Friday, June 19, 2026
முகப்பு பதிவு பக்கம் 289

நடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம். தென்னிந்தியாவின் மிகப்பெரும் நுழைவாயில். இங்கிருந்து காஷ்மீர், கன்னியாகுமரி, கவுகாத்தி என்று இந்தியாவின் எல்லா முனைகளுக்கும் 70 க்கும் மேற்பட்ட தொடர்வண்டிகள் இயங்குகின்றன. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா என்ற பல்வேறு மாநிலங்களிலிருந்து 50 க்கும் மேற்பட்ட தொடர்வண்டிகள். ஆக வாரத்தின் 7 நாட்களிலும் 24 நேரமும் கண்ணயராமல் இருக்கும் இடம்.

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தின் முக்கிய இயங்கு உறுப்பாக இருப்பவர்கள் 300-க்கும் மேற்பட்ட போர்ட்டர்கள் எனப்படும் சுமைதூக்கும் தொழிலாளிகள்.

20 முதல் 80 வயது வரை உள்ள இந்தத் தொழிலாளிகள் சிவப்பு சீருடை அணிந்து நடைபாதையின் எல்லா முனைகளுக்கும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஓட்டத்தின் இடையே ஒரு காலைப்பொழுதில் அவர்களைக் குறுக்கிட்டோம்.

***

கோவிந்த்

லக்கேஜ பாத்துட்டு பிளாட்பாரத்தின் அடுத்த முனைக்கு ஓடுவோம்; பக்கத்தில போனதும், வேணாம் நாங்களே இழுத்துப் போறோமுன்னு சொல்வாங்க.

“எனக்கு எங்கப்பா கொடுத்த வேல இது; அவருக்கு எங்க தாத்தா கொடுத்தது. நான் மூனாவது தலைமுறை. எம் பையன் இந்த வேலைய விரும்புவானான்னு தெரியல. விடியக்கால 3 மணிக்கு வந்தேன், இப்ப பகல் 11 மணியாகுது. இதோ இந்த ஒத்த 50 ரூபாதான் வருமானம்” என்று பணத்தை நீட்டினார்.

“இன்னும் காலையில சாப்பிடல, அடுத்து கூலி கெடக்குமான்னு தெரியல, அதனால இத ஒடைக்காத (செலவு செய்யாமல்) வச்சிருக்கேன். மதியம் சாப்பிடணும், எந்த கெட்ட பழக்கமும் இல்ல, அதனால தப்பிச்சிட்டேன். கட்டிங் போடுறவனாயிருந்தா இன்னேறம் பயித்தியம் புடிச்சிருக்கும்.

படிக்க:
தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா ?
♦ வீதிக்கு வாங்க ரஜினி | மனுஷ்ய புத்திரன் கவிதை

ஒரு ரயிலுக்கு ரெண்டு மூனு பேர்தான் கூலின்னு கூப்பிடுறாங்க- ஒரு ட்ரெயினுக்கு 12 கோச். ஒரு கோச்சுக்கு 72 சீட்டு. கணக்கு போட்டுக்குங்க. இதில அதிகபட்சம் 5 பேருகூட கூலிக்கு கூப்பிடுறதில்ல. எவ்வளவு வெயிட்டா இருந்தாலும் அவங்களே இழுத்து போயிடுறாங்க. நாலு வீலு, ஆறு வீலு, எட்டு வீலு சூட்கேசல்லாம் வந்துருச்சு. 5 வயசு கொழந்த 50 கிலோ சூட்கேச விளையாட்டா இழுத்துப் போகுது. குழந்தைங்களுக்குள்ளே போட்டி வேற. அழுது அடம்புடிச்சு அப்பா கையிலேருந்து வாங்கி இழுத்துப் போகுதுங்க. நாம பேச முடியல. லக்கேஜ் இருக்குறத பாத்துட்டு இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடிக்கு ஓடுவோம், வேணாம் நாங்களே இழுத்துப் போறோமுன்னு சொல்வாங்க, வெறுங்கையோட திரும்புவோம். ஒரு பிளாட்பாரத்தை ஓடி திரும்புனா ஒரு கிலோ மீட்டர். இப்படி சும்மா சும்மா பல கிலோ மீட்டர் ஓடுவோம்.

சுமைதூக்கும் தொழிலாளர்களின் அடையாள அட்டை.

அடுத்தடுத்து ட்ரெயின் வரும்போது விடாம ஓடுறதுனால கிர்ருனு தலை சுத்தும். அப்பப்ப உட்கார்ந்து சமாளிப்போம். மாசத்துல சில நாளுகூட முழுசா 500 ரூபாய எடுத்துப் போகமுடியல. 200, 300ஐ தாண்ட மாட்டேங்குது. பல நேரம் அதுவும் கெடைக்காது.

பல வேளை டீ கூட கடன்லதான் குடிப்போம். 30 ரூபா பட்ட சோத்துக்கு பக்கத்துல உள்ளவன்தான் கடன் கொடுப்பான். இப்படித்தான் போகுது பொழப்பு.

வீட்டு வாடகை, பசங்க படிப்பு, சாப்பாட்டுச் செலவு, கரண்ட் பில்லுனு இந்த கஷ்டத்த தலையில ஏத்துனா வேற சுமைய தலையில ஏத்த முடியுமா? இப்படித்தான் வாழ்க்கை ஓடுது” என்றார்.

நாம் அவரிடம், “இவ்வளவு ஜனங்களையும், ரயிலையும் பார்க்குறீங்களே, நீங்க குடும்பத்தோட டூர் போயிருக்குறீங்களா? என்றோம்.

நம்மை ஆழமாகப் பார்த்தார். பிறகு பெருமூச்சுவிட்டபடி, “அப்படியெல்லாம் நெனச்சுக்கூட பார்த்ததில்ல…” என்றார்.

***

மதுரை

நடக்க முடியாதவுங்கள மூட்ட மாதிரி தோளு மேல சாச்சிகிட்டு போயி வண்டியில ஏத்தி விடுவோம். ஆனா, எங்கள தாங்குறதுக்குத்தான் யார் இருக்கா?

எனக்கு 54 வயது. கூலியா வந்து 25 வருஷமாகுது. கேரள பொழப்பு மொத்தமா போயிருச்சு. இங்கேருந்து யாரும் எந்த சரக்கும் வாங்கிப் போறதில்ல. ‘எந்தப் பொருள் கையில இருந்தாலும் அதுக்கு பில்லு எங்கேன்னு கொடச்சல் கொடுக்குறாங்க; ஜி.எஸ்.டி இல்லாத பில்ல ஏத்துக்க மாட்டேங்குறாங்க; நாங்க பொழப்பு நடத்த முடியலன்னு’ வியாபாரிங்க சொல்றாங்க. என்னமோ நடக்குது நாட்டுல. எல்லாரு வயித்துலயும் அடிச்சிட்டாங்க.

பணம் செல்லாதுன்னு சொன்னபோதே பாதி தொழில் போச்சு. இப்ப ஜி.எஸ்.டியால மீதித் தொழிலும் போச்சு.

படிக்க:
நானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை
♦ ஜாமியா நூலகத்தில் டில்லி போலீசு வெறியாட்டம் ! சிசிடிவி காட்சிகள் வெளியீடு

எங்க பொழப்ப ஏன் கேக்குறீங்க… வெள்ளச்சட்ட போட்ட பிளைட் டிரைவரா இருந்தாலும், ட்ரெயின் கார்டா இருந்தாலும் சரி…! அவங்களுக்கெல்லாம் குறிப்பிட்ட நேரந்தான் வேல, எங்கள மாதிரி செவப்புச் சட்டக்காரங்களுக்கு 24 மணி நேரமும் வேல. நடு ராத்திரி 12 மணிக்கு வந்து லக்கேஜோடு வந்தாலும் நாங்க ஓடுவோம்.

கூலி மட்டுமில்ல, நடக்க முடியாதவங்கள மூட்ட மாதிரி தோளு மேல சாச்சிகிட்டு போயி வண்டியில ஏத்தி விடுவோம். ஆனா, எங்கள தாங்குறதுக்குத்தான் யாரும் இல்ல.

நாள் முழுக்க இங்கே இருந்துட்டு வெறுங்கையோட வீட்டுக்கு போனா, சண்டைதான் வருது. நாங்க ஏதோ தெண்டச் செலவு செய்யிற மாதிரி, வீட்டம்மாங்க நேரடியா இங்கேயே வந்து கூலிக்காக நிக்கிறாங்க. கையில இருக்குற 50, 100 வாங்கிட்டுப் போறாங்க.

எங்க பாடாவது பரவாயில்ல, கல்யாணம் கட்டுன சின்னதுங்க, ‘இவன கட்டிகிட்டு நான் என்னதான் பண்றதுன்னு’ கண் கலங்குதுங்க. எதிர்காலம் கலக்கமா இருக்கு.

***

முருகேசன் (74)

சின்ன வயசுல 100 கிலோ லக்கேஜ அனாயசமா தோள்ல தூக்கிப் போடுவேன். இப்போ, 40, 50 கிலோவுக்கே மூச்சு வாங்குது.

அடுத்த வருசம் வந்தா, நான் சென்ட்ரலுக்கு வந்து 50 வருசமாகுது. சின்ன வயசுல 100 கிலோ லக்கேஜ அனாயசமா தோள்ல தூக்கிப் போடுவேன். இப்போ 40, 50 கிலோவுக்கே மூச்சு வாங்குது. அந்தக் காலத்துல இவ்வளவு போக்குவரத்து இல்ல. இப்ப எது கேட்டாலும் வாசல்படிக்கே வந்து நிக்குது. நம்மள மாதிரி கூலிகள யாரு சட்டப்பண்ணுவாங்க-

எனக்கு வயசாயிடுச்சு, நான் போகப்போறேன். படிச்சி முடிச்ச சின்னப் பசங்க இங்கே அல்லாடுறதுதான் கஷ்டமா இருக்கு.

***

ஜெயவேலு

ஃபோன தட்டுனா எல்லாமே கெடைக்குது. பின்ன எதுக்கு சுமைய தூக்கிகிட்டு வரணும். இப்பல்லாம் ஸ்டைலா தோள்பையோட போறாங்க.

நான் பிளஸ் டூ படிச்சிருக்கேன். நான் கூலியா வந்து 10 வருசமாகுது. இப்ப எல்லாமே ஆன்லைனிலேயே கிடைக்குது. ஊருக்குப் போக டிக்கெட்டு முதற்கொண்டு, சாப்பிடுற சோறு வரை எல்லாமே ஃபோன தட்டுனா கெடைக்குது. பின்ன எதுக்கு சுமைய தூக்கிகிட்டு வரணும். கைய ஆட்டிகிட்டு வர்றாங்க, ஸ்டைலா தோள்பையோட போறாங்க. முன்ன மாதிரி மூட்ட முடிச்சோட இப்ப யாரும் வர்றதில்ல.

***

பாலகுரு

போர்ட்டருக்கு சேர்ந்தா கேங்க் மேன் வேல கெடைக்குமுன்னாங்க; இப்போ கூலி வேலைதான் நெறந்தரமுன்னு ஆயிடுச்சு.

12-வது படிச்சிட்டு ஐடிஐ முடிச்சிருக்கேன். இங்கே போர்ட்டருக்கு சேர்ந்தா கேங்க் மேன் வேல கெடைக்குமுன்னு சொன்னதுனால ஆசைப்பட்டு வந்தேன். ஆனா, கூலி வேலைதான் நெறந்தரமுன்னு ஆயிடுச்சு.

படிக்க:
திருச்சி: ரெயில்வே திமிரை அடக்கிய சுமைப்பணி தொழிலாளிகள்
♦ நூல் அறிமுகம் : நினைவழியா வடுக்கள்

நாங்க ரவுடித்தனம், திருட்டுத்தனம் பண்றதா சிலர் புரளியை கௌப்புறாங்க. ஆனால், பயணிங்க மறந்து  போன, விட்டுட்டுப் போன பொருளுங்களையெல்லாம் எஸ்.எம்.ஆர் ரூம்ல ஒப்படைச்சிருக்குறோமுன்னு போயி கேளுங்க.

இரயில் நிலையத்திலேயே தவறவிட்ட பயணிகளின் பொருள்களை அலுவலகத்தில் ஒப்படைத்ததற்கான ஒப்புகைச் சான்று.

***

பீட்டர்

தண்டவாளத்துல தலைய கொடுத்த மாதிரிதான் எங்க கதை. இப்ப இருக்கவும் முடியல, வெளிய போகவும் முடியல.

நான் டீச்சர் ட்ரெயினிங் முடிச்சிருக்கேன். எங்கப்பா எடத்துல கூலியா வந்தேன். 2008ல லல்லு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சரா இருந்தபோது, போர்ட்டருங்கள கேங்மேனா நெரந்தரமாக்குனாரு. அந்த மாதிரி இப்ப செய்வாங்களோன்னு எதிர்பாக்குறேன். இப்போ போகவும் முடியல, இருக்கவும் முடியல. தண்டவாளத்துல தலைய கொடுத்த மாதிரிதான் எங்க கதை.

***

சைமன்

இப்போ போலீசு கெடுபிடி அதிகமாயிடுச்சு. காக்கிச் சட்டப் போட்டு வர்றவனெல்லாம் எங்கள அதட்டுறாங்க. இங்கே உட்காராதே, அங்கே நிக்காதேன்னு ரூல்ஸ் பேசுறாங்க. 24 மணி நேரமும் இங்கே நிக்கிறது போலீஸ்காரங்களுக்கு தலைவலியா இருக்கு. அவங்கள வாச் பண்றதா நெனச்சிக்கிறாங்க. அவங்களோட தப்ப மறைக்கிறதுக்கு நம்ம மேலே திருட்டுப்பட்டம் கட்டுறாங்க.

***

ஜெகன் பவுல்ராஜ் (ரயில்வே போர்ட்டர் சங்கத்தின் பொறுப்பாளர்)

வீல் வச்ச சூட்கேசு, பேட்டரி காருன்னு வந்தது போயி, இப்போ செல்ஃப் ட்ராலி வேற வரப்போகுதாம். இனி நாங்க வீட்டுக்குப் போகவேண்டியதுதான்.

இங்கே யார்கிட்டேயும் ஒற்றுமை இல்ல. பின்னாலதான் புலம்புவாங்க, எதையும் தடுக்க முடியல.

பேசஞ்சர் வீல் வச்ச சூட்கேச எடுத்து வந்தது போயி, இப்போ இங்கேயே பேட்டரி கார் வந்துருச்சு. மொதல்ல ஹான்டிகேப்புக்குனு சொன்னாங்க. இப்ப பேட்டரி கார கான்ட்ராக்டுக்கு விட்டு ஒருத்தருக்கு 10 ரூபா வசூல் பண்றாங்க. லக்கேஜ் மொத்தமும் அதுலதான் போகுது. இத கேக்க யாரும் வரல.

இதுல செல்ப் ட்ராலி வேற வரப்போறதா சொல்றாங்க. அது வந்தா சுத்தம். எல்லா கூலிகளும் வீட்டுக்குப் போக வேண்டியதுதான்.

ஊருக்குப் போற ஒவ்வொரு டிக்கெட்டையும் நிமிசத்துக்கு ஒரு வெல விக்கிறான். டைனமிக், தக்கல் விதவிதமா பேரு வேற. அத யாரும் கேக்கல. ஆனால், கூலி கொஞ்சம் அதிகம் கேட்டா, ரவுடித்தனமுன்னு போலீசிடம் கம்ப்ளயின்ட் பண்றாங்க.

சமீபத்துல வெளியில நிக்கிற ஆர்.பி.எப் எங்கள அதிகமா மெரட்டுறாங்க. இவங்க எல்லாம் நேத்து வந்த சின்னப் பசங்க. நாங்க 50 வருசமா தொழில் பண்றோம். இனிமே அவங்ககிட்டேதான் கையெழுத்து போட்டு உள்ளே போகணுமுன்னு சொல்றாங்க. இப்பவே அவங்களோட அட்டகாசம் தாங்க முடியல. சட்டம் வந்தா என்ன பண்ணுவாங்களோ, எங்க தலையெழுத்து.

இலவச வாடிக்கையாளர் சேவை மையம் போல, தங்களிடம் இரயில் பற்றிய விவரம் கேட்கும் பயணிகளுக்கு சளைக்காமல் உதவுகிறார்கள் இந்த செஞ்சீருடை பணியாளர்கள்.

வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! அஞ்சாதே போராடு ! மாநாட்டு நிதி தாரீர் !!

CAA – NRC – NPR வேண்டாம் ! கல்வி, வேலை, ஜனநாயகம் வேண்டும் !
அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் !
அஞ்சாதே போராடு !

மாநாடு – கலைநிகழ்ச்சி

நாள் : 23 பிப்ரவரி, ஞாயிறு மாலை 5 மணி,
இடம் : திருச்சி உழவர் சந்தை.

ன்பார்ந்த நண்பர்களே, வணக்கம்.

என்றுமில்லாத வகையில் இன்று நாடு இருபெருந் தாக்குதல்களை எதிர் கொண்டு வருகிறது. முதலாளித்துவப் பொருளாதாரத்தின் சீர்குலைவும், தோல்வியும் பெரும்பான்மையான தொழிலாளிகள், விவசாயிகள், சிறு உடைமையாளர்களை போண்டியாக்கி வருகிறது. மறுபுறம் ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறிக் கும்பல் அதிகாரத்தில் அமர்ந்து ஜனநாயகம், மதச்சார்பின்மை, பன்முக்த்தன்மை ஆகிய அடிப்படைகள் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது. எதிர்ப்பவர்கள் அனைவரையும் தேச விரோதிகளாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரித்து கொடிய சட்டங்களின் கீழ் சிறை வைக்கிறது.

இத்தகைய இரட்டைத் தாக்குதலை முறியடிக்க வேண்டிய அவசர சூழலில் தான் மக்கள் அதிகாரம் சார்பில் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கிறோம். பேருந்து, இரயில், கடை வீதி போன்று மக்களிடம் நிதி திரட்டும் வாய்ப்பை காவல் துறை தடுத்து விடுகிறது. அனுமதி பெறுவதற்கே உயர் நீதிமன்றம் செல்லவேண்டியிருக்கிறது. அரசின் அடக்குமுறைக்கு ஆளாகும் எமக்கு நிதி பெரும் நெருக்கடியாகவே தொடர்கிறது. மாநாடு வெற்றி பெற உங்கள் வருகை மட்டுமல்லாது நிதி உதவியும் பெரிதும் தேவைப்படுகிறது. தாராளமாக உதவுங்கள்.. நன்றி..

கீழ் காணும் வங்கிக் கணக்கில் நன்கொடை செலுத்தலாம்.

மாநாட்டு நிகழ்ச்சி நிரல்

வரவேற்புரை :

தோழர் சூர்யா
கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

தலைமை :

தோழர் காளியப்பன்
மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்

தொடக்க உரை :

நீதிபதி கோபால கவுடா
மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதி

உரையாற்றுவோர் :

திரு. சசிகாந்த் செந்தில், ஐ.ஏ.எஸ்.
(ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்தவர், கர்நாடகா)

வழக்கறிஞர் பாலன்
பெங்களூரு

தோழர் தியாகு 
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

திரு. லெனின் பாரதி
திரைப்பட இயக்குநர்

திரு. பாலாஜி
ஜெ.என்.யூ மாணவர் (JNUSU முன்னாள் தலைவர்), டெல்லி

வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

கலை நிகழ்ச்சி : ம.க.இ.க. கலைக்குழு

நன்றியுரை :

தோழர் செழியன்
திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மோடி – அமித்ஷா பாசிச ஆட்சிக்கு எதிரான போராட்ட அலை ஓங்கட்டும்.
புதிய இந்தியா எழட்டும்! கார்ப்பரேட் – காவி பாசிசம் வீழட்டும்!

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
தொடர்புக்கு : 99623 66321

தலைமை அலுவலகம்:
16, முல்லைநகர் வணிக வளாகம், 2-வது நிழற்சாலை,
அசோக் நகர், சென்னை-083.
E-mail : ppchennaimu@gmail.com | fb: makkalathikaramtn

நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி

னநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் காக்கும் போராட்டம் இன்னும் நீண்ட பாதையைக் கொண்டுள்ளது. ஏனெனில், இந்துத்வா சங்பரிவாரங்கள் இன்னமும் வீளவுமில்லை; நாம் மீளவும் இல்லை.

இதை நாம் உணருவதற்கு பாஜக பிறந்த கதையை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் பாசிச சூழ்ச்சிகளை அறிந்து கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ். வகுத்துக் கொண்டுள்ள வேலைப் பிரிவினையை அம்பலப்படுத்த வேண்டும்.

இதற்குத் துணைபுரியும் அரிய புத்தகமே – இது. முக்கியத்துவமிக்க ஒரு சில அரசியல், பொருளாதார எழுத்தாளர்களில் ஏ.ஜி. நூரனி ஒருவர். அவர் இப்புத்தகத்தில்,

வெள்ளையனை வெளியேற்றும் யுத்தத்தில் இந்துத்வா சக்திகளின் பங்கு என்ன?

காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேகளும், ஆர்.எஸ்.எஸ்.ஸிற்கும் இடையே இருந்த உள் கூட்டு என்ன?

ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் கருவியான (கட்சியின்) ஜனசங்கம், அது பின்னர் மறுபிறவி எடுத்த பா.ஜ.க.வும் எவ்வாறு உருவாயின?

இந்திய அரசியல் வரைபடத்தில் பா.ஜ.க.வும், அதன் மூலமாக ஆர்.எஸ்.எஸ்.ஸும் தமக்கான ஒரு பிரபலத்தை அடைந்தது எப்படி?

சங் பரிவாரங்களான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க., வி.எச்.பி., பஜ்ரங்தள் என்று சங்பரிவாரங்கள் எந்தவகையான வேலைப்பிரிவினையை செய்து கொண்டு செயல்படுகின்றன?

வாஜ்பாயிக்கும் அத்வானிக்கும் இடையேயான உள்கூட்டு என்ன? என்ற கேள்விகளுக்கும், புதிர்களுக்கும் விடையளிக்கிறார் ஏ.ஜி. நூரனி. (நூலின் பதிப்புரையிலிருந்து)

ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இந்திய அரசியல் சாசனமும்

இந்திய அரசியல் சாசனம் இந்துக்களுக்கு எதிரானது என்ற குற்றச் சாட்டுடன் வெள்ளை அறிக்கை ஒன்றை சங்பரிவார் கும்பல் 1993 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி அன்று வெளியிட்டது. அவர்கள் நிறுவ திட்டமிட்டுள்ள அரசியல் அமைப்பு முறையைப் பற்றி அந்த வெள்ளை அறிக்கை குறிப்பிட்டது. வெள்ளை அறிக்கையின் முன் பக்க அட்டையில் இரண்டு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. இந்தியாவின் ஒருமைப்பாடு, சகோதர உணர்வு, மத நல்லிணக்கம் ஆகியவற்றை சீர்குலைத்தது யார்? இது முதல் கேள்வி. பட்டினி, வேலையின்மை, லஞ்ச ஊழல் மத நம்பிக்கையின்மை இவற்றையெல்லாம் பரப்பியது யார்? இது எழுப்பப்பட்டிருந்த இரண்டாவது கேள்வி. அதற்கான பதில் வெள்ளை அறிக்கையின் தலைப்பில் அளிக்கப்பட்டது. வெள்ளை அறிக்கையின் தலைப்பு ‘தற்போதைய இந்திய அரசியல் சாசனம்’.

இந்தி மொழியில் எழுதப்பட்ட தலைப்பில் இந்தியன் என்ற சொல் ஒரு காரணத்துடன் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் சாசனம் இந்தியத் தன்மை வாய்ந்தது. அது இந்துக்களின் அரசியல் சாசனமல்ல என்பதை உணர்த்துவதற்கே அவ்வாறு குறிப்பிடப்பட்டது அந்த வெள்ளை அறிக்கையின் முன்னுரையில் ஸ்வாமி ஹீரானந்த எழுதுகிறார்:

“நாட்டின் கலாச்சாரமும், குணநலன்கள், சூழ்நிலைகள், ஆகிய எல்லாவற்றுக்கும் விரோதமான முறையில் தற்போதைய அரசியல் சாசனம் அமைந்துள்ளது. அது அன்னியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது” இந்த ஆவணத்தைப் படிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திவிட்டு அவர் கூறுகிறார். “இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை செயலிழக்கச் செய்தபிறகு தான் நம்முடைய பொருளாதாரக் கொள்கை நீதித்துறை மற்றும் நிர்வாக அமைப்புகள் மற்ற தேசிய நிறுவனங்கள் ஆகியவை பற்றிய மறு சிந்தனையில் ஈடுபடவேண்டும். அதனை முழுமையாக ஒதுக்கித் தள்ளுவது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விஷயம். இந்த அரசியல் அமைப்புச் சட்டம் விளைவித்துள்ள தீங்குகளுடன் ஒப்பிடும் போது 200 ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி நாட்டுக்கு ஏற்படுத்திய சேதாரங்கள் மிகவும் குறைவானதே. பாரதத்தை இந்தியாவாக மாற்றுவதற்கான சதி தொடர்கிறது. உலகம் முழுவதும் தற்போது இந்தியர்கள் என்றே அறியப்படுகிறோம்” என்று வருத்தப்படுகிறார். ”இந்துஸ்தானைப் பெறுவதற்காக விடுதலைப் போராட்டம் நடத்தப்பட்டது. வந்தே மாதரம்தான் தேசிய கீதமாக இருந்தது. விடுதலைக்குப் பிறகு உருவான இந்தியாவில் இந்துஸ்தானமும் வந்தேமாதரமும் அழிக்கப்பட்டு விட்டன. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்பதற்காகப் பாடப்பட்ட பாடல் தேசிய கீதமாக மாறியுள்ளது. ”

உணர்ச்சிக் கொந்தளிப்பின் விளைவாக அந்தப் பிரசுரம் உருவாக்கப்பட்டதாகக் கருதக் கூடாது. முழுமையான விவாதத்திற்குப் பிறகு திட்டமிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை அது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட சில நாட்களுக்குப்பிறகு 1992ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதியன்று சுவாமி முக்தாநந்த் ஒரு பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். சுவாமி வாமதேவ் மஹாராஜும் அவருடன் பேட்டியில் கலந்து கொண்டார்.

இந்து எதிர்ப்பு அரசியல் சட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று அவர்கள் தேசத்திற்கு அறைகூவல் விடுத்தனர். “இந்த நாட்டின் சட்டங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சாதுக்கள் நாட்டின் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியாவின் இயற்கையான குடிமக்கள் என்று இந்தியாவின் குடியுரிமைச் சட்டங்கள் கூறுவது ஒரு மோசடி ஆகும்.” ஒரு வாரம் கழித்து முக்தானந்தின் பிரசுரம் வெளியிடப்பட்டது.

ராஜேந்திர சிங்.

சங்பரிவாரின் தாய் ஸ்தாபனமான ஆர்.எஸ்.எஸ் தான் வெள்ளை அறிக்கை பற்றி கருத்துக்களை முதலில் வெளியிட்டது. இது மிகவும் பொருத்தமானதே. 1993ஆம் ஆண்டு ஜனவரியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அப்போதைய தலைவராக இருந்த ராஜேந்திர சிங் பின்வருமாறு எழுதினார்:

“இந்தியாவின் இன்றியமையாததேவைகளை ஈடுசெய்யும் வகையிலோ, அதன் பாரம்பரியம், அது உயர்வாகப் போற்றும் அம்சங்கள், அதன் உயர்ந்த பண்புகள் ஆகியவற்றுக்கு ஏற்றதாக இல்லாத வகையில் நமது அமைப்புகள் இருப்பதே தற்போது நடைபெறும் மோதலுக்கு ஓரளவு காரணமாக அமைந்துள்ளன என்று கூறலாம். இந்த நாட்டின் சில சிறப்புத்தன்மைகள் அரசியல் அமைப்புச் சட்டத்தில் பிரதிபலிக்க வேண்டியது அவசியம். இந்தியா எனப்படும் பாரத் என்பதற்கு பதிலாக பாரத் எனப்படும் இந்துஸ்தான் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பன்முகத் தன்மை கொண்ட கலாச்சாரம் என்று அதிகாரப்பூர்வமான ஆவணங்களில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் நமது கலாச்சாரம் பன்முகத்தன்மை கொண்டதல்ல என்பது உறுதி. அணியப்படும் ஆடைகளோ, பேசும் மொழிகளோ கலாச்சாரமல்ல. அடிப்படை யான நிலையில் பரிசீலித்தால் கலாச்சார ரீதியில் நாடு ஒன்றுபட்டு நிற்பது தெரிய வரும். எந்த ஒரு நாடும் நீடித்து நிலைக்க வேண்டுமானால் பல பிரிவுகளாகப் பிரிந்திருக்கக் கூடாது. இவைகளெல்லாம் மாறுதல் செய்யப்பட வேண்டியதன் தேவையைக் காட்டுகின்றன. இந்த நாட்டின் உயர்பண்புகளுக்கும், அறிவுத்திறனுக்கும் ஏற்ற ஒரு அரசியல் அமைப்புச்சட்டம் எதிர்காலத்தில் உருவாக்கப்படவேண்டும்” (இந்தியன் எக்ஸ்பிரஸ் ஜனவரி 14,1993)

அன்றைய பா.ஜ.க. தலைவரான எம்.எம். ஜோஷி 1993 ஆம் ஆண்டு ஜனவரி 24ந் தேதி ஆந்திர மாநிலத்தின் அனந்தப்பூர் நகரத்தில் பேசும் போது, “அரசியல் அமைப்புச்சட்டத்தைப் புதிதாகப் பரிசீலிக்க வேண்டும் ‘என்ற தமது கோரிக்கையை வலியுறுத்தினார்” இது தான் சங்பரிவாரின் பிரத்தியேக பாணி. அதனையே இம்முறையும் கடைப் பிடித்தனர்.

படிக்க:
தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா ?
அஞ்சாதே போராடு ! தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram

சங்பரிவார் கும்பல் முழுமையுமே அடிப்படையில் தாராளமான சிந்தனைப் போக்கு கொண்டதல்ல, அவை அறிவாளிகளுக்கு எதிரானது, மேற்கத்திய அறிவுப் பாரம்பரியத்தை நிராகரிக்கும் அமைப்புகள் அவை. பிரசுரம் புகார் கூறுகிறது, “ இந்தியாவின் கலாச்சாரத்துடனும் வரலாற்றுடனும் அறிமுகமில்லாத மேற்கத்திய பாணி சிந்தனை கொண்ட மக்கள் உருவாக்கியதுதான் நமது அரசியல் அமைப்புச்சட்டம்.” தாழ்த்தப்பட்ட பிரிவினர், பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதற்கு எதிராகப் பிரசுரம் கண்டனம் முழங்குகிறது. சிறுபான்மையினர் தொடர்பான விமர்சனங்கள் மிகவும் மோசமானவை. அதுவும் அமைப்புச்சட்டத்துக்கு எதிராக நிதானமற்ற சொற்களைப் பயன்படுத்தி கடுமையாகத் தாக்குதல் தொடுத்துள்ளனர். அரசியல் அமைப்புச்சட்டமே ஒரு குப்பைக் குவியல் என்று வருணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அரசியல் அமைப்புச்சட்டம் ஒரு விரோதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (நூலிலிருந்து பக்.150-153)

நூல் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும்
ஆசிரியர் : ஏ.ஜி.நூரனி

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
எண்:7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண்: 044 – 24332424, 24332924.
மின்னஞ்சல்: thamizhbooks@.com

பக்கங்கள்: 176
விலை: ரூ 70.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தமிழக அரசை தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த பிப் 14 அன்று சென்னை வண்ணாரப்பேட்டையில் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் மற்றும் ஆதரவு அமைப்பினர், தங்கள் குடும்பத்துடன் போராடினர். பகல் 2 மணிக்கு கூடியவர்கள் இரவு வரை கலையாமல் போராடினர், அவர்களை போலீசு வெறிகொண்டு தாக்கி கலைத்தது. அந்தக் கொடூரத்தை சொல்லி மாளாது.

போலீசின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை, தினத்தந்தி, தினமலர் போன்ற தமிழ் பத்திரிகைகள் ‘லேசான தடியடி’ என்று மைபூசி, அதை, மூன்றாம் பக்கச் செய்தியாக்கி மறைக்கப் பார்க்கின்றன. ’இந்து தமிழ் திசை’ பத்திரிகையோ போராட்டத்தை மூன்றாம் பக்க செய்தியாக்கி போக்குவரத்து இடைஞ்சலை மிகப்பெரும் பிரச்சினையாக சித்தரித்தது. தங்கள் குடியிருப்புக்கு அருகில் அமைதியாக எதிர்ப்பை பதிவிட்ட மக்கள் சற்றும் எதிர்பார்க்காத தாக்குதலால் நாலாபுறமும் சிதறி ஓடுகிறார்கள். சமூக ஊடகங்களில் வெளியான அந்தக் காட்சி, பார்ப்போரை திகிலூட்டியது. இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்களும் இதற்கு தப்பவில்லை. போராடியவர்களை தனித்தனியாக இழுத்துச் சென்று பத்துக்கும் மேற்பட்ட போலீசார் சூழ்ந்துகொண்டு கண்மண் தெரியாமல் தாக்கியது மொத்த தமிழகத்தையும் கலங்கச் செய்தது.

இரவு 8 மணிக்குத் துவங்கிய இந்தக் கொடூரம் 2 மணி நேரத்திற்கும் மேலாகவே நீடித்தது. முஸ்லீம் தலைவர்களும் பலவந்தமாக அடித்து இழுத்துச் செல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகளை அருகமை மண்டபங்களில் அடைத்து வைத்திருந்த செய்தி காட்டுத் தீ போல பரவியது.

செய்தியறிந்து, தமிழ்நாடு முழுதும் உள்ள முஸ்லீம்களும் – ஜனநாயக சக்திகளும் நள்ளிரவிலேயே போராட்டத்தைத் துவக்கினர். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி இராமதாசும், ‘முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்’ என்ற ரஜினியும் முக்காடு போட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார்கள் போலும்.

போலீசின் நரவேட்டையை கண்ணுற்ற ஒரு முஸ்லீம் முதியவர் மூச்சடைத்து விழ மருத்துவமனை செல்லும் வழியிலேயே இறந்தார். அவர் மீது எவ்வித தடியடியும் நடத்தவில்லை, இயற்கையாகவே மரணமடைந்தார் என்றது போலீசு. தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஏற்பட்ட கொந்தளிப்பால், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

எஞ்சியோர் சாலையில் அமர்ந்து மீண்டும் போலீசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஒன்றுசேர்ந்தனர். அடுத்த நாள்(15.02.2020) வண்ணாரப்பேட்டை ரவுண்டானா சென்னையின் ஷாகீன் பாக் ஆனது…

நாங்கள் போராட்டக் களத்தை அடைந்தபோது சாரைசாரையாக மக்கள் வெள்ளம் குவிந்துகொண்டிருந்தது. சில மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை மூவாயிரம், நான்காயிரம் என பெருகியது. இந்துமத அடையாளங்களோடு வந்து கலந்துகொண்ட பெண்கள் பலரையும் போராட்டத்தில் பார்க்க முடிந்தது. மேலும், முதல் நாளில் போலீசாரின் கொடுந்தாக்குதலுக்கு ஆளான பெண்களும் இளைஞர்களும் கலந்து கொண்டு உணர்ச்சிபூர்வமாக முழக்கமிட்டது நம்மை ஆச்சரியப்படுத்தியது.

படிக்க :
பா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் !
♦ வீதிக்கு வாங்க ரஜினி | மனுஷ்ய புத்திரன் கவிதை

கூட்டத்தின் எதிர்வினை பல்வேறு தொடர்முழக்கங்களால் எதிரொலித்தது. முஸ்லீம் பெரியவர்கள், வயது முதிர்ந்த பெண்கள் உரத்த குரலில், ‘அல்லாஹ் ஹு அக்பர்’ என முழங்கினாலும்! இளைஞர்களும் சிறுவர்களும், ‘இன்குலாப் சிந்தாபாத், ஆசாதி… ஆசாதி’ என்றும் கரம் உயர்த்தி முழங்கினர்.

அவர்களிடம் பேசியபோது, “அடக்குமுறைக்கு கடுகளவும் அஞ்சமாட்டோம், உரிமைக்கு உயிர் கொடுக்கவும் தயங்கமாட்டோம்” என்று ஆவேசமாக பேசி முழக்கமிடத் தொடங்கினர்.

கூட்ட நெரிசலில் நிற்கமுடியாமல் திணறிய நாம் ஒருவழியாக பெண்கள் பகுதியை அடைந்தோம். முஸ்லீம் மக்களோடு இணைந்து முழக்கமிட்ட இந்துப் பெண்களை அணுகினோம்.

“அவுங்க முஸ்லீமா இருந்தா என்ன? அத பத்தி கவலை இல்லை, நாங்க இதுநாள் வரைக்கும்  அப்படி பழகல. கூடவே உறவாடுற அவங்களை வேற்றாளாவா பார்க்க முடியும்? ஒன்னாதான் உழைக்கிறோம், ஒன்னாதான் கஷ்டப்படுறோம். எங்களோட நல்ல நாளுக்கு அக்கா தங்கச்சியா வந்து போறாங்க, அவங்க வீட்டுக்கும் நாங்க போறோம்.

எங்க குடும்பத்துக்கு ஒன்னுன்னா, பக்கத்தில் உள்ள சொந்தக்காரங்க அவங்கதான். கோடைக்காலத்துல தண்ணி, கரெண்ட் இல்லாது தவிக்கும்போதும், கொசுக்கடி, மழை, வெயிலுன்னு எல்லாக் காலத்துலயும் ஒன்னாதான் கஷ்டப்படுறோம்.

இந்துன்னு சொல்றதுனால எங்களுக்கு வானத்திலேருந்து எதுவும் விழப்போறதில்ல. உழைக்கிறோம், ஒருத்தருக்கொருத்தர் உதவி செஞ்சிருக்கிறோம். நான் பக்கத்துல இருக்குற பிஸ்கெட் கம்பெனிக்கு போயி குடும்பத்த காப்பாத்துறேன். அதே கம்பெனிக்குத்தான் அவங்க புர்கா போட்டுகிட்டு வர்றாங்க. ரெண்டு பேருமே மாடா உழைக்கிறோம். இதிலே என்ன வித்தியாசம்?” என்றார் தீர்க்கமாக.

அப்போது,  பக்கத்தில் இருந்த முஸ்லீம் மூதாட்டி, “அதோ அந்த அம்மா எங்க தெருதான், என் பொண்ணு மாதிரி” என்றார். அங்கு பொட்டு, மாங்கல்யம், அணிந்தபடி சக பெண்களிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த பவானியை அணுகினோம்.

படிக்க :
ஜாமியா நூலகத்தில் டில்லி போலீசு வெறியாட்டம் ! சிசிடிவி காட்சிகள் வெளியீடு
♦ தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா ?

“எங்க வீட்டுக்காரரே என்ன எதுவும் சொல்லல. போகட்டுமான்னு கேட்டதுக்கு போய் வான்னு சொன்னாரு. நாங்க முஸ்லீமாவோ இந்தாகவோ இருந்தா உங்களுக்கென்ன? வெயில் காலத்துலயும், மழைக் காலத்துலயும் நாங்க படுற கஷ்டத்த பாத்திருக்கீங்களா?

போன வெள்ளத்தில 7 நாள் வீட்டச் சுத்தி தண்ணி. அப்போ இந்துன்னு சொல்ற யாரும் வரல, இந்த முஸ்லீம் பசங்கதான் அக்கா அக்கான்னு ஓடிவந்து உதவுனாங்க. கரெண்ட் இல்லாம இருட்டுல இருந்த எங்களுக்கு மெழுகுவர்த்தி, பால் பாக்கெட், சோத்து பொட்டலமுன்னு என்னன்னமோ எடுத்து வந்து கொடுத்தாங்க.

ஏதோ, குடியுரிமை ரத்துன்னு சட்டம் சொல்றாங்களே, அத சொல்லி இவங்க படுற வேதனைய எங்களால பார்க்க முடியல. அதான் போராட்டமுன்னு சொன்னதும், நானும் வர்றேண்டின்னு அவங்ககூட வந்துட்டேன்.

யாரோ, எச்ச ராசா, நொச்ச ராசாவாமே, எங்ககிட்டே பேசச்சொல்லுங்க, செருப்பால அடிப்பேன். ஏன் நாங்க ஒன்னா இருக்கக்கூடாதா? அவங்களுக்கு எங்கே நோகுது?

அவர் அருகே இருந்த நந்தினி என்பவர், “நானும் இந்துதான். இப்ப என்ன வேணும்?” என்று நம்மை முறைத்தார்.

“ஒன்னுமில்ல, தெரிஞ்சுக்கத்தான்” என்று சமாளித்தோம். நாம் கூட்டத்திலிருந்து ஓரமாக வந்தபோது, பொட்டுவைத்த இளம் பெண், உட்கார இடம்தேடி அலைந்துகொண்டிருந்தார். “எதற்கு இங்கு வந்திருக்கிறீர்கள்?” என்றோம்.

நம்மை வித்தியாசமாக ஏற இறங்க பார்த்தவர், “முஸ்லீம்களுக்கு ஆதரவு தெரிவிக்கணுமுன்னு தோனுச்சு வந்தேன். நான் ஐ.டி. -யில வேலை பார்க்கிறேன். என்கூட வேல பாக்குற நெறைய பேரு வந்திருக்காங்க. இது என்னோட கடமையா நினைக்கிறேன். இந்த நேரத்துல அவங்ககூட இருக்கனுமுன்னு மனசுக்கு தோனுது. நாம கேக்கலன்னா வேறு யாரு இருக்காங்க? நாம படிச்சது எல்லாம் அப்ப பொய்யா?” என்று நம்மையே கேள்வி கேட்டார். மேலும் தொடர்ந்தார்.

“டெல்லியில் இந்தியா கேட் போயி பாருங்க. அதுல சுதந்திரத்துல உயிர்த்தியாகம் பண்ணுனவங்கங்கன்னு ஒரு லிஸ்ட் இருக்கும். அதுல 80% பேரு முஸ்லீம்தான். அப்போ அவங்க ஜனத்தொகையோ நாட்டுல வெறும் 20% தான். இப்ப பேசுற யாரும் (மோடி வகையறா) அப்போ எங்கே போனாங்க. வெள்ளக்காரங்கிட்டே இவங்க (சங்கிகள்) என்ன ஆதாரம் காமிச்சு உயிர் தப்பினாங்கன்னு நமக்குத் தெரியாதா? இப்ப முஸ்லீமுக்கு ஆதாரம் கேக்குறாங்க.

ஏதாவது செஞ்சு அவங்க கூட இருக்குறோமுன்னு நாம காமிக்கணும். போலீசு இங்கே வந்து அடிச்சா நான் என்ன பண்ண முடியும்? ஒருபக்கம் பயம்தான். வேறு என்ன செய்யிறது? அவங்க அடிவாங்கும்போது நாமளும் வாங்கினா என்ன தப்பு? அவங்க அப்படி நம்மள விட்டுற மாட்டாங்க, அந்த தைரியத்துல இங்கே வந்தேன்” என்றார் கண்கள் பிரகாசிக்க.

ஆர்ப்பாட்டத்தில் ஓரமாக அமர்ந்திருந்த முஸ்லீம் இளைஞர்களிடம் பேச்சு கொடுத்தோம்.

“சார் நீங்க எந்த பத்திரிகை?” என்று ஆரம்பித்து, நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தனர். இடையிடையே “ஏன் சார் எங்கள மட்டும் விடாம அசிங்கப்படுத்துறீங்க. எங்க உயிரையும் வாங்கிட்டு, மானத்தையும் வாங்குறீங்க. இது நியாயமான்னு யாரு சார் கேக்குறீங்க. நாங்க இன்னும் எவ்வளவுதான் பணிஞ்சு போறது” என்றனர்.

“பகல் 2 மணியிலிருந்து எல்லோரும் அங்கேதான் இருந்தோம். சாயாங்காலம் கலைஞ்சிடுவோம், பெண்களா இருப்பதால் போய்விடுவோம் என்று போலீசு நினைத்தது. நாங்கள் போக மாட்டோம், இரவு இங்கேதான் படுக்கப்போகிறோம் என்று சொன்னதும், பேய் பிடித்தது மாதிரி ஆனார்கள் போலீஸ்காரர்கள்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஜனங்க கத்திக்கொண்டு ஓடினர். போலீசு லத்தி சார்ஜ் செய்கிறார்கள் என்பது தெரியும். குழந்தைகள், பெண்கள், முதியோர் என்று கூட பார்க்காமல் போலீசு எங்களை துரத்தியடித்தது. ஒரு மணிநேரத்தில் அந்த இடமே மயான அமைதியானது.

அடிவாங்கியவர்கள் மற்றவர்களை உதவிக்கு ஃபோனில் அழைக்க முடியவில்லை. யாருக்குமே ஃபோன் போகல. பிறகுதான் தெரிந்தது, ஃபோன் வேலை செய்யவில்லைன்னு. போனை செயலிழக்க வைக்க ஜாமர் கருவியை பொருத்தி விட்டுத்தான் அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

அவர்கள் நடத்தும் குரூரத்தை லைவாக சோசியல் மீடியாவில் காட்டி விடுவோம் என்று பயந்திருக்கிறார்கள். இதன் பிறகுதான் பல நண்பர்கள் சொன்னார்கள். மாடியிலிருந்து லைவ் முயற்சிக்கும் போது, ஃபோன் எர்ரர் வந்தது என்று. அதனால், இந்த விஷயம் உடனே வெளியே போக முடியவில்லை.

நாங்கள் வக்கீல் படிக்கும் மாணவர்கள்தான். இந்தக் கருப்புச் சட்டத்தை அரசு வாபஸ் வாங்காமல் விட மாட்டோம். இந்திய தேசியக் கொடிக்காக உயிர் கொடுத்தவர்கள் நாங்கள். அது எங்களை காப்பாற்றும் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் கையிலேந்திருக்கிறோம்” என்று உணர்ச்சியில் வார்த்தை வராமல் தடுமாறினர். வரும் கண்ணீரை மறைக்க தலைகுனிந்து கொண்டனர்.

கூட்ட மேடையில் பேசிய பல கட்சித் தலைவர்கள், ஜனநாயகக் கட்சிகள், அறிவுத்துறையினர், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என அனைவரும் ஒரே குரலில் பேசினார்கள். தன்மானமும் சுயமரியாதையும்தான் உயிரைவிட மேலானது, என்று எங்கள் முன்னோர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள். அந்தப் போராட்ட வழியில் எங்கள் உயிரைக் கொடுத்து இந்தச் சட்டத்தை எதிர்ப்போம் என்று உணர்ச்சி மேலிட பேசினர்.

கூட்டத்தில் பேசிய வி.சி.க மாநில துணை பொதுச் செயலாளர், ஆளூர் ஷாநவாஸ், தனது பேச்சின் மையமாக, இந்து, முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தினார். “மிருக பலம்கொண்டு மோடி அரசு முஸ்லீம்கள் மீதான தொடர் வேட்டையை நடத்தி வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இது தொடர்கிறது. காஷ்மீர், முத்தலாக், பாபர் மசூதி, சி.ஏ.ஏ போன்ற அவமானகரமான இழிவுகள், அரசியல் சட்டம் மற்றும் உச்சநீதி மன்ற துணையுடன் அதிகாரபூர்வமாக முஸ்லீம்கள் மீது ஏவப்படுகிறது.

இவ்வளவுக்கும் முஸ்லீம்களிடம் கனத்த மவுனமே நிலவியது. கடைசியில் இப்போதுதான் மோடி அரசு விக்கித்து மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைகிறது. அதற்குக் காரணம், நம்முடைய இந்து சகோதரர்கள் மோடி அரசுக்கு எதிராக நம்மோடு களத்தில் இறங்கியதுதான்.

பெரியார், அம்பேத்கர் மற்றும் இடதுசாரிகள் வழங்கிய இந்த ஜனநாயக ஒளியை அணையவிடாமல் நாம் முன்னெடுக்க வேண்டும். நாம் நமது மத அடையாளங்களை துரந்துவிட்டு, நம்முன் உள்ள ஜனநாயகக் கடமைக்காக ஒன்றிணைய வேண்டும்” என்று சங்கிகளின் முஸ்லீம் – இந்து மத பிளவுக்கு ஆப்பறைந்தார்.

மறுபுறம் தமிழகத்தின் மரபுரிமையாக வரும் ஜனநாயக அறிவுத்துறையினரை கண்டு சகிக்காத பிரபல சங்கி ஊடகங்கள், மோடிக்கு எதிரான மதச்சார்பற்ற போராட்டங்களை முஸ்லீம் சாயம்பூசி பின்னிழுக்கப் பார்க்கின்றனர். ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் மீது கல்லெறிந்தனர். போலீஸ் படுகாயமடைந்தனர் என்று உண்மையை மடைமாற்றுகின்றனர்.

ஜனநாயக விரோத பாசிச மோடி கும்பலை நாம் தோலுரிப்பது போல், அவர்களுக்கு பட்டுப் பாவாடை விரிக்கும் இந்த சங்கி ஊடகங்களையும் உடன் அம்பலப்படுத்த வேண்டும். அதற்கு மோடி எதிர்ப்புப் போராட்ட அலைகளை அதன் செய்திகளை தீயாக எங்கும் பரப்புவோம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )


– வினவு களச்செய்தியாளர்

நிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி !

0
நா. வானமாமலை

தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 04

முதல் பாகம்

சோழர் ஆட்சியில் அறப் போர்கள்

மிழ்நாட்டில் நீண்டகாலம் நிலைத்து நின்ற பேரரசு சோழப் பேரரசு ஆகும். அது கி.பி. 846 முதல் 1281 முடிய நிலவியிருந்தது. பல்லவர் கீழ் சிற்றரசனாக இருந்த விஜயாலயன் கி.பி. 846-ல் தனி அரசை நிறுவினான். அவனது மகனும் பெயரனும், தொண்டை நாட்டையும், பாண்டிய நாட்டையும் போரில் தோற்கடித்துக் கைப்பற்றினார்கள். அதற்குப் பின் பட்டம் பெற்ற அரிஞ்செயன், சிங்கள நாட்டின் மீது படையெடுத்துச் சென்று போரிட்டான். ராஜராஜன், கங்கை பாடி, நுளம்பாடி, வேங்கைநாடு இவற்றை வென்று சோழ சாம்ராஜ்யத்தை விசாலப்படுத்தினான். அவனது மகன் ராஜேந்திரன் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைப் போரிலேயே கழித்து இடைத்துறை நாடு, வனவாசி, கோசலம், விராடம், வங்காளம் ஆகிய நாடுகளைக் கைப்பற்றினான். சோழரது படை வலிமை குன்றியவுடன் இந்நாட்டு மன்னர்கள் தாங்களே சுதந்திரமாக ஆட்சி நடத்தத் தலைப்பட்டனர். இராஜேந்திரனுக்குப் பின்பு பட்டமெய்திய மூன்று சோழ மன்னர்கள் தங்களின் முன்னோர்களின் வெற்றிகளை உறுதிப்படுத்தப் பல போர்களில் ஈடுபட்டனராயினும், வட புல நாடுகளை அதிக நாட்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்க முடியவில்லை.

குலோத்துங்க சோழன்.

கி.பி.1070 முதல் 1120 வரை தமிழ்நாடு முழுவதையும் தெலுங்கு நாட்டின் பெரும் பகுதியையும் ஆண்டு வந்த முதல் குலோத்துங்க சோழ தேவன் வனவாசி, கலியாணபுரம், கன்னியாகுமரி, கோட்டாறு, தென்கலிங்கம், வடகலிங்கம் ஆகிய நாடுகள் மீது போர் தொடுத்து வென்று ஆண்டு வந்தான். அவனது வெற்றிகளின் பயனை அவனது மகன் விக்கிரம சோழனும், அவனது பெயரன் குலோத்துங்க சோழனும் அனுபவித்தார்கள். இராஜேந்திரனுடைய காலத்திற்குப் பின்பு குலோத்துங்க சோழனுடைய காலத்தில் தான் சோழ சாம்ராஜ்யம் அதிகப் பரப்புடையதாய் இருந்தது. முதல் குலோத்துங்கன் கலிங்கத்துப் பரணியின் தலைவன். விக்கிரம சோழன் இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன். மூவரும் ஒட்டக்கூத்தர் பாடிய ‘மூவருலா’வின் தலைவர்கள். இரண்டாம் இராஜராஜனுக்குப் பின் பட்ட மெய்திய சோழ மன்னர்கள் காலத்தில் வெளிநாட்டு மன்னர்கள் சோழ நாட்டிலும் படையெடுத்து வந்தார்கள். சிற்றரசர்கள் கலகம் விளைவித்தார்கள், பாண்டியர்கள் முத்துச் சலாப வருமானத்தாலும், அராபிய வர்த்தகத்தாலும் தமது படைபலத்தைப் பெருக்கிக் கொண்டு சோழ நாட்டின் மீது படையெடுத்தார்கள். மாறவர்மன் சுந்தர பாண்டியனும், சடைய வர்மன் சுந்தர பாண்டியனும் நடத்திய இறுதிப் போர்களால் சோழ சாம்ராஜ்யம் சரிந்து விழுந்தது.

இதுவே சோழர் காலத்துச் சரித்திர சுருக்கம். ஒவ்வொரு சோழ மன்னனும், சாம்ராஜ்ய விஸ்தரிப்புப் போர்களில் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்டு இருக்கிறார்கள். இவ்வாறு பெரும் போர்களை நடத்துவதற்கும் போரிட்டு வென்ற நாடுகளை அடிமைப்படுத்தி வைப்பதற்கும் சோழ மன்னர்கள் பெரும்படைகளை வைத்திருந்தனர்.

சோழர் கல்வெட்டுகளில் மூவகை நிலைப்படைகளைக் குறித்த செய்திகள் காணப்படுகின்றன. வலங்கைப் படை, இடங்கைப் படை மூன்று கை மகாசேனை என்ற மூன்று படைப் பிரிவுகள் இருந்தன என்று கல்வெட்டுக் குறிப்புகளால் தெரிகிறது.

ராஜ ராஜ சோழன்.

இப்படைகளுக்கு வேண்டிய உடை, உணவு முதலியவற்றையும், படைக் கலங்களையும், யானை, குதிரை முதலிய ஊர்திகளையும் சேகரித்துத் தருவது மன்னனது கடமையாக இருந்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் படைவீரர்களது குடும்பங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை மன்னனே ஏற்றுக்கொள்ள வேண்டி வந்தது. ஏனெனில் அக்காலத்தில் போர்வீரர்களுக்கு மாத ஊதியம் அளிப்பதில்லை. நிலங்களையோ, நிலங்களின் வருமானத்தில் வரும் ஒரு பகுதியையோ மானியமாகவும், கடமையாகவும், அக்குடும்பங்களுக்கு அளிப்பதுண்டு. கோயில் வருமானத்தின் ஒரு பகுதியைப் படைகளுக்கு அளித்ததாகவும், சில கோயில்களைப் படைகளின் பாதுகாப்பில் விட்டதாகவும், சில சாசனங்கள் கூறுகின்றன.

உதாரணமாகச் சில சாசனச் செய்திகளைக் கீழே தருவோம். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன் மகாதேவிக் கோவிலில் கல்வெட்டு ஒன்று மூன்று கை மகாசேனையார், பக்தவத்ஸல ஸ்வாமி கோவில் தர்மங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறது. இது முதல் குலோத்துங்கச் சோழன் காலத்துக் கல்வெட்டு. பிரம்மதேசம் என்று பெயர் வழங்கும் திருவாலீச்வரம் கல்வெட்டு ஒன்று. அவ்வூர்க் கோவிலையும் – ஸ்ரீபண்டாரத்தையும் (பொக்கிஷம்) தேவ கன்மிகளையும், (கோவில் ஊழியர்கள்) மூன்று கை மகாசேனை ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறது. இக்கல்வெட்டு முதல் இராஜேந்திரச் சோழனது மகன் பாண்டிய நாட்டில் மண்டலேச்வரனாக ஆண்ட காலத்தில் வெட்டிக் கொடுத்தது. இச்சான்றுகள் லட்சக்கணக்கான போர்வீரர்களது ஊதியம் கோவில் வருமானத்திலிருந்து கொடுக்கப்பட்டது என்பதைக் காட்டுகின்றன.

அப்படியானால், சோழர் காலத்தில் கோயில்களின் வருமானத்தைப் பெருக்க வழிவகைகள் செய்திருக்க வேண்டும். சோழர் காலத்துக்கு முன்பு கோவில்கள் மிகச் சிறியவையாயிருந்தன. பல்லவர் காலத்துக் கோயில்கள் மிகச் சிறிய குடைகோயில்களே. அவற்றை மாமல்லபுரத்திலும் திருக்கழுக்குன்றத்திலும் காணலாம். அவற்றிற்கு நிரந்தர வருமானமோ சொத்தோ இருந்ததில்லை. ஆனால் சோழர் காலத்தில் பிரம்மாண்டமான கற்கோயில்கள் எழுப்பப்பட்டன. ராஜராஜன் பிருகதீசுவரர் ஆலயம் கட்டினான் . ராஜேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தில் அதே போன்றதொரு கோயில் கட்டினான். ஊருக்கு ஊர் கோவில்கள் தோன்றின. இதனைப் பெரிய புராணத்திலுள்ள வரலாறுகளிலிருந்து அறியலாம். கல்வெட்டுச் சான்றுகளும், ஏராளமாக உள்ளன. இக்கோயில்களைக் கட்ட, போரில் சிறைப்பட்ட யுத்தக் கைதிகளையும் போரில்லாத காலத்தில் உள்நாட்டு மகாசேனைகளையும் ஈடுபடுத்தினார்கள் என்று தெரிகிறது. இக்கோயில்களுக்கு ஏராளமான நிலங்களை சர்வ மானியமாக சோழ அரசர்கள் விட்டார்கள். இதற்குச் சில சான்றுகள் கீழே தருவோம்.

‘ராஜராஜன் பெரிய கோவில் பணிகள் நடைபெற 35 கிராமங்களை சர்வமானியமாக விட்டதாகக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. அவற்றுள் நான்கு சிற்றூர்கள் 500 முதல் 1000 ஏக்கர் பரப்புள்ளவை; மூன்று சிற்றூர்கள் 300 முதல் 400 ஏக்கர் பரப்புள்ளவை. ஆறு 100 முதல் 200 வரை; மற்றும் ஆறு 25 முதல் 50 வரை, இரண்டு சிற்றூர்கள் 25 ஏக்கருக்கும் குறைவு’ (சோழர் வரலாறு, மு. இராச மாணிக்கனார்). கல்வெட்டுக்களில், கிராமங்களின் பயிருள்ள நஞ்செய் நிலம் முழுவதையும் கோயில் காணியாக்கிய செய்திகள் காணப்படுகின்றன. இவற்றுள் புஞ்செயை உழவர்களுக்கு வெள்ளான் வகை(சொந்த நிலம்)யாக விடுத்து, அது நஞ்செயாகத் திருத்தினால் கோயில் காளியாக எடுத்துக் கொண்ட விவரங்களையும் கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. உதாரணமாகக் கீழ் வரும் கல்வெட்டைப் பார்க்கலாம்.

படிக்க:
இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!
இராஜராஜ சோழன் ஆட்சி பொற்காலமா, துயரமா?

‘ஸ்வஸ்தி ஸ்ரீ ஸ்ரீமான் ராஜாதிராஜ ஸ்ரீ வீர நாராயண சோழ தேவர்க்கு செல்லா நின்றயாண்டு ஒன்பதாவது பரஞ்சரா வள்ளியில் மகாதேவர் நட்டூரமர்ந்தார்க்கும், (கோவில் மூர்த்தியின் பெயர்) பல நியந்தப் படிக்கும், தீபாராதனைப் படிக்கும் ஊரார் பிடாரியூர்க்குப் போகும் வழிக்குக் கீழ்பாகம் கொடுத்தோம். இதுக்கு நிலம் அரைக் கிடவுக்காக, பரஞ்சரா வள்ளியில் நிலத்தில் புஞ்செய் நீக்கி, நஞ்செய் கொடுத்தோம். இந்த நிலம் தேவதானமாக உழுது மேல் வாரம் மேற்கொண்டு படித்தரம் தீபாராதனை நடந்து வருகிறதற்காக’

சேரன்மகாதேவி கல்வெட்டு.

இவை போன்ற ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்களைத் தமிழ்நாட்டில் கோயிலுள்ள ஊர்களில் காணலாம். அவற்றில் பெரும்பாலானவை சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள். இக்கல்வெட்டுக்களின் மூலம், சோழர்கள் அதற்கு முன்பிருந்த நிலவுடைமை முறையை மாற்றினார்கள் என்பது புலனாகிறது. எவ்வாறு மாற்றினார்கள் என்பதறிய அவர்கள் காலத்தில் எத்தகைய நிலவுடைமை முறை நிலவியது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நிலவுடைமை அக்காலத்தில் நான்கு வகையாகவிருந்தது. (1) வெள்ளான் வகை: இது சொந்த நிலம். இந்நிலங்களில் ஒரு பகுதி ‘உழுவித்துண்பார்’ என்ற உழவர்களிடமிருந்தன. (2) தேவதானம்: இந்நிலங்கள் கோயில்களுக்கு உடமையாக இருந்தன. அவற்றின் மேற்பார்வை சபையாரிடமிருந்தன. அவர்கள் பெரும்பாலும் நிலவுடைமையாளர்களே. சிறுபான்மை படையாரிடம் இருந்தன. (3) பிரமதேயம்: இந்நிலங்கள் பிராமணர்களுக்கு உடமையாக இருந்தன. (4) ஜீவிதம்: இந்நிலங்கள், கோயில் பணி செய்வார்க்கு இனாம் நிலங்களாக ஆயுள் காணியாக இருந்தன.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா ?

தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (NRC) நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.3000 கோடிக்கு மேல் நடுவண் அரசு நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால் இதை செயல்படுத்தப் போவதில்லை என சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன. விரைவில் தொடங்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு, இந்த தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) திட்டம் ஆதாரமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் இயற்றும் எந்த ஒரு சட்டமும் நாடு முழுவதற்கும் செல்லத்தக்கது. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 256 -இன் படி இதை நடைமுறைப்படுத்த வேண்டியது ஒவ்வொரு மாநில அரசின் கடமையாகும். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றை செயல்படுத்த முடியாது என்று சொல்வதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா என்கிற கேள்வி இங்கு எழுகிறது. ஆனால் இத்தகைய திட்டங்கள் சட்டத்தின் ஒரு பகுதியா என்பதிலிருந்தே இதற்கான விடையைத் தேட வேண்டும்.

இந்தக் கேள்வி மிக முக்கியமானது. அரசியலமைப்புச் சட்டப்படி பார்த்தால் மத்திய அரசின் சட்டத்தை மாநில அரசுகள் மறுக்க முடியாது. சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஒரு மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட முடியும். மத்திய அரசின் உத்தரவை மீறும் மாநில அரசுகளை அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 356 இன்படி கலைப்பதற்கும், குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வருவதற்கும் இடமிருக்கிறது.

அத்தகைய சூழல் இன்னும் உருவாகவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பதற்குப் பதிலாக, அதைத் திரும்பப் பெறக்கோரி சில மாநில அரசுகள் வெறுமனே தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றி உள்ளன. முதன் முதலில் கேரளதான் இது போன்றதொரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தகைய தீர்மானங்களுக்கு சட்டமன்ற விதிகளின்படி எவ்வித அனுமதியும் கிடையாது என்றாலும், ஒரு பிரச்சனையைப் பற்றி விவாதிப்பதற்காக சட்டமன்ற விதிகளைக்கூட நிறுத்தி வைக்க சட்டமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.

CAA செல்லுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விரைவில் பரிசீலிக்க உள்ளது. துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள சட்டவிரோதக் குடியேறிகள் குறித்து நீதிமன்றம் எத்தகைய ஒரு தீர்ப்பையும் வழங்கி இப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவரலாம். ஆனால் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஏதோ வகையில் நீண்ட காலத்துக்கு இந்தியர்களை விரட்டிக் கொண்டே இருக்கும். தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டாலும், தாங்கள் முகாம்களில் அடைக்கடுவோமோ அல்லது நாடு கடத்தப்படுவோமோ என்கிற ஒரு சாராரின் அச்சம் மட்டும் நீங்கப் போவதில்லை.

படிக்க:
♦ வீதிக்கு வாங்க ரஜினி | மனுஷ்ய புத்திரன் கவிதை
♦ CAA-வுக்கு எதிராக பேசியதாக மருத்துவர் கஃபீல் கான் மீது தேசத்துரோக வழக்கு !

வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் போதே குடியுரிமைச் சட்ட விதிகள் 2003 இன் கீழ் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (NPR) உருவாக்குவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வேலையை முடுக்கி விட்டுள்ளது நடுவண் அரசு. குடியுரிமைச் சட்டம் 1955, விதி 18 இன் கீழ் வரும் துணை விதிகள் 1 மற்றும் 3 இன் படி குடியுரிமைச் சட்ட விதிகள் 2003 உருவாக்கப்பட்டுள்ளன. இதன் பிரிவு 2(l) இன் படி வரையறுக்கப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) என்பது ஒரு கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் வசிக்கும் நபர்களின் விவரங்களைக் கொண்ட பதிவேடாகும்.

மாநில அரசின் வருவாய் அலுவலரே உள்ளூர் பதிவாளராகவும் செயல்படுவார்.  இவர்தான் தனது ஆளுகைக்கு உட்பட்ட கிராம மட்டம் வரை வசிக்கும் மக்கள் அனைவரையும் பற்றிய விவரங்களை சேகரித்து தேசிய மக்கள் தொகை பதிவேட்டைத் (NPR) தயாரிப்பார் என துணை விதி 4 சொல்கிறது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (NPR) உள்ள விவரங்கள்தான் உள்ளூர் பதிவேட்டிலும் இருக்கும் என துணை விதி 5 சொல்கிறது. தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சரிபார்க்கப்பட்ட பிறகு அதன் விவரங்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) சேர்க்கப்படும்.

ஆக NPR என்பது குடிமக்களைப் பற்றிய விவரம் மட்டுமன்றி கிராம மட்டம் வரை வசிக்கும் அனைவரின் விவரங்களையும் உள்ளடக்கிய ஒரு ஆவணமாகும். NRC -க்கான தரவுகள் இதிலிருந்தே எடுக்கப்படும். எனவே NRC தயாரிப்பதற்கு NPR மிகவும் அவசியமானது. NPR மற்றும் NRC ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதை விதிகள் தெளிவுபடுத்துகின்றன. NRC உடன் CAA சட்டபூர்வமாக இணைக்கப்படவில்லை என்றாலும், பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர்களின் அறிக்கைகள் இவற்றுக்குள்ள இணைப்பை தெளிவு படுத்துகின்றன.

CAA, NRC மற்றும் NPR பற்றிப் பேசும் பொழுது இவை சட்டப்படி செல்லத்தக்கவைதானா? என்கிற முக்கியமான விசயம் மட்டும் விவாதிக்கப்படாமலேயே விடுபட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட குடியுரிமை சட்ட விதிகளில் NPR நடைமுறை பற்றி பேசப்பட்டாலும், இதன் மூலச் சட்டமான குடியுரிமைச் சட்டம் 1955-ல், எந்த ஒரு விதியிலும் NPR நடைமுறைப்படுத்துவதைப் பற்றி குறிப்பிடப்படவில்லை. இது ஆச்சரியமானது என்றாலும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

படிக்க:
♦ குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டமும் நீதிமன்றத்தின் பாராமுகமும் !
♦ அஞ்சாதே போராடு ! தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram

குடியுரிமைச் சட்டத்தின் 18-வது பிரிவின் (1) மற்றும் (3) துணைப் பிரிவுகளின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள NPR குறித்த விதிகள் மிகவும் விசித்திரமானது. குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்று பிரிவு (1) தெளிவாகக் கூறுகிறது. ஆனால் NPR தயாரிப்பது பற்றி குடியுரிமைச் சட்டத்தில் எங்குமே பேசப்படவில்லை. மூலச் சட்டமான குடியுரிமைச் சட்டத்தில் சொல்லியிருந்தால் மட்டுமே அது பற்றிய விதிகளை உருவாக்க முடியும். விதிகள் உருவாக்குவதற்கு இது மிகவும் முக்கியமானதொரு அம்சமாகும். விதிகள் தனிப்பட்ட முறையில் அதிகாரம் கொண்டவை அல்ல. நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை என்றால் எந்த ஒரு முக்கியமான திட்டத்தையும் இந்த விதிகளை மட்டும் கொண்டு  நடைமுறைப்படுத்த முடியாது. அதிகார முறைகேட்டுக்கு வழிவகுக்கும் இத்தகைய விதிகள் சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல. சட்டக் கோட்பாடுகளும் கொள்கைகளும் போதுமான அளவு வகுக்கப்பட்டிருந்தால் மட்டுமே சட்டமியற்றும் அதிகாரம் சட்டமன்றத்திற்கு வழங்கப்படுகிறது என டாடா நிறுவனத்திற்கும் அதன் தொழிலாளர்களுக்கும் இடையிலான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்தி உள்ளது.

NPR தயாரிப்பதற்கு  குடியுரிமைச் சட்டம் 1955 இல் இடமில்லை என்பதே உண்மை. எனவே அதற்கான விதிகளையும் வகுக்க முடியாது. அதற்கான சட்டக் கொள்கைகளும் கோட்பாடுகளும் முதலில் வகுக்கப்பட வேண்டும். அதன் பிறகுதான் விதிகளை வகுக்க முடியும். இதுதான் துணைச் சட்டங்களை உருவாக்குவதற்கான அடிப்படைக் கொள்கையாகும். விதிகள் என்பவை துணைச் சட்டமாகும், அவை மூலச் சட்டத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும்.

மூலச்சட்டத்திற்குப் புறம்பாக விதிகள் இருந்தால் அவை முறைகேடானவை எனக்கூறி நீதிமன்றம் அவற்றை இரத்து செய்து விடும். அரசுத் துறைகள் இந்த விதிகளை உருவாக்குவதற்கான அதிகாரத்தை மூலச்சட்டத்திலிருந்தே பெறுகின்றன. எனவே ஒரு குறிப்பிட்ட திட்டம் குறித்து மூலச்சட்டத்தில் இடமில்லை என்றால் அது குறித்த விதிகளை உருவாக்க அரசுத் துறைகளுக்கு அதிகாரமில்லை.

NPR தொடர்பான விதிகள் பாரதூரமான குறைபாடுகளைக் கொண்டதாகவே உள்ளது. விதிகள் வடிவமைக்கப்பட்ட காலத்திலிருந்தே இக்குறைபாடுகள் நீடிக்கின்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்வைக்கப்பட்டதாலேயே இவ்விதிகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்துவிட முடியாது. மூலச் சட்டத்தில் வழிவகை செய்தால் மட்டுமே இக்குறைபாடுகளை சரி செய்ய முடியும்.


கட்டுரையாளர் : P.D.T Achary
தமிழில் : 
ஊரான்
நன்றி :  தி வயர். 

குறிப்பு : P.D.T ஆச்சாரி மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் அரசியலமைப்பு நிபுணர் ஆவார்.

வீதிக்கு வாங்க ரஜினி | மனுஷ்ய புத்திரன்

வீதிக்கு வாங்க ரஜினி

வீதிக்கு வாங்க ரஜினி
முதல் ஆளாக இல்லாவிட்டாலும்
கடைசி ஆளாகவாவது.
நீங்கள் காணாமல் போய்விட்டீர்கள் என்றும்
கடத்தப்பட்டு விட்டீர்கள் என்றும்
தலைமறைவாகிவிட்டீர்கள் என்றும்
ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டன
இன்னும் நீங்கள்
அமைதியாக இருப்பது நல்லதல்ல

வீதிக்கு வாங்க ரஜினி
வெய்யில் குறைந்து
அந்தி சாய்ந்துவிட்டது
மாலை நடை மூப்புக்கு நல்லது
கடல் காற்று சுவாசத்திற்கு நல்லது
சாலையோர தேநீர் கடையில்
இஞ்சி டீ தலை சுற்றலுக்கு நல்லது

வீதிக்கு வாங்க ரஜினி
கதவைத்திற காற்றுவரட்டும்
என்றார் நித்தி
நீங்கள் ‘ கேட்’டைத்திறங்கள்
‘மைக்’குகள் ‘ கேட்’ டிற்கு வெளியே
உங்களுக்காக தவமிருக்கின்றன
இஸ்லாமியர்களுக்கு
நீங்கள் சொன்னபடி ஒன்றல்ல
நூறு அடிகள் விழுந்துவிட்டன
இன்னும் ஏன் தயங்குகிறீர்கள்?

வீதிக்கு வாங்க ரஜினி
போராட்டக்காரர்களிடையே
சமூகவிரோதிகள் புகுந்துவிட்டார்கள்
என்பதுதானே உங்கள் அடுத்த டயலாக்?
அதை எவ்வளவு நேரம் மனப்பாடம் செய்வீர்கள்?
ஆனால் அதை இந்த முறை
எப்படிச் சொல்வதெனக் குழம்புகிறீர்கள்
ஏனெனில் எந்தத் தீவிரவாதியும் புகமுடியாதபடி
போராடுகிறவர்கள் எல்லோருமே தீவிரவாதிகள்
குல்லாபோட்ட தீவிரவாதிகள்
முக்காடிட்ட தீவிரவாதிகள்

வீதிக்கு வாங்க ரஜினி
நீங்கள் துடிப்பாக நடந்துவருவதைக்காண
எங்களுக்கும் மிகவும் பிடிக்கும்
உங்கள் துருப்பிடித்த மூளையைப்போலவே
உங்கள் துடிப்பும்
இந்த வயதிலும் மாறாமல்
அப்படியேதான் இருக்கிறது
எதையாவது பேசுங்கள்
அரசரின் ரத்தக்கறை படிந்த பூட்ஸ்களை
இன்னொருமுறை கழுவுங்கள்
நீங்கள் உங்கள் ரசிகனின் மாமிசத்தை
விற்பவர் என்பதையும்
உங்களையே எந்தக் கூச்சமும் இல்லாமல்
விற்றுக்கொள்பவர் என்பதையும
இன்னொருமுறை உலகிற்கு காட்டுங்கள்

வீதிக்கு வாங்க ரஜினி
வீதியில்தான் மக்கள் இருக்கிறார்கள்
வீதியில்தான் நீதி இருக்கிறது
வீதியில்தான் அன்பு இருக்கிறது
வீதியில்தான் சத்தியம் இருக்கிறது

நன்றி: மனுஷ்ய புத்திரன்

disclaimer

நூல் அறிமுகம் : நினைவழியா வடுக்கள்

சிலவற்றைப் படித்து முடித்தவுடன் அவற்றைப்பற்றிய கருத்துகளை மற்றவர்களுடன் பகிராமல் இருக்க முடிவதில்லை. அப்படியொரு நுால் சிவா சின்னப்பொடி அவர்களின் நினைவழியா வடுக்கள்.

இதில் எழுதப்பட்ட சம்பவங்கள் நடந்தது மிகத் தொலைவான ஒரு காலத்திலல்ல. நாம் அறியாத ஓர் ஊரிலல்ல. நாகரிகமும் அறிவும் வளர்ந்ததாகவும் சொல்லி, பண்பும் கலாசாரமும் எனப் பெருமை பேசிக் கொண்டிருக்கும் நம் சனங்களிடம் இருந்த அயோக்கியத்தனங்களை – அழுக்குகளை இப்புத்தகம் பதிவு செய்துள்ளது.

1962-ம் ஆண்டு. எட்டு வயதான சிறுவன் தான் பள்ளிக்கூடம் போன நாளை நினைவுக்குக் கொண்டு வருவதோடு தொடங்குகிறது நினைவழியா வடுக்கள். ஆறுமுகநாவலர் வழிவந்த சைவ சற்சூத்திரப்பாரம்பரியமும் அதையொட்டிய சாதியக் கட்டமைப்பும்… என்று முதற்பக்கத்திலேயே ஆரம்பமாகிறது இந்தத் தன்வரலாறு.
சாதியவெறி செய்த கொடுமைகள் ஒரு சிறுவனாக மனதைப் பாதித்தவை – அதை எதிர்கொண்ட துணிச்சல் என சிறுவயதின் சில ஆண்டுகளின் நினைவுப்பதிவு தான் இப்புத்தகம். அந்தச் சில ஆண்டுகளில் பட்ட துன்பங்களும் போராட்டங்களும் இன்றும் அவர் மனதை ரணப்படுத்துகின்றன.

யாழ்ப்பாணத்தின் மந்திகை என்ற ஊரிலுள்ள பள்ளிக்கூடத்தில் சாதி காரணமாக நிலத்தில் இருத்தப்பட்டுத்தான் படிக்கவேண்டியிருந்தது. புதிய சீருடைகளையணிந்து தான் நிலத்தில் இருத்தப்பட்டால் அழுக்காகக்கூடாது என கீழே விரித்து அமர்வதற்காக, வீட்டில் தந்தை படிக்க வாங்கிய நாளிதழான வீரகேசரியின் ஒரு பக்கத்தை தன் கையில் எடுத்துச்செல்கிறார். அதையும் அனுமதிக்க முடியாத கதிர்காமன் என்ற வாத்தியார் வாழைமட்டையால் அடித்துக் கறைபிடிக்கச் செய்ததை இவ்வாறாக எழுதியிருக்கிறார்…

‘நீங்களே ஊத்தையன்கள். நிலத்தில இருந்தா உங்கடை கால்சட்டை ஊத்தையாப்போயிடுமோ? நீங்கள் இருக்கிறதால நிலம் தான்ரா ஊத்தையாப் போகுது’ என்றவர் விறுவிறென்று வெளியே போய் பாடசாலைக் கிணற்றடியில் நின்ற வாழை மரத்திலிருந்து மொத்தமான பச்சைத் தடலொன்றை வெட்டிக்கொண்டு வந்தார். அந்த வாழைத்தடலால் எனது உடம்பில் பத்துப்பதினைந்து சாத்தல்கள் விழுந்த பின்பு தான் எனக்கு எல்லாமே புரிந்தது’

அவர்களது உடைகள் அழுக்காக வேண்டுமென்று பள்ளிக்கூடப் பற்றைகளை வெட்டித் துப்பரவு செய்ய வைக்கப்படுகின்றனர். ஏன் இப்படி என அச்சிறுவன் தனக்குள் பல கேள்விகளைக் கேட்கிறான். பதில் சாதி… பள்ளிக்கூடத்தில் சமமாக இருந்து படிக்கமுடியாது.

தண்ணீர் அள்ள முடியாது. சக மாணவர்கள் சாதிப்பெயர் சொல்லி ஏளனம் செய்வது என ஒரு குழந்தையைக் கூட வதைத்த சாதி, பெரியவர்களை என்ன செய்திருக்கும்?
இணுவில் உணவகமொன்றில் தந்தையாருடன் மேசையில் உணவருந்திய காரணத்தால் தந்தைக்கு விழுந்த அடிகளும் ஆடையவிழ்ப்பும் நாள் முழுதும் விறகு கொத்துவதுமாகத் தண்டனை கிடைக்கிறது. அதை உடனிருந்து பார்த்ததுமின்றி நீரின்றி உணவின்றி அந்த விறகுகளை இச்சிறுவன் ஓடியோடி அடுக்கவும் வேண்டும். இதைப் போல பல சம்பவங்களை வெள்ளாள ஆதிக்கசாதியின் வெறித்தனத்தை எதிர்கொண்ட சம்பவங்கள். சுயதொழிலும் பொருளாதாரமும் நிலமும் கொண்டவராக வாழ்ந்தாலும் சாதி என்பது அடங்கிப் போகச் சொல்கிறது.

படிக்க:
♦ நூல் அறிமுகம் : கோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும் !
♦ பா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் !

தீண்டாமைக்கொடுமைகளுக்கு ஆளானதை இன்னுமொருவருக்கு நடந்தது, அறிந்தது என இல்லாமல். தன் வாழ்விலிருந்து இரத்தமும் கண்ணீரும் பெருகியவற்றை எழுதியிருக்கிறார் சிவா சின்னப்பொடி. பொருளாதார ரீதியாகவும் சொந்தக்காலில் நின்ற போதும் சாதி என்பது காரணமாக கோயிலில் நுழையவோ பொதுக்கிணற்றில் நீரள்ளவோ படிக்கவோ கல்வீடு கட்டவோ மேலாடை- காலணி- புதிய ஆடைகளை உடுத்தவோ கூடாது என மிரட்டப்படுவதும் கொல்லப்படுவதும் நடக்கிறது. சாதிய மனிதர்கள் எவ்வளவு குரூரமானவர்கள்!

தந்தையாரின் பெயர் தான் சின்னப்பொடியன். பிறப்புச் சான்றில் பெயர்களை எழுதுவதும் திட்டமிட்ட வகை. அதைப்போல சாதி என்ற இடத்தில் 1957-ல் பாராளுமன்றத்தில் சமூகக்குறைபாடுகள் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்பு அது இனம் என மாற்றப்படுகிறது. அப்போது இலங்கைத் தமிழர் எனக் குறிப்பிடப்படவேண்டும். ஆனால் சாதியப்படியைப் பொறுத்து இலங்கைத் தமிழர், இலங்கைத் தமிழ், இலங்கைத் தமிழன் என்று வேறுபடுத்தி எழுதி வித்தியாசப்படுத்தியதும் நடந்தது. பொதுவுடமைச் சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் இவ்வாறான இழிவுகளை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நிற்கின்றனர்.

நினைவழியா வடுக்கள் நூலின் ஆசிரியர் சிவா சின்னப்பொடி விடியல் பதிப்பக அரங்கில். (படம் : அவரது முகநூல் பக்கத்தில் இருந்து)

பாராளுமன்ற உறுப்பினர் பொன். கந்தையாவின் தீண்டாமைக்கு எதிரான செயற்பாடுகளும் சமூக முன்னேற்ற வேலைகளும் எழுதப்பட்டிருப்பதைப் படிக்கும் போது இவர் போன்றவர்களை எமக்கு ஏன் யாரும் சொல்லித்தரவில்லை என்ற கேள்வி எனக்கு ஏற்பட்டது. இந்நுாலாசிரியர் மூன்று மாதங்கள் பயின்ற திண்ணைப் பள்ளிக்கூடமும் அதன் ஆசிரியர் கந்தமுருகேசனார் கற்பித்த முறையும் மிகுந்த ஈர்ப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்தியது. முதல் நாள் அழுத சிறுவனை துாக்கி மடியில் வைத்த காரணத்தால் வெள்ளாளர்கள் அடுத்த நாள் தங்களது பிள்ளைகளை அங்கு படிக்க அனுப்பவில்லை. ஆனால் இவருக்கு அடுத்த நாளும் தனியாக இருத்தி வைத்துக் கற்பிக்கிறார். கந்த முருகேசனாரின் கேள்விகளும் அணுகுமுறைகளும் இயற்கையோடிணைந்த வாழ்வு முறையும் தொடர்ந்து ஏன் நம்மிடமில்லாமல் போனது? இவரைப் போன்றவர்கள் பற்றிப் பரவலாக எம் காலத்தில் அறியமுடியவில்லை. யாழ்ப்பாணத்துப் புலவர்களையும் சைவப் சமயப்பெருமைகளையும் படிப்பித்தது போல, சமுதாய மாற்றத்திற்காக உழைத்தவர்களைப் பற்றிய பாடங்கள் வேண்டும். இக்கொடுமைகளும் போராட்டங்களும் இலக்கியத்தின் வழியாகவே வெளிக்கொண்டு வரப்படுகின்றன.

படிக்க:
♦ ஐயாவின் கணக்குப் புத்தகம் | அ. முத்துலிங்கம்
♦ சென்னையின் ஷாகீன் பாக் – தொடரும் வண்ணாரபேட்டை போராட்டம் !

நினைவழியா வடுக்கள், அகாலம் (சி.புஷ்பராணி), தீண்டாமைக்கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் (யோகரட்ணம்) போன்ற புத்தகங்களும் கே.டானியல், டோமினிக் ஜீவா போன்றவர்களது எழுத்துகளுமாக வரலாறில் பதிவாகின்றன.
யாழ்ப்பாணச் சாதியடுக்கு முறைகள், 1961 லிருந்து 1964 வரை இங்கு நடைபெற்ற தீண்டாமை ஒழிப்புப்போராட்டங்களும் அவற்றின் பலன்களும் எனப் பல சம்பவங்களும் அவை தொடர்பான பெயர்களுமென ஒரு பதிவாக இதுவொரு கவனிக்கப்படவேண்டிய புத்தகம். மேலும் சாதிய ஒடுக்குமுறைகளுடன்; சிவா சின்னப்பொடியவர்களது அவதானிப்பில் அப்போதைய அரசியல் நிலமைகள், மொழிப்போராட்டங்கள், இனக்கலவரம், பற்றிய விடயங்கள் பலவும் எழுதப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்டவர்கள் ஆயுதங்களோடு துணிச்சலாக நின்று சண்டை போடுவதும் போராடுவதும் கல்வியில் கவனங்கொள்வதுமான அதே வேளையில் மெதுமெதுவாகச் சில சட்டங்களும் வருகின்றன. ஆனாலும் அவை இன்றுவரை வெவ்வேறு வடிவங்களாக மறைந்து கிடக்கின்றன. தீண்டாமை என்பது வேறுவேறு வழிகளாக; தேர் இழுக்கவும் காணி-நிலங்கள் வாங்கவும் கல்யாணத்திற்குமாக… எனப் பல விதமாகவும் தொடர்கின்றது.

கம்யூனிஸ்ட் தோழர்களும் தீண்டாமைக்கு எதிராகப் போராடியவர்களும் ஏற்படுத்திய மாற்றங்களும் பொன்.கந்தையா பாராளுமன்ற உறுப்பினராகச் செய்த பணிகளும் ஓரளவுக்குச் சாதியக் கொடுமைகளை ஒழித்ததைப் பதிவு செய்துள்ளார். ஆனாலும் உண்மையாகவே மக்கள் மனந்திருந்தினார்களா? சாதிய ஏற்றத்தாழ்வின் அநாகரிகம் பற்றிய பிரக்ஞையுடன் தான் தமிழீழப்போராட்டத்தைச் செய்தனரா? சாதிப்பெயர் சொன்னாலே பச்சை மட்டையடி என்ற பயம் இருந்ததேயொழிய மனதளவில் அது உள்ளே பதுங்கியிருந்தது. இல்லையென்றால் இப்போது இன்னும் அது இளையவர்களிடம் கூட எப்படி நிலை கொண்டிருக்கிறது? புலம்பெயர்ந்து அகதிகளாக வந்த நாடுகளிலும் ஃபேஸ்புக்கில் கூட சாதிப்பெயர் சொல்லித் திட்ட எப்படி முடிகிறது? கேள்விகளுக்கும் சுயவிசாரணைகளுக்கும் நினைவழியா வடுக்கள் போன்ற புத்தகங்கள் இன்னுமின்னும் வரவேண்டும்.

வெளியீடு: விடியல் பதிப்பகம்

இணையத்தில் வாங்க : udumalai

நன்றி : ஃபேஸ்புக்கில் Dharmini Ni 

அஞ்சாதே போராடு ! தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram

க்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக எதிர்வரும் பிப்ரவரி 23 அன்று திருச்சி உழவர் சந்தை திடலில் நடைபெறவிருக்கும் “அஞ்சாதே ! போராடு !” மாநாட்டை முன்னிட்டு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக் குழு தோழர் கோவன் பாடிய பாடல் !

பாருங்கள் ! பகிருங்கள் !

பாடல் வரிகள் :

அஞ்சாதே… போராடு !
அஞ்சாதே… போராடு !

CAA, NPR, NRC எதிர்த்திடு !
காவி கார்ப்பரேட்
பாசிசம் ஒழித்திடு ! ( அஞ்சாதே போராடு…)

ஜே.என்.யூ, ஜாமியா
அலிகர் போராட்டம் !
தேசத்தையே இணைத்தது
மாணவர் போராட்டம் !

சிஏஏ பாயுது
முசுலீமுக்கு எதிரா !
போராட்டக்களத்திலே
இந்துக்களும் திரளா !

இது அமித்ஷா வெறுப்பு !
மோடி வெறுப்பு !
ஆறாண்டு கால
ஆட்சியின் மேல்வெறுப்பு !

கார்ப்பரேட் – காவி
பாசிச எதிர்ப்பு !

நூறுகோடி மக்கள் சொத்து
ஒருசிலர் குவிப்பு !
பதினெட்டு கோடி மக்கள்
உணவின்றி தவிப்பு !

நாட்டையே வதைத்த
பணமதிப்பழிப்பு !
மாடுறித்தவர்கள்
தோலையே உரிப்பு !

நீட்டு ரேட்டுன்னு
கல்வி பறிப்பு !
ஜிஎஸ்டி வரிபோட்டு
சிறுதொழில் அழிப்பு !

எல்லாம் தனியார் !
வேலை இழப்பு !
இந்தி சமஸ்கிருதம்
அனைத்திலும் திணிப்பு !

அத்தனை வெறுப்பின்
மொத்த உருவிது !
எத்தனை முறைதான்
அடங்கிப் போவது !
எத்தனை நாள்தான்
பய்ந்து சாவது !

இந்த முறை மக்கள்
எழுந்துவிட்டார்கள் !
கவுண்ட் டவுன் ஆகுது
காவியின் நாட்கள் !  (அஞ்சாதே போராடு…)

பின்வாங்க மாட்டேனென்று
பேசுகிறார் அமித்ஷா !
பின்னடைவில் பொருளாதாரம்
மூழ்குது முழுசா !

இது
தோல்வியின் மேல் நிற்பவர்கள்
கொண்டுவந்த சட்டம் !
இந்து
ராஷ்டிரம்தான் இவர்கள்
நீண்டகாலத் திட்டம் !

இனி
போராட்டம் நாடெங்கும்
தீயாகப்பற்றும் !
டெல்லி
சாகின்பாக்கிலும்
ஜல்லிக்கட்டு யுத்தம் !

அஞ்சாதே… போராடு !

எழுதப்படிக்காத
இந்தியனுக்கு
எங்கேருக்கு பெர்த்து
சர்டிஃபிகேட்டு !
உன்னோட டாக்குமெண்டு
முன்னோர்கள் டாக்குமெண்டு
எடுத்துக்கொடுக்கலன்னா
முகாமில் அடைப்பு !

ஆவணத்த காப்பது
அரசின் பொறுப்பு அத
நம்மகிட்டா கேட்டா
சுடுகாட்ட காட்டு !

என்.ஆர்.சி-என்.பி.ஆர்
கணக்கெடுப்பு – இது
அரசு எதிர்ப்பாளர்
களையெடுப்பு !

மீத்தேன எதிர்த்தா
நீயூட்ரினோவ எதிர்த்தா
அணு உலை, ஸ்டெர்லைட்டு
கெயில எதிர்த்தா
முகாமில் அடைப்பு !

எத்தனைபேர அடப்ப ?
எத்தனை நாள் அடப்ப ?

பதினோரு மாநிலத்தில்
என் ஆர் சிக்கு மறுப்பு !
மாதம் ரெண்டை கடந்தும்
மக்களின் கொதிப்பு !

வகுப்பறையை துறந்து
மாணவர்கள் எதிர்ப்பு !
இன்று
அம்பேத்கர் பெரியார்
அனைவரின் கரத்தில் !
இன்குலாப் ஜிந்தாபாத்
இசுலாமியர் உதட்டில் !

நீ சுட்டு கொல்லலாம் !
என்சொத்தை பிடுங்கலாம் !
வழக்குப்போடலாம் !
சிறையில் தள்ளலாம் !
தவிர்க்க முடியாது
மூலதன அழிவு !

உலகமே அறியும்
ஹிட்லரின் முடிவு !
போதும் போதும் உங்கள்
தேசபக்த நடிப்பு !
இது
காவி பாசிசத்தின்
கடைசி துடிப்பு ! (அஞ்சாதே போராடு …)

பா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் !

பா.ஜ.க ஐடி செல் தலைவரான அமித் மால்வியா. அவர் இந்துத்துவா கட்சியின் ஆன்லைன் பிரச்சார இயந்திரத்தின் அதிகாரப்பூர்வ தலைவர் என்பதால், அவரது தவறான கூற்றுக்கள் ஆபத்தான விளைவுகளைக் கொண்டுள்ளன. அவரால் பரப்பப்பட்ட 16 தவறான தகவல்கள் (பொய் செய்திகள்) இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. பாருங்கள்…

***

னவரி 15ம் தேதி, பாரதீய ஜனதா கட்சியின் ஐடி பிரிவை நடத்தும் அதிகாரி அமித் மால்வியா, குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து போராடும் டெல்லியின் ஷாகீன் பாக் பெண்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாகக் கூறி ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். மால்வியாவின் இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என ஆல்ட் நியூஸ் – நியூஸ் லாண்ட்ரி விசாரணையால் கண்டறியப்பட்டது.

இரண்டு நாட்களுக்கு பிறகு, ஷாகீன் பாக் கில் ஒரு முதியவர் உணவு உண்ணும் புகைப்படத்தை அமித் மால்வியா ட்வீட் செய்தார். “ஷாகீன் பாக் நகரில் பிரியாணி விநியோகிக்கப்பட்டதற்கான ஆதாரம்!” என்று அவர் கூறினார், அந்த இடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ரூ.500 வழங்கப்படுவதாகவும், இலவச உணவு வழங்கப்படுவதாகவும் வதந்தியைப் பரப்பினார். அவரது ட்வீட் ஆதாரமற்றது. ஒரு போராட்டக்களத்தில் உணவு உண்பது ஒரு குற்றமா அல்லது தார்மீகரீதியில் சந்தேகத்திற்குரியதா என்ன?

ஷாகீன் பாக் பற்றி மட்டும் மால்வியா தவறான ட்வீட்டுகள் பதிவிடவில்லை. அவரது சமூக ஊடக பதிவுகளை ஆல்ட் நியூஸ் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது.

தனிநபர்கள், சமூகங்கள், எதிர்க்கட்சிகள், தலைவர்கள் மற்றும் சமூக இயக்கங்களை இழிவுபடுத்தும் முயற்சியில் அவர் பலமுறை தவறான தகவல்களைப் பயன்படுத்துகிறார் என்பதைக் கண்டறிந்துள்ளது. அவர் பா.ஜ.கவின் ஆன்லைன் பிரச்சார இயந்திரத்தின் அதிகாரபூர்வ தலைவராக இருப்பதால், மால்வியா பரப்புகின்ற தவறான தகவல்கள் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அவரது தவறான கூற்றுக்கள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பா.ஜ.கவின் ஆதரவாளர்களால் எதிரொலிக்கப்படுகின்றன, இது மிகப்பெரிய அளவில் தவறான தகவல்கள் பிரச்சாரம் செய்யப்படுவதற்கு வழிவகுக்கிறது.ஸ்

CAA எதிர்ப்பாளர்கள் பற்றிய தவறான தகவல்கள்

லக்னோவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷமிட்டனர்:

டிசம்பர் 28 ம் தேதி, லக்னோவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் போராட்ட வீடியோவை ட்வீட் செய்ததோடு, அவர்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத், பாகிஸ்தான் நீடூழி வாழ்க’ என முழக்கமிட்டதாக கூறினார்.

இந்த கூற்று தவறானது என ஆல்ட் நியூஸ் கண்டறிந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பாகிஸ்தான் சார்பு கோஷங்களை எழுப்பவில்லை, மாறாக, “காஷிஃப் சாப் ஜிந்தாபாத்” என முழக்கமிட்டுள்ளனர். அவர்கள் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிகாட்-உல்-முஸ்லிமின் கட்சியின் லக்னோ தலைவர் காஷிஃப் அகமதுவைக் குறிப்பிடுகிறார்கள். அக்கட்சியின் உத்தரபிரதேச தலைவர் ஹாஜி சவுக்கத் அலி ஆல்ட் நியூசிடம் கூறியபோது டிசம்பர் 13 அன்று மாநில தலைநகரில் காஷிஃப் அகமது ஒரு போராட்டத்திற்கு தலைமை தாங்கினார் என்றார்.

AMU மாணவர்கள் இந்துக்களுக்கு எதிராக கோஷமிட்டனர்:

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அலிகார் முசுலீம் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. அவர்கள் இந்துக்களுக்கு எதிராக கோஷமிட்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வீடியோ பரப்பப்பட்டது. டிசம்பர் 16 அன்று, வீடியோ கிளிப்பைப் பகிர்ந்தவர்களில் மால்வியாவும் ஒருவர்.

உண்மையில் மாணவர்கள் இந்துத்துவா, சாவர்க்கர், பா.ஜ.க, பார்ப்பனியம் மற்றும் சாதியவாதத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்துத்துவாவின் கல்லறை AMU -வில் தோண்டப்படும், சாவர்க்கரின் கல்லறை AMU -வில் தோண்டப்படும், பாஜகவின் கல்லறை AMU -வில் தோண்டப்படும், பார்ப்பனியம் மற்றும் சாதியவாதத்திற்கு கல்லறை AMU -வில் தோண்டப்படும் என முழக்கமிட்டுள்ளனர்.

CAA குறித்த பத்திரிக்கையாளரின் பேச்சு திரித்துக் கூறப்பட்டது:

“முசுலீமல்லாதவர்கள், முசுலீம்களின் மத அடையாளம், நம்பிக்கைகள் மற்றும் மேலாதிக்க முழக்கங்களை நற்செய்தியாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கும் வரை CAA எதிர்ப்பு என்பது ஆர்ப்பாட்டங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று முசுலீம்கள் விரும்புவதாக அமித் மால்வியா ஜனவரி 26 அன்று ஒரு வீடியோவை பகிர்ந்து கொண்டார்.

அலிகார் முசுலீம் பல்கலைக்கழகத்தில் தி வயர் தளத்தைத் சார்ந்த பத்திரிக்கையாளர் அர்பா கானும் ஆற்றிய உரை, கிளிப் செய்யப்பட்டு தவறாக சித்தரிக்கப்பட்டது. பத்திரிக்கையாளர் ஒரு இஸ்லாமிய சமுதாயத்தை ஸ்தாபிப்பதை ஊக்குவித்து வருவதாகவும், அத்தகைய சமூகம் உருவாகும் வரை முசுலீமல்லாதவர்களுக்கு ஆதரவளிக்கும் பாசாங்கைப் பேணுமாறு போராட்டக்காரர்களை வலியுறுத்துவதாகவும் மால்வியா கூறினார்.

ஆனால் உண்மையில் கானும் இதற்கு முற்றிலும் நேர்மாறாக கூறினார், மத முழக்கங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் இயக்கத்தின் மதச்சார்பற்ற தன்மையைப் பேண வேண்டும் என்றும் அவர் எதிர்ப்பாளர்களை வலியுறுத்தினார்.

***

ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பற்றிய தவறான தகவல்கள்

நேருவை ஒழுக்கக்கேடானவராக சித்தரிக்க முயற்சி.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பல பெண்களோடு இருக்கும் படங்களின் படத்தொகுப்பை நவம்பர் 2017ல் அமித் மால்வியா பகிர்ந்து கொண்டார். பெரும்பாலான புகைப்படங்கள் நேருவின் சகோதரி அல்லது மருமகளுடன் அல்லது ஜாக்குலின் கென்னடி போன்ற உலகநபர்களோடு இருக்கும் புகைப்படங்கள். மால்வியா பின்னர் தனது ட்வீட்டை நீக்கிவிட்டார். ஆனால் இது மற்றவர்கள் இப்படத் தொகுப்பைப் பகிர்வதைத் தடுக்கவில்லை.

மன்மோகன் சிங் குறித்த தவறாக சித்தரிக்கப்பட்ட வீடியோ

நவம்பர் 27, 2018 அன்று மன்மோகன் சிங் குறித்து ஒரு வீடியோவை மால்வியா ட்வீட் செய்துள்ளார், அதில் முன்னாள் பிரதம மந்திரி, “மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் அரசாங்கங்கள் மிகச் சிறந்தவை” என்று சொல்வதைக் கேட்கலாம். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மன்மோகன் சிங் பாராட்டு தெரிவிப்பதாக இந்த வீடியோ வெளியிடப்பட்டது.

மன்மோகன்சிங் பேசிய வார்த்தைகளை தவறாக சித்தரிக்கும் வகையில் மால்வியா பகிர்ந்துள்ளார். சிங்கின் வார்த்தைகளின்படி, “மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் அரசாங்கத்துடனான எனது உறவுகள் நன்றாக இருந்தன. பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு நாங்கள் ஒரு போதும் பாகுபாடு காட்டவில்லை.” என்று அவர் பேசியுள்ளார்.

ராகுல் காந்தி சோம்நாத் கோயிலில் பதிவேட்டில் ‘இந்து அல்லாதவர்’ என்று கையெழுத்திட்டார்:

நவம்பர் 2017ல் காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, குஜராத்தின் சோம்நாத் கோவிலில் ‘இந்து அல்லாதவர்’ என்று பதிவேட்டில் கையெழுத்திட்டதாக மால்வியா கூறினார்.

இருப்பினும் கையெழுத்து பகுப்பாய்வு, பதிவேட்டில் உள்ள கையெழுத்து ராகுல் காந்தியின் பொதுவில் கிடைக்கக்கூடிய கையால் எழுதப்பட்ட குறிப்புகளுடன் பொருந்தவில்லை என்பதைக் காட்டுகிறது.

உருளைக்கிழங்கு தங்க இயந்திரம்

அதே மாதத்தில் ராகுல் காந்தியின் வேறொரு வீடியோவை மால்வியா ட்வீட் செய்துள்ளார். ஒரு உருளைக்கிழங்கு ஒரு முனையிலிருந்து செருகப்பட்டால், மறுமுனையில் தங்கம் வெளியே வரும் வகையில் ஒரு இயந்திரம் நிறுவப்படும் என ராகுல் கூறியதாக அந்த வீடியோவில் உள்ளது.

உண்மையில் நவம்பர் 12, 2017 அன்று குஜராத்தின் பதானில் ஒரு உரையின் போது ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துக் கொண்டிருந்த மிக நீண்ட உரையின் வீடியோ கிளிப் இது. இதன் முழுமையான வீடியோ கிளிப் காங்கிரசின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டது.

அதில் ராகுல் பேசும்போது, சில மாதங்களுக்கு முன்பு இங்கு வெள்ளம் வந்தபோது, மோடி ரூ.500 தருவேன் என்று அறிவித்தார், ஆனால் ஒரு ரூபாய் கூட தரவில்லை. அவர் உருளைக்கிழங்கு விவசாயிகளிடம் “ஒரு இயந்திரத்தை நிறுவுகிறேன், அதில் ஒரு முனையிலிருந்து உருளைக்கிழங்கு செருகப்பட்டால் மறுமுனையிலிருந்து தங்கம் வெளியே வரும் என்றார்”, இவை என் வார்த்தைகள் அல்ல, “நரேந்திர மோடியின் வார்த்தைகள்”.

ராகுல் காந்தி குர்மீத் ராம் ரஹிமின் தேரா சச்சா சவுதாவை பார்வையிட்டார்:

ஆகஸ்ட்2017ல், மால்வியா கூறுகையில், “ராகுல் காந்தி தேரா சச்சா சவுதாவிற்கு ஜனவரி 2017 வரை சென்று வந்தார்.” என்று குற்றம் சாட்டப்பட்டது.

மால்வியா வெளியிட்ட கட்டுரையின் ஸ்கிரீன் ஷாட் முதலில் ஜனவரி 29, 2017 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை. “பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் ராகுல் காந்தி ஜலந்தரில் உள்ள தலித் சமூகத்தினரின் தேராசச் காண்ட் பல்லனைப் பார்வையிட்டார்.” என்று அக்கட்டுரையில் எழுதப்பட்டு இருந்தது.

காந்தி தேரா சச்சா சவுதாவைப் பார்க்கவில்லை, தேரா சச் காண்ட் பல்லன் என்ற இடத்தைத் தான் பார்வையிட்டார், அதன் தலைவர் சாந்த் நிரஞ்சன் தாஸ், சர்ச்சைக்குரிய பாலியல் கொலை குற்றவாளி குர்மீத் ராம் ரஹிமைப் பார்க்கவில்லை என்பதே உண்மை.

***

தேர்தல் பிரச்சாரங்களின் போது தவறான தகவல்கள் பரப்புதல்

01.02.2019 டெல்லி தேர்தலுக்கு முன்னர் தவறான தகவல் பரப்புதல்

டெல்லி மாநில தேர்தலுக்கு முன்னர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீடியோவை ஜனவரி 31 அன்று மால்வியா ட்வீட் செய்துள்ளார். கெஜ்ரிவால் ‘ரோட் ஷோவில்’ ஒருவர் கொலை செய்யப்பட்டதாக அவர் கூறினார். ஆனால் இந்த சம்பவம் பொது தேர்தலுக்கு முன்னதாகவே நிகழ்ந்தது.

மால்வியா முழு படத்தையும் வெளியிடவில்லை. வீடியோவின் பிற கிளிப்புகளில் கெஜ்ரிவாலை ஒரு நபர் அறைந்தார், பின்னர் அவர் முதலமைச்சரின் ஆதரவாளர்களால் அப்புறப்படுத்தப்பட்டார். சமூக ஊடக கூற்றுகளின் படி அந்த மனிதன் கொலை செய்யப்படவில்லை. இருப்பினும் அவர் கொடூரமாக தாக்கப்பட்டார்.

மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவுக்கு முன்னர் தவறான தகவல் பரப்புதல்

2019 மக்களவை தேர்தலுக்கு முன்னர், பா.ஜ.க தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியில் நடந்த கலவரம் குறித்து கொல்கத்தா வித்யாசாகர் கல்லூரி மாணவர் ஒருவரின் பதிவை மால்வியா ட்வீட் செய்துள்ளார். அதில் வளாகத்தில் ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் சிலை அழிக்கப்பட்டதாக திரிணாமூல் காங்கிரசை மாணவர் குற்றம் சாட்டியிருந்தார்.

வன்முறையின் காட்சிகளை ஆராய்ந்து அக்கல்லூரி ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களை விசாரித்த பின்னர் “மால்வியா பகிர்ந்த இடுகையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.” என ஆல்ட் நியூஸ் ஒரு விசாரணை அறிக்கையை பின்னர் வெளியிட்டது.

2018 தெலுங்கானா தேர்தலுக்கு பிறகு தவறான தகவல்கள் பரப்புதல்

பா.ஜ.க -வுக்கு பின்னடைவு ஏற்பட்ட 2018 ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர், மால்வியா தரப்பில் “தெலுங்கானாவில் 7% வாக்குகளைப் பெற்று, ஒரு இடத்தை பா.ஜ.க வெல்ல முடிந்தது. அதே நேரத்தில் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமின் வெறும் 2.7% வாக்குகளைப் பெற்று ஏழு இடங்களைப் பெற்றார்.” என ட்வீட் செய்யப்பட்டது.

மால்வியா மேற்கோள் காட்டிய எண்கள் சரியானவை என்றாலும், அந்தக் கூற்று தவறானது. ஏனென்றால் வெறும் 8 இடங்களில் போட்டியிட்டு 7 இடங்களை வென்றது AIMIM. மறுபுறம் மாநில  சட்டசபையில் 119 இடங்களில் 118 இடங்களில் பா.ஜ.க போட்டியிட்டது. அதில் ஒரு இடம் மட்டுமே வென்றுள்ளது. பா.ஜ.கவுடன் ஒப்பிடும்போது AIMIM அதிக சதவீத வித்தியாசத்தில் வென்றுள்ளது. முழுமையான விவரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் கிடைக்கின்றன.

***

மோடிக்கு ஆதரவான தகவல்கள் பரப்புதல்

கும்பமேளாவைப் பார்வையிட்ட முதல் அரச தலைவர் மோடி

2019 ஜனவரி 24 ஆம் தேதி, நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தில் உள்ள கும்பமேளாவில் கங்கையில் நீராடினார். இது குறித்து உடனடியாக ட்வீட் செய்த மால்வியா, “இந்த ஆண்டில் கும்ப மேளாவிற்கு விஜயம் செய்த முதல் மாநிலத் தலைவர் மோடி” என்றார்.

 

இரண்டு வகையில் இக்கூற்று தவறானது, மோடி மாநிலத் தலைவர் அல்ல, அதே போல் கும்ப மேளாவைப் பார்வையிட்ட முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், கும்பமேளாவைப் பார்வையிட்ட முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு என்பதே உண்மை.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் தாலர் பணமதிப்பிழப்பை ஆதரித்தார்

2017ல் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் தாலர் மோடியின் பணமதிப்பிழப்பை ஆதரித்தார் என மால்வியா ட்வீட் செய்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தாலர் இது குறித்து கூறுகையில், “ஊழலை ஒழிப்பது என்ற நல்ல நோக்கத்திற்காக பணமற்ற பரிவர்த்தனை என்பது சிறந்த வழி, ஆனால் 2000 ரூபாயை அறிமுகப்படுத்தியதால் இந்த நடவடிக்கையின் நோக்கத்தைக் குறித்த குழப்பத்தை ஏற்படுத்துகிறது.” என்றே கூறியுள்ளார்.

யோகேந்திர யாதவ் குறித்த வீடியோ

ஏப்ரல் மாதத்தில் நடந்த தொலைக்காட்சி விவாதத்தில் யோகேந்திர யாதவ் சாதி அரசியல் செய்வதாக மால்வியா குற்றம் சாட்டினார். மால்வியாவின் இந்த குற்றச்சாட்டிற்கு ஆதாரம் காட்டினால் தான் அரசியல் வாழ்விலிருந்தே விலகிவிடுவதாக யோகேந்திர யாதவ் கூறினார். பதிலடியாக, யோகேந்திர யாதவ் தனது முசுலீம் அடையாளத்தைக் கூறி முசுலீம் மக்கள் மத்தியில் பேசுகின்ற வீடியோவை மால்வியா பதிவிட்டார்.

அந்த வீடியோவின் இறுதியில் நீங்கள் எப்போது பொது வாழ்க்கையிலிருந்து விலகப் போகிறீர்கள் என கேள்வியெழுப்பி இருந்தது. வாக்கு வங்கிக்காக தனது முசுலீம் அடையாளத்தைப் பயன்படுத்தியதற்காக யோகேந்திர யாதவிற்கு வரும் ஆதரவைத் தடுக்கவே மால்வியா தேர்தல் பேரணியில் கூட வராத ஒரு வீடியோவை தவறாக சித்தரித்து பதிவிட்டுள்ளார்.


தமிழாக்கம் :
தமிழாக்கம் : சமீரா
நன்றி :  ஸ்க்ரால். 

காதலர் தினம் – ஏன் காதல் ? எது காதல் ? | வினவு கட்டுரைத் தொகுப்பு !

காதலர் தினம் என்றவுடன் பலருக்கு ரோஜாவும், சாக்லேட்டுகளும் பரிசுப் பொருட்களும் நினைவுக்கு வரும். சிலருக்கு கைகூடாத காதலின் ஏக்கமும் இன்னும் பலருக்கு காதலை எப்படி சொல்வது என்ற எண்ணமும் வரும்.

ஆனால் அடிப்படைவாதிகளுக்கோ சாதியும், மதமுமே முன் வந்து நிற்கிறது. அதிலும் இக்காலத்தில் சங்கிகளும், ‘திரௌபதியியர்களும்’ கங்கணம் கட்டிக் கொண்டி ‘நாடக காதல்’ கூத்தாடுவார்கள். ஆனாலும் கடற்கரையிலும், பூங்காக்களிலும் காதலர்கள் குவிவதை இவர்கள் யாராலும் தடுக்க இயலாது.

காதல் ஒரு மனித உணர்வு, அது முழுக்க முழுக்க தனிப்பட்ட அன்புணர்ச்சி என்பதெல்லாம் கதைகளிலும், புதினங்களிலும் மட்டுமே சாத்தியம். இன்றும் சரி என்றும் சரி காதல் இரு இதயங்களைத் தாண்டி சமூக நாடித்துடிப்புடன் சம்மந்தப்பட்டதே.

ஆணவக் கொலைகள் அரங்கேறும் இக்காலத்தில் “ஏன் காதல்?” என்று ஒரு பக்கத்திலும். ஆபாச நுகர்வு வெறி சதிராடும் இக்காலத்தில் “எது காதல்?” என்பது மறு புறமும் குத்தீட்டிகளாக நிற்கின்றன. இவற்றுக்கிடையில் காதல் குறித்த புரிதல்களை விவாதிக்கிறது இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். படியுங்கள்… காதலை பகிருங்கள்…

***

லவ் – பியார் – பிரேமா – காதல் | மு.வி.நந்தினி

காதல் அனைவரையும் ஏதேனுமொரு சமயத்தில் கிளர்ச்சி கொள்ள வைக்கும் ஒன்று. பதின்மத்தின் ஒருதலைக் காதலுக்காகவோ, திருமணத்தில் முடிவுறாத காதலுக்காகவோ, ‘உண்மையான காதலை’த் தேடியோ பெரும்பாலான மனங்கள் ஏங்கித் தவிக்கின்றன. கார்ல் மார்க்ஸின் 200-வது பிறந்த  தினத்தில் அவருடைய கோட்பாடுகளை விவாதிப்பதைக் காட்டிலும் ஜென்னியுடனான அவருடைய காதலின் மகத்துவத்தை சொன்ன பதிவுகளைத்தான் முகநூலில் அதிகம் காணமுடிந்தது. காதலைக் கொண்டாட எல்லோருக்கும் ஒரு காரணம் தேவைப்படுகிறது. இடது, வலது, லிபரல் என வேறுபட்ட கருத்துடையவருக்கும் காதல் மிகக் கிளர்ச்சியூட்டும் வார்த்தை! எது காதல்? அது எப்படிப்பட்ட தன்மையில் இயங்குகிறது? காதல் உணர்வு ஆண்-பெண் இருவருக்கும் பொதுவானதா? …. முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே அழுத்தவும்

***

காதல்: நேசிக்குமா, கொலை செய்யுமா?

… தனது காதல்ஜோடிக்கு முன் தனது தீமைகளை மறைப்பதாக இருக்கட்டும், தனது நல்லெண்ணங்களைகாட்டுவதாக இருக்கட்டும், குடும்பத்தில் எல்லோரிடமும் அன்பு காட்டுவதாகஇருக்கட்டும், சமூக உறவுகளில் உதவும் பண்பு திடீரென்று உருவவாதாகஇருக்கட்டும், இவையெல்லாம் ஒருகாதல் வயப்பட்ட ஆண், பெண்ணின் மனதில்இயல்பாகத் தோன்றும். மனமே பரிசுத்தமாக மாறியது போலும், பண்பே அடியோடுமாறிப்போனது போலும், இதற்கு முன் இருந்த நானும் இப்போது இருக்கும்நானும் அடியோடு வேறுபடுவதும் போல இருந்தாலும் கொஞ்ச காலத்தில் அந்தகாதல் வழக்கமானதும், அல்லது திருமணம் முடிந்ததும் இருவரதும்உண்மைப்பண்புகளை ஒருவரோருவர் தெரிந்து கொண்டு அவமானமும், சினமும்அடைவதும் அப்புறம் சில ஆண்டுகளில் இந்தப் பகை நிதானமடைந்து பிரிவதற்குவழியில்லாத பார்ப்பனிய சமூகத்தின் தடையில் மற்றவர்களின் குறைகளை சகித்துக்கொண்டு வாழப்பழகுவதும் ஏற்பட்டு வாழ்க்கை வண்டி ஓடுகிறது… முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே அழுத்தவும்

***

காதலைத் தீர்மானிப்பது அப்பியரன்சா, அப்ரோச்சா, அரிவாளா?

சாதி மதம் மாறி, ஜாதகம் பார்க்காமல், பெற்றோர்-உற்றோரை எதிர்த்துக்கொண்டு, மணம் செய்வது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. இதில் சமரசம் செய்து கொண்டு பெற்றொர் வழி திருமணம் செய்தவர்களே இங்கு அதிகம். அவர்களுக்கெல்லாம் காதல் விருப்பமற்றது என்பதல்ல, காதல் நடைமுறையில் சாத்தியமல்ல என்ற சமூக நிர்ப்பந்தமே காரணம். காதலிப்பவர்களும் கூட இந்த தடைக்கற்களைத் தாண்டுவதை விட சமரசம் செய்து கொண்டு குறுக்கு வழியைத் தேடுகிறார்கள். சாதி, மதம் மாறாமல் காதலிப்பது, தனது சாதியின் தரத்தினையொத்த சாதியில் காதலிப்பது, கீழ் சாதியைத் தவிர்ப்பது, தனது வர்க்க நிலைக்கேற்ப காதலிப்பது, காதலித்தாலும் ஜாதகப் பொருத்தம் பார்ப்பது, பெற்றோருக்காக வரதட்சணை கேட்டு காதலியை நிர்ப்பந்திப்பது, தாய் தந்தை விருப்பத்திற்காகக் காதலியை வேலையை விடச் செய்து வீட்டு விலங்காக நடத்துவது, பிறக்கும் குழந்தைகளை தந்தையின் சாதி அடையாளத்துடன் வளர்ப்பது, இருவரில் யார் மேல்சாதியோ அவர்களது சாதியப் பண்பாட்டைக் கடைபிடிப்பது….. இங்கே காதல் எங்கே இருக்கிறது?.. முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே அழுத்தவும்

***

முதல் காதல் அபத்தமா ? அழியா நினைவா ? | மு.வி. நந்தினி

…… ‘முதல் காதல்’ கதைகளை பேசிக் ‘கொல்லும்’ பல ஆண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்படியான ‘முதல் காதல்’ அனுபவங்களை விதந்தோதும் ஒரு பெண்ணைக்கூட சந்திக்கவில்லை. பலருக்கு காதல் கைகூடாமல், வேறொரு ஆணுடன் திருமணம் நடந்தபோதும்கூட தங்கள் ‘முதல் காதலை’ தனிப்பட்ட பேச்சிலும்கூட நினைவு கூறியதில்லை. பெண்கள், ஆண்களைக்காட்டிலும் நிதர்சனத்தில் வாழ்கிறவர்களாக இருக்கலாம். அல்லது ஆண்களைப்போல தங்களுடைய காதல் பராக்கிரமங்களை சொல்லிக்கொள்ளும் ‘சுதந்திரம்’ பெண்களுக்கு இல்லாமல் இருக்கலாம். அல்லது பெண்கள் முதல் காதலை நினைப்பதால் உண்டாகும் சிக்கலை எதிர்கொள்ளத் தயாராக இல்லை; அவர்களுடைய சமூக வாழ்நிலை அதற்கு இடம்கொடுக்காது. ஆனால், ஆண்கள் முதல் காதலைத் தொடர எப்போதும் தயாராக இருக்கிறார்கள். அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்கும் சமூக வாழ்நிலையும் அவர்களுக்கு பிரகாசமாகவே உள்ளது… முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே அழுத்தவும்

***

ஆதலினால் காதல் செய்வீர் !

காதல் வெறும் உடலுறவு அல்லவே. ஆனால், உடலும் சேர்ந்தே காதல். பெண் மற்றும் ஆணின் விரல்கள் தீண்டுதலில் தீண்டுபவை விரல்கள் அல்ல. மாறாக, ஒரு இனத்தின் நாகரிகம் தன்னைத் தானே ஸ்பரிசித்துக் கொள்கிறது என்பதே பொருள்.

பெண்ணின் உலகம் ஆணை நம்பியும் அவன் அன்பை எதிர்பார்த்தே இருந்தது என்பதையும் கூடிய புரிதலோடேயே அந்தப் பழைய இலக்கியத்தை அணுக வேண்டும். அவை உன்னதமானவை அல்ல; மாறாக, அந்தக் காலத்தை உண்மையாக நாடகியமாகச் சொல்பவை. காதல் உலகத்தில் ஆண் ஒரு முதலாளியைப் போல, போலீஸ்காரனைப் போல நடந்துகொள்ளும் போது காதல் துளிர்ப்பதில்லை. காதல் அந்த மனிதரின் விடுதலை கூர் உணர்வில் தோன்றும் இயற்கை விழைவு. இந்த சமுகம் காதலை புரிந்து கொள்ளும் சமூகமாக இல்லை. இந்திய ஜனத்தொகையில் பெருபான்மையோர் வன்புணர்ச்சியில் பிறந்தவர்கள். ஏனெனில் சகாவான பெண் சம்பந்தப்பட்டு தாயாவதில்லை. இந்த தேசத்தில் காதல் தொழிலில் சமபங்கு ஆற்றாத பெண் காதலியாகக் கருதப் படலாமோ எனில் மட்டாள். மாறாக அவள் சுரண்டப்படும் மற்றுமொரு தொழிலாளியே ஆவாள்… முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே அழுத்தவும்

***

தேவை போர் அல்ல ! காதல் ! | காதலர் தின கேலிச்சித்திரங்கள்

முதலாளித்துவத்தின் எல்லைகளைக் கடந்து செல்லும் ஆற்றல் கொண்டது மனித குலத்தின் மீதான காதல்தான்…

அனைத்து கேலிச்சித்திரங்களையும் காண இங்கே அழுத்தவும்

***

காதலர் தினம் : பொண்ணுங்களுக்காக யோசிக்கிறோம் இல்லேன்னா இந்துமுன்னணிய அடிச்சு விரட்டுவோம் ப்ரோ !

…. லவ்வர் இருக்கவனுக்கு ஜாலி.. இல்லாதவனுக்கு பொறாமை’ண்ணா…. காதல்-ங்கிறது செம்ம ஃபீல்… அது வேற லெவல்…. அதெல்லாம் இப்படி எதிர்க்கிறவனுங்களுக்கு தெரியாது. நான் கோ-எஜுகேட்லதான் படிக்கிறேன். எல்லாம் ஆல்ரெடி கமிடட். எங்களுக்குத்தான் இன்னும் செட் ஆகல. அதுக்குதான் பார்க் – பார்க்கா சுத்திட்டு இருக்கோம். சீக்கிறத்துல செட் ஆகிடும் ப்ரோ.

காதலர்கள் ஒன்னா இருக்கும்போது தொந்தரவு பண்றவங்கள அடிச்சி விரட்டனும். பசங்க கொஞ்சம் பயப்படுறாங்க. அதுக்கு காரணம், கூட இருக்குற பொண்ணுக்கு பாதிப்பாகிடுமோன்னு யோசிக்கிறாங்க. இல்லன்னா இந்த மாதிரி ஆளுங்கள ஓட விட்டுடுவாங்க. எங்ககிட்ட வந்து அந்த மாதிரி பண்ணா அதுதான் நடக்கும். காதல எதிர்க்கிறவன் எல்லாம் சாதி வெறியனாத்தான் இருப்பான். அதனால தான் பி.ஜே.பி. எதிர்க்குது. அந்த கட்சியில இருக்கவன் எல்லாம் சாதி வெறியனுங்கதான்… முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே அழுத்தவும்

***

திரை விமர்சனம் : ஆதலால் காதல் செய்வீர் : அனாதையும் ஆணுறையுமா பிரச்சினை ? 

எதார்த்தத்தில் “கலவி கொள்ளலாம் வா” என்று அழைக்கும் காதலனை மறுக்க முடியாத அளவுக்கு துணிவும், அதற்காக வீட்டில் பொய் சொல்லி விட்டு மகாபலிபுரம் கிளம்பும் அளவுக்கு தைரியமும் கொண்ட ஸ்வேதா ஆணுறையின் அவசியம் அறியாத அளவுக்கு அப்பாவியாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், கதை நடப்பது எங்கோ குக்கிராமத்தில் அல்ல. கதையின் பின்னணியும் வயல்காடும் அல்ல, கதையின் நாயகி கொத்து வேலை செய்பவரும் அல்ல.

மேலும் படத்தில் காட்டப்படுவது போல கருக்கலைப்பு ஒன்றும் அவ்வளவு கடினமானதாக யதார்த்தத்தில் இல்லை. திருட்டுத்தனமாக கருக்கலைப்பு செய்யும் பெண்கள் பலர் இறந்து போகிறார்கள் என்ற அனுபவத்திற்கு பிறகு அரசே இப்போது கருக்கலைப்பை எளிதாக மாற்றியிருக்கிறது. அரசு மருத்துவமனையில் கூட பெரிய தடைகள் ஏதுமின்றி யாரும் கலைப்பு செய்து கொள்ள முடியும். பாதுகாப்பாக உறவு வைத்துக் கொண்டால் எய்ட்ஸ் கிடையாது என்று யாருடனும் உறவு வைக்கலாம் அளவுக்கு அரசு மாறியிருப்பது இயக்குநருக்கு தெரியாது போலும்… முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே அழுத்தவும்

தொகுப்பு :

அல்பேனியா : ஐரோப்பாவின் நாஸ்திக – முஸ்லிம் நாடு !

0

ஐரோப்பாவின் நாஸ்திக – முஸ்லிம் நாடு! அல்பேனியா பயணக்கதை – 2

முதல் பாகம்

கலையரசன்

ரோப்பாவில் உள்ள முஸ்லிம் நாடு எது? அல்பேனியா!
உலகின் முதலாவது நாத்திக நாடு எது? அல்பேனியா!

இவை அல்பேனியா பற்றி பெரும்பாலானோர் அறிந்திராத தகவல்கள். அந்த நாட்டில் எழுபது சதவீதமானோர் இஸ்லாமிய மதத்தை பின்பற்றுகிறவர்கள். குறைந்த பட்சம் பெயரளவிலாவது. ஐரோப்பாவில் பல நாடுகளில் மசூதிகள் இருந்த போதிலும், தொழுகை நேரம் ஒலிபெருக்கியில் குரான் ஓதி அழைப்பு விடுப்பதை அல்பேனியாவில் தான் கண்டேன். ஒவ்வொரு தடவையும் மசூதி ஒலிபெருக்கியின் ஊடாக காற்றில் தவழ்ந்து வரும் அரபி வசனங்களை கேட்கும் பொழுது மத்திய கிழக்கில் உள்ள அரபி- முஸ்லிம் நாடொன்றுக்கு வந்து விட்ட பிரமை உண்டாகிறது.

கவலைப்படாதீர்கள், இது ஐரோப்பா தான். நம்மைப் போலவே, பெரும்பாலான அல்பேனிய முஸ்லிம்களுக்கும் அரபி மொழி தெரியாது. அத்துடன் தொழுகைக்கு அழைப்பு விடுக்கிறார்கள் என்பதற்காக விழுந்தடித்துக் கொண்டு மசூதிக்கு விரையும் யாரையும் நான் காணவில்லை. பொது இடங்களில் எல்லோரும் தத்தமது வேலைகளில் ஆர்வமாக இருக்கிறார்களே தவிர மதக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்தளவுக்கு மத நம்பிக்கை கொண்டவர்களை காண்பது அரிது.

அல்பேனியா குறைந்தது இரண்டு தசாப்த காலமாக உலகில் ஒரேயொரு நாத்திக நாடாக இருந்தது. கவனிக்கவும்: “ஒரேயொரு”. அதாவது உலகில் வேறெந்த நாட்டிலும் மதம் முற்றாகத் தடைசெய்யப் பட்டு, அனைத்து மத வழிபாட்டுஸ்தலங்களும் மூடப்படவில்லை. புரட்சி நடந்த காலங்கள் விதிவிலக்கு. பிரெஞ்சுப் புரட்சி முதல் ரஷ்யப் புரட்சி வரையில் மத நிறுவனங்களுக்கு எதிரான மக்கள் எழுச்சி காரணமாக உண்டான விளைவுகள் வேறு விடயம்.

ஒரு தேசத்தின் அரசாங்கமே அரசமைப்பு சட்டம் மூலம் மதங்களை தடைசெய்தமை அல்பேனியாவில் மட்டுமே நடந்துள்ளது. சீனாவின் கலாச்சாரப் புரட்சி பாணியில் அல்பேனிய இளைஞர்கள் தான் தீவிரமான நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். அவர்களுக்கு தாராளமாக சுதந்திரம் வழங்கப்பட்டது. தேவாலயங்கள், மசூதிகள் காலவரையறை இன்றி மூடப்பட்டன. சில இடித்து நொறுக்கப்பட்டன. எஞ்சியவை மியூசியம், ஹோட்டல், ரெஸ்டாரன்ட், இளைஞர் விடுதி, உள்ளரங்க விளையாட்டுத் திடல் என பொது மக்களின் கேளிக்கை நிலையங்களாக மாற்றப் பட்டன. குறிப்பிட்ட அளவு பாதிரிகள், இமாம்கள் சிறைகளில் அடைக்கப் பட்டனர்.

படிக்க:
♦ என்ன நடக்கிறது சிரியாவில் ?
♦ நானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை

தொண்ணூறுகளுக்கு பிறகு அல்பேனியாவில் மீண்டும் மதச் சுதந்திரம் உள்ளது. மசூதிகள், தேவாலயங்கள் புதிது புதிதாக முளைக்கின்றன. இருப்பினும் மக்கள் மத்தியில் மத நம்பிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. அதற்குக் காரணம், இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பொருளாதார குறிக்கோள் மட்டுமே மேலோங்கிக் காணப் படுகின்றது. அதற்குக் காரணம் “என்வர் ஹோஷாவின் சர்வாதிகாரமா அல்லது அல்பேனியர்களின் அலட்சியமா?” என்று பட்டிமன்றம் நடத்தலாம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. காலம் மாறி விட்டது. ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த சமுதாயம் இன்று இல்லை. அது காலவோட்டத்தில் பல்வேறு கலாச்சார மாற்றங்களுக்கு உட்பட்டு விட்டது.

அல்பேனியா ஏன், எவ்வாறு உலகின் ஒரேயொரு நாத்திக நாடானது?

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக அறுபதுகளில் குருஷேவின் சோவியத் யூனியனுடனான அனைத்து தொடர்புகளையும் முறித்துக் கொண்ட அல்பேனியா, மாவோவின் சீனாவை மட்டும் நட்பு நாடாக்கிக் கொண்டது. அந்தக் காலகட்டத்தில் சீனாவில் நடந்த கலாச்சாரப் புரட்சியின் தாக்கம் அல்பேனியாவில் எதிரொலித்தது. இரண்டாவது காரணம் அன்னை தெரேசா!

உலகப் புகழ் பெற்ற கத்தோலிக்க பெண் துறவியான தெரேசா மாசிடோனியாவில் பிறந்தவர். ஆனால் அவரது சிறுவயதில் பெற்றோருடன் அல்பேனியாவுக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்தார். தெரேசா கன்னியாஸ்திரியான பின்னர் இந்தியா சென்று தங்கிவிட்ட போதிலும், அவரது தாயாரும் பிற குடும்ப உறுப்பினர்களும் அல்பேனியாவில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவரது தாயார் மரணப் படுக்கையில் இருந்த நேரம் தெரேசா விசா கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அந்தக் காலத்தில் எந்த நாட்டுடனும் சேராமல் தனிமைப் படுத்தப் பட்டிருந்த அல்பேனியா யாரையும் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. அதே போல யாரையும் உள்ளே வர அனுமதிக்கவில்லை. (விதிவிலக்குகள் இருந்தன.) அதனால் தெரேசா அம்மையாருக்கும் உள்நுழையும் விசா கிடைக்கவில்லை, அவரது அம்மாவுக்கும் வெளியேற அனுமதி கொடுக்கவில்லை.

இருந்தாலும் தெரேசா விவகாரம் என்வர் ஹோஷாவின் கவனத்தை திசைதிருப்பியது. அதுவரை காலமும் தெரேசா என்றால் யார் என்று தெரியாமல் இருந்தது. தற்போது அவர் ஒரு “மேற்குலக ஏகாதித்திய ஏவலாளி” என்று சந்தேகப் பட வைத்தது. பாரிசில் இருந்த அல்பேனிய தூதரகத்தில் தெரெசாவுக்கு விசா பெற்றுக் கொடுப்பதில் பிரெஞ்சு ஜனாதிபதியின் அழுத்தமும் பிரயோகிக்கப்பட்டது. அதனால், மேற்குலக ஏகாதிபத்தியம் தெரேசாவை பகடைக் காயாக பயன்படுத்தி அல்பேனிய உள்விவகாரங்களில் தலையிட முனைவதாக சந்தேகிக்க வைத்தது.

அன்னை தெரேசா விசா பிரச்சினையின் எதிர்விளைவாக புதிய அரசமைப்பு சட்டம் மூலம் “நாத்திக நாடு” பிரகடனப் படுத்தப் பட்டிருக்கலாம். (சில வருடங்களின் பின்னர் போப்பாண்டவராக தெரிவான போலிஷ்காரர் ஜோன் போல் மூலம் போலந்து கம்யூனிச ஆட்சிக்கு மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டமை இங்கே குறிப்பிடத் தக்கது.) மதம் என்பது மக்களின் உணர்வுபூர்வமான விடயம் தான். அந்தக் காலத்திலும் பெரும்பாலான அல்பேனியர்கள் தீவிர மத நம்பிக்கையாளர்கள் தான். ஆனால், அல்பேனியாவில் குறைந்தது இருபது வருட காலமாவது மதத்தை மக்களிடம் இருந்து பிரித்து வைத்திருந்தமை மிகப் பெரிய சாதனை தான்.

படிக்க:
♦ லாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு !
♦ “ஸ்டாலின் பிறந்த மண்” – ஜோர்ஜியா பயணக் கதை | கலையரசன்

அல்பேனியா ஒரு “முஸ்லிம் நாடு” தான். ஆனால், தற்கால அரசின் அமெரிக்க சார்புத்தன்மை காரணமாக இஸ்ரேலுடனும் நட்புறவு பேணத் தயங்கவில்லை. ஜனவரி (2020) மாதம் நான் அல்பேனியா பயணம் சென்றிருந்த சமயம், ஒரு சர்வதேச இராஜதந்திர நெருக்கடி ஏற்பட்டிருந்தது. திரானாவில் இருந்த ஈரானிய தூதுவரலாயம் மூடப்பட்டு அதன் தூதுவரும் ஊழியர்களும் நாட்டில் இருந்து வெளியேற்றப் பட்டிருந்தனர். இது அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான கெடுபிடிப் போரின் விளைவு என்பது தெளிவானது.

அந்த சம்பவத்தை அடுத்து, அமெரிக்காவுக்கு விசுவாசமான அல்பேனிய அரசு, பிற உலக நாடுகள் எதுவும் செய்யத் துணியாத ஒரு காரியத்தை செய்தது. ஈரானுக்கு எதிரான கிளர்ச்சிக்குழுவான முஜாஹிதீன் கால்க் (MEK) இயக்கம் தளம் அமைப்பதற்கு பூரண ஒத்துழைப்புக் கொடுத்தது. ஆயுதபாணிகளான மூவாயிரம் முஜாஹிதீன் போராளிகள் இரகசிய தளம் ஒன்றில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் முன்பு ஈராக்கில் முகாமிட்டு இருந்தனர். பின்னர் ஈராக் அரசின் நெருக்குவாரம் காரணமாக வெளியேற்றப் பட்டனர்.

அல்பேனிய தேசிய இனம் மொழி அடிப்படையில் உருவானது. ஒரே மொழி (அதிலும் இரண்டு பிரிவுகள்) மட்டுமே அவர்களை ஒன்றிணைக்கிறது. அல்பேனியர்களை மத அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். இஸ்லாமியர்கள் பெரும்பான்மை. கிறிஸ்தவர்கள் சிறுபான்மை. ஆனால், கிறிஸ்தவர்களும் கத்தோலிக்கர்கள், (கிரேக்க) ஒர்தொடக்ஸ் என இரண்டாகப் பிரிந்துள்ளனர். துருக்கி ஓட்டோமான் படையெடுப்புகளுக்கு முன்னர் அனைத்து அல்பேனியர்களும் கிறிஸ்தவர்களாக இருந்தனர். ஓட்டோமான் ஆட்சியில் பதவிகள், வசதி வாய்ப்புகள், மற்றும் வரிச்சலுகைகள் காரணமாக பெரும்பாலானோர் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டனர்.

ஓட்டோமான் ஆட்சியாளர்கள் மொழியையோ அல்லது இனத்தையோ அங்கீகரிக்கவில்லை. அவர்களைப் பொறுத்த வரையில் அல்பேனியாவில் மூன்று இனப் பிரிவுகள் (உண்மையில் மதப் பிரிவுகள்) இருந்தன. துருக்கியர்கள், இலத்தீனியர்கள், கிரேக்கர்கள். உண்மையில் அங்கு மிகச் சிறுபான்மையான துருக்கி மொழி பேசுவோர் இருந்த போதிலும், இஸ்லாமியர் அனைவரும் “துருக்கியர்” என அழைக்கப் பட்டனர். அதே போன்று கிரேக்க மொழி பேசும் சிறுபான்மையினர் இன்னமும் அங்கிருந்த போதிலும், ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவத்தை பின்பற்றிய எல்லோரும் “கிரேக்கர்கள்” என அழைக்கப் பட்டனர். அதே போன்று கத்தோலிக்கர்கள் லத்தீனியர்கள் (அல்லது இத்தாலியர்?) என அழைக்கப் பட்டனர்.

மேற்குறிப்பிட்ட வரலாற்றுத் தரவு ஓர் உண்மையை உரைக்கிறது. உண்மையில் இன்றுள்ள தேசிய இனங்கள் யாவும் கலப்பினங்கள் தான். அன்று மதத்தை மட்டும் முக்கியமாகக் கருதிய காலத்தில் இருந்து இன்று மொழியை முக்கியமாகக் கருதும் காலத்திற்கு வந்திருக்கிறோம். ஆனால், ஒரே மொழி பேசும் அனைவரும் ஒரே இனம் எனும் கோட்பாடு சரியானதா? நிச்சயமாக இல்லை. அல்பேனியா சுதந்திரம் அடைந்த காலத்திலும் துருக்கியர் என்ற சிறுபான்மை இனம் இருந்தது. ஆனால், அவர்கள் எல்லோரும் இனத்தால் துருக்கியர் அல்ல. ஓட்டோமான் ஆட்சிக் காலத்தில் பெரும்பாலும் பட்டம், பதவிகளுக்கு ஆசைப்பட்டு, துருக்கி மொழியை தாய்மொழியாக ஆக்கிக் கொண்ட அல்பேனியர் ஏராளம் பேர் இருந்தனர். தற்காலத்தில் தமிழர்களில் சிலர் ஆங்கிலத்தை முதன் மொழியாக கொண்டிருக்கவில்லையா? அது போலத் தான் இதுவும்.

படிக்க:
♦ நீலச்சட்டை பேரணி – சாதி ஒழிப்பு மாநாட்டு தீர்மானங்கள் !
வியட்நாம் டைரீஸ் : போராளிகளின் தேசம் ! பயண அனுபவக் கட்டுரை

பயணத்தின் போது நான் நேரில் கண்ட அனுபவம் ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். ஜீரோகாஸ்டர் மாவட்டம் தெற்குப் பகுதியில் கிரேக்க நாட்டு எல்லைக்கு அருகில் உள்ளது. ஒரு காலத்தில் கிரீஸ் அதற்கு உரிமை கோரியிருந்தது. அங்கு கிரேக்க மொழி பேசும் சிறுபான்மையின மக்கள் வசிப்பது உண்மை தான். கிரேக்கர்கள் ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவர்கள். ஆனால் அந்த மத நம்பிக்கை கொண்ட அனைவரும் கிரேக்கர்கள் அல்ல. அல்பேனிய மொழி பேசும் ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவர்களும் உண்டு.

நான் ஒரு மலைப் பகுதி கிராமத்தில் ஒரு குடும்பம் நடத்தும் விடுதியில் தங்கியிருந்தேன். அன்று நான் மட்டுமே ஒரேயொரு விருந்தாளி என்பதால் காலை உணவு சாப்பிட அழைத்திருந்தார்கள். அப்போது அவர்கள் ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களது மகன் மட்டுமே ஆங்கிலம் பேசத் தெரிந்திருந்த படியால், அந்தப் பகுதி மக்களின் இனம், மதம் பற்றி விசாரித்தேன். அந்தக் குடும்பத்தினர் மதத்தால் ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவர்கள், மொழியால் அல்பேனியர்கள். கிரேக்க மொழி பேசும் மக்களும் அங்கு வாழ்கிறார்களாம். அவர்கள் பரம்பரை பரம்பரையாக அல்பேனியாவில் வாழ்ந்து வருகின்றனர். அண்மைக் காலமாக சிலர் கிரேக்க பாஸ்போர்ட் எடுத்து வைத்திருக்கிரார்களாம். அதன் மூலம் ஐரோப்பாவுக்கு இலகுவாக பயணம் செய்ய முடியும்.

அது சரி, கத்தோலிக்கர்கள் எவ்வாறு இத்தாலியர் (லத்தீனியர்) ஆவார்கள் என்று நீங்கள் கேட்கலாம். கத்தோலிக்க மதத்தவர்கள் கரையோரப் பகுதிகளில் பெருமளவில் வாழ்கிறார்கள். உதாரணத்திற்கு டூரேஸ் (Durres) பட்டினத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது தலைநகர் திரானாவில் இருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடற்கரைப் பட்டினம். எனது பயணத்தின் கடைசி நாள் அங்கு தங்கியிருந்து தான் விமான நிலையத்திற்கு சென்றேன்.

நான் முன்னர் குறிப்பிட்டது போன்று, திரானா இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய நகரம். ஆனால் டூரேஸ் இரண்டாயிரம் வருடங்களாக நகரமாக இருந்து வருகின்றது! இன்றைக்கும் அங்கே ரோமர் காலத்தில் கட்டப்பட்ட விளையாட்டு மைதானம் (Amphitheatre) உள்ளது. பெருமளவு இடிபாடடைந்து விட்டாலும் அதன் வடிவம் மாறாமல் உள்ளது. அதற்கு எதிர்ப் புறத்தில் பைசாந்தின் கிரேக்கர்கள் (அவர்களும் தம்மை ரோமர்கள் என்றே அழைத்துக் கொண்டனர்.) கட்டிய Forum எனும் சந்தை மைதானம் உள்ளது. ஒன்றிரண்டு தூண்களும் பளிங்குக்கல் தரையும் இன்னமும் அங்குள்ளன.

இன்னும் உங்களுக்கு ஆதாரம் வேண்டுமென்றால் கடற்கரைப் பக்கம் சென்று பாருங்கள். அங்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வெனிஸ் நாட்டவர் கட்டிய காவற்கோபுரம் இன்னமும் உருக்குலையாமல் அங்கே உள்ளது. ஐநூறு வருடங்களுக்கு முன்னர் இத்தாலி என்ற தேசம் இருக்கவில்லை. ஆனால், வெனிஸ் என்ற நாடு இருந்தது. அதனை பிற்காலத்திய ஐரோப்பிய காலனியாதிக்க நாடுகளின் முன்னோடி எனலாம். மத்தியக் கடல் கரையோரத்தில் பல பகுதிகளில் வெனிஸ் வணிகக் காலனிகள் இருந்தன. ஓட்டோமான் படையெடுப்புகளுக்கு பின்னர் அவை மறைந்து விட்டன. இருப்பினும் பல நூறு வருடங்களாக அங்கு வாழ்ந்த மக்கள் இத்தாலிய(வெனிஸ்) வம்சாவளியினராக அல்லது இத்தாலிய கலப்பாக இருக்கலாம் அல்லவா?

இன்றைய டூரேஸ் நகரத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும் பங்கினர் இத்தாலியர் என்பது குறிப்பிடத் தக்கது. அதனால் அங்குள்ள ரெஸ்டாரன்ட் வணிகம் பெரும்பாலும் இத்தாலிய பயணிகளை குறிவைத்தே இயங்கி வருகின்றது. காணும் இடமெங்கும் பீட்சா கடைகள். உண்மையில் அங்கே மிகவும் மலிவான, தரமான பீட்சா உணவு கிடைக்கிறது. நான் அங்கு சென்றிருந்த நேரம் கடற்கரையில் திருத்த வேலைகள் நடந்து கொண்டிருந்தன. புதிதாக நடைபாதைகள் கட்டப் பட்டுக் கொண்டிருந்தன. கடற்கரை மணல் கூட இனிமேல் தான் கொண்டு வந்து தான் கொட்டுவார்கள் போலிருந்தது. அது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரும் காலம் அல்ல. அநேகமாக கடற்கரையில் பொழுதுபோக்க வந்தவர்கள் அனைவரும் உள்நாட்டவர் தான்.

டூரேஸ் கடற்கரையோரமாக அல்பேனிய விடுதலைப்போர் தியாகிகளை நினைவுகூரும் சிலை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. அது அல்பேனியா சோஷலிச நாடாக இருந்த காலத்தில் கட்டியது என்பது வடிவத்தை பார்த்தாலே தெரிகிறது. அல்பேனியாவை தற்போது கம்யூனிச விரோத அரசியல்வாதிகள் ஆண்டு வந்தாலும், இது போன்ற நினைவுச்சின்னங்களை அப்படியே வைத்திருக்கிறார்கள். லெனின், ஸ்டாலின், ஹோஷா சிலைகள் ஏற்கனவே அகற்றப் பட்டு விட்டன. அதனால், தற்போது அந்நாட்டுக்கு செல்லும் யாருக்கும் முன்னொரு காலத்தில் அது ஒரு கம்யூனிச நாடாக இருந்தது என்ற எண்ணம் தோன்றாது. ஆனாலும், அல்பேனிய விடுதலைப் போரில் கம்யூனிசப் போராளிகளின் பங்களிப்பை யாராலும் அழிக்க முடியவில்லை.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

(தொடரும்)

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

நானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை

கடற்கரைவாசிகள் – (மெரினா பீச்சில் குடியிருக்கும் மக்களின் வாழ்க்கை அனுபவம்)

சென்னை மெரினா கடற்கரை, காலை 6 மணி.

கண்களை போர்த்திய பனிமூட்டம், மயிர்க்கால்கள் விரைத்திடும் குளிர். வாழ்க்கைக்கு ஓய்வு கொடுத்தோரும் இளைஞர்களும் செல்லும் நீளமான நடைப்பயிற்சி சாலை. சாலை ஓரங்களை ஆக்கிரமித்து நின்ற கார்கள், இருசக்கர வாகனங்கள். இந்தச் சூழலுக்கு சற்றும் பொருந்தாத இன்னுமொரு காட்சியும் நம்மை வரவேற்றது. கக்கத்தில் கிழிந்த போர்வை, வெற்றுடம்பு, கலைந்த தலை, தூக்கக் கலக்கம். இவற்றுடன் மணற்போர்வையை விலக்கி வெளிவரும் மக்கள்.

யார் இவர்கள்?

அடுத்து என்ன செய்வது? எங்கே போவது? என்று ஆயிரம் கேள்விகளுடன் விடிந்த பொழுதை விரித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்கள், பிழைப்பு தேடி சென்னைக்கு வருபவர்கள், ஆதரவற்றோர்.

அவர்களிடம் நெருங்கிப் போவதே கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. யாரும் நம்மை சக மனிதனாகப் பார்க்கவில்லை. அவர்கள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. நம்மை நோக்கி இறுகிய பார்வை. “உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ”  என்ற உடல்மொழிக்கு மேல் அவர்களிடம் எதிர்வினை இல்லை. இருந்தாலும் சிலரிடம் அணுகினோம்.

பக்கிரி

தனது மகளை இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ள இவர், பூம்பூம் மாட்டுத் தொழிலிருந்து விடுபட்டு, தற்போது ஸ்டவ் பழுது பார்க்கும் வேலையை செய்து வருகிறார்.

“எங்கள பூம் பூம் மாட்டுக்காரன்னு கிராமத்துல கூப்பிடுவாங்க. வேளாங்கன்னி பக்கம் ஊரு. எங்க தாத்தா, அப்பன் காலத்துல காளைகளை வளர்த்து, அதை அலங்கரிச்சு கிராமம் கிராமமா போயி வாசல்ல நின்னு கையேந்துவாங்க. நெல்லோ, அரிசியோ, பழஞ்சோறா மடியில் விழுந்ததை எடுத்து வந்தாங்க.

இந்தக் காலத்துல அந்தப் பொழப்பு சரிப்படுமா? இப்ப காளைய வளர்க்க முடியுமா? கிராமமும் முன்ன மாதிரி செழுமையாவா இருக்கு! வயிறுன்னு ஒன்னு இருக்குதே, ஆளுக்கொரு புதுத் தொழில புடிச்சிகிட்டோம்.

ஸ்டவ் ரிப்பேர், குடை ரிப்பேர், பிளாஸ்டிக் தொழிலுன்னு (குடம், வாளி விற்பனை) இப்ப தெருத்தெருவா அலையுறோம். வருஷத்துக்கு ரெண்டு வாட்டி மெட்ராஸ் பக்கம் வருவோம். பொங்கல், தீபாவளின்னு வந்தா ஒருமாசம் இங்கேயே தங்கி பொழப்பப் பார்ப்போம். இந்த பீச்சுதான் எங்களோட வீடு. வெட்டவெளிதான் படுக்கை. குளிரு, வெயிலு எல்லாம் பழகிப்போச்சு. கீழே மேலேன்னு உடம்ப பிளாஸ்டிக் சீட்டுனால மூடிக்குவோம். தூங்கியும் தூங்காமலும் பல நாளு போகும். காலை விடிஞ்சதும் வேலைக்கு கௌம்பிடுவோம்.

படிக்க:
♦ மெரினா மூலிகை ஜூஸ் : பிழியப்படும் வாழ்க்கை !
♦ சிலிண்டர் விலை : தேர்தல் முடிஞ்சதும் வச்சான் பாரு ஆப்பு !

இத வுட்டாலும் வேற இடமில்லை. குளிக்கிறது, வெளிக்கு போறது எல்லாம் கட்டணக் கழிப்பிடம், ரயில்வே ஸ்டேசன்னு போகவேண்டியதுதான்.

தெரு மேல போகும்போது சிலபேரு காசு கொடுப்பாங்க; அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க சோறு, பழந்துணிகூட கொடுப்பாங்க. பசியெடுத்தா வாய்விட்டு கேப்போம். இப்படித்தான் எங்க பொழப்பு பிளாட்பாரம், பீச்சுன்னு கழியுது. இப்பெல்லாம் ஊருக்கு திரும்பும்போது 5000 ரூபாகூட தேற மாட்டேங்குது. இப்போ வந்து 10 நாளாகுது. கையில 300 ரூபாகூட இல்ல. தினமும் சாப்பாட்டுக்கே 150, 200-ன்னு ஆகுது. பல நாளு அதுவும் இருக்காது.

முன்ன மாதிரி சுத்த முடியல. எங்கள பொறுத்தவரைக்கும் காலு எந்தளவுக்கு சுத்துதோ அந்தளவுக்குத்தான் சம்பாத்தியம்.”

***

சுரேஷ்

மோளம் அடிச்சி காசு கேக்குறது என்னோட வேலை. பெரும்பாலும் பங்களா பக்கம் தலைவைக்கவே மாட்டோம். பகல்ல நோட்டமிட்டு நைட்ல திருடுற கும்பலான்னு கேட்டு திட்டி அசிங்கப்படுத்துவாங்க.

“தரங்கம்பாடி பக்கம் பொறக்குடி ஊரு. நாங்க கழைக்கூத்தாடி. இப்ப கம்பி மேலே நடந்தா யாரும் வேடிக்க பார்க்குறதில்லே. பொங்கல் முடிஞ்சதும் சென்னைக்கு வருவோம். எங்கே சுத்துனாலும் இங்கே வந்து படுத்துப்போம். இந்த இடம்தான் பாதுகாப்பு. ஒரு பக்கம் கடலு, மறுபக்கம் மீனவருங்க. எங்கள யாரும் தொந்தரவு பன்றதில்லே. ரோடு ரோடா போயி மோளம் அடிச்சி காசு கேப்போம். சிலபேரு கொடுப்பாங்க, யாரையும் தொந்தரவு பண்ண மாட்டோம். பெரும்பாலும் பங்களா பக்கம் தலைவைக்கவே மாட்டோம். பகல்ல நோட்டமிட்டு நைட்ல திருடுற கும்பலான்னு கேட்டு திட்டி அசிங்கப்படுத்துவாங்க.

நல்ல நாள்ல சில பேரு காருல வந்து சோத்து பொட்டலம், பிஸ்கட், துணின்னு கொடுப்பாங்க.

வெயில் காலத்துல மெட்ராஸ்ல இருக்க மாட்டோம். குடிக்க தண்ணிகூட கெடைக்காது. இப்பல்லாம் கிராமத்துப் பக்கம்கூட போக முடியல, கொழந்தைங்கள கடத்த வந்தீங்களான்னு தொறத்துறாங்க. பயமா இருக்கு.”

படிக்க:
♦ சாந்தோம் கடற்கரையில் டீ விற்கும் சந்தோஷ் ஊருக்கு போவாரா ?
♦ பொங்கல் : மண்ணைப் போற்றும் அறுவடைத் திருவிழாவா? கதிரவனை வணங்கும் திருவிழாவா?

***

அன்னபூர்னா

ரோடு மேல போன வீட்டுக்காரரு வந்தாத்தான் சோறு. அதுவரை இப்படியே கெடக்க வேண்டியதுதான்.

“சொந்த ஊரு சீர்காழி. ஏன் எங்கள பத்தி கேக்குற, ஏதாவது பணம் கொடுக்க போறீயா?

காலையிலேர்ந்து டீகூட குடிக்கல. பைசா இருந்தா ஏதாவது கொடு. எனக்கு ஒரே மண்ட வலி. பசி வேற…” என நம்மைப் பார்த்து நட்பாக சிரித்தார்.

“நீ சம்பாதிக்கிறத பேங்குல போட்டுடுறீயா?” என்று சீண்டினோம்.

“உடம்பு ஒரே காய்ச்சல், நடக்கக்கூட முடியல. ரோடு மேல போன வீட்டுக்காரரு வந்தாத்தான் சோறு. குழந்தைங்க இதுவரை எதுவும் சாப்பிடல. பையன் ஊருல எட்டாவது படிக்கிறான். அவனும் என்கூட வந்துட்டான். ஆனா, ரோட்டுக்குப் போகலாம் என்கூட வாடான்னா (பிச்சை எடுக்க), வரமாட்டேன்னு அடம்புடிச்சு அழுறான்” என்றார்.

நாம் பையனிடம், “மெட்ராஸ் பிடிச்சிருக்கா?” என்றோம்,

புடிச்சிருக்கு என்று தலையை ஆட்டினான்.

“பெரியவனானதும் என்ன செய்யப் போகிறாய்?” என்றோம்.

“பிளாஸ்டிக் வியாபாரத்துக்கு போவேன்” என்று மகிழ்ச்சி பொங்கினான்.

எட்டாவது படிக்கும் இந்தச் சிறுவனின் ஒரே ஆசை, பிளாஸ்டிக் கடை வைப்பதுதான். அவனுக்கு தெரிந்த கவுரவமான ஒரே தொழில் அதுதான்.

“ஏன் அம்மாகூட தெருவுக்கு போகமாட்டியா?” என்றதும் அவனது முகம் வாடியது; அந்தச் சிறுவனின் கண்களில் ததும்பிய நீர்த்திவளைகள் பீச்சிட்ட குண்டுகளாய் எமது நெஞ்சை உலுக்கியது.

***

சங்கீதா

சிறுவர்களின் குடை ராட்டினத்தின் அருகில் இரண்டு கைக்குழந்தகளுடன் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தார். “ஏம்மா” என்று குரல் கொடுத்த நம்மைப் பார்த்து மெல்ல எழுந்தார்.

“ஏன் குழந்தைகளோடு படுத்துக்கொண்டிருக்கிறீர்கள், வெளியூரா?” என்றோம்.

அவர் மேலும், கீழும் நம்மைப் பார்த்து எடைபோட்டு “நீங்கள் யார்?” என்றார்.

அவர் அனுமதியுடன் மணலில் உட்கார்ந்து, நம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு, தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

வீட்டுல சமைச்சு சாப்பிட ஆசையா இருக்கு. எறாத் தொக்கு, மீன் குழம்புன்னு எல்லாம் வப்பேன்…. இங்கே என்னதான் செய்ய முடியும்?

“எனக்கு சொந்த ஊரு மாயவரம். கோயம்பேடு மேட்டுக்குப்பத்தில் சொந்தக்காரங்க இருக்குறாங்க. நாங்க பொலுவா (அம்மி குத்துதல்) வேலை செய்யிறவுங்க. வேலையில ஒருத்தர்கிட்டே நேசமாகி அவரை கல்யாணம் கட்டிக்கொண்டேன். என் கணவரோட சேர்ந்து பட்டினம்பாக்கம் பிளாட்பாரத்திற்கு வந்தேன். அங்கே பக்கத்தில் இருந்தவங்க சரியில்லை. அதனால, பீச்சுக்கு வந்துட்டோம். இதுதான் எங்களுக்கு வீடு, படுக்கை எல்லாமும்” என்றார்.

குழந்தைகள் வெற்றுடம்புடன் மூக்கில் ஒழுகியபடி மணலில் சோர்ந்து கிடந்தனர். நம் அருகில் வந்து தோளோடு தோள் சாய்ந்து ஒட்டிக்கொண்டனர்.

படிக்க:
♦ இந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் !
♦ பயங்கரவாத பாஜக : இந்துக்களுக்கு ஆயுதப் பயிற்சி வேண்டுமாம் !

மேலும், தொடர்ந்தார்.

“ரெண்டாவது குழந்தை பொறக்குற வரைக்கும் முதல் குழந்தைய இடுப்புல சுமந்து தெருத்தெருவா அலைஞ்சேன். இப்போ ரெண்டு குழந்தைங்குறதுனால வெளிய போறது சிரமமாயிருக்கு.

எங்க வீட்டுக்காரரு ரோட்டோரமா காத்துகிடந்து, கெடச்ச வேலைய செய்வாரு. பெயின்ட் அடிக்கிறது, கொத்தனாரு, கல்யாண வேலை, கிளீனரு… இப்படி எதாவதொரு வேலைக்குப் போயி சம்பாதிச்சு வருவாரு. அந்த வேலைக்கும் இப்ப மேஸ்திரிங்க வந்துட்டாங்களாம். நேரடியா யாரும் கூப்பிடுறதில்லேன்னு கஷ்டப்படுறாரு. எனக்கும் வேலை இல்லை, காலையிலேருந்து குழந்தைகளுக்கு ஒன்னுகூட வாங்கிக் கொடுக்க முடியல” என்றார்.

“இயற்கை உபாதைகளுக்கு என்ன செய்வீங்க?” என்றோம்.

தொடர்ந்தார், “அவசரத்துக்கு பக்கத்துல இருக்குற கக்கூசத்தான் நம்பியிருக்கோம். நான் குளிச்சு மூனு நாளாகுது. உடம்ப சுத்தம் பண்ணக்கூட முடியாது. குளிக்கணும், துணி துவைக்கனுமுன்னா, இங்கேயிருந்து ட்ரெயின் ஏறி வேளச்சேரி ஏரிப்பக்கம் போவோம். இப்போ, குழந்தைங்களயும் தூக்கிக்கிட்டு அலையவேண்டி இருக்கு.

முந்தானையில முடிச்சு போட்டுத்தான் நைட்ல தூங்க வைக்க வேண்டியிருக்கு. இங்கே குழந்தைங்க திருட்டு வேற அதிகம். அந்த பயத்தால ராவுல சரியாக்கூட தூங்குறதில்லை. அதான் பகல்ல கண்ணசந்துட்டேன். சொந்தக்காரங்ககிட்டே போகணுமுன்னாலும் அங்கேயும் பிளாட்பாரம்தான். என்ன பண்றது, சொந்தமா ஒரு வாடகை வீடு இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்! வீட்டு சோறு சாப்பிட ஆசையா இருக்கு. எறாத் தொக்கு, மீன் குழம்புன்னு எல்லா குழம்பும் நல்லா வப்பேன்…. இங்கே என்னதான் செய்ய முடியும்?” என்று நம்மைப் பார்த்துச் சிரித்தார். வேதனையின் வெளிப்பாடாய் அந்தச் சிரிப்பு நமது நெஞ்சை இன்னமும் குத்திக்கொண்டே இருக்கிறது.

***

கனகவள்ளி

கண்டவனும் முறைச்சுப் பார்க்குறான். வண்ட வண்டயா பேசினாலும் போக மாட்டேங்குறாய்ங்க. கல்ல எடுத்து அடிச்சாத்தான் போவானுங்க போல. சீக்கிரம் ஊரு பக்கம் போயிடணும்.

பார்ப்பதற்கு சிறுமிபோல இருந்தாலும், பெரிய மனுஷிபோல உட்கார்ந்திருந்தார். தோரணை மட்டுமல்ல, பேச்சும் அப்படித்தான் இருந்தது.

“எங்களப் பத்தி கேட்டு என்ன பண்ணப் போறீங்க?” என்றார்.

சிறு அறிமுகத்துக்குப் பிறகு,

“எங்கள தப்பான எண்ணத்துல பாக்குறவுங்கதான் நிறைய பேரு இருக்காங்க. மெட்ராஸ்ல வீடு இல்லாதவுங்க பாடு ரொம்ப கஷ்டம். பாக்குறவுங்க மதிக்க மாட்டாங்க. அசிங்கம் பண்றாய்ங்க.

ப்ளஸ் டூ படிச்சிருக்கேன். என்னோட அப்பா அம்மா கூலிக்காரங்க. நானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன். 7 மாசமாகுது. அவங்க வீட்டுல என்ன மதிக்கல. எப்பப் பார்த்தாலும் மூஞ்சிய காமிச்சிகிட்டே இருப்பாங்க. அதான் சரிப்படாம கௌம்பி வந்துட்டோம்.

படிக்க:
♦ ஓட ஓட விரட்டியது கிராமம் ! ஓடு… ஓடு… என்று துரத்துகிறது நகரம் !
♦ வண்ணக் குடைகள் சாயம்போன வாழ்க்கை ! – படக்கட்டுரை

அவன் (கணவன்) வேலைக்கு கௌம்பிட்டான். கொஞ்சம் பணம் சேர்ந்தா ஊருக்குப் (கடலூர்) போயிடுவோம். இப்ப கையில காசு பணம் எதுவுமில்ல. இந்த நெலமையில அங்கே போனா, மாசம் மாசம் வாடகை எப்படி கொடுக்குறது, எப்படி சாப்பிடுறதுன்னு ஒரே யோசனையா இருக்கு. இங்கேயும் (பீச்) நிம்மதியா இருக்க முடியல. கொஞ்சம்கூட மரியாதையாவும் வாழ முடியல. கண்டவனும் முறைச்சுப் பார்க்குறான். வண்ட வண்டயா பேசினாலும் போக மாட்டேங்குறாய்ங்க. கல்ல எடுத்து அடிச்சாத்தான் போவானுங்க போல. சீக்கிரம் ஊரு பக்கம் போயிடணும்.

இங்கே வீடு இல்லாதவனுக்கு வேல இல்லேங்குறாங்க; வேலை இல்லாம எப்படி வீடு புடிக்க முடியும்? வாடகை கொடுக்க முடியும்? அது இவங்களுக்குப் புரியாதா?” என்றார்.

அவருக்கு என்ன பதிலைச் சொல்வது என்ற யோசனையில் எழுந்தோம்,

உடற்பயிற்சி முடித்தவர்கள் களைப்பு நீங்க இளநீர், மூலிகைச்சாறு பருகினார்கள். சிலர், வாகனங்களில் வீட்டை நோக்கிப் பறந்தனர். டயர்களில் ஒட்டிக்கொண்டிருந்த மணற்துகள் பொளபொளவென சிதறி மீண்டும் கடற்கரை தழுவியது.

வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

பொங்கல் : மண்ணைப் போற்றும் அறுவடைத் திருவிழாவா? கதிரவனை வணங்கும் திருவிழாவா?

0
நா. வானமாமலை

தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 03

முதல் பாகம்

பொங்கல் விழா

மிழ்நாட்டில் தை மாதம் அறுவடை காலமாக இருந்தது. இப்பொழுது காலநிலை மாறுபாட்டால் பங்குனி அறுவடைக் காலமாக ஆகிவிட்டது. முற்காலத்தில் தைப் பொங்கல் விழா அறுவடை விழாவாகவே கொண்டாடப்பட்டது. இன்று தைமாதம் அறுவடைக் காலமாக இல்லாவிட்டாலும் வழக்கத்தையொட்டி இன்று தைமாதப் பிறப்பை அறுவடை விழாவாகவே தமிழ் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அந்நாளில் கதிரவனைத் தமிழ் மக்கள் வணங்குவதாக ‘கல்கி’ கூறுகிறது. ஏனெனில் கதிரவனே பூமியின் செழிப்புக்குக் காரணம் என்று ‘கல்கி’ கருதுகிறது. கல்கியின் கருத்து தற்கால விஞ்ஞானக் கருத்துக்கு ஒருவாறு ஒத்திருக்கலாம். ஆனால் வரலாற்றுக்கோ, வழக்கத்துக்கோ, மரபுக்கோ அது பொருந்துவதாக இல்லை. பொங்கல் எவ்வாறெல்லாம் கொண்டாடப்பட்டு வந்தது, இன்று பொங்கல் விழாக் கொண்டாடப்படும் முறையில் வரலாற்று எச்சங்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பொங்கல் விழாவின் உண்மையான தன்மை பற்றி நாம் முடிவுக்கு வர வேண்டும்.

பொங்கல் விழாவிற்கும் பாவை நோன்பிற்கும் தொடர்பு உண்டு. பாவை நோன்பு மார்கழி மாதம் தொடங்கி தை மாதப் பிறப்பன்று முடிவது. ஏழாம் நூற்றாண்டில் பாவை நோன்பு கொண்டாடப்பட்ட விதத்தைக் குறித்து ‘திருப்பாவை’யினின்று நாம் அறியலாம்.

வையத்து வாழ்வீர்காள்!
நாமும் நம் பாவைக்கு,
செய்யும் கிரிசைகள்,
கேளீரோ பாற் கடலுள்
பையத் துயின்ற
பரமன் அடிப்பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம்

பாவை நோன்பு.

நாட் காலே நீராடி,
மையிட்டு எழுதோம்
மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம்
தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும்
ஆந்தளையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி
உகந்தேல் ஓரெ ம்பாவாய்!

மார்கழி மாதம் முழுவதும் கன்னியர்கள் மேற்கண்ட முறையில் நோன்பு நோற்கிறார்கள்.

இந்நோன்பு யாரை மகிழ்விக்க ? கண்ணனை மகிழ்விக்கவா? இல்லை. அவன் அடிபாடி அவர்கள் நோன்பு நோற்றாலும் நோன்பு பாவை நோன்பே; பாவையை மகிழ்விக்கவே. பாவை யார்? பாவை மண்ணாலோ, சாணத்தாலோ, மணலாலோ செய்த படிமம். இது பூமியையே குறிக்கும். இந்நோன்பு பூமியை மகிழ்விக்கவே நோற்கப்படுகிறது. பூமி மகிழ்ந்தால் செழிப்பைத் தருவாள். ஆண்டாள் ஆயர் மகளிர் கொண்டாடும் பாவை நோன்பை வருணிக்கிறாள். ஆகையால் அவர்களுக்குச் செல்வச் செழிப்பு எதுவோ, அதனைப் பாவை அருளும் என்று பாடுகிறாள்.

திருப்பாவை.

‘ஓங்கி உலகளந்த
உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச்
சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம்
திங்கள் மும்மாரி பெய்து
ஓங்குபெரும் செந்நெல்
ஊடு கயல் உகள்
பூங்குவளைப் போதில்
பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து
சீர்த்த முலைப்பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும்
வள்ளற் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம்
நிறைந்தேல் ஓர் எம்பாவாய்’

ஆயர் மகளிர் விரும்பும் செல்வம் எதுவென்று ஆண்டாள் மேற்கண்ட செய்யுளில் குறிப்பிடுகிறாள். இச்செல்வத்தைப் பாவை தருவாள். அவள் தருவதற்கு, ஆயர் மகளிர் தங்கள் உடல் வருந்த நோன்பு நோற்கிறார்கள். பூமி செழிப்பைத் தருவதற்கு இவர்கள் உடலை வருத்துவானேன்? இவ்வினாவிற்கு விடைகாண தொல்குடி மக்களின் உலகக் கண்ணோட்டத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இயற்கையின் இயக்க விதிகளைத் தொல்குடி மக்கள் அறிந்தவர்களல்லர். கூட்டுழைப்பினால் அவர்கள் இயற்கையோடு போராடினார்கள். போராட்டத்தின் முதல் வெற்றியே புன்செய்ப் பயிர்த்தொழில். அதற்கடுத்த வெற்றி ஆடு மாடுகளைப் பழக்கியது. மனிதன் தனது செயவால் இயற்கையினின்று தனக்குத் தேவையானவற்றைப் பெற முடியுமென்று கண்ட தொல்குடி மக்கள் இயற்கை விதிகளோடு எவ்விதத் தொடர்புமில்லாத தங்களது செயல்களால் இயற்கையை வசப்படுத்த முடியுமென்று நம்பினார்கள். இடி முழக்கம் போன்ற ஓசைகளை எழுப்பிக் கூத்தாடினால், தங்களைப் பார்த்து இயற்கையும் மழையைப் பொழியும் என்று எண்ணினார்கள். அதற்காக ஒரு கூத்தும் வகுத்துக் கொண்டார்கள்.

காற்றிலிருந்து பயிரைப் பாதுகாக்கக் காற்றில் அசைந்தாடுவதுபோல் நடனமாடி அதைப்போலப் பயிரையும் ஆடும்படிக் கேட்டுக் கொண்டார்கள். அசைந்தாடினால் காற்று பயிரை வேரோடு பிடுங்கி எறியாது என்பது அவர்கள் நம்பிக்கை. உலக முழுவதிலும் இத்தகைய வழக்கங்கள் இருந்திருக்கின்றன. தொல்குடி மக்களினத்தவர் பலரிடம் இத்தகைய வழக்கங்களைக் காணலாம். இதனை நாம் (Magic) மந்திரம் என்றழைக்கிறோம்.

இம்மந்திரம்தான் மனிதனுக்கும் இயற்கைக்கும் ஏற்பட்ட முதல் தொடர்பு. மனிதன் மந்திர முறைகளினால் இயற்கையை வசப்படுத்த முயன்றான். இயற்கையை அறிய புறவய முறைகள் தோன்றிய பின் மந்திரத்தைக் கொன்று விட்டு, அதன் வயிற்றில் விஞ்ஞானம் தோன்றியது. இம்மந்திரத்தின் எச்சமே பாவை நோன்பு. தங்கள் உடலை வருத்தித் தூய்மையாக இருந்தால் பாவையும் வரந்தரும் என்ற ஆயர் மகளிரது நம்பிக்கையே திருப்பாவையில் கவிதா ரூபத்தில் வெளிப்படுகிறது.

இதை உறுதிப்படுத்த ஒரே ஒரு சான்று காட்டுவோம். மந்திர முறையில், இயற்கைச் சக்திகளை அழைத்து மனிதன் கட்டளையிடுவது போல் சொற்களை மறுபடி உச்சரிப்பது வழக்கம். தெய்வத்தை வேண்டிக் கொள்வதென்பது மனிதன் தன் உடலில் சக்தியை வரவழைக்கவே; சக்தி பெற்றதாக அவனுக்குத் தோன்றியதும் இயற்கைச் சக்திகளை நோக்கி மனிதன் கட்டளைகளைப் பிறப்பிப்பான். இவ்வாறு ஆயர் மகளிர் மழையைப் பார்த்துக் கூறுவதைக் கேளுங்கள்;

‘தாழாதே சார்ங்கம்
உதைத்த சரமழை போல்
வாழ உலகினில்
பெய்திடாய்; நாங்களும்;
மார்கழி நீர் ஆட
மகிழ்ந்தேல் ஓர் எம்பாவாய்;
‘நாங்கள் வாழ நீ பெய்’

என்ற மந்திர மொழியாக அவர்கள் கட்டளையிடுகிறார்கள்.

மழை பெய்து பூமி விளைந்து அறுவடை ஆனபின் பாவைக்கு அவர்கள் செய்யப்போகும் விழாச் சிறப்புக்களைப் பற்றியும் முன்கூட்டியே ஆயர் மகளிர் சொல்லுகிறார்கள். அதுதான் அறுவடைத் தினத்தன்று அவர்கள் பாவைக்குச் செய்யப்போகும் சிறப்பான விழா.

கூடாரை வெல்லும் சீர்க்
கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு
யாம் பெறும் சம்மானம்
நாடும் புகழும்
பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள் வளையே
தோடே, செவிப் பூவே
பாடகமே என்று அனைய
பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம்
அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து
முழங்கை வழிவார
கூடி இருந்து
குளிர்ந்தேல் ஓர் எம்பாவாய்!
***
கறவைகள் பின் சென்று
காரனம் சேர்ந்துண்போம்.

அறுவடையின் பயனை அவர்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சியே பாவைக்குச் செய்யும் விழா.

இவ்விழாவைக் கொண்டாடுபவர்கள் பெண்கள். ஆரம்பத்தில் உழவுத் தொழிலைக் கண்டு பிடித்தவர்கள் பெண்களாதலால் அவர்களே அவ்விழாவிற்கு உரியவர்களாகிறார்கள். பாவையும் பெண் தெய்வம். அதன் பூமியின் படிமம். அவளை மந்திரம் மூலமும் பாட்டின் மூலமும் மகளிர் மகிழ்விக்கிறார்கள். மகளிர் கண்ணனை வழிபடுகிறார்கள் என்றாலும் கண்ணனிடம் பறை மட்டுமே கேட்கின்றார்கள். பறை எதற்கு? குரவைக் கூத்தாடப் பறையை முழக்க வேண்டி பறையைக் கண்ணனிடம் பெற்று அவர்கள் பாவைப் படிமம் செய்து அதன் முன் குரவையிடுவார்கள். அவர்கள் சம்மானம் பெறுவது கண்ணனிடமல்ல. பாவையிடமே. இன்றும் பொங்கல் பொங்கும் போது பெண்கள் குரவையிடுகிறார்கள். இது மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் குரல் ஒலி. இது குரவைக் கூத்தின் எச்சம்.

இவ்விழா புறநானூற்றுக் காலத்தில் கொண்டாடப்பட்டது. நெல் களத்தைப் போர்க்களத்துக்கு உவமை கூறுவது பண்டைப் புலவர் மரபு. குறுங்கோழியூர் கிழாரென்னும் புலவர் நெல் களத்தை வருணித்து அதனைப் போர்க்களத்துக்கு உவமை கூறுகிறார். அன்று அறுவடை விழா ’சாறு கொண்ட களம்’ என்று புலவர் கூறுகிறார். சாறு என்றால் விழா. அறுவடை விழாவைப் பற்றி இச்செய்யுளிலிருந்து நமக்குச் சில வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டு உழவர் பொங்கல் கொண்டாடிய முறையைப் பற்றி இச்செய்யுள் அறிவிக்கிறது.

‘வலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
வாய் கரும்பின் கொடிக் கூரை
சாறு கொண்ட களம் போல,
வேறு வேறு பொலிவு தோன்ற
குற்றானா வுலக்கையால்
கலிச் சும்மை வியாலங் கண்’

நெற் கதிர் வரிந்த கூரை வீடுகள். கரும்பை வாசலில் தோரணமாகக் கட்டியிருக்கிறார்கள். இவ்வலங்காரம் விழா நாளை அறிவிக்கின்றது. தானியம் குவியலாகக் கிடக்கிறது. உலக்கையைக் கழுவி அணி செய்து வைத்திருக்கிறார்கள். அது நெல் குற்ற அல்ல. வள்ளக் கூத்தாடு களத்தின் நடுவே கிடத்துவதற்காக வைத்திருக்கிறார்கள். இவ்வாறு விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழா வள்ளைக் கூத்து நெல் குற்றுவது போல ஆடும் கூத்து. ஆகவே பெண்கள் ஆடும் கூத்து. இக்கூத்து விழாவில் மகளிரின் பங்கை வலியுறுத்தும். உழவுத் தொழிலின் ஆரம்ப காலத்தில் மகளிர் அத்தொழிலில் ஈடுபட்டிருந்ததன் எச்சமாக இக்கூத்து காணப்படுகிறது.

அறுவடை விழா, அறுவடையன்று தான் நிகழும். அன்று உழவர் மனமகிழ்ச்சி கொள்வார்கள். அன்று போல் என்றும் மகிழ்ச்சி கொள்ளும் உழவர் பெருமக்கள் வாழும் நாட்டையுடையவன் எங்கள் அரசன் என்று பிசிராந்தையார், கோப்பெருஞ் சோழனைப் புகழ்ந்து பாடுகிறார். ஒரு நாள் விழாவன்று வயிறு நிறைந்தாற் போதாது; என்றும் நிறைய வேண்டும் என்ற இன்றைய உழவரது கோரிக்கையைக் கவிஞர் தமது ஆர்வமாகவும் வெளியிடுகிறார்.

கோப்பெருஞ்சோழன்.

‘நுங்கோ யாரென வினவின் எங்கோ
களமர்க் கரித்த விளையல் வெங்கள்
யாமைப் புழுக்கிற் காமம் வீடவாரா
வராற் கொழுஞ் சூடங் கவுளடாஅ
வைகு தொழின் மடியு மடியா விழுவின்
யாணர் நன்னாட்டுள்ளும் பாணர்
பைதற் சுற்றத்துப் பசிப்பகை யாகி
கோழியானே கொப்பெருஞ் சோழன்’
(புறம். 282)

‘உழவர்கள் நாள்தோறும் விழாக் கொண்டாடுகிறார்கள். நாள்தோறும் ஆமை இறைச்சியும், மீன் கறியும் உண்டு கள் குடிக்கிறார்கள். தினந்தோறும் புது வருவாய் கிடைக்கிறது. ஆடல் பாடல் கலைஞர்கள் பசியறியாதவர்களாக உழவர்களை மகிழ்விக்கிறார்கள். இந்நாட்டின் தலைநகரான கோழியில் கோப்பெருஞ் சோழன் அரசு விற்றிருக்கிறான். அவனே எங்கள் அரசன். அறுவடை நாள் ஆண்டின் ஒருநாள் விழாவாகப் போய்விடக் கூடாது. தினந்தோறும் அறுவடை விழாவாக, செல்வச் செழிப்போடு உழவர்கள் வாழ வேண்டும்’ என்ற கவிஞரின் கனவை இச்செய்யுள் சித்திரிக்கிறது.

படிக்க:
ரஜினி : கிறுக்கா … காரியக் கிறுக்கா ?
தமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் ! | வி.இ.குகநாதன்

பொங்கல் விழாவிலே பூமியை வாழ்த்தியது போலவே, மகளிர் நீர் தரும் ஆற்றையும் வாழ்த்தினார்கள். ஆறு பெண் பாலாகக் கருதப்பட்டது. தைந்நீராடல் என்பது பண்டைய வழக்கம். இவ்வழக்கத்தைப் பரிபாடல் வருணிக்கிறது. வையை நதிக்குப் பொங்கலிட்டுப் பூசனை புரிகின்றனர் மதுரை நகர மகளிர்; நாட்டுக்கு வளம் தர வேண்டுமென வையை நதியை வேண்டுகிறார்கள். பின்பு தங்கள் தாய்மாரருகில் நின்று நீராடுகிறார்கள். நீராடும் போது வையையை நோக்கிப் பாடுகிறார்கள்.

‘வையை நினக்கு மடைவாய்த் தன்று
மையாடல் ஆடல் மழுபுலவர் மாறு எழுந்து
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பில் அவர், அவர்
தீ எரிப்பாலும் செறிதவம் முன்பற்றியோ,
தாயருகா நின்று தவத்தை நீராடுதல்
நீ உரைத்தி வையை நதி!’
(பரிபாடல் -11)

அவர்கள் வையையை வாழ்த்தும்போது தங்கள் வேண்டுகோள்களையும் வையையிடம் சமர்ப்பிக்கிறார்கள்.

‘நீ தக்காய், தைந்நீர் நிறம் தெளித்
தாய்’ என்மாரும்,
கழுத்து அமை கை வாங்காக்
காதலர்ப் புல்ல
விழுத்தகை பெறுக! என
வேண்டுதும்’ என்மாரும்,
‘கிழவர் கிழவியர்’ என்னாது
ஏழ் காறும்
மழ ஈன்று மல்லற் கேள்
மன்னுக!’ என்மாரும்,
(பரிபாடல் -11)

சிறந்த கணவனைப் பெறவேண்டுமென தை நீராடும் மகளிரின் வேண்டுகோள் வையையிடம் சமர்ப்பிக்கப்படுகிறது.

எனவே, பொங்கல் விழா உழவர்களின் ஆர்வங்களை வெளியிடும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. அவர்கள் வாழ்க்கை, விழாவன்று மட்டும் வளம் பெற்று விளங்காமல் என்றும் வளம் பெற வேண்டும் என்பதே அவர்கள் ஆர்வம். மந்திர மொழியின் மூலமும், வணக்கத்தின் மூலமும் இயற்கையை வசப்படுத்த அவர்கள் செய்த முயற்சி இன்று வேறு வழியில் நிறைவேறி வருகிறது. மனிதன் விஞ்ஞானத்தின் மூலம் இயற்கையை வென்று வருகிறான். இயற்கையளிக்கும் சக்தியைத் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்தி, உழவர்களை அடிமைப்படுத்தும் சுரண்டல் வர்க்கத்தை எதிர்த்துத் திரளும் உழவர் பெருமக்கள் நாள்தோறும் பொங்கல் விழாக் கொண்டாடும் காலத்தை நோக்கி முன்னேறுகிறார்கள்.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் !

சென்னை பல்கலைக் கழகத்தில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் சார்பில், அதன் நான்காம் ஆண்டு விழாவையொட்டி சென்னை நிருபர்கள் சங்க அரங்கில் கடந்த 03.02.2020 அன்று சிறப்பு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

அந்நிகழ்வில் பேராசிரியர் அ. கருணானந்தன் மற்றும் திரு ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அந்நிகழ்வின் காணொளி தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பாருங்கள்… பகிருங்கள்…

பாஜக பிடியில் உயர்கல்வி | பேராசிரியர் கருணானந்தன்

இந்தியா முழுவதும் பல்கலைக்கழகங்களில் தனது ஆதரவாளர்களை துணைவேந்தர்களாக நியமிப்பது முதல் புதிய கல்விக் கொள்கை வகுத்து அதன் மூலம் கல்வியை காவிமயம் மற்றும் கார்ப்பரேட் மயமாக்கும் சதியை பாஜக எப்படி செய்து வருகிறது என்பதை உணர்த்திப் பேசுகிறார் பேராசிரியர் கருணானந்தன்.

இந்துக்களின் எதிரி பாஜக | ஆளூர் ஷாநவாஸ்

பாஜக-வும் ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரமும் தாம் கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் முசுலீம்களுக்கு மட்டுமே எதிரானவை என்பது போன்ற தோற்றத்தையே ஏற்படுத்துகின்றன. ஆனால் உண்மையில் அது குறித்த விவாதங்கள் நடந்து கொண்டிருக்கையில், ஒட்டுமொத்த இந்தியாவையும், பெரும்பான்மை இந்துக்களையும் புதைகுழியில் தள்ளும் திட்டங்களை நிறைவேற்றிச் செல்வதை அம்பலப்படுத்தி பேசியிருக்கிறார், ஆளூர் ஷாநவாஸ்.

நீங்கும் நினைவுகள் எங்கோ போகுதே பாத்திமா.. | ஸ்ரீஜா – கிளாரா பாடல்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டும் வரும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் 4-ம் ஆண்டு நிறைவு விழாவில் வழக்கறிஞர் ஸ்ரீஜா மற்றும் சிறுமி கிளாரா ஆகியோர் பாடிய பாடல்கள் !

அனைத்து காணொளிகளையும் பாருங்கள் ! பகிருங்கள் !

தொகுப்பு: