Saturday, June 27, 2026
முகப்பு பதிவு பக்கம் 180

இங்கேயும் சில நட்சத்திரங்கள் நகர்கின்றன!

மைதிப்படை திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். எம்.எல்.ஏ.வாக இருக்கக்கூடிய ராஜராஜசோழன்  குளத்தில் குளித்துவிட்டு வெளியேவந்து தன்னுடைய ஜட்டியை கழட்டி போடுவார். அந்த ஜட்டியை துவைப்பதற்கு ஒரு போட்டியும் சண்டையும் நடக்கும். அதற்கு தன்னுடன் போட்டியிட்டு வந்த நபரிடம் மணிவண்ணன்” இத்தன நாளா நான் இருக்கேன் நீ என்னடா இப்ப வந்த ஆளு” என்பார்.

***

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை அமல்படுத்தியது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. அது ஒரு முற்போக்கான விஷயம் என்பதும் வரவேற்கத்தக்கதும்தான். ஆனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற கோரிக்கைக்காக பல ஆண்டுகள் பல்வேறு அமைப்பினரும் தொடர்ச்சியாக போராடி வந்திருக்கிறார்கள். மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய நக்சல்பாரி அமைப்புகள் அவற்றில் முதன்மையானவை. எமது அமைப்புகள் நடத்திய போராட்டத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவும், பெரியாரிய மற்றும் ஜனநாயக அமைப்புகள் கொடுத்த ஆதரவும் அறிஞர் பெருமக்கள் கொடுத்த ஆதரவும் சொல்லில் அடக்க முடியாது. குறிப்பாக மூத்த வழக்குரைஞர்கள் எத்தனையோ பேர் வழக்கு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உதவி செய்திருக்கிறார்கள்.

சாதி தீண்டாமை, மொழித் தீண்டாமை கெதிராக திருச்சி தில்லை கருவறை நுழைவுப் போராட்டம் முதல் எண்ணிலடங்கா போராட்டங்கள் நடைபெற்றன.

தில்லை தீட்சிதர் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களில் பல தோழர்களின் மண்டை உடைபட்டன. பல தோழர்கள் போலீசு தடியடியால் பாதிக்கப்பட்டனர். பல நாட்கள் சிறைப்படுத்தப்பட்டனர். தொடர் போராட்டத்தின் விளைவாக வேறுவழியின்றி அன்றைய கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு, ஆறுமுகசாமியை தமிழில் பாடுவதற்கு அனுமதி அளித்தது. இந்த வரலாறெல்லாம் இனி வேகமாக அழிக்கப்படும். மாறாக திமுக அரசு தானாகவே முன்வந்து ஆறுமுகசாமியை தில்லைக் கோயிலில் பாட அனுமதி அளித்ததாக மாற்றப்படலாம்.

படிக்க : சேலம் : மல்லி குந்தம் பகுதி பாமக-வின் சாதிவெறியால் ஒடுக்கப்படும் ஆசிரியர் !

பேருந்துகளிலும் ரயில்களிலும் தெருக்களிலும் சாதி தீண்டாமைக்கு எதிராகவும் மொழி தீண்டாமைக்கு எதிராகவும் பேசிப்பேசி தொண்டையில் ரத்தம் கசியும் அளவுக்கு தங்கள் உணர்வை வெளிப்படுத்தியவர்கள் ஏராளம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதற்காக எத்தனை மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் பெரியாரிய – ஜனநாயக – புரட்சிகர அமைப்புகளால் நடத்தப்பட்டிருக்கும். ஆனால் எல்லாவற்றுக்கும் காரணம் திமுக என்பதைப்போல அறிக்கை வெளியிடுவதற்கும் கூட்டம் நடத்துவதற்கும் பெரிய துணிச்சல் இருக்கத்தான் வேண்டும். ஒட்டுமொத்த தமிழ் மக்களின் போராட்டத்தையும் திமுகவின் காலடியில் வைத்து யாசகம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

***

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்துக்கு எதிராக பார்ப்பனர்கள் தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசின் நியமனம் செல்லும். ஆனால் ஆகம விதிப்படி இருக்கக்கூடிய கோயில்களில் தமிழ்நாடு அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று தெரிவிப்பதற்கு முன்னோட்டமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கோயில்கள் ஆகம விதிப்படி இருக்கின்றன என்பதை கண்டறிய ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுவில் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரரையும் நியமித்தது உயர்நீதிமன்றம். இதற்கு எதிராக திமுக சார்பில் எவ்வித அறிக்கையும் வெளியாகவில்லை.

புரட்சிகர அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டம்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் இந்த தீர்ப்பை உச்சிமுகர்ந்து வரவேற்ற நிலையில், உண்மையைப் பார்த்தால் இந்தத் தீர்ப்பு இந்து அறநிலைத்துறையின் பணியை கேள்விக்குள்ளாக்குவதுடன் இனி தமிழன் மீதும் தமிழ் மொழியின் மீதும் நடத்தப்படும் தீண்டாமை சட்டபூர்வமாக்கப்படும் என்ற ஒரு இழிவான நிலையை நோக்கிச் செல்வதையே காட்டுகிறது.

எது நடந்தாலும் அதை திமுக அரசின் வெற்றியாகவே காட்டும் கி.வீரமணி உள்ளிட்டோர் ஒருபுறம் இருக்கிறார்கள். தமிழன் மீதும் தமிழினத்தின் மீதும் நீதிமன்றத்தால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை வேடிக்கை பார்த்துக்கொண்டு வாயை மூடி அமைதியாக இருந்தது தமிழ் நாட்டை ஆளக்கூடிய திமுகவின் அரசு.

இதற்கெதிராக தனிச்சட்டம் இயற்றுவதன் மூலம் பார்ப்பனியத்துக்கு எதிரான போரில் தானும் இருக்கிறேன் என்று காட்டுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.  அந்தத் தனிச் சட்டத்திற்கு வழக்கம்போல ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை என்றால் அதை வைத்து தமிழ்நாடு மக்களிடம் மாபெரும் பிரச்சாரத்தை கொண்டு சென்று இந்தக் கோயில் தீண்டாமைக்கு எதிராக மாபெரும் எழுச்சியை உருவாக்கவும் முடியும்.

5 வருடம் ஆட்சி நடத்துவதே மிகப் பெரிய போராக இருக்கக்கூடிய இந்த சூழலில் மு.க.ஸ்டாலின் அதற்கு தயாராக இல்லை.

இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகளில் அரசு பார்ப்பனியத்திற்கு எதிராக தீவிரமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற உண்மை சுடும் வேளையில் இதுவரை திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் கூட எதிராக பேசத் தொடங்கினார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மானம் காற்றிலே பறக்கக் கூடாது என்றெண்ணி புதியதாக புத்தம் புதியதாக பலர் ஓடி வருகிறார்கள். அதில் நேற்று வரை புரட்சி கீதம் பாடி விட்டு திமுகவுடன் கூட்டணி கட்டுவதே புரட்சிகரப் பணி என்றும் அதற்காக செயல்படுவதே செயல்தந்திரம் என்றும் செயல்படுவோரின் பணி மிக முக்கியமானது.

அதிகாரத்தில் இருப்பவர்களின் உள்ளாடையை துவைக்க போட்டி போடுவது எப்போதும் நடக்கின்ற கலைதான். ஆனால் அந்த உள்ளாடையை துவைப்பதற்கு போட்டியாக வந்த நபரை பலிகொடுக்க எண்ணுவது என்பதுதான் மிக முக்கியமான விவகாரம்.

உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தோற்பதற்கு முக்கிய காரணம் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞரும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும்தான் என்கிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். மு.க.ஸ்டாலினுக்கு சொல்லாமல் இதுவெல்லாம் நடந்ததுபோல ஒரு கதையாக நமக்கு சித்தரித்து படம் காட்டுகிறார். தனிப்பட்ட நபர்கள் தங்களுடைய சுயலாபத்துக்காக ஒட்டுமொத்த நிகழ் காலத்தையே திரிக்கிறார்கள்.இதற்கு எடுத்துக்காட்டு வாஞ்சிநாதன்.

பாசிசத்தை வீழ்த்தும் மு.க.ஸ்டாலின் மீது எந்த ஒரு தூசு பட்டாலும் ஓடோடி துடைப்பதற்கு பல பேர் இருந்தாலும் இன்னும் ஒரு படி முன்னேறி இருக்கிறார் அவர். மு.க.ஸ்டாலினுக்கு தெரியாமல் இது நடந்தது என்று சொல்வதன்மூலம் அவரை காப்பாற்ற வேண்டும் .அப்படி என்றால் யாரையாவது பலி கொடுக்க வேண்டும். திமுக ஜெயிக்க வேண்டுமென்று காவடி தூக்கிய முன்னாள் புரட்சியாளர்களுக்கு எல்லாம் சேகர் பாபுவின் செயல்பாடுகள் மிகுந்த எரிச்சலை தருகின்றன.

ஆவடியில் பசுமடம் கட்டுவது என்ற பெயரில் பசுவின் ஆசனவாய்க்கு தீபம் காட்டிய சேகர் பாபுவால் மானம் கெட்டுப் போனார்கள். மக்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.

அதிலேயே முக்கியமானவர் மருதையன். ஒரு புரட்சிகர அமைப்பிலேயே 30 ஆண்டுகளுக்குமேல் இருந்த தன்னுடைய அனைத்து அனுபவங்களையும் திறமையையும் திமுகவுக்கு சொம்படிப்பதையே இலக்காகக் கொண்டு அதன்மூலம் தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை அவர் லட்சியம். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அப்பட்டமாக திமுக அரசின் அராஜக நடவடிக்கைகளை எதிர்க்காமல், ஆதரவாக இருந்தார்.

மு.க.ஸ்டாலினின் புகழைக் காப்பாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதே அவருடைய ரத்தநாளம் எல்லாம் ஊறிப்போய் இருக்கிற ஒரே சிந்தனை. கலைஞர் கருணாநிதியின் பூதவுடலை பார்ப்பதற்காக  துடித்ததை அவர் மட்டுமல்ல பலரும் அறிவர்.  எவ்வளவோ முயன்றும் மருதையனால் அருகில் சென்று பார்க்க முடியவில்லை. ஏனென்றால் அப்போது அவர் ஒரு புரட்சிகர அமைப்பிலேயே ஒரு தலைவராக இருந்தார். ஆனால் இப்போது திமுகவுக்கு சொம்படிக்கும் நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார்.

ராமசுப்புவுக்குப் பிறகு மக்கள் கலை இலக்கிய கழகத்தின் முன்னாள் செயலாளர், தோழர் இடதுசாரி சிந்தனையாளர், சமூக செயற்பாட்டாளர் என்று பல்வேறு பெயர்களில் புதியது புதியதாக அறிமுகம் ஆகிக் கொண்டிருக்கும் மருதையன்.

தற்போது அவர் எடுத்து இருக்கிற ஒரு முக்கியமான வீழ்த்தப்பட வேண்டிய இலக்கு சேகர்பாபு. அவரை வீழ்த்திவிட்டு அந்த இடத்தில் யாரை வைக்க முடியும்?  ஏன் அவரே கூட அதற்கு விருப்பப்படலாம். அவருடைய ஸ்டாலின் மனது வைத்தால் எல்லாம் நடக்கும். ஆனால் அவர் மனது வைக்க வேண்டுமே?

***

திமுக கட்சியிலேயே பாரம்பரியமாக இருப்பவர்களுக்கு எந்த பதவியும் இல்லாமல் போய்விட்டது. அதிமுக போன்ற கட்சிகளில் இருந்து வந்தவர்கள் எல்லா பதவிகளையும் அதிகப்படியாக அனுபவித்து வருகின்ற காலம் இது. இது பலருக்கு எரிச்சலைத் தந்தாலும்,  மு.க.ஸ்டாலினுக்கு தன்னுடைய சொல்பேச்சு கேட்டு நடக்கின்ற நபர்கள்தான் தேவை.

அவர்கள்தான் தனக்கு நம்பிக்கையானவர்கள். அவர்களைத்தான் அவர் ஆட்சியின் பொறுப்பிலே அமர்த்தி இருக்கிறார்.

சேகர்பாபு போன்று எவ்விதமான திராவிட பண்பாடும்’ அடிப்படையும் இல்லாதவர்கள் எல்லாம் பதவி சுகத்தை காண்கிறார்களே! ஐயகோ எங்களுக்கும் பொறுக்கித் தின்ன ஏதாவது கொடுங்கள் இந்த ஏங்கிக் கிடக்கும் கூட்டத்திற்கு தலைமை கொடுக்க யாருமில்லை. அவ்வாறு யாராவது தலைமை தாங்க முயன்றால் அவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் திமுகவில் பதவி சுகம் காணாமல் பாதிக்கப்பட்டு போய் கிடக்கும் அந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்க மருதையனும் வாஞ்சிநாதனும் கிளம்பியிருக்கிறார்கள்.

இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்பான் என்பது போல, திமுகவை ஆதரிப்பதில் தொடங்கிய பயணம் எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.

பிரசாந்த் கிஷோரின் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி இது. இந்த ஆட்சியிலே திராவிட ஆதரவு, பார்ப்பன எதிர்ப்பு பேசுவோரும் உண்டு. பசுமாட்டின் ஆசனவாய்க்கு சூடம் காட்டுவோரும் உண்டு.

நாங்கள் இந்துக்களுக்கான ஆட்சி என்று மார்தட்டுவதன் மூலமாகத்தான் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும். இதுதான் இப்போதைய ஆட்சி நீடித்து இருப்பதற்கான  வழிமுறை.

இப்படியெல்லாம் ஒரு வழிமுறையும் இல்லாததுபோல, ஏதோ மு.க.ஸ்டாலினுக்கு திராவிட ஆட்சியை நடத்திக் காட்ட வேண்டுமென்று விருப்பம் இருப்பது போலவும், அப்படிப்பட்ட ஸ்டாலினுக்கு தெரியாமல் சேகர்பாபுவும் தலைமை வழக்குரைஞரும் சதி செய்துவிட்டார்கள் என்று  அறிக்கையை இவர்கள் கொடுக்கிறார்கள் என்றால் இவர்களின் துணிச்சலையும் தைரியத்தையும் கண்டிப்பாக நாம் பாராட்டத்தான் வேண்டும்.

ஒட்டுமொத்தமாக இந்த அரசு கட்டமைப்பு காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலிடம் சிக்கி அதற்கேற்ற ஒரு பாசிச ஆட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த சூழலில் திமுக போன்ற கட்சிகள் தங்களுடைய கொள்கையை கைவிட்டு அப்பட்டமான பிழைப்புவாத செயல்களையே மேற்கொண்டு வருகின்றன. இதை அம்பலப்படுத்தி செயல்பட வேண்டிய நேரத்தில் இப்படிப்பட்ட பிழைப்புவாத கட்சிகளுக்கு சோப்பு போட்டுக்கொண்டு புரட்சி பணியைத் தொடரலாம் என்ற மருதையனின் சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல்படும் ராஜு – காளியப்பன் – வாஞ்சிநாதன் ஆகியோரின் அமைப்புகள் செயல்படுவதை பாருங்கள்.

சமீபத்திய கள்ளக்குறிச்சி விஷயம் வரை எங்கேயும் திமுக அரசை கொஞ்சமும் விமர்சனம் செய்யாமல் ஒரு புரட்சிகர’ அமைப்பை நடத்தி வருகிறார்கள். அவர்களுடைய அணிகளும் அதை நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதுவே மிகப்பெரிய சாதனை தானே.

கள்ளக்குறிச்சியில் போலீஸ் நடத்திய நர வேட்டைக்கு காரணம் அந்த மாவட்ட போலீசும் மாவட்ட நிர்வாகமும்தான். அதற்கும் திமுக அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இப்படியெல்லாம் சமூகத்தில் பேசிக்கொண்டு தெரிவதற்கு அவர்களுக்கு இருந்த துணிச்சல்தான் அடுத்த கட்டமாக சேகர்பாபுவை எப்படி தூக்குவது என்பதில் போய் முடிந்திருக்கிறது.

உண்மையைப் பேசினால், விமர்சனம் செய்தால் ஐக்கியம் முன்னணி ஆட்சியில் பங்கு கிடைக்காமல் போய்விடுமே என்ற ஏக்கம் இவர்களுடைய முகத்தில் எப்போதும் குடி கொண்டே இருக்கிறது. அதுதான் டாஸ்மாக் முதல் கள்ளக்குறிச்சி வரை அனைத்து பிரச்சினைகளிலும் இவர்களின் நிலைப்பாடாக அமைந்திருக்கிறது.

***

சந்தர்ப்பவாதிக்கு தத்துவம் மட்டுமல்ல; சுயமரியாதை சூடு சொரணையும் இல்லை என்பது எப்போதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

திமுகவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பிரிந்து போனவர்கள், வெளியேற்றப்பட்டவர்கள், துரத்தப்பட்டவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலினை காப்பாற்ற வேண்டும் என்பதல்ல. மு.க.ஸ்டாலினின் இருப்பைத்தக்க வைப்பதன் மூலம் தங்களுடைய இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.

படிக்க : அர்ச்சகர் பணியில் அனைத்து இந்துக்களுக்குமான இடஒதுக்கீட்டை தடுப்பது யார் ?

அதற்காக திமுகவிலேயே பதவி கிடைக்காத ஒரு கூட்டத்துக்கு வெளியே இருந்து ஆதரவு அளிக்கிறார்கள். இது ஒரு முயற்சிதான். சேகர்பாபுவுக்கு இப்படிப்பட்ட பல்வேறு இடங்களிலிருந்து அழுத்தம் கொடுப்பதன் மூலம் ஒருவேளை அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்டால் அதன் மூலம் தி.மு.க.வில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று பகற்கனவு காண்கிறார்கள். இப்படிப்பட்ட பல்வேறு பார்ப்பன நரித் தந்திரங்கள் மூலம்  திமுகவை ஒரு உண்மையான பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணிக்கு தலைமை தாங்கும் கட்சியாக்க முடியும் என்று நம்புகிறார்கள்.

காங்கிரசுக்கு உள்ளே இருந்தே கம்யூனிஸ்ட் கட்சியை கட்ட முயன்றதுபோல இன்னும் தீராத பயணம்.

கனவு காண்பதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறதென அப்துல் கலாமே சொல்லிவிட்டார். ஆனால் பலியாவதற்கு சேகர்பாபுவும் பலி கொடுப்பதற்கு திமுக தலைமையும் தயாராக இருக்கிறதா? கனவுதானே காணப்போகிறோம் காசா? பணமா?

ஐக்கிய முன்னணி என்றால் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு ரீதியாக பலம் பெற்று பாசிச சக்திகளை வீழ்த்த ஆளும் வர்க்க கட்சியோடு கூட்டணி அமைப்பது மட்டுமல்ல. அந்த ஆளும் வர்க்க கட்சியில் இருக்கிற கூடிய எல்லா பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து அதை காப்பாற்றுவதும்தான் என்ற ஒரு புதிய விளக்கம் கூட கொடுக்கப்படலாம். கேட்பதற்கு நாலு பேர் இருக்கும்பொழுது சொல்வதற்கு அவர்கள் ஒருபோதும் கூச்சப்பட போவதுமில்லை, தங்கள் பயணத்தை நிறுத்த போவதுமில்லை.

ஆம், இங்கேயும் சில நட்சத்திரங்கள் நகர்கின்றன.


தமிழ்

மின்சார சட்டத் திருத்தம் 2022 : மின் துறையை மொத்தமாக விழுங்கவரும் கார்ப்பரேட் மலைப்பாம்பு!

பெட்ரோல்-டீசல், கேஸ் விலை உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி வரி உயர்வு ஆகிய தாக்குதல்களால் ஏற்கெனவே நிலைகுலைந்து கிடக்கும் உழைக்கும் மக்களின் தலையில் அடுத்த இடியாக அறிமுகமாகியிருக்கிறது மின்சார சட்டத் திருத்தம் 2022.

இம்மசோதா ஏற்கெனவே 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டபோதே கடுமையான எதிர்ப்பு நிலவியதால் நிறைவேற்றாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி மீண்டும் இம்மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும், மின்துறை ஊழியர்களின் போராட்டம் மற்றும் எதிர்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளின் காரணமாக, சட்டமாக நிறைவேற்றப்படாமல் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

000

மின்சார சட்டம் 2003-இன் சில பிரிவுகளில் திருத்தங்களை முன்வைக்கும் இம்மசோதா, மின் துறையை கார்ப்பரேட்டுகளுக்கு விருந்தாக்கும் நோக்கம் கொண்டதாகும். எனினும் மின் துறையைத் தனியாருக்கு தாரைவார்ப்பது இம்மசோதாவின் மூலம் மட்டுமே தொடங்கப் படவில்லை. இதுவொரு நிகழ்ச்சிப் போக்காகும். 1990களில் புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தத் தொடங்கியபோதிலிருந்து இப்போக்கு தொடங்குகிறது.

இப்போக்கின் முதல் சுற்று, மின் உற்பத்தியில் தனியாரின் நுழைவுக்கு அனுமதி வழங்கியதாகும். மின் உற்பத்தியில் தனியார் நுழைந்த பிறகு, அரசுப் படிப்படியாக உற்பத்தி மீது கவனம் செலுத்துவதைக் கைவிட்டது; வளர்ந்துவரும் மின் நுகர்வின் தேவைக்கு திட்டமிட்டே தனியார் முதலாளிகளை சார்ந்திருக்கும் நிலைக்கு அரசு சென்றது.

படிக்க : ஏழைகளுக்கும் நடுத்தரவர்க்கத்திற்கும் இனி மின்சாரமும் எட்டாக்கனிதான் !

எடுத்துக்காட்டாக, 1998 ஆம் ஆண்டு தன்னுடைய மின்சார தேவையில் 8 சதவிகிதம் மட்டுமே தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய தமிழக அரசானது, தற்போது 50 சதவிகிதம் மின்சாரத் தேவைக்குத் தனியாரைச் சார்ந்தே உள்ளது. தனியாருக்கு டெண்டர் விடுவதன் கோடிகளைச் சுருட்டிக் கொள்ள முடியும் என்பதால், எந்த கட்சி ஆண்டபோதும் தனியார் மின் கொள்முதல் போட்டிபோட்டுக் கொண்டு செய்யபட்டன.

ஒருபக்கம் கொள்ளை விலைக்கு தனியாரிடம் மின் கொள்முதல் செய்வது; மறுமுனையில், அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரத்தை தொழில்துறை மண்டலங்களின் முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு கொடுப்பது – என்ற நிலையால் மின்சாரத் துறை கடுமையான கடன் நெருக்கடிக்கு உள்ளாகின.

தற்போது, இரண்டாவதும் இறுதியானதுமான சுற்றிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது மோடி அரசு. சென்ற சுற்றில், மின்சார உற்பத்தித் துறை மட்டுமே தனியாருக்கு திறந்துவிடப்பட்டது. மின்விநியோகம் முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. மின்சார சட்டத் திருத்தம் 2022, மின் விநியோகத்திலும் தனியாரை அனுமதிக்கும் வகையில் திருத்தப்பட்டுள்ளது.

000

சட்டப் பிரிவு 14 மற்றும் 42-ல் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தமானது ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட தனியார் முதலாளிகளை மின் விநியோகம் செய்ய அனுமதிக்கிறது. மேலும் அரசின் மின் விநியோகக் கட்டமைப்பை தனியார் முதலாளிகள் பயன்படுத்துவதற்கும் அனுமதிக்கிறது. மின் விநியோகம் செய்வதற்கு தனியார் நிறுவனங்களுக்கு கட்டமைப்பு வசதிகள் இல்லாவிட்டாலும் சட்டத்தில் உள்ள சரத்துகளின் அடிப்படையில், அரசின் மின் விநியோகக் கட்டமைப்பையே அவர்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மின் விநியோகத்தில் தனியார் நுழைவதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு பல்வகையான (multiple choice) மற்றும் தரமான (quality) மின் விநியோகம் கிடைக்கும் என்று நமக்கு இச்சையூட்டுகிறது மோடி அரசு. 90களில் தனியார்மயக் கொள்கையை அமல்படுத்தத் தொடங்கிய காலம் தொடங்கி, அளந்துவிடப்படும் அதே புளித்துப்போன மோசடிப் பிரச்சாரமே இது.

‘மக்கள் சேவை, மகேசன் சேவை’ என்ற தொண்டுள்ளத்தோடு தானா தனியார் முதலாளிகள் மின் விநியோகத்தில் நுழைவார்கள்; லாபவெறி நோக்கம் மட்டுமே முதலாளிகளின் குறிக்கோள். இச்சட்டம் அமலுக்கு வந்தால் மின் நுகர்வு அதிகமுள்ள பெருநகரங்கள் மற்றும் தொழிற்சாலைப் பகுதிகளில் மின் விநியோகம் முழுவதும் தனியாரிடம் போய்விடும்.

மின் நுகர்வு அதிகம் இல்லாத கிராமப்புற, மலைவாழ் பகுதிகளுக்கு சேவை வழங்க தனியார் முதலாளிகள் முன்வர மாட்டார்கள், மேலும் விவசாயிகள், நெசவாளர்களுக்கு இலவச, மானிய மின்சாரத்தை அரசே வழங்குவதால், அங்கு தனியார் முதலாளிக்கு சந்தையும் குறைவு. மேற்சொன்னவாறு, மின் நுகர்வு அதிகமுள்ள பகுதிகளைத் தனியார்கள் கைப்பற்றிக் கொண்டு, மக்கள் நலச் சேவைகளை மட்டும் அரசிடம் தள்ளிவிட்டால், ஏற்கெனவே கடனில் தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசு, திவாலாகி மொத்தமாக மின் துறையை விட்டே வெளியேறும் அபயாம் உள்ளது.

மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்.

மின் விநியோகக் கட்டமைப்பை தனியார் முதலாளிகள் பயன்படுத்துவதற்கு பயனீட்டுக் கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே அரசுக்கு ஒன்றும் நட்டமில்லை என்று பாஜக வாதம் புரியலாம். ஆனால், ‘கருணையே உருவான பாஜக’ கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகைகளையும் மானியங்களையும் வாரி வழங்குவது நாம் அறியாததா, கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடன் வாராக் கடன்களாக மாறி பல வங்கிகளைத் திவாலாக்கிய கதை நமக்குத் தெரியாதா! ஆகவே இவையெல்லாம் வெறும் ஏமாற்று வாதங்களே.

65வது பிரிவில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது, மாநில அரசுகள் மின் கட்டணத்தை உற்பத்திச் செலவுக்கு இணையாக நிர்ணயிக்கக் கூறுகிறது. மக்களுக்கு மானியம் வழங்க வேண்டுமென்றால் அதை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டுமென்றும் முன்மொழிகிறது. இலவச மற்றும் மானிய மின்சாரத்தை படிப்படியாகவும் மிக எளிதாகவும் ஒழித்துக்கட்டும் வழி இது.

கேஸ் சிலிண்டருக்கு இதேபோல் அறிமுகம் செய்யப்பட்ட மானியமே இதற்கு சிறந்த சான்றாகும். ஆரம்பத்தில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகை, படிப்படியாகக் குறைந்து தற்போது நின்றே போய்விட்டது. நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை உயருவதைப் போல, மின் கட்டணம் உயரும் அபாயமும் உள்ளது.

மேலும் இம்மசோதா, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அதிகப்படியான அதிகாரங்களை வழங்குகிறது. மாநில ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர்களை நியமிப்பது மற்றும் அவற்றின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது என முழு அதிகாரமும் மத்திய அரசிற்கு வழங்கப்படுகிறது.

மின் ஒப்பந்த அமுலாக்க ஆணையம் என்ற புதிய ஆணையமும் உருவாக்கப்படுகிறது. மின் உற்பத்தி, விநியோகம் மற்றும் பகிர்மான நிறுவனங்களுக்கிடையே உள்ள ஒப்பந்தங்களில் ஏற்படும் தகராறுகளை விசாரிக்கவே இந்த ஆணையத்தை உருவாக்குவதாகக் கூறுகிறார்கள். அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் போடப்படும் ஒப்பந்தங்களில், தனியாருக்கு ஆதரவாகக் கட்டப்பஞ்சாயத்து செய்வதற்காகவே இந்த புதிய அமைப்பு உருவாக்கப்படுகிறது.

படிக்க : மின்சார திருத்த மசோதா 2022: மின்துறையை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் மோடி அரசு!

சுருக்கமாகக் கூறவேண்டுமென்றால், மத்திய மற்றும் மாநில மின்சார வாரியங்கள் இழுத்து மூடிவிட்டு தொலைத்தொடர்புத் துறையில் அம்பானியின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது போல், மின்சாரத் துறையில் அதானியின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதே இம்மசோதாவின் குறிக்கோள்.

000

நீட், புதிய கல்விக் கொள்கை, ஜி.எஸ்.டி, தேசிய பணமயமாக்கல் திட்டம், மூன்று வேளாண் சட்டங்கள், தொழிலாளர் சட்டத் திருத்தம் ஆகிய மக்கள் விரோத கார்ப்பரேட் திட்டங்களைப் பாசிசக் கும்பலானது எவ்வித சமரசமும் இல்லாமல் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது; அதன் வரிசையில் இன்று இந்த மின்சார சட்டத் திருத்த மசோதா சேர்ந்துள்ளது.

நாட்டின் பெரும்பான்மையான ஏழை மற்றும் நடுத்தர மக்கள், விவசாயிகள், நெசவாளிகள் மற்றும் மின்துறை ஊழியர்களுக்கு எதிராகவே இம்மசோதா கொண்டுவரப்படுகிறது. இம்மசோதாவிற்கு எதிராக, போராடும் மின்துறை ஊழியர்கள் மற்றும் விவசாய சங்கங்களுடன் பாதிக்கப்படும் மக்கள் பிரிவுகள் அனைவரும் ஒன்றிணையும்போதே, மின் துறையை விழுங்கவரும் கார்ப்பரேட் மலைப்பாம்பை விரட்டியடிக்க முடியும்.

சிவராமன்

ஹர் கர் திரங்கா : பாசிஸ்டுகளின் தேசபக்தி அரிதாரம்!

ந்தியா போலி சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதைப் பவள விழாவாக கடைப்பிடிக்கும் வகையில், ‘சுதந்திர நாள் அமுதப் பெருவிழா’ என்ற பெயரில் கடந்த ஆண்டிலிருந்து மோடி அரசு நாடெங்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகளை நடத்தி வந்தது. இதன் தொடர்ச்சியாகவே “ஹர் கர் திரங்கா” (மூவர்ணக் கொடியைப் போற்றுவோம்) என்ற திட்டத்தை அறிவித்தார் மோடி. 20 கோடி வீடுகளில் தேசியக் கொடியேற்றுவது இத்திட்டத்தின் இலக்காக அறிவிக்கப்பட்டது.

நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் ஆகஸ்டு 13 முதல் 15 வரையிலான மூன்று நாட்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்; தேசியக் கொடியுடன் தற்படங்களை (செல்ஃபி) எடுத்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும்; தமது சமூக ஊடகப் பக்கங்களின் முகப்புக்களில் தேசியக் கொடி படத்தை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் மோடி.

தனது உரையில், மூவர்ணக் கொடியுடனான நமது உறவை இந்நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் கொடி ஏற்றுவதற்கேற்ப, தனிநபர் இல்லங்களிலும், வணிக நிறுவனங்களிலும் கொடியேற்றலாம், பகல்-இரவு என அனைத்து நேரங்களிலும் கொடி பறக்கலாம் என கொடிச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

படிக்க :  விழிஞ்சம் துறைமுகத் திட்டம்: அதானிக்கு சேவகம் செய்யும் கேரள அரசு!

குடிமக்களின் உள்ளங்களில் நாட்டுப்பற்றை வரவழைப்பதும் தேசியக் கொடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இல்லந்தோறும் கொடியேற்றும் திட்டத்தின் நோக்கம் என்பது மத்திய பண்பாட்டுத்துறை அமைச்சகம்.

மூட்டிவிடப்பட்ட ‘தேசபக்த ஜோதி’

அமிதாப் பச்சன், ஷாருக்கான், ரஜினிகாந்த், விஜய் தேவரகொண்டா, மம்முட்டி, மோகன்லால், டெண்டுல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் தாங்கள் கொடியேற்றிய பாடல்களை (செல்ஃபி) விளம்பரப்படுத்தினர். தற்படங்களைப் பதிவேற்றம் செய்வதற்காகவே தொடங்கப்பட்ட ஹர் கர் திரங்கா.காம் இணையதளத்தில் சுமார் 6 கோடி தற்படங்கள் பதிவேற்றப்பட்டன.

இல்லங்களில் கொடியேற்றுவதை வலியுறுத்தி நாடு முழுவதும் பாஜகவினர் பிரச்சார பேரணிகளையும் நடத்தினர். இத்திட்டம் யோகியின் உத்தரப் பிரதேசத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பள்ளிக் குழந்தைகளுடன் தேசியக் கொடி பேரணியில் கலந்து கொண்டு, இருசக்கர வாகனப் பேரணியையும் நடத்தினார்.

குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா என மற்ற பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் அவரவர் மாநிலங்களில் தேசியக் கொடி பேரணிகளை நடத்தியுள்ளனர். ஸ்மிருதி ராணி, பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் டெல்லியில் பிரச்சாரப் பேரணிகளை நடத்தியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகமான நாக்பூரில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

பாஜக மட்டுமல்லாது காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் தேசியக் கொடி பேரணிகளை நடத்தியுள்ளன.

இவ்வாறு ஆர்.எஸ்.எஸ்-பாஜகவாலும் நாடறிந்த பிரபலங்கள் மற்றும் ஆளும் வர்க்க ஊடகங்களாலும் நிகழ்த்தப்பட்ட தொடர் பிரச்சாரங்கள் காரணமாக மக்கள் ‘தேச பக்தி’ வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டனர்.

அறிவிக்கப்பட்ட இலக்கான 20 கோடியையும் தாண்டி அதிக அளவில் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றியதாக செய்திகள் வெளியாகின. இத்திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதில், பெரு மகிழ்ச்சியடைவதாகவும் பெருமைப்படுவதாகவும் கூறியிருக்கிறார் மோடி.

ஆனால் அதே பெருமகிழ்ச்சியோடு இந்நாட்டின் அடிப்படை உழைக்கும் மக்களால் இந்நாளைக் கொண்டாட முடிந்ததா, ஆளும் வர்க்க ஊடகங்கள் ஊதிப்பெருக்கிக் காட்டுவது மட்டுமே உண்மையா? சுதந்திர நாள் கொண்டாடும் அளவிற்கு நம் நாட்டில் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கிறதா? என்ற கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது. அதற்கான பதிலை இக்கொண்டாட்ட நாளை ஒட்டியே தேடுவோம்.

எங்கே வாழ்கிறது சுதந்திரமும் சுதேசியமும்?

வீடுகளில் தேசியக் கொடி ஏற்றும் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு கொடி சட்டம் திருத்தப்பட்டது. அதில், கதர் துணியால் மட்டுமே தேசியக் கொடி தயாரிக்க வேண்டும் என்று இதுவரையில் இருந்த விதியை நீக்கி பாலிஸ்டரால் தயாரிக்கப்பட்ட கொடியையும் பயன்படுத்தலாம்.

இத்திருத்தத்தின் மூலம் நம் நாட்டு நெசவாளர்களின் வயிற்றில் அடித்துள்ளது மோடி அரசு; கொடி தயாரிப்பதற்கான டெண்டர்களை கைத்தறி நிறுவனங்களுக்கு கொடுக்காமல் குஜராத்தில் உள்ள பெரும் விசைத்தறி நிறுவனங்களுக்கும், சீன நிறுவனங்களுக்கும் கொடுத்துள்ளது.

‘சுதந்திர தின’ பெருவிழாவை ஒட்டி விற்பனையான கொடிகளில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொடிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே 3,000 கோடிக்கு பட்டேல் சிலை.. தற்போது தேசியக் கொடியையும் சீனா தயாரித்துவிட்டார் மோடி. “உள்நாட்டுப் பொருட்களை வாங்குங்கள்” என்று அடிக்கடி தனது உரையில் வாயளந்து கொண்டிருக்கும் மோடி அரசின் ‘சுதேசியம்’ என்னவென்று இதன் மூலம் அம்பலப்பட்டுப்போயுள்ளது.

போலி சுதந்திர தினத்தை ஒட்டி, நாட்டின் தலைநகரில் மட்டும் விற்பனையான கொடிகளின் சந்தை மதிப்பு 4 முதல் 5 கோடிகளாகும். நாடுமுழுவதும், கடந்த ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை 2.36 கோடி தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றின் சந்தை மதிப்பு ரூ.60 கோடியாகும்.

இதனால் கைத்தறி நெசவாளர்களுக்கு துளியும் பலனில்லை. முந்தைய ஆண்டுகளில் கிடைத்த ஆர்டர்கள் கூட கிடக்கவில்லை.

அரச ஒன்றியத்திற்கு கதர் துணியால் தேசியக் கொடி தயாரித்து கொடுத்த கர்நாடக காதி கிராமோத்யோகா சம்யுக்த சங்கம் மோடியின் சட்டத் திருத்தத்தால் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. நிறுவனம்தான் அரசு நிகழ்வுகளுக்கான தேசிய கொடியைத் தயாரித்துக் கொடுக்கிற ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்ற நிறுவனமாகும். நிறுவனத்தில் பெரும்பாலான தொழிலாளிகள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஒவ்வோர் ஆண்டும் ஜூலை இறுதிக்குள் 2.5 கோடி கொடிகளை சம்யுக்த சங்கம் அனுப்பியிருக்கும். ஆனால், இச்சட்டத் திருத்தத்தால் ஏற்கனவே கிடைத்த ஆர்டர்களில் பாதிகூட கிடைக்கவில்லை. இதுவரை 1 கோடி கொடிக்கான ஆர்டர்கள்தான் கிடைத்துள்ளன. ஆனால் சங்கத்திடம் 5 கோடி மதிப்புள்ள கொடிகளை வழங்குவதற்கான மூலப்பொருட்கள் இருப்பு உள்ளது” – என்று இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் சம்யுக்த சங்கத்தைச் சேர்ந்த சிவானந்த் மதபதி.

இச்சங்கத்தின் சார்பில் ஜூலை இறுதியில் கொடிச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்துப் போராட்டமும் நடைபெற்றது.

“முந்தைய தேசியக் கொடியில் சுதேசி சின்னமும், அசோக சக்கரமும் கைத்தறி நெசவாளர்களைக் குறிப்பதாக இருந்தது. இன்று நாம் சுதந்திர தின அமிர்த பெருவிழாவைக் கொண்டாடுகிறோம், ஆனால் ஏன் நெசவாளர்களை மறந்தோம், சுதேசி இயக்கத்திற்கான காரணத்தை நாம் ஏன் மறந்தோம்? சுதந்திரப் போராட்டத்தில் சுதேசி இயக்கமும் முக்கியமான பகுதிதானே” என்று கேள்வி எழுப்புகிறார் ஆந்திர கைத்தறி நெசவாளர் சங்கத் துணைத்தலைவர் பில்லமாரி நாகேஸ்வர ராவ்.

***

ஹரியானா மாநிலத்தில் ரேஷன் பொருட்கள் வாங்க வந்த மக்களிடம் 20 ரூபாய் கொடுத்து கொட்டி வாங்கினால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று மிரட்டி கொடியை விற்றுள்ளனர். அவ்வாறு கொடி விற்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.

உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க தலைவரோ, தேசியக் கொடி ஏற்றாத வீடுகளைப் புகைப்படம் எடுத்து அனுப்பச் சொல்லி மிரட்டியிருக்கிறார். சில மாநிலங்களில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பள்ளிக் குழந்தைகளிடம் கட்டாயம் தேசியக் கொடி ஏற்ற வலியுறுத்தியுள்ளனர். சில தனியார் பள்ளிகள் குழந்தைகளிடம் கொட்டி விற்பனை செய்து அதிலும் கொள்ளை லாபம் பார்த்ததாக பெற்றோர்கள் கொந்தளித்தனர்.

மகாராஷ்டிரத்தில் பாஜகவைச் சேர்ந்த மாநில பண்பாட்டுத்துறை அமைச்சரான சுதிர் முங்கந்திவார், அரசு அதிகாரிகள் தங்களது அழைப்புகளை ஏற்கும்போது, ​​“ஹலோ” என்பதற்குப் பதிலாக “வந்தே மாதரம்” என்று கூறவேண்டுமென அடுத்த ஆண்டு ஜனவரி 26 வரை இதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு ரயில்வே ஊழியரின் சம்பளத்திலிருந்து ஹர் கர் திரங்கா பிரச்சாரத்திற்காக 38 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் கொடியேற்றி அதைப் புகைப்படமெடுத்து வாட்சப்பில் அனுப்ப வேண்டும் என்று அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எந்த அசம்பாவிதங்களும் இல்லாமல் இந்தமுறை காஷ்மீரில் தேசியக் கொடியை ஏற்றியிருக்கிறோம்; தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக கைதுசெய்யப்பட்டுள்ள நபர்களின் வீடுகளிலும் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டுள்ளது என்று பாஜகவினரும் ஊடகங்களும் சிலிர்த்துக் கொண்டனர். ஆனால் வீடுகளில் கொட்டி ஏற்றுவதற்காக மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் காஷ்மீர் முழுக்க அடக்குமுறையை ஏவித்தான் இக்கொண்டாட்டங்கள் அரங்கேற்றப்பட்டதாகவும் உண்மையை உடைத்துப் பேசினார் மெகபூபா முப்தி.

‘தேசபக்தியின் பெயரால் மக்கள் மீது ஏவப்படும் வன்முறை’ என்று அழைக்காமல் இந்நடவடிக்கைகளை வேறு என்ன பெயரிட்டு அழைப்பது?

***

தேசபக்தி அரிதாரம் பூசிக்கொண்ட யோகி, போலி சுதந்திர தின விழாவில் பள்ளி மாணவர்களுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி

2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டிலுள்ள அனைவருக்கும் சொந்த வீடு கட்டித்தருவேன் என்று அறிவித்த மோடி, இன்று இருக்கும் குடிசைகளையும் காலி செய்துவருகிறார்.

ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் இந்நாட்டின் பெருநகரங்களைக் கட்டியெழுப்பிய அடித்தட்டு மக்கள் தமது வாழ்விடங்களை விட்டுத் துரத்தியடிக்கும் போக்கு அண்மைக் காலங்களில் தீவிரமடைந்துள்ளது.

டெல்லியில் அடித்தட்டு மக்கள் வாழ்கின்ற கயாஷ்பூர் மற்றும் கஸ்தூரிபா நகர் வீடுகளை இடிக்கப் போவதாக டெல்லி மேம்பாட்டு நிறுவனம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. தங்களது வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆகஸ்ட் 12 ஆம் தேதி அப்பகுதி மக்கள் போராட்டமும் நடத்தியுள்ளனர். “எங்கள் வீடுகளை இடித்தால் நாங்கள் எவ்வாறு கொடியேற்றுவது” என்று அவர்கள் நியாயமாகக் கேள்வியெழுப்பினார்கள்.

ஒருபக்கம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் அடித்தட்டு மக்களின் குடியிருப்புப் பகுதிகள் காலிசெய்யப்படுகின்றன. இன்னொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் பாசிச ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடும் முஸ்லீம்களின் வீடுகள் புல்டோசரால் தரைமட்டமாக்கப்படுகின்றன. இதுதான் சுதந்திர மணம் கமழும் இந்தியாவா?

***

ராஜஸ்தான் மாநிலம் சுரானா பகுதியில், தாகத்திற்காகப் பானையிலிருந்து தண்ணீர் எடுத்து குடித்த குற்றத்திற்காக, 9 வயது பள்ளிச் சிறுவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆதிக்க சாதியினர் குடிப்பதற்காக வைத்திருந்த பானையிலிருந்து அந்த தலித் சிறுவன் தண்ணீர் குடித்ததால் சைல்சிங் என்ற ஆசிரியர் அச்சிறுவனை அடித்து குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கியிருக்கிறார். உயிருக்குப் போராடிய அச்சிறுவன் ஆகஸ்டு 14ம் தேதி இறந்துபோகிறான்.

ஒருபக்கம் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் மக்கள் மூழ்கடிக்கப்பட்டபோது, ​​ஒடுக்கப்பட்ட மக்களும் ஜனநாயக உணர்வாளர்களும் இச்சாதி வெறிக் கொடூரத்திற்குக் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவிட்டுக் கொண்டிருந்தனர்.

நாடு முழுவதும் சாதிவெறி ஆணவக் கொலைகளும், தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தாக்குதல்களும் காவி கும்பல்களின் ஆட்சியில் மென்மேலும் அதிகரித்து வருகின்றன. சாதியத் தாக்குதல்களும், கொலைகளும் அன்றாட நிகழ்வான சமூகத்தில் எங்கிருக்கிறது சுதந்திரம்? சாதி ஆதிக்கத்திலிருந்து விடுபடும் நாள் தானே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திர நாளாக இருக்க முடியுமா?

***

குஜராத் கலவரத்தின் போது, ​​பில்கிஸ் பானு என்ற இஸ்லாமியப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய கொடூரர்களை, பாஜக தலைமையிலான குஜராத் அரசு சுதந்திர தினத்தை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுவித்துள்ளது.

பாலியல் வல்லுறவு கொடூரர்களுக்கும் பாசிச பயங்கரவாதிகளுக்கும் சுதந்திரம் வழங்கப்படுவது இந்நாட்டில் பெண்கள் வாழ்வதற்கே விடுக்கப்படும் சவால் அல்லவா? இந்த நாள் எப்படி நமக்கு கொண்டாட்ட நாளாக இருக்க முடியும்.

எதற்கு இந்த தேசபக்தி அரிதாரம்?

பாசிஸ்டுகளின் புகலிடம் தேசியம் என்பார்கள், அந்த வகையில் தமது மக்கள் விரோத செயல்பாடுகளை தேசபக்தி அரிதாரம் பூசி மறைத்துக் கொள்வதற்குப் போலி சுதந்திரத்தின் பவள விழா ஆர்.எஸ்.எஸ்-பாஜகவிற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாசிஸ்டுகள் மக்களிடம் பிரச்சாரம் செய்யும் தேசியம் எந்தவகையைச் சேர்ந்தது? நமது நாட்டையும் நம் நாட்டின் புரட்சிகர வரலாற்றையும் மக்கள் நேசிக்கிறார்கள், அவற்றைக் கொண்டாடுகிறார்கள். ஆகவே அதை இருக்கமாகப் பிடித்துக் கொள்ளும் பாசிஸ்டுகள், மக்களின் தேசப் பற்றுக்கு பாசிச உள்ளடக்கத்தை வழங்குகிறார்கள். கோடான கோடி உழைக்கும் மக்களின் நலனை தேசத்திற்கு முரணாக நிறுத்துகிறார்கள்.

படிக்க : பாட்டாளி வர்க்கத்தை அமைப்பதற்கு இதோ ஓர் ஆயுதம்! – நூல் அறிமுகம்

விலைவாசி உயர்வு, வேலையின்மை, கார்ப்பரேட் திட்டங்களால் வாழ்வாதாரப் பறிப்பு, சிறுபான்மையினர் மீதான பாசிஸ்டுகளின் தாக்குதல் ஆகியவை தேசியத் துயரமல்ல; அதையும் தாண்டி தேசியமும் தேசப் பெருமிதமும் இருக்கிறது என்பது பாசிஸ்டுகள் முன்வைக்கும் தேசியம். ஆர்.எஸ்.எஸ்-பாஜக முன்வைக்கும் ‘தேசம் முதலில்’ என்ற பிரச்சாரம் அந்தவகையைச் சேர்ந்ததுதான்.

தஞ்சை டெல்டாவின் பச்சை வயல் ஹைட்ரோகார்பனால் பற்றி எரிந்துகொண்டிருந்தபோது, ​​“தேசத்திற்காக ஒரு ஊரை பலிகொடுத்துதான் ஆகவேண்டும்” என்று இல.கணேசன் கூறியதை நினைவூட்டிக் கொண்டால் இந்த தத்துவம் மிக எடுப்பாகப் புரியவரும்.

மக்களிடம் தாம் மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக தாம்தான் தேசத்திற்கான கட்சி, தேசத்திற்கான வலிமையான தலைவர் என்ற கருத்தை மக்களுக்கு உருவாக்குவது; பின்னர் தேசத்துக்கான கட்சி, தேசத் தலைவர், அவர்கள் சொல்லும் தேச நலனைக் குறித்த கேள்விகளுக்கு அப்பாற்பட்டு ஏற்றுக்கொள்வது ஆகியவை அடங்கும்.

சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாட்டங்கள், ஹர் கர் திரங்கா திட்டம் ஆகியவை அந்தவகையில் திட்டமிட்டு செய்யப்பட்டவையே; பாசிஸ்டுகளின் இத்தகைய எத்தனிப்புகளை உடனுக்குடன் அம்பலப்படுத்தி முறியடிப்பது புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் முக்கியக் கடமையாகும்.


அப்பு

இலங்கையில் ‘சீன உளவுக் கப்பல்’: மக்களைத் திசைதிருப்பிய ஆளும் வர்க்க ஊடகங்கள்!!

சீனாவின் யுவான் வாங் 5 ரக கப்பல் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துசேர்ந்தது. கப்பலின் வருகையையொட்டி பல விவாதங்கள் கிளம்பின. இந்தியப் பெருங்கடலில் நுழைகிற உளவுக் கப்பல் என்றது அமெரிக்கா.

இந்திய ஊடகங்களோ 750 கி.மீ. தூரம் வரை கண்காணிக்கும் வல்லமை கொண்ட இக்கப்பலால் தென்னிந்தியாவிற்கு மிகப்பெரும் ஆபத்து என்று கூச்சலிட்டன. மேலும், இந்தியாவின் தென்மாநிலங்களில் அமைந்திருக்கும் 6 கடற்படை தளங்கள், குறிப்பாக தமிழகத்தில் கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம், ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் ஆகியவற்றைக் கண்காணிக்க முடியும் என்று பலவாறு விவாதித்தன.

சீனாவின் யுவான் வாங் 5 ரக கப்பல் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிலைகொள்ள அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து கப்பலின் வருகையைத் தாமதப்படுத்துமாறு சீன அரசாங்கத்திடம் இலங்கை வெளிவிவகார அமைச்சகம் கோரிக்கை விடுத்தது.

படிக்க : கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !

எனினும், எரிபொருள் நிரப்பவே, தங்கள் நாட்டுக் கப்பல் இலங்கைக்கு வந்துள்ளதாகவும், ஆராய்ச்சி நடவடிக்கையில் ஈடுபடும் இக்கப்பலால் எந்த நாட்டு பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படாது என்றும் சீன வெளியுறவுத்துறை விளக்கம் அளித்தது. இதனையடுத்து சில நிபந்தனைகளுடன் சீனக் கப்பலை இலங்கை அனுமதித்தது.

இந்தியாவின் எதிர்ப்பால் இலங்கை பணிந்தது; பாருங்கள் ‘இந்தியாவின் பராக்கிரமத்தை’ எனப் பீற்றிக் கொண்டிருந்த இந்திய ஊடகங்கள், ‘இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கை சீனக் கப்பலை அனுமதித்தது’ என நொந்து கொண்டன. யுவான் வாங் கப்பல் குறித்து ஊடகங்கள் ஒருபுறம் பீதிகளைக் கிளப்பிக் கொண்டிருக்க, இன்னொருபுறம் இந்திய ஆளும் வர்க்கங்களின் அடிவருடிகள் தங்கள் பங்கிற்குக் கூச்சலிட்டனர்.

“சீனாவின் உளவுக் கப்பல் விண்வெளி மற்றும் செயற்கைக் கோள் கண்காணிப்புகளை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும், ஏவுகணைகளை ஏவும் போர்க்கப்பல்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், “இலங்கையில் போர்க் கப்பல்களை அணிவகுக்க சீனா திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன” என்று பாமக தலைவர் ராமதாசும் பீதியூட்டிக் கொண்டிருந்தார்கள். அதேபோல் சீனக் கப்பலை அனுமதிக்கக் கூடாது என இலங்கையைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டணியும் தெரிவித்திருந்தது.

இந்திய ஆளும் வர்க்கங்களால் பூதாகரமாக பிரச்சாரம் செய்யப்பட்ட ‘சீன உளவு கப்பல்’.

இலங்கையில் நிறுத்தப்பட்ட சீனக் கப்பலால் போர் அபாயம் மூண்டதைப் போல பாவனை காட்டிய இந்தியக் கடற்படை ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் ஹெலிகாப்டரை தாழ்வாகப் பறக்கவிட்டு, கடற்படை வீரர்களைக் கொண்டு பாதுகாப்பு ஒத்திகை நடத்தியது. இவர்கள் ஊதிப் பெருக்கியதை போல எதுவும் நடக்கவில்லை. இலங்கையைவிட்டு சீன கப்பல் அமைதியாக வெளியேறியது.

***

‘உளவுக் கப்பல்’ என்று அமெரிக்க தெரிவித்த கருத்தை அப்படியே வாந்தியெடுத்தன பல இந்திய ஊடகங்கள்; ஆனால், அக்கப்பல் உண்மையில் ராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிற கப்பலல்ல, செயற்கைகோள்களை ஆராய்ச்சி செய்யும் ஆய்வுக் கப்பலே; ஃப்ர்ஸ்ட் போஸ்ட், பிபிசி உள்ளிட்ட சில ஊடகங்களே இக்கருத்தைப் பதிவுசெய்திருந்தன. அதேநேரத்தில், யுவான் வாங் கப்பல் சர்வதேச விதிமுறைகள் எதையும் மீறி இந்தியப் பெருங்கடலுக்குள் நுழையவில்லை என்பதும் கவனிக்க வேண்டியது.

மேலும் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் சீனக் கப்பல் நுழைவதற்கு அந்நாடு யாருடைய சிறப்பு அனுமதியையும் பெற வேண்டியதில்லை என்பது முக்கியமானது. சீனாவிடமிருந்து வாங்கிய கடனை திருப்பி கட்டமுடியாததால் சீன அரசுக்கு சொந்தமான சீனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் நிறுவனத்திற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம், கிட்டத்தட்ட இலங்கையில் உள்ள சீனாவின் காலனி பகுதி போன்றது. எதிர்காலத்தில் சீனா அங்கு ராணுவ கப்பலையே கொண்டுவந்து நிறுத்தினாலும் ‘சட்டப்படி’ யாரும் கேள்வி எழுப்ப முடியாது.

யுவான் வாங் கப்பல் நிறுத்தப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகமானது தென்கிழக்காசியாவை ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவுடன் இணைக்கும் பாதையில் அமைந்துள்ளது; சீனாவின் மிகப்பெரிய வர்த்தகத் திட்டமானப் பட்டுப்பாதை திட்டத்தில், இலங்கையின் அம்பாந்தோட்டை ஒரு அங்கமாகும். தென் சீன கடலில், சீனாவின் ஆதிக்கம் விரிவடைந்துவரும் போக்கில், இது ஒரு அம்சமாகும்.

ஆனால் தற்போது வந்த யுவான் வாங் கப்பல், ராணுவ நோக்கம் கொண்ட உளவுக் கப்பல் அல்ல; அமெரிக்காவால் கிளப்பிவிடப்பட்டு இந்திய ஆளும் வர்க்க ஊடகங்களால் பூதாகரமாக்கப்பட்ட பிரச்சாரமே ‘உளவுக் கப்பல் அபாயம்’.

சீன கப்பலின் வருகையை இந்தியா, அமெரிக்காவைத் தவிர வேறு நாடுகள் எதுவும் கண்டிக்கவில்லை என்பதே இதற்கு துலக்கமான சான்று. இந்திய ஊடகங்கள் புலம்பித் தள்ளுவது போல ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு உளவு கப்பலை சர்வ சாதாரணமாகக் கொண்டுவந்து நிறுத்திவிடவும் முடியாது.

***

“சீனா, ரஷ்யா, ஜப்பான், இந்தியா, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து கப்பல்கள் இலங்கைக்கு வருவது புதிதல்ல” – என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு எதிராக இந்தியா கூச்சலிடுவது இது முதல்முறை அல்ல. கடந்த காலங்களில் ஒவ்வொரு முறை சீன கப்பல் இலங்கை அல்லது இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு வந்தபோதெல்லாம் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பிரச்சாரத்தையே மீண்டும் மீண்டும் கிளப்பி விவாதப் பொருளாக்கியிருக்கிறது.

படிக்க : இந்தோ-பசுபிக் பொருளாதார கூட்டமைப்பு : சீனாவிற்கு எதிராக அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வு !

2014 ஆம் ஆண்டு, சீனாவின் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான ‘ஜான்சென்க் 2’ இலங்கைக்கு வந்தபோதும்; 2019 ஆம் ஆண்டு, அந்தமான் தீவுகளுக்கு அருகில் சீன ஆராய்ச்சி கப்பலான ‘ஷி யார் 1’ வந்தபோதும் இதே போன்ற விவாதங்கள் கிளம்பின; 2020ல் மட்டும் நான்கு முதல் ஆறு சீன ஆராய்ச்சி கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு வந்திருக்கிறது. இச்செய்திகளை இந்து நாளிதழின் தரவுகளிலிருந்து அறியமுடிகிறது.

***

அமெரிக்காவின் ஒற்றைத்துருவ உலக மேலாதிக்கம் இன்று ஆட்டங்கண்டுவரும் நிலையில், அதன் மேலாதிக்கத்திற்கு சவால்விடும் நாடாக இன்று ரஷ்யாவும் சீனாவும் வளர்ந்து நிற்கிறது. மேலாதிக்க வல்லரசுகளுக்கு இடையிலான போட்டோ போட்டியில், அடிக்கடி இதுபோன்ற பிரச்சாரங்கள் எழுப்பப்படுவதும், அதை ஒட்டி ஆளும் வர்க்க அடிவருடிகள் ‘தேசபக்தியால்’ தொண்டை கிழிவதும் வழமையாக நடப்பதுதான்.

உள்நாட்டில் பாஜக ஆட்சியில் உழைக்கும் மக்கள் சந்தித்துவரும் அவலங்கள், அவர்கள் மீதான அடக்குமுறைகள், அக்கிரமங்களை விவாதப் பொருளாக்கவிடாமல், அவர்களின் சிந்தனையில் ‘தேசவெறி’ குப்பையைக் கிளப்பிவிடதான் இத்தகைய பிரச்சாரங்கள் ஆளும் வர்க்கங்களுக்குது துணை புரிகின்றன. அதற்கு மேல் இந்நிகழ்வுகளில் ஒன்றும் இல்லை.


வெண்பா

உழைக்கும் மக்களின் மானியங்களை வெட்டி சுருக்கி கார்ப்பரேட்டுக்களை வாழவைக்கும் மோடி அரசு!

ற்போது இந்திய ஊடகங்களில், ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவசங்கள் / மானியங்கள் குறித்து தீவிரமாக விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த விவாதம், இலவசங்களால் இளைஞர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று மோடி எச்சரித்ததில் இருந்து தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து, டில்லி பாஜக தலைவரும், வழக்கறிஞரும், வகுப்புவாத வெறுப்பு பேச்சுகளுக்குப் புகழ்பெற்றவருமான அஸ்வினி உபாத்யாயா, இலவசங்கள் வழங்கப்படுவதைத் தடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஏற்கெனவே குடியுரிமை திருத்தச் சட்டம், கொடூரமான தொழிலாளர் சட்டத் திருத்தம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து என பல முக்கிய வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, உச்ச நீதிமன்றம் இந்த மனுவை மட்டும் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இப்பிரச்சினை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசிக்க 3 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

இம்மனுவில் இலவசங்கள் என பட்டியலிடப்பட்டுள்ளவையில், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் மலிவான ரேசன் விநியோகம், ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGA), மின்சார மானியம், பயிர்களுக்கான ஆதரவு விலை, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை குறைப்பதற்கான திட்டங்கள் என ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு மானியங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

ஆனால், இப்பட்டியலில் இதே அரசாங்கத்தால் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படும் பல்வேறு வரிச்சலுகைகள், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக்கடன் தள்ளுபடிகள் ஆகியவை இடம்பெறவில்லை.

படிக்க : மோடியின் இந்தியா: பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற நாடு!

அவ்வப்போது ஏதேனும் சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டு அவற்றை பெரும் விவாதமாக மாற்றுவதில் நிபுணத்துவம் பெற்றவர் மோடி. இதன்மூலம் வேலையின்மை, கடும் விலைவாசி உயர்வு, வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றில் தனது அரசாங்கத்தின் தோல்விகளை மறைப்பதில் திறமைசாலி.

முதலில், இந்த ஒருசில நலத்திட்டங்களை எல்லாம் இலவசங்கள் என்று கூறுபவர்கள் கார்ப்பரேட்களுக்கு வழங்கப்படும் பல்வேறு வரிச் சலுகைகள், இலவச நிலம், குடிநீர், பல லட்சம் கோடி கடன் தள்ளுபடிகளைப் பற்றி வாயை திறக்காமல் இறுக மூடிக் கொள்கிறார்கள்.

இந்தியா மூன்று டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் அறுபது பில்லியனர்களைக் கொண்ட பொருளாதாரத்தில் ஐந்தாவது பெரிய நாடாக இருக்கிறது என்று பெருமை பீற்றிக் கொள்கின்றனர். ஆனால், மனித வளர்ச்சிக் குறியீட்டில் ஆசியாவில் மட்டுமல்ல தெற்காசிய அண்டை நாடுகளை விடவும் பின்தங்கியே உள்ளது இந்தியா. பட்டினிக் குறியீட்டில் 116 நாடுகளில் 101 வது இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக கடந்த ஏழரை ஆண்டுகளில் தனியார்மய தாராளமய கொள்கைகளினால் மக்களின் துன்பங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

மலிவான ரேசன், ஊரக வேலை உறுதித் திட்டம், மானிய மின்சாரம் மற்றும் பயிர்களுக்கு குறிப்பிட்ட அளவிலான ஆதரவு விலை போன்றவையே பொதுமக்களின் அதிருப்தியை தணிப்பதற்காகவும் பட்டினியால் இறந்துவிடாமல் இருப்பதற்காகவுமே வழங்கப்படுகின்றன. இவையாவும் விலைவாசி உயர்வு, வேலையின்மை, விவசாயத்தில் நட்டமடைதல் ஆகிய காரணங்களால் நலிவுற்ற மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் அளிப்பவையாக இருக்கின்றன.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது என்று கூறிக் கொள்கின்றார்கள். இது உழைக்கும் மக்களை சுரண்டியதால் ஏற்பட்ட வளர்ச்சியே. ஆனால் அரசோ அவர்களுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச மானியங்களைக் கூட ரத்து செய்வதன் மூலம் அவர்கள் உயிர் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது.

அரசாங்கத்தின் வருவாயில் மூன்றில் இரண்டு பங்கு ஜி.எஸ்.டி, பெட்ரோல்-டீசல் மீதான மத்திய கலால் வரி, எண்ணெய் மற்றும் வருமான வரிகள் ஆகியவை மூலம் கிடைக்கிறது. இங்கு ஒவ்வொரு பொருளையும் வாங்கும்போதும் ஒவ்வொரு ஏழையும், அதானி போன்ற கோடீஸ்வரர்களும் ஒரே வரியையே செலுத்துகின்றனர்.

ஒரு சாமானியரின் அத்தியாவசிய தேவைகளான உணவுப்பொருட்கள், டீசல் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றிற்கு அதிக ஜி.எஸ்.டி மற்றும் கலால் வரி விதிக்கும் அதே வேலையில் வைரங்கள் மீதான வரி 1.5 சதவீதமாக இருக்கிறது. கோவிட் காலத்தில் கார்ப்பரேட் வரி 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை குறைக்கபட்டது. இதனால் 2021-22 நிதியாண்டில் மட்டும் 1.53 லட்சம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தவிர கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும், கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளில் பெற்ற பத்து லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நம் நாட்டில் பணக்காரர்கள் பரம்பரை மற்றும் சொத்துவரிகளை செலுத்தாமல் தப்பித்து விடுகின்றனர். இதனால் மத்திய பட்ஜெட்டில் துண்டு விழுந்து, நடப்பாண்டிற்கான நிதிப் பற்றாக்குறை 6.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பல்வேறு வரிச்சலுகைகளின் மதிப்பு கிட்டத்தட்ட ஐந்து லட்சம் கோடி. மேலும் பத்து லட்சம் கோடி அளவிலான வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மலிவான ரேசன் மற்றும் இலவச உணவு, MGNREGA ஆகியவற்றிற்கு ஆகும் செலவோ வெறும் 2.69 லட்சம் கோடிதான். மேலும் மக்கள் செலுத்தும் வரிப்பணத்தின் மூலம்தான் இந்த மானியங்கள் வழங்கப்படுகின்றன. எனவே முதலில் இவற்றை இலவசங்கள் என்று கூறுவதே தவறானது.

அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் எல்லா அரசாங்கங்களும் WTO, IMF ஆகிய ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களின் ஆணைகளுக்கு இணங்கி நாட்டில் தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கைகளைக் கடந்த 35 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகின்றன. இவர்களின் பட்ஜெட் முன்னுரிமைகள் எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சேவைசெய்யும் வண்ணமே உள்ளன.

மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய்களை புதிய விமான நிலையங்களுக்கும் , புல்லட் இரயில் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்வதற்கும் செலவிட ஒருபோதும் தயங்குவதில்லை. ஆனால் மக்களுக்காக சில கோடிகளை செலவளிக்க தயங்குகிறது.

படிக்க : தெலுங்கானா: ரேஷன் கடையில் மோடி புகைப்படம் வைக்க சொல்லும் நிர்மலா சீத்தாராமன்!

இது மட்டுமன்றி கொரோனா காலகட்டத்தில் சரியான சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் லட்சக்கணக்கான அப்பாவி உயிர்கள் பலியாகின. பட்ஜெட் ஒதுக்கீட்டில், கல்வி மற்றும் மருத்துவத்திற்காக ஒரு தனிபருக்கு ஒதுக்கப்படும் தொகையானது மிகவும் குறைவாக, அதாவது ஆறு துணை சஹாரா ஆப்பிரிக்க நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியா உள்ளது. அனைத்து மக்களுக்கும் சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகள் வழங்குவது அந்தந்த நாட்டு அரசாங்கங்களின் முக்கிய பொறுப்பாகும்.

பாரதிய ஜனதா கட்சி உ.பி சட்டசபை தேர்தலின்போது பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 376 டன் இலவச ரேசன் வழங்கியது. தனது உணவுத் தேவையைக் கூட நிறைவேற்றிக் கொள்ள இயலாத நிலையில் மக்கள் இருத்தப்பட்டு இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தன் வெற்றிக்கு பயன்படுத்திக்கொண்ட பிரதமர் இப்போது மட்டும் இவற்றின் பயன் குறித்து கேள்வி எழுப்புகிறார்.

இந்த இலவசங்கள் பற்றிய விவதாங்கள் எல்லாம் மக்களின் உரிமைப் போராட்டங்களைத் திசைதிருப்பும் சூழ்ச்சியே தவிர வேறொன்றுமில்லை. இவ்வாறு நலத்திட்டங்கள் மீது போர் தொடுப்பதன் மூலம், ஆளும் பா.ஜ.க அரசு தனது பாசிச நடவடிக்கைகளை மூடி மறைக்கப் பார்க்கிறது. இவ்வாறு மக்கள் மீது அன்றாடம் ஏதேனும் பிரச்சினையைத் திணித்து அவர்களை வாழவிடாமல் செய்யும் இந்த காவி-கார்ப்பரேட் பாசிச பா.ஜ.க அரசை வீழ்த்தாமல் மக்களுக்கு வாழ வழியில்லை.


கிளாரா
நன்றி: Counter Currents

கள்ளக்குறிச்சி போராட்ட மாடலை நிபந்தனையின்றி ஆதரிப்போம் ! தமிழக மாணவர்-இளைஞர்களின் பக்கம் நிற்போம் !!

ள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரைச் சுற்றியுள்ள கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் கவுண்டர் சாதி வெறியர்களுக்கு சொந்தமானவையாக உள்ளன. கல்லக்குறிச்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சக்தி கல்வி தனியார்மயத்தின் அடையாளமாக மட்டும் இல்லை. அப்பகுதியில் கோலோச்சிக் கொண்டிருக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர் சாதிவெறி ஆதிக்கத்தின் ஒரு அங்கமாகவும் இருக்கிறது.

அப்பள்ளியின் தாளாளர் சக்திவேல், கவுண்டர் சாதிவெறி அமைப்பான தீரன் சின்னமலைப் பேரவையின் நிர்வாகி. எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமானவர். சமீபத்தில் பாஜகவில் இணைந்திருக்கிறார். மேலும் அப்பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகள், ஷாகாக்கள் ஆகியவை நடைபெறுகின்றன.

அவ்வூரில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் கடை வைத்து நடத்துவதற்கு கூட கவுண்டர் சாதிவெறியர்கள் அனுமதிப்பதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு பீஃப் (மாட்டுக்கறி) சில்லி கடை வைக்க முயன்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர், கவுண்டர் சாதி வெறியர்களால் தாக்கப்பட்டார். கனியாமூர் என்பது கவுண்டர் சாதி வெறியர்களின் கோட்டையாக விளங்குவதை இதன்மூலம் அறியமுடியும்.

மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் மட்டுமல்ல, இதுவரை ஏழு மாணவர்கள் சக்தி மெட்ரிக் பள்ளியில் இறந்து போனதாக சொல்கிறார்கள். இருப்பினும் நான்கு மாணவர்கள் இறந்தது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக இருக்கிறது. பள்ளிப் பேருந்தில் இருந்து கீழே விழுந்து ஒரு மாணவி இறந்துபோனது; குளியலறையில் இரு மாணவர்களுக்கு ஏற்பட்ட சண்டையில் ஒரு மாணவன் கொல்லப்பட்டதால் இரண்டு சம்பவங்கள் விபத்தாகும், எனவே இதைக் கடந்து போகலாம். ஆனால் 12-ஆம் வகுப்பு மாணவன் பிரகாஷின் மரணத்தை அவ்வாறு கருத முடியாது.

நயினார் பாளையம், ஈரியூரைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரின் மகன் பிரகாஷ் 2007-ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்து போகிறார். இவ்வழக்கு 15 ஆண்டுகள் ஆன பின்னரும் தற்போதுவரை விசாரணைக்கு வரவில்லை. பள்ளி நிர்வாகத்திற்கும் அரசு அதிகார வர்க்கத்திற்கும் உண்டான உறவை இதிலிருந்து அம்பலமாகிறது.

அம்மாணவன் தன்னை மாய்த்துக் கொள்வதற்கு எந்தவிதமான காரணங்களும் இல்லாத நிலையில், ‘பள்ளியிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தள்ளி கிணற்றில் இறந்து கிடந்தான்’ என்பது அம்மாணவனின் பெற்றோர் மட்டுமல்ல; வேறு யாரால்தான் நம்ப முடியும்!

பிரகாஷின் மர்ம மரணத்திற்கு நீதிகேட்டு நூறு பேர் வரை அப்பள்ளி முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். அதன் விளைவாகப் பள்ளி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தையும் நடைபெற்றுள்ளது. பேச்சுவார்த்தை அறைக்கு வெளியே கவுண்டர் சாதி வெறியர்கள் நூறு பேர் கையில் கம்புகளோடு இருந்து மிரட்டியுள்ளனர். இறுதியில் பெற்றோருக்குக் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து விசயம் முடித்து வைக்கப்படுகிறது.

அதிகார வர்க்கத்தின் ஆதரவு, ஆதிக்க சாதிவெறியர்களின் பக்கபலம், ஆர்.எஸ்.எஸ் பின்னணி – இத்தனையும் உள்ள ஒரு தனியார் பள்ளியின் கொட்டத்தை மாணவி ஸ்ரீமதிக்கு நீதிகேட்டு நடத்தப்பட்ட போராட்டம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது யார்தான் எதிர்பார்த்திருப்பார்!

000

தன் மகள் எப்படி இறந்தாள் என்பதை தெரிந்து கொள்வதற்காக ஸ்ரீமதியின் தாயார் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது மட்டுமல்ல; போலீசு, நிர்வாகம் என அனைவரும் சக்தி மெட்ரிக் பள்ளியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அம்பலமானது.

கணவனின் மரணத்துக்கு நீதிகேட்டு மதுரையை எரித்தார் கண்ணகி என்பார்கள். ஸ்ரீமதியின் மரணத்துக்கு நீதிகேட்ட அந்தத்தாயின் கண்ணீர் தமிழ்நாட்டு மாணவர்-இளைஞர்களின் உள்ளத்தைச் சுட்டது. தன் மகளுக்கு நீதிகேட்டு அம்மாணவியின் தாய் தொடங்கிய மாபெரும் போராட்டம் சாதி கடந்து மக்கள்திரள் போராட்டமாக மாறி இருக்கிறது. இப்போர்குணமிக்கப் போராட்டத்தின் கதாநாயகர்கள் தமிழக மாணவர்-இளைஞர்கள்.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தன்னெழுச்சியான மாணவர்-இளைஞர்களின் போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்ட மாடலை நமக்கு நினைவுபடுத்துகிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்காக மாணவர்களும் இளைஞர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டதைப் போலவே, ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் (Justice for srimathi) என்ற பெயரில் பல்வேறு வாட்சப் குழுக்கள் அமைத்து கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளிக்கு எதிராக போராடி வருகின்றனர்.

ஸ்ரீமதிக்கு நீதி கோரி பல இ-தட்டிகள், சிறிய காணொளிகள், பதிவுகள் ஆகியவற்றை தயாரித்துப் பரப்பியுள்ளனர். முழக்க அட்டைகள், கருப்புச் சட்டை என போராட்ட நாளன்று தயாரிப்போடு சென்றுள்ளனர். இதில் பங்குபெற்ற சுற்றுவட்டாரத்து இளைஞர்களுள் ரசிகர் மன்றங்களை சேர்ந்தவர்களும் அடக்கம்.

ஜூலை 17-ம் தேதி ஸ்ரீமதிக்கு நீதிகேட்டுத் தொடங்கிய ஆர்ப்பாட்டம் நூறுபேர் அளவில் இருக்கும்போது, ​​சாலை மறியலாக இருந்தது. நூறு பேர் என்பது மாணவர்-இளைஞர்கள் போராட்டத்தில் இணைந்ததும் சுமார் ஐந்தாயிரம் பேராக அதிகரித்தது. இக்காரணத்தாலேயே பண்புநிலையில் மாறுபட்ட போராட்டம் வீரியமான வடிவத்தை எட்டுகிறது. 4 நாட்களாக மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு போராடுவோரையே தொடர்ந்து குற்றவாளியாக்குவதையும், பள்ளி நிர்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் நடவடிக்கைகளும், பள்ளி நிர்வாகத்தின் ஆர்.எஸ்.எஸ் பின்புலமும் மக்களின் மனதில் புயலாக மாறி பள்ளியைச் சூறையாடியது, தீக்கிரையாக்கியது.

கல்வி தனியார்மயத்தால் கொல்லப்பட்ட உயிர்களுக்குப் பழிதீர்க்கும் நடவடிக்கையாக இப்போராட்டம் அமைந்தது. இதுவரை தனியார் பள்ளிகளின் அட்டூழியங்களுக்கு எதிராகவும் நிறுவனப் படுகொலைகளுக்கு எதிராகவும் மேலும் ஒரு போராட்டத்தை தமிழகம் கண்டதில்லை. மேலும் சென்னை போன்ற பெருநகரம் அல்லாத, ஒப்பீட்டளவில் பின் தங்கிய பகுதி, சாதி ஆதிக்கம் நிறைந்த பகுதி சின்ன சேலம் வட்டாரம். அப்பகுதியில் ஒரு அநீதிக்கு எதிராக இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரள்வது சாதாரண விசயமல்ல. இது இப்போராட்டத்தின் கூடுதல் சிறப்பு.

நடுநிலை என்று பேசுபவர்களும் நம்மில் பலருமே எந்த தர்க்க அடிப்படையும் இல்லாமல் கள்ளக்குறிச்சி வன்முறை போராட்டம், ஆர்.எஸ்.எஸ் தூண்டிவிட்ட போராட்டம் அல்லது சமூக விரோதிகள் உள்ளே புகுந்துவிட்டார்கள் என்று பேசினார்கள். அநீதிக்கு எதிராக தன்னெழுச்சியாக நடைபெறும் மக்கள் போராட்டம் சூழலைப் பொறுத்து வன்முறை வடிவத்தையும் எடுக்கும் எந்த அடிப்படையான விதியைக் கூட அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இவ்வாறு பேசுவோர் திமுக ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பவர்கள் கிளப்பிடும் விவாதத்திற்குப் பலியாகிறார்கள்; இன்னொருபக்கம் அவர்கள் மக்கள் மீதான நம்பிக்கையின்மையை அப்படி வெளிப்படுத்துகிறார்கள்.

ஆனால், ஜல்லிக்கட்டு பாணி போராட்ட மாடல் பரவிவருவதை நம்மைவிட ஆளும் வர்க்கமும் அரசும் நன்கு அறிந்து வைத்துள்ளன. கள்ளக்குறிச்சி போராட்டம் அவர்களை அச்சுறுத்தியுள்ளது. இப்போராட்டத்திற்கு பின், மிகப்பெரிய போலீஸ் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டதன் மூலம் அநீதிக்கு எதிராக ஆவேசம் கொண்டு, தன்னெழுச்சியாகப் போராடும் தமிழக மாணவர்-இளைஞர்களுக்கு அரசு வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளது.

பள்ளிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் 12 மணியுடன் கலைந்துசென்ற பிறகு, அச்சுற்றுவட்டாரத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட அப்பாவி இளைஞர்கள், மாணவர்கள், மக்களைப் பிடித்து கலவரத்தில் ஈடுபட்டதாக காவல் துறையினர் கைது செய்தனர். இன்னொருபக்கம் தங்கள் சாதி ஆதிக்கத்தின் குறியீடு சிதைவுற்றதைத் தாங்கிக் கொள்ள முடியாத கவுண்டர் சாதிவெறியர்கள் அப்பகுதியில் போலீசுக்கு இணையாக வேட்டை நடத்தி தலித், வன்னியர் என பிற சாதி இளைஞர்களைப் பிடித்து தாக்கியுள்ளனர்; குறிப்பாக தலித் இளைஞர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்; போலீசுக்கு ஆள்பிடித்துக் கொடுத்துள்ளனர்.

ஸ்ரீமதிக்கு நீதிகேட்டு வாட்சப் குழுவை உருவாக்கிய மாணவர்களைத் தேடித்தேடிச் சென்று கைதுசெய்து அச்சமூட்டியது போலீசு. கைதுசெய்த மாணவர் இளைஞர்களின் கைகால்களை உடைத்து ‘பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டார்கள்’ என்று வெளிப்படையாக விளம்பரம் செய்தார்.

000

கடந்த பத்தாண்டுகளில் எத்தனை மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்டோ, கொலை செய்யப்பட்டோ மர்மமான முறையில் இறந்து போனார்கள் என்று கணக்கெடுக்க முடியாது. ஏனெனில் அரசும் அதிகார வர்க்கமும் அந்தக் கொலைகளையெல்லாம் தற்கொலைகளாக மட்டுமே மாற்றிவிட்டன. இதன்மூலம் கல்வி தனியார்மயத்துக்கும் கொள்ளைக்கார கிரிமினல் கல்வித் தந்தைகளுக்கும் படுகொலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரணத்தையும் வர்க்கம் அந்த திசையை நோக்கித்தான் நகர்த்திக் கொண்டிருக்கிறது.

ஒட்டு மொத்த அரசின் அரசியல் கொள்கையே தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்றபின் அதைக் காப்பாற்றவும், கார்ப்பரேட்டுகள் அக்கொள்கைகளால் வளம் கொழிக்கவும் மட்டுமே இந்த அரசால் முடியும். இப்படிப்பட்ட அரசு எப்படி கல்வி தனியார்மயத்தால் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் என்ற கோணத்தில் இருந்து சிந்திக்கும் போதுதான் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளிக்கு எதிரான போராட்டத்தைப் புரிந்து கொள்ள முடியும், ஆதரிக்கவும் முடியும்.

லட்சக்கணக்கானோர் கடற்கரையில் கூடி மோடி அரசை பணியவைக்க முடியும் என்பது ஜல்லிக்கட்டு மாடல்; லட்சம் மக்கள் கூடினால் கார்ப்பரேட் வேதாந்தா நிறுவனத்தை மூட முடியும் என்பது தூத்துக்குடி மாடல்; இப்படிப்பட்ட போராட்ட வழிமுறைகள் பரவிவிடக் கூடாது என்பதற்காகவே சென்னையில் மீனவர் குடிசைகளைத் தீவைத்தது மக்கள் மீது நடத்தப்பட்ட கொடும் தாக்குதல்கள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அதற்குப் பின்னாளில் அடக்குமுறைகள். இவை போலீசும் அரசும் இணைந்து மக்களை ஒடுக்குவதற்காக உருவாக்கிய மாடல்கள்.

பல்லாயிரக்கணக்கான தன்னெழுச்சிப் போராட்ட மாடல்களிலிருந்து பல்வேறு அனுபவங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பெற்ற மக்கள் திரளின் ஒரு பகுதி நடத்திய போராட்ட வடிவமே கள்ளக்குறிச்சி மாடல். இந்த கள்ளக்குறிச்சி போராட்ட மாடலுக்கு எதிராக ராஜசேகர் தலைமையிலான சாதிவெறி கும்பலுடன் இணைந்து போலீசு நடத்திய வெறியாட்டம் இன்னொரு ஒடுக்குமுறை மாடல்.

இந்த இரண்டில் ஒன்றின் பக்கம்தான் நாம் நிற்க முடியும். ஏனெனில் இனி கள்ளக்குறிச்சி மாடலோ அல்லது அதிலிருந்து மேம்பட்ட மாடலோதான் மக்களின் போராட்ட வடிவமாக இருக்கும். அன்றாடம் மக்களின் வாழ்வு கொஞ்சம் கொஞ்சமாகச் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கும்போது, ​​அநீதிக்கு எதிராக எரிமலையாக வெடிப்பார்கள். இலங்கையில் ராஜபக்சேக்களுக்கு எதிரான போராட்ட மாடலை ஆதரிப்போர் கள்ளக்குறிச்சி மாடலை ஆதரிப்பதில்லை. ஏனெனில் சாதியும் வர்க்கமும்தான் அவர்களை யோசிக்க வைக்கிறது. இந்த நடுநிலை நாயகர்களின் கூற்றைப் புறந்தள்ள வேண்டும்.

அநீதிக்கு எதிரான உணர்வை அச்சுறுத்தலால் ஒடுக்க நினைக்கும் அதிகார வர்க்கத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்வோம், கள்ளக்குறிச்சி போராட்ட மாடலை எந்த நிபந்தனையுமின்றி ஆதரிப்போம்!

சங்கர் குஹா நியோகி விட்டுச்சென்ற போராட்ட மரபு

த்தீஸ்கர் முக்தி மோர்ச்சாவின் நிறுவனரான தோழர் சங்கர் குஹா நியோகி எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவராக இல்லாதிருந்தாலும், நன்கறியப்பட்ட மார்க்சிய – லெனினியவாதி ஆவார். 1977 முதல் சத்தீஸ்கரில் உழைக்கும் வர்க்க இயக்கத்தைக் கட்டினார்; தொழிலாளர்களின் ‘உரிமையுள்ள பங்கை’ கோரி, முதலாளிகளுக்கு எதிராகத் தீவிரமான தொழிற்சங்கப் போராட்டங்களை வர்க்கரீதியான வழியில் வழிநடத்தியதோடு மட்டுமின்றி, அதையும் தாண்டி செயல்பட்டவர். வள ஆதாரங்கள் நிறைந்த, ஆனால் பிற்படுத்தப்பட்ட பகுதியில், தொழிலாளர் விவசாயக் கூட்டணியின் (எனவேதான் சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சாவின் கொடி சிவப்பு – பச்சையாக இருக்கிறது).

தலைமைப் பொறுப்பில் உள்ள உழைக்கும் வர்க்கம், அந்தப் பகுதியில் அனைத்து உழைக்கும் மக்களின் போராட்டத்தின் (நியாயமான, சமத்துவமான – வளர்ச்சிக்காகத் தொழிலாளர்கள், விவசாயிகள், நகர்ப்புற ஏழைகள், கடை உரிமையாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் சிறுதொழிலதிபர்கள் கூட நடத்தும் போராட்டத்தின்) முன்வரிசைப் படையாக இருக்க வேண்டும் என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார். பெருநிறுவன மேலாதிக்க சக்திகள், அவற்றின் புதிய நடுத்தரகர்கள், பெருநிறுவன கொள்கைக்கு வசதி செய்து தரும் அரசியல் சக்திகள் என்று ஆகப் பிற்போக்கான சக்திகளுக்கு எதிராகத் திரளுதல் என்பது அதன் அர்த்தம்.

படிக்க: பாட்டாளி வர்க்கத்தை அமைப்பதற்கு இதோ ஓர் ஆயுதம்! – நூல் அறிமுகம்

அந்த உறுதியான வர்க்கக் கண்ணோட்டத்துடன், உழைக்கும் வர்க்கத்தால் வழிநடத்தப்படும் தேசிய இயக்கம் ஒருபோதும் பிற்போக்காக மாறாது என்று தோழர் நியோகி நம்பினார்; உதாரணமாக, மஹாராஷ்டிராவில் சிவசேனா / எம்.என்.எஸ். இயக்கங்களைக் குறிப்பிட்டார். பிறப்பின் அடிப்படையில் இல்லாமல், வர்க்க நிலையின் அடிப்படையிலான அவரது வரையறையான ‘யார் சத்தீஸ்காரர்’ என்ற வரையறை இந்த வேறுபாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. (உள்ளூரில் உள்ள அவரது உடனுழை தொழிலாளர் போலவே, இந்தப் பகுதியில் தனது வாழ்வாதாரத்தை ஈட்டப் போராடும் ஒரு புலம்பெயர் தொழிலாளிக்கும் இந்த சத்தீஸ்கர் சொந்தம்)

நியோகியால் சுரங்க நகரியமான துர்க் மாவட்டத்தில் உள்ள டல்லி ராஜ்ஹராவில் நிறுவப்பட்டு, தலைமை வகிக்கப்பட்ட தொழிற்சங்கம் வேலை நிலைமையை மட்டும் கவனிக்கும் எட்டு மணி நேர சங்கம் அல்ல; தொழிலாளர்களின் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கவனிக்கும் 24 மணிநேர சங்கம். சுகாதாரம், கல்வி கலாச்சாரம், சேமிப்பு, விளையாட்டு உட்பட 17 துறைகள் சங்கத்தில் இருந்தன.

11 பள்ளிகளை சங்கம் நடத்தியது; ஷாகித் (Shaheed) மருத்துவமனை என்ற மருத்துவமனையை நடத்தியது; சுரங்கங்களை சுற்றியிருந்த ஏழை கிராமப்புற மக்களுக்கு சேவை யாற்றும் முழுமையான சமூக மருத்துவமனையாக அது வளர்ச்சியுற்றது. தொழிலாளர்களிடையே குடிப்பழக்கம் நிலவுவதற்கு எதிராக அந்த பெண்கள் பிரிவான ‘மஹிளா முக்தி மோர்ச்சா’ வெற்றிகரமான போராட்டம் நடத்தியது.

ஓர் ஆக்கபூர்வ மாற்றாக ‘பாதி இயந்திரமய’ முறையை உருவாக்கி, நிறுவ சங்கம் போராடியது; அந்த வேலை வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டது மட்டுமின்றி, சிக்கனமானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கிறது என்று பிலாய் ஸ்டீல் நிர்வாகத்தால் ஒப்புக்கொள்ளப்படும் அளவிற்கு, ஆஸ்திரேலியாவிலிருந்து கனரக இயந்திர சுரங்கக் கருவியை இறக்குமதி செய்வதை விட மேலதிக சுயச்சார்பு மாற்றப்பட்டது. சங்கத்தின் ‘விவசாயத்துறை’யில் சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சா வளர்ந்தது.

தொழிற்சங்க இயக்கத்தை அதன் மையப் பணியாக வைத்துக்கொண்டு, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கான கூட்டு அமைப்பாக அது கட்டப்பட்டது. டல்லி ராஜ்ஹரா சுரங்கத்தைச் சுற்றியுள்ள நூற்றுக்கு மேலான கிராமங்களில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகப் பல வகையான போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். தொழிலாளர் வர்க்க நலனுக்கு எதிரானது விவசாய வர்க்க நலன் என்ற கருத்தாக்கத்தை தோழர் நியோகி முழுவதுமாக முறித்துக் காட்டினார்; சித்தாந்த ரீதியில் மட்டுமின்றி, உயிரோட்டமான பெருந்திரள் மக்கள் பங்கேற்ற செயல்பாடுகள் மூலம் அவ்வாறு செய்தார்.

(இந்திய உழைக்கும் வர்க்கமும் அதன் எதிர்காலமும் என்ற நூலிலிருந்து…)

அலைகள் வெளியீட்டகம்
எண்: 5/1ஏ, இரண்டாவது தெரு,
நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089
கைபேசி: 9841775112
விலை: ரூ.330.00

New Democracy – September 2022 | Magazine

New Democracy September – 2022 Printed issue has now published. We ask readers and comrades to buy, read and support.

New Democracy (Puthiya Jananayagam) September – 2022

List of Articles Present in this Issue :

  • Parliamentary Facism
  • The Working People pushed towards Catastrophe by the Fascist Modi Regime!
  • Saffron Fascism oppressing the Minorities!
  • Saffron-Corporate coalition regime looting the country!
  • Let’s defeat RSS-BJP, Ambani-Adani Fascisam!
  • A few remarks on the attitude of the proletarian party in paying Salute and Tribute
  • DMK Government Unleashing State Terrorism!
  • Droupadi Murumu, Illayaraja: Be traitor and get a Post!

To get Free e-magazine, mail us : puthiyajananayagam@gmail.com

To Get the Magazine by Post :
Contribution : Rs. 25
Pay through G-Pay : 94446 32561

Make Payment and send your address details along with Payment receipt to our email : puthiyajananayagam@gmail.com

பாட்டாளி வர்க்கத்தை அமைப்பாக்குவதற்கு இதோ ஓர் ஆயுதம்! – நூல் அறிமுகம்

மகாலத்தில் அரிதினும் அரிதாகவே இந்திய உழைக்கும் வர்க்கத்தைப் பற்றி, அதிலும் குறிப்பாக பாட்டாளி வர்க்கத்தைப் பற்றிய ஆய்வுகள் வந்துள்ளன. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கின்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் நடைமுறைக்கு வந்த காலத்தில், இந்திய விவசாய வர்க்கத்தைப் பற்றியும் விதர்பா விவசாயிகள் குறித்தும் பி.சாய்நாத்தின் ஆய்வுகள் முதன்மையானவையாக இருந்துள்ளன. விவசாயம் தொடர்பாகவும், பழங்குடி மக்கள் தொடர்பாகவும் அவர்களது வாழ்வு சூறையாடப்படுவது தொடர்பாகவும் பெருநகரமயமாக்கத்தின் விளைவாக உருவாகியிருக்கும் கோடிக்கணக்கான உதிரித் தொழிலாளர்கள் குறித்தும் அவர்களது நிலைமைகள் குறித்தும் அவ்வப்போது சில ஆய்வுகள் வெளிவந்துள்ளன.

ஆளும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் நிலைமை, அது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அன்றாடம் ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகள் ஆய்வுகளுடன் ஒப்பிடும்போது சமூகத்தின் 99 சதவிகிதமான உழைக்கும் வர்க்கங்கள் குறித்து வந்த இந்த ஆய்வுகள் மிகமிகக் குறைவானவையே.

இருப்பினும், உழைக்கும் வர்க்கத்தின் பிற பிரிவுகளான இந்த வர்க்கங்கள் குறித்து வந்த அளவிற்குக் கூட தொழிலாளி வர்க்கம் தொடர்பாக ஆய்வுகள் வெளிவந்ததில்லை என்பதுதான் அவலமான எதார்த்த நிலைமையாகும். அமைப்புசார்ந்த தொழிற்சங்கங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தும், தொழிலாளி வர்க்கத்தில் ஏற்படும் மாற்றங்கள், அது எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அமைப்பாக்குவதில் கிடைத்த அனுபவங்கள் குறித்த ஆய்வுகள் மிகமிகக் குறைவாக வெளிவந்திருப்பது, மார்க்சிய, கம்யூனிச இயக்கங்கள் திசைவிலகிச் செல்லும் போக்கினை நமக்கு உணர்த்துகின்றன.

தேர்தல் அரசியல் வரம்பிற்குள் இருக்கும் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் அவ்வப்போது அடிப்படை உழைக்கும் வர்க்கப் பிரிவினர் மத்தியில் செயல்பட்டாலும் அவர்களை அரசியல்படுத்தும் போராட்டம் மிகக் குறைவே. பொதுத்துறைகள் தனியார்மயத்திற்கு எதிராகப் போராடுகின்ற அல்லது பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்ற ஊழியர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அப்போராட்டங்களில் ஈடுபட்டதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய தொழிற்சங்கங்களே மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கும் அவலநிலைமையை நாம் பரவலாகக் காண்கிறோம்.

இன்னொருபுறம், ‘அரசியல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது’ என்று கருதிக்கொண்டு, தான் அன்றாடம் சந்திக்கின்ற தொழிலாளர்கள் குறித்துகூட அக்கறை கொள்ளாத மனோபாவம் சிறிய இயக்கங்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்துகிறது.


படிக்க : நூல் அறிமுகம் : மார்க்சியம் – வர்க்கமும் அடையாளமும்


இவை எதுவாக இருந்தாலும் மேற்கண்ட நிலைமைகள் மார்க்சிய இயக்கங்கள் அடிப்படை உழைக்கும் வர்க்கங்களிடமிருந்து அந்நியப்பட்டு வெகுதூரம் சென்று கொண்டிருக்கின்றன என்பதையே உணர்த்துகின்றன.

எம்மை உள்ளிட்ட புரட்சிகர ஜனநாயக இதழ்களும், இயக்கங்களும் இவ்வர்க்கங்கள் மத்தியில் மேற்கொண்ட பணிகள், இவ்வர்க்கங்களை அமைப்பாக்குவது தொடர்பாகப் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள், மேற்கொண்ட ஆய்வுகள் சொற்பமானவையே என்பது சுயபரிசீலனைக்கு உரியவையாகும்.

***

சத்தீஷ்கர் மாநிலத்தின் சங்கர் குஹா நியோகி, மும்பையின் தத்தா சமந்த் போன்ற மாபெரும் தொழிற்சங்கத் தலைவர்களை இன்று இந்தியாவில் எந்த மூலையிலும் பார்க்க இயலவில்லை. நீண்டகாலமாக தொழிற்சங்க இயக்கத்தில் இருக்கும் இந்த வெற்றிடத்தைப் பயன்படுத்தி, என்.ஜி.ஓ.க்கள் தொழிலாளர் வர்க்கத்தை முனைமழுங்கச் செய்துவந்தன. இன்று, அந்த இடத்தை பாசிஸ்டுகள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். இவை இரண்டும் தொழிலாளர் வர்க்கத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தை நிரந்தர அடிமைத்தனத்தில் வீழ்த்தும் ஆபத்தானவை.

மற்றொருபுறம், விவசாயப் பண்ணைகளில் பணிபுரியும் கூலித் தொழிலாளர்கள், செங்கற் சூளைத் தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், பல்வேறு வகையான பட்டறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பின்னலாடைத் தொழிலாளர்கள், ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், மால்கள், துணிக்கடை மற்றும் நகைக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஓலா, உபேர் போன்றவற்றின் வாகன ஓட்டுனர்கள், ஃபிலிப்கார்ட், அமேசான், ஸ்வக்கி, செமேட்டோ போன்றவற்றில் பணிபுரியும் டெலிவரி பாய்கள், நகராட்சி, மாநகராட்சிகளின் துப்புரவுத் தொழிலாளர்கள், நகர வளர்ச்சிப் பணியில் ஈடுபடுத்தப்படும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், மருத்துவ செவிலியர்கள் என்று சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் என பாட்டாளி வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகள் அமைப்பாக்கப்படாமல் சிதறிக்கிடக்கின்றனர்.

இப்பிரிவினரை அமைப்பாக்கும் சிரமமான பணியைக் கண்டு மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டிருப்பவர்களாகக் கருதப்படுபவர்களே அஞ்சுகின்றனர்.

இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்றால் அவர்கள்பால் உள்ளூர் தொழிலாளர்கள் மத்தியில் சிறு முதலாளிகள் உருவாக்கியிருக்கும் அச்சம் தனிவகையானது. வர்க்கப் பார்வையை மறுத்து முன்வைக்கப்படும் மத, மொழி, இனவாத அரசியலுக்கு இந்த புலம்பெயர் தொழிலாளர்களின் அவல வாழ்க்கை நிலைமையைப் பயன்படுத்தப்படுகிறது. இத்தொழிலாளர்களை அமைப்பாக்கத் தவிர்ப்பதன் மூலம், வர்க்க ஒற்றுமையைப் பேசுகின்ற தொழிற்சங்கங்கள் கூட, இந்தத் தொழிலாளர்களுக்கு அந்நியமாவதும், இதன் வாயிலாக வர்க்க வேறுபாடு நிலைநிறுத்தப்படுவதும் நடக்கிறது. இந்த வெற்றிடத்தைத்தான் சங்கப் பரிவாரங்கள் கைப்பற்றிக் கொள்ளத் துடிக்கின்றன. அதிகாரத்தைக் கையிலெடுக்கும் ஒரு வர்க்கம், அடியாள் படையாக்கப்பட்டு வருகிறது.

இவற்றையெல்லாம் முறியடித்து தொழிலாளர் வர்க்கப் பிரிவினரை அமைப்பாக்கி அரசியல் அதிகாரத்தை நோக்கி உயர்த்துவதற்கு இன்றைய மறுகாலனியாக்கச் சூழலில் அதன் தன்மை, அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அதனை அமைப்பாக்குவதற்குரிய வாய்ப்புகள், அதில் கிடைத்த அனுபவங்கள் போன்றவை குறித்து விரிவான பரிசீலனை அவசியமாக இருக்கிறது.

***

மும்பையைச் சேர்ந்த, “அரசியல் பொருளாதாரத்திற்கான ஆராய்ச்சி அலகு” என்ற ஆய்வு மையத்தின் சார்பாக ஆங்கிலத்தில் கொண்டுவரப்பட்ட “இந்திய உழைக்கும் வர்க்கமும் அதன் எதிர்காலமும்” என்ற நூலை “அலைகள் வெளியீட்டகம்” தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டுவந்திருப்பது, மேலே குறிப்பிட்ட தேவையை நிறைவேற்றுவதற்கான, குறிப்பிடத்தக்க, முக்கியத்துவமுடைய பணியாகும்.

 

உலகம் பன்முகமாக இருந்தாலும் நாமறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே காண்கிறோம். இன்று நாம் காணும் உலகத்தில் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமுதாயங்களின் உற்பத்தி உறவுகளின் நீட்சியின் காரணமாக நிலவும் வர்க்க வேறுபாடுகளுடன் ஏகபோக முதலாளித்துவக் காலகட்டம், காலனியாதிக்க, நவீன காலனியாதிக்கக் காலகட்டங்களைக் கடந்து இன்றைய மறுகாலனியாக்கக் காலகட்டம் நிலவுகின்ற சூழலில், வர்க்க வேறுபாடுகள் மென்மேலும் சிக்கலான வகையில் வளர்ந்தும் கூர்மையடைந்தும் வருகின்றன.

‘சுரண்டுபவர்கள் – சுரண்டப்படுபவர்கள்’ என்ற இரு பிரிவுகளில், அதிலும் குறிப்பாக ‘முதலாளி – தொழிலாளி’ என்ற இரு பெரும் வர்க்க முரண்பாடுகளில் ‘தொழிலாளி வர்க்கம்’ என்ற ஒரு கூறை எடுத்துக் கொண்டு, இந்தியாவில் அதன் நிலைமை குறித்து விரிவாகப் பரிசீலித்திருக்கிறது, இந்நூல்.

அன்றாடம் அல்லலுறும் இந்த வர்க்கம் குறித்து குட்டிமுதலாளிய பிரிவினர் இன்றைக்கும் ஒரு அசட்டைப்போக்கை வெளிப்படுத்தி வருகின்றனர். தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகள் நடைமுறைக்கு வந்த பின்னர் உருவான அவுட்சோர்சிங், காண்ட்ராக்ட் உற்பத்தி முறை போன்றவை காரணமாக, அற்ப ஊதியத்திற்கு எந்த அடிப்படை உரிமைகளும் இல்லாமல், பணிப்பாதுகாப்பும் இல்லாமல் வேலை செய்யும் இந்த தினக்கூலித் தொழிலாளர்கள், நவீன கொத்தடிமைகளாகக் காட்சியளிக்கின்றனர்.

ஒரே வார்ப்பான தன்மையில் தொழிலாளர் வர்க்கத்தை எளிதில் வகைப்படுத்திவிட முடியாத நிலைமை இன்று நிலவுகிறது. இது இந்த வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகளை அமைப்பாக்குவதிலும் பிரதிபலிக்கிறது. பாட்டாளி வர்க்கம் குறித்த மார்க்ஸின் வரையறை, ஏகாதிபத்திய காலகட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், மேற்கத்திய நாடுகளில் பாட்டாளி வர்க்கத்தின் தன்மை, இந்தியாவில் பாட்டாளி வர்க்கத்தின் தன்மை குறித்து ஒரு தொகுப்பான சித்திரத்தை இந்நூல் வழங்குவது மற்றொருமொரு சிறப்பாகும்.


படிக்க : பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் ! | ஜே. வி. ஸ்டாலின்


பல்வேறு வகைகளாகப் பிரிந்து கிடக்கும் பாட்டாளி வர்க்கத்தை அமைப்பாக்க வேண்டும்; பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்திற்கான வர்க்கம் என்ற உணர்வைப் பெறுவதற்கு அதனை அமைப்பாக்கும் இந்த நடவடிக்கைதான் முதல்படி. அதற்கு உதவும் வகையில், பாட்டாளி வர்க்கத்தில் ஏற்படும் மாற்றங்கள், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், தொழிற்சங்கங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், உரிமைகளை அடைவதற்கான போராட்டங்கள், அனுபவங்கள் பரவலாகப் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். மேலும், பாட்டாளி வர்க்கத்தை அமைப்பாக்குவதற்கும் அரசியல் அதிகாரத்திற்கான வர்க்கம் என்ற வகையில், அதனை அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதற்குமானக் கடமையை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

மார்க்சியவாதிகளுக்கே உரிய இந்தக் கடமையை மேற்கொள்ள இந்த நூல் பெரும் உந்துதலை வழங்குகிறது. அமைப்பாக உள்ள தொழிலாளர்கள், தோழர்கள் தங்களது வட்டங்களில் இந்த நூல் மீதான விவாதங்கள், வகுப்புகளை நடத்துவதன் மூலம் தொழிலாளர் வர்க்கத்தை அமைப்பாக்கும் முதன்மையான கடமையை நிறைவேற்றுவதை நோக்கி முன்னேற வேண்டும்!

ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.

அலைகள் வெளியீட்டகம்
எண்: 5/1ஏ, இரண்டாவது தெரு,
நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089
கைபேசி: 9841775112
விலை: ரூ.330.00

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2022 | மின்னிதழ்

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

செப்டம்பர்-2022 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜி−பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ. 20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

  • தலையங்கம்: கள்ளக்குறிச்சி போராட்ட மாடலை நிபந்தனையின்றி ஆதரிப்போம்! தமிழக மாணவர் – இளைஞர்களின் பக்கம் நிற்போம்!
  • கல்வித் தொலைக்காட்சியில் சங்கி நியமனம்! ஆர்.எஸ்.எஸ்-க்கு அடிமட்ட வேலை பார்க்கிறதா திமுக?
  • ஹர் கர் திரங்கா: பாசிஸ்டுகளின் தேசபக்தி அரிதாரம்!
  • பாசிஸ்டுகளின் கரங்களுக்கு கோடாரிக் காம்புகளை வழங்கும் அடையாள அரசியல்!
  • பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது ஏமாற்று! டெல்டாவை சூறையாடத் துடிக்கும் மோடி அரசு!
  • பில்கிஸ் பானு வழக்கில், குற்றவாளிகள் விடுதலை: ‘இந்துராஷ்டிர நீதிக்கு’ எதிராக ஆர்த்தெழுவோம்!
  • இயல்பு நிலையாகிவிட்ட இயற்கைப் பேரிடர்கள்! இன்றியமையாதது, முதலாளித்துவத்தின் அழிவு!
  • காவி கும்பலின் தொடர் சதிச் செயல்களை முறியடித்து, முன்னேறும் விவசாயிகள்!
  • நூல் அறிமுகம்: பாட்டாளி வர்க்கத்தை அமைப்பாக்குவதற்கு இதோ ஓர் ஆயுதம்!
  • இலங்கையில் ‘சீன உளவுக் கப்பல்’: மக்களைத் திசைதிருப்பிய ஆளும் வர்க்க ஊடகங்கள்!!
  • மின்சார சட்டத் திருத்தம் 2022: மின்துறையை மொத்தமாக விழுங்கவரும் கார்ப்பரேட் மலைப்பாம்பு!
  • செஸ் வரி: இந்துராஷ்டிர சாம்ராஜ்யத்திற்கு மாநிலங்கள் செலுத்தும் கப்பம்!

விழிஞ்சம் துறைமுகத் திட்டம்: அதானிக்கு சேவகம் செய்யும் கேரள அரசு!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே விழிஞ்சம் துறைமுகத் திட்டத்தைத் தொடங்கியுள்ள அதானி குழுமம் அதன் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. துறைமுகத் திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என கூறும் 40 கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31 வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேறும்வரை போராட்டம் ஓயாது என்றும் உறுதியாக நிற்கின்றனர்.

போராட்டத்தின்போது துறைமுக வாயிலில் போடப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு துறைமுகத்தை நோக்கி அணிவகுத்து சென்ற மீனவர்கள், கௌதம் அதானியின் உருவ பொம்மையை எரித்தனர். மேலும் சிலர் தங்களின் மீன்பிடி படகுகளைக் கொண்டு கடலுக்குள் இறங்கி கடல்வழியாகவும் துறைமுகத்தை முற்றுகையிட்டனர்.

கடல் – தரை மார்க்கமாக முற்றுகையிட்டதன் விளைவாக துறைமுகத்திற்கு தேவையான கட்டுமானப் பொருட்கள் எடுத்து செல்வது தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் தனது கட்டுமானப் பணியினை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டது அதானி குழுமம் என்கிறது டௌன் டூ எர்த் (Down to earth) இணையதளம்.

போராட்டக்காரர்களால் தனது துறைமுக ஊழியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே துறைமுகக் கட்டுமானப் பணியினை முடிக்க துறைமுகத்திற்கு தடையின்றி சென்றுவர சி.ஆர்.பி.எஃப் (CRPF) பாதுகாப்பு வழங்கக் கோரியும் கேரள நீதிமன்றத்தை நாடியது அதானி குழுமம். “கேரள அரசு நாடினால் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையை (CISF) அனுப்ப தயார்” என்று நீதிமன்றம் மனு குறித்தான விசாரணையை கையெடுப்பதற்கு முன்பே, மத்திய அரசு ஆலோசகரிடம் இருந்து அழைப்பு வருகிறது என்றால் எந்தளவு முக்கியமான திட்டம் என்று புரிந்துகொள்ள முடியும்.

விழிஞ்சம் துறைமுகத் திட்டம் மீனவர்களுக்கு மட்டுமல்ல சுற்றுச்சூழலுக்கே பேராபத்து:

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் அதானி குழுமத்துடன் போடப்பட்ட சலுகை ஒப்பந்தத்தின்படி (Concession Agreement) விழிஞ்சம் துறைமுகத் திட்டம் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சலுகை திட்டம் என்பது, தனியாரால் தொடங்கப்படும் திட்டத்திற்கு சில ஆண்டுகள் அரசு உதவிகளும்(நிதி), உரிமைகளும் வழங்குவதாகும்.

விழிஞ்சம் துறைமுகம் என்பது இந்தியாவின் முதல் மெகா டிரான்ஸ்ஷிப்மென்ட் கொள்கலன் முனையமாக (Mega Transshipment Container Terminal) இருக்கும். ரூ.7,525 கோடி செலவில் கட்டப்படும் இது இந்திய துணைக்கண்டத்தில் உள்ள சர்வதேச கப்பல் வழித்தடங்களுக்கு அருகில் அமைந்துள்ள ஆழ்கடல் துறைமுகம் என்கிறது அதானி போர்ட்ஸ் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் இணையதளம்.


படிக்க : இலங்கை மின் உற்பத்தி ஒப்பந்தம்: அதானியின் பகற்கொள்ளைக்கு மோடியின் கரசேவை!


இத்துறைமுகத் திட்டத்திற்கென கிட்டத்தட்ட 450 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது; 120 ஹெக்டேர் பரப்பளவு கடலின் அடிப்பகுதியை துளைக்க வேண்டும். இத்திட்டத்திற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2011 அனுமதி வழங்கியபோதே, மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

மேலும் துறைமுகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கடல் அரிப்பு ஏற்படும் என்கின்ற சுற்றுச்சூழல் நிபுணர்கள், துறைமுகத்தில் நிறுத்தப்படும் கப்பல்களை, அலைகள் மற்றும் புயல்கள் தாக்காமல் இருக்க கடலலை வரும் திசைக்கு செங்குத்தாக பிரேக்வாட்டர்ஸ் (Breakwaters) கட்டப்படுகிறது. இப்பிரேக்வாட்டர்ஸால் கடல் நீரோட்டத்தின் திசையே மாறியுள்ளது. இதன்விளைவாக அடிக்கடி கடல் சீற்றம், கொந்தளிப்புகள் ஏற்படுவதால் கடலில் விபத்துகளும், சில நேரங்களில் உயிரழிப்புகளும் ஏற்படுகிறது என்கின்றனர். இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு அவர்களது வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

ஏற்கனவே 2019 இல் வலியத்துறை மற்றும் முட்டத்தாரா உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ஏற்பட்ட கடல் அரிப்பால் வீடுகளை இழந்த 143 குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அதேபோல சங்குமுகம் கடலில் ஏற்பட்ட கடல் அரிப்பால் கடற்கரையும் மக்கள் பயன்படுத்தமுடியாதளவு மோசமாகிவிட்டது என மோங்கபே இந்தியா (Mongabay-India) என்ற இணையதள தரவு கூறுகிறது.

இத்திட்டம் தொடர்ந்தால் மேலும் என்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை விவரிக்கிறார் கோஸ்டல் வாட்ச் (Coastal Watch) என்ற தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினரும் விழிஞ்சம் திட்டத்தை ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வருபவருமான ஏ.ஜெ.விஜயன். “திட்டத்தின்படி 3.2 கி.மீ. தூரம் கடற்கரைக்கு செங்குத்தாக பிரேக்வாட்டர்கள் அமைக்கப்பட வேண்டும். தற்போது வெறும் 1 கி.மீ. தூர அளவிற்குதான் பணி முடிந்துள்ளது. இப்போது திட்டத்தை கைவிட வேண்டும். அப்படியின்றி மேலும் தொடர்ந்தால் அதிகளவு கற்கள் தேவைப்படும். கற்களை குவாரிகள் மற்றும் சுரங்கங்களில் இருந்துதான் எடுக்கமுடியும் என்பதால் சுற்றுச்சூழல் மேலும் பாதிப்படையும் அபாயம் உள்ளது.

கடந்த மே மாதம், கற்களை எடுப்பதற்காக குவாரிகளை அமைக்க அதானி குழுமத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது தேசிய வனவிலங்கு வாரியம். மேற்கு தொடர்ச்சி மலைகள் உள்ள கேரளத்தில், அதிகளவில் மலைசரிவுகள் ஏற்படுவது இயல்பு. ஆனால் இங்கிருக்கும் 30-க்கும் மேற்பட்ட குவாரிகளால் மலைசரிவுகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன. இதுபோன்று 2019 இல் ஏற்பட்ட மலைசரிவில் சிக்கி கிட்டத்தட்ட 50 பேர் உயிரிழந்தனர். மேலும் நெய்யாறு மற்றும் பெப்பரா பகுதிகள்தான் திருவனந்தபுரத்திற்கு நீராதாரமாக இருக்கிறது. இங்குள்ள குவாரிகளால் நிலத்தடி நீரும் பெரிதளவில் பாதிக்கப்படும்” என்கிறார் ஏ.ஜெ.விஜயன்.

இவை ஒருபுறம் அச்சத்தை ஏற்படுத்த தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) அறிக்கையோ, “சலுகை ஒப்பந்த காலம் முடிவடையும்போது திட்டத்தின் கட்டுமானத்தால் ரூ.5,608 கோடி வரை கேரள அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும். இந்த ஒப்பந்த முறை கேரள அரசுக்கு ஆதரவாக இருப்பதற்கு பதிலாக அதானி குழுமத்திற்கு ஆதரவாக தயாரிக்கப்பட்டுள்ளது” என்று எச்சரித்துள்ளது.

***

வேளாண் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் காலிஸ்தானியர்கள் புகுந்துவிட்டார்கள் என்று பாஜக பிரச்சாரம் செய்ததைபோல, “முன்கூட்டியே திட்டமிடப்பட்ட போராட்டம் இது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீனவர்கள் மட்டுமல்ல” என விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிராக போராடுபவர்களை சாடுகிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

கேரள மாநில சட்டமன்றத்தில் பேசிய துறைமுகத் துறை அமைச்சர் அகமது தேவர்கோவில், “பல பணிகள் முடிந்துவிட்டதால், விழிஞ்சம் துறைமுகத் திட்டத்தை தற்போது நிறுத்தமுடியாது. நிறுத்தினால் மாநில அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படும்” என்றார்.


படிக்க : கடந்த ஆண்டில் மட்டும் 49 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த அதானி !


ஆனால், “துறைமுக கட்டுமானப் பணிகள் பாதிக்கும் குறைவாகவும்; கடலுக்குள் துளையிடும் பணி 40 சதவிதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்தை நிறுத்துவதற்கு இதுவே சரியான தருணம்” என்கிறார் ஏ.ஜெ.விஜயன்.

ஆனால் மீனவர்கள், மக்கள் நலனில் துளியும் அக்கறைக் காட்டாத பினராயி விஜயன், “விழிஞ்சம் துறைமுகத் திட்டத்தை நிறுத்துவது குறித்து இப்போது பரிசீலிக்க முடியாது. இதுபோன்ற திட்டத்தில் பிரச்சினைகள் வருவது இயல்பே. பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வாடகை வீடு கொடுப்பதைப் பற்றி அரசு பரிசீலித்து வருகிறது” என்றும் “திட்டத்தை கைவிடவேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்காது” என்றும் அதானிக்கு வெளிப்படையாக ஆதரவளித்தார்.

ஆக, மீனவர்கள் குடும்பங்கள் வீடு இழந்து வாழ்வாதாரத்தை இழந்தாலும் அதானி துறைமுக திட்டத்தை முடித்தே தீரவேண்டும் என்ற குறிகோளோடு இருக்கிறது கேரள அரசு. இதற்கு வலுசேர்க்கும் விதமாக விழிஞ்சம் துறைமுகத்திற்கு போலீசு பாதுகாப்பு வழங்குமாறு கேரள அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழிஞ்சம் அதானி துறைமுகம், சில்வர்லைன் திட்டம் போன்று அடுக்கடுக்காக மக்கள் விரோத, கார்ப்பரேட் நலத் திட்டங்கள் கொண்டுவந்து மக்களை வாட்டி வதைக்கிறது கேரள அரசு.


வேம்பு

ஜி.எஸ்.டி: இந்துராஷ்டிர வரிக் கொள்கை!

narendra-modi-gst

யர் பணவீக்கம், வளர்ந்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை இன்று இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் மூன்று அடிப்படைப் பிரச்சினைகளாகும். இதன் விளைவாக, மனித வளர்ச்சியானது இரத்த சோகை முற்றிய நோயாளியின் நிலைக்குச் சென்றுள்ளது. கல்வி மற்றும் சுகாதார உள்கட்டமைப்பு சீர்குலைந்து வருகிறது.

இந்த பிரச்சினைகளில் இருந்து மீளும் வழியில் இந்தியப் பொருளாதாரத்தை வழிநடத்தும் திட்டம் ஏதும் மோடி அரசிடம் இல்லை. மாறாக, உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அதிகரிப்பதன் மூலம், அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக, நாட்டில் உள்ள மக்கள் அனைவரையும் ஒட்டச் சுரண்டுகிறது.

நாட்டில் உள்ள பெரும்பான்மையான ஏழை எளிய மக்கள், சாப்பாட்டிற்கே வழியில்லாமல் பட்டினியில் பரிதவிப்பவர்கள், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் கிராமப்புற ஏழைகளிடம் மிச்சம் மீதமிருக்கும் இரத்தத்தைக் கூட உறிஞ்சி எடுக்கிறது ஜி.எஸ்.டி வரி.

இதன் மூலமாவது பொருளாதாரம் முன்னேறுமா? மோடி அரசின் இந்த பாசிச பொருளாதார நடவடிக்கைகள் ஒட்டுமொத்த நாட்டை முன்னேற்றிவிடுமா? என்று சில முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் எதிர்பார்க்கலாம். ஆனால், அப்படி எதுவும் நடக்கப் போவதில்லை.

படிக்க : ஜி.எஸ்.டி வரி உயர்வு: மக்களை வாட்டிவதைக்கிறார்கள் | மக்கள் நேர்காணல்

“ஒரு தேசம், ஒரு வரி, ஒரு சந்தை” என்ற மோடி அரசின் திட்டம் என்பது பிராந்திய, மாநில மற்றும் உள்ளூர் அளவிலான பன்முகப் பொருளாதாரத் தன்மை கொண்ட நமது நாட்டின் பெரும் பொருளாதாரச் சூழலை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஏகபோகமாக்கல் திட்டமே. இந்த ஏகபோகங்களின் வளங்களைக் கொள்ளையடிக்கும் நிதி ஆதிக்கக் கும்பல்களாக குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளியக் கும்பல் இருக்கும்.

அரசியலில் இந்துத்துவா (ஆர்.எஸ்.எஸ்-பாஜக) மேலாதிக்கம் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தில் அம்பானி-அதானி கார்ப்பரேட் முதலாளியக் கும்பலின் ஆதிக்கம் ஆகிய இரண்டும் மக்களின் வாழ்வாதாரங்கள், உற்பத்தி சக்திகள், கண்டுபிடிப்புகள் மற்றும் பிற வருமானம் உருவாக்கும் திறன்களின் அடிப்படையில் அனைத்து படைப்பு திறன்களையும் உழைப்பு சக்தியையும் பிழிந்தெடுக்கும் ஹைபிரிட் பாசிசமாகும்.

இந்துத்துவா என்பது முதன்மையாக இந்தியாவில் உள்ள உயர் வர்க்க மற்றும் உயர் சாதி மக்களின் பொருளாதார நலன்களை நிலைநிறுத்தும் ஒரு கலாச்சார திட்டமே. கலாச்சார தேசியம் என்ற பெயரில் மக்களை மத ரீதியாக அணிதிரட்டுவது, இந்தியர்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தை பணயம் வைத்து அம்பானி, அதானி கார்ப்பரேட் முதலாளியக் கும்பலுக்கு சேவை செய்யும் அரசியல் தந்திரமே.

புதிய வேலைவாய்ப்புகள், புதிய தொழில் வளர்ச்சிகளை நாட்டின் கீழ்மட்டங்களில் சிறிய அளவில் கூட உருவாக்கவில்லை. இருக்கின்ற வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு எதிராக இளம் இந்தியா திரும்பிவிடாமல் இருப்பதற்கு அவர்களை தீராத போதை மயக்கத்தில் ஆழ்த்த வேண்டியுள்ளதை ஆர்.எஸ்.எஸ்-பாஜக மற்றும் அம்பானி-அதானி கும்பல் நன்குணர்ந்துள்ளது.

வேலையின்மை இல்லை என்று சங்கிகள் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வந்தாலும் வேலையின்மையால் உருவாகியிருக்கும் பெரும் அளவிலான ஒரு ரிசர்வ் பட்டாளத்தைக் கண்டு மோடி அரசு அஞ்சுகிறது. அக்னிபாத் திட்டத்திற்கு எதிராகவும், கள்ளக்குறிச்சியிலும் ஆயிரக்கணக்கில் திரண்ட இளம் பட்டாளமே அதற்கு சிறந்த சான்று. ஆங்காங்கே இந்த இளம் பட்டாளம் சங்கப் பரிவாரக் கும்பல்களால் அணிதிரட்டப்பட்டாலும், அவர்களிடம் வேலையின்மையால் ஏற்படும் குமுறலை அடக்கிவிட முடியவில்லை.

உழைக்கும் மக்களின் இளம் பிரிவான இந்த ரிசர்வ் பட்டாளம் வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு வகைகளில் மோடி அரசின் திட்டங்களுக்கு எதிராக தன்னெழுச்சியாக திரள்கிறது. ஒன்றிய, மாநில அரசுகள் இந்தப் பட்டாளத்தை வேகமாக அடக்கி ஒடுக்க முயற்சின்றன. இந்த மக்கள் போராட்டங்கள் வெடித்த உடனே மிகப்பெரும் அளவில் போலீசை ஏவி கைது நடவடிக்கைகளை மோடி அரசு மட்டுமின்றி, இந்துத்துவ எதிர்ப்பு பேசும் அரசுகளும் மேற்கொள்கின்றன.

இதுமட்டுமின்றி, கார்ப்பரேட் நலன் சார்ந்த திட்டங்கள் மற்றும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டாலும், அவற்றிற்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடையவே செய்கின்றன.

இப்போராட்டங்களை ஒடுக்குவதற்கு அரசு மக்கள் மீதான வன்முறையை தீவிரப்படுத்துவது மட்டுமின்றி, ஒருபுறம் இந்துத்துவா என்ற மதவெறி போதையை ஏற்றி மக்களைப் பிளவுப்படுத்துகிறது. மற்றொருபுறம், கஞ்சா, அபின் போன்ற பல்வேறு வகையான போதைக் கலாச்சாரங்களை திட்டமிட்டு ஊக்குவிக்கிறது. இவை கீழ் மட்டத்தில் உள்ள அனைத்துப் பிரிவு இளைஞர்கள் மற்றும் மாணவர்களையும் சென்றடைந்துள்ளது. எந்த விழுமியங்களும் இல்லாத பொறுக்கி கும்பல் கலாச்சாரம் இவர்கள் மத்தியில் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது.

படிக்க : உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி என்பது உழைக்கும் மக்களை சுரண்டவே!

கார்ப்பரேட் நலன்சாரந்த இந்துத்துவப் பொருளாதாரம் மக்கள் மீது ஒரு கொடிய வரி பயங்கரவாத ஆட்சியை உருவாக்குகிறது. பெயரளவிலான ஜனநாயகம் என்று அழைக்கப்படும் மக்கள் நல அரசைக் கூட’ ஒழித்து, உழைக்கும் மக்களால் நெருங்க முடியாத அரசாங்கத்தையும் (மாட்சிமை தாங்கிய மன்னராட்சியை), மக்கள் போராட்டங்களால் நெருங்க முடியாத வகையில் பாதுகாக்கப்பட்ட மற்றும் கார்ப்பரேட்மயமாக்கப்பட்ட அரசையும் உருவாக்குகிறது. பாலியல் ஒழுக்கக்கேடு, சுற்றுச்சுழல் அழிப்பு, லஞ்சம், ஊழல், கடத்தல் மற்றும் கறுப்புச் சந்தை போன்றவை ஆட்சிப்புரியும் ஒரு சமுதாயத்தையும், அதற்கு தலைமை தாங்கும் அரசையும் உருவாக்குகிறது.

ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலின் “ஒரு நாடு, ஒரு வரி, ஒரு சந்தை” என்ற மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத் திட்டம் என்பது உற்பத்தி மற்றும் நுகர்வு மீதான ஆதிக்க அரசியலாகும்; ஜி.எஸ்.டி. மற்றும் பிற வரிவிதிப்புகளின் உயர்வு இந்த திசையில் நாட்டை கொண்டு செல்லும் ஒரு வழிமுறையாகும். இது இந்தியாவின் கீழ்மட்ட மக்களின் வாழ்வாதாரத்தை ஒட்டச் சுரண்டுவதன் மூலம் அவர்களை எதிர்த்து நிற்க முடியாதவர்களாக மாற்றி பட்டினிக் கொடுமைக்கோ, மதக் கலவரங்களுக்கோ, அரச வன்முறைக்கோ இறையாக்குகிறது.

அம்பானியும் அதானியும் இராம லெட்சுமணர்கள். ஆர்.எஸ்.எஸ்.யும் பா.ஜ.க.வும் சுக்ரீவன், அனுமன் போன்ற வானரப்படைகளாகக் காட்சியளிக்கும் இந்த இந்துராஷ்டிர ஆட்சியின் வரிக் கொள்கையே ஜி.எஸ்.டி.!


பரமேஷ்
மூலக்கட்டுரை: frontierweekly

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் செப்டம்பர் – 2022 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :

ஓராண்டு சந்தா- ரூ.240
இரண்டாண்டு சந்தா- ரூ.480
ஐந்தாண்டு சந்தா- ரூ.1,200

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561

வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

  • தலையங்கம்: கள்ளக்குறிச்சி போராட்ட மாடலை நிபந்தனையின்றி ஆதரிப்போம்! தமிழக மாணவர் – இளைஞர்களின் பக்கம் நிற்போம்!
  • கல்வித் தொலைக்காட்சியில் சங்கி நியமனம்! ஆர்.எஸ்.எஸ்-க்கு அடிமட்ட வேலை பார்க்கிறதா திமுக?
  • ஹர் கர் திரங்கா: பாசிஸ்டுகளின் தேசபக்தி அரிதாரம்!
  • பாசிஸ்டுகளின் கரங்களுக்கு கோடாரிக் காம்புகளை வழங்கும் அடையாள அரசியல்!
  • பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது ஏமாற்று! டெல்டாவை சூறையாடத் துடிக்கும் மோடி அரசு!
  • பில்கிஸ் பானு வழக்கில், குற்றவாளிகள் விடுதலை: ‘இந்துராஷ்டிர நீதிக்கு’ எதிராக ஆர்த்தெழுவோம்!
  • இயல்பு நிலையாகிவிட்ட இயற்கைப் பேரிடர்கள்! இன்றியமையாதது, முதலாளித்துவத்தின் அழிவு!
  • காவி கும்பலின் தொடர் சதிச் செயல்களை முறியடித்து, முன்னேறும் விவசாயிகள்!
  • நூல் அறிமுகம்: பாட்டாளி வர்க்கத்தை அமைப்பாக்குவதற்கு இதோ ஓர் ஆயுதம்!
  • இலங்கையில் ‘சீன உளவுக் கப்பல்’: மக்களைத் திசைதிருப்பிய ஆளும் வர்க்க ஊடகங்கள்!!
  • மின்சார சட்டத் திருத்தம் 2022: மின்துறையை மொத்தமாக விழுங்கவரும் கார்ப்பரேட் மலைப்பாம்பு!
  • செஸ் வரி: இந்துராஷ்டிர சாம்ராஜ்யத்திற்கு மாநிலங்கள் செலுத்தும் கப்பம்!

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: அப்பாவி மக்களை ஒடுக்கும் போலீசு! குற்றவாளிகளுக்கு பிணை வழங்கிய நீதிபதி!

ஸ்ரீமதியின் முதல் பிரேத பரிசோதனை அறிக்கையின் விவரங்களும் இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையின் விவரங்களும் ஏன் வேறு வேறாக உள்ளது என்ற கேள்வியை கூட நீதிமன்றம் கேட்கவில்லை. இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; தலித் மக்கள் கைது செய்யப்படிருக்கிறார்கள்; பொது மக்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; அப்பாவிகள் தண்டிக்கப்படிருக்கிறார்கள்; அவர்களின் கை, கால் முறிக்கப்பட்டிருக்கிறது இவை எவற்றை பற்றியும் நீதிமன்றம் கேட்கவில்லை. மொத்தத்தில் நியாயமான எந்த கேள்வியையும் நீதிமன்றம் கேட்கவில்லை. மேலும் ஜிப்மர் அறிக்கையை ஸ்ரீமதியின் பெற்றோர்களுக்கு கொடுக்கவில்லை. ஜனநாயகப் பூர்வமான உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. வெறும் நீதிபதிக்கும் மட்டும் அறிக்கையை காண்பித்து பிணை வழங்குவது எந்த வகையில் நியாயம்?

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பான பல்வேறு கருத்துக்களை தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டிவீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

தலிபான்களை எதிர்த்து ஆப்கான் பெண்கள் போராட்டம்!

0

ப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு பெண்களுக்கு எதிரான ஜனநாயக உரிமையை மறுக்கின்ற வகையில் கடுமையான சட்டங்களையும், கட்டுபாடுகளையும் விதித்து வருகின்றனர். தலிபான்களின் அடக்குமுறையை எதிர்த்து 40-க்கும் மேற்ப்பட்ட பெண்கள், ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று தலைநகர் காபூலில் உள்ள கல்வி அமைச்சகத்தை முற்றுகையிட முயன்றனர்.

“ஆகஸ்ட் 15 கறுப்பு நாள்” என்ற பேனரை ஏந்தியும், அரசியலில் பங்கேற்கவும், வேலைகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். ரொட்டி, சுதந்திரம், கல்வி, வேலை வேண்டும் என்றும் முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. “நீதி வேண்டும், நீதி வேண்டும்; நாங்கள் அறியாமையால் சலிப்பு அடைந்துவிட்டோம்” எனவும் முழக்கமிட்டனர்.

படிக்க : ஆப்கான் : குழந்தைகளை சல்லடையாக்கிய அமெரிக்க இராணுவம்

அப்போராட்டம் நடைபெற்றதை அறிந்த தலிபான்கள் அப்போரட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆயுதங்களை கொண்டு தாக்கினார்கள்.  அப்பெண்களை அச்சுறுத்த  தலிபான்கள் வானத்தை நோக்கி தூப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். பெண்கள் அனைவரும் வெவ்வேறு திசைகளில் பிரிந்து சென்றாலும் அவர்களை பின்தொடர்ந்த தலிபான்கள் துப்பாக்கியால் அடித்து துன்புறுத்தினார்கள்.  போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வளவு அடக்குமுறையை ஏவினால் போராட்டத்தில் கலந்து கொண்ட முனிசா முபாரிஸ், “பெண்களுக்கான உரிமை பெறும் வரை போராட்டம் தொடரும்” என்று உறுதியாக கூறியுள்ளார். மேலும் “தலிபான்கள் எங்கள் குரலை அடக்க நினைக்கிறார்கள், அது சாத்தியமில்லை. நாங்கள் எங்கள் வீடுகளில் இருந்து போராட்டத்தை நடத்துவோம்”என்று கூறினார்.

தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு பெண்களின் உரிமைகள், பத்திரிகை சுதந்திரம், ஜனநாயக உரிமைகளை மறுத்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பள்ளி கல்வியை மறுத்துள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி படிக்க மறுத்துள்ளனர். பெண்களின் அரசு வேலைகள் பறிக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான கொலை, பாலியல் வன்கொடுமைகள் என்பது அதிகரித்து இருக்கிறது. பெண் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பணியில் இருந்து அனுப்பப்படுகின்றனர்.

வேலை மற்றும் அரசியல் பங்கேற்புக்கான உரிமைகளை கோரி, ‘ஆகஸ்ட் 15 ஒரு கருப்பு நாள்’ என எழுதப்பட்ட பதாகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

பொது இடங்களில்  ஆண், பெண் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணக் கூடாது, பூங்காக்களுக்கு செல்லத் தடை, அரசியலில் பெண்கள் பங்கேற்கக் கூடாது, உச்சதலை முதல் உள்ளங்கால் வரை புர்கா அணிந்து கொண்டுதான் வெளியே செல்ல வேண்டும் போன்ற கடும் கட்டுபாடுகளை எதிர்த்து பேரணியாக சென்றனர். ஆப்கான் பெண்களின் வாழ்க்கை சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டதுபோல உள்ளது என மனித உரிமை ஆர்வலர்களும், பத்திரிகைகளும் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் பத்திரிகை ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது என RSF இயக்குநர் கிறிஸ்டியன் மிர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். பெரும் எண்ணிக்கையிலான பத்திரிகை நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. நூற்றூக்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர். ஆப்கானில் ஜனநாயக உரிமைகள் தலிபான்களால் அடக்கி ஒடுக்குப்படுகின்றன. தற்போதைய தலிபான்கள் ஆட்சி 1996 – 2001 வரையிலான தலிபான்களின் காட்டுமிராண்டிதனமான ஆட்சியை மீண்டும் நிலைநாட்டியுள்ளனர். மதவாத பாசிஸ்ட்டுகள் தங்களது மரபு என்ற பெயரில் இஸ்லாமிய அடிப்படைவாத சர்வாதிகாரத்தை  தீவிரமாக அமல்படுத்துகின்றனர்.

இந்தியாவின் மதவாத பாசிஸ்டுகள்:

ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய சிறுமி ஆசிஃபா, உத்தரப்பிரதேசத்தில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு குற்றவாளிகளை விடுதலை செய்ய கோரி போராடியது, இஸ்லாமிய பெண்களை பலாத்காரம் செய்ய வேண்டும் என்று பொது அழைப்பு விடுப்பது, பில்கிஸ் பானோ  கர்ப்பிணி பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தார்கள்; அவரது குழந்தையையும் குடும்பத்தினரையும் கொலை செய்தவர்கள் பார்ப்பன பாசிஸ்டுகள். தலிபான்களை விட ஒருபடி மேலான கொடூர எண்ணம் கொண்டவர்கள் பார்ப்பன பாசிஸ்டுகள்.

படிக்க : தம்மிடம் பணியாற்றிய ஆப்கான் ஊழியர்களைக் கைவிட்ட மேற்குலகம் !

மதவாத பாசிஸ்டுகள் பெண்களுக்கு எதிரானவர்கள் மட்டும் அல்ல, ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள், மனித குலத்துக்கே எதிரானவர்கள். இம்மாதவாத பாசிஸ்டுகளை எதிர்த்து துணிச்சலோடு போராடுகின்ற ஆப்கான் பெண்களின் போராட்டத்தை நாம் ஆதாரிப்போம். நம் நாட்டில் அரங்கேறி கொண்டிருக்கும் காவி பாசிஸ்ட்டுகளின் அடக்குமுறைகளுக்கு அமைதி காத்து நிற்காமல் ஆப்கானிஸ்தான் பெண்களின் போராட்ட உணர்வை வரித்து கொண்டு நாமும் பார்ப்பன பாசிஸ்ட்டுகளுக்கு எதிராக களமிறங்கிப் போராடுவோம்.

ராமசாமி