Saturday, June 20, 2026
முகப்பு பதிவு பக்கம் 324

என்ன கதைப்பது ? | அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்

ரு துறையில் பிரசித்தி பெற்றவரை திடீரென்று சந்தித்தால் வாயடைத்து நிற்பது என் வழக்கம். அப்படியிருக்க வீடு தேடிவந்த கொலைகாரனிடம் பேசவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அதை எப்படி சமாளிப்பது. அத்தோடு மொழிப்பிரச்சினை வேறு எனக்கு இருந்தது. இது நடந்தது பல வருடங்கள் முன்பு. இன்று அதையெல்லாம் தாண்டி நான் வந்திருந்தாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் யாருடனும் பேசுவதை கலையாகவே வளர்த்து வைத்திருக்கும் சிலரை காணும்போது ஏற்படும் பொறாமையை நிறுத்தமுடியவில்லை.

சமீபத்தில் ஒபாமா கனடா வந்திருந்தார். அவரை கனடிய ஆளுனர் விமானத்திலிருந்து இறங்கியதும் வரவேற்றார். அரை நிமிட நேரத்தில் இருவரும் சிரித்து சிரித்து பேசினார்கள். இதை தொலைக்காட்சி காமிராக்கள் உலகெங்கும் ஒளிபரப்பின. அவர்கள் என்ன பேசியிருப்பார்கள் என்பதை எவ்வளவு கற்பனை வளம் உள்ளவராலும் ஊகிக்கமுடியாது.

ஒருமுறை நான் நைஜீரியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் வோலே சோயிங்காவுடன் கைகுலுக்க நேர்ந்தது. ஒரு முழு நிமிடம் நான் ஒன்றுமே பேசவில்லை. அப்பொழுதே அவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றிருந்தார். அந்த தருணம் நழுவிப் போனது. ‘உங்கள் சிறைக் கவிதைகள் படித்தேன், நல்லாயிருந்தது’ என்று சொல்லியிருக்கலாமோ என்று பின்னர் பட்டது. ஆனால் யோசித்துப் பார்த்தபோது மௌனமாக இருந்ததே சரியென்று தோன்றியது.

உலகப் பிரபலமானவர்களை எதேச்சையாக சந்திக்கும்போது என்ன செய்யவேண்டும்? முதல் நிமிடத்திலேயே அவரை புகழக்கூடாது. சிலருக்கு அது அவமானமாகவும் கூச்சமாகவும் இருக்கும். எரிச்சலைக்கூடத் தரும். ‘உங்கள் புத்தகத்தை வாசித்தேன், அதுபோல ஒன்றை என் வாழ்நாளில் படித்தது கிடையாது என்று சொல்லலாமா?’ அதனால் அவருக்கு என்ன பிரயோசனம். அதிக பெறுமதி வாய்ந்த அவருடைய நேரத்தை பகிர்ந்துகொள்ளும்போது நீங்கள் சொல்வது அவருக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும்; அல்லது வித்தியாசமாகவாவது இருக்கவேண்டும். குறைந்த பட்சம் ஒரு சம்பாசணையை கிளப்புவதற்கான சுவாரஸ்யத்தையாவது தரவேண்டும்.

சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டுக்கு விருந்துக்கு போயிருந்தேன். அந்த நண்பர் எந்த விசயத்தையும், எந்த ஆளுடனும், எந்த சமயத்திலும் பேசுவதற்கு தயாராயிருப்பவர். அவருடைய அறிவு ஆழமில்லாதது, ஆனால் அகலமானது. மொழி தெரியாத எஸ்கிமோவை அவர் சந்திக்க நேர்ந்தால் சில நிமிடங்களில் எஸ்கிமோக்களுக்கு பிடித்த அஸாலீக் ரொட்டியை எப்படி மிருதுவாகச் செய்வது என்று அவர் கற்றுக் கொடுத்துக்கொண்டிருப்பார். அந்த நண்பர் விருந்து முடிந்த பின்னர் ஒரு புகைப்படத்தை எனக்கு காட்டினார். அதில் நண்பரும் இன்னொரு 75 வயது மதிக்கத்தக்க வெள்ளைக்காரரும் இருந்தனர். அந்த வெள்ளைக்காரர் ஒரு காலத்தில் உலகம் முழுவதற்கும் தெரிந்தவர். ஒரு கிராமத்து குழந்தைக்குக்கூட அவருடைய பெயர் பரிச்சயம், ஆனால் எனக்கு தெரியவில்லை. நண்பர் ‘அவர் நீல் ஆம்ஸ்ரோங், சந்திரனில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதர்’ என்றார்.

Neil-Armstrongநான் உடனே பரபரப்பாகி, அப்படியா எங்கே சந்தித்தீர்கள், என்ன பேசினீர்கள் என்று கேள்விகளை அடுக்கினேன். பொஸ்டனில் ஒரு கருத்தரங்கில் நீல் ஆர்ம்ஸ்ரோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அங்கே அவருடன் பேசுவதற்கு நண்பருக்கு சில நிமிடங்களை ஒதுக்கினார்கள். நண்பர் கேள்விகள் ஒன்றையும் முன்கூட்டியே தயாரித்திருக்கவில்லையாதலால் அந்தக் கணம் மனதில் தோன்றியதை கேட்டிருக்கிறார்.

நண்பர்: சந்திரனுக்கு போனது சரி, செவ்வாய் கிரகத்துக்கு மனிதன் பயணிப்பதற்கான ஆராய்ச்சிகள் நடக்கின்றனவா?

ஆர்ம்ஸ்ரோங்: நான் இதை உத்தியோகபூர்வமாகச் சொல்லமுடியாது. ஆனால் நாசாவில் அதற்கான ஆராய்சிகள் ஆரம்பமாகிவிட்டன. இன்னும் இருபது வருடங்களில் செவ்வாய் கிரகத்தை நோக்கி மனிதன் பயணம் செய்யக்கூடும்.

நண்பர்: முதன்முதலில் சந்திரனை நோக்கி பயணித்தபோது உங்களுக்கு பயம் இருந்ததா?

ஆர்ம்ஸ்ரோங்: இருந்தது, ஆனால் பயணம் பற்றிய பயம் அல்ல. சோவியத் யூனியன் விஞ்ஞானிகள் மனிதன் இல்லாத விண்கலம் ஒன்றை சந்திரனுக்கு அனுப்பி அங்கே நாங்கள் காலடி வைப்பதற்கு முன்னர் அவர்கள் கொடியை நாட்டுவதற்கு திட்டமிட்டிருந்தார்கள் என்ற செய்தி எங்களுக்கு கிடைத்தது. அது நடந்துவிடுமோ என்ற பயம் அந்த பயணம் முழுக்க எங்களிடம் இருந்தது. ஆனால் அப்படியொன்றும் நடக்கவில்லை.

நண்பர்: மறக்கமுடியாத சம்பவம் ஏதாவது?

ஆர்ம்ஸ்ரோங்: மறக்க முடியாதது அல்ல, துன்புறுத்திய சம்பவம். நாங்கள் சந்திரனில் இறங்கிய பிறகு உடனடியாக தரையில் கால் வைப்பது என்ற திட்டமில்லை. ஓய்வெடுத்த பிறகுதான் அதைச் செய்வதாக இருந்தோம். ஆனால் சந்திரனுக்கு போன பிறகு அதை மாற்றினோம். சந்திரனில் இரண்டரை மணி நேரம் நானும் என் சக விண்வெளிப் பயணி அல்டிரினும் சோதனைகள் நடத்தினோம். சந்திரன் தன்னைத்தானே சுற்ற 28 நாட்கள் எடுக்கும். சந்திரன் பூமியை சுற்றவும் அதேபோல 28 நாட்கள் எடுக்கும். ஆகையால் சந்திரனின் ஒரு பக்கம் எப்பவும் பூமியை பார்த்தபடியே இருக்கும். சந்திரனில் பகல் 28 நாட்கள் என்றால் இரவும் 28 நாட்கள். அங்கே காற்று இல்லாதபடியால் காலை மாலை என்றெல்லாம் கிடையாது. வெப்பமோ தாங்கமுடியாது, 102 டிகிரி செண்டிகிரேட். அந்தக் காலத்து விண்வெளி உடை கார் ரேடியேற்றர் போல தண்ணீரை சுற்றி அனுப்பி உடம்பை குளிரவைக்கும். ஆனால் அது போதாது. உடம்பு கொதித்தபடி இருந்தது. என்னால் ஓய்வெடுக்க முடியவில்லை; தூங்கமுடியவில்லை. அந்த உடைதான் என்னை இம்சைப்படுத்தியது.

படிக்க:
பகவத்கீதையை திணிக்காதே ! மதுரை ஆர்ப்பாட்டம் – தோழர்கள் கைது !
♦ சட்டவிரோதமான காரியம் | அ. முத்துலிங்கம்

ஒருவித ஆயத்தமும் இல்லாமல் நீல் ஆர்ம்ஸ்ரோங்குடன் இந்த சம்பாசணையை நண்பர் நடத்தியிருக்கிறார். எனக்கு இப்படியான வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்திருப்பேன் என்று யோசித்து பார்த்தேன். ஒன்றுமே மனதில் உடனடியாக தோன்றவில்லை. ஆற அமர சிந்தித்தபிறகு நான் ஆம்ஸ்ரோங்கிடம் இப்படி கேட்டிருக்கலாம் என்று பட்டது. ‘விண்வெளி பயிற்சிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது நீங்களும் அனுப்பினீர்கள் ஆனால் உங்கள் விண்ணப்பம் ஒருவாரம் பிந்தி, முடிவுதேதி கடந்தபிறகு போய்ச் சேர்ந்தது. டிக்டே என்பவர் உங்கள் விண்ணப்பத்தை ரகஸ்யமாக எடுத்து ஏற்கனவே வந்திருந்த விண்ணப்பங்களுக்கு நடுவில் செருகிவிட்டார். ஆகவே நீங்கள் பயிற்சிக்கு தேர்வானீர்கள். எப்போதாவது நீங்கள் டிக்டேக்கு நன்றி சொன்னீர்களா?’ என்று கேட்டிருக்கலாம். ஆனால் உடனுக்குடன் மனதில் தோன்றியதைக் கேட்டு ஒரு சம்பாசணையை சரியான திசையில் செலுத்துவது என்பது என் நண்பர் போன்றவர்களுக்கே சாத்தியமானது.

padminiபிரபலமான ஒருவரைக் கண்டு மௌனமாக இருப்பதிலும் பார்க்க மோசமானது அவரிடம் மோசமான கேள்விகளைக் கேட்பது. நடிகை பத்மினி ஒருமுறை கனடாவுக்கு வந்திருந்தார். ஐம்பது வயதான ஒரு பெண்மணி விமான நிலையத்துக்கே வந்துவிட்டார், அவரை வரவேற்க. அவருக்கு பத்மினியை முன்பின் தெரியாது. ஆனால் அதற்காக அந்தப் பெண்மணி அதிகாலையிலேயே எழுந்து மிகையான ஒப்பனை செய்ததில் முகம் ஒரு நிறத்திலும், கழுத்தும் கைகளும் வேறு நிறத்திலும் இருந்தன. முதல் நாள் இரவே காசுகொடுத்து தலையலங்காரம் செய்து கதிரையில் உட்கார்ந்தபடியே இரவு தூங்கியதாகச் சொன்னார். இந்தப் பெண்மணி தன் மனதில் பத்மினியிடம் கேட்பதற்கான ஒரு கேள்வியை முப்பத்தைந்து வருடங்களாக காவி வருகிறாராம். பத்மினி கனடா மண்ணில் காலடி வைத்து சரியாக அரை மணி நேரம்கூட கழியும் முன்னர் அவரிடம் இந்த நடுத்தர வயது பெண் கேட்ட கேள்வி: ‘நீங்கள் ஏன் சிவாஜியை கல்யாணம் செய்துகொள்ளவில்லை?’

நான் பிரபலமானவர்களை தேடிப் போய் சந்திக்கும்போது எப்படியும் ஒரு வித்தியாசமான கேள்வியை கேட்டு சம்பாசணையை தொடங்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். அப்படிக் கேட்டால்தான் அவருக்கும் கேள்விக்கு பதில் சொல்வதற்கான ஒரு சுவாரஸ்யம் ஏற்படும். கனடாவில் வசிக்கும் பிரபல எழுத்தாளர் மார்கிரட் அட்வூட்டை சந்தித்தபோது நான் முதல் கேள்வியாக அவருடைய புத்தகத்தைப் பற்றிக் கேட்கவில்லை. அவருடைய சிவப்பு சுருண்ட தலைமுடியை பற்றிய கேள்வியை எழுப்பினேன். ‘இளவயதில் இருந்து இன்றுவரை உங்கள் தலைமுடி ஸ்டைல் மாறவில்லை. இதை பராமரிப்பதற்கு ஏதாவது விசேஷமாக செய்வீர்களா?’ இதுதான் கேள்வி. அவருடைய முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியை அப்போது பார்த்திருக்கவேண்டும்.

அவர் ‘இந்த முடி என்னுடைய ஐரிஷ் மூதாதையர் மரபில் வந்தது. நான் அதை பராமரிக்க சிரமப்பட்டு ஒன்றுமே செய்ததில்லை. அதன் வளர்ச்சியில் நான் குறுக்கிடாமல் இருக்கிறேன். அவ்வளவுதான்’ என்றார். அதற்கு பிறகு மீதி கேள்விகளை இலகுவாக தொடர முடிந்தது. அதே மாதிரிதான் Zana Brisky யும். 2005-ம் ஆண்டு அவர் இயக்கிய Born into Brothels விவரணப்படத்துக்கு ஒஸ்கார் விருது கிடைத்தது. நான் அவரிடம் ‘விருதுச் சிலையை நீங்கள் எங்கே வைப்பீர்கள்? வீட்டிலா அலுவலகத்து மேசையிலா, வங்கி லொக்கரிலா?’ என்று கேட்டேன். அவர் அலுவலகத்து மேசை என்று சொல்லிவிட்டு சிரித்தார். அதன்பிறகு சம்பாசணை தடையின்றி ஓடியது.

படிக்க:
நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு | அ முத்துலிங்கம்
♦ மோடி வரும் பின்னே ! #gobackmodi வரும் முன்னே !

எனக்கு தெரிந்த ஒரு விஞ்ஞானி அமெரிக்காவில் ஒரு கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் பில் கேட்ஸ் உரையாற்றினார். இந்த விஞ்ஞானியும் பேசினார். அவர்களுக்கிடையில் சில அடிகள் தூரமே இருந்தது. ‘நீங்கள் பில் கேட்சிடம் ஏதாவது பேசினீர்களா?’ என்று கேட்டேன். அவர் ‘இல்லை, என்ன பேசுவது. விண்டோஸ் என்னுடைய கணினியில் நன்றாக வேலை செய்கிறது என்று சொல்வதா?’ என்றார். ‘என்ன இப்படிச் செய்து விட்டீர்கள்? பில் கேட்ஸ் நிலத்துக்கு அடியில் வீடு கட்டி வாழ்கிறார். அவர் வீட்டு கூரையில் புல் முளைக்கிறது. அதுபற்றி கேட்டிருக்கலாமே’ என்றேன். நண்பரோ ‘நீங்களே அடுத்தமுறை அதை அவரிடம் நேரில் கேளுங்கள்’ என்று பதில் இறுத்தார்.

உலகப் புகழ் பெற்றவர்களை சந்திப்பதற்கு அருமையான இடம் பறக்கும் விமானம்தான். நான் ஒன்றிரண்டு பேரை விமானத்திலேயே சந்தித்திருக்கிறேன். விமானத்தில் அவர்கள் அகப்பட்டால் அவர்கள் உங்களிடமிருந்து தப்பி ஓட முடியாது. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் அல்லது தூங்குவதுபோல பாசாங்கு செய்யலாம். தூங்கினாலும் தூக்கம் கலைந்து எழும்பும்போது மீண்டும் தொடரலாம். ஒருமுறை பக்கத்தில் அமர்ந்த எழுத்தாளர் ஒருவரிடம், ‘நீங்கள் ‘எனக்கு இன்று சுகமில்லை, ஆகவே கவிதை எழுத முடியாது. நான் கட்டுரைதான் எழுதுவேன்’ என்று சொன்னீர்களாமே? அது உண்மையா?’ என்று கேட்டேன். அவர் அப்படி சொன்னதே கிடையாது. அவர் ‘உண்மையில்லை’ என்று சொல்வார் அல்லது வேறு பதில் கூறுவார். எப்படியும் ஒரு சம்பாசணை ஆரம்பமாகிவிடும்.

இப்பொழுதெல்லாம் பயணம் செய்யும்போது சில கேள்விகளை தயாராக வைத்திருக்கிறேன். தற்சமயம் உலகத்தில் நடிப்பிற்கு அதிக சம்பளம் வாங்கும் அஞ்சலினா ஜூலியை விமானத்தில் தற்செயலாக சந்தித்தால் அவரிடம் கேட்பதற்குகூட என்னிடம் கேள்விகள் உள்ளன. ‘உங்கள் பெயரில் ஆண் பெயர் இல்லை, இரண்டுமே பெண் பெயர்கள். அதற்கென்ன காரணம்? என்று கேட்கலாம். அல்லது ‘நீங்கள் இளம் பெண்ணாக இருந்தபோது கோபம் வரும் சமயங்களிலெல்லாம் உங்கள் கைகளில் நீங்களே கத்தியால் வெட்டிக்கொள்வீர்களாமே. இப்பொழுதும் அப்படி செய்வதுண்டா?’

இந்தக் கேள்வியை, அஞ்செலினா ஜூலி சாப்பிட்டு முடித்தபின்னர் விமானப் பணிப்பெண் அவருடைய கரண்டிகளையும், கத்திகளையும் திரும்ப பெற்றுக்கொண்டு போய்விட்டார் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே கேட்பேன். அதற்கு பதிலாக அவர் என்ன சொன்னாலும் அடுத்தநாள் அது பத்திரிகை செய்திதான்.

ஒரு கேள்வியே தயாரிக்க முடியாத ஒருவர் உடனுக்குடன் பதில் சொல்வதென்பது எவ்வளவு கடினமான காரியம். முந்திய பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதங்கள் காரசாரமாக நடக்கும். சுடச்சுட பதிலடி கொடுப்பார்கள். அதையெல்லாம் புத்தகங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை மேற்கோள் காட்டப்படும் சாமர்த்தியமான வாசகம் ஒன்றுள்ளது. ஜோன் வில்க்ஸ் என்பர் எழுத்தாளர், அத்துடன் அரசியல்வாதி. ஒருமுறை அவருடைய எதிரி அவரைப் பார்த்து இப்படி வசை பாடினார். ‘நீ ஒன்றில் தூக்கில் தொங்குவாய் அல்லது மேகநோய் பிடித்து சாவாய்.’ வில்க்ஸ் மூக்குப்பொடி போடும் வழக்கமுள்ளவர். அவர் பொடியை எடுத்து சாவதானமாக மூக்கினுள் உறிஞ்சிவிட்டு இப்படி பதிலடி கொடுத்தார். ‘அது சொல்ல முடியாது. நான் உம்முடைய கொள்கையை தழுவுகிறேனா அல்லது உம்முடைய ஆசைநாயகியை தழுவுகிறேனா என்பதில்தான் அது தங்கியிருக்கிறது.’ உடனுக்குடன் பேசி எதிரியை முறியடிப்பது என்பது ஒரு கலை.

தயாரிப்பு இல்லாமல் பேசும் அறிவு பல வருடங்களுக்கு முன்னர் என்னிடம் இல்லை. ஒரு முழுக் கொலை செய்தவனுடன் இந்த உலகத்தில் எத்தனை பேர் உரையாடியிருப்பார்கள். ஒரு காலத்தில், 50 வருடங்களுக்கு முன்னர், கரோலிஸ் என்ற பெயர் இலங்கையில் பிரசித்தம். காலையில் தினப் பத்திரிகையை திறந்தால் அவனுடைய பெயரும் படமும் முதல் பக்கத்தில் இருக்கும். அந்தப் பிரபலத்துக்கு காரணம் கரோலிஸ் தன் மனைவியை கொலை செய்தவன். அவனுடைய வழக்கு தீர்ப்பு வெளியாகும்வரை அவன் பெயர் பேப்பர்களில் அடிபட்டது. அவனைக் குற்றவாளி என்று கண்ட நீதிமன்றம் அவனுக்கு தூக்கு தண்டனை விதித்தது. பிறகு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

நான் மணமுடித்து இரண்டு வருடங்கள் ஆனபிறகு ஒரு நாள் நானும் மனைவியும் மாடியில் நின்றுகொண்டிருந்தோம். எங்கள் ஆறுமாதக் குழந்தை உள்ளே தூங்கியது. அப்பொழுது தூரத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருத்தன் நடந்து வருவது தெரிந்தது. வெள்ளைச் சாரம், வெள்ளை சேர்ட், கறுத்த அகலமான பெல்ட். அவனைப் பார்த்துவிட்டு என் மனைவி ‘ஐயோ கரோலிஸ்’ என்று கத்திவிட்டு உள்ளே ஓடினார்.

படிக்க:
குரல் இருக்கிறது | அ.முத்துலிங்கம்
♦ நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல !

நான் எதிர்பார்த்த மாதிரியே கரோலிஸ் வந்து எங்கள் வீட்டு கதவு மணியை அடித்தான். நான் திறப்பதா வேண்டாமா என்று தயங்கிவிட்டு கதவை திறப்பதற்காக கீழே இறங்கினேன். நான் மணமுடிப்பதற்கு முன்னர் என் மனைவி வீட்டில் கரோலிஸ் டிரைவராக வேலை பார்த்தவன். மனைவியுடைய நாலு வயதில் இருந்து அவருடைய 14 வயது வரை, பத்து வருடங்கள் காலையில் பள்ளிக்கூடத்துக்கு ஏற்றிப் போவதும் மாலையில் திரும்ப அழைத்து வருவதும் அவன் பொறுப்பு. நேர்மையானவன், நம்பிக்கையானவன், குணசீலன் என்று பேரெடுத்தவன். அவன்தான் தன் மனைவியை நடு ரோட்டில் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அது போதாமல் என் மனைவி வீட்டுக் காரை இரண்டுமுறை அவள் மேல் ஏற்றி அவள் செத்துப்போய்விட்டதை நிச்சயம் செய்தவன். இந்த தகவல்கள் எல்லாம் நீதிமன்றத்து விசாரணையில் வெளிவந்தன. பன்னிரெண்டு வருடங்கள் கழித்து ஆயுள் தண்டனையை முடித்துவிட்டு கரோலிஸ் வெளியே வந்திருந்தான்.

நான் கதவை திறந்தபோது அவன் இன்னொரு முறை மணியை அடிப்பதற்காக ஒருகையை தூக்கியபடி நின்றான். என்னைக் கண்டதும் அதே கையை மற்றக் கையுடன் சேர்த்து வணக்கம் என்றான். அவன் புறங்கைகளில் மயிர் எக்கச்சக்கமாக முளைத்து காணப்பட்டது. வாய் ஓரம் வெடித்து சிவப்பாக இருந்தது. நானும் வணக்கம் கூறினேன். என்னை அவனுக்கு தெரியாது, நான் மணமுடித்தபோது அவன் சிறையில் இருந்தான். ஆனால் ஊகித்திருப்பான். அவனுக்கு எவ்வளவு தமிழ் தெரியுமோ அதே அளவுக்கு எனக்கு சிங்களம் தெரிந்தது. என் மனைவி நல்லாக சிங்களம் பேசுவார், ஆனால் அவர் மாடி அறை ஒன்றில் நடுக்கத்துடன் ஒளித்துக்கொண்டிருந்ததால் எனக்கு உதவ யாரும் இல்லை. கரோலிசும் வந்த காரியத்தை முடிக்காமல் போகமாட்டான் போல இருந்தது. கரோலிஸ் தன் இடது தோளைப் பார்த்தபடி அடுத்து பேசிய வசனம் முக்கியமானது.

‘பேபி சுகமாய் இருக்கா?’

‘இப்ப தூங்குது. எழும்பியதும் தூக்கிக்கொண்டு வந்து காட்டுறன்.’

என் மனைவி குழந்தையாக இருந்த காலத்திலிருந்து கரோலிஸ் அவரை தூக்கி தோளில் வைத்து விளையாடியிருக்கிறான். அவன் பேபி என்று சொன்னது என் மனைவியைத்தான். தாகூரின் இன்னொரு காபூலிவாலா கதை. சின்ன பேபியும் பெரிய பேபியும் அறையைவிட்டு வெளியே வரவில்லை. ஒரு கொலைகாரனுடன் நான் தனியே விடப்பட்டேன். அவனுடன் என்ன பேசுவது, என்ன பேசாமல் விடுவது என்பது எனக்கு தெரியவில்லை. சாவியை நுழைத்து யாரோ கார் எஞ்சினை முடுக்கிவிட்டதுபோல என் நெஞ்சு டுக்கு டுக்கென்று அடித்தது. அடுத்த ஒரு மணிநேரம் சம்பாசணையை முடிவுக்கு கொண்டுவர நான் என்ன என்னவெல்லாமோ தந்திரங்கள் செய்யவேண்டியிருந்தது.

அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு :
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

பொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 38

பொருளியலாளர் பிராங்க்ளின்

அ.அனிக்கின்

ழைப்பளவை மதிப்புத் தத்துவத்தை ஆடம் ஸ்மித் தன்னுடைய நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தில் வகுத்துரைத்தார். ஆனால் அவருக்கு முன்பே சுமார் ஒரு நூற்றாண்டுக் காலம் முழுவதும் அநேகமாகத் தெளிவில்லாத ஊகங்கள் என்ற வடிவத்தில் அதன் மூலத்தைப் பலருடைய எழுத்துக்களில் காண முடியும். அரசியல் பொருளாதாரத்தில் பிராங்க்ளின் அதிகமான அளவுக்குப் பெட்டியைப் பின்பற்றியவர் என்றுதான் கூற வேண்டும்.

முதல் தடவை அவர் லண்டனுக்கு வருகை தந்த பொழுது பெட்டியின் புத்தகங்களைப் படித்திருக்கலாம். ஒருவேளை டாக்டர் மான்டெவில் துறுதுறுப்பான கேள்விகளைக் கேட்ட பத்தொன்பது வயது இளைஞனிடம் அவற்றைப் படிக்குமாறு சிபாரிசு செய்திருக்கலாம். சீப்ஸைட் என்ற இடத்தில் “கொம்புகள்” என்ற மதுக்கடையில் தேனீக்களின் கதையை எழுதிய டாக்டர் மான்டெவில் தனக்கு அறிமுகம் செய்யப்பட்டதாக பிராங்க்ளின் எழுதியிருக்கிறார்.

சில அறிஞர்கள் பிராங்க்ளினுடைய கருத்துக்களை அவருடைய சம காலத்தவர்களில் வயதால் மூத்தோரில் ஒருவரான டேனியல் டிஃபோவோடு – குறிப்பாக அவர் எழுதிய திட்டங்களைப் பற்றிய கட்டுரையோடு தொடர்புபடுத்துகிறார்கள்.

பல ஆராய்ச்சியாளர்கள் பிராங்க்ளின் மீது பெட்டி தாக்கம் செலுத்தியதாகக் கருதுகிறார்கள்; இவர்கள் பிராங்க்ளின் எழுதிய முதல் பொருளாதாரக் கட்டுரையை (காகிதப் பணத்தின் தன்மை, அவசியத்தைப் பற்றி ஒரு எளிமையான ஆராய்ச்சி) பெட்டியின் நூல்களோடு ஒப்பிடுகிறார்கள்.

1751-ம் வருடத்தில் பிராங்க்ளின் மக்கள் தொகை இயலை பற்றி ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதினார். இந்தக் கட்டுரை பொருளாதார இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இக்கட்டுரையிலும் பெட்டியின் தாக்கத்தைக் காண முடியும். அவருடைய கட்டுரைகளில் பிராங்க்ளின் அமெரிக்காவின் மாநிலங்களில் நடைமுறையில் இருந்த நிலைமைகளைப் பயன்படுத்தி வெளித்தலையீடு இல்லாமல் ”இயற்கையான நிலைமையில்” ஒவ்வொரு இருபத்தைந்து வருட காலத்திலும் மக்கள் தொகை இரண்டு மடங்காக அதிகரிக்க முற்படுகிறது என்ற சுவாரசியமான கருத்தை வெளியிட்டார். பிற்காலத்தில் மால்தஸ் இந்த மதிப்பீட்டைப் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கைக்கு அவசியமான பொருள்களின் உற்பத்தி மக்கள் தொகைப் பெருக்கத்தைக் காட்டிலும் ஆபத்தான வகையில் குறைவாகவே இருக்கும் என்றார்.

Benjamin_Franklin-Daniel_Defoe-political-economy
டேனியல் டிஃபோ (இடது) மற்றும் பெஞ்சமின் பிராங்க்ளின்.

எனினும் மால்தசின் கருத்துக்களில் இருந்த வரலாற்று ரீதியான நம்பிக்கையின்மைக்கும் பிராங்க்ளினுக்கும் முற்றிலும் சம்பந்தமில்லை. அதோடு பகுத்தறிவுக்குப் பொருத்தமான வகையில் சமூகத்தை அமைத்துக் கொண்டால், வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை ஏராளமான அளவில் உற்பத்தி செய்ய முடியும் என்று அவர் நம்பினார். அமெரிக்காவின் மக்கள் தொகை அதிகமாகப் பெருக வேண்டும், அதுவே அந்தப் புதிய கண்டத்தின் வளர்ச்சிக்கு அவசியமான முன் தேவை என்றும் கருதினார்.

கிரேட் பிரிட்டனைப் பற்றி அவர் பின்வருமாறு எழுதினார்: “… இந்த தீவினால் இப்போதுள்ள எண்ணிக்கையினரைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமான பேர்களை – அவர்களை வேலையில் ஈடுபடுத்த முடியுமென்றால் – காப்பாற்ற முடியும்.(1)

பெட்டியைப் போலவே பிராங்க்ளினும் அதிக ஸ்தூலமான வேறொரு பிரச்சினையைப் பற்றி வாதாடுகிற பொழுது உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தை வகுத்துரைத்தார். அவர் பிடிவாதமிக்க குவேக்கர்களின் மூளையில் காகிதப் பணத்தை உபயோகிக்கும் கருத்தைத் திணிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். அன்று விலையுயர்ந்த உலோகங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தபடியால் இது குறிப்பிடத்தக்க முக்கியமான பிரச்சினையாக இருந்தது.

படிக்க:
பங்குச் சந்தை 2 : செலவழித்தால் பணம் – பெருக்கினால் மூலதனம் !
♦ யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை !

இதைச் செய்வதற்கு அவர் முதலில் உலோகப் பணத்தை, அது வகித்த உயர்வான இடத்திலிருந்து, கீழே இறக்க வேண்டும். இங்கே அவருடைய வாதம் பெட்டியின் கருத்துக்களைக் காட்டிலும் ஜான் லோவின் உணர்ச்சிமிக்க வாதங்களை நினைவுபடுத்துகிறது. மதிப்பின் உண்மையான அளவுகோல் பணம் அல்ல, உழைப்பே என்பது பிராங்க்ளினுடைய முக்கியமான கருத்தாகும். அவர்பின் வருமாறு எழுதுகிறார். ”வெள்ளியின் மதிப்பும் மற்ற பொருள்களின் மதிப்பும் உழைப்பின் மூலமாகவே அளக்கப்படும். ஒரு மனிதன் தானிய உற்பத்தியிலும் இன்னொருவன் வெள்ளியை வெட்டியெடுத்து அதை சுத்தப்படுத்துவதிலும் உழைப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு வருடத்தின் அல்லது வேறு ஏதாவது காலப்பகுதியின் முடிவில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த தானியத்தையும் வெள்ளியையும் எடுத்துக் கொள்வோம். ஒன்று மற்ற பொருளின் இயற்கையான விலையாகும்; ஒன்று இருபது புஷல் அளவும் மற்றது இருபது அவுன்ஸ் அளவும் இருக்குமானால், ஒரு அவுன்ஸ் வெள்ளி ஒரு புஷல் தானியத்தை உற்பத்தி செய்த உழைப்பின் மதிப்பைக் கொண்டிருக்கிறது. முன்னைக் காட்டிலும் அருகில் அதிக சுலபமாக வெட்டி எடுக்கக் கூடிய அல்லது வெள்ளி அதிகமாகக் கிடைக்கின்ற சுரங்கங்கள் கண்டு பிடிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். ஒரு நபர் முன்பு இருபது அவுன்ஸ் வெள்ளி கிடைப்பதற்குச் செலவிட்ட அதே உழைப்புக்கு இப்பொழுது நாற்பது அவுன்ஸ் வெள்ளி கிடைக்கிறது. முன்பு இருபது புஷல் தானியத்தை உற்பத்தி செய்யச் செலவிடப்பட்ட அதே உழைப்பு இப்பொழுதும் தேவைப்படுகிறது. அப்படியானால் இரண்டு அவுன்ஸ் வெள்ளியின் மதிப்பு ஒரு புஷல் தானியத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவையான அதே உழைப்பைக் காட்டிலும் அதிகமான மதிப்பைப் பெறுவதில்லை. ஒரு புஷல் தானியம் முன்பு ஒரு அவுன்ஸ் வெள்ளிக்கு மலிவாகக் கிடைத்தது போல இப்பொழுதும் இரண்டு அவுன்ஸ் வெள்ளிக்குக் கிடைக்கும்.”(2) 

மார்க்ஸ் தம்முடைய அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை என்ற புத்தகத்தில் இந்தப் பகுதியை மேற்கோள் காட்டுகிறார், விஞ்ஞானத்துறையில் பிராங்க்ளினுடைய சேவைகளை மார்க்ஸ் இந்தப் புத்தகத்தில் முதல் தடவையாக, மிகவும் முழுமையாக வர்ணிக்கிறார். பிராங்க்ளின் மதிப்புத் தத்துவத்தை , ”நவீன அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படையான விதியை வகுத்துக் கொடுத்தார்”(3)  என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் இந்தப் பிரபலமான அமெரிக்கரின் பங்கினைப் பற்றி மார்க்ஸ் கொண்டிருந்த உயர்ந்த அபிப்பிராயத்தை அவர் எழுதிய மூலதனத்தில் மறுபடியும் வலியுறுத்துகிறார். அதில் ”வில்லியம் பெட்டிக்குப் பிறகு மதிப்பின் இயல்பை ஊடுருவிக் கண்ட முதல் பொருளியலாளர்களில் ஒருவர்” (4)  என்று பிராங்க்ளின் பாராட்டப்படுகிறார்.

முதலாவதாகவும் முதன்மையாகவும் பெட்டியின் சிறப்பான கருத்துக்களைத் திறமையோடு பரப்புவதும் பிரச்சாரம் செய்வதும் ஸ்தூலமான பொருளாதாரப் பிரச்சினைகளுக்குப் பயன்படுத்துவதும் அவசியமாயிற்று. பிராங்க்ளின் இந்தப் பணியைத்தான் செய்தார். ஆனால் அவர் அதோடு நின்று விடவில்லை. ஸ்தூலமான உழைப்பின் பல வகைகளும் சமமானவை, பொதுவான தன்மையைக் கொண்டவை என்ற கருத்துக்கு பெட்டியைக் காட்டிலும் மிக நெருக்கமாக பிராங்க்ளின் வந்தார். அவர் பெட்டியைப் போல விலையுயர்ந்த உலோகங்களை வெட்டி எடுக்கும் உழைப்பு சிறப்பான குணாம்சங்களைக் கொண்டிருப்பதாகக் கருதவில்லை. இதற்கு மாறாக, அவர் தன்னுடைய செய்முறை நோக்கத்தைப் பின்பற்றிச் செல்லும் பொழுது, மதிப்பைப் படைத்தல் என்ற கருத்து நிலையிலிருந்து பார்க்கும் பொழுது இது உழைப்பின் வேறு வகைகளிலிருந்து கோட்பாட்டளவில் சிறிதும் வேறுபட்டிருக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்குத் தன்னாலியன்ற அனைத்தையும் செய்தார்.

ஒரு பண்டத்தில் அடங்கியிருக்கும் உழைப்பின் இரட்டை அம்சத்தை விளக்கும் வகையில் பொருளியல் விஞ்ஞான சிந்தனையில் ஏற்பட்ட படிப்படியான முன்னேற்றம் உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தின் வளர்ச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது; இதன் தொடர்பாக, அரசியல் பொருளாதாரத்தில் மூலச் சிறப்புடைய மரபின் மொத்த வளர்ச்சியையுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அது நீளமான, கடினமான பாதையாக இருந்தது. இளைஞரான பிராங்க்ளின் இந்தப் பாதையில் அடியெடுத்து வைத்தார்.

படிக்க:
பணக்காரனுக்குச் சொர்க்கம் கூடப் பற்றாக்குறைதான்
♦ நூல் அறிமுகம் : இந்திய பொருளாதார மாற்றங்கள் – ஜெ. ஜெயரஞ்சன் கட்டுரைகள்

காகிதப் பணத்துக்கு ஆதரவாக பிராங்க்ளின் நடத்திய போராட்டத்துக்கு அரசியல் அடிப்படை மட்டுமல்லாமல் வர்க்க அடிப்படையும் இருந்தது. ஒரு பக்கத்தில் அது குடியேற்ற நாடுகளின் மீது கட்டுப்படுத்துகின்ற உலோகப் பண முறையைக் கண்டிப்பான கட்டுப்பாடுகளோடு திணித்து அதன் மூலமாக அவற்றின் பொருளாதார வளர்ச்சியைத் தடுத்த இங்கிலாந்தின் வல்லரசுக் கொள்கையை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. மறுபக்கத்தில் கடன் கொடுத்த பணத்தை உறுதியான கெட்டிப் பணத்தில் பெற விரும்பிய வட்டிக் கடையினர், வணிகர்களுக்கு எதிராக விவசாயிகள், நகரங்களிலுள்ள சாதாரண மக்களின் நல உரிமைகளுக்கு அது ஆதரவாக இருந்தது. வட்டிக் கடையினர் காகிதப் பணத்தைப் “பொய்யான” பணம் என்றும் அதற்கு எதிராக உலோகப் பணத்தை ”மெய்யான” பணம் என்றும் கூறினார்கள்.

வெள்ளியைப் பெறுவதற்காக (குடியேற்றங்களில் தங்கம் அநேகமாக இல்லை) கடன்காரர்கள் புதிய கடன்களை வாங்க வேண்டியிருந்தது அல்லது குறைவான கூலிகளை ஒத்துக் கொள்ள நேர்ந்தது. பணத்தைப் பற்றிய இந்த விவாதத்தில் அடங்கியிருந்த வர்க்க நலன்களை பிராங்க்ளின் முழுமையாக உணர்ந்திருந்தார் என்பதை அவருடைய பிற்காலத்திய எழுத்துக்களில் காண முடியும்.

உலோகப் பணத்தை விமர்சித்த வேகத்தில் பிராங்க்ளின் வெகுதூரம் போய்விட்டார்; எனவே அவருடைய வாதங்களில் தத்துவரீதியில் பலவீனமான அம்சங்கள் இடம் பெற்றன. மதிப்பைப் படைத்தல் என்ற கருத்து நிலையிலிருந்து வெள்ளிக்கும் தானியத்துக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது என்று சரியாக முடிவு செய்த பிறகு பிராங்க்ளின் பரிவர்த்தனையில், பண்டச் செலாவணியில் அவை வகிக்கின்ற பாத்திரத்திலும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் முடிவு செய்தார். அவர் பணமாகப் பயன்படுகின்ற பண்டத்தின் தனி வகையான சமூகப் பாத்திரத்தைப் புறக்கணித்தார்.

Silver coin

அந்தக் காலத்தில் அமெரிக்காவில் வெள்ளி எக்காலத்துக்கும் உரிய சம மதிப்பாக இருந்தது. அதாவது, நீண்ட பரிணாமத்தின் விளைவாக மற்ற எல்லாப் பண்டங்களிலிருந்தும் தனித்து நிற்கின்ற ஒரு பண்டமாக இருந்தது. தானியம் அப்படிப்பட்ட பண்டமல்ல. மற்ற பண்டங்களைப் போலவே அதற்கும் அதன் மதிப்பை எடுத்துரைக்க வெள்ளி -உண்மையான பணம்- அவசியமாக இருந்தது . முதலாளித்துவப் பண்டப் பொருளாதாரத்தில் மதிப்பை எடுத்துக் கூறுவதற்கு வேறு ஒரு வழியும் கிடையாது. இந்த அர்த்தத்தில் வெள்ளி ஒரு “விசேஷமான” பண்டமாக இருந்தது. வெள்ளியின் பிரதிநிதியாக, மாற்றுப் பொருளாக மட்டுமே காகிதப் பணம் இருக்க முடியும். இந்தத் தகுதியின் அடிப்படையில்தான் அவற்றின் செலாவணி பொருளாதார ரீதியில் ”சட்டபூர்வமானதாகும்”.

பணம் ஒரு விசேஷமான சமூகக் கடமையை நிறைவேற்றுகிறது. மற்ற எல்லாப் பண்டங்களையும் போல இல்லாமல் அது சூக்குமமான உழைப்பின் நேரடியான, எக்காலத்துக்கும் உரிய கண்கூடான உருவமாக இருக்கிறது. அதன் மதிப்பை எடுத்துக் கூறுவதற்கு இன்னொரு பண்டத்தின் உதவி அதற்குத் தேவையில்லை; மற்ற பண்டங்களின் மதிப்பை அது எடுத்துரைக்கிறது. பணத்தின் தோற்றமும் பரிணாமமும் மனிதனின் விருப்பத்தோடு சம்பந்தமில்லாமல் புறநிலையான, தானாகவே தோன்றி வளர்ந்த நிகழ்வுப் போக்காகும். எனினும் பிராங்க்ளின் பணத்தை ஒரு ”செயற்கையான” கண்டுபிடிப்பாக, பரிவர்த்தனைக்கு உதவுகின்ற தொழிற்சாதனமாகக் கருதலானார். எனவே உலோகப் பணத்தை பணத்தின் வளர்ச்சியின் தர்க்கரீதியான வடிவமாக அவர் நினைக்கவில்லை; அந்நிய சக்தியினால் திணிக்கப்பட்ட செயற்கையான பொருளாக மட்டுமே கருதினார்.

கடைசியாகப் பார்க்கும் பொழுது, அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படையான பிரச்சினைகளைப் பற்றி பிராங்க்ளின் செய்த ஆராய்ச்சியின் குறைகளுக்கு அவர் ஆராய்ந்த சமூகத்தில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் குறைவாக வளர்ச்சியடைந்திருந்த நிலையே காரணமாகும். ஆனால் வெகு தொலைவிலுள்ள மாகாண நகரமான பென்சில்வேனியாவில் அவர் வெளியிட்ட பிரசுரம், ஆடம் ஸ்மித்தின் நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்துக்கு அரை நூற்றாண்டுக் காலம் முந்தியிருப்பதை நினைத்துக் கொண்டால் அந்த மாபெரும் அமெரிக்கரின் சாதனைகளை சரியான முறையில் நாம் புரிந்து கொள்ள முடியும்.

இருபத்து மூன்று வயதே நிரம்பிய பிராங்க்ளின் தன்னுடைய பிரசுரத்தில் வெளியிட்ட குறிப்பிடத்தகுந்த கருத்துக்கள் பொருளாதார விஞ்ஞானத்தின் வளர்ச்சியின் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது. அவர் பிற்காலத்தில் எழுதிய நூல்களில் மதிப்பின் தன்மையைப் பற்றிய பிரச்சினையை அதனளவில் ஒருபோதும் எழுப்பவில்லை; ஆனால் அதைப் பற்றி எழுதுவதற்கு நேர்ந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் பல்வேறு வழிகளில் அதை ஆராய்ந்து எழுதினார். சில சமயங்களில் அதே உழைப்புத் தத்துவத்தின் அடிப்படையிலும் சில சமயங்களில் அவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த பிசியோகிராட்டுகளின் போதனையின் உணர்ச்சியை ஒட்டியும் சில சமயங்களில் அக நிலையான வகையிலும் எழுதினார். பரிவர்த்தனையில் சமத்தன்மை என்பது இல்லை, ஏனென்றால் பரிவர்த்தனையில் ஈடுபடுகின்ற ஒவ்வொரு நபரும் அதிகமான அகமதிப்பை, அதிகமான திருப்தியை அடைகின்றார் என்பது அகநிலைக் கருத்தாகும்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) B, Franklin, The Works of Benjamin Franklin, Vol. 3, London, 1806, p. 115.
(2)  B. Franklin, The Works, Boston, 1840, Vol. II, p. 265.
(3)  K. Marx, A Contribution to the Critique of Political Economy, London, 1971, p. 55.
(4) K. Marx, Capital, Vol. 1, Moscow, 1972, p. 57.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

காஷ்மீர் : இளம் பெல்லட் குண்டு மருத்துவர்கள் !

1
Pellet-victims

 “பெல்லட் குண்டுகள் உங்கள் உடலில் நுழையும்போது உங்கள் உடலின் ஒவ்வொரு பாகமும் பற்றி எரிவது போன்று உணர்வீர்கள். அவை துப்பாக்கிகளிலிருந்து கிளம்பும் போது மிகவும் சூடாக இருக்கும். உங்கள் கண்களிலோ அல்லது மிக அருகாமையிலிருந்து சுடப்பட்டு உங்கள் உடலில் அவை நுழைந்தால் அவை மிகவும் ஆபத்தானவை. உங்கள் கால்களிலோ அல்லது பின்பக்கமோ அவை மோதியிருந்தால் முதலுதவி மூலம் அந்த தாக்குதலை சமாளிக்கலாம்.” என்கிறார் அகமது (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

அகமது மருத்துவரோ அல்லது மருத்துவ மாணவரோ அல்ல. வணிகவியல் படிக்கும் மாணவர். கடந்த சில வாரங்களாக, அன்ச்சார் பகுதியின் பெல்லட் குண்டு தாக்குதலில் இருந்து மக்களைக் காக்கும் மருத்துவராக செயல்பட்டுவருகிறார்.

Pellet-victims
கோப்புப் படம்

ஸ்ரீநகரில் இருக்கும் சவுராவைச் சேர்ந்த அன்ச்சார் பகுதி, காஷ்மீர் முடக்கப்பட்ட ஆகஸ்ட் 5-ம் தேதியிலிருந்தே போராட்டத்தின் விளைநிலமாக உள்ளது. ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீரே முடக்கப்பட்டு, அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டதில் இருந்து அந்தப் பகுதி கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

செப்டம்பர் மாதத் தொடக்கத்தில், சவுராவை ஒட்டிய புச்புராவைச் சேர்ந்த அஸ்ரர் அகமது கான் எனும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர், பெல்லட் குண்டுகளின் கொடுங்காயங்களின் விளைவாக மரணமடைந்தார். ஆனால் அவர் கல்லடி பட்டதனால்தான் இறந்தார் என்று கூறியது போலீசு. பெல்லட் குண்டு தாக்குதலால் படுகாயமடைந்தவர்கள் குறித்த தகவல்கள் பலவும் மறைக்கப்பட்டுவருகின்றன. போலீசு அதிகாரிகள் மருத்துவமனையில் மாறுவேடமிட்டு போராட்டத்தில் பங்கு பெற்று சிகிச்சைக்கு வருபவர்களைக் கண்காணித்து வருகிறது. பல சந்தர்ப்பங்களில் காயமடைந்த இளைஞர்கள் கைது நடவடிக்கைக்குப் பயந்து மருத்துவமனைகளுக்குச் செல்வதில்லை.

காஷ்மீரின் சிறப்புத் தகுதி பறிக்கப்பட்ட பிறகு அன்ச்சார் பகுதியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத வழிபாட்டிற்குப் பின்னர் போராட்டம் நடைபெறுகிறது. முதல் வெள்ளிக்கிழமை போராட்டம் கடந்த ஆகஸ்ட் 9 அன்று நடைபெற்றது. அன்ச்சார் பகுதி மக்கள் பேரணியாக ஸ்ரீநகரின் நகர்ப்பகுதி நோக்கி வந்தபோது சூனிமார் பகுதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

படிக்க:
“கருவில் இருக்கும் சிசுவைக்கூட விடாமல் அழிப்போம்” : கொக்கரிக்கும் பெண் போலீசு
♦ பெல்லட் குண்டு : கண்ணில்லாத என் மகனின் கனவுகள் பொசுங்கிவிட்டன !

“குறைந்தபட்சம் 18 பேராவது அன்று சூனிமார் பகுதியில் படையினரால் காயப்படுத்தப்பட்டிருப்பார்கள். அவர்கள் அருகில் உள்ள ஷெரி காஷ்மீர் மருத்துவ அறிவியல் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். ஆனால் அன்று மாலையே நாங்கள் அவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டோம். ஏனெனில் போலீசு அவர்களைத் தேடி வரும் என்று எங்களுக்குத் தெரியும்.” என்கின்றனர் அப்பகுதியைச் சேர்ந்த பெல்லட் குண்டு நீக்கு மருத்துவர்கள்.

ஆகஸ்ட் 9 சம்பவத்திற்குப் பின்னர், அப்பகுதி மக்கள் சாலைகளை தோண்டியும், தடுப்பரண்களை ஏற்படுத்தியும் படையினர் தங்களது குடியிருப்புப் பகுதிக்குள் நுழையாமல் தடுத்து வைத்திருந்தனர். பல நாட்களுக்கு அவர்களை இரவுநேர வேட்டையை நடத்த விடாமல் நுழைவாயிலிலேயே நிறுத்தி வைத்திருந்தனர் மக்கள்.

ஆனால் ஆகஸ்ட் 23 அன்று, படையினர் அன்ச்சர் பகுதியில் நுழையும் நிலைக்கு முன்னேறினர். ஜம்மு காஷ்மீர் போலீசு படையினர் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசு உள்ளிட்ட படையினர் தடை ஏற்படுத்தப்பட்ட ஐந்து பகுதிகளில் குவிக்கப்பட்டனர்.

Pellet-victim
கோப்புப் படம்

“அன்று தொழுகை முடிந்து வந்த சமயத்தில் படையினருடனான மோதல் அன்ச்சார் முழுவதும் தொடங்கியது. முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 200 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சில சிறுவர்களுக்கு கண்களுக்குள் பெல்லட் குண்டுகள் பாய்ந்தன.” என்கிறார் அகமது.

காயமடைந்தவர்கள் ஜெனாப் சாஹிப் ஆலயத்தின் ஒரு நீண்ட ஹாலில் கூடினர். அங்கு அவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது. “அந்த சூழல் மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எங்களுக்கு உதவ மருத்துவர்கள் குழுவை வரவழைத்தனர். அவர்கள் சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அவசரமாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர்களைப் பார்த்தனர். எங்களைப் போன்ற உள்ளூர் வாசிகள், குறைவான காயம்பட்டவர்களுக்கு உதவி புரிந்தோம். கண்களில் காயமடைந்த சிலரைத் தவிர வேறு யாரும் மருத்துவமனைக்கு செல்லவில்லை” என்கிறார் அகமது.

கடந்த ஆகஸ்ட் 23 அன்று அங்கு வீடியோ எடுத்த ஒரு புகைப்பட பத்திரிகையாளர், மக்கள் வரிசையாக சிறு சிறு குழுக்களாக ஒவ்வொரு நோயாளியையும் கவனித்து வந்தனர் என்கிறார்.

அன்ச்சரை சேர்ந்த பெல்லட் குண்டு காயத்துக்கு சிகிச்சை அளிப்பவர்கள், நோயாளிகளை குணப்படுத்த தங்களது சொந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர். அவர்கள் சிகிச்சைக்குப் பயன்படுத்திய உபகரணங்கள், பிளேடு, டெட்டால் முக்கப்பட்ட பஞ்சு ஆகியவையே ஆகும்.

படிக்க:
காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது !
♦ காஷ்மீர் : பெல்லட் குண்டுகள்தான் அமைதிக்கான சாட்சியாம் !

பெயர் சொல்ல விரும்பாத பெல்லட் குண்டு காய சிகிச்சை அளிப்பவர் பெல்லட் குண்டுகளை எடுக்கும் வழிமுறைகளைப் பற்றி கூறுகி்றார். “பெல்லட் குண்டுகளை மனித உடலில் இருந்து வெளியேற்ற இரண்டு வழிமுறைகள் உண்டு. அவை தோலின் மேல்புறத்திற்கு அருகே பொதிந்திருந்தால், காயத்தின் இருமுனைகளையும் அழுத்தி பிதுக்கி அந்தக் குண்டை வெளியேற்றிவிடலாம். ஒரு வேளை அது தோலின் உள்ளே ஆழமாகப் பதிந்திருந்தால், முதலில் விரல் முனையைப் பயன்படுத்தி, குண்டு பொதிந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்போம். பின்னர், அதன் அருகில் உள்ள தோலை பிளேடால் கீறி பெல்லட் குண்டுகளை வெளியில் எடுப்போம். அதன் பிறகு அந்தக் காயத்தை டெட்டால் முக்கிய பஞ்சால் துடைப்போம். இவை அனைத்தும் மயக்கமருந்து இல்லாமல் செய்யப்படும் சிகிச்சையாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் இவை அனைத்திற்கும் வெகு நேரம் பிடிக்கும்” என்கிறார் அவர்.

சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் ஆகஸ்ட் 5-ம் தேதியிலிருந்து இவ்வகையில்தான் மருத்துவ உதவி பெற்று வருகின்றனர் என்கிறார் ஒரு உள்ளூர்வாசி. பெல்லட் குண்டு சிகிச்சை அளிப்பவர்கள் முந்தைய காலகட்ட போராட்டத்தில் பங்குகொண்டு இது குறித்து பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள்.  கடந்த 2016-ம் ஆண்டு, புர்ஹான் வானி கொல்லப்பட்ட போது நடந்த பெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் பெல்லட் குண்டுகளால் காயமடைந்தனர். புர்ஹான் வானி கொல்லப்பட்ட போது நடந்த எழுச்சியில் காயமடைந்தவர்களில் சுமார் 15 சிறுவர்களுக்கு நானே தனியாக மருத்துவம் பார்த்தேன் என்கிறார் அகமது. அந்த ஆண்டுகளில் அவரது நண்பர்கள் சிலரும் பெல்லட் நீக்குவதில் வல்லுனர்கள் ஆகியிருக்கின்றனர்.

கைது பயம், மக்களை மருத்துவமனைக்குச் செல்வதில் இருந்து விலக்கிவைக்கிறது. அன்ச்சார் பகுதி மக்கள், பொதுவான காயங்களுக்கு கை வைத்தியங்களையே சார்ந்திருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டிருகின்றனர்.

“டைபாய்டிலிருந்து – சளி காய்ச்சல் வரை நாங்களே எங்களுக்கான சிகிச்சையை செய்து கொள்கிறோம். அன்ச்சார் பகுதிக்குள் அதிகபட்சமாக நாங்கள் பெறும் மருத்துவ வசதி, உள்ளூர் மருத்துவ உதவியாளர்கள் மற்றும் மருந்தாளுனர்கள் மூலம் மட்டும்தான் கிடைக்கிறது” என்கிறார் அன்ச்சார் பகுதியில் குடியிருக்கும் ஒருவர். அன்ச்சார் பகுதியில் இருந்து வெளியேற ஒருவரும் தயாராக இல்லை.

அன்றாட வாழ்க்கைப் பிழைப்பிற்குச் செல்லும் குடியானவர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் உள்ளூர் போலீஸ் வித்தியாசம் பார்ப்பதில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த செபடம்பர் 14 அன்று, அன்ச்சார் பகுதியைச் சேர்ந்த பெண்கள் சவுரா போலீசு நிலையத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒரு இளம்பெண்ணை தடுப்புக்காவலில் போலீசு வைத்ததை எதிர்த்து அந்த போராட்டம் நடத்தப்பட்டது. சவுரா பகுதியின் பிரதான சந்தையிலிருந்து மருந்துகள் வாங்கச் சென்ற அப்பெண்ணை போலீசு கைது செய்தது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

படிக்க:
ஜம்முவில் ரேப்பிஸ்ட்டை காக்கப் போராடும் பா.ஜ.க !
♦ அனல் மின் நிலையம் : அதானிக்காக தளர்த்தப்படும் காற்று மாசுபாடு வரம்புகள் !

சவுரா போலீசு நிலையத்தைச் சேர்ந்த போலீசோ, “அப்பெண் கைது செய்யப்பட்டதை மறுத்ததோடு, சவுரா பகுதியைச் சேர்ந்த பழ வியாபாரிகளிடம் கடையை மூடும்படி கூறினார்” என்கிறது. காஷ்மீர் முழுவதும் ஆகஸ்ட் 5 முடிவுகளுக்கு எதிராக உள்ளூர் கடையடைப்புக்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் துப்பாக்கி ஏந்திய சிலர், கடையடைப்பு செய்யாத வியாபாரிகளை கடையை மூடக் கூறி தாக்கியிருக்கின்றனர்.

சில பத்தாண்டுகளாக மொகரம் அனுசரிப்பு ஊர்வலம் காஷ்மீரில் தடை செய்யப்பட்டிருக்கிறது. எனினும் சிறிய அளவிலான ஊர்வலங்கள், பகுதிகளுக்குள் நடத்தப்படுவது வாடிக்கையாக இருந்தது. இத்தகைய மொகரம் ஊர்வலத்தில் மருத்துவ உதவிகள் செய்வதற்காக தன்னார்வலர்கள் பலரும் உடன் செல்வார்கள்.

ஆனால் இந்த ஆண்டு கடந்த செப்டம்பர் 10 அன்று நடத்தப்பட்ட சிறிய அளவிலான மொகரம் ஊர்வலங்களுக்கும் தடை விதிக்கப்பட்டன. “அமைதியாக நடைபெற்ற ஊர்வலங்களின் மீது பெல்லட் குண்டு தாக்குதல்களைத் தொடுத்தது போலீசு.” என்கிறார் சடிபால் பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர்.

கடந்த செப்டம்பர் 10 அன்று சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டு சடிபால் முகாமில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பெண்களும் முதியவர்களும் அடக்கம்.

பெல்லட் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எக்ஸ்-ரே படங்கள். (கோப்புப் படம்)

“தீவிரவாதம் அதிகமாக இருந்த 1990 காலப்பகுதியில் கூட இப்படி பெண்கள் மீதும் முதியவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது இல்லை.

இந்த முறை மொகரம் பண்டிகைக்கு மருத்துவத் தன்னார்வலர்களாக வந்தவர்கள் அனைவரும் பெல்லட் குண்டுகளை நீக்கும் வேலையைச் செய்ய வேண்டியிருந்தது. ஆட்கள் அதிகமாக அடிபட்டிருக்கையில், இருக்கும் தன்னார்வ மருத்துவர்கள் போதுமானவர்களாக இல்லை. போதுமான உபகரணங்கள் இல்லை. அச்சமயத்தில்தான் நான், சைக்கிள் சக்கரக் கம்பியை எடுத்து வந்து அதன் ஒரு முனையைக் கூராக்கி, தீயில் காட்டி கிருமிநாசம் செய்து அதனைக் கொண்டு பெல்லட் குண்டுகளை உடலில் இருந்து வெளியே தோண்டி எடுத்தேன். நான் மட்டுமே 12 -க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தேன்” என்கிறார் ஒரு தன்னார்வலர்.

மருத்துவர்கள் இவ்வகைச் சிகிச்சையில் பொதிந்திருக்கும் ஆபத்தைப் பற்றிக் கூறுகின்றனர். இவ்வகை முறையற்ற சிகிச்சைகளின் காரணமாக தோல் மூலமாக பாதிப்புகள் ஏற்படுவதில் தொடங்கி, முக்கிய உறுப்புகள் பாதிப்படைவது வரை ஏற்படக் கூடும் என்கின்றனர். “பொதுவாக நாங்கள் கால் மற்றும் பின்பக்கத்தில் புகுந்த பெல்லட்களை வெளியே எடுக்க மாட்டோம். காயமடைந்தவர்களுக்கு முதலில் நோய் எதிர்ப்பு மருந்துகளைத்தான் கொடுப்போம். தோலுக்கு உட்புறம் இருக்கும் இரும்புத் துகள்கள் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தாது. கல்லீரல், சிறுநீரகம், வயிறு, குடல்பகுதி ஆகியவற்றிற்கு அருகில் ஏற்பட்டிருக்கும் பெல்லட் குண்டுகளை மட்டுமே உடனடியாக வெளியே எடுப்போம்” என்கிறார் ஸ்ரீ மஹராஜா ஹரிசிங் மருத்துவமனையின் மூத்த அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவர்.

காயமடைந்த யாராக இருந்தாலும், அவர் ஆயுதமேந்திய குழுவைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் மருத்துவ உதவி பெறுவதற்குத் தகுதியானவர், “பாலினம், இனம், தேசியம், மதம், அரசியல் கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த ஒரு பாரபட்சமும் வெறுப்பும் இல்லாமல் மருத்துவ உதவி செய்ய வேண்டும்” என்று, 1949 – ஜெனிவா மாநாட்டுத் தீர்மானங்களின் பிரிவு 12 கூறுகிறது. இந்த ஒப்பந்தத்தை மீறிச் செயல்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது


சுருக்கப்பட்ட தமிழாக்கம் :
நந்தன்
நன்றி : ஸ்க்ரால்.

அனல் மின் நிலையம் : அதானிக்காக தளர்த்தப்படும் காற்று மாசுபாடு வரம்புகள் !

0

த்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துகான அமைச்சகம் நிலக்கரி அனல் மின் நிலையத்திற்கான காற்று மாசுக்கட்டுப்பாடு அளவீடுகளை தளர்த்துவதற்கு முதற்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது. கடந்த மே 17, 2019 அன்று அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ரிதேஷ்குமார் சிங்கின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அனல் மின் நிலையங்களுக்கு தற்போது அனுமதிக்கப்பட்டு வரும் காற்றில் வெளியிடப்படும் நைட்ரஜன் ஆக்சைடு மாசு அளவான 300mg/Nm3-லிருந்து 450mg/ Nm3-ஆக அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆற்றல்துறை அமைச்சகம் வெகுநாட்களாகக் கோரி வந்தது. இதனை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடுமையாக எதிர்த்து வந்தது. ஆனாலும் கடந்த மே மாதத்தில் ஆற்றல்துறை அமைச்சகத்தின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய மின்சார வாரியம் ஆகிய இரு அமைப்புகளுக்கும் இடையில் நீண்டகாலமாக அனல் மின் நிலையங்களில் மாசுக் கட்டுப்பாட்டு அளவீடு தொடர்பாக ஒத்த கருத்து இல்லாமல் இருந்த காரணத்தால், இரண்டு அமைப்புகளும் இணைந்து அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியாகும் காற்று மாசு அளவைக் கண்காணிப்பது என்றும் அதன் முடிவு அறிக்கைகளில் இருந்து முடிவெடுக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இராஜஸ்தானின் கவாய் பகுதியில் உள்ள அதானி பவர் மின் உற்பத்தி நிறுவனத்தின் இரண்டு மையங்கள், நாக்பூரில் உள்ள தேசிய அனல் மின் கழக சிறப்பு அனல்மின் உற்பத்தி நிலையம், அரியானாவின் ஜாஜ்ஜார் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி மின் உற்பத்தி நிலையம், பஞ்சாபின் ராஜ்புரா பகுதியில் உள்ள நபா பவர் மின் உற்பத்தி நிலையம் ஆகிய நிறுவனங்களின் அனல் மின் உற்பத்தி நிலையங்களை இவ்விரு வாரியங்களும் இணைந்து தொடர்ந்து 48 நாட்களுக்கு (பிப்ரவரி 13, 2019 முதல் ஏப்ரல் 2, 2019 வரை) மாசு அளவைக் கண்காணித்தன.

இந்த நான்கு அனல் மின் நிலையங்களின் 7 மையங்களின் கண்காணிப்பு அறிக்கையை சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கு கடந்த மே 2, 2019 அன்றுதான் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கண்காணிப்பு அறிக்கையின் படி, இந்த 7 மையங்களில் அதானி குழுமத்தின் இரண்டு மின் நிலையங்களில் நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாடு முறையே 509 mg/Nm3 மற்றும் 584 mg/Nm3-ஆக இருக்கிறது. இது தற்போதைய அனுமதிக்கப்பட்ட அளவான 300 mg/Nm3-க்கு மிகவும் அதிகமாகும். அதே சமயத்தில், இதர 5 அனல் மின் நிலையங்களின் நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாடு 200 mg/Nm3-லிருந்து 300 mg/Nm3  -குள்தான் இருந்துள்ளது.

படிக்க:
சுற்றுச் சூழலை சீரழிக்கும் அனல் மின் நிலையங்கள் – கண்டுகொள்ளாத அரசு !
♦ நூல் அறிமுகம் : கார்ப்பரேட்டும் வேலைபறிப்பும்

நைட்ரஜன் ஆக்சைடு காற்றில் அதிகமாக கலந்திருப்பது நுரையீரல் தொடர்பான கடுமையான நோய்களை ஏற்படுத்தும்.

கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம், சுற்றுச் சூழலியல் அமைச்சகம் அனல் மின் நிலையங்களுக்கான காற்று மாசு அளவுகளை நிர்ணயித்தது. குறிப்பாக 2003-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டத்தில் தொடங்கப்பட்ட அனல் மின் நிலையங்களில், நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாடு 300 mg/Nm3-க்கு அதிகமாக இருக்கக் கூடாது என நிர்ணயித்தது. நிர்ணயிக்கப்பட்ட இந்த காற்று மாசுக் கட்டுப்பாட்டு அளவை நிறுவனங்களால் எளிமையாக எட்டிவிட முடியும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது.

அதே போல 2017-ம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட அனல்மின் நிலையங்களுக்கான அனுமதிக்கப்பட்ட நைட்ரஜன் ஆக்சைடு வெளிப்பாட்டின் அளவு 100 mg/Nm3 .

ஆனால் ஆற்றல்துறை அமைச்சகம்  2003-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுக்கு பிறகு வரை தொடங்கப்பட்ட அனைத்து அனல்மின் நிலையங்களுக்கான நைட்ரஜன் ஆக்சைடு காற்று மாசுபாட்டு அளவை 450 mg/Nm3 -ஆக உயர்த்த வேண்டும் என்று கோரி வந்தது.

அதானி நிறுவனம் தவிர மற்ற எல்லா நிறுவனங்களும் குறிப்பிட்ட அளவிற்கு உள்ளாகவே நைட்ரஜன் ஆக்சைடை வெளியிடும்போது, இவ்வளவு அவசரமாக கற்று மாசுபாட்டு வரம்பை உயர்த்துவது ஏன் ? நம்புங்கள் ! ஆற்றல்துறை அமைச்சகத்துக்கும் அதானி குழுமத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை !

கடந்த மே மாதம் நடைபெற்ற கூட்டம் குறித்து, தி வயர் இணையதளம் சேகரித்த தகவல்கள் மற்றும் கூட்டக் குறிப்புகளின் படி, இக்கூட்டத்தில் ஆற்றல் அமைச்சகம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டுத் துறை, தேசிய அனல் மின் கழகம் மற்றும் சுற்றுச் சூழலியல் அமைச்சகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மத்திய மாசுக் கட்டுப்பாட்டுத்துறையின்  எதிர்ப்பையும் மீறி, இந்த மாசுக்கட்டுப்பாட்டு அளவை தளர்த்த முதற்கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதில் இறுதி ஒப்புதல் சுற்றுச் சூழலியல் அமைச்சகம் மற்றும் ஆற்றல் அமைச்சகத்தின் செயலர்களால் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரியவருகிறது.

படிக்க:
பார்ப்பனர்களின் முகத்தில் கரியைப் பூசும் பிரம்மா !
♦ ஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் !

மத்திய மாசுக் கட்டுப்பாட்டுத் துறை விஞ்ஞானிகளின் ஆலோசனையின் பேரிலேயே சூழலியல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் சுற்றுச் சூழல் அளவீடுகளை பல்வேறு துறைகளுக்கு நிர்ணயிக்கிறது. பல்வேறு துறைசார் வல்லுனர்கள் மற்றும் தொழிற்துறை வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து விவாதித்த பின்னரே அனல் மின் நிலையங்களுக்கான, தண்ணீர் நுகர்வு, சல்பர் டை ஆக்சைடு வெளியீடும் நைட்ரஜன் ஆக்சைடு வெளியீடு ஆகிவற்றிற்கான வரம்புகளை கடந்த 2015-ம் ஆண்டில் நிர்ணயித்தது.

சுற்றுச் சூழல் மாசு ஏற்படுத்தும் பல்வேறு உடல் நலன் சார்ந்த பிரச்சினைகளையும், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட உலகம் தழுவிய பிரச்சினைகளையும் கணக்கில் கொண்டே துறைசார் வல்லுனர்கள் மாசுக் கட்டுப்பாட்டு அளவை நிர்ணயிக்கின்றனர். ஆனால் அதானிகளின் மூலதனத்தின் இலாபவெறி இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் ‘ஹைகோர்ட்டாக’ மதித்து உதைத்துத் தள்ளி முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. நமது வருங்காலத் தலைமுறை வாழ்வதற்கு ஒரு சுடுகாட்டை தயார் செய்து கொடுத்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்?


தமிழாக்கம் :நந்தன்
நன்றி : தி வயர்.

உழைக்கும்போதே இந்த உசுரு போகணும் | ஒரு உழைப்பாளி காதல் ஜோடி !

t-nagar-life-of-chennai-photo-essay

மரவள்ளி… புட்டு… வேர்க்கடல…ய்…! மாநகரத்து நடைபாதையில் கிராமத்து வாசனை!

சென்னை தி. நகர் பேருந்து நிலையம். அருகிலேயே ரெங்கநாதன் தெரு இருப்பதால், ஒருவருக்கொருவர் மோதாமல், இடிக்காமல் சர்வ சாதாரணமாக நடைபாதையில் நடந்து போய்விட முடியாது. அதற்குத் தனித்திறமை வேண்டும். அந்த இடத்தில் சகலரும் விரும்பிச் சாப்பிடும் கிராமத்து திண்பண்டத்தை விற்கும் உழைப்பாளி ஜோடியைப் பார்க்க முடியும்.

நடைபாதையில் திண்பண்டங்கள் வியாபாரம் செய்யும் வடிவம்மாள் – ஆறுமுகம் காதல் தம்பதியினர்.

வெடித்து மலர்ந்திருக்கும் மரவள்ளிக் கிழங்கு, வேகவைத்த வேர்க்கடலை. மேலும் தேங்காய், சர்க்கரை கலந்த சிவப்புப் புட்டரிசி. அந்தப் பக்கமாகச் செல்வோர், அவசர நடையிலும் இந்தத் தின்பண்டத்தைப் பார்த்ததும் சட்டென பிரேக் போட்ட மாதிரி நின்று, பழைய பள்ளிக்கூட நினைவுக்குச் சென்று வருவார்கள்.

10 ரூபாயை நீட்டி விருப்பமானதை வாங்கிக் கொண்டு, நடையை கட்டுகின்றனர் பாதசாரிகள். பெரும்பாலும் கிராமத்து வாசனை மாறாதவர்கள், தயக்கமே இல்லாமல் இயல்பாக சிரித்தபடி வாங்கிக் கொள்கிறார்கள். நகர்ப்புறத்து பெண்களும், இளசுகளும் ஓரக்கண்ணால் பார்த்தபடி அதை விட்டுப் போகவும் மனதில்லாமல், பார்க்காதது மாதிரி பார்த்துக் கொண்டே கடக்கிறார்கள்.

புட்டரிசி வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே உழைப்பாளி ஜோடியிடம் பேச்சு கொடுத்தோம். அவர்கள் நம்மிடம் இயல்பாக பேச ஆரம்பித்தவுடன், அவர்களை கலாய்க்க ஆரம்பித்தோம்.

“எந்த முதலும் போடாமல் இவ்வளவு முக்கியமான இடத்தில், இவ்வளவு பெரிய வியாபாரம் செய்கிறீர்களே, இதற்கு ஜி.எஸ்.டி, இன்கம் டாக்ஸ் எல்லாம் கட்டுகிறீர்களா என்று உங்களை சோதிக்க வந்துள்ளோம்.” என்றோம்.

அவர்களும், “ஆமா…மா…, வா … வா… வந்து செக் பண்ணு. பணத்த எடுத்தா எங்களுக்கும் கொஞ்சம் கொடுத்துட்டுப் போ” என்று ஏகத்துக்கும் நம்மை ஓட்டினார்கள்.

படிக்க:
சரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை
♦ ஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ

“எவ்வளவு வருசமா இந்த வியாபாரம் செய்கிறீர்கள்? இதுவரை எவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறீர்கள்?” என்றோம்.

அதற்கு அந்த வயதான ஜோடியின் குடும்பத்தலைவரான ஆறுமுகம், “நான் சிந்தாதிரிப்பேட்டை பொறுக்கி. எங்க அம்மா, ‘டேய் தறுதல எங்கடா போனே’ன்னுதான் என்னைய ஆசயா கூப்பிடுவாங்க. கொஞ்சம் வளர்ந்த பிறகு, அப்படியே மாட்டு புரோக்கராகி தமிழ்நாட்டுலேயே தலைகீழா சுத்துனேன். ஆந்திரா, கேரளா பக்கம்கூட போயிருக்கேன். நல்ல பணம். அப்போ தமிழ்நாட்டுல இருக்குற எல்லா பேங்குலயும் என் கையெழுத்து இருக்கும்” என்றார்.

கொஞ்சம் கிண்டலாக, “ஏன் பேங்குக்குக்கூட கடன் கொடுத்தீர்களா” என்றோம்.

அவர், “இல்ல, இல்ல… எம்ஜியார் பீரியடுல விவசாயிகளுக்கு மாட்டு லோன் கொடுத்தாரு. அப்ப பேங்க் மேனேஜருங்க அந்த மாடுகள நான்தான் வாங்கிக் கொடுத்தேன்னு எங்கிட்டே கையெழுத்து கேட்டாங்க. காசா பணமா… சும்மா கையெழுத்துத்தானேன்னு சரஞ்சரமா போட்டுக் கொடுத்தேன். அதெல்லாம் ஒரு காலம்.

இவளகூட லவ் பண்ணித்தான் கல்யாணம் பண்ணிட்டேன். நான் பொறுக்கியா அலையிறேனுன்னு என்னோட மாமன், பொண்ணு தரமாட்டேன்னு சொல்லிட்டான். விடுவேனா தூக்கிகிட்டுப் போயி தாலி கட்டிட்டேன். கல்யாணம் கட்டுன புது ஜோர்ல ஒரு படம் விடுறதில்ல. மெட்ராஸ்ல இருக்குற எல்லா தியேட்டருக்கும் போயிருக்கோம். பாக்காத படமே கிடையாது, அப்படி ஊர் சுத்துவோம். அப்புறம் குழந்தைங்க பொறந்துச்சு, எல்லாம் அடங்கி போயிருச்சு.

எனக்கும் வயசாக வயசாக பல நோய்ங்க வந்துடுச்சு. முதல்ல ஹார்ட், அப்புறம் எர்னியா (இரணியல்) கம்ப்ளய்ண்டுன்னு ஒவ்வொன்னா வர ஆரம்பிச்சிடுச்சு. தண்ணி அடிக்கிறத விட்டுட்டு சிகரெட் மட்டும் புடிச்சிட்டிருப்பேன். ஒரு நாள் ஜிஎச் பெரிய டாக்டரு பக்கத்துல செக்கப்புக்கு உக்காரும்போது, ‘டேய் மரியாதயா எழுந்து வெளியே போ… இவன வெளியே தள்ளுங்க’ன்னு சொல்லி அனுப்பிட்டாரு. ஏன்னா என்மேலே அவ்வளவு சிகரெட் கப்பு. ஹார்ட் பிரச்சினைன்னு சொல்லிட்டு சிகரெட் கப்போட போனா டாக்டர் சும்மா இருப்பாரா. எனக்கு ரொம்ப அசிங்கமா போச்சு. அதிலேருந்து சிகரெட்ட விட்டுட்டு, இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்.

இப்போவும் இந்த நோயோடுதான் பஸ்ல ஏறி இறங்கிக்கிட்டிருக்கேன். குறைஞ்சது ஒரு நாளைக்கு 50 பஸ்சாவது ஏறுனாத்தான், 100 பாக்கெட் ஓட்ட முடியும். அப்பத்தான் ஒரு 300 ரூபாயாவது பார்க்க முடியும். இங்கே இவ கடையிலேயே (நடைபாதை) உக்காந்த மாதிரி வியாபாரம் பாத்துக்குவா. எதோ எங்க செலவ பாத்துகிணு யாருகிட்டேயும் கை நீட்டாம கவுரவமா வாழுறோம்” என்றார்.

“இந்த வயசான காலத்துல பஸ்சில ஏறி இறங்குறது ஆபத்து இல்லையா!” என்றோம்.

“உயிருக்கு ஆபத்துன்னு, வயிறு பசிக்காது இருக்குமா! அதயும் சந்திச்சுத்தான் ஆகணும். டிரைவரு, கன்டக்டருங்க எனக்கு ரொம்ப ஒத்தாசயா இருப்பாங்க. வண்டி எடுக்கப் போறாங்கன்னு பதட்டத்தோடு எறங்குனாகூட, ‘நைனா பாத்து இறங்கு’ன்னு வாஞ்சையா சொல்வாங்க. கீழே எறங்குன பிறகுதான் வண்டிய ஸ்பீடா எடுப்பாங்க. எல்லாருமே மரியாதையா நடந்துக்குவாங்க. நான் வேர்க்கடலை கொடுத்தாக்கூட சும்மா வாங்க மாட்டாங்க. அவங்களோட ஒத்தாசயாலத்தான் எம் பொழப்பும் போகுது” என்றார்.

படிக்க:
சென்னை கோயம்பேடு பழச்சந்தை – படக்கட்டுரை !
♦ சிவாஜி முடிசூட்டு விழா பற்றிய கதை !

“மரவள்ளி, கடலை, சிவப்பரிசி புட்டு போன்றவற்றை எங்கே வாங்குவீர்கள்? எப்படி தயார் செய்கிறீர்கள்” என்று கேட்டபோது,

“விடியற்காலை 4 மணிக்கு எழுந்து டிவிஎஸ் ஃபிப்டியை ஓட்டிகிட்டு கோயம்பேடு போயி சரக்கு வாங்கி காலை 6 மணிக்கெல்லாம் திரும்பிடுவேன். வயசானதுனால கண்ணு ரெண்டும் சரியா தெரியாது. மூனு அடிக்கு அப்பால் இருக்குற எந்தப் பொருள் தெரியாது. உங்கக்கிட்டே கூட ஏதோ குத்து மதிப்பாத்தான் பேசிகிட்டிருக்கேன். ஏதோ, பழக்கப்பட்ட ரோட்டுலயே போயி வர்றதுனால நிதானமா வீடு வந்து சேந்துடுறேன். அதுக்குப் பிறகு அவளோட வேல.

பொருள் எல்லாம் பிஞ்சு பொறுக்கி எடுத்துட்டு சுத்தம் பண்ணி, அலசி, கிருஷ்ணாயில் ஸ்டவ்ல வேக வைப்போம். இப்படியே 11 மணியாயிடும். வேல முடிஞ்சாதான் கால சாப்பாடே சாப்பிடுவோம். 12 மணிக்கு மேலே கௌம்பி வந்துடுவோம். நான் பஸ் வியாபாரத்த பாத்துக்குவேன், இவ கடை வியாபாரத்த பாத்துக்குவா.

உடம்பு கிடம்பு சரியில்லன்னா வேலைக்கு வர முடியாது. எம் பையன்தான் சோறு எடுத்தாந்து கொடுப்பான். எனக்கு மொத்தம் ஏழு புள்ளைங்க, அதுல ரெண்டுதான் நின்னது. பையன் ஒன்னு, பொண்ணு ஒன்னு. அதயும் கட்டிக் கொடுத்துட்டேன். அவங்களும் பக்கத்துலதான் 10 ரூபா பழக்கட போட்டிருக்காங்க. பேரப்புள்ளைங்க படிக்கிறாங்க” என்றார்.

ஆறுமுகத்தின் மனைவி வடிவம்பாளிடம், “வீட்டு வேலையை முடித்து இங்கே வந்து எப்படி வியாபாரமும் செய்கிறீர்கள்?” என்றோம்.

“நான் கடைக்கு லீவு விட்டாத்தான் அன்னிக்கு வீட்டுல சோறாக்குவேன். மத்த நாளெல்லாம் ஓட்டல் சோறுதான். பழகிபோயிடுச்சு. இவரும் ஒன்னும் சொல்ல மாட்டாரு. கொடுக்குறத சாப்பிடுவாரு. ஆசப்பட்டா ஒரு நாளைக்கு மீன் குழம்பு சோறு. ஒடம்பு மக்கர் பண்ணினா அன்னிக்கு தயிர் சோறுதான்.

பல நேரம் முட்ட புரோட்டா, சமோசான்னு வாங்கிச் சாப்பிட்டு அதோட சாப்பாட்ட முடிச்சுக்குவோம். இதுவற எனக்கு உடம்புக்குன்னு எதுவும் பெரிசா வரல. அப்படியே ஓடுது” என்றார்.

“தி.நகர் பகுதிக்கு வருபவர்களிடம் வியாபாரம் செய்வது ரொம்ப கஷ்டமாச்சே, எப்படி சமாளிக்கிறீர்கள்?” என்றோம்.

“சாதாரண ஜனங்க, பொருள் என்ன சின்னதா இருக்கு, கொஞ்சமா இருக்குன்னு கேப்பாங்க, ஆனா கண்டிப்பா வாங்கிடுவாங்க. ஆனா, படிச்சவங்க இருக்காங்களே… ‘ஒரே மண்ணா இருக்குதே, ஈ மொய்க்குதே, மூடி வக்கிறதில்லயா’ன்னு நோண்டி நோண்டி கேப்பாங்க. அதுல சில பேருதான் வாங்குவாங்க. சின்னப் பசங்க எப்போதுமே ‘ஆயா ஆயா’ன்னு கேட்டு வாங்கிப் போவாங்க. வியாபாரம்னா ஆயிரம் இருக்கும். எல்லாத்தயும் அனுசரிச்சுத்தான போகணும்” என்றார்.

“உங்களுக்கு நிறைவேறாத ஆசை எதுவும் இருக்கா?” என்றோம்.

அவர், உதட்டைப் பிதுக்கியபடி, “அப்படியெல்லாம் பெருசா எந்த ஆசயும் இல்ல; சாப்பிட கொஞ்சம் சோறும், போட்டுக்க துணியும் கெடச்சா போதும். உழைக்கும் போதே இந்த உயிரு போயிடணும், யாருக்கும் பாரமா இருக்க விரும்பல…” என்று சொல்லிக்கொண்டே, ஒரு கையில் வேர்க்கடலை பாக்கெட்டுகளையும் மறு கையில் புட்டுத் தாம்புலத்தையும் சுமந்து சென்றார்.

அந்த இடத்தைக் கடந்து வெகு நேரமாகிவிட்டது. ஆனாலும், இந்த உலகத்தின் மூச்சுக் காற்றாய் ஆறுமுகத்தின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

நூல் அறிமுகம் : கார்ப்பரேட்டும் வேலைபறிப்பும்

ந்தியாவில் அந்நிய மூலதனத்தை ஈர்க்கும் இடங்களில் தமிழகம் தலைசிறந்து விளங்குகிறது என பீற்றிக் கொள்ளும் ஆட்சியாளர்களின் அங்கலாய்ப்புகளின் அர்த்தம் என்ன என்பதை ஆற்றொழுக்கு போன்ற நடையில் விளக்க முனைந்த முயற்சியே உங்கள் கையில் தவழும் இந்த சிறுநூல். நூல் அளவில் மட்டுமே சிறியது. ஆனால், இது விவரிக்கும் மனிதத் துயரம், இழப்பு, ஏமாற்றம் மிகவும் ஆழமானது, நுட்பமானது.

நவீன கௌரவமான வேலையின் அடையாளமாகத் திகழ்ந்த நோக்கியா, பாக்ஸ்கான், டி.சி.எஸ். போன்ற மின்னணு மற்றும் தகவல்… தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைக்கு சேருவதும், தொடர்ந்து வேலை பார்ப்பதும் எவ்வளவு கௌரவமானது, சுகமானது என்ற கனவுகளோடுதான் பணிக்கு சேர்ந்தனர் உழைப்பாளிகள். இவர்களது சிறகுகள் ஓடிக்கப்பட்ட கதையை, அதனின் உள் அர்த்தத்தை, இதன் உலக பரிமாணத்தை விளக்கும் நூல் இது. (நூலின் அறிமுக உரையிலிருந்து…)

கொத்துக் கொத்தாய்ப் பஞ்சத்தில் மடிந்த மனிதர்களை விடவும் வேதனையை அனுபவிப்பவர்களாக இன்றைய இளைஞர்கள் உள்ளனர். ஒருமுறை மரணத்தைத் தருவது நோய்கள் என்றால், எப்போது வேலையை விட்டு விரட்டப் படுவோம் என்ற வேதனை, மனிதனை அன்றாடம் சாகடிக்கிறது. பெரு நிறுவனங்களின் இலாபவெறி, ஆட்கொல்லியாகச் செயல்படுவதில், பஞ்சங்களை விடவும், பெரும் நோய்களை விடவும், வலிமையானதாக இருக்கிறது.

நோக்கியா 12 ஆயிரம் வேலை வாய்ப்புகளைச் சவப்பெட்டிக்கு அனுப்பியது. ஃபாக்ஸ்கான் 6 ஆயிரம் தொழிலாளர்களை வெளியேற்றி, இப்போது 1700 நபர்களைப் படிப்படியாகச் சாகடித்து வருகிறது. இந்திய நிறுவனமான, டாடா கன்சல்டன்ட் சர்வீஸஸ் 25 ஆயிரம் சாஃப்ட்வேர் பொறியாளர்களை வீட்டுக்கு அனுப்ப இருப்பதாகவும், புதிதாக 50 ஆயிரம் இளைஞர்களை வேலைக்கு அமர்த்த இருப்பதாகவும் அறிவிப்பு செய்துள்ளது.

… அதாவது 19 முதல் இருபது வயதில் வேலைக்கு ஆள் தேவை, என்பது நிரந்தர விளம்பரம். அதே நேரத்தில், 8 முதல் 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவசாலிகளுக்கு வேலைப்பறிப்பு என்பது, கார்ப்பரேட் நிறுவனங்களின் இன்றைய நடைமுறையாகி விட்டது. (நூலிலிருந்து பக்.5)

காண்ட்ராக்ட் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் உள்ளிட்ட ஏராளமான சட்டங்கள் உள்ளன. 480 நாட்கள் பணிபுரிந்தால் அந்த தொழிலாளரை நிரந்தரம் செய்யவேண்டும் என தமிழ்நாடு அரசு வகுத்த விதி குறிப்பிடுகிறது. அதன்படி மேற்குறிப்பிட்ட பல்லாயிரம் தொழிலாளர்களும், இதர நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையில் சமூகப் பாதுகாப்புடன் கூடிய நிரந்தரத் தன்மையுள்ள வேலை வாய்ப்பைப் பெற்றிருக்க முடியும். மேலே குறிப்பிடப்பட்டத் தொழிலாளர்கள் 5 முதல் 8 ஆண்டுகள் காண்ட்ராக்ட் உள்ளிட்ட பலவேறு பெயர்களில் வேலை வாங்கப் பட்டவர்கள் ஆவார்கள். இது குறித்து அரசு மற்றும் தொழிலாளர் துறை கவலை கொள்ளவில்லை.

ஆலைமூடலுக்கு எதிரான பாக்ஸ்கான் தொழிலாளர்களின் போராட்டம். (கோப்புப் படம்)

ஐ.எல்.ஓ. ஆய்வில் கிடைத்த தகவல் தமிழகத் தொழிலாளர் துறை மற்றும் அரசின் அலட்சியத்தை சுட்டிக்காட்டுகிறது. அதாவது, காண்ட்ராக்டர்கள் நிறுவனத்தில் 20-க்கும் கீழே தொழிலாளர் எண்ணிக்கையைக் கொண்டவர்களாக உள்ளனர். மேலே ஹூண்டாய் நிறுவனத்தில் 456 காண்ட்ராக்டர்கள் உள்ளனர் என்பதைத் தெரிந்து கொண்டோம். ஆனால் அதன் உதிரிபாக உற்பத்தி ஆலைகளில் 20-க்கும் கீழானத் தொழிலாளர்களைக் கொண்ட காண்ட்ராக்டர்கள் அதிகம். இவர்கள் முறையான லைசன்ஸ் வைத்திருப்பதில்லை.

மேலும் எந்த ஒரு காண்ட்ராக்டரிடம் இருந்தும், அவர்களிடம் பணிபுரியும் தொழிலாளர் எண்ணிக்கை, பெயர் பட்டியல், சர்வீஸ் கணக்கு போன்ற எந்த விவரமும் தொழிற்சாலைகள் ஆய்வுத் துறை கேட்டு பெறுவதில்லை. இது குறித்து அவர்களின் வரம்புக்குள் உள்ள அதிகாரம் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனாலும் தற்போது மோடி அரசு, இன்ஸ்பெக்டர் ராஜ் தொல்லை தருவதாக உள்ளது என்றும், அதைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனது செயல்களுக்கு நியாயம் கற்பிக்கிறது. (நூலிலிருந்து பக்.26-27)

படிக்க:
காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது !
சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள் ! | கலையரசன்

எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும், சுரண்டல் மற்றும் ஆட்குறைப்புடன் நிறுத்திக் கொள்வதில்லை என்பதே அனுபவம். அந்த சமூகத்தில் உள்ள எதிர்ப்புஉணர்வு, அரசியல் விழிப்புணர் ஆகியவற்றை கொண்டே, அந்த நிறுவனம் தன்னுடைய நடவடிக்கைகளை கட்டமைக்கிறது. அதில் இருந்தே தன்னுடைய இலாப விகிதத்தை உயர்த்தும் செயலில் இறங்குகிறது. குறிப்பாக கொடும் சுரண்டலில் ஈடுபடுவதா? அல்லது நவீனத்துவ முறையில் செயல்படுவதா? என்பது உள்ளிட்டவை இந்த முறையில்தான் தீர்மானிக்கப்படுகின்றன. தமிழகத்தைப் பொருத்தளவில் பொருளாதார வளர்ச்சியில், இந்தியாவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. சிறந்த தொழில் நுட்பத் திறனைப் பெற்ற மாநிலமாக விளங்குகிறது. ஆனால் இது சாமான்ய மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்கவில்லை .

ஐ.டி. நிறுவன வேலைபறிப்புக்கு எதிராக பு.ஜ.தொ.மு. ஐ.டி. பிரிவு நடத்திய பிரச்சார இயக்கம். (கோப்புப் படம்)

இன்றைய நிலையில் ஒருபுறம் வேலையிழப்பு மறுபுறம் நிரந்தரமற்ற வேலை என்பது எழுதப்படாத விதியாக இளைஞர்கள் முன் வைக்கப்படும் கொள்கையாக உள்ளது. அரசு பின்பற்றிய கொள்கைதான் முழு முக்கியமான காரணம் ஆகும். உலகமயமாக்கல் கொள்கை அமலான காலத்தில், அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்றனர். அதன் பின் வேலைக்கு ஆள் எடுக்கும் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. குறைக்கப்பட்ட வேலையாட்களின் இடங்களை காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் நிரப்பினார்கள். மற்றொரு புறம், வேலையின்மை பல மடங்கு பெருகியது. அதேபோல் உலகமயமாக்கல் கொள்கை துவங்குவதற்கு முன்பே, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதன் காரணமாக உருவான திறன் படைத்த ஊழியர்களுக்கான வேலை வாய்ப்பாக பன்னாட்டு நிறுவனங்களின் வருகையை அரசுகள் நியாயப்படுத்தின. இன்று பொதுத் துறை நிறுவனங்களில் 32%-மும், தனியார் துறையில் மதிப்பிடமுடியாத வகை காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர், என்று ஐ.எல்.ஓ. ஆய்வு குறிப்பிடுகிறது. இளைஞர்களும் இத்தகைய நிறுவனங்களின் வேலை வாய்ப்பிற்காக போட்டியிட்ட நிலையில், உரிமைகளையும் விட்டுத்தர தயாராகினர், என்பதையே மேற்படி ஆய்வு வெளிப்படுத்துகிறது. (நூலிலிருந்து பக்.28)

நூல் : கார்ப்பரேட்டும் வேலைபறிப்பும்
ஆசிரியர் : எஸ்.கண்ணன்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2433 2424.
மின்னஞ்சல் : tamizhbooks@gmail.com
இணையம் : www.tamizhbooks.com

பக்கங்கள்: 32
விலை: ரூ 25.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

குழந்தைகளுக்கு சுமை தெரியாமல் கணிதம் கற்றுத்தர இயலுமா ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 06

கணிதப் பாடம்

பாடத்தின் நோக்கம்: கணிதப் பாடத்தின் அடிப்படையில் புதியவற்றை அறியும் ஆர்வத்தையும் கல்வியின்பாலான ஆக்கப்பூர்வமான அணுகுமுறையையும் மேற்கொண்டு வளர்த்தல்.

பாடத்தின் உள்ளடக்கம்: கவனத்தை வளர்க்கும் கணக்குகள்; பத்து வரையிலும், பத்து முதல் இருபது வரையிலும் உள்ள எண்களின் கூட்டல், கழித்தல் கணக்குகள், சுயமாகக் கணக்குகளை அமைத்துப் போடும் பயிற்சி.

  1. முகமன் கூறுதல். இன்று மாணவர்களுடைய மனதில் உள்ளவற்றைப் பற்றி அவர்களுடன் அவசரப்படாமல், அன்போடு கலந்து உரையாடுதல். நேரம் 3-5 நிமிடங்கள்.

“வணக்கம் குழந்தைகளே! புதிய விஷயங்கள் ஏதாவது உள்ளனவா?”

புதிய சம்பவங்கள், மனப்பதிவுகள், மகிழ்ச்சிகள், ஏமாற்றங்கள் பற்றி குழந்தைகள் சொல்வதைக் கேட்கிறேன்.

எனது மகிழ்ச்சியைத் தெரியப்படுத்துகிறேன், அவர்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறேன், குழந்தைகள் சொல்வதைப் பற்றிய எல்லாவற்றிற்கும் என் கருத்தை வெளியிடுகிறேன், என்னுடனும் சக நண்பர்களுடனும் தன் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொண்ட ஒவ்வொரு குழந்தையின் மீதும் கவனம் செலுத்தி அன்பு காட்டுகிறேன். நிறையப் பேர் பேச விரும்பினால், இடைவேளையில் அல்லது அடுத்த பாடவேளையில் அல்லது பாடங்களுக்குப் பின் பேசலாம் என்று சாமர்த்தியமாகச் சொல்லி சமாளிக்கிறேன்.

  1. பாட வேலையை முன்வைத்தல். (காரிய ரீதியான, விளையாட்டுத் தனமற்ற, நட்பு ரீதியான தொனி.) நேரம் 2 நிமிடங்கள்.

“இன்று என்ன படிக்கப் போகின்றோம் தெரியுமா? முதலில் உங்கள் கவனத்தை வளர்க்க உதவுவேன். இதோ பாருங்கள் எப்படிப்பட்ட கணக்குகளை நான் தயாரித்துள்ளேன்.”

கரும்பலகையில் எழுதியுள்ளவற்றைக் காட்டி விட்டு உடனேயே திரையால் மூடிவிடுகிறேன்.

“அடுத்து, கணக்குகளைச் சரியாகப் போட்டிருக்கின்றீர்களா என்று சரிபார்க்க வேண்டும்.”

பத்து வரையிலும், பத்து முதல் இருபது வரையிலும் உள்ள கூட்டல் கணக்குகளைக் காட்டி விட்டு, திரையால் மூடுகிறேன்.

“அடுத்து, நான் கூட்டல், கழித்தல் கணக்குகளை எப்படிப் போட்டேன் என்று கண்டுபிடித்து அவை சரியா தவறா என்று சொல்ல வேண்டும்.”

நான் கரும்பலகையில் போட்டுள்ள கணக்குகளைக் காட்டி விட்டுத் திரையால் மூடுகிறேன்.

“பின் நீங்களாகவே கணக்குகளை யோசித்து தாளில் எழுதுங்கள். இவற்றிலிருந்து மிக சுவாரசியமானவற்றை, சிக்கலானவற்றைத் தேர்ந்தெடுத்து நாளை எல்லோரும் சேர்ந்து போடுவோம்.”

“இறுதியில் நாம் என்ன படித்தோம் என்று தொகுத்துப் பார்ப்போம்.”

III. கவன உணர்வை வளர்த்தல். (விரைவான வேகம், கவர்ச்சிகரமான, உற்சாகமான தொனி.) நேரம் 5 நிமிடங்கள்.

கரும்பலகையின் ஒரு பகுதியைத் திறந்து குழந்தைகளுக்குப் படத்தைக் காட்டுகிறேன்.

“கவனமாகப் பாருங்கள்! இங்கு என்னென்ன வடிவங்கள் எங்கெங்கே உள்ளன என்று நினைவில் கொள்ளுங்கள். நான் இவற்றில் ஏதாவது மாற்றங்களைச் செய்வேன், என்ன மாற்றம் என்று கண்டுபிடிக்க முயலுங்கள்!”

நினைவு வைக்க வேண்டிய நேரம் 4-5 நொடிகள். உறுதியோடு சொல்கிறேன்:

“குனிந்து, கண்களை மூடுங்கள்!…”

கரும்பலகையை நோக்கித் திரும்பி 2-3 நொடிகளில் படத்தில் மாற்றங்களைச் செய்கிறேன். கீழ்வருமாறு செய்யலாம்:

எவ்வித மாற்றமும் செய்யாமலிருக்கலாம்;

9 என்பதற்குப் பதில் 6 என்று மாற்றலாம்;

அரை வட்டத்தை முழு வட்டமாக்கலாம்;

இரண்டு வடிவங்களை இடம் மாற்றலாம்;

புதிய வடிவத்தைச் சேர்க்கலாம்.

இவற்றில் ஏதாவது 2-3 மாற்றங்களைச் செய்து காட்டுகிறேன். ஒவ்வொரு முறையும் கரும்பலகையிலிருந்து தள்ளி நின்று உறுதியான குரலில் சொல்கிறேன்:

“தலையைத் தூக்குங்கள்! படத்தில் நான் எந்த மாற்றம் செய்துள்ளேன் என்று என் காதில் சொல்லுங்கள்!” என்று யாரெல்லாம் பதில் சொல்ல விரும்புகின்றார்களோ அவர்களை நெருங்கி விடையைக் கேட்டு, சரியா தவறா என்று காதிலேயே சொல்கிறேன். பின் எல்லோரும் விடையை உரக்கச் சொல்லும்படி கேட்கிறேன்.

முதல் பயிற்சிக்குப் பின் அடுத்த பயிற்சிக்குச் செல்கிறேன்.

“இந்தப் படத்தைப் பாருங்கள்!”

கரும்பலகையின் இன்னொரு பகுதியில் உள்ள திரையை விலக்கி படத்தைக் காட்டுகிறேன்.

“இங்கு என்னென்ன, எவ்வளவு வரையப்பட்டுள்ளது என்று கண்டு பிடிக்க வேண்டும். நீங்கள் தனியாக மனதில் எண்ணுங்கள், நானும் தனியே எண்ணுவேன். ஏனெனில் எனக்கும் எவ்வளவு உள்ளது என்று தெரியாது. வாருங்கள், முதலில் முக்கோணங்களை எண்ணுவோம்…”

குழந்தைகள் பார்க்கும்படி நானும் எண்ணுகிறேன்.

ஐந்து முக்கோணங்கள் உள்ளன. சரியா?”

பதில்கள் பல மாதிரியானவையாக இருக்கலாம்: அனேகமாக, பெரும்பாலான குழந்தைகள் நான் சொல்வதையே திரும்பச் சொல்லக்கூடும்; யாராவது, அங்கே ஐந்தல்ல, ஆறு முக்கோணங்கள் இருப்பதைக் கண்டுபிடிக்கலாம், ஏனெனில் எந்த பெரிய முக்கோணத்தினுள் எல்லாம் வரையப்பட்டுள்ளதோ அதையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமல்லவா!

தப்பைக் கண்டு பிடித்துச் சொன்னவனுக்கு நன்றி சொல்கிறேன்.

“இப்போது புள்ளிகளை எண்ணுவோம்…” சிறு இடைவெளி.

“அங்கே மூன்று… இல்லையில்லை, நான்கு புள்ளிகள் உள்ளன. சரியா?“

இதே போல் தொடரும். ஒவ்வொரு பதிலும் வந்த பின் படத்திற்கு வலது புறம் எழுதுகிறேன்:

ஒரு இடத்தில் ”தவறு” செய்கிறேன்: இங்கே 4 முக்கோணங்கள் உள்ளன என்று கூறி விட்டு 4-க்கு பதில் 5 அல்லது 6 என்று எழுதுகிறேன். எனது தவறை ”திருத்த” குழந்தைகளுக்கு வாய்ப்பளிக்கிறேன், முதலில் என்னைத் திருத்துபவர்களுக்கு நன்றி சொல்கிறேன்.

  1. பத்து வரையிலும் பத்து முதல் இருபது வரையிலும் உள்ள எண்களின் கூட்டல், கழித்தல் கணக்குகள். (திடீரென விரைந்த வேகத்திற்கு மாறுகிறேன்) நேரம் 5 நிமிடங்கள்.

“நான் கையை அசைத்ததும், 6 உடன் எதைக் கூட்டினால் 10 வரும் என்று சொல்லுங்கள்!”

“7 உடன் எதைக் கூட்டினால் 10 வரும்?..”

“8 உடன் எதைக் கூட்டினால் 10 வரும்?…”

“5 உடன் எதைக் கூட்டினால் 10 வரும்?…”

“நன்றி! இப்போது இந்தக் கணக்குகளைப் பாருங்கள்!” கரும்பலகையின் திரையை விலக்குகிறேன்:

”இக்கணக்குகளைப் போட்டதில் நான் தப்பு செய்திருக்கிறேனா என்று பாருங்கள்!”

“இரண்டாவது கணக்கிலா? 3 என்பதற்குப் பதில் 5 என்று இருக்க வேண்டுமா?… நன்றி…. மூன்றாவது கணக்கிலா? 5 என்பதற்குப் பதில் 6 என்று இருக்க வேண்டுமா? நன்றி !”

இதே போல் வேகத்தைக் கூட்டிச் செல்கிறேன்.

  1. சுயமாக கணக்குகளை அமைத்து போடும் பயிற்சி. (மிதமான வேகம், நட்பு ரீதியான தொனி.) நேரம் 3-4 நிமிடங்கள்.

படிக்க:
நூல் அறிமுகம் : இந்திய பொருளாதார மாற்றங்கள் – ஜெ. ஜெயரஞ்சன் கட்டுரைகள்
ரூ. 4355 கோடி : பஞ்சாப் – மகராஸ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி !

“எனக்கு உதவி செய்கின்றீர்களா?.. ஒவ்வொருவருக்கும் ஒரு வெள்ளைத் தாளைத் தருகிறேன். 1-2 கூட்டல், கழித்தல் கணக்குகளை எழுதுங்கள். இவற்றிலிருந்து மிக சுவாரசியமானவற்றை, சிக்கலானவற்றை நாளை வகுப்பறையில் எல்லோரும் சேர்ந்து போடுவோம். இதன் மூலம் பாடம் நடந்த நீங்கள் எனக்கு உதவுவீர்கள்!”

முதல் 10 நிமிட இடைவேளை

குழந்தைகள் சுதந்திரமாக இயங்குவதை, கலந்து பழகுவதை, விளையாடுவதைக் கவனிக்கிறேன்.

தாய் மொழிப் பாடத்திற்குத் தேவையானவற்றைக் கரும்பலகையில் எழுதுகிறேன். அதே சமயம் குழந்தைகள் எதைப் பற்றித் தாமே பேச விரும்புகிறார்கள் என்பதையும் கேட்கிறேன். அவர்களுக்கு சுவாரசியமான பல விஷயங்களைப் பேசுகிறேன். தாழ்வாரத்தில் உள்ள கரும்பலகையருகே நின்று விளையாட்டிலும் பொழுதுபோக்கிலும் ஈடுபட்டுள்ள குழந்தைகளைக் கவனிக்கிறேன்.

சாதாரண, அவசரமற்ற வேகம், பிரதான தொனி.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

சிவாஜி முடிசூட்டு விழா பற்றிய கதை !

0
Shivaji

காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு ! – இறுதி பாகம்

துனாத் சர்காரை தவிர வரலாற்றறிஞர் கோவிந்த் சகாராம் சர்தேசாயின் ‘மராட்டியர்களின் புதிய வரலாறு’ எனும் நூலும் சிவாஜியின் முடிச்சூட்டு விழாவை சுற்றியுள்ள சிக்கல்களை குறிப்பிடுகிறது.

***

முடிசூட்டு விழா………

1673-ம் ஆண்டின் தொடக்கத்தில் சிவாஜியின் முடிசூட்டு விழா குறித்த எண்ணமானது ஈடேறத் தொடங்கியது. விழாவிற்கான தயாரிப்புகள் முழுமையாக நிறைவேறியப் பின்னர், சிம்ம இராசிக்குள் சூரியன் அடியெடுத்து வைத்த 1674-ம் ஆண்டு ஜுன் 5 ஆம் நாள் ரைக்காட் அரண்மனையில் சிவாஜியின் முடிச்சூட்டு விழா நடந்தேறியது.

Shivajiசெயலால் தான் ஒரு சத்திரியன் என சிவாஜி நிரூபித்தாலும், பிறப்பால் சத்திரியனாக அங்கீகரிக்க கோரிய அவரது கூற்றுக்கு வைதீக பார்ப்பனர்களுக்கு உடன்பாடு இல்லை. இப்படி ஒரு முடிசூட்டு விழா நடந்து ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது மேலும் அது குறித்து ஆண்களுக்கு முழுமையாக மறந்தே போய்விட்டது. அலாவுதின் கில்ஜியின் தக்காண படையெடுப்பு மற்றும் தக்காணத்தை முஸ்லிம்கள் கைப்பற்றிக் கொண்டப்பிறகு பரம்பரையாக புனித மத நூல்களை கற்றறிந்த தக்காணத்தின் பார்ப்பனர்கள் அனைவரும் பெனாரசுக்கு குடிப்பெயர்ந்தனர்.

பரம்பரையாக மத நூல்களின் புலமைக்கு பெயர் போன தேவர்கள், தர்மதிகாரிகள், சேசர்கள், பட்டர்கள் மற்றும் மவுனிகள் என அனைவரும் அவர்களது சொந்த வீடுகளை விட்டு விட்டு புனித நூல்களுடன் புனித கங்கைக்கரையில் குடி பெயர்ந்தனர் மேலும் இந்து சிந்தனை மற்றும் கற்றலுக்கான புதிய பல்கலைக்கழகத்தையும் திறந்தனர். படிப்பறிவிலா சிந்தனையற்ற பைத்தானின் மக்களை ஆதிக்கம் செலுத்த இப்போது யாருமில்லை. பெனாரஸ் இப்போது இந்து சிந்தனையிலும் கற்றலிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.

படிக்க:
சிவாஜி முடிதரிக்க வேண்டுமாம் ! சூத்ரனுக்கு ராஜாபிஷேகமா ?
♦ காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு !

எனவே பெனாரசின் கற்றறிந்த இந்து சட்ட நிறுவனங்களின் முன்னனியாளர்களில் ஒருவரான காகா பட்டரிடம் சிவாஜி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டியிருந்தது. பழங்கால பயன்பாட்டிற்கு இணங்கவும் தற்போதைய சூழலின் தேவைகளுக்கு ஏற்பவும் விவரங்களை தயாரிக்க அவர் ராய்காட்டிற்கு அழைக்கப்பட்டார்.

மராட்டியர்களின் புதிய வரலாறு – கோவிந்த் சகாராம் சர்தேசாய்
(இனவாதத்தை முறியடித்தல், அக்டோபர் 2001 இதழிலிருந்து காப்பகப்படுத்தப்பட்டது)


தமிழாக்கம் :
சுகுமார்
நன்றி : சப்ரங் இந்தியா 

இதன் முந்தைய பகுதிகள் :
♦ காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு ! 
♦ மராட்டியம் : வரலாறு பாடநூல்கள் காவி மயமாக்கப்பட்ட வரலாறு ! 
♦ சிவாஜி முடிசூடுவதில் ஏற்பட்ட சாதிய சிக்கல்கள் !

பார்ப்பனர்களின் முகத்தில் கரியைப் பூசும் பிரம்மா !

ண்ணா பல்கலைக் கழக இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் பகவத் கீதையைப் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது குறித்து தொலைக்காட்சிகளில் அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறின. காந்தியைக் கொலை செய்ய கோட்சேவைத் தூண்டிய ஒரு கொலை நூலை மாணவர்கள் படிப்பதா என பதறுகிறார்கள் பகுத்தறிவாளர்கள். அதுவும் அண்ணா பெயரில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்திலா என ஆதங்கப்படுகிறார்கள். நால் வருண சாதி அமைப்பை நியாயப்படுத்தும் பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்ப்பது பார்ப்பன மேலாண்மையை நிலை நாட்டுவதும் மறைமுகமாக சமஸ்கிருதத்தைப் புகுத்துவதும்தான் மோடி அரசின் நோக்கம் என்பதே பகவத் கீதையை எதிர்ப்போரின் கருத்தாக இருக்கிறது.

மோடி எதைச் செய்தாலும் எதிர்ப்பதே பெரியாரிஸ்டுகளின் வேலையாப் போச்சு என்கிறது பார்ப்பன தரப்பு. மானுடவியல், தனிமனித ஆளுமை, நிர்வாக மேலாண்மை குறித்துத் தெரிந்து கொள்ள ஏராளமான செய்திகள் கீதையில் கொட்டிக் கிடக்கிறது; மேலும் இந்து மதத்துக்கும் பகவத் கீதைக்கும் தொடர்பே கிடையாது; நால்வருண அமைப்பு என்பது செய்கிற தொழிலை அடிப்படையாகக் கொண்டது; வருண அமைப்புக்கும் சாதிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என அடித்துச் சொல்கிறார்கள். கீதை அனைவருக்குமான ஒரு பண்பாட்டு நூல். பிளாட்டோவையும் அரிஸ்டாட்டிலையும் படிக்கும் போது பகவத் கீதையை ஏன் படிக்கக் கூடாது என கேள்வி எழுப்புகிறது வலதுசாரி பார்ப்பனத் தரப்பு.

இதில் எந்தத் தரப்பு சொல்வது சரி. சாதாரண மக்களுக்கு பொறியியல் பாடத்திட்டம் குறித்த விவரம் தெரியாது.  ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்பதைத்தவிர பகவத் கீதை பற்றி வேறு எதுவும் தெரியாது. “எதப் படிச்சா என்ன? வேலை கெடச்சா சரி!” என்பதைத் தாண்டி பொறியியல் மாணவர்களும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. மோடிகளும் எடப்பாடிகளும் நீடிக்கும் வரை யார் எதைப் படிச்சாலும் எந்த வேலைக்கும் உத்தரவாதம் இல்லை என்பது மட்டும்தான் தற்போதைக்கு எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இதுல மேலாண்மைக் கோட்பாடாம்! ஆளுமைத் திறனாம்! சோத்துக்கே வழியில்லையாம். ஆனால் சோக்குக்கு மட்டும் கொறச்சல் இல்ல!’

சரி! விசயத்துக்கு வருவோம்! பகுத்தறிவு தரப்பு குறித்து நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. பார்ப்பனர்களின் கருத்தை பரிசீலித்தாலே எது சரி என்பதை முடிவு செய்ய முடியும் எனக் கருதுகிறேன்.

பகவத் கீதைக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பே கிடையாது?

“ருக்ஸாம யஜூரேவ ச!” (கீதை: 9-17). இருக்கு, சாம, யஜூர் என்ற மூன்று வேதங்களும் நானேதான் என்கிறான் கிருஷ்ணன். “இருக்கு, எஜூர், சாம என்னும் பெயரையுடைய அநாதியான வேதத்தை அக்கினி, வாயு, சூரியன் இவர்கள் மூவரிடத்தினின்றும் (பிரம்மா) வெளிப்படுத்தினார்” (மனு:1-23) என்கிறான் மனு.

வேதங்கள், மனு தரும சாஸ்திரம், பகவத் கீதை இவை எல்லாம் இந்து மதத்தைப் பற்றிப் பேசாமல் கன்பூசியசிசமா பேசுகிறது? கீதைக்கும் இந்து மதத்திற்கும் உள்ள தொடர்பு குறித்த சான்றுகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் போது பகவத் கீதை ஒரு இந்து மத நூலே அல்ல என்று ஒருவன் பேசுகிறான் என்றால் அவனை சந்தேகப்பட வேண்டுமா? வேண்டாமா?

மனுதரும சாஸ்திரமும் கீதையும்!

“சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்” (கீதை: 4-13). “பார்ப்பனர், சத்திரியர். வைசியர், சூத்திரன் ஆகிய நான்கு வருணங்களையும்”, “கு ணகர்மவி பாக” (கீதை:4-13).  “அவர்களுக்கான குணங்களையும் கர்மங்களையும் நானே படைத்தேன்” என்கிறான் கிருஷ்ணன். இதையேதான் “உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், துடை, கால் இவைகளினின்றும் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்” (மனு:1-31) என்கிறது மனுதரும சாஸ்திரம்.

“வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றல் – கற்பித்தல் இவை பார்ப்பனர்களுக்கு இயல்பாகவே உண்டான கர்மங்கள்” (கீதை:18-42), “கொடையும் ஆளும் தன்மையும் சத்திரியர்களுக்கு இயல்பான கர்மங்கள் ஆகும்” (கீதை:18-43), “உழவு செய்தலும், பொருட்களை வாங்கி விற்பதும் வைசியர்களுக்கு இயல்பாக உண்டான கர்மங்கள்” (கீதை:18-44), “மக்கள் அனைவருக்கும் சேவை புரிவது நான்காம் வர்ணத்தவர்களுக்கு இயல்பாக உண்டான கர்மம்” (கீதை:18-45) என கீதை சொல்கிறது.

இதையேதான் மனுதரும சாஸ்திரமும் சொல்கிறது. “இவர்களுக்கான கர்மங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்” (மனு: 1-87), “பார்ப்பானுக்கு வேதம் ஓதுவித்தல், யாகம் செய்தல்” (மனு:1-88), “சத்திரியனுக்கு மக்களைக் காத்தல், தானம் கொடுத்தல்” (மனு:1-89), “வைசியனுக்கு பயிரிடுதல், வாணிபம் செய்தல்” (1-90), “சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமை இன்றி பணி செய்வதை தருமமாக ஏற்படுத்தினார்” (மனு:1-91).

கீதையும் மனுதரும சாஸ்திரமும் வேறு வேறு அல்ல என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? மனுதர்மத்தை சுலபமாக புரிய வைக்க, பதிய வைக்க எழுதப்பட்ட ஒரு கோனார் உரைதான் கீதை.

தொழிலை மாற்றிக் கொண்டால் வருண சாதி மாறிவிடுமா?

இதில் தொழிலை மாற்றிக் கொண்டால் அதாவது பார்ப்பனன் பிறருக்கு சேவை செய்தால் அவன் சூத்திரனாகவும், சூத்திரன் வேதம் ஓதி யாகம் வளர்த்தால் அவன் பார்ப்பானாகவும் ஆக முடியும் என்று மூச்சு முட்ட பேசுகின்றனர் பார்ப்பனர்கள்.

இசைக் கருவிகளை வாசிப்பது பார்ப்பானின் தொழில் கிடையாது.  வீணை, புல்லாங்குழல், வயலின், பக்க வாத்தியங்களான மிருதங்கம், கஞ்சிரா  வாசிக்கிற பார்ப்பனர்கள் எல்லாம் இசைவேளாளர்களாக சாதி மாறிவிட்டார்களா? அப்படி மாற்றிக் கொண்ட ஒரு பார்ப்பானையாவது காட்ட முடியுமா?

இவர்கள் சொல்வது போல அப்படி எல்லாம் மாற்றிக் கொள்ள முடியாது. “பிறருடைய தர்மத்தைக் காட்டிலும் தன்னுடைய தர்மம் உயர்ந்தது” (கீதை:18-47), “தனக்குரிய இயல்பான கடமையை விட்டுவிடலாகாது” (கீதை:18-48), உன்னுடைய தொழில்தான் உயர்ந்தது, அதை விட்டுவிடாதே என வலியுறுத்துகிறான் கிருஷ்ணன்.

படிக்க:
சினிமா மற்றும் அறிவுத்துறையினர் மீது தேசத்துரோக வழக்கு !
யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை !

ஒரு வேளை ஏதோ ஒரு காரணத்திற்காக உனது தொழிலை நீ மாற்றிக் கொண்டால் உனது வருணம் மாறிவிடுமா? உனது தொழிலை நீ மாற்றிக் கொள்ள உனக்கு அதிகாரம் கிடையாது என்பதுதான் இந்து மத சாஸ்திரம். “பார்ப்பனன் தொழிலைச் செய்தாலும் சூத்திரன் பார்ப்பன சாதியாகமாட்டான். ஏனென்றால் அவனுக்கு பார்ப்பனச் சாதித் தொழிலில் அதிகாரமில்லையல்லவா. சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பார்ப்பனன் சூத்திரசாதியாகமாட்டான். ஏனென்றால் அவன் ஈனத் தொழிலைச் செய்தாலும் அவன் சாதி உயர்ந்ததல்லவா. இப்படியே இந்த விசயங்களை பிரம்மாவும் நிச்சயம் செய்திருக்கிறார். (மனு:10-73).

நீ உனது தொழிலை மாற்றிக் கொண்டாலும் உனது வருணம் – சாதி மாறாது என ஷேசாத்திரிகள், கோலாகலன்கள், இராமசுப்புக்களின் முகத்தில் கரியைப் பூசுகிறார் பிரம்மா.

ஊரான்

disclaimer

ஈராக்கை உலுக்கிய மக்கள் போராட்டம் ! படக் கட்டுரை

லட்சக்கணக்கான ஈராக் மக்கள் அரசிற்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போராட்டங்கள் வேலையின்மை, அரசு சேவைகள் செயலிழந்தமை, ஊழல் முதலியவற்றை எதிர்த்து நடைபெற்று வருகின்றன.

எண்ணெய் வளத்தில், உலகளவில் ஐந்தாவது இடத்தில் இருக்கக்கூடிய ஈராக் பல ஆண்டுகளாக அமெரிக்காவின் படையெடுப்பால் பல இன்னல்களை சந்தித்து வருகிறது. அதனால் ஈராக்கில் போராட்டம் புதிதில்லை என்றாலும், தற்போது நடைபெற்றுவரும் இந்தப் போராட்டம் அரசை கதிகலங்க வைத்துள்ளது. போராட்டத்தை ஒடுக்க ஈராக் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில், கடந்த அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து இதுவரை 104 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 6,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட 51 வயது பெரியவர், “நாங்கள் பட்டினியில் வாடுகிறோம். அதனால்தான் போராடுகிறோம். இங்கு எண்ணெய் கிணறுகள் அதிகம் இருக்கிறது. ஆனால் எங்களது நாடோ நலிவடைந்திருக்கிறது. என்ன நடக்கிறது, நாடு எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது?” என்கிறார்.

IRAQ-POLITICS-DEMONSTRATIONதலைக்குமேல் சூழ்ந்த வெள்ளைப் புகை. ஷோகிக்கு தப்பியோடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை. ஈராக் தலைநகர் பாக்தாத்தில், பாதுகாப்புப் படையினரால் அடுத்தடுத்து வீசப்படவிருக்கும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைக் கண்டு கொத்து கொத்தாக மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடுகின்றனர்.

“அரசு ஸ்னைப்பர்களால் (மறைந்திருந்து சுடுபவர்கள்) குறிவைக்கப்படாதவர்கள் அதிர்ஷ்டசாலிகள்” என்று தனது அருகில் முகமூடி அணிந்து ஓடும் நபரை பார்த்துக் கூறுகிறார் ஷோகி.

அரசியல் கட்சிகளால் இல்லாமல், வெகுஜன மக்களால் ஒருங்கிணைத்து நடத்தப்படுகிறது என்பதே இப்போராட்டத்தின் சிறப்பு. வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும், ஊழல் ஒழிய வேண்டும், மக்களது வாழ்க்கைத் தரம் உயரவேண்டும் என்று அவர்களது முழக்கங்கள் இருந்தாலும், அவர்களது முதன்மையான நோக்கம், இதற்கெல்லாம் மூலக் காரணமான ஈராக் பிரதமர் அடில் அப்துல் மக்தி பதவி விலக வேண்டும் என்பதே.

ஷியா ஆன்மீகத் தலைவரான கிராண்ட் அயதுல்லா அலி அல்-சிஸ்தானி, சில சீர்த்திருத்தங்கள் செயல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். ஈராக் ஜனாதிபதி பர்ஹாம் சாலிஹ் போன்றவர்கள், போராடும் மக்களுக்கு எதிரான அரசின் வன்முறையை கண்டித்ததோடு, மக்களின் அரசியலமைப்பு உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றனர்.

படிக்க:
மீளாத்துயரில் ஈராக்கின் பஸ்ரா நகரத்து மக்கள்… | படக்கட்டுரை
♦ பசுமை படர்ந்த தேயிலைத் தோட்டங்களில் புதைந்து கிடக்கும் தொழிலாளர்கள் !

மேலும், அப்துல் மக்தி அரசை கலைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஷியா தலைவர் முக்ததா அல்-சதரும், கூறி வருகிறார்.

ஆனால், “எங்களுக்குச் சீர்த்திருத்தங்கள் தேவையில்லை; நாங்கள் முழுமையான மாற்றத்தை விரும்புகிறோம்; அதிகாரத்திற்கு உட்பட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்; கைகளில் இரத்தம் படிந்த கட்சியிலிருந்து இல்லாமல், புதிய நபர்களை நாங்கள் தேர்ந்தெடுக்க விரும்புகின்றோம்” என்கிற அவர், “இனி இழக்க ஏதுமில்லை; மானமுடன் இறப்பது மேல். நாங்கள் போராட்டத்தை தொடருவோம்” – என்று போராட்டக்காரர்களின் ஒருமித்தக் குரலாக, களப்போராளி ஷோகியின் குரல் ஒலிக்கிறது.

IRAQ-POLITICS-DEMONSTRATION

அரசிற்கு எதிரானப் போராட்டத்தில் காயமடைந்த சிறுவனை மீட்டுச் செல்லும் போராட்டக்காரர்.

Mass Protest Iraq

இரண்டு நாட்கள் போராட்டத்திற்கு பிறகு கலவர பூமியாக மாறிய பாக்தாத்தில், எரியும் டயர்களுக்கு இடையில் ஓடும் சிறுமி.

Mass Protest Iraq

வேலையின்மை, ஊழல் மற்றும் செயலிழந்துபோன அரசைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களை தங்களது ஆயுத பலத்தால் தடுத்து நிறுத்தும் ஈராக் பாதுகாப்புப் படையினர்.

Mass Protest Iraqஈராக் பாதுகாப்புப் படையினரால் வீசப்பட்ட வெடித்த குண்டுகளின் குப்பிகளை காண்பிக்கிறார் போராட்டக்காரர்.

Mass Protest Iraq

தலைநகர் பாக்தாத்தில் அக்டோபர் 1-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில், அரசுப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட போராளியின் இறுதி ஊர்வலம்.

Mass Protest Iraq

போராட்டக்களத்தில் ஊழல், வேலையின்மை, செயலிழந்த அரசுக்கு எதிராக ஈராக் கொடியை ஏந்தி நிற்கும் போராளி.

Mass Protest Iraq

பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட பெரியவர், ஆயுதங்களுக்கு அஞ்சாமல் தனது கைத்தடியை உயர்த்தி வீரமுழக்கமிடுகிறார்.

Mass Protest Iraqபாக்தாத்தில் துவங்கிய போராட்டம் தீயைப் போல நாடு முழுவதும் பரவியது. ஈராக் தெற்கு பகுதியில் தீப்பிழம்புகளுக்கு மத்தியில், முழக்க அட்டையை ஏந்தி நிற்கும் இளைஞர்.

Mass Protest Iraqஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட ஈராக்கின் தென்பகுதி நகரமான நசீரியாவில், 8 போராளிகளும் ஒரு அரசு அதிகாரியும் இறந்த பிறகும்கூட தொடர்ந்து முன்னேறிச் செல்லும் மக்கள் போராட்டம்.


செய்தி ஆதாரம் : In Pictures: Mass protests shake Iraq
தமிழாக்கம்  :
ஷர்மி

கோவை அரசுக் கல்லூரியில் காவிகளுக்கு துணைபோகும் நிர்வாகம் !

0

ன்றைய காலகட்டத்தில் இந்துத்துவ பாசிசம், நாடு முழுவதிலும் மட்டுமல்ல கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ஆதிக்கம் செலுத்தி மாணவர்களிடமும் ஒரு பிரிவினையை ஏற்படுத்துகின்றது.

கடந்தகால நிகழ்வாக டெல்லி பல்கலைக்கழகத்தில் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பு சாவர்க்கரின் சிலையை வைத்து சாவர்க்கரை ஒரு தியாகி போல சித்தரித்து மாணவர்களிடம் பிரிவினைவாத கருத்துக்களைத் தெரிவிக்கின்றன.

அதைப்போல கோவை அரசு கலைக் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறை சுவற்றில் விவேகானந்தர் படத்தை வரைந்து அதற்கு காவி வண்ணம் அடித்து சமூக வலைத்தளங்களில் பிரிவினைவாத கருத்துக்களை தொடர்ந்து பதிவிடுகின்றன.

கடந்த ஒரு வருட காலமாக கோவை அரசு கலைக் கல்லூரி சுவற்றில் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், போன்ற தலைவர்களின் உருவப்படங்கள் அந்தத் துறையை சேர்ந்த மாணவர்களால் வரையப்பட்டுள்ளது. அது அந்தத் துறையில் உள்ள மாணவர்களின் விருப்பத்தினால் வரையப்பட்டது. ஆனாலும் அதற்கு அத்துறைத்தலைவர் அனுமதி அளிக்கவில்லை. தடைகளை மீறி மாணவர்களின் விருப்பத்தின் பேரில் மூன்று வரலாற்று முக்கியத்துவம் மிக்க தலைவர்களின் படத்தை வரைந்தனர் மாணவர்கள்.

கோவை அரசு கலைக் கல்லூரி அரசியல் அறிவியல் துறை என்பது முற்போக்குக் கருத்துக்கள் நிறைந்த இடமாக இருந்து வந்தது. அதை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டது ஏபிவிபி மாணவர் அமைப்பு .

அவர்களின் திட்டத்தின் ஒரு பகுதியாக முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்த கணேசன் (கலை கணேசன்), மற்றும் கல்லூரியை சாராத மற்ற சில காவி குண்டர்களுடன் சேர்ந்து கொண்டு கல்லூரி விடுமுறை நாளான சனிக்கிழமை (28.09.2019) அன்று, மார்க்ஸ் படத்தை பாதி அழித்து விவேகானந்தர் காவி உடையில் நிற்பது போலவும், அதற்கு பின்புறம் கோவிலில் காவிக்கொடி பரப்பது போலவும் வரைந்துள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் மதரீதியான கருத்துக்களையும், மற்ற முற்போக்கு மாணவர் அமைப்பிற்கும், முற்போக்காளர்களுக்கு மிரட்டல் விடுவது போல தவறான கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டுள்ளனர்.

இந்தக் காவி விவேகானந்தரின் படம் வரைந்தால் சர்ச்சை ஏற்படும் என்று தெரிந்தே இதற்கு அனுமதி வழங்கியுள்ளார் துறைத் தலைவர் கனகராஜ்.

இவர் இலவச IAS பயிற்சி நடத்துவதாக தெரிவித்துக் கொண்டு, கல்லூரியில் உள்ள கட்டிடத்தில் மேலே உள்ள ஒரு பகுதியை வளைத்துப் போட்டு அதற்கு தன் பெயரை வைத்துக்கொண்ட ‘யோக்கியமானவர்’ ஆவார்.

படிக்க:
டெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. !
♦ யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை !

அவர் பயிற்சியளிக்கும் இடம் உள்ளிட்டு, கல்லூரி முழுமையும் மாணவர்களின் சொத்து. அவர்களுடைய கட்டணத்தில் உருவான கல்லூரியின் வளாகத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்.

அதுமட்டுமல்ல இவர்தான் கல்லூரியில் ஏற்படும் சலசலப்புகளுக்கு முக்கிய காரணமானவர். அதிகார வர்க்கத் தாழ்வாரத்தில் தனது நெருக்கத்தை அதிகரித்துக் கொள்வதற்காக பல பிற்போக்கு, பாசிச சிந்தனை உள்ள நபர்களை பேச்சாளர்களாக அழைத்து நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார். இவரின் ஒப்புதலுடன் தான் காவி உடை அணிந்த விவேகானந்தர் படம் வரையப்பட்டுள்ளது.

கடந்த 30.09.2019 அன்று இது குறித்து துறையில் உள்ள மாணவர்கள் ஒரு புகார் கடிதம் எழுதி, அதில் மாணவர்கள் கையெழுத்திட்டு சர்ச்சைக்குரிய படமான காவி விவேகானந்தரை எடுக்கவேண்டும், என்ற புகார் கடிதத்தை துறைத் தலைவரிடம் கொடுத்தனர். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. நாங்கள் பேசி முடிவெடுத்து சொல்கிறோம். கமிட்டி அமைத்து முடிவு செய்கிறோம் என்றார்.

பின்பு மாணவர்கள் அந்த புகார் கடிதத்தை கல்லூரி முதல்வரிடம் கொடுத்தனர். வரும் வியாழன் விசாரணை குழு அமைக்கப்படும் என்றார். அதில் முடிவெடுத்து சொல்கிறோம் என துறைத் தலைவரும், கல்லூரி முதல்வரும் கூறியுள்ளனர். ஆனால் இன்னும் முடிவு எதையும் தெரிவிக்கவில்லை.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை மாவட்டம். தொடர்புக்கு : 94451 12675.

சினிமா மற்றும் அறிவுத்துறையினர் மீது தேசத்துரோக வழக்கு !

ந்தியாவில் சிறுபான்மை இசுலாமியர்கள். தலித்துகள் மீது கும்பல் கொலைகள் அதிகரித்துவருவதை சுட்டிக்காட்டி இதனை உடனே தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்கள் ராமச்சந்திர குஹா, சுமித்சர்க்கார், அஷிஷ் நந்தி போன்ற அறிவுத்துறையினர், அடூர் கோபாலகிருஷ்னன், மனிரத்னம், சுபாமுட்கல், ரேவதி, ஷ்யாம்பெனகல் போன்ற திரையுலக பிரபலங்கள், பினாயக் சென் போன்ற புகழ் பெற்ற மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தையே குற்றமாக்கி பிகார் மாநில போலீசு வழக்குப் பதிந்துள்ளது. 120-பி,153-பி, 290, 297, 504 ஆகிய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் தேசத்துரோகம், பொது அமைதியைக் குலைத்தல், மத உணர்வைப் புண்படுத்தல், பிரதமரை இழிவுபடுத்துதல் என மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

தேசியக் குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ள ஆதாரங்களைச் சுட்டிக்காட்டியே இந்த வேண்டுகோளை அவர்கள் அனுப்பியுள்ளனர். ஆர்.எஸ். எஸ்., பா.ஜ.க.வினர் இத்தகைய கடிதத்தையும் விமர்சனத்தையும் குற்றமாகக்கருதுவது வியப்புக்குரியதல்ல. ஆனால், முசாபர்புர் நீதித்துறை நடுவர் எவ்விதப் பரிசீலனையுமின்றி வழக்குப் பதிய உத்தரவிடுவது மிகவும் ஆபத்தானது. தனக்கு எதிரான கருத்துக்கள், விமர்சனங்களை மோடி அரசு நீதித்துறையைக் கொண்டே ஒடுக்க முயல்வதன் துலக்கமான உதாரணம்தான் இந்த வழக்கு. எந்தவொரு அடிப்படை ஆதாரமுமின்றியும், எந்தவொரு நியாயமான சட்டபூர்வ செயலையும்கூட குற்றமாக்கி தண்டிக்க மோடி அரசு தயாராகிவிட்டதையே இந்த நடவடிக்கை காட்டுகிறது. இந்தியாவின் மதிப்பை 49 பேரும் குலைத்துவிட்டதாக  குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் உண்மையாதெனில், சர்வதேச மனித உரிமைகள், இந்திய அரசியல் சட்டம், ஜனநாயக, தார்மீக நெறிகள் அனைத்தையும் நசுக்கி இந்தியாவைத் தலைகுனிய வைப்பது மோடி ஆட்சிதான்.  காஷ்மீரில் நடக்கும் கொடுமைகளை மோடியின் நண்பன் அமெரிக்காவே கண்டித்திருக்கிறது.

படிக்க:
யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை !
ரூ. 4355 கோடி : பஞ்சாப் – மகராஸ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி !

நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து ஆகப்பெரும்பாலான மக்கள் ஓட்டாண்டியாக்கப்பட்டுவரும் நிலையில் மக்கள் போராட்டங்களையும், போராளிகளையும் அச்சுறுத்தவே பிரபலங்கள் மீது வழக்குப் போடுகின்றனர். கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்ட இந்தியாவின் தலைசிறந்த அறிஞர்களும் மக்கள் உரிமைப் போராளிகளுமான வரவர ராவ், சுதா பரத்வாஜ் உள்ளிட்ட 10 பேர் எந்த அடிப்படையுமின்றி இன்றுவரை சிறை வைக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. குற்றவாளிகள் விடுவிக்கப்படுகின்றனர். வரும் நாட்கள் மிகவும் ஆபத்தானவையாக மாறிவருகின்றன. எனவே மோடி அரசின் பாசிச ஒடுக்குமுறையை முறியடிப்பதே இன்றைய உடனடித்தேவை. பாசிசம் கோழைத்தனத்தின் வெளிப்பாடு. மக்கள் போராட்டத்தின் முன் தோற்றதுதான் அதன் வரலாறு.  எனவே பாசிச ஒடுக்குகுறையை முறியடிக்க அனைவரும் ஒன்றுபடுவோம்.

நன்றி.

காளியப்பன்,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.
99623 66321

கால்கள் இன்றி சண்டை விமானம் ஓட்டும் ஒரே மனிதர் !

உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 10-அ

“சரி, தோழர் சீனியர் லெப்டினன்ட்” என்று அவனை உற்சாகப்படுத்தினார் கப்பூஸ்தின். “இப்போது உட்காருங்கள். கலந்து ஆலோசிப்போம்” என்றார்.

“எதைப் பற்றி?”

“நாம் என்ன செய்வது என்பது பற்றி, வெளியே போவோமா? எனக்குப் புகை குடிக்க வேண்டும் போல இருக்கிறது, இங்கே குடிக்கக்கூடாது.”

மறைத்து மூடப்பட்டிருந்த விளக்குகளின் மங்கிய நீல வெளிச்சத்தில் அரையிருட்டாக இருந்த ஆளோடிக்கு வந்து ஜன்னல் அருகே நின்றார்கள் அவர்கள். கப்பூஸ்தின் சுங்கானை வாயில் வைத்து உறிஞ்சலானார். புகை இழுக்கும் போது சுங்கான் கனிகையில், அவரது சிந்தனை நிறைந்த அகன்ற முகம் அரையிருட்டிலிருந்து நொடிப்பொழுது வெளித் தெரிந்தது.

“உங்கள் குழு ஆசிரியருக்கு இன்று தண்டனை விதிக்கப் போகிறேன்” என்றார் அவர்.

“எதற்காக?”

“பள்ளித் தலைமை அதிகாரிகளின் அனுமதி பெறாமல் உங்களை விமானமோட்ட விட்டதற்காக … ஆமாம். என்னை ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்? உண்மையைச் சொன்னால் நான் இதுவரை உங்களுடன் அளவளாமல் இருந்ததற்காக என்னையே தண்டித்துக் கொள்ளவேண்டும். நேரமே கிடைக்கவில்லை, ஒழிவு இல்லை, உங்களோடு பேச வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன்… நல்லது, அது கிடக்கட்டும். விஷயம் என்னவென்றால் விமானம் ஓட்டுவது உங்களுக்கு அவ்வளவு லேசான காரியம் அல்ல. ஆமாம்… அதனால் தான் உங்கள் ஆசிரியருக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்கிறேன்.”

அலெக்ஸேய் பேசாதிருந்தான். சுங்கானைப் புகைத்தவாறு தன்னருகே நிற்கும் இந்த ஆள் எப்படிபட்டவர்? இவருக்கு என்ன வேண்டும், என்பதற்காக இவர் வந்திருக்கிறார்? இவர் இல்லாமலே மனது புளித்துப் போய்த் தற்கொலை செய்துகொள்ளலாம் போல இருக்கிறதே…….

அலெக்ஸேய்க்கு உள்ளூற ஆத்திரம் மண்டியிட்டுக் கொண்டு வந்தது. சிரமப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டான். அவன் துன்பத்தில் உழன்ற மாதங்கள் அவசரப்பட்டு எதையும் முடிவு செய்யாதிருக்கக் கற்பித்திருந்தன. தவிரவும், கமிஸார் வரபியோவை, அலெக்ஸேய் மனதுக்குள் எவரை உண்மை மனிதர் என்று அழைத்தானோ அந்தக் கமிஸாரை நினைவுபடுத்தும் இனந்தெரியாத ஏதோ ஒரு விஷயம் அசட்டுப்பிசட்டான இதே கப்பூஸ்தினிடம் இருந்தது. சுங்கானில் நெருப்பு பிரகாசமாகச் சுடர்விட்டு அணைந்தது. ஊடுருவி நோக்கும் அறிவார்ந்த விழிகள் கொண்ட, அகன்று பருத்த முகம் நீல மங்கலிலிருந்து வெளிப்பட்டுவிட்டு மறுபடி அதில் கரைந்தது.

“இதோ பாருங்கள் மெரேஸ்யெவ், நான் உங்களுக்குப் புகழுரை கூற விரும்பவில்லை. ஆனால் எப்படித்தான் சுற்றி வளைத்தாலும் முடிவில் கால்கள் இல்லாமல் சண்டை விமானம் ஓட்டும் ஒரே மனிதர் உலகில் நீங்கள் மட்டுமே. ஒரே மனிதர்!” சுங்கான் குழியில் துளைக்குள் மங்கிய விளக்கு வெளிச்சத்தில் பார்த்து விட்டுக் கவலையுடன் தலையை அசைத்தார் கப்பூஸ்தின். பின்பு பேச்சைத் தொடர்ந்தார்: “சண்டை விமானப் படைக்குத் திரும்புவதற்காக நீங்கள் செய்யும் பெருமுயற்சியைப் பற்றி இப்போது நான் பேசவில்லை. இது சந்தேகமின்றி அருஞ்செயல். ஆனால் இதில் தனிப்பட்டது எதுவும் இல்லை. இப்போது காலம் அத்தகையது – வெற்றியின் பொருட்டுத் தன்னால் முடிந்ததை எல்லாம் ஒவ்வொருவனும் செய்கிறான்…. அட இந்தப் பாழாய்ப் போகிற சுங்கானில் எது போய் அடைத்துக் கொண்டிருக்கிறது?”

அவர் மறுபடியும் சுங்கான் குழாயை நோண்டத் தலைப்பட்டார். இந்த வேலையில் அவர் ஒரேயடியாக ஆழ்ந்து விட்டார் போலத் தோன்றியது. அலெக்ஸேயோ, தெளிவற்ற முன்னுணர்வால் உந்தப்பட்டு அவர் என்ன சொல்லப் போகிறார் என்று இப்போது ஆவலே வடிவாய் எதிர்பார்த்தான்.

சுங்கானுடன் மல்லுக்கட்டுவதை நிறுத்தாமலே, தமது சொற்கள் எத்தகைய உளப்பதிவு ஏற்படுத்துகின்றன என்பது பற்றிய கவலை இன்றி, கப்பூஸ்தின் மேலே சொன்னார்:

“இங்கே விஷயம் உங்களை, சீனியர் லெப்டினன்ட் அலெக்ஸேய் மெரேஸ்யெவைப் பற்றியது அல்ல. மிகவும் உடல் நலம் வாய்ந்தவர்கள் மட்டுமே, அவர்களிலுங்கூட அதிகமாய்ப் போனால் நூற்றுக்கு ஒருவர் மட்டுமே அடைய முடியும் என்று உலகு எங்கும் இதுவரை எண்ணப்பட்டு வந்த சிறந்த தேர்ச்சியைக் கால்கள் இல்லாமலே நீங்கள் பெற்றுவிட்டீர்கள் என்பதுதான் விஷயம். நீங்கள் வெறும் பிரஜை மெரேஸ்யெவ் அல்ல, நீங்கள் மாபெரும் சோதனையாளர்… அப்படி வா வழிக்கு, கடைசியில் சுத்தமாகிவிட்டாயா? எதைப் போட்டு நான் இதை அடைத்துக்கொள்ளச் செய்யாதேனோ?… ஆக, விஷயம் இதுதான்: சாதாரண விமானி போன்று உங்களை நாங்கள் நடத்த முடியாது, அதற்கு எங்களுக்கு உரிமை கிடையாது. நீங்கள் மகத்தான சோதனை ஒன்றைத் திட்டமிட்டிருக்கிறீர்கள். முடிந்த வகையில் எல்லாம் உங்களுக்கு உதவ நாங்கள் கடமைப் பட்டிருக்கிறோம். ஆனால் எந்த வகையில்? அது தான் கேள்வி. நீங்களே சொல்லுங்கள், உங்களுக்கு எந்த விதத்தில் உதவ முடியும்?”

படிக்க:
காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து : வெற்றி யாருக்கு ?
இனி 5 ரூபாய் இரயில் பயணம் வாய்ப்பேயில்ல ராஜா : இரயில்வே தனியார்மயம்

கப்பூஸ்தின் மீண்டும் சுங்கானில் புகையிலையை நிரப்பி அழுத்திப் புகைக்கத் தொடங்கினார். சுங்கானில் செவ்வொளிர்வு கனிந்து படர்வதும் மங்கிப் போவதுமாக, பருத்த மூக்குள்ள அந்த அகன்ற முகத்தை அரையிருட்டிலிருந்து வெளிக் கொணர்வதும் மறுபடி அதிலேயே ஆழ்த்திவிடுவதுமாக இருந்தது.

மெரேஸ்யெவின் பறப்பு எண்ணிக்கையை அதிகமாக்கும் படி பள்ளித் தலைவரிடம் பேசுவதாகக் கப்பூஸ்தின் வாக்களித்தார். தனக்குரிய பயிற்சித் திட்டத்தைத் தானே அமைத்துக் கொள்ளும் படி அவனுக்கு யோசனைக் கூறினார்.

“ஆனால் இதற்கு ஏகப்பட்ட பெட்ரோல் வீணாகுமே?” என்று தயக்கப்பட்டான் அலெக்ஸேய். பாந்தமற்ற இந்தச் சிறு மனிதர் தனது சந்தேகங்களை எவ்வளவு சுளுவாக, காரியரீதியாகத் தீர்த்து வைத்துவிட்டார் என்று வியந்தான்.

“பெட்ரோல் முக்கியமான பொருள் தான் – அதிலும் முக்கியமாக இப்போது. ஆனால் பெட்ரோலைவிட மதிப்புயர்ந்த பொருள்கள் உள்ளனவே.” இவ்வாறு சொல்லிவிட்டுக் கப்பூஸ்தின் வளைந்த சுங்கானிலிருந்து வெதுவெதுப்பான சாம்பலைத் தமது பூட்சுக் குதியில் அடித்து வெளியேற்ற முற்பட்டார்.

மறுநாள் முதல் அலெக்ஸேய் தனியாகப் பயிற்சி செய்யலானான். நடக்கவும் ஓடவும் நடனமாடவும் கற்றுக் கொண்ட போது செய்தது போல வெறும் பிடிவாதத்துடன் மட்டும் அவன் பாடுபடவில்லை. உண்மையான அகத்தூண்டல் அவனை ஆட்கொண்டுவிட்டது. பறப்புத் தொழில் நுட்பத்தைப் பகுத்தாயவும், அதன் எல்லா அம்சங்களையும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கவும், மிக மிகச் சிறு இயக்கங்கள், அசைவுகளாக அதைப் பாகுபடுத்தவும், ஒவ்வொரு அசைவையும் தனியாகப் பயின்று தேறவும் அவன் முயன்றான். பாலப் பருவத்தில் தானாகவே புரிந்துகொண்ட விஷயங்களை இப்போது ஆராய்ந்து கற்றான். ஆம், ஆராய்ந்து கற்றான். முன்பு அனுபவத்தாலும் பழக்கத்தாலும் தேர்ந்து கொண்டவற்றை இப்போது அறிவால் நுணுகித் தெரிந்து பயின்றான். விமானம் ஓட்டும் செயல்முறையை உறுப்பு அணைப்புள்ள அசைவுகளாகக் கூறுபடுத்தி, காலின் செயல் உணர்ச்சிகள் எல்லாவற்றையும் பாதங்களிலிருந்து கெண்டைக் கால்களுக்குக் கொண்டு வந்து, ஒவ்வோர் அசைவிலும் தனக்குத் தனிப்பட்ட தேர்ந்த திறமையை முயன்று ஏற்படுத்திக் கொண்டான்.

இது மிகவும் கடினமான, சள்ளைபிடித்த வேலையாக இருந்தது. அதன் விளைவுகள் தொடக்கத்தில் அனேகமாகத் தட்டுப்படவில்லை. எனினும் தடவைக்குத் தடவை விமானம் தன்னோடு மேலும் மேலும் இணைந்து ஒன்றாவது போலவும் தன் விருப்பத்திற்கு இணங்கச் செயல்படுவது போலவும் அலெக்ஸேய் உணர்ந்தான்.

“என்ன, எப்படியிருக்கிறது விஷயம், கலைவாணரே?” என்று அவனைத் தற்செயலாகச் சந்தித்தபோது வினவினார் கப்பூஸ்தின்.

மெரேஸ்யெவ் பெருவிரலை உயர்த்திக் காட்டினான், நன்றாக இருக்கிறது என்பதற்கு அறிகுறியாக. அவன் மிகைப்படுத்தவில்லை. விஷயம் நிரம்பச் சரளமாக இல்லவிடினும் நம்பிக்கையுடனும் திண்ணமாகவும் முன்னேறிக் கொண்டு தான் இருந்தது. எல்லாவற்றிலும் முக்கியமானது என்னவெனில், வெறிகொண்டு விரைந்தோடும் குதிரைமேல் ஒன்றும் ஏலாத, திராணியற்ற சவாரிக்காரன் அமர்ந்திருப்பது போன்று விமானத்தில் உணர்வதை இந்தப் பயிற்சிகளின் விளைவாக அலெக்ஸேய் விட்டுவிட்டான். தனது தேர்ந்த திறமையில் அவனுக்கு மீண்டும் நம்பிக்கை உண்டாயிற்று. விமானமோ, உயிர்ப் பிராணிபோல, தன்னை ஓட்டுபவன் நல்ல சவாரிக்காரன் என உணரும் குதிரை போல, வர வர அதிகக் கீழ்படிவு உள்ளதாயிற்று. தனது பறப்புப் பண்புகள் யாவற்றையும் விமானம் அலெக்ஸேய்க்குப் படிப்படியாக வெளிக்காட்டியது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

புற்றுநோயை கண்டறிவது எப்படி ? | மருத்துவர் BRJ கண்ணன்

cancer

ணக்கம், நாம் இந்த அறிவியல் ஆரோக்கியம் சேனலில், அடுத்து சில காணொளிகளில் புற்றுநோய் சம்பந்தமான காணொளிகளை பதிவேற்றலாம் என முடிவெடுத்துள்ளோம்.

புற்றுநோய் என்றால் எல்லோருக்கும் ஒரு பயம் வந்துவிடுகிறது, அது ஒரு இறப்புச்சான்றிதழ் என எல்லோரும் முடிவெடுத்து விடுகிறோம். ஆனால், அது உண்மையில் அப்படி கிடையாது. இன்றைய அறிவியல் உலகில் பல புற்று நோய்கள் ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால் பூரணகுணம் என்பது சாத்தியமே.

அதேபோல, பல புற்றுநோய்களுக்கு மருந்துகளை உட்கொண்டு வாழ்நாளை நீட்டிக்க முடியும். சில புற்று நோய்கள் தான் ஆபத்தானவை என கூறுகிறோம். இதைப் பற்றி உங்களுக்கு விளக்கவே இந்த காணொளி மற்றும் அடுத்தடுத்த காணொளிகளை பதிவேற்ற உள்ளோம்.

இதைப் பற்றி விவாதிப்பதற்கு நம்முடன் மருத்துவர் அழகு கணேஷ் வந்துள்ளார், அவரை வரவேற்போம் வணக்கம்.

கேள்வி : //புற்றுநோய் என்றால் என்ன என்பதை மக்களுக்கு புரியும்படி எளிமையாக விளக்குங்கள்.//

நம் உடலில் உள்ள செல்கள் அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம் உண்டு. குறிப்பிட்ட காலம் வரை வளரும் பிறகு தானாகவே இறந்து போகும். இதுவே செல்லானது இறந்து போகாமல், மேலும் மேலும் வளர்வதையே புற்றுநோய் என நாம் கூறுகிறோம்.

What is cancerஎன்ன கூற வருகிறோம் என்றால், நம் உடலில் செல்லானது, உருவாகி மறைவதும் மீண்டும் உருவாகுவதும் மறைவதும் என சுழற்சி முறையில் மாறிக்கொண்டே வருகிறது. இதுவே செல்லானது அழியாமல் வளர்ச்சி அடைந்து கொண்டே போனால், அதைத்தான் புற்று நோய் என கூறுகிறோம்.

கேள்வி : //புற்று நோய் எல்லோருக்கும் வர வாய்ப்புள்ளதா, அப்படி இல்லையென்றால் யாருக்கெல்லாம் வரும்.//

புற்று நோயானது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதற்கு ஆண், பெண், சிறியவர், பெரியவர், மத வேறுபாடுகள் ஆகியன கிடையாது.

கேள்வி : //எல்லோருக்கும் வரும் என தடாலடியாக கூறிவிட்டீர்கள். யாருக்கெல்லாம் வர வாய்ப்புகள் அதிகம். அந்த ரிஸ்க் ஃபேக்டர்-ஐ கூறி விளக்குங்கள்.//

முதலில் புகைப்பிடிப்பவர்கள் அல்லது புகையிலையை உட்கொள்பவர்கள் இவர்களுக்கு வாய்ப் புற்று நோய், கணைய புற்று நோய், சிறுநீரகப் புற்று நோய் ஆகியன வர வாய்ப்புகள் அதிகம். அடுத்ததாக உடல்பருமன் மற்றும் உடற்பயிற்சி –  உடல் உழைப்பு ஆகியவற்றில் ஈடுபடாமல் இருப்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆண், பெண் இருபாலருக்கும் குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகம். அதேபோல சிலர் கெமிக்கல் தொழிற்சாலைகளிலும், டையிங் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர். இவர்களுக்கும் அது சார்ந்த புற்று நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.

கேள்வி : //முன்பைவிட தற்போது புற்றுநோய் அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் அறிவியல் நம்மிடம் உண்டு. இதை கணக்கில் கொண்டு தற்போது புற்றுநோய் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா குறைந்துள்ளதா? என்பதை கூறுங்கள்.//

இதை நாம் இரண்டாக பிரித்துப் பார்க்கலாம் முன்பெல்லாம் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 50 அல்லது 60தான். ஆனால், இன்றைக்கோ சராசரி ஆயுட்காலம் என்பது 70 அல்லது 80. ஒருவருடைய சராசரி ஆயுட்காலம் நீடிக்கும் பொழுது அவர்களுக்கான புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம். எளிமையாக கூற வேண்டுமானால், வயதாகும்போது புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம்.

தற்போது சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளதால் புற்றுநோயின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதேபோல் முந்தைய காலங்களில் காய்கறி ஆகட்டும் அல்லது உணவு பண்டங்கள் ஆகட்டும் உடனடியாக உண்ணும் பழக்கம் நம்மிடம் இருந்தது. ஆனால் இன்று அதை பதப்படுத்தி வைப்பதும் சீக்கிரம் கெடாமலிருக்க பூச்சிக்கொல்லிகளை சேர்க்கும் பழக்கமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவும் புற்றுநோயானது ஏற்படுகிறது.

கேள்வி : //அசைவம் உட்கொள்வதால் புற்றுநோய் உண்டாகுமா.//

அசைவம் என்று பொதுமைப்படுத்தி கூறிவிட முடியாது ரெட் மீட் அதாவது சிவப்பு மாமிசம் உட்கொள்வதால், குடல் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளது என கூறுகிறார்கள். எனவே அசைவம் மட்டும் உட்கொள்வதால் புற்றுநோய் வரும் என்பது கிடையாது. கூடுதலாக அசைவத்தோடு சேர்த்து பச்சை காய்கறிகள் உட்கொண்டால் புற்றுநோய் வரும் வாய்ப்பானது குறைகிறது.

படிக்க :
♦ ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பற்றாக்குறை | வழக்குகள் தேக்கம் !
♦ புற்றுநோய் : திருட்டுத்தனத்தை மறைக்க ஊரை மிரட்டும் மான்சாண்டோ

கேள்வி : // புற்றுநோய்க்கான ஆரம்ப நிலை அறிகுறிகள் என்ன? ஆரம்பத்திலேயே அவற்றை கண்டுபிடிக்கும் கருவிகள் மற்றும் வாய்ப்புகள் நம்மிடம் உள்ளதா?//

இப்போது வாய் புற்றுநோய் என எடுத்துக் கொண்டோமானால், வாயில் ஏற்படும் புண் ஆறாமல் நீண்டகாலம் இருக்கும். குறிப்பாக வாயில் பல் அல்லது வேறெங்கிலும் புண்ணானது ஏற்பட்டால் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களில் அந்தக் காயமானது குணமாகும். அதுவே, நீண்டகாலம் ஆறாமல் இருந்தால் அது புற்றுநோயாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

அதேபோல் வயிற்றில் தொந்தரவு ஏற்படும் போது குடல் புண் அல்லது வாயு பிரச்சினையாக இருந்தால் அது அதிகபட்சம் நான்கு வாரங்களில் குணமடையும். அப்படி குணமடையாமல் நீண்டகாலமாக நீடித்தால் அது குடல் புற்று நோயாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். இதை நாம் எண்டாஸ்கோப்பி அல்லது வேறு பரிசோதனைகள் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக மார்பகப் புற்றுநோய் சிலருக்கு மார்பகங்களில் ஏதேனும் கட்டி சிறுவயதிலிருந்தே இருக்கிறது என்றால் அது பிரச்சினை இல்லை. அதுவே சிலருக்கு மார்பகங்களில் ரத்தம் கசிவது, புதிதாக கட்டி உருவாவது அல்லது நிறம் மாறுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டு நீண்டகாலமாக நீடித்தால் அது மார்பக புற்று நோயாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

அதேபோல் இருமல், சளி; பொதுவாக இருமல், சளி என்றால் அது 4 வாரங்கள் அல்லது 2 வாரங்களுக்குள் சரியாகும். அப்படி இல்லாமல் நீண்ட நாட்களாக நீடித்தால் அது நுரையீரல் புற்றுநோயாக இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இங்கு காச நோய்க்கும் இதே போன்ற அறிகுறிகள் தென்படும் ஆதலால் காசநோய்க்கான மருத்துவம் எடுத்துக் கொண்டு இருப்போருக்கும் அது நுரையீரல் புற்றுநோயாக இருக்கும் வாய்ப்புகளும் உண்டு.

சுருக்கமாக கூற வேண்டுமென்றால் நம் உடலில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மருத்துவரை அணுகவேண்டும். இரண்டு அல்லது நான்கு வாரங்கள் வரை அது குணமடைகிறதா என்று பார்க்கலாம். அப்படி குணமடையவில்லை என்றால் அந்த உறுப்பில் புற்றுநோய் பரிசோதனை செய்து கொண்டால், நாம் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

ஒரு உதாரணத்தைக் கூறுகிறோம், ஒருவருக்கு உடலில் அனிமியா பாதிப்பு உள்ளது என்றால், அதனால் அவருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும், மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை நாம் உட்கொள்ளலாம். அப்படி உட்கொள்ளும் போது நமக்கு ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு கூட வேண்டும். அப்படி கூடவில்லை என்றால் நாம் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.

இதேபோல்தான் இன்னஇன்ன அறிகுறிகளால்தான் புற்றுநோய் ஏற்படும் என்று நாம் கூற முடியாது. எனவே நாம் எந்த நோயாக இருந்தாலும் அது குறிப்பிட்ட கால அளவில் குணமடையவில்லை என்றால் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். அவ்வாறு செய்யும்போது அதை எளிதில் குணப்படுத்த நம்மிடம் வசதிகள் உண்டு.

கேள்வி : //புற்று நோயை கண்டறிவதற்கான அடிப்படை பரிசோதனைகள் என்னென்ன என்பதை விளக்குங்கள்.//

அடிப்படை பரிசோதனையானது உடலிலுள்ள பாகங்களை பொறுத்து மாறுபடும். உதாரணத்திற்கு வாய்புற்றுநோயை கண்டறிவதற்கு மருத்துவர் டார்ச் லைட் அடித்து பார்த்தும் அல்லது தொட்டுப் பார்த்தும் கண்டறிந்து விடுவார் அப்படியும் தென்படவில்லையானால் ஒரு சிடி ஸ்கேன் மூலம் கண்டறிந்து விடுவார்.

அதுவே, மார்பகப் புற்றுநோயானால் ஒரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அல்லது மேமோகிராம் போதுமானவை. குடல் புற்று நோயானால் அது எண்டோஸ்கோபி பரிசோதனை மூலம் கண்டறிய முடியும். அதேபோல் மலக்குடல் புற்று நோயை கண்டறிய டொர்னோஸ்கோஃபி பரிசோதனை உண்டு.

அதேபோல் பெண் உறுப்புகள் சார்ந்த புற்று நோயைக் கண்டறிவதற்கு அல்ட்ராசவுண்ட் அல்லது சிடி ஸ்கேன் போதுமானவை. எந்த ஒரு உறுப்பாக இருந்தாலும் அது என்ன வகையான கட்டி என்று பரிசோதனை செய்து பார்ப்பதற்கு முதலில் இமேஜிங் என்ற பரிசோதனையை மேற்கொள்வார்கள். பிறகு பயாப்சிக் மேற்கொள்வார்கள்.

ஏனென்றால், எந்த ஒரு கட்டியாக இருந்தாலும், அதை நாம் புற்றுநோய் என கூறிவிடமுடியாது. பயாப்சி பரிசோதனை செய்து கொண்ட பிறகுதான் நாம் உறுதி செய்ய முடியும்.

கேள்வி : //பயாப்ஸி என்று கூறுகிறீர்களே அப்படி என்றால் என்ன.//

பயாப்ஸி என்பது திசு பரிசோதனை அதாவது உடம்பில் உருவாகக்கூடிய கட்டியின் ஒரு பகுதியை எடுத்து பரிசோதனை செய்வார்கள். பொதுமக்களிடம் உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால், பயாப்சி பரிசோதனை மேற்கொண்டால் கட்டி பரவும் என யூகிக்கிறார்கள். இது தவறு, இதற்குக் காரணம் பயாப்சி பரிசோதனை மேற்கொண்ட பின், அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடுவார்கள். அதுதான் கட்டி பரவுவதற்கான காரணமே தவிர, பயாப்சி பரிசோதனை மேற்கொள்வதால் கட்டி பரவாது.

பயாப்சி பரிசோதனை மேற்கொண்டால் தான், அது புற்றுநோயா, இல்லையா என்பதை நாம் உறுதி செய்ய முடியும். நாம் முன்னமே கூறியது போல் மார்பகங்களில் உண்டாகக்கூடிய கட்டியானது காச நோயாகவும் இருக்கலாம் அல்லது புற்று நோயாகவும் இருக்கலாம். அதை உறுதி செய்ய நாம் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். எனவே, பயாப்சி என்பது புற்றுநோயை கண்டறிவதற்கான அடிப்படை பரிசோதனை.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : இந்திய பொருளாதார மாற்றங்கள் – ஜெ. ஜெயரஞ்சன் கட்டுரைகள்
♦ இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் அதிகரிப்பதன் காரணம் என்ன ?

கேள்வி : //புற்றுநோய்க்கு என்ன வகையான மருத்துவம் மேற்கொள்வார்கள்? உதாரணத்திற்கு கட்டியை எடுத்து விடுகிறார்களே.. அதுதான் புற்றுநோய்க்கான மருத்துவமா? அல்லது வேறு என்ன என்பதை விளக்குங்கள்.//

முன்பு எப்படி என்றால் அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டியை அகற்றி விடுவதே மருத்துவமாக இருந்தது. ஆனால், இன்று அப்படி இல்லை. புற்று நோய்க்கான மருத்துவம் என எடுத்துக்கொண்டால், அதை நாம் மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.

ஒன்று அறுவைசிகிச்சை, இரண்டு புற்றுநோய்க்கான மருந்துகளை கொடுப்பது, மூன்றாவது கதிர்வீச்சு மூலம் புற்றுநோய் கட்டியை அகற்றுவது. அறுவை சிகிச்சையும் கதிர்வீச்சு முறையும் புற்றுநோய் உண்டான இடத்தை மட்டுமே மையமாக வைத்து மேற்கொள்ளும் மருத்துவம்.

அதேபோல் நாம் இரண்டாவதாகக் கூறிய கீமோதெரபி முறை, அந்தப் புற்றுநோய் உடம்பில் வேறு எங்கும் பரவி இருக்கிறது என்றால் அதற்காக மேற்கொள்ளப்படும் மருத்துவம். உடம்பில் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வகையான மருத்துவம் உண்டு, சிலவற்றிற்கு ஆரம்பநிலையிலேயே அறுவை சிகிச்சையானது மேற்கொள்ளப்படும். சிலவற்றிற்கு ஆரம்பத்தில் கீமோதெரபி மருத்துவம் மேற்கொண்டு கட்டியை சுருக்கி விட்டு பிறகு அறுவை சிகிச்சையை மேற் கொள்வோம். சிலவற்றிற்கு மூன்று முறையும் கலந்து மருத்துவம் மேற்கொள்ளப்படும். மிகவும் ஆரம்ப நிலையில் கண்டறியப்படும் புற்று நோய்க்கு மட்டுமே அறுவை சிகிச்சையானது போதுமானது.

இதில் நாம் என்ன எளிமையாக விளங்கிக் கொள்ளவேண்டும் என்றால், புற்றுநோய்க்கான வைத்தியம் நேரடியாக இதுதான் என்பது கிடையாது. முதலில் அந்த புற்றுநோய் அந்த இடத்தில் மட்டும்தான் உள்ளதா, அல்லது உடலில் பிற பாகங்களுக்கும் பரவி உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும்.

பிறகு நாம் மேல் கூறிய மூன்று வகையான புற்று நோய்க்கான மருத்துவத்தில் எதை மேற்கொள்வது என்பதை முடிவு செய்வதற்கு ஒரு குழு தேவைப்படும். அந்தக் குழுவில் அறுவை சிகிச்சை நிபுணர்களும், கீமோதெரபி மருத்துவர்களும் இடம்பெற வேண்டும். இதை ஏன் கூறுகிறேன் என்றால் சிலர் உடலில் ஏதோ ஒரு உறுப்பில் கட்டியை கண்டறிந்த பின் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு. சிறிது காலம் கழித்து உடலில் பிற பாகங்களில் கட்டி பரவி, ரொம்பவும் முற்றிய நிலையில் மருத்துவமனையை வந்து அடைகிறார்கள். இதைத் தவிர்ப்பதற்காகதான் கூறுகிறோம் அந்தந்த நிபுணர்களைக் கொண்ட குழுதான் இதை முடிவு செய்ய வேண்டும் என்று.

சுருக்கமாக ஒருங்கிணைந்த புற்றுநோய் மையத்திற்கு செல்வது நல்லது ஏனென்றால் அங்குதான் மூன்று துறைகளின் சேர்ந்த மருத்துவர்கள் கூடி முடிவு செய்வார்கள்.

கேள்வி : //நாம் கூறுகிறோம் அல்லவா இத்தனை வசதிகள் நம்மிடம் உண்டு என்று, இருந்தும் ஏன் மக்கள் காலம் கடந்து மருத்துவமனையை அடைகிறார்கள்.//

இது மிகவும் நல்ல கேள்வி, இதற்கு சோஷியல் ஸ்டிக்மா என்று பொருள். உதாரணத்திற்கு, ஒருவர் சர்க்கரைநோய் அல்லது மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றால் அதற்கான சிகிச்சை முறையையும் மேற்கொள்கிறார்கள் என்றால் அதைப்பற்றி பிறரிடமும் அல்லது நெருங்கியவர்களிடம் கலந்துரையாடுகிறார்.

சர்க்கரை நோய் என்றால் நான் அதற்காக இன்சுலின் எடுத்துக் கொண்டேன் என்றும், அதுவே மாரடைப்பு என்றால் அதற்காக நான் ஸ்டன்ட் வைத்துள்ளேன் என்றும், அது உடலுக்கு எந்த வகையான தீங்கும் ஏற்படுத்தாது என்றும் கலந்துரையாடுகிறார். இதுவே ஒருவர் தனக்கு புற்றுநோய்க்கான அறிகுறி நன்றாகவே தென்படுகிறது என்றாலும், அதை தனது காலத்தின் இறுதி கட்டம் என்று நினைத்துக்கொண்டு, பிறரிடமும் அல்லது நெருங்கியவர்களிடம் கூற அஞ்சுகிறார்கள்.

தன்னை இந்த சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கக் கூடிய ஒரு நோய் நம்மை பீடித்துவிட்டது என அஞ்சி யாரிடமும் கூறாமல் விட்டு விடுகிறார்கள். இந்த ஸ்டிக்மாதான் முதல் காரணம். படிக்காத மக்கள் மட்டுமல்ல படித்தவர்களும் இதையேதான் செய்கிறார்கள். ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருப்பார். ஆனால், முற்றிய நிலையில் மருத்துவரை அணுகுவார்.

நீங்களே இப்படி செய்யலாமா? என வினவினால், பக்கத்தில் இருப்பவர்களிடம் கூறினால் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கத்தில் கூறவில்லை என்பார். அவர்கள் தன்னை தன் பேரக் குழந்தைகளிடம் இருந்து ஒதுக்கி வைத்து விடுவார்களோ என அச்சப்படுகிறார்கள். சிலர் இதை தொற்றுநோய் போலவும் பாவிக்கிறார்கள். எனவேதான் அவர்கள் ஆரம்பநிலையில் அணுகாமல், நோய் முற்றிய நிலையில் வருகிறார்கள். அப்படி வரும்போது எங்களால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விடுகிறது.

சுருக்கமாக மற்றும் என்றால் அதைப் பற்றி ஒருவர் மற்றவரிடம் கூறுகிறார் அவரும் அந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை அடைகிறார். ஆனால், புற்றுநோயைப் பொறுத்தவரை ஒருவர் தனக்கு இந்த தொல்லை இருக்கிறது என்பதையே உணர மறுக்கிறார். அப்படி வந்தாலும் அதை வெளியில் கூறுவதற்கு தயக்கம் காட்டுகிறார். எனவே மக்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை, மருத்துவர்கள் நாங்கள் ஓரளவுக்கு தான் முயற்சி செய்ய முடியும்.

படிக்க :
♦ சாம்சங் நிறுவனத்தின் ரத்தப் புற்று நோய் கொலைகள்
♦ ஸ்டெர்லைட் புற்றுநோய்க்கு பண்டாரம்பட்டி கணேசம்மாள் பலி

மக்கள்தான் இதைப்பற்றிய விழிப்புணர்வு பெற்றவர்களாக மாறவேண்டும். எனவே முதலில் புற்றுநோய் என்றால் அது தொற்றுநோய் அல்லாமல் அதுவும் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற நோய்களைப் போன்ற ஒன்று தான் என்பதை உணரும் பக்குவம் வேண்டும்.

மருத்துவர் கூறிய உதாரணம் போல ஒருவர் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தால், அவரை குடும்பத்தில் உள்ள எல்லோரும் ஒரு தீண்டத்தகாதவர் போலவே கருதுவார்கள். ஒரு நிகழ்ச்சிக்குத் செல்கிறார் என்றால் அங்கும் அவரை தனிமைப்படுத்தி அறிவுரைகளை மட்டுமே கூறுவார்கள். இதன் காரணமாகவே அவர் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்வதை தவிர்த்து விடுவார். உண்மையில் அவர் புற்றுநோயால் அவஸ்தைப் படுவதை விட இந்த வகையான மன உளைச்சலால் அவஸ்தைப்படுவது தான் அதிகம். எனவே நாம் இவற்றில் இருந்து வெளியே வரவேண்டும்.

இதை தெரிவிக்கும்போதே நான் புற்றுநோய் பற்றிய மூடநம்பிக்கைகளையும் மக்களிடம் இருந்து அகற்ற வேண்டும் என விரும்புகிறேன். புற்று நோய் என்றால் வலி அதிகமாக இருக்கும் என எண்ணுகிறார்கள் அது தவறு, பெரும்பாலான கட்டிகள் வலியில்லாமல்தான் ஏற்படும். மிகவும் முற்றிய நிலையில் தான் வலியை ஏற்படுத்தும். இன்னும் சொல்லப் போனால் வலி உண்டாகக்கூடிய கட்டிகள் புற்று நோயாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. சீழ்க் கட்டி இருக்கிறது என்றால் அது வலியை ஏற்படுத்தும் பின்பு குணமாகும். அது புற்றுநோயாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. அதுவே எந்த வலியும் இல்லாமல் ஒரு கட்டி இருக்கிறது, வளர்கிறது என்றால் அதுதான் புற்றுநோயாக இருக்கக்கூடிய வாய்ப்பு அதிகம்.

கேள்வி : //கடைசியாக முடிப்பதற்கு முன் புற்றுநோய் பற்றி இணையதளத்தில் நாம் தேடுகிறோம் என்றால் நம்பத்தகுந்த இணையதளங்கள் சிலதை குறிப்பிடுங்கள்.//

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் அல்லது பாதிக்கப்படாதவர்களோ இணையதளத்தை அணுகினால் அதில் பெரும்பாலும் தவறான விஷயங்கள் தான் வரும், யாரோ ஒருவர் பிளாக் எழுதி இருந்தால் அதிலிருந்துதான் தகவல்கள் தென்படும்.

NCCN.ORG என்ற அனைத்துலக தகவல் மையம் உள்ளது. இந்த இணையதளத்தில் மருத்துவர்கள் என்ன செய்யவேண்டும் அல்லது நோயாளிகள் என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்பன போன்ற எல்லா விஷயங்களும் உள்ளது. இதை வாசிப்பதன் மூலம் நோயாளிகள் தான் சரியான மருத்துவத்தை தான் மேற்கொள்கிறோமா என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். இன்னொன்று CANCER.ORG இது அமெரிக்க புற்றுநோய் அசோசியேஷனுடைய வலைத்தளம். இந்த இணையதளத்திலும் எளிய முறையில் ஒவ்வொரு புற்றுநோய்க்கும் என்ன வகையான மருத்துவம் என்பது போன்ற தகவல்கள் உள்ளன.

இதை நாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆனால், மருத்துவரை நோக்கி இதில் இப்படி உள்ளது நீங்கள் ஏன் இந்த மருத்துவத்தை மேற்கொள்கிறீர்கள் என கேட்கக்கூடாது. இதை நிலைமைகள் தான் தீர்மானிக்கும். இதைப்பற்றி நாம் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த வலைதளங்கள் உதவும். ஆனால், நமக்கு என்ன மருத்துவம் செய்ய வேண்டும் என்கிற தார்மீக உரிமை மருத்துவருக்குதான் உண்டு என்பதை உணர்ந்துகொண்டால், நமது மருத்துவம் எளிமையாக முடியும்.

இந்த காணொளியில் புற்றுநோய் பற்றிய ஒரு பொதுவான விவாதத்தை தான் தொடங்கியுள்ளோம். அடுத்த காணொளியில் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் பற்றிய முழு விளக்கங்களை எடுத்துரைக்கிறோம். நன்றி.

நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

விருதை : ஊராட்சி செயலாளர் ஊழல் – அம்பலப்படுத்திய மக்கள் அதிகாரம் !

டலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் கோ. பூவனூரில் 02.10.2019 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டார்கள். ஊர் பொதுமக்கள் சார்பில் தங்கள் அடிப்படைத் தேவைகளை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றினர்.

பிறகு ஊராட்சியில் வரவு செலவு கணக்குகளை காண்பிக்கும்படி ஊர் பொதுமக்கள் ஊராட்சி செயலாளரிடம் கேட்டனர். இதற்கு, முன்பு கடந்த 8 ஆண்டுகளாக வரவு செலவு கணக்குகளை காண்பித்ததே கிடையாது. ஆனாலும் பொதுமக்களும் மக்கள் அதிகாரம் தோழர்களும் குறைந்தபட்சம் நீங்கள் இந்த ஆண்டு வரையான வரவு செலவுகளைக் காட்டினால் மட்டுமே உங்களை வெளியே விடுவோம் இல்லை என்றால் இங்கேயே சிறை பிடிப்போம் என்று உறுதியாக அமர்ந்தனர்.

ஊராட்சி செயலாளரும், சிறப்பு அதிகாரியும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர். பொதுமக்கள் அதிகப்படியான கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கும் போது, 100 நாள் வேலைத்திட்டத்தின் பயனாளிகளாக இறந்தவர்கள், வெளியூர் மற்றும் வெளிநாடு சென்றவர்களைச் சேர்த்து, அவர்களது பெயரில் ஊதியப்பணம் செலுத்தப்பட்டதாக மோசடி நிகழ்ந்துள்ளதை தோழர்கள் அம்பலப்படுத்தினர். இதற்கு ஊராட்சி செயலாளர் “இதற்கும் எனக்கும் எந்த பொறுப்பும் கிடையாது…” என்று தட்டிக்கழித்தார்.

படிக்க:
விழுப்புரம் : கவர்மெண்டு கட்டுன வீட்டைக் காணோம் !
விவசாயிகளிடம் ரூ. 15,000 கோடி ஜி.எஸ்.டி பிடுங்கிய மோடி அரசு !

இதையடுத்து பொதுமக்கள் ஊழலை அம்பலப்படுத்தி கோஷமிட்டு தீர்மானம் நோட்டில் கையொப்பம் போட விடாமல் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து சென்றார்கள். இந்த செய்தியை கேட்டு புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் தினமலர், தினத்தந்தி ஆகிய பத்திரிகைகளில் மறுநாள் செய்தி வெளியிட்டன. இதை ஏற்க முடியாத ஊழல்வாதிகள், அரசு அதிகாரிகள் துணையோடு மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர் சங்கர் கணேஷ் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக மங்கலம்பேட்டை போலீசு நிலையத்தில் பொய் புகார் கொடுத்தனர். காலை 7 மணி அளவில் தோழரை கைது செய்து போலீசு நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

இத்தகவலறிந்த அப்பகுதி ஒருங்கிணைப்பாளர், தோழர் பாலாஜி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் மற்றும் பிற தோழர்களும்; ஊர் பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் போலீசு நிலையத்திற்கு சென்றனர்.

பின்னர், ஆய்வாளரிடம் இது பொய்வழக்கு என்பதை சுட்டிக் காட்டி கைது செய்யப்பட்ட தோழரை விடுவிக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆய்வாளர் இரு தரப்பினரையும் விசாரணை செய்து வழக்கு ஏதும் போடாமல் தோழரை விடுவித்தார்.

ஊழல் செய்தவர்களை அம்பலப்படுத்தினால் அவர்கள் மீது பொய் வழக்கு, கைது ஆகிய நடவடிக்கைகள்தான் பாயும் என்பதை கண்கூடாக பார்த்த பொதுமக்கள், ஊழல்வாதிகளை தண்டிக்கும் அதிகாரம், மக்கள் போராட்டங்களின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்பதை உணர்ந்துள்ளனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்
விருத்தாசலம் வட்டாரம்,
தொடர்புக்கு : 97912 86994