மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 48 (தொடர்ச்சி)
மாக்சிம் கார்க்கிஅவன் தாயின் அருகே உட்கார்ந்தான். முதலில் தனது பிரகாசம் பொருந்திய முகத்தை ஒருபுறமாகத் திருப்பிக்கொண்டு, தனது. உணர்ச்சிக் குழப்பத்தை மறைப்பதற்காக, பிடரி மயிரைக் கோதி விட்டுக்கொண்டிருந்தான். ஆனால் சீக்கிரமே அவன் தாயைத் திரும்பி நோக்கினான். அவளோ தனது அனுபவங்களை ஒன்றுவிடாமல், தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுவதுபோல, எளிய வார்த்தைகளால் விவரித்துச் சொன்னாள்.
”பேரதிருஷ்டம்தான்.” என்று வியந்தான் அவன்: “உங்களைச் சிறையில் தள்ளுவதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருந்திருக்கின்றன, இருந்தாலும்… ஆமாம், விவசாயிகள் விழிப்புற்று எழத் தொடங்கிவிட்டார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது; அது ஒன்றும் அதிசயமில்லை, இயற்கைதானே! அந்தப் பெண் – அவளை நான் நன்றாகக் கற்பனை செய்து பார்க்க முடிகிறது… கிராமாந்திரப் பிரதேசங்களில் உழைப்பதற்கென்று நாம் சில பிரத்தியேக ஆட்களை நியமிக்க வேண்டும். ஆட்கள்! நம்மில் போதுமான ஆட்கள் இல்லையே! நமக்கு நூற்றுக்கணக்கான தோழர்கள் வேண்டும்!”
”பாவெல் மட்டும் வெளியில் இருந்தால் – அந்திரேயும் இருந்தால்!” என்று மெதுவாகச் சொன்னாள் தாய்.
அவன் அவளைப் பார்த்தான்; உடனே கண்களைத் தாழ்த்திக்கொண்டான்.
“நீலவ்னா, நான் சொல்லப்போகும் விஷயம் உங்களுக்குச் சிரமம் தருவதாயிருக்கலாம். நான் பாவெலை நன்றாக அறிவேன். அவன் சிறையிலிருந்து தப்பியோடி வரவே மாட்டான். அதுமட்டும் எனக்கு நிச்சயம். அவன் விசாரணைக்குத் தயாராயிருக்கவே விரும்புகிறான். விசாரணையின் மூலம் தனது முழு உருவையும் காட்ட நினைக்கிறான். அதற்காகக் கிடைத்த சந்தர்ப்பத்தை அவன் உதறித் தள்ளமாட்டான். ஏன் தள்ள வேண்டும்? அவன் சைபீரியாவிலிருந்து ஓடி வந்துவிடுவான்.”
தாய் பெருமூச்செறிந்துவிட்டு மெதுவாகக் கூறினாள்:
“ஆமாம். அதெல்லாம் அவனுக்கு நன்றாய்த்தான் தெரியும்…”
“ஹூம்!” என்று தன் கண்ணாடி வழியாக அவளைப் பார்த்துக்கொண்டு மறுகணமே சொன்னான் நிகலாய். “உங்களுடைய அந்த முஜீக் தோழன் சீக்கிரமே வந்து நம்மைப் பார்ப்பான் என்றே நம்புகிறேன். ரீபினைப் பற்றி விவசாயிகளுக்கு ஒரு துண்டுப் பிரசுரம் எழுதியாக வேண்டும். அவன் இவ்வளவு பகிரங்கமாக வெளி வந்துவிட்டதால், இந்தத் துண்டுப் பிரசுரத்தால் அவனுக்கு எந்தக் கெடுதியும் விளையாது. நான் இன்றே எழுதிவிடுகிறேன். லுத்மீலா அதைச் சீக்கிரமே அச்சடித்துக் கொடுத்துவிடுவாள்……… ஆனால், இந்தப் பிரசுரத்தை அவர்களிடம் எப்படிக் கொண்டு போய்ச் சேர்ப்பது ?”
”நான் கொண்டு போகிறேன்.”
“இல்லை; நன்றி! நீங்கள் வேண்டாம்” என்று அவசரமாகச் சொன்னான் நிகலாய். “நிகலாய் வெஸோவ்ஷிகோவால் முடியுமா என்று யோசிக்கிறேன்.”
”அவனிடம் நான் கேட்டுப் பார்க்கட்டுமா?”
“முயன்று பாருங்கள். எப்படியெப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் அவனுக்குச் சொல்லிக்கொடுங்கள்.”
ஆனால், நான் என்ன செய்வது?”
”கவலைப்படாதீர்கள். உங்களுக்கு வேறு வேலை பார்க்கலாம்.”
அவன் எழுத உட்கார்ந்தான். மேஜையைச் சீர்படுத்திக்கொண்டே அவள் அவனைக் கவனித்தாள். வரிவரியாக வார்த்தைகளை நிரப்பிச் செல்லும் அவனது விரல்களினால் பேனா நடுநடுங்கிச் செல்வதைப் பார்த்தாள். சமயங்களில் அவனது கழுத்துத் தசை நெளிந்து அசைந்தது. அவன் தன் தலையைப் பின்னால் சாய்த்துக் கண்களை மூடியவாறு யோசிக்கும்போது, அவனது மோவாயின் நடுக்கத்தை அவளால் காண முடிந்தது. இது அவளது ஆர்வத்தைப் பெருக்கியது.
“தயாராகிவிட்டது” என்று கூறிக்கொண்டே, அவன் எழுந்தான். “இதோ, இந்தக் காகிதத்தை உடம்பில் எங்கேயாவது மறைத்து வைத்துக்கொள்ளுங்கள் – ஆனால் போலீஸார் வந்து உங்களைச் சோதனைபோட ஆரம்பித்துவிட்டால்………..”
“அவர்கள் நாசமாய்ப் போக!” என்று அமைதியாகச் சொன்னாள் அவள்.
அன்று மாலையில் டாக்டர் இவான் தனீல்விச் அங்கு வந்தான்.
”இந்த அதிகாரிகளுக்குத் திடீரென்று என்ன கொள்ளை வந்து விட்டது?” என்று கேட்டுக்கொண்டே அறையில் குறுக்கும் மறுக்கும் நடந்தான் அவன். “நேற்று ராத்திரி அவர்கள் ஏழு வீடுகளைச் சோதனை போட்டிருக்கிறார்கள், சரி, நோயாளி எங்கே?”
”அவன் நேற்று போய்விட்டான்” என்றான் நிகலாய். “இன்று சனிக்கிழமை. அரசியல் வகுப்புக்குப் போகாமால் அவனால் இருக்க முடியவில்லை.”
“அது முட்டாள்தனம், உடைந்துபோன மண்டையோடு அரசியல் வகுப்புக்குச் சென்று உட்கார்ந்திருப்பது முட்டாள்தனம்…”
”நானும் அவனுக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ஒன்றும் பயனில்லை.”
“ஒருவேளை தான் அடிபட்டிருப்பதைத் தன் தோழர்களிடம் காட்ட வேண்டுமென்று விரும்பினானோ என்னவோ?” என்றாள் தாய். “இதோ என்னைப் பாருங்கள். நான் ஏற்கெனவே ரத்தம் சிந்திவிட்டேன்” என்று சொல்ல நினைத்தான் போலிருக்கிறது…..”
அந்த டாக்டர் தாயைப் பார்த்தான். போலிக் கடுமையோடு முகபாவத்தை மாற்றி முகத்தைச் சுழித்துக்கொண்டு சொன்னான்.
“அடேடே நீங்கள் எவ்வளவு கல் நெஞ்சுப் பிறவி!”
“சரி இவான்! நீ இங்கேயே இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. சீக்கிரமே போய்விடு. நாங்கள் ‘விருந்தாளிகளை’ எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். நீலவ்னா, அந்தத் தாளை இவனிடம் கொடுங்கள்.”
“இன்னொரு தாளா?” என்று வியந்தான் டாக்டர்.
“ஆமாம். அதை எடுத்துக்கொண்டுபோய், அச்சாபிசிலே, கொடுத்துவிடு.”
“சரி . நான் அதை வாங்கிக்கொண்டேன்! போய்க் கொடுத்து விடுகிறேன். வேறு ஏதாவது உண்டா?”
“ஒன்றுமில்லை. வாசல்புறத்தில் ஓர் உளவாளி நின்று கொண்டிருக்கிறான்.”
“அவனை நானும் பார்த்தேன். என் வீட்டு வாசலிலும் ஒருவன் நிற்கிறான். சரி, வருகிறேன். ஏ… கல் நெஞ்சுக்காரி! நான் வருகிறேன். தோழர்களே, சந்தர்ப்பவசமாக, அந்த இடுகாட்டுச் சம்பவத்தால் நன்மைதான் விளைந்திருக்கிறது. நகர் முழுவதுமே அதைப் பற்றித்தான் பேச்சாயிருக்கிறது. அதைப் பற்றி நீ எழுதிய பிரசுரம் ரொம்ப நல்ல பிரசுரம்; மேலும், அது சரியான சமயத்தில் வெளிவந்துவிட்டது. மோசமான முறையில் சமாதானமாவதைவிட, நல்ல முறையில் சண்டையிட்டுப் பார்ப்பதே மேலானது என்று நான் எப்போதும் சொல்லி வந்திருக்கிறேன்.”
“நீ மிகுந்த தயாள குணமுடையவன் என்று நான் சொல்ல மாட்டேன், நீலவ்னா. கை கொடுங்கள். அந்தப் பையன் நிச்சயம் முட்டாள்தனமான காரியத்தைத்தான் செய்துவிட்டான். அவன் எங்கு வசிக்கிறான் என்பது உனக்குத் தெரியுமா?”
நிகலாய் அவனது விலாசத்தைக் கொடுத்தான்.
“நாளை நான் அவனைப் போய்ப் பார்க்கிறேன். அருமையான பையன், இல்லையா?”
“ஆமாம்.”
”அவனை ஜாக்கிரதையோடு கவனிக்க வேண்டும். அவனுக்கு நல்ல மூளை இருக்கிறது” என்று வெளியே போகும்போது பேசிக்கொண்டே சென்றான் அந்த டாக்டர். “வர்க்க பேதமற்ற அந்த மேலுலகத்திற்கு நாம் செல்லும்போது அவன் மாதிரி நபர்கள்தான் பாட்டாளி வர்க்கத்தின் அறிவாளிகளாக வளர்ச்சி பெற்று உருவாக வேண்டும்.”
“இவான், நீ ரொம்ப ரொம்ப வாயளக்க ஆரம்பித்துவிட்டாய்.”
”ஏனெனில் நான் உற்சாக வெறியோடிருக்கிறேன். அப்படியானால், நீ சிறைக்குப் போவதைத்தான் எதிர்நோக்கி இருக்கிறாய் இல்லையா? போ… போ… போய் நன்றாக ஓய்வு பெற்றுக்கொள்.”
“நன்றி. நான் ஒன்றும் களைத்துப் போகவில்லை .”
அவர்களது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த தாய் அவர்கள் அந்தத் தொழிலாளி வர்க்கச் சிறுவனின் மீது கொண்டுள்ள அன்பைக் கண்டு மிகுந்த மனமகிழ்ச்சி அடைந்தாள்.
டாக்டர் சென்ற பிறகு தாயும் நிகலாவும் சாப்பிட உட்கார்ந்தார்கள். தங்களது இரவு விருந்தினர்களை எதிர்நோக்கி அமைதியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். நாடு கடத்தப்பட்ட தோழர்களைப் பற்றியும், அவர்களில் தப்பியோடி மீண்டும் ஊருக்குள் வந்தவர்களைப் பற்றியும், வெவ்வேறு பெயர்களில் அவர்கள் தங்களது இயக்க வேலையைத் தொடர்ந்து செய்து வருவதைப் பற்றியும் நிகலாய் தாயிடம் விளக்கிக் கூறினான். புத்துலக சமுதாயத்தை உருவாக்குவதில் தங்களைப் பரிபூரணமாக அர்ப்பணித்துவிட்ட அந்தப் புனிதமான, அடக்கமான வீரர்களைப் பற்றிய கதைகளை அந்த அறைச் சுவர்கள் கேட்டன. நம்ப இயலாத வியப்போடு அந்தக் கதைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் எதிரொலித்தன. அறியப்பட முடியாத மனிதர்களின் மீது ஏற்படும் அன்புணர்ச்சியால் இதயத்திற்குச் சூடேற்றி, வெதுவெதுப்பான ஒன்று அப்பெண்மணியை இதமாகச் சூழ்ந்தது. அந்த வீரர்கள் அனைவரும் அச்சமென்பதையே அறியாத ஒரு மாபெரும் பேருருவாக உருண்டு திரண்டு உருப்பெற்று பூமியின் மீது மெதுவாக, எனினும் நிச்சயம் தீர்க்கத்தோடு, முன்னேறி வருவதாகவும், அழுகி நாற்றமெடுக்கும் பண்டைப் பொய்மைகளையெல்லாம் தமது பாதையிலிருந்து விலக்கித் தூர எறிந்து, எளிய நெளிந்த வாழ்க்கையின் உண்மைத் தத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதற்காக முனைந்து முன்னேறுவது போலவும் தாய் கற்பனை பண்ணிப்பார்த்தாள். அந்த மாபெரும் உண்மை. புத்துயிர் பெற்ற அந்தச் சத்தியம், ஒரே மாதிரியாக எல்லோரையும் தன்னிடம் அழைக்கிறது. பேராசை, பொறாமை, பொய்மை – என்ற மூன்று ராட்சச மிருகங்கள் தமது வெறிபிடித்த சக்தியினால் உலகம் பூராவையும் அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தி வைத்திருப்பதையெல்லாம் தகர்த்து, ஒவ்வொருவருக்கும் உண்மையான விடுதலையை உத்தரவாதம் அளிக்கும்… இந்தக் கற்பனா சொரூபமான எண்ணம் அவளது மனத்தில் ஓர் உணர்ச்சியைக் கிளப்பியது. மற்ற நாட்களைவிட எளிதாக இருந்த அந்த நாட்களில் அவள் விக்ரகத்தின் முன் மண்டியிட்டுத் தொழும்போது அவள் உள்ளத்தில் எம்மாதிரி உணர்ச்சி பொங்கியதோ அம்மாதிரி உணர்ச்சிதான் அவளுக்கு இப்போதும் ஏற்பட்டது. இப்போதோ அவள் அந்த நாட்களையெல்லாம் மறந்துவிட்டாள். எனினும் அந்த நாட்களில் அவள் மனத்தில் எழுந்த உணர்ச்சி மட்டும் விரிந்து பெருகி, முன்னைவிடக் குதூகலமும் பிரகாசமும் பொருந்தியதாக வளர்ந்து. அவளது இதய பீடத்தின் ஆழத்திலே இடம்பிடித்து, ஒளிமயமான தீபச்சுடராக நின்றெரிந்தது.
”போலீஸ்காரர்கள் வருவதாகத் தெரியவில்லையே!” என்று திடீரெனச் சொன்னான் நிகலாய்.”
“அவர்கள் நாசமாய்ப் போகட்டும் என்றேனே” என்று அவனை விருட்டெனத் திரும்பிப் பார்த்தவாறே சொன்னாள் தாய்.
”உண்மைதான். ஆனால், நீலவ்னா, நேரமாகிவிட்டது. கொஞ்ச நேரமாவது படுத்துத் தூங்குங்கள். மிகவும் களைத்துப் போயிருப்பீர்கள். உங்களுக்கு அற்புதமான மனோதிடம் இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. இந்த அபாயத்தையும் அயர்ச்சியையும் ரொம்பவும் சுளுவாகத் தாங்கிக் கொள்கிறீர்கள். ஆனால், உங்கள் தலைமயிர் மட்டும் விறுவிறுவென்று நரை தட்டி வருகிறது. சரி, போய்ப் படுத்துக் கொஞ்ச நேரமாவது களைப்பாறுங்கள்.”
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
”14 தியாகிகளை நாம் எந்த காலத்திலும் மறந்துவிடக் கூடாது. பிற மாவட்ட மக்கள் இதை ஒரு படிப்பினையாக கொண்டு எப்பேற்பட்ட தியாகத்தையும் செய்து இத்தகைய நச்சு ஆலைகளை முடிவிற்கு கொண்டு வர உறுதியேற்க வேண்டும். சமகால அரசியலில் மிகவும் முக்கியமான போராட்டமாக தூத்துக்குடி மக்களின் இந்த போராட்டம் இருந்துள்ளது. காரணம் கூடங்குளம் அணு உலை, மீத்தேன் போன்றவைகளுக்கு எதிரான இத்தகைய போராட்டங்கள் எல்லாம் சம்பந்தபட்டவர்கள் மட்டுமே போராடுவதாக இருந்த நிலையில் தூத்துக்குடி போராட்டம் மட்டும்தான் சாதி கடந்து, மதம் கடந்து ஒரு புரட்சி அலை போல் தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரையும் ஒரு கோரிக்கைக்கு எதிராக களத்தில் இறக்கியது. எனவேதான் ஆளும்வர்க்கமும் அரசும் இதை கண்டு அஞ்சுகிறது.
(கோப்புப் படம்)
இதனால்தான் போராட்டக்குழுவின் மீதும், போராடிய அமைப்புகள், வழிகாட்டிய வழக்கறிஞர்கள் மீதும் எண்ணற்ற வழக்குகளை பதிவு செய்து செயல்படவிடாமல் தடுக்கிறது. என் மேல் மே 22 அன்று காலை 9.30 க்கு மடத்தூரில் இருந்ததாக ஒரு வழக்கு, அதே 9.30க்கு பனிமலர் மாதாகோவில் வளாகத்தில் இருந்ததாகவும் கண்ணில் பட்ட பொதுச்சொத்திற்கு எல்லாம் தீ வைத்ததாகவும் ஒரு வழக்கு. வழக்கறிஞர் அரிராகவனை ரவுடி லிஸ்டில் சேர்த்து வாய்தாவிற்கு அலையவிடும் பிரிட்டீஸ் அட்சி கால அணுகுமுறையில் வழக்கு. ஒரு சம்பவத்திற்கு ஒரு வழக்காக பதிவு செய்து விசாரிக்காமல் 240 வழக்கு பதிவு செய்துள்ளது.
இப்போது நாம் மனதில் வைக்க வேண்டியது என்னவெனில் துப்பாக்கி சூடு நடக்கும் முன்வரை நாம் செயல்பட்டது முக்கியம் அல்ல, அதன் பிறகு அடக்குமுறை உச்சத்தை தொட்டுள்ள இந்த சமயத்தில் மக்களை அணுகி , ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்களை அணிதிரட்ட எப்படி வேலை பார்க்கிறோம், அதை யார் பார்க்கிறார்கள் எனபதுதான் வீரம். ஏனெனில், ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனமான வேதாந்தா ஒன்றும் சாதாரண நிறுவனமல்ல உலகம் முழுவதும் சுரங்கத் தொழில் கொடிகட்டி பறக்கும் ஒரு நிறுவனம். அதனை தற்காலிகமாக என்றாலும் வெற்றி கொண்ட ஒரே மக்கள் தூத்துக்குடி மக்கள்தான். மேலும், வேதாந்தா நிறுவனம் ஒரு முறைகேடுகளுக்கு பெயர் போன நிறுவனம் என்று இங்கிலாந்திலே ஒரு அமைப்பு அதற்கெதிராக செயல்படும் நிலை உள்ளது. இங்கிலாந்து அரசே அதனுடைய முறைகேடுகளுக்காக வேதாந்தா நிறுவனத்தை அந்நாட்டின் பங்கு சந்தையிலிருந்து தடை செய்துள்ளது.
உலகம் முழுவதும் வேதாந்தாவிற்கு எதிர்ப்பு. (கோப்புப் படம்)
இன்னொரு புறம் வேதாந்தா சுரங்கத்தொழிலில் பங்கு வைத்துள்ள நாட்டை பார்த்தால் ஒரு உண்மை புரியும். அதாவது அது ஏழை மூன்றாம் உலக நாடுகளில் மட்டும்தான் தன் தொழிலை வைத்துள்ளது. காரணம் இந்த நாடுகளில்தான் மக்கள் செத்தாலும் பரவாயில்லை என்று பாதுகாப்பு செலவை குறைக்க அந்தந்த நாட்டின் சட்டங்களை, அரசியல்வாதிகளை, அதிகாரிகளை தன் வலைக்குள் கொண்டு வந்து கணிசமான இலாபம் பார்க்க முடியும். எனவே வேதாந்தா போன்ற நிறுவனங்கள் நமக்கு மட்டுமல்ல மூன்றாம் உலக நாடுகள் அனைத்திற்கும் எதிரி. அதனுடைய சாம்ராஜ்ஜியத்தின் சேவகர்கள்தான் மோடியும், எடப்பாடியும். எனவே இத்தகைய நிறுவனத்தை விரட்டியடிக்க இந்தி எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் போன்றதொரு போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும். தூத்துக்குடி மக்கள் காவல்துறையின் அடக்குமுறைகளின் கீழ் உள்ள இந்த நேரத்தில் அதற்கு பிற மாவட்ட மக்கள்தான் முன் வரவேண்டும்.
ஸ்டெர்லைட்டை திறக்க சொல்கிற பசுமை தீர்ப்பாய உத்தரவு கிடக்கட்டும்…. தமிழக அரசே.…. மேல்முறையீடு என்று ஏமாற்றாதே ! தனிச்சட்டம் இயற்று! ஸ்டெர்லைட்டை விரட்டு!! என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மதுரை மண்டலம் சார்பாக கடந்த டிசம்பர்- 30 அன்று நடைபெற்ற அரங்கக்கூட்டத்தில், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன் ஆற்றிய உரை.
கடந்த 2018-ம் ஆண்டு புதிய முயற்சியாக விருந்தினர்களுக்கென்று கருத்தாடல் பகுதி அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு முற்போக்கு பார்வை சார்ந்த நண்பர்களுடைய கருத்துக்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதே இந்த பகுதியின் நோக்கம். கருத்தாடல் பகுதியில் சில நண்பர்கள் எழுதி வருகின்றனர். அவற்றில் அவசியமாக படிக்க வேண்டிய கட்டுரைகள் சிலவற்றை இங்கே தொகுத்திருக்கிறோம்.
***
போர்ன் படங்களை ஆண்கள் ஏன் விரும்புகிறார்கள் ? மு.வி.நந்தினி
‘‘நம் முன்னோர்’ பால் உறவு சிற்பங்கள் செதுக்கி வைத்திருக்கிறார்களே? நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை’’ என்கிறார் மருத்துவர் நாராயணரெட்டி. ஆம், கோயில்களில் யார் நுழைந்தார்கள், யாருக்காக கோயிலில் பால் உறவு சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டன. அத்தனையும் அரசர்களுக்காகவும் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த ஆண்களுக்காகவுமே. அங்கேயும் பெண் ஒரு காட்சி பொருள். புணர்வதற்கென்றே பிறந்த உடல். விதவிதமாக புணர்வதற்குப் படைக்கப்பட்ட பண்டம். மேலும் படிக்க…
இணைய வணிகத்தின் பின்னால் வதைபடும் அடிமைத் தொழிலாளர்கள் !
இணையத்தில் இரவு பதினொரு மணிக்கு முன்னர் ஒரு பொருளை வாங்கினால் அடுத்த நாள் வீடு தேடி வரும் என்று விளம்பரம் செய்கிறார்கள். அது மந்திரத்தால் நடக்கும் விடயமா? அதற்காக சில மனிதர்கள் இரவிரவாக வேலை செய்ய வேண்டும். அப்போதுதான் அடுத்த நாள் காலையில் வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்கலாம் மேலும் படிக்க…
ஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும் !
முன்பு ஈராக் மீது பொருளாதாரத் தடை கொண்டு வந்து, பின்னர் ஒரு இனப்படுகொலை யுத்தம் நடத்தி, ஈராக் என்னைக் கிணறுகள் அனைத்தையும் அமெரிக்கா கைப்பற்றிய வரலாற்றை உலகம் மறந்து விடவில்லை. வரலாறு திரும்புகிறது. ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதித்து பலவீனப் படுத்தி விட்டு, இறுதியில் படையெடுத்து ஈரானின் எண்ணை வளத்தை முழுமையாகக் கைப்பற்றுவது அமெரிக்காவின் நீண்ட காலத் திட்டம். மேலும் படிக்க…
ஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா ? மு.வி.நந்தினி
பிரெஞ்சு மன்னராட்சி காலத்தில் சமூக அந்தஸ்துக்கு ஏற்ப குதிகால் உயர்த்தப்பட்ட செருப்புகள் அணியும் விதி இருந்திருக்கிறது. அந்த காலத்தில் ஆண்கள் குதிகால் உயர்த்தப்பட்ட செருப்புகளை அணிந்தார்கள். சாமானியர்கள் அரை இன்ச் உயர்த்தப்பட்ட செருப்புகளையும் அரச மரபினர் இரண்டரை இன்ச் உயர்த்தப்பட்ட காலணிகளை அணிய வேண்டும் என விதிகள் போடப்பட்டிருந்ததாக வரலாறு சொல்கிறது. குதிகால் உயர்த்தப்பட்ட செருப்புகள் ‘பெண் தன்மை’ இருப்பதை கண்டுபிடித்த சிலர், அதை பெண்களுக்கு பரிந்துரைத்தார்கள். மேலும் படிக்க…
நீங்கள் அறியாத பெண் வலி – என்டொமெட்ரியோசிஸ் !
வலி என்பது பெண்களுக்கு சாதாரணமானதென்ற மூடநம்பிக்கை அநேகமானோரிடம் இருக்கிறது. “மாதவிடாய் மிகுந்த வலியுடன் தொடர்புடையதுதானே, இதற்கெல்லாம் தொண தொணத்துக் கொண்டிறாதே”, என்றே பலநேரம் பெண்கள் நினைக்கிறார்கள்.
அப்படியே வலியைச் சொன்னாலும் அநேகமாக அவர்களை மருத்துவர்கள் கூட நம்புவதில்லை. மேலும் படிக்க…
FIR போட வேண்டியது பாயம்மா மீதா ? விஜய் டி.வி நீயா நானா மீதா ?
நீயா நானா விவாதங்கள் பெருமளவு பேசுவோரை உசுப்பேற்றி அதன் மூலம் அவர்களை விவாதத்தில் முரட்டுத்தனமாக பேசவைத்து நடத்தப்படும் வியாபாரம். அங்கே மாமியார்-மருமகள், கணவன் – மனைவி போன்ற ஆபத்தில்லாத (பங்கேற்பாளருக்கு அல்ல, விஜய் டிவிக்கு ஆபத்தில்லாத என்று பொருள்) மற்றும் எளிதில் விற்பனையாகவல்ல தலைப்புக்களே விவாதிக்க தேர்வு செய்யப்படும். மேலும் படிக்க…
தென்னிந்தியாவின் உணவு இட்லி தோசையா – இறைச்சியா ? மு.வி.நந்தினி
ஒரு தனிமனிதன் என்ன உண்ண வேண்டும் என தீர்மானிக்க நினைக்கிறது ஓர் அரசு. உலகின் எந்த ஒரு அரசும் செய்யாத திணிப்பை இந்திய அரசு செய்துகொண்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லிக்கொள்ளும் அரசு ஊக்கப்படுத்தி வளர்க்கும் கும்பல் குண்டர்கள், அம்மக்கள் எதை உண்டுகொண்டிருக்கிறார்கள் என சதா கண்காணித்தபடியே இருக்கிறார்கள். மேலும் படிக்க…
பாலியல் குற்றங்கள் பெருகும் நிலையில் பள்ளி மாணவர்கள் நிலை என்ன ?
பதின்மூன்று வயது மாணவி ஒருவரது டைரியை வாசித்தபோது, அதில் 6 மாத கால இடைவெளியில் அவர் 3 பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டிருப்பதை அறிய முடிந்தது. ஒன்று வகுப்பறையில், இன்னொன்று அவரது நெருங்கிய உறவுக்காரரால் நடந்திருக்கிறது. சம்பவங்களைவிட மோசமான செய்தி என்னவென்றால் அந்த சிறுமி இந்த சம்பவங்களை சாதாரண டிராஃபிக் விதிமீறலைப்போல சகஜமான குற்றமாக கருதிக் கொண்டிருக்கிறார். மேலும் படிக்க…
பாட்டி வைத்தியத்திற்கும் பாதுகாப்பான மகப்பேற்றிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை !
அண்மையில் தமிழகத்தில் இயற்கை முறையிலான பிரசவம் குறித்து யூ-டியூப் இணையதளத்தில் வீடியோ பார்த்து வீட்டில் மனைவிக்குப் பிரசவம் பார்த்து மனைவி இறந்த நிகழ்வை விமர்சிக்கும் கட்டுரைகளுக்கு வந்த பதில்களைப் பாருங்கள். பலர் ”இது அரிதாக நடக்கும் ஒரு செயல்; கிராமப்புறங்களில் பல பிரசவங்கள் இவ்வாறே ஒரு பிரச்சனைகளுமின்றி நடக்கிறது; நீங்கள் யாரும் மருத்துவமனைகளில் நடக்கும் மரணங்களைக் குறிப்பிடுவதில்லை” போன்ற கருத்துகளை எழுதியிருந்தனர். மேலும் படிக்க…
ஆங்கில மோகத்திற்கு பலியிடப்படும் அறிவுத்திறன் – ஒரு கள ஆய்வு !
ஆங்கிலத்தின் மீதான பிடிவாதமான மோகம் (அப்சஷன்) ஒரு மதத்தைப் போல நம்மை பீடித்திருக்கிறது. அதற்காக எதையும் தியாகம் செய்யும் மனநிலையில்தான் பெரும்பான்மை பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
“ஒன்பது வருசமா அங்க படிக்கிறான், இன்னும் ஒழுங்கா இங்கிலீஷ் பேச வரல. இந்த வருசம் ஸ்கூலை மாத்திரலாம்னு இருக்கேன்” என சலித்துக் கொண்டார் ஒரு நண்பர். அவர் ஒரு பள்ளி ஆசிரியர் என்பது உபரித் தகவல். மேலும் படிக்க…
பசுக்காவல் கும்பல் வன்முறை : கட்டுப்படுத்தும் வழியென்ன ?
ஒரு பசுவையும், முசுலீமையும் ஒன்றாக பார்த்த மாத்திரத்தில் கொல்லப்படுவதால் பசு தொடர்பாக – பசுவை வளர்ப்பது, பால் கறப்பது, உழவுப் பயன்பாடு என்று – எந்த உரிமை கோரலும் ஓர் முசுலீமுக்கு எதார்த்தத்தில் மறுக்கப்படுகின்ற கால நிலைமையை நாம் அடைந்திருக்கிறோம். மேலும் படிக்க…
பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்கள் இலுமினாட்டிகளை எப்படி சமைக்கிறார்கள் ?
நிஜவாழ்வில், நிஜ உலகில் நடப்பவை எல்லாம் நமது மூளையின் புரிதலுக்கு உட்பட்டேதான் நடக்குமா? நம்மால் எல்லா தரவுகளையும், தகவல்களையும் ஒரு படிவமாக்க முடியுமா? ஒரு படிவத்திற்குள் அடங்காத ஒரு தகவலை, ஒரு நிகழ்வை, ஒரு உணர்ச்சியை நமது மூளை எப்படி அணுகும்?
தெரியாத விஷயங்களை அறிவியல் ‘x’ என்று பெயரிட்டு தனக்கு தெரியாது என்று அறிவித்து விடுகிறது. ஆனால் அதுபோன்ற இயல்பு நமது மூளைக்கு கிடையாது. மேலும் படிக்க…
பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்களை நாம் எப்படி கையாள வேண்டும் ?
சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் தங்களுடைய emotional investmentயை பாதுகாத்துக் கொள்ள தங்களுக்கு சாதகமான தகவல்களை மட்டும் சேகரித்து வைத்துக்கொண்டு தங்களுடைய நம்பிக்கையை இறுக பற்றிக்கொள்வார்கள். அவர்களுக்கு தங்களுடைய நம்பிக்கைக்கு எதிரான தகவல்களை பற்றி எந்த அக்கறையோ முனைப்போ இல்லை. இதனால்தான் பாரி பேசுவதை கேட்கும் ஒரு அப்பாவிக்கு, ‘தம்பி நல்லா கருத்தா பேசறாப்ல’ என்று தோன்றும். மேலும் படிக்க…
மரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா ?
மரண தண்டனை மனிதாபிமானமற்றதென்பதைத் தாண்டி மரண தண்டனையால் உண்மையில் பலன் ஏதாவது இருக்கிறதா என யோசித்துப் பாருங்கள். குற்றங்கள் சமூகத்தில் குறைகின்றனவா என்பது முக்கியமா அல்லது குற்றவாளியைக் கொன்று போடுவது முக்கியமா? குற்றம் செய்தவன் கொடூரமான முறையில் பழிவாங்கப்படுவது தான் முக்கியம் என்று நினைக்கிறீர்களா? மரண தண்டனையால் சமூகத்தில் மிகச் சாதாரணமாக இருக்கும் பெண் வெறுப்பும் பாலியல் வன்முறையும் முடிவுக்கு வந்து விடுமா? குறைந்தது மரண தண்டனை கொடுக்கும் சட்ட வல்லுநர்களும் நீதிபதிகளும் நியாயமாகச் செயற்படுகிறார்களா? மேலும் படிக்க…
ஏழாயிரம் கோடி கடன் ஸ்வாகா : நீதிமன்றத்தோடு தாயம் ஆடும் ஆர்ஸ்லர் மிட்டல் !
எஸ்ஸார் ஸ்டீல் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால், திவாலான கம்பெனி என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. திவாலான கம்பெனிகளை ஏலம் விட்டு கடனை திரும்பப்பெற 2016-இல் புதிதாக ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது, அது தான் Insolvency and Bankruptcy Code, சுருக்கமாக IBC. இந்த IBC-படி திவாலான கம்பெனிகள் ஏலம் விடப்பட்டு ஏலத்தில் வரும் பணம் கடன் தந்த வங்கிகளுக்கு பிரித்து தரப்படும். (இந்த IBC இந்திய சொத்துக்களை வெளிநாட்டு முதலாளிகளுக்கு அடிமாட்டு விலையில் விற்பதற்காக கொண்டுவரப்பட்டது என்று விமர்சனங்கள் உள்ளன). மேலும் படிக்க…
குன்றத்தூர் அபிராமி : கலாச்சார நீதிபதிகளின் தற்குறித் தீர்ப்புகள்
கள்ளக்காதல் பற்றியல்ல பிள்ளைகள் கொல்லப்படுவது பற்றியே நான் கவலைப்படுகிறேன் என சொல்பவர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோர்களுக்கு இருக்கும் கடுமையான மனஅழுத்தம் குறித்துத்தான். சிறார்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை அதுதான். கடுமையான தண்டனைகள் தொடங்கி கூட்டுத் தற்கொலைகள் / கொலைகள் வரை அதன் தாக்கம் பிரம்மாண்டமானது. இந்தவகை மன அழுத்தம் ஒரு தனிநபர் பிரச்சினை அல்ல, அதில் சமூக – பொருளாதார -கலாச்சார – அரசியல் காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. அவற்றை சீர்செய்ய முயல்வதே ஒரு நாகரீக சமூகத்திற்கு அழகு. மேலும் படிக்க…
A1, A2 பால் – உண்மைதான் என்ன?
நாம் அறிந்தவையெல்லாம் பசும்பால், எருமைப் பால், ஆட்டுப் பால், ஒட்டகப் பால் போன்றவையே. அது என்ன A1, A2 பால்? A2 பால் நாட்டுப் பசுவின் பாலென்றும், A1 பால் சீமை மற்றும் கலப்பினப் பசுவின் பால் என்றும் கூறப்படுகின்றதே? உண்மையா? A2 பால் சிறந்ததென்றும், A1 பால் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் சொல்லப்படுகின்றதே. ஏன்? மேலும் படிக்க…
இணைய வணிகம் – மெய்நிகர் போதை | வில்லவன்
ஆன்லைன் சந்தையின் வசீகரிக்கும் அம்சம் அதன் விலை. வெளி சந்தையில் 2500 ஆகும் கண்ணாடிகளை ஆன்லைன் கடைகளில் 1000 ரூபாய்க்கு வாங்கிவிட முடியும். மொபைல் போன்களின் விலையை கணிசமாக குறைத்தவை ஆன்லைன் வழியே போன் விற்பனை செய்யும் நிறுவனங்கள்தான். ஜியோமி நிறுவனம் ஒரே நாளில் 20 லட்சம் போன்களை விற்ற சம்பவம்கூட நடந்திருக்கிறது. பெருநகரங்களில் பயணத்தை/ பயணச் செலவை தவிர்ப்பதற்கும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யப்படுகிறது. ஆனால் ஆன்லைன் வழி நுகர்வு என்பது வெறுமனே பொருள் தேவையை பூர்த்தி செய்யும் செயலாக இருப்பதில்லை. மேலும் படிக்க…
கிழங்கு கிண்டியபோது கிடைத்த ரத்தினக் கல் | அ.முத்துலிங்கம்
‘நாட்டுப்புற நடனத்தில் பெண்கள் தலைக்குமேல் பானைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து நடனமாடுவார்கள். அதை மூச்சைப் பிடித்துக்கொண்டு பதற்றத்தோடு பார்த்து ரசிப்போம். ஒரு தவறான அடி பானைகளைச் சிதற அடித்துவிடும். ஆனால் இந்த மொழிபெயர்ப்பில் கவிதைகள் மீண்டும் மீண்டும் ஒரு நர்த்தனம் செய்து வெற்றியை எட்டிவிடுகின்றன.’ பானையும் தப்பிவிடுகிறது, கவிதையும் தப்பி விடுகிறது. இந்த வர்ணனைகூட நூலுக்கு பற்றாது என்றே எனக்கு தோன்றுகிறது. மேலும் படிக்க…
மீ டூ : நாம் யார் பக்கம் நிற்பது ? வில்லவன்
பாலியல் சீண்டல் செய்யும் ஆட்கள் அடிப்படையில் கோழைகள். அதனால்தான் அவர்கள் தம்மிலும் மிக பலவீனமான ஆட்களை தெரிவு செய்கிறார்கள். இத்தகைய குற்றச்சாட்டுக்களை நேர்மையோடும் கரிசனத்தோடும் அனுகுவதன் வாயிலாக நாம் எதிர்காலத்தில் பல பாலியல் குற்றங்களை தடுக்க முடியும். ஒப்பீட்டளவில் அதன் எதிர்மறை விளைவுகள் குறைவாகவே இருக்கும்.
எனக்கும் சின்மயியை ஆதரிக்க வேண்டும் எனும் விருப்பம் இல்லை. ஆனால் சின்மயியை எதிர்க்கவேண்டும் எனும் அல்ப நோக்கத்திற்காக ஒரு பெரும் சமூக விரோத செயலை இலகுவாக கடந்துபோக இயலாது. மீ டூ போன்ற இயக்கங்களை இன்னும் செம்மைப்படுத்தவும் இன்னும் பரவலாக கொண்டு செல்லவும் நாம் முயற்சிக்கலாம். மேலும் படிக்க…
சாலை விபத்துக்கு காரணம் எடப்பாடி பேனரா – ஹெல்மெட் போடாத வாகன ஓட்டியா ?
பேனர் வைப்பதையோ சாலைகள் பராமரிப்பு இல்லாமல் குண்டு குழிகளில் இறங்கி இரு சக்கர வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி மக்கள் கொல்லப்படுவதையோ எல்லாம் நீதி மன்றங்கள் கேட்பது இல்லை. இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லக் கூடாது! ஹெல்மெட் அணியாமல் செல்லலாம் என்று நான் கூறுவதாக எண்ண வேண்டாம்! நீதிமன்றங்கள் யாரிடம் கடுமையாகவும் யாரிடம் நீக்கு போக்காகவும் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்! மேலும் படிக்க…
மேற்கு தொடர்ச்சி மலை : செங்குத்து வாழ்க்கையின் படம் | ராஜ்
மேற்கு தொடர்ச்சி மலையில் காரணகாரியம் சார்ந்து கேள்விகள் இருந்தாலும் அதன் திரைஅனுபவம் மார்க்சிய அழகியலாக இருப்பதை மறுப்பதற்கில்லை. இயக்குநர் ஜனநாதனின் புறம்போக்குஎன்றபொதுடமை அடிப்படையில் காந்திய சிந்தனையை முன்வைக்கின்ற திரைப்படம் தான் என்றாலும் அது மக்கள் போராளிகள் எல்லாம் அரசு சித்தரிப்பது போல அவ்வளவு மோசமானவர்களில்லை என்ற குறைந்தபட்ச உண்மையை உரத்து கூறுகிறது. மேலும் படிக்க…
#MeToo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை !
பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு கொடுக்கப்படும் அதீத கவனம் ‘அவன் எப்படி அவளை வளைத்தான்’ என்கிற விதத்தில் இதை செய்தியாக நுகரும் பெரும்பான்மை ஆண்களின் விருப்பத்திலிருந்து வருகிறது. பாலியல் ஒடுக்குமுறையால் அல்லது அத்துமீறலால் எப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கை திசை திரும்புகிறது அல்லது வாழ்க்கையே இல்லாமல் போகிறது என்கிற கோணத்தில் ஆண் மனம் பொதுவாக சிந்திப்பதில்லை. மேலும் படிக்க…
நாட்டுக் கோழி வணிகக் கோழியான வரலாறு !
மரக்கிளையில் துயிலெழுந்து காடுகளில் சுற்றித் திரிந்து புற்புழுக்களை உண்டுவந்த வண்ண காட்டுக் கோழியை (Red Jungle Fowl) ஊருக்குள் கொண்டு வந்து நாட்டுக் கோழியாக்கியதும், நாட்டுக் கோழியை ’அறிவியல் தொழில்நுட்பம்’ துணை கொண்டு வணிகக் கோழியாக்கியதுமே மனிதனின் மாபெரும் சாதனை. மேலும் படிக்க…
எங்கள் பிள்ளை கோட்சேவை கொஞ்சி மகிழ முடியவில்லை. தொட்டால் பட்டுக்கொள்ளும் அம்பேத்கரை எல்லாம் பாராட்டித்தொலைய வேண்டியிருக்கிறது. சொந்தப் பிள்ளைக்கு இன்ஷியல் கொடுக்க முடியாமல் ஊரான் பிள்ளையை தன் பிள்ளையென கொஞ்ச வேண்டிய துரதிருஷ்டம் வேறு ஜாதிக்கு வாய்த்திருக்கிறதா? மஹாராஜாக்களை காலடியில் விழுந்து கிடக்க வைத்த சமூகம் இன்று காமெடியன்களை ஐகான்களாக வைத்திருக்க வேண்டிய அவல நிலையில் இருக்கிறது. இன்று இருக்கும் பிராமண தலைவர்களை பாருங்கள், சுப்ரமணிய சாமி, எஸ்.வி.சேகர், எச்.ராஜா, நிர்மலா சீதாராமன்… மேலும் படிக்க…
அண்மையில் நடந்த 106-வது இந்திய அறிவியல் மாநாடு, புராண புரட்டு மாநாடாக நடந்து முடிந்திருக்கிறது. ஜனவரி 4 முதல் ஜனவரி 7-ம் தேதி வரை நடக்கவிருக்கிற இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்ட பல ‘பேச்சாளர்கள்’, இந்துத்துவ புராண புரட்டை அறிவியல் என பேசினர்.
இவர்களின் ‘கண்டுபிடிப்பின்’படி, ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு, நியூட்டனின் புவி ஈர்ப்பு விசை, ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருந்துளைகள் அனைத்தும் பொய்யாம். மகாபாரதத்தில் வரும் கௌரவர்கள் சோதனைக் குழாய் குழந்தைகளாம். ராவணனிடம் 24 வகையான விமானங்கள் இருந்தனவாம்…
ஜனவரி 4-ம் தேதி, குழந்தைகளுக்கான அறிவியல் மாநாட்டில் பேசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த கண்ணன் ஜகத்தள கிருஷ்ணன் ஐன்ஸ்டீன், நியூட்டன், ஹாக்கிங் எல்லாம் அறிவியலாளர்களே கிடையாது என்கிறார். மேலும் 20-ம் நூற்றாண்டு ஐன்ஸ்டீனின் நூற்றாண்டு என்றால், இது தன்னுடைய நூற்றாண்டு என்கிறார். தமிழ்நாட்டிலிருந்து இப்படியொரு ‘மேதை’ இருப்பதே இத்தனை நாள் தெரியாமல் போய்விட்டதே என பின்னணியைத் தேடினால், வியப்பு…வியப்பு!
எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையில் ‘புதுப்பிக்கத் தக்க ஆற்றல் அமைப்புகள்’ (Renewable Energy Systems) குறித்து ஆய்வு செய்து, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழக்கத்தில் பட்டம் வாங்கியிருப்பதாக சொல்லும் இவர், இயற்பியல் ஆய்வுகள் தவறு என்கிறார். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்த நீங்கள் இயற்பியல் குறித்த ஆய்வுகள் தவறு என எப்படி சொல்கிறீர்கள் என கேட்டால், “அறிவுக்கு பட்டம் வாங்க வேண்டுமா?” என பதில் கேள்வி போடுகிறார்.
கண்ணன் ஜகத்தல கிருஷ்ணன்
தற்போது ‘பிரபஞ்சத்தின் தோற்றம்’ குறித்து ஆய்வு செய்து வருகிறாராம். ஆய்வுக்கூடம் இருப்பது மகிரிஷி வேதாந்த்ரி ஆசிரமத்தின் உள்ளே. ஆய்வு வழிகாட்டி, லேப் டெக்னீஷியன் படித்த யோகா டீச்சர் சத்தியமூர்த்தி! இத்தகைய பின்னணியில், “நான் ஜன்ஸ்டீனைக் காட்டிலும் சிறந்த இயற்பியலாளர். என்னுடைய ஆய்வு அனைத்து இயற்பியல் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும்” என சவால் விடுகிறார். புவி ஈர்ப்பு விசை கோட்பாட்டுக்கு மாற்றாக தனது புதிய கோட்பாட்டுக்கு ‘மோடி அலை’ என பெயரிடப்போவதாகவும் மாநாட்டில் அறிவித்தார். ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்றுள்ள இவர், தனது ஆராய்ச்சிக்காக இந்தியா திரும்ப இருக்கிறாராம். தன்னுடைய கண்டுபிடிப்பால் இந்தியா பெருமையடையப் போகிறது என்கிறார். இந்தச் சொற்பொழிவின் மூலம் இந்தியா அடைந்த பெருமையே போதுமையா சாமி !
கருத்துப்படம் : வேலன்
பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவுடன் ஆஸ்திரேலியாவில் தகவல் அமைப்பு மேலாண்மையில் மேற்படிப்பும் எம்.பி.ஏ-வும் முடித்து அங்கேயே தொழில் தொடங்கியுள்ளார். தன்னுடைய ஆய்வுகளை பெயர் குறிப்பிடாத ஆய்வு இதழ்களில் வந்துள்ளதாக சொல்லும் கிருஷ்ணன், 400-க்கும் மேற்பட்ட உலக அறிவியலாளர்களுக்கு தன்னுடைய ஆய்வை மின்னஞ்சலில் அனுப்பியிருப்பதாக சொல்கிறார்.
ஆந்திரா பல்கலையின் துணை வேந்தர் நாகேஸ்வர ராவ்
இதே மாநாட்டில், ஆந்திர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துணை வேந்தர் பேராசிரியர் ஜி. நாகேஸ்வர ராவ், கௌரவர்கள் ஸ்டெம் செல் தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சோதனை குழாய் குழந்தைகள் என்கிறார். மேலும் இராவணன் 24 வகையான விமானங்களை வைத்திருந்ததாகவும் அள்ளிவிட்டிருக்கிறார்.
கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவில் டைனோசர்களின் தோற்றமும் மறைவும் குறித்து ஆய்வு செய்துவரும் பஞ்சாப் பல்கலைக்கழக புவியியலாளர் அசு கோஸ்லா, “இந்த பிரபஞ்சத்தின் சிறந்த அறிவியலாளர் பிரம்மாதான். அவருக்கு டைனோசர்கள் பற்றி தெரிந்திருந்தது. வேதங்களில் அது குறித்த தகவல் உள்ளது” என்கிறார்.
“இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிய பிரம்மனுக்குத் தெரியாமல் எதுவும் இல்லை. எவரும் அறியும் முன்பே பிரம்மாவுக்கு டைனோசர்கள் இந்த உலகில் இருப்பது தெரிந்திருந்தது. இந்தியாதான் டைனோசர்கள் நிறைந்திருந்த இடமாகவும் பரிணாமம் கண்ட இடமாகவும் இருந்தது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு டைனோசருக்கு ‘ராஜ அசுரா’ என பெயர் வைத்து அழைத்தார்கள்” என்கிறார். இதற்கே மூச்சு வாங்கினால் எப்படி, இன்னும் நிறைய புராண புரட்டுகளை அள்ளி வீசுகிறார்…
“நம்முடைய வேதங்களிலிருந்துதான் அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் டைனோசர்கள் என்ற பதத்தை உருவினார்கள். 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்து போனபோது, பிரம்மா கண்களை மூடி வேதம் எழுதிக் கொண்டிருந்தார். அந்த இமைப் பொழுதில் டைனோசர்கள் அழிந்துவிட்டன. இந்த உலகத்தில் உள்ள எவரும் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால், வேதங்களில் டைனோசர்கள் குறித்து சொல்லப்பட்டிருப்பது உண்மை. டைனோ- சர் என்பதே சமஸ்கிருத சொல். டைனோ என்றால் சூனியக்கார என பொருள்; சர் என்றால் ராட்சசன் என பொருள். எனவே, இந்த பூமியில் உள்ள அனைத்தும் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது” என புராண ஆராய்ச்சியை அவிழ்த்து விடுகிறார்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறை அமைச்சகம் நடத்தி வரும் அறிவியல் மாநாட்டில், கடந்த ஐந்தாண்டுகளாக இப்படிப்பட்ட இந்துத்துவ புராண அபத்தங்களை அறிவியல் என்ற பெயரில் இந்த அமைச்சகம் மேடை ஏற்றிவருகிறது . அதிக அளவில் கல்லூரி-பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டில் அறிவியலை கேலியாக்கி, மூளையற்ற மூடர்களின் உளறலை திணித்து வருகிறது இந்தக் கேடுகெட்ட அரசு. இன்னும் ஐந்தாண்டுகள் இவர்களுடைய ஆட்சி நீடிக்குமானால், நிச்சயம் இந்தியா ஆயிரம் நூற்றாண்டுகள் பின்னோக்கித்தான் போகும்!
காசுமீர், சோபியன் நகரத்தை சேர்ந்த 20 மாதமேயான குழந்தையான ஹிபா நிசார் இந்திய இராணுவத்தின் பெல்லட் குண்டுகளால் கடந்த 2018, நவம்பர் 28-ம் தேதி தாக்கப்பட்டாள். கண்ணீர் புகைக் குண்டுகளின் புகை மூட்டத்திலிருந்து அவளது தாய் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் தப்பிச் செல்லும் போதுதான் இக்கொடூரம் நிகழ்ந்தது. சிகிச்சை நடந்து கொண்டிருந்தாலும் வலது கண்ணின் பார்வையை அவள் இழக்கக்கூடும்.
இந்திய இராணுவத்தின் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட ஹிபா நிசார்.
கடந்த 2016 கோடையில் இந்திய இராணுவத்தால் போராட்டக்காரர்களின் தளபதி புர்கான் வானி கொல்லப்பட்ட பிறகு, அதற்கு எதிர்வினையாக காசுமீர் முழுதும் பற்றிய போராட்டங்களில் சுமார் 17,000-க்கும் மேற்பட்ட காசுமீர் மக்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் முழுவதுமாகவோ அல்லது பாதி அளவிலோ கண்பார்வையை இழந்தனர். இப்படி காயமடைந்தவர்கள், உடலுறுப்புகளை இழந்தவர்கள் மற்றும் கண்பார்வையை இழந்தவர்களது புகைப்படங்களை ஊடகங்களில் அவர்கள் பகிர்ந்தனர். இதில் பெரும்பான்மையானவை ‘மரணம் ஏற்படுத்தா’ ஆயுதங்கள் என்று பெயரிடப்பட்ட பெல்லட் குண்டுகளால் ஏற்பட்டவை. ஆனால் துப்பாக்கியிலிருந்து தெறிக்கும் இக்குண்டுகள் கடுமையாக உறுப்பு சேதாரத்தையும் உடல் விகாரத்தையும் ஏன் மரணத்தையும் கூட ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.
முரணாக, மக்கள் போராட்டங்களை மென்மையாக தடுக்கவே இந்திய இராணுவத்தால் மரணம் ஏற்படுத்தா ஆயுதம் பயன்படுத்தப்படுவதாக கட்டுக்கதை சொல்லப்படுகிறது. ஆயினும் இந்த பெல்லட் குண்டுகள் மக்களின் துயரை குறைக்கவில்லை மாறாக துன்பங்களை மென்மேலும் மோசமாக்கிவிட்டது.
புர்காணி கொல்லப்பட்ட சில நாட்களிலேயே பெல்லட் குண்டுகளால் தாக்குதலுக்குள்ளான மக்களுக்கு சிகிச்சையளித்த ஸ்ரீ மஹாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் முதலுதவி மருந்துக்களும் கருவிகளும் தீர்ந்து போனது. “மரணம் ஏற்படுத்தா ஆயுதங்கள் இப்போது சுமையை சாவிலிருந்து நோயுற்ற நிலைமைக்கு மாற்றிவிட்டது” என்று அம்மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறுகிறார்.
கடந்த 2016-ம் ஆண்டு பெல்லட் குண்டு தாக்குதலால் இரு கண்களிலும் பார்வையிழந்த இன்ஷா மாலிக்.
இப்படி ஆயிரக்கணக்கான காசுமீர் மக்களின் உடலை சிதைத்து நூற்றுக்கணக்கானவர்களின் பார்வையை பறித்த இந்த ஆயுதங்களை “மரணம்-விளைவிக்காதவை” என்று எப்படி நம்மால் ஏற்க முடியும்? இந்த சிதைக்கப்பட்ட உடல்களின் புகைப்படங்களைப் பார்த்த பின் எதிர் வினையாற்ற இந்திய மக்கள் யாருக்கேனும் பொறுப்புணர்வு இருக்கிறதா?
நம்முடைய நெறிமுறை, கலாச்சாரம், அரசியல் மற்றும் வரலாற்று வழியாகவே பாதிக்கப்பட்ட மக்களின் புகைப்படங்களை பார்த்து நாம் வினையாற்றுவதாக சமூக விஞ்ஞானிகள் வாதிடுகிறார்கள். இது பகிர்ந்துகொள்ளப்பட்ட வரலாறு, கலாச்சாரம் அல்லது மத அடையாளம் மற்றும் யாரை நாம் மனிதராக கருதுகிறோம் என்பதை பொறுத்தது. வரலாற்றுவழியாக இது இனம், பால், பாலியல் நோக்குநிலை மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றை பொறுத்து இம்முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஒவ்வொரு சமூகமும் படிநிலை துன்பங்களை அதாவது சிலரது துன்பம் ஏனையோரை விட அவசரமானது மற்றும் சகிக்க முடியாதது என்பதை நிறுவுகிறது. இனவெறியும், தீவிர தேசியவாதமும் வன்முறையும் தறிகெட்டு நடக்கும் இக்காலத்தில் சமூக விஞ்ஞானிகளும் மனித நேயம் கொண்டவர்களுமான நாம் இவற்றை கண்டிப்பாக கேள்விக்குட்படுத்தவும் உடைக்கவும் வேண்டும்.
பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்ட காசுமீர் மக்களின் துயரங்களை புகைப்படங்களாக இந்தியாவின் முதன்மையான ஊடகங்களுக்கு பகிரப்பட்டதையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் 2016 -லிருந்து நான் கவனித்து வருகிறேன். காஷ்மீர் மற்றும் இந்திய மைய நீரோட்டத்தில் இந்த புகைப்படங்கள் எப்படி பார்க்கப்படுகின்றன என்பதில் ஒரு பாரிய இடைவெளி இருப்பதை பார்த்திருக்கிறேன்.
முதன்மையான இந்திய ஆங்கில ஊடகங்களில் சிலர் பாதிக்கப்பட்ட காசுமீர் மக்களுக்கு தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் சிறுபான்மையினர். ஆனால் பெரும்பான்மையானோரது கேள்விகளாலும் குற்றச்சாட்டுகளாலும் பின்னூட்ட பெட்டிகள் நிறைக்கப்பட்டுவிட்டது. “தங்களது குழந்தைகளை கல்லெறிய காசுமீர் பெற்றோர் ஏன் விடுகிறார்கள்? அல்லது அது அவர்களுக்கு தேவைதான்” என்கிறார்கள்.
“மேலும் ஆக்கிரமிப்பு காசுமீரில் பாகிஸ்தான் இராணுவம் செய்து வருவதையும் காசுமீர் பள்ளத்தாக்கில் மரணம் ஏற்படுத்தா ஆயுதங்களால் ஏற்படும் துன்பங்களையம் சிலர் ஒப்பிடுகிறார்கள்.” இக்கேள்விகள் தீங்கு விளைவிக்கும் காரணிகளிலிருந்து கவனத்தை திசை திருப்புகின்றன. மேலும் இக்கொடூரமான வன்முறைக்கு சில உடல்கள் தகுதியானவைதான் என்று கூறுகின்றன.
அவர்களது துயரங்களை சந்தேகப்படுவது :
இந்த ‘வேற்று’ காசுமீர் மக்கள் மீதான மனிதாபிமானமற்ற விவாதமுறையும் அவப்பெயரும் எப்படி இந்துக்களின் ஆழ்மனதில் புரையோடியிருக்கின்றன என்பதை காசுமீர் மக்களுடைய துன்பங்களின் மீதான கருணையில்லாத அவர்களது மனநிலை காட்டுகிறது.
காசுமீர் மக்களின் துயரங்களும் வலியும் சந்தேகிக்கப்படுகின்றன ஏனெனில் அவர்களது அடிப்படை மனிதத்தன்மையே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. மற்றவர்கள் துயரப்படுவதை கண்டுணராத போக்கு தான் உலகம் முழுமைக்கும் இனவாத மற்றும் தேசியவாத அரசுகளின் அடையாளமாகிவிட்டன.
சமீபத்தில் அமெரிக்க எல்லையில் கண்ணீர்புகை குண்டுகளால் தாக்கப்பட்ட அகதிகளிலிருந்து “ஆபத்தானவர்கள்” என்று அடையாளப்படுத்தப்பட்டு பட்டப்பகலிலேயே இசுரேல் இராணுவத்தால் கொல்லப்பட்ட காசா போராட்டக்காரர்கள்வரை இதே கதைதான்.
பெல்லட் தாக்குதலுக்கு ஆளான இன்ஷா மாலிக்கின் எக்ஸ்-ரே பதிவு. காஷ்மீர் மக்கள் தங்கள் துயரத்தை பதிவு செய்துவைத்துள்ளனர். ஆனால் இந்திய மனசாட்சியை இவை தொடுவதில்லை.
இந்திய பொதுமக்களின் இரக்கமற்ற மனநிலைக்கு முரணாக துயரங்களின் புகைப்படங்கள் மூலம் காசுமீர் மக்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள். நான் 2016 -ஆம் ஆண்டில் சந்தித்த பல காசுமீர் மக்கள் பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை தங்களது செல்போன்களில் சேமித்து வைத்திருந்தார்கள். ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டபோது, துயரங்களை நினைவில் வைத்திருப்பது எங்களின் கடமை என்றார்கள்.
இந்த புகைப்படங்கள் அவற்றை பார்ப்பவர்களின் இதயங்களையும் எண்ணங்களையும் மாற்ற ஏதாவது செய்யக்கூடும் என்று காசுமீரை சேர்ந்த ஒரு மருத்துவர் நம்பினார். “ஒருவேளை பெல்லட் குண்டுகளால் என்ன செய்ய முடியும் என்பதை யாரேனும் உண்மையில் அறிந்தால், காசுமீரில் நடந்து கொண்டிருப்பதை அவர்கள் ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள்” என்று அவர் கூறினார்.
காசுமீர் மக்களது காயங்கள் இந்திய மக்களால் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதை அவர்கள் உணர்ந்தே உள்ளனர். மேலும் தங்களுக்கு பெல்லட் குண்டுகளால் ஏற்பட்ட காயங்கள் உண்மையானது தான் என்பதை நிறுவ புகைப்படங்களை மட்டுமல்ல எக்ஸ்-ரே மற்றும் சி.டி ஸ்கேன் புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார்கள்.
இந்த புகைப்படங்கள் மூலம் அவர்கள் சொல்ல வருவது யாதெனில், “எங்களது துயரம் உண்மையானது. இதை எப்படி நாங்கள் போலியாக காட்ட முடியும்?” என்பது தான். ஆனால் கெடுவாய்ப்பாக இந்த புகைப்படங்கள் கூட இந்திய மக்களின் பொதுபுத்தியை பெரிதாக மாற்ற முடியவில்லை.
மாறாக, பெல்லட் குண்டுகள் மீதான விவாத்தை தான் இப்புகைப்படங்கள் தூண்டி விட்டிருக்கின்றன. இந்திய அரசும் உச்சநீதிமன்றமும் பெல்லட் குண்டுகளை கடுமையாக பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றன. ஆனால் அதை பயன்படுத்துவதற்கான காரணம் என்ன என்பதை பற்றியும் போராட்டங்களைப் பற்றியும் சிறிதளவே விவாதம் நடந்து வருகிறது.
ஆயிரக்கணக்கான காசுமீர் மக்களின் உடலை சிதைத்து நூற்றுக்கணக்கானவர்களின் பார்வையை பறித்த இந்த ஆயுதங்களை “மரணம்-விளைவிக்காதது” என்று எப்படி நம்மால் ஏற்க முடியும்?
மாறாக மிளகு பொடி குண்டுகளை பயன்படுத்த இராணுவ நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் ஆலோசனை கூறியிருக்கின்றனர். இப்படி காசுமீர் மக்களின் உடல்கள் மீது பரிசோதனை செய்ய புதிய புதிய “மரணம் விளைவிக்காத” ஆயுதங்களை பயன்படுத்த இராணுவ கற்பனைகள் பூத்து குலுங்குகின்றன. ஆனால் இங்கே பார்வையை நிரந்தரமாக குருடாக்குவது குறித்தும் பொது மக்களின் உடலுறுப்புகளை சிதைப்பது குறித்தும் எந்த கேள்வியும் எழுப்பப்படுவதிலை.
இத்துயரங்களின் புகைப்படங்கள் நம்மிடம் என்ன சொல்லுகின்றன? ஒருவேளை, காசுமீர் மக்கள் மீது தொடுக்கப்படும் வன்முறை நமக்கு பாதுகாப்பைத் தருகிறதா என்று நம்மை கேட்கச்சொல்லலாம். “ஹிபா நிசார் போன்ற குழந்தைகளின் கண்களை குருடாக்குவது ஏற்றுக் கொள்ளத்தக்கதா?” என்ற தர்க்கப்பூர்வக் கேள்வியைக் கேட்கச் சொல்லி நம்மை வலியுறுத்தலாம். சில துயரங்களின் புகைப்படங்கள் நம்மை ஆட்கொள்வதும் மற்றவை ஏன் அவ்வாறு நம்மை ஆட்கொள்வதில்லை என்ற கேள்வியை நாம் நமக்கே கேட்டுக் கொள்ள வேண்டும். நம்மை பற்றி அவை என்ன கூறுகின்றன மற்றும் நாம் அவற்றை எப்படி பார்க்கிறோம் என்ற கேள்வியையும் அப்புகைப்படங்கள் நம்மிடம் கேட்கலாம் .
காசுமீர் மக்களை கொல்வதற்கு மற்றும் முடமாக்குவதற்கு எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது என்ற விவாதமோ அல்லது சிதைந்துபோன உயிர்கள் பற்றிய இரக்க உணர்வோ கூட இந்தியாவிற்கு இப்பொழுது தேவையில்லை. இராணுவமயமாதல் குறித்தும், மனிதன் என்று நாம் யாரை கணக்கிடுகிறோம் என்பது குறித்துமான ஆழமான கேள்வியுமே நமது தற்போதைய தேவை.
இக்கட்டுரையை எழுதிய சாய்பா வர்மா அமெரிக்காவில் சான் டிகோவிலுள்ள கலிபோர்னியா பல்கலைகழகத்தில் மானுடவியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
“தொழிலாளர் உரிமைகளை மீட்க பாசிச RSS – BJP கும்பலை வீழ்த்த 2019 ஜனவரி 8 – 9 வேலைநிறுத்தத்தை முன்னெடுப்போம்!” எனும் முழக்கத்தின் அடிப்படையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கிறது.
அதனை ஒட்டி வருகின்ற 08.01.2019 தேதியன்று துடியலூர் பேருந்து நிறுத்தம் முன்பு காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நிரல்
இடம் : துடியலூர் பேருந்து நிருத்தம் முன்பாக.
நாள் : 08.01.2018 (செவ்வாய்)
நேரம் : 10.00 மணி முதல் 12.00 மணிவரை
தலைமை :
தோழர் M.கோபிநாத், பு.ஜ.தொ.மு தலைவர் SRI-கிளை கோவை,
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கோவை. தொடர்புக்கு : 90924 60750.
*****
“தொழிலாளர் உரிமைகளை மீட்க பாசிச RSS – BJP கும்பலை வீழ்த்த 2019 ஜனவரி 8 – 9 வேலைநிறுத்தத்தை முன்னெடுப்போம்!”
அன்பார்ந்த தொழிலாளர்களே!
இனிமேல் இந்தியாவில் அரசியல் கட்சிகள் என்று எதுவும் கிடையாது. வேண்டுமானால் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்று ஒரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டால் என்ன நடக்கும்?
இனி தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் எதுவும் கிடையாது. தொழிலாளர்கள் விரும்பினால் BMS சங்கத்தில் சேர்ந்து கொள்ளலாம் என்று ஒரு சட்டம் வந்தால்?
இது இப்போது நகைப்புக்குறியதாக இருக்கலாம். ஆனால் இதை நடைமுறைப்படுத்த மோடி தலைமையிலான அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற சட்டங்களை எல்லாம் ஒழித்துக்கட்டுவது, அவர்களின் உரிமைகளை மறுப்பது, ஆகியவற்றின் மூலம் தொழிலாளர்களை முதலாளிகளின் நிரந்தர அடிமைகளாக மாற்றுவதற்காக மோடி ஒரு வாட்ச்மேனைப் போல நாள்தோறும் ‘உழைத்து’ வருகிறார்.
ஜனவரி 8,9 வேலைநிறுத்தத்தையொட்டி தோழர் முகுந்தன் பேட்டி
காலனியாக்க காலத்தில் கிடைத்த உரிமைகள் கூட சுதந்திரம் கிடைத்து விட்டதாக சொல்லப்படுகிற இக்காலத்தில் உண்மையில் நமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதா? இல்லை என்றே சொல்ல வேண்டும். காகிதத்தில் இருக்கின்ற பெயரலவிலான சட்டங்களை மதிப்பதற்கு கூட எந்த முதலாளியும் தயாராக இல்லை. அதையும் கூட செல்லாகாசாக்குவதற்கு போராடி பெற்ற சட்டங்கள் நான்கு விதிமுறை தொகுப்பாக மாற்ற எத்தனிக்கிறது, மோடி அரசு. இதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை தொழிலாளர்களாகிய நமது கடமை.
லாபத்தில் இயங்கும் பொதுத்துறைகளை தனியாருக்கு விற்பது, முதலாளிகளுக்கு கடன் கொடுத்து வாராக்கடன் என கணக்கு காட்டி தள்ளுபடி செய்வது, வரிச்சலுகை அளிப்பது, நீரவ் மோடி, மல்லையா வகை பணத் திமிங்கலங்களை உருவாக்கி வளர்ப்பது போன்றவை தான் அரசின் வேலையாக இருக்கிறது.
மறுபுறம் உழைப்பை தவிர வேறு எதையும் தனது சொந்தமாக கொண்டிராத தொழிலாளர்களின் உழைப்பு சக்தியை அற்ப கூலிக்கு வாங்கி ஒட்டச் சுரண்டுவது. சுரண்டப்படும் தொழிலாளர்கள் ஒன்று திரளாமல் பார்த்துக் கொள்ளவது. திரட்டப்பட்டு போராடும் தொழிலாளர்களை போலீசு, ரானுவம் கொண்டு ஒடுக்குவது, என முதலாளிகளின் அடியாள் படையாக செயல்படுகிறது அரசு.
ஜனவரி 8,9 வேலைநிறுத்தத்தையொட்டி தோழர் விஜயகுமார் பேட்டி
இந்த சுரண்டலை நாம் புரிந்து கொண்டு வர்க்கமாக திரண்டு விடக்கூடாது என்பதற்காக ராமனும் – ஐய்யப்பனும் படாத பாடு படுகிறார்கள். சாதி, மத, இன, மொழி வேற்றுமைகளைக் கொண்டு தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்துவது, சாதிய படிநிலை போன்று ஒப்பந்த தொழிலாளி, பயிற்சியாளர், தொழில் பழகுநர், NEEM, FTE என பல பெயர்களில் தொழிலாளி வர்க்கத்தை பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்கிறது ஆளும் வர்க்கம்.
நமது உரிமைகளை பறித்து, நம்மை நவீன கொத்தடிமைகளாக முதலாளிகளுக்கு சப்ளை செய்யும் வேலையை தான் அரசு செய்கிறது.
இனியும் பொறுப்பது அவமானம் ! போராடுவதே தன்மானம்! மோடி அரசின் தேச விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளை முறியடிக்க வருகின்ற ஜனவரி 08, 09 தேதிகளில் நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டியது ஒவ்வொரு தொழிலாளியின் கடமை !
தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு. தொடர்புக்கு : 94444 42374.
ஸ்டெர்லைட்டை திறக்க சொல்கிற பசுமை தீர்ப்பாய உத்தரவு கிடக்கட்டும்… தமிழக அரசே… மேல்முறையீடு என்று ஏமாற்றாதே ! தனிச்சட்டம் இயற்று! ஸ்டெர்லைட்டை விரட்டு!! என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மதுரை மண்டலம் சார்பாக அரங்கக் கூட்டம் கடந்த டிசம்பர்- 30 அன்று மாலை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள இராமசுப்பு அரங்கத்தில் நடைபெற்றது.
மக்கள் அதிகாரம் அமைப்பின் கம்பம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தன்னுடைய வரவேற்புரையில், ”இன்று மத்திய அரசும் சரி மாநில அரசும் சரி பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரு புதிய முறையை கையாண்டு கொண்டிருக்கிறது. அதாவது போராடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்குவது என்பதுதான் அது. ஏனெனில் அவர்களிடம் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை. எனவே, அடிப்படை தேவைகளுக்காக போராடுபவர்களை கூட தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி மக்களை பயமுறுத்துவது, தேச துரோகிகள் என தனிமைப்படுத்துவது என்று குறிப்பாக பி.ஜே.பி கும்பல் செயல்படுகிறது. எனவே முற்போக்கு, ஜனநாயக சக்திகள் தனித்தனியாக செயல்படுவதை விட்டு, ஒன்றிணைய வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்ந்து இங்கே வருகை தந்துள்ள பேச்சாளர்களை வரவேற்கிறேன்” என பேசினார்.
இதற்கு பின் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 14 தியாகிகளுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தலைமையுரையில் தோழர் மோகன் அவர்கள் ” தூத்துக்குடி மக்களின் இந்த வீரஞ்செறிந்த போராட்டத்தையும் அங்கே 14 பேர் மக்கள் கொல்லப்பட்டதையும் பிற மாவட்டத்தை சேர்ந்த மக்கள், வெறும் சம்பவமாக மட்டுமே பார்க்கின்றனர். தூத்துக்குடியில் தற்போது மிக தீவிர அளவில் கண்காணிப்பு செய்யப்படுகின்றது. இந்த நிலையில்தான் இந்த பசுமைதீர்ப்பாய உத்தரவு ஸ்டெர்லைட்டுக்கு சாதகமாக ஆலையை திறக்கலாம் என வந்திருக்கின்றது. இதை கேட்டு தமிழகம் போர்க்களமாக ஆகியிருக்க வேண்டாமா? இவ்வாறு மக்கள் மவுனமாக இருப்பதை நாம் அனுமதிக்க முடியாது. ஸ்டெர்லைட்டுக்குஎதிராகவும், தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாகவும் பிற மாவட்ட மக்களையும் போராடுவதற்கு உணர்வூட்ட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த அரங்க கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்தியாவிலேயே காஷ்மீருக்கு பிறகு அதிகமாக எண்ணிக்கையில், சுமார் 25 ஆயிரம் போராட்டங்கள் ஒரு ஆண்டுக்கு நடக்கும் மாநிலமாக தமிழகம் இருக்கின்றது. மக்களுடைய பிரச்சினைக்கு பதில் சொல்லாமல், தீர்வை தேடாமல், சமூக விரோதிகள் தூண்டி விடுவதாகவும், அச்சமூக விரோதிகள் போராட்டத்தில் புகுந்து கலவரம் உருவாக்கியதால்தான் தற்காப்புக்காக போலீசு சுட்டதாகவும், மற்றபடி அந்த மக்களுக்கு ஸ்டெர்லைட்டால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை என்பதாகவும் பத்திரிக்கை, செய்தி தொலைக்காட்சிகள், அறிவுஜீவிகளை வைத்து பொய்பிரச்சாரம் செய்கின்றது மத்திய மாநில அரசுகள்.
ஆனால் உண்மை நிலவரம் என்ன? இதற்கு முன்பே கூட பல கட்ட ஆய்வுகள் நடந்து ஸ்டெர்லைட் நிர்வாகம் சுற்று சூழலை மிக மோசமாக பாதிப்படைய வைத்துள்ளதாக நிரூபித்துள்ளது. இதை ஒட்டித்தான் ஏற்கனவே 100 கோடி ரூபாயை ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு அபராதம் விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். அதை கூட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும், தூத்துக்குடி நகரத்திலும் பூங்காக்கள் அமைக்க செலவழித்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர். மேலும், கடந்த மார்ச் மாதம் நடந்த ஆய்வில் மொத்தம் 15 இடங்களில் கந்தக அமில ரசாயனக் கழிவுகளை எந்த வித பாதுகாப்புமின்றி வெட்ட வெளியில் கொட்டி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவ்வறிக்கையை கூட வெளியிடாமல் வைத்திருந்தார்கள்.
தோழர் மோகன்
பல சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மூலம் பெற்றுத்தான் இந்த விசயங்கள் தெரிய வந்துள்ளது. இன்னொரு விசயம் நீங்கள் கவனித்து பார்த்தால் இது எடப்பாடியே சொல்வது போல் அவருக்கே தெரியாமல் தமிழக உள்துறை செயலர் திருமதி கிரிஜா வைத்தியநாதன் மூலம் இந்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ஸ்டெர்லைட் நிர்வாகம் கூட்டு சேர்ந்து செய்த திட்டமிட்ட சதி என்பதுதான் உண்மை. உதாரணத்திற்கு கடந்த 2012 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் மரக்கானா சுரங்க தொழிலாளர்கள் நடத்திய அமைதியான உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி 34 பேரை படுகொலை செய்துதான் அப்போராட்டத்தை ஒடுக்கியது. அந்த போராட்டக்குழு தலைவரின் முகத்தில் மட்டும் 14 குண்டுகள் பாய்ந்திருந்தன. அப்போது ஆங்கிலோ இந்தியன் நிறுவனம் என்கின்ற அந்த சுரங்க ஆலையில் நிர்வாக அதிகாரியாக இருந்த வெங்கடேஷ் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம்தான் ஸ்டெர்லைட்டிற்கு மாற்றப்பட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக ஒரு மாத குறுகிய காலத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அந்த ஆங்கிலோ இந்தியன் நிறுவனத்தில் 23% பங்கை வைத்திருப்பவர் வேறு யாரும் அல்ல ஸ்டெர்லைட்டின் முதலாளி அதே அனில் அகர்வால்தான்.
’உலகத்தில் பூமிக்கடியிலிருந்து சுரங்கம் தோண்டி என்ன வளத்தை வெளிக்கொண்டு வந்தாலும் அதில் எனக்கு ஒரு பங்கு வருமாறு நான் எல்லா நாடுகளிலும் சுரங்கத்தொழிலில் முதலீடு செய்துள்ளேன்’ என்று இவன் திமிராக சொல்கிறான். இவனுடைய இந்த திமிருக்கு காரணம் நம்முடைய அமைதிதான். அதை உடைத்தெறிந்து மக்களை ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அணி திரட்டுவதே இந்த அரங்க கூட்டத்தின் நோக்கம்” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர் குமரன், நாணல் நண்பர்கள் குழுவை சேர்ந்த தோழர் துளிர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் கனியமுதன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன், மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். (தோழர்களின் உரைகள் தனித் தனி பதிவுகளில் வெளிவரும்)
இறுதியாக மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் மருது நன்றியுரை கூறினார். இடையிடையே பாடப்பட்ட புரட்சிகர பாடல்களும், தோழர்களின் உரைகளும் கூடியிருந்தவர்களுக்கு உயிர் வாழ வேண்டுமெனில் மக்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக இருந்தது.
எதிர்வரும் 2019, ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய இரு தினங்கள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்திற்கு அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் அறைகூவல் விடுத்துள்ளன.
ஏன் இந்த வேலைநிறுத்தம்? இந்த வேலைநிறுத்தத்தை இந்திய தொழிலாளி வர்க்கம் ஏன் ஆதரிக்க வேண்டும்?
மோடி அரசின் தேசவிரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதை எதிர்த்தே இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தொழிலாளி வர்க்கம் பிரிட்டன் காலனியாதிக்கத்தின்போதே போராடி வென்றெடுத்த பல்வேறு உரிமைகள் 44 சட்டங்களாக இருக்கின்றன. இந்தச் சட்டங்களையெல்லாம் செல்லாக் காசாக்கும் நோக்கத்தில் 4 நடத்தை விதிமுறைகளாக மாற்றுவதற்கான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் முன் வைத்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, மோடி அரசு. தொழிலாளர் நலச்சட்டங்களில் சீர்திருத்தம் என்கிற பெயரில் அப்பட்டமான கார்ப்பரேட் சேவையை செய்து வருகின்ற மோடி அரசு, கார்ப்பரேட் நிறுவனங்கள் இடையூறின்றி தொழில் நடத்துவதை மேற்படி சட்ட திருத்தங்களை அமலாக்குவதன் மூலம் உத்திரவாதப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளது.
தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளின் அடுத்த முயற்சியாக மத்திய தொழிற்சங்க அங்கீகாரம் குறித்த விதிமுறைகளை மாற்றி, ஆர்.எஸ்.எஸ் சார்புடைய பி.எம்.எஸ் மட்டுமே இந்திய தொழிலாளி வர்க்கத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக திணிக்கப்படும் நிலையை உருவாக்கி வருகிறது. ஜெர்மனியில் இட்லரும், இத்தாலியில் முசோலினியும் அந்தந்த நாட்டின் தொழிற்சங்கங்களை ஒழித்துக்கட்டி, பாசிச கட்சிகளது தொழிற்சங்கத்தை ஒரே தொழிற்சங்கமாக மாற்றிய அதே உத்தியை இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பல் கையாள்கிறது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ) தேசிய மாநாட்டைக் கூட்டி, மத்திய மற்றும் துறைவாரி தொழிற்சங்கங்களது பிரதிநிதிகளுடன் தொழிலாளர்களது பிரச்சினைகளை விவாதிக்கின்ற நடைமுறையை 2015-ம் ஆண்டு முதல் புறக்கணித்து வருகிறது மோடி அரசு. அதேபோல மத்திய அமைச்சர்களது குழுவுடனோ (Group of Ministers) துறைவாரி அமைச்சர்களுடனோ தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தும் வழக்கத்தினையும் புறக்கணித்து விட்டது. அதே நேரத்தில் தினம் ஒரு கார்ப்பரேட் முதலாளியை சந்திப்பது, வாரத்திற்கொரு ஒப்பந்தம் போடுவது, மாதம் ஒரு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வர்த்தக ஒப்பந்தங்கள் போடுவது என்கிற வகையில் கார்ப்பரேட் முதலாளிகளது பிரதமராக மட்டுமே செயல்பட்டு வருகிறார், மோடி.
வரம்புக்குட்பட்ட காலத்துக்கான வேலைவாய்ப்பு (FTE), குடும்பம் நடத்துகின்ற தொழில்களில் குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்த அனுமதிப்பது போன்ற சமீபத்திய தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் மூலம் நிரந்தர, பாதுகாப்பான வேலைகளை ஒழித்துக் கட்டிய மோடி அரசு, சம வேலைக்கு சம ஊதியம், தொழிலாளர் பங்களிப்புடன் கூடிய பென்சன் போன்றவற்றில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளையும் அமல்படுத்த மறுக்கிறது.
நாட்டின் அரைகுறை வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் துணையாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களை ஒழிப்பதில், இதற்கு முந்தைய காங்கிரசு அரசு செயல்பட்ட வேகத்தை விட பன்மடங்கு வேகத்தில் செயல்பட்டு வருகிறது, மோடி அரசு.
ஒருபுறத்தில் பொதுத்துறை நிறுவனங்களை செயல்பட முடியாமல் முடக்குகிறது. உதாரணமாக, பி.எஸ்.என்.எல் தொலைபேசி நிறுவனம் 5ஜி செல்பேசி சேவையைத் துவங்குவதற்கு தேவையான அலைக்கற்றையை ஒதுக்கிட மறுப்பது, பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன்களை அதிகரிக்க வைத்து அவற்றை இணைப்பது என்கிற பெயரில் செயல்பாட்டை முடக்குவது, இலாபமீட்டும் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியின் நிதியை கார்ப்பரேட்டுகள் திவாலாக்கிய நிறுவனங்களில் முதலீடு செய்ய நிர்ப்பந்திப்பது போன்ற செயல்களை செய்து வருகிறது. மறுபுறத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசு வைத்திருக்கும் பங்குகளை விற்பனை செய்து, பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் கயவர்களுக்கு பலியிடுவது என்கிற கயமையை செய்து வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ 2.09 லட்சம் கோடி மதிப்புள்ள பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்த மோடியின் அரசு அந்தப் பணத்தின் பெரும்பகுதியை கார்ப்பரேட்டுகளது நலனுக்காகவே செலவிட்டுள்ளது. அரசுக்கும் பொதுத்துறை நிறுவனங்களின் சுயேச்சையான செயல்பாட்டுக்கும் மேலாக ஒழுங்குமுறை ஆணையம் என்கிற அதிகார அமைப்பை உருவாக்கி கார்ப்பரேட் சேவையை தீவிரமாக்கி வருகிறது.
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி என்கிற பெயரில் இலட்சக்கணக்கான சிறுதொழில்களை ஒழித்துக்கட்டி, கோடிக்கணக்கானவர்களை வேலையற்றவர்களாக்கிய மோடி அரசு, பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துக் கட்டி கார்ப்பரேட் நிறுவனங்கள் கொழுப்பதற்கு அவற்றை பலியிடுவது என்கிற போக்கை தீவிரமாக கையாண்டு வருகிறது. இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கி வந்த வேலைவாய்ப்புகளை முடக்கியதுடன், சிறு, நடுத்தர நிறுவனங்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் இல்லாமல் செய்துவிட்டது. அதற்கு உதவியாக, எல்லா வேலைகளையும் காண்டிராக்ட் மயமாக்குதல், சட்டவிரோத ஆலைமூடல்- ஆட்குறைப்புகளுக்கு அனுமதியளிப்பது போன்ற துரோகத்தனத்தை செய்து வருகிறது
இவ்வாறு கொழுக்க வைக்கப்படும் கார்ப்பரேட் முதலாளிகளில் கூட பார்ப்பன-பனியா-பார்சி முதலாளிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் அம்பானி, அதானி உள்ளிட்ட பார்ப்பன-பனியா-பார்சி முதாலளிகள் அடைந்த வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த பேருண்மை புரியும். இந்த பார்ப்பன-பனியா-பார்சி முதலாளிகள்தான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலின் இந்து மதவெறி பாசிசத்துக்கு அடிநாதமாக விளங்குகின்றனர். நாட்டின் அனைத்து தொழில்களையும் பார்ப்பன-பனியா-பார்சி முதலாளிகளே கைப்பற்றி உள்ளனர்.
மேக் இன் இந்தியா, தொழில் செய்வதை சுலபமாக்குவது (Ease of Doing Business), ஸ்டார்ட் அப் இந்தியா (Start up India) என்ற பல்வேறு பெயர்களில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான திட்டங்களை அமல்படுத்துகிறது. அதே தருணத்தில், நாடே ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போலவும், முதலாளிகளுக்கு இலாபமீட்டித் தருவது ஒன்றே நாட்டின் ஒரே செயல்பாடு என்பதாகவும் மத்திய – மாநில அரசுகள் இதனை செய்து முடிக்கும் கங்காணிகளாகவும் இருக்கும் வகையில் இந்த கட்டமைப்பு மாற்றப்பட்டுள்ளது.
தொழிலாளி வர்கத்தை காண்டிராக்ட்மயமாக்குதல், கட்டுப்பாடற்ற வேலைபறிப்பு, தொழிற்சங்க உரிமை பறிப்பு உள்ளிட்ட தொழிலாளர் விரோத – மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன இந்துமதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க மோடி கும்பலை வீழ்த்துகின்ற வரலாற்றுக் கடமை இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் தோளில் சுமத்தப்பட்டுள்ளது. நமது வர்க்கக் கடமையை நிறைவேற்ற இருநாள் வேலை நிறுத்தத்தை நடத்தி முடிப்போம்.
தொழிலாளர் உரிமைகள் மீட்க; பாசிச RSS-BJP கும்பலை வீழ்த்த
2019 ஜனவரி 8-9 வேலை நிறுத்தத்தை முன்னெடுப்போம்!
அகில இந்திய பொது வேலை நிறுத்தம் ஜனவரி 8-9 2019
தொழிலாளர்கள் போராடி பெற்ற 44 தொழிலாளர் நல சட்டங்களை RSS-BJP அரசாங்கம் செல்லாக்காசாக்கி தொழிலாளர்களுக்கு விரோதமான 4 நடத்தை விதிமுறைகளாக மாற்றுகிறது
இதற்கு எதிரான வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் அனைவரும் பங்கேற்குமாறு பு.ஜ.தொ.மு அறைகூவி அழைக்கிறது.
இப்படிக்கு :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி.
தொடர்புக்கு : 94444 42374
மாக்சிம் கார்க்கிநிகலாய் இவானவிச் அவளுக்குக் கதவைத் திறந்துவிட்டான். அவனது தலை கலைந்து போயிருந்தது; கையில் ஒரு புத்தகம் இருந்தது.
”அதற்குள்ளாகவா?” என்று உற்சாகமாகக் கூறினான் அவன். ”நீங்கள் மிகவும் சுறுசுறுப்பான பேர்வழிதான்!”
அன்பு ததும்பும் கண்கள் அவனது மூக்குக் கண்ணாடிக்குப் பின்னே படபடவென்று இமை தட்டி விழித்தான். அவளது மேல் கோட்டைக் கழற்றுவதற்கு அவளுக்கு உதவினான். அன்பு நிறைந்த புன்னகையோடு அவளது முகத்தைப் பார்த்தான்.
“நேற்றிரவு நம் வீட்டைச் சோதனை போட்டார்கள்” என்றான் அவன். “அதைக் கண்டு, போன இடத்தில் உங்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்துவிட்டதோ என்று நான் பயந்து போனேன். ஆனால் அவர்கள் என்னைக் கைது செய்யவில்லை. உங்களைக் கைது செய்திருந்தால் என்னையும் அவர்கள் நிச்சயம் கொண்டு போயிருப்பார்கள்.”
அவளைச் சாப்பாட்டு அறைக்குள் அழைத்துச் சென்றான். போகும்போதே ஒரே உற்சாகத்தோடு பேசிக்கொண்டே போனான்.
”என் வேலை போய்விடும். அது நிச்சயம்தான். ஆனால், அது என்னைக் கொஞ்சம்கூடப் பாதிக்கவில்லை. மேஜையடியிலே உட்கார்ந்து, குதிரைகள் வைத்திராத விவசாயிகளைக் கணக்கு எடுத்து எடுத்து எனக்கே எரிச்சலாய்ப் போய்விட்டது.”
யாரோ ஒரு ராட்சதன் திடும் வெறியோடு வெளியிலிருந்து சுவர்களை உலுக்கி வீட்டிலுள்ள சாமான்களையும் உருட்டித் தள்ளிய மாதிரி. அந்த அறையே ஒரே அலங்கோலமாய்க் கிடப்பதைத் தாய் கண்டாள். படங்கள் எல்லாம் தரைமீது இறைந்து கிடந்தன. சுவரில் ஒட்டியிருந்த காகிதங்களெல்லாம் கிழிபட்டு, துண்டு துண்டாக நாடாக்களைப் போல் தொங்கிக்கொண்டிருந்தன. ஒருபுறத்தில் தரையில் பதிந்திருந்த பலகை அகற்றப்பட்டுக் கிடந்தது. ஒரு கண்ணாடிச் சட்டம் தகர்த்தப்பட்டிருந்தது. அடுப்புக் கரியும் சாம்பலும் தரையில் பரவிக்கிடந்தன. தனக்கு ஏற்கெனவே பழகிப்போன இந்தக் காட்சியைக் கண்டு தலையை அசைத்துக்கொண்டாள் தாய். நிகலாயின் முகத்திலே தோன்றும் ஒரு புதிய தன்மையை உணர்ந்து அவனையே கூர்ந்து நோக்கினாள்.
ஆறிப்போன தேநீர் பாத்திரம், கழுவப்படாத ஏனைய தட்டுக்களோடு மேஜை மீது அப்படியே இருந்தது. தட்டுக்களில் வாங்கிவராமல், தாளில் பொட்டலம் கட்டி வாங்கிவந்த பாலடையும். சாஸேஜும் அந்தந்த காகிதத்தில் அப்படியப்படியே கிடந்தன. மேஜைத்துணி முழுவதிலும் அடுப்புக் கரியும் ரொட்டித் துண்டுகளும், புத்தகங்களும் குவிந்து கிடந்தன. தாய் லேசாகச் சிரித்தாள், நிகலாவும் பதிலுக்குக் குழப்பமாகப் புன்னகை புரிந்தான்.
“இந்த மாதிரிக் குழப்பத்தில் என் பங்கும் உண்டு. ஆனால், அது சரியாய் போயிற்று, நீலவ்னா! அவர்கள் திரும்பவும் வரக்கூடும் என்று நினைத்தேன். எனவேதான் நான் இவற்றை ஒழுங்குபடுத்தவில்லை. சரி, அது கிடக்கட்டும். நீங்கள் போய்வந்த விவரத்தைச் சொல்லுங்கள்.”
அந்தக் கேள்வி அவள் இதயத்தில் திடுக்கென விழுந்து உலுப்பியது. மீண்டும் அவள் கண் முன்னால் ரீபினின் உருவம் தோன்றியது. வந்தவுடனேயே அவனைப் பற்றிப் பேசாதிருந்ததைக் குற்றம் என்றே அவள் உணர்ந்தாள். அவள் நிகலாயின் பக்கமாகக் குனிந்து தான் போய்வந்த விவரத்தை அமைதியாக ஒன்றுவிடாமல் சொல்லத் தொடங்கினாள்.
“அவர்கள் அவனைக் கைது செய்துவிட்டார்கள்……”
நிகலாயின் முகத்தில் ஒரு நடுக்கம் ஓடி மறைந்தது.
”அப்படியா?”
அவனைக் கையமர்த்திவிட்டு, தான் ஏதோ நியாய தேவதையின் சந்நிதியில் நிற்பது போலவும், அந்த தேவதையிடம் ஒரு மனிதனுக்கு இழைக்கப்பட்ட சித்ரவதையைப் பற்றி வாதாடி வழக்காடுவது போலவும், அவள் மேலும் பேசத் தொடங்கினாள். நிகலாய் நாற்காலியில் சாய்ந்து கொண்டும், வெளிறிய முகத்தோடு அடிக்கடி உதட்டைக் கடித்துக்கொண்டும் அவள் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவன் தன் கண்ணாடியை மெதுவாகக் கழற்றியெடுத்து அதை மேஜை மீது வைத்தான், தன் முகத்தில் ஏதோ கண்ணுக்குத் தெரியாத நூலாம்படை படிந்துவிட்டது போல் முகத்தைத் துடைத்து விட்டுக்கொண்டான்.
அவனது முகபாவம் திடீரெனக் கூர்மை பெற்றது. கன்ன எலும்புகள் புடைத்துத் துருத்தின, நாசித் துவாரங்கள் நடுநடுங்கின. இந்த மாதிரி என்றுமே அவனை அவள் பார்த்ததில்லை; அவனது தோற்றம் அவளை பயமுறுத்தியது.
அவள் பேசி முடிந்த பிறகு அவன் எழுந்து தனது முஷ்டிகளைப் பைகளுக்குள் அழுத்தி ஊன்றியவாறு கீழும் மேலும் நடந்தான்.
“அவன் ஒரு மகா புருஷனாய்த்தானிருக்க வேண்டும்” என்று பற்களை இறுகக் கடித்தவாறே அவன் முணுமுணுத்தான். ”சிறையில் இருப்பது அவனுக்குக் கஷ்டமாய்த்தானிருக்கும், அவன் போன்ற ஆட்களுக்கு அது சிரமம்தான்.”
அவன் தனது முஷ்டிகளை அழுத்தியவாறே தனது உணர்ச்சி வேகத்தைத் தணித்துப் பார்த்தான். எனினும் அவனது நிலைமையைத் தாய் உணர்ந்துகொண்டாள்; அது தாய்க்குத் தானாகவே தெரிந்தது. அவன் தன் கண்களைச் சுருக்கினான். கண்கள் கத்தி முனையைப் போல் நீண்டு சுருங்கின. மீண்டும் அவன் மேலும் கீழும் நடந்தவாறே அடங்கிக் குமுறும் கோபத்தோடு பேசத் தொடங்கினான்.
”இந்தப் பயங்கரத்தை எண்ணிப்பாருங்கள். ஜனங்களின் மீது தமக்குள்ள ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற வெறியுணர்ச்சியில், ஒருசில அயோக்கிய நபர்கள் ஒவ்வொருவரையும் உதைக்கிறார்கள், நெரிக்கிறார்கள், நசுக்குகிறார்கள். காட்டுமிராண்டித்தனம் பெருகி வருகிறது, கொடுமையே வாழ்க்கையின் நியதியாகிவிடுகிறது! இதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவர்களில் சிலர் ஜனங்களை அடித்து நொறுக்கி, மிருகங்களைப் போல் நடந்து கொள்கிறார்கள். ஏனெனில் சட்டம் தங்களை எதுவும் செய்யாது என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். சித்ரவதை செய்வதில் அவர்கள் மோகவிகாரம் கொண்டு திரிகிறார்கள். அடிமைகளின் அடங்காத பைத்திய வெறியைப் பயன்படுத்தி, அந்த அடிமை மக்களின் அடிமை உணர்ச்சிகளையும், மிருக்குணங்களையும் அவற்றின் பரிபூரண வேகத்தோடு பாய்ந்து குதறும்படி அவிழ்த்துவிட்டு விடுகிறார்கள். வேறு சிலர் பழிக்குப்பழி வாங்கும் விஷ ஆசைக்கு ஆளாகிறார்கள். தாம் வாங்கிய அடி உதைகளால் ஊமையாகவும் செவிடாகவும் போகிறார்கள், சிலர். மக்கள் குலத்தையே சீர்குலைத்துவிட்டார்கள்!”
அவன் பேச்சை நிறத்திவிட்டு மெளனமாகப் பற்களைக் கடித்தான்.
“இந்த மாதிரியான மிருக வாழ்க்கையில், நீ உன்னையும் மீறி மிருகமாகிவிட முடிகிறது!”
அவன் தன் உத்வேகத்தை அடக்கியாண்டவாறே அழுதுகொண்டிருந்த தாயின் பக்கமாக அமைதியோடு திரும்பி, தனது கண்களில் பிரகாசிக்கும் நிலையான ஒளியோடு அவளைப் பார்த்தான்.
”நாம் நேரத்தை வீணில் போக்கக்கூடாது, நீலவ்னா. நாமே முன்னின்று நமது காரியங்களைக் கவனிக்கலாம் ……..”
சோகம் நிறைந்த புன்னகையோடு அவள்பக்கமாகச் சென்று அவள் கரத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டு கேட்டான்:
“உங்கள் பெட்டி எங்கே?”
”சமையலறையில்.”
”நம் வீட்டு வாசலில் உளவாளிகள் திரிகிறார்கள். அதிலுள்ள அவ்வளவையும் அவர்கள் கண்ணில் படாமல் நாம் வெளியே கொண்டு போக முடியாது. அவற்றை மறைத்து வைப்பதற்கும் இடமில்லை. இன்று ராத்திரி அவர்கள் மீண்டும் சோதனை போட வருவார்கள் என்றே நினைக்கிறேன். – எனவே எவ்வளவு வருத்தம் தரத் தக்கதாயிருந்தாலும் சரி – நாம் அவற்றைச் சுட்டுப் பொசுக்கிவிட வேண்டியதுதான்.”
“எவற்றை ?”
“டிரங்குப் பெட்டியிலிருக்கிறதே – அவற்றை!”
தாய் புரிந்து கொண்டாள். அவள் எவ்வளவுதான் வருத்தங்கொண்டிருந்த போதிலும், தனது காரிய சாதனையை எண்ணி அவள் மனத்தில் ஏற்பட்ட பெருமையுணர்ச்சி புன்னகையாக உருவெடுப்பதை அவளால் தடுக்க முடியவில்லை.
”அதில் ஒன்றுமே கிடையாது. அதில் ஒரு துண்டுக் கடுதாசிகூடக் கிடையாது!” என்று கூறிவிட்டு, அதன் பின்னர்தான் ஸ்திபான் சுமக்கோவைச் சந்தித்த விவரத்தையெல்லாம் கொஞ்சங் கொஞ்சமாக உற்சாகத்துடன் சொல்ல ஆரம்பித்தாள்.
ஆரம்பத்தில் நிகலாய் முகத்தைச் சுழித்தவாறே ஆர்வத்தோடு கேட்டான், ஆனால் அந்தச் சுழிப்பு சீக்கிரமே மறைந்து, அவன் முகத்தில் வியப்புக் குறி படர்ந்தது. இறுதியில் அவன் உணர்ச்சிப் பரவசமாகி அவள் பேச்சில் குறுக்கிட்டுக் கத்தினான்:
”அபாரம்! மாபெரும் வேலை!”
அவன் அவள் கைகளை இறுகப் பற்றி மெதுவாகச் சொன்னான்:
”உங்களுக்கு ஜனங்களிடம் ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது …… உங்களை நான் என் சொந்தத் தாய்போலவே நேசிக்கிறேன்!” அவன் ஏன் இப்படி உணர்ச்சிவசப்பட்டு உற்சாகமடைகிறான் என்பதைப் புரிய முடியாமல் அவனை வியப்போடு கூர்ந்து நோக்கியவாறே புன்னகை புரிந்தாள் தாய்.
”பொதுவாக, இது மகத்தான காரியம்!” என்று கூறிக்கொண்டே அவன் தன் கைகளைத் தோய்த்துக்கொண்டான். மெதுவாகச் சிரித்தான். ”கடந்த சில நாட்களில், எனக்குப் பொழுது மிகவும் அருமையாகக் கழிந்தது. முழுநேரமும் தொழிலாளர்கள் மத்தியிலேயே கழிந்தது; அவர்களுக்கு நான் பாடம் சொன்னேன்: அவர்களோடு பேசினேன்; அவர்களைக் கண்டுணர்ந்தேன். என் இதயத்திலே ஏதோ ஒரு புனிதமான பரிபூரணமாக வியப்பூட்டும் உணர்ச்சி நிறைந்து ததும்புகிறது. அவர்கள் எவ்வளவு அருமையான மனிதர்கள், நீலவ்னா! நான் வாவியத் தொழிலாளர்களைப் பற்றிப் பேசுகிறேன். அவர்கள் எவ்வளவு பலமும். உணர்ச்சியும் அறிவுத் தாகமும் பெற்றவர்களாயிருக்கிறார்கள்! அவர்களைப் பார்க்கும்போது என்றாவது ஒரு நாள் ருஷ்ய தேசம்தான் உலகிலேயே தலைசிறந்த ஜனநாயக நாடாக விளங்கப்போகிறது என்ற எண்ணம்தான் நமக்கு உண்டாகும்!
அவன் தன் கூற்றை அழுத்தமாக ஆமோதிப்பதைப்போல், சபதம் எடுப்பதுபோல் கரத்தை நீட்டினான். பிறகு ஒரு கணநேரம் கழித்து மேலும் பேசத் தொடங்கினான்.
”இந்தப் புத்தகங்களோடும் உருவங்களோடும் உட்கார்ந்து உட்கார்ந்து எனக்குப் புளித்தே போய்விட்டது. சுமார் ஒரு வருஷகாலம் இந்த மாதிரி வாழ்க்கையை – பயங்கர வாழ்க்கையை வாழ்ந்தாயிற்று. நான் தொழிலாளரோடு வாழ்ந்து பழக்கப்பட்டவன். ஆனால், நான் மிகுந்த சிரமத்தோடும், பதனத்தோடும் அவர்களிடமிருந்து தனிமைப்பட்டு வாழ்வதாகவும் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இப்போதோ நான் மீண்டும் சுதந்திர புருஷனாக வாழ்கிறேன். நான் இனிமேல் முழு நேரம் அவர்களோடு வாழவேண்டும்; அவர்களோடு உழைக்க வேண்டும். நான் சொல்வது புரிந்ததா? இளமை நிறைந்த சிருஷ்டி சக்தியின் முன்னிலையிலே, புதிய சிந்தனைகள் என்னும் பிள்ளைத் தொட்டிலருகேயே நான் வளர்ச்சி பெறவேண்டும். அது அபூர்வமான அழகான வளர்ச்சி, பிரமாண்டமான உணர்ச்சிக் கிளர்ச்சி. அப்படிப்பட்ட வாழ்க்கை ஒரு மனிதனை இளைஞனாக்குகிறது; பலசாலியாக்குகிறது. அதுவே வாழ்க்கையின் செழிப்பு நிறைந்த மார்க்கம்!”
அவன் ஆனந்தப் பரவசத்தோடும் குழப்பத்தோடும் சிரித்தான். அவனது ஆனந்தத்தைத் தானும் உணர்ந்து, அதில் பங்கெடுத்துக்கொண்டாள் தாய்.
“மேலும் – நீங்கள் ஓர் அற்புதமான பிறவி” என்றான் நிகலாய் ”எவ்வளவு தெள்ளத் தெளிவாக மக்களைப் பற்றி வருணிக்கிறீர்கள்! எவ்வளவு நன்றாக அவர்களைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்!”
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
கடந்த டிசம்பர் 2018 இறுதியில் நான்கு நாட்களில் வாசகர் இணையக் கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டன. கீழ்கண்ட தலைப்புகளின் கீழ் விருதுகளுக்கு பொருத்தமான நபர்களைத் தெரிவு செய்யுமாறு வாசகர்களை கோரினோம்.
பாஜக – மோடிக்கு பயப்படுவதில் நம்பர் 1 தமிழ் தொலைக்காட்சி எது ?
பாஜக கொள்கை பரப்பும் நம்பர் 1 தமிழ் நாளிதழ் எது ?
மோடியை விட்டுக் கொடுக்காமல் வெண்பா பாடுவதில் நம்பர் 1 தமிழ் நடிகர் யார்?
தமிழகத்தின் அர்னாப் கோஸ்வாமி யார் ?
வினவு தளம் மட்டுமல்ல, டிவிட்டர், யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ஏராளமான வாசகர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நேற்று மாலை வரையில் இந்தத் தளங்களில் பதிவான வாக்குகளில் அடிப்படையில் தற்போது இந்த விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.
***
முதலில், பாஜக – மோடிக்கு பயப்படுவதில் நம்பர் 1 தமிழ் தொலைக்காட்சிக்கான தேடல்…
இந்த விருதுக்கான பந்தயத்தில் கலந்து கொண்டவர்கள்..
புதிய தலைமுறை
நியூஸ் 18 தமிழ்நாடு
தந்தி டிவி
நியூஸ் 7 தமிழ்
பாலிமர் நியூஸ்
நியூஸ் ஜே
முதல் இடம் : தந்தி டிவி (60% வாசகர்களின் தெரிவு)
விருது: “காவி லென்சுல உட்றாண்டா உடான்சு”
சிறப்புப் பரிசுகள் :
அதானி, ரிலையன்ஸ், பதஞ்சலி விளம்பரங்கள் ஆண்டு முழுவதும் தரப்படும்.
தி நகர், பனகல் பார்க் கடை விளம்பரங்கள் தினசரி தரப்படும் (விளம்பரம் தர மறுத்தால் ரெய்டுக்கு ஏற்பாடு செய்யப்படும்)
அண்ணாச்சி பொன்னாரு, அக்கா தமிழிசை பிரஸ் மீட் அன்றாடம் கிடைக்கும்
இந்த விருதுக்கான தேர்வில் மொத்தம் 1817 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் தந்தி டிவிக்கு 1092 வாக்குகள் கிடைத்துள்ளன. அடுத்ததாக புதிய தலைமுறைக்கு 288 வாக்குகளும், நியூஸ் 7-க்கு 243 வாக்குகளும் கிடைத்துள்ளன. பாலிமர் நியூஸ் 79 வாக்குகளும், நியூஸ் 18 – தமிழ்நாடு 56 வாக்குகளும், இதர தொலைக்காட்சிகள் அனைத்தும் சேர்ந்து 59 வாக்குகளும் பெற்றுள்ளன.
***
பாஜக-வின் கொள்கை பரப்பும் நம்பர் 1 தமிழ் நாளிதழுக்கான பந்தயத்தில் பங்கேற்போர்:
அமித்ஷாவின் வீட்டுத் திருமணம் முதல் அக்கா தமிழிசையின் பிரஸ் மீட் வரை முதல் பக்க விளம்பரங்கள் 365 நாட்களும் தரப்படும்
இரண்டாம் இடம்: தினத்தந்தி (17% வாசகர்களின் தெரிவு)
விருது: “கூவுறாண்டா கொடுத்த காசுக்கு மேல”
சிறப்புப் பரிசுகள் :
அமித்ஷாவின் மீடியா டீமாக இந்தியா சுற்றலாம்.
அதானி டென்டர் முதல் பிஆர்பி குவாரி டென்டர் வரை ஆறு மாதம் அரை பக்க விளம்பரம் தரப்படும்
மூன்றாம் இடம்: தினமணி (11% வாசகர்களின் தெரிவு)
விருது: “மேல கூவுறாண்டா கொடுத்த காசுக்கு”
சிறப்புப் பரிசுகள் :
பொன்னாருடன் மீடியா டீமாக தமிழகம் சுற்றலாம்.
கமலாலயத்தில் நடக்கும் கூட்ட விளம்பரங்கள் மூன்று மாதம் கால் பக்கத்திற்கு தரப்படும்.
ஆறுதல் பரிசு: இந்து தமிழ் திசை (6% வாசகர்களின் தெரிவு)
விருது: “காசுக்கு கூவுறாண்டா”
சிறப்புப் பரிசு :
மாதம் 5 விமான பயணம், 50 ரயில் பயணங்கள், 100 கார் பயணங்கள் இலவசம்
இந்த விருதுக்கான தேர்வில் மொத்தம் 1054 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 699 வாக்குகள் பெற்று தினமலர் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அடுத்ததாக் 178 வாக்குகள் பெற்று தினத்தந்தி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. 120 வாக்குகள் பெற்று தினமணி மூன்றாம் இடத்தையும், 57 வாக்குகள் பெற்று இந்து தமிழ் திசை ஆறுதல் பரிசையும் பெற்றுள்ளது.
ரெய்டு வந்தாலும் வருவோம் – நீ நடந்துக்குறத பொறுத்து
சென்சார் போர்டு உறுப்பினர் பதவி வழங்கப்படும்
இந்த விருதுக்கான தேர்வில் மொத்தம் 1219 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 938 வாக்குகள் பெற்று ரஜினிகாந்த் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அடுத்ததாக 197 வாக்குகள் பெற்று கமல்ஹாசன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். 47 வாக்குகள் பெற்று சூர்யா மூன்றாம் இடத்தையும், 30 வாக்குகள் பெற்று விஷால் ஆறுதல் பரிசையும் பெற்றுள்ளனர். 7 வாக்காளர்கள் பிற நடிகர்களைப் பரிந்துரைத்துள்ளனர்.
***
இறுதியாக, தமிழகத்தின் அர்னாப் கோஸ்வாமிக்கான தேடலில் போட்டியாளராக பங்கேற்பவர்கள் :
மீடியாவில் விரும்பிய வேலை விரும்பிய நிறுவனத்தில் விரும்பிய சம்பளத்தில் வாங்கித் தரப்படும்
எச்ச ராஜா, எஸ்.வி.சேகர் அடங்கிய பார்ப்பன கிச்சன் கேபினட்டின் மீடியா இன்சார்ஜாக வாய்ப்பு தரப்படும்.
இந்த விருதுக்கான தேர்வில் மொத்தம் 1457 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 949 வாக்குகள் பெற்று ரங்கராஜ் பாண்டே முதலிடத்தைப் பெற்றுள்ளார். அடுத்ததாக 194 வாக்குகள் பெற்று மாலன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். 110 வாக்குகள் பெற்று சமஸ் மூன்றாம் இடத்தையும், 107 வாக்குகள் பெற்று வைத்தியநாதன் ஆறுதல் பரிசையும் பெற்றுள்ளார். 97 வாக்குகள் பெற்றாலும் சதவித அடிப்படையில் கிட்டத்தட்ட வைத்தியநாதனை எட்டிப் பிடித்ததால், ஜெயமோகனுக்கும் ஆறுதல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது.
***
வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நன்றி ! உங்களது நல்ல நோக்கம் நிறைவேற எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்
பிப்ரவரி மாதம் 2017-ல், ஐ.டி மக்களில் அநேகரை போல நானும் அப்ரைசலிற்காக காத்துக்கொண்டு இருந்தேன். புதிதாய் திருமணமான அந்த வருடம், “௭னக்கு அப்ரைசல் நல்லபடியாக வரும், பதவி உயர்வு வரும்” என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு அது அதிர்ச்சியை அளித்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், டிசம்பர் வரையில் என்னை “star performer” என்று சொல்லிக்கொண்டு இருந்தவர்கள் திடீரென என்னை under performer என்று 4th bucket கொடுத்திருந்தார்கள்.
Appraisal meeting :
ஐ.டி.-யில் பொதுவாக ஒரு பழக்கம் உண்டு. இதுபோன்ற அப்ரைசலுக்குப் பிறகு அதைப்பற்றி மேனேஜருடன் விவாதிப்பது ஒரு சம்பிரதாயமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்படி ஒரு விவாதம் எனக்கும் நடந்தது. அந்த விவாதத்தில் எனது மேனேஜர் என்னிடம் சொன்ன வார்த்தை “நீங்கள் செய்த வேலை திருப்திகரமாகத்தான் இருந்தது அதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை ஆனால் நமது கம்பெனியில் இந்த வருடம் 7 சதவிகித ஊழியர்களுக்கு 4th bucket, கொடுப்பது கட்டாயமாக்கபட்டுள்ளது. அதனால்தான் உங்களுக்கும் அது கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
அதுமட்டுமல்ல இதுபோன்ற செயல்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்காக செய்யப்படும் முதற்கட்ட செயல்பாடு என்பதையும் அவரே எச்சரித்தார்.
Appraisal-க்கு பிறகான பகுப்பாய்வு :
அவர் எச்சரித்த அந்த நொடி என் மனதில் ஏற்பட்டது பணிநீக்கம் மட்டுமல்ல, “நாம் எப்படி வேலை செய்தாலும் நமக்கு மேல் இருக்கும் மேல் மட்ட குழுதான் நம் தலையெழுத்தை தீர்மானிக்கும் என்றால் அந்தக் குழு எதற்காக அப்படி செய்கிறது? லாப நோக்கம், இல்லை வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா?” என்பதை தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். எனவே ஒரு நிறுவனத்தில் mass lay off எதற்காக நடைபெறுகிறது என்பதைப் பற்றி இணையத்தில் தேட ஆரம்பித்தேன்.
அப்பொழுதுதான் எனது நிறுவனத்திலேயே மேல்மட்ட குழுவில் பல ஊழல்கள் நடைபெற்று இருப்பதும், அது வெளியே தெரிந்தவுடன் பங்குதாரர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டிருப்பதும் எனக்கே தெரிந்தது. அதுமட்டுமல்ல ஊழியர்கள் மத்தியில் தான் பணி நீக்க நடவடிக்கை என்பது எதிர்மறையாக பார்க்கப்படுகிறது. ஆனால் பங்குதாரர்கள் மத்தியில் அல்லது பங்குச்சந்தையில் இதுபோன்ற ஐ.டி கம்பெனிகளின் பணி நீக்க நடவடிக்கை என்பது வரவேற்கக் கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. பங்குதாரர்களின் நன்மதிப்பைப் பெற கம்பெனிகள் பணிநீக்க நடவடிக்கையை ஒரு யுக்தியாக பயன்படுத்தி வருகிறது என்பதையும் புரிந்து கொண்டேன்.
இப்பொழுது என் தேடலுக்கு பதில் கிடைத்துவிட்டது. எனது கம்பெனியில் மேல் மட்டத்தில் நடைபெற்ற ஊழல்கள் அதனால் பங்குதாரர் மத்தியில் ஏற்பட்ட அதிருப்திகளை சமாளிக்கவே 2017 -ம் வருடம் அந்தப் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது எனக்கு தெள்ளத் தெளிவாகி விட்டது.
அதுவரையில் பணி நீக்கம் என்பதை ஒரு சம்பிரதாயம் என நம்பிக்கொண்டிருந்த எனக்கு அது ஊழியர்களுக்கு ஏற்படுத்தப்படும் அநீதி என்பது அப்போதுதான் உறைத்தது. எவனோ ஒருவன் மேல்மட்டத்திலிருந்து செய்த ஊழலுக்காக கீழ்மட்டத்தில் உள்ள 25,000 ஊழியர்களை தண்டிப்பது எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று. என் பக்கம் எந்தத் தவறும் இல்லை என்பதை உணர்ந்த நான் ஒருவேளை பணிநீக்க நடவடிக்கைக்கு நாம் ஆளாக்கப்பட்டால் அதை எதிர்த்தே தீருவது என்ற முடிவிற்கு வந்து அதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள தயாரானேன்.
NDLF – ஐ.டி. அறிமுகம் :
இப்படி பணி நீக்க நடவடிக்கையை எதிர்க்க தீர்மானித்த பிறகு என் மனதில் வந்த முதல் விஷயம் 2014-ம் ஆண்டு TCS நிறுவனத்தை எதிர்த்து ஒரு பெண் நீதிமன்றத்தை நாடி வெற்றி பெற்றார் என்பதுதான். எனவே அது எப்படி சாத்தியமானது என்பதை பற்றி இணையத்தில் தேட ஆரம்பித்தேன்.
அப்பொழுதுதான் அந்தப் பெண் FITE சங்கத்தின் உதவியுடன் நீதி மன்றத்தை நாடினார் என்பதும் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அந்த வழக்கை வென்றார் என்பதும் தெரிந்தது. உடனடியாக நாமும் அந்த சங்கத்தில் சேர்ந்து விட வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். தொலைபேசியில் அவர்களை தொடர்புகொண்டு இது பற்றி பேசிய பொழுது கோயம்புத்தூரில் இன்னும் நாங்கள் சங்க நடவடிக்கைகளை பெரிதாக துவங்கவில்லை எனவே அந்த முயற்சிகளை கூடிய விரைவில் நாங்கள் மேற்கொள்ள இருக்கிறோம் அப்பொழுது உங்களை நாங்கள் தொடர்பு கொள்கிறோம் என்று கூறிவிட்டனர்.
பணிநீக்க நடவடிக்கைக்கு நாமும் உடனடியாக ஆளாகலாம் என்ற எண்ணம் என் மனதில் இருந்ததால் உடனடியாக வேறு ஏதாவது சங்கங்கள் கோயம்பத்தூரில் செயல்படுகிறதா என்பதை தேட ஆரம்பித்தேன்.
அப்பொழுதுதான் NDLF என்ற சங்கம் ஐ.டி கிளைகளை வைத்துள்ளது என்பதையும் அது தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது என்பதையும் தெரிந்து கொண்டேன். உடனடியாக அவர்கள் ஐ.டி பிரிவின் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு விடுத்தேன். அப்பொழுதுதான் எனது கம்பெனியில் வேலை செய்யும் பத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஏற்கனவே சங்கத்தில் இணைந்து செயல்பட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயத்தை தெரிந்து கொண்டேன். உடனடியாக அவர்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து அவர்களின் whatsapp குரூப்பில் இணைந்து கொண்டேன்.
தொழிலாளர் துறை அலுவலகம் :
ஏற்கனவே பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளான மற்றும் என்னைப்போல் பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாக இருக்கின்ற பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இணைந்து தொழிலாளர் துறையை அணுகி புகார் கொடுக்கும்படி சங்கத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில் நானும் சக ஊழியர்களும் தொழிலாளர் துறையை அணுகினோம். கம்பெனியில் நடைபெறும் அநீதிகளைப் பற்றி எடுத்துரைத்தோம், அதைப்பற்றி புகார் கொடுத்தோம்.
இதுபோன்று ஐ.டி துறையில் ஏற்படும் விஷயங்களெல்லாம் தொழிலாளர் துறையில் வேலை செய்யும் அலுவலர்களுக்கு புது அனுபவமாக இருந்தது என்பதை கண்கூடாக பார்த்தேன்.
தொழிலாளர் துறை அலுவலகத்திற்கு வந்த மனிதவள அதிகாரி:
தொழிலாளர் துறையின் வழக்கத்தின்படி எங்களிடமிருந்து எழுத்து மூலமாக வாங்கப்பட்ட புகார்கள் கம்பெனிக்கு அனுப்பிவைக்கப்பட்டு அவர்களை பேச்சுவார்த்தைக்காக தொழிலாளர் துறைக்கு அழைத்து ஒரு கடிதம் தொழிலாளர் துறையின் சார்பில் இருந்து அனுப்பப்பட்டது.
சரியாக 15 நாட்கள் கழித்து எங்கள் கம்பெனியின் HR, துறையிலிருந்து பேச்சுவார்த்தைக்காக தொழிலாளர் துறைக்கு வந்திருந்தார்கள். வந்திருந்தவர்கள் வெறுமெனே விஷயத்தை மட்டும் கேட்டுவிட்டு கம்பெனியில் விசாரித்துவிட்டு இதைப்பற்றிய முழு தகவல்களை தெரிவிப்பதாக சொல்லி விட்டு சென்றுவிட்டனர்.
அடுத்த பேச்சுவார்த்தை மீண்டும் 15 நாட்கள் கழித்து வைக்கப்பட்டது அதிலும் வந்தவர்கள் மழுப்பல் பதில்களையே கூறிவிட்டு காலம் தாழ்த்துவதிலேயே குறியாக இருந்தனர். கிட்டத்தட்ட நான்கு மாதம் இழுத்தடிக்கப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்தது. இதுவரை பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாகாத ஊழியர்கள் கொடுத்த புகார்களில் எந்த முகாந்திரமும் இல்லை எனவும், அவர்கள் எந்த பணிநீக்க நடவடிக்கைக்கும் ஆளாக மாட்டார்கள் என்ற உத்தரவாதமும் அளிக்கப்பட்டது.
இது ஒருபுறம் எனக்கு மன நிம்மதியை கொடுத்தாலும் எங்களது குழுவில் இருந்த பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளான வேறு சில ஊழியர்களின் புகார்கள் இன்னமும் அப்படியே இருப்பது கவலை அளிக்கத்தான் செய்தது.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் புகார்கள் :
என்னதான் எனது பிரச்சினை தீர்ந்து விட்டாலும் அவர்களுக்கும் ஒரு moral support கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருந்த காரணத்தினால் அவர்களின் புகார்களில் நடக்கும் விசாரணை மற்றும் அதன் போக்குகளையும் கேட்டுத் தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டேன்.
இதுபோன்று பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளான ஊழியர்களின் மேல் வைக்கப்படும் அபாண்டமான குற்றச்சாட்டு என்னவென்றால் அவர்களாகவே ராஜினாமா செய்துவிட்டு கம்பெனியின் நற்பெயரை கெடுக்க இங்கு வந்து புகார் தெரிவிக்கிறார்கள் என்பதுதான். இதையெல்லாம் கேட்க கேட்க கம்பெனிகள் இதுபோன்று பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை திரும்பி பணியில் அமர்த்துவது ஒரு கௌரவ குறைச்சலாக பார்க்கிறது என்று நம்பினேன். அவர்களின் வழக்கம் அதுபோன்ற ஒரு திசையில்தான் பயணித்தது.
ஆனால் சில மாதங்கள் கடத்திய பிறகு இதுபோன்ற புகார்களை மறைக்க, HR, ஊழியர்கள் காட்டிய உத்வேகம், கம்பெனியின் board members தொழிலாளர் துறை முன்வந்ததும் அவர்களுக்கு ஏற்பட்ட பயம், அந்த புகார்களை திரும்பப் பெற 10 லட்சம் வரையில் கொடுக்க முன் வந்த விதம் இதையெல்லாம் பார்க்கும் பொழுது ஒருவேளை HR, ஊழியர்கள்தான் ஏதோ தவறு செய்துவிட்டு அதை மறைக்கப் பார்க்கிறார்கள் என்ற எண்ணமும் எழத்தான் செய்தது.
எது எப்படி இருந்தாலும் பணி நீக்க நடவடிக்கை என்பது ஒரு ஊழியருக்கு கொடுக்கப்படும் மரணதண்டனைக்கு சமமானது என்பதை ஐடி ஊழியர்கள் உணர வேண்டும்.
இதுபோன்ற கம்பெனிகளின் பணி நீக்க நடவடிக்கையை எதிர்த்து போராடுவது சிரமமான காரியம் என்றாலும் அது காலத்தின் கட்டாயம்.
வருண்குமார் நன்றி :new-democratsஇணையதளத்தில் வெளியான கட்டுரை.
எச்.ஐ.வி பாதித்த இளைஞர் தனது ரத்தத்தால் கர்ப்பிணித்தாய்க்கு தொற்று பரவி விட்டதே என்ற குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்து இறந்திருக்கிறார். அந்த இளைஞருக்கு ஆழ்ந்த இரங்கல்களை பதிவு செய்து இந்த கட்டுரையை ஆரம்பம் செய்கிறேன். நடந்தது என்ன? புதிதாக படிப்பவர்களுக்கான ஒரு சின்ன பின்னோக்கு பயணம்
நவம்பர் 30,2018 ஒரு இளைஞர் ரத்தம் கொடையாக வழங்குகிறார். டிசம்பர் 3,2018
அவர் வழங்கிய ரத்தம், அது தேவைப்படும் ஒரு கர்ப்பிணி தாய்க்கு ரத்த சோகையை சரி செய்ய ஏற்றப்படுகிறது.
டிசம்பர் 16, 2018 தான் வெளிநாடு செல்ல விண்ணப்பித்த இடத்தில் மருத்துவ பரிசோதனை செய்தவர்கள். ரத்தத்தில் “எச்.ஐ.வி” தொற்று இருப்பதாக தகவல் தருகிறார்கள். உடனே தனது ரத்தம் யாருக்கும் ஏற்றப்படாமல் தடுக்க வேண்டும் என்ற உந்துதலில் மீண்டும் ரத்த வங்கிக்கு தொடர்பு கொள்கிறார். ஆனால் காலம் கடந்துவிட, அந்த உதிரம் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டுவிட்டிருக்கிறது.
டிசம்பர் 17, 2018 அந்த கர்ப்பிணிக்கு ரத்த பரிசோதனை செய்தததில் துரதிர்ஷ்டவசமாக அவருக்கு ரத்தம் மூலம் ” எச்.ஐ.வி” தொற்று பரவியிருப்பது கண்டறியப்படுகிறது. இந்த விசயம் பாதிக்கப்பட்ட அந்த கர்ப்பிணிக்கு நஷ்ட ஈடு, நியாயம் கிடைக்க வேண்டும் என்ற ரீதியில் மீடியாக்களால் கையில் எடுக்கப்படுகிறது.
“மூன்றாவது கண்ணாக” மாறி வரும் அதிகமான மக்கள் இயங்கும் முகநூல் மற்றும் டிவிட்டர் மீடியாவும் இந்த விசயம் பரவலாக பேசப்பட்டது. பேசப்படுகிறது.
இந்த விசயத்தில் என்னென்ன தவறுகள் நடந்திருக்கலாம் என்ற ரீதியில் நானும் ஒரு பதிவு செய்தேன். ஆனால் இது அனைத்தையும் முடிவு செய்ய வேண்டியது துறை சார்ந்த ஆய்வு முடிவு மட்டுமே. ஆகவே, நாம் எப்போதும் நடுநிலையுடனே இந்த பிரச்சனையை ஆய்வு செய்வோம்
சந்தர்ப்பம் 1
ஒரு வேளை அந்த ஆய்வக நுட்புணர்கள், கொடையாக அளிக்கப்பட்ட ரத்தத்தில் செய்ய வேண்டிய பரிசோதனைகளை செய்யாமல் கர்ப்பிணி பெண்ணுக்கு அளித்திருந்தால் அது அந்த ஆய்வக நுட்புணர்களின் மிகப்பெரும் தவறு.
அதற்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.
சந்தர்ப்பம் 2
ஆய்வக நுட்புணர்கள் அவர்கள் வேலையை சரியாக செய்தும் பரிசோதனையில் நெகடிவ் என வந்திருந்தால் அது விண்டோ பீரியடினால் ஏற்பட்ட மருத்துவ பரிசோதனை பிழை ( Error in medical test) என்ற ரீதியில் அணுகப்பட்டு , இந்த பிழைகள் இன்னும் குறைக்கப்பட அரசு ஆணவ செய்ய வேண்டும்.
அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அப்பாவிகள் இரண்டு பேர் ஒருவர்
தனக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருப்பது தெரியாமல் ரத்தம் கொடையாக கொடுத்த அந்த இளைஞர். மற்றொருவர் தனக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்டு அதனால் பாதிப்புக்குள்ளான அந்த கர்ப்பிணி.
இந்த இருவரில் அந்த இளைஞர் தனக்கு தொற்று இருப்பது தெரிந்ததும், தானாக இந்த விசயத்தை பற்றி அறிய ரத்த வங்கிக்கு தொடர்பு கொள்கிறார். தனது ரத்தம் பிறருக்கு ஏற்றப்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணமே அவ்வாறு செய்யத் தூண்டுகிறது.
அந்த ஒரு நற்செயலாலேயே அவர் இந்த மாய சுழுலுக்குள் சிக்கி இறக்கவும் செய்கிறார்.
ஆம்..
எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட செய்தி அறியாமல் அவர் செய்த ரத்தக்கொடைக்கு அவரை பலிகடாவாக இன்று பலி கொடுத்திருக்கிறோம்
ஒருவருக்கு எச்.ஐ.வி கிருமி தொற்று என்று கண்டறியப்பட்டால் விதிகளின்படி அவரது நெருங்கிய சொந்தங்களுக்கு கூட( அவரது மனைவி உட்பட) அவரது விருப்பம் இன்றி தெரியப்படுத்தக்கூடாது.
காரணம் ??
நமது சமூகத்தில் ” எச்.ஐ.வி” என்றாலே விபச்சாரம் / பாதுகாப்பற்ற உடலுறவு இவற்றால் மட்டுமே வரும் நோய் என்ற மூடநம்பிக்கை ஆள்மனதில் ஆணியாக அடிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் உண்மை நிலவரம் வேறு எச்.ஐ.வி தொற்று – ரத்தம் ஏற்றுதல் மூலம், காயமுற்ற ஒருவர் பயன்படுத்திய ரேசர், பிளேடு போன்றவற்றை பிறர் பயன்படுத்தும் போது கீறிவிடுதல், தாயிடம் இருந்து பிள்ளைக்கு(perinatal transmission) , மருத்துவ துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு எச்.ஐ வி பாதித்த ஊசி குத்தி(Needle stick injury) என இன்னும் சில வழிகளில் பரவியிருக்கலாம்.
ஆனால் நாம் ஒருவருக்கு எச்.ஐ.வி என்று தெரிந்தால் உடனே அவரது நடத்தை / கற்பொழுக்கம் போன்றவற்றை பேசுபொருளாக மாற்றி அவர்களை தனிமைப்படுத்தி நாதியற்றவர்களாக மாற்றி விடுகிறோம்.
சமீபத்தில் வெளியான “அருவி” எனும் திரைப்படம் கூட ஒரு விபத்து மூலம் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட கதையின் நாயகியை அவரது குடும்பமே எவ்வாறு ஒதுக்கி வைக்கிறது. சமூகம் அவரை எப்படி நடத்துகிறது என்று காண்பித்திருப்பார்கள்.
மெடிக்கல் துறையில் ஒரு சொற்பதம் உண்டு. அனைத்து மருத்துவ ஊழியர்களும் நோயாளியை பார்க்கும் போதும் ஊசி போடும் போதும் Universal safety precautions ஐ கடைபிடிக்க வேண்டும் என்று ஏனென்றால் “Unless proved otherwise , all should be considered HIV positive is the rule என்று பழக்கப்படுத்தப்பட்டோம்
ஆம்.. நீங்களோ? நானோ? யாரோ ? ரத்த பரிசோதனை மூலம் நிரூபிக்காத வரை HIV தொற்று அற்றவர்கள் என்று கூறமுடியாது இதுவே நிதர்சனம். இந்த காரணத்தினால் தான் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் அவர்கள் கர்ப்ப காலத்தில் முதல் ரத்த பரிசோதனையில் கட்டாயம் எச்.ஐ வி பரிசோதனை செய்யப்படுகிறது.
அவர்களது கணவர்களுக்கும் எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்படுகிறது.
அவர்களுக்கு இருந்தால் குழந்தைக்கு பரவுவதை தடுக்க ஆவண செய்ய வேண்டும் என்பதற்காக. மேலும் அனைத்து காச நோய் பாதித்தவர்களுக்கும் எச்.ஐ.வி தொற்று இருக்கிறதா என்று பார்க்கப்படுகிறது (TB – HIV co infection).
எந்த தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாலும் சரி.. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்றாலும் சரி… அதன் மருத்துவ பரிசோதனைகளில் எச்.ஐ.வி கண்டறிதலும் இருக்கும்.
இதன் மூலம் நான் கூற வருவது “ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது என்பது அவரை எந்த விதத்திலும் ஒழுக்கம் கெட்டவராக ஆக்கிவிடாது”. மேலும் பிறரது ஒழுக்கத்தை எள்ளிநகையாடும் முன் நமது ஒழுக்கத்தை அனைவரும் பேணுதல் சிறப்பு.
இந்த சம்பவத்தில் அந்த இளைஞன் எந்த தவறும் செய்யாமல் சமூகம் தந்த அழுத்தத்தால் தற்கொலை செய்திருக்கிறார். எலி பாசானம் (Rat killer poisoning) என்பது ரத்தம் உறைதலை தடுக்கும் (warfarin ) வகையைச் சேர்ந்தது. அந்த வகை பாசானங்களை பொது வெளியில் தடை செய்வது சிறந்தது.
காரணம் தற்போது அந்த பாசானம் உண்டு மக்கள் இறக்கும் நிகழ்வு அதிகமாகிவருவதை காணமுடிகிறது.
சரி.. விசயத்துக்கு வருவோம்..
அந்த இளைஞரை கொன்றது எலிப்பாசானம் என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. ஆனால் அவரைக்கொன்றது “ஈவு இரக்கமற்ற நமது சமூகமே” என்றால் யாரும் மறுப்போருண்டோ?
அவரது பெயர், ஊர், இருப்பிடம் என்று அத்தனையையும் அம்பலமாக்கி அவரை கூனிக்குறுகச்செய்து கடைசியில் அவரது கதையையும் முடித்து விட்டாயிற்று. உண்மையில்.. எச்.ஐ.விக்கு எதிரான நமது ART (anti retro viral therapy ) அதிவேக முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பல மக்கள் சரியான மருந்துகள், ஊட்டச்சத்து உணவுகள் உட்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது ஆயுட்காலமும் நீண்டு வருகிறது.
எச்.ஐ.வி வந்தால் ஐந்து வருடத்தில் இறந்து விடுவோம் என்ற காலமெல்லாம் மலையேறிப்போய்விட்டது. இந்த நிலையில் எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வு ,
அது பாதித்தோர் மீது நாம் காட்டும் அரவணைப்பு இவற்றின் மூலம் அறிவார்ந்த சமூகமாக நாம் வளர முடியும்.
அந்த இளைஞரின் இறப்பு மூலம் நாம் அடையும் பாடமாக அது இருக்கட்டும் …
***
கட்டுரையின் கீழ் வந்த பின்னூட்டங்களில் வந்த கேள்விகளுக்கு விடையளிக்குமாறு இந்த கட்டுரையை எழுதுகிறேன்
கேள்வி 1
ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதில் இருந்து எத்தனை நாளில் நம்மால் அதை பரிசோதனை மூலம் கண்டறிய முடியும் ??
நமது generation 4 ELIZA antigen antibody test kits களை வைத்து நாம் எச்.ஐ வி உள்ளே நுழைந்த 28 நாட்களுக்கு பின் கண்டு பிடிக்கலாம். generation 3 ELIZA kits களை கொண்டு மூன்று மாதத்திற்கு பின் மிகத்துள்ளியமாக கண்டறிய முடியும்.
இதற்கு முன்னமே கண்டறிய வேண்டும் என்றால் அதற்கு NAAT எனும் பரிசோதனை உள்ளது. Nucleic Acid Amplification Test இந்த பரிசோதனை மூலம் உள்ளே வந்த எச்.ஐ.வி கிருமியில் உள்ள ஜீன்களை பெருக்கம் செய்து கண்டறிவார்கள். இது துள்ளியமானது. இதே NAAT எனும் பரிசோதனையை தற்போது காச நோய் எனும் Tuberculosis பாதித்த மக்களுக்கு கூட்டு சிகிச்சைக்கு கட்டுப்படாத காச நோயை கண்டறிய பயன்படுத்துகிறோம்(Multidrug resistant TB).
இந்த பரிசோதனையை அனைத்து இந்திய ரத்த வங்கிகளிலும் கட்டாயமாக்கிவிட்டால் பிரச்சனை தீர்ந்து விடுமா?
அதில் சிக்கல் உள்ளது. இந்த NAAT எனும் இந்த பரிசோதனையை Rapid test ஆக செய்ய முடியாது. இது நேரம் எடுக்கும் ஒரு பரிசோதனை. மேலும் இந்த பரிசோதனைக்கு ஆகும் செலவு இப்போது இருப்பதை காட்டிலும் பன்மடங்கு அதிகம்.
சரி செலவு ஆனால் ஆகிவிட்டுப்போகிறது. நமக்கு எச் .ஐ.வி தொற்று பரவக்கூடாது என்பதே தலையாய நோக்கம். ஆகவே பல லட்சங்களில் விற்கும் இந்த NAAT மெசின்களை ரத்த வங்கி முழுவதும் வாங்கி வைத்து பரிசோதனை செய்யலாம்.
நிச்சயம் அந்த காலம் கூடிய விரைவில் வரும். தமிழகத்தில் உள்ள அரசு ரத்த வங்கிகளில் அந்த பரிசோதனை செய்யப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.
காரணம் மருத்துவம் சார்ந்த விசயங்களில் நாம் தான் நாட்டுக்கே முன்னோடி ஆகவே இதிலும் நாமே முன் செல்வோம். சரி இப்போது NAAT இல் உள்ள ப்ராக்டிகல் பிரச்சனை என்ன தெரியுமா? அது ஒரு Highly sensitive test.
sensitive ஆ? அப்படியென்றால் என்ன? ஆய்வக பரிசோதனைகளை பொறுத்த வரை sensitivity & specificity என்ற இரு பதங்கள் பேசப்படும்.
ஒருவன் ரொம்ப சென்சிடிவாக இருக்கிறான் என்று எப்போது கூறுவோம்?சிறிய விசயத்துக்கெல்லாம் மூக்குக்கு மேல் கோபம் வருபவனை தான் சென்சிடிவ் என்று கூறுவோம். அதே போல்.. ஒரு கருத்தை பேச மேடை ஏறியவர்.. தொன தொனவென்று பேசிக்கொண்டிருந்தால் அவரை நாம் என்ன சொல்வோம் Be specific please என்போம்.
இந்த இரண்டும் தான் பரிசோதனைகளுக்கும் தேவை அதாவது ஒரு பரிசோதனைக்கு sensitivity அதிகம் என்றால் அது பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர்களுள் நோய் இருப்பவர்களை மிக மிக துள்ளியமாக காட்டும். True positive கேஸ்களை கனக்கச்சிதமாக பிடித்துவிடும்.
sensitivityஐ மிக அதிகமாக வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? நோய் இருப்பவர்களை நோய் இருப்பவர்கள் (true positive) என்று காட்டும் கூடவே பல நோய் இல்லாதவர்களையும் நோய் இருப்பவர்கள்(false positive) என்று காட்டி விடும்.
specificity அதிகம் உள்ள ஒரு பரிசோதனையை தேர்ந்தெடுத்தால்
அது என்ன செய்யும் தெரியுமா? பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நோய் இல்லாதவர்களை சரியாக இவர்களுக்கு நோய் இல்லை(True negative) என்று காட்டி விடும். ஆனால் அதனுடன் சேர்ந்து நோய் இருப்பவர்கள் சிலரையும் நோய் இல்லாதவர்கள்(False negatives) என்று காட்டும்.
இதில் நமது NAAT எனும் இந்த ஜீன் எக்ஸ்பர்ட் பரிசோதனை Highly sensitive category இல் வருகிறது. இந்த NAAT க்கும் window period ஒரு வாரம் முதல் இரண்டு வாரம் (குறைந்த பட்சம் 7 முதல் 10 நாட்கள்). இன்று எச்.ஐ.வி தொற்று பெற்ற ஒருவர் ஒரு வாரத்துக்குள் ரத்தம் கொடுத்தால் அவருக்கு NAAT பரிசோதனையே செய்தாலும் Negative என்று வரலாம். காரணம் Window period.
இந்த NAAT எனும் பரிசோதனை மேலைநாடுகளில் Genexpert என்று அழைக்கப்படுகிறது. இதில் உள்ள பாதகம் யாதெனில் இது ஒரு Highly sensitive test. இதை எச்.ஐ.வி கிருமி கண்டுபிடிக்க உபயோகித்தால் நோய் இருப்பவர்களை நோய் இருப்பவர்கள்( true positive) என்று துள்ளியமாக காட்டும்.
அது பிரச்சினையில்லை. கூடவே நோய் இல்லாத பலரையும் நோய் இருப்பவர்கள் (False positive) என்றும் காட்டிவிடும். இப்படி நோய் இல்லாத ஒருவர் ரத்தம் வழங்கிவிட்டு வீட்டுக்கு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
அவருக்கு NAAT முறைப்படி பரிசோதனை செய்யப்படுகிறது. அது Highly sensitive test ஆதலால் false positive ஆக அந்த நோயற்ற நபருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாக காட்டுகிறது என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு உடனே ரத்த வங்கியில் இருந்து கால் பறக்கும். உடனே ரத்த வங்கிக்கு வாருங்கள். இவர் அரக்கப்பறக்க ஓடுவார்.
ரத்த வங்கி அதிகாரி “சார். வீ ஆர் சாரி டு சே திஸ். யூ ஆர் ஹேவிங் எச்.ஐ.வி இன் யுவர் ப்ளட் .. ICTCக்கு உடனே போங்க.. ART ஸ்டார்ட் பண்ணுவாங்க” என்பார்.
நம்ம ஆளுக்கு தலை கிறு கிறுவென சுத்தும். இதை வீட்டிலும் சொல்ல முடியாது. எங்கும் பகிர்ந்து கொள்ள முடியாது. நேரே ICTC க்கு சென்று Antiretro viral therapy ஆரம்பிப்பார்.
வீட்டிற்கு இந்த விசயம் சில நாட்களுக்கு பின் தெரியவந்தால் வீட்டில் பெரிய கலவரமே நடக்கும். காரணம் எச்.ஐ.வி தொற்று என்றாலே தகாத உறவு முறை மூலம் மட்டும் தான் வரும் என்ற பொதுக்கற்பிதம் இன்றும் உள்ளது. அந்த நபரின் மானம் பறிபோகும். வீட்டின் அமைதி பறிபோகும்.
மனைவி குழுந்தைகளுடன் தனது ஊருக்கு சென்று விடுவார். இவர் மது அருந்த ஆரம்பிப்பார். இன்னும் மனம் லேசானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவைக் கூட எடுப்பார்கள். ( இவையெல்லாம் எனது அரசுப்பணியில் நான் எனது நேரடி கண்காணிப்பில் பார்த்த எச்.ஐ.வி நோயாளிகளுக்கு நடந்தவை. கதையோ கற்பனையோ அல்ல).
திரும்பவும் கூறுகிறேன். ஜீன் எக்ஸ்பர்ட் கூறிய ஒரு தவறான முடிவு. ஒருவரின் வாழ்க்கையை தடம்புரளச்செய்து விடும் அளவு சக்தி வாய்ந்தது. சரி . ஜீன் எக்ஸ்பர்ட் ஒருவரை நோயாளி என்று முத்திரை குத்திவிட்டால் அது தான் இறுதியானதா?
இல்லை இல்லை. இல்லவே இல்லை.
ஜீன் எக்ஸ்பர்ட் ஒருவரை நோயாளி என்று சொன்னாலும் மூன்று மாதங்களுக்கு பிறகு எடுக்கப்படும் ELIZA antibody test தான் confirmatory ஆகும். எனவே NAAT எனும் இந்த பரிசோதனையை எச்.ஐ.வி கண்டறிய பயன்படுத்துவதில் நடைமுறை சிக்கல் உண்டு. அதைக்களைந்து நிச்சயம் ஒரு நாள் NAAT தமிழகத்தில் நடைமுறைக்கு வரும்.
கேள்வி 2
எடுக்கப்பட்ட ரத்தத்தை எச்.ஐ.விக்கான அதன் window period ( 28 நாட்கள்) வரை வங்கியிலேயே வைத்திருந்து பிறகு பரிசோதனை செய்து அதை ஏற்றலாமே ? என்று பலரும் கேட்கின்றனர்.
window period என்பது ஒரு கிருமி ஒரு உயிருள்ள உடலுக்குள் நுழைந்ததில் இருந்து அந்த நோய்க்கான ரத்த பரிசோதனையில் பாசிடிவ் என வரும் வரை உள்ள இடைப்பட்ட காலம் window period ஆகும்.
இது உயிருள்ள உடலுக்குள் மட்டுமே பொருந்தும். வெளியே எடுத்த ரத்தத்திற்கு பொருந்தாது. காரணம் ஒருவருக்கு நேற்று எச்.ஐ வி தொற்று ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.
இன்று அவர் ரத்தம் கொடையாக தருகிறார். அவருக்கு எச் ஐ வி பரிசோதனை செய்யப்படுகிறது. அது நெகடிவ் என்று வருகிறது. அதே ரத்தத்தில் 28 நாட்கள் கழித்து எடுத்தாலும் Negative என்று தான் வரும்.
ஆனால் அதே நபருக்கு இப்போது எச்.ஐ வி பரிசோதனை செய்தால் positive என்று வரலாம். காரணம் அவரது ரத்தம் இப்போது உடலுக்குள் இல்லை. அந்த கிருமிக்கு எதிராக எதிர்வினை செய்யும் உடலின் நொதிகள் இல்லை. ஆகவே ரத்தம் எடுக்கப்பட்ட போது எத்தனை கிருமிகள் அந்த ரத்தத்தில் இருந்ததோ. அதை விட கொஞ்சம் பெருகியோ அல்லது அதே அளவு தான் இருக்கும்.
காரணம் ரத்தத்தோடு அது உறையாமல் இருக்க ரசாயனம் சேர்க்கப்படுகிறது. அந்த ரசாயனம் ரத்தத்தை அது எடுத்த போது எப்படி இருந்ததோ..அதே போன்று வைக்கிறது..
உண்மையில் எடுக்கப்பட்ட ரத்தத்தின் ஆயுட்காலம் எவ்வளவு ? 21 நாட்கள் முதல் அதிகபட்சம் 35 நாட்கள் மட்டுமே.
ஒருவர் தரும் முழு ரத்தமானது (whole blood)
1. மலேரியா
2. எச்.ஐ வி 1&2 வைரஸ்
3. சிஃபிலிஸ்
4. ஹெப்பாடைடிஸ் பி&சி
போன்ற பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அதில் நெகடிவ் என்று தெரிந்த பிறகே ஏற்றப்படுகின்றன.
தமிழகத்தின் பெரிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் முழு ரத்தம் மட்டுமல்லாமல்
ரத்தத்தின் தனித்தனி பாகங்கள் பிரிக்கப்பட்டு தேவைப்படுவோர்க்கு ஏற்றப்படுகின்றன.
முழு ரத்தமானது (Whole blood ) குளிர் நிலையில் 21 முதல் 35 நாட்கள் வைக்கப்படலாம். இப்போது உள்ள டிமாண்டில் ஒரு வாரத்திற்குள் நாம் கொடுத்த ரத்தம் உபயோகப்படுத்தப்பட்டுவிடும். ரத்தத்திற்கான டிமாண்ட் அவ்வளவு அதிகம். Packed cell unit என்போம். அதாவது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை மட்டும் பிரித்து எடுத்து அதை மட்டும் ஏற்றுவார்கள். பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை ஏற்படும் போதும். ரத்த சோகையை சரிசெய்யவும் இது போன்று ஏற்றப்படும். இந்த சிவப்பு அணுக்களை 6 டிகிரி செல்சியஸில் 42 நாட்கள் வைத்திருக்கலாம்.
ரத்த தட்டணுக்களை (Platelets transfusion) மட்டும் ஏற்றும் முறையும் இருக்கிறது.
டெங்கி போன்ற நோய் பாதித்தவர்கள், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்த தட்டணுக்களை ஏற்றலாம்.
அடுத்தது “ப்ளாஸ்மா ட்ரான்ஸ்ப்யூசன்” எனும் முறை. இதில் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டணுக்கள் யாவும் எடுக்கப்பட்டு ப்ளாஸ்மா மட்டும் ஏற்றப்படும்.
விபத்தில் அடிபட்டவர்கள், தீக்காயமுற்றவர்களுக்கு இது உதவும். இதிலும் Cryoprecipitate என்ற முறையில் ரத்தம் உறைய வைக்க தேவையான clotting factor VIII மற்றும் fibrinogen மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு ஏற்றப்படுகிறது. இது hemophilia போன்ற ரத்த உறைதல் பிரச்சனை இருப்போருக்கு உபயோகமாக இருக்கின்றது.
ப்ளாஸ்மா மற்றும் க்ரையோ ப்ரிசிபிடேட்டை ஒரு வருடம் கூட உறை நிலையில்(freezed) வைத்திருக்கலாம். நாம் தந்த முழு ரத்தத்தை இவ்வாறு componentகளாக பிரிக்கும் நவீன கருவிகள் நமது அரசு மருத்துவக்கல்லூரிகளில் உண்டு.
கேள்வி 3
20,000 பேருக்கு இந்தியாவில் கடந்த வருடம் ரத்தம் ஏற்றுதல் மூலம் எச்.ஐ வி வந்துள்ளது என்று நோயாளிகள் வாயிலாக எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் கூறுகின்றன. இது இந்திய மக்கள் தொகையை கணக்கிடுகையில் மற்றும் ரத்தம் ஏற்றப்படும் மக்களின் அளவைக்காட்டிலும் மிக குறைவு என்று கூறினேன்
அதற்கு சிலரிடம் இருந்து எதிர்ப்பு வந்தது.
எனது பதில் இதுவே இந்தியாவில் வருடம் ஒன்றிற்கு 90 லட்சம் யூனிட் ரத்தம் கொடையாக வழங்கப்பட்டு அது தேவைப்படும் மக்களுக்கு ஏற்றப்படுகிறது.
ரத்தம் ஏற்றுதல் என்பது உயிர் போகும் நிலையில் இருக்கும் ஒருவருக்கும் அது தேவைப்படும் ஒருவருக்கும் அத்தியாவசிய உயிர் காக்கும் சிகிச்சை.
இந்தியாவின் வருடாந்திர ரத்த யூனிட் தேவை 1.25 கோடி. ஆனால் கிடைப்பதோ 90 லட்சம் யூனிட்கள் தான். அதுவும் அனைத்து இடங்களிலும் சரிசமமாக கிடைப்பதில்லை. டெல்லி போன்ற பெருநகரங்களில் 200 % க்கு மேல் ரத்தம் கிடைக்கிறது. ஆனால் அதுவே பிஹார் போன்ற மாநிலங்களில் 85% கிடைப்பதே இல்லை.
ஒரு கார் ஆக்சிடண்ட்டில் கால் உடைந்த நோயாளிக்கே 100 யூனிட் ரத்தம் தேவைப்படும் நிலை இருக்கிறது. பிரசவ காலத்தில் ரத்தப்போக்கு நேர்ந்தால் அதை நிறுத்த 20 யூனிட் முதல் 50 யூனிட் ரத்தம் ஏற்றி தாய் பிழைத்த சம்பவங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நான் பயிற்சி மருத்துவனாக இருந்த நேரத்தில் பிரசவத்தில் ரத்தப்போக்கு சென்ற தாய்க்கு இருபது யூனிட் ரத்தம் ஏற்றியும் பிழைக்காமல் போனதையும் பார்த்துள்ளேன்.
ஒரு ரத்த வங்கிக்கு இன்று முப்பது யூனிட் ரத்தம் வருகிறதென்றால், அதே நாள் தேவை – 40 யூனிட்டாக இருக்கும். மேலும் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு தேவைப்படும் வங்கிக்கு ரத்தம் பறந்து கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு யூனிட் ரத்தமும் அது கிடைக்கும் பல உயிர்களை காப்பாற்றிக்கொண்டே இருக்கிறது. 50 கோடி இளைஞர்கள் ரத்தம் தர தகுதிகள் இருக்கும் நாட்டில் வெறும் 90 லட்சம் யூனிட்டுகள் மட்டுமே ரத்தம் வருடம் கிடைக்கிறது. மேலும் 20,000 பேருக்கு ரத்தம் ஏற்றுதல் மூலம் எச்.ஐ.வி வந்தது என்று கூறியிருப்பது. நோயாளிகள் அவர்கள் வாய்மொழி வழி கூறியது.
தகாத உறவு மூலம் வந்த எச்.ஐ.வி தொற்றைக்கூட நோயாளிகள் மறைத்து ரத்தம் மூலம் வந்தது என்று கூறவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே ரத்தம் மூலம் எச்.ஐ.வி வந்தவர் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே இருக்கும்.
130 கோடி மக்கள் வாழும் நாட்டில் வருடந்தோறும் 1.2 கோடி பேர் ரத்தம் கொடுக்க தேவையுள்ள நாட்டில் 20000 என்பது குறைந்த எண்ணிக்கை இதை பெரிய எண்ணிக்கையாக பார்ப்பவர்கள் பின்வரும் எண்ணிக்கையையும் பாருங்கள்.
இந்தியாவில் நாள்தோறும் 400 பேர் வாகன விபத்துகளில் சாகின்றனர்
ஆண்டொன்றிற்கு சுமார் 1.5 லட்சம் மக்கள் வாகன விபத்துகளில் உயிரை இழக்கின்றனர். ஆறு லட்சம் பேர் விபத்துகளால் முடமாகின்றனர். இவற்றை விபத்துகள் என்ற கேட்டகரிக்குள் கொண்டு வந்து அனைவரும் மெளனிகளாக வாழ்கிறோம்
ஆனால் ரத்தம் மூலம் ஆண்டு ஒன்றிற்கு 20,000 பேருக்கு எச்.ஐ.வி வந்தது என்றால் இந்த உயிர் காக்கும் சிகிச்சை மேலும் அரசு மருத்துவமனைகளுக்கு எதிராகவும் கூக்குரல் எழுப்புகிறோம்
ஏன் இந்த ரெட்டை நிலை?
முடிவுரை
ஒரு உயிருக்கும் தெரிந்தே தீங்கு இழைக்கப்படக்கூடாது என்பதே நீதி. ஆனால் விபத்துகள் அனைத்து துறைகளிலும் நடக்கின்றன. நமது பதிவின் நோக்கம் யாதெனில் மருத்துவத்துறையில் நடக்கும் விபத்துகளை மட்டும் பூதக்கண்ணாடி கொண்டு பெரிதாக்குவது தவறு.
தவறுகள் நடந்திருந்தால் அதை சரிசெய்யும் பொருட்டு கடுமையான தண்டனைகள் தரப்பட வேண்டும். அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய இழப்பீடு / வாழ்வாதாரத் தேவை/ உயர்தர சிகிச்சை போன்றவற்றை அரசு உறுதி செய்யும்.
ஆகவே அரசு மருத்துவமனைகள் மீது காழ்ப்புணர்ச்சி வேண்டாம். அரசு மருத்துவமனைகள் ஏழைகளுக்கானது மட்டுமன்று. அனைவருக்குமானது. நல்ல நிலையில் இருக்கும் நீங்கள் இன்று அரசு மருத்துவமனைகள் மீதும் ரத்தம் ஏற்றுதல் மீதும் கல்லெறிந்தால் ரத்தம் கிடைப்பது இன்னும் குறையத்தான் செய்யும்.
ஒருநாள் நீங்கள் மகிழ்வுந்தில் சத கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் சென்று எங்கேனும் ஆள் அரவமில்லா இடத்தில் சாலை விபத்து நடந்தால் அங்கு உங்களை காப்பாற்ற 108 இலவசமாக ஓடி வரும். அருகில் பெரிய தனியார் மருத்துவமனைகள் இருக்காது.
அரசு மருத்துவமனைக்கு 108 செல்லும். அங்கு ரத்த வங்கியில் இருக்கும் கடைசி பை ரத்தம் தான் உங்களை காப்பாற்றும் ஒன்றாகக் கூட இருக்கலாம்.
நன்றி :ஃபேஸ்புக்கில் –Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., சிவகங்கை.
தமிழகத்தில் செயல்பட்டுவரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் 15-ம் ஆண்டு விழா கடந்த டிசம்பர் 16 அன்று மதுரையில் நடைபெற்றது.
வடக்கே அயோத்தியில் ராமனுக்குக் கோவில் தெற்கே சபரி மலையில் ஐயப்பன் கோவிலில் பெண்களுக்குத் தடை ஆகிய பிரச்சனைகளைக் கையிலெடுத்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு – அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான முழக்கங்களை முன்வைத்து மதக் கலவரத் தீயை வளர்க்கத் தொடங்கி விட்டனர். நவம்பர் 25-ல் அயோத்தியில் திரண்ட மதவெறியர்கள் ‘ராமனுக்கு முதலில் ஆலயம் அதன் பிறகே அரசு’ என்ற முழக்கத்தை முன்வைத்து தடையை மீறி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர். ராமர் கோவில் கட்ட தனிச்சட்டம் தயார் என்று ஆர். எஸ். எஸ். தலைவர் இந்திரேஷ்குமார் அறிவிக்கிறார்.
ஆர். எஸ் . எஸ் . இந்துமத வெறியைத் தூண்டும் சதியை அம்பலப்படுத்திய அறிவுத்துறையினர் தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்றவர்களைத் சனாதன் சன்ஸ்தா என்ற மதவெறி அமைப்பு கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
பழங்குடி மக்கள், தலித்துகள், விவசாயிகளின் வாழ்வாதாரங்களையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடித்துச் சுற்றுச் சூழலை நாசமாக்கும் கார்ப்பரேட்களுக்கு அரணாக நிற்கும் மோடி அரசு அவற்றை எதிர்த்துப் போராடும் மக்களைக் காவல் படைகளை ஏவிப் படுகொலை செய்கிறது.
இந்திய ஜனநாயகத்திற்குப் பார்ப்பன இந்து மதவெறி பாசிச சக்திகளால் பேராபத்து ஏற்பட்டுள்ள இந்தச்சூழலில் அறிவுத் துறை சார்ந்த வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், மக்களின் வாழ்வுரிமை காக்க என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக அமைந்திருந்தது இக்கருத்தரங்கம்.
”சமூக சிந்தனையாளர்கள் கவுரி லங்கேஷ், கல்புர்கி, தபோல்கர், பன்சாரே படுகொலையும் ‘சத்ர தர்மா சாதனா’ கொலை நூலும்!” என்ற தலைப்பில் பெங்களூரு வழக்கறிஞர் பாலன் வழங்கிய கருத்துரை.
மாக்சிம் கார்க்கிதாய் சுவரின் மீது சாய்ந்து, தலையைப் பின்னால் சாய்த்து, அவர்கள் சொல்லும் ஆழமும் அமைதியும் நிறைந்த வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்தாள். தத்யானா எழுந்திருந்து, சுற்றும் முற்றும் பார்த்தாள், மீண்டும் உட்கார்ந்துகொண்டாள். அந்த முஜீக்குகளை வெறுப்போடும் கசப்புணர்ச்சியோடும் நோக்கிய அவளது பசிய கண்கள் வறட்சியாகப் பிரகாசித்தன. திடீரென்று அவள் தாயின் பக்கம் திரும்பினாள்.
”உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவோ துயரங்களை அனுபவித்திருக்க வேண்டும்” என்று சொன்னாள்.
”ஆமாம்” என்று பதில் சொன்னாள் தாய்.
”உங்கள் பேச்சு, எனக்குக் கேட்கக் கேட்கப் பிடித்திருக்கிறது. உங்கள் வார்த்தைகள் இதயத்தையே இழுத்து நீட்டுகின்றன. நீங்கள் பேசும்போது நான் எனக்குள் ‘கடவுளே, இவள் பேசுகின்ற மனிதர்களை நான் கொஞ்ச நேரமேனும் பார்க்கக் கொடுத்துவைக்க மாட்டாயா? வாழ்க்கையையே நான் காண மாட்டேனா?’ என்று நினைத்துக் கொள்கிறேன். இங்கு நாங்கள் வாழ்க்கையில் என்னத்தைக் காண்கிறோம்? வெறும் ஆட்டு மந்தையாகத்தான் நாங்கள் இருக்கிறோம். உதாரணமாக, என்னையே பாரேன், எனக்கு எழுதப்படிக்கத் தெரியும். புத்தகங்களைப் படிக்கிறேன். எதை எதைப் பற்றியெல்லாமோ சிந்திக்கிறேன். சமயங்களில் சிந்தித்துச் சிந்தித்தே இரவெல்லாம் தூங்காமல் அவதிப்பட்டிருக்கிறேன். ஆனால் அதனால் என்ன லாபம்? நான் சிந்திப்பதை நிறுத்திவிட்டால், ஒன்றுமற்று வாடி வதங்கி நாசமாய்ப் போவேன். சிந்திப்பதைத் தொடர்ந்து மேற்கொண்டாலும் அதனாலும் எனக்கு எந்தப் பயனும் இல்லை.”
பேசும்போது அவளது கண்களில் கேலி பாவமே பிரதிபலித்தது. சமயங்களில் அவள் தான் பேசும் வார்த்தைகளை ஏதோ ஒரு நூலைக் கடித்துத் துண்டாக்குவது மாதிரி உச்சரித்தாள். அந்த முஜீக்குகள் எதுவும் பேசவில்லை. காற்று ஜன்னல் கதவுகளின் மீது வீசியடித்தது. புகைக் கூண்டு வழியாக லேசாக முணுமுணுத்து வீசியது, வீட்டுக்கூரை மீது சலசலத்தது. எங்கோ ஒரு நாய் ஊளையிட்டது, எப்போதாவது இடையிடையே மழைத் துளிகள் வேண்டா வெறுப்பாக ஜன்னலின் மீது விழுந்து தெறித்தன. விளக்கின் சுடர் படபடத்துக் குறுகி, அணைவது போல் இறங்கியது. மீண்டும் சுடர் வீசி எழுந்து அதிக பிரகாசத்துடன் நிலையாக நின்று எரிந்தது.
“நீங்கள் பேசுவதைக் கேட்கும்போது, ‘இதற்காகத்தான் மக்கள் வாழ்கிறார்கள்’ என்று எனக்குள்ளாகச் சிந்தித்துக்கொண்டிருந்தேன். அவையெல்லாம் எனக்கே தெரிந்த விஷயங்கள் மாதிரி உணர்ந்தேன், அதுவே எனக்கு ஓர் அதிசயம். ஆனால், இந்த மாதிரி யாரும் அதுவரை பேசி நான் கேட்டதில்லை. நானும் இந்த மாதிரி எண்ணங்களைச் சிந்தித்துப் பார்த்ததில்லை……..”
“ஏதாவது சாப்பிட்டுவிட்டு, சீக்கிரம் விளக்கை அணைப்பது நல்லது, தத்யானா” என்று முகத்தைச் சுழித்துக்கொண்டே மெதுவாகச் சொன்னான் ஸ்திபான்: “சுமகோவின் வீட்டில் இரவு அகாலம் வரையிலும் விளக்கு எரிவதை ஜனங்கள் கண்டு கொள்ளக்கூடும். அதனால் நமக்கு ஒன்றுமில்லை. ஆனால் நமது விருந்தாளியின் நலத்துக்கு அது உகந்ததல்ல…”
தத்யானா எழுந்து அடுப்பருகே சென்றாள்.
”ஆ – மா – ம்” என்று புன்னகை புரிந்தான் பியோத்தர். “இப்போதெல்லாம் நாம் உஷாராய்த்தானிருக்க வேண்டும். இந்தப் பத்திரிகைகள் ஜனங்கள் மத்தியிலே மீண்டும் தலைகாட்டியவுடனே…”
“நான் என்னைப் பற்றி நினைக்கவே இல்லை. அவர்கள் என்னைக் கைது செய்து கொண்டு போனாலும், எனக்கு அதனால் பெரிய நஷ்டம் ஏதும் விளையப் போவதில்லை.”
அவன் மனைவி மீண்டும் மேஜையருகே வந்து சொன்னாள்:
”கொஞ்சம் எழுந்திரு.”
அவன் எழுந்திருந்து ஒரு பக்கமாக ஒதுங்கிக்கொண்டான்: மேஜையின் எல்லாவற்றையும் அவள் ஒழுங்குபடுத்துவதையே கவனித்துக்கொண்டிருந்தான்.
“சகோதரர்களே – உங்களையும் என்னையும் ஒன்றாகச் சேர்த்தால் ஒரு ஐந்து கோபெக்தான் மதிப்பு. ஆமாம், நம்மைப் போன்றோர் நூறு பேர் சேர்ந்தாலும் இப்படித்தான்” என்று கிண்டல் நிறைந்த புன்னகையோடு சொன்னான் அவன்.
தாய் அவனுக்காக வருந்தினாள். அவனைப் பார்க்கப் பார்க்க அவனை மேலும் மேலும் அவளுக்குப் பிடித்துப் போயிற்று. தனது பேச்சுக்குப் பிறகு அன்றைய கோர சம்பவத்தின் மனப்பாரத்தை இறக்கிவைத்த உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. அவள் தனக்குத் தானே மகிழ்ந்து கொண்டாள். எல்லோரும் நல்லபடி இருக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்து நிரம்பி வழிந்தது.
“தோழனே, நீங்கள் சொல்வது தவறு” என்றாள் அவள். ரத்தத்தை உறிஞ்சுபவர்கள் உங்களை மதிப்பிடுவதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவே கூடாது. நீங்கள் உங்களையே மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். உங்களது இதயத்துக்குள் இருப்பதைக் கொண்டு, உங்கள் நண்பர்களைக் கொண்டுதான் மதிப்பீடு செய்ய வேண்டும். எதிரிகளைக் கொண்டு அல்ல.
“எங்களுக்கு எந்த நண்பர்கள் இருக்கிறார்கள்” என்று அந்த முஜீக் மெதுவாகக் கூறினான். “நண்பர்கள் – ஒரு வாய் ரொட்டிக்கு நான் முந்தி நீ முந்தி என்று விழுந்தடித்துச் சண்டை போடுகிறவரையிலும்தான், நண்பர்கள் எல்லாம்!”
“இல்லை. சாதாரண மக்களுக்கும் நண்பர்கள் உண்டு என்று நான்தான் சொல்லுகிறேன்.”
“இருக்கலாம்; ஆனால் இங்கு அப்படி ஒருவருமே இல்லை. அதுதான் விஷயம்” என்று எதையோ நினைத்துக்கொண்டு சொன்னான் ஸ்திபான்.
”ஏன் இங்கேயும் கூட நண்பர்களை நாம் தேடிக்கொள்ளக் கூடாதா?”
ஸ்திபான் பதில் சொல்வதற்கு முன் ஒரு கணம் யோசித்தான். பிறகு சொன்னான்
“ஹும்! ஆமாம், தேடித்தான் பார்க்க வேண்டும்.”
”சரி, உட்காருங்கள். சாப்பாடு தயார்” என்று அழைத்தாள் தத்யானா.
தாய் தங்களிடம் கூறிய பேச்சினால் இழுக்கப்பட்டு சிந்தை இழந்திருந்த பியோத்தர் சாப்பிடும்போது மீண்டும் உற்சாகம் பெற்றான்.
”அம்மா, நீங்கள் அதிகாலையிலேயே போய்விட வேண்டும், அப்போதுதான் யார் கண்ணிலும் படாமல் போகலாம்” என்றான் அவன். “பக்கத்து ஊர் வரையிலும், வண்டியிலேயே போக வேண்டும். ஆனால் நகருக்குள் போகக்கூடாது. ஒரு தபால் வண்டியை அமர்த்திக் கொள்ளுங்கள்.”
”அவள் ஏன் அமர்த்த வேண்டும்? நானே அவளுக்கு வண்டியோட்டுகிறேன்” என்றான் ஸ்திபான்.
“இல்லை, நீ ஓட்டக்கூடாது. அவர்கள் யாராவது உன்னைப் பார்த்து, ‘இவள் இரவு உன் வீட்டில் தங்கினாளா?’ என்று கேட்டால், நீ என்ன சொல்வாய்? ‘ஆமாம், தங்கினாள்’ என்பாய். ‘இப்போது எங்கே போகிறாள்?’ என்றால், ‘நான் அவளைப் பக்கத்து ஊர் வரையிலும் கொண்டுவிடப் போகிறேன்’ என்பாய். உடனே, ‘ஓஹோ… நீதான் அவள் தப்பித்துக் கொண்டுபோக வழி செய்தாயா?’ என்று சொல்வார்கள், ‘அப்புறம் நீ சிறைக்குப் போக வேண்டியதுதான்’. சிறைக்குப் போவதற்கு இப்போது ஒன்றும் அவசரமில்லை. எல்லாம் அதனதன் காலத்தில் தானே நடக்கும். சாகிற காலம் வந்துவிட்டால் ஜார் அரசனும்கூட சாகத்தான் செய்வான் என்பது பழமொழி. ஆனால் நான் சொல்கிறபடி செய்தால், அவளாக எங்கோ இரவைக் கழித்துவிட்டு, ஒரு வண்டியை அமர்த்திக்கொண்டு போவது மாதிரி இருந்தால் நல்லது. நம்முடைய கிராமம் ராஜபாட்டைக்கு அருகிலிருப்பதால், எத்தனையோ பேர் இரவில் இங்குத் தங்கிப் போவார்கள்.”
“பியோத்தர்! இவ்வளவு தூரம் பயப்படுவதற்கு நீ எங்கே கற்றுக்கொண்டாய்?” என்று குத்தலாகக் கேட்டாள் தத்யானா.
“ஏனம்மா எப்படியெப்படிச் செய்வது என்று தெரிந்து கொள்ளவுமா கூடாது?” என்று தன் முழங்காலில் தட்டிக்கொடுத்தவாறே சொன்னான் பியோத்தர். ”எப்போது பயப்பட வேண்டும், எப்போது தைரியமாயிருக்க வேண்டும் என்பதையெல்லாம் தெரிந்துதான் வைத்திருக்க வேண்டும். நினைத்துப்பார், அந்தப் பத்திரிகையை வைத்திருந்ததற்காக வாகானவைப் ஜில்லா அதிகாரி என்ன பாடுபடுத்தினார் என்பது உனக்குத் தெரியாதா? அப்புறம் காசுக்காகட்டும், ஆசைக்காகட்டும் – அவன் கையிலே ஒரு புத்தகத்தைக் கொடுக்க முடியுமா? கொடுத்தால் வாங்கத் துணிவானா? அம்மா, நீங்கள் என்னைப் பரிபூரணமாக நம்பலாம். நான் என்னவோ கொஞ்சம் அடாபிடிக்காரன். இருந்தாலும், நான் நீங்கள் தரும் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் ஆள் பார்த்து, இடம் பார்த்து விநியோகிக்கிறேன். எங்கள் ஜனங்களில் பெரும்பாலோர் மிகவும் பயந்தவர்கள், படிப்பில்லாதவர்கள் என்பது உண்மைதான். இருந்தாலும், பலமாக மூடிய கண்களைக் கூட, பலவந்தமாகப் பிதுக்கித் திறந்து உண்மையைப் பார்க்கும்படி செய்யும் காலம் வரத்தான் போகிறது. இந்தப் பிரசுரங்கள், விஷயத்தை மிகவும் சுளுவாகச் சொல்லிவிடுகின்றன. விஷயம் இதுதான்: ‘சிந்தித்துப் பார், மூளைக்கு வேலை கொடு’ – என்பதுதான். சமயங்களில் படித்தவர்கள் புரிந்து கொள்வதைவிடப் படியாதவர்களே அதிகமாகப் புரிந்து கொள்கிறார்கள். அதிலும் படித்தவர்களுக்குத் தொந்தி விழுந்து சோற்றுக் கவலையில்லாது போய்விட்டால் அவர்களுக்குப் புரியவே புரியாது. இந்த வட்டாரத்தில் நான் எவ்வளவோ பிரயாணம் செய்திருக்கிறேன். எவ்வளவோ பேரைக் கண்டிருக்கிறேன். நாங்கள் எப்படியாவது சமாளித்துக் கொள்கிறோம். ஆனால், எடுத்த எடுப்பிலேயே அகப்பட்டுக் கொள்ளாதவாறு, மிகுந்த ஜாக்கிரதையுடன் நடந்துகொள்வதற்குக் கொஞ்சம் மூளையைச் செலவழிக்க வேண்டும், அவ்வளவுதான். நிர்வாகிகள் தாங்கள் கத்திமீது அமர்ந்திருப்பது போலவே உணர்கிறார்கள். எவனாவது ஒரு முஜீக் அதிகாரிகளைக் கண்டு புன்னகை புரிவதையோ, அன்பு காட்டுவதையோ நிறுத்திவிட்டால், அவனது வழக்கத்துக்கு மாறான அந்தத் தன்மையைக் கண்டு, அவன் அதிகாரிகளுக்கு எதிராகச் செல்கிறான் என்று கருதி, அவனை லேசாக மோப்பம் பிடித்துவிடுகிறார்கள்.
அன்றைக்கு இப்படித்தான் ஸ்மல்யகோவோவிலே — அதுவும் பக்கத்துக் கிராமம் — அதிகாரிகள் வரி வசூல் செய்வதற்காக வந்திருந்தார்கள். உடனே அங்குள்ள முஜீக்குகள் கம்பும் தடியும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்கள். போலீஸ் தலைவனுக்கு அதைப் பற்றிக் கொஞ்சம்கூடப் பயமில்லை, ‘ஏ, நாய்க்குப் பிறந்த பயல்களா! நீங்கள் ஜார் அரசனுக்கு எதிராகக் கிளம்புகிறீர்கள்?’ என்று ஊளையிட்டான்.
அங்கே ஸ்பிவாகின் என்று ஒரு முஜீக் அவன் முன்னாலேயே வந்து பதில் சொன்னான். “உன் ஜாரோடு நீயும் நாசமாய்ப் போ. அவன் எப்படிப்பட்ட ஜாராம்? உடம்பிலே ஒத்தைத் துணிகூட இல்லாமல் உரித்துப் பிடுங்குகிறவன்தானே!” என்று கூறினான். எனவே, காரியங்கள் இவ்வளவு தூரத்துக்குப் போயிருக்கிறது, அம்மா அவர்கள் ஸ்பிவாகினைப் பிடித்துச் சிறையில் போடத்தான் செய்தார்கள். இருந்தாலும் அவன் வார்த்தைகளைச் சிறையில் போட முடியுமா? சின்னஞ்சிறு பிள்ளைகளுக்குக்கூட அவன் பேச்சு ஞாபகத்தில் இருக்கிறது. அவன் பேச்சு என்றென்றும் ஒலிக்கிறது, என்றென்றும் வாழ்கிறது”
அவன் எதுவுமே சாப்பிடாமல் விறுவிறுவென்று ரகசியக் குரலில் பேசியவாறே, தன்னைச் சுற்றிக் குறுகுறுவென விழிக்கும் இருண்ட கண்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றித் தான் அறிந்தவற்றையெல்லாம் தாயிடம் பொலபொலவென்று உதிர்த்துத் தள்ளினான்.
ஸ்திபான் இடையே இரண்டுமுறை குறுக்கிட்டுப் பேசினான்:
“நீ முதலில் ஏதாவது சாப்பிடப்பா.”
அந்த இரண்டு முறையும் பியோத்தர் ஒரு ரொட்டித் துண்டையும் கரண்டியையும் கையில் எடுத்ததுதான் மிச்சம்; அவற்றைக் கையில் வைத்தவாறே உல்லாசமாகப் பாடும் வானம்பாடி மாதிரி தனது கதைகளையே சொல்லிக்கொண்டிருந்தான். சாப்பாடு முடிந்தவுடன் அவன் திடீரெனத் துள்ளியெழுந்து நின்று பேசினான்.
“சரி… நான் போவதற்கு நேரமாகிவிட்டது. வருகிறேன், அம்மா” என்று கூறிவிட்டு அவள் கையைப் பிடித்துக் குலுக்கினான். “ஒருவேளை நாம் இருவரும் மீண்டும் சந்திக்க இயலாமலே போகலாம். இருந்தாலும் உங்களைச் சந்தித்ததும் உங்களோடு பேசியதும் என்றென்றும் மறக்க முடியாத இனிய விஷயங்கள் என்பதை மட்டும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். சரி அந்த டிரங்குப் பெட்டியில் பத்திரிகைகளைத் தவிர வேறு ஏதாவது இருக்கிறதா? கம்பளிச் சவுக்கம் ஏதாவது? ரொம்ப நல்லது — கம்பளிச் சவுக்கம்தானே? ஞாபகம் வைத்துக்கொள், ஸ்திபான். இவன் இன்னும் ஒரு நிமிஷத்தில் டிரங்குப் பெட்டியைக் கொண்டு வந்து சேர்ப்பான். புறப்படு, ஸ்திபான். வருகிறேன், அம்மா, உங்களுக்கு வெற்றி உண்டாகட்டும்!”
அவர்கள் சென்ற பிறகு சுவர்க் கோழிகளின் இரைச்சல்கூடத் தெளிவாகக் கேட்டது. காற்று கூரையின் மீது சலசலத்தது, புகைக் கூண்டு வழியாகப் படபடத்தது. மெல்லிய மழைத் தூவானம் ஜன்னலின் மீது பெய்து வழிந்தது. தத்யானா அடுப்புக்கு மேலாக இருந்த பரணிலிருந்து சில போர்வைகளை எடுத்து, ஒரு பெஞ்சின் மீது விரித்து, தாய்க்குப் படுக்கை தயார் பண்ணிக் கொடுத்தாள்.
”அவன் ஓர் உற்சாகமான பேர்வழி என்று கூறினாள் தாய்.”
”பெரிய வாயளப்புக்காரன். சத்தம் போடுவதுதான் மிச்சம்.”
”உன் கணவன் எப்படி?” என்று கேட்டாள் தாய்.
“அவன் ஒழுங்கானவன்தான். ஓரளவு நல்லவன்தான். குடிப்பதில்லை. நாங்கள் சந்தோஷமாகத்தான் இருக்கிறோம். அவனிடம் பலவீனமான குணம்…”
அவள் நிமிர்ந்து நின்றாள்.
”அதற்கு இப்போது நாங்கள் என்ன செய்வது?” என்று ஒருகணம் கழித்துச் சொன்னாள் அவள். “நாங்களெல்லாம் போராடி எழ வேண்டாமா? போராடத்தான் வேண்டும். அதைப் பற்றித்தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஒவ்வொருவனும் தனக்குத் தானே நினைத்துக்கொள்கிறான். ஆனால், அதை வெளிப்படையாக நினைத்துப் பார்க்க வேண்டும். யாராவது முதலில் துணிந்து காலடி எடுத்து வைக்க வேண்டும் ……..”
அவள் பெஞ்சின் மீது உட்கார்ந்து தாயைப் பார்த்துக் கேட்டாள்.
”சீமான் வீட்டு வயசுப் பெண்கள் கூட, தொழிலாளிகளோடு கலந்து பழகுவதாகவும், அவர்களுக்குப் பாடம் சொல்வதாகவும் நீங்கள் சொல்கிறீர்கள். அவ்வளவுக்கு, அப்படிச் செய்வதற்கு அவர்களால் முடியுமா? அவர்களுக்குப் பயமாயிருக்காது?”
அவள் தாயின் பதிலைக் கேட்டு ஆழ்ந்த பெருமூச்சு விட்டாள். பிறகு தன் கண்களையும் தலையையும் தாழ்த்திக்கொண்டு மேலும் பேசத் தொடங்கினாள்.
“ஏதோ ஒரு புத்தகத்தில் அர்த்தமற்ற வாழ்க்கை” என்ற அடியைப் படித்தேன். அதைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு அதன் அர்த்தம் உடனே புரிந்துவிட்டது. அந்த மாதிரி வாழ்க்கை எப்படிப்பட்டது என்பது எனக்குத் தெரியும். அதில் கருத்துக்கள் எல்லாம் இருக்கத்தான் செய்தன. எனினும் சம்பந்தா சம்பந்தமற்று, தொடர்பு இல்லாமல் இருக்கின்றன. மேய்ப்பவன் இல்லாத ஆட்டுமந்தை மாதிரி கட்டி மேய்க்க ஆளில்லாமல் தான்தோன்றியாய்த் திரிகின்றன. அதுதான் அர்த்தமற்ற வாழ்க்கை. என்னால் முடியுமானால், இந்த மாதிரி வாழ்க்கையிலிருந்து திரும்பியே பார்க்காமல் ஓடிவிடுவேன். அதிலும், உண்மை இதுதான் என்று உணர்ந்த பிறகும் அந்த வாழ்க்கையில் என்னால் கால் தரித்து நிற்க முடியாது.”
அவளது பசிய கண்கள் வறண்ட பிரகாசத்திலும், மெலிந்த முகத்திலும், அவளது குரலின் தொனியிலும் தோன்றிய வேதனையைத் தாயால் உணர முடிந்தது; அவளைத் தழுவி ஆசுவாசப்படுத்தி ஆறுதலளிக்க விரும்பினாள் தாய்.
”அடி பெண்ணே! என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு நன்றாகத் தெரிகிறதே……..”
“ஆனால் எப்படிச் செய்வது என்று தெரிய வேண்டும்” என்று குறுக்கிட்டாள் தத்யானா. ”சரி, படுக்கை தயாராகிவிட்டது.”
அவள் மீண்டும் அடுப்பருகே சென்று அங்கே சிந்தனைவயப்பட்டு மெய்மறந்து ஆடாமல் அசையாமல் அமைதியாக நிமிர்ந்து நின்றாள். தாய் தன் உடையைக்கூடக் கழற்றாமல் அப்படியே படுத்துக்கொண்டாள். அவளது எலும்புகள் அசதியினால் வலித்தன; அவள் லேசாக முனகினாள். தத்யானா விளக்கை இறக்கி அணைத்தாள். அறை முழுவதும் இருள் பரந்து கவிந்த பின்னர் அவள் நிதானமாகத் தணிந்த குரலில் பேசிக்கொண்டிருந்தாள். அந்த இருட் படலத்திலிருந்து எதையோ துடைத்தெடுப்பது போல் அவள் பேச்சு ஒலித்தது.
“நீங்கள் பிரார்த்திப்பதாகத் தோன்றவில்லையே. நானும் கடவுள் ஒருவர் இருப்பதாக நம்பவில்லை. அற்புத லீலைகளிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது.”
தாய் நிலை கொள்ளாமல் பெஞ்சின் மீது புரண்டு படுத்தாள். ஆழங்காண முடியாத அந்த இருட்டிலும் ஜன்னலின் வழியாக அவளை நோக்கி வாய் திறந்து கொட்டாவி விட்டது. மங்கிய சப்தங்கள் இருளின் ஊடாகத் தவழ்ந்து வந்தன. அவள் பயத்தோடு ரகசியம் போலப் பேசினாள்.
“கடவுளைப் பொறுத்தவரை – எனக்கு நிச்சயமாய்த் தெரியாது. ஆனால் நான் கிறிஸ்துவை நம்புகிறேன். அவரது வாசகத்தை ‘அயலானையும் உன்னைப்போல் நேசி’ என்ற வாசகத்தை – நான் நம்புகிறேன்.”
தத்யானா மௌனமாக இருந்தாள். அடுப்பின் இருண்ட புகைப் புலத்திலே அவளது மங்கிய உருவத்தைத் தாயால் காண முடிந்தது. அவள் அசைவற்று நின்றுகொண்டிருந்தாள். தாய் துயரத்தோடு கண்களை மூடிக்கொண்டாள். திடீரென்று அந்தப் பெண்ணின் கசப்பான குரல் ஒலித்தது.
”என்னுடைய குழந்தைகள் செத்துப்போனதற்காக நான் கடவுளாகட்டும், மனிதனாகட்டும் இருவரையும் மன்னிக்க மாட்டேன், ஒருக்காலும் மன்னிக்க மாட்டேன்!”
“நீங்கள் இன்னும் சின்னவர்தானே, உங்களுக்கு இனிமேலும் குழந்தைகள் பிறக்கும்” என்று அமைதியாகச் சொன்னாள்.
அந்தப் பெண் இதற்கு உடனே பதில் சொல்லவில்லை. பிறகு மெல்லிய குரலில் பதில் சொன்னாள்.
“ஒருக்காலும் நடக்காது. என்னிடம் ஏதோ கோளாறு இருக்கிறதாம். எனக்கு இனிமேல் குழந்தைகளே பிறக்காது என்று வைத்தியர் சொன்னார்.”
ஒரு சுண்டெலி தரையில் குறுக்கே விழுந்தோடியது. அந்த அமைதியை மின்னல் மாதிரி கிழித்துக்கொண்டு எங்கிருந்தோ படாரென்று ஒரு ஓசையெழுந்தது. மீண்டும் கூரையின் வைக்கோலில் எதையோ பயந்து நடுநடுங்கும் மெல்லிய விரல்களால் துழாவித் துழாவித் தேடுவதுபோல் மழை பெய்தது. தண்ணீர் சொட்டுச் சொட்டாகத் தரையில் வழிந்தது. அந்த இலையுதிர்கால இரவுக்குப் பாதை வகுத்துக் கொடுத்தது….
தூக்கக் கிறக்கத்திலும் தாயின் காதில் அந்த மெல்லிய காலடியோசை வாசற்புறத்தில் நெருங்கி வருவது கேட்டது. கதவை ஜாக்கிரதையுடன் திறந்து கொண்டு யாரோ உள்ளே நுழைந்தார்கள்.
“தத்யானா, நீ படுத்துவிட்டாயா?”
“இல்லை,”
”அவள் தூங்கிவிட்டாளா?”
“அப்படித்தான் தெரிகிறது.”
விளக்கின் சுடர் ஓங்கியது. ஒரு நிமிஷம் அந்த இருளில் திக்கித் திணறிப் படபடத்தது. அந்த முஜீக் தாயின் படுக்கையின் அருகே வந்து, தனது கோட்டை எடுத்து அவளது பாதங்களைப் பதனமாகப் போர்த்தி மூடினான். அவனது பணிவிடையின் எளிமை தாயின் உள்ளத்தைத் தொட்டுவிட்டது; அவள் புன்னகையோடு தன் கண்களை மீண்டும் மூடிக்கொண்டாள். ஸ்திபான் ஒன்றுமே பேசாமல் உடுப்புகளைக் கழற்றிவிட்டுப் பரணின்மீது ஏறிப் படுத்தான். மீண்டும் எங்கும் அமைதி நிலவியது.
தாய் அசையாமல் படுத்தவாறே இருளின் கனவுக் குரலை கேட்டுக்கொண்டு கிடந்தாள். அப்போது அவளது கண் முன்னால் ரத்தம் தோய்ந்த ரீபினின் முகம் நிழலாடித் தெரிந்தது.
மேலே பரணில் உசும்பும் சத்தம் கேட்டது.
“இந்த மாதிரி வேலையில் எப்படிப்பட்டவர்கள் ஈடுபடுகிறார்கள், பார்த்தாயா? வாழ்க்கை முழுவதும் சோகத்தையே அனுபவித்து அனுபவித்து உழைத்தவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த வயசிலே இவர்கள் ஓய்வெடுக்க வேண்டியதுதான் நியாயம். அனால் அதற்குப் பதிலாக இந்த மாதிரிக் காரியங்களில் ஈடுபட்டு வேலை செய்கிறார்கள். நீயும் இளமையாகவும் துடிப்பாகவும்தான் இருக்கிறாய் …….. இருந்தும் என்ன, ஸ்திபான்……..”
அந்த முஜீக்கின் பதில் ஆழ்ந்த செழுமையான குரலில் ஒலித்தது.
”இறங்குவதற்கு முன்னால் முதலில் யோசிக்க வேண்டாமா?”
”இந்த மாதிரி நீ முன்னாலேயே சொல்லியிருக்கிறாய்.”
இருவர் குரலும் ஒரு நிமிஷ நேரம் நின்றுபோயின. பிறகு ஸ்திபானின் குரல் ஒலித்தது.
”இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும். முதலில் முஜீக்குகளிடம் தனித்தனியாகப் பேச வேண்டும். உதாரணமாக, அலெக்சி மாகவிடம் பேசத் தொடங்குவோம். அவன் படித்தவன், உணர்ச்சி நிறைந்தவன். அதிகாரிகளால் துன்பத்துக்கு ஆளானவன். செர்கேய்ஷோரின் அவனும் ஒரு புத்திசாலியான முஜீக்தான். கினியாசெவ் நேர்மையானவன்; பயப்பட மாட்டான். ஆரம்பத்திலே இவர்கள் போதும். அவள் நமக்குச் சொன்னாளே, அந்த மாதிரி மக்களை நாமும் பார்க்கத்தான் வேண்டும். நான் ஒரு கோடரியைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு, விறகு பிளந்து கொடுத்துக் கொஞ்சம் மேல் வரும்படி சம்பாதிக்கப் போகிறவன் மாதிரி நகருக்குப் போய் வருகிறேன். நாம் மிகுந்த ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். ஒரு மனிதனின் மதிப்பு அவன் செய்யும் வேலையில் இருக்கிறது என்று அவள் சொன்னாளே, அது ரொம்ப சரி. இன்று அந்த முஜீக் நடந்து கொண்டானே, அந்த மாதிரி. கடவுளின் முன்னால்கூட அவனைக் கொண்டுவந்து நிறுத்திப் பாரேன். அவன் தன் பிடியிலிருந்து கொஞ்சம்கூடத் தவறமாட்டான். சரி. நீ அந்த நிகீதாவைப் பற்றி என்ன நினைக்கிறாய்? மனச்சாட்சிக்கு ஆட்பட்டவன். இல்லையா? சரி.”
“உங்கள் கண் முன்னாலேயே அவர்கள் ஒரு மனிதனை அடித்து நொறுக்குகிறார்கள். நீங்களானால் வாயைப் பிளந்து கொண்டு வெறுமனே வேடிக்கை பார்க்கிறீர்கள்.”
”அவசரப்படாதே. அந்த மனிதனை நாங்களும் சேர்ந்து கொண்டு அடிக்காமல் விட்டோமே. அதை நினைத்து நீ சந்தோஷப்பட வேண்டும்.”
அவன் வெகு நேரம் வரையிலும் ரகசியம் பேசிக்கொண்டிருந்தான். சமயங்களில் சத்தத்தை மிகவும் குறைத்துப் பேசினான். எனவே தாய்க்கு அநேகமாக ஒன்றும் கேட்கவில்லை. சமயங்களில் உச்ச ஸ்தாயியிலும் பேசினான். அப்படி பேசும்போது அவனது மனைவி அவனைத் தடுத்து நிறுத்துவாள்.
”உஷ்! அவளை எழுப்பி விட்டுவிடப் போகிறாய்?”
தன்னைக் கவிந்து மேகம் போல் சூழ்ந்து வந்த தூக்கத்துக்குத் தாய் ஆளாகித் தூங்கலானாள்.
மங்கலான அருணோதயப் பொழுது அந்தக் குடிசையின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கும் வேளையில், ராத்திரிக் காவல் ஓய்ந்ததை அறிவிக்கும் தேவாலய மணியோசை மிகுந்து ஒலித்த நேரத்தில், தத்யானா தாயை உசுப்பி எழச் செய்தாள்.
“நான் தேநீர் தயாரித்து விட்டேன். முதலில் ஒரு கோப்பை தேநீரைக் குடியுங்கள். படுக்கையிலிருந்து எழுந்தவுடன் நேராகச் சென்றால் குளிர் உறைக்கும்.”
ஸ்திபான் தனது சிக்கலான தாடியைக் கோதிவிட்டவாறே தாயிடம் அவளது விலாசத்தைக் கேட்டான். ராத்திரியில் தோன்றியதைவிட, இப்போது அந்த முஜீக்கின் முகம் தெளிவாகவும் பரிபூரணமாகவும் தோன்றுவதுபோலத் தாய்க்குப் பட்டது.
“நடந்ததையெல்லாம் எண்ணிப் பார்க்க எவ்வளவு வியப்பாக இருக்கிறது!” என்று அவர்கள் தேநீர் பருகும் சமயத்தில் சிரித்துக்கொண்டே சொன்னான், அவன்.
“என்னது?” என்று கேட்டாள் தத்யானா.
“நாம் ஒருவருக்கொருவர் பழகிப்போனதுதான் எவ்வளவு எளிதாக…”
“நமது வேலையோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலுமே ஓர் அதிசயமான எளிமை இருக்கத்தான் செய்கிறது” என்று ஏதோ சிந்தித்தவாறே சொன்னாள் தாய்.
தாயிடம் விடைபெற்றுக் கொள்ளும்போது அவர்கள் எந்தவிதமான பரபரப்பையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அவர்கள் அவளிடம் பேசாமலே, தாங்கள் செய்யும் சின்னஞ்சிறிதான பற்பல செயல்களின் மூலம் அவளுக்குச் சௌகரியம் செய்து கொடுப்பதில் தாங்கள் எவ்வளவு அக்கறை கொண்டவர்கள் என்பதைக் காட்டிக்கொண்டார்கள்.
தபால் வண்டியில் ஏறி உட்கார்ந்ததுமே, தாய் நினைத்தாள். ஸ்திபான் ஒரு வயலெலியைப் போல் மிகுந்த ஜாக்கிரதையோடும் சத்தமின்றியும், களைப்படையாமலும் வேலை செய்யத் தொடங்குவான். அவனது மனைவியின் குறைபாடுகள் அவன் காதுகளில் என்றென்றும் ஒலிக்கும். அவளது பசிய கண்களின் கூரிய ஒளி மறையவே மறையாது. தனது இறந்துபோன குழந்தைகளை எண்ணி, தாய்மையுணர்ச்சியோடு உறுமிக் கொண்டிருக்கும் அவளது பழிவாங்கும் எண்ணம் அவள் உயிர் வாழ்கின்றவரையிலும் தீரவே தீராது.”
அவள் ரீபினைப் பற்றியும் நினைத்துப் பார்த்தாள். அவனது ரத்தத்தை, அவனது முகத்தை, அவனது கனன்றெரியும் கண்களை, அவனது பேச்சையெல்லாம் நினைத்துப் பார்த்தாள். அந்த அகோரமான மிருகத்தனத்தை எண்ணி அவளது மனத்தில் நிர்க்கதியான நிலைமையின் கசப்புணர்ச்சி புகுந்து, அவளது இதயத்தைக் கசக்கி இறுக்கியது. நகருக்கு வந்து சேருகிறவரையிலும் வழியெல்லாம் அந்தக் காலைப் பொழுதின் மங்கிய பகைப்புலத்திலே மிகயீலின் உருவம்தான் அவள் கண்முன்னே உருவாகிக் கொண்டிருந்தது. அவனது கட்டுமஸ்தான, கரிய தாடிகொண்ட உருவத்தை, கந்தல் கந்தலாகக் கிழிந்த சட்டையோடும், பின்புறமாகக் கட்டிய கைகளோடும், பறட்டைத் தலையோடும் அவள் கண்டாள். எந்த உண்மைக்காக அவன் போராடுகிறானோ அதன்மீது கொண்ட நம்பிக்கையும், அது தாக்கப்படுவதால் எழுந்த கோபமும் நிறைந்து பொங்கும் மனிதனாக அவனைக் கண்டாள். பூமியோடு ஒட்டிக்கொண்டிருக்கும் எண்ணிறந்த கிராமங்களையும், அந்தக் கிராமங்களிலே நியாயத்தின் திக்விஜயத்தை வரவேற்க ரகசியமாகக் காத்திருக்கும் ஜனங்களையும், எந்தவித எதிர்ப்புமின்றி, எதிர்கால சுபிட்சத்தில் எவ்வித நம்பிக்கையுமின்றி அர்த்தமற்ற உழைப்பிலேயே தமது வாழ்நாளையெல்லாம் போக்கிவிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தையும் அவள் எண்ணிப் பார்த்தாள்.
குன்றுகள் பெருத்துக் கரடு முரடாக, உழவற்றுக் கிடக்கும் நிலத்தைப் போல், உழுபவனை எதிர்நோக்கி ஆர்வத்தோடும் மெளனத்தோடும் அங்காந்து காத்திருக்கும் தரிசு நிலம் போன்ற வாழ்க்கையை அவள் கற்பனை பண்ணிப் பார்த்தாள்.
அந்தத் தரிசு நிலம் சுதந்திரமான, நேர்மை நிறைந்த மனிதர்களை நோக்கி, “என்மீது சத்தியத்தையும் அறிவையும் விதைத்துப் பயிராக்குங்கள்; நான் உங்களுக்கு உங்கள் உழைப்புக்கு நூறு மடங்காகப் பலன் அளிக்கிறேன்” என்று சொல்வது போலிருந்தது.
தன்னுடைய சொந்த முயற்சிகளால் தான் பெற்ற வெற்றியை அவள் மீண்டும் நினைவுகூர்ந்தபோது, அவளது உள்ளம் ஆனந்த வெறியால் அமைதியாகப் படபடத்தது. அந்த ஆனந்தத்தை அவள் நாணிக் கோணி உள்ளடக்கிக்கொண்டாள்.
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
“காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகவிற்கு பாசிச பாஜக அனுமதி! தமிழகத்தை பாலைவனமாக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் சதித்திட்டத்தை முறியடிப்போம்!” என்கிற முழக்கத்தின் கீழ் 03.01.2019 அன்று காலை 11 மணியளவில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுக்கட்சினர் திரளாக கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி தருமபுரி மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான பிரசுரங்கள், நூற்றுக்கணக்கான சுவரொட்டி, கிராமங்கள்தோறும் தெருமுனைப்பிரச்சாரம் என வீச்சான பிரச்சாரம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தினை மக்கள் அதிகாரம் தோழர் சிவா தலைமை தாங்கி நடத்தினார். அவர் பேசுகையில்; “ஏற்கனவே தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீர் கொடுக்காததால் ஊருக்கே சோறுபோட்ட டெல்டா விவசாயிகள் சென்ற ஆண்டு மட்டும் 400 பேர் கருகிய பயிரை பார்த்து நெஞ்சுவெடித்து இறந்தனர். இன்றைக்கு கஜா புயலால் மிச்சமிருந்த விவசாயத்தையும் இழந்துள்ளனர். அவர்கள் மீண்டெழவே 20 ஆண்டுகள் ஆகும் என்கிற நிலையில், சொந்த நாட்டிலேயே சோத்துக்கு கையேந்தி நிற்கின்றனர்.
இந்த நிலையில் அணையைக்கட்டினால் தமிழகம் பாலைவனமாகும். அடுத்ததாக நிலத்தடிநீர் ஆணைய மசோதாவை நிறைவேற்றப் போகிறார்கள். எனவே இனியும் வேடிக்கை பார்க்காமல், மக்களுக்கு எதிராக இருக்கும் இந்த அரசை நம்பாமல் கிராமங்கள், நகரங்கள்தோறும் போராட்டத்தைக் கட்டிஎழுப்புவதுதான் தீர்வு.” என்று பேசினார்.
அவரைத்தொடர்ந்து புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு பேசுகையில், “மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கான காரணம், அரசாங்கத்தின் கொள்கையே தனியார் முதலாளிகள் கொள்ளை அடிப்பதற்காகவே இருப்பதுதான். 1991-ல் கொண்டு வரப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தை வளர்ச்சி என்ற பெயரில் அமல்படுத்தி வருகிறார்கள்.
“நீரின்றி அமையாது உலகு” என்றார் வள்ளுவர் அப்படி எல்லா உயிருக்கும் ஆதாரமாக இருக்கும் தண்ணீரைதான் விற்பனை செய்கிறார்கள். அதற்காகதான் மேகதாதுவில் அணையை கட்டத் துடிக்கிறார்கள். கார்ப்பரேட்டுகள் தண்ணீர் கொள்ளயடிப்பதை நாம் வேடிக்கை பார்க்கமுடியுமா? உயர்கல்வி ஆணையம், மருத்துவ ஆணையம், நிலத்தடி நீர் ஆணையம் என்று.. எல்லாம் ஆணையம் என்கிற பெயரில் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க வழிவகை செய்கிறார்கள். எல்லாமே காசு என்றால் கவர்மெண்டு எதற்கு, நாம் கட்டும் வரிபணம் எங்கே போகிறது, எனவே மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும்” என்றார்.
மக்கள் அதிகாரம், பென்னாகரம் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜா பேசுகையில், “ஒருபக்கம் 2019 புத்தாண்டை இந்தியா முழுவதும் கொண்டாடுகிறோம். இன்னொரு பக்கம் விவசாயிகளின் ஏக்கம், பரிதவிப்பு என ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் காவிரிப் பிரச்சினைதான் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. அணையை கட்டி தமிழகத்து தண்ணீர் கொடுக்கிறோம் என்று கூறிகிறார்கள், ஆனால் இன்றைக்கு உள்ளூரில் பல கிராமங்களுக்கு குடிநீர் தேவை பூர்த்தியாகமல் பல மைல்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டியுள்ளது.
பலமுறை மனுக்கொடுத்தாலும் அதிகாரிகள் திரும்பி பார்ப்பதில்லை அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் இவர்கள் எப்படி மாநிலப்பிரச்சினையை தீர்ப்பார்கள் எனவே தமிழகத்தின் பண்பாடு, கலாச்சாரத்தை வாழ்வாதரத்தை அழிக்கும் வேலையில் பிஜேபி-யும் அதிமுக-வும் இறங்கியிருக்கிறார்கள். எனவே அனைத்துப் பிரச்சினைக்கும் போராடினால்தான் வாழ்வு! இல்லையென்றால் சாவுதான் மிஞ்சும்..” என்று எச்சரித்தார்.
அவரைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார் சிறப்புரையாற்றினார், அவரது உரையில் “தருமபுரி மாவட்டம் வறட்சி மாவட்டம். மற்ற மாவட்டங்களை காட்டிலும் பருவமழையும் 52 % குறைந்துள்ளது. மழை குறைந்தால் குடிநீர் தேவையும் அதிகரிக்கும். எனவே, நம்பி இருப்பது காவிரிநீரைத்தான். தண்ணீர் என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுச்சொத்து அதனை என்னுடைய சொத்து என்று கர்நாடகா உரிமை கொண்டாடுகிறது. அதற்கு மோடியும், தீர்ப்புகளும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறது.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த பிறகுதான் கர்நாடகாவில் அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். அதனை ஆணையம் தலையிட்டு தடுக்காமல் மாதம் மாதம் கூட்டம் நடத்துவது என்று தமிழகத்திற்கு துரோகம் செய்வார்கள். ஆனால் இவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்று பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்.
கர்நாடகாவில் அணையை கட்டி அங்குள்ள தண்ணீரை கார்ப்பரேட்டுகள், சொகுசு பங்களாக்கள் மேட்டுக்குடிகள் ஆகியோர் கும்மாளமிடுவதற்கு பயன்படுத்தி வருகிறார்கள், எனவே 10 லட்சத்துக்கு கோட்டு போடும் மோடியும், பல ஆயிரம் கோடிகளை கொள்ளையிடும் பி.ஜே.பி அமைச்சர்களும், அவர்களின் எடுபிடியான தமிழக அரசும்; உயர்மின் கோபுரம் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதரத்தை பறிப்பதற்கு எதிராக 8 மாவட்ட விவசாயிகள் 12 நாட்களாக போராடியும் கண்டுகொள்ளவில்லை.
தாயிடம் அழுதால் பால் கிடைக்கும், பேயிடம் அழுதால் சாவுதான் கிடைக்கும் என்பதைதான் இந்த அரசாங்கம் நமக்கு காட்டுகிறது, எனவே 40 ஆண்டுகளாக தீர்ப்புகளை நம்பி ஏமாந்து விட்டோம். இனியும் ஏமாறக்கூடாது.
மக்கள் போராட்டம் மூலம் ஸ்டெர்லைட்டை மூடியதும், ஜல்லிக்கட்டை வென்றெடுத்ததும் தமிழர்கள்தான். எனவே தமிழகத்துக்கு அப்படிப்பட்ட போராட்ட பாரம்பரியம் இருக்கிறது எனவே ஜல்லிக்கட்டு போராட்டம் போல், வடமாநில விவசாயிகள் போராட்டத்தை போல கட்சி பாராமல் ஒருங்கிணைந்து போராடினால்தான் இப்பிரச்சினையை தீர்க்கமுடியும்” என்று அறைகூவல் விடுத்தார்.
1 of 4
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
பின்னர் மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டல பொருளாளர் தோழர் கோபிநாத் பேசுகையில், “கர்நாடகாவில் அணையை கட்ட பிஜேபி அனுமதி அளித்து தமிழகத்தின் எதிரி என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறது. அணையைக்கட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட வராது. 22 மாவட்டங்கள் குடிநீர் இல்லாமல் பாலைவனமாகும். இதனை எதிர்த்து போராடுவதற்கு அனுமதி இல்லை காரணம் சட்டம் ஒழுங்கு பாதிக்குமாம்.
ஆனால் இங்கே சந்து பொந்துகள் தோறும் சாராயம் விற்பதற்கு மாமூல் வாங்கிக்கொண்டு அனுமதி அளித்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்காதாம். எல்லா அதிகாரிகளும் மூன்று வேலை சோறு தின்பது விவசாயிகளின் வியர்வை, உழைப்பில்தான். எடப்பாடியும், பன்னீர்செல்வமும் சட்ட வகையில் போராடுவோம் என்று கூறுவது கர்நாடகா அணைகட்டுவதற்குதான் உதவும். காவிரி எங்களுக்கு சொந்தம் என்று கர்நாடகா சொல்வதற்கும், மோடி சொல்வதற்கும் பின்னால் கார்ப்பரேட்டுகளின் கூட்டு அடங்கியிருக்கிறது.
அணையை கட்டினால்தான் டெல்டாவில் இருக்கும் மீத்தேன், ஹட்ரோகார்பன், போன்ற கனிமவளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க முடியும், மேலும் 8 வழிச்சாலை, 6 வழிச்சாலைக்கு எதிராக போராடினால் கடுமையாக ஒடுக்கிறது இந்த அரசு. அடிப்படை உரிமையை பறிப்பவர்களிடம் எப்படி பிரச்சினையை தீர்க்க முடியும்.
மக்களின் வீரம் செறிந்த போராட்டம்தான் ஸ்டெர்லைட்டை மூடியது, வீரம் செறிந்த போராட்டம்தான் ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது. எனவே ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல நம்முடைய போராட்டதை தொடங்குவோம்! காவிரி உரிமையை மீட்டெப்போம்.” என்று அறைகூவி அழைத்தார்.
இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வை திரளான மக்கள் இறுதிவரை நின்று கவனித்தனர். அணையை கட்டினால் தமிழகம் சுடுகாடாக மாறும் அபாயத்தை உணர்த்தும் வகையிலும், காவிரி தீர்ப்புகள், ஆணையங்கள் மூலமும் தீர்வு கிடைக்காது, மாற்று மக்கள் எழுச்சிதான் தீர்வு என்பதை உணர்த்தும் வகையில் ஆர்ப்பாட்டம் அமைந்தது.
தகவல்: மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டலம், தொடர்புக்கு – 97901 38614