாவின் ஊழலைப் பற்றியோ, பெல்லாரி கொள்ளையைப் பற்றியோ குறிப்பிடாததன் மூலமும், மோடியை மனமாரப் புகழ்ந்ததன் மூலமும், தான் ஆர்.எஸ்.எஸ் இன் கைப்பிள்ளைதான் என்பதை நிரூபித்திருக்கிறார்.

ஹசாரே முன்வைக்கும் இந்த ஜன் லோக்பால் அவரது சொந்த சரக்கல்ல. ஊழலை ஒழிப்பதுசிறந்த அரசாளுமை ஆகிய இரண்டும் உலகவங்கியின் முழக்கங்களாகும். 90 களில் துவக்கத்தில் ஊழலின் மொத்த உருவமே அரசுத்துறைதான் என்பதால், ஊழலை ஒழிப்பதற்கு தனியார்மயம்தான் தீர்வு என்று கூறி தனியார்மயக் கொள்கைகளை நியாயப்படுத்தின ஆளும்வர்க்கங்கள்.  இன்று தனியார்மயக் கொள்கைகள்,  ஊழலை முன்னிலும் பல்லாயிரம் மடங்கு பிரம்மாண்டமானதாக மாற்றியுள்ளன.  எனினும் ‘தனியார்மயத்தை ஒழி’ என்று பேசுவதற்குப் பதிலாக, ஊழல் ஒழிப்புப் பணியை தன்னார்வக் குழுக்கள் உள்ளிட்ட தனியார் ஏஜென்சிகளிடம் கொடுத்துவிட்டு, அவர்களின் முன்னே கைகட்டி நிற்குமாறு அரசினைப் பணிக்கின்றன ஏகாதிபத்தியங்கள். தன்னார்வக் குழுக்களின் அதிகாரத்தைத்தான் மக்களின் அதிகாரம் என்று ஏய்க்கின்றனர் ஹசாரே குழுவினர்.

ஆயுத போலீசு, சிறப்பு போலீசு ஆகியோர் போதாதென்று வீரப்பனைப் பிடிப்பதற்காக சிறப்பு அதிரடிப்படை ஒன்றை உருவாக்கியது போல, லஞ்ச ஒழிப்புத் துறை, விஜிலென்ஸ் கமிஷன் போன்ற அமைப்புகள் போதாதென்று ‘சர்வ வல்லமை பொருந்திய’ ஜன் லோக்பால் என்ற அதிரடிப் படையை  உருவாக்கி இலஞ்சத்தை ஒழிக்கப்போவதாக கூறுகின்றனர். சிறப்பு அதிரடிப்படை எத்தனை அப்பாவிகளைக் கொன்றது, பெண்களை சிதைத்தது என்பதை நாம் அறிவோம். அதிகாரவர்க்கத்தை கொழுக்கவைப்பதும் புதிய சட்டங்களால் அதனை ஆயுதபாணியாக்குவதும், ஊழலையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் அதிகரிப்பதற்கு மட்டுமே பயன்படும். அரசு எந்திரத்தைப் பொருத்தவரை, இது வரையிலான அனுபவங்கள் நமக்கு இதைத்தான் காட்டியிருக்கின்றன.

கிரண் பேடி, அருண் கேஜ்ரிவால் உள்ளிட்ட ஹசாரே குழுவின் பலரும் தன்னார்வக் குழுக்களை நடத்துபவர்கள். ராக்ஃபெல்லர் பவுண்டேசனின் நிதியுதவியில் தரப்படும் மகசேசே விருது பெற்றவர்கள். நோபல் பரிசு, மகசேசே பரிசு போன்றவற்றைப் பெற்றவர்களைத்தான் ஜன் லோக்பால் அமைப்பில் நியமிக்க வேண்டும் என்று பச்சையாக அறிவிக்கும் அளவுக்கு இவர்கள் வெட்கம் கெட்ட பதவி வேட்டைக்காரர்கள். கார்ப்பரேட் கொள்ளைகள் மற்றும் ஊழலின் விளைவாகத் தனியார்மய தாராளமயக் கொள்கைகளும், அவற்றை அறிமுகப்படுத்திய மன்மோகன்சிங்கும் நடுத்தரவர்க்கத்தின் மத்தியிலேயே மதிப்பிழிந்து வருவதால், அரசியலுக்கு அப்பாற்பட்ட ‘புனிதர்கள்’ சிலரை முன்நிறுத்தி தனியார்மயத்தைப் பாதுகாக்க எண்ணும் ஏகாதிபத்தியங்களின் நேரடியான மற்றும் மறைமுகமான கைப்பாவைகளான தன்னார்வக் குழுக்களின் கூட்டணியே ஹசாரேயின் அணி.

_______________________________________________________________

புதிய ஜனநாயகம், செப்டம்ர் 2011
__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

The Battleship Potyomkin (1925) போர்கப்பல் பொதம்கின்! (ரசியத் திரைப்படம்- வீடியோ)

13

லக திரைப்பட ரசிகர்கள், திரை விமரிசகர்கள், திரைத்துறை படைப்பாளிகள் முதலாளித்துவ அறிவுஜீவிகள் முதல் பாட்டாளிவர்க்கம், புரட்சிகர கட்சிகள் வரை அனைவரும் கலை எழுச்சியுடன் இன்றும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் இந்த ’ போர்க்கப்பல் பொதம்கின்’(Battelship Potemkin) என்ற ரஷிய மவுன படத்திற்க்கு வயது 85.

திரை மேதை செர்ஜி ஐசன்ஸ்டினால் இயக்கப்பட்ட இந்த படத்தின் கரு, ரஷியாவில் 1905-ம் ஆண்டு ஜார் மன்ன்னுக்கு எதிராக நடந்த போதம்கின் கப்பல் தொழிலாளர்களின் கலகத்தை பற்றியது. பேட்டல்ஷிப் பொதம்கின் கப்பலில் அதன் மாலுமிகளால் ஆரம்பிக்கப்படும் கலகம் பின்பு ஒடேசா துறைமுகத்தில் தீயாக பரவி பல உயிரிழப்புகளுக்கு பின் மக்கள் எழுச்சியாக மாறுகிறது.

வடிவம், உள்ளடகம் என இரண்டிலும் கணகச்சிதப் படைப்பான இந்த படம், 1925-ம் ஆண்டு சோவியத் ரஷியாவில், ரஷிய புரட்சியை நினைவு கோரவும், அதன் எழுச்சியை ஆவணப்படுத்தவும் உலக மக்களுக்கு தெரியப்படுத்தவும் நடந்த குறிப்பிடத்தக்க முயற்ச்சி.

ஐசன்ஸ்ட்டீன் ரஷிய புரட்சியை மையமாக வைத்து மூன்று படங்களை இயக்கினார் ஸ்டரைக்(Strike -1925),  பேட்டில்ஷிப் பொதம்கின்(Battleship Potemkin-1925),அக்டோபர் (October-1928).  முதல் படம் ரஷிய புரட்சியின் மிக முக்கிய நிகழ்வுகளான, ரஷியா தொழிலாளர்கள் ஒன்றுபட்டு வேலை நிறுத்தம் செய்தது குறித்த ஒன்று. அதை தொடர்ந்து இரண்டாவது படம் 1905-ம் ஆண்டு பேட்டில்ஷிப் பொதம்கின் எனும் கப்பலில் ஏற்பட்ட கலகம் குறித்தது. இறுதியாக மூன்றாவது படம் 1917-ம் ஆண்டு லெனின் தலமையில் நடந்த பாட்டாளிவர்க மக்கள் பேரெழுச்சியை ஆவணப்படுத்தியிருக்கிறது.

பேட்டல்ஷிப் பொதம்கின் படம் வெளிவந்தவுடன் அதை பல முதலாளித்துவ நாடுகள் தடை செய்தன. இன்னொரு புறம் திரைத்துறைப் படைப்பாளிகளும் பொதுவுடமைவாதிகளும் உச்சிமுகர்ந்து வரவேற்றனர். 1925-ல் பெரிய தொழில்நுட்ப வளர்ச்சி ஏதும் இல்லாத நிலையில் மவுனப்படமாக ஐசன்ஸ்டின் எடுத்த இந்த படம், நூற்றாண்டுகள் கடந்தும், பார்க்கும் பார்வையாளனை ஒன்றிவிடச்செய்யும் அற்புத திரைக்கதையையும்,அதற்க்கு தகுந்த கச்சிதமான காட்சிகளையும் கொண்டது. இது பிரச்சாரப்படம் தான். ஆனால் பல போலி அறிவுஜீவிகளும், முதலாளித்துவ முட்டாள்களும் முன் வைக்கும் கருத்தான “கம்யுனிஸ்டுகளுக்கு படைப்புக்கான நுண்ணுர்வும், நவின யுக்திகளும் , புதுமைகளை படைக்கும் அறிவும் இல்லை” எனும் வாதம் முட்டாள்த்தனமானது என்பதை நிரூபித்த படம்.

தொடர் பிரச்சாரங்களைச் செய்யும் போது தான்  படைப்பில் பல புதுமைகள் செய்ய வேண்டிய நிர்பந்தம் தானாக எழுகிறது. இல்லையென்றால் மக்கள் பிரச்சாரத்தை புறந்தள்ளிவிடுவார்கள். இன்னொரு பக்கம் எழுச்சியை மக்களிடம் பதியவைக்க வேண்டும் என்கிற ஆவல் தான் புதுமைகளுக்கான தேவையை ஏற்படுத்துகின்றது.

ஒடெஸா படிகட்டுகள் எனும் ஒரு முக்கிய காட்சியில் ஐசன்ஸ்டீன் கையாண்ட  படத்தொகுப்பு யுக்தியான மாண்டேஜ் திரைத்துறையின் முக்கிய கோட்பாடாக மாறியது. இன்றளவும் பல நாடுகள் இந்தப் படத்தை அந்த யுக்தியை கற்றுக் கொடுத்த “க்ளாசிக் சினிமாவாக ” அறிமுக படுத்துகிறார்கள. அந்த யுக்தியின் பிறப்பின் சூழலும் அவசியத்தையும் பின்பு பார்க்கலாம்.

இன்னொரு பக்கம் இந்த படத்தை ஏதோ படத்தொகுப்பு கோட்பாட்டிற்க்கான ஒரு மாதிரி படம் என்பது போலவும், இந்த படத்தை பற்றிய விமரிசனம், ஆய்வு தொகுப்புகள், கட்டுரைகள் என பலவும் அதன் வடிவத்தை மாத்திரம் முன்னிறுத்தி அந்த வடிவத்தைக் கோரிய உள்ளடகத்தையும், அரசியலையும் புறக்கணிக்கும் வேலையை சிறப்பாகவே முதலாளித்து அறிவுஜீவிகள் செய்கிறார்கள்.

ஆனாலும் பார்வையாளர்கள் இந்த அறிவுஜீவிகளின் கருத்தை புறந்தள்ளுவது நிச்சயம். படம் பார்த்தப்பின் ரஷிய பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சி இயல்பாகவே உங்களுள் புகுந்துவிடும். இந்த படம் பார்த்து தங்கள் நாட்டிலும் புரட்சி வந்துவிடும் என பயந்து ஆரம்ப நாட்களில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற முதலாளித்துவ நாடுகள இந்த படத்தை தடை செய்தது. அதையும் மீறி பலர் மூலம் இந்த படம் ரகசியமாக பார்க்கப்படுவதும்,ஆராதிப்பதும் தொடரவே, திரைத்துறையை பற்றிய கோட்பட்டினை கற்க இது அவசியம் என்றபதாலும் அந்த தடைகள் புறகணிக்கப்பட்டு படம் எல்லா நாடுகளிலும் வெளியிடப்பட்டு மக்கள் மத்தியில் கோலாச்சியது.

சோவியத் அரசாலே அறிவிக்கப்பட்ட பெரும்கொடையான இந்த படத்தின் கதை என்ன?

இந்த படம் ஐந்து பகுதிகளாக பிரிக்கபட்டது,

1. “Men and Maggots”

பேட்டல்ஷிப் பொதம்கின் எனும் கப்பலில் பணி செய்யும் மாலுமிகள் கடுமையான பணிகளோடும், மோசமான உணவும் கொடுக்கப்பட்டு கொடுமை படுத்தப்படுகிறார்கள். ஒரு நாள் புழுக்கள் நிறைந்திருக்கும் இறைச்சியின் சூப்பை சமைக்க அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கண்ணுக்கு தெரிந்து நெளியும் புழுக்களை கண்டுக்கொள்ளாத அதிகாரி மாமிசம் புழுக்களற்றது அது தான் சமைக்கப்படும் என்கிறான். இதனால் ஆத்திரம் அடையும் மாலுமிகள் சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள். மாலுமிகளின் கலகம் பிறக்கிறது.

2. “Drama on the deck”

உண்ணாவிரதம் போராட்டமாக மாறுகிறது, நடுக் கப்பலில் பிரச்சரங்கள், விவாதங்கள் என போராட்டம் சூடு பிடிக்கிறது ஒரு கட்டத்தில் அதிகாரிகளுக்கெதிரான பெரும் கலகமாக வெடிக்கிறது. கப்பலில் ஊழியர்கள் வேலை செய்ய மறுக்க, கொழுத்த அதிகாரிகளோ துப்பாக்கி முனையில் அவர்களை மிரட்டுகிறார்கள். பணியாமல் எதிர்த்து நிற்க்கும் கலகக்காரர்களின் தலைவன் சுட்டுக்கொல்லபடுகிறான். ஆனால் கலகம் தொடருகிறது, அதிகாரிகள் கொல்லப்படுகிறார்கள், கப்பலில் இருந்து வீசியெறியப்படுகிறார்கள். கப்பல் ஒடேஸா துறைமுகம் வருகிறது.

3. “A Dead Man Calls for Justice”

சுடப்பட்ட தலைவனின் பிணம் துறைமுகத்தில் அனாதையாக கிடக்கிறது, மறு புறமோ இந்த செய்தி காட்டு தீயை போல பரவுகிறது. மக்கள் கூடுகிறார்கள். கலகத்தின் விளைவாக இறந்த த்ங்கள் தோழனுக்கு இறுதி மரியாதை செலுத்த சாரைசாரையாக வருகிறார்கள். அதிகார வர்கத்தின் கொடுமைகளுக்கு எதிராக அணிதிரளுகிறார்கள். மக்கள் எழுச்சியடைகிறார்கள்.

4. “The Odessa Staircase”

ஒடெஸா படிகட்டுகளில் மிக சாதரணமாக பொழுதை கழிக்கும் எண்ணற்ற மக்கள் கூட்டதின் மீது ஜார் ராணுவம் எந்தவித அறிவிப்புமில்லாமல் தாக்குதலை தொடுக்கிறது. மக்கள் சிதறி ஓடுகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரை கொன்று வெறியாட்டம் ஆடுகிறது ஜாரின் ராணுவம்.

5. “The Rendez-Vous with a Squadron”

பொதம்கின் கப்பலை கலக்காரர்கள் கைப்பற்றி கடலில் செலுத்துகிறார்காள், அதை தடுக்க அனுப்படும் இன்னொரு போர் கப்பல் இவர்களை நெருங்கி சரணடைய சொல்லுகிறது. மீறினால் பொதம்கின் தாக்கப்படலாம் என எச்சரிக்கை செய்யபட்டு தாக்குதல் தொடுக்க தயாராகிறது. எந்த நேரத்திலும் கப்பல் எதிர்கப்பலால் அழிக்கப்படலாம் என்ற சூழலில் பொதம்கின் ஊழியர்கள் குண்டுகளை எதிர்கொண்டு நிற்க, சுட வேண்டியா பீரங்கிகள் தாழ்ந்து பொதம்கினுக்கு வழிவிடுகின்றது. தங்களின் தோழர்களின் ஆதரவால் எழுச்சியடையும் பொதம்கின் தோழர்கள், சுதந்திரமாக கடலில் செல்கிறார்கள். கலகம் வெற்றியடைகிறது.

ஜார் மன்ன்ன் காலத்தில் முதலாளித்தும் வளர்ச்சியடைந்து வந்த நேரத்தில் ரஷியாவில் மக்கள் அனுபவித்த இன்னல்கள் சொல்லில் முடியாது. கசக்கி பிழிந்து சக்கைகளாக, மருத்துவம், சுகாதரம், போதிய உணவு என்று ஏதுமில்லாமல் தூக்கி வீசப்படுவார்கள். ஆனால் பின்னாட்களில் கம்யுனிஸ்ட கட்சியின் வரவால் அந்த தொழிலாளர்களது வர்க்கம் ஒரு முற்போக்கு பாதையில் வளரத் தொடங்கியது. ஒன்றுப்படவும், போராடவும் பழக ஆரம்பித்தார்கள். அரசின் மீதும், சக்கையாக பிழியும் முதலாளிகளையும் எதிர்த்து போராடக் கற்றுக்கொண்டார்கள். இது பின்னால் வரப்போகும் எழுச்சிக்கான ஆரம்ப படி நிலை.

இப்படியாக முன்னேறிய தொழிலாளர் வர்க்கத்தின் பிரதிநிதிகளான பேட்டில்ஷிப் பொதம்கினில் வேலை செய்த மாலுமிகள் 1905-ம் ஆண்டு இனிமேலும் சகித்துக்கொள்ள முடியது என கலகத்தை தொடங்குகிறார்கள். புழுக்கள் நிறைந்த மாமிசத்தை சாப்பிட மறுக்கிறார்கள். இது ஏதோ உணவால் வந்த பிரச்சனை என்பது போல் சுருக்கிவிட முடியாது. காலம் காலமாக ஊட்டப்பட்டு வந்த எழுச்சியின் ஒரு படிநிலை.

படத்தில் இந்த எழுச்சியை இயல்பாக பார்வையாளர்களுக்கு பதிய வைத்ததில் தான் முதல் வெற்றி. உதரணத்திற்க்கு சுடப்பட்டு ஒடேசா துறைமுகத்தில் அனாதை பிணம் போல் கலக்கார தலைவனின் பிணம் கிடத்தப்பட்டிருக்க, இறுதி மரியாதை செலுத்த வரும் ஒடேசா மக்களின் அனுதாபம் பேரேழுச்சியாக மாறும் காட்சியை பாருங்கள்.

முதலில் செய்தி சிலருக்கு தெரியும், பின்பு அது பலருக்கு, என தீயாய் பரவும்., மக்கள் கூட ஆரம்பிப்பார்கள். உடனடியாக பல கம்யுனிஸ்ட்டுகள் பிராச்சாரம் செய்வார்கள்,. மக்கள்திரள் அரசியல்படுத்தப்படும், அதற்க்கான துண்டு பிரச்சுரங்கள் விநியோகிக்கப்படும். முதலில் துக்கத்துடன் த்ங்கள் தொப்பிகளை கசக்கிச் பிடிக்கும் கைகள் காட்டப்படும் . பின்பு தொடர் அரசியல்படுத்தப்படுதலின் விளைவு விரல்கள் மடக்கி முஷ்ட்டிகள் உயரும். ”போராடுவோம்” என மக்கள் எழுச்சியடைவார்கள். இந்த காட்சி, மக்கள திரள் பற்றிய அரசியலை போதிக்கும் அதே நேரம் ஒரு திரைப்பட வடிவம் என்ற முறையிலும் மிக நேர்த்தியான காட்சிகளைக் கொண்டிருக்கும்.

மாண்டேஜ் கோட்பாட்டை விளக்கும் ஒடேசா படிகட்டுகள் பகுதியையும் பாருங்கள். மாண்டேஜ் யுக்தியின் தேவையை அந்த உள்ளடக்கம் கோருகிறது. அமைதியாக கூடும் மக்கள் மீதான எதிர்பாராத தாக்குதல், அந்த தாக்குதல் ஏற்படுத்தும் போர்கள், ஜார் ராணுவத்தின் ஒழுங்குப்படுத்தப்பட்ட வெறி, என  அந்த நச்சு சூழல் திரையில் வரவேண்டுமென்பது மாத்திரம் இல்லை. அதை பார்க்கும் மக்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இலக்கல்ல. அதை பார்க்கும் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே புரட்சிகர இயக்குனரின் இலக்கு. அந்த இலக்கும், உள்ளடக்கமும், தொடர்ச்சியாக மாறும் காட்சிகளையும், பெரும் மக்களின் சிதறலையும், அவர்களை கொல்லும் ராணுவத்தின் கோரமுகத்தையும், சிதறி ஓடும் மக்களில் மடியும் குழந்தைகள் என அந்த போர்க்கள காட்சியின் வீரியம், அதை தொடர்ந்து இனி போராடுவது தான் வழி என ஒரு தாய் தன் இறந்த குழந்தையை எடுத்துக்கொண்டு தனி ஒருவராக அந்த ராணுவத்தை எதிர்த்து முன்னோக்கி நகருவதும் சிலிர்க்க வைக்கும் காட்சி. அதை வார்த்தைகளால விளக்கிவிட முடியாது. பார்த்து அனுபவிக்க வேண்டும்.

பொதம்கின் கப்பலை நோக்கி இன்னொரு ராணுவ கப்பல் பீரங்கிகளை உயர்த்தி குறிபார்க்க, என்ன நடக்குமோ என்று வெறித்து பார்க்கும் கப்பல் ஊழியர்களின் நிலையையும், அந்த நேரத்திலும் எழுச்சியுடன்  சரணடையாத வீரத்தையும் பார்க்கும் பார்வையாளர்கள் ”சுடாதே” என தங்களை மீறி திரையை நோக்கி முனங்கவைத்ததுதான் இந்த படத்தின் சிறப்பு தன்மை. தனித் தன்மை.

பல கோடிகள் செலவில் முன்னேறிய டெக்னிக்குகளுடன் லாபம் மட்டும் நோக்கம் என எடுக்கப்பட்ட டைட்டானிக் முதல் எத்தனையோ படங்களை ஒப்பிடும் போது வசதிகள் குறைவான நிலையில் எடுத்த ஒரு படம் வெல்கிறது என்றால், அது காலந்தோரும் வரும் மக்கள் எழுச்ச்சியின் சாட்சி. மக்கள் இருக்கும் வரை மக்கள் எழுச்சி மறையபோவதில்லை. மக்கள் எழுச்சி இருக்கும் வரை அதை பிரதிநித்துவப்படுத்தும் இந்த மாதிரியான கலைப்படைப்புகள் மறையப் போவதில்லை.

இனி போர்க்கப்பல் பொதெம்கினை பாருங்கள், எழுச்சி கொள்ளுங்கள்!

__________________________________________________________________________________

ஆதவன்
__________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பனக் குருக்கள்!

56
5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பன குருக்கள் !

5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பன குருக்கள் !வேலூர் குடியாத்தம் பகுதியில் உள்ள பாண்டியன் நகரைச் சேர்ந்த சிறுமி ராஜேஸ்வரி, வயது ஐந்து. இவளது தந்தை ராஜா. இந்தச் சிறுமி சாலையம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள்.

செப்டம்பர் 19-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை என்று தந்தை குடியாத்தம் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். இடையில் கடந்த புதன்கிழமை இந்த பகுதியில் உள்ள கிணற்றில் ஒரு சிறுமியின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அந்தச் சிறுமி ராஜேஸ்வரி என்று உறுதி செய்யப்பட்டது.

பின்னர் போலீசார் அந்தச்சிறுமியின் குடியிருப்புப் பகுதியருகே விசாரணை செய்திருக்கின்றனர். மேலும் பள்ளி அருகேயும் விசாரணை செய்திருக்கின்றனர். பள்ளி அருகே மூன்று கட்டிடங்கள் தாண்டி குமார குருக்கள் எனும் 46 வயது ஆஞ்நேயர் கோயிலின் பார்ப்பனப் புரோகிதர் குடியிருக்கிறான். இவன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரேயே இது போன்ற புகாரில் சிக்கி கைதாயிருக்கிறான். வீட்டு முகப்பில் அப்பாவி போன்று அமைதியாக இருந்த இந்த குருக்களை பிடித்து விசாரித்த போது உண்மை வெளியே வந்திருக்கிறது.

பள்ளி வாசலில் நின்றிருந்த சிறுமியை சாக்லெட் கொடுத்து கடத்தி சென்ற கடவுளுக்கு பூசை செய்யும் இந்த குருக்கள் அவளை பலமுறை வன்புணர்ச்சி செய்து அதன் போக்கிலேயே அந்த சிறுமி மூச்சுத் திணறி செத்துப் போயிருக்கிறாள். பிறகு எதுவும் நடக்காதது போன்று அந்தச் சிறுமியின் பிணத்தை கிணற்றில் வீசியிருக்கிறான்.

இப்போது இந்தத் தலைப்பில் ஏன் பார்ப்பனப் குருக்கள் என்று போட்டிருக்கிறீர்கள் என்று சிலர் கொதிக்கலாம். இதே வேலையை ஒரு ஆட்டோ டிரைவர் செய்தால் அவரது தொழிலைக் குறிப்பிட்டு போடுவதை யாரும் மறுக்க மாட்டார்கள். அந்த நீதிப்படி இங்கே அந்த கயவனது தொழிலைக் குறிப்பிட்டு போட்டிருக்கிறோம்.

அடுத்து இத்தகைய கொடிய பாதகங்களை சமூகத்தில் பலரும், பல தொழில் செய்பவர்களும் செய்யக்கூடிய ஒன்றுதான். ஆனால் இங்கே தனது சாதி மற்றும் தொழிலின் அடிப்படையில் பக்தர்களின் நம்பிக்கையை பெற்று அவர்களின் சார்பாக கடவுளுக்கு பய பக்தியோடு பூஜை செய்யும் ஒருவன் செய்திருக்கிறான், எனவே மற்ற குற்றவாளிகளைப் போல இவனையும் ஒரு குற்றவாளி என்று ஒதுக்கிவிட முடியாது.

ஐந்துவயது சிறுமியை பல முறை வன்புணர்ச்சி செய்து மூச்சுத்திணற வைத்து கொல்லுமளவுக்கு வெறி கொண்ட இந்த கயவன் எத்தகைய கொடிய பண்புடன் வாழ்ந்திருக்கிறான்? கோவையில் சேட்டு வீட்டு குழந்தையை கொன்றவர்களை விசாரணை எதுவுமின்றி என்கவுண்டர் செய்த போலீஸ் இங்கேயும் செய்ய வேண்டும் என்று தினமலரோ, இந்து முன்னணியோ கோருமா? கோரமாட்டார்கள்.

ஜெயேந்திரன், தேவநாதன், தீட்சிதன் பொறுக்கிகள் வரிசையில் குமார குருக்களும் சேர்ந்திருக்கிறான். இனி கடவுளுக்கு பூசை செய்யும் குருக்கள் அத்தனை பேரையும் போலீஸ், உளவுத்துறையைப் போட்டு கண்காணிக்க வேண்டும். அவர்களை தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்து போடுமாறு பணிக்க வேண்டும். பொது சந்திப்பில் எல்லா குருக்களது போட்டோவை போட்டு இவர்கள் பெண்கள், சிறுமிகள் மீது பாலியல் வன்முறை செய்தால் உடன் புகார் அளிக்கும் வண்ணம் தொலைபேசி எண், தனி ஹாட் லைன் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இல்லையேல் நாம் இன்னும் பல சிறுமிகளை இழக்க வேண்டியிருக்கும்.

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

கோடிகளில் கொழிக்கும் மத்திய அமைச்சரவை ! பி.சாய்நாத் !!

தி இந்து நாளிதழின் ஊரகப் பிரிவு ஆசிரியராக பணியாற்றும் திரு பி சாய்நாத், மக்களின் வாழ்விலுள்ள அவலங்களை தோலுரித்துக் காட்டுவதில் மிகச் சிறந்த படைப்பாளர்.  இன்று (21/09/11) நாடெங்கிலுமுள்ள ஊடகங்களில் இந்திய திட்டக் குழு ஒரு நாளைக்கு ஒரு நபர் ரூ 32 சம்பாதிப்பார் எனில் அவரை வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர் என கூற முடியாது என்ற ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை வெளியிட்டு பார்க்கும் அனைவரையும் அதிர்ச்சியுறச் செய்த அதே வேளையில், இந்திய அரசியல் என்பது எவ்வாறு வளம் கொழிக்கும் தளமாக மாறியிருக்கிறது என்பதை அற்புதமான தனது நக்கலும், நையாண்டியும் கலந்த நடையில் மக்களின் வயிற்றெரிச்சலை வெளிக்கொணரும் விதமாக  இந்து நாளிதழில் வந்த கட்டுரை அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழாக்கம் செய்து இதன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

கொழிக்கும் மத்திய அமைச்சரவை
தில்லி திட்டக் கமிஷன் அலுவலக வளாக வாயிலில் வேலைக்கு காத்திருக்கும் தினக்கூலிகள். படம் www.thehindu.com

ர்இந்தியா நிறுவனம் நாம் விரும்பியது போல் நல்ல விதமாக செயல்படாமல் இருந்திருக்கலாம்.  ஆனால் திட நெஞ்சோடு பயமின்றி அதை அடர்த்தியான கடன் மேகத்திற்குள் பறக்கவிட்டவர்கள் நன்றாக உள்ளனர்.  பிரபுல் படேல் (குறுகிய காலம் மாநிலங்களுக்கான விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர்) மே 2009 முதல் ஆகஸ்ட் 2011 வரையிலான 28 மாதங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூபாய் அரை கோடி வீதம் தனது சொத்தில் சேர்த்துள்ளார்.  இதுவும் அவரது வார்த்தைப்படியான கணக்கு என்பதால், குறைத்து மதிப்பிடப்பட்ட கணக்காகவே இருக்கலாம்.  இது போன்றவற்றில் அமைச்சர்கள் தற்பெருமை பேசாதவர்களாகவே இருக்க விரும்புகின்றனர்.  ஆனால் அலுவலக ரீதியான புள்ளி விபரங்கள் கொடுக்கும் போது, கணக்கில் தப்பிக்க வழியில்லை.

திரு படேல் 2009-ம் ஆண்டு தனது தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் சொத்தாக ரூ 79 கோடி காண்பித்துள்ளார்.  மே மாதம் அந்த வருடம் தேர்தல் நடைபெற்றது என்பதால், அந்த கணக்கு ஏப்ரல் 2009 வரை என கணக்கில் கொள்வோம்.  இந்த மாதம் பிரதமர் அலுவலக இணையதளத்தில் அவர் (படேல்) பெயருக்கெதிரே ரூ 122 கோடி (சொத்து மதிப்பு) என குறிப்பிட்டிருப்பதோடு ஒப்பிடுவோம்.  இந்த உயர்வு என்பது 28 மாதங்களில் ஏற்பட்டது என்பதால் எனது கணக்குப்படி ஒரு நாளைக்கு சராசரி ரூ 5 லட்சம் சேர்ந்துள்ளது.  என்னால் கூட்ட முடியும் என்றாலும், நான் திரு பிரபுல் படேல் அளவிற்கு விரைவாக கணக்கு கூட்ட முடியாது என எண்ணுகிறேன்.

இதன் நடுவில் ஏர் இந்தியா நிறுவனம் தனது தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவே போராடி திணறியிருக்கிறது.  ஏர் இந்தியா நிறுவனத்தின் 40 சதவீத  பணியாளர்களும் ஒவ்வொருவரும் ஒரு நாளில் சம்பாதிப்பதை விட மிகுதியாக, திரு படேல் தினசரி தனது சொத்தில் சேர்த்துள்ளார்.  அதாவது ஏர் இந்தியா விமானங்கள் தரை தட்டிக்கொண்டிருக்கையில், அவர் உயர உயர பறந்திருக்கிறார்.  தொழிற்சாலைகள் மற்றும் நிதிசார் மறுகட்டமைப்பின் முன்னாள் இயக்குனர் குழும தலைவர் என்ற முறையில் 12 ஆண்டுகளுக்கு முன்பாக இவ்வாறு தெரிவித்தார்.  சிரமப்படும் தனியார் நிறுவனங்கள் பற்றி தெரிவிக்கையில், நலிவடைந்தவை என்ற எண்ணிக்கை ஒரு புறம் அதிகரிக்கையில், அதன் சொந்தக்காரர்கள் வளமாகிக் கொண்டிருக்கின்றனர் என்றார்.  இந்திய ஏழைகளும் அவர்கள் சார்ந்திருக்கிற அரசோடு ஒப்பிடுகையில் இது சரியாக பொருந்தி வருகிறது.  ஏழைகள் மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர், மத்திய அமைச்சரவை வளமாகிக் கொண்டிருக்கிறது. (கார்ப்பரேட் முதலாளிகளை இந்த சமன்படுத்துதலில் இழுத்துப் பார்த்தால் அது மிக வியக்கத்தக்க வகையில் இருக்கும், ஆனால் அது வேறு கதை)

திரு படேல் அவர் மேற்கொண்ட பணிக்காக உயர்வளிக்கப்பட்டுள்ளார்.  அவர் மத்திய அமைச்சர் அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்டு கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறைகள் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.  மத்திய அமைச்சர்களின் சொத்துக்கள் விவரங்களை, எப்போதும் போல் மக்களாட்சி சீரமைப்பிற்கான குழுமம் (ஏடிஆர்) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு (நியூ) ஆகிய அமைப்புக்கள் விரிவாக மேற்கொண்ட ஆய்வுகளை படிக்கும் போது ருசிகரமாக இருக்கும்.  அது அலுவலக ரீதியானது.  சொட்டு சொட்டுகளாக விழுவதென்பது முடிந்து போன மாதிரி.  பாசனத்தை உயர்த்தும், வெள்ளம் உயரத்தை உடைத்துக் கொண்டு பாயும். ஒரு மத்திய அமைச்சரின் சராசரி சொத்து என்பது 7.3 கோடியிலிருந்து 28 மாதங்களில் 10.6 கோடியாக உயர்ந்துள்ளது.  28 மாதங்களிலும், சராசரி மாதத்திற்கு 10 லட்சங்களுக்கு குறைவில்லாத சேர்க்கை. திரு படேல்தான் மத்திய அமைச்சர்களில் மிக உயர்ந்த பணக்காரர் என்பது பழைய கதை.

ஆனால் திமுக வின் முனைவர் எஸ்.ஜகத்ரட்சகன் அதை தைரியமாக மோதி சிதறடிக்கச் செய்துவிட்டார்.  மாநில அந்தஸ்திலான அந்த தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சரின் சொத்து 1092 சதவீதம் வளர்ந்துள்ளது, ஆனால் படேலின் வளர்ச்சி 53 சதம்தான்.  ஆய்வின்படி அவரின் சொத்து மதிப்பு 2009ம் வருடம் 5.9 கோடி என்றிருந்தது இந்த வருடம் 70 கோடியாக உயர்ந்துள்ளது.  ஆனால் 122 (கோடி) என்ற எண்ணில் நின்று மட்டையடித்துக் கொண்டிருக்கிற படேல் இன்னமும் அமைச்சரவை பிரிமியர் லீகில் இன்னும் உயர்வான நிலையில்தான் உள்ளார். திமுக மனிதரின் செயல்பாடு விரைவான எண்ணிக்கை சேர்க்கைக்கு உதவியிருக்கலாம்.  ஆனாலும் நின்று நிதானமாக சேர்க்கும் படேலின் ஆட்டம் தான் நீண்ட விளையாட்டிற்கு நல்லது.

இதன் நடுவில் சுறுசுறுப்பான இளவயது அமைச்சர்கள் யாரும் மோசமென சொல்லிவிட முடியாது.  இளைஞர் மிலண்ட் தியோரா, மாநிலங்களுக்கான செய்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர 2009 லிருந்து 2011ற்குள் தனது சொத்துக்களை ஏறக்குறைய இரட்டிப்பாக்கியுள்ளார்.  அவரது சொத்து 17 கோடியிலிருந்து 33 கோடிக்கு மேல் சென்றுள்ளது. அவர் 2004ல் தாக்கல் செய்த தேர்தல் பிரமாண பத்திரத்தில் தெரிவித்திருந்தது ரூ 8.8 கோடி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  தினசரி சராசரியாக ஒரு லட்சம் ஒரு நாளைக்கு என சேர்த்து 7 வருடங்களில் சொத்தை 3 மடங்காக்கியிருப்பது ஒன்றும் மோசமாக சொல்ல முடியாது.

மேலோட்டமாக பார்க்கின்ற போது தியோரா, விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாரை பின்னுக்கு தள்ளிவிட்டார்.  நெடிய ஓட்டத்தில் பின்னுக்கு வரும் அவரைவிட, இளையவர் தியோரா இரண்டரை பங்கு கூடுதல் பணக்காரராக உள்ளார்.  அவர் முன்னதாக 2009-லும் பவாரை விட பணக்காரராகத்தான் இருந்திருக்கிறார்.  ஆனால் இந்த 28 மாதத்தில் 90 சதவீதம் அதிகரித்திருக்கிறார்.  பவார் இதே காலத்தில் சொற்பமாக ஒரு நான்கு கோடி கூட சேர்க்கவில்லை.  அதற்கு அர்த்தம் என்னவென்றால், எல்லோரும் சொல்வது போல் அவரது சொத்தை காண்பிக்கும் கடிகார முள் 12.5 கோடியிலேயே நிற்கிறது. அவருடைய சொந்த மாநிலத்திலுள்ள சொத்துக்களை யெல்லாம் கணக்கிட்டு பார்க்கும் போது பவாருக்கு பிரமாணப்பத்திரத்தில் தனது மொத்த சொத்தை தெரிவிக்க் வேண்டுமா?  அல்லது மாத வருமானத்தை தெரிவிக்க வேண்டுமா என்ற குழப்பம் நேரிட்டது போல் தோன்றுகிறது.

அடுத்து தற்பெருமை பேசாத மற்றொரு அமைச்சர யாரென்றால் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்.  அவர் தனது பங்கிற்கு 2009ற்கு பின்னர் ரூ 1.73 கோடி சேர்த்துள்ளார்.  திரு தேஷ்முக் நில அறிவியலுக்கான அமைச்சரும் ஆவார். (மகாராஷ்டிராவில் அவருக்கு குறிப்பிட்டுள்ள தலைப்பை பார்த்தால் ரியல் எஸ்டேட் விற்பன்னர் என்றும் தெரிகிறது).  மற்றபடி முனைவர் மன்மோகன்சிங் தலைமையிலான கிரிக்கெட் வீரர்கள் எல்லோரும் நன்றாகவே செயல்பட்டுள்ளனர்.  பாராளுமன்ற நடவடிக்கைத்துறை அமைச்சர மற்றும் ஐபிஎல் புதிய தலைவர் திரு ராஜிவ் சுக்லா சொல்லப்பட்ட 28 மாதங்களில் ரூ 22 கோடி சொத்துக்கள் சேர்த்துள்ளார்.  அதாவது 2009ல் 7 கோடியாக இருந்த சொத்து தற்போது 30 கோடிக்கும் அதிகம்.

பணியிலுள்ள அமைச்சர்கள் மட்டும் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி செல்வதில்லை.  அல்லது மைய அரசை மட்டும் வரம்பாக வைத்துக் கொண்டு மேல்நோக்கி நகருவதில்லை.  எப்போதும் போல் கின்னஸ் சாதனைக்கான பொருள் என்பது எனது இரு மாநிலங்களான  மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேசத்திலிருந்துதான் வருகிறது. (எனக்கு இன்னொரு மாநிலமான தமிழ்நாட்டுடனும் சொந்தம் உண்டு.  அதாவது ஜகத்ரட்சகன் எங்கிருந்து வந்தாரோ அந்த இடத்துடன் – எனவே சொந்த இடம் என பெருமைப்பட்டுக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு சற்று அதிகம்தான்).

ஆனால் தற்போது நாம் ஆந்திரப்பிரதேசம் பக்கம் திரும்புவோம்.  ஓ.எஸ்.ஜெகன் மோகன்ரெட்டி என்பவர் ஆளும் பொறுப்பில் இல்லை.  ஆனால் அது அவரது தொழில் முனைவை நோக்கிய பயணத்தை எந்த வகையிலும் தடை செய்யவில்லை.  அவரிடம் 2009-ல் இருந்த வெறும் ரூ 72 கோடி என்ற எண்ணிக்கையை 24 மாதங்களில் நடப்பு ஏப்ரல் வரை ரூ 357 கோடி சொத்து மட்டும்தான் சேர்த்துள்ளார்.  அதாவது இந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ 50 லட்சம் வீதம் மட்டுமே சேர்த்துள்ளார்.  எல்லாவற்றிலும் அவர் முன்னிலைப்படுத்தப் பட்டிருக்கும் நிலையில், இது ஒன்றும் சிறிய சாதனையல்ல.  சாமியார்கள் அரசியலில் ஆற்றல் என்றும் அடுத்த சந்ததி எனவும் பேசுவது எதைப்பற்றி என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கலாம்.

அந்தோ, சந்திரபாபுநாயுடு மட்டும் ஏழையாக வளர்ந்துள்ளார்.  அன்னா ஹ‌சாரேயால் உருவாகியுள்ள காலச் சூழல் காரணமாக இந்த ஆந்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் தனது சொத்து மதிப்பை எச்சரிக்கையோடு வெளியிட்டுள்ளார்.  திரு நாயுடுவின் சொத்து ரூ 40 லட்சம் அளவில் கூட இல்லை.  அதன் காரணமாக அவரின் வாழும் சூழலுக்கு உடனடியாக பங்கம் வந்துவிட்டதாக எண்ண வேண்டியதில்லை.  அவரின் மனைவி வசமுள்ள சொத்து ரூ 40 கோடி மட்டுமே.

ஆந்திர அரசியலில் இந்த தொடர்புடைய படங்களை ஒப்பிட்டு பார்த்தால் ஜகன் வளர்ச்சியில் இருப்பதும், நாயுடு சரிவில் இருப்பதும் புலப்படும்.  அவருடைய கணக்காளர்கள் அவரை விட பெருந்தன்மையுடையவர்களாக இருப்பதால் எதிர்காலம் என்பது திரு நாயுடுவிற்கு சாதகமாக இல்லை.  அவரின் ஜூப்ளி மலை சொத்து என்பது 10000 சதுர அடி பரப்பளவுள்ள கட்டிடத்தோடு, 1125 சதுர அடியில் நடைபாதைகளும் கட்டப்பட்டுள்ளதன் மதிப்பு ரூ 23.20 லட்சத்திற்கும் குறைவாகவே காட்டப்பட்டுள்ளது.  இப்போது அந்த இடம்தான் ஆந்திரப்பிரதேசத்திலேயே மிக உயர்வாக மதிப்பிடப் படும் இடமாகும்.  எனவே அந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள 10000 சதுர அடி கட்டிடம் என்பது, அந்த தொகை மதிப்பீட்டில் பார்க்கும் போது, மிக எளிமையான சாதாரண சொத்து என்றே வாதிட தோன்றுகிறது.

ஆனால் 2009 தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அதன் மதிப்பு ரூ 9 கோடி என காண்பிக்கப் பட்டது போல் மதிப்பில்லாத ஒன்றா?  இதைப்பார்க்கிற போது திரு நாயுடு தற்போதைய சந்தை மதிப்பை குறிப்பிடாமல் அந்த இடத்தை கையகப் படுத்த செலவழித்ததை மட்டும் குறிப்பிட்டிருப்பார் போலும், ஏனெனில் சந்தை மதிப்பு என்பது நேரத்திற்கு நேரம் மாறுபடும் என்பதாலா?

இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் யாதெனில் எல்லாவற்றிற்கும் பின்புலமாக புத்தி கூர்மையுள்ள கணக்காளர் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பணம் படைத்த மற்றும் வளமான இந்த மடத்தனமான வளர்ச்சி என்பது அமைச்சர்கள் அளவில் மட்டுமல்ல, பாராளுமன்ற, மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அளவிலும்தான்.  எல்லா அரசியல் சக்தி சார்ந்த தலைவர்கள்  குறிப்பாக காங்கிரஸ், பாஜக மற்றும் பெரிய மாநிலங்களில் ஆளும் அந்தஸ்திலுள்ள கட்சி தலைவர்களும் இதில் அடக்கம்.

ஒவ்வொரு பாராளுமன்ற, மற்றும் சட்டமன்ற தேர்தல் காலத்திலும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது.  மகாராஷ்டிராவில் 2004-ல் 108 ஆக இருந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2009ல் 189 ஆக உயர்ந்துள்ளது.  நான்கில் மூன்று பங்கு மத்திய அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள். பெரும்பாலான அவர்களின் புதிய சொத்துக்கள் பதவியில் உள்ளபோது சம்பாதித்தவை. பொது மக்களின் கோபத்திற்கு நன்றி.  அதன் காரணமாகத்தான் ‘ஏடிஆர்’ மற்றும் ‘நியூ’ போன்ற ஆய்வு முடிவுகள் வெளிப்படையாக பலருக்கும் தெரிய வந்துள்ளது.  இது மிகவும் சிறப்பானது.

ஆனால் இத்தகைய அறிவிக்கப் பட்டவை அனைத்தும் அவர்களின் வரி செலுத்தும் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்.  அதுதான் பொதுமக்கள் இந்த எண்ணிக்கைகளில் சிறப்பான கூடுதல் கவனம் செலுத்த அனுமதிப்பதாக இருக்கும்.  பொது வாழ்வில் உள்ளவர்கள் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், அவர்களின் வரி செலுத்துதல் போன்ற சமர்ப்பித்தல்களும் இணையதளம் மூலம் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.  நமக்கு மிக தேவையாக உள்ள மறுசீரமைப்பிற்கு அதுதான் பெருமளவில் உதவியாக இருக்கும்.  மற்றொன்று ஏமாற்றுதல்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களாகும். ஆய்வறிக்கை காண்பிப்பதை பார்க்கும் போது அமைச்சர்கள் அவர்களுக்கு சொந்தமான 12 குடியிருப்பு கட்டிடங்கைள காண்பிக்கவில்லை என தெரிகிறது.

நமக்கு கடுமையான தணிக்கை என்பது தேவை.  அதுவும் மத்திய அமைச்சரவை உறுப்பினர்களின் சொத்துக்களிலிருந்து அந்த தணிக்கை துவங்க வேண்டும்.  எப்படி மக்கள் அலுவலில் இருக்கும் போது ஒரு நாளைக்கு அரை கோடி சம்பாதிக்க இயலும்.  நினைவில் கொள்ளுங்கள் அவர்கள் அனைவரும் இந்த மிகப்பெரும் சொத்துக்குவிப்பு என்பதை ‘மக்கள் சேவை’யில்தான் சேர்த்துள்ளனர். நிச்சயமாக நாமும் இதற்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளோம்.  சொத்துக்களை பகிரங்கமாக அறிவிப்பது என்பது மட்டும் போதாது.  அது விசித்திரமாக மிகப் பெரியதாக இருப்பின் எவ்வாறு அது வந்தது என்பதை அறிவதும் நமக்கு அவசியமாகும்.

ஏப்ரல் கடைசியில் இந்தியாவின் திட்டக்குழு உச்சநீதிமன்றம் முன்பாக ஒரு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.  அதில் ஊரக இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர் என்பதை தீர்மானிக்க ஒரு நாளைக்கு ஒருவருக்கு ரூ 20 செலவழிக்கும் நபர் என்பதை எல்லைக்கோடாக வைத்துக் கொண்டால் போதுமானது என்றது.  கிராமப்புற இந்தியாவிற்கு அது வெறும் ரூ 15 மட்டுமே.  மேலும் அவர்கள் சொல்வது என்னவென்றால் இந்த ரூ 20 என்பதை வேண்டுமானால் பெருந்தன்மையுடன் ரூ 25 என உயர்த்திக்கொள்ளலாம் என்பதாகும்.

சிறு தொழில்கள் மற்றும் அமைப்புசாரா பிரிவினருக்கான முனைவர் அர்ஜுன் சென்குப்தா தலைமையிலான தேசிய ஆணையத்தின் அறிக்கையை இங்கு நினைவு கொள்ள வேண்டும்.  அந்த அறிக்கையில் 83.6 கோடி இந்தியர்கள் ரூ 20 மற்றும் அதற்கு கீழான வருமானத்தில் வாழ்கிறார்கள் என பதிவு செய்திருந்தது.  கோடீஸ்வரர்களாக சேர்ந்த குழுக்கள் எவ்வாறு இந்த மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாக அமையும்?  இந்த நிலை தொடருமானால் நங்கூரமிட்டு வைத்துள்ள பிடிமானம் மிக சீக்கிரம் விடுபட்டுவிடும்?  இதை எவ்வாறு தடுக்கப் போகிறோம்.  இதைப்பற்றி சிறிதளவாவது சிந்திக்க வேண்டும்.

எனவே கடந்த 20 ஆண்டுகளில் உள்ளார்ந்த மாற்றங்கள் என்பது எதனையும் சிரமத்திற்குரியதாக ஆக்கவில்லை, ஆனால் மாறாக கோடீஸ்வரர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்பதையும், அவர்கள் மட்டுமே வெல்ல முடியும் என்பதையும் குறிப்பாக காட்டுவதாக உள்ளது.

___________________________________________________

– திரு பி.சாய்நாத், நன்றி தி இந்து 
தமிழாக்கம்: சித்ரகுப்தன்
____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

முத்துராமலிங்கத்திற்கு வக்காலத்து! பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம்! பெ.தி.கவின் இரட்டை வேடம்!

97

பெரியார் திராவிடர் கழகம் (பெ.தி.க) நடத்தி வரும் மரணதண்டனை ஒழிப்பு பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை இராயப்பேட்டையில் செப்டம்பர் 20 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் பேரா.தீரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, மதிமுக வைகோ, கொளத்தூர் மணி (பெ.தி.க), காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட பலர் அக்கூட்டத்தில் பேசினர். அக்கூட்டத்தில் பெ.திக மூத்த தலைவர், வழக்கறிஞர் துரைசாமி பேசியதில் இருந்து:

 “ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் பொய்வழக்கு சோடனை செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரிக்க ஆரம்பிக்கும் முன் நான் இவ்வாறு சொன்னேன். 1957 ஆம் ஆண்டு இம்மானுவேல் சேகரன் கொலை வழக்கில் முத்துராமலிங்கத் தேவர் கைதாகி இருந்தார். அவ்வழக்கில் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக 100 அரசு சாட்சியங்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். வழக்கை மதுரையிலோ ராமநாதபுரத்திலோ வைத்து நடத்த இயலாத சூழ்நிலை. புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்தது. நாடே எதிர்பார்த்த வழக்கு அது. முத்துராமலிங்கத் தேவருக்கு தூக்கு தண்டனைதான் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்தார்கள். அரசு தரப்பில் பப்ளிக் ப்ராசிக்யூட்டராக பாரிஸ்டர் எத்திராஜ், எத்திராஜ் கல்லூரியின் நிறுவனர் ஆஜரானார். அவர் எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிட்டார். நீதிபதியைப் பார்த்து, ‘இந்த வழக்கு பொய் வழக்கு. சாட்சிகள் எல்லாம் அரசால் ஜோடிக்கப்பட்டுள்ளனர். சாட்சியங்களில் இருவர் கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் ஆவர். எனவே இந்தப் பொய்வழக்கில் இருந்து தேவரை விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அரசு தரப்பே அவ்வழக்கைப் பொய் வழக்கு எனச் சொன்னதால் வழக்கு தேவருக்கு ஆதரவாகத் தீர்ப்பானது.. ஆகவே நீதிபதி அவர்களே, எப்படி தேவர் வழக்கை ஜோடித்தார்களோ அதே போல பொய்களால் புனையப்பட்ட இந்த வழக்கினையும் ஜோடிக்கப்பட்ட வழக்காகவே கருத வேண்டும் என நான் வாதாடினேன்”

இப்பேச்சினை அடுத்துப் பேசிய கொளத்தூர் மணி, துரைசாமியின் இந்தக் கருத்தை மறுத்து ஏதும் பேசவில்லை. வைகோவும் இதைக் குறிப்பிடவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, இப்பேச்சின்போது மேடையில்தான் இருந்தார். அவரிடமும் எதிர்ப்பேதும் வரவில்லை.

இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்க வந்த தாழ்த்தப்பட்டோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஜெயா அரசு 7 பேர் உயிரைப் பறித்தெடுத்துள்ளது. இதைக் கண்டித்தும் பெரியார் தி.க அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆனால் இவர்களின் மூத்த உறுப்பினரும், நாடறிந்த வழக்கறருமான துரைசாமி இம்மானுவேல் சேகரன் கொலை வழக்கையே பொய் வழக்கு என பகிரங்கமாக பேசுகிறார். அதைவிட இந்த வெட்கம் கெட்ட விசயத்தை வைத்து மூவர் தூக்கையும் எதிர்க்கிறார்.

ஆக இம்மானுவேல் சேகரனை பகிரங்கமாக ஆள்வைத்துக் கொன்ற முத்துராமலிங்கத்தை ஒன்னுமே தெரியாத அப்பாவி என்பதுதான் பெ.தி.கவின் நிலைப்பாடா? அது உண்மையெனில் இப்போது பரமக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து அவ்வியக்கத்தினர் பேசுவது நாடகமா? சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்கட்டும். என்னதான் சாதி எதிர்ப்பு, தலித் ஆதரவு என்று பேசினாலும் உண்மை என்னவோ இப்படி பச்சையாக வெளிவருகிறதே? பெ.தி.க சுயவிமரிசனம் செய்து கொள்ளுமா? பேசியவரை கண்டிக்குமா? பேசியவரை கண்டிக்காமல் மேடையில் அமைதி காத்த பெருந்தலைகளை கண்டிக்குமா?

________________________________________________

– இரணியன்
_______________________________________________________

பரமக்குடி துப்பாக்கி சூடு: HRPC நேரடி அறிக்கை!

செப்டம்பர் 11 – 2011 பரமக்குடி துப்பாக்கி சூட்டில் 6 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை

 கடந்த 11.09.2011 அன்று தலித் தலைவர் தியாகி இமானுவேல் சேகரன் 54வது நினைவு குருபூஜை நாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு வருகை வந்த மக்கள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 1. பல்லவராயனேந்தல் கணேசன் 2.வீரம்பல்  பன்னீர் 3. மஞ்சூர் ஜெயபால், 4. சடையனரி முத்துக்குமார் 5. கீழகொடுமலூர் தீர்ப்புக்கனி 6. காக்கனேந்தல் வெள்ளைச்சாமி ஆகியோர்கள் கொல்லப்பட்டனர்இளையான்குடி துப்பாக்கிச் சூட்டில் ஆனந்த் என்ற மாணவன் குண்டடிபட்டான். மதுரையிலும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 1. ஜெயப் பிரகாஷ், 2. பாலசுப்பிரமணியன் ஆகியோர் படுகாயமுற்றனர். காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு சார்பில் உண்மை அறியும் குழு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உண்மைகளை கண்டறிந்தது.

குழு உறுப்பினர்கள்

1.            சி. ராஜு, வழக்கறிஞர், மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உ
ரிமை பாதுகாப்பு மையம். தமிழ்நாடு.

2.            சே. வாஞ்சிநாதன், வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், மதுரை

3.            திருமுருகன், வழக்கறிஞர் உயர்நீதிமன்றம், மதுரை

4.            சுப.ராமச்சந்திரன், வழக்கறிஞர்,

5.            ரிராகவன், வழக்கறிஞர்,

6.            ப. நடராஜன், வழக்கறிஞர்,

7.            சி. ராஜசேகர், வழக்கறிஞர்,

8.            ம. லயனல் அந்தோணிராஜ்

____________________________________________________

2011 செப்டம்பர் 13, 14, 15, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு மூன்றாகப் பிரிந்து துப்பாக்கிச் சூடு நடந்த பரமக்குடி ஐந்து முக்கு சாலை, மதுரை சிந்தாமணி, இளையான்குடி புறவழிச்சாலை துப்பாக்கிச் சூடு தடியடியில் இறந்த காயமடைந்த நபர்களின் வீடுகள்,  காயம்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் மதுரை, இராமநாதபுரம் அரசு மருத்துவமனைகள், பரமக்குடி சம்பவத்திற்கு மூலக் காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் சொல்லப்பட்ட மாணவர் பழனிக்குமார் கொலை நடந்த கமுதி, மண்டல மாணிக்கம், பள்ளபச்சேரி கிராமம் உள்ளிட்ட இடங்களில் நேரடியாக மக்களை சந்தித்து விசாரித்தும் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை,  குற்ற எண்கள்.300, 459, anan& 33/2011இ மருத்துவமனை tவிபத்துபதிவேடு அறிக்கைகள், ஆப்பநாடு மறவர் சங்க அறிவிப்பு சம்பவம் தொடா்பாக எடுக்கப்பட்ட வீடியோ சி.டி. உள்ளிட்ட ஆவணங்களை பரிசீலித்தும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு விசாரணை நடத்தியது.

தலித் தலைவர் தியாகி இமானுவேல் சேகரன் குருபபூஜை விழா!

தலித் தலைவர் தியாகி இமானுவேல் சேகரன் தேவேந்திரர் என்று அழைக்கப்படும் பள்ளர் வகுப்பைச் சார்ந்தவர். ஆதிக்க தேவர் சாதி வெறியர்களால் அவர் பரமக்குடியில் 1957-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி 33 வயதில் படுகொலை செய்யப்பட்டார். அவ்வழக்கில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இம்மானுவேல் சேகரன் நினைவிடம் பரமக்குடி கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் உள்ளது. ஆண்டுதோறும் தாழ்த்தப்பட்ட மக்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பல மாவட்டங்களில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக லட்சக்கணக்கான தலித் மக்கள் குருபபூஜை நாளில் வருகை தருகின்றனர். பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்தும், ஆண்கள் காவடி எடுப்பதும், சிலம்பாட்டம் ஆடுவதும், வருகின்ற மக்களுக்கு அன்னதானம், தண்ணீர் பந்தல், புத்தக கடை விற்பனை தியாகி இமானுவேல் சேகரன் படம் அச்சடித்த பனியன் விற்பனை என்று கோவில் திருவிழாவில் கடவுளை வணங்குவது போல தியாகி இம்மானுவேல் நினைவு நாளை மக்கள் கடைபிடிக்கின்றனர்.

இதை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஒட்டுமொத்த தலித் மக்களின் கோரிக்கையாக முன் வைக்கப்பட்டு அதற்கான ஆதரவும் பெருகி வரும் வேளையில் இந்த ஆண்டு தலித் மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி, லத்தி சார்ஜ், பொய் வழக்கு, கைது சிறை 144 தடை உத்தரவு என்ற வகையில் செயல்பட்டுள்ளது. போலீசின் அச்சுறுத்தலால் ஆண்கள் இரவில் வீட்டில் தங்காமல் வெளியில் சென்று பதுங்கும் நிலைமையில் உண்மை அறியும் குழு இந்த விசாரணையை மேற்கொண்டது.

‘’இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், மண்டல மாணிக்கம், பள்ளபச்சரி கிராமத்தில் சிறுவன் பழனிக்குமாரி படுகொலையால் பதற்றம் ஏற்பட்டதால் ஜான்பாண்டியன் 11.09.2011 அன்று தூத்துக்குடி வல்லநாட்டில் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டார் பரமக்குடியில் ஐந்து முக்கு சாலையில் ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் மறியல் போராட்டம் செய்தனர். அதன்பிறகு 12.30 க்கு மேல் கலவரம், தீ வைப்பு, கல் வீச்சு என ஈடுபட்டதில் காவல்துறை அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது அதனால் தற்காப்புக்காகவும் பொதுச் சொத்தைப் பாதுகாக்கவும் தடியடி கண்ணீர் புகை வீச்சு துப்பாக்கி சூடு நடந்தது. அதில் ஆறு பேர் பலியாகிவிட்டனர்” என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டது.

மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில், “மண்டல மாணிக்கம் கிராமத்தில் ஒரு சுவரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களைப் பற்றி இழிவான சில வாசகங்கள் சுவற்றில் எழுதி வைக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து தான் இந்த மாணவர் பழனிக்குமார் கொலை நடந்திருக்கிறது அதனைத் தொடர்ந்து தான் திரு. ஜான் பாண்டியன் அங்கே படையெடுத்து புறப்பட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து தான் இந்தக் கலவரங்கள் எல்லாம் நடைபெற்றிருக்கின்றன” என்று கூறினார்.

கூடுதலாக அரசு தரப்பின் கூற்றை பரமக்குடி நகர் காவல்நிலைய குற்ற எண். 300/2011ன் படியான முதல் தகவல் அறிக்கை மூலம் அறியலாம். இப்புகாரை பரமக்குடி நகர் காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார் அளித்து 1000 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பரமக்குடி நகர காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார் கொடுத்த புகாரில்சுமார் 1000 பேர் ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் ஐந்து முக்கு சாலையில் மறியல் செய்தனர். துணை ஆணையர் செந்தில்வேலன் டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல், தாசில்தார் ஆகியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். “நீங்கள் கூடியிருப்பது சட்டவிரோத கூட்டம் கலைந்து போங்கள் என்றோம் செவி சாய்க்காமல் அவதூறாக பேசி காலித்தனமாக போக்குவரத்தை தடைபடுத்தி வாகனங்களை தாக்க முற்பட்டார்கள். கும்பலைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்த வட்டாட்சியர் வாய்மொழியாக உத்தரவிட்டார். கலவரக் கும்பல் கலைந்து போகவில்லை. கணேசன், ஜெயபால், வெள்ளைச்சாமி, மாணிக்கம், தீர்த்தகனி  ஆகியோர் வெறி கொண்டு எங்களை நோக்கி கற்களை எறிந்தனர். உடனே வட்டாட்சியர் தடியடி நடத்தி கலவரக் கும்பலைக் கலைக்க சொன்னார். அங்கு வந்த டி.எஸ்.பி. யும் கலைந்து போகச் சொன்னார். ஆனால் போகவில்லை. குறைந்த பட்சம் தடியடி நடத்தப்பட்டது. அப்போதும் போகவில்லை.”

“எங்களை நோக்கி கல்லால் தாக்க ஆரம்பித்தனர். நாங்கள் பின்வாங்கினோம். அந்த சமயத்தில் 14 வாகனங்களுக்கு தீ வைத்து அடித்து நொறுக்கினார்கள். தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்தையும் தீ வைத்தார்கள். அப்போது டி.ஐ.ஜி சந்தீப் மிட்டலுக்கு தலையிலும், அடையாறு துணை ஆணையா  டாக்டர் செந்தில்வேலனுக்கு வலது கையிலும் டி.எஸ்.பி. கணேசனுக்கு வலது காதிலும் மேலும் பல போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனக்கும் காயம் ஏற்பட்டது. மேற்கொண்டு உயிர்சேதம், பொருட் சேதத்தை தடுக்கும் பொருட்டு கலவரக் கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கலைக்க நேரிடும் எனவும் உடனே கலைந்து செல்ல வாய்மொழி உத்தரவிட்டார். துணை ஆணையர் செந்தில்வேலனும் அவ்வாறு எச்சரித்தர். கலவரக் கும்பல் மிகக் கொடூரமாக தாக்கவும் பரமக்குடி வட்டாட்சியர் துப்பாக்கியால் சுட்டு கலைக்க எழுத்து மூலமாக உத்தரவு வழங்கினர்”. இவ்வாறு புகார் பதிவு செய்துள்ளனர்.

சம்பவ சாட்சிகளின் வாக்குமூலங்கள் :

பரமக்குடி துப்பாக்கி சூட்டை நேரில் பார்த்த வழக்கறிஞர் சத்தியமூர்த்தி கூறும் பொழுது, “காலை சுமார் 11.30 மணிக்கு பரமக்குடி ஐந்து முக்கு ரோட்டுக்கு வந்தேன். அப்போது சுமார் 50க்கும் குறைவான நபர்களே கைது செய்யப்பட்ட ஜான்பாண்டியனை விடுதலை செய்யக் கோரி மறியல் நடத்தினர். போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். ஆய்வாளர் சிவக்குமார், ஆயுதப்படை துணை ஆய்வாளர் கந்த முனியசாமி, டி.எஸ்.பி.  கணேசன், துணை ஆணையர் செந்தில்வேலன் ஆகியோர் கூடியிருந்தவர்களை கலைந்து போக பேசினர். நேரம் ஆக ஆக குருபூஜைக்கு வந்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் எண்ணிக்கையில் அதிகரித்தது. அவர்களிடம் உரிய அதிகாரிகளை வைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல் எந்த முன்அறிவிப்பும் இன்றி துணை ஆணையர் செந்தில்வேலன் திடீரென தடியடி நடத்தினார். மக்கள் நாலா பக்கமும் சிதறி ஓடினர். போலீஸினுடைய காட்டுமிராண்டித் தனமான தாக்குதலில் பலபேர்களின் மண்டை உடைந்தது. சிதறி ஓடிய நபர்கள் சிலர் கல் வீச்சில் ஈடுபட்டனர். உடனே ஆய்வாளர் சிவக்குமார், துணை ஆய்வாளர் கந்தமுனியசாமி, டி.எஸ்.பி.   கணேசன் ஆகியோர் துப்பாக்கியால் சூட்டனர். மூன்று பேர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தனர். பல பேருக்கு மண்டை உடைந்தது. சம்பவம் போர்களம் போல் காட்சியளித்தது.

காமராஜ் என்பவர் சொல்லும் போது, “எங்க அப்பா செல்லத்துரை வாத்தியார், தியாகி இமானுவேலுக்குப் பிறகு இரண்டாவதாக மறவர்களால் படுகொலை செய்யப்பட்டவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து போராடியவர். துணை ஆணையர் செந்தில்வேலன் ஏற்கனவே இராமநாதபுரம் மாவட்ட எஸ்.பியாக  இருக்கும் பொழுது எங்க அப்பாவின் நினைவுநாளுக்கு பூஜைக்காக அனுமதி கேட்டேன். அதற்கு செந்தில்வேலனோ உங்க அப்பா படத்தை வீட்டிலேயே வைத்து பூஜை செய் வெளியிலே எதற்கு கொண்டு வருகிறாய். நடத்தக்கூடாது என்று சொல்லியதுடன் அருகில் இருந்த ஆய்வாளர் மூலம் வெளியே போகச் சொல்லிவிட்டார். ஆனால் நாங்கள் மீறி நடத்தினோம். இந்த ஆண்டு குரு பூஜையில் எஸ்ஸி/.எஸ்.டி. அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பாக தியாகி “தெய்வத்திருமகன்’’ இமானுவேல் சேகரன் என்று பிளக்ஸ் போர்டு வைத்தனர். தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள். போலீசிடம் சென்று போர்டை அகற்ற புகார் கொடுத்தனர். மேலும் போக்குவரத்துத் துறையின் மேலாளர் மூலமாக எஸ்ஸி/.எஸ்.டி.  அரசு ஊழியர்களை மிரட்டியதாலும் தெய்வத்திருமகன் என்பதை மட்டும் அழித்துவிட்டோம்.”

“இரண்டு நாட்கள் முன்பாக ’’அவங்க எதுவானாலும் வைக்கட்டும் இவர்கள் எப்படி பங்சன் நடத்துகிறார்கள் என்று பார்ப்போம’’ என்று தேவர் சாதியைச் சேர்ந்த சிலர் பேசி வந்தனர். இந்த ஆண்டு குருபூஜையை நடத்தக்கூடாது என பல்வேறு இடையூறுகளை தேவர் சாதியினர் செய்து வந்தனர். இதற்கு காவல்துறை முழுஅளவில் ஒத்துழைக்கிறது. தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் புதிதாக போடப்பட்ட கான்கிரீட் தரை தளம்  உலர்வதற்குள் தேவர் பேரவை என எழுதி வைத்ததுடன் அந்த இடத்தில் மலம் கழித்து அசிங்க படுத்தி சென்றனர். இது வெளியில் பல பேருக்கு தெரியாது. போலீசிடம் சொல்லியதுடன் நகராட்சியில் மூலம் அகற்றினோம்.”

“சம்பவ தினத்தன்று போலீஸ் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. வஜ்ரா வாகனத்தில் தண்ணியே இல்லை. அதை பயன் படுத்தாமல் போலீசாரே தீ வைத்துக் கொளுத்தினர். பொது மக்களுடைய பைக், கார் போன்றவற்றை போலீசாரே அடித்து சேதப்படுத்தினர். ஆய்வாளர் சிவக்குமார் இரண்டு கையிலும் துப்பாக்கி வைத்து மக்களைப் பார்த்து சுட்டுள்ளார். ஆறு பேரை படுகொலை செய்ததோடு பலரை கொடூரமாக தாக்கியுள்ளனர். 1000 பேர் மீது வழக்குப் போட்டு கிடைப்பவரை கைது செய்வதற்காக கிராமம், கிராமமாக மக்களை அச்சுறுத்த தேடுதல் வேட்டை செய்கிறது. மக்கள் காடுகளிலும், வயல்வெளிகளிலும் வாழ்ந்து வருகிறார்கள். பரமக்குடி நகரத்தில் தியாகி இமானுவேல் குருபூஜைக்காக வைத்த பிளக்ஸ் பேனர்கள்; அனைத்தையும் போலீசு கிழித்து கையிலே வைத்துக் கொண்டு அதில் உள்ள பெயர்களை வழக்கிலே சேர்த்து கைது செய்ய கிராமங்களுக்கு செல்கிறது. இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கைக்கு ஆதரவு பெருகி வலுவடைந்து வருகிறது. இதை தடுப்பதற்காகவே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இது சாதி மோதல் கிடையாது. சாதி வெறியோடு தலித் மக்கள் மீது நடத்திய போலீஸ் தாக்குதல். இந்த படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்.”

வழக்கறிஞர் முத்துக்கண்ணன் கூறும் பொழுது, “போலீஸ் தான் கலவரத்தைத் தூண்டியது. காலை 6 மணி முதலே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் யாருக்கும் இடையூறு இல்லாமல் 50 பேர் தான் சாலை மறியல் செய்தனர். போலீஸ் நினைத்திருந்தால் இந்த துப்பாக்கிச் சூட்டை, லத்தி சார்ஜை தவிர்த்திருக்கலாம். சசிகலா நடராஜனின் தூண்டுதலின் பேரில் நடந்துள்ளது. தேவர் சாதிக்காரர்களை கூப்பிட்டு பேசியிருக்கிறார். குருபூஜை நடத்தக்கூடாது என்று போலீசை தூண்டிவிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்கள். இது சாதிக்கலவரமாக சித்தரிக்க போலீஸ் முயல்கிறது. துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களைக் கூட சாதி வெறியோடு போலீஸ் எட்டி உதைத்திருக்கிறது. ஆறு பேரில் சிலரை காட்டுமிராண்டித் தனமாக போலீசு; அடித்தே கொன்றிருக்கிறது. இந்த படுகொலைக்கு காரணமான ஆய்வாளர் சிவக்குமார், துணை ஆணையர் செந்தில்வேலன், டி.எஸ்.பி. கணேசன், டி.ஐ.ஜி.சந்தீப் மிட்டல் ஆகியோர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்” என்றார்.

சிவா, வடிவேல் ஆகியோர்கள் கூறும் பொழுது, “பகல் 12 மணிக்கு ஆரம்பித்த போராட்டம் மாலை ஆறு மணி வரை நீடித்தது. துப்பாக்கிச் சூடு நடந்த பிறகும் நான்கு பேர்கள் பிணமான பிறகு கூட அவர்களை தூக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக போலீசு மீது தொடர்ந்து கல் எறிவதும் தாக்குவதும் பிறகு பின்வாங்குவதும் என்று மூர்க்கமாக மக்கள் போராடினார்கள். இந்த சம்பவத்தால் பல்வேறு ஊர்களிலிருந்து வரக்கூடிய மக்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி போலீசால் திருப்பி அனுப்பப்பட்டனர். இது தலித் மக்கள் மீது நடந்த அநியாய தாக்குதல்”.

பரமக்குடியில் நகர காவல்நிலையம் எதிரே அலுவலகம் நடத்தி வரும் வழக்கறிஞர் பசுமலை  கூறும் பொழுது ஆப்பநாடு மறவர் சங்கம் அனுப்பிய சுற்றறிக்கையில் முதுகுளத்தூர் தேவர் திருமண மஹால் தொடர்பான சொத்துப் பிரச்சனையை பேசுவதற்கான ஆலோசனைக் கூட்டம்” என்ற செய்தியைச் குறிப்பிட்டு தொடர்ந்து நமது ஐயா பசும்பொன் தேவர் அவர்கள் குருபூஜையை நடத்துவது போல் பெரும் ஆதரவு பெறும் இமானுவேல் குருபூஜை வருடா வருடம் கூட்டம் அதிகமாகி அரசு விழாவாக நடத்த அனுமதி வழங்கவிடாமல் தடுப்பதற்காகவும் கிராம வாரியாக கீழத்தூவல் கிராமத்திற்கு திரண்டு வர வேண்டும் என்று சம்பவத்திற்கு முன்பே குறிப்பிட்டு அனுப்பியுள்ளனர். இமானுவேல் குருபூஜையை தடுக்க வேண்டுமென்று போலீசும், தேவர் சாதியினரும் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். பரமக்குடி ஆய்வாளர் சிவக்குமார் இதற்கு முன்பு வெள்ளைச்சாமி என்பவரை கொடூரமாக தாக்கியதில் அவருக்கு எதிராக தேவேந்திர குல மக்கள் பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர். அதனால் காழ்ப்புணர்ச்சியுடனே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்”.

மாவட்ட ஆட்சியர் அருணாராய் சம்பவ இடத்திற்கும் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கும் அன்று முழுவதும் வரவில்லை. வருவாய் துறை அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் சுமூகத் தீர்வு ஏற்பட்டிருக்கும் மேலும் துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பங்களுக்கோ காயம்பட்டு மருத்துவமனையில் இருப்பவருக்கோ மாவட்ட ஆட்சியர் எந்த ஆறுதலும் நேரில் சென்று கூறவில்லை. துப்பாக்கிச் சூட்டில் இறந்த ஜெயபால் என்ற இளைஞனை  மனித நேயமற்ற நிலையில் இறந்த நாயை தூக்கிச் செல்வது போல் போலீசார் தூக்கிச் சென்றனர். இந்த படுகொலைக்கு காரணமான போலீஸ் அதிகாரியின் மீது கொலை வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்என்றார்.

பரமக்குடி, இளையான்குடி மற்றும் மதுரை துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் காயமடைந்தோர் மதுரை அரசு மருத்துவமனையில், இராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 17 பேர் சிகிச்சை பெற்று வருவதில் 10 நபர்களுக்கு துப்பாக்கிக் குண்டு காயங்கள் உள்ளது. ஆறுமுகசாமி என்பவருக்கு லத்தியால் தாக்கப்பட்டதால் 9 காயங்கள ஏற்பட்டுள்ளது. தர்மராஜ் என்பவருக்கு 13 காயங்கள் எலும்பு முறிவுடன் சோந்து ஏற்பட்டுள்ளது. முகம், உடம்பில் முழுவதும் காயங்கள் உள்ளது. இதர நபர்களுக்கு லத்தியால் அடித்த காயங்கள் உடம்பில் முக்கிய பகுதிகளில் உள்ளன.

இராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் வெள்ளைச்சாமி (வயது 70) அவரைச் சந்தித்தோம், “சம்பவத்தன்று நானும் இருந்தேன். ஐந்து முக்கு சாலையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் ஜான்பாண்டியனை விடுதலை செய்யுங்கள், உங்களுக்கு கைது செய்ய என்ன அதிகாரம் இருக்கிறது. அக்டோபர் 30 அன்று தேவர் குரு பூஜையில் இப்படி நடப்பீங்களா எனக் கேட்டேன். இந்நிலையில் நாளா பக்கமும் போலீஸ் சுற்றி வளைத்துவிட்டனர். சிவக்குமார்நீங்க என்னடா பெரிய விழா நடத்துறீங்க என்று கேவலமாக பேசினார்.” அதற்கு நான் அரசியல் சட்டத்தை எழுதிய அம்பேத்கார் எங்க சாதி தான், ஜெகஜீவன் ராம் எங்க சாதி தான், பல மொழி தெரிந்த மாயாவதி எங்க சாதி தான் என வாக்குவாதம் செய்தேன்.”

“திடீரென்று போலீஸ் லத்தியால் அடித்து மக்களை துரத்தினர். டுப் டுப் என துப்பாக்கியால் சுட்டனர். நான் ஓடி அருகில் இருந்த படிக்கட்டில் ஏறி மறைந்து கொண்டேன். மக்களை அடித்து விரட்டி விட்டு வந்த போலீசார் என்னைப் பார்த்துவிட்டனர். சட்டையைப் பிடித்து இழுத்து வாடா மாப்பிள்ளை சட்டமா பேசுற என கொடூரமாக தாக்கினர். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பெரிய கம்பால் ஒரே போடாக என இடது காலில் போட்டார் பெருவிரல் நசுங்கி இரத்தம் வழிந்தது தலையில் ஒரு அடி அடித்தார். புருவத்தில் இருந்து ரத்தம் வந்தது. சுற்றியிருந்த காவலர்கள் ஆளாளுக்கு கடுமையாக தாக்கினார்கள். வெயிலில் கால் சுடுது செருப்பை எடுத்துக் கொள்கிறேன் என்று கேட்டேன் அதற்கு இன்ஸ்பெக்டர் உனக்கு எதுக்குடா செருப்பு பள்ளப்பயலே என அசிங்கமாக திட்டினார். கீழே விழுந்த வாட்ச்ஐ எடுக்கவிடவில்லை.”

“பிறகு போலீசார் காவல்நிலையத்தில் அடைத்து ஏண்டா பள்ளப்பயலே உங்களுக்கு குருபூஜை கேட்குதா என்று  தாக்கினர்தண்ணி தவிக்குது தண்ணீர் கொடுங்க அவசரமா யுரின் போகனும் எனக் கேட்டேன் போடா என விரட்டினா. சிவக்குமாரும், எஸ்.ஐ.யும் வெளியே போனவுடன் ஏட்டு ஒருவர் தண்ணீர் கொடுத்தார். சட்டை, பனியனில் இரத்தம் காய்ந்ததால் நாற்றம் எடுத்ததால் அனைத்தையும் கழற்றிவிட்டு டவுசருடன் இருந்தேன் அப்போது மதியம் சுமார் 2 மணி இருக்கும். அப்போது சாப்பிட எதுவும் கொடுக்கவில்லை. இரவு 10.20 மணிக்கு தான் இராமநாதபுரம் மருத்துவமனையில் சேர்த்தனர். என்னைப் போல் அடிபட்ட பலரும் இதுபோல் தான் நடத்தப்பட்டனா. என்னை அடித்த இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும் என்று சொல்லியதுடன் உன் சட்டையை கழற்றி ஜெயிலில் தள்ளாமல் விடமாட்டேன் என்று சொன்னேன். காவல்நிலையத்தில் அடைபட்ட போது நெஞ்சு பொறுக்கவில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து என்ற பாரதியார் வரிகளை நினைத்துப் பார்த்தேன்.

காயம்பட்ட 22 வயதான சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தவமணி மகன் ராஜ்குமார் கூறுகையில் பரமக்குடி ஐந்து முக்கு சாலையில் மதியம் இரண்டு மணி முதல் மாலை 3.15 வரை தொடர்ந்து காவல்துறையினர் தாக்கினர். நான் உட்பட பலரும் அடிபட்டு 1 ½ மணி நேரம் சுடும் வெயிலில் கிடந்தோம். ரத்தம் வழிந்து கொண்டிருந்தது வேதனையில் துடித்தோம். தண்ணீர் கூட யாரும் கொடுக்கவில்லை’’ என்று குறிப்பிட்டார்.

காயம்பட்ட பரமக்குடி மணி நகரைச் சேர்ந்த குமார் கூறுகையில் எனக்கு கைகளில் போலீசார் அடித்து காயம் ஏற்பட்டுள்ளது. 3.00 மணிக்கு 20 போலீசார் நான் காய்கறி வாங்க கடைக்கு சென்ற போது அடித்தனர். நான் வண்ணார் சமூகத்தைச் சேர்ந்தவன்.

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான ஜெயபால் வயது 20 மஞ்சூரைச் சேர்ந்தவர் அவருடைய தந்தை பாண்டி கூறும் பொழுது என் மகன் கலப்பு திருமணம் செய்து கொண்டவன். மருமகள் நிறைமாத கர்ப்பிணி, கூலி வேலை செய்து தான் பிழைக்கிறோம். குருபூஜைக்குச் சென்றவன் பிணமாக வந்தான். பத்திரிக்கையில் அவன் நடந்து வருகிற போட்டோவும் இருக்கிறது. அவன் பிணமாக போலீசார் தூக்கி வருவதும் இருக்கிறது. அரசு கொடுத்த இழப்பீடை திருப்பித் தரப் போகிறேன். என் மகனின் படுகொலைக்கு நீதி வேண்டும். பணத்தை எளிதாக சம்பாதித்து விடலாம். என் மகனின் மார்பில் பாய்ந்த குண்டால் என் கை உள்ளே போகிற அளவுக்கு மார்பில் குழியாக இருந்தது. கீழே இருந்த சதையை எடுத்து அதில் வைத்து அழுத்தினேன். என் மகன் நான்கு பேர்களை ஒரே நேரத்தில் அடிக்கும் வலிமை உடையவன்.  அவனை கொன்று விட்டார்கள். நாங்கள் விடமாட்டோம்”.

பல்லவராயனேந்தல் ஊரைச் சார்ந்த கணேசன் வயது 55 துப்பாக்கிச் சூட்டில் பலியானவர். இவர் மனைவி கூறும் பொழுது என் கணவா குருபூஜைக்கு போகவில்லை. என் மகனுக்கு 15-ம் தேதி திருமணம் அழைப்பிதழ் கொடுப்பதற்காக பரமக்குடி சென்றார். அநியாயமாக துப்பாக்கிச் சூட்டில் இறந்துவிட்டார். ஆடு, மாடு வைத்துள்ளோம் அதை எல்லாம் பட்டியில் அடைப்பதற்கு வந்துவிடுவேன் என்று போனார். பந்தகால் நட்டுப் போனவர் மகன் திருமணத்திற்கு வரவில்லை. போலீஸ் இப்படி அநியாயமாக கொன்றுவிட்டது. மணப்பெண்ணை பற்றி தவறாக பேசிவிடுவார்கள் என்பதற்காக என் கணவர் விருப்படியே  குறித்த தேதியில் திருமணத்தை நடத்தினோம்”.

காக்கனேந்தல் ஊரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். அவருடைய அண்ணன் மனைவி கூறும் பொழுது போலீஸ் அநியாயமாக என் தம்பியைச் சுட்டுக் கொன்றுவிட்டது. மக்களை கொன்றதோடு மட்டுமல்லாமல்; இரவு நேரங்களில் போலீஸ் எங்களை கைது செய்கிறது. இரவு நேரங்களில் ஆண்கள் வீடுகளில் இல்லை. பாத்திர வியாபாரிகள் போல முள்ளுக்காட்டில் நின்று வேவு பார்க்கிறது. நாங்கள் நிம்மதியில்லாமல் இருக்கிறோம். என்னுடைய வீடு பரமக்குடி பொன்னையாபுரத்தில் இருக்கிறது. ஒரு சிறுவனை பிடித்து வைத்துக் கொண்டு பல போலீசார் சுற்றி நின்று காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். உங்க ஆட்களை இப்ப வர சொல்லு என்று தாக்கியது. நான் மாடியில் இருந்து பார்த்தேன். தெருவில் இருந்த இருசக்கர வாகனங்கள் டாக்டருக்கு சொந்தமான கார் இவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள். தேவர் குருபூஜையை பாதுகாப்பாக நடத்துவதற்கு அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறது. எங்கள் தலைவர் விழாவை நடத்தவிடாமல் தடுக்கிறது செய்தால் எல்லா குருபூஜையும் தடை செய்யட்டும் இல்லை என்றால் அனைவருக்கும் ஒரே மாதிரி நடத்த ஆவண  செய்ய வேண்டும். இந்த அம்மா ஆட்சிக்கு வந்து இப்பவே மக்கள் மீது துப்பாக்கிச் சூடு என்றால் இவர்களுக்கு ஓட்டுப் போட்டது எவ்வளவு தவறு என்று தெரிகிறது”.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி புறவழிச்சாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்

இளையான்குடியில் தியாகி இமானுவேல் பேரவை சேர்ந்த முனியாண்டி என்பவர் கூறும் பொழுது புறவழி சாலையில் குருபூஜைக்காக பகைவரை வென்றான் கிராமத்து மக்கள் சார்பில் பேனர் வைத்தோம்.  அதிகாலையில் சிலர் தியாகி இமானுவேல் படத்தின் தலையை கிழித்துவிட்டனர். இதற்காக நாங்கள் போலீசிடம் புகார் கொடுத்தோம். வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எந்த நடவடிக்கையும் இல்லை. குருபூஜைக்கு செல்வதற்காக இந்திரா நகரில் 50 வாகனங்களில் நாங்கள் தயாராக இருந்தோம். பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்ததால் போலீஸ் அனுமதி மறுத்தது. இந்நிலையில் இளையான்குடி புறவழிச்சாலையில் துப்பாக்கி சூட்டை கண்டித்து கரைக்குடி மக்கள் சுமார் 27 பேர் சாலை மறியல் செய்தனர். அங்கு வந்த டி.எஸ்.பி. இளங்கோவன் எந்த அறிவிப்பும் இன்றி துப்பாக்கியால் சுட்டார். ஆனந்த் என்ற +2 படிக்கும் மாணவன் துப்பாக்கி குண்டு பட்டு கீழே விழுந்தான். பொதுமக்கள் அனைவரும் சிதறி ஓடினர். போலீசாரே ஆனந்தை மருத்துவமனையில் சேர்த்தனர். இது சம்பந்தமாக 200 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.”

“நாங்கள் கூட்டமாக சென்று துப்பாக்கிச் சூடு ஏன் நடத்தினீர்கள் என்று டி.ஸ்.பி.இளங்கோவனிடம் கேட்டோம். அவர் சிரித்துக் கொண்டே நான் தான் சுட்டேன் என்று சொன்னார். பிறகு யாரையும் கைது செய்யக்கூடாது என்று நாங்கள் கடுமையாக பேசினோம். இத்தனை வருடம் எந்த பிரச்சனையும் கிடையாது என்று சொன்னோம். டி.ஸ்.பி. மறவர் இனத்தைச் சேர்ந்தவர் நயினார் கோவில் அருகில் உள்ள சாதி ஆதிக்கம் மிகுந்த அக்கிரமேசி ஊரைச் சேர்ந்தவர். இவர் தேவர்களுக்கு சாதகமாக சாதி உணர்வோடு நடக்கிறார்.

ஆனந்தினுடைய தாயார் செல்லம்மாள் ‘’என் மகன் டியூசன் போனான் அநியாயமாக போலீஸ் சுட்டுவிட்டனர். தற்பொழுது மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்’’.என்றார்.

பகைவரை வென்றான் ஊரைச் சேர்ந்த திருநாவுக்கரசு கூறும் பொழுது நாங்கள் வைத்த பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசோடு போராட்டம் நடத்தியதால் குருபூசைக்கு கிளம்ப காலதாமதம் ஆகிவிட்டது. இல்லாவிட்டால் நாங்களும் பரமக்குடி போயிருப்போம். இந்த விழாவை ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதை சீர்குலைக்கவே பேனர் கிழிப்பு காவல்துறையும் துணை போகிறது. இளையான்குடியில் துப்பாக்கி சூடே இல்லை என்று காவல் துறை மூடி மறைக்கப் பார்க்கிறது. டி.எஸ்.பி.இளங்கோவன் மருத்துவர்களிடமும் குண்டடிபட்ட ஆனந்தின் பெற்றோர்களிடமும் பேசி சரிகட்ட முயற்சிக்கிறார். தியாகி இமானுவேல் குருபூஜையை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். எங்களின் நியாயமான இக்கோரிக்கையை அமைப்பு பாகுபாடு கட்சிப் பாகுபாடு இலலாமல் அனைவரும் ஆதரிக்கின்றனர்”.

மதுரை சிந்தாமணியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்

                11.09.2011 அன்று மதுரை, சிந்தாமணியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அரசு தரப்பில் காளியம்மாள் என்ற முதல்நிலை காவலரிடம் புகாரைப் பெற்று 38 நபர்கள் மீது குற்ற எண்.459/ 2011 yஇ.த.ச 147, 148, 188, 341, 322, 336, 353, 307 & 3 (1) தமிழ்நாடு பெண்கள் வதை தடுப்புச்சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்புகரில் குருபூஜைக்கு வந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், புகார்தாரரான காளியம்மாள் என்ற தலித் பெண் காவலரை மானபங்கப்படுத்த முயற்சி செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

                மேற்படி சம்பவத்தைப் பற்றி நாங்கள் விசாரித்த பொழுது மதுரை சிந்தாமணியில் இருக்கும் முனியாண்டி மகன் துரைப்பாண்டி, கிருஷ்ணன் ஆகியோர் சொன்னது “11.09.2011 அன்று காலை 11 மணிக்கு புலியூர் என்ற ஊரிலிருந்து திறந்த வேனில் குருபூஜைக்கு வந்தவர்களை அவனியாபுரம் சார்பு ஆய்வாளர் சண்முகம் அடித்துத் திருப்பி அனுப்பிவிட்டார். அந்த நேரத்தில் பாட்டம் கிராமத்தில் இருந்து குருபூஜைக்குச் செல்ல வந்து கொண்டிருந்தனர். சிந்தாமணியைச் சேர்ந்த உள்ளுர்வாசிகளும் அப்போது இருந்தனர். திடீரென சார்பு ஆய்வாளர் சண்முகநாதன் மற்றும் போலீசாரும் லத்தியால் கொடூரமாக தாக்க ஆரம்பித்தனர். பால்குடம் எடுக்க வந்த பெண்கள், மற்றவர்களும் கூட ரத்தம் சொட்ட சொட்ட சிதறி ஓடினர். இச்செய்தியை சண்முகநாதன் வாக்கி டாக்கி மூலம் குருபூஜைக்கு வந்தவர்கள் காவலர்களை தாக்குகிறார்கள். பேருந்துகளை அடித்து நொறுக்கிறார்கள் என்று பொய்யாக தகவல் சொன்னதால் ஜீப்பின் கதவு திறந்த நிலையில் வந்த அவனியாபுரம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் வந்தவுடன் எடுத்த எடுப்பிலேயே துப்பாக்கியால் சுட்டார். ஜெயப்பிரகாஷ் என்ற 19 வயது இளைஞர் தொடைப் பகுதியிலும், முதுகுப் பகுதியிலும் குண்டடிப்பட்டு கீழே விழுந்தார். அவரைத் தூக்க முயற்சித்த பாலசுப்பிரமணி என்ற இளைஞர் விலாவில் குண்டடி பட்டார். மக்கள் அனைவரும் சிதறி ஓடினர். ஏற்கனவே பாட்டம் கிராமத்தில் உள்ள பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது சேர்வை இனத்தவர்களுக்கு பகை உள்ளது.இதில் சேர்வை சமுகத்திற்கு ஆதரவாக பல வழக்குகளில் எஸ்.ஐ.. சண்முகநாதன  செயல்பட்டுள்ளார்.

“ஆய்வாளர் கஜேந்திரன் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். தூத்துக்குடியில் வேலை பார்த்த போது வெங்கடேச பண்ணையாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். வெங்கடேச பண்ணையாருக்கும் பள்ளர் சமூகத் தலைவர் பசுபதி பாண்டியனுக்கும் பிரச்சினை இருந்தது. இதனால் பள்ளர் சமூகத்தின் மீது எப்போது விரோத மனப்பான்மையில் செயல்படுபவர். ஜீப்பை விட்டு இறங்கி துப்பாக்கியால் சுட்டதும் நல்ல நிலையில் வேறு ஒரு வாகனத்தில் ஏறிச் சென்று தனக்கு காயம்பட்டதாக நாடகம் ஆடி மருத்துவ மனையில் படுத்துக் கொண்டார். மேலும் காளியம்மாள் என்ற பெண் காவலரிடம்  புகார் வாங்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு போட்டுள்ளார். காளியம்மாள் பள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர். சிந்தாமணியில் உள்ளவர்கள் பலர் அவருக்கு உறவுக்காராகள். சம்பவத்தன்று குருபூசைக்கு வந்தவர்களோடு பேசியதுடன் அனைவருடனும்  சேர்ந்து கரும்புச்சாறு வாங்கி குடித்தார். தடியடி ஆரம்பித்தவுடன் மற்ற பெண் காவலருடன் சென்றுவிட்டார். ஆனால் உண்மைக்கு மாறாக காளியம்மாளை யூனிபார்முடன் இழுத்து மார்பகங்களை பிடித்து அமுக்கி மானபங்கம் செய்ததுடன் அவரை கீழே தள்ளிவிட்டு உயிர் தலத்தில் காலால் மிதித்தனர் என்று வக்கிரமாக சாதி வெறியுடன் புகார் பதிவு செய்துள்ளனர். அங்கு வைத்திருந்த பிளக்ஸ் பேனரில் உள்ள பெயர்கள் அனைத்தையும் புகாரிலேயே எழுதி பதிவு செய்துள்ளனர். முதல் நாள் இரவே எஸ்.ஐ. சண்முகநாதன் அவனியாபுரத்தில் அனுமதி பெற்று வைத்த ரேடியோவை நிறுத்துமாறும் கூட்டமாக இருப்பதை தடுத்தும் இடையூறு செய்தார். இச்சம்பவத்திற்கும் ஜான்பாண்டியன் கைது செய்ததற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. மப்டி போலீசார் தான் பேருந்து மீது கல்வீச்சு நடத்தி கண்ணாடியை உடைத்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம், மண்டல மாணிக்கம் பள்ளப்பச்சேரி கிராமத்தில் 09.09.2011 அன்று பழனிக்குமார் என்ற +1 மாணவன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான சம்பவம்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா 12.09.2011 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் பரமக்குடியில் 11.09.2011 அன்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு அளித்த பதில் உரையில் மண்டல மாணிக்கம் கிராமத்தில் ஒரு சுவரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களைப் பற்றி இழிவான சில வாசகங்கள் சுவற்றில் எழுதி வைக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து தான் இந்த மாணவர் பழனிக்குமார் கொலை நடந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து தான் திரு. ஜான் பாண்டியன் அங்கே படையெடுத்து புறப்பட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து தான் இந்தக் கலவரங்கள் எல்லாம் நடைபெற்றிருக்கின்றன என்று கூறினார்”.

மேற்படி சம்பவம் தொடர்பாக அந்த ஊரில் உள்ளவர்களிடம் விசாரித்த போது. பள்ளபச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஜெயபாலன் சொன்னது

மண்டல மாணிக்கத்தில் ஆரம்பத்தில் நாடார், செட்டியார், முதலியார், பண்டாரம், அருந்ததியர் ஆகியோர் வீடு வாசல் நிலங்களோடு வாழ்ந்து வந்தனர். சுற்றியுள்ள ஏழு கிராமங்களிலும் மறவர் சாதியினர் பெரும்பான்மையாக வாழ்ந்ததால் மண்டல மாணிக்கத்தில் குடியேறி பல்வேறு வகைகளில் மற்றவர்களுடைய சொத்துக்களை அபகரித்து பெரும்பான்மையாக மாறிவிட்டனா. இக்கிராமத்தோடு இணைந்தது தான் பள்ளப்பச்சேரி கிராமம். 2004-ம் ஆண்டு மில்லுக்கு வேலை செய்யச் சென்ற பள்ளர் சமூகத்து பெண்களை  மறவர்கள் தாக்கினர். பிறகு நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் போலீசாரே எங்களை அழைத்துச் சென்று மண்டல மாணிக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போதே மறவர் சாதியினர் எங்களை கடுமையாக தாக்கி மண்டையை உடைத்தனர். போலீசையும் தாக்கினர். இதற்கு போலீசே மறவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.”

“பள்ள்பச்சேரி கிராம மக்கள் வெளியில் செல்ல வேண்டுமென்றால் மறவர்கள் இருக்கும் மண்டல மாணிக்கம் பக்கம் சென்று தான் பேருந்தில் செல்ல முடியும். எங்கள் இளைஞர்கள், பெண்கள் சென்றால் கிண்டல் செய்வார்கள். நாங்கள் அவர்களை எதிர்த்து பேச முடியாது, வெளியிலும் சொல்ல முடியாது. அரசு விடுதியில் பள்ளர் சாதி மாணவர்களை துன்புறுத்துவார்கள். இதனால் 40 க்கும் மேற்பட்ட மாணவர்களை ஆனைக்குளம் பள்ளியில் சேர்த்துவிட்டோம். காவல்நிலையத்தில் கூட பெரும்பான்மை போலீசார் இப்பகுதி மறவர் சாதியினரே இதனால் எங்களுக்கு எந்த காலத்திலும் நீதி கிடைக்கவில்லை.”

“ஜனவரி 2011-ல் சிறையில் இருந்து வந்த ஜான்பாண்டியன் எங்கள் கிராமத்திற்கு வரும் பொழுது மாடியில் இருந்து மறவர் சமூகத்தினர் கல்லெறிந்து வாகனங்களை தாக்கியதுடன் இருவரை கத்தியால் குத்தினர். மேலும் எங்கள் பள்ளப்பச்சேரி ரிசர்வ் ஊராட்சி தொகுதியாகும்  எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்தினோம். ஆனால் மறவர் சாதியினர் அங்கு வாழக்கூடிய குமரன் என்ற அருந்ததியினரை மிரட்டி வேட்பு மனு தாக்கல் செய்து பஞ்சாயத்து தலைவராக ஜெயிக்க வைத்தனர். பஞ்சாயத்து தலைவர் தரையிலே உட்கார்ந்திருப்பார், மறவர்சாதி துணைத் தலைவர் நாற்காலியிலே அவரதுமகன் உட்கார்ந்திருப்பார். டீ வாங்கி வருவது போன்ற எடுபிடி வேலைகளை தலைவர் தான் செய்வார் வாடா, போடா என்று தான் கூப்பிடுவார்.  மற்றொரு பாப்பாபட்டி, கீரிப்பட்டி இது மண்டல மாணிக்கத்தில் இரட்டை டம்ளர்  இன்றும் உள்ளது”.

இப்படி நாள்தோறும் அஞ்சி வாழ்கின்ற சூழலில் 09.09.2011 அன்று முத்துராமலிங்கபுரத்தில் நடந்த கட்டபொம்மன் நாடகத்தைப் பார்க்க எங்கள் ஊரில் இருந்து பலர் சென்றனர். பபூன் காமெடி முடிந்ததுடன் பல இளைஞர்கள் ஆற்றுப் பாலத்தை கடந்து திரும்பி ஊருக்கு ஐந்து பேர், நான்கு பேர் என்று வந்து கொண்டிருந்தனர். பின்பு இரு சிறுவர்கள் சற்று தூரமாக வந்த போது வேலியில் மறைந்திருந்த 10 பேர் மண்டல மாணிக்கம் மறவர்கள் பழனிக்குமார் என்ற 16 வயது சிறுவனை தலையில் வெட்டிக் கொன்றனர். கொலைக்கு முதல் நாள் மறவர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்கள் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்க கட்டிடத்தில் தேவர் வாழ்க என்பதற்கு கீழே யாரோ ஒன்பது என்று எழுதிவிட்டார்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தனர். போலீசார் எங்களை விசாரித்தனர். அந்த கட்டிடப் பகுதியில் மறவர் சாதி மாணவர்களும், இளைஞர்களும் கிரிக்கெட் விளையாடுவார்கள் நாங்கள் அங்கு செல்லவே முடியாது இரவிலும் அவர்களே அங்கு மது அருந்துவர். நாங்கள் யாரும் எழுதவில்லை என்று போலீசாரிடம் சொன்னோம். அன்று இரவு தான் பழனிக்குமார் என்ற சிறுவன் கொல்லப்பட்டான். அச்சிறுவன் பார்ப்பதற்கு 10 வயது போல தோற்றம் தான் இருக்கும் இமானுவேல் சேகர் குருபூஜையை தடுக்கும் நோக்கத்தில் தான் கொலை நடந்துள்ளது.

பள்ளபச்சேரி தங்கராஜ் கூறும் பொழுது அன்று இரவு நான் குண்டாற்றை தாண்டி வரும் பொழுது கத்தும் குரல் கேட்டது. அப்போது ‘’கதையை முடிச்சாச்சு இமானுவேல் சேகரன் விழா எப்படி நடக்குது பார்ப்போம்’’ என்று சொல்லிக் கொண்டே கருவேல மரங்களில் சென்று மறைந்தனா. பழனிக்குமார் தலையில் வெட்டுபட்டு கீழே கிடந்தான்”.

கொலையுண்ட பழனிக்குமாரரின் பெற்றோர்கள்     தங்கவேல், புவனேஸ்வரி, கூறும் போது எனக்கு நான்கு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை எனது இரண்டாவது மகன் பழனிக்குமார் என் மகன் எந்தத் தவறும் செய்யவில்லை. நன்றாக படிப்பான் பள்ளிக்கூடத்தில் 301 மார்க் எடுத்திருக்கிறான். இவன் படிப்பை அடையாளமாக வைத்து தான் ஆனைகுளம் அரசு பள்ளியில் எங்கள் ஊர் மாணவர்கள் அடையாளப்படுத்தப்பட்டார்கள். மற்ற மூன்று பிள்ளைகளும் சிறுவர்கள் படிக்கிறார்கள். காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் பொழுது சார்பு ஆய்வாளர்  வழிவிட்டான் எழுதினார். கொலை செய்தவர்களுடைய பெயரை நாங்கள் சொல்லியும் எழுதாமல் முதல் தகவல் அறிக்கையில் அடையாளம் தொpயாத பத்து மர்ம நபர்கள் என்று எழுதிக் கொண்டார். மறவர் சாதி என்பதால் குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் செயல்படுகிறார். நாங்கள் சொன்னதில் நான்கு பேரை போலீஸ் கைது செய்துள்ளது. ஒருவர் தலைமறைவாக இருக்கிறார்”.

                பள்ளபச்சேரி இருளப்பன் கூறும் பொழுது எங்கள் ஊருக்கு தனி ரோடு கேட்டு பல வருடங்களாக மனுக் கொடுத்திருக்கிறோம். அரசு அதிகாரிகள் செயல்படுத்த மறுக்கிறார்கள். இதனால் மறவர்கள் இடத்திற்கு நாங்கள் செல்லுகின்ற கட்டாயம் இருப்பதால் தான் இவ்வளவு பிரச்சனைகள் வருகிறது. நாங்கள் அச்சத்திலேயே வாழ்ந்து வருகிறோம். எங்கள் ஊரில் சமுதாய ரீதியாகவே ஜான்பாண்டியன் வந்தார். எங்களுக்கு ஆறுதல் சொல்ல வந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினரை போலீசார் மிரட்டி திருப்பி அனுப்பிவிட்டனர். பரமக்குடி துப்பாக்கிச் சூடு நடந்தவுடன் அ.தி.மு.க.வில் உள்ள மறவர்கள் நாங்கள் நினைத்ததை முடித்துக் கொடுத்த தாயே என ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்”.

அரசு அதிகாரிகளிடம் மேற்கொண்ட விசாரணை

பரமக்குடி துப்பாக்கி சூடுகுறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தமிழக முதல்வா் ஜெயலலிதா அவா்கள் சட்டமன்றத்தில் பதிவு செய்துள்ளார்.காவல் துறையினா் தாங்களே பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகள் மூலம் சம்மபவத்தை குறிப்பிட்டுள்ளனா்.

பரமக்குடி தாசில்தார் சிவக்குமார் மாவட்ட ஆட்சியா் அனுமதியின்றி சம்பவத்தில் எதுவும் சொல்ல முடியாது என்று கூறி முடித்துக்கொண்டார்.பரமக்குடி ஆய்வாளா் சிவக்குமார் தனது புகாரில் தாசில்தாரிடம் எழுத்துபூர்வமாக உத்திரவு பெற்று துப்பாக்கி சூடு நடத்தினோம் என்கிறார். அதற்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டதற்கு எதுவாக இருந்தாலும் கலெக்டரிடம் பேசிவிட்டு உங்களை போனில் தொடர்பு கொள்கிறேன் என்றுசொன்னார். ஆனால் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை.

பரமக்குடி காவல் ஆய்வாளார் சிவக்குமாரை சந்திக்க முயன்ற போது அவர் வெளிப் பணிக்கு சென்று விட்டதாக சொன்னார்கள். அதன்பின் அவருடைய செல் எண் 8056697999 –ல் தொடர்பு கொண்ட போது வேறு ஒருவர் எடுத்து மீட்டிங்கில் இருப்பதாகவும் நான் தகவல் சொல்லி விடுகிறேன்.உங்களோடு பேசுவார் என்றார்.ஆய்வாளர் சிவக்குமார் தொடர்பு கொள்ளவில்லை.

பரமக்குடி டி.எஸ்.பி.கணேசன் அவர்களை சந்திக்க முயன்ற போது அவர் மாமல்லபுரத்திற்கு மாறுதல் ஆகிவிட்டதாக பரமக்குடி போலீசார் தொரிவித்தனர்.

இளையான்குடி தாசில்தார் மணி அவர்களிடம் விசாரித்தபோது, “இளையான் குடி புறவழிச்சாலையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என போலீசார் கூறுகிறார்கள்.ஆனால் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கிராம நிர்வாக அலுவலர் அறிக்கை கொடுத்துள்ளார்.சம்பவத்தில் ஆனந்த் என்ற மாணவன் காயம்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதன் அடிப்படையில் அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளேன்.”

நிழற்படங்கள்

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

_________________________________________________________________________________________

மேற்படி சாட்சிகளின் விசாரணை மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் உண்மை அறியும் குழு கண்டறிந்தவற்றை முடிவுகளாக தருகிறோம்.

1.            தேவர் குருபூஜைக்கு இணையாக தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் தியாகி இமானுவேல சேகரன் குருபூஜை விழா நடத்தக்கூடாது, இமானுவேல் சேகரன் குருபூஜை விழா அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில் திட்டமிடப்பட்டு ஆப்பநாடு மறவர் சங்கம், சசிகலா நடராஜன் உள்ளிட்டோர் சேர்ந்து ஜெயலலிதா அரசின் ஆதரவுடன் தேவர் சாதியினரை திருப்திபடுத்த சாதி வெறி கொண்ட போலீசை ஏவிவிட்டு பரமக்குடியில் ஆறு தலித் மக்களை சுட்டுப் படுகொலை செய்திருக்கிறார்கள் என்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் உள்ளது. இவ்வாண்டு இமானுவேல் சேகரன் குருபூசையை தடுத்து நிறுத்தவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

2.            செப்டம்பா 11 அன்று பரமக்குடியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து சட்டப் பேரவையில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா மண்டல மாணிக்கத்தில் தெய்வத்திருமகன் முத்துராமலிங்கத் தேவரை கொச்சைப் படுத்தும்விதமாக சுவரில் எழுதப்பட்டிருந்தது. இதுவே பரமக்குடி சம்பவத்திற்கு மூலக்காரணம் என கூறிப்பிட்டார். ஆனால் நாங்கள் நேரடியாக சென்று விசாரித்ததின் அடிப்படையில் பள்ளப்பச்சேரி கிராம பள்ளர் சாதி மக்கள் பல ஆண்டுகளாக அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். மறவர்களை எதிர்த்து அப்பகுதியில் வாழ முடியாது என்ற நிலையில் பள்ளர் சாதி மக்கள் செல்ல முடியாத இடத்தில் அதிலும் கொல்லப்பட்ட பள்ளி சிறுவன் பழனிகுமார் கூட்டுறவு சங்க சுவரில் எழுதும் உயரம் கூட இல்லாத நிலையில். மறவர் சாதியினரே தேவர் வாழ்க என்பதற்கு கீழே ஒன்பது என எழுதிவிட்டு பொய்யாக போலீசில் புகார் கொடுத்து இரவில் கொலையும் செய்துள்ளனர்.

3.            மண்டல மாணிக்கம் பள்ளபச்சேரி பழனிக்குமாரை கொடூரமாக கொலை செய்தது, குருபூஜை தினத்தன்று ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டது, குருபூஜை விழாவிற்கு சென்னை மாநகர அடையாறு துணை ஆணையர் செந்தில்வேலன் கொண்டு வரப்பட்டது, கற்கள், கைத்துப்பாக்கிகள், உருட்டுக் கட்டைகள் இவை எல்லாம் முன் கூட்டியே தயாரித்து சம்பவ இடத்தில் கொண்டு வரப்பட்டது, ஆரம்பத்தில் 50 பேராக பேராட்டத்தில் ஈடுபட்டவர்களை எளிதாக அப்புறப்படுத்தும் நிலையில் இருந்த காவல்துறை அப்புறப்படுத்தாமல் இருந்தது, அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு பரமக்குடி நகரைத் தாண்டி சென்றவுடன் ஜான் பாண்டியனை கைது செய்தது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஜான்பாண்டியன் கட்சியைச் சேர்ந்தோர்  பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று கூப்பிட்டு அதில் பேச்சுவார்த்தைக்காக எழுந்த ஒருவரை தள்ளிவிட்டு திடீரென தடியடியைத் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக துப்பாக்கியால் சுட்டது, இவற்றை எல்லாம் நியாயப்படுத்தி சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியது, இன்றுவரை அ.தி.மு.க. அரசாங்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்டவர்களை யாரும் சந்திக்காதது, 144 தடை உத்தரவு நீக்கப்படாமல் இருப்பது, பொய் வழக்குகள் 2000 பேர் மீது போட்டிருப்பது, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது, ஆகியவை பரமக்குடி சம்பவம் திட்டமிட்டு அரசாங்க ஆதரவுடன் போலீஸ் தாழ்த்தபட்ட மக்கள் மீது நடத்திய படுகொலை என்பதை உறுதி செய்கிறது.

4.            பரமக்குடி பேருந்து நிலையத்தின் அருகில் தமிழ்நாடு அரசு எஸ்ஸி./எஸ்.டி போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட குருபூஜை பேனரில் தெய்வத்திருமகன் இமானுவேல் சேகரன் என்று குறிப்பிட்டுள்ளதை தேவர் சாதியைச் சேர்ந்தோர், காவல்நிலையத்திலும் புகார் மனு அளிக்கிறார்கள். போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மூலம் நீக்கக் கோருகிறார்கள். போக்குவரத்து அதிகாரிமுன்பு நடந்த பேச்சுவார்த்தையின் போது பேனரை வைத்துக் கொள்ளட்டும். ஆனால் விழா நடக்காது என்று மேல் இடத்தில் உள்ளவர்கள் சொன்னதாக சில அதிகாரிகள் குறிப்பிட்டது. குருபூஜைக்கு இருதினங்களுக்கு முன்பு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பூசப்பட்டிருந்த கான்கிரீட்டில் தேவர் பேரவை என்று எழுதப்பட்டு அதில் மலம் கழித்து வைக்கப்படுகிறது. ஆகிய சம்பவங்கள் குருபூஜை விழாவின் போது பிரச்சனையை உருவாக்குவது ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்பதை நிரூபிக்கிறது.

5.            தமிழகத்தில் ஜெயலலிதா அரசுக்கு எதிராக யாரேனும் போராட்டம் செய்தால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கு முன் உதாரணமாக இச்சம்பவம் ஜெயலலிதா அரசு மற்றும் காவல்துறையால் நிகழ்த்தி காட்டப்பட்டுள்ளது. இனிவரும் ஐந்தாண்டு கால ஜெயலலிதா ஆட்சி எப்படி நடக்கும் என்பதற்கு சாட்சியாக இச்சம்பவம் விளங்குகிறது. பரமக்குடி சம்பவம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது என்பதுடன் ஒட்டுமொத்த மக்களுக்கும் அரசு விடுத்திருக்கும் எச்சரிக்கை.. தமிழகத்தில் போலீஸ் ஆட்சி துவங்கிவிட்டது என்பதை இச்சம்பவம் அப்பட்டமாக எடுத்துரைக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது அரசு பயங்கரவாதமே.

6.            பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை தவிர்ப்பதற்கான வாய்ப்பிருந்து அதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பாளர் வருவாய் கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு  வரவில்லை. துப்பாக்கி சூட்டிற்கு முன்பான சட்ட நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. ஆனால் கடைபிடித்தது போல் பரமக்குடி ஆய்வாளர் சிவக்குமார் குறிப்பிட்டிருப்பது பொய்யானது. அதே போல் இளையான்குடியிலும், மதுரையிலும் திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு அரசு ஆதரவும் காவல்துறையில் உள்ள ஆதிக்க சாதிவெறியும் காரணமாக அமைந்துள்ளது.

7.            ஜான்பாண்டியனை கைது செய்யாமல் இமானுவேல் சேகரன் குருபூசைக்கு செல்ல அனுமதித்திருந்தால் துப்பாக்கிச்சூடு படுகொலை நடந்திருக்காது.

8.            அரசியல் சட்டத்தில் மக்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறி மனித உரிமைகளை மறுத்து காட்டுமிராண்டித்தனமாக தடியடி துப்பாக்கிசூடு நடத்தி படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல்,  டி.சி.செந்தில்வேலன், டி.எஸ்.பி.கணேசன், ஆய்வாளா  சிவக்குமார் மற்றும் ஆயுத படை துணை ஆய்வாளர் கந்த முனியசாமி ஆகியோர் முக்கிய குற்றவாளிகள்.

பரிந்துரைகள்:

1.            பரமக்குடி துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் கொலை சம்பவத்திற்கு காரணமான டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல்,  டி.சி.செந்தில்வேலன், டி.எஸ்.பி.கணேசன், ஆய்வாளா  சிவக்குமார் மற்றும் ஆயுத படை துணை ஆய்வாளர் கந்த முனியசாமி மற்றும் இதர போலீசார் மீது தமிழக அரசு கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்து விசாரணை நடைபெறும் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

2.            இராமநாதபுரம் மாவட்டத்தில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை ரத்து செய்து, கிராமங்களில் போலீஸ் ரெய்டு செய்வதை கைவிட வேண்டும். செப்டம்பா 11 அன்று 2000 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை அரசு திரும்ப பெற வேண்டும். யாரையும் கைது செய்யக்கூடாது.

3.            சம்பவத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூபாய் பத்து லட்சம் இழப்பீடும், காயம்பட்டவர்களுக்கு ஐந்து இலட்சம் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும். பரமக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தில் அவர்களது வாரிசுகளில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

4.    மண்டல மாணிக்கம் சிறுவன் பழனிக்குமார் கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். பள்ளவச்சேரி பகுதி நிலமையை நேர்மையான மாவட்ட ஆட்சியர் மூலம் ஆய்வு செய்து தலித் மக்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5.    தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தலித் மக்கள் மீதான காவல் துறையின் அடக்குமுறையை இனக்கலவரம் என்பதாக தவறாக சித்தரிப்பதுடன் அதற்கு ஆதரவாக போலீசாரின் துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தி செயல் பட்டு வருகிறார்.இதனால் பரமக்குடி துப்பாக்கி சூட்டில் அரசாங்கத்தின் பங்கு குறித்து விசாரிக்க பணியில் உள்ள நேர்மையான உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

 வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

அம்மா!!!!!!!!! தேம்பித் ததும்பும் கேப்டனும் ‘காம்ரேடு’களும்!

36

ஜயகாந்த்-கம்யூனிஸ்டு

ழை பெய்ததும் உழுது, நாற்று நட்டு, களை பறித்து, நீர் பாய்ச்சி, பின் அறுவடை செய்யும் விவசாயிகளோடு ஒப்பிடும் போது ஓட்டுக் கட்சிகளின் தேர்தல் வெற்றிகளை என்னவென்று சொல்வது?

ஐந்தாண்டுகள் கொட நாட்டில் படுத்துக் கொண்டே எழுதிக் கொடுக்கப்படும் அறிக்கைகளை வெளியிட்டு, இறுதி ஆண்டில் ஈர்த்து வரப்படும் கூட்டத்தை வைத்து ஹெலிகாப்டரில் பறந்து ஆர்ப்பாட்டம் செய்த ‘புரட்சித் தலைவி’ தி.மு.க அரசாங்கம் மீது மக்கள் கொண்ட வெறுப்பினால் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று கரையொதுங்கினார்.

அது உழைத்துப் பெற்ற வெற்றியல்ல, உட்கார்ந்து பிடித்த வெற்றி என்றாலும் அம்மாவின் ஆணவத்தை தேர்தலுக்கு முன்பேயே நாம் மட்டுமல்ல அம்மாவின் நிழலை வணங்கி கரையேறிய கூட்டணிக் கட்சிகளும் உணர்ந்திருந்தார்கள். பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த போதே வேட்பார்களை வெளியிட்டதாக இருக்கட்டும், பிரச்சாரத்தில் அவர்களை வேண்டாத விருந்தாளியாக பந்தாடியதாக இருக்கட்டும் எதுவும் மறக்கக் கூடிய ஒன்றல்ல.

ஆனாலும் தி.மு.க எதிர்ப்பு மனநிலையில் குவிந்திருந்த தமிழக மக்களின் மனநிலையை அம்மாவின் சேட்டைகள் சிதறடித்துவிடும் என்று அவரது அந்தப்புரத்து சாணக்கிய குருக்கள் கொஞ்சம் ஓதியதன் பலனாக அம்மா கொஞ்சம் இறங்கி வந்தார். அப்போதும் கூட ‘கேப்டன்’ விஜயகாந்தும், காம்ரேடுகளான போலிக் கம்யூனிஸ்டுகளும் சுயமரியாதை இன்றி அம்மாவின் அருளைப்பெற அலைந்த கதையும் நமக்கு மறந்திருக்காது.

தேர்தல் முடிவு வந்ததும் கையில் திணிக்கப்பட்ட அந்த வெற்றி தனது கடந்த கால ஆட்சியின் மகத்துவத்தை நினைத்து மக்கள் பயபக்தியுடன் அளித்த வெற்றி என்று ஜெயா பேசினார். “எனது அரசு, எனது திட்டம், எனது தொலை நோக்கு,” என்று எதற்கெடுத்தாலும் அந்த ட்ரிபிள் எக்ஸ்எல் அகந்தை அவ்வப்போது ஆட்டம் போட்டாலும் பார்ப்பன ஊடகங்கள் எதுவும் அதை கண்டு கொள்ளாததோடு ஏதாவது கோரிக்கை இருந்தால் பணிவோடு முன்வைத்து அம்மா பார்த்து ஏதாவது செய்தால் சரி என்று எழுதி வந்தனர். இந்த பக்தி பஜனை மண்டலியில் தினமணி வைத்தியநாதன் முதல் ஆளாய் இருந்தார்.

அம்மாவோடு கூட்டணி வைத்து அடிமைத்தனத்தோடு பணியாற்றியதன் பலனாக தே.மு.தி.கவிற்கு எதிர்க்கட்சி தகுதியும், காம்ரேடுகளுக்கு சில சீட்டுகளும் கிடைத்தன. பிறகு சட்டமன்றத்தில் அவர்களும் அம்மா சரணம் பாடியே காலத்தை ஓட்டினார்கள். சமச்சீர்கல்வி ரத்து என்று வந்த சட்டத்திற்கு போலிக்கம்யூனிஸ்டுகள் முதல் ஆளாய் ஆதரித்து ஓட்டுப் போட்டார்கள். கேப்டனின்அடிமை எம்.எல்.ஏக்களோ கருணாநிதியை பழித்து அடுக்கு மொழியில் பேசி அம்மாவை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தார்கள்.

ஆனாலும் அம்மா தே.மு.தி.க சில்லறைகளை மதிக்கவில்லை என்பதோடு அவ்வப்போது கலாய்க்கவும் செய்தார். சட்டமன்ற அனுபவம் இல்லாத அந்த கத்துக்குட்டிகள், மேட்டூரில் அணை இருக்கிறது, திருத்தணியில் முருகன் கோவில் இருக்கிறது என்ற வரலாற்று உண்மைகளை பேசி கொல்கிறார்கள் என்று அம்மா அவர்களை எச்சரிக்கவே செய்தார். இவையெல்லாம்  கேப்டன் முன்னிலையில் நடந்திருந்தாலும் பதிலுக்கு திருப்பி சுடுவதற்கு அவரென்ன இராணவத்தில் இருக்கும் கேப்டனா என்ன? ஆர்.கே.செல்வமணி அளித்த அந்த கேப்டன் பதவியையும், வெத்துத் துப்பாக்கியையும் வைத்து மன்சூர் அலிகானை வேண்டுமானால் சுடலாம், அம்மாவை முடியுமா என்ன?

தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் புரட்சித் தலைவி மேயர், நகராட்சி என்று எல்லா பதவிகளுக்கான அ.தி.மு.க அடிமைகள் பட்டியலை அறிவித்து விட்டார். கூட்டணிக் கட்சி என்று பரிதாபத்துடன் கூறிக்கொள்ளும் சில அய்யோ பாவம் அடிமைகள் இருக்கிறார்கள் என்பதெல்லாம் அம்மாவின் அதிரடிக்கு முன் கால்தூசு.

ஆனாலும் காம்ரேடுகள் விடவில்லை. விடாது போயஸ் தோட்டத்திற்கு காவடி எடுத்தார்கள். ராமகிருஷ்ணனும், தா.பாண்டியனும் (நல்லகண்ணுவிற்கு என்னாச்சு?) வந்தார்கள்; பேசினார்கள்; அம்மா வெளியிட்ட பட்டியல் இறுதியல்ல என்றார்கள். இப்படி என்னவெல்லாம் சமாதானமடைய முடியுமோ அப்படி எல்லாம் பேசினார்கள். ஆனாலும் அவர்களுக்கு மேயர் இல்லை, ஏற்கனவே இருந்த நகராட்சி இடங்களும் இல்லை என்று முதல்கட்ட ‘பேச்சுவார்த்தை’கள் தெரிவிக்கின்றன.

ஆயினும் காம்ரேடுகள் இத்தகைய போயஸ்தோட்டத்து அடிமைத்தனத்தில் கொட்டை போட்டவர்கள் என்பதால் ஏதோ சில எலும்புத்துண்டுகள் கிடைக்காமல் போகாது. ஆனால் கேப்டன் நிலையோ இன்னும் பரிதாபம். 29 நபர்களை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவி இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. தேர்தலுக்கு முன்பு நடந்தது போன்று இப்போதும் அம்மா இறங்கி வரமாட்டார் என்று கேப்டன் வீட்டு நாய்குட்டிக்கு கூடத் தெரியும்.

அப்போதாவது தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது. இப்போது அசுர பெரும்பான்மையில் ஆட்சியை அதிகாரத்துடன் நடத்தும் அம்மாவிடம் ஏதாவது கோரிக்கை வைக்க நினைத்தாலும் அது தொண்டைக்குழியை தாண்டி வருவது கடினம். மேலாக தி.மு.க பெருந்தலைகளே அம்மாவின் ருத்ர தாண்டவத்தை கண்டு கதிகலங்கிய நிலையில் கத்துக்கட்சி கேப்டன் கட்சியினர் என்ன செய்து விட முடியும்?

பத்து மேயர் பதவிகளில் நான்கிலிருந்து இரண்டு வரை, உள்ளாட்சி பதவிகளில் முப்பது சதவீதம் என்று பெருந்தன்மையுடன் மனக்கோட்டை கட்டிய கேப்டன் தற்போது என்ன செய்வது என்று திண்டாடி வருகிறார். அம்மாவின் நூறு நாள் ஆட்சி விழா பஜனை மண்டலிக்கு அவர் போகவில்லை என்பதுதான் பு.த வின் கோபத்திற்கு காரணம் என்று கேப்டனது பாடிகார்டுகளே பேசிவருகிறார்கள்.

அதன்படி கேப்டன் தனியாக தேர்தலில் நிற்பதை அவரது கட்சியினர் யாரும் விரும்பவில்லை. அவர்கள் விரும்பவில்லை என்பதற்காக அம்மாவும் அருள்பாலிக்க தயாரில்லை. சில பல எலும்புத் துண்டுகளை கவ்விக்கொண்டு ஓடிவிட வேண்டும் என்பதுதான் அவரது நிலை. காம்ரேடுகளை முதலில் அழைத்து பேசியது போல பெரிய கூட்டணிக் கட்சியான தே.மு.தி.கவை இன்னும் பேசுவதற்கே அழைக்கவில்லை என்பது வேறு கேப்டனது படை வீரர்களை கதிகலங்க வைத்திருக்கிறது. இதெல்லாம் வைகோ அண்ணனின் வசந்த மாளிகை புலம்பலில் ஏற்கனவே நாம் பார்த்து விட்டோம்.

அரசியல் வெற்றி என்பது கட்சிகள் தமது சொந்த முயற்சியில் மக்களைத் திரட்டி பெறும் போராட்டம் என்பது இல்லாமல் சில வரலாற்று விபத்துக்களால் கிடைத்தால் என்ன நடக்கும்? போயஸ் தோட்டத்தின் உச்சாணிக் கொம்பில் இருந்து கொண்டு அம்மா போடும் ஆட்டமும், அந்த ஆட்டத்தில் சில எலும்புகளாவது தவறி கீழே விழும் என்று கூட்டணி அடிமைகள் தவமிருப்பதும் மேற்கண்ட விபத்து வெற்றியின் தொடர் விளைவுகள்.

இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்ற அநாமதேயங்கள் கேப்டன் கட்சிக்கு 51 சதவீத சீட்டு ஒதுக்கீடு தருவோம் என்றெல்லாம் பேசிக் கொல்லுகிறார்கள். இந்தச்சூழலில் லெப்டிணன்ட்டுகளின் கூட்டத்தை கூட்டிய கேப்டன் “எல்லாவற்றும் தயாராக இருக்குமாறு” பேசியிருக்கிறார். முக்கியமாக இந்த சொந்தக்கதை, சோகக்கதையெல்லாம் மீடியாவில் வெளியாகிவிடுவதாகவும், இந்த முறை அப்படி வெளியானால் இனி இந்த கூட்டத்தை கூட்டவே மாட்டேன் என்றெல்லாம் எச்சரித்திருக்கிறார்.

தனது சொந்த சோகத்தைக் கூட வெளியுலகிற்கு தெரிவிக்காமல் குமுறி குமுறி அழவேண்டிய இந்தக் காட்சி எதை நினைவுபடுத்துகிறது?

எங்கேயும் எப்போதும்: ஆபத்தான அழுகை!

41
எங்கேயும் எப்போதும் : ஆபத்தான அழுகை !

எங்கேயும் எப்போதும் : ஆபத்தான அழுகை !

போராடுவதற்கு போக்கற்று அரற்றுவதையே விதியாகக் கொண்ட நாடு இது. அழுவதற்கென்றே கதைகளை உருவாக்கிய மண்ணிது. நல்லதங்காளோ, அரிச்சந்திரனது மயான காண்டமோ, பாசமலரோ, பாவமன்னிப்போ எல்லாம் கிராமத்து திடலிலோ இல்லை மண் தரையுள்ள டூரிங் டாக்கிசிலோ முடிந்து போன விசயங்கள் என்று நினைத்திருந்தால் உங்கள் முடிவுகளை கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள்! எஸ்க்கலேட்டர் வசதி கொண்ட மல்டிபிளக்ஸ் அரங்குகளில் கூட அந்த கண்ணீர்க் கதைகள் தொடருகின்றன என்றால் ஆச்சரியமாயிருக்கிறதா?

சிறுவயதில் கேட்ட ஆகாசவாணியின் பிரச்சாரக் கதைகளும், பிலிம்ஸ் டிவிஷனின் 20 அம்சத்திட்டக் கதைகளும் தரும் ஆயாசத்தை இந்த படமும் தருகிறது. பிலிம்ஸ் டவிஷன் படம் போட்ட பிறகு “யோவ் ஆப்பரேட்டர் படத்த போடுய்யா” என்று வரும் கூச்சல்கள் ஒரு கனவு போல இன்றும் நினைவிருக்கிறது. ஆனால் இரசிகர்களால் ஏகமனதாக புறக்கணிக்கப்பட்ட அதே பிலிம்ஸ் டவிஷன் உணர்ச்சியை இன்றும் ரசிக்கப்படுகிறது என்ற உண்மை கொஞ்சம் அலுப்பாகவும் இருக்கிறது. காலம் மாறினாலும் நம் மக்களது இரசனை இன்னும் மாறவில்லையே?

திரைப்பட விமரிசனம் எழுதும்போது முதலிலேயே, முன்னுரையிலேயே  அதன் சாரத்தை, ஒன்லைனை சொல்லுவது வழக்கமில்லை. சொல்லிவிட்டால் ஆர்வமாக வருபவர்களது வேகம் பட்டென தணிந்து ஸ்க்ரோல் செய்து போய் விடுவார்கள். ஆனாலும் அடக்கமாட்டாமல் இங்கே முதலிலேயே அதை சொல்ல வைத்திருப்பது நம் குற்றமல்ல, படத்தின் குற்றம்.

இந்தப் படத்தில் இரண்டு விசயங்களிருக்கின்றன. ஒன்று கொடூரமான விபத்து, மற்றொன்று இனிமையான காதல். இனிமையான காதலில் இரண்டு காதல் கதைகள் இருக்கின்றன. ஒன்று பி சென்டருக்கான சிறு நகரத்து காதல். மற்றொன்று ஏ சென்டருக்கான ஐ.டி துறை காதல். அதே நேரம் பி சென்டரின் காதல் முற்றிலும் பி சென்டருக்குரியதல்ல. அது ஏ சென்டரை நோக்கி மாறும் விசயங்களுடன் வருகிறது. அதாவது ஏ சென்டருக்கான அழகியல் மதிப்பீடுகளுடன்.

இலக்கணத்தில் இரண்டு எதிர்மறைகள் சேர்ந்து ஒரு உடன்பாட்டுப் பொருளாவது போல இங்கே காதலும், விபத்தும் சேர்ந்து உங்களிடமிருந்து கட்டற்ற கண்ணீரை வரவழைக்கிறது. நேரில் பார்க்கும் விபத்தென்றால் நாம் நிச்சயம் வருந்துவோம் என்றாலும் அதில் நமக்குத் தெரிந்த காதல் ஜோடிகள், அதுவும் அவர்களது காவியமான காதல் கதைகளின் நினைவுகளோடு வருமென்றால் நாம் யாரும் கோராமலேயே கதறி அழுவோம்.

நாளிதழ்களில் மற்றுமொரு செய்தியாக மறையும் ஒரு விபத்து போன்றுதான் இது இருக்க வேண்டுமென்று சொல்லவில்லை. ஆனால் ஒரு விபத்தை பார்த்து நாம் அழவேண்டுமென்று நினைக்கும் இயக்குநர் அந்த உடனடி விளைவைத் தாண்டி விபத்தின் சமூகப் பரிமாணத்தை அறிந்தவராகவோ, இல்லை அது குறித்து கவலைப்பட்டவராகவோ இந்தக் கதையில் தென்படவில்லை.

ஒரு மாபெரும் வரலாற்று சம்பவத்தையோ இல்லை ஒரு மனதை வலிக்கச் செய்யும் பெரிய விபத்தோ இரண்டையும் ஒரு சில தனிநபர்களது செயலாக மட்டும் பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. தலைக்கேற்ற தொப்பியைத்தான் தேட வேண்டுமே ஒழிய தொப்பிக்காக தலையை வெட்டினால் முண்டத்திற்கான சவப்பெட்டிதான் தேவைப்படும், தொப்பி அல்ல. விபத்து குறித்த இந்தப்படத்தில் இத்தகைய விபத்து தெரிந்தே நடந்திருக்கிறது. அது இயக்குநரின் கருத்தால் விளைந்த விபத்து.

____________________________________________________________________________

இந்தத் திரைப்படம் குறித்து விமரிசனம் எழுதியிருக்கும் பதிவர்கள் பலருக்கும் கூட அந்த விபத்து நடந்திருக்கிறது. சாலை விதிகளை மதிப்போம், ஓட்டும் போது செல்பேசியில் பேசாதிருப்போம், மது அருந்தாமல் ஓட்டுவோம், கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிவோம், ஓட்டுநர்களுக்கு இந்தப் படத்தை விசேடமாக திரையிட்டு காட்ட வேண்டும் என்பதாய் அவை குவிகின்றன. இவையெதுவும் தவறல்ல. ஆனால் உடன் தெரியும் இந்தத் தவறுகளின் பின்னே நிறுவனமயமான தவறுகள் பல அடிப்படையாக இருக்கின்றன. அவையெல்லாம் சம்பந்தப்பட்ட வாகனத்தை ஓட்டும் தொழிலாளர்களது தவறுகளல்ல.

வாகனத்தை ஓட்டும் அனைவரும் பொதுவில் எச்சரிக்கையாகத்தான் இருக்கிறார்கள். அவர்களது எச்சரிக்கையின் அளவை தீர்மானிப்பது பணிச்சூழல், குடும்பச் சூழல் குறித்த பிரச்சினைகள். பேருந்து ஓட்டுநர்களும், லாரி ஓட்டுநர்களும் எச்சரிக்கையாக இருப்பதால்தான் தமிழகத்தில் இலட்சக்கணக்கான வாகனங்கள் இருந்தும் இலட்சக்கணக்கான விபத்துக்கள் நடப்பதில்லை. நடக்கும் ஒரு சிலவற்றுக்கு கண நேர, திட்டமிடாத, எதிர்பாராத செயல்கள் காரணமென்றாலும் ஒரு ஓட்டுநரின் எச்சரிக்கை அளவு ஏன் மீறப்பட்டது என்பது குறித்து நாம் தெரிந்திருக்க வேண்டும். இல்லையேல் இந்தப்படத்தின் விளைவாய் வரும் மொக்கை மனிதாபிமானத்தில் சரணடைந்து உண்மையை தொலைத்துவிடுவோம்.

படத்தில் சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்லும் ஆம்னி பேருந்தும், திருச்சியிலிருந்து சென்னை செல்லும் அரசு விரைவுப் பேருந்தும் மோதிக் கொள்கின்றன. இவை ஏன் மோதிக்கொண்டன, யார் காரணம் என்பது குறித்து படத்தில் தெளவில்லை என்றாலும் அது தேவையுமில்லை. ஆனால் என்னவெல்லாம் காரணமாக இருந்திருக்க வேண்டும் என்பது குறித்து இந்தத் திரைக்கதை சுட்டியிருக்க வேண்டும். அதை விடுத்து கோரக் காட்சிகளை வைத்து விபத்து குறித்து ஒரு பய உணர்வை மட்டும் இந்தப்படம் ஏற்படுத்துகிறது.

அரசுப் பேருந்துகள் போதுமான பராமரிப்பில் இல்லை. தனியார் பேருந்துகளை ஊக்குவிக்கும் தனியார்மயக் கொள்கை காரணமாக வேண்டுமென்றே திட்டமிட்ட முறையில் அவை நலிந்துப் போக விடப்படுகின்றன. இரவு பத்து மணிக்கு கோயம்பேடு சென்றால் வெளியூர் செல்லும் விரைவுப் பேருந்துகளை நிறுத்துவதற்கே வழியில்லாமல் நேரக் கண்காணிப்பாளரும், ஓட்டுநர்-நடத்துநர்களும் திண்டாடுவதை பார்க்கலாம். அல்ட்ரா டீலக்ஸ், டீலக்ஸ் என்று பெயர்களை தாங்கியிருக்கும் பேருந்துகள் அந்த பெயர்களுக்குரிய வசதிகள் இல்லாமல் இருப்பதும், அது குறித்து கேட்கும் மக்களிடம் நடத்துநர்கள் பேசி அலுத்துப் போவதும் அன்றாடம் நடக்கும் காட்சிகள்.

பேருந்துகளின் வெளிப்புற கன்டிஷன்களே இப்படி இருக்கும் போது அதன் உள்கட்டுமான கன்டிஷன்கள் எப்படி இருக்குமென்று யூகித்துக் கொள்ளலாம். பன்னாட்டு நிறுவனங்களுக்கு ராஜபாட்டை போட்டுக் கொடுக்கும் அரசு ஒரு விரைவுப் பேருந்து நிறுவனத்தை நல்லமுறையில் நடத்துவது முடியாத ஒன்றா என்ன?

அரசால் திட்டமிட்டே உருவாக்கப்படும் இந்தச் சூழலை தனியார் பேருந்து முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். வேறு வழியின்றி நடுத்தர வர்க்கமும் இங்கே அதிக கட்டணம் கொடுத்து பயணிக்கிறது. தனியார் பேருந்துகள் நல்ல முறையில் பராமரிக்கப்படுவது உண்மையென்றாலும் அதன் ஓட்டுநர்கள் கொத்தடிமை போல நடத்தப்படுகிறார்கள். அரசு ஓட்டுநர்களை விட மிகக் குறைந்த சம்பளம். மட்டுமல்ல, நிறுவனத்தின் பெயரை காப்பாற்றும் விதமாக குறிப்பிட்ட நேரத்தில், அதி வேகத்தில் பேருந்துகளை ஓட்டி சென்று இலக்கை அடைய வேண்டிய நிர்ப்பந்தம். அதன் கோரமுகத்தை கே.பி.என் விபத்தில் பார்த்திருக்கிறோம். இப்படி அனைவரும் அறிந்த விசயங்கள் என்றாலும் இந்தப் படம் எதனையும் கோடிட்டுக்கூட காட்டவில்லை. மாறாக படத்தில் இரு பேருந்துகள் ஓடுவதை பயமுறுத்தும் கோணங்களில், காட்சிகளில், இசையில் காட்டுகிறார்கள். கருத்து இல்லாத அந்தக் காட்சிகள் மூலம் விபத்து குறித்த ஒரு காரணமற்ற பயம் மட்டுமே தோன்ற முடியும்.

படத்தில் அரசுப் பேருந்து பஞ்சர் ஆவதும், அதன் ஓட்டுநர் அதிவேகமாக சாலையை விட்டிறங்கி ஓட்டுவதும் வருகிறது. அரசுப் பேருந்து என்றாலே மெதுவாக சென்று ஊரை தாமதமாக அடையும் என்பதுதான் மக்களின் குற்றச்சாட்டு. இங்கே ஊரறிந்த எதார்த்தத்தைக்கூட கதைக்காக சாகடித்திருக்கிறார் இயக்குநர். உண்மையில் பராமரிப்பில்லாத அரசுப் பேருந்து, பணிச்சுமையில் இருக்கும் தனியார் ஓட்டுநர்கள் என்பதைத் தாண்டி இந்த விபத்தில் வேறு எதைக்காட்டினாலும் அது பொருத்தமற்றது. ஆனால் இயக்குநர் அப்படி எதுவும் காட்டவில்லை.

ஃபைனல் டெஸ்டினேஷன் வரிசைப் படங்களில் என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் விபத்தும், மரணமும் நடக்கும் என்று மிரட்டுவார்கள். அது பாதுகாப்பாக வாழும் மேற்குல மக்களை வேறு எப்படியும் மிரட்ட முடியாது என்ற எதார்த்தத்தோடு அபத்தமாக சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆனால் எல்லா வகை அபாயங்களோடும் வாழும் நமது நாடுகளில் விபத்து என்பது சமூக வகைப்பட்டதாக, நிறுவன ரீதியாக இருக்கிறது. அதை வெறுமனே மொக்கை உபதேசங்களோடு கடந்துவிடலாம் என்பது இயக்குநரது துணிபு.

ஒருவேளை விபத்திற்காக காதல் கதை என்று அமைத்திருந்தால் அப்படி கொஞ்சம் ஏதாவது வந்திருக்கும். இங்கே காதலுக்காக விபத்து என்று போவதால் எதுவும் சொல்லிக்கொள்ளுமளவு வரவில்லை. அதனால்தான் ஆரம்பத்திலேயே விபத்து என்று காட்டியிருந்தாலும், படத்தின் முடிவை ரசிகர்கள் ஓரளவு ஊகிக்க முடியும் என்றிருந்தாலும் அது அவர்களது ரசனையை பாதிக்காது என்று இயக்குநர் நினைத்திருக்கிறார். அதில் அவர் சோடை போகவில்லை என்பதற்கு காரணம் இந்தப்படத்தை தூக்கி நிற்பது விபத்து போலத் தோன்றினாலும் அது நிற்பது உண்மையில் காதல் குறித்த சித்திரத்தில்தான். காதல் மயக்கத்தில் விபத்தின் வேர் மறைந்து போவது பார்வையாளர்கள் குறித்து இயக்குநருக்குள்ள மலிவான நம்பிக்கையைக் காட்டுகிறது.

அதிலும் ஒரு பேருந்தில் ஒரு இளம் ஜோடி, சமீபத்தில் திருமணமான ஜோடி வருகிறது. அதில் மணமகன் கொடூரமாக கொல்லப்படும் காட்சியை இடையில் காட்டி விட்டு பின்னர் பேருந்தில் அவர் மணமகளைக் கொஞ்சும் காட்சி ஒன்றே இயக்குநரது தரத்தை காட்டுகிறது. இது சென்டரல் ஸ்டேஷனில் கையை கீறி ரத்தத்தை வரவழைத்து உதவி கேட்கும் அதிரடி பிச்சைக்காரர்களின் ரசனைக்கொப்பானதாக இருக்கிறது. ஆனால் இந்த மலிவான உத்தியைக்கூட ஆழமான படிமமாக உணரும் நமது பதிவர்கள் இருக்கும் போது இயக்குநர் சரவணனை மட்டும் நாம் குற்றம் சொல்ல முடியுமா என்ன?

காதலையும், விபத்தையும் ‘பொருத்தமாக’ இணைத்து வெற்றியடைந்த படம் டைட்டானிக். டைட்டானிக்கில் கூட இறுதிக்காட்சிகளில் சாதாரண மக்களெல்லாம் உயிர் காக்கும் படகுகளில் ஏற முடியாமல் அலறும் காட்சிகள் ஒரு பின்னணியாக மட்டும் வரும். படத்தை பார்க்கும் இரசிக மனமோ காதலர்கள் எப்படியாவது பிழைக்க மாட்டார்களா என்று ஏங்கும். இங்கும் அதே கதைதான். அஞ்சலி – ஜெய், அனன்யா – சரவ் ஜோடிகளின் காதல் காட்சிகளில் மனதைப் பறிகொடுக்கும் இரசிகர்கள் இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்கள் என்ன ஆனார்கள், அவர்களது குடும்பத்தினர் எப்படி அதை எதிர்கொள்வார்கள் என்பதைப் பற்றி கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். இதற்கு வேண்டுமானால் இயக்குநர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

நாமெல்லாம் என்றாவது ஒரு நாள் பயணம் போகிறோம். ஆனால் ஓட்டுநர்களுக்கு அது அன்றாட பிழைப்பாக இருக்கிறது என்ற முறையில் கூட அவர்கள் நினைக்கப்படவில்லை. ஒரு வேளை அவர்கள்தான் இந்தப் படத்தின் வில்லன்கள் என்று இயக்குநர் கருதியிருப்பார் போலும். ஒருக்கால் இந்த இயக்குநர் நாளையே கூடங்குளம் அணுமின்நிலையத்தில் விபத்தையும் காதலையும் பிசைந்து ஒரு கதை செய்தால் வில்லனாக யாரை காட்டுவார்? ஒரு சுவிட்ச்சை போட மறந்த தொழிலாளிதான் அந்த வில்லன் என்பதில் மாற்றுக் கருத்து உண்டா என்ன?

_____________________________________________________________________________________

படத்தில் வரும் காதல் காட்சிகள் குறித்து சொல்வதற்கு நிறைய இருக்கிறது.

காதலன் ஜெய்யை அதிரடியாக மிரட்டி காதலிக்கும் அஞ்சலியை எடுத்துக் கொள்வோம். இதையெல்லாம்  “ஓடிப்போயிடலாமா” என பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னரேயே மணிரத்தினம் எடுத்துவிட்டாலும், இன்றும் அதை இரசிப்பதற்கு காரணம் என்ன?

ஆணுக்கு அடங்கியவள் பெண், அவனுக்குரிய பணிவிடைகள் செய்வது பெண் என்றாலும் அந்தக்கால ஆனந்த விகடனில் கணவன் துணி துவைப்பதும், சமையல் செய்வதும், மனைவி பூரிக்கட்டையால் கணவனை தாக்குவதான ஜோக்குகள் வரும். மனைவியின் பணிவிடைகளில் சோம்பிக் கிடக்கும் கணவன்கள் அதைப் படித்து சிரிப்பார்கள். அதுதான் இது. அரதப்பழைய விகடன் முதல் அதி நவீன தமிழ் டவிட்டர்- பஸ்ஸர்களின் டைம்லன் வரை இதுதான் ஓடுகிறது. ஒரு பொதுவான சமூக யதார்த்தத்தில் ஆண்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறான் என்றாலும் கதையில் அதற்கு நேரெதிராக வரும் போது தீர்மானிக்கும் அந்த ஆண் ரசிகர்கள் வாய்விட்டு சிரிக்கிறார்கள். இது சிரிப்பதற்குரிய ஒன்றாக இருப்பதினாலேயே நிஜத்தில் வாய்ப்பில்லாததாக ஒன்றாக இருக்கிறது. நிஜத்தை காட்டியிருக்கும் பட்சத்தில் அங்கே சிரிப்பதற்கு ஏதுமில்லை. இந்த முரண் உங்களுக்குப் புரிகிறதா?

மற்றுமொரு சான்றைப் பார்ப்போம். படத்தில் இரண்டு ஜோடிகளின் ‘கற்பை’யும், ஒழுக்கத்தையும் அழுத்திக் காட்டுவதற்கு சில காட்சிகள் வருகின்றன. நாயகன் ஜெய், நாயகி அணியும் ஆடையின் வண்ணத்தைப் பார்த்து அதே கலரில் தினமும் சட்டை அணிகிறார். அவரோடு பணி புரியும் தொழிலாளி இரண்டு கலர் சட்டைகளை மாற்றி மாற்றி அணிகிறார். காரணம் கேட்டால் அவர் இரண்டு தெருவில் இரண்டு பிகர்களை சைட் அடிக்கிறார்.

ஐ.டி துறை நாயகனான சரவ், பொறியியல் முடித்திருக்கும் அனன்யாவை விரும்புகிறார். இவர்கள் இருவரும் கம்பெனி பேருந்தில் பயணிக்கும் போது ஒரு பெண் சரவை இரண்டு ஆண்டுகள் துரத்திக் காதலித்ததாகவும், அவர் ஏற்கவில்லை எனவும், பிறகு ஒரு அப்பாவியை திருமணம் செய்திருப்பதாக தாலியை காட்டுகிறார். பேருந்தின் பின் சீட்டில் இருக்கும் ஒரு இளைஞன்தான் அந்த அப்பாவி என்று சொல்கிறார்.

நகரப் பேருந்தில் அனன்யாவின் அருகில் பயணிக்கும் ஒரு நகரத்துப் பெண் இரண்டு காதலர்களோடு பேசுகிறாள். மற்றவர் லைனில் வந்தால் அது அப்பா என்று இருவரிடமும் மாறி மாறி பேசுகிறாள். இந்த மூன்று காட்சிகளுக்கும் திரையரங்கில் கைதட்டல் தூள் கிளப்புகிறது. காதல் ஜோடிகளின் ஒழுக்கத்தையும், ‘கற்பையும்’ ஜாக்கி வைத்து தூக்குவதற்காக இந்தக்காட்சிகள் திட்டமிட்ட முறையில் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

தங்களையும் அந்த நாயகர்கள் போல கருதிக் கொள்ளும் இரசிகர்கள் இந்த காட்சிகளுக்கு சிரிப்பதன் காரணம், தன்னைத் தவிர மற்றவர்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள் என்று நினைப்பதால். ஆனால் எல்லோரும் தானென்று ஆனால் யார்தான் அந்த மற்றவர்கள்? ஆனால் நடப்பில் மற்றவர்கள்தான் பெரும்பான்மை எனும் போது அது இங்கே விமரிசனமாக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படி விமரிசனத்திற்குள்ளாக்கப் பட்டிருக்க வேண்டுமென்றால் அது படத்தின் மையமான பாத்திரங்களோடு இருக்க வேண்டும். ஆனால் அது துணைப் பாத்திரங்களோடு கேலிக்குரியதாக ஆக்கப்படும் போது சுயவிமரிசனம் மறுக்கப்பட்டு ஆழ்மனதில் புதையுண்டிருக்கும் கீழ்மைகள் வெறும் கேலிப்பொருளாய் பார்க்ப்படுகின்றன. இந்த முரணை அறிந்து கொள்ள முடிகிறதா?

படத்தில் அஞ்சலி அநியாயத்திற்கு பிரச்சாரம் செய்கிறார். சொல்லப் போனால் அஞ்சலியின் பாத்திரச் சித்தரிப்பு அண்ணா ஹாசாரே டைப் போலித்தனத்திற்கு பொருத்தமானதாகவும் இருக்கிறது. இறந்த பிறகு உடல் பாகங்களை தானம் செய்ய வேண்டும் என்று கையெழுத்து வாங்கும் அஞ்சலி இறுதிக் காட்சியில் அழுது கொண்டே காதலனது பாகங்களை தானமாக எடுக்க வேண்டுமென்று அரசு மருத்தவரிடம் கூறுவார். இப்படி தானமாகப் பெறப்படும் பாகங்கள் எவையும் ஏழைகளுக்காக பொருத்தப்படுவதில்லை. அவை அப்பல்லோவுக்கு சென்று பணக்காரர்களுக்கோ, வெளிநாட்டவருக்கோதான் பொருத்தப்படுகின்றன. இதற்காகவே உடல் தானம் குறித்த விழிப்புணர்வு வளரவேண்டும் என்று அப்பல்லோ முதலாளி ரெட்டி பேசியது குறித்து வினவில் முன்னர் எழுதிய பதிவு நினைவுக்கு வருகிறது.

இருக்கட்டும், இத்தகைய மனிதாபிமானியான அஞ்சலி தனது காதலனை வம்படியாக கூட்டிச் சென்று பணக்காரர்களது கடையில் 6000 ரூபாய்க்கு துணி எடுப்பதும், மேட்டுக்குடியினர் செல்லும் காபிஷாப்புகளுக்கு சென்று 160 ரூபாய்க்கு காபி குடிப்பதும், நாற்பது ரூபாயை டிப்ஸாக கொடுப்பதும், அதில் நாயகனது அறியாமையை கேலி செய்வதும் என்ன விதத்தில் பொருத்தம்? நியாயமாக தமிழ்நாட்டு காதலர்களுக்கு இந்த முதலாளித்துவ இடங்கள் தேவையில்லை என்ற விதத்தில் கேலி செய்யப்பட்டிருந்தால் நாம் பெருமைப்படலாம். ஆனால் இந்த நுகர்வுக் கலாச்சார வக்கிரங்களுக்கு நாம் அறிமுகமாகவில்லை என்று இயக்குநர் செல்லமாக கிள்ளிச் சொல்லுகிறார். அதோடு அஞ்சலியின் உடல்தானம் குறித்த பிரச்சாரம் சேரும் போது அண்ணா ஹசாரே நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் காதல் குறித்த பிளாஷ் ஃபேக் நினைவுகளில் காதலின் சமூக யதார்த்தமும், அதன் பிரச்சினைகளும் மருந்துக்குக் கூட வரவில்லை. அந்த வகையில் உண்மையான காதல் படங்கள் எதுவும் தமிழில் இப்போதைக்கு வராது என்றுதான் தோன்றுகிறது. காதல் தோன்றும் தருணங்களை விதம் விதமாக ஆனால் அரைத்த் மாவாக காட்டும் நமது இயக்குநர்கள் காதல் தோன்றியதும் அது நிறைவேற எத்தனிக்கும் போராட்டங்களை, சமரசங்களை, குழப்பங்களை கிஞ்சித்தும் அறிந்தவர்கள் அல்லர்.

______________________________________________________

இயக்குநர் சரவணன் இந்தக் கதையை கூறியதும் தயாரிப்பாளர் முருகதாஸ் ஆடிப்போய் விட்டாராம். சரிதான். அதனால்தான் ஹாலிவுட் நிறுவனமான முர்டோச்சின் பாக்ஸ் நிறுவனமும் இதில் கூட்டுத் தயாரிப்பாளராக இணைந்திருக்கிறது. டைட்டானிக் அளவு செலவில்லாமலேயே இரண்டு பேருந்துகளை மோத வைத்து தமிழகத்தை அள்ளிவிடலாம் என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும். இனி இந்த இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும்தான் தமிழ் சினிமாவின் எதிர்காலம் என்றால் நாம் மகிழ்வதற்கு ஏதுமில்லை.

திருமணம் செய்த இரசிகர்கள் இனி தினுசு தினுசாகக் காதலிக்க முடியாது என்பதால் விபத்தையும், திருமணம் செய்யாத இரசிகர்கள் விபத்தை ஒதுக்கி வைத்து காதலை மட்டும் நினைத்து திரையரங்கை விட்டு அகலுவார்கள். இதைத் தவிர இந்தப்படம் எதையும் ஏற்படுத்தாது. அப்படி ஏற்படுத்தியாகக் கூறப்படும் மொக்கை மனிதாபிமானங்கள் அனைத்தையும் இந்தத் திரைப்படம்தான் முதலில் கண்டறித்து கூறியதாக பெருமைப்படவும் முடியாது.

நல்லதங்காள் கதையை உற்பத்தி செய்த மண்ணிலிருந்து “எங்கேயும் எப்போதும்” போன்ற கதைகள் வந்து கொண்டேதான் இருக்கும். சமூக வாழ்க்கையில் கோபம் என்ற உணர்ச்சி பிறந்து செயலாக முடியாத நாட்டில் கண்ணீர், நிறையக் கண்ணீர் உதித்துக் கொண்டுதான் இருக்கும். சரிதானே?

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

‘முர்டோச் மயமாக்கப்படும்’ இந்திய ஊடகங்கள்!

10
முர்டோச்சின் ஊடக ஏகபோகம்
முர்டோச்சின் ஊடக ஏகபோகம். நன்றி - கார்டியன் (படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்)

டந்த இரண்டு பத்தாண்டுகளில் இந்தியாவின் ‘ஊடகப்பரப்பு’ பிரம்மாண்டமான மாறுதல்களைப் பார்த்திருக்கிறது. ஊடகப் பரப்பு என்பது அமெரிக்காவில் வசிக்கும் அர்ஜூன் அப்பாதுரை என்ற இந்திய ஆராய்ச்சியாளரால் முதலில் பயன்படுத்தப்பட்டது. காட்சி ஊடகங்கள் உலகில் எப்படிப்பட்ட தாக்கம் செலுத்துகின்றன என்பதையும், உலகளாவிய பண்பாட்டுப் பாய்ச்சல்களில் பொதுஊடகங்களின் பங்கையும் விவரிக்கவும் பொருத்தவும் பயன்படுத்தப்பட்டது. உலகின் மிகப்பெரிய மக்களாட்சியை வலிமைப்படுத்துவதற்கு ஊடகங்களில் பெரும்பகுதியினர் ஆற்றி வரும் பங்கு பாரட்டப்பட வேண்டிய அதே நேரத்தில் சில செய்தித் தாள்கள், தொலைக்காட்சி ஓடைகள், இணையத் தளங்கள் செயல்படும் முறைகளில் பல மோசமான போக்குகளையும் பார்க்க முடிகிறது. இவற்றில் “பணத்துக்கு செய்தி”யும் பிற வெளிப்படையான வணிகப் போக்குகளும் அடங்கும்.

1990களில் இந்திய பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்ட பிறகு புதிய தகவல் தொழில்நுட்பங்களும் விளம்பரதாரர்களுக்கு ஆதாயம் கொடுக்கும் இலக்காக மாறிய வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தின் நுகர்வுக் கலாச்சரமும் ஊடகங்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வளரச்சியடைய வழிவகுத்தன.

உலகின் எந்த நாட்டுடனும் ஒப்பிடும் போது இந்தியாவின் செய்தித் தாள்கள்/பத்திரிகைகள் மிக அதிகமாக இருக்கின்றன. இந்திய செய்தித் தாள்கள் பதிவாளர் அலுவலகத்தில் தற்போது 60,000க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தி எகனாமிஸ்ட் தகவலின் படி, இந்தியா இப்போது உலகின் அதிவேகமாக வளரும், மிகப்பெரிய செய்தித் தாள்களின் சந்தையாக இருக்கிறது. விலைக்கு விற்கப்படும் பிரதிகளின் எண்ணிக்கையில் சீனாவை முந்தி 11 கோடி பிரதிகள் தின விற்பனையைக் கொண்டிருக்கிறது.

தொலைக்காட்சி ஓடைகளின் எண்ணிக்கை வளர்ச்சி பல மடங்காக அதிகரித்திருக்கிறது. 1991ல் ஒரே ஒரு பொதுத்துறை ஒளிபரப்பாளராக தூர்தர்ஷன் இருந்தது. இப்போது 600க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி ஓடைகளுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் நாட்டிலிருந்து ஒளிபரப்ப அனுமதி வழங்கியிருகிகறது. பண்பலை வரிசையில் ஒலிபரப்பும் வானொலி நிலையங்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது. இப்போது இருக்கும் 250க்கும் அதிகமான பண்பலை வானொலிகளின் எண்ணிக்கை இன்னும் 5 ஆண்டுகளில் 1,200 ஆக உயரும். இந்திய பயனாளர்களுக்கென இயங்கும் இணைய தளங்களின் எண்ணிக்கையை யாரும் கணிக்கவில்லை.

ஆனால், எண்ணிக்கை அதிகரிப்பு தர அதிகரிப்பாக மாறவில்லை. முதலாளித்துவ அமைப்பின் பாரம்பரிய நம்பிக்கைகளுக்கு விரோதமாக, ஊடகத் துறையில் அதிகரித்த போட்டி  வெளிப்படையாக தரக் குறைவுக்கு வழிவகுத்திருக்கிறது. பார்வையாளர்களைக் கைப்பற்றும் போட்டியின் கூடவே உள்ளடக்கத்தை ‘சிறுமைப்படுத்தும்’ போக்கு வளர்ந்தது. தொலைக்காட்சி ஓடைகள் மிகவும் பொருத்தமற்ற, பிழை மலிந்த தொலைக்காட்சி மதிப்பெண் புள்ளி (TRP) யின் மூலம் பார்வையாளர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் முறைக்கு அடிமைகளாகிப் போனார்கள். 1991ஆம் ஆண்டில் வெளிநாட்டு மூலதனத்தை பெறும் விதிமுறைகள் மாற்றப்பட்ட பிறகு முதலில் இந்தியச் சந்தைக்குள் நுழைந்த பன்னாட்டு ஊடக நிறுவனங்களின் முதல் வரிசையில் இருந்தது பல ஆண்டுகளாக இந்திய சந்தையில் கண் வைத்துக் கொண்டிருந்த ரூபர்ட் முர்டோச்சின் ஸ்டார் (சாட்டிலைட் டெலிவிஷன் ஆசிய மண்டலம்) குழுமமும் ஒன்றாக இருந்ததில் வியப்பு ஏதும் இல்லை.

முர்டோக் நிலவரங்களை தெளிவாக புரிந்து கொண்டவர். அவரது இந்திய பேரரசு இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு மற்றும் வினியோகத்திலிருந்து செய்தி, பதிப்பித்தல் மற்றும் திரைப்படம் வரை பரந்திருக்கிறது. ஸ்டார் இந்தியா குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய (வருமான அடிப்படையில்) ஊடக பெருநிறுனங்களில் ஒன்றாக விளங்குகிறது. அது 8 மொழிகளில் செயல்படும் 32 ஓடைகளில் இருப்பதில் அதிகமான பார்வையாளர்களைக் (வாரத்துக்கு 17 கோடி பார்வையாளர்கள்) கொண்டிருப்பதாக சொல்கிறது. இந்த ஓடைகள் ஸ்டார் பிளஸ், ஸ்டார் ஒன், ஸ்டார் கோல்ட், சேனல் வி, ஸ்டார் ஜல்சா, ஸ்டார் ப்ரவாஸ், ஸ்டார் வேர்ல்ட், ஸ்டார் மூவிஸ், ஸ்டார் உத்சவ் மற்றும் கூட்டு நிறுவனங்களாக ஏசியாநெட், ஸ்கை நியூஸ், FX, பாக்ஸ் கிரைம், ஸ்டார் விஜய், ஸ்டார் நியூஸ், ஈஎஸ்பிஎன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் பிற. ஸ்டார் குழுமம் டாடா குழுமத்துடன் கூட்டு வைத்து ‘நேராக-வீட்டுக்கு’ என்ற டிடிஎச் வினியோக சேவையையும் வழங்கி வருகிறது.

இந்திய செயல்பாடுகள்

கேபிசி
"யார் மில்லியனர் ஆக விரும்புகிறீர்கள்" என்ற பிரிட்டிஷ் நிகழ்ச்சியின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு புகழ் பெற்ற "யார் கோடீஸ்வரன் ஆவார்" என்ற விளையாட்டு நிகழ்ச்சியை, தான் ஸ்டார் பிளஸ் சேனலில் நடத்த முடிவு செய்திருப்பதாக 2005ம் ஆண்டு புது தில்லியில் பத்திரிகையாளர்களுக்கு அறிவிக்கிறார், திரைப்பட நடிகர் ஷாருக்கான்.

நியூஸ் கார்ப் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகள் “அடுத்த தலைமுறை” வாய்ப்பு என்று முர்டோச்சினாலேயே குறிப்பிடப்பட்டது. முர்டோச்சின் இந்திய முயற்சிகளின் வெற்றி கெட்டிக்காரத்தனமான வணிக மற்றும் மேற்கத்திய முறைகளை உள்ளூர் அணுகுமுறையுடன் செயல்படுத்தியதை நம்பியிருக்கிறது. அவர்தான் இந்தியாவின் முதன் முதலில் ஒரு இசைத் தொலைக்காட்சி (சேனல் வி), ஒரு 24×7 செய்தி தொலைக்காட்சி (ஸ்டார் நியூஸ்), பன்னாட்டு விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றின் வெற்றிகரமான இந்திய வடிவம் (“கோடீஸ்வரன் ஆகப்போவது யார்”, இங்கிலாந்தின் “மில்லியனர் ஆக விரும்புவது யார்” என்ற நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.) ஆகியவற்றை உருவாக்கியவர். வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக் கழகத்தில் பன்னாட்டு தகவல் தொடர்பு துறை பேராசிரியாராக இருக்கும் தயா கிஷன், ‘முர்டோக்மயமாக்கப்படும்’ இந்திய ஊடகம் என்பதை “ஊடக வலிமை பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து வினியோக அமைப்புகளையும், உலகளாவிய நிகழ்ச்சி தயாரிப்பு பின்னல்களையும் கட்டுக்குள் வைத்திருக்கும் பன்னாட்டு, பல்ஊடக தனியார் பெருநிறுவனங்கள் கைக்குப் போவதாக” வரையறுக்கிறார்.

பெரு நிறுவன குழுமங்களின் கையில் ஊடக உடைமை குவிதல்; விளம்பர வருமானத்தை நம்பி இருப்பதால் மதிப்பீடுகளுக்காக அதிகரித்துக் கொண்டே போகும் போட்டி; அடிக்கடி தெளிவற்று வரையறுக்கப்பட்ட “உடனடி செய்தி” மீதான மிகையான சார்புநிலை; “எக்ஸ்குளூசிவ்” என்று அழைக்கப்படும் நிகழ்ச்சிகள், “எதுவாயிருந்தாலும் சரி” என்ற செயல்உத்தி; வசதிபடைத்த நடுத்தர மக்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளுக்கு மட்டும் இடம் கொடுத்தல் (விளம்பரதாரர்களுக்கு அதிக ஆதாயம் தரும் பிரிவினர்); செய்தி உள்ளடக்கத்தைக் கவர்ச்சி மயமாக்குதல், மீச்சிறு பொது அறிவு நிலைக்கு பொருந்தும்படி செய்தி அளித்தல்; விற்பனை பிரிவுக்கும் ஆசிரியர் பிரிவுக்கும் இடையிலான நெருக்கமான பொருத்தமற்ற உறவு; செய்தியை விலைபொருளாக மாற்றுவது: இவை அனைத்துமே இந்திய ஊடகத்துறையின் பெரும்பகுதிகளில் காணக் கிடைக்கும் முர்டோச் மயமாக்கலின் வெளிப்பாடுகள்.

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் முதல் டேப்ளாய்டுகளில் ஒன்றான த ஹெரால்டு செய்தித்தாளைத் தொடங்கிய ஜேம்ஸ் பென்னட் எனபவர், “கற்பிப்பதற்காக இல்லை, திடுக்கிட வைப்பதற்காகத்தான் செய்தித் தாள்கள்” என்று சொல்லியிருந்தார். துஸ்சு மற்றும் பிறரின் கருத்துப்படி, ஸ்டார் குழுமத்தின் ஓடைகள் பரபரப்பானதாகவும், நகர, மேற்கத்திய, நுகர்வுக் கலச்சாரத்தைத் தூக்கிப் பிடிப்பதாகவும் இருக்கும் நிகழ்ச்சிகளை உருவாக்குவதில் முன்னணி வகித்தன. குறிப்பாக பாலியல் உள்ளடக்கத்தையும் பிரபலங்களை துதி பாடும் கலாச்சாரத்தையும் இந்தியர்களைப் பிடித்து ஆட்டுவதாகச் சொல்லப்படும் மூன்று Cகளான குற்றம், கிரிக்கெட், திரைப்படம் இவற்றையும் குறி வைத்தார்கள். கூடவே, இந்தியாவின் பெரும்பாலான செய்தித்தாள்கள் வெளிப்படையான பக்கசார்புடன் செயல்படுகின்றன. முர்டோச் நடத்தும் பாக்ஸ் நியூஸ் மற்றும் பிற நியூஸ் கார்ப் ஊடக அமைப்புகளைப் போன்றே வெளிப்படையாக அடாவடியான நிலைப்பாடுகளை எடுக்கின்றன.

ஸ்டார் செய்தி நிகழ்ச்சி “சன்சனி” (இந்தியில் பரபரப்பு என்று பொருள்) நகரக் குற்றங்கள், பாலியல் வன்முறை, கொலை போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. அதே போன்று “ரெட் அலெர்ட்” என்ற நிகழ்ச்சி, குற்றங்களை காவல் துறை கையாளுவதைப் பற்றி டேப்ளாய்டுகளின் பாணியில் உண்மை விபரங்களை பின்தள்ளி பேசுகின்றது. செய்திகளை நாடகத்தனமாகவும் பரபரப்பாகவும் மாற்றுவதே நோக்கமாக இருக்கிறது. பெரும்பாலும், ஹாலிவுட் மற்றும் இந்தி படங்களில் சித்தரிக்கப்பட்ட குற்ற நிகழ்ச்சிகளுடன் பொருத்திக் காட்டும் உத்தியையும் பயன்படுத்துகிறார்கள். தி இந்துவின் தலைமை ஆசிரியர் என் ராம் அண்மை காலங்களில் ஊடக செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றி வருத்தப்பட்டு சொல்லும் போது “இது ஒரு கவலைப்படத்தக்க போக்கு” என்று குறிப்பிட்டார். “எங்கும் புகுந்து விடும் உளவு பார்க்கும் ஒளிப்படக்கருவிகள் துப்பறியும் ஊடக உத்திக்கு கெட்ட பெயரை வாங்கிக்கொடுத்திருக்கின்றன”

பிரபலமானவர்களுக்கும் அவர்களின் பாலியல் வாழ்க்கைக்கும் பரவலாக இடம் கொடுக்கும் போக்கு ஸ்டார் நியூசில் மட்டும் இல்லை. ஊடக விமர்சகர் சேவந்தி நீனன் சொல்வது போல “திரு எம் தயவால் நாம் எப்போதையும் விட அதிகமாக தொலைக்காட்சி பார்க்கிறோம்” “அவரது நிகழ்ச்சிகள் மேம்படுத்துவையாகவோ, அறிவூட்டுபவையாகவோ இல்லை என்பது பொருட்டே இல்லை. வேறு யாருடையதும் அப்படி இல்லைதான்”

உதாரணமாக டிவி டுடே குழுமத்தின் ஆஜ் தக் நிறுவனம் “கபரேன் படாபட்” (உடனடி செய்திகள்) என்ற முழக்கத்துடன் தேஜ் (வேகம் என்று பொருள்) என்ற ஒரு தொலைக்காட்சியை ஆரம்பித்தது. இந்த தொலைக்காட்சி “நீளமான விவாதங்கள், தேவையற்ற அலசல்களில்” ஈடுபடாது என்று உறுதியளித்தார் அதன் தலைமை அலுவலர் அரூண் பூரி. விற்பனை/பார்வையாளர் எண்ணிக்கையை அதிகரிப்பதையே வணிக முறையாக கொண்டிருக்கும் ஊடக நிறுவனத்திற்கு செய்தியின் திடுக்கிடச் செய்யும் மதிப்புதான் அதிமுக்கியமாகப் போய் விடுகிறது. செய்திகளை முந்தித் தருவதற்காக கழுத்தை அறுக்கும் உத்திகளைப் பயன்படுத்தும் இந்திய ஊடகத் துறையின் சில பிரிவினர் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் ஜூன் 2007-ல் ஊடகங்களை காட்டு மிருகமாக உருவகித்து, பத்திரிகையாளர்களை கட்டுப்பாடற்ற பசியுடன் அலையும் விலங்குகளுடன் ஒப்பிட்டதை நினைவூட்டுகிறார்கள்.

நவம்பர் 2008ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களைப் பற்றிய ஊடக செய்திகள் இது போன்ற பல பிரச்சனைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தன. அதிகமாக திடுக்கிட வைக்கும் காட்சிகளையும் ஒலித்துணுக்குகளையும் தேடும் இடிபிடியில், மிக மோசமான உணர்வுகளை மதிக்காத முறைகள் பின்பற்றப்பட்டன, பல நேரங்களில் சரிபாரக்கப்படாத தகவல்கள் உண்மை என வழங்கப்பட்டன. இந்திய ஊடகங்களின் ஒரு பகுதியினர் தர்மத்துக்கு மாறாக நடந்து கொண்டதற்கு இன்னொரு வெளிப்படையான உதாரணம் 2008 மே மாதம் நடந்த 14 வயதான் ஆரூஷி தல்வார் கொலை வழக்கைப் பற்றி செய்தி அளித்த முறைகளும், அதை கதை போல மாற்றுவதற்கு செய்த முயற்சிகளும் ஆகும். ஊடக நிறுவனங்களின் செயல்பாட்டில் அதிகரித்து வரும் விளம்பரதாரர்களின் செல்வாக்கின் விளைவாக, விற்பனை பிரிவுக்கும் ஆசிரியர் பிரிவுக்கும் நடுவில் ஒரு காலத்தில் இருந்த சீனப் பெருஞ்சுவர் உடைவதைப் பார்க்க முடிகிறது. 2003-ல், பென்னட் கோல்மன் நிறுவனம் (பிசிசிஎல், டைம்ஸ் ஆப் இந்தியா, எகனாமிக் டைம்ஸ், மகராஷ்டிரா டைம்ஸ் போன்ற அவற்றின் பிரிவுகளில் சந்தையின் முதல் இடத்தில் இருக்கும் பத்திரிகளை வெளியிடும் நிறுவனம்) “பணத்துக்கு செய்தி” தருவதற்கு மீடியா நெட் என்ற சேவையை ஆரம்பித்தது. அதன் மூலம் விற்பனை நிகழ்வுகளுக்கும் பிரபலமானவர்களின் நிகழ்வுகளுக்கும் கட்டணம் வாங்கிக் கொண்டு பத்திரிகையாளர்கள் அனுப்பப்பட்டார்கள். அதன் போட்டியாளர்கள் ‘இந்த செயல்முறை பத்திரிகையாளர் தர்மத்தை வெளிப்படையாக மீறுவது’ என்று புகார் சொன்ன போது, பிசிசிஎல் நிர்வாகம், ‘இந்த விளம்பரதலையங்கங்கள் நாளிதழின் முக்கிய பகுதியில் இல்லாமல், குறிப்பிட்ட நகரத்துக்கு மட்டுமான சமூக துணுக்குகளடங்கிய பலவண்ண துணைப் பகுதியில் மட்டுமே வெளியாவதால் இது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்’ என்று பதிலளித்தது.

ஸ்டார் நியூஸ்
மும்பையில் ஜூலை 13 ஆன்று நிகழ்ந்த மூன்று குண்டு வெடிப்புகள் தொடர்பான ஒளிபரப்பின் ஒரு பகுதி முர்டோக் நிறுவனங்களில் அடிக்கடி குழப்பமாக வரையறுக்கப்படும் பிரேகிங் நியூஸ் மீதான மிகையான சார்புநிலை; எக்ஸ்குளூசிவ் என்று அழைக்கப்படும் நிகழ்ச்சிகள், எதுவாயிருந்தாலும் சரி என்ற உத்தி;

பணத்துக்குச் செய்தி

மீடியாநெட் நல்ல விதமாக செய்தி வெளியிடப்படுவதற்காக நாளிதழ்களுக்கும் ஒளிபரப்பாளர்களுக்கும் காசு கொடுக்கும் ‘பணத்துக்கு செய்தி’ வெளியீட்டை நிறுவனமயாமாக்கியது. செய்தி போல வேடம் பூண்டிருக்கும் இது, சாதாரண விளம்பரங்களை விட தாக்கம் அதிகமானது. வாசகர் அல்லது பார்வையாளர் இதில் சொல்லப்படும் தகவல்கள் பத்திரிகையாளரால் தன்னிச்சையாக திரட்டப்பட்டது என்று எண்ணுவார்.

மற்ற ஊடக நிறுவனங்களும் பிசிசிஎல்லின் அடிச்சுவடுகளை ஒற்றி பின் தொடர ஆரம்பித்து விட, இந்த நிழல் வழிமுறை அரசியல் செய்திகளுக்கும் பரவி 2009 மக்களவை தேர்தலில் பரவலாக கையாளப்பட்டது. குறிப்பிட்ட வேட்பாளரை பாராட்டி அல்லது ஆதரித்து அல்லது அவரது அரசியல் எதிரிகளைக் குறை சொல்லி எழுதுவதற்கு உரிய ‘விலைப்பட்டியல்’ அல்லது ‘பொதிகள்’ வினியோகிக்கப்பட்டன. இந்த நிபந்தனைகளுக்கு உட்பட மறுத்த வேட்பாளர்களுக்கு இடம் மறுக்கப்பட்டது.

நிறுவனமாக இல்லாத வடிவத்தில் (ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமின்றி சட்ட விரோதமானதுமான), இந்த செயல்பாடுகளை நிரூபிப்பது மிகவும் கடினமானது, ஏனெனில் இந்த பண பரிமாற்றங்கள் அதிகாரபூர்வமான பதிவுகள் எதுவும் இல்லாமலேயே நடைபெறுகின்றன. இது பி சாய்நாத் எழுதி தி இந்துவில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் சுட்டிக் காட்டுவது போன்று பல வேடிக்கையான சம்பவங்களுக்கு வழி வகுத்தது . எந்தத் தவறும் நடக்கவில்லை என்று அப்போதைய மகாராஷ்டிரா முதலமைச்சர் அசோக் சவான் மறுத்தாலும், அவரது சாதனைகளையும் திறமைகளையும் பாராட்டும் ஒரே மாதிரியான கட்டுரைகள் இரண்டு போட்டி போடும் நாளிதழ்களில் சில நாட்கள் இடை வெளியில் எப்படி வெளியானது என்பதை அவரால் விளக்க முடியவில்லை.

இந்திய பிரஸ் கவுன்சில், பணத்துக்கு செய்தி பற்றி அறிக்கை எழுதுமாறு ஒரு துணைக் குழுவை பணித்தது (அந்தக் குழுவில் இந்த கட்டுரையாளர்களில் ஒருவரான பரஞ்சோய் குகா தகுராலும் ஒருவர்) அந்த அறிக்கை சந்தர்ப்பம் சார்ந்த சாட்சியங்களை வைத்து முன்னணி செய்தித்தாள்களைக் குறிப்பிட்டு அவர்கள் செய்தி போன்ற உருவில் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட தனிநபர்களுக்கு சாதகமான தகவல்களை வெளியிட்டதை விளக்கியது.

செல்வாக்கு வாய்ந்த பதிப்பாளர்களின் குழு முயற்சிகளால் ஜூலை 31, 2010 அன்று நடந்த கூட்டத்தில் கை தூக்கி வாக்கெடுப்பு மூலம் (முறையான வாக்கெடுப்பு இல்லாமலேயே) முடிவு எடுக்கப்பட்டு பெரிதும் நீர்த்துவிக்கப்பட்ட வடிவத்தில் இந்த அறிக்கை அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருந்தாலும் துணைக்குழுவின் 71 பக்க முழு அறிக்கை கசிய விடப்பட்டு பல இணையதளங்களில் கிடைக்கிறது. சமீபத்தில் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி இந்த நிகழ்வைப் பற்றி கருத்து தெரிவித்தார். ஜூலை 15ஆம் தேதி இந்தூரில் நடந்த மறைந்த பிரபாஷ் ஜோஷி (பணத்துக்கு செய்தியை தீவிரமாக எதிர்த்தவர்)யின் 75வது நினைவு நாளில் பேசிய துணைக் குடியரசுத் தலைவர், “பிரஸ் கவுன்சில் பணத்துக்குச் செய்திகள் பற்றிய தனது அறிக்கையை பொதுவில் வைக்க முடியாமல் இருப்பது ‘ரகசிய கலாச்சாரம்’ மற்றும் சுய ஒழுங்குபடுத்தல் தொடர்பாக முழு துறையில் நிலவும் போக்குகளின் அறிகுறி என்று குறிப்பிட்டார்.

தனியார் ஒப்பந்தங்கள்

“தனியார் ஒப்பந்தங்கள்” என்ற திட்டம் இன்னொரு கவலை தரும் போக்காக இருக்கிறது. பிசிசிஎல் ஆரம்பித்து வைத்த இந்த திட்டத்தின்படி பெருநிறுவனங்களின் பங்குகளைப் பெற்றுக் கொண்டு விளம்பர பகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்தத்திட்டத்தின் வெற்றி, பிசிசிஎல்லை இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பங்கு முதலீட்டாளர்களில் ஒன்றாக மாற்றியிருக்கிறது. பிசிசிஎல் பேச்சாளர்கள், செய்திக் கட்டுரைகளின் உள்ளடக்கம் விளம்பரதாரர் மற்றும் பிசிசிஎல் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களால் பாதிக்கப்படுவதில்லை என்று சொன்னாலும், விற்பனை-ஆசிரியர் பிரிவுகளுக்கிடையேயான சுவரின் பலவீனத்தைக் கணக்கில் எடுக்கும் போது பொறுப்புகளுக்கிடையேயான முரண்பாடு வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரு வாடிக்கையாளருக்கு சாதகமான செய்தி வெளியிடப்படுவதாலோ, பாதகமாக செய்தி வெளியிடப்படாமல் இருப்பதாலோ, பத்திரிகை நிறுவனம் விளம்பரதாரர் நிறுவனம் இரண்டுமே ஆதாயம் பெறுகின்றன.

சமீப ஆண்டுகளில் பங்குகளின் விலை வீழ்ச்சியும், பரிவர்த்தனை செய்த போது இருந்த கூடுதல் மதிப்பிலேயே மதிப்பு நிர்ணயிக்கும் வருமான வரித் துறையின் வழிகாட்டல் முறையும் தனியார் ஒப்பந்த திட்டத்தின் கவர்ச்சியை ஓரளவு குறைத்திருக்கிறது. மீடியாநெட்டைப் போலவே, தனியார் ஒப்பந்த முறையும் பிசிசிஎல்லால் ஆரம்பிக்கப்பட்டு உடனடியாகவே மற்றவர்களால் பின்பற்றப்பட ஆரம்பித்தது. ஆகஸ்டு 27, 2010ல் செபி நிறுவனம் (இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை கழகம்) ஒரு ஊடக நிறுவனம், தான் வெளியிட்ட அல்லது ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளுடன் தொடர்புடைய வணிக நிறுவனங்களில் அதற்கு இருக்கும் நலன்களை வெளிப்படையாக தெரிவிக்க வேணுடம் என்ற வழிகாட்டுதலை உருவாக்கியது. ஆனால், இந்த வழிகாட்டுதல் முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.

எதிர்பார்க்கும்படியாக விளம்பரதாரர்கள் வாங்கும் திறன் அதிகமான சமூக பிரிவுகளையே குறி வைக்கிறார்கள். வாசகர்கள்/பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மட்டுமே செய்தி அலசலின் நோக்கமாக இருக்கும் போது, தவிர்க்க முடியாத பின் விளைவாக பன்முகத்தன்மை குறைக்கப்படுகிறது. இதன் விளைவாக ஒரே மாதிரியாள அதுவும் நகர, வசதி வாய்ந்த நடுத்தர வர்க்க நுகர்வோர்களுக்கு சார்பான உள்ளடக்கத்தை மட்டுமே பார்க்கிறோம்.

2008-இல் மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் போது ஊடகங்களின் வர்க்க சார்பு நிலை கண்டனத்துக்குள்ளாகியது. ஐந்து நட்சத்திர தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களில் நடந்த நிகழ்வுகளுக்கு தேவைக்கதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, சாதாரண மக்கள் கொல்லப்பட்ட சத்ரபதி சிவாஜி முனையத்தில் நடந்த நிகழ்வுகள் புறக்கணிக்கப்பட்டன. வெளிப்படையான ஊழலை விட மோசமான ஊடக உலகத்தைப் பெரும்பான்மையான மக்கள் பிரச்சனைகளிலிருந்து தனிமைப்படுத்தும் போக்கு இதில் இருக்கிறது. நோம் சாம்ஸ்கி, ஊடக பிரநிதித்துவத்தை பெருநிறுவன குழுமங்கள், பத்திரிகை பெருமுதலாளிகள், அரசியல்வாதிகள் இணைந்து அவர்களது நலன்களுக்கு சேவை செய்யுமாறு உருவாக்குவது என்று வரையறுத்த “சம்மதத்தை உற்பத்தி செய்தலை” ஒத்திருக்கிறது இது.

ஒழுங்குபடுத்தல்

இந்தப் பிரச்சனைக்கு ஒழுங்குபடுத்தல் ஒரு தீர்வாக இருக்கலாம், குறிப்பாக, கூட்டு சேர்த்தல், போட்டியைத் தவிர்க்கும் நடவடிக்கைகளுக்கு எதிரான ஒழுங்குபடுத்தல் முக்கியமானது. பிரஸ் கவுன்சிலின் அதிகாரம் அச்சு ஊடகத்தின் மீது மட்டுமே இருக்கிறது, அரை நீதி அமைப்பான அதற்கு தண்டிக்கும் அதிகாரமும் எதுவும் இல்லை.

பிப்ரவரி 2008-ல் இந்திய தொலைதொடர்பு ஒழுங்கு படுத்து ஆணையம் (TRAI) தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்துக்கு “ஊடக உடைமைக்கான பரிந்துரைகள்” என்ற அறிக்கையை சமர்ப்பித்தது. இன்னும் வெளியிடப்படாத இந்த அறிக்கையில் (அறிக்கையின் ஒரு பிரதி இந்த கட்டுரையாளர்களிடம் உள்ளது), “மூன்று ஊடக துறைகளான அச்சு, தொலைக்காட்சி, வானொலி பிரிவுகளில் பன்முகத்தன்மையும் வேற்றுமையும் பராமரிக்கப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று வாதிடப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள இந்திய நிர்வாக பணியாளர் கல்லூரியின் உதவியோடு தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை குறுக்கு ஊடக உடைமைகளை கட்டுப்படுத்தவும், ஒளிபரப்பாளருக்கும் வினியோகிப்பவருக்கும் இடையே இடைவெளியைப் பராமரிப்பதன் மூலம் போட்டிச் சந்தைக்கு எதிரான நடத்தைகளையும் ஊடக ஏகபோகத்தையும் தடுக்க பரிந்துரைக்கிறது. இந்தியாவின் தற்போதைய ஊடக சட்டங்களின் முக்கிய பிரச்சனை அவை தனிப்பட்ட நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதுடன், ஊடக குழுமங்களையும் பெரு நிறுவனங்களையும் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. பல பெரிய பெருநிறுவன குழுமங்கள் வெவ்வேறு நிறுவனங்களை கையில் வைத்திருப்பதன் மூலம் இந்த கட்டுப்பாடுகளை முழுவதுமாக தவிர்த்து விடுகின்றன. டிராயின் பரிந்துரைகள் மீது இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

யுகே, இந்தியா மற்றும் பிற இடங்களில் இருக்கும் எல்லா அரசாங்கங்களின் முக்கிய பதவிகளில் இருக்கும் நபர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்களுடன் விருப்ப-வெறுப்பு நிலை இருந்தாலும் ஊடக உறவுகளை வளர்ப்பதை விரும்புகிறார்கள். நியூஸ் ஆப் த வேர்ல்ட் தொடர்பான தொலைபேசி ஒட்டுக் கேட்பு நிகழ்வும் முர்டோச்சுகள் மற்றும் நிறுவனத்தின் உயர் ஊழியர்கள் பொதுவில் விசாரிக்கப்பட்டதும், இந்திய ஊடக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

______________________________________________________

பரஞ்சோய் குகா தாகுர்தா மற்றும் அலீஸ் சீபிரைட்

பரஞ்சோய் குகா தாகுர்தா ஒரு தனிப்பட்ட பத்திரிகையாளர் மற்றும் கல்வியாளர் அலீஸ் சீபிரைட் இந்தியாவில் பணிபுரியும் ஒரு பிரிடிஷ் பத்திரிகையாளர்.

கட்டுரை- படங்கள : நன்றி ப்ரண்ட் லைன், தமிழாக்கம்: குமார்
______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்!

33

ன்றாக பின்னிப் பிணைந்திருந்ததாலேயே அந்த நான்கு விலங்குகளையும் சிங்கத்தால் அடித்துக் கொன்று சாப்பிட முடியவில்லை. எனவே தந்திரமாக, சூழ்ச்சி செய்து அந்த நான்கு விலங்குகளையும் பிரித்தது. இப்போது சிங்கத்தால் தனித்தனியாக அந்த நான்கு விலங்குகளையும் வேட்டையாடி புசிக்க முடிந்தது. இந்தக் கதையை விரல் சூப்பும் வயதிலேயே பள்ளியில் படித்திருப்போம்.

ஆனால், தந்திரமாக ஏமாற்றப்பட்டு, சூழ்ச்சி செய்து பிரிக்கப்பட்டு, தனித்தனியாக இருப்பதாலேயே தொடர்ந்து நாம் சிங்கத்தால் நர வேட்டையாடப்பட்டு இறந்து வருகிறோம். எனவே ஒன்றாக இணைவோம். சிங்கத்தை பின்னங்கால் பிடறியில் அடித்து ஓட ஓட விரட்டுவோம்… என்று முடிவு செய்து நான்கு விலங்குகளும் ஒன்றாக கைகோர்த்தன. சிங்கத்தை காட்டை விட்டே விரட்டின… என்றொரு கதையை எந்தக் காலத்திலும் நாம் படித்ததில்லை. அப்படியொரு கதை இந்தியாவில் சமீபத்தில் எழுதப்படவும் இல்லை.

இந்தக் குறையை போக்குவதற்காகவே வரலாற்று புகழ்மிக்க ஒரு கதையை அரியானா மாநிலம், குர்கான் நகரிலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள மானேசர் தொழிற்பேட்டையில் அமைந்திருக்கும் மாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டாவது பிரிவு கார் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அதுவும் அச்சில் அல்ல. இந்திய சரித்திர கல்வெட்டில் பொறிக்கும் விதமாக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். மன உறுதியுடன் போராடி வரும் இத்தொழிலாளர்களின் போராட்டம், வர்க்க ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகவும், நாளைய விடியலுக்கு அறைகூவல் விடுப்பதாகவும் உள்ளது.

இந்திய நாட்டின் தலைநகரிலிருந்து ஒரு மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் மானேசர் தொழிற்பேட்டையை அடைந்துவிடலாம். ஒருவகையில் உலகமே இங்குதான் உற்பத்தியாகிறது என்று சொல்லலாம். கார்கள், பைக்குகள், செமிகண்டக்டர்கள், வாகன உதிரி பாகங்கள், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், தொலைப்பேசி – கைப்பேசிகள்… அவ்வளவு ஏன், பாம் டேட்டா அனலிஸ் மையமும், பிரைன் ரிசர்ச் ஆய்வுக்கூடமும், இராணுவப் பள்ளியும் கூட இங்கு அமைந்திருக்கிறது.

1980களில் குர்கானில் தொடங்கப்பட்ட மாருதி உத்யோக் நிறுவனத்தால் அதிகரித்து வந்த நுகர்வு கலாச்சாரத்துக்கு தீனி போடும் வகையில் கார்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. எனவே இந்த மானேசர் தொழிற்பேட்டையில் தனது இரண்டாவது கார் பிரிவு தொழிற்சாலையை மாருதி சுசுகி நிறுவனம் தொடங்கியது. விதவிதமான ஃப்ளேவர்களில் தயாராகும் ஐஸ்க்ரீம் போல ஸ்விப்ட், ஏ-ஸ்டார், டிஸெயர், எஸ்எக்ஸ்4 மாடல் கார்களை உற்பத்தி செய்து நடுத்தரவர்க்கத்துக்கும், மேட்டுக்குடி கனவான்களுக்கும் இங்கிருந்து வழங்க ஆரம்பித்தது.

இதற்காக சுற்று வட்டார பகுதியிலிருந்து, ஐடிஐ முடித்த இளைஞர்களை நிர்வாகம் வேலைக்கு அமர்த்தியது. ஷிப்டுக்கு 600 தொழிலாளர்கள் வீதம் மொத்தம் ஆயிரத்து 200 தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகிறார்கள். இவர்களில் நிரந்தர தொழிலாளர்களை விட, பயிற்சியாளர்களும், அதை விட ஒப்பந்த தொழிலாளர்களும்தான் எண்ணிக்கையில் அதிகம் என்பதை சொல்லாமலேயே புரிந்து கொள்ளலாம்.

இந்த ஆயிரத்து 200 தொழிலாளர்கள்தான் கடந்த நான்கு மாதங்களாக தங்கள் உரிமைக்காக போராடி வருகிறார்கள் என்பதல்ல விஷயம். இவர்களுக்காக மானேசர் தொழிற்பேட்டையிலுள்ள அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கிறார்கள், களத்தில் நிற்கிறார்கள் என்பதுதான் நெஞ்சை நிமிர்த்தி பெருமைப்பட வேண்டிய விஷயம். ஓரு தொழிற்சாலையில் மட்டுமோ அல்லது அந்தத் தொழிற்சாலையின் கிளைத் தொழிலாளர்களைச் சேர்த்துக் கொண்டோ மட்டும் போராடினால் போதாது. அந்த வட்டாரம் முழுதுமாக உள்ள தொழிலாளர் வர்க்கத்தை ஓரணியில் திரட்டி உறுதியுடன் போராட வேண்டும். அப்பொழுதுதான் இன்றைய உலகமய சூழலில் முதலாளித்துவ அடக்குமுறைகளை முறியடிக்க முடியும் என்பதை இந்திய தொழிலாளி வர்க்கத்துக்கு உணர்த்தியிருக்கிறார்களே… அதுதான் சிறப்பு.

இதை தொடக்கத்திலிருந்து பார்த்தால்தான் இந்தப் போராட்டத்தின் வலிமையை, அது தரும் உத்வேகத்தை உணரவும், புரிந்து கொள்ளவும், பாடம் கற்கவும் முடியும்.

மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்

45 விநாடிகளில் உங்களால் என்ன செய்ய முடியும் என்று மெத்தப் படித்த மேதாவிகளிடம் கேட்டுப் பாருங்கள். விடை சொல்லவே 45 விநாடிகளுக்கு மேல் யோசிப்பார்கள். ஆனால், மானேசர் தொழிற்பேட்டையில் அமைந்திருக்கும் மாருதி சுசுகி தொழிற்சாலையின் அசெம்பிளிங் லைனில் பணிபுரியும் தொழிலாளர்கள், சராசரியாக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு 45 விநாடிகளும் ஒரு காரை உருவாக்க தங்கள் குருதியை எரிக்கிறார்கள். இதை ஏதோ அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மிகைப்படுத்தி சொல்வதாக நினைக்க வேண்டாம். மாருதி சுசுகியின் இணையதளத்திலேயே 12.5 மணி நேரத்தில் மெட்டல் ஷீட்டிலிருந்து ஒரு காரை தயாரிப்பதாகவும், அசெம்பிளிங் லைனில் 23 விநாடிகளுக்கு ஒரு கார் நகருவதாகவும் பெருமையுடன் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அதாவது சராசரியாக ஒரு ஷிப்டுக்கு 600 கார்களை உற்பத்தி செய்வதற்காக 600 தொழிலாளர்கள் மாருதி சுசுகி இரண்டாவது பிரிவு தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள்.

இந்த இடத்தில் மாருதி சுசுகி நிறுவனம் குறிப்பிடாமல் விட்ட ஒரு விஷயத்தை – கணக்கை – பார்ப்போம். அப்பொழுதுதான் எரிந்து சாம்பலாகும் அந்நிறுவன தொழிலாளர்களின் நிலையை உணர முடியும்.

8 மணிநேரம் கொண்ட ஒரு ஷிப்டில், 600 தொழிலாளர்கள், 600 கார்களை தயாரிக்கிறார்கள். இது அந்நிறுவனமே குறிப்பிடும் கணக்கு. 600ஐ 45 விநாடிகளால் பெருக்கினால் 27 ஆயிரம் விநாடிகள் வரும். அதாவது 450 நிமிடங்கள். அதாவது ஏழரை மணித் துளிகள். அதாவது 8 மணிநேரம் கொண்ட ஒரு ஷிப்டில் ஏழரை மணி நேரங்கள் கார்களை தயாரிக்க மட்டுமே ஒவ்வொரு தொழிலாளியும் செலவு செய்கிறார். மீதமுள்ள 30 நிமிடங்களில், 20 நிமிடங்கள் உணவுக்காகவும், 7 நிமிடங்கள் தேநீர் குடிக்கவும் ஒதுக்குகிறார். எனவே மீதமுள்ள 3 நிமிடங்களில்தான், அதாவது 180 விநாடிகளில்தான், ஒரு தொழிலாளி, அன்றைய தினம், தான் பணிபுரிந்த 27 ஆயிரம் விநாடிகளுக்காக ஓய்வெடுத்துக் கொள்ள, ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும்.

இதையே கொஞ்சம் விரித்து பார்ப்போம். ஓய்வுக்காக கிடைத்த இந்த 180 விநாடிகளை, உழைப்புக்காக ஒரு தொழிலாளி செலவிடும் 27 ஆயிரம் விநாடிகளின் மீது பரப்பினால், மாருதி சுசுகி நிறுவனத்தில் ஒரு ஷிப்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஒரு விநாடியில் 150 மைக்ரோ விநாடிகள் மட்டுமே அவர்களுக்கு என்று கிடைக்கும். இதற்குள்தான் அவர்கள் நிற்கவும், மூச்சு விடவும், கை கால்களை அசைக்கவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எஞ்சிய விநாடிகள், நிமிடங்கள், நேரங்கள் அனைத்தும் மாருதி சுசுகி நிறுவனத்துக்கு மட்டுமே சொந்தம். நிறுவனத்துக்கு சொந்தமான ‘அந்த நேரத்தில்’ தலையைக் கூட திருப்பக் கூடாது. தப்பித் தவறி திருப்பினால், வெட்டி விடும் உரிமை நிறுவனத்துக்கு உண்டு.

ஆம், உணவுக்காக ஒதுக்கப்பட்ட 20 நிமிடங்களில், ஒவ்வொரு தொழிலாளியும் 400 மீட்டர் தொலைவிலுள்ள உணவகத்துக்கு நடக்க வேண்டும். அங்கு வரிசையில் நிற்க வேண்டும். வாங்கிய உணவை அவசரமாக சாப்பிட வேண்டும். தனது இடத்துக்கு திரும்பி விட வேண்டும். ஒரு நிமிடம் தாமதமானாலும் சம்பளத்தில் வெட்டு நிச்சயம். வேலை நேரத்தில் கழிப்பறை செல்ல அனுமதியில்லை. எனவே சிறுநீர் – மலம் கழிக்கவும் இந்த உணவு இடைவேளையைதான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருநாள் விடுப்பு எடுத்தால், ஊக்கத்தொகையில் ரூபாய் 1,500ம், இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்தால் ஊக்கத்தொகை முழுவதும் பறிக்கப்படும். அடுத்த ஷிப்டுக்கு உரிய தொழிலாளி வரவில்லை என்றால், 16 மணி நேரங்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும். இதெல்லாம் நிர்வாகத்துக்கு உரிய ‘உரிமைகள்’.

இதைதான் ‘க்ளாஸ் பவர்’ என்று பெருமையாக விளம்பரங்களில் குறிப்பிடுகிறதா மாருதி சுசுகி? தனது வாடிக்கையாளர்களிடம், ‘நீங்களே எரிபொருள்’ என மல்டி கலரில் அச்சடித்து மார் தட்டுகிறதே மாருதி சுசுகி நிறுவனம்… அதன் உண்மையான அர்த்தம், எரிந்து சாம்பலாவது எங்கள் நிறுவனத்தின் இரண்டாவது பிரிவு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் குருதிதான் என்பதை குறிப்பால் உணர்த்துகிறதா?

தங்கள் நிறுவன பங்குகளை மேட்டுக்குடியினர் வாங்குவதற்காக தொழிற்சாலையின் வெளித் தோற்றத்தை ஹை டிஜிட்டல் கேமராவில் படம் பிடித்து காட்டும் நிறுவனம், ஏன் உட்புற தோற்றத்தை படம் பிடித்துக் காட்ட மறுக்கிறது? ஒவ்வொரு பிரிவிலும் கண்காணிப்பு கேமராவை பொருத்தி ஒரு தொழிலாளி எப்படி வேலை செய்கிறார் என்பதை கண்காணிக்கும் நிறுவனம், கழிப்பறைகளில் கூட ‘அநாவசியமாக’ அவர் நேரத்தை செலவிடுகிறாரா என்பதை அறிய கேமராவை பொருத்தியிருப்பது வக்கிரம் மட்டுமல்ல, பாசிசத்தின் உச்சம்.

இந்நடவடிக்கையை ஆதரிக்க வேறு செய்கிறார், நிர்வாகம் வீசும் எலும்புத் துண்டை பொறுக்கித் தின்னும் ஒர் அதிகாரி. ”கழிவறைகளில் ‘நேரம்’ செலவிட எந்தத் தொழிலாளிக்கும் உரிமையில்லை. இதனால் உற்பத்திதான் பாதிக்கும்? எனவே அதிக முறை கழிவறை செல்பவர்கள் – ‘அதிக நேரத்தை’ அங்கு செலவிடுபவர்கள் ஆகியோரின் சம்பளம் பிடிக்கப்படும். இதில் தவறொன்றுமில்லை…” என கொக்கரிக்கிறார்.

இப்படி பல அடக்குமுறைகளை எதிர்கொண்டு கற்பனைக்கும் எட்டாத அளவில், மைக்ரோ விநாடி கூட வீணாக்காமல் உழைக்கும் இந்தத் தொழிலாளர்களின் பணியை துல்லியமாக அறிய விரும்பினால், உடனடியாக சார்லி சாப்ளினின் ‘மாடர்ன் டைம்ஸ்’ சினிமாவை பாருங்கள்.

இப்படி தங்களையே எரித்து சாம்பலாவதற்குத்தான் நிரந்தர தொழிலாளர்களுக்கு 10 முதல் 12 ஆயிரம் ரூபாயும், பயிற்சியாளர்களுக்கு 7 ஆயிரம் ரூபாயும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 4 முதல் 5 ஆயிரமும் சம்பளமாக தரப்படுகிறது. ‘வேகமும் கட்டுப்பாடும்’ மாருதி சுசுகி காரின் அடையாளம் மட்டுமல்ல, மாருதி சுசுகி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீது கட்டாயமாக சுமத்தப்பட்ட அடிமை ஒப்பந்தமும் கூட.

இந்த இடத்தில் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். ஷிப்டுக்கு 600 கார்கள் என்பது சராசரி அளவுதான். இதுவே உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என நிர்வாகம் முடிவு செய்தால், இந்த 45 விநாடிகள் என்னும் எண்ணிக்கை மேலும் குறைக்கப்படும். அதாவது 27 ஆயிரம் விநாடிகளில் ஓய்வுக்காகவும், ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் ‘பெரிய மனதுடன்’ ஒதுக்கப்பட்ட 180 விநாடிகளும் நிர்வாகத்தால் களவாடப்படும்.

இப்படி தொழிலாளர்களை சக்கையாக உறிந்துதான் இந்திய சந்தையின் கார் விற்பனையில் மாருதி சுசுகி முதல் இடத்தில் இருக்கிறது. வருடந்தோறும் இந்நிறுவனத்துக்கு கிடைக்கும் லாபம், இரு மடங்கு, மும்மடங்கு என அதிகரித்து வருகிறது. ஆனால், தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வோ, சலுகைகளோ வழங்கப்படவேயில்லை. பதிலாக உற்பத்தியின் எண்ணிக்கை மட்டும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அதிகரிக்கப்படுகிறது. இந்த ‘டார்கெட்’டை அடையும்படி தொழிலாளர்கள் டார்ச்சர் செய்யப்படுகிறார்கள்.

இதனால் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு மாதமும் அத்தொழிலாளர்கள் தங்களுடன் சம்பளத்தை மட்டும் எடுத்துச் செல்வதில்லை. மன அழுத்தத்தையும், உடல் சோர்வையும் சேர்த்தே சுமந்து செல்கிறார்கள்.

இவர்களது பிரச்னைகளை பேசித் தீர்க்க மானேசரில் வலுவான சங்கம் இல்லை. 1980களில் குர்கானில் தொடங்கப்பட்ட மாருதி உத்யோக் நிறுவனத்தில் ஏற்கனவே ‘மாருதி உத்யோக் தொழிலாளர் சங்கம்’ இருக்கிறது. மாருதி நிர்வாகமே உருவாக்கிய இந்த எடுபிடி சங்கமே மானேசரில் உள்ள இரண்டாவது கார் பிரிவு தொழிற்சாலைக்கும் பொருந்தும் என நிர்வாகம் திட்டவட்டமாக சொல்லிவிட்டது.

அப்படியானால், குர்கானில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு என்ன சம்பளமோ அதையே எங்களுக்கும் தர வேண்டியதுதானே… அவர்கள் உற்பத்தி செய்யும் கார்களை விட அதிகளவில் உற்பத்தி செய்யும்படி எங்களை ஏன் கசக்கிப் பிழிகிறீர்கள் என்று மானேசரில் உள்ள மாருதி சுசுகி தொழிலாளர்கள் கேட்ட கேள்விக்கு நிர்வாகம் பதிலளிக்கவில்லை.

மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும் !

எனவே மானேசர் தொழிலாளர்கள் எந்தக் கட்சியையும் சாராத ஒரு தொழிற்சங்கத்தைக் கட்ட முயன்றனர். கடந்த ஜூன் மாதம், ‘மாருதி சுசுகி பணியாளர் சங்கம்’ (மாருதி சுசுகி எம்ப்ளாயீஸ் யூனியன்) என்னும் பெயரில் சங்கத்தை தொடங்கி, அதனை பதிவு செய்வதற்காக 11 தொழிலாளர்கள் சண்டிகரில் உள்ள தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளை சந்தித்து ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

ஆனால், முதலாளிகளின் எடுபிடிகளாக மாறிவிட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், தொழிற்சங்கம் தொடங்குவதற்காக அளிக்கப்பட்ட ஆவணங்களின் நகலை உடனடியாக மாருதி நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்தார்கள். அதைப் பார்த்து ஆவேசம் அடைந்த நிர்வாகம், ஜூன் 3 அன்று தொழிற்சாலைக்கு வந்த தொழிலாளர்களை விசாரித்து, ‘சங்கம் தொடங்கி அதை பதிவு செய்யச் சென்ற மாபெரும் குற்றத்துக்காக’ 11 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்தது.

1926-ம் ஆண்டு தொழிற்சங்க சட்டத்தின்படி, 7 அல்லது அதற்கு மேற்பட்டோர் ஒன்றாகச் சேர்ந்தாலே சங்கம் கட்டும் உரிமையும், அவர்களின் குறைகளைப் பேசித் தீர்வு காணும் உரிமையும் தரப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் ஏட்டளவிலேயே இருப்பதற்கு மானேசர் மாருதி சுசுகி நிறுவனம் நடந்துக் கொண்டது ஓர் உதாரணம்.

நிர்வாகத்தின் இந்த அடாவடித்தனத்தை எதிர்த்து ஜூன் 4 அன்று மானேசர் மாருதி சுசுகி தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். முறைப்படி முன்னறிவிப்பு கொடுக்காத வேலை நிறுத்தம் என்னும் காரணத்தை காட்டி இந்த வேலை நிறுத்தத்தை சட்ட விரோதம் என அரசும், மாருதி சுசுகி நிறுவனமும் அறிவித்தன. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால், இன்னும் பல ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வே தரமாட்டோம் என மிரட்டின.

இதற்கெல்லாம் அசராமல் மானேசர் மாருதி சுசுகி தொழிலாளர்கள் உறுதியுடன் போராடினார்கள். தங்கள் சங்கத்துக்கு அங்கீகாரம் வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார்கள். நிர்வாகம் தனது எடுபிடி சங்கத்தின் வலிமையை காட்டுவதற்காக 11 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிற்சங்க தேர்தலை நடத்தியது. அதை ஒட்டுமொத்த தொழிலாளர்களும் புறக்கணித்தார்கள்.

மாருதி நிர்வாகத்துக்கு எதிராக தொழிலாளர்கள் இப்போது முதல்முறையாக போராடவில்லை. ஏற்கனவே 2000-ம் ஆண்டில் நடந்த நீண்ட போராட்டம், நிர்வாகத்தால் கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்கிறது. பல நிரந்தர தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 2005-ல் ஹோண்டா தொழிலாளர்கள் போராடிய போது, அரசும் நிர்வாகமும் குண்டர் படையின் உதவியுடன் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. 2009-ல் ரிகோ ஆட்டோ நிறுவனத்தின் தொழிலாளர்கள், தொழிற்சங்க உரிமைக்காக தொடர்ந்து ஒரு மாதம் போராடி அடக்குமுறைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இந்த முந்தைய வரலாற்றிலிருந்து படிப்பினைகளை கற்றுக் கொண்டு மாருதி சுசுகி தொழிலாளர்கள் போராடியதுதான் சிறப்புக்குரிய அம்சம். இப்போராட்டத்தை ஆதரித்து ஹோண்டா மோட்டார் சைக்கிள் தொழிலாளர் சங்கம் உட்பட பல சங்கங்கள் திரண்டன. மானேசர் மட்டுமின்றி ரேவாரி மாவட்டத்திலுள்ள தாரு ஹோரா தொழிற்பேட்டை முதல் குர்கான் வரையிலான அனைத்து தொழிலாளர்களின் சங்கங்களையும் தங்களுக்கு ஆதரவாக மாருதி சுசுகி தொழிலாளர்கள் திரட்டினார்கள்.

இதனால் அரியானா மாநிலமே பற்றி எரிந்தது. ஆனால், எந்தவொரு தேசிய காட்சி ஊடகத்திலும் இப்போராட்டம் குறித்த விரிவான தகவல்கள், செய்திகள் வரவில்லை. இத்தனைக்கும் தில்லியிலிருந்து ஒரு மணி நேரத்துக்கும் குறைவான பயணத்தில் மானேசரை அடைந்து விடலாம். என்றாலும் ஊடகங்கள் இந்த எழுச்சிமிகு போராட்டத்தை புறக்கணித்தன. காரணம், செய்தி வெளியிட்டால் மாருதி சுசுகி விளம்பரம் கொடுக்காது. விளம்பர வருவாய் இல்லாவிட்டால் ஊடகத்தை நடத்த முடியாது. எனவே மாருதி சுசுகி நிறுவனத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. அங்கு ‘முப்போகமும் விளைவதாக’ செய்திகளை வெளியிட்டன.

ஆனால், ஊடகங்களை போல் மாநில முதல்வரால் இந்த எழுச்சிமிகு போராட்டத்தை புறக்கணித்து மவுனமாக இருக்க முடியாதே? எனவே அரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, இரு தரப்பையும் அழைத்து பேசினார். மானேசர் மாருதி சுசுகி நிர்வாக இயக்குநர் சின்ஜோ நகானிசி உள்ளிட்ட உயரதிகாரிகளும், தொழிலாளர்களின் பிரதிநிதிகளும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். இதனையடுத்து 13 நாட்கள் நடைபெற்ற போராட்டம், ஜூன் 16 அன்று முடிவுக்கு வந்தது.

மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்! “இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. பணிநீக்கம் செய்யப்பட்ட 11 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த மாருதி சுசுகி நிர்வாகம் ஒப்புக்கொண்டது. எனவே வேலைநிறுத்தத்தை கைவிட தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். சனிக்கிழமை முதல் (ஜூன் 18 முதல்) அவர்கள் பணிக்குத் திரும்புவார்கள்” என்று மாநிலத் தொழிலாளர் நலத்துறைச் செயலர் சர்பன் சிங் அறிவித்தார்.

ஆனால், புதிய தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்குவது என்ற முக்கிய கோரிக்கை தொடர்பாக உடன்பாட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. “புதிய தொழிற்சங்கம் அமைப்பதில் ஆலை நிர்வாகத்துக்கு எவ்வித பங்கும் இல்லாததால், உடன்பாட்டில் 2-வது தொழிற்சங்கம் அமைப்பது குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. அரியானா மாநில தொழிலாளர் நலத் துறையிடம் எங்களது தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வதற்காக கடந்த ஜூன் 3-ம் தேதி விண்ணப்பம் அளித்தோம். இதற்கு அனுமதி கிடைத்தவுடன் எங்களது சங்கம் செயல்படத் தொடங்கும்” என்று புதிதாகத் தொடங்கப்பட்ட மாருதி சுசுகி தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் சிவகுமார் நம்பிக்கையுடன் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

“தொடர் வேலைநிறுத்தம் காரணமாக, இந்த மாதம் ஏற்பட்ட உற்பத்தி இழப்பை ஈடுகட்டுவதற்கு தொடர்ந்து வேலை செய்வோம்…” என தொழிலாளர்கள் வாக்குறுதி அளித்தனர். அதன்படியே 13 நாட்கள் இழப்பை ஈடுகட்ட உழைத்தனர்.

ஆனால், மாருதி சுசுகி நிர்வாகம், தான் அளித்த வாக்குறுதிகளை மீறியது. ஜூலை மாதம் முழுக்க சங்கத்தை பதிவு செய்வதற்காக சண்டிகர் சென்ற 11 தொழிலாளர்களையும் குறி வைத்து தாக்கியது. ‘ஜூலை மாதம் முழுக்க தொழிலாளர்கள் மந்தமாக வேலை செய்தனர்…’ என குற்றம் சாட்டியது. புதிய சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்க மறுத்தது. இதனால் நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையிலான பிரச்னை முற்றத் தொடங்கியது.

இந்நிலையில்தான் ஆகஸ்ட் மாதம் பிறந்தது. ‘ஃப்ரெஷ் பீஸ்’ புனிதரும், மாபெரும் குணசித்திர நடிகருமான அண்ணா ஹசாரே, தில்லி ராம் லீலா மைதானத்தில், அரசின் ஏற்பாட்டில், அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்.

இதை வேடிக்கை பார்ப்பதற்காக சில தொழிலாளர்கள் சென்றார்கள். இதை எப்படியோ மோப்பம் பிடித்த நிர்வாகம், அந்தத் தொழிலாளர்களை அழைத்து மிரட்டியதுடன் ‘முன்பே அடையாளம்’ காணப்பட்ட 11 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்தது. அத்துடன் 38 தொழிலாளர்களை ஆகஸ்ட் 29 அன்று சஸ்பெண்ட் செய்தது.

இதனையடுத்து தொழிலாளர்கள் அணி திரண்டு மீண்டும் போராட ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போராட்டத்தை ஒடுக்க நிர்வாகமும் முயன்று வருகிறது. அனைத்து தொழிலாளர்களும் கட்டாயமாக ‘Good Conduct form’ல் கட்டாயமாக கையெழுத்திட வேண்டுமென்று இப்போது நிர்வாகம் கட்டளையிடுகிறது. ஆனால், ‘இப்படியொரு படிவமே தேவையில்லாதபோது நாங்கள் எதற்காக கையெழுத்திட வேண்டும்? எங்கள் சுயமரியாதையை அடகு வைக்க முடியாது’ என்று தொழிலாளர்கள் கம்பீரமாக மறுத்து விட்டனர்.

இந்நிலையில் செப்டம்பர் 8 அன்று ‘தொழிலாளர்களுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை…’ என்று மாருதி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பர்கவா திமிருடன் பேசியிருக்கிறார். இதற்கு ஜப்பானில் உள்ள சுசுகி நிர்வாக தலைவர் ஒசாமு சுசுகி ஆதரவு தெரிவித்துள்ளதுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார். தில்லியில் நடைபெற்ற மாருதி நிறுவனத்தின் 30வது ஆண்டு பங்குதாரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒசாமு சுசுகி, “தொழிற்சாலைக்குள் தொழிலாளர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதை அனுமதிக்க முடியாது. அது ஜப்பானாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி. யாராக இருந்தாலும் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதை அனுமதிக்க முடியாது. எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல அமெரிக்கா சிலாகிக்கும் ‘நிர்வாகப் புகழ்’ இந்துமத பயங்கரவாதி மோடியின் குஜராத்தில், மாருதியின் ஒரு பிரிவை தொடங்கவும் ஒசாமு பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

அடக்குமுறைக்கும், தொழிலாளர்களை கசக்கிப் பிழியவும் குஜராத் முதல்வரான இந்த இந்துமத பயங்கரவாதி பொருத்தமானவன்தான். அதற்கு குஜராத் மாநிலம் ஹலோல் என்ற இடத்தில் அமைந்துள்ள சிறப்பு பொருளாத மண்டலமே சாட்சி. இங்குள்ள ஜெனரல் மோட்டார்ஸ் என்னும் பன்னாட்டு நிறுவனத்தில், செவ்ரோலெட் உள்ளிட்ட பல நவீன கார்கள், இறக்குமதி செய்யப்பட்ட உதிரிகளை வைத்து தயார் செய்யப்படுகிறது.  இந்த தொழிற்சாலையில் கார்கள் தயாரிக்கும் பணியில் சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் கணக்கில் அடங்காதவை.

எனவே மாருதி சுசுகியின் மற்றொரு கிளை தொழிற்சாலையை இந்த மாநிலத்தில் நிறுவ ஒசாமு சுசுகி பேச்சு வார்த்தை நடத்துவதில் வியப்பொன்றும் இல்லை.

மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்! ஒசாமு சுசுகியின் அடாவடித்தனமான பேச்சும் நடவடிக்கையும் ஒரு விஷயத்தை அழுத்துமாக உணர்த்துகிறது. அது, ஏகாதிபத்தியங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தேசம், நாடு, கொலைக்காரன், கொள்ளைக்காரன், மத பயங்கரவாதி என்பதெல்லாம் முக்கியமில்லை. நிதிமூலதனமும், நிதிமூலதன பெருக்கமும்தான் முக்கியம்.

ஆனால், ஏகாதிபத்தியத்தின் ஏவலாகவும், அடிவருடியாகவும் தரகு முதலாளிகள் வேண்டுமானால் இருக்கலாம். வர்க்க ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து கிளர்ந்து எழும் உழைக்கும் மக்கள் என்றுமே ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்துக்கு தலைமை வகித்து நிற்பார்கள். எந்த அடக்குமுறைக்கும் அடி பணிய மாட்டார்கள்.

இந்த உண்மையைத்தான் மானேசர் மாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டாவது பிரிவு கார் தொழிற்சாலையின் தொழிலாளர்கள், தங்கள் வட்டாரத்திலுள்ள அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து போராடுவதன் மூலம் இந்திய உழைக்கும் மக்களுக்கு அறிவித்திருக்கிறார்கள்.

சமரசத்துக்கு அடிபணியாமல் போராடும் அத்தொழிலாளர்களுக்கு புரட்சிகர நல்வாழ்த்துகள்.

______________________________________________

அறிவுச் செல்வன்

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

அமெரிக்க சொர்க்கத்தில் ஆறில் ஒருவர் ஏழை!

24

ஹாலிவுட் படங்களில் டெக்னாலாஜியை வைத்து மிரட்டுவதாக இருக்கட்டும், பின்லேடனை பறந்து போய் கொன்ற ஆக்சன் த்ரில்லராக இருக்கட்டும், மென்பொருள் துறையில் ஆதிக்கம் செய்வதாக இருக்கட்டும், உலகெங்கும் கடன் வாங்கி தின்று தீர்ப்பதாக இருக்கட்டும்…. எல்லாவற்றிலும் விண்ணைத் தொடும் அமெரிக்காவில்தான் ஏழைகள் அதிகமாம்! அதாவது வளர்ந்த நாடுகளில் அதிகம் ஏழைகள் வசிக்கும் நாடு அமெரிக்கா!

அமெரிக்க சென்சஸ் துறையின் வருடாந்திர அறிக்கை சென்ற செவ்வாய்க்கிழமை 13.09.2011 அன்று வெளியிடப்பட்டது. அமெரிக்க அரசுத்துறையே வெளியிட்டிருப்பதனால் ஆதாரம் கேட்கும் அம்பிகள் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும்.

முதலில் இரண்டாவது வருடமாக வேலையில்லாத் திண்டாட்டம் ஒன்பது சதவீதத்திற்கும் மேல் தொடருகிறது. அதாவது வேலை செய்யும் திறன் கொண்டவர்களில் பத்தில் ஒருவருக்கு வேலை இல்லை. அமெரிக்க அளவுப்படி ஏழ்மை அல்லது வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் வருடத்திற்கு 22,314 டாலர் அல்லது 10,26,444 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள். பத்து இலட்சம் சம்பாதித்தும் ஏழையா என்று கேட்காதீர்கள். அமெரிக்க வாழ்க்கைத் தரப்படி இந்த பத்து இலட்சம் என்பது அங்கே ஒரு இலட்சத்திற்கு சமம். இந்த அளவு கோலின்படி அமெரிக்காவில் இருக்கும் ஏழைகள் 4 கோடியே 62 இலட்சம் பேர். அல்லது அமெரிக்க மக்கள் தொகையில் 15.1% விழுக்காடு. அதாவது ஆறில் ஒரு அமெரிக்கன் ஏழை!.

இந்த ஏழைகளின் சதவீதம் சென்ற ஆண்டில் 14.3% ஆக இருந்தது. இந்த வருடம் ஏறியிருக்கிறது. 1980க்குப் பிறகு ஏழைகளின் சதவீதம் இவ்வளவு வேகத்தில் ஏறியிருப்பது இப்போதுதானாம். வேலை இன்மை, பணவீக்கம், என்று பல்வேறு காரணங்களால் ஏழைகள் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறார்கள். இப்படி வருட சென்சஸ் ஆரம்பித்த பிறகு 1959-ம் வருடத்திற்கு பின் இந்த அளவு அதிக எண்ணிக்கையை இப்போதுதான் தொட்டிருக்கிறார்களாம். வாழ்த்துக்கள்!

மிசிசிபி மாநிலத்தில் மட்டும் 22.7% பேர் ஏழைகள். இந்த மாநிலத்தை தொடர்ந்து லூசியானா, கொலம்பியா மாவட்டம், ஜார்ஜியா, நியு மெக்சிகோ, அரிசோனா போன்ற மாநிலங்களிலும் அதிக ஏழைகள் வாழ்கின்றனர் இல்லை வாழ முடியாமல் வதைபடுகின்றனர்.

அமெரிக்க ஏழைகளில் கருப்பர்களும், ஹிஸ்பானியர்களும் சேர்ந்து 54% இருக்கிறார்கள். வெள்ளையர்கள் 9.9%மும், ஆசியர்கள் 12.1% பேரும் ஏழைகள். இதைக்கேட்டால் நமது மிடில்கிளாஸ் மாதவன்கள் கருப்பர்கள் ஒழுங்காக பள்ளிக்கு சென்று படிக்காததன் விளைவு என்று கூசாமல் உபதேசிப்பார்கள்.

மேலும் காப்பீடு இல்லாமல் வாழும் அமெரிக்கர்களின் சதவீதம் 16.3 ஆகும். இதன்படி கிட்டத்தட்ட ஐந்து கோடி அமெரிக்கர்கள் காப்பீடு இல்லாமல் வாழ்கின்றனர். அமெரிக்காவில் மருத்துவம் பார்ப்பதற்கு இந்தக் காப்பீடு கண்டிப்பாக வேண்டும். அந்தபடிக்கு பார்த்தால் இந்த ஐந்து கோடி அமெரிக்கர்களுக்கும் நோய் வந்தால் எமலோகம் நிச்சயம்.

தற்போது சோமாலியாவில் பட்டினிச்சாவை எதிர்நோக்கி இருக்கம் மக்களுக்காக மேற்குலக ஊடகங்கள் மக்களிடம் காணிக்கை போடுமாறு கேட்டு வருகின்றன. இனி அந்த கோரிக்கை அமெரிக்க மக்களுக்காகவும் இருக்குமோ? மைனர் சாயம் வெளுத்துப்போச்சு டும் டும் டும்!

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

குண்டுவெடிப்பு குறித்து நிரபராதி அப்சல் குருவின் அறிக்கை!

அப்சல் குரு
அப்சல் குரு

நண்பர்களே,

திகார் சிறையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் காஷ்மீரத்து அப்பாவி அப்சல்குருவின் வழக்கறிஞர் அனுப்பிய ஊடகச் செய்தி அறிக்கையை இங்கு மொழிபெயர்த்து தருகிறோம். கூடவே டெல்லி உயர்நீதிமன்ற குண்டு வெடிப்பை கண்டித்தும், சம்பந்தமே இல்லாமல் அவரது பெயர் இழுக்கப்பட்டிருப்பது குறித்தும் அப்சல் குரு அவரது வழக்கறிஞர் பஞ்சொலி மூலம் வெளியிட்டிருக்கும் அறிக்கையும் தரப்பட்டிருக்கின்றது.

மூவர் தூக்கு குறித்து அதிகம் அறிந்த தமிழகத்தில் அப்சல் குருவின் நியாயம் பலருக்கும் தெரியாது. பாராளுமன்றத் தாக்குதலில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதும், அத்தகைய ஆதாரங்கள் ஒன்று கூட இல்லாத நிலையில் ‘தேசத்தின் மனசாட்சியை’ திருப்திப் படுத்துவதற்க்காக அவருக்கு மரண தண்டனை அளிப்பதாக வெட்கம் கெட்ட உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும் பாராளுமன்றத் தாக்குதல் நிச்சயமாக இந்திய உளவுத்துறையின் சதி நடவடிக்கை என்பதை பல மனித உரிமை அமைப்புகள் உரிய காரணங்களுடன் முன்வைத்திருக்கின்றனர். இதை உண்மையாக விசாரித்துப் பார்த்தால் அன்று இருந்த பா.ஜ.க அரசும், உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுவார்கள். அதை மறைக்கவே இந்துத்வா கும்பல் அப்சல் குருவை அதிவிரைவாக தூக்கிலட வேண்டும் என்று துடிக்கிறது. காங்கிரசு அரசு அதற்கு ஒத்தூதுகிறது.

இதை காஷ்மீரத்து மக்கள் அறிவார்கள். ஒரு வேளை அப்சல் குரு அநியாயமாகத் தூக்கிலடப்பட்டால் காஷ்மீர் மீண்டும் தீப்பிடித்து எரியும். இதற்காக மட்டும்தான் ஆளும் வர்க்கங்கள் கொஞ்சம் தயங்குகின்றன. ஆனால் காஷ்மீரத்திற்கு வெளியே இது மக்கள் போராட்டமாக பரிணமிக்கவில்லை என்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும், வேதனைப்பட வேண்டும். பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் அப்சல் குருவின் நியாயத்திற்காக தங்களது குரலை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன்

வினவு

_____________________________________________________

என்.டி.பஞ்சொலி,

வழக்கறிஞர், ஜி 3/617 ஷாலிமார் கார்டன் விரிவாக்கம் 1

ஷஹிபாபாத், காஜியாபாத் (உ.பி) 201005

ஏன் அப்சல் குரு தூக்கிலிடப்படக்கூடாது?

அப்சல் குரு
அப்சல் குரு

முகமது அப்சல் குருவின் வழக்கறிஞா் என்ற அடிப்படையிலும், கூடவே மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் உறுப்பினா் என்ற அடிப்படையிலும், நான் இத்துடன் அப்சல் குரு விடுத்த அறிக்கை நகலை இணைத்துள்ளேன்.

இந்திய பாராளுமன்றம் தாக்கப்பட்டது என்பது கண்டனத்துக்குரியது என்பதிலோ, அது எந்த அடிப்படையிலும் நியாயப்படுத்த இயலாத செயல் என்பதிலும் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் அந்த குற்றம் குறித்த மொத்த புலனாய்வு நடைபெறும் வழிமுறையில், விதத்தில் பல கேள்விகள் முன் நிற்கின்றன.  மேலும் எவ்வாறு துவக்க நிலை விசாரணையே துவங்காத நிலையில் மின்னணு ஊடகங்கள், குற்றம் சாட்டப்பட்டவரின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது போல் சித்தரித்து அவரை கொன்றேயாக வேண்டும் எனுமளவிற்கு எவ்வாறு ஒலிபரப்ப இயலும்?

மேலும் மீண்டும் ஒரு பயங்கரமான குண்டு வெடிப்பு சம்பவம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் 7 செப் 2011-ல் நடைபெற்று பல உயிர்கள் பலியான சில மணிகளில், அப்சல் குருவின் பெயர் இதில் இழுக்கப்பட்டிருக்கிறது.  ஊடகங்கள் மின்னஞ்சல் ஒன்றை குறிப்பிட்டு அதன் உண்மைத் தன்மை நிறுவப்படாத சூழலிலேயே, முக்கியமான நேர ஒலி/ஒளி பரப்புகளில் குண்டுவெடிப்பு என்பது அப்சல் குருவிற்கு ஆதரவாக உள்ள குழுவினால் ஏற்பட்டது போல் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் ஊடகங்கள் என்பது யாருக்கும் கட்டுப்படாத ஒன்றாகும்.  மேலும் 24 மணி நேர தொலைக்காட்சி ஒளிபரப்புகளை மேற்கொள்கிற அத்தகைய ஊடகங்களின் செயல்பாடு, அடிப்படையான பத்திரிகை தர்மத்தை மீறுகிற செயல்களை திறம்பட கண்காணிக்க அதிகார அமைப்பு ஏதுமில்லை. அத்தகைய ஊடகங்களில் நடைபெறுகிற அனைத்து விவாத நிகழ்ச்சிகளும், நிலைத்திருக்கக் கூடிய கருத்திற்கு முரணாக யார் ஒருவர் மாறாக கருத்து சொன்னாலும் அதை எதிர்த்து மிகுதியான கருத்து திணிக்கப்பட்டு ஒலிபரப்பப்படுகிறது. மின்னணு ஊடகங்களெல்லாம் மிக உரக்க ஊழலுக்கு எதிராக பேசிய போதிலும், எந்தவித பொறுப்புமின்றி அதிகாரத்தோடு அத்தகைய ஊடகங்கள் தாம் செய்து வரும் ஊழலை ஒருபோதும் உணர்ந்து பார்ப்பதில்லை.

ஊடகத்தின் முன்பாக யாரேனும் அப்சல் குருவிற்கு சாதகமாக பேசினால் அவர் இந்தியனுக்கெதிராக பேசுபவர் எனவும், தேசிய பாதுகாப்பு வல்லுனர்கள் சொல்லும் தேசப்பற்று என்பது நிலையாக நிற்கக் கூடிய கார்ப்பரேட் ஊடகங்களுக்கும் மற்றும் இந்து மத உரிமை பேசுபவர்களுக்கு மட்டுமே உரித்தானது போல் சித்தரிக்கப்படுகிறது.

நமது “அப்சல் குருவை காப்பாற்றுங்கள்” என்கிற பிரச்சாரம் இந்திய ஜனநாயகத்தில் கீழ்காணும் அம்சங்களை பிரதிபலிக்கிறது.

  1. புலனாய்வு அமைப்புகளில் நிலவி வரும் ஊழல் மற்றும் அவர்களிடம் தொழில் திறமை குறைவாக இருப்பது அம்பலப்படுத்தப்படுகிறது.  பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் புலனாய்வு அதிகாரியாக செயல்பட்டவர் பலமுறை புகழ்ந்து பேசப்பட்டார்.  ஆனால் பின்னர் கோடிக்கணக்கான பணம் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் பரிமாற்றங்களில் அவருக்கிருந்த நிழலான மோசமான தொடர்புகள் காரணமாக அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.  அப்சலை தூக்கிலிடுவதன் மூலம் சிறப்பு பிரிவில் செயலாற்றும் காவலர்களின் ஊழல்களிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பிவிடலாம்.
  2. நீதித்துறை என்பது அரசியலமைப்பு சட்ட நிலை, மற்றும் சட்ட நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டு ஊடகங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் விளைவாக உச்ச நீதிமன்றம் “இந்த நாட்டின் தேசிய மனச்சாட்சியை திருப்திப் படுத்துவதற்காக” தூக்கு தண்டனையை உறுதிப்படுத்துகிறது. எந்த ஒரு நபரின் இறப்பு குறித்த தண்டனையை முடிவு செய்யும் சட்ட அடிப்படை இங்கு கிடையாது. அப்சல் தூக்கிலிடப்பட்டால் அது எந்த ஒரு இந்தியனும் இந்திய உரிமைக் குழுக்கள் அல்லது கார்ப்பரேட் நலனை திருப்திப் படுத்துவதற்காக தூக்கிலிடப்படலாம் என்றாகிவிடும்.
  3. பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் திட்டத்தின் பிரதம மூளை என்ற அடிப்படையில் மெளலானா மசூத் அசார்,காஜிபாபா மற்றும் தாரிக் அகமது என்ற 3 பாக்கிஸ்தானியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு குற்றக் குறிப்பாணை பதிவு செய்யப்பட்டது.  அத்தகைய பிரதம மூளையாக செயல்பட்டவர்கள் பிடிக்கப் படவில்லை.  கொலை நடவடிக்கையில் நிதர்சனமாக ஈடுபட்டவர்கள் இறந்து விட்டனர்.  எனவே சதிச்செயலில் ஒரு பங்கு அப்சலுக்கு உண்டு என கருதப்படினும் அவருக்கு தலைமை தண்டனையான தூக்கு தண்டனை வழங்கப்படக் கூடாது. ஏனேனில் அவர் குறிப்பிட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்படவும் இல்லை, தாக்குதலில் ஈடுபடவும் இல்லை.  அப்சலை தூக்கிலிடுவதன் மூலம் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொறுப்பு என்பதும், தீவிரவாதத்திற்கு உண்மை காரணம் என்னவென்று கண்டறியும் நடவடிக்கையும் புறந்தள்ளப்பட்டுவிடும்.
  4. மனித உரிமை ஆர்வலர்கள் இது தொடர்பாக கைதான இருவர் ஒன்றும் அறிந்திராதவர்கள் என நிரூபித்துள்ளனர்.  இதில் கருவுற்றிருந்து சிறையில் குழந்தையை பெற்றெடுத்த ஒரு சீக்கிய பெண்ணும் அடக்கம். அவளது வாழ்வு முழுமையாக பழிவாங்கப்பட்டுவிட்டது.  நாம் எப்போதும் அவளை தொலைக்காட்சிகளில் கண்டதில்லை, என்பதுடன் அவளின் பயங்கரமான சோகமயமான வாழ்க்கையையும் கண்டதில்லை.  இது எவ்வாறு சில குடிமக்கள் கைவிடப்படுகிறார்கள் என்பதை காண்பிக்கிறது.
  5. டெல்லியிலும் நாட்டின் பிற பகுதியிலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நியாயமாக ஒன்றுபட்ட ஆதரவு காண்பிப்பதை காஷ்மீர மக்கள் பார்க்கின்றனர்.  அப்சலை தூக்கிலிடுவதென்பது அத்தகைய காஷ்மீர மக்களுக்கும், இதர இந்திய பகுதி மக்களுக்கும் இடையே நிலவிவரும் உணர்வு பூர்வமான பாலம் உடைந்துவிட ஏதுவாகும்.
  6. அப்சல் குருவிடம் எப்போதும் நியாயமான விசாரணை நடத்தப்படவில்லை. மேலும், அவருக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராக முன்வராததால், அவர் வழக்கறிஞர் மூலம் தனது தரப்பை தெரிவிக்க இயலவில்லை. மிக முக்கியமான சாட்சியங்கள் கூட குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. அப்சலை தூக்கிலிடுவதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒவ்வொருவருக்கும் உறுதியளிக்கப்பட்டுள்ள நியாயமான விசாரணை என்ற உரிமையை நாம் குறைத்து மதிப்பிடுவதாக ஆகிவிடும்.
  7. பாராளுமன்ற தாக்குதல் வழக்கின் முழுமையான அனுபவம் என்பது நமது ஜனநாயக நிறுவனங்களின் பலவீனத்தை காட்டுவதாக உள்ளது. அதே சமயம் அது குறிப்பிட்ட சில மெனக்கெடும் ஆர்வலர் குழுக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஜனநாயக உரிமைக்காக போராட துணிந்தால் அதற்கு இடமளிப்பதும் சாத்தியப்படும் என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அப்சல் தூக்கிலிடப்பட்டால் அந்த இடம் என்பது குற்றத் தீர்ப்பிற்குள்ளாகிவிடும்.  இந்துத்வா தீவிரவாதிகள் வெடிகள் வெடித்து கொண்டாடலாம், கார்ப்பரேட் ஊடகங்களுக்கு சில தினங்களுக்கு தொடர்ந்து ஒலிபரப்ப நாடக காட்சிகள் கிடைக்கலாம். ஆனால் இந்திய ஜனநாயகம் என்பது வெடித்து சிதறுவதாக ஆகிவிடும். எனவே தான் அப்சல் குரு தூக்கிலிடப்படக்கூடாது.
  8. நான் இத்துடன் அப்சலின் பத்திரிக்கை செய்தி அறிக்கை நகல் ஒன்றை இணைத்துள்ளேன்.  அவர் வேண்டுகையின்படி அது பிரசுரிக்கப்பட்டால் அவர் மீது தவறான கருத்துக் கொண்டிருக்கும் மக்களில் பலர் அவரின் குரலைக் கேட்க முடியும்.

– என்டி பஞ்சொலி,  வழக்கறிஞர், 09 செப் 2011

 அப்சல் குருவின் பத்திரிகை செய்திக் குறிப்பு:

 சில தீய சக்திகள் மற்றும் சமூக விரோத நபர்கள் டெல்லி நீதிமன்ற வளாகத்தில் கடுங்கொடிய மற்றும் பதைபதைக்க வைக்கும் குண்டு வெடிப்பு என்ற சம்பவத்தை மேற்கொண்டிருப்பது மிகவும் கவலைப்படக் கூடிய செயலாகும்.  அந்த கொடுஞ்செயல் அனைவராலும் கண்டிக்கத்தக்க செயலாகும்.  எந்த ஒரு மதமும் அப்பாவி மக்களை கொல்வதை அனுமதிப்பதில்லை.  எனது பெயர் இதில் சம்பந்தமில்லாமல், தேவையில்லாமல் இழுத்தடிப்பது அறிந்து நான் மிகவும் துயருற்றுள்ளேன். சில தரகர்கள்/குழுக்கள் அசிங்கமான ஆட்டத்தை ஆடி என்பெயரை இதில் ஈடுபடுத்துகின்றனர்.  மிகக்கொடுமையான குற்றங்கள் நடைபெறும் போது சில தவறான நோக்கமுள்ள குழுக்கள் என் பெயரை வேண்டுமென்றே இழுப்பது என்பது இது முதல்தடவையல்ல. எப்போதெல்லாம் நாட்டில் குண்டு வெடிப்புகள் நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் என் பெயரை வேண்டுமென்றே அடிபடச் செய்வதன் மூலம் என் மீது களங்கம் விளைவிக்கவும், எனக்கு எதிரான பொதுக் கருத்தை வலுப்படுத்துவதற்காகவும் இவ்வாறு செய்யப்படுகிறது.

 நான் இதை எனது வழக்கறிஞர் திரு என்டி பஞ்சொலி மூலம் இதை எனது பத்திரிகை செய்திக் குறிப்பாக அனுப்பியுள்ளேன்.  தயவு செய்து இதை பிரசுரிக்கவும்.

 (ஒ-ம்) அப்சல் குரு

த/பெ: அபிபுல்லா

பகுதி எண் 8, சிறை எண் 3

திஹார் சிறைச்சாலை

___________________________________________________

– தமிழாக்கம்: சித்ரகுப்தன்

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்