தொடர்ந்து எச்சரிக்கும் சூழலியலாளர்கள், மதிக்காத ஒன்றிய – மாநில அரசுகள்!
2011-இல் ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட சூழலியலாளர் மாதவ் காட்கில் தலைமையிலான “மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு” (WGEEP), 1,29,037 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலையை, அதாவது 75 சதவிகித பகுதியை, சுற்றுச்சூழல் கூருணர்வு மண்டலமாக (Eco-Sensitive Zone) அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
டெல்லி: தனியார் பயிற்சி மையத்தின் இலாபவெறியால் 3 மாணவர்கள் படுகொலை!
தனியார் பயிற்சி மையங்கள் மாணவர்களிடம் லட்சக்கணக்கில் கட்டணமாகப் பெற்றுக்கொண்டு முறையான வசதிகள் எதுவும் செய்து கொடுக்காமல் தனது கொள்ளை லாபவெறிக்கு மாணவர்களை சித்திரவதை செய்து வருகின்றன.
வயநாடு நிலச்சரிவு: தோண்டத் தோண்ட உடல்கள்
"காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே அடிப்படை பிரச்சனையை சரிசெய்வதில்தான் கவனம் செலுத்த வேண்டும். அது கேரளா இழந்த வனங்களை மீட்பது, இருக்கும் வனங்களை பாதுகாப்பது” என்கிறார் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் விஞ்ஞானி தன்யா.
மூன்று குற்றவியல் சட்டங்கள்: தமிழ்நாடு – புதுச்சேரி வழக்கறிஞர்கள் டெல்லியில் போராட்டம்
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் மொழி உரிமை, மாநில அரசுகளின் உரிமை, கூட்டாட்சித் தத்துவம், மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானவை.
தடம் புரளும் ரயில்கள்: இவை வெறும் விபத்துகளா?
மேல்தட்டு மக்கள் மட்டும் பயணிக்கும் வந்தே பாரத், கௌரவ பாரத் போன்ற சொகுசு ரயில்களை உருவாக்குவதற்கும், ரயில்களில் ஏசி பெட்டிகளை அதிகப்படுத்துவதற்குமே ஒதுக்கப்படும் நிதி பயன்படுத்தப்படுகிறது.
கேரளா கனமழை: வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு
இதுவரை ஒரு வயது குழந்தை உட்பட 36 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஒன்றிய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான துறைக்கு 0.025 விழுக்காடு நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை புறந்தள்ளும் வகையில் நிதி ஒதுக்கீடு அமைந்துள்ளது.
கன்வார் யாத்திரையில் வன்முறை: முஸ்லிம்களைத் திட்டமிட்டுத் தாக்கும் இந்துத்துவா குண்டர்கள்
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலத்தில் கன்வார் யாத்திரையில் களமிறங்கியுள்ள இந்துத்துவா குண்டர்கள் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
பஞ்சாபில் நடைபெற்ற புதிய மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான மாநாடு!
அருந்ததி ராய் மற்றும் பேராசிரியர் ஷங்கத் ஹூசைன் மீதான வழக்கு, அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு அளிக்கப்பட்ட தண்டனை ஆகியன கருத்து மற்றும் போராட்ட உரிமை மீதான பாசிச தாக்குதல்களாகும்.
மும்பை கனமழை ரெட் அலர்ட்: உழைக்கும் மக்கள் மீதான அடுத்த தாக்குதலுக்கான முன்னறிவிப்பு
கார்ப்பரேட் கொள்ளைக்காக மேற்கொள்ளப்படும் நகரமயமாக்கலில் உழைக்கும் மக்கள் தான் பலியிடப்படுகிறார்கள். உழைக்கும் மக்கள் மீதான அடுத்த தாக்குதலுக்கான முன்னறிவிப்பாகவே தற்போது கொடுக்கப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பை (ரெட் அலர்ட்) பார்க்க வேண்டியுள்ளது.
அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ் குறி வைப்பது ஏன்?
"முஸ்லிம்கள், கிறித்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளாகிய அம்மூவரே பாரத தேசத்தின் பிரதான எதிரிகள்" என வரையறுத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகத்தில் ’சிந்து-சரஸ்வதி நாகரிகம்’: போலி வாட்ஸ் அப் வதந்திகளை உண்மையாக்க எத்தனிக்கும் மோடி அரசு
பா.ஜ.க அரசாங்கம் கோடிகளைக் கொட்டித் தேடியும், சரஸ்வதி நதி என்ற ஒன்று இருந்ததற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவுமே இன்று வரை கிடைக்கவில்லை. சங்கிகளின் ’வாட்ஸ் அப் பல்கலைக்கழக’த்தில் மட்டுமே சரஸ்வதி நதி கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.
கர்நாடகா: வேலை நேரத்தை 14 மணிநேரமாக உயர்த்த முயற்சிக்கும் காங்கிரஸ் அரசு
சட்டத் திருத்தத்தின்மூலம் ஐடி நிறுவன ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரம் (12 மணி நேரம் + 2 மணி நேரம் கூடுதல் பணி) என நிர்ணயம் செய்ய கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது.
இந்தியாவில் 56 சதவிகித மக்களுக்கு மட்டுமே மூன்று வேளை உணவு கிடைக்கும் அவலம்!
இந்தியாவில் பல கோடி பேர் வறுமைக்கோட்டில் இருந்து மீண்டுவிட்டதாக மோடி அரசு கூறிவரும் பொய்கள் அம்பலமாகியுள்ளன.
உ.பி கான்வர் யாத்திரை: நாஜிக்களின் வழிமுறையைப் பின்பற்றும் யோகி
கான்வர் யாத்திரை செல்லும் வழித்தடம் முழுவதும், உணவகங்களின் உரிமையாளர் பெயர் விவரங்களைக் கடைக்கு வெளியே எழுதிவைக்க வேண்டும் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

























