ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடத் தனிச் சட்டம் இயற்று !
நாசகார ஸ்டெர்லைட் ஆலையினைத் தமிழகத்தில் இருந்து அகற்ற தூத்துக்குடி மக்களோடு இணைந்து தமிழகமே குரல் எழுப்புகிறது. தாமிர உருக்காலையினைத் தமிழகத்தில் தடைசெய்யும் சிறப்புச் சட்டத்தினைத் தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றக் கோருகிறது, தமிழகம்.
மக்களின் கருத்தைக் கேட்காமலேயே இரண்டாவது ஆலையைத் தொடங்கும் முயற்சியில் ஸ்டெர்லைட் வெற்றி பெற்றதையடுத்துதான், ஆலையினை நிரந்தரமாக மூடக் கோரித் தொடர் போராட்டங்களை நடத்தத் தொடங்கினர், தூத்துக்குடி நகர மக்கள்.
இத்தொடர் போராட்டத்தால், ஆலை இயங்குவதற்கான அனுமதியினை நீட்டிக்க இயலாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. அதேசமயம், மின்சாரம் துண்டிக்கப்படாததால், இந்த உத்தரவு காகித உத்தரவாகவே இருந்தது.
இப்பித்தலாட்டத்தினை உணர்ந்த தூத்துக்குடி மக்கள் ஆலை மூடப்படும் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டுப் போராடுவது எனத் தீர்மானித்து, கடந்த மே 22 அன்று ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். அமைதியான முறையில் நடந்த இந்தப் பேரணியைத் துப்பாக்கிச் சூடு நடத்தி இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது, தமிழக அரசு. இதன் காரணமாக ஆளும் அ.தி.மு.க. அரசின் மீது தமிழகமெங்கும் எழுந்த வெறுப்பையும் கோபத்தையும் தணிக்கும் முகமாக ஆலையை நிரந்தரமாக மூடும் பலவீனமான அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த ஆணையை ரத்து செய்து, ஆலையினைத் திறக்கலாம் எனப் பசுமைத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பினைத் தமிழக மக்கள் ஏற்கவில்லை. கருப்புக் கொடி, சிறுவர்கள் பேரணி, மாவட்ட ஆட்சியரிடம் சென்று கேள்வி கேட்பது என தூத்துக்குடி மக்கள் இத்தீர்ப்புக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் முறையிடுவோம் என ஒருபுறம் பொதுமக்களைச் சமாதானப்படுத்தும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, மறுபுறமோ தீர்ப்பு வெளியான நாள் முதலாகவே தூத்துக்குடியை போலீசின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்து, ஊர் ஊராக, தெருத்தெருவாக போலீசைக் குவித்து மக்களை மிரட்டி வருகிறது.
கருப்புக் கொடி விற்கத் தடை, விற்பனை செய்த கடைக்காரர் மீது போலீசு தாக்குதல், போராட்ட முன்னணியாளர்கள் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வேவு பார்ப்பது, மீனவர் அமைப்புகள், வணிகர் சங்கத்தினரைச் சந்தித்தால் கைது, சிறுவர்கள் பேரணியாகச் சென்றதற்கு வழக்கு, துண்டு பிரசுரங்கள் விநியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது என அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது தமிழக அரசு.
இன்னொருபுறத்தில், வேதாந்தா நிர்வாகம் கோவில் நன்கொடை, கல்வி உதவித் தொகை, மகளிர் சுய உதவிக்குழு கடன் அடைப்பு எனப் பணத்தினை வாரியிறைத்து மக்களை ஊழல்படுத்தும், மக்களைப் பிளவுபடுத்தும் அதனின் சதிக்கு துணை போகிறது.
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதித்த பசுமைத் தீர்ப்பாய ஆணையைக் கண்டித்து தூத்துக்குடி நகர மக்கள் தெருக்கள், வீடுகள் எங்கும் கருப்புக் கொடி கட்டி நடத்திய போராட்டம்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அரசு தரப்பைத் தவிர, வேறு யாரையும் கேட்காமலேயே தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆய்வுக் குழுவோ மக்கள் தரப்பு நியாயங்களை ஒப்புக்குக் கேட்டுவிட்டு, தன் முன்னால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் முன்வைக்கப்பட்ட சான்றுகளுக்கும் பதிலளிக்காமலேயே ஆலையினைத் திறக்கலாம் எனப் பரிந்துரைத்தது. தூத்துக்குடியின் நாலரை இலட்சம் மக்கள் ஆலையினைத் திறக்க வேண்டாம் என அளித்த மனுக்கள் குப்பைத் தொட்டிக்குத்தான் சென்றன.
ஸ்டெர்லைட் ஆலை தங்களது நலனுக்கு உகந்தது இல்லை என மக்கள் கூறும்போது கார்ப்பரேட் நலனைப் பற்றி பேசுகிறார்கள், நீதிபதிகள். கொள்கை முடிவெடுத்து ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக வெளியேற்று என்று மக்கள் காட்டும் வழியில் செல்ல மறுக்கிறது தமிழக அரசு.
மக்களின் போராட்டத்தினால் ஸ்டெர்லைட் மூடப்படுமானால், அது ஒட்டுமொத்த கார்ப்பரேட் அதிகாரத்திற்கும் விடப்படும் சவாலாக இருக்காதா என்ன? இதனால்தான் சற்று தள்ளிப்போட்டும், துப்பாக்கிச்சூட்டை நினைவுபடுத்தும் வகையில் மக்களை அச்சுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையினைத் திறக்க வன்மத்துடனும் சதித்தனத்தோடும் செயல்படுகிறது, அரசு-வேதாந்தா கூட்டணி.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் தங்களின் அடிப்படை ஊதியத்தை 1000 ரூபாயக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாடுதழுவிய அளவில் இன்று (23.01.2019) போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் பல்வேறு இடதுசாரி அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். தங்கள் உடலை உருக்கி, உயிரைக் கரைத்து தேயிலைத் தோட்டங்களை உருவாக்கிய தொழிலாளிகளின் அடிப்படை ஊதியப் போராட்டத்தை ஆதரிப்போம் !
போராட்டம் நடைபெரும் இடங்கள் :
1. கேகாலை தெஹிஓவிட்ட
2. பதுளை நகர் காலை 10 மணிக்கு
3 ஹப்புதளை நகர் பகல் 12 மணிக்கு
4. தெமோதர பகல் 12 மணிக்கு
5. அட்டாம்பிட்டிய பகல் 12 மணிக்கு
6. யாழ்ப்பாணம் மாலை 3.00 மணிக்கு பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில்
7. கிளிநொச்சி காலை 10 மணிக்கு மார்கட்டுக் அருகில்
8. வவுனியா காலை 10.00 மணிக்கு பழைய பேருந்தி நிலையத்திற்கு அருகில்
9. மாத்தளை ரத்தோட்டை பகல் 12 மணிக்கு
10. பகவன்தலாவ காலை 8.00 மணிக்கு
11. ஹட்டன்
12. மத்துகம மாலை 3.00 மணிக்கு
13. பதுரலிய மாலை 3.00 மணிக்கு
14 தலாவக்கலை
15. ராகல
16. நூரளை
17. தெல்தொட்ட
18. இரத்தினபுரி மாலை 3.00 மணிக்கு
19. கொஸ்கம நகர் மாலை 3.00 மணிக்கு
அதே போல அனைத்து முக்கிய பல்கலைக் கழகங்களுக்கு முன்பாக பகல் 12.00 மணிக்கு போராட்டம் நடைபெறவுள்ளது. போராட்டம் நடைபெரும் இடங்கள் :
20 ருஹுனு பல்கலைக் கழகம்
21. ஜயவர்தனபிர பல்கலைக் கழகம்
22. தென்கிழக்கு பல்கலைக் கழகம்
23. சபரகமுவ பல்கலைக் கழகம்
24. ரஜரட்ட பல்கலைக் கழகம்
25. களனி பல்கலைக் கழகம்
26 வயம்ப பல்கலைக் கழகம்
27. பேராதெனிய பல்கலைக் கழகம்
தகவல் :
சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, இலங்கை
முகநூல் பக்கத்திலிருந்து ..
மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 54 (தொடர்ச்சி)
மாக்சிம் கார்க்கிநீதிபதிகளின் நிலைகொள்ளாமல் தவித்துத் தத்தளித்துத் தமது ஆசனங்களில் நெளிந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பிரபு வம்சத் தலைவர், உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டிருக்கும் நீதிபதியிடம் ஏதோ ரகசியமாகச் சொன்னார். அதைக் கேட்டு, அந்த நீதிபதி தலையை ஆட்டிவிட்டு, பிரதம நீதிபதியிடம் ஏதோ சொன்னார். அவருக்கு அடுத்தாற்போலிருந்த சீக்காளி நீதிபதி அவரது இன்னொரு காதில் ஏதோ ஓதினார். அந்தக் கிழ நீதிபதி வலது இடதுபுறமாக அசைந்து கொண்டே பாவெலின் பக்கமாகத் திரும்பி ஏதோ சொன்னார். ஆனால் அவரது வார்த்தைகளைப் பாவெலின் நிதானமான ஆற்றொழுக்குப் பேச்சு அமிழ்த்தி விழுங்கிவிட்டது.
”நாங்கள் சோஷலிஸ்டுகள்! அதாவது தனி நபர் சொத்துரிமைக்கு – சொத்துரிமையின் பேரால் மக்கள் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி, மக்களை ஒருவருக்கொருவர் எதிராகத் தூண்டி மோதவிட்டு, தமது நல் உரிமைகளின் மீது வெறுப்புணர்ச்சியை உண்டாக்கும் சமுதாய அமைப்புக்கு – நாங்கள் எதிரிகள். இந்தச் சொத்துரிமைச் சமுதாய அமைப்பு இந்த வெறுப்புணர்ச்சியை மூடி மறைப்பதற்காக, அல்லது அதை ஏற்றுக்கொள்வதற்காக, பொய்மைக்கும், புனைசுருட்டுக்கும் ஆளாகி, மக்கள் அனைவரையும் பொய்களுக்கும், மாய்மாலத்துக்கும், தீய கிரியைகளுக்கும் ஆளாக்கிவிடுகிறது. தான் செழிப்பாக வாழ வேண்டும் என்பதற்காக, மனிதப் பிறவியை ஒரு கருவியாகப் பயன்படுத்த எண்ணும் சமுதாயத்தை நாங்கள் மனிதத் தன்மையற்றதாக, எங்களது நல உரிமைகளின் எதிரியாகக் கருதுகிறோம்.
அந்தச் சமுதாயத்தின் பொய்யான, இரண்டுபட்ட ஒழுக்க நெறியை நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது. தனி மனிதனிடம் அந்தச் சமுதாயம் காட்டும் குரூரத்தையும் வக்கிர புத்தியையும் நாங்கள் வெறுத்துத் தள்ளுகிறோம். அந்த மாதிரியான சமுதாய அமைப்பு தனி மனிதனின் உடலின் மீதும் உள்ளத்தின்மீதும் சுமத்தியிருக்கும் சகலவிதமான அடிமைத்தனத்தையும், சுயநலத்தின் பேராசையால் மனிதர்களை நசுக்கிப் பிழியும் சகலவிதமான சாதனங்களையும் நாங்கள் எதிர்த்துப் போராட விரும்புகிறோம், எதிர்த்துப் போராடவே செய்வோம். நாங்கள் தொழிலாளர்கள். சிறு குழந்தைகளின் விளையாட்டுக் கருவிகளிலிருந்து பிரம்மாண்டமான யந்திர சாதனங்கள் வரை சகலவற்றையும் எங்கள் உழைப்பின் மூலமே நாங்கள் உலகத்துக்குப் படைத்துக் கொடுக்கிறோம். ஆனால், எங்களது மனித கெளரவத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் உரிமையைக்கூடப் பறிகொடுத்தவர்களும் நாங்கள்தான்.
சொந்த நலன்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக ஒவ்வொருவரும் எங்களைத் தங்கள் கைக்கருவிகளாகப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. ஆனால், தற்போது நாங்கள் எங்கள் கைகளிலேயே சகல அதிகாரமும் இருக்க வேண்டும் என்பதற்காக, இறுதியாய் அந்த அதிகாரத்தை அடையும் அளவுக்கு சுதந்திரம் பெற விரும்புகிறோம். எங்களது கோஷங்கள் மிகவும் தெளிவானவை. ‘தனிச் சொத்துரிமை ஒழிக!’ ‘உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் மக்கள் கையில்!’ ‘அதிகாரம் அனைத்தும் மக்களிடம்’ ‘உழைப்பது ஒவ்வொருவருக்கும் கடமை!’ இவைதான் எங்கள் கோஷங்கள். இவற்றிலிருந்து நாங்கள் வெறும் கலகக்காரர்கள் அல்ல என்பதை நீங்கள் கண்டுகொள்ளலாம்!”
பாவெல் லேசாகச் சிரித்தான். தனது தலைமயிரை விரல்களால் மெதுவாகக் கோதிவிட்டுக்கொண்டான். அவனது நீலக்கண்களின் ஒளி முன்னைவிட அதிகமாகப் பிரகாசித்தது.
“விஷயத்தைவிட்டுப் புறம்பாகப் பேசாதே!” என்று அந்தக் கிழட்டு நீதிபதி தெளிவாகவும் உரத்தும் எச்சரித்தார். அவர் பாவெலின் பக்கமாகத் திரும்பி அவனைப் பார்த்தார். அவர் பார்த்த பார்வையில் அவரது மங்கிய இடது கண்ணில் பொறாமையும் புகைச்சலும் நிறைந்த ஒரு ஒளி பளிச்சிட்டு மின்னுவதாகத் தாய்க்குத் தோன்றியது. எல்லா நீதிபதிகளும் அவளது மகனை ஏறிட்டுப் பார்த்தார்கள். எல்லோரது கண்களும் அவனது முகத்தையே பற்றிப்பிடித்து அவனது சக்தியை உறிஞ்சுவது போலவும், அவனது ரத்தத்துக்காக தாகம் கொண்டு தவிப்பது போலவும், அந்த ரத்த பானத்தால் உளுத்துக் கலகலத்துப்போன தங்கள் உடம்புகளுக்கு ஊட்டமளித்துத் தேற்றிக்கொள்ள நினைப்பது போலவும், தாய்க்குத் தோன்றியது. ஆனால், அவளது மகனோ உறுதியோடும் தைரியத்தோடும் நேராக நிமிர்ந்து நின்று தனது கையை எட்டி நீட்டிப் பேசிக்கொண்டிருந்தான்.
“நாங்கள் அனைவரும் புரட்சிக்காரர்கள். ஒரு சிலர் வேலை வாங்கவும் மற்றவர்கள் அனைவரும் வேலை செய்யவுமாக இருக்கின்ற நாள் வரையிலும், நாங்களும் புரட்சிக்காரர்களாகவே இருப்போம். யாருடைய நலன்களைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் அனைவரும் ஏவலாளிகளாக இருக்கிறீர்களோ, அவர்களது சமுதாயத்தோடு எந்தவிதத்திலும் ஒத்துப்போகாத எதிரிகள் நாங்கள். அந்தச் சமுதாயத்துக்கும். உங்களுக்கும் எதிரிகள் நாங்கள். எங்களது போராட்டத்தில் நாங்கள் வெற்றி காணும் வரை நமக்குள் எந்தவிதமான சமாதானமும் ஏற்படப்போவதில்லை. தொழிலாளர்களாகிய நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்!
உங்கள் எஜமானர்களோ, அவர்கள் நினைத்துக்கொண்டிருப்பது போலப் பலசாலிகள் ஒன்றுமில்லை. தனிநபர் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவும், பெருக்கிக் காப்பதற்காகவும், பெருக்கிக் குவிப்பதற்காகவும் தங்களது அதிகாரத்தால், லட்சோப லட்ச மக்களை அடிமைப்படுத்தவும் கொன்று குவிப்பதற்காகவும் உதவிக்கொண்டிருக்கும் தனிப்பட்ட சொத்துரிமைதான் – எங்கள் மீது ஆட்சி செலுத்த அவர்களுக்குப் பலம் தரும் அந்தச் சக்திதான் – அவர்களுக்குள்ளாகவே தகராறுகளைக் கிளப்பிவிடுகிறது, அந்தச் சொத்துரிமை அவர்களை உடல்பூர்வமாகவும், உள்ளபூர்வமாகவும் சீர்குலைத்து வருகிறது. தனிச் சொத்துரிமையைக் காப்பது என்பது சாமான்யமான காரியம் அல்ல.
உண்மையைச் சொல்லப்போனால், எங்களது எஜமானர்களாயிருக்கும் நீங்கள் அனைவரும் எங்களையும்விட மோசமான அடிமைகளாயிருக்கிறீர்கள். நாங்கள் உடல் பூர்வமாய்த்தான் அடிமையானோம்; நீங்களோ உள்ளபூர்வமாகவே அடிமையாகிவிட்டீர்கள்! உங்களை உள்ளபூர்வமாகக் கொன்றுவிட்ட நுகக்காலிலிருந்து, வெறுப்பு விருப்புப் பழக்கதோஷமென்னும் நுகத்தடியின் பளுவிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்வதற்கு நீங்கள் சக்தியற்றுப் போய்விட்டீர்கள்.
ஆனால் நாங்கள் சுதந்திரமான உள்ளத்தோடிருப்பதை எந்த சக்தியுமே கட்டுப்படுத்தவில்லை. உங்களது இஷ்டத்துக்கு மாறாக, நீங்கள் எங்களது உணர்விலே பெய்து கொண்டிருக்கும் முறிவு மருந்துகளாலேயே, நீங்கள் எங்களுக்கு ஊட்டி வரும் விஷங்களெல்லாம் வலுவற்று முறிந்து போகின்றன. எங்களது சத்திய தரிசனம் எந்தவிதத் தடையுமின்றி, அசுர வேகத்தோடு வளர்ந்தோங்கிக்கொண்டிருக்கிறது, மேலும் அந்த சத்தியம் நல்ல மனிதர்களை – உங்களது சமூகத்திலேயே மனத்தைப் பறிகொடுக்காது தப்பிப் பிழைத்த நல்லவர்களை – எல்லோரையும் தன்பால் கவர்ந்திழுக்கிறது. உங்களது வர்க்கத்தை நேர்மையான ஒழுங்கு முறையோடு பாதுகாப்பதற்கு உங்களிடம் ஒருவரும் இல்லையென்பதை நீங்களே பாருங்கள்! சரித்திரபூர்வமான நியாயத்தின் அழுத்த சக்தியிலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்கு நீங்கள் கூறிய சகலவாதப் பிரதிவாதங்களும் வாய் சோர்ந்து வலுவிழந்து வாடி விழுந்ததை இப்போது நீங்கள் கண்டீர்கள். எந்தவிதமான புதிய சிந்தனைகளையும் உங்களால் படைக்க இயலாது. ஆத்மார்த்த விஷயத்தில் நீங்கள் ஆண்மையற்று மலடுதட்டிப் போய்விட்டீர்கள்.
ஆனால், எங்கள் கருத்துக்களோ என்றென்றும் வளர்ந்தோங்குகின்றன. என்றென்றும் அணையாத தூண்டா மணிவிளக்காய் பிரகாசமுற்றோங்குகின்றன. மக்கள் அனைவருக்கும் உணர்ச்சி ஊட்டி, சுதந்திரப் போராட்டத்துக்காக அவர்களை ஒன்றுபடுத்தி பலம் பெற்று விளங்கச் செய்கின்றன. தொழிலாளர் வர்க்கம் சாதிக்க வேண்டிய மகத்தான சாதனையின் ஞானபோதம், உலகத் தொழிலாளர்கள் அனைவரையும் ஒன்றுபட உருக்கி வார்த்து அவர்களை ஒரு மகத்தான ஏக சக்தியாக உருவாக்குகிறது. அவர்களைக் கலகலத்து உயிர்ப்பிக்கும் பெரும் சக்தியை எதிர்த்துப் போராடுவதற்கு கொடுமையையும் வெடுவெடுப்பையும் தவிர உங்களிடம் எந்தவித ஆயுதமும் கிடையவே கிடையாது. ஆனால், உங்களது வக்கிர குணமோ வெளிப்படையானது. கொடுமையோ எரிச்சல் தருவது. இன்று எங்களது கழுத்தை நெரிக்கும் கைகளே நாளைக்கு எங்களைத் தோழமையுணர்ச்சியோடு தழுவிக்கொள்வதற்காகத் தாவி வரத்தான் போகின்றன. உங்களது சக்தியே செல்வத்தைப் பெருக்க உதவும் யந்திர சக்தி. அந்த சக்தி உங்களைத் துண்டுபடுத்தி, இரு கூறாக்கி, நீங்களே உங்களில் ஒருவரையொருவர் கொத்திக் குதறிக் குலைபிடுங்கிச் சாவதற்குத்தான் வழிகோலிக் கொடுக்கும்.
ஆனால், எங்களது சக்தியோ சகல தொழிலாளர் மக்களின் ஒன்றுபட்ட ஐக்கிய பலத்தால் என்றென்றும் ஜீவ வேகத்தோடு வளர்ந்தோங்கிக்கொண்டிருக்கும், மனச்சாட்சியினால் இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் செய்வது அனைத்தும் படுமோசமான பாதகச் செயல்கள். ஏனெனில் உங்கள் செயல்கள் அனைத்தும் மக்களை அடிமைப்படுத்துவதில்தான் முனைந்து நிற்கின்றன. உங்களது பொய்மையும், பேராசையும், குரோத வெறியும் உலகத்தில் எண்ணற்ற பிசாசுகளையும் பூதங்களையும்தான் படைத்திருக்கின்றன. அந்தப் பூதங்களும் பிசாசுகளும் மக்களை கோழையராக்கிவிட்டன. அந்தப் பிசாசு ஆதிக்கப் பிடிப்பிலிருந்து மக்களை விடுவித்துக் காப்பாற்றுவதே எங்கள் பணி. நீங்கள் மனிதனை வாழ்க்கையினின்றும் பிய்த்துப் பிடுங்கி, அவனை அழித்துவிட்டீர்கள். நீங்கள் அழித்துச் சுடுகாடாக்கிய இந்த உலகத்தை, சோஷலிசம் ஒரு மகோன்னதமான மாசக்தியாக வளர்ந்து உருவாகி வளம்படுத்தும். நிச்சயம் இது நிறைவேறத்தான் போகிறது!”
பாவெல் ஒருகணம் பேச்சை நிறுத்தினான். மீண்டும் அதே உறுதியோடு மெதுவாகக் கூறினான்.
”நிச்சயம் நிறைவேறத்தான் போகிறது!”
நீதிபதிகள் தங்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டார்கள்; பாவெலின் மீது வைத்த பார்வையை விலக்காமலேயே முகத்தை எப்படியெல்லாமோ விகாரமாகச் சுழித்துக்கொண்டார்கள். அவனது துடிப்பையும் இளமையையும், பலத்தையும் கண்டு பொறாமை பொங்கி, தங்களது பார்வையாலேயே அவனை அவர்கள் நாசப்படுத்திவிட முயல்வதுபோல் தாய்க்குத் தோன்றியது. கைதிகள் அனைவரும் மகிழ்ச்சியினால் கண்கள் பிரகாசிக்க, முகம் வெளிற, பரிபூரண கவனத்தோடு தங்களது தோழனின் பேச்சைக் கூர்ந்து கேட்டார்கள். தாயோ தன் மகனின் ஒவ்வொரு வார்த்தையையும் அள்ளிப் பருகினாள். அந்த வார்த்தைகள் அனைத்தும் அவளது மனத் தகட்டில் வரிசை வரிசையாகப் பதிந்து நிலைத்தன. அந்தக் கிழ நீதிபதி எதையோ தெளிவுபடுத்திக்கொள்வதற்காக, பாவெலின் பேச்சில் எத்தனையோ முறை குறுக்கிட்டார். இடையே ஒருமுறை அவர் வருத்தத்தோடு புன்னகையும் புரிந்து கொண்டார். பாவெல், இடையிடையே பேச்சை நிறுத்தினாலும், மீண்டும் அதே அமைதி தோய்ந்த உறுதியோடு மேலும் பேசத் தொடங்குவான். மீண்டும் ஜனங்கள் அவனது பேச்சை உள்ளமிழந்து கேட்கச் செய்வான். நீதிபதிகளின் விருப்பத்தையும், அவன் தன் விருப்பத்துக்கு ஆளாக்கிவிடுவான். கடைசியாக அந்தக் கிழ நீதிபதி வாய்விட்டுக் கையை நீட்டிக் கத்தினார். பதிலுக்குப் பாவெல் கேலி பாவத்தோடு தனது பேச்சைத் தொடங்கினான்.
”இதோ நான் என் பேச்சை முடித்துவிடப் போகிறேன். உங்களில் எவரையும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசவேண்டும் என்ற விருப்பம் எனக்கு இல்லை. அதற்கு மாறாக, விசாரணை என்ற பெயரால் நீங்கள் நடத்தும் கேலிக்கூத்தை நான் வேண்டா வெறுப்பாக உட்கார்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறேன். உங்கள் மீது அனுதாப உணர்ச்சிதான் என் உள்ளத்தில் அநேகமாகப் பொங்கி வழிகிறது. என்ன இருந்தாலும் நீங்களும் மனிதப் பிறவிகள்தான். எங்களது இயக்கத்தின் எதிரிகளைக்கூட, மிருக சக்திக்கு ஊழியம் செய்வதற்காக கேவலமாக வெகு தாழ்ந்து கடை கெட்டுப்போனவர்களைக்கூட, மனித கெளரவத்தின் மான உணர்ச்சியையே முற்றிலும் இழந்துவிட்டவர்களைக் கூட, நாங்கள் மனிதப் பிறவிகளாக மதித்து அவர்களுக்காகத் துக்கப்படுகிறோம்………”
அவன் நீதிபதிகளைப் பார்க்காமலேயே தன் இடத்தில் அமர்ந்தான். தாயோ திக்குமுக்காடும் மூச்சோடு அந்த நீதிபதிகளையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
பாவெலின் கையைப் பிடித்து அழுத்திய அந்திரேயின் முகமும் பிரகாசமடைந்தது. சமோய்லவ், மாசின் முதலியவர்களும் அவன் பக்கமாகக் குனிந்து இருந்தார்கள். தன்னுடைய தோழர்களின் உற்சாகத்தைக் கண்டு பாவெல் புன்னகை செய்து கொண்டான். அவன் தன் தாயின் பக்கமாகத் திரும்பி, ‘உனக்குத் திருப்திதானே!’ என்று கேட்கும் பாவனையில் தலையை ஆட்டினான்.
பதிலுக்கு அவள் மகிழ்வோடு பெருமூச்செறிந்தாள். அவளது முகத்திலே அன்புணர்ச்சி அலை பரவிச் சிலிர்த்துச் சிவந்தது.
”இப்போதுதான் உண்மையான விசாரணை ஆரம்பமாயிற்று!” என்று தாயிடம் மெதுவாகக் கூறினான் சிஸோவ். “அவன் அவர்களை வீசி விளாசித் தள்ளிவிட்டான், இல்லையா?”
அவள் பதில் கூறாமல் தலையை மட்டும் ஆட்டினாள். தன் மகன் தைரியத்தோடு பேசியதைக் கேட்டு அவள் மகிழ்வுற்றாள். அவன் பேசி முடித்ததைக் கண்டு அந்த ஆனந்தம் பேரானந்தமாயிற்று. அவளது மனத்தில் துடிதுடித்துக்கொண்டிருந்த கேள்வி ஒன்றே ஒன்றுதான்.
”அவர்கள் இப்போது என்ன செய்வார்கள்?”
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
சென்னை லயோலா கல்லூரி அண்மையில் வீதி விருது விழாவை நடத்தியது. இதில் தோழர் முகிலனின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவை வினவு தளத்தில் ஏற்கனவே வெளியானவைதான் என்றாலும் இந்துத்துவ கோஷ்டி, லயோலா என்ற கிறித்துவ கல்லூரி நிகழ்ச்சியில் பாரத் மாதாவை ‘இழிவாக’ சித்தரிப்பதாகக் கூறியது. குருமூர்த்தி, எச்.ராஜா, தமிழிசை போன்ற தமிழக காவிப்படையின் தலைகள் இந்து அடையாளங்களையும் பாரத் மாதாவையும் புண்படுத்தியதாக பேசினார்கள்.மத சிறுபான்மையினரை குறிவைத்து காத்திருக்கும் காவி கும்பல் இதுதான் வாய்ப்பென்று லயோலா கல்லூரிக்கு எதிராக களமாடத் தொடங்கியது. ஓவியங்களை காட்சிப் படுத்திய ஒரே காரணத்துக்காக கல்லூரியை இழுத்து மூட வேண்டும் என்றது. ட்விட்டரில் உள்ள அத்தனை காவிப் படையும் திட்டமிட்டதுபோல், இந்த விசயத்தை வைத்து நாள் முழுக்கவும் களமாடியது. இது சர்ச்சையாக்கப்பட்டு தேசிய ஊடகங்களில் செய்தி ஆனது.
1 of 3
மோடி ஆதரவு தளமான யாஹூ தளத்தின் முகப்பில் இந்த சர்ச்சை குறித்த செய்தி வெளியானது. த வயர், த வீக், இந்தியன் எக்ஸ்பிரஸ், த க்விண்ட் உள்ளிட்ட தளங்களில் காவி கும்பலின் கருத்துரிமை அத்துமீறல் செய்தியானது.
இவர்களின் வெறுப்பு பிரச்சாரத்துக்கு பலியாகக்கூடாது என்று லயோலா நிர்வாகம் மன்னிப்புக் கேட்டதோடு, தோழர் முகிலனின் ஓவியங்களை விலக்குவதாக அறிவித்தது. ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்வு நடந்து முடிந்துவிட்டது வேறு விஷயம். அதோடு, ஓவியங்கள் விலக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவுடன் தமிழ் முகநூல் முகிலனின் ஓவியங்களை வைரலாக்கியது. ஒவ்வொரு ஓவியத்தை பகுப்பாய்வு செய்து பலர் எழுத ஆரம்பித்தனர். சமகால அரசியலின் நிலையை இதைவிட சிறப்பாக சொல்லிவிட முடியாது எனவும் தங்களுடைய எண்ணவோட்டத்தை இந்த ஓவியங்கள் பிரதிபலிப்பதாகவும் சிலாகித்து எழுதினர்.
வழக்கம்போல, சங்கிகளின் பிடியில் இருக்கும் அறிஞர்கள் – ஊடகவியலாளர்கள் இப்படியெல்லாம் செய்யலாமா? என்றார்கள். புதிய தலைமுறையில் பணியாற்றும் மனோஜ் பிரபாகர் என்ற ‘பத்திரிகையாளர்’, ‘லயோலாவின் செயலில் வெட்கமடைவதாகவும் மற்ற மதத்தினரின் சென்டிமெண்டை தாக்கக் கூடாது. ஒற்றுமையை குலைக்க வேண்டாம். கருத்துக்களை சொல்வது வேறு, வேண்டுமென்ற மற்ற மதத்தினரை புண்படுவது வேறு’ என தனது ட்விட்டரில் வியாக்கியானம் பேசி முற்போக்கு பிரிவினரிடமிருந்து செருப்படி வாங்கினார்.
அதில் ஒரு எதிர்ப்புக்குரல், “டேய் வெண்ணை, ஒட்டு மொத்த மதத்தையே ஒரு கும்பல் அரசியல் பெயரால் ஹைஜாக் செய்த போது நவ துவாரத்தையும் மூடிட்டுதானே இருந்தே. நீ யோக்கியசிகாமணி #NotinmyName நு ஒரு எதிர்குரல் கொடுத்து இருப்பியா.” எனக் கேட்டது.
ரேகா கண்ணதாசன் என்பவர், “இந்து மதத்தை ஏற்காத மற்ற மத பெண்களை கற்பழிக்கும் நல்வாய்ப்பை அருள கேட்கிறார் அப்பர் பெருமான். இது சரியா ? நீங்கள், நான் எல்லாம் பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள் என்ற கேவலமான இந்து மத கருத்துக்கு அவர்கள் என்றாவது வருத்தம் கோரியது உண்டா ?” என கேட்ட கேள்விக்கு சங்கி பத்திரிகையாளரிடமிருந்து பதில் இல்லை.
ஓவியர் முகிலன்.
அதுபோல முகநூலில் லிபரல் பார்ப்பனர்கள் சிலர், ‘கண்டீசன்ஸ் அப்ளை’யுடன் கருத்து சுதந்திரத்துக்கு குரல் கொடுத்தனர். ஆனால், எப்போதுமே சங்கிகளை ஓட ஓட விரட்டும் தமிழ் முகநூலில் தோழர் முகிலனின் ஓவியங்களுக்கு ஆர்ப்பரிப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
வி.உ. இளவேனில் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தோழர் முகிலனின் சித்திரங்களை பகிர்ந்து ஒவ்வொன்றுக்கும் ஆழமான தலைப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
ஒக்கி புயலின் போது தனது குடிமக்களை காக்க வராத இந்தியத்தை கேள்வி கேட்கும் விதமாக வரையப்பட்ட ஓவியத்தை பகிர்ந்து “பேருக்குத்தான் இந்தியா; கதறும்போது வந்தியா?” எனக் கேட்டிருக்கிறார் இவர். முகநூலில் ஒலித்த ஆதரவு குரல்கள் சிலவற்றை இங்கே தொகுத்திருக்கிறோம்…
சம்சுதீன் ஹீரா:
அதாகப்பட்டது கள நிலவரம் சொல்வது என்னவென்றால்…
உண்மையில் இந்துக்கள் எனப்படும் சாதாரன மக்கள், இந்த பாரத மாதா கோஷ்டி மீதுதான் கொலைவெறியில் இருக்கிறார்கள்…!! ‘இந்துக்கள் மனம் புண்படுகிறது’ என்று இவர்கள் நீலிக்கண்ணீர் வடிப்பதெல்லாம் ஹிந்தி மாநிலங்களில் எடுபடலாம்.. இது கிழவன் கைத்தடியால் பக்குவமாக்கப்பட்ட மண்..!! எந்தப்பருப்பும் வேகாது..!!
முதலாளித்துவச் சார்பு படைப்பாளிகளே….கலைவழி அரசியல் பேசுதலே முதன்மை! ஓவியர் முகிலன் பேசியிருக்கிறார்! காவிக்கூடாரம் அலறுகிறது!
மாதவராஜ்:
இந்த நாட்டின் நாணயத்தின் மதிப்பு குறைந்து கொண்டே போவது பாரத மாதாவுக்கு நேர்ந்த அவமானமாகத் தெரியவில்லை. இந்த நாட்டின் கடனை தாறுமாறாக அதிகரிக்கச் செய்தது பாரத மாதாவை படுத்திய கேவலமாகத் தெரியவில்லை. இந்த நாட்டின் போர் விமானங்களை வாங்குவதில் ஊழல் செய்தது பாரத மாதாவுக்கு ஏற்பட்ட அசிங்கமாகத் தெரியவில்லை.
இந்த நாட்டின் வளங்களையும், செல்வங்களையும் ஒரு சிலரே சுரண்ட அனுமதித்து அவர்களுக்கு பிரதம சேவகம் செய்தது பாரதமாதாவுக்கு செய்த அயோக்கியத்தனமாகத் தெரியவில்லை.
இந்த நாட்டின் சுயமரியாதையை, சயச்சார்பை அடகுவைத்து அமெரிக்காவிடம் வாலாட்டிக் கொண்டு நிற்க வைத்திருப்பது பாரத மாதாவுக்கு செய்யும் பச்சைத் துரோகமாகத் தெரியவில்லை.
இதையெல்லாம் படமாக வரைந்தால் மட்டும் பாரதமாதாவுக்கு ஏற்பட்ட களங்கமாகத் தெரிகிறதாம். போங்கடா, நீங்களும் உங்கள் பாரத மாதாவும்!
#WeSupportLoyala #WeSupportFreedomofExpression
சதீஷ்செல்லதுரை:
நான் பார்த்தவரை எந்த சங்கியும் முகிலனின் ஓவியங்களுக்கு பதிலாக எந்த கருத்தும் தர்க்கரீதியான மறுப்பும் கூறியதாக தெரியவில்லை. லயோலா கிருத்துவ கல்லூரி என பாரத மாதாவை வைத்து இந்து கிருத்துவ அரசியல் செய்ய மட்டுமே முற்படுகின்றனர். வசை பாடியுள்ளனர். புண்பட்டதாக புலம்புகின்றனர். ஆனால் அதன் பின்னாலிருக்கும் உண்மையை மறுக்கவில்லை.அல்லது இயலவில்லை.
ஆதவன்தீட்சண்யா:
தோழர் முகிலனின் ஓவியங்களை பரவலாக்கும் பொறுப்பை திறம்பட நிறைவேற்றிவரும் சங்கிகளுக்கு பாராட்டுகள்.
கருப்புநீலகண்டன்:
சமூகப் பணியாளர்கள், பேராசிரியர் காளீஸ்வரனையும் ஓவியர் முகிலனையும், “வருத்தப்பட்டு பாரஞ் சுமக்கின்றவர்களே எங்களிடம் வராதீர்கள் ” என தொடர்ந்து தலித்துகளை போதிய அளவிற்கு தமது கல்வி நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ளாத கல்வி நிறுவனமென்றபோதிலும் ஜனநாயக வெளியில் ஒரு சிறும்பான்மை சமூக கல்விநிறுவனத்தை பாதுகாப்பது பெரியார்- அம்பேத்கரியவாதிகளின் கடமை என்கிற பொறுப்பில் திறன்மிகு லொயோலா கல்லூரியையும் இந்துத்துவ ஆதிக்க ஜாதிவெறியர்களிடம் பாதுகாப்போம் நண்பர்களே!!
பிரபாகரன்அழகர்சாமி:
புரட்சிகர ஓவியர் தோழர் முகிலன் மிகவும் அற்புதமான ஒரு கலைஞர். அவருக்கான சரியான வெகுமக்கள் அங்கீகாரம் இன்றுதான் கிடைத்திருக்கிறது எனலாம். லயோலா வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட அவருடைய ஓவியங்களை தொகுத்து சிறப்பான அச்சாக்கத்தில் ஒரு தனி நூலாக கொண்டுவரவேண்டும். அவை வரலாற்றின் சாட்சியங்கள் !
ஒடியன்லட்சுமணன்:
லயோலாவில் வைக்கப்பட்டிருந்த ஒவியங்கள் குறித்து கலையைப்போற்றும் முகாமுக்குள்ளேயே தவறு சரி என்று எதிரும் புதிருமாக எழுந்த கருத்துக்கள் அடிபடத்தொடங்கியிருக்கிறது. சிலர் அது சரி என்பதற்கான விமர்சனங்களை கூர்மையாக எழுப்புகிறார்கள். அது ஸ்பெசலிஸ்டுகளின் சிகிச்சை என்று எடுத்துக்கொள்கிறேன். சிலர் மட்டையடி அடிக்கிறார்கள் அதை முரட்டுவைத்தியம் என்று எடுத்துக்கொள்கிறேன். எல்லா நோயாளிகளும் ஒருவகையினர் அல்ல. சிலர் சிகிச்சை நடைபெற்ற இடத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகளை சொல்லியிருந்தார்கள் அது கவனிக்கப்படவேண்டியதே.
சிலர் சில மருந்துகள் ஓவர்டோஸ் என்கிற குற்றச்சாட்டை வைத்திருந்தார்கள். இதற்கு பதில் சொல்லும் செந்தில் அரசுவின் மூன்று நிலைத்தகவலைப்பார்க்கலாம்
இது முதல் நிலைத்தகவல்
உண்மையிலேயே உனக்கு உன் மதம் மேல் நம்பிக்கை இருந்தா, மரியாதை இருந்தா நீ என்ன செய்யணும்? பிஜேபி, சங்கிகள்ட்ட எங்க மத அடையாளங்கள் எங்களுக்கு முக்கியம். அவைகளைப் பயன்படுத்தி அரசியல் செய்யாதீங்க.
உங்களை எதிர்ப்பவர்கள் எங்கள் மத அடையாளங்களையும் சேர்த்து எதிர்த்து புண்படுத்துகிறார்கள். ஆகவே எங்கள் மதத்து திரிசூலம், காவி, ராமன், அனுமன், விநாயகர், லட்சுமி, சரஸ்வதி இன்ன பிற நாங்கள் வணங்கும் கடவுள்களை, அதன் அடையாளங்களை வைத்து அரசியல் லாபத்திற்காக பொது சமூகத்திற்கு எதிரான வன்முறையை, கலவரத்தை, கொள்கைத் திணிப்புகளைச் செய்யாதீர்கள். என்று தான சொல்லணும்?
ஆனா நீ அத செய்யாம, அதற்கு எதிர்வினை செய்யுறவங்க கிட்ட வந்து “என் மதத்தை நீ புண்படுத்திட்டன்னு மட்டும்தான கூவுற’ அப்படீன்னா பிரச்சன யார் கிட்ட?…
இது செந்தில் அரசுவின் இரண்டாவது நிலைத்தகவல்
முதன் முதலாக தமிழகத்திலிருந்து சங்கிகளை இடுப்புக்குக் கீழாக இப்படி இறங்கி அடித்த ஓவியங்களை இப்போதுதான் பார்க்கிறேன். மதம் எல்லாம் அதில் ஒன்றும் இல்லை. இந்துத்துவ சக்திகளை சவட்டி எடுத்துருக்காப்ல.
மதம் புண்படுத்தப்பட்டது என்று கூறுபவர்கள் தம் இந்துத்துவ ஆதரவை நேரடியாக அல்லது மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்கள். கேட்டால் பிஜெபியை ஆர்.எஸ்.எஸ் ஐ விமர்சியுங்கள், ஏன் எங்கள் மதத்தை என்று இழுக்கிறார்கள்.
நேரடியாக ஆதரிப்பவரை விட்டு விடலாம். மறைமுகமாக அல்லது அறியாமல் மதம் புண்பட்டதாக அரற்றுவோர்களுக்கு..ஒன்று சொல்லவேண்டும். நீங்கள் ஆரம்ப நிலையில் இருக்கிறீர்கள். அவ்வளவுதான்.
இது செந்தில் அரசுவின் மூன்றாவது நிலைத்தகவல்
சிதறிய ரத்தத்தின் அடர் சிவப்பு நிற வண்ணம் எந்த ஓவியங்களிலும் காண முடியாதது.
தலையில் காவிப்பட்டை, கையில் சூலம் வாள் ஈட்டி ஏந்தித்தானே கலவரங்கள் செய்து உயிர்களைப் பறித்தார்கள்.
வெறும் கண்டன ஓவியங்களுக்காய் இப்போது புண்பட்டதாய் அரற்றும் உனக்கு அன்று நடந்த கொலைகள் குறித்த குற்ற உணர்ச்சி இருக்கிறதா? ஆம் அது குறித்த குற்ற உணர்ச்சி இருந்தால். நீ ஏன் புண்படப் போகிறாய்?
கவிதாசொர்ணவல்லி:
on serious note…தமிழ்நாட்டின் ஒரு கல்லூரியில், நிகழ்த்தப்பட்ட படைப்பு சுதந்திரத்திற்கு எதிரான காவிகளின் அராஜகத்திற்கு, நாம் பணிந்து போயிருக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நாம் என்பது, மன்னிப்பு கேட்காவிட்டால் கல்லூரிக்கு ஆபத்து வருமோ என்று லயோலா நிர்வாகத்தை பீதியடைய வைக்கிற அளவிற்கு பலவீனமாக இருக்கிற அரசையும் சேர்த்துதான். அதே போல அரசின் கட்டுப்பாட்டில் வரும் பெரியார் பல்கலைகழகத்தில் வலதுசாரி சிந்தனையுடையோர் அனுமதிக்கப்படுவதும், இடதுசாரிகள் மறுக்கப்படுவதும், இந்த “நாமிற்குள்” அடக்கம். தாமரை மயிரில்தான் மலரும் என்று மிக அசட்டையாக கடந்து போகிறோம் நாம். ஆனால், காவிகள் அடிமட்டத்தில் இருந்து அமைப்பு ரீதியாக தங்களை பலமாக்குகிரார்கள். அலுவலக மனிதவளத்துறையில் கோலோச்சுகிறார்கள். ஊடகங்களில் குடியேறி இருக்கிறார்கள். கல்லூரி மாணவர்களிடையே விஷத்தை விதைக்கிறார்கள்.
எதையும் யாருக்கும் நிரூபிக்காமல் மெதுவாக, நிதானமாக வேலை பார்க்கிறார்கள். நாம் கோட்டைவிடுகிற இடங்களை சரிபார்த்து, அதை சீர் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
அன்பன்ரஹ்மான்
இந்து முன்னணி பயங்கரவாதிகளால் கொடூரமாக கூட்டு வன்புணர்வு செய்து கொல்லப்பட்டாள் தலித் சிறுமி நந்தினி.
அப்போது “இந்து முன்னணி” என்று தங்கள் மத பெயரை அடையாளமாக வைத்துக்கொண்டு இவ்வாறு செய்ததால் தங்கள் மதம் அவமதிக்கப்பட்டதாக இந்துக்கள் யாரும் இந்து முன்னணியினரை எதிர்க்கவில்லை. இப்போது அதை சித்திரமாக வரைந்தவுடன் என்ன மத நம்பிக்கையை தூக்கிட்டு வர்றீங்க?
திரிசூலத்தை வைத்து குஜராத்தில் சங்கி பயங்கரவாத கூட்டம் கற்பினி பெண்ணின் மர்ம உறுப்பில் குத்தியது. அப்போது இந்து மத அடையாளமான திரிசூலம் அவமதிக்கப்பட்டது தொடர்பாக யாரும் சங்கிகளை கேள்வி கேட்கவில்லை.
நடந்த சம்பவத்தை ஓவியமாக வரைந்தவுடன் இதற்கு மட்டும் இந்து மத நம்பிக்கை என்று வருவது என்ன நியாயம்? உண்மையில் நீங்கள் எதிர்க்கவேண்டியது திருசூலத்தை மர்ம உறுப்பில் குத்திய சங்கி கூட்டதையா அல்லது அவர்களின் செயலை ஓவியமாக வரைந்த லயோலா கல்லூரியையா?
மகிழ்நன்பா.ம:
சங்கிகளை கதறவிட்ட ஓவியர் தோழர் முகிலனுக்கு தூரிகை வழங்கிய அரசியல் கோட்பாட்டின் பெயர்
#கம்யூனிசம் #Communism #பொதுவுடமை
வத்சலாநாகேந்திரன்:
தில்லைச் சமரில் தமிழ் வென்று, கோயில் தீட்சிதர்கள் கையிலிருந்து அறநிலையத் துறைக்கு மாறிய போது, சிற்றம்பல மேடையில் தமிழ் பாடிய தீட்டைக் கழிப்பது சிக்கலாக இருக்கவில்லை.மாறாக, உண்டியலை வைத்து அதற்குப் பூட்டும் போட்டது தான் ரொம்ப அன் ஈஈஈஈஈஸியா இருந்தது. அதே போல, இந்து(அ)தர்மம், நம்பிக்கை புண்படும் போன்ற ஈர வெங்காயங்களை விட, ஓவியங்களும்/அது பேசும் அரசியலும், உயர் நடுத்தர, நடுத்தர வர்க்க “முதல்” முறையாக வாக்களிக்கப் போகும் வயதை எட்டும் மாணவர்களை சென்றடைந்தது தான் கும்பி எரிவதற்கான உண்மைக் காரணம்.
கதிரவன்மாயவன்:
பெண் தீட்டு
கோவிலுக்குள்ளே அர்ச்சகர்களால் பல பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டபோது, எந்தப் பார்ப்பானும் கோவிலுக்குள் தீட்டு கழிக்கவில்லை. ஆனால், சபரிமலையில் பெண்கள் நுழைந்த பின், கோவில் புனிதம் கெட்டுவிட்டதாக கூறி, தீட்டு கழிக்கும் சடங்கை செய்தனர் பார்ப்பன நம்பூதரிகள். இவர்கள் சொல்லும் வேத உபநிஷட ஆன்மீக லட்சணம் இது தான். பெண்கள் தீட்டல்ல… மூளை அழுகிய அர்ச்சக ஓசி சோறுகளே இந்த சமூகத்தின் தீட்டு..
பாரதிநாதன்:
பாரத மாதா ஓவியத்தில் மீ டூவா? ரத்தம் கொதிக்கிறது/// தமிழிசை.
அது சரிங்க. இந்துக் கோயிலில் பாலியல் வன்முறைக்கு அசிஃபா என்ற தளிர் உள்ளாக்கப்பட்ட சமயத்தில் உங்கள் ரத்தம் உறைநிலைக்கு போய் விட்டதே ஏன் மேடம்?
புலியூர்முருகேசன்:
எழுத்து, ஓவியம், இசை, பாடல், நாடகம்… என எதைக் கண்டெல்லாம் காவி பயங்கரவாதிகள் பயப்படுகின்றனரோ, அதுவே சிறந்த படைப்பு.
#லயோலா ஓவியங்கள் படைப்பின் உச்சம்.
மாதவராஜ்:
இந்த ஓவியங்களில் கிண்டல் இல்லை. கோபமும் வலியும்தான் மேலெழுந்து நிற்கிறது. அதிகாரத்தில் இருக்கும் இந்துத்துவா மிரட்டல்களுக்கு லயோலா கல்லூரி மன்னிப்பு கேட்கலாம். ஆனால், காலம் லயோலா ஓவியக் கண்காட்சியினை வாழ்த்துகிறது. திசையெல்லாம் கொண்டு செல்கிறது. #supportLoyala
கி. நடராசன்:
படைப்பு (ஓவியர்கள்) சுதந்திரத்தில் தலையிடும் பாஜக பாசிஸ்டுகளை வன்மையான கண்டங்கள் #supportLoyala
சுசீலா:
ஓவியங்கள் அனைத்தும் மிக அருமை … நடந்த, நடந்துக் கொண்டிருக்கும் உண்மைகளை அப்பழுக்கற்ற வகையில் அப்படியே சொல்கின்றன. அதனால் தான் காவித்துவம் பதறி போய் மிரட்டலாக வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த மிரட்டலினால் என்னவொரு பயன் என்றால், வழக்கம் போல் இலவச விளம்பரம் தான். பார்க்காதவர்களுக்கும் செய்தி போய் சென்றிருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. ஒரேயொரு வருத்தம் என்னவென்றால், கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கேட்டிருக்கிறது என்பது மட்டும் தான். பிற மதத்தை சேர்ந்தவர்கள் நடத்தும் கல்லூரி என்பதால் , இதனை தவிர்க்க முடியாது என்பது வெட்கப்பட வேண்டிய உண்மை … இந்த ஹிந்துத்வா ஆட்சியில்!
வரைந்த ஒவியங்கள் மனதை புண்படுத்துகிறது என்றால், நடந்த சம்பவங்கள் அனைத்தும் மனதை என்ன பாடுபடுத்தும்???
கௌரிபால்சாத்திரி:
பாரத மாதா .. பாரத மாதா என்று புலம்புறாங்களே . பாரதமாதாவே இங்கிலாந்து காரன் பெத்துப்போட்டது தானே .. 😂
அருள்எழிலன்:
ஸ்வஸ்திக்கை தவிர்த்து விட்டு ஹிட்லரை வரையமுடியுமா?
முகிலன் வரைந்த ஓவியங்கள் லயோலா கல்லூரியில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது தொடர்பாக, பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் இந்து மதத்தை அவமதித்து விட்டார்கள் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து முகிலனுக்கும், லயோலாக் கல்லூரிக்கும், பேராசிரியர் காளீஸ்வரன் அவர்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை உருவாக்கியிருக்கிறார்கள். முகிலனின் ஓவியங்கள் மிகத் தீர்க்கமாக பாஜகவை விமர்சிக்கிறது. இன்று தமிழினம் சந்திக்கும் உயிராதார பிரச்சனைகளை மையமாக வைத்து பாஜக அதில் செய்த துரோகங்களையும், நடத்திக் கொண்டிருக்கும் நாடகங்களையும் அம்பலமாக்குகின்றன.
இந்த ஓவியங்களில் சூலாயுதமும், பாரதமாதாவும் குறியீடுகளாக வரையப்பட்டுள்ளன. தமிழ் ஓவிய மரபில் அதிலும் குறிப்பாக இந்துத்துவத்திற்கு எதிரான ஓவியங்களில் சூலாயுதமும், பாரதமாதாவும் பல நூறு ஓவியங்களாக இதற்கு முன்னர் வரையப்பட்டுள்ளன. அந்த ஓவிய மரபின் தொடர்ச்சிதான் முகிலனுடையது. மிகத்தீர்க்கமான அரசியல் படங்கள் அவை. நடைபெற்ற இடம் லயோலா என்ற கத்தோலிக்க கல்வி நிறுவனம் என்பது பாஜகவுக்கு மட்டும் உறுத்தவில்லை. இங்கு அறிவுலகில் புரளும் பலருக்கும் அது உறுத்தலாகவே இருக்கிறது. ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனம் எதிர்கொள்ளும் சங்கடங்கள், அதன் பதட்டம் என அனைத்தும் புரிந்து கொள்ளக் கூடியதுதான். என்ற போதிலும் ஒரு கேள்வி உறுத்துகிறது.
பாஜகவை விமர்சிக்கும் போது இந்துத்துவத்தை தன் அரசியல் முகமாக வரித்துக் கொண்ட ஒரு அரசியல் பீடத்தை அதன் குறியீடுகளை தவிர்த்து விட்டு வரைவது ஹிட்லரை வரையும் போது அவரது தோள்பட்டை ஸ்வஸ்திக்கை தவிர்த்து விட்டு வரைவது போன்றது. தமிழ் நிலத்தில், இந்தியாவில் இந்துத்துவத்திற்கெதிரான போராட்டத்தின் மரபை இடையில் ஒரு ஓவியன் நிறுத்திக் கொள்ளும் கருத்து அல்லது அது தொடர்பான ஊசலாட்டம் எங்கிருந்து வருகிறது. சிறுபான்மையினரை பாதுகாப்போம் என்ற கோஷத்தை இழந்து சிறுபான்மையினர் இறந்தால் மலர் வளையம் வைப்போம் என்கிற அளவுக்கு அது வலுவிழந்து விட்டதா?
முகிலனின் அரசியல் கோடுகளுக்கு வலுவான ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அவர் பயணத்தில் அவர் தெளிவாக பயணிப்பார்!
ஆனந்தி:
பாரதமாதா தமிழர் சம்பளத்தை மாதம் ஒன்று ஆனவுடன் பிடுங்கிவிடுகிறாள். விவசாய, தொழிற்வளர்ச்சி தர மறுக்கிறாள். மருத்துவ சீட்டுகளை பிடுங்கி வடநாட்டவருக்கு கொடுத்தாள். TNPSC-ல் வடநாட்டவரை பணி அமர்த்துகிறாள். தமிழக அலுவலகங்களை இந்தி மொழியால் நிரப்புகிறாள். பாரதமாதாவால் என்ன பயன் நம் தலைமுறையினருக்கு??
ஓவியம் என்ன சொல்கிறது?
கார்ப்பரேட்டுகளால் பாதிக்கப்பட்ட பாரதமாதா #metoo சொல்கிறாள். பாரதமாதா பற்று இருப்பவர்கள் காப்பாற்றுங்கள், அவளை.
பெண்கள் வாழ தகுதியற்ற நாடு இந்தியா என உலகமே காறி உமிழ்கிறது. துப்பினா தொடச்சிக்குவேன்னு மானம் கெட்டு அலைவது. 😕
இந்தியன்களுக்கு பொழப்பு.
சங்கிகளின் கருத்துரிமை அத்துமீறலை கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,
“சென்னை இலயோலா கல்லூரி மாணவர் அரவணைப்பு மன்றமும், மாற்று ஊடக மையமும் இணைந்து ஆறாம் ஆண்டு வீதி விருது விழாவை 2019 ஜனவரி 19, 20 தேதிகளில் நடத்தின. இவ்விழாவின் ஓரங்கமாக, சமகால நடப்புகளை துல்லியமாகவும் கலைநேர்த்தியுடனும் விமர்சிக்கும் ஓவியங்களின் கண்காட்சியும் நடந்தது. ஆனால் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த சில ஓவியங்கள் ஆட்சேபகரமாக இருப்பதாக பா.ஜ.க உள்ளிட்ட சில சங்பரிவார அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கல்லூரி நிர்வாகம் அந்த ஓவியங்களை நீக்கியதுடன், இதற்காக பகிரங்க மன்னிப்பையும் கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. எனினும் தாங்கள் பூதாகரப்படுத்த நினைத்த ஒரு விசயம் இப்படி உடனடியாக சுமூக முடிவை எட்டுவதை பொறுக்காத சங் பரிவாரத்தினர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு எதிரான அவதூறுகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். மட்டுமல்லாது, மாற்று ஊடக மையத்தின் பொறுப்பாளர் முனைவர் காளீஸ்வரன், அவரது வாழ்விணையர், ஓவியர் முகிலன் ஆகியோரை செல்பேசியில் அழைத்து கடுமையாக மிரட்டியும் அருவருப்பாக ஏசியும் வருகின்றனர்.
கல்விக்கூட வளாகச் செயல்பாடுகளையும் கலை இலக்கிய நடவடிக்கைகளையும் கண்காணித்து அச்சுறுத்துவதன் மூலம் அவற்றின் சுதந்திரத்தன்மையை பறிப்பதுடன், தமக்கெதிரான விமர்சனங்களையும் தடுத்துவிட முடியுமென சங்பரிவாரத்தினர் தொடர்ந்து இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதை தமுஎகச வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தங்களுக்கு தனிப்பெரும் அதிகாரம் இருப்பதாக அடாவடி செய்துவரும் சங் பரிவாரத்தினரின் இப்போக்கிற்கு எதிரான கண்டனத்தை எழுப்புமாறு அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது. லயோலா கல்லூரி கல்விசார் பணிகளை இடையூறின்றி தொடரவும், முனைவர் காளீஸ்வரனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஓவியர் முகிலனுக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைப் போக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை தமுஎகச கேட்டுக்கொள்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு:
இதையும் பாருங்க …
வினவு தளத்தில் வெளியான முகிலனின் கேலிச்சித்திரங்களிலிருந்து சில பதிவுகள்.
நாவல்களை வாசிப்பதன் மீதான ஆர்வம் வற்றிப்போய் ஒரு தசாப்தம் ஆகிறது. விருப்பத்தெரிவின் பட்டியலில் இல்லாமல் போய் அதைவிடக் கூடுதலான காலம் ஆகிவிட்டது. இத்தகைய நிலையில்தான் தோழர் ஒருவர் நவல் எல் சாதவி எழுதிய ‘woman at point zero’ எனும் நூலைப் பரிந்துரைத்தார். தமிழில் சசிகலா பாபு மொழியாக்கத்தில் சூன்யப் புள்ளியில் பெண் எனும் தலைப்பில் எதிர் வெளியீடு பதிப்பகத்தால் சென்ற மாதம் வெளிவந்திருக்கிறது. தோழர் விவரித்ததை பகுதியளவாக புரிந்துகொண்டு இதனை ஒரு கட்டுரைத் தொகுப்பு என நினைத்து வாங்கினேன். சற்றே ஏமாற்றத்துடன் வாசிக்கத் துவங்கிய சில நிமிடங்களில் பிர்தவ்ஸ் வாழ்ந்த கொடிய உலகிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தேன்.
நவல் எல் சாதவி
நாவலை எழுதிய நவல் எல் சாதவி 1931-ல் எகிப்தில் பிறந்து, மருத்துவம் படித்து மனநல மருத்துவராக பணியாற்றியவர். கெய்ரோ சிறைச்சாலையில் இருந்த தண்டனை பெற்ற பெண்களின் பண்புகளை ஆராய்ச்சி செய்தவர். அங்கே அவர் சந்திக்க விரும்பிய, பல நாட்கள் சந்திக்கவே ஒப்புக்கொள்ளாத, தூக்கு தண்டனைக்கு முதல்நாள் சந்திக்க ஒப்புக்கொண்ட பிர்தவுஸ் எனும் பெண்ணின் உண்மைக் கதையே இந்த நாவல். மதப் பிற்போக்குத்தனம் கொண்ட ஒரு சமூகம் பெண்களை எப்படியெல்லாம் நடத்தும் என்பதற்கான சாட்சியாக காட்சியளிக்கிறார் பிர்தவுஸ்.
சாதவி ஆராய்ச்சி செய்யும் சிறையில் பிர்தவுஸ் மட்டும் தனித்துத் தெரிகிறார். யாருடனும் பேசுவதில்லை. அவரைப் பார்க்க பார்வையாளர்கள் யாரும் வருவதும் இல்லை. தனக்கு தரப்பட்ட உணவைக்கூட காலை வரை சாப்பிடாமல் எதையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார் அந்தக் கைதி. அவரது நடவடிக்கைகள் அவரை சந்திக்க வேண்டும் எனும் ஆவலை தூண்டுகிறது. சிறை மருத்துவரிடம் அவரை ஒரு சந்திப்புக்கு ஒப்புக்கொள்ள வைக்க முடியுமா என கேட்கிறார்.
(சிறை மருத்துவர்) “நான் முயற்சி செய்து பார்க்கிறேன், அவர் எனது கேள்விகளுக்கே பதில் சொல்வதில்லை. தமது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க எழுதப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் அவர் கையெழுத்திடவும் மறுத்துவிட்டார். நீங்கள் ஒரு மனநல மருத்துவர் என்று அறிமுகப்படுத்துகிறேன். ஒருவேளை அப்போது அவர் உங்களை சந்திக்க ஒப்புக்கொள்ளக்கூடும்”
(சாதவி) “அவரது கருணை மனுவை யார் எழுதியது?”
”நான்தான் எழுதினேன். உண்மையில் அவரை கொலை செய்தவராக நான் கருதவில்லை. இத்தனை கனிவான பெண் கொலை செய்திருக்கக்கூடும் என உங்களால் நம்பவே முடியாது.”
”கனிவான நபர்கள் கொலை செய்ய மாட்டார்கள் என உங்களிடம் யார் சொன்னது?”
அன்று சிறை மருத்துவரின் கோரிக்கையை பிர்தவுஸ் நிராகரிக்கிறார். அப்போது துவங்கிய சாதவியின் ஏமாற்றம் பல நாட்களுக்கு தொடர்கிறது. இந்த ஏமாற்றத்தை அவர் தன் மீது நாட்டமில்லாத ஒருவரிடம் காதல்வயப்பட்ட தருணத்தோடு ஒத்திருந்ததாக குறிப்பிடுகிறார் சாதவி.
ஒரு நாள் அவர் பணி முடிந்து காரில் ஏறுகையில் பிர்தவுஸின் அறைக்காவலர் மூச்சிறைக்க ஓடி வருகிறார்.
”அவர் உங்களை சந்திக்க விரும்புகிறார்”
அதைக்கேட்ட சாதவிக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதைப்போல சுவாசத்தின் வேகம் அதிகரித்தது. முன்னெப்போதையும்விட அவர் இதயம் வெகுவேகமாக துடித்தது. அவர் கால்கள் அவர் எடையை சுமக்காததைப்போன்ற இலகுவான நடையில் அதிவேகமாக பிர்தவுஸின் அறையை அடைகிறார். அங்கு உறைந்துபோனவராய் நிற்கையில் கத்தி போல ஊடுருவும் குரலில் பிர்தவுஸ் சொல்கிறார் “ஜன்னலை மூடுங்கள்!”
“நான் பேசவேண்டும்; இடையூறு செய்யாதீர்கள்; உங்கள் பேச்சை கேட்பதற்கு என்னிடம் நேரமில்லை. இன்று மாலை ஆறு மணிக்கு என்னை அழைத்துச் சென்றுவிடுவார்கள் (தூக்கிலிட). நாளை காலை நான் இங்கு இருக்க மாட்டேன்.” என்பதாக தொடங்கும் பேச்சு அவர் கைது செய்யப்படும் நிகழ்வை விவரிக்கும்வரை நீள்கிறது.
நாவலின் கதையை விவரிப்பதைவிட ஒரு கொலைக்குற்றவாளி, நீண்ட நாள் பாலியல் தொழில் செய்தவரின் கதை ஏன் உங்களுக்கும் எனக்கும் அவசியப்படுகிறது என்பதை பேசுவது சரியாக இருக்கும் என கருதுகிறேன். ஆகவே நாவலில் இருக்கும் சில சம்பவங்களை மட்டும் பார்க்கலாம்.
சூனியப் புள்ளியில் பெண் (ஆங்கில நூல்)
தன்னை ஒரு பாலியல் தொழிலாளியாக வைத்து பணம் ஈட்டிய பெண்ணிடம் இருந்து தப்பி, ஒரு போலீஸ்காரனால் உடலுறவுக்கு பயன்படுத்தப்பட்டு பிறகு சாலையில் பசியோடு குளிரில் அலைகிறார். அப்போது ஒருவர் காரில் வந்து அவரை அழைத்துசெல்கிறார். அவர் வாழ்வில் பலமுறை எதிர்கொண்டதுதான் அப்போதும் நடக்கிறது. ஆனால் விதிவிலக்காக அவருக்கு அதற்காக பத்து பவுண்ட் பணம் கிடைக்கிறது. இருபத்தைந்து ஆண்டு கால வாழ்வில் அவர் முதல் முறையாக தொடும் பணம். அந்த பணத் தாள் கொடுக்கும் வினோத அனுபவத்தோடு வீதியில் நடக்கிறார். உணவகம் ஒன்றில் கோழி இறைச்சி வறுபடும் மணம் அவரை வந்தடைகிறது.
கடையில் நுழைந்து கோழி வறுவல் ஒன்றை ஆர்டர் செய்கிறார். மேசைக்கு வந்த கோழி வறுவலை நிதானமாக ஒவ்வொரு வாயாக முழுமையாக மென்று உண்கிறார். எவ்வளவு நேரம் ஒரு கவளம் உணவை (இறைச்சியை) வாயில் வைத்திருக்க இயலுமோ அவ்வளவு நேரம் வைத்திருந்து விழுங்குகிறார். அவருக்கு உணவை பரிமாறும் ஊழியர் அவர் சாப்பிடுவதை பார்க்காமல் முகத்தை வேறு பக்கம் வைத்துக்கொள்கிறார். தான் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை யாரும் கண்காணிக்காமல் இருக்கும் ஒரு தருனத்தை தன் வாழ்நாளில் அப்போதுதான் எதிர்கொள்கிறார் பிர்தவுஸ். அவர் குழந்தைப்பருவத்தில் இரவு உணவு இல்லாமல் தூங்கப்போவதே வழக்கமாக இருந்திருக்கிறது. பசியிலும் குளிரிலும் கோழிக்குஞ்சுகளைப்போல தம் சகோதர சகோதரிகள் சுருண்டு கிடந்து செத்துப்போனது அவருக்கு நினைவுக்கு வருகிறது. எப்போதும் அவர் அப்பா பசியோடு உறங்கப்போவதில்லை. ஆகவே அவருக்கு மட்டுமான உணவை பிர்தவுசின் தாய் வீட்டு சுவர் பொந்துகளில் ஒளித்து வைப்பார். அவர் அப்பா மீதம் வைத்த உணவுதான் அவருக்கும் ஏனையோருக்கும் கிடைக்கும்.
ஒரு பியஸ்தர் நாணயத்துக்காக அவர் சிறு வயதில் ஏராளமாக அடி வாங்கியிருக்கிறார். வேலை வாங்கப்பட்டிருக்கிறார், அழுதிருக்கிறார், ஏமாற்றப்பட்டிருக்கிறார். நூறு பவுண்ட் பணத்துக்காக ஒரு 60 வயது முதியவருக்கு மணம் முடித்துக்கொடுக்கப்படுகிறார் 19 வயது பிர்தவுஸ். அந்த கணவர் பிரார்த்தனை செய்யும்போதுகூட பிர்தவுஸ் சாப்பிடுவதை திருட்டுத்தனமாக கண்காணிக்கிறார்.
சிறுமியாக இருக்கையில் உடன் விளையாடிய இன்னொரு சிறுவனால் பாலியல்ரீதியாக (விளையாட்டாக) பயன்படுத்தப்பட்டதில் தொடங்கும் அவர் வாழ்வு இறுதியாக தன்னால் கொல்லவும் முடியும் என ஒரு ஆணிடம் விவரிக்கும்வரை ஒரு பாலியல் பண்டமாகவே நீள்கிறது. பெற்றோர்களை இழந்த பின் கெய்ரோவிற்கு அவரை அழைத்துச்செல்லும் அவர் மாமா, பிறகு 100 பவுண்ட் கொடுத்து அவரை மணமுடித்து செல்லும் அவரது முதிய கணவர், அவரிடமிருந்து தப்பி ஓடுகையில் அடைக்கலம் கொடுத்த ஒரு கடைக்காரர், அங்கிருந்து தப்பிச் செல்கையில் சந்தித்த ஒரு விபச்சார தரகுப் பெண், வழியில் விசாரணை செய்த போலீஸ்காரன் என அவர் எதிர்கொண்ட எல்லோரும் அவரை இரக்கமின்றி நுகர்கிறார்கள்.
பத்தொன்பது வயதில் திருமணம் எனும் பெயரில் அவரை வாங்கிய கணவர் வாயில் ஒரு விகாரமான ஒரு புண்ணோடு இருப்பவர். அதில் இருந்து வழியும் ரத்தத்தோடும் சீழோடும்தான் அவர் பிர்தவுஸுடன் உறவுகொள்கிறார். கணவர் உறங்கியபின் தன் முகத்தை பலமுறை சோப்பு போட்டு கழுவியதாக குறிப்பிடுகிறார் பிர்தவுஸ். அந்த வாழ்வை தொடர இயலாமல் தன் மாமா வீட்டுக்கு வந்தவருக்கு உணவுகூட கொடுக்காமல் திருப்பி கணவரிடம் சேர்க்கிறார்கள். அந்த நாள் முழுவதும் அவர் உணவில்லாமல் பசியோடிருக்கிறார், அந்த பசியின்போது அவர் கணவர் “உனக்கு சாப்பாடு போடக்கூட யாரும் இல்லை. நீ என்னை நம்பித்தான் பிழைத்தாக வேண்டும்” என்கிறார்.
நாவலின் எல்லா பக்கங்களிலும் அவர் எதிர்கொண்ட துயரங்கள் மட்டுமே நிறைந்திருக்கிறது. அப்படியான துயரங்களில் ஓரளவு சகிக்கக்கூடிய துயரங்கள்தான் அவருக்கு கிடைத்த மகிழ்ச்சி தரும் அனுபவங்களாய் இருந்திருக்கின்றன. அடைக்கலமளித்த கடைக்காரர் அவரிடம் உனக்கு ஆரஞ்சுப் பழம் பிடிக்குமா தேன் நாரத்தைகள் பிடிக்குமா என கேட்கிறார். பிர்தவுஸுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. என்ன வேண்டும் என்றோ என்ன பிடிக்கும் என்றோ யாரும் அவரிடம் கேட்டதில்லை.
முதல் பத்து பவுண்ட் சம்பாதித்த பிறகு நிமிர்ந்து சாலையில் நடக்கிறார். பலரும் அவரை “அழைக்கிறார்கள்”. முடியாது என மறுத்துவிட்டு நகர்கிறார். தன்னால் ஒருவனை நிராகரிக்கவும் முடியும் எனும் நம்பிக்கை அவரை பரவசமூட்டுகிறது. ஒருவன் அவரை அனுகும்போது அவனை தலை முதல் கால்வரை பார்த்துவிட்டு முடியாதென்கிறார். அவன் ஏன் என கேட்கிறான்.
”ஏனெனில் இங்கே நிறைய ஆண்கள் இருக்கிறார்கள். நான் யாருடன் செல்வது என்பதை நான்தான் முடிவு செய்வேன்” என்கிறார் பிர்தவுஸ்.
அப்படியானால் என்னை ஏன் நீ தேர்வு செய்யவில்லை என அவன் கேட்க உன் நகங்கள் அழுக்காக இருக்கின்றன எனக்கு அவை சுத்தமாக இருக்க வேண்டும் என பதிலளிக்கிறார் அவர். முதல் முறையாக அவர் உடல் அவருக்கு சொந்தமாகிறது. ஒரு உயர்மதிப்பு கொண்ட விபச்சாரிக்கு கிடைத்த அந்த வாய்ப்புகூட மத கட்டுப்பெட்டித்தனம் கொண்ட சமூகத்தில் குடும்பப்பெண்களுக்கு வாய்ப்பதில்லை. பிறகும் அவர் விபச்சாரத்தை நியாயப்படுத்தி வாழவில்லை சில காலத்துக்குப் பிறகு ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அந்த குறைவான சம்பளத்தில் கழிவறைகூட இல்லாத அறையில் வாழ்கிறார். அங்கே முதல் முறையாக காதல்வயப்பட்டு ஏமாற்றப்படுகிறார். பிறகு கடைசி துணுக்கு ஒழுக்கத்தை தூர எறிந்துவிட்டு மீண்டும் பாலியல் தொழிலுக்குப் போகிறார். அதிகாரிகள் இளவரசர்கள் என பலரும் நாடும் பெண்ணாகிறார்.
இறுதியில் ஒரு காவல்துறையில் செல்வாக்குள்ள விபச்சாரத் தரகனால் அச்சுறுத்தப்பட்டு அவன் கட்டுப்பாட்டில் இருக்க நிர்பந்திக்கப்படுகிறார். ஒரு நாள் அவன் அழைப்பை நிராகரிக்கையில் ஏற்பட்ட சண்டையில் அவன் எடுத்த கத்தியை பிடுங்கி அவனைக் கொன்றுவிட்டு வெளியேறுகிறார்.
கதை முடியவில்லை. சாலையில் நடந்து போகும் பிர்தவுஸை பெரிய காரில் வந்த நபர் அழைக்கிறான். இவர் மறுக்க விலை ஆயிரம் பவுண்டாகிறது. மீண்டும் மறுக்க அது இரண்டாயிரமாகிறது. அவன் கண்களை உற்றுப்பார்த்து பிர்தவுஸ் சொல்கிறார் “மூன்றாயிரம்”. அதற்கும் ஒப்புக்கொள்கிறான் அந்த அரபிய இளவரசன். உறவுக்குப்பிறகு பெற்ற பணத்தை அவன் கண் முன்னாலேயே கிழித்து வீசுகிறார் அவர். தான் தொட்ட முதல் பியஸ்தர் கொடுத்த அதே உணர்வு அவருக்கு இப்போது தோன்றுகிறது. அந்த இளவரசன் சொல்கிறான் “உண்மையில் நீ ஒரு இளவரசிதான். நீ முதலில் சொன்னபோது ஏன் நான் நம்பாமல் போனேன்?”
அதனைத் தொடர்ந்து நீளும் அந்த சிறு உரையாடலில் அரபிய இளவரசன் கேட்கிறான் “நீ யாரையேனும் கொலை செய்திருக்கிறாயா?”
”ஆமாம் கொன்றிருக்கிறேன்.”
”இல்லை நீ மென்மையானவளாக இருக்கிறாய். ஒரு கொசுவைக்கூட கொல்வாயா என எனக்கு சந்தேகமாக இருக்கிறது.”
”கொசுவைக் கொல்ல மாட்டேன், ஆனால் ஒரு மனிதனைக் கொல்வேன்.”
”நான் இதை நம்ப மாட்டேன்.”
”நான் என்ன செய்தால் நம்புவாய்?”
”நீ அதை எப்படி செய்வாய் என எனக்கு புரியவில்லை.”
அப்போது கையை உயர்த்தி ஓங்கி அவனை அறைந்துவிட்டு “ நான் உன்னை அறைந்துவிட்டேன் என்பதை நீ நம்பித்தான் ஆகவேண்டும். அதேபோல எளிதானதுதான் உன் கழுத்தில் கத்தியை செருகுவதும், அதற்கும் இதே அசைவு போதுமானது. பட்டினிகிடக்கும் உன் நாட்டு மக்களிடம் சுரண்டி விபச்சாரிகளுக்கு கொட்டிக்கொடுக்கும் நீ என்னால் கொல்லப்படுவதற்கு தகுதியானவன் என்பதை இப்போதேனும் நம்புவாய் என எண்ணுகிறேன்” என்கிறார் பிர்தவுஸ்.
மத அடிப்படைவாதிகள் வாழும் நாடு பெண்களுக்கு ஒரு கொடும் சிறையாகவே இருக்கும் என்பதை பிர்தவுஸ் வாழ்க்கை மட்டுமல்ல நாவலில் வரும் எல்லா பெண் பாத்திரங்களும் உணர்த்துகின்றன. கணக்கிலடங்காத பெண்கள் இப்போதும் பகுதியளவுக்கான பிர்தவுஸின் வாழ்வை வாழ்கிறார்கள். அடிப்படைவாதிகள் எழுச்சிபெறும் எல்லா இடங்களிலும் பிர்தவுஸ்கள் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கிறார்கள். கொடுந்துயரமாக அவர்களுக்கு ஒரு விபச்சாரிக்கு கிடைக்கும் சுதந்திரம்கூட கிட்டுவதில்லை, குறைந்தபட்சம் அவர்களின் கதையை கேட்க சாதவியைப் போன்ற ஆட்களும் கிடைப்பதில்லை.
அவர் படித்திருந்தால் எல்லாம் சரியாகியிருக்கும் என உச்சுகொட்டும் கலாம் டைப் அறிவுரையாளர்களுக்கு ஒரு தகவல்.. பிர்தவுஸ் பள்ளி இறுதி வரை படித்தவர். தேசிய அளவில் ஏழாவது ரேங்க் எடுத்து தேறியவர். அவர் தப்பி ஓடிய தருணங்களில் எல்லாம் தமது பள்ளி சான்றிதழை மறக்காமல் எடுத்துக்கொண்டு போயிருக்கிறார். ஒரு உயர் மதிப்பு கொண்ட விபச்சாரியான பிறகு தன் வீட்டில் நூலகத்தை அமைத்திருக்கிறார். தமது தனிமையை அனேகமாக அங்கேயே செலவிட்டிருக்கிறார்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று,
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி:99623 90277
எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு புத்தகத் திருவிழாவை நடத்துகிறார்கள். அதில் வந்து, அது நொட்டை இது நொள்ளை என குத்தம் சொல்லிக்கொண்டிருப்பது சரியா… பாஸிட்டிவான எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது ஏன் இந்த அளவுக்கு போட்டு அடிக்கிறீர்கள் என்று சிலபேர் வருத்தப்பட்டார்கள்.
ஆமாம் சரிதான், புத்தகத்திருவிழா நிறைய மாறியிருக்கிறதுதான். நிறைய நல்ல விஷயங்களும் நடக்கிறதுதான். சிற்றரங்கு வைத்து இலக்கியத்துக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள். ஆவணப்படங்கள் திரையிடுகிறார்கள். ஓரளவு சுமாரான கேன்டீன் வசதிகள், கழிப்பறை வசதிகள் செய்திருக்கிறார்கள்… ஆனால், பத்தாண்டுகளுக்கு முன்பு இப்படியெல்லாம் இல்லை புத்தகத் திருவிழா. சர்வாதிகாரர்களின் வதைமுகாம்களை போல மகா மோசமாக இருக்கும். சரியான காற்றோட்டமிருக்காது, உள்ளே நுழைந்து வெளியே வந்தால் கருகிப்போன சிக்கன் டிக்கா மாதிரி ஆகிவிடுவோம். தண்ணீர் இருக்காது. நாற்றமடிக்கும் மோசமான கழிப்பறைகள் வைத்திருப்பார்கள். குறுகலான பாதைகள் வைத்திருப்பார்கள், உள்ளே நுழைந்தாலே அடுத்தநாள் காய்ச்சலில் படுத்துவிடவேண்டியதுதான்.
இந்த சிக்கல்களை எல்லாம் ஆண்டுதோறும் யாராவது திட்டித்திட்டிதான் இப்போது இந்த அளவுக்கு நிலைமை சரியாகி இருக்கிறது. இல்லையென்றால் பபாஸியார்கள் இன்னும் இன்னும் நிலைமையை மோசாமாக்கிக்கொண்டே போவார்கள். இந்தமுறை பார்க்கிங்கில் அடித்து விரட்டுகிறார்கள் என எஸ்ரா தொடங்கி பத்துபேர் சொன்னால்தான் அடுத்தமுறை பார்க்கிங் கான்ட்ராக்டரிடம் கொஞ்சம் பார்த்து நடங்கப்பா என அறிவுறுத்துவார்கள். உலகின் அத்தனை மெத்தனங்களை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்த ஓர் மாபெரும் அமைப்பு இந்த பபாஸி!
இந்த முறை கவனித்திருப்பீர்கள், ஒவ்வொரு சந்திலும் தண்ணீர் கேன் வைத்திருக்கிறார்கள். உள்ளேயே காபி கிடைக்க ஏற்பாடு நடந்திருக்கிறது. எல்லா கடைகளிலும் டெபிட்கார்ட் பில்லிங் இருக்கிறது. இதெல்லாம் சமீபத்திய மாற்றங்கள். ஆனாலும் அதிலும் சில பிரச்னைகள் இருக்கவே செய்தன. தண்ணீர் குண்டா வைத்தவர்கள் டம்ளர் வைக்க வேண்டுமில்லையா… அது எங்குமே இல்லை. இதுதான் அந்த பபாஸி மெத்தனம். இதெல்லாமா கவனிக்க முடியும் என்று கேட்டால்… இதையெல்லாம்தான் கவனிக்க வேண்டும். வாசகனின் காசு மட்டும் வேண்டும்… அவனுடைய கஷ்டங்களை கவனிக்க வேண்டாமா?
சிற்றரங்கு என ஒன்றை வைத்திருக்கிறார்கள். இங்குதான் தமிழின் முக்கியமான அத்தனை நிஜ எழுத்தாளர்களும் பேசுகிறார்கள். பெரிய அரங்கு என்பது சோக்கு சுந்தரன்களின் கோட்டை. அங்கே எப்போதாவதுதான் எழுத்தாளர்கள் மேடையேறுவார்கள். மற்றபடி அது இலக்கியத்துக்கு தொடர்பற்ற ஏரியா… இப்படிப்பட்ட சிற்றரங்கை ஏன் கழிப்பறையை போல யாருக்குமே தெரியாத ஒரு மர்மமான இடத்தில் வைத்திருக்கிறார்கள். அதை எல்லோருக்கும் தெரிகிற இடத்தில் வைத்தால் என்ன ஆகிவிடப்போகிறது? இதை யாராவது கேட்க வேண்டும். இப்படி ஒரு சிற்றரங்கு கடந்த காலங்களில் கிடையாது. மனுஷ்யபுத்திரன் மாதிரி நிறையபேர் போராடிதான் அப்படி ஒன்றையே கொண்டுவந்தார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.
மொத்தம் எட்டு நீண்ட வரிசைகள் கொண்ட பெரிய பாதைகள் கொண்டது புத்தகத் திருவிழா அரங்கு. ஒவ்வொரு வரிசையும் அரைகிலோமீட்டருக்கு குறையாமல் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக ஒரு சுற்றுக்கு நான்கு அல்லது ஐந்து கிலோமீட்டர்கள் நடக்கவேண்டும். அதுவும் மிதமான வேகத்தில்… வேக நடையைவிட மிதமான வேகத்தில் நடப்பதால் அதிக கால்வலி உண்டாகும். என்னதான் சுவாரஸ்யான நூல்களை பார்த்துக்கொண்டே நடந்தாலும்… வலி நிச்சயமாக இருக்கும். நல்ல உடல்வாகுள்ளவர்களுக்கு சிக்கலில்லை. பொதுவாக வாசிப்பாளர்கள் அத்தனை பலசாலிகளாக இருப்பதில்லை. எனவே அவர்கள் ஆங்காங்கே அமர்ந்து ரெஸ்ட் எடுக்க உட்கார ஏற்பாடுகள் செய்யலாம். பல ஆண்டுகளாக அப்படி ஒரு ஏற்பாடே அரங்கில் கிடையாது. எங்காவது ஸ்டாலில் காலி சேர்களில் உட்கார்ந்து பாருங்கள்… கடைக்காரர்கள் எல்லாம் பதறிப்போய் திருடர்களை போல டீல் பண்ணுவார்கள்.
ஒரு நூலை வாங்குபவர் அந்த நூலை பத்து பக்கங்களாவது படித்துவிட்டு வாங்குவதுதான் சரியாக இருக்கும். இது காய்கறியோ மொபைல் போனோ அல்ல… 200 ரூபாய் கொடுத்து வாங்குகிற நூலின் நான்கு பக்கங்களையாவது படிக்கிற அவகாசம் வேண்டும். அதற்கான வசதிகள் நம் கடைகளில் இருக்கிறதா? கிடையாது. அப்படியே நின்றுகொண்டே பார்த்து நின்றுகொண்டே நகரவேண்டியதுதான். சாப்ட்வேர் விற்கிறவன் சேர் போட்டு வைத்திருக்கிறான்… உங்களுக்கு என்ன?
அடுத்து நிறைய நூல்கள் வாங்குகிறவர்கள்… பல பத்து கிலோ எடையுள்ள நூல்களையும் கைகளில் சுமந்தபடியேதான் நடக்கவேண்டும். சாதாரண சிறிய சூப்பர் மார்க்கெட்டில் கூட சுமை வண்டிகள் தருகிறார்கள். இவ்வளவு செலவழித்து நூல்கள் வாங்குகிறவர்களுக்கு அப்படி ஒரு ஏற்பாடு வேண்டாமா… உள்ளேயே வயதானவர்கள், நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகள் சுற்றிப்பார்க்க வீல்சேர் வசதிகளும் கிடையாது. அப்படி வருகிறவர்களுக்கு உதவுகிற வாலண்டியர்களும் இல்லை.
இதையெல்லாம் இப்போதுதான் கேட்கிறோம். அடுத்த பத்தாண்டுகளில் மாற்றம் வரலாம். என்ன, அதுவரை வாசகர்கள் மிச்சம் மீதியாவது இருக்கவேண்டும் !
அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தடாலடியாக ஒரே நாளில் விவாதம் – வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டுள்ள, 10 சதவிகித இட ஒதுக்கீடு (பொருளாதார அடிப்படையைக் கணக்கில் கொண்டு) முன்னேறிய வகுப்பு ஏழைகளுக்கு வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற இந்திய அரசியல் சட்டத்தின் 103-வது திருத்தத்தை ஏன், எதற்காக எதிர்க்கிறோம் என்பதை – இட ஒதுக்கீடு ஏன், எதற்காக, எப்படி – எப்போது ஏற்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள வாய்ப்பில்லாத இளைய தலைமுறையும், மேலெழுந்தவாரியாக ஏழைகளுக்கும் இட ஒதுக்கீட்டை இவர்கள் எதிர்ப்பது என்ன நியாயம் என்று குழம்பியுள்ளவர்களுக்கும் தெளிவுபடுத்துவது மிக அவசியமாகும்.
இந்த ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு நமது நாட்டில் (இந்தியாவில்) ஏன் தேவைப்படுகிறது?
உலகில் எங்குமில்லாத ஜாதி – வர்ண தர்மமுறை, தீண்டாமை என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பு.
மனுதர்மத்தில் முதலாம் அத்தியாயம் 87 ஆவது சுலோகத்தில் அந்தப் பிரம்மாவானவர் “தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளின்றுமுண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்.”
இதன்படி, பிராமணர்களுக்கே கல்வி ஏகபோகம். அதுமட்டுமா? அதனை மீறி கல்வி அக்காலத்தில் வேதம் கற்க மற்றவர்கள் முயன்றால், நாக்கை அறுக்க வேண்டும்; காதால் ஓதுவதைக் கேட்டால். காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்கிறது மனுதர்மம் (டாக்டர் அம்பேத்கர்).
இதனால், கீழ்ஜாதிக்காரர்கள் காலங்காலமாய், கல்வியறிவு பெற முடியாதவர்களாகவும், அதன் விளைவாக அரசு வேலை வாய்ப்புகளை நினைத்துப் பார்க்க முடியாத ‘மன ஊனம்” உற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள்! சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் நடேசன், டாக்டர் டி.எம்.நாயர் ஆகிய திராவிடர் இயக்க முன்னோடிகள் – பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கையில் இதனைச் சுட்டிக்காட்டி, (வகுப்புவாரி உரிமை) சமூகநீதி வேண்டும் என்று கேட்கப்பட்டது.
தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்தபோது 1920 முதல் 1925 வரை ஒவ்வொரு மாகாண மாநாட்டிலும் முயன்று வெற்றி பெறாத நிலையில், சமூகநீதிக்காகவே – இட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்காகவே காங்கிரசை விட்டு 1925 இல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டிலிருந்து வெளியேறினார்.
இவர்களுக்காகத்தான் 1920 இல் பதவியேற்ற நீதிக்கட்சி – திராவிடர் இயக்கம் – அதன் ஆட்சியின்போது வெள்ளைக்காரர்களிடம் ஆட்சியின் அதிகாரம் இருந்த “இரட்டை ஆட்சி முறையிலும் முயற்சித்து. 1921, 1922 என்று இரண்டு வகுப்புவாரி ஆணைகளைப் பிறப்பித்தனர். அது சரியாக செயல்படாததால், தந்தை பெரியார் போன்ற தலைவர்களின் ஊக்கத்தினால், நீதிக்கட்சித் துணையுடன் ஆட்சி அமைத்த டாக்டர் சுப்பராயன் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் இடம்பெற்ற எஸ்.முத்தய்யா (முதலியார்) ஒரு புது வகுப்புவாரி உரிமை ஆணை (ஜி.ஓ) அனைவருக்கும் இட ஒதுக்கீடு தரும் வகையில் பார்ப்பனர்கள் உள்பட ஜனத்தொகையில் 3 சதவிகிதம் உள்ள பார்ப்பனர்களுக்கு 17 சதவிகிதம் இட ஒதுக்கீடு 1928 முதல் அமலில் வந்தது; அதனால், வகுப்புவாரி உரிமையில், பார்ப்பனரல்லாதாரில் ஆதிதிராவிடர், இசுலாமியர், கிறித்துவர் என்று பலருக்கும் இட ஒதுக்கீடு தரப்பட்டு – இட ஒதுக்கீடு ஒரு சமுகநீதியைத் தந்தது!100சதவிகிதஏகபோகம் அனுபவித்தவர்களுக்கு 17 சதவிகிதத்தை ஏற்க மனமில்லை !!
“1950 இல் அமலான இந்திய கூறப்பட்டிருக்கும் இது சமத்துவத்திற்கு விரோதம்” என்று அடிப்படை அரசியல் சட்டத்தில் உரிமை கோரி, செண்பகம் துரைராசன் என்ற பார்ப்பன) அம்மையார்”‘ போட்ட வழக்கு. கம்யூனல் ஜி.ஓ. வகுப்புவாரி உரிமை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்புக் கூறியதனால், 1928 முதல் 1950 வரை அமலில் இருந்த வகுப்புவாரி உரிமை ஆணை செல்லாததானது.
இதற்காக அரசியல் சட்டத்தைத் திருத்த தந்தை பெரியார் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் திரட்டி, ஒரு மாபெரும் போராட்டம் நடத்தினார். அப்போதைய பிரதமராக இருந்த நேரு அவர்கள், சட்ட அமைச்சர் அம்பேத்கருடன் கலந்து, முதல்முறையாக அரசியல் சட்டத்தைத் திருத்தினார்.
அப்போது கல்வி உத்தியோகங்களில் பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காண ‘சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்” ‘Socially and educationally’ என்ற சொற்றொடரையே பயன்படுத்தினர். அந்த அடையாளம் ஏற்கெனவே பிற்படுத்தப்பட்டோர் நலம் பற்றி இந்திய அரசியல் சட்டத்தின் 340 ஆவது பிரிவில் உள்ள சொற்றொடர்களே).
அப்போது நாடாளுமன்றத்தில் இருந்த சிலரும், ‘பொருளாதார ரீதியாக’ (Economically) என்பதையும் இணைக்கவேண்டுமென்று விவாதம் எழுந்தது. பிரதமர் நேரு சொன்னார்.
கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்.
“ஜாதியால் சமூகத்தில் ஒதுக்கப்பட்டு, கல்வி மறுக்கப்பட்டது பாரம்பரியமானது. தெளிவானது. பொருளாதார அளவுகோல் ஆண்டுக்காண்டு மாறக்கூடியது. இன்றைய பணக்காரன் நாளைய ஏழையாகவும், இன்றைய ஏழை மறுநாள் பணக்காரனாகவும் ஆகலாம். ஆனால், கீழ்ஜாதிக்காரன் ஒருபோதும் மேல்ஜாதிக்காரன் ஆக முடியாது: சுடுகாடுகூட தனித்தனிதான்! பிறவி அடிப்படை என்பது மாறாத, மாற்ற முடியாத சமூக அடிப்படை எனவே, நமது அரசியல் சட்ட கர்த்தாக்கள் அந்த இரு சொற்களைப் போட்டார்கள்” என்ற கருத்தை உள்ளடக்கிய விளக்கம் தந்ததை ஏற்றார்கள்!
எனவே, இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: பல ஆண்டுகளாக கல்வி, உத்தியோக வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூக ஊனம்’ (Socially handicapped) ஏற்பட்டவர்களுக்கு ஏற்படும் அநீதியைக் களையவே!
வறுமை ஒழிப்புத் திட்டங்களை அரசு வகுப்பதையும், அனைவருக்கும் அனைத்தும் தருவதையும் நாம் எதிர்ப்பதில்லை, ஆனால், “இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல” என்பதை உச்சநீதிமன்றமே பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது.(நூலிலிருந்து பக்.11-14)
இந்திரா – சகானி வழக்கு என்ற 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய மண்டல் கமிசன் இடஒதுக்கீடு பற்றிய வழக்கு தீர்ப்பில் 13(1), 14, 15, 15(4) ஆகிய அரசமைப்புச் சட்டப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டி (16.11.1992 மிகவும் தெளிவாகவே பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு ஆணை அறவே செல்லாது என்று திட்டவட்டமாகவே தீர்ப்பளித்துவிட்டது.
15(4) என்று முதலாவது அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொணர்ந்தபோது பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் பி.ஆர்.அம்பேத்கர் எல்லாம் பல உறுப்பினர்களுடன் விவாதித்தபோதும், அதற்கு முன்பே அரசியல் சட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் பற்றிய விரிவான 340 அய் எழுதும்போதே – எந்தெந்த வரையறைச் சொற்கள் விவாதிக்கப்பட்டு பின் போடப்பட்டதோ அதே சொற்களைத்தான் “Socially and Educationally” என்று போடப்பட்டதை அப்படியே 15(4) என்ற புதுப்பிரிவை பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கான சட்டத் திருத்தத்திலும் கையாளப்பட்டது
அப்போது சில உறுப்பினர்கள் ‘Economically’ என்றும் இணைத்து. அந்த அளவுகோலையும் இணைக்கவேண்டும் என்று வாதாடியபோது, பிரதமர் நேரு பொருளாதார அளவுகோல் என்பது அவ்வப்போது ஆண்டுக்கு ஆண்டு மாறக்கூடியது. அது திட்டவட்டமான அளவுகோல் அல்ல. அது குழப்பத்திற்கு ஆளாகும் என்று அரசியல் நிர்ணய சபை, முதலாவது அரசியல் திருத்தத்தின்போது நடைபெற்ற விவாதங்களில் தெளிவாக்கப்பட்ட பிறகுதான், பொருளாதார அளவுகோல் கைவிடப்பட்டது. நாடாளுமன்றத்தில் பொருளாதார அளவுகோலுக்கு ஆதரவாக 5 வாக்குகளும், எதிராக 243 வாக்குகளும் பதிவாயின), 340 பிரிவிலிருந்த “Socially and Educationally” ‘சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்’ என்ற சொற்றொடர்களே போடப்பட்டது என்பது வரலாறு.
மேலும், நரசிம்மராவ் பிரதமரானபோது தனியே 10 விழுக்காடு பொருளாதார அடிப்படையில் ஒதுக்கியதும், அதனால்தான் 9 நீதிபதிகள் அமர்வால் செல்லாதது என்று தீர்ப்பளிக்கப்பட்டது!
ஜஸ்டிஸ் ஓ.சின்னப்ப ரெட்டி என்ற உச்சநீதிமன்ற நீதிபதி மிக அழகான விளக்கத்தை ஒரு வழக்கில் கூறினார். ‘Reservation is not a poverty alleviation scheme’ இட ஒதுக்கீடு என்பது சமூகத்தில் இதுவரை காலங்காலமாக கல்வி, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தைக் கைதூக்கி விடுவது: கடந்த கால அநீதிக்குப் பரிகாரம் தேடுவதற்கான வழிவகையே தவிர, வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: அதற்குப் பல வழிகள் தனியே காணவேண்டுமே தவிர, இதனை அதற்குப் பயன்படுத்துவது அரசியல் சட்ட விரோதம் என்றும் தெளிவுபடுத்தினார்.
இந்திரா – சகானி வழக்கு மட்டுமல்ல, ஏற்கெனவே குஜராத் மாநிலத்தில் இதே போன்று உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு தருவதில் அவசரச் சட்டம் (Ordinance) (1.5.2016) கொண்டு வரப்பட்டதை எதிர்த்து “தயாராம் வர்மா vs குஜராத் மாநில அரசு” என்ற வழக்கின் 104 ஆவது பக்கத் தீர்ப்பில் அதனை செல்லுபடியற்றது (Quashed) (4.8.2016) என்று அடிபட்டு விட்டது. (நூலிலிருந்து பக்.5-7)
நூல்: உயர் ஜாதியினருக்கு பொருளாதார ரீதியான 10% இடஒதுக்கீடு கூடாது – ஏன்? ஆசிரியர்: கி.வீரமணி
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி:99623 90277
“சமத்துவமில்லாமல் செல்வம் சேருவது நாட்டின் சமூக கட்டமைப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்” என்கிறது திங்கள்கிழமை வெளியான ஆக்ஸ்ஃபாம் சமத்துவமின்மைக்கான 2019 அறிக்கை. “செல்வம் சேர்ப்பதில் அதிக அளவிலான வேறுபாடு ஜனநாயகத்தையே சீர்குலைக்கக்கூடியது” என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
உலகம் முழுமைக்குமே அதிக செல்வம் உள்ளவர்களிடம் அதிகப்படியான செல்வம் சேர்வதும், பரம ஏழைகளும் மேலும் ஏழ்மையான நிலைக்கு தள்ளப்படுவது பொதுவான ‘டிரெண்டாக’ உள்ளது என்கிறது ஆக்ஸ்ஃபாம் அறிக்கை. கடந்த ஆண்டு மட்டும் உலக அளவில் 3.8 பில்லியன் மக்கள், அதாவது வறுமையின் பிடியில் இருந்த மக்கள் தொகையில் பாதிபேர் 11% கீழ் நிலைக்குச் சென்றனர். அதே சமயம், 2017-2018 காலக்கட்டத்தில் இரண்டு நாட்களில் ஒரு புதிய பில்லினியர் உருவாகிக்கொண்டிருந்தார். 2018-ம் ஆண்டு 26 செல்வந்தர்கள் உலகின் சரிபாதி 308 பில்லியன் ஏழைகளின் ஒட்டுமொத்த செல்வத்துக்கு ஈடான செல்வ வளத்தை பெற்றுள்ளனர்.
இந்தியாவில், 1% உள்ள செல்வந்தர்களின் செல்வ வளம் 39% அதிகரித்துள்ளது. ஆனால், மக்கள் தொகையில் சரிபாதியானவர், 50% பேர் 3% வளர்ச்சியை மட்டுமே அடைந்திருக்கின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 18 புதிய பில்லியனர்கள் இந்தியாவில் உருவாகியிருக்கிறார். ஒட்டுமொத்தமாக உள்ள 119 பில்லியனர்கள் மட்டும், இந்தியாவின் 2018-19 பட்ஜெட் தொகையான ரூ. 24,42,200 கோடிக்கும் அதிகமான செல்வத்தை கையகப்படுத்தி வைத்துள்ளனர்.
இந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, நாட்டின் மொத்த வருமானம், மத்திய, மாநில அரசுகள் பொது சுகாதாரம், துப்புரவு மற்றும் குடிநீர் விநியோகம் போன்றவற்றுக்கு செய்யும் மூலதன செலவைவிட அதிகம் என்கிறது இந்த அறிக்கை.
சமத்துவமின்மைபாலினஒடுக்குமுறையானதும்கூட!
இந்த அறிக்கையில் பெண்களின் பணி குறித்து சிறப்பு கவனத்தை செலுத்தியிருக்கிறது. பெண்கள் எப்படி ஏழ்மையிலும் ஏழ்மையாக இருந்துகொண்டிருக்கிறார்கள் என அறிக்கை விவாதிக்கிறது. சமத்துவமின்மை பாலின ஒடுக்குமுறையானதுகூட என அந்தப் பகுதிக்கு தலைப்பிடப்பட்டிருக்கிறது. உலக அளவில் 23% குறைவான பணம் ஈட்டும் பெண்களைக் காட்டிலும் மொத்த செல்வ வளத்தில் 50% அதிகமானதை ஆண்கள் பெற்றிருக்கிறார்கள் என்கிற ஐ.நா.வின் பெண்கள் அறிக்கையை சுட்டிக்காட்டுகிறது ஆக்ஸ்ஃபாம்.
இந்தியாவைப் பொருத்தவரை, ஒரே விதமான பணிக்கு பெண்கள் இப்போதும் ஆண்களைவிட 34% குறைவான சம்பளத்தையே பெறுகிறார்கள் என்றும் இந்த அறிக்கை கோடிட்டு காட்டுகிறது. பெண்களின் ஏற்றுக்கொள்ளப்படாத, சம்பளம் தரப்படாத பராமரிப்பு பணிகளை உலக அளவில் கணக்கிட்டால் , ஆப்பிள் நிறுவனத்தின் 10 ட்ரில்லியன் டாலர் ஆண்டு வருமானத்தைவிட 43 மடங்கு அதிகமாக வருகிறது என அறிக்கை சொல்கிறது.
செல்வந்தர்களில்செல்வந்தர்களுக்கானவரிசலுகைகள்!
செல்வந்தர்கள் மற்றும் கார்ப்பரேட்களுக்கு வழங்கப்படும் வரி சலுகைகள் கடந்த பத்தாண்டுகளைவிட தற்போது மிகவும் குறைவாக உள்ளது என்பதை அறிக்கை சொல்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிலான வரி தவிர்ப்பும் வரி ஏய்ப்பும் செல்வந்தர்கள் மிகக் குறைந்த அளவிலான வரி செலுத்த காரணமாகிறது எனவும் ஆக்ஸ்ஃபாம் சுட்டிக்காட்டுகிறது.
“அவமதிப்பிற்குரிய புதிய தாராளவாத கொள்கையைக் கடந்து, அறத்தின் அடிப்படையில் இதை நியாயப்படுத்தவே முடியாது.” என கடினமான வார்த்தைகளிலும் செல்வந்தர்களின் வரி ஏய்ப்பு குறித்து கருத்து சொல்கிறது. செல்வந்தர்களில் செல்வந்தர்கள் 7.6 ட்ரில்லியன் டாலர்கள் அளவிலான பணத்தை வரி ஏய்ப்பை செய்வதாகவும் கார்ப்பரேட்டுகள் தங்களுடைய பணத்தை வரி ஏய்ப்பு செய்வதற்காக போலி நிறுவனங்களில் பெயர்களில் மறைத்து வைப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் சமத்துவமின்மை வர்க்க அடிப்படையிலானது மட்டுமல்ல, சாதி ரீதியிலானது, பாலின அடிப்படையிலானது என்கிறது ஆக்ஸ்ஃபோம். “ஒரு தலித் பெண்ணின் வாழ்நாள், உயர்சாதி பெண்ணின் வாழ்நாளைவிட 14.6 ஆண்டுகள் குறைவு” என சமத்துவமின்மை இந்தியாவின் மனித வளத்தையும் காவு வாங்குவதை அழுத்தமாகச் சொல்கிறது.
பொது சேவையை தனியார்மயமாக்குதலும் நிதி ஒதுக்கீட்டை குறைப்பதும் பாலின சமத்துவமின்மையை ஏற்படுத்தி பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டுகின்றன. ஊதியமில்லா பராமரிப்புப் பணிகள், பெண்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட குழுக்களுக்கான நிதிஒதுக்கீட்டில் சமத்துவமின்மையும் ஊழலும் இந்தியாவின் செல்வ வளத்தில் சமத்துமின்மை அதிகரிக்கக் காரணம் என்கிறது அறிக்கை.
ஊதியமில்லா பணிகளுக்கு ஒரு நாளில் ஆண்கள் வெறும் 30 நிமிடங்களே செலவழிக்கிறார்கள் என்றும் பெண்கள் 3 மணி நேரம் செலவழிக்கிறார்கள் என்றும் இதுவே பெண்கள் பணியில் சேர்ந்து மதிப்பான சம்பளம் வாங்குவதற்கு தடையாக இருப்பதாகவும் முக்கியமான காரணத்தை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. “ஊதியமில்லா சேவை, பொருளாதாரத்தின் பெரும்பகுதியாக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மானியம். இது துல்லியமான பொருளாதார ஆய்வில் கண்டுகொள்ளப்படுவதில்லை.” என்கிறது ஆக்ஸ்ஃபாம்.
பொய்பிம்பங்களின்மறுபுறம்!
இந்தியாவின் கிராமப்புற மருத்துவ சேவை மிக மோசமான நிலையில் இருப்பதை அறிக்கை சொல்கிறது. ஆயிரம் பேருக்கு 0.7 மருத்துவர்களே உள்ளனர். இங்கிலாந்தில் ஆயிரம் பேருக்கு 2.8 மருத்துவர்கள் மருத்துவம் பார்க்கின்றனர். முக்கியமாக இந்தியாவின் மருத்துவ இன்ஷூரன்ஸ் திட்டங்கள் தோல்வியடைந்தவை. மோடியின் ஆயுஷ்மான் பாரத் திட்டமும் இதில் அடங்கும். அதோடு இந்த அறிக்கை மிக மோசமான மருத்துவ மோசடியையும் அம்பலப்படுத்துகிறது. ‘உலகத்தரத்திலான மருத்துவம் குறைந்த விலையில்’ என அரசு விளம்பரப்படுத்தப்படும் மருத்துவ சுற்றுலாவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. அதேவேளையில் தன் சொந்த மக்களின் நலனில் அக்கறை செலுத்துவதில் மொத்தமுள்ள 195 நாடுகளில் 145-வது இடத்தில் இருக்கிறது இந்தியா!
அதுபோல, தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையே கெடுபிடியாக உள்ள நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, குறிப்பாக மாணவிகள் சேர்க்கை குறைந்து கொண்டே வருவதாகவும் ஆய்வறிக்கை சுட்டுகிறது. அரசின் கண்டுகொள்ளாத்தனமே இதற்கு காரணம் எனவும் அதில் சொல்லப்பட்டுள்ளது.
அரசுக்கானபரிந்துரைகள்
பல்வேறு பிரிவுகளில் நிலவும் சமத்துவமின்மையை சுட்டிக் காட்டியிருக்கிற ஆக்ஸ்ஃபாம் அறிக்கை, சில பரிந்துரைகளையும் செய்துள்ளது. இந்தியாவில் உள்ள 1% செல்வந்தர்களிடம் 0.5 % வரி பிடித்தம் செய்தால், அரசு பொது சுகாதாரத்துக்காக செலவிடும் தொகையில் 50% எளிதாக அதிகரிக்க முடியும்.
பொதுசுகாதாரத்தின் தரத்தை அதிகப்படுத்துதல், கல்வி உரிமையை கட்டாயமாக்குதல், கல்வி மற்றும் சுகாதாரத்தில் வணிகமயமாக்கலை கைவிடுதல், பாலின அடிப்படையிலான நிதி ஒதுக்கீடு போன்றவற்றை பலப்படுத்தவும் பரிந்துரைக்கிறது ஆக்ஸ்ஃபாம்.
“சாதி, வர்க்கம், பாலின அடிப்படையிலான பொருளாதார சமத்துவமின்மையை சீர்செய்ய போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கை தேவை. அரசு மிகப் பெரும் செல்வந்தர்களிடமும் கார்ப்பரேட்டுகளிடமும் வரி பிடித்தம் செய்து உண்மையான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அந்த வரிப்பணத்தில் பொது சுகாதாரத்தையும் கல்வியை பலப்படுத்த வேண்டும். ஒரு சிலருக்காக மட்டுமல்ல, அரசு அனைவருக்கும் சிறப்பான எதிர்க்காலத்தை கட்டமைத்து தரவேண்டும் ” என்கிறார் ஆக்ஸ்ஃபாம் இந்தியாவின் செயல் அதிகாரி அமிதாப் பெஹர்.
அறிக்கை என்னவோ, சமூகத்தின் உண்மை நிலையை பிரதிபலிப்பதாகவே உள்ளது. ஆனால், சமத்துவமின்மையை சரிபடுத்த வேண்டிய அரசு, மேலும் மேலும் சமத்துவமின்மையை ஆழப்படுத்தவே பார்க்கிறது. நான்கரை ஆண்டுகால மோடி அரசு கார்ப்பரேட்டுகள், அம்பானி, அதானிகளுக்காகத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை அரசியல் அறிவில்லாதவரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். இந்துத்துவ மனுவின் வாரிசுகள் பெண்களை படிதாண்டக்கூடாது என்பதையே வெவ்வேறு விதங்களில் வலியுறுத்தி வருகிறார்கள். இவர்களால் எப்படி உழைப்புச் சுரண்டலிலிருந்து பெண்களை மீட்க முடியும்? ஜனநாயகத்தின் படியேதான் இந்த பாசிச ஆட்சியாளர்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள் எனும்போது, இந்த ஜனநாயக அமைப்பு சமத்துவமின்மைக்கு முடிவு கட்டுமா?
பொங்கலும் விவசாயமும் – தலைப்பில் வினவு வாசகர்கள் எடுத்து அனுப்பிய புகைப்படங்களின் தொகுப்பு !
இலங்கையில் 99% சிங்களவர்கள் பணிபுரியும் அரசு அலுவலகம் ஒன்றில் பொங்கல் விழா
இடம்: Matale district, Ukuwela DS office, இலங்கை. படம்: தர்ஷினி பாக்கியம்
♣ ♣ ♣
கிராமியப் பொங்கல்
இடம் : கருப்பம்பட்டி.எம், முசிறி வட்டம், திருச்சி மாவட்டம்
படம்: சண்முகம்
♣ ♣ ♣
நாங்கள்வாழ … விவசாயியைவாழவிடு …
இடம்: ஈரோடு. படம்: தமிழ் மாஞ்சோலை
♣ ♣ ♣
“ஒஓ… இதுதான் தமிழர் திருநாளோ!!! 1000 ரூபாய் கொடுத்து பல ஆயிரம் பேரை கெடுத்து ஆயிரம் கோடி இலக்கை நிறைவேற்றும் எடப்பாடி அரசு.பல கடைகள் பூட்டிருந்தது … இந்தக் கடை மட்டும் திறந்திருந்தது. கூட்டமாகவும் நிறைந்திருந்தது. பொங்கல் தினத்தன்று நான் பொங்கியது இதை பார்த்துதான்.
இடம்: திருச்சி. படம்: பிருத்திவ் மாவோ
♣ ♣ ♣
ஸ்டெர்லைட் எதிர்ப்பு கருப்புப் பொங்கல்
இடம்: தூத்துக்குடி. படம்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு
♣ ♣ ♣
ஸ்டெர்லைட் எதிர்ப்பு கருப்புப் பொங்கல்
இடம்: தூத்துக்குடி. படம்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு
♣ ♣ ♣
கருப்பு எங்கள் நிறமடா: மதுரை மணியம்மை மழலையர் பள்ளியில் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற கண்காட்சியிலிருந்து ஒரு காட்சி.
இடம்: மதுரை. படம்: இரணியன்
♣ ♣ ♣
கருப்பு எங்கள் நிறமடா: மதுரை மணியம்மை மழலையர் பள்ளியில் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற கண்காட்சியிலிருந்து ஒரு காட்சி.
இடம்: மதுரை. படம்: இரணியன்
புது அரிசியும் புதுக் கரும்பும் படைத்து புத்தாடை தரித்துக் கொண்டாடும் உங்களுக்கு ஆண்டுக்கொரு முறை பொங்கல். புதிதாய் மலர்ந்து, பனித்துளி ஆடை தரித்துக் கொண்டாடும் எனக்கு அன்றாடம் பொங்கல்தான்.
இடம்: ஊட்டி. படம்: நவீன்
தொகுப்பு:
வாசகர் புகைப்படம் பகுதிக்கு புகைப்படம் அனுப்பும் வாசகர்கள், vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள். கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்!
மூன்று மாநில மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக ஏன் வாக்களித்தார்கள் ?
இராஜஸ்தான் மக்கட்தொகையில் 75% கிராமப்புறம் சார்ந்தது. கிராமப்புற மக்கட் தொகையில் 53% பேரிடம் நிலம் இருக்கிறது. இவர்களில் 90% பேரின் விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை கிடைக்கவில்லை. மொத்த கோதுமை விளைச்சலில் வெறும் 4% மட்டுமே பா.ஜ.க. அரசு கொள்முதல் செய்திருக்கிறது. ம.பி.யில் மண்டி வியாபாரிகளின் சுரண்டலிலிருந்து விவசாயிகளைப் பாதுகாத்து அவர்களுக்கு குறைந்தபட்ச விலையை உத்திரவாதம் செய்யப்போவதாக சொல்லிக் கொண்டு, சவுகான் அரசு கொண்டு வந்த திட்டம், மண்டி வியாபாரிகளின் இலாபத்தை அதிகரிப்பதற்கே பயன்பட்டிருக்கிறது. இம்மூன்று மாநிலங்களிலுமே விவசாய உற்பத்தி அதிகரித்திருக்கிறது. அதே விகிதத்தில் அவர்களது துயரமும் அதிகரித்திருக்கிறது.
ம.பி.-யைப் பொருத்தவரை, மக்கட்தொகையில் 70% பேர் விவசாயத்தை சார்ந்திருக்கின்றனர். இவர்களில் 46% விவசாயிகள் மீளாக் கடன் வலையில் சிக்கியிருக்கின்றனர். தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் புள்ளிவிவரங்களின் படி கடந்த 16 ஆண்டுகளில், அதாவது பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் மொத்தம் 21,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். சட்டிஸ்கர் மாநிலத்திலோ பா.ஜ.க. ஆட்சியின் கீழ் 13,000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
இது மட்டுமின்றி, முஸ்லீம் பால் வியாபாரிகளை காவு வாங்கிய பா.ஜ.க.வின் மாடு விற்பனைத் தடை, ஒரு விபரீதமான கோணத்தில் விவசாயிகளை காவு வாங்கத் தொடங்கியிருக்கிறது. கறவைக்கோ உழவுக்கோ பயன்படாத மாட்டை விற்க முடியாத காரணத்தால், அவற்றை விவசாயிகள் அவிழ்த்து விட்டு விடுகின்றனர். அவை விளைந்த பயிர்களை மேய்கின்றன. இந்த மாடுகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க மின்கம்பி வேலி அமைப்பதற்கு விவசாயிகள் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அல்லது நாள் முழுதும் வயலைக் காவல் காக்க வேண்டியிருக்கிறது. பசுக்குண்டர்கள் கொலைவெறியாட்டம் நடத்திய இராஜஸ்தானின் ஆல்வார் உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ.க.வின் தோல்வியை இந்த பின்புலத்தில் புரிந்து கொள்ளலாம்.
இவற்றை வைத்து பசுப்பாதுகாப்பு விசயத்தில் விவசாயிகளின் கண்ணோட்டம் மாறிவிட்டதாக சொல்ல முடியாது. மாட்டு மூத்திர வியாபாரம், கோசாலை போன்ற வாக்குறுதிகளில் பா.ஜ.க.வை காங்கிரசு விஞ்சுவதிலிருந்து விவசாயிகளின் இரட்டை மனோபாவம் குறித்து நாம் புரிந்து கொள்ளலாம்.
எனவே, இம்மாநிலங்களில் நடைபெற்ற தீவிரமான விவசாயிகள் போராட்டங்களை மட்டும் கணக்கில் கொண்டு பா.ஜ.க.வின் 2019 தோல்வி குறித்து கனவு காண்பது தவறு. ம.பி.யில் விவசாயிகள் போராட்டமும் துப்பாக்கிச் சூடும் நடைபெற்ற மாண்ட்சோர், நீமுச் உள்ளிட்ட ஆறு தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது. அதாவது தமது உடனடி வர்க்க நலன் பாதிக்கப்பட்ட போதிலும், தமது பா.ஜ.க. ஆதரவு நிலையிலிருந்து விவசாயிகள் விலகவில்லை என்பதற்கு இது ஒரு சான்று.
இன்னொரு புறம், ஆதிக்க சாதி உணர்வு பா.ஜ.க.வுக்கு எதிராகவும் செயல்பட்டிருக்கிறது. வன்கொடுமைத் தடுப்பு சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து மோடி அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தம், பா.ஜ.க.வின் ஓட்டு வங்கியான ஆதிக்க சாதியினரிடம் தோற்றுவித்த கோபம், இம்மாநிலங்களில் காங்கிரசுக்கு ஆதரவாகத் திரும்பியிருக்கிறது.
காங்கிசின் மிதவாத இந்துத்துவா : முள்ளை முள்ளால் எடுக்கும் தந்திரமா?
அதாவது மாண்ட்சோரில், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தொழிற்பட்டிருக்கும் ஆதிக்க சாதி உணர்வு, இன்னொரு கோணத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராகவும் செயல்பட்டிருக்கிறது. அதேபோல, இராஜஸ்தானில் பா.ஜ.க. அரசின் மீது பல்வேறு காரணங்களுக்காக ராஜ்புத் சாதியினர் கொண்டிருந்த கோபம் காங்கிரசுக்கு பயன்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில் மேற்படி சட்ட திருத்தம் காரணமாக தலித்துகள் பா.ஜ.க.வின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து விடவில்லை என்பதும், 2014-ஐக் காட்டிலும் 3 மாநிலங்களிலும் தலித் வாக்குகள் பா.ஜ.க.வுக்கு குறைந்திருக்கின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
வர்க்கம், சாதி, மதம், இனம், பிராந்தியம், விளைவிக்கும் பயிர் – என்று பல்வேறு விதமான காரணிகள் விவசாயிகளின் மீது வினையாற்றுகின்றன. அவர்களுடைய அரசியல் தெரிவு பா.ஜ.க. அல்ல என்பதை மட்டும் வைத்து நாம் நிறைவு கொள்ள முடியாது. அவர்களது அரசியல் முடிவினை மேற்சொன்னவற்றில் எந்தக் காரணி தீர்மானித்தது என்பதுதான் நம் அக்கறைக்கும் ஆய்வுக்கும் உரியது.
இம்மூன்று மாநிலங்களும் உ.பி., பீகாரைப் போல முஸ்லீம்கள் அதிகம் வாழும் மாநிலங்கள் அல்ல. இங்கே முஸ்லீம்களின் மக்கட்தொகை மிக குறைவு. இருந்த போதிலும் கடந்த 15 ஆண்டுகளில் பா.ஜ.க. இம்மாநிலங்களில் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது. சொல்லப்போனால், குஜராத்துக்கு முன்னதாக பா.ஜ.க.வின் அடித்தள மாநிலங்களாக இருந்தவை இவைதான். பாடத்திட்டங்களில் இந்துவெறி, பள்ளிகளில் கட்டாய சூரிய நமஸ்காரம் ஆகியவை அமல்படுத்தப்படும் மாநிலங்கள் இவை. ஆர்.எஸ்.எஸ்.இன் கிளைகளும் இம்மாநிலங்களில் மிக அதிகம் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.
ம.பி., இராஜஸ்தான் மாநிலங்களில் 2014-இல் பெற்ற வாக்குகளை கணிசமான அளவில் பா.ஜ.க. இழந்திருக்கிறது என்ற போதிலும், மொத்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே பாரிய வேறுபாடு இல்லை. இராஜஸ்தானில் காங்கிரசு பெற்ற வாக்குகள் 39.3%. பா.ஜ.க. – 38.8%. ம.பியில் காங் – 40.9%, பா.ஜ.க. – 41%
இந்து மதவெறி பா.ஜ.க.விற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் மகாகூட்டணியின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு.
வளர்ச்சி – மதவெறி ஆகியவற்றை தேவைக்கேற்பவும், மக்களின் மனநிலைக்கு ஏற்பவும் பார்ப்பன பாசிஸ்டுகள் மாற்றி மாற்றி பயன்படுத்துவதை 80-களில் தொடங்கி இன்று வரை நாம் பார்த்து வருகிறோம். இந்த நீண்ட நிகழ்ச்சிப் போக்கில் அதன் அரசியல் ரீதியான அடித்தளம் விரிவடைந்திருக்கிறதே அன்றி, குறையவில்லை. மதச்சார்பின்மை என்ற சொல்லைப் பயன்படுத்துவதே ஆபத்து என்ற நிலைக்கு காங்கிரசு தள்ளப்பட்டிருக்கிறது. அதாவது, பார்ப்பன பாசிச அரசியலும், கருத்தியலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட நிலையிலிருந்து, மெல்ல மெல்ல அவை அங்கீகரிக்கப்படும் நிலைக்கும், புதிய எதார்த்தம் என்ற நிலைக்கும் உயர்ந்திருக்கின்றன.
இந்த உண்மையைப் புறந்தள்ளிவிட்டு, விவசாயிகளின் கோபம், வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞர்களிடம் ஏற்படுத்தியிருக்கும் கோபம், பணமதிப்பழிப்பு – ஜி.எஸ்.டி. போன்ற தாக்குதல்கள் சிறு தொழில் முனைவோரிடம் ஏற்படுத்தியிருக்கும் கோபம் ஆகியவற்றை மட்டும் முதன்மைப்படுத்திப் பார்ப்பதும், இந்தக் கோபமே சங்க பரிவாரத்தை வீழ்த்திவிடும் என்று நினைப்பதும், பார்ப்பன பாசிச அபாயத்தை குறைத்து மதிப்பிடுவதும், முடிந்தது மோடி மாயை என்று குதூகலிப்பதும் அசட்டுத்தனம்.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
இந்த மரங்களை அப்புறப்படுத்த சில ஆயிரங்கள் செலவாகும்.
“மழை விட்டாலும் தூவானம் விடவில்லை” என்பதாக டெல்டா மாவட்டங்களில் கஜா புயலின் பாதிப்புகள் தொடர்கிறது. ஒரு தலைமுறை மக்கள் , பல தலைமுறை மக்கள் வாழ்வதற்கு உருவாக்கிய விவசாயத்தை ஆணி வேர்வரை அடியோடு சாய்த்து விட்டது கஜா புயல். இந்நிலையில் அரசு அறிவித்த அரைகுறை நிவாரணத்தை பெறுவதில் மக்களுக்கு ஆயிரத்தெட்டு சிக்கல்.
இது தொடர்பாக பலரிடம் பேசிய போது உண்மை நிலவரம் நமது கற்பனைக்கும் அப்பாற்பட்டது என்பது புரிந்தது. புயல் பாதித்த மாவட்ட பகுதிகளின் சேதத்தை கணக்கெடுக்கும் வேளாண்மைத்துறை அரசு அலுவலர் ஒருவரிடம் பேசினோம்.
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு அரசு நிவாரணம் சரியான முறையில் மக்களுக்கு வந்து சேரலன்னு மக்கள் போராட்டம் பண்றாங்களே, என்னதான் நடக்குது?
“புயல் பாதித்த மாவட்டங்களில் பட்டியலிட மனம் ஒப்பாத வகையில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உயிர் முதல் உடமை வரை பறிகொடுத்த மக்களுக்கு நாம் என்ன செய்து இழப்பை ஈடுகட்டிவிட முடியும். சமன்படுத்த முடியாத நிலையை பார்க்கும் போது போகும் இடமெல்லாம் ஒரு விவசாயியாக கண்கலங்கி நிற்கிறேன்.
பாதிப்பு பட்டியலில் விவசாயம் பெரும்பகுதி. அந்த விளைநிலத்தில் விஸ்வரூபமாக பாதித்தது என்றால் தென்னைதான் அதிகம். கடலோர விவசாய பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் மாற்று விவசாயமாக தென்னை உருவாயிற்று. ஆனால், பல வருடமாக தென்னை விவசாயம் செய்து வரும் நிலங்களை பயிர் விவசாய நிலமாகவே அரசு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
அது எப்படிங்க ஐயா, பல வருசமா செய்யும் விவசாயத்த பதிவு பண்ணாம இருக்க முடியும். அப்படின்னா பயிர் காப்பீடு திட்டத்துக்கு எந்த அடிப்படையில நஷ்டஈடு குடுப்பீங்க.?
ஒரு விவசாயப் பகுதியில் விவசாயம் செய்யப்பட்ட நிலத்தில் பொதுவான பாதிப்புகள் பெருவாரியாக ஏற்பட்டால் பாதித்த நிலத்தையும் அதன் அளவீட்டையும் வருவாய்த்துறையை சேர்ந்த வி.ஏ.ஓ அதிகாரி கணக்கெடுக்க வேண்டும். அந்தக் கணக்கெடுப்பு பகுதிக்குள் உட்பட்ட நிலத்தில் எத்தனை சதவீதம் பாதித்தது என்பதன் அளவீட்டை வேளாண்துறை அதிகாரி நாங்கள் சொல்ல வேண்டும். இதனடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும்.
நஞ்சை, புஞ்சை, தரிசு என நிலத்தின் வகையும் அதன் பயிர் வகை பற்றிய கணக்கும் வருவாய்த்துறை அதிகாரி வி.ஏ.ஓ-வின் அடங்கல் பதிவேட்டில் தான் இருக்கும். வாய்தா வரி வசூலிக்கும் போது நிலத்தின் பயிர் வகையினை மாற்றம் செய்திருக்க வேண்டும். ஆனால், பல இடத்தில் வேண்டுமென்றே பதிவு செய்யப்படாமல் இருக்கிறது.
பணப்பயிரை விட வருடத்திற்கு இருமுறை செய்யப்படும் பயிர் விவசாயத்தில் பாதிப்பு சேதம் அதிகம். நெல் போன்ற பயிர் விவசாயத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் வறட்சி வந்துவிடும். பருவகாலத்தில் ஏற்படும் அதிக மழையால் வெள்ளம் வந்துவிடும். இப்படி எந்த வகையில் பயிர் சேதம் ஏற்பட்டாலும் நிவாரணம் கிடைக்கும் என்பதால் மாற்று விவசாயத்தை பதிவு செய்யாமல் இருந்துள்ளனர்.
விவசாயிங்க நிவாரணத்துக்காக மாற்று விவசாய முறையை பதிவு பண்ணாமல் இருந்துருக்காங்கன்னு சொல்றீங்களா?
விவசாயிங்கள குத்தம் சொல்ல முடியாது. அவங்களுக்கு அரசு அறிவிக்கும் திட்டம் மட்டும் தான் தெரியும். அதில் உள்ள ஓட்டைகள் அதிகாரிகளுக்கு மட்டும் தான் தெரியும். பயிர் விவசாயம் பணப் பயிர் விவசாயமாக மாற்றப் படாமல் இருந்தால் வருடத்துக்கு ஓரிரு முறை வருமானம் வரலாம் என்பது அதிகாரிகள் மூலமாகத்தான் விவசாயிகளுக்கு போகும். விவசாயிக்கு என்ன தோணும்? முறையா வர்ற நிவாரணத்தையே முழுசா குடுக்க மாட்டாய்ங்க… சரி வந்த வரைக்கும் இலாபம் என இருக்க தோணும். இந்த வகையில் சில பெரும் விவசாயிகள் நடுத்தர விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் சலுகையை வந்தவரை இலாபமென தெரிந்தே பதிவு செய்யாமல் இருந்துள்ளனர்.
ஆனால், வீட்டு அருகில் மட்டும் குறைவான எண்ணிக்கையில் மரம் வைத்திருந்தவர்களும் புஞ்சை நிலமான கட்டுமனை பகுதியில் மட்டும் மரம் வைத்துள்ளவர்களும் அரசு பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்ற விபரம் தெரியாமல் இருந்துள்ளனர். இப்போது மரம் விழுந்து அதற்கு நிவாரணம் தருகிறார்கள் என்ற பிறகுதான் அதற்கான வழிமுறையே அவர்களுக்கு தெரிய வருகிறது.
விவசாய முறையை பதிவு பண்ணாத அல்லது கணக்கில் வராத பாதிப்புகள் எவ்வளவு இருக்கும்.?
இன்னும் சரியான கணக்கு வெளிவரவில்லை. இருபது முப்பது வருடம் தென்னை, மா, தேக்கு, என பணப்பயிர் விவசாயம் செய்த நிலங்கள் மூன்றில் ஒரு பங்கு கணக்கில் வரவில்லை. இது போக வரப்பில் உள்ள தென்னை, வீட்டு மனைகளில் உள்ள தென்னை, நத்தம் பொறம்போக்கு என சொல்லப்படும் தரிசு நிலத்தை அனுபவம் செய்து வளர்த்த தென்னை என எதுவுமே பதிவேட்டில் இல்லை.
இது போல் பல இடங்களில் கணக்கில் வராத மரங்கள் சாய்ந்துவிட்ட நிலையில் நிவாரண கணக்கெடுப்பில் பல சிக்கல் வருகிறது. வெளிய சொன்னா வெட்கக்கேடு, வேளாண்துறை, வருவாய்த்துறைன்னு ரெண்டு துறை இருந்துகொண்டு என்ன செஞ்சிங்கன்னு கேப்பாங்க. புயல் வந்துட்டு போயி ரெண்டு மாசம் முடிஞ்சுருச்சி கணக்க சரிகட்ட முடியாம எங்க துறையை சேந்தவங்க மண்ட காஞ்சு நிக்கிறோம். இப்போது ஏற்பட்டிருக்கும் இழப்பை எதனடிப்படையில் சரிசெய்வது என்று குழம்புகிறது அரசு நிர்வாகம்.
பத்து இருபது வருசமா தென்னை இருந்த நிலத்தை பயிர் நிலம் பாதித்ததுன்னு வருவாய்த்துறையும் இத்தன சதவீதம் பாதித்ததுன்னு வேளான்துறையும் கணக்கு எழுதிட்டு இப்ப குழப்பமா இருக்குதுன்னா எப்படி?
எப்படி இந்த தவறு நடந்துச்சுன்னு கேக்கிறீங்க புரியுது. எந்த துறைய சேந்த அதிகாரியக் கேட்டாலும் எனக்கு முன்ன இருந்தவரு பாத்த கணக்கதான் சார் நான் பாக்கிறேன்னு ஈசியா சொல்வாங்க. அதுக்கு மேல உள்ள போயி கேக்க முடியாது. ஏன்னா அதிகாரிகளுக்கு அந்தந்த ஊரு அரசியல் புள்ளிங்க தர்ர அழுத்தம் அப்படி. இப்ப எங்க துறைய பாத்தீங்கன்னா இத்தன சதவீதம் பாதித்த விவசாயத்துக்குதான் காப்பீட்டு தொகை தர வேண்டும் என்பது விதி. குறைவான பாதிப்பையும் நிவாரணத்துக்கு பரிந்துரைக்க வேண்டி கட்டாயப்படுத்துவாங்க. இதே போலதான் விவசாய திட்டத்தில் கிடைக்கும் நலனை பெறுவதற்காக இப்படியான தவறுகள் நடக்கிறது.
இந்த புயலை பொருத்தவரை வருவாய்த்துறை செய்த வேலையை (நில அளவீடு விவசாய முறை கணக்கெடுப்பு) வேளாண்துறையை செய்ய சொல்லிட்டாங்க. வருவாய்துறைக்கு (வி.ஏ.ஓவுக்கு) கால்நடை துறையை மாத்தி குடுத்துருக்காங்க. துறைகளை மாத்தி மாத்தி குடுத்ததனால் வசூல் வேட்டையில் துண்டு விழுந்துவிடும் என்பது அதிகாரிகளின் மனக்கவலை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இருப்பதை இழந்துவிட்டு எதிர்காலம் என்னவென்று தெரியாமல் நிற்கும் விவசாயியை விட நிவாரணம் வருவதில் அதிகாரிகளுக்குதான் சந்தோசம்.” என்று முடித்தார் அந்த அலுவலர்.
அரசு துறையில் நடக்கும் ஊழலை ஒரு அரசு அலுவலரே வாக்குமூலமாக ஒப்புக்கொண்டார் என சொல்லலாம். இவர் பகிர்ந்து கொண்டதில் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பாதிப்பும் அதற்காக அரசு கொடுக்கப்படும் நிவாரணத்தில் ஏற்படும் நிர்வாக பிரச்சனைகளும்தான் நிறைந்திருந்தது. ஆனால், நிலமற்ற ஒரு கூலி விவசாயி எந்த சிட்டா அடங்கலை காண்பித்து வருவாய்துறை அடங்கலுக்குள் தன் கணக்கை கொண்டுவர முடியும்?
நாற்பது ஆண்டுகள் பின்னோக்கி போய்விட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை எந்த நிவாரணமும் ஈடு செய்து விட முடியாது. புயல் பாதித்த பகுதியில் விழுந்த மரத்தை வாங்குவதற்கு ஆள் இல்லை. ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக கொண்டு போட போக்குவரத்துக்கு செலவு செய்ய முடியவில்லை. பிணத்தைப் புதைப்பது போல் குழிதோண்டி புதைக்கிறார்கள் விவசாயிகள். ஆனால், அந்த பரிதாபத்தை தாண்டி அவர்களுக்கு நிலம் என்ற ஒரு உடமை இருக்கிறது. அதை வைத்திருப்பதால் மகிழ்ச்சியை விட சோகமே அவர்களிடம் நிறைந்திருக்கிறது.
அரசு நிவாரண கணக்கில் வராத ஒரு பிரிவு இருக்கிறது. விவசாயக் கூலிகள். இவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்ட விவசாய பிரிவினர். எதை ஆதாரமாகக் காட்டி இவர்கள் இழப்பீடு வாங்க முடியும். குத்தகைக்கும் கூலிக்கும் விவசாயம் பார்த்த இவர்கள் எதை முதலீடாக போட்டு முன்னுக்கு வர முடியும். அடுத்த நாள் சாப்பாட்டுக்கு கூலி வேலையை நம்பியிருந்தவர்கள் யாரிடம் போய் வேலை கேட்பார்கள். சூறையாடப்பட்ட விவசாய பூமியில் கூலி விவசாயிகள்தான் அகதிகளாக அவதிப்படுகிறார்கள்.
பட்டுக்கோட்டை கரிக்காடு கிராமத்தை சேர்ந்த கூலி விவசாயி மாரிமுத்து பெற்ற மகனை விற்றுள்ளார். புயலில் தன் குடிசை பாத்திரம் அனைத்தையும் இழந்துள்ளார். ஒரு மாத காலம் பசியும் பட்டினியுமாக மனைவி நான்கு குழந்தைகளுடன் வறுமைக்குள்ளானதால் இப்படி செய்ததாக கூறுகிறார்.
புயல் பாதித்த பகுதிகளில் அவசியம் கருதி அரசு அல்லாத தனிமனிதர்கள் அமைப்புகள் என மனிதநேயம் உள்ளவர்கள் உரிய நேரத்தில் அடிப்படை உதவிகளை அனைத்து மக்களுக்கும் செய்தனர். அரசை எதிர்பார்த்து காத்திருக்கும் கட்டாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கு நிர்வாக குளறுபடிகளை எடுத்துக் கூறி பட்டை நாமம் போட இருக்கிறது, அரசு. கஜா புயலின் பாதிப்புகளை பதிவு செய்வதற்கே முடியாத போது நம் விவசாயிகளை எப்படிக் காப்பாற்ற முடியும்? மனிதாபிமானத்தோடு உதவி செய்த அனைவரும் மனிதாபிமானமற்று இருக்கும் இந்த அரசை எதிர்த்து போராட வேண்டும். உண்மையில் இதுதான் நமது விவசாயிகளுக்கு செய்ய வேண்டிய அவசரமான உதவி!
– வினவு செய்தியாளர்.
தொடரும், மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்களின் நிவாரணப் பணிகள் !
கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் வட்டம் நாகை மாவட்டம் தாணிக்கோட்டகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு அப்பகுதி மக்கள் அதிகார தோழர்களும் இளைஞர்களும் ஆசிரியர்களும் இணைந்து மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் – எழுதுபொருட்கள் வழங்கினர்.
மாக்சிம் கார்க்கிசிஸோவ் பெஞ்சில் உட்கார்ந்தவாறே ஏதோ வாய்க்குள் முனகிக்கொண்டான்.
“என்ன விஷயம்?” என்று கேட்டாள் தாய்.
“ஒன்றும் பிரமாதமில்லை. ஜனங்கள் முட்டாள்கள்….” மணி அடித்தது.
“அமைதி, ஒழுங்கு!”
எல்லோரும் மீண்டும் ஒருமுறை எழுந்து நின்றார்கள். நீதிபதிகள் ஒவ்வொருவராக வந்து தத்தம் ஆசனங்களில் அமர்ந்துகொண்டார்கள். கைதிகளையும் அவர்கள் இடத்துக்குக் கொண்டுவந்து சேர்த்தார்கள்.
“கவனி!” என்று ரகசியமாகக் கூறினான் சிஸோவ். ”அரசாங்க வக்கீல் பேசப் போகிறார்.”
தாய் தன் உடம்பு முழுவதையும் முன்னால் தள்ளிக் குனிந்து கொண்டு, ஏதோ ஒரு பயங்கரத்தைப் புதிதாக எதிர்பார்ப்பதுபோல் ஆர்வத்தோடு கவனித்தாள்.
அரசாங்க வக்கீல் நீதிபதிகளுக்கு ஒரு பக்கமாக எழுந்து நின்று மேஜை மீது ஒரு கையை ஊன்றியவாறு அவர்களைப் பார்த்துத் திரும்பினார். ஒரு பெருமூச்சோடும், வலது கையின் வீச்சோடும் அவர் பேசத் தொடங்கினார். அவரது பேச்சின் ஆரம்பத்தைத் தாயால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவரது குரல் கனத்து மெதுவாக, ஆனால் ஒழுங்கற்று, சமயங்களில் துரிதமாகவும் சமயங்களில் மந்தமாகவும் ஒலித்தது. சிறிது நேரத்துக்கு அவரது பேச்சு மெதுவாகவும் ஆயாசத்தோடும், சிரமத்தோடும் ஒலித்தது. திடீரென்று அந்தப் பேச்சு கும்மென்று இரைந்தெழுந்து சர்க்கரைக் கட்டியை மொய்க்கும் ஈக்கூட்டத்தைப்போல் ரீங்காரித்து விம்மியது. அந்தப் பேச்சில் எந்தக் கெடுதியும் இருப்பதாகத் தாய்க்குத் தோன்றவில்லை. அந்த வார்த்தைகள் பனியைப் போலக் குளிர்ந்தும், சாம்பலைப் போலக் கறுத்தும், கவிந்து குவிந்து மூடும் தூசியைப் போல் அந்த அறையில் கொஞ்சங் கொஞ்சமாக விழுந்து நிரம்பிக் கொண்டிருந்தன. வார்த்தை அலங்காரமும், உணர்ச்சியின் வறட்சியும் கொண்ட அந்தப் பேச்சு பாவெலையும் அவனது தோழர்களையும் கொஞ்சம் கூடத் தொட்டதாகத் தெரியவில்லை. எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. அவர்கள் தம் பாட்டுக்கு உட்கார்ந்து அமைதியாகவும், நிதானமாகவும் தமக்குள் பேசிக்கொண்டார்கள்; புன்னகை புரிந்தார்கள்; பொங்கி வரும் சிரிப்பை மறைப்பதற்காக முகத்தைச் சுழித்துக்கொண்டார்கள்.
”அவன் பொய் சொல்கிறான்!” என்றான் சிஸோல்.
அவள் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அவள் அரசாங்க வக்கீலின் பேச்சையே கேட்டுக்கொண்டிருந்தாள்; அவர் எல்லாக் கைதிகளையுமே பாரபட்சமில்லாமல் சகட்டுமேனிக்குக் குற்றம் சாட்டிப் பேசுவதை அவள் உணர்ந்தறிந்தாள். பாவெலைப் பற்றிப் பேசிய பின் பியோதரைப் பற்றியும் பேசினார். பியோதரைப் பற்றிய பேச்சை முடிக்கப்போகும் தருணத்தில், புகினைப் பற்றிய பேச்சைத் தொடங்கினார். இப்படியாக அவர்கள் அனைவரையும் ஒரே கோணிச் சாக்குக்குள் பிடித்துத் தள்ளி மூட்டை கட்டுவதுபோல் இருந்தது அவரது பேச்சு. ஆனால் அந்தப் பேச்சின் வெளி அர்த்தத்தைக் கண்டு அவளுக்குத் திருப்தி ஏற்படவில்லை. அந்த மேலோட்டமான அர்த்தபாவம் அவளைத் தொடவும் இல்லை; கலக்கமுறச் செய்யவும் இல்லை. அவள் இன்னும் ஏதோ ஒரு பெரிய பயங்கரத்தை எதிர்பார்த்தாள், அந்தப் பயங்கரத்தை அந்த வார்த்தைகளின் உள்ளர்த்தத்திலும், அரசாங்க வக்கீலின் முகத்திலும், கண்களிலும், குரலிலும், லாவகமாக வீசி விளாசும் அவரது வெள்ளைக் கரத்திலும் துருவித் துருவித் தேடிக்கொண்டிருந்தாள். இருந்தாலும் அதில் ஏதோ பயங்கரமிருப்பதாகத் தோன்றியது. அதை அவள் உணர்ந்தாள். எனினும் அதை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை; அதை உருவாக்கிக் காண முடியவில்லை. அவளது இதயம் எப்படித்தான் எச்சரித்த போதிலும் அவளால் அதை இனம் காணமுடியவில்லை.
அவள் நீதிபதிகளைப் பார்த்தாள். அந்தப் பேச்சைக் கேட்டு அவர்கள் அலுத்துப் போய்விட்டார்கள் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவாகத் தெரிந்தது. அவர்களது உயிரற்ற சாம்பல் நிற, மஞ்சள் மூஞ்சிகளில் எந்தவித உணர்ச்சியுமே பிரதிபலிக்கவில்லை. அரசாங்க வக்கீலின் பேச்சு கண்ணுக்குத் தெரியாத ஒரு பனி மூட்டத்தைப் பரப்பியது. அந்தப் பனிமூட்டம் நீதிபதிகளின் மீது அடர்ந்து கவிந்தது. அலுப்போடும் வேண்டா வெறுப்போடும் காத்திருக்கும்படி, அவர்களை நிர்ப்பந்தித்தது. பிரதம நீதிபதி தமது ஆசனத்திலேயே உறைந்து போய்விட்டார். இடையிடையே எப்போதாவது மட்டும் அவரது கண்ணாடிக்குள்ளாகத் தெரியும் கரும்புள்ளிக் கண்கள் உணர்ச்சியற்று அகல விரிந்து மூடின.
இந்த மாதிரியான உயிரற்ற வெறுப்புணர்ச்சியையும், உணர்ச்சியற்ற பற்றின்மையையும் கண்டு தனக்குள் தானே கேட்டுக்கொண்டாள்.
“இவர்களா தீர்ப்புக் கூறப் போகிறார்கள்?”
இந்தக் கேள்வி அவளது இதயத்தை குன்றிக் குறுகச் செய்தது. அவளது இதயத்திலிருந்த பய பீதியைப் பிதுக்கி வெளித்தள்ளி, வேதனை தரும் அவமான உணர்ச்சியைக் குடி புகுத்தியது.
அரசாங்க வக்கீலின் பேச்சு எதிர்பாராதவிதமாகத் திடீரென நின்றுவிட்டது. அவர் விருட்டென இரண்டடி முன்னால் வந்து நீதிபதிகளுக்கு வணக்கம் செலுத்தினார்; தமது கைகளைத் தேய்த்துக் கொடுத்துக்கொண்டே உட்கார்ந்தார். பிரபுவம்சத் தலைவர் அவரைப் பார்த்துத் தலையை ஆட்டி, கண்களை உருட்டி விழித்தார். நகர மேயர் அவரோடு கை குலுக்குவதற்காகத் தம் கரத்தை நீட்டினார்; ஜில்லா அதிகாரி தமது தொந்தியையே பார்த்தார்; லேசாகப் புன்னகை புரிந்து கொண்டார்.
ஆனால் நீதிபதிகளோ இந்தப் பேச்சினால் எந்தவிதத்திலும் மகிழ்வுற்றதாகத் தெரியவில்லை. அவர்கள் அசையாது உட்கார்ந்திருந்தார்கள்.
அந்தக் கிழ நீதிபதி தம் முகத்துக்கு நேராக ஒரு காகிதத்தை உயர்த்திப் பிடித்துப் பார்த்தவாறே பேசினார். “இப்பொழுது பெதசெயெவ், மார்க்கவ், சகாரவ் மூவர் தரப்பு வக்கீலும் பேசலாம்.”
நிகலாயின் வீட்டில் தாய் பார்த்திருந்த அந்த வக்கீல் எழுந்து நின்றார். சுமூகமான தோற்றம் கொண்ட பரந்த முகமும், சிவந்த புருவங்களுக்குக் கீழாகத் துருத்தி நின்று, இரு கத்தி முனைகளைப் போல் பளபளத்து. கத்திரியைப்போல் எதையும் வெட்டித் தள்ளி நோக்கும் சிறு கண்களும் கொண்டிருந்தார் அவர். அவர் உரத்த குரலில் தெளிவாக நிதானமாகப் பேசினார். எனினும் அவரது பேச்சையும் தாயால் உணர்ந்து புரிந்துகொள்ள முடியவில்லை.
”அவர் சொன்னது புரிகிறதா?” என்று அவள் காதில் ரகசியமாகக் கேட்டான் சிஸோவ். “புரிகிறதா? அந்தக் கைதிகளெல்லாம் மிகவும் மனமுடைந்து போய் நினைவிழந்து போனதாகக் கூறுகிறார். பியோதரைத்தான் சொல்லுகிறாரோ?”
அவளது மனத்தில் நிரம்பியிருந்த அதிருப்தி உணர்ச்சியால் அவளால் பதில் கூடக் கூற முடியவில்லை. அவளது அவமான உணர்ச்சி விரிந்து பெருகி, இதயத்தையே ஒரு பெரும் பாரத்தோடு அழுத்திக் கொண்டிருந்தது. தான் ஏன் நியாயத்தை எதிர்பார்த்தாள் என்பது பெலகேயாவுக்கு அப்போதுதான் தெளிவாயிற்று. தன்னுடைய மகனது சத்தியத்தை, அந்த நீதிபதிகளின் நியாய சத்தியத்துக்கு எதிராக நேர்மையோடு துல்லியமாக எடை போடுவதைக் காண முடியும் என்று அவள் எதிர்பார்த்தாள். அந்த நீதிபதிகள் அவன் இப்படிச் செய்வதற்குரிய காரண காரியங்களைப் பற்றி, அவனது சிந்தனைகளையும் செயல்களையும் கூர்ந்து கவனித்து அவனைச் சரமாரியாக, இடைவிடாது, கேள்விகள் கேட்பார்கள் என்று அவள் எதிர்பார்த்தாள். அவன் கூறுவதைக் கேட்டு, அதன் உண்மையை அவர்களும் கண்டறிந்து, உற்சாகத்தோடு உரத்த குரலில் “இவன் சொல்வதுதான் உண்மை!” என்று நியாயபூர்வமாகச் சொல்லிவிடுவார்கள்!” என்றும் எதிர்பார்த்தாள்.
அந்த அறை முழுவதும் ஒரு புத்துணர்ச்சி பரவிக் கலகலத்தது. குத்தலான வார்த்தைகளால் அந்த வக்கீல் அந்த நீதிபதிகளின் தடித்த உணர்ச்சிகளைக் கிளறிவிட்டபோது, ஜனக் கூட்டத்திடையே ஓர் ஆக்கிரமிப்புச் சக்தி கட்டிழந்து பரவுவதுபோல் தோன்றியது.
ஆனால் அவள் எதிர்பார்த்தது எதுவுமே நடக்கவில்லை விசாரணைக்காகக் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருக்கும் அந்தக் கைதிகளுக்கும் அந்த நீதிபதிகளின் கண்ணோட்டத்துக்கும் வெகுதூரம் என்றே தோன்றியது. மேலும் அந்த நீதிபதிகளை அந்தக் கைதிகள் ஒரு பொருட்டாக மதித்ததாகவும் தோன்றவில்லை. ஆயாசத்தினால், தாய்க்கு அந்த விசாரணையிலேயே அக்கறையற்று அலுத்துப் போய்விட்டது. அங்கு ஒலிக்கும் பேச்சுக்களைக் கேட்காமல் அவள் தனக்குத்தானே கூறிக்கொண்டாள்:
“இதையா விசாரணை என்கிறீர்கள்?”
“அவர்களுக்கு வேணும்!” என்று அதை ஆமோதித்து ரகசியமாகக் கூறினான் சிஸோவ்.
இப்போது வேறொரு வக்கீல் பேசிக்கொண்டிருந்தார். அவர் ஏளனபாவத்தோடு துடிப்பாகத் தோன்றும் வெளுத்த முகம் கொண்ட குட்டை ஆசாமி. அவரது பேச்சில் நீதிபதிகள் அடிக்கடி குறுக்கிட்டுப் பேசினார்கள்.
அரசாங்க வக்கீல் கோபத்தோடு துள்ளி எழுந்து, ஏதோ ஒரு நியாய ஒழுங்கைச் சுட்டிக் காட்டினார். உடனே அந்த ஆட்சேபணையைக் கிழ நீதிபதி ஏற்றுக்கொண்டார். பிரதிவாதித் தரப்பு வக்கீல் அவர் கூறியதைத் தலைவணங்கி மரியாதையோடு கேட்டுக்கொண்டு, தமது பேச்சை மேலும் தொடங்கினார்.
”விடாதே. அடி முடி காணும் வரையிலும் விடாதே!” என்று சொன்னான் சிஸோவ்.
அந்த அறை முழுவதும் ஒரு புத்துணர்ச்சி பரவிக் கலகலத்தது. குத்தலான வார்த்தைகளால் அந்த வக்கீல் அந்த நீதிபதிகளின் தடித்த உணர்ச்சிகளைக் கிளறிவிட்டபோது, ஜனக் கூட்டத்திடையே ஓர் ஆக்கிரமிப்புச் சக்தி கட்டிழந்து பரவுவதுபோல் தோன்றியது. நீதிபதிகள் ஒருவருக்கொருவர் நெருங்கிக்கொண்டு, அந்த வக்கீலின் வாசகத்தால் தமக்கு ஏற்படும் வேதனை உணர்ச்சியைத் தாங்கிக்கொண்டு உம்மென்று முறைத்துக்கொண்டிருந்தார்கள்.
பாவெல் எழுந்திருந்தான். திடீரென அந்த அறை முழுவதிலும் அமைதி நிலவியது. தாய் தன் உடம்பை முன்னால் தள்ளிக்கொண்டு பார்த்தாள். பாவெல் மிகுந்த அமைதியோடு பேசத் தொடங்கினான்.
”கட்சியின் அங்கத்தினன் என்ற முறையில், நான் என் கட்சியின் தீர்ப்பைத்தான் அங்கீகரிக்கிறேன். எனவே என் குற்றமின்மையைப் பற்றி எதுவுமே பேசத் தயாராயில்லை. ஆனால், என் தோழர்களின் வேண்டுகோளுக்காக, என்னைப்போலவே தங்கள் சார்பிலும் வாதாட மறுத்துவிட்ட தோழர்களின் வேண்டுகோளுக்காக, நீங்கள் புரிந்துகொள்ளாத சில விஷயங்களை நான் விளக்கிச் சொல்ல முயல்கிறேன். சோஷல் – டெமாக்ரஸி என்ற பெயரால் எங்கள் இயக்கம் ஆட்சி அதிகாரத்துக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறது என அரசாங்க வக்கீல் குறிப்பிட்டார். நாங்கள் அனைவருமே ஜார் அரசனைக் கவிழ்க்க முயலும் கூட்டத்தார் என்றே அவர் எங்களைப் பற்றி எப்போதும் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். ஆனால் உங்களுக்கு நான் ஒரு விஷயத்தைத் தெளிவாக்கிவிட வேண்டும். மன்னராட்சி ஒன்றே ஒன்று மட்டும்தான் நமது நாட்டினைப் பிணைத்துக் கட்டியிருக்கும் விலங்கு என்று நாங்கள் கருதவில்லை. ஆனால், அதுதான் முதல் விலங்கு; அதுதான் நம் கைக்கு விரைவில் எட்டக்கூடிய விலங்கு; அந்த விலங்கைத் தறித்து மக்களை விடுவிக்க வேண்டியது எங்கள் கடமை.”
அவனது உறுதிவாய்ந்த குரலின் ஓங்காரத்தால் அந்த அறையின் அமைதி மேலும் அழுத்தமாகத் தோன்றியது. அந்த அறையின் சுவர்களே பின்வாங்கி விசாலம் அடைவது போலத் தோன்றியது. உயர்ந்ததொரு இடத்துக்குச் சென்றுவிட்டவனைப்போல் பாவெல் காட்சி அளித்தான்.
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
அருண் கார்த்திக்சமீபத்தில் பொது பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு என்று சொல்லி அதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபொழுது அதை ஒட்டி பல விவாதங்கள் நடந்தன. பாராளுமன்றத்திலும், சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் விவாதங்கள் நடந்தன. இந்த விவாதங்களில், இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்காக கொண்டுவரப்பட்டது; 8 லட்சம் வருமானம் என்பது நகைப்புக்குரியது; இந்த நடவடிக்கை எந்தவித ஒரு கள ஆய்வும் செய்யாமல் எடுக்கப்பட்டுள்ளது; இந்த நடவடிக்கை தேர்தலுக்காக பிஜேபி-யால் கொண்டுவரப்பட்டது என்பன போன்ற பல அலைவரிசைகளில் விவாதங்கள் நடந்தன.
இவை அனைத்தும் முக்கியமான விவாதங்களே. ஆனால், இந்த 10% நடவடிக்கையை பற்றி விவாதிக்க துவங்கும் முன் இதுவரை அரசு பணிகள் எவ்வாறு நிரப்பப்பட்டு வந்துள்ளன என்பது பற்றி நாம் புரிந்துகொள்வது அவசியம்.
இருக்கும் வேலைகள் எவ்வாறு நிரப்பப்படுகின்றன, நிரப்பப்படுகின்றனவா, என்பது எல்லாம் தெரிந்தால்தான் அந்த வேலைகளில் இட ஒதுக்கீடு பற்றி நாம் பேச முடியும்.
NDTV-இந்தி செய்தி சேனலில் ‘Prime Time with Ravish Kumar’ என்ற ஒரு நிகழ்ச்சி உண்டு. ரவீஷ் குமார் என்னும் செய்தியாளர் / தொகுப்பாளர் நடத்தும் நிகழ்ச்சி. வட மாநிலங்களில் அரசு பணிகளை நிரப்பும் தேர்வாணையங்கள் பற்றி ‘Job series’, கல்லூரிகள் இயங்கும் விதம் பற்றி ‘college series’, வங்கிகளில் வேலைசெய்பவர்கள் பற்றி ‘bank series’, என்று தொடர் நிகழ்ச்சிகளை நடத்தினார். இவை அனைத்தும் போலி விவாதங்களை தவிர்த்து உண்மையான கள நிலவரத்தைப் பற்றி பேசின.
இந்த நிகழ்ச்சியில் வந்த தகவல்கள் அனைத்தும் மிக முக்கியமானவை, நாம் தெரிந்துகொள்ளவேண்டியவை. இந்த 10% விவாதத்துக்கு சம்மந்தமானவையும் கூட.
மேலும், முன்னுரையை நீட்டிக்காமல், 19 டிசம்பர் 2018 அன்று ரவீஷ் குமார் நிகழ்ச்சியில் வந்த சில தகவல்களை மட்டும் கீழே தருகிறேன். இதில் இருந்து 10% பற்றி நமது புரிதலை நாம் ஏற்படுத்திக்கொள்ள முடியும். (19 டிசம்பர் அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சி மேலே கூறிய எந்த வகையான தொடரும் அல்ல, இது அவர் வழக்கமாக தினமும் நடத்தும் பொதுவான நிகழ்ச்சி).
(கீழே உள்ள தகவல்களும் பல கருத்துகளும் ரவீஷ் சொல்பவை, என்னுடையவை சிலதே)
♠ ♠ ♠
மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை:
2018-ல் முதல்வர் பதவியேற்ற கமல்நாத் மத்திய பிரதேசத்தில் உள்ள வேலைகளை உத்தர பிரதேசம், பீகார் மாநில இளைஞர்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்றும், அதை சரி செய்ய 80% வேலைகளை மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கே வழங்க வழிசெய்ய உள்ளதாகவும் கூறினார். பல பாஜக தலைவர்கள் இதை கண்டித்தனர். டிவிக்களில் இதை பற்றி சூடுபறக்கும் விவாதங்கள் நடந்தன. டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அரசியல்வாதிகள், உ.பி. பீகார் இளைஞர்களுக்காக மிகவும் கோவப்பட்டார்கள். உ.பி., பீகார் இளைஞர்களா இல்லை மத்திய பிரதேச இளைஞர்களா, யார் முக்கியம் என்கிற தொனியில் விவாதங்கள் நடந்தன.
கமல்நாத்.
கமல்நாத் போலவே, ‘உத்தரபிரதேசத்தில் உள்ள வேலைகளில் 90% அம்மாநில இளைஞர்களுக்கே கிடைக்கும்படி வழிவகைகள் செய்யப்படும்’ என்று 2017 உத்தர பிரதேச தேர்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதி அளித்தது. இந்த நடவடிக்கை பாஜக உத்தர பிரதேசத்தில் ஆட்சி அமைத்து 90 நாட்களில் மேற்கொள்ளப்படும் என்றும், ஆட்சி அமைத்து 90 நாட்களில் ஏற்கனவே காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்பும் பணிகள் துவங்கப்படும் என்றும், தேர்தலுக்கு முன் நடந்த கூட்டம் ஒன்றில் அமித்ஷாதெரிவித்தார்.
இப்படி மாறி மாறி உத்திரவாதங்கள் தருவது ஒரு பக்கம் என்றால் உண்மையில் களத்தில் நடப்பது முற்றிலும் வேறு மாதிரி உள்ளது.
நிரப்பப்படாத ஆசிரியர் பணியிடங்கள் :
உத்தர பிரதேசத்தில், 12,460 முதல் நிலை பள்ளி ஆசிரியர் பணிகளுக்கான விளம்பரம் வெளியாகி மார்ச் 2016-ல் கவுன்சிலிங்கும் முடிந்துவிட்டது. 30 மார்ச் 2017-ல் அவர்களுக்கு நியமன உத்தரவு கிடைக்கவேண்டியது. ஆனால் அதற்குள் மார்ச் 2017-ல் அகிலேஷ் யாதவ் ஆட்சி போய் ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்துவிட்டார். புதிதாக பதவி ஏற்ற ஆதித்யநாத் இந்த தேர்வையே மறு பரிசீலனை செய்வதாக கூறி நியமனங்களை நிறுத்திவைத்தார். மறு பரிசீலனை என்று சொல்லி ஒரு வருடம் ஆன பிறகும் எதுவும் நடக்கவில்லை.
இந்த ஒரு ஆண்டில் ஆசிரியர் பதவிக்கு தேர்வானவர்கள் முதல் அமைச்சர், துணை முதல்வர், அமைச்சர்கள் என்று பலரையும் சந்தித்து தங்களது நிலைமையை தெரிவித்தும் எதுவும் நடக்கவில்லை. மார்ச் 2018-ல் உத்தர பிரதேச பாஜக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இருந்தாலும், 90 நாட்களில் இடங்கள் நிரப்பப்படும் என்ற பாஜக -வின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. நீதி மன்றத்தின் அறிவுறுத்தலுக்கு பின் சிலருக்கு, சுமார் 1000 பேருக்கு, நியமன உத்தரவு கிடைத்தது. ஆனால், டிசம்பர் 2018 வரை பல்லாயிரம் பேருக்கு தேர்வு நடந்து முடிவுகள் வெளிவந்த பிறகும் நியமன உத்தரவுகள் வழங்கப்படவில்லை.
இவ்வாறு தேர்வு நடந்து கவுன்சிலிங்கும் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும், சுமார் 11000 பேருக்கு நியமனங்கள் நடக்காதது பற்றி எந்த அரசியல் தலைவரும் அறிக்கை வெளியிட்டது போலவோ அல்லது போராட்டம் நடத்தியது போலவோ தெரியவில்லை. தேர்தல் சமயங்களில் மக்களின் கவனத்தை திருப்பவே இவ்வாறு வேலைவாய்ப்பில் அக்கறை உள்ளவர்கள் போல நாடகமாடுகின்றனர். இந்து – முஸ்லீம், உ.பி. – பீகார் போன்ற இருமைகளில் விவாதங்கள் நடக்கும்படியும் பார்த்துக்கொள்கின்றனர். இவ்வாறு விவாதங்களை நடக்க வைத்து களத்தில் இருக்கும் உண்மை நிலவரம் பற்றி எந்த பேச்சும் நடக்காதவண்ணம் பார்த்துக்கொள்கின்றனர்.
உ.பி.யில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடு.
அனைத்து மாநில அரசுகளும் முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் வருடா வருடம் மாநாடு நடத்தி முதலாளிகளுக்கு பல சலுகைகளை வழங்குகின்றன. இந்த மாநாடுகளில் பல கோடிகளுக்கு முதலீடு செய்ய ஒப்பந்தம் ஆகி உள்ளதாகவும் அதன் மூலம் பல ஆயிரம் வேலை வாய்ப்புகள் கிடைக்கப்போவதாகவும் அறிக்கைகள் வெளியாகின்றன. உண்மையில் எவ்வளவு முதலீடுகள் வந்தன, எவ்வளவு வேலைவாய்ப்புகள் கிடைத்தன என்பன போன்ற தகவல்கள் வெளியிடப்படுவது இல்லை.
இவ்வாறு நடந்த ஒரு முதலீட்டாளர் மாநாட்டில், குஜராத்தில் உருவாகும் வேலை வாய்ப்புகளில் 90% குஜராத் மக்களுக்கு தான் வழங்க வேண்டும் என்று முதல்வர் விஜய் ரூபாணி உத்தரவிட்டார். இதே போல் உத்தரவுகளை கர்நாடகா, இமாச்சல பிரதேசம் போன்ற அரசுகளும் கடை பிடிக்கின்றன. இதில் காங்கிரஸ் பாஜக, இரண்டு அரசுகளும் அடக்கம்.
பணமதிப்பழிப்பின் தாக்கம்:
ஆனால், எந்த அரசும் இவ்வாறான விதிகளின் மூலம் மாநில இளைஞர்கள் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது என்ற தகவலை வெளியிடுவது இல்லை. எந்த தகவலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொருமுறையும் இந்த விதிகள் புதிதாக அறிவிக்கப்படும்பொழுதோ அல்லது மாற்றப்படும்பொழுதோ இந்து-முஸ்லீம், உபி-பீகார், மகாராஷ்டிரா-இந்திவாலா என்பன போன்ற டிவி விவாதங்களில் உணர்ச்சி பொங்க கட்சிகளை சேர்ந்தவர்கள் பேசுகின்றனர். அவர்கள் நோக்கம் உணர்வுகளை தூண்டி ஓட்டுகளை வாங்குவதே தவிர வேலை கிடைப்பது அல்ல. டிவியில் நடக்கும் விவாதங்களை மட்டும் பார்த்தால் நமக்கு உண்மை என்னவென்று தெரியாது. செய்திகளை தெரிந்துகொள்கிறோம் என்கிற மாயையில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்போம்.
2-3 நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளியானது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு வணிகர்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களில் 35 இலட்சம் வேலைகள் காணாமல் போய்விட்டன என்று அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 34 ஆயிரம் உற்பத்தியாளர்களிடம் நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில் அறியப்பட்ட தகவல் இது. அதாவது, பண மதிப்புநடவடிக்கைக்கு பிறகு நாடு முழுவதும் 35 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். ஒவ்வொருவரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவராக இருந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் 3 உறுப்பினர்கள் என்று வைத்துக்கொண்டால் சுமார் 1 கோடி பேருக்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை எதாவது டிவி விவாதங்களில் இதை பற்றி பேசி உள்ளார்களா? உபி-பீகார் விவாதம், இந்து-முஸ்லீம் விவாதம் போன்ற விவாதங்கள் மூலம் மக்களின் உணர்வுகளை தூண்ட மட்டுமே டிவி விவாதங்கள் பயன்படுத்தப் படுகின்றன. எந்த ஒரு தலைவரும், காங்கிரஸ் பாஜக யாரும், இதைப் பற்றி பேசவில்லை.
தனியார் வேலைவாய்ப்புகளை விட்டுவிடுவோம், பல ஆயிரக்கணக்கான அரசு வேலை வாய்ப்புகளின் நிலைமையும் மேலே கூறிய வேலைகளின் நிலைமை தான்.
உஜ்வல் தாஸ் என்பவர் 17 டிசம்பர் அன்று இறந்துவிட்டார். போலீஸ் தடியடியில் காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பலன் இல்லாமல் இறந்துவிட்டார். 16 டிசம்பர் அன்று ஜார்கண்டில் உள்ள ஜும்கா என்ற இடத்தில மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சரின் வீட்டுக்கு வெளியில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த கஞ்சன் தாஸ் என்பவரும் இறந்து போனார்.
கஞ்சன் கடந்த 10 ஆண்டுகளாக ஜார்கண்டில் தற்காலிக ஆசிரியராக இருந்தார். இறப்பதற்கு முந்தய நாள் போராட்டம் தொடரவேண்டும் என்பதற்காக தன்னுடைய சகாக்களுக்காக கஞ்சன் அரிசி வாங்கிவந்திருந்தார். உஜ்வல் மற்றும் கஞ்சன் போலவே பகதூர் தாக்குர், ஜீத்தன் காத்துன் ஆகியோரும் இதே சமயத்தில் மரணமடைந்தனர். இவர்கள் அனைவரும் 15 நவம்பர் அன்று நடந்த போலீஸ் தடியடியில் அடி வாங்கியவர்கள்.
இந்த தற்காலிக ஆசிரியர்கள் கடந்த 10, 15 ஆண்டுகளாக ஆசிரியப் பணி புரிந்து வருகின்றனர். அவர்களுடைய வேலை நிரந்தரம் ஆக வேண்டும், நல்ல ஊதியம் கிடைக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய எதிர்பார்ப்பு. அதற்காகதான் போராட்டம். ஜார்கண்டில்மட்டும் சுமார் 68,000 தற்காலிக ஆசிரியர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் 10, 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகின்றனர். வேலையை நிரந்தரம் ஆக்கக்கோரி பல வருடங்களாக பல முறை பல போராட்டங்களை நடத்திவிட்டார்கள்!
இவர்களை பற்றி எந்த டிவி விவாதங்களும் பேசுவது இல்லை, யாரும் உணர்ச்சிவசப்படுவதும் இல்லை. எந்த அரசியல்வாதியும் இதைப் பற்றி பேசுவது இல்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது பேசுகின்றனர், ஆட்சி கிடைத்ததும் பேசுவதை நிறுத்திவிடுகின்றனர். ஆட்சி கிடைப்பதற்காக பேசுகிறார்களோ?
அகிலேஷ் யாதவ்.
மேலே கூறிய தகவல்தான். 2016-ல் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்த பொழுது 12,640 முதல்நிலை (primary) ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு நடத்தி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், அதன் பின்பு ஆட்சிக்கு வந்த ஆதித்யநாத் அரசு இந்த தேர்வு ஒழுங்காக நடைபெறவில்லை என்று கூறி முடிவுகள் செல்லாது என்று அறிவித்துவிட்டு, 2016-இல் அகிலேஷ் யாதவ் ஆட்சியில் 12,640 முதல்நிலை ஆசிரியர்களை தேர்வு செய்ததை செல்லாது என்று அதற்குப் பின் 2018-ல் ஆட்சிக்கு வந்த ஆதித்யநாத் அரசு சொன்னது; தேர்வு ஒழுங்காக நடைபெறவில்லை என்பதுதான் காரணமாக கூறப்பட்டது. இப்படி சொன்ன ஆதித்யநாத் அரசு, 2018-ல் சுமார் 70 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்காக புதிதாக தேர்வு நடத்தியது. 2018 செப்டம்பர் மாதம் உ.பி.-யில் ஒரு போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்தியவர்கள் ஆதித்யநாத் அரசாங்கம் நடத்திய முதல்நிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதியவர்கள்.
முன்பு நடந்த தேர்வு ஒழுங்காக நடைபெறவில்லை என்று கூறி புதிதாக ஆதித்யநாத் அரசு நடத்திய தேர்வு எவ்வாறு இருந்தது என்று பார்ப்போம்.
தேர்வு எழுதியவர்களில் ஒருவரான அங்கித் வர்மா 122 மதிப்பெண் எடுத்தும் பெயில் ஆக்கப்பட்டார். தேர்வு முடிவுகள் வந்தபொழுது அங்கித் வெறும் 22 மதிப்பெண்களே பெற்றிருந்ததாக முடிவுகள் கூறியது. முடிவுகள் வந்தவுடன் விடைத்தாள் நகலை பெற 2000 ரூபாய்க்கு காசோலை எடுத்து விண்ணப்பித்தார். எந்த பதிலும் வராததால் நீதிமன்றத்தை நாடி நகலை பெற்ற பொழுதுதான் அவருடைய மதிப்பெண் 122 என்று மாறியது. தேர்வு எழுதிய 68000 பேரில் அங்கித் முதல் மதிப்பெண் பெற்றிருந்தார். இதே தேர்வில், தேர்வே எழுதாத சிலருக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது.
அதே போல, குறித்த நேரத்தில் நியமனங்கள் நடைபெறவில்லை. தேர்வான அனைவருக்கும் இன்னும் நியமன ஆணை வழங்கப்படவில்லை. தேர்வானவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கொஞ்சம் தகவல்களை திரட்டிப் பார்த்தால் பீகாரில் 2016, 2017 ஆண்டுகளில் நடந்த தேர்வுகளுக்கே இன்னும் முடிவுகள் வெளியாகவில்லை; நியமனங்களும் நடைபெறவில்லை என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.
மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் 80% பற்றி பேசியபொழுது மோடியின் மந்திரி சபையைச் சேர்ந்த கிரிராஜ் சிங் என்பவர் கமல்நாத்தை கண்டித்தார். இந்தியா என்பது பல மாநிலங்கள் கூட்டாட்சி செய்யும் ஒரே நாடா இல்லையா என்ற கேள்விக்கு கமல்நாத் பதிலளிக்க வேண்டும் என்று கிரிராஜ் சிங் கூறினார். அது மட்டுமல்லாமல், காங்கிரஸ் முதல்வர் ஒருவர் இவ்வாறு தெரிவித்ததற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உ.பி. பீகார் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கிரிராஜ் கூறினார்.
கிரிராஜ் கமல்நாத்திடம் கூட்டாட்சி பற்றி கேள்வி கேட்பார், ஆனால் உ.பி. தேர்தலின் பொழுது அவர் இருக்கும் பாஜக, கமல்நாத் தந்த அதே வாக்குறுதியை தரும்பொழுது கூட்டாட்சி பற்றி அவருக்கு எந்த கேள்வியும் இருக்காது. கமல்நாத்தும் ஆட்சியில் இல்லாமல் இருந்தால் பாஜகவை கேள்வி கேட்டு இருப்பார். ஆனால், இப்போது கேட்க மாட்டார்.
இவர்கள் அனைவரும் இதுபோன்ற கேள்விகளை மட்டுமே கேட்டு மக்களின் உணர்வுகளைத் தூண்டி, மக்கள் மத்தியில் பகையை வளர்த்து ஓட்டுக்களை வாங்க வேண்டும் என்று மட்டுமே நினைக்கின்றனர். மக்களுக்கு வேலை கிடைப்பது பற்றி இவர்களுக்கு கவலை இல்லை!
நீதிமன்றங்களும் சளைத்தவை அல்ல:
உ.பி., பீகார் இருக்கட்டும். ரிசர்வ் வங்கி (RBI) நடத்தும் தேர்வு பற்றி பார்ப்போம். 623 உதவியாளர் பணிகளை நிரப்பும் தேர்வுக்கான அறிவிப்பு அக்டோபர் 2017-ல் வெளி வந்தது. அறிவிப்பு வெளியாகி மார்ச் 2018-க்குள் தேர்வு மற்றும் மற்ற நடைமுறைகள் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டன. ஆனால், இந்த 623-ல் ஒருவருக்கு கூட இன்னமும் நியமனம் நடைபெறவில்லை. எந்த பிரச்சினையிலும் சிக்காத பதவிகளுக்கும்கூட இன்னும் நியமனம் நடைபெறவில்லை. மும்பை பகுதியில் உள்ள 261 பணியிடங்கள் சம்மந்தமாக ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கின் காரணமாக அனைத்து நியமனங்களும் சிக்கலில் உள்ளன. இந்த வழக்கின் அடுத்த வாய்தா எப்பொழுது தெரியுமா? 25 செப்டம்பர் 2019-ல்!! இந்த ஆட்டத்தில் நீதிமன்றங்களின் பங்கும் இல்லாமல் இல்லை, நீதி அரசர்களும் சளைத்தவர்களும் இல்லை.
ஒரு மாணவர் ரவீஷ் குமாருக்கு கொடுத்துள்ள தகவல் பின்வருமாறு. அலகாபாத் உயர்நீதிமன்ற பணிக்கான தேர்வெழுதி அதில் தேர்ச்சி பெற்று 6 மாதங்களாக காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் இன்னும் நியமனம் நடைபெறவில்லை. நம்பிக்கை இழந்துவிட்டதாக மாணவர் தெரிவிக்கிறார். பல இளைஞர்களின் நிலை இது தான்!!
ரயில்வே வேலைக்கான அறிவிப்பு வந்தபொழுது 2 1/2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பெருமையாக சொன்னார்கள். ஆரம்பத்தில் ரூ.500-க்கு விண்ணப்பங்கள் விற்கப்பட்டன. பின்னர் ரூ.400-ஐ திருப்பி தந்துவிடுவோம் என்று ரயில்வே மந்திரி தெரிவித்தார். இந்த தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் 2500 கிமீ தொலைவில் வேறு மாநிலங்களில் ஒதுக்கப்பட்டிருப்பது தேர்வு நுழைவுச்சீட்டு வந்தபொழுதுதான் மாணவர்களுக்கு தெரிந்தது. இந்த மாணவர்களில் பெரும்பாலானோருக்கு 2-3 நாட்கள் பயணம் செய்து விடுதிகளில் தங்கி தேர்வு எழுதும் அளவுக்கு வசதி இல்லை. இதனாலேயே பலர் தேர்வு எழுத முடியவில்லை.
ரயில்வே தேர்வு எழுதும் இந்த மாணவர்களும் உ.பி. பீகாரை சேர்ந்தவர்கள்தான். இவர்களுக்காக கிரிராஜ் சிங்கோ அல்லது கமல்நாத்தோ அல்லது அமித்ஷாவோ பேசுவதில்லை!
நாம் செய்ய வேண்டியது என்ன ?
இதில் தமிழகத்தை சேர்ந்த நாம் புரிந்துகொள்ள வேண்டிய செய்தியும் உள்ளது. தேர்வுகளை நடத்துவதில் மத்திய அரசும் பாஜகவும் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை. நீட் எவ்வாறு நடத்துகிறார்களோ அதே போல் தான் ரயில்வே தேர்வுகளையும் நடத்துகிறார்கள். இது புரியாவிட்டால் பாஜக தமிழர்களுக்கு மட்டும் எதிராக நடந்துகொண்டு வட மாநிலத்தவருக்கு நல்லது செய்வது போல தெரியும். ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் எதிரானவர்கள்தான் இவர்கள்.
தனியார் துறையிலும் சரி, அரசு துறையிலும் சரி, வேலைவாய்ப்புகள் இல்லை. இருக்கும் அரசு வேலைவாய்ப்புகளையும் அரசு சரியாக நிரப்புவது இல்லை!
வேலை வாய்ப்புகள் இல்லாததை மறைக்கத்தான் இந்து-முஸ்லீம் விவாதங்கள், உ.பி.-பீகார் விவாதங்கள் போன்றவற்றை ஆளும் வர்க்கம் கிளப்பிக்கொண்டே இருக்கிறது. இந்த விவாதங்களின் மூலம் மக்களின் உணர்வுகளை தூண்டி சரியான கேள்விகளை கேட்பதில் இருந்து தடுக்கப்படுகின்றனர்.
இந்த தகவல்களின் மூலம் நாம் புரிந்துகொள்ளக் கூடியது என்ன. பாஜக (அல்லது காங்கிரஸ்) கட்டமைக்கும் விவாதங்களில் நாம் சிக்கிக்கொள்ளக் கூடாது. தனியார்மயத்தின் காரணமாக, ஒன்று, அரசு நிறுவனங்களே தனியார்மயம் ஆகின்றன; அல்லது, அரசு நிறுவனங்களில் இருக்கும் வேலைகளும் ஒப்பந்த வேலைகளாக மாற்றப்பட்டுவிட்டன. ஜனாதிபதி அலுவலகத்தில் உள்ள துப்புரவு தொழிலாளர்கள் கூட ஒப்பந்தக் கூலிகளாகவே இருப்பார்கள். இவை எல்லாம் போக, மீதம் இருக்கும் வேலைகளை அரசுகள் எவ்வாறு நிரப்புகின்றன என்று மேலே உள்ள தகவல்கள் காட்டுகின்றன.
நிலைமை இவ்வாறு இருக்க பாஜக அரசு, எங்கும் இல்லவே இல்லாத அரசு வேலைகளில் 10% இட ஒதுக்கீடு தருவதாக கூறுகிறது. நாமும் அதை பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறோம். நாம் எதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்பதை பாஜகவால் கட்டுப்படுத்த முடிகிறது.
ஆகவே, நாம் அரசிடம் கேட்க வேண்டியது இட ஒதுக்கீடு மட்டுமல்ல. இருக்கும் வேலை வாய்ப்புகளை சரியாக நிரப்ப வேண்டும், அரசு அலுவலகங்களில் இருக்கும் வேலைகளை நிரந்தர வேலைகளாக்க வேண்டும்; தனியார்மய கொள்கைகளை தவிர்த்து அத்தியாவசிய சேவைகளில் அரசே நேரடியாக ஈடுபட வேண்டும். இதை விடுத்து பாஜக புருடா விடும் 10% பற்றி பேசிக்கொண்டு இருந்தால் அவர்கள் விரித்த வலையில் தான் விழ வேண்டும்.
பி.கு.: NDTV இந்தி செய்தி சேனலில் ‘Prime Time with Ravish Kumar’ என்ற ஒரு நிகழ்ச்சி உண்டு. இந்த ரவீஷ் குமார் இந்தி செய்தி பார்ப்பவர்கள் மத்தியில் பிரபலமானவர். மக்களுக்காகத்தான் பத்திரிக்கை, பத்திரிக்கையாளர்கள், என்ற கருத்தை உடைய மக்கள் பத்திரிக்கையாளர். மற்ற எந்த பத்திரிக்கைகளும், செய்தி சேனல்களும் கவனிக்காத மக்கள் பிரச்சனைகளையும் போராட்டங்களையும் பதிவு செய்து Prime Time நிகழ்ச்சியில் பேசுபவர். உண்மையான மக்கள் வாழ்க்கைக்கு தேவையான உண்மைகளை பேசுவதால் ஆளும் வர்க்கத்துக்கு இவரை பிடிப்பது இல்லை, கொலை மிரட்டல்களும் வந்தவண்ணம் உள்ளன.
எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான ஆனந்த் தெல்தும்ப்டே மீது 2018 ஜனவரி மாதம் பீமா கோரேகானில் வன்முறையை தூண்டியதாக மகாராஷ்டிர அரசு புனையப்பட்ட குற்றச்சாட்டில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது. இதிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி ஆனந்த் தெல்தும்ப்டே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். கடந்த திங்கள்கிழமை தெல்தும்ப்டே-வின் மனுவை நிராகரித்தது நீதிமன்றம். நான்கு வாரங்களுக்கு அவரை கைது செய்ய தடையும் விதித்தது. இந்நிலையில் தான் கைதாகும் சூழலே அதிகமாக உள்ளது என தெரிவிக்கும் தெல்தும்ப்டே, தனக்கு ஆதரவளிக்கும்படி பொதுமக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடிதத்தின் தமிழாக்கம் இங்கே…
“புனே காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட என்மீதான பொய்யான முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடி செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு ஜனவரி 14-ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது. இதுபற்றி ஊடகங்கள் வாயிலாக நீங்கள் அறிந்திருப்பீர்கள். நல்லவேளையாக, பிணை பெறும் பொருட்டு எனக்கு நான்கு வார கால அவகாசமும் நீதிமன்றம் அளித்திருக்கிறது.
காவல்துறை சொன்ன குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் புனையப்பட்டவை என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுவிடும் என இதுவரை உறுதியாக நம்பிக்கொண்டிருந்தேன். அதனால் உங்களிடம் பேச வேண்டிய தேவையிருக்காது என கருதினேன்.
ஆனால், இப்போது என்னுடைய நம்பிக்கை முற்றிலும் நொறுங்கியிருக்கிற நிலையில் புனே நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றம் வரை பிணையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். உடனடி கைதிலிருந்து என்னைக் காப்பாற்ற, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடமிருந்து ஆதரவு பிரச்சாரத்தை கட்டமைக்கும் தேவை எழுந்துள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் கைதானால் பல ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவிக்க நேரிடும் என்பதை நம்மில் பலர் அறிந்திருக்க முடியாது. கொடுஞ்செயல்கள் புரிந்த குற்றவாளிகூட ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்று தப்பிவிட முடியும். ஆனால், அரசியல்வாதிகளுக்காக வேலை செய்யும் காவல்துறை, அப்பாவிகளுக்கு எதிராக தங்களிடம் வலுவான ஆதாரம் இருப்பதாகக் கூறினால், அந்த நபர் ஆண்டு கணக்கில் சிறையில் இருக்க நேரிடும்.
என்னைப் பொறுத்தவரை இந்தக் கைது என்பது கடுமையான சிறை வாழ்க்கை மட்டுமல்ல, அது என்னுடைய உடலில் ஒரு பகுதியாகிவிட்ட லேப் டாப் – இடமிருந்து என்னை பிரித்து வைக்கும், என்னுடைய வாழ்வின் பகுதியாக உள்ள நூலகத்திடமிருந்து என்னை பிரித்துவிடும். பதிப்பகத்தாரிடம் தருவதாக ஒப்புக்கொண்ட பாதி முடிக்கப்படாத நூலின் பிரதிகள், முடிக்கப்படாமல் வெவ்வேறு கட்டங்களில் உள்ள என்னுடைய ஆய்வுத்தாள்கள், என் தொழில்முறை நற்பெயரை நம்பி தங்களுடைய எதிர்காலத்தை பணயம் வைத்திருக்கும் மாணவர்கள், என்னுடைய கல்வி நிறுவனம் (கோவா இன்ஸ்ட்டியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்) என்னை நம்பி பல வசதிகளை செய்துகொடுத்திருக்கிறது. சமீபத்தில் என்னை நிர்வாகக்குழுவில் சேர்த்துள்ளது, மேலும் எண்ணற்ற நண்பர்கள் மற்றும் என்னுடைய குடும்பத்திடமிருந்தும் இந்த கைது என்னை பிரித்துவிடும். பாபாசாகேப் அம்பேத்கரின் பேத்தியான என்னுடைய மனைவி, கடந்த ஆகஸ்டு மாதத்திலிருந்து, எனக்கு நடந்துகொண்டிருப்பவற்றை அறிந்து மிகுந்த துயருற்றிருக்கிறார்.
ஏழ்மையிலும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வருகிற நான், அறிவார்ந்த சாதனைகள் மூலம் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் தேர்ச்சி பெற்றேன். என்னை சூழ்ந்துள்ள சமூக முரண்பாடுகளை கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் மிகப்பெரிய கல்வி நிறுவனமான அகமதாபாத் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் படித்த எனக்கு, ஆடம்பரமான வாழ்க்கை எளிதாகவே கிடைத்திருக்கும்.
இருப்பினும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான உணர்வுடன், குடும்பத்தை இயக்குவதற்கான பொருளீட்டினால் போதும் என முடிவு செய்து, என்னுடைய நேரத்தை அறிவார்ந்த பங்களிப்பு செய்வதற்கு ஒதுக்கினேன். இந்த உலகத்தை சற்றே மேம்படுத்த என்னால் சாத்தியமானது இதுதான். இந்த உள்ளுணர்வின் காரணமாக, என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நான் இயல்பாக ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு போன்ற அமைப்புகளில் சேர்ந்து இயங்கத் தொடங்கினேன். இப்போது இந்த இயக்கத்தின் பொது செயலாளராகவும் உள்ளேன். கல்வி உரிமைகளுக்கான அனைத்திந்திய மன்றத்தின் தலைமை உறுப்பினராகவும் உள்ளேன். என்னுடைய எழுத்துக்களிலோ அல்லது சுயநலமற்ற செயல்பாடுகளிலோ கடுகளவும் சட்டவிரோத நடவடிக்கை இருந்ததில்லை.
அதுபோல, என்னுடைய முழு கல்வி பணியிலும் நாற்பதாண்டு கால பெருநிறுவன பணியிலும் சிறு களங்கமும் இல்லாமல் நேர்மைக்கான உயர்ந்த முன்னுதாரணமாக இருந்திருக்கிறேன். எனவே, எந்த நாட்டுக்காக என்னுடைய தொழில்முறை வாழ்க்கை முழுவதும் உழைத்தேனோ அதே நாட்டின் அரசு இயந்திரம் எனக்கு எதிராகத் திரும்பும் என்று மோசமான கனவிலும்கூட நான் நினைத்து பார்த்ததில்லை.
பீமா கோரேகான் நிகழ்வு.
இந்த நாட்டை சமத்துவமற்ற உலகமாக மாற்றிக்கொண்டிருக்கும் திருடர்களையும் கொள்ளையர்களையும் பாதுகாக்கும் அரசு இயந்திரம், அப்பாவி மக்களை குற்றவாளிகளாக்கி பழிவாங்குகிறது என்பது மட்டுமல்ல, டிசம்பர் 31, 2017-ஆம் ஆண்டு புனேயில் நடந்த எல்கர் பரிஷத் நிகழ்வை குற்றப்பின்னணி உடையதாகவும் மாற்றிவிட்டது. இதன் மூலம் மாற்றுக்குரலை ஒலிக்கும் குறிப்பிட்ட மனித உரிமை பாதுகாவலர்கள், அறிவு ஜீவிகள் மற்றும் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னணியாளர்களை சிறையில் அடைக்கப்பார்க்கிறது. இது முன்னெப்போதும் இல்லாத வெளிப்படையாக மேற்கொண்டிருக்கும் அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.
சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவில், ஜனநாயகத்தின் அத்தனை கண்ணியத்தையும் பின் தள்ளிவிட்டு அரசை விமர்சிப்பவர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு சுமத்தப்படும் மிக மோசமான சதி குற்றச்சாட்டு இதுவாகத்தான் இருக்கும்.
மிக மோசமான சதி
உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.பீ. சாவந்த் மற்றும் மும்பை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பீ.ஜி. கோல்சே பட்டேல் ஆகியோர் 1818-ஆம் ஆண்டு பீமா கோரேகானில் நடந்த ஆங்கிலோ – மராத்தா போரின் 200-வது ஆண்டை நினைவு கூறும்வகையில் தற்போது நடந்துகொண்டிருக்கும் பாஜக ஆட்சியின் மத மற்றும் சாதி ரீதியிலான கொள்கைகளை எதிர்க்க மக்களைத் திரட்டும் யோசனையை முன்வைத்தனர். அவர்கள் செயல்பாட்டாளர்களையும் முற்போக்கு அறிவுஜீவிகளையும் இந்த யோசனையை திட்டமிட்டு செய்ய அழைத்தனர்.
எனக்கும் ஒருவரின் மூலம் சாவந்த் அழைப்பு விடுத்தார், கோல்சே பட்டேலும் பிறகு அழைத்தார். கல்விப் பணிகள் இருந்தமையால் அந்தக் கூட்டத்துக்குச் செல்ல முடியவில்லை என வருத்தம் தெரிவித்திருந்தேன். ஆனால், நிகழ்வின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்க அழைத்திருந்த அவருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டேன். எல்கர் பரிஷத் தொடர்பான வாட்ஸப் துண்டுபிரசுரத்தை பார்க்கும் வரை என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது.
பேஷ்வாக்களின் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்த மகர் வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவிடத்தில் அவர்களின் தியாகத்தை நினைவுகூற நான் ஆதரவாக இருந்தேன். அதே நேரத்தில், பேஷ்வாக்களின் பார்ப்பனிய அடக்குமுறைக்கு எதிராக பீமா கோரேகானில் போரிட்ட மகர் வீரர்களின் வெற்றியாக எல்கர் பரிஷத் காட்டப்பட்டதில் எனக்கு சங்கடம் இருந்தது.
வரலாற்றை இப்படி சிதைத்து படிப்பது, தலித்துகளை அடையாள அரசியலுக்குள் தள்ளி, பரந்துபட்ட மக்களுடன் அவர்களை ஒன்றிணைப்பதை மேலும் கடினமாக்கும் என நான் கருதினேன். இதையொட்டி த வயரில் நான் எழுதிய கட்டுரை தலித்துகளிடையே கோபத்தை உண்டாக்கியது. அதன் பிறகு, இந்த முழு விவகாரத்தையும் நான் மீண்டும் சிந்தித்து என்னுடைய முடிவில் ஒரு உண்மையான அறிவுஜீவிக்குரிய தன்மையுடன் நின்றேன்.
தற்செயலாக, இந்தக் கட்டுரை, அதற்கு பதிலளிக்கிறது. யாரோ ஒருவருக்காக தலித்துகளை தூண்டிவிடுகிறேன் என்ற குற்றச்சாட்டை மறுப்பதாக என்னுடைய கருத்தை மறுபரிசீலனை செய்திருக்கிறேன். ஆனால், பகுத்தறிவு முதன்மையாக இல்லாத இடத்தில், இத்தகைய பகுப்பாய்வுகள் அரசு அல்லது போலிசுடனான இடைவெளிகளை குறைக்க உதவாது.
தலித்துகளுடன் முன்னெப்போதும் ஒன்றிணைந்திராத மராத்தா அமைப்புகள் உள்பட 250-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த நிகழ்வில் பங்கெடுத்தன.
மராத்தா பேரணி.
2014-ஆம் ஆண்டு பார்ப்பன முதலமைச்சரின் கீழ், பாஜக – சிவ சேனா இணைந்து மாநிலத்தில் அரசு அமைத்தபின், மராத்தாக்கள் தங்களுடைய அதிருப்தியை வெவ்வேறு விதங்களில் காட்டத் தொடங்கினர். மராத்தாக்கள் மிகப்பெரும் பேரணிகளை நடத்தினர். அப்படிப்பட்ட பேரணி ஒன்றில் விரும்பத்தகாத நிகழ்வொன்று நடந்தது. 2016-ஆம் ஆண்டு கோர்பாடி என்ற இடத்தில் நடந்த பேரணியில் மராத்தி சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். சிறுமியை வன்கொடுமை செய்தவர்களில் ஒரு தலித்தும் இருந்தார். நிர்வாகம் உடனடியாக செயல்பட்டது. பாதிக்கப்பட்டவருக்கான சட்டரீதியான நீதி, பட்டியல் இன மற்றும் பழங்குடியினருக்கான எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதில் வந்து முடிந்தது.
இதுபோன்ற பெருந்திரளான மக்கள் திரட்டல் மூலம், இடஒதுக்கீடு கேட்க மராத்தாக்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். தலித்துகளுடன் ஒன்றிணைந்தால்தான் பார்ப்பன அரசை அகற்ற முடியும் என மராத்தாக்கள் புரிந்துகொள்ள தொடங்கினார்கள். இது மராத்தாக்களின் இளைஞர் அமைப்புகள், எல்கர் பரிஷத் நிகழ்வில் பங்கேற்றபோது ‘பேஷ்வாக்களை புதையுங்கள்’ என்னும் முழக்கத்தில் எதிரொலித்தது.
இது வெறும் குறியீட்டு முழக்கமாக இருந்தாலும் பாஜகவின் வளைக்குள் விழும் அபாயத்தை உண்டாக்கியது. கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்களும் மராத்தாக்களாக இருந்தனர். அரசு அதிகாரத்தில் தீவிர பற்றுதலுடன் இருந்த பாஜகவுக்கு அது பயத்தை கொடுத்தது. மிலிந்த் எக்போடேயின் சமஸ்தா ஹிந்துத்துவா அகாடி மற்றும் சாம்பாஜி பிடேயின் சிவ் சக்ரபதி ப்ராசிஸ்தான் ஆகியவற்றில் உள்ள தன்னுடைய ஏஜெண்டுகள் மூலம் தலித்துகள் மற்றும் மராத்தாக்களுக்கிடையே பிரச்சினையை உண்டாக்க திட்டமிட்டது பாஜக. சிவாஜியின் மகனான சம்போஜி மகராஜின் சமாதி, பீமா கொரேகானிலிருந்து 4 கி.மீ. தள்ளியிருக்கிறது. இதை வைத்து ஒரு சர்ச்சையை உருவாக்கினார்கள்.
மொகலாய சக்ரவர்த்தி அவுரங்க சீப், சம்பாஜியை கொன்று துண்டுத்துண்டாக உடலை வெட்டி போட்டதாகவும் கோவிந்த மகர் என்பவர் உடலின் பாகங்களை எடுத்து, சம்போஜிக்கு மரியாதைக்குரிய இறுதிச் சடங்கை செய்ததாகவும் 300 ஆண்டு கால பிரபலமான வரலாறு சொல்கிறது. தன்னுடைய நிலத்தில் சம்போஜிக்கு நினைவிடம் எழுப்பினார் கோவிந்த மகர். அவர் இறந்த பின் சம்போஜிக்கு அருகிலேயே அவருக்கும் நினைவிடம் எழுப்பியுள்ளது அவருடைய குடும்பம்.
சூரத்தில் நடைபெற்ற சிவாஜி ஜெயந்தி விழாவில்…
மேலே சொன்ன இரண்டு சதிகாரர்களும் ஒரு புனைகதையை சொன்னார்கள். அதாவது சம்போஜிக்கு நினைவிடம் கட்டியது ‘சிவாலே’ என்ற மாரத்தி குடும்பம், கோவிந்த் மகர் அல்ல என்பதே அந்தக் கதை. இது மராத்தாக்களை தலித்துகளுக்கு எதிராக திருப்பியது. இந்தப் பிரச்சினையை பயன்படுத்தி மராத்தாக்களை வாடு படாட்ரூக் என்ற இடத்தில், 2018 ஜனவரி 1-ஆம் தேதி பீமா கொரேகானில் கூட இருந்த தலித்துகளுக்கு எதிராகத் தூண்டிவிட பார்த்தார்கள். இதற்கான ஏற்பாடுகள் சுற்றுப்புற கிராமங்களில் வெளிப்படையாக தெரிந்தது. ஆனால், நிர்வாகம் தெரியாதுபோல் நடந்துகொண்டது.
2017, டிசம்பர் 29-ஆம் தேதி, கோவிந்த மகரின் சமாதியும் அங்கிருந்த தகவல் பலகையும் சேதப்படுத்தப்பட்டிருந்ததை தலித்துகள் கண்டார்கள். இது முன்பே திட்டமிட்டதுபோல சமூகங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், சதிகாரர்களின் துரதிருஷ்டம் காரணமாக, அடுத்த நாள் கிராமத்தினர் ஒன்றாக இணைந்தனர்.
திட்டமிட்டதுபோல, 2017 டிசம்பர் 31-ஆம் தேதி ஷானிவர்வாடா என்ற இடத்தில் எல்கர் பரிஷத் நிகழ்வு தொடங்கியது. இந்த மாநாட்டின் முடிவில், குழுமியிருந்த மக்கள் பாஜகவுக்கு எப்போதும் வாக்களிக்க மாட்டோம் என்றும் இந்தியாவின் அரசியலமைப்பை காப்போம் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மாநாட்டின் அத்தனை நிகழ்வும் காவல்துறையாலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களாலும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.
மாநாட்டில் வேறு எதுவும் நடக்கவில்லை. மாநாட்டின் அனைத்து பிரதிநிதிகளும் அமைதியாக கலைந்து சென்றனர். என்னுடைய நெருங்கிய நண்பரின் மகனின் திருமணத்துக்காக டிசம்பர் 31-ஆம் தேதி காலை 10.55 மணிக்கு புனே சென்றேன்.
புனேயில் ஸ்ரேயால் ஹோட்டலில் தங்கியிருந்து, திருமணத்துக்குச் சென்றோம். அடுத்த நாள் இரவு 12.40 மணிக்கு ஹோட்டலிலிருந்து வெளியேறி கோவா சென்றோம். புனேவுக்கு வந்த காரணத்தால் என்னுடைய மனைவி அங்கிருந்த உறவினர்கள் சுஜாத் அம்பேத்கர் மற்றும் அஞ்சலி அம்பேத்கரை காண விரும்பினார். செல்லும் வழியில் கார் டயரை மாற்றுவதற்காக 5-10 நிமிடங்கள் அலைந்திருபோம்.
அதிருஷ்டவசமாக, எல்கர் பரிஷத் நிகழ்வில் முழுநேரமும் இல்லை என்பதற்கு என்னிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. புனேவுக்கு வந்த பிறகு, நான் முழுநேரமும் மாநாட்டில் இருந்திருக்க முடியும். ஆனால், மாநாட்டின் பொருளில் எனக்கு உவப்பில்லை என்பதோடு பணிக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் இருந்ததால், நான் கிளம்பிவிட்டேன்.
பீமா கொரேகான் வெற்றித் தூண்.
2018, ஜனவரி 1-ஆம் தேதி, பீமா கொரேகானின் தலித்துகள் ஒன்று கூடிய போது, இந்துத்துவ அடியாட்கள் திட்டமிட்டதுபோல கூடினார்கள். பீமா கொரேகான் நினைவிடத்துக்குச் செல்லும் தெருவில் உள்ள வீடுகளின் மாடிகளில் ஏறி கற்களால் தாக்கத் தொடங்கினார்கள், மக்களை அடிக்கத் தொடங்கினார்கள்; கடைகளை எரித்தார்கள். போதிய காவலர்கள் இல்லாத நிலையில் நடப்பதை இருந்த சில காவலர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இந்துத்துவ குண்டர்களின் தாக்குதலுக்கு அரசு நிர்வாகமும் உடந்தையாக இருப்பது தெளிவாகத் தெரிந்தது. இந்தப் பகுதியில் சில குழப்பங்கள் நடந்துவருவதை பொதுமக்களும் அறிந்திருந்தனர்.
2017 டிசம்பர் 29-ஆம் தேதி சம்பாஜியின் சமாதியில் நடந்த நிகழ்வுகள் இந்த வதந்திகளை உறுதிபடுத்தின. ஆனால், நிர்வாகம் அதைக் கண்டுகொள்ளாமல் கலவரங்களை நிகழ்த்தி பார்த்தது. அப்போது எடுக்கப்பட்டு வாட்ஸப்பில் வெளியான வீடியோக்களில் காவி கொடி பிடித்தவர்கள் எக்போடே மற்றும் பிண்டே-இன் பெயர்களைச் சொல்லி முழக்கங்கள் எழுப்பியதையும் தலித்துகளை அடித்து விரட்டுவதையும் காட்டின. பல தலித்துகள் காயமுற்றனர், அவர்களுடைய வாகனங்கள் சேதமாக்கப்பட்டன; கடைகள் எரித்து சாம்பலாக்கப்பட்டன; இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.
எல்கர் பரிஷத்தின் போது என்ன நடந்தது என்பது பற்றி எனக்கு முழுமையாக எதுவும் தெரியவில்லை. தாக்குதல் நடந்த ஜனவரி 1-ஆம் தேதி மதியம் வரை எனக்கு எதுவும் தெரியாது. அதன்பிறகு, த வயரின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் இமெயில் வழியாக தெளிவாக சொன்னபிறகுதான் அங்கு நடந்ததை அறிந்தேன். அதன்பிறகு ஜனவரி 2-ஆம் தேதி இணையதளத்தில் கட்டுரை எழுதினேன்.
போலீசின் கை
2018 ஜனவரி 2-ஆம் தேதி, பகுஜன் ரிபப்ளிக் சோசியலிஸ்ட் பார்டி என்ற கட்சியின் உறுப்பினரும் சமூக செயல்பாட்டாளருமான அனிதா ரவீந்திர சால்வே, முந்தைய தினம் நடத்தப்பட்ட தலித்துகள் மீதான தாக்குதலுக்கு எக்போடே மற்றும் பீடே என்ற இரண்டு கயவர்கள்தான் காரணம் என சிக்ராபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜனவரி 3-ஆம் தேதி பிரகாஷ் அம்பேத்கர், மகாராஷ்டிராவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தார். ஜனவரி 4-ஆம் தேதி எந்தவித வேண்டத்தகாத சம்பவங்களும் நிகழாமல் முழு அடைப்பு நடந்தது. அதன்பிறகு, வன்முறையில் ஈடுபட்டதாக தலித் இளைஞர்களை போலீசு கைது செய்யத் தொடங்கியது.
பீமா கொரேகான் : இலட்சக்கணக்கில் திரண்டு வந்த மக்கள் கூட்டம்
2018 ஜனவரி 8-ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்தவரும் சம்பாஜி பீடேவின் அடியாளுமான துஷார் தம்காடே, கபீர் கலா மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த செயல்பாட்டாளர்கள் மீது எல்கர் பரிசாத் நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தார். எல்கர் பரிசத்தில் பேசப்பட்ட சர்ச்சைக்குரிய பேச்சுக்களே ஜனவரி 1-ஆம் தேதி வன்முறையை தூண்டின என அதில் குற்றம்சாட்டியிருந்தார். அபத்தமான குற்றச்சாட்டுக்கு அதுவே முகாந்திரமாக அமைந்தது.
முதலாவதாக, எல்கர் பரிசத்தில் என்ன பேசப்பட்டது என்பதற்கு போலீசாரே சாட்சியாக இருந்தனர், அவர்களே எடுத்த வீடியோவில் அதை சரிபார்த்திருக்கலாம். அதில் உண்மையாகவே சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் இருந்திருந்தால், அவர்களாகவே பேசியவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கலாம். யாரோ ஒரு நபர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் வரை காத்திருக்க வேண்டிய தேவையே இல்லை.
அடுத்து, எல்கர் பரிசத்தில் ஆத்திரமூட்டும் படியான பேச்சு தலித்துக்களுக்காக மட்டுமே பேசப்பட்டதாக வைத்துக்கொண்டால், அவர்கள் அடிவாங்கியிருக்க மாட்டார்கள். இந்த கலவரத்தில் ஒரு இளைஞர் தன் உயிரை இழந்தார்; அது ஒரு தலித் உயிர். ஆனாலும்கூட, காவலர்கள் திட்டமிட்ட திரைக்கதை செயல்படுத்த முனைந்தார்கள்.
அவர்கள் பெயர்களை வைத்துக்கொண்டு வீடுகளில் சோதனையிட்டார்கள். எல்கர் பரிசத்தின் ஒருங்கிணைப்பாளர்களான நீதிபதி கோல்சே பட்டேல் மற்றும் நீதிபதி பி.பீ.சாவந்த் ஆகியோர் வெளிப்படையாக இந்த நிகழ்வுக்கு எந்தவித நிதியுதவியும் தேவையில்லை என அறிவித்தபோதும் கூட, எல்கார் பரிசத் நிகழ்வுக்கு மாவோயிஸ்டுகள் நிதியுதவி செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக மறைமுகமாக சொல்லத் தொடங்கினார்கள்.
இதுநாள் வரை, இந்த நிகழ்வை மாவோயிஸ்டுகளின் மிகப் பெரும் சதித்திட்டமாகச் சொல்லி இந்த பொய்யை நம்பும்படி நீதிமன்றத்திடம் சொல்லி வருகிறார்கள். நிகழ்ச்சி ஏற்பாடு செய்த இரண்டு நீதிபதிகளையும் விசாரிக்கவில்லை. குற்றப்பத்திரிகையில் நீதிபதி சாவந்த் கூறியதாக ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்கள், அதை அவர் பகிரங்கமாக மறுத்துவிட்டார். இத்தகைய கடுமையான குற்றமும்கூட நீதிமன்றங்களால் புறக்கணிக்கப்படுகிறது.
மாவோயிஸ்டுகள் நிதியளிக்கிறார்கள் என்கிற கோட்பாட்டை சாக்காகச் சொல்லி, புனே காவல்துறை, நாக்பூர், மும்பை மற்றும் டெல்லி காவல்துறையுடன் இணைந்து ஐந்து செயல்பாட்டாளர்களின் வீடுகளில் 2018 ஜூன் 6-ஆம் தேதி சோதனை நடத்தி, கைதும் செய்தது. அவர்களுக்கும் எல்கர் பரிசத்துக்கும் எந்த வழியிலும் தொடர்பே இல்லை.
இந்த கைதுகளுக்குப் பின், காவல்துறை கதைகளை புனைய ஆரம்பித்தது. பீமா கொரேகான் நினைவிடத்தில் நடந்த வன்முறைக்கு இந்த ஐந்து நபர்களே காரணம் என்பதில் தொடங்கி, நக்சல் செயல்பாட்டுக்கு அவர்கள் உதவுகிறார்கள், பிரதமர் நரேந்திர மோடியை ‘ராஜீவ் காந்தி மாதிரியான’ படுகொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதுவரை பலகதைகளை போலீசு சொல்லிக்கொண்டிருக்கிறது. வாதாடுவதற்கு எந்தவித வாய்ப்பும் அளிக்காத, குற்றம்சாட்டப்பட்டவரை பல ஆண்டுகள் சிறையில் அடைக்கக்கூடிய கொடூரமான, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தை செயல்படுத்த போலீசால் இந்தக் கதைகள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டன.
பொதுவாக, இதுபோன்ற சோதனைகளில் பாதிக்கப்பட்டவர்களின் எலக்ட்ரானிக் பொருட்களை கையகப்படுத்தி, அதன் மூலம் தங்களுக்கு என்ன வேண்டுமோ அதை போலீசார் சொல்லிக் கொள்வார்கள். ஆனால், இந்த சோதனைகள் விசித்திரமாக இருந்தன. டெல்லி, நாக்பூர், மும்பையில் சோதனை செய்யும் போலீசார் புனேவிலிருந்து இரண்டு சாட்சிகளை கையோடு அழைத்து வந்தது, சோதனைக்கான செயல்முறையே கேலி செய்வதாக இருந்தது. அந்த வீட்டில் இருப்பவர்களை ஒரு அறையில் அடைத்து வைத்துவிட்டு, இன்னொரு அறையிலிருந்து சீல் இடப்பட்ட கைப்பற்றப்பட்ட பொருட்களை கொண்டு வந்தார்கள்.
வெர்னோம் கொன்சாவே -இன் வீட்டை சோதனையிட்டபோது, அவருடைய மனைவி சூசன் ஆபிரஹாம், வழக்கறிஞராக இருப்பவர், இந்த சோதனை முறைகளை கண்கூடாக பார்த்திருக்கிறார்கள். போலீசாரே கம்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களோடு வந்ததாக அவர் தெரிவிக்கிறார். தங்களுடைய சோதனையை வீடியோ பதிவு செய்திருப்பதாக நீதிமன்றத்தில் போலீசாரே தெரிவிக்கின்றனர், அதையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
எலக்ட்ரானிக் சாதனங்களில் தொலைவிலிருந்து இயக்கி மாற்றமுடியும், சில நொடிகளில் எண்ணற்ற கோப்புகளை ஏற்ற முடியும் என்பதை நீதிபதிகள் கருத்தில் கொள்ளவே இல்லை. எலக்ட்ரானிக் சாதனங்களின் உண்மைத்தன்மையை வீடியோ பதிவு மூலம் நிரூபிக்க முடியாது. தகவல் தொடர்பு துறையில் எனக்கு நிபுணத்துவம் உள்ளது என்பதால் நானே இதை மோசடி என நிறுவ முடியும்.
எலக்ட்ரானிக் சாதனங்களின் உண்மைத்தன்மையை நிரூபிக்க நீண்ட காலம் ஆகும். வழக்கு விசாரணை என்ற நீதிமன்றம் சொன்னாலும் வழக்கு விசாரணை நடக்கும் பல வருடங்களில் அப்பாவி நபர்களும் அவர்களுடைய குடும்பமும் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கும்.
கவுதம் நவ்லகா கைது செய்யப்பட்டபோது…
கைதான ஒருவரின் கம்யூட்டரிலிருந்து மாவோயிஸ்டுகள் எழுதிய கடிதங்களை கைப்பற்றி இருப்பதாக (இமெயில்கள் அல்ல; ஏனெனில் மெயில்கள் ஏற்கத்தக்கவை அல்ல) போலீசு கூறுகிறது. உண்மையான பெயர்கள், அவர்களுடைய தொலைபேசி எண்கள் என பல வினோதங்கள், கைப்பற்றதாக சொல்லப்பட்டு அளிக்கப்பட்ட கடிதங்கங்களில் உள்ளன.
இந்தக் கடிதங்கள் முற்றிலும் போலீசால் புனையப்பட்டவை என கடிதத்தின் வார்த்தை பிரயோகங்கள் சொல்கின்றன. அதன் அடிப்படையில், மாவோயிஸ்டுகள் ஒரு அரசாங்க அமைப்பை நடத்துகின்றனர், அந்த அமைப்பு தங்களுடைய திட்டங்கள் குறித்து விளக்கமாக எழுதுகிறது. அதோடு, தங்கள் கடிதங்களை பெறுபவர்களிடம் ரசீதுகளை பெற்று தணிக்கைக்காக ஆவணப்படுத்தவும் செய்கின்றது. அவர்கள் தங்களுடைய ரகசியத்துக்காக பெயர் பெற்றவர்கள், மனிதர்களை மட்டுமே தொடர்புக்கு பயன்படுத்துகிறவர்கள், செய்திகளை படித்த பிறகு அவற்றை அழிக்க வலியுறுத்துகிறவர்கள். அப்படிப்பட்ட அமைப்பு அவர்களுடைய நிர்வாகிகளுடன் கடிதங்கள் வழியாக தொடர்பு கொள்ள முடியாது.
பொது தளத்துக்கு வந்த இந்தக் கடிதங்களை ஏராளமான மக்கள் அலசி ஆராய்ந்து இவற்றின் போலித்தன்மையை தோலுரித்துவிட்டனர். இதுபோன்ற அமைப்புகளை படித்து வரும் மோதல் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் (Institute of Conflict Management) செயல் இயக்குனராக உள்ள அஜய் சகானி என்ற நிபுணர், இந்தக் கடிதங்கள் போலியானவை என சொல்லிவிட்டார்.
ரோமிலா தாப்பர் உள்ளிட்ட அறிவுஜீவிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் மாற்றுக்கருத்து சொன்ன ஒரே ஒரு நீதிபதியான சந்திர சூட், போலீசின் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட கடிதங்களை ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு இந்த முழு வழக்கையும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்றார். ஆனால், வினோதமான சட்டத்தின் செயல்முறை இந்த சர்ச்சைக்குரிய ஆதாரத்தை நகர்த்த போதுமானதாக இல்லை. அதே நேரத்தில் அப்பாவி மக்களின் வாழ்க்கையை தியாகம் செய்ய இந்த சட்டத்தின் செயல்முறை தயாராகிவிட்டது. உண்மையில் இது தண்டனையைக் காட்டிலும் மோசமானது.
இந்தக் கடிதங்களில் மாவோயிஸ்டு திட்டங்களின் கூட்டாளிகளாக ராகுல் காந்தி, பிரகாஷ் அம்பேத்கர், திக்விஜய் சிங் போன்றோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இந்தத் தலைவர்களை மோசமான முறையில் சித்தரிக்க அரசியல் நோக்கத்தோடு இது செய்யப்பட்டிருக்கிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. போலீசோ, நீதிமன்றமோ இந்த பிரபலங்களிடம் என்ன நடந்தது என்பது குறித்து சோதிக்கவும் விரும்பவில்லை, கேட்கவும் இல்லை.
எனக்கெதிரான வினோத குற்றச்சாட்டுகள்!
ஆறு செயல்பாட்டாளர்களுடன் சேர்த்து, (அதில் ஐந்து பேர் ஆகஸ்டு 28-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்) என் வீட்டையும் புனே போலீசு சோதனை செய்தது. நாங்கள் இல்லாதபோது, கல்வி நிறுவனத்தில் இருந்த பாதுகாவலரிடம் மாற்று சாவியைப் பெற்று வாரண்ட் ஏதும் இல்லாமல் என்னுடைய வீட்டை அவர்கள் திறந்துள்ளனர்.
என் வீட்டின் உள்புறத்தை வீடியோவில் பதிவு செய்து, பிறகு பூட்டிவிட்டதாக போலீசு தகவலில் எழுதப்பட்டுள்ளது.
அப்போது நாங்கள் மும்பையில் இருந்தோம். டிவி சேனல்கள் எங்கள் வீட்டைத் திறந்து சோதனையிட்டதை முக்கிய செய்தியாக அறிவித்தன. அப்போதுதான் எங்களுக்கு இந்த விசயம் தெரிய வந்தது. என்னுடைய மனைவி உடனடியாக விமானம் மூலம் சென்றார், பிகோலிம் காவல் நிலையத்தில் புகார் அளித்து, போலீசு ஏதேனும் கேட்க வேண்டுமெனில் எங்களுடைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளச் சொல்லி எண்களை அளித்துவிட்டு வந்தார்.
ஆகஸ்டு 31-ஆம் தேதி ஏடிஜிபி பர்மேந்தர் சிங், மேலும் சிலருடன் புனேயில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது என்னுடைய தொடர்பு இருப்பதாகக்கூறி அதற்கு ஆதாரமாக ஒரு கடிதத்தையும் வெளியிட்டார். அந்தக் கடிதம் மாவோயிஸ்ட் என சொல்லப்படுபவரால் எழுதப்பட்டது, அவரை என்னை ‘காம். ஆனந்த்’ என விளித்து 2018-ஆம் ஆண்டு நடந்த பாரீஸ் கருத்தரங்கு குறித்து பேசுகிறார், அது உண்மை போலவே உள்ளது. கல்வி தொடர்பான அந்தக் கருத்தரங்கில் உலகெங்கிலும் உள்ள மற்ற கல்வியாளர்களைப் போல கலந்துகொண்டேன். கருத்தரங்கை பாரீசில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்தது.
மாவோயிஸ்டுகள் இந்த பல்கலைக்கழகத்துக்கு பணம் கொடுத்து என்னை கருத்தரங்கில் பேச அழைத்திருந்தார்கள் என கடிதம் விவரிப்பது நகைப்புக்குரியது. அதோடு, அவர்கள் ‘காம். எடினே பாலிபர்’ என்ற மதிப்பிற்குரிய பிரெஞ்சு மார்க்சிய ஆய்வாளருடன் சந்திப்பை ஏற்பாடு செய்ததாகவும் அப்போது அவர் என்னையும் ‘காம். அனுபமா ராவ் மற்றும் சைலஜா பேய்க்’ (பர்னார்டு கல்லூரி மற்றும் சின்சினாடி பல்கலைக்கழக பேராசிரியர்கள்) ஆகியோரையும் நேர்காணல் செய்வார் எனவும் அவர்கள் தாங்கள் பணியாற்றும் கல்லூரிகளில் என்னை பேச அழைப்பார் எனவும் கடிதம் சொல்கிறது.
என்டிடிவி-யிலிருந்து இந்தக் கடிதத்தைப் பெற்று பாலிபருக்கும் இந்த கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் லிசா லிங்கனுக்கும் இமெயிலில் அனுப்பி வைத்தேன். அவர்கள் இந்தக் கதையைப் படித்து அதிர்ச்சியானார்கள்; எனக்கு பதில் எழுதினார்கள். பாலிமர் கண்டனக் கடிதத்தை அனுப்பியதோடு, பிரெஞ்சு தூதரகத்துக்கும் இதுகுறித்து எழுதினார். லிங்கன் எப்படி இந்த கருத்தரங்குக்கு என்னை அழைத்தார் என்பது குறித்து விளக்கினார்.
உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் பரம்ஜித் சிங் மீது அவதூறு வழக்கு தொடுக்க முடிவு செய்தேன். செயல்முறையின் பகுதியாக மகாராஷ்டிர அரசுக்கு செப்டம்பர் 5-ஆம் தேதி கடிதம் எழுதி, அனுமதியும் கேட்டேன். இதுநாள் வரை அதுகுறித்து ஒரு பதிலும் இல்லை.
அதேவேளையில், என்மீது எந்த வழக்கும் இல்லாதபட்சத்தில், என்னுடைய கடிதம் அவர்களுக்கு குற்றவுணர்வை ஏற்படுத்தியிருக்கலாம். எனவே, முதல் தகவல் அறிக்கையில் உள்ள என்னுடைய பெயரை நீக்குமாறு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். நீதிமன்ற அமர்வு என் மீதுள்ள குற்றச்சாட்டுகளின் பட்டியலை சமர்பிக்கச் சொல்லி போலீசுக்கு உத்தரவிட்டது. போலீசு தாக்கல் செய்த அஃபிடவிட்டில் என்மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டிருந்தன, ஐந்து நீண்ட கடிதங்களும் (மேலே விவரித்த ஒன்றும் அதில் அடங்கும்) சமர்பிக்கப்பட்டன. நாங்கள் அவர்களின் குற்றச்சாட்டுக்களை மறுத்தோம், கடிதங்கள் உண்மையென்று கொண்டால்கூடாமல் அதை வைத்து வழக்கு தொடுக்க முடியாது. அந்த நான்கு கடிதங்களும் இவைதான்…
முதல் கடிதம் யாரோ ஒருவர் யாருக்கோ எழுதியது. அதில் ஏதோ ஒரு ஆனந்த், அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2015-ஆம் ஆண்டு சென்னை ஐஐடி நிர்வாகம் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை அங்கீகரிக்க மறுத்தது செய்தியானது. நான் அப்போது கரக்பூரில் உள்ள ஐஐடி மேலாண்மை பள்ளியில் பேராசிரியராக பணியாற்றினேன். சென்னையிலிருந்து அது 2000 கிமீ தள்ளி இருக்கிறது. மாணவர்களை ஒருங்கிணைக்கும் தேவை இருந்திருந்தால் வெகு தூரத்தில் உள்ள ஐஐடி-யைக் காட்டிலும் என்னுடைய ஐஐடியிலேயே செய்திருப்பேன். இதுகுறித்து அறிந்த அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் நிறுவன உறுப்பினர், எனக்கும் அந்த அமைப்பு நிறுவப்பட்டதற்கும் அதனுடைய செயல்பாடுகளுக்கும் தொடர்பே இல்லை என கடிதம் எழுதினார்.
மாவோயிஸ்டுகள் எழுதியதாக கூறப்படும் கடிதம்
இரண்டாவது கடிதம், மீண்டும் யாரோ ஒருவர் யாருக்கோ எழுதிய கடிதத்தில் ஏதோ ஒரு ஆனந்த், அனுராத கண்டி மெமோரியல் கமிட்டியை சந்திப்பதை ’சிறந்த பரிந்துரை’யாக சொல்கிறார் என்கிறார். அந்த ஆனந்த் நானே என்று வைத்துக்கொண்டாலும், இன்னும் சில மதிப்பிற்குரிய நபர்களுடன் நானும் அந்த அறக்கட்டளையின் உறுப்பினராக இருக்கிறேன். அது பத்தாண்டுகளாக செயல்பட்டு வரும் பதிவு பெற்ற அமைப்பு, அதற்கு நிரந்த கணக்கு எண்ணும் வங்கி கணக்கும் உண்டு. சமீர் அமீன் மற்றும் ஏஞ்சலா டேவிஸ் போன்ற முக்கியமான ஆய்வாளர்களின் ஆய்வுரைகளை இந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து பத்திரிகை செய்திகளும் பரவலாக வந்துளது. இந்த அறக்கட்டளை அல்லது கமிட்டியின் கூட்டத்துக்கோ, ஆய்வுரைகளை கேட்கவோ என்னால் சமீப ஆண்டுகளில் போக முடியவில்லை. ஏனெனில் கடந்த பத்தாண்டுகளாக ஐஐடி கரக்பூரிலும் அதற்கடுத்து கோவாவிலும் என நான் தொலைவில் வசிக்கிறேன்.
மூன்றாவது கடிதத்தில், மீண்டும் யாரோ ஒருவர் யாருக்கோ எழுதிய கடிதத்தில் ஏதோ ஒரு ஆனந்த், 2018 ஏப்ரல் மாதம் கட்சிரோலியில் நடந்த என்கவுண்டர் குறித்து உண்மை அறியும் குழுவுக்கு பொறுப்பேற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது நானாகவே எடுத்துக்கொண்டாலும் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு கமிட்டியின் பொது செயலாளராக இருக்கும் என்னால், மனித உரிமை மீறல் நடந்திருக்கும் வழக்குகளில் உண்மை அறியும் குழு அமைக்க முடியும். ஆனால், இந்த குழுவை நான் அமைக்கவோ, பங்கேற்கவோ இல்லை என்பதே உண்மை. மகாராஷ்டிராவிலிருந்து தள்ளியிருந்தாலும் கடைசியாக பொது செயலாளராக இருந்த பி.ஏ. செபாஸ்டியனின் விருப்பத்தின் பேரில் நான் பொது செயலாளர் ஆனேன். உறுப்பினர்களும் அதை வலியுறுத்த அந்தப் பதவியில் தொடர்கிறேன்.
நான்காவது… ஒரு குறிப்பு, யாரோ ஒருவருடைய கணினியிலிருந்து கைப்பற்றப்பட்டது. அதில் சுரேந்தர் என்பவர் மிலிந்த் மூலமாக எனக்கு ரூ. 90 ஆயிரம் கொடுத்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. கற்பனை திறன் குறைந்த, அபத்தமான குற்றச்சாட்டு இது. ஒவ்வொரு மாதமும் அந்த அளவிலான பணத்தை வருடக்கணக்கில் வரியாக செலுத்தும் நான் பணம் பெறுகிறேன் என சொல்வது அபத்தமாக உள்ளது. அதோடு, இத்தகைய குறிப்பு சட்டத்தின் முன் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படாது.
போலீசு அஃபிடவிட்டில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் பதிலுக்கு பதில் மறுத்துவிட்டேன். ஆனால், இறுதியாக போலீசு ‘முத்திரை’ வைக்கப்பட்ட உறைகளில் நீதிபதிகளிடம் எதையோ அளித்தது. நீதிமன்றம் என்னுடைய மனுவை நிராகரித்தது. நான் அளித்த எந்த விளக்கத்தையும் ஏற்கவில்லை, என்னுடைய தனிப்பட்ட மதிப்பு மரியாதை எதையும் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. போலீசு சொன்னதற்கும் என்னுடைய சுயவிவரத்துக்கும் தொடர்பிருக்கிறதா என்பதையும் பார்க்கவில்லை.
என்னுடையது வினோதமான வழக்கு எனக் கருதி, நான் உச்சநீதிமன்றத்தை அணுகினேன். ஆனால், நீதிமன்றம், இந்த நிலையில் போலீசின் புலனாய்வில் தலையிட முடியாது எனக் கருதியது. கைதிலிருந்து தப்பிக்க பிணை பெறும்படி எனக்கு அறிவுறுத்தியது.
இப்போது இந்த வழக்கு மிக முக்கியமான கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது. என்னுடைய அப்பாவித்தனமான நம்பிக்கைகள் அனைத்தும் உடைந்து போயுள்ளன. நான் உடனடியாக கைது செய்யப்படலாம் என்பது துயரத்தைத் தருகிறது. என்னை போன்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே ஒன்பது பேர் சிறையில் இருக்கிறார்கள். சட்ட நடைமுறைகளால் அவர்கள் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். என்னைப் போல அல்லாமல், அவர்கள் உங்களிடம் உதவி கேட்கும் வாய்ப்பைப் பெறவில்லை. நீங்கள் எனக்கு ஆதரவாக என்னுடன் நிற்பது எனக்கு மட்டுமல்ல, என்னுடைய குடும்பத்துக்கும் ஆற்றலை அளிக்கும். அதோடு, இந்தியாவில் தங்களுக்கு எதிராக குரல் எழுப்பும் மக்களை சித்திரவதை செய்யும் பாசிச ஆட்சியாளர்களுக்கு செய்தியைச் சொல்லும்.
எனவே, தயவுசெய்து கையெழுத்து இயக்கத்தை ஒருங்கிணையுங்கள், அறிக்கைகளை வெளிவிடுங்கள், கட்டுரைகள் எழுதுங்கள் … உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு வழிமுறையில் இந்த படுமோசமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் எனக்கு ஆதரவளிக்கும் வகையிலும் பொதுமக்களின் சீற்றத்தை வெளிப்படுத்துங்கள்.”
சென்னை லயோலா கல்லூரியும், மாற்று ஊடக மையமும் இணைந்து ”வீதி விருது வழங்கும் விழா” என்கிற நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது. கடந்த ஜனவரி 19 மற்றும் 20-ம் தேதிகளில் இதன் ஆறாம் ஆண்டு விழா சென்னை லயோலா கல்லூரியில் நடத்தப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக ஓவியக் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் “கருத்துரிமை ஓவியங்கள்” எனும் தலைப்பில் சில ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாகவும், இதற்காக லயோலா கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் சார்பில் காவல் துறையினரிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று (ஜனவரி 21ம் தேதி) காலை 11:30 மணிக்கு காவல் துறையில் தான் ஒரு புகார் அளிக்கவிருப்பதாகவும், இதற்கு இந்து உணர்வாளர்கள் மற்றும் தேசபக்தர்கள் காவல்துறை அலுவலகத்திற்கு திரளாக திரண்டு வர வேண்டும் எனவும் பா.ஜ.கவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா டிவிட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.
பாரதமாதாவை, பாரதப் பிரதமரை, இந்து மதத்தை இழிவு படுத்தும் லயோலா கிறித்துவக் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு கொடுக்க டிஜிபி அலுவலகம் முன்பு 11.30 க்கு அனைத்து தேசபக்தர்கள் இந்து உணர்வாளர்கள் வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், இந்த விவகாரம் குறித்து பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசும் போது லயோலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி உள்ளார். பாரதிய ஜனதாவின் செய்தித் தொடர்பாளரான இழிபுகழ் நாராயணன் தரப்பில் இருந்தும் புகார் ஒன்று அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. சங்கி கும்பலோடு (சொல்வதெல்லாம் உண்மை புகழ்) லஷ்மி ராமகிருஷ்ணன், (குத்துவிளக்கு குத்துப் பாட்டு புகழ்) நடிகை கஸ்தூரி உள்ளிட்ட மாமிகளும் கைகோர்த்து லயோலா கல்லூரிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கம்பு சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
1 of 4
புகார் - 1
புகார் - 2
ஹிந்துக்கள்
பத்திரிகைகளுக்கு பேட்டி வேறு
தமிழக இந்துத்துவ கும்பலின் சார்பாக கூலிக்கு அமர்த்தப்பட்ட இணையப் பொறுக்கிகள் சிலர் #loyolacollage, #BanAntiHinduLoyola எனும் ஹேஷ்டேகின் கீழ் களமிறக்கி விடப்பட்டுள்ளனர். ”லயோலா கல்லூரியைத் தடை செய்ய வேண்டும்” “லயோலா கல்லூரியை மத்திய அரசின் யு.ஜி.சி தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்” “லயோலா கல்லூரி தமிழகத்தின் ஜே.என்.யூ” என்பதில் துவங்கி “லயோலா கல்லூரி நக்சல்களின் புகலிடம்” என்பது வரை விதவிதமாக வெறுப்புப் பிரச்சாரத்தைக் கையிலெடுத்துள்ளது இந்துத்துவாவின் இணைய கூலி கும்பல்.
இந்தப் பிரச்சாரத்திற்கு தமிழகத்தின் பொதுவான முற்போக்காளர்களும், பெரியாரிய மற்றும் திமுக ஆதரவு செயல்பாட்டாளர்களும் சமூக வலைத்தளத்தில் தன்னிச்சையான முறையில் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தை சங்கிகள் சமூக வலைத்தளத்தில் கிளப்பி சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் வெகுவிரைவில் அவர்களுக்கான பதிலடிகள் மேலும் கூர்மையடையும் என்பதை எதிர் பார்க்கலாம்.
பாஜகவின் தேசியச் செயலர் அறைகூவல் விடுத்ததும், ‘ஹிந்து’ உணர்வோடு ’திரளாகக்’ கலந்து கொண்ட ‘ஹிந்துக்கள்’ – மொத்தம் ஏஏஏஏஏழு பேர்
குறிப்பாக சங்கிகள் வைக்கும் குற்றச்சாட்டில் ஒன்று மேற்படி ஓவியங்கள் இந்து மதத்தை புண்படுத்துவதாக உள்ளது என்பதாகும். ஆனால், அவர்களே எடுத்துப் போடும் படங்களில் எந்த குறிப்பிட்ட கடவுளின் படங்குளும் இடம் பெறவில்லை என்பதை முதற்கட்டமாக இதற்கு எதிர்வினையாற்றுகிறவர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் சூலாயுதம், உடுக்கை உள்ளிட்ட சில குறியீடுகள் உள்ளன என்றாலும், அவை எதுவும் இந்து மதத்திற்கே உரியனவாக காப்புரிமை பெறப்பட்ட குறியீடுகள் அல்ல என்பதும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அடுத்ததாக வரையப்பட்டுள்ள ஓவியங்கள் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக இருக்கின்றன என்பது சங்கிகளின் ஆதங்கம். இதன் மூலம் அவர்கள் சொல்ல வருவது என்னவென்றால், மோடியோ மத்திய அரசோ விமர்சனத்திற்கெல்லாம் அப்பாற்பட்ட கடவுள்கள் என்பது தான். மோடியை விமர்சிப்பது இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் என்றால் மோடி தான் இந்து மதமா? தங்களுடைய இந்த சிந்தனையே ”இந்து மத உணர்வை” புண்படுத்தக் கூடியது என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு கூட சங்கிகளின் இணையக் கூலிப் படையினருக்கு மூளையில்லை என்பதை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தினமலரின் பொறுப்பான பணி – ஒவ்வொரு ஓவியங்களும் என்னென்ன சேதியைச் சொல்கின்றன என்பதை தமது பார்ப்பனக் குசும்போடு விவரித்திருக்கிறது.
கேரளாவுக்கு ஒரு சபரிமலை விவகாரம் போல் தமிழகத்திலும் வாகாக ஏதாவது ஒரு பிரச்சினையைக் கிளப்பி மதக் கலவரங்களைத் தூண்ட வேண்டும் என்கிற முனைப்பில் வெறியோடு செயல்பட்டு வருகிறது இந்துத்துவ கும்பல். ஒரு பக்கம் தமிழகத்தில் பெரிய கலவரங்களைத் தூண்டும் அளவுக்கான ஆள்பலம் தங்களிடம் இல்லை என்பதை உணர்ந்திருப்பதால் இதைப் போல் பகுதியளவில் சிறு சிறு பிரச்சினைகளைக் கிளப்ப திட்டமிட்டுள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனவேதான் லயோலா விவகாரத்தை நேரடியாக ”கிறிஸ்தவ சதி” என்று திரும்பத் திரும்ப நிறுவ முயற்சிக்கின்றனர்.
சங்கிகளின் இரவல் மனதை ’புண்படுத்திய’ அந்த ஓவியங்கள் தோழர் முகிலனால் வரையப்பட்டவை. அவை அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்பட்டவைதான். அவை ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட வரலாற்றுப் பின்னணியும், காரணங்களும், நியாயங்களும் உள்ளன. அவை வெளியான போது இணைய வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டும், பகிரப்பட்டும் இருந்தன.
ரங்கராஜ் பாண்டே முதல் இதர இந்துத்துவ அறிஞர்கள் கல்லூரி கல்லூரியாக சுற்றி மோடிக்கும், பார்ப்பனியத்திற்கும் பஜனை பாடினாலும் லயோலா கல்லூரி மாணவர்கள் மோடி கும்பலை எதிர்க்கும் தமிழக மக்கள் உணர்வை வீரத்துடன் வெளிப்படுத்தியிருக்கின்றனர். எனவே கல்லூரிகளில் இருக்கும் இத்தகைய இந்துத்துவ எதிர்ப்பு உணர்வை கட்டோடு தடை செய்வதே ஆர்.எஸ்.எஸ் கும்பலின் நோக்கம். அதற்காகத்தான் லயோலாவை குறி வைத்து இவர்கள் கிளம்பியிருக்கிறார்கள்.
மோடியை வரைவது குற்றமென்றால் அந்த குற்றத்தை நாம் ஆயிரம் முறை செய்வோம். சங்கிகள் பொறுமும் வகையில் சந்து பொந்துகளிலெல்லாம் மோடியின் கேலிச்சித்தரங்களை வரைந்து தள்ளுவோம். பார்ப்பன பாசிசத்திற்கு பாடை கட்டும் வரை தமிழகம் ஓயப் போவதில்லை.
கண்காட்சியில் இடம்பெற்ற ஓவியங்களில் சில …
நானும் பாதிக்கப்பட்டேன் என்று பெண்கள் ஆணாதிக்கக் கிரிமினல்களின் மீது குற்றச்சாட்டு வைக்கையில், பாய்ந்து வரும் கார்ப்பரேட், பன்னாட்டு நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட பாரதமாதா #MeToo சொல்வதில் இந்துத்துவ கும்பலுக்கு என்ன பிரச்சினை ? இந்துத்துவக் கிரிமினல்களுக்கு பெண்களை ஒடுக்கித் தானே பழக்கம். பாரத மாதாவாகவே இருந்தாலும், #MeToo என்று சொன்னால் கோவம் வராதா என்ன ?
அரியலூர் நந்தினியைக் கொன்ற மணிகண்டனும் ராஜசேகரும், அரியலூரின் இந்து முன்னணி பொறுப்பாளர்கள். ராஜசேகரின் ரவுடிப் படையிலும் இந்து முன்னணியிலும் முக்கிய தளபதியாக செயல்பட்டதே மணிகண்டனுக்கு அத்தனை கொடூரமாக நந்தினியை கொல்லும் வெறியை வழங்கியுள்ளது. (மேலும்)
காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிஃபா-வைக் கடத்தி கோவிலில் அடைத்து வைத்துக் கொன்றவனைப் பாதுகாத்த பாஜக (மேலும்)