நாடாளுமன்றம் பஜனை மடம்:
எதிர் கட்சிகளே மக்களிடம் செல்லுங்கள்! | தோழர் வெற்றிவேல்செழியன்
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
நாடாளுமன்றம் பஜனை மடம்:
எதிர் கட்சிகளே மக்களிடம் செல்லுங்கள்! | தோழர் வெற்றிவேல்செழியன்
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
“தீண்டாமை ஒரு பாவச்செயல்; பெருங்குற்றம்; மனிதத்தன்மையற்ற செயல்” என்று கற்றுக்கொள்ள வேண்டிய பள்ளி மாணவர்களின் நெஞ்சில் “சாதிவெறி” எனும் நஞ்சை விதைத்து தீண்டாமையை ‘புனித’ செயலாக கருதக்கூடிய நிலைமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள், ஆதிக்கசாதி வெறியர்கள். அதன் வெளிப்பாடுதான், தாழ்த்தப்பட்ட மாணவர் சின்னத்துரை மீது ஆதிக்கசாதி வெறி பிடித்த மாணவர்கள் நடத்தியிருக்கும் கொலைவெறித் தாக்குதல்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி கிராமத்தில் தலித் பறையர் சமூகத்தைச் சேர்ந்த அம்பிகாபதி தனது மகன் சின்னத்துரை மற்றும் மகள் சந்திராசெல்வியுடன் வசித்துவருகிறார். வீட்டு வேலைகளுக்கு சென்றுதான் தன் பிள்ளைகளை படிக்க வைக்கிறார். அவரின் மகன் சின்னத்துரை வள்ளியூரில் உள்ள கண்கார்டியா மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஒன்பதாம் தேதி இரவு பத்து மணியளவில் சின்னத்துரையுடன் படிக்கும் சக மாணவர்களான சுப்பையா, செல்வரமேஷ், மற்றொரு மாணவர் என மூன்று பேர் சின்னத்துரையின் வீட்டிற்குள் புகுந்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கூர்முனையைக் கொண்டு குத்தியும் தாக்கியுள்ளனர். சின்னத்துரைக்கு தோள்பட்டை, கால் பாதம், கைகள் என 15 இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இரு கை எலும்புகளும் நொறுங்கியுள்ளன. தன் அண்ணன் மீதான தாக்குதலை தடுக்க முயன்ற சந்திராசெல்வியையும் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளார்.
படிக்க : எங்களை மன்னித்துவிடு ஜெகதீஸ்வரன்! நாங்கள் சுரணையற்றவர்களாக இருக்கிறோம்!
அம்பிகாபதி மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பாத்திமா ஆகிய இருவரும் கூச்சலிட்டதால், தாக்கிய மூவரும் தப்பித்து சென்றுவிட்டனர். தன் பேரன் தன் கண்முன்னாலேயே கொடூரமாக தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்த சின்னத்துரையின் தாத்தாவான கிருஷ்ணன் என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சின்னத்துரையின் ரத்தம் அவரது வீட்டுக் கதவிலும், படிகளிலும், பாத்திரங்களிலும் மற்றும் தெருக்களிலும் படிந்து கிடப்பதை பார்க்கும் போதே நம் நெஞ்சம் பதறுகிறது. ஆதிக்கசாதி வெறி பிடித்த மாணவர்கள் சின்னத்துரையை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனே இக்கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர். சின்னத்துரையின் கழுத்தையும் தலையும் குறிவைத்தே தாக்கியுள்ளனர். ஆனால் சின்னத்துரை அத்தாக்குதல்களை தன்னுடைய கைகளைக் கொண்டு தடுத்ததால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்பிழைத்துள்ளார்.
தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சின்னத்துரையும் அவனது தங்கையும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகைய கொலைவெறித் தாக்குதலில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டிருப்பதும் அதற்கான காரணமும் தமிழ்நாடு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களிடம் சின்னத்துரை, தன் மீது சாதிய வன்கொடுமை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சுப்பையா மற்றும் செல்வரமேஷ் ஆகிய இருவர் மீதும் புகார் அளித்ததே இத்தாக்குதலுக்கான காரணம் ஆகும்.
சுப்பையா மற்றும் செல்வரமேஷ் ஆகிய இருவரும் சின்னத்துரையை சாதிரீதியாக ஆபாசமாக பேசியும், இழிவாக நடத்தியும் உள்ளனர்; பணத்தை மிரட்டிப் பிடுங்கியுள்ளனர்; சிகரெட் வாங்கிவரச் சொல்லி அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்து பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த சின்னத்துரையை, அவனது ஆசிரியர்கள் அழைத்து நடந்ததை விசாரித்து ஆறுதல் கூறி சின்னத்துரையிடம் புகார் கடிதத்தை எழுதி வாங்கியுள்ளனர்.
“பறையர் சாதியைச் சேர்ந்த நீ ஆதிக்கசாதியைச் சேர்ந்த எங்கள் மீதே புகார் கொடுக்க துணிந்து விட்டாயா?” என்ற சாதிவெறித் திமிரிலேயே தாக்குதல் நடத்தியுள்ளனர், சுப்பையாவும் செல்வரமேசும். “பறத் தேவடியா பயலே எங்களுக்கு எதிராக புகார் கொடுப்பியா” என்று கத்திக் கொண்டே தலையிலும் கழுத்திலும் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். அந்த அளவிற்கு ஆதிக்கசாதி வெறியர்களால் அவர்களின் நெஞ்சில் “சாதி வெறி” எனும் நஞ்சு விதைக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களான இவர்கள், இத்தாக்குதலை ஒரு கூலிப்படையைப் போல திட்டமிட்டு நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்து செல்வதற்கான வழிகளை குறித்து வைத்துக் கொள்வதற்காக மாலை 6 மணி அளவில் செல்வரமேஷ், தன் பாட்டி மற்றும் சித்தப்பாவை அழைத்துக்கொண்டு சின்னத்துரை வீட்டிற்கு சென்றுள்ளார்.
கடந்த பத்தாம் தேதி போலீசு, சின்னத்துரையின் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய மூன்றுபேர் மற்றும் அவர்களுக்கு உதவி செய்த செல்வதுரை, வான்முத்து, கல்யாணி ஆகிய மூவர் என ஆறு பேரை கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரும் பதினேழு வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள். தற்போது மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கொடூர தாக்குதலில் ஈடுபட்ட மூவரும் காவல்நிலையத்தில் சிறிதளவும் குற்றவுணர்ச்சி இல்லாமல் சிரித்து விளையாடிக் கொண்டிருந்ததாய் தன்னுடைய ஆதங்கத்தை முகநூல் வீடியோவில் வெளிப்படுத்துகிறார், சமூக செயற்பாட்டாளரான எவிடென்ஸ் கதிர். இச்சிறுவர்கள் மட்டுமல்ல, மாமன்னன் படத்தில் வரும் ரத்தினவேலு கதாபாத்திரத்தை கொண்டாடும் ஆதிக்கசாதி வெறியர்கள் இக்கொடூர தாக்குதலுக்காகத் துளியும் வருத்தப்படப் போவதில்லை.
திருநெல்வேலி மாவட்டமே ஆதிக்கசாதி வெறியர்களின் கோட்டையாகத் தான் உள்ளது. சின்னத்துரை மீது நடந்த தாக்குதல், கடந்த மூன்று மாதத்தில் நாங்குநேரியில் நடந்த மூன்றாவது தாக்குதல் என்று கூறுகிறார், சின்னத்துரையின் பெரியப்பா தளவாய் மணி. இக்கொடுமைகளை சகித்துக்கொள்ள முடியாமல் 50 குடும்பங்கள் கிராமத்தை விட்டு வேறு ஊர்களுக்கு சென்றுவிட்டதாக வருத்தத்துடன் கூறுகிறார்.
மேலும், சின்னத்துரை படிக்கும் பள்ளியில் மட்டுமல்லாமல், திருநெல்வேலி மாவட்டத்தில் பத்து பள்ளிகளில் இதுபோன்ற சாதிரீதியிலான வன்கொடுமைகள் நடந்துவருவதைப் பற்றி கண்காணித்து வருவதாக கூறுகிறார், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்.
படிக்க : வேங்கைவயல் – பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக்க சதி செய்யும் சாதிய அரசு!
வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்தது, மதுரை திருமோகூர் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது எனத் தமிழ்நாடு முழுவதும் கொட்டமடித்து வருகிறார்கள், ஆதிக்கசாதி வெறியர்கள். தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சாதிரீதியான மோதல்கள் அதிகரித்து வருவதாகவும், கடந்த மூன்று மாதங்களில் 500 மோதல்கள் அதிகரித்து இருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார், எவிடென்ஸ் கதிர்.
இந்த மோதல்களில் பெரும்பாலானவை ஆதிக்கசாதி வெறி சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊருடுவி உள்ளதன் விளைவே ஆகும். தமிழ்நாட்டில் மதக்கலவரத்தின் மூலம் தங்களுக்கான அடித்தளத்தை உருவாக்க முடியாத ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங்கப் பரிவாரக் கும்பல், மக்களை சாதி ரீதியாக பிளவுபடுத்துவதன் மூலம் தங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொள்ள விழைகிறது.
எனவே, மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பு மக்களிடமும் சாதி வெறியை விதைத்து, சாதிவெறி தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திக்கொண்டிருக்கும் ஆதிக்கசாதி வெறி சங்கங்கள் மற்றும் கட்சிகளும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலும் தடைசெய்யப்படாத வரை தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தாக்குதல்கள் குறையப்போவதில்லை.
ஆதிக்கசாதி வெறி சங்கங்கள் மற்றும் கட்சிகளையும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலையும் சமூகப் புறக்கணிப்பு செய்வோம்! ஆதிக்கசாதி வெறி சங்கங்கள் மற்றும் கட்சிகளையும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலையும் தடை செய் என வீதிதோறும் முழங்குவோம்!
பிரவீன்
எங்களை மன்னித்துவிடு ஜெகதீஸ்வரன்!
நாங்கள் சுரணையற்றவர்களாக இருக்கிறோம்!
அனிதா தொடங்கி ஜெகதீசன்வரை இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொலைகார நீட் தேர்வுக்கு பலிகொடுத்துள்ளோம். ஆனால், தமிழ்நாட்டில் நீட் தேர்வு தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகிறது. இரண்டுமுறை சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறோம். இனி நமது கையில் என்ன இருக்கிறது, ஜனாதிபதி இறுதி முடிவு அறிவிக்கும்வரை சாவுகளை எண்ணிக் கொண்டிருப்போம் என்று சுரணையற்று இருக்கிறது தமிழ்நாடு.
நீட் தேர்வை விரும்பாவிட்டாலும், “வேறுவழியில்லை, நீட் தேர்வில் தேர்ச்சிபெறுவதற்கேற்ப நம்மை தகவமைத்துக் கொள்வோம்” என்று ஒருபிரிவு நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் தயாராகிவிட்டார்கள். நீட்டை ஒழித்துக் கட்டவேண்டும் என்று போராடிக் கொண்டிருந்த நம்மில் பலர், “அரசு கொடுக்கும் நீட் தேர்வு பயிற்சியில் அதிக மாணவர்களைச் சேர்க்க வேண்டும்; 7.5 சதவிகித இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு விரிவுபடுத்த வேண்டும்” என்று இடைக்கால கோரிக்கைகளை வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் நிலைமைகளுக்கேற்ப சமயோசிதமாக செயல்படுவதாக நாம் கருதிக் கொள்ளலாம். ஆனால், இது நமது சுரணையற்ற நிலையையே காட்டுகிறது என்பதை நீட் தேர்வால் கொல்லப்படும் ஒவ்வொரு மாணவனின் மரணமும் காட்டுகிறது.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவன் ஜெகதீசனின் தற்கொலையைத் தொடர்ந்து, துயரம் தாங்காத அவரது தந்தை செல்வசேகரனும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று மகன், அடுத்த நாள் தந்தையும் உயிரிழந்துள்ளார்கள்.
படிக்க : மீண்டுமொரு இனக் கலவரத்திற்கு தயாராகும் ஹரியானா!
“என்ன இருந்தாலும், தற்கொலை தீர்வாகாது, ஜெகதீசன் செய்தது தவறு” என்று நம்மில் பலர் கருதக்கூடும். மாணவி அனிதாவின் தற்கொலையை ஒட்டியும் இதேபோன்ற கருத்துகள் பேசப்பட்டதுதான். இத்தகைய கருத்துகள் எல்லாம் “சுரணையற்றவர்களின் புத்திசாலித்தனமான வாதங்கள்” என்றே சொல்லவேண்டும். வெளிப்படையாகச் சொல்லவேண்டுமென்றால், ஜெகதீசன் போன்ற மாணவர்களின் தற்கொலைக்கு நீட் மட்டுமே காரணமல்ல, இதுபோன்று நியாயவாதங்களைப் பேசும் நாமும்தான் காரணம். “இந்த கொலைகார நீட்டை இன்னமும் அனுமதித்து வருகிறீர்களே, என் சாவுக்குப் பிறகாவது உங்களுக்கு சுரணைவரட்டும்” என்று தற்கொலைக்குத் தள்ளப்பட்ட அனைத்து மாணவர்களுமே கருதியிருக்கக் கூடும்.
ஒன்றியத்தின் ஆதிக்கம் எந்த வடிவத்தில் வந்தாலும், அதை தமிழ்நாடு எதிர்த்து நிற்கும் என்று பார்க்கப்படுகிறது. அது இந்தி எதிர்ப்பில் மட்டுமல்ல, நீட் எதிர்ப்பிலும் உறுதி குலையாது என்று எதிரிகளும் கருதுகிறார்கள். ஆனால், “அந்த நம்பிக்கையை ஏன் பொய்யாக்குகிறீர்கள், ஆதிக்க நீட்டை விரட்டியடிக்காமல் இன்னமும் ஏன் அமைதி காக்கிறீர்கள்?” – நீட் தேர்வால் ஒவ்வொரு மாணவர் தற்கொலைசெய்துகொள்ளும் போதும், அந்தத் தற்கொலை, தமிழ்நாட்டைப் பார்த்து எழுப்பும் கேள்வி இதுதான்!
“நேற்று அனிதா, இன்று என் நண்பன் ஜெகதீசன், நாளை உங்களுடன் இருக்கும் யாருக்கு வேண்டுமானாலும் இது நடக்கலாம். அனிதாவின் வலி இப்போதுதான் எங்களுக்குப் புரிகிறது” என்று கதறியழுகிறார் ஜெகதீசனை இழந்த அவரது நண்பர் ஃபயாஸ்.
ஜெகதீசனின் தந்தை செல்வசேகரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சூழ்ந்துகொண்ட ஜெகதீசனின் நண்பர்கள் பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளனர். “இன்னும் எத்தனை ஜெகதீசனை, எத்தனை அனிதாவை இழக்கப்போகிறோம்?” இவை நம்மை நோக்கி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் நோக்கியும் எழுப்பும் கேள்விகள்தானே!
ஜெகதீசனுக்காக வாதாடும் அவனது நண்பர், சி.பி.எஸ்.சி பள்ளியில் படித்தவர், நீட் தேர்வுக்காக கோச்சிங் செண்டருக்குப் போய் படித்தும், 160 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால், 25 லட்சம் செலவுசெய்து ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கியிருக்கிறார். “எனது அப்பா பொருளாதாரத்தில் கொஞ்சம் மேலே இருந்ததால், நான் எம்.பி.பி.எஸ். சேர்ந்துவிட்டேன். ஆனால் அந்த பணம் இல்லாததால் என் நண்பன் ஜெகதீசனை நாங்கள் இழந்துவிட்டோம்” என்று கதறியழுகிறார் ஃபயாஸ்.
ஜெகதீசனின் தற்கொலைக்கு ஒருநாள் முன்பு, ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்காக நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவியை பார்த்து ஜெகதீசனின் நண்பர் ஃபயாஸைப் போன்றே ஒரு கேள்வியை எழுப்பினார் ஒரு மாணவரின் தந்தை.
“நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் கொடுப்பீர்கள்” என்று அவர் எழுப்பிய கேள்விக்கு “நானாக இருந்தால், ஒருபோதும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்க மாட்டேன்” என்று திமிராகப் பதிலளித்துள்ளார் ஆர்.என்.ரவி. “நான் ஒன்றிய அரசு ஊழியராக இருந்ததால், என் மகளைப் படிக்கவைக்க முடிந்தது; நீட் தேர்வால் பணம் இருப்பவர்கள் மட்டுமே படிக்க முடிகிறது என்றும், கோச்சிங் செண்டர்களுக்குதான் லாபம்” என்றும் அவர் அடுத்தடுத்த கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும்போதே அவரிடமிருந்த மைக் பறிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேவந்து பேட்டியளித்த அம்மாசையப்பன் என்ற அந்த தந்தை அளித்த பேட்டியில், “அங்கிருந்த அதிகாரிகள் கூட ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அங்கு வந்திருந்த ஏதோ ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தினர்தான் என்னை சுற்றிவளைத்துக் கொண்டனர். அவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் உங்க பசங்கள டாக்டருக்கு படிக்க வைக்கிறீங்க? ஆளுநரிடம் கேள்வி கேட்கிற அளவுக்கு தைரியமா? என்றெல்லாம் என்னைக் கேட்டார்கள்” என்றார்.
படிக்க : நாங்குநேரி கொடூரம்: மாணவர்களிடையே அதிகரித்துவரும் சாதிவெறி!
லட்சங்களை கட்டி நீட் பயிற்சிவகுப்புச் செல்ல முடிந்த, ஓரளவு பொருளாதார வசதி படைத்தவர்கள்கூட, இந்த கொள்ளைக்கார தேர்வை ஏன் அனுமதிக்க வேண்டும் என்று கேள்வியெழுப்பும் வகையில், மாணவர்களின் தொடர் தற்கொலைகள் நமக்கு ஆத்திரமூட்டுகின்றன. அப்படியிருக்க, இனியும் இந்த அநீதியை எப்படி தமிழ்நாடு சகித்துக் கொண்டிருக்க முடியும்?
மாணவர் ஜெகதீசனின் தற்கொலை தொடர்பாக, “குழுந்தைகளைக் கல்வி, மதிப்பெண்களை வைத்து ஒருவரோடு ஒருவர் ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், குழந்தைகளிடம் நேர்மறையான எண்ணங்களை விதைப்போம்” என்று உபதேசம் செய்து அறிக்கைவிட்டிருக்கிறார் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.
அப்பட்டமாக கொலைகார நீட் தேர்வை நியாயப்படுத்தியும், மாணவர்களின் தற்கொலையை கொச்சைப்படுத்தியும் வரும் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட காவிக் கும்பலை, தமிழ்நாட்டில் நிம்மதியாக இருக்க அனுமதிக்கிறோம் என்றால் அது ஜெகதீசனுக்குச் செய்கின்ற துரோகம் அல்லவா! எத்தனை பேர் செத்தாலும் நமக்கு சுரணை வரவில்லை என்று பொருளல்லவா!
அனிதா முதல் ஜெகதீசன் வரை நம்மிடம் இரங்கல் அஞ்சலியைக் கோரவில்லை. அவர்கள் கேட்பதெல்லாம் அநீதிக்கு எதிராக, நம் மீது நீட்டை திணித்துவரும் பாசிச பா.ஜ.க. கும்பலுக்கு எதிராக, கொஞ்சமாவது சுரணை கொள்ளுங்கள் என்பதைதான்!
வாசு
16-வது ஆண்டில் வினவு!
பா.ஜ.க.வைத் தடை செய் என முழங்குவோம்!
அன்பார்ந்த வாசகர்களே, தோழர்களே,
வினவு 16-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அந்த வகையில் வாசகர்களுக்கு எமது புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
2020 பிப்ரவரியில் வினவுக்கு ஏற்பட்ட ‘லாக்டவுனு’க்குப் பின்னர் வினவு மீண்டெழுந்து நடைபோடத் தொடங்கியதை எமது சென்ற ஆண்டுப் பதிவில் தெரிவித்திருந்தோம்.
இந்த ஓராண்டைத் தொகுத்துப் பார்க்கும் போது பல முன்னேற்றங்கள், பல புதிய அம்சங்களில் வினவின் பங்களிப்புகள் அதிகரித்துள்ளன. இதற்கு ஆயிரக்கணக்கான வாசகர்களின் ஆதரவும், தோழர்களின் பங்களிப்பும்தான் முதன்மையான காரணம். இன்னும் குறிப்பாக, வினவுக்கென நிரந்த ஊழியர்கள் இல்லையெனினும், தோழர்கள் இடையறாது கொடுத்துவரும் ஆதரவுதான் வினவை புதிய வளர்ச்சி நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. புதிய தோழர்கள் பலரும் வினவுக்கு எழுதத் தொடங்கியிருப்பதும், வீடியோ பதிவுகளை வழங்கி வருவதும் வினவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும்.
000

எந்த இயக்கமாக இருந்தாலும் அதன் அரசியல் அமைப்பும் கட்டமைப்பும் எந்த அளவிற்கு விரிவடைகிறதோ அந்த அளவிற்கே அது தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். புதியன புகுதலும் பழையன கழிதலும் புரட்சிகர அமைப்புக்கு இல்லையென்றால் அது என்ன ஆகும் என்பதற்கு சம காலத்தில் பல இணைய தளங்களை நாம் எடுத்துப் பார்க்கலாம். கொரோனா காலத்தில் ஓரளவிற்கு இயங்கிக் கொண்டிருந்த பல இணைய தளங்கள் இன்று தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவே போராடுகின்றன.
இவையில்லாமல் மையின் ஸ்டீரிம் (Mainstream) ஊடகங்கள் பெரும்பாலானவை மோடியின் ஊதுகுழலாக மாறிவிட்டன. சொல்லிக் கொள்ளப்படும் மாற்று ஊடகங்கள் பல பாசிச எதிர்ப்பில் உழைக்கும் மக்கள் பக்கம் நிற்காமல் திமுக-காங்கிரஸ் போன்ற ஓட்டுக் கட்சிகளிடம் சரணாகதியடைந்துவிட்டன. மக்களுக்காக குரல் கொடுக்கும் ஊடகங்கள் மீது பாசிச பாஜக அரசால் அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன.
படிக்க : நூறு நாள் வேலை திட்டத்தை ஒழித்துக் கட்டத் துடிக்கும் பாசிச மோடி அரசு!
ஆனால் இந்த கடுமையான அரசியல் சூழலிலும் தோழர்கள், வாசகர்களின் ஆதரவுடன் பாசிச எதிர்ப்பு சக்திகளுக்கு தோள்கொடுக்கும் வகையில் உழைக்கும் மக்களின் குரலாக வினவு தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது.
பாசிச எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் வினவு:
பா.ஜ.க-வின் இந்தி திணிப்புக்கு எதிராக “மீண்டும் இந்தி: வெறும் மொழித் திணிப்பல்ல” என தொடர்ச்சியாக வீடியோக்கள் மற்றும் பதிவுகளை கொண்டுவந்தோம்.
ரஷ்ய புரட்சி நாள் மற்றும் பாட்டாளி வர்க்க ஆசான் ஸ்டாலின் பிறந்த நாள் ஆகிய நிகழ்வுகளையொட்டி வினவு வாசகர்களுக்கு சோசலிச உணர்வையும், பாசிச எதிர்ப்பு உணர்வையும் ஏற்படுத்தும் வீடியோக்கள் மற்றும் பதிவுகளை கொண்டுவந்துள்ளோம்.
கல்வியை காவிமயமாக்கும் பாசிச அரசின் பல்வேறு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி வருகிறோம். திமுக அரசால் வெவ்வேறு பெயர்களில் அமல்படுத்தப்படும் புதிய கல்விக்கொள்கையின் அம்சங்களை ஆசிரியர் உமா மகேஸ்வரி போன்ற கல்வியாளர்களுடன் இணைந்து வீடியோக்களையும் அம்பலப்படுத்தும் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளோம்.
பத்திரிகையாளர் சித்திக் கப்பன், பேராசிரியர் சாய்பாபா, பாடகர் நேஹா சிங் ரத்தோர் போன்ற பல்வேறு பாசிச எதிர்ப்பு சக்திகளின் மீதான மோடி அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக உடனுக்குடன் குரல் கொடுத்துள்ளோம்.
இவையில்லாமல், தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என். ரவி-யின் பாசிச நடவடிக்கைகள், மோடியை அம்பலப்படுத்தும் பிபிசி ஆவணப்படம், அதானியை அம்பலப்படுத்தும் ஹிண்டன் பர்க் அறிக்கை, மோடி அரசின் உழைக்கும் மக்கள் மீதான பொருளாதார தாக்குதல்கள் போன்றவற்றின் மீது வினையாற்றியுள்ளோம்.
தற்போது “மணிப்பூர் இனப்படுகொலை” குறித்த சரியான அரசியலை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் வினவு முக்கிய செயலாற்றியுள்ளது. பாசிஸ்டுகளின் பாதந்தாங்கி ஊடகங்களும் மதன்கௌரி போன்றவர்களும் திட்டமிட்டு மணிப்பூர் கலவரத்தை இரண்டு இனங்களுக்கு இடையிலான மோதலாக சித்தரித்த போது, மணிப்பூர் கலவரம் ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கலவரம் என்பதை பல்வேறு கட்டுரைகள் வீடியோக்கள் மூலம் அம்பலப்படுத்தினோம்.
மேலும், மணிப்பூர் கலவரத்தில் குக்கி பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட காணொளி வெளியாகி தமிழ்நாட்டு மாணவர்கள் போராட்டத்தில் இறங்கிய போது “ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வை தடை செய்” என்ற முழக்கம் போராட்டக்களம் தோறும் ஒலித்தது. மாணவர் போராட்டங்களை தொகுத்து வீடியோவாக வெளியிட்டோம். ”பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி!” என்ற முழக்கத்தின் அடிப்படையிலான புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம்.
இதேபோல் தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 15 பேரின் உயிரை பறித்த கொலைகார அனில் அகர்வால் ஆகஸ்ட் 6-ஆம் தேதி சென்னைக்கு வருகைதரவிருந்த போது கார்ப்பரேட் ஊடகங்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக விளம்பரங்கள் வெளிட்டது. ஆனால் வினவு, ”கொலைகார அனில் அகர்வாலே தமிழ்நாட்டிற்குள் நுழையாதே!” என்ற களபோராட்டங்களை காட்சிபடுத்தியது.
அனில் அகர்வாலின் வருகையை ஒட்டி மக்கள் அதிகாரம், மே பதினேழு இயக்கம், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி போன்ற பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து சென்னையில் ”அனில் அகர்வாலே திரும்பி போ” என்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த ஆர்ப்பாட்டத்தை வினவு மட்டுமே நேரடி ஒளிபரப்பு செய்தது. வேறு எந்த ஊடகங்களும் ஒளிபரப்பவில்லை.
ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க பல்வேறு சதித்தனங்களை செய்து வரும் வேதாந்த குழுமத்தை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். இந்துராஷ்டிரத்தை நிறுவ துடிக்கும் பாசிச பா.ஜ.க-வின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி வருகிறோம்.
களப்போராட்டங்களில் வினவு:
உழைக்கும் மக்களின் போராட்டத்தில் வினவு களத்தில் நின்றுள்ளது. கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரணத்தையொட்டி நடந்த போராட்டம், திருச்சி பெல் மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம், விஷ சாராய பலிகள்- திமுக அரசை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம், ஓசூர் உத்தனப்பள்ளி விவசாயிகள் போராட்டம், தூய்மை பணியாளர்கள் போராட்டம், ஸ்விக்கி தொழிலாளர்கள் போராட்டம், போர்ட் ஆலை தொழிலாளர்கள் போராட்டம், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கட்டண கொள்ளைக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் என தொடர்ச்சியாக போராட்டக்களத்தில் வினவு வினையாற்றி வருகிறது.
கடந்த ஓராண்டில் வினவின் வளர்ச்சி
வினவு ஊடக தளம் சமூக ஊடகங்களில் விரிவடைந்து லட்சக்கணக்கான மக்கள் பின்பற்றும் வகையில் இன்று சில முன்னேற்றங்கள் அடைந்துள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 19 வீடியோக்கள் வரை பதிவிட்டுள்ளோம். மாதம் சராசரியாக 20 வீடியோ பதிவுகளை நோக்கி முன்னேறியுள்ளோம்.
அதேவேளையில், இணைய தளத்தில் நாளொன்றுக்கு சராசரியாக மூன்று பதிவுகள் என்பதை தாண்டி சில மாதங்களில் சராசரியாக நான்கு பதிவுகளுக்கு முயற்சி செய்துள்ளோம். பதிவுகளைப் பொருத்தவரை, அதிக அளவில் செய்திப் பதிவுகளாக இருந்த நிலைமையை இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் மாற்றியமைத்துள்ளோம். அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் கருத்து சொல்லும் பதிவுகளைக் கொண்டுவந்துள்ளோம்.
சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் அடுத்தடுத்து நடந்த மக்கள் போராட்டங்கள், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி படுகொலை தொடர்பாக தோழர்களின் களப்போராட்டங்கள், மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய எமது தோழமை அமைப்புகளின் மாநாடு போன்றவை வீடியோ எண்ணிக்கை அதிகரிப்பதில் முதன்மையான பங்காற்றியது.
குறிப்பாக, நவம்பர் மாதத்தில் இருந்துதான் வினவு தனது வீடியோக்கள் பதிவிடுவதை அதிகரிக்கத் தொடங்கியது. நவம்பர் ரசிய புரட்சி நாளை ஒட்டி வெளியிட்ட டீசர், நவம்பர் 7 தொடர்பாக தோழமை அமைப்புகளின் அரசியல் நிகழ்வை ஒட்டி கொண்டுவரப்பட்ட ஆவணப்படம், தோழர் ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி மறு உருவாக்கம் செய்து கொண்டுவரப்பட்ட வீடியோ ஆகியவை வினவின் புதிய பங்களிப்புகளாகும். இத்துடன், தொடர்ந்து இந்த வகையிலான எமது வீடியோக்களை அதிகரித்து வந்துள்ளோம்.
கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக
நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? | பத்திரிகையாளர் சந்திப்பு, சிவப்பு அலை கலைக்குழு தொடக்க நிகழ்ச்சி, 2022 செப்டம்பர் மாநாடு, 2023 மே 15 மாநாடு ஆகியவற்றை ஒட்டி வினவு நேரலைகளைக் கொண்டுவந்தது. இதில் மே 15 மாநாட்டின் வீடியோ தொடர்ந்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு பல வகைகளில் பேசிவந்தாலும் அது தொடர்பாக புரட்சிகர கண்ணோட்டத்தில் ஒரு முறையான வரலாற்றுப் பதிவு இதுவரை இருந்ததில்லை. இந்த ஆண்டு இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் ஊடாக, இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்ட வரலாற்றை விளக்கிக் கொண்டுவந்த வீடியோக்கள் வரலாற்று ஆவணத்தின் வினவின் முக்கியமான பங்களிப்பாகும்.
இவையன்றி, மக்களை பாதிக்கின்ற பிரச்சினைகள், உடனடி அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்டு வெளியிடும் வீடியோக்களும் அதிகரித்துள்ளன. ஆளுநர் ஆர்.என். ரவியின் திமிர் பேச்சு, ஜி.எஸ்.டி வரி சாதனை அல்ல வேதனை, திருமங்கலம் சுங்கச்சாவடியின் அடாவடித்தனம், திமுக அரசின் 90மிலி சாராய திட்டம், தக்காளி விலை உயர்வு, மணிப்பூர் கலவரம், அணில் அகர்வால் சென்னை வருகை என உழைக்கும் மக்களை நேரடியாக பாதிக்கும் பல விஷயங்களை ஒட்டி மக்களிடம் நேர்காணல்களை நடத்தியுள்ளோம். இது போன்ற மக்கள் நேர்காணல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சிவப்பு அலை கலைக்குழு தொடக்கமானது சமகால புரட்சிகர இயக்க வரலாற்றில் ஒரு முக்கியமான அம்சமாகும். இது வினவின் வளர்ச்சிக்கும் பெரிய பங்காற்றியுள்ளது. புதிய இளந்தோழர்கள், கல்லூரி மாணவர்களைக் கொண்டிருந்தாலும் அது தொடங்கப்பட்ட குறுகிய காலத்தில் சொந்தமாக பாடல் தொகுப்பைக் கொண்டுவந்துள்ளது.
அக்குழுவின், வீழாது தமிழ்நாடு துவளாது போராடு – நமது வீர மரபை வரித்துக் கொள்ளும் பாடல்களை பல்வேறு ஜனநாயக சக்திகள் தங்களது பக்கங்களில் தீம் பாடல்களாக வைத்துள்ளனர் என்பது சிவப்பலைக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். தற்போது இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் இன்றைய நாளில், சிவப்பலையின் “Ban Rss Ban BJP” பாடல் பல்வேறு பிரிவுகளால் மிகவும் வரவேற்பைப் பெற்று வருவது சிறந்த முன்னேற்றமாகும். இதை இன்னும் நாடு முழுவதும் கொண்டுச் செல்ல வேண்டிய தேவை உள்ளது.
2008 ஜூலை 17 வினவு தொடக்க நாள்!
நெருக்கடிகளை உடைத்து முன்னேற வேண்டியுள்ளது:
இந்த ஓராண்டில் வினவுக்கு ஏற்பட்ட வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த ஊடகத்துறையின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது மிகச்சிறிய வளர்ச்சியே ஆனால், வினவை பொருத்தவரை இது குறிப்பிட்டதக்க வளர்ச்சிதான். வினவு எந்த அளவிற்கு முன்னேற்றங்களை அடைந்துள்ளதோ அந்த அளவிற்கு நெருக்கடிகளையும் சந்தித்துள்ளது.
குறிப்பாக, சென்ற ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் வினவு தளம் தொடர்ந்து சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டது. இதனால் சில நாட்கள் தளம் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த நெருக்கடியான சூழலிலிருந்து வினவு கடந்து வருவதற்குப் பெரிதும் போராட வேண்டியிருந்தது. வினவு தளத்தின் சர்வரைப் பராமரிக்கும் செலவுகளும் பலமடங்கு உயர்ந்துவிட்டன. விலையேற்றம் என்பது வினவையும் கடுமையாக தாக்கியுள்ளது.
இந்த சூழலில் வினவுக்கு நன்கொடை வழங்கிவந்த ஓரிரு நண்பர்கள் மீண்டும் அவர்களது நன்கொடையை வழங்கியுள்ளனர். இந்த நன்கொடை உதவி என்பது படுகாயங்களுடன் போராடிக் கொண்டிருக்கும் வினவுக்கு இரத்தம் கொடுத்தது போன்ற பங்களிப்பாகும்.
படிக்க : ஆர்.எஸ்.எஸ் பற்றிய புத்தகங்களை அகற்றச் சொல்லும் ஆர்.எஸ்.எஸ் சங்கியும் போலீசும் | தோழர் புகழ்
இருப்பினும், கடுமையான நிதி நெருக்கடி, கடனில் வினவு தள்ளாடிக் கொண்டிருக்கிறது. வீடியோ பதிவுகள் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டாலும் அதற்கு ஏற்றார்போல கட்டமைப்பை இன்னும் விரிவுப்படுத்த வேண்டியுள்ளது.
ஆனால் இந்த நெருக்கடிகளை தீர்க்க நீண்ட காலம் அவகாசம் இல்லை. புறநிலையில் பாசிச அபாயம் நம்மை அச்சுறுத்தி வருகிறது. பாசிச எதிர்ப்பு சக்திகளை ஓரணியின் கீழ் திரளவைப்பதன் மூலம்தான் பாசிசத்தை வீழ்த்த முடியும். ஆனால் பாசிச எதிர்ப்பு சக்திகள் பலவீனமாக இருக்கும் இந்த தருணத்தில் அவர்களை சரியான அரசியல் பிரச்சாரத்தின் மூலம் மட்டுமே ஒன்றிணைக்க முடியும். அத்தகைய பிரச்சாரத்தை தான் வினவு முன்னெடுத்துச் செல்கிறது. அதற்கு உதாரணம் புரட்சிகர அமைப்புகள் முன்வைத்த “பா.ஜ.க-வை தடை செய்” என்ற முழக்கம் இன்று மக்களின் முழக்கமாக மாறிவருவதுதான்.
ஆனால் இந்த பிரச்சாரத்தை நாடு தழுவிய அளவில் கொண்டு செல்ல உடனடியாக வினவு தன்னுடைய நெருக்கடிகளை தீர்த்துக் கொண்டு முன்னேற வேண்டியுள்ளது. அதற்கு பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் ஒவ்வொருவரின் பங்களிப்பும் (அது எந்த வகையில் இருந்தாலும் நிதி, களச்செய்தி சேகரிப்பது, நேரலைக்கு உதவுவது, புகைப்படங்கள் மற்றும் கார்ட்டூன்கள் அனுப்புவது) தேவைப்படுகிறது.
இதனுடன் தமிழ்நாடு முழுவதும் நடக்கும் பாசிச எதிர்ப்பு சக்திகளின் போராட்டங்களை, கூட்டங்களை நேரலையாக அல்லது வீடியோக்களாக ஒளிபரப்ப வினவு தயாராக உள்ளது. அதற்கு தோழர்கள், வாசகர்கள் எங்களை அணுகலாம்.
பாசிச எதிர்ப்பில் அனைவரும் ஒன்றிணைந்து முழங்குவோம் பா.ஜ.க-வை தடை செய் !
வினவு வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை வழங்குங்கள்!
வங்கி மூலம் நன்கொடை செலுத்த:
NAME : S.MAHALAKSHMI
ACCOUNT NO : 6938161028
IFSC CODE : IDIB000M246
Branch : MOGAPPAIR (2147)
Account Type: Savings
Mobile – (91) 93 8465 9191
Email – vinavu@gmail.com


13.08.2023
நீட் ரத்திற்கு அனுமதி தரமாட்டேன் என்று
தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் ஆளுநர் ரவியே
தமிழ்நாட்டை விட்டு வெளியேறு!
விவசாயிகளின் பிள்ளைகள் மருத்துவர்கள் ஆக கூடாதா?
பத்திரிகை செய்தி
ரம்மி ரவி, உளவாளி ரவி, ஆர்.எஸ்.எஸ் ரவி என தமிழ்நாட்டு மக்களால் அழைக்கப்படும் ஆளுநர். மீண்டும் தன்னுடைய ஆணவ பேச்சால் தமிழ்நாட்டின் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளார். சென்னையில் கிண்டியில், நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடலை ஆளுநர் ரவி சனிக்கிழமையன்று ஆளுநர் மாளிகையில் நடத்தியுள்ளார். 2023 ஆம் ஆண்டில் ’நீட்’ தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். கலந்துரையாடலின் போது சேலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தந்தை ” நீட் விலக்கு மசோதாவிற்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். உடனே ஆளுநர் ரவி கோபமாக ”நான் இருக்கும் வரை நடக்கவே நடக்காது, நீட் விலக்கு மசோதாவிற்க்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட மாட்டேன்” என ஆவேசமாக பேசியுள்ளார். அந்த தந்தையின் குரல் தான் தமிழ்நாட்டு மக்களின் குரல்.
மேலும் அந்த தந்தை ”என்னுடைய மகள் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுவிட்டாள். ஆனால் எத்தனை ஏழை மாணவர்கள் இப்படி மதிப்பெண் எடுக்க முடியும். நாட்டில் உள்ள ஏழை மாணவர்கள் படிக்க முடியுமா? நீட் தேர்வால் ஏற்கனவே 15 உயிரை இழந்து விட்டோம். இன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும். என் மகளுக்கு 20 லட்சம் செலவிட்டுள்ளேன். மேலும் நான் மத்திய அரசின் வேலையில் இருப்பதால் என்னால் பணம் கட்ட முடியும். அனைவருக்கும் இது சாத்தியமா? என்றும் நீட் தேர்வு இல்லாமலேயே தமிழ்நாட்டு மாணவர்கள் பலர் சாதனைகளைப் படைத்துள்ளனர். நீட் தேர்வு இல்லாமலேயே தமிழ்நாடு இந்திய அளவில் மருத்துவக் கல்வியில் சிறந்து விளங்குகிறது. நீட் தேர்வுக்கு முன்பே மருத்துவ கட்டமைப்பும் மருத்துவ கல்லூரியின் கட்டமைப்புகளும் தமிழ்நாட்டில் நன்றாகத்தான் இருந்தது” என்று சேலம் மாணவியின் தந்தை கூற ஆளுநர் மேலும் கடும் கோபம் அடைந்தார். நீங்கள் சொல்வது தவறு. உட்காருங்கள் என சப்தமிட்டார். மாணவியின் தந்தையிடமிருந்து மைக்கும் பறிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் அரசுப் பள்ளி மாணவர்களோ பெற்றோர்களோ பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆணவ பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்தது முதல் சனாதனம், மதம், வரலாறு, மொழி, கலாச்சாரம், பண்பாடு, மாநில உரிமை, போன்ற விவகாரங்களின் மீது ஆர்.எஸ்.எஸ் நச்சு கருத்துகளை திமிர்த்தனமாக பேசி தமிழ்நாட்டு மக்களின் கோபத்திற்கு ஆளாகி வருகிறார். தமிழ்நாட்டு மக்களின் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். இவரை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் தமிழ்நாட்டில் வலுத்து வருகிறது.
ஜனநாயக சக்திகளே , தமிழ்நாட்டின் 21 மசோதாக்களை முடக்கி கிடப்பில் போட்டு வைத்திருக்கும் ஆளுநரை எதிர்த்து நம் போராட்டங்களை வலுவாக தொடர்வோம்!
மாணவர்களே, ஆளுநர் ரவி என்பவர் ஆர்.எஸ்.எஸ்யின் பிரச்சாரகர், நம் கல்வி உரிமையை பறிக்கும் நபர், கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கல்வியின் கனவை அழிக்கும் ஆளுநர் ரவியை எதிர்த்து களம் இறங்குவோம்! நீட் தேர்வை ரத்து செய்ய போராடுவோம்! ஆளுநர் ரவியே வெளியேறு, தமிழ்நாட்டை விட்டு வெளியேறு என முழங்குவோம்!
![]()
தோழமையுடன்
தோழர் அமிர்தா,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321
ஆதிக்க சாதி சங்கங்களை அரசு தடை செய்ய வேண்டும் | மக்கள் அதிகாரம் மருது
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஒருவழியாக நாடாளுமன்றத்திற்குள் வந்து பேசி விட்டார், பிரதமர் மோடி. மணிப்பூர் கலவரத்தைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக எதிர்க்கட்சிகளின் “இந்தியா” (I.N.D.I.A.) கூட்டணி பற்றியும், எதிர்க்கட்சிகளை குறிப்பாக காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வை விமர்சித்துப் பேசியுள்ளார். நாடாளுமன்றத்தை தன்னுடைய அரசியல் கட்சியின் பிரச்சார மேடையாக மாற்றிவிட்டார்.
கடந்த ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. மணிப்பூர் கலவரத்தை ஒட்டி பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் மோடி நாடாளுமன்றத்துக்கு வரவே இல்லை.
எனவே மணிப்பூர் கலவரத்தை ஒட்டி மோடியைப் பேச வைக்க வேண்டும் என்பதற்காக, ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வழங்கப்பட்டது.
ஆகஸ்ட் 8-ஆம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. இரு நாட்களாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் பதிலளித்து ஒன்றிய அமைச்சர்களும் பா.ஜ.க மக்களவை உறுப்பினர்களும் பேசினர். இந்த இரு நாட்கள் விவாதங்களில் மோடி கலந்துகொள்ளவில்லை.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு தான் பதிலளிக்க வேண்டும் என்பதற்காக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 10-ஆம் தேதி (இறுதி நாள்) தான் கலந்துகொண்டார், மோடி. இரண்டு மணி நேரம் பன்னிரண்டு நிமிடங்கள் ஆற்றிய உரையில் மணிப்பூரைப் பற்றி சில நிமிடங்கள் மட்டுமே பேசினார். ஒரு மணி நேரம் முப்பது நிமிடங்களுக்குப் பிறகே மணிப்பூரைப் பற்றி பேசினார். வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேசினார்.
படிக்க: பாசிஸ்டுகளின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் “ஸ்டண்ட்” பலிக்காது!
“மணிப்பூரில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றன. வரும் காலத்தில் மணிப்பூரில் அமைதி திரும்பும் என மக்களுக்கு உறுதி அளிக்க விரும்புகிறேன். மணிப்பூரின் பெண்கள், மகள்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் நான் சொல்லிக் கொள்வது எல்லாம் நாடு உங்களோடு இருக்கிறது என்பதைத் தான்” என்று பேசினார், மோடி.
மணிப்பூர் கலவரத்தை ஒட்டி எதிர்க்கட்சிகள் முன்வைத்த விமர்சனங்களுக்கும், காங்கிரஸ் கட்சி முன்வைத்த கேள்விகளுக்கும் எந்த பதிலும் கூறவில்லை. கலவரம் நடந்து 100 நாட்களைக் கடந்தும் பிரதமர் மோடி ஏன் மணிப்பூருக்குச் செல்லவில்லை? மணிப்பூரைப் பற்றி மவுனம் கலைக்கப் பிரதமர் 80 நாட்களை எடுத்துக் கொண்டது எதற்காக? இத்தனை வன்முறைக்குப் பின்னரும் கூட மணிப்பூர் முதல்வர் பதவி நீக்கம் செய்யப்படாதது ஏன்? ஆகியவையே காங்கிரஸ் முன்வைத்த கேள்விகள் ஆகும்.
மாறாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களை அதிகாரப் பசி கொண்டவர்கள் என்றும், நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றும் இழிவுபடுத்தும் வகையில் பேசினார், மோடி. NDA என்பதில் கூடுதலாக இரண்டு ‘I’ சேர்த்து I.N.D.I.A. என எதிர்க்கட்சிகள் தங்கள் அணிக்குப் பெயர் வைத்துள்ளன. இதில் ஒரு ‘I’ 26 கட்சிகளின் “தான்” என்ற ஆணவத்தையும், மற்றொரு ‘I’ ஒரு குடும்பத்தின் “தான்’ என்ற ஆணவத்தையும் குறிக்கிறது என்று கொச்சையாகப் பேசினார்.
ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்திலும் இதுதான் நடந்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் “அதானி, அதானி” என்று முழக்கமிட்டுக் கொண்டு இருக்கும் போது, அதானியின் பங்குச்சந்தை மோசடி குறித்துப் பேசுவதற்குப் பதிலாகக் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து இந்திராகாந்தியின் அவசரநிலை ஆட்சி பற்றி நெஞ்சுப்புடைக்க உரையாற்றினார் மோடி. எதைப் பற்றிப் பேச வேண்டுமோ அதை விடுத்து, எதிர்க்கட்சிகளைத் தாக்கி பேசுவதையே ஒரு யுக்தியாகக் கையாண்டு வருகிறார், மோடி.
90 நாட்களைக் கடந்தும் மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டுதான் இருக்கிறது. மேய்தி இனவெறியர்களால் அப்பாவி குக்கி பழங்குடியின மக்கள் அடித்தும் சுட்டும் கொல்லப்படுவதும், பெண்கள் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்படுவதும் இன்றுவரை நடந்துகொண்டு தான் இருக்கின்றன. தினந்தோறும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
படிக்க: அவரை எதற்கு உள்ளே அழைக்கிறீர்கள்!
மோடி அரசும் மணிப்பூர் மாநிலத்தை ஆளும் பாஜக அரசும் கலவரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஒரு பொய்த்தோற்றத்தை நாட்டு மக்களிடம் ஏற்படுத்திவிட்டு, ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்ட அரம்பை தெங்கால் மற்றும் மேய்தி லீபன் ஆகிய மேய்தி இனவெறி அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு திட்டமிட்டு கலவரத்தை நடத்தி வருகின்றன.
மேய்தி இன வெறியர்கள் மாநில போலீசு உதவியுடன் அரசின் ஆயுதக் கிடங்குகளிலிருந்து துப்பாக்கிகள், சிறு பீரங்கிகள் உள்ளிட்ட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்களையும், ஆறு லட்சம் தோட்டாக்களையும் கொள்ளையடித்து இருப்பதும், கடந்த மாதத்தில் மேய்தி இனவெறியர்களால் நிர்வாணமாக இழுத்து வரப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் போலீசு தான் தங்களை இனவெறிக் கும்பலிடம் ஒப்படைத்தாக கூறியதுமே அதற்குச் சான்று.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் மணிப்பூரில் இக்கலவரத்தைத் திட்டமிட்டு நடத்துவதாக வரம்பிட்டு பார்க்கின்றனர், எதிர்க்கட்சிகள். இக்கலவரங்கள் மூலம் மதமுனைவாக்கத்தையும் இனமுனைவாக்கத்தையும் தீவிரப்படுத்துவதன் மூலம் பரந்துப்பட்ட மேய்தி இன மக்களை தங்கள் பக்கம் திரட்டிக் கொண்டு இந்துராஷ்டிர கனவை நோக்கி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் முன்னேறிக் கொண்டு இருப்பதை பார்க்கத் தவறுகின்றனர்.
மேலும் இக்கலவரத்தின் மூலம் குக்கி பழங்குடி இன மக்களை வெளியேற்றி, அவர்கள் வாழும் மலைப்பகுதிகளில் புதைந்துள்ள கனிமவளங்களை அம்பானி – அதானி போன்ற கார்ப்பரேட் கும்பல்கள் சூறையாடத் திட்டமிட்டுள்ளது. அதற்கு வழிவகை செய்யும் வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவையும் இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றியுள்ளது மோடி அரசு.
எனவே இனி வருங்காலங்களில் குக்கி பழங்குடி மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கவே செய்யும். இப்படிப்பட்ட சூழலில் மோடி, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டால் மணிப்பூரில் மேய்தி இன வெறியர்களின் குக்கி பழங்குடி மக்கள் மீதான தாக்குதல்கள் நின்றுவிடப் போகின்றனவா? இல்லை.
மோடி கூறுவதைப் போல, நாடாளுமன்றம் பாசிஸ்டுகளின் ‘விளையாட்டு மைதானம்’. அதில் அவர்களால் மட்டும் தான் ‘சிக்ஸர்’ அடிக்க முடியும். மணிப்பூர் கலவரத்தை அடக்க வேண்டுமென்றால் மோடியைப் பேச வைப்பதோ, நாடாளுமன்றத்தை புறக்கணிப்பதோ, முடக்குவதோ தீர்வாகாது. நாட்டை முடக்குவது தான் ஒரே தீர்வு.
![]()
பிரவீன்
நாங்குநேரி கொடூரம்: ஆதிக்க சாதிவெறி சங்கங்களை தடைசெய்! | தோழர் வெற்றிவேல் செழியன்
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
கடந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்றோடு நிறைவடைந்தது. நாடாளுமன்றத்திற்கு வராத எம்.பி.க்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கும் மோடி இந்த கூட்டத்தொடரிலும் கலந்துகொள்ளவில்லை. முதல் நாள் மட்டும் நாடாளுமன்றத்திற்கு வந்து செய்தியாளர்களைச் சந்தித்து சென்ற மோடி அதற்கு பிறகு நாடாளுமன்றம் பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை.
ஆனால், இந்தியாவின் ஓர் மாநிலமான மணிப்பூர் மூன்று மாதங்களுக்கும் மேலாக பற்றி எரிந்துகொண்டிருக்கும் போது நாட்டின் பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வந்து தார்மீக விளக்கம் அளிக்காமல் இருந்தது நாட்டு மக்களை முகம் சுளிக்க வைத்தது. மோடி எவ்வளவு பெரிய “கல்லுளி மங்கன்” என்பதை மணிப்பூர் சம்பவம் மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியது. இதற்கு ‘தீர்வாக’ மோடியை நாடாளுமன்றத்திற்கு வர வைக்க மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்போவதாக அறிவித்தன, எதிர்க்கட்சிகள்.
நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசுக்கு இருக்கும் பெரும்பான்மை காரணமாக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிச்சயம் தோல்வி அடையும் என்பது எதிர்க்கட்சிகளுக்கு தெரிந்திருந்தபோதிலும், மோடியின் திருவாயால் மணிப்பூரைப் பற்றி பேச வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக எதிர்க்கட்சிகளால் விளக்கம் தரப்பட்டது.
ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில், பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குப் பதிலளிக்காமலேயே வாக்கெடுப்பு நடத்த முடியும் என்றும் அப்படியே பேசினாலும் கூட எதிர்க்கட்சிகளின் முயற்சியைக் கோமாளித்தனமாக மாற்றும் வகையில் மோடியின் உரை அமையும் என்றும் நாம் முன்பே கூறியிருந்தோம்.
படிக்க: அவரை எதற்கு உள்ளே அழைக்கிறீர்கள்!
மேலும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கான தேதி கூட்டத்தொடரின் கடைசி நாட்களிலேயே ஒதுக்கப்படும் என்பதும்; அதில் மோடி மணிப்பூர் வன்முறை பற்றி பேசாமல் எதிர்க்கட்சிகளை விமர்சித்து நெஞ்சு புடைக்க உரையாற்றுவார் என்பதும் முன்பே கணிக்கப்பட்டது தான். அதற்கு ஏற்றவாறே ஆகஸ்ட் 11 ஆம் தேதியோடு (நேற்றோடு) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடையும் நிலையில், ஆகஸ்ட் 8, 9, 10 ஆகிய கடைசி நாட்களே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டது.
இதற்கிடையே ராகுல் காந்திக்கு பறிக்கப்பட்ட எம்.பி. பதவி திரும்பக் கிடைக்கவே நம்பிக்கையில்லாத்தீர்மானம் மீதான விவாதம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றது. காங்கிரஸ் கட்சி முதலில் ராகுலைப் பேச வைத்து விவாதத்தைத் தொடங்கலாம் என்று திட்டமிட்டது. ராகுல் எதிர் மோடி (Rahul Vs Modi) என்று ஊடகங்களால் இவ்விவாதம் ஊதிப் பெருக்கப்பட்டது ஆனால், ஆகஸ்ட் 8 ஆம் தேதி மோடியின் வருகைக்காக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் காத்துக்கொண்டிருக்க. நாடாளுமன்றத்திற்கே வராமல் எதிர்க்கட்சிகளின் தலையில் இடியை இறக்கினார், மோடி.
நாடளுமன்றதிற்கு வராத மோடியை எப்படியாவது அழைத்து வந்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட அத்தனை பிரயத்தனங்களும் பாழாய்ப் போனது. அதிலும், விவாதம் நடக்கும் அவைக்குப் பக்கத்து அறைகளுக்கு வந்து பா.ஜ.க எம்.பி.க்களை சந்தித்து பேசிவிட்டு சென்ற மோடி, விவாதம் நடக்கும் மக்களவைக்கு மட்டும் வராமல் தவிர்த்தது மோடியின் பாசிச தன்மையையும் அதனை நாடாளுமன்ற முறைப்படியே வென்றுவிடலாம் என்று எண்ணிய எதிர்க்கட்சிகளின் பரிதாப நிலைமையையும் வெளிப்படுத்தியது.
மோடி அவைக்கு வராத நிலையில் வேறுவழியின்றி எதிர்க்கட்சிகள் விவாதத்தை தொடங்கின. இந்தியாவில் நடந்த 20க்கும் மேற்பட்ட நம்பிக்கையில்லாத்த் தீர்மானங்களில் நாட்டின் பிரதமர் இல்லாமல் விவாதம் நடந்தது இதுவே முதன்முறை. இதில் வி.சி.க எம்.பி தொல்.திருமாவளவன், தி.மு.க எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மௌவா மொய்த்ரா போன்றோரின் உரைகள் முக்கியத்துவமுடையதாக ஊடகங்களால் விவாதிக்கப்பட்டன.
ஆனால், அவர்கள் பேசி முடித்த உடனேயே அவர்கள் பேசியதில் பல கருத்துக்கள் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. குறிப்பாக, விவாதத்தின் இரண்டாவது நாளில் பேசிய ராகுலின் உரை அனைவராலும் முக்கியத்துவம் வாய்ந்த உரையாகப் பார்க்கப்பட்டது. ஆனால் அவரது உரையிலிருந்து 23 பகுதிகள் நீக்கப்பட்டு, உரை வெட்டி சுருக்கப்பட்டது.
இந்திய அரசாங்கத்தின் (அடிமை) தொலைக்காட்சியான சன்சத் டி.வி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசிய போது அவர்களைக் காட்டாமல் அவைத் தலைவரையும் பா.ஜ.க எம்.பி.க்களையும் காட்டிக்கொண்டிருந்தது. சான்றாக, ராகுல் பேசிய போது 40 சதவிகிதத்திற்கும் குறைவான நேரம் மட்டுமே அவர் சன்சத் டி.வி.யால் தொலைக்காட்சியில் காட்டப்பட்டார். மற்ற நேரங்களில் அவைத்தலைவர் ஓம் பிர்லாவும், ஸ்மிருதி இராணியும் காட்டப்பட்டனர்.
படிக்க: தேர்தல் ஆணையர்கள் மசோதா: தேர்வுக் குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கம்!
இதையொட்டி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மௌவா மொய்த்ரா மூன்றாவது நாள் அவைக்கு வருவதற்கு முன்பு ட்வீட் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில், ”நான் இன்று நாடாளுமன்றத்தில் பேச வேண்டும், நான் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிற புடவை அணிந்துள்ளேன், நான் பேசும் போது சன்சத் டி.வி வேறு எதையாவது காட்டிக்கொண்டிருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக, விவாதத்தின் மூன்றாவது நாளின் இறுதியில் இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவருக்கு நிகரான பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மக்களைவை குழு தலைவரும் எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய போது, “மகாபாரதத்தில் திருதராஷ்டிரன் குருடனாக அமர்ந்திருந்தபோது திரௌபதியின் ஆடைகள் பறிக்கப்பட்டன; அதே போல் இன்று நம் அரசனும் குருடனாக அமர்ந்திருக்கிறார்” என்று மோடியைக் குறிப்பிட்டுப் பேசியதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கிடையே, தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய ஆளும் பா.ஜ.க. எம்.பி.க்கள் தங்களுக்கே உரிய பாசிச நயவஞ்சகத்துடன் பொய்யையும் புரட்டையும் அள்ளி வீசிக்கொண்டிருந்தனர். கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகள் “அதானி அதானி” என்று முழங்க, “அதானி” என்ற சொல்லை ஒருமுறை கூட பிரயோகிக்காமல் மோடி எப்படி வீர தீர உரை நிகழ்த்தினாரோ அதைப் போலவே பா.ஜ.க. எம்.பி.க்கள் மணிப்பூர் கலவரம் குறித்துப் பேசாமல் எதிர்க்கட்சிகள் மீது சேற்றை வாரி அடித்துக்கொண்டிருந்தனர்.
ஸ்மிருதி இராணி, நிர்மலா சீதாராமன், அமித்ஷா என அனைவருமே இந்த பாசிச அணுகுமுறையைக் கையாண்டனர். எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விக்கும் வைத்த வாதத்திற்கும் பதில் அளிக்காமல் எதிர்க்கட்சிகளைக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர். குறிப்பாக எம்.பி.க்கள் பலரும் திட்டமிட்டே தி.மு.க.வை தாக்கிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் மூன்றாவது நாள் மாலை 5 மணியளவில் அவைக்கு தரிசனம் தந்தார் மோடி. பா.ஜ.க எம்.பி.க்களை போலவே கொஞ்சமும் பொருத்தமின்றி மிகவும் அலட்சியத்தோடு தனது பதிலுரையை தொடங்கினார். “எதிர்க்கட்சிகள் நோ பால் போட்டுக்கொண்டிருக்கின்றனர், நாங்கள் சிக்சர் அடித்துக்கொண்டிருக்கிறோம்”, “எனது மூன்றாவது பதவிக் காலத்தில் இந்தியா உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும்”, “ஏழைத் தாயின் மகன் பிரதமரானதை காங்கிரஸால் ஜீரணிக்க முடியவில்லை”, “எதிர்க்கட்சிகளின் பொய்களுக்கு மத்தியிலும் எல்.ஐ.சி வளர்ச்சியடைந்தது” என்று தேர்தல் பிரச்சார உரை போன்றதொரு உரையை நிகழ்த்தி தனது கொடூர பாசிச முகத்தை மீண்டும் ஒருமுறை வெளிக்காட்டிக் கொண்டார்.
இந்த உரைக்கு இடையில் பல கேலிகளும் நையாண்டிகளும் வேறு இடம்பெற்றது. மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்துகொண்டிருப்பதையொட்டி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் பிரதமரின் உரை எதிர்க்கட்சிகளை எள்ளி நகையாடுவதிலேயே கவனம் செலுத்தியது. அவரின் உடல்மொழியும், பாவனையும், பேச்சு தொனியும், சிரிப்பும் மணிப்பூர் மக்களையும், நாட்டு மக்களையும், எதிர்க்கட்சிகளையும் ஏளனம் செய்தது.
படிக்க: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: உங்களுக்கும் நம்பிக்கையில்லை, எங்களுக்கும் நம்பிக்கையில்லை!
ஆனால், ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் “மணிப்பூர்” என்ற வார்த்தையை மட்டும் மோடி உச்சரிக்கவே இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகப் பொறுத்துப் பார்த்த எதிர்க்கட்சிகள் “மணிப்பூர் மணிப்பூர்” என்று முழக்கமிட்டுவிட்டு அவையை விட்டு வெளிநடப்பு செய்தன.
அதன் பிறகும் மோடியின் உரை தொடர்ந்தது. கிட்டதட்ட 2 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு (160 நிமிடங்கள்) மோடி உரையாற்றினார். மோடி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் நீண்ட உரை என்ற ‘சாதனை’யை இவ்வுரை பெற்றது. ஆனால், அவ்வளவு நீண்ட உரையில் மோடி மணிப்பூரைப் பற்றிப் பேசியது 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரம் தான். கிட்டத்தட்ட மாலை 5 மணிக்குப் பேசத் தொடங்கிய மோடி “மணிப்பூர்” என்ற வார்த்தையை உச்சரிக்க 6:42 மணி ஆனது. அதுவும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் வேறுவழியின்றி கண்த்துடைப்புக்காக பேசினார். அந்த சொற்பமான நேரத்திலும் மணிப்பூர் வன்முறைக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சி தான் காரணம் என்று சொல்லி முடித்தார்.
மோடியின் இந்த ‘பதிலை’ கேட்க தான் எதிர்க்கட்சிகள் இவ்வளவு முயற்சிகளையும் செய்தன!
மோடியை நாடாளுமன்றத்திற்கு வர வைக்க வேண்டும், அவரை மணிப்பூர் குறித்துப் பேச வைக்க வேண்டும் என்ற குறுகிய வட்டத்திற்குள் சுருங்கியவையே எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள். ஆனால், அதை செய்யக்கூட பாசிஸ்டுகள் தயாராக இல்லை. தனது உரையைத் தவிர்த்து எதிர்க்கட்சிகளின் உரைக்காக நாடாளுமன்றத்திற்கு வரவும் மோடி தயாராக இல்லை, அந்த உரையில் மணிப்பூரைப் பற்றிப் பேசவும் அவர் விரும்பவில்லை.
மோடியைப் பொறுத்தவரை இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது, வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு புளித்துப் போன பழைய அவதூறுகளைப் பிரசாரம் செய்ய எதிர்க்கட்சிகளால் உருவாக்கித் தரப்பட்ட ஓர் வாய்ப்பு மட்டுமே. அதனைக் கடந்து எதிர்க்கட்சிகளின் எந்த ‘விருப்பத்தையும்’ நிறைவேற்ற மோடி தயாராக இல்லை.
ஆனால் எதிர்க்கட்சிகளோ ஏற்கெனவே புளுத்து நாறிக் கொண்டிருக்கும், அதுவும் தற்போது பாசிஸ்டுகளின் கரங்களில் இருக்கும் இந்திய நாடாளுமன்ற ‘ஜனநாயக’த்திற்குள் சென்று பாசிஸ்டுகளை வழிக்கு வரவைக்கப் போகிறோம் என்று கிளம்புகின்றன, ஆனால், ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதியிலும் மெழுகுவர்த்தி ஊர்வலமும் பேரணியும் நடத்திக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு பாசிஸ்டுகளின் நாடாளுமன்றத்திற்குள் “ஸ்டண்ட்” அடிக்க முடியாது என்பது நன்றாகத் தெரியும்.
எனவே, பாசிஸ்ட் மோடியை நாடாளுமன்றத்திற்குள் அழைத்துப் பேச வைக்கும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு நாட்டிற்கு வந்து போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள், கடையடைப்புகளை நடத்துங்கள். உண்மையில், அதுவே மோடியின் “கல்லுளி மங்கன்” மௌனத்தைக் கலைத்து அவரைப் பேச வைக்கும்.
![]()
துலிபா
தொடரும் கப்பலூர் டோல்கேட்-இன் அடாவடித்தனம்! | தோழர் நாகராஜ்
கப்பலூர் டோல்கேட் நிர்வாகமும் போலீசும்: தொடரும் வழிப்பறி – அடாவடித்தனம்! ஓட்டுநர் ஜெயராஜ்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
அவரு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிங்க..
இருக்கட்டும் நாங்கள் பாசிஸ்டுகள்…
ஆகஸ்ட் 10 அன்று மோடி அரசு தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்கள் (EC) ஆகியோரின் நியமனம், சேவைக்கான நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம் தொடர்பான புதிய மசோதா {The Chief Election Commissioner and other Election Commissioners (Appointment, Conditions of Service and Term of Office) Bill, 2023} ஒன்றை மாநிலங்களவையில் தாக்கல் செய்தது. எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
இதன்படி பிரதமர், மக்களவை எதிர்கட்சி தலைவர் மற்றும் பிரதமர் பரிந்துரைக்கும் ஒரு மத்திய கேபினெட் அமைச்சர் ஆகியோர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். இதற்கு பிரதமர் தலைவராக இருப்பார். இக்குழு பரிந்துரைக்கும் நபர்களை குடியரசுத் தலைவர் தேர்தல் ஆணையர்களாக நியமனம் செய்வார்.
முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் 19 அன்று அருண் கோயல்-இன் பெயர் தேர்தல் ஆணையர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதே நாளில் ஜனாதிபதி ஒப்புதலும் வழங்கப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் அருண் கோயல் அதற்கு முந்தைய நாள் தான், நவம்பர் 18 அன்று தான், தான் முன்னர் வகித்த பதவியிலிருந்து விருப்ப ஓய்வை அறிவிக்கிறார்.
மோடி அரசின் இந்த நடவடிக்கை அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. இதனையடுத்து தான், சி.பி.ஐ (CBI) இயக்குநரை பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தேர்வுசெய்வதைப்போல் தேர்தல் ஆணையர்களும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் அடங்கிய ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு அவ்வழக்கை விசாரித்தது.
படிக்க: விருப்ப ஓய்வு பெற்ற அருண் கோயலுக்கு அடுத்த நாளே தேர்தல் ஆணையர் பதவி!
இவ்வாண்டு மார்ச் மாதம் அவ்வழக்கின் தீர்ப்பு வெளியானது. அதன் அடிப்படையில் தான், தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட தேர்தல் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இதில் தலைமை நீதிபதிக்கு மாற்றாக பிரதமர் பரிந்துரைக்கும் ஒரு கேபினட் அமைச்சரை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைக்கும் வகையில் தற்போது சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் அதிகாரம் மத்திய அரசின் கைகளுக்கே மீண்டும் சென்று சேரும். பிரதமரும், பிரதமரால் பரிந்துரை செய்யப்படும் கேபினட் அமைச்சரும் கொண்ட ஒரு குழுவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரால் எவ்வாறு பெரும்பான்மை பெற முடியும். இது ஒன்றும் மோடி அரசு அறிந்திராதது அல்ல. ஜனநாயகத்தை எள்ளி நகையாடும் பாசிச மனோபாவத்தின் வெளிப்பாடு இது.
அது மட்டுமல்ல, நீதிபதிகளின் நியமனமே அரசின் விருப்பப்படி இருக்க வேண்டும் என்று கொலீஜிய முறையை ஒழித்துக் கட்டத் துடிக்கும் பாசிஸ்டுகள், இதுநாள் வரையிலும் இல்லாத வகையில் தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் நீதித்துறை தலையிடுவதை எப்படி சகித்துக் கொள்வார்கள். தங்களது அதிகாரம் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதை பாசிஸ்டுகள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் என்பதன் வெளிப்பாடு தான் இந்த சட்ட மசோதா.
படிக்க: கொலீஜிய பரிந்துரைகளை தணிக்கை செய்யும் பாசிச மோடி அரசு!
இந்தியா ‘சுதந்திரம்’ அடைந்ததாகக் கூறப்படும் காலத்தில் இருந்து, தேர்தல் ஆணையர்களை மத்திய அரசு தானே தேர்வு செய்து வந்துள்ளது என்று சிலர் கேட்கக் கூடும்.
அதற்கான பதில் என்னவென்றால் இதுவரை இருந்துள்ள அரசாங்கங்களையும் மோடி அரசாங்கத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது என்பதுதான். கடந்த மார்ச் மாதத்தில், தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டதே பாசிச மோடி அரசின் மீது கொண்ட அச்சத்தினால் தான். தேர்தல் ஆணையராக அருண் கோயலை நியமித்தபோது பின்பற்றப்பட்ட வழிமுறைதான் அந்த அச்சத்தை ஏற்படுத்தியது.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு மோடி அரசு ஆயத்தமாகி வருகிறது. தற்போது தேர்தல் ஆணையர்களில் (EC) ஒருவரான அனுப் சந்திர பாண்டே அடுத்தாண்டு பிப்ரவரி 14 அன்று ஓய்வு பெற உள்ளார். தேர்தலை தங்களுக்கு ஏற்ற வகையில் நடத்த மோடி அரசுக்கு அமலாக்கத் துறை இயக்குனர் சஞ்சய் மிஸ்ராவைப் போன்ற பொருத்தமான அடியாட்கள் தேர்தல் ஆணையர்களாகத் தேவைப்படுகிறார்கள்.
கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அதற்கு இடையூறாக இருந்தது. அந்த இடையூறை நாடாளுமன்றத்தைக் கொண்டே, சட்டபூர்வ வழிமுறையைப் பின்பற்றியே, பாசிச மோடி அரசு கடக்க நினைக்கிறது.
பாசிசத்தை சட்டபூர்வ வழிகளில் நிறுவுவதற்கான பாதையைச் செப்பனிடவே தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கான இந்த சட்ட மசோதா.
![]()
பொம்மி
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மணிப்பூர் பிரச்சினையை விவாதிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்குவார்கள் என்று மோடிக்கு நன்கு தெரியும்.
கூட்டத்தொடர் தொடங்கும் முதல் நாளிலேயே மணிப்பூரில் குக்கி இனப் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வன்முறைக் காணொளி வெளியானதை அடுத்து, 78 நாட்களாக மவுன விரதமிருந்த பிரதமர் மோடி வாய் திறந்து பேசிவிட்டார். அவரது கருத்துக்களும் உடல்மொழியும் இந்தப் பிரச்சினையை எந்த அளவிற்கு அலட்சியப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு அலட்சியப்படுத்திவிட்டது.
அவரது உரை குறித்து அனைத்து தரப்பினரும் தத்தமது கண்டனங்களைப் பதிவு செய்திருப்பதால் அதற்குள் சென்று மீண்டும் நாம் பேச வேண்டியதில்லை. எதிர்க்கட்சிகளை எப்படிக் கையாள வேண்டும் என்று அவருக்குத் தெரியும். எப்படியும் மணிப்பூர் விசயம் தொடர்பாக வாய் திறக்க வேண்டியதாகிவிட்டது.
நாடாளுமன்றத்திற்குள்ளே பேசினால், விவாதம் நடத்த வேண்டிவரும் என்றுணர்ந்து, நாடாளுமன்றத்திற்கு வெளியே அவர் பேட்டியளித்துவிட்டு கடமையை முடித்துக் கொண்டார். பிரதமர் மோடியின் இச்செயல், “நாடாளுமன்ற மரபு மீறிய செயல், நாடாளுமன்றத்திற்குள் பேச வேண்டும்” என்று எதிர்க்கட்சிகள் கண்டனக் குரல் எழுப்புகின்றனர்.
படிக்க: ஆமாம், அவர் பிரதமராக இருக்கிறார்
குக்கி இன மக்களுக்கு எதிராக அரசு, அதிகாரவர்க்கத்தின் துணையுடன் திட்டமிட்டு இந்த வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்படுகிறது. அவரது கட்சி ஆளும் மாநில அரசுதான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் விவாதத்திற்குள்ளாகும் என்பது அவருக்குத் தெரியாதா என்ன? ஆகவே அவர் கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சிகளோ, “மோடி, உள்ளே வாருங்கள்” என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில்தான் ஜுலை 26-ஆம் தேதி, மோடியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்திருக்கிறார்கள் எதிர்க்கட்சியினர். நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. பெரும்பான்மை பலத்துடன் அமர்ந்திருப்பதால், எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள இத்தீர்மானம் நிச்சயம் தோல்வியடையும். இதற்கு முன்பு 2018-ஆம் ஆண்டும் மோடி மீது எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்திருக்கிறது.
எனினும் நாடாளுமன்றத்திற்கு வந்து பேசமாட்டேன் என்று வம்படியாக நிற்கும் மோடியை நாடாளுமன்றத்திற்கு இழுத்துவந்து பேசவைப்பதற்கு இது ஒரு வாய்ப்பு என்று எதிர்க்கட்சிகளால் நம்பப்படுகிறது. ஆனால், அவர்கள் ஏமாறுவது நிச்சயம்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, அதானியின் பங்குச் சந்தை மோசடி குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரிக்க வேண்டுமெனக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர். மோடி என்ன செய்தார்! குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தனது உரையில், சம்பந்தமே இல்லாமல் இந்திராகாந்தியின் அவசரநிலை ஆட்சிபற்றி ஒன்றரை மணிநேரம் நெஞ்சுபுடைக்க உரையாற்றினார். மோடிக்கு எதிராக “அதானி” “அதானி” என்று முழக்கமெழுப்பிய எதிர்க்கட்சிகளைப் பார்த்து, “மோடி” “மோடி” என்று முழக்கமிட்டனர் பா.ஜ.க.வினர்.
படிக்க: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: உங்களுக்கும் நம்பிக்கையில்லை, எங்களுக்கும் நம்பிக்கையில்லை!
ஒருவேளை நம்பிக்கையில்லாத் தீர்மானம் அவைத்தலைவரால் விவாதத்திற்கு கொண்டுவரப்படுமாயின், அதேதான் மீண்டும் நடக்கப்போகிறது. ஆகஸ்டு 10 வரை நடக்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் உச்சக்காட்சியாக (கிளைமாக்ஸ்) அது இருக்கும்.
“நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள், அங்கே விவாதிப்போம்” என்பதெல்லாம், பழைய காலம். நாடாளுமன்றத்தை பஜனை மடமாக மாற்றுவதுதான் மோடி காலம். அதற்கேற்ப அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அங்கே மோடி மீதான பா.ஜ.க.வினரின் பஜனை கோசத்தைத் தாண்டி, எதிர்க்கட்சிகளின் கதறல்கள் எதுவும் ஒலிக்கப்போவதில்லை.
நாட்டு மக்களின் எதிரியான மோடியை தூக்கியெறிவதுதான் தேவையே ஒழிய, அவரை பேசவைத்து அழகுபார்ப்பது அல்ல. அதற்கு நாடாளுமன்றத்தை முடக்குவது வழிமுறையல்ல. மக்கள் போராட்டங்களால் நாட்டை முடக்குவதே வழி!
![]()
வாசு
பாசிஸ்டுகளின் பஜனை மடத்தை விட்டு வெளியே வாருங்கள்!
மோடியே சொல்வதைப் போல, பாசிஸ்டுகள் “சிக்ஸர் அடிக்கும்” மைதானம்தான் நாடாளுமன்றம்!
நேற்றைய நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் அதை மற்றொருமுறை உறுதிசெய்துள்ளது!
ஹிண்டன்பர்க் அறிக்கை பற்றிய விவகாரம் முதற்கொண்டு பல்வேறு விஷயங்களில் படிப்பினை இருக்கும்போது, மோடி வாய் திறக்க வேண்டும் என்று மூன்று மாத காலமாக எதிர்க்கட்சிகள் செய்தவை எல்லாம் தங்களது ஹீரோயிசத்தை காட்டும் முயற்சியே!
பாசிஸ்டுகளை எதிர்கொள்ள நாடாளுமன்றத்தை முடக்குவது அல்ல, நாட்டை முடக்குவதே தீர்வு!

புதிய ஜனநாயகம்
11.08.2023
ஆர்.எஸ்.எஸ் பற்றிய புத்தகங்களை அகற்றச் சொல்லும் ஆர்.எஸ்.எஸ் சங்கியும் போலீசும்
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

11.08.2023
நாங்குநேரி : பெருந்தெரு,
தாழ்த்தப்பட்ட பள்ளி மாணவர் மீது தாக்குதல், முதியவர் இறப்பு !
இனியும் இதை அனுமதிக்க முடியாது!
பத்திரிகை செய்தி
நெல்லை மாவட்டம், நாங்குநேரி, பெருந்தெருவைச்சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவன் சின்னதுரை. அவருடன் படித்து வரும் ஆதிக்க சாதிவெறி கொண்ட மாணவர்கள் தொடர்ச்சியாக சின்னத்துரை மீது வன்கொடுமை செயல்கள் செய்து வந்துள்ளனர்.
இதனால் பாதிப்படைந்த அந்த மாணவன் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை கண்டறிந்த அந்த மாணவனின் தாய், பள்ளி ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். பள்ளி ஆசிரியர் சம்பந்தப்பட்ட ஆதிக்க சாதிவெறி மாணவர்களை கண்டித்துள்ளார்.
ஆதிக்க சாதிவெறி மாணவர்களோ இரவு 10 மணிக்கு சின்னதுரையின் வீட்டுக்குள் புகுந்து சின்னதுரையையும் அவரது தங்கையையும் கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளனர். இதை தடுக்க வந்த ஒரு முதியவரும் இறந்து போய் உள்ளார். சின்னத்துரை உடல் முழுவதும் காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இச்சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
படிக்க : 100 நாட்களைக் கடந்து தொடரும் ஹாலிவுட் எழுத்தாளர்கள் போராட்டம்!
இது வழக்கமாக நடைபெற்ற கொலை முயற்சி அல்லது கொலை சம்பவம் அல்ல. தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆதிக்க சாதி வெறி நோய் எந்த அளவுக்கு பிடித்திருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம்.
தங்களுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் பள்ளி மாணவர்கள் இந்த படுகொலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஆதிக்க சாதிவெறியிலும் வன்கொடுமை சம்பவங்களிலும் ஈடுபடும் மாணவர்களை கைது செய்வது என்றால் தமிழ்நாட்டில் எத்தனை பேரை கைது செய்வது? பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை விதைப்போரை ஒழித்துக் கட்டாமல் ஆதிக்க சாதி வெறியை முடிவுக்கு கொண்டு வர முடியாது.
ஆதிக்க சாதி சங்கங்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன. அந்த ஆதிக்க சாதி சங்கங்களின் நச்சு கருத்துக்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரிடமும் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. பள்ளி செல்லும் மாணவர்கள் கைகளில் சாதிக் கயிறு கட்டிக் கொள்வதும் இருசக்கர வாகனங்களில் சாதிய வண்ணம் பூசிக் கொள்வதும் சாதாரண செயல்களாகி விட்டன.
படிக்க : பா.ஜ.க ஆட்சியில் மாபெரும் வங்கிக் கொள்ளை! | புஜதொமு
தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல் என்று பாடப்புத்தகங்களில் அச்சடித்து இருந்தாலும் கூட தீண்டாமையை ஒரு புனிதமான செயலாகவே ஆதிக்க சாதி வெறியர்கள் கருதி அதை நிலைநாட்டவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆதிக்க சாதி சங்கங்களையும் தடை செய்ய வேண்டும். சமூகநீதி, சமத்துவ நீதியை நிலை நாட்ட கூடிய பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
தீண்டாமையை பின்பற்றுவதும் தீண்டாமையை அனுமதிப்பதும் சமூகக் குற்றமாக இனங்காணப்பட வேண்டும். தீண்டாமை குற்றங்களில் ஈடுபடுவோரை மக்களே சமூகப் புறக்கணிப்பு செய்யும் வகையில் தொடர்ச்சியான பிரச்சாரங்களையும் செயல்களையும் நாம் முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
![]()
தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321.