மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு திறமையின் அடையாளமா?
தேசிய தேர்வு முகமை போன்ற ஆணையங்களைக் கலைக்க வேண்டும்; நீட் தேர்வை முற்றிலுமாக இரத்து செய்ய வேண்டும்; கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
மே 22, ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகளின் 8-ஆம் ஆண்டு நினைவுநாள்!
எட்டு வருடங்கள் ஆன பின்னும் கொலையுண்ட தியாகிகளுக்கு உண்மையான நீதி கிடைக்கவில்லை. 15 ஸ்டெர்லைட் தியாகிகளின் இழப்பு நமது நெஞ்சை உலுக்குகிறது. ஆனால், இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் அதிகாரத்தின் தாழ்வாரங்களில் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்.
வணிக சிலிண்டர் விலையேற்றம்: ம.அ.க., பு.ஜ.தொ.மு. கண்டன ஆர்ப்பாட்டம் | ராணிப்பேட்டை
சிலிண்டர் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தாமலும் வணிக சிலிண்டர் விலையை உயர்த்தியும் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் நசுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து, கடந்த மே 16, 2026 அன்று, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆகாஷ் கொட்டடிப் படுகொலை: மதுரையில் ஜனநாயக சக்திகள் ஆர்ப்பாட்டம்
உடனடியாக சி.பி.சி.ஐ.டி. குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யக் கோரியும், முதல் தகவல் அறிக்கையில் திருப்புவனம் ஆய்வாளர் திலீபன், மானாமதுரை சார்பு ஆய்வாளர் குகன் உட்பட 16 போலீசுதுறை கொலையாளிகளின் பெயரைச் சேர்க்கக் கோரியும், அவர்களைக் கைது செய்யக் கோரியும் மதுரையில் உள்ள ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து, கடந்த மே 15, 2026 அன்று காலை 10:30 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாலியல் வன்புணர்ச்சி மையங்கள்: பாலியல் பயங்கரவாதத்தின் புதிய பரிமாணம்
இன்று, இந்த வக்கிரங்கள் கைப்பேசி வழியாக வீட்டின் படுக்கையறைக்கே ஊடுருவியுள்ளன. ஆண்கள் தாங்கள் திரையில் காணும் வக்கிரங்களை நிஜ வாழ்க்கையில் ‘பரிசோதிக்கின்ற’, அதற்கு தங்களது மனைவிகளையே பலியாக்குகின்ற பேரவலம் உருவாகியுள்ளது.
கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் பாசிச மோடி அரசு!
10.25 சதவிகிதம் சர்க்கரைச் சத்து கொண்ட ஒரு டன் கரும்புக்கான சாகுபடி செலவு ரூ.1,820 என்று ஒன்றிய அரசு கணக்கிட்டுள்ளது. ஆனால், ஒரு டன் கரும்பு சாகுபடி செய்ய உண்மையில் ஏறக்குறைய ரூ.3,500 வரை செலவாகிறது என்பதை கரும்பு விவசாயிகளும் உழவர் சங்கங்களும் அம்பலப்படுத்துகின்றன. இம்மோசடியின் மூலம் மோடி அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்குகிறது.
மாணவர் சங்கங்களை முடக்க நினைத்த நேபாள அரசு: மாணவர் போராட்டத்தால் தற்காலிகத் தடை!
மாணவர் சங்கங்களைக் கலைக்கும் நேபாள அரசின் முடிவுக்கு முக்கிய அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இத்தடையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, மாணவர் அமைப்புகளைக் கலைக்கும் திட்டத்திற்குத் தற்காலிகத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உ.பி: 111 உயிர்களைக் காவு வாங்கிய கனமழை, சூறைக்காற்று
இக்கோரப் பேரிடரால் 26 மாவட்டங்களில் மின்னல் தாக்கியும், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உடல் நசுங்கியும் 111 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்; 72 பேர் காயமடைந்துள்ளனர்; 227க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன; 179 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
டெல்லியில் மீண்டும் ஒரு “நிர்பயா” | தோழர் அமிர்தா
டெல்லியில் மீண்டும் ஒரு “நிர்பயா” | தோழர் அமிர்தா
https://youtu.be/_JlnAWGKUHg
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி நடைபெற்ற மக்கள் போராட்டங்கள்!
தற்போது வெளியாகியுள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான அறிவிப்பானது வரவேற்கத்தக்கதேயானாலும் இளைஞர்களைச் சீரழிக்கின்ற, குடும்பங்களின் தாலி அறுக்கின்ற டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மூட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
டெல்லியில் மீண்டும் ஒரு “நிர்பயா”: ஓடும் பேருந்தில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
டெல்லியில் சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவின் பெருநகரங்களிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் நகரமாக டெல்லி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, பாசிச பா.ஜ.க கும்பல் ஆட்சியைக் கைப்பற்றும் மாநிலங்கள் அனைத்திலும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தீவிரமடைவது ஒரு தொடர் போக்காகவே உள்ளது.
ஹோமியோபதியில் முதுநிலை பட்டப்படிப்பு வேண்டி மாணவர்கள் தொடர் போராட்டம்
ஹோமியோபதியில் அரசு கல்லூரியிலேயே முதுநிலை பட்டப்படிப்பு வேண்டும்; ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மாவட்ட அரசு மருத்துவமனை வரை ஹோமியோபதிக்கான உள்கட்டமைப்பு உருவாக்கி வேலைவாய்ப்பினை வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் மூன்று நாட்களாகப் போராடி வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு! பாசிச மோடி அரசின் கையாலாகத்தனத்தை மக்கள் தலையில் சுமத்தும் நடவடிக்கையே!
கடந்த நான்கு ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியில் இருந்த போதெல்லாம் விலையைக் குறைக்காத கச்சா எண்ணெய் நிறுவனங்கள் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளை அடித்தன. தற்பொழுது கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது என்று சொல்லி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது இந்த நாட்டு மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் தலையில் இடியை இறக்கிய பாசிச மோடி அரசு!
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது அதன் பலனை மக்களுக்குக் கடத்தாத இந்த அரசு, விலை உயரும் போது மட்டும் அந்தச் சுமையை உடனடியாக மக்கள் தலைமீது சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்?
நீட் மோசடி: வேண்டாம் நீட்! வேண்டும் ஜனநாயகம்! | தோழர் ரவி
நீட் மோசடி: NTA-ஐ கலைத்திடு!
வேண்டாம் நீட்! வேண்டும் ஜனநாயகம்! | தோழர் ரவி
https://youtu.be/PLgZAe2pkmA
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

























