Sunday, August 9, 2026

குற்ற கும்பலின் பிடியில் நீட் தேர்வு!

மே 1ஆம் தேதியே ராஜஸ்தானின் சிகார் பகுதியில் இந்த வினாத்தாள் சுழற்சிக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது. இது மாணவர்களிடம் 25,000 ரூபாய் முதல் 40 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 720 மதிப்பெண்களில், 600 மதிப்பெண்களுக்கான கேள்விகள் தேர்வுக்கு முன்னரே கசிந்துள்ளன.

கிருஷ்ணகிரி: டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன தொழிலாளர்கள் போராட்டம் வெல்லட்டும்!

ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை “கமிஷன்” என்ற பெயரில் இடைத்தரகராகச் செயல்படும் டி.சி.எஃப்.எம் நிறுவனம் பெற்றுக்கொண்டு தங்களைச் சுரண்டுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக சரியான சம்பளம் வழங்காமல் ஏமாற்றி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

கன்னியாகுமரி முகில் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்!

0
78 மாணவர்களின் வாழ்க்கையில் ஓராண்டை அழித்துவிட எத்தனிக்கிறது நிர்வாகம். பல்கலைக்கழகத்திடம் மாணவர்கள் முறையிடவே, அவர்கள் ஏதோ தங்களுக்கு தொடர்பே இல்லை என்பது போலவும், நீங்கள் கல்லூரியிடம்தான் கேட்கவேண்டும் என்றும் பதிலளித்து தனது தார்மீக பொறுப்பை கைகழுவியுள்ளனர்.

ராஜஸ்தான் ‘சேட்டு’ ஆர்.பி. சவுத்ரியின் மரணத்திற்கு ‘செந்தமிழன்’ சீமான் புகழ் வணக்கம்!

வட இந்தியாவில் இருந்து தொழில் செய்ய வந்த ஒரு சேட்டை, வாழ வைத்த தெய்வம் என்று புகழும் சீமான், வட மாநில தொழிலாளர்கள் மீது இன வெறியைக் கக்குகிறார்; உழைத்து வாழும் அருந்ததியின மக்களை தெலுங்கர்கள், வந்தேறிகள் என்று கொச்சைப்படுத்திப் பேசுகிறார்.

மே தினம்: புரட்சிகர அமைப்புகளின் மாநிலம் தழுவிய பேரணி, ஆர்ப்பாட்டம் | பகுதி 2

“டிரம்ப் - மஸ்க் பாசிச கும்பல் தலைமையிலான அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்! நாட்டை மறுகாலனியாக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை –...

மே தினம்: புரட்சிகர அமைப்புகளின் மாநிலம் தழுவிய பேரணி, ஆர்ப்பாட்டம் | பகுதி 1

“டிரம்ப் - மஸ்க் பாசிச கும்பல் தலைமையிலான அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்! நாட்டை மறுகாலனியாக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை –...

கிருஷ்ணகிரி: அதிகரித்து வரும் குழந்தை திருமணங்களைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

குழந்தை திருமணம் நடைபெறுவதற்கு பல்வேறு சமூக, பொருளாதார காரணங்கள் இருக்கின்றன. இவற்றைக் களையாமல் குழந்தை திருமணத்தைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆகையால், குழந்தை திருமணத்தைத் தடுக்க அரசியல் - பொருளாதார மாற்றுத் திட்டங்களை முன்வைத்துப் போராட வேண்டிய அவசியம் உள்ளது.

தொடரும் ஈரான் போர் – அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை

போக்குவரத்திற்கான செலவுகள் அதிகரிப்பதாலும் மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பதாலும் உரத்தின் விலை பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்த போர் மேலும் நீடித்து வந்தால் விவசாயம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பெண் பத்திரிகையாளர்கள் மீது அதிகரிக்கும் இணையவழி வன்முறைகள்!

0
22 சதவீதம் பெண் பத்திரிகையாளர்கள் தங்கள் தொழில்முறை வேலையிலேயே கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்கின்றனர். சான்றாக ஒரு அரசியல்வாதியைப் பற்றி எழுதுவதற்கு முன்பாக ஆபத்து வரும் எனத் தெரிந்தால், அந்தச் செய்தியை எழுதாமல் தவிர்ப்பது, வன்முறையைத் தூண்டும் குழுக்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்ப்பது என்று தங்களைத் தாமே கட்டுப்படுத்திக் கொள்கின்றனர்.

பென்னாகரம் – போடூர்: சந்துக்கடை சாராயக்கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்!

நமது பிரச்சினையைச் சரிசெய்ய யாரும் வரப்போவதில்லை, நாம்தான் தீர்க்க வேண்டுமென முடிவெடுத்த போடூர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு 27.04.2026 மதியம் 12.00 மணியளவில் போடூரில் இயங்கிவந்த சந்துக்கடைகளை அடித்து நொறுக்கியுள்ளனர்; சந்துக்கடை நடத்தும் நபரை ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர்.

பா.ஜ.க-வின் பினாமி ஆட்சியா? கவர்ச்சி நாயகனின் கார்ப்பரேட் ஆட்சியா?

தற்போது தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மையை கொடுக்காத மக்களின் முடிவானது, விஜய்யின் பெயரில் பா.ஜ.க-வின் பினாமி ஆட்சி அல்லது விஜய் தலைமையில் இன்னொரு கார்ப்பரேட் ஆட்சி என்கிற நிலைமையைத்தான் உருவாக்கியுள்ளது.

லடாக் மாவட்ட மறுசீரமைப்பு: இஸ்லாமியர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கும் பாசிச நடவடிக்கை!

“மாவட்ட பிரிப்பு என்பது நிதி மற்றும் அரசியல் அதிகாரத்தைப் பரவலாக்கும் நோக்கம் கொண்டது என்று சொல்லப்பட்டாலும், யூனியன் பிரதேச அமைப்பில் நிதி மற்றும் வளங்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இதனால் அதிகாரம் டெல்லியில்தான் குவியுமே தவிர, பரவலாக்கப்படாது.”

பாசிச மோடி ஆட்சியில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறை!

0
இந்தியப் பிரதமர் பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்துவதில்லை. அவரது ஆட்சிக்குச் சாதகமாகப் பேசும் ஊடகங்களுக்கே பேட்டி அளிக்கிறார். ஆட்சிக்கு எதிராக விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் பா.ஜ.க இணையதள குண்டர்களால் மிரட்டல்களுக்கும், கைது மற்றும் நேரடி தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கிருஷ்ணகிரி – போத்தசந்திரம்: சாதி மறுப்பு மணம் புரிந்த பெண்ணை கொடுமைப்படுத்தும் பெற்றோர்!

தேஜாஸ்ரீ மற்றும் அவரது கணவர் தீபக் ஆகியோருக்கு நிரந்தரமாக பாதுகாப்பு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் தேஜாஸ்ரீ யின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் கிருஷ்ணகிரி மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

ஆயிரக்கணக்கான ஊழியர்களை வெளியேற்றும் காக்னிசன்ட் நிறுவனம்!

காக்னிசன்ட் நிறுவனம் எவ்வளவு ஊழியர்களை வேலையில் வெளியேற்ற இருக்கிறது என்பதை நேரடியாகத் தெரிவிக்கவில்லை. ஆனாலும் ஒதுக்கியுள்ள இழப்பீட்டுத் தொகையின் அடிப்படையில் ஒரு கணக்கீடு செய்து இந்தியாவில் 12,000 முதல் 15,000 பேர் வரை வெளியேற்றப்படலாம் என்று ஐ.டி. துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அண்மை பதிவுகள்