கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து விமர்சித்து வெளியிட்ட காணொலியைப் பயன்படுத்தி அந்த சேனலையே இந்துத்துவக் கும்பல் முடக்கியது நினைவிருக்கலாம். குறிப்பாக இது போலீசின் உதவியுடன் கன கச்சிதமாக நிறைவேற்றப்பட்டது.
தமிழர் பண்பாட்டின் மீது தாங்கள் தனிக்காதல் கொண்டவர்கள் என்பதாகக் காட்டிக் கொள்ள இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டது இந்துத்துவக் கும்பல். ’தமிழ்க்’ கடவுள் முருகனை ‘திராவிட’ நாத்திகவாதிகள் அவமதித்துவிட்டதாகக் கூறி ஒரு கொந்தளிப்பைக் காட்ட சங்க பரிவாரக் கூட்டம் எத்தனித்தது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பாஜக-வின் தமிழகத் தலைவர் முருகன், திடீரென ஒரு அறைகூவல் விடுத்தார். அதாவது ஆகஸ்ட் 9-ம் தேதி ஞாயிறு அன்று மாலை 6.01 மணிக்கு அனைவரும் அவரவர்களது வீட்டில் இருந்து கொண்டே வேல் அல்லது முருகன் (கடவுள்) படத்தை வைத்துப் பூஜை செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
கொரோனா பெருந்தொற்றில் மக்களின் இழந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க ஒரு நடவடிக்கையோ, போராட்டமோ நடத்தாத பாஜக மற்றும் சங்க பரிவாரக் கும்பலின் இந்த ‘அறைகூவல்’ மக்களுக்கு ஆத்திரத்தை மட்டுமே ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் தங்களது ‘கந்த சஷ்டி இயக்கம்’ வெற்றி பெற்றதாக கூறிக் கொண்டது பாஜக. அதற்குச் சான்றாக பாஜக-வின் தலைவர்களும், அதிமுக தலைவர்களும் தாங்கள் வேலோடும் முருகன் படத்தோடும் நிற்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
படிக்க :
♦ புராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும் !
♦ பாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் !
பண்டைய தமிழகத்தின் குறிஞ்சி நிலத் தலைவனான முருகனை வழிபடும் போக்கை சுவீகரித்துக் கொண்ட பார்ப்பனீயம், முருகனுக்கு ஒரு புதிய கதையைக் கட்டி ஸ்கந்தன் என்றும் சுப்ரமணியன் என்றும் பெயரிட்டு முருக வழிபாட்டை பார்ப்பனமயமாக்கிக் கொண்டது. முருகனின் துணைவியாக அறியப்பட்ட வள்ளியை ஓரம்கட்ட தெய்வானையைக் கொண்டுவந்து இறக்கிப் புராணப் புழுகுகளைக் கட்டிவிட்டது தனிக் கதை !
மக்களின் மத நம்பிக்கையை பார்ப்பனியமயமாக்க முருகனை சுவீகரித்துக் கொண்டாலும் பார்ப்பனர்கள் வீட்டில், விஷ்ணுவின் அவதாரங்களுக்கும், சிவனுக்கும், பிள்ளையாருக்கும் தான் முதல் மரியாதையே ஒழிய முருகனுக்கு என்றும் இருந்ததில்லை. பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த பாஜக, அதிமுக தலைவர்கள் நேற்று (09-08-2020) வெளியிட்டுள்ள முருகன் வழிபாட்டுப் புகைப்படங்களே அதற்குச் சான்று!
மேலே உள்ள புகைப்படங்களில் பாஜகவின் எஸ்.வி. சேகர், எச். ராஜா ஆகியோரின் பூஜையறையைப் பாருங்கள். கடவுளர்களுக்கே வர்ணாசிரம தர்மப்படிதான் உரிய இடம் வழங்கப்பட்டிருக்கும். குறிப்பாக எச்.ராஜாவின் பூஜை அறையின் ‘மேல்’ தட்டில், “மகா பெரியவா”, திருப்பதி வெங்கடாசலபதி, லெட்சுமி, பிள்ளையார், கிருஷ்ணர், நடராஜர் உள்ளிட்ட கடவுளர் படங்களும், ‘கீழ்’ தட்டில் மாரியம்மன், பராசக்தி உள்ளிட்ட கடவுளர்களும், தரையில், கட்சியின் செயல்திட்டத்துக்காக நிறுத்திவைக்கப்பட்ட வேலும் இடம் பெற்றிருக்கிறது. கடவுளர்களேயானாலும் பார்ப்பனியத்தின் படிநிலைக்கு உட்பட்டவர்கள்தான்.
‘சவுண்டு ஸ்பெசலிஸ்ட்’ திருப்பதி நாராயணன், அதிமுகவின் மைத்ரேயன் ‘ஐயங்கார்’ உள்ளிட்ட அனைவரின் வீட்டு பூஜையறையிலும் முருகனின் படம் எதுவும் இல்லை என்பதையும் அவசரத்துக்காக காலண்டரில் இருந்து கிழித்துவந்த படமும், அவசரமாக ஆர்டர் செய்யப்பட்ட வேலும் தான் அதற்கு சான்று.
அவசர அவசரமாக தயாரிக்கப்பட்ட செட்டப்புகளில், அவசர அவசரமாக வாங்கப்பட்ட போட்டோக்களைக் கொண்டே பூஜைகள் செய்யப்படுகின்றன. எச்.ராஜா, எஸ்.வி.சேகர் வீட்டுப் பூஜையறையில் மகா பெரியவாளின் அருகில் ஒரு சிலையாகவோ, படமாகவோ இடம்பெறக் கூட முருகனுக்கு பாக்கியதையில்லை. இதுதான் முருகப் பெருமான் மீதான பாஜகவினரின் ‘திடீர்க் காதலின்’ இலட்சணம். நியாயப்படி அவர்களின் ‘பாஷையில்’ சொல்வதானால் இதை நாடகக் காதல் என்றுதானே சொல்லமுடியும். ஆனால் ஒன்று ! பூஜை அறையில் முருகனைச் சேர்த்துக் கொள்ள வேண்டிய ‘அவல நிலைக்கு’ பாஜக பார்ப்பனர்களைத் தள்ளிய பெருமை தமிழ்நாட்டையே சேரும் !
தமிழகத்தில் மக்களை மதரீதியாக தங்கள் பக்கம் அணி சேர்க்க மீண்டும் மீண்டும் முயற்சித்து வரும் பாஜக-விற்கு தமிழக ஊடகங்களும் ஆதரவாக இருந்து வருகின்றன. இன்றைய ‘தமிழ் இந்து’ நாளிதழில், இது குறித்து அதற்கே உரிய இந்துத்துவ நரித்தனத்தோடு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
”கந்த சஷ்டி கவசத்தை பெருமைப் படுத்த வீடுதோறும் கந்தவேல் பூஜை” என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில் யூடியூப் சேனல் ஒன்று தமிழ் கடவுள் முருகனையும், கந்த சஷ்டிக் கவசத்தையும் அவதூறாகப் பேசியதால் தமிழகத்தில் உள்ள முருக பக்தர்கள், காவடிக் குழுக்கள், பாதயாத்திரைக் குழுக்கள் ஆகியோர் சார்பில் தான் 9-ம் தேதி மாலை 6 மணிக்கு கந்த சஷ்டிக் கவசம் படிக்குமாறு அறைகூவல் விடுக்கப்பட்டதாம். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பலரும் இந்த பூஜையை நடத்தினராம். இந்த செய்தியோடு முருகன் படத்தைக் கும்பிடும் ஒரு சிறுவனின் படத்தையும் வெளியிட்டு, வாசகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது சாதாரண மக்கள் இதைத் தங்களுக்கான பிரச்சினையாக கையிலெடுத்துக் கொண்டு தாங்களே முன் வந்து அறைகூவல் விடுத்து கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு எதிராகக் குரல் கொடுத்திருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
மற்றொரு செய்தியில், பாஜக அமைப்பினருடன், ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் இந்த பூஜையை நடத்தியது குறித்து விலாவாரியாக ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. ‘தமிழ் இந்து’ நாளிதழைப் பொறுத்தவரையில் ஆர்.எஸ்.எஸ்.-ன் அதிகாரப் பூர்வ நாளிதழாக அறிவிக்கப்படாதது ஒன்றுதான் பாக்கி. அந்த அளவிற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்க பரிவாரக் கும்பலின் செயல்திட்டத்தின் அங்கமாக மாறியிருக்கிறது.
கொரோனாவை விடக் கொடூரமான இந்தக் கிருமிகளை அடையாளம் கண்டு விரட்டியடிப்பதுதான் காலத்தின் அவசியத் தேவையாக இருக்கிறது.
நந்தன்


















காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து. கடந்த ஆகஸ்ட் 12, 2019 அன்று ஈத் பண்டிகைக்கான தொழுகை முடித்தபின், ஸ்ரீநகரில் போராட்டத்தில் ஈடுபடும் காஷ்மீரிகள். இந்நிகழ்வில் “சுதந்திரம் வேண்டும்” மற்றும் “இந்தியாவே திரும்பிப் போ!” என போராட்டக்காரர்கள் முழங்கியதாக நேரில் கண்டவர்கள் கூறினார்கள்.
சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீரில் இந்தியப் படைகளின் தாக்குதல் தொடர்கதையாகிப் போனது. இந்நிலையில் மருத்துவமனைகள் போலிசின் தீவிர கண்காணிப்புக்குள்ளான சூழலில், கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெல்லட் குண்டு தாக்குதலுக்கு ஆளாகி, அருகாமையில் உள்ள ஒரு விட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நபர்.
கடந்த ஆகஸ்ட் 16, 2019 அன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற போராட்டத்தின் போது, தனது கைகளில் “சுதந்திரம் வேண்டும்”, “சட்டப்பிரிவு 370 -ஐ அமல்படுத்து” என்ற முழக்கத்தை மெகந்தி மூலம் எழுதி காண்பிக்கும் காட்சி.
ஸ்ரீநகரில், இந்தியப் படையினரின் கண்ணீர் புகை குண்டு தாக்குதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள சிதறி ஓடும் காஷ்மீரிகள். நாள் – செப்டம்பர் 6, 2019
இந்திய தேசியவாதிகளால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொது முடக்கம் மற்றும் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு மொத்த காஷ்மீரும் சிறைவைக்கப்பட்டது. அதனைக் கண்டித்து வீதியில் இறங்கிப் போராடும் பெண்கள்.
கடந்த அக்டோபரில் ஒவ்வொரு அங்குலமும் இந்தியப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த சூழலில் ஒரு சிறுமி சைக்கிளில் செல்லும் காட்சி.
ஸ்ரீநகரில் பத்திரிகையாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தகவல் தொடர்பு மையத்தில் அவரவர் தொலைபேசிகளில் உள்ள இணைய வசதியைப் பயன்படுத்தும் காட்சி. கடந்த மார்ச் 4, 2020-ல் தான் பல மாதங்களுக்குப் பிறகு இணைய சேவைகள் காஷ்மீரில் அனுமதிக்கப்பட்டதன. அதிலும் தற்போது வரை 4-ஜி சேவைகள் முடக்கப்பட்ட நிலையே தொடர்கிறது.

இந்த வகையில் சிலருக்கு ஆக்சிஜன் தேவைப்படும் நிலை இருக்கும். முறையாக ஆக்சிஜன் வழங்கி ரத்த ஆக்சிஜன் அளவுகளை பராமரிக்காவிடில் இதயத்துக்கு சுத்தமான ரத்த ஓட்டம் கிடைக்காமல் இதயம் சார்ந்த பிரச்சனைகள் உருவாகக்கூடும்.


ஆனால் ஏற்கெனவே வாங்கிய கல்விக்கடன், திருமணக் கடனுக்காக நெய்வேலி கனரா வங்கி கடந்த ஒரு வருட காலமாக ஓய்வூதிய பணத்தைத் தராமல் கடனுக்காக ஈடுசெய்துகொள்கிறது. நேரில் சென்று மேனேஜரை பார்த்து தம்பதியினர் பேசியுள்ளார்கள். “முழு கடனையும் கட்டு! பிறகு மத்ததை பேசி கொள்ளலாம்” என ஈவிரக்கம் இல்லாமல் பேசியுள்ளார்.
ஜூலை 1992-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் கல்யாண் சிங் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் “சிங்துவார்” எனப்படும் முதன்மை நுழைவாயிலுக்காக திட்டமிடப்பட்ட இடத்தில் அடிக்கல் நாட்டும் விழாவிற்காக கூடியிருந்த கர சேவகர்கள்.
ஜூலை 1992-ம் ஆண்டு அந்த நிலத்தை சீரமைத்து தயாரித்துக் கொண்டிருந்த போது மனித எலும்புகள் கிடைத்தன. வருவாய்துறை ஆவணப் பதிவேடுகளில் அந்த இடம் முசுலீம்களின் இடுகாடு என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
அன்றைய மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் 03, டிசம்பர் 1992 அன்று புது டெல்லியிலிருந்து லக்னோவுக்குக் கிளம்புகையில் ரயில் நிலையத்தில் இருந்து அன்றைய பிரதமர் நரசிம்மராவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அயோத்தியின் நிலைமைகளைக் கண்காணிக்க அங்கு சென்றார்.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் டிசம்பர் 5. 1992 அன்று ஒரு கர சேவகர், “நாங்கள் ரத்தத்தைக் கொடுப்போம். நாங்கள் உயிரையும் கொடுப்போம்” என்று ஒரு சுவற்றில் எழுதிக் கொண்டிருக்கிறார்.
ராம ஜென்மபூமி இயக்கத்தோடு ஒருங்கிணைந்த பாபர் மசூதி இடிப்புக்கு ஒரு நாள் முந்தைய ஒத்திகைக்கு மத்தியில், ஒரு உத்தரப் பிரதேச போலீசுக்காரர் கரசேவகர்களுடன் இணைந்து “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிடுகிறார்.
டிசம்பர் 5, 1992 அன்று சம்மட்டிகளோடும் கடப்பாரைகளோடும் வரிசையில் நிற்கும் கரசேவகர்கள்.
முகமூடி அணிந்த ஒரு நபர், ஒத்திகையின் போது கரசேவகர்களுக்கு வழிகாட்டுதல் கொடுக்கிறார்.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முந்தைய நாள் இரவு.
உச்சநீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட குறியீட்டுக் கரசேவைக்காக, டிசம்பர் 6, 1992 அன்று சரயு நதியில் இருந்து நீரும், மணலும் எடுத்து வரும் கர சேவகர்கள்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளன்று காலையில், பாஜக தலைவர் எல்.கே. அத்வானி ராம ஜென்மபூமி இயக்கத்தின் தலைவர்களை சந்திக்கிறார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது பல்வேறு பாஜக தலைவர்கள் அந்த இடத்தில் இருந்தனர். இடமிருந்து வலமாக, அன்றைய பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி, எல்.கே அத்வானி மற்றும் விஜயராஜே சிந்தியா ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர்
ராம் கதா கஞ்ச் எனுமிடத்தில், விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் (நின்று கொண்டிருப்பவர்), உமா பாரதி (சிங்காலுக்கு வலப்புறம் நிற்பவர்) ஆகியோர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தனர்.
பாபர் மசூதியை இடிக்கும் கர சேவகர்கள்.
புது டெல்லியில் அத்வானி கைது செய்யப்பட்ட போது எடுத்த படம். அவருக்கு வலப்புறம் அவரது மனைவி கம்லா அத்வானி இருக்கிறார். முன்னால் நிற்பது இன்றைய பிரதம மந்திரி நரேந்திர மோடி







