Saturday, August 16, 2025
முகப்பு பதிவு பக்கம் 282

ஆறு வயதுக் குழந்தைகளிடம் ஆசிரியர் எவ்வாறு அணுக வேண்டும் ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 15

ரம்பக் கட்டப் போதனை முறை முழு எதிர்கால நம்பிக்கையுடையதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தன் சக்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், ஒவ்வொரு பள்ளி நாள் குறித்தும் மகிழ வேண்டும், ஒவ்வொரு முறை ஆசிரியரைச் சந்திக்கும் போதும் சந்தோஷப்பட வேண்டும், ஒவ்வொரு முறை பாடத்திற்கு மணியடிக்கும் போதும் உற்சாகப்பட வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் பள்ளி வாழ்க்கை அவனுடைய வாழ்க்கையின் சாரமாக இருக்க வேண்டும். சத்தம் போடுதல், திட்டுதல், அச்சுறுத்தல், முரட்டுத்தனம் ஆகிய விஷயங்கள் குழந்தைகளுடன் கலந்து பழகுவதில் தலைகாட்டவே கூடாது.

எனது கருத்துப்படி, ஆரம்பக் கட்டத்தில் உண்மையான கல்வி போதிக்கும் முறை, குழந்தைகள் மீது உண்மையான அன்புடன் படிப்பு சொல்லித் தந்து, வளர்க்கும் முறை மனிதாபிமான அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர அதிகாரத் தொனியிலான, கட்டாய, நிர்ப்பந்த அடிப்படையில் அமையக் கூடாது.

தமது ஆசிரியர்களுக்குக் கோபமேற்படுத்தவோ, தமக்குப் படிப்பு சொல்லித் தந்து வளர்ப்பதற்கு இடையூறு செய்யவோ குழந்தைகள் பிறக்கவில்லை. யதார்த்தத்தை அறியும் திறமைகளும் வாய்ப்புகளும் இவர்களிடம் கிட்டத் தட்ட எல்லையற்று உள்ளன, அறிவுத் தாகம் இவர்களிடம் மிகுந்துள்ளது என்பதை நாம் நம்ப வேண்டும். எனது கருத்துப்படி, ஆரம்ப வகுப்புகளில் கல்வி – வளர்ப்புப் பணியை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முழுவதும் குழந்தைகளின்பாலான மனிதாபிமான உறவைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இது குழந்தை வளர்ப்பின் விதியாக வேண்டும்.

ஆறு வயதுக் குழந்தைகள் படிக்க விரும்புகின்றனர். ஆனால் நாம் எப்படி சொல்லித் தந்தாலும் இவர்கள் படிப்பார்கள் என்பது இதன் பொருளல்ல. அதிகாரத் தொனியோடு, கட்டாயப்படுத்தி இவர்களுக்குப் படிப்பு சொல்லித் தந்தால், முரட்டுத் தனமாக இவர்களுடன் கலந்து பழகினால், படிப்பார்வத்தை ஒரு வருடம் முன்னதாகவே இவர்களிடமிருந்து பிடுங்கியவர்களாவோம், இவர்களின் வளர்ச்சியை செயற்கையாகத் தடுத்து நிறுத்துவோம். விளையாட வேண்டுமென்ற தங்கள் தேவையை குழந்தைகளால் விட முடியாது என்பதை நாம் மறந்தால் நமது போதனை முறை, அவர்களுடைய அறிதல் உலகில் வழிகாட்டியாக இருக்காது, இரவு நேரத்தில் தன்னந்தனியாக தன் மகளை தண்ணீர் எடுத்துவர காட்டிற்கு அனுப்பிய மாற்றாந்தாய் போலிருக்கும்.

குழந்தைகளுக்கு விளையாட்டுக்கள் மூலம் படிப்பு சொல்லித் தர வேண்டுமா, இதனால் இவர்களுக்கு என்ன பயன் என்று விஞ்ஞானிகள் இன்று வரை விவாதிக்கின்றனர். அதிகாரத் தொனியை விரும்பும் பலர் இப்படிப்பட்ட முறை குழந்தைகளுக்குத் தீங்கிழைக்க மட்டுமே செய்யும், ஏனெனில் படிப்பே ஒரு விளையாட்டு என்ற கருத்து இவர்களிடம் ஏற்படக் கூடும் என்கின்றனர். படிப்பு எவ்வளவு கடினமானது, சிக்கலானது என்று குழந்தைகள் முதலிலேயே நன்கு புரிந்து, உணர்ந்து, அனுபவிப்பது நல்லதாகும் என்று இதற்குப் பொருளாகாதா? ஒருவேளை, படிப்பே ஒரு வேதனை, இம்சை என்று குழந்தைகளுக்குத் தோன்றினால் என்ன செய்வது?

படிக்க :
பேராசிரியர் சாய்பாபாவை விடுவிக்கக் கோரி் கனடாவில் பேரணி !
கறி சாப்பிடாதே ! கோவை மாணவர்களிடம் சங்கிகள் விசமப் பிரச்சாரம் !

என் கருத்துப்படி, பிரச்சினையை இப்படி வைக்கக் கூடாது. விளையாட்டின் மனவியல் சாரத்தை வெளிப்படுத்தி, இந்த அடிப்படையில் கல்வி போதிப்பதைப் பற்றித் தெளிவுபடுத்துமாறு பிரச்சினை முன்வைக்கப்பட வேண்டும். விளையாட்டில் முக்கியமான அம்சம் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு. குழந்தை தானாகவே ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுத்து, சலிப்பேற்படும் வரை விளையாடுகிறான், தன் தேவை பூர்த்தியானதாக உணர்ந்ததும் இதை நிறுத்துகிறான். என் கருத்துப்படி, சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் உணர்வு தான் விளையாட்டின் மனவியல் அடிப்படையாகும்.

ஆனால் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பயன்படுத்தும் குழந்தை கடினமற்ற நடவடிக்கைகளை மட்டும்தான் விளையாட்டில் தேர்ந்தெடுக்கிறான் என்று இதற்குப் பொருளாகாது. விளையாட்டைத் தேர்ந்தெடுக்கும் குழந்தை இதன் மூலம் இடர்ப்பாட்டையும் தேர்ந்தெடுக்கிறான், இதைக் கடப்பதில் அவன் தன் கவனத்தையும் முயற்சிகளையும் ஒன்று திரட்டி செயல் முனைப்போடு இயங்குகிறான். இடர்ப்பாடுகளைக் கடக்கும் அம்சம் தான் குழந்தையைப் பொறுத்த மட்டில் விளையாட்டை உணர்ச்சிகரமானதாய், இலட்சிய நோக்குடையதாய் ஆக்குகிறது.

விளையாட்டில் ஏற்படும் அதே உணர்ச்சிகளை, கல்வி கற்கும் போதும் குழந்தை அனுபவிப்பதில் என்ன தப்பு? அப்போது நாம் விளையாட்டுப் படிப்பைப் பற்றிப் பேச மாட்டோம், மாறாக, குழந்தைகளின் நிலைகளின் அடிப்படையிலான, இந்த நிகழ்வுப் போக்கில் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் உணர்வை குழந்தைகள் அனுபவிப்பதன் அடிப்படையில் கல்வி போதிப்பதைப் பற்றிப் பேசுவோம். குழந்தை விளையாட்டினால் மகிழ்ச்சியடைகிறான் இல்லையா? படிப்பைக் கண்டும் அவன் மகிழ வேண்டும். ஆசிரியர்கள், குழந்தை வளர்ப்பாளர்களாகிய நாம் இந்த சந்தோஷத்தைக் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். இதுதான் ஆறு வயதுக் குழந்தைகள் விஷயத்தில் எனது பணியின் அடிப்படைகளில் ஒன்று.

பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பை நாம் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தரவும் அவர்களை வளர்க்கவும் அதிகபட்சம் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளின் திறமைகளை உரிய நேரத்தில் வளர்ப்பதற்கு அனுகூலமான சூழ்நிலைகளை ஏற்படுத்துவதற்காக மட்டுமே அவர்களை டெஸ்குகளில் உட்கார வைக்க வேண்டும். இத்திறமைகள் இந்த வயதில்தான் முளை விடுகின்றன, புதியவற்றை அறியும் போக்கில் குழந்தைகளின் வெற்றிகரமான முன்னோக்கிய இயக்கத்திற்கு இவை பெரிதும் முக்கியமானவை.

குழந்தை நன்கு படிக்க இவனுக்கு என்ன தேவை? குழந்தைக்குப் படிக்கவும் படித்ததைப் புரிந்து கொள்ளவும் தெரிய வேண்டும், தன் மனப்பதிவுகளை எழுதத் தெரிய வேண்டும், படிப்பதை, பார்ப்பதைப் புரிந்து, கிரகிக்க குறிப்பிட்ட கண்ணோட்டம் வேண்டும், சுற்றியுள்ள ஏராளமான நிகழ்வுப் போக்குகளிலிருந்து, பொருட்களிலிருந்து மேற்கூறியவற்றைப் பிரித்தெடுக்கத் தெரிய வேண்டும், தான் பார்த்ததை வார்த்தைகளில் சொல்லத் தெரிய வேண்டும். இப்படிப்பட்ட திறமைகளையும் இவற்றோடு தொடர்புடைய ஞானத்தையும் கிரகிப்பதானது கல்விக்குக் குழந்தை தயார் என்று காட்டுகிறது. குழந்தைக்குப் பேச்சு வராவிடில் எப்படிப் படிக்க முடியாதோ அதே போல் மேற்கூறியது இல்லாமல் பள்ளியில் கல்வியை நிறைவேற்ற இயலாது.

மேற்கூறிய திறமைகள் குழந்தையின் கல்வி – அறிதல் நடவடிக்கைக்கு அவசியமான கருவிகள் ஆகும். இவை எவ்வளவுக்கெவ்வளவு முழுமையானவையாக உள்ளனவோ அவ்வளவுக்கவ்வளவு வெற்றிகரமாக அவனால் விஞ்ஞானக் கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் புரிந்து, கிரகிக்க முடியும். குழந்தைகள் இத்திறமைகளைப் பெறுவதை – இது எந்த சூழ்நிலையில் நடைபெற்றாலும், பள்ளியில் நடைபெற்றாலும் கூட – கல்வி என்று இச்சொல்லின் கண்டிப்பான பொருளில் கூற முடியாது. குழந்தை படிக்க, எழுத, எளிய கணக்குகளைப் போடக் கற்றுக் கொள்வதை கல்வி என்று அடிக்கடி அழைத்தாலும் இதை புதிய மட்டத்துக்கு இட்டுச் செல்லும் வளர்ச்சிப் போக்காகத்தான் கருத வேண்டும். படிப்பது, எழுதுவது, எளிய கணக்குகளைப் போடுவது இவையெல்லாம் இன்றைய உலகில் குழந்தையின் வளர்ச்சிப் போக்கில் புதிய மட்டங்கள் மட்டுமே. நடக்கவும் பேசவும் குழந்தை எந்த சமூக – மனவியல் அடிப்படையில் கற்றுக் கொண்டானோ அதே அடிப்படையில் தான் இவற்றையும் கற்றுக் கொள்கிறான்.

வாழ்க்கை அனுபவம், உறுதி, பேச்சின் உள்ளடக்கமும் ஆழமும், வார்த்தைகளின் எண்ணிக்கை, நடவடிக்கைகளின் திடீர் எழுச்சி ஆகியவற்றில் ஆறு வயதுக் குழந்தைகள் ஏழு வயதுக் குழந்தைகளிடமிருந்து கணிசமாக மாறுபடுகின்றனர். முக்கியமானது என்னவெனில் விளையாட்டின் மீதுள்ள நாட்டமும் தேவையும் மாறுபடுவதாகும். ஓராண்டு வித்தியாசம், அல்லது இதற்கும் குறைவான வயது வேறுபாடு நம்மைக் குழப்பாமல் இருக்கட்டும்.

இவ்வாறு ஆறு வயதுக் குழந்தைகளுக்கும் ஏழு வயதுக்  குழந்தைகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாததானது இன்னொரு தவறான கருத்திற்கும் இட்டுச் செல்கிறது. அதாவது ஆறு வயதுக் குழந்தைகளின் தயாரிப்பு வகுப்பை முழு முதல் வகுப்பாக்க வேண்டுமென சொல்லப்படுகிறது. இதனால் ஆறு வயதுக் குழந்தைகளைப் பற்றிய பிரச்சினை மறைகிறது, பாடத்திட்டங்கள், பாடநூல்கள், முறையியல் சிபாரிசுகளை உருவாக்குபவர்கள் முன் தோன்றக்கூடிய சிக்கலான பிரச்சினைகளும் இதன் மூலம் “அகற்றப்படுகின்றன”. இப்படியிருக்கும் பட்சத்தில் ஆறு வயதுக் குழந்தைகளைத் தவிர மற்ற அனைவருக்கும் – ஆசிரியர்கள், முறையியல் நிபுணர்கள், ஆணையாளர்கள் எல்லோருக்கும் – வசதியாகவும் எளிதாகவும் ஆகிறது. ஆறு வயதுக் குழந்தைகளுக்குக் கல்வி போதிக்கும் பிரச்சினையை இப்படி எளிதாகத் ”தீர்ப்பதை” நான் குழந்தை வாழ்க்கையை மட்டுமின்றி, குழந்தைகளின் மனவியல், ஆசிரியரியல், முறையியல் போன்ற விஞ்ஞானங்களையும் அதிகார முறையில் அணுகுவதாகப் பார்க்கிறேன்.

(அடுத்த பாகத்துடன் நிறைவடைகிறது)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு ! ஆர்ப்பாட்டம் ! நேரலை !

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, இலங்கைத் தமிழரை குடியுரிமை திருத்த சட்டத்தில் இணைக்காததைக் கண்டித்து, டில்லி ஜாமியா பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து சி.பி.எம் தலைமையில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் !
இடம் : சேப்பாக்கம், சென்னை
நாள் : 16-12-2019
வினவு நேரலை ! காணத் தவறாதீர்கள் !

பாருங்கள் ! பகிருங்கள் !

அதிகரிக்கும் வங்கி மோசடிகள் : மோடி ஆட்சியின் சாதனை !

மோடி ஆட்சியில் அசுர வேகமெடுக்கும் வளர்ச்சி… இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் !

2014 -க்குப் பிறகு இந்திய வங்கிகளில் அதிகரிக்கும் மோசடிகள்…

1. 2014 -க்குப் பிறகு, அரசு நடத்தும் வங்கிகளில் மோசடிகள் நான்கு மடங்காக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது. 2017-18 உடன் ஒப்பிடும்போது, 2018-19ல் மோசடிகள் 70 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன.

2. பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்ற மோசடியின் மதிப்பு 2013-14ஆம் ஆண்டுடன் முடிவடைந்த நிதியாண்டில் 10,171 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், அடுத்த ஆண்டில் இது 19,455 கோடி ரூபாயாக அதிகரித்தது.

3. 2016-17ல் 23,944 கோடி ரூபாயை எட்டியது. அதன் பிறகு, மோசடிகளில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டது. 2017-18ஆம் ஆண்டில் 41,168 கோடியாகவும், 2018-19ல் 71,543 கோடியாகவும் இந்தத் தொகை உயர்ந்தது.

4. 2019 ஏப்ரலில் தொடங்கிய வணிக ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மோசடி 95,760 கோடி ரூபாய் என்று நிதி அமைச்சர் சமீபத்தில் மாநிலங்களவையில் தெரிவித்தார். அப்படியென்றால் மோசடி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

5. 2018-19ல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் 22,000 -க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளில் 25,417 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக தெரியவந்தது. பஞ்சாப் நேஷனல் வங்கி (10,822 கோடி ரூபாய்), பாங்க் ஆப் பரோடா (8,273 கோடி ரூபாய்) ஆகியவை மோசடியில் அடுத்த இரண்டு இடங்களை பிடித்தன. நாட்டின் இந்த மூன்று மிகப்பெரிய அரசு வங்கிகளின் நிலைமை அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

படிக்க:
இந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்
இந்திய நாடு, அடி(மை) மாடு !

6. மோசடிகளில் 55 சதவிகிதம் பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்றுள்ளது. மோசடி செய்யப்பட்ட பணத்தில் 90 சதவீதம் பொதுத்துறை வங்கிகளிடமிருந்தே சென்றுள்ளது.

7. பொருளாதார குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில் முதலிடத்தை பிடித்துள்ளது ஜெய்ப்பூர். அதையடுத்த இடங்களை லக்னோ, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், கான்பூர், மும்பை, புனே, நாக்பூர் மற்றும் காசியாபாத் ஆகிய இடங்கள் பிடித்துள்ளன.

8. முத்ரா கடன்கள் தொடர்பாக வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. பல வங்கிகள் முத்ரா திட்டத்தின் கீழ் கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கவில்லை என்ற தகவல்களுக்குப் பிறகு, இதுபோன்ற கடன்களைக் கொடுக்கும்போது வங்கிகள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

இங்கிலாந்துத் தேர்தலில் தடம் பதித்த இந்துத்துவா : வி.இ.குகநாதன்

ண்மையில்  இங்கிலாந்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பழமைவாதக் கட்சி வெற்றி பெற்றது தெரிந்ததே. பழமைவாதக் கட்சிக்கும் (Conservative Party) , தொழிலாளர் கட்சிக்கும் (Labour party) இடையே கடும் போட்டியாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட இத் தேர்தலானது, இறுதியில் பெருமளவிற்குப்  பழமைவாதக் கட்சிக்கு சார்பானதாகவே முடிவுற்றிருந்தது.

இக் கட்சிகளின் பெயர்களே கட்சிகளின் கொள்கைகளை ஒரளவிற்குத் தெளிவாக்கிவிடும். கட்சிக் கொள்கைகளை விட, இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் விடயமானது (BREXIT) இத் தேர்தலில் முதன்மையான இடத்தினைப் பெற்றிருந்தது. இக் கட்டுரையின் நோக்கமானது கட்சிகளின் கொள்கைகளையோ அல்லது வெற்றி-தோல்விகளிற்கான காரணங்களையோ ஆராய்வதல்ல. மாறாக, இத் தேர்தலில் முதன்முறையாக இந்துத்துவா பரப்புரை இங்குள்ள இந்திய கால்வழி மக்களிடம் செலுத்திய செல்வாக்குப் பற்றி ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

***

ங்கிலாந்தில் ஏறத்தாழ 3 மில்லியன் தென்னாசியர்கள் வாழ்வதாகவும், அவர்களில் ஒன்றரை மில்லியன் இந்தியர்கள் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஒன்றரை மில்லியன் (15 லட்சம்) இந்தியர்களில் பெருமளவானோர் வட இந்திய இந்துக்களே பெரும்பான்மையானோர். பொதுவாகத் தொண்ணூறுகள் வரை, மிகப் பெருமளவான இந்தியர்கள் தொழிற் கட்சி சார்பானவர்களாகவே இருந்து வந்தார்கள். நிறவெறித் தாக்குதல்களின்போது இந்தியர்களிற்குச்  சார்பாகத் தொழிற்கட்சி செயற்பட்டமையும், இந்தியர்களில் பலர் தொழிலாளர்களாகவிருந்தமையும் இதற்குக் காரணங்களாகவிருந்தன.

தொண்ணூறுகளின் பின்னர் தொழிற்கட்சியும் பழமைவாதக் கட்சி போன்றே முதலாளிகளின் நலன் பேணும் கட்சியாக மாறத் தொடங்கியமையாலும், இந்தியர்களிலேயே பலர் பெரும் பணக்காரர்களாக மாறியிருந்தமையும், நிறவாதம் பெருமளவிற்கு குறைந்து போயிருந்தமையாலும்; இந்த நிலையில் சிறியளவு மாற்றம் ஏற்பட்டிருந்தது. அதாவது இந்திய மக்களும் பொது நீரோட்டத்தில் கலந்து வெள்ளையினத்தவர்கள் போன்று தொகுதி வேட்பாளர், அன்றைய இங்கிலாந்து அரசியல் நிலைக்கேற்ப வெவ்வேறு கட்சிகளிற்கும் சார்பாகச் செயற்படத் தொடங்கியிருந்தார்கள். என்றபோதிலும், இதற்குப் பின்னரும் ஒப்பீட்டுரீதியில் பெருமளவான இந்தியர்கள் தொழிற் கட்சியின் சார்பாளர்களாகவே இருந்துவந்தார்கள்.

இவ்வாறான வேளைகளில் எல்லாம் இந்தியர்கள் எப்போதுமே மதம் சார்ந்து சிந்தித்ததில்லை. குறிப்பாக இங்குள்ள இந்திய வழி முஸ்லீம்களுடனும், பாகிஸ்தானியர்களுடனும் இணைந்தே செயற்பட்டு வந்தார்கள். இந்த ஒற்றுமையில் மிகப் பெரிய பிளவாக இந்தத் தேர்தலில் பெருமளவு இந்தியர்களின் செயற்பாடு அமைந்திருந்தது. குறிப்பாக இந்த மோதல் 42 விழுக்காடளவிற்கு தென்னாசியர்கள் வாழும் பிரட்போர்ட் (Bradford) தொகுதியில் தெளிவாகவே வெளித் தெரிந்தது.

2016 அமெரிக்க அதிபர் தேர்தலின் போது இந்து சேனா டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஆதரவளிப்பதை அம்பலப்படுத்தும் கேலிச்சித்திரம்.

2014 இல் இந்தியாவில் பாரதீய சனதா கட்சியின் இந்துத்துவா ஆட்சி ஏற்பட்டதிலிருந்து புலம் பெயர் நாடுகளிலும் இந்தியர்களிடம் ‘இந்துத்துவா வெறி’ பரவத் தொடங்கியிருந்தது. அதன் பின்னர், இந்துத்துவா அமைப்புகள் புலம்பெயர் நாடுகளிலும் இந்துக்களாக மக்களை அணிதிரட்டி, அந்தந்த நாடுகளிலுள்ள தீவிர வலதுசாரிகளிற்கு வாக்களிக்க வைத்து; அதற்குக் கைமாறாக அந்த அரசுகளிடமிருந்து தமது பார்ப்பனிய-பணியா கும்பலின் வணிக நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தொடங்கியிருந்தன.

இந்த வகையிலேயே  சென்ற அமெரிக்கத் தேர்தலில் டிரம்பிற்காக இந்து அமைப்புக்கள் களமாடின. டிரம்பின் வெற்றிக்காக யாகங்கள் கூட நடாத்தப்பட்டன.  டிரம்பே வெற்றி பெற்று, இந்தியர்களின் வேலை வாய்ப்பினை அமெரிக்காவில் விசா தொடர்பான கடுமையான நடைமுறைகள் மூலம் பறித்ததும், இந்தியாவிற்கான அவுட்சோர்சிங்  முறையிலான இந்தியாவிலேயே கிடைத்த வேலை வாய்ப்புகளைப் பறித்ததும், டிரம்பின் எழுச்சியால் உந்தப்பட்ட தீவிர வலதுசாரிகளால் இந்தியர்களே கொல்லப்பட்டதும் பிந்திய விளைவுகள். இவற்றைப் பற்றி இந்துத்துவா அமைப்புக்கள் அலட்டிக் கொள்ளவேயில்லை, ஏனெனில் இவற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டது நடுத்தர இந்துக்களே. அவை தமது பார்ப்பனிய – பணியா வணிக நலன்களைப் பேணுவதிலையே குறியாகவிருந்தன.

மேற்கூறிய ஒரு இந்துத்துவா அணிதிரட்டலினை இங்கிலாந்து வாழ் இந்திய கால்வழி இந்துக்களிடமும் ‘இந்து கவுன்சில் யுகே’ (HCUK) , RSS, விஸ்வ ஹிந்து பரிசத் போன்ற அமைப்புக்கள் மேற்கொண்டிருந்தன. இதற்காக, இந்த அமைப்புகள் சென்ற சில ஆண்டுகளாகவே கடுமையாகச் செயற்பட்டுவந்தன. தொழிற் கட்சியின் தலைவராக ஜேர்மி கோபன் தெரிவு செய்யப்பட்டதிலிருந்து, அக் கட்சியானது தனது பழைய தொழிலாளர் நலன் பேணும் இடதுசாரிப் பாதைக்கு மீண்டும் திரும்பியிருந்தது. சமத்துவம் என்ற சொல்லைக் கேட்டாலே அலறும் இந்து அமைப்புக்களிற்கு, சமத்துவத்தினையே இலக்காகக் கொண்ட ஒரு தலைமையினை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.

படிக்க:
♦ பிரக்சிட் – இடியாப்பச் சிக்கலில் இங்கிலாந்து !
♦ அமெரிக்க – சீன வர்த்தகப் போர் : வீழக் காத்திருக்கும் உலகப் பொருளாதாரம் !

அப்போதே  இந்துக்களை பழமைவாதக் கட்சிக்குச் சார்பாக அணிதிரட்டும் வேலையில் இறங்கியிருந்தன. 2017 பொதுத் தேர்தலிலேயே இந்து அமைப்புக்கள் தமது வேலையில் இறங்கி ஒரளவு தாக்கத்தினையும் ஏற்படுத்தியிருந்தன, என்ற போதிலும் பெரு வெற்றி பெற்றார்கள் என்று கூற முடியாது. மே 2016 இல் தொழிற்கட்சியின் சார்பில் லண்டன் மேயராக பாகிஸ்தான் கால்வழியினைச் சேர்ந்த ‘சாதிக் கான்’ (Sadiq Khan ) வெற்றி பெற்றதனை முன்னிட்டு இந்துத்துவா அமைப்புக்கள் இந்துக்களிடம் ‘தொழிற்கட்சி ஒரு முஸ்லீம் சார்புக் கட்சி’ என்ற பொய்ப் பரப்புரையினை கட்டிவிட்டது.  இதற்கு முன்னர் பல இந்துக்கள், முஸ்லீம்கள் தொழிற்கட்சியில் பல பதவிகளை வகித்தபோதும், அப்போதெல்லாம் இத்தகைய முத்திரை குத்தல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. இவர்களின் மத வெறுப்புப் பரப்புரை 2017 தேர்தலில் பெருமளவு பலன்களைக் கொடுக்காமையால், அவ்கள் சோர்வடையவில்லை. மாறாக புலனம், முகநூல் போன்ற பல குழுக்களை ஏற்படுத்தித் தொடர் முயற்சியில் ஈடுபட்டுவந்தார்கள்.

குறிப்பாக  இந்து கவுன்சில் (HCUK) இந்துக் கோயில்களை மையப்படுத்தி இந்த மத வெறுப்பினைச் சிறப்பாகவே இந்துக்களிடம் கட்டமைத்தார்கள். இவர்கள் கோபன் மீது வெறுப்புக் கொள்வதற்கு இன்னொரு முதன்மையான காரணமும் உண்டு.

சாதி பாகுபாடுகளை கண்டித்து தொழிலாளர் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

2010 இல் இங்கிலாந்தில் கொண்டுவரப்பட்ட சமத்துவச் சட்டத்திறகுள் சாதி ஒடுக்குமுறையினையும் கொண்டு வந்து கோயில்களில் பிறப்பால் பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாவதனைத் தடுக்கும் ஒரு முயற்சி நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்தச் சட்டத்திற்காக நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் கடுமையாகக் கோபன் குரல் கொடுத்திருந்தார்.

அம் முயற்சியினைக் கடுமையாகப் போராடி முறியடித்தது இந்த இந்துப் பேரவையே (HCUK). அந்தக்  காரணத்தை வெளிப்படையாகத் தெரிவித்தால், தமது பார்ப்பனப் பற்று வெளிப்பட்டுப்போகும் என மறைத்துவிட்டு, ‘லண்டன் மேயர் ஒரு முஸ்லீம்’ என்ற வெறுப்புணர்வினைக் கட்டியமைத்தார்கள். இவ்வாறான பின்புலத்தில், காஷ்மீர் மாநிலம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அந்த மாநில மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை எதிர்கொண்ட வேளையில், கோபன் அந்த மாநில மக்களிற்காகக் குரல் கொடுத்திருந்தார்.

பொதுவாகவே கோபன் உலகில் எங்கு மக்கள் ஒடுக்கப்பட்டாலும், அங்கு ஒடுக்கப்படுவோர்களிற்காக கட்சி ஆதாய இழப்புகளிற்கு அப்பால் குரல் கொடுத்துவருபவர். அந்த வகையில் ஈழத் தமிழர்களிற்காக 1983 முதலே குரல் கொடுத்து வருபவர். அவ்வாறே இங்கும் காஷ்மீரிய மக்களிற்காகக் குரல் கொடுத்திருந்தார். இதனையே H.U.C.K (இந்து கவுன்சில்) ‘இந்து விரோதி கோபன்’ என முத்திரை குத்தி, வெளிப்படையாகவே ஒரு அறிக்கை வெளியிட்டது. மறுபுறத்தில் பழமைவாதக் கட்சியின் தலைவரான போரிஸ் யோன்சனிற்கு தலைப்பாகை கட்டி ‘இந்துக்களின் காவலன்’ எனும் அடையாளத்தையும் கொடுத்தது.

இந்த இந்துத்துவா அமைப்புக்களின் வேலை பெருமளவான வட இந்திய இந்துக்களைப் பழமைவாதக் கட்சியின் பக்கம் திருப்பியிருந்தது. அதாவது மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்களை எல்லாம் மறைத்து, வெறும் மத அமைப்பு ஒன்றின் சொல்லிற்கு மிகப் பெரியளவிலான இந்து மக்களை ஒப்பீட்டுரீதியில் வளர்ச்சியடைந்த ஒரு நாட்டிலேயே செயற்படவைக்க முடிந்தமை கடுமையான ஆய்விற்குரிய ஒன்றாகும்.

படிக்க:
♦ கம்பம் : குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு ! 2000 பேர் ஆர்ப்பாட்டம்
♦ குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் !

தமிழர்களின் நிலை :

இங்குள்ள ஒரு ஆறுதலான செய்தி என்னவென்றால் தமிழர்களில் பெருமளவானோர் இந்த ‘இந்துத்துவா’ மாயைக்குள் சிக்கவில்லை. தமிழ்நாட்டுத் தமிழர்களும் சரி, ஈழத் தமிழர்களும் சரி,  இந்த ‘இந்து’ அணி திரட்டலில் இணையவில்லை. பெருமளவான தமிழர்கள் இங்குள்ள வாழ்வியல் சிக்கல்களிற்கமையவே வாக்களித்திருந்தார்கள்.  இலவச பொது மருத்துவ சேவை (NHS), தரமான பொதுத்துறைக் கல்வி போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தொழிற்கட்சிக்கோ அல்லது  BREXIT இனைக் கருத்திற்கொண்டு பழமைவாதக் கட்சிக்கோ வாக்களித்திருந்தார்கள்.  தமிழர்களில் பெருமளவானோர்கள் மதரீதியான அணி திரட்டலிற்குள் சிக்கிக்கொள்ளாமைக்கு இங்கு செயற்படும் தமிழ் சொலிடாரிற்றி, பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் (லண்டன்), மக்கள் கலை பண்பாட்டுக் களம் போன்ற சிறு அமைப்புகளின் விழிப்புணர்வுச் செயற்பாடுகளும் ஒரு காரணம்.

பழமைவாதக் கட்சியின் தலைவரான போரிஸ் ஜான்சனிற்கு தலைப்பாகை கட்டி ‘இந்துக்களின் காவலன்’ எனும் அடையாளத்தையும் கொடுத்தது இந்துத்துவ கும்பல்.

ஆனால், இந்த நிலை எதிர்காலத்தில் மாறாமலிருப்பதற்குப்  பெரியளவிலான செயற்பாடுகள் தேவைப்படுகின்றன. தமிழர்கள் இங்குள்ள கோயில்களில் உண்டியல்களில் போடும் பணத்தின் ஒரு பகுதியும் இந்த இந்துத்துவா அமைப்புக்களிற்குச் சென்று சேருகின்றது. இலண்டனிலுள்ள சிறீ முருகன் கோயில் மட்டுமே 769 ஆயிரம் பவுண்களை ஆண்டு (2016) வருவாயாகக் கணக்கு காட்டியுள்ளது. இவ்வாறு இலண்டனிற்குள்ளேயும், வெளியேயும் பல கோயில்கள் உண்டு.

ஈழத் தமிழர்களை மையமாகக் கொண்டு இயங்கும் கோயில்களில் சில ஈழத்தில் மக்கள் சார்ந்த வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதனையும் மறுப்பதற்கில்லை. எவ்வாறாயினும் கோயில்களிற்கான கொடுப்பனவுகளில் மிகுந்த கவனம் தேவைப்படுகின்றது. அதே போன்று தமிழர்களிடம் தொடர்ச்சியான விழிப்பூட்டல் மேற்கொள்ளப்பட வேண்டியமுள்ளது. இது தமிழ்நாடு – ஈழம் ஆகிய தாயகங்களிலிருந்து புலம்பெயர் நாடுகள் வரைச் செய்யப்படவேண்டியுள்ளது.

மீண்டும் இந்துத்துவா அணிதிரட்டலினைப் பார்த்தால், இதனால் மட்டுமே பழமைவாதக் கட்சி வெற்றிபெற்றது எனக் கூறவரவில்லை. மாறாக, ‘இந்து மாயை’ எவ்வளவிற்கு ஆழமாகப் புலத்திலும் பரவிப் பார்ப்பனிய நலன்களைப் பேணுகின்றது என்பதனை எடுத்துக்காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

உலகின் வலதுசாரிகள் எல்லோரும் கோபனின் வெற்றியானது புதிய ஒரு தொடக்கமாக அமைந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாகவிருந்தன. டிரம்ப் வெளிப்படையாக பொரிஸினை ஆதரித்திருந்தார். ருஸ்யாவின் மாபியா நேரடியாகவே பழமைவாதக் கட்சிக்கு ‘கட்சிப் பணம்’ வழங்கியிருந்தது. யூதர்கள் முதல் கிறிஸ்தவ மதகுருமாருமார்கள் வரைப் பல பிற மத அமைப்புகளும் கூடப் பழமைவாதக் கட்சிக்கு ஆதரவு கொடுத்திருந்தன.

இங்குள்ள சிங்களப் பேரினவாத அமைப்புகள், சில முஸ்லீம் சிறு அமைப்புகள் என இந்த பழமைவாத ஆதரவு நீண்டு செல்கின்றது.  இவ்வாறு பலமான எதிரணியினை எதிர்கொள்ள உலகெங்குமுள்ள இடதுசாரிகள், முற்போக்குவாதிகள் ஆகியோரும் இணைந்து செயற்படவேண்டிய தேவையுள்ளது.

வி.இ.  குகநாதன்

குடியுரிமை திருத்தச் சட்டம் : முற்றுகை | மனுஷ்ய புத்திரன் கவிதை

முற்றுகை

முற்றுகை துவங்கிவிட்டது
அடையாளங்களின் மீதான முற்றுகை
வரலாற்றின் மீதான முற்றுகை
இழப்பதற்கு ஏதுமற்றவர்களின்மீதான முற்றுகை

என் அடையாளங்களை கேட்கிறார்கள்
என் மூதாதையர்களின் அடையாளங்களை கேட்கிறார்கள்
நான் எங்கிருந்து வந்தேன் என்று கேட்கிறார்கள்
இதோ இந்த மண்ணுக்குக் கீழ்
புதையுண்டு கிடக்கும் நகரத்திலிருந்து வந்தேன்
அங்கிருக்கும்
மண் ஓடுகளில் என் அடையாள அட்டைகள் எழுதப்பட்டிருக்கின்றன
நான் வந்தது
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பா
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பா
என்று விவாதங்கள் நடக்கின்றன
என் தெய்வங்கள் மாறிக்கொண்டே இருந்திருக்கின்றன
உங்கள் தேசங்கள் உருவாவதற்கு முன்பே
நான் இந்த பூமிக்கு வந்தவன்

அவர்கள் மூன்று நீண்ட
அகதி வரிசைகளை உருவாக்குகிறார்கள்
உள்ளே வரவேண்டிய அகதிகள் வரிசை
வெளியேறவேண்டிய அகதிகள் வரிசை
உள்ளே நுழையக்கூடாத அகதிகள் வரிசை
அவர்கள் சற்று முன் வரை சகோதரர்கள்
பிரித்து நிறுத்தப்பட்ட வரிசைகளில்
ஒருவர் முகத்தை
ஒருவர் பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள்

ஒரு மூட்டை தூக்கும் வங்காளி கேட்கிறான்
ஒரு ரிக்‌ஷா இழுக்கும் ரோஹிங்கியா கேட்கிறான்
‘என்னை முகாம்களுக்கு அனுப்பப் போகிறீர்களா
எல்லைக்கு அப்பால் அனுப்பப் போகிறீர்களா?’
கொலைகாரர்களுக்கு
யாருக்கு எதிராக யுத்தம் செய்கிறோம்
என்பதைப்பற்றி எந்த நாணமும் இல்லை

நான் வெளியேற்றப்பட வேண்டிய ஒரு இஸ்லாமியனா
உள்ளே நுழைய அனுமதிக்கக் கூடாத இஸ்லாமியனா என
குழப்பமாக இருக்கிறது
என்னிடம் ஆவணங்கள் இல்லை
நான்தான் ஆவணம்
என் நினைவுகள்தான் ஆவணம்
என் மூதாதையர்கள் நாடோடிகள்
போர்களாலும் பசியினாலும்
தொடர்ந்து துரத்தப்பட்டவர்கள்
பிறகு ஒரு நிலத்தைக் கண்டுபிடித்தோம்
அதை நாங்களும் சேர்ந்து உருவாக்கினோம்
கடவுள் எங்களைப் பார்த்துக்கொண்டார்
எங்கள் கடவுளை நாங்கள் பார்த்துக்கொண்டோம்

படிக்க :
கம்பம் : குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு ! 2000 பேர் ஆர்ப்பாட்டம்
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்

கணக்கெடுப்பு துவங்கிவிட்டது
ஆஷ்ட்விட்ச் முகாம்களை கட்ட
கணக்கெடுப்புகள் முக்கியம்
ஒரு தேசத்தையே விஷவாயுக்கூடமாக்கும்
வலிமையான சித்தாந்தம் நம்மை ஆள்கிறது
அது அப்படித்தான் முன்னரும் நிகழ்ந்தது
இனியும் அப்படித்தான் நிகழும்
மக்கள் இரண்டு அணிகளாக பிரித்து நிறுத்தப்படுகின்றனர்
இரண்டு மதங்கள்
இரண்டு தேசங்கள்

நகரங்கள் பற்றிஎரிகின்றன
அஸ்ஸாமிலிருந்து
திரிபுராவிலிருந்து
வங்கத்திலிருந்து
டெல்லியிலிருந்து
தீ பரவிக்கொண்டிருக்கிறது
மிகப்பெரிய அச்சம் ஆள்கிறது
மிகப்பெரிய குழப்பம் ஆள்கிறது

இங்கே ஒருவன் மஞ்சள் நிற சட்டையில்
மக்களை வேன் மீதிருந்து சுட்டான்
அங்கே ஒருவன்
சிவப்பு நிற சட்டையில்
மாணவர்களை குண்டாந்தடியில் தாக்குகிறான்
சீருடைகள் மாறிவிட்டன
அவர்கள் யார் என்று நமக்குத் தெரியாது
கறுப்புப் படையினர் மாறுவேடங்களில் இருக்கிறார்கள்
வாகனங்கள் தானே பற்றி எரிகின்றன
எதிர்ப்பவர்களைக் கொல்ல
காரணங்களை உருவாக்கவேண்டும்
இதற்கு முன்பும்
அவை இப்படித்தான் நிகழ்ந்தன

ஒரு இதயமற்ற தேசத்தில் வாழ்கிறேன்
அவமானத்தில் என் உடல் கூசுகிறது
ஒரு கருணையற்ற தேசத்தில் வாழ்கிறேன்
அவர்கள் முதலில் என் தெய்வத்தின் நிலத்தை பிடுங்கினார்கள்
இப்போது என் நிலத்தை பிடுங்க விரும்புகிறார்கள்

பசியைப் பற்றி பேசாதே
வேலையின்மை பற்றிப் பேசாதே
வெங்காய விலை பற்றி பேசாதே
நிகழ்காலத்தையோ
எதிர்காலத்தையோ பற்றிப் பேசாதே

பேசு
முற்றுகையைப் பற்றி
அதற்காகத்தான்
அவர்கள் நகரங்களுக்கு
தீ வைத்திருக்கிறார்கள்

தீ பரவுகிறது
இதயங்களின் ஆழங்களில்

நன்றி: மனுஷ்ய புத்திரன்

disclaimer

ஜே.என்.யூ : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம் !

ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 2

ஜே.என்.யூ. பரிசோதனையாக முன்னெடுத்த பல்வேறு சனநாயகக் கூறுகள் முழுவதுமாக வெற்றி கண்டுள்ளன என்று கூறமுடியாது. குறிப்பாகச் சாதி, பால் சார்ந்த குற்றச்சாட்டுகள் அவ்வப்பொழுது எழுந்து அடங்கும். ஆனால், பெண்ணுரிமை அமைப்புகள் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் அமைப்புகள் இங்கு வலுப்பெற்று வழிப்புணர்வோடு இருப்பதும், பொதுவாக அனைத்துதர சமூகத்தில் இருந்து வரும் மாணவர்கள் ஆசிரியர்கள் இதுபோன்ற அமைப்புகளுக்கு ஆதரவாக இருப்பதும் உரிமைமீறலுக்கான வாய்ப்புக்களை மிகவும் கட்டுப்படுத்தியுள்ளது எனக்கூறலாம்.

இத்தகைய பரிசோதனைகளுக்குக் கடந்த 50 வருடங்களாகத் தொடர்ந்து ஏதோவொரு வகையில் முட்டுக்கட்டைகளும், தொந்தரவுகளும்  வந்தவண்ணம் இருக்கத்தான் செய்தன. ஆனால், மாணவ – ஆசிரியர் போராட்டங்கள் இவற்றைத் துணிச்சலாக எதிர்த்து ஜே.என்.யூ மாண்புகளை பேணிக்காத்தன. அண்மையில், வலதுசாரிகள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைபெற்று ஆட்சியைப் கைப்பற்றியபோது ஜே.என்.யூ மீதான தாக்குதல்கள் பல்கிப் பெருகின. இதுவரை எவை.. எவை சனநாயக மாண்புகள், சமத்துவச் சமூகத்தை வென்றெடுப்பதற்கான முன்மாதிரிகள் எனப் போற்றிக் பாதுகாக்கப்பட்டனவோ, அவற்றைக் குறிவைத்து இத்தாக்குதல்கள் வலுப்பெற்றன.

இது வெறும் அரசியல் குறுக்கீடு அல்ல. அரசு ஆதரவுபெற்ற, அல்லது அரசுக்குப் பயந்த தொலைக்காட்சிகள், இந்துத்துவா வெறிகொண்ட அரசியல்வாதிகள், பெண் விடுதலைக்கு எதிர்ப்பானோர், இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பானோர், பொதுக் கல்வியை ஒழித்துக்கட்ட விரும்பிய பணக்கார வர்க்கத்தினர் எனப்  பலதரப்பினரிடமிருந்தும் இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்தன.

குறிப்பாக, இந்துத்துவா அரசியல்வாதிகள் எந்த அளவிற்கு இஸ்லாமியருக்கு அல்லது பாகிஸ்தானுக்கு எதிர்ப்பான வன்பிரச்சாரத்தைத் தூண்டிவிட்டார்களோ அதே அளவிற்கு ஜே.என்.யூ மீதும் தன் வன்மத்தைக் கொட்டினர். ஜே.என்.யூவில் நடந்த ஒரு கூட்டத்தில் ஒரு ஓய்வுபெற்ற பெரியமீசை கொண்ட இராணுவ ஜெனரல், ‘இன்று நாம் ஜே.என்.யூ-வைக் கைப்பற்றிவிட்டோம்’ என்று ஒரு எதிரி நாட்டைக் கைப்பற்றிவிட்டது போல், பெருமிதம் கொண்டார்.

இராணுவப் பீரங்கிகள் இங்கு நிறுத்தப்பட வேண்டுமென்றனர். ஒருவர் ஜே.என்.யூ-வின் முதுகெலும்பை உடைக்கவேண்டும் என்றார். மற்றொருவர் ஜே.என்.யூ-வில் ஒருநாளைக்கு எத்தனை உடலுறவு உறைகள் பயன்படுத்தப்படுகின்றன என புள்ளிவிபரம் கொடுத்தார். ஜே.என்.யூ பெண்களை விலைமாதர் என்றனர். ஆண்கள் தேசத்துரோகிகள் ஆனார்கள். சிலநாட்களுக்கு முன்பு பிஜேபி பாராளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி ஜே.என்.யூ-வை இரண்டு வருடங்களுக்கு மூடிவிட்டு மீண்டும் சுபாஷ் சந்திரபோஸ் பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றித் திறக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

இத்தோடு மட்டுமல்லாமல் தனக்கு அடிபணிந்து நடக்கும் ஒருவரை துணைவேந்தராக நியமனம் செய்து ஜே.என்.யூ-வின் அடிப்படை விதிகளை, நடைமுறைகளை மாற்றி அமைத்தனர். இதற்கு எதிர்ப்பான போராட்டங்களே தற்போதைய மாணவர் புரட்சியின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

படிக்க:
ஜே.என்.யூ : விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து தேர்வு புறக்கணிப்பு !
♦ அயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் ! புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு

தொடர் அத்துமீறல்கள், அடக்குமுறைகள்

ஜே.என்.யூ-வின் முதுகெலும்பை உடைக்கவேண்டும் என்று கூறியவர்கள் அதை நிறைவேற்றத் துரிதமாய்ச் செயல்பட்டனர். துணைவேந்தர் தனக்குச் சாதகமானவர்களை அனைத்து உயர் பதவியிலும் நியமித்தார். மரபுகளை மீறி துறைத் தலைவர்கள், டீன்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் கல்விக்குழு (academic council) உறுப்பினர்களாக இருப்போர். இவற்றையும் மீறி கல்விக்குழு கூட்டங்கள் சரியாக முறைப்படி நடைபெறவில்லை. விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டன. இதைவிட, கல்விக்குழு கூட்டங்களில் பேச அனைத்து உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு தரப்படவில்லை.

மேலும், கல்விக் குழுவால் நிறைவேற்றப்படாத மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்டன. மறுப்பு தெரிவித்தோருக்கு சரியான பதில் இல்லை. இதுபோல தான் ஒவ்வொரு குழுக் கூட்டமும் இதுவரை நடைபெற்றன. இந்துத்துவ அரசியலுக்கு ஆதரவானவர்கள் நிர்வாக குழு (Executive council) உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு கல்விக் குழுவால் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்ட மசோதாக்கள் நிர்வாகக் குழுவால் எவ்வித விவாதமும், எதிர்ப்பும் இன்றி ஏற்றுக்கொள்ளப்பட்டன.

முதுகெலும்பை உடைக்கும் கடைசி முயற்சியாக வெவ்வேறு குழுக் கூட்டங்களில் மாணவர் அமைப்புப் பிரதிநிதிகள் பங்கேற்பதற்கு அனுமதி மறுத்ததோடு, நாளடைவில் மாணவர் அமைப்புக்கே அங்கீகாரம் மறுக்கப்பட்டது.

ஆரம்பத்திலிருந்தே வலதுசாரிகளுக்கு ஆதரவான மாணவர்களின் அமைப்புகளுக்கு அனைத்து வகையான ஆதரவுகளையும் கொடுத்து மாணவர் அமைப்பு தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. ஆனால், அதையும் மீறி ஒவ்வொரு தேர்தலிலும் சனநாயக அமைப்பை சேர்ந்த கட்சிகள் பெருவாரியான வாக்குகளைப்பெற்று மாணவர் அமைப்பின் அனைத்துப் பதவிகளையும் தக்கவைத்துக்கொண்டன. பின் சனநாயக முறைப்படி நடக்கும் தேர்தலுக்குப் பல இன்னல்களைக் கொடுப்பதும் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பை அங்கீகரிக்காததும் தொடர்ந்தன. ஒவ்வொரு முறையும் மாணவர்கள் நீதிமன்றம் சென்று தமக்கு ஆதரவாகத் தீர்ப்பு பெறவேண்டியிருந்தது.

இவ்வாறாக, படிப்படியாகப் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. கல்வி காலண்டர் மாற்றி அமைத்தல், எம்.பில்-பி.எச்.டி மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைத்தல், வருகைப் பதிவு முறையைக் கொண்டுவருதல்,  மாணவர் போராட்டங்களுக்கு அனுமதி மறுத்தல், மிகவும் வலிமை வாய்ந்த அமைப்பான GSCASH-ஐ அழித்தல், நிர்வாகத்திற்கு உடந்தையாக இருப்போரை பல்வேறு பதவிகளில் நியமித்தல்,  நியாயமாகப் போராடிய ஆசிரியர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தல், புதிய ஆசிரியர் தேர்வுக் குழுக்களில் சரியான முறையைப் பின்பற்றாமல் தகுதி இல்லாத உறுப்பினர்களை நியமித்து அனைத்து விதிகளையும் இருட்டடித்து, தகுதி இல்லாத, இந்துத்துவாவிற்கு ஆதரவான ஆசிரியர்களை நியமித்தல், நுழைவுத்தேர்வு நடத்துவதைத் தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்தல், இணையம் மூலம் நுழைவுத்தேர்வு,  நூல் நிலையத்திற்கு ஒதுக்கப்படும் நிதியைக் கணிசமான அளவில் குறைத்தல், உலகெங்கும் BE மற்றும் MBA படிப்புகள் மூடப்பட்டுவரும் நிலையில், இந்த படிப்புகளுக்கான புதிய மையங்களை ஜே.என்.யூ-வில் தோற்றுவித்தல், சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்குத் தடை, தாபாக்களின் திறப்பு நேரங்கள் குறைப்பு, பொதுக் கூட்டங்களுக்குத் தடை,  என ஒவ்வொன்றாக பல்வேறு புதிய விதிகள் எந்தவித விவாதமும் இன்றி அமல்படுத்தப்பட்டன. பொதுவாக முடிவுகளை வெளியில் இருப்போர் எடுப்பதும், அந்த முடிவுகள் துனைவேந்தர் வழியாக அடிமட்டத்திலிருந்து ஒவ்வொரு குழுவிலும் நிறைவேற்றப்பட்டது எனக் காட்டுவதும் மரபாகிப்போனது.

படிக்க:
ஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப் போராட்டம் சாத்தியமா ? | கேள்வி – பதில் !
♦ வாரணாசி முதல் சென்னை வரை ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பிடியில் உயர்கல்வி நிறுவனங்கள் !

கல்விக்கட்டணம் விடுதி விதிகளில் மாற்றம்

இந்தச் சூழ்நிலையில்தான் கல்விக்கட்டண உயர்வு மற்றும் ஆடைநெறிமுறைகள் உட்பட விடுதி விதிகளில் மாற்றம் என்ற அறிவிப்பு வெளிவந்தது. பொதுவாக இதுபோன்ற மாற்றங்கள் தீவிர விவாதத்திற்குப் பிறகு, அனைத்துத் தரப்பினரின் ஒப்புதலையும் பெற்றுத்தான் அமல்படுத்தப்படும். குறிப்பாக மாணவர்கள் அமைப்பு பிரதிநிதிகளுடன் ஆசிரியர் அமைப்பு பிரதிநிதிகளுடன், விடுதி காப்பாளர்கள், விடுதி மாணவர் தலைவர்கள் எனப் பலபேர் கொண்ட குழு இவற்றைப் பற்றி விவாதித்து, பின் இவை பல்கலைக்கழகக் கல்விக்குழு மற்றும் நிர்வாகக் குழுக்களின் ஒப்புதல் மூலமாகத்தான் நிறைவேற்றப்பட முடியும். ஆனால், இம்முடிவு இவ்வழிமுறைகளிள் பலவற்றைப் பின்பற்றாமலேயே அறிவிக்கப்பட்டது. குறிப்பாக மாணவர் அமைப்பு பிரதிநிதிகளை இது தொடர்பான கூட்டங்களுக்கு அழைக்காதது மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஜே.என்.யூ ஒரு குடியிருப்புப் பல்கலைக்கழகம். 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிப்பவர்கள். பொதுவாக மாணவர்கள் இரண்டு வகையான கட்டணங்களைச் செலுத்துவர் – ஒன்று கல்விக் கட்டணம் மற்றொன்று மாதாந்திர உணவுக் கட்டணம் உட்பட ஏனைய விடுதிக் கட்டணங்கள். அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கும் பொதுக்கல்வி என்ற நோக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தில் கடந்த பல வருடங்களாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆனால் விடுதிக் கட்டணங்கள் அவ்வப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றப்படும்.

விடுதி கட்டண உயர்வு மற்றும் தனியார்மயமாக்கப்படும் கல்வி ! இவற்றை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் ஜே.என்.யூ மாணவர்கள் (கோப்புப் படம்)

தற்போது திருத்தப்பட்ட கட்டணங்கள் அறிவிக்கப்பட்டபோது, மாணவர்கள் ஏறக்குறைய மாதம் 3000 ரூபாய் கட்டணங்களுக்கு செலவழிக்கவேண்டியிருந்தது. திருத்தப்பட்ட கட்டணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் இது 6000 முதல் 9000 வரை உயரக்கூடும். இது ஏற்படுமானால், நாட்டின் ஒட்டுமொத்த மத்தியப் பல்கலைக்கழகங்களோடு ஒப்பிடும்போது, ஜே.என்.யூ அதிக கட்டணம் வசூலிக்கும் பல்கலைக்கழகமாக மாறும் என மதிப்பிடப்படுகின்றது.

வசதிபடைத்த குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு இக்கட்டணங்கள் பெரும் சுமையாக இருக்காது என்ற போதிலும், 60 சதவிதத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் – இவர்களில் 40 சதவீதம் மாணவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களிலிருந்து வருபவர்கள் – இக்கட்டணங்களால் பெரிதும் பாதிக்கப்படுவர். இந்நிலை தொடர்ந்தால், ஜே.என்.யூ நாளடைவில் மாணவர்களின் கட்டணத்தால் செயல்படும் பல்கலைக்கழகமாக; ஒரு தனியார் பல்கலைக்கழகம் போன்று மாறுவதற்கான சாத்தியங்கள் அதிகம்.

இந்தியர் அனைவருக்கும் பொதுக்கல்வி நிறுவனங்கள் மூலம் இலவசக் கல்வி என்பதே ஜே.என்.யூ சமூகத்தினரின் கோரிக்கையாக இதன் தொடக்கத்திலிருந்தே இருந்துவந்தது. கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு வரைந்த புதிய கல்விக் கொள்கையை அரசு அறிவித்தபோது, எங்கும் இல்லாத அள‍வில் ஜே.என்.யூ மாணவர்கள், இதற்கு எதிர்ப்பாக பெரும் போராட்டத்தை முன்வைத்தார்கள்.  கல்வி தனியார்மயமாக்கலுக்கு எதிரான குரலாக ஜே.என்.யூ மாணவர்கள் தொடர்ந்து இருந்திருக்கின்றார்கள். இந்தச் சூழ்நிலையில், ஒரு பிரசித்தமான, உள்ளடக்கிய பொதுப் பல்கலைக் கழகம் என்ற நிலையிலிருந்து ஜே.என்.யூவே மாறப்போகும் ஆபத்தை உணர்ந்தபோது மாணவர்களின் போராட்டம் அதீத தீவிரம் அடைந்தது.

டிவிட்டரில் உரையாடும் துணைவேந்தர்

பல்கலைக்கழக வளாகத்திற்குள் உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் என மிகவும் அமைதியாகப் போராடிவந்த மாணவர்களைப் பல்கலைகழக நிர்வாகம் எவ்வித பேச்சுவார்த்தைக்கும் அழைக்காததோடு அவர்கள்மீது பல்வேறு அடக்குமுறைகளைத் தூண்டிவிட்டது மாணவர்களை பெரும் கோபத்திற்கு உள்ளாக்கியது.  துணைவேந்தரைச் சந்திக்க அனுமதி கேட்கப்படும் விண்ணப்பங்கள் பொதுவாக நிராகரிக்கப்பட்டன. மாணவப்பிரதிநிதிகளோ, அல்லது ஆசிரியர்களின் பிரதிநிதிகளோ துணைவேந்தரை சந்திக்க மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. பொதுவாக, ஆசிரியர்கள், துணைவேந்தர், மாணவர்கள், பணியாளர்கள் எனப் பெரிதான வேறுபாடு கண்டிராத ஜே.என்.யூ சமூகத்திற்கு இவ்வகையான புதிய நடப்புகள் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தோற்றுவித்தன.  கடந்த சில ஆண்டுகள்வரை, மாணவர்கள் துணைவேந்தரை வளாக அங்காடிகளில் காண நேரிடும்.

வணக்கங்களைப் பரிமாறிக்கொள்வர். எவ்வளவு எதிர்ப்புக்கும் எந்தவொரு துணைவேந்தரும் மாணவர்களைச் சந்திக்க மறுத்தது கிடையாது, சில துணைவேந்தர்கள் மாணவர்களுடன் சேர்ந்து போட்டி உண்ணாவிரதம் இருந்திருக்கின்றார்கள். ஆனால் வலதுசாரிகளால் புதிதாக நியமிக்கப்பட்ட இந்தத் துணைவேந்தரோ இதற்கெல்லாம் மாறாகத் தாம் ஒரு சர்வ வல்லமை படைத்த சர்வாதிகாரியெனத் தன் முடிவுக்கு அனைவரும் ஒத்துப்போக வேண்டும் என்பது போன்றதொரு மனப்பான்மையுடன் செயலாற்றினார். பல்கலைக்கழக மாணவர்கள் ஆசிரியர்கள் இந்தத் துணைவேந்தரை கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை நேரடியாக சந்தித்திருப்பார்களா என்பது சந்தேகமே. இவர் பொதுவாக டிவிட்டர் மூலம் தன் கருத்தை, உண்மைக்கு மாறான திரிக்கப்பட்ட கருத்தை, அனுப்புவார். அல்லது, தன் கீழ் உள்ள அதிகாரிகள் மூலம்  நோட்டிஸ் அனுப்புவார். இதைத் தவிர்த்து நேரடியான உரையாடலில் இதுவரை இவர் ஈடுபட்டதில்லை.

விரைவில் அடுத்த பகுதி : பட்டமளிப்புவிழா போராட்டம் காத்திருந்த அமைச்சர்

(தொடரும்)

தொடரின் முந்தைய பாகம் :

சௌ. குணசேகரன்

(ஆசிரியர் பற்றி : ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகத்தில், வரலாற்று ஆய்வுகளுக்கான மையத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்)

டிசம்பர் 10 – மனித உரிமைகள் தினம் கருத்தரங்கம் !

க்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 அன்று தருமபுரியில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியை வழக்கறிஞர் ஜானகிராமன் தலைமை தாங்கி நடத்தினார். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு மற்றும் வழக்கறிஞர் முரளி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். மேலும் வழக்கறிஞர் பொன் சேகர், விரிவாக கருத்துரையாற்றினார். இதில் மனித உரிமை ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அதில் வழக்கறிஞர் முரளி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை பற்றி விளக்கிப் பேசினார். அதனைத் தொடர்ந்து உரையாற்றிய  பு.மா.இ.மு. தோழர் அன்பு, மாணவர்களின் உரிமைகளை பற்றி விளக்கிப் பேசினார்.

படிக்க:
♦ மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !
♦ பகவத் கீதை Vs திருக்குறள் | சுபவீ – அருள்மொழி கருத்துரையாடல் | காணொளி

இறுதியாக கருத்துரையாற்றிய வழக்கறிஞர் பொன் சேகர் நாம் பெற்ற உரிமைகளின் வரலாற்று வழி வகைப்பட்ட வளர்ச்சி போக்கினையும், இன்றைய இந்திய சமுதாயத்தில் அதன் வளர்ச்சிப் போக்கு மற்றும் உரிமைகள் மறுக்கப்படுவதையும் தனது பேச்சில் விளக்கினார். மேலும் இன்றைய கட்டத்தில் பாசிசம் அதனுடைய அபாயப் போக்கு, உரிமைகள் மீட்டெடுக்கப்படுவதற்கான தேவை, சட்டபூர்வமான உரிமைகள் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் ஆகியவற்றைப் பற்றியும் உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தருமபுரி.

மக்களை மதிக்காத வங்கி அதிகாரி : ஒரு அரசு வங்கி அனுபவப் பகிர்வு !

ணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு பிறகு, மக்களின் பண பரிவர்த்தனைக்கு மொத்தமாக வங்கியை நிரந்தர அடியாளாக நியமித்துவிட்டது பி.ஜே.பி,அரசு.

டிஜி-தன் அபியான், டிஜி-தன் மேளா, டிஜி பீம் என்று பல வண்ண டிஜிட்டல் சங்கிலியால் மக்களை வங்கியுடன் பூட்டி விட்டது.

மக்களின் பணம் உள்ளே வந்தாலும் வெளியே போனாலும் கட்டணம் என்ற பெயரில் கப்பம் செலுத்தினால்தான் வங்கியில் வேலை நடக்கும். இதுநாள் வரையில் மக்களின் சிறுசிறு கடன் கோரிக்கைகளைக்கூட காதில் வாங்காமல் அவர்களைத் துரத்தியடித்த அரசு வங்கிகள், இப்போது மக்கள் வங்கியில் தங்கள் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தக்கூட அனுமதிக்காமல் மூர்க்கமாக வெளியேற்றுகின்றன.

வங்கியில் சென்று சலான் எழுதி பணம் செலுத்தினால், வாங்க மறுத்து வாடிக்கையாளரை அவமானப்படுத்தி வங்கி அதிகாரிகள் குரூரமாக நடந்து கொண்ட உண்மைச் சம்பவம் இது.

***

சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மைய கிளையில், எனக்கு தெரிந்தவர்களுக்கு உதவுவதற்காக உடன் சென்றிருந்தேன். அவருடைய மகளுக்கு கல்லூரி செமஸ்டர் பீஸ் கட்டுவதற்காக ரூபாய் 5,000 வங்கியில் போடவேண்டும். ஏற்கெனவே அவ்வங்கியின் வெளியில் இருக்கும் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரத்தில் (Deposit Machine) பல தடவை பணம்போட மற்றவர் உதவியுடன் அவர் முயற்சித்து தோல்வியடைந்துள்ளார்.

“டெபாசிட் மெஷினுல ஏ.டி.எம் கார்டு இல்லாம போட்டா, ஒவ்வொரு தடவைக்கும் சர்விஸ் சார்ஜ் 25 ரூபா போயிடும். ஐயாயிரம் போட்டா ஒரு தடவைக்கு மூணாயிரத்தை எடுத்துட்டு; இரண்டாயிரத்தை தள்ளிடும். மறுபடியும் அத போடணும். மறுபடியும் இருபத்தஞ்சி போய்டும். ஏற்கெனவே இந்த அனுபவம் நிறைய எனக்குண்டு. அதனால, நாளைக்கு பேங்கு போய் சலான் எழுதிப் போட்டுடலாம். கொஞ்சம் கூடவாங்க” என்றார்.

சரி என்று போனேன். மறுநாள் காலைல பதினொரு மணிக்கு சென்றோம். காஞ்சிபுரம் எஸ்.பி.ஐ மெயின் பிரான்ச் என்பதால கூட்டம் அதிகம். சலான் கொடுப்பதற்கு தனியாக ஒரு டேபிள்.

நான், “மேடம்… பணம் போடவேண்டும், அதுக்கான சலான் கொடுங்க” என்றேன்.

அங்கியிருந்த ஊழியர், “வெளியில மிஷின் இருக்கே நாப்பதாயிரம் வரைக்கும் மெஷின்லயே போடலாமே? எவ்ளோ பணம்? உங்களோட அக்கௌண்ட்டா? இந்த பிரான்ச்சா?” என்று சலானைத் தராமல் கேள்வியை மட்டும் அடுக்கிக்கொண்டே இருந்தார்.

“ஐஞ்சாயிரம் பணம் இங்கதான் போடணும். கொஞ்சம் சலான் கொடுங்க” என்றேன் மீண்டும்.

“ஐஞ்சாயிரம்தானே வெளியே மிஷின்லயே போடுங்க, ரெண்டு மிஷின் இருக்கே…” என்றார் விடப்பிடியாக…..

“இல்ல… அங்க பணம் வீணா போய்டுது, சலான்லத்தான் போடணும். சலான் கொடுங்க…” என்றேன்.

“பணம்… இங்க போட முடியாது. வேணும்னா… எட்டாம் நம்பர் சார்க்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு சலான ஃபில்லப் பண்ணுங்க…. போய்ப் பாருங்க… சொன்னா கேட்க மாட்டீங்க… நீங்க.” என்றார்.

எட்டாம் நம்பர் சார்க்கிட்டப் போய் “சார் பணம் போடனும் கையெழுத்து போடுங்க … சலான் நிரப்பணும்” என்றேன்.

“ஏன்.. ம்மா இங்க பணம் போட முடியாது, வெளியில மெஷின் இருக்கு அதுலப்போய் போடு”… என்று தலையை நிமிராமலேயே வேகமாக பதில் சொன்னார்.

படிக்க:
ஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப் போராட்டம் சாத்தியமா ? | கேள்வி – பதில் !
♦ நீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி !

நான், “என்ன அநியாயமா இருக்கு… பேங்க் எதுக்கு சார். பணம் போடவும் எடுக்கவும் தானே. அதுக்குதானே நீங்க இருக்கீங்க. ஏன் இப்படி விரட்டி அடிக்கிறீங்க” என்றேன்.

“யாரும்மா உன்ன இங்க அனுப்புனது? எனக்கு தெரியாது. எனக்கு எவ்ளோ வேல இருக்கு உனக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. உன் கேள்விக்கெல்லாம் நான் பொறுப்பு இல்ல…. என்கிட்ட அனுப்புன அந்த ஆள்கிட்டப்போய் சொல்லு…” என்று கத்தினார்.

எனக்கும் கோபம். இருவருக்கும் பேச்சில் வேகம் கூடியது. உடனே, வங்கி ஊழியர்கள் அங்கு ஒன்று கூடினர். ஆங்காங்கு இருந்த வாடிக்கையாளர்களும் என்ன ஏதென்று புரியாமல் பார்த்தனர். அனைவரின் கவனமும் என் மீது திரும்பவே, நான் நியாயம் கேட்க மேனேஜர் ரூமுக்கு உள்ளே போனேன்.

மேனேஜர். “என்னம்மா பிரச்சனை… ஏன் கத்துற? என்னா வேணும்… பொறுமையா சொல்லு?” என்றார்.

மறுபடியும் நான், மொதல்லயிருந்து  சொன்னேன்… “ஐஞ்சாயிரம் பணம் என் நண்பர் பொண்ணு அக்கௌண்டுல போடணும். செமஸ்டர் பீஸ் கட்டணும். இன்னிக்கு போட்டாகணும்.” என்றேன்.

மேனேஜர், “வெளியே ஒண்ணுக்கு ரெண்டு மெஷின் இருக்கு, ஒனக்கு போடத்தெரியலனால்லும் போட செக்யூரிட்டி இருக்கும் பாரு, அங்கப் போய் போடும்மா.” என்றார்.

“மெஷின்ல போட்டா இருபத்தஞ்சி ரூபாய் சர்வீஸ் சார்ஜ் போவுது, பேங்க் திறந்திருக்கும்போது நான் ஏன் மெஷின்ல போடணும்? மெஷின் சரியா வேல செய்யல… பணத்த வெளியே தள்ளுது ஒருதடவைக்கு ரெண்டுதடவையா போட்டா அதுக்கு ஐம்பது ரூபாப் போய்டும். அதனால நான் இங்கத்தான் போடுவேன். சலான கொடுக்கச் சொல்லுங்க.. அதுக்கு என்ன வழியோ அத செய்ங்க….சார்”.

“உன் இஷ்டப்படியெல்லாம் இங்க போட முடியாது, ஏ.டி.எம் கார்டு வைச்சிப்போட்டா சர்வீஸ் சார்ஜ் இல்ல…” என்று ஏக வசனத்தில் ஆரம்பித்தார்.

“காலேஜ் படிக்கிற பொண்ணுக்கிட்டத்தானே ஏ.டி.எம் கார்டு இருக்கு… அக்கௌண்ட்ல நாங்க போட்டாதானே, ஏ.டி.எம்-ல அவ எடுக்க முடியும்… நீங்க சொல்லறது புரியல.  சலான் எழுதி இங்கப்போட நான் என்ன பண்ணணும்னு சொல்லுங்க” என்றேன்.

“நான் சொல்லிக்கினே இருக்கேன்… மறுபடி, மறுபடி, அடங்காம பேசிட்டே இருக்க? இங்க நீ போட முடியாது, அவங்க பொண்ணு அக்கௌண்ட்ல நீ போட முடியாது…. அவங்க அவங்க அகௌண்ட்ல அவங்கத்தான் போடணும். மூணாவது ஆளுப் போடக்கூடாது! போம்மா… போ…” என்றார் திமிராக.

“எப்படி? அவுங்க அவுங்கதான் பணம் போடணும்னா? உங்க சம்பளப் பணத்த நீங்களே போட்டுக்கீறிங்களா? மெஷின்ல பணம் போடுறவன் யாருனு பாத்துட்டுத்தான் பணத்த மிஷின் எடுத்துக்குத்தா..? என்ன பேசீறீங்க?” என்றேன்.

மேனேஜர் டென்சனாகி கத்தினார்.

அதற்குள் பண அறையில் இருந்து, இரண்டு  போலீசு – இரண்டு செக்யூரிட்டி என அட்டேன்சன்ல நின்னு அறையில் என்னை சூழ்ந்துட்டாங்க.

“நீ எங்க நின்னு பேசறேன்னு தெரியுதா? இந்தப் பக்கம் பணம் லாக்கர் இருக்கு…. அந்தப்பக்கம் நகை லாக்கர் இருக்கு…. நீ பேசறதெல்லாம் சுற்றி எல்லா கேமராவுலயும் ரெக்கார்டு ஆயிட்டுருக்கு… என் பவருக்கு நான் என்ன செய்யலாம்னு தெரியுமா?” என்றார் மேனேஜர் கோபம் வழிய.

“பேங்க்ல இருக்கற லாக்கரப்பத்தியெல்லாம் ஏன் என்கிட்ட சொல்றீங்க? கேமரா என்ன மட்டும்தான் ரெக்கார்டு பண்ணுமா, நீங்க பேசறதெல்லாம் டெலிட் பண்ணிடுமா? எடுத்துப்போடுங்க பாக்கலாம்…” என்றேன்.

படிக்க:
உசிலையில் இருப்பது ஸ்டேட் பேங்கா? மாஃபியா கேங்கா?
♦ ஏழைகளிடம் பிடுங்கித் தின்னும் பாரத ஸ்டேட் வங்கி !

அதற்குள் என்னை சூழ்ந்தவர்கள் எனக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்கள்.

ஏம்மா…. நீ என்ன மார்க்கெட்டுக்கா வந்திருக்க… பேங்க்குக்கு வந்திருக்க.. அடங்கிப் பேசும்மா…. மேனேஜர் என்ன சொல்றாருன்னு கேளும்மா? என்று அறிவுரைகளை நாற்புறமும் வீச ஆரம்பித்தார்கள்.

நான் உண்மையிலேயே கோபமாகி, “அய்யா, ஆபிசருங்களே..! பேங்குக்கு நான் அட்வைஸ் வாங்க வர்ல, பணத்தை டெபாசிட் பண்ண வந்திருக்கேன், அதுக்கு என்ன வழி அதச் சொல்லுங்க…”. என்றதும்.

திரும்பவும் மேனேஜர், “பொம்பள..ன்ற திமிருல பேசுறீயா? பத்து ஆம்பளைங்க பேசறாங்க, அடங்கவே மாட்ற.. இதுமட்டும் உன் அகௌண்டா இருந்தா, இப்பவே க்ளோஸ் பண்ணி விசிறியடிப்பேன்… அதுக்கு எனக்கு ரிசர்வ் பேங்க் பவர் கொடுத்திருக்கு” என்றார்.

“ஆமாம், எனக்கு திமிருத்தான்! உங்க, ரிசர்வ் பேங்க் பவரை வைச்சி இப்ப இந்த அக்கௌண்ட்ட முடிச்சி அதுல இருக்கற பணத்தை கொடுங்க பாக்கலாம்” என்றேன்.

மேனேஜருக்கு கோபம் கிறுகிறுத்தது. பக்கத்திலிருந்தவர்கள் பதற ஆரம்பித்தார்கள். என்னை மேலும் அறிவுரையில் திணறடித்தார்கள். “கொஞ்சம் அடங்குமா… யாரையும் மதிக்கவே மாட்றயே… பணம் போட வந்தியா? சண்ட போட வந்தியா?” என்று அவர்களும் மேனேஜர் மாதிரியே மாறினார்கள்..

“எனக்கு தெரிஞ்சவங்க பொண்ணோட செமஸ்டர் பீசுக்கு பணம் போட வந்த என்னை சண்டக்காரி, அடங்காபிடாரினு அசிங்கப்படுத்திட்டு, என் மேலயே பழி போடுறீங்களா? யாருன்னா ஒருத்தருன்னா நியாயமா பேசுறீங்களா? அறிவுரை சொல்றீங்க, நான் இங்க அட்வைஸ் வாங்கவா வந்தேன்? ஐஞ்சாயிரம் பணம் போட வந்தேன். நீங்க என்ன செய்தாலும் இந்த சலான்ல பணம் போடாம போகமாட்டேன் யாரை வேணும்னாலும் வரச் சொல்லுங்க…” என்று நான் அழும் நிலையில் தடுமாறி கத்தினேன்.

உடனே, மேனேஜர் பக்கத்திலிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து சாலனில் கையெழுத்துப்போட சொன்னார்கள்.

அப்போதும், என்னை அசிங்கப்படுத்த நினைத்த மேனேஜர், வெளியிலிருக்கும் செக்யூரிட்டியிடம் என் பாஸ் புக்கையும், பணத்தையும் கொடுத்து மெஷினில போடச்சொல்லி வெளியேற்றப் பார்த்தார்.

அவர் கையிலிருந்து, அவற்றை பிடுங்கி “என்னை மேலும் அசிங்கப்படுத்தி பாக்கிறீங்களா? சலான் எழுதி பேங்க்ல தான் இந்தப் பணம் போடணும், இல்லாட்டி நான் இங்கிருந்து போகவே மாட்டேன்.” என்று நான் கத்த…

மேனேஜர், மேலும்.. மேலும் அசிங்கமாவதைத் தவிர்க்க தன்னுடைய கோபம், குரூரத்தைத் மறைத்து, எனக்கு அறிவுரை கூறிவது மாதிரி கையெழுத்துப்போட தயாரானார்.

நான் அப்போதும் அடங்காமல், “ஐயா, அறிவுரைகளை நீங்களே வைச்சிக்கங்க, என் அகௌன்ட்ல பணம் மட்டும் போட வழிப் பண்ணுங்க… உங்களோட அதிகாரத்தையும், அறிவுரையையும் ஐயாயிரம் போட வந்த எங்கிட்டதான் காட்டுவீங்க” என்று சொல்ல அவர் என்னை பார்க்காமலேயே வேகமாக கையெழுத்து போட்ட சலானை என் முன்னே தள்ளினார்.

அப்போது பத்தாம் நம்பர் கௌண்டரிலிருந்து ஒரு இளம் ஊழியர், “….மேடம் கொஞ்சம் ரிலாக்சாவுங்க…. நீங்க ரெண்டாம் நம்பர் கௌண்டருக்கு போங்க….. ஃப்ரண்ட் பேஜ் பிரிண்ட் பண்ணச் சொல்லி போன் பண்றேன்…. போங்க…” என்றார்.

நமக்காக  பேங்க்லருந்து ஒரு குரல் வருதேன்னு அவரை மதிச்சி, இரண்டாம் நம்பர் கொளண்டருக்குப் போனேன்.

“மேடம் ஃப்ரண்ட் பேஜ் பிரிண்ட் பண்ணனும், சாரு சொன்னாரு?” என்றேன்.

“சாரிங்க….. பிரிண்டர் ஒர்க் ஆகல, அப்புறம் போட்டுக்கங்க…. ப்ளீஸ்” என்றார்.

உடனே, என் பக்கத்திலிருந்த ஒருவர் “எப்பத்தான் பிரிண்டர் ஒர்க் ஆச்சி….. வெளியவும் ஒர்க் ஆகல…. உள்ளயும் ஒர்க் ஆகல…” என்றார் விரக்தியாக.

சுமார், 45 நிமிடம் நடந்த இந்தச் சலான் போராட்டத்தில் வெற்றிப் பெற்றாலும் உள்ளுக்குள் உதறல், பதற்றம்  நீடித்தது. இருந்தும் நம் பணத்தை கட்டுவதை தடுக்க இவர்கள் யார்? என்ற சாதாரண உண்மைதான், தைரியமாக கேள்வி கேட்க வைத்தது.

ஆனாலும், சுற்றி மக்கள் இருந்தும் யாரும் என்ன? ஏது? என்று வங்கி அதிகாரிகளை ஒரு கேள்வி கேட்கவில்லையே என்ற வலி… வெளியே வரும்போது ஒருபெண்ணாகக் கண்ணீர் துளிர்த்தது, கண்ணீரைத் துடைத்தப்படியே நண்பருடன் வங்கியை விட்டு வெளியேறினேன்.

***

ரசின் நல்ல நிர்வாகம் என்பது; வெளிப்படைத்தன்மை மற்றும் குடிமக்கள் சாத்தியம் என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இன்றைய அரசு வங்கிகளின் செயல்பாடுகள் யாருக்கானது? இன்றளவும் அரசு வங்கிகள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சேவை செய்வதை தன் கடமையாகவும்; வங்கி படியேறும் சாமான்ய மக்களை அலைக்கழிப்பதும், அவமானப்படுத்துவதும் தன் அதிகாரமாகவும் வலம்வருகின்றன.

அரசு வங்கிகளை மொத்தமாக தனியார்வசம் தாரைவார்க்க மோடி அரசு எத்தனிக்கும் வேளையில், அதன் ஊழியர்களே மக்களிடமிருந்து அந்நியப்பட்டால் யார் அவர்கள் பிரச்சினைக்களுக்கு துணைநிற்பது?

– கீதா

கம்பம் : குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு ! 2000 பேர் ஆர்ப்பாட்டம்

ம்பம் நகரில் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி முஸ்லீம் அமைப்புகள் , மக்கள் அதிகாரம், திமுக, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாபெரும் எழுச்சிப் பேரணி கடந்த டிசம்பர் 15, 2019 அன்று காலை நடைபெற்றது.

இந்தப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு விடுக்கப்பட்ட அறைகூவலைத் தொடர்ந்து கம்பம் தபால் நிலையம் அருகில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடினர். அதன் பின் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு தயார் நிலையில் குவிக்கப்பட்டிருந்த போலீசு ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யத் தொடங்கியது. கைது செய்யப்பட்டவர்கள் அப்பகுதிகளில் இருந்த தனியார் மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் மதியம் ஒரு மணியளவில் மண்டபங்களில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்தது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கம்பம்.

பகவத் கீதை Vs திருக்குறள் | சுபவீ – அருள்மொழி கருத்துரையாடல் | காணொளி

மிழ் மண்ணில் பகிரங்கமாக பெருமைப்பட்டுக் கொள்ள முடியாத வருணாசிரமத்தை மட்டுமே தனது வரலாறாகக் கொண்டிருக்கும் பார்ப்பனியம், திருக்குறளையும் திருவள்ளுவரையும் விழுங்க எத்தனிக்கிறது. வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்துச் சமர் புரிந்த திருக்குறள் கீதையின் சாரத்தைப் பேசுகிறது என்று வண்ண வண்ணக் கதைகளை அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.

இந்த வெட்டிக் கதைகளை ‘இந்துத்துவ’வாதிகளின் நூல்களில் இருந்து சான்றாதாரங்களை எடுத்து வைத்து விவாதிக்கின்றனர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், அருள்மொழி ஆகிய இருவரும். இந்த விவாதத்தின் போக்கில் சங்க பரிவாரத்தின் ஒவ்வொரு பொய்யையும் ஆதாரப் பூர்வமாக முறியடிக்கின்றனர்..

கடந்த 14.12.2019 அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகம் அரங்கத்தில் நடைபெற்ற  “குறளும் கீதையும்” – கருத்துரையாடல் நிகழ்வில் பேராசிரியர் சுப.வீ மற்றும் அருள்மொழி பங்கேற்ற கருத்துரையாடலின் காணொளி – பாகம் 1

பாருங்கள் ! பகிருங்கள் !

அயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் ! புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு

ந்தியா எதிர்பார்த்துக் காத்திருந்த பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது. ”இரு சமூகங்களுக்கு இடையே அமைதியைக் கொண்டுவரும் நடுநிலையான தீர்ப்பு” என்று ‘மதச்சார்பற்ற’ அரசியல் கட்சி களே இந்தத் தீர்ப்பின் மீது கருத்துக் கூறியுள்ளன.

“நள்ளிரவில் குழந்தை ராமன் சிலையை பாபர் மசூதியில் வைத்தது தவறு; மசூதியை இடித்தது தவறு. அந்த இடத்தில் ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரம் இல்லை ; அங்குதான் ராமர் பிறந்தார் என்பது இந்துச் சமூகத்தின் நம்பிக்கை என்பதால், மத்திய அரசு ராமர் கோவில் கட்ட வேண்டும்.” – இதுதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் சாரம்.

இந்தத் தீர்ப்பின் மூலம் ”பாபர் மசூதியை வீழ்த்தி விட்டோம், அடுத்தது எங்கள் இலக்கு மதுரா, காசி” என்று சூளுரைத்த சங்க பரிவாரத்தினரின் கடப்பாரையை கூர்தீட்டிக் கொடுத்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

சனாதன பார்ப்பன மேலாதிக்கத்தின் அடிப்படையில் இந்து ராஷ்டிரத்தை கட்டியமைப்பதுதான் சங்க பரிவாரத்தின் நோக்கம். அதனை செயல்முறைப் படுத்தவே பாபர் மசூதி விவகாரத்தைக் கையில் எடுத்தார் அத்வானி. அவர் 1990-ம் ஆண்டு துவங்கிய ரதயாத்திரை, இந்திய நகரங்களை இரத்தத்தால் நனைத்தது. நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த 1992, டிசம்பர் 6 அன்று சங்க பரிவார கும்பலால் பாபர் மசூதி இடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து நாடெங்கும் நடைபெற்ற கலவரங்கள், குண்டு வெடிப்புகளைக் காரணம் காட்டியே முஸ்லீம்களை இந்துக்களின் எதிரியாக சங்க பரிவாரம் சித்தரிக்கத் தொடங்கியது. காங்கிரசு ஆட்சியின் மீதான மக்களின் அதிருப்தியையும், முஸ்லீம் ‘பயங்கரவாத’ பீதியையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் கணிசமான தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.

இவ்வாறு, ஆளும் கட்சியாக உருவெடுத்த சங்க பரிவாரம், இன்று ஜனநாயகத்தின் அத்தனைத் தூண்களையும் வளைத்து சுருட்டி தனிப்பெரும் பாசிச சக்தியாக வளர்ந்துள்ளது. ஏகாதிபத்திய நலனுக்காக, இந்துக்கள் உள்ளிட்டு அனைத்து உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதார அரங்கில் அழித்து வருகிறது.

பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் சாதாரண இந்துக்களை பெரும்பான்மைவாத மயக்கத்தில் ஆழ்த்த சங்க பரிவாரம் செய்த சதித்தனங்களையும், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் இலட்சணத்தையும் அம்பலப்படுத்துகிறது, இந்தத் தொகுப்பு.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

***

அயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் ! – புதிய கலாச்சாரம் டிசம்பர் 2019 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் ! உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

அச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

மின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.

“அயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் ! ” நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • ராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம்!
  • இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல; இது ஒரு ஆரம்பம்!
  • சதி – சூழ்ச்சி நிறைந்த பாபர் மசூதி வழக்கின் வரலாறு!
  • சங்க பரிவாரக் கும்பலின் இலக்கு இந்துமத பாசிச பயங்கரவாத ஆட்சி!
  • பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்ச நீதிமன்றமே இடித்திருக்குமா? – நீதிபதி ஏ.கே.கங்குலி
  • காசி – மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு!
  • பாபர் மசூதி இடிப்பு வழக்கு: முரண் நிறைந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
  • பாபர் மசூதி வழக்கு: நடுவர் குழுவின் தந்திரங்கள்!
  • அயோத்தி தீர்ப்பு: சீராய்வு மனுதாக்கல் செய்ய முஸ்லீம் தரப்பு முடிவு!
  • ராமன் தொடுத்த வழக்கு குரங்கு எழுதியத் தீர்ப்பு!
  • அயோத்தி தீர்ப்பு: அரசியலமைப்புக்கு விழுந்த அடி!
  • பாபர் மசூதி விவகாரம்: வரலாற்றாசிரியர் டி.என்.ஜா நேர்காணல்
  • சுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோயிலும் எங்களுடையதுதான்! – பாஜக அமைச்சர்
  • பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா?

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

இணையம் மூலமாக ஆண்டுச் சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.

வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

____________

புதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

 

ஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப் போராட்டம் சாத்தியமா ? | கேள்வி – பதில் !

கேள்வி : தற்போதைய ஐ.ஐ.டி.நிலை .. ஐய(ங்கார்)ர் இன்ஸடிடியூட் ஆப் டெக்னாலஜி என்று மாறி வருகிறதா …?

செல்வராஜன்

ன்புள்ள செல்வராஜன்,

இப்போது அல்ல, துவக்கம் முதலே அது அப்படித்தான் இருந்து வருகிறது. அந்த இருத்தலை எதிர்த்து வந்த போராட்டங்கள்தான் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத் தடை, சூரஜ் மாட்டுக்கறி பிரச்சினை, ஃபாத்திமா தற்கொலை. இந்தப் போராட்டங்கள் நடந்த காலத்தில் மோடி அரசே பதவியிலிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் ஆளும் போது ஐயர் இன்ஸ்டிடியூட்டின் ஆட்டத்தை சொல்லவா வேண்டும்?

“ஐயர் உண்டு தீர்ப்பார்; கர்ணன் கொடுத்து அழிப்பான்.” என்ற பழமொழியைப் போல ஐஐடியில ஐயர் படிச்சா நல்ல வேலை! ஐஐடியில மற்றவர் படிக்கப் போனா படிப்பே காலி !

ஆனாலும் அம்பேத்கர் பெரியார் மாணவர் வாசகர் வட்டத் தடையில் இந்துத்துவக் கும்பல் கரிபூசிக்கொண்டு பின்னர் வேறு வழியின்றி தடையை நீக்கியது. ஆகவே இப்படிச் சொல்லலாம். ‘அமைதி’யான அக்ரஹாரமாக இருந்த ஐஐடி-யில் இன்று சூத்திர – பஞ்சமக் குரல் ஓங்கி இல்லை என்றாலும் சலசலப்பாகக் கூட ஒலிக்க ஆரம்பித்து விட்டது. இனிமேலும் அங்கே ‘அமைதி’ இருக்காது. ஆதிக்கத்தின் அமைதிக்கு எதிராக சமத்துவத்தின் குரல் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. அந்தக் குரலை வலுவாக்க வேண்டியது தமிழக மாணவர்கள் – மக்களது கடமை!

நன்றி!

படிக்க:
சென்னை ஐஐடி-யில் நிலவும் தீண்டாமை ! தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் !
♦ மாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு !

♦ ♦ ♦

கேள்வி : ஒருபுறம் கொல்லப்பட்டாலும் மறுபுறம் சாதி மறுப்பு காதலர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்… எப்படி இது?

சி. நெப்போலியன்.

ன்புள்ள நெப்போலியன்,

“ஒரு நாயைக் கூட எதுகை மோனையுடன் குரைக்கச் செய்து விடுகிறது காதல்” எனும் போது சாதி வெறி ஓநாய் பைரவர்கள் என்ன செய்து விட முடியும்? சாதியின் இருப்பை தனித்து வாழ்தலும், தனித்து வாழ்தலுக்கான பொருளாதாரமும், அகமண முறையும் தீர்மானிக்கின்றன.

இன்றைய காலத்தில் சீரான பொருளாதார வளர்ச்சியே இந்த தனித்து இருத்தலை மெல்ல மெல்ல ஒழித்து வருகிறது. முன்பெல்லாம் அந்தந்த சாதியில் பிறந்தவர்கள் முக்கியமாக பெண்கள் தமது கிராமம், வட்டாரத்தை தாண்டி வெளியே செல்ல வாய்ப்பில்லை. அப்படியே சென்றாலும் சாதியின் பாதுகாப்பு வளையம் கூடவே பவுன்சராய் வரும்.

இன்று கல்வி, வேலை தேடி மக்கள் நாடெங்கும் செல்கின்றனர். நகரங்களில் எந்த சாதியும் தனித்து வாழ முடியாத படி (பார்ப்பனர்கள் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு) நகரக் கட்டுமானம் செயல்படுகிறது. ஐ.டி துறையிலோ, உயர் கல்வித் துறையிலோ அப்படி வரும் மாணவர்கள், இளைஞர்கள் பழகுவதும், காதலிப்பதும் இப்போது சுலபமாகி விட்டது. இதற்கு மேல் சமூகவலைத்தளங்கள் இவர்களை பார்க்காமலே இணைப்பதற்கும் பின்னர் பார்த்து விட்டு காதலிப்பதற்கும் எண்ணிறந்த வாய்ப்புகளை திறந்து விட்டிருக்கின்றன.

ஆகவே சாதிவெறியர்கள் என்னதான் யுவராஜாவாக, பாமக ராமதாஸாக கம்பு சுழற்றினாலும் இன்றைய சமூக இயக்கம் அந்த இத்துப் போன கம்புகளைத் தட்டிப் போட்டு போய்க்கொண்டே இருக்கிறது. ஆகவே ஆணவக் கொலைகள் அதிகம் நடந்தாலும் காதல் இணைவு அதை விட அதிகம். சொல்லப் போனால் இந்த இணைவின் அதிகரிப்பே ஆணவக் கொலை வழியான மூர்க்கத்தினைக் காட்டுகிறது. அல்லது காதல் அதிகரிப்பே சாதிவெறியர்களை தூங்க விடாமல் செய்கிறது. ஆனாலும் பூனை கண்ணை மூடிக் கொள்வதால் உலகம் இருண்டு விடுவதில்லையே!

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : சாதி ஒழியாமல் வர்க்க போராட்டம் சாத்தியமில்லை என்ற அம்பேத்கரிய கருத்துடன் வினவின் நிலைப்பாடு என்ன ?

மீரான்

ன்புள்ள மீரான்,

வர்க்கப் போராட்டம் இல்லாமல் சாதி ஒழிப்புக்கான போராட்டம் சாத்தியமே இல்லை. சாதி என்பது வெறுமனே மனதில் “நான் உயர்ந்தவன்/ள், நீ தாழ்ந்தவன்/ள்” என்றிருக்கும் கருத்து நிலை மட்டுமல்ல. அது பொருளாதார ரீதியாகவும் மக்களை ஏற்றத் தாழ்வாக பிரித்து வைத்திருக்கும் ஒரு பார்ப்பனிய ஏற்பாடு.

இந்தியாவில் வர்க்கங்கள் சாதிகளாகவும் இருக்கின்றன. நிலமற்ற விவசாயியாக இருக்கும் ஒரு தலித் தன் மீது நிகழ்த்தப்படும் தீண்டாமை – சாதிக் கொடுமைகளை எதிர்க்க முடியாமல் அடங்கிப் போகும்படியான நிலையை அவரது ஏழ்மையே ஏற்படுத்திக் கொடுக்கிறது. வட தமிழகத்தில், சென்னையின் சுற்றுப்புறங்களில் வன்னியர் – பறையர் சாதி மறுப்பு மணம் செய்தோர் அதிகம். இடைக்காலத்தில் பாமக வந்த பிறகும் இந்த நிலை மாறிவிடவில்லை.

வசதி வாய்ப்புடன் இருக்கும் மிகச்சில வன்னியர்களுக்கு இருக்கும் சாதிவெறி ஏழ்மை நிலையுடன் இருக்கும் பெரும்பான்மை வன்னியர்களுக்கு இருப்பதில்லை. ஆனால் சாதிவெறியர்கள் இந்தப் பெரும்பான்மையை குறிவைத்தே எல்லா சாதிகளிலும் சாதிவெறியை தூண்டி விடுகிறார்கள். வயிற்றுக்கு இல்லை என்றாலும் வைவதற்கு ஒரு சாதி இருக்கிறதே என்று அந்தப் பெரும்பான்மை அதற்கு பலியாகிறது. ஆனால் அந்த பலியாதலால் அவர்களது வாழ்வில் பொருளாதார வசந்தம் வீசப்போவதில்லை.

படிக்க:
கேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி
♦ குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் !

வேலையின்மை, கல்வி தனியார் மயம், மருத்துவம் தனியார் மயம் அனைத்தும் அனைத்து சாதி ஏழைகளையும் நடுத்தர வர்க்கங்களையும் அச்சுறுத்துகின்றன. இந்நிலையில் வெற்று சாதிப்பெருமை அவர்களது பிரச்சினையை எப்படித் தீர்க்க முடியும்? எனவே ஏழ்மைக்கும், நடுத்தர வர்க்கத்தின் பிரச்சினைகளுக்கும் சாதி அடிப்படை இல்லை எனும் போது இவர்களை இணைத்து நடத்தப்படும் வர்க்கப் போராட்டங்கள் உருவாகித்தானே ஆக வேண்டும்?

அரசு ஊழியர்களோ, ஆசிரியர்களோ, தொழிலாளிகளோ, காவிரிப் பிரச்சினைக்காகப் போராடும் விவசாயிகளோ, ஹைட்ரோ கார்பனை எதிர்த்துப் போராடும் விவசாயிகளோ சாதி கடந்து போராடுவது உண்மையானால் இந்த இணைவின்மூலமே எதிர்காலத்தில் உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து சாதி தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை வலுவாக நடத்துவார்கள். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த அனிதா நீட் தேர்வினால் தற்கொலை செய்தபோது முழு தமிழகமே அந்தச் சிறுமியை தனது மகள் என்று எண்ணி போராடவில்லையா? இந்த (‘கீழ்’) சாதி மகளுக்கு டாக்டர் படிப்பு எதற்கு என்று சாதிவெறியர் கூட கேட்க முடியாத நிலை வந்ததா இல்லையா?

வர்க்கப் போராட்டங்கள் சாதியை ஒழித்து விடாது. ஆனால் சாதி ஒழிப்பிற்கான அடித்தளத்தை நிச்சயம் கட்டியமைக்கும். அந்த அடித்தளமில்லாமல் சாதி ஒழிப்பு சாத்தியமே இல்லை. மறுபுறம் சாதி ரீதியான அணிதிரட்டல்கள், அதாவது தாழ்த்தப்பட்டோர் மட்டும் சேர்ந்து நடத்தும் போராட்டங்கள் சாதி ஒழிப்பிற்கான அடித்தளத்தை உருவாக்க இயலாது.

இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் சிறுபான்மையாக வாழும் கிராமங்களே அதிகம். அந்த கிராமங்களில் வர்க்கப் போராட்டம் தவறு என்று சித்தாந்தம் பேசும் அம்பேத்கரியவாதிகள் சென்று தங்கி தாழ்த்தப்பட்ட மக்களை சாதி ஒழிப்பிற்கான போராட்டத்திற்கு அணிதிரட்ட முயற்சித்துப் பார்க்கட்டும். அப்போது அவர்கள் வர்க்கப் போராட்டமே அன்றி அந்த மக்களை திரட்ட முடியாது என்று பட்டறிந்து உணர்வார்கள்.

கீழத்தஞ்சையிலோ, கேரளாவிலோ, தெலுங்கானாவிலோ, மேற்கு வங்கத்திலோ, பீகாரிலோ வர்க்கப் போராட்டத்தின் மூலம் சாதி தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி, பண்ணைக் கொடுமைகளை ஒழித்து இந்திய பொதுவுடமை இயக்கம் சாதித்திருக்கிறது.

இன்றைக்கு பீகாரில் ரன்வீர் சேனா, பூமிகார் சேனா, ரஜ்புத் சேனா போன்ற ஆதிக்க சாதிவெறி இராணுவங்களை ஒழித்ததும் கம்யூனிச இயக்கம்தான். இத்தகைய சாதனைகளை அம்பேத்கரியம் பேசும் அறிஞர் பெருமக்கள் எங்காவது சாதித்திருப்பதற்கு சான்றுகள் உண்டா? எதுவுமில்லை! வர்க்கப் போராட்டத்தை உடைப்பதற்கு பிரச்சாரம் செய்யப்படும் இந்த அடையாள அரசியலை நாம் புறந்தள்ள வேண்டும்.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி

2

“இங்கே நியாயம் தர்மம் இல்லை… மனுசங்க கிட்ட நியாயம் இல்லை…”

“என் புள்ளைங்க மூனு பேருக்கும் சயனைடு குடுத்துட்டேன்.. இப்போ நாங்களும் சாப்பிட போறோம். என் பொண்ணு மூச்சு திணறுதுடா.. ஏன்டா என்னை இந்த மாதிரி வாழ்க்கையை வாழ வெச்சிட்டீங்க.. சரி.. விடு.. நாங்களும் சாகதான் போறோம் கொஞ்ச நேரத்துல…”

“மூச்சு திணறுதுடா இனிமேல் என்னால் ஒன்னுமே பண்ண முடியாது.. ஜாலியா இருங்க. நீங்களாவது நிம்மதியா வாழ்ந்துட்டு போங்க இந்த உலகத்துல. விழுப்புரத்துல லாட்டரி சீட்டை ஒழிச்சிடுங்கடா..ப்பா.. 3 நம்பரை ஒழிச்சிடுங்க.. என்னை மாதிரி 10 பேராவது உயிரோட பொழைப்பான்.. இங்கே எவனும் யோக்கியம் கிடையாது.. நானும் யோக்கியம் கிடையாது.”

“வாழ்க்கையில யாருக்கும் தொந்தரவு தர மாட்டோம்.. எவனுக்குமே தொல்லை இல்லாம செத்து போகணும்.. இங்க வாழ முடியல.. பட்டறை வேலை செஞ்சு ஒரு மயிரையும் புடுங்க முடியாது.. புரியுதா..”

இறப்பதற்கு முன் அருண் தன் நண்பர்களுக்கு அனுப்பிய வாட்சப் காணொளியில் பேசியதில் இருந்து சில பகுதிகள்.

***

நெஞ்சை உலுக்கும் இந்த உரையாடலை தன் கைபேசியில் பதிவு செய்த அருண், அதைத் தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்து விட்டு இறந்து போனார்.

விழுப்புரத்தில் உள்ள சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்த அருண் நகை செய்யும் தொழிலாளி. தன் வீட்டிலேயே ஒரு பட்டறை நடத்தி சிறிய அளவில் தொழில் செய்து வந்தார். அருணின் மனைவி சிவகாமி. இவர்களுக்கு பிரியதர்ஷினி, யுவஸ்ரீ, பாரதி என்று 3 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்தவள் பிரியதர்ஷினிக்கு ஐந்து வயது, அடுத்தவள் பாரதிக்கு 3 வயது. கடைக்குட்டி யுவஸ்ரீ நான்கு மாதமே ஆன பிஞ்சுக் குழந்தை. அருண் குமாருக்கு சொந்தமாக வீடும் அதில் ஒரு நகைப் பட்டறையும் இருந்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட நகை பட்டறைத் தொழிலாளி அருண் மற்றும் அவரது மனைவி சிவகாமி.

ஆரம்பத்தில் நன்றாகச் சென்று கொண்டிருந்த நகைத் தொழில் கடந்த சில ஆண்டுகளில் மெல்ல மெல்ல நலிந்து போயுள்ளது. தொழில் வாய்ப்புகள் அருகி வந்த நிலையில் வேறு வேலைகளும் கிடைக்காமல் அந்தக் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளது. வறுமையில் இருந்து தப்பிக்க வழி தெரியாது தவித்த அருணுக்கு விழுப்புரத்தில் சட்ட விரோதமாக நடந்து வந்த மூன்று எண் லாட்டரி குறித்து தெரிய வந்துள்ளது. பல லட்சங்கள் வரை பம்பர் பரிசு விழும் என ஆசை காட்டியுள்ளனர். அதனை நம்பி கடந்த பல மாதங்களாக லாட்டரிச் சீட்டு வாங்கி வந்துள்ளார் அருண். 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்கப்படும் 3 எண்கள் மட்டுமே கொண்ட இந்த லாட்டரிச் சீட்டுகளில் பரிசு விழுந்தால் அன்றன்றைக்கே பணத்தைக் கொடுத்து விடுவார்கள் என்றெல்லாம் ஆசை காட்டி விற்கின்றது சட்ட விரோத கும்பல்.

எனினும், சொன்னபடி லாட்டரியில் எந்த பரிசும் விழாத நிலையில் கடனாளியாகி உள்ளார் அருண். இந்நிலையில் இம்மாதம் 12-ம் தேதி அன்று இரவு தனது குழந்தைகளுக்கு நகை செய்ய பயன்படுத்தும் சயனைடு விஷத்தைக் கொடுத்து கொன்றுள்ளார். அதன் பின் தனது கைபேசியில் தனது கடன் பிரச்சினைகள் குறித்தும்; அதனால் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்று விட்டதையும் பேசி பதிவு செய்துள்ளார். மேலும், தானும் மனைவியும் அடுத்து விஷம் அருந்த உள்ளதாகவும் பேசி பதிவு செய்து அதைத் தன் நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார்.

வீடியோவைப் பார்த்து பதறிப்போன நண்பர்கள் அருணின் வீட்டைத் தேடி ஓடோடி வந்துள்ளனர். பூட்டப்பட்டிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்றபோது அங்கே அருணும், அவரது மனைவியும், 3 குழந்தைகளும் சடலமாக கிடந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் 5 பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நகைத் தொழில் நசிவு காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் லாட்டரிச் சீட்டிற்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அத்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் கூறுகிறார்கள். 3 நம்பர் லாட்டரிச் சீட்டால் ஒரு குடும்பமே உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

படிக்க:
♦ நெல்லை : இசக்கிமுத்துக்களின் மரணத்திற்கு எப்போது பழி தீர்ப்போம் ?
♦ அமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா ?

***

மிழ்நாட்டில் குட்கா, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்க தடை உள்ளது. ஆனால், ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் போலீசு அதிகாரிகள் ஆசீர்வாதத்தோடு எல்லா இடங்களிலும் இவை நீக்கமற நிறைந்துள்ளன. அதே போல் லாட்டரிக்கும் சட்டரீதியான தடை உள்ளது – என்றாலும் தமிழகம் முழுவதும் சட்டவிரோத லாட்டரிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாதிரிப் படம்

சட்டவிரோத மூன்று எண் மற்றும் ஒற்றை எண் லாட்டரி சீட்டுகளை நடத்துபவர்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மாஃபியா கும்பலாகச் செயல்பட்டு வருவதோடு போலீசார், உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் வரை கீழிருந்து மேல் வரை முறையாக லஞ்சம் கொடுத்து விடுகின்றனர் (இது குறித்து விகடன் பத்திரிகையின் நிருபர்கள் நடத்திய கள ஆய்வை இந்த இணைப்பில் பார்க்கலாம்)

மக்கள் கூடும் இடங்களில் சட்ட விரோத லாட்டரி கம்பெனியின் ஏஜெண்டுகள் மக்களை அணுகுகின்றனர். ஒரு துண்டுச் சீட்டில் மக்கள் சொல்லும் மூன்று எண்களை எழுதி சீல் வைத்துக் கொடுத்து விட்டு அவர்களின் வாட்சப் எண்களை வாங்கிக் கொள்கின்றனர். மூன்று எண்கள் என்பது ஒரு செட் – இதன் விலை 60 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை இருக்கலாம். பம்பர் பரிசுத் தொகைக்கு ஏற்ப ஒரு செட்டின் விலையை நிர்ணயிக்கின்றனர். இவ்வாறு மூன்று எண்கள் கொண்ட நான்கு அல்லது ஐந்து செட்டுகளை அப்பாவி மக்கள் வாங்கிச் செல்கின்றனர். ஒரு தொழிலாளி இவ்வாறு நாளொன்றுக்கு ஏறத்தாழ 300 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் வரையும் கூட லாட்டரிக்காக செலவிடுகிறார்.

சீட்டில் கொடுக்கப்பட்ட மூன்று எண்களுக்கு பரிசு விழுந்தால் குறைந்தபட்சமான ஒரு தொகையும், கடைசி இரண்டு எண்களுக்கு பரிசு விழுந்தால் அதை விட கூடுதலான தொகையும், கடைசி எண்ணுக்கு விழுந்தால் மேலும் அதிகமான தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று எண்களும் ”குலுக்கலில்” தெரிவானால் பம்பர் பரிசு என்கிறார்கள். இந்த “குலுக்கல்” ஆன்லைன் மூலமாக கேரளாவில் நடப்பதாக ஏஜெண்டுகள் சொன்னாலும், அது இங்கே தமிழகத்தில் தான் நடக்கிறது. ஒவ்வொரு நாள் மாலை, 6:00 மணிக்கு சீட்டுகளை வாங்கிச் சென்றவர்களின் வாட்சப் எண்ணுக்கு முடிவுகளை அனுப்புகின்றனர். பரிசு விழுந்தவர்கள் சீட்டைக் கொடுத்து பணத்தைப் பெற்றுச் செல்லலாம்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான சட்டவிரோத லாட்டரிச் சீட்டு நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் இரண்டு அமைச்சர்களுக்கு இந்த சட்ட விரோத லாட்டரிச் சீட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்களுக்கும் பல்வேறு மட்டங்களில் உள்ள அதிகாரிகளுக்கும் முறையாக மாதா மாதம் கமிஷன் சென்று விடுவதாகவும் விகடன் பத்திரிகையின் செய்தி தெரிவிக்கிறது.

படிக்க:
இசக்கிமுத்து வழியில் தீக்குளித்த ஆசைத்தம்பி ! போலீசின் இலஞ்ச வெறிக்குப் பலி !
♦ மகன், மகள், தாயுடன் திருப்பூர் விவசாயி முத்துச்சாமி தற்கொலை !

***

ண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு என மத்தியில் ஆளும் மோடி அரசு நடத்திய பொருளாதார சர்ஜிக்கல் தாக்குதலின் விளைவாக சிறு குறு தொழில்கள் முற்றாக அழிந்து விட்டன. கிராமப்புற பொருளாதாரம் மொத்தமாக நலிந்து விட்டது. அதே நேரம் சிறு நகரங்களில் மக்கள் சொந்தமாக நடத்தி வந்த நகைப் பட்டறை உள்ளிட்ட சிறு பட்டறைத் தொழில்களும் முடங்கி விட்டன. இந்த சாதனைகளை எல்லாம் தனது முதல் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றி முடித்து விட்ட பிரதமர் நரேந்திர மோடி, தனது இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் எஞ்சிய தொழில்துறைகளின் மேல் கவனத்தை திருப்பி உள்ளார். இதன் விளைவாக பெரும் ஆலைகளில் ஆட்குறைப்பு, வேலைப் பறிப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பல கோடி தொழிலாளர்கள் பஞ்சைப் பராரிகள் ஆக்கப்பட்டு வருகின்றனர்.

மாட்டு வளைய மாநிலங்கள் என வருணிக்கப்படும் இந்தி பேசும் வட மாநிலங்களில் இவ்வாறு பிழைக்க வழியற்ற நிலையில் நிர்கதியாக்கப்பட்ட ஏழைகளுக்கு பசு பயங்கரவாதப் படைகள் வேலை வாய்ப்பு வழங்கப்படுகின்றது. பாகிஸ்தான் வெறுப்பு, இசுலாமிய வெறுப்பு என அந்த மாநிலங்களில் உதிரிகளாக்கப்படும் மக்கள் தொடர்ந்து ஏதாவது ஒரு “அரசியல்” நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழ் நாட்டில் பாரதிய ஜனதாவுக்கும் இந்துத்துவத்துக்கும் செல்வாக்கு இல்லை என்பதால் அவர்களின் அடிமைகளான எடப்பாடி பன்னீர் ஜோடியின் அடிமையரசு இது போன்ற சட்ட விரோத லாட்டரிகள் மூலம் தொழில் இழந்த வேலை இழந்த வாழ்க்கை இழந்த மக்களை “கவனித்து” கொள்ளும் பணியை ஆற்றி வருகின்றனர்.

அருணின் வாட்சப் வீடியோவைக் கேட்டால் நெஞ்சம் பதறுகின்றது. ஆசையாகப் பெற்று பார்த்துப் பார்த்து வளர்த்த ஒரு பெண் குழந்தையின் வாயில் அவளின் தந்தையே நஞ்சைப் புகட்டுவதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. அப்படி ஒரு நிலைக்கு அருணை தள்ளி விட்ட இந்த அடிமை அரசை என்ன செய்யலாம் நண்பர்களே?


சாக்கியன்
செய்தி ஆதாரம் : நியூஸ் 18.

மாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு !

1

“வாழ்வு என்பது பொருள்கள் மற்றும் நிகழ்வுகளில் பொதிந்துள்ள முரண்பாடே ஆகும். அது தமக்குள்ளே தொடர்ச்சியாக உருவாகிக்கொண்டும் மறைந்து கொண்டும் இருக்கின்றது. முரண்பாடு தீர்ந்தவுடன் வாழ்வு முடிந்து, மரணம் அடியெடுத்து வைக்கிறது”. அண்மையில் இந்திய அரசாங்கம் வெளியிட்ட ‘விலங்குகள் மீதான கொடுமை தடுப்பு (கால்நடை சந்தைகளை ஒழுங்குபடுத்துதல்) விதிகள்- 2017’ பற்றி சிந்திக்கத் தொடங்கியபோது ஃபிரடெரிக் ஏங்கெல்ஸின் இந்த மேற்கோள் நினைவுக்கு வந்தது.

எனது சொந்த முரண்பாடுகள்: நடைமுறையில் இல்லையெனினும் பிறப்பால் நான் ஒரு இந்து. வலியுணர்ச்சி (nociceptors) கொண்டதாக அறியப்பட்ட விலங்குகளை சாப்பிடுவதைத் தவிர்க்கும் அதே நேரத்தில் இந்தியாவில் எந்தவொரு உணவுக் கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் திணிப்பதையும் நான் எதிர்க்கிறேன்.

எனவே இறைச்சியின் விஞ்ஞானத்தைப் பற்றி குறிப்பாக என்னுடைய இந்த இரட்டை நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்வதை விட, நமது மூளை, பரிணாமம் மற்றும் எதிர்காலத்தில் இறைச்சியின் தாக்கம் குறித்து விவாதிக்க முடிவு செய்தேன்.

இறைச்சி இல்லாவிட்டால் நாம் மனிதர்களாக இருக்க மாட்டோம் :

மனித பரிணாம வளர்ச்சியின் முதல் ஆறு மில்லியன் ஆண்டுகளில் நம் முன்னோர்கள் அடிப்படையில் சைவ உணவு உண்பவர்களாகவே இருந்தனர். சுமார் 2 – 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தான் நம்முடைய உணவு பழக்கத்தில் ஒரு மாற்றம் வந்தது. நாம் இறைச்சி உண்ணிகளாக மாறிய பின்னரே நமது மூளையின் அளவு அதிவேகமாக அதிகரித்துள்ளது என்பதையும் ஆராய்ச்சி இப்போது நிறுவியுள்ளது. இன்று நாம் மனிதர்களாக இருக்கவும் மேலும் மனிதக் குரங்குகள் போன்ற பிற விலங்குகளை விட மிகவும் அறிவாளிகளாக இருக்கவும் இறைச்சி எப்படி உதவியது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

முதலாவது: இறைச்சியைப் போல திறனுள்ள வகையிலோ அல்லது அதிக அளவிலோ ஆற்றல் மற்றும் முதன்மையான ஊட்டச்சத்துக்களை காய்கறி உணவு வழங்கவில்லை. நவீன மனிதனின் மூளைக்கு மிக அதிக ஆற்றல் தேவையாக உள்ளது.

இரண்டாவது: ஆரம்பகால மனிதர்களின் இரைப்பைக் குழாய்கள் பழங்கள், இலைகள் மற்றும் வேர்களை செரிக்க உதவும் அளவுக்கு பெரிதாக இருந்தன, மேலும் ஆற்றலும் மிக அதிகமாக தேவையாக இருந்தன. ஆகவே, நாம் நம்முடைய உணவுப்பழக்கத்தை மாற்றியமைக்கும் போது, அதிக அளவில் ஆற்றலைப் பெறுவதற்காக நம்முடைய வயிற்றுப்பகுதி சிறியதாகி மூளை மிகப் பெரியதாக மாறியது. கருவிகளைப் பயன்படுத்துவதில் நாம் மிகவும் கைத்தேர்ந்தவர்களானதும், சமைக்கத் தொடங்கியதும் கூட இதற்கு உதவின.

படிக்க:
கறி சாப்பிடாதே ! கோவை மாணவர்களிடம் சங்கிகள் விசமப் பிரச்சாரம் !
♦ பாரதமாதாவின் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் | படக்கட்டுரை

சமீபத்திய வரலாறும் எதிர்காலமும்:

டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் டி.என். ஜா சர்ச்சைக்குரிய ‘புனித பசுவின் கட்டுக்கதை’ என்ற பெயரில் நூலை 2002-ல் வெளியிட்ட பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. வேத காலங்களில் உணவு விருப்பத்தேர்வுகள் குறித்த அவரது கடுமையான அறிவார்ந்த ஆராய்ச்சியின் முடிவுகளை இந்த நூல் ஆவணப்படுத்தியது. அந்தக் காலங்களில் பசுக்கள் பலியிடப்பட்டதுடன் மாட்டிறைச்சியும் உணவாக உட்கொள்ளப்பட்டது என்று அவர் எழுதினார். நாம் அவரது கூற்றை நம்பினால், சற்றேறக்குறைய 30% இந்தியர்கள் அதற்கு பிறகு மரக்கறி உணவுக்கு மாறியுள்ளனர்.

இந்தியாவில் தான் உலகின் மிக அதிகமான மரக்கறி உண்பவர்கள் விகிதம் உள்ளது. முழுமையான எண்ணிக்கையில் உலகின் பிற பகுதிகளை விட அதிகமான மரக்கறி உணவு உண்பவர்களை இந்தியா கொண்டுள்ளது.

எனவே மனிதர்களின் சமீபத்திய ஊட்டச்சத்து வரலாறு சில கேள்விகளை எழுப்புகிறது. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறைச்சி உண்ணும் பழக்கம் நம் மூளையின் பரிணாம வளர்ச்சியை மேலும் தூண்டியதா? மனிதர்கள் நம் மூளையை மேலும் வளர்ப்பதற்கு இறைச்சி உண்ணும் பழக்கம் முதன்மையாக இருக்கிறதா? எல்லா இந்தியர்களும் நீண்ட காலம் இறைச்சி சாப்பிடுவதை நிறுத்திவிட்டால், இதன் விளைவாக நமது மூளையின் அளவுகளில் கணிசமான வேறுபாடு இருக்குமா? நம்முடைய அறிவுத்திறனை இறைச்சி உண்ணும் மற்றவர்களுடன் இன்னமும் ஒப்பிட முடியுமா? இந்திய அரசின் அறிவிப்பானது மாட்டிறைச்சிக்கும் அப்பாற்பட்டது. இது கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டால், மற்ற இறைச்சி உண்ணும் பழக்கத்தையும் இது பாதிப்பது மட்டுமல்லாமல், பால் போன்ற பிற விலங்கு புரத மூலங்களையும் தடை செய்யக்கூடும்.

மாதிரிப் படம்

இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் ஒன்று தெளிவில்லாமல் உள்ளன, அல்லது நன்கு ஆராயப்படவில்லை. ஒரு கற்பனையான மதிப்பீடு என்னவென்றால், ஒரு சில ஆயிரம் ஆண்டு பழக்கத்தை விட சில ஆயிரம் தலைமுறை உணவு பழக்கம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

பேறு காலத்தில் இறைச்சி சாப்பிடுவது கருவின் மூளையின் வளர்ச்சியை தூண்டுகிறதா என்பது குறித்து சமீபத்திய ஆராய்ச்சி சிறிது வெளிச்சம் காட்டுகிறது. வழக்கமான ஒரு பேறு காலத்தில் மூளை மெதுவாக உருவாகி மிகவும் சிக்கலானதாகவும் முதிர்ச்சியானதாகவும் மாறும். தாய்மார்களுக்கான இரும்புச்சத்து குறைபாடு பிறக்கும் சந்ததிகளின் மூளையின் சிக்கலை எதிர்மறையாக பாதித்ததை புதுமையான நரம்பு-படவியல் (neuroimaging) நுட்பங்களைப் பயன்படுத்தி சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது.

படிக்க:
இறைச்சியை மறுக்கும் மோடியின் இந்தியாவில் குழந்தை இறப்பு அதிகம்
♦ சீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன ? | கேள்வி – பதில் !

வேறு சொற்களில் கூறுவதானால், இரும்புச்சத்தின் சரியான அளவு பிறந்த குழந்தையின் சரியான அளவு மூளையுடன் தொடர்புடையது. இறைச்சியில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இறைச்சி சாப்பிடுவது கருவின் மூளைக்கு நன்மை பயக்கும் என்பதற்கு சில மறைமுக சான்றுகளை இந்த ஆய்வு வழங்குகிறது. கர்ப்பிணிப் பெண்களிடையே இரத்த சோகை அதிக அளவில் உள்ள இந்தியாவுக்கு இது இன்றியமையா தேவையாக இருக்கும்.

மூளை மற்றும் பரிணாம வளர்ச்சியில் உணவுப் பழக்கத்தின் மீதான கட்டுப்பாடுகளின் தாக்கமானது தற்போதைய பகிர்மான முறையின் ஒரு தவறாகவும் இருக்கலாம். இது வரலாறு மற்றும் அறிவியலை மட்டுமல்ல, பொருளாதாரத்தையும் கூட புறக்கணித்து சித்தாந்தத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.

கட்டுரை : ஜெய் தேசாய் (நரம்பியல் மருத்துவர்)
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : தி வயர்.

சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் !

க்களவையில் சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களின் மசோதா இன்று (12.12.2019) தாக்கல் செய்யப்பட்டது. இதன் விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன், சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் என வாதிட்டார்.

இதுகுறித்து மதுரை தொகுதி எம்.பி.யான சு.வெங்கடேசன் இன்று பேசியதாவது :

”இந்த மசோதாவை முன்மொழிகிற பொழுது அமைச்சர் முன்வைத்த கருத்து கடும் அதிர்ச்சியை உருவாக்கியது, இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக சமஸ்கிருதத்தையும் உலக அறிவினுடைய ஆதாரமாக சமஸ்கிருதத்தையும் அவர் முன்வைத்தார்.

இதற்கு என்ன அறிவியல் ஆதாரம் இருக்கிறது என்ற கேள்வியை நான் இங்கே எழுப்ப விரும்புகிறேன். நாடாளுமன்றத்தில் அமைச்சர் அறிவியல் பூர்வமான ஆதாரங்களோடு முன்வைக்க வேண்டும் என்பதை மக்கள் விரும்புவார்கள்.

இது அடிப்படையில் ஆதாரமற்ற கருத்து, மட்டுமல்ல. நான் இங்கே சில புள்ளிவிவரங்களையும் எடுத்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

சமஸ்கிருதத்தினுடைய முதல் கல்வெட்டு ராஜஸ்தானத்தினுடைய அத்திப்பாராவிலும் குஜராத்தில் இருக்கிற ஜுனாகடிலும் கிடைத்துள்ளது. அந்த கல்வெட்டின் காலம் கிபி ஒன்றாம் நூற்றாண்டு. ஆனால், தமிழ் மொழியில் முதல் கல்வெட்டு மதுரையில் மாங்குளத்திலும், தேனியில் புலிமான்கோம்பையிலும் கிடைத்திருக்கிறது.‌ இந்தக் கல்வெட்டின் காலம் கிமு ஆறாம் நூற்றாண்டு.

சமஸ்கிருத கல்வெட்டு கிடைத்ததற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்க் கல்வெட்டு கிடைத்திருக்கிறது. சொல்லுங்கள் எது மூத்த மொழி. உங்களை விட 700 ஆண்டு வயதானவர்கள் நாங்கள்.

படிக்க:
கீழடி : ஆரிய – சமஸ்கிருத – பார்ப்பனப் புரட்டுகள் தவிடுபொடி !
♦ தேசிய இன அடையாளங்களை அழிக்கும் மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு

தமிழ் மொழி மூத்ததா? சமஸ்கிருத மொழி மூத்ததா? என்ற கேள்வியை எழுத்துபூர்வமாக அறிவியல் கண்டுபிடிப்புகளிள் இருந்து நாங்கள் கேட்க விரும்புகிறோம்.

அதே போல இங்கே மிக முக்கியமாக குறிப்பிட்டுள்ளார்கள் இதுவரை இந்தியாவிலே கிமு 6-ம் நூற்றாண்டில் தொடங்கி 18-ம் நூற்றாண்டு வரை 60,000 தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

ஆனால், சமஸ்கிருதக் கல்வெட்டுக்களின் எண்ணிக்கை வெறும் 4000 மட்டும் தான் என்பதை இந்த அவையிலே எடுத்துச் சொல்ல கடமைப்பட்டுருக்கிறேன்.

தமிழ் தேவபாஷை அல்ல

இங்கே மீண்டும் மீண்டும் பலர் சொல்கிறார்கள் சமஸ்கிருதம் தேவ பாஷை என்று, அது அவர்களின் நம்பிக்கை. நான் அதை குறுக்கிடவில்லை, ஆனால் மிக முக்கியமாக இங்கே நாங்கள் சொல்லுவது தமிழ் தேவபாஷை அல்ல.

சமஸ்கிருதத்தில் பெண் புலவர் இல்லை

இது மக்களின் மொழி என்பதுதான் எங்களின் பெருமை. ஏன் தெரியுமா? இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு சமஸ்கிருதத்திலே இவ்வளவு இலக்கியங்கள் இருக்கின்றது. ஒரு பெண்ணாவது சமஸ்கிருதப் புலவராக உதயமாகி இருக்கிறாரா?

40 பெண் தமிழ்ப் புலவர்கள்

ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தமிழ் இலக்கியத்தில் ஒருவரல்ல, இருவரல்ல நாற்பதுக்கும் மேற்பட்ட பெண் புலவர்களைக் கொண்ட ஒரே உலக மொழி தமிழ்.

சமஸ்கிருதம் புழங்கு மொழி அல்ல

எனவே தான் தமிழை மக்களின் மொழி என்று இங்கே சொல்கிறோம். அதே போல மிக முக்கியமாக மீண்டும் மீண்டும் சமஸ்கிருதம், எந்தக் காலத்திலும் மக்களின் புழங்கு மொழியாக இருந்ததில்லை.

சமஸ்கிருதம் ஒரு சடங்கியல் மொழி

அது சடங்கியல் மொழி. ஆனால் தமிழ் அப்படியல்ல. எல்லாக் காலத்திலும் மூவாயிரம் ஆண்டுகளாக மக்களின் மொழியாக இருக்கிறது. இன்றைக்கும் இலங்கையில், சிங்கப்பூரில், மலேசியாவில், மொரீசியஸில், கனடாவில் அரசினுடைய அரசு மொழியாக இருக்கிறது.

தமிழர்களுடைய மொழி தமிழ்

தமிழ் தேவபாஷை என்று நாங்கள் சொல்லவில்லை. பூவுலகம் முழுக்க இருக்கிற பல நாடுகளில் இருக்கிற 10 கோடி தமிழர்களுடைய பாஷை என்று நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

புதிய மைல்கல்லாக கீழடி

அதே போல தமிழினுடைய பெருமை அது ஒரு சமயச் சார்பற்ற மொழி. இன்றைக்குக் கீழடியினுடைய ஆய்வு முடிவுகள் இந்திய தொல்லியல் வரலாற்றில் புதிய மைல்கல்லை உருவாக்கியுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துகள்

கீழடியில் 16,000 பொருட்கள் கிடைத்துள்ளன. அதில் ஒரு பொருள் கூட பெரும் மதங்களும், மத நிறுவனம் சார்ந்த பொருள் கிடையாது. ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துகள் கிடைத்துள்ளன.

செழித்தோங்கிய மொழி தமிழ்

கிமு ஆறாம் நூற்றாண்டில் பெரும் மதங்களும் பெரும் மதங்களுடைய கடவுள்களும் உருவாவதற்கு முன்பே செழித்தோங்கிய மொழியாக தமிழ் இருந்தது.

சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் போட்டி

அதே போல நம்முடைய நாடாளுமன்ற அமைச்சர் தலையிட்டு ‌இந்த விவாதத்தை சமஸ்கிருதத்திற்கும் தமிழிற்கும் நடக்கின்ற ஒரு போட்டியாக, யுத்தமாக மாற்றாதீர்கள் என்று சொன்னார். நிச்சயம் நாங்கள் அப்படி மாற்ற விரும்பவில்லை.

படிக்க:
ஆறு வயதுக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் !
♦ குஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை !

சமஸ்கிருதத்தை எதிர்க்கும் தமிழ்க் குரல்

எங்களை விட 700 வருடம் இளைய ஒரு மொழிக்கு எதிராக நாங்கள் ஏன் சண்டை போடப்போகிறோம் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் சமஸ்கிருதம் தான் இந்திய பண்பாட்டின், அறிவின் அடையாளமாக, நீங்கள் மீண்டும் மீண்டும் முன்வைத்தால் அதை எதிர்க்கிற முதல் குரல் தமிழகத்தின் குரலாக இருக்கும்.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் 4

இன்றைக்கு மத்திய அரசின் நிதி நிலையின் கீழ் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக நான்கு இருக்கிறது. இந்த நான்கையும் மத்திய அரசினுடைய பல்கலைக்கழகங்களாக மாற்றுவோம் என்று நீங்கள் சொன்னீர்கள்.

பிரச்சினை காந்தியா? தமிழா?

ஆனால் இன்றைக்கு மூன்று சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களை மட்டும் மாற்றிவிட்டு தமிழகத்திலே இருக்கிற காந்திகிராம பல்கலைக்கழகத்தை கைவிட்டு விட்டீர்கள். உங்களின் பிரச்சினை காந்தியா அல்லது தமிழா என்பதை இந்த அவையிலே நாங்கள் கேட்க விரும்புகிறோம்.

இயக்குனர் இல்லாத செம்மொழி நிறுவனம்

காந்தி கிராம பல்கலைக்கழகத்தை உடனடியாக மத்திய பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும். இன்றைக்கு உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், உலக செம்மொழி நிறுவனம் பல ஆண்டுகளாக இயக்குனர் போடவில்லை. 150 இடங்கள் காலியாக உள்ளன.

நிதி கொடுக்க மறுப்பு

மொழி சார்ந்த பல பல்கலைக்கழகங்களுக்கு நீங்கள் நிதி கொடுக்க மறுக்கிறீர்கள். அது, மைசூரிலே இயங்கிக் கொண்டிருக்கிற இந்திய மொழிகளினுடைய ஆய்வு நிறுவனம்.

ஒரு மொழியை தூக்கிப் பிடிப்பவது தவறு

இந்த நிறுவனத்தை போன்று அனைத்து இந்திய மொழிகளினுடைய ஆய்வுக்கு, வளர்ச்சிக்குத்தான் ஒரு முக்கியத்துவம் தர வேண்டுமே ஒழிய, ஒரு மொழியை மட்டும் தூக்கிப் பிடிப்பது தவறு. அந்த மொழியையே இந்தியாவினுடைய அடையாளமாக மாற்றுவதுடன் அதை மனிதனுக்கு அப்பாற்பட்ட தேவபாஷை என்ற ஒரு புனிதத் தன்மையை கொடுப்பதும் ஒரு மதச்சார்பற்ற அரசுக்கு நல்லதல்ல.

அனைத்து மொழிகளும் இந்திய அடையாளம்

“இந்திய அடையாளம் அனைத்து மொழிகளிலும் இருக்கிறது அதை உயர்த்திப் பிடிப்போம்”.

இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

நன்றி : Saravana Kanth
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer