Thursday, June 18, 2026
முகப்பு பதிவு பக்கம் 174

இந்தித் திணிப்பு ; தாய்மொழி அழிப்பு ! அமித்ஷா குழு பரிந்துரை ! | மக்கள் அதிகாரம் கண்டனம்

11.10.2022

இந்தித் திணிப்பு ; தாய்மொழி அழிப்பு !
அமித்ஷா குழு பரிந்துரை !
தேவை மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப் போராட்டம் !

கண்டன அறிக்கை !

ன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக் கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. மேலும், வேலைவாய்ப்பு தேர்வுகளில் இந்தி மொழி அவசியம், பணியாளர்கள் தேர்விலும் இந்தி மொழி அறிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை குடியரசு தலைவரிடம் அளித்துள்ளது.

ஒன்றிய அரசின் அலுவலகங்கள், இலாகாக்கள் அளிக்கும் கடிதங்கள், பதில்கள், மின்னஞ்சல்கள் ஆகிய அனைத்தும் இந்தி மொழியில்தான் இருக்க வேண்டும்; அரசின் விளம்பரங்கள், நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள், உரைகள் அனைத்தும் இந்தி மொழியில்தான் இருக்க வேண்டும்; ஐ.நா.வில் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி மொழிதான் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளையும் அக்குழு அளித்துள்ளது.

ஒரே நாடு, ஒரே உணவு, ஒரே வரி என்ற வகையில் தற்பொழுது ஒரே மொழி என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கையை நடைமுறைப்படுத்த மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு.

அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகளிலும் இந்தி மொழி கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டால் அதன் விளைவாக தாய்மொழி அழிக்கப்படும். ஒவ்வொரு இனத்தின் மொழியும் அழிக்கப்படும் போது அதன் பண்பாடும் வரலாறும் சேர்த்து அழிக்கப்படும்; அழிக்கப்பட வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டம்.


படிக்க : 1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் ! பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை !


வட இந்தியாவில் இருந்த பல்வேறு இனக்குழுக்களின் மொழிகளை மறைத்துவிட்டு / அழித்துவிட்டு இந்திதான் அம்மக்களின் தாய்மொழி என்பது போன்ற ஒரு தோற்றத்தை பொய்யாக உருவாக்கியது போலவே இந்தியா முழுவதும் அப்படிப்பட்ட பொய்த் தோற்றத்தை உருவாக்க முயல்கிறது பாசிச மோடி அமித்ஷா கும்பல்.

இந்தித் திணிப்புக்கு எதிராக 1935 மற்றும் 1965 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு நடத்திய வீரம் செறிந்த போராட்டங்களே தாய்த்தமிழைக் காப்பாற்றியது.

1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தொடங்கி வைத்த கல்லூரி மாணவர்களின் எழுச்சியானது பள்ளி மாணவர்கள் இளைஞர்கள், தமிழ்நாட்டு மக்கள் என பற்றிப் பரவியது. இறுதியில், பொள்ளாச்சியில் இந்திய ராணுவம் தமிழ் மக்களை சுட்டுக் கொன்றதும் தமிழ்நாடு அரசின் போலீசுக்கும் இந்திய ராணுவத்துக்கும் முரண் ஏற்பட்டதும் தமிழ்நாடு மக்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறு ஆகும்.

வேறுவழியின்றி அன்றையகாலக்கட்டத்தில் பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி கட்டாய இந்தித் திணிப்பை திரும்பப் பெற்றார். கட்டாய இந்தித் திணிப்பை ஏற்காத மாநிலங்கள் இருக்கும் வரை அதை நடைமுறைபடுத்த மாட்டோம் என்று உறுதி அளித்தார்.

ஆனால், அந்த உறுதிமொழிக்கு மாறாக கடந்த 57 ஆண்டுகளில் பல்வேறு வகைகளில் இந்தித்திணிப்பு படிப்படியாக கட்டாயப் படுத்தப்பட்டிருக்கிறது.

இறுதியாக, ஒரே சம்மட்டி அடியாக அடித்து அனைத்து தாய் மொழிகளையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது மோடி அமித்ஷா பாசிச கும்பல். அதனால்தான் அமித்ஷாவின் தலைமையில் இருக்கக் கூடிய நாடாளுமன்ற நிலைக் குழுவானது இப்படிப்பட்ட ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவித்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலம், தாய் மொழி என்று மூன்று மொழிகளிலும் அனைத்து பத்திரங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை இன்னொரு நிலைக்குழு கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதையும் விரைவில் படிப்படியாக மாற்றி அனைத்து மாநிலங்களிலும் பத்திரப் பதிவுகள் மேற்கண்ட மூன்று மொழிகளில் ஏதாவது ஒன்றில் இருக்கலாம் என்பது இந்தியில் பத்திரப்பதிவு இருந்தால் போதும் என்ற நிலைக்கு வரலாம்.

ஏற்கனவே, தமிழ்நாட்டின் அனைத்து அரசுத்துறைகளிலும் திட்டமிட்டு வட நாட்டவர்களை நுழைத்து அதன் மூலம் தமிழர்களையும் தமிழையும் அரசுப்பணிகளில் இருந்து ஒழித்துக்கட்டும் வேலை தொடங்கி நடந்து வருகிறது.

சி.பி.எஸ்.இ என்று கூறப்படும் பள்ளிகளில் தமிழே தெரியாமல் எந்த ஒரு மாணவனும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி படிப்பை முடிக்க முடியும் என்ற நிலை உள்ளது.

ஆக தமிழும் தமிழ்ப் பண்பாடும் தெரியாத தமிழர்களை உருவாக்கி அவர்களை தன்னுடைய இந்து ராஷ்டிரத்தை நோக்கிய பயணத்திற்கு ஆதரவாளர்களாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு.


படிக்க : “வள்ளலார் 200” தனிப்பெரும் கருணையா? பார்ப்பனிய எதிர்ப்பு மரபா?


ஆரிய – பார்ப்பன, வேத எதிர்ப்பே தமிழ் – திராவிட பண்பாட்டின் அடிநாதம். நான்கு வர்ண, சாதி போன்ற இழிவான பண்பாட்டுக்கு எதிராக பல்வேறு இலக்கியங்களையும் வாழ்வியல் நெறிமுறைகளையும் வகுத்தது திருவள்ளுவர், சித்தர் முதல் வள்ளலார், பெரியார் வரையிலான  தமிழ் – திராவிட பண்பாடு.

இந்து ராஷ்டிரத்தை நிறுவுவதில் அனைத்து தாய் மொழிகளையும் பல்வேறு இனக்குழுக்களின் பண்பாடு, உணர்வுகளையும் அழிப்பது என்பது ஒரு முக்கியமான மைல்கல். அதைக் கடப்பது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி – அதானி பாசிச கும்பலின் இன்றைய முக்கியமான தலையாய கடமை.

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் வெறுமனே தாய்த் தமிழை காப்பதற்கான போராட்டமாக மட்டும் இருக்கப் போவதில்லை. மாறாக இந்தித்திணிப்பு என்ற வகையில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அதானி – அம்பானி பாசிசத்தை நிறுவும் முயற்சிகள் அனைத்தையும்  தூளாக்கும் வகையில் நம்முடைய போராட்டங்கள் இருக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

அமித்ஷா குழுவின் இந்த ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி, அம்பானி- அதானி பாசிசம் ஒழிக! அக்டோபர்- 11 சமூக நல்லிணக்கப் பேரணி வெல்க!

0

ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி, அம்பானி- அதானி பாசிசம் ஒழிக!

அக்டோபர்- 11 சமூக நல்லிணக்கப் பேரணி வெல்க!

தமிழகத்தில் சாதி, மத கலவரங்கள் மூலம் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி அதன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி கொடுத்து தமிழ்நாட்டை கைப்பற்ற துடிக்குது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல்.

அந்த நாசகர நோக்கத்திற்காக பாசிச ஆர்.எஸ்.எஸ் பேரணி ஒன்றை நடத்த உள்ளது.

அந்த பேரணிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும், சாதி, மத கலவரங்களை ஏற்படுத்தி இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், தலித்துகள், நாட்டின் உழைக்கும் மக்கள் ஆகியோருக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி பாசிச கும்பல் முற்றிலும் சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்கிற இலக்கிலும்,
இந்த ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பார்ப்பன பாசிச கும்பலுக்கு எதிரான களம் தான் தமிழ்நாடு என்பதை அறிவிக்கும் விதமாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து அக்டோபர் 11 ஆம் தேதி சமூக நல்லிணக்க பேரணி – மனித சங்கிலியை தமிழகமெங்கும் நடத்தப்பட உள்ளன.

இதில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு) மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் பங்கேற்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆர்.எஸ்.எஸ் என்பது தமிழகத்தில் உள்ள மற்ற அமைப்புகளைப் போன்றதல்ல! அது ஒரு பாசிச அமைப்பு. அதன் வழிமுறையே நாடு முழுவதும் குண்டு வைப்பதும், இஸ்லாமியர்கள், தலித்துகள், கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்வதும், அச்சுறுத்துவதும் அதன் வழிமுறையாகும்.

இதன் நோக்கம் இந்து ராஷ்டிரமே. ஆர்.எஸ்.எஸ் அமைக்கத் துடிக்கும் இந்து ராஷ்டிரம் என்பது மத சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட, தலித் மக்களுக்கு எதிரான ஒரு பாசிச அரசு தான் என்பதை அவர்களது நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. அப்படிப்பட்ட ஒரு பாசிச அரசை அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்பதே அவர்களது லட்சியம்.

உலகத்திலேயே தொடர்ச்சியாக 100 ஆண்டுகள் இயங்கிய ஒரே பாசிச அமைப்பு ஆர்.எஸ்.எஸ் மட்டுமே. அந்த அளவுக்கு அதன் உள் கட்டமைப்பு இறுக்கமாகவும், நுணுக்கமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்று கோருவது நாட்டின் நலம் மீதும், மக்கள் நலன் மீதும் அக்கறை கொண்டவர்களது இயல்பான கோரிக்கையே. அது மட்டுமன்றி அந்த அமைப்பு முற்றிலும் மக்களால் புறக்கணிக்கப்படும் அளவுக்கு அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்பதும் காலத்தின் கட்டாயமாகிறது.

தமிழ்நாட்டின் மரபு என்பது பௌத்தம், சமணம் உள்ளிட்ட நெறிமுறைகளாலும், திருவள்ளுவர் சித்தர்கள் வள்ளலார், பெரியார் போன்றவர்களுடைய சிந்தனைகளையும் வரித்துக் கொண்ட சனாதன எதிர்ப்பு மரபாகும்.

வைதீக, வேத, பார்ப்பன, ஆரிய எதிர்ப்பு மரபே தமிழ்நாட்டின் மரபு. அந்த மரபின் தொடர்ச்சியாகவே, நாம் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலை முறியடிக்கும் பொறுப்பை உணர்கிறோம்.

ஆர்.எஸ்.எஸ் வெறியனான கோட்சே காந்தியைக் கொன்றது அப்பட்டமான மதவெறியின் துவக்கமாகும். காமராசரைக் கொல்ல முயன்றது அதன் தொடர்ச்சியாகும்.

அம்பேத்கரது நூற்றாண்டு விழாவின்போது அவரது பெயர் சூட்டப்பட்ட மரத்வாடா பல்கலைக் கழகத்தை எதிர்த்தது ஆர்.எஸ்.எஸ், இந்துமதவெறி பார்ப்பன பாசிச கும்பல். ஒவ்வொரு இடஒதுக்கீடு பிரச்சினையின் போதும் மாணவர் அமைப்பான ABVP மூலம் கலவரங்களை முன்னெடுத்தது ஆர்.எஸ்.எஸ்.

இப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு காந்தி, அம்பேத்கர் ஆகியோரை முன்னிறுத்தி அவர்களின் நினைவாக பேரணி நடத்தவுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிப்பது கேலிக்கூத்தான விசயம்.

தமிழ்நாட்டில் சாதி மற்றும் மதக் கலவரங்களை உருவாக்கி இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினர் மீது பெரும் தாக்குதலை நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் தயாராக இருக்கிறது.

இதன் மூலமாக தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று கூறி ஆட்சியை கைப்பற்றுவதற்கான திட்டமும் இருக்கிறது.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனது கார் மீது செருப்பை வீசியது, முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.ராசாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது ஆகியவை சமீபத்திய உதாரணங்கள்.

இப்படிப்பட்ட நாசகர நோக்கமுடைய பாசிச ஆர்.எஸ்.எஸ், பேரணி நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது.

அதுமட்டுமில்லாமல் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி போன்ற பாசிச அமைப்புகள் தமிழ்நாட்டில் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாடே ஒருமுகமாக ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலுக்கு எதிர்ப்பை பதியவைக்கும் விதமாக அக்டோபர் 11 ஆம் தேதி விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைத்திருக்கக் கூடிய சமூக நல்லிணக்கப் பேரணியை வரவேற்பதுடன் அப்பேரணியில் எமது அமைப்புகள் கலந்து கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆர்.எஸ்.எஸ்-பாஜக, அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்!

காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் !

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம்!

பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைப்போம்!

ம.க.இ.க – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை

தொடர்புக்கு : 9791653200, 9444836642, 7397404242, 9962366321

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2022 | மின்னிதழ்

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

அக்டோபர் – 2022 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜி−பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ. 20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

அக்டோபர் இதழ்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

♦ தலையங்கள்: ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிரான இறுதிப் போர்: தமிழகமே உன் போர்வாளை கூர் தீட்டு!

♦ காவி பயங்கரவாதமே அரசாளுகிறது!

♦ சர்வதேச அச்சுறுத்தலாக வளர்ந்துவரும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!

♦ ‘வல்லரசு இந்தியா’ யாருக்காக?

♦ துரோகி சாவர்க்கர் விடுதலை வீரரா?

♦ உ.பி உள்ளிட்ட பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் பாலியல் வன்கொடுமைக் கூடாரங்களே!

♦ மின் கட்டண உயர்வு: தனியார்மயக் கொள்கையை அமல்படுத்தும் தி.மு.க அரசு!

♦ ஜி.பி.எஸ் சுங்கக் கட்டண வசூல்: ‘டிஜிட்டல் பிட்பாக்கெட்’ ஜாக்கிரதை!

♦ பாகிஸ்தான் பொருளாதார, சூழலியல் நெருக்கடி: மனித குலத்தின் எதிரி ஏகபோக மூலதனம்!

♦ ஒரு கம்யூனிச துரோகி செத்துத் தொலைந்தான்!

சின்மயா மிஷன் பள்ளி சாதி புத்தி – வன்கொடுமை சட்டம் பாயுமா? | மருது வீடியோ

0

சின்மயா மிஷன் பள்ளி சாதி புத்தி – வன்கொடுமை சட்டம் பாயுமா? | மருது வீடியோ

சின்மயா மிஷன் பள்ளி அம்பேத்கரும் அப்துல்கலாமும் எந்த வர்ணத்தை சார்ந்தவர்கள் என்ற கேள்வியை வினாத்தாள்களில் கேட்டுள்ளது. இதை பற்றி விமர்சனங்களை RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

இரண்டாம் எலிசபெத் மரணம்! வருந்துவதற்கு நம்மிடம் மீதம் ஒன்று உள்ளது.

ழுபது ஆண்டுகள், 214 நாட்கள் என்று மிக நீண்ட ஆட்சிகாலம் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் சென்ற மாதம் 8 ஆம் தேதி இறந்தார். இறக்கும் வரை இங்கிலாந்து உட்பட காமன்வெல்த்தின் 15 நாடுகளுக்கு ராணியாக இருந்தார். இந்தியாவில் இருந்து திருடிக்கொண்டுப்போன கோஹினூர் வைரத்தை தன்னுடைய கிரீடத்தில் வைத்துக்கொண்டு எவ்வித மான ஈனமின்றி திரிந்த எலிசெபத் மறைவு குறித்து பிரதமர் மோடியும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”பிரிட்டன் ராணி நம் காலத்தில் வாழ்ந்த மிகுந்த மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். தனது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தலை சிறந்த ராணியாக அவர் பொறுப்பேற்றிருந்தார். பொது வாழ்க்கையில் கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைப்பிடித்து வந்தார்.

அவருடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தாருக்கும், இங்கிலாந்து நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார். ”மறைந்த மகாராணி 2 ஆம் எலிசெபத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் வருகிற 11 ஆம் தேதி ஒருநாள் இந்தியா முழுவதும் துக்க தினம் அனுசரிக்கப்படும்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

காலனிய கால மிச்ச சொச்சங்களை ஒழித்துக்கட்டுவோம் என்ற பெயரில் கடந்த செப்டம்பர் மாதம் தில்லி ராஜ பாதையை கடமை பாதை என்று மாற்றினார் மோடி. மேலும் இராணுவத்தில் இருந்த காலனிய கால பழக்க வழக்கங்களும் மாற்றப்பட்டிருக்கின்றன என்று பெருமையாக பீற்றிக்கொள்ளப்பட்ட சூழலில்தான் எலிசபெத்தின் மறைவும் அதற்கு ஒன்றிய அரசின் ஒரு நாள் துக்க அறிவிப்பையும்  பார்க்க வேண்டும்.

படிக்க : கொடூர குற்றவாளிக்கு ஒப்பாரியா? எலிசபத் ராணியின் உண்மை முகம் | மருது வீடியோ

என்னதான் இருந்தாலும் இறந்துபோன ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவது தவறா? என்னதான் ஊரில் ஒரு கெட்டவன் இறந்தாலும் அஞ்சலி செலுத்துவது மரபல்லவா என்று பலரும் வகைவகையாக பல வினாக்களை எழுப்புகிறார்கள். எல்லாவற்றிலும் அரசியல் பேசக் கூடாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமானத்துடன் பாருங்கள் என்கிறார்கள்.

வாழ்க்கை என்றால் சரி, தவறு என இரண்டுமேதான் இருக்கும் உங்களுக்கு தேவையான நல்லதை எடுத்துக்கொண்டு கெட்டதை விட்டுவிடுங்கள் என்கிறார்கள். இப்படி பேசத் தொடங்கினால் முசோலினி, ஹிட்லர், இடி அமீன், எம்.ஜி.ஆர், ஜெயா, அத்வானி, மோடி உள்ளிட்ட அனைத்து பாசிஸ்டுகளுமே ஏதோ ஒரு வகையில் நல்லவர்களாகிவிடுவார்கள்.

மோடியின் காவி – கார்ப்பரேட் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களை  ஈர்ப்பதற்காக 56 இன்ச் மார்பும் இல்லாத ரயில் நிலையத்தில் டீ விற்ற சிறப்பும் பேசப்படுகின்றது. எம்.ஜி.ஆர் என்னதான் பாசிஸ்டாக இருந்தாலும் வெள்ளையாக, அழகாக இருக்கிறார் அல்லவா அதற்காகவே ரசித்துத்தான் தீர வேண்டும் என்று மறைமுகமாக பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இதுநாள் வரை பாசிஸ்டுகள் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் நியாப்படுத்துவதற்கு அவர்களின் மரணம் பயன்படுத்தப்படுகின்றது.

இது ஏதோ ஹிட்லர் முதல் மோடி வரையிலான பாசிஸ்டுகளை நியாயப்படுத்துவதற்காக மட்டுமல்ல; இப்படிப்பட்ட பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு சொல்லொண்ணா துயரங்களை உனக்கு தருவோம் நீ ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற ஆளும் வர்க்கத்தின் மறைமுக கட்டளை. ஒருவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதோ அல்லது அஞ்சலி செலுத்துவது என்பதோ அவர் இது நாள் வரை மேற்கொண்ட செயல்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாகும்.

ஒரு நாட்டிடம் இத்தனை ஆண்டுகள் அடிமையாக இருந்தோம் என்பதை  அவமானமாகக் கருதாமல் அதை பெருமையாகவும் நினைப்பதே எலிசபெத் மறைவுக்கான இரங்கலின் சாரம்சம். காலனிய மிச்ச சொச்சங்களை மாற்றுவது என்ற பெயரில் யோகி ஆதித்யநாத் நகரங்களின் முசுலீம் பெயர்களை ஒழிப்பதையே வேறு வெர்ஷனில் செய்யப்போகிறார் மோடி.

ஏனென்றால் மேக் இன் இந்தியா என்று அறிவித்த பின்னர்தான் உலகின் மிகப்பெரிய படேல் சிலையை சீனாவில் தயாரித்து கொண்டுவந்து நிறுவினார்கள். காலனிய மிச்சசொச்சங்களை ஒழிக்க வேண்டுமென்றால் தற்போது நாட்டை சூறையாடிக்கொண்டிருக்கும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகளை எதிர்க்க வேண்டும். அப்படி எதிர்த்தால் ஆர்.எஸ்.எஸ்-ன் இந்து கனவெல்லாம் இறுதி வரை பகற்கனவாக மட்டுமல்லவா இருக்க முடியும்?

இரண்டாம் எலிசபெத் என்றழைக்கப்பட்ட எலிசபெத் அலெக்சாந்திரா மேரி தனது 94வது வயதில் இறந்து போனார். இங்கிலாந்தின் மக்கள் தொகையில் அல்லது உலக மக்கள் தொகையில் ஒன்று கழிந்தது என்பதைத்தாண்டி பேசுவதற்கு ஏதுமில்லை என்ற போதிலும் இரண்டாம் எலிசபெத் பற்றிய பழைய தகவல்கள் எல்லாவற்றையும் விசிறியடித்து அவற்றுக்கு எல்லாம் மக்களை உச் கொட்ட வைத்திருக்கிறது.

இப்படி வயதான பெண்மணி இருந்தது உலகில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு தெரியாத அல்லது அவசியமில்லாத நிலைதான் இருக்கிறது. ஆனால் இரண்டாம் எலிசபெத்தின் மரணம் ஏன் எதற்காக மக்களின் சோகமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டும்.

இருக்கும் வரை ஜெயலலிதாவை பாசிசப்பேய் என்று கூறிவிட்டு அவர் இறந்த பின்னர் இரும்பு மங்கை என்பதன் அர்த்தம் என்ன? இது வரை ஜெயலலிதா மேற்கொண்ட அனைத்து பாசிச நடவடிக்கைகளுக்கும் அங்கீகாரம் அளிப்பதுதானே. பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தான் செலுத்திய அஞ்சலி பாடும் திறமைக்குத்தானே தவிர, தன்னுடைய வீட்டை சங்கர மடத்துக்கு எழுதி வைத்ததற்காக அல்ல என்று ஒருவன் கூறினால் அது எவ்வளவு கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதமோ அதை விட மோசமானது எலிசபெத்துக்காக வருந்துவது.

எலிசபெத்தின் மரணத்தை மிகப்பெரிய செய்தியாக்கி உலகின் பெரும்பான்மை மக்களையும் அதைப்பற்றி பேச வைத்ததில் ஆளும் வர்க்கத்தின் நோக்கம் என்னவாக இருக்கும்? பிரிட்டனுக்கு சூரியன் மறையாத சாம்ராஜ்யம் என்றிருந்த பெயருக்குப் பின்னால் சொல்லொண்ணா கொடூரங்கள் மறைந்திருக்கின்றன.

அவுரிச்செடியை பயிரிட மறுத்த இந்திய விவசாயிகளின் கட்டை விரலை வெட்டியெடுத்ததும், முதலாம் சுதந்திரப்போரான வேலூர் சிப்பாய் கலகத்தில் ஈடுபட்ட போராளிகளை புளியம் விளார்களால் அடித்தேக் கொன்றதும், பீரங்கி வாயிலில் கட்டிவைத்து சிதற வைத்ததும், ஜாலியன் வாலாபாக்கில் நூற்றுக்கணக்கான நிராயுதபாணியான மக்களை துப்பாக்கியில் குண்டுகள் தீரும் வரை சுட்டுக்கொன்றதும், திப்புசுல்தான் முதல் தீரன் சின்னமலை, பூலித்தேவன், கட்டபொம்மன், மருதுபாண்டியர் என அனைவரையும் பலியெடுத்ததும் எது?

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு என ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளை தூக்கிலிட்டது எது? சாவர்க்கர் அந்தமான் சிறையிலிருக்கும் போது புல்புல் பறவையில் ஏறிப்போய் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததும் யாரிடம்? இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் கனிம வளங்களையும் மனித வளங்களையும் கொள்ளையடித்து சேர்த்த பணத்தில் அல்லவா இப்போதும் இங்கிலாந்து பணக்கார நாடாக மிளிர்கிறது.

படிக்க : கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகின் மிக மோசமான ஐந்து தலைவர்கள் !!

இதற்கும் செத்துப்போன இரண்டாம் எலிசபெத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லையா? மாட்சிமை தாங்கிய மன்னரின் பேரால் நடைபெற்ற அனைத்து போர்க்குற்றங்களையும் இரங்கல் என்ற பெயரில் மன்னிப்பதற்கு மோடிக்கு யார் உரிமையை தந்தது?

இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை அனைவரும் பேசும் பொருளாக்கி அதன்மூலம் ஏகாதிபத்தியம், இதுவரை தான் நடத்திய சுரண்டல், கொள்ளை, போர் உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களையும் மக்களை ஏற்க வைத்து அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறது.

செத்துப்போன இரண்டாம் எலிசபெத்தின் மகனும் தற்போதைய மன்னனுமான இரண்டாம் சார்லசின் மகனான ஹாரி, நிற வேறுபாட்டு இழிவை ஆதரிக்கும் மாட்சிமை தாங்கிய மன்னர்குல பாரம்பரியங்களின் மீது சிறுநீர் கழித்துவிட்டு இளவரசர் பட்டத்தை துறந்தோடினார். கருப்பர் இனப்பெண்ணை மணந்ததால் தன்னுடைய குடும்பம் மீது ஏவப்பட்ட நிறவெறியை, இராஜ குடும்பம் போற்றிப் பாதுகாப்பதை சொல்லி தூற்றினார். அவர் சொன்ன ராஜ குடும்பத்தில் இரண்டாம் எலிசபெத் வரமாட்டாரா?

இப்படி இனவெறி, நிறவெறி, ஏகாதிபத்திய ஆதிக்கவெறி ஆகியவற்றை தன்னுள்ளே வீற்றிருந்த 96 வயது ஒரு மூதாட்டி செத்துப்போயிருக்கிறார். பிரிட்டனின் காலனியாதிக்கப் போர்களால் கொல்லப்பட்ட பல இலட்சக்கணக்கான மக்களின் படுகொலைகளுக்கு தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளியை தண்டிக்கப்பட முடியாமல், அந்த ராஜவம்சத்தை மக்களால் வீழ்த்த முடியாமல் போய்விட்டதே என்றெண்ணி மட்டுமே நாம் வருத்தமடைய முடியும்.


மருது

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் அக்டோபர் – 2022 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561

வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

♦ தலையங்கள்: ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிரான இறுதிப் போர்: தமிழகமே உன் போர்வாளை கூர் தீட்டு!

♦ காவி பயங்கரவாதமே அரசாளுகிறது!

♦ சர்வதேச அச்சுறுத்தலாக வளர்ந்துவரும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!

♦ ‘வல்லரசு இந்தியா’ யாருக்காக?

♦ துரோகி சாவர்க்கர் விடுதலை வீரரா?

♦ உ.பி உள்ளிட்ட பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் பாலியல் வன்கொடுமைக் கூடாரங்களே!

♦ மின் கட்டண உயர்வு: தனியார்மயக் கொள்கையை அமல்படுத்தும் தி.மு.க அரசு!

♦ ஜி.பி.எஸ் சுங்கக் கட்டண வசூல்: ‘டிஜிட்டல் பிட்பாக்கெட்’ ஜாக்கிரதை!

♦ பாகிஸ்தான் பொருளாதார, சூழலியல் நெருக்கடி: மனித குலத்தின் எதிரி ஏகபோக மூலதனம்!

♦ ஒரு கம்யூனிச துரோகி செத்துத் தொலைந்தான்!

புதுச்சேரியில் வெடித்தது மின்துறை ஊழியர்கள் போராட்டம், துணை ராணுவத்தை ஏவிய தமிழிசை ! | ச.விஜி | வீடியோ

புதுச்சேரி மக்களை இந்த அரசு துணை ராணுவத்தை கொண்டு மிரட்டுகிறது. மின்சார தனியார் மயத்திற்கு எதிராக மின் ஊழயர்கள் போராடுகிறார்கள். அவர்களின் போராட்டம் மக்கள் மத்தில் ஆதரவும் எதிர்ப்பும் என்ற இரண்டு கருத்துக்களாக வெளிபடுகிறது. ஆனால், பிஜேபி என்.ஆர்.காங்கிரஸ் மக்கள் மீது நடத்தும் கொடூரமாக நடவடிக்கைகள்.. மக்கள் மின் ஊழியர்கள் போராட்டத்தை தனியார்மயத்திற்கு எதிரான போராட்டமாக மாற்றியிருக்கிறது.

புதுச்சேரியில் நடைபெறும் மின்சார தனியார்மயத்திற்கு எதிரான போராட்டத்தை பற்றிய கள நிலவரங்களை தமிழ் குரல் செய்தி ஊடகத்தின் பேட்டி வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி புதுச்சேரியின் ச.விஜி அவர்கள்….

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நன்றி : தமிழ் குரல்

புதுச்சேரி மின் துறை தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்கும் பாசிச அரசு! | பு.ஜ.தொ.மு

03.10.2022

புதுச்சேரி மின் துறை தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்கும் பாசிச அரசு!

பத்திரிகை செய்தி

புதுச்சேரி அரசு மின் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை எதிர்த்து மின் துறை தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். கடந்த 5 நாட்களாக புதுவை இருண்டு கிடக்கிறது.

புதுவை மக்கள் ஆங்காங்கே போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆளும் கட்சியைத் தவிர்த்து பிற அரசியல் கட்சிகள் அனைத்தும் தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவு  தெரிவித்ததோடு இணைந்து போராடி வருகின்றன.

அண்டை மாநிலமான தமிழகத்தின் மின் துறை ஊழியர் சங்கங்கள் நேரில் சென்று தங்களது ஆதரவை பதிவு செய்து வருகின்றன. 27 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அகில இந்திய அமைப்பான All India Power Engineers Federation (AIPEF) தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் துணை இராணுவப் படையை வரவழைத்து தொழிலாளர்களை அச்சுறுத்துகிறது புதுச்சேரி அரசு. போராடும் தொழிலாளர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்கிறது, புதுவை அரசு.

புதுவை யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் பொது    மக்களுக்கு ‘இடையூறு’ ஏற்படுத்தும் வகையில் போராட்டம் தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்கிறார்.

படிக்க : புதுச்சேரி: மின்சாரம் தனியார்மயத்துக்கு எதிரான மின் ஊழியர்களின், பொதுமக்களின் போராட்டம் வெல்லட்டும்! | மக்கள் அதிகாரம்

மின்துறை மட்டுமல்ல நாட்டின் கேந்திரமான பொதுத் துறைகள் பலவற்றை தனியார்மயமாக்கும் நடவடிக்கை நாட்டு மக்களுக்கு எதிரானதுதான். மக்களுக்கு  இடையூறு ஏற்படுத்த கூடியவைதான். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ‘உங்கள்’ அரசு மீது யார் நடவடிக்கை எடுப்பது, புதுவை துணைநிலை ஆளுநரே?

மின்சார சட்டத் திருத்தம் 2022 மசோதாவை கடந்த ஆகஸ்டு 8-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது கடும் எதிர்ப்புக்குரல் வெளிப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற  நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு, அதன் பரிந்துரைகள் இன்னும் வராத நிலையில் புதுவை அரசு அவசர அவசரமாக மின் துறையை தனியார்மயமாக்குவதின்  நோக்கம் என்ன? சிறிய யூனியன் பிரதேசமான புதுவையில் சோதனை ஓட்டம் நடத்திப் பார்க்கலாம் என்கிற உத்தியாக இருக்கக் கூடும்.

பெயரளவில் உள்ள சட்டத் திட்டங்களை கூட நடைமுறைப்படுத்தாமல் போராடும் தொழிலாளர்களை அச்சுறுத்துவது யாருக்காக?

கால் நூற்றாண்டுக்கு மேலாக அமலாக்கப்பட்ட தனியார்மயமாக்கல் நடவடிக்கையால்  நாட்டு மக்களுக்கு கிடைத்த பலன் என்ன?

மக்கள் நிம்மதியுடன் வாழமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டதும், அதானி – அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகள் உலக பணக்காரர் வரிசையில் முதல் இடத்துக்கு போட்டியிடுவதும்தான் நடந்திருக்கிறது.

உண்மையில் மின் துறை தனியார்மயமாக்கல் என்பது இதுவரை மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களிலேயே மிகக் கொடூரமான தாக்குதலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மின்துறையை மொத்தமாக அதானிக்கும் டாடாவுக்கும்  தாரை வார்ப்பதைதான் மோடி ஆட்சியின் இலக்காக இருக்கிறது.

புதுச்சேரியில் RSS ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்ததும், மின் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கை எதிர்த்து போராடும் தொழிலாளர்களை ஒடுக்க துணை இராணுவப் படையை ஏவிவிட்டு எஸ்மா சட்டத்தை காட்டி மிரட்டுவதும் காவி – கார்ப்பரேட்  பாசிசத்தின் கொடூர முகமே அன்றி வேறல்ல.

படிக்க : மின்சாரம் தனியார்மயத்திற்கு எதிராக போராடும் புதுச்சேரி மக்களை இருளில் மூழ்கடிக்கும் பாசிச அரசு! | மருது வீடியோ

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பு குழு மேற்கண்ட  தனியார்மயமாக்கல் மற்றும் அச்சுறுத்தும்  நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறது. போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பது அனைத்து உழைக்கும் மக்கள் மற்றும் தொழிற்சங்க இயக்கங்களின்  கடமை என்ற வகையில் ஆதரவளிப்போம்.!

நாளை நம் வீட்டையும் மின் துறை தனியார்மயம் இருட்டாக்கும் என்பதை உணர்ந்து போராடும் தொழிலாளர்களுடன் கரம் கோர்க்க உழைக்கும் மக்களை அழைகிறோம்!

இவண்,
ஆ.கா.சிவா,
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

ஆயுத பூஜை தொழிலாளர்களின் பண்டிகை இல்லை!

ம்ப்யூட்டருக்குப் பொட்டு, கல்லாப் பெட்டிக்கும் பொட்டு; டீக்கடை பாய்லருக்குப் பொட்டு, ஹெவி பாய்லருக்கும் பொட்டு; வில்வண்டிக்குப் பொட்டு, விமான‌த்துக்கும் பொட்டு.. புரிந்திருக்குமே ஆயுத பூசைதான். அவல், பொறி, கடலை, வாழைப்பழ‌ம், வெல்லச் சர்க்கரையுடன் ஆயுதபூசை பட்டியலில் தொழிலாளியும் சேர்ந்து விட்டதனால்தான் இதை எழுத வேண்டியிருக்கிறது.

விவசாயிக்குப் பொங்கலைப் போல, தொழிலாளிக்கு ஆயுதபூசையா? அப்படியானால் மே தினம்?

ஒரு கொல்லரோ, தச்சரோ, வண்டிக்காரரோ பயபக்தியுடன் ஆயுதபூசை செய்வதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. கொல்லனுக்குத் துருத்திதான் மூச்சு. தச்சனுக்கு உளி தான் கைவிரல். வண்டிக்காரருக்குச் சக்கரம் தான் வாழ்க்கை.

விண்ணில் உயர்ந்து பறக்கும் செங்கொடி, முதலாளிகளைக் கிலி கொள்ள வைக்கும் போர்க்குணம், அடிவயிற்றிலிருந்து வெடித்துக் கிளம்பும் முழக்கங்கள், நெருப்புத் துண்டுகளாய் சொலிக்கும் கண்கள், கண்ணுக்கு எட்டியவரை கடல் போல விரிந்து அலைபோல ஆர்த்தெழும் அணிவகுப்பு – மே தினம். யதார்த்தம் இல்லையென்றாலும் எதிர்பார்ப்பு. ஏன் ஈடேறவில்லை இந்த எதிர்பார்ப்பு?

ஒவ்வொருவராகத் தேடிச்சென்று காகிதத்தில் கையெழுத்து வாங்கும் அக்கறை, பின்னர் கையெழுத்துப் போட்டவர்களைக் காசு போட வைப்பதில் உள்ள திறமை – மே தினத்தில் இல்லையே. பூசை போட்டு பூசணிக்காய் உடைப்பதில் இருக்கும் நம்பிக்கை ஊர்வலத்தில் இல்லையே. பொரி, கடலை விநியோகத்தில் இருக்கும் பொறுப்புணர்வு பிரசுர விநியோகத்தில் இல்லையே, தோரணம் கட்டுவதில் உள்ள ஆர்வம் கொடி கட்டுவதில் இல்லையே. ஏன்?

படிக்க : புதுச்சேரி: மின்சாரம் தனியார்மயத்துக்கு எதிரான மின் ஊழியர்களின், பொதுமக்களின் போராட்டம் வெல்லட்டும்! | மக்கள் அதிகாரம்

இதுதான் நமது முதுகில் ஏற்றப்பட்டிருக்கும் ஆயிரமாண்டு கலாச்சாரச் சுமையோ!

ஒரு கொல்லரோ, தச்சரோ, வண்டிக்காரரோ பயபக்தியுடன் ஆயுதபூசை செய்வதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. கொல்லனுக்குத் துருத்திதான் மூச்சு. தச்சனுக்கு உளி தான் கைவிரல். வண்டிக்காரருக்குச் சக்கரம் தான் வாழ்க்கை. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற பழமொழி இவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஏனென்றால் இவர்களது கருவிகள் இவர்களது உடலின் உறுப்புகள்.

ஆனால் தொழிலாளிக்கு? சங்கு ஊதினால் உள்ளே போக வேண்டும். அடுத்த சங்கிற்கு வெளியே போக வேண்டும். ஆலையின் தூசு எதுவும் சட்டையில் ஒட்டி யிருந்தால் கூட அதைத் தட்டிப்பார்த்து, தடவிப் பார்த்து வெறும் ஆளாக வெளியே அனுப்புவதற்கென்றே வாயிற்காவலர்கள்.

துருத்தியும் சம்மட்டியும் கொல்லனுக்கு சொந்தம்; வெல்டருக்கு? ”உனக்குச் சொந்தமில்லாததை உடைத்தெறி” என்று சொல்லவில்லை. ”போய்த் தொலையட்டும் – மூடநம்பிக்கை” என்று வைத்துக் கொண்டாலும் தனக்குச் சொந்தமானதை ஒருவர் பூசிப்பதில் அர்த்தமிருக்கிறது. ஆனால் கல்யாண சடங்குகளில் ‘அதிகாரம்’ செலுத்தும் பெண்களைப் போல ஆயுத பூசை ஏற்பாடுகளை கவனித்து நடத்த ‘அதிகாரமளிக்கப்பட்ட’ தொழிலாளிகள் தலை கால் புரியாமல் போகிறார்களே, அதுதான் விநோதம்.

ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ‘இது என்னுடைய ஆலை’ ‘இது என்னுடைய எந்திரம்’ என்று மண்டையில் அடிக்காத குறையாக முதலாளி நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும் போது கூட, தலைவாரி, பூச்சூடி, பொட்டிட்டு பிள்ளையை அழகு பார்க்கும் தாயைப்போல – எந்திரத்திற்கு எண்ணெய் முழுக்காட்டி, பொட்டு வைத்து, சாம்பிராணிப் புகை போட்டு அழகு பார்க்கும் ‘பாசம்’ தொழிலாளிக்கு எப்படி வந்தது ? பாசமா, பெருந்தன்மையா, மூடநம்பிக்கையா? வெறும் மூடநம்பிக்கை மட்டும்தானா?

போனசுக்கும், கூலி உயர்வுக்கும் போராடும் போது முதலாளியின் பிரதிநிதியாகத் தொழிலாளியின் கண்ணுக்குத் தென்படும் எந்திரம் ஆயுத பூசையன்று மட்டும் தன்னுடைய அவதாரமாகத் தெரிவது ஏன்? சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கைத்தறி முதல் கம்ப்யூட்டர் வரை எல்லா எந்திரங்களும் தொழிலாளிகள் பெற்றெடுத்தவைதான். அவர்களது உழைப்பின் விளைபொருட்கள்தான்.

அதனால் தான் ஆத்திரம் கரை புரண்டாலும் கூட தான் வேலை செய்யும் எந்திரத்தை நொறுக்கவோ நாசம் செய்யவோ தயங்குகிறான் தொழிலாளி [மாறாக அதை மதித்து கொண்டாடி பூசை செய்கிறான்].

இன்சூரன்சு பண‌த்தை ஏமாற்றி வாங்க நினைக்கும் முதலாளியோ ஆயுத பூசையன்றே கூட ஆலைக்குத் தீ வைக்கத் தயங்குவதில்லை. விலை சரிந்து விட்டால் உற்பத்தியாகிக் கிடங்கில் குவிந்துள்ள பொருட்களைக் கடலில் கொட்டவும் தயங்குவதில்லை. முதலாளி நேசிக்கும் ஒரே எந்திரம் அவனுடைய பணப்பெட்டிதான். அதற்கு மட்டும் ஆயுதபூசையன்று மட்டுமல்ல; அன்றாடம் பொட்டு வைத்துப் பூசை போட அவன் தவறுவதில்லை.

படிக்க : ஃபோர்டு ஆலை தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்! | வீடியோ

ஆனால் தொழிலாளியால் அது முடிவதில்லை. ஏனென்றால் அவர்கள் ஆக்க வேலைக்காரர்கள், அழிக்க மறுக்கிறார்கள். அவசியம் நேரும்போது கூட அழிக்க தயங்குகிறார்கள்; அவர்களது கரங்களும், அவற்றின் உள்ளேயிருந்து ஊற்றெடுக்கும் உழைப்பும் மட்டுமே அவர்களுக்குச் சொந்தமானவை. உழைப்புதான் அவர்களது ஒரே ஆயுதம்.

இந்த ஆயுதத்துக்கு சந்தனப் பொட்டும் வைக்க முடியாது; சாம்பிராணி புகையும் போட முடியாது. பூசை போடவேண்டியவற்றின் பட்டியலில் முதலாளி இதைச் சேர்க்கவும் மாட்டான். ஏனென்றால் அது அவனுடைய ஆயுதமல்ல; அவனுடைய எதிரிகளின் ஆயுதம் – தொழிலாளி வர்க்கத்தின் ஆயுதம்.

அந்த ஆயுதத்தை – உழைப்பைப் போற்றும் நாள்தான் மே நாள். ஆலையையும் தொழிலையும் உழைப்பாளியின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக்கக் குரல் கொடுக்கும் நாள், அதுதான் தொழிலாளிகளின் திருநாள்.

எனவே, சாம்பிராணிப் புகை மயக்கத்திலிருந்து விடுபடுங்கள்.

உண்டியல் சாவி தருமகர்த்தாவின் கையில் இருக்கும் போது, பூசாரியாய் இருப்பதில் என்ன பெருமை?

– புதிய கலாச்சாரம் இதழ் ஒன்றிலிருந்து

மின்சாரம் தனியார்மயத்திற்கு எதிராக போராடும் புதுச்சேரி மக்களை இருளில் மூழ்கடிக்கும் பாசிச அரசு! | மருது வீடியோ

புதுச்சேரி : மின்சாரத்துறை தனியார்மயமாவதற்கு எதிரானப் போராட்டம் – மக்களின் மின்சாரத்தை துண்டித்து வஞ்சிக்கும் பாசிசம்! | மருது வீடியோ

அக்டோபர் 2-ஆம் தேதி புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடந்தது. அதில் அமைச்சர்கள் கலந்துகொண்டார்கள். துணை இராணுவ படையின் பாதுகாப்புடன் பேரணி நடத்தப்படுகிறது. அந்த பேரணிக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதில் எமது மக்கள் அதிகாரம் அமைப்பும் கலந்துகொண்டது. இரண்டு மூன்று நாட்களாக புதுச்சேரியில் எங்குமே மின்சாரம் இல்லை.

மக்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லும் ஆர்.எஸ்.எஸ் பேரணி பாதுகாப்புடன் நடத்தப்படுகிறது. ஆனால், மக்கள் மின்சாரம் வேண்டும் வேண்டும் என்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு மின்சாரம் கொடுக்க கூடாது. அதை முழுக்க சந்தைமயமாக்க வேண்டும் என்பதற்காக, தனியார்மயமாக்கிறார்கள். இதுதான் பாசிசம்!

புதுச்சேரியில் மின் ஊழியர்கள் மற்றும் மக்கள் போராட்டத்தை பற்றியும் ஆளும் வர்க்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகள் பற்றியும் REDSEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பொன்னியின் செல்வன்: தமிழர்களின் அடையாளமா? அடிமைத்தனமா?

ணிரத்னம் இயக்கி வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது சமூக ஊடகங்கள் முதல் அனைத்து இடங்களிலும் பரபரப்பான பேசு பொருளாகியுள்ளது.

இது வலதுசாரி சிந்தனையாளரான கல்கி அவர்களால் 1950-ல் சோழர்களைப் பற்றி எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புனைவு நாவல். இந்த நாவலில் சோழ இளவரசன் ஆதித்த கரிகாலன் நான்கு பார்ப்பனர்களால் கொல்லப்பட்டதைத் திரித்து பாண்டிய ஆபத்துதவிகளால் தான் கொள்ளப்பட்டதாக அந்த நாவலின் ஆசிரியிர் கல்கி எழுதியுள்ளார்.

பார்ப்பனரான ரவிதாஸ் எப்படி பாண்டியர்களின் ஆபத்துதவிகளாக முடியும். ஆதித்த கரிகாலனை கொன்றது பார்பனர்கள் தான் என்பது கல்வெட்டு சான்றுகளிலேயே உள்ளது. மேலும் பார்ப்பனரான ஆழ்வார்க்கடியானுக்கும், அநிருத்த பிரம்மராயருக்கும் மிகை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாவலை திரைப்படமாக எடுக்க வலதுசாரி மணிரத்னம் இயக்கி, ஜெயமோகன் திரைக்கதை எழுதியிருக்கிறார்.

படிக்க : சோழர் பெருமை – பார்ப்பன பெருமை ரெண்டுமே ஒன்னுதான் | பொன்னியின் செல்வன் திரை விமர்சனம் | மருது வீடியோ

இந்தப் படம் தமிழர்களின் வரலாறு, தமிழர்களின் பண்பாடு இதை நாம் கொண்டாட வேண்டும் என கருத்து பரப்பப்படுகிறது. மக்களைச் சுரண்டிப் பிழைத்த மன்னர்களின் வரலாறு மக்களின் வரலாறாக முடியாது. இவர்களின் திரைப்படமும் மக்களுக்கானதாக இருக்க முடியாது. இந்த படத்தின் ட்ரைலரில் பொன்னியின் செல்வனாக நடித்த ஜெயம்ரவி “நான் சோழ நாட்டின் காவலன் சோழ மக்களின் சேவகன்” என்று கூறுகிறார். மன்னன் மக்களின் சேவகனாக இருக்க முடியுமா?

ஆதித்த கரிகாலன் எனும் ‘தமிழ்’ பெயரை ஆதித்திய கரிகாலன் என்ற ‘ஆரிய’ பெயராக திரித்துக் கூறியுள்ளனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை கலை – கலைக்காக என்று கூட பார்க்க முடியாது. இந்த படம் நாவல் படித்தவர்களை திருப்திப் படுத்தவில்லை. நாவலை படிக்காதவர்களுக்கு புரியும்படி இல்லை பொழுதுபோக்காக கூட மக்களை திருப்திப்படுத்தும் வகையிலும் இல்லை.

இந்துத்துவ காவி பாசிசம் தலைவிரித்தாடும் இந்த சூழலில் சனாதனத்தை வளர்த்த சோழ மன்னனின் திரைப்படத்துக்கான தேவை தான் என்ன? இந்து மன்னர்களைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்று கூறுகிறார் பா.ஜ.க தலைவர் அமித்ஷா. வள்ளுவருக்கு காவி உடுத்தி இந்துக்களின் பெருமை பட்டியலில் சேர்த்தது போல தமிழ்நாட்டு மன்னர்களையும் அந்தப் பட்டியலில் சேர்ப்பதற்கான முன்னோட்டம்தான் இந்த பென்னியின் செல்வன்.

யார் இந்த பொன்னியின் செல்வன்? அருள்மொழிவர்மன் என்ற இயற்பெயர் கொண்ட ராஜராஜசோழன். சோழ நாட்டை 985 முதல் 1014 வரை ஆட்சி புரிந்தார். இவரின் ஆட்சிக் காலத்தில் ராணுவம், சமயம், கட்டிடக்கலை ஆகியவை சிறந்து விளங்கியதால் இவரின் காலம் பொற்காலம் என போற்றப்படுகிறது. இவர்கள் கூறும் பொற்காலம் உழைக்கும் மக்களுக்கான பொற்காலமா?

ராஜராஜசோழன் ஆட்சியில் உழைக்கும் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு கோவிலுக்கு கொடுக்கப்பட்டது. நிலத்தை இழந்த மக்கள் வேறு இடத்திற்கு செல்லக் கூடாது என்று சட்டம் போட்டு, அவர்களை கோயிலின் அடிமைகளாக்கினர். மக்களின் உழைப்பைச் சுரண்டி, மக்களை அடிமையாக்கி கட்டப்பட்டதே தஞ்சை பெரியகோவில். தஞ்சை பெரிய கோவிலின் பிரம்மாண்டத்தைப் பற்றி கூறுபவர்கள், அந்த கோயிலை கட்டிய மக்களின் துயர வாழ்வைப் பற்றிப் பேசுவதில்லை.

சோழர்கள் ஆட்சியில் பார்ப்பனர்களின் நிலை மேலோங்கி இருந்தது. மன்னரின் உயிருக்குச் சமம் பார்ப்பனரின் மயிர் எனும் மனுநீதிக்கிணங்க, ஆதித்த கரிகாலனை கொன்ற பார்ப்பனருக்கு வெறும் முடி மட்டும் வெட்டப்பட்டு நாடுகடத்தப் பட்டதுதான் பார்ப்பன குற்றவாளிக்கான உச்சபட்ச தண்டனை.

கடல் கடந்து கிழக்காசிய நாடுகளை வென்றவர்கள் சோழர்கள் என்று பெருமையாக கூறுப்படுகிறது. போரில் மக்களை கொன்று குவித்ததை, பெருமையாக கருத முடியுமா? இராஜராஜசோழனை தமிழன் என்று ஆண்ட பரம்பரை பெருமை பேசுவதும், நாயகனாக கொண்டாடுவதும் நம் அடிமை புத்தியைத்தான் காட்டுகிறது.

படிக்க : திரை விமர்சனம்: பொன்னியின் செல்வனை குப்பையில் வீச வேண்டும் | மருது வீடியோ

இந்திய முதலாளி அதானி மோடியின் ஆட்சியில் உலகின் இரண்டாவது பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்திருக்கிறார். அவர் வேர்வை சிந்தி உழைத்தா இரண்டாவது பணக்காரரானர். அது மக்களின் உழைப்பைச் சுரண்டி கொள்ளையடித்துச் சேர்த்த பணம். அதானி இந்தியர் என்பதற்காக அவரை நாம் இந்திய நாயகனாக கொண்டாட முடியுமா என்ன? நிச்சயம் முடியாது. இதே பார்வையில்தான் சுரண்டலாளர்களான மன்னர்களையும் நாம் பார்க்க வேண்டும்.

கார்ப்பரேட் முதலாளி அம்பானியின் “குரு” படத்தை போல, நாளை அதானியின் கதையையும் படமாக எடுத்து ‘இவர்தான் நம் நாயகர்’ என்று காவி கும்பல் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நமது நாட்டு மக்களை அரை வயிற்று கஞ்சிக்கு வழியில்லாத அடிமைகளாக்கி ஆண்ட மக்கள் விரோத அரசர்களை நாயகர்களாகவும் நமது அடையாளமாகவும் பார்க்காமல், நமது வரலாற்றின் எதிரிகளாக பார்க்க வேண்டும்!


அலெக்சாண்டிரா

புதுச்சேரி: மின்சாரம் தனியார்மயத்துக்கு எதிரான மின் ஊழியர்களின், பொதுமக்களின் போராட்டம் வெல்லட்டும்! | மக்கள் அதிகாரம்

03.10.2022

புதுச்சேரி: மின்சாரம் தனியார்மயத்துக்கு எதிரான மின் ஊழியர்களின்,
பொதுமக்களின் போராட்டம் வெல்லட்டும்!

பத்திரிகை செய்தி

டந்த இரண்டு நாட்களாக புதுச்சேரியில் மின்வாரியத்தை தனியார்மயமாக்க கூடாது என்பதை வலியுறுத்தி ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் விளைவாக புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் மின்சாரத் தடை, எங்கும் இருள் பரவியிருக்கிறது.

இதற்கு காரணமான ஆள்கின்ற என்.ஆர்.காங்கிரஸ் – பி.ஜே.பி அரசை கண்டித்தும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்தும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் மக்கள் போராடி வருகிறார்கள். பல்வேறு அரசு அலுவலகங்கள் முன்பு மக்கள் போராடி வருகிறார்கள்.

எவ்வித கடன்களும் நட்டமும் இல்லாமல் செயல்படும் புதுச்சேரி மின்வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்க வேண்டும் என்பதற்காக அண்மையில் எடுத்த முயற்சிகளை மின் ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்த்தது. ஊழியர்களுடைய ஒத்துழைப்பின்றி நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று கூறிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அரசு, திடீரென மின்வாரியத்தை தனியார்மயமாக்குவோம் என்று திமிராக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

படிக்க : மின்சார சட்டத் திருத்தம் 2022 : மின் துறையை மொத்தமாக விழுங்கவரும் கார்ப்பரேட் மலைப்பாம்பு!

ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் “கண்டிப்பாக மின்வாரியத்தை தனியார்மயமாக்குவோம். இதை எதிர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கிறார்.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையை இறக்கி மின்வாரிய ஊழியர்கள் கைது செய்வது, போராட்டத்தை ஒடுக்குவது, மக்களின் போராட்டத்தை அடக்குவது என்று ஒட்டுமொத்தமாக புதுச்சேரி முழுவதும் பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது என்.ஆர்.காங்கிரஸ் – பாசிச பிஜேபி அரசு.

இந்த மறுகாலனியாக்க காலகட்டத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் சந்தையாக்குவதே அனைத்து அரசுகளின் ஒரே கடமை. அதன் விளைவாகவே மின்சாரமும் இன்று தனியார்மயமாக்கப்படுகிறது.

மின்சாரம் தனியார்மயமாக்கப்பட்டால் மக்கள் இதுநாள் வரை பெற்று வந்த இலவச மின்சார உரிமையும் சலுகைகளும் பறிக்கப்படும். மின்சாரம் இல்லாமல் எதுவும் இயங்காது என்ற சூழல் ஏற்படுத்தப்பட்ட பின்னர் தற்பொழுது மின்சாரத்தை தனியார்மயமாக்குவது கடும் மின் கட்டண உயர்வுக்கும் வழிவகுப்பது மட்டுமல்ல; மின்சாரத்தை மக்களிடம் இருந்து முற்றிலும் அந்நியப்படுத்துவதன் நோக்கத்தைக் கொண்டதாகும்.

மக்களை இருளில் தள்ளி உரிமை கேட்டுப் போராடுபவர்களை துணை ராணுவப் படையை கொண்டு அடக்குவதுதான் பாசிசம்.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி – அதானி பாசிசம் என்பது சிறுபான்மை மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டின் உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்பதை தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வரும் சம்பவங்கள் நமக்கு மீண்டும் உணர்த்துகின்றன.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி – அதானி பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியே புதுச்சேரி மக்களின், மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் ஆகும்.

புதுச்சேரி யூனியன் பிரதேச மக்களின், மின் ஊழியர்களின் போராட்டத்தை மக்கள் அதிகாரம் வாழ்த்துகிறது, வரவேற்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321.

தமிழகத்தின் கிராமங்கள் வரை ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி! | ஜவாஹிருல்லா | வீடியோ

மிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர், MLA ஜவாஹிருல்லா அவர்கள் பேசிய உரையில், தமிழகத்திலே பாசிசத்திற்கு எதிராக, கார்ப்பரேட் கொடுங்கோன்மைக்கு எதிராக தொடர்ச்சியாக, சிறப்பான பரப்புரைகளை, மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து பல்வேறு போராட்டங்களை உங்கள் அமைப்புகளின் சார்பாக எடுத்துள்ளீர்கள்.

ம.க.இ.க-வின் சார்பாக வெளியிடப்பட்ட காவி இருள், அசுரகானம் ஆகிய ஒலிப்பேழைகளை மறக்க முடியாது. உங்கள் அமைப்பின் மாநாட்டில் பேச வாய்ப்பளித்தற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இங்கு பாசிசம் என்றால் என்ன? பாசிசத்தின் வடிவம் என்றால் என்ன? என்றும் இங்கே பேசியவர்கள் பேசியுள்ளனர். “பிரதமர் நரேந்திர மோதியும் அம்பேத்கரும்” என்ற புத்தக வெளியீடு விழாவில் ராம்நாத்கோவித் பேசுகிறார். அதில் பிரதமர் மோடிதான் உண்மையாக பின்பற்றுபவர் என்று நூல் வெளியீட்டு விழாவில் ஒரு சான்றிதழை கொடுக்கிறார்.

பாசிசம் பொய்மைகளை உண்மையாக நம்ப வைத்து மக்களை தன் வயப்படுத்த கூடிய ஒரு செயல்திட்டம் உடையது. பாபா சாகேப் அம்பேத்கர் வர்ண பேதங்களுக்கு எதிராக போராடினாரோ, அதற்கு நேரதிரான கொள்கையை மோடியை உண்மையிலேயே பின்பற்ற கூடியவர் என்று சொல்கிறார்.

மோடி அவர்களின் ஆட்சியில் 2021 ஆண்டு மட்டும் தலித் மக்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகள் 7818 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது. உ.பி.யில் மட்டும் தலித்துக்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக வன்கொடுமை வழக்குகள் 61,000 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டிருக்கின்றது. ஹத்ராஸ் 19 தலித் சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு நிதியில்லை. அப்படிப்பட்ட மோடியை அம்பேத்கரை பின்பற்றக் கூடியவர் என்று சொல்கிறார்கள் சங்கிகள்.

தமிழ்நாடு என்பது பெரியார் மண்தான். மாற்று கருத்தில்லை. ஆனால், கிராமங்கள் வரை பாசிசம் ஊருடுவியிருக்கிறது. விழுப்புரத்தில் ஆய்விற்கு சென்றபோது, ஒரு பகுதியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் உங்களுக்கு எத்தனை நாட்கள் வேலை கிடைக்கிறது என்று விசாரித்தோம். 100 வேலைத்திட்டத்திற்கு பெயர் என்ன? யார் கொண்டு வந்தது என்று கேட்டால்? அந்த பெண்கள் மோடி கொண்டு வந்தார் என்கின்றனர். அவர்கள் எப்படி கிராமப்புறங்களில் கூட ஊடுருவியிருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.

பாசிஸ்டுகளின் நோக்கம் உயர்சாதி, ஆதிக்கச் சாதிகளை தவிர மற்றவர்களை அடிமையாக்குவதுதான். பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்ட வேண்டும். பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும் அதையெல்லாம் களைந்து நன்கு ஒருங்கிணைத்து எதிர்க்க வேண்டும். மனித நேய மக்கள் கட்சி உங்களுடன் சேர்ந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறோம் நன்றி என பேசினார்.

“ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அதானி – அம்பானி பாசிசம் முறியடிப்போம்” மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர், MLA ஜவாஹிருல்லா அவர்களின் உரையை காணொலி வடிவில் இங்கு வெளியிடுகிறோம்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

இயல்பு நிலையாகிவிட்ட இயற்கைப் பேரிடர்கள்! இன்றியமையாதது, முதலாளித்துவத்தின் அழிவு!

காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் சந்தித்துக் கொண்டிருக்கும் பேரிடர்கள் ஆண்டுக்கு ஆண்டு புதிய உச்சநிலைகளை எட்டிவருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டின் ஜூன் – ஆகஸ்டு மாதங்களில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்கள் பல நாடுகளையும் நிலைகுலைய வைத்துள்ளது, குறிப்பாக ஐரோப்பா பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

ஐநூறு ஆண்டுகளில் இல்லாத அளவில் வறட்சி, வெப்ப அலை, காட்டுத் தீ, வெள்ளப்பெருக்கு எனத் தொடர் பேரிடர்களை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன ஐரோப்பிய நாடுகள்.

உயிர்களைக் குடித்த ‘வெப்பப் புயல்’!

ஐரோப்பாவின் முதல் வெப்ப அலை ஜூன் மாதத் தொடக்கத்தில் வீச ஆரம்பித்தது. அடுத்து ஜூலை மாத நடுப்பகுதியில் தொடங்கிய இரண்டாவது வெப்ப அலை வடக்கே இங்கிலாந்து வரை பரவியது; ஆகவே இங்கிலாந்தில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது. பிரான்ஸ் முதலிய பல நாடுகளில் 40 முதல் 43 டிகிரி வரை வெப்பம் பதிவானது.

படிக்க : பில்கிஸ் பானு வழக்கில், காவி குண்டர்கள் விடுதலை: அநீதிக்கு எதிராக களமிறங்குவோம்!

இங்கிலாந்தின் பீட்டர்பரோ நகரத்தில் ரயில்வே சிக்னல்களே வெப்பம் காரணமாக உருகியதென்றால், அங்கு நிலவிய வெப்ப அளவை நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். லூடன் விமான நிலையத்தின் (இலண்டன் நகரம்) ஓடு பாதை வெப்பத்தால் உருகியதால் விமானச் சேவை முடங்கியது; கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள பெருநகரமான ஸ்டாக்போர்ட்டில் பரபரப்பாக இருக்கும் சாலையின் ஒரு பகுதி உருகி திரவமாகத் தேங்கி நின்றதால் சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

பல்வேறு இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதால், அதை சமாளிக்க முடியாமல் அந்நாட்டின்  தீயணைப்பு துறையே திணறிப்போனது. ஒரு நாளைக்கு சுமார் 2,600 அழைப்புகள் தீயணைப்பு துறைக்கு வந்துள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் தீயணைப்பு துறைக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருந்தது ஜூலை 19 அன்றுதான் என இலண்டன் மேயர் சாதிக் கான் கூறியுள்ளார்.

ஜூன் 14 முதல் 20 வரை வீசிய முதல் வெப்ப அலையால் ஜெர்மனியில் 1,636 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இரண்டாம் வெப்ப அலையின் காரணமாக ஸ்பெயினில் 679 பேரும், ஜெர்மனியில் 6,502 பேரும் உயிரிழந்துள்ளனர். இறுதியாக ஆகஸ்டு மாதத்தில் தொடங்கிய மூன்றாவது வெப்ப அலையால் ஐரோப்பிய வனப் பகுதியில் சுமார் 14,000 ஹெக்டேர் பரப்பளவு காட்டுத்தீயில் எரிந்து நாசமாகியது.

எப்போதும் போலல்லாமல், வெப்ப அலையானது இம்முறை வெப்பப் புயலாக (Heatwave Storm) மாறியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உலகில் முதன்முறையாக ஸ்பெயினில் வீசிய வெப்ப அலைக்கு “ஜோ” (Zoe) எனப் பெயரிட்டுள்ளனர். ஐரோப்பா முழுவதும் வீசிய வெப்பப் புயல் காரணமாக இதுவரை 12,000 பேர் இறந்துள்ளனர்.

ஐந்து நூற்றாண்டுகளில் காணாத வறட்சி

ஏற்கெனவே பருவமழை பொய்த்துப் போனதால் ஏற்பட்ட வறட்சியோடு, தற்போது வீசிய இந்த வெப்ப அலைகளும் சேர்ந்துகொள்ள அதன் தாக்கம் மிக மோசமானதாக மாறியது. வரலாறு காணாத வறட்சி ஐரோப்பாவில் தலைவிரித்தாடத் தொடங்கியது.

டெவோன், கார்ன்வால், சோலண்ட், சவுத் டவுன்ஸ், கென்ட் உள்ளிட்டு இங்கிலாந்தில் மொத்தம் ஒன்பது நகரங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்தது அந்நாட்டு அரசு. இதன் காரணமாக அந்நாட்டில் ‘குழாய் தடை’ (hosepipe ban) அறிவிக்கப்பட்டது. இந்தத் தடை அறிவிக்கப்பட்ட இடங்களில், குழாய்கள் மூலம் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதோ, கார் கழுவுவதோ, நீச்சல் குளங்களை நிரப்புவதோ செய்யக் கூடாது என்பது விதியாகும். பல்பொருள் அங்காடிகளில் ஒரு நபர் 3-5 தண்ணீர் பாட்டில்களை மட்டுமே வாங்க வேண்டும் என அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டன.

படம் 1: லூடன் விமான நிலையத்தின் (இலண்டன் நகரம்) ஓடு பாதை வெப்பத்தால் உருகியது. | படம் 2 : இங்கிலாந்தின் பீட்டர்பரோ நகரத்தில் ரயில்வே சிக்னல் வெப்பம் காரணமாக உருகியது.

பல இடங்களில் நீர் நிலைகள் வற்றத் தொடங்கிவிட்டன. இங்கிலாந்தில் சுமார் 1.5 கோடி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் தேம்ஸ் நதியும், ஜெர்மனியின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் ரைன் நதியும் வற்ற ஆரம்பித்ததுள்ளது. வடக்கு இத்தாலியின் மிகப்பெரிய ஏரியான கார்டாவும், மிக நீளமான நதியான போவும் சுத்தமாக வறண்டே போய் விட்டன.

இது அறுவடை மேற்கொள்ளும் விவசாயிகளைப் பெரிதும் பாதித்துள்ளது. பயிர்களுக்கு நீர் பாசனம் செய்ய இயலாததால் 50 சதவிகித பயிர்கள் வீணாகியுள்ளன. மேலும் எண்ணெய் விதைகளை விதைக்க வேண்டிய இக்காலத்தில் மண்ணில் ஈரப்பதம் வற்றிப் போனதால், விதைக்க இயலாத நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக விலையேற்றமடைந்துள்ள தாவர எண்ணெய்கள் இதனால் மேலும் விலை உயரும் அபாயம் நிலவுகிறது.

வறட்சியைத் தொடர்ந்துவந்த பெருவெள்ளம்

வெப்ப அலையால் தவித்து வந்த ஐரோப்பிய மக்களை ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் கனமழை தாக்கத் தொடங்கியது. இத்தாலியின் லிகுரியா பகுதியில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மின்னல்கள் தாக்கின. பிரான்சின் கோர்சிகாவில் மழையினால் மரங்கள் மற்றும் வீட்டின் கூரைகள் விழுந்து 3 பேர் உயிரிழந்தனர், மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். லண்டன், பாரிஸ், மார்செய் போன்ற பெருநகரங்களை மழை நீர் சூழ்ந்தது. இங்கிலாந்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால் இப்பெருவெள்ளம் ஏற்கெனவே நிலவிய கடும் வறட்சியை சரிசெய்யப் போதுமானதாக இல்லையெனவும், அக்டோபர் மாதம்வரை வறட்சி நிலை நீடிக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐரோப்பா போலவே மற்ற உலக நாடுகளும் இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறன. பிப்ரவரி மாதம் பிரேசிலில் இருக்கும் ரியோ டி ஜெனிரோ-வில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 233 பேர் உயிரிழந்துள்ளனர். ஏப்ரல் மாதம் பிலிபைன்ஸ் நாட்டில், மெகி என்னும் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக 167 பேர் இறந்துள்ளனர். ஜூன் மாதத்தில் வீசிய வெப்ப அலையால் அமெரிக்காவின் கேன்சாசில் 2,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்து போயின.

ஜூன் மாதம் சீனாவில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வெள்ளப் பேரிடர் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ஆகஸ்ட் மாதம் முதல் கடுமையான வெப்ப அலைகள் மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் அந்நாட்டில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய நதியான யாங்சே வறண்டு வருகிறது. வேளாண் உற்பத்தி, மின்சார உற்பத்தி ஆகியவையெல்லாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்தியாவில் காஷ்மீர், அசாம், மகாராஷ்டிரா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.

முன்னிலைக்கு வந்துவிட்ட சூழலியல் நெருக்கடி!  

காலநிலை மாற்றம் காரணமாக இன்று பரவும் கொரோனா, குரங்கு அம்மை போன்ற பெருந்தொற்று நோய்களில் 58 சதவிகித நோய்கள் வேகமாகப் பரவுகின்றன என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். “நேச்சர் க்ளைமேட் சேஞ்ச்” இதழில் இது தொடர்பான ஆய்வின் முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் காலநிலை மாற்றம் காரணமாகச் சுற்றுச்சுழலில் ஏற்படும் மாற்றங்களே நோய்க்கிருமிகள் வேகமாகப் பரவ வழிவகுக்கிறது எனத் தெரிய வந்துள்ளது.

காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது புவி வெப்பமயமாதல் ஆகும். புவியின் சராசரி வெப்ப நிலையானது 1.5 டிகிரியைத் தாண்டினால் அதனுடைய விளைவுகள் மீள முடியாததாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் ஏற்கெனவே எச்சரித்திருந்த நிலையில், 2026-ஆம் ஆண்டிற்குள் புவியின் சராசரி வெப்பநிலை தற்காலிகமாக 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு மேல் உயர்வதற்கு 48 சதவிகிதம் வாய்ப்பிருப்பதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

புவியின் சராசரி வெப்பநிலையை 1.5 டிகிரிக்குள் வைத்திருப்போம் எனச் சென்ற ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற cop26 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் தீர்மானம் போட்டார்கள். அத்தீர்மானத்தின்படி, அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால்கூட பரவாயில்லை, இயற்கையை மேலும் தீவிரமாகச் சுரண்டும் வேலையிலேயே ஈடுபட்டு வருகின்றனர்.

படிக்க : செஸ் வரி: இந்துராஷ்டிர சாம்ராஜ்யத்திற்கு மாநிலங்கள் செலுத்தும் கப்பம்!

cop26 மாநாட்டிற்குப் பிறகும், பல புதைபடிவ எரிபொருள் திட்டங்களுக்கு இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது; அதேபோல பிரேசிலின் அமேசான் முதல் காங்கோ வரை 11.1 மில்லியன் பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. உலகின் நுரையீரலாக அறியப்படும் அமேசான் மழைக் காடுகளில், நியூயார்க்-இன் 5 மடங்கைவிட பெரும்பகுதி அழிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் இந்த முதாளித்துவ அரசுகளுக்கு இயற்கைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம் துளியும் இல்லை என்பதையே மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றன.

சுற்றுச்சுழல் சீர்கேடும் அதனால் உருவான காலநிலை மாற்றமும், ஆளும்வர்க்க ஊடகங்கள் காட்டுவதைப் போல தனிநபர்களின் முறையற்ற செயல்பாடுகளினால் நடைபெறுவதல்ல. தன் லாப நோக்கத்திற்காக இயற்கையை வரன்முறையின்றி சூறையாடும் முதலாளித்துவ உற்பத்தி முறையினால் விளைந்த கேடாகும்.

முதாளித்துவத்திற்கும் உழைக்கும் மக்களுக்குமான முரண்பாடு ஒரு பக்கம் இதுவரை காணாத வகையில் உச்சமடைந்துள்ளது. அதன் விளைவாகவே, இன்று இயற்கை நாசமாக்கப்பட்டு ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் இயற்கைக்குமான முரண்பாடு தீவிரமடைந்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் ஐரோப்பாவிலும் மற்ற உலக நாடுகளிலும் ஏற்படும் பேரழிவுகள் இதனையே நமக்கு உணர்த்துகின்றன. இலாபவெறி கொண்ட முதாளித்துவத்தை ஒழித்துக்கட்டுவது பெருந்திரளான உழைக்கும் வர்க்கத்திற்கான விடுதலை என்பதோடு, இப்புவிப்பரப்பை காப்பதற்கே அது இன்றியமையாதது என்றாகிவிட்டது.


மதி

வாரணாசி: பாசிஸ்டுகளால் குறிவைத்து தாக்கப்படும் தலித் பேராசிரியர்கள்!

0

வாராணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யா பீடம் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் கவுரவ பேராசிரியர், டாக்டர் மிதிலேஷ் குமார் கவுதம் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

“நவராத்திரி காலங்களில் பெண்கள் விரதம் இருப்பதற்கு பதிலாக, அரசியலமைப்பு சட்டத்தையும், இந்து சட்ட மசோதாவையும் படிப்பது நல்லது என்றும், இவ்வாறு படிப்பது பயத்திலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்கும். ஜெய் பீம்” என்று சமூக வலைத்தளங்களில் தனது கருத்தை பதிவு செய்து இருந்தார்.

சமூக வலைதளத்தில் பேராசிரியர் பதிவு செய்த கருத்து, இந்து விரோத கருத்து என்று கூறி அக்கல்லூரியில் செயல்பட்டு வரும் பாசிச ஆர்.எஸ்.எஸ்.ன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி போராட்டத்தில் ஈடுப்பட்டது. அவரை உடனடியாக பல்கலைக் கழகத்தில் இருந்து பணிநீக்கம் செய்ய வேண்டும் என்ற் கூறி துறைத்தலைவரின் அறைக்கு முன்னால் சென்று ‘ஜெய் ஸ்ரீராம், மாதா கி ஜெய்’ என்று வெறிக்கூச்சல் போட்டனர்.

மேலும், பல்கலைக்கழக துணைவேந்தர் அறைக்கு சென்று பேராசிரியர் கவுதம், இரண்டு மணி நேரத்தில் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். அடுத்த நிமிடமே பல்கலைக் கழகம் அவரை பணிநீக்கம் செய்து உத்தரவு பிறபிக்கிறது.

படிக்க : 1947-க்கு பிறகு மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்!

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பல்கலைக் கழக பதிவாளர் சுனிதா பாண்டே, “கவுதம் கூறிய கருத்து ஏற்புடையது அல்ல. மதங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும், இதுபோன்ற கருத்துகள் வெளியிட யாருக்கும் உரிமையில்லை. ஒரு ஆசிரியர் எப்போதும் இப்படியான கருத்துகளை கூறக் கூடாது” என்று கூறியுள்ளார். கல்லூரியில் மாணவர்கள் மனம் புண்பட்டுள்ளதாகவும் எனவே அவரை பணிநீக்கம் செய்கிறோம் என்றும் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பேராசிரியர் கவுதம், “நாங்கள் தலித் என்ற காரணத்திற்காகவே பாசிச கும்பலால் குறிவைத்து தாக்கப்படுகிறோம். துறைத்தலைவர் தலித் என்பதற்காகவே அவரையும் தாக்குகிறார்கள். இந்துத்துவ மாணவர் கும்பலின் அழுத்தம் காரணமாகவும், உயர்சாதி பிரிவினரின் அழுத்தம் காரணமாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் எவ்வித விசாரணையும் இன்றி என்னை பணி நீக்கம் செய்துள்ளது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் இதேபோன்று சில பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கல்வித்துறை தலைவர் சுசில் கவுதம் மீது தாக்குதல் நடத்தினார்கள். கிருபாசங்கர், ஜெய்சங்கர் மீதும் தாக்குதல் நடத்தினார்கள் என குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் அன்று பல்கலைக்கழகத்தில் இருந்திருந்தால் கும்பல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அச்சத்தை வெளிபடுத்தி உள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த பேராசிரியர்களை தாக்கினார்கள். தற்போது தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் மீது திட்டமிட்ட வகையில் தாக்குதலை நடத்துகிறார்கள். பல்கலைக் கழக வளாகத்தில் என்றும் அச்சத்தில் வாழும் நிலை உருவாகி வருகிறது என கூறினார்.

பல்கலைக் கழகங்களில் முஸ்லீம்கள், தலித்துகள், சமூக செயற்பாட்டாளர்கள் சமீப காலங்களாக இந்துத்துவ கும்பல்களால் குறிவைத்து தாக்கப்பட்டு வருகிறார்கள் என்பதே உண்மை.

படிக்க : வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கேரளாவில் ஊடுருவிவரும் ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரங்கள்!

கடந்த மே மாதம், லக்னோ பல்கலைக் கழக பேராசிரியர், ரவிகாந்த் சாந்தன், ஒரு ஊடக நிகழ்ச்சியில் ஞானவாபி மசூதி குறித்து வரலாற்று புத்தகத்தில் இருந்து ஒரு மேற்கோள் எடுத்து கூறினார். புத்தகத்தில் உள்ள மேற்கோள்களை எடுத்து கூறியதையே, இந்து விரோத கருத்து என்று கூறி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள் ஏ.பி.வி.பி மாண குண்டர்கள்.

தற்போது பேராசிரியர் கவுதம் தாக்கப்பட்டுள்ளார். அவர் தெய்வங்களை கேலி செய்யவில்லை. தவறாக பேசவில்லை. இந்திய அரசியலைமைப்பு சட்டத்திற்கு முரணாகவும் பேசவில்லை. ஆனாலும், பாசிச கும்பலால் வேட்டையாடப்பட்டு வருகிறார்.

நாடுமுழுவதும் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பணியாற்றக் கூடிய தலித் பேராசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், முஸ்லீம் பேராசிரியர்கள் இந்துத்துவ குண்டர்களால் தாக்குதல்களுக்குள்ளாகிறார்கள்.

பல்கலைக் கழகங்களில் செயல்பட்டு வரும் ஜனநாயக முற்போக்கு எண்ணம் கொண்ட பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஒன்றிணைந்து பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி சங் பரிவாரி கும்பலிடமிருந்து பல்கலைக் கழகங்களை மீட்டெடுக்க களமிறங்க வேண்டியது அவசியமாகியது.


தங்கபாலு