Saturday, June 13, 2026
முகப்பு பதிவு பக்கம் 387

பிரேமலதா : தி ரியல் தியாகத்தலைவி !

0

வில்லவன்
ராஜாஜிக்குப் பிறகு ஒரு நல்ல பிராமண பீஸுக்காக மயிலை ஆன்மாக்கள் பன்னெடுங்காலம் காத்திருந்த வேளையில் குத்துமதிப்பான அய்யரான எம்.ஜி.ஆர் வாய்த்தார். சுயபுத்தியும் சொல்புத்தியும் இல்லாத சுயத்தை சொறிய மட்டுமே தெரிந்த அவர்தான் நேற்றைய ஜெயாவுக்கும் இன்றைய மோடிக்கும் முன்னோடி.

கழிசடையாக இருந்தாலும் பார்ப்பனியம் கால்நூற்றாண்டு தவத்தில் பெற்ற பிள்ளை இல்லையா? ஊடகங்கள் முட்டுக்கொடுத்து முட்டுக்கொடுத்து “சோறுபோட்ட மஹாராஜா” என பாமர மக்களை நம்பவைத்தார்கள். அவரால் அடித்து மெண்ட்டலாக்கப்பட்ட ஆட்களோ, அடியாட்களுக்கு பட்டா போடப்பட்டு கொல்லப்பட்ட ஏரிகளோ கணக்கில் வரவேயில்லை.

அடுத்து கோமளவல்லி வந்து சேர்ந்தார். அக்ரஹாரவாசிகள் எல்லோரும் கும்பலாய் போய் போயஸ்கார்டனில் கொண்டாடலாம் என்றால் அங்கே ஏற்கனவே நந்தி போல சசி கும்பல் உட்கார்ந்துவிட்டது. ‘விருந்து வைத்து வாயைத் தைத்ததைப்போல’ ஆயிற்று அவர்கள் நிலை. ஜெ ஊழலின் பெரும் பங்கை சூத்திர தோழியின் குடும்பம் தின்ன, மீண்டும் பார்ப்பனியம் விரல் சப்பியபடியே சாபமிட்டு காலம் கழித்தது.

ஆரிய மாமா சோ ராமசாமியே ஜெயாவை திட்டிவிட்டு எதிரணியை ஆதரிக்க வேண்டியாயிற்று. ஆனாலும் ஜாதிப் பாசம் விட்டுபோகுமா? அந்த டபுள் பாசிஸ்ட்டை நிர்வாகப்புலி என பிரச்சாரம் செய்து ஒப்பேற்றினார்கள். சாராய ஆலை ஓனர் எனும் தட்சணையைக்கூட சோ காலம் போன கடைசியில்தான் வாங்கினார். ஜெ ஒரு சோத்து சோம்பேறி என்பதால் சோ தட்சணை பெறும் காலம்வரை இருந்தார். இல்லாவிட்டால் எதிர்த்து பேசிய காலத்திலேயே சந்திரலேகா டைப் டிரீட்மெண்ட்டை பெற்றிருப்பார்.

படிக்க:
♦ கேப்டன் பீரங்கியிலிருந்து வெடிப்பது குண்டா குசுவா ? | வில்லவன்
♦ சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட தேமுதிக விஜயகாந்த் : யார் காரணம் ? கருத்துக் கணிப்பு

அந்தம்மா போன பிறகு வாய்த்த சுமார் மூஞ்சிகள் எல்லாம் புரோக்கர் வேலையே போதும் என செட்டில் ஆயின. புரோக்கர் வேலைக்குக்கூட லாயக்கற்ற எச்.ராஜா, குருமூர்த்தி, எஸ்.வி.சேகர் போன்ற கொழுப்பெடுத்த கூமுட்டைகள் தலைவன் தோரணையில் பேசி மீதமிருக்கும் பர்னிச்சர்களை உடைத்தன. எம்ஜியார் காலம் என்றால்கூட இந்த கூமுட்டைகளை இண்டலெக்சுவல்ஸ் எல்லாம் அப்படித்தான் இருப்பா என தடவிக் கொடுத்திருப்பார்கள். சமூக ஊடகங்கள் வந்த பிறகு தடவிக்கொடுக்கும் கைகளில் ‘ஷண’ நேரத்தில் துப்பிவிடுகிறார்கள். பெரியார் காலத்தில்கூட பார்ப்பனர்கள் அறிவாளிகள் எனும் அந்தஸ்துக்கு ஆபத்து அவ்வளவாக இல்லை. பேஸ்புக் காலத்தில் வெறும் ஸ்டேட்டஸ்கள் போட்டே அந்த ஸ்டேட்டசுக்கும் எள்ளும் தண்ணீரும் தெளித்துவிடுகிறார்கள்.

பார்ப்பனர்களின் முக்கால் நூற்றாண்டு அனுபவத்தில் அரசியலுக்கு வரும் சொந்தப்பிள்ளைகள் அவர்கள் கவுரவத்தை சந்தியில் நிறுத்தும் வாய்ப்பே அதிகமாக இருந்திருக்கிறது. ஆகவே பார்ப்பனியத்தின் பிளான் பி ஆனது அடிமை சூத்திரர்களை இறக்கி அவர்கள் வழியே அதிகாரத்தை தக்கவைக்கலாம் என்பதாக இருந்தது. இது சேர, சோழ காலத்து அரத பழசு டெக்னிக்தான். என்ன செய்வது பார்ப்பனியத்தை இன்றும் கிழடு கட்டைகள்தானே காப்பாற்ற வேண்டியிருக்கிறது?

பிளான் பி மூலம் முதலில் அவிழ்த்துவிடப்பட்ட நாய்கள் சாதிச் சங்கங்கள். அவர்கள் படையெடுப்புக்குப் பிறகு பார்ப்பனர்களின் சாதி வெறிக்கு ஒரு பாதுகாப்பு கிடைத்தது. பாதுகாப்புக்கு சரி, அதிகாரத்தை தக்க வைக்க? அதற்குத்தான் விஜயகாந்த் வரைமுறையில்லாமல் ஊடகங்களால் ஆராதிக்கப்பட்டார். அவர் கட்சி துவங்கும் முன்பே அதற்கான நேர்மறை முன்னோட்டங்கள் வெள்ளமென பாய்ந்தன. பார்ப்பனர்கள் விரும்பியிருக்காவிட்டால் ஊடக நடத்தை இப்படி இருந்திருக்காது. பெயரளவுக்குகூட சித்தாந்தம் இல்லாத, ஓரளவு ஓட்டுக்களை திரட்டக்கூடிய கொழுப்பெடுத்த முட்டாள்கள் பார்ப்பன லாபிக்கு தேவை. அதற்கு ‘சப்ஜாடாக’ பொருந்தி வந்தவர் விஜயகாந்த். நீங்கள் சந்திக்கும் பார்ப்பனர்களிடம் பேசிப் பாருங்கள், விஜயகாந்தின் வீழ்ச்சி அவர்களை சங்கடப்படுத்தியிருக்கும்.

விஜயகாந்தும் அவர்களின் கொஞ்சலுக்கு உகந்த நியாயத்தை செய்தார். அரை ஜெயாவான மனைவி, அரை பிரேமாவான மச்சான், பணக்கார திமிரைத்தவிர வேறு தகுதியே இல்லாத பிள்ளைகள் கூடவே சினிமாக்காரனுக்கே உண்டான அதிகார மிதப்பு என எல்லா சிக்கல்களையும் தாண்டி அவர் 2011-ல் ஜெயாவை ஆதரித்து பார்ப்பனியத்துக்கு சேவை செய்தார். பிறகு ம.ந.கூ-வில் இருந்தும் ஜெவுக்கு உதவினார் (அப்படித்தான் பிரேமலதா சொல்லியிருக்கிறார்). இப்போதும் பார்ப்பனியத்துக்கு ஒரு பார்ப்பனனால்கூட செய்ய இயலாத சேவைகளை செய்யும் அதிமுகவை ஆதரிக்கிறார்.

இவற்றின் கிரெடிட் முழுமையும் விஜயகாந்துக்கு போய் அதன் பாவங்களை மட்டும் அண்ணியார் சுமக்கிறார். விஜயகாந்தை ஆதரிக்கும் மயிலை ஜீவன்கள்கூட அண்ணி பிரேமலதாவை சபிக்கிறார்கள். ஸ்டாலினுக்கு கடும் போட்டி கொடுத்திருக்க வேண்டிய ஆளை கரடி பொம்மைபோல செட் பிராப்பர்ட்டியாக மாற்றிவிட்டார் எனும் அவச்சொலை நீங்கள் கபாலி கோயில் மாடவீதிகளில் இப்போதும் கேட்க இயலும். ஆனால் உண்மை அதுவா?

2006 -ல் மட்டுமே விஜயகாந்த் ஓரளவுக்கு கோர்வையாக பேசினார். 2009 -ல் இருந்தே அவர் பேச்சு கோளாறானதாகவும் புரிந்துகொள்ள முடியாததாகவும் ஆகிவிட்டது. கேப்டன் டிவி லைவில் அவர் பேச்சு ஒளிபரப்பாகையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் உடனே ஒலி மட்டும் நிறுத்தப்பட்டு “நீ பொட்டு வச்ச தங்கக்குடம்” பாட்டை ஓடவிடுவதற்கென்றே ஒரு சிறப்பு டீம் ஒன்று செயல்பட்டது. ஊடகங்களிடம் ஏடாகூடமாக பேசுவது, கூட இருப்பவனை எகிறியடிப்பது போன்ற கூடுதல் இம்சைகள் வேறு. ஆனால் இத்தனைக்கும் மத்தியில் கடந்த பத்தாண்டுகளாக விஜயகாந்தை ஒரு போணியாகும் சரக்காக வைத்திருக்க அண்ணியார் எத்தனை சிரமப்பட்டிருக்க வேண்டும்? ஒரு சூத்திர நிர்மலா சீதாராமனுக்கு இது எத்தனை பெரிய சவால் என்பதை யாருமே யோசித்துப் பார்ப்பதில்லை.

படிக்க:
மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் ! சமூக அக்கறையை வளர்க்கும் முயற்சி இது !!
♦ நிர்மலா சீத்தாராமன் X 24-ம் புலிகேசி – வீடியோ

இப்போது அதிமுக கூட்டணியில் கொஞ்சம் கூடுதலாக ஜாதி ஓட்டுக்களை ஓட்டிக் கொண்டுவரும் சூழலில் இருப்பது மாங்கா கும்பல்தான். குடிசைகளை கொளுத்தி, காதலித்து மணம் புரிந்த பல குடும்பங்களை சிதைத்து (பல கிராமங்களில் வன்னியர்-தலித் தம்பதிகளை ஒதுக்கி வைத்த நிகழ்வுகள் இளவரசன் மரணத்துக்குப் பிறகு நடந்தது) அடைந்த பலன் இது. அதிமுக-பாஜக-பாமக கூட்டணிக்குப் பிறகு சமூக ஊடக மக்கள் அடித்த அடியில் மாங்கனிகள் நசுங்கி மண்ணில் விழுந்திருக்கும். ஆனால் கேப்டனின் மகனும் மச்சானும் அதன் தாக்கத்தை குறைத்திருந்த வேளையில், அண்ணியார் வாய் திறந்த வினாடியே மாங்கா மைந்தனும் அப்பா மாங்காவும் சமூக ஊடகங்களில் நிபந்தனையற்ற ஜாமீன் பெற்றார்கள். இது அம்மனின் அருளுக்கு இணையான வரம். அந்த வகையில் கூட்டணிக்காக அதிகம் தியாகம் செய்தது அண்ணிஜிதான்.

இதுநாள் வரை வாய்க்கொழுப்பின் ஒற்றை பிரதிநிதியாக நிம்மி மாமியே இருந்து வந்தார். ‘ஜெ’கூட தன் திமிரை வார்த்தைகளால் பொதுவெளியில் காட்டியவரல்ல. ஆனால் ஊறுகாய் மாமியோ பிரஸ்மீட்டுக்கு 1000 ஓட்டு வீதம் தொலைக்கும் அளவுக்கு சனியை நாக்கில் குடிவைத்திருப்பவர். ஒரே பிரஸ்மீட் முலம் அந்த சனிநாக்கு நாயகி பட்டத்தை பிரேமா தட்டிப்பறித்து நிம்மி மாமியை காத்தருளியிருக்கிறார். இனி மீம்ஸ்களில் வாய்க்கொழுப்பு டெம்ப்ளேட்டுக்களை பிரேமலதாவே ஆக்கிரமிப்பார். ராஜேந்திர பாலாஜிக்கு மோடி டாடியானதில்கூட சில லாஜிக் மீறல்கள் இருக்கலாம், ஆனால் நிம்மிக்கு பிரேமாதான் மம்மி என்றால் அதை மறுக்க அகிலத்தில் யாருக்கும் திராணி இருக்காது.

யாசகம் பெற்ற அடுத்த வகையறா ஊடகவியலாளர்கள், எஸ்.வி சேகர் போன்ற சினிமா பிட்டுக் காமெடியன்களானாலும் சரி எச்.ராஜா போன்ற அரசியல் பிட்டுக் காமெடியன்களானாலும் சரி, துப்பினால் துடைத்துக் கொண்டு போவதே ஊடகங்களின் தலைவிதியாக இருந்தது. எஸ்.வி சேகர் வீட்டு வாசலில் ஆர்பாட்டம் செய்த பத்திரிக்கையாளர்கள் தங்கள் நிறுவன விசாரணைக் கமிசனை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இப்போதோ பிரேமா அண்ணி விவகாரத்தில் தங்கள் எதிர்ப்பை கொஞ்சம் போல காட்டிக் கொள்ள அவர்கள் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். காட்சி ஊடகங்கள் விவாதங்கள் நடத்தின. நிம்மி மாமி செருப்பால் அடித்திருந்தாலும் பத்திரிக்கையாளர்களுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்பதை பரிசீலித்தால் இது எத்தனை பெரிய வாய்ப்பு என்பது உங்களுக்கு புரியும்.

வெறும் அரசியல்வாதியாக மட்டும் அவர் தியாகம் செய்தவரல்ல, ஒரு தாயாக, அக்காவாக, மனைவியாகவும் அவர் தியாகியே. தனியே போய் ஒரு தீக்குச்சி கடன் வாங்கிவரக்கூட தகுதியில்லாத திமிரெடுத்த பிள்ளையை வைத்துக் கொண்டு அவரையும் பொதுக்கூட்டத்தில் பேச அனுப்பினார். அது ஊரில் இருக்கும் கட்சிகள் எல்லாவறையும் ஒரே வாக்கியத்தில் ஒரண்டை இழுத்தது. வீட்டுக்காரர் ஃபேஸ் வேல்யூவின் கடைசி அறுவடையை எடுக்க வேண்டும். பிள்ளையின் வாயிலோ மூதேவி மல்லாக்கப் படுத்த வாக்கில் காலாட்டிக் கொண்டிருக்கிறது. இந்த துயரங்கள் போதாதென்று புரோக்கரேஜில் பாண்டித்யம் போதாத தங்கத் தம்பியோ இரண்டு கட்சிகளுக்கும் ஒரே நாளில் லவ் லெட்டர் கொடுத்து அம்பலப்பட்டிருக்கிறார்.

இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியில் எந்த மனிதரும் நிதானமிழப்பார்கள். ஆனால் அண்ணியோ திட்டமிட்டு நிதானமாக நிதானமிழந்தார் என்பதை அந்த பேட்டியை பார்த்த யாராலும் கணிக்க முடியும். தன்னை பலியிட்டு தம் பிள்ளையையும் தம்பியையும் காப்பாற்றிய தியாகத்தாய் அவர் என்பதை அறிய இந்த ஒரு உதாரணமே போதும். ஜென்டில்மேன் படத்தில் மகன் படிப்புக்காக தன்னைத்தானே தீயிலிட்ட மனோரமாதான் தமிழகத்தின் தியாகத்தாய்க்கு உதாரணமாக இருந்தார். அண்ணி பிரேமா அதனிலும் மேலானவர் என்பதை காலம் உங்களுக்கு உணர்த்தும்.

ஜெய்ஹிந்த்..

வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

#Gobackmodi டிரெண்ட் செய்தது பாகிஸ்தானியர்களா ?

மிழ்நாட்டிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி விஜயம் செய்யும்போதெல்லாம் #GobackModi என்ற ஹாஷ்டாகை எதிர்க்கட்சிகள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். கடந்த முறை மோதி கன்னியாகுமரிக்கு வந்தபோதும் இதேபோல நடந்தது.

ஆனால், இதனைச் செய்தது தமிழர்கள் அல்ல. பாகிஸ்தானியர்கள். குறிப்பாக ஐஎஸ்ஐ இதற்குப் பின்னால் இருக்கிறது என்ற கருத்தை பா.ஜ.க பிரமுகர்கள் பரப்பினார்கள்.

ட்விட்டர் உலகில் மிகப் பிரபல ஹேக்கரான எலியட் ஆல்டர்சன் ( @fs0c131y ) இப்போது ஒரு ஆய்வைச் செய்திருக்கிறார். மார்ச் ஆறாம் தேதி சென்னைக்கு மோதி வந்தபோது ட்ரெண்ட் செய்யப்பட்ட ட்வீட்களை அவர் ஆய்வுசெய்து, அவை எங்கிருந்து பதிவுசெய்யப்பட்டன, எந்தெந்த ட்வீட்டர்கள் அதில் தீவிரமாக ஈடுபட்டார்கள் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார். மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

#GoBackSadistModi என்ற ஹாஷ்டாகுடன் கூடிய 68543 ட்வீட்களை அவர் முதலில் ஆராய்ந்திருக்கிறார். மோதிக்கு எதிரான மேலும் சில ஹாஷ்டாகுகள், அன்று ட்ரெண்டான வேறு சில ஹாஷ்டாகுகளையும் அவர் ஆராய்ந்திருக்கிறார்.

அந்த ஹாஷ்டாகுகளும் அவற்றின் கீழ் பதிவான ட்வீட்களின் எண்ணிக்கையும் இதுதான்:

#gobacksadistmodi – 41174
#gobackmodi – 16818
#gobackmodii – 1631
#whereismugilan – 1566
#rafaledeal –1437
#rafalescam – 1197
#tnwelcomesmodi – 681
#gobackantinationalmodi – 657
#admkfails – 477
#bjpfails – 476

அன்றைய தினம் மிகத் தீவிரமான ட்வீட்களைப் பதிவுசெய்த பதிவர்களின் பெயர்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இவர்கள் ஒவ்வொருவரும் அந்த நாளில் 350 முதல் 200 வரையிலான ட்வீட்களை பதிவுசெய்திருக்கிறார்கள்.
அன்றையை ட்வீட்களில் அதிகம் பகிரப்பட்ட படங்களையும் அவர் தொகுத்திருக்கிறார்.

முதலிடத்தில் இருப்பது கருணாநிதியும் துரைமுருகனும் சிரிக்கும் படம்.

படங்களின் பட்டியல் இது:

481 http://pbs.twimg.com/media/D098-kFU4AAJrig.jpg
409 http://pbs.twimg.com/media/D09tctFUwAEpVxF.jpg
376 http://pbs.twimg.com/media/D088tIoV4AA_nAa.jpg
322 http://pbs.twimg.com/media/D098Cw9U4AAZGCF.jpg
270 http://pbs.twimg.com/…/11031665…/pu/img/E7kgt9zJHGlIpVpV.jpg
255 http://pbs.twimg.com/media/D09iv-bVsAAbeii.jpg
246 http://pbs.twimg.com/media/D09vAxhVsAElo9T.jpg
182 http://pbs.twimg.com/media/D09d1TrVsAAPswG.jpg

மொத்த ட்வீட்டர்களில் தாங்கள் எந்த இடத்திலிருந்து ட்வீட்டை பதிவுசெய்கிறோம் என்பதை வெளிப்படையாகத் தெரிவித்த பதிவர்கள் 30 சதவீதம் பேர். எந்தெந்த இடங்களிலிருந்து இந்த ட்வீட்கள் பதிவாயின என்ற பட்டியலையும் அவர் வெளியிட்டிருக்கிறார். அதில் தமிழ்நாட்டிற்கு வெளியில் இருப்பது பெங்களூருவும் புதுதில்லியும்தான்.

படிக்க:
அம்மாவின் தவ வாழ்க்கையும் 2 லட்சம் கேரட் வைரமும் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?

மிகத் தீவிரமாகச் செயல்பட்ட பதிவர்களின் பெயர்களையும் ஆல்டர்சன் வெளியிட்டிருக்கிறார். அதில் முதலிடத்தில் இருப்பவர், நண்பர் பிறை கண்ணன் @piraikannan.

ஆக, இந்த மோதி எதிர்ப்புப் பிரச்சாரம் என்பது முழுக்க முழுக்க தமிழ்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டது என்று முடித்திருக்கிறார் ஆல்டர்சன்.

முகநூலில் : Muralidharan Kasi Viswanathan

சாவின் விளிம்பில் ! உண்மை மனிதனின் கதை 3

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 3


ண்டைச் சந்தடித்தால் குகையிலிருந்து எழுப்பப்பட்டிருந்த கரடி பசித்திருந்தது, எரிச்சல் கொண்டிருந்தது. ஆனால் பிணங்களின் இறைச்சியைக் கரடிகள் உண்பதில்லை. பெட்ரோல் நெடி சுள்ளென்று அடித்த அசைவற்ற உடலை நெடுக மோந்த கரடி சோம்பலுடன் திறப்பு வெளிக்குப் போயிற்று. முனகலும் சரசரப்பும் அதைத் திரும்பி வரச் செய்தன. அது இப்போது அலெக்ஸேயின் அருகே குந்தியிருந்தது. பிண மாமிசத்தின் பால் அருவருப்பும் வயிற்றை கிள்ளும் பசியும் அதற்குள் போராடிக் கொண்டிருந்தன. பசியே வெற்றி பெறலாயிற்று. கரடி பெருமூச்செறிந்தது, வெண்பனிக் குவியலில் கிடந்த மனிதனைப் பாதத்தால் புரட்டி திருப்பிற்று, விமானி உடையின் “பேய்த் தோலை” நகங்களால் கிழிக்க முற்பட்டது. விமானி உடை அதற்கு மசியவில்லை.

கரடி வாய்க்குள்ளாக உறுமிற்று. கண்களைத் திறக்கவும், அப்பால் விலகவும், கூச்சலிடவும், தன் மார்பின் மேல் சாய்ந்து அழுத்தும் அந்தக் கனத்த பேருடலை நெட்டித்தள்ளவும் உண்டான விருப்பத்தை அடக்கிக் கொள்ள அந்தக் கணத்தில் அலெக்ஸேய் அரும்பாடு பட வேண்டியிருந்தது. ஆவேசமும் சீற்றமும் பொங்கத் தற்காத்துக் கொள்வதற்கு அவனது உடலும் உள்ளமும் ஒருங்கே துடித்தன. ஆனால் அவனோ, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மெதுவாக, கரடிக்குத் தெரியாமல் கையைப் பைக்குள் விட்டு ரிவால்வரின் உறைகளிட்ட கைப்பிடியைத் தொட்டுணர்ந்து பெருவிரலால் குதிரையைச் சுடுநிலைக்குக் கொண்டுவந்து ஆயுதந்தரித்த கையைக் கரடி காணாதவாறு வெளியே எடுத்துவிட்டான்.

கரடி முன்னிலும் வலுவாக விமான உடையைப் பற்றிக் கிழிக்க முயன்றது. அழுத்தமான துணி முடமுடத்தது, எனினும் மறுபடியும் தாக்கு பிடித்தது. கரடி வெறித்து உறுமியது. உடையைப் பற்களால் பற்றி மென்மையாயிருக்கும் பஞ்சுப் பற்றைக்கும் ஊடாக உடலை நசுக்கியது. பெருமுயற்சி செய்து உடல் வலியைப் பொறுத்துக் கொண்டான் அலெக்ஸேய். கரடி தன்னை வெண்பனிக் குவியலிலிருந்து வெளியே இழுத்த தருணத்தில் ரிவால்வரைச் சட்டென உயர்த்திக் குதிரையை அழுத்தினான். மந்தமான வெடியோசை சடாரென்ற ஒலிப்புடன் பரவியது.

கரடி இரையை மெதுவாகப் பிடியிலிருந்து விட்டது. அலெக்ஸேய் பகை விலங்கின் மேலிருந்து பார்வையை அகற்றாமல் வெண்பனியில் விழுந்தான். விலங்கு பின்கால்களில் குந்தியிருந்தது. சிறுமயிர் அடர்ந்த அதன் பீளை சாடிய கருவிழிகள் விளங்காமையைத் தோற்றுவித்தன. கொழுகொழு வென்ற குருதி அதன் வெட்டுப் பற்களின் இடைவழியாகக் கலங்கிய தாரையாகப் பெருகி வெண்பனிமேல் சொரிந்தது. கம்மலாக, பயங்கரமாகக் கத்தி, உடற்சுமையை சிரமத்துடன் தாக்கியவாறு பின்னங்கால்களில் எழுந்த கரடி, அலெக்ஸேய் மறுமுறை சுடுவதற்குள்ளேயே, மரண மூர்ச்சையடைந்து வெண் பனியில் துவண்டு விழுந்துவிட்டது. இளநீல வெண்பனிப் புறணியில் மெதுவாகச் செம்மை பரவிற்று. உருகத் தொடங்கிய வெண்பனியிலிருந்து கிளம்பி ஆவி விலங்கின் தலையருகே படலமாகக் கிளம்பிற்று. கரடி இறந்து விட்டது.

அலெக்ஸேயின் இறுக்கம் தளர்ந்தது. பாதங்களில் சுரீரென்ற காந்தும் வலியை அவன் மீண்டும் உணர்ந்தான். வெண்பனியில் தொய்ந்து விழுந்து உணர்விழந்தான் ….

அவனுக்கு நினைவு வந்தபோது சூரியன் உயரே எழுந்து விட்டிருந்தது. பழுப்புச்சடை அடர்ந்த அலங்கோலமான அழுக்கு உடல் அருகே இளநீலப் பனிமீது கிடந்தது. காடு ஆரவாரித்தது. மரங்கொத்தி மரப்பட்டையை ஒலிப்புடன் கொத்திற்று. மஞ்சள் வயிறுகளும் துடிதுடிப்பும் கொண்ட சிட்டுக்குருவிகள் புதர்களில் தத்தியவாறு கீச்சிட்டன.

“உயிரோடிருக்கிறேன், உயிரோடிருக்கிறேன், உயிரோடிருக்கிறேன்” என்று மனதுக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டான் அலெக்ஸேய். உயிர் வாழ்வின் அற்புதமான, விறல்மிக்க, போதையூட்டும் உணர்வால் நிறைந்தது, அவனுடைய அகம் அனைத்தும், உடல் முழுவதும் களி துள்ளியது. மரண அபாயத்தை எதிர்பட்டு மீளும் ஒவ்வொரு தடவையும் மனிதனுக்கு ஏற்படுவதே இந்த உணர்வு.

வலிமைமிக்க இவ்வுணர்வால் ஆட்கொள்ளப்பட்டு அவன் துள்ளி எழுந்து நின்றான். ஆனால் அப்போதே முனகலுடன் கரடியின் உடல் மேல் தொப்பென உட்கார்ந்துவிட்டான். உள்ளங்கால்களில் உண்டான வலியால் அவன் உடல் முழுதும் காந்தியது. மண்டைக்குள் மூளையை அதிரச்செய்யும் கடகடப்புடன் தேய்ந்த பழைய திரிகை சுழல்வது போன்று ஆழ்ந்த, கனத்த ஓசை நிறைந்திருந்தது. இமைகளுக்கு மேல் யாரோ விரலால் அழுத்துவது போலக் கண்கள் வலித்தன. சுற்றிலும் இருந்தவை யாவும் ஒரு கணம் ஆதவனின் தண்ணிய மஞ்சள் கதிரொளியில் மூழ்கித் துலக்கமாகப் பளிச்செனத் தென்பட்டன. மறுகணமே, தீப்பொறிகள் மினுமினுக்கும் சாம்பல் நிறப் போர்வையால் மூடப்பட்டு பார்வைக்கு மறைந்திருந்தன.

“மோசம்… விழும்போது அடிப்பட்டிருக்கிறது போலிருக்கிறது. கால்களுக்கும் ஏதோ நேர்ந்துவிட்டது” என்று எண்ணமிட்டான் அலெக்ஸேய். வரைபடப் பெட்டியை அவன் விழும்போது தவறவிட்டு விட்டான். ஆனால் வரைபடம் இல்லாமலேயே கூட அன்றைய வழியை அலெக்ஸேய் தெளிவாக எண்ணிப் பார்த்தான். தாக்கு விமானங்களின் இலக்கான ஜெர்மனியப் போர்த்தள விமானநிலையம், போர்முனை வரிசையிலிருந்து சுமார் அறுபது கிலோமீட்டர் மேற்கே இருந்தது. ஜெர்மனியச் சண்டை விமானங்களை விமானப் போரில் ஈடுபடுத்தி, விமான நிலையத்திலிருந்து ஏறக்குறைய இருபது கிலோமீட்டர் தொலைவு கிழக்கே இட்டு வருவதில் அவனுடைய விமானிகள் வெற்றி பெற்றார்கள். ”இரட்டை இடுக்கியில்” இருந்து தப்பி வெளியேறிய பின் அலெக்ஸேய் இன்னும் சற்று தூரம் கிழக்கே சென்றிருப்பான்.

ஆகவே, முனை முகத்திலிருந்து சுமார் முப்பத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில் முன்னணி ஜெர்மன் டிவிஷன்களின் முதுகுப்புறம் வெகு தூரத்தில், கருங்காடு என அழைக்கப்பட்ட விசாலமான வனப்பிரதேசத்தில் எங்கோ அவன் விழுந்திருக்க வேண்டும். அருகாமையிலிருந்த ஜெர்மன் பின்னணிகளின் மீது தாக்குதல் நடத்தச் சென்ற வெடி விமானங்களுக்கும் திடீர்த் தாக்கு விமானங்களுக்கும் துணையாக அவன் இந்த வனப் பிரதேசத்தின் மேலாக எத்தனையோ தடவை பறந்திருந்தான். மேலிருந்து பார்ப்பதற்கு இந்தக் காடு முடிவற்ற பச்சைக் கடல் போன்றே எப்போதும் அவனுக்குத் தோற்றமளித்தது. நல்ல வானிலையில் இந்தக் காடு, பைன் மர முடிகளின் மகுடங்கள் அணிந்து இலகும். மோசமான வானிலையில் சாம்பல் நிற மூடுபனியில் ஆழ்ந்து, சிற்றலைகள் படிந்த சுருண்ட நீர் பரப்பு போலக் காணப்படும்.

இந்த அடர்ந்த காட்டின் மைதானத்தில் அவன் விபத்துக்கு உள்ளானது ஒரு வகையில் நல்லதுதான், இன்னொரு வகையில் மோசம். வழக்கமான சாலைகளையும் குடியிருப்புகளையுமே நோக்கிச் செல்லும் ஹிட்லர் படையினர் இந்தக் கன்னிக்காட்டில் எதிர்படுவது அரிதுதான் என்பதால் இது நல்லது. ஆனால் மனிதனுடைய உதவியையோ ஒரு துண்டு ரொட்டியையோ, தங்கிடத்தையோ, ஒரு மடக்குக் கொதி நீரையோ எதிர்பார்க்க வகையற்ற அடர்காட்டுப் புதர்கள் வழியாக, வெகு நீண்டதாக இல்லாவிட்டாலும் கடினமான நடைப்பயணம் அவன் செய்ய வேண்டியிருந்தது என்பதால் இது கெட்டது. தவிர, கால்கள்… கால்கள் கிளம்புமா? அவை நடக்குமா?

கரடியின் உடல் மேலிருந்து அவன் மெதுவாக எழுந்தான். உள்ளங்கால்களில் உண்டான அதே சுரீரென்ற வலி கீழிருந்து மேல்வரை அவன் மேனியெங்கும் துளைத்துப் பரவியது. அவன் வீரிட்டான். மறுபடி உட்கார வேண்டியதாயிற்று. மென்மயிர்த் தோல் நீள் பூட்சைக் கழற்ற முயன்றான். அது கழலவில்லை. ஒவ்வொரு தடவையும் அதைச் சுண்டி இழுத்த போது வலி தாங்காமல் முனகினான். அப்போது அலெக்ஸேய் பற்களை கடித்துக் கொண்டு, கண்களை இடுக்கியவாறு, தன் பலத்தை எல்லாம் திரட்டி இரு கைகளாலும் பூட்சை வெட்டி இழுத்தான் – அக்கணமே நினைவிழந்தான்.

உணர்வு திரும்பியதும் அவன் காலில் சுற்றியிருந்த பிளானால் துணியை ஜாக்கிரதையாகப் பிரித்தான். பாதம் முழுவதும் வீங்கி ஒரு மொத்தமாக நீலம் பாரித்திருந்தது. அது மழுவாய்க் கொதித்தது. கணுக்கணுவாய்த் தெரிப்பது போல வலித்தது. அலெக்ஸேய் பாதத்தை வெண்பனி மேல் வைத்தான். வலி கொஞ்சம் மட்டுப்பட்டது. தன் பல்லைத் தானே பிடுங்குவது போன்ற ஆவேசத்துடன் இரண்டாவது பூட்சையும் வெட்டி இழுத்துச் கழற்றினான்.

படிக்க:
♦ கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் !
ஆளுநர் ஷாநவாஸ், தியாகு, பாலன் உரை | ஆடியோ

உலகை அணு ஆயுதப் போர் அபாயத்தில் தள்ளும் வல்லரசுகள் !

இரண்டு கால்களும் எதற்கும் பயன்படாத நிலையில் இருந்தன. பைன் மரமுடிகள் மீது விமானத்தின் மோதலால் அவன் தனது அறையிலிருந்து தூக்கி எறியப்பட்ட போது பாதங்களை எதுவோ நசுக்கி விரலடியும் விரல்களும் சேர்ந்த சிற்றெலும்புகளை நொறுக்கிவிட்டது போலும். சாதாரண நிலைமைகளில் முறிந்து வீங்கிய இந்தக் கால்களால் எழுந்து நிற்க அவன் நினைத்துக்கூட இருக்க மாட்டான்தான். ஆனால் அவன் இந்தக் காட்டின் உள்ளே, பகைவனின் பின்புலத்தில் தன்னந்தனியாக இருந்தான். எனவே இங்கே மனிதனை சந்திப்பது என்பது துன்பம் குறைவதற்கு அல்ல, சாவையே ஏற்படுத்தும். எனவே நடப்பது, கிழக்கு நோக்கி நடப்பது என்று அவன் தீர்மானித்தான். வசதியான பாதைகளையும் குடியிருப்புகளையும் தேடாமல் காடு வழியாகவே நடப்பது, என்ன ஆனாலும் சரியே, நடப்பது என்று முடிவு செய்தான்.

மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அவன் கரடியின் உடலிலிருந்து எழுந்தான், ஐயோ என்று முனகினான், பற்களை நெறுநெறுத்து முதல் அடி எடுத்து வைத்தான். சற்று நின்று மற்றக் காலை வெண்பனியிலிருந்து வெளியில் எடுத்து இன்னோர் அடி வைத்தான். தலைக்குள் இரைச்சல் உண்டாயிற்று. காடும் திறப்பு வெளியும் அசைந்தாடின, ஒருபுறமாக மிதந்து சென்றன.

மெத்தென்ற வெண்பனி மேல் நடப்பது ஓரளவு சகிக்க கூடியதாக இருந்தது. ஆனால் வீசுக் காற்றால் துப்புரவாக்கப்பட்டிருந்த, கடினமான பனிக்கட்டிப் பாதையில் கால் வைத்ததுமே வலி பொறுக்கமாட்டாமல் அவன் நின்றுவிட்டான். மேற்கொண்டு ஓர் அடி எடுத்து வைக்கக் கூட அவனுக்கு தயக்கமாயிருந்தது.

அலெக்ஸேய் வெண்பனிமேல் உட்கார்ந்தான். முள் போன்ற உறுதியான சிறு வெட்டிழுப்புக்களால் பூட்சுகளைக் கழற்றினான். நகங்களாலும் பற்களாலும் அவற்றைப் புறங்கால் பக்கம் கிழித்தான் – அவை நொறுக்கிய பாதங்களை இறுக்காதிருப்பதற்காக. அங்கோர ஆட்டு ரோமத்தால் நெய்த பெரிய, மென்மையான லேஞ்சியைக் கழுத்திலிருந்து எடுத்து இரு பாதியாகக் கிழித்துப் பாதங்களில் சுற்றிக்கொண்டு, பூட்சுகளைப் போட்டுக் கொண்டான்.

இப்போது நடப்பது முன்னிலும் எளிதாக இருந்தது. நடப்பது என்பது சரியல்ல: நடப்பது அல்ல, இயங்குவது, சதுப்பு நிலத்தில் நடப்பது போன்று குதிகால்களை ஊன்றி, முன் பாதங்களை உயரத் தூக்கியவாறு எச்சரிக்கையுடன் இயங்குவது. வலியும் இறுக்கமும் காரணமாக, சில அடிகள் முன்னேறியதும் தலைச் சுற்றத் தொடங்கியது. ஏதேனும் அடி மரத்தில் முதுகைச் சாய்த்தபடி, கண்களை மூடிக் கொண்டு நிற்க வேண்டிவந்தது. அல்லது, இரத்த நாளங்களில் கடுமையான நாடித்துடிப்பை உணர்ந்தவாறு வெண்பனிக் குவியலில் சற்றே அமர்ந்து இளைப்பாற நேர்ந்தது.

அந்த மாதிரியாக அவன் சில மணி நேரம் நடந்தான். ஆயினும் அவன் திரும்பிப் பார்த்தபோது காட்டுப் பாதைக் கோடியில் அவனுக்குப் பரிச்சயமான திறப்பு வெளி இன்னும் தென்பட்டது. இது அலெக்ஸேய்க்கு மிக்க வருத்தத்தை ஏற்படுத்தியது, ஆனால் அச்சமூட்டவில்லை. இன்னும் விரைவாக செல்ல அவனுக்கு விருப்பம் ஏற்பட்டது. வெண்பனி குவியலிருந்து எழுந்து பற்களை இறுகக்கடித்தவாறு முன்னே சென்றான். தனக்கு முன்னே சிறு குறிக்கோள்களை வைத்துக் கொண்டு, கவனத்தை அவற்றில் மையப்படுத்தியபடி நடந்தான் – ஒரு பைன் மரத்திலிருந்து மற்றொன்றுக்கு, ஒரு வெண்பனி குவியலிலிருந்து மற்றொன்றுக்கு என்று. ஆள் நடமாட்டம் அற்ற வெற்றுக் காட்டுப் பாதையின் கன்னி வெண்பனியில் அவனது பின் கால்களை பதிந்து கோணல்மானலான, தளர்வுள்ள, தெளிவற்ற அடித்தடம் – காயமடைந்த விலங்கின் அடித்தடம் போல.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

முகிலன் எங்கே : தமிழகத்திலும் வெள்ளை வேன்கள் ?

ழத்தில் போர் நடைபெற்றக் காலங்களிலும், அதற்குப் பின்பும் கூட ஏராளமான தமிழர்கள் வெள்ளை வேன்கள் மூலமாகக் கடத்தப்பட்டுக் காணாமல் போய் இருக்கிறார்கள். சாலையோரங்களில் நடந்து செல்லும் பொழுது, வீட்டில் இருக்கும் பொழுது, கோயிலுக்குச் செல்லும் பொழுது என எந்த நேரம் வேண்டுமானாலும் கடத்தப்படலாம், காணாமல் போகலாம் என்ற சூழ்நிலையே ஈழத்திலும், கொழும்பிலும் நிலவியது. சிறீலங்கா அரசாங்கமே இவ்வாறு கடத்திச் சென்று கொன்று விடுவது அல்லது ஏதேனும் சிறைகளில் சட்டவிரோதமாக அடைத்து வைப்பது போன்றவற்றைச் செய்து வந்துள்ளது.

காஷ்மீரிலும் இந்தியப் படைகள் இது போல பல காஷ்மீரிகளை கடத்திச் சென்றுள்ளன. காணாமல் போன அவர்களின் நிலைக் குறித்து எதுவும் தெரியாது. இது குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்பு இந்தியா மீது பலக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. உலகெங்கிலும் போர்ச் சூழல் உள்ளப் பகுதிகளில் காணாமல் போகிறவர்களின் எண்ணிக்கை அதிகம். இதில் அந்தப் பகுதியில் உள்ள அரசாங்கங்களின் பங்கு முக்கியமாக உள்ளது.

இவ்வாறான நிலைமை தமிழகத்திலும் வரும் என எதிர்பார்க்கவில்லை. சூழலியல் போராளி முகிலன் காணாமல் போய் இருக்கிறார். அவரது நிலை என்ன என்பது தெரியவில்லை.

தமிழகத்தின் அதிமுக அரசு பாஜகவின் சொல்படி இயங்கும் அடிமை அரசாங்கம். பாஜக நாக்பூர் திட்டங்களையும், கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டங்களையும் செயல்படுத்தும் அரசாங்கம் தானே தவிர சாமானிய மக்களின் அரசாங்கம் அல்ல. இந்த அரசாங்கங்களின் உதவி இல்லாமல் முகிலன் காணாமல் போய் இருக்க முடியாது என்பது தான் எல்லோரின் எண்ணமாக உள்ளது.

இலங்கை திரிகோணமலை : சிங்கள இராஜபக்சே அரசால் கடத்தப்பட்டவர்களின் கதி என்ன? இதுவரை விடையில்லை!(கோப்புப் படம்)

தமிழகத்தில் எத்தனை செய்தி ஊடகங்கள் உள்ளன என்று எண்ன முடியாத அளவுக்கு ஊடகங்கள் வளர்ச்சிப் பெற்று விட்டன. ஆனால் தமிழகத்தில் இன்று வரை முகிலன் காணாமல் போனது ஒரு பெரிய பிரச்சனையாகத் தெரியவில்லை. தேர்தல் கூட்டணி, போர் எனச் சுவாரசியமான செய்திகளைச் சுற்றித் திரியும் ஊடகங்களுக்கு, ஒரு சூழலியல் போராளி காணாமல் போனது பெரிய பிரச்சனையா என்ன ?

படிக்க:
பாஜக-வுக்கு ரஃபேல் ஊழல் என்றால் அதிமுக-வுக்கு வைர ஊழல்
அடக்குமுறைதான் ஜனநாயகமா ? அடங்கிபோனால் மாறிடுமா | கோவன் பாடல்

கூட்டணிப் பேர அரசியல் செய்து வரும் முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் கூட இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மணல் கொள்ளைகளும், கனிமவளச் சுரண்டலும் தொடரத்தான் போகின்றன. அதனால் முகிலன் போன்றவர்கள் காணாமல் போவது அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சிக்கு நல்லது தான். அதனால் அவர்களும் அதனைப் பற்றி அதிகம் பேசுவதில்லை.

காஷ்மீர்: காணாமல் போன எங்கள் பிள்ளைகள் இறந்துவிட்டனரா? உயிருடன் உள்ளனரா? பரிதவிப்பில் பெற்றோர்கள்.

தமிழகத்திலும் இலங்கை போல வெள்ளை வேன்களின் கலாச்சாரம் வந்து விடுமோ என்ற அச்சமே ஏற்படுகிறது. அதிகப் போராட்டங்கள் நடைபெறும் தமிழகத்தில், போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர, சமூகச் செயற்பாட்டாளர்கள், வெள்ளை வேன் கலாச்சாரம் மூலமாக காணாமல் போகும் அபாயகரமானச் சூழலை தமிழகம் எதிர்கொள்ளுமோ என்ற அச்சத்தையே முகிலனின் நிலை நமக்கு ஏற்படுத்துகிறது.

ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் கேட்காத சூழலில் நாம் மட்டுமே சமூக ஊடகங்களில் கையறு நிலையுடன் கேட்க வேண்டியுள்ளது – முகிலன் எங்கே ?

முகநூலில் : தமிழ் சசி


முகிலன் வெளியிட்ட வீடியோ:

நூல் அறிமுகம் : பணம் – எமிலி பேர்ன்ஸ்

ங்கில நாட்டு மார்க்சிய சிந்தனையாளர்களுள் திரு எமிலி பேர்ன்ஸ் தலைசிறந்தவராவார். “மார்க்சியம் என்றால் என்ன?’, ‘பணம்’ ஆகிய நூல்களை எழுதி மார்க்சிய இலக்கியத்திற்குச் சிறப்பைத் தேடித்தந்துள்ளார். மார்க்சிய அரசியல் பொருளாதாரத் தத்துவத்தை எல்லாரும் புரிந்து தெளிவு பெறவேண்டும் என்ற நோக்குடன் ‘பணம்’ (Money) எனும் இந்நூலை அவர் எழுதியுள்ளார்.

‘பணம்’ என்றால் என்ன? சமுதாய வளர்ச்சிக் கட்டத்தில் பணம் ஆற்றி வரும் பங்கு என்ன? பணம் எப்படித் தோன்றியது? ஏன் தோன்றியது? நோட்டுகள் அச்சிடப்பட்டுப் புழக்கத்தில் விட்டதன் காரணம் என்ன? ஆகிய பிரச்சினைகளை ஆசிரியர் இந்நூலில் சுவைபட விளக்கியுள்ளார்.

சமுதாயத்தில் பணத்திற்கு மதிப்பு எதனால் ஏற்படுகிறது? எல்லாப் பண்டங்களுடைய மதிப்பை நிர்ணயிக்கும், சமுதாயக் கடமையை நிறைவேற்றக்கூடிய ஒரு பண்டமாகப் பணம் விளங்கி வருவது ஏன்? மதிப்பின் அளவுகோலாகவும், புழக்கத்தில் விடக்கூடியச் சாதனமாகவும், சேமிப்பின் கருவியாகவும், கொள்வன – கொடுப்பனவற்றின் சாதனமாகவும், சர்வ வியாபக (Universal) பணமாகவும் அது விளங்கி, முதலாளித்துவச் சமுதாயத்திற்குத் தொண்டாற்றிக் கொண்டு இருக்கிறது.

இவ்வாறு, உலகளாவியப் பணமாக விளங்கும் இப்பணத்தைப் பற்றிய வரலாற்று உண்மைகளையும் வருங்காலத்தில் இப்பணம் நிரந்தரமாக நிலைக்குமா? அல்லது மறைந்து போகுமா? என்ற பிரச்சினைகளையும் ஆசிரியர் இந்நூலில் நன்கு ஆய்வு செய்துள்ளார். (நூலின் பதிப்புரையிலிருந்து)

… ஆதிகால மக்கள் தங்களுடைய தேவைபோக மிஞ்சிய தங்களது உற்பத்திப் பொருட்களை, உழைப்பு நேரத்தை அளவையாகக் கொண்டு தங்களுக்கிடையே பரிவர்த்தனை செய்து வந்தனர். இந்நிலைமையில் மக்களிடையே மிஞ்சிய பொருட்களை சேகரித்து மக்களுக்கே பரிவர்த்தனை செய்ய ஒரு கூட்டம் உருவாயிற்று. அதுதான் வியாபாரிகள். இப்போது உலோகங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அவற்றில் அதிகப்படியான வேலை நேரத்தை எடுத்துக்கொள்ளக்கூடியதும் அதிக அளவில் கிடைக்காததுமான தங்கமும் வெள்ளியும் அக்காரணங்களினாலேயே, பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்குமான பரிவர்த்தனை பொருளாக இருந்தன. இந்த உலோகங்களின் எடையினை அளவையாகக் கொண்டுதான் மக்களுக்குத் தேவையான பொருட்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டன.

இந்தமுறை, செயல்பாட்டுக்கு வந்த ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட எடையுள்ள உலோகத்துண்டுகளுக்கு ராஜாங்க முத்திரை இடப்படுகின்றன; இதன் மூலம், எடை அடிப்படையில் பொருட்களை பரிவர்த்தனை செய்வதற்கு ஆதாரமாக இருந்த தங்கமும் வெள்ளியும் நாணயமாகப் பரிணமித்தன.

இத்தனையும் நாணயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட உலோகங்களையும் பரிவர்த்தனைக்கான பொருட்களையும் உற்பத்தி செய்வதற்கு ஆகும் உழைப்பு நேரத்தை அளவையாகக் கொண்டுதான் நிகழ்ந்தன என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அதிகமான உழைப்பு நேரத்தைக் கொண்ட உலோகங்களினால் ஆன நாணயங்கள் வங்கிகளில் போட்டு வைக்கப்படும் போது கொடுக்கப்படும் ரசீதுகள் அப்போது வங்கி நோட்டுகள் எனப்பட்டன. இந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சியாக உலோக நாணயங்கள் பணமாக அதாவது கரன்சி நோட்டுகளாகப் பரிணமித்தன.

ஐரோப்பிய நாடுகளைக் குறிப்பாக ஆங்கில நாடான பிரிட்டனையும் அந்நாட்டின் கரன்சி நோட்டு பவுனையும் மையமாகக்கொண்டு பணத்தின் பரிணாமத்தை இந்நூலில் ஆசிரியர், வரலாற்று உண்மைகளை ஆதாரமாகக் கொண்டு ஆழ்ந்த ஆய்வு செய்து விவரித்துள்ளார்.

காலப்போக்கில் நிகழ்ந்த பொருளாதார நிகழ்வுகளால் உருவான பணம், ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரமும் உலகப் பொருளாதாரமும் ஏற்றம் காண்பதற்கு எப்படியெல்லாம் செயல்பட்டது என்பதையும் முதலாளித்துவ சமுதாயத்தில் வர்த்தகச் சூதாட்டம், பங்குச் சந்தைச் சூதாட்டம் போன்றவற்றில் பணம் நடத்தும் கைங்கரியங்களையும் விளக்கியுள்ளார். தேவை மற்றும் விநியோகத்தின் ஏற்ற இறக்கத்தில் பணத்தின் பங்கு, உலோக நாணயம், கரன்சி நோட்டுகளாகப் பரிணமித்த பின்பு ஏற்பட்ட விளைவுகள், சர்வதேச வர்த்தகம், அதில் அந்தந்த நாடுகளின் பணங்களுக்கிடையேயான பரிவர்த்தனை, வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகளில் பணத்தின் சுழற்சி, பணவீக்கம் மற்றும் பணப்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பணச் செயல்பாடுகளையும் எளிமையாக அதே நேரத்தில் ஆழமாக நூலாசிரியர் எடுத்துரைத்துள்ளார். தொழிலாளி பெறும் கூலிக்கான வேலை நேரத்தை விட கூடுதலாக உழைப்பதன் மூலம் கிடைக்கும் உபரிமதிப்பைக் கொண்டு முதலாளி தனது மூலதனத்தை பெருக்கிக்கொள்வதையும் எளிமைப்படுத்திக் கூறியுள்ளார்.

இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் தங்கம், வெள்ளி, செப்பு, பித்தளை ஆகிய உலோக நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன என்பதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உலோக நாணயங்கள் நிரூபித்துள்ளன. அதுமட்டுமின்றி, தமிழகத்தின் பட்டு, வாசனைப் பொருட்கள் கிரேக்கம், ரோம் ஆகிய நாடுகளில் விற்று அங்கிருந்து கொண்டு வரப்பட்ட அந்நாடுகளின் தங்க நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

படிக்க:
நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் வாட்சப் வதந்திகள் !
பாஜக-வுக்கு ரஃபேல் ஊழல் என்றால் அதிமுக-வுக்கு வைர ஊழல்

பிரிட்டிஷ் காலனி ஆட்சி காலத்தில்தான் இந்தியாவில் கரன்சி நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன, இன்று கறுப்புப் பணம், கள்ளப் பணம், லஞ்சப் பணம் போன்ற ஊரறிந்த ரகசிய வேடங்களைத் தரிக்கும் இந்தப் பணத்தின் அனுபவத்தால் உருவான “பணம் பாதாளம் வரை பாயும்”, “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே” போன்ற புதுமொழிகள் முதலாளித்துவ முறையின் ஈவிரக்கமற்ற தன்மைகளை அம்பலப் படுத்துகின்றன.

எனவே, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் உருவான பணம் என்ற முறை கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் என்பதையும் நூலின் கடைசிப் பகுதியில் ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்… (நூலின் இரண்டாம் பதிப்புக்கான பதிப்புரையிலிருந்து)

நூல்:பணம்
ஆசிரியர்: எமிலி பேர்ன்ஸ்
தமிழில்: வெ.ராமசாமி

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி: 044 – 2635 9906 / 2625 1968

பக்கங்கள்: 132
விலை: ரூ 60.00 (இரண்டாம் பதிப்பு)

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: noolulagam | panuval | commonfolks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

பொருளாதாரத்தில் அரசு தலையிடுவதை முதலாளிகள் விரும்புகிறார்களா ? | பொருளாதாரம் கற்போம் – 13

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 13

வாணிப ஊக்கக் கொள்கையும் நம் காலமும்

அ.அனிக்கின்
 பொருளாதாரத் தத்துவத்தில் ஒரு போக்கு என்ற வகையில் வாணிப ஊக்கக் கொள்கை பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் காட்சியிலிருந்தே மறைந்து விட்டது. தொழில் துறைப் புரட்சி மற்றும் ஆலை உற்பத்தியின் நிலைமைகளுக்கு மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் கோட்பாடுகள் அதிகம் பொருந்தக் கூடியனவாக இருந்தன. அதிகமான வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளான இங்கிலாந்திலும் பிரான்சிலும் இந்தக் கோட்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு மேலோங்கியிருந்தன. பொருளாதாரத்திலும் வெளிநாட்டு வர்த்தகத்திலும் அரசின் நேரடியான தலையீடு பலவீனமடைந்தது பொருளாதாரக் கொள்கையில் இதனுடைய பிரதிபலிப்பே.

எனினும் பிற்காலத்தில் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை மேற்கொண்ட நாடுகளில் மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரக் கருத்துக்கள் முழுமையாக வேரூன்ற முடியவில்லை. பொருளாதாரத்தில் எல்லாவற்றையுமே சக்திகளின் சுதந்திரமான இயக்கத்துக்கு விட்டுவிட வேண்டும் என்ற கருத்தை இந்த நாடுகளைச் சேர்ந்த முதலாளிகள் ஒத்துக் கொள்ளவில்லை. இந்த சுதந்திரமான ஆட்டத்தில் ஆங்கில, பிரெஞ்சு முதலாளிகளே வெற்றி பெறக் கூடிய வாய்ப்புக் கொண்டவர்கள் என்று அவர்கள் நினைத்தது தவறானதல்ல. எனவே வாணிப ஊக்கக் கொள்கையில் சில ஸ்தூலமான கருத்துக்கள் ஒருபோதும் மறையவில்லை. பொருளாதாரத்தை அரசு நிர்வாகம் செய்தல், காப்புவரிவாதம், நாட்டுக்குள் அதிகமான பணத்தைக் கொண்டு வருதல் போன்ற வாணிப ஊக்கக் கொள்கையின் முக்கியமான கருத்துக்களை அரசாங்கங்கள் பல சந்தர்ப்பங்களில் அதிகமாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றன.

இருபதாம் நூற்றாண்டு ஆரம்பமானது; தொழில் துறை வளர்ச்சி மிக்க முதலாளித்துவ நாடுகளில் அரசு-ஏகபோக முதலாளித்துவம் வளர்ச்சியடைந்தது. இந்த நிலைமைகளோடு பொருந்திய பொருளாதாரக் கருத்துக்களை, பொருளாதாரத்தின் மீது அரசு தாக்கம் செலுத்த வேண்டிய கடமையை, முப்பதுக்களில் ஆங்கிலத் தத்துவாசிரியரான ஜான் மேனார்ட் கெய்ன்ஸ் மிக முழுமையாக எடுத்துக் கூறினார். சமீப காலத்தில் முதலாளித்துவப் பொருளாதாரச் சிந்தனை அதிகமான அளவுக்கு அவருடைய கருத்துக்களின் தாக்கத்தில் வளர்ச்சியடைந்தது. இன்று ஏகபோகங்களும் அரசும் பின்பற்றுகின்ற நவீன முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கைகளை அவருடைய கருத்துக்கள் பல அம்சங்களில் நிர்ணயிக்கின்றன.

படிக்க:
♦ ஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் !
♦ கேள்வி பதில் : அறிவியல் வளர்ச்சி மனித வாழ்விற்கு பலனளிப்பதா ? அழிப்பதா ?

முதலாளித்துவம் சுயஒழுங்குபடுத்தலின் மூலம் ஒருபோதும் நீடிக்க முடியாது என்று கெய்ன்ஸ் வாதாடினார். பொருளாதாரத்தைத் திட்டமிடுகின்ற கடமையை அரசு மேற்கொள்ள வேண்டும். பணத்தினால் நிறுவப்படும் தேவை எப்பொழுதுமே உற்பத்தியிலிருந்து மோசமான அளவுக்குப் பின் தங்குவதால் அதற்கு உதவுவதற்கும் ஊக்குவிப்பதற்கும் இது அவசியமானது. எனவே வேலையில்லாமையையும் தொழிற்சாலைகள் வேலை நேரத்தைக் குறைத்துக் கொள்வதையும் எதிர்ப்பது அவசியம். தனிப்பட்ட முதலாளிகளிடம் முதலீடு செய்யுமாறு, அதாவது புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்துங்கள், உற்பத்தியைப் பெருக்குங்கள் என்று எப்பொழுதும் வற்புறுத்த வேண்டும் என்றார்.

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம், அரசு பொருளாதாரத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்ற கொள்கையை ஒன்றரை நூற்றாண்டுக் காலம் பறைசாற்றியது; இது போலியான, ஆபத்தான கருத்து. முதலாவதாகவும் முதன்மையாகவும் நாட்டில் ஏராளமான பணம் இருப்பதையும் அது ”மலிவாகக்” கிடைப்பதையும், அதாவது குறைவான வட்டிக்குக் கடன் கிடைப்பதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும். இத்தகைய நிலைமை ஏற்பட்டால் முதலாளிகள் வங்கிகளில் கடன் வாங்கி முதலீடு செய்வதிலும் தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பதிலும் அவர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் ஆர்வம் காட்டுவார்கள். சுதந்திர வர்த்தகம் என்பது ஒரு தவறான எண்ணம். முழு வேலை வாய்ப்புக் கொடுப்பதற்கு அது அவசியமென்றால், அந்நியப் பொருள்களை இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்துவதும் அனுமதிக்கப்படக் கூடியதே; அது போலவே வெளி நாட்டில் பொருள்களைக் குவிப்பதும் (சந்தையைக் கைப்பற்றுவதற்காக குறைந்த விலைக்குப் பொருள்களை ஏற்றுமதி செய்வது) நாணய மதிப்பைக் குறைப்பதும் அனுமதிக்கக் கூடியதே.

இவருடைய ஆலோசனைகள் வாணிப ஊக்கக் கொள்கையினரது கருத்துக்களை விசித்திரமான வகையில் நமக்கு நினைவூட்டுகின்றன; ஆனால் மேற்கு ஐரோப்பாவில் 250-300 வருடங்களுக்கு முன்பு இருந்த பொருளாதார அமைப்புக்கும் இன்றுள்ள நவீன முதலாளித்துவப் பொருளாதார அமைப்புக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுக்கு நாம் இடமளிப்பதும் தேவையே.

Eli_Heckscher
ஸ்வீடிஷ் பொருளாதார நிபுணர் எலி ஹெக்‌ஷெர்

வாணிப ஊக்கக் கொள்கையில் புலமை மிக்கவரென்று சொல்லப்படும் ஸ்வீடிஷ் பொருளாதார நிபுணரான எலி ஹெக்‌ஷெர் (1879-1952) பின் வருமாறு எழுதுகிறார்: “…..கெய்ன்சின் சமூகத் தத்துவம் வேறு விதமானது என்ற போதிலும் பொருளாதார நிகழ்வுகளைப் பற்றிய அவருடைய கருத்து வாணிப ஊக்கக் கொள்கையினருடைய கருத்துக்களோடு குறிப்பிடத்தக்க வகையில் ஒத்திருக்கிறது…” (1) அவருடைய சமூகத் தத்துவம் வேறுவிதமானது தான். கெய்ன்ஸ் நவீன அரசு – ஏகபோக முதலாளித்துவத்தின் தத்துவாசிரியர்; வாணிப ஊக்கக் கொள்கையினர் முதலாளித்துவத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்த வளரும் வர்த்தக மற்றும் தொழில்துறை முதலாளிகளின் நலன்களை வெளியிட்டவர்கள்.

கெய்ன்ஸ் எதையும் மழுப்பவில்லை. அவர் ”மூலச் சிறப்புடைய கோட்பாடுகளை” (இதன் மூலம் அவர் சுய ஒழுங்குபடுத்தல், அரசு பொருளாதாரத்தில் தலையிடக் கூடாது என்ற கருதுகோள்களைக் குறிப்பிட்டார்) அம்பலப்படுத்துவதைத் தன்னுடைய கடமையாக வரித்துக் கொண்டார். இதைத் தமது புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே அறிவித்தார். வாணிப ஊக்கக் கொள்கையினர் தனது முன்னோடிகள் என்பதைப் பகிரங்கமாக ஒத்துக் கொண்டார். கெய்ன்ஸ் ஓரளவுக்குத் தன்னுடைய சொந்தக் கருத்துக்களை 17, 18-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கருத்துக்கள் என்று துணிச்சலாகக் கூறினார்; மேலும் அவர்களின் கருத்துக்களை மிக விசித்திரமான வகையில் தனக்குச் சாதகமாகப் பொருள் விளக்கம் கொடுத்தார் என்று சில விமரிசகர்கள் – குறிப்பாக ஹெக்‌ஷெர் – கூறுவது உண்மையே. எனினும் கெய்ன்சுக்கும் வாணிப ஊக்கக் கொள்கையினருக்கும் இருக்கின்ற உறவு குறிப்பிடத்தக்கதாகும். அவ்வாறு இணைக்கின்ற நான்கு கருத்துக்களைக் கெய்ன்ஸ் எடுத்துக் கூறினார்.

முதலாவதாக, வாணிப ஊக்கக் கொள்கையினர் கடன்களுக்கு வட்டியைக் குறைத்தும் முதலீட்டை ஊக்குவித்தும் நாட்டிலுள்ள பணத்தின் அளவை அதிகரிக்க முயற்சி செய்தனர் என்பது அவருடைய கருத்து. இது கெய்ன்சின் அடிப்படையான கருத்துக்களில் ஒன்று என்பதை சற்று முன்பு பார்த்தோம். இரண்டாவதாக, அவர்கள் விலை ஏற்றத்தைக் கண்டு அச்சமடையவில்லை; அதிகமான விலைகள் வர்த்தகத்தையும் உற்பத்தியையும் விரிவுபடுத்த உதவுவதாகக் கருதினார்கள். பொருளாதார நடவடிக்கைகளுக்கு உதவி செய்யும் வகையில் ”நிதானமான பணவீக்கத்தை ஏற்படுத்துகின்ற நவீன சிந்தனையை நிறுவியவர்களில் கெய்ன்சும் ஒருவர்.

மூன்றாவதாக, ”வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணங்களில் பணப் பஞ்சமும் ஒன்று…. என்பதை முதலில் கூறியவர்கள் வாணிப ஊக்கக் கொள்கையினர்” (2) வங்கிகள் கொடுக்கும் கடன் வசதிகளைப் பெருக்குவதன் மூலமும் அரசின் பற்றாக்குறை வரவு செலவுத் திட்டங்களின் மூலமும் பணத்தின் அளவை அதிகப்படுத்துவது வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான ஆயுதமாகப் பயன்படும் என்றார்.

நான்காவதாக, “தங்களுடைய கொள்கைகளின் தேசியத்தன்மை பற்றியும் அவை காரணமாக யுத்தம் ஏற்பட்டுவிடக் கூடும் என்பதைப் பற்றியும் வாணிப ஊக்கக் கொள்கையினருக்கு எத்தகைய மயக்கங்களும் இருக்கவில்லை.” (3) ஒரு குறிப்பிட்ட நாட்டில் முழு வேலை வாய்ப்பை ஏற்படுத்துகின்ற பிரச்சினையைத் தீர்ப்பதற்கு காப்புவரிவாதம் உதவி செய்யுமென்று கெய்ன்ஸ் நம்பினார்; பொருளாதார தேசியவாதத்தை அவர் ஆதரித்தார்.

படிக்க:
♦ ஏழைத்தாயின் மகன் # 2 – நீரவ் மோடியின் லண்டன் ‘அகதி’ வாழ்க்கை !
♦ பாஜக-வுக்கு ரஃபேல் ஊழல் என்றால் அதிமுக-வுக்கு வைர ஊழல்

எல்லோருக்கும் தெரிந்த விஷயம் என்று கெய்ன்ஸ் விட்டு விட்ட ஒரு கருத்தை ஐந்தாவது கருத்தாகச் சேர்த்துக் கொள்ளலாம். பொருளாதாரத்தில் அரசு வகிக்க வேண்டிய முக்கியமான பாத்திரத்தைப் பற்றி அவர் சிறப்பான அழுத்தம் கொடுத்தார் என்பது அந்த ஐந்தாவது கருத்தாகும்.

முன்பு குறிப்பிட்டது போல், பத்தொன்பதாம் நூற் றாண்டின் இறுதியில் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் மூலச்சிறப்புள்ள மரபினருடைய உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தையும் மற்ற தத்துவ அடிப்படைகளையும் நிராகரித்தது. இன்று அது மூலச்சிறப்புடைய முதலாளித்துவ அரசியல் பொருளாதார நிபுணர்களின் தத்துவங்களிலிருந்து ஏற்படும் பொருளாதாரக் கொள்கையையும் கைவிட்டுவிட்டது. முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் தீவிரமடைந்திருப்பது தான் இதற்குக் காரணம். அரசின் தலையீட்டை அதிகப்படுத்தி இந்த முரண்பாடுகளின் கடுமையைக் குறைப்பதற்கு முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்கள் முயற்சி செய்கிறார்கள். அரசு பொருளாதாரத்தில் சர்வ வல்லமை கொண்டதாக இருக்க வேண்டும் என்ற கருத்தை சென்ற காலத்தில் மிகவும் முழுமையாகச் சொன்னவர்கள் வாணிப ஊக்கக் கொள்கையினரே. அதனால் தான் இந்த உறவு ஏற்படுகிறது.

நவீன முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் முழுவதுமே கெய்ன்சின் பாதையைப் பின்பற்றுவதாகச் சொல்ல முடியாது. பொருளாதாரத்தில் அரசின் தலையீட்டை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை மொத்தமாக நிராகரிக்கின்ற மரபுகளும் இருக்கின்றன. இவர்கள் கெய்ன்ஸ்வாதிகள் பண வீக்கத்தை உற்சாகமாக ஆதரிப்பதை எதிர்த்து “தனிப் பட்ட தொழில் முயற்சிகளின் சுதந்திரத்தை” ஆதரிக்கின்றனர். இவர்கள் பொருளாதாரம், உற்பத்தி, வேலை வாய்ப்பு ஆகியவற்றின் மீது அரசின் தாக்கத்தை ஏற்படுத்தச் செய்கின்ற முயற்சிகளைக் குறிக்க ”புதிய வாணிப ஊக்கக் கொள்கை” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதுண்டு; அந்தச் சொல்லையும் அவர்கள் அவமதிக்கும் நோக்கத்தில் உபயோகப்படுத்துவதுண்டு.

அந்த வகையில் அரசின் தாக்கம் தனிப்பட்ட சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகும் என்பதால் அது ”மேற்கு நாடுகளின் இலட்சியங்களுக்குப் பொருந்துவதல்ல என்பது அவர்களுடைய கருத்து.” புதிய வாணிப ஊக்கக் கொள்கையின் விமரிசகர்கள் கெய்ன்ஸ்வாதிகள் தங்களுடைய கொள்கைகளின் மூலம் எதை வெளியிடுகிறார்கள் (ஒருவேளை சுய உணர்வு இல்லாமலும் கூட) என்பதைப் பார்க்கத் தவறுகிறார்கள். பொருளாதாரத்தில் நவீன முதலாளித்துவ அரசின் பாத்திரம் அதிகரிப்பது ஒரு புறவயமான விதி என்பதையே அவர்கள் எடுத்துரைக்கிறார்கள். அப்படி இல்லையென்றால் தான் உருவாக்கிய சக்திகளையே முதலாளித்துவத்தால் இனி மேல் கட்டுப்படுத்த முடியாது போய்விடும்.

ஜான் மேனார்ட் கெயின்ஸ்

மறு பக்கத்தில் ”புதிய வாணிப ஊக்கக் கொள்கை” என்ற சொற்றொடர் வளர்முக அரசுகளின் பொருளாதாரக் கொள்கையைப் பற்றி சந்தேகத்தை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. பொருளாதாரத்தில் அரசுத் துறை, பொருளாதாரத் திட்டங்கள், வேலைத்திட்டங்கள் ஆகியவை புதிய வாணிப ஊக்கக் கொள்கை என்று சொல்லப்படுகின்றன. சுங்க வரிவிதிப்பின் மூலமாகவும் வேறு நடவடிக்கைகளின் மூலமாகவும் சொந்த நாட்டுத் தொழில் துறையைப் பாதுகாப்பது புதிய வாணிப ஊக்கக் கொள்கை. இரு நாடுகளுக்கிடையே வர்த்தக ஒப்பந்தங்கள், தொழில் துறைப் பெருக்கத்துக்கு அரசு கடனுதவி செய்தல், விலைகளை ஒழுங்குபடுத்துவது, ஏகபோகங்களின் லாபங்களைக் கட்டுப்படுத்துவது புதிய வாணிப ஊக்கக் கொள்கை.

அப்படியானால் இந்த நாடுகள் வளர்ச்சியடைவது எப்படி? சுதந்திரமான வர்த்தகம், அதாவது அந்நிய ஏகபோகங்களைச் சுதந்திரமாக உள்ளே நுழைய விட்டுவிட்டு அதற்கு ஆதரவாக அரசு தலையிடாமைக் கொள்கையைப் பின்பற்றுவதன் மூலமா? அப்படிச் செய்தால் அது புதிய வாணிப ஊக்கக் கொள்கையாக இருக்காது போலும். ஆனால் அங்கே சுதந்திரமான பொருளாதார வளர்ச்சியும் ஏற்படாது. ஏனென்றால் இந்த நிலைமைகளினால் தான் ஒரு நாட்டில் பின் தங்கிய நிலையும் சார்பு நிலையும் நீடிக்கின்றன!

வளர்முக நாடுகள் பலவற்றிலும் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கின்ற கருவியாகக் காப்புவரிவாதம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நாடுகளைப் பொறுத்த வரையிலும் இது முற்போக்கான கொள்கை; நன்கு வளர்ச்சியடைந்த பெரிய நாடுகள் சந்தைகளைக் கைப்பற்றுவதற்காக நடத்துகின்ற ஏகாதிபத்தியப் போராட்டத்தில் பின்பற்றுகின்ற ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட காப்புவரி வாதத்திலிருந்து இது மிகவும் வேறானதாகும்.

(தொடரும்…)

அடிக்குறிப்பு:
(1) E. Heckscher, Mercantilism, N.-Y., 1955, Vol. 2, p. 340.
(2) J. Keynes, The General Theory of Employment, Interest and Money, London, 1946, p. 346.
(3) Ibid., p. 348.

  • கேள்விகள்:
  • பிரான்சு, இங்கிலாந்து நாடுகளில் பொருளாதாரக் கோட்பாடுகள் வளர்ச்சியடைய என்ன காரணம்?
  • வாணிப ஊக்கக் கொள்கை என்றால் என்ன?
  • ஏகபோக முதலாளித்துவம் – சிறு குறிப்பு வரைக!
  • பொருளாதாரத்தில் அரசு தாக்கம் செலுத்த வேண்டும் என்று கெய்ன்ஸ் கூறியதற்கு காரணம் என்ன?
  • முதலாளித்துவம் சுய ஒழுங்குபடுத்தலின் மூலம் ஒரு போதும் நீடிக்க முடியாது என்று கெய்ன்ஸ் கூறியதற்கு என்ன காரணம்?

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

குழந்தையின்மை சிகிச்சையும் பார்ட்னர்ஷிப்பும் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

பார்ட்னர்ஷிப் !

மீபத்தில் கிளினிக்கில் என்னை இருபதின் இறுதிகளில் இருக்கும் ஒரு பெண்மணி சந்தித்தார். PCOD எனும் கருமுட்டையில் நீர்க்குமிழ் போன்ற கட்டிகள் உருவாகும் நோய் இருப்பதாகவும், அதனால் திருமணமாகி சில ஆண்டுகள் ஆகியும் மகப்பேறு இயற்கையாக உண்டாகவில்லை என்பது அவர்புறத்துப் பிரச்சனை.

PCOD -ஐ சரி செய்வதற்கு பேலியோ உணவு முறை உள்ளங்கையில் நெல்லிக்கனி. ஆதலால் குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறை குறித்து அவரிடம் விவரித்தேன். அவரும் ஆர்வம் தெரிவித்தார்.

PCOD – மாதிரிப் படம்

அவரது கணவருக்கும் உடல் பருமன் இருப்பதாக தெரிவித்தார். அடுத்த முறை அவருக்கும் அவரது கணவருக்கும் ரத்த பரிசோதனை செய்து வருமாறு கூறி அனுப்பி வைத்தேன்.

ரத்த பரிசோதனை முடிவுகளோடு பெண்மணி மட்டும் என்னை சந்தித்தார்.

ஏன்.. கணவர் வரவில்லை? என்று கேட்டதற்கு

கணவருக்கு கடையை பார்த்துக்கொள்ளும் வேலை இருப்பதாகவும், அதனால் கடையை விட்டுவிட்டு வர முடியாது என்று அவர் கூறிவிட்டதாகவும் எனக்கு தெரிவித்தார்.

“சரி.. ரத்த பரிசோதனையாவது செய்திருக்கலாமே? உடல் குண்டாக இருப்பது.. ஆண்மைத்தன்மையை குறைக்கும். அதற்காகவாவது இருவரும் சேர்ந்து பேலியோ கடைபிடித்து பார்க்கலாமே?” என்றேன்

அந்த பெண்மணி “இல்ல சார். எங்க வீட்டுக்காரருக்கு எந்த பிரச்சனையும் இருக்காதுனு மாமியார் சொல்லிட்டாங்க. அவரு ரத்த டெஸ்ட் கொடுக்க ரெடியாதான் இருந்தாரு. ஆனா மாமியார் விட மாட்றாங்க சார். அவுக மகனுக்கு பிரச்சனை இருக்காதாம்.. என்னை மட்டும் தான் சார் கொற சொல்றாக…”

படிக்க:
♦ சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்
இன்னும் எத்தனை அனிதாக்கள் இருக்கிறார்களோ | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

“இது உலகம் பூரா இருக்கிறதுதான் மா.. எந்த அம்மாவாவது தன் புள்ளையை குத்தம்னு சொல்லுமா.. ஆனா குழந்தையின்மைல உங்கள மட்டும் டெஸ்ட் பண்ணி ப்ரயோஜனம் இல்ல. அடுத்த தடவ வரும் போது அவருக்கும் டெஸ்ட் எடுத்துட்டு வாங்க…”

அவருக்கு ஒரு முழு ரத்த பரிசோதனை மற்றும் விந்தணுக்கள் பரிசோதனை எழுதி அனுப்பினேன். மீண்டும் சில நாட்கள் கழித்து அந்த பெண்மணி மட்டும் வந்தார்.

“சார்..இந்தாங்க அவரோட ரிப்போர்ட்.. பெரும்பாடு பட்டு இந்த டெஸ்ட்ட எடுக்க வச்சேன் சார். பாத்து நல்ல வார்த்தை சொல்லுங்க…”

நினைத்ததை போலவே அந்த கணவனுக்கு விந்தணுக்கள் தேவைக்கும் குறைவாக இருந்தது. இன்னும் பெரும்பான்மை விந்தணுக்கள் நல்ல நிலையில் இல்லை.
டெஸ்டோஸ்டிரோன் எனும் ஆண்மைக்கான ஹார்மோன் குறைவாக இருந்தது..

நான் கூறினேன் “அவரு நேர்ல வரணும் மா.. வந்தா தான் டயட் தர முடியும். பிரச்சனை இருக்கு. நேர்ல வந்தே ஆகணும்னு டாக்டர் சொன்னாருனு கூட்டிட்டு வாங்க”

இன்னும் சில நாட்களுக்குப் பிறகு தம்பதி சமேதாராக வந்தனர். இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சையும் உணவுப்பரிந்துரையும் வழங்கப்பட்டது.

இப்போது இருவரும் நல்ல முறையில் எடை குறைந்து வருகின்றனர். விரைவில் மகப்பேறு அடைய இறைவன் அருள் புரிய வேண்டும்..

நிற்க ; மலட்டுத்தன்மைக்கு காரணம் பெண்கள் மட்டுமே என்ற எண்ணம் நமது குடும்பங்களில் வேரூன்றி நிற்கிறது. அக்காவிற்கு குழந்தை பிறக்காவிட்டால் தங்கையை கட்டுவது போன்ற கொடூர அக்கிரமங்கள் நிகழ்ந்த வரலாறுகள் நமது சமுதாயத்தில் உண்டு.

பெண்கள் குழந்தை பெற்றெடுக்கும் வேலையை மட்டுமே செய்ய வேண்டும் என்ற எண்ணமே இதற்கு காரணம்.

சரி.. இப்போது விசயத்துக்கு வருவோம்; குழந்தையின்மை என்பது ஆண் பெண் இருவருக்கும் பொது. ஆகவே சிகிச்சை என்று வந்துவிட்டால் இருவரும் சேர்ந்து தான் எடுக்கவேண்டும். பெண்களை மட்டும் பலிகடா ஆக்குவது தவறு. அது வன்கொடுமை.

ஆண்களுக்கு இப்போதெல்லாம் விந்தணுக்கள் குறைபாடு மிக அதிகமாக காணப்படுகிறது.

எப்படி கிரிக்கெட்டில் இரண்டு பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் வைத்து ரன் எடுக்கிறார்களோ?

ஆம்.. அடுத்தவர் எடுக்கும் ரன்னுக்கும் எதிர் நிற்பவர் சேர்ந்து ஓடினால் தான் ரன் பதிவாகும். அவர் எடுக்கும் ரன்னுக்கு நான் ஓட மாட்டேன் என்று நிற்க முடியாது.

அதுபோலவே வாழ்க்கையை சேர்ந்து வாழ முடிவெடுத்த இரண்டு உயிர்கள் இணையும் பார்ட்னர்ஷிப்பே திருமணம். இதில் குழந்தையின்மைக்கு ஒருவரை மட்டும் பலிகடா ஆக்கி மற்றவர் பொறுப்பின்றி இருப்பது தவறு..

நல்லதோ கெட்டதோ, லாபமோ நட்டமோ, வெற்றியோ தோல்வியோ, ஏன் உயிரே போனாலும் சரி…. பார்ட்னர்களை எப்போதும் பிரியக்கூடாது

டாட்👆

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

பாஜக-வுக்கு ரஃபேல் ஊழல் என்றால் அதிமுக-வுக்கு வைர ஊழல்

ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தபோது 2 லட்சம் கேரட் வைரம் வாங்கியது எப்படி?

ந்திய வைரச்சந்தை பெரும் சரிவை சந்தித்திருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1 லட்சம் கேரட் மதிப்புள்ள வைரம் திடீரென விற்பனைக்கு வந்துள்ளதால், வைரத்தின் மதிப்பு சரசரவென சரிவை சந்தித்திருக்கிறது. கிட்டத்தட்ட 30 சதவிகித விலை சரிவு. இந்த விலை சரிவு ஹாங்காங் உள்ளிட்ட உலக வைர சந்தையிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. திடீரென இவ்வளவு அதிகமான மதிப்புள்ள வைரம் சந்தைக்கு விற்பனைக்கு வந்தது எப்படி என்பதை ஆராய்ந்தால் அது, ஜெயலலிதாவிடம் வந்து முடிகிறது.

இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு, 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஜெயலலிதா 2 லட்சம் கேரட் வைரத்தை, மும்பை வைரச் சந்தையில் இருந்து வாங்கியிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்திய வைரச்சந்தையில் திடீரென விற்பனைக்கு வந்திருக்கும் 1 லட்சம் கேரட் மதிப்புள்ள வைரம் அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்தே வந்துள்ளது எனக் குறிப்பிடும் அந்த செய்தி, அப்போது ஜெயலலிதா வாங்கிய வைரமே தற்போது விற்பனை செய்யப்படுவதாகவும் கூறுகிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் செய்தி, எவ்வளவு மதிப்புக்கு வரைம் வாங்கப்பட்டது என்பதை குறிப்பிடவில்லை, அப்போது வாங்கப்பட்டது ’+11’ எனப்படும் நகைகளில் பயன்படுத்தப்படும் வைரம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது திடீரென சந்தையில் விற்பனைக்கு வந்திருப்பதும் இந்த வகையைச் சேர்ந்த வைரம்தான்.

இந்திய வைர தொழிலின் தலைமையகமாக செயல்படுவது குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம். சூரத் வைர கூட்டமைப்பின் (Surat Diamond Association – SDA) தலைவர் பாபு குஜராத்தி இதுபற்றிக் கூறும்போது, “பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டபோது இந்தியாவின் மிகப்பெரும் செல்வந்தர்களும், அரசியல்வாதிகளும் தங்களிடம் இருந்த கறுப்புப் பணத்தை வைரமாக வாங்கி வைத்துக்கொண்டார்கள். இப்படித்தான், தமிழ்நாட்டை சேர்ந்த மிக உயரிய அரசியல்வாதிகள் 2 லட்சம் கேரட் வைரத்தை வாங்கினார்கள். தற்போது அந்த வைரங்களை மொத்தமாக விற்பனைக்கு கொண்டு வந்திருப்பதால், வைரச் சந்தையும், இதன் வணிகமும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறது என்பது உண்மை” என பேட்டி கொடுத்திருக்கிறார்.

படிக்க:
♦ சர்வதேச மகளிர் தினத்தை உயர்த்தி பிடிப்போம் | கடலூர் புமாஇமு | தேனி மக்கள் அதிகாரம்
♦  உலகத்துலே பெரிய சிலை பட்டேலு … | கோவன் பாடல் !

இந்த வைர கொள்முதல் மற்றும் விற்பனையில் சந்தேகத்துக்கு உரிய பல மர்மக் கேள்விகள் முளைக்கின்றன.

01. 2016 நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பாக பல்லாயிரம் கோடி மதிப்பு கொண்ட வைரம் ஜெயலலிதாவால் வாங்கப்பட்டிருக்கிறது என்றால், பண மதிப்பு நீக்கம் குறித்து ஜெயலலிதா முன்கூட்டியே அறிந்திருந்தது எப்படி?

02. ஜெயலலிதாவால் இந்த வைரம் வாங்கப்பட்டிருக்கிறது என்றால், அதற்குப் பயன்படுத்தப்பட்ட தொகை முழுவதும் கறுப்புப் பணம் என்பது உறுதியாகிறது. இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

03. 2016 செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியில் வரவே இல்லை. அப்படியானால், 2016 நவம்பர் 8-ல் பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு முன்னால் ஜெயலலிதா, இத்தனை பிரமாண்ட மதிப்பில் வைரம் வாங்கியது எப்படி?

04. ஜெயலலிதா படுத்த படுக்கையாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தபோது அவர் 2 லட்சம் கேரட் வைரம் வாங்கியதாக சொல்வது நம்பும்படியாக இருக்கிறதா?

05. அப்படியானால், ஜெயலலிதாவின் பெயரால் வாங்கப்பட்டுள்ள இந்த வைரத்தை உண்மையில் வாங்கியது யார்? யாருக்காக அந்த வைரம் வாங்கப்பட்டது?

06. ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த காலத்தில் அவர்தான் முதலமைச்சராக இருந்தார். ஒரு முதலமைச்சர் இத்தனை பிரமாண்டமான மதிப்பில் வைரம் வாங்கியிருக்கிறார் என்றால், அதற்கான கணக்கு என்ன? எங்கிருந்து வந்தது அந்தப் பணம்?

07. ஜெயலலிதாவுக்கே தெரியாமல் அவரிடம் கையெழுத்து பெற்று அல்லது அவருடைய கையெழுத்தை வேறு யாரேனும் போட்டு, இந்த வைரம் வாங்கப்பட்டுள்ளது என்றால், ஒரு முதலமைச்சரின் கையெழுத்தை போலியாக இட்டது மாபெரும் குற்றம் அல்லவா?

08. ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்ட அந்த வைரத்தின் தற்போதைய உரிமையாளர் அல்லது பாதுகாவலர் யார்? தற்போது அந்த வைரத்தை விற்பனை செய்பவர்கள் யார்?

09. அப்போது ஜெயலலிதாவின் பாதுகாவலராக உடன் இருந்த சசிகலா மற்றும் அவருடைய உறவினர் வலைப்பின்னலுக்கு இந்த வைரம் வாங்குவது குறித்து தெரியுமா? அவர்களின் பங்கு என்ன?

10. அப்போது செல்வாக்கு மிக்க அமைச்சர்களாக இருந்தவர்களும், நாள்தோறும் அப்பல்லோ சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிந்து ஊடகங்களிடம் பேசியவர்களுமான எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு இதில் உள்ள பங்கு என்ன?

இப்படி ஏராளமான கேள்விகள் எழுகின்றன. ஒட்டுமொத்தமாக ஜெயலலிதா மரணப்படுக்கையில் இருந்தபோது அவருடைய பெயரை பயன்படுத்தி, பெரும் தொகையிலான கறுப்புப் பணம், வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளது. நினைத்துப் பார்க்க முடியாத ஒரு மாபெரும் கறுப்புப் பண ஊழல் இதன்பின்னே மறைந்திருக்கிறது. பா.ஜ.க.வுக்கு ரஃபேல் ஊழல் என்றால், அ.தி.மு.க.வுக்கு வைர ஊழல்!

நன்றி : ஃபேஸ்புக்கில் பாரதி தம்பி 

இன்னும் எத்தனை அனிதாக்கள் இருக்கிறார்களோ | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

கிளினிக்கில் சந்தித்த பதினோறாம் வகுப்பு மாணவிக்கு பரிசோதனை செய்து அவருக்கான மாத்திரைகளை எழுதும் பொழுது… படிப்புல எப்டிமா? என்று பேச்சு கொடுத்தேன்.

“நல்லா படிப்பா சார்.. கெட்டிகாரி.. பத்தாவதுல 493/500 -க்கு” என்றார் அவளது தாய்.

“அருமை மா.. என்ன க்ரூப் மா எடுத்துருக்கீங்க?”

” சய்ன்ஸ் சார்”

“அருமை. என்ன ஆம்பிஷன் வச்சுருக்கீங்க?”

( இந்த கேள்வியை இனி யாரிடமும் கேட்கவே கூடாது என்று நொந்து கொண்டேன். இதற்கு கிடைத்த பதில்தான் இன்று எனக்கு கிடைத்த பேரிடி )

” டென்த் வரைக்கும் டாக்டர் ஆகணும்னு வச்சுருந்தேன் சார் . இப்ப தான் நீட் வந்துடுச்சே… போச்சு.”

சிறிது நேரம் எதுவும் பேச முடியாத கையாலாகாத ஒருவனாய் நிசப்தத்துடன் நான் ஏன் இந்த கேள்வியை கேட்டேன் என்று நொந்து கொண்டவனாய்
கண்களை ஈரமாக்கிய நீரை அவர்கள் இருவருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டு…

“ஓ.. ஆமா.. நீட் வந்துடுச்சுல்ல.. அதுக்கு தனியா கோச்சிங் ஒரு வருசம் போகலாம்ல மா?”

படிக்க:
♦ மகளிர் தினம் : வெறும் கொண்டாட்டமல்ல.. உரிமையை மீட்கும் நாள் !
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாய் புதிய கலாச்சாரம் நூல்கள் !

அவளது அம்மா இடைமறித்து, “போகலாம் சார். இங்க இருந்து இவள மதுரை வரைக்கும் போய் படிக்க இவ அப்பா விடமாட்டாரு. அது போக வருசம் ஒரு லட்சம் செலவழிச்சு படிக்க வைக்க வசதி இல்ல சார்”

“ஆமா மா.. போன வாரம் கூட ஒரு பொன்னு கிட்ட கேட்டேன் ஒரு லட்சம் செலவாகுதாம். உண்மைதான்”

இப்போது அந்த மாணவி “ஏதாவது கிடைக்கிறத படிப்பேன் சார். டாக்டராகுறதலாம் இனி நினைச்சு பாக்குறது தப்பு சார்”

சிறிது நேர நிசப்தம் அவர்கள் எழுந்து சென்று விட்டார்கள்… கண்ட கனவுக்காக உழைத்து அது பலிக்காமல் போனால் கூட வலி பெரிதாய் இருக்காது, ஆனால் கனவே காணக்கூடாது என்று தடுப்பதெல்லாம் கொடுமையின் உச்சம்.

இனி ஒரு போதும் பள்ளி பயிலும் யாரிடமும், “உங்கள் ஆம்பிசன் என்ன ?” என்று நான் கேட்கப் போவதில்லை. இறைவனிடமே கையேந்துகிறேன் இது போன்ற சமூக நீதிக்கு எதிரான பரீட்சையை துடைத்தெறிவாய் இறைவா..

இது போன்ற எத்தனை Dr.அனிதாக்கள் தமிழகம் முழுவதும் இருக்கிறார்களோ? சாணை தீட்டப்படாத ரம்பத்தைக் கொண்டு நெஞ்சை அறுப்பது போல ஒரு வலி.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

சர்வதேச மகளிர் தினத்தை உயர்த்தி பிடிப்போம் | கடலூர் புமாஇமு | தேனி மக்கள் அதிகாரம்

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில்…
புரட்சிகர  மாணவர்- இளைஞர் முன்னணி சார்பாக, கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மார்ச்- 8 சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண் உரிமைக்காக போராடிய தந்தை பெரியாரின் சிலைக்கு கல்லூரி மாணவர்கள் மாலை அணிவித்தனர். மேலும் மகளிர் தினத்தை உயர்த்திப் பிடிப்போம் என்று முழக்கமிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பெரியார் சிலைக்கு இரண்டு மாணவிகள் மாலையிட்டு உரையாற்றினர். பெண் உரிமைகளைப் பற்றியும், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை பற்றியும், பாசிச மோடி ஆட்சியில் பெண்களுக்கு  பாதுகாப்பில்லாத நிலைமை குறித்தும் உரையாற்றினர். பெரியாரின் புகழையும், சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தையும் உயர்த்திப் பிடித்து முழக்கமிட்டனர்.
தகவல்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, கடலூர்.
♦ ♦ ♦ 
கம்பம் – என்.டி.பட்டி கிராமத்தில்…
தேனி மாவட்டம், கம்பம் – என்.டி.பட்டி கிராமத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அப்பகுதி தோழர் பிரேமா தலைமை ஏற்றார். காலமெல்லாம் பெண்களும், கடந்துவந்த பாதையும் என்ற புகைப்படக் கண்காட்சியை தோழர் சேகர் அவர்கள் திறந்து வைத்தார். விழாவின் சிறப்பு அழைப்பாளராக ஆவணப்பட இயக்குநர், வழக்கறிஞர் தோழர் திவ்ய பாரதி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆண் குழந்தைகளிடம் பேச வேண்டும்; டெல்லியில் நிர்பயா என்ற பெண் பாலியல் வன்முறைக்குப் பின் சட்டங்களால் பெண்கள் மீதான தாக்குதல்கள் குறைந்துள்ளதா?” என பெண்களின் பிரச்சினைகள் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

குழந்தைகள், மகளிர் பங்கேற்ற கவிதை வாசிப்பு, பாடல்கள், நடனம், நாடகம் என நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது. முன்னதாக ஸ்டெர்லைட் மற்றும் வன்முறைகளில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னணி பெண் தோழர்கள் கெளரவப்படுத்தப்பட்டனர். பல்வேறு பகுதியைச் சேர்ந்த தோழர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டாலும், உள்ளூர் பெண்கள் அதிகம் கலந்து கொண்டார்கள். இந்த சர்வதேச மகளிர் தின விழா இப் பகுதியில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: மக்கள் அதிகாரம், தேனி மாவட்டம்.

தொகுப்பு:

உலகத்துலே பெரிய சிலை பட்டேலு … | கோவன் பாடல் !

பிப்ரவரி 23 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் ”கார்ப்பரேட் காவி பாசிசம்! எதிர்த்து நில்!” மாநாடு திருச்சியில் சிறப்பாக நடந்தது. நிகழ்வில் கோவன் தலைமையிலான ம.க.இ.க. கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. முதல் பாடலாக மோடி – அம்பானி ரஃபேல் ஊழலை அம்பலப்படுத்தும் ”உலகத்துலே பெரிய சிலை பட்டேலு… அது உள்ள போயி ஒளிஞ்சிக்கிச்சி ரஃபேலு…” பாடல் பாடப்பட்டது. அருந்ததி ராய் உள்ளிட்ட அனைத்து பேச்சாளர்களும் பார்வையாளர்களும் இப்பாடலை ரசித்துப் பார்த்தனர்.

நேரலையாக பாடப்பட்ட இப்பாடல் சில நாட்களில் கிரமமான இசை, ஒலிப்பதிவு, வீடியோவாக சில நாட்களில் வெளியிடப்படும். மேடையில் நேரலையாக பாடப்பட்ட இப்பாடல் வந்திருந்த மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

பாருங்கள்.. பகிருங்கள்.. !

 

 


இதையும் பாருங்க…

மகளிர் தினம் : வெறும் கொண்டாட்டமல்ல.. உரிமையை மீட்கும் நாள் !

மிக நீண்ட நாட்களாக பெண்கள் சார்ந்த இந்த தினத்தைப்பற்றி எழுத வேண்டும் என்றும் நினைத்தேன். சமூகத்தில் பெண்களின் நிலை குறித்த எனது கண்ணோட்டத்தின் நீட்சியே இக்கட்டுரை.

இன்று நாம் கொண்டாடும் மகளிர் தினத்தில், கோலப் போட்டி, சமையல் போட்டி, அழகுப் போட்டி  என பல போட்டிகள் பெண்களுக்காக நடத்தப்படுகின்றன.  ஊடகங்களும், வர்த்தக நிறுவனங்களின் மூலம் பெண்கள் பயன்படுத்தும் பொருளுக்கு தள்ளுபடியுடன் கூடிய வாழ்த்துகளை கூறுகின்றன. இதைத்தான் கார்ப்பரேட்டுகள்,  “ஊடகங்களின்  மூலம் சந்தைப்படுத்துதல்” என  நமக்கு சொல்லி தருகின்றன. இதுதான் உண்மையில் மகளிர் தினமா ?

இல்லை.. உண்மை அதுவல்ல. மகளிர் தினம் குறித்து அறிய அதன் தோற்றத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். 1910-ம் ஆண்டு, டென்மார்க் தலைநகரில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் கிளாரா ஜெட்கின் தலைமையிலான உலக சோசலிஸ்ட் பெண்கள் மாநாட்டில், பெண்களின் பிரச்சினைகளுக்கு சோசியலிஸ்ட் பார்வையுடன், உரிமை மீட்பதே தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில் 1917-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதியன்று பெண்கள் மற்றும் தொழிலாளர்கள், தங்கள் உரிமைகளுக்காக மிகப்பெரும் பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர்.  இந்தப் புரட்சிகர தினமே உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதில் ஏராளமான ஆண்களும் கலந்துகொண்டனர். ஆணும் பெண்ணும் சேர்த்தேதான் மகளிர் தினத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனது கருத்தும்கூட.

இதை முன்னெடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு  தீம் (Theme) முன்னெடுக்கப்படுகிறது. அதில் இந்த ஆண்டுக்கான தீம் #BalanceforBetter   என்பதாகும். ஆணும் பெண்ணும் சமம் என்கிறது.  Gender Equality (பாலின சமத்துவம்) என்பது கல்வி, கடமை, வேலை வாய்ப்பு, உரிமை என எல்லாம் இருவருக்கும் ஒன்று என்பதே.

ஆனால், எதார்த்தத்தில் சமூகம் அப்படியானது அல்ல; அது பெண் என்பவளை உடல் சார்ந்தவளாகவும், அவளது உழைப்பை பயன்படுத்தி கொள்ளவும் மட்டுமே பார்த்து வருகிறது. தற்போது இது மாறிவிட்டதைப் போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அது தவறு.

இந்தியாவில் ஆண்கள் சராசரியாக 7 மணி நேரமும், பெண்கள்  9 முதல் 11  நேரம் வரை உழைக்கின்றனர் என்றும் சமீபத்திய ஆய்வு சொல்கிறது. இதில் பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளை கணக்கில் கொள்வதில்லை என்கிறது. ஆனால், ஆணோ பெண்ணோ யார் எதைச் செய்தாலும் அது வேலையே. ஆனால், நம் சமூக அமைப்பு இதிலிருந்து வேறுபடுகிறது. உலக பாலியல் பேத பட்டியலில் (Global Gender Gap Index) ஆய்வறிக்கை  149 நாடுகள் கொண்ட பட்டியலில் வெளியிட்டுள்ளது. இதில்  இந்தியா 108-வது இடத்தை பெற்றுள்ளது. இதே போன்று மற்றுமொரு ஆய்வில் உலகில் சமத்துவத்தை பாதுகாக்கின்ற நாடுகளில் முதலிடத்தில் பெல்ஜியம் அதைத் தொடர்ந்து டென்மார்க், பிரான்ஸ், லட்டவியா, லக்ஸ்சம்பர்க் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள்தான் முன்னிலையில் உள்ளன என்பது தெரிய வந்துள்ளது. அதில் பிரான்ஸ் அபரித வளர்ச்சியை கொண்டுள்ளது என்கிறது ஆய்வின் முடிவு.

பெண்களின் பாதுகாப்பு

பெண்கள் என்றவுடன் அவர்களின் பாதுகாப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில், பெண்களின் பாதுகாப்பு பற்றிய ஆய்வின் முடிவுகள் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உலகில் பெண்கள் வாழ்வதற்கு மிக மோசமான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. போர் சூழ்ந்து உள்ள ஆப்கானிஸ்தான், சோமாலியா, பாகிஸ்தான், காங்கோ போன்ற நாடுகள் கூட நம்மைவிட பின்னால் இருக்கின்றன. இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியா, பெண்களின் மீதான பாலியல் வல்லுணர்வு, அதிகமாக இருப்பதாக தெரிவிக்கிறது. இது மிகவும் வெட்கக்கேடான ஒன்று.

பெண் கல்வி

பாதுகாப்பு இப்படி இருக்கையில் பெண் கல்வி கேள்விக்குறியாக மாறிவருகிறது. மாணவி அனிதாவின் டாக்டர் கனவைக் காவு வாங்கிவிட்டு ‘பேட்டி படோ’ என்கிறது மத்திய அரசு. உள்நாட்டு உற்பத்தியில் ஜி.டி.பி.யில் 6 சதவிதத்தில் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்று கோத்தாரி கல்விக்குழு பரிந்துரைக்கிறது. ஆனால், 2013-14 ஆண்டு 0.71 சதம் மட்டுமே கல்விக்கு ஒதுக்கப்பட்டுவருகிறது. அதை ஆளும் மத்திய  அரசு 0.45-யாக மேலும் குறைத்துள்ளது. இப்படி கல்வியும் அடிபாதாளத்தில் போய் கொண்டு இருக்கிறது. இதில் பெரும் பாதிப்பு பெண்களுக்கே.

படிக்க:
உழைக்கும் மகளிர் தினம் – சர்வதேச கருத்துப் படங்கள்
வாழத்துடிக்கும் பெண்ணினம் ! வாழ்க்கை மறுக்கும் சமூகம் !

பள்ளி கட்டிடங்களில், கழிவறைகள் உள்ளிட்ட சுகாதார கட்டமைப்பு இல்லாமல் பெண் உயர் கல்வி இடைநிற்றலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இப்போது சத்துணவையும், ஏற்கெனவே கொடுக்கப்பட்ட முட்டை போன்ற புரதச்சத்து கொடுக்ககூடிய உணவுகளை தவிர்க்கக்கூடிய தனியார் NGO-விடம் கொடுக்க அரசு முயன்று வருகிறது. மேலும், கடந்த மாதம் 5 மற்றும்  8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்று அறிவித்து எதிர்ப்புகள் கிளம்பியபின் அதை ரத்து செய்தது. இந்த ஆண்டு மட்டுமல்லாமல் வரும் ஆண்டும் பள்ளிக் கட்டமைப்பை, ஆசிரியர் மேம்படுத்தல், புதிய கற்றல் முறை போன்று கற்றலை மேம்படுத்த வேண்டுமே தவிர குழந்தைகளின் தலையில் சுமையை ஏற்றுவது தவறு.

இவ்வாறு செய்வதன் முலம் பெண் கல்வியை கேள்விக்குறியாக்குகிறது.  இப்படி மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல்  செயல்படுகிறது அரசு. ஆனால், இதற்கெல்லாம் மாறாக கேரளா இடதுசாரி அரசு செயல்பட்டு வருகிறது. அங்கு மக்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற்றி வருகின்றனர்.

பெண்களின் வேலை மற்றும் ஊதியம்

உலக அளவில் இந்தியாவில்தான் ஊதிய பாகுபாடு பெரும் அளவில் இருப்பதாக International Labour Organization (ILO) 2018-19 ஆண்டின்  ஆய்வு அறிக்கை Business Standard இதழில் கடந்த நவம்பர் மாதம் வெளி வந்துள்ளது. 73 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியாவில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக ஊதியம் பெறவில்லை எனவும் அது  34% ஆண்களை விட பெண்கள்  குறைந்த ஊதியத்தை வாங்குகின்றனர் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதிலும் பகுதி நேர வேலை செய்யும்  16% பெண்கள், ஆண்களை காட்டிலும் குறைவாக ஊதியம் பெறுகின்றனர். இப்படி கல்வித்துறையில் பெண்கள் முன்னேற்றம் அடைந்து வரும் வேளையிலும் இந்த இடைவெளி தொடர்ந்து கொண்டேதான் வருகிறது. கடந்த 2017-18-ம் ஆண்டு 20%-ஆக இருந்த இருந்த பாலின ஊதிய இடைவெளி (Gender Wage Gap ), இந்த 2018-19-ம் ஆண்டும் தொடர்கிறது.

இப்படி கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, சம ஊதியம் போன்ற எல்லாவற்றிலும் போராட வேண்டிய நிலையில் உள்ள இச்சூழலில் மகளிர் தினக் கொண்டாட்டத்தை முன்னெடுப்போம் நம் உரிமைகளை கோரி …

சிந்துஜா சமூக ஆர்வலர்.

அதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி – புதிய கலாச்சாரம் மார்ச் மின்னிதழ் !

அதிமுக குற்றக்கும்பல் ஆட்சி

டந்த ஓரிரு ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த வருமானவரித் துறை சோதனைகளின் பட்டியல் மிக நீளமானது. கரூர் அன்புநாதன், சேகர் ரெட்டி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், டி.டி.வி தினகரன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், கொடநாடு, போயஸ் இல்லம், கிறிஸ்டி நிறுவனம் மற்றும் எஸ்பிகே நிறுவனம் போன்றவற்றில் எடப்பாடி, பன்னீர்செல்வத்தின் பினாமிகளும் அடக்கம்.

இவை தவிர கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கண்டெய்னர்களில் கடத்தப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்கள் சிக்கின. மேலும், துணை ராணுவப் படையை தலைமைச் செயலகத்தைச் சுற்றிலும் பாதுகாப்புக்கு நிறுத்தி, தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் பணமும் தங்கமும் கைப்பற்றப்பட்ட செய்திகள் வெளியாகின. ஆனால் இன்று வரை இச்சோதனைகளின் மூலம் பிடிபட்ட கருப்புப் பணத்தை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எந்தத் தகவலும் இல்லை. இந்தச் சோதனைகள் அனைத்துமே ஆளும் எடப்பாடி – பன்னீர் கும்பலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க, மோடியால் மேற்கொள்ளப்படுபவை என்கின்றன தமிழக எதிர்க்கட்சிகள்.

ஜெயா எதிர்த்து வந்த மத்திய அரசின் நீட், உதய் உள்ளிட்ட திட்டங்களை எடப்பாடி அரசு ஆதரிக்கத் துவங்கியதை இதற்கு சான்றாகக் குறிப்பிடலாம். கூடவே ஜி.எஸ்.டி வரிவிதிப்பை எதிர்க்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டது, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவை ஆதரித்தது, மோடி அரசைக் காப்பாற்றும் முகமாக பாரளுமன்றத்தில் கூச்சலிடுவது என ஒன்று பாக்கியில்லை .

மறுபுறம் போராடும் மக்களை ஒடுக்குவதிலும் எடப்பாடி அரசு முன்னணியில் இருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கியது; அரசு ஊழியர் போராட்டம், போக்குவரத்து ஊழியர் போராட்டம் அனைத்தையும் சதி மற்றும் மிரட்டலால் அடக்கி ஒடுக்கியது.

பொதுவாக திட்டங்களைக் கொண்டு வந்துதான் ஊழல் செய்வார்கள். ஆனால், ஊழலுக்காகவே திட்டங்களைக் கொண்டு வருவதுதான் அதிமுக அரசின் பாணி. இந்த ஊழல் கும்பலை அடியாளாக்கி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி அமைத்திருக்கிறது பாஜக. தமிழக மக்களின் விரோதியாக பெருத்து நிற்கும் எடப்பாடி – ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக கும்பலின் யோக்கியதையை தோலுரித்துக் காட்டுகிறது இந்தத் தொகுப்பு.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

***

அதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி – புதிய கலாச்சாரம் மார்ச் 2019 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்துங்கள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

” அதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • எத்தனை அடிச்சாலும் எடப்பாடி தாங்குவது எப்படி ?
  • ரேஷனை ஒழித்துக்கட்டு ! பாஜக-வின் கட்டளைக்கு எடப்பாடி போட்ட சலாம் !!
  • அதிமுக + பாஜக + போலீசு + புகையிலை = குட்கா கூட்டணி !
  • போயஸ் : பொறுக்கித்தனத்தில் விஞ்சி நிற்பது அத்தையா மருமகளா ?
  • பத்தாயிரம் சமூக விரோதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி சட்டத்தை நிலைநாட்டிய எடப்பாடி !
  • தமிழகத்தைக் காக்க அதிமுகவை அழி !
  • மாணவி அனிதாவைப் படுகொலை செய்த மோடி – எடப்பாடி அரசுகள் !
  • அம்மாவின் ஆட்சியில் கொழிக்கும் டாஸ்மாக் – மணற்கொள்ளை !
  • அதிமுக – பாஜக: திருடன் போலீசா, திருட்டு போலீசா ?
  • ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து : அதே ஆம்பூர் பிரியாணி, அதே தேர்தல் ஆணையம் !
  • வருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக
  • எடப்பாடி ஆட்சியில் கொசுக்களின் ராஜ்ஜியம் ! தமிழகத்தில் பரவும் டெங்கு !
  • எடப்பாடியும் ஜெயலலிதாவும் ஒண்ணு ! இதை அறியாதவன் வாயில மண்ணு !
  • ஜெயா – சசி மட்டுமல்ல அதிமுகவே ஒரு குற்றக் கும்பல்தான்!

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

 

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.

வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

Price range: ₹1,500.00 through ₹6,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

 புதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

5 மாநில தேர்தலில் பாஜக தோல்வி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

நூல் அறிமுகம் : இராமாயண ஆராய்ச்சி ( பால காண்டம் )

”குடி அரசு” இதழில் சந்திரசேகரப் பாவலர் என்பவரால் ”இதிகாசங்கள்” என்னும் தலைப்பின் கீழ் எழுதப் பெற்று வெளிவந்த இராமாயண ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொகுக்கப் பட்டிருக்கிறது.

இதிகாசங்கள் என்ற சொல்லுக்குப் பொருள், பழைய கதைகள் என்பது. பழைய கதைகளெல்லாம் இப்பொதுத் தலைப்பின்கண் வருமோ என்றால் அவை வரா. இராமாயணம், பாரதம் என்ற இரண்டுமே இதிகாசங்களெனப் பெயர் பெறுவன. இவற்றை நன்றாக ஆராய்ந்து படிப்பதால், பழைய காலத்திலிருந்த ஆரியர்களது பழக்க வழக்கங்களும், நீதி முறைகளும், இன்னும் அவர்களைப் பற்றிய ஒழுக்க முறைகளும் நன்கு புலனாகும். ஆதலின் ஈண்டுத் தலைப்பிட்டு அவ்விரண்டு நூல்களையும் ஆராயத் தொடங்குகின்றோம். இவ்வாராய்ச்சியைப் படிப்போர், இதனை ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்க வேண்டுகின்றோம். முதற்கண் இராமாயணத்தை எடுத்துக் கொள்வோம்.

இராமாயணம் என்பது இராமன் என்ற ஆரிய மன்னவனின் வரலாறு. தற்காலம் இவ்வரலாற்றை அறியாதவர் இலர். இது அவ்வளவு தூரம் ஆரியர்களால் தமிழ்நாட்டில் பரப்பப் பெற்றுள்ளது. நம் தமிழ் மக்களில் பெரும்பாலோர் இவ்விராம சரித்திரம், நம்மவர்களைச் சேர்ந்த சரித்திரமென்றும், இராமபிரான் திருமாலின் அவதாரமென்றும், அவன் நம் தெய்வமென்றும் நினைத்துப் பாராட்டும்படி ஆரியர் செய்து விட்டனர். இப்போது இச்சரித்திரம் பல ஊர்களில் வித்வான்கள் படிக்க, பலர் கூடிப் பக்தி சிரத்தையோடும் கேட்கப் பெறுகின்றது. அவ்வாறு படிக்கும் வித்வான்களும், கேட்கும் அறிஞர்களும் இக்கதையின் உண்மையை அறிய வேண்டிக் கொள்கின்றோம். அவர்கள் தயவு செய்து கீழே வரும் ஆராய்ச்சிக் கட்டுரையைக் கவனித்துப் படிக்கக் கேட்டுக் கொள்கிறோம். அவர்கள் படிப்பதெல்லாம் தமிழ் மகனாகிய பெரும் புலவர் கம்பர் பாடிய இராமாயணக் கதையே. கம்பர் தாம் பாடியுள்ள இராமாயணக் கதையைப் படிப்போர், அது முழுதும் உண்மைதானா என்பதை அறிந்து கொள்வதற்காக, வட மொழியிலுள்ள இராமாயணத்தையும் படிக்க வேண்டுமென்று அதன் பெருமையை முதலில் எடுத்தோதுகிறார். ஏனென்றால், கம்பர் தாம் பாடியுள்ள பாடல்களில் சிற்சில இடங்களில் தம் கதையை மாற்றி எழுதியிருக்கிறார். புலவர்களில் மிகச் சிறந்தவரிலொருவராகிய கம்பர் இக்கதையைப் பாடிய பின்னரே இது தமிழ் மக்கள் பெரும்பாலோரால் படிக்கப் பெற்றது. (நூலிலிருந்து பக்.10-11)

குரங்குகளோடு அவன் கூடி வாழ்ந்தது அவன் பெற்ற சாபப் பயனேனும், அவன் வாலியை மறைந்து நின்று கொன்று சகோதரத் துரோகியாகிய சுக்ரீவனோடு நட்பு கொண்டது. பரதனாகிய தனது சகோதரனுக்குத் துரோகம் நினைத்த அவ்விராமனுக்கு இயல்பானதே. இதுபோலவே சகோதரத் துரோகியாகிய விபீஷணனிடம் இராமன் நட்புக் கொண்டதும் அவனுக்கு இயல்பும் இராஜ தந்திரமுமாம். இவ்வாறாக இவ்விருவருடனும் நட்பு கொண்டதை இராமனுக்குப் பெருமையானதென மயங்கினார் சாமிநாதன். 3 பேராசைக்காரனும் சகோதரத் துரோகியுமாகிய விபீஷணனைத் தன்பக்கம் சேர்க்காதிருந்தால், இராமன் இராவணனைக் கொன்றிருத்தல் இயலாது.

படிக்க:
விழுப்புரம் கெடார் : மருத்துவர் இல்லாததால் இறந்து பிறந்த குழந்தை – ஆபத்தான நிலையில் தாய் !
விரைவில் வெளிவருகிறது ! கார்ப்பரேட் – காவி பாசிசம் புதிய நூல் !

“இராவணனுடைய நெஞ்சில் அம்பெய்து கொல்” எனக் கூறி அருகே நின்றானே பாவி விபீஷணன்! அநியாயம்! அநியாயம்! இன்று போய் நாளை வாவென இராமன் கூறியதாகக் கூறுவது, இராமனால் பற்றுடைய வால்மீகியும் கம்பரும் என்பதைச் சாமிநாதன் உணர்வாராக ! இனத்துரோகமும் இனத் துரோகச் சேர்க்கையும்தான் சாமிநாதனுக்குச் சமத்துவமாகத் தோன்றுகின்றன போலும். தனக்கு உதவி செய்த சடாயுவுக்கு மனமிரங்கியது உலக இயற்கையே. நல்லுணவு கிடையாது திண்டாடிய இராமனுக்குச் சபரி நல்லுணவு தர அதை அவன் ஆவலுடன் வாங்கி உண்டதும் அவனுக்கு ஒரு பெருமையே! நன்றாகச் சாப்பிட்டதை ஒரு பெருமையாகக் காட்டியது சுவாமிநாதனுக்கு ஒரு பெருமையே. இவற்றால் இராமனுடைய துரோகச் செயல்கள் இனிது புலனாகும். இராமன் சூத்திரனைக் கொன்றது அதிபாதகமே, அதனால், இராமன் சிறந்த அதர்மராஜனே என்பதும் விளங்குகிறது. இனி சீதையைப் பற்றி அவர் கூறுவதைக் கவனிப்போம்.

இராமன் சீதையின் கற்புடைமையில் அய்யுறுகிறான். சீதையை இராவணன் பற்றி மடியில் வைத்துப் போனதும் அவனுடைய வசமாக அவள் பத்துமாதம் வாழ்ந்ததுமே அவ்வையுறவுக்குக் காரணம். சீதையும் தன்னுடல் இராவணன் வசமிருந்ததை ஒப்புக் கொள்ளுகிறாள்.

இராமன் அரசாளும் நாளையிலே ஒரு வண்ணான் (சலவைத் தொழிலாளி) அந்நியனோடு வாழ்ந்த சீதையை இராமன் சேர்த்துக் கொண்ட இழிசெயலை மிக இழித்துப் பேசுகிறான். அதனால் மானம் பொறுக்க மாட்டாமல் இராமன், நிறைந்த கர்ப்பிணியாக இருந்த சீதையைக் காட்டுக்கு வஞ்சகமாக அனுப்புகிறான். இவ்விழிந்த செயலைப் பாராட்டிச் சாமிநாதன், “வண்ணான்தானே என்று அலட்சியம் செய்யாமல் அவனும் ஒரு பிரஜா உரிமையுடையவனெனக் கருதி, அவன் சொல்லுக்கும் தான் கட்டுப்பட வேண்டுமென்னும் காரணத்தால், தன்னுடைய மனைவியாகிய நாட்டின் அரசியைக் காட்டிற்கனுப்பிய நன்னடத்தைகளும்” என்று எழுதினார். பிரஜா உரிமை பற்றியும் அரசாளும் முறை பற்றியும், நன்னடத்தை பற்றியும் இச்சாமிநாதனுக்குள் அறிவு மிக அழகியதே. இவ்விழிந்த ஆராய்ச்சியையும் தமிழ்நாடு’ வெளிப்படுத்தியதே! அறிவாளர் நகையாடக் கூடிய இத்தகைய கட்டுரைகளை வெளிப்படுத்துவதிலும் நல்ல கட்டுரைகள் கிடையாது போலும். வெள்ளைத் தாள்களை மடித்துச் சந்தாதாரர்களுக்கு அனுப்பின் மிக நலமாக இருக்குமே.

” வண்ணான் ஒருவன் தன் மனைவியின் நடத்தையில் அய்யுற்றது காரணமாகத் தன் மனைவியை – அதிலும் பூரணக் கர்ப்பிணியை ஒருவன் காட்டுக்கு அனுப்பினானென்றால், அவனைப் போலும் அறிவில்லாத முழு மூடன் ஒருவன் இவ்வுலகத்தில் இதுகாறும் தோன்றியிருப்பானா என்பதைச் சாமிநாதன் சிந்திப்பாராக!

இராமன் இதனால் மிகவும் முழுமூடனாதல் வேண்டும். அன்றியும் இரக்கமற்ற பாவியுமாதல் வேண்டும். தன்னுடைய மனைவியும் பூரணக் கர்ப்பிணியுமாகிய சீதையென்ற ஒரு பெண்ணிடத்திலே இவ்வாறு மிருகத்திலும் கேடு கெட்ட மிருகம் போல நடந்துகொண்ட இராமன், தவம் செய்து கொண்டிருந்த ஒரு சூத்திரனுடைய தலையை வெட்டினானென்பது ஒரு ஆச்சரியமன்று. விவேகானந்தர் கூறுகிறாரென நம்பும் இடைச் செருகலெனும் நம்பிக்கையைச் சாமிநாதன் விட்டொழிப்பாராக! மேலும், சீதை கற்பிழந்தவளாகாதிருந்தால், அவள் கணவனாகிய இராமன் அய்யுற்றதோடு நில்லாமல் உறுதி கொண்டு அவளைக் காட்டுக்கு அனுப்பியிரானன்றோ ? அவரது பாரதக் கூற்றாராய்ச்சியை வரும்போது எழுதுவோம். இது இடனன்றாம். ( நூலிலிருந்து 83 – 84 )

நூல்: இராமாயண ஆராய்ச்சி ( பால காண்டம் )
ஆசிரியர்: பண்டித இ.மு. சுப்பிரமணியபிள்ளை

வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்,
பெரியார் திடல், 50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007.
தொலைபேசி: 8428 455 455
மின்னஞ்சல்: periyarbooks.in@gmail.com

பக்கங்கள்: 84
விலை: ரூ 20.00 (ஆறாம் பதிப்பு)

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: periyar books

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட தேமுதிக விஜயகாந்த் : யார் காரணம் ? கருத்துக் கணிப்பு

ரசியலை நொறுக்குத்தீனி போல கொடுப்பதற்கு தமிழ் ஊடகங்கள் எப்போதும் காத்திருக்கின்றன. அந்த காத்திருப்பில் தேமுதிக விஜயகாந்த் ஒரு முக்கியமான தீனி. டாஸ்மாக்கும் சால்னா கடையும் பிரிக்க முடியாதது போல தமிழ் ஊடகங்களையும் கேப்டனின் நியூசையும் பிரிக்க முடியாது. இது இன்று நேற்று மட்டுமல்ல கடந்த 20 ஆண்டுகளாகவே நடந்து வரும் வரலாறு.

விஜயகாந்த் பிறந்த ஆண்டு 1952. அப்போது அந்த குழந்தையின் பெற்றோர்கள் பின்னொரு நாளில் நமது குழந்தைதான் வருங்கால முதலமைச்சர் என்ற முழக்கத்தினை கேட்கும் என்பதை நம்பியிருக்க மாட்டார்கள். இந்த பணக்கார விவசாய குடும்பத்தை சேர்ந்த அந்த குழந்தை வளர்ந்த விதம் ஒரு பண்ணையார் வீட்டு முறையில்தான்.

“தமிழகத்தில் வெண்தாடி வேந்தர் என அழைக்கப்படுபவர் தந்தை பெரியார் அவரைப் போலவே முற்போக்கு சிந்தனை உள்ளவர் என்பதால் இந்தியாவின் வெண்தாடி வேந்தர் என நரேந்திர மோடியை அழைக்கலாம்” என்று இந்த பொன்மொழியை தமிழ் கூறும் நல்லுலகிற்கு தந்தவர் சாட்சாத் கேப்டன் தான். தாடிக்கு தாடி வெள்ளைக்கு வெள்ளை உருவத்திலேயே எதுகை சந்தத்தை கண்டுபிடித்தவர் இந்த விஞ்ஞானி. மோடியை முற்போக்கு சிந்தனை உள்ளவர் என்று சொல்வதற்கு ஒரு முரட்டு முட்டாள்தனம் வேண்டும். அது கேப்டனின் டி.என்.ஏ-விலேயே இருக்கிறது.

திரையுலகில் வாய்ப்பு பறிபோனதும் இனி அவர் கதாநாயகனாக நடிக்க முடியாது என்று ஆன அன்றே தமிழ் அரசியல் உலகிற்கு சிறு சனி பிடித்தது எனலாம். மரத்தையோ குளத்தையோ ஃபாரின் பூங்காக்களையும் சுற்றிச் சுற்றி நாயகியை தூக்கி டூயட் பாடுவதற்கு விஜயகாந்தின் வயிறு பெரும் பிரச்சனையாக இருந்ததால் (கோட்டு போட்ட போதும் கூட) அவருக்கே கூட இனிமேல் நாம் நாயகனாக நடித்தால் நானே கூட பார்க்க மாட்டேன் என முக்தி அடைந்து இருக்கலாம்.

1970-களின் இறுதியில் “இனிக்கும் இளமை” திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்வில் விஜயகாந்த் துவக்கினார். எண்பதுகளில் கோபம் கொண்ட சிவப்பு இளைஞனாக போராடினார். தொண்ணூறுகளில் அந்த சிவப்பு கரைந்து காக்கியாகி நேர்மையான போலீஸ் அதிகாரியாக உலா வந்தார், உரையாற்றினார். இரண்டாயிரத்தில் அந்த நேர்மை எக்ஸ்ட்ரா லார்ஜாக விரிந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடும் ராணுவ தளபதியாக பிரமோஷன் ஆனார். இறுதியில் விருதகிரி எனும் சூப்பர் கோமாளியாக அவரது திரையுலக வாழ்வு முடிந்து போனது.

படிக்க:
கேப்டன் பீரங்கியிலிருந்து வெடிப்பது குண்டா குசுவா ?
♦ விஜயகாந்த் – தே.மு.தி.க: “எங்கே செல்லும் இந்தப் பாதை?”

இதன் தொடர்ச்சியாக அவர் கட்சி ஆரம்பிக்கிறார். தற்போது கட்சியின் நிலையும்கூட விருதகிரியாகத்தான் வந்து நிற்கிறது. அவர் கட்சியை துவக்கியது ஒரு பெரும் சிரிப்பு திரைப்படத்திற்கு உரிய கதை கொண்டது. 2005 செப்டம்பர் 14 அன்று தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற எந்த பொருளுமற்ற வார்த்தைகளை அதுவும் குலதெய்வத்தின் முன் சீட்டு குலுக்கிப் போட்டு தெரிவு செய்து, ராகு காலம் – எமகண்டம் பார்த்துத்தான் இந்தக் கட்சியை விஜயகாந்த் ஆரம்பித்தார். ஆக இந்த கட்சியை ஆரம்பித்த நேரத்தையும் பெயரையும் ஜோசியர்களும் வாஸ்து நிபுணர்களும் தான் தீர்மானித்திருந்தார்கள்.

இடையில் கெடுவாய்ப்பாக அவரது திருமண மண்டபம் மேம்பாலம் கட்டுவதற்காக கொஞ்சம் இடிக்கப்பட்டது. அது இடிபடாமல் காக்க நிறைய பேரிடம் கெஞ்சிப் பார்த்தார் விஜயகாந்த். அது முடியவில்லை என்ற பொழுது என் மண்டபத்தை இடிக்கிறாயா என்ன செய்கிறேன் பார் என்று கருணாநிதிக்கு சவால் விட்டு கட்சியை ஆரம்பித்தார். ஒரு கல்யாண மண்டபம் ஒரு அரசியல் கட்சி தோன்றுவதற்கு காரணமாக இருந்தது என்ற மாபெரும் வரலாறு தமிழகத்தில் மட்டும் தான் நடக்க முடியும்.

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கேப்டன் ஏழு ஏழரை அல்லது எட்டு சதவீத வாக்குகளை பெற்றார். உடனே பார்ப்பன ஊடகங்களும் துக்ளக் சோ போன்ற தரகர்களும் இந்த வெற்றியை மாபெரும் வெற்றியாக சித்தரித்து கேப்டனை உசுப்பி விட்டனர். அப்போதே அவரை அதிமுக வசம் கூட்டணியில் சேர்க்க வைக்க இந்த தரகர்கள் பெரும் பாடுபட்டனர்.

அந்த தேர்தலில் கேப்டன் சரக்கடித்துவிட்டு பேசுகிறார் என்ற உண்மையை ஜெயலலிதா சொல்ல விஜயகாந்தும் நீ தான் கூட இருந்து ஊட்டி கொடுத்தாயா என்று பதிலடி கொடுத்தார். இத்தகைய மாபெரும் தத்துவ போராட்டங்கள் தான் அன்றைய பத்திரிக்கைகளின் கவர் ஸ்டோரியாக தமிழக மக்களின் பொழுதைத் தின்றது.

அவரது 8 சதவீத வாக்குகளை பார்த்து திமுக அதிமுக போன்ற கட்சிகளில் செட்டிலாக முடியாத பண்ருட்டி போன்ற பழம் பெருச்சாளிகள் கேப்டன் கட்சியில் வந்து குவிந்தனர். அப்போது விஜயகாந்த்தோடு பிரச்சாரக் கூட்டங்களில் பயணம் செய்த பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆருக்கு பிறகு கேப்டனுக்கு தான் தமிழக மக்கள் ஆங்காங்கே ஆயிரக்கணக்கில் திரண்டு வரவேற்பதாக ஆனந்தவிகடனில் பதிவு செய்திருக்கிறார். இது போதாதா கேப்டன் மற்றும் கேப்டன் குடும்பம் குப்புறப் படுத்துக் கொண்டு கனவு காண்பதற்கு?

படிக்க:
நேற்று அண்ணாயிசம் ! இன்று அண்ணியிசம் !!
புரட்சி அண்ணி பிரேமலதா – தமிழகத்தின் புதிய சீக்கு !

2006 சட்டமன்றத் தேர்தலில் அவர் விருத்தாசலத்தில் வென்று பாமக முகத்தில் கரியைப் பூசினார். இதுவும் ஒரு மாபெரும் சாதனை என்பதை நாம் ஒத்துக் கொண்டாக வேண்டும். அந்த அளவுக்கு கேப்டனின் திரைப்பட வசனங்களை உண்மையென நம்பிய பரிதாபத்திற்குரிய மக்கள் இருக்கத்தான்  செய்தார்கள்.

இடையில் பண்ணையார் தனது வீட்டு பண்ணையார் அம்மா பிரேமலதாவை மகளிர் அணி தலைவியாக அல்லது கட்சிக்கே செயல் தலைவர் போன்று முன்னிறுத்தினார். அதுபோக கேப்டனின் மச்சான் சதீஷ் இளைஞர் அணித் தலைவராக பொறுப்பேற்றார். ஆக இந்த பண்ணையார் குடும்பம் மொத்த கட்சியையும் கையில் வைத்துக் கொண்டு இயங்கியது. மற்ற கட்சிகளில் வாரிசு முறை என்பது தந்தை அல்லது தாய் மண்டையைப் போட்ட பிறகோ அல்லது ஓய்வு பெற்ற போதோ நடக்கும். இங்கு மட்டும்தான் ஒரே ஷாட்டில் ஒரு  குடும்பம் ஒட்டு மொத்த கட்சியையும் கைப்பற்றிக் கொண்டது.

இருப்பினும் இவர்கள் தலைமைக் கழகம், தலைமைக் கழகத்தின் அறிவிப்பு, அது இது என்று ஒரு தொழிற்முறை கழகம் போல பேசுவார்கள். இதையெல்லாம் ரசிக்கும் அளவுக்கு தமிழக மக்களிடம் நகைச்சுவை உணர்வு மிளிரவில்லை என்பது ஒரு சோகமான உண்மை.

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !கேப்டனின் பண்ணையார் குடும்பம் மட்டுமல்ல அந்தக் கட்சியே மூடநம்பிக்கையில் தினமும் மூன்று முறை குளித்துவிட்டுத்தான் கட்சி பணி ஆற்றும் என்பது ஒரு கொசுறு செய்தி. சான்றாக சேலத்தில் விஜயகாந்த் குடும்பத்தினர் தமது கைக்காசை போட்டு நடத்திய மாநாட்டிற்கு போவோம். அங்கே மாநாட்டுத் திடலில் பனமரத்துப்பட்டி ஒன்றிய நிர்வாகிகள் கருப்பு நிற ஆட்டுக்கடா பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதே போன்று வேறு சில பகுதிகளில் மாநாடு சிறப்பாக நடைபெற்றதற்காக 12 கிலோ எடை கொண்ட கருப்பு ஆடுகளை வெட்டி ரத்தத்தை மண்ணில் விட்டு பலி கொடுத்தனர்.

பிறகு ஜெயலலிதாவுடன் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்தார். எதிர்க்கட்சி தலைவராக ஆனார். அப்போதே அவர் அடுத்த தேர்தலில்ல தான்தான் முதலமைச்சர் என எண்ணியிருக்க வேண்டும். இது தண்ணி போடாமலே வந்த கருத்து என்பதை நினைவில் கொள்க. பிறகு புரட்சித் தலைவியோடு புரட்சி கேப்டன் சண்டை போட்டார். 2014 தேர்தலில் மக்கள் நல கூட்டணியாக காமெடி செய்தார். தற்போது 2019 பாராளுமன்ற தேர்தலில் என்ன செய்வது என்று அவருக்கே தெரியவில்லை. ஏனெனில் அவரது அரசியல் வாழ்க்கையில் ஆக்சன் டூயட் காமெடி சோகம் டிராமா என அனைத்தும் முடிந்து விட்டதால் வர இருக்கின்ற எபிசோடில் என்ன செய்வது என தெரியவில்லை.

கேப்டனின் தற்போதைய திரிசங்கு நிலைக்கு புரட்சி அண்ணி பிரேமலதா ஒரு முக்கியமான காரணம். கேப்டன் எப்போதெல்லாம் நிதானம் இழக்கிறாரோ அப்போதெல்லாம் கடிவாளத்தை இந்த புரட்சி அண்ணிதான் எடுத்துக் கொள்வார். யோகா தினத்தில் ஆசனங்களை செய்யாமல் விஜயகாந்த் திணறிய போதும் சரி, பொதுக்கூட்டங்களில் உணரும் போதும் சரி இவர்தான் சரி செய்வார். ஆனால் விஜயகாந்துக்கு இருக்கும் ஒரு மக்கள் தொடர்பு கூட இந்த புரட்சி அண்ணிக்கு கிடையாது. ஒரு வகையில் இவர் தேமுதிகவின் ஜெயலலிதா என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !“தமிழகத்தின் வசந்த காலமே, எங்கள் விழாக்கோலம் தமிழ் வீர மங்கையே, புரட்சி அண்ணியே என்று தேமுதிகவினர் இவருக்கு ஆங்காங்கே பிளக்ஸ் பேனர் வைத்து உசுப்பேத்தினர். தற்போது தேமுதிக என்ற கம்பெனி புரட்சி அண்ணியின் ரிமோட் கண்ட்ரோலில் தான் உள்ளது. சென்ற தேர்தலின்போதும் இவர்தான் நட்சத்திர பேச்சாளர்.

இந்த நிலையில் சென்ற தேர்தலில் டங்குவார் அறுந்து கிழிந்தாலும் கேப்டன் ஃபேமிலி தாங்களும் ஒரு கமிஷன் வாங்கக் கூடிய அளவுக்கு வலிமை உள்ள கட்சி தான் என்று நினைக்கின்றனர். எனவேதான் இந்த தேர்தலில் யாருடன் கூட்டணி சேருவது என திமுக அதிமுக என்று மாறி மாறி மாபெரும் ஆராய்ச்சி செய்து சதியாலோசனைகள் செய்து தரகர்கள் பலரை இறக்கி முயற்சி செய்தனர்.

அவர்களுக்கு தேவை சீட்டு மற்றும் நோட்டு. இதில் யார் அதிகம் தருவார்கள் என்பதில் கேப்டன் கம்பெனி ரொம்பவும் மிகையாக நடந்து கொண்டது. தனது கம்பெனியில் எவ்வளவு வியாபாரம் நடக்கிறது, எவ்வளவு வாடிக்கையாளர்கள் வருகிறார்கள் என்பதைத் தாண்டி ஒரு பெட்டிக் கடைக்காரர் ஒரு சூப்பர் மார்க்கெட் கடை போல நினைத்துக்கொண்டு கடன் வாங்கினால் எப்படி இருக்கும்?

படிக்க:
சில பைன் மரங்களையும் ஒரு காகத்தையும் குறி பார்த்து அழித்த மோடியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 !

பாஜகவை பொருத்த வரைக்கும் கேப்டனின் ஓட்டு 8 சதவீதத்தில் இருந்து இரண்டு மூன்று என குறைந்தாலும் அது தங்களுக்கு தேவை, எப்படியாவது தமிழகத்தில் சில பல சீட்டுகள் கூட்டணியோடு ஜெயிக்க வேண்டும் என்று வெறியாக இருக்கின்றனர். ஆகவேதான் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கேப்டன் வீட்டுக்கு சென்று சால்வை போட்டு அவரிடம் பலமுறை பேசியிருக்கிறார். பதிலுக்கு கேப்டன் பேசினாரா என்று கேட்காதீர்கள். கேப்டன் சேரில் அமர்ந்து இருந்தார் என்றாலும் பேச்சுவார்த்தையை சதீஷும் புரட்சி அண்ணியும்தான் செய்திருக்கிறார்கள். கூடவே இவர்கள் திமுகவிலும் ஒரு நூல் விட்டு பார்த்திருக்கிறார்கள் இப்படி மாறி மாறி பேசுவது குறித்து வெட்கம் சூடு சொரணை இவர்களுக்கு இல்லை. அந்த வகையில் இந்த கோமாளித்தனத்தின் தர்க்க ரீதியாக கேப்டனின் கட்சி “எங்கே செல்லும் இந்த பாதை” என்னும் முக்தி நிலைக்கு வந்திருக்கிறது.

இருப்பினும் கடைசியில் கேப்டன் குடும்பம் அதிமுக கூட்டணியில் பாஜக-வின் உத்தரவிற்கு இணங்க மூன்றோ நாலோ சீட்டில் ஒதுங்கி விடும். ஆனால் ஒரு தேர்தல் கூட்டணிக்காக இப்படி சந்தி சிரிக்கும் அளவுக்கு நடந்து கொண்டது குறித்து இவர்களுக்கு கூச்சமே இல்லை. தேர்தல் அரசியலில் இத்தகைய கூத்துக்கள் நடக்கும் போது பாஜக செய்யும் சதிச் செயல்களின் பரிமாணம் எப்படி இருக்கும்? விஜயகாந்தோ, பாமக ராமதாசோ இன்று மோடி துதி பாடுகிறார்கள். நாளை மோடி மீண்டும் வெற்றி பெற்று வந்து முற்போக்காளர்களை வேட்டையாடினால் இவர்களும் எச்.ராஜாவோடு இணைந்து நம்மை தேச விரோதிகள் என்று முத்திரை குத்துவார்கள்!

கேள்வி : சொந்த செலவில் தேமுதிக விஜயகாந்த் சூனியம் வைத்துக் கொண்டதற்கு  யார் காரணம் ?

கேப்டன் குடும்பம்
பாஜக
அதிமுக
திமுக
ஊடகங்கள்

(பதில்களில் இரண்டைத் தெரிவு செய்யலாம்)

*****

டிவிட்டரில் வாக்களிக்க:

*****

யூ-டியூபில் வாக்களிக்க:

சொந்த செலவில் தேமுதிக விஜயகாந்த் சூனியம் வைத்துக் கொண்டதற்கு  யார் காரணம் ?