ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் அரசாங்கத்தில் உள்ள நாஜிக்களை களையெடுப்பதாக கூறி உக்ரைன் மீது படையெடுக்க உத்தரவிட்டார். ஆனால், மாஸ்கோவிற்கான முன்னால் அமெரிக்கா தூதர் மைக்கெல் மெக்பால் உட்பட பல மேற்கத்திய நாடுகளை சார்ந்த அதிகாரிகள் ‘உக்ரைனில் எந்த நாஜிக்களும் இல்லை’, மேலும் ‘இது ஒரு வெற்று பிரசாரம்’ எனவும் குற்றம் சாட்டினர்.
ரஷ்ய படையெடுப்பின் பின்னணியில், 2014-க்கு பிந்தைய உக்ரேனிய அரசின் தீவிர வலதுசார்புடைய குழுக்கள் மற்றும் நவ-நாஜி கட்சிகளுடனான பிரச்சினைக்குறிய உறவானது ஒரு தீப்பொறியாக அமைந்துவிட்டது. மேற்கு உலக நாடுகள் இதை திட்டமிட்டு மறைத்தாலும், ரஷ்யா பெரிதுபடுத்தி போருக்கான முதன்மை காரணியாக கூறிக்கொள்கிறது.
உண்மை என்னவெனில், அமெரிக்கா மற்றும் அதன் உக்ரேனிய கூட்டாளிகளின் தூண்டுதலில் 2014-ன் அப்போதைய உக்ரேனிய அரசை கவிழ்த்து, அதன் மூலம் தீவிர வலதுசாரி குழுக்களை அதிகாரம் பெறச் செய்து, கிழக்கு உக்ரேனியப் பகுதிகளில் உள்ள பிரிவினைவாதிகளுடன் மோதச் செய்ததே ஆகும். ஆனால் உக்ரேனில் உள்ள நாஜிக்களை களைப்பதாக கூறி ரஷ்யா நடத்தும் இந்த போரானது, உலகம் முழுவதும் உள்ள போர் வீரர்களையும் பங்கு பெறச் செய்வதுடன், உக்ரேனியர்கள் மற்றும் சர்வதேச நவ-நாஜிக்கள் எதிர்பார்த்த ஆயுதங்கள், இராணுவப் பயிற்சி மற்றும் போர் அனுபவம் உள்ளிட்டவை கிடைப்பதால், இந்த போர் அவர்களை மேலும் வலுப்படுத்தவே செய்யும்.
2014 – பிப்ரவரியில், அமெரிக்க ஆதரவுடன் நடந்த ஆட்சி கவிழ்ப்பிற்கு, உக்ரேனின் நவ-நாஜி கட்சியான ஸ்வொபோடாவும் அதன் நிறுவனர்களான ஒலே ட்யானிபோக் மற்றும் அண்ட்ரி பருபிய்-ம் முக்கிய பங்காற்றியுள்ளனர். ஆட்சி கவிழ்ப்புக்கு பிந்தைய அரசாங்கத்தின் அதிகார பொறுப்பிலிருந்து ஒலே ட்யானிபோக்-ஐ வெளியேற்ற முயற்சித்தபோதும், உதவி செயலர் நூலண்ட் மற்றும் தூதர் பியாட்டும் ஆட்சி கவிழ்ப்பிற்குமுன் தாங்கள் பணியாற்றிய தலைவர்களில் ஒலே ட்யானிபோக்–உம் ஒருவர் என ஒரு கசிந்த தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் கீவ் பகுதியில் அமைதியாக நடந்த போராட்டம் வன்முறையாகமாறி போலீசுத்துறையுடன் மோதத் தொடங்கியது. ஸ்வொபோடா – கட்சியின் உறுப்பினர்களும் ட்மி யாரோஷ்-ன் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட வலதுசாரி போராளிகளும் போலீச்த்துறையின் ஆயுதக் கிடங்கை சூறையாடியதுடன், கைப்பற்றிய ஆயுதங்களுடன் பாதுகாப்பு வளையங்களை உடைத்துக் கொண்டு பாராளுமன்ற வளாகத்தை அடைந்தனர். கடந்த 2014 பிப்ரவரி மாதத்தின் இடையில் நிசாலென்ஸ்நோஸ்தி சதுக்கத்தில் நடந்த போராட்டத்திலிருந்த முக்கிய தலைவர்கள் அனைவரும் ஆயுதங்களுடன் இருந்தனர்.
அமெரிக்காவின் தலையீட்டாலோ அல்லது வலதுசாரி அமைப்புகளின் வன்முறையாலோ, உக்ரேனில் நடைபெற்ற அமைதியான போராட்டம் என்ன மாதிரியான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றும், இந்த அமைதி போராட்டத்தின் விளைவால் உருவான புதிய அரசாங்கத்தின் செயல்பாடுகளில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று நமக்கு தெரியாமலேயே போய்விட்டது.
ஆனால், போராட்டக்குழு தலைவர் ட்மி யாரோஷ் என்பவர் நிசாலென்ஸ்நோஸ்தி சதுக்கத்தின் போராட்ட மேடையேறி, பிரஞ்ச், ஜெர்மன் மற்றும் போலந்து உள்ளிட்ட நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்தல் நடத்தும்படி யனுகோவிச் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒப்புதலுடன் கொண்டுவரப்பட்ட 2014-பிப்ரவரி 21 உடன்படிக்கையை நிராகரித்தார். மாறாக யாரோஷ் மற்றும் மற்ற வலதுசாரிகளும் ஆயுதங்களை கைவிட மறுத்து அரசாங்கத்தை தூக்கியெறிய பாராளுமன்றத்தில் இறுதிக்கட்ட அணிவகுப்பை நடத்தினர்.
1991-லிருந்தே உக்ரேனிய தேர்தல்களானது, டொனெடஷ்கிலிருந்து வந்த ரஷ்ய ஆதரவு அதிபர் யனுகோவிச்-க்கும் மற்றும் மேற்கு உலக நாடுகளின் ஆதரவில் குறிப்பாக ‘ஆரஞ்சு புரட்சி’-க்கு அதாவது 2005-ன் சர்ச்சைகுறிய தேர்தலுக்குபின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட யஸ்சென்கோ–க்கும் இடையில் ஊசலாடியது. உக்ரைனில் முடிவிலா ஊழலானாது ஒவ்வொரு அரசாங்கத்தையும் கரைப்படுத்தியது. மேலும், எந்த தலைவர் அல்லது கட்சி வென்றது என்பது ரஷ்யா அல்லது அதற்கு எதிரான மேற்கு உலக நாடுகள் இசைவுக்கேற்ப இருந்ததால் மக்கள் விரைவில் நம்பிக்கை இழந்தனர்.
2014-ல் ஆட்சி கவிழ்ப்பிற்கு பிறகு நூலண்ட்-ம் அரசுத்துறையும் சேர்ந்து அர்செனிய்-ஐ பிரதமராக தேர்ந்தெடுத்தது. இரண்டு ஆண்டு பதவியில் நீடித்த அவரும் கடும் ஊழல் காரணமாக தன் பதவியை இழந்தார். ஆனால் அதிபராக இருந்த பெய்ரோ போரோஷென்கோ (Peyro poroshenko) 2016 பனாமா பேப்பர்ஸ் மற்றும் 2017 பேரடைஸ் பேப்பர்ஸ்-ல் அவரது தனிவரி விலக்கு திட்டங்களில் நடந்த ஊழல்கள் அம்பலப்பட்டபோதும் 2019 வரை பதவி வகித்தார்.
யட்சென்யுக் பிரதமராக பதவியேற்றதும் ஆட்சி கவிழ்ப்புக்கு உதவியாகயிருந்த ஸ்வொபோடா கட்சியை சார்ந்த ஒலெக்சாண்டர்-க்கு துணை பிரதமர் பதவி உட்பட அக்கட்சிக்கு மூன்று அமைச்சர் பதவிகள் மற்றும் உக்ரைனின் 25 மாகாணங்களில் 3 கவர்னர் பதவிகளும் வழங்கினார். மேலும், ஸ்வொபொடோ-வின் அண்ட்ரி பருபிய், ஐந்து ஆண்டுகள் உக்ரைன் பாராளுமன்றத்தின் சபாநாயகராகவும் பதவி வகித்தார். 2014 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ட்யானிபோக் வெறும் 1.2% வாக்குகளை மட்டுமே பெற்றதோடு, பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
2014-க்கு பின் நடந்த தேர்தலில் உக்ரேனிய வாக்காளர்கள் தீவிர வலதுசாரி அரசியலிருந்து பின்வாங்கிவிட்டனர். ஏனெனில் 2012 தேர்தலில் 10.4%-ஆக இருந்த ஸ்வோபோடாவின் (Svoboda) வாக்கு சதவீதம், 2014 ஆட்சி கவிழ்ப்பிற்கு பிறகு நடந்த தேர்தலில் 4.7%-ஆக குறைந்துவிட்டது. வெளிப்படையாக ரஷ்யாவை எதிர்க்கும் பல கட்சிகள் தோன்றியதாலும், ஸ்வொபோடா கட்சி தனது வாக்குறுதிகளை செயல்படுத்த தவறியதாலும் உள்ளூர் அரசாங்களில் அதிகாரத்திலிருந்த பகுதிகளிலும் தனது ஆதரவை இழந்தது.
2014 ஆட்சி கவிழ்ப்பிற்கு பிறகு வலதுசாரி கும்பல், ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது தாக்ககுதல் நடத்தி அவற்றை பலவீனப்படுத்துவதன் மூலம் புதிய ஒழுங்கை கட்டமைக்க தொடங்கியது. ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை ரஷ்ய ஆதரவு கும்பல் எனவும், அவர்கள் மீது நடந்தப்பட்ட வன்முறையை நாட்டை சுத்தம் செய்ய நடத்தப்படும் போர் என்றும் நியூஸ்வீக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அதன் தலைவர் யாரோஷ் கூறினார். இந்த போரானது மே 2 அன்று Trade Unions Houes-ல் தஞ்சமடைந்த 42 ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பாளர்களை கொடூரமாக கொலை செய்த பிறகே முடிவுக்கு வந்தது.
டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்-ல் நடந்த ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பாளர்களின் போராட்டம் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தியதும், இந்த தீவிர வலதுசாரிகள் முழு அளவிளான ஆயுதம் தாங்கிய போராட்டத்தை கையிலெடுத்தனர். உக்ரேனிய இராணுவம் தனது சொந்த மக்களுடனே போரிடுவதற்கு தயக்கம் காட்டியதால், உக்ரேனிய அரசாங்கம் புதிய தேசிய காவலர் பிரிவுகளை உருவாக்கியது.
வெள்ளை இனவெறியரான ஆண்ட்ரி பிலெட்ஸ்கி (Andriy Biletsky) வலதுசாரி ஆதரவாளர்களைக் கொண்ட அசோவ் படாலியன் எனும் படைப்பரிவை உருவாக்கினார். இதில் நவ-நாஜிக்கள் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தினர். இதன் நோக்கம் யூதர்களையும் மற்ற தாழ்ந்தப்பட்ட இனங்களையும் உக்ரேனிலிருந்து வெளியேற்றுவது என ஆண்ட்ரி பிலெட்ஸ்கி கூறினார். சுயாட்சி குடியரசாக அறிவித்துக் கொண்ட பகுதிகளை தாக்கியதிலும், பிரிவினைவாதிகள் வசம் இருந்த நகரத்தையும் மீட்டெடுத்ததிலும் உக்ரேனிய அரசாங்கத்தை வழிநடத்தியது இந்த அசோவ் படாலியன்.
2015-ல் போடப்பட்ட ஒப்பந்ததின் மூலம் இந்த மோசமான சண்டை முடிவுக்கு வந்ததுடன், பிரிந்த குடியரசுகளுக்கும் ஒரு பாதுகாப்பு வளையமாக அமைந்தது. இருப்பினும் சிறிய அளவிலான உள்நாட்டுப் போர் தொடரந்தது. 2014 முதல் நடந்து வந்த இந்த சண்டையில் கிட்டத்தட்ட 14,000 பேர் உயிரிழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. காங்கிராஸை சார்ந்த ரோ கண்ணாவும் (Ro Kanna) காங்கிராஸின் முற்போக்கு உறுப்பினர்களும் அசோவ் படாலியன்-க்கு அளிக்கும் இராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்த பல ஆண்டுகள் போராடினர்.
இறுதியாக 2018-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பாதுகாப்பு ஒதுக்கீடு மசோதா மூலமே அவர்களால் தடுக்க முடிந்தது. இருப்பினும் அசோவ் படாலியன் இந்த தடைகளையும் மீறி ஆயுதங்களையும், ஆயுதப்பயிற்சிகளையும் அமெரிக்காவிடமிருந்து பெற்றுவந்ததாக கூறப்படுகிறது.
அசோவ் படாலியன் வலதுசாரி வன்முறை தீவிரவாத நடவடிக்கைகளில் அபாயகரமானதாக வளர்ந்துள்ளது என 2019-ல் உலகெங்கும் உள்ள பயங்கரவாத மற்றும் தீவிரவாத குழுக்களை கண்காணிக்கும் அமைப்பான சௌஃபான் சென்டர் தெரிவித்துள்ளது. மேலும், இதன் கட்டுபாட்டில் உள்ள உக்ரேனிய பகுதிகளை வெள்ளை மேலாதிக்கத்திற்கான முதன்மை பகுதிகளாக மாற்றுவதையே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அசோவ் படாலியனின் பயங்கரவாத தொடர்புகள் எவ்வாறு உலகம் முழுவம் போராளிகளை தெர்ந்தெடுக்கிறது மற்றும் அதன் வெள்ளை மேலாதிக்க கருத்துக்கள் எவ்வாறு பரப்பப்படுகிறது என்பதை சௌஃபான் சென்டர் விளக்கியுள்ளது. வெளிநாட்டு போராளிகள் அசோவ் படாலியன்-ல் தாங்கள் பயிற்சிகளை முடித்துக்கொண்டு அவற்றை பரிசோதித்து பார்பதற்கும், புதிய போராளிகளை உருவாக்கிக் கொள்வதற்க்கும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப செல்கின்றனர்.
2019-ல் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்-ல் (Christchurch) உள்ள மசூதில் 51 வழிபாட்டாளர்களை கொலை செய்த ப்ரெண்டன் டாரன்ட் (Brenton Tarrant|) உட்பட பல வெளிநாட்டு தீவீரவாத வன்முறையார்கள் அசோவ் படாலியன் உடன் தொடர்பில் உள்ளனர். 2017-ம் ஆண்டு சார்லோட்டஸ்வில்லே-ல் (Charlottesville) நடந்த ‘உரிமையை ஒன்றிணைக்கவும்’ (Unite the Right) என்ற பேரணியின் எதிர்-போராட்டக்காரர்களை தாக்கிய குற்றவாளிகளில் பலர் ரைஸ் அபோவ் இயக்கம் (U.S Rise Above Movement) என்ற அமைப்பை சார்ந்தவர்களே. மற்ற அசோவ் படாலியன் உறுப்பினர்கள் ஆஸ்திரேலியா, ஜெர்மன், இத்தாலி, நார்வே, ஸ்வீடன், ஐரோப்பிய ஒன்றியம் என இன்னும் சில நாடுகளுக்கு திரும்ப சென்றுவிட்டனர்.
ஸ்வொபோடாவின் வெற்றி தேர்தலில் மறுக்கப்பட்டபோதிலும் நவ-நாஜிக்கள் மற்றும் தீவிர தேசியவாத குழுக்கள் அசோவ் படாலியன் உடன் தங்களது உறவை மேம்படுத்திக் கொண்டு உக்ரேனிய தெருக்களிலும், உக்ரேனிய தேசியவாதத்தின் மையப் பகுதியான உள்ளூர் அரசியலிலும் தங்கள் அதிகாரத்தை தக்கவைத்துள்ளன.
2019 அதிபர் தேர்தலில் செலன்ஸ்கி வெற்றிபெற்றதும் டான்பாஸ்-ஐ சேர்ந்த பிரிவினைவாத தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மின்ஸ்க் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தினால் பதவி நீக்கம் அல்லது கொலை செய்யப்படுவார் என்று தீவிரவாத வலதுசாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். அந்த 2019 தேர்தலில் செலன்ஸ்கி ஒரு அமைதிக்கான வேட்பாளராகவே போட்டியிட்டார். ஆனால், வலதுசாரிகளின் அச்சுறுத்தலினால் டான்பாஸ்-ஐ சேர்ந்த தலைவர்களை பிரிவினைவாதிகள் என கூறிபேச கூட மறுத்துவிட்டார்.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் விற்பதற்கு அதிபர் ஒபாமா விதித்திருந்த தடையை ட்ரம்ப் தலமையிலான அமெரிக்க அரசாங்கம் திரும்பப்பெற்றது. மேலும், அதிபர் செலன்ஸ்கி உக்ரேனிய நகரங்களான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய நகரங்களை மீட்டெடுக்க தேவையான புதிய தாக்குதலுக்கு உக்ரேனிய படைகளைக் தயார்படுத்தினார். அவரது ஆக்ரோசமான சொல்லாடல் டான்பாஸ் மற்றும் ரஷ்யாவில் புதிய அச்சுறுத்தல்களை ஏற்ப்படுத்தியது.
உக்ரேனின் உள்நாட்டுப் போர் அந்த அரசாங்கத்தின் நவதாராளவாத பொருளாதாராக் கொள்கைகளுடன் சேர்ந்து தீவிரவாத வலதுசாரிகளுக்கு ஏற்ற நிலமாக வடிவமைத்து கொடுத்துள்ளது. ஆட்சிக் கவி்ழ்ப்பிற்கு பிந்தைய உக்ரேனிய அரசாங்கம், 1990-ல் கிழக்கு ஐரோப்பா முழுவதும் திணிக்கப்பட்ட நவதாராளவாத ‘அதிர்ச்சி சிகிச்சை’யை அப்படியே அமல்படுத்தியது. IMF–யிடமிருந்து 40 பில்லியன் டாலரை கடனாக பெற்றுக்கொண்டு அதனுடனான ஒப்பந்தப்படி, அரசுக்கு சொந்தமான 342 நிறுவனங்களை தனியார்மயமாக்கியதுடன் சம்பளம் மற்றும் ஓய்வூதியவெட்டுடன் பொதுத்துறையில் இருந்த வேலைவாய்ப்பை 20% குறைத்தது, மேலும் மருத்துவம் தனியார்மயமாக்கப்பட்டதுடன், பொதுக்கல்வியில் முதலீடு செய்யாமல் அதன் 60% பல்கலைக் கழகங்களை மூடியுள்ளது.
உக்ரேனின் ஊழலுடன் இணைசேர்ந்த இந்த நவதாராளவாதக் கொள்கைகள், அரசு சொத்துகளை இலாபகரமாக கொள்ளையடிப்பதற்கும், மக்களின் வாழ்க்கைதரம் வீழ்ச்சியடைவதற்கும், சிக்கன நடவடிக்கைக்கும் வழிவகுத்தது. ஆட்சிக் கவி்ழ்ப்பிற்கு பிந்தைய அரசாங்கம் போலந்தை அதன் முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டது. ஆனால் உண்மையில் அதன் நிலை 1990-லிருந்த ரஷ்யாவில் எலிட்சின் ஆட்சியை ஒத்திருந்தது. 2012 மற்றும் 2016-க்கு இடைப்பட்ட காலத்தில் உக்ரைனின் வளர்ச்சி 25% வரை குறைந்து. இன்று வரை ஐரோப்பியாவிலேயே ஏழ்மையான நாடாக உள்ளது.
மற்ற இடங்களைப் போலவே, நவ தாராளவாதத்தின் தோல்விகள் வலதுசாரி தீவிரவாதம் மற்றும் இனவாதத்திற்கு எரிபொருளாக அமைந்துள்ளது. மேலும் ரஷ்யாவுடனான இப்போரால் உலகில் உள்ள மற்ற இளைஞர்களுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ள இராணுவப் பயிற்சி மற்றும் போர் அனுபவம் ஆகியவற்றை தங்கள் சொந்தநாடுகளை அச்சுறுத்த எடுத்துச் செல்கின்றனர்.
அசோவ் படாலியன் சர்வதேச அளவில் செயல்படும் யுக்தியை அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ்.வுடன் (ISIS) ஒப்பிட்டுள்ளது சௌஃபான் சென்டர். சிரியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் நேடோ கூட்டணியுடன் சேர்ந்து அல்கொய்தா-வுடன் தொடர்புடைய குழுக்கள் ஏற்படுத்திய அதே அச்சுறுத்தலை அசோவ் படாலியன் உக்ரேனில் ஏற்படுத்துகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ (ISIS) உருவாக்கி, அது தங்களின் மேற்கு ஆதரவு நாடுகளுக்கு எதிராக தீர்க்கமாக திரும்பியதும் அந்த கோழைகள் விரைவாக வீடு திரும்பினர்.
இப்போது ரஷ்ய ஊடுறுவலுக்கு எதிராக உக்ரேனிய மக்கள் ஒன்றுபட்டு நிற்கின்றனர். ஆனால் அமெரிக்கா, உக்ரேனிய நவ-நாஜி பினாமி படைகளுடன் அதிநவீன ஆயுதங்களில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளது. இந்த கூட்டணி, இதைவிட மோசமான வன்முறை மற்றும் அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதில் நாம் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை.
“சிறீரங்கநாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ?” என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். தமிழனையும் தமிழையும் தீண்டாமை எனும் இழிவை சுமக்க வைக்கும் பார்ப்பனிய – சனாதனம் உச்சிமீது வைத்து பாதுகாக்கப்படுவது இந்த இரண்டு கோயில்களில்தான் என்ற ஆத்திரத்தின் – சுயமரியாதை உணர்ச்சியின் வெளிப்பாடு அது.
சென்ற மாதம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஜெயசீலா என்ற சிவபக்தர் சிற்றம்பலத்தில் ஏறி நடராஜரை வழிபட முயன்றபோது, அங்கிருந்த தீட்சித பார்ப்பனர்கள் கும்பலாகச் சூழந்து கொண்டு அவரை அடிக்க முயன்றதோடு, “பறைச்சி” என்று சாதியைச் சொல்லி இழிவுப்படுத்தியும் உள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து புரட்சிகர அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் தீட்சிதர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர். தி.மு.க. அரசு சாதி சொல்லி திட்டியதற்காக தீட்சிதர்கள் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து தனது கடமையை முடித்துக் கொண்டது. ஆனால், தில்லை சிற்றம்பல மேடை ஏறி வழிபடுவதற்கும் அங்கு தமிழ் பாடுவதற்கும் போராடுகின்ற ஜனநாயக சக்திகளைத் தடுப்பது மட்டுமின்றி, கைது செய்தும் வருகிறது.
அரியலூர் மாணவி லாவண்யா விசயத்தில், பொய்யாக செய்தியைப் பரப்பி இந்துமதவெறியூட்ட போராடிய பா.ஜ.க. உள்ளிட்ட சங்கப் பரிவார கும்பல்கள், தில்லையில் தமிழில்பாடச் சென்ற சிவபக்தருக்கு நிகழ்ந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. அவர்களின் உயிர்நாடியே தமிழ் விரோத, பார்ப்பன சாதி மேலாதிக்க மனோபவம்தான் என்பதை இச்சம்பவமும் அம்பலப்படுத்தியுள்ளது.
புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் போராட்டத்தால் நிலைநாட்டப்பட்ட, சிற்றம்பல மேடையிலேறி தமிழில் பாடும் உரிமையை தடுப்பதற்காக தீட்சிதர்கள் சமயம் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்தச் சூழலில், கொரோனா ஊரடங்கைக் காரணம் காட்டி பக்தர்கள் சிற்றம்பல மேடை ஏறுவதற்கு தடைவிதித்தது தீட்சிதர் கும்பல். இதையே சாக்காக வைத்து, தனது பார்ப்பன மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தும் வகையில், தீட்சிதர்களைத் தவிர வேறு யாரும் சிற்றம்பல மேடை ஏறி வழிபடக்கூடாது என ஒரு விதியை வகுத்து தொடர்ந்து செயல்படுத்தியுள்ளனர்.
தற்போது ஜெயசீலாவின் போராட்டம் காரணமாக அனைத்து சாதியினரையும் திருச்சிற்றம்பல மேடை ஏற அனுமதிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. தீட்சிதப் பார்ப்பனர்கள், இது ‘அரசியல்வாதிகளின் சதி’ என்று மறைமுகமாக புரட்சிகர அமைப்புகள்மீது பழி சுமத்துகின்றனர்.
பாபர் மசூதி ராமனுக்கு சொந்தமாம், தில்லைக் கோயில் தீட்சிதர்க்கு சொந்தமாம்!
40 ஏக்கர் பரப்பளவில் திசைக்கு ஒருகோபுரமாக நான்கு கோபுரங்களும் ஐந்து சபைகளையும்கொண்டது சிதம்பரம் நடராஜர் கோயில். இக்கோயில், சுமார் 2,700 ஏக்கர் நிலம்; பலகோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் என பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டதாகும். அனைத்தையும் மொத்தமாக திருடி வைத்துள்ளது இந்த தீட்சிதப் பார்ப்பன கும்பல்.
கி.பி. பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இக்கோயில் தமிழர் – திராவிடக் கட்டிடக் கலையிலானது. சோழர், பல்லவர், விஜயநகரப் பேரரசுகளால் புனரமைக்கப்பட்டு வந்ததையும் மன்னர்களின் மானியங்களை பெற்றதையும் இக்கோயில் வரலாற்றில் அறியமுடியும். இவ்வாறு மன்னர்களால் தமிழ் மக்களிடம் இருந்து கட்டாயமாக வரிவசூல் செய்யப்பட்ட பணத்தை வைத்துக் கட்டப்பட்ட, புனரமைக்கப்பட்ட இந்த தில்லைக்கோயில் தீட்சிதப் பார்ப்பனர்களின் சொத்தாக மாற்றப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டு புரட்சிகர அமைப்புகளின் சார்பில் நடத்தப்பட்ட தில்லைக் கோயில் மீட்பு பொதுக்கூட்டம்.
தில்லையில் தமிழ் பாடும் உரிமைக்காக புரட்சிகர அமைப்புகள், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தலைமையில் பல போராட்டங்களை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, தில்லை நடராசர் கோயிலை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்த அமைப்புகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் 2014-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு ஆதாரம் தீட்சிதர்கள் சொல்லிய கதை.
முன்னொரு காலத்தில், கைலாயத்திலிருந்து 3,000 தீட்சிதர்கள் சிதம்பரத்திற்கு வந்ததார்களாம். வந்து எண்ணிப்பார்க்கும்போது, எண்ணிக்கையில் ஒருவர் மட்டும் காணோமாம். தீட்சிதர்கள் எல்லோரும் குழம்பி நிற்கையில், அந்த சிவபெருமானே “மீதம் உள்ள ஒருவர் நான்தான்” என்று கூறினாராம் – இந்த புருடா கதையை ஏற்று நடராஜர் கோயில் தீட்சிதர்களின் சொத்துதான் என அங்கீகரித்ததுள்ளது உச்சநீதிமன்றம்.
தேவாரம், திருவாசகம் போன்ற புகழ் பெற்ற சைவ இலக்கியங்களில் “தீட்சிதர்” என்ற ஒரு சொல்கூட இல்லை; இக்கோயிலை தீட்சிதர்களோ அவரது வாரிசுகளோ கோயிலை கட்டியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. எனினும், தீட்சிதர்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் தமிழரின் சொத்தான தில்லைகோயிலை தீட்சிதர்களுக்கு பட்டா போட்டுக் கொடுத்துள்ளது உச்சிக்குடுமி மன்றம். பாபர் மசூதியை ராமனுக்கு தாரை வார்த்தது போல.
திருட்டு தீட்சிதன் புகழ் போற்றி போற்றி !
“நானும் தீட்சிதன்” என்று சிவன் கூறியதிலிருந்து, பட்டாச்சார்யர்களுக்கும் சிவாச்சார்யர்களுக்கும் இல்லாத பெருமை தங்களுக்கு உண்டு என்று தில்லை தீட்சிதர்கள் கூறிக்கொள்கின்றனர். அதனாலேயே, எல்லாவித அக்கிரமங்களையும் பகிரங்கமாகவும் துணிச்சலாகவும் செய்துவருகிறார்கள் தீட்சிதர்கள்.
கடந்த ஆண்டு கோயில் தரிசனத்துக்கு வந்த ஒரு வன்னியர் சாதியைச் சேர்ந்த பெண்ணை அடித்தான் ஒரு தீட்சிதன். கடந்த மாதம் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஜெயசீலாவையும் அடிக்க முனைந்துள்ளது தீட்சிதர் கும்பல். அவர்களைப் பொருத்தவரை சூத்திர, பஞ்சமர்கள் தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும், உரிமை என்று கேட்டால் அடிதான் விழும்.
கோயிலினுள்ளே கறி தின்னுவது, பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, பக்தர்களை தாக்குவது போன்ற செயல்கள் எல்லாம் தில்லை கோயில் தீட்சிதர்களுக்கு சர்வ சாதாரணம். சைக்கிள் திருடி போலிசிடம் பிடிபட்ட தீட்சிதர்; தட்சணையை பிரிப்பதில் கொல்லப்பட்ட தீட்சிதர்; கே.ஆடூர் செல்வராஜை கொன்ற தீட்சிதர்கள், நிலத்தரகர் ராயரை கொன்ற தீட்சிதர்கள் என இருக்கும் 400 பேரும் கிரிமினல்கள்தான். அதனால்தான் 2000-ஆம் ஆண்டில் சிவனடியார் ஆறுமுகசாமியைத் தாக்கிய தீட்சிதர்கள்மீது வழக்கு பதிவு செய்யவே 55 நாட்கள் ஆனது. அவ்வழக்கில் அத்தனை தீட்சிதர்களும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். ஜெயசீலா வழக்கிலும் இந்த தீட்சிதப் பார்ப்பனர்கள் நிச்சயம் விடுதலை ஆவார்கள்.
சிவனடியாரை காப்பாற்றிய சிவப்பு
தில்லையில் தமிழ்பாடும் உரிமை என்பது சாதாரணமாக வந்துவிடவில்லை. ஆறுமுகசாமி என்ற சிவனடியார் முதன்முதலில் சிற்றம்பலத்தில் தமிழ்பாட முயற்சிக்கிறார். அவர் சிற்றம்பல மேடை ஏறக்கூடாது என்றும் அவர் கோயிலுக்குள் வந்தால் கோயில் நகைகள் திருடு போக வாய்ப்புள்ளது என்றும் தீட்சிதர்கள் சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கிட்டார்கள். தீட்சிதர்களின் வாதத்தை ஏற்று அவ்வாறே ஆறுமுகசாமி கோயிலில் நுழைய தடை விதித்தார் நீதிமன்ற நடுவர். இதற்கெதிராக உயர் நீதிமன்றத்தில் புரட்சிகர அமைப்புகள் மற்றும் அரசின் சார்பாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு 2008-ஆம் ஆண்டு சிற்றம்பலத்தில் தமிழ்பாடும் உரிமையை சென்னை உயர்நீதிமன்றம் மூலம் பெற்றோம்.
மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் சிவனடியார் ஆறுமுகசாமிக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் தில்லை சிற்றம்பலத்தில் தமிழ் பாடும் உரிமையை பெற்றுத்தந்தது.
தீர்ப்புக்கு பின்னர் மார்ச் 2, 2008-ஆம் ஆண்டு, சிவனடியார் ஆறுமுக சாமியை யானை மீதேற்றி கோயிலுக்கு அழைந்து வந்தனர் புரட்சிகர, முற்போக்கு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். திருச்சிற்றம்பல மேடையில் ஆறுமுகசாமியை ஏறவிடாமல் தடுப்பதற்காக அம்பலத்து மேடையில் எண்ணெய் ஊற்றியதோடு, தங்கள் உடலிலும் எண்ணை தடவிக்கொண்டு கோயிலுக்குள் நுழைந்தவர்களின் மீது பாயக் காத்திருந்தார்கள் தீட்சிதர்கள்.
கோயிலுக்கு வெளியே நூற்றுக்கணக்கான தோழர்கள், போலீசு படை. எதற்கும் அசராமல் தீட்சிதப் பார்ப்பனர்கள் திருச்சிற்றம்பலத்தில் ஏறிய சிவனடியார் ஆறுமுகசாமியை தாக்கினர்; உடன் வந்த போலீசு உயரதிகாரிகளையும் தாக்கினர்.
ம.க.இ.க. தோழர்கள் பலரும் தாக்கப்பட்டனர். சமீபத்தில் நம்மைவிட்டுப் பிரிந்த சீர்காழி தோழர் அம்பிகாபதியின் மண்டை உடைந்து சிற்றம்பலத்தில் ரத்தம் தெரித்தது. அந்த ரத்தச்சிவப்பே தமிழை பாட வைத்தது.
ஆறுமுகசாமியை சிற்றம்பலத்தில் ஏற்றாமல் கோயிலைவிட்டு நகரமாட்டோம் என்று உறுதியாக தோழர்களும் மக்களும் அறிவிக்க, வேறுவழியின்றி தீட்சித குடுமிகளை உதைத்து, வெளியே இழுத்துப்போட்டு ஆறுமுகசாமியை சிற்றம்பல மேடையில் தமிழ் பாட வைத்தது போலீசு. “தில்லைவாழ் அந்தணர்க்கு அடியார்க்கு அடியேன்” என்ற தமிழ்ப்பாடலைப் பாடினார் சிவனடியார் ஆறுமுகசாமி. அப்போது “நீசபாஷை”யான தமிழ், சிவபெருமானின் காதுகளில் கேட்காமல் இருக்க ஊளையிட்டனர் தீட்சிதர்கள்.
இதே சிவனடியார் ஆறுமுகசாமி 2000-ஆம் ஆண்டு சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடச்சென்றபோது ரவுடி தீட்சிதப் பார்ப்பனர்களால் கை கால்கள் உடைக்கப்பட்டு கோயில் வாசலில் வீசியெறியப்பட்டார். அப்போது தில்லை சிற்றம்பல மேடையில் தமிழில் பாடும் உரிமையை நிலைநாட்ட போராட்ட களம் புகுந்தது நக்சல்பாரி கம்யூனிஸ்டு அமைப்புதான்.
லட்சக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள், வெளியீடுகள் மூலம் இப்பிரச்சினையை மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள் மூலம் தமிழில் பாடும் உரிமையை நிலைநாட்டியது புரட்சிகர அமைப்புகள்தான். திராவிடர் கழகம், தி.மு.க, வி.சி.க, பா.ம.க. உள்ளிட்ட பல கட்சிகள்/அமைப்புகள் அதற்கு துணையாக நின்றன.
சிவனை நம்பிச்சென்ற நந்தனாரும் வள்ளலாரும் பார்ப்பன கும்பலால் எரித்துக் கொல்லப்பட்டனர் என்பதுதான் வரலாறு. அவர்களிடமிருந்து தப்பித்த ஒரே நபர் ஆறுமுகசாமி மட்டும்தான். ஏனெனில், சிவனடியாரை சிவன் காப்பாற்றவில்லை, சிவப்புதான் காப்பாற்றியது.
இவ்வாறு போராடிப்பெற்ற தமிழ்பாடும் உரிமையை நிலைநாட்ட தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் மடங்களும், சிவனடியார்களும் அன்று வரவில்லை. வேறு வழியின்றி நாத்திகர்களாகிய கம்யூனிஸ்டுகளே திருச்சிற்றம்பலத்தில் தமிழ்பாடும் உரிமையை நிலை நாட்டுவதற்காக திருவாசகம் பாட வேண்டியதாக இருந்தது.
தில்லைக் கோயிலை திருமண மண்டம் போல வாடகைக்கு விட்டு தீட்சிதர்கள் அட்டூழியம்.
போராடிப் பெற்ற உரிமையை நிலைநாட்டிக் காப்பாற்றிக் கொள்ளும் சுயமரியாதை உணர்ச்சி ஆத்திகர்களிடமே அற்றுபோன ஒரே காரணத்தால்தான் இன்றுவரை தில்லையில் கொட்டமடிக்கிறது பார்ப்பன ஆதிக்கம்.
அரசாணையும் உச்சி குடுமி மன்றமும்
தில்லைக் கோயிலை தீட்சித கும்பலிடமிருந்து மீட்டு இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவரவேண்டும் என்று புரட்சிகர அமைப்புகளும் ஜனநாயக சக்திகளும் தொடர் போராட்டம் நடத்தினார்கள். விளைவாக 2009-ஆம் ஆண்டு, பிப்ரவரி 2-ஆம் தேதி கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு, அரசாணை வாயிலாக இந்து அறநிலையத்துறையின் கீழ் தில்லை சிதம்பரம் நடராஜன் கோயிலைக் கொண்டுவந்தது.
இதற்கு முன்னர், தில்லைக்கோயிலில் இரு தீட்சிதர்கள், சக தீட்சிதர்கள் மீது கோயில் நகைக்களவு உள்ளிட்ட புகார்கள் தெரிவித்ததை அடுத்து, 1982-ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சியில் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைப்பது என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து தீட்சிதர்கள் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தில்லைக் கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட பின்னர், கோயில் குளம் தூர்வாரப்பட்டது. கழிவறைகள் சுத்தம் செய்யப்பட்டன. அப்போது அந்தக் கழிவுகளில் பிராந்தி, பீர் பாட்டில்கள், ஆணுறைகள்தான் மிகுந்திருந்தன. இவை தில்லை தீட்சிதர்கள் ஆகம விதிகளை சீந்தும் யோக்கியதையை உலகுக்கே உணர்த்தின.
பக்தர்களின் காணிக்கையை தீட்சிதர்கள் கொள்ளையடிக்கும் நிலைமை மாற்றப்பட்டு கோயிலில் உண்டியல்கள் வைக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளில் உண்டியல் வருமானம் மட்டுமே ஒன்றரை கோடி ரூபாயைத்தாண்டியது. இது தவிர தங்கம், வெள்ளி, வைர நகைகளும் குவிந்தன. அரசின் கட்டுப்பாட்டில் வருவதற்கு முன்னர் உண்டியல் ஆண்டு வருமானம் முப்பதாயிரம் ரூபாய் என்றும் கையிருப்பு ரூ.199.00 என்று கணக்கு காட்டினார்கள் தீட்சிதர்கள். எனில், இத்தனை ஆண்டுகளில் இந்த திருட்டு தீட்சிதர்கள் அடித்த கொள்ளை எத்தனை நூறு கோடியை தாண்டுமோ?
இந்து அறநிலையத்துறையின் கீழ் தில்லை சிதம்பரம் நடராஜன் கோயில் கொண்டு வரப்பட்ட அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தீட்சதர்கள் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில், 2009 பிப்ரவரி 2-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி தீர்ப்பு வழங்கினார்.
“நீதிமன்றத்தின் கடந்தகால பல உத்தரவுகள் தில்லை நடராஜர் கோயில் ‘பொது’ சொத்து (Public Temple) என்றுதான் வந்திருக்கின்றதே தவிர, கோயில் தீட்சதர்களுக்கு சொந்தமானது என எங்கும் சொல்லவில்லை. 1885-லேயே நீதியரசர்கள் முத்துசாமி ஐயர், ஷேப்பர்ட் அடங்கிய அமர்வு “சிதம்பரம் கோயில் தீட்சதர்களின் சொத்தல்ல” என தீர்ப்பு கொடுத்திருப்பதை சுட்டிக்காட்டி, “சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகிக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல் அதிகாரியை நியமித்த தமிழக அரசின் உத்தரவு சரிதான்” என்று கூறி, தீட்சதர்களின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், அப்போது தீட்சிதன் ஒருவன் கோயில் சொத்தை முறைகேடாக விற்றதும் விசாரணையில் வெளிவந்தது.
சென்னை உயர்நீதிமன்ற ஒரு நபர் நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பார்ப்பன சகுனி சுப்பிரமணிய சுவாமியும் தீட்சதர்களும் தொடர்ந்த மேல்முறையீடு செய்தனர். இரு நீதிபதிகளைக் கொண்ட உயர்நீதிமன்றத்தின் அந்த அமர்வும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி அளித்தது.
அந்த தீர்ப்பு, “தீட்சதர்களோ, அவர்களது மூதாதையர்களோ சிதம்பரம் கோயிலை கட்டவில்லை. அதனால், கோயிலின் மீது தீட்சதர்களுக்கு உரிமைக் கொண்டாட முகாந்திரம் இல்லை” எனக் கூறி, “கோயில் சொத்துக்களை பாதுகாக்கவும், நிர்வகிக்கவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கோயிலுக்கு செயல் அதிகாரியை நியமித்த உத்தரவு செல்லும்” என்றது.
இந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தீட்சதர்களும், சுப்பிரமணியன் சுவாமியும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த சமயம் தமிழ்நாட்டிலும் தி.மு.க. ஆட்சி மாறி, ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றிருந்தது.
ஜெயலலிதாவை சந்தித்த தீட்சிதர்கள் தங்களுக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவர்கள் கோரியபடியே, அவ்வழக்கில் தமிழ்நாட்டு அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர்களைக்கூட நியமிக்கவில்லை. அதற்கு எதிராக புரட்சிகர, ஜனநாயக அமைப்புக்கள் போராட்டம் நடத்தின.
29.11.2014-ஆம் தேதி சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில், “உச்சநீதிமன்றம் சென்றுள்ள தீட்சிதர்களுக்கு எதிராக, மூத்த வழக்கறிஞரை நியமித்து கோயில் சொத்துக்களை காப்பாற்ற வேண்டும்” என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையே அன்றைய சூழலை விளக்கப் போதுமானது.
சிற்றம்பல மேடையேறி வழிபாடு செய்ய முயன்ற ஜெயசீலா என்ற பெண்மணியை தாக்குவதற்கு பாயும் தீட்சிதர்கள்.
பி.எஸ்.சவுகான், எஸ்.ஏ.பாப்டே அடங்கிய உச்சநிதிமன்ற அமர்வு, “தில்லை கோயிலை தமிழ்நாட்டு அரசின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வந்தது சரி அல்ல” என்று கூறி தீட்சிதர்களிடமே கோயிலை ஒப்படைத்தது. “தில்லைக்கோயில் பொதுச் சொத்துதான் என்றும் தீட்சிதர்க்கு சொந்தமல்ல” என்ற சென்னை நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு அடிப்படையான ஆதாரங்கள், 1885 தீர்ப்புக்கான ஆதாரங்கள் என எதையுமே தமிழக அரசின் வழக்குரைஞர்கள் அப்போது சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்ரமணியசாமி, அதிகார வர்க்கம், தீட்சிதர்கள், நீதித்துறை என பார்ப்பன அதிகார பீடம் மொத்தமும் சேர்ந்து சதித்தனம் புரிந்தனர். ஆகையால், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருந்த கோயில் மீண்டும் தீட்சித கிரிமினல்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பீனல் கோடு பூணுல் கோடை கட்டுப்படுத்தாது!
தீட்சிதப் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் கோயில் வந்த பின்னர், கடந்த 11-9-2018 அன்று நடைபெற்ற சிவகாசி பட்டாசு தொழிலதிபர் குடும்பத்தின் ஆடம்பர திருமணத்திற்காக கையூட்டாக பல கோடி பெற்று கோயிலை திருமண மண்டபமாக மாற்றினார்கள் தீட்சிதர்கள். பொற்கூரைமீது ஏறி கோவிலில் திருட்டுத்தனமாக வெளியூர் ஆட்களை தங்கவைத்து ஆயிரங்கால் மண்டபம் முழுவதும் ஐந்து நட்சத்திர விடுதி போல ஆடம்பர ஏற்பாடு செய்தனர். திருமண வீட்டார் தந்த பேட்ஜ் அணிந்தவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்கு வந்த பிற பக்தர்கள் தடுக்கப்பட்டனர்.
இப்பிரச்சினை வெளியே வந்த உடன் பட்டு தீட்சிதன் என்பவனை மட்டும் சஸ்பெண்ட் செய்து 1001 ரூபாய் அபராதம் விதித்தனர். இது ஒரு தண்டனையா, எந்த சட்டப் புத்தகத்தில் இது இருக்கின்றது எனக் கேள்வி எழலாம். குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் பீனல் கோடு, பூணுல் கோடை கட்டுப்படுத்தாது என்பதே அதன் பொருள். அதனால்தான் இன்று ஜெயசீலா போன்ற பக்தர்களைத் தாக்க தீட்சிதர்களுக்கு துணிச்சல் வருகிறது.
இத்தகைய பூணுல் சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்துதான் இன்று வழிபாட்டு உரிமைக்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். தமிழ்பாடும் உரிமைக்கான போராட்டமும் அக்கோயிலை அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரவேண்டும் என்ற போராட்டமும் வேறு வேறல்ல.
விலகிச்செல்ல நமக்கு உரிமை ஏதும் இல்லை !
தீட்சிதர் ஆதிக்கத்தில் இருந்து தில்லையை மீட்க, தமிழ்பாடும் உரிமையை மீட்டெடுக்க, தில்லை சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசின் கட்டுப்பாட்டில் கீழ் கொண்டு வருவதுதான் ஒரே வழி. இதற்கு தமிழ்நாடு அரசு சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும். அன்று தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த நந்தன் நுழைந்தான் என்பதற்காக ‘தீட்டு’ என்று கூறி அடைக்கப்பட்ட தெற்கு வாயில் இப்போதே சல்லி சல்லியாக நம்மால் நொறுக்கப்பட வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. காவி பாசிஸ்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள். நாட்டில் மீண்டும் நவீன வடிவ பார்ப்பன கொடுங்கோன்மையை – இந்துராஷ்டிரத்தை – அதிகாரப்பூர்வமாக நிறுவும் திசையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். எனவே தில்லையில் தீட்சிதர்களின் ஆதிக்கத்தை தகர்ப்பது எளிதானதல்ல.
1992-இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது “இந்து என்று சொல்லாதே, பார்ப்பான் பின்னால் செல்லாதே” என்று திருச்சி சிறீரங்கநாதனின் கோயில் கருவறையில் பெரியார் அம்பேத்கரின் படங்களோடு நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த இரங்க நாதனை துயிலெழுப்பிய மரபுக்கு சொந்தக்காரர்கள் நாம்.
இன்று, இந்தியாவின் பிற மாநிலங்களில் ஹிஜாபுக்கு தடை, பாங்கு ஓதுவதற்கு தடை என்று காவி பாசிஸ்டுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுப்பதற்கான விசயமாகவும் தில்லை தீட்சிதர் ஆதிக்கத்தை முறியடிப்பதைப் பார்க்க வேண்டும். தில்லைக்கோயிலை தமிழனுக்கு சொந்தமாக்குவது என்பது சனாதன – பார்ப்பனிய எதிர்ப்புப் போர்க்களத்தின் ஒரு படி.
தமிழ்நாட்டுக் களத்தில் நின்று நாம் அடிக்கும் அடி பார்ப்பனியத்தின் உயிர்நாடியில் விழவேண்டும். பார்ப்பன – சனாதக்கூட்டமா, தமிழனா? என்று ஒரு கை பார்க்க வேண்டும்! தன்மான உணர்ச்சி மிக்க ஒவ்வொரு தமிழனும் களம் காண வேண்டும். இதற்காக மக்களைத் தட்டி எழுப்புகிற மாபெரும் பணியை புரட்சிகர-ஜனநாய சக்திகளாகிய கம்யூனிச, திராவிட, தமிழ்த்தேசிய அமைப்புகளிடம் வரலாறு ஒப்படைத்துள்ளது.
கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. ஆனால், இலங்கையானது கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து மீளமுடியாத வகையில் 1970–ல் அங்கு ஏற்பட்ட பஞ்சத்தைவிட, மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
உயிராதாரமான அத்தியாவசியப் பொருட்களான சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், உணவுப் பொருட்கள், மருந்துகள் போன்றவைகளின் விலையானது விண்ணை முட்டுமளவிற்கு அதிகரித்துள்ளது. ஒரு முட்டை விலை ரூ.35 ஆகவும், ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.250 ஆகவும், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.250 ஆகவும் உயர்ந்துள்ளது.
விலைவாசி உயர்வு ஒருபுறமிருக்க, பொருட்கள் தட்டுப்பாடு என்பது பாரிய அளவில் நீடிக்கிறது. இதனால் உழைக்கும் மக்கள் வாழவழியின்றி தவிக்கின்றனர். பிள்ளைகளுக்கு உணவளிக்க இயலாமல் போவதாலும், பட்டினியாலும் பலரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் அதிக நேரம் பட்டினியால் காத்திருந்து மயங்கி விழுந்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
மின்சார விநியோகம் தினசரி 7½ மணி நேரம் தடை செய்யப்படுவதால் தொழில்கள், வியாபார நிறுவனங்கள், கணினிகள் இயங்குவது பாதிக்கப்படுகிறது. எரிப்பொருட்கள் இல்லாமல் போக்குவரத்து, விவசாயம், கைத்தொழில் போன்றவைகள் முடக்கப்படுவதோடு, 90% உணவகங்கள் மூடப்பட்டுவிட்டன. இதனால் இவற்றில் பணிபுரியும் பெருவாரியான தொழிலாளர்களும் வருமானமின்றி அல்லல்படுகின்றனர். வேலைகளையும் இழந்து பரிதவிக்கின்றனர்.
இவ்வளவு கொடுமைக்கு மத்தியில் நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் புதல்வரும், அமைச்சருமான நாமல் ராஜபக்ச மாலத்தீவில் கேளிக்கை விளையாட்டில் இலயித்துக் கொண்டிருக்கிறார் எனில் இதைவிட பெரிய வக்கிரம் இருக்க முடியுமா?
இலங்கைக்கு ஏன் இந்த நிலை ?
இலங்கை பொருளாதாரத்தில் அதிகப்பட்ச பங்கைச் செலுத்துவது தேயிலை உற்பத்தி, ஆடை தயாரிப்பு, சுற்றுலா ஆகியவை. தேயிலை – ஆடை உற்பத்தி ஏற்றுமதியை சார்ந்திருந்தது. சுற்றுலா வெளிநாட்டவர் வருகையைச் சார்ந்திருந்தது.
கொரோனா தொற்று தொடங்கியவுடன் குறிப்பாக 2020 மார்ச் முதல் சர்வதேச / உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சுற்றுலா வருவதும் நின்றுபோனது. தற்போது கூட ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகள் இலங்கைக்கு சுற்றுலா செல்வதைத் தவிர்க்குமாறு தன் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளன. இதனால் அந்நிய செலவாணி வரவு நின்று விட்டது. உற்பத்தியான தேயிலையையும், ஆடையையும் கூட ஏற்றுமதி செய்ய இயலவில்லை.
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கைவாழ் மக்களும் டாலர் – அந்நிய நாணயங்கள் அனுப்புவதைக் குறைத்துக் கொண்டனர். வேறு எந்த வழியிலும் பொருளாதாரத்தை ஈட்ட வழியில்லாமல் உள்நாட்டின் அத்தியாவசிய தேவையான பெட்ரோல், டீசல், கோழி, பால்மா, எரிவாயு மற்றும் இதர பொருட்களின் இறக்குமதிக்காக இருப்பிலுள்ள அந்நிய செலாவணியும் இழக்க நேரிட்டது.
இறுதியாக அந்நிய செலாவணி (அமெரிக்க டாலர் – இதர நாட்டு நாணயங்கள்) இருப்பானது தமிழ் இந்து தகவலின்படி, இந்தியா கடனாக வழங்கிய 50 கோடி டாலர்களையும் சேர்த்தே மொத்தமாக அதன் கையிருப்பானது 90 கோடி டாலர்கள்தான் உள்ளது. இது சீனாவின் அந்நிய செலாவணி இருப்பு 3.35 டிரில்லியன் டாலர்களுடன் ஒப்பிடும்போது மிக மிக சொற்பமானது, ஏணி வைத்தாலும் எட்ட முடியாது.
கொரோனாவை ஒட்டி நிறுத்தப்பட்ட ஏற்றுமதியானது மீண்டும் நடந்தாலும் அதன் பழைய நிலையை எட்ட இயலவில்லை. வருடத்திற்கு 1000 கோடி டாலர்கள் மதிப்புள்ள தேயிலை, ஆடை ஏற்றுமதி செய்ததோடு, சுற்றுலா மூலம் கிடைத்த டாலர், வெளிநாட்டில் தொழில் புரிவோர், வேலை செய்வோர் அனுப்பும் டாலர், வெளிநாட்டு தூதரகங்கள் இலங்கையில் செலவு செய்யும் அந்நிய செலாவணிகள், பிற நாடுகளிலிருந்து பெறும் கடன்கள், நன்கொடைகள் மூலம், வருவாயை ஈட்டியுள்ளது.
இவற்றில் இறக்குமதிக்காக 2000 டாலர்கள் செலவழித்ததுபோக மீதியை அந்நிய செலவாணி (நாணயங்களை) கையிருப்பாக இருந்துள்ளது. இதன் மூலம் பற்றாக்குறையை ஈடுசெய்துள்ளது என்பதை அறிய முடிகிறது. இலங்கையின் இன்றைய அந்நிய செலவாணி தேவையோ 3500 கோடி டாலர்களாகும்.
தற்போது ஏற்றுமதியும் குறைந்து, சுற்றுலா வருவாயும், வெளிநாட்டு இலங்கைவாழ் மக்கள் அனுப்பும் வருவாயும் இல்லாமல் போய்விட்டது. இறக்குமதியும் அதிகரித்துள்ள நிலையில் மேற்கண்ட நிதியைப் பெறவும், இதன் மூலம் குறைந்து வரும் அந்நிய செலவாணியின் இருப்பை உயர்த்தவும் கடன் வாங்க வேண்டும். இல்லையேல் இறக்குமதியைக் குறைத்து அந்நிய செலாவணி இருப்பை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.
இதனடிப்படையில்தான் இலங்கை மத்திய வங்கியும், நிதி அமைச்சரும் இணைந்து அத்தியாவசியமற்ற 367 பொருட்கள் பட்டியலை தயாரித்து அவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது. இதில் கைபேசியும், கணினியும் அடங்கும். இவை தடை செய்யப்பட்டதால் மாணவர்களின் படிப்பும், இவை சார்ந்த வேலைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் குறிப்பாக விவசாய உற்பத்திக்கான இரசாயன உரத்திற்கும் தடை விதித்துள்ளது. இதனால், ஒரு மூட்டை ரசாயன உரத்தின் விலை ரூ.20,000-ஐ எட்டிவிட்டது. இதற்கான மானியத்தையும் நிறுத்த முடிவு செய்துவிட்டது ராஜபக்ச அரசு.
இதன் காரணமாக 1971, 1989, 1991-களில் நடந்த கிராமப்புற இளைஞர்கள் எழுச்சியைப்போல இன்னும் நடக்கலாம் என்பதை உணர்ந்த ராஜபக்ச அரசு விவசாயத்தை இராணுவமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
இரசாயன உரத்தில் ஊறிப்போன விவசாய நிலத்தில் வலுகட்டாயமாக இயற்கை உரத்தை பயன்படுத்த கட்டாயப்படுத்துவதோடு, பசுமை வேளாண்மை செயலுக்கான மையத்தை நிறுவி அதற்கு ராணுவ தளபதியை தலைவராக நியமித்துள்ளது. இதன் மூலம் சிவில் நிவாகத்தின்கீழ் உள்ள விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும், இராணுவ துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அனைத்து எதிர்ப்புகளையும் இராணுவ சர்வாதிகாரத்தால் ஒடுக்குவது என்பதை இலக்காக வைத்து செயல்படுகிறது.
இதற்கேற்ப கடுமையான சட்டங்களையும் போடுகிறது. இதன் மூலம் சுகாதார ஊழியர்கள், எறிபொருள் துறை ஊழியர்கள் மத்தியில் வளர்ந்து வரும் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதனூடே IMF-லும் கடன்பெற முயன்று வருகிறது மகிந்த ராஜபக்ச அரசு. ஆனால் அது வரியை உயர்த்த வேண்டும்; மானியங்களை ரத்து செய்ய வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதிக்கும். அவற்றை ஏற்கும் பட்சத்தில் கடனை வழங்கும்.
சீனா, இந்தியா போன்ற நாடுகள் பிற நாடுகளின் பற்றாக்குறையை, பஞ்சத்தைப் பயன்படுத்திக் கொண்டு கடன் வழங்கும். ஆனால், தன் நாட்டின் தேவைப் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் கடன் வழங்கும் நாட்டின் மீதான சுரண்டலையும், ஆக்கிரமிப்பையும் மேற்கொள்ளும்.
இந்த வகையில்தான் சீனாவும் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் இலங்கையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது. இந்தியாவும் தற்போது SBI வங்கி மூலம் வழங்கும் (மக்களின் சேமிப்பிலிருந்து) 50 கோடி டாலர்கள் நீண்டகால கடனுக்கு, உள்நாட்டு கட்டமைப்பு மின்சார உற்பத்தி இன்னும் பிற கட்டுமான பணிகளை தங்களுடைய எஜமானர்களான அதானி, அம்பானி கும்பலுக்கு தாரைவார்ப்பதாக கூறி இருப்பதும்; இன்னும் பல்வேறு பொருளாதார கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளது. மேலும் தான் தரும் கடனுக்கு ஈடாக அத்தியாவசிய பொருள்களை ஏற்றுமதி செய்யப்போவதாகவும் கூறி உள்ளது.
IMF-ம் சரி சீனா, இந்தியா போன்ற நாடுகளும் சரி தாங்கள் தரும் கடனுக்காக அவைகள் திணிக்கும் அனைத்து சுமைகளையும் ஏற்கனவே மறுகாலனியாக்க கொள்கையால் பாதிக்கப்படும் மக்கள்மீதுதான் சுமத்தப்படும் என்பதில் ஐயமில்லை.
இந்த சுமையிலிருந்து விடுபட, பாதிக்கப்பட்ட மக்கள் கிளர்ந்து எழுவது இயல்பே. இவற்றை ஒடுக்கவும், பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான புதிய வழிமுறைகளை தேடாமல் பழைய முறையிலேயே சமூகத்தை வழிநடத்த சிவில் பிரச்சினைகளை – மக்கள் பிரச்சினைகளை இராணுவமயமாக்கலின்கீழ் கொண்டுவர முயல்கிறது. இதன் மூலம் தேர்தல் ஜனநாயகம் ஒத்து வராது; இராணுவ சர்வாதிகாரம் தான் தீர்வு என்பதை நிலைநாட்ட முனைகிறது மகிந்த ராஜபக்ச அரசு.
எனவே இனியும் உழைக்கும் வர்க்கமாகிய இலங்கை விவசாயிகளும், தொழிலாளர்களும் தேர்தல் ஜனநாயகத்தை நம்பி பயனில்லை என்பதை உணர வேண்டும். இலங்கையை இராணுவமயமாக்கலின் கீழ் கொண்டுவரும் ராஜபக்ச அரசை தூக்கியெறியாமல் இலங்கைவாழ் உழைக்கும் மக்களுக்கு விடிவில்லை.
இதற்கு பாட்டாளி வர்க்கம் தலைமையில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களை கட்டியெழுப்பி நாடு தழுவிய அளவில் ஒரு பேரெழுச்சியை உருவாக்க வேண்டும். இந்த எழுச்சியை தொடர்ந்து இடைவிடாமல் நடத்துவதன் வளர்ச்சி போக்கில் தேச நலனில் உண்மையான, உளப்பூர்வமான அக்கறை கொண்ட உழைக்கும் மக்களுக்கான புதியதொரு அரசை கட்டியமைப்பதே தீர்வாக அமையும்.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரசியா போர் தொடுத்தது. இதற்கான பதற்ற சூழல் சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்தே நிலவி வந்தது. ரசிய ராணுவம் உக்ரைன் ராணுவத்தை கடல், வான்வெளி, தரை போன்ற அனைத்து தளங்களிலும் செயலிழக்க வைக்கும் வகையில் ராணுவத் தளங்களின் மீது போர் தொடுத்தது. ஆனால் மக்கள் கூட்டமாக வாழும் பகுதிகளில் தாக்குதல் நடைபெறவில்லை என ரசியா ராணுவம் சொல்கிறது.
ஆனால் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையத்தின் (OHCHR) அறிக்கைப்படி, மார்ச் 8ஆம் தேதி வரை 516 குடிமக்கள் இறந்திருக்கின்றனர். அதில் 37 பேர் குழந்தைகள். பிரபலங்கள் (Celebrities) சிலர் “போர் வேண்டாம்” என்று கருத்து தெரிவிப்பதன் மூலம் தங்களை மனிதாபிமானம் உள்ளவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். சரி அவர்கள் பிரபலங்கள் – அரசியலற்றவர்கள். அப்படி தான் பொதுவாக பேசுவார்கள். ஆனால் இங்கே உள்ள அரசியல் கட்சிகள் கூட அப்படி தான் பொதுவாக “போர் வேண்டாம்” என்கிறார்கள். ஆனால் அந்த போருக்கு பின்னணியாக ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டி பற்றி, அதன் வரலாற்று தன்மை பற்றி யாரும் வாய் திறப்பதில்லை.
“எந்தவகையான ஆத்திரமூட்டல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்தாலும், இத்தனை பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கை எந்த வழியிலும் பிரச்சினைகளை தீர்க்கப்போவதில்லை. உடனடியான போர் நிறுத்தமும், பேச்சு வார்த்தைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்” அறிக்கை வெளியிடுகிறார் சீதாராம் யெச்சூரி. ஆனால் பேச்சு வார்த்தைகளால் ஏகாதிபத்தியம் தோற்றுவிக்கும் போரை நிறுத்த முடியாது. உக்ரைன் மீதான ரசியாவின் இந்த தாக்குதல் போருக்காக வரலாற்று காரணங்களையும் அதில் அமெரிக்காவின் மேல்நிலை ஆதிக்க கொள்கை எந்த அளவு பங்காற்றி இருக்கிறது என்பதையும் உடைத்து பேசு வேண்டிருக்கிறது. அதன் போக்கில் தான் இன்றைய ஏகாதிபத்திய மறுகாலனியாக்க இடைகட்டத்தில் ஏற்படும் போர்களுக்கான தீர்வை நம்மால் முன்வைக்க முடியும்.
உக்ரைன் மீதான ரசியாவின் போர் விவகாரத்தில் நமது முதல் கடமை என்பது மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுக்கு காவடி தூக்கும் ஊடகங்களின் பாசாங்கு தனத்தையும் பொய்களையும் அம்பலப்படுத்துவதாகும். உக்ரைன் மீதான ரசியாவின் இந்த போர் தேசிய இறையாண்மையையும், சர்வதேச சட்டங்களையும் மீறுவதாக கூப்பாடு போடுகின்றன மேற்கத்திய ஊடகங்கள். ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் இரத்தக்கறை படிந்த வரலாற்றையும், தேசிய இறையாண்மை, சொல்லிக்கொள்ளப்படும் சர்வதேச சட்டங்கள் ஆகியவற்றை மதிக்காமல் இந்த ஏகாதிபத்தியங்கள் போர் தொடுத்ததையும் நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஈராக், ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல், வியட்நாமில் அப்பாவி மக்களை கொன்று குவித்தது, சிலியில் பாசிச ஆட்சிக் கவிழ்ப்பு போன்றவையெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே. அப்போதெல்லாம் தேசிய இறையாண்மை, சர்வதேச சட்டங்கள் பற்றிய எந்த கூச்சலையும் மேற்கத்திய ஊடகங்கள் எழுப்பவில்லை.
மேலும் இந்த பாசாங்குதனத்திற்கு பேர்போன இந்த ஊடகங்கள் முன்வைக்கும் தேசிய இறையாண்மை என்பது முரண்பாடானதாக உள்ளது.
2014ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டி ரசியாவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கிய அதிபர் யானுகோவிச் ஆட்சி, யூரோ மைதான் என்று அமெரிக்காவால் ஆதரவளிக்கப்படும் நவ நாஜிக்களால் (Neo Nazi) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மூலம் கவிழ்க்கப்பட்டது. அந்த நிகழ்விலிருந்து உக்ரைன் மீதான அமெரிக்காவின் பிடி இறுகிக்கொண்டேயுள்ளது. அமெரிக்காவின் பிராந்திய ஆதிக்க விரிவாக்கத்திற்கு துணை போகும் ஒரு பகடைக்காய் போல்தான் உக்ரைன் இருந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் தேசிய இறையாண்மை எங்கே இருக்கிறது?
சர்வதேச நாணய நிதியம் தான் உக்ரைனின் பொருளாதார கொள்கைகளை வழிமொழிகிறது, அமெரிக்க தூதரகம் தான் உக்ரைனின் அரசாங்கங்கள் அமைவதில் முக்கிய பாங்காற்றுகின்றன.
அப்படியென்றால் அமெரிக்க ரசிய ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல் உக்ரைனில் போராக வெடித்திருக்கிறது. இதை நாம் பார்க்கத் தவறக்கூடாது.
ரசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில நாடுகள் 1955ஆம் ஆண்டு வார்சா (Warsaw) ஒப்பந்தத்தை மேற்கொண்டனர். மேற்கு ஜெர்மனி அன்றைய தினத்தில் (NATO) நோட்டோவில் இணைந்ததன் எதிர்வினையாகவே இந்த வார்சா ஒப்பந்தம் இருந்தது. 1991ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் தகர்ந்த உடன் வார்சா ஒப்பந்தம் களைக்கப்பட்டது. இது ரசியாவின் சர்வதேச ரீதியான பலவீனத்தை குறித்தது. சோவியத் ஒன்றியம் சிதைந்து போனது, வார்சா ஒப்பந்தம் முடிவுக்கு வந்த உடன் நோட்டோ படை நிலவுவதற்கான தார்மீக கூறுகளும் முடிவுக்கு வந்துவிட்டது. நோட்டோவை களைத்து விட்டு பனிப்போரை முடித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் இது ஏகாதிபத்தியங்களின் இயல்பல்ல. அது நீடித்து நிலவுவதற்கு போர் ஒரு அவசியமான கருவி. அதனடிப்படையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் புதிய ஒற்றை துருவ மேலாதிக்கத்திற்காக நோட்டோ படையை கிழக்கு ஐரோப்பாவை நோக்கி விரிவுபடுத்தியது. இதனால் ரசியாவிற்கு அதன் எல்லைகளை சுற்றி தேசிய பாதுகாப்பு நெருக்கடியை ஏற்படுத்துவதாக இருந்தது.
பல வண்ணப் புரட்சிகளின் மூலமாக கிழக்கு ஐரோப்பாவில் மேற்கத்திய அமெரிக்க சார்பு அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன. அதுமட்டுமின்றி அமெரிக்கா, கிழக்கு ஐரோப்ப நாடுகளுக்கு தனது படைகளை அனுப்பி ரசியாவின் எல்லையில் ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டது. இவையெல்லாம் ரசியாவை ஒரு போருக்கு தூண்டும் விதத்திலானதாக இருந்தது.
தனது எல்லையில் பாதுகாப்பு நெருக்கடிகள் இருப்பதாக தோன்றினாலும், ரசியா தனது பலவீனங்களை கணக்கில் கொண்டும், ஒப்பீட்டளவில் அமெரிக்காவின் ராணுவ மற்றும் பொருளாதார உயர்ந்தநிலையை கணக்கில் கொண்டும் ஏதும் செய்ய முடியாத நிலையில் இருந்தது.
ஆனால் ஒரு குறிப்பிட்ட அரசியல் பொருளாதார இராணுவ சூழல் சாசுவதமாக தங்கிவிடுவதில்லை. இயக்கவியல் படி எல்லாம் மாற்றத்திற்குரியது தான். அப்படிப்பட்ட மாற்றம் தான் 2008 ஆம் ஆண்டு நடந்தது. ஈராக் மீதான போரால் அமெரிக்கா மிகப்பெரிய பொருட் செலவையும், இழப்பையும் சந்தித்தது. அமெரிக்கா இறங்கு முகத்தில் இருந்தது. அதை பயன்படுத்தி கொண்டு ரசியா, 2008 ஆம் ஆண்டு ஜார்ஜியா மீது கூர்மையான போர் தொடுத்தது. நோட்டோவினால் ஆயுதங்கள் அளிக்கப்பட்டு, பயிற்சி அளிப்பட்டிருந்த ஜார்ஜியாவின் ராணுவத்தை நாசம் செய்தது. அப்காசியன் மற்றும் தெற்கு ஒசேஷியன் பகுதிகளை துண்டாடி அதில் தனது ஆதரவை உறுதி செய்து கொண்ட பின்பு வெளியேறியது.
அதேபோல், 2014 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையில் நவ நாஜிக்களால் யானுகோவிச் ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது, கிரிமியாவை தன்னுடன் இணைப்பதன் மூலம் ரசியா பதிலடி கொடுத்தது. இது கருங்கடல் பகுதியில் ரசியாவின் கப்பற்படைக்கு சாதகமான சூழலை உருவாக்கி கொடுத்தது. இப்படி அமெரிக்காவும், ரசியாவும் தங்களது சொந்த ஏகாதிபத்திய நலனுக்காக செயல்பட்டுக் கொண்டிருந்தனர். இதில் பாதிக்கப்படும் உக்ரைன், ஜார்ஜியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் இறையாண்மை என்பது மருந்துக்கு கூட மதிக்கப்படவில்லை. ஆனால் ரசிய, அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் இந்த பலப்பரீட்சை, அவற்றின் பலம் மற்றும் பலவீனங்களை காட்டிக்கொடுத்துள்ளது.
அமெரிக்க மேல்நிலை வல்லரசின் பலம் 2008 ஆம் ஆண்டு ஈராக் போர், சப் பிரைம் நெருக்கடி போன்றவற்றால் குறையத் தொடங்கியது. ஆனால், ஒரு மேல்நிலை வல்லரசுக்கே உன்டான கட்டமைப்புகளை அமெரிக்கா கொண்டிருந்தது. சர்வதேச நிறுவனங்களை தனது ஏகாதிபத்திய அரசியல் ஆதாயங்களுக்காக அமெரிக்காவால் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. ஏனெனில் அமெரிக்க ஏகாதிபத்தியம் சர்வதேச அளவில் நிறுவனமயப்பட்டிருந்தது. உதாரணமாக சர்வதேச நாணய நிதியத்தை தனது நலனுக்காக பயன்படுத்தி வந்ததை சொல்லலாம்.
சர்வதேச நாணய நிதியம் (IMF), என்ற நிறுவனத்தின் முக்கியமான வேலை என்பது, வளரும், பின்தங்கிய நாடுகளின் சந்தையை சர்வதேச ஏகபோக நிதிமூலதனத்தின் சூறையாடலுக்கு திறந்துவிடுவதுதான். அதற்கு அது பிரதானமாக பயன்படுத்தும் வழி, திருப்பிச் செலுத்த முடியாத கடன்களை கொடுத்து அதனை கட்ட முடியாமல் தவிக்கும் நாடுகளின் அரசுகளிடம் தனது நிபந்தனைகளை திணிப்பது. இந்த நிபந்தனைகளில் முக்கியமான ஒன்று, சர்வதேச ஏகபோக நிதியாதிக்க கும்பல் கொள்ளையடிக்க அந்த நாடுகளின் சந்தையை திறந்துவிடுவது.
2014 ஆம் ஆண்டு உக்ரைன் அதிபராக யானுகோவிச் இருந்த போது, சர்வதேச நாணய நிதியம் உக்ரைனிடம் கூலியை குறைப்பது, அந்த நாட்டில் பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய துறைகளான கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்கான செலவுகளை குறைப்பது, இயற்கை எரிவாயுவிற்கான மானியத்தை குறைப்பது போன்ற நிபந்தனைகளை முன்வைத்தது. இது மக்கள் மீது பெருமளவில் சுமையை சுமத்தும் என்பதாலும், மக்கள் தனக்கெதிராக போராட்டங்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும் இந்த நிபந்தனைகளை ஏற்க தயக்கம் காட்டிய யானுகோவிச் ரசியாவுடன் பேச்சு வார்த்தைகளை தொடங்கினார். இது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிராகரிப்பது மட்டுமல்ல அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் விரிவாக்க முயற்சிக்கு விடப்பட்ட சாவல் என்று கருதிய அமெரிக்கா, இந்த “குற்றத்தை” செய்யத் துணிந்ததற்காக யானுகோவிச் ஆட்சியை கவிழ்க்க முடிவெடுத்தது. அமெரிக்கா ஊட்டி வளர்த்த நவ நாஜிக்களால் யூரோ மைதான் என்னும் போராட்டத்தின் மூலம் யானுகோவிச் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
அதன்பிறகு வந்த ஆட்சி, எரிவாயுவிற்கான மானியத்தை பாதியாக குறைப்பதாக வாக்குறுதி அளித்து, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 27 பில்லியன் டாலர் கடன் வாங்கியது. இது வழக்கமாக இந்த சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியம் கொடுக்கும் கடன்களின் அளவைவிட ஆறு மடங்கு அதிகமாகும். அதுமட்டுமல்ல, சர்வதேச நாணய நிதியத்தின் வழக்கத்திற்கு மாறாக உள்நாட்டு போர் நடந்துகொண்டிருக்கும் நாடான உக்ரைனுக்கு இவ்வளவு பெரிய தொகையை கடனாக அளித்துள்ளது. இந்த கடன் திருப்பிச் செலுத்த முடியாதது என்று சர்வதேச நாணய நிதியத்திற்கு நன்றாக தெரியும்.
சர்வதேச நாணய நிதியம் தனது நிபந்தனைகளால் உக்ரைன் நாட்டின் வளங்களை சர்வதேச ஏகபோக நிதிமூலதனத்திற்கு திறந்துவிடுவதன் மூலம் அதை சூறையாடுவதற்கு நிதியாதிக்க கும்பலுக்கு இயற்கை வளங்களை ஒப்படைப்பதன் மூலம் தனது கடனை சரிசெய்து கொள்ளும். இந்த திருப்பிச் செலுத்த முடியாத கடன் என்பது, அமெரிக்க அரசுக்கும், உக்ரைனின் உள்நாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும், 2014 ஆட்சி கவிழ்க்கபட்ட பிறகு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திற்கும், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான கள்ளக்கூட்டை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
இதன் மூலம் சர்வதேச நாணய நிதியம் சர்வதேச நிதி மூலதனத்திற்கு வளரும், பின்தங்கிய நாடுகளின் சந்தையை திறந்து விடுவது
மட்டுமல்ல, அமெரிக்காவின் மேலாதிக்க பிராந்திய விரிவாக்கத்திற்கு துணை செய்யும் நிறுவனமாகவும் நடந்து கொள்கிறது என்பது தெளிவாகிறது.
சர்வதேச ரீதியில் மட்டுமல்லாமல் உள்நாட்டிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ஆழமான வேர்களை கொண்டுள்ளது. கிளின்டன் ஆட்சிக்காலத்தில் இருந்து அமெரிக்கா கடைபிடித்து வரும் கொள்கை, கடந்த 30 ஆண்டுகளாக நோட்டோவை விரிவுபடுத்துவதன் மூலம் தனது சொந்த மேலாதிக்க நலனை நோட்டோவில் அங்கம் வகிக்கும் பிற வட ஐரோப்பிய நாடுகளின் நலன்களை விட பெரிதாக முன்நிறுத்திக்கொண்டது. அதனால் நல்ல பலன்களையும் அறுவடை செய்துள்ளது.
அமெரிக்க ரசிய போட்டியின் பிடியில் சிரிய மக்கள்
அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்டு நவ நாஜிக்களால் 2014 ஆம் ஆண்டு உக்ரைனில் நடந்த யூரோ மைதான் போராட்டம் மூலமான ஆட்சிக் கவிழ்ப்பு அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக பயன்படுத்தி வரும் யுக்திகளில் ஒன்று. வட ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிற அமெரிக்க கூட்டாளி நாடுகள், சீனா மற்றும் ரசியாவிடம் வர்த்தகம் முதலீடுகள் ஆகியவற்றில் ஈடுபடுவது அந்த நாடுகளின் மீதான அமெரிக்காவின் மேலாதிக்க பிடியை தளர்த்துவதாக இருக்கிறது. இதை தொடர்ந்து அமெரிக்கா அந்த நாடுகளின் விவகாரங்களில் தலையிடுகிறது. இந்த தலையீடுகள் யாவும் அமெரிக்காவின் மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் செனட்டர்களின் (Senators) அரசியல் அல்ல. அமெரிக்காவின் மூன்று துறை சார்ந்த சில ஏகபோக முதலாளிகளின் அரசியல். செனட்டர்கள் இத்தகைய ஏகபோக நிறுவனங்களின் பங்குதாரர்கள் மட்டுமே !
முதல் துறையான, இராணுவ-தொழிற்கூட்டு (Military-Industrial Complex) என்பது ஆயுத தளவாடங்கள் உற்பத்தி செய்யும் ஏகபோக நிறுவனங்களின் கைகளில் உள்ளது. அவற்றில் சில போயிங், லாக்ஹீட் மார்ட்டின் போன்ற நிறுவனங்கள் ஆகும்.
இரண்டாவது துறை, OGAM என்று அழைக்கப்படும் எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் சுரங்கம் ஆகியவற்றை சேர்ந்த ஏகபோக முதலாளிகளின் நலன்களை தூக்கிப்படிக்கிறது. இது டாலர் பிரதேசங்களில் தனது எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தையை ஏகபோகமாக நிலைநாட்டுவதை இலக்காக கொண்டது. அதனால் தான் ரசியாவின் நார்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய் திட்டம் வட ஐரோப்பிய நாடுகளை ரசியாவுடன் நெருக்கமாக இணைக்கும் என்பதால் இதை மூர்க்கமாக எதிர்க்கிறது அமெரிக்கா.
மூன்றாவது துறை, FIRE என்று சொல்லப்படும் நிதி, காப்பீடு மற்றும் நிலமனைகள் ஆகிய தளங்களில் உள்ள ஏகபோக முதலாளிகளை பிரதிநிதித்துவம் செய்கிறது. நிலமனைகளுக்கு அதிகமான கடன் கொடுப்பவர் மூலம் அந்த கடன்களுக்கான வட்டியின் வருவாய் மூலமே கொழுத்து போனது இந்த துறை.
இந்த மூன்று துறைகளைச் சேர்ந்த சில ஏகபோக முதலாளிகள்தான் அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு தேர்தல் நிதி வழங்குகிறார்கள். அதனால் அமெரிக்க அரசியல்வாதிகள், அவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர் குறிப்பிட்ட மாகாணங்கள் அல்லது மாவட்டத்தை சேர்ந்த மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. மாறாக இந்த ஏகபோக முதலாளிகளின் நலன்களை தான் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். இந்த ஏகபோக முதலாளிகளின் நலன்களை பொருட்டே அமெரிக்காவின் வெளியுறவுத்துறை கொள்கை வடிவமைக்கப்படுகிறது. இதில் அமெரிக்காவின் தொழிற்துறைக்கோ விவசாய துறைக்கோ எந்த பங்குமில்லை.
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ஸ்திரத்தன்மையிலும், நிறுவன ரீதியாகவும் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்ற ஏகாதிபத்தியங்களைவிட ஒப்பீட்டளவில் பலமாக உள்ளது. இதற்கு போட்டியாக சீனா வளர்ந்து வருகிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை.
2019 ஆட்சிக்கு வந்த அதிபர் ஜெலென்ஸ்கி அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு நிலையை எடுத்தார். உக்ரைன் நோட்டோவில் இணைவது ரசியாவின் வர்த்தக நலன்களுக்கும், அதன் முதலாளிகளின் நலன்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க பல்வேறு சுற்று பேச்சு வார்த்தைகளை அமெரிக்கா, ரசியா ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைன் நடத்திவிட்டனர். ஆனால் ஏகாதிபத்தியங்களின் செல்வாக்கு மண்டலங்களுக்கான இந்த போட்டியை வெறும் பேச்சு வார்த்தைகளால் தீர்க்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 24 தேதி புதின் தலைமையிலான ரசிய அரசு உக்ரைன் மீதான போரை தொடங்கியது.
இங்கே ரசிய அதிபர் புதின் முன்வைக்கும் “ரசிய தேசிய பாதுகாப்பு” என்பது, ரசியாவின் மக்கள் பற்றியதல்ல. மாறாக ரசியாவின் ஏகபோக முதலாளிகளின் லாபத்தையும், அந்த ஏகபோக மூலதனத்திற்கான செல்வாக்கு மண்டலங்களையும் பாதுகாப்பது பற்றியதுதான்.
ஒவ்வொரு போரை தொடங்குவதற்கும் ஒரு சாக்கு போக்கு வேண்டுமல்லவா? அப்படியொரு காரணம் தான் உக்ரைன் டொனெட்ஸக் மீது நடத்திய தாக்குதலை, இனப்படுகொலை என்று கண்டித்து போரை புதின் தொடங்கி வைத்தார்.
இங்கே விளாடிமிர் புதின் இயற்கையாகவே தனது சொந்த நலன்களையும் பிரதிபலிக்கக்கூடியவராகவும் இருக்கிறார். தேசியவாதத்தை உக்கிரமாக முன்னெடுப்பதன் மூலம் தனது ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, தொழிலாளர்களின் சனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றால் சரிந்துபோன தனது பிம்பத்தை மீண்டும் உயர்த்திக்கொள்கிறார். 2014 ஆம் ஆண்டு கிரிமியாவை ரசியாவுடன் இணைத்த போது கடைபிடித்த அதே தந்திரத்தை தற்போதும் கடைபிடிக்கிறார்.
மேலும் ரசியா என்பது அதனளவில் ஒரு ஏகாதிபத்திய நாடு. அதற்கென்று சொந்த நலன்கள் உள்ளன. இயற்கை மற்றும் எண்ணெய் ஏற்றுமதி தான் ரசிய பொருளாதாரத்தின் முக்கிய கூறுகள். ரசியாவின் வெளியுறவுத்துறை கொள்கை பெரும்பாலும் இந்த இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆகிறவற்றின் வழங்கலுக்கான சந்தையை உறுதிபடுத்துவதன் ( மிக முக்கியமாக ஐரோப்பாவில்) மூலமாக தனது ஏகாதிபத்திய நலன்களை பாதுகாத்துக்கொள்வது பற்றியது தான்.
இந்த எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்கள் சர்வதேச நிதி மூலதனத்தின் கைகளில் அல்ல மாறாக ரசியாவின் உள்நாட்டு ஏகபோக முதலாளிகளின் கைகளில் தான் உள்ளன. அதன் நலனையே புதின் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். தனது நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக புதின் போராடவில்லை. தான் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏகபோக முதலாளிகளின் நலன்களை உறுதி செய்யவும் அதனை விரிவாக்கவும் தான் இந்த போரை அவர் மேற்கொள்கிறார்.
ஆனால் உக்ரைன் மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் அமெரிக்க மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைன் மக்களை காக்க எந்த உதவியும் செய்யவில்லை. “உக்ரைன் போருக்காக ரசியா பதில் சொல்லியாக வேண்டும்” என்று ஆவேசமாக வாய்ச்சவடால் அடிக்கும் அமெரிக்க அதிபர் பைடன் தனது நாட்டின் தரப்பில் இருந்து ஒரு ராணுவ வீரரைக்கூட அனுப்பவில்லை. இந்த போரை அமெரிக்க ஆயுத தளவாடங்கள் உற்பத்தியில் கோலோச்சும் வியாபாரிகளின் ஆயுத விற்பனைக்கான களமாக பயன்படுத்திக்கொண்டார் பைடன். மேலும் இந்தப் போரின் மூலம் உக்ரைன் ரசியா ஆகிய இரண்டு தரப்பிலும் சேதங்கள் ஏற்படும் என்று காத்திருந்து அந்த சேதங்களை தனது மேலாதிக்க விரிவாக்கத்திற்காக மேலும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று நினைக்கிறது அமெரிக்கா.
ஒரு பக்கம் ” சாகும் வரை போராடுவோம்” என்றும் இன்னொரு பக்கம் ஒரு ராணுவ வீரரைக்கூட அனுப்பாமல் இருப்பதும், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் உக்ரைனை எப்படி பகடைக்காயாக பயன்படுத்துகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
இந்த அமெரிக்கா மற்றும் ரசிய ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்கான போரில் அமெரிக்காவிற்கும் பிற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஐரோப்பாவின் எரி சக்தி துறை 40% ரசியாவை சார்ந்துள்ளது. குறிப்பாக, ஜெர்மனி தனது 60% எரிசக்திக்கு ரசியாவை சார்ந்துள்ளது. அத்துடன் ஜெர்மனியின் மூலதனமும் ரசியாவில் போடப்பட்டுள்ளது. அதனால் தான் ரசியா மீது பொருளாதார தடை விதிக்க ஜெர்மனி தயக்கம் காட்டி வருகின்றது. ஜெர்மனியால் எரிவாயு மற்றும் எண்ணெய்க்கான நிலையான மாற்று ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. ஜெர்மனி அரசு தனது சொந்த நாட்டு ஏகபோக முதலாளிகளின் நலன்களுக்காக அதை பாதுகாக்க செயல்படவேண்டும். இது இயற்கையாகவே அமெரிக்காவின் மேலாதிக்க கொள்கைக்கு முரணாக இருக்கிறது.
இவ்வாறு சர்வதேச அளவில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் வளர்ந்து வருகிறது. தனது செல்வாக்கு மண்டலங்களை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு ஏகாதிபத்தியங்கள் போரை நடத்துவதில் உறுதியாக இருக்கிறது. அதனால் மீண்டும் நாம் ஒரு முறை வலியுறுத்துகிறோம். போர்கள் இல்லாமல் ஏகாதிபத்தியங்களால் ஜீவித்திருக்க முடியாது.
கடந்த மார்ச் 6 ஆம் தேதி ரசியா போரை நிறுத்தி பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறது. அதை தொடர்ந்து, மார்ச் 8 ஆம் தேதி “உக்ரைன் நோட்டோ உறுப்புரிமைக்காக இனி அழுத்தும் கொடுக்கப்போவதில்லை”என்று அதிபர் ஜெலென்ஸ்கி கூறுகிறார். இந்த போர் இத்துடன் முடிந்துவிட்டதா? இல்லை. சர்வதேச ரீதியில் ஏகாதிபத்தியங்களின் பாலபலம் மாறுபட்டுக்கொண்டே இருக்கும். ஏகாதிபத்தியத்தின் விட்டு விட்டு தாவக்கூடிய வளர்ச்சி விதியின் ( Rule of uneven development) படி புதிய ஏகாதிபத்தியங்கள் தோன்றி வளர்வதும், பழைய ஏகாதிபத்தியங்கள் தங்கள் செல்வாக்கு மண்டலங்களை இழப்பதும் நிகழும். ஆனால் போருக்கான காரணங்கள் சாம்பல் பூத்த நெருப்பின் உள்ளே இருக்கும் கங்குபோல் எப்போதும் கொந்தளிப்புடன் இருக்கும்.
அப்படியென்றால் எப்போதுதான் இந்த போர்கள் முடிவுக்கு வரும் ? என்ற கேள்வி எழுவது இயல்பே. சர்வதேச அளவில் பாட்டாளி வர்க்க மிகவும் பலவீனப்பட்டிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் பாட்டாளி வர்க்கம் போராடுவதற்கான காரணங்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த உக்ரைன் போரில் உக்ரைன் நாட்டு பாட்டாளி வர்க்கம், தேசியவாதத்தின் பெயரில் தங்கள் சொந்த நாட்டு ஏகபோக மூலதனத்திற்கு ஆதரவு தராமல், அதற்கெதிராக போராடவேண்டும். அதே நேரத்தில் ரசியா, அமெரிக்க ஏகாதிபத்திய மூலதனங்களையும் எதிர்த்து போராடவேண்டும்.
அதன் மூலமாக தங்கள் விடுதலையை சாதித்துக் கொள்வது மட்டுமின்றி சர்வதேச பாட்டாளி வர்க்கத்திற்கும் பங்களிப்பு செய்ய முடியும். ஆனால் உக்ரைன் பாட்டாளி வர்க்கம் தேசியவாதத்தின் பெயரில் இழுத்துச் செல்லப்பட்டால், அது உக்ரைன் மண்ணில் வாழும் சிறுபான்மை ரசிய மொழி பேசும் மக்களின் மீதான இனப்படுகொலையில் தான் முடியும். அதனால்தான் உக்ரைன் மட்டுமல்ல ஒடுக்கப்படும் ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்களை ஒடுக்கும் பன்னாட்டு, உள்நாட்டு ஏகபோக மூலதனத்தை எதிர்த்து போராடவேண்டும். அதன் மூலம் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடிக்கவேண்டும். இதன் மூலமாக கட்டமைக்கப்படும் சோசலிச குடியரசுகளின் வழியாகவே இந்த உலகை போர்கள் இல்லாத ஒன்றாக மாற்றியமைக்க முடியும்.
கண்களில் கண்ணீர் வழிய இன்று நான் உன்னை பார்க்கும்போது வருத்தமடைந்தேன். இன்று உன் பேச்சில் ஆழமான வலி இருந்தது. நீ அழுது என்னால் பார்க்க முடியவில்லை.
என் செல்லமே, உன் படிப்பை தொடர்வதில் கவனம் செலுத்து, உன் உடல் நலத்தில் கவனமாக இரு.
மனதில் உறுதி வேண்டும். வேறு என்ன… சொல்ல? (வேறு என்ன எழுத முடியும்?)… என்னால் என்ன கவிதை பாடிவிட முடியும்?
கேள்:
அடக்குமுறையின் புதிய புதிய வடிவங்களை கண்டுபிடிப்பதில் அவர்கள் எப்போதும் முனைப்பாக இருக்கின்றார்கள். அடக்குமுறையின் எல்லைதான் என்ன என்று தெரிந்துகொள்ள நாம் ஆர்வமாக இருக்கின்றோம்.
நாம் ஏன் உலகத்தின் மீது கோபப்பட வேண்டும், புகார் செய்ய வேண்டும்? இது உலகம், நமக்கான உலகம், அவ்வளவுதான், அதற்காக நாம் போராடுவோம்.
என் சக பயணிகளே, நான் இங்கே ஒரு தற்காலிக விருந்தாளி, அவ்வளவுதான்,
நான் ஒரு விளக்கு, விடியும்வரை எரிவேன், அணைக்கப்படும் நேரத்தை எதிர்பார்த்து இருப்பேன்.
வீசும் தென்றல் என் சிந்தனையின் சாரத்தை எங்கெங்கும் எடுத்துச்செல்லும்
இந்த உடலோ கையளவு மண் அன்றி வேறில்லை, எங்கு வாழ்ந்தாலும் எங்கே மடிந்தாலும்.
சரி, செல்கின்றேன்.
நாட்டு மக்களே, மகிழ்ச்சியுடன் இருங்கள், பயணத்தை தொடங்கி விட்டேன்.
துணிச்சலுடன் வாழுங்கள்.
வணக்கம். உன் சகோதரன்,
பகத் சிங். ….
1931 மார்ச் 3 அன்று சிறையில் அவர் குடும்பத்தினர் கடைசியாக அவரை சந்தித்தார்கள். இளைய சகோதரன் குல்தார் கண்ணில் நீர் வழிய நின்ற காட்சியை பகத் சிங்கால் தாங்க முடியவில்லை. குல்தாருக்கு பகத் எழுதிய கடிதமே இது.
திருவண்ணாமலை மாவட்டம் வீரளூரில், கடந்த ஜனவரி 15-ஆம் தேதி உயிரிழந்த அருந்ததியர் சாதியைச் சேர்ந்த அமுதா என்பவரது உடலைப் பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல முயன்றதற்காக, வன்னிய கவுண்டர் உள்ளிட்ட ஆதிக்கசாதி வெறியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு அருந்ததியர்களின் குடியிருப்புகளைச் சூறையாடி, அவர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் தீயாகப் பரவியது.
ஆண்டாண்டு காலமாக அப்பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் சாதிய மக்கள், முட்புதர் மண்டிய, மலம் கழிக்கும் பாதை வழியாகத்தான் பிணத்தை மயானத்துக்கு எடுத்துச் செல்கின்றனர். இதை எதிர்த்து பொதுவழியில் உடலை எடுத்துச் செல்ல அனுமதி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் இரு தரப்பினரிடையே நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையின்போது, பூ மாலை, மேள தாளம் இல்லாமல் பிணத்தை பொதுவழியில் கொண்டுபோகலாம் என்ற அநீதியான நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த முடிவைக்கூட ஏற்காமல் ஆதிக்க சாதி வெறியர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 15-ஆம் தேதி உயிரிழந்த அருந்ததியர் சாதியைச் சேர்ந்த அமுதாவின் உடலைப் பொதுவழியின் மூலம் மயானத்துக்குக் கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என்று ஆதிக்க சாதி வெறியர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக ஜனவரி 16-ஆம் தேதி ஊர் பஞ்சாயத்து கூடவிருந்த நிலையில், 15-ஆம் தேதி இரவே ஆதிக்க சாதி வெறியர்கள் ஒன்றுகூடி அருந்ததியர் சாதிய மக்கள்மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டனர். குறிப்பாக, அருந்ததியர் சாதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துராமன் என்பவரைக் கொலை செய்யவும் தீர்மானித்தனர். இக்கொலை வழக்கை நடத்தவும், இதற்காக கிணறு, மோட்டார் பம்பு செட் வைத்திருப்பவர்கள் தலா 10,000 ரூபாயும், ஆதிக்க சாதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரான மணி ஒரு இலட்சம் ரூபாயும் கொடுப்பதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனவரி 16 அன்று ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே, மாலை 4 மணியளவில் தொடங்கிய இக்கொலைவெறித் தாக்குதலானது சுமார் 2 மணிநேரம் நடத்தப்பட்டது. ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிக்க சாதி வெறியர்கள் அருந்ததியர் சாதியினர் குடியிருக்கும் தெருவில் புகுந்து கட்டை, இரும்புக் கம்பிகள், கடப்பாரை, கருங்கற்கள் போன்றவற்றைக் கொண்டு அருந்ததியரைக் கொடூரமாகவும் சரமாரியாகவும் தாக்கியுள்ளனர். என்ன நடக்கிறதென்றே தெரியாமல் மிரண்டுபோன அம்மக்கள் உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்ட போதிலும், அவர்களைத் தப்பியோட விடாமல் அவர்களின் வீடுகளில் புகுந்து தாக்கியுள்ளனர். அருந்ததியர் பெண்களையும் சிறுமிகளையும் பாலியல் ரீதியாகச் சீண்டியும் ஆகக் கேடான வசவு சொற்களால் தாக்கியுமுள்ளனர்.
அவர்களின் வீடுகள், உடைமைகள், இரு சக்கர வாகனங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள் என அனைத்தையும் சாதிவெறியர்கள் காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்கியுள்ளனர். ஓட்டு வீடுகளின்மீது பெரிய கற்களைத் தூக்கி வீசியுள்ளனர். “எங்களிடம் அடிமைகளாகக் குனிந்து கஞ்சி வாங்கிக் குடித்த சக்கிலியன் பிணத்தைப் பொதுவழியில் எடுத்துப் போகும் துணிச்சல் உங்களுக்கு எப்படி வந்தது” “சக்கிலியனுக்கு எதுக்கு புது உடை, செருப்பு, பைக்” “ஒரு மரக்கா சக்கிலியச்சி தாலியை அறுத்து எடுத்துட்டு வாங்கடா…” “ஜே.சி.பி. வச்சு சக்கிலியன் வீடு, தெருக்களை நெறவுங்கடா” என்றெல்லாம் சாதிவெறியோடு கூச்சலிட்டுக் கொண்டே நடந்துள்ளது, இத்தாக்குதல்.
அருந்ததியினர் வீடுகளுக்கு குடிநீர் வழங்கிடும் நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி சாதி வெறியர்கள் சிறுநீர் கழித்ததாகவும், அதில் நஞ்சு கலந்ததாகவும் அம்மக்கள் கூறுகின்றனர். அவர்களின் வீடுகளில் புகுந்து பல இலட்ச ரூபாய் பணம், நகைகளைத் திருடிச் சென்றதாகவும், குறிப்பாக முத்துராமனின் குடும்பத்தைக் குறிவைத்துத் தாக்கி 3 சவரன் நகையையும் ரூ.4 இலட்சம் பணத்தையும் திருடிச் சென்றதாகவும், அவர் அமைதிப் பேச்சுவார்த்தைக்குச் சென்றிருந்ததால் உயிர் தப்பினார் என்றும் கூறுகிறார்கள் அப்பகுதி மக்கள்.
இக்கொலைவெறியாட்டம் நடைபெற இருப்பதை உளவுத்துறை மூலம் தெரிந்திருக்க ஏராளமான வாய்ப்புகள் இருந்துள்ள போதிலும், அதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காததோடு, தாக்குதலின் ஆரம்பம் முதல் இறுதிவரை கண்டும் காணாமல் இருந்து ஆதிக்க சாதி வெறியர்களுக்குத் துணையாக நின்றுள்ளது போலீசு. தாக்குதலின்போது வேடிக்கை பார்த்து படம் பிடிப்பதை மட்டுமே செய்த போலீசு, சாதி வெறியர்களின் தாக்குதலை அங்கீகரிக்கும் விதத்தில் “அடித்தது போதும் பா.. போங்க..” என்று கூறியுள்ளது.
தாக்குதலை முன்னிருந்து நடத்திய சாதிவெறியர்கள் அன்று இரவு தமது கிராமத்தின் அருகிலுள்ள மலையின் அடிவாரத்தின் காடுகளில் பதுங்கி இருந்து கொண்டு, கேக் வெட்டி கொண்டாடி “இது ஆரம்பம்தான், படையாட்சி (வன்னியர்) ஆட்டம் இனி தொடரும்” என்று வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் பகிர்ந்து கொண்டாடியதாகவும் அம்மக்கள் கூறியுள்ளனர். இதைப் பற்றி போலீசில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட அருந்ததியர்கள் ஜனவரி 17 அன்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கிருந்த ஊழியர்கள் சிகிச்சை அளிக்காமல் விரட்டியடித்துள்ளனர்.
ஜனவரி 15-ஆம் தேதி இறந்த அமுதாவின் உடலை உறவினர்கள் பெறுவதற்குக்கூட போலீசு இழுத்தடித்து காலம் தாழ்த்தியுள்ளது. ஜனவரி 17-ஆம் தேதி பிற்பகல் அவசர அவசரமாக சடலத்தை வீட்டுக்குக் கொண்டு வந்ததும் இறுதிச் சடங்கைக்கூட அனுமதிக்காமல் 10 நிமிடங்களில் உடலை எடுத்துச் செல்லுமாறு உறவினர்களைக் கட்டாயப்படுத்தியுள்ளது போலீசு.
தாக்குதலுக்கு மறுநாள் (ஜனவரி 17) அன்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக போலீசு நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் இருந்த பெயர்கள் மற்றும் பாதிப்புகள் தொடர்பான விவரங்களைத் திருத்தி (அதாவது பாதிக்கப்பட்டவரகள் 230 பேர் என்பதை 36 பேர் என்று சுருக்கியும், பாதிப்பின் விவரங்களை நீக்கியும்) வாங்கியுள்ளது போலீசு. தாக்குதலை முன்னின்று நடத்தியவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, அவர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டுமென கோட்டாட்சியரிடம் மனுவை அளித்த போதிலும், இன்றுவரை யாரும் கைது செய்யப்படவே இல்லை. மாறாக, ஆதிக்க சாதியினர் பாதிக்கப்பட்டவர்கள் மீது இரண்டு பொய் வழக்குகளைக் கொடுத்துள்ளனர். அப்பொய் வழக்குகள்மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால், அரசின் நிவாரணத்தை உடனே பெற்றுக் கொண்டு அமைதியாக வேண்டும் என்று மிரட்டியுள்ளனர் அதிகாரிகளும் போலீசும். மேலும், முன்பு எடுக்கப்பட்ட முடிவின்படி, பிணத்தை பொதுவழியில் எடுத்துச் செல்வதற்கு மாறாக, ஆதிக்க சாதிவெறியர்களுக்கு ஆதரவாக நின்று கொண்டு முட்புதர் மண்டிய பாதையை சரி செய்து தருகிறோம் என்று அருந்ததியினரிடம் கூறியுள்ளனர்
இத்தாக்குதலை முன்னின்று நடத்தியவர்களுள் ஒருவர் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரான மணி என்பவராவார். மேலும், தாக்குதலுக்கு மறுநாளன்று அப்பகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.டி.சரவணன்., தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை இருவரும் திருவண்ணாமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஆதிக்க சாதியினரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். ஆனால் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்துப் பேசக்கூட இல்லை. இவ்வாறாக அதிகாரிகள், போலீசு, ஆளும் கட்சி – என மொத்த அரசுக் கட்டமைப்பும் இத்தாக்குதலுக்குத் துணை நின்றுள்ளது. இன்றுவரை துணைநின்றும் வருகிறது. சமூக நீதியின் பெயரால் ஆட்சியைப் பிடித்த தி.மு.க. அரசு, சாதிவெறியர்களுக்குத் துணையாய் நிற்கும் இந்த அயோக்கியத்தனத்தை மே 17 உள்ளிட்ட சில இயக்கங்களைத் தவிர யாரும் கேள்விக்குள்ளாக்கக்கூட இல்லை. ஊடகங்களும் இதை “இரு பிரிவினரிடையே மோதல்” என்று அயோக்கியத்தனமாக செய்தியை வெளியிட்டு அரசுக்கும் சாதி வெறியர்களுக்கும் சேவை செய்துள்ளன.
இத்தாக்குதலை அடுத்து அருந்ததியினர் மீதான சாதிய ஒடுக்குமுறை அன்றாட நிகழ்வாக மாறிவருகிறது. அருந்ததியின மக்களின் வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்பவரை ஆதிக்க சாதியினர் தடுத்துள்ளதோடு, அம்மக்கள் வளர்க்கும் மாடுகளின் பாலை கிராம நிர்வாகம் பெற்றுக்கொள்ளவும் தடை விதித்துள்ளனர். மேலும், அம்மக்கள் தங்களது ஆடு, மாடுகளை மேய்க்கச் செல்லும் பாதைகளையும் வயல்களுக்குச் செல்லும் பாதைகளையும் சாதிவெறியர்கள் முள்வேலியிட்டு அடைத்துள்ளனர். பொதுவெளியில் அவர்களை சக்கிலியர் என்று இழிவாகப் பேசுவதும், இன்னும் கேடான வார்த்தைகளைச் சொல்லி அழைப்பதும் அன்றாட நிகழ்வாகி வருகிறது.
வீட்டுக்கு வீடு நிதி திரட்டி, கொலை செய்யவும் அதற்கான வழக்கை நடத்தவும் திட்டமிட்டு, குடிக்கும் நீர் தொட்டியில் சிறுநீரும் நஞ்சும் கலந்து, ஒன்றுதிரண்டு ஒரு தாக்குதலை நடத்துகிறார்கள் என்றால், இதைச் சாதாரணமாகப் பார்க்க முடியாது. சாதிவெறியாட்டம் தமிழகத்தில் முன்னிலும் கொடூரமானதாய் எண்ணிக்கையிலும் தன்மையிலும் வளர்ந்து வருவதையே இச்சம்பவம் நமக்குத் துலக்கமாகக் காட்டுக்கிறது. அண்மைக்காலமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சாதி வெறித் தாக்குதல்கள் நடந்தும் வருகின்றன.
தானே ஒரு தனிவகைச் சாதியாக, ஒடுக்குமுறை நிறுவனமாக இருக்கும் அதிகாரவர்க்கம், போலீசு, நீதித்துறை அடங்கிய அரசு எந்திரத்தைத் தகர்க்கும் திசையில் போராடாமல் இக்கட்டமைப்பிற்குள் சட்டங்களை இயற்றுவதையும் புதிய அமைப்புகளை, ஆணையங்களை உருவாக்குவதையும் முன்வைத்தே பல்வேறு ஓட்டுக் கட்சிகளும் இயக்கங்களும் போராடி வருகின்றன. உதாரணமாக பல்வேறு சாட்சியங்கள் இருந்தும், கண்ணுற்ற சாட்சியான கெளசல்யா உயிரோடிருந்தும் உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமியை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தபோது, இன்னும் கடுமையான சட்டங்கள் வேண்டுமென்றுதான் பேசினார் வி.சி.க. தலைவர் திருமாவளவன். ஆனால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், ஆணையங்கள், ஆதித்திராவிடர் நலத்துறை என அரசின் உறுப்புகள், சட்டங்கள் எவையும் சாதிவெறியைத் தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் தோல்வியடைந்துள்ளதையே இச்சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நமக்கு நிரூபித்துக் காட்டுகின்றன.
எல்லா சாதிவெறித் தாக்குதல்களையும் போலவே வீரளூர் விவகாரத்திலும் அரசும் போலீசும் ஆளும் கட்சியும் சாதி வெறியர்களுக்கு ஆதரவாக நிற்கிறது என்பதே நாம் பெறும் அனுபவமாகும். இன்றைய அரசுக் கட்டமைப்பில் ஒடுக்கப்படும் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதே வெண்மணி முதல் உடுமலை சங்கர் படுகொலை வழக்கு வரை எல்லாவற்றிலும் நாம் கண்டுணரும் அனுபவமும் ஆகும்.
(குறிப்பு : வீரளூர் சாதிவெறித் தாக்குதல் தொடர்பாக மே 17 இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட உண்மையறியும் குழுவின் அறிக்கையை அடிப்படையாக வைத்து இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.)
கடந்த ஓராண்டில் மட்டும் உலக அளவில் அதிகமான சொத்துக்களை சேர்ந்தவர்கள் வரிசையில் அதானி முதல் இடத்தில் இருப்பதாக ஆண்டுதோறும் உலக அளவில் பணக்கரர்களின் சொத்துக்களை மதிப்பிடும் M3M Hurun என்ற நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகள் உலகம் முழுவதும் கொரோனா பேரிடர் மற்றும் பிற காரணங்களால் பொருளாதாரம் மிகவும் மந்த நிலையில் இருந்தது. இந்த காலகட்டத்தில் இந்தியாவில் தொழிற்சாலைகள் மூடல், வேலையிழப்பு, பசி, பட்டினி போன்ற நிகழ்வுகள் அதிகரித்து இருந்தன. இதே ஆண்டில்தான் இந்தியாவின் இயற்கை வளங்களையும், இந்திய மக்களையும் சுரண்டி கொழுத்த ஒரு கூட்டத்தின் சொத்து மதிப்புகள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
இந்த ஆண்டிற்கான உலக பணக்காரர்களுகன பட்டியலை M3M Hurun அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆசியா மற்றும் இந்திய அளவில் அதிக பணக்காரர் பட்டியலில் அதானி இரண்டாவது இடத்திலும் அம்பானி முதல் இடத்திலும் உள்ளனர். உலக அளவில் எலோன் மஸ்க் முதல் இடத்திலும், ஜெஃப் பெசோஸ் மற்றும் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும், அம்பானி எட்டாவது இடத்திலும் உள்ளனர் என்று அந்த நிறுவனத்தின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானி, 103 பில்லியன் டாலர் சொத்து மதிப்புகளுடன் இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் இருவருடைய சொத்து மத்திப்பு 24 சதவீதம் அதிகரித்துள்ளது. அதானி 81 பில்லியன் டாலர் சொத்துகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் இவரின் சொத்து மதிப்பு 153 சதவீதம் அதிகரித்துள்ளது. துறைமுகம் மற்றும் எரிசக்தி சார்ந்த துறையில் இவரது நிறுவனம் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அம்பானியின் சொத்து மதிப்பு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 45 பில்லியன் டாலராகவும், 10 ஆண்டுகளுக்கு முன்பு 20.5 பில்லியன் டாலராகவும் இருந்தது. அதானியின் மதிப்பு 10 ஆண்டுகளுக்கு முன்பு 8.8 பில்லியன் டாலராகவும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 14 பில்லியன் டாலராகவும் இருந்தது.
அதானியின் சொத்து மதிப்பு கடந்த பத்தாண்டில் மட்டும் 1,830 சதவீதம் அதிகரித்து அம்பானியை பின்னுக்கு தள்ளி அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ளார். அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் 400 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஹெச்.சி. எல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ்நாடார் 28 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் இந்தியாவில் மூன்றாவது இடத்திலும், சீரம் இன்ஸ்டியூட் சைரஸ் பொன்னவாலா 26 பில்லியன் டாலர் மற்றும் லட்சுமி மிட்டல் 25 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் நான்காவது மற்றும் 5 வது இடத்திலும் உள்ளனர்.
உலகத்திலேயே கடந்த ஓராண்டில் மட்டும் அதிக சொத்துக்க்ளை சேர்த்தவர்கள் பட்டியலில் அதானி தான் முதல் இடத்தில் உள்ளார். (49 பில்லியன் அமெரிக்க டாலர்). இவர், உலகபணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களை விட அதிகமான சொத்துக்களை கடந்த ஆண்டில் மட்டும் சேர்த்துள்ளார். 2021 ம் ஆண்டில் மட்டும் அதானி நிறுவனத்தின் சொத்து மதிப்பு அதிகரித்து தற்போது 81 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. கூகுள் இணை நிறுவனர் லாரி பேஜ், செர்ஜி பிரின் மற்றும் ஆடம்பர பொருட்களின் நிறுவனமான LVMH –ன் நிறுவனர் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் 39 பில்லியன் சொத்துக்களை சேர்த்து 2 வது இடத்தில் உள்ளனர். ஆனால் அம்பானி 2021 ம் ஆண்டில் 20 பில்லியன் டாலர் தான் சொத்து சேர்த்துள்ளார்.
உலகத்தில் உள்ள 3,381 பணக்காரர்கள் வெறும் 69 நாடுகளை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். கடந்த 10 ஆண்டில் மட்டும் இந்தியவை சேர்ந்த பணக்காரர்கள் சம்பாதித்த 700 பில்லியன் டாலர் என்பது சுவிட்சர்லாந்து நாட்டின் ஜி.டி.பி. க்கு இணையாகவும், ஐக்கிய அரபு அமிரகம் நாட்டின் ஜி.டி.பி. யின் இரண்டு மடங்குக்கு சமமாகும். இந்தியாவில் உள்ள 215 பணக்காரர்கள் சீனாவை சேர்ந்த 1,133 பணக்காரர்களுக்கும், 716 அமெரிக்க பணக்கரர்களின் சொத்துகளுக்கும் இணையாக தனது சொத்தை அதிகப்படுத்தி உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட்களுக்கு வேலை செய்யவே மோடி தலைமையிலான இந்த காவி கும்பல் வேலை செய்து வருகிறது. இருந்தாலும் மோடியால் மிகப்பெரிய பணக்காரராக உருவாக்கப்பட்டவரும் அவரின் நெருங்கிய நண்பருமான அதானியின் சொத்து மதிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. ஒரு வேளை சோறு இல்லாமல் சாவு ஒரு பக்கம். உலக பணக்காரர்களுடன் போட்டிபோடும் இந்திய முதலாளிகளின் வளர்ச்சி ஒரு பக்கம். இந்த ஏற்றத்தாழ்வை அகற்றும் காலம் எப்போது..?கார்ப்பரேட்களின் வளர்ச்சியைதான் இந்தியாவின் வளர்ச்சி என வாய்சவடால் அடித்து வரும் இந்த காவி கும்பலை கருவருக்காமல் நமக்கு விடிவேதும் இல்லை.
அயோத்தி – சபரி மலை தீர்ப்புகளை நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கிய நீதிமன்றம், ஹிஜாப் பிரச்சினையை மட்டும் சட்ட வரம்பிற்குள் வைத்து தீர்ப்பு வழக்குகிறது. மேலும் ஹிஜாப் பிரச்சினையில் காவி பாசிச கும்பல் துளியும் நேர்மையற்ற ஆதாரம் இல்லாத வகையில் காவி அரசியலை செய்து வருகிறது என்பது ஊர் அறிந்த உண்மை. ஆனால் நீதிமன்றம் அதைகுறித்து பேசாமல் மௌனம் சாதிக்கிறது. தீர்ப்பை அரசியல் சாசனப்படிதானே இருக்கிறது எனறாலும் கூட இது சிறுபான்மையினரின் நம்பிக்கையின் மீதான தாக்ககுதலாக அமைகிறது. இப்பிரச்சினையை நாட்டில் உள்ள அனைத்து முற்போக்காளர்களும் இசுலாமிய அமைப்பிகளும் கண்டித்து பேசி வருகின்றனர். ஆனால் ‘பெரும்பான்மை’ இந்து சமூகம் இப்பிரச்சினையை பற்றி பேசுவதில்லை. ஏன் பேசுவதில்லை. காவி பாசிச கும்பல் இந்து சமூகத்தின் பெயரில்தான் இந்த ஹிஜாப் பிரச்சினையை செய்து வருகிறது. எனவே பெரும்பான்மை மக்கள் இந்த ஜனநாயக விரோத தீர்ப்பை பற்றி பேசவேண்டும் என்ற வகையில் ஹிஜாப் தீர்ப்பின் முழுபின்னணியை இக்காணொலியில் விளக்குகிறார் தோழர் சுரேசு சக்தி முருகன்.
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் ஏமாற்றம்தான். ஆனால் ஒன்று தெரியுமா? இந்த ஏமாற்றத்தைதான் கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் அடைந்து கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு முறையும் ஏதோவொரு மாநிலத் தேர்தல் நடக்கும்போது பாஜகவைத் தகர்க்கும் வெற்றி கிடைக்க வேண்டுமென விரும்பி காத்திருக்கிறோம். ஏமாறுகிறோம்.
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, ராமர் கோவில், விலைவாசி உயர்வு, குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீர் பிரிப்பு என ஒவ்வொரு விஷயத்தை பாஜக நடத்தி முடிக்கும்போதும் அதில் கிளம்பும் எதிர்ப்பைக் கண்டு, அடுத்து நடக்கும் மாநில தேர்தலில் பாஜக வீழ்ந்துவிடும் என மீண்டும் நம்பிக்கைக் கொண்டு காத்திருக்கிறோம். மீண்டும் ஏமாறுகிறோம்.
ஏமாறும் ஒவ்வொரு முறையும் ‘வடக்கன்கள்’, ‘வாக்கு இயந்திர முறைகேடுகள்’, ‘இந்துத்துவ வெறி’, ‘எதிர்க்கட்சிகளின் தோல்வி’ எனப் பலக் காரணங்களைச் சொல்லிக் கொள்கிறோம்.
பாஜக வெல்வதற்கு என்னதான் காரணம்?
திரிபுராவில் பாஜகவை வெற்றிபெறச் செய்தவர் இப்படிச் சொல்கிறார்: ‘கம்யூனிஸ்ட்டுகளை பணம் கொடுத்து வாங்க முடியாதென்பதால், அம்மண் சார்ந்த நாகர்களின் விடுதலைக்கு கம்யூனிஸ்டுகள் உழைத்த பணி தெரியாமலும் வாசிக்காமலும் வளர்ந்திருக்கும் தலைமுறையை மட்டும் கைகொள்ளும் வேலையைச் செய்து வெற்றி பெற்றோம்.’
உத்தரப்பிரதேசத்தில் யாதவர்களுக்குதான் ஆளும் கட்சிகள் ஆதரவாக இருந்திருக்கின்றன என்றும் பாஜக தலித்களுக்கு ஆதரவான கட்சி என்றும் ஒரு கருத்தை உருவாக்குவதற்காக உத்தரப்பிரதேச தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரைக் குடியரசுத் தலைவராக்குவது வரை சென்றதாகவும் சொல்கிறார். ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் உதவியுடன் ஒவ்வொரு வட்டாரத்திலும் நிதியுதவி பெற்றிருக்கின்றனர்.
மறுபக்கத்தில் வாக்கு இயந்திரங்கள்!
2010-ம் ஆண்டில் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்திய வாக்கு இயந்திரத்தை ‘ஹேக்’ செய்து செல்பேசியின் குறுந்தகவலைக் கொண்டு எண்ணிக்கையை மாற்ற முடியும் என செய்தே காட்டினார்கள். அமெரிக்க ஆய்வாளர்களுடன் அதைச் செய்து காட்டிய ஹரி பிரசாத் கைது கூட செய்யப்பட்டார். இதுபோல் எத்தனையோ demonstration-களை ஆம் ஆத்மி கட்சி சேர்ந்தவர் உட்பட பலரும் செய்து காட்டியிருக்கின்றனர்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் கடத்தப்படும் வாக்கு இயந்திரங்கள், குப்பையிலும் ஹோட்டல் அறைகளிலும் கிடக்கும் வாக்கு இயந்திரங்கள் என செய்திகள் வருகின்றனவே, அவற்றுக்கென்ன அர்த்தம்?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக வென்றதே… அது மக்கள் ஓட்டுகளில் மட்டும்தான் நடந்ததென நிச்சயமாகவே நம்புகிறீர்களா என்ன? அந்தளவுக்கு பேராதரவு பெற்ற உலக மகா தலைவரா தேனியில் வென்ற அந்த அவர்?
இந்தியத் தேர்தலில் இதுவரை எல்லா கட்சிகளும் பயன்படுத்திய உத்திகளையும் தேர்தல்முறை கொண்டிருக்கும் பலவீனங்களையும் புது உத்திகளையும் புதிய வாய்ப்புகளுடன் இணைத்துதான் பாஜக ஒவ்வொரு தேர்தலையும் அணுகுகிறது. வெற்றி பெறுகிறது.
பிகார் சட்டமன்ற தேர்தலின்போது சுஷாந்த் சிங் என்கிற நடிகரின் தற்கொலையை வைத்துக் கொண்டு பிரசாரம் செய்தது பாஜக. ஜுன் 2020-ல் இறந்தவரை அக்டோபரில் நடந்த பிகார் தேர்தலுக்கு பயன்படுத்தியது அக்கட்சி. பாஜகவின் இணைய அணி சுஷாந்த் சிங் பற்றிய காணொளியை உருவாக்கி பரப்பியது. மும்பையில் ஆளும் சிவசேனை கூட்டணி அரசு சுஷாந்த் சிங் மரணத்தை முறையாக விசாரிக்கவில்லை என பிரசாரத்தை மாற்றியது. சிபிஐக்கு அந்த வழக்கை கொண்டு போய் முறையான நீதி கொடுத்தது பாஜகவின் ஒன்றிய அரசுதான் என அக்கட்சி பிரசாரம் செய்தது.
சாம, தான, பேத, தண்டம் எல்லாம் பாஜக தேர்தல் வெற்றியில் பார்ப்பதில்லை.
ஒரு தற்கொலை தொடங்கி, குடியரசுத் தலைவர் நியமனம், இராணுவ நடவடிக்கை வரை நீளும் அளவுக்கு பாஜக தேர்தலுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது.
பிற கட்சிகளில் தேர்தல் காலத்தில் தேர்தலை கவனிக்கவென ‘war room’ இருக்கும். பாஜகவில் அது தேர்தலல்லாத காலத்திலும் இயங்குகிறது.
பாஜக மக்களுக்கு நேரடியாகப் பணம் கொடுப்பது குறைவுதான். அல்லது குறைந்த அளவுதான். ஆனால் பிற அணிகளுக்குக் அக்கட்சிக் கொடுக்கும் பணம் அளப்பரியது. உதாரணமாக ஒரு தொகுதியை எடுத்துக் கொள்ளுங்கள்.
தொகுதியில் A சாதி 40 சதவிகிதம் இருக்கிறது. B சாதி 30 சதவிகிதமும் C சாதி 20 சதவிகிதமும் D சாதி 10 சதவிகிதமும் இருக்கிறது. இதில் 40 சதவிகிதமும் 30 சதவிகிதமும் இருக்கும் சாதிகள் பாஜகவுக்கு ஓட்டு நிச்சயமாக போடாது எனத் தெரிகிறது. 20 சதவிகிதமான C சாதியிடம் பாஜக கடுமையாக வேலை பார்த்து தன் வாக்கு வங்கியை உருவாக்கி வைத்திருக்கும். ஆனால் வெறும் 20 சதவிகிதத்தைக் கொண்டு எப்படி தேர்தலை வெல்வது? அதுதான் தேர்தல் முறையின் மகத்துவம்!
A சாதியில் ஒரு மூன்று பி டீம்களை பாஜக இருக்கும். மூன்று டீம்களும் மக்களுக்குக் கொடுக்கவென பல நூறு கோடிகளை பாஜக கொடுக்கும். 40 சதவிகித வாக்குகள் சிதறும். அது எத்தனை மடங்காகச் சிதறினாலும் பாஜகவுக்கு சாதகம்தான். போலவே B சாதியில் ஒரு மூன்று பி டீம்கள். பல கோடி பணம். 30 சதவிகிதமும் சிதறும். அடுத்து இருக்கும் 20 சதவிகிதம் சரியாக பாஜகவுக்கு வந்து சேர்ந்து விடும். அதற்கடுத்த 10 சதவிகிதம் ஒரு கட்சிக்குக் கொத்தாக சென்றாலும் பிரச்சினை இல்லை. இறுதியில் அத்தொகுதியில் 20 சதவிகிதமே வெல்லும்.
மேற்குறிப்பிட்ட சதவிகிதங்களுக்குள் மதம் பாலினம் போன்ற விஷயங்களையும் ஊடாடியும் கணக்குகள் உருவாக்கப்படும். உதாரணமாக கிறித்துவ நாடார்கள் 40 சதவிகிதம் என வைத்துக் கொண்டால் அவர்கள் நிச்சயம் பாஜகவுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள். எனவே இந்து நாடார்கள் பக்கமோ அல்லது நாடார்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் சாதிக்கோ பாஜக வேலை செய்து வைத்திருக்கும்.
இத்தகைய social engineering-ம் கூட பாஜக கண்டுபிடித்ததில்லை. ஆண்டாண்டு காலமாக இந்தியாவில் நடந்து வரும் உத்திதான்.
உத்தரப்பிரதேச தேர்தலில் மோடி பயன்படுத்திய பிரச்சாரக் கருத்தாடல்களில் சிலவை:
‘என்னை வீழ்த்துவதற்காக என்னை கொலை செய்யும் நிலைக்கு எதிர்கட்சிகள் தரம் தாழ்ந்துவிட்டார்கள். ஆனால் என்னை கொலை செய்யக்கூட, அவர்கள் சாமி கும்பிட என் தொகுதி வாரணாசிக்குதான் அவர்கள் வந்தார்கள் என தெரிந்தபோது நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்’
‘இந்திய நாட்டின் வளர்ச்சி பிடிக்காமல் இஸ்லாமிய நாடுகள் பெட்ரோலை அதிக விலைக்கு விற்பதால்தான் பெட்ரோல் விலை உயர்கிறது’
இத்தகைய கருத்தாடல்களை ஏன் அந்த முட்டாள்கள் நம்புகிறார்கள் என்றெல்லாம் இறுமாப்புடன் நாம் கேள்வி கேட்கக் கூடாது. கேள்வி நம் மனதில் தோன்றினால் பழநியில் கேம்ப் அடித்த தெற்கத்தி இளைஞர்களை சாரை சாரையாக ஈர்த்துக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் வகுப்புக்கு ஒருமுறை சென்று பார்க்கலாம்.
மேற்குறிப்பிட்டத் தகவல்களை தெரிந்துகொள்ள ஒருவர் அலைந்து திரிய வேண்டியது கூட இல்லை. எல்லாமே சுலபமாகக் கிடைக்கிறது.
பாஜகவுடன் இயங்கியவர்களும் இயங்கிய நிறுவனங்களும் சாட்சிகளாக இருந்து பல புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பாஜகவின் வளர்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்.ஸும் கொண்டிருக்கும் பங்கைப் பற்றியும் முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எழுதிய பல புத்தகங்கள் உண்டு. இந்திய அரசை (State) ஆர்.எஸ்.எஸ் உள்ளிருந்து எப்படி கையகப்படுத்துகிறது என முன்னாள் அதிகாரிகளின் எழுத்துகளும் பல இருக்கின்றன. இந்துத்துவத்தை முதலாளித்துவம் பயன்படுத்தி இரண்டும் எப்படி வளர்கிறது என்பதற்கான புத்தகங்களும் இருக்கின்றன. இணையத்தை பாஜக எத்தனை வலிய ஆயுதமாக பயன்படுத்துகிறது என்பதைச் சொல்லவும் பல புத்தகங்கள் இருக்கின்றன.
தங்களது சித்தாந்தங்களையும் ‘கும்பகர்ண’ சோம்பலையும் கட்சிகள் கொஞ்சம் தூக்கி ஓரம் வைத்துவிட்டு, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சி பற்றிய வரலாறுகளையும் புத்தகங்களையும் எழுத்துகளையும் படித்து உரையாடி கட்சிகளுக்குள் வகுப்புகள் எடுக்கத் தொடங்கலாம். நிலைமையின் தீவிரம் பற்றியப் புரிதலை கட்சிகளின் அனைத்து மட்டங்களிலும் உருவாக்க முயற்சிக்கலாம். விமர்சனங்களைக் காது கொடுத்து கேட்கத் தொடங்கலாம்.
Emptying cup is also a way to fill the cup (கோப்பையை காலி செய்தும் நிரப்ப முடியும்) என்கிற பேருண்மையைக் கண்டுபிடிக்கலாம்.
இந்தியச் சமூகம் மற்றும் அதன் அரசியல் ஆகியவற்றின் பிரத்தியேகதை என்னவென துலக்கமாக நமக்கு புரிபடலாம். பார்ப்பனீயமும் இந்துத்துவமும் இந்தியச் சமூகத்தின் நுண்ணிய இழைகளில் கூட ஊடுருவியிருப்பதை ஏற்றுக் கொள்வதிலிருந்து பாஜகவை வீழ்த்தத் தொடங்கலாம்.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்றான பிறகு பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் ஆடப்போவதுதான் உண்மையான ஆட்டமாக இருக்கும். இப்போது நடப்பதெல்லாம் வெறும் ட்ரெயிலர்தான்.
மோடியின் அரசு கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்ற கூட்டத்தில், நடைமுறையில் உள்ள குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தைத் திருத்த ஒரு முன்மொழிவை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, பெண்களுக்கு குறைந்தபட்சம் 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் அடைந்தால் மட்டுமே அவர்கள் திருமணம் செய்துகொள்வது சட்டப்படி செல்லும். அதற்கு குறைவான வயதில் திருமணம் நடைபெறும் பட்சத்தில் அது குழந்தை திருமணமாக கருதப்படும்.
ஆனால், மணமக்களில் எவரேனும் ஒருவர் கட்டாயப்படுத்தப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார் என்று நிரூபித்தால் மட்டுமே அத்தகைய திருமணங்கள் செல்லாது என்று அறிவிக்கப்படும். அதேவேளை, இஸ்லாமிய சட்டத்தின்படி பெண்கள் பூப்படைந்து பதினாறு வயதானால் போதும் அவர் திருமணத்திற்கு தகுதி வாய்ந்தவர் என்பதும் தற்போதைய நிலை.
000
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்ட வரைவுக்கான முன்னுரை, வழக்கத்திற்கு மாறான வகையில் மிக நீண்ட விளக்கத்தைக் கொண்டுள்ளது. முதலாவதாக, நடைமுறையில் உள்ள இந்து, கிறித்தவ, இஸ்லாமிய, பார்சி, சிறப்புத் திருமண சட்டங்கள், வெளிநாட்டவர் திருமண சட்டங்கள் அனைத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறான அங்கீகரிக்கப்பட்ட திருமண வயதைக் கொண்டிருகின்றன. அதேவேளை, பல்வேறு இன, சமய மக்களுக்கும் வெவ்வேறு வயது குறிப்பிடப்பட்டுள்ளதால், பெண்களுக்கிடையே கூட சம உரிமை இல்லை எனவும் அதைப் போக்குவது இச்சட்டத்தின் முதல் நோக்கம் என்றும் தெரிவிக்கிறது.
அடுத்ததாக, அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள சம உரிமை இன்னமும் பெண்களுக்கு சென்று சேரவில்லை என்றும்; குறைவான வயதில் பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதால் அவர்கள் அதிகப்படியாக உடல், மன, பொருளாதார ரீதியாக மிகுந்த துயரத்திற்கு உள்ளாவதை தடுக்க வேண்டும் என்றும்; இந்தியா கையொப்பம் இட்டுள்ள சர்வதேச எழுதாச் சட்டங்களையும் (International conventions), கடப்பாடுகளையும் (Obligations) நிறைவேற்றும் வண்ணம் அரசின் செயல்பாடு இருக்க வேண்டும் என்பது இந்த சட்டத்தின் நோக்கம் என்றும் தெரிவிக்கிறது.
கூடவே, இந்த சட்டம் ஒரு மதச் சார்பற்ற சட்டம் என்றும் இந்தியாவில் வாழும் அனைத்து இனங்கள், சமயங்கள், பகுதிகளைச் சேர்ந்த பெண்களுக்கும் பொதுவானதாக இருக்கும் என்பதை அழுத்தி கூறுகிறது. இந்த சட்டம் நிறைவேறும் பட்சத்தில் நடைபெறும் திருமணங்கள், இந்து திருமண சட்டம், இஸ்லாமிய தனி நபர் (ஷரியத்) சட்டம் என்று எந்தச் சட்டத்தின்கீழ் வந்தாலும் அனைவரையும் கட்டுப்படுத்தும் என்றும் குறிப்பிடுகிறது.
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பை சந்தித்த பிறகு, இச்சட்ட முன்வரைவை நிலைக் குழுவுக்கு அனுப்புவதாக முடிவு செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிலைக்குழு அறிக்கை அளித்த பின்னர்தான் இச்சட்டம் குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்.
சமூகத்தில் குறுகிய காலத்தில் இச்சட்டம் பெறும் விவாதப் பொருளாகியிருக்கிறது. தற்போதைய சட்டத்தினை மீறியே ஆங்காங்கு குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதை தடுக்க வேண்டுமென்று பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஆனால், பெரிய அளவில் சமூகத்தில் யாரும் அழுத்தம் கொடுக்காத ஒன்றை – பெண்ணின் திருமண வயதை 21-ஆக உயர்த்துவது – மோடி அரசு சட்டமாக கொண்டுவர முயல்கிறது. மோடி அரசு அமைத்த இந்திய சட்ட ஆணையம் கூட (Indian Law Commission of India 2018) அனைவருக்கும் உகந்த வயது 18 என்று சட்டம் இயற்றவே பரிந்துரை செய்திருந்தது.
கடைந்தெடுத்த பிற்போக்காளர்கள், பாசிச பயங்கரவாதிகளான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வினர் முற்போக்கு முகமுடி போர்த்திக் கொண்டு இச்சட்டத்தைக் கொண்டுவருவதற்கான உள்நோக்கம் முசுலீம்களை குறிவைத்தே.
பெண்கள் முன்னேற்றத்தில், சனாதனவாதிகளுக்கு என்ன பங்கு!
ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே, 1891-ம் ஆண்டு ஒப்புதல் வயது சட்டம் (Age of Consent Act 1891) என்ற ஒன்று கொண்டுவரப்பட்டது. “உடல் உறவு கொள்ள ஏதுவான வயது 12; அதன் பின்னரே பெண்கள் திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும்” என்றது அச்சட்டம். ஆர்.எஸ்.எஸ்-ன் மூதாதையர்களான இந்து சனாதனவாதிகளால் இது கடும் எதிர்ப்புக்குள்ளாக்கப்பட்டது. இச்சட்டத்தை எதிர்த்து அவர்கள் பல்வேறு கலவரங்களை நடத்தினார்கள்.
அதன்பிறகு 1929-ம் ஆண்டு “சாரதா சட்டம்” என்று அழைக்கப்படும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் (Prohibition of Child Marriage Act) கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, பெண்ணின் திருமண வயது 14 எனவும் ஆணின் வயது 18 எனவும் வரையறை செய்யப்பட்டது. இச்சட்டமும் சனாதனவாதிகளின் கடும் எதிர்ப்புக்கு ஆளானது. இச்சட்டத்தைக் கொண்டுவருவதில் பல்வேறு சமூக சீர்திருத்த இயக்கங்கள், சோசலிஸ்டுகள் மற்றும் காங்கிரசின் பங்கு இருந்தது.
சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றும் முகமாக குடும்பம் நடத்தும் அளவுக்கு மன நிறைவுள்ள பெற்றோரை உருவாக்கும் வயது வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சட்டம் 1979-ல் மீண்டும் திருத்தப்பட்டது. அதில், பெண்களுக்கு திருமண வயது 18 மற்றும் ஆண்களுக்கு 21 என்று மறுவரையறை செய்யப்பட்டது.
இப்படி நீண்ட போராட்டங்கள், விவாதங்களுக்கு இடையே உருவான இந்த சீர்திருத்தச் சட்டங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் அவர்களின் முன்னோர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இச்சட்டங்கள் கொண்டுவரும்போது அதற்கு எதிராக இருந்தவர்கள் அவர்கள்.
தவறான நபர்கள் கொண்டு வந்த, சரியான சட்டமா?
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பிற்போக்குவாதிகளாக இருப்பதால் அவர்கள் என்ன கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டுமா என்று சில நண்பர்கள் கேட்கின்றனர். இதுபோன்ற முற்போக்கான சட்டங்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கு தேவைப்படுகிறது தானே எனக் கருதுகின்றனர். சில விவரங்களை பரிசீலிப்பதிலிருந்து இதற்கு விடை காண்போம்.
கடந்த 1901 முதல் 2011 வரை கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகை புள்ளி விபரங்களின்படி, பெண்களின் சராசரி திருமண வயது இயல்பாகவே உயர்ந்துகொண்டுதான் வருகிறது. 1901-ல் இந்திய பெண்களின் சராசரி திருமண வயது 13-ஆக இருந்தது. ஆனால், இது படிப்படியாக உயர்ந்து கடந்த 2011-ம் 20-ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரம் குழந்தைத் திருமணங்கள் ஒரேடியாக இல்லாமல் போய்விடவில்லை. 2015-2016-ம் ஆண்டுக்கான தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின்படி (NFHS-5) 26.8% பெண்கள், அதாவது சுமார் நான்கில் ஒரு பெண், 18 வயது நிறைவுபெறும் முன் திருமணம் செய்துகொள்கிறார். 15 வயதுக்கு முன் திருமணம் செய்துகொள்பவர்கள் பதினைந்தில் ஒரு பெண் மட்டுமே.
குறைந்த வயது திருமணத்தின் ஒரு பகுதி, மனமுதிர்ச்சியற்ற விடலைப் பருவ அவசரத் திருமணங்கள் என்று கணக்கில் கொண்டால், 18 வயதுக்கு குறைவான பெண்களின் திருமணங்கள் மிகவும் சொற்பமே.
இப்படி பெண்களின் திருமண வயது தொடர்ச்சியாக அதிகரித்துவருவதற்கு நடைமுறையில் உள்ள சட்டங்கள் மட்டும் காரணம் அல்ல. அதற்கான காரணம் சமூக பொருளாதார வளர்ச்சியில் இருக்கிறது. சான்றாக, இன்று நாட்டில் அதிக குழந்தைத் திருமணங்கள் நடக்கும் பகுதிகள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய வடமாநிலங்கள்.
குறிப்பாக, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இன்றளவும் குழந்தைத் திருமணங்களைக் காணமுடியும். எனவே வர்க்கப் பின்னணி இதில் முக்கியப் பங்காற்றுகிறது. தங்களுடைய வயிற்றுப் பிழைப்புக்காகவும் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை ஈடுசெய்து கொள்ளவுமே அல்லாடிக் கொண்டிருக்கும் ஒருவருக்கும் தன் பிள்ளைகளை வளர்ப்பதே பெரும்பாடுதான்.
ஆண் பிள்ளைகளாய் இருந்தால் சிறு வயதிலேயே கல்வியை இடைநிறுத்தி அவர்களை வேலைக்கு அனுப்பிடுவார்கள். பெண் பிள்ளைகளை திருமணம் செய்துகொடுத்து விடுவதுதான் ஒரேவழி. நிலவுகின்ற சமூகத்தில், பெண் பிள்ளைகளை காப்பாற்றுவது அடித்தட்டு வர்க்கத்திற்கு வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பதைப் போன்றது.
இதிலிருந்து பெறப்படும் முடிவு என்னவெனில், மேலிருந்து சட்டம் போட்டுவிடுவதால் மட்டும் குழந்தைத் திருமணங்களை ஒழித்துவிட முடியாது. வயது வரம்பை உயர்த்திவிட முடியாது. குழந்தைத் தொழிலாளர் முறையும் கிட்டத்தட்ட இதே போலத்தான்.
இலவச கல்வி, அனைவருக்கும் வேலை, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளத்தக்க அளவில் ஒவ்வொரு குடும்பத்திற்கு போதுமான வருவாய் போன்ற ஆதாரங்களை மக்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும். இதன் மூலம்தான் சமூக வளர்ச்சியோடு பெண்கள் முன்னேற்றத்திற்கும் வழியேற்படுத்தி தர முடியும்.
அதனடிப்படையில் மோடியின் பாசிச நோக்கத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால்கூட, மேற்ச்சொன்ன மக்கள் நலப்பணிகளை அரசு செய்துதராமல் இதுபோன்ற சட்டங்களை நிறைவேற்றுவது எந்த வகையிலும் முற்போக்காக கொண்டாட முடியாது. அவை தன்னியல்பிலேயே மக்களை ஒடுக்கும் சட்டங்களாகத்தான் மாறும்.
(குறிப்பு: மார்ச் மாத பு.ஜ அச்சு நூலில் காணப்பட்ட இக்கட்டுரையின் பிழையை தற்போது சரிசெய்து வெளியிடுகிறோம்)
“யாத் வஷேம்” – நினைவு இடம். நாஜிப்பிடியில் மரணமடைந்த ஆறு மில்லியன் யூதர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இடம்.
“யாத் வஷேம்” கர்நாடக சாகித்ய அகாதமி விருது பெற்ற இந்நூலை நேமிசந்த்ரா எழுதியுள்ளார். கே.நல்லதம்பி மொழிபெயர்த்துள்ளார். கன்னட இலக்கியத்தில் மிகவும் அரிதான புத்தகம்.
ஒரு வெளிநாட்டுக் கதையைத் தேர்ந்தெடுத்து இந்தியாவிற்கு ஏற்ற கதைக்களத்தை அமைத்துள்ளார் ஆசிரியர். நாவலுக்கு வலுசேர்க்கும் விதமாக இந்நூலை எழுதுவதற்குமுன் பல ஆய்வுகளையும் பயணங்களையும் மேற்கொண்டுள்ளார். பன்னிரண்டு ஆண்டுகளில் தான் பார்த்த யூதர்களின் உலகை நாவலில் திறந்துகாட்ட முயன்றுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பாவிலிருந்து தப்பி பிரிட்டிஷ் இந்தியாவில் தஞ்சமடைந்த யூதக் குடும்பத்தைப் பற்றியது இப்புத்தகம். ஹிட்லரின் மண்ணிலிருந்து காந்தியின் மண்ணிற்கு வந்த குட்டி யூதச் சிறுமியின் கதை. பிரிட்டிஷ் கால பெங்களூர், யூதப் படுகொலைகள், நாஜிகளின் கொடுமைகள், இஸ்ரேலின் எழுச்சி மற்றும் பாலஸ்தீனத்துடனான மோதல்கள் பற்றிய பல தகவல்கள் இதில் உள்ளன.
ஹ்யானா மோசஸ், கதாநாயகி உங்களை பல உணர்ச்சிகரமான ரோலர் கோஸ்டர் மூலம் அழைத்துச் செல்கிறார். இது இந்தியாவில் அனிதாவாக மாறிய ஹ்யானா வாழ்க்கை மற்றும் தொலைந்துபோன குடும்பத்திற்கான தேடலைப் பற்றியது. உயிரின் சங்கடங்களுக்கு ஒரு விடை வேண்டும் என்று அனிதா தன் அறுபதுகளில் தனது வேரைத்தேடி ஐரோப்பா, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஜெரூசலம் போன்ற பல நாடுகளை அலைந்து திரிந்து கடைசியாக உயிருடன் இருக்கும் தன் 70 வயது அக்காவைத் தேடிக்கண்டுபிடிப்பதும், அக்கா இஸ்ரேலில் குடியேற அழைக்க அதை மறுத்து “நான் நானாகவும். அவர்கள் அவர்களாகவும் இருந்துகொண்டு, நாமாக வாழமுடியும்” என்று இந்தியாதான் தனது நாடு என்று இந்தியாவுக்குத் திரும்புவதுதான் கதை.
பல நூற்றாண்டுகளாக யுத்தம் மக்களின் வாழ்க்கையை எவ்வாறு அழித்தது என்பது பற்றிய செய்தியை ஆசிரியர் தெரிவிக்க முயற்சித்துள்ளார்.
வரலாற்றுக் கொடுமைகளைவிட நிகழ்காலத்து அழிவு என்னை வதைக்கிறது என்று பாலஸ்தீன் மீதான இஸ்ரேல் அடக்குமுறையை எதிர்த்துள்ளார். இது ஒரு ஹ்யானாவின் கதையாக மட்டும் இருக்கவில்லை. உலகின் உள்ள ஒவ்வொரு சிறுபான்மை மக்களின் கதை. மனிதர்களில்தான் மாற்றம். ஆனால் மாற்றமில்லாத அதே வலி, மரணம், பிரிவு, துன்பம்.
அன்று பற்றி எரிந்தது ஜெர்மனி, நின்று பார்த்தது உலகம். இன்று ஹிட்லர் எங்கே வேண்டுமென்றாலும் பிறக்கலாம். அமெரிக்காவில், ஜெர்மனியில், இஸ்ரேலில், ‘அகிம்சையே உயர்ந்த தர்மம்’ என்று முழங்கும் இந்தியாவில் கூட, ‘நம் நடுவில் எங்கு வேண்டுமென்றாலும் பிறக்கலாம்’, நமக்குள் பிறந்துவிடக் கூடிய ஹிட்லரைத் தடுக்கும் பொறுப்பு நம்முடையது’ என்ற நம்பிக்கையின் பின்னணியில் நாவல் எழுதப்பட்டிருக்கிறது.
நூல் ஆசிரியர் : நேமிசந்த்ரா தமிழில் : கே.நல்லதம்பி
வெளியீடு : எதிர் வெளியீடு
விலை : ரூ.399
நூல் அறிமுகம் : தமிழ் இலக்கியா சமூகசெயற்பாட்டாளர்.
வருங்கால வைப்பு நிதிக்கான கொள்கை முடிவுகளை நிர்ணயிக்கும் மத்திய அறங்காவலர்கள் குழு கூட்டம் டில்லியில் 12.3.2022 அன்று நடந்தது. அதில் 2021-2022 ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாக குறைக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 14.3.2022 அன்று நடந்த மக்களவை கூட்டத்தில் தி.மு.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டதற்கு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இப்படி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தபோதும் அவர்களுடைய எதிர்ப்பு எல்லாம் கண்டன அறிக்கைளை வெளியிடுவது, ட்விட்டரில் கருத்தை பதிவிடுவது, நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது என்பதுடன் அடங்கி விடுகிறது. அதைத் தாண்டி செல்வதில்லை. தங்களுடைய கட்சியின் தொழிற்சங்கங்களை வைத்து அரசை நிர்பந்திக்கும் போராட்டங்களை நடத்தி வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று எல்லாம் இவர்கள் யோசிப்பதில்லை. அப்படிப்பட்ட எண்ணமும் இவர்களுக்கு கிடையாது.
வருங்கால வைப்பு நிதித் திட்டம் – ஒரு சுருக்கமான பார்வை
வருங்கால வைப்பு நிதி திட்டம் இந்தியாவில் 1952-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகி்றது. இத்திட்டத்தின்கீழ் ஊழியர்களின் மாத ஊதியத்தில் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனமும் அதே 12 சதவீத தொகையை வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் முதலீடு செய்யும்.
ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 12 சதவீதவுடன் நிறுவனத்தின் பங்காக செலுத்தப்பட்ட 12 சதவீதத்தில் இருந்து 3.67 சதவீதம் சேர்த்து 15.67 சதவீதம் இபிஎப் என்னும் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் சேமித்து வைக்கப்படும்.
நிறுவனத்தின் பங்களிப்பாக அளிக்கப்பட்டதில் மீதம் உள்ள 8.33 சதவீதம் ஊழியர்களின் வருங்கால ஓய்வூதியத் திட்டத்தில் சேமித்து வைக்கப்படும். இந்த தொகை 58 வயதையை கடந்த பின்பே ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக ஊழியர்களுக்கு கிடைக்கும்.
இபிஎப் என்னும் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் சார்பாக செலுத்தப்பட்ட 15.67 சதவீதத்திற்கே வட்டி கணக்கிடப்படுகிறது.
பி.எப் ஆணையம் ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். ஒவ்வொரு வருடமும் இந்நிறுவனத்தின் மத்திய அறங்காவலர்கள் குழு கூடி வருங்கால வைப்பு நிதித் திட்டத்திற்கான வட்டியை மத்திய அரசிற்கு பரிந்துரை செய்யும். மத்திய அரசின் நிதி அமைச்சகம் ஏற்றுக்கொண்ட பிறகே வட்டியானது இறுதி செய்யப்படும்.
வருங்கால வைப்பு நிதித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட 1952 – 1953 நிதியாண்டில் வட்டியானது 3 சதவீதம் அளிக்கப்பட்டது. 1989 – 1990 நிதியாண்டிலிருந்து 1999 – 2000 நிதியாண்டு வரை வட்டியானது 12 சதவீதம் அளிக்கப்பட்டது. தற்போதுதான் 2019 – 2020 நிதியாண்டில் அளிக்கப்பட்ட 8.5 சதவீத வட்டியானது 2021 – 2022 காலாண்டில் 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதித் திட்டத்திற்கு மிகக் குறைந்த வட்டியாக 8 சதவீதம் 1977 – 1978 நிதியாண்டில் அளிக்கப்பட்டது. தற்போது 44 வருடம் கழித்து 8.1 சதவீதம் என்று மிகக் குறைந்த வட்டியை நிர்ணயம் செய்து இருப்பதாக அரசியல் கட்சிகள் விமர்சிக்கின்றன.
ஊழியர்கள் மற்றும் நிறுவனம் செலுத்தும் தொகையானது, வருங்கால வைப்பு நிதியாக வட்டியோடு பரிணமிக்கும். பணிக்காலம் முடிந்த பிறகு ஊழியர்கள் மொத்த தொகையையும் வட்டியோடு பெற்றுக்கொள்ள முடியும். தொழிலாளர்கள் அவசர தேவை அடிப்படையில் மருத்துவ செலவு, சுப செலவுகளுக்கு கூட வருங்கால வைப்பு நிதியில் இருந்து குறிப்பிட்ட அளவு நிதியை பெற்றுக்கொள்ள முடியும்.
கொரோனா காலத்தில் மத்திய அரசானது பி.எப் தொகையில் 75 சதவீதம் அல்லது 3 மாதங்களுக்குரிய அடிப்படை ஊதியம், அகவிலைப்படி இதில் எது குறைவோ அந்த அளவை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்தது.
அதனடிப்படையில் ஏப்ரல் 17, 2020 புள்ளிவிவரப்படி, மத்திய அரசானது “கடந்த 15 நாட்களில் 946.41 கோடி பி.எப் பணத்தை பெற்ற 3.31 இலட்சம் பேர் பயனடைந்துள்ளனர்” எனத் தெரிவித்தது.
2021 டிசம்பர் 31 நிலவரப்படி 14,310.21 கோடி மதிப்பிலான 56.79 இலட்சம் கோரிக்கைகளை தீர்த்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமில்லாமல் கொரோனா காலத்திற்கு முன்பே 2018-ம் ஆண்டு மத்திய அரசானது, ஊழியர்கள் வேலையிலிருந்து நின்ற தேதியிலிருந்து இரண்டு மாதம் ஆன பிறகுதான் தங்களின் கணக்கிலிருந்து 75 சதவீதம் வரையிலும் பணத்தை எடுக்க முடியும் என்பதை தொழிலாளர்கள் அந்த இரண்டு மாதங்களில் கடன்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதால் ஒரு மாதமாக குறைத்தது.
இப்படி இந்த வருங்கால வைப்பு நிதியானது தொழிலாளர்கள் வேலையைவிட்டு நின்றவுடன் ஏற்படும் செலவுகளை சமாளிக்கவும், கொரோனா காலத்தில் தொழிலாளர்களின் மருத்துவ செலவுக்காகவும் பயன்பட்டது மேற்கூறிய புள்ளிவிவரங்களில் இருந்து பார்க்கும்போது தெரிய வருகிறது.
வருங்கால வைப்பு நிதி வாரியம், பங்கு சந்தையிலும், கடன் சந்தையிலும் செய்துள்ள முதலீடுகள் மீது 15 சதவீதம் வரை வருவாய் ஈட்டியுள்ளது. அத்தொகையிலிருந்து 8.5 சதவீதம் கூட வட்டி வழங்க மறுப்பது தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்று தினகரன் நாளிதழ் 14.3.2022 அன்று தன்னுடைய தலையங்கத்தில் எழுதியுள்ளது. இதே கருத்தை பா.ம.க நிறுவனர் ராமதாஸும் கூறியுள்ளார்.
மத்திய அரசின் புள்ளிவிவரப்படி, 2015 முதல் 2018 பிப்ரவரி வரை வருங்கால வைப்பு நிதியிலிருந்து சேமித்து வைக்கப்பட்ட நிதியிலிருந்து சுமார் ரூ.44000 கோடியை பங்குச் சந்தையில் வர்த்தகப் பரிமாற்ற நிதித் திட்டத்தில் முதலீடு செய்துள்ளது. இதில் சுமார் ரூ.886 கோடி முதலீட்டை விற்ற வகையில் சுமார் ரூ.1054 கோடி வரையிலும் திரும்பக் கிடைத்துள்ளது.
மேற்கூறியதிலிருந்து பார்க்கும்போது, வருங்கால வைப்பு நிதி வாரியம் இலாபத்தில் இயங்குவது உறுதியாகிறது. ஆனால், அதிலிருந்து தொழிலாளர்களுக்கு பணத்தை கொடுக்கதான் அரசுக்கு விருப்பம் இல்லாமல் உள்ளது.
எந்த சேமிப்பும் இல்லாத தொழிலாளர்கள் தங்களுடைய மருத்துவ செலவுகள் போன்ற திடீர் செலவுகளுக்கு வருங்கால வைப்பு நிதியைதான் நம்பி உள்ளனர். ஆனால், அவர்களுடைய பணத்திலிருந்து வரும் வருவாயில் தன்னுடைய நிதி ஆதாரத்தை பெருக்கும் மத்திய அரசானது, பெரும் பணக்காரர்களான அம்பானி, அதானி போன்றவர்களுக்கு அரசின் நிதியை கார்ப்பரேட் சலுகை என்ற பெயரில் வாரிக் கொடுப்பதில் குறியாய் உள்ளது.
000
மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு அரசு கொடுக்கும் எல்லாவித மானியங்களையும், சலுகைகளையும் படிப்படியாக குறைத்துக் கொண்டே வருகிறது. கேஸ் மானியம் குறைக்கப்பட்டது சிறந்த எடுத்துக்காட்டு.
2016 – 2017 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வருங்கால வைப்பு நிதியின்மீது வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார். 2016 ஏப்ரல் 1-க்கு பிறகு கணக்கில் சேரும் தொகையை திருப்பி எடுக்கும்போது 60 சதவீத தொகைக்கு மட்டுமே வட்டி விதிக்கப்படும் என்றார்.
அதனைத் தொடர்ந்து தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பால், வருங்கால வைப்பு நிதியின்மீது வரி விதிக்கும் பட்ஜெட் அறிவிப்பை வாபஸ் பெறுவதாகவும், அதற்கு பதிலாக வேறுவழிகளில் நிதி ஆதாரத்தை பெருக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
அருண் ஜெட்லி அறிவித்த வேறுவழிகளில் நிதி ஆதாரத்தை பெருக்குவதுதான் மோடி அரசு கையாண்டு வரும் படிப்படியாக வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை குறைப்பது.
2014 – 2015 நிதியாண்டு – 8.5%
2015 – 2016 நிதியாண்டு – 8.8%
2016 – 2017 நிதியாண்டு – 8.65%
2017 – 2018 நிதியாண்டு – 8.55%
2018 – 2019 நிதியாண்டு – 8.65%
2019 – 2020 நிதியாண்டு – 8.5 %
2021 – 2022 நிதியாண்டு – 8.1%
2015 – 2016 நிதியாண்டில் 0.30% அதிகரித்தது, மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு நல்லது பண்ணுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு அறிவிக்கப்பட்டது. வருங்கால வைப்பு நிதி வாரியம்தான் 0.30% அதிகரிக்க வேண்டும் என்று முடிவு செய்தது. மோடி அரசோ 0.30% அதிகரிக்க வேண்டாம், 0.20% அதிகரித்தாலே போதும் என்று போராடியது. மக்கள் மற்றும் தொழிற்சங்களின் தொடர் எதிர்ப்பால் 0.30% அதிகரிக்க மோடி அரசானது ஒத்துக் கொண்டது. 2018 – 2019 நிதியாண்டில் 0.1% அதிகரிக்கப்பட்டதும் தேர்தலை ஒட்டிதான்.
மற்ற நிதியாண்டுகளில் எல்லாம் மோடி அரசானது வட்டி விகிதத்தை 0.1% முதல் 0.15% குறைத்துக் கொண்டுதான் வந்துள்ளது.
இங்கே ஒரு கேள்வி? எல்லா நிதியாண்டுகளிலும் வட்டி விகிதத்தை 0.1% முதல் 0.15% குறைக்கும் மோடி அரசானது, தற்போது இந்த நிதியாண்டில் மட்டும் ஏன் வட்டி விகிதத்தை 0.4% குறைத்துள்ளது.
இதற்கான பதிலை நாம் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளில் இருந்துதான் புரிந்துகொள்ள முடியும். 2014 தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளில் முக்கியமானது 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, ஸ்வச் பாரத் மற்றும் கருப்பு பணத்தை மீட்டெடுப்பது போன்ற மக்களின் தேவைகளை பொறுத்து வாக்குறுதிகளை அமைந்தன.
ஆனால், தற்போது நடந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் குறிப்பாக உ.பி.யில் பிரச்சாரமே இந்துகளுக்கும், முஸ்லீம்களுக்குமான தேர்தல் என்றுதான் இருந்தது. யோகி ஆதித்தநாத் இது 80% இந்துக்களுக்கும் 20% முஸ்லீம்களுக்குமான தேர்தல் என்று கூறினார். பா.ஜ.க.வின் எல்லா தலைவர்களுடைய தற்போதைய பிரச்சாரமும் மக்கள் நலத்திட்டங்கள் பற்றிய வாக்குறுதிகள் குறைந்து இந்து மதவெறியூட்டும் பேச்சுக்கள் அதிகரித்துள்ளன.
இந்தியாவில் தற்போது புதியசூழல் உருவாகி உள்ளது. காவி பாசிஸ்டுகளின் அடித்தளம் அதிகரித்து உள்ளது. நாள்தோறும் இந்துமுனைவாக்கம் செய்யப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மொத்த அரசுக்கட்டமைப்பும் பாசிச ஆட்சிக்கான செயற்கருவியாக படிப்படியாக மாறிக்கொண்டே வருகிறது.
காவி பாசிஸ்டுகள் இந்த பலத்திலிருந்துதான் தங்களின் கார்ப்பரேட் பாசிச சேவைகளை அமைத்துக் கொள்கிறார்கள்.
தங்களது அடித்தளம் விரிவடைந்ததன் விளைவாகத்தான் எல்லா நிதியாண்டுகளிலும் வட்டி விகிதத்தை 0.1% முதல் 0.15% வரை குறைத்துவந்த மோடி அரசு, தற்போது இந்த நிதியாண்டில் 0.4% குறைத்துள்ளது. இது வெறும் தொடக்கம்தான். காவி பாசிஸ்டுகளின் அடித்தளம் விரிய விரிய தொழிலாளர் உரிமைகள் மேலும் மேலும் படுகுழியில் தள்ளப்படும்.
இந்த வட்டி விகிதம் குறைப்பை தொழிலாளர் பிரச்சினை என்று தனிப்பட்ட பிரச்சினையாக நாம் பார்க்கக் கூடாது. இந்த காலகட்டத்தில்தான் மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு பகிரங்கமாக விற்பது, அதை பட்ஜெட்டிலே பகிரங்கமாக அறிவிப்பது, மூன்று வேளாண் சட்டங்களை மறைமுகமாக அமல்படுத்துவது, எல்லா மானியங்களையும் மற்றும் சலுகைகளையும் வெட்டுவது, இப்படி எல்லா வர்க்கங்களின் மீதான கார்ப்பரேட் பாசிச தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
கார்ப்பரேட் பாசிசத்தை அமல்படுத்த வேண்டும் என்ற காவிகளின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதிதான் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைப்பு.
இவ்வட்டி விகித குறைப்பானது தொழிலாளர் பிரச்சினை, அவர்கள் போராடுவார்கள் என்று இல்லாமல், இப்பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம் காவி – கார்ப்பரேட் பாசிசம்தான் என்ற புரிதலிலிருந்து அதை வீழ்த்த எல்லா வர்க்கங்களும் ஒன்றிணைந்து போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். அப்போதுதான் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழத்த முடியும். மக்களின் உரிமைகளை நிலைநாட்ட முடியும்.
திருவண்ணாமலை பாலியப்பட்டு உழைக்கும் மக்களின் சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிப்போம் !
திருவண்ணாமலை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்களின் கருத்துக்கு மறுப்பு !
பத்திரிகைச் செய்தி
நேற்றைய தினம் (15.03.2022) விகடன் மற்றும் தினமலர் தமிழ் இந்து ஆகிய ஊடகங்களில் திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு மக்கள் ஏறத்தாழ 100 நாட்களில் நெருங்கும் வகையில் சிப்காட் எதிரான போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றார்கள். அந்தப் போராட்டத்தில் சி.பி.ஐ-எம் அமைப்பின் பங்களிப்பு இல்லை என்று கூறி இயக்குனர் லெனின் பாரதி, தனக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக அளிக்கப்பட்ட விருதினை திருப்பிக் கொடுக்க உள்ளதாக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
இப்போராட்டம் பற்றி சி.பி.ஐ-எம் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளரிடம் ஊடகங்கள் கேட்டதற்கு, அவர் “மக்கள் அதிகாரம் அமைப்பினர் இப்போராட்டத்தில் நேரடியாக ஈடுபடுவதால் நாங்கள் ஈடுபடவில்லை. சிப்காட் மூலமாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்பில்லாத இடத்தில் சிப்காட் அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சிப்காட் அமைக்க தமிழக அரசு உறுதியான தகவல் இதுவரை வெளியிடவில்லை என்றும் அதுவரை அழுத்தமான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட வேண்டியதில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன் அம்மக்களின் போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இப்போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தொடக்கம் முதல் இப்போது வரை துணை நிற்கிறது; எதிர்காலத்திலும் துணைநிற்கும்.
விவசாயம் செழிப்பாக உள்ள ஒரு பகுதியின் மக்கள் எங்களுக்கு சிப்காட் தேவையில்லை என்று கூறினார்கள் என்றால் அதைத்தான் ஒரு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அம்மக்களின் கோரிக்கைக்காகத்தான் எந்த ஒரு ஜனநாயக மற்றும் முற்போக்கு, இடதுசாரி அமைப்புகள் துணை நிற்க வேண்டும்.
பாலியப்பட்டு சிப்காட் பிரச்சினையை ஒட்டி கேள்விகள் கேட்கப்படும்போது, மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் சிப்காட் அமைக்க வேண்டும் என்று கூறுவது தவறாகும். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கூறிய இரண்டு கருத்துக்களும் மக்களின் கோரிக்கை அல்ல, அவர்களுக்கு எதிரானது ஆகும்.
பாலியப்பட்டில் அரசு சிப்காட்டுக்காக இடத்தை கையகப்படுத்த போகிறோம் என அரசு எதுவும் அறிவிக்கவில்லை என்றால் ஏன் பாலியப்பட்டு உழைக்கும் மக்கள் போராடுகிறார்கள்?
அவர்கள் அறியாமையில் இருக்கிறார்களா அல்லது அரசுக்கு எதிராக உள்நோக்கத்துடன் போராடுகிறார்களா என்பதையும் பாலியப்பட்டு சுற்றியுள்ள கிராம பகுதிகளில் போலீஸ் எதற்காக குவிக்கப்பட்டிருக்கிறது? வெளியாட்கள் நுழைவதற்கு ஏன் மறைமுகமாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது? என்பதையும் சி.பி.ஐ-எம் கட்சிதான் விளக்க வேண்டும்.
தேர்தல் கூட்டணி என்ற பெயரில் சமரசமாக இருந்து மக்கள் பிரச்சினையை கண்டும் காணாமல் இருப்பதுதான் சி.பி.ஐ-எம் மாவட்ட செயலாளரின் அறிக்கையில் வெளிப்படுகின்ற கண்ணோட்டம். கூட்டணி தர்மத்துக்காக உழைக்கும் மக்களின் வாழ்வை பணயம் வைப்பது எந்த வகையில் நியாயம் என்பதை அக்கட்சிதான் விளக்க வேண்டும்.
தங்கள் பகுதிக்கு சிப்காட் வேண்டாம் என்று போராடும் திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு மக்களின் போராட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் உடன் இருந்து தோள் கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன், தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க கூட்டணி பெற்ற வெற்றியை கொண்டாடி மகிழ்ந்ததைவிட உள்ளாட்சித் தேர்தல் வெற்றி கூடுதல் மகிழ்ச்சியை தி.மு.க ஆதரவு தரப்பினருக்கு வழங்கியுள்ளது. இது தி.மு.க அரசின் ஒன்பது மாத நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்று பேசி வருகின்றனர். “பா.ஜ.க.விற்கு தமிழகத்தில் இடமில்லை” என்றும் “அ.தி.மு.க-விற்கு இனி எதிர்காலம் இல்லை” என்றும் சிலர் ஆரூடம் சொல்லி வருகின்றனர்.
மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும், 138 நகராட்சிகளில் 132 இடங்களையும் 489 பேரூராட்சிகளில் 80 சதவிகித இடங்களையும் தி.மு.க கூட்டணி கட்சிகள் கைப்பற்றியுள்ளன. குறிப்பாக, சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க மிக பலவீனமாக இருந்த மேற்கு மண்டலத்தில், தற்போது அபார வெற்றியை சாதித்திருப்பது தி.மு.க.வினரின் அளவிடா மகிழ்ச்சிக்கு சிறப்புக் காரணம்.
தனித்து களம் கண்ட பா.ஜ.க தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்துள்ளதாக அக்கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேசிய அளவில் உள்ள ஆளுங்கட்சி ஆதரவு ஊடகங்களும் இதற்கு பெரிய அளவில் விளம்பரம் கொடுத்து வருகின்றன. மற்றொரு பக்கம் இதை தி.மு.க ஆதரவாளர்கள், பா.ஜ.க எதிர்ப்பாளர்கள் அனைவரும் நக்கலடித்து பேசி வருகின்றனர்.
பத்தாண்டுகளுக்கு பிறகு நடைபெற்று முடிந்திருக்கும் இந்த உள்ளாட்சித் தேர்தல் எந்தவகையில் உழைக்கும் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை; தங்கள் கட்சி அதிவிரைவாக வளர்ந்துவருவதாக பாசிச பா.ஜ.க.வினர் கூறிவருவதை நக்கலடித்து கடந்து செல்வதா போன்ற கேள்விகளுக்கு விடைகாண நாமும் இத்தேர்தல் குறித்து பேச வேண்டியிருக்கிறது.
‘தேர்தலும்’ ‘ஜனநாயகமும்’ கொள்ளையர்களுக்காக…
சாலை, குடிநீர் வசதி, குடியிருப்பு வசதி என மக்கள் தங்களின் அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து போராடுவதையும் தேர்தலைப் புறக்கணிப்பதையும் ஒவ்வொரு சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தலின்போதும் நாம் பரவலாக காண முடியும். ஆனால், இந்தமுறை ஒன்றிரண்டு பகுதிகளைத் தவிர பரவலாக அத்தகைய கோரிக்கையுடன் கூடிய போராட்டங்களை பார்க்க முடியவில்லை.
மேலும், தற்போது முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தல் நகர்ப்புறத்திற்கானவை. இந்த நகரங்களில்தான் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவரப்படுகிறது. மதுரை, நெல்லை, தஞ்சை போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் அறிவிப்பு வெளியான சில நாட்களுக்கு முன்னர்தான் சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளில் பெரும்பாலானவற்றை இடிக்க வேண்டும் என்றும் மூன்று மாதங்களுக்குள் வீடுகளை காலி செய்து கொடுக்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. சுமார் 25,000 வீடுகள் வரை ஒரே நேரத்தில் இடிக்கப்படுவதாக அறிவித்ததால், அடுத்து நம்முடைய வாழ்க்கை எண்ணாகுமோ என்ற பயத்தில் புலம்பிக் கொண்டிருந்தனர் மக்கள். இங்கெல்லாம் எந்த சலனமும் இல்லாமல் வாக்களிப்பு நடந்துள்ளது.
தங்கள் விளைநிலத்தை அழித்து நாசகார சிப்காட் அமைப்பதற்கு எதிராக போராடிவரும் திருவண்ணாமலை பாலியப்பட்டு கிராம மக்களின் போராட்டம் கண்டுகொள்ள நாதியற்று போனது. கொஞ்சமும் மன உறுத்தலின்றி வாக்களித்துள்ளனர் சுற்றுவட்டார கிராமத்தினர்.
தங்களது வாழ்வாதாரமும் உரிமைகளும் நேரடியாகப் பறிக்கப்படும் நிலையிலும் அதற்கும் இந்த தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; தேர்தல் வந்தால் ஓட்டுப் போட வேண்டும் என்ற சுரணையற்ற மனநிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டிகிறார்கள். “தேர்தல் வேறு, ஜனநாயக உரிமைகள் வேறு” என்ற கருத்தாக்கத்தை இத்தனை ஆண்டுகளில் ஆளும் வர்க்கமும் உழைக்கும் மக்களிடம் புகுத்தி பழக்கிவிட்டுள்ளது.
கோட்சேவின் சித்தாந்த பேத்தி என்று தன்னை பறைசாற்றிக் கொண்ட பா.ஜ.க.வைச் சேர்ந்த உமா ஆனந்தன் சென்னை 134-வது வார்டில் வெற்றி.
பிறகு யாருக்குத்தான் இந்த ‘வேர்மட்ட ஜனநாயகம்’; ஒவ்வொரு கட்சியிலும் வேர்மட்டத்திலுள்ள ‘குட்டி அலிபாபாக்கள்’ கொள்ளையடிப்பதற்கான ‘ஜனநாயக’ ஏற்பாடுதான் உள்ளாட்சித் தேர்தல். ஒவ்வொரு வார்டிலும் 10 இலட்சம் முதல் 40 இலட்சம் வரை வாரியிறைத்து செலவு செய்ய தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே கட்சிகளில் சீட் வழங்கப்பட்டது. இத்தகையவர்களின் மக்கள் சேவை எப்படி இருக்கும்!
இந்த கூத்தெல்லாம் தெரிந்தபோதும்கூட தேர்தல் ஆணையம் வேட்பாளர்களுக்கு விதித்த செலவு வரம்பு என்ன தெரியுமா? பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் அதிகபட்சமாக ரூ.17,000, நகராட்சி வார்டு உறுப்பினர் என்றால் அதிகபட்சமாக ரூ.34,000, மாநகராட்சி பதவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.85,000 வரை செலவு செய்துகொள்ளலாம் என்று அறிவித்தது.
உள்ளாட்சியில் சந்தி சிரித்த ‘சமூகநீதி’!
தொகுதி பங்கீட்டில் உடன்பாடு இல்லையென்று கூறி, அதி.மு.க கூட்டணியிலிருந்து பிரிந்து தனியாக தேர்தலை சந்தித்தது பா.ஜ.க; நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் தத்தமது பணபலத்திற்கு ஏற்ப வேட்பாளர்களை நிறுத்தின.
கடந்த சட்ட மன்றத்தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும் என்று தி.மு.க அறிவித்தாலும் கூட்டணிக் கட்சியினருக்கான பங்கீட்டை அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் பெற்றுச் செல்லுமாறு கூறிவிட்டது. ஒவ்வொரு மாவட்டச் செயலாளரிடமும் மல்லுக்கட்டி, அவமானமடைந்தும் சோர்வடைந்தும் போயின தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள்.
கும்பகோணம் நகராட்சியில் ஒரே ஒரு வார்டு மட்டுமே சி.பி.எம்-க்கு ஒதுக்கப்பட்டது. அந்த வார்டிலும் தி.மு.க.வின் வட்டச்செயலாளர் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். இது பற்றி பலமுறை முறையிட்டும் பலன் இல்லாததால் சி.பி.ஐ கட்சி சார்பில் போட்டியிட்ட பாரதி என்ற வேட்பாளர் வேட்புமனுவை திரும்பப்பெற்றார்.
கோவையில் வி.சி.க.விற்கு ஒரு வார்டு கூட அறிவிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி அம்மாவட்டத்தில் எங்கும் திருமாவளவனின் பெயரோ, படமோ தி.மு.க.வினரால் பயன்படுத்தப்படவில்லை. கோவையைப் போலவே பல பகுதிகளிலும் திருமாவளவனின் படம் பயன்படுத்தப்படவில்லை. இது குறித்து வெளிப்படையாக அக்கட்சியினர் எதிர்ப்புகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டு தொண்டர்களை சமாதானப்படுத்த வேண்டிய சோகமும் நடந்தது.
ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் தி.மு.க.வினர் சுயேச்சையாக நின்றனர். தங்களது கட்சியினருக்கு சீட்டுகள் வழங்கப்படாததால், காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கட்சியும் சில பகுதிகளில் கூட்டணியை முறித்துக்கொண்டு தனியாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டன.
கூட்டணிக் கட்சியினருக்கு சீட் ஒதுக்கியதால் (ஆங்காங்கு சில வார்டுகள்தான் என்ற போதிலும்) ஆர்ப்பாட்டம் செய்த தி.மு.க.வினர்; ஆளுங்கட்சியான தி.மு.க தங்களுக்கு உரிய ஒதுக்கீடுகளை வழங்காததால் ஆர்ப்பாட்டம் செய்த கூட்டணிக் கட்சியினர் என ‘சமூக நீதி’ உள்ளாட்சியில் சந்தி சிரித்துவிட்டது.
இதுபோக ஒவ்வொரு கட்சிக்குள்ளும் தங்களுக்கு சீட் வழங்கவில்லை என்று உட்கட்சி பூசல் வேறு. காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் பி.வி. தமிழ்ச்செல்வன் அக்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிலேயே தர்ணா போராட்டம் நடத்தினார். முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம், கூட்டணி தர்மத்தை அனைவரும் ஏற்க வேண்டும் என கட்சியினருக்கு வேண்டுகோள் வைத்தார்.
கோவை பெரிய நாயக்கன் பாளையம் பேரூராட்சியில், சி.பி.எம் வேட்பாளர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தலைவர் பதவியைக் கைப்பற்றிய தி.மு.க.வினருக்கு எதிராக போராடும் சி.பி.எம் கட்சியினர்.
‘கூட்டணி தர்மம்’ குடைசாய்வது பற்றி பொதுவெளியில் நாறுவதைத் தடுப்பதற்காக தி.மு.க.வின் தலைவர் மு.க. ஸ்டாலின், “கூட்டணிக் கட்சியினருக்கு எதிராக தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் தி.மு.க.வினர் உடனே மனுக்களை வாபஸ் பெற வேண்டும்; இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவிக்கும் நிலை ஏற்பட்டது. கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட 56 பேரைத் தற்காலிக நீக்கம் செய்வதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
இவை எல்லாவற்றிற்கும் உச்சமாக அமைந்தது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல். கட்சித் தலைமையால் கூட்டணிக் கட்சியினருக்காக ஒதுக்கப்பட்ட பல பேரூராட்சி, நகராட்சி தலைவர் பொறுப்புகளை ரவுடித்தனம் செய்து தி.மு.க.வினரே அராஜகமாக கைப்பற்றிக் கொண்டார்கள். மாற்றுக் கட்சி கவுன்சிலர்களை கடத்திய சம்பவங்களும் அரங்கேறின.
வி.சி.க.வினருக்கு ஒதுக்கப்பட்ட கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவியை தி.மு.க.வினரே கைப்பற்றிக் கொண்டனர். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேனி மாவட்டம் அல்லிநகர் நகராட்சித் தலைவர் பதவியையும் கடைசி நேரத்தில் தி.மு.க உள்ளூர் கவுன்சிலரே கைப்பற்றிக் கொள்ள, அதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது. சி.பி.ஐ-க்கு ஒதுக்கப்பட்ட கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சியும் அதேபோல தி.மு.க கவுன்சிலரால் கைப்பற்றப்பட்டது.
சி.பி.எம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சியில், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சி.பி.எம் கட்சி வேட்பாளர் என். சிவராஜ் மீது தாக்குதல் நடத்தி தேர்தல் முடியும் வரை அவரை தனியொரு அறையில் அடைத்துள்ளனர். மேலும், உடன் வந்த கட்சித் தலைவர்களை தாக்கி விரட்டிவிட்டு அதிகாரிகள், போலீசுப் படை உதவியுடன் தலைவர் பதவியை தி.மு.க.வைச் சேர்ந்தவரே கைப்பற்றியுள்ளார்.
கோவை மாவட்டம் வெள்ளாளூர், மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆகிய தொகுதிகளில் சொந்த கட்சியினரே கோஷ்டியாக பிரிந்து மோதிக்கொள்ளும் சூழல் உருவானதால், அப்பகுதிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டது.
தேர்தல் என்பதே ஒரு பிசினஸ் ஆகிவிட்ட பின், உள்ளாட்சி தேர்தல் போன்றவைதான் கீழ்மட்ட கட்சி ‘தலைவர்’களுக்கு முக்கிய பிழைப்பாதாரம். கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல்கள் நடக்காமல் ‘காய்ந்து போயிருந்த’ கீழ்மட்ட அணிகள் ‘கட்சிக் கட்டுப்பாட்டை’ மீறும் செயலை எந்தக் கட்சியால்தான் கட்டுப்படுத்த முடியும்; அதுவும் தனது கட்சி ஆட்சி நடக்கும்போது எளிதாக வென்றுவிட முடியும் எனத் தெரிந்தும் எந்த தொண்டன்தான் வேடிக்கை பார்ப்பான்.
இந்த இலட்சணத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதானது சமூகநீதி சாதனையாக பீற்றிக் கொள்ளப்பட்டது. நடைமுறையில், வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட பெண்கள் அனைவரும் உள்ளூர் தலைவர்களின் மனைவி, சகோதரி, மகள் ஆகியோரே. பிரச்சாரத்திலும் பேனரிலும் அத்தலைவர்களின் பெயரோடு இணைத்துதான் வேட்பாளர் பெயரையே பிரச்சாரம் செய்தார்கள். இதெல்லாம் ஊரறிந்த கூத்து!
இது திராவிடக் கொள்கையின் வெற்றியா?
ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினராகவும் தி.மு.க.வின் தலைமைச் செயலாளராகவும் இருந்த கு.க. செல்வம் பா.ஜ.க.விற்குத் தாவி, தற்போது மீண்டும் தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்பட்டதே அக்கட்சியின் ‘கொள்கை’ அரசியலுக்கு சரியான சான்று.
கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள கப்பியறையில் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் சேர்ந்து வேட்பாளரை நியமிக்காமல் பா.ஜ.க.வை போட்டியின்றி வெற்றிபெற வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பும், நாம் தமிழர் கட்சி மட்டுமே தனது வேட்பாளரை வாபஸ் பெறவில்லை.
நாகர்கோயில் மாநகராட்சி தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தலின்போது, பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து நான்கு தி.மு.க கவுன்சிலர்களே வாக்களித்த செய்தி (அ.தி.மு.க மற்றும் சுயேட்சைகள் ஆதரவையும் சேர்த்து பா.ஜ.க.விற்கு 20 ஒட்டுகளே இருந்த நிலையில், 24 ஓட்டுகள் வாங்கி தோல்வியடைந்தார் பா.ஜ.க வேட்பாளர்) வெளியாகி நாறுகிறது. இதுதான் தி.மு.க அணிகளிடம் உள்ள ‘கொள்கைப் பிடிப்பு’.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, அ.தி.மு.க – பா.ஜ.க.வின் கோட்டையாக இருந்த மேற்கு மண்டலத்திலேயே தி.மு.க மிகப் பெரிய வெற்றி பெற்றிருப்பது குறித்து பா.ஜ.க எதிர்ப்பாளர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றனர். எனில், தி.மு.க.வின் வெற்றியை பா.ஜ.க.வின் தோல்வியாக எடுத்துக் கொள்ளலாமா? இவ்வாறு நினைப்பதும், அதன் அடிப்படையில் தி.மு.க.வின் மேற்கு மண்டல வெற்றியைப் பார்ப்பதும் ஆபத்தான புரிதலாகும்.
மற்ற ஓட்டுக் கட்சிகளைப்போல அல்ல பா.ஜ.க, அது பார்ப்பன இந்துமதவெறி சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட பாசிஸ்டு அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ன் தேர்தல் கட்சி. மற்ற ஓட்டுக் கட்சிகளைப்போல பெயரளவில் கொள்கையையும் வெறும் கவர்ச்சிவாத அரசியலையும் மட்டுமே வைத்து மக்களை ஈர்க்க கூடிய அமைப்பு அல்ல.
பல ஆண்டுகாலம் கோவை பகுதியில் அது உருவாக்கி வைத்த இந்து முனைவாக்க அடித்தளமெல்லாம் தி.மு.க.வின் வெற்றியால் ஒரு நொடியில் காணாமல் போய்விட்டதாக கருதுவது அடிப்படையிலேயே பகுத்தறிவற்ற சிந்தனை. அப்படியானால் மேற்கு மண்டலத்தில் தி.மு.க.வின் வெற்றியை எப்படி பார்ப்பது என்ற கேள்வி எழலாம்.
கே.என். நேரு, செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம் போன்றவற்றைகளை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து பணத்தை வாரியிறைத்தும் இதுநாள்வரை தான் மேற்கொண்டுவந்த கவர்ச்சிவாத திட்டங்கள் – விளம்பரங்கள் மூலமும் பெற்ற வெற்றியே தி.மு.க.வின் தேர்தல் வெற்றி.
இதில், செந்தில் பாலாஜியும் தோப்பு வெங்கடாச்சலமும் முன்னாள் அ.தி.மு.க பெருச்சாளிகள் என்பதால், அ.தி.மு.க செல்வாக்காக உள்ள மேற்கு மண்டலத்தில் எப்படி காய் நகர்த்தி காரியத்தை முடிக்க வேண்டும் என்ற வித்தை தெரிந்தவர்கள்.
மேலும், எந்த கட்சி ஆளும் கட்சியோ, எந்த கட்சி வெற்றிபெற வாய்ப்பு உள்ளதோ அவர்களுக்கு பார்த்து வாக்களிப்பதுதான் பெரும்பான்மை வாக்காளர்களின் பொதுப்புத்தி. இந்த அம்சமும் சேர்வதால்தான் பொதுவாக உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி பெறக் கூடிய சூழல் உள்ளது. கூடுதலாக, தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் அ.தி.மு.க.வின் ஊழல்களை அடுக்கடுக்காக அம்பலப்படுத்தியதும் அதன் தலைவர்கள் வீட்டில் தொடர்ச்சியாக ரெய்டுகளை நடத்தி பொதுவெளியில் அவர்களை நாறடித்ததும் சேர்ந்து வினையாற்றியிருக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு வழக்கப்படாததால் கட்சித் தலைமையகம் முன்பே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் பி.வி. தமிழ்ச்செல்வனை சமாதானம் செய்யும் கே.எஸ். அழகிரி.
பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் தனித்து நின்றது கணிசமாக வாக்கு வங்கியை பிரித்துள்ளதும் இக்கட்சிகளின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. அப்படி இருந்தும்கூட கோவை மாவட்டப் பகுதிகளின் பெரும்பான்மை வார்டுகளில் பா.ஜ.க இரண்டாம் இடம், மூன்றாம் இடம் வந்திருக்கிறது. இதிலிருந்துதான் பா.ஜ.க.வின் பலத்தை பரிசீலிக்க வேண்டுமே ஒழிய, வெற்றி பெற்றதை மட்டும் வைத்தல்ல.
சுருக்கமாக, தி.மு.க.வின் வெற்றி கொள்கை ரீதியானது அல்ல. கோவையை பார்த்து பேசுபவர்கள் கன்னியாகுமரியை விட்டுவிடுகிறார்கள். 9 மாத ஆட்சி சாதனை கன்னியாகுமரி மாவட்ட மக்களை ஏன் ஈர்க்கவில்லை என பரிசீலிப்பதில்லை. மேற்கில் பா.ஜ.க வெற்றி பெறுவது தற்காலிகமாக தள்ளிப் போயிருக்கிறது என இளைப்பாறுதல் பெற்றுக் கொள்ளலாமே ஒழிய, பா.ஜ.க.வை வீழ்த்திவிட்டதாக மகிழ்வது பகுத்தறிவுக்கு முரணானது. நம்மை செயலின்மைக்கு தள்ளும் அபாயமிக்கது.
பா.ஜ.க.வின் வளர்ச்சியை நக்கலடிப்பதற்கு பின்…
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு நடைபெற்று முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டியிட்டு 308 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்த முற்போக்கு – ஜனநாயக சக்திகளின் பார்வை என்ன?
பா.ஜ.க.விற்கென்று சுயேட்சை பலமே இல்லை; அ.தி.மு.க.வின் முதுகில் சவாரி செய்ததன் மூலமே சட்டமன்றத் தேர்தலில்கூட நான்கு தொகுதிகளை வென்றது என்பதே அவர்களின் மதிப்பீடு. நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பா.ஜ.க அறிவித்தபோது, “நோட்டா பொத்தான் இல்லை என்ற துணிச்சலில் பா.ஜ.க களமிறங்கியுள்ளது” என்று பகடி செய்தார்கள்.
தேர்தல் முடிவு வந்த பிறகு, “தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்ந்து வருகிறது. நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி” என பேசினார் அண்ணாமலை. அதன் மிகைப்படுத்தலை ஒதுக்கிவிட்டு, பாசிச பா.ஜ.க.வின் மதவெறி அரசியலுக்கு தமிழகத்திலும்கூட குறிப்பிட்ட பகுதிகளில் அடித்தளம் இருக்கிறது; இது ஒரு அபாயம்; பாசிச எதிர்ப்பாளர்கள் மக்களிடம் தீவிரமாக வேலைசெய்ய வேண்டிய தேவை உள்ளது என்று நாம் பரிசீலிப்பதில்லை. மாறாக, பா.ஜ.க.வின் வெற்றியை பகடிசெய்து ஆறுதலடைந்து கொண்டிருக்கிறார்கள் முற்போக்காளர்கள்.
“கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் பா.ஜ.க அதிக தொகுதிகளை வென்றிருக்கிறது. சென்னை 134-வது வார்டு பார்ப்பனர்கள் அதிகம் வசிக்கும் மேற்கு மாம்பலம் தொகுதி. பா.ஜ.க கோவை மாவட்டத்திலேயே ஒன்றுமில்லாமல் போய்விட்டது. 2011 தேர்தலில் பா.ஜ.க தனித்து களம் கண்டபோது 226 வார்டுகள் பெற்றது. தற்போதைய தேர்தலில் 308 வார்டுகள் பெற்றுள்ளது. இரண்டையும் ஒப்பிட்டால் பா.ஜ.க வளர்ச்சி சதவிகிதம் 0.63 சதவிகிதம்தான்” – இவையெல்லாம் பா.ஜ.க.வின் வெற்றியெல்லாம் ஒன்றுமேயில்லை அல்லது பெரிதுபடுத்த தேவையில்லை என்பதற்காக சொல்லப்படும் வாதங்கள்.
செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம்
இதிலிருந்தே நாம் கேள்வியை எழுப்புவோம். கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தில் தானே உள்ளது. இல்லை, அது நீங்கலாகத்தான் பெரியார் மண்ணை கணக்கெடுக்க வேண்டுமா. மேலும் 2011 தேர்தலுடன் ஒப்பிட்டு 0.63 சதவிகிதம்தான் வளர்ச்சி என்கிறார்கள். 2014-ம் ஆண்டு முதல் மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்த பிறகுதான் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்டு மோடி கொண்டுவந்த பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து நாடு முழுக்கவும் குறிப்பாக தமிழகத்திலும் பா.ஜ.க எதிர்ப்பு தீவிரமானது.
ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி நீட் எதிர்ப்பு போராட்டம், காவிரி உரிமை போராட்டம், புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் என பல போராட்டங்கள் 2011-க்கு பின்னர் நடைபெற்றவைதான்.
இந்த அடிப்படையில் பார்த்தால், 2011 தேர்தலில் பெற்ற வெற்றியை மீண்டும் பெற்றாலேகூட பா.ஜ.க குறிப்பிட்ட பகுதிகளில் வளர்ந்து வருகிறது என்றுதான் பரிசீலிக்க முடியும். ஆனால், கூடுதலாக 0.63 சதவிகிதம் வளர்ச்சி வேறு பெற்றிருக்கிறது. “தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பே இல்லை” என்று நாம் பெருமை பேசுவது மிகைப்படுத்தல் இல்லை என்றால் இதை எப்படி பரிசீலிப்பது?
ஆர்.எஸ்.எஸ்-ன் தேசிய நாயகனான இராமனை கொளுத்திய மண்ணில், காந்தியை சுட்டது கோட்சே என்று பேசுவதற்கு போலீசு தடை விதிக்கிறது. ஆனால், “நான் கோட்சேவின் சித்தாந்தப் பேத்தி” என்று பேசிய ஒரு பயங்கரவாதி தேர்தலில் நின்று பிரச்சாரம் செய்ய முடிகிறது. இது உ.பி-ல் நடக்கவில்லை. தமிழகத்தில் நடக்கிறது.
“நோட்டாவுடன் போட்டிபோடும் பா.ஜ.க; ஒத்த ஓட்டு பா.ஜ.க.” என்று ஒருபுறம் நக்கலடிப்பதும்; இன்னொருபுறம் “ஒரு மாவட்டத்தில் பெற்றதெல்லாம் பெரிய வெற்றியா? 0.63 சதவிகிதமெல்லாம் ஒரு வளர்ச்சியா?” என்று பேசுவதும் ஒருவகை கலாச்சாரம்.
விவகாரத்தை உள்ளபடியே பரிசீலிக்காமல், ஒருவரை/ஒன்றை பகடி செய்வதற்காகவே விசயத்தை தங்களுக்கேற்ப முறுக்கி, தேவைப்படுவதை மட்டும் பொறுக்கி எடுத்து பிரச்சாரம் செய்யும் மீம்ஸ் கலாச்சாரம். மீம்ஸ்-களை பொறுத்தவரை அதில் பரிசீலிப்பதற்கெல்லாம் ஒன்றுமில்லை; நக்கலடிப்பது ஒன்றே நோக்கம். ஆபத்தான பல விசயங்களைகூட வெறும் நகைத்துவிட்டு கடந்துசெல்ல நம்மை பழக்கப்படுத்துவது மீம்ஸ்-களின் எதிர்மறையான அம்சம்.
பா.ஜ.க.வை நக்கலடிக்கும் முற்போக்காளர்களுக்கு இதை ஒத்த சிந்தனைதான் உள்ளதே ஒழிய பரிசீலனை உணர்ச்சி அறவேயில்லை. பாசிஸ்டு கட்சியைப் பற்றிய இத்தகைய சிந்தனை போக்கு பாசிச எதிர்பாளர்களை சிந்தனை அளவிலும் செயல்பாட்டளவிலும் நிராயுதபாணியாக்கி அதன் வளர்ச்சிக்கு வழிகோலக்கூடிய அபாயமிக்கது.
தேர்தலுக்கு அப்பால்…
தி.மு.க.வுடன் ஒப்பிட்டால் பா.ஜ.க பெற்றிருப்பது மிக சொற்ப இடங்கள்தான், இதனால் எதையும் சாதித்துவிட முடியாது என்று கருதுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.
மேலும், இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஒதுக்கும் சொற்ப இடங்களுக்குள் அடங்காமல் பா.ஜ.க தனித்து நின்று போட்டியிட முடிவு செய்தது என்பது, போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்பதால் அல்ல. இத்தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் பரவலாக தனது மதவெறி அரசியலை பிரச்சாரம் செய்வதும், அ.தி.மு.க.வை மொத்தமாக ஓரங்கட்டிவிட்டு தி.மு.க.வை எதிர்க்கக்கூடிய திராணியுள்ள ஒரே கட்சி பா.ஜ.க மட்டுமே என ஒரு அடையாளத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதும்தான் நோக்கம்.
“தி.மு.க. எண்ணற்ற கோயில்களை இடித்துவிட்டது, லாவண்யா விசயத்தில் மதமாற்ற கும்பலுக்கு துணை நிற்கிறது, பெண்களுக்கு ரூ.1,000 வழங்குவது உள்ளிட்டு பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது, சட்ட ஒழுங்கை சீர்குலைத்துவிட்டது – எங்கள் கட்சி அலுவலகத்தில் ஆளை வைத்து குண்டு போட்டுவிட்டது” போன்றவைதான் இத்தேர்தலில் பா.ஜ.க.வின் பிரச்சாரங்களாக இருந்தன. தி.மு.க-வை இவை ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளினார்கள் காவிகள்.
இதுபோன்ற உத்திகள்தான், நாளை தி.மு.க.வின் மீது மக்கள் அதிருப்தி கொள்ளும்போது அக்கட்சிக்கு எதிரான ஒரே மாற்றாக தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்கு பா.ஜ.க.விற்கு முன்தயாரிப்பாக அமையும். பா.ஜ.க.வின் தேர்தல் பங்கேற்பை இந்த கோணத்திலும் அணுக வேண்டும்.
மற்றபடி, ஒரே தேர்தல் பிரச்சாரத்தில் கொடி கட்டி பறக்க வேண்டும் என்ற நப்பாசையெல்லாம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.விற்கு கிடையாது. தமிழகத்தில் வேரூன்றுவதற்காக அவர்கள் செய்யும் நீண்ட நெடிய முயற்சியில், இது ஒரு படி அவ்வளவுதான். படிப்படியான முன்னேற்றம் என்பதுதான் அவர்களது இலக்கு. இது புரியாமல் “ஒத்த ஓட்டு பா.ஜ.க” என நாம் கலாய்த்துக் கொண்டிருந்தால் நமக்கு எதார்த்தம் புரியவில்லை என்று பொருள்.
சுருக்கமாகச் சொன்னால், இந்த தேர்தல் களம் என்பது பாசிஸ்டுகள் பாய்ச்சல் வேகத்தில் முன்னேற துணைசெய்வதுதானே தவிர, பாசிச எதிர்பாளர்களுக்கான கருவியாக ஒருபோதும் பயன்படுத்த முடியாத ஒன்று.
பாசிச எதிர்ப்புக்கான களம் “தேர்தல்களுக்கு அப்பால்” உள்ளது. ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, ஷாகீன்பாக், டெல்லிச் சலோ என மக்கள் போராட்டங்களில் மையம் கொண்டுள்ளது.
“தில்லை இருப்பது தமிழ்நாடா? அல்லது அதற்குள் ஒரு தனிநாடா?
தில்லை நடராஜர் கோயிலை இந்து அறநிலையத் துறையின் கட்டுபாட்டில் கொண்டுவர சிறப்பு சட்டம் இயற்று!
இலட்சுமி என்ற பெண் சிவபக்தையை ஜாதி சொல்லி இழிபடுத்திய தீட்சதர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்! சிறையில் அடை!”
என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது அதன் ஒரு பகுதியாக சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் 11.03.2022 அன்று காலை 11 மணிக்கு மக்கள் அதிகாரம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேச மக்கள் முன்னணி, தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம், மாநிலப் பொருளாளர், தோழர் அமிர்தா தலைமை தாங்கினார். கம்யூனிச, பெரியாரிய, தமிழ்த் தேசிய அமைப்புகளின் தோழர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
தோழர் அமிர்தா தனது தலைமை உரையில், “தில்லை சிதம்பரம் கோயில் மக்கள் சொத்து, ஆனால் தீட்சத கும்பல் ஆக்கிரமித்து கொண்டு அட்டூழியம் செய்து வருகிறது. சிதம்பரத்தில் உள்ள போலீசு நிலையத்தில் பல வழக்குகள் தீட்சத கும்பல் மீது இருக்கிறது. சைக்கிள் திருடிய தீட்சதர், கொலை வழக்கில் தீட்சதர், தட்டில் விழும் காசுக்கு சண்டை போட்டு கொண்டு அடித்தடி என ரவுடி கும்பலாக இவர்கள் இருக்கின்றனர். பக்தர்களை அடிப்பது, சமீபத்தில் இலட்சுமி என்ற சிவபக்தை சிற்றம்பல மேடையில் ஏறி வழிப்பட சென்றபோது ‘பரச்சி’ என்று சொல்லி இழுவுப்படுத்தி அடிக்க முற்பட்டனர். இதை இணையத்தில் வீடியோவாக அனைவரும் பார்த்தோம். ஆனால், இலட்சுமி மீது சொம்பை திருடினார் என பொய் வழக்கு பதிந்துள்ளனர் திட்சதர்கள். இவர்களின் யோக்கியதை இது தான்.
3000 பேர் கைலாயத்திலிருந்து வந்தோம் அதில் ஒருவரை காணவில்லை, தேடினால் அவர்தான் சிவன் அதனால் சிவன் வகையறா நாங்கள் என ஒரு புருடா கதையை சொல்லிதான் இவர்கள் இந்த கோயிலுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள். நந்தன் நுழைந்த வாயிலை இடித்துதள்ள வேண்டிய கடமை முற்போக்காளர்களாகிய நம் தோள்களின்மேல் உள்ளது. தமிழக அரசு, சிதம்பரம் கோயிலை இந்துஅறநிலையத் துறையின்கீழ் கொண்டுவர சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்” என்று பேசினார்.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தனது உரையில், “இரண்டு கோரிக்கைகளை முன் வைத்து இந்த போராட்டம் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. ஒன்று ஹிஜாப் பிரச்சினை ; மற்றொன்று சிதம்பரம் தில்லை கோயில் பிரச்சினை.
தமிழ்நாட்டில் மட்டும்தான் தேர்தலில் ஈடுபடாத இயக்கங்கள் ஒரு முற்போக்கு செயல்திட்டத்தை முன்வைத்து மக்கள் மன்றத்தில் தொடர்ச்சியாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. வேறு எந்த மாநிலத்திலும் இப்படி பார்க்க முடியாது. முற்போக்கு சிந்தனையுள்ள கம்யூனிச, பெரியாரிய, தமிழ்த் தேசிய இயக்கங்கள் இணைந்து இங்கு போராடிக் கொண்டிருக்கிறோம்.
இந்த நாட்டில் உள்ள சட்டங்கள் எதுவும் எங்களை கட்டுப்படுத்தாது என்பதே தீட்சதர்களின் வாதம். இதை உச்சநீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது என்பதே அவர்களின் வலிமை. தமிழில் வழிபடும் உரிமையை தடுக்கிறார்கள் என்ற அடிப்படையில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி பானுமதி தீர்ப்பு கொடுத்தார். ஆனால், உச்சநீதிமன்றத்திற்கு சென்று சு.சாமி போன்றோர் தீட்சத கும்பலுக்கு ஆதரவான தீர்ப்பை வாங்கியுள்ளனர். இது தொடர்ச்சியான நீண்ட நெடிய போராட்டம். இன்றும் தொடர்கிறது.
இன்று தில்லையிலே பல அமைப்புகள் இதற்காக போராடுகிறார்கள். ஆனால் ஊடகங்கள் எதுவும் வெளியிடுவதில்லை. சமூக வலைதலங்களில்தான் செய்திகள் வருகிறது. மேலும் தில்லையில் தீண்டாமையை கடைப்பிடித்து சிவபக்தை இலட்சுமியை அடித்துள்ளனர். அதற்காக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் தீட்சதர்கள்மீது வழக்கு போடப்பட்டுள்ளது. ஏன் அவர்களை கைது செய்யவில்லை? காரணம் என்ன? உடனடியாக அவர்களை கைதுசெய்ய வேண்டும்” என்று பேசினார். மேலும், தில்லை கோயில் வரலாற்றை அம்பலப்படுத்தி பேசினார். தீட்சதர்களின் வரலாற்று புளுகுகளை அம்பலப்படுத்தி நீண்ட உரையாற்றினார்.
தமிழ்த் தேச மக்கள் முன்னணியை சேர்ந்த தோழர் செந்தில் அவர்கள் தனது உரையில், “எந்த ஆடை அணிய வேண்டும்? ஆடை அணிவது அவரவர் சொந்த உரிமை என்ற கருத்தைக் கொண்டவர்கள் நாங்கள் அதனால்தான் நாங்கள் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக நிற்கின்றோம். தில்லையிலே கனகசபையில் யார் ஏறி பாட வேண்டும் என்பதில்தான் தில்லை பிரச்சினை எழுகிறது. இந்திய அரசியலைப்பின் சட்டப்பிரிவு 25, 26 என்பது சாதியைப் பாதுகாக்கிறது. அதனால்தான் அதை நாங்கள் எறிக்கிறோம் என்று பெரியார் சிறை செல்லும் போராட்டத்தை நடத்தினார். கருவறை முதல் கல்லறை வரை எங்கெல்லாம் உரிமை மறுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் போராடுவதை கொள்கையாகக் கொண்டவர்கள் நாங்கள். சாதியை சொல்லி இலட்சுமி பாட அனுமதிக்காததால் தீண்டாமைக்கு எதிரானப் போராட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொள்வோம்.” என்று பேசினார்.
தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன் அவர்கள் தனது உறையில், “ஹிஜாப் அணியலாமா என்பது அந்தப் பெண்ணின் உரிமை. முஸ்லீம் பெண்களின் கல்வியை தடை செய்யவே ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் ஹிஜாப் அணிய கூடாது என்று தடை விதிக்கிறது. பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். இந்த ஆட்சியில் தீட்சிதர்களுக்கு முடிவு கட்டவில்லையென்றால் எந்த ஆட்சியில் முடிவு கட்ட முடியும்” என்று பேசினார்.
இ.க.கட்சி (மா-லெ) ரெட் ஸ்டார், அமைப்பின் மாநில அமைப்புச் செயலாளர், தோழர் கார்க்கி வேலன் தனது உரையில், “தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போதும் வணிக சிலிண்டரின் விலை ரூ.109 விலை உயர்த்தி உள்ளது ஒன்றிய அரசு. வாக்களித்த மக்களுக்கு கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு பரிசாக வழங்கப்படும் சூழலில்தான் உள்ளோம். நாம் ஓட்டுபோட்டுதான் கட்சிகள் ஜெயிக்கிறது என நினைத்துக் கொள்கிறோம்.
முதலாளிகளுக்கு அடிவருடிகளாக யார் வேலை செய்கிறார்களோ அவர்கள்தான் ஆட்சியில் அமர்த்தப்படுகிறார்கள். முதலாளிகளின் அனைத்து திட்டங்களையும் பாஜக தங்குதடையின்றி அமல்படுத்தும் என்பதற்காகவே அவர்களுக்கு ஆட்சி வழங்கப்படுகிறது. தஞ்சாவூரில் லாவண்யா மரணத்தை மதக் கலவரமாக்க துடிக்கிறது பாஜக அரசு. தில்லை கோயில் 2008-ல் தீட்சிதர்களுக்கு சொந்தம் இல்லை என்று தீர்ப்பு வந்தது. அப்போது அங்கு உண்டியல் வைக்கப்பட்டபோது வருடத்திற்கு ஒன்றரை கோடி வருமானம் வந்தது.
பாஜகவிற்கும் பார்ப்பனியத்துக்கும் எதிராக தமிழ்நாட்டில் இருந்துதான் முதலில் எதிர்ப்பு வரும். நீண்ட நெடிய மக்கள் சொத்து தனி நபர்களால் சூரையாடப்படுவதை எதிர்த்து நாம் தொடர்ந்து போராடுவதன் மூலம் வெற்றி காண்போம்” என்று பேசினார்.
புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர் சீராளன் அவர்கள் தனது உரையில், “பாபர் மசூதியை இடித்து பார்ப்பன கும்பல் தனது சொந்தம் மாற்றிக் கொண்டது. ஒரு காலத்தில் காளிக்கு சொந்தமானது நடராஜர் கோயில். நடனப் போட்டியில் காளியை தோற்கடித்து நடராஜன் வலதுகாலைத் தூக்கி காட்டியதால் காளி தலை குனிந்து தனது இடத்தை மாற்றிக் கொண்டு போய்விட்டார். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் விஷ்ணுவின் சிலையை அகற்றி நடராஜனை மட்டும் நிறுவினர்.
சட்டப்பிரிவு 26-ஐ வைத்துக்கொண்டு நாங்கள் தனித்த பிரிவினர் என்று கூறி தில்லையை தங்கள் சொத்தாக வைத்துக் கொண்டுள்ளனர் தீட்சதர்கள். சுப்ரமணியசுவாமி தில்லைக்கு யாரும் சொந்தம் கொண்டாடவரவில்லை இது தீட்சதர்கள் சொத்து என்கிறார். 8 கோடி மக்கள் கேட்கிறோம் இது எங்கள் சொத்து. நாங்கள் உரிமை கோருகிறோம். தில்லை தமிழகத்தின் 8 கோடி மக்களுக்கான சொத்து எனவே தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்” என்று பேசினார்.
தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் தோழர் மகிழன் தில்லை கோயில் தமிழர்களின் சொத்து என்பதை வலியுறுத்தி பேசினார். மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் தோழர் சேல் முருகன் அவர்கள் தனது உரையில், “ஹிஜாப் அணியத் தடை தில்லையில் தமிழுக்கு தடை. ஒரு இடத்தில் மதத்தைப் பாதுகாக்கிறான்; மற்றொரு இடத்தில் மதத்தின் உரிமையை மறுக்கிறான். ஹிஜாப் வந்த பிறகுதான் முஸ்லீம் பெண்கள் கல்வி கற்க வருவதாக முதலாளித்துவ பத்திரிகைகளே கூறுகின்றனர். நாட்டின் பொருளாதார நெருக்கடி இருக்கும்போது மக்களை தூண்டி மோதிக்கொள்ள செய்வதற்காகதான் ஹிஜாப் தடை என்ற பிரச்சினையை கிளப்புகிறார்கள்.
தீட்சதர்களுடைய சொத்து அவருடைய பயன்பாட்டிற்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று சட்டம்போட்டு பாதுகாக்கப்படுகிறது. மக்கள் பயன்பாட்டிற்கு இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி, கல்லூரிகள் வைத்து கார்ப்பரேட் இணையாக சம்பாதிக்கிறார்கள். அவர்கள் ஒன்றும் சேவைத்துறை நடத்தவில்லை. அரசமைப்புச் சட்டம் 25, 26 சிறுபான்மை மக்கள் உரிமைகளை முடக்குகிறது. ஹிஜாப்பில் இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சொன்ன நீதிமன்றம்தான் தில்லையில் தீட்சிதர்களை பாதுகாக்கிறது. ஆன்மீகத்தில் மொழி உரிமைக் காலங்காலமாக மறுக்கப்பட்டு வருகிறது. தமிழ் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம்தான் ஆதிக்கத்தில் உள்ளது. இதனை எதிர்த்துப் போராடி தமிழை அதிகாரத்திற்கு கொண்டுவர வேண்டும்” என்று பேசினார்.
மக்கள் அதிகாரத்தின் மாநிலச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள் தனது உரையில், “தில்லை தீட்சிதர்களின் சொத்து என்று நிரூபிக்க அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று 2008-ல் உயர்நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. மன்னராட்சி காலத்தில் மக்களுடைய சொத்திலிருந்து கட்டப்பட்டதே தில்லைக் கோயில். இது அரசிற்கு சொந்தம். ஆர்.எஸ்.எஸ் – பாஜக கேட்கலாம் இந்து கோயில்கள் மட்டுமே ஏன் அரசுடமையாக்க வேண்டும் என்று? சர்ச், மசூதி போன்றவைகள் அவர்களே சொந்த செலவில் கட்டியது.
மன்னர் ஆட்சி முடிந்துவிட்டது. அந்த அடிப்படையில் அரசாங்கம்தான் இதனை நிர்வகிக்க வேண்டும். சிற்றம்பல மேடையில் பாடலாம் என சட்டம் போட்ட பின்பும் சிவனடியார் ஆறுமுகசாமி அங்கு பாடுவதற்கு தீட்சிதர்கள் தடையாக இருந்தனர். சட்டத்தை அமல்படுத்த முடியாத நிலையே பார்ப்பனர்களுக்கு உள்ளது. வக்கீல், வழக்கு தொடுத்தவர்கள், உழைக்கும் மக்கள் சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டும்; ஆனால், பார்ப்பனர்கள் நீதிமன்ற தீர்ப்பிற்கு கட்டுப்படமாட்டார்கள். அரசு கையில் எடுத்து நடத்த சட்டமியற்ற வேண்டும். அதனை மக்கள் நடைமுறைப்படுத்த நாம் துணை நிற்போம்” என்று பேசினார்.