Wednesday, July 1, 2026
முகப்பு பதிவு பக்கம் 297

சுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 53

சுதந்திர உற்பத்தி

அ.அனிக்கின்

சுதந்திர உற்பத்திக் கொள்கை அல்லது ஸ்மித் குறிப்பிட்டது போல இயற்கைச் சுதந்திரக் கொள்கை என்பது மனிதன், சமூகம் ஆகியவை பற்றிய அவருடைய கருத்துக்களின் நேரடியான வளர்ச்சியாகும். ஒவ்வொரு மனிதனுடைய பொருளாதார நடவடிக்கையும் கடைசியில் சமூகத்தின் நன்மைக்கே அடிகோலுமென்றால் இந்த நடவடிக்கையில் எவ்விதமாகவும் குறுக்கிடக் கூடாது என்பது தெளிவாகும்.

பண்டங்களும் பணமும், மூலதனமும் உழைப்பும் சுதந்திரமாக எங்கும் செல்ல அனுமதிக்கப்பட்டால் சமூகத்தின் செல்வாதாரங்கள் இயன்ற அளவுக்கு அதிகப் பகுத்தறிவுடைய வழியில் உபயோகிக்கப்படும் என்று ஸ்மித் நம்பினார். அவருடைய பொருளாதாரப் போதனையின் முதலும் முடிவும் சுதந்திரமான போட்டி என்பதாகும். நாடுகளின் செல்வம் என்ற புத்தகம் நெடுகிலும் அந்தக் கருத்து காணப்படுகிறது. அவர் மருத்துவர்களுக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கும் மதகுருக்களுக்கும் கூட இந்தக் கோட்பாட்டைக் கையாண்டார். எல்லா மதங்களையும் மதப்பிரிவுகளையும் சேர்ந்த மதகுருக்களுக்கும் தங்களுக்கிடையே சுதந்திரமான போட்டியில் ஈடுபடுகின்ற உரிமையைக் கொடுத்தால், எந்தத் தனிக்குழுவுக்கும் சலுகைகளோ அல்லது ஏகபோக உரிமையோ கொடுக்கப்படவில்லையென்றால், அவர்களால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்கிறார் (அவர்களிடமிருந்து நாம் அதிகமாக எதிர்பார்க்கக் கூடியது இதுவே என்று சாடையாகக் குறிக்கிறார்).

படிக்க :
வேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு !
லாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு !

சுதந்திர உற்பத்திக் கோட்பாட்டைக் கண்டு பிடித்தது ஸ்மித்தினுடைய சாதனை அல்ல, ஆனால் அதற்காக முரணில்லாமல் முறையாக வாதாடியது தான் அவருடைய சாதனை. அந்தக் கோட்பாடு பிரான்சில் தோன்றியது என்றபோதிலும், ஒரு ஆங்கிலேயரால் தான் அதன் தர்க்க ரீதியான முடிவுக்கு அதை வளர்த்துக் கொண்டு போக முடிந்தது, பொருளாதாரத் தத்துவத்தின் அடிப்படையாக அதை ஆக்க முடிந்தது. உலகத்திலேயே அதிகமான தொழில் துறை வளர்ச்சி அடைந்த நாடாக முன்னேற்றமடைந்த இங்கிலாந்து இதற்கு முன்பாகவே யதார்த்த ரீதியில் சுதந்திர வர்த்தகத்தின் மீது அக்கறை கொண்டிருந்தது. பிரான்சில் பெரும்பாலும் அறிவு வளர்ச்சியும் மிதவாதமும் கொண்ட பிரபுக்கள் பிஸியோக்ரஸியை ஒரு நவீன பாணியாகக் கருதி ஆதரித்தார்கள்; அவர்களுடைய மோகம் விரைவில் மறைந்தது. ஆனால் இங்கிலாந்தில் ஸ்மித் மீது ஏற்பட்ட “மோகம்” முதலாளிகள் மற்றும் முதலாளித்துவ மயமாகிக் கொண்டிருந்த பிரபுக்களின் நம்பிக்கைச் சின்னமாயிற்று. அடுத்து வந்த நூற்றாண்டு முழுவதிலும் இங்கிலாந்து அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை என்பது ஓரளவுக்கு ஸ்மித்தினுடைய திட்டத்தை அமுல் நடத்துவதாக இருந்தது.

ஸ்மித் உயிரோடிருக்கும் பொழுதே இதற்கான முதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இது சம்பந்தமாக ஒரு வேடிக்கையான கதை சொல்லப்படுவதுண்டு. தம்முடைய வாழ்க்கையின் கடைசிப் பகுதியில் ஸ்மித் மிகவும் பிரபலமானவராக இருந்தார். 1787 -ம் வருடத்தில் அவர் லண்டனுக்கு வந்தபொழுது மிகவும் முக்கியமான ஒரு பிரபுவின் மாளிகைக்குப் போனார். அங்கே வரவேற்புக் கூடத்தில் பிரதம மந்திரி வில்லியம் பிட் உட்பட பலர் உட்கார்ந்திருந்தார்கள். ஸ்மித் உள்ளே நுழைந்ததும் எல்லோரும் எழுந்து நின்றார்கள். ஸ்மித் பேராசிரியருக்குரிய தோரணையில் கையை உயர்த்தி, ”உட்காருங்கள், கனவான்களே!” என்றார். ”இல்லை. நீங்கள் உட்காரும் வரை நாங்கள் நின்று கொண்டிருப்போம்; ஏனென்றால் நாங்கள் அனைவருமே உங்களுடைய சீடர்கள்” என்றார் பிரதம மந்திரி பிட். இது கற்பனையாகக்கூட இருக்கலாம். ஆனால் இந்த சம்பவம் நடந்திருந்தால் ஆச்சரியப்பட முடியாது. வில்லியம் பிட் வர்த்தகத் துறையில் அடுத்தடுத்துச் செய்த சில நடவடிக்கைகள் “நாடுகளின் செல்வம்” புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களோடு உணர்ச்சி ரீதியில் ஒன்றியிருந்தன.

ஸ்மித் தன்னுடைய செயல் திட்டத்தில் அடங்கிய கருத்துக்களை ஒவ்வொன்றாக எங்குமே எடுத்துக் கூறவில்லை, ஆனால் இது கஷ்டமான வேலையல்ல. அவருடைய பார்வையில் சுதந்திரமான உற்பத்தி என்பது நடைமுறையில் பின்வரும் அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

முதலாவதாக, தொழிலாளர்கள் இடம் பெயர்தலைக் (இந்த வார்த்தை நவீன பொருளாதாரத்தைச் சேர்ந்தது) கட்டுப்படுத்துகின்ற எல்லா நடவடிக்கைகளையும் ரத்துச் செய்ய வேண்டுமென்று அவர் கோரினார். எல்லாவற்றுக்கும் மேலாக, கட்டாயத் தொழில் பயிற்சி, குடியேற்றச் சட்டம் போன்ற நிலப்பிரபுத்துவ மிச்சங்களோடு இது சம்பந்தப் பட்டிருந்தது. இந்தக் கோரிக்கையின் யதார்த்தமான நோக்கம் முதலாளிகளுக்கு நடவடிக்கைச் சுதந்திரத்தை உறுதி செய்வதே என்பது தெளிவு. ஆனால் ஸ்மித் புத்தகத்தை எழுதிய காலத்தை நாம் கவனத்தில் வைக்க வேண்டும்: அன்று பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவத்தினால் இன்னும் துன்பமடைந்து கொண்டிருக்கவில்லை, முதலாளித்துவ வளர்ச்சி போதுமான அளவுக்கு இல்லாததனால்தான் துன்பமடைந்து கொண்டிருந்தது. எனவே ஸ்மித்தின் கோரிக்கை முற்போக்கானதாகும், இரக்கப் பண்புடையது என்று கூடச் சொல்லலாம்.

இரண்டாவதாக, ஸ்மித் நிலத்திலும் முற்றிலும் சுதந்திர வர்த்தகத்தை ஆதரித்தார். பெரிய நிலப் பண்ணைகள் வைத்திருப்பதை அவர் எதிர்த்தார். வாரிசுரிமையாகப் பெறும் நிலச் சொத்தைப் பிரிப்பதைத் தடுக்கும் முந்துபிறப்புரிமைச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டுமென்று அவர் கோரினார். நிலத்தை மிகவும் அதிகமான பொருளாதார உபயோகத்துக்கு யார் பயன்படுத்துவார்களோ அல்லது அதைச் செலாவணிக்குள் கொண்டுவருவதற்கு யார் உடன்படுகிறார்களோ அவர்களுடைய உடைமையாக அது இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இவை எல்லாமே விவசாயத்தில் முதலாளித்துவ வளர்ச்சி ஏற்படுவதை நோக்கமாகக் கொண்ட கருத்துக்களாகும்.

மூன்றாவதாக, தொழில் துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை அரசாங்கம் ஒழுங்குபடுத்தும் எச்சங்களை ஒழிக்க வேண்டுமென்று ஸ்மித் வற்புறுத்தினார். உள் நாட்டுச் சந்தையில் சில பண்டங்களின் விற்பனை மீது தீர்வை விதிப்பது செலவுத் திட்ட வருமானத்துக்காக இருக்க வேண்டுமே தவிர, பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக இருக்கக் கூடாது என்றார். இங்கிலாந்தில் இதற்கு முன்பாகவே உள்நாட்டில் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படும் பண்டங்கள் மீது தீர்வை விதிப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால் ஸ்மித்தின் விமர்சனம் பிரான்சுக்கு மிகவும் பொருத்தமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.

நான்காவதாக, ஸ்மித் இங்கிலாந்தின் மொத்த அந்நிய வர்த்தகக் கொள்கையையும் நுணுக்கமாக விமர்சித்துவிட்டு சுதந்திரமான அந்நிய வர்த்தகத்துக்கு ஒரு திட்டத்தைத் தயாரித்தார். இதுவே அவருடைய மிக முக்கியமான கோரிக்கையாகும்; அது வாணிப ஊக்கக் கொள்கையை மிகவும் நேரடியாகத் தாக்கியது. 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலத் தொழில் முதலாளிகளின் பதாகையாக இருந்த சுதந்திர வர்த்தக இயக்கம் இவ்விதம் ஆரம்பமாயிற்று.

வழங்கீடுகளின் சமநிலையைக் கட்டாயமாக ஏற்படுத்த முயற்சிப்பது, சில குறிப்பிட்ட பண்டங்களின் ஏற்றுமதி, இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடைகள், மிக அதிகமான 

இறக்குமதித் தீர்வைகள், ஏற்றுமதிக்கு நிதியுதவிகள் மற்றும் ஏகபோக வர்த்தக உரிமை கொண்ட கம்பெனிகள் ஆகிய வாணிப ஊக்கக் கொள்கையினரின் மொத்தக் கொள்கையுமே ஸ்மித்தின் தாக்குதலுக்கு உட்பட்டது. ஆங்கிலக் காலனியாதிக்கக் கொள்கையை அவர் விசேஷமாகக் குறை கூறினார்; நாட்டின் நன்மைக்காக இல்லாமல், குறைந்த எண்ணிக்கையுள்ள வர்த்தகர்கள் கும்பலின் நன்மையையே அது நோக்கமாகக் கொண்டிருக்கிறதென்று பகிரங்கமாகக் குறிப்பிட்டார். அயர்லாந்திலும் குறிப்பாக வட அமெரிக்காவிலுமுள்ள குடியேற்றங்களிலும் தொழில்துறையை நசுக்கி வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் கொள்கையை இங்கிலாந்து கடைப்பிடித்தது. இந்தக் கொள்கை குறுகிய நோக்கமுடையது, பொருளற்றது என்று ஸ்மித் கருதினார். “எனினும் ஒரு மாபெரும் நாட்டின் மக்களை அவர்களுடைய சொந்த உற்பத்திப் பொருளின் ஒவ்வொரு பகுதியைக் கொண்டு அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் அடைவதைத் தடுப்பதும் அல்லது அவர்களுடைய செல்வத்தையும் தொழில் உழைப்பையும் தங்களுக்கு அதிகமான பலன் தரக் கூடியதென்று அவர்கள் முடிவு செய்யும் வழியில் ஈடுபடுத்துவதைத் தடுப்பதும் மனிதகுலத்தின் மிகவும் புனிதமான உரிமைகளை வெளிப்படையான வகையில் மீறுவதாகும்” (1) என்று எழுதினார்.

1776-ம் வருடத்தில், புரட்சி செய்த குடியேற்றங்களோடு இங்கிலாந்து யுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது இப்படி எழுதினார். ஸ்மித் அமெரிக்கக் குடியரசுவாதத்துக்கு அனுதாபம் கொண்டிருந்தார். ஆனால் அவர் நல்ல பிரிட்டிஷ்காரராக இருந்தார் என்பதனால் அமெரிக்கக் குடியேற்றங்கள் பிரிந்து போவதை ஆதரிக்கவில்லை; இங்கிலாந்துக்கும் குடியேற்றங்களுக்கும் சமத்துவமான முழு உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட இணைப்பை ஏற்படுத்துவதை ஆதரித்தார். கிழக்கு இந்தியக் கம்பெனி இந்தியாவில் பின்பற்றி வந்த கொள்ளை, ஒடுக்குமுறைக் கொள்கையைப் பற்றி இதே மாதிரியான தீவிரத்தோடு கருத்துக்களைக் கூறினார். ஸ்மித் தன்னுடைய புத்தகத்தில் திருச்சபையைப் பற்றியும் பல்கலைக்கழகக் கல்வி முறையைப் பற்றியும் பல கடுமையான வார்த்தைகளை எழுதினார். இங்கிலாந்தில் அவ்வாறு எழுதுவதனால் அவருடைய உயிருக்கோ, சுதந்திரத்துக்கோ ஆபத்து ஏற்படாது; அவரைச் சிறையில் போட மாட்டார்கள் என்பது உண்மையே. அவருடைய பிரெஞ்சு நண்பர்கள் சிலருக்கு வொல்டேர், டிட்ரோ, மோரெல்லே, மிராபோ கூட வெவ்வேறு காலங்களில் அந்த அனுபவம் ஏற்பட்டதுண்டு. ஆனால் ஆங்கில மதகுருக்கள், பல்கலைக்கழக அதிகாரிகள், பத்திரிகைகளின் கூலி எழுத்தாளர்களின் வெறுப்பும் தாக்குதல்களும் எவ்வளவு ஆபத்தானது என்பது அவருக்குத் தெரியும். இவர்களைக் கண்டு அவர் அஞ்சினார்; அந்த அச்சத்தையும் அவர் மறைக்கவில்லை.

ஸ்மித் இயற்கையாகவே கவனமும் முன் எச்சரிக்கையும் கொண்டவராக இருந்த போதிலும், ஒரு துணிச்சலான புத்தகத்தை எழுதி வெளியிட்டார். மனிதர் என்ற முறையில் அவருடைய கவர்ச்சி இதில் அடங்கியிருக்கிறது.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1) A. Smith, The Wealth of Nations, Vol. II, London, 1924, p. 78.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

முதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் !

5

டந்த வாரத்தில் ‘துக்ளக்’ பத்திரிகையின் 50-ம் ஆண்டு நிறைவு விழாவில் ரஜினிகாந்த் பெரியார் குறித்து ஒப்பித்த அவதூறு பேச்சுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியது.

ரஜினி பேசிய அவதூறு பேச்சுக்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்து அந்த சமயத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை தொகுத்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார் தோழர் சுப. வீரபாண்டியன்.

தமிழகம் முழுவதும் பல்வேறு முற்போக்கு அமைப்புகளும் கட்சிகளும் ரஜினிகாந்தின் இந்த ‘ஒப்பித்தலுக்கு’ கடும் கண்டனங்கள் தெரிவித்தன. ரஜினிகாந்தின் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடந்து ஜனவரி 22 அன்று ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் செய்யப் போவதாக திராவிடர் விடுதலைக் கழகம் அறிவித்தது.

“குருமூர்த்தி டயலாக்கை மனப்பாடம் செய்து துக்ளக் மேடையில் பேசியதற்கெல்லாம் போரா ? பெரிய அக்கப்போராக அல்லவா இருக்கிறது”  என பீதியடைந்த “போயஸ் 420” குடும்பம் உடனடியாக போலீசு பாதுகாப்பு வேண்டும் எனக் கேட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வீட்டு முன் போலீசும் குவிக்கப்பட்டிருக்கிறது.

எந்த மாநிலத்தில் எப்படியோ, தமிழகத்தைப் பொருத்தவரையில் அரசியலில் பெயர் சொல்லும் அளவிற்கு தலைவர்களாக இருந்தவர்கள் அனைவரும் தமிழகத்தின் வரலாறு, அரசியல், கலாச்சாரம் ஆகியவை குறித்த குறைந்தபட்ச அறிவாவது கொண்டவர்களாகத்தான்  இருந்திருக்கிறார்கள்.

தற்போது பெரியாரின் 1971 சேலம் ஊர்வலம் பற்றிப் பேசியிருக்கும் ரஜினிகாந்தின் யோக்கியதை என்ன தெரியுமா?

எழுவர் விடுதலை பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “யார் அந்த ஏழு பேர்?” என்று கேட்டவர்தான் இந்த துக்ளக் படித்த ‘அறிவாளி’ ரஜினிகாந்த். பத்திரிகையாளர்கள் மீண்டும் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் என்று குறிப்பிட்டு கேட்டபோதும், “அதெல்லாம் எனக்குத் தெரியலைங்க..” என்று சொல்லி தப்பித்து ஓடுவிட்டார். இவ்விவகாரம் சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களே காறி உமிழும் அளவிற்கு அம்பலப்பட்டது.

அன்றும் இரண்டுநாள் கழித்து பத்திரிகையாளர்களை தனது வீட்டுக்கு அழைத்து, எழுவர் விடுதலையைப் பற்றி தனக்குத் தெரியும் என்றும், மொட்டையாக ஏழுபேர் என்று கேட்டதால்தான் தன்னால் அப்போது பதில் சொல்ல முடியவில்லை என்றும் கூறி சமாளித்தார் ரஜினிகாந்த்.

படிக்க :
ரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் !
♦ பாஜகவுக்காக மட்டுமே துடிக்கும் ரஜினியின் ஆன்மீக ஆன்மா !

தூத்துக்குடியில் மக்கள் துப்பாக்கிச் சூட்டில் குண்டடிபட்டு, தமது சொந்தங்களை இழந்து துடித்துக் கொண்டிருக்கையில், சங்கி கும்பலின் அட்வைசின் பேரில் தூத்துக்குடியில் அதாவது அப்போதுதான் இழவு விழுந்த வீட்டில் போய் ‘மாஸ்’ காட்டுவதற்கு சுற்றுவட்டாரத்தில் இருக்கும் தனது ரசிகக் குஞ்சுகளையும் வரவழைத்து, மன்னிக்கவும் ரசிகக் கிழடுகளையும் வரவழைத்து அவர்கள் புடைசூழ துக்கம் விசாரிக்கச் சென்றார். சென்ற இடத்தில் ஒரு “ஆண்டி இந்தியன்” யார் சார் நீங்க எனக் கேட்க, நமது 70 வயது கிழவரும், “நான் தாம்பா ரஜினிகாந்த்” என அறிமுகம் செய்து கொள்ள #நான்_தான்பா_ரஜினிகாந்த் எனும் டேக் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தூத்துக்குடியில் பற்றியெரிந்த நெருப்பிலிருந்து தப்பித்தால் போதுமென தெறித்து ஓடிவந்த ரஜினிகாந்திடம், சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் வாயைக் கிளற, தனது சுயரூபத்தைக் காட்டினார் ரஜினிகாந்த். போராடிய மக்களை சமூக விரோதிகள் என்று குறிப்பிட்டதோடு, போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டையும் ஆதரித்தார்.

இவையெல்லாம் தெரிந்த சம்பவங்கள்தான் என்றாலும், வரலாற்று ரீதியில், யார் இந்த ரஜினிகாந்த் – அவருடைய சமூக அறிவு ‘ஹைகோர்ட்’ எந்த அளவிற்கு இருக்கிறது எனத் தெரிந்து கொள்வதற்குத்தான் இந்த ரீ-கேப் (Recap).

நமது ‘துக்ளக் அறிவாளி’ ரஜினிகாந்தின் வரலாற்று அறிவும் சமூக அறிவும் குறித்து ஆண்மை லேகிய ஆடிட்டருக்குத் தெரியாமல் இருந்திருக்குமா என்ன?

இரண்டு நிமிடம் கூட மீடியாக்களை எதிர்கொள்ள முடியாத ‘தலைவர்’. கேப்சனில் மட்டும் குறைச்சல் இல்லை.

அன்னாரின் வழிகாட்டலின் பேரில் இன்று (21-01-2020) பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து பேசியிருக்கிறார் ரஜினிகாந்த். 2017-ல் எழுதப்பட்ட  அவுட்லுக் பத்திரிகையில் (அவுட்லுக் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டதே 1995-ம் ஆண்டுதான்) எழுதப்பட்ட ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதை பெரிய ஆதாரமாகக் காட்டி, தான் சொன்னது சரிதான் என்றும், தான் மன்னிப்புக் கேட்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

”அவுட்லுக்”கில் வந்தது எல்லாம் ஆதாரம் என்றால், 1980-களில் ரஜினிகாந்தின் யோக்கியதைப் பற்றியும் எம்ஜியாருக்கும் அவருக்கும் ராமாபுரம் தோட்ட இல்லத்தில் நடைபெற்ற டீலிங் குறித்தும் அன்றைய தினசரி பத்திரிகைகளிலேயே தகவல்கள் பல கொட்டிக் கிடக்கின்றன. அதை வைத்து ரஜினியின் தேர்தல் பிரச்சார அறிக்கை தயார் செய்யலாமா ?

இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் மிரண்டு போய் இருக்கிறார் என்பதை இந்த பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்தே தெரிகிறது. அன்று மேடையில் பேசியபோது தானே நேரே இருந்து பார்த்தது போல சுவாரசியமாகப் பேசிவிட்டு, இன்றைய பேட்டியில் “இந்த பத்திரிகையில வந்ததை வச்சித்தான் நான் பேசிருக்கேன்” என்று முதல் ஜகா வங்கியுள்ளார் ரஜினி.

அடுத்ததாக, பல்வேறு தரப்பினரும், அந்த சமயத்தில் களத்தில் இருந்த பல பத்திரிகையாளர்களும் நீங்கள் கூறியது பொய் எனக் கூறி சில ஆதாரங்களைக் கூறியிருக்கிறார்களே என்று நிருபர் ஒருவர் கேட்டதற்கு, “ நான் பார்த்ததை நான் சொல்றேன்; அவங்க பார்த்ததை அவங்க சொல்றாங்க” என்று இரண்டாவது ஜகா வாங்கியுள்ளார்.

“அவர்கள் பொய் சொல்கிறார்கள். நான் சொன்னதுதான் உண்மை” என அடித்துக் கூறுவதில், நமது ”வேங்கையன் மகனுக்கு” என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.

படிக்க :
ஆண்ட பரம்பரையே நீ ஆம்பிள்ளையா ? குருமூர்த்திக்கு என்ன பதில் !
♦ எமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா. வைகை

அடுத்து ஒரு நிருபர் மீண்டும் தி.வி.க. முன்வைக்கும் வாதங்களைக் கூறி விளக்கம் கேட்கிறார். நமது ஆன்மிக அரசியல்வாதிக்கு முகம் இருண்டுவிட்டது. சொல்லிக் கொடுக்கப்பட்டதைத் தாண்டி ஆதாரம், விளக்கம் என்று கேட்டால், பாவம் அவரும் எத்தனை முறைதான் ஒரே பல்லவியைப் பாடி சமாளிப்பது? “இது மறுக்கக் கூடிய சம்பவம் இல்லை. மறக்கவேண்டிய சம்பவம்” என ஒரு பஞ்ச் டயலாக் அடித்துவிட்டு மலையேறிவிட்டார்.

எதை மறக்கப்பட வேண்டிய சம்பவம் என்கிறார். 1971- சம்பவத்தையா ? அல்லது பெரியாரை அவதூறாகத் தான் பேசிய சம்பவத்தையா ?

தான் பெரியாரை அவதூறாகப் பேசியது மறக்கப்பட வேண்டும் எனக் கேட்டாரெனில் நேர்மையாக மன்னிப்புக் கேட்டுவிட்டுப் போகலாம். அல்லது 1971-இல் பெரியார் நடத்திய பேரணி மறக்கப்பட வேண்டிய சம்பவம் என்றால், நமக்கு முன்னே ஒரே ஒரு கேள்விதான் நிற்கிறது.

“அப்புறம் என்ன ‘ஹைகோர்ட்டுக்கு’ அன்னைக்கு துக்ளக் விழாவுல 1971- சம்பவத்தைப் பத்தி பேசுனீரு?” என்பதுதான் அது.

இப்படி அரசியலுக்கு வரவிருக்கும் ஒருவர், முக்கியமான ஒரு விசயத்தில் அவதூறு பேசிவிட்டு, அதற்கு பட்டும்படாமல் விளக்கமளித்தால் அவரது எதிர்கால அரசியல் வாழ்க்கை என்னவாகும் என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

நமக்கு அதற்கு விடை தெரியவில்லை எனினும், ஒன்று மட்டும் பிரகாசமாகத் தெரிகிறது. நமது ‘ஆண்மை லேகிய’ அரசியல் புரோக்கர் குருமூர்த்தி, ஏற்கெனவே தமிழகத்தில் பம்மி பவிசாக ஆட்சி நடத்திவரும் இரண்டு அதிமுக அடிமைகளைப் பரிசோதித்து, “இம்பொடெண்ட்” (ஆண்மையற்றவர்கள்) என்ற பட்டத்தை வழங்கியிருக்கிறார். தற்போது குருமூர்த்தியிடம் சிக்கியிருக்கும் ரஜினிகாந்த் என்ற இந்த மூன்றாவது அடிமை, சாதாரண நிருபர்கள் சந்திப்புக்கே பம்மி ஜகா வாங்கி ஓடிப் போவது தொடர்ந்தால், கூடிய சீக்கிரத்தில் அவருக்கும் “இம்பொடெண்ட்” பட்டம் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.

ரஜினிகாந்தின் விசிலடிச்சான்கிழட்டு ரசிகர்களும், சங்கிகளும், “#மன்னிப்பு_கேட்க_முடியாது” என சமூக வலைத்தளங்களில் இன்று ட்ரெண்டிங் செய்துவருகின்றனர்.

ஒருவேளை ரஜினிகாந்த், தன்னால் மன்னிப்புக் கேட்க முடியாது என்பதை பிரச்சினையான மறுநாளே சொந்த மூளையில் சிந்தித்து தைரியமாகப் பேசியிருந்தால், எச். ராஜாவுக்குக் கொடுத்த ‘மரியாதை’யாவது கொடுக்கலாம்.

மன்னிப்பு கேட்க முடியாது என்ற தனது வாதத்திற்கு நேர்மையாக பதில் கூட அளிக்க முடியாத ஒரு அடிமையை – மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததை மட்டும் மனப்பாடம் செய்து பேசும் ஒரு அடிமையை –சுயமாக முதுகெலும்பில்லாத இந்தப் புழுவை – எப்படித்தான் திரையில் ஹீரோவாகக் கொண்டாட முடிகிறதோ இந்த ரசிகக் குஞ்சுமணிகளால்?


நந்தன்

எமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா. வைகை

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) – தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) – தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) – பறிக்கப்படும் மனித உரிமைகளும் ! தகர்க்கப்படும் அரசமைப்பு சட்டமும் ! என்ற தலைப்பில் மக்கள் உரிமை பாதுபாப்பு மையம் (PRPC) சார்பில் கடந்த ஜனவரி-10 அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடத்திய கருத்தரங்கில் சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் மற்றும் மூத்த வழக்கறிஞர் இரா.வைகை ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி!

எமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது ! | நீதிபதி அரிபரந்தாமன்

மூகம் அரசியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு நீதிமன்றத்தில் தீர்வில்லை என்பதை நீதிமன்றங்களின் கடந்த கால செயல்பாடுகளிலிருந்து எடுத்துரைக்கிறார், முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன்.

CAA – NRC – NPR : மக்கள் மன்றத்தில்தான் தீர்வு | மூத்த வழக்கறிஞர் இரா. வைகை

ரசியல் சாசனத்தின் உயிராதாரத்தையே பறிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் … முதுகெலும்பில்லாத நீதிபதிகள் கொண்ட நீதிமன்றத்தை நம்பி ஏமாந்துவிடாதீர்கள் … மக்கள் நீதிமன்றத்தில் முறையிடுங்கள் என்கிறார், மூத்த வழக்கறிஞர் இரா.வைகை.

பாருங்கள்! பகிருங்கள்!!

காந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ !

பாரத ரத்னாவா இந்தியாவின் அவமானச் சின்னமா? – பாகம் – 2

முதல் பாகம்  படிக்க

காந்தி கொலை வழக்கிலும் இதுதான் நடந்தது. இதைவிடக் கேவலமாக நடந்தது :

ஜனவரி 30, 1948 மூன்று துப்பாக்கித் தோட்டாக்கள் இந்தியாவை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தின. இந்திய அரசியல் வரலாற்றில் மாறாத வடுவை ஏற்படுத்தின. அந்தத் துப்பாக்கி நாதுராம் கோட்சேயின் கையிலிருந்தது. கோட்சேயின் சிந்தனையில் இந்துத்வ வெறி நிறைந்திருந்தது. அந்தத் துப்பாக்கிக்கும் தத்துவத்துக்கும் பின்னால் இருந்தவர் சவார்க்கர். ஆனால் அந்த துன்ப சம்பவம் நடந்தது முதல் தன் மரணம் வரை கோட்சேவுக்கும் தனக்கும் அவ்வளவு நெருக்கமில்லை என்கிற மாயையை ஏற்படுத்துவதில்தான் சவார்க்கரின் உடல், பொருள், ஆவி எல்லாம் தீவிர முயற்சியில் இருந்தது.

காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 9 பேர்: நாதுராம் கோட்சே, நாராயன் ஆப்தே, விஷ்ணு கார்க்கரே, மதன்லால பாஹ்வா, சங்கர கிஸ்டய்யா, கோபால் கோட்சே, (நாதுராமின் சகோதரர்) வி.டி. சவார்க்கர், தத்தாத்ரேய பார்ச்சூரே, திகம்பர் பாத்கே. இவர்களுள் பாத்கே அப்ரூவராக மாறியதால் அவருக்கு மன்னிப்பு வழங்கப் பட்டது. பாத்கேயின் வாக்குமூலம்தான் சவார்க்கரை தண்டனைக்கு வெகு அருகில் கொண்டு சென்றது. அவருடைய வாக்குமூலம் உண்மையானது என்று ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆத்மா சரண் அதை உறுதி செய்யும் ஆதாரங்கள் இல்லாததால் சவார்க்கரை விடுதலை செய்தார். சவார்க்கரின் மரணத்திற்குப் பின் அமைக்கப்பட்ட ஜீவன் லால் கபூர் விசாரணை ஆணையம் சவார்க்கர் குற்றவாளிதான் என்ற முடிவுக்கு வந்தது. அந்தக் கதையைச் சுருக்கமாக இங்கு பார்ப்போம்.

காந்தி படுகொலை செய்வதற்கு 10 நாட்கள் முன்பு ஒரு கொலை முயற்சி நடந்தது. அந்தக் கொலை முயற்சிக்கான சதியைக் குறித்து முதலில் அறிந்தவர் பேராசிரியர் ஜகதீஷ் சந்திர ஜெயின். அவர் தன் சுயசரிதையில் I Could not Save Bapu (நான் பாப்புவைக் காப்பாற்ற முடியவில்லை) எழுதியிருக்கிறார். மதன்லால பாஹ்வா தேசப் பிரிவினைக்குப் பின் பம்பாய்க்கு வந்த அகதி. அவனுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜெயின் உதவி செய்திருக்கிறார். காந்தியைக் கொலை செய்யும் திட்டம் இருப்பதாகவும், சவார்க்கர் தன்னைத் தட்டிக் கொடுத்து தொடர்ந்து செல் என்று கூறியதாகவும் ஜெயின் சொல்கிறார்.

“பிறரால் முடுக்கிவிடப்பட்ட இந்த இளைஞர் வன்முறைச் செயலில் இறங்கலாம். மேலும் அவன் சவார்க்கரைச் சந்தித்து அவருடைய ஆசிகளையும் பெற்றிருந்தான்,” என்கிறார் ஜெயின். இந்தத் தகவலை அன்று பம்பாயின் உள்துறை அமைச்சரான மொரர்ஜி தேசாயிடம் ஜெயின் சொல்ல, தேசாய் பம்பாயின் துணை போலீஸ் கமிஷனரான ஜாம்ஷெட் நகர்வாலாவிடம் அதைச் சொல்லியிருக்கிறார். இந்த விவரம் தெரிந்திருந்தும் அரசாங்கம் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது.

அங்கு என்ன நடந்தது என்கிற விவரங்களை டீஸ்டா செடல்வாட் வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் தொகுத்த ‘Beyond Doubt – A Dossier on Gandhi’ என்கிற புத்தகத்தில் தந்திருக்கிறார். (2015-ல் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தில் காந்திக்கு எதிராக மொத்தம் ஐந்து கொலை முயற்சிகள் நடந்ததாகப் பட்டியலிடுகிறார்).

படிக்க:
காந்தி படுகொலைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். தப்பிப் பிழைத்தது எப்படி ?
திப்பு சுல்தான் – ஆங்கிலேயர் + ஆர்.எஸ்.எஸ்-ன் குலை நடுக்கம் !

திட்டமிட்டபடியே ஜனவரி 20 அன்று பாஹ்வாவும் விஷ்ணு கார்க்கரேயும் காந்தி தங்கியிருந்த பிர்லா பவனுக்கு முதலில் சென்றனர். கோட்சே, ஆப்தே, திகம்பர் பாட்கே, ஆகியோர் பின்னர் ஒரு வாடகைக் காரில் அங்கு சென்றனர். இந்தக் காரை ஓட்டிய சுர்ஜித் சிங் காந்தி கொலை வழக்கில் ஒரு சாட்சியாக இருந்தார்.

திட்டத்தின்படி, பஞ்சை அமிலத்தில் ஊறவைத்துத் தயாரிக்கப்படும் கன்காட்டன் என்கிற வெடிகுண்டை பாஹ்வா வெடிக்க வேண்டும். அப்போது ஏற்படும் பதட்டத்தைப் பயன்படுத்தி பாட்கேயும், ஷங்கரும் தங்களிடம் இருந்த துப்பாக்கிகளை வைத்து காந்தியைச் சுட வேண்டும். கை வெடிகுண்டையும் அவர்மீது எறிய வேண்டும். கோபால் கோட்சேயும், பாஹ்வாவும், கார்க்கரேயும் தங்களிடமிருந்த கை வெடிகுண்டுகளை காந்தி மீது எறிய வேண்டும். நாதுராம் கோட்சேயும் ஆப்தேயும் ஒரு இடத்தில் நின்றுகொண்டு அவரவருக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்யும் வகையில் வழிகாட்ட வேண்டும்.

 

பிர்லா பவனுக்கு முன்பே சென்று விட்ட பாஹ்வா அங்கு கார் ஓட்டுனராகப் பணிபுரியும் சோட்டுராமிடம் தன்னை ஒரு புகைப்படக்காராக அறிமுகப்படுத்திக் கொண்டு காந்தி மாலை நேரப் பிரார்த்தனை செய்யும் மேடைக்குச் செல்ல அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். அவரைப் பின்னாலிருந்து படம் எடுக்க வேண்டுமென்றும் கூறினார். சந்தேகமடைந்த சோட்டுராம் நீ புகைப்படக்காரர் என்றால் கேமரா எங்கே என்று கேட்க, பாஹ்வா காருக்குத் திரும்பச் செல்வது போல் நடந்து சென்றார். ஆனால் அவர் சென்றது மேடைக்குப் பின்புறம் இருந்த ஒரு சுவர். சுவரின்மீது வெடிகுண்டை வைத்துப் பற்ற வைத்தார் பாஹ்வா. ஆனால் அது சரியாக வெடிக்கவில்லை. திட்டம் தோல்வியுறுவதை உணர்ந்த மற்ற சதிகாரர்கள் காரில் ஏறித் தப்பிச் சென்றனர்.

பாஹ்வா மட்டும் பிடிபட்டார். ஏழு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சதிகாரர் கூட்டத்தில் நானும் ஒருவர் என்று அவர் ஒப்புக் கொண்டார். முதல் நாள் இரவு அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு போலீசை அழைத்துச் சென்றார். அதற்குள் மற்றவர்கள் தப்பி விட்டனர். கோட்சேயும், ஆப்தேவும் மீண்டும் டெல்லிக்கு ஜனவரி 29 அன்று டெல்லிக்கு வந்தனர். இந்த முறை அவர்களிடம் பெர்ரெட்டா தானியங்கி துப்பாக்கியும், 11 குண்டுகளும் இருந்தனர்.

ஜனவரி 30 அன்று அவர்களின் நீண்ட காலத் திட்டம் நிறைவேறியது. பாஹ்வா பேராசிரியர் ஜெயினிடம் கூறியது போல் சவார்க்கருக்கு சதிகாரர்களுடன் தொடர்ந்து ஒரு தொடர்பு இருந்திருக்கிறது.

அப்ரூவர் திகம்பர் பாட்கேயின் சாட்சியம் இதனைத் தெளிவாக்கியது. பூனாவில் வாழ்ந்த பாட்கே அவருடைய தொழில் குறித்து இப்படிக் கூறுகிறார்: “1947லிருந்தே நான் நான் துப்பாக்கி ரவைகள், வெடிகுண்டுகள், ரைஃபிள் துப்பாக்கிகள், ஸ்டென் துப்பாக்கிகள் போன்றவற்றை விற்று வந்தேன். புத்தகங்களையும் விற்பேன். வருடாந்திர இந்து மகாசபைக் கூட்டங்களில் பங்கேற்ற நான் அங்கு ஆயுதங்களையும் புத்தகங்களையும் விற்பேன்.”

சவார்க்கரின் மெய்க்காப்பாளர் அப்பா கேசர், செயலாளர் கஜானந்த் ராவ் டாம்லே ஆகியொருடனும் பழக்கம் இருந்தது. அவருக்கு சவார்க்கர் அறிமுகமானது 1944-45இல். கோட்சேயை 1941 முதலே தெரியும். 1947 ஜூலை- ஆகஸ்டு மாதஙகளில் கோட்சேவுக்கும், ஆப்தேவுக்கும் முதன் முதலாக ஆயுதம் விற்றிருக்கிறார். நவம்பர் 1947இல் ஆயுதங்கள் அவசரத் தேவை என்று செய்தி வந்ததும் பம்பாயிலிருக்கும் இந்து மகாசபை அலுவலகத்தில் அவற்றை சேர்ப்பித்து விடுவதாக உறுதியளித்தார்.

ஏ.ஜி. நூரானி

அதற்குப் பிறகு நடந்தவைகளை நூரானி இப்படி எழுதுகிறார்: “ஜனவரி 14, 1948 அன்று ‘பொருளுடன்’ பம்பாய்க்கு வந்தார் பாட்கே. கோட்சே, ஆப்தேயைச் சந்தித்த சில நிமிடங்களுக்குப் பின் சவார்க்கர் வசித்த சவார்க்கர் சாதனுக்கு, 2 கன்காட்டன் வெடிகுண்டுகள், வெடியைப் பற்ற வைக்கும் கம்பித் திரி போன்ற பொருட்களைக் கொண்ட ஒரு காக்கிப் பையை எடுத்துக் கொண்டு சென்றனர். இனி பாத்கே கூறுவதைப் பார்ப்போம்:

“ஆப்தே என் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டு என்னை வெளியில் காத்திருக்குமாறு சொன்னார். அவரும் கோட்சேயும் சவார்க்கர் சாதனுக்குள் சென்றனர். 5—10 நிமிடங்கள் கழித்து திரும்பி வந்தனர்.”

இவர்கள் சவார்க்கருடன் நடத்திய சந்திப்புதான் இன்னும் அதிக முக்கியமானது. ஷங்கரும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார். ஜனவரி 17 அன்று மீண்டும் சவார்க்கர் சாதனுக்குச் சென்றனர். அது குறித்து பாட்கே இப்படிச் சொல்கிறார்: “ஆப்தேயும், கோட்சேயும், நானும் சவார்க்கர் சாதன் வளாகத்திற்குச் சென்றோம். வீட்டின் கீழே இருந்த ஒரு அறையில் காத்திருக்குமாறு ஆப்தே என்னிடம் சொன்னார். கோட்சேயும் ஆப்தேவும் மேலே சென்றனர். 5—10 நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்தனர். அவர்கள் இருவரும் படியில் இறங்கி வரும்போதே அவர்களைத் தொடர்ந்து தத்யாராவும் (சவார்க்கரை இப்படித்தான் மரியாதையாக அழைப்பார்கள்). அவர்களிடம் யஷஸ்வி ஹூன் யா (வெற்றியுடன் திரும்புங்கள்) என்றார். நாங்கள் நால்வரும் காரில் ஏறி ரூயா கல்லூரிக்குச் சென்றோம். காரில் செல்லும்போது, காந்திஜியின் நூற்றாண்டு முடிந்து விட்டதென்று தத்யாராவ் தன்னிடம் தீர்க்கதரிசனமாகக் கூறியதாக ஆப்தே எங்களிடம் கூறினார். நம் வேலை வெற்றிகரமாக முடிந்து விடும் என்றும் ஆப்தே கூறினார்.” இது காந்தியின்மீது ஜனவரி 20ஆம் தேதி அவர்கள் நடத்திய தாக்குதலுக்கு முன் தினம் நடந்தது.

படிக்க:
“கோட்சேயின் மேற்கோளை கூறுங்கள்” : கேரள ஆளுநருக்கு வரலாற்றாய்வாளர் இர்பான் ஹபீப் பதிலடி !
2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி

அப்ரூவர் பாட்கேயின் சாட்சியத்தை முற்றிலுமாக மறுத்தார் சவார்க்கர். தன் தரப்பு வாதமாக எழுத்து பூர்வமாகக் கொடுத்த அறிக்கையில் சதிகாரர்கள் குறித்து எப்படியெல்லாம் அவர் மழுப்பினார் என்பதை ராபர்ட் பேயின் இவ்வாறு விளக்குகிறார்:

“அவர் சதிகாரர்களை எப்போதும் சந்தித்ததே இல்லை; அப்படிச் சந்தித்திருந்தால் அதற்கும் காந்தி கொலைச் சதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; நான் படியிலிருந்து இறங்கி வரவே இல்லை; அப்படி வந்திருந்தாலும், ‘வெற்றியுடன் திரும்பி வாருங்கள்’ என்று அவர் சொல்லவில்லை. இந்து ராஷ்டிரத்தின் பங்குகளை விற்பது அல்லது ஹைதராபாத் நிஜாமுக்கு எதிரான அமைதிப் போராட்டம் நடத்துவது, அவர்கள் மேற்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பணிகள் குறித்து. இப்படி கொலைச் சதிக்கு சம்பந்தமில்லாத ஏதாவது பேசியிருப்பார் என்று புரிந்துகொள்ளப்பட வேண்டும். அவருடைய அறிக்கை முழுவதும் சதிக்கும் அவருக்கும் வெகு தூரம் என்கிற பொருள்படும் வகையில் சட்டப் பூர்வமான சொற்களையே பயன்படுத்தினார். கொலைச் சூழல் சார்ந்த ஆதாரங்கள் வலுவாக இருந்தன. பாட்கேயின் ஒவ்வொரு வாக்கியத்தையும் அதன் சூழலிலிருந்து பிரித்தெடுத்து அதற்கு குறிப்பிட்ட பொருள் இல்லாதவாறு பார்த்துக் கொண்டார்.”

இதைவிடப் பெரிய மோசடி கோட்சே, ஆப்தே ஆகியோருடன் அவருக்கிருந்த உறவு வலுவானதல்ல என்பதை நிரூபிக்க அவர் சொன்ன வார்த்தைகள்தாம். “ஸ்தாபனம் தொடர்பாக நான் எழுதிய கடிதங்கள், சுற்றுப்பயணங்கள், எழுத்துக்கள், பேச்சுக்கள் வாயிலாக நான் இந்து மகாசபையின் ஆயிரக் கணக்கான தலைவர்களுடனும், ஊழியர்களுடனும் உறுப்பினர்களுடனும் தனிப்பட்ட முறையில் தொடர்பிலிருந்தேன். இந்து மகாசபையின் எண்ணிலடங்காத் தொண்டர்கள், ஊழியர்களில் ஒருவர் என்ற முறையில்தான் நாதுராம் கோட்சே எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். மிஸ்டர் ஆப்தே நகர் என்ற இடத்தில் தான் இந்து மகாசபை உறுப்பினர் என்றும், தான் ஒரு ரைஃபிள் கிளப் தொடங்க இருப்பதாகவும் அதற்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் எழுதிய கடிதத்தின் மூலாமாக எனக்கு அறிமுகமானார். குவாலியர் இந்து மகாசபாவின் தலைவராக டாக்டர் பர்ச்சூரே அறிமுகப்படுத்திக் கொண்டார். தன்னை இந்து சங்காதனிய உறுப்பினரென்றும், சட்டப்படி உரிமம் தேவைப்படாத ஆயுங்களை விற்பதாகவும் பாட்கே கடிதம் எழுதிய போதுதான் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டேன். குற்றம்சாட்டப்பட்டுள்ள ஷங்கர், கோபால் கோட்சே, மதன்லால் பாஹ்வா ஆகியோரை நான் எப்போதுமே தெரிந்திருக்கவில்லை. அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டதுகூட இல்லை.”

Gopal-Godse
நாதுராமின் சகோதரர் கோபால் கோட்சே.

நாதுராமின் சகோதரர் கோபால் கோட்சேயைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை என்றும், ஒரு இந்து மகாசபையின் உறுப்பினராக மட்டுமே நாதுராமை அறிந்திருந்ததாகவும் கூறியது பொய் என்கிற உண்மையை கோபால் கோட்சேவே பின்னர் போட்டுடைத்தார். ‘காந்தியின் கொலையும் நானும்’ என்கிற தலைப்பில் அவர் 1967இல் வெளியிட்ட புத்தகத்தில் இப்படி எழுதினார்: “கோட்சேயின் தந்தை சவார்க்கர் வசித்த ரத்னகிரிக்கு 1929இல் பணிமாற்றம் பெற்றுச் சென்ற போதுதான் நாதுராமும் சவார்க்கரும் சந்தித்தனர். ரத்னகிரிக்குச் சென்ற மூன்று நாட்களுக்குள்ளேயே வீர் சவார்க்காரை முதன்முறையாகச் சந்திக்கச் சென்றார் நாதுராம். அதற்குப் பிறகு அவர் சவார்க்கரிடம் அடிக்கடி சென்றார். சவார்க்கரின் எழுத்துகளைக் காப்பி எடுத்துத் தரும் பணியைச் செய்வதாகவும் சொன்னார்.”

சவார்க்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்செய் கீர் இப்படி எழுதுகிறார்: “தன்னுடைய இளமைக் காலத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊழியராக இருந்த நாதுராம், பின்னர் இந்து மகாசபையின் அகில இந்திய கமிட்டியின் முன்னணி உறுப்பினரானார். அவர் மகாராஷ்டிர மாநிலத்தில் நன்கு அறியப்பட்ட பத்திரிகையாளர். அக்ரானி (தலைவர்) என்கிற மராத்தி தினசரியின் ஆசிரியர். அதன் பெயர் பின்னர் இந்து ராஷ்டிரா என்று மாற்றப்பட்டது. பண்டிட் நாதுராம் கோட்சே என்று அதிகமாக அறியப்பட்ட இந்தப் பத்திரிகையாசிரியர் உறுதியான சவார்க்காரியவாதி. சவார்க்கரின் முன்னணி ஊழியர், தளபதி என்பதும் ஓரளவுக்குத் தெரிந்த விஷயம்தான்.”

தனக்கும் சதிகாரர்களுக்கும் அதிகப் பழக்கமில்லை என்று தொடர்ந்து பொய் சொன்ன சவார்க்கர் செங்கோட்டை வழக்கு என்று அழைக்கப்பட்ட காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்த சமயத்திலும், சிறையில் ஒன்றாக இருக்கும்போதும் அவர்கள் யாரென்றே தெரியாததுபோல்தான் நடந்து கொண்டார். இதைச் சொல்வது கோபால் கோட்சே சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பி.எல். இனாம்தார்தான்.

விசாரணை நடந்து கொண்டிருந்தபோது நாதுராமின் பக்கம் அவர் திரும்பவுமில்லை; பேசக் கூட இல்லை என்று The Story of the Red Fort Trial 1948-49 என்கிற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதையில் இனாம்தார் குறிப்பிடுகிறார். நாதுராம்கூட இதனால் வேதனையடைந்தார் என்றும் அவர் பதிவு செய்கிறார். அவர் எழுதியது இதுதான்: “தத்யாராவ் தங்களுக்கிடையே தொடர்பில்லை என்று திட்டமிட்ட வகையில், வெளிப்படையாக நடந்து கொண்டதால் நாதுராம் ஆழமாகக் காயப்பட்டிருந்தார். சிறையில் இருக்கும் போது தத்யாராவ் தன்னைத் தொடுவாரென்றும், பரிவாக ஒரு வார்த்தைப் பேசுவாரென்றும், குறைந்த பட்சம் கருணையுடன் பார்ப்பார் என்றும் நாதுராம் ஏங்கினார். சிம்லா உயர்நீதி மன்றத்தில் நான் கடைசியாகச் சந்தித்தபோது காயம் பட்ட தன் உணர்வுகள் குறித்து என்னிடம் பேசினார்.”

அவர் காயம் பட்டிருந்தாலும் இறுதி வரை தன் குருவைக் காப்பாற்றும் வகையில்தான் பேசினார். சீடர்களைக் கைகழுவி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த சவார்க்கர் நாதுராம் விஷயத்திலும் அதையேதான் செய்தார்.

பாட்கேயின் சாட்சியத்தை உறுதி செய்யும் வகையில் இன்னும் இரண்டு சாட்சிகள் இருந்தனர். அவர்களில் ஒருவர் சாந்தாபாய் மோடக் எனும் நடிகை. இவர் கோட்சே, ஆப்தேவை ஜனவரி 14 அன்று பூனா எக்ஸ்பிரசில் சந்தித்தார். தன்னுடைய வீடு சவார்க்கர் சாதனுக்கு அருகில் இருப்பதால் அவர்களை தன் தாதர் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் தன் சகோதரரின் காரில் அங்கு இறக்கி விடுவதாகவும் சொன்னார். அவர்களை அங்கே இறக்கிவிட்ட பின் சவார்க்கர் சாதனுக்குள் அவர்கள் செல்வதையும் அவர் பார்த்திருக்கிறார்.

இன்னொரு சாட்சி ஜனவரி 17 அன்று ஆப்தே, கோட்சே, பாட்கேயை சவார்க்கர் சாதனுக்குக் கொண்டு சென்ற காரின் ஓட்டுனர் ஐத்தப்ப கோட்டியான். அவர்கள் மூவரும் காரிலிருந்து இறங்கிச் சவார்க்கர் சாதனுக்குச் செல்வதைப் பார்த்ததாகக் கூறினார்.

நடிகையின் சாட்சியம் அவர்கள் சவார்க்கர் சாதனுக்குச் சென்ற போதிலும் சவார்க்கரைச் சந்தித்தாகச் சொல்ல முடியாதென்றும் அதே வீட்டில் ஏ.எஸ். ஷிண்டேவும், கஹன் டாம்லே என்கிற இருவரும் கூட வசித்தனரென்றும் நீதிபதி ஆத்ம சரண் கூறிவிட்டார். அதே போல் கார் ஓட்டுனரின் சாட்சியம் ‘வெற்றியுடன் திரும்புக’ என்று சவார்க்கர் கோட்சே, ஆப்தேயிடம் சொன்னதை உறுதி செய்யவில்லை என்றும் கூறிவிட்டார். தெருவில் நின்ற ஓட்டுனர் வீட்டுக்குள் நடந்ததைப் பார்த்திருக்க முடியாது என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும். சவார்க்கர் அப்படிச் சொன்னதற்கான ஆவணங்களும் இல்லையென்று விசித்திரமாகப் பேசினார்.

பாட்கேயின் சாட்சியத்தை அவரால் முற்றிலும் நிராகரிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்மையான சாட்சியம் என்பதை அவரே ஒப்புக் கொண்டார். அவர் கூறியது இதுதான்: “விவரங்களாக பாட்கே அறிந்தவற்றை நேரடியாகவும், நேர்மையாகவும் பேசினார். நடக்காத உண்மைகளைக் குறித்து இவ்வளவு நீண்ட நேரமாகவும், குறிப்பாகவும் தடுமாற்றமின்றி யாராலும் பேச முடியாது. அடிப்படை இல்லாத ஒரு விஷயத்தை மனப்பாடம் செய்து இவ்வளவு நீண்ட நேரம் இவ்வளவு விவரமாக ஒருவர் பேசுவார் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.”

ஆத்ம சரண் ஆத்மார்த்தமாக இப்படிப் பேசினாலும் இறுதியில் சவார்க்கரை விடுவித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் இதுதான்:

“வினாயக் டி சவார்க்கர் தன்னுடைய அறிக்கையில் “சதி’’ என்கிற ஒன்று நடந்திருந்தால் அதில் தனக்குப் பங்கில்லை என்றும், நாதுராம் வி. கோட்சே மற்றும் நாராயண் டி. ஆப்தே ஆகியோர் எந்த விதத்திலும் தன் கட்டுப்பாட்டில் இல்லையென்றும் கூறியிருக்கிறார். அப்ரூவரின் (பாட்கேயின்) சாட்சியின் அடிப்படையில்தான், அந்த அடிப்படையில் மட்டுமே, அரசுத் தரப்பு தொடுத்த வழக்கு நிற்கிறது என்று இங்கு கூறப்பட்டுள்ளது. அப்ரூவரின் சாட்சியத்தை மட்டும் வைத்து முடிவுகளை எடுப்பது ஆபத்தானது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் ஜனவரி 20, 1948இலும் ஜனவரி 30இலும் நடந்த சம்பவங்களில் சவார்க்கரின் கை இருந்தது என்று தீர்மானிக்க காரணம் எதுவுமில்லை.”

இதில் துயரம் என்னவென்றால், ஆத்ம சரணின் இந்த சொற்கள் தீர்ப்பில் இடம் பெறவில்லை. விசாரணையின்போதும், தீர்ப்பு வழங்கும்போதும் நீதிபதிகள் வாய்மொழியாக சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். அதற்கு ஆங்கிலத்தில் ஓபிட்டர் டிக்டம் (obiter dictum) என்று பெயர். அப்படி ஒரு ஓபிட்டர் டிக்டம்தான் இந்திய வரலாற்றை மாற்றியது.

படிக்க:
NRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா ? | வாஞ்சிநாதன் உரை
பாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்!

கபூர் கமிஷன் விசாரணையில் வெளிவந்த உண்மை

மறைக்கப்பட்ட உண்மைகளையும், மறுக்கப்பட்ட நீதியையும் நம் கண் முன் மீண்டும் கொண்டு வந்து நிறுத்தும் வித்தைக்காரன்தான் வரலாறு. நவம்பர் 12, 1964 அன்று காந்தி கொலை வழக்கில் கைதான கோபால் கோட்சே, மதன்லால் பாஹ்வா, விஷ்ணு கார்க்கரே ஆகியோரின் தண்டனைக் காலம் முடிந்த நிலையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களுடைய விடுதலையைக் கொண்டாடும் விதத்தில் பூனாவில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பால கங்காதர திலகரின் பேரன் ஜி.வி. கேட்கர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார். இவர் கேசரி, தருண்பாரத் பத்திரிகைகளின் ஆசிரியர். கொலை நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன் நாதுராம் தன்னிடம் அது குறித்துப் பேசியதாகவும், அந்தத் திட்டத்தை தான் எதிர்த்ததாகவும், அந்த விவரத்தை அப்போதை பம்பாய் மாகாண முதல்வரிடம் தெரிவித்ததாகவும் கூறினார். இதைத் தொடர்ந்து நீதிபதி ஜே.எ. கபூர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையத்தின் முன் சவார்க்கரின் மெய்க்காப்பாளர் அப்பா ராமச்சந்திர கேசர், சவார்க்கரின் செயலாளர் கஜனன் விஷ்ணு, டாம்லே உட்பட பலர் சாட்சியம் அளித்தனர். சாட்சியங்கள் மீண்டும் சவார்க்கருக்கும் மற்ற சதிகாரர்களுக்குமிடையே இருந்த தொடர்புகளைத் தெளிவாக நிரூபித்தனர். இந்த சாட்சிகள் செங்கோட்டை வழக்கில் விசாரிக்கப்பட்டிருந்தால் தீர்ப்பு வேறு மாதிரியாக இருந்திருக்கலாம். ஆத்ம சரண் கண்டுபிடிக்க முடியாத உண்மைகளை கபூர் வெளிக்கொண்டு வந்தார். 1909இல் கர்சன் வைலி, ஜாக்சன் ஆகியோரின் கொலைகள், ஹாட்சன் என்கிற ஆங்கிலேய அதிகாரி மீது நடந்த கொலை முயற்சி ஆகியவற்றுக்கும் காந்தி படுகொலைக்கும் பின்னாலிருந்த வலைப் பின்னலை வெளிச்சம் போட்டுக் காட்டினார் கபூர். அவருடைய முடிவு இதுதான்: “சவார்க்கரும் அவருடைய குழுவும் சதியில் ஈடுபட்டனர் என்பதைத் தவிர வேறு எந்தக் கருத்தையும் தகர்க்கும் என்று இந்த உண்மைகளை ஒன்றாக வைத்துப் பார்க்கும்போது தெரிகிறது.”

நடந்த மூன்று அரசியல் கொலைகளுக்குப் பின்னிருக்கும் வலைப் பின்னலை வெளிச்சம் போட்டுக் காட்டினார் கபூர்.

மகாத்மா காந்தியின் நூற்றாண்டை முடிப்பதாக சவார்க்கர் பேசியது இந்துத்வத்தின் நூற்றாண்டைத் துவங்கி வைப்பதற்குத்தான். அவர் இந்துத்வம் என்கிற புத்தகத்தை எழுதிய ஆண்டு 1923. இன்னும் நான்கு ஆண்டுகளில் அதன் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும். இன்று இந்து மதத்திற்கு அபாயம், வரலாற்றில் வஞ்சிக்கப்பட்ட இந்துக்களுக்கு நியாயம் என்றெல்லாம் பேசித்தான் பொதுமக்களிடையே எளிதாகச் சென்றடைந்து கொண்டிருக்கிறது சங்பரிவாரம். ஆனால் இந்துத்வம் என்பதும், இந்து மதம் என்பதும் வேறு என்று சவார்க்கர் எழுதினார். அவர் ஒரு நாத்திகர். இனி அவர் பேசிய இந்துத்வம் என்பதன் உண்மைப் பொருள் என்ன என்று பார்க்கலாம்.

இந்து மதமும், இந்துத்வமும்

இந்துத்வம் என்ன சொல்கிறது? ஏ.ஜி. நூரானியின் புத்தகத்தில் இருக்கும் சில பத்திகளைப் பார்த்தால் அது புரிந்து விடும்:

“இந்து மதம் (இந்துயிஸம்) என்கிற சொல் தெளிவற்று உணர்த்தும் பொருளும் இந்துத்வமும் ஒரே மாதிரியானவை அல்ல என்று இங்கு சுட்டிக் காட்டினால் போதும். ‘இஸம்’ என்பது பொதுவாக ஒரு கோட்பாட்டையோ அல்லது மதக் கோட்பாடு அல்லது மத அமைப்பின் அடிப்படையிலான ஒரு நெறி முறையையோ குறிக்கும். ஆனால் இந்துத்வம் என்பதன் சாரத்தை ஆய்வு செய்யும்போது நாம் ஒரு குறிப்பிட்ட இறையியல் அல்லது மதக் கோட்பாட்டை முதன்மையாக – நிச்சயமாக முதன்மையாக அல்ல – கருத்தில் கொள்வதில்லை.”

அவர் மேலும் இவ்வாறு விளக்குகிறார்:

“இந்த இரண்டு கருத்தியல்களுக்கு நடுவே ஒரு தெளிவான கோட்டை வரைய நாம் முன்பே முயற்சி செய்தோம்; இந்து மதம் என்பதைச் சனாதன தர்மம் மட்டும் என்று தவறாகப் பொருள் கொள்வதை நாம் ஆட்சேபித்திருக்கிறோம். இந்துத்வமும், இந்து தர்மமும் ஒன்றல்ல. அதேபோல் இந்து தர்மம் என்பது இந்து மதமும் ஒரே மாதிரியானவை அல்ல.”

”இந்து மதம் புராதனமானது. இந்துத்வம் என்பது நவீன கட்டுமானம்; ‘கலாச்சார தேசியம்’ என்பதைச் சுருக்கமாகக் குறிப்பிடும் சொல். இந்த வேறுபாட்டிற்குக் கொடுக்கப் படும் அழுத்தம் சவார்க்கரின் எழுத்துகளில் விரவிக் கிடக்கிறது.” இந்தி என்கிற சகோதரிச் சொல் எப்படி இந்தியனை மட்டும் குறிக்குமோ அது போல் இந்து என்பதன் வேர்ச் சொல்லும் இந்தியனைக் குறித்தாலும், ஒரு முகமதியர் இந்தியாவில் வசிப்பதாலேயே அவரை இந்து என்று குறிப்பிடுவது, இச்சொற்களை அதிகம் பயன்படுத்துவது அவை உடையுமளவுக்குப் போய்விடும் என்கிற ஐயம் நமக்கு இருக்கிறது” என்கிறார் சவார்க்கர். இந்துமதம் என்பது உன்னமானது. இந்துத்வம் என்பது வெறுப்பின் தத்துவம்.

லஜ்பதி ராய் முன்வைத்த இரு தேசக் கொள்கையை மீண்டும் வலியுறுத்துகிறார் சவார்க்கர். அவர், “இந்துக்கள் வெறும் இந்தியக் குடிமக்கள் மட்டுமல்ல; ஏனெனில் ஒரு பொதுவான தாய்நாட்டின் மீதிருக்கும் நேசத்தினால் மட்டுமின்றி ஒரே ரத்தத்தினாலும் பிணைக்கப்பட்டவர்கள். அவர்கள் ஒரு தேசம் மட்டுமல்ல; அவர்கள் ஒரு இனம், ஜாதி.” என்கிறார். இது இனவாதத்தின் மிகக் கொடூரமான வடிவம்.

இந்து என்பதைக் கண்டறியும் சோதனையை மிகத் தெளிவாக இப்படி விளக்குகிறார் சவார்க்கர்:

“சந்தால் பழங்குடியினர் முதல் சாதுக்கள் வரையில், ஒவ்வொரு இந்துவுக்கும் இந்த பாரத பூமி பித்ருபூவாகவும் புண்ணியபூவாகவும் இருக்கிறது – அதாவது தந்தை பூமியாகவும், புண்ணிய பூமியாகவும் இருக்கிறது. இதனால்தான் தங்களின் பூர்வீக இந்து மதத்திலிருந்து கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்ட நம் நாட்டுக்காரர்களாகிய முகமதியர்களோ, கிறிஸ்துவர்களோ, இந்துக்களுடன் சேர்ந்து ஒரே தந்தைநாட்டையும் ஒரு பொதுவான கலாச்சாரத்தின் சொத்துக்களையும் – மொழி, சட்டம், வழக்கங்கள், நாட்டார் கதைகள், வரலாறு போன்றவற்றையும் – வரித்துக் கொண்டிருந்தாலும், அவர்களை இந்துக்களாக அங்கீகரிக்க முடியாது; அங்கீகரிக்கக் கூடாது. இந்துக்களைப் போலவே அவர்களுக்கு இந்துஸ்தானம் தந்தை நாடாக இருந்தபோதிலும், அது அவர்களின் புண்ணிய பூமி அல்ல. அவர்களின் புண்ணிய பூமி வெகுதொலைவிலிருக்கும் அரேபியாவோ, பாலஸ்தீனமோதான்.”

அவர்கள் மீண்டும் தங்கள் அமைப்பிற்குள் “திரும்பி வர வேண்டும்” என்று அழைப்பும் விடுக்கிறார் சவார்க்கர்.

“இன ரீதியாகவும், ரத்த ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், தேசிய இன ரீதியாகவும் இந்துத்வத்தைச் சாரமாகக் கொண்ட நீங்கள், வன்முறையின் கைகளினால் நம் மூதாதையர் பூமியிலிருந்து கட்டாயமாகப் பறித்துச் செல்லப்பட்ட நீங்கள், நம்முடைய பொதுவான தாயிடம் முழு மனதுடன் அன்பு செலுத்தி, அவளை தந்தை நாடாக (பித்ருபூ) மட்டுமின்றி , புண்ணிய பூமியாகவும் (புண்யபூ) ஏற்றுக் கொள்வதை மட்டுமே செய்ய வேண்டும்.; அப்படிச் செய்தால் நீங்கள் இந்து அமைப்புக்குத் திரும்ப முழுமையான வரவேற்பு கிடைக்கும்.

படிக்க :
♦ குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரி !
♦ மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் !

பின்னிப் பிணைந்திருக்கும் இந்த இரண்டு கருத்துக்களும் ஆர்.எஸ்.எஸ். -சின் சொல்லாடலில் இன்று வரை தொடர்கின்றன. முஸ்லிம்கள் இந்த அமைப்புக்கு சொந்தமானவர்களல்ல என்பதால், அவர்கள் அதற்குத் திரும்ப வேண்டும். அவர்கள் இந்திய எல்லைக்குள் பிறந்திருந்தாலும் இந்து அமைப்புக்கு வெளியில் இருப்பதால் அவர்கள் இந்தியாவின் முழு குடிமக்கள் அல்ல. ‘எல்லை சார்ந்த தேசியம்’ என்பது தீர்மானகரமாக நிராகரிக்கப் படுகிறது. இந்துமதம் என்கிற ‘வீட்டிற்குத் திரும்ப வருவது’ மட்டுமே அவர்களுக்கிருக்கும் ஒரே வழி.

“பொதுவான தேசம் (ராஷ்டிரா), பொதுவான இனம் (ஜாதி), பொதுவான நாகரீகம் (சன்ஸ்கிருதி) இவைதான் இந்துத்வத்தின் சாரங்கள். சிந்துஸ்தான் என்பது யாருக்கு பித்ருபூ மட்டுமின்றி, புண்யபூவாகவும் இருக்கிறதோ அவர்தான் இந்து என்று இந்த சாரங்களைத் தொகுத்துச் சுருக்கமாகச் சொல்லலாம். தேசம், ஜாதி ஆகிய இரு இந்துத்வச் சாரங்களையும் பித்ருபூ என்கிற சொல் நேரடியாகவும், மறைமுகமாகவும் தெளிவாகக் குறிக்கிறது; மூன்றாவது சாரமான சன்ஸ்கிருதியைப் பிரதானமாகக் குறிக்கும் சொல்தான் புண்யபூ. சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறைகள், விழாக்கள் போன்ற சமஸ்காரங்களை உள்ளடக்கிய சன்ஸ்கிருதிதான் ஒரு பூமியை புண்ணிய பூமியாக்குகின்றன.”

கிறிஸ்துவர்கள், யூதர்களின் நிலை முஸ்லிம்களை விட மேலானதாக இல்லை.

“யூதர்களைப் பாருங்கள்; பல நூற்றாண்டுகளாய் அவர்கள் செழிப்பாக வாழ்ந்து வந்தாலும், அவர்களுக்குப் புகலிடமளித்த பல நாடுகள் மீது நன்றியுணர்ச்சி இருந்தபோதிலும், அவர்கள் வாழும் நாடுகளை சமமாகவோ இன்னும் அதிகமாகவோ அவர்கள் நேசிக்க முடியாது. முகமதியர்களைப் போலவே அவர்களும் தங்களின் புனித பூமியின் நலன்களை, தாய்நாட்டின் நலன்களுக்குக் கீழாகவே வைத்திருக்கின்றனர்.”

இதில் சமரசத்திற்கு இடமே இல்லை. ‘கலப்புக் கலாச்சாரம்’ என்கிற கருத்தியல் நிராகரிக்கப்பட்டது. 1937இல் அகமதாபாத்தில் நடந்த இந்து மகாசபை மாநாட்டில் சவார்க்கர் ஆற்றிய தலைமையுரையில் இந்தக் கருத்தியலை உரக்க ஒலித்தார். அதற்குப் பிறகு மகாசபையின் ஏழு வருடாந்திர மாநாடுகளுக்குத் தலைமை தாங்கினார்.

இந்த உரைகளில் தான் ‘இந்துத்வம்’ என்கிற சொல்லை உருவாக்கியதாக பெருமையுடன் நினைவு கூர்ந்தார். யார் இந்து என்பதைக் கண்டறிவதற்கான சோதனை புண்ணிய பூமி என்கிற கருத்தைச் சார்ந்தது. அதன்படி, முகமதியர்கள், யூதர்கள், கிறிஸ்துவர்கள், பார்சிகள் போன்றோர் இந்துஸ்தானத்தை தங்கள் தந்தை நாடாக அங்கீகரித்த போதிலும், தங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்வதிலிருந்து விலக்கி வைக்கப்படுகின்றனர்; அவர்கள் இந்துக்களும் அல்ல. “இந்து அமைப்புக்குள்ளிருந்த ஜப்பானியர்களும், சீனர்களும், பிறரும் இந்தியாவைத் தங்களின் புனித பூமியாகக் கருதினாலும் அவர்களும் இந்துக்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்கள்தாம். இப்படிப்பட்ட கருத்துக்கள் விசித்திரமானவையாக இருந்த போதிலும், சவார்க்கரின் இந்துத்வக் கொள்கையின் உட்கருவை ஆர்.எஸ்.எஸ். -சும், பிஜேபியும் ஏற்றுக் கொண்டனர் என்பதை மறைக்க முடியாது.

1937-ல் சவார்க்கர் இப்படிப் பேசினார் :

“சில விரும்பத் தகாத உண்மைகளை நாம் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். இன்றைய இந்தியா ஒருமைப்பட்ட, ஒற்றைத் தன்மை கொண்ட தேசம் இல்லை; மாறாக, அதற்குள் இரு தேசங்கள் இருக்கின்றன: ஒன்று, இந்துக்களின் தேசம், மற்றொன்று, முஸ்லிம்களின் தேசம்.”

இந்தக் கருத்து அடுத்து வந்த நாக்பூர் மாநாட்டில் விரிவுபடுத்தப்பட்டது.

“ஆம், இந்துக்களாகிய நாம் இயல்பிலேயே ஒரு தேசம்தான். ஏனெனில், மத, இன, கலாச்சார, வரலாற்றுப் பந்தங்கள் நம்மை ஒரு ஒற்றைத் தன்மை கொண்ட தேசமாக இணைக்கின்றன. இதனுடன் சேர்ந்து அது எல்லைரீதியாகவும் ஒன்றான தேசமாகத் திறன் பெற்றிருக்கிறது. ஓர் இனம் என்ற வகையில் நம் இருப்பு இந்தியாவுடன் அடையாளப்படுத்தப்படுகிறது. இது நம் தந்தை நாடு, நம் புனித பூமி எல்லாவற்றிற்கும் மேலாகவும், எது எப்படி இருந்தாலும், இந்துக்களாகிய நாம் ஒரு தேசமாக இருப்போம். எனவே நாம் ஒரு தேசம், இந்துஸ்தானத்தில் இந்துக்கள் அனைவரும் ஒரு தேசம்; அதில் முஸ்லிம் சிறுபான்மையினர் ஒரு சமூகம்தான்.”

இந்துத்வம் நடைமுறையில் இன்று

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தின் ஒரு தீவிர வெளிப்பாடாக முதல் இரண்டு படுகொலைகளைக் கண்டாலும், மூன்றாவது படுகொலை விடுதலை பெற்ற பன்முகத் தன்மை கொண்ட, கலப்புக் கலாச்சாரத்தின் மாதிரியாக மதச் சார்பற்ற இந்தியா உருவாகிடக் கூடாது என்கிற வெறியின் வெளிப்பாடு. தேசத் தந்தையைக் கொல்லுமளவுக்குச் சென்ற இந்த வெறிக்குப் பின் இருப்பது கலாச்சார தேசியம் என்ற பெயரில் முதலில் சவார்க்கரும், பின்னர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தோற்றுவித்த ஹெட்கேவாரும், அதன் தலைவராக நீண்ட காலமாகப் பணியாற்றிய கோல்வால்கரும், ஜன சங்கத்தைத் துவங்கிய ஷ்யாமா பிரசாத் முகர்ஜியும், பின்னர் பாரதீய ஜனதா கட்சி என்கிற புதிய முகமூடியுடன் வந்த அமைப்பின் தலைவர்களும் பேசிய, எழுதிய, அரசியல் ரீதியாக நிறைவேற்றத் துணிந்த ஒரு அரசியல் கோட்பாடு. இதன் தொடக்கப் புள்ளியாக வந்ததுதான் சவார்க்கர் 1923இல் எழுதிய இந்துத்வம் என்கிற புத்தகம்.

மகாத்மாவின் படுகொலைக்குப் பின் அரசியல்ரீதியாகத் தனிமைப்பட்ட ஆர்.எஸ்.எஸ். -சும் இந்து மகாசபையும் ஜனசங்கம் என்ற பெயரில் மீண்டும் அரசியல் கட்சியாக வந்தது. அப்போது அதன் கொள்கை ஒருமைப்பட்ட மனிதநேயம் என்று கூறப்பட்டது. எமர்ஜென்சி எதிர்ப்பில் உருவான ஜனதா கட்சியில் ஐக்கியமான ஜனசங்கம் அதிலிருந்து பிரிந்து பாரதீய ஜனதா கட்சியாக வெளியே வந்தது. அப்போது அதன் கோட்பாடு காந்தீய சோஷலிசம் என்று கூறப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் பிஜேபி இந்துத்வம் என்கிற சொல்லைத் தவிர்த்தே வந்தது. ராமஜென்ம பூமி குறித்து அது 1989இல் பாலம்பூரில் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தில் கூட இந்துத்வம் என்று குறிப்பிடவில்லை. ஆனால் செப்டம்பர் 1990இல் ரத யாத்திரையைத் தொடங்கிய எல்.கே. அத்வானி, “கொள்கைரீதியாக நான் இந்தப் பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எதிராக நிற்கிறேன். அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாகச் சிந்திக்கிறார்கள்,” என்றார். பிரச்சினை ராம ஜென்ம பூமியல்ல. அது இந்துத்வத்தைக் காப்பதற்கான போர் என்று தன் பேச்சில் உணர்த்தினார். ஆயினும் பிஜேபி 1989இலும் 1991இலும் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் இந்துத்வம் என்று குறிப்பிடப்படவில்லை. அது முதன்முதலாக 1996 தேர்தல் அறிக்கையில்தான் இடம் பெற்றது.

பிஜேபி முதன் முறையாக ஆட்சிக்கு வந்த பின் சவார்க்கர் உயிர்த்தெழுந்தார். அந்தமான் சிறையில் அவர் இருந்த சிறைக் கொட்டடியில் ஒரு நினைவுச் சின்னம் வைக்கப்பட்டது. அந்தமானின் தலைமையிடமான போர்ட்பிளேரின் விமான நிலையத்துக்கு வீர் சவார்க்கர் விமான நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டது. பிறகு பாராளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் காந்தியின் உருவப் படத்திற்கு அருகிலேயே சவார்க்கரின் உருவப் படமும் திறந்து வைக்கப்பட்டது.

தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துப் பிரதமராயிருக்கும் மோடி இவர்கள் இருவரின் படத்திற்கு முன் நின்றும் வணங்குவதுதான் மிகப் பெரிய வரலாற்று விசித்திரம்.

சவார்க்கரின் இந்துத்வத்தின் நூற்றாண்டு நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதன் விழா கொண்டடப்படும் நேரத்தில் இந்துத்வக் கொள்கையின் லட்சியமாகிய இந்து ராஷ்டிரத்தை அமைப்பது என்கிற முனைப்பில் மோடி அரசு செயல்படுகிறது.

தேசத்தின் அவதார புருஷர்களின் வரிசையில் சவார்க்கரை நிறுத்தும் நோக்கத்துடன்தான் அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.

படிக்க:
பகத் சிங் – அந்த வீரன் இன்னும் சாகவில்லை….பாடல்!
பகத்சிங் – சோசலிசப் புரட்சியாளனா தீவிர தேசியவாதியா ?

யார் உண்மையான பாரத ரத்னா?

கருணை மனு புகழ் சவார்க்கரை இந்த நேரத்தில் வேறு ஒருவருடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. அவரின் பெயர் பகத்சிங்.

பகத்சிங்கும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் ஒரு மனுவை அளித்தார். அது கருணை மனு அல்ல. இரக்கமற்று என்னைச் சுட்டுக் கொல்லுங்கள் என்று கூறும் விருப்ப மனு.

அவர் லாகூர் சிறையிலிருந்து பஞ்சாப் கவர்னருக்கு 1931-ம் ஆண்டு இந்த மனுவை அனுப்பினார். அதில் அவர் சொன்னதன் சாரம் இதுதான்: “அக்டோபர் 7, 1930 அன்று ஒரு சிறப்பு நீதிமன்றம் எங்களுக்கு மரண தண்டனை வழங்கியது. இங்கிலாந்து அரசுக்கு எதிராக நாங்கள் போர் தொடுத்தோம் என்பதுதான் எங்கள் மீதான குற்றச் சாட்டு. பிரிட்டிஷ் தேசத்த்துக்கும் இந்திய தேசத்துக்கும் இடையே ஒரு போர் நடப்பதாகவும், அந்தப் போரில் நாங்கள் உண்மையாகப் பங்கேற்றதால், நாங்கள் போர்க் குற்றவாளிகள் என்றும் கூறியிருக்கிறீர்கள். இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொண்டாலும், அப்படி ஒரு போர் நடக்கிறதென்றும், ஒரு சில ஒட்டுண்ணிகள் இந்தியாவின் உழைக்கும் மக்களையும், இயற்கை வளங்களையும் சுரண்டும் வரை அந்தப் போர் தொடருமென்றும் நாங்கள் பிரகடனம் செய்கிறோம். அந்த ஒட்டுண்ணிகள் பிரிட்டிஷ் முதலாளிகளாக மட்டுமோ அல்லது பிரிட்டிஷ் மற்றும் இந்தியர்களின் கலப்பாகவோ அல்லது இந்தியர்கள் மட்டுமாகவோ இருக்கலாம்.

“எனவே. போர் தொடரும். அது வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வடிவங்களை எடுக்கலாம். அது பகிரங்கமாவோ, ரகசியமாகவோ, போராட்டங்களாக மட்டுமாகவோ அல்லது வாழ்வா சாவா என்கிற உக்கிரமானதாகவோ இருக்கலாம். அது ரத்தம் தோய்ந்ததாக இருக்குமா அல்லது ஒப்பீட்டு வகையில் அமைதியானதாக இருக்குமா என்பதைத் தெரிவு செய்யும் பொறுப்பு உங்களிடம்தான் இருக்கிறது. எது உங்களுக்கு விருப்பம் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் ஒரு சோஷலிசக் குடியரசு உருவாகும் வரை அந்தப் போர் புதிய வேகத்துடனும், இன்னும் அதிகத் திமிருடனும், குலைக்க முடியாத உறுதியுடனும் தொடரும்.”

இறுதியாக பகத் சிங் எழுதிய வரிகள்தாம் வீரம் என்பது என்னவென்று நமக்கு உணர்த்தும்.

“தூக்கிலடப்படுவதைவிட சுட்டுக் கொல்லப்படுவதையே நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் கருணை கூர்ந்து உங்களுடைய ராணுவத் துறையின் ஒரு பிரிவை அனுப்பி எங்களுடைய மரண தண்டனையை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம். அதைச் செய்வீர்கள் என நம்புகிறோம்.”

கருணைக்காக மன்றாடிய சவார்க்கர் ஒருபுறம். சுட்டுக் கொல்லப்படுவதற்காக மனு அளித்த பகத்சிங் மறுபுறம். மற்றவர்களின் கையில் துப்பாக்கியைக் கொடுத்து கொலை செய்யத் தூண்டிய சவார்க்கர் ஒருபுறம். தானே கையில் ஆயுதம் தாங்கிச் சென்று அரசாங்கத்தை அதிர வைத்த பகத்சிங் மறுபுறம். விடுதலை அளித்தால் அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துவேன் என்ற சவார்க்கர் ஒருபுறம். உயிரே போனாலும் என் போர் தொடரும் என்ற பகத்சிங் மறுபுறம். உங்கள் போருக்கு உதவுவேன் என்ற சவார்க்கர் ஒருபுறம். உழைக்கும் மக்களையும் இயற்கை வளங்களையும் காப்பதற்காக எங்களின் போர் நிற்காது என்ற பகத்சிங் மறுபுறம். இந்துக்களின் ராஷ்டிரத்தை உருவாக்குவதே லட்சியம் என்றிருந்த சவார்க்கர் ஒருபுறம். சோஷலிசக் குடியரசை உருவாக்குவோம் என்ற பகத்சிங் மறுபுறம். இதில் யார் பாரத ரத்னா?

(முற்றும்)

***

(இந்த நீண்ட கட்டுரையின் பெரும்பகுதி அறிஞர் ஏ.ஜி. நூரானி எழுதிய இரு புத்தகங்களிலிருந்து தொகுக்கப்பட்டவை. அவை: 1. Savarkar and Hindutuva: The Godse Connection; 2. The RSS: A Menace to India.

உயிர்மை இதழுக்காக நான் சவார்க்கர் குறித்து ஒரு கட்டுரை எழுதுவதற்கு இந்தப் புத்தகங்களிலிருந்து விவரங்களையும் மேற்கோள்களையும் எடுத்துக்கொள்ள மிகுந்த மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த அவருக்கு நன்றி. கட்டுரையில் இருக்கும் மேற்கோள்களின் மொழிபெயர்ப்பு என்னுடையது)

நவம்பர் 2019 உயிர்மை மாத இதழுக்கு ஆர்.விஜயசங்கர் அவர்கள் எழுதிய கட்டுரை.

disclaimer

புத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | ஊழியர்கள் – தலைவர்கள்

புதிய வெளியீடுகள் :

ஊழியர்கள் – தலைவர்கள் – சென் யுன்

யல்மொழி பதிப்பகம், பெய்ஜிங் – 1988 இல் வெளியிடப்பட்டுள்ள ”சென்யுன் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்” எனும் ஆங்கில நூலிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட கட்டுரைகள்.

தோழர் சென் யுன் சீனப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்களில் ஒருவராவார்.
தொடக்கக் காலத்திலிருந்தே பல்வேறு தலைமைப் பொறுப்புகளில் செயல்பட்டு வந்த தோழர் சென் யுன், சீனப் பொதுவுடைமைக் கட்சி மையக் குழுவின் சார்பில் கட்சியின் அமைப்பு விவகாரத்துறை இயக்குனராக 1937 – லிருந்து ஏழாண்டு காலம் செயல்பட்டார். அக்காலத்தில், எஃகுறுதிமிக்க கட்சியைக் கட்டுவதிலும், ஊழியர்களை போல்ஷ்விக் முறையில் பயிற்றுவிப்பதிலும், புதிய வகைப்பட்ட போர்க்குணமிக்க கம்யூனிச ஊழியர்களையும் தலைவர்களையும் புடம்போட்டு வளர்ப்பதிலும், அனைத்து நடைமுறைப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு அவர் வெற்றியைச் சாதித்தார்.

எந்த அரங்கில் செயல்பட்டாலும், யதார்த்த நிலைமைகளைச் சரியாக மதிப்பீடு செய்வதிலும், விவரங்களிலிருந்து உண்மையைத் தேடுவதிலும், அனுபவங்களைத் தொகுத்து ஆக்கப்பூர்வமாக வழிகாட்டுவதிலும் அவர் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.
சீனாவின் புதிய ஜனநாயகப் புரட்சியின் வெற்றியிலும், புரட்சிக்கரக் கட்சியைக் கட்டியமைப்பதிலும், மா சே துங் சிந்தனையின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் அவர் மிகச் சிறந்த பங்காற்றியுள்ளார். அவரது செறிவான அனுபவங்களும் வழிகாட்டல்களும், இந்திய புதிய ஜனநாயகப் புரட்சியைத் தலைமையேற்று வழிநடத்தும் மார்க்சிய – லெனினியப் பொதுவுடைமைக் கட்சிக்கும் அதன் ஊழியர்களுக்கும் என்றும் பயனளிக்கக் கூடியவை.

பக்கம்: 48
விலை:
ரூ.40.00


கட்சி நிறுவனக் கோட்பாடுகள்

பொதுவுடமைவாத நிறுவனங்களுக்கான கோட்பாடுகள் சாரமாக வழங்கப்பட்டுள்ள இந்த ஆவணத்தில், பெரும்பாலும் முதலாளித்துவ நாடுகளைப் பற்றி மட்டுமே சொல்லப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு படிக்க வேண்டும். எனவே, நாடாளுமன்ற வடிவங்களைப் பயன்படுத்துவது, மையமான பெரிய நகரங்களில் குவிந்து வேலை செய்ய வேண்டும் என்பன போன்று வருகின்ற அனுபவங்களை, அந்த நாடுகளின் போர்த்தந்திரம், செயல்தந்திரம் ஆகியவைகளோடு இணைத்து புரிந்து கொள்ள வேண்டும்.
நமது நாட்டிற்குப் பொருத்தும்போது, நமது நாட்டு புதிய ஜனநாயகப் புரட்சிக்கான நீண்டகால மக்கள் யுத்தப் பாதை எனும் போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரம் ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும்.

பக்கம்: 64
விலை: ரூ.50.00


சென்னை புத்தகக்காட்சியில் கீழைக்காற்று ! இன்று (ஜன-21)  கடைசி நாள் !

நாள் : 09.01.2020 முதல் 21.01.2020 வரை
நேரம் : மதியம் 2 – இரவு 9 மணி
இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை–35

கடை எண் : 182, 183

அனைத்து முற்போக்கு நூல்களும் ஒரே கூரையின் கீழ் உங்களுக்காக காத்திருக்கிறது …

புதிய முகவரி :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி

2

பொ. வேல்சாமியுடன் ஓர் நேர்காணல் | பாகம் – 01

இந்திய மெய்யியலின் அறுபடாத தொடர்வளர்ச்சியைத்
தமிழகத்தில் மட்டுமே காணமுடியும் !

பொ.வேல்சாமி.

பொ.வேல்சாமி (1951) தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பொம்மையா நாயக்கர், பாப்பம்மாள் ஆகியோர் இவரது பெற்றோர். தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். முட்டை வணிகம் செய்து வருகிறார். தினமணி, காலச்சுவடு, தீராநதி, உங்கள் நூலகம், கவிதாசரண், புத்தகம் பேசுது உள்ளிட்ட பல இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

1990-களில் தமிழ்ச் சூழலில் மிகப் பெரும் அதிர்வை ஏற்படுத்திய ‘நிறப்பிரிகை’ இதழின் ஆசிரியர் குழுவில் ரவிக்குமார், அ.மார்க்ஸ் ஆகியோருடன் பணிபுரிந்தவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். இவர் எழுதிய நூல்கள் 1. பொற்கலங்களும் இருண்ட காலங்களும், 2. கோவில் நிலம் சாதி, 3. பொய்யும் வழுவும். இந்த நேர்காணலுக்குத் தேவையான நிழற்படங்களை எடுத்துதவியவர் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் ஒருங்கிணைந்த முதுநிலைக் காட்சித் தொடர்பியல் பயிலும் மாணவர் சே. தனபால்.

தமிழக மெய்யியல் வரலாறு பற்றிப் பேசுவோம். Philosophy என்னும் புலமைத் துறைக்காகத் தமிழில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் யாவை? இந்தப் புலமைத்துறை தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு நோக்கப்பட்டிருக்கின்றது?

மெய்ப்பொருள், மெய்யுணர்தல் போன்ற சொற்களைத் திருக்குறளில் காண்கிறோம். வாதம், சமயம் போன்ற சொற்களை மணிமேகலையில் காண்கிறோம். திருக்குறளின் மெய்யுணர்தல் அதிகாரத்திற்கு விளக்கம் சொல்லும்போது பரிமேலழகர் “மெய்யுணர்தலை வடமொழி நூலோர் தத்துவ ஞானம் என்பர்” என்று கூறுகின்றார். இங்குதான் ‘தத்துவ ஞானம்’ என்னும் சொல் முதன் முதலாக வருகின்றது. ‘தத்வ ஞானி’ என்ற சொல் வில்லி பாரதத்தில் வருகின்றது.

Philosophy என்பதற்குச் சமமான சொல்லாக ‘தத்துவ ஞானம்’ என்ற சொல்லைக் கொள்கிறோம். இது நாம் இத்துறையைப் புரிந்துகொள்வதில் சில சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. ஓர் எடுத்துக் காட்டைப் பார்ப்போம். Atom என்பதை ‘அணு’என்று நவீன காலத்தில் மொழிபெயர்க்கிறோம். இந்த அணு என்ற சொல் தமிழிலக்கியத்தில் எங்கெங்கு வருகின்றதோ அங்கங்கெல்லாம் Atom என்றே பொருள் கொள்கிறோம். Atom என்ற சொல்லுக்கு அறிவியல் துறையில் உள்ள பொருளில் அணு என்ற சொல் தமிழிலக்கியத்தில் பயன்படுத்தப் படவில்லை.‘அணு’ என்பது மிகச் சிறிய துகள் என்ற பொருளிலேயே தமிழ் இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதைப் போலத்தான் ‘தத்துவ ஞானமும்’ ‘Philosophy’. ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக்குப் பிறகு Philosophy என்ற புலமைத் துறை பெற்ற இலக்கணங்களை எல்லாம் இங்குத் ‘தத்துவ ஞானம்’ என்னும் புலமைத்துறை பெறவில்லை. Philosophy என்பதைத் ‘தத்துவ ஞானம்’ என்று மொழிபெயர்ப்பது இத்துறையைச் சரியாக விளங்கிக் கொள்வதற்குத் தடையாய் மாறிவிடுகின்றது.

தமிழகத்தில் சுமார் இரண்டாயிரம் அல்லது ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் உலகத்தைப் பற்றி, வாழ்க்கைப் பிரச்சினைகள் பற்றி, இந்தப் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு மனிதன் படுகின்ற பாடுகள் பற்றி எல்லாம் சிந்தித்திருக்கின்றனர்; விவாதித்து இருக்கின்றனர். வாழ்க்கைப் பிரச்சினைகள், பாடுகள் ஆகியவற்றிலிருந்து விடுதலை அடைவது வாழும்போது சாத்தியமா அல்லது இறந்த பிறகு சாத்தியமா? என்று கேட்டால் இறந்த பிறகுதான் கிடைக்கும் என்கின்றனர். அதனை முக்தி என்று சொல்கின்றனர். சில பேர் வாழும் போதே முக்தி அடையலாம் என்று கூறுவர்.

ஒருவன் உயிரோடு இருக்கும்போது முக்தியடைதல் என்பது தன் சக மனிதர்களிடமிருந்து அந்நியப்பட்டிருத்தல்; அதாவது அவனளவிலே முக்தியடைதல் என்பதுதான் இருக்கிறது. விடுதலை என்பதை மனிதகுல விடுதலையாகப் பார்க்காமல் தனிமனிதனுக்கான விடுதலையாக இங்கே பார்த்திருக்கின்றனர். மனித குல விடுதலை என்பதற்கு மனித நடவடிக்கைகள் அனைத்தையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்; வெறும் மனம் அல்லது சிந்தனை சார்ந்த விடுதலை என்பது மட்டுமாகப் பார்க்க முடியாது. மனிதகுல விடுதலை என்பது மொத்த மனித நடவடிக்கையையும் மாற்றியமைப்பது, விமர்சிப்பது, நடை முறையிலிருக்கின்ற கூறுகளில் மனிதனுக்கு எதிரான கூறுகளை அகற்றிவிட்டு, மனித வாழ்வுக்கு வளம் சேர்க்கிற கூறுகளை இணைப்பது. இவையெல்லாம் சாதாரணமாக நடக்காது. அதற்குப் பெயர்தான் புரட்சி. இந்த மாதிரியான சிந்தனை மரபுகள் இங்குத் தோன்றவில்லை. அப்படி வரவேண்டும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. ஏனென்றால் இங்கு ஒரு தனித்துவமான நிலக்கிழமை முறை இருந்தது.

இந்தத் தனித்துவமான, ஐரோப்பிய மாதிரியில் இருந்து விலகின நிலக்கிழமை முறையைத்தான் மார்க்ஸ் ஆசிய பாணி உற்பத்தி முறை என்று சொல்லி விளக்குகிறார். இங்கிருந்த நிலக்கிழமை உற்பத்தி முறையில் நிலம் அடிப்படை வாழ்வாதாரமாக இருந்தாலும், நில உரிமை ஐரோப்பாவில் இருந்த மாதிரி இங்கு இல்லை. அப்போது அங்கிருந்த மாதிரியான உற்பத்தி முறை இங்கு இல்லை என்றாகிறது. இங்கு இருந்த உற்பத்தி முறை மனிதர்களைத் தொகுதிதொகுதியாகப் பிரித்து வைத்திருந்தது. இதுதான் சாதி. ஒரு சாதிக்கான உணவு இன்னொரு சாதிக்குக் கிடையாது. ஒரு சாதிக்கான உடை இன்னொரு சாதிக்குக் கிடையாது. ஒரு சாதிக்கான சிந்தனையும் இன்னொரு சாதிக்கானதாக இருக்க முடியாது. இப்படி இருக்கும் போது எப்படி ஒரு சிந்தனை, சமூகம் தழுவியதாக மாற முடியும்; சமூக விடுதலையைப் பேச முடியும்?

இங்குத் ‘தத்துவ ஞானம்’ என்று பேசப்பட்டவை எல்லாம் இறையியல் சார்ந்தவையாக இருந்தன; இறையியலுக்குக் கீழ்ப்பட்டவையாக இருந்தன. அதனால்தான் ஐரோப்பிய அறிஞர்கள் இந்தியச் சிந்தனை மரபை இறையியல் சார்ந்தது என்று சொன்னார்கள். கிறித்துவ மதம் சார்ந்த சிந்தனைகளை இறையியல் என்று சொல்வது போல இங்கிருந்த சிந்தனை முறைகள் இருந்தன. அப்படியென்றால் மதம் எப்படி இருந்தது. மேலிருந்த இரண்டு,மூன்று சாதிகளைத் தாண்டி இங்கிருந்த மதங்கள் பொதுமக்கள் மதமாக இல்லை. அது சைவமாக இருந்தாலும் சரி, வைணவமாக இருந் தாலும் சரி,எந்த மதமும் அனைத்துச் சாதி களையும், மக்களையும் உள்ளடக்கிய மதமாக இல்லை. பார்ப்பனர், வேளாளர், முதலியார் மதமாகத் தாம் அவை இருந்தன. மக்கள் மதமாக அவை இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் எவையும் இல்லை. இதனால்தான் எந்தவொரு சிந்தனைமுறையும் சமூகம் தழுவியதாக நிலவ இங்கு வாய்ப்பே இல்லை. இன்றுவரை இங்கு வாழ்கின்ற மனிதர்களை ஒருங்கிணைப்பதற்கான பொதுத்தன்மை என்ன இருக்கின்றது? தமிழ் மொழியைப் பேசிக்கொண்டிருக்கின்றனர் என்பதைத் தவிர ஒன்றுமில்லை.

இப்படி ஒருங்கிணைக்கப்படாத, கூறுகூறாகப் பிரித்திருக்கின்ற சமூகங்களாக இருப்பவை பழங்குடிச் சமூகங்கள். அவை இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் ஒருங்கிணைந்த சமூகமாகத் திரள முடியாமல் இயற்கைக்குக் கீழ்ப்பட்டுக் கிடக்கும். இங்கு ஒரு சமூகத்திற்குள் நாம் சாதிகளாகப் பிளவுபட்டுக் கிடக்கிறோம். அதனால் ஒருங்கிணைந்த பண்பாடு இல்லை. வெவ்வேறான திருமணமுறைகள், பழக்கவழக்கங்கள், சடங்குகள் இருக்கின்றன. இவற்றை ஒருங்கிணைப்பது மதம் தான். கிறித்துவம், இசுலாம் எல்லாம் அப்படிச் செயல்பட்டன. இங்கிருந்த மதங்கள் அப்படிச் செயல்படவில்லை. எனவே மதங்களும், மதரீதியான சிந்தனைகளும், உலகம், மனிதன், அவன் படுகின்ற பாடுகள் பற்றிய சிந்தனைகளும் குறிப்பிட்ட சாதிகளுக்கே உரியவையாக இருந்தன. தமிழ் மக்கள் அனைவருக்குமான ஒரு சிந்தனை முறை இங்குத் தோன்றவே இல்லை.

படிக்க:
லாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு !
வேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு !

இதனை வேறு மாதிரியாகவும் சொல்ல முடியும். உபரி உற்பத்தி முறையை அனுபவித்துக் கொண்டிருந்த சாதிகளுக்கு ஓய்வு நேரத்தில் நாட்டியம், நாடகம், இசை, இலக்கியம் போன்ற இன்பம் தரும் பொழுதுபோக்குகள் போன்றே ‘தத்துவ ஞானமும்’ இங்கு ஒரு பொழுது போக்காகவே இருந்தது. ஒட்டுமொத்த சமூகத்தின் விடுதலையைப் பற்றிச் சிந்திக்கும் ‘தத்துவ ஞானம்’ இங்குத் தோன்றவே இல்லை. செயற்படவும் இல்லை. அப்படியானதொரு தொடக்கத்தைப் பெரியாரிடம்தான் காண்கிறோம்.

உரையாடியவர் : க.காமராசன்
நன்றி : (உங்கள் நூலகம், Friday, June 10, 2011)

(தொடரும்)

……………………………………………………………………. அடுத்த பாகம் »

லாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு !

லையும் மேங்காங் நதிக்கரையும் என சுற்றி நிலப்பரப்புகளால் சூழ்ந்த நாடு. இயற்கை எழில் கொஞ்சும் பூமி, பரந்து விரிந்த கலாச்சாரம் என்றாலும் வலிமிகுந்த, கடந்த கால நினைவுகளை சுமந்து எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்கும் லாவோஸில் ஓர் பயணம்…

வியட்நாம் முடித்துக்கொண்டு லாவோஸ் சென்றோம். போகும் வழியெல்லாம் இயற்கை செதுக்கிய சிற்பங்களாய் மலைகளும், குகைகளும் வழிமுழுக்க நடனங்களை அறங்கேற்றிய படி அதன் அழகில் மயங்குவது போன்று ஓர் உணர்வு. காலையில் கண் விழிக்கையில் லாவோஸ் தூதரகத்தின் வாசலில் விசாவிற்கு நின்று கொண்டுருந்தோம். சிறிது நேரம் கடந்து விசா எடுத்தபின் வெளியில் வந்தோம். ஒரு கடையில் அதிகாரி ஒருவர் ’போ’ என சொல்லப்படும் நூடுல்ஸ் சூப் சுடச்சுட சாப்பிட்டுக் கொண்டுருந்தார். ’போ’வை வாங்கிச் சாப்பிட அப்படி ஒரு சுவை. நான் சுவைத்த சூப்பில் மனதை கவர்ந்தும் இதுவே. அங்கிருந்து லாவோஸின் தலைநகரம் வியன்டியன் (வியஞ்சான்) சென்றோம்.

வியன்டியன் சென்றுதும் அங்கு சிறிது ஓய்வு எடுத்துவிட்டு அங்கிருந்த ஓரு பங்களாதேஷ் உணவகத்தில் மதிய உணவை முடித்து COPE எனும் பார்வையாளர் விடுதிக்கு சென்றோம். அங்கு போரின் துயரங்களையும் அதன் தாக்கத்தையும் மக்கள் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை காணொளியாக பார்க்கும் போது கண்களில் நீர் ததும்பியது. உலகில் அதிக குண்டுகளை தன் மண்ணில் சுமந்திருக்கும் நாடு. அன்றைய நாள் முழுவதும் அதன் பாதிப்பு தூக்கத்தை கலைத்தது.

லாவோஸ் நிலவியல் பரப்பு

லாவோஸ் சுற்றிலும் நிலப்பரப்பால் சுழ்ந்த நாடு. இது தான் கிழக்கு ஆசியாவிலே நிலத்தால் சூழப்பட்ட ஒரே நாடு. இது பர்மா, சீனா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் கம்போடியா என ஐந்து நாடுகளால் சூழப்பட்டுள்ளது. இங்கு மேங்காங் நதிக்கரையின் வழியே வணிகம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் தலைநகரம் வியன்டின்.

வியன்டின் லாவோஸின் மிக பெரிய நகரம் அதுமட்டுமல்லாமல் தாய்லாந்திற்கும் லாவோஸுக்கும் மேங்காங் நதியின் வழியே போக்குவரத்து இங்குதான் நடந்து வருகிறது.

வாழ்வியலும் மக்களும்

லாவோஸ் பண்முக கலாச்சாரத்தை கொண்ட நாடு, 55 சதவித மக்கள் மான் கீமார் மற்றும் ஹமான் என மலையின் கீழ் வாழ்பவராகவும் 45 சதவித மக்கள் மலை பிரதேசங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். லாவோ மக்கள் லாவோமும், பிரெஞ்சையும் ஆட்சி மொழியாக கொண்டுள்ளனர்.

லாவோஸ் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு. லாவோஸ் மேங்காங் நதியின் மூலம் மின்ஆற்றலை உற்பத்தி செய்து தாய்லாந்து, வியட்நாமிற்கு கொடுத்து பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்கிறது. தற்போது பக்கத்து நாடுகளுடான உறவை மேம்படுத்திக்கொள்ளவும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் நான்கு நாட்டிற்கு இடையிலான ரயில் பாதைத்திட்டத்தை நிறுவியுள்ளது. உலக வங்கி கிழக்காசியாவிலே மிக வேகமாக வளர்ந்து வரும் நாடு எனவும், கடந்த பத்து ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.8 சதவித வளர்ச்சியைக் கொண்டுள்ளது லாவோசைக் குறிப்பிடுகிறது.

படிக்க:
எனது நீண்ட பயணம் (My Long March ) சீனத்திரைப்படம்: அறிமுகம்! வீடியோ!!
வேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு !

லாவோஸின் வரலாறு

வியன்டின் 1573-லில் பர்மிஸிடமிருந்தது, 1827 -லிருந்து பிரெஞ்சு அரசாங்கம் இதை தன் கையில் வைத்திருந்தது. அதனால் இன்றும் அது ஒரு பிரெஞ்சு நகரமாவே தோற்றமளிக்கிறது.

வியன்டினில் பட்டுக்குசாய் போர் நினைவகம், புத்த கோவில்கள், இயற்கை அழகு என எங்கும் ஆர்ப்பரிக்கிறது. இங்கு லான் சாங் ஹாம் கோவ் அதாவது மில்லியன் வெள்ளை யானைகளை கொண்ட அரசாங்கம். நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை கிழக்காசியாவிலே செல்வ செழிப்புமிக்க அரசாக இருந்துள்ளது. பின் உள்நாட்டுக் கிளர்ச்சியால் லூவாங் பிராபாங், வியன்டின் மற்றும் சாம்பாசக் என மூன்றாக பிரிந்தது.

பட்டுக்குசாய் போர் நினைவகம்

பின்னர் 1893-ல் பிரான்ஸ் தனது காலனி ஆதிக்கத்தின் மூலம் மூன்றையும் ஒன்றிணைத்து லாவோஸ் என்று பெயரிட்டது. பிறகு 1943-லிருந்து ஜப்பான் தன் ஆதிக்கத்தை செலுத்த முயன்றது. அது 1949 போரைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. பின்னர் பிரான்சிடமிருந்து விடுதலைப்பெற்று 1953-ல் லாவோஸ் தனி நாடாக அரசர் சிஸ்சாவோங் வாங் ஆட்சியின் கீழ் 1959 வரை நீடித்தது.

இதற்கிடையில் வியட்நாம் போர் நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கம்யூனிசம் லாவோஸில் கால் ஊன்றியது. வியட்நாம் போர் முடிவுக்கு வந்த நிலையில் 1975-ல் லாவோஸும் மன்னராட்சிலிருந்து மீண்டு, லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இங்கு ஒரு கட்சி ஆட்சி முறையே கடைபிடிக்கப்படுகிறது. வியட்நாம் போரில் ஹோ சி மின் பாதை (Hochi Minh Trial) என்று உண்டு. அந்தப் போர் ஏற்படுத்திய துயரங்களில் பெரும் பகுதி  இங்கு தான் புதைந்துள்ளது.

ஹோ சி மின் பாதை

ஹோ சி மின் பாதை என்பது வியட்நாம் போரின்போது வியட்-காங் மற்றும் வட வியட்நாம் இராணுவத்திற்கு தளவாட ஆதரவை வழங்குவதற்காக வட வியட்நாமில் இருந்து தென் வியட்நாமுக்கு அண்டை நாடுகளான லாவோஸ் மற்றும் கம்போடியா வழியாக கட்டப்பட்ட சாலைகளின் வலையமைப்பாகும். இது சைக்கிள் போக்குவரத்திற்கும் மற்றும் வியட்-காங் போராளிகளும் பயன்படுத்தும் சாலை. இந்த பாதை 16,000 கிலோமீட்டர் (9,940 மைல்) தடங்கள், சாலைகள் மற்றும் நீர்வழிகளின் வலைப்பின்னல் ஆகும்.

வியட்நாம் மக்கள் இராணுவம் தெற்கிற்கு போர் பொருட்களை கொண்டு செல்ல ஒரு ரகசிய சாலை அமைப்பை உருவாக்க முடிவு செய்திருந்தது. ஆரம்பத்தில் 559 குறியிடப்பட்ட வலைப்பின்னலாக உருவாகி இறுதியில் ஹோ சி மின் பாதை என அறியப்பட்டது. ஹோவின் பிறந்த நாளான மே 9, 1959-ல், 440 இளைஞர்கள் மற்றும் பெண்கள் அடங்கிய இராணுவ போக்குவரத்து பிரிவு 559 -ஐ நிறுவியதன் மூலம் பாதை அமைத்தல் தொடங்கியது.

அடுத்த 16 ஆண்டுகளில், இந்த பாதை கடுமையான அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் இருந்தபோதிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வட வியட்நாமிய வீரர்களையும், தென் வியட்நாமில் போர்க்களங்களுக்கு ஏராளமான பொருட்களையும் கொண்டு சென்றது

வியட்நாமிற்குள், மத்திய வியட்நாமில் உள்ள மலைத்தொடருக்குப் பிறகு இது டேங் த்ரோங் சன்(Ðuong Truong Son), அல்லது த்ரோங் சன் (Truong Son) என அழைக்கப்பட்டது. இந்த பாதைக்கு கொடுக்கப்பட்ட மற்றொரு பெயர் “தி பிளட் ரோடு (The Blood Road).” இடைவிடாது அமெரிக்க ராணுவம் பெரும் குண்டுவெடிப்புகளை ஏற்படுத்தியும் அவர்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.

பாதையில் இறந்தவர்களில் குறைந்தது 10 சதவீதம் பேர் மலேரியா போன்ற நோய்களினால் இறந்தவர்கள். வழியிலேயே இடைவெளியில், தேசிய விடுதலை முன்னணி (என்.எல்.எஃப்) அடிப்படை முகாம்களைக் கட்டியது. அவர்கள் ஓய்வெடுக்க ஒரு இடத்தை வழங்குவதோடு, பயணத்தில் காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அடிப்படை முகாம்கள் மருத்துவ சிகிச்சையை வழங்கின. அடிப்படை முகாம்களில் பெரும்பாலானவை நிலத்தடியில் இருந்தன.

கையால் தோண்டப்பட்ட, மறைக்கப்பட்ட நுழைவாயில்களுடன் சிக்கலான ஒன்றோடொன்று இணைக்கும் சுரங்கங்கள். மலையேறுபவர்களை மறைத்து வைத்தன. பெரும்பாலும் அவர்களைத் தேடும் அமெரிக்க துருப்புக்களின் காலடியில் நேரடியாக போராளிகள் சிக்கவில்லை. வானொலி மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள், உணவு மற்றும் ஆயுதங்கள், மருத்துவ உதவி நிலையங்கள் அனைத்தும் நிலத்தடியில், ஆயிரக்கணக்கான வட வியட்நாமியர்களை போரின் போது மறைத்து வைத்தன. பாதை அமைப்பு மிகவும் மேம்படுத்தப்பட்டது. அதிகமான மக்கள் இந்த வழியைப் பயன்படுத்தினார்கள். ஹோ சி மின் பாதையில் காடுகளின் வழியாக கடுமையான மலையேற்றத்தை மேற்கொள்ள ஒரு வட வியட்நாமிய சிப்பாய்க்கு ஆறு மாதங்கள் ஆகுமாம்.

வடக்கு வியட்நாமியர்கள் ஹோ சி மின் தடத்தையும் பயன்படுத்தி தெற்கே வீரர்களை அனுப்பினர். சில நேரங்களில், ஹனோயிலிருந்து ஒரு மாதத்திற்கு 20,000 வீரர்கள் இந்த வழியில் வந்தார்கள். இந்த போக்குவரத்தை தடுக்கும் முயற்சியில், மெக்னமாரா லைன் எனப்படும் முள்வேலி மற்றும் கண்ணிவெடிகளின் தடையை கட்ட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. தடையை நிர்மாணிப்பதில் ஈடுபட்டவர்கள் மீது என்.எல்.எஃப் பலமுறை தாக்குதல் நடத்திய பின்னர் இந்த திட்டம் 1967-ல் அமரிக்காவால் கைவிடப்பட்டது.

ஹோ சி மின் பாதையை தரைப்படைகளுடன் அமெரிக்காவால் தடுக்க முடியவில்லை, ஏனெனில் அது கடந்து வந்த நாடுகள் அதிகாரப்பூர்வமாக நடுநிலை வகித்தன. விரிவான வான்வழி குண்டுவெடிப்பு வட வியட்நாமியர்கள் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான டன் போர் பொருட்களை ஹோ சி மின் பாதையில் தெற்கே நகர்த்துவதை தடுக்கவில்லை. இந்த பாதையை யுத்தத்தின் மையத்தில் மறுக்கமுடியாது. வடக்கு வியட்நாமியர்களுக்கு ஹோ சி மின் பாதை போர்க்கள ஆயுதம் போன்றே உதவியது. இந்த நடைபயணம் ஒரு தலைமுறையின் மைய அனுபவமாக மாறியது.

நவம்பர் 11, 1968-ல், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் ஆபரேஷன் கமாண்டோ ஹன்ட் (Operation Commando Hunt) தொடங்கப்பட்டது. லாவோஸ் வழியாக தெற்கு வியட்நாமிற்குள் ஹோ சி மின் பாதையில் ஆண்கள் மற்றும் பொருட்களை தடை செய்வதே இந்த நடவடிக்கையின் குறிக்கோளாக இருந்தது. செயல்பாட்டின் முடிவில், லாவோஸில் மூன்று மில்லியன் டன் குண்டுகள் வீசப்பட்டன. ஆனால் தமது பாதை நடவடிக்கைகளை இது பாதிக்காதிருக்க வியட்நாமியர்கள் கடுமையான வழிமுறைகளை கையாண்டனர்.

யுனைடெட் ஸ்டேட்ஸ் தேசிய பாதுகாப்பு அமைப்பின் யுத்தத்தின் உத்தியோகபூர்வ வரலாற்றின் படி, ஹோ சி மின் டிரெயில் அமைப்பு 20-ம் நூற்றாண்டின் இராணுவ பொறியியலின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நாங்கள் COPE முடித்துவிட்டு மறுநாள் பட்டுகுசாய் போர் நினைவகம் சென்றோம். இது பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது இராண்டாம் உலகப்போரில் லாவோசின் சிப்பாய்கள் உயிர் துரந்ததை நினைவு கூர்வதற்காக கட்டப்பட்டது. இது பிரான்ஸ் நாட்டில் இருக்கும் Arc de Triomphe போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. பின் அங்கிருந்து லோன் பிராபங்க சொன்றோம் இது யுனஸ்கோவால் பாதுக்காக்கப்பட்ட உலக பராம்பரிய இடம். முற்றிலும் பிரெஞ்சு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கட்டிடங்களும், புத்தக்கோவில்களும் நிரம்பியுள்ள நகரம். சுற்றிலும் மலைப்பிரதேசம் என கண்களை கொள்ளை கொண்ட இயற்கை…

பின் அங்கிருந்து இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து குவங்சி அருவியை கொட்டும் மழையில் நனைந்தவாறே சென்றடைந்தோம். போகும் வழியெல்லாம் விவசாய நிலங்கள் அவர்களுடன் சிறிது நேரம் பேசி விட்டு அருவிக்கு சென்றோம். மூன்று அடுக்கு அருவி அது பார்ப்பதற்கு செயற்கை அருவி போன்றே ஓரு பிம்பம். கண்களுக்கு விருந்தளித்த அருவியிடம் உடலை ஒப்படைத்து ஓரு குளியல். நேரமின்மை காரணமாக நாங்கள் ஒரு வாரம் மட்டுமே தங்கினோம். பிரிய மணம் இல்லாமல் அங்கிருந்து லோன் பிராபாங் திரும்பினோம். பின் அங்கிருந்து தாய்லாந்து வந்து இந்தியா திரும்பினோம். லாவோஸ்  பயணத்தில் போர் எவ்வளவு பயங்கரமானது என்பது  மனதில் தீராத வலியாகவே நிரம்பி உள்ளது…

சிந்துஜா சமூக ஆர்வலர்.

தமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் ! | வி.இ.குகநாதன்

ன்று இந்து மதத்தின் விழாக்களாகக் காணப்படும் பல விழாக்களும் முன்னர் பழங்குடி மக்களிடமிருந்தோ அல்லது சமண-பவுத்த-ஆசீவக மதங்களிலிருந்தோ களவாடப்பட்டவையேயாகும்.

எடுத்துக்காட்டாக;  விளக்கீடு என்பதனை எடுத்துக்கொண்டால், அது தமிழர்களின் விழா, இன்று மதத்தின் பிடிக்குள் சென்றுவிட்டது. அதே போன்று சங்ககாலப் பாடல்கள் குறிப்பிடும் ‘பாவை நோன்பு’ எனும் இயற்கையினைப் போற்றும் விழா, இன்று ‘திருவம்பாவை’ என்றாகிவிட்டது. இவ்வாறு களவாடப்பட்ட விழாக்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அவுஸ்திரேலியப் பழங்குடி மக்கள்.

இவ்வளவு ஏன்? மத அடையாளமாகக் கருதப்படும் திருநீற்றினையே பார்ப்போம். ‘சமயத்திலுள்ளது நீறு’ என்று தேவாரமேயுள்ளது. எந்தச் சமயத்திலுள்ளது? என எண்ணிப் பாருங்கள். சைவசமயம் எனக் கொண்டால் கூட, வட இந்தியாவிலுள்ள சிவன் கோயில்களில் எங்காவது திருநீறு கொடுக்கின்றார்களா? இல்லையே. தமிழர் உட்பட்ட பழங்குடி மக்களின் அடையாளமாகவிருந்ததே இந்தத் திருநீறு. பின்னரான காலப்பகுதியில் இந்தப் பழங்குடி அடையாளமும் ஒரு மத அடையாளமாக மாற்றப்பட்டது.

ஏற்கனவே இங்கிருந்த மக்களிடமுள்ள இந்தப் பழக்கத்தினை, வடக்கே கொண்டு செல்ல மதத்தால் முடியவில்லை/முனையவில்லை. மதமானது திருநீற்றினை வடக்கே கொண்டுபோய்ச் சேர்க்கவிட்டாலும், அங்கிருந்து ‘விபூதி’ என்ற வடமொழிப் பெயரினை இங்கு கொண்டு வந்துசேர்த்துவிட்டது. இவ்வாறு அடையாளங்களையே ஆட்டை போடும்போது, விழாக்களை மட்டும் எவ்வாறு விட்டுவிடுவார்கள். பலவற்றையும்  விழுங்கிவிட்டார்கள்.

இன்றும் மதத்தினால் விழுங்கமுடியாத ஒரு தொடர் விழாவாகவே (தைப்பொங்கலையும் உள்ளடக்கிய) ‘தை மரபுத் திங்கள் விழா’ காணப்படுகின்றது.  இதற்கும்  மதச் சாயம் பூசும் வேலையினை அண்மைக் காலத்தில் காணக்கூடியதாகவுள்ளது. அந்த வகையில் பொங்கலிற்கு எனப் ‘புராணப் புருடா’ ஒன்று வெளிவந்துள்ளது.

மகர சங்கராந்திதான் தைப் பொங்கல் என்பது ஏற்கனவே அவர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு விளக்கம். கதிரவனின் வட செலவு (வடக்கு நோக்கிய நகர்வு) என்பதற்கான ஒரு வடமொழிப் பெயராக ‘சங்கராந்தி’ என்பதனைக் கொண்டு வந்துபார்த்தார்கள். அதில் வடமொழிப் பெயரினை மட்டும் நீக்கிவிட்டால், அது ஒரு இயற்கை சார் நிகழ்வே. எனவே பொங்கலினை மத மயமாக்குவதற்கு இன்னொரு புராணக்கதை அவர்களிற்குத் தேவைப்பட்டது.

படிக்க :
தை முதலே தமிழ்ப் புத்தாண்டு : வி.இ.குகநாதன்
எடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் !

பொங்கலிற்கான  புராணக்கதை :

தமிழர்களின் இயற்கைசார் விழாவான பொங்கலிற்கு ஒரு புதிய மத விளக்கம் கொடுப்பதற்கென ‘கோவர்த்தன மலைக் கதை’ இன்று கூறப்படுகின்றது. இக் கதையின் படி, இந்திராவினை (இந்திரனை) வணங்காமல் மக்கள் புறக்கணித்தமையால், இந்திரா சினமுற்றார். இதனால் மழை, மின்னல் போன்றவற்றை மக்கள் மீது ஏவினார். அதனால் அச்சமுற்ற மக்கள் கிருசுணரிடம் முறையிட, அவர் கோவர்த்தன மலையினைத் தூக்கிக் குடையாகப் பிடித்து, மக்களை காப்பாற்றினார் (‘மழைக்கு நல்ல குடை என மலை பிடித்த கண்ணனாம்’ பாடல் நினைவிருக்கின்றதா, அதே தான்). பின்னர் இந்திரா தவறினை உணர்ந்தமையால், அவரிற்குப் பொங்கி மகிழ்ந்தார்கள். அதுதான் பொங்கல் ஆயிற்று. இவ்வாறு செல்கின்றது அந்தக் கதை.

சரி, இந்தக் கதை உண்மையென்றால் பொங்கலன்று இந்திராவிற்கு அல்லவா படைத்து வணங்குவார்கள். ஏன் கதிரவனையே வணங்குகின்றார்கள் எனக் கேளுங்கள். பதிலிருக்காது. ஏனெனில், இன்றைய பொங்கலுடன், பழங்கால (சிலப்பதிகாரம் குறிப்பிடும்) இந்திர விழாவினையும் சேர்த்துக் களவாட முனைந்து, இரண்டையுமே கோட்டை விட்ட புராணக்கதைதான் இந்தக் கோவர்த்தன மலைக் கதை. (இப் புராணக்கதையினை அணுகி நுணுக்கமாகப் பார்த்தால் ஒரு உண்மை புலப்படும். அதாவது, ரிக் வேதத்தால் பெரிதும் பாடப்பட்ட இந்திராவினை மக்கள் ஏற்றுக்கொள்ளாமையால், பார்ப்பனியமானது தொல்குடி மக்களின் நிறத்திலேயே (கறுப்பு) ஒரு கடவுளை உருவாக்கி, மக்களைக் கவர்ந்திழுத்தமையே அந்த உட்கிடை).

தைப் பொங்கலிற்கு ஒரு புராணக்கதை கட்டியவர்கள் மாட்டுப் பொங்கலை மட்டும் விட்டுவைப்பார்களா என்ன? அதற்கும் ஒரு புராணக் கதை. ஒரு முறை சிவன், நந்தியிடம் பூமியிலிலுள்ள மக்களிடம் சென்று ‘மாதமொரு முறை எண்ணெய் தேய்த்துக் குளித்து, மாதமொருமுறை உண்ணுமாறு’ சொல்லச் சொல்லிக் கேட்கின்றார். நந்தி தவறுதலாக ஒவ்வொரு நாளும் உண்ணுமாறு கூறிவிடுகின்றது (நல்லவேளை நந்தி மாறிக் கூறியிருக்காவிடின், இன்றைக்கு எமக்கு மாதத்திற்கொருமுறைதான் உணவு).

இவ்வாறு பொய் சொன்னதற்காகச் சாபம் பெற்ற நந்திதான் பின்னர் மாடுகளாக உலகில் பிறந்தது எனவும், அதனால் மாடுகளாகப் பிறந்த நந்திக்காகவே மாட்டுப் பொங்கல் பொங்கப்படுகின்றது எனச் செல்கின்றது அந்தப் புராணக்கதை. சரி இந்தப் புராணக்கதை உண்மையென்றால், வேதங்களில் எல்லாம் பசுக்களைக் கொன்று யாகங்களில் போட்டுக் கொல்லுமாறு கூறப்படுகின்றதே, அவ்வாறு கொல்லப்பட்டவையும் நந்திதானா! எனக் கேளுங்கள் பதிலிருக்காது (அஷ்டதச பசுவிதானம் – 18 பசுக்களை கொலை செய்து நடத்தும் யாகம்,  ஏகாதசீன பசுவிதானம் – 11 பசுக்களை கொல்லும் யாகம், வாயவீயஸ் வேதபசு – வாயு தேவதைகளுக்காக வெள்ளை பசுவை கொல்லுவது, ஆதித்ய வேதபசு – சூரிய தேவனுக்கு பசு யாகம்,…).

படிக்க :
இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – புதிய தொடர்
இங்கிலாந்துத் தேர்தலில் தடம் பதித்த இந்துத்துவா : வி.இ.குகநாதன்

ஏறு தழுவலிற்கான புராணக்கதை:

இவ்வாறு தைப் பொங்கல், மாட்டுப் பொங்கலிற்கு எல்லாம் புராணக்கதை இருக்கும்போது, ‘ஏறு தழுவல்’ (சல்லிக்கட்டு) மட்டும் என்ன பாவம் செய்தது என நினைத்த தமிழக பாரதீய சனதா கட்சியினர், அதற்கும் ஒரு புராணக்கதையினை ருவீட்டரில்(டிவிட்டரில்) தட்டிவிட்டுள்ளார்கள்.

அதில் அர்ச்சுணன் சிவனிடம் வரம் வேண்டித் தவமிருந்தபோது காளை ஒன்று அர்ச்சுணனைக் கொல்ல வரச் சிவன் அதனைத் தழுவியதே ‘ஏறுதழுவல்’ என்று அப் பதிவு செல்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஏற்கனவே சிவ புராணத்திலும், மகா பாரதத்திலும் சொல்லப்பட்ட இக் கதையில் சிவனிற்கும் அர்ச்சுணனிற்குமிடையே வந்த மிருகமாக பன்றியே (வராஹம் ) குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னமும் சொல்லப்போனால், முகாசுரன் என்ற அசுரனே முள்ளம்பன்றி வடிவம் கொண்டு வந்ததாக சிவ புராண / மகாபாரத புராணக்கதை சொல்லுகின்றது. இன்று ஏறு தழுவலைத் தழுவிக் கொள்ளும் நோக்கில்,  இந்தப் பன்றியினையே இப்போது காளை என மாற்றியுள்ளார்கள். பாரதீய சனதா கட்சியினர் ஏறு தழுவலைக் களவாடப் போய், மகாபாரத – சிவ புராணத்தையே மாற்றியுள்ளார்கள்.

பாரதீய கட்சியினர் ஒழுங்காக யோசித்திருந்தால் இவ்வாறு மகாபாரதத்தை எல்லாம் சிதைக்காமலேயே ஒரு கதை பிடித்திருக்கமுடியும். அதாவது, மகாபாரதத்திலேயே ஒரீடத்தில் கிருசுணர் மாட்டுடன் சண்டையிடுவதாகக் கதை வருகின்றது. அதனைக் கூடப் பொருத்தமாகப் பிடிக்கத் தெரியாமல், பன்றியினை காளையாக மாற்றிவிட்டார்கள்.

சிந்துவெளி முத்திரை.

ஆனால், அக் கதையிலுள்ள சிக்கல் என்னவென்றால், கிருசுணர் காளையுடன் போரிட்டுக்  காளையினைக் கொல்வதாகவே  பாரதக் கதை செல்கின்றது.  அது காளையினைக் கொல்லலே தவிர,  ஏறுதழுவல் அல்ல. இந்தப் புராணக்கதையில் ஒரு மறைமுகச் செய்தி உண்டு. ஆரியர்கள் நாடோடிகளாகக்  கைபர் கணவாய் மூலமாக இந்தியாவிற்குள் நுழைந்தபோது, இங்கிருந்த  பழங்குடியினர் இங்கு உழவினை மேற்கொண்டிருந்தனர். அந்த உழவுத் தொழிலின் ஒரு கூறாகவும், குறியீடாகவுமே காளை பாரதக்கதையில் காணப்பட, அதனைக் கிருசுணர் கொல்வதன் மூலம் சொல்லப்படும் செய்தியானது ஆரியர்கள்,  தமிழர் உட்பட்ட தொல் குடிகளையும் அவர்களது உழவுத் தொழிலினையும் அழிப்பதையுமே, அக் கதை குறிக்கிறது.

முடிவாக,  இவர்கள் என்னதான் முயன்றாலும், இன்று வரை இவர்களால் கைப்பற்றப்பட முடியாத ஒரே விழாவாக இந்தத் தைத்திருநாள் தொடர் விழாக் கொண்டாட்டமே காணப்படுகின்றது. இத் தை மரபுத் திங்களானது அவர்களது இந்து ராஸ்டிர கனவிற்குத் தொண்டையில் சிக்கிய ஒரு முள்ளாகவும், மறுபுறத்தே  எமக்கு  எமது பண்பாட்டினைக் கட்டிக்காக்கும் ஒரே பற்றுக்கோடாகவும் உள்ளது.

வி.இ.  குகநாதன்

வேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு !

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.

06.01.20 அன்று பேராசிரியர் பாத்திமா பாபு சார்பில் வழக்கறிஞர் யோகேஸ்வரன் அவர்கள் ஆஜராகி நிலமோசடி, புகைபோக்கி, காற்று மாசு, பசுமை வளையம், மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்தியான பொருட்கள் மற்றும் நச்சு கழிவுகள் அவற்றைப் மோசமாக பராமரிப்பது பற்றி வாதிட்டார். மேலும் ஸ்டெர்லைட் நச்சு ஆலை பொது தொழிற்சாலை பகுதியில் அமைந்துள்ளதையும் பற்றி சிறப்பாக விளக்கினார்.

07.01.20 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் வழக்கறிஞர் டி.மோகன் அவர்கள் ஆலை துவங்கியது முதல் மூடப்படும் வரை, உற்பத்தி நடவடிக்கைகளில் வெளியேறும் இரசாயனங்கள், உலோகங்கள் அடங்கிய கழிவு, நீரை சுத்திகரிக்கும் முறையில் உள்ள குறைபாடுகள், ஆலையின் அலட்சியமான நடவடிக்கைகள், மாசு கட்டுபாட்டு வாரியத்தின் கண்காணிப்பின்மை ஆகியவற்றால் நச்சு பொருட்கள் சுற்றுச்சூழலில் கலந்தன என்றும் ஆலையின் உள்ளே அபாயகரமான கழிவுகள் புதைக்கப்படும் இடங்கள், ஜிப்சம் குளம், தாமிர கழிவு வைப்பிடம் அருகில் நிலத்தடிநீர் மாசு கண்காணிப்பிற்காக உள்ள அனைத்து போர் கிணற்று நீரும் கன உலோகங்கள், இரசாயனங்களால் கடுமையாக மாசு அடைந்துள்ளன.

நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன்.

குமரெட்டியாபுரம், காயலூரணி, தெற்கு வீரபாண்டியபுரம், மீளவிட்டான், சில்வர்புரம், பண்டாரம்பட்டி, மடத்தூர் கிராமங்களிலுள்ள கண்காணிப்பு கிணற்று நீரும் மாசடைந்துள்ளது என்றும், நீரோட்டத்திற்கு எதிரான குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், காயலூரணி நிலத்தடி நீர் பாதிப்பிற்கு எங்களை எப்படி காரணம் சொல்ல முடியும்? என்ற ஆலையின் வாதத்திற்கு, 2009-ல் ஸ்டெர்லைட் நிதியுதவியில் செய்யப்பட்ட நிலத்தடி நீர் ஆய்வில் ஆலை உள்ள இடத்தில் நிலத்தடி நீர் முகடு (Groundwater crest) உள்ளது, அதிலிருந்து நிலத்தடி நீர் அனைத்து திசைகளிலும் பாய்கிறது எனவும், ஆலையின் உற்பத்தி நடவடிக்கைகள் நடைபெற்ற இடம், தாமிர கழிவுகள் வைப்பிடம் இக்கிராமங்களின் அருகில் இருப்பதாலும், ஓர் ஆண்டின் பல மாதங்கள் காற்று அக்கிராமங்களை நோக்கி வீசுவதாலும், இடையில் தூசுக்களை தடுக்கும் மரங்களின் பசுமை வளையம் இல்லாததால் கனஉலோகங்கள், இரசாயனங்கள் அடங்கிய தூசுக்கள் பல ஆண்டுகளாக அப்பகுதிகளில் தங்கியுள்ளன எனவும் வாதிட்டார். தன் இறுதி வாதமாக, பல ஆண்டுகளாக செயலற்று இருந்த மாசு கட்டுபாட்டு வாரியமும், தமிழக அரசும் மக்களின் தொடர் போராட்டங்களில் விழிப்படைந்து ஆலையை மூடியுள்ளன என்றார்.

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்திருந்த கிராம மக்கள்.

39-வது நாள் விசாரணையான 08.01.20 அன்று அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் அவர்கள் ஆஜராகி, ஸ்டெர்லைட் ஆலை நிலம், நீர், காற்று ஆகியவற்றை மிகவும் மோசமான நிலையில் மாசுபடுத்தி உள்ளதாகவும், 25 மீட்டர் பசுமை வளையம் அமைக்கவில்லை என்றும், பல முறை கண்டிப்புடன் கூடிய அவகாசம் கொடுத்ததாகவும், 2013-ல் உச்சநீதிமன்றமும் பல அறிவுரைகள் கூறி பல விதிமுறை மீறல்களை கண்டித்து ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நடத்த அனுமதித்ததாகவும், அதன் பின்னரும் தவறுகளை ஆலை சரி செய்யாததால் தான் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவை பிறப்பித்ததாகவும் வாதிட்டார்.

தூத்துக்குடி வாழ் மக்களுக்கு சுத்தமான காற்று, குடிநீரை வழங்க வேண்டியது அரசின் கடமை. அதற்காக அந்த ஆலையை மூடுவதைத்தவிர வேறு வழியே இல்லை. ஆலையை மூடிய பிறகு தூத்துக்குடி சுற்று வட்டார நிலத்தடி நீர் மற்றும் காற்றின் தரம் அதிகரித்துள்ளது.

ரூ.3000 கோடி முதலீடு செய்து ரூ.20,000 கோடி லாபம் ஈட்டிய ஆலை நிர்வாகம் தற்போது நஷ்டம் ஏற்பட்டுவிட்டது எனக் கூறுவதை ஏற்க முடியாது. விதிகளை பின்பற்றாத காரணத்தால் தான் ஆலை நிர்வாகத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது என வாதிட்டார்.

ஸ்டெர்லைட் தரப்பில் ஆஜரான ஆரியமா சுந்தரம்.

ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம் ஆஜராகி வாதிடும் போது, ‘‘ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டால் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவோம். கூடுதலாக கட்டுப்பாடுகள் விதித்தாலும் அதை ஏற்கத்தயார்” என்றார். ஆனால் அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அரசு தரப்பு வழக்கறிஞர் விஸ்வநாதன் அவர்கள் தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துதான் ஆலையை மூடியுள்ளதாக வாதங்களை வைத்தார்.

அதன் பின்னர் நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் அவர்களிடம் “ஸ்டெர்லைட் ஆலை பொது தொழிற்சாலை பகுதியில் உள்ளதா? (General industrial zone) அல்லது நச்சு தொழிற்சாலை (hazardous industrial zone) பகுதியில் உள்ளதா?” என்பது பற்றிய கேள்விகளை எழுப்பினர். அதற்கு விஜயநாராயணன் அவர்கள் நச்சு ஆலையான ஸ்டெர்லைட்டானது நச்சு தொழிற்சாலை பகுதியில் இல்லாமல் பொது தொழிற்சாலை பகுதியில் உள்ளதாக பதிலளித்தார்.

அதன் பின்னர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் அவர்கள் ஆஜராகி, ”காப்பர் கழிவுகள் புதுக்கோட்டை உப்பாற்று ஓடை உட்பட பல இடங்களில் கொட்டப்பட்டது அனைவரும் அறிந்ததே! ஆனால் ஸ்டெர்லைட் நிர்வாகம் தனது பினாமிகளை வைத்து அதை உப்பாற்று ஓடையில் கொட்டிவிட்டு, தற்போது தனக்கும் காப்பர் கழிவுகளைக் கொட்டியற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நாடகமாடுகிறது. ஆனால் இப்போது கழிவுகளை அகற்றி விடுகிறோம் என்கிறார்கள்.

படிக்க:
எடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் !
சட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் ! பொன்.சேகர் உரை !

மேலும் ஐந்து வருடமாக நச்சுக் கழிவுகளை பராமரிப்பதில் அரசிடம் எந்த அனுமதியும் வாங்காமல் ஆலை செயல்பட்டு நிலம், நீர், காற்று ஆகியவற்றை கடுமையாக மாசு படுத்தியுள்ளது என்றார். இறுதியாக ஸ்டெர்லைட் ஆலை ஒரு போதும் எந்த விதிகளையும் கடைப்பிடிப்பதில்லை என்றும் மாசுபடுத்துதல், விதிகளை மீறுதல், அரசையும் மக்களையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் மட்டுமே ஆலையை நடத்தியதாகவும், இதற்கு அரசு அதிகாரிகளும் கூட்டுச்சதியில் ஈடுபட்டுள்ளதாகவும்” வாதிட்டார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ்.

இதற்கு ஸ்டெர்லைட் தரப்பு மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் அவர்கள், அனைத்து தரப்பினரும் தவறான தகவல்களையும் மற்றும் தங்கள் நிலையில் மாற்றி மாற்றி பேசுவதாகவும் வாதிட்டார். நாங்கள் சட்டத்துக்கு புறம்பாக செயல்படவில்லை என்றும் தொழிற்சாலை விதிகளின்படியே செயல்பட்டதாகவும் வாதத்தை வைத்தார்.

இதனோடு பல மாதங்கள் கழித்து சென்னை உயர்நீதிமன்ற விசாரணை முடிவுக்கு வந்தது. தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் தீர்ப்புத்தேதி பட்டியலில் வரும் போதுதான் தெரியும். அதாவது தீர்ப்பு வருவதற்கு ஒரு நாள் முன்பு மட்டுமே தீர்ப்பு தேதியை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

இலட்சம் மக்கள் போராட்டமும், அனைவரின் தியாகமும் வீண் போகாது. நம்பிக்கையுடன் காத்திருப்போம் !

தகவல்:ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.

தொடர்புக்கு: 9443584049, 7811940678, 8122275718, 7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.


ஸ்டெர்லைட் ஆலையின் அயோக்கியத்தனம்!

ஸ்டெர்லைட் சார்பில் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் சுற்றுவட்டார கிராமங்களில் கொண்டாடப்பட்டதாகவும், அதற்கான பரிசுப்பொருட்கள் வழங்கியதாகவும், ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் அதிகாரிகள், அலுவலர்கள் அந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டதாகவும் நேற்று (18-01-2020) சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. இந்த நாளிதழ் செய்தியை பார்த்த பல கிராமங்களில் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏனென்றால் இந்த கிராமங்களில் எல்லாம் இளைஞர்கள், பெரியோர்கள் வசூல் செய்தும் மற்றும் ஊர் கணக்கில் இருந்தும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் கொண்டாடப்பட்டது.ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து சல்லிக்காசு கூட வாங்காமல் தான் நடத்தியுள்ளார்கள். உண்மை இப்படியிருக்க ஸ்டெர்லைட் நிறுவனத்தின் செலவில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்தியதாக ஸ்டெர்லைட் நிறுவனம் உண்மைக்கு புறம்பாக பத்திரிகைகளில் செய்தி கொடுத்துள்ளது.இது ஸ்டெர்லைட் சுற்றுவட்டார கிராம மக்களை மதிப்பிழக்கச் செய்யவும், அவதூறு செய்யும் விதமாகவும் ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. இது விஷமத்தனமானது.

இந்த பொய்யான செய்தி கொடுத்து வெளியிட செய்ததற்கு ஸ்டெர்லைட் நிறுவனம் மறுப்பும், மன்னிப்பு செய்தியும் உடனே வெளியிட வேண்டும் என்று பண்டாரம்பட்டி சந்தன மாரியம்மன் கோயில் முன்பு ஊர் மக்களும் ஸ்டெர்லைட் சுற்றுவட்டார கிராம மக்களும் கண்டணம் தெரிவித்திருப்பதோடு, சிப்காட் போலீசு நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர்.


 

புதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து !

நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 08

ந்த உதவித் தலைமை எழுத்தனோ மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்தான். மாடிப்படிக்கு மேலே விளக்கு எரிந்து கொண்டிருந்தது, அவன் இருப்பிடம் இரண்டாவது மாடியில். நடைக்குள் புகுந்ததுமே அக்காக்கிய் அங்கே ரப்பர் மேல்காலணிகள் வரிசை வரிசையாக வைத்திருப்பதைக் கண்டான். அவற்றுக்கு இடையே, சீறிக்கொண்டும் ஆவிப் படலங்களை வெளிவிட்டுக் கொண்டும் அறை நடுவில் நின்றது ஒரு சமோவார். சுவர்கள் மேல்கோட்டுக்களாலும் குளோக் எனப்படும் போர்வைகளாலும் மூடப்பட்டிருந்தன. அவற்றில் சில நீர்நாய்த்தோல் காலர்களும் மகமல் முகப்புக்களுங்கூட வைத்தவை. சுவரின் மறுபுறமிருந்து பேச்சும் கூச்சலும் கேட்டன. காலித் தேநீர் கிளாசுகளும், க்ரீம் ஜாடியும் பிஸ்கட்டுகளும் வைத்த டிரேயுடன் பணியாள் அறைக் கதவைத் திறந்துகொாண்டு வரவும், சத்தம் தெளிவாகக் கணீரென ஒலித்தது. எழுத்தர்கள் கொஞ்ச நேரமாகவே அங்கே கூடியிருக்கிறார்கள் என்பதும் முதல் முறை தேநீர் அருந்தி ஆயிற்று என்பதும் துலக்கமாகப் புலப்பட்டது.

அக்காக்கிய் மேல்கோட்டைக் கழற்றி மாட்டி விட்டு அறைக்குள் நுழைந்ததுமே மெழுகுவத்தி விளக்குகளும், எழுத்தர்களும், சுங்கான்களும், சீட்டாட்ட மேசைகளும் எக்காலத்தில் அவன் பார்வையில் பளிச்சிட்டன. அவன் காதுகளோ, அறையின் எல்லா மூலைகளிலிருந்தும் வந்த இடையறாத உரையாடல்களின் குழம்பிய ஒலிகளாலும், நாற்காலிகள் நகர்த்தப்படும் அரவத்தாலும் நிறைந்தன. அவன் அறை நடுவே அசடுவழிய நின்றுகொண்டு என்ன செய்வது என்று மூளையைக் குழப்பிக்கொண்டான். ஆனால், கூடியிருந்தவர்கள் அவன் வந்ததைக் கவனித்துப் பெருங்கூச்சலுடன் அவனை வரவேற்று, அவனது மேல்கோட்டை மறுமுறை பார்வையிடும் பொருட்டு ஒரு மொத்தமாக நடைக்குச் சென்றார்கள். அக்காக்கிய் ஆரம்பத்தில் கொஞ்சம் கூச்சப்பட்டாலும் களங்கமற்ற உள்ளம் வாய்ந்தவனாதலால் எல்லாரும் தன் மேல்கோட்டைப் புகழ்வதைக் கேட்டு உச்சி குளிராமலிருக்க அவனால் முடியவில்லை. அப்புறம் எல்லாரும் அவனையும் அவன் மேல்கோட்டையும் அறவே மறந்து விட்டு, எதிர்பார்த்தது போலவே சீட்டாட்ட மேசைகளைச் சுற்றிக் குழுமினார்கள்.

அக்காக்கிய்க்கோ இந்தச் சத்தம், பேச்சு, ஆட்களின் கூட்டம் எல்லாமே புதுமையாகவும் விந்தையாகவும் இருந்தன. என்ன செய்வது, கைகளையும் கால்களையும் உடல் முழுவதையுமே எங்கு வைப்பது என்று விளங்காமல் தத்தளித்தான். முடிவில் அவன் சீட்டாடுபவர்கள் அருகே உட்கார்ந்து, சீட்டுக்களைப் பார்ப்பதும் ஆட்டக்காரர் முகங்களை ஒன்று மாற்றி ஒன்றாக நோட்டமிடுவதுமாக இருந்து விட்டு, சிறிது நேரம் சென்றதும் சலிப்புற்றுக் கொட்டாவி விட ஆரம்பித்தான் – அகாலமாகிவிட்டது, அவன் வழக்கமாகத் தூங்கும் வேளை எப்போதோ கடந்துவிட்டதாகையால். அவன் விடை பெற்றுகொண்டு வெளியேறத் துடித்தான். ஆனால் அவனுடைய புதிய மேல்கோட்டுக்கு மரியாதை செலுத்தும் பொருட்டுத் தலைக்கு ஒரு கிளாஸ் ஷாம்பெயின் பருகுவது அவசியம் எனக் கூறி எல்லாரும் அவனைத் தடுத்துவிட்டார்கள். ஒரு மணி நேரத்திற்கெல்லாம் உணவு பரிமாறப்பட்டது: ஸலாத் எனப்படும் காய்கறிக் கூட்டு, பொரிக்காத கன்றிறைச்சி, இறைச்சி வடை, க்ரீம் கேக்கு, ஷாம்பெயின் ஆகியன.

படிக்க :
நூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)
போலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் ! உஷார்

அக்காக்கிய் இரண்டு கிளாஸ் ஷாம்பெயின் அருந்தினான். அப்புறம் அறையில் குதூகலம் அதிகரித்துவிட்டதாக அவனுக்குப்பட்டது. எனினும் நள்ளிரவாகிவிட்டது என்பதையும் தான் எப்போதோ வீடு திரும்பியிருக்க வேண்டும் என்பதையும் மாத்திரம் அவனால் மறக்கவே முடியவில்லை. விருந்தளப்பவன் எதாவது சாக்குப் போக்கு சொல்லித் தன்னைப் போகாது தடுத்துவிடக் கூடாதே என்பதற்காக யாரும் கவனிக்காத படி நழுவி, நடைக்கு வந்து தன் மேல்கோட்டைத் தேடி எடுத்தான். அது தரையில் விழுந்து கிடந்ததைக் கண்டு அவனுக்கு நெஞ்சு சுரீர் என்றது. அதை எடுத்து உதறி, ஒரு பொட்டு தூசி இல்லாமல் தட்டித் துடைத்துத் தோள் மேல் போட்டுக்கொண்டு மாடிப்படியிறங்கித் தெருவுக்கு வந்தான். தெருவில் இன்னும் வெளிச்சமாயிருந்தது. செல்வர் வீட்டு வேலைக்காரர்களுக்கும் பலரக மக்களுக்கும் ஓயா அரட்டைக் கூடங்களாக விளங்கிய சில சிறிய பலசரக்குக் கடைகள் திறந்திருந்தன. மூடியிருந்த கடைகளுக்குள்ளிருந்தும் கதவிடுக்கு வழியாக வந்த ஒளிக்கீற்று உள்ளே ஆட்கள் இருப்பதைக் காட்டியது – பணிப் பெண்களும் பணியாட்களும் அவர்கள் எங்கே போய்த் தொலைந்தார்கள் என்று தெரியாமல் எசமானர்கள் தவிக்கும்படி விட்டு விட்டு, மிச்ச அரட்டையை அடித்து முடித்துக் கொண்டிருந்தார்கள் போலும். அக்காக்கிய் உள்ளம் மகிழ நடந்து சென்றான்; மேனியின் ஒவ்வோர் அங்கமும் அசாதாரணச் சலனத்துடன் இயங்க மின்வெட்டுப் போலத் தன்னைக் கடந்து சென்ற சீமாட்டி ஒருத்தியின் பின்னே, எதற்காகவோ தெரியவில்லை, ஓடக் கூடத் தலைப்பட்டான்.

ஆனால் அக்கணமே நின்று, இந்தத் திடீர் விரைவாற்றல் எங்கிருந்து வந்தது என்று எண்ணியவனால் மீண்டும் மிக மிக மெதுவாக நடக்கலானான். சிறிது நேரத்திற்கெல்லாம் முடிவேயின்றி வெறிச்சோடிக் கிடந்த தெருக்களை அடைந்தான். பகல் வேளையிலேயே இவை அழுது வழியும், இரவிலோ கேட்கவே வேண்டியதில்லை. இப்போது அவை இன்னும் வெறுமையாகவும் ஏகாந்தமாகவும் தோற்றமளித்தன; தெரு விளக்குகள் குறைவாயிருந்தன, அப்படித் தென்பட்ட ஒரு சிலவும் அணைந்து போயிருந்தன. நகரசபை அதிகாரிகள் எண்ணெயை மிச்சம் பிடித்தார்கள் போலும். மரவீடுகளும் வேலிகளும் உள்ள பகுதிக்கு அவன் வந்து விட்டான்.

சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஓர் ஆளைக் காணோம், வெண்பனி மட்டுமே தெருக்களில் ஒளிர்ந்தது. சன்னல்களின் பலகைக்கதவுகள் அடைக்கப்பட்டு இருளடைந்து கிடந்த தாழ்ந்த குடில்கள் அயர்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தவை போன்ற தோற்றத்துடன் அவலம் பிடித்த கரிக்கோடாய் நெடுந்தொலை வரை சென்றிருந்தன. அக்காக்கிய் அக்காக்கியெவிச் தெருவின் குறுக்கே எல்லையற்றது போலப் பரந்து கிடந்த விசாலமான மைதானத்தை நெருங்கினான். மைதானத்தின் மறு கோடியிலிருந்த வீடுகள் மங்கலாக, பட்டும் படாமலும் தெரிந்தன. இந்த மைதானம் அவனுக்குப் பயங்கரமான பாலைவனம் போலக் காணப்பட்டது.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

சமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி ! | Chennai Book Fair – 2020 | புதிய நூல்கள் !

சென்னையில் நடைபெறும் 43-வது புத்தகக் கண்காட்சியில்
வாங்க வேண்டிய நூல்கள் குறித்து ஒரு பார்வை !

ரலாற்றில் இருந்து நாம் கற்க வேண்டிய படங்களை நூல்கள் கற்றுத் தருகின்றன. இன்றைய பாசிச சூழலை எதிர்கொள்வதற்கான உத்திகளை தெரிந்து கொள்ள படிக்க வேண்டிய நூல்களைப் பட்டியலிடுகின்றனர் பிரபல வெளியீட்டகங்களான பாரதி புத்தகாலயம், நீலம் மற்றும் நிமிர் ஆகியவற்றின் நிர்வாகிகள் !


நூல்கள் : காவி இருளை விரட்டும் அறிவொளி ! | சுப. வீரபாண்டியன் | ஓவியா | மருதன்

சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கும் 43வது புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களின் தேவையை பற்றி எழுத்தாளர் ஓவியா, எழுத்தாளர் மருதன், கருஞ்சட்டை பதிப்பகத்தில் இருந்து சுப. வீரபாண்டியன் இந்தக் காணொளியில் விளக்குகிறார்கள் !


சமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி |
மகிழ்நன் | மருத்துவர் ருத்ரன் | பேரா.சுந்தரவள்ளி

சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கும் 43 -வது புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் வாசிப்பின் தேவை குறித்து விளக்குகிறார்கள், மகிழ்நன், வசன எழுத்தாளர்.,
ருத்ரன், மனநல மருத்துவர், த.கணேசன், பு.மா.இ.மு., பேராசிரியர் சுந்தரவள்ளி ஆகியோர்.

* இது புத்தகத் திருவிழா! கொண்டாடித் தீர்க்க வேண்டும்!
இளைஞர்களிடையே வாசிப்பு பழக்கத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது மகிழ்ச்சிக்குரிய விசயம்தான். வாசிப்புதான் இளைஞரின் அனுபவத்தை கூர்தீட்டும். உரையாடலை நிகழ்த்துகிறபோது, இன்னும் அடுத்தக் கட்டத்துக்கு செல்லும்.

* வாட்சப், சமூக ஊடகங்களில் காணும் செய்திகளைத் தாண்டி புத்தகத்தைப்படி. குறைந்தபட்சம் எதையாவது படி!

* நாட்டைப்பற்றி புரிந்துகொள்ள சமூக நடப்புகளை அறிந்துகொள்ள தினந்தோறும் குறைந்தபட்சம் நான்கு பக்கங்களையாவது படிக்க முயற்சியுங்கள்… நாளைக்கு மட்டுமல்ல எதிர்கால சந்ததியினருக்காக படியுங்கள்!

* போராட்டக் களத்தில் நிற்கிறோம். எதிரிகளை எதிர்க்கிறோம். அதிகாரத்தின் அத்துமீறல்களுக்கு எதிராக பெருந்திரளாகக் கூடுகிறோம். இவற்றுக்கெல்லாம் எது ஆயுதம்? அறிவாயுதம்தான் ஆயுதம். அறிவாயுதத்தை கையில் எடுக்கும்பொழுதுதான் எதிரிகள் அச்சம் கொள்வார்கள். அறிவாயுதம் ஒருபோதும் தோற்காது.


அறிவுப் பசியை தீர்க்க புத்தகக் கண்காட்சிக்கு வாங்க ! வாசகர்கள் பரிந்துரை !

சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கும் 43 -வது புத்தகக் கண்காட்சியில் கல்லூரி மாணவர்கள் – இளைஞர்கள் தாங்கள் தேர்வு செய்த நூல்கள் குறித்து வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.

புத்தகங்களின் மீதான ஆர்வம் இளைஞர்களிடையே குறைந்துவிட்டதா? பதிலுரைக்கிறார்கள் கல்லூரி மாணவர்கள்…

பாருங்கள் ! நண்பர்களுக்கு பகிருங்கள் !

கசக்கும் கரும்பு ! சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை !

பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் கடைவிரித்திருந்த சாலையோர கரும்பு வியாபாரிகளிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் காணொளி!

லாரி ஓட்டுநர், கல்லூரி மாணவர், பி.இ. பட்டதாரி இளைஞர்கள் கூட, சீசனுக்காக கரும்பு வியாபாரிகளாக மாறியிருக்கும் அவலத்தையும்; மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்து போயிருப்பதால் கட்டுக்கட்டாக கரும்பு வாங்கிய மக்கள் இன்று சம்பிரதாயத்திற்காக ஒன்று இரண்டு கரும்பு வாங்கிச் செல்லும் வாழ்க்கைச்சூழலையும் எடுத்துக்காட்டுகிறது, இந்த நேர்காணல்!

பாருங்கள்! பகிருங்கள்!

ஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை !

ரண்டாம் உலகப் போரின் காலகட்டத்தில் உலகம் ஒரு ஹிட்லரைத்தான் எதிர் கொண்டது. இன்றோ உலகம் முழுவதும் ஹிட்லர்கள் தலைதூக்கியிருக்கிறார்கள்.

இந்தியாவிலும் ஆர்.எஸ்.எஸ். என்றொரு நாசிக் கும்பல் ஆட்சியதிகாரத்தில் அமர்ந்துள்ளது. மோடி என்ற ஹிட்லர் ஏகாதிபத்தியத்தின் சேவகனாக மக்களை ஒடுக்குகிறார்.

அன்று உலகை ஹிட்லரிடமிருந்து காக்க ஒரு ஸ்டாலின் இருந்தார். ஹிட்லரை வீழ்த்தி மனித சமூகத்தைப் பேரழிவிலிருந்து காத்தார். ஆனால் இன்றோ பல ஹிட்லர்கள் உருவாகி நிற்கிறார்கள். இவர்களை எதிர்கொள்ள இன்னும் பல ஸ்டாலின்கள் தேவை !

இன்றைய சூழலில் ஹிட்லர்களை எதிர்கொள்ள தோழர் ஸ்டாலினின் எழுத்துக்கள் மிகவும் அவசியமானவை ! அதனை உணர்ந்து தோழர் ஸ்டாலினின் எழுத்துக்களை கடும் உழைப்பைச் செலுத்தி தமிழில் கொண்டு வந்துள்ளார் அலைகள் வெளியீட்டகத்தின் தோழர் சிவம்.

கடை எண் 71, 72 – அலைகள் வெளியீட்டகத்தில் இந்நூல் தொகுப்பு முன்பதிவு செய்யப்படுகிறது. வாங்கிப் படியுங்கள் !

சவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் !

பாரத ரத்னாவா இந்தியாவின் அவமானச் சின்னமா? – பாகம் – 1

வினாயக் தாமோதர் சவார்க்கர். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒரு அரை நூற்றாண்டு காலம் மறக்கப்பட்ட, இன்று அதை அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு உச்சரிப்பவர்களே பொது வெளியில் சொல்லத் தயங்கிய பெயர் மீண்டும் பேசு பொருளாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உடனடிக் காரணம், மஹாராஷ்டிர மாநிலத்தின் பி.ஜே.பி வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் சவார்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதற்கான முயற்சி எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையிலேயே கூறியிருக்கிறது.

பிஜேபியின் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும் சவார்க்கரைப் புகழ்ந்து, 1857-ல் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நடந்த ராணுவ வீரர்களின் எழுச்சியை முதன் முதலாக இந்தியாவின் முதல் சுதந்திரப் போராக உலகுக்குக் காட்டியவர் சவார்க்கர்தான் என்று ஒரு பொய்யைச் சொல்லியிருக்கிறார். பிரதமர் மோடியும் தன் ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் சவார்க்கரை 1857 எழுச்சியின் ‘சாம்பியன்’ என்று பொருள்படப் பேசியிருக்கிறார். வரலாற்று அறிவில்லாதவர்கள் இவர்களின் உரைகளைக் கேட்டால் சவார்க்கரே முன் நின்று அந்த எழுச்சியை நடத்துவது போல் தோன்றும். அதுதான் மோடி— ஷா கூட்டணியின் நோக்கமும்.

இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து நடத்திய அந்த எழுச்சிப் போராட்டத்தை காரல் மார்க்ஸ் செப்டம்பர் 16, 1857 அன்றே இந்தியாவின் ‘முதல் சுதந்திரப் போர்’ என்று வர்ணித்து நியூயார்க் டெய்லி டிரிப்யூன் பத்திரிகையில் எழுதினார். தகவல் தொழில்நுட்பம் வளராத காலத்தில் அவருக்குக் கிடைத்த தகவல்களை வைத்து எழுதிய மார்க்ஸ் புரட்சியாளர்களை எதிர்மறையாக விமரிசித்த அதே நேரத்தில், அவர்களின் ‘கொடூரமான’ செயல்பாடுகள் பிரிட்டிஷ் அரசின் கொள்கைகளுக்கான எதிர் வினையென்றே சொன்னார். பிரிட்டிஷ் ராணுவம் உலகில் பிற பகுதிகளில் செய்து கொண்டிருந்த கொடுமைகளையும் அதில் பட்டியலிட்டு பகிரங்கப்படுத்தினார்.

1857-க்கு முன்பே தென்னிந்தியாவில் ஆங்காங்கு நடந்த கிளர்ச்சிகள் வரலாற்றில் பதிவு செய்யப்படாமலே போயிருந்தன என்பது மார்க்ஸுக்குத் தெரியாமல் போயிருக்க வாய்ப்புண்டு. சவார்க்கருக்கும், இன்று அவரை தேசிய ஹீரோக்களின் வரிசையில் வைக்கத் துடிக்கும் அமித் ஷா போன்றோருக்கும் தெரிந்தாலும் ஏன் பேச மாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும்.

ஆனால் இவற்றிற்கெல்லாம் மேலான பிரச்சினை அல்லது தர்மசங்கடம், அமித் ஷாவுக்கும் சங்க பரிவாரத்திற்கும் இருக்கிறது.

வரலாற்றை ‘நம்’ பார்வையில் எழுத வேண்டும் என்று சொல்கிற அமித் ஷா சவார்க்கரின் பார்வையில் எழுதப்பட்ட 1857-ன் வரலாறு குறித்த புத்தகத்தை இன்று தடை செய்ய வேண்டும் என்றுதான் கூறுவார். அந்த அளவுக்கு இந்து—முஸ்லிம் ஒற்றுமையை வலுவாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் எழுதியிருக்கிறார் சவார்க்கர். ஆனால் அவரின் கண்ணோட்டத்தில் மதவாதம் அப்போதே பொதிந்திருந்தது என்று வரலாற்றியலாளர்கள் கூறுகிறார்கள்.

‘1857-ல் நடந்த முதல் சுதந்திரப் போர்’ என்கிற புத்தகத்தை சவார்க்கர் மராத்தி மொழியில் எழுதியது 1908-ல். பின்னர் அது ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது. அப்போது அபினவ் பாரத் என்கிற அமைப்பினைத் தன் சகோதரருடன் நடத்தி வந்தார்.

படிக்க:
CAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசமைப்பு சட்டம் ! PRPC கருத்தரங்கம் ! நேரலை | Live Streaming
கேள்வி பதில் : முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பல் வெறுக்க காரணம் என்ன ?

இனி சவார்க்கரின் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்:

1857-ல் நடந்த போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களைக் குறித்து இப்படி எழுதுகிறார்.

“மவுல்விகளின் போதனையைப் பெற்று, கற்றறிந்த பிராமணர்களின் ஆசி பெற்று, டெல்லியின் மசூதிகளிலிருந்தும், பனாரஸின் கோவில்களிலிருந்தும் சொர்க்கம் வரை சென்ற பிரார்த்தனைகளின் பலனிகளான இவர்கள் யார்? சுயதர்மமும் சுயராஜ்யமும்தான் அவர்களின் பெரும் கொள்கைகள். உயிரினும் மேலான மதத்தின்மீது சூழ்ச்சிமிகு, அபாயகரமான, அழிவுமிக்க தாக்குதல் நடத்தப்படுவதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்த பிறகு, சுயராஜ்யத்தை அடைவது என்கிற புனிதமான விருப்பத்துடன் அடிமைச் சங்கிலிமீது ஆவேச அடிகள் விழுந்தபோது ‘தீன், தீன்’ என்ற கோஷம் இடியாக எழுந்தது. சுயதர்மம், சுயராஜ்யம் ஆகிய கொள்கைகள் இந்துஸ்தானத்தின் புதல்வர்களின் எலும்பிலும் மஜ்ஜையிலும் பதிக்கப்படும்.”

புத்தகத்தில் கடைசி முகலாய மன்னரான பகதூர் ஷா சஃபரை தாராளமாகப் புகழ்கிறார் சவார்க்கர். அதைவிட அதிகமாக இன்று உத்தரப் பிரதேசத்திலிருக்கும் அவத் பிரதேசத்தை 1857-ல் கைப்பற்றிய மவுல்வி அஹமத் ஷாவையும் இவ்வாறு புகழ்கிறார்: “தேசபக்த மவுல்வியான அஹமத் ஷாவின் புனிதப் பெயர் இந்துஸ்தானத்தைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தைச் சூட்டியிருக்கிறது, அவருடைய மரணச் செய்தி லண்டனை அடைந்தபோது, பிரிட்டிஷ் ஆட்சிக்கு வட இந்தியாவில் இருந்த பெரும் வல்லமை நிறைந்த ஒரு எதிரி இனி இல்லை என்று ஆங்கிலேயர்கள் நிம்மதியடைந்தனர்.

சாவர்க்கர்

அதேபோல் ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரின் பெருமைகளையும் சொல்லாமல் அவர் கடந்து செல்லவில்லை. “இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஏற்பட்ட அபாயத்தை முதன்முதலில் உணர்ந்தவர்கள் பூனாவைச் சேர்ந்த நானா ஃபத்னாவிஸும், மைசூரின் ஹைதர் சாஹிபும்தான். நம் கண்முன் விரிந்த நாடகத்தில் தஞ்சாவூர், மைசூர், ராஜ்கார், டெல்லி போன்ற சமஸ்தானத்தை ஆண்டவர்கள் முக்கியமான பாத்திரங்களாயிருந்தனர்” என்கிறார் சவார்க்கர்.

மராத்தா பேரரசின் பேஷ்வா பாஜி ராவின் மகன் நானா சாஹிப் தன் நம்பிக்கைக்குரிய தூதுவராக அறிவுக் கூர்மை வாய்ந்த அசிமுல்லா கானைத்தான் வைத்திருந்தார் என்றும் சவார்க்கர் குறிப்பிடுகிறார். அன்று சவார்க்கரின் உலகப் பார்வையைப் பின்வரும் பத்தியிலிருந்து அறிந்து கொள்ளலாம்:

“முதலில் இந்தியாவின் விடுதலைக்காக ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்தி, உள்நாட்டுச் சண்டைகளை நிறுத்தி, மாநிலங்களை உள்ளடக்கிய ஐக்கிய இந்தியாவை உருவாக்கி, உலகில் இருக்கும் சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பில் அதற்குரிய இடத்தை அடைவதுதான் நானா சாகிப்பின் முதல் திட்டமாக இருந்தது. இஸ்லாம் மற்றும் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களின் ஐக்கிய தேசமாக இருக்க வேண்டுமென்றும் அவர் விரும்பினார். முகமதியர்கள் இந்தியாவில் ஆட்சி செய்யும் அன்னியர்களாக இருக்கும் வரை அவர்களை சகோதரர்களாகக் கருதுவது ஒரு தேசிய பலவீனத்தை ஒப்புக் கொள்வது போல்தான் இருந்தது.

அதனால் அந்த எண்ணம் நீடிக்கும் வரை இந்துக்கள் முகமதியர்களை அன்னியர்களாகப் பார்ப்பது அவசியமாக இருந்தது. டெல்லியின் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு ஆண்ட முகமதியர்களின் ஆட்சியை பஞ்சாபின் குரு கோவிந்த், ராஜபுதனத்தின் ராணா பிரதாப், புண்டேல்கண்டின் சத்ராசல், மராத்தியர் போன்றோர் அழித்து விட்டனர்; பல நூற்றாண்டுகளுக்கும் மேல் நடந்த போர்களின் மூலம் முகமதியர்களை வென்ற இந்து இறையாண்மை தன்னை இந்தியா முழுவதிலும் ஸ்திரப்படுத்திக் கொண்டது. அந்தச் சூழலில் முகமதியர்களுடன் கைகோர்த்து செல்வது தேசிய அவமானம் அல்ல. மாறாக, அது ஒரு பெருந்தன்மையான செயல்.”

முகமதியர்களை இந்து மன்னர்கள் அடக்கி வெற்றி கண்டபின் அவர்களை சகோதரர்களாகக் கருதலாம் என்கிற இந்த இந்து மேலாதிக்கப் பார்வையின் தொடர்ச்சியை அவருடைய இந்துத்துவம் என்கிற நூலில் காணலாம். இந்துக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டால் இந்து இனம் விரும்பும்வரை கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் இங்கு இருக்கலாம் என்பதுதான் அவருடைய இந்த்துவக் கொள்கையின் சாரம்.

முஸ்லிம்கள் அடக்கப்பட்டு விட்டதால் “இந்துக்களுக்கும் முகமதியர்களுக்கும் இடையே இருந்த விரோதத்தினைக் கடந்த காலத்திற்குள் வீசி விடலாம். அவர்களுக்கிடையே இப்போது நிலவுவது ஆள்வோருக்கும் ஆளப்படுவோர்க்கும், அன்னியர்க்கும் பூர்வகுடியினருக்குமான உறவு அல்ல. அது சகோதரர்களுக்கிடையேயான உறவு. அவர்களுக்கு இடையில் நிலவும் ஒரே வேறுபாடு மதம் மட்டும்தான். இரு தரப்பினரும் இந்துஸ்தான மண்ணின் மைந்தர்கள். பெயர்கள் வேறுபட்டாலும் அவர்கள் ஒரு தாய் மக்கள். இந்தியா என்கிற ஒரே தாயின் பிள்ளைகளாக இருப்பதால் அவர்கள் ரத்த உறவு கொண்ட சகோதரர்கள்.”

1857 எழுச்சியின் உச்சகட்டத்தில் பஹதூர் ஷா சஃபரை புரட்சிக்காரர்கள் மன்னராக ஏற்றுக் கொண்டதைக் குறித்து சவார்க்கர் இப்படி எழுதுகிறார்:

பஹதூர் ஷா

“எனவே, பஹதூர் ஷா சஃபரை இந்தியாவின் அரியாசனத்தில் ஏற்றியது மீண்டும் முகமதிய ஆட்சியை ஏற்படுத்தியதாகாது என்பதுதான் உண்மை. மாறாக, இந்துக்களுக்கும் முகமதியருக்கும் இடையே நடந்த நீண்ட காலப் போர் முடிவுக்கு வந்துவிட்டது, கொடுங்கோலாட்சி முடிந்தது என்கிற பிரகடனம்தான் அது. ஆகவே, இந்துக்களும் முகமதியர்களும் மே 11, 1857 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது முதன்முதலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அவர்களது மண்ணின் பேரரசருக்கு உளப்பூர்வமான, மிகவும் விசுவாசமான வாழ்த்துகளை அனுப்பட்டும்!”

முஸ்லிம் ஆளுமைகள மட்டுமின்றி, பாமர முஸ்லிம்களையும், முல்லாக்களையும் கூட சவார்க்கர் வெகுவாகப் புகழ்கிறார். “டெல்லியில் நிறைந்து வாழும் முஸ்லிம் மக்களிடையே முல்லாக்கள் தீவிரமாகப் பணியாற்றினர். நாடு, மதம் ஆகியவற்றைக் காக்கும் லட்சியத்திற்கான போர்க்களத்தில் ரத்தம் சிந்துவதற்காக உத்தரவு வரும்வரை ஆயிரக்கணக்கான முஸல்மான்கள் உறுதியுடன் காத்திருந்தனர்.

சவார்க்கர் கடந்த காலத்தைக் குறித்துதான் எழுதினார். ஆனால் அவருடைய எச்சரிக்கைகள் தெளிவாக எதிர்காலம் குறித்தும் இருந்தன.

“இப்போதும் ஆங்கிலேயர்கள் தங்களுடைய பழைய ஏமாற்று வேலையை மீண்டும் காண்பிக்க முயற்சி செய்வார்கள். இந்துக்களை முஸல்மான்களுக்கு எதிராகவும், முகமதியர்களை இந்துக்களுக்கு எதிராகவும் போராடத் தூண்ட முயற்சி செய்வார்கள். ஆனால், அவர்களின் வலைக்குள் விழுந்து விடாதீர்கள் இந்து சகோதரர்களே! ஆங்கிலேயர்கள் தாம் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற மாட்டார்களென்று புத்திசாலியான இந்து சகோதரர்களுக்கு சொல்லத் தேவையில்லை.”

முஸல்மான்களே, நீங்கள் குரானை வணங்குபவர்களென்றால், இந்துக்களே நீங்கள் கோமாதாவை வணங்குபவர்களென்றால், உங்களுக்கிடையே இருக்கும் சிறு பிரச்சினைகளை மறந்துவிட்டு இந்தப் புனிதப் போருக்காக ஒன்றுபடுங்கள்! போர்க்களத்தில் ஒரே கொடியின்கீழ் திரண்டு, போராடி ரத்த ஆறுகளின் மூலம் ஆங்கிலேயரின் பெயரை இந்தியாவிலிருந்து கழுவி விடுங்கள்! இந்துக்கள் முகமதியர்களுடன் கைகோர்த்து இந்தப் போரில் இறங்கினால், முகமதியர்களும் நாட்டின் சுதந்திரத்திற்காகக் களத்தில் இறங்கினால், அவர்களின் தேசபக்திக்குப் பரிசாக பசுக்களைக் கொல்வது நிறுத்தப்படும்.”

படிக்க:
சொந்த நாட்டு மக்களை ஒடுக்குவது மட்டுமே இராணுவத்தின் பணி !
ஆர்.எஸ்.எஸ் : இந்திய ஆன்மாவின் மீதான ஒரு அச்சுறுத்தல் ! – ஏ.ஜி. நூரனி

அமித் ஷாவும் மோடியும் இந்த வரலாற்றைக் கூடச் சரியாகப் படிக்கவில்லை என்பதுதான் உண்மை. இன்று 1857 குறித்து எழுதியதை அவர்கள் மேற்கோள் காட்டக்கூட முடியாது. ஏனெனில் இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு என்பது அவர்கள் மூடி மறைக்க விரும்பும் வரலாறு.

முஸ்லிம்களைச் சகோதரர்கள் என்றும், பிரிட்டிஷ் ஆட்சியை எதிரிகளென்றும் பார்த்த சவார்க்கர் பின்னர் வரலாற்றையும் அரசியல் பார்வையையும் நேர்மாறாகத் திருப்பிப் போட்ட புரட்டு வேலை அந்தமான் சிறையில் துவங்கியது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் அரசியல் பார்வைகள் மாறுவதில் ஆச்சரியமில்லை. ஆனால், அது எந்தத் திசையில் எந்த நோக்கத்திற்காக மாறுகிறது என்பதைப் பொறுத்துதான் அதனை ஏற்றுக் கொள்வதா நிராகரிப்பதா என்று முடிவு செய்ய முடியும்; அந்த மனிதனைக் குறித்த மதிப்பீடும் இருக்கும்.

தன் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் ‘இந்தியாவின் ஆறு புகழ்மிகு சகாப்தங்கள்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார். அதில் முதல் சுதந்திரப் போர் குறித்து அவர் எழுதிய புத்தகத்தில் இந்து தேசத்தின் பார்வையை முன்வைத்ததாகக் கூறுகிறார். முஸ்லிம்களின் பங்களிப்பு குறித்து எழுதியதை முழுவதும் மறைத்து விட்டார். அசோகர் வேதாந்த வழி வந்த இந்துக்களிடம் மிகவும் சகிப்புத் தன்மையின்றி நடந்து கொண்டார், திப்பு சுல்தான் என்கிற காட்டுமிராண்டித்தனமான சுல்தானை மராத்தியர்களும், ஆங்கிலேயர்களும் தோற்கடித்தனர், அக்பர் அன்னியர், இரக்கமற்றவர், சகிப்புத் தன்மையற்றவர் என்றெல்லாம் வசை பாடுகிறார்.

அவருடைய அறிவு நாணயத்திற்கு வேறு ஒரு சான்று தேவையில்லை.

சவார்க்கர் அந்தமான் சிறையிலிருந்தபோதே அவருடைய மதவாதப் பார்வை தெளிவாக வெளிப்படத் தொடங்கியது.

அந்தமான் உண்மைகள் :

அந்தமானின் தனிமைச் சிறையில் அவர் செக்கிழுப்பது போன்ற கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார் என்பது யாரும் குறைத்து மதிப்பிட முடியாத உண்மை என்ற போதிலும் அதே போன்ற கொடுமைகளை அனுபவித்த சக சிறைவாசிகள் பிரிட்டிஷ் அரசிடம் விடுதலைக்காக மண்டியிடவில்லை என்பதும் உண்மைதான். சுபோரஞ்சன் தாஸ்குப்தா என்பவர் அது குறித்து இப்படி எழுதுகிறார்:

“வினாயக் தாமோதர் சவார்க்கர் ஒரு சுதந்திரப் போராட்டக்காரர்தான். ஆனால் சிட்டகாங் எழுச்சியில் ஈடுபட்ட புரட்சிக்காரர்களைப் போல பிரிட்டிஷாருடன் போராடி உயிர் துறக்கவில்லை; பகத்சிங், குதிராம் போஸ் ஆகியோரைப் போல பிரிட்டிஷாரை எதிர்த்து நிற்பதால் உயிரே போனாலும் சரி என்று தியாகம் செய்யவும் இல்லை. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் அவர் வீரமாகப் போராடினாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட தருணங்களில் ஆட்சியாளர்களிடம் மன்னிப்புக் கோரும் அளவிற்கு அவரது உணர்வு தகர்ந்து போயிருந்தது.. அந்தமான் சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட பிற புரட்சிக்காரர்கள் மன்னிப்புக் கேட்பது குறித்து கனவுகூடக் காணவில்லை.”

அந்தச் சிறையில்தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் சவார்க்கரும் பின்னர் சங்கப் பரிவாரமும் ஒத்துழைத்த கதையின் கரு உருவானது. மதம் கடந்த தேசியம் என்று அவர் பேசிய சிறிது காலத்திற்குள்ளேயே அவருக்குள் இருந்த மதவாத விஷம் வெளிப்பட்டதும் அங்குதான், இதற்கு அவர் எழுதிய The Story of My Transportation for Life என்கிற புத்தகமே சாட்சி. 1927-ல் வெளிவந்த அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டது. 1947-ல் தடை நீங்கியது. சிறைக்குள்ளேயே மதரீதியான பிரிவினை வேலைகளைச் செய்தார் என்பது இந்த புத்தகத்தில் தெளிவாகிறது. சவார்க்கரின் நிலைப்பாட்டில் நிகழ்ந்த மாற்றத்திற்கு சிறையிலிருந்த முஸ்லிம் வார்டர்கள்தான் காரணம் என்று பொருள்படும்படி எழுதுகிறார் சவார்க்கர். எல்லா அரசியல் கைதிகளுக்கும் முஸ்லிம் வார்டர்கள்தான் இருந்தனர், இதனால் சக சிறைவாசிகளும், குறிப்பாக இந்துக்களும், துன்புறுத்தலுக்கு ஆளாயினர் என்கிறார்.

சிறைக்குள்ளும் மதம் மாறியவர்களைச் சுத்திகரிக்கும் ஷுத்தி இயக்கத்தை நடத்தியதாகவும், இது சிறைக்கு வெளியில் அந்தமான் தீவிலும் பரவியது என்கிறார். அவர் சொல்வது இதுதான்: “பாவிகளாகவும், கிரிமினல்களாகவும், சமூக விஷமிகளாகவும் இந்து சமூகத்தில் இருப்பவர்களை அந்தச் சமூகத்திற்குள்ளேயே வைக்க முயற்சிப்பது நேர விரயம், குழந்தைத் தனமானது என்று சொன்னால், ஆயிரம் ஆண்டுகளாக இந்து சமூகத்திற்குள் இருக்கும் சபிக்கப்பட்ட இந்தக் கீழ்மக்களை வென்றெடுக்க முஸ்லிம்கள் செய்யும் பிரச்சாரத்தை எப்படி விளக்குவது? முஸல்மான்கள் அதற்காகப் போர்களை நடத்தினர்; ஆண்களையும் பெண்களையும் வாளினால் கொன்றனர்; வீடுகளுக்குத் தீ வைத்துக்கொள்ளை அடித்தனர். சுருக்கமாகச் சொன்னால், பேரளவிலான மதமாற்றத்திற்காக அவர்கள் ஜிஹாத் என்கிற புனிதப் போரைப் பிரகடனம் செய்திருக்கின்றனர்.”

கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களின் மீது என் இதயத்தில் வெறுப்பில்லை; இவர்களிடையே இருந்து மற்றவர்களை ஒடுக்கி, வன்முறைக்குள்ளாக்கும் பிரிவினரை நான் முழுமனதுடன் எதிர்க்கிறேன் என்று சொன்ன சவார்க்கர் ஷுத்தி இயக்கத்தின் மூலம் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நிரந்தரமான ஒற்றுமையை உருவாக்குவேன் என்றும் ஒரு விசித்திரமான தர்க்கத்தை முன்வைக்கிறார். ‘சுத்திகரிக்கப்பட்டு’ மீண்டும் ‘தாய் மதத்திற்கு’ வருபவர்களை எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்வார் என்று அவர் சொல்லவும் இல்லை, சொல்லவும் மாட்டார்.

அவ்வப்போது அன்பொழுகப் பேசும் சவார்க்கர் இதே புத்தகத்தில் மீண்டும் ஒரு குட்டிக் கரணம் அடிக்கிறார். 1914-ல் முதல் உலகப் போர் துவங்கி விட்டிருந்தது. மத்திய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஜெர்மனி, ஆஸ்த்ரியா, ஹங்கேரி, பல்கேரியா, ஆட்டோமான் ஆட்சியிலிருந்த துருக்கி ஒருபுறமும், பிரிட்டன், ஃபிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, ருமேனியா, ஜப்பான், அமெரிக்கா எதிரிலும் நின்றிருந்தன.

துருக்கி பிரிட்டனுக்கு எதிரணியில் இருந்ததால் சவார்க்கருக்கு பயம் வந்து விட்டது. “துருக்கி ஜெர்மனியின் பக்கமும் பிரிட்டனுக்கு எதிராகவும் இருப்பதால், உலகம் முழுவதும் பரந்த இஸ்லாமியம் வந்து விடுமோ என்று எனக்கு சந்தேகங்கள் எழுந்து விட்டன. அதனால் இந்தியாவுக்கு அபாயம் நேரும். இந்தச் சூழலில் ஜெர்மனியின் நீண்ட கை இந்தியாவை நோக்கி நீண்டு, இந்தியாவிற்கு ஒரு சிக்கலான சூழலை உருவாக்கும் என்று நான் கண்டுபிடித்து விட்டேன். இது என் திட்டங்களுக்கு உகந்த சூழல்தான். ஏனெனில், பிரிட்டன் இந்தியா கேட்கும் எல்லா உரிமைகளையும் வழங்கி விடும். போரினால் பிரிட்டனும், ஜெர்மனியும் களைத்துப் போயிருக்கும் தருணத்தில் இந்தியாவே அந்த உரிமைகளப் பறித்துக் கொள்ளலாம். ஆனால் இரண்டு வலுவான நாடுகளுக்கிடையே கடுமையான சண்டை நடக்கும் இந்தச் சூழலை இந்தியாவிலிருக்கும் முஸ்லிம்கள் ஒரு சாத்தானின் வாய்ப்பாகக் கருதி வடக்கிலிருக்கும் முஸ்லிம் கும்பல்களை ரஷ்யாவின் உதவியுடன் அழைத்து வந்து சூறையாடி விடுவார்களோ என்கிற அச்சமும் எனக்கு இருக்கிறது,” என்கிற சவார்க்கர் பிரிட்டிஷ் அரசிடம் சரணாகதி அடைவதற்குத் தயாராகிறார். இதை எழுதுவதற்குச் சில ஆண்டுகள் முன்னர் முஸ்லிம்களை நண்பர்களாகவும், பிரிட்டிஷ் அரசை எதிரிகளாகவும் சித்தரித்த சவார்க்கர் சிறைவாசத்தின்போது அப்படியே நேர் மாறாக இடம் மாற்றிப் போட்டு விடுகிறார்.

விடுதலை செய்தால் ஏராளமானவர்களை இந்திய ராணுவத்தில் சேர்த்து ஆஃப்கானிஸ்தானத்திலிருந்தும், துருக்கியிலிருந்தும் நடக்கும் படையெடுப்புகளைத் தடுக்க தன்னாலான முயற்சிகள் அனைத்தையும் செய்வதாக பிரிட்டி அரசுக்கு உறுதி மொழி கொடுக்கிறார். பிரிட்டிஷ் அரசு இந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறார். தன் விடுதலைக்காக இப்படி எழுதிய சவார்க்கர் சக சிறைவாசிகளைக் குறித்து சொல்வதையும் பார்த்தால் ஆழமாக வேரூன்றியிருக்கும் அவருடைய போலித்தனம் வெளிப்படும். போர் செய்தியை அவர்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருப்பதற்கு ஆழமான காரணம் ஒன்றுமில்லை, விடுதலை கிடைக்கும் என்கிற சுயநலம்தான் காரணம் என்று சொல்கிறார். இவருடைய விடுதலை தேச நலனுக்காக; பிறருடைய விடுதலை சுயநலத்துக்காக. பாரத ரத்னாவுக்காகக் காத்திருக்கும் சவார்க்கரின் ஆவிக்கு வாழ்க்கை முழுவதும் இரட்டை வேடம்தான்!

படிக்க:
பிரிட்டிஷ் கைக்கூலியாகவும் தயார் ! என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் !
இராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் !

பிரிட்டனிடம் அவர் அளித்த உறுதிமொழிக்கு விடுதலை கிடைக்கவில்லையெனினும் உடனடி பலனாகப் பதவி உயர்வு கிடைத்தது. அவர் சிறையில் எண்ணெய் டிப்போவின் ஃபோர்மேனாக ஆக்கப்பட்டார். அவருடைய உடனடி இலக்கு முஸ்லிம் சிறைவாசிகள்தாம். “நான் ஃபோர்மேனாக ஆன பிறகு முஸ்லிம்களிடமிருந்து நான் என்ன எதிர்பார்த்தேன் என்று அவர்களுக்குத் தெரியும். இந்து முறைப்படி ‘ராமா ராமா’, ‘நமஸ்கார்’, ‘வந்தே மாதரம்’ முகமன் கூறுவதில் எனக்குப் பெருமிதம் இருப்பது அவர்களுக்குத் தெரியும். நான் எண்ணைய் டிப்போவின் தலைவராக்கப்பட்டேன் என்பதைக் கண்டு பயந்து நடுங்கிய அவர்கள் என்ன விலை கொடுத்தாவது என்னை தாஜா செய்வதற்குத் தயாராக இருந்தனர்.” இவர் வீர சவார்க்கர்தான்.

ஃபோர்மேன் ஆனவுடன் வார்டர்களை நீக்கி விட்டு இந்துக்களை அந்தப் பதவியில் நியமித்தார்.

அந்தமான் சிறை தொடர்பான ஆவணங்களில் தேசியத்திலிருந்து மதவாதத்திற்கு சிறைவாசிகள் (சவார்க்கர் தவிர) மாறியதாகவோ, இந்து சிறைவாசிகளை முஸ்லிம் வார்டர்கள் மோசமாக நடத்தியதாகவோ எந்தக் குறிப்பும் இல்லை என்று அறிஞர் ஏ.ஜி. நூரானி எழுதுகிறார்.

அந்தமானில் ஷுத்தி மற்றும் கல்வி தொடர்பான இயக்கங்களை மேற்கொள்ளத் தன் புதிய பதவி உதவியதாக சவார்க்கர் எழுதுகிறார். இந்தியைத் தேசிய மொழியாகப் பிரச்சாரம் செய்யவும் இதனால் வாய்ப்பு ஏற்பட்டதென்றும் கூறுகிறார்: “நாம் ஜெர்மானிய மொழியைக் கற்பது போலவே இந்தியையும் கற்க வேண்டும். ஆனால் ஒரு தாய்மொழியாகவோ அல்லது தேசிய மொழியாகவோ அந்தமானின் இந்து கலாச்சாரத்தில் இடமிருக்கவில்லை. அந்தமானுக்கு உருது தவிர வேறு மொழி தெரியவில்லை. இந்துப் பெண்கள் பேசிக்கொண்டிருக்கும்போதுகூட திருமணம் என்பதைக் குறிக்க ஷாதி என்கிற சொல்லைத்தான் இயல்பாகப் பயன்படுத்துகின்றனர். அதற்கு இணையான சமஸ்கிருதச் சொல்லையோ, இந்தி சொல்லையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் இன்று அற்புதமான ஒரு மாற்றம் அங்கு நிகழ்ந்திருக்கிறது. இந்துஸ்தான் மற்றும் இந்து கலாச்சாரத்தின் பாதுகாப்பையும் மேலாண்மையையும் பாதுகாத்து அந்தமானின் முக்கியத்துவத்தையும், எதிர்காலத்தையும் மேம்படுத்த வேண்டுமெனில் இந்தியும், நாகரியும் அங்கு கட்டாயமாக்கப்பட வேண்டும்” என்கிறார் அவர். இன்று வரை இவர்கள் மாறவில்லை.

பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் ரகசியமாக சமரசம் பேசிய சவார்க்கர் தன்னுடன் இருந்த பிற அரசியல் கைதிகளையும் இழிவுபடுத்துகிறார். அதிகாரிகளின் அழைப்புக்கும் கட்டளைக்கும் காத்திருந்த அவர்கள் அவர்களுக்கு அடிமை போலிருந்தனர் என்கிறார் இந்த வீர். இதைச் சொல்பவர் சவார்க்கரின் மீது பரிவு கொண்ட வரலாற்றியலாளர் ஆர்.சி. மஜூம்தார்.

“சவார்க்கர் இப்படிச் சொல்வது மிகவும் சீரியஸான குற்றச்சாட்டு. பிற அரசியல் கைதிகள் அப்படி நடந்து கொண்டனர் என்று சவார்க்கர் சொல்வதை உறுதி செய்ய நமக்கு வழியில்லை. சவார்க்கர் தன் கருத்தை நிரூபிக்க ஆதாரமும் கொடுக்கவில்லை” என்று மஜும்தாரே வருத்தப்படுகிறார்.

அதே மஜூம்தார் அந்தமான் சிறையில் நடந்த ஒரு வேலை நிறுத்தத்தின்போது சவார்க்கர் செய்த துரோகத்தையும் பதிவு செய்கிறார். 1916 முதல் 1920வரை அந்தமான் சிறையிலிருந்த ட்ரைலோக்ய நாத் சக்ரவர்த்தி தன்னுடைய சுயசரிதையில், “சவார்க்கரும் அவருடைய சகோதரரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு எங்களை ரகசியமாக ஊக்குவித்து விட்டுப் பின்னர் அவர்களே அதில் கலந்துகொள்ளவில்லை” என்று எழுதியிருப்பதை மஜூம்தார் சுட்டிக் காட்டுகிறார்.

இது குறித்து சவார்க்கர் அளித்த விளக்கம் இன்னமும் சிறப்பானது. “நாங்கள் பகிரங்கமாக வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்திருந்தால் அதை வாய்ப்பாகப் பயன்படுத்தி அதிகாரிகள் சிறை விதிகளின்படி எங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த சலுகைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டு என்னை மீண்டும் தனிமைச் சிறையில் அடைத்திருப்பார்கள். எனவே எங்களிடையே இருந்த இளைஞர்களும் வலுவானவர்களும் அந்தச் சுமையை ஏற்றுக் கொள்வதுதான் நல்லது. மேலும் இந்தியாவிற்குக் கடிதம் அனுப்பும் என் உரிமையும் பறி போயிருக்கும்” என்றார் வீர்.

கருணை மனு, சரணாகதி, ஒத்துழைப்பு :

ஆனால் இதையெல்லாம் விஞ்சும் வகையில் இருந்தது அவர் சிறையிலிருந்து எழுதிய மன்னிப்பு மனுக்களும் அதன் வாயிலாக பிரிட்டிஷ ஆட்சியாளர்களுடன் சமரசமும், அவர்களுடன் ஒத்துழைப்பதாக அவர் அளித்த உறுதிமொழிகளும்.

சிறைக்கு வந்து ஒரு ஆண்டு முடியும் முன்னரே பிரிட்டிஷ் அரசுக்கு ஒரு கருணை மனுவை அனுப்பினார் சவார்க்கர். ஆனால் அதில் என்ன எழுதியிருந்தார் என்கிற விவரங்கள் கிடைக்கவில்லை. இப்படி ஒரு மனுவை அவர் எழுதிய விவரமே நவம்பர் 14, 1913 அன்று எழுதிய மனுவிலிருந்துதான் தெரிய வந்தது. இரண்டாவது மனு இப்படிச் செல்கிறது:

“இறுதியாக, நான் 1911-ல் அனுப்பிய மன்னிப்பு மனுவை நல்ல மனது வைத்துப் படித்துப் பார்க்க வேண்டுமென்று மேன்மை தாங்கிய உங்களுக்கு நினைவுபடுத்தி அந்த மனுவை இந்திய அரசுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளலாமா? இந்திய அரசியலின் இன்றைய நிகழ்ச்சிப் போக்கில் அரசியலமைப்புச் சட்டரீதியான நிலைப்பாட்டை அரசாங்கம் முன்வைத்திருக்கிறது. 1906–07-ல் நிலவிய பதட்டமான, நம்பிக்கையற்ற இந்தியச் சூழலினால் ஏமாந்துபோய் நாங்கள் அமைதியான முன்னேற்றப் பாதையிலிருந்து விலகி முட்கள் மண்டிய பாதைகளில் சென்றது போல் இன்று, இந்தியா மற்றும் மனிதகுலத்தின் நன்மையை மனதில் கொண்ட யாரும் கண்ணை மூடிக் கொண்டு செல்ல மாட்டார்கள். எனவே, அரசாங்கம் அளவில்லாத அறத்தையும் கருணையையும் காட்டி என்னை விடுதலை செய்தால் நான் அரசியலமைப்பு சட்டரீதியான முன்னேற்றத்துக்காகவும், அந்த முன்னேற்றத்துக்கு முன்நிபந்தனையான ஆங்கிலேய அரசின்பால் காட்ட வேண்டிய விசுவாத்துக்காகவும் தீவிரமாக வாதிடுபவனாக இருப்பேன். நான் என் சக்திக்கு உட்பட்ட வகையில் எந்த விதத்தில் வேண்டுமானாலும் அரசுக்குச் சேவகம் செய்யத் தயாராயிருக்கிறேன். பெற்றோரின் வீட்டுக்குத் திரும்புவதைத் தவிர ஊதாரி மகனுக்கு என்ன வழி?”

மார்ச் 30, அன்று மீண்டும் ஒரு கருணை மனுவை அளித்தார் சவார்க்கர். அதில்,

“காலம் கடப்பதற்கு முன் என்னுடைய கோரிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஒரு இறுதி வாய்ப்பைத் தருமாறு” கெஞ்சினார். அரவிந்த கோஷின் சகோதரர் உட்பட தன் சக சிறைவாசிகளைக் காட்டிக் கொடுக்கும் வகையிலும் அதில் ஒரு வாசகம் இருந்தது.

“போர்ட்பிளேரில் இருக்கும்போதே அவர்கள் தீவிரமான சதி செய்ததாக ஒரு சந்தேகம் இருந்தது. அந்த வகையான தீவிரவாத சிந்தனையிலிருந்து நான் வெகுதூரம் தள்ளியிருக்கிறேன். கடந்த காலத்தில் என்னிடமிருந்த புரட்சிகர மன நிலையைப் பொறுத்த வரையில் நான் கூறுவது இதுதான். இப்போது மன்னிப்புக்காக மட்டுமின்றி, பல ஆண்டுகளுக்கு முன்பே நான் அரசுக்கு எழுதிய மன்னிப்புக் கடிதங்களில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணியை திரு மாண்டேகு தொடங்கியவுடனே அச்சட்டத்திற்கு ஆதரவாக இருக்கவும், அதற்கு இணங்கி நடக்கவும் உறுதியான எண்ணத்தில் இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறேன். மாண்டேகு சீர்திருத்தங்களும் அது குறித்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் செய்யப்பட்ட பிரகடனமும் என்னுடைய கருத்துகளை உறுதி செய்திருக்கின்றன; இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டப் படியான முன்னேற்றத்தை முறையாகச் செய்யும் முயற்சியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதென்றும் அதற்கு நான் ஆதரவாக இருப்பேனென்றும் பகிரங்கமாக உறுதியளித்திருக்கிறேன்.”

மேலும், “அரசியலமைப்புச் சட்டரீதியான பாதையில் நடப்பேன் என்கிற என் சீரிய நோக்கத்தை உண்மையுடன் வெளிப்படுத்துகிறேன்; என் அன்பையும், மரியாதையையும், பரஸ்பர உதவியையும் காட்டும் வகையில் பிரிட்டிஷ் ஆளுகைக்கு கை கொடுக்க எளியவனான நான் அனைத்து முயற்சிகளையும் செய்வேன். பிரகடனத்தில் கூறப்பட்டிருப்பது போல் அமையப் போகும் ஒரு பேரரசுடன் மனப்பூர்வமாக இணங்கி நடப்பேன்.”

இப்படிப் பேசும் சவார்க்கர், முடிவாகச் சொன்னது இதுதான்:

“அரசாங்கம் குறிப்பிட்டுச் சொல்லும் ஒரு உறுதியாக நிர்ணயம் செய்யப்பட்ட, நியாயமான காலம் வரை நானும் எனது சகோதரரும் அரசியலில் பங்கேற்க மாட்டோம் என உறுதிமொழி அளிக்க முற்றிலும் தயாராக இருக்கிறோம். இது தவிர, நாங்கள் விடுதலை செய்யப்பட்டவுடன் நிர்ணயம் செய்யப்பட்ட காலம் வரை ஒரு குறிப்பிட்ட பகுதியில் தங்கியிருப்பது, எங்கள் நடமாட்டங்களின் விவரங்களைப் போலீசுக்குத் தெரிவிப்பது, அரசின் பாதுகாப்பை உறுதி செய்யும் உண்மையான நோக்கத்துடன் விதிக்கப்படும் இத்தகைய நிபந்தனைகளை நானும் என் சகோதரரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம்.”

சவார்க்கரின் கருணை மனுக்களை அரசாங்கம் நிராகரித்தது. மே 2, 1921 அன்று சவார்க்கரும் அவருடைய சகோதரர் கணேஷும் இன்றைய மஹாராஷ்டிரத்திலுள்ள ரத்னகிரி சிறைக்கும், பின்னர் எரவாடா சிறைக்கும் மாற்றப்பட்டனர். இறுதியாக ஜனவரி 6, 1924 நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டார். அந்த நிபந்தனைகள்:

பம்பாய் கவர்னரின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், ரத்தினகிரி மாவட்டத்திற்குள்ளும், குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களிலும் அவர் தங்கியிருக்க வேண்டும்.; அரசாங்கத்தின் அனுமதியின்றியும், அவசரமாக இருந்தால் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அனுமதியின்றியும் மாவட்டத்தின் எல்லைகளைத் தாண்டிச் செல்லக் கூடாது; ஐந்து வருட காலத்திற்கு அரசாங்கத்தின் ஒப்புதலின்றி அரசியல் நடவடிக்கைகளில் தனிப்பட்ட முறையிலும், பொதுவாகவும் பங்கேற்கக் கூடாது; குறிப்பிட்ட இந்தக் காலம் முடியும் போது மீண்டும் இத்தகைய தடைகளை மீண்டும் பிறப்பிப்பது குறித்து அரசாங்கம் முடிவு செய்யும்.

அவரை விடுதலை செய்யும் ஆவணம் இப்படிக் கூறியது:

“இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக சவார்க்கர் ஏற்கனவே கூறிவிட்டார். மேலும் பின்வரும் அறிக்கையையும் அவர் சமர்ப்பித்தார் (அப்படிச் சமர்ப்பிப்பது அவருடையை விடுதலைக்கான நிபந்தனை அல்ல என்பதை அவருக்குத் தெளிவுபடுத்திய பின்னரும்): “என் வழக்கில் நேர்மையான விசாரணை நடந்து நியாயமான தண்டனை வழங்கப்பட்டது என்று நான் இதன் மூலம் பதிவு செய்கிறேன். கடந்து சென்ற நாட்களில் நான் நடத்திய வன்முறைச் செயல்களை நான் மனப்பூர்வமான வெறுக்கிறேன்; என் சக்தி முழுமையையும் பயன்படுத்தி சட்டத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் உயர்த்திப் பிடிப்பது என் கடமையென நினைக்கிறேன்; எதிர்காலத்தில் அரசியலமைப்புச் சட்டச் சீர்திருத்தங்களை வெற்றிபெறச் செய்வதற்கு எனக்கு அனுமதியளிக்கப்பட்ட அளவிற்கு உதவுவேன்.”

அந்தமானில் கொடுமைகளை அனுபவித்த சிறைவாசிகள் அவற்றை எப்படி எதிர்கொண்டனர்? அது குறித்து சவார்க்கரே இப்படிச் சொன்னதாக மஜும்தார் எழுதுகிறார்: “அவர்களில் ஒருவர் 60 வயதான சீக்கிய அரசியல் கைதி சர்தார் சோஹன் சிங். மற்றொருவர் ராஜபுத்திர இனத்தைத் சேர்ந்த பஞ்சாபிய இளைஞர் பிரித்வி சிங். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அவர்கள் ஒரு வாய் சோறு கூட இல்லாமல் 12 நாட்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கடைசியில் சிறை நிர்வாகம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோரின் அனைத்துக் கோரிக்கைகளும் அடங்கிய மனுவை அவர்களிடமிருந்து ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. இதைத் தொடர்ந்து சோஹன் சிங் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார். ஆனால் பிரித்வி சிங் மேலும் 12 நாட்களுக்குத் தன் போராட்டத்தைத் தொடர்ந்தார்.”

சிறையில் இருந்தபோதே சக சிறைவாசிகளைக் காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்து தன் விடுதலைக்கு ஏங்கிய சவார்க்கரின் அரசியல் வாழ்வு முழுவதும் அப்படியே தொடர்ந்தது. கொலைச் சதிகளில் பங்கேற்று அவை நிறைவேறும் தருணத்தில் தப்பித்துக் கொண்ட வரலாற்றினை இனி பார்ப்போம்.

படிக்க:
காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் கோட்சே – ஆதாரங்கள்
மோகன் பகவத்தின் இந்தியாவில் எல்லோருமே இந்து தான் : காஞ்சா அய்லய்யா

எய்தவன் இருக்க, சிக்கிக் கொண்ட அம்புகள்

மஹாரஷ்டிர மாநிலத்தின் நாசிக் மாவட்டத்திலிருக்கும் பாகூரில் மே 28, 1883இல் பிறந்த வினாயக் தாமோதர் சவார்க்கருக்கு பாபாராவ் என்றைழைக்கப்பட்ட கணேஷ், நாராயண் என்று இரு சகோதரர்கள். கல்லூரியில் படிக்கும்போது இவர்கள் நடத்திய அமைப்பின் பெயர் அபினவ் பாரத் சொசைட்டி. இந்திய சுதந்திரத்திற்காகப் போராடுவதுதான் அதன் நோக்கம்.

பாரிஸ்டர் பட்டப் படிப்புக்காக சவார்க்கர் லண்டன் சென்றிருந்த நேரத்தில் மஹாராஷ்டிராவில் அபினவ் பாரத் நடத்திய சிறிய வெடிகுண்டுத் தொழிற்சாலைகளும் கிடங்குகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஜூன் 8, 1909 அன்று தேசத் துரோக குற்றத்துக்காகக் கணேஷ் சவார்க்கர் கைது செய்யப்பட்டார். இது நடந்து சில நாட்களுக்குள்ளேயே வினாயக் சவார்க்கர் லண்டனில் இருக்கும் இந்தியா ஹவுஸில் தேசத் துரோக உரையாற்றியதாக உளவுத் துறை இந்தியாவில் பயங்கரவாதம் என்கிற தலைப்பில் தயாரித்த ஆவணம் கூறுகிறது. அந்த அறிக்கை மேலும் கூறியதாவது: “சவார்க்கர் இந்த உரையை ஆற்றிய 12 நாட்களுக்குள் பிரிட்டிஷ் அதிகாரியான கர்னல் சர் வில்லியம் கர்சன் வைலி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே ஆண்டு டிசம்பர் மாதம், கணேஷ் சவார்க்கர் மீது வழக்குத் தொடுத்த நாசிக் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் எம்.டி. ஜாக்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மூன்று பேருக்குத் தூக்கு தண்டனையும், 27 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப் பட்டது.” ஆயுள் தண்டனை பெற்றவர்களுள் ஒருவரான கணேஷ் சவார்க்கர் அந்தமான் சிறைக்கு அனுப்பப் பட்டார். (ஆர்.எஸ்.எஸ்.சின் ஸ்தாபர்களுள் ஒருவர் இவர்)

ஜுலை 1, 1909 அன்று வில்லியம் கர்சன் வைலியைச் சுட்டுக் கொன்றவர் மதன் லால் திங்க்ரா. அவருடைய உண்மையான இலக்கு முன்னாள் இந்திய வைஸ்ராயான கர்சன் பிரபுதான். கர்சன் பிரபு அதிர்ஷ்டவசமாகத் தப்பி விட்டார். லண்டனில் உள்ள இம்பீரியல் இன்ஸ்டிடியூட்டில் இந்திய தேசிய அசோஷியேஷன் என்கிற அமைப்பின் ஆண்டு விழாக் கூட்ட முடிவில் இந்தப் படுகொலை நடந்தது. சவார்க்கரின் வாழ்க்கை வரலாறை எழுதிய தனஞ்சய் கீர் திங்க்ராவைக் குறித்து இப்படி எழுதுகிறார்:

“மதன்லால், சவார்க்கரின் விசுவாசம் மிக்க ஆதரவாளர். வைலி கொலை செய்யப் படுவதற்குச் சில நாட்கள் முன்பு, அவர் உயிர்த் தியாகம் செய்வதற்கான நேரம் வந்து விட்டதா என்று சவார்க்கரிடம் கேட்டார். சவார்க்கரிடமிருந்து பொறித்து வைத்தது போல் பதில் வந்தது: ‘ஒரு தியாகி உறுதியோடும் தயாராகவும் இருந்தால் அதுவே உயிர்த் தியாகத்திற்கான நேரம் வந்து விட்டதென்பதையே உணர்த்துகிறது.’ இந்தியாவின் முன்னாள் வைஸ்ராயான கர்சன் பிரபுதான் திங்க்ராவின் உடனடி இலக்கு.”

1950இல் வெளிவந்தபோது சில உண்மைகளை அப்போது எழுதவில்லை. சவார்க்கர் இறந்த பிறகு ராபர்ட் பாய்ன் என்கிற எழுத்தாளரிடம் அவர் சொன்ன உண்மைகள் அதிர்ச்சியளிக்கக் கூடியவை. ராபர்ட் பாய்ன் அது குறித்து எழுதியது இதுதான்:

“வைலியின் படுகொலைக்குத் தானே காரணம் என்று தனஞ்சய் கீரிடம் அவர் கூறினார். நிக்கல் பட்டை வைத்த துப்பாக்கியை மதன்லால் திங்க்ராவிடம் கொடுத்த சவார்க்கர், “இந்த முறை தோற்றால் உன் முகத்தை என்னிடம் காட்டாதே,’ என்று கடுமையாகச் சொன்னார்… லண்டன் மாநகர போலீஸ் இந்தக் குற்றத்தில் சவார்க்கருக்குப் பங்கு இருக்கிறது என்று உறுதியான சந்தேகம் கொண்டிருந்தது ஆனால் அவரைத் தண்டிக்க போதுமான ஆதாரம் இல்லை. அவர் இறுதியாக தண்டிக்கப்பட்டது நாசிக்கில் நடந்த ஜாக்சன் கொலை வழக்கில்தான். அவருக்கு அந்தமான் சிறையில் ஆயுள் தண்டனை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.”

சவார்க்கர் உயிரோடிருக்கும் வரை முதல் இரண்டு கொலை வழக்குகள் தொடர்பாகத் தனக்குத் தெரிந்த உண்மைகளை எழுதாத கீர், அவர் இறந்த பிறகு வெளியிட்ட தன் புத்தகத்தின் இரண்டாவது பதிப்பில் (1966) இப்படிச் எழுதினார்: “திங்க்ரா இந்திய விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்யும் நாளுக்காக அவரைப் பல மாதங்கள் ஆயத்தப் படுத்தினார் சவார்க்கர். திட்டமிட்டபடி கர்சன் பிரபுவை திங்க்ரா கொல்லத் தவறியதை மீண்டும் மீண்டும் குத்திக் காண்பித்துக் கொண்டிருந்தார் அவர். சர் கர்சன் வைலி கொல்லப்பட்ட அன்று காலை திங்க்ராவிடம் ஒரு நிக்கல் பட்டை பதித்த துப்பாக்கியைக் கொடுத்த சவார்க்கர், ‘இந்த முறை நீ தவறினால் உன் முகத்தை என்னிடம் காட்டாதே,” என்று கூறினார். திங்க்ரா கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து தன்னை வழக்கிலிருந்து காப்பாற்றும் வகையில் எழுதப்பட்ட ஒரு தாள் கைப்பற்றப்பட்டது. அதில் சவார்க்கர் கைப்பட எழுதியது.

நாசிக்கில் ஜாக்சன் ஷாரதா என்கிற மராத்தி நாடகத்தைக் கண்டு கொண்டிருக்கும் அவரைச் சுட்டுக் கொன்றவர் ஆனந்த் கான்ஹேரே. அவருடன் கூட்டுச் சதியில் ஈடுபட்ட சிலரும் கைது செய்யப்பட்டனர். சாவர்க்கர் எழுதிய ஒரு கடிதமும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது. கான்ஹேரே பயன்படுத்திய ப்ரவுனிங் துப்பாக்கியும் சவார்க்கரிடமிருந்து வந்தது என்று தெரியவந்தது. மார்ச் 13, 1920 அன்று அவர் லண்டனில் கைது செய்யப் பட்டார். அவர்மீது வைக்கப் பட்ட குற்றச்சாட்டுகள்: இந்தியாவை ஆளும் பிரிட்டிஷ் அரசருக்கு எதிராகப் போர் தொடுத்தார்; பிரிட்டிஷ் இந்தியாவின் மீது அரசருக்கு இருக்கும் இறையாண்மையைப் பறிக்க சதி செய்தார்; ஆயுதங்களைச் சேகரித்து, வினியோகம் செய்து, ஜாக்சனைக் கொலை செய்யத் தூண்டினார், லண்டனில் அவர் தங்கியிருந்த காலத்தில் ராஜத்துரோக உரைகளை ஆற்றினார். இந்தியாவிலிருக்கும் தன் சகாக்களுக்கு 20 ப்ரவுனிங் துப்பாக்கிகளைக் கொடுத்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு இருந்தது.

அவரை இந்தியாவுக்குக் கொண்டு வந்த கப்பல் பிரான்சின் மார்செயில்ஸ் துறைமுகத்தில் நின்றிருந்தபோது இரண்டு காவலர்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு கப்பலின் பக்கவாட்டு ஜன்னல் வழியே தப்பித்தது அவர் ஒரு வீரராகப் புகழப்படுவதற்கு முக்கியக் காரணம். அவர் பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்கும் எண்ணத்துடன் நீந்திக் கரை சேர்ந்தவுடனே மீண்டும் கைது செய்யப்பட்டார். பம்பாய் உயர்நீதிமன்றத்தின் 69 நாட்கள் அவர் தொடர்பான இரண்டு வழக்குகள் நடந்தன. டிசம்பர் 24, 1910 அன்று வந்த முதல் வழக்கில் அவருக்கு அந்தமான் சிறையில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

அவரது சொத்துக்கள் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டாவது வழக்கில் ஜனவரி 23, 1911இல் வந்த தீர்ப்பின்படி 50 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. இரண்டு தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அவர் எழுப்பிய கோரிக்கை சிறைவாசத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் நிராகரிக்கப் பட்டது. ஜூலை 4, 1911இல் அவர் அந்தமானிலிருக்கும் போர்ட் பிளேயர் சிறைக்குக் கொண்டு வரப்பட்டார்.

விடுதலைப் போராட்டத்தில் தீவிரவாத நடவடிக்கை என்பதை ஏற்றுக் கொண்டாலும் அவர் மற்றவர்களின் கைகளில் ஆயுதங்களைக் கொடுத்து தான் தப்பிக்கும் வகையில் செயல்பட்டார் என்பதுதான் அவர்மீது குற்றச்சாட்டு. பகத்சிங், குதிராம் போஸ் போன்றோர் அவர்களே நேரடியாக தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டனர் என்பதை ஒப்பிடும்போதுதான் சவார்க்கரின் தந்திரம் தெளிவாகப் புரியும்.

(தொடரும்)

***

(இந்த நீண்ட கட்டுரையின் பெரும்பகுதி அறிஞர் ஏ.ஜி. நூரானி எழுதிய இரு புத்தகங்களிலிருந்து தொகுக்கப்பட்டவை. அவை: 1. Savarkar and Hindutuva: The Godse Connection; 2. The RSS: A Menace to India.

உயிர்மை இதழுக்காக நான் சவார்க்கர் குறித்து ஒரு கட்டுரை எழுதுவதற்கு இந்தப் புத்தகங்களிலிருந்து விவரங்களையும் மேற்கோள்களையும் எடுத்துக்கொள்ள மிகுந்த மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த அவருக்கு நன்றி. கட்டுரையில் இருக்கும் மேற்கோள்களின் மொழிபெயர்ப்பு என்னுடையது)

நவம்பர் 2019 உயிர்மை மாத இதழுக்கு ஆர்.விஜயசங்கர் அவர்கள் எழுதிய கட்டுரை.

disclaimer

காவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள் !

புதிய வெளியீடுகள் :

காவி – கார்ப்பரேட் பிடியில் சித்த மருத்துவம்

ந்திய ஒன்றியத்தின் பல்வேறு தேசிய இனங்கள் தத்தம் தனித்த தேசிய வளங்களுடன், அது சார்ந்த சமூக, பொருளியல் மற்றும் பண்பாட்டு உறவுகளுடன் இயங்கி வருகின்றன. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நகர நாகரீகம் கண்டு தழைத்தோங்கிய தமிழ்ச் சமூகம் அதன் ஊடாக மொழி, கல்வி, மருத்துவம், இலக்கியங்கள், அறிவியல், அறம் என தேர்ந்த பட்டறிவின் மூலம் பல்வேறு துறைகளில் பல நிலை முன்னேற்றத்தை கண்ட இனமாக இருந்தது என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.

தமிழினத்தின் முதன்மையான அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் நம் சித்த மருத்துவமும் இதையே பறைசாற்றுகிறது. இந்திய ஒன்றியத்தில் தனக்கென ஒரு தனி மருத்துவத்தைக் கடுமையான பார்ப்பனிய ஊடுருவலைத் தாண்டி, தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதில் தமிழ்ச் சமூகம் தனிச்சிறப்பை பெற்றிருக்கின்றது. “உணவே மருந்து, மருந்தே உணவு” என்ற வாழ்வியல் மருத்துவ அறநெறியை தனது மருத்துவத்தின் தனித்தன்மையாகக் கொண்டிருகின்ற சித்த மருத்துவம் எனும் தமிழ் மருத்துவம் இன்று எப்படி படிப்படியாக, கார்ப்பரேட் நலன்களுக்கு சமஸ்கிருதத்தின் வழி பலியிடப்படுகிறது என்பதை இந்நூல் சரியாக அம்பலப்படுத்துகிறது. ‘தமிழ்ச் சமூகம்’ எப்படி வாழ்ந்தது என்பதைவிட என்னவாக இருக்கின்றது என்ற பார்வையும், அதற்கான அரசியலும் மிக அவசியமானது.

முடக்கப்பட்டு வரும் தமிழ் மருத்துவத்தைக் காப்பதற்கு மருத்துவத்தைத் தொடர்ந்து நாசமாக்கி வரும் கார்ப்பரேட் காவி கட்டமைப்பை எதிர்த்து களம் காண்பதற்கு இந்நூல் ஒரு கருவியாகப் பயன்படும் என உறுதியாக நம்புகிறேன். இந்நூலை வெளிக்கொண்டு வந்திருக்கின்ற பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவிற்கு (நெல்லை) எனது வாழ்த்துக்கள். (தொ. பரமசிவன், (மேனாள் தமிழ் துறைத் தலைவர், ம. சு. பல்கலைக்கழகம், திருநெல்வேலி), அவர்கள் எழுதியுள்ள மதிப்புரையிலிருந்து…)

மருந்து நிறுவனங்கள் நோய்களுக்கான மருந்துகளை தயாரிப்பதற்கான அடிப்படை மூலக்கூறுகளை இயற்கையிடமிருந்தே பெறுகின்றன. அவற்றைத் தன்னுடையச் சொத்தாக அறிவுசார் சொத்துடைமைச் சட்டத்தின் மூலம் பாதுகாத்துக் கொள்வதின் வாயிலாகக் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. பல நூற்றாண்டுகளாக மனித சமூகம் இயற்கையுடன் நடத்திய போராட்டத்தின் மூலமும் நோய்களுக்கான சரியான மருந்துகளையும் உணவு முறைகளையும் கண்டறிவதற்கான போராட்டத்தின் மூலமும் பெற்ற அறிவை சித்த மருத்துவம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகள் பாதுகாத்து வைத்துள்ளன. அதனை நவீன அறிவியல் – தொழில்நுட்ப உதவியுடன் ஆராய்ந்து பெரும்பான்மை மக்களுக்கானதாக்க முடியும். எதார்த்தத்திலோ இந்திய மருத்துவச் சந்தை ஏகாதிபத்தியங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. சித்த மருத்துவமோ பார்ப்பனிய மேலாதிக்கத்தினால் தொடர்ந்து நசுக்கப்பட்டு கொண்டே வருகிறது. இந்தக் கார்ப்பரேட் – காவி கூட்டுப் பிடியிலிருந்து சித்த மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவத்தை மீட்பதென்பது பெரும்பான்மை மக்களுக்கான தரமான மருத்துவக் கட்டமைப்பை உருவாக்குவதில் ஒரு முக்கியப் பணியாகும். இவ்வகையில் இந்நூல் சித்த மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளும் இந்திய மருத்துவ சந்தையும் கார்ப்பரேட்- காவிக் கும்பலின் பிடியில் சிக்கியுள்ளது எவ்வாறு? என்பது பற்றிய கண்ணோட்டத்தை வாசகர்களுக்கு உருவாக்கும் என்று நம்புகிறோம்.

படிக்க :
சென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் !
கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புதிய நூல்கள் அறிமுகம் !

இந்நூலின் முதற்பகுதியில் இந்திய மருத்துவச் சந்தையை ஏகாதிபத்தியங்கள் கட்டுப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பகுதி சித்த மருத்துவம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவம் எவ்வாறு பார்ப்பனியமாக்கப்படுகிறது என்பதை விளக்குகிறது. இறுதியில் 1920, 1955-ம் ஆண்டுகளில் சித்த மருத்துவம் குறித்து பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூல் உருவாக்கத்திற்கு உறுதுணையாய் இருந்த பேராசிரியர்கள் மற்றும் நண்பர்களுக்கு CCCE-ன் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். (நூலின் பதிப்புரையிலிருந்து…)

பக்கங்கள் : 32
விலை: ரூ.25.00


நவீன காலனியாதிக்கத்தின் தோற்றம் !

காதிபத்திய காலனியாதிக்கத்தின் சூறையாடலுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் உலகெங்கும் தீவிரமடைந்து வரும் சூழலில், நவீன காலனியாதிக்கத்தைப் பற்றிய தொகுப்பான புரிதல் நமக்கு அவசியமாகியுள்ளது. இதற்கு உதவும் வகையில், மார்க்சிய அரசியல் – பொருளாதாரக் கண்ணோட்டத்தில், ஏகாதிபத்தியத்தின் நவீன காலனியாதிக்கத்தைப் பற்றி தோழர் பி.ஜே. ஜேம்ஸ் “நவீன காலனியக் கட்டத்தில் ஏகாதிபத்தியம்” (Imperialism in the Neo colonial Phase)  என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

இந்நூலின் முதல் அத்தியாயமான, நவீன காலனியாதிக்கத்தின் தோற்றம்” (Genesis of Neo colonialism) என்ற பகுதியை மட்டும் மொழியாக்கம் செய்து வெளியிடுகிறோம். இப்பகுதியைத் தமிழில் வெளியிட ஒப்புதல் அளித்த மாஸ் லைன் பதிப்பகத்தாருக்கு (Massline Publication) எமது நன்றி.

தோழர் ஜேம்ஸ் எழுதியுள்ள இந்நூலின் முதல் அத்தியாயமானது, நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவமும், முதலாளித்துவத்திலிருந்து ஏகாதிபத்தியமும் காலனியாதிக்கமும் வளர்ச்சியடைந்துள்ளதைப் பற்றி வரலாற்று ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் விரிவாகத் தொகுத்தளிக்கிறது. தலைமை தாங்கும் ஏகாதிபத்திய வல்லரசாக வளர்ந்துள்ள அமெரிக்காவின் காலனியாதிக்கக் காட்டுமிராண்டித்தனங்களையும், உலகையே அடிமைப்படுத்திவரும் நிதி மூலதனம் மற்றும் நிதியாதிக்கக் கும்பல்களின் வளர்ச்சியையும் விளக்குவதோடு, சமூக – பொருளாதாரக் கட்டமைப்பு என்ற வகையில் முதலாளித்துவத்தின் தோல்வியையும், கீனிசியவாதம் உள்ளிட்ட அதன் சித்தாந்த – கோட்பாட்டு ஓட்டாண்டித்தனத்தையும் அம்பலப்படுத்திக் காட்டுகிறது. முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், காலனியாதிக்கம் பற்றியும், அவற்றின் இரத்தம் தோய்ந்த வரலாறையும் கற்றறிய முயற்சிக்கும் இளைய தலை முறையினருக்கு, ஒருங்கிணைந்த கண்ணோட்டத்தைத் தரும் ஒரு பாடப்புத்தகம் போல இந்த அத்தியாயம் எளிமையாக விளக்குகிறது.

ஏகாதிபத்தியத்துக்கும் நவீன காலனியாதிக்கத்துக்கும் எதிராகப் போராடிவரும் புரட்சிகர – ஜனநாயக சக்திகளுக்கு இந்நூல் பெரிதும் பயனளிக்கும் என்று நம்புகிறோம். (நூலுக்கான பதிப்புரையிலிருந்து…)

தோழர் பி.ஜே.ஜேம்ஸ், தற்போது இ.பொ.க. (மா-லெ), ரெட் ஸ்டார் குழுவின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக இயங்கி வருகிறார். இதற்குமுன் அவர் பொருளாதாரத் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். கேரளத்தின் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் கல்விச்சாலையில் அவர் முனைவர்ர பட்டம் பெற்றுள்ளார். ”நேரு முதல் ராவ் வரை: இந்தியாவில் நவீன காலனியாதிக்கத்தின் நிகழ்முறை” (1995), ”உலகளாவிய நிதி ஒதுக்கலும் அரசுசாரா நிறுவனங்களின் வலைப்பின்னலும்: செயல்முறைத் திட்டத்தின் உண்மையான பணி” (2004) ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ரெட் ஸ்டார் இதழில் தொடர்ந்து அரசியல் – பொருளாதார – சித்தாந்தக் கட்டுரைகளை எழுதி வருகிறார். (நூலாசிரியரை பற்றிய அறிமுகக் குறிப்பிலிருந்து…)

(அச்சில்… விரைவில் விற்பனைக்கு)


சென்னை புத்தகக்காட்சியில் கீழைக்காற்று !

நாள் : 09.01.2020 முதல் 21.01.2020 வரை
நேரம் : வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி
இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை–35

கடை எண் : 182, 183

அனைத்து முற்போக்கு நூல்களும் ஒரே கூரையின் கீழ் உங்களுக்காக காத்திருக்கிறது …

புதிய முகவரி :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க