Saturday, June 27, 2026
முகப்பு பதிவு பக்கம் 173

தீபாவளி கதை! | தந்தை பெரியார்

தீபாவளி கதை பற்றி சுமார் 10 வருடங்களுக்கு மேலாக எழுதியும் பேசியும் வருகிறோம். ஆதலால் விரித்து எழுத வேண்டியதில்லை என்றாலும் குறிப்பு கொடுக்கின்றோம்.

இது தீபாவளி கதை. மிகவும் அதிசயமானதும், ஆபாசமானதும், இழிவும், ஈனத்தன்மையும் பொருந்தியதுமாகும்.

மகாவிஷ்ணுக்கு வாயில் காப்பாளராக இருந்த இரு காவலர்கள் உத்தரவின்றி உள்ளேவிட மறுக்கப்பட்ட இரண்டு பிராமணர்கள் சாபத்தால் இரணியன், இரணியாட்சன் என்று இரண்டு ராட்சதர்களாகப் பிறந்து விஷ்ணுவால் கொல்லப்பட்டு சீக்கிரம் மோட்சமடைய வேண்டுமென்று ஏற்பட்டுவிட்டதற்கிணங்க மூத்தவன் தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தான். இளையவன் பூமியை பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு ஓடி சமுத்திரத்திற்குள் நுழைந்து கொண்டான். தேவர்கள் வேண்டுகோளால் மூத்தவனைக் கொல்ல மகாவிஷ்ணு நரசிம்ம (சிங்க) அவதாரமெடுத்து வந்து கொன்றுவிட்டார். இளையவனான இரண்யாட்சனைக் கொல்ல மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்து வந்து சமுத்திரத்திற்குள் பாய்ந்து இரண்யாட்சனைக் கொன்று பூமியைக் கொண்டுவந்து பழையபடி விரித்துவிட்டு போய்விட்டார்.

இதுவரை கதையில் அதிசயம் அதாவது பொய்யும் புளுகும் இருக்கலாமே தவிர, இதில் ஆபாசமில்லை. இனிமேல் நடப்பதுதான் ஆபாசம்.

படிக்க : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: எடப்பாடி முதல் மக்களை சுட்ட போலீசு வரை அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் | மருது வீடியோ

என்னவென்றால் விஷ்ணு பல அவதாரம், பலரூபம் எடுத்து இருக்கிறார். அவற்றுள் பெரும்பாகம் ஆபாசமாகவே முடிகின்றன.

விஷ்ணு, அசுரர்களால் கடைந்து எடுக்கப்பட்ட அமிர்தத்தை வஞ்சித்து தேவர்களுக்குக் கொடுப்பதற்காக அசுரர்களை ஏமாற்ற மோகினி அவதாரமெடுத்தார். அந்தக் காரியம் தீர்ந்த உடன் சிவனுக்கு அந்த மோகினி அவதாரத்தின்மீது ஆசை வந்து அவர் பின் திரிந்து, மோகினி இணங்காமல் போய் இருவரும் பலாத்காரம் செய்து, சிவன் இந்திரியம் பூமியில் கொட்டப்பட அந்த இந்திரியம் பூமியில் வெள்ளி தங்கமாக வேர் இறங்கிவிட்டன. அதுதான் இன்று வெள்ளியும் தங்கமுமாம்.

மற்றொரு சமயம் சிவன் பத்மாசூரனுக்கு வரம் கொடுத்ததால் அவன் சிவன் தலையிலேயே கையை வைத்து சிவனைக் கொல்லவர சிவன் ஓடி ஒழிந்து விஷ்ணுவைக் கூப்பிட விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து தந்திரம் செய்து பத்மாசூரனை இறக்கும்படி செய்து விட்டுத் திரும்புகையில் சிவன் அவளைப் புணர்ந்தானாம். அப்போது அய்யனார் பிறந்தார்.

இப்படியுள்ள கதைகள் போலவே விஷ்ணு பன்றி அவதாரமெடுத்து இரண்யாட்சனைக் கொன்றுவிட்டுத் திரும்பும் காலையில், பன்றி தான் கொண்டு வந்த பூமியைத் தனக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய உரிமை இருக்கிறதென்று கருதி அந்தப் பூமியையே அந்த பன்றி புணர்ந்ததாம். பூமியும் அதற்கு சம்மதித்து இடம் கொடுத்ததாம். அப்போது பூமி கர்ப்பமாகி ஒரு குழந்தையையும் பெற்று விட்டதாம். அக்குழந்தைக்கு நரகாசூரன் என்று பெயர் இட்டார்களாம். ஏன் அப்பெயர் இட்டார்கள் என்றால் நரகலைச் சாப்பிடுகின்ற பன்றிக்கும், நரகலைச் சுமக்கின்ற பூமிக்கும் குழந்தை பிறந்ததால் நரகன் என்று பெயர் இடாமல் வேறு என்ன பெயர் இடுவார்கள்?

இப்படிப் பிறந்த இந்தக் குழந்தை வங்காளத்துக்கும், அஸ்ஸாமுக்கும் மத்தியில் உள்ள ஒரு பிரதேச அரசனாக இருந்து கொண்டு பிரம்மாவின் மனைவியின் காதணியையும் வருணனின் ஆயுதத்தையும் பிடுங்கிக் கொண்டு, இந்திரனின் சிம்மாசனத்தையும் தூக்கிவர எத்தனித்தானாம். அதோடு தேவர்களுக்கு தொல்லை கொடுத்தானாம்; உலகத்தையும் துன்புறுத்தினானாம். தேவர்களுக்காக கிருஷ்ண பகவான் வந்து இந்த அசுரனை வதம் செய்தாராம். அந்த நாளை கொண்டாடுவதுதான் தீபாவளியாகும். இது என்ன கதை? இதில் அறிவு மானம் இருக்கிறதா?

இரண்யாட்சன் பூமியை சுருட்டித் திருடிக் கொண்டு போகக் காரணம் என்ன?

பூமி தட்டையாய் இருந்தாலல்லவா சுருட்ட முடியும்? அதுதான் உருண்டை ஆயிற்றே? பூமியை உருட்டிக் கொண்டல்லவா போயிருக்க வேண்டும்?

அப்படியே சுருட்டினதாக வைத்துக் கொள்வதானாலும் சுருட்டினவன் எங்கே இருந்து கொண்டு பூமியை சுருட்டி இருப்பான்? ஒரு சமயம் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டு சுருட்டி இருந்தாலும் பூமியில் இருந்த மலை, சமுத்திரம், ஆறு, ஜீவப்பிராணி முதலிய சகலமும்தானே பாயாக சுருட்டப்பட்டு பாய்க்குள் சிக்கி இருக்க வேண்டும். அப்படி இருக்க அவன் பூமியை தூக்கிக் கொண்டு ஒளிய வேறு சமுத்திரமேது? வேறு சமுத்திரம் இருந்திருந்தால் அது எதன்மீது இருந்திருக்கும்?

அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தப் பூமியை திருப்பிக் கொண்டுவர விஷ்ணு அவதாரமெடுப்பானேன்? அதுவும் பன்றி அவதாரமெதற்கு? அப்போது அது ஆகாரமான எதைத் தின்று இருக்கும்? எதையோ தின்று தொலைந்து போகட்டும்.

இந்தப் பன்றி பூமியைப் புணர ஆசைப்படுவானேன்! கொண்டு வந்ததற்குக் கூலியா? அப்படியேதான் இருக்கட்டும். இதற்கு இந்தப் பன்றியுடன் போகம் செய்ய பூமிதேவி இணங்கலாமா? இது என்ன கதை?

படிக்க : தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினரை கைது செய்து தண்டனை வழங்குக! மக்கள் அதிகாரம்

திராவிட மக்களை அசுரன், இராட்சதன், அரக்கன் என்று கூறி அவர்களை இழிவு செய்ய எழுதினதல்லாமல் வேறு என்ன இது? வங்காளத்தில் ஆரியர் வரும் முன்பு திராவிடர்கள்தானே ஆண்டு கொண்டிருந்திருக்க வேண்டும்? ஆரியர்கள், திராவிடர்களைக் கொல்வதானால் மானம், வெட்கம் பார்க்காமல் மிருகங்களுடன் புணர்ந்தானாலும் சரி, மலத்தைத் தின்னாலும் சரி, எப்படியான இழிவான அசிங்கமான காரியத்தைச் செய்தாவது கொல்லலாம் என்கின்ற தர்மத்தை ஆரியர்களுக்கு போதிக்க வந்த மனுநூல் போன்ற ஒரு கோட் தானே ஒழிய இப்புராணங்களுக்கு வேறு என்ன கருத்து சொல்ல முடியும்?

ஆகவே அப்பேர்ப்பட்ட கதையில் ஒன்றான நரகாசூரன் கதையை நம்பி நாம் பண்டிகை கொண்டாடலாமா? நாம் திராவிடரல்லவா? நம் கடவுள்கள் மலம் தின்பதையும், நம் பெண் கடவுள்கள் பன்றியுடன் புணர்ச்சி செய்வதையும் ஒப்புக் கொள்ள நம்மால் முடியுமா? ஒப்புக் கொள்ளலாமா? நமக்கு மானம், வெட்கம், புத்தி ஒன்றுமே கிடையாதா?

நம் தலைவனைக் கொன்றதை நாம் கொண்டாடும் அவ்வளவு மானம் ஈனம் அற்றவர்களா நாம்? நாம் வீர திராவிடரல்லவா? நம் இன மக்கள் தீபாவளி கொண்டாடலாமா? கண்டிப்பாய் கொண்டாடாதீர்கள். கொண்டாடுவதானால் இந்தக் கதை கொண்ட புத்தகங்களை வாங்கி நடு வீதியில் வைத்து ஆண்கள் மிதியடியால் மிதி மிதியென்று மிதியுங்கள்; பெண்கள் முறத்தால் மொத்து மொத்து என்று மொத்துங்கள்.

– குடிஅரசு, 07.10.1944

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: எடப்பாடி முதல் மக்களை சுட்ட போலீசு வரை அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் | மருது வீடியோ

ரு மனிதன் சுத்தமான காற்று சுத்தமான நிலம் சுத்தமான நீர் வேண்டும் என்பதற்காக, இந்த வேதாந்தா கார்ப்பரேட்டுக்கு எதிராக போராடி, நாசகார ஸ்டெர்லைட் கம்பெனியை மூடிய தூத்துக்குடியின் தியாகிகளுக்கு நாம் என்னென்றும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்திய அளவில் இலட்சம் மக்கள் கூடுவோம் ஸ்டெர்லைட்டை மூடுவோம் என்ற முழக்கத்தின் கீழ் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு முன்வைத்த முழக்கத்தை ஏற்று இலட்சம் மக்கள் கூடி அன்றைக்கு மே 22 தேதி போலீசின் துப்பாக்கிச்சூட்டில் அந்த இடத்திலேயே இறந்தவர்கள் 13 பேர் அதற்கு பிறகு இரண்டு மூன்று பேர் இறந்துள்ளனர். இன்றைக்கு போலீசு கொன்றது உண்மை என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் பற்றி பல்வேறு விமர்சனங்களையும், தூத்துக்குடி மக்களின் தியாகத்தையும் தமிழ் குரல் யூடியூப் சேனலிக்கு அளித்த பேட்டியில் விவரிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்.

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | சுரண்டலுக்கு முடிவுகட்டிய நவம்பர் புரட்சி !

1917-ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் நாள் உலக வரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்கும் நாள். முதன் முதலாக சுரண்டல் ஒழிக்கப்பட்டது, அந்த நாளில் தான். கஞ்சிக்கு வழியில்லாமல் வயிறு காய்நதுகிடந்த உழைப்பாளிகள் தன்மானத்துடன் நிமிர்ந்து நின்றது அந்த நாளில்தான். அன்றுதான் உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது.

அன்று காலை முதல் பெத்ரோகி ராடு வீதிகளில் தொழிலாளர்கள் ஆயுதங்களுடன் அணி வகுக்கத் தொடங்கினர். அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், காவல் நிலையங்கள், வானொலி நிலையம் முதலியவை கைப்பற்றப்பட்டன. அரசின் தலைமையகமான கிரெம்ளின் மாளிகை இறுதியாக வீழ்ந்தது. முதலாளிகள் அலறி அடித்துக் கொண்டு ஊரை விட்டு ஓடினர். இப்படியாக உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது. ரசியா சோசலிச நாடு என அறிவிக்கப்பட்டது. லெனின் அதனுடைய அரசு தலைவரானார்.

ஆட்சியில் அமர்ந்த அடுத்த கணமே அனைத்து நாடுகளுடனும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்வதாக லெனின் அறிவித்தார். போரினால் நீண்ட காலமாக அமைதி இழந்திருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர். ரசியாவின் அனைத்து நிலங்களும், வளங்களும் தேசிய உடைமை ஆக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டிருந்த பண்ணையார்களின் நிலங்கள் ஏழை உழவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டன. உழவர்களின் வறுமை இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !

உழைப்பாளி மக்கள் அரசு அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டனர். சோவியத்துகள் என்ற உழைக்கும் மக்கள் மன்றங்கள் அரசு நிர்வாகத்தை நடத்தின. ஒரு ஊரின் உழைக்கும் மக்கள் அனைவரும் அந்த ஊர் சோவியத்தின் உறுப்பினர்கள். அவர்கள் மாதம் ஒரு முறை கூடி ஊருக்குத் தேவையான சட்டங்களையும், திட்டங்களையும் தீட்டுவார்கள். அதை அமல்படுத்த ஒரு நிர்வாகக் குழுவும் தேர்ந்தெடுக்கப்படும். நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கடுமையாக வேலை செய்து அந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

சரியாக ஒரு மாதம் கழித்து மீண்டும் சோவியத்தின் கூட்டம் நடைபெறும். அதில் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் வேலைகள் பரிசீலிக்கப்படும். திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், ஊழல் புகார் எழுந்தாலும் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். அதுமட்டுமல்ல நீதிமன்றங்களாக செயல்படும் அதிகாரமும் சோவியத்துகளுக்கு இருந்தது.

மக்களே சட்டங்களை இயற்றி, மக்களே அவற்றை அமல்படுத்தி, மக்களே நீதி வழங்கும் ஆட்சி முறைதான் சோவியத் ஆட்சிமுறை. லெனினால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சிமுறைதான் உண்மையான, ஜனநாயகம். இதில் மக்களே சர்வ அதிகாரம் படைத்தவர் கள்.

தொழிற்சாலைகளின் நிர்வாகம் தொழிலாளர்களிடம் வழங்கப்பட்டது. இதுவரை தனிப்பட்ட முதலாளிகளின் இலாபத்திற்காக பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. புரட்சிக்குப் பின்னர் மக்களுக்கு எவ்வளவு பொருட்கள் தேவையோ அவ்வளவு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஒவ்வொருவருக்கும் திறமைக்கேற்ற வேலை வழங்கப்பட்டது. வேலைக்கேற்ற ஊதியம் வழங்கப்பட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு நொடியில் மறைந்தது.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள்: புரட்சி வீரர்களை நினைவு கூறுவோம்!

நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கையில். இதை மனதில் கொண்டு 20 வயது வரை கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. ஒரே நாளில் புதிதாக ஆயிரக்கணக்கான பள்ளிகளும், கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. மனப்பாட கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அறிவு மற்றும் திறமைகளின் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

அது மட்டுமல்ல. உலகில் எந்த நாடும் செய்யாத மற்றொரு விசயத்தையும் சோவியத் ரசியா செய்தது. ஜார் மன்னன் பல அண்டை நாடுகளை அடிமையாக்கி வைத்திருந்தான். புரட்சி அந்த அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்தது. லெனின் அந்த நாடுகளுக்கு முழு விடுதலை அளிப்பதாக அறிவித்தார். இச்செயல் உலக மக்களால் போற்றப்பட்டது. ஆயினும் அந்த நாடுகளிலுள்ள மக்கள் பிரிந்துபோக விரும்பவில்லை.

லெனின் தலைமையில் தங்கள் நாட்டிலும் சோசலிசம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பினர். அதனால் இந்த நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து சோவியத் யூனியன் என்ற கூட்டமைப்பை லெனின் ஏற்படுத்தினார். தொழிற்சாலை உற்பத்தியும், விவசாய உற்பத்தியும் பெருகியது. வளமான எதிர்காலத்தை நோக்கி சோவியத் யூனியன் வேகமாக நடைபோட்டது.

(இவர்தான் லெனின் நூலிலிருந்து…)

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினரை கைது செய்து தண்டனை வழங்குக! மக்கள் அதிகாரம்

22.10.2024

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய
இந்திய கடற்படையினரை கைது செய்து தண்டனை வழங்குக!

கண்டன அறிக்கை!

மிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இந்தியக் கடற்படையால் துப்பாக்கிச் சூட்டுக்குள்ளாகியுள்ளனர். இந்திய கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் வீரகுமார் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடலில் படகினை நிறுத்தச் சொன்ன போது, நிறுத்தாமல் சென்றதால்தான் சுட்டதாக கடற்படை தெரிவிக்கிறது. ஒரு மீன்பிடி படகு நிற்காமல் சென்றால் அதனை சுட வேண்டும் என்பதுதான் இந்தியக் கடற்படையின் சட்டமா?

எவ்வித அடையாளமும் இல்லாததால் இலங்கை கடற்படையாக இருக்குமோ என்ற அச்சத்திலேயே  நிற்காமல் சென்றதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.  ஆனால் மீன்பிடித்து வாழ்க்கையை நடத்தும் மீனவர்கள் மீது சராமரியாக குண்டுமழை பொழிந்து உள்ள இந்திய கடற்படை வீரர்கள்,  மீனவர்கள் தங்களுடைய ஆதார் கார்டை காட்டிய பிறகும் அவர்களைக் கட்டி வைத்து சுமார் 2 மணி நேரம்  கடும் சித்திரவதை செய்துள்ளனர்.

தமிழ்நாட்டு மீனவர்களை துப்பாக்கியால் சுடுவதிலும் சித்திரவதை செய்வதிலும் இலங்கை ராணுவத்துக்கு சளைத்ததல்ல இந்திய கடற்படை என்பதை நிரூபித்திருக்கிறது. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கும் பன்னாட்டு கார்ப்பரேட் கப்பல்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்த முடியுமா? அல்லது இந்தியாவின் வேறு எந்த பகுதியிலாவது, வேறு எந்த மீனவர்கள் மீதாவது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறதா?

சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இத்தாலி கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை போல தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு மற்றும் சித்திரவதை செய்த இந்திய கடற்படையினர் உடனே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321.

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !

சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் ! – மீள்பதிவு

ஜான் பெலாமி ஃபாஸ்டர், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் மன்த்லி ரிவ்யூ இதழின் ஆசிரியர். ஓரேகான் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை பேராசிரியர். மார்க்சிய சூழலியல் தொடர்பான இவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. சூழலியலின் பால் மார்க்சியமும், குறிப்பாக மார்க்சின் எழுத்துகளும் கொண்டுள்ள அக்கறைகளை விளக்கப்படுத்தியதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

வளர்சிதை மாற்றப் பிளவு குறித்த மார்க்சின் கோட்பாடு (Marx’s Theory of Metabolic Rift)  என்ற இவரது புகழ் பெற்ற கட்டுரை, அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் சோசியாலஜியில் வெளியிடப்பட்டது. முதலாளித்துவ கட்டமைப்பின் கீழ் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவில் நிகழும் நாசகரமான மாற்றங்களைச் சுட்டுவதற்கு மார்க்ஸ் உருவாக்கிய வளர்சிதை மாற்றப் பிளவு என்ற கருத்தாக்கத்தை இக்கட்டுரையின் வாயிலாக அறிமுகப்படுத்தினார் ஃபாஸ்டர்.

ஃபாஸ்டரின் கருத்துப்படி உலகம் இன்று எதிர்கொண்டிருக்கும் சூழலியல் நெருக்கடி என்பது முதலாளித்துவத்தின் விளைவாகத் தோன்றியிருக்கும் ஒரு கட்டமைவு நெருக்கடியாகும். முதலாளித்துவமும் சூழலியல் பேண்தகைமையும் (Environmental Sustainability) ஒன்றுக்கொன்று ஒவ்வாதவை என்கிறார் ஃபாஸ்டர். மனிதகுலத்துக்கு முன்னால் இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளன. சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம் (Socialism or Cannibalism) என்றார் ஜெர்மன் கம்யூனிஸ்டு புரட்சியாளர் ரோசா லக்சம்பர்க். ரோசாவின் கூற்றைச் சற்றே மாற்றி, சோசலிசம் அல்லது இறுதிப் பேரழிவு (Socialism or Exterminism)  எனக் கூறுகிறார் ஃபாஸ்டர்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | சோசலிசம்: முதலாளிகளின் கொடுங்கனவு! பாட்டாளிகளின் கலங்கரை விளக்கம்!!

பத்திரிகையாளர்கள் ஜிப்சன் ஜான், பி.எம்.ஜித்தீஷ் ஆகியோர் ஜான் பெலாமி ஃபாஸ்டருடன் நிகழ்த்திய நேர்காணலை ஃபிரண்ட்லைன் ஆங்கில இதழ் (“Socialism a necessity for human survival”,  Feb 02, 2018) வெளியிட்டுள்ளது. அதன் சுருக்கப்பட்ட மொழியாக்கத்தைத் தருகிறோம்.

* * *

இயற்கை குறித்து  மார்க்ஸ், எங்கெல்ஸின் கருத்து என்ன?

பொருள்முதல்வாதிகள் என்ற முறையில் மார்க்சும் எங்கெல்சும் வரலாறு குறித்த பொருள்முதல்வாதக் கருத்தாக்கத்தையும், இயற்கை குறித்த பொருள்முதல்வாதக் கருத்தாக்கத்தையும் இயல்பாகவே பிரிக்கவொண்ணாதவையாகக் கருதினார்கள்.

“ஆற்றலைச் சேமிக்கின்ற அதே நேரத்தில், மனிதத் திறனின் சாத்தியங்களை நிறைவு செய்வது என்ற வகையில், மனித இனத்துக்கும் இயற்கைக்கும் இடையிலான வளர்சிதை மாற்றத்தினை அறிவுபூர்வமாக நெறிப்படுத்துவதே சோசலிசம்” என்று விளக்கினார் கார்ல் மார்க்ஸ்.

“பூமி யாருக்கும் சொந்தமானது அல்ல. இந்தப் புவிப்பரப்பிலுள்ள மக்கட்சமூகத்தினர் அனைவரும் சேர்ந்தாலும் கூட, அவர்கள் இந்தப் பூமியைத் தங்கள் உடைமையாகக் கருதவியலாது. ஒரு குடும்பத்தலைவன் குடும்பத்தைப் பேணிப் பாதுகாத்து, அடுத்த வாரிசுக்கு விட்டுச்செல்வதைப் போல, இந்தப் பூமியைப் பேணிப் பாதுகாத்து, வளர்த்து, வருங்காலச் சந்ததிக்கு விட்டுச்செல்லும் காவலர்களே மக்கட்சமூகத்தினர்” என்கிறார் மார்க்ஸ். முதலாளித்துவத்துக்கும் சூழலியலுக்கும் இடையிலான உறவை, அறிவியல்பூர்வமாகவும், ஒரு வலிமையான இயங்கியல் சட்டகத்தில் வைத்தும் புரிந்து கொள்ளும் விதத்திலும் வேறு யாருடைய ஆய்வும் சொன்னதில்லை என்று நான் கூறுவேன்.

சூழலியல் பேரழிவைத் தோற்றுவிப்பது முதலாளித்துவமே!

முதலாளித்துவம் என்ற தற்போதைய சமூகப் பொருளாதார அமைப்பு உலகின் சூழலியல் அமைப்புகள் அனைத்தையும் அச்சுறுத்துவதோடு நிற்கவில்லை. இந்தப் பூமியே மனித குலத்தின் இருப்பிடமாக தொடர்ந்து நீடித்திருக்குமா என்ற அச்சுறுத்தலை விடுக்கிறது. இது கேள்விக்கிடமற்ற உண்மை. இன்றைய அறிவியலின் எல்லாத்துறைகளும் இந்த உண்மையை அங்கீகரிக்கின்றன. 2017 நவம்பரில் உலகின் 184 நாடுகளைச் சேர்ந்த 15,000 அறிவியலாளர்கள் இது குறித்து மனித குலத்தை இன்னொருமுறை எச்சரித்தார்கள். எனவே, நாம் கேள்வியை இப்படி எழுப்பவேண்டியுள்ளது.

புவியின் அழிவை நோக்கிச் செல்வதைத் தவிர்க்கவியலாததாக்குகின்ற இந்தப் போக்கிற்கான கூறுகள், முதலாளித்துவத்தின் இயக்கத்தைத் தீர்மானிக்கின்ற விதிகளிலேயே இருக்கின்றனவா? ஆம் என்பதுதான் இதற்கான விடை. முதலாளித்துவத்தின் விதி ஒன்றுதான். அதை மார்க்சின் சொற்களில் கூறுவதாயின், “மூலதனத்தைக் குவி, குவி, மேலும் குவி என்பதுதான் மோசஸின் இறைக்கட்டளை.”

அதிகரித்த அளவில் மூலதனத்தைக் குவிப்பதைத் தவிர, இந்த முதலாளித்துவ அமைப்பிற்கு வேறு எதைப் பற்றியும் அக்கறை இல்லை.  அத்தகைய மூலதனக் குவிப்பு சாத்தியமாக வேண்டுமென்றால், பொருளாதாரம் முடிவே இல்லாமல் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு வளரவேண்டுமானால், உலகிலுள்ள அனைத்துமே வாங்கவும் விற்கவுமான பண்டமாக்கப்படவேண்டும். உலகமே பணத்தால் ஆனதாக மாற்றப்படவேண்டும்.

இந்தப் பூமியின் உயிரியல், புவியியல், வேதியியல் இயக்கப்போக்குகளில் தோன்றும் முறிவுகளும் பிளவுகளுமே (Ruptures or Rifts in the Bio-Geo-Chemical Processes of the Planet)  இதன் விளைவு. இப்பிரச்சினையைத்தான் வளர்சிதை மாற்றப் பிளவு என்று கணித்தார் மார்க்ஸ் – இன்றைய சூழல் அமைப்பியலாளர்கள் கணிப்பதைப் போலவே.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் சூழலியல் நெருக்கடிக்கு ஒரு தீர்வை வழங்கக் கூடுமா?

தொழில்நுட்பம் குறித்துப் பல தவறான அபிப்ராயங்கள் நிலவுகின்றன. நமது காலத்தின் மிக முக்கியமான தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்குக் காரணம் – தனியார் மூலதனக் குவிப்புக்கான கட்டமைப்பு என்ற பொருளில் – முதலாளித்துவமல்ல.

புதிய கண்டுபிடிப்புகள் இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கும் சாத்தியத்தை வழங்குவதால், அணு ஆயுதங்களை இதற்குப் பொருத்தமாக நவீனப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது. துல்லியமாகத் தாக்க முடியும் என்பதால், இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக அணு ஆயுதப் போர் கூட சாத்தியமே என்ற ஆபத்தான, அபத்தமான கருத்துகளும் உருவாகத் தொடங்கியிருக்கின்றன. ஆனால், இந்த புவிக்கோளத்தில் தோன்றியிருக்கும் சூழலியல் முறிவை எதிர்கொள்வது எப்படி என்ற பிரச்சினையில் இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்துவது குறித்து யாரும் சிந்திப்பதில்லை.

சூழலியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான எல்லா தொழில்நுட்பங்களும் நம்மிடம் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், மூலதனத்தை மென்மேலும் குவித்துக் கொள்ளும் பொருட்டு, இயற்கை இந்தப் பூமிக்கு விதித்திருக்கும் வரம்புகளைத் தாண்டிப் பொருளாதாரத்தை வளரச்செய்ய வேண்டுமென்றும், இந்த நோக்கத்தைப் பாதுகாப்பான முறையில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்றும் முதலாளித்துவ அமைப்பு விரும்புகிறது. இந்த விருப்பத்தைத் தொழில்நுட்பத்தால் தீர்த்துவைக்க முடியாது.

இயற்கை விதிக்கின்ற எல்லா வரம்புகளையும் மீறப்பட வேண்டிய தடைகளாக மட்டுமே கருதுகின்ற முதலாளித்துவத்தின் மிகக் குறுகலான பார்வையை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இப்பிரச்சினையைக் கடக்கவியலாத இயற்கையின் வரம்புகள் (Insuperable natural limits) என்று அழைத்தார் மார்க்ஸ். நாம் இந்தச் சமூகத்தை அர்த்தமுள்ள சமத்துவத்தையும் சூழலியல் பேண்தகைமையையும் நோக்கிப் பெருமளவில் நகர்த்திச் செல்ல வேண்டுமானால், – சுதந்திரமும் மனித குலத்தின் எதிர்காலமும் இதைத்தான் கோருகின்றன – சமூக உறவுகளை நாம் மாற்றியமைப்பது அவசியம். இந்த முதலாளித்துவ கட்டமைப்பு அதனை ஏற்றுக்கொள்ளாது.

சோசலிசம் இயற்கையைச் சீரழிக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

“உற்பத்திச் சக்திகளின் உயர்ந்த கட்ட வளர்ச்சியை சோசலிசம் கோருகிறது என்று மார்க்சியம் கூறுவதால், அது இயற்கையை மிகப்பெரும் அளவில் சுரண்டுவதற்கும் அழிப்பதற்கும் வழிவகுக்காதா?” என்று கேட்கப்படுகிறது. உற்பத்தி சக்திகளின் உயர்ந்த கட்ட வளர்ச்சி என்பதன் பொருள் என்ன? உற்பத்தி சக்திகளில் தலையாய சக்தி மனிதர்கள்தான் என்பதையும் அவற்றின் வளர்ச்சி என்பது வேலைப்பிரிவினயின் வளர்ச்சியே என்பதையும் மார்க்ஸ் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள்: தோழர் லெனினை நினைவு கூறுவோம்!

“இறுதியாக சோசலிசத்தின் கீழ் உற்பத்தியாளர்களின் ஒருங்கிணைவானது, மனித சாத்தியத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், ஆற்றலைச் சேமிக்கும் வகையிலும் இயற்கையுடனான தமது வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்” என்கிறார் மார்க்ஸ். இதனை உற்பத்தி உற்பத்திக்காகவே என்றோ, தொழில்மயம் தொழில்மயத்துக்காகவே என்றோ யாரும் விளக்கப்படுத்த முடியாது. வளர்ச்சியின் அலகு இந்தப் பூமிதான் என்பதால், பேண் தகைமையைத்தான் (Sustainability) மார்க்ஸ் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

பருவநிலை மாற்றம் அறிவியல் வழியில் நிரூபிக்கப்பட்ட பின்னரும் அதனைச் சிலர் மறுப்பது ஏன்?

பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் அறிவியல் எந்த அளவுக்கு அசைக்க முடியாத உறுதியுடன் இருக்கிறதோ, அதைக் காட்டிலும் சற்று அதிகமாகவே பருவநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் இன்றைய அறிவியல் உறுதியாக இருக்கிறது.

“இது அனைத்தையும் மாற்றுகிறது” (This Changes Everything -Naomi Klein)  என்ற தனது நூலில் நவோமி கிளைன் சரியாகத்தான் சொல்கிறார். அவரது கருத்துப்படி பருவநிலை மாற்றப் பிரச்சினையை வலதுசாரிகள் மறுப்பதற்கான காரணம் மிகவும் வெளிப்படையானது.

புவி சூடேறுதலைக் கட்டுப்படுத்துகின்ற முயற்சியானாலும் சரி, அல்லது புதைபடிவ எரிபொருள் தொழிலின் மீது (fossil fuel industry) கட்டுப்பாடுகளை விதிக்கின்ற முயற்சியானாலும் சரி, அவற்றை முதலாளித்துவத்துக்கு எதிரான அச்சுறுத்தலாகவும் புதைபடிவ எரிபொருள் தொழிலை மையமாகக் கொண்ட வாழ்க்கை முறைகளுக்கு எதிரான அச்சுறுத்தலாகவுமே வலதுசாரிகள் காண்கிறார்கள். அந்த வகையில் வலதுசாரிகள் அஞ்சுவது சரிதான் (The Right is right)  என்கிறார் நவோமி கிளைன். பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான இயக்கமென்பது தவிர்க்கவியலாமல் புரட்சிகரமான மாற்றத்துக்கானதாகவும் முதலாளித்துவத்துக்கு எதிரானதாகவும் இருக்கிறது என்கிறார் நவோமி கிளைன்.

நவோமி கிளைன் வலதுசாரிகளை விமரிசித்த போதிலும், அவரது உண்மையான இலக்கு வலதுசாரிகள் என்பதை விடத் தாராளவாத மையவாதிகளே (liberal centrists) ஆவர். இந்த மையவாதிகள் வேறொரு முறையில் பருவநிலை மாற்றப் பிரச்சினையை மறுக்கிறார்கள். சமூக உறவுகளில் மாற்றத்தைக் கொண்டு வராமலேயே, சந்தை மற்றும் தொழில்நுட்பத்தின் துணையுடன் மந்திர வித்தையைப் போல புவி சூடேறுதலைத் தடுத்து விட முடியும் என்று எதார்த்தத்துக்குப் புறம்பான வகையில் வாதிடுகிறார்கள்.

சூழலியல் பேரழிவை நம்மால் தடுக்க முடியுமா?

நம்மை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலியல் பேரழிவிலிருந்து தப்புவதற்கு தொழில்நுட்பத் தடைகளோ, வேறு பௌதிகத் தடைகளோ ஏதும் இல்லை. ஆனால், வழமையான முறையில், அதாவது, மூலதனக் குவிப்பு வழக்கம் போல நிகழ்ந்து கொண்டிருக்க, அதன் போக்கிலேயே இப்பிரச்சினைகளைத் தீர்க்கவியலாது.

ஒரு பேரழிவைத் தடுக்கின்ற அதே நேரத்தில், பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும் முடியும். சாத்தியமான தீர்வுகள் பல உள்ளன. ஆனால், அநேகமாக அவை அனைத்துமே மூலதனக் குவிப்புக்கு எதிரானவையாகவே இருக்கின்றன.

அமெரிக்காவில் யாருக்கும் தேவைப்படாத, யாரும் விரும்பாத பொருட்களை, பெரும்பாலும் குப்பைகள் என்று சொல்லத்தக்கவற்றை மக்களின் தலையில் கட்டுவதற்கான விளம்பரங்களுக்காக மட்டும் ஒரு டிரில்லியன் டாலர்கள் ஆண்டுதோறும் செலவிடப்படுகின்றன.

உலகப் பொருளாதாரத்தில் சூழலியில்ரீதியில் அழிவுத்தன்மை வாய்ந்த துறை இராணுவம். அழிவினை இலக்காகக் கொண்ட இந்தத் துறைக்கு ஆண்டுதோறும் ஒரு டிரில்லியன் டாலர்களைச் செலவிடுகிறது, அமெரிக்கா. மேலும் பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். இத்தகைய செலவுகள் அனைத்துமே தேவையற்றவை. எனினும், இவற்றையெல்லாம் மாற்ற வேண்டுமென்றால், மூலதனத்தின் இயக்க விதிகளுக்கு எதிராகச் செயல்படுவது அவசியம்.

ஒரு புரட்சிகரமான எதிர்வினை என்பதன் பொருள் நாம் விதிகளை மாற்ற வேண்டும் என்பதுதான். பெட்ரோல்ட் பிரெக்ட் கூறியதைப் போல, எரிந்து கொண்டிருக்கும் இந்த வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு நாம் வழி தேடவேண்டும். அதற்கான நமது போராட்டத்தில்தான் எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் நாம் பெற முடியும்.

முதலாளித்துவ நெருக்கடியும் பாசிசமும்

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நாம் காணும் பாசிசத்தின் எழுச்சி என்பது மையப் பொருளாதாரங்களின் மூலதனம் எதிர்கொள்ளும் கட்டமைவு நெருக்கடியுடன் தொடர்புள்ளவை.

டிரம்பும் வெள்ளை மாளிகையும்  என்ற எனது நூலில் இத்தகைய பிரச்சினைகள் பலவற்றைக் கையாண்டிருக்கிறேன். பாசிசம் என்பது நெருக்கடியில் சிக்கிய முதலாளித்துவக் கட்டமைப்பிலிருந்து பிறப்பது. அது குறிப்பான வர்க்க அடித்தளத்தைக் கொண்ட தெளிவானதொரு அரசியல் கட்டமைப்பு.  தாராளவாத ஜனநாயக அரசின் நெருக்கடியையும் பாசிசத் தன்மை கொண்ட அரசமைப்பால் அது மாற்றீடு செய்யப்படுவதையும் இது காட்டுகிறது.

1930-களிலும் 40-களிலும் பாசிசம் குறித்த விமரிசனமென்பது மார்க்சியத்திடமிருந்துதான் வந்தது என்றபோதிலும் அது பரவலாக உயர்த்திப் பிடிக்கப்பட்டது. ஒரு அரசமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சி நடப்பதைப் போன்ற தோற்றத்தை பாசிச அரசுகள் பராமரித்த போதிலும், தாராளவாத ஜனநாயக அரசுக்குரிய வரம்புகளை மறுத்து, முதலாளித்துவ ஆளும் வர்க்கம் நடத்துகின்ற ஆட்சி என்றவாறே பாசிசம் புரிந்து கொள்ளப்பட்டது.

பின்னர் முதலாளித்துவத்துக்கும் பாசிசத்துக்கும் இடையில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று காட்டும் விதத்தில் பாசிசத்துக்கு வியாக்கியானம் அளிப்பதற்குத் தாராளவாதக் கோட்பாட்டுப் பிரிவினர் அரும்பாடுபட்டார்கள். பாசிசம் என்பதை ஒரு வகை உளவியல் பிறழ்ச்சி போலக் காட்டுவதற்கும், நிறவெறி தோன்றிய வரலாற்றுப் பின்புலத்திலிருந்து அதனைப் பிரித்தெடுத்துவிட்டு, நிறவெறிதான் பாசிசம் என்பதுபோலக் காட்டுவதற்கும் இவர்கள் பெரிதும் முயன்றார்கள். பாசிசம் என்பதை அரசியல்ரீதியான வர்க்கக் கட்டமைவாக நாம் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. அப்போதுதான் அதனைத் தீர்மானகரமாக முறியடிக்க முடியும். பெட்ரோல்ட் பிரெக்ட் கூறியதைப் போல, முதலாளித்துவத்தை எதிர்க்கத் தயாராக இல்லாதவர்கள் பாசிசத்தை எதிர்க்க முடியாது.

ஒரு புதிய புரட்சிகர சூழலை நாம் வந்தடைந்து விட்டோமா?

முதலாளித்துவக் கட்டமைப்பை ஒரு நாளில் கடந்து சென்றுவிட முடியாதென்பதை நாம் அறிவோம். நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை வெற்றி கொள்வதற்கு முதலாளித்துவ வர்க்கத்துக்குப் பல நூற்றாண்டுகள் ஆயின. நாம் நீண்டதொரு புரட்சி என்ற கோணத்தில் சிந்திக்க வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில், தன் ஒவ்வொரு அடி வைப்பிலும் அது புரட்சிகரமானதாகவும் இருக்க வேண்டியுள்ளது. இந்தப் பூமியும் நாமும் பிழைத்திருக்க வேண்டுமென்றால், மூலதனத்தின் இயக்க விதியை எதிர்த்துத்தான் நாம் நகர வேண்டும். மூலதனக் குவிப்பின் தர்க்க நியாயத்தை முறியடிக்க இடையறாது போராடவேண்டும். இது நம்முடைய காலம் நம் அனைவருக்கும் அளித்திருக்கும் பாடமாகும்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள்: புரட்சி வீரர்களை நினைவு கூறுவோம்!

சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம் என்று நாம் பேசும் நிலை ஒருகாலத்தில் இருந்தது. இன்று நமது தெரிவு சோசலிசம் அல்லது இறுதிப் பேரழிவு என்பதாக மாறிவிட்டது. சோசலிசத்தை நோக்கிய முன் நகர்வு என்பது தவிர்க்கவியலாத் தேவை ஆகிவிட்டது. மனித சுதந்திரம் என்ற இலட்சியத்துக்காக மட்டுமல்ல, மனித இனம் பிழைத்திருப்பதற்கான வழியே  சோசலிசம்தான் என்றாகிவிட்டது.

150 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று மார்க்சுடைய மூலதனத்தின் பொருத்தப்பாடு குறித்து..

மார்க்சின் விமரிசனபூர்வமான இயங்கியல் ஆய்வுமுறையும், முதலாளித்துவ சமூகம் குறித்த அவரது வரலாற்று ஆய்வுகளும் அவரது பணியைத் தன்னிகரற்றதாகவும் தவிர்க்கவியலாததாகவும் ஆக்கியிருக்கிறது. கடந்த 150 ஆண்டு காலத்தில் சமூக விஞ்ஞானத்துறையில் நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகள் அனைத்தைக் காட்டிலும் மார்க்சியம் நெடிதுயர்ந்து நிற்கிறது.

மாறி வரும் வரலாற்றுச் சூழலுக்கு ஏற்ப சோசலிச இயக்கம் முன்னேறிச் செல்லச் செல்ல, தான் வாழ்ந்த காலத்தின் தேவைகளுக்கு அப்பால் நெடுந்தொலைவுக்கு ஊடுறுவிப் பார்த்த மார்க்சின் சிந்தனைகளுக்குள் பொதிந்திருக்கும் புதிய, புதிய அறிவியல் கூறுகளை அது கண்டு கொள்ளும் என்று ரோசா லக்சம்பர்க் ஒரு முறை சொன்னார். அது உண்மையென நிரூபிக்கப்பட்டு வருகிறது.

நம்முடைய வரலாற்றுக் கட்டத்தின் தேவைகளுக்கேற்ப நமது போராட்டங்கள் புதிய புதிய வடிவங்களை எடுக்கலாம். ஆனால், அவருடைய ஆய்வுமுறை நீடித்து நிற்கிறது.

மொழியாக்கம்: சூரியன்
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2018 இதழ்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: திட்டமிட்ட அரச பயங்கரவாதப் படுகொலை | மருது வீடியோ

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே இருந்து துப்பாக்கிக் குண்டுகள் பாய்கின்றன. ஒரு எஸ்.பி நேரடியாக சென்று சுட்டுக்கொல்கிறார். டி.எஸ்.பி சுட்டுக்கொல்கிறார். இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொள்கிறார். ஒரு ஏட்டு சுட்டுக்கொல்கிறார். அப்போது இந்த வன்மம் எதற்காக இருந்தது என்பது அந்த அறிக்கையில் பதிவு செய்யப்படவில்லை.

போலீசு – அரசு – நிர்வாகம் மூன்று பேரும் ஒன்றிணைந்து, முன்கூட்டிய திட்டமிட்டு அரச பயங்கரவாத நடவடிக்கையை இவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த அறிக்கையில் மாற்றுக்கருத்து இருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் ஏ1 குற்றவாளி எடப்பாடி பழனிச்சாமி தான். அவருக்கு இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள உச்சபட்ச தண்டனையை கொடுக்கவேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம்.

அருணா ஜெகதீசன் அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமியை முதல் குற்றவாளியாக சேர்க்காமல் ‘அவர் பொய் சொல்லிவிட்டார்’ என்பதை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒரு துப்பாக்கிச்சூடு என்பது டி.ஜி.பி-கோ முதலமைச்சருக்கோ தெரியாமல் நடப்பதற்கு வாய்பே இல்லை.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் குற்றவாளிகளை பற்றி பல்வேறு விளக்கங்களை IBC TAMIL யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தருகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மாணவர்களுக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க மறுக்கும் அரசுக்கு என்ன தண்டனை? | புமாஇமு பத்திரிகை செய்தி

0

21.10.2022

கூடுதல் பேருந்துகளை இயக்க மறுக்கும் அரசுக்கு என்ன தண்டனை?

புமாஇமு பத்திரிகை செய்தி!

மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் கூட்டமாக தொங்கிக்கொண்டு பயணித்தால் அவர்களின் பாதுகாப்பிற்கு நடத்துனர்கள் ஓட்டுநர்கள் தான் பொறுப்பு என போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டாம் என ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அறிவுறுத்த வேண்டும். அறிவுரைகளை மீறி மாணவர்கள் செயல்பட்டால், போலீசு நிலையத்தில் அல்லது அவரச போலீசு உதவி எண் 100-ஐ நாடலாம் எனவும் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியுடன் கடந்த செப்டம்பர் மாதத்தில் போலீசுத்துறையின் அறிவிப்பையும் சேர்த்து பார்க்க வேண்டும். அதாவது மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் அபாயகரமான முறையில் பயணித்தால் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள். இது பல்வேறு தரப்பினராலும் கண்டனங்களுக்கு உள்ளானது.

மாணவர்களுக்கு பள்ளி – கல்லூரி செல்லும் நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற குரல் தொடர்ந்து சமூகத்திலிருந்து எழுந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு துளியும் செவி சாய்க்காத ஒரு அறிக்கையை தான் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து மாணவர் மரணங்களும், பெரிய – சிறிய காயங்களும் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு போகும் மாணவர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகள். இதிலிருந்துதான் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதை பரிசீலிக்க வேண்டியுள்ளது.

அரசுப் பள்ளிக் கல்லூரி மாணவர்களை தாண்டி, தனியார் பள்ளிக் கல்லூரி மாணவர்களும் நிர்வாகங்களின் அடாவடியான பேருந்துக் கட்டணங்களை சமாளிக்க முடியாமல் அரசுப் பேருந்துகளை நம்பியே இருக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்லூரிகளில் சுமார் ஒரு கோடி பேருக்கு மேல் பயிலும் நிலையில், தினசரி அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் மாணவர்களைக் கணக்கில் கொண்டு பேருந்துகள் இயக்கப்படவில்லை. போதுமான பேருந்துகளை இயக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கிற்கு மிக முக்கியமான காரணம் தனியார்மய கொள்ளையே.

கடன் அதிகமாக உள்ள அரசு நிறுவனங்களில் மின்சாரத்துறை போக்குவரத்துத் துறை மிக முக்கியமாக உள்ளது. ஒரு காலத்தில் இலாபத்தில் இயங்கி வந்த இந்த அரசுத்துறைகளை எல்லாம் தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு இன்று தனியார் நிறுவனங்கள் கேட்கும் தொகையை கொடுத்து மின்சாரத் துறையையே போண்டி ஆக்கிவிட்டார்கள். விளைவு மின்சாரத் துறையின் கடனே இலட்சம் கோடிக்குமேல் வரும்.

இதேபோல் போக்குவரத்து துறையில் பேருந்து வாங்குவதில் முறைகேடு, உதிரி பாகங்கள் வாங்குவதில் முறைகேடு என ஒட்டுமொத்த போக்குவரத்து துறையையும் சீரழித்து விட்டார்கள். முக்கியமான வழித்தடங்களை தனியார் நிறுவனங்கள் கொள்ளை இலாபம் சம்பாதிப்பதற்கு ஏற்றார்போல் வாரி வழங்கினார்கள்.

போக்குவரத்துத் துறையின்  சீரழிவு  மற்றும் தனியார்மயமாக்கல் போன்றவற்றை ஒழித்துக்கட்டாமல் மாணவர்களையும், பெற்றோர்களையும், ஆசிரியர்களையும், ஓட்டுனர்களையும், நடத்துனர்களையும் குற்றவாளி கூண்டில் ஏற்றிக் கொண்டிருக்கிறது இந்த அரசு.

மேலும் இதுபோன்ற அறிவிப்புகள் தொடர்ச்சியான நடவடிக்கைகள் நடத்துனர்கள் மாணவர்களுக்கிடையிலான மோதலாக மாறிய சம்பவங்களும் எண்ணற்றவை.

இதை முடிவுக்கு கொண்டுவர மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள் அனைவரும் களத்தில் இறங்க வேண்டும். தனியார்மயம் – தாராளமயம் – உலகமயத்தை ஒழித்துக் கட்டுவதை நோக்கி நாம் முன்னேற வேண்டும். அதுவே இந்த பிரச்சினைக்கு முடிவாகும்.


இவண்,
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
தொடர்புக்கு : 94448 36642.

ஜி.பி.எஸ் சுங்கக்கட்டண வசூல்: ‘டிஜிட்டல் பிட்பாக்கெட்’ ஜாக்கிரதை!

ரந்து விரிந்த இந்தியாவை குறுக்கு நெடுக்காக பிளக்கின்றன தேசிய நெடுஞ்சாலைகள். இந்த சாலைகளில் பயணிப்பதற்கு சேவைக்கட்டணம் என்ற பெயரில் வாகன ஓட்டிகளை ஒட்டச் சுரண்டுகிறார்கள் பணம் திண்ணும் கழுகுகளான கார்ப்பரேட் முதலாளிகள். அரசானது மக்களாகிய நம்மிடம் சாலை வரி, மோட்டார் வரி என வசூலித்த பிறகும், இக்கட்டணக் கொள்ளையை நம்மீது திணிக்கிறது. சுங்கச்சாவடிகள் மூலம் நம்மீது சுரண்டலை நிலைநாட்டியவர்கள், தற்போது ஜிபிஎஸ் கருவி மூலம், சாலையில் வாகனங்கள் பயணிக்கும் குறிப்பிட்ட கிலோமீட்டர்களை கணக்கிட்டு அதன் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செப்டம்பர் 9 அன்று டெல்லியில், இந்திய – அமெரிக்க வர்த்தகக் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி, “சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமல், தானியங்கி வாகனப் பதிவெண் அங்கீகார முறையில் (Automatic Number-plate Recognition) தாமாக சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மத்திய அரசு சோதனை முறையில் நடைமுறைப்படுத்த உள்ளது. இதன் மூலம் நெடுஞ்சாலைகளில் பயன்பாட்டின் அடிப்படையில், அதாவது செல்லவிருக்கும் தொலைவின் அடிப்படையில் கட்டணங்களை வசூலிக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

படிக்க : பாரதிதாசன் பல்கலையில் தேர்வு கட்டண உயர்வு! திரு.வி.க அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

டிஜிட்டல் முறையில் கட்டணம் வசூலிப்பது ஒருபுறமிருக்கட்டும், முதலில் சுங்கச்சாவடிகளில் ஏன் கட்டணம் வசூலிக்கிறார்கள்? கட்டணங்கள் ஏன் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றன? இப்போது ஜி.பி.எஸ் மூலம் கட்டணம் வசூலிப்பதன் தேவை என்ன? போன்ற கேள்விகள் நம்முன் எழுகின்றன. இக்கேள்விகளுக்கு விடை காண்பது அவசியமாகிறது.

***

நாடு முழுவதிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 800 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 50 சுங்கச்சாவடிகள் உள்ளன. தனியார் முதலாளிகள் சாலைகளை அமைத்துப் பராமரித்து, செலவிட்ட தொகையை கட்டணங்கள் மூலம் வசூலித்து முடித்த பின்னர், அவற்றை நாட்டுக்கு அர்ப்பணிப்பது எனும் “உருவாக்கு – பயன்படுத்து – ஒப்படை” என்ற திட்டத்தின் கீழ் பொதுச் சாலைகள் அமைக்கப்பட்டன.

சாலைகள் அமைத்ததற்கான செலவை ஈடுகட்ட, முதலில் தனியார் முதலாளிகளுக்கு சுங்கம் வசூலிக்கும் உரிமை 15 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது. பின்னர் 30 ஆண்டுகள் வரை நீடிக்கப்பட்டது. சாலைகள் அமைத்ததற்கான முழுத்தொகையையும் வசூலித்த பிறகு, அச்சாலைகளை பராமரிப்பதற்காக 40 சதவீதம் கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதி தரப்பட்டது. ஆனால் சாலை அமைத்த நிறுவனங்கள் ஒப்பந்தங்களை மீறி நீண்டகாலமாக முழுஅளவுக் கட்டணத்தை வசூலித்து வருகின்றன. அவ்வப்பொழுது அக்கட்டணத்தையும் உயர்த்துகின்றன.

2013ஆம் ஆண்டு மத்திய அரசானது, ஆண்டுத்தோறும் சுங்கக்கட்டணத்தை உயர்த்த தனியார் முதலாளிகளுக்கு அனுமதி அளித்தது. மத்திய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி, 1992ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. அதன்படி, ஆண்டுக்கு 10 – 15 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு மார்ச் புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் மட்டும் ஓராண்டு வருமானம் 2,400 கோடி. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு பணத்தைக் தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்கிறார்கள் என்றால், ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் ஓராண்டில் எவ்வளவு பணத்தை கொள்ளையடிப்பார்கள். மேலும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை எவ்வளவு பணத்தைக் கொள்ளையடித்து இருப்பார்கள் என்பதை நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

***

தனியார் முதலாளிகள் ஆண்டுத்தோறும் சுங்கச்சாவடி கட்டணங்களை அதிகரித்து வாகன ஓட்டிகள் பணத்தை கொள்ளையடிக்க வழிசெய்த மத்திய அரசானது, தற்போது அக்கொள்ளையை மேலும் அதிகரிக்கும் விதமாக ஜி.பி.எஸ் மூலமாக – டிஜிட்டல் முறையில் – சுங்கக் கட்டணங்களை வசூலிக்கும் புதிய முறையை உருவாக்கி உள்ளது.

சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவே, இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக மோடி அரசால் காரணம் கூறப்படுகிறது. இக்காரணத்தை இப்பொழுது மட்டும் கூறவில்லை. பாஸ்டேக் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை அறிமுகப்படுத்திய போதும், இதே காரணத்தைக் கூறியது. பாஸ்டேக் முறை இருக்கும் போது ஏன் ஜி.பி.எஸ் மூலம் கட்டணம் வசூலிக்கும் புதிய முறையை கொண்டுவருகிறார்கள் என்று கேள்வி கேட்டாலே, இத்திட்டத்தின் உண்மையான நோக்கத்தை புரிந்துக்கொள்ள முடியும்.

படிக்க : சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு : உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டும் ஒன்றிய அரசு !

பாஸ்டேக் முறையானது, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு வாகன ஓட்டிகளை பழக்கப்படுத்தியது. அதாவது சுங்கச்சாவடிகளில் நேரடியாக கட்டணங்களை செலுத்திக் கொண்டிருந்த வாகன ஓட்டிகளை, ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணங்களை செலுத்த வேண்டும் என நிர்பந்தித்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்குள் நெட்டித் தள்ளியது. பாஸ்டேக் முறை மற்றும் அதில் நடக்கின்ற குளறுபடிகளால், வாகன ஓட்டிகளின் பணம் கூடுதலாக சுரண்டப்படுகிறது என்பது தனிக்கதை.

ஜி.பி.எஸ் முறையில், பாஸ்டேக் மற்றும் சுங்கச்சாவடிகளுக்கான தேவையும் இல்லாமல் போகும். இம்முறையில் முக்கியமாக வாகனங்கள் செல்லும் சாலைகளின் தூரத்தை பொறுத்து சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது. இதற்காக நாட்டின் அனைத்து வாகனங்களுக்கும் அதன் நம்பர் பிளேட் மின்னணு தொழில்நுட்பத்துடன் மாற்றப்பட உள்ளது. இந்த பணி முடிந்தால் தான் ஜிபிஎஸ் முறையில் சுங்கக்கட்டணம் சாத்தியமாகும்.

இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால், சாலையில் வாகனங்கள் பயணிக்கும் தூரமும் ஜி.பி.எஸ் முறையில் கணக்கிடப்படும். அதற்கேற்ப வாகன ஓட்டிகளின் வங்கிக் கணக்கில் இருந்து கட்டணம், தனியார் நிறுவனங்களால் நேரடியாக பிடித்துக் கொள்ளப்படும். இனிமேல் தேசிய நெடுஞ்சாலையில் 2 அல்லது 3 கிலோமீட்டர் தூர பயணங்களுக்கே கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலை உருவாகலாம். கைநீட்டி செலவுசெய்வதற்கு பதில், டிஜிட்டல் முறையில் வங்கிக் கணக்கில் இருந்து உருவப்படுவதால், இந்தக் கொள்ளையை நம்மால் உணர முடியாது என்பது அவர்களுக்குச் சாதகமான மற்றொரு அம்சம். கிட்டத்தட்ட பிட்பாக்கேட்டுக்கு நிகரான இதை, டிஜிட்டல் பிக்பாட்கெட் என்றே கூட அழைக்கலாம்.


குப்பு

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள்: புரட்சி வீரர்களை நினைவு கூறுவோம்!

ரஷ்ய புரட்சியின் ஓராண்டு நிறைவின் போது, புரட்சியின் வீரர்களை நினைவு கூறும் விதமாக தோழர் லெனின், புரட்சி வீரர்களின் மகத்தான அர்பணிப்பையும் தியாகத்தையும் பற்றி எடுத்துரைத்தார். அந்த மகத்தான ரஷ்ய சோசலிசப் புரட்சியின் வீரர்களை 106-வது ரஷ்ய புரட்சி நாளில் நினைவு கூறுவதன் மூலம், அவர்களது அர்ப்பணிப்பையும், தியாகத்தையும், புரட்சிகர உணர்வையும் வரித்துக்கொள்வோம். நம் நாட்டில் ஓர் புரட்சியை நடத்திட சூளுரைப்போம்!

– வினவு

000

அக்டோபர் புரட்சியில் உயிர் இழந்தவர்களுக்கான நினைவுக்கல் திறப்புவிழாவின் போது ஆற்றிய உரை

நவம்பர் 7, 1918

தோழர்களே! 1917 ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சியில் வீழ்த்தப்பட்டவர்களை நினைவு கூரும் ஒரு நினைவுச் சின்னத்தைத் திறந்து வைத்திட இங்கு கூடியுள்ளோம். நாடுகளை ஏகாதிபத்தியப் பிடியினின்றும் விடுதலை செய்திட, நாடுகளுக்கிடையே போர்களை ஒழித்திட, மூல தன ஆதிக்கத்தை வீழ்த்திட மற்றும் சோஷலிசத்தை அடைந்திடப் புரட்சி ஒன்றினைத் துவக்கி அதில் உழைக்கும் மக்களின் தவப்புதல்வர்கள் தங்களது உயிரினைத் தியாகம் செய்தார்கள்.

தோழர்களே! ருஷ்யாவின் பலபத்தாண்டுக் கால நவீனகால வரலாற்றில் புரட்சிகரத் தியாகிகளின் நீண்ட பட்டியல் இருந்து வந்துள்ளது. ஆயிரம் ஆயிரம் பேர்கள் ஜாராட்சியை எதிர்த்துப் போரிட்டு மடிந்தனர். அவர்களது உயிர்த்தியாகம் புதிய போராளிகளை எழுச்சியுறச் செய்தது, போராட்டத்திற்குள் இன்னும் அதிகமதிகமான மக்களை ஈர்க்க உதவியது.

கடந்த அக்டோபரின் போது வீழ்த்தப்பட்ட இந்தத் தோழர்கள் வெற்றியின் மகத்தான நற்பேற்றைக் கொண்டு வந்தார்கள். மனித குலத்தின் புரட்சிகரத் தலைவர்கள் கனவு கண்ட அந்த மகத்தான சிறப்பினை இவர்கள் வென்று பெற்றார்கள் : போர்க்களத்தில் வீரமரணம் அடைந்து இந்தத் தோழர்களின் சடலங்களைத் தாண்டி தமது வெகுஜன வீராவேசத்தினால் வெற்றி ஈட்டிய ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான புதிய இதேபோன்று அச்சமென்பதே அரியாத வீரர்கள் முன்னேறிச் சென்றார்கள்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள்: தோழர் லெனினை நினைவு கூறுவோம்!

இன்று, அகில உலகிலும், தொழிலாளர்கள் கோபாவேசத்தால் கொதித்துக் குமுறிக் கொண்டு இருக்கிறார்கள். பல்வேறு நாடுகளில் தொழிலாளர்களின் சோஷலிஸ்டுப் புரட்சி துவங்கிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுதுமுள்ள முதலாளிகள் திகிலாலும் குரோதத்தாலும் புரட்சியினை அடக்கிட அவசரமாக அணி திரளுகின்றனர். மேலும் ருஷ்யாவின் சோஷலிஸ்டு சோவியத் குடியரசு அவர்கள் விலாவினைக் குத்திடும் குறிப்பிட்ட முள்ளாக இருக்கிறது. ஒன்றுபட்ட உலக ஏகாதிபத்தியவாதிகள் நம்மைத் தாக்கிடத் தயாராக உள்ளனர். இன்னும் பல புதிய போர்களில் நம்மை இழுத்து விடவும் நம் மீது இன்னும் அதிகமான தியாகங்களைச் சுமத் திடவும் தயாராக உள்ளனர்.

தோழர்களே! இவர்களது அடிச்சுவடுகளைப் பின்பற்ற நடப்போம் என்றும், இவர்களது துணிவையும் வீரத்தையும் நாம் முன்மாதிரியாகக் கொள்வோம் என்றும், இவர்களது நினைவுச் சின்னத்தின் முன்னின்று சபதமேற்பதன் மூலம் இந்த அக்டோபர் வீரர்களின் நினைவை நாம் கௌரவப்படுத்துவோம். அவர்களது குறிக்கோள் வாசகமே நமது குறிக்க வாசகம் ஆகட்டும். இதுதான் புரட்சி செய்து வரும் உலகத் தொழிலாளர்களது குறிக்கோள் வாசகம். இந்தக் குறிக்கோள் வாசகம் : “வெற்றி அல்லது வீர மரணம்!’

ஆகவே இந்த குறிக்கோள் வாசகத்தை ஏற்ற பாட்டாளி வர்க்கச் சர்வதேச சோசலிஸ்ட்டு புரட்சியின் போராளிகள் வெல்ல முடியாதவர்கள் ஆவர்.

லெனினின் அட்டோபர் புரட்சியின் ஆண்டுவிழாக்களை ஒட்டி (1918-1922 உரைகள், அறிக்கைகள், கட்டுரைகள்) எனும் நூலிலிருந்து…

பாரதிதாசன் பல்கலையில் தேர்வு கட்டண உயர்வு! திரு.வி.க அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

0

சூத்திரனுக்கு படிப்பு எதற்கு என்று கல்வி மறுக்கப்பட்ட காலம் போய், பணம் இல்லாத ஏழை மாணவர்களுக்கு படிப்பு எதற்கு என்று கல்வி நிலையத்திலிருந்து மாணவர்களை விரட்டியடிக்கும் வேலையில் அரசு இறங்கியுள்ளது.

பல ஆண்டுகளாக பார்ப்பன கொடுங்கோல் ஆதிக்கத்தால் கல்வி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் கிராமப்புற மக்கள் இன்று சிறிதளவேனும் அரசுப் பணிகளும் மற்ற துறைகளுக்கும் செல்ல அடிப்படை காரணமாக இருந்தது வருவது இடஒதுக்கீடும் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கல்லூரிகளும்தான். ஆனால் அதற்கும் இப்போது முடிவுகட்டத் தொடங்கியுள்ளது அரசு.

திருவாரூர் அருகே உள்ள கிடாரம்கொண்டான் பகுதியில் அமைந்துள்ள திரு.வி.க அரசினர் கலைக்கல்லூரியில் 4000-க்கும் மேற்பட்ட ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் அதிகப்படியான மாணவர்கள் கூலி விவசாயக் குடும்ப பின்னணியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஏற்கனவே கல்வி கட்டணம், பேருந்து கட்டணம் மற்றும் புத்தகமென அதிகப்படியான செலவை தன் தலையில் சுமக்கின்றனர். ஆனால் எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சென்ற வாரம் தீடீரென்று முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

படிக்க : அண்ணா பல்கலையில் சான்றிதழ் கட்டண உயர்வு : கல்வி என்ன கடைச்சரக்கா? | புமாஇமு

சென்ற ஆண்டு இளங்கலை ஒரு பேப்பருக்கு ரூ.75-ஆக இருந்ததை தற்போது ரூ.120-ஆகவும், செய்முறை தேர்வுக்கு ரூ.100-ஆக இருந்ததை ரூ.200-ஆகவும் உயர்த்தி உள்ளது. அதேபோன்று, முதுகலை படிப்பிற்கும் ஒரு பேப்பர்க்கு ரூ.120-ஆக இருந்ததை ரூ.200-ஆகவும், செய்முறை தேர்வுக்கு ரூ.200-ஆக இருந்ததை ரூ.300-ஆகவும் உயர்த்தி உள்ளது. இளங்கலைக்கு மொத்தம் ரூ.950-ஆகவும் முதுகலைக்கு மொத்தம் ரூ.1500-ஆகவும் உயர்த்தி உள்ளது.

ஏற்கனவே, மாணவர்கள் குடும்ப வறுமையின் காரணமாக படிப்பதற்கே கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்த தேர்வு கட்டண உயர்வு என்பது மாணவர்களை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது.

இந்த தேர்வுக் கட்டண உயர்வை கண்டித்து 600-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பாக அக்டோபர் 17, 2022 அன்று போராட்டம் நடைபெற்றது.

அப்போதைக்கு போராட்டத்தை கலைப்பதற்காக மாணவர்களிடம், “பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக தேர்வு கட்டண உயர்வை பற்றி பேசுகிறேன்” என்று சொன்ன கல்லூரி முதல்வர் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போராட்டம் நடத்தி இரண்டு நாட்கள் ஆகியபோதும் தேர்வு கட்டண குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் வரவில்லை. பல்கலைக்கழகம் உயர்த்திய தேர்வு கட்டணத்தை அப்படியே வசூலிக்க தொடங்கியுள்ளனர்.

படிக்க : கியூட் நுழைவு தேர்வு – 1 முதல் 12 வகுப்பு வரை படித்ததற்கு மதிப்பில்லையா?

அனைவருக்கும் தரமான இலவச கல்வியைக் கொடுக்க வேண்டிய இந்த அரசு தொடர்ச்சியாக கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டண உயர்வு என்றப் பெயரில் மாணவர்களை வஞ்சித்து வருகிறது. இலவசம் என்று படிக்கவரும் ஏழை எளிய மாணவர்களும் இதுபோன்ற தேர்வுக் கட்டண உயர்வால் கல்லூரியில் இருந்து பின்வாங்கும் நிலையும் உருவாகியுள்ளது.

திரு.வி.க அரசினர் கலைக்கல்லூரியில் பேதிய கழிவறை வசதியோ குடிதண்ணீர் வசதியோ கிடையாது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற ஆசிரியர்களும் கிடையாது. கல்லூரி கட்டிடத்தில் அங்கங்கே விரிசல் காணப்படுகிறது. திருவாரூர் சுற்றியுள்ள அனைத்து கிராமப்புற மாணவர்கள் இந்த அரசுக் கல்லூரிக்குதான் படிக்க வருகின்றனர். மாணவர்கள் எண்ணிக்கை ஏற்ற பேருந்து வசதியும் கிடையாது. கிடைத்த ஒன்று இரண்டு பேருந்துகளும் மாணவர்கள் கூட்ட நெரிசலில் தொங்கி கொண்டு வருகின்றனர். ஆனால் இதைப்பற்றி துளியும் கவனம் செலுத்தாத அரசு தேர்வுக் கட்டணத்தை மட்டும் உயர்த்தி உள்ளது.

இராணுவ செலவுக்கு இந்திய வருமானத்தில் இருந்து 30 சதவிகிதம் செலவு செய்யும் அரசு, மாணவர்களுக்கு கல்வி என்று வரும்போது மட்டும் மாணவர்களிடமே பணம் வசூலித்து கல்லூரியை நடத்த சொல்கிறது. இது முற்றிலும் ஏழை எளிய மாணவர்களை கல்வியிலிருந்து விரட்டியடிக்கும் செயலாகும்.


பாரி

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | சோசலிசம்: முதலாளிகளின் கொடுங்கனவு! பாட்டாளிகளின் கலங்கரை விளக்கம்!!

சோசலிசம்: முதலாளித்துவத்தின் கொடுங்கனவு!
பாட்டாளி வர்க்கத்தின் கலங்கரை விளக்கம்!! – மீள்பதிவு

து நவம்பர் புரட்சி நூற்றாண்டின் துவக்கம். 1917, நவம்பர் 7 – உலகின் முதல் தொழிலாளி வர்க்க அரசு அமைந்த நாள்.

இது கலாச்சாரப் புரட்சியின் ஐம்பதாண்டு நிறைவு. மே, 1966-இல் தான் சோசலிசத்தை உள்ளிருந்தே கவிழ்க்கும் முதலாளித்துவ மீட்புக்கு எதிரான சீன கலாச்சாரப் புரட்சி தொடங்கியது.

இது நக்சல்பாரி எழுச்சியின் ஐம்பதாம் ஆண்டு. மே, 1967-இல்தான், திருத்தல்வாத கம்யூனிஸ்டு தலைமையின் நாடாளுமன்ற சரண்டைவுப் பாதைக்கு எதிரான போர்க்குரலாக நக்சல்பாரி உழவர் எழுச்சி தொடங்கியது.

இது கார்ல் மார்க்ஸின் பிறந்தநாளின் 200-வது ஆண்டு தொடக்கம். முதலாளித்துவத்தின் மரணத்தையும், தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தையும் முன்னறிவித்த பேராசான் மார்க்ஸின் பிறந்த நாள் மே 5, 1818.

ஐம்பதாம் ஆண்டு, நூறாம் ஆண்டு போன்றவை ஒருங்கே அமையப் பெறுவது ஒரு தற்செயல் நிகழ்வுதான். ஆனால் அந்தக் குறிப்பிட்ட காலத்தில் நடைபெற்ற குறிப்பிட்ட நிகழ்வுகளும், அவற்றுக்கு இடையிலான உறவும் தற்செயலானவைகள் அல்ல. அவ்வகையில் இந்நான்கு நிகழ்வுகளும் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்தவை.

1917 ரசிய சோசலிசப் புரட்சி என்பது முதலாளித்துவம் முயன்றாலும் மறக்கவே முடியாத கெட்ட கனவு. மனித சமூகத்தை தலைமை தாங்கி வழிநடத்திச் செல்வதாகக் கூறி வந்த முதலாளித்துவ வர்க்கத்தை, அதிகாரத்திலிருந்து அகற்றியது மட்டுமல்ல, அது சமூகத்துக்குத் தேவைப்படாத வர்க்கம் என்பதையும் சமூக முன்னேற்றத்தின் தடைக்கல் என்பதையும் நடைமுறையில் நிரூபித்தார் நவம்பர் புரட்சியின் நாயகன் தோழர் லெனின்.

இன்று சோசலிசம் தோற்றுவிட்டதாக முதலாளித்துவம் தனக்குத்தானே தைரியம் சொல்லிக் கொள்கிறது. இருப்பினும் அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு – என ஒவ்வொரு துறையிலும் சோசலிசம் நிகழ்த்திய சாதனைகள் தொல்பொருட்களாகப் புதைந்து விடவில்லை. அவை பல்வேறு வடிவங்களில் உலகெங்குமுள்ள தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளாக உயிருடன் உலவுகின்றன.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள்: தோழர் லெனினை நினைவு கூறுவோம்!

தொழிலாளிகளுக்கான பணி உத்திரவாதம், ஓய்வூதியம், வேலையின்மைக்கான உதவித்தொகை, பெண்களுக்கான உரிமைகள் – என சோசலிச ரசியா முன்னோக்கி எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் முதலாளித்துவத்தின் மீது இடியென இறங்கியது. இன்று மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் தொழிலாளி வர்க்கம் பெற்றிருக்கும் பல உரிமைகள், அன்று தத்தம் நாடுகளில் சோசலிசப் புரட்சியைத் தடுக்கும் பொருட்டு முதலாளித்துவம் மேற்கொண்ட தற்காப்பு நடவடிக்கைகளே!

சோசலிசத்தின் தோல்வி குறித்து பெருங்கூச்சல் போடும் முதலாளி வர்க்கம், அதனைக் காட்டிலும் நெடிய வரலாறு கொண்ட தன்னுடைய தோல்வியைப் பேசுவதில்லை. சுதந்திரச் சந்தையின் இடத்தை ஏகபோகம் கைப்பற்றிக் கொண்டிருப்பதையும், ஜனநாயகம் மெல்ல மெல்ல பாசிசமாக உருமாறி வருவதையும், உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாமல் முதலாளித்துவம் தவிப்பதையும், முதலாளித்துவத்தின் கருவறையிலேயே கிளர்ந்தெழும் மக்களின் போராட்டங்களையும் அது தனது தோல்வியாக கூறிக் கொள்வதில்லை.

ஆனால் ஒரு நூற்றாண்டுக்குள் சோசலிசம் தோற்றுவிட்டதாக தீர்ப்பு கூறுகிறது. மனித குலத்தின் வரலாற்றுடன் ஒப்பிடும்போது நூறு ஆண்டுகள் என்பது ஒரு நாளின் ஒரு மணித்துளி. பிறந்த முதல் ஐம்பது ஆண்டுகளில் வெற்றி மேல் வெற்றி ஈட்டிய சோசலிசம், பிந்தைய ஆண்டுகளில் சரிவையும் தோல்வியையும் சந்தித்தது உண்மைதான்.

ஒரு நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்தை மனித உடலில் சோதித்துப் பார்த்து, அதன் விளைவுகள் – பக்க விளைவுகள் என்ன என்பதை ஓரளவு புரிந்து கொள்வதற்கே அறிவியலுக்கு, ஒரு மனிதனின் ஆயுட்காலமே தேவைப்படுகிறது. சோசலிசம் என்பது சமூக அறிவியல். இது மனித சமூகத்தின் வாழ்நிலை மீதான சோதனை; சிந்தனை மீதான சோதனை. சடப்பொருளின் மீதோ, தன்னிலை உணரவியலாத உயிர்ப்பொருளின் மீதோ நடத்தப்படும் இயற்கை விஞ்ஞான சோதனை அல்ல. சிந்திக்கின்ற மனிதர்கள் மீதான சோதனை. உற்பத்தி சாதனங்களின் மீதான தனியுடைமையை ஒழிப்பது மட்டுமல்ல, அந்தக் கருத்தாக்கத்தையே சமூகத்தின் நினைவிலிருந்து அகற்றுவதற்கான சோதனை.

உற்பத்தி சாதனங்களின் மீதான தனியுடைமை ஒழிக்கப்பட்டு விட்டாலும், சமூகத்தில் பரவியிருக்கும் முதலாளித்துவ வர்க்க சிந்தனை உடனே அகன்று விடுவதில்லை. அது கம்யூனிஸ்டு கட்சிக்கு உள்ளேயும் தலையெடுக்கிறது. மக்களுக்கு பதில் சொல்லும் கடமையிலிருந்து தவறிய அதிகாரத்துவப் போக்காக, திறமைக்கு முன்னுரிமையும் சலுகையும் அளித்து அதிகாரத்தில் அமர்த்த வேண்டுமென்றும் ‘’இலக்குதான் முக்கியம்; வழிமுறை முக்கியமல்ல’’ என்றும் கூறுகின்ற முதலாளித்துவ சிந்தனைப் போக்காக அது வெளிப்படுகிறது.

இத்தகைய போக்குகள் அதிகாரத்தில் இருக்கும் ஒரு கம்யூனிஸ்டு கட்சிக்குள் தலையெடுக்குமானால், அதற்கு எதிராகப் போராட மக்களைக் களத்தில் இறக்க வேண்டும் – சோசலிச அரசே அமைந்தாலும் வர்க்கப் போராட்டம் தொடரத்தான் செய்யும் என்றார் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர் தோழர் மாவோ. சொன்னது மட்டுமல்ல, , சோசலிசத்தின் கீழ் தொழிலாளி வர்க்கம் தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு நடத்த வேண்டிய கலாச்சாரப் புரட்சியின் அறைகூவலாக, ‘’தலைமையகத்தைத் தகர்த்தெறியுங்கள்’’ என்ற அறைகூவலையும் விடுத்தார்.

இருப்பினும் சீனக் கம்யூனிஸ்டு கட்சியை முதலாளித்துவப் பாதையாளர்கள் கைப்பற்றிக் கொள்வதை சீனத் தொழிலாளி வர்க்கத்தால் தடுக்கவியலவில்லை. இன்று முதலாளித்துவ மீட்புக்குப் பின்னர் சமூகத்தில் அதிகரித்து வரும் சீரழிவுகளும் ஏற்றத்தாழ்வுகளும் சோசலிசம் குறித்த ஏக்கத்தை சீனமக்களிடம் தோற்றுவித்து வருவதை சீன முதலாளி வர்க்கத்தாலும் தடுக்கவியலவில்லை.

முதலாளித்துவ மீட்புக்கு எதிராக சீனத்தில் கலாச்சாரப் புரட்சி தொடங்கிய அதே காலத்தில், நாடாளுமன்ற நாற்காலி கம்யூனிஸ்டு இயக்கமாக மாறி விட்ட இந்திய கம்யூனிஸ்டு இயக்கத்திலும் ஒரு புரட்சி வெடித்தது. மே, 1967-இல் நக்சல்பரி கிராமத்தில் வெடித்தெழுந்த உழவர் புரட்சி, ஒரு புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியின் உருவாக்கத்துக்கு வித்திட்டது. இடது விலகல் காரணமாக இ.பொ.க (மா-லெ) பின்னடைவைச் சந்தித்த போதிலும், இந்த அரசமைப்பைத் தூக்கியெறிய வேண்டுமென்று அது விடுத்த அறைகூவல், இன்றைக்கு முன்னிலும் பொருத்தமானதாகியிருக்கிறது. ஆளும் வர்க்கம் தோற்கடிக்கப்படவில்லை என்பது உண்மைதான். எனினும், அது ஆளும் அருகதை இழந்து தோற்றுவிட்டது. தன்னை அகற்றும் வலிமையை பாட்டாளி வர்க்கம் பெற்றிருக்கவில்லை என்ற காரணத்தினால், அது அதிகாரத்தில் நீடிக்கிறது.

உலக முதலாளி வர்க்கத்தின் நிலையும் அதுதான். முதலாளித்துவத்தின் முடிவை, அதனை ஒழித்துக் கட்ட வேண்டிய பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையை முன்னறிந்து சொன்ன மார்க்சும் மார்க்சியமும் செத்துவிட்டதாக முதலாளித்துவம் பிரச்சாரம் செய்யாத நாளில்லை. மார்க்சியம் சாகவில்லை என்பதை தொழிலாளி வர்க்கம் புரிந்திருக்கிறதோ இல்லையோ, முதலாளி வர்க்கம் தெளிவாகப் புரிந்திருக்கிறது.

“இத்தனை நாடுகளில் தோல்வியடைந்த பின்னரும் சோசலிசம் என்ற இந்தக் கருதுகோள் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு நாடுகளில் தலையெடுப்பது ஏன்? சோசலிசம் என்பது மனிதனின் உள்ளுணர்விலேயே உறைந்திருக்கிறதா? ஒரு வேளை அது மனித மூளையின் அங்கமாக இருந்தால், அதனை சமாளித்து சுதந்திரச் சந்தையின் ஆதாயங்களை மனிதர்களுக்குப் புரிய வைப்பது எப்படி?” என்று ஆராய்ச்சி நடத்துகிறது அமெரிக்க முதலாளித்துவம். மூளையை அறுத்தெறிவதன் மூலம் சோசலிசக் கருத்தை வெல்ல முடியுமா என்று சிந்திக்கிறது.

சோசலிசம் பெறவிருக்கும் வெற்றியை இதைக்காட்டிலும் தெளிவாக யாரேனும் கூற இயலுமா? இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் மனித குலத்தின் சிந்தனையில் உயிர்வாழும் மார்க்ஸை அகற்ற முடியாத முதலாளித்துவத்தின் தோல்வியைத்தான் மேலும் தெளிவாக யாரேனும் விளக்க இயலுமா?

புதிய ஜனநாயகம், நவம்பர் 2016

தூத்துக்குடி அரச பயங்கரவாத படுகொலைகள் அம்பலம்: குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை? | மருது வீடியோ

டப்பாடி பழனிசாமி, கிரிஜா வைத்தியநாதன், அன்றைய டி.ஜி.பி, டி.ஐ.ஜி, ஐ.ஜி, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து தூத்துக்குடியில் நடத்திய அரசு பயங்கரவாதப் படுகொலை. யாருக்காக இந்த படுகொலை வேதாந்தா நிறுவனத்திற்காக. இப்படி குற்றப்பத்திரிகையில் பதிவு செய்யப்படவில்லை.

யார்யாரெல்லாம் இந்த பச்சை படுகொலையை ஆதரித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ரஜினி கோமாளி என்று நினைத்தோம், ஆனால் அவர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி பாசிஸ்ட் தன்மையில் கருத்து சொன்னார். பாஜகவின் தமிழிசை சௌந்திரராஜன் 13 பேரை சுட்டுக்கொல்லாவிட்டால் 100 பேருக்கு மேல் இறந்திருப்பார்கள் என்று சொன்னார்கள். அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமியின் மீது என்ன நடவடிக்கை?

படிக்க : தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரசு பயங்கரவாதப் படுகொலைகள் | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

தூத்துக்குடி மக்கள் குற்றம் செய்தார்கள்; போலீசு தற்காப்பிற்காக சுட்டார்கள் என்று சி.பி.ஐ அறிக்கை சொல்கிறது. போலீசுதான் குற்றவாளிகள் என்று அருணா ஜெகதீசன் அறிக்கை சொல்கிறது. இவற்றில் எது வெல்லும்?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் அரச பயங்கரவாத படுகொலைகள் பற்றியும் அருணா ஜெகதீசன் அறிக்கையை பற்றியும் பல்வேறு கருத்துக்களை ரெட் பிக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்….

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக செயற்பாட்டாளர்களை செயலிழக்க வைப்பதே பாசிஸ்டுகளின் நோக்கம்!

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிலிருந்ததாக கைது செய்யப்பட்டு ஆயுள்தண்டனை வழங்கப்பட்ட டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என். சாய்பாபா உட்பட ஆறு பேரை  கடந்த வெள்ளிக்கிழமை 14-ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டது. ஆனால் அதற்கு மறுநாளே (அக்டோபர் 15)  உச்ச நீதிமன்றம் அவர்களின் விடுதலையை ரத்து செய்து மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

சாய்பாபாவின் மேல் முறையீட்டு மனுவை மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையைச் சேர்ந்த நீதிபதிகள் ரோஹித் தியோ மற்றும் அனில் பன்சாரே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. ‘தேசபாதுகாப்பிற்கு ஆபத்து என்ற பலிபீடத்தில் சட்டத்தின் சரியான செயல்முறைகளை பலியிட முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு பாதுகாப்பும், எவ்வளவு சிறிதாக இருப்பினும் அது கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும்’ என கூறி உடனடியாக ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பு பலரிடத்தில் வரவேற்பைப் பெற்று வந்தது, குறிப்பாக சாய்பாபாவின் மனைவி ‘இது ஒரு நீண்ட இழுபறியான போராட்டம்; ஆனால் இறுதியாக நீதி கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று  கூறினார். வழக்கறிஞர் ரத்தோட் என்பவர், “இது ஒரு வரலாற்று தீர்ப்பு மற்றும் இதேபோன்று துன்பங்களை அனுபவித்து வரும் பல நபர்களுக்கு இது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறினார். ஆனால் இவர்களின் மகிழிச்சி ஒரு நாள் கூட முழுமையாக நீடிக்கவில்லை.

மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த சில மணி நேரங்களில் மகராஷ்டிர மாநில அரசு ஆறு பேரின் விடுதலை உத்தரவை தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஊபாவின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது நியாயமற்றது, இதனை உடனே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டது.


படிக்க: முன்னால் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது!


உச்ச நீதிமன்றமும்  இதை  ஏற்று விடுமுறை நாளான சனிக்கிழமையன்று விசாரணையை மேற்கொண்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர் ஷா மற்றும் பேலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. இரண்டு மணிநேரம் நடந்த விசாரணையில் ‘மும்பை உயர்நீதிமன்றம் குற்றத்தின் தீவிரத்தை புரிந்துக் கொள்ளமால், தகுதிகளை பரிசீலிக்காமல் உத்தரவு பிறப்பித்துள்ளது’ என கூறி விடுதலையை ரத்து செய்தது.

குறைந்தபட்சம் போலியோவால் பாதிக்கப்பட்டு 90 சதவிதம் உடல் செயலிழந்துள்ள சாய்பாபாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவரை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் இதை எதிர்த்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா என்பவர், ‘இப்போதெல்லாம், நகர்ப்புற நக்சல்கள் வீட்டுக் காவல் கேட்கும் போக்கு அதிகமாகியுள்ளது. தற்போது அவர்கள் எல்லாவற்றையும் தொலைபேசியின் மூலம்  வீட்டிலிருந்தே செய்யலாம். அதனால் வீட்டுக் காவல் ஒரு தேர்வாக இருக்க முடியாது’ என வாதிட்டார்.

இதனை ஏற்ற அமர்வு ‘நாங்கள் இந்த வழக்கிற்காக சொல்லவில்லை; பொதுவாக மூளை மிகவும் ஆபத்தான விஷயம். பயங்கரவாதிகள் அல்லது மாவோயிஸ்டுகளுக்கு, மூளைதான் எல்லாமே’ என்று கூறி மனதாபிமானமற்ற முறையில் வீட்டுக் காவல் கோரிக்கையை நிராகரித்தது.

அரசுக்கட்டமைப்பு முழுவதும் எப்படி பாசிசமயமாகியுள்ளது என்பதை  சாய்பாபாவின் விடுதலையை ரத்து செய்ததிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடியும்.


படிக்க: சிசிடிவி-யை அகற்றகோரி சிறையில் பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரதப் போராட்டம் !


எட்டு ஆண்டுகளாக சித்திரவதையை அனுபவித்து வருகிறார்கள்!

2017-ஆம் ஆண்டு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிலிருந்ததாக கூறி சாய்பாபா, மகேஷ் திர்கி, ஹெம் கேஸ்வதத்தா மிஸ்ரா, பிரசாந்த் ராஹி , விஜய் நன் திர்கி, பாண்டு போரோ நரோட் ஆகியோருக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA)-கீழ் மகாராஷ்டிரா நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது. இதில் தண்டனை அனுபவித்து வந்த பாண்டு போரோ நரோட் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால், உடல்நிலை மோசமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

2020-ஆம் ஆண்டிலிருந்து சாய்பாபாவின் உடல் நிலையும் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அவருக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதில்லை. அவர் விண்ணபித்த மருத்துவ ஜாமீன் மனுவையும் மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மரணத்தின் மூலம் மட்டுமே அவரால் சிறையில் இருந்து விடுபட முடியும், மற்றபடி ஒரு நாள் கூட அவர் வெளியில் இருப்பதை இந்த பாசிச அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சாய்பாபா மட்டுமல்ல மோடி அரசை எதிர்த்து சிறுபான்மையினருக்கு ஆதரவாக போராடும் அறிவுத்துறையினரின் நிலை இதுவாக தான் உள்ளது. இதற்காகவே தான் உபா என்ற கருப்பு சட்டம் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் மீது பொய்யாக குற்றம்சாட்டி சிறையில் அடைத்து, பிணை கொடுக்கமால், அவர்கள் முழுமையாக மனம் நொந்து செயலிழந்து போகும் வரை சித்தரவதை செய்கிறது.

இப்படி தான் பீமா கோரேகான் வழக்கில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்களை மோடி அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதில் கைது செய்யப்பட்ட 84 வயதான ஸ்டான் சுவாமிக்கு மருத்துவ சிகிச்சையும் கொடுக்காமல்  பிணையும் கொடுக்காமல் சிறையிலேயே கொன்றுவிட்டது.

சமீபத்தில் சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் (PUCL) அறிக்கை வெளியானது. அதில், நாடு முழுவதும் UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுபவர்களில் 97.2% பேர் குற்றமற்றவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. 2015 – 2020 காலகட்டத்தில் UAPA சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட 8,371 பேரில் வெறும் 235 பேர் மீதான குற்றங்கள் மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளன. அதே போல மோடி அரசாங்கம்தான் 80 சதவிகிதம் அளவிற்கு இந்த சட்டத்தை பயன்படுத்தியிருக்கிறது. பாசிசிட்டுகளின் தாக்குதலை புரிந்துக்கொள்ள இந்த புள்ளி விவரமே போதுமானது.

பீமா கோரேகான் வழக்கில் ரோன வில்சன் கணினியில் இருந்து எடுக்கப்பட்ட கோப்புகள் புனே போலீசாரால் தான் நடப்பட்டது என்பதை அமெரிக்க ஆய்வு நிறுவனம் நிருபித்துள்ளது. சாய்பாபாவின் மீதான வழக்கு புனையப்பட்ட ஒன்று என்பதும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும் எந்த வெகுஜன ஊடகங்களும் இதை பேசு பொருளாக்கவில்லை. ஏனென்றால் மோடியை எந்த அளவுக்கு விமர்சிக்க வேண்டும் என்பதும் மோடியால் தான் தீர்மானிக்கப்படுகிறது. நிலைமை இப்படி இருக்கையில் இன்னமும் சட்டத்தின் மூலம் விடுதலையை பெற முடியும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனத்தின் உச்சமாகத்தான் இருக்கும்.


இளமதி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரசு பயங்கரவாதப் படுகொலைகள் | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

19.10.2022

தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரசு பயங்கரவாதப் படுகொலைகள்;
அன்றைய முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்  ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டும்!

பத்திரிகை செய்தி

னில் அகர்வாலுக்குச் சொந்தமான வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியின் நீர், நிலம், காற்று என அனைத்தையும் நஞ்சாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்ததற்கு எதிராக ஏறத்தாழ 30 ஆண்டுகளாகப் போராடினர்.

கடந்த 2018-ஆம் ஆண்டில்  ஸ்டெர்லைட் வேதாந்தா ஆலைக்கு எதிராக தொடர் போராட்டத்தை தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு  அறிவித்தது.

அந்தப் போராட்டத்தின் 100வது நாளான 2018-ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்து நீதி கேட்பது என்று முடிவெடுத்தனர்.

அமைதியான முறையில் போராடிய பொதுமக்களை பூங்காவில் மறைந்திருந்து வேண்டுமென்றே திட்டமிட்டு துப்பாக்கியால் சுட்டு  வேதாந்தா கம்பெனிக்காக படுகொலைகளை செய்தது தமிழ்நாடு போலீசு .

அன்றைய தினம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் எமது மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் உள்ளிட்ட 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர். 13 பேரை சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் தூத்துக்குடி மக்கள் கிஞ்சித்தும் பின்வாங்காமல் ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் தான் இறந்தவர்களின் உடலை வாங்குவோம் என்று உறுதியாக நின்றார்கள். அதன் விளைவாகவே ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது என்பதே உண்மை.


படிக்க: சுடுகாட்டு ஜனநாயகம்! உறுதியாய் நின்ற மக்கள்! மக்களிடம் கற்போம்! ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடி நீதி பெறுவோம்!


இது தொடர்பா நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அளித்த அறிக்கை நேற்று (18.10.2022) தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

அருணா ஜெகதீசன் அறிக்கையில் குறிப்பாக,  “மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தவர்களை பூங்காவில் இருந்து மறைந்து கொண்டு வந்திருந்த மக்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே  துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

மேலும் துணை தாசில்தார்களிடம் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப துப்பாக்கிச்சூடு உத்தரவை போலீசு திட்டமிட்டு பெற்றிருக்கிறது.
நெற்றியிலும் மார்பிலும் திட்டமிட்டு கொலை செய்ய வேண்டும் என்றும் நோக்கில் மிக அருகில் இருந்து போலீசால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது ” என்று கூறப்பட்டுள்ளது.

சுடலைக்கண்ணு என்ற போலீசின் துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்து விட்டதால் மட்டுமே 17 ரவுண்டுகள் சுடப்பட்டு இருக்கின்றன. ஒருவேளை அவருடைய துப்பாக்கியில் குண்டுகள் இருந்திருந்தால் இன்னும் பலரின் உயிர் பலியாகி இருக்கும் என்பதையும் குறிப்பாக இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது .

அன்றைய முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி இந்த சம்பவத்தை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டதாகக் கூறியது ஒரு பச்சைப் பொய் என்பதையும் அந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு  திட்டமிட்டு நடைபெற்ற ஒரு படுகொலை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நாள் முதல் தூத்துக்குடி மக்கள் பலரை வீடு புகுந்து அராஜகமான முறையில் கைது செய்த போலீசு, கடும் சித்திரவதை செய்து  ஒவ்வொருவரின் மீதும் பல வழக்குகளை பதிவு செய்தது.
எமது மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த மதுரை முதல் நெல்லை வரையிலான பல தோழர்கள் கைது செய்யப்பட்டதுடன் கடும் சித்திரவதைக்கு உள்ளாகினர்.

தூத்துக்குடி மக்கள் மீதான துப்பாக்கிச் சூட்டையும் அடக்குமுறையையும் ஆதரித்த ரஜினிகாந்த், அன்றைய பா.ஜ.க-வின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட அனைவரும் மக்கள் எதிரிகளே.

000

அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.20 லட்சம் போக, எஞ்சியத் தொகையை வழங்க வேண்டும் என்பதும் அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருக்கின்ற வழிமுறைகளாகும்.


படிக்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குற்றவாளிகளான போலீஸ் உயரதிகாரிகள், கலெக்டர், துணை தாசில்தார் உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்! | மருது வீடியோ


மேலும் “இந்த போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு போதிய அளவில் போலீசிடம் ஒருங்கிணைப்பு இல்லை என்றும்  ஸ்டெர்லைட் போராட்டத்தில் மே 13 முதல் 22 வரை நடந்த படிப்படியான சீரான வளர்ச்சியை எடைபோட்டு யுக்திகளைக் கையாண்டு குழப்பம் விளைவிக்கும் நபர்களை அடையாளம் கண்டு கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வேண்டுமென்ற போராட்டக்காரர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கும்.

ஆனால், அதை முறியடிக்கும் வகையில் அணுகுமுறை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இது காவல்துறையின் குறைபாடு, மாவட்ட நிர்வாகத்தின் செயலின்மை, அலட்சியம் என்பது தெளிவாகத் தெரிகிறது” என்றும் அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.

வேதாந்தா ஸ்டெர்லைட் என்ற கார்ப்பரேட் நிறுவனத்திற்காக தமிழ்நாட்டின் அன்றைய முதலமைச்சர், தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட ஒட்டுமொத்த அதிகார வர்க்கமே இணைந்து தூத்துக்குடி மக்களை கொன்றொழித்தது என்பதுதான் உண்மை .

அந்தப் போராட்டத்தை உருவாக்கியதும் அந்தப் போராட்டத்தில் குழப்பத்தை விளைவித்ததும் ஸ்டெர்லைட் வேதாந்தாவும் அன்றைய அதிகாரவர்க்கமும் தான் . போராட்டக்காரர்கள் அல்ல.

தமிழ்நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் எந்த அளவிலும் உருவாகக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு நடத்தப்பட்ட அரசு வன்முறை இது.  இந்த உண்மையை அருணா ஜெகதீசன் ஆணையம் பிரதிபலிக்கவில்லை.

தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டமும்,  போலீசால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு படுகொலைகளும் அதற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட  கைதுகள் – சித்திரவதைகளும்   இந்த அரசு கார்ப்பரேட் ஆதரவாக மக்கள் மீது நடத்திய பயங்கரவாத நடவடிக்கையே.

தனியார்மயம் – தாராளமயம்- உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளே அரசியல் சட்டங்களாகவும் பொருளாதாரத் திட்டங்களாகவும் நீடிக்கும் வரை இப்படிப்பட்ட படுகொலைகளையும் அரசு பயங்கரவாத செயல்களையும் ஒருபோதும் தடுக்க முடியாது .

ஒரு அரசின் அடக்குமுறையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் பல்வேறு தியாகங்களின் மூலமாக மட்டுமே ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை மூட முடியும் என்பதையும் தூத்துக்குடி மக்கள் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

அன்றைய தினம் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழ்நாடும்  ஒருங்கிணைந்து நின்றே அந்த அரசு பயங்கரவாதத்தை முறியடித்தது என்பதை எப்போதும் மறக்க முடியாது.

ஆர்எஸ்எஸ்-பாஜக அம்பானி – அதானியின் பாசிச சூழலில் தூத்துக்குடி மக்களின் போராட்ட பாரம்பரியத்தை நாம் வரித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர்கள் என்று அருணா ஜெகதீசன் அறிக்கை குறிப்பிட்டுள்ள 17 பேர் தவிர
அன்றைய முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,  டிஜிபி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்  ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

ஸ்டெர்லைட் வேதாந்தாவுக்கு எதிராக வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தி மாபெரும் வரலாற்றைப் படைத்த தூத்துக்குடி தியாகிகளின் புகழ் ஓங்குக!

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் வெல்க!


தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன், மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு  – புதுவை
9962366321

துரோகி சாவர்க்கர் விடுதலை வீரரா?

நாடு முழுவதும் ஆகஸ்டு 15-ஐ ஒட்டி சாவர்க்கரை விடுதலைப் போராட்ட வீரராகக் காட்டும் வேலையை மோடி அரசும் பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளும் திட்டமிட்டு மேற்கொண்டன. இதன்மூலம், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அடிவருடியான சாவர்க்கரை ‘வீர் சாவர்க்கராக’ மாற்றும் பிரச்சாரத்தை காவி கும்பல் நாடு முழுவதும் வீச்சாகக் கொண்டு சென்றது.

நமது நாட்டின் 75-வது ‘சுதந்திரத் தினத்தன்று’ விடுதலைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்த தியாகிகளுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்றியபோது, அதில் சாவர்க்கரையும் இணைத்துப் பேசினார். அன்றைய தினம், ‘சுதந்திர தின’ விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் சாவர்க்கரை முன்னிறுத்தும் செயல்கள் அரங்கேறின.

இதுபோலவே, காவி கும்பல் ஆளும் மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில், அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட விளம்பரத்தில், படேல், காந்தி, ஜான்சி ராணி, திலகர் வரிசையில் சாவர்க்கருடைய படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் படம் இடம்பெறவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, “நேருவை அவமதித்ததற்காக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும். தங்கள் நாட்டின் முதல் பிரதமரை இழிவுபடுத்தும் எவரையும் கர்நாடக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்றார். இதற்காக, சித்தராமையா மீது முட்டையை வீசி தாக்குதலை நடத்தியது சங்கப் பரிவார கும்பல்.

படிக்க : சாவர்க்கர் ஒரு அதிதீவிர சாதிவெறியர் : இந்துத்துவ ஆவணங்களிலிருந்து ஆதாரம் !

கர்நாடகாவின் பல இடங்களில் சாவர்க்கர் படம் கொண்ட பேனர்கள் வைக்கப்பட்டன. ஷிவமோகா நகரில் இருக்கும் பள்ளிவாசலை ஒட்டிய ஷாப்பிங் மால் ஒன்றில் இந்துத்துவ அமைப்புகளால் சாவர்க்கர் படத்துடன்கூடிய பேனர் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்கள் சிலர் சாவர்க்கர் படம் கொண்ட பேனருக்கு பதிலாக, திப்பு சுல்தான் புகைப்படத்தை வைக்க முயன்றனர். அப்போது காவி கும்பல், அந்த இளைஞர்கள் மீது தாக்குதலை நடத்தியது. காவி கும்பலுக்கு எதிரான எதிர்த்தாக்குதல் தீவிரமடைந்ததை ஒட்டி, கூட்டத்தைக் கலைக்க போலீசு தடியடி நடத்தியது.

விடுதலைப் போராட்ட வீரர்களின் வரிசையில் சாவர்க்கரின் படத்தை வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூரு, உடுப்பி, ஷிவமோகா உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு மக்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியதை சற்றும் எதிர்பாராத ஆளும் பா.ஜ.க. அரசு, போராட்டங்களைத் தடுக்கும் வகையில், மங்களூரு, ஹிவமோகா பகுதிகளில் ஆகஸ்ட் 18 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறை செலுத்தியது.

ஊரடங்குக்குப் பிறகு, கர்நாடக பா.ஜ.க. சார்பில், “சாவர்க்கர் ரத யாத்திரை” என்ற பெயரில் ஆகஸ்ட் 23 முதல் 31 ஆம் தேதி வரை பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. ரத யாத்திரையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த எடியூரப்பா “போராடுபவர்களுக்கு சாவர்க்கரின் சித்தாந்தம் மற்றும் தியாகத்தைக் கொண்டு போய் சேர்ப்பது நமது கடமையாகும். ரத யாத்திரை தேசவிரோதிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும்” என்றார்.

இப்படி, கர்நாடகாவில் சாவர்க்கரை விடுதலைப் போராட்ட வீரராகக் காட்டும் வேலையை கர்நாடக பா.ஜ.க. அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில், கடற்கரை சாலையில் ‘சுதந்திர தின’ விழாவையொட்டி அமைக்கப்பட்ட தியாகிகள் சுவரில், தேச விடுதலைக்காகப் போராடிய ஆயிரம் தியாகிகளின் பெயர்களுடன் சாவர்க்கர் பெயரும் சேர்த்திருக்கிறது பா.ஜ.க. அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. இது குறித்துப் பேட்டியளித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “சாவர்க்கரை எதிர்ப்போருக்கு விடுதலைப் போராட்ட வரலாறு தெரியாது. சுதந்திரத்துக்காக ஒரு சிறிய கல்லை எடுத்துப் போட்டாலும் அவர் சுதந்திரப் போராட்ட வீரர்தான். வீர சாவர்க்கர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்பதை எந்த சபையிலும் அழுத்தமாக என்னால் கூறமுடியும்” என்றார்.

இதேபோல், இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் இணையதளத்தில் ஆகஸ்டு 15-ஐ ஒட்டி வெளியிடப்பட்ட இ-போஸ்டரில் நேருவின் படம் இல்லாமல் சாவர்க்கர் படம் இடம்பெற்றிருந்தது.

இதுமட்டுமல்ல, தற்போது கேரளாவில் ராகுல்காந்தி மேற்கொண்ட நடைப்பயணத்தில் வைக்கப்பட்ட பேனரில்கூட சாவர்க்கர் படம் இடம்பெற்றிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த காங்கிரசு தலைவர்கள், அவசரவசரமாக காந்தியின் படத்தை வைத்து சாவர்க்கர் படத்தை மறைத்தனர். “விடுதலைப் போராட்ட வீரர்கள்” என்று இணையதளத்தில் தேடினாலே சாவர்க்கர் படமும் வரும் வகையில், காவிக் கும்பலின் ஐ.டி. பிரிவு சதி செய்துள்ளது.

சாவர்க்கர் பிரச்சாரத்திற்கு தமிழகமும் தப்பவில்லை. அகில பாரத இந்து மகாசபா சார்பில் “சுதந்திரத்தின் தந்தை வீர சாவர்க்கர்” என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடத்தப்பட்டுள்ளது.

இதுவரை ‘சுதந்திர தின விழா’ பள்ளிகளில் கொண்டாடப்பட்டால் காந்தி, நேரு, பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களின் வேடம்தான் பிள்ளைகளுக்குப் போட்டு அனுப்பப்படும். ஆனால், கேரளாவின் மலப்புரம் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், சாவர்க்கர் போல வேடமிட்டு வந்தது, ஒரு குழந்தை. இதற்கு எதிர்ப்புகள் எழுந்த போதும், பள்ளி நிர்வாகம் அதனைப் பொருட்படுத்தவில்லை.

இந்த நிகழ்வுகளில் மட்டுமல்ல, பாடப்புத்தகங்களில் சாவர்க்கரை விடுதலைப் போராட்ட வீரராகக் காட்டும் வேலையை கர்நாடக பா.ஜ.க. அரசு செய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தின் 8-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், “சாவர்க்கர் சிறையில் அடைக்கப்பட்ட அறையில், ஒரு சிறிய சாவித் துவாரம் கூட இல்லை. இருப்பினும், புல்புல் பறவைகள் எங்கிருந்தோ அறைக்கு வரும். சாவர்க்கர் ஒவ்வொரு நாளும் தாய்நாட்டிற்குச் செல்ல அந்த பறவைகளின் இறக்கைகளில் அமர்ந்து பறந்து செல்வார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இந்த பகுதியை நீக்க வேண்டும் என குரல் கொடுத்த போது, இந்த புத்தகத்தை வடிவமைத்த குழுவின் தலைவர் ரோஹித் சக்ரதீர்த்தா என்பவர்  “இந்த பத்தியில் உள்ள வரிகள் அழகிய புலமை நயமிக்கவை. இந்தப் புலமை நயத்தை சிலரால் புரிந்துகொண்டு ரசிக்கத் தகுந்த அளவில் அறிவாற்றல் இல்லையே என்பது ஆச்சரியமாக இருக்கிறது” என்று திமிராகப் பதிலளித்தார்.

***

மோடி அரசும், பா.ஜ.க ஆளும் மாநில அரசுகளும் வரலாற்றைக் காவிமயமாக்கும் நோக்கத்தில், ஒருபுறம், உண்மையான விடுதலைப் போராட்ட, பார்ப்பன எதிர்ப்பு மரபை இருட்டடிப்பு செய்கின்றன; திரித்துப் புரட்டுகின்றன. மற்றொருபுறம், பொய்யான கற்பனைக் கதைகளை வரலாற்றாக்க முயற்சிக்கின்றன. பொய்யான கற்பனைக் கதைகளை வரலாற்றாக்க முயற்சிக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றுதான் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை விடுதலைப் போராட்ட வீரர்களாகக் காட்டும் முயற்சியாகும்.

இதற்காக, மோடி அரசும் பா.ஜ.க ஆளும் மாநில அரசுகளும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான கோல்வால்கர், சாவர்க்கர், தீனதயாள் உபாத்யாயா போன்றவர்களின் பெயர்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கில் பேருந்து நிலையம், ரயில்நிலையம், விமானநிலையம் போன்ற பொது இடங்களுக்குச் சூட்டின. இதன் தொடர்ச்சியாக, அவர்களை வரலாற்று நாயகர்களாக ஒளிவட்டமிடுவதற்கான நடவடிக்கைகள்தான், ஆகஸ்டு 15-ஐ ஒட்டி மேற்கொள்ளப்பட்ட மேலே விவரிக்கப்பட்ட நடவடிக்கைகளாகும்.

***

சொந்த நாட்டு மக்களுக்குத் துரோகமிழைத்த வரலாற்றைத் தவிர ஆர்.எஸ்.எஸ்-க்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை. தற்போது இவர்களால் முன்னிறுத்தப்படும் சாவர்க்கர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து, தன்னுடைய விடுதலைக்காக மண்டியிட்டவர்; விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்தவர். ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் வரலாறு அனைத்தும் துரோக வரலாறுதான். விடுதலைப் போராட்டத்தில் இந்த கும்பல் எந்தவித நேர்மறை பங்கையும் ஆற்றியதில்லை.

படிக்க : கர்நாடகா: பள்ளி பாடத்திட்டத்தில் சாவர்க்கரை திணிக்கும் சங் பரிவார்!

இப்படி இழிபுகழ் வரலாற்றைக் கொண்ட சங்கப் பரிவாரக் கும்பலுக்கு, இந்துராஷ்டிரத்தை நிலைநாட்டுவதற்கு நேர்மறையான வரலாறு தேவைப்படுகிறது. விடுதலைப் போராட்டத்தில், முதன்மையான பங்காற்றியது ஆர்.எஸ்.எஸ்.தான் என்று பொய்யாக சித்தரிப்பதன் மூலம், விடுதலைப் போராட்டப் பாரம்பரியமிக்க, மதிக்கத்தக்க ஒரு அமைப்பாக ஆர்.எஸ்.எஸ்-ஐ முன்னிறுத்துகிறது.

தங்களது இந்துத்துவ சித்தாந்தத்தை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கவும், பார்ப்பன, கார்ப்பரேட் அடிமைத்தனத்தை மக்கள் ஏற்றுக்கொண்டு இந்துராஷ்டிரத்தில் ஐக்கியப்பட வைப்பதற்கும் இவ்வாறான கற்பனைத் தலைவர்களையும் கற்பனைக் கதைகளையும் உருவாக்குகிறது. இதன்மூலம், வரலாற்றைப் பற்றி ஏதும் அறியாத பாமர மக்களை எளிதில் இந்தக் கற்பனைக் கதைகளுக்கு ஆட்படுத்திவிடலாம் என்பது ஆர்.எஸ்.எஸ்-இன் பெருங்கனவாகும். ஆனால், இந்தக் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை.

வள்ளலாரின் சமரச சன்மார்க்க நெறி, சித்தர்கள், அம்பேத்கர் – பெரியார் – பூலே போன்ற சமூக சீர்த்திருத்தவாதிகளின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபையும், பகத்சிங், திப்பு சுல்தான், வ.உ.சி., கட்டபொம்மன் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு – தேசிய மரபையும், விவசாயிகள், தொழிலாளர்கள், பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு உழைக்கும் மக்களின் தனியார்மய – தாராளமய – உலகமய எதிர்ப்புப் போராட்ட மரபையும் கொண்ட நமது நாட்டின் கோடான கோடி உழைக்கும் மக்கள் இந்த கற்பனைப் புரட்டுகளை ஒரு போதும் ஏற்கப்போவதில்லை.


மதி