திரு இளங்கீரன்,
தலைவர், காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, சிதம்பரம்.
தோழர் மருது,
மாநில செய்தி தொடர்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு
தோழர் காளியப்பன்,
மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.
அனைவரும் வாருங்கள்! தமிழகத்தை நாசமாக்கும் பேரழிவு திட்டங்களைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்!
***
நடைபெற உள்ள கருத்தரங்கத்தினையொட்டி கடந்த 12.08.2019 அன்று ஊமங்கலம் கிராமத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக தமிழகத்தை நாசமாக்காதே !என்ற தலைப்பில் மக்கள் அதிகாரத்தின் ஊமங்கலம் கிளை தலைவர் தோழர் ஆடியபாதம் தலைமையில் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் உரையாற்றினார்.
அதன்பிறகு வட்டார குழு தோழர் அசோக் உரையாற்றினார். உடன் ஊமங்கலம் கிளைத் தோழர் கணேஷ், தோழர் தம்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் தமிழகத்தை நாசமாக்க கூடிய பல்வேறு அழிவுத் திட்டங்களை விளக்கி பேசப்பட்டது கிராம மக்கள் அனைவரும் கூடி இருந்து கவனித்தனர்.
மக்கள் அதிகாரம் தோழர்களின் பிரச்சாரம் !
1 of 5
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், கடலூர் மண்டலம் – 81108 15963
இதையும் பாருங்க :
பசுமை எங்கும் அழிகிறதே ! இனி பாலைவனமோ தமிழகமே | Kovan Song
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 02
முதல் பாடநூல்களை உருவாக்கும் கோட்பாடு
ஒரே பாடத்தைத் திரும்பத் திரும்பப் படிக்கும்படி நான் குழந்தைகளுக்குச் சொல்லவில்லை. படிக்கும் பாடம் இடையறாது மாற்றப்படாவிடில் படிக்கும் பழக்கம் நன்கு வராது என்பது எனது உறுதியான நம்பிக்கை. பல்வேறு நூல்கள், கட்டுரைகளிலிருந்து வெவ்வேறு விதமான விஷயங்களை அறிந்து கொள்ளதான் படிப்பு தேவையே தவிர தேவையற்ற ஒரே வாசகத்தைத் திரும்பத் திரும்பப் படிப்பதற்காக அல்ல.
எழுத்துகளைச் சொல்லிக் கொடுத்த அனுபவம், ஆறு வயதுக் குழந்தைகளுக்கு முதல் பாடநூலை எப்படி சிறப்பாக உருவாக்குவது என்பது சம்பந்தமாக சில கருத்துகளை எனக்குச் சொல்லித் தந்தது. ஆறு வயதுக் குழந்தைக்கு ஒரே மாதிரியான பாடங்கள் அலுப்பு தட்டச் செய்யும், நீண்ட காலமாக – ஒரு கல்வியாண்டு பூராவும் – ஒரே நூலைப் பயன்படுத்தினால் அது அவனுக்குச் சலிப்பேற்படுத்தும். சிறுவர்களுக்கான தாய்மொழிப் பாடநூல் நான்கு நூல்களைக் கொண்டதாயிருந்தால் நல்லது. முதல் நூல் குழந்தையைப் பேச்சு யதார்த்த உலகிற்கு இட்டுச் செல்லும், இரண்டாவது நூல் படிப்பு ரகசியங்களைக் காட்டும், மூன்றாவது, நான்காவது நூல்கள் படிக்கும் ஆர்வத்தை வளர்க்க உதவும். நான் முதல் நூலிலிருந்து துவங்குவேன். இதைக் கற்றுத் தேர்ந்ததும் “’பார்த்தீர்களா, நாம் வளர்ந்து விட்டோம், இப்போது இரண்டாவது நூலுக்குச் செல்வோம்” என்று கூறி இரண்டாவது நூலுக்குச் செல்வேன். இதே மாதிரி தொடரலாம். குழந்தையை இந்நூல்கள் சந்தோஷப்படுத்துமா? பெரும் சந்தோஷத்தைத் தரும். தான் எப்படி வளர்ச்சியடைகிறோம், எப்படி முன்னோக்கி நடைபோடுகிறோம் என்று குழந்தைக்குத் தெட்டத் தெளிவாகத் தெரியும். ஒவ்வொரு முறையும் குழந்தையிடம் புதிய புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் வளரும்.
புதியவற்றை அறியும் மகிழ்ச்சி எனும் கோட்பாடுதான் இந்த நூல்களின் அடிப்படையாகத் திகழ வேண்டும். ஆம், மகிழ்ச்சிக் கோட்பாடு! ஆறு வயதுக் குழந்தைகளுக்கான முதல் பாடநூல்களில் நிறைய நகைச்சுவையும், குழந்தை தனது நேரத்தை நன்கு செலவிடவல்ல பல சுவாரசியமான கேள்விகளும் பயன்மிகு ஆலோசனைகளும் (உதாரணமாக, சிறுவர்களுக்கான விளையாட்டுச் சாமான்களை எப்படிச் செய்வது, பெற்றோர்களை எப்படி சந்தோஷப்படுத்துவது, அம்மாவிற்கு எப்படி உதவுவது) அடங்கியிருக்க வேண்டுமென என் அனுபவம் காட்டுகிறது. ஓவிய ஒலியெழுத்துப் புதிர்கள், குறுக்கெழுத்து புதிர்கள், பல்வேறு விதமான விளையாட்டுகள், விடுகதைகள், கடகடவென சொல்லவல்ல வாசகங்கள் போன்றவை இவற்றில் இருக்கலாம். இதில் மகிழ்ச்சிகரமான, புத்திசாலித்தனமான கவிதைகளும் கதைகளும் இருக்க வேண்டும். பள்ளிக்கு வருவதற்கு முன்னரே படிக்கக் கற்றுக் கொண்ட அல்லது படிப்பு வேகத்தில் முன்னிற்கும் குழந்தைகளுக்கான பக்கங்களைச் சேர்க்க நான் அஞ்ச மாட்டேன்.
சுயமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை – இந்த அடிப்படையில் தான் புதியவற்றை அறிந்து கொள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ள நாட்டத்தை வளர்க்க வேண்டும். இப்படிப்பட்ட பாடநூல் இருந்தால் குழந்தைகளுக்கு அடிக்கடி பின்வருமாறு சொல்லலாம்:
“விருப்பமான புதிரைப் போடுங்கள்… ஏதாவது ஒரு கவிதையைப் படியுங்கள். உங்களுக்கு விருப்பமான கதையைப் படியுங்கள். பின்னர் எல்லோரும் சேர்ந்து இதைப் பார்ப்போம்!” அப்போது வகுப்பில் காரியரீதியான பேச்சு நடக்கும்!
குழந்தைகள் படிப்படியாகப் படிக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொள்ள வழிகோலுவதே இந்நூல்களை உருவாக்குவதற்கான முக்கிய நிபந்தனையாகும்.
எழுத்துகளே! உமக்கு நன்றி!
“குழந்தைகளே, வணக்கம்!… நீங்கள் இன்று அலங்காரமாக ஆடையணிந்திருக்கின்றீர்களே! என்ன விஷயம்?”
“நீங்களும் தான் அழகாக ஆடையணிந்திருக்கின்றீர்கள்!”
“இன்று விழாவாயிற்றே!”
“நாம் எல்லா எழுத்துகளையும் கற்றுக் கொண்டு விட்டோம்!”
“இன்று விருந்தினர்கள் வருகின்றனர்!”
“தாழ்வாரத்தில் உள்ள கரும்பலகையில் பாராட்டுதல் எழுதப்பட்டுள்ளதை நான் படித்தேன்…. நமக்குப் படிக்கவும் எழுதவும் தெரியும் என்பதற்காக நம்மைப் பாராட்டுகின்றனர்.”
“எனக்கு புத்தகம் படிக்கத் தெரியும்.”
“இன்று கடைசி எழுத்தைப் பார்ப்போம். கடைசி எழுத்துள்ள பக்கத்தைத் திறவுங்கள்!”
சின்னஞ்சிறு பாத்தா எல்லா எழுத்துகளையும் படித்த பின் மகிழ்ச்சியோடு வீட்டிற்கு ஓடிவந்து “பாட்டி, நான் உனக்குப் படிக்கச் சொல்லித் தரட்டுமா, இது மிகவும் சுலபம்!” என்று கூறியது பற்றிய கதையைக் குழந்தைகள் படிக்கின்றனர்.
“சரி, இப்போது அடுத்த கதையைப் படியுங்கள்!”
“இனி பக்கங்கள் இல்லை, தீர்ந்து விட்டது.”
“இல்லையா?”
“ஆம், நாங்கள் புத்தகத்தைப் படித்து முடித்து விட்டோம்.”
“முற்றிலுமாக முடித்து விட்டோம்…” மீண்டும் மகிழ்ச்சி ஆரவாரம்.
“அப்படியெனில் பாடநூலை மூடுங்கள்….. உங்களுக்கு என்ன தெரியுமென பார்ப்போம் வாருங்கள்!”
“இது எங்களுக்கு அழகிய தாய்மொழி எழுத்துகளைச் சொல்லிக் கொடுத்தது.”
“பெற்றோர்கள் மீது மரியாதை செலுத்தச் சொல்லித் தந்தது!”
“நாகரிகமாகப் பழக சொல்லித் தந்தது!”
“நமது தாய் நாடு எப்படிப்பட்டதென சொல்லித் தந்தது!”
“அதில் நிறைய சிரிப்பான, மகிழ்ச்சியான படங்கள் உள்ளன.”
“பல்வேறு புதிர்களும் பாடல் வாசகங்களும் உள்ளன.”
“இப்புத்தகத்தின் மீது எனக்குப் பெரும் விருப்பம். இதை வீட்டிற்கு எடுத்துச் செல்ல நீங்கள் அனுமதித்த போது இதை நான் தலையணை அடியில் வைத்துக் கொண்டு தூங்கினேன்.”
“நான் இதை எல்லோருக்கும் காட்டினேன்.”
“இப்போது குனிந்து, கண்களை மூடுங்கள்” என்று நான் குரலைத் தாழ்த்திக் கூறுகிறேன். “உங்களுடைய முதல் புத்தகம் உங்களுக்குப் பிடித்துள்ளது. அப்படித்தானே!”
“ஆம்” என்று மெதுவாகச் சொல்கின்றனர் குழந்தைகள்.
“நீங்கள் இப்புத்தகத்திற்கு நன்றி சொல்ல விரும்புகின்றீர்களா?”
“ஆம்!” என்கின்றனர் குழந்தைகள்.
“உங்கள் நன்றியை எப்படிப்பட்ட ‘வார்த்தைகளின்’ மூலம் தெரிவிப்பீர்களென யோசியுங்கள்!”
ஒரு நிமிட மௌனம். குழந்தைகள் கரங்களை உயர்த்துகின்றனர்.
பல்வேறு நூல்கள், கட்டுரைகளிலிருந்து வெவ்வேறு விதமான விஷயங்களை அறிந்து கொள்ளதான் படிப்பு தேவையே தவிர தேவையற்ற ஒரே வாசகத்தைத் திரும்பத் திரும்பப் படிப்பதற்காக அல்ல.
மாரிக்கா: “ ‘என் அன்புப் புத்தகமே! உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்’ என்று நான் சொல்வேன்.”
லேரி: புத்தகத்தை தலைக்கு மேலாக உயர்த்தியபடி “மிக, மிக, மிக நன்றி!”
தீத்தோ: “என் அன்பு நண்பனே! நான் உன்னை என்றுமே மறக்க மாட்டேன்! உனது அட்டையை நாசப்படுத்தியதற்கு, பக்கத்தைக் கிழித்ததற்கு மன்னித்து விடு! புத்தகங்களைக் கவனமாகப் பேணிக் காப்பேன் என்று உறுதி தருகிறேன். நீ உண்மையான மனிதனைப் போன்றவன்!”
கீயா: “நான் நிறைய படிப்பேன், நூல்களை நேசிப்பேன் என்று கூறி உனக்கு நன்றி சொல்கிறேன்.”
மாயா: “எங்கள் அன்பு முதல் புத்தகமே! நாங்கள் ஒருவேளை உன்னை இம்சித்திருக்கலாம், எங்களுக்குப் படிப்பது கடினமாக இருந்தது, நீ அனேகமாக எங்கள் மீது கோபம் கொண்டிருக்கலாம்! ஆனால் நீ அன்பான புத்தகம். நாங்கள் அனைவரும் உன்னை மிகவும் நேசிக்கின்றோம். எப்போதும் உன்னை மறக்க மாட்டோம்!”
நீயா: “நீ சூரியன், நீ நூல்களின் ராணி! நீ என்றென்றும் நீடூழி வாழ்க!”
இலிக்கோ: “நான் பள்ளிக்கு வந்த போது தாய்மொழி எனக்கு நன்றாகத் தெரியாது. இந்தப் புத்தகம் தாய்மொழியில் நன்றாகப் படிக்கச் சொல்லித் தந்தது. எனவே, நான் இதை மிகவும் நேசிக்கிறேன்!”
சான்த்ரோ: “நீ மிகவும் நல்ல, நேர்மையான, மிகவும் அன்பான புத்தகம். நீ எல்லோருக்கும் தாய்மொழியைச் சொல்லித் தருகிறாய், எனவே எல்லோரும் உன்னை நேசிக்கின்றனர். நானும் உன்னை நேசிக்கிறேன்!”
சாஷா: (மெளனமாக புத்தகத்தைப் பார்த்தபடி நின்று, பின் மெதுவாகச் சொல்ல ஆரம்பிக்கின்றான்) “இந்தப் புத்தகம் எழுத்துகளைக் கற்பித்தது, படிக்கச் சொல்லித் தந்தது. ஒருவனுக்குப் படிக்கத் தெரிந்தால் அவன் ஏராளமானவற்றைக் கற்றுக் கொள்வான், ஏனெனில், புத்தகங்களில் எல்லா விஞ்ஞானங்களும் அடங்கியுள்ளன என்று என் அம்மா கூறியிருக்கின்றாள். இது ஆசிரியராகத் திகழும் புத்தகம். நானும் இதற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன், இதை நான் நேசிக்கிறேன்!”
“உங்களுடைய முதல் புத்தகத்தை விட்டுப் பிரிய வருத்தமாயுள்ளதா?”
ஒரே ஏகோபித்த குரலில்: “ஆமாம், மிகவும் வருத்தமாயுள்ளது!”
நிலவில் மனிதன் முதன்முதலாக கால்பதித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நிலவை ஆய்வு செய்யும் இந்தியாவின் சந்திராயன்-2 இறங்கு கலம் ஜூலை 22 அன்று விண்ணில் ஏவப்பட்டது. ஒட்டுமொத்த அண்டவெளியில் நமது பூமிக்கு மிக அருகில் இருக்கும் விண்பொருள் நிலா தான். ஆனால் நிலவைப் பற்றி நாம் அறிந்துள்ளவை மிகக் குறைவே. வேண்டுமானால், உங்கள் சுற்றத்தில் இந்த உரையாடலை நிகழ்த்திப் பாருங்கள்:
இந்தக் கேள்விக்கு “குனிந்து” என்று நம்மில் பெரும்பாலானோர் தவறாக பதிலளிப்போம். நிலா கோள வடிவிலானது என்று அறிந்திருந்தும் கூட நமது பார்வைக் கோணத்தில் வட்ட வடிவிலான தட்டாக மூளையில் பதிவுபெற்றிருப்பதே இதற்கு காரணம்.
நமது நிலா, ஒரு கால்பந்தைப் போல ஒரு முழுநிறைவான கோள வடிவிலில்லை. நிலவின் துருவங்களுக்கிடையேயான விட்டம் நிலநடுக்கோட்டு விட்டத்தை விட சிறிது குறைவு. நிலநடுக்கோட்டு விட்டம் 3,476 கிலோமீட்டர். துருவ விட்டம் 3,472 கிலோமீட்டர்.
நமது சூரியக் குடும்பத்தில் மொத்தம் 185 நிலாக்கள் (துணைக்கோள்களின்) உள்ளன. கோள்கள் சூரியனையும், துணைக் கோள்கள் கோள்களையும் சுற்றுகின்றன என்றறிவோம். செவ்வாய் கோளை 2 துணைக்கோள்களும் (நிலாக்கள்), வியாழன் கோளை 79 துணைக்கோள்களும், சனிக் கோளை 62 துணைக்கோள்களும், யுரேனஸ் கோளை 27 துணைக்கோள்களும், நெப்டியூன் கோளை 14 துணைக்கோள்களும் சுற்றி வருகின்றன. இந்து வேதங்கள், பைபிள், குரான் அல்லது சோதிடம், நவகிரக அமைப்புகள் இவை எதிலுமே நமது சந்திரனைத் தவிர மற்ற எவையும் குறிப்பிடப்படவில்லை.
இவற்றில் நான்கு துணைக்கோள்கள் நமது நிலவை விடப் பெரியவை. சூரியக் குடும்பத்தில் இருப்பவற்றிலேயே மிகப் பெரிய நிலா (துணைக் கோள்) வியாழனின் நிலாக்களில் ஒன்றான கனிமீடு (Ganymede). இதன் விட்டம் 5268 கிலோ மீட்டர். இரண்டாவது இடத்திலுள்ள சனிக் கோளின் நிலாக்களில் ஒன்றான டைட்டனின்(Titan) விட்டம் 5150 கி.மீ. மூன்றாமிடத்தில் இருக்கும் வியாழனின் நிலா காலிஸ்டோ(Callisto) 4820 கி.மீ விட்டமுடையது. நான்காமிடத்தில் 3660 கி.மீ விட்டமுள்ள உள்ளது வியாழனின் நிலா ஐஓ(IO). ஐந்தாமிடத்தில் நமது நிலாவும், ஆறாமிடத்தில் 3122 கி.மீ விட்டம் கொண்ட வியாழனின் நிலாக்களில் ஒன்றான யுரோப்பாவும்(Europa) உள்ளன. இவற்றில் கனிமீடும் டைட்டனும் சூரியக் குடும்பத்தின் முதல் கோளான புதனை(Mercury) விடப் பெரியவை.
மனிதக் குரங்கிலிருந்து தோன்றிய ஆதி மனிதனிலிருந்து இன்று வரை நாம் அனைவருமே நிலாவின் ஒரு அரைக்கோளத்தை மட்டுமே பார்க்கிறோம். ஏனெனில் நிலா பூமியைச் சுற்றுவதும், தன்னைத் தானே சுற்றுவதும் ஒரு ஒத்திசைவான விகிதத்தில் இருக்கிறது. அதனால் எப்போதும் நிலவின் ஒரு முகத்தை மட்டுமே எப்போதும் பார்க்கிறோம்.
நிலவானது பூமியை வட்டப்பாதையில் சுற்றவில்லை; நீள்வட்ட பாதையில் சுற்றிவருகிறது. ஒருமுறை நமக்கு அருகிலும் மற்றொரு முறை தொலைவிலுமாக பூமியிலிருந்து அதன் தொலைவு மாறிக்கொண்டே இருக்கிறது. அதனாலேயே சில முழுநிலவு நாட்களில் நிலா பெரிதாகவும் சில நாட்களில் சிறிதாகவும் தெரிகிறது.
காஷ்மீர்-கார்கிலிலிருந்து கன்னியாகுமரி வரை ஒரு நேர்கோடு வரைந்தால் அதன் நீளம் 2945 கிலோமீட்டர் இருக்கும். இந்தியாவை எடுத்து நிலவில் வைத்தால், அதன் துருவ விட்டம் இந்தியாவின் நீளத்தை விட சுமார் 500 கிலோமீட்டர் அதிகமிருக்கும்.
ஆனால் இது ஒருவகையான ஒப்பீடு மட்டுமே. மேற்பரப்பளவை ஒப்பீட்டால், நிலவு மிக மிக பெரியது. இந்தியாவின் பரப்பளவு சுமார் 33 இலட்சம் சதுர கிலோமீட்டர். நிலவின் மேற்பரப்பளவு சுமார் 3 கோடியே 80 இலட்சம் சதுர கிலோமீட்டராகும். (பூமியின் மொத்த மேற்பரப்பளவு சுமார் 51 கோடி சதுர கிலோமீட்டரில் சுமார் 14 கோடியே 90 இலட்சம் கோடி சதுர கிலோமீட்டர் மட்டுமே நிலப்பகுதி)
நிலா பூமிக்கு மிக அருகில் இருக்கும் போது அதன் தொலைவு 3 இலட்சத்து 56 ஆயிரம் கிலோமீட்டராகவும் தொலைவிலிருக்கும் போது 4 இலட்சத்து 6 ஆயிரம் கிலோமீட்டராகவும், சராசரியாக 3 இலட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டராகவும் உள்ளது. இத்தொலைவுக்கு நாம் பயணம் சென்றால்?
கன்னியாகுமரிலிருந்து காஷ்மீர்-கார்கிலுக்கு கழுகு பறப்பதைப் போல் நேர்கோட்டுப் பாதையில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் சுமார் 30 மணிநேரம் பிடிக்கும். இதே100 கிலோமீட்டர் வேகத்தில் நிலவிற்கு சென்றால் 3840 மணிநேரம் அதாவது 160 நாட்கள் பிடிக்கும். அதாவது கன்னியாகுமரிலிருந்து காஷ்மீர் கார்கிலுக்கு 64 முறை போய் வரும் நேரம். ஆனால் அப்பல்லோ-11 விண்கலத்தில் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங்கும், பஸ் ஆல்ட்ரினும் 3 நாட்கள் 4 மணிநேரத்தில் சென்றடைந்தனர். இதுவரை 12 மனிதர்கள் மட்டுமே நிலவில் கால் பதித்துள்ளனர்.
1 of 2
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
சோவியத் ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய 4 நாடுகள் மட்டுமே நிலவில் ஆய்வுக்கலத்தை இறக்கியுள்ளன. இந்தியாவின் சந்திராயன்-2, செப்டம்பர் 6 அன்று நிலவைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலா எப்படி தோன்றியது என்பது பற்றி பல்வேறு கருதுகோள்கள் நிலவுகின்றன. பூமியைப் போலவே சந்திரன் சூரியனிலிருந்து தோன்றியிருக்கலாம், பூமியிலிருந்து பிரிந்து சென்றும் சந்திரன் உருவாகியிருக்கலாம், எங்கிருந்தோ வந்து பூமியின் ஈர்ப்புப் புலத்தில் சிக்கிக் கொண்ட சிறு கோள் போன்ற கோட்பாடுகள் தவறு என்று நிருபணமாகி விட்டன. “ஆரம்பகால குழந்தைப் பருவ பூமியின் மீது ஒரு கிரகம் மோதி அதன் விளைவாக ஏற்பட்ட சிதறல்கள் ஒன்றுதிரண்டு சந்திரனாக உருவெடுத்திருக்க வேண்டும்” என்பதே பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாகும். ஆதி பூமியின் மீது மெதுவாக வந்து மோதியதாகக் கருதப்படும் (தோராயமாக செவ்வாய் கோள் அளவிலான) கோளுக்கு விஞ்ஞானிகள் தைய்யா (Theia) என்று பெயரிட்டுள்ளனர்.
நிலா ஒரு முறை பூமியை சுற்றி வருவதற்குள் பூமி தோராயமாக 28 முறை தன்னைத் தானே சுழன்றிருக்கும். அதாவது, 28 நாட்கள். நிலா சூரியனின் திசையில் இருக்கும் போது அது இரவில் தெரிவதில்லை. சூரியனுக்கு எதிர்த்திசையில் இருக்கும்போது இரவில் தெரிகிறது. இந்த சுழற்சியின் நிகழ்வுகளே புதுநிலவு (அமாவாசை), முழுநிலவு (பௌர்ணமி). கதிரவன், பூமி, நிலா இம்மூன்றும் ஒரே துல்லியமான நேர் கோட்டில் அமையும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. நிலா கதிரவனை மறைக்கும் போது சூரிய கிரகணமும், பூமியின் நிழல் சந்திரனில் படும் போது சந்திர கிரகணமும் ஏற்படுகின்றன. அதாவது அமாவாசையன்று சூரிய கிரகணமும், பௌணர்மியன்று சந்திர கிரகணமும் நடக்கும்.
ஆனால் இன்றும் கதிரவ மறைப்பு, சந்திர மறைப்பு (கிரகணங்கள்) இராகு, கேது என்ற பாம்புகள் சூரியனையும் சந்திரனையும் விழுங்குவதால் ஏற்படுகின்றன என்ற அறிவியலுக்கு ஒவ்வாத கட்டுக்கதைகள் கோலோச்சுகின்றன.
பிரபஞ்சத்திலேயே உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த சூழல் பூமியில் மட்டும் இருப்பதை நாம் அறிவோம். அதே போல வியத்தகு முறையிலானதோர் விகிதம் நமது பூமிக்கும் துணைக் கோளான நிலவிற்கும் உள்ளது.
கதிரவனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் 14.96 கோடி கிலோ மீட்டர். பூமிக்கும் நிலவிற்கும் இடையிலான தூரம் 3.84 இலட்சம் கி.மீட்டரை விட தோராயமாக 400 மடங்கு. சூரியனின் விட்டம் 14 இலட்சம் கி.மீட்டர். நிலவின் விட்டம் 3476 கி.மீட்டரை விட தோராயமாக 400 மடங்கு. இவ்விகித ஒற்றுமையால்தான் முழு நிறைவான சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன.
1 of 4
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
நீல் ஆம்ஸ்ட்ராங்கும், பஸ் ஆல்ட்ரினும் நிலவில் காலடித் தடத்தை மட்டும் விட்டுவிட்டு வரவில்லை. எதிரொளிப்பான் ஒன்றையும் நிலவில் விட்டுவிட்டு வந்துள்ளனர். அந்த பிரதிபலிப்பானை குறிவைத்து ஒரு லேசர் ஒளிக்கற்றை அனுப்பப்படுகிறது. ஒளி கற்றை பிரதிபலிப்பானில் பட்டு திரும்பிவர எடுக்கும் நேரத்தைக் கொண்டு பூமி-நிலவிற்கிடையிலான தொலைவு அளக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நிலா, பூமியை விட்டு 4மில்லி மீட்டர் – அதாவது நம் நகக்கண் அளவு விலகிச் செல்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு 4 மீட்டர். பத்து லட்சம் ஆண்டுகளுக்கு 4 கிலோ மீட்டர் நகரும்.
இதற்கு காரணம் நியூட்டனின் மூன்றாம் விதி. நிலவின் ஈர்ப்பு விசை பூமியிலுள்ள கடல் மற்றும் நீர்பரப்புகளில் அலைகள் ஏற்பட காரணமாக உள்ளது. இவ்வலைகள் நிலவின் மீது எதிர்விசையை – விலக்கு விசையை உண்டாக்குகின்றன.
இந்த விகிதத்தில் நிலா விலகிச் சென்றால் அது முழு நிறைவாக கதிரவனை மறைத்து – முழு நிறைவான சூரிய கிரகணம் ஏற்படாது; நமது கடல்கள் அலைகளின்றியும் போகலாம்; இது பூமியின் பல்லுயிர் சூழலை பாதிக்கும். ஆனால் இது ஏற்படுவதற்கு சுமார் 50 கோடி ஆண்டுகள் பிடிக்கும். அன்று நிலா சுமார் இரண்டாயிரம் கி.மீட்டர்கள் நகர்ந்திருக்கக் கூடும். அன்று நமது புதுநிலவு – முழுநிலவு (அமாவாசை-பௌணர்மி) இடையினான நாட்கள் அதிகரித்திருக்கவும் கூடும்.
கற்றல் என்பது ‘புதிதாக’ கருத்துக்களை அறிந்து கொள்வது என்பது மட்டுமோ அல்லது கற்றல் என்பது சரியான கருத்துக்களை தெரிந்து கொள்வதும், தவறானவற்றை நிராகரிப்பதும் மட்டுமோ அல்ல. புலனுணர்வின் மூலம் பெறப்பட்ட பல கருத்துக்களை ஒருங்கினைத்துப் புரிந்து கொள்வதுடன், ஏற்கனவே புலனுணர்வினாலும், பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் மூலமும் பெற்றுள்ள தவறான கருத்துக்களை நமது மூளையிலிருந்து துடைத்தெறிவதன் மூலமே கற்றல் முழுமையடைகிறது.
தவறான கருத்துக்கள் அல்லது அரைக்காணி (1/160) அளவிலான உண்மைகளோடு கட்டமைக்கப்படும் கட்டுக்கதைகள் மத மூடநம்பிக்கைகளுடன் கலக்கும் போது அவை பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாகி விடுகிறது. அதனால் தான் இன்றும் கூட பூமி தட்டை, சோதிடம், கிரகப் பெயர்ச்சி போன்ற மூடநம்பிக்கைகளை நம்புவோரும் ‘நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால்பதித்தது பொய்’ என்பது போன்ற சதிகோட்பாடுகளை நம்பிப் பரப்புவோரும் இருக்கிறார்கள்.
அதனால் அறிவுக்கு ஒவ்வாத கட்டுக் கதைகளையும், கற்பிதங்களையும் நமது மூளையிலிருந்து துடைத்தெறிந்துவிட்டு இயற்கையின் வியத்தகு நிகழ்வுகளை இரசிப்போம், நமது கற்றலை விரிவு செய்வோம்.
கேள்வி : //தனி மனித, சமூக, நல்ல – கெட்ட நிகழ்வுகள் எல்லாவற்றிக்கும் உணர்ச்சி வசப்படுவதால் நிதானம் இழக்கிறேன். அறிவு பூர்வமாக யோசித்தால் யாரும் எப்படியோ போகட்டும் என்று தோன்றுகிறது. மனதுக்கும் அறிவிற்குமான இந்த போராட்டத்தை அடக்க முடியுமா? முடியுமெனில் விளக்கவும்.//
– ராதாகிருஷ்ணன் ரங்கராஜ்
அன்புள்ள ராதாகிருஷ்ணன் ரங்கராஜ்,
அறிவுப் பூர்வமாக யோசிக்கும் போது யாரும் எப்படியோ போகட்டும் என்று தோன்றுகிறதல்லவா? இது தொடரும் பட்சத்தில் காலப்போக்கில் சமூகரீதியான நிகழ்வுகளுக்கு உணர்ச்சிவசப்பட்டு நிதானம் இழப்பதே நின்று போகும். சுயநலமாய், காரியவாதியாகவும் உருப்பெறுவோம். அப்போது தன்னலம் சார்ந்து உணர்ச்சி வசப்படுவது மட்டும் இருக்கும்.
எனவே இப்போது நீங்கள் உணர்ச்சிவசப்படுவது உங்களிடம் இருக்கும் சமூக நலன்பாற்பட்ட சிந்தனைகளின் நல்ல அறிகுறி. அதே போன்று அறிவுப்பூர்வமாக யோசிக்கும் போது வழி ஒன்றுமில்லை என்று சிந்திப்பதன் காரணம் நீங்கள் இந்த இடத்தில் தனிநபராக சிந்திக்கிறீர்கள். இதை விடுத்து அதே இடத்தில் சக மனிதர்களோடு கூட்டாக கவலைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தெம்பாக யோசிக்க முடியுமல்லவா? மனித குலத்தின் வரலாறும் சரி, வளர்ச்சியும் சரி இத்தகைய கூட்டுத்துவமாய் சமூகமாய் செயல்பட்டதன் விளைவுகளே. அது அப்போது மட்டுமல்ல எப்போதும் பொருந்தக் கூடிய ஒன்று.
ஆய்வு ஒன்றின்படி தொழிற்சங்கம் இருக்கும் தொழிற்சாலை பகுதிகளில் தற்கொலை விகிதம் குறைவாகவும், தொழிற்சங்க நடவடிக்கைகள் இல்லாத பகுதிகளில் தற்கொலை விகிதம் அதிகமாகவும் இருக்கிறது. தனித் தொழிலாளியாக மட்டும் இருந்து, தன்னுடைய பணி சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாத போது விரக்கியடைந்து; வேறு வழியில்லாமல் தற்கொலைக்கு இட்டுச் செல்கிறது. சங்கமாய் சேரும்போது நான் மட்டும் தனியாக இல்லை, இங்கே நாம் என்று பலரும் இருக்கிறோமென ஒரு கூட்டு மனப்பான்மை அந்த தனிப்பட்ட விரக்தியை ஒழிக்கிறது.
எனவே உங்களது உணர்ச்சிவசப்படல் சமூகநலன்பாற்பட்டும், உங்களது சிந்தனை தனிநபராக நின்று யோசிப்பதும் இருக்கிறது. இதன் முரண்பாட்டை களைய நீங்கள் ஏதாவது ஒரு முற்போக்கு அமைப்பு ஒன்றில் (ம.க.இ.க., மக்கள் அதிகாரம் போன்ற) இணைந்து கூட்டாய் சிந்திக்க முயலுங்கள். அப்போது உணர்ச்சிவசப்படல் குறைந்து சமூக அநீதிகளுக்கு நாம் இன்னதுதான் செய்ய வேண்டும் என்ற கடமை உணர்ச்சி தோன்றி உருப்பெறும்.
♦ ♦ ♦
கேள்வி : //சுபாஷ் சந்திர போஸ் (மற்றும் அவரின்) ராணுவத்தால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து, ஒருவேளை இந்தியாவை வழிநடத்தி இருந்தால் எப்படி இருந்திருக்கும்? ஹிட்லரைச் சந்தித்த சந்திரபோஸ் ஃபாசிசத்தின் வழியில் இந்தியாவை ஆண்டிருப்பாரா அல்லது சோசலிச வழியில் ஆண்டிருப்பாரா?உண்மையில் அவர் இடதா அல்லது வலதா?//
-மா.பேச்சிமுத்து
சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய அச்சு நாடுகளின் கூட்டணி ஆதரவுடன் பிரிட்டனை எதிர்த்து போர் புரிந்து விடுதலை அடைய அவர் விரும்பினார்.
இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளின் கூட்டணி தோற்று அச்சு நாடுகள் வெற்றி பெற்றிருந்தால் உலகமே பாசிச, நாஜிக்களின் வசம் அடிமைப்பட்டிருக்கும். சோவியத் யூனியனின் அளப்பரிய தியாகத்தால் பாசிச ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மனி வீழ்ந்தது. கிழக்கே ஜப்பானும் தோல்வியுற்றது. ஜப்பான் உதவியுடன் பர்மா வரை வந்த சுபாஷின் இந்திய தேசிய இராணுவம் பின்னர் பிரிட்டன் படைகளிடம் தோற்றுப் போனது.
எனவே சுபாஷின் வெற்றி தோல்வி என்பது பாசிச ஜெர்மனியோடு தொடர்புடையது. உள்நாட்டில் காந்தியின் அஹிம்சைப் போராட்ட முறையால் விடுதலை அடைய முடியாது, போர் புரிந்தே விடுதலை அடைய முடியும் என்ற அளவில் சுபாஷ் சந்திர போஸ் இடதாகவும், நாஜி – பாசிச ஜெர்மனி – ஜப்பானிடம் உதவி கேட்ட வகையில் அவர் வலதாகவும் இருக்கிறார்.
♦ ♦ ♦
கேள்வி : //நான் முதுகலை இதழியல் முதலாம் ஆண்டு படித்து வருகின்றேன். எனக்கு இம்மாதிரியான கட்டுரைகளை எழுதி என்னால் முடிந்தவற்றை; மாற்றங்களை செய்ய விரும்புகின்றேன். அதற்கு எனக்கு முறையான பயிற்சி தேவை என்பதை உணர்ந்துள்ளேன். அதற்கு வகுப்புகள் நீங்கள் நடத்துகிறீர்களா?//
-ராஜா
அன்புள்ள ராஜா,
வகுப்பு மற்றும் பயிற்சி அளித்து வருகிறோம். அது குறித்து மேலும் அறிய எங்களது மின்னஞ்சல் முகவரியில் ( vinavu@gmail.com ) தொடர்பு கொள்ளவும்.
♦ ♦ ♦
கேள்வி : //பல்வேறு திரைப்படங்களுக்கும் விமர்சனம் (நேர்மறை அல்லது எதிர்மறை) எழுதும் நீங்கள் அம்பேத்கர் படத்தை பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாதது ஏன்?//
-அம்பேத்கர் பிரியன்
அன்புள்ள அம்பேத்கர் பிரியன்,
பல திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுத நினைத்தாலும் உண்மையில் அப்படி எழுத முடியவில்லை. வினவு தளத்தின் ஆரம்ப வருடங்களில் அவ்வப்போது திரை விமர்சனங்கள் வரும். இப்போது வருவதில்லை. மற்றபடி அம்பேத்கர் படம் குறித்து விமர்சனம் எழுத தடையில்லை. அதை குறித்துக் கொள்கிறோம்.
♦ ♦ ♦
வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்: கேள்விகளை பதிவு செய்யுங்கள்
உலகத்திலேயே பெண் விடுலையைப் பற்றி சிந்தித்தவர்கள் மிகவும் குறைவானவர்கள். அவர்களுள் தந்தைப் பெரியார் குறிப்பிடத்தக்கவர். பெண் ஏன் அடிமையானாள் என்ற தன்னுடைய சிறு நூலில் தன் கருத்துக்களை விளக்குகிறார். 10 தலைப்புகளில் வரலாற்றுக் காலங்களில் பெண்கள் ஆண்களுக்கு அடிமைகளாக மாறியதற்கான காரணங்களைத் தெளிவாக விளக்கி பெண்கள் விடுதலை பெறுவதற்கான வழிமுறைகளையும் புரட்சிகரமாகவும் நடைமுறையில் சாத்தியம் உள்ளதாகவும் விவரிக்கிறார்.
இந்நூலை பெரும்பாலான தோழர்கள் படித்திருப்பார்கள். அந்தப் புத்தகத்தையும் கையில் வைத்திருப்பார்கள். அந்நூலின் PDF இணைப்பை இத்துடன் இணைத்துள்ளேன்.
1 of 2
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:
“தமிழகத்தை நாசமாக்காதே!” என்கின்ற தலைப்பில் மக்கள அதிகாரம் சார்பில் 19.08.2019 அன்று மாலை மதுரையில் நடக்கவிருந்த பொதுக்கூட்டத்திற்கு இறுதி நேரத்தில் போலீசு அனுமதி மறுத்ததால் அந்நிகழ்ச்சி அரங்கக்கூட்டமாக நடந்தது.
கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக மக்கள் அதிகாரத்தின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மருது வரவேற்புரை நிகழ்த்தினார்.
கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தலைமை தாங்கினார். அவர் தன்னுடைய தலைமையுரையில், “பொதுவாகவே மக்கள் அதிகாரம் கூட்டம் என்றாலே அனுமதி கொடுப்பதில்லை என்கின்ற முடிவோடுதான் அரசும் போலீசும் இருக்கிறது. ஆனால் ரூம் போட்டு உக்காந்து யோசித்து புதிய புதிய முறையில் அனுமதி மறுக்கின்றனர். இன்று போய் நாளை வா என்று தினமும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி இழுத்தடித்துவிட்டு பொதுக்கூட்டத்திற்கு முதல்நாள் அனுமதி இல்லை என்பது. புதிதாக கேள்வியை கேட்டு மறுப்பது இப்படி ஜனநாயக அடிப்படையின்றி செயல்படுகிறார்கள்.
”இந்தியாவை நாசமாக்காதே” என்கின்ற தலைப்பு வைத்தால் கூட இன்றைய சூழ்நிலைக்கு பொருத்தமானதுதான். அந்தளவிற்கு இன்று இந்திய மக்களையும் பொருளாதாரத்தையும் சீரழித்துள்ளது இந்த பாசிச கும்பல். இதில் குறிப்பாக தமிழகத்தை ஆரிய வன்மத்தோடு நாசமாக்க மீத்தேன், ஹைட்ரோகார்பன், அணுக்கழிவு மையம், எட்டு வழிச்சாலை, சாகர்மாலா என நாசகார திட்டங்களை இங்கு நடைமுறைப்படுத்த திட்டமிடுகிறார்கள். இதனை எதிர்த்து இயக்கங்கள் மட்டுமா போராடுகிறார்கள்? பலதரப்பட்ட மக்களும் போராடுகிறார்கள்.
ஆனால் போராடிய அனைவரையும் ஒடுக்குகிறார்கள். கூடங்குளத்தில், நியூட்டிரினோவில், தேசிய கல்வி கொள்கை என அனைத்தையும் அமுல்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியமிருக்கின்றது. எனவேதான் அனைத்து மாற்று அமைப்பை சேர்ந்தவர்களையும் இந்த கூட்டத்திற்கு அழைத்துள்ளோம். எனவே தனித்தனியே பிரிந்து போராடி கொண்டிருந்த நம்மை எல்லாம் ஒன்றிணைத்த ஒரே ஒரு காரணத்திற்காக நாம் அவர்களுக்கு நன்றி சொல்லலாம்” எனப் பேசினார்.
அடுத்ததாக பேசிய தமிழ்தேச மக்கள் முன்னணி அமைப்பின் தலைவர், தோழர் மீ.த. பாண்டியன் பேசும் போது
“இது கார்பரேட் நிறுவனங்களின் வெளிப்படையான பன்முனைத்தாக்குதல். முன்னர் இத்தகைய திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் கூட தற்போது இதனை புரிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நாம் அணு உலையே வேண்டாம் என்றால் ஆறு அணு உலை வைத்து அணுவுலை பூங்கா அமைக்கப்போகிறோம் என்கிறார்கள். இப்போது அணு கழிவு மையம், மீத்தேன் என அதிகாரத்தை குவித்து வைத்து கொண்டு இதை நடைமுறப்படுத்துகிறார்கள்.
பொட்டிபுரத்தில் நம் சொந்தக்காரர்களைக் கூட நாம் பார்க்கச் செல்ல முடியாது. அந்தளவிற்கு கெடுபிடி. எல்லாவற்றிற்கும் காரணம் இந்த ஆர்.எஸ்.எஸ். கும்பல். முன்பெல்லாம் இவர்கள் நம்மை பார்த்து பதுங்கியிருந்தவர்கள், தற்போது நம்மிடம் நேரடியாக சண்டைக்கு வரும் அளவிற்கு அதிகாரத்தின் நிழலில் அவர்கள் பாசிசத்தை நம் கண்முன் காட்ட ஆரம்பித்துள்ளார்கள்.
போலீசு, நீதிமன்றம், கார்ப்பரேட் எல்லாம் அரசோடு கூட்டணி அமைத்து நம் நாட்டை கொள்ளையிடுகிறார்கள். இவர்களுடைய இந்த கூட்டணியை முறியடிக்க ஒரு தனித்துவமான மக்கள் கூட்டணியை அமைக்க வேண்டும். அது செங்கொடியை கையில் ஏந்தியிருப்பவர்களாலேயே சாத்தியம்” என்று பேசினார்.
திராவிடர் விடுதலை கழகத்தின் மதுரை மாவட்ட செயலர் தோழர் மா.பா. மணி அமுதன் அவர்கள் பேசும்போது
“மதுரையில் தற்போதைய நிலையில் எந்த இயக்கத்திற்கும் எந்த கூட்டங்களுக்கும் அனுமதி மறுக்கும் காவல்துறை ஆர்.எஸ்.எஸ் பள்ளிகளில் நடத்தும் எந்த கூட்டத்திற்கும் தடை விதிப்பதில்லை. சத்தமில்லாமல் எல்லா பள்ளிகளிலும் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் வேலையை செய்துகொண்டு இருக்கிறார்கள். அதுமட்டுமில்லை வட மாநிலத்தில் ஜெய்சிரீராம் சொல்ல சொல்லி முஸ்லிம் மக்களை கொல்வதை போல் இங்கே நீங்கள் செய்தால் உங்களை நாங்கள் அதே போல் தண்டிப்போம் என்று கூட்டத்தில் பேசியதற்கே அன்றிரவு 3 மணிக்கு வீட்டில் வந்து என்னை கைது செய்தார்கள்.
மாணவர்கள் சாதிக் கயிறு கட்டுவதை தடை செய்த விசயத்தில் எச்.ராஜா பேசிய உடனேயே மந்திரி செங்கோட்டையன் அந்த உத்தரவை ரத்து செய்கிறார் என்றால் இவர்கள் யாருடைய கையாட்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்று பேசினார்.
மக்கள் சிவில் உரிமை கழகத்தின் தேசிய செயலர் பேராசிரியர். முரளி தன்னுடைய உரையில் “இந்த நாட்டில் வளர்ச்சி என்றால் நிலங்களைப் பறிப்பது என்று அர்த்தம்” என்று கூறி வளர்ச்சி என்ற பெயரில் இந்தியாவில் சமீபத்தில் திட்டமிடப்பட்ட ஓவ்வொரு துறையிலும் மக்களிடமிருந்து எத்தனை ஆயிரகணக்கான ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட்டன என்று புள்ளி விவரங்களோடு பட்டியலிட்டார். மேலும் மீத்தேன் திட்டம் என்றாலே உலக அளவில் ஒரு பெயரை பெற்றிருக்கிறது “நரகத்தின் கதவு” என்று. நமக்கு நரகத்தை இவர்கள் பரிசளிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் விச பாம்போடு படுத்து கொண்டிருப்பதாக உணருகிறேன்” என்று பேசினார்.
மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. தியாகராஜன் பேசும் போது உலகமெங்கும் கார்பரேட் நிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காக இயற்கையை சூறையாடுவதால் மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் அதை எதிர்த்து போராடும் மக்களை நீதிமன்றங்கள் கூட அதிகாரத்தோடு சேர்ந்து கொண்டு எப்படி ஒடுக்குகிறது என்பதையும் பட்டியலிட்டார்.
தமிழ் புலிகள் அமைப்பின் நிறுவனத்தலைவர் தோழர். நாகை திருவள்ளுவன் பேசும் போது “ஆள், அம்பு, அதிகாரிகள், படை என்று இந்த நாடே உண்மையில் ஒரு கார்ப்பரேட் அதிகாரமாகத்தான் இருக்கிறது. ஆனால் பெயரில் நாம் மக்கள் அதிகாரம் என்று இருப்பதற்கே இவர்கள் பயப்படுகிறார்கள் என்றால் இதுதான் உண்மையாக நாம் பின்பற்ற வேண்டிய பாதை என்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தகைய ஒரு அமைப்பின் கூட்டத்திற்கு அவர்கள் தடை விதித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடுமா? கூட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டால் மக்கள் அதிகாரம் என்கின்ற கருத்து மக்களிடம் பரவாமல் போய்விடுமா? என்று பேசி இவர்கள் கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் தமிழகத்திற்கு பேரழிவை தரக்கூடியவை என்பதை புரிந்துகொள்ள வேண்டுமெனில் பார்ப்பானியத்தின் சூழ்ச்சிகளை வரலாற்றுரீதியாக புரிந்து கொள்ள வேண்டும்” என எழுச்சிகரமாக உரையாற்றினார்.
1 of 12
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
“மதுரையில் வளர்ச்சி என்ற பெயரில் நடைபெறும் பல்வேறு திட்டங்களிலும், சாலை விரிவாக்கத்திலும் எத்தனை எத்தனை மரங்களும், ஏரிகளும் அழிக்கப்பட்டன என்பதையும், மதுரை காளவாசல் பகுதியை காற்று மாசடைந்த பகுதி என்று சுற்றுச் சூழல் அலுவலகமே அறிவித்த ஆறு மாதத்தில் அதே பகுதியில் பாலம் கட்டுவதற்கு சுற்றுச் சூழல் அலுவலகம் எப்படி அனுமதி கொடுத்தது. அதே போல் விமான நிலைய விரிவாக்கம் என்கின்ற பெயரில் 4 கிராமத்திற்கு நிலங்களுக்கு பாசன நீர் கொடுக்கும் கண்மாயை ஆக்கிரமித்ததில் வேலம்மாள் மருத்துவமனைக்கும் மிகப்பெரிய நிறுவனங்களுக்கும் அந்த கண்மாயின் தண்ணீரை மடை மாற்றுவதற்காகத்தான் ” என்று தன்னுடைய கள அனுபவத்தை மக்களறிய பேசினார் நாணல் நண்பர்கள் குழிவின் தோழர் சிறிதர் நெடுஞ்சழியன்.
“தன் சொந்த மக்களை கையால் மலம் அள்ள வைத்து விட்டு நியூட்ரினோ ஆய்வு செய்வதுதான் இந்த நாட்டின் அரசாங்கம் என்றால் இது யாருக்கான அரசு? நாடு பிரிவினையின் போது நடந்த கலவரங்களுக்கு பிறகு பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகுதான் மீண்டும் மிகப்பெரிய மதக் கலவரங்கள் நடக்க ஆரம்பித்தன. ஆர்.எஸ்.எஸ். கும்பல் இந்த நாட்டை மிகப்பெரிய பிரிவினைவாதத்திற்கு கொண்டு போய் கொண்டிருக்கிறது. அத்வானி ஒரு முறை சொன்னார் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அம்பேத்கர் புத்தகங்களை தடை செய்வோம் என்று. இவர்களுக்கு அறிவை கண்டால் பயம் வருகிறது, கோபம் வருகிறது. இவர்களை வீழ்த்த வேண்டுமெனில் பகத்சிங்கை போன்ற ஒரு ஆளுமை தேவை. மக்கள் அதிகாரம் அந்த தேவையை நிறைவு செய்ய ஆற்றல் பெற்ற அமைப்பு” என்று வி.சி.க.-வின் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் தோழர் இன்குலாப் அவர்கள் உரையாற்றினார்.
அடுத்ததாக பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் தோழர் விஜயராஜன் தன்னுடைய உரையில் “நம்முடைய மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் என்னிடம் சொன்னார், பாராளுமன்றத்தில் உட்கார்ந்திருப்பது ஏதோ காசியில் சாமியார்களுக்கிடையே உட்கார்ந்திருப்பது போல் இருக்கிறது என்று. அந்த அளவிற்கு ஆர்.எஸ்.எஸ் தன்னுடைய காவி கொள்கையை நாடு முழுவதும் விரித்துள்ளது. அதே போல் அவர் சொன்ன இன்னொரு தகவல் பி.ஜே.பி -யின் வெறுப்புக் கொள்கையின் சாட்சியமாக உள்ளது. அதாவது மதுரை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள திட்டங்களை நிதி மந்திரி திருமதி நிர்மலா சீதாராமனிடம் கேட்கும் போது அவர் “நீங்கள் பி.ஜே.பி. -க்கு வாக்களிக்காத போது உங்களிடம் எதற்காக நான் அதை சொல்ல வேண்டும்” என்று பேசினாராம். எனவே இவர்களுடைய கொள்கையே வெறுப்பு கொள்கைதான் எனவே இவர்களை முறியடிக்க வேண்டுமெனில் ஒரு தத்துவார்த்த கொள்கையின் அடிப்படையில் நாம் ஒன்றிணைய வேண்டிய அவசியமிருக்கிறது” என்று பேசினார்.
மக்கள அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ தன்னுடைய சிறப்புரையில் “மீத்தேன், எட்டு வழி சாலை, அணு உலை ஆகியவைகள் வேண்டாம் என்பது ஒரு புறமிருக்கட்டும் முதலில் அதை பற்றி பேச நமக்கு உரிமை இருக்கிறதா இல்லையா என்பதே முதல் கேள்வி. ஏனென்றால் இத்தகைய தமிழகத்தை பாதிக்க கூடிய மோசமான திட்டங்களை பற்றி பேச யாருக்குமே அனுமதி இல்லை. நிலைமை இப்படி இருக்கும்போது நாம் எப்படி இந்த ஆட்சியை, பிஜேபி கும்பலை முறியடிப்பது? அதுதான் இங்கே முதல் கேள்வி.
நாம் இவர்களை பார்த்து பயப்பட வேண்டியதில்லை ஏனென்றால் அவர்கள் மக்களை ஏமாற்றும் திருடர்கள். உழைத்து வாழும் நாம் ஒரு திருடனுக்கு ஏன் பயப்பட வேண்டும். சமீபத்தில் செய்திகளில் காட்டினார்களே, ஒரு முதிய இணையர்கள் சேர்ந்து கொள்ளையடிக்க வந்தவர்களை விரட்டியடித்தார்களே அவர்களை போல்தான் நாம் அதிகாரிகளை, போலீசை பார்க்க வேண்டும். நீ அனுமதி கொடுக்கவில்லை என்றால் என்ன? தடையை மீறி நாங்கள் கூட்டம் நடத்துவோம், உன்னால் ஆனதை செய், எதற்கும் நாங்கள் தயார் என்று செவிட்டில் அடித்தாற்போல் நம்முடைய நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
இன்னும் மனு கொடுப்பவர்களாகவே இருந்தோமென்றால், அனுமதி கேட்டுத்தான் போராடுவோம் என்றால் நம்மால் இந்த திட்டங்களை எல்லாம் தடுக்க முடியாது. எனவே தூத்துக்குடியில் அம்மக்கள் திரண்டதை போல திட்டமிட்ட வழியில் திரண்டு போராட வேண்டும்” என்று பேசினார்.
இறுதியில் மகஇக -வின் கலைக்குழு சார்பில் தோழர் கோவன் அவர்களின் தலைமையில் பாடப்பட்ட பாடல்கள் மக்களிடையே எழுச்சிகரமான உணர்வை உருவாக்கியது.
அதன்பின் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் சரவணன் நன்றியுரை வழங்க கூட்டம் நிறைவுற்றது.
தகவல்: மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.
தொடர்புக்கு – 98438 73975
98943 12290
உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 01
1942-ம் ஆண்டு கோடை உச்சத்தில் இருந்தபோது மாஸ்கோவின் ஒரு மருத்துவமனையின் கனத்த ஓக் மரக் கதவுகளின் பின்னிருந்து வலிய கருங்காலிக் கைத்தடியை ஊன்றியபடி வெளியே வந்தான் கட்டுக்குட்டான இளைஞன் ஒருவன். போர் விமானிக்குரிய கோட்டும் பூட்சுகளை மூடியிருந்த சீருடைக் காற்சட்டையும் அணிந்திருந்தான் அவன். சீனியர் லெப்டினன்ட் என்பதைக் காட்டும் குறிகள் அவனது நீலக் கழுத்துப் பட்டையின் மீது பொறிக்கப்பட்டிருந்தன. வெள்ளை நீளங்கி அணிந்த ஒரு மாது வாயில் வரை வந்து அவனை வழியனுப்பினாள். சென்ற உலகப் போரில் மருத்துவத்தாதிகள் அணிந்த செஞ்சிலுவை பொறித்த தலைக்குட்டை அவளுடைய நல்லியல்பு ததும்பிய இனிய முகத்துக்கு ஓரளவு கம்பீரத் தோற்றத்தை அளித்தது. வாயில் மேடையில் அவர்கள் நின்றிருந்தார்கள். விமானி சாயம்போன மென்மையான தொப்பியைக் கழற்றி மருத்துவத்தாதியின் கையை அசட்டுப் பிசட்டென்று உயர்த்தி முத்தமிட்டான். பிறகு சற்றே தள்ளாடியவாறு அவன் விரைவாகப் படிகளில் இறங்கி, மருத்துவமனையின் நீண்ட கட்டிடத்தின் அருகாக ஆற்றோரத் தார் ரோட்டில் திரும்பிப் பாராமல் நடந்தான்.
நீல, மஞ்சள், பழுப்புப் பைஜாமாக்கள் அணிந்த நோயாளிகள் ஜன்னல்கள் வழியே கைகளையும் கைத்தடிகளையும் கவைக்கோல்களையும் ஆட்டி அவனை வழியனுப்பினார்கள், ஏதோ கத்தினார்கள். அவனும் அவர்களை நோக்கிக் கையை ஆட்டினான். எனினும் இந்தப் பெரிய சாம்பல் நிறக் கட்டிடத்திலிருந்து கூடிய விரைவில் அப்பால் போய்விட அவன் முயன்றது தெளிவாகப் புலப்பட்டது. தனது உள்ளக் கிளர்ச்சியை மறைப்பதற்காக அவன் ஜன்னல்களின் பக்கத்திலிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டான். விந்தையான, நிமிர்ந்த, துள்ளுநடையில் அவன் கைத்தடியை லேசாக ஊன்றியவாறு விரைவாகச் சென்றான். அவனது ஒவ்வொர் அடிவைப்பின் போதும் ஏற்பட்ட மெல்லிய கிரீச்சொலி இல்லாவிட்டால் வடிவான வலிய உடற்கட்டுள்ள இந்தத் துடிப்பான மனிதனுடைய கால்கள் வெட்டி அகற்றப்பட்டுவிட்டன என்று எவருமே எண்ணியிருக்க முடியாது.
மருத்துவமனையிலிருந்து அலெக்ஸேய் மெரேஸ்யெவ் உடம்பைத் தேற்றிக் கொள்வதற்காக மாஸ்கோவுக்கு அருகிலிருந்த விமானப்படை ஆரோக்கிய நிலையத்துக்கு அனுப்பப்பட்டான். மேஜர் ஸ்த்ருச்கோவும் அங்கேயே அனுப்பப்பட்டார். அவர்களை ஏற்றிப் போவதற்காக ஆரோக்கிய நிலையத்திலிருந்து மோட்டார் வருவதாக இருந்தது. ஆனால் மெரேஸ்யெவ் தனக்கு மாஸ்கோவில் உறவினர்கள் இருப்பதாகவும் அவர்களைப் பார்க்காமல் தன்னால் போக முடியாது என்றும் மருத்துவமனை நிர்வாகிகள் நம்புமாறு செய்து விட்டான். தனது சாமான் பையை ஸ்த்ருச்கோவிடம் வைத்துவிட்டு, மாலையில் மின்சார ரெயிலில் ஆரோக்கிய நிலையம் போய்ச் சேர்ந்து விடுவதாக வாக்களித்து விட்டு, மருத்துவமனையிலிருந்து கால்நடையாகவே புறப்பட்டான்.
மாஸ்கோவில் அவனுக்கு உறவினர்கள் இல்லை. எனினும் தலைநகரைச் சுற்றிப் பார்க்க அவனுக்கு மிகவும் ஆசையாக இருந்தது. விட்டாற்றியாக நடந்து தன் பலத்தைச் சோதித்துப் பார்க்கவும் தன் விஷயத்தில் எவ்வித அக்கறையும் அற்ற, ஆரவாரம் நிறைந்த ஜனத்திரளில் இடித்துப் புகுந்து செல்லவும் அடங்கா ஆவல் உண்டாயிற்று. ஆகவே, சுருங்கற்சுவர்களுக்கு இடையே கட்டுண்ட மாட்சிமிக்க ஆற்றின் கரையோரச் சாலை வழியாக இப்போது அவன் நடந்தான். ஆற்றின் சிற்சிலைச் செதில்கள் வெயிலில் மினுமினுத்தன. ஏதோ நன்கு பழக்கமான, இனிய நறுமணம் வீசிய, வெதுவெதுப்பான கோடைக் காற்றை ஆர்வத்துடன் மூச்சிழுத்தான் அலெக்ஸேய்.
எங்கும் எவ்வளவு நன்றாயிருந்தது!
எல்லா மகளிரும் அவனுக்கு வனப்பு வாய்ந்தவர்களாகத் தோன்றினார்கள். மரங்களின் பசுமை தனது பளபளப்பால் அவனைப் பரவசப்படுத்தியது. போதையூட்டும் குளுமையான காற்று தலையைக் கிறுகிறுக்க வைத்தது. நன்றாகத் தெளிந்திருந்த காற்றில் தொலைவு பற்றிய உணர்வு மழுங்கிவிட்டது. தான் முன்பு ஒருபோதும் நேரில் கண்டிராத கிரெம்ளினின் நெடுங்காலக் கொத்தளச் சுவர்களையும் மாபெரும் இவானின் மாதாகோவில் கும்மட்டத்தையும் நீருக்குமேல் கனத்த வளைவாகத் தொங்கிய பாலத்தையும் கையை நீட்டினால் தொட்டுவிடாலாம் போலப் பிரமை உண்டாயிற்று.
இதற்கு முன் அலெக்ஸேய் தலைநகரை அறிந்திருந்ததெல்லாம் சஞ்சிகைகளிலும் செய்தித்தாள்களிலும் வெளியாகும் நிழற்படங்களிலிருந்தும், புத்தகங்களிலிருந்தும், அங்கு போய் வந்தவர்களின் வருணனைகள் மூலமாகவும், நள்ளிரவில் உறங்கத் தொடங்கிய உலகுக்கு மேலே ஒலித்துப் பரவும் பழங்காலக் கடிகார மணியின் நீட்டொலி, கொந்தளிக்கும் ஆர்பாட்ட ஊர்வலத்தின் பல்வகை இரைச்சல்கள் ஆகியவற்றை வானொலியில் கேட்டதன் வாயிலாகவுமே. அப்போதோ, பளிச்சிடும் கோடை வெயிலில் சோர்வுற்று எழிலுடன் நீண்டு பரந்திருந்த தலை நகரம் அவன் முன் காட்சியளித்தது.
நான்கு மாதங்கள் மருத்துவமனையில் கடந்தபின் மாஸ்கோவின் கோடைகால மாட்சியால் அலெக்ஸேய் ஒரேயடியாகப் பரவசமடைந்திருந்தான். எனவேதான் அது போர்க்கோலம் பூண்டிருந்ததையும் எந்தக் கணமும் பகைவனை எதிர்த்துப் போரிட ஆயத்தமாக இருப்பதையும் அவன் உடனே கவனிக்கவில்லை. பாலத்தின் அருகில் இருந்த விசாலமான வீதியின் குறுக்கே விகாரமான பெரிய தடையரண் நிறுவப்பட்டிருந்தது. அது, பாலத்தின் கோடிகளில் நான்கு பீரங்கி வாய்கள் கொண்ட கன்க்ரீட் சதுர அரண்கள் நின்றன. அவை சிறுவன் மேஜை மீது மறந்துவிட்ட கனசதுரங்கள் போன்று இருந்தன. செஞ்சதுக்கத்தின் மழமழப்பான சாம்பல்நிற மேற்பரப்பில் கட்டிடங்களும் புல் தரைகளும் மரச்சாலைகளும் பல வண்ணங்கள் தீட்டப்பட்டிருந்தன. கோர்க்கிய வீதிக் கடைகளின் ஜன்னல்கள் பலகைகளால் அடைத்து மூடப்பட்டு மணல் நிரப்பப்பட்டிருந்தன. சந்துகளிலும் கட்டுக்கு அடங்காப் பையன் ஒருவனால் மறந்து விடப்பட்ட விளையாட்டுப் பொருள்கள் போலத் தண்டவாளங்களைப் பற்றாக வைத்து இணைத்த துருபிடித்த தடையரண்கள் நின்றன.
முன்னர் மாஸ்கோவைக் கண்டிராதவனும் போர்முனையிலிருந்து இங்கு வந்தவனுமான படைவீரனுக்கு இவை எல்லாம் வெகுவாகக் கண்ணில் படவில்லை.
பொய்க்கால்கள் கறுமுறுக்க, கைத்தடியை அழுத்தி ஊன்றியவாறு கோர்க்கிய வீதிகளில் மேலே சென்றான் பெரிதும் களைத்திருந்த அலெக்ஸேய். கிடங்குகளையும் வெடிப்புகளையும் வெடிகுண்டால் தகர்க்கப்பட்ட கட்டிடங்களையும் ஆவென்று வாய் பிளந்திருக்கும் ஆழ்பள்ளங்களையும் உடைந்த ஜன்னல்களையும் வியப்புடன் தேடினான் அவன். மேற்குக் கோடியிலிருந்த விமான நிலையத்தில் வாழ்ந்த அவன், ஜெர்மன் வெடி விமானங்கள் அணிக்குப்பின் அணியாக அனேகமாக ஒவ்வோர் இரவும் கிழக்கு நோக்கிப் பறந்து செல்வதைக் காப்பரணிகளிலிருந்து கேட்டிருந்தான்.
விமானங்களின் ஓர் அலை தொலைவில் ஓசை அடங்குவதற்குள் இன்னோர் அலை வரும். சில வேளைகளில் இரவு முழுவதும் வானம் விமானங்களின் இரைச்சலால் ஓயாது அதிரும். பாசிஸ்ட் விமானங்கள் மாஸ்கோவுக்குப் போகின்றன என்று சோவியத் விமானிகள் அறிந்திருந்தார்கள். அங்கே எப்பேர்பட்ட நகரமாயிருக்கும் என்று அவர்கள் கற்பனை செய்து கொள்வார்கள்.
இப்போது, போர்க்கால மாஸ்கோவைச் சுற்றிப் பார்க்கையில் மெரேஸ்யெவ் விமானத் தாக்குக்களின் அடையாளங்களை விழிகளால் துழாவித் தேடினான். அவனுக்கு அவை தென்படவில்லை. தார் ரோடுகள் சமமாக இருந்தன, ஒழுங்கு கலையாத வரிசைகளாக நின்றன வீடுகள். ஜன்னல் கண்ணாடிகள் கூட, வலைப் பின்னல் போலக் காகித நாடாக்கள் ஒட்டப் பட்டிருந்த போதிலும் அபூர்வமாக ஒரு சில தவிர மற்றவை எல்லாம் சேதமின்றி முழுமையாக இருந்தன. ஆனால் போர்முனை அருகாமையில் இருந்தது என்பதை நகரவாசிகளின் கவலை தேங்கிய முகங்களைக் கொண்டே அனுமானிக்க முடிந்தது. நகர மக்களில் பாதிப்பேர் படைவீரர்கள். புழுதி படிந்த ஜோடுகளும் வியர்வையில் நனைந்து தோள்களுடன் ஒட்டிக் கொள்ளும் சட்டைகளும் அணிந்து, சாமான் பைகளைத் தோள்களில் தொங்கவிட்டவாறு நடந்தார்கள் அவர்கள். ஒரு சந்திலிருந்து வெளிப்பட்டு வெயிலொளியில் முழுக்காடிய வீதியில் விரைந்தது புழுதி படிந்த லாரிகள் வரிசை. இந்த லாரிகளின் பக்கங்கள் நெளிந்திருந்தன., கேபின் கண்ணாடிகள் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தன. லாரிகளின் அற்றலைந்த மரப் பின்பகுதிகளில் உட்கார்ந்திருந்தார்கள் புழுதிபடிந்த படைவீரர்கள். அவர்கள் அணிந்திருந்த மழைக் கோட்டுக்கள் படபடத்துக் கொண்டிருந்தன. சுற்றிலும் உள்ளவற்றை எல்லாம் அவர்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள், டிராலி பஸ்களையும் கார்களையும் டிராம்பர்களையும் முந்திக்கொண்டு விரைந்து லாரி வரிசை. பகைவன் இங்கே தான் அருகில் இருக்கிறான் என்பதைத் தெளிவாக நினைவு படுத்தியது அது.
ருஷ்ய மகாகவி பூஷ்கின் உருவச்சிலை வரையில் அலெக்ஸேய் அரும்பாடுபட்டு நடந்தான். இருகைகளாலும் கைத்தடியைப் பற்றிச் சாய்ந்து, தயாரிப்புச் சாமான் கடைகளின் தூசி படிந்த காட்சி ஜன்னல்களில் உள்ள எதையோ உற்றுப் பார்ப்பது போன்ற நடிப்புடன் வழியில் அவன் சில தடவைகள் ஓய்ந்து கொண்டான். உருவச் சிலைக்குச் சற்றுத் தூரத்தில் போடப்பட்டிருந்த, வெயிலில் காய்ந்து கதகதத்த பச்சை நிற பெஞ்சில் அப்பாடா என்று உட்கார்ந்தான்… இல்லை, இல்லை, உட்காரவில்லை, பொத்தென்று சாய்ந்தான்.
சாய்ந்தவன், இரத்தங்கட்டி, வார்களால் தேய்த்து வழற்றப் பட்டுக் கடுமையாக வலித்த கால்களை நீட்டிக் கொண்டான். களைப்பு மிகுதியாக இருந்தாலும் களிபொங்கும் மனநிலை அதனால் பாதிக்கப்படவில்லை. வெயிலொளி வீசிய பகல் மிக நேர்த்தியாக இருந்தது. வானம் எல்லையற்ற ஆழங்கொண்டதாக விளங்கியது. பூக்கள் பூத்துக் குலுங்கிய லிண்டன் மரங்களின் நறுமணத்தை உலாச்சாலையில் பரப்பியது மெல்லிளங்காற்று. டிராம் வண்டிகள் கணகணவென்று மணியடித்தவாறு கடகடத்து ஓடின. உருவச்சிலைகள் பாதபீடத்தருகே புழுதி மணலை ஒரே மும்மரமாகத் தோண்டிக் கொண்டிருந்த, வெளிறி ஒடிசலாயிருந்த மாஸ்கோச் சிறுவர் சிறுமியர் இனிமையாகக் கலகலவென்று சிரித்தார்கள். புன்னனகை பூத்த முகத்தை வெயில்படும்படி திருப்பிக் கொண்டு கண்களைச் சுருக்கிக் கொண்டான் மெரேஸ்யெவ்.
போக்குவரத்தை அதிகரிக்க விட்டுவிட்டு ஹெல்மெட் போடுவதால் மட்டும் சாலை விபத்துகள் குறையுமா ?
அருண் கார்த்திக்நமது கருத்தியல் (ideology) என்ன என்பதே நமது சிந்தனையை முடிவு செய்கிறது. நாம் எந்த பிரச்சினையைப் பற்றி யோசித்தாலும், நமது யோசனையை நமது கருத்தியல் மட்டுமே வழி நடத்துகிறது. அதில் இருந்து தப்பிக்கவே முடியாது!
எடுத்துக்காட்டாக, சமீபத்தில் சாலை விபத்துகளை குறைப்பது சம்பந்தமாக நீதி மன்றங்களும் அரசாங்கமும் நிறைய விசயங்களை சொல்லி வருகிறார்கள்; நிறைய புதிய விதிமுறைகளை கொண்டுவருகிறார்கள். இவர்கள் சொல்லும் அனைத்து விதிமுறைகளின் பின்னும் விபத்துகள் நடப்பதற்கு ஒரே காரணம் வாகன ஓட்டிகள் மட்டும்தான் என்பது போன்ற ஒரு தோற்றம் உண்டுபண்ணப்படுகிறது. மறந்தும் கூட விபத்து நடப்பதில் அரசின் பங்கும் உள்ளது என்பதை சொல்லிவிட மாட்டார்கள்.
ஒழுங்கான சாலைகளும் போதுமான பேருந்துகளும், போக்குவரத்தில் பேருந்துகளுக்கு முதலிடமும் – இவை போன்ற சில விஷயங்களைச் செய்தாலே தனியார் போக்குவரத்தை மிகவும் குறைத்துவிட முடியும், விபத்துகளும் தானாகக் குறையும். ஆனால், ஆளும் வர்க்கம் இதை பற்றி எல்லாம் பேசாது, அதிகரிக்கும் வாகனங்களை கட்டுப்படுத்தாமல் ஹெல்மெட் அணிந்தால் மட்டும் விபத்துகள் குறைந்துவிடும் என்று நம்மை நம்பச்சொல்கிறது! நாமும் நம்புகிறோம்!
இது இவ்வாறு என்றால், நமது அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் இருக்கும் பிரச்சினைகளை அதிகப்படுத்துவதற்காகவே எடுப்பது போல் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, அதிகம் வருமான வரி கட்டுபவர்களுக்கு டோல் கேட்களில் முன்னுரிமை என்ற செய்தியை நாம் பார்த்திருப்போம். சக மனிதர்களை அடிப்படையில் சமமாக பார்க்க முடியாத ஒருவரால் மட்டுமே இது போல் ஒரு திட்டத்தை யோசிக்க முடியும்.
நியாயமாக என்ன விதி இருக்க வேண்டும்? டோல் கேட்களில் பேருந்துகளுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்றுதான் இருந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 4 பேர் செல்லும் காருக்கு முன்னுரிமை, ஆனால் எப்படியும் 50 பேருக்கு மேல் ஏற்றி செல்லும் பேருந்துக்கு முன் உரிமை இல்லை! இது என்ன லாஜிக்? அதிகம் வரி கட்டுபவர் காரில் பொதுவாக 4 பேர் செல்ல மாட்டார்கள் என்பது வேறு விஷயம்.
நமது சமுதாயத்தில் ஒரு சில விஷயங்களை நாம் மாற்றவே முடியாது என்று ஏற்றுக்கொண்டு விட்டோம். மாற்ற முடியாதது என்பது கூட இல்லை, இவை மாற்றப்பட வேண்டும் என்ற எண்ணமே பல விஷயங்களை பற்றி நமக்கு வருவது இல்லை. எடுத்துக்காட்டாக கல்வி. உயர்நிலையை விட்டுவிடுவோம், மழலையர் கல்விக்கு ஏன் குழந்தைகள் வெகு தொலைவுக்கு செல்ல வேண்டும்? அனைத்து குழந்தைகளும் அவரவர் வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் மட்டுமே படிக்க வேண்டும் என்று மாற்ற முடியாதா? இந்த ஒரு மாற்றம் எத்தனை சமூகப் பிரச்சினைகளை சரி செய்யும்.
அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே தரமான கல்வி என்பது மட்டுமல்ல, அனைத்து ஜாதி குழந்தைகளுக்கும் ஒரே கல்வி என்பது மட்டும் கூட இல்லை, இந்த நடவடிக்கை போக்குவரத்து பிரச்சினையையும் சரி செய்யும். போக்குவரத்து அதிகமாக இருக்கும் நேரங்கள் எது என்று பார்த்தால், பள்ளி கல்லூரிகள் துவக்கம், முடியும் நேரங்களாகவே இருக்கும். ஏனென்றால், நமது குழந்தைகள் நிறைய பயணம் செய்து கல்வி கற்கிறார்கள். வீட்டருகில் உள்ள பள்ளி என்ற விதிமுறை வந்து விட்டால், நமது குழந்தைகள் பயணம் செய்யும் தூரம் குறையும், போக்குவரத்து குறையும், பள்ளி மாணவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றால் உள்ளே விட மாட்டோம் என்று சொல்ல தேவையும் இருக்காது, ஏனென்றால் மாணவர்களுக்கு வாகனங்களில் பயணம் செய்யும் தேவையே இருக்காது.
இதே போல்தான் மருத்துவமும். அனைவருக்கும் வீட்டுக்கு அருகிலேயே சிறந்த சிகிச்சை கிடைக்கும் என்றும், ஆரம்ப சிகிச்சைக்கு வீட்டருகில் உள்ள சுகாதார மையத்தைதான் நாட வேண்டும் என்று விதிமுறையும் வந்துவிட்டால், அனைவருக்கும் ஒரு தரத்தில், நல்ல தரத்தில் மருத்துவம் என்பது மட்டுமல்லாமல், நோயாளிகள் தேவையில்லாமல் பயணம் செய்வதும், பணம் செலவு செய்வதும் குறையும். போக்குவரத்து என்பது மட்டும் அல்ல, இதன் விளைவுகள் இன்னும் அதிகம்.
வீட்டருகில் உள்ள பள்ளி மட்டுமே, வீட்டருகில் உள்ள சுகாதார மையம் மட்டுமே என்று ஆகிவிட்டால், உள்ளூர் மக்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களும் தேவை இல்லாமல் பயணம் செய்து நேரத்தை வீணடித்து, போக்குவரத்தை அதிகரித்து, சுற்றுசூழலை மாசுபடுத்த மாட்டார்கள்.
ஆக, இது போன்ற சாதாரண நடவடிக்கைகளே நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பிரச்சினைகளை தீர்க்கும். சாதாரண நடவடிக்கை என்று சொல்லக் காரணம், இது ஒன்றும் நியூட்டன் சூத்திரம் இல்லை, அனைவருக்கும் புரியக்கூடிய விஷயம் தான்.
இவை இவ்வாறு இருக்க, நமது ஆளும் வர்க்கம் என்ன செய்கிறது, நேர் எதிர் திசையில் நம்மை நடத்தி செல்கிறது. ஊரக பள்ளிகளை மூடுகிறது, ஆயிரக்கணக்கானோர் பயிலக்கூடிய கல்வி நிறுவனங்களை அமைப்பதாக சொல்கிறது, அந்த நிறுவனங்களுக்கு நெடுந்தூரம் பயணம் செய்து வருபவர்களிடம் ஹெல்மெட் அணிய சொல்லி பின்பு சொல்லும், ஆரம்ப சுகாதார நிலையங்களை திட்டமிட்டு வலுவிழக்க செய்கிறது, பல்லாயிரம் பேர் சிகிச்சை பெறக்கூடிய எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளை கட்டப்போவதாக சொல்கிறது, அந்த மருத்துவமனைகளுக்கும் மக்கள் நெடுந்தூரம் பயணம் செய்துதான் செல்ல வேண்டும்.
அத்தனையும் செய்து போக்குவரத்தை அதிகப்படுத்திவிட்டு சுற்றுசூழல் மாசுபடுவதை குறைக்க எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கி உபயோகப்படுத்துமாறு நம்மிடம் சொல்கிறது. ஒரு வேற்றுகிரகவாசி வந்து பார்த்தால் நம்மை கடைந்தெடுத்த முட்டாள்கள் என்று நினைப்பான்! ஆனால் நாம் அவ்வாறு நினைக்க மாட்டோம்!
காரணம், வேறு என்ன, கருத்தியல், ideology தான்!
நீங்கள் பொதுவான ஒருவரிடம் வீட்டருகில் பள்ளி அல்லது வீட்டருகில் மருத்துவம் என்பதை சொல்லிப்பாருங்கள், நீங்கள் எதோ ஆடை இல்லாமல் அம்மணமாக ரோட்டில் நடக்கச் சொல்வதை போல உங்களை பார்ப்பார்கள். இந்த தீர்வுகள் அவர்களுக்கு கற்பனை (fantasy) போலத் தெரியும். அதுதான் கருத்தியல் நமது சிந்தனை மீது வைத்திருக்கும் பிடி!
இந்த கட்டமைப்பில் இருக்கும் தர்க்கங்களை வைத்து யோசித்தால் நம்மால் இந்த பிரச்சினைகளில் இருந்து விலகிச் செல்ல முடியாது!
விபத்துகளுக்கு தீர்வு ஹெல்மெட் மட்டுமே என்று முட்டாள்தனமாக நம்பிக்கொண்டு இருப்போம்!
நாம் நம்பும்வரை நீதிமன்றங்களும் அரசுகளும் இந்த கட்டமைப்புக்குள்ளேயே தீர்வுகளைத் தேடும், அல்லது பிரச்சனைகளின் வீரியத்தை அதிகரிக்கும், பள்ளிகளை மூடி அதிகரிப்பதை போல. ஒரு விதத்தில் கட்டமைப்புக்குள் தீர்வு தேடுவதுதான் ஆளும்வர்க்கத்திற்கு பயனுள்ளதும் கூட. மக்கள் அதிகம் பயணம் செய்தால்தான் அதிக ரோடுகள் தேவைப்படும், அதிக வாகனங்கள் தேவைப்படும், இவை சம்மந்தமான தொழில்களும் அதிகரிக்கும், கூடவே அவர்கள் லாபமும் அதிகரிக்கும். வீட்டருகில் பள்ளி என்பன போன்ற திட்டங்கள் ஒரு விதத்தில் ஆளும் வர்கத்தின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்குவது ஆகும்!
நமக்கு சொல்லப்படும் தீர்வு உண்மையிலேயே தீர்வுதானா என்பதை எல்லாம் புரிந்துகொள்ள இந்த கட்டமைப்பு பற்றிய புரிதல் அவசியம்! அப்பொழுதுதான் சாலை விபத்துகளுக்கு ஹெல்மெட் தீர்வு அல்ல, சமூக மாற்றம்தான் தீர்வு என்று புரிந்துகொள்ள முடியும்!
கடந்த 60 ஆண்டுகளில் அதிகபட்ச உற்பத்தி செய்து அதிகபட்ச இலாபமாக ரூ 1,983 கோடி ஈட்டிய அசோக் லேலண்ட் நிறுவனம் வாரத்தில் 6 வது வேலை நாளில் கதவடைப்பு செய்து வருகின்றது. இரவு, பகல், வெயில், மழை, குளிர் பராமல் ஆண்டு முழுவதும் உழைத்து கொடுத்த பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம், ஊதியஉயர்வு, போனஸ் வழங்க வேண்டிய நிர்வாகம் வாரத்தில் ஒரு வேலைநாளை பறித்துக்கொண்டு தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து வருகின்றது.
போனஸ் கேட்ட நிரந்தரத் தொழிலாளர்களுக்கு சம்பளவெட்டை பரிசாக தந்துள்ளது. நிர்வாகத்தின் சூழ்ச்சிகள் நிரம்பிய பேச்சுவார்த்தைகளால் தொழிலாளர்களை குடுமி சண்டையில் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றது, நிர்வாகம். முதலாளித்துவம் வாழவிடாது என்பதற்கு லேலாண்ட் அறிவித்திருக்கும் சட்டவிரோத லே-ஆஃப் ஓர் சாட்சியாகும்.
பணி நிரந்தரமில்லாத சூழலில் அசோக் லேலண்ட்-ன் முதலாளித்துவ லாபவெறி கொள்கையால் வாரத்தில் 6 வது நாள் சம்பளவெட்டுக்கு ஓசூரில் மட்டும் 10,000 தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். உற்பத்தியில் பெரும்பான்மையாக ஈடுபடும் கேஷுவல்(CL), காண்ட்ராக்ட், அப்ரண்டீஸ் தொழிலாளர்களில் பணிக்கு சேர்ந்த சில நாட்களேயான 1,100 பேர் ஆட்குறைப்பும் செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே, தினந்தோறும் இரண்டு வேளை மட்டுமே உணவு உட்கொள்வதும்; தான் வாங்கும் அற்பக்கூலியில் ஒருவேளைக்கு பட்டினி கிடந்து சிக்கனம் செய்துதான் பெற்றோருக்கு பணம் அனுப்புகின்றனர். குறைந்த கூலியை சமாளிக்க விடுமுறை நாட்களில் சில்லரை வேலையும் செய்கின்றனர். இதனால் சத்துமிகுந்த காய்கறி, மாமிசம், மளிகைப் பொருட்கள் வாங்குவதை குறைத்து விடுகிறார்கள். இத்தொழிலாளர்களை சார்ந்துள்ள குடும்பத்தினர் ஏறக்குறைய 40 ஆயிரம் பேர் பட்டினியின் பிடியில் தள்ளப்படுகிறார்கள்.
குறிப்பாக, இந்த ஆலை மூடலுக்கு உற்பத்தி தேக்கத்தை காரணமாக காட்டுகின்றது, லேலாண்ட் நிர்வாகம். சந்தையின் தேவையை கணக்கில் கொள்ளாமல் அதிகபட்ச இலாபத்தை மட்டும் உற்பத்தி கொள்கையாக கொண்ட முதலாளித்துவ மிகை உற்பத்திதான் தேக்கத்திற்கு காரணமாகும்.
லேலாண்டு நிர்வாகம் கடந்த 11 ஆண்டுகளில் உற்பத்தி கொள்கையையே தலைகீழாக மாற்றிவிட்டது. 2008 – 09-ல் 54,431 வாகனங்கள் என செய்யப்பட்ட உற்பத்தி 2018 – 19-ல் 1,94,366 வாகனங்கள் என உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தொழிற்சங்கம் உற்பத்தியில் பேரம் பேச முடியாத வகையில் ALTS என்கின்ற மைக்ரோசெகண்ட் உற்பத்தி முறையைத் திணித்து; பல மடங்கு உற்பத்தி உயர்த்தியும் 6 நாள் உற்பத்தியை 5 நாளில் செய்தும்; உற்பத்தியின் பெரும் பகுதியை அவுட்சோர்ஸ், காண்ட்ராக்ட் என்ற பெயரில் ஆலைக்கு வெளியே தள்ளி விட்டும்; அதுமட்டுமில்லாமல் கேஷுவல், காண்ட்ராக்ட், அப்ரண்டீஸ் என பணி நிரந்தரம் செய்யப்படாத பல ஆயிரம் தொழிலாளர்களை நேரடி உற்பத்தியில் அற்பக் கூலிக்கு நியமித்து அவர்களை சுரண்டித்தான் இந்த அதிகபட்ச உற்பத்தியும் லாபத்தையும் ஈட்டியிருக்கிறது, நிர்வாகம்.
பல லட்சம் வாகனம் தயாரிக்கும் அளவிற்கு உற்பத்தி தளத்தை விரிவு படுத்தியதில் பெரும்பாலும் சட்டவிரோதமான நடைமுறைகளே உள்ளது. தற்போது உபரி உற்பத்தியைக் காட்டி வாரத்தில் ஆறாவது வேலை நாளை பறித்து விட்டது. அடுத்து, ஆட்குறைப்பு என்ற கத்தியை தலைக்கு மேல் தொங்க விட்டுள்ளது, லேலாண்ட் நிர்வாகம்.
மற்றொரு பக்கம், இந்த முதலாளித்துவ அடக்குமுறைகளுக்கு முன்னால் சட்டப்பூர்வ உரிமைகளை அடகு வைத்த பிழைப்புவாத தொழிற்சங்கத் தலைமைகள் அம்பலப்பட்டு நிற்கின்றன. தொழிலாளர் உரிமைகளை மறுக்கும், இந்த சமூக அமைப்பையே பட்டினியில் தள்ளும் முதலாளித்துவ கொடுங்கோன்மைகளை அம்பலப்படுத்தி முறியடிக்கும் புரட்சிகர தலைமைகள் இன்றைய தேவைகளாக உள்ளது. மேற்கண்ட முதலாளித்துவ தாக்குதல்களை லேலாண்ட் நிர்வாகத்தின் பிரச்சனையாக மட்டும் பார்த்தால் அது தொழிற்சங்கவாதமாக முடியும்.
இதே போல டாடா, மகேந்திரா, மாருதி என பல ஆலைகளில் 5 லட்சம் கார்களும் 30 லட்சம் டூவீலர்களும் தேங்கி இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த மிகை உற்பத்தியை தேக்கம் என காட்டியதில் குஜராத்தில் 10, ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். நாடு முழுவதும் ஆட்டோ மொபைல் சந்தை மந்தமாக உள்ளது என கார்ப்பரேட் கம்பெனிகள், செய்தி ஊடகங்கள் பூதாகரமாக செய்திகள் வெளியிடுகின்றன.
அடுத்து, பொருளாதார மந்தம் என பொதுவாக ஊடங்களில் பேசுவார்கள். ஆனால் முதலாளிகளின் அதித லாபவெறியால் மிகை உற்பத்தி செய்து சந்தையில் தேக்கத்தை ஏற்படுத்தியதை மறைத்து பொருளாதாரம் வீழ்ந்தது என்று சலுகை பெறுவதும் தொழிலாளர் சட்ட உரிமைகளை பறிப்பதும்; அடக்கு முறைகளை ஏவி விடுவதும் முதலாளித்துவ சர்வதேச கொள்கையாகும். இந்த சூழ்நிலையில், மத்திய அரசு தொழில் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளதாக (போராடி பெற்ற) 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொகுப்பு விதிகளாக மாற்றி தொழிலாளர்களின் உரிமைகளை குப்பை தொட்டிக்கு அனுப்ப தயாராக இருக்கின்றது.
முதலாளித்துவத்தின் கட்டற்ற இலாப வெறி கொள்கையால் மிகை உற்பத்தி செய்யப்பட்டு; உலகின் பல நாடுகள் திவாலாகி, மக்கள் உணவுக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த நெருக்கடிகள் பாசிச ஆட்சிக்கும் வழி ஏற்படுத்துகிறது.
உதாரணமாக முதலாளித்துவ மிகை உற்பத்தியால் தான் அமெரிக்க பொருளாதாரமே 12 ஆண்டுகளாக வீழ்ந்து கிடக்கிறது. ஆனால் இந்த யதார்த்தத்தை மறைத்து “வந்தேறிகள்தான் நெருக்கடிக்கு காரணம்” எனப் பேசியே டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது “வங்கதேச கரையான்களை ஒழிப்பேன்” என்று வெறுப்பு அரசியல் பேசிய அமித்ஷா மேற்கு வங்கத்தில் மட்டும் 18 எம்.பி தொகுதிகளை கைப்பற்ற முடிந்துள்ளது.
முதலாளித்துவ இலாபவெறியால் உண்டாகும் வேலையின்மை, விவசாயம் – சிறுதொழில் – அழிப்பு , பற்றாக்குறை போன்ற நெருக்கடிகளை மறைக்க இனவெறி, மதவெறி, சாதிவெறி என திட்டமிட்டு தூண்டி விட்டு பாதிக்கபட்ட மக்களை பிரித்து பாசிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றி விடுகிறார்கள். உலகளவில் மக்களை சுரண்டும் முதலாளித்துவத்தை புரிந்து கொள்ளத் தவறினால் சக மனிதனையே எதிரியாக பார்க்கும் பாசிசம் நம் வாசலுக்கு வந்து நிற்கும்.
ஹெல்மெட் போடவில்லை என்றாலே இரு சக்கரவாகனம் ஓட்டக் கூடாது எனக் கெடுபிடி செய்யும் அரசு, தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் இந்த கார்ப்பரேட் அடக்குமுறையை வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளின் இந்த லாபவெறிக்கு அரசின் அங்கங்களான தொழிலாளர் நலத்துறை, போலீசு, நாடாளுமன்றம் – சட்டமன்றம் உள்ளிட்ட நிர்வாக அமைப்புகள் அனைத்தும் பாதுகாப்பு அரணாக உள்ளது. பண மதிப்பு நீக்கம் முதல் GST வரை சிறு முதலீட்டாளர்களை விவசாயம், தொழில்துறை இவற்றிலிருந்து வெளியேற்றி எல்லாவற்றையும் கார்ப்பரேட் கையில் ஒப்படைப்பது இந்த அரசின் நோக்கமாகும். ஆட்டோமொபைல் வீழ்ச்சியோ, பொருளாதார மந்தமோ இரண்டுமே முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையின் பொதுமக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் தான்.
தொழிலாளர்களின் வாழ்வை சூறையாடும் கார்ப்பரேட் லாபவெறிக்கு எதிராக நமக்கு முன்னே இருக்கும் ஓர் வழி – வரலாறு நமக்கு காட்டும் பாதை – ஒன்று திரளுவதும்! உரிமைக்காக குரல் எழுப்புவதும் தான்!. PF சட்ட திருத்தத்துக்கு எதிராக பெங்களூர் ஆயத்த ஆடை பெண்தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராடிய ஒரே நாளில் PF சட்டத் திருத்தத்தை வாபஸ் வாங்கியது, மோடி அரசாங்கம்.
அதுபோல ஓசூரில் இருக்கக்கூடிய தொழிலாளர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு இந்த அரசின் சதித் திட்டங்கள் மற்றும் முதலாளித்துவ அடக்குமுறை, உரிமை பறிப்புக்கு எதிராக அணிதிரள்வோம். தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்டுவோம்!
♦♦♦
தொழிலாளர்களே!
மக்கள் எதிர்கொண்டுள்ள வேலையில்லாத திண்டாட்டம் முதல் திருட்டு, ஏமாற்று, கொலை, கொள்ளை, வன்முறை என இந்த எல்லா சமூக சீரழிவு பிரச்சனைகளுக்கும் முதலாளித்துவ கார்ப்பரேட் சுரண்டல் தான் காரணமாகும்!
கார்ப்பரேட் இலாப வெறிக்காக படித்த இளைஞர்கள், தொழிலாளர்கள் நாடோடிகளாக அலைய வேண்டுமா?
NEEM, கேஷுவல், காண்ட்ராக்ட், அப்ரன்டீஸ் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யப் போராடுவோம்! மக்களை சூறையாடும் பொருளாதாரக் கொள்கையை வீழ்த்தினால் தான் மக்கள் கையில் பணம் புழங்கும்!
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள். தொடர்புக்கு : 97880 11784.
இந்தியா நிர்வகித்த காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை அளித்த சட்டப்பிரிவை நீக்கும் முன், அம்மாநிலத்தை முடக்கி சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் படைகளால் நிரப்பியது.
அதன் பின், 15 நாட்கள் கழிந்த பின்னும் காஷ்மீரின் நிலைமை சீராகவில்லை. இந்திய அரசும் ஊடகங்களும் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறதென சொல்லிவந்தாலும், ஆயிரக்கணக்கான படையினர் வீதிகள் தோறும் நிறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டபோது, ஒரு மாணவர்கள்கூட பெரும்பாலான பள்ளிகளுக்கு வரவில்லை என செய்திகள் சொல்கின்றன.
பத்து நாட்களாக கேபிள் டிவி இணைப்புகள், தொலைபேசி, இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தது. இன்னமும் பல பகுதிகளில் தடை தொடரவே செய்கிறது.
நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டு, போராட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்க தெருக்களில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடைகளும்கூட மூடியே உள்ளன.
1989-ம் ஆண்டு முதல் இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் அந்த பிராந்தியம் சுதந்திரம் பெற வேண்டும் அல்லது பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என போராடி வருகின்றனர். காஷ்மீர் பிரச்சினையை உற்றுநோக்கி வரும் குழுக்கள், இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீரில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான, பெரும்பாலும் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றன.
பிரிட்டிஷாரிடமிருந்து 1947-ல் இந்தியா, பாகிஸ்தான் ‘சுதந்திரம்’ பெற்றது முதல், இருநாடுகளுக்கும் இடையே காஷ்மீரை முன்வைத்து மூன்று யுத்தங்கள் நடந்திருக்கின்றன.
இந்தியாவின் நடவடிக்கை முசுலீம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த பிராந்தியத்தில் பதட்டத்தை மேலும் தூண்டும் என்றும் பாகிஸ்தானுடன் உராய்வை அதிகரிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீநகரில் தடை செய்யப்பட்ட பகுதியில் மக்களை நிறுத்தும் இந்தியப் படையினர்.
அனைத்து தொலைபேசிகளும் இணைய இணைப்புகள் மற்றும் கேபிள் தொடர்புகளும் இந்திய அரசின் நடவடிக்கைக்கு முன்னரே நிறுத்தப்பட்டன. அடுத்தடுத்த நாட்களில் இது பிரச்சினையை உண்டாக்கும் எனக் கருதி, இந்தியாவுக்கு ஆதரவான தலைவர்கள் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டனர்.
இந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள், ஸ்ரீநகரின் ஆள் அரவம் இல்லா சாலைகளை ஆக்கிரமித்துள்ளனர்.
முள்வேலியால் தடுக்கப்பட்டிருக்கும் ஜம்முவின் ஒரு பகுதியில், இந்தியப் படையைச் சேர்ந்தவர் நிற்கிறார்.
பாகிஸ்தான் எல்லையோரமும், பள்ளத்தாக்கு முழுவதும் சுமார் 7,00,000 படைவீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். உலகின் இராணுமயமாக்கப்பட்ட பகுதிகளில் காஷ்மீரும் ஒன்று.
மத்திய ஸ்ரீநகரில் ஊரடங்கின்போது, சாலையை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் இந்திய போலீசின் கவச வாகனம்
இடதுசாரி போராட்டக்காரர்கள் மற்றும் மாணவர்கள் டெல்லியில் நடந்த போராட்டத்தில் இந்திய அரசின் முடிவை எதிர்த்து முழக்கங்களை எழுப்புகின்றனர்.
பாகிஸ்தானின் லாகூரில் இந்தியாவுக்கு எதிராக நடத்த ஆர்ப்பாட்டத்தில் பாகிஸ்தானியர்… தங்களின் சுயநிர்ணய உரிமைக்காக அமைதியான வழியில் போராடும் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவை தெரிவிக்கின்றனர்.
பல்வேறு தொழிற்பிரிவுகளைச் சேர்ந்த, வெவ்வேறு தொழிற்சங்கங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதியன்று தில்லி பாராளுமன்றத் தெருவில் போராட்டம் ஒன்றை நடத்தினர்.
நரேந்திர மோடி அரசு தற்போது தொழிலாளர் நலன்களைக் குறித்து நடப்பில் இருக்கும் 44 சட்டங்களைக் கூட்டிக் கலந்து நான்கு சட்டங்களாக திருத்தியமைக்க உத்தேசித்திருப்பதை எதிர்த்தே இந்தப் போராட்டம் நடைபெற்றது.
சம்பளம், பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிட வேலைச் சூழல், சமூக பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாடு உள்ளிட்டவைகளை நேரடியாக பாதிக்கக் கூடியதாக இந்த சட்ட திருத்தம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் நடைபெற்ற தொழிற்சங்கங்களின் போராட்டம். ( படம் : நன்றி – த வயர் )
சுமார் பத்து தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைத்த இந்தப் போராட்டத்தில் சங்கப்பரிவார “தொழிற்சங்கமான” பாரதிய மஸ்தூர் சங்கம் கலந்து கொள்ளவில்லை. “சம்பளச் சட்டம் – 2019” ஏற்கனவே பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் கடந்த மாதமே நிறைவேற்றப்பட்டு விட்டது. இந்நிலையில், பணிப் பாதுகாப்பு, சுகாதாரம், பணியிட வேலைச் சூழல் குறித்த சட்ட திருத்தம் கீழவையில் அறிமுகம் செய்யப்பட்டு விவாதத்திற்காக காத்துள்ளன.
ஏற்கெனவே இருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்கள் குழப்பமானதாக இருப்பதாகவும், தொழில் வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு அவற்றை எளிமைப்படுத்துவதே தமது நோக்கம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், தொழிற்சங்கங்களோ இந்த திருத்தங்கள் முதலாளிகளுக்குச் சாதகமானவை என்கின்றன. ஏற்கெனவே இருந்த தொழிலாளர் நலச் சட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களையே கணக்கில் கொள்வதாக இருந்த நிலையில், தற்போது கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட திருத்தமானது எல்லா பிரிவு தொழிலாளர்களையும் கட்டுப்படுத்துவதாக உள்ளது. மேலும், தொழிலாளர்களின் சட்ட உரிமைகளும் குறுக்கப்பட்டுள்ளது.
அதேபோல “சம்பளச் சட்டம்” பயிற்சிக் காலத்தில் உள்ள ஊழியர்களை (அப்ரண்டீஸ்) தொழிலாளர்கள் எனும் வரையறைக்குள் கொண்டு வரவில்லை என்பதையும் தொழிற்சங்கங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மேலும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் வழிகாட்டுதலின் பேரில் குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வந்ததை மாற்றி அதை ஒரு கமிட்டியின் பொறுப்பில் ஒப்படைக்கும் அதே வேளையில், வருடாந்திர சம்பள உயர்வையும் கணக்கில் கொள்ளவில்லை என்பதை தொழிற்சங்கங்கள் சுட்டிக் காட்டுகின்றன. குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்படுவது அல்லது மாற்றப்படுவதைப் பொறுத்தவரை ஐந்தாண்டுகளுக்கு மிகாமல் ஒரு முடிவெடுத்தால் போதுமானது என்கிறது புதிய சட்ட திருத்தம். இதில் உலகளவில் இந்தியத் தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே குறைந்தபட்ச சம்பளமானது மிகக் குறைவான அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக, ஏற்கெனவே இருக்கும் தொழிலாளர் ஆய்வு அதிகாரி (Labour Inspector) எனும் பதவியை “ஆய்வாளர் மற்றும் செயலாக்குநர்” (Inspector-cum-Facilitator) என மாற்றியுள்ளனர். இது நிர்வாக அதிகாரத்தை மொன்னையாக்கும் நோக்கம் கொண்டது என தொழிற்சங்கவாதிகள் குறிப்பிடுகின்றனர். ஒருவேளை தொழிலாளர் நலச் சட்டங்கள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் அது வழக்காடு மன்றத்திற்கு வரும்போது அரசு தரப்பு வாதம் முதலாவதாக இருக்காது. மாறாக, ஆலை நிர்வாகம் தனது செயல்பாடுகளை “சட்டத்திற்கு உட்பட்டதாக” மாற்றிக் கொள்ள “ஆய்வாளர் மற்றும் செயலாக்குநர்” வாய்ப்புக் கொடுக்கலாம்.
டெல்லியில் நடைபெற்ற தொழிற்சங்கங்களின் போராட்டம். ( படம் : நன்றி – த வயர் )
குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தை மீறினால் அபராதம் அல்லது சிறை தண்டனை என இருந்தது தற்போது மாற்றப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறது AICCTU தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை. மேலும், வேலை நேரத்தைப் பொறுத்தவரை புதிய சட்டத்தின் பிரிவு 13, உட்பிரிவு 1A வேலை நேரத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அரசுக்கு கொடுக்கிறது. அதே நேரம் பிரிவு 13 உட்பிரிவு 2 அந்த வேலை நேரத்தை நீட்டிக்கும் அதிகாரத்தை முதலாளிகளுக்கு வழங்குகின்றது. ஆக, சட்டப்பூர்வமாகவே 8 மணி நேர வேலை என்பதை நினைத்தமாத்திரத்தில் முதலாளிகளால் மீற முடியும் – தொழிலாளிகளின் உழைப்பை முதலாளிகள் சுரண்டுவதை சட்டப்பூர்வமாக்கியுள்ளது மோடி அரசு.
தொழில் வளர்ச்சி, முன்னேற்றம் என்கிற பம்மாத்துகளின் பின்னணியில் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் மற்றும் அந்த உரிமைகளைக் காக்க ஏற்படுத்தப்பட்ட 44 சட்டங்களை ஒரே மூச்சில் நொறுக்கிப் போட்டுள்ளது மோடி அரசு. பல்வேறு தொழில்கள், தொழிற்பிரிவுகள் மற்றும் அவற்றில் ஈடுபட்டுள்ள வேறுபட்ட தொழிலாளர்கள், வேறுபட்ட பணிச்சூழல், பிரத்யேகமான நிலைமைகள், தன்மைகள், முக்கியமாக பரந்துபட்ட நாடு மற்றும் பிரதேச வேறுபாடுகள் என பலபத்தாண்டுகளாக ஒவ்வொரு தனித்தன்மையான சூழலுக்கும் ஏற்ப தொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டங்கள் வேண்டும் என ஒவ்வொரு சந்தர்பத்திலும் போராடியதால் தான் இதுவரை இருந்த பாதுகாப்புச் சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவையனைத்தையும் ஒரே வீச்சில் ஒழித்துக் கட்டிவிட்டு அனைத்துக்கும் ஒரே சட்டம் என மாற்றுவது சந்தேகமின்றி முதலாளிகளுக்கே சாதகமானது என குற்றம்சாட்டுகின்றன தொழிற்சங்கங்கள்.
”தொழிலாளர் நலச் சட்டங்களை பாராளுமன்றத்திற்கு உள்ளும், சிறுபான்மையினரை பாராளுமன்றத்திற்கு வெளியிலும் கும்பல் கொலை செய்துள்ளது பாரதிய ஜனதா. இதனை அனுமதிக்க முடியாது” என்கிறார் AICCTU தொழிற்சங்கத்தின் தில்லி இணைச் செயலாளர் ராஜேஷ் சோப்ரா. ஆனால், சங்க பரிவாரத்தின் பி.எம்.எஸ் இந்த சட்டங்களை வரவேற்கிறது. அதற்கு பி.எம்.எஸ் சொல்லும் காரணம் இந்தச் சட்டங்கள் அனைத்துப் பிரிவு தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொள்கிறது என்பதே.
ஆனால், ஒருமைப்படுத்தப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு மட்டுமே பொருந்தும். இந்தியாவில் உள்ள மொத்த தொழிலாளர்களில் நான்கில் மூன்று பங்கினர் பத்துக்கும் குறைவான ஊழியர்கள் கொண்ட சிறு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர் என்கிறார் முன்னாள் நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பணகாரியா. அனைத்துத் தொழிலாளர்களையும் காக்கப் போகிறோம் என்கிற முகமூடியில் போடப்பட்டுள்ள புதிய சட்டம் உண்மையில் முக்கால் பங்கு தொழிலாளர்களை ஒதுக்கித் தள்ளியுள்ளது.
தொழிலாளர்கள் தில்லியில் நடத்திய போராட்டத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது சர்வதேச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (International Trade Union Confederation (ITUC)) “மிக அடிப்படையான சமூக நீதியையும், கவுரவமான வேலைக்கான கோரிக்கையையும் மோடியின் அரசு துச்சமாக மதிப்பதை உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இது எமது இந்தியச் சகோதர சகோதரிகளின் போராட்டம் மட்டுமல்ல; எமது போராட்டமும்தான்” என அதன் பொதுச் செயலாளர் ஷரோன் பர்ரோ தெரிவித்துள்ளார்.
கட்டுரையாளர் :Akhil Kumar
தமிழாக்கம் : சாக்கியன் நன்றி :தி வயர்
“மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை 2019 முறியடிப்போம்!” என்ற தலைப்பில் குடந்தையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக அரங்கக்கூட்டம் 13.8.2019 அன்று, பெரியார் மாளிகையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு குடந்தை பகுதி அமைப்பாளர் தோழர் திலீபன், தலைமை தாங்கினார். “இப்ப அரசு கல்லூரில படிக்கும் போதே, வீட்டு கஷ்டத்தால குழு கடன் நிறைய வாங்கி, அத கட்டுறதுக்கு காலேஜ் லீவ் போட்டு, சப்ளையர் வேலைக்கு போறதால ஒழுங்கா காலேஜு போக முடில, படிக்கவும் முடில, இதுல புதிய கல்வி கொள்கைனு.. எல்லாம் பெரு முதலாளிகளிடம் போச்சுனா, எங்கள போல கஷ்டபடுற பசங்க படிப்புலாம் அப்புறம் கேள்விக்குறிதான்” என்று தன் சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
அடுத்து கருத்துரையாக, தாளாண்மை உழவர் இயக்கத்தின் தோழர் திருநாவுக்கரசு பேசுகையில், “கல்வி என்பது அறிவாற்றல் உள்ள மாணவர்களை உருவாக்க வேண்டும். ஆனால், ஏற்கெனவே இருக்கும் கல்வி முறை, நம்மை சிந்திக்கவிடாமல், ஆங்கிலேயனுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இருந்தபோதும் அது ஏதோ ஒரு வகையில் பலருக்கு கல்வியை கொடுத்தது, ஆனால் தற்போது அருகமைப் பள்ளிகளை மூடுவது, கல்வியை பெரு முதலாளிகளிடம் ஒப்படைப்பது, என்பது பொதிமாடுகள் போன்ற இளம் தலைமுறைகளையே உருவாக்கும். இதை எப்பாடுபட்டாவது தடுக்க வேண்டும்” என்றார்.
பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த ஆசிரியர் செந்தில், நமது நாட்டில் கல்விக் கொள்கை உருவான வரலாறு பற்றியும், சூத்திரர்களுக்கு கல்வி சென்றதும், அதை பார்ப்பனர்கள் எவ்வாறு பொறுக்காமல் துடித்தார்கள் என்பதையும், இன்று மிக கோரமான முறையில் அறிவியலுக்கு புறம்பான, புராண இதிகாச குப்பைகளை அறிவியல் என மாணவர்களிடம் புகுத்துவது பற்றியும் விளக்கிப் பேசினார். “இந்த புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையாக இருக்கும் போதே, பல வழிகளில் அமல்படுத்திவருகிறார்கள். இதை முறியடிக்க வேண்டும், அதற்காக எமது அமைப்பு துணை நிற்கும்” என்று பேசினார்.
சிறப்புரையாக பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த. கணேசன் புதிய கல்விக் கொள்கை எப்படி கார்ப்ரேட்டுகளுக்கும், காவிகளுக்கும் சேவை செய்கிற வகையில் உள்ளது என்பதையும், இதற்கு எதிர்ப்பு தமிழகத்தில்தான் பலமாக உள்ளது மற்ற மாநிலங்களில் உள்ள ஆசிரியர்களின் அறிவு மிகவும் பின்தங்கி உள்ளதால் அங்கு இதைப் பற்றியான விழிப்புணர்வு மிக குறைந்த அளவே உள்ளது. எனவே இதை எதிர்த்து முறியடிக்க பள்ளி – கல்லூரி மாணவர்கள் – ஆசிரியர்கள் – பேராசிரியர்கள் ஒற்றுமையுடன் களத்தில் போராட வேண்டும், என்று அறைகூவல் விடுத்தார்.
கடலூர் பு.மா.இ.மு தோழர்கள் மாணவர்களை ஈர்க்கும் விதமாக பாடல்களை பாடினார்கள். தோழர்சந்தோஷ் நன்றியுரையாற்றினார். மாணவர்கள், ஆசிரியர்கள், ஜனநாயக சக்திகள் என பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.
1 of 4
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, குடந்தை.
லோவின் திட்டத்திலிருந்த மோசமான அத்துமீறல்கள் இனி எந்தக் காலத்திலும் மறுபடியும் ஏற்பட முடியாது என்று அவருடைய சமகாலத்தவர்கள் எண்ணினார்கள். அவர்கள் நினைத்தது தவறாகும். லோவின் திட்டம் முடிவைக் குறிக்கவில்லை, தொடக்கத்தையே குறித்தது அல்லது வரப்போகின்ற யுகத்துக்குக் கட்டியங் கூறியது. அவர் ஆரம்பித்த துணிவான முயற்சிகளைக் கண்டு அவர் காலத்து மக்கள் திகைத்து நின்றார்கள். ஆனால் 19, 20-ம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவம் ஏற்படுத்தியவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது அவை குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகளைப் போலத் தோன்றுகின்றன.
சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் நுண்ணறிவுடைய பெரெய்ரா சகோதரர்களின் “கிரெடிட் மொபிலியே” என்ற பாரிஸ் நகரக் கூட்டுப் பங்கு வங்கியின் மூலம் லோவின் திட்டங்களான ஜெனரல் வங்கிக்கும் மிஸிஸிப்பி கம்பெனிக்கும் புத்துயிர் கொடுக்கப்பட்டதென்று சொல்லலாம்.
லோ தொடங்கிய நிறுவனங்களுக்கு, பொறுப்பு அரசரான ஃபிலீப் எப்படி புரவலராகவும் சுரண்டுபவராகவும் இருந்தாரோ அதைப் போலவே இந்த ஊக வாணிக அரக்கனின் திட்டங்களுக்கு மூன்றாம் நெப்போலியன் இருந்தார். இந்த வங்கி தன்னுடைய நடவடிக்கைகளைப் பன்மடங்காக்கி பிரான்சின் தொழில் துறை வளர்ச்சி முழுவதையுமே பங்குச் சந்தையின் சூதாட்டத்துக்கு உட்படுத்துவதற்கு என்ன சாதனங்களைப் பயன்படுத்தியது என்ற கேள்வியைக் கேட்டுப், பின்வரும் பதிலைத் தருகிறார் மார்க்ஸ்: “லோ உபயோகித்த அதே சாதனங்கள் தான்”(1)என்று சொல்லிய பிறகு இருவருக்குமிடையே உள்ள ஒற்றுமையை விரிவான முறையில் விளக்குகிறார்.
கிரெடிட் மொபிலியே பிரெஞ்சு – பிரஷ்ய யுத்தத்துக்குச் சற்று முன்பு முறிந்தது; ஆனால் அது ஓரளவுக்கு முக்கியமான வரலாற்றுப் பாத்திரத்தை வகித்தது. தொழில் துறையோடு நெருக்கமாக இணைந்துள்ள ஊகவணிக வங்கிகளை ஏற்படுத்தியதன் மூலம் வங்கித் தொழிலில் ஒரு புதிய சகாப்தத்துக்கு அடிக்கல் நாட்டியது. தொழில் துறையின் முழுக் கிளைகளிலும் கேந்திரமான உச்சிகளைக் கைப்பற்றிய பெரிய அளவிலுள்ள கூட்டுப் பங்குக் கம்பெனிகளின் வளர்ச்சியிலிருந்து, 19-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பிரம்மாண்டமான வங்கிகள் தொழில் துறை ஏகபோகங்களோடு இணைந்து நிதி மூலதனம் உருவாக்கப்பட்டது.
ஆனால் இதை “ஆக்கபூர்வமான” வளர்ச்சி என்றே சொல்ல வேண்டும். ஆனால் அதன் அத்து மீறல்கள் அப்படிப்பட்டனவா? மிஸிஸிப்பி பள்ளத்தாக்கில் குடியேற்றத்தை ஏற்படுத்தப் போவதாக லோ சொன்னதை, ஒரு வணிகர்கள் குழு பனாமா கால்வாய் கட்டப் போகிறோம் என்று சொல்லி 8,00,000 பங்குதாரர்களிடம் பணத்தை வசூலித்து அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிப்போன மோசடியோடு ஒப்பிடலாமா? “பனாமா” (மாபெரும் மோசடி) என்ற சொல்லோ காலத்தில் ”மிஸிஸிப்பி” என்ற சொல்லைப் போல சாதாரணமாகக் கையாளப்பட்டது .
1929 நியூயார்க் வீழ்ச்சியினைத் தொடர்ந்து வால்வீதியில் குவிந்திருக்கும் மக்கள்.
லோ உருவாக்கிய திட்டத்தின் வீழ்ச்சியை 1929-ம் வருடத்தில் நியூயார்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்ததோடு ஒப்பிடலாமா? அல்லது லோவினால் ஏற்பட்ட பணவீக்கத்தை, இருபதாம் நூற்றாண்டில் (இருபதுக்களில் ஜெர்மனியிலும் நாற்பதுக்களில் கிரீசிலும்) பணம் பல மில்லியன் தடவைகள் தன் மதிப்பை இழந்த மிக அதிகமான பண வீக்கத்தோடு ஒப்பிடலாமா? பண வீக்கப் பிரச்சினை நவீன முதலாளித்துவத்துக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைச் சிறிதும் மிகைப்படுத்தத் தேவையில்லை. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் பண வீக்கம் என்பது கட்டளை விதியாக, நிரந்தரமான கூறு என்பதாகிவிட்டது. அது பொருளாதாரக் கஷ்டங்களை அதிகப்படுத்துகிறது, சமூகப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துகிறது, பண நெருக்கடியை ஊக்குவிக்கிறது. நவீன காலத்தில் பணவீக்கம் ஜான் லோவின் காகிதப் பணம் மதிப்புக் குறைந்ததைக் காட்டிலும் ஒப்பிட முடியாத அளவுக்கு அதிகச் சிக்கலான, பன்முகத்தன்மை கொண்ட நிகழ்வு ஆகும்.
நவீன காலத்தில் பணவீக்கம் என்பது காகிதப் பணத்தை மிகவும் அதிகமாக அச்சிடுவதோடு சம்பந்தப்பட்ட பொதுவான பொருளாதார நிகழ்வுப் போக்காகும்; ஆனால் சில சமயங்களில் அது இல்லாத பொழுதும் ஏற்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பண வீக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான காரணம் “பணவியல்” அம்சத்தோடு நேரடியாக இணைக்கப்படாமல் ஆனால் வேறு ஏதாவது காரணங்களின் மூலமாக ஏகபோகக் கொள்கை, பொருள்கள் பற்றாக்குறை அல்லது அந்நிய வர்த்தக நிலைமை முதலியவற்றினால் ஏற்படுகின்ற விலைகளின் அதிகரிப்பாகும்.
ஆனால் இப்படி “முட்டுக் கொடுக்கின்ற” பணத்தின் அளவின் அதிகரிப்பு அதிகரித்திருக்கும் விலைகளின் மட்டத்தை உறுதிப்படுத்தியதோடு பணவீக்கத்தை ஊக்குவிக்கலாம்; அவ்வாறு செய்கிறது. இன்றைய நவீன நிலைமைகளில் பணத்தின் அளவும் விலைகளின் மட்டமும் ஒரே வழியாக மட்டுமே இருக்கும் நெகிழ்ச்சியைப் பெற்றிருக்கின்றன, அதாவது அவை மேலே உயர்கின்றனவே தவிர, கீழே இறங்குவதில்லை. இந்த விதியின் கரு ஏற்கெனவே லோவின் முறையில் இடம் பெற்றிருந்தது.
லோ வளமான கற்பனையும், வாய்ப்பும் தீவிரமான வேகமும் கொண்ட பண மோசடிக்காரராக இருந்தார்; அவருக்குப் பின்னர் அவரைப் போன்றவர்கள் வரலாற்றில் தோன்றினர்; அவருடைய ஆளுமையை வரலாறு பல தடவைகளில் மறுபடியும் உருவாக்கியது. அப்படிப்பட்ட மனிதர்கள் முதலாளித்துவத்துக்குத் தேவை; அவர்களை அது பெற்றெடுக்கிறது. அவர்கள் சில சமயங்களில் இஸாக் பெரெய்ரா அல்லது ஜான் பிர்பான்ட் மார்கன் ஆகியவர்களைப் போன்று உண்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். அல்லது எமிலி ஜோலாவின் L’argent என்ற நாவலின் முக்கிய பாத்திரமான பங்கு மார்க்கெட் முதலாளி சாக்கார் அல்லது டிராய்ஸரின் படைப்பாகிய அசுர பலமும் அடக்கமும் கொண்ட பண மோசடிக்காரரான கௌபெர்வுட் போல கற்பனைப் பாத்திரங்களாக இருக்கிறார்கள்……
லோவின் நிதித் துறைச் செய்முறைகளும் கருத்துக்களும் அரசியல் பொருளாதாரத்தை ஏற்படுத்துவதிலும் வளர்ப்பதிலும் முக்கியமான பங்கு வகித்தன. இந்த விஞ்ஞானத்தில் அவருக்கு நேரடியான சீடர்கள் ஏற்படுவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு அல்லது அதற்கும் அதிகமான காலத்துக்கு அவர் காத்திருக்க வேண்டியிருந்தது என்பது உண்மையே. மறுபக்கத்தில், 18-ம் நூற்றாண்டிலும் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அரசியல் பொருளாதாரத்தின் மிகச் சிறப்பான வளர்ச்சி பெருமளவுக்கு லோவின் கருத்துக்களின் மூலமாகவே ஏற்பட்டன என்றபோதிலும், அந்தக் கருத்துக்கள் அபாயகரமான, பெருங்கேடு ஏற்படுத்தக் கூடிய முரண் கோட்பாடுகள் என்ற வகையில் அவற்றை நிராகரித்ததன் மூலமாக வளர்ச்சி அடைந்தன.
ஆடம் ஸ்மித் மற்றும் ரிக்கார்டோ
லோவின் முரண்கோட்பாடுகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் கெனே, டியுர்கோ, ஆடம் ஸ்மித், ரிக்கார்டோ ஆகியோருடைய கருத்துக்களை உருவாக்குவதில் கணிசமான பங்கு வகித்தது. பிரெஞ்சு அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஆராய்ந்த பொழுது மார்க்ஸ் பின்வருமாறு எழுதினார்: “பிஸியோ கிராட்டுகளின் தோற்றம் கொல்பேர்வாதத்தை எதிர்த்ததோடும் குறிப்பாக ஜான் லோவின் அமைப்பைப் பற்றி ஏற்பட்ட கலவரத்தோடும் இணைப்புக் கொண்டிருந்தது.”(2) மூலச்சிறப்புடைய பொருளியலாளர்கள் லோவைக் குறை கூறியது முற்போக்கான தன்மை கொண்டிருந்தது, சரியான திசையில் செலுத்தப்பட்டிருந்தது. வாணிப ஊக்கக் கொள்கையோடு லோ பல பொது அம்சங்களை அதிகமாகக் கொண்டிருந்த படியால் அந்தக் கொள்கைக்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டத்தில் அது ஒரு பகுதியாக இருந்தது. எல்லாவிதமான பொருளாதாரப் பிரச்சினைகளையுமே பணம், வர்த்தகச் சமநிலை முதலியவை பற்றிய விவகாரங்களாகவே வகைப்படுத்திய பூர்வீக வாணிப ஊக்கக் கொள்கையினரிடமிருந்து அவர் அதிகமாக வேறுபட்டிருந்தார் என்பது உண்மையே.
பணம் என்பது பிரதானமாக பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தைச் செலுத்துகின்ற கருவி என்றே அவர் கருதினார். ஆனால் அவர் மேலெழுந்த வாரியாகவுள்ள செலாவணி உலகத்தைத் தாண்டி முன்னேறவில்லை; முதலாளித்துவ உற்பத்தியின் சிக்கல் நிறைந்த அமைப்பியலையும் உட்கூறுகளையும் புரிந்து கொள்வதற்குக் கூட எந்த முயற்சியும் செய்யவில்லை. முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் மூலச்சிறப்புடைய ஆசிரியர்கள் இதற்குத் தேவையான எல்லா முயற்சிகளையும் செய்தார்கள்.
லோ பணவியல் காரணிகளைச் சார்ந்திருந்தபடியால் இயல்பாகவே தன்னுடைய எல்லா நம்பிக்கைகளையும் அரசுடன் இணைத்துக் கொண்டார். அவர் ஆரம்பத்திலிருந்தே அரசு வங்கி ஏற்படுவதை விரும்பினார்; அப்பொழுது ஏற்பட்ட தற்காலிகமான சிரமங்களே முதலில் தனியார் வங்கியை ஏற்படுத்துவதற்கு அவரை இணங்கவைத்தன. அவருடைய வர்த்தக ஏகபோகம் என்பது பிரத்தியேகமான வகையில் அரசின் ஒட்டுப்பகுதியாக இருந்தது.
லோ தன்னுடைய பொருளாதாரக் கொள்கையில் முரண்பாடுகளோடு நடந்து கொண்டார். அரசின் ஒழுங்கு முறை உத்தரவுகளில் சில பொருளாதாரத்துக்குக் குந்தகமாக இருந்தபடியால் அவர் அவற்றை ரத்துச் செய்தார், உடனே வேறு நடவடிக்கைகளைக் கொண்டுவந்தார். நிலப்பிரபுத்துவ அதிகாரவர்க்க அரசின் ஆதரவு அவருக்குக் கிடைத்தது; ஆனால் பொருளாதாரத்தில் அரசின் இத்தகைய முரட்டுத்தனமான, சுமை மிகுந்த தலையீட்டை எதிர்த்து பிஸியோ கிராட்டுகளும் ஆடம் ஸ்மித்தும் போராடினார்கள். இந்த அம்சத்திலும் கூட, லோவைக் காட்டிலும் புவாகில் பேர் அவர்களுக்கு அதிகம் நெருக்கமானவர்.
கடன் வசதி மூலதனத்தைப் படைக்கும் என்ற கருதுகோளை லோ முன்வைத்ததோடு அதை அமுல் செய்வதற்கும் முயற்சி செய்தார். மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தினர் இந்தக் கருதுகோளை நிராகரிக்கும் பொழுது உற்பத்தியை வளர்ப்பதில் கடன் வசதி வகிக்கின்ற முக்கியமான பாத்திரத்தைக் குறைவாக மதிப்பிட்டார்கள், இங்கே ஒரு ஆங்கிலப் பழமொழியை உபயோகிக்கலாமென்றால், அவர்கள் குழந்தையைக் குளிப்பாட்டிய தண்ணீரை மட்டும் வெளியே கொட்டவில்லை, குழந்தையையும் சேர்த்தே கொட்டினார்கள்.
கடன்வசதியைப் பற்றி லோ கொண்டிருந்த கருத்துக்கள் குறைந்தபட்சம் ரிக்கார்டோவின் கருத்துக்களைக் காட்டிலும் அதிக சுவாரசியமானவை; எனினும் மூலச்சிறப்புடைய முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தை விளக்கியவர்களில் மிகவும் முக்கியமானவரோடு மொத்தத்தில் அவரை ஒப்பிட முடியாது.
“இயற்கையான அமைப்பின்” முன்னரே நிர்ணயிக்கப்பட்ட ஒத்திசைவில், சுதந்திரமான உற்பத்திக் கொள்கையின் பேராற்றலில் லோ நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. இதிலும் கூட அவர் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளைப் பற்றித் தெரிந்திருக்கிறார் என்பது வெளிப்படுகிறது. இந்த முரண்பாடுகள் தீவிரமடைந்தது முதலாளித்துவ விஞ்ஞானம் லோவைப் பற்றிய அணுகுமுறையை மறுபரிசீலனை செய்யுமாறு நிர்ப்பந்தித்தது. லுயீ பிளாங், இஸாக் பெரெய்ரா ஆகியோர் காலத்தின் போது அவருடைய பழைய பெருமை மீட்டுக் கொடுக்கப்பட்டது. ஆனால் அதுவே கடைசி அல்ல. இன்னொரு புது வகையான மீட்டுக் கொடுத்தலை (வேறு வகையான கருத்து நிலையிலிருந்து என்பது தெளிவு) அரசு ஏகபோக முதலாளித்துவச் சித்தாந்திகள், கெய்ன்சின் ஆதரவாளர்கள் செய்து வருகிறார்கள்.
கடன் வசதி, நிதித்துறை ஆகியவற்றின் மூலமாகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது, அரசு பொருளாதாரத்தில் மிகப் பெரும் பாத்திரத்தை வகிப்பது ஆகியவை லோவின் முக்கியமான இரண்டு கருத்துக்களாகும். இவை இங்கே நன்கு பொருந்துகின்றன. இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் லோ, கெய்ன்ஸ் ஆகிய இருவருக்குமிடையே உள்ள ஒற்றுமைகளைப் பற்றி ஒரு நவீன எழுத்தாளருடைய கருத்துக்களை மேற்கோளாகக் காட்டினோம். இது மட்டும் தான் புதிரான கருத்து என்று நினைக்கக் கூடாது. உதாரணமாக பிரான்சில் ஜான் லோவும் டிரிஜிஸ்மின் தோற்றமும் என்ற தலைப்புடன் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது. டிரிஜிஸ்ம் என்பது அரசு பொருளாதாரத் திட்டமிடுதலின் பிரெஞ்சுப் பதிப்பாகும்.
அமெரிக்காவில் முதலாளித்துவக் கம்பெனிகள், தனிநபர்கள் மீது விதிக்கப்படுகின்ற வரி விகிதங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென்றால் அதற்குக் காங்கிரசின் அனுமதி இல்லாமல் முடியாது. இது நிர்வாகத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துகின்ற பழைய முதலாளித்துவ ஜனநாயக நடவடிக்கையாகும். இன்று அரசாங்கத்தின் பொருளாதார ஆலோசகர்கள் இந்த நிலைமையைப் பற்றி அதிகமாக அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்; வரிகளைக் கையாளுவது தான் நவீன பொருளாதாரக் கொள்கையின் ஒரு முக்கியமான ஆயுதம்; எனவே அதைத் தங்களுடைய முழுமையான ஆதிக்கத்துக்குள் கொண்டுவருவதற்கு அவர்கள் விரும்புவார்கள். அந்தக் காலத்தில் பிரான்சில் முடிவுகள் எவ்வளவு சீக்கிரமாக எடுக்கப்பட்டன என்பதைப் பற்றி லோ மகிழ்ச்சியடைந்தது நமக்கு நினைவுக்கு வருகிறது. “இது அதிர்ஷ்டமான நாடு; இங்கே ஒரு நடவடிக்கையைப் பற்றி ஆராய்வதற்கும் முடிவு செய்வதற்கும் அதை நிறைவேற்றுவதற்கும் இருபத்து நான்கு மணி நேரம் போதும்; இங்கிலாந்தில் அதற்கு இருபத்து நான்கு வருடங்கள் தேவைப்படும்.” பிரான்சில் மிக வேகமாக முடிவுகள் எடுக்கப்பட்டதற்கு ஒரே காரணம் அங்கே சர்வாதிகார முடியாட்சி நடைபெற்றது தான்; இதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை.
அதிகமான பணச் செலாவணி, பண வீக்கம் ஆகியவற்றின் சாதகமான விளைவுகளைப் பற்றி லோ கூறியிருக்கும் கருத்துக்கள் முதலாளித்துவப் பொருளியலாளர்களின் புத்தகங்களில் திரும்பத் திரும்பப் புத்துயிர் அடைகின்றன. பொருளாதார நெருக்கடிகள், வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார மந்தம் ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வு “அளவான பண வீக்கம்” என்று அவர்கள் கருதுகின்றனர்.
எனினும் இந்தக் கொள்கையைப் பின்பற்றும் பொழுது, அதற்குரிய தீவிரமான பிரச்சினைகளையும் மோதல்களையும் அது ஏற்படுத்துகிறது. மேற்கு நாடுகளில் பொருளாதார நிபுணர் என்ற தொழில் முதலாளித்துவம் என்ற நோயாளியின் படுக்கையின் அருகே உட்கார்ந்திருக்கும் மருத்துவர் தொழிலைப் போன்றதாகும். நோயினால் ஏற்படும் துன்பங்களை இடையிடையே குறைப்பது தான் இந்த மருத்துவர்கள் செய்யக் கூடிய மாபெரும் சேவையாகும்.
(தொடரும்…)
அடிக்குறிப்புகள் :
(1)K. Marx, F. Engels, Werke, Bd. XII, Berlin, 1969, S. 32.
(2)K. Marx, Theories of Surplus-Value, Part 1, p. 59.
நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
கேள்வி : //மோடியும் ” காமராஜர் ஆட்சி ” என்று இப்போது பிதற்றுவது எப்படியிருக்கு //
-எஸ். செல்வராஜன்
அன்புள்ள செல்வராஜன்,
தேர்தல் பிரச்சார நேரத்தில் மோடி அப்படி கூறியிருப்பார். காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கருக்கு பாராளுமன்றத்தில் படம் திறந்து விட்டு இன்னொருபுறம் காந்தியை ஆண்டுதோறும் நினைவுகூர்கிறார் மோடி.
அது போல பசுவதைத் தடைச் சட்ட கலவரத்தின் போது ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தில்லியில் காமராசாரின் வீட்டையே எரிக்க முயன்றது. திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கையை எதிர்ப்பதற்காக துக்ளக் சோ துவங்கி வைத்த இந்த “காமராஜர் ஆட்சி பொற்காலம்” புரளியை சோவின் மனங்கவர்ந்த மோடி உச்சரிப்பதில் என்ன அதிசயம்?
♦ ♦ ♦
கேள்வி : // கேள்விக்கு பதில் வரல அப்படி அந்த கேள்வி தப்புனாலும் அதை எடுத்துச் சொல்லலாம்..? அப்படி வினவில் போட முடியாத கேள்விகளுக்கு மின்னஞ்சல் மூலமாக பதில் தந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்? //
– பா.அருண்
அன்புள்ள அருண்,
அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கவே முயல்கிறோம். வேலைச் சுமை தவிர தாமதத்திதற்கு வேறு காரணங்கள் இல்லை
♦ ♦ ♦
கேள்வி : // தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்றால் என்ன? //
– சசாங்கன்
விரிவாக பதிலளிக்க வேண்டிய இந்தக் கேள்விக்கு ஒரு எளிய அறிமுக விளக்கம் மட்டும் கொடுக்கிறோம். 1991-ம் ஆண்டில் இந்தியாவில் இம்மூன்றும் அறிமுகம் செய்யப்பட்டன. தனியார்மயம் என்பது தனியார் இன்னின்ன தொழில்தான் செய்ய வேண்டும், அவை தவிர மற்ற தொழில்களை செய்யக் கூடாது, சில துறைகள் அரசிடம் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற நடைமுறையை ரத்து செய்கிறது. அவ்வகையில் அனைத்து தொழிற்துறைகளும் ஏன் கல்வி, சுகாதாரம் போன்ற சேவை அடிப்படையிலான துறைகளும் தனியார்மயமாக்கப்பட்டன. தற்போது ரஃபேல் ஊழல் விவகாரத்தில் பார்த்தால் நாட்டின் பாதுகாப்பு தொழிற்துறைகளிலும் தனியார் துறை வந்துவிட்டது. இந்த 28 ஆண்டுகளில் ஏராளமான பொதுத்துறைகள் தனியாருக்கு விற்கப்பட்டிருக்கின்றன. பல பொதுத்துறை நிறுவன பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டிருக்கின்றன.
தாராளமயம் என்பது சந்தைதான் அனைத்தையும் தீர்மானிக்க வேண்டும் என்ற முறையில் அன்னிய முதலீடு உள்ளே வருவது மற்றும் தனியார் தொழில் துவங்க இருக்கும் தடைகள் அத்தனைகளையும் ரத்து செய்யக் கோருகிறது. கோக், பெப்சி மட்டுமல்ல சில்லறை வணிகத்தை அழிக்கும் வால்மார்ட் கூட எந்த தடையுமின்றி வரலாம் என்பதை தாராளமயம் நடைமுறைப்படுத்துகிறது. தற்போது அமேசான் ஆன்லைன் விற்பனையாக அது பரிணமித்துவிட்டது. சில துறைகளில் அன்னிய முதலீடு 49% இருக்கலாம் என்பதை 51 மற்றும் அதற்கு மேல் என்பதை தாராளமயம் கொண்டு வருகிறது. ‘லைசன்ஸ் ராஜ்ஜியம்’ என்று கூறப்பட்ட தடைகள் அனைத்தையும் தகர்ப்பதே தாராளமயம். தாராளமயத்தின் மூலம் தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுவது, சங்கம் கட்ட ஆயிரத்தெட்டு நிபந்தனைகள் போன்றவையும் அமல்படுத்தப்படுகிறது. இதற்காக அரசு உத்தரவுகளோடு, சட்டங்களையும் திருத்துகிறார்கள், அல்லது புதிய சட்டங்களைக் கொண்டு வருகிறார்கள்.
உலகமயம் வல்லரசு நாடுகளின் நிதி மூலதனம் தங்கு தடையின்றி நம்மைப் போன்ற ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு சுரண்டுவது. மேலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளை உற்பத்தியின் பின்னிலமாக்குவது. தற்போது உலக அளவில் உள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது உற்பத்தி மற்றும் சேவையை உலக அளவில் பல நாடுகளில் மலிவான உழைப்பு, தாராளமய சலுகைகளைப் பெற்றுக் கொண்டு மலிவாக உற்பத்தி செய்கின்றன. அதன் மூலம் பெரும் இலாபத்தை அடைகின்றன. உற்பத்தி மட்டுமல்ல நுகர்வையும் சுரண்டலுக்கேற்ப உலக மயமாக்குகிறார்கள். இதற்கு தோதாக உலகம் முழுவதும் அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்கிறார்கள். அவ்வகையில் தேசிய இனப் பண்பாடுகள் ஒழிக்கப்பட்டு நுகர்வு கலாச்சாரமே ஆதிக்கம் செலுத்துகிறது. கலை, இசை, சினிமா அத்தனையும் உலகமயத்தில் தேசிய அடையாளங்களை இழந்து வருகின்றன.
தனியார்மயம், தாராளமயம், உலக மயத்தை அமல்படுத்துவதற்காக 90-களில் உலக வர்த்தகக் கழகம் (World Trade Organisation) துவங்கப்பட்டது. இந்நிறுவனம் ஏகாதிபத்திய நாடுகளின் சார்பில் ஏழை நாடுகளின் வர்த்தகம், ஏற்றுமதி, இறக்குமதிகளை வடிவமைக்கிறது. உலக வங்கியும் (World Bank), சர்வதேச நாணய நிதியமும் (International Monetary Fund) அமெரிக்கா மற்றும் இதர ஏகாதிபத்திய நாடுகளின் நலன்களுக்காக தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகள் உலகெங்கும் அமல்படுத்துவதை செய்கின்றன. அதற்காகவே ஏழை நாடுகளுக்கு பல்வேறு நிபந்தனைகளோடு கடன்களை அளிக்கின்றன. அந்த நிபந்தனைகள் உலகமயத்தை அமல்படுத்துவதை உத்திரவாதப்படுத்துகின்றன.
மொத்தத்தில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கை அமெரிக்காவை மையமாகக் கொண்ட வல்லரசு நாடுகள் முழு உலகையும் பொருளாதார ரீதியாக ஆக்கிரமிப்பு செய்வதற்காக அமல்படுத்தப்படுகிறது. உலக வங்கி, பன்னாட்டு நிதி முனையம், உலக வர்த்தகக் கழகம் போன்ற வல்லரசு நாடுகளின் அமைப்புகள் மேற்கண்ட மூன்று கொள்கைகளையும் அமல்படுத்தும் கருவிகளாக செயல்படுகின்றன.
♦ ♦ ♦
கேள்வி : // சிலை வழிபாடு தேவையா? பெரியார்க்கு மாலை போடுறது அப்படினு கேள்வி வருது? சிலை பிற்போக்குத்தனமான ஒன்றா? //
– பா.அருண்
அன்புள்ள அருண்
கடவுள் சிலைகளை வழிபடுபவர்கள் பக்தர்கள். தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதை செய்பவர்கள் கட்சி மற்றும் இயக்க ஆர்வலர்கள். இரண்டும் முற்றிலும் வேறுபட்ட ஒன்று.
கடவுளர்களே இந்த உலகை படைத்து காப்பதாக நம்பும் பக்தர்கள் கடவுளர்களின் சிலைகளை தொழுகிறார்கள். அப்படி தொழும் போது தங்களது வாழ்க்கை பிரச்சனைகளிலிருந்து கடவுள் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தவறாது வைக்கிறார்கள். நமக்கு அப்பாற்பட்ட சக்தி, இந்த உலகை ஆளும் சக்தி என்ற பயத்தோடும் இந்த வழிபடுதல் அல்லது தொழுதல் நடக்கிறது. இதுவும் தலைவர்களை மரியாதை செய்வதும் ஒன்று அல்ல.
தலைவர்கள் சிலைகளை பொறுத்தவரை அவர்களது கொள்கைகள் போராட்டங்கள் பங்களிப்பு சார்ந்து அவர்களை நினைவுகூர்ந்து அந்தக் கொள்கைகள் போராட்டங்களை தொடருவோம் என அவர்களது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து உறுதிமொழி ஏற்கிறார்கள். அந்த வகையில் பெரியார் உள்ளிட்ட தலைவர்களுக்கு சிலைகள் வைப்பதும் மாலை போட்டு மரியாதை செய்வதும் அவர்கள் பிறந்த மற்றும் இறந்த தினத்தன்று பெருந்திரளாக மாலை போட்டு நினைவு கூர்வதும் சரியான ஒன்றுதான். இரண்டையும் ஒன்றாக குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.
♦ ♦ ♦
வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்: கேள்விகளை பதிவு செய்யுங்கள்
சிவாஜியின் வளர்ச்சி மற்றும் ஆட்சியின் பன்முக பரிமாணங்களை ஆய்வு செய்தல் :
சிவாஜி குறித்த வரலாற்று உண்மைகளை சங்கபரிவாரங்கள் மறைந்த வரலாற்று உண்மைகளை தனது சப்ரங் இணையதளத்தில் ”Sivaji in Secular Maharastra” என்ற பெயரில் கட்டுரைத் தொடர்களாக எழுதியிருந்தார், சமூகச் செயல்பாட்டாளர் தீஸ்தா செதல்வாத். அதன் தமிழாக்கத்தை இங்கே உங்களுக்கு வழங்குகிறோம்..
மராட்டிய நாட்டுப்புறப்பாடல்களில் குறுநில நாடுகளின் மன்னனாக உருவகப்படுத்தப்பட்ட சிவாஜி சமகால வரலாற்றாசிரியர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளதன் விளைவு : இந்து தீவிரவாதிகளால் அவர் கைப்பற்றப்பட்டதுடன் அரசியல் அதிகாரத்திற்கு குறிப்பாக அவர் முடிசூடப்பட்டதன் பின்னனியில் இருக்கும் சாதிய பரிணாமத்தை மறைப்பார்கள்.
தோழர் எஸ்.ஏ. டாங்கே
தோழர் எஸ்.ஏ. டாங்கே (SA Dange) மற்றும் கோவிந்த் பன்சாரே (Govind Pansare) ஆகியோர் தங்களது வீச்சான சொற்பொழிவில் மராட்டியத்தில் சிவாஜியின் வரலாற்றை திறம்பட அறிமுகப்படுத்துவதற்கு முன்பே ஜடுநாத் சர்க்கார் (Jadunath Sarkar) முதல் ஜி.எஸ்.சர்தேசாய் (GS Sardesai) வரையிலான புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்கள் இவற்றை ஆய்வு செய்துள்ளனர். 1994 முதல் பன்முக இந்தியாவுக்கான கல்வி இயக்கமான KHOJ அமைப்பு சமூக ஆய்வுகள் மற்றும் வரலாற்றை கற்றுக்கொள்வதை ஜனநாயகப்படுத்தி வருகிறது. வரலாற்றாசிரியர்களின் பணிகள் உள்ளடக்கிய சிலவற்றை இங்கு தொகுத்து தருகிறோம்.
கேள்வி 1: சிவாஜியின் படையில் முதன்மை படைத்தலைவர்கள் யார்?
பதில்: தௌலத் கான் மற்றும் சிட்டி மிஸ்ரி. இருவரும் முஸ்லிம்கள்.
கேள்வி 2: சிவாஜியின் மிக நம்பகமான வெளியுறவு செயலர் யார்?
பதில்: முல்லா ஹைதர். இவரும் ஒரு முஸ்லிம் தான்.
கேள்வி 3: சிவாஜிக்கு மிக நம்பகமான மற்றும் நெருக்கமான வேலைக்காரரும் ஆக்ரா சிறையிலிருந்து அவர் தப்ப உதவியரும் யார்?
பதில்: மதானி மஹ்தர். இவரும் முஸ்லிம் தான்.
கேள்வி 4: ராய்காட்டிலுள்ள தன்னுடைய அரண்மனையின் முன்னால் நாள்தோறும் வழிபாட்டிற்காக செல்லும் ஜெகதீஸ்வர் கோவிலுக்கு அடுத்து சிவாஜி கட்டியது என்ன?
பதில்: முஸ்லிம்களின் தொழுகைக்காக சிறப்பான ஒரு பள்ளிவாசலை கட்டினார்.
(ஆனால் வரலாற்றில் கீர்த்தி பெற்ற பல்வேறு நபர்களை தங்களது அரசியல் ஆதாயத்திற்காக அரசியல்வாதிகள் கபளிகரம் செய்துள்ளனர்.)
சிவாஜியைப் பற்றிய ஒரு சமச்சீரான புரிதலுக்கு பள்ளி மாணவர்களைப் பழக்கப்படுத்துவதற்கான ஒரு ஆய்வினை சீர்குலைப்பதாக சிவசேனா அச்சுறுத்துகிறது. ஒரு முன்னோடி கல்வி நிறுவனத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பதிலாக எந்த தவறும் செய்யாத போதும் பள்ளி நிர்வாகத்தை எழுத்துப்பூர்வ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மும்பை காவல்துறை மிரட்டுகிறது.
ஒருபுறம் நாட்டை பாகுபடுத்தும் போக்கு மற்றும் வரலாற்றை குறுகிய கண்ணோட்டத்துடன் திரிப்பது குறித்த விவாதம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பாராமுகமாக இருந்து வருகிறது. இச்சூழலில், சிவாஜியைப் பற்றிய ஒரு சமச்சீரான பகுத்தறிவு பார்வையை தரக்கூடிய ஒரு கையேட்டை வெளியிட்டதற்கு எதிராக மிரட்டல்களையும் நியாயமற்ற எதிர்ப்புகளையும் மராட்டியத்தை ஆளும் ‘மதச்சார்பற்ற’ காங்கிரஸ்-எம்.சி.பி அரசு பார்க்க நேர்ந்தது.
டான் பாஸ்கோ குழுமத்தால் நடத்தப்படும் மூன்று பள்ளிகளில் வரலாற்றைப் பற்றிய புரிதலையும் கற்றலையும் மேம்படுத்துவதற்காக தீஸ்தா செதல்வாத் (KHOJ மதச்சார்பற்ற கல்வித் திட்டம் வழியாக) எழுதிய ஒரு கையேட்டை அறிமுகப்படுத்தியது தான் சிக்கலின் தொடக்கம். மும்பையில் டான் பாஸ்கோ குழுமத்தால் இயக்கப்படும் பள்ளிகளில் சோதனை அடிப்படையில் இக்கையேடு அறிமுகப்படுத்தப்பட்டது. வரலாற்றுப் பாடத்திட்டங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இக்கையேடுகள் வரலாற்று ஆசிரியர்களுக்கும் எழுத்தாளருக்கும் இடையிலான பத்து மாத கால ஒத்துழைப்பின் விளைவாகும்.
சிவாஜியைப் பற்றிய பல தகவல்களுடன் சாதியத் தடைக்கற்களை தாண்டி அவர் அதிகாரத்திற்கு வந்து புகழடைந்ததை பற்றியும் இக்கையேடு கூறுகிறது. அப்சல் கானையும் சீரான முறையில் இது அணுகுகிறது. கலாச்சார பாதுகாவலர்களாக தங்களை தாமே அறிவித்து கொண்டவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்த இவை மட்டுமே போதுமானவையாக இருக்கின்றன.
பெற்றோர் – ஆசிரியர் சங்கங்களின் முழு ஒப்புதலுடன் மூன்றில் இரண்டு பள்ளிகளில் ஜூன் முதல் இச்சோதனை நடத்தப்பட்டது. ஆனால் போரிவாலியில் உள்ள மூன்றாவது பள்ளியில் கையேட்டின் பகுத்தறிவு மற்றும் தர்க்கரீதியான கருத்துக்களால் எரிச்சலடைந்த சில பெற்றோர்கள் அதை திரும்ப பெறக்கோரி பள்ளி தலைவரிடம் புகாரளித்து ஏற்றுக்கொள்ளப்படாததால் சிவசேனாவின் உள்ளூர் ஷாகா ஒன்றை அணுகினர். சிவசேனாவின் மகிழ்ச்சிக்கு வேறு என்ன வேண்டும்?
மராட்டியத்தில் குறிப்பாக கடந்த 25 ஆண்டுகளாக குறுகிய வகுப்புவாத அமைப்பு ஒன்றினால் சிவாஜி ஊதி பெருக்கப்பட்டுள்ளார். பாடநூல்களின் தரத்தை உயர்த்த அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தையும் அச்சுறுத்தும் வன்முறைகளால் இவ்வமைப்புகள் தடுத்து நிறுத்துகின்றன. 1986-ம் ஆண்டின் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் பாடநூல்களை திருத்த மராட்டிய பாடநூல் கழகம் எடுத்த முயற்சிகள் கூட இப்பிற்போக்கு சக்திகளால் கவிழ்க்கப்பட்டது.
சிவாஜியின் காலத்தில் பார்ப்பனிய படிநிலைக்கு எதிராக அவரது கசப்பான போராட்டத்தை மறைக்கவே குறுகிய உலக கண்ணோட்டம் கொண்ட இந்த பிற்போக்கு சக்திகள் விரும்புகின்றன. தன்னுடைய வாழ்நாளில் மகத்தான வெற்றிகளையும் புகழுமடைந்த ஒரு மனிதர் தன்னை மன்னனாக முடிசூடுவதற்கு பெனாரஸிலிருந்து ஒரு பார்ப்பனரை வரவழைத்து பூணூல் அணிந்து புனிதமாக்கும் சடங்கை செய்ய வேண்டியிருந்த துயரக்கதையை புகழ் பெற்ற வரலாற்றாசிரியர்கள் பலர் எடுத்துரைத்துள்ளனர். சிவாஜிக்கான சடங்கை செய்ய ஒப்புக்கொண்ட பார்ப்பன பூசாரிக்கு கணிசமான பணத்தை கொடுத்து ஈடு செய்ய வேண்டியிருந்தது.
சிறிது காலத்திற்கு முன்பாக இந்து மகாசபா, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சிவசேனா போன்ற சமூகத்தை பிளவுபடுத்தும் மதவாத அமைப்புகள் இந்த வரலாற்று உண்மைகளை கையிலெடுத்து அதற்கு பல வண்ணம் பூசி கலவரத்திற்கு முயன்றன. ஆனால் ஜெயந்த் கட்காரி, என்.ஆர் பதக், கோவிந்த் பன்சாரே மற்றும் சரத் படேல் போன்றவர்களின் தொடர் முயற்சியால் மராட்டியத்தில் சிவாஜியை பற்றிய உண்மையான கருத்துக்கள் புத்துயிர் பெற்றன. மூத்த தொழிற்சங்கவாதி எஸ்.ஏ. டாங்கே 1950-களின் பிற்பகுதியில் மராட்டிய தொழிலாளர்களிடம் ஆற்றிய புகழ்பெற்ற சொற்பொழிவுகளான தியான்ச்சி சிவாஜி (Tyanche Shivaji), ஆம்ச்சே சிவாஜி (Aamche Shivaji) சிவாஜியை ஒரு ‘இந்து’ மன்னனாக காட்டும் சூழ்ச்சியையும், சிவாஜியின் ஆட்சிப் பகுதிகளில் பல்வேறு மத நம்பிக்கையாளர்களிடையே சமரச போக்கை உருவாக்க அவரெடுத்த கடுமையான முயற்சிகளை வேண்டுமென்றே புறக்கணிக்கும் செயல்களையும் கடுமையாக எதிர்த்தன.
சிவசேனாவை பொருத்தவரை சிவாஜிக்கும் அப்சல் கானுக்கும் இடையிலான சண்டை என்பது முஸ்லிம்களுக்கெதிரான தங்களது அரசியலை அதாவது அவர்களுக்கெதிரான தங்களது வன்முறையை நியாயப்படுத்துவதற்கான ஒரு கருவி அவ்வளவே. சிவசேனாவினால் மராட்டிய நாட்டுப்புற பண்ணான போவாடாவில் அவை பாடல் ஒலிப்பேழைகளாக வெளியிடப்பட்டு புகழ் பெற்றன. கடந்த காலத்தை நிகழ்கால அரசியலுக்கு அவர்கள் பயன்படுத்துவதை தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் எதிர்த்தாலும் கொலை மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலம் அத்தகைய முயற்சிகள் முளையிலேயெ கிள்ளியெறியப்படுகின்றன.
சமீபத்தில் டான் பாஸ்கோ கல்வி நிறுவனத்திற்கு எதிராக சிவசேனாவின் மிரட்டல்களையும் பிறகு மாநில அரசு உறுப்புகளான காவல்துறையும் கல்வித்துறையும் எப்படி செயற்பட்டன என்பது குறித்தும் இதன் வரலாற்று ஒளியில் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
2001, செப்டம்பர் 17-ம் தேதி காலையில் கையேட்டைத் திரும்ப பெற நிர்வாகத்தை பணிய வைக்க சில பெற்றோர்களால் முடியாமல் போன பிறகு, சிவாஜியை ‘சூத்திரன்’ என்று இழிவுப்படுத்தியதாகவும் இந்து மக்களின் மத உணர்வை புண்படுத்தியதாகவும் கூறி போராட்டம் நடத்தப்போவதாக சிவசேனாவின் அறிவிப்பு பலகை ஒன்று பள்ளிக்கு வெளியே வைக்கப்பட்டது.
டாப் போஸ்கோ பள்ளி (மாதிரிப் படம்)
அந்த நேரத்தில் பள்ளி நிர்வாகம் என்னை தொடர்பு கொண்டது. ‘சர்ச்சைக்குரிய’ பகுதியை நிபுணர்களின் குழு ஒன்றின் முடிவிற்கு நாம் விட வேண்டும். ஆனால் பள்ளிக்கு விடப்பட்ட மிரட்டல்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று நான் சொன்னேன். அதே சமயத்தில் சிவசேனாவின் வன்முறை வரலாற்றுப் பின்னணியின் கரணமாக பள்ளிக்கு பாதுகாப்பு கோரி செப்டம்பர் 18 காவல்துறையை அணுகினேன்.
ஆனாலும் பள்ளி நிர்வாகம் எடுத்த சரியான நிலைபாட்டை ஆதரிக்காமல் சிவசேனாவின் போராட்டத்தை நிறுத்த வேண்டுமென்றால் கையேட்டை திரும்ப பெறுவதுடன் மன்னிப்பும் கோர வேண்டும் என்று அப்பகுதியின் காவல்துறை துணை ஆணையர் இரக்கமற்ற முறையில் பள்ளி நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்தார்.
விளைவு: செப்டம்பர் 19 காலையன்று பள்ளிக்கு முன்பு வெற்றி மிதப்பில் திரண்ட சிவசேனா கும்பல் நிர்வாகத்தின் மன்னிப்பு கடிதத்தை நகல் எடுத்து பொது மக்களுக்கு கொடுத்தது. பள்ளி நிர்வாகம் அளித்த மன்னிப்பு கடிதம் சிவசேனாவின் கைகளுக்கு எப்படி சென்றது என்பதை போலீசுதான் விளக்க வேண்டும். போலீசு இதற்கு உடந்தை இல்லையெனில் ஆங்கில அகராதிகளில் திருத்தம் வேண்டும்.
அதே போல பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த சில அதிகாரிகள் பள்ளிக்கு வந்ததுடன் கையேடு திரும்ப பெறப்படும் என்றும் உறுதியளித்த ஆச்சரியமும் நிகழ்ந்தது.
இப்பின்னணியில் அரசு ஊழியர்களின் நடத்தை தொடர்பாக எழுந்த இந்த சிக்கல்கள் மராட்டிய மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மராட்டிய மாநில சிறுபான்மையினர் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டு விவாதப்பொருள்களாகின. ஒன்று, வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் போலீசு செயற்பட்டது மற்றொன்று, வரலாற்றைப் பற்றிய புதிய கண்ணோட்டம் வழங்குவதை கல்வித்துறை கட்டுப்படுத்தியது தொடர்பானது.
செப்டம்பர் 17 திங்களன்று சிவசேனாவிடமிருந்து பாதுகாப்புக் கோரி உள்ளூர் போலீசை தொடர்பு கொள்ள பள்ளி நிர்வாகம் தொடர்ந்து முயற்சித்தாலும் துணை ஆணையர் எஸ்.எஸ் கேம்கரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. மும்பையில் சிவசேனா உருவாக்கிக் கொண்டிருக்கும் பயங்கரவாதம் மற்றும் மிரட்டல்களுடன் சேர்த்தே இதை பார்க்க வேண்டுமெயொழிய தனித்துப் பார்க்க முடியாது.
இதற்கு சில வாரங்களுக்கு முன்பு மும்பை அருகிலுள்ள தானேவிலிருந்த ஒரேயொரு மருத்துவமனையை சிவசேனா முழுவதுமாக நொறுக்கியது அதன் உண்மையான நிறத்தை காட்டியது. நோயாளிகளைக் காப்பாற்ற தங்களால் முடிந்த அனைத்தையும் செய்த மருத்துவமனை மருத்துவர்களால் கூட இரண்டு நோயாளிகளுக்கு கூடுதலாக எத்தனை பேர் இறந்திருக்கலாம் என்று சொல்ல முடியாது. இந்த கும்பலின் ஆத்திரத்திற்கு காரணம்? சாலை விபத்தைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேனாவின் தானே தலைவர் ஆனந்த் திகே இதய செயலிழப்பு காரணமாக இறந்தார். ரூ 9 கோடி மதிப்புள்ள மருத்துவமனை சொத்துக்கள் மற்றும் கருவிகளை நொடிப்பொழுதில் நொறுக்கித்தள்ளிய சேனாவிற்கு எதிராக செயல்படத் தவறியதற்காக காவற்துறை ஆணையரும் மற்ற போலிஸ்காரர்களும் இப்போது மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் முன் விசாரணையை எதிர்கொள்கின்றனர். அந்த மருத்துவமனை பின்னர் மூடப்பட்டு நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர்.
இவையெல்லாம் டான் பாக்ஸோ நிறுவனத்தை மிரட்டிக்கொண்டிருந்த சிவ சேனாவின் உடனடி செயல்பாடுகள் ஆகும். அந்நிறுவனத்திற்கு எதிரான சிவசேனாவின் மிரட்டல்கள் ஒருபுறமிருக்க, சிவ சேனாவின் மகளிர் அமைப்பினரோ மும்பை நகராட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து ஆணையரை அடித்துள்ளனர். இந்த சூழ்நிலைகளில் நூற்றுக்கணக்கான இளம் குழந்தைகளுக்கு பொறுப்பேற்றுள்ள ஒரு பள்ளி நிர்வாகத்தின் அச்சத்தை நீக்க காவல்துறை என்ன செய்கிறது?
பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பள்ளி நிர்வாகமும் எழுத்தாளரும் பலமுறை தெளிவுப்படுத்திய போதிலும் துணை ஆணையர் எஸ்.எஸ் கேம்கர் மூலம் போரிவலி காவல்துறை பள்ளி நிர்வாகத்திற்கு கடுமையான அழுத்தத்தை கொடுத்து கையேட்டை திரும்ப பெற வைத்திருக்கிறது. முதல் நாள் நேரில் சந்திக்க முயன்று வீணானதைத் தொடர்ந்து செப்டம்பர் 18, செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் தொலைபேசியில் நான் தொடர்பு கொண்ட பிறகு நகர காவல்துறை ஆணையர் எம்.என். சிங்கின் நடத்தை இன்னும் மோசமானது.
தொலைப்பேசி அழைப்பிற்கு பிறகு துணை ஆணையர் கெம்கரிடமிருந்து பள்ளிக்கு மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்கள் வந்தன. மேலும் திரை மறைவில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஜூலியோ ரிபெய்ரோவுடனான கிறிஸ்தவ தொடர்புகளைப் பயன்படுத்தி “சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்குமாறு” பள்ளிக்கு சிங் எச்சரித்தார்.
அந்த நேரத்தில், அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட பதட்டங்கள் காரணமாக பிரிவு 142 (ஆயுதங்களுடன் கூட தடை) நடைமுறையில் இருந்தது. இந்த புறச்சூழல் மற்றும் சிவசேனாவின் வன்முறை வரலாற்றை பார்க்கும்போது சட்டம் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் அதன் அணுகுமுறையை கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால் துணை ஆணையர் எஸ்.எஸ். கெம்கர் மூலம் முன்னோடி கல்வி நிறுவனத்தின் நிர்வாகத்தை மன்னிப்பு கோர செய்து கையேட்டையும் திரும்ப பெற செய்திருக்கிறார் ஆணையர்.
மாநில பள்ளிக்கல்வித்துறையும் இதையேதான் செய்திருக்கிறது. மேல்நிலை பள்ளிக்கல்வி துறைக்கான சட்ட விதிமுறைகளின் படி, பள்ளிகள் பாடத்திட்டங்களை மேம்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது. இருந்தும் மாநில அரசு இயல்புக்கு மாறாக நடந்து கொண்டுள்ளது.
நாட்டின் பிற மாநிலங்களைப் போலவே மகாராஷ்டிராவிலும் ஆர்.எஸ்.எஸ் / வி.எச்.பி நடத்தும் பல்லாயிரம் நிறுவனங்கள் காளான்களை போல பரவியிருக்கின்றன, வெறுப்பை பரப்பும் நூல்களை தடையேதுமில்லாமல் அவை பயன்படுத்துகின்றன. இதற்கெதிராக விசாரணை நடத்த ஆளும் ‘மதச்சார்பற்ற’ அரசுக்கு எப்போதாவது ‘தைரியம்’ இருக்கிறதா? வரலாற்றை பகுத்தறிவுடன் கற்றலுக்கும், மதவெறி மற்றும் வெறுப்பின்பால் பின்னப்படும் வலைகளை தூய்மைப்படுத்துவதற்கு எடுக்கும் முயற்சிகள் நமது நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக ஏன் இருக்கின்றன? மதவெறி மற்றும் ஒற்றை கலாச்சாரத்தை திணிக்கும் கும்பலுக்கு இது சவாலாக இல்லையே ஏன்?
இந்த வழக்கு தற்போது மகாராஸ்டிர மாநில மனித உரிமை ஆணையத்திடம் உள்ளது. அடுத்த கட்ட விசாரணை வரும் நவம்பர், 29-ம் நாள் நடக்க உள்ளது. அதே நேரத்தில் கையேட்டின் ஆசிரியருக்கு எதிராக 153 சி பிரிவின் கீழ் ஒரு வழக்கையும் போரிவலி காவல் நிலையம் தொடுத்துள்ளது.