”மே தினத்தை போராட்ட தினமாக அனுஷ்டிப்பதற்கு பதிலாக கேளிக்கை மற்றும் ஓய்வு தினமாக மாற்றுவதன் மூலம் பல கட்சிகளின் சீர்திருத்த தலைவர்கள் மே தினத்தின் முக்கியத்துவத்தை சீர்குலைக்க முயற்சித்தார்கள். சீர்திருத்த தலைவர்களுக்கு மே தினம் பார்க்கில் விளையாடுவதற்கும், கலை நிகழ்ச்சிக்குமான உலக விடுமுறை நாளாகும். ”
– இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட வாசகம் இதுவென்றால், நம்ப முடிகிறதா? இன்றைய நடப்போடு இவை அப்படியே பொருந்திப்போகிறதென்றால், வார்த்தைகளின் தீர்க்கதரிசனம் என்று மெய்சிலிர்ப்பதா? இல்லை, தொழிலாளி வர்க்கத்தின் தோல்வி இதுவென்று வெட்கித் தலைகுனிவதா?
வேலைக்கேற்ற ஊதியமில்லை; வேலை உத்திரவாதமில்லை; எட்டுமணிநேர வேலை என்பது எங்குமில்லை; கொத்தடிமைகளைப்போல தொழிலாளர்கள் சுரண்டப்படுவதும், தொழிலாளி வர்க்கம் போராடிப்பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றாய் பறிக்கப்பட்டு வருவதுமான மறுகாலனியாக்கச் சூழலில் மே தினத்தின் வரலாற்றை அறிந்துகொள்வதும், உரிமைக்கானப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது, இந்நூல்.
அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் என கண்டதுக்கெல்லாம் ஒரு தினம் அனுசரிக்கப்படுவதைப் போன்றதல்ல, தொழிலாளர் தினம். 1886ஆம் ஆண்டு சிகாகோ நகரில் எட்டுமணி நேர வேலைக்காகப் போராடிய தொழிலாளர்கள் இரத்தச் சகதியில் மூழ்கடிக்கப்பட்டும், முன்னணியாளர்கள் தூக்கிலிடப்பட்டும் கொல்லப்பட்டதன் நினைவாகத்தான் மேதினம் கடைபிடிக்கப்படுகிறதென்று பொதுவில் நாம் அறிந்திருப்போம்.
அதற்கு முன்பும் பின்புமான வரலாற்றுப் பின்புலத்தில் நின்று, அதன் வளர்ச்சிப்போக்கை சித்திரம் போல கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது, இச்சிறுநூல்.
‘அதிகாலை முதல் அந்திசாயும் வரை’ என்பதுதான் அப்போதெல்லாம் வேலைநாள். இதனால் ஏற்பட்ட மனக்குமுறல்களை அமெரிக்கத் தொழிலாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வெளிக்காட்டினர். பதினாறு, பதினேழு ஏன் பதினெட்டு மணிநேர வேலை என்பதெல்லாம் அப்போது சாதாரண விஷயங்கள்.
1806-ம் ஆண்டிலேயே அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்… குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் அமெரிக்காவில் மட்டும் நிகழவில்லை. முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் சுரண்டப்பட்ட எல்லா வளரும் நாடுகளிலும் இப்போராட்டங்கள் நிகழ்ந்தன.
1877-ல் மிகப் பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் பத்தாயிரக்கணக்கில் சாலை, ரெயில்வே, மற்றும் உருக்குத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அரசாங்கத்தையும் நகராட்சியையும் எதிர்த்து தீவிர போர்க்குணத்தோடு போரிட்டனர். இவர்களுக்கெதிராக ராணுவம் ஏவப்பட்டது. தொழிலாளர்கள் தொடர்ந்து போராடினர்.
1884-ல் அமெரிக்காவில் 8 மணி நேர இயக்கத்தின் போது வெடித்த போராட்டங்கள்தான் மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணமாய் அமைந்தன.
சிக்காகோவில் மே முதல் நாள் வேலை நிறுத்தம் மிகத் தீவிரமாக இருந்தது. அப்போது இடதுசாரி தொழிலாளர்கள் இயக்கத்தின் ஒரு மையமாக சிக்காகோ திகழ்ந்தது.
மே முதல் நாள் சிக்காகோ, நகரத் தொழிலாளர் இயக்க ஸ்தாபனம் அழைப்பு கொடுத்ததின் பேரில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை கீழே வைத்துவிட்டு தெருவுக்கு இறங்கிய மாபெரும் காட்சியைக் கண்டது. இந்த ஆர்ப்பாட்டம் முன் எப்போதுமில்லாத வகையில் மாபெரும் வர்க்க ஒற்றுமையாக விளங்கியது… 1886 மே முதல் தினம் உச்சக் கட்டத்தையடைந்த 8 மணி நேர இயக்கமானது, அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாற்றில் ஒரு மகோன்னத அத்தியாயத்தை உருவாக்கியது.
அதே நேரத்தில் தொழிலாளர்களின் விரோதிகள் வெறுமனே இருக்கவில்லை. முதலாளிகள் மற்றும் அரசின் இணைந்த சக்தி, ஊர்வலம் சென்ற சிக்காகோ தொழிலாளர்களைக் கைது செய்தது. போர்குணமிக்க தலைவர்களை அழித்தொழிப்பதன் மூலம் சிக்காகோ நகரின் தொழிலாளர் இயக்கத்தையே நசுக்கி விடலாம் என கண்டார்கள். மே 3-ம் நாள் வேலை நிறுத்தம் செய்த மெக்கார்மிக் ரீப்பர் வொர்க்ஸ் தொழிலாளர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த போலிஸின் காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறையை எதிர்த்து மே 4-ஆம் நாள் வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த கூட்டம் அமைதியாக நடந்தது. போலீசு மீண்டும் கூடியிருந்த தொழிலாளர் மீது தாக்குதலைத் தொடுக்க … கூட்டத்தில் எறியப்பட்ட ஒரு குண்டு ராணுவ அதிகாரி ஒருவனைக் கொன்றது. இதன் விளைவாக எழுந்த ஒரு மோதலில் ஏழு போலீஸ்காரர்களும் நான்கு தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர். வைக்கோல் சந்தை சதுக்கத்தில் ஏற்பட்ட ரத்த ஆறும், போர்க்குணமிக்க சிக்காகோ தொழிலாளர் தலைவர்களை சிறைக்கும், தூக்கு மேடைக்கும் அனுப்பியதும்தான் சிக்காகோ நகர முதலாளிகளின் பதிலாயிருந்தன. 1886 ஆண்டின் பிற்பாதி முழுவதும் முதலாளிகளின் திட்டமிட்ட கொடூரத் தாக்குதல் தொடர்ந்தது.
1889-ம் ஆண்டு நடைபெற்ற பாரிஸ் மாநாடு கீழ்க் கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது. ‘’எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணி நேரத்தை சட்டபூர்வமாக்கக் கோரி அரசாங்கத்திடமும், நிர்வாகத்திடமும் போராட வேண்டும். இதை உலகம் தழுவிய ஆர்ப்பாட்டமாக நடத்தவும், பாரிஸ் மாநாட்டு முடிவுகளை நிறைவேற்றக் கோரியும் இம்மாநாடு தீர்மானிக்கிறது. 1888 டிசம்பரில் செயிண்ட் லூயிஸில் கூடிய அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு இத்தகைய ஆர்ப்பாட்டத்திற்கு 1890 மே முதல் நாளை ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டதால் அதே நாள் சர்வதேச அளவிலான ஆர்ப்பாட்டம் செய்யவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே அந்த குறிப்பிட நாளில் எல்லா நாட்டு தொழிலாளர்களும் அவர்களின் நாட்டு சூழ்நிலைக்கேற்ப இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று மாநாடு அறிவிக்கிறது.’’ இதனைத்தொடர்ந்தே ஐரோப்பா, ஜெர்மனி, அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் தொழிலாளர் போராட்டங்கள் விரிவடைந்தன.
”உழைக்கும் வர்க்கத்தின் பிரதான விருப்பம் சமூக மாற்றத்தின் மூலம் வர்க்கப் பாகுபாடுகளை அழித்தொழிப்பது, மற்றும் உலகம் முழுவதும் எல்லா மக்களுக்கும் அமைதியை ஏற்படுத்துவது ஆகும். மே தின ஆர்ப்பாட்டங்கள் எட்டு மணி நேர வேலைநாளுக்காக மட்டுமல்லாமல் மேற்கூறிய விஷயங்களுக்கும் பயன்பட வேண்டும்’’என்கிறார் எங்கெல்ஸ்.
வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுவதற்கெதிராக, உரிமைகள் மறுக்கப்படுவதற்கெதிரானப் போராட்டங்கள் நிறைந்த இன்றையச் சூழலில் தொழிலாளி வர்க்கத்தின் முன்னுள்ள வரலாற்றுக்கடமையை நினைவூட்டுகிறது, இந்நூல்.
நூல்: மே தின வரலாறு
ஆசிரியர்: அலெக்ஸாண்டர் ட்ராச்டென்பர்க்
தமிழில் எம்.சிவக்குமார்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை,தேனாம்பேட்டை,
சென்னை – 600 018
பேச : 044- 24332424
பக்கங்கள்: 32
விலை: ரூ.20.00
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 2. தொ.பே : 044-2841 2367
– வினவு செய்திப் பிரிவு
வாரம் இரு நூல்களை அறிமுகம் செய்கிறோம். நூல்களை அனுப்ப விரும்புவோர் இரண்டு பிரதிகள் அனுப்பவும். சமூக, பொருளாதார, அரசியல், மொழிபெயர்ப்பு நூல்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். கவிதை, சிறுகதை நூல்களை அனுப்ப வேண்டாம்.
நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Puthiya Kalacharam – Vinavu
122, Nehru Park (Slum Clearance Board),
Poonamallee High Road,
Chennai 600084.
Tamilnadu, India
Mobile – (91) 99411 75876































உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பதவி நீக்கும் ந டவடிக்கைக்கான முன்மொழிவை ஒட்டி நடந்த விவகாரங்கள் இதற்கு ஒரு சிறந்த நிரூபணமாகும். முன்மொழிவில் குறிப்பிட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடந்தது இதுதான்.
ஆனால், எந்த அரசியல் கட்சியும் சரி, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பலரும், உயர் போலீசு அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், நிபுணர்கள் மக்களின் மனநிலை பற்றி துளியும் கவலையோ அச்சமோ கொள்ள வில்லை. இப்படித்தான் செய்வோம், உன்னால் என்ன செய்ய முடியும் என்ற இறுமாப்புடன் நடந்து கொள்கின்றனர். உள்நாட்டு – வெளி நாட்டு கார்ப்பரேட் டுகள் அரசு சொத்துக்களை அபகரிக்கவும் இயற்கைவளங்களைச் சூறையாடி சுற்றுச் சூழலை நச்சாக்கவும் மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து, அடக்கி ஒடுக்கி, சுரண்டி கொள்ளை இலாபம் அடிக்கவும் மேலும் மேலும் அடிமைச் சேவகம் புரிந்து வருகின்றனர்.
”இந்துக்கள்தான் இந்த நாட்டின் பூர்வகுடிகள், வேதங்களிலும் புராணங்களிலும் சொல்லப்பட்டிருப்பவை கதை அல்ல, வரலாற்று உண்மைகள்” என்று நிரூபிப்பதற்குப் பொருத்தமான வகையில் புதைபொருள் ஆதாரங்களையும், மரபணு ஆய்வுகளையும் தொகுத்து முன் வைப்பதுதான் இந்த கமிட்டிக்கு வழங்கப்பட்டிருக்கும் வேலை.













சென்னை வர்த்த மையத்தின் வரவேற்பறையில் வைக்கப்பட்டுள்ள விளம்பரம். குழப்பத்திலிருந்து விடுதலையா, குழப்பத்தை வைத்து வழிப்பறியா?
சிவராமகிருஷ்ணன். தாம்பரம், தனியார் நிறுவன ஊழியர், ‘’பொண்ணு பிளஸ் டூ எக்ஸாம் எழுதி இருக்கு. அடுத்து எதை எடுப்பது என்று தெரியாமல் குழப்பமா இருக்கு. இங்க பல கல்லூரிகளின் வசதிகளைப் பற்றி நேரடியாக தெரிந்து கொள்ள முடிந்தது. எப்படி இருந்தாலும் நம்ம பசங்க வாங்குற மார்க்குக்கு கவர்மென்ட் கல்லூரியில இடம் கிடைக்காது. தனியார் கல்லூரியிலதான் சேர்க்கணும். அதுக்கு இப்பவே எது நல்லதுன்னு தேடுறோம். பணம் செலவானாலும் ஒரு நல்ல கல்லூரியில சேர்த்துட்டோம்ன்ற ஒரு நிம்மதி நமக்கும் கிடைக்கும்.’’
ஹர்ஷிதா, பத்தாம் வகுப்பு மாணவி. ‘’பிளஸ் டூ-வில் எந்தப் பிரிவு எடுக்க வேண்டும், எதற்கு வருங்காலம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள இங்கு வந்திருக்கிறோம். எம்.பி.பி.எஸ். தான் படிக்கணும்னு இல்ல. மருத்துவத்துலயே தொழில்நுட்ப பிரிவுகள் இருப்பதை தெரிந்து கொண்டோம். அது சம்பந்தமாக படித்தால் நல்லது என்று சொல்கிறார்கள். இன்னும் சுத்தி விசாரிக்க போறோம்.’’
சிவா, தாம்பரம் பிளஸ் டூ மாணவர். ‘’நான் இஞ்சினியரிங் EEE படிக்கணும்னு ஆசை. எந்த காலேஜ்ல சேர்ந்தா நல்லதுன்னு விசாரிக்க வந்தேன். பொறியியல் நுழைவுத் தேர்வு, நேர்காணலின் போது குழப்பம் வரக்கூடாது இல்லையா? அரசு பொறியியல் கல்லூரியில் சீட்டு கிடைப்பது சந்தேகம்.’’ என்றார்.
சிவக்குமார், காவல்துறை அதிகாரி, மேற்கு சைதாப்பேட்டை. ‘’என் மகள் பெயர் ஆர்த்தி. அவரை (clat) தேசிய சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு தயார்படுத்தி வருகிறேன். எட்டாவது படிக்கும் போதே இதற்கான முயற்சியில இறங்கிட்டேன். கடந்த இரண்டு வருஷமா சென்னையில ஸ்ரீராம் அகாடமியில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். பெங்களூர் நேசனல் லா காலேஜ்தான் சிறந்தது. அதில் எப்படியாவது சேர்த்து விட வேண்டும். போலீஸ் துறையில் இருப்பதால் எனக்கு சட்டம் பற்றி தெரியும். போலீசு நாங்கள் சட்டத்திற்கு கீழ் படிய வேண்டும். ஆனால் வக்கீல்கள் சட்டத்தோடு எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். அதற்காக இத்துறையில் பொண்ணை எப்படியாவது சேர்த்து விட வேண்டும்.’’
ஜெயசங்கர், ஐயப்பன்தாங்கல். ‘’என் மகள் சோனா, பி.இ. பொறியியல் படிக்க வேண்டும். கல்வித்தரமும், வேலை வாய்ப்பும் வழங்கும் கல்லூரியைத் தேடி வந்திருக்கிறேன். வி.ஐ.டி. அதிகம் பணம் கேட்கிறார்கள். இருந்தாலும் தரம் இருக்கும். என்ன படிக்கிறோம் என்பதைவிட எங்க படிக்கிறோம் என்பது ரொம்ப முக்கியமில்லையா!’’
கார்த்திகேயன், புனித பீட்டர்ஸ் தொழில்நுட்பக்கல்லூரி ஆவடி. ‘’மெக்கானிக்கல் எஞ்சினியரிங் மூன்றாம் ஆண்டு மாணவர். அவருடைய கல்லூரி ஸ்டாலில் புதிய மாணவர்கள் சேர்க்கைக்கு ஆள் பிடிப்பதற்கு கல்லூரி நிறுவனம் இவரை அழைத்து வந்துள்ளது. கோட்டுப் போட்டுக்கொண்டு, வரும் பெற்றோர்களிடம் தன் கல்லூரியின் பெருமைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். சொந்த ஊர் கோவில்பட்டி. தந்தை இல்லை. இரண்டு அண்ணன்கள் பாராமரிப்பில் படிக்கிறார். இவர் நான்கு அரியர்ஸ் வைத்துள்ளார். ‘’நீங்களே சரியாக படிக்க முடியவில்லை. நீங்கள் எப்படி மாணவர்களுக்கு ஆசைக்காட்டி சேர்க்கலாம்’’ என்று கேட்டதற்கு, சிரிக்கிறார்.

‘’நாம் ஆளுநரை கைது செய்ய சொல்கிறோம். ஆனால் உண்மை நிலைமை என்ன? பதவியில் இருக்கக் கூடிய ஆளுநரையோ, நீதிபதிகளையோ, குடியரசுத் தலைவரையோ சட்டப்படி கைது செய்ய முடியாது. இதைத்தாண்டி குற்றம் வெளியே வந்தால் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த புகார்களை ஒன்றுமில்லாமல் செய்து விடலாம். இந்த சட்ட பாதுகாப்புடன் தான் இவ்வளவு கிரிமினல், பாலியல் அத்துமீறல்களை இவர்கள் செய்து வருகிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் இந்த அரசு கட்டமைப்பில் அது சாத்தியமில்லை. இந்த அரசு கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டிய போராட்டத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் இணைய வேண்டும் என்று பேசி கூட்டத்தை நிறைவு செய்தார், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட செயலாளர் தோழர் லயோனல் அந்தோனி ராஜ்.
காவிரி உரிமை மீட்பு நடைபயணத்தை சார்பில் கடந்த ஏப்ரல் – 21 அன்று கல்லணையில் இருந்து தொடங்கியது, மக்கள் அதிகாரம். கல்லணையில் தொடங்கிய இந்நடைபயணம் ஏப்ரல் – 30 அன்று பூம்புகாரில் நிறைவடைகிறது. நடைபயணத்தின் நிறைவையொட்டி, சீர்காழி பகுதியிலுள்ள திருமுல்லைவாசலில் நடைபெறும் என அறிவித்திருந்தது மக்கள் அதிகாரம்.


