கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல, கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு ! மே நாள் ஆர்ப்பாட்டங்கள் !
மேதினத்தை முன்னிட்டு சென்னை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளிள் பு.ஜ.தொ.மு. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக...
லெனினைப் போற்று ! சோசலிசமே மாற்று ! புதுச்சேரியில் லெனின் பிறந்த நாள் விழா !
லெனின் சிலையைத் தான் உடைக்க முடியும், தனது விடுதலையை நேசிக்கும் தொழிலாளி வர்க்கத்தின் சிந்தனையாக மாறிவிட்ட லெனினை அசைக்கக் கூட முடியாது.
புரோக்கர் நிர்மலாதேவி கைது ! காம வெறியர்களான உயர் அதிகாரிகள் கைது எப்போது ?
பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுக்களில் மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்களின் பங்கேற்பை உறுதி செய்யும் பொழுதுதான் ஊழல் முறைகேடுகளை தடுக்கவியலும். நிர்மலா தேவி - களையும் நீக்க முடியும்!
காவிரி உரிமை மீட்பு : சீர்காழியில் பேசத் தடை! தோழர்கள் மீது வழக்கு !
‘’கருத்து சுதந்திரம் இருக்கு, ஆனா நீ அதை கக்கூசுக்குள்ளதான் சொல்லிக்கனும்’’னு சொல்லுது சீர்காழிப் போலீசு.
எஸ்.வி.சேகரை குண்டர் சட்டத்தில் கைது செய் ! திருச்சி மக்கள் அதிகாரம் மனு !
வழக்குக்குப் பயந்து தலைமைச் செயலரும் அண்ணியுமான கிரிஜா வைத்தியநாதன் தயவில் ஓடி ஒளியும், எஸ்.வி.சேகரை உடனடியாகக் கைது செய்து சிறையிலடைக்கக்கோரி திருச்சியில் மக்கள் அதிகாரம் காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளது.
காவிரி : திருவாரூரில் நடைபயணம் – தாம்பரத்தில் பொதுக்கூட்டம் !
காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது!’’ என்ற முழக்கத்தின் கீழ் விவசாயிகளை அணிதிரட்டி வரும் மக்கள் அதிகாரம் அமைப்பினரின் பல்வேறு நிகழ்வுகள் பற்றிய அறிவிப்பு.
லெனின் நமக்குத் தேவைப்படுகிறார் !
லெனின் பிறந்த நாள் விழா என்பது இந்த உலகில் உழைக்கும் தொழிலாளர்களான பெரும்பான்மை மக்கள் எப்படி நல் வாழ்க்கை வாழ்வது என்கின்ற சிந்தனையை நினைவு கூர்வதாகும்.
தூத்துக்குடியில் யார் வாழ்வது ? ஸ்டெர்லைட்டா – மக்களா ?
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி “ஸ்டெர்லை எதிர்ப்பு அனைத்து கிராம மக்கள் கூட்டமைப்பு”சார்பில் நடைபெற்ற மாபெரும் பேரணி.
அம்பேத்கர் விழாவிற்கு சென்ற தொழிலாளிகளை நீக்கிய ஆக்சில்ஸ் இந்தியா நிறுவனம் !
செய்யாறு ஆக்சில்ஸ் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஆலைக்கு வெளியே அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றக் 'குற்றத்திற்காக'ப் பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள்.
லெனின் 149 – வது பிறந்தநாள் விழா ! அவர் வெறும் சிலையல்ல ! விடுதலைக்கான தத்துவம் !
ஒடுக்குமுறைகள் தீவிரமாகியுள்ள இன்றையச் சூழலில் ஆசான் லெனினின் தத்துவத்தை நெஞ்சில் நிறுத்தி இற்றுப்போன அரசமைப்பைத் தகர்த்தெறிந்து புதிய சமூகத்தைப் படைக்க அணிதிரள வேண்டுமென்று அறைகூவலோடு அவரது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினர்.
தமிழகமெங்கும் தோழர் லெனின் பிறந்த நாள் விழா !
இந்து மதவெறி பாசிசத்திற்கு தமிழகத்தில் கல்லறை எழுப்புவோம்! தோற்றுப்போன அரசுக் கட்டமைப்பை தூக்கியெறிந்து மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்! - என்ற அறைகூவலோடு புரட்சிகர அமைப்புகள் லெனின் பிறந்தநாளை நினைவுகூர்ந்தன.
காவிரி உரிமை : கல்லணை முதல் பூம்புகார் வரை மக்கள் அதிகாரம் பிரச்சாரப் பயணம் !
காவிரி உரிமைக்காக மக்களை அணிதிரட்டும் வகையில், மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்திவரும் கல்லணை முதல் பூம்புகார் வரையிலான பிரச்சார நடைபயணக் குழுவினர் இன்று திருவையாறு வந்தடைந்துள்ளனர்.
திருச்சி : மாணவர்களை மதரீதியாக பிளக்காதே ! ஆர்ப்பாட்டம் !
காவிரி உரிமைக்காக போராடிய மாணவர்களை மத ரீதியாக பிரிக்கும் திருச்சி போலீசைக் கண்டித்து ஈ.வே.ரா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
காவிரி : குப்புறத் தள்ளிய டெல்லி ! ஏப். 28 தாம்பரம் பொதுக்கூட்டம் ! அனைவரும் வருக !
காவிரி உரிமையை பறிக்கும் டெல்லியை கண்டித்து மக்கள் அதிகாரம் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் வாருங்கள்! ஏப்ரல் 28, சென்னை - தாம்பரம்.
தமிழினப் பகைவன் மோடியே திரும்பிப் போ ! செய்தி – படங்கள்
#GoBackModi மோடியின் தமிழக வருகையின் போது ஒட்டு மொத்த குரலாய் ஒலித்த “மோடியே திரும்பிப்போ!” என்ற போராட்டத்தின் செய்திகள் மற்றும் படங்கள்...
























