Sunday, August 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 275

காஷ்மீர் – பண்டிட் குடும்பத்தை காப்பாற்றிய சுபைதா பேஹம் !

ள் நடமாட்டம் இல்லாத அந்த சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் அந்தப் பெண். அருகிலேயே அவளது கணவர். தூக்க முடியாமல் ஒரு பெரிய மூட்டையை தூக்கி தோளில் சுமந்தபடி, அந்தப் பெண்ணுக்கு துணையாக வந்து கொண்டிருந்தார்.

இவர்கள் இருவரைத் தவிர அந்த சாலையில் ஒரு ஈ, காக்கா கூட இல்லை .

காரணம் ஊரடங்கு உத்தரவு. கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டன; போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது. வீட்டிலிருந்து யாராவது தெருவுக்கு வந்தால் விரட்டி அடித்தார்கள் போலீஸ்காரர்கள். காஷ்மீர் தலைநகரமான ஸ்ரீநகரில் கடந்த சில காலம் முன் நடந்தது இது. ( 2016 ஜூன் )

மாதிரிப் படம்

பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு முக்கியமான தலைவர் கொல்லப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. இந்துக்களும் முஸ்லிம்களும் மோதிக் கொண்டார்கள். உடனே போடப்பட்டது ஊரடங்கு உத்தரவு.

சந்தேகப்படும்படி யாராவது கண்ணில் பட்டால் உடனே சுட்டுத் தள்ள உத்தரவு !
ஆனாலும் அந்த கணவனும் மனைவியும், ஆள் அரவமற்ற சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

தடுத்தி நிறுத்தினார்கள் போலீஸ்காரர்கள்: “யார் நீங்கள் ? எங்கே போகிறீர்கள் ?”

அந்தப் பெண் பதில் சொன்னார் : “ஜவகர் நகருக்கு ?”

“ஜவகர் நகருக்கா ? உங்கள் வீடு அங்கேயா இருக்கிறது ?”

“இல்லை. இங்கே ஸ்ரீநகரில்தான் இருக்கிறோம். ஒரு முக்கியமான வேலையாக ஜவகர் நகருக்கு போகிறோம்.”

“முக்கியமான வேலையா ? இந்த நெருக்கடியான நேரத்திலா ? அதுவும் நீங்கள் போகும் ஜவகர் நகர் கலவர பூமி. இந்த நேரத்தில் அங்கு போக உங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது ? அது இருக்கட்டும். இங்கிருந்து ஜவகர் நகர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது தெரியுமா?”

அந்த கணவன் சொன்னார் : “தெரியும். பல கிலோ மீட்டர்கள் போக வேண்டும்.”

“பஸ் ஆட்டோ எதுவும் ஓடவில்லை. எப்படி நடந்து போவீர்கள் அவ்வளவு தூரம் ? அதுவும் இவ்வளவு பெரிய மூட்டையை தூக்கிக் கொண்டு…”

“போய் விடுவோம்.” கணவனும் மனைவியும் சேர்ந்தே சொன்னார்கள்.

படிக்க:
♦ காஷ்மீரிகளின் நம்பிக்கையும் இந்தியாவின் துரோகமும் !
♦ குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் !

இவர்கள் பிடிவாதத்தை கண்டு கோபம் கொண்டார் அந்த போலீஸ்காரர் : “சந்தேகப்படும்படி யாராவது சாலையில் போனால் கண்டவுடன் சுடச் சொல்லி எங்களுக்கு உத்தரவு. அது தெரியுமா உங்களுக்கு ?”

“தெரியும்.”

“அது மட்டும் அல்ல. இந்துக்களும் முஸ்லிம்களும் அங்கங்கே மோதிக் கொண்டிருக்கிறார்கள். அந்த கலவரக்காரர்கள் கண்ணில் பட்டால் உங்கள் கதையையே முடித்து விடுவார்கள்.”

அந்தப் பெண் உறுதியாக சொன்னார் : “அதுவும் தெரியும். ஆனாலும் நாங்கள் போய் விடுவோம். போய்த்தான் ஆக வேண்டும். மிக மிக முக்கியமான வேலை.”

அந்தப் பெண் நடக்க ஆரம்பித்தார். கணவனும் மூட்டையை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு மனைவியை பின் தொடர்ந்தார் .

இடையில் பல இடங்களில் போலீஸ் அவர்களை மறித்தது. மீண்டும் மீண்டும் எச்சரித்தது. அதையும் மீறி அந்த கணவனும் மனைவியும் வெறிச்சோடிய அந்த சாலைகளில் பகல் முழுவதும் நடந்தார்கள் ; பல கிலோ மீட்டர் தூரத்தை கடந்தார்கள். ஒரு வழியாக ஜவஹர் நகரை அடைந்தார்கள்.

எல்லா வீடுகளின் கதவுகளும் இறுக்கமாக மூடப்பட்டிருந்தன. இந்த தம்பதிகள் தேடி வந்தது பண்டிட்ஜி வீடு. அது அடுத்த தெருவில்தான் இருக்கிறது. தெருவை நெருங்கினார்கள்.

அதற்கு முன் ஒரு கடுமையான குரல் அவர்களை அதட்டியது : “நில்லுங்கள்.”

திரும்பிப் பார்த்தார்கள். காவல்துறை அதிகாரியுடன் சேர்ந்து ஒரு பெரிய போலீஸ் பட்டாளமே அங்கு நின்றது.

“உங்களை கைது செய்யப் போகிறோம்.”

“எதற்காக ?”

“உங்கள் தோளில் இருக்கும் பெரிய மூட்டைக்குள் என்ன ஆயுதங்களை வைத்திருக்கிறீர்கள் ? அதை கீழே இறக்குங்கள் .”

இறக்கினார்கள். போலீஸ்காரர்கள் அதை எச்சரிக்கையுடன் திறந்து பார்த்தார்கள். திகைத்துப் போனார்கள். எல்லாமே உணவுப் பொருட்கள்.

“யாருக்கு இதை கொண்டு போகிறீர்கள் ?”

அந்தப் பெண் சொன்னார் :

“இந்த ஜவகர் நகரில் இருக்கும் பண்டிட் வீட்டுக்கு ! ஏன் என்பதையும் நீங்கள் கேட்காமலேயே சொல்லி விடுகிறேன்.”

நடந்ததை அப்படியே போலீசுக்கு எடுத்துச் சொன்னார் அந்தப் பெண்.

அதிகாலையிலேயே ஒரு போன் வந்தது ஸ்ரீநகரில் இருக்கும் இந்தப் பெண்ணுக்கு !

பேசியவர் ஜவகர் நகரில் இருக்கும் பண்டிட்டின் மனைவி. இருவரும் நெருங்கிய தோழிகள். ஒரே ஸ்கூலில்தான் டீச்சராக வேலை செய்கிறார்கள். அது சரி, போனில் பண்டிட்டின் மனைவி என்னதான் சொன்னார் ?

இதோ, அந்த பரிதாப கதை :

“ஹலோ, இங்கே ஜவகர் நகரில் நிலைமை ரொம்பவும் மோசமாக இருக்கிறது . கடைகள் அடைக்கப்பட்டு பலநாட்களாகி விட்டன. வெளியில் செல்ல முடியவில்லை. வீட்டிலும் உணவுப் பொருட்கள் எதுவுமே இல்லை. பாட்டியம்மா வேறு படுத்த படுக்கையாக இருக்கிறார்கள். தொலைபேசி வேறு வேலை செய்யவில்லை. இப்போதுதான் இணைப்பு கிடைத்திருக்கிறது. நான்கு நாட்களாக நாங்கள் யாரும் எதுவும் சாப்பிடவில்லை. உயிரை கையில் பிடித்தபடி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இன்றும் பட்டினியாகத்தான் இருக்க வேண்டும் போல தெரிகிறது. நாளை நாங்கள் உயிரோடு இருப்பது கூட சந்தேகமாக…” பேசிக் கொண்டிருக்கும்போதே போன் கட் ஆகி விட்டது.

சுபைதா பேஹம் – பண்டிட் குடும்பத்தாருடன்.

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தொலை தொடர்பு இணைப்புகள் மீண்டும் துண்டிக்கப்பட்டு விட்டன. இனி அவர்களோடு பேசுவது இயலாத காரியம். இங்கே ஸ்ரீநகரில் இந்தப் பெண்ணும், அவரது கணவரும் தவித்தார்கள்; துடித்தார்கள். “நான்கு நாட்களாக பட்டினியா ? அந்த பண்டிட்டின் குடும்பத்துக்கு எப்படிஉதவுவது ?”

ஒரு நொடி கூட யோசித்து நேரத்தை கடத்தாமல் உடனே ஜவகர் நகருக்கு புறப்பட்டு விட்டார்கள் கணவனும் மனைவியும்.

வீட்டில் இருந்த கோதுமை, அரிசி, பருப்பு, காய்கறிகள், மசாலா பொருட்கள். எல்லாவற்றையும் பெரிய மூட்டையாக கட்டி தன் கணவரின் தலையில் வைத்தார் அந்தப் பெண். பஸ், ஆட்டோ எதுவும் இல்லாததால், பல கிலோ மீட்டர்கள் நடந்தே வந்து… “இப்போது ஜவகர் நகருக்கு வந்திருக்கிறோம்” இப்படி போலீஸ்காரர்களிடம் பொறுமையாக சொல்லி முடித்தார் அந்தப் பெண்.

படிக்க:
♦ காஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை!
♦ ஆர்.எஸ்.எஸ்-க்கு வலுசேர்க்கும் இசுலாமிய அமைப்புகளின் கவனத்திற்கு !

கலங்கி விட்டார் அந்த காவல்துறை அதிகாரி : “ஒரு நட்புக்காக உயிரை பணயம் வைத்து பல கிலோமீட்டர்கள் நடந்தே வந்திருக்கிறீர்கள். அதுவும் இந்த மூட்டையை சுமந்து கொண்டு ! பாராட்டுகிறேன் அம்மா. சரி, உங்கள் குடும்ப நண்பர் பண்டிட் வீடு எங்கே இருக்கிறது ?”

“அடுத்த தெருவில்தான்.”

“வாருங்கள். நானே பத்திரமாக வீடு வரை வருகிறேன்.”

அந்த காவல்துறை அதிகாரியே சென்று பண்டிட் வீட்டு கதவை தட்டினார் .
கதவு மெல்ல திறந்தது. உள்ளே இருந்து வந்த பண்டிட்டும் அவரது மனைவியும் , இந்த தம்பதிகளை பார்த்தவுடன் ஆச்சரியத்தில், “ அட கடவுளே, இது என்ன ? இவ்வளவு தூரம் எப்படி வந்தீர்கள் ? முதலில் உள்ளே வாருங்கள்.”

தோழிகள் இருவரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள் ; கண்ணீர் வடித்தார்கள்.

வாசலில் நின்ற காவல்துறை அதிகாரி கூட தன் கண்களை துடைத்துக் கொண்டார் : “சரியம்மா, முதலில் சாப்பாடு தயார் செய்து சாப்பிடுங்கள். நான் வருகிறேன்.”

“நன்றி சார்.”

“பை தி பை, நான் உங்கள் பெயரை தெரிந்து கொள்ளலாமா மேடம் ?”

அந்த ஸ்ரீநகர் பெண் சிரித்தபடி சொன்னார் : “சுபைதா பேகம்.”

ஆம். இந்து முஸ்லிம் கலவரம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த அந்த நேரத்தில், பசியால் துடித்துக் கொண்டிருந்த பண்டிட் என்ற ஒரு இந்து மனிதரின் குடும்பத்துக்கு, பல கிலோமீட்டர் தூரம் நடந்து கடந்து, தேடிச் சென்று உணவு கொடுத்தது சுபைதா பேகம் என்ற ஒரு முஸ்லிம் குடும்பம்தான் !

இது கதையல்ல. ‘இந்தியா டுடே’யில் வந்த செய்தி. இப்படிப்பட்ட மனித நேயம், மத நல்லிணக்கம் கொண்ட மனிதர்கள் இருக்கும்வரை, அந்த ஆண்டவனே வந்தால் கூட இந்தியாவில் மதப் பிரிவினையை உருவாக்க முடியாது.

வாழ்த்துக்கள்
எங்கள் இனிய சகோதரி
சுபைதா பேகம் அவர்களே !

நன்றி : John Durai Asir Chelliah ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

செய்தி ஆதாரம் : இந்தியா டுடே

disclaimer

ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் !

ஜனவரி 8 2020, வேலை நிறுத்தத்தை அரசியல் போராட்டமாக முன்னெடுப்போம் ! – புதுச்சேரியில் தொழிற்பேட்டைப் பிரச்சாரம்

மோடி அரசின் ஆறாண்டு கால ஆட்சியில் நீம் (NEEM), FTE திட்டங்களை அமல்படுத்தி தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, பணி நிரந்தர உரிமைகளை ஒழித்துக் கட்டியும், தற்போது; தொழிலாளர் சட்டத் திருத்தங்களை அமல்படுத்தி வருவதன் மூலமும் ஒட்டுமொத்த தொழிலாளர் சட்டங்களையும் ஒழித்து கார்ப்பரேட்டுக்களுக்கு அடிமைச் சேவகம் செய்து வருகிறது.

பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, வறுமை, பசி, பட்டினிச் சாவுகள் என மக்கள் கொத்து கொத்தாக மடிகின்றனர். மறுபுறம், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், தலித் – இஸ்லாமியர் மீதான கும்பல் படுகொலைகள் என சமூகமே அமைதியற்று உள்ளது.

‘மயான அமைதி’யை நிலைநாட்டுவதற்காக, ஊபா, என்.ஐ.ஏ. என ஆள்தூக்கி பாசிச சட்டங்களையும், குடி உரிமையைப் பறிக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் வரை மக்கள் எதிர்ப்பையும் மீறி, ஜனநாயக விரோதமான முறையில் மக்கள் மீது திணித்து வருகிறது.

இவைகளை எதிர்த்து நாடெங்கிலும் பல்வேறு வகைகளில் நடத்தப்படும் மாணவர் – தொழிலாளர் – வணிகர் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் போராட்டங்களை கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிரான போராட்டமாக மாற்றும் வகையில், ஜனவரி 8 அகில இந்திய நிறுத்தத்தை அரசியல் எழுச்சிக்கான போராட்டமாக முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக, முக்கிய தொழிற்பேட்டையான திருபுவனை தொழிற்பேட்டை முழுவதும் வேலை நிறுத்தத்தை வலியுறுத்தி; தொழிலாளர்களை அணிதிரட்டும் வகையிலும்; அனைத்து நிறுவன தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்ள வைக்கும் வகையிலும், தொழிற்பேட்டையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

தொழிற்பேட்டையில் வேலை நிறுத்தத்தை அமல்படுத்தக் கூடாது என்ற அடிப்படையில் நிறுவனங்களை இயக்க ஆலை நிர்வாகங்கள் முயற்சி செய்தன. ஆனால், நாம் வேலை நிறுத்தத்தை வலியுறுத்தி ஏற்கனவே பல்வேறு ஆலைத் தொழிற்சங்கத்தினரிடமும், சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்தும் பேசியிருந்தோம். இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் செயல்படவில்லை. சில நிறுவனங்கள், தொழிலாளர்களை காலை 06.00 மணிக்கே வேன்களில் அழைத்து வந்து திருட்டுத்தனமாக இயக்கினர்.

இதற்கு முன்னர், இது போன்ற வேலை நிறுத்தங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அனைத்து நிறுவனங்களையும் வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும் அனைத்து ஷிப்டுகளையும் முழு அளவில் இயக்கி வந்தனர். ஆனால், சென்ற 2018 வருடம் இதே நாளில் நடந்த வேலை நிறுத்தத்தில் பல நிறுவனங்கள், யாருக்கும் தெரியாமல் தொழிலாளர்களை அழைத்து வந்தும், கேட்டில் இன்று விடுமுறை என அறிவிப்புப் பலகையை வைத்தும் ஆலைகளை இயக்கியது.

ஆனால், இந்த வருடம் பல்வேறு மாற்றுக் கட்சி தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்துப் பேசி, இந்த வேலை நிறுத்தத்தின் அவசியத்தை விளக்கும் வகையில் அரங்கக் கூட்டம் நடத்தியதன் விளைவாகவும், இந்தப் பகுதியில் வேலை நிறுத்தத்தைப் பற்றி பிற சங்கங்களையும் பேச வைத்ததன் விளைவாகவும் ஏற்பட்ட நெருக்கடிகளின் காரணமாக பெரும்பான்மையான நிறுவனங்கள் இயங்கவில்லை.

எனினும், ஒரு சில ஆலைகளில் தொழிலாளர்களை திருட்டுத்தனமாக அடைத்து வைத்து இயக்குவதைக் கண்டிக்கின்ற வகையிலும், இந்த வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் கலந்து கொள்ள வேண்டிய அவசியத்தை விளக்கும் வகையிலும் திருபுவனை தொழிற்பேட்டைப் பகுதியில் பேரணியாகச் சென்று பிரச்சாரம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அதன் அடிப்படையில் நமது பு.ஜ.தொ.மு. தலைவர் தோழர் சரவணன் தலைமையில், திருபுவனை அலுவலக வாயிலிலிருந்து பேரணி துவங்கியது. பிரைட் நிறுவனத்தின் வாயிலில் முழக்கமிட்டு பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த சில நிமிடங்களில் அந்தப் பகுதி போலிசு வந்தது. அனுமதி வாங்கவில்லை என்றும், தொழிற்பேட்டைக்கு வெளியில் அமைதியான முறையில் பேசிவிட்டு கலையுமாறு பேசியது போலிசு.

இன்று அகில இந்திய வேலை நிறுத்தம் எனவும், தொழிலாளர் மத்தியில் பேச அனுமதி தேவை இல்லை எனவும், நாங்கள் மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத வகையில் அமைதியான முறையில் பிரச்சாரம் செய்வதாகச் சொன்னோம். எனினும், தனக்கு மேலிடத்திலிருந்து அழுத்தம் வந்து கொண்டிருப்பதாகச் சொல்லி உடனடியாகக் கலையுமாறும், இல்லையெனில் கைது செய்வதாகவும் மிரட்டியது. தொழிலாளர்களிடம் நேரடியாகச் சென்று உங்கள் சங்கம் சொல்வதைக் கேட்டு அவர்கள் பின்னால் போக வேண்டாம் எனவும், மீறிப் போனால் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி வரும் எனவும் மிரட்டிப் பார்த்தது.

தொழிலாளர்கள் அதைப் பொருட்படுத்தாமல், அடுத்த பிரச்சாரத்திற்கு நகர்ந்தனர். தொடர்ச்சியாக, பிப்டிக் தொழிற்பேட்டை நுழைவாயிலில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதற்குள் வழியில் வந்த ஒரு தனியார் பள்ளியின் பேருந்தை மடக்கி வைத்துக் கொண்டு உடனடியாக கைது செய்வதாக அறிவித்து நம்மை, தொழிற்பேட்டை உள்ளே செல்ல விடாமல் தடுத்து அங்கேயே கைது செய்தது போலிசு.

கைது செய்து மண்டபத்தில் அடைத்த பிறகு, தொழிலாளர்களை ஒருங்கிணைத்து இந்தப் போராட்டத்தின் நோக்கத்தையும், அவசியத்தையும் விளக்கிப் பேசப்பட்டது. இதற்கிடையில், திருபுவனை அருகிலுள்ள மதகடிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டியூசி, விசிக, ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களையும் அதே மண்டபத்திற்குக் கொண்டு வந்தது போலீசு.

நமது புரட்சிகர பாடல்களுடன், பிற கட்சியினரின் உரைகள் நிகழ்த்தப்பட்டன. இதற்கிடையில் போலிசின் வழக்கமான நடைமுறைகளை முடித்தவுடன், அனைவரையும் விடுவிப்பதாக முறையாக அறிவிக்காமல், அங்கு வெளியில் நின்றிருந்த தோழர்களிடம் அறிவித்து, கூட்டத்தை கலைக்க முற்பட்டது. நாம் இதை உணர்ந்து, போலிசின் நரித்தனத்தை அம்பலப்படுத்திப் பேசி முறையாக தோழர்கள் மத்தியில் அறிவித்து போராட்டம் முடிக்கப்பட்டது. இப்போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே, நம்மை தொழிற்பேட்டையிலிருந்து அப்புறப்படுத்தி பிரச்சாரத்தை முடக்கிவிட வேண்டும் என்பதையே போலிசு குறியாகக் கொண்டிருந்தது. எனினும், தொடர்ச்சியாகப் போராடி பிரச்சாரங்களை கொண்டு சென்றதன் விளைவாக தொழிலாளர் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்பத்த முடிந்தது.

இது இந்தப் பகுதியில் நடத்தும் போராட்டங்களின் அடுத்த கட்ட வளர்ச்சியாக மாறி உள்ளது. இதன் மூலம் அரசு பாசிசமயமாகி வரும் இன்றைய அரசியல் கால கட்டத்தில், தொழிற்சங்க கூட்டமைப்புக்களை உருவாக்க வேண்டும்.

மேலும், மக்கள் போராட்டங்களை அரசியல் அதிகாரத்திற்கான எழுச்சிகளாக வளர்க்க வேண்டியதும் இன்றைய உடனடி அரசியல் கடமையாகும்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புதுச்சேரி, தொடர்புக்கு: 95977 89801.

***

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் !

“ஜனவரி 8, 2020 வேலைநிறுத்தத்தை அரசியல் போராட்டமாக முன்னெடுப்போம்!” என்கிற முழக்கத்தின் கீழ் தமிழகம் முழுவதும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.

திருவள்ளூர் (மேற்கு )

திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி அருகில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்டத் தலைவர் தோழர் சரவணன் தலைமை உரையாற்றினார், மாநில குழு உறுப்பினர் தோழர் முகிலன் கண்டன உரையாற்றினார்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

திருவள்ளூர் (கிழக்கு)

திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் கும்முடிப்பூண்டி தபால் நிலையம் எதிரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் விகேந்தர் தலைமை தாங்கினார். மாநில இணைச்செயலாளர் தோழர் சுதேஷ்குமார் கண்டன உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கோவை

கோவை மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் தோழர் தேவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தோழர் சி.சரவணகுமார், கொவை மண்டல தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்க இணைச்செயலாளர் தோழர் ஜெகநாதன், கோவை மாவட்ட பொறுப்பாளர் தோழர் லோகநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

வேலூர்

வேலூர் மாவட்டத்தில், மாவட்ட செயலாளர் தோழர் சுந்தர் தலைமையில் மாநில தலைவர் தோழர் அ.முகுந்தன் கண்டன உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஓசூர்

ஓசூர் மாவட்ட ரயில் நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் தலைமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அதன் உண்மையான உள்ளடகத்தில் இருந்து அரசியல் போராட்டமாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்தியுள்ள இந்த ஆர்ப்பாட்டங்கள் தொழிலாளர் மத்தியில் புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தமிழ்நாடு – புதுவை

குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் ! புதிய கலாச்சாரம் ஜனவரி 2020 வெளியீடு

மோடி அரசு டிசம்பர், 2019-ல் கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவுமே கிளர்ந்தெழுந்துள்ளது. இச் சட்டத்தை முசுலீம் மக்கள் மட்டுமே எதிர்ப்பார்கள், இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிடலாம் என மனப்பால் குடித்துக் கொண்டிருந்த சங்க பரிவாரத்தின் கனவில் மண்ணள்ளிப் போட்டது இந்த மக்கள் எழுச்சி.

“தற்போதைய குடியுரிமை திருத்தச் சட்டத்தாலும், தேசிய குடிமக்கள் பதி வேடு திட்டத்தாலும், சட்டவிரோதமாகக் குடியேறிய முசுலீம்களுக்குத்தான் பிரச்சினை, இந்திய முசுலீம்களுக்குப் பிரச்சினை இல்லை’ என சங்க பரி வாரத்தினர் கூறிவருகின்றனர். ஆனால் உண்மையில் இவை இந்தியாவைச் சேர்ந்த பெரும்பான்மை இந்துக்களையும் பாதிக்கக் கூடியவை என்பதை நிரூபித்திருக்கிறது அசாம்.

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் அடிப்படையில் குடி யுரிமை அற்றவர்களாக்கப்பட்ட 19 லட்சம் பேரில் சுமார் 12 லட்சம் பேர் இந்துக்கள் என்பதும் அதிலும் பெரும்பான்மையினர் இந்திய வம்சாவளி யைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை அசாமில் மட் டும் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார் அமித்ஷா.

தற்போது இந்தியா எங்கும் மக்களின் கடும் எதிர்ப்பைச் சந்தித்த பின்னர், “தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத் துவது குறித்து எதுவும் முடிவு செய்யப்படவில்லை என பொய்யுரைத்தார் மோடி: குடியுரிமை திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்யத் தயாராக இருப்ப தாக அறிவித்தார் அமித்ஷா .

இந்த அறிவிப்புகள் தற்போதைக்கு பிரச்சினையைத் தள்ளிப் போடுவதற் காகவே வெளியிடப்பட்டிருக்கின்றன என்பது சங்க பரிவாரத்தின் ‘நேர்மை’ குறித்த வரலாற்றைப் புரட்டிப் பார்த்தாலே தெரிந்துவிடும்.

தனிப் பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந் ததும், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மோசடியான தீர்ப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு. குடியுரிமை திருத்தச் சட் டம் ஆகியவற்றின் மூலம் இந்தியாவை சட்டப் பூர்வமாகவே இந்து ராஷ்டிர மாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது பாஜக.

ஆதார் தொடங்கி தற்போதைய குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் இனி வரவிருக்கும் மரபணு அடையாள மசோதா வரையில் அனைத்தும் நம்மை பார்ப்பனிய ஒடுக்குமுறை மற்றும் ஏகாதிபத்திய சுரண்டலின் கீழ் இருத்தி வைக்கவும் அவற்றுக்கு எதிராகத் திரண்டெழாத வகையில் நம்மைக் கண் காணிக்கவுமே கொண்டுவரப்பட்டிருக்கின்றன என்பதைத் தரவுகளோடு அம்பலப்படுத்துகிறது இந்த நூல்.

தோழமையுடன்,
புதிய கலாச்சாரம்.

***

குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் ! – புதிய கலாச்சாரம் ஜனவரி – 2020 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் ! உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .

அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

அச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

மின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.

“ குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் ! ” நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • குடியுரிமைச் சட்டத் திருத்தம்: இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல்!
  • தேசிய குடிமக்கள் பதிவேடு: ஒரு கேடான வழிமுறை!
  • ஆதார் அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?
  • அமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது!
  • குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு!
  • தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்களின் உயிரி மாதிரிகள் சேகரிப்பு!
  • முஸ்லீம்களை மட்டுமல்ல இந்துக்களையும் செல்லாக்காசாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்!
  • ஆதார் கண்காணிப்பு: மக்களை அச்சுறுத்தும் சர்வாதிகார அரசு அகண்ட பாரத கனவும் 40 இலட்சம் அசாமிய அகதிகளும்!
  • ஆதார்: மாட்டுக்குச் சூடு! குடிமகனுக்கு டிஜிட்டல் கோடு !!
  • ‘அறிவிக்கப்படாத அவசரநிலை’: மாணவர்கள் மீது காவி போலீசின் தாக்குதல்!
  • அசாம் – தேசிய குடிமக்கள் பட்டியல் குறிப்புகள்: முஸ்லீம்களுக்கு எதிரான சதி!
  • சமூக வலைத்தள கணக்குகளுக்கும் ஆதார்! மோடியின் அடுத்த அடி!
  • அசாம்: 51 உயிரைக் காவு வாங்கிய தேசிய குடிமக்கள் பதிவு!
  • அசாமைப் போல் கர்நாடகத்திலும் குடியேறிகள் தடுப்பு முகாம்!
  • இந்த முறை உங்களால் எங்களைத் தடுக்க முடியாது!
  • குடியுரிமை சட்டத் திருத்தம்: ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம்!
  • நாட்டு மக்களை கண்காணிக்க வரும் மரபணு அடையாள மசோதா!

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

இணையம் மூலமாக ஆண்டுச் சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.

வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

____________

புதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

 

தை முதலே தமிழ்ப் புத்தாண்டு : வி.இ.குகநாதன்

மிழர்களின் புத்தாண்டு தையிலா அல்லது சித்திரையிலா என்ற ஒரு வழக்காடல் நீண்ட காலமாகவே நடைபெற்று வருகின்றது. அது தொடர்பான ஒரு பார்வையாகவே இக் கட்டுரை அமைகின்றது.

முதலில் தமிழர்களிடம்  ஆண்டு  என்றொரு  காலக்கணிப்பு முறை இருந்ததா?  எனப் பார்ப்போம். ‘யாண்டு’ என்ற பழந்தமிழ்ச் சொல்லே மருவி ஆண்டு என வழங்கலாயிற்று. யாண்டு என்ற சொல்லானது தொல்காப்பியத்தின் முதற்பொருளான நிலம், பொழுது ஆகிய இரண்டையும் குறிக்கும். ‘யாண்டு’ என்ற சொல் இடம்பெற்ற சில பாடல்களைப் பார்ப்போம்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.” (குறள் 4)

இப்போது காலத்தைத் தெளிவாகக் குறிக்கும் யாண்டு என்ற சொல் இடம்பெற்ற சங்ககாலப் பாடலைப் பார்ப்போம்.

பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப்’ (குறு:57:1)

இப் பாடலில் ‘யாண்டு கழிந்தன்ன’ என்பது ‘அக்காலம் பல யாண்டுகள் கடந்தாற் போன்ற’ என்ற பொருளில் இடம்பெறுகின்றது. இந்த ஆண்டு தற்போதைய நாட்காட்டி ஆண்டு போன்றது (365.2425 days) என நான் கூறவரவில்லை, ஏனெனில் தற்போதைய நாட்காட்டி ஆண்டு (Gregorian calendar) நடைமுறைக்கு வந்தது சில நூற்றாண்டுகளிற்கு முன்புதான்.

ஏதோ ஒரு வகையான காலப்பகுதியினை யாண்டு எனச் சங்க காலத் தமிழர்கள் அழைத்துள்ளனர் என்பதுதான் இங்கு தெளிவாகின்றது. எனவே தமிழர்களிற்கு என ஒரு ஆண்டுக் கணிப்பு இருந்திருந்திருப்பின், அந்த ஆண்டிற்கு ஒரு தொடக்கமும் இருந்திருக்கும்.

யாண்டின் தொடக்கமாக தை மாதமே இருந்துள்ளது என்பதற்கு நேரடித் தரவுகள் சங்ககாலப் பாடல்களில் காணமுடியவில்லை என்றபோதும், அதற்கான இரு சான்றுகளை உய்த்துணரலாம்.

முதலாவதாக : தை மாதமளவிற்கு வேறு எந்தவொரு மாதமும் சங்ககாலப் பாடல்களில் சிறப்புப்படுத்தப்படவில்லை. (தை மாதச் சிறப்பின் 10% அளவிற்கு கூட வேறு எந்த மாதமும் சிறப்புப் பெறவில்லை). “தைத்திங்கள் தண்கயம் படியும்” (நற்றிணை 80) , “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” (குறுந்தொகை 196) என்பன உட்படப் பல சங்க காலப்பாடல்கள் தையினைச் சிறப்பித்துக் கூறுகின்றன.

இரண்டாவதாக : தை என்ற சொல்லிற்குச் சேர்த்தல் என்ற பொருளும் உண்டு (இரண்டு துணிகளை இணைத்து தைத்தல்). இங்கு ‘தை’ என்பது இரண்டு யாண்டுகளை (காலப்பகுதிகளை) இணைக்கின்றது. இவ்விரு காரணங்களையும் அடிப்படையாகக் கொண்டே தை மாதமே ஆண்டின் தொடக்கமாகவிருந்திருக்கும் என உய்த்தறியலாம்.

இதனைவிட, தை மாதமே ஆண்டின் தொடக்கமாகக் கொள்ள இயற்கைசார்ந்த இரு காரணங்களும் உண்டு. அவையாவன வருமாறு.

  1. அறுவடைக்காலம் : செல்வ வளம்பொருந்திய காலமே புத்தாண்டாகக் கொண்டாடப் பொருத்தமாகவிருந்திருக்க முடியும். (இன்று பலர் உழவுத்தொழிலில் தங்கியிராத நிலையில், இதன் எச்சமாகவே பொங்கல் மிகைப்பணம் (Bonus) அரசால் வழங்கப்படுகின்றது. அன்று அந்த வாய்ப்பு இல்லாமையால், அறுவடைக்காலமே பொருத்தமானதாகும்).
  2. காலநிலை: தை மாதத்தின் தண்மை (குளிர்மை) பல பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறான ஒரு மகிழ்ச்சியான காலப்பகுதியே யாண்டின் தொடக்கமாகக் கொள்ளப் பொருத்தமானதாகும். (மாறாக தாயகத்தில் சித்திரையில் கொளுத்தும் வெயிலே சுட்டெரிக்கும் காலப்பகுதி பொருத்தமானதாகக் காணப்படமாட்டாது.)

படிக்க :
இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – புதிய தொடர்
♦ ‘தை’ரியமாகச் சொல் நீ தமிழறிஞன் தானா?

மேலும் எளிய மக்களின் வழக்காற்று மொழிகளிலும் கூட பழைய வரலாற்று எச்சங்களைக் காணலாம். அந்த வகையில், “தை பிறந்தால் வழி பிறக்கும் , “தீய்ந்த தீபாவளி வந்தாலென்ன? காய்ந்த கார்த்திகை வந்தாலென்ன? மகா ராசன் பொங்கல் வரவேண்டும்” என்பன போன்ற சொல்லடைகளும் தை மாதத்தின் முதன்மையினைக் காட்டுகின்றன.

அண்மையில் இராமநாதபுரம் கீழக்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் சில நூற்றாண்டுகளிற்கு முன்னர்வரைத் தையே புத்தாண்டாகக் கருதப்பட்டதனைக் காட்டுகின்றது. வரலாற்று தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை தை மாதமே தமிழ் ஆண்டின் முதல் மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கலாம் என்பதற்குச் சான்றாக இந்த பழங்கால கல்வெட்டு உள்ளது என்கின்றார் (சான்று – தினத்தந்தி 03-01-2019).

சித்திரை மாதக் கணிப்பீடு :

சித்திரைப் புத்தாண்டு கணிப்பீட்டு முறையானது சாலிவாகணன் என்ற அரசனால் (சிலர் கனிஷ்கன் என்கின்றனர்) கி.பி 78-ம் ஆண்டளவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது எனக் கூறப்படுகிறது. இவ்வாறு அக் காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்ட போதும், மக்களிடம் அந்தப் புத்தாண்டு வரவேற்புப் பெற்றிருக்கவில்லை என்பதனையே மேற்கூறிய கல்வெட்டுச் சான்றும், நாம் ஏற்கனவே பார்த்த வழக்காற்றுச் சான்றுகளும் காட்டுகின்றன.

கடந்த இரு நூற்றாண்டுகளிலேயே மதப் புராணங்கள் மூலம் சித்திரை, புத்தாண்டாக எளிய மக்களிடம் திணிக்கப்பட்டுள்ளது. இதற்காகக் கூறப்பட்ட புராணக்கதை வேடிக்கையானது. அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392-ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

ஒருமுறை நாரதமுனிவர், ‘கடவுள்’ கிருஷ்ணனை “நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?” என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், “என்னுடன் இல்லாமல்  வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள்” என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி “நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

கிருஷ்ணன் நாரதரை “யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்” எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம். பின் ‘கடவுள்’ கிருஷ்ணனுடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு, அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்கள். இதுதான் அந்தப் புராணக்கதை.  இதில் மேலும் வேடிக்கை என்னவென்றால் இவ் அறுபது ஆண்டுகளில் 15 ஆண்டுகள் சூத்திர ஆண்டுகளாம் (ஆண்டுகளில் கூட வர்ணப் பிரிவினை).

வேறு சிலர் வியாழனை அடிப்படையாகக்கொண்ட 60 ஆண்டுக் கணிப்பீட்டு முறையினையே, பிற்காலத்தில் புராணம் ஆக்கிவிட்டார்கள் எனக் கூறுவதுமுண்டு. இராசியினை அடிப்படையாகக் கொண்டு சோதிட விளக்கம் கூறுவோரும் உண்டு.

இன்னொரு சாரார் தொல்காப்பியப் பாடல் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு ஆவணியினை புத்தாண்டாகக் கருதுவோருமுண்டு (இன்றும் சிங்க மாதமே (ஆவணி) மலையாளப் புத்தாண்டு : கொல்லமாண்டு). இத்தகைய குழப்பங்களைத் தீர்ப்பதற்காக 1935 -ம் ஆண்டில் தமிழறிஞர்கள் இணைந்து ஒரு தீர்வு கண்டிருந்தார்கள்.

படிக்க :
ஜே.என்.யூ : ஏ.பி.வி.பி. குண்டர்கள் வெறியாட்டம் ! கொலைவெறி தாக்குதல்கள் !
♦ சென்னை புத்தகக் காட்சியில் புதுப் பொலிவுடன் கீழைக்காற்று !

குழப்பத்திற்கான அறிஞர்களின் தீர்வு :

இக் குழப்பத்திற்கு தீர்வு காணும்பொருட்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1935 -இல் மறைமலை அடிகளார் தலைமையில் பல அறிஞர்கள் ஒன்றுகூடி தை முதலே தமிழ்ப் புத்தாண்டு என முடிவு செய்திருந்தனர். பின்பு அதேபோன்று திருவள்ளுவரின் பிறப்பினை அடிப்படையாகக் கொண்டு ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளைக்கூட்டி திருவள்ளுவர் ஆண்டு தமிழாண்டாகக் கொள்வது எனவும் அறிவித்திருந்தார்கள். இவ்வாறு  முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் பலர் இருந்தார்கள். அவர்களில் சிலர் வருமாறு.

  • தமிழ்க்கடல் மறைமலை அடிகள்,
  • தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார்,
  • தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியபிள்ளை,
  • சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை,
  • நாவலர் நா.மு. வேங்கடசாமி நாட்டார்,
  • நாவலர் சோமசுந்தர பாரதியார்,
  • முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்,
  • பேராசிரியர் சா. நமச்சிவாயனார்,
  • உ.வே. சாமிநாத ஐயர்

தமிழில் புலமையும் காதலும் கொண்ட இந்த தமிழறிஞர்கள் சமய வேறுபாடுகளையும் கொள்கை மாறுபாடுகளையும் மறந்துவிட்டு; ஆரியக் கலப்பையும் வடமொழிக் குறுக்கீட்டையும் உதறிவிட்டுத் தமிழ் ஒன்றையே முதன்மைப்படுத்தி முறையான ஆய்வியல் பார்வையோடு ‘தை முதலே தமிழ்ப் புத்தாண்டு’ எனும் அறிவிப்பை வெளியிட்டனர்.

இங்கு டாக்டர் மு.வ கூறுகின்றார் “முற் காலத்தில் வருடப் பிறப்பு, சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல்நாள் தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள்” ( சான்று – 1988 கோலாலம்பூர் பொங்கல் மலர், மு.வ. கட்டுரை மீள் பதிப்பு ). இறையன்பர்களான மறைமலை அடிகள், திரு. விக, உ.வே.சா போன்றோர் முதல் இறை மறுப்பாளரான பெரியார் ஈ.வெ.ரா வரை தமிழின் பெயரில் ஒன்றுபட்ட வேளை அது.

தமிழ்நாடு அரசு, இதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் திருவள்ளுவர் ஆண்டினை நடைமுறைப்படுத்தி வருகிறது.  இருந்தபோதிலும், 2006-2011 இடைப்பட்ட கலைஞர் ஆட்சியிலேயே ‘தை முதல் தமிழ்ப் புத்தாண்டு’ ஆக அதிகாரபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. மீண்டும் ஜெயலலிதா ஆட்சியில் தமிழர்கள் தமது புத்தாண்டு மரபினைத் தொலைத்துவிட்டார்கள். அக் காலப்பகுதியில் ஈழத்திலும் தைமுதலே புத்தாண்டாக விடுதலைப்புலிகளால் தமது அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. இங்கும் வரலாற்று  இன்னலாக புலிகளின் அழிவிற்குப் பிறகு அந்த முயற்சி தொடரப்படவில்லை.

அறிவியல் பொருத்தப்பாடு :

அரசியல், தமிழறிஞர்களின் அறிவிப்பு என்பன எல்லாம் போகட்டும், அறிவியல்ரீதியாக எந்தப் புத்தாண்டு பொருத்தம் எனப் பார்ப்போமா!

முதலாவதாக திருவள்ளுவர் ஆண்டானது எண்களில் வருவதனால் சிறப்பானது, மறுபுறத்தில் சித்திரைக் கணிப்பீடானது ஒரே பெயர்களில் 60 ஆண்டுகளிற்கொரு முறை மறுபடியும் மீள வருவதனால் குழப்பகரமானவை. எடுத்துக் காட்டாக சுக்கில ஆண்டு என்றால், எந்தச் சுக்கில ஆண்டைக் கருதுவீர்கள். மேலும் இப்பெயர்கள் எதுவுமே தமிழில் இல்லாதிருப்பதுடன் அவற்றின் கருத்துக்கள் ஆபாசமானவை அல்லது எதிர்மறையானவை. (சுக்கில-விந்து, துன்மதி-கெட்டபுத்தி).

இரண்டாவதாக ஒருவரின் (திருவள்ளுவரின்) வாழ்க்கைக் காலத்தினை அடிப்படையாகக்கொண்ட கணிப்பீடானது அனைத்துலக நடைமுறைகளுடன் ஒத்துப்போகின்றது. மறுபுறத்தில் சித்திரைக் கணிப்பீட்டிற்கான நாம் ஏற்கனவே பார்த்த புராணக்கதையினை மதநம்பிக்கையாளரில் பெரும்பாலானோரே நம்பமாட்டார்கள். அதேபோன்று சித்திரைக்கணிப்பீட்டிற்குச் சொல்லப்படும் இராசிக்கணிப்பும் அறிவியலிற்கு முரணான புவிமையக் கொள்கையினை அடிப்படையாகக்கொண்டது.

படிக்க :
இங்கிலாந்துத் தேர்தலில் தடம் பதித்த இந்துத்துவா : வி.இ.குகநாதன்
♦ சுற்றுலாப் பயணிகளை கவரும் ஸ்டாலின் பிறந்த வீடு ! | கலையரசன்

மூன்றாவதாக, தைக் கொண்டாட்டமானது சங்க இலக்கியங்களினடிப்படையில் வரலாற்றுத் தொன்மையானதாகக் காணப்பட, மறபுறத்தில் சித்திரை ஆண்டுப் பிறப்பானது இடைக்காலத்தில் வெளியாரின் திணிப்பால் உள்நுழைக்கப்பட்டதாகக் காணப்படுகிறது.

நான்காவதாக தைத்திருநாளானது மதசார்பற்றதாகக் காணப்படுவதால் எல்லாத் தமிழரும் கொண்டாடக்கூடியதாகவிருக்க, மறுபுறத்தில் சித்திரையானது இந்துக்களிற்கு மட்டுமே அதுவும் பார்ப்பன ஆதிக்கத்தினை ஏற்றுக்கொண்டவரிற்கே பொருத்தமானதாகக்  காணப்படுகின்றது.

இறுதியாக தைத்திருநாளானது தமிழரின் வாழ்க்கையுடன் இணைந்தும், உழவுத்தொழிலுடன் தொடர்பானதாகவும் காணப்படுகிறது.

முடிவுரை:

இதுகாறும் இலக்கியச் சான்றுகள், மக்களின் வழக்காற்றுச் சான்றுகள், கல்வெட்டுச் சான்று, அறிஞர்களின் முடிவு, அறிவியற் பொருத்தப்பாடு என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு தை முதலே தமிழ்ப் புத்தாண்டு எனப் பார்த்தோம்.

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்,  கிரிகேரியன் நாட்காட்டி (Gregorian calendar) சனவரி 15 ம் திகதியினைக் காட்டும், அந்த நாளே திருவள்ளுவர் ஆண்டு 2051 (2020+31) ஆகும் நாளன்றே (தை முதலே) தமிழ்ப் புத்தாண்டாகும்.

முடிவாக  தைத்திருநாள், தைப்பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு (தை) என்பன அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த ஆயிரமாயிரமாண்டு தமிழர் மத சார்பற்ற பண்பாட்டு நிகழ்வுகளே. பாவேந்தரின் பாடலுடன் இக் கட்டுரையினை முடிப்பதே சிறப்பானதாக அமையும்.

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் , கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”

-பாவேந்தர் பாரதிதாசன்

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வி.இ.  குகநாதன்

ஆர்.எஸ்.எஸ்-க்கு வலுசேர்க்கும் இசுலாமிய அமைப்புகளின் கவனத்திற்கு !

ந்தவொரு விசயத்திலும் தட்டையான விமர்சனங்களை நான் வெளிப்படுத்தியது கிடையாது. தடித்த விமர்சனங்களை அதிகம் விரும்பியதும் இல்லை. ஆனால் முஸ்லிம் ஜமாத்துகளின் போராட்டங்கள், சிலவற்றைப் பேச வைக்கிறது என்பதால் இந்தப் பதிவை மிகமிகச் சுருக்கமாக எழுதுகிறேன். மிகப்பெரும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள காலத்தில் இதையெல்லாம் எழுதவேண்டுமா என்று சிலர் நினைக்கலாம். ஆனால் முஸ்லிம்களின் போராட்ட அணுகுமுறைகள் அபாயத்தை மேலும் மேலும் அதிகரிக்கவே உதவும் என்பதால், இந்த விமர்சனப் பதிவைத் தவிர்க்க முடியாத ஒன்றாகவே கருதுகிறேன்.

பொதுவாக ஆர்.எஸ்.எஸ். எதை விரும்புகிறதோ, அதை அவர்களைவிடவும் வெகுசிறப்பாகச் செய்து தருவதில் முஸ்லிம்கள் அவ்வளவு முனைப்பு காட்டுகிறார்கள். பொதுசிவில் சட்டத்தில் முஸ்லிம் வெறுப்பு அரசியலின் சாரம் நிறைந்து இருக்கிறது என்றாலும், அது முஸ்லிம்களை மட்டுமே சீண்டிப் பார்க்கிற ஒன்றல்ல. ஆனால் முஸ்லிம் இயக்கங்களும், ஜமாத்துகளும் அதை “எல்லாத் தரப்பினருக்குமான” பிரச்சனை என்கிற வடிவத்திற்குள் செல்லவிடாமல், அவர்களின் தனியுடைமையாக தகவமைத்துக்கொண்டார்கள். அதே கதைதான் #CAA #NRC எதிர்ப்பிலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

சென்னையில் இசுலாமிய அமைப்புகள் நடத்திய CAA எதிர்ப்புப் பேரணி. (கோப்புப் படம்)

“இன்குலாப்” முழக்கத்தைப் பொதுச்சமூகம் ஓங்கி ஒலிக்க, முஸ்லிம்களோ “நாரே தக்பீர், அல்லாஹு அக்பர்” என்கிற கூக்குரல்களை எழுப்புகின்றனர். மதச்சார்பற்ற தலைவர்களை மேடைகளில் வைத்துக்கொண்டு, கிராத் ஓதி (குரான் வசனங்கள்) போராட்டத்தைத் தொடங்குகிற போக்கு நிலவுகிறது. “பிர்அவ்னையே பார்த்த கூட்டம்; பத்ருப் போரைக் கண்ட சமூகம்; 800 ஆண்டுகாலம் இந்தியாவை ஆண்ட மக்கள்” என்கிற உணர்ச்சி பிழம்புகள் முஸ்லிம் ஜமாத்துகள் ஒருங்கிணைக்கும் கூட்டங்களில் கொடி கட்டிப் பறக்கின்றன. இதுபோன்ற மூடத்தனங்களை அல்லது மடத்தனங்களை வெளிப்படையாகக் கண்டிக்காமல் கடந்து செல்ல முடியவில்லை.

“இந்து மதத்தை விமர்சிக்கிற நீங்கள் இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏன் விமர்சிப்பதில்லை?” என்கிற கேள்விகளை எழுப்பி, முற்போக்கு ஜனநாயக சக்திகளை இந்துக்களுக்கு எதிரானவர்களாக நிறுத்தும் சங்கிகளின் பிரச்சாரங்களை எல்லோருமே நன்கு அறிவோம். இதன்விளைவாக ஜனநாயகத் தலைவர்கள் களத்தில் நிறையவே இடர்களையும், பின்னடைவுகளையும் எதிர்கொள்கிறார்கள். போதாக்குறைக்கு அவர்களை மேடையில் வைத்துக்கொண்டு “நாரே தக்பீர்” என்று முஸ்லிம்கள் முழங்குவதானது, மதச்சார்பற்றத் தலைவர்களை எவ்வளவு சங்கடப்படுத்தும் என்றோ, சங்கிகளின் பிரச்சாரத்திற்கு அது எவ்வளவு வலுசேர்க்கும் என்றோ கொஞ்சம்கூட சிந்திக்க மட்டீர்களா?

இவை ஒருபுறமிருக்கட்டும்…

பொது இடத்தில் நடத்துகிற பொதுவான போராட்டத்தில், மதம் சார்ந்த கோசத்தை முன்வைப்பது சரியான வழிமுறையா? “ஓம் காளி; ஜெய் காளி” என சங்கிகள் கத்துவதற்கும், உங்களின் செயலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. மேலும் பிர்அவ்ன் வரலாற்றைக்கூறி, “இந்த மோடி அமித்ஷாவுக்கா அஞ்சப் போகிறோம்” என்கிற வீராவேசக் கேள்விகளினால், எதை சாதிக்கப்போகிறீர்கள் தலைவர்களே?

படிக்க :
மோகன் பகவத்தின் இந்தியாவில் எல்லோருமே இந்து தான் : காஞ்சா அய்லய்யா
♦ CAA ஆதரவு – பாஜக ட்ரோல் படையின் தரம் தாழ்ந்த ‘மிஸ்டுகால் புரட்சி’ !

அறிவுப்பூர்வமான தளங்களில் சமூகத்தை வழிநடத்த வேண்டிய காலத்தில், வெற்று உணர்ச்சிகளைப் பேசிக் கைத்தட்டு வாங்குவது ஒன்றே என்.ஆர்.சி.யைத் தடைசெய்துவிடுமா என்ன? இதில் “இந்த ஆலிமின் வீரத்தைப் பாருங்கள், மாஷா அல்லாஹ்” ரகங்களில் பரவுகிற வீடியோக்களெல்லாம் எரிச்சலைத்தான் தருகின்றன. இவற்றை மற்ற சமூக மக்கள் சகித்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா? இந்துமயப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் வேள்விக்கு நீங்கள்தான் நெய் ஊற்றுகிறீர்கள்.

போராட்டத்தின் ஒரு பக்கம் இப்படியாக நீண்டுகொண்டிருக்க, மற்றொருபுறம் காறித்துப்புகிற விசயமொன்றை நேற்றுத் திருப்பூரில் கண்டேன். குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டம் ஒன்று அங்கு நடப்பதை அறிந்து, அதைக் காண்பதற்காகச் சென்றேன். அதிலும் ஸோ கால்டு ‘ஆண்ட பரம்பரை’ வசனங்கள் வழிந்து ஓடின. சரி இவர்கள் இப்படித்தானே என உச்சுக்கொட்டிவிட்டு வந்துவிட்டேன். வெளியே வந்த பிறகுதான் மேடையில் பிரதான முஸ்லிம் இயக்கங்கள் சில தவிர்க்கப்பட்டதைக் கேள்விப்பட்டேன். என்ன விசயமென்று கேட்டபோது, “இது ஷாபி ஜமாத் நடத்துகிற போராட்டம்” என்று சொன்னார்கள். அதைக்கேட்டதும் அவ்வளவு ஆத்திரம் பெருக்கெடுத்தது.

முதலில் இந்தப் போராட்டங்களை ஜமாத்துகள் நடத்துவதே அறிவற்ற போக்குதான். இதில் “அந்த ஜமாத், இந்த ஜமாத்” என்கிற பாகுபாட்டோடு நடத்துவதையெல்லாம், எந்த ரகத்தில் சேர்ப்பது? ஜனநாயகச் சக்திகளையும் சங்கடத்திற்குள்ளாக்கி, வெகுமக்களை வெறுப்பேற்றி, போதாக்குறைக்கு ஜமாத் பிரிவுகளை முதன்மைப்படுத்தி நடத்துகிற உங்களின் போராட்டங்களை “மயிரென்று” சொன்னாலும், அது மயிருக்குத்தான் இழுக்கு.

ஒன்றை நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் நடத்துகிற இந்த வகைப் போராட்டங்களை ஆர்.எஸ்.எஸ். மத்திய அரசு ஒரு பொருட்டாகவே கருதப்போவதில்லை. ஏன் எடப்பாடி அரசுகூட நமட்டுச் சிரிப்பைக் கொட்டும்படிதான் உள்ளது உங்களின் போராட்ட லட்சணங்கள்!

நன்றி : பழனி ஷஹான்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

சுற்றுலாப் பயணிகளை கவரும் ஸ்டாலின் பிறந்த வீடு ! | கலையரசன்

0

ஜோர்ஜியா பயணக் கதை – இரண்டாம் பாகம்

முதல் பாகம்

கலையரசன்

ஸ்டாலின் பிறந்த காலத்தில் ஜோர்ஜியா என்ற தேசம் இருக்கவில்லை. பெரும்பாலான ஜோர்ஜியர்களுக்கும் தேசிய இன உணர்வு இருக்கவில்லை. கருங்கடலுக்கும், கஸ்பியன் கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை காவ்காசாஸ் பிரதேசம் என்று அழைப்பார்கள். அங்குள்ளவர்கள் பெரும்பாலும் மலை வாழ் மக்கள். இன்றைக்கும் பல்வேறு மொழிகளை பேசுகிறவர்கள். ஜோர்ஜிய மொழியுடன் தொடர்புடைய மிங்கேறிலியன், ஸ்வான் ஆகிய மொழிகள் இன்று அழிந்து வருகின்றன. தற்போது நாற்பதாயிரம், அல்லது எண்பதாயிரம் பேர் தான் அந்த மொழிகளைப் பேசுகிறார்கள். ஜோர்ஜியாவின் மொத்த மக்கட்தொகை நான்கு மில்லியன் கூட இல்லை.

ஜோர்ஜியாவில் ஸ்டாலின் பிறந்த கோரி (Gori) எனும் சிறு நகருக்கு அருகில், ஒசெத்தியர் எனும் ஈரானிய மொழி ஒன்றைப் பேசும் சிறுபான்மை இன மக்கள் வாழும் பிரதேசம் உள்ளது. தொண்ணூறுகளில் ஜோர்ஜியா தனியான சுதந்திர நாடானாதும், ஒசெத்தியர் தமக்கென தனிநாடு கோரினார்கள். ஆனால் அது சாத்தியப் படவில்லை. 2008 ஆம் ஆண்டு அங்கு பெரியதொரு யுத்தம் நடந்தது. ஜோர்ஜிய இராணுவத்தின் படையெடுப்பை எதிர்த்து நிற்க முடியாத ஒசேத்திய கெரில்லாப் படையினர் ரஷ்யாவை உதவிக்கு அழைத்தார்கள்.

அந்த நேரம் ஜோர்ஜியாவை ஆண்ட சாகாஷ்விலி தனது மேற்கத்திய சார்பு அரசியல் நிலைப்பாடு காரணமாக ரஷ்யாவை பகைத்திருந்தார். ரஷ்யாவும் இது தான் சாட்டு என்று “ஒசேத்திய சிறுபான்மை இன மக்களை பாதுகாப்பதற்காக” இராணுவத்தை அனுப்பியது. ஜோர்ஜிய இராணுவத்தை ஓட ஓட அடித்து விரட்டிய ரஷ்யப் படைகள், கோரி வரை வந்து விட்டன. அப்போது கோரியை விட்டு ஜோர்ஜியர்கள் வெளியேறியதும், நகர மத்தியில் ரஷ்யப் படையினர் நின்றதும் சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக பேசப் பட்டன.

உண்மையில் அன்று ரஷ்யப் படையினர் தமது பலத்தைக் காட்டுவதற்காகவே கோரியை கைப்பற்றி இருந்தனர். சில நாட்களின் பின்னர் தாமாக வெளியேறி ஒசேத்திய தனிநாட்டு எல்லையோடு நின்று விட்டனர். இந்த நிலைமை இப்போதும் தொடர்கிறது. ஆனால், முன்பிருந்த பதற்றம் தணிந்து சமாதானம் நிலவுகிறது. அப்போது தொலைக்காட்சிகளில் கோரி நகர சபைக் கட்டிடமும், அதற்கு முன்னால் நின்ற துப்பாக்கி ஏந்திய ரஷ்யப் படையினரையும் காட்டினார்கள். அப்போது அங்கே ஒரு பிரமாண்டமான ஸ்டாலின் உருவச் சிலை இருந்தது.

கோரி நகர மத்தியில் இருந்த ஸ்டாலின் சிலை, 2010-ம் ஆண்டு “சோவியத் நீக்கம்” என்ற பெயரில் அகற்றப்பட்டது. பகலில் செய்தால் ஊர் மக்கள் எதிர்ப்பார்கள் என்ற பயத்தில், இரவோடிரவாக வந்து சிலையை பெயர்த்து எடுத்துச் சென்று நகருக்கு வெளியே வீசி விட்டனர். தற்போது பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று சிலையை மீண்டும் கொண்டு வர திட்டமிடுகின்றனர். இது தொடர்பாக நகரசபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அனேகமாக அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

படிக்க:
உலகப் போலீசின் உள்ளத்தை வெளிப்படுத்தும் 3 திரைப்படங்கள்!
♦ ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் !

ஜோர்ஜியா வரும் சுற்றுலாப் பயணிகளில் குறைந்தது அரைவாசியாவது ஸ்டாலின் மியூசியம் பார்க்க வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைக்கும் ரஷ்யாவில் இருந்து பெருந்தொகை சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அதை விட போலந்து, (தென்) கொரியா, ஈரான் போன்ற நாடுகளில் இருந்தும் பெருமளவு சுற்றுலாப் பயணிகள் ஸ்டாலின் மியூசியம் பார்க்க வருவதாக அங்கு வேலை செய்யும் ஊழியர் தெரிவித்தார். நான் அங்கே சென்றிருந்த நேரத்திலும், ரஷ்யர்கள், ஈரானியர்கள் ஒரு பெரிய குழுவாக வந்து பார்வையிட்டனர்.

பத்து வருடங்களுக்கு முன்னர், கோரி சுற்றுலாத் துறை பெரிதாக வளர்ச்சி அடையவில்லை. தற்போது நிறைய புதிய ஹோட்டேல்கள் கட்டப்பட்டுள்ளன. நான் தங்கிருந்த ஹோட்டல் கட்டி ஒரு வருடம் தானாகிறது என்றார்கள். கோடை காலத்தில் எல்லா அறைகளும் நிரம்பி விடுமாம். நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட அறை வாடகை ஐம்பது லாரிகள். ஸ்டாலின் மியூசியத்தில் இருந்து இருநூறு மீட்டர் தூரத்தில் இருந்தது. ஸ்டாலின் நினைவுச் சின்னங்கள் உட்பட, தற்போது அங்கே எல்லாம் வணிகமயமாகிவிட்டது. வழமையாக பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்த கோரி நகருக்கு ஸ்டாலின் மியூசியத்தால் பெருமளவு வருமானம் கிடைக்கிறது எனலாம்.

ஸ்டாலின் பிறந்த வீட்டின் முன்புறத் தோற்றம்.

1937-ம் ஆண்டு, அதாவது சோவியத் யூனியனில் ஸ்டாலின் ஆட்சியில் இருந்த காலத்தில், அவரது பிறந்த வீடு மியூசியமாக்கப்பட்டது. அதைச் சுற்றி தூண்களை எழுப்பி, மேலே கொங்கிரீட் கூரை போடப் பட்டது. இந்த நினைவுச்சின்னம் இப்போதும் பேணிப் பாதுக்கப்பட்டு வருகின்றது. ஸ்டாலின் பிறந்த வீட்டுக்குப் பின்னால் ஒரு சிறிய ஸ்டாலினின் சிலையும் மியூசியக் கட்டிடமும் அமைந்துள்ளன.

ஐம்பதுகளின் தொடக்கத்தில் தான் தற்போதுள்ள நூதனசாலைக் கட்டிடம் கட்டிமுடிக்கப் பட்டது. அப்போது ஸ்டாலின் மறைந்து, குருஷேவ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. “ஸ்டாலினிச எதிர்ப்பாளர்” குருஷேவ் அங்கு ஒரு நூதனசாலை வருவதை விரும்பி இருக்கவில்லை. இருப்பினும் உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், மக்களும் விட்டுக் கொடுக்கவில்லை. அப்போது திறக்கப்பட்ட மியூசியம் இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஸ்டாலின் மியூசியம் மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. ஒரு மாடிக் கட்டிடத்தின் மேல் பகுதியில் தான் மியூசியம் உள்ளது. அதற்கு செல்லும் படிக்கட்டின் நடுவிலும் மார்பிளால் செய்யப் பட்ட ஸ்டாலின் சிலை உள்ளது. உள் நுழைந்தவுடன் வாயில் அருகில் சிறு வயது ஸ்டாலின், மற்றும் அவரது தாய், தந்தையின் புகைப்படங்கள் உள்ளன. அதற்கு அருகில் அவர் பள்ளிக்கூடத்தில் படித்த புத்தகங்கள் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப் பட்டுள்ளன. மேலே கற்பித்த ஆசிரியர்களின் படங்கள் உள்ளன. ஸ்டாலின் சிறு வயதில் எழுதிய கவிதைகளும் பெரிதாக்கி காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

ஒரு கிறிஸ்தவ பாதிரியாக வேலை செய்வதற்கு படித்துக் கொண்டிருந்த ஸ்டாலின், அரசியல் ஈடுபாடு காரணமாக கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்குப் பின்னர் அவர் புரட்சிகர சமூக ஜனநாயகக் கட்சியின் போல்ஷெவிக் பிரிவில் இயங்கிய காலங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. நகர்ப்புற தொழிலாளர்களின் கூட்டங்கள், மேதின ஊர்வலம் போன்றவற்றை ஒழுங்கமைத்து நடத்திய ஸ்டாலினின் ஓவியங்கள் வைக்கப் பட்டுள்ளன.

அடுத்த பகுதியில் இரண்டாம் உலகப்போர் காலத்தில் எடுத்த படங்கள், மற்றும் ஸ்டாலின் எழுதிய நூல்களின் தொகுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இறுதியாக இன்னொரு பகுதியில் உலகம் முழுவதிலும் இருந்து ஸ்டாலினுக்கு கிடைத்த அன்பளிப்புகள், பரிசுப் பொருட்கள் உள்ளன. திரும்பி வரும் வழியில், மாடியில் இருந்து கீழிறங்கும் போது, படிகளில் வலது பக்கத்தில் ஸ்டாலின் கிரெம்ளினில் பயன்படுத்திய அலுவலக மேசை, நாற்காலிகள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.

மேலும் வெளியே மியூசியக் கட்டிடத்திற்கு அருகில் ஸ்டாலின் தனது அலுவலகமாக பயன்படுத்திய ரயில் பெட்டி உள்ளது. ரஷ்யப் புரட்சியின் ஆரம்ப காலங்களில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது புரட்சியை நடத்திய தலைவர்கள் இது போன்ற ரயில் பெட்டிகளை தமது அலுவலகமாக வைத்திருந்தனர். அதாவது விடுதலைப் போருக்கு தலைமை தாங்கவும், போர் முனைக்கு சென்று செம்படையினரை ஊக்குவிக்கவும், அன்றைய தலைவர்கள் ரயில்களை பயன்படுத்தினார்கள்.

கோரி நகரில் இன்னொரு மியூசியமும் ஆர்வத்தை தூண்டியது. ஜோர்ஜிய இன மக்களின் பூர்வீகம் தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்துள்ள நூதனசாலை அது. நுழைவுக் கட்டணம் மூன்று லாரிகள். மேலதிகமாக ஐந்து லாரிகள் கொடுத்தால் ஒரு ஆங்கிலம் பேசும் வழிகாட்டி கிடைப்பார். அது மிகவும் பிரயோசனமாக இருந்தது. அங்கிருந்த பொருட்கள் பற்றிய விளக்கத்தில் ஆங்கிலத்திலும் குறிப்புகள் இருந்த போதிலும், வழிகாட்டி மூலம் அதிக விளக்கம் கிடைத்தது.

படிக்க:
சுபாவ வாதம் : விஞ்ஞானச் சிந்தனையின் துவக்கம் !
♦ சென்னை புத்தகக் காட்சியில் புதுப் பொலிவுடன் கீழைக்காற்று !

சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஆதிகால மனிதர்களின் நாகரிகம் தொடர்பாக கண்டெடுத்த அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் அங்கே உள்ளன. அந்தக் காலத்திலேயே தானியம் அரைப்பதற்காக பயன்படுத்திய அம்மிக் குழவி அங்கே காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தது. நமது நாட்டில் உள்ள அதே மாதிரியான அம்மிக் குழவி தான். கல் கொஞ்சம் வளைந்திருக்கும். உலகின் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்த மக்கள் ஒரே மாதிரியான உபகரணங்களை பாவித்துள்ளமை மிகப் பெரிய ஆச்சரியம்.

ஆதி கால மக்கள் களிமண்ணால் கட்டப் பட்ட வீடொன்றில் வாழ்ந்துள்ளனர். கூரையும் களிமண்ணால் செய்யப்பட்டது. கூரை நடுவில் புகை போவதற்கான ஓட்டை இருந்தது. வீட்டுக்கு நடுவில் அடுப்பு மாதிரி கட்டி இருந்தனர். அதில் எந்த நேரம் நெருப்புத் தணல் இருந்து கொண்டிருக்கும். அதை அடுப்பு மாதிரி சமைப்பதற்கும் பயன்படுத்தலாம். அதே நேரம், குளிரை தாக்குப் பிடிக்க வெப்பம் தருவதற்கும் பயன்பட்டது. இது போன்ற வீடுகள் ஸ்கண்டிநேவிய நாடுகளிலும் இருந்துள்ளன. தற்போதும் மத்திய ஆசியாவில் வாழும் நாடோடி மக்கள் இது போன்ற வீடுகளை அமைக்கும் கலையை அறிந்து வைத்திருக்கின்றனர்.

ஆதி கால மனிதர்கள் பிற்காலத்தில் வளர்ச்சி அடைந்ததும், வெண்கலம், இரும்பால் செய்த கருவிகளை வேட்டையாட பயன்படுத்தினார்கள். அப்போது பயன்படுத்திய ஈட்டிகள், கத்திகள் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. அப்போது பயன்பாட்டில் இருந்த மான் வடிவில் செய்யப்பட்ட வைன் குடிக்கும் கிண்ணம், ஒரு சில மாற்றங்களுடன் இன்றைய காலத்திலும் பயன்பாட்டில் உள்ளது. அன்றிருந்த ஆதி கால மக்களும் மலை வாழ் மக்கள் தான். வேட்டையாடுவோராக, கால்நடைகள் மேய்ப்பவர்களாக இருந்துள்ளனர். குளிர் நேரத்தில் வெப்பம் தரும் மேலாடை ஒன்றை அணிந்து கொண்டார்கள். அது ஆட்டுத் தோலால் செய்யப் பட்டது. அந்த மணத்திற்கு பாம்புகளும் கிட்ட நெருங்காதாம்.

மியூசியத்தின் இறுதிப் பகுதியில் ஜோர்ஜிய மொழியின் தோற்றம், கிறிஸ்தவ மதத்தின் வருகை போன்ற விபரங்கள் உள்ளன. ஜோர்ஜியாவில் இன்றைக்கும் கிறிஸ்தவ மதத்தலைவர் பாவிக்கும் தொப்பியின் பெயர் “மித்ரா”. தற்செயலாக, மித்ரா என்பது ஈரான், இந்தியாவில் வேதகால ஆரியர்கள் வழிபட்ட ஒரு கடவுளின் பெயர். அநேகமாக ஒரு காலத்தில் அந்தப் பிரதேசத்திலும் மித்ரா வழிபாடு இருந்திருக்கலாம்.

அந்த மியூசியத்தில் வரவேற்பளராக இருந்த பெண், தன்னுடைய பெயர் “தமிழ்” என்றும், அது பற்றித் தெரியுமா என்றும் கேட்டார். மிகுந்த ஆச்சரியத்துடன் நானும் ஒரு தமிழர் தான், உங்களுக்கு அந்த மொழி பற்றிய விபரங்கள் தெரியுமா என்று கேட்டேன். அவர் அது பற்றி ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார். ஜோர்ஜியாவில் நிறையப் பெண்களுக்கு தமிழ் என்று பெயர் இருக்கிறதா என்று நான் கேட்டேன். பெருமளவில் இல்லையென்றாலும், சில பெண்களுக்கு தமிழ் என்ற பெயர் இருப்பதாக பதில் அளித்தார். அங்கிருந்து விடை பெறும் முன்னர் “தமிழும், தமிழும் சந்தித்துக் கொண்ட தருணத்தை” செல்பி எடுத்துக் கொண்டேன்.

ஜோர்ஜிய மொழியின் பூர்வீகம் எதுவென்பது யாருக்கும் தெரியாது. தாங்கள் ஆயிரமாயிரம் வருட காலமாக அந்தப் பிராந்தியத்தில் வாழ்வதாக ஜோர்ஜியர்கள் சொல்லிக் கொள்வார்கள். அவர்களது மொழியின் எழுத்து வடிவம் ஆச்சரியப் படத் தக்கவாறு தென்னிந்திய மொழிகளின் வரி வடிவத்தை ஒத்திருக்கிறது. பெருமளவு வளைவுகளும், சுழிகளும் கொண்ட எழுத்துக்கள். பண்டைய ஜோர்ஜிய எழுத்துக்கள் இதிலிருந்து வித்தியாசமாக இருக்கும். அதிலும் ஓர் அதிசயம் என்னவென்றால் இந்தியாவின் பிராமி எழுத்துக்கள் போலுள்ளன. ஜோர்ஜிய மொழி எழுத்துக்கள் அரேமிய அல்லது, கிரேக்க மொழிகளை பின்பற்றி உருவாக்கப் பட்டிருக்கலாம் என மொழியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்தக் கோட்பாடு கூட தவறாக இருக்கலாம்.

உலகில் இன்னமும் அறிந்து கொள்ளப்படாத பல அதிசயங்களை ஜோர்ஜியா கொண்டுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அங்கிருந்து திரும்பும் பொழுது ஒரு ஜோர்ஜிய மொழி திரைப்பட டிவிடி வாங்கிக் கொண்டு வந்தேன். “தேதே” (அம்மா) என்ற பெயரிடப் பட்ட படம், நவீன நாகரிகம் ஊடுருவி இருக்காத மலை வாழ் மக்களின் வாழ்க்கை முறை பற்றிப் பேசுகின்றது. குளிர்காலத்தில் பனி மூடிய பாதைகளில் வாகனங்கள் செல்ல முடியாது. ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்திற்கு குதிரைகளில் தான் செல்ல வேண்டும்.

அந்தப் படத்தில் காட்சிக்கு காட்சி எவ்வாறு பழைய சம்பிரதாயங்கள் தனி மனித வாழ்வைப் பாதிக்கின்றன என்பதை சிறப்பாக காட்டி இருந்தார்கள். அந்த சமுதாயத்தில் இன்னமும் பெண்களுக்கென்று தெரிவுகள் இருக்க முடியாது. குடும்பத்தில் பெரியவர்கள் சிறுவயதில் நிச்சயர்தார்த்தம் செய்த ஆணை தான் திருமணம் செய்ய வேண்டும். ஓர் ஆண் ஒரு இளம் பெண்ணை கடத்திச் சென்று விட்டால், அவள் அவனோடு தான் காலம் முழுவதும் வாழ வேண்டும். இல்லாவிட்டால் இரு குடும்பங்களுக்கும் இடையில் பகை மூண்டு இரத்தக்களரி ஏற்படும். அதை விட சாமிப் படத்தின் மீது சத்தியம் செய்வது, நோயை குணப்படுத்துவதற்கு முன்னோர்களின் ஆவிகளை துணைக்கு அழைப்பது எனப் பல சம்பிரதாயங்கள் இன்னமும் பின்பற்றப் படுகின்றன. இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது ஜோர்ஜியர்களின் கலாச்சாரம், கீழைத்தேய மரபுகளை கொண்டுள்ளமை தெரிய வந்தது.

ஜோர்ஜியா பயணம் முடித்து வந்ததும், பல நண்பர்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்பினார்கள். நான் ஏற்கனவே ஐரோப்பாவின் மேற்கிலும், கிழக்கிலும் பல நாடுகளுக்கு பயணம் செய்திருப்பதால் வித்தியாசங்களை உணர முடிந்தது. எல்லா நாடுகளிலும் பெரும் நகரங்களில் திருட்டுக்கள் நடப்பதுண்டு. ஆனால் கிராமங்கள் பாதுகாப்பானவை. நான் பார்த்த அளவில் பெரும்பாலான ஜோர்ஜியர்கள் நேர்மையாக நடந்து கொள்கிறார்கள். யாரும் எம்மை வெளிநாட்டவர் தானே என்று ஏமாற்ற நினைக்கவில்லை.

இன்னொரு முக்கியமான விடயம். “எங்களிடம் பணம் இருக்கிறது” என்று ஆடம்பரம் காட்டுவோரை தான் திருடர்கள் குறிவைக்கிறார்கள். “ரோமாபுரியில் ஒரு ரோமனாக இருக்க வேண்டும்” என்று சொல்வது மாதிரி, எந்த நாட்டுக்கு சென்றாலும் உள்ளூர் மக்களில் ஒருவராக மாறிவிட வேண்டும். அவர்களது நடை, உடை, பாவனைகளை மேலெழுந்த வாரியாக அவதானித்து விட்டு, நாமும் அப்படியே நடந்து கொண்டால் எந்தப் பிரச்சினையும் வராது. சுருக்கமாக, எங்கிருந்தாலும் மிகவும் எளிமையாக வாழ வேண்டும்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றை அழுத்தவும் )

(முற்றும்)

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 51

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 51

பிரான்சில் ஆடம் ஸ்மித்

அ.அனிக்கின்

நாம் மேலே வர்ணித்திருக்கும் சம்பவங்களுக்கு ஐம்பது வருடங்களுக்குப் பிறகு ஜான் படிஸ்ட் ஸேய் 1765-1766ம் வருடங்களில் ஸ்மித் பாரிசில் தங்கியிருந்த காலத்தைப் பற்றி வயோதிகரான டுபோன்னிடம் கேட்டார். ஸ்மித் டாக்டர் கெனேயின் “மாடியறை மன்றத்துக்குப்” போவதுண்டு; ஆனால் அவர் அங்கே அமைதியாகவே உட்கார்ந்திருப்பார், பிஸியோகிராட்டுகளின் கூட்டங்களில் எதுவும் பேச மாட்டார்; எனவே நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தை எதிர்காலத்தில் எழுதிப் பிரபலமடையப் போகின்ற ஆசிரியர் இவர்தான் என்று யாரும் சந்தேகித்திருக்கக்கூட முடியாது என்று அவர் பதிலளித்தார்.

மொரெல்லே என்ற அறிஞரும் எழுத்தாளரும் பாரிசில் ஸ்மித்துக்கு நண்பராக இருந்தார். அவர் தம்முடைய நினைவுக் குறிப்புகளில் பின் வருமாறு எழுதுகிறார்: “திரு. டியுர்கோ… ஸ்மித்தின் திறமையைப் பற்றி மிக உயர்ந்த அபிப்பிராயம் கொண்டிருந்தார். நாங்கள் அவரைப் பல தடவைகள் பார்த்தோம்; அவர் ஹெல்வெடியசுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். நாங்கள் வர்த்தகத் தத்துவம், வங்கித் துறை, தேசியக் கடன் ஆகியவை பற்றியும் அவர் எழுதத் திட்டமிட்டிருந்த மாபெரும் புத்தகத்தில் பல விஷயங்களைப் பற்றியும் பேசுவதுண்டு” (1)  ஸ்மித் எழுதிய கடிதங்களிலிருந்து அவர் கணிதவியல் அறிஞரும் தத்துவஞானியுமான ட-அலம்பேர், அறியாமை, மூட நம்பிக்கை ஆகியவற்றை எதிர்த்துப் போராடிவந்த மாவீரரான கோல்பாக் பிரபு ஆகியவர்களோடு நட்புக் கொண்டிருந்தார் என்று தெரிகிறது. ஸ்மித் வொல்டேரையும் ஜினீவாவின் புறநகர்ப் பகுதியில் அவருடைய பண்ணையில் சந்தித்தார்; அவரோடு சில முறை பேசி மகிழ்ந்தார். வொல்டேர் மிகச் சிறந்த பிரெஞ்சுக்காரர்களில் ஒருவர் என்று கருதினார்.

ஸ்மித் மிகவும் ஆரம்பத்திலேயே – அதாவது 1775-ம் வருடத்திலேயே – எடின்பரோ சஞ்சிகையில் ஒரு கட்டுரை எழுதினார்; அந்தக் கட்டுரையில் பிரெஞ்சுக் கலாச்சாரத்தைப் பற்றி ஸ்மித்தின் மிகச் சிறப்பான அறிவு வெளிப்பட்டது. அவர் ஜான் லோவின் கருத்துக்கள், நடவடிக்கைகளைப் பற்றி மிக விரிவாகத் தெரிந்துவைத்திருந்தார் என்பதை அவர் நிகழ்த்திய விரிவுரைகளிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.

படிக்க :
ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான ஏ.பி.வி.பி. தக்குதல் – மதுரை வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !
♦ ஜே.என்.யூ : ஒரு ஏபிவிபி ரவுடி கூட இன்னும் கைது செய்யப்படவில்லை !

அவர் பிரெஞ்சுக் கலைக்களஞ்சியத்தில் கெனேயின் கட்டுரைகளைப் படித்திருந்த போதிலும் பிஸியோகிராட்டுகளின் நூல்களைப் பற்றி லேசாக மட்டுமே அறிந்திருந்தார். இப்பொழுது பாரிசில் அவர்களுடைய கருத்துக்களை அவர்களோடு ஏற்பட்ட நேரடியான சந்திப்புக்களில் தெரிந்து கொண்டார், ஏராளமான அளவில் வெளிவரத் தொடங்கியிருந்த பிஸியோகிராட்டிய பிரசுரங்களின் மூலமாகவும் அறிந்து கொண்டார்.

ஸ்மித் சரியான நேரத்தில்தான் பிரான்சுக்குச் சென்றார் என்று கூடச் சொல்லலாம். ஒரு பக்கத்தில் அவர் ஏற்கெனவே போதிய அளவுக்கு முதிர்ச்சியடைந்த புலமை உடையவராகவும் சுயமாகவே முடிவு செய்த கருத்துக்களைக் கொண்டவராகவும் இருந்தார். மறுபக்கத்தில் அவருடைய பொருளாதார முறை இன்னும் முழுமையாக வளர்ச்சி அடையவில்லையாதலால் அவர் கெனே, டியுர்கோவின் கருத்துக்களை ஈர்த்துக் கொள்ள முடிந்தது.

ஆடம் ஸ்மித்

ஸ்மித் பிஸியோகிராட்டுகளையும் குறிப்பாக டியுர்கோவையும் எந்த அளவுக்குச் சார்ந்திருந்தார் என்ற பிரச்சினையைப் பற்றி தனி சரித்திரமே இருக்கிறது. முதலாளித்துவ சமூகத்தின் உள்ளமைப்பை பிஸியோகிராட்டுகளைக் காட்டிலும் ஸ்மித் இன்னும் ஆழமாக ஊடுருவிப் பார்த்தார். ஆங்கில மரபையொட்டி அவர் உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தை ஆதாரமாக வைத்துத் தன்னுடைய பொருளாதாரத் தத்துவத்தை அமைத்தார்; ஆனால் பிஸியோ கிராட்டுகளிடம் மதிப்புத் தத்துவம் என்பதே இல்லை. எனவே, அவர்களோடு ஒப்பு நோக்கில் ஸ்மித் மிக முக்கியமான முன்னேற்றத்தைச் செய்வதற்கு இது உதவியது. விவசாய உழைப்பு மட்டும் மதிப்பை உருவாக்கவில்லை, எல்லா விதமான பயனுள்ள உழைப்புமே மதிப்பை உருவாக்குகிறது என்று ஸ்மித் நிரூபித்தார். முதலாளித்துவ சமூகத்தின் வர்க்க அடுக்கமைவைப் பற்றி பிஸியோகிராட்டுகளைக் காட்டிலும் ஸ்மித் அதிகத் தெளிவான கருத்துக் கொண்டிருந்தார்.

அதே சமயத்தில் சில துறைகளில் ஸ்மித்தைக் காட்டிலும் பிஸியோகிராட்டுகள் அதிக முன்னேற்றமடைந்திருந்தார்கள். இது குறிப்பாக முதலாளித்துவப் புனருற்பத்தியின் இயந்திர நுட்பம் பற்றி கெனே வெளியிட்ட மிகச் சிறப்பான கருத்துக்களுக்குப் பொருந்துவதாகும். முதலாளிகள் தங்களுடைய நுகர்வை விலக்கிக் கொள்வதன் மூலம், தவிர்த்தலின் மூலம், சுய இழப்பின் மூலமாகவே மூலதனத் திரட்டல் சாத்தியம் என்ற நம்பிக்கையில் ஸ்மித் பிஸியோகிராட்டுகளைப் பின்பற்றினார். அவ்வாறு கருதுவதற்கு அவர்களுக்காவது ஒரு தர்க்க அடிப்படை இருந்தது. ஏனென்றால் தொழில்துறை உழைப்பு “மலட்டுத் தனமானது”, “ஒன்றும் இல்லாமலேயே” முதலாளிகள் மூலதனத் திரட்டலைச் செய்வதாக அவர்கள் கருதினார்கள்.

ஸ்மித்துக்கு இந்த வகையான நியாயமும் கிடையாது. பயனுள்ள உழைப்பின் எல்லா வகைகளுமே சமமானவை, பொருளாதார ரீதியில் சமமான மதிப்புடையவை என்ற கருத்துரையில் அவர் முரண்பாடுகளோடு தான் எழுதுகிறார். மதிப்பை உருவாக்குவதை ஆதாரமாகக் கொண்டு பார்க்கும் பொழுது விவசாய உழைப்பு முன்னுரிமை கொண்டிருக்கிறது, ஏனென்றால் இங்கே “இயற்கை மனிதனோடு சேர்ந்து பாடுபடுகிறது” என்ற கருத்தை அவர் இன்னும் தன்னுடைய மனதிலிருந்து தெளிவாக அகற்ற முடியவில்லை.

படிக்க :
இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டத்தை பற்ற வைத்த புதிய குடியுரிமை சட்டம் !
♦ சுபாவ வாதம் : விஞ்ஞானச் சிந்தனையின் துவக்கம் !

பிஸியோகிராட்டுகளின்பால் அவருடைய அணுகுமுறை வாணிப ஊக்கக் கொள்கையினரிடம் அவர் கடைப்பிடித்த அணுகுமுறையிலிருந்து முற்றிலும் வேறுவிதமாக இருந்தது. அவர் வாணிப ஊக்கக் கொள்கையினரைத் தன்னுடைய சித்தாந்த எதிரிகளாகக் கருதினார். அறிவுத் துறையைச் சேர்ந்தவர் என்ற முறையில் அவர் பொதுவாக நிதானத்தைக் கடைப்பிடித்த போதிலும், அவர்களை மிகவும் கூர்மையாக (சில சமயங்களில் மிக அதிகமாகவே) விமர்சனம் செய்தார். பொதுவான வகையில் சொல்வதென்றால், பிஸியோகிராட்டுகளை ஒரே இலட்சியத்துக்காக ஆனால் வேறு வழிகளில் பாடுபடுகின்ற தோழர்கள், நண்பர்கள் என்றே அவர் கருதினார். “இந்த முறையில் எவ்வளவு குறைகள் இருந்தபோதிலும், அரசியல் பொருளாதாரத்தைப் பற்றி இதுவரையிலும் எழுதப்பட்டிருக்கின்றவற்றில் உண்மைக்கு மிகவும் நெருங்கி வருவது இதுவே” (2) என்பது தன்னுடைய முடிவு என்று நாடுகளின் செல்வத்தில் எழுதினார். அது “உலகத்தின் எந்தப் பகுதியிலும் எப்படிப்பட்ட தீமையும் செய்யவில்லை, ஒருபோதும் அவ்வாறு செய்யாது” என்று வேறொரு பகுதியில் எழுதினார்.

கடைசியாகச் சொல்லியிருப்பதை வேடிக்கையாகச் சொன்னதாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆடம் ஸ்மித் மிக நுட்பமான நகைச்சுவையைக் கையாள்கிறார், அதே சமயத்தில் தீவிரமாக சிந்தனை செய்வதைப் போல முகபாவத்தை வைத்துக்கொள்கிறார். அவர் வாழ்க்கையிலும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ஒரு நாள் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் அதிகாரபூர்வமான விருந்து நிகழ்ச்சியின் போது அவருக்குப் பக்கத்தில் லண்டனைச் சேர்ந்த ஒருவர் உட்கார்ந்தார். பார்த்தவுடனேயே அவ்வளவு கெட்டிக்காரர் அல்ல என்று தோன்றக் கூடிய ஒரு நபரிடம் எல்லோரும் அதிகமான மரியாதை காட்டுவது ஏன் என்று அவர் ஸ்மித்திடம் ஆச்சரியத்தோடு கேட்டார்.

“அவர் கெட்டிக்காரர் அல்ல என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் எங்கள் பல்கலைக்கழகத்திலிருக்கும் ஒரே பிரபு அவர்தான்” என்று ஸ்மித் பதிலளித்தார். அவர் கேலியாகப் பேசுகிறாரா இல்லையா என்பதைப் பக்கத்தில் இருந்தவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவருடைய புத்தகத்தில் நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ பிஸியோகிராட்டுகளோடு தொடர்புடைய கருத்துக்களிலும் அதிகமான எண்ணிக்கையுள்ள பல்வேறு காட்சிப் பதிவுகளிலும் (இவற்றில் தனிப்பட்டவையும் உள்ளன) பிரான்ஸ் குறிப்பிடப்படுகிறது. இந்தக் குறிப்புகள் பொதுவாக விமர்சன ரீதியில் அமைந்திருக்கின்றன. நிலப் பிரபுத்துவ சர்வாதிகார அமைப்பைக் கொண்ட பிரான்ஸ், முதலாளித்துவ வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்ற வகையில் விலங்குகள் மாட்டப்பட்டுள்ள பிரான்ஸ், இன்றைக்கிருக்கின்ற அமைப்புக்களுக்கும் இலட்சிய வடிவமான “இயற்கையான அமைப்புக்கும்” இடையே உள்ள முரண் பாட்டுக்குச் சிறந்த உதாரணம் என்று ஸ்மித் கருதினார். இங்கிலாந்தில் எல்லாமே மிகவும் சிறப்பாக இருப்பதாகச் சொல்ல முடியாது, ஆனால் அந்த நாட்டிலுள்ள அமைப்பு தனி நபர் சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் இவற்றைக் காட்டிலும் முக்கியமான எந்தத் தொழிலிலும் ஈடுபடுவதற்குரிய சுதந்திரத்தையும் அனுமதித்தது; எனவே “இயற்கையான அமைப்புக்கு” அது மிகவும் அதிகமான அளவுக்கு நெருங்கி வந்தது.

ஸ்மித் பிரான்சில் மூன்று வருடங்கள் இருந்தார். அவருடைய சொந்த வாழ்க்கையில் அதன் முக்கியத்துவம் என்ன?

முதலாவதாக, அவருடைய பொருளாயத நிலையில் அதிகமான அபிவிருத்தி ஏற்பட்டது. பக்லூ கோமகனின் பெற்றோர்களிடம் செய்து கொண்ட உடன்பாட்டின்படி அவருக்கு வருடத்துக்கு முந்நூறு பவுன் ஊதியம் கிடைக்கும்; இப்பணம் பிரான்சில் இருந்த மூன்று வருடங்களுக்கு மட்டுமல்லாமல், அவருடைய வாழ்க்கை முழுவதும் ஓய்வூதியமாகக் கிடைக்கும். இந்த ஏற்பாட்டின் பலனாக அவர் அடுத்த பத்து வருடங்களில் தன் கவனம் முழுவதையும் புத்தகம் எழுதுவதில் செலவிட முடிந்தது; அதற்குப் பிறகு அவர் கிளாஸ்கோ பல்கலைக்கழக வேலைக்குத் திரும்பவில்லை.

இரண்டாவதாக, அவருடைய சமகாலத்தவர்கள் அவருடைய குணத்தில் மாற்றத்தைக் கண்டார்கள்; அவர் இப்பொழுது அதிகமான திறமையும் சுறுசுறுப்பும் கட்டுப்பாடும் உடையவராக இருந்தார், தன்னுடைய மேலதிகாரிகள் உள்பட வெவ்வேறு விதமான நபர்களிடம் பழகும் பொழுது ஒரு வகையான திறமையைக் கூட அவர் இப்பொழுது பெற்றிருந்தார். எனினும் மற்றவர்களோடு பழகும் பொழுது அவசியமான நிதானத்தை அவர் கடைசிவரையிலும் அடையவில்லை. அவருடைய நண்பர்களில் பலருக்கும் அவர் ஓரளவு விசித்திரமானவராக, ஞாபக மறதியுள்ள பேராசிரியராகவே இருந்தார். அவர் புகழ் பெருகிய பொழுது அவருடைய ஞாபக மறதியைப் பற்றிய கதைகளும் வேகமாக அதிகரித்தன, சாதாரண மனிதர்களுக்கு இந்தக் கதைகள் அவருடைய புகழின் ஒரு பகுதியாக இருந்தன.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1) A. Morellet, Mémoires sur le dix-huitième siècle et sur la révolution française, t. I, Paris, 1822, p. 244.

 (2) A. Smith, The Wealth of Nations, Vol. III, London, 1924, p. 172.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

CAA ஆதரவு – பாஜக ட்ரோல் படையின் தரம் தாழ்ந்த ‘மிஸ்டுகால் புரட்சி’ !

2

திக்கத்தில் இருப்பவர்களுக்கு புரோக்கர் வேலை பார்த்த வரலாறே சங்கபரிவாரத்தின் 100 ஆண்டுகால வரலாறு. – இதுதான் தெரிந்த கதையாயிற்றே.. இப்போது அவர்களே ஆதிக்கத்தில் நேரடியாக அமர்ந்திருக்கிறார்களே என்று நினைக்கலாம். ஆனால் காட்டிக் கொடுக்கும் புத்தி என்றும் விலகாது என்பதற்கு சமீபத்திய சான்றுதான் சி.ஏ.ஏ சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக பாஜக எடுத்து நடத்தியுள்ள “மிஸ்டு கால்” இயக்கம்.

கடந்த 2014-ம் ஆண்டில் பாஜக-வின் உறுப்பினர் சேர்க்கையை நடத்துவதற்கு மிஸ்டு கால் இயக்கத்தை முதன்முதலில் தொடங்கியது. அப்படி நோகாமல் மிஸ்டுகால் கொடுத்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் காட்டியே உலகிலேயே அதிக உறுப்பினர் சேர்க்கையைக் கொண்ட கட்சி பாஜக என வெற்று அலப்பறை செய்து கொண்டிருந்தது நினைவிருக்கலாம்.

மோடி – அமித்ஷா கும்பலைத் தொடர்ந்து அவர்களைப் போலவே வாயில் வடைசுடுவதில் கில்லாடியான ஜக்கி வாசுதேவ், மரங்களை நடவும், காவிரியை இணைக்கவும் ‘மிஸ்டுகால் புரட்சி’யைத் தொடங்கி வைத்தார். இப்படி பயணித்த ‘மிஸ்டுகால் புரட்சி’யின் வரலாற்றுக்கே ஒரு பெரும் ‘புரட்சியை’ சமீபத்தில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது பாஜக.

சங்க பரிவாரக் கும்பலின் நெடுநாள் செயல்திட்டமான இந்துராஷ்டிரத்தைச் சட்டரீதியாக நடைமுறைப்படுத்தும் வகையிலான குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் இயற்றியது பாஜக. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் தொடங்கின. அன்று தொடங்கிய இப்போராட்டங்கள் இன்றுவரை நாடுமுழுவதும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

படிக்க :
ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் !
♦ குடியுரிமை திருத்தச் சட்டம் : உத்தர பிரதேசத்தில் போலீசு நடத்திய படுகொலைகள் !

இந்நிலையில் இச்சட்டத்திற்கு நாடு முழுவதும் பெருவாரியான மக்களின் மத்தியில் ஆதரவு இருப்பதாகக் காட்டிக் கொள்ள ஒரு ‘மிஸ்டுகால் புரட்சி’ இயக்கத்தைத் தொடங்கியது பாஜக. அதாவது போராட்டம், ஆர்ப்பாட்டம், பரபரப்பு ஏதுமில்லாமல் வீட்டிலிருந்தபடியே நோகாமல் நோம்பு கும்பிடும் வகையில் மிஸ்டுகால் கொடுத்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு உங்கள் ஆதரவைத் தெரிவிக்கலாம் என்று அறிவித்தது பாஜக.

இதனை கடந்த ஜனவரி 3, 2020 அன்று அமித்ஷா தமது சமூக வலைத்தள கணக்குகளில் அறிமுகப்படுத்தி துவங்கிவைத்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு உங்கள் ஆதரவைத் தெரிவிக்க 88662-88662 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்குமாறு அழைப்பு விடுத்தார்.

ஜனவரி 3, 2020 அன்று விடுக்கப்பட்ட இந்த அழைப்பிற்கு யாரும் செவிமடுக்கவில்லை போலத் தெரிகிறது. அப்படியே விட்டால் மானம் போய்விடும் என்று நினைத்த சங்க பரிவாரக் கும்பல், தனது ட்ரால் படையை மிஸ்டுகாலுக்கு ஆள் பிடிக்க களத்தில் இறக்கி விட்டது. மிஸ்டுகாலுக்கே ஆள்பிடிக்க வேண்டிய தமது இழிநிலையை எண்ணி ட்ரால்படைகள் கண்ணீர் சிந்தியிருக்குமோ இல்லையோ அமித்ஷா ஜி மனதிற்குள்ளாவது சிறிது கண்ணீர் சிந்தியிருப்பார்.

சமூக வலைத்தளங்களில் அடுத்தவர்களை இழிவுபடுத்தவும், மிரட்டவும், மேலிருந்து தரப்படும் குறுந்தகவல்களை அதே எழுத்துப் பிழையோடு ஈயடித்தான் காபி செய்து நிலைத் தகவல் பதிவிடுவதற்கு மட்டுமே பழக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த சங்கி ட்ரால் படையிடம் போய், மிஸ்டுகால் கொடுக்க ஆள் பிடிக்கச் சொன்னால் என்ன செய்வார்கள் பாவம் ?

ஒரு பிரிவு ட்ரால் கூட்டம், பணரீதியாக ஊரை ஏய்க்கத் தொடங்கியது. மிஸ்டு கால் கொடுக்க வேண்டிய எண்ணைப் பதிவிட்டு, இந்த எண்ணிற்கு அழைப்புவிடுத்தால் ஆறுமாதத்திற்கு நெட்பிளிக்ஸ் சேனல் சந்தாவுக்கான இலவச இணைப்பு கிடைக்கும் என்று விளம்பரப் படுத்தத் தொடங்கியது.

இது வைரலாகப் பரவியதைக் கண்டு மிரண்டு போன நெட்பிளிக்ஸ் நிர்வாகம் பதறிப் போய் உடனடியாக தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் இத்தகவல்களை மறுத்து, அவை தவறான தகவல்கள் என விளக்கமளித்தது. பாவம் எத்தனை பேர் இதனை நம்பி அழைப்பு விடுத்து ஏமாந்து போய், நெட்பிளிக்ஸ் கஸ்டமர் கேர் எண்ணிற்கு அழைத்து காய்ச்சி எடுத்தார்களோ தெரியவில்லை.

இன்னொரு ட்ரால் கூட்டம், மோடி அரசின் மிகப்பெரும் சாதனையான வேலைவாய்ப்பின்மையையும் தமக்குச் சாதகமாக பயன்படுத்தி ஆள் பிடிக்க இறங்கியிருந்தது. புதிய வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும் ஆர்வமுள்ளவர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க அமித்ஷா ஜி அறிமுகப்படுத்திய எண்ணைப் பதிவிட்டிருந்தது. ஏற்கெனவே வேலையின்றித் தவிக்கும் இளந்தலைமுறையை இதற்கு மேல் அவமானப்படுத்த வேறு எந்தக் கட்சியாலும் முடியாது.

படிக்க :
கேரளாவில் முசுலீம் மாணவர்கள் குடியரசு தினத்தை புறக்கணித்தனரா ? சங்கிகளின் ட்ரோல் அம்பலம் !
♦ ஜே.என்.யூ : ஒரு ஏபிவிபி ரவுடி கூட இன்னும் கைது செய்யப்படவில்லை !

பெண்களின் பெயர்களைக் கொண்ட மற்றொரு பாஜக ட்ரால் கும்பல், தனது அலைபேசியை தொலைத்து விட்டதாகவும், தனது எண்ணிற்கு அழைப்பு விடுத்து கண்டுபிடிக்க உதவுமாறும் பதிவிட்டிருந்தது. சரி யாரோ பெண்பிள்ளை கைபேசியைத் தொலைத்துவிட்டது; உதவி செய்யலாம் என அழைப்பு விட்டவர்களின் அழைப்புகளும் குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவான அழைப்புக்களாக பதிவு செய்யப்பட்டிருக்கும்.

கூலிக்கு மாறடிக்கும் ட்ரோல்கள் மேற்கண்டவாறு தவறான தகவல்கள் மூலம் மிஸ்டுகால் புரட்சிக்கு ஆள்பிடித்துக் கொண்டிருக்க, உண்மையான ஆர்.எஸ்.எஸ். ரத்தம் ஊறியிருக்கும் கணிசமான ட்ரோல்கள் பெண்களைப் பண்டமாக்கி தங்களது ஆள்பிடிக்கும் கடமையைச் செய்துவந்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

பெண்களின் பெயர் கொண்ட ஐடியிலிருந்து, “நான் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன். அழையுங்கள் 8866288662.” ; “இன்று மிகவும் போர் அடிக்கிறது. எனது எண்ணை என் பின் தொடர்வாளர்களுக்கு பகிர விரும்புகிறேன் – அழையுங்கள் 8866288662” என்பது போன்ற வாசகங்களைப் பதிவிட்டு ஆள்பிடிக்கத் தொடங்கினர்.

இன்னொரு ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தி நேரடியாக ‘மாமா’ வேலையையே செய்யத் தொடங்கியிருந்தார். “உங்கள் ஊரில் 69 சூடான பெண்கள் உங்களோடு பாலியல் உறவு வைக்கக் காத்திருக்கிறார்கள். அழையுங்கள் 8866288662”. என்று பதிவிட்டிருக்கிறார்.

சரி இதையெல்லாம் வைத்து ஒரே நாளில் பல கோடி மிஸ்டுகால்களைப் பெற்று சி.ஏ.ஏ. சட்டத்திற்கு அமித்ஷா ஆதரவு திரட்டியிருப்பார் என்று பார்த்தால், அமித்ஷா வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படியே வெரும் 52 லட்சம் பேர்தான் மிஸ்டுகால் கொடுத்திருக்கிறார்களாம்.

ஆள்பிடிக்க மெனக்கெட்ட சங்கிகள் தான் பாவம் ! பாஜக-விற்கு ட்ராலாக வாக்கப்பட்ட பாவத்திற்காக இணையத்தில் ‘மாமா’ வேலை வரை பார்த்தும் ஒன்றும் பலனில்லாமல் போய்விட்டதே ! வருத்தம் இருக்காதா பின்னே !


நந்தன்
நன்றி : தி வயர்

 

ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான ஏ.பி.வி.பி. தக்குதல் – மதுரை வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

போராட்டத் தீ பரவட்டும் ! மதுரை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !

  • டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மீது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. நடத்திய ஆயுதத் தாக்குதல் – மனித சமூக அறிவின் மீதான தாக்குதல்!
  • தாக்கிய குண்டர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்!
  • குடியுரிமை திருத்தச் சட்டத்தால் நாட்டையே வன்முறைக் களமாக்கிய மோடி-அமித் சா அமைச்சரவையே பதவி விலகு!

மேற்கண்ட முழக்கங்களை வலியுறுத்தி 06.01.2020 அன்று மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன், பார் கவுன்சில் உறுப்பினர் பா.அசோக் , வழக்கறிஞர் முத்து அமுதநாதன், வழக்கறிஞர் வின்சென்ட் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

தங்களது உரையில் ஜே.என்.யூ மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததுடன், வழக்கறிஞர்கள் மாணவர்களின் போராட்ட உரிமைக்காக, அரசியல் சட்டத்தை காப்பதற்காக களத்தில் நிற்போம் என்றனர்.

மேலும், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் – மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. நடத்திய ஆயுதத் தாக்குதல் நாட்டையே அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.

மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலை நிர்வாகமும், உள்துறை அமைச்சர் அமித்சாவின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறையும், ஏ.பி.வி.பி. -யின் தாக்குதலுக்குத் துணை நின்றுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவந்த மோடி அரசுக்கு எதிராக நாடே ஒன்றுதிரண்டு போராடுகிறது. இப்போராட்டங்களில் முன்னணியில் இருப்போர் இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக் கழக மாணவர்கள்தான். மோடி அரசின் பாசிச திட்டங்களை அறிவுப்பூர்வமாக அம்பலப்படுத்திப் போராடுவோர் பல்கலைக் கழக மாணவர்களும்-பேராசிரியர்களும்தான்.

இதனால்தான் டெல்லி ஜாமியா, அலிகார், ஜவகர்லால் நேரு, ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி. -க்கள் மோடி அரசால் குறிவைக்கப்பட்டு தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றன.

ஜெர்மனி – இத்தாலியில் நடந்த பாசிச ஆட்சியில் முதலில் அரசுத் துறைகள், நீதிமன்றங்களை கைப்பற்றிய பாசிஸ்ட்டுகள், அடுத்து குறிவைத்தது உயர்கல்வி நிலையங்களைத்தான். மோடி ஆட்சியிலும் அதுதான் நடக்கிறது. கல்வி நிலையங்களின் மீதான தாக்குதல் என்பது மனித நாகரீகம் மீதான தாக்குதலே!

நாட்டின் சொத்தே அறிவுசார் பிரிவினரும், உழைக்கும் மக்களும்தான். இந்த இரண்டு பிரிவுகளும் நாட்டில் பாதுகாப்பாக இல்லை. பல்கலைக்கழகம், கல்லூரி விடுதிகளில்கூட நமது பிள்ளைகள் பாதுகாப்பாக இல்லையெனில், வேறு எங்கு பாதுகாப்பாக இருக்க முடியும்? யாருக்கு பாதுகாப்பு இருக்க முடியும்?

படிக்க:
பீகார் : தேசியக் கொடி ஏந்தியவரை கொடூரமாகக் கொன்ற காவி குண்டர்கள் !
♦ ICU-வில் இந்திய ஜனநாயகம் ! குடந்தை ம.உ.பா.மையம் கருத்தரங்கம் !

மத, இன அடிப்படையிலான குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு என்று நாட்டைப் பிளக்கும் அரசியல் சட்ட விரோதக் கொள்கைகளை அமல்படுத்திய மோடி அரசைப் புரிந்து கொண்ட மக்கள், மாணவர்கள் – இளைஞர்கள் தீவிரமாகப் போராடுகிறார்கள். வரலாறு காணாத போராட்டத்தால் பயந்துபோன மோடி அரசு, துப்பாக்கிச் சூடு, கொலை, ஆயுதத் தாக்குதல் என்ற உத்திகளை கையில் எடுக்கிறது.

மோடி அரசு அனைத்துத் துறைகளிலும் தோற்றுப் போன, பெரும்பான்மை இந்து மக்களுக்கு எதிரான அரசு. இந்த அரசு தொடர்ந்தால் இட ஒதுக்கீடு போகும்; குலத் தொழில் வரும்; பொருளாதாரம் நாசமாகும்; அரசியல் சட்டம் அழிக்கப்படும்.

மோடி அரசு எத்தனை வன்முறையை ஏவினாலும், அரசியல் சட்டத்தை, நாட்டைக் காக்கப் போராடும் இந்திய மக்கள் அஞ்ச மாட்டோம். ஒரு அடி கூடப் பின்வாங்க மாட்டோம்; தொடர்ந்து முன்னேறுவோம். நாட்டு மக்களின் அனைத்து உரிமைப் போராட்டங்களுக்கும் வழக்கறிஞர்கள் துணைநிற்போம். மாணவர்களின் போராடும் உரிமை அடிப்படை உரிமை. போராடும் உரிமை பறிக்கப்பட்டால், அனைத்து உரிமைகளும் பறிபோகும்.

எனவே, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மீதான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பு ஏ.பி.வி.பி. நடத்திய ஆயுதத் தாக்குதலை மதுரை வழக்கறிஞர்கள் வன்மையாக கண்டிக்கிறோம்!

போராடும் மாணவர்களுக்கு, மக்களுக்கு துணைநிற்கிறோம்! மோடி அமித்சா பதவி விலகும்வரை போராட்டத்தைத் தொடர்வோம்! என்று மதுரை வழக்கறிஞர்கள் உறுதி எடுத்தனர்.

மூத்த வழக்கறிஞர் ஜகாங்கீர் பாஷா, AILU, SDPI, VCK, CPCL உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். வழக்கறிஞர்கள் திரு கனகவேல், திரு ராஜேந்திரன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கான  உரிய ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மதுரை வழக்கறிஞர்கள்.

சுபாவ வாதம் : விஞ்ஞானச் சிந்தனையின் துவக்கம் !

0
நா. வானமாமலை

இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – பாகம் – 05

முதல் பாகம்

ஈஸ்வர வாதமும் இயற்கை வாதமும்

வேத காலத்திற்கு பின் பொருள் முதல்வாதச் சார்புடைய மூன்று கொள்கைகள் உருவாகின. வேதயக்ஞங்களை எதிர்த்தவர்கள், ஐம்பூதக் கொள்கை, பிரக்ருதி கொள்கை, சுபாவவாதம் ஆகியவற்றை முன் வைத்தனர். உலக இயக்கத்திற்கு பூதங்களின் செயல்களே காரணம் என்றும், உலக இயக்கத்தை விளக்க கடவுளின் தலையீடு தேவையில்லை என்றும் கூறியவர்கள் லோகாயதர்கள். இவர்கள் முரணற்ற நாத்திகர்கள். ‘பிரக்ருதி’ என்ற மூலப் பொருளின் பரிணாம மாற்றமே பிரபஞ்சத்தின் உருவாக்கத்திற்குக் காரணம் என்று சாங்கியவாதிகளின் கடைப்பிடி. அவர்கள் கடவுளின் செயலை மறுத்தார்கள், இவர்களது பண்டைக்கால தத்துவம் நிரீச்சுவர சாங்கியம் என்று எதிரிகளால் அழைக்கப்பட்டது (நிரீச்சுவர = கடவுள் இல்லாத). இதனோடு சுபாவவாதம் என்றதோர் கொள்கையும் உருவாயிற்று. இதனைப் பல தத்துவவாதிகள் ஏற்றுக் கொண்டனர். பொருள்களின் குணங்களால் (சுபாவம்) உலக மாறுதல்கள் அனைத்தும் நிகழ்கின்றன என்பது சுபாவவாதத்தின் உள்ளடக்கம். இந்தக் கொள்கை, ஆரம்பத்தில் எந்தத் தத்துவத்தோடும் சார்புடையதாக இருக்கவில்லை. பின்னர் பொருள்முதல்வாத தத்துவங்களான லோகாயதம், சாங்கியம் இவற்றின் பகுதிகளாக இக்கொள்கை பொருந்தி விட்டது. கடவுளை மறுக்க இக்கொள்கையைப் பண்டையப் பொருள்முதல்வாதிகள் பயன்படுத்தினார்கள்.

‘சுபாவம்’ என்னும் கொள்கைதான் பண்டையத் தத்துவ வரலாற்றில் மத நம்பிக்கையையும், விஞ்ஞான ஆராய்ச்சியையும் பிரிக்கிற எல்லைக்கோடாகக் காணப்படுகிறது. இவை முரண்பட்டு, முரண்பாடுகள் வளர்ச்சியடைந்து தற்காலத்தில் விஞ்ஞானம், மத நம்பிக்கையும் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கின்றன. இதனை பெட்ராண்டு ரஸ்ஸல் என்னும் சிந்தனையாளர் நிலைத்த போராட்டம் (Pitched battle) என்று வருணிக்கிறார்.

மதங்களின் மிக முக்கியமான நம்பிக்கை, “இப் பிரபஞ்சத்திற்கு வெளியே உள்ள இயற்கைக்கு அதீதமான சக்தி ஒன்றுதான் இவ்வுலகைப் படைத்தது” என்பதே. அச்சக்தியைத்தான் ‘கடவுள்’ என்று பக்திமான்கள் அழைக்கிறார்கள். இக்கடவுளை நம்பிக்கையால் மட்டுமே அறிய முடியும் என்று மதவாதிகள் கூறுகிறார்கள். சில தீர்க்கதரிசிகள் மூலம் கடவுள் தனது நீதியை வெளிப்படுத்துவார். இந்தியாவில் கடவுளே அவதாரம் எடுத்து தமது நீதியை நிலை நாட்டுவார் என்று நம்புகிறார்கள்.

பைபிளில் வருங்காலத்தில் நிகழப்போகும் நிகழ்ச்சிகளை தேவ தூதர்கள் புனிதர் ஜானுக்கு வெளிப்படுத்தியதாக “வெளிப்படுத்தின விசேஷம்” (Revelation)(1) என்று ஓர் அத்தியாயம் உள்ளது. அதில் தேவ தூதர்கள் நடத்தப் போகிற சம்பவங்களை திவ்ய வாசகனான யோவானுக்கு அறிவிக்கிறார்கள். சைவத்தில் அடியார்களுக்குச் சிவபெருமான் காட்சி கொடுத்தோ அல்லது கனவில் தோன்றியோ தம் விருப்பங்களைத் தெரியப்படுத்துவார் (பெரிய புராணம்). தற்காலக் கிராமத் தெய்வங்கள் கூட ஆராதனை கொண்டு ஆடுபவர்கள் மூலமாக தம் விருப்பங்களைத் தெரியப்படுத்துவதாக நம்பிக்கையுள்ளது. இவர்களுக்கு சாமியாடி, கோமரம் என்ற பெயர்கள் உண்டு. இது போலவே பகவதி மனம் தெரிந்து சொல்லுகிற பூசாரிக்கு ‘வெளிச்சப்பாடு’ என்று பெயர்.

J.G. ஃப்ரேஸர்

இவர்களை J.G. ஃப்ரேஸர் என்னும் பண்பாட்டு மானிடவியல் அறிஞர் (Temporary Gods) ‘தாற்காலிகக கடவுளர்’ என்று அழைப்பர். சாதாரண மனிதர்களாக வாழும் இவர்கள், ஊட்டு, கொடை, விழா நேரங்களில் சாமியேறப் பெற்றவர்களாக தங்கள் தன்மையை இழக்கிறார்கள். இவையாவும் நம்பிக்கையே. சாமியாடிகள் தங்கள் உடலில் சிறிது நேரம் சாமி புகுந்து கொள்வதாக எண்ணுகிறார்கள். பக்திமான்கள் அதனை நம்புகிறார்கள்.

வைஷ்ணவ ஆழ்வார்கள், குருமார்களுடைய செயல்களைத் திருமால், கனவில் தோன்றி வழிப்படுத்துவதாக அவர்களுடைய ‘வரலாறு’ போன்ற புராணக் கதையான ‘குரு பரம்பரை’ கூறும். பக்தியின் ஆற்றலால், வழிபாட்டுக்குரிய தெய்வங்களோடு நேரில் பேசுகிற சாமியார்கள் மீது பெருமதிப்பு வைக்கும் நாடு இது. இவ்வாறு பேசுவது, கனவு காண்பது, காட்சிகள் இவையாவும் கடவுளர்களின் பிரியத்துக்குரியவர்களுக்கே நிகழும். வேறு யாருக்கும் தெரியாது. கடவுள் வெளிப்படுத்திய நிலையான உண்மைகளே, சமய நூல்களில் காணப்படுகின்றன என்று மதச்சார்பாளர்கள் நம்புகிறார்கள். மத ஸ்தாபகர்களுக்கு எல்லாம் இப்படியொரு வாழ்க்கை நிகழ்ச்சியுண்டு என்று அவ்வம்மதவாதிகள் நம்புகிறார்கள். இதனை ஆகமம், நூல் என்று சமயக் கணக்கர் வாதங்களைக் கேட்ட காதையில் மணிமேகலை கூறுகிறது.

விஞ்ஞானத்தின் அடிப்படைக் கருதுகோள் இந்த நம்பிக்கைகளுக்கு விரோதமானது. அதன் முக்கியமான சிந்தனைகள் வருமாறு:

இவ்வுலகம் அடிப்படையில் பொருளால் ஆனது. பொருள்களிலேயே உள்ளார்ந்து இருக்கும் நியதிகளால் பொருள்-இயக்கம் தோன்றுகிறது, ‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்ற கடவுளை நம்புவோரின் கூற்றை அணுக்கள் தங்களுடைய சக்தியாலேயே அசைகின்றன, அவனது தலையீடு “அவசியமில்லை” என நவீன அணுவியல் நிரூபிக்கிறது.

படிக்க :
கடவுள் இருட்டு ! அறிவியல் வெளிச்சம் ! – நூல் அறிமுகம்
♦ சென்னை புத்தகக் காட்சியில் புதுப் பொலிவுடன் கீழைக்காற்று !

பலிகளாலும், காணிக்கைகளாலும், ஜபங்களாலும், பிரார்த்தனைகளாலும் மாற்ற முடியாத விஞ்ஞான விதிகளுக்குட்பட்டு பிரபஞ்ச இயக்கம் நிகழ்கிறது. இதனால் மனிதன் விஞ்ஞான விதிகளின் கையில் ஒரு பந்து போல எவ்வித சுதந்திரமும் அற்றவன் என்பது பொருளல்ல. “விஞ்ஞான விதிகளை மனிதன் அறிய முடியும்; அறிந்து அவ்வறிவால் பொருள்களின் இயக்கத்தை நெறிப்படுத்த இயலும்” என்று விஞ்ஞானம் வெளிப்படுத்தியுள்ளது. இன்று எத்தனை சக்திகள் மனிதன் விஞ்ஞான விதிகளை அறிந்ததால் அவனுக்குப் பணிபுரிகின்றன?

ரசாயன விஞ்ஞானத்தை மனிதன் படைத்திருக்கும் காரணத்தால், விவசாயத்திற்குத் தேவையான ரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகள், நமது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கக் கூடிய பல மருந்துப் பொருள்களையும், நோயைக் குணப்படுத்தக்கூடிய பல ஒளஷதிகளையும், இயற்கையில் இருந்து படைத்துள்ளான். அறுவை வைத்தியம் எவ்வளவு முன்னேற்றமடைந்துள்ளது என்று இன்று சொல்ல வேண்டியதில்லை. இதற்குக் காரணம் உயிரியல் விதிகளையும், உயிர் ரசாயன விதிகளையும், வேறு விஞ்ஞானப் பிரிவுகளின் விதிகளையும் மனிதன் அறிந்து பயன்படுத்துவது தான்.

விறகைத் துளைத்துத் தீயை உண்டாக்கிய மனிதன், குளிர் காயத் தீயின் உஷ்ணத்தைப் பயன்படுத்தினான். இன்று பிரம்மாண்டமாக வளர்ச்சி பெற்றுள்ள உற்பத்தித் தொழில்களுக்கு வெப்பம் அளிக்க நிலக்கரியைப் பூமியின் அடியில் இருந்து தரைமட்டத்திற்குக் கொண்டு வருகிறான். பாறை எண்ணெயைத் தரையின் அடிப்பாகத்தில் இருந்து மேலே கொண்டு வருகிறான். நிலக்கரியும் பாறை எண்ணெயும் இருப்பது மனிதனுக்கு எப்படித் தெரியும்? இவை இருக்கும் இடங்களில் உள்ள பிசாசுகள், தம்மை ஆராதிக்கும் சாமியாடிகளுக்கு வந்து காட்சி கொடுத்துச் சொல்லிச் சென்றனவா? தரையியல் (Geology) தரையியல் ரசாயனம் (Geo chemistry) ஆகிய விஞ்ஞானங்களின் வளர்ச்சியே நிலக்கரி, உலோகங்கள், மண்ணெண்ணெய் முதலியன எத்தன்மையுடைய பாறைகளில் காணப்படும் என்ற விதிகளைத் தோற்றுவித்தன. இவ்விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி மனிதன் பூமியின் உட்குடலைத் தோண்டித் தனக்குத் தேவையான பொருள்களைப் பெறுகிறான். ஃபிஸிக்ஸ் (பௌதீகம்-இயற்பியல்) என்னும் விஞ்ஞானத்தின் விதிகளை அறிந்து இப்பொருள்கள் இருக்கும் இடத்தையும், அளவையும் தெளிவாக அறியலாம்.

வெடி அதிர்வுகளே, அண்மைக் காலத்தில் உலோக தாதுக்கள், நிலக்கரி, மண்ணெண்ணெய் போன்ற பொருள்களின் இருப்பிடத்தை அறியப் பயன்பட்டது. தற்போது பல வகைக் கதிர்களின் (Rays) பிரதிபலிப்பினால் பூமியினடியில் உள்ள பொருள்களை அறிய முடிகிறது. ஓரிரு உதாரணங்களே நான் கொடுத்துள்ளேன். விஞ்ஞான- தொழில் நுணுக்கப் புரட்சிக் காலத்தில் ஆயிரக் கணக்கான சான்றுகளை அடுக்கிக்கூற முடியும். மனிதன், இயற்கை விதிகளை அறிந்து கொள்வதால், இயற்கையை தனது நலனுக்கேற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளுகிறான் என்ற உண்மையை விளக்கப் பல நூற்றுக் கணக்கான நூல்களே வெளிவந்துள்ளன.

இவ்விஞ்ஞானிகள் இயற்கையை அறியப் பயன்படுத்தும், அறிதல் முறை, நேர்காணல், சோதனை, தொடர் சிந்தனை, கருதுகோள் அமைப்பு, பின்னும் நிரூபணச் சோதனை ஆகிய சிந்தனைப் பகுதிகள் அடங்கிய விஞ்ஞான ஆய்வு முறையாகும். இங்கு நம்பிக்கைகள், கடவுளைக் கண்டவர்கள் கூறியது, ஆப்த வாக்கு (பெரியோர் கூற்று) என்பதற்கெல்லாம் இடம் இல்லை.

இவ்விரண்டு போக்குகளுக்கும் பண்டைக்கால முதலே போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தியத் தத்துவ சிந்தனையில் ‘கடவுட் கொள்கை’ ‘சுபாவக் கொள்கை’ இரண்டிற்கும் நடைபெற்றுள்ள போராட்டங்களை இங்கு காண்போம்.

சுபாவவாதம், விஞ்ஞானத்திற்கு அடிப்படைக் கருதுகோள். இது ஈஸ்வர வாதத்தின் ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் முரண்பட்டு மோதிக் கொள்ளுகிறது. இதனை இந்திய தத்துவ வரலாற்றில் ஈஸ்வர வாதத்திற்கும் சுபாவ வாதத்திற்கும் இடையே நடைபெற்ற போராட்டமாகக் காணலாம். ஸ்வேதாஸ்வதார உபநிஷதம் என்னும் நூலில் சுபாவவாதத்தை எதிர்க்கும் வாதங்கள் உள்ளன. இவ்வுபநிஷதம் ‘பானையைக் கண்டதும் செய்பவன் உண்டென்று யூகிப்பது போல, உலகத்தை அறிந்ததும், இதைப் படைத்தவன் உண்டென்று அறிய வேண்டும்’ என்று படைப்பாளியான கடவுள் உண்டென்று கூறுகிறது.

இவ்வாறு வாதிப்பதற்கு, அவர் காலத்தில் இக்கூற்றை மறுத்த சுபாவவாதம் என்னும் கருத்தை மறுக்க வேண்டியதாயிற்று. இதன் தர்க்க உருவம், இயக்கத்திற்கு இயற்கைச் சக்திகள் காரணமா, அல்லது இயற்கைக்கு அதீதமான சக்திகள் காரணமா என்ற வாதமாக இருந்தது.

நடுக் காலத்தில் சுபாவவாதத்தை, ‘நிகழ்ச்சிகளுக்குக் காரணம் கிடையாது’ என்ற பொருளில் தத்துவவாதிகள் பொருள் கொண்டார்கள். அல்லது காரணம் மட்டுமே உண்மை விளைவு மாயை என்று சில தத்துவங்கள் கூறின. காரணம் அல்லது விளைவு உண்மையல்ல என்று வேறு தத்துவங்கள் கூறின. இதனை உபநிஷதங்கள் ‘யதிருச்சா’ (யதேச்சை) என்ற பெயரால் அழைக்கின்றன. காரணமின்றித் தாமாகவே நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அல்லது எந்த நிகழ்ச்சிக்கும் காரணம் காண இயலாது என்று யதிருச்சாவாதிகள் வாதித்தனர். இங்கும் கடவுளின் தலையீடு இன்றியே உலக நிகழ்ச்சிகள் நிகழ்கின்றன என்ற கருத்து உள்ளது.

சமணத் துறவி (மாதிரிப் படம்)

இவ்விரண்டு கொள்கைகளும் நேர்முரணானவை. சுபாவவாதத்தை இயற்கை வாதம் என்றழைக்கலாம். இயற்கை நிகழ்ச்சிகளுக்குக் காரணம் உண்டு. அவற்றை மனிதர் அறிலாம். இக்காரணங்கள் இயற்கையில் உள்ளார்ந்து உள்ளன. ஒரு நிகழ்ச்சிக்குக் காரணம் கடவுள் என்று நம்பினால் அறிவு ஸ்தம்பித்துப் போய்விடும். பொருள்களின் இயற்கையே அவற்றின் மாறுதல்களுக்குக் காரணம். இது சுபாவவாதம். யதிருச்சவாதம் என்பது உலகில் நடைபெறும் நிகழ்ச்சிகளனைத்தும் தான்தோன்றியாக நிகழ்கின்றன. இயற்கையிலோ, இயற்கைக்கு வெளியிலோ ஒரு நிகழ்ச்சிக்குக் காரணத்தைத் தேடுவது அவசியமில்லை என்று வாதிப்பதுதான் யதேச்சை வாதம். இரண்டும் கடவுள் அல்லது தேவர்களின் தலையீட்டை எதிர்க்கின்றன. இரண்டும் நாத்திகச் சிந்தனை உடையவை. ஆயினும் நேர் எதிர் சிந்தனைப் போக்குடையவை.

இவ்விரண்டின் வேறுபாட்டை மிகத் தெளிவாக குணரத்னா கூறுகிறார் (இவர் நடுக்கால ஜைன தத்துவவாதி).

இயற்கைவாதிகள் (சுபாவவாதிகள்) கீழ் வருமாறு கூறுகிறார்கள் : பொருள்களின் மாற்றங்கள் அவற்றில் உள்ளார்ந்திருக்கும் தன்மைகளால் (சுபாவம்) நிகழுகின்றன. ஒவ்வொன்றும் உருப்பெறுவது சுபாவம் என்னும் இயற்கைப் போக்கின் செயல்பாட்டினாலேயே. உதாரணமாக களிமண், சட்டியாக மாறுகிறது. துணியாக மாறுவதில்லை. நூலிழையில் இருந்து துணி உண்டாகிறது. சட்டி உண்டாவதில்லை. ஒழுங்கான இந்நிகழ்ச்சிகளுக்கு சுபாவமே காரணமாகும். உலகில் நிகழும் எல்லா மாற்றங்களும் சுபாவத்தினால் நிகழ்கின்றன என்று அறியலாம். அதனால் பின் வருமாறு கூறப்பட்டுள்ளது:

முள்ளைக் கூர்மையாக்கியவர் யார்?
விலங்குகளிலும், பறவைகளிலும் பற்பல வேறுபாடுகள் இருப்பது எதனால்?
பாவம் என்பதால் இவை அவ்வாறுள்ளன. யாரும் முள்ளைக் கூர்மையாக்கவோ, விலங்கு பறவைகளை வேறுபட்ட தன்மைகளோடு படைக்கவோ இல்லை.
இலந்தை மரத்தின் முட்கள் கூர்மையாக இருக்கின்றன. சில முட்கள் நேராகவும், சில முட்கள் கோணலாகவும் உள்ளன.
ஆனால் பழம் உருண்டையாக இருக்கிறது.
இவற்றையெல்லாம் யார் அத்தன்மை உடையதாகச் செய்தார்கள்.

ஒவ்வொரு பொருளின் உருவாக்கத்திற்கும் காரணம் சுபாவமே என்ற முடிவு தவிர்க்க முடியாதது.

படிக்க :
ஜே.என்.யூ : ஒரு ஏபிவிபி ரவுடி கூட இன்னும் கைது செய்யப்படவில்லை !
♦ நூல் அறிமுகம் : கூலி உழைப்பும் மூலதனமும் | மனிதன் உருவானதில் உழைப்பின் பாத்திரம்

குணரத்னா, யத்ரிச்சா வாதத்தை விளக்கிப் பின்வருமாறு கூறுகிறார்:

நிகழ்ச்சிகள் காரணமின்றி நடைபெறும் என்று யதேச்சை வாதிகள் கூறுகிறார்கள். காரண காரியத் தொடர்ச்சியெதுவும் இன்றி உலக நிகழ்ச்சிகள் நடைபெறுவதாகவும், நிகழ்ச்சிகள் யதேச்சையாக நிகழ்வதாகக் கூறுபவர்கள் யதேச்சை வாதிகள். உலக நிகழ்ச்சிகள் அனைத்தும் காக்கை உட்காரப் பனம்பழம் விழுவது போல நடக்கின்றன. தற்கால இந்தியத் தத்துவவாதிகள் சுபாவவாதத்தை ‘இயற்கைவாதம்’ என்றும், யதேச்சை வாதத்தை ‘விபத்து வாதமென்றும் அழைக்கிறார்கள். இவ்விரு வாதங்களும் காரணம் பற்றிய கருத்தில் வேறுபடுகின்றன. ஆனால் கடவுளுக்கு உலக நிகழ்ச்சிகளில் எவ்விதத் தலையீடும் இல்லை என்றே கூறுகின்றன.

சாந்தராஷிதர் என்ற பௌத்தரும், குணரத்னா என்ற ஜைனரும் சுபாவ வாதத்தையும், விபத்து வாதத்தையும் எதிர்த்து வாதாடினார்கள். அவர்களின் வாதங்களின் பரபக்க வாதமாக இவை இரண்டும் இருந்தன. இவ்வெதிரிகளின் வாதங்களில் இருந்து சுபாவவாதம், விபத்துவாதம் இரண்டின் தத்துவ உள்ளடக்கத்தை அறிந்து கொள்கிறோம்.

இக்கொள்கைகளில் சுபாவவாதத்தை பிரஹாஸ்ப தீயர்கள் என்ற லோகாயவாதிகள் தங்கள் வாதங்களுக்குத் துணைக் கொண்டார்கள். அவர்கள் கூறியதாவது:

தீயின் தன்மை சுடுதல்.
நீரின் தன்மை குளிர்ச்சி.
காற்று இரண்டும் இல்லாதது.
இவ்வேறுபாடுகளை உண்டாக்கியது யார்?
அவற்றின் சுபாவத்தால் அவை அவ்வாறிருக்கின்றன.

சாங்கியர்களும் சுபாவவாதச் சார்புடையவர்களே. தற்கால இந்தியத் தத்துவவாதியான கோபிநாத கவிராஜ் கூறுவதாவது: “ ‘நிமித்த காரணம்’ என்று உலகப் பரிணாம இயக்கத்திற்குக் கடவுளைக் காரணமாக்காமல் பொருள் தனது இயற்கையால் தான் பரிணாம மாற்றம் அடைகிறது என்று கூறுவதால் சாங்கியவாதிகள் சுபாவவாதிகளே.”

ஈஸ்வர வாதத்திற்கும், சுபாவ வாதத்திற்கும் நடைபெற்ற தத்துவப் போராட்டம், மிகப் பண்டைக் காலத்தில் மதத்திற்கும், விஞ்ஞானத்திற்கும் நிகழ்ந்த போராட்டமாகும். முதன் முதல் சுபாவவாதம் எந்தத் தத்துவப் போக்கோடும் தொடர்பு கொள்ளாமல் சுதந்திரமான கருத்தாக இருந்தது. பொருள்முதல்வாதிகள், தங்கள் கொள்கைகளை வலுப்படுத்திக்கொள்ள இக்கொள்கையைத் தங்கள் தத்துவ உள்ளடக்கத்தோடு இணைத்துக் கொண்டார்கள். சுபாவ வாதம் என்பது நாத்திகம் மட்டுமன்று, பொருள்கள் மாற்றம் அடைவதற்குக் காரணம் அவற்றின் சுபாவமே என்ற விஞ்ஞான கருத்தும் அதில் உள்ளது. இதுவே விஞ்ஞானச் சிந்தனையின் துவக்கம் என்று கூறலாம்.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

(1) II யோவான-பக். 333, இந்திய வேதாகமச் சங்க வெளியீடு பரிசுத்த வேதாகமம்.

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

இந்திய நாத்திகமும்
மார்க்சீயத் தத்துவமும்

நா. வானமாமலை
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

நூல் அறிமுகம் : கூலி உழைப்பும் மூலதனமும் | மனிதன் உருவானதில் உழைப்பின் பாத்திரம்

சமீபத்தில், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் வரியை குறைத்ததுடன், பெரு நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளையும் அறிவித்தார். பொருளாதார மந்தநிலையால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நிர்மலா சீதாரமனின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்திற்குள்ளானது. இதற்கு பதிலாக விவசாயிகளின் கடன்களை ரத்து செய்திருக்கலாம் என்று சிலர் கூறினர். எந்த அரசாங்கமாக இருந்தாலும் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை வழங்குவதே அவர்களின் நோக்கமாக இருப்பதாக சிலர் கூறினர். கார்ப்பரேட்டுகளுக்கு வரியை குறைப்பதால் பொதுமக்களுக்கு என்ன லாபம் என்று பலர் கேள்வி எழுப்பினர்.

இந்த விமர்சனங்கள் நியாயமாக தோன்றினாலும், நிர்மலா சீதாராமன் தரப்பிலும் ஒரு நியாயம் உள்ளது. அந்த நியாயத்தை புரிந்துகொண்டால்தான் அது உண்மையிலேயே நியாயமா, இல்லையா என்ற முடிவுக்கு வர முடியும். அதாவது, தர்க்க ரீதியில் அதை தவறு என்று நிறுவமுடியும்.

ரோம் பற்றி எரியும்போது, நீரோ மன்னன் ஃபிடில் வாசித்த கதையோடு, நிர்மலா சீதாராமனின் நடவடிக்கையை ஒப்பிட முடியுமா? அவ்வாறு ஒப்பிடுவதே சரி என்று நீங்கள் நினைத்தால், ரோம் ஏன் பற்றி எரிகிறது என்பதை முதலில் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நீரோ மன்னன் ஃபிடில் வாசித்த பிறகு ரோம் பற்றி எரியவில்லை. நகரம் பற்றி எரியத்தொடங்கிய பிறகே, அவன் ஃபீடில் வாசிக்கத் தொடங்கினான். தீயை அணைப்பதற்கான நடவடிக்கையை எடுக்காமல், ஃபிடில் வாசித்ததை வேண்டுமென்றால் குற்றம் என்று சொல்லலாம். ஆனால், நகரம் பற்றி எரிய யார் காரணம்?

“அரசாங்கம், அரசாளவேண்டுமே தவிர, வியாபாரத்தில் ஈடுபடக் கூடாது” என்று கூறும் சில அறிவாளிகள் “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு” என்ற குறளையும் சரி என்று கூறுகிறார்கள். பொருளீட்டும் வழிகளை அதிகரித்து, அதை பாதுகாத்து முறையாக செலவிடுதே சிறந்த அரசு என்று வள்ளுவர் கூறுகிறார். ஒரு வாதத்திற்கு, பொருளீட்டுவதென்பது, வரி வசூலை மட்டுமே குறிப்பதாக எடுத்துக்கொண்டால், கார்ப்பரேட்டுகளின் வரியை குறைப்பது அரசுக்கு வரும் வருமானத்தை குறைப்பதல்லவா? பொருளீட்டுவதென்பது, வரி வசூலை மட்டுமே குறிப்பிடவில்லை என்றால், அரசாங்கம் வியாபாரத்தில் ஈடுபடக் கூடாது என்ற கூற்று தவறல்லவா? முன்னதற்கு, பின்னது முற்றிலும் முரணாக உள்ளது. ஆகவே, இந்த இரண்டும் சரி என்று கூறுபவர்கள் முரண்பாடுகளின் மொத்த உருவமல்லவா?

உண்மையில் நமது அரசாங்கம் எப்படி பொருளீட்டுகிறது? அதை எப்படி மக்களுக்கு செலவழிக்கிறது?

படிக்க :
♦ பொருளாதார வீழ்ச்சி : மறைக்கும் நிர்மலா ! வீதிக்கு வரும் ஆதாரங்கள் !
♦ சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !

பொருளீட்டல் என்பது பெரும்பாலும் வரி வசூலையே நம்பியுள்ளது. இயற்கை வளங்களின் மூலமும், லாபம் தரும் ஒரு சில பொதுத்துறை நிறுவனங்கள் மூலமும் வருமானம் ஈட்டப்படுகிறது. இந்த வருமானம் அரசாங்கத்தை நடத்தவும், பெயரளவிலான நலத்திட்டங்களை வழங்கவும் மக்களின் சில அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது. மற்றபடி, மக்களின் அனைத்து தேவைகளையும் அரசாங்கம் பூர்த்தி செய்வதில்லை. மாறாக, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த சேவைகளும், படிப்படியாக நிறுத்தப்பட்டு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்கு விற்கப்பட்டு வருகின்றன. இயற்கை வளங்களும், அதன் உண்மையன மதிப்பை விட மிகவும் சொற்பமான விலைக்கு தனியாருக்கு தாரைவார்க்கப்படுகின்றன.

இதனால் அரசு, மக்களுக்கு வழங்கிவந்த இலவச அல்லது நியாயமான விலையிலான சேவைகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. அடிப்படையாக அரசு வழங்க வேண்டிய நல்ல வாழும் சூழலும், கல்வியும், சுகாதாரமும் கூட பணம் கொடுத்தால் மட்டுமே கிடைக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், “அரசாங்கம், அரசாளவேண்டுமே தவிர, வியாபாரத்தில் ஈடுபடக் கூடாது” என்ற குறிக்கோள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

சரி, இந்த குறிக்கோளை வகுத்தது யார்? இந்த குறிக்கோளை நோக்கி அரசாங்கத்தை செலுத்துவது எது?

உழைப்பு என்ற உயிர்ப்பான செயல்பாடே, மனித வாழ்க்கையின் அடிப்படையாகும். உண்மையில், உழைப்பே மனிதனை மனிதனாக மாற்றியது. அப்படிப்பட்ட உன்னதமான உழைப்புச் சக்தியை முதலாளியிடம் விற்பதன் மூலம், அவரிடமிருந்த தொழிலாளி கூலியைப் பெருகிறார். அதைக்கொண்டு உயிர்வாழ தேவையான பொருட்களை வாங்கிக்கொள்கிறார். உழைப்புச் சக்திக்கு ஈடாக முதலாளி வழங்கும் கூலி, ஒரு தொழிலாளியை தொடர்ந்து தொழிலாளியாக மட்டுமே வைத்துக்கொள்வதற்கு போதுமானதாக உள்ளது. அதுவும், தொழில்துறை சிறந்த விளங்கும் காலங்களில் மட்டுமே இது சாத்தியமாகிறது. தொழில்துறையில் அடிக்கடி நிகழும் நெருக்கடிகளின்போது கூலியின் அளவு குறைகிறது. அத்துடன், ஒரு மிகப்பெரிய தொழிலாளர் கூட்டம் வேலையை இழக்கிறது. லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட முதலாளி வர்க்கம், அதைப் பெருக்குவதற்காக செய்யும் சித்து விளையாட்டுகள் தொழிலாளர்களை பாதிக்கிறது.

தொழில்துறை ஏற்றமாக இருக்கும் காலங்களில் தொழிலாளர்களின் வாழ்நிலையில் மாற்றம் நிகழ்கிறதா? என்று கேட்டால் அதுவும் இல்லை என்றே கூறவேண்டும். ஏனென்றால், தொழில்துறை ஏற்றம் கண்ட காலத்திலும்கூட, லாபம் அல்லது கொள்ளை லாபம் மட்டுமே முதலாளிகளின் நோக்கமாக உள்ளது. அப்படியிருக்க, முதலாளி அடையும் லாபத்தோடும், அதனால் அவன் அனுபவிக்கும் சுகபோகங்களோடும் ஒப்பிட்டால், தொழிலாளர்களுக்கு உயர்த்தி வழங்கப்படும் கூலி மிக மிக சொற்பமே. தொழில்துறை ஏற்றத்தால் சமூகத்தில் நிகழ்ந்துள்ள மாற்றத்துடனும், புதிய நுகர்பொருட்களின் வருகையுடனும் ஒப்பிட்டால் உண்மையில் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு சில ஆயிரம் ரூபாய் கூலி உயர்ந்துள்ளதே தவிர, அதன் மதிப்பின் அடிப்படையில் பார்க்கப்போனால் உண்மையில் கூலி குறைந்துள்ளதை புரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு, மூலதனத்தை வைத்துக்கொண்டு, லாபத்தை பெருக்குவதற்காக வழிதேடி அலையும் முதலாளிகளுக்கு வழியை ஏற்படுத்திக்கொடுக்கவே அரசுதுறைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகின்றன. தனியார் முதலீடு பெருகினால், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று இந்த கீழ்த்தரமான செயலுக்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது. இது ஒரு தனிப்பட்ட நபரின் தவறால் நிகழ்வதில்லை. இதுவே ஒட்டுமொத்த சமூகத்தின் விதியாக உள்ளது. ஆகவே, யார் ஆட்சியில் இருந்தாலும் சமூகத்தை இயக்கும் விதி என்ற அடிப்படையில் அவர்கள் இதைத்தான் செய்ய வேண்டும். முன்னர் மன்மோகன் செய்தார். பின்னர் சிதம்பரம் செய்தார். அருண்ஜெட்லிக்குப் பிறகு இப்போது நிர்மலா சீதாராமன் அதை செய்கிறார். இவர்கள் அனைவரும் பின்பற்றும் அந்த சமூக இயக்கத்தின் விதியே முதலாளித்துவம்.

படிக்க :
♦ மனிதனை நாயாகப் பயிற்றுவிக்கிறது முதலாளித்துவம் ! தோழர் மருதையன்
♦ மாவோவின் சீனாவில் மக்களை பட்டினியில் தள்ளிய முதலாளித்துவ பாதையாளர்கள்

அரசு மக்களுக்கு செய்ய நினைப்பதை முதலாளிகளுக்க செய்ய வேண்டும். முதலாளிகள் அதைக்கொண்டு தங்கள் தொழில்துறையை பெருக்குவார்கள். இதனால், வேலைவாய்ப்பு பெருகும். கூலி உயரும். மக்களின் வாழ்நிலையும் உயரும். இந்த விதியையே அனைத்து அரசுகளும் பின்பற்றுகின்றன. இதன் அடிப்படையில்தான், வேலை வாய்ப்பை பெருக்குவதற்காக, கார்ப்பரேட் வரியை நிர்மலா சீதாராமன் குறைத்துள்ளார். இதுதான் அவர் தரப்பில் முன்வைக்கப்படும் நியாயம்.

ஆனால், லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு முதலாளித்துவம், அந்த லாபத்தை பெருக்கும் பேராசையில் இந்த விதியை தொடர்ந்து மீறுகிறது. இதனால், மக்கள் கூட்டம் கூட்டமாக வேலை இழக்கின்றனர். ஒருவேளை உணவுக்கு கூட வழியில்லாமல் அலைகின்றனர். ஆனால், மறுபுறம் முதலாளிகள் கற்பனை செய்து பார்க்க முடியாது அளவு செல்வத்தை சேர்த்து சுகபோகமாக வாழ்கின்றனர். இவை அனைத்தையும் அறிந்திருந்தும், முதலாளிகளுக்கு அரசு தொடர்ந்து சலுகை வழங்கி வருகிறது. அத்துடன், பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது.

நிர்மலா சீதாராமனை பொருத்தவரை அவர் செய்ய நினைத்ததன் நோக்கம் சரிதான். ஆனால் அது எதிர்பார்த்த விளைவைத் தராது என்பது அவருக்கே தெரியும். இருந்தபோதும் முதலாளித்துவம் என்ற விதி, அதை செய்ய நிர்பந்திக்கிறது. முதலாளித்துவத்தின் பிரதிநிதி என்ற அடிப்படையில் அவர் அதை செய்தே ஆகவேண்டும்.

ரோமை சுருட்டி விழுங்கிய பெருந்தீயோடு, முதலாளித்துவத்தை ஒப்பிடலாம். இந்தப் பெருந்தீ, இன்று உருவானதில்லை. 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பற்றத்தொடங்கி, அவ்வபோது கனன்றபடியும், பெரும்பாலும் சுவாலையை விரித்தும் தொடர்ந்து எரிந்து வருகிறது. தீயின் தன்மையை அறியாமல், தீ எப்படி உருவானது என்பதையும் அறியாமல், அவ்வபோது ஃபிடில் வாசிப்பவர்களை மட்டுமே குற்றம் சொல்வதுடன் இந்த மிகப்பெரிய பேரவலம் மறைக்கப்படுகிறது.

தூரத்தில் நிற்கும் பார்வையாளர்கள் இதன் உஷ்ணத்தை உணராமல் இருக்கலாம். ஆனால், உள்ளே வெந்துகொண்டிருப்பவர்கள் தீயை எதிர்த்து போராட துணிந்துவிட்டார்கள். அந்த கூட்டத்தில் பலர், முன்னாள் பார்வையாளர்கள் என்றபடியால், பரவி வரும் தீ, இன்றைய பார்வையாளர்களையும் வெகு சீக்கிரத்தில் போராட்டத்தின் பக்கம் ஈர்க்கும் நாள் தொலைவில் இல்லை.

170 ஆண்டுகளுக்கு முன், கார்ல் மார்க்ஸ் எழுதிய “கூலியுழைப்பும் மூலதனமும்” என்ற புத்தகம், நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் வரியை குறைத்ததற்கான அடிப்படையை விளக்குகிறது. மன்மோகன் சிங் உலகமயமாக்களுக்கு இந்தியாவை திறந்துவிட்டதன் பொதுவான நோக்கத்தை புரிவைக்கிறது. இது தொடர்வதால் நிகழும் பயங்கரத்தை கூறுவதுடன், இது இப்படியே தொடராது என்பதையும் தத்துவார்த்தமாக புரியவைக்கிறது.

மார்க்சியத்தின் மற்றொரு கர்த்தா ஏங்கெல்ஸ் எழுதிய “மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பு வகித்த பாத்திரம்” என்ற கட்டுரை, உழைப்பே அனைத்திற்கும் அடிப்படை என்று வாதிடுகிறது. உழைப்பு என்ற உயிர்ப்பான செயல்பாடே குரங்கிலிருந்து மனிதன் உருவானதற்கு அடிப்படைக் காரணம் என்று கூறுகிறது. மனித சமூகம் உருவானதற்கு உழைப்பும், உழைப்புக் கருவிகளும் எவ்வாறு காரணமாக அமைந்தன என்பதை விளக்குகிறது. இயற்கையின் மீது மனிதன் ஆற்றும் வினையும், அதற்கு எதிர்வினையாக, இயற்கை மனிதனை தண்டிப்பதைப் பற்றியும் பேசுகிறது. எதிர்வினையைப் பற்றி கவலையில்லாமல், இயற்கையை அழிப்பதால் ஏற்படும் விளைவே, எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல், லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் முதலாளியத்தால் ஏற்படும் என்று கூறுகிறது. இறுதியாக, இந்த ஆபத்திலிருந்து மனித சமூகத்தை பாதுகாக்க, தற்போதைய சமூக கட்டமைப்பு முழுவதிலும் ஒரு புரட்சி தேவை என்று கூறுகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த புத்தகங்கள், இதுவரை எளிமையாக்கப்படாதது மிகவும் வருத்தத்திற்குரியது. பொருள் முதல்வாதமே மார்க்சியத்தின் அடிப்படையாகும். ஆனால், அதை மறுக்கும் வகையில், மார்க்சிய ஆசான்கள் எழுதிய வாக்கிய அமைப்புகளை மாற்றினால்கூட பெரும்பாவம் என்பது போல், அந்த மொழிபெயர்ப்புகள் கடினமாகவே விடப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியும், அதைத்தொடர்ந்து மக்கள் நடத்தும் வீரம் செறிந்த போராட்டங்களும், கம்யூனிச தத்துவத்தின்கீழ் அனைவரும் அணிதிரளும் காலம் தொலைவில் இல்லை என்பதை உணர்த்துகின்றன. அந்த வரலாற்றுத் தருணத்தை விரைவில் அடைய வேண்டுமென்றால், தத்துவம் மக்களிடம் விரைவாக சென்றுசேர வேண்டும். அதற்கு, மார்க்சிய ஆசான்களின் எழுத்துகள் மக்கள் மொழில் எளிமையாக்கப்பட வேண்டும்.

இந்த வரலாற்று தேவையை உணர்ந்து பணியாற்றும் சக தோழர்களுக்கு தோள்கொடுக்கும் முயற்சியாக கார்ல் மார்க்ஸ் எழுதிய “கூலியுழைப்பும், மூலதனமும்”, ஏங்கெல்ஸ் எழுதிய “மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பு வகித்த பாத்திரம்” ஆகிய இரண்டு நூல்களை எளிய தமிழ்நடையில் மொழிபெயர்த்ததுடன் எளிய விளக்கங்களையும் சேர்த்துள்ளேன். என் அறிவுக்கு எட்டியவகையில், கருத்துகள் மாறாமல், பிழை ஏதும் இல்லாமல், முடிந்தவரையில் எளிமைப்படுத்தியுள்ளேன்.

இந்த இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா, வரும் வெள்ளிக்கிழமை (10.01.2020) மாலை 6 மணிக்கு, புத்தக கண்காட்சி அரங்கில், “போதி வனம்” (கடை எண்: 201) பதிப்பகத்தில் நடைபெறவுள்ளது என்பதை மகிச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஊக்கமளித்த “மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின்” தோழர்களுக்கும், மொழிபெயர்ப்பை சரிபார்த்து தந்த தோழர் பாஸ்கர் மற்றும் தோழர் அ.கா.ஈஸ்வரன் அவர்களுக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்.

இது ஒரு இயக்கமாக்கப்பட்டு அனைத்து தத்துவார்த்த எழுத்துகளும் விரைவில் எளிமையாக்கப்படும் என்று நம்பிக்கையுடன் !

முகநூலில் – அசீப்

இந்தியா 2020 : அப்துல் கலாமின் வல்லரசுக் கனவு என்ன ஆனது ?

0

டுமையான பொருளாதார மந்தநிலை, அதிகரித்து வரும் வறுமை நிலை மற்றும் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் என கொந்தளிப்பான நிலையில் இந்தியா 2020-ம் ஆண்டிற்குள் நுழைகிறது.

2020 – இந்தியா ஒரு வல்லரசாக மாறும் ஆண்டாக இருக்கும் என்று மில்லினியம் தொடங்கிய காலக்கட்டத்தில் சிலர் நம்பினர் என்பதை நினைவுகூர்வது தற்போது வினோதமாகத் தோன்றலாம்.

நாம் இப்போது 2020-ல் இருப்பதால், அது உண்மை இல்லை என்று நமக்குத் தெரியும். ஒரு வல்லரசாக இல்லாமல், உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வாழ்க்கைத் தரம் குறைவாக உள்ளது என்பதே நிதர்சனமாக உள்ளது.

ஒரு சொடுக்கில் அல்லது கண் அசைவில் ஏழை நாட்டை வல்லரசாக மாற்றிவிடுவோம் என ஏமாற்றிக்கொண்டிருந்த, அதிக எண்ணிக்கையிலான இந்திய உயரடுக்கினர் இறுகப்பற்றியிருந்த பகுத்தறிவற்ற களிப்பை இங்கே திரும்பிப் பார்ப்போம்.

ஏவுகணை மனிதன்

இதையெல்லாம் ஆரம்பித்தவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த நேரத்தில், கலாம் இந்தியாவின் ஏவுகணை திட்டம் மற்றும் போக்ரான்- II அணுசக்தி சோதனைகளுடன் தொடர்புடைய ஒரு அறிவியலாளர் மற்றும் நிர்வாகியாக இருந்தவர். பின்னர் அவர் இந்திய ஒன்றியத்தின் குடியரசுத் தலைவராக பணியாற்றினார்.

1998-ம் ஆண்டில், கலாம் மற்றுமொரு அரசாங்க அறிவியலாளர் ஒய்.எஸ். ராஜன் ஆகியோர் இந்தியா 2020 : எ விஷன் ஃபார் தி நியூ மில்லினியம் என்ற புத்தகத்தை இணைந்து எழுதினர்.

1998 -ம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் வெளியான அப்துல் கலாம் அவர்களின் பேட்டி.

புத்தகத்தில் ஒரு எளிய செய்தி இருந்தது: “2020-க்குள் அல்லது அதற்கு முன்பு ஒரு வளர்ந்த நாடாவது வெறும் ஒரு கனவு அல்ல. இது பல இந்தியர்களின் மனதில் வெறும் ஆர்வமாகக்கூட இருக்க தேவையில்லை. ஆனால், நாம் அனைவரும் எடுத்துக்கொண்டு சாதிக்கக்கூடிய ஒரு பணி இது”

புத்தகத்தின் பெரும்பகுதி நம்பிக்கையூட்டும் முன்னறிவிப்புகளின் தொகுப்பாகும், இது எந்தவொரு பொருத்தமான தரவையும் விட அதிகமாக தேசபக்தியின் உணர்ச்சியால் முழுவதுமாக இயக்கப்பட்டதாக இருந்தது. பல வழிகளில், புத்தகத்தின் பாணி இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு ஸ்மார்ட்போன்களை மூழ்கடித்துக்கொண்டிருக்கும் மில்லியன் கணக்கான தேசபக்தி வாட்ஸ்அப் செய்திகளுக்கு ஒரு நீண்ட முன்னோடி வடிவமாகும்.

உதாரணமாக, கலாம் மற்றும் ராஜன், “நேரடி பொருளாதார நடவடிக்கைகளில் அதிகமான பெண்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பு உள்ளது” என்றும் – மிகவும் நம்பமுடியாத அளவிற்கு – “2007 – 2008 -க்குள் வறுமை முற்றிலுமாக அகற்றப்படுவதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன” என்றும் கருதினர்.

2008 முதல் 12 ஆண்டுகளில், இந்தியாவில் வறுமை ஒழிக்கப்படவில்லை என்பது வெளிப்படையானது மட்டுமல்ல, இதுபோன்ற கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் அதிகமான பெண்கள் பணியிடங்களில் நுழைவதை விட, உண்மையில், இந்தியாவின் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2017-18-ம் ஆண்டில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள எட்டு நாடுகளில் மட்டுமே இந்தியாவை விட பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பு விகிதம் குறைவாக உள்ளது. வீட்டை விட்டு வெளியேறி, பணியிடங்களுக்குச் செல்வதில், தெற்காசியாவிலேயே இந்திய பெண்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். கலாம் மற்றும் ராஜன் ஆகியோர் தங்களது சுதந்திரமான கணிப்புகளைச் செய்யும்போது, இந்திய ஆணாதிக்கத்தின் ஆழமான வேரூன்றிய வலிமையை மறந்துவிட்டதாகத் தெரிகிறது.

படிக்க:
பீகார் : தேசியக் கொடி ஏந்தியவரை கொடூரமாகக் கொன்ற காவி குண்டர்கள் !
♦ அப்துல் கலாம் கனவை நிறைவேற்ற அமலா பால்!

கூட்டு மாயை !

குழப்பத்தை விட, இந்த நம்பமுடியாத இலக்குகள் உண்மையில் அந்த நேரத்தில் பாராட்டுக்களைப் பெற்றன. “இந்த சிக்கலான காலங்களில், இந்தியா சூப்பர் பவர் தகுதியை அடைய இன்னும் இரண்டு தசாப்தங்களே தொலைவில் உள்ளன என்கிற கருதுகோளை, உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களின் தெளிவான தொகுப்புகளை கொண்டு ஆய்வு செய்திருப்பது அரிதான ஒன்றாகவே உள்ளது” என ‘இந்தியா 2020’க்கான அறிமுகத்தை டைம்ஸ் ஆப் இந்தியா எழுதியது.

இந்தப் பாராட்டு, கலாமை தனது இலக்குகளை இன்னும் வியக்க வைக்கும் அளவில் ஊக்குவிக்கும் துரதிர்ஷ்டவசமான விளைவைக் கொண்டிருந்தது. 2008-ம் ஆண்டில், தனது புத்தகம் வெளியிடப்பட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, கலாம் இந்தியா 2012-ம் ஆண்டிலேயே வல்லரசு ஆகிவிடும் என்றார். “2020-ம் ஆண்டளவில் இந்தியா ஒரு வல்லரசாக மாற வேண்டும் என்று நான் கற்பனை செய்திருந்தாலும், இளைஞர்களின் அணுகுமுறையும் நம்பிக்கையும், அனைத்தையும் சரியான முறையில் வெல்லும் துடிப்பும், ஐந்தாண்டுகளுக்குள் நாட்டை உலகளாவிய தலைமையாகவும், சூப்பர் பவராகவும் மாற்றும்” என்று அப்போதைய முன்னாள் ஜனாதிபதி தனது தன்னம்பிக்கையை தானே பாராட்டும் வகையில் கூறினார்.

இந்தியா ஒரு முழுமையான வளர்ந்த தொழில்மயமாக்கப்பட்ட பொருளாதாரம் மற்றும் வல்லரசாக மாறுவதற்கு மிக அருகில் உள்ளது; கொள்கை மற்றும் அரசியலில் மிக உயர்ந்த மட்டங்களில் நுழைந்துள்ளது என்பன போன்ற – நடைமுறைக்கு எட்டாத – கற்பனைகள் உருவாக்கப்பட்டன. 2002-ம் ஆண்டில், பிரதமர் வாஜ்பாயி தனது சுதந்திர தின உரையில் அரசாங்கத்தின் நோக்கம் 2020-க்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த தேசமாக மாற்றுவதே’ என்றார்.

வாஜ்பாயின் கீழ், திட்ட ஆணையம் 2002-ல் ‘இந்தியா விஷன் 2020’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை ‘டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நூலான, இந்தியா 2020 : புதிய மில்லினியத்திற்கான ஒரு பார்வை’ என்பதை அங்கீகரிப்பதாக இருந்தது.

தவறான நம்பிக்கை

திட்ட ஆணையம் அங்கீகரித்ததன் காரணத்தால் அது கலாமின் சூத்திரப்படி இந்தியாவை வல்லரசாக்கும் திட்டம் என்ற பொருளல்ல. எவ்வாறாயினும், இருபது ஆண்டுகளில் ஒரு ஏழை நாடு எவ்வளவு சாதிக்க முடியும் என்கிற பகுத்தறிவற்ற நம்பிக்கை (Pollyannaishly) தொடர்வதாகவே இருந்தது.

இந்தியா 2020-ஐ போலவே, இந்த அறிக்கை வாட்ஸ்-அப்பின் மொக்கையான தேசபக்தி தகவலைப் போல உள்ளது. இந்தியா முழுவதும் பயணம் செய்த மெக்காலே பிரபு, ‘ஒரு பிச்சைக்காரன்; ஒரு திருடன் கூட நாட்டில் இல்லை’ எனவும் காரணம் நாட்டின் ‘ஆன்மீக – கலாச்சார பாரம்பரியமே’ எனவும் சொன்னதாக வாட்சப்பில் சுற்றிக்கொண்டிருக்கும் மொக்கையான தேசபக்தி தகவல்களைப்போல உள்ளது இந்த அறிக்கை.

அறிக்கையின் உண்மையான கணிப்புகள் அதே வெகுளித்தனமான வகையில் தொடர்கின்றன. அறிக்கை நம்பிக்கையுடன் கூறுகிறது, “இந்தியா குறைந்த வருமானம் கொண்ட நாட்டிலிருந்து உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடாக மாறும்”. நிச்சயமாக அது நடக்கவில்லை. இன்றைய நிலவரப்படி, இந்தியா ஒரு உயர்-நடுத்தர வருமான நாடாக இருப்பதில் இருந்து வெகு தொலைவில் உள்ளது (அதில் நுழைய நாட்டின் அதன் மூலதன வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும்). இந்தியாவின் பிரிட்டீஷ் ராஜ்ஜிய உடன்பிறப்புகளான பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தை போலவே, இந்தியாவும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடு. இருப்பினும், இந்தியாவின் சிறிய தெற்கு அண்டை நாடான இலங்கை வல்லரசு தீர்க்கதரிசனங்களால் அறியப்படாமல் அமைதியாக 2019-ம் ஆண்டில் ஒரு உயர் நடுத்தர வருமான நாடாக மாறியது.

படிக்க:
NRC – NPR-ஐ தமிழகத்தில் அமல்படுத்தாதே ! மக்கள் அதிகாரம் பேரணி !
♦ வினவு 2019 – அதிகம் வாசிக்கப்பட்ட 10 பதிவுகள் !

மேலும்: “புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான மகத்தான வாய்ப்புகளுடன் இணைந்து, வேலைவாய்ப்பின்மை 2020-க்குள் கிட்டத்தட்ட அகற்றப்படலாம்”. 2020-ம் ஆண்டில் இதைப் படிக்கும்போது, அத்தகைய “மகத்தான வாய்ப்புகள்” எதுவும் இல்லை என்பது நமக்குத் தெரியும். வியட்நாம் அல்லது வங்க தேசத்தை போலன்றி, இந்தியா வெகுஜன உற்பத்தித் தொழில்களை உருவாக்க முடியவில்லை. உண்மையில், அதிக மதிப்புள்ள நாணயத்தாள்களை மதிப்பிழக்கச் செய்த மோடி அரசாங்கத்தின் பேரழிவுகரமான நடவடிக்கையைத் தொடர்ந்து, 2017-18-ம் ஆண்டில் வேலையின்மை விகிதம் 45 ஆண்டுகளைக் காட்டிலும் உச்சத்தில் இருந்தது.

ஒரு கட்டத்தில், இது இந்தியாவின் 2020 இலக்குகளை பட்டியலிடுகிறது, “இந்தக் குறிப்பு நிலைகளை அடைவது மட்டுமல்லாமல், பல சந்தர்ப்பங்களில் அவற்றை மிஞ்சும்”. நம்பிக்கை தவறாக இருந்தது. 2020-ம் ஆண்டில் இந்தியா எந்த திட்ட ஆணையத்தின் இலக்குகளையும் எட்டவில்லை.

எடுத்துக்காட்டாக, 2020-ம் ஆண்டில் இந்தியாவின் பெண் வயதுவந்தோரின் கல்வியறிவு விகிதம் 94% ஆக இருக்கும் என்று அறிக்கை கணித்தது. ஆனால் முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இது 65% மட்டுமே. குழந்தை இறப்பு 1000 பிறப்புகளுக்கு 22.5 ஆக இருக்கும் என்று விஷன் 2020 கணித்துள்ளது. ஆனால் 2017-ம் ஆண்டின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் இது 33 ஆக உள்ளது, இது உலக சராசரியை விட அதிகம். வயதுக்கான எடையின் அடிப்படையில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு 8% மட்டுமே இருக்கும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது. உண்மையில், இது 32.7% என்ற கணிப்பை விட நான்கு மடங்கு அதிகமாகும் (2020-ம் ஆண்டில் இந்தியா உலகிலேயே மிகவும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள சமூகங்களில் ஒன்றாகும்).

மீம்களில் நுழைந்த ‘சூப்பர் பவர்’!

சூப்பர் பவர் 2020 கணிப்புகள் பலனளிக்கவில்லை என்றாலும், அவை பயனுள்ள எதையும் விளைவிக்கவில்லை என்று அர்த்தமல்ல. முன்னறிவிப்பு மிகவும் மோசமாக இருந்ததன் விளைவாக, அதில் ஒரு முரண்பாட்டின் வளமான ஆதாரத்தைக் கண்டது இணையம்: மீம் உருவாக்குபவர்களுக்கு சரியான மூலப்பொருள் கிடைத்தது.

‘2020-க்குள் சூப்பர் பவர்’ மீம்கள் இரண்டு பதிப்புகள் வெளிவந்தன. ஒன்று சர்வதேச செய்தி பலகைகளான ரெடிட் மற்றும் 4சான் போன்றவற்றில் பரவி, சூப்பர் பவர் அந்தஸ்து குறித்த இந்தியாவின் உரிமை கோரல்களை கேலி செய்தது. திறந்த வெளியில் மலம் கழிக்கும் நெருக்கடியை வளர்ந்து வரும் ஒரு வல்லரசின் வழக்கத்திற்கு மாறாக அடிப்படை பிரச்சினையாக மீம்கள் காட்டின.

இவ்வளவு குறுகிய காலத்தில் தங்கள் நாடு வளர்ச்சியடையாத நிலையிலிருந்து வல்லரசாக மாறியதாக இந்தியர்கள் கேலி செய்தனர். டிசம்பர் 31, 2019 என்றும் ஜனவரி 1, 2020 என்றும் தேதியிட்டு முந்தைய படங்களையும் பிந்தைய படங்களாக வளர்ந்த நாடுகள் அல்லது கிராபிக்ஸ் செய்யப்பட்ட படங்களையும் பகிர்ந்தனர்.

விளைவுகள்

அசல் சூப்பர் பவர் 2020 கணிப்பு பொய்த்து போயிருந்தாலும், அதன் பதிப்புகள் தொடர்ந்து உயிர்வாழ்கின்றன (அவை இப்போது மிகக் குறைவாகவே அவ்வப்போது எழுந்தாலும்கூட). 2019 மக்களவைத் தேர்தலின் போது, பாஜக தலைவர் அமித் ஷா, நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக வாக்களித்தால் 2024-க்குள் இந்தியா ஒரு வல்லரசாக மாறும் என்று வாக்காளர்களுக்கு உறுதியளித்தார். முன்னதாக 2018-ம் ஆண்டில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், கலாமின் “விஷன் 2020”-ஐ மோடி நிறைவேற்றுவார் என்று கூறினார் . இருப்பினும், புத்திசாலித்தனமாக எந்த ஆண்டுக்குள் என அவர் குறிப்பிடவில்லை.

இவற்றில் சில வேடிக்கையானவை அல்லது அபத்தமானவை என்று தோன்றலாம். உண்மையில் அதில் சில அபத்தமானவைதான். ஆயினும்கூட, இந்த “சூப்பர் பவர் 2020” வணிகத்துடன் தொடர்புடைய உண்மையான விளைவுகளைகூட சொல்வதில்லை. கடந்த இரண்டு தசாப்தங்களாக, பல இந்திய கொள்கை வகுப்பாளர்கள் அபத்தமாக அடைய முடியாத இலக்குகளின் அடிப்படையில் திட்டங்களை வடிவமைத்து வந்ததாக தெரிகிறது.

சுதந்திரத்திற்குப் பிறகு முதல் சில தசாப்தங்களில், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகள் இந்தியாவை கடந்தன. இப்போது, பொருளாதார வல்லுனர் அமர்த்தியா சென் போன்ற வல்லுநர்கள் தன் தெற்காசிய அண்டை நாடுகளான வங்க தேசம், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளிடமிருந்தும் இந்தியா பின்னோக்கி போய்க் கொண்டிருப்பதாக எச்சரிக்கிறார்கள்.

இந்த நிலையில், இரண்டாவது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா, துயரமளிக்கும் விதமாக இன்னமும் தனது வல்லரசு கனவை தொடர்ந்து கொண்டிருக்கிறது.


கட்டுரை: சோயிப் டானியல்
தமிழாக்கம் :
கலைமதி
நன்றி: ஸ்க்ரால்.

எது உங்களது புத்தாண்டுப் புரட்சி ?

1

டந்த ஆண்டு (2019) மனச்சோர்வுடன் முடிந்தாலும் நம்பிக்கையான ஒரு குறிப்பையும் அது விட்டுச் சென்றுள்ளது. அரசாங்கம் அதன் ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் உறுதியாக இருப்பதை அது காட்டியுள்ளது. மேலும், தான் விரும்பியதைச் செய்வதற்கான முழுமையான உரிமையை தேர்தல் வெற்றி அளிக்கிறது என்பதிலும் அரசாங்கம் உறுதியாக உள்ளது. இது சாத்தியமான எல்லா வழிகளிலும் முசுலீம்களையே குறிவைக்க விரும்புகிறது. ஏனென்றால் சங்க பரிவாரின் முக்கியக் கோட்பாடே எப்போதும் அதுதான். அந்த திசையில் குடியுரிமை திருத்த சட்டம் – குடிமக்கள் தேசிய பதிவேடு ஒரு முக்கியமான படியாகும்.

இது இந்தியாவுக்கு மிகவும் கவலையளிக்கும் நிலையாகும். ஆனால், மக்கள் பெருமளவில் இதற்கு எதிர்வினையாற்றிய விதத்தில் நம்பிக்கை ஏற்படுகிறது. நாடு முழுவதும் குடிமக்கள் சினத்தில் எழுந்துள்ளனர், CAA – NRC-க்கு எதிராக மட்டுமல்லாமல், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய சமுதாயத்திற்குள் வளர்ந்து வரும் ஆபத்தான பிரிவினை நிலைமைக்கு எதிராகவும் தங்கள் எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்துள்ளனர். எதிர்ப்பு அணிவகுப்புகளில் இந்திய அரசியலமைப்பின் முன்னுரை வாசிக்கப்படுவது தற்செயலானவை அல்ல – 70 ஆண்டுகளாக நாட்டை ஒன்றாக வைத்திருக்கும் கொள்கைகள் மற்றும் மதிப்புகளின் தொகுப்பைக் காப்பாற்றுவதற்கே இந்த யுத்தம் என்பதை குடிமக்கள் அறிவார்கள். பாஜகவும் அதன் அதிகாரம் மிக்க தலைவர்களும் அந்த மதிப்புகளை அழிக்க விரும்புகிறார்கள். ஆனால் குடிமக்கள் அவற்றைக் காக்கவும் பாதுகாக்கவும் விரும்புகிறார்கள்.

எல்லோரும் பரபரப்புக்கும் சோர்வுக்கும் உள்ளாகி போராட்டங்கள் சோர்வை எட்டினாலும் இந்த உள்ளொலி தொடர வேண்டும்; சிதறக்கூடாது.  சங்க பரிவாரம் தாம் கற்பனை செய்துகொண்டிருக்கும் இந்து ராஷ்டிரத்தை அடைவதற்கான தனது இடைவிடாத பயணத்தை எப்போதும் நிறுத்தாது என்பது தெளிவாகிறது. அவர்கள் உருவாக்க விரும்பும் சமுதாயத்தைப் பற்றிய தெளிவான பார்வையும், எதையும் தங்கள் வழியில் வர விடக்கூடாது என்பதற்கான  உறுதியும் கொண்ட மொத்த விசுவாசிகளின் பரந்த இராணுவத்தையும் கடந்த தொண்ணூறு ஆண்டுகால மூளைச் சலவை உருவாக்கியுள்ளது.

படிக்க :
♦ CAA எதிர்ப்புக் கோலம் : கருத்துரிமையை காலில் போட்டு மிதிக்கும் தமிழகப் போலீசு !
♦ குடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் !

அவர்களைப் பொறுத்தவரை, அது வெற்றியைப் பெறுவது மட்டுமல்ல; மதச்சார்பற்ற, தாராளமய ஜனநாயகத்திலிருந்து தொடங்கி அவர்கள் வெறுக்கிற அனைத்தையும் மொத்தமாக அழிப்பதும் ஆகும். குடிமக்கள் அதைப் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த ஆண்டு, அரச அதிகாரத்தால் உயர்த்தப்பட்ட, சங்க இயந்திரங்கள் அந்த இலக்குகளை இன்னும் தீவிரமாகவும் இரக்கமின்றியும் தொடரும். நேரம் முடிந்துவிட்டதைப் போல, ஒரு அவசர உணர்வு அவர்களிடம் இருக்கிறது.

நரேந்திர மோடியின் முதல் அரசாங்கத்தில் அது தடத்தைக் கண்டுபிடித்தது; இப்போது இது தரையில் ஓடுகிறது. 2019-ம் ஆண்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சில மாதங்களுக்குள், புதிய அரசாங்கம் காஷ்மீருடனான 70 ஆண்டுகால அரசியலமைப்பு ஏற்பாட்டை மாற்றுவதாக அறிவித்து ஒரு முழு மாநிலத்தையும் முடக்கியது. பின்னர் டிசம்பரில், குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இடையில், அயோத்தியில் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படுகிறது; பொது சிவில் சட்டம் போன்ற முடிக்கப்படாத பணியும், இன்னும் பலவும் உள்ளன. அவை விரைவில் அடையப்படும்.

பொது சமூகமும் இந்திய குடிமக்களும் அதை எவ்வாறு எதிர்ப்பார்கள்? இது முக்கியமான கேள்வியாக இருக்கும், ஏனென்றால் போராட்டங்களுக்கு அவற்றிற்குரிய இடம் உண்டு; நிச்சயமாக அரசாங்கத்தை அவை திணறடித்தன. ஆனால், அவை மட்டும் போதுமானதாக இருக்காது. வீதியில் உருவாகும் அழுத்தம் ஒரு பிரச்சினையில் கவனம் செலுத்துகிறது, ஆனால் அது அடிப்படையில் விஷயங்களை மாற்றாது. அரசாங்கம் இப்போது தனது அடியில் பின்தங்கியுள்ளது என்பது வெளிப்படையானது. CAA-க்கு ஆதரவாக தொண்டர்களின் பலவீனமான அணிவகுப்புகளையோ அல்லது ஜக்கி வாசுதேவ் போன்றவர்களின் ஆதரவையோ மட்டும் கொண்டு மிகவும் அவநம்பிக்கையுடன் இருக்கிறது அரசாங்கம். ஆனால், ஆர்ப்பாட்டங்கள் நிறுத்தப்பட்டாலோ அல்லது மெதுவாக வந்தாலோ, அரசாங்கம் புதுப்பிக்கப்பட்ட சக்தியுடன் முன்னேறும்.

எனவே, பரந்த அளவிலான அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பொதுக் கருத்தை உருவாக்குதல், பிரச்சாரத்தை எதிர்கொள்வது, சக்திவாய்ந்த பொதுக் குரல்களின் ஆதரவைப் பெறுதல், சட்ட நடவடிக்கைகள் கூட – இவை அனைத்தும் எதிர்வரும் சவால்களை எதிர்கொள்ள பயன்படுத்தப்பட வேண்டும். போராட்ட அணிவகுப்புகளின் ஆற்றல் உண்மையின் அடிப்படையிலும் தன்னிச்சையாகவும் அடையாளம் காணக்கூடிய தலைவர்கள் இல்லாமல் இருக்கிறது – எல்லோரும் இப்போது இணைந்திருக்கிறார்கள். திரைக்குப் பின்னால், குடிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல் செயல்பாட்டாளர்கள் மக்களை ஊக்குவிக்க கடுமையாக பணியாற்றுவதோடு தொண்டர்களை வழங்குகின்றனர்.

இப்போது தலைவர்கள் தோன்ற வேண்டும், கட்டமைப்புகள் வைக்கப்பட வேண்டும். இந்தியா என்கிற கருத்தாக்கத்துக்காக யோசனைக்காக போராட விரும்பும் அனைவருக்கும் இது நெருக்கடி நேரமாக இருக்கும்.

ஏற்கெனவே சிவில் சமூக அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பு பற்றிய பேச்சு உள்ளது, ஆனால் அரசியல் கட்சிகள் இல்லாமல், அவர்களால் சிறிய அளவிலேயே செயல்பட முடியும். அரசியல்வாதிகளின் வலிமை என்னவென்றால், அவர்கள் தங்கள் தொகுதிகளுக்கு செய்தியை எடுத்துச் செல்ல முடியும். அரசியல்வாதிகள் பிரச்சினையின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள், அவர்களை வெளியே வைக்க வேண்டும் என்று சிவில் சமூக ஆர்வலர்களால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு நம்பிக்கை உள்ளது. ஜெயபிரகாஷ் நாராயணனின் ‘முழுமையான புரட்சி’ மற்றும் உலகெங்கிலும் இதுபோன்ற பல இயக்கங்கள் அந்த கருத்தை பரப்பியுள்ளன. இந்தியாவில் அரசியல்வாதிகளை கேலி செய்வது எளிதானது, பெரும்பாலும் அவர்கள் அதற்கு தகுதியானவர்கள். ஆனால் அவை ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாகும். கேரளாவில் பினராயி விஜயன் அல்லது உண்மையில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி போன்ற அரசியல்வாதிகள் இல்லாமல், பாஜகவுக்கு ஆதரவாக நின்றிருந்தால், CAA-NRC க்கு எதிரான எந்தவொரு போராட்டமும் மிகவும் பலவீனமாக இருந்திருக்கும்.

படிக்க:
♦ ஜே.என்.யூ : ஏ.பி.வி.பி. குண்டர்கள் வெறியாட்டம் ! கொலைவெறி தாக்குதல்கள் !
♦ பொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு : அமெரிக்காவின் நாட்டாமை !

போர்கள் தெருவில் அல்லது உண்மையில் சமூக ஊடகங்களில் வெல்லப்படுகின்றன என்று நினைப்பது தவறு. டிவிட்டர் போக்குகள் செய்தியின் முறையீட்டை விரிவுபடுத்த உதவும், ஆனால் அடிமட்டத்தில் கடுமையான வேலைக்கு தொண்டர்கள் தேவை. ஒழுங்காக பயன்படுத்தப்பட்டால், அரசியல் அமைப்புகள் ஒரு சிறந்த வளமாக இருக்கக்கூடும். ஏனென்றால் ஒருகட்டத்தில், போர் என்பது அரசியல் ரீதியாக போராட வேண்டியிருக்கும். அவர்களின் பங்கில், அரசியல்வாதிகள் எழுந்து நிற்க வேண்டும் – அவர்களில் பலர் இதுவரை கலவையான செய்தியை அனுப்பியுள்ளனர் அல்லது பாஜகவை எதிர்ப்பதில் தெளிவற்ற தன்மையைக் காட்டியுள்ளனர், மேலும் முக்கியமான சந்தர்ப்பங்களில் அவர்கள் எந்தப் பக்கத்தை ஆதரிப்பார்கள் என்று கூறப்படவில்லை.

குடிமக்கள் சக்தியுடன் இணைந்து அனைத்து முக்கிய பங்குதாரர்களையும் உள்ளடக்கிய நன்கு திட்டமிடப்பட்ட ஒரு திட்டத்தின் கலவையானது, தீங்கு விளைவிக்கும் CAA-NRC-ன் தாக்குதலை எதிர்ப்பதில் நிச்சயமாக ஒரு வல்லமைமிக்க சக்தியாக இருக்கக்கூடும். ஆனால், இது உடனடியாக எதிர்கொள்ளவிருக்கிற தேசிய மக்கள் தொகைப் பதிவை மறந்துவிடக் கூடாது.

மாசேதுங் கூறியிருப்பது போல, “புரட்சி என்பது ஒரு மாலைநேர விருந்து அல்ல, அல்லது ஒரு கட்டுரை எழுதுவது அல்ல. ஒரு ஓவியம் தீட்டுவதோ அல்லது தையல் வேலை செய்வதோ அல்ல; அது அவ்வளவு பண்பானதாக இருக்காது; அவ்வளவு ஓய்வானதாகவோ, மிருதுவானதாகவோ இருக்காது. அவ்வளவு அமைதியானதாக, இரக்கமுடையதாக, மரியாதையானதாக இருக்காது. இன்னும் அடக்கமானதாகவோ, பெருந்தன்மை வாய்ந்ததாகவோ இருக்காது.”

இது ஒரு புரட்சி அல்ல, அது ஒரு துணிகர முயற்சியும் அல்ல. ஆனால் அது ஒரு போர், இந்திய விழுமியங்களையும், அடிப்படைக் கொள்கைகளையும் நிலைநிறுத்துவதற்கான போர். தேசபக்தி கொண்ட இந்தியர் முசுலீம்களை – அல்லது வேறு யாரையும் – இரண்டாம் தர குடிமக்களாக குறைக்க விரும்பமாட்டார். எல்லா மதத்தினரும் தெருவுக்கு வந்துள்ளனர். ஏனெனில் அவர்கள் ஒரு ‘முஸ்லீம்’ காரணத்திற்காக போராடவில்லை; ஆனால் அவர்கள் இந்தியாவுக்காக நிற்கிறார்கள். இந்த அளவிலான அகில இந்திய உற்சாகம் நீண்டகாலமாக இல்லாத ஒன்று.

அதுவே தன்னளவில் புரட்சிகரமானது.  அந்த உள்ளொலியுடன்  இந்த நாடு புதிய ஆண்டிற்குள் நுழைய வேண்டும்.

கட்டுரையாளர் : சித்தார்த் பாட்டியா
தமிழாக்கம் : அனிதா
நன்றி : தி வயர்.

ஒப்பந்த சாகுபடிச் சட்டம் : விவசாயிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் பொறி !

ஒப்பந்த சாகுபடிச் சட்டம்  : விவசாயிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் பொறி !

மிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல்) என்ற சட்டத்தை கடந்த அக்டோபர் 30  நிறைவேற்றியிருக்கிறது தமிழக அரசு. கடந்த 2018, மே மாதத்திலேயே மைய அரசு இந்தச் சட்டத்தை இயற்றியிருந்தாலும், மாநிலங்களைப் பொருத்தவரையில் தமிழகத்தில்தான் முதன்முதலாக நிறைவேற்றப்பட்டுள்ளது. விளைச்சல் அதிகமாகி விலை வீழ்ச்சி ஏற்படும் காலங்களில் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்கவும், உரிய விலை கிடைப்பதை உத்தரவாதம் செய்யவும் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறுகிறது, தமிழக அரசு.

இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மாநில அளவில் அதிகார அமைப்பு ஒன்று உருவாக்கப்படும். இதில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, வருவாய் நிர்வாகத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த ஐந்து அரசு அதிகாரிகள்; நிறுவனம் அல்லது கொள்முதலாளர் பிரதிநிதிகள் இருவர், விவசாயிகள் அல்லது உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் பிரதிநிதிகள் இருவர், வேளாண் வல்லுநர் ஒருவர் என அரசால் முன்மொழியப்படும் ஐந்து பேர் என மொத்தம் 10 பேர் அங்கம் வகிப்பர். ஒப்பந்தச் சாகுபடி தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளிலும் இந்த அமைப்பு தலையிட்டுத் தீர்த்து வைக்கும் அதிகாரம் கொண்டதாக இருக்கும் என்று சட்டவிதிகள் கூறுகின்றன.

சத்தியமங்கலத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட பருத்தி விவசாயிகள்.

”இந்த சட்டத்தின்படி, கொள்முதலாளர்  அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும்  விவசாயிகள் அல்லது உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், தங்களது விளைபொருட்கள்  அல்லது கால்நடைகள் அல்லது கால்நடைகளிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை,  ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட அன்று நிர்ணயம் செய்யப்பட்ட விலையிலேயே பரிமாற்றம் செய்வதற்குப்  பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு அப்பால், இச்சட்டம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும்” எனக் கூறுகிறது தமிழக அரசு. மேலும், ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விலையைப் பெறுவதில் விவசாயிகளுக்குச் சிக்கல் ஏற்பட்டால், அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக நின்று உரிய விலை கிடைக்க உத்தரவாதம் செய்யும் என்றும் தமிழக அரசு கூறுகிறது.

”தமிழக அரசின் இந்தப் பிரகடனங்களைக் கேட்கும்போது கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்” என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. ஒப்பந்த சாகுபடி மூலம் விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்கப் போவதாகவும், அப்படி நிர்ணயிக்கப்பட்ட விலையை எந்தச் சூழ்நிலையிலும் பெற்றுக் கொடுக்கப் போவதாகவும் சொல்லும் மத்திய அரசுகள், விளைபொருட்களுக்குத் தாங்கள் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலை விடயத்தில் இதனைக் கடைப்பிடிக்கிறார்களா?

நெல், கோதுமை, பருத்தி உள்ளிட்ட 23 பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை மைய அரசு தீர்மானிக்கிறது. இந்த விலை உற்பத்திச் செலவை ஈடுகட்டக் கூடியதாக, விவசாயிகளுக்கு நியாயமான இலாபம் தரத்தக்கதாக இருக்கிறதா? சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைப்படி நெல் விவசாயிகளுக்கு 50 சதவீத இலாபம் கிடைக்கும்படி விலை நிர்ணயிக்க வேண்டுமென்றால், இந்த ஆண்டு ஒரு குவிண்டால் நெல்லின் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,428/- என நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மோடி அரசு நிர்ணயித்திருக்கும் விலை ரூ.1,815/- இதனால் உழவர்களுக்கு ஏற்படக்கூடிய இழப்பு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.613/- நெல்லுக்கு மட்டும் அல்ல, அரசால் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் 23 பயிர்களுக்கும் இதேநிலைதான். விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு நியாயமான இலாபம் தரத்தக்க விலையை நிர்ணயம் செய்ய மறுத்துவரும் அரசு, ஒப்பந்த சாகுபடிச் சட்டத்தின் கீழ் தனியாரிடமிருந்து விவசாயிகள் கோரும் விலையைப் பெற்றுத் தரும் என நம்ப இயலுமா?

நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிடக் கோரி கரும்பு விவசாயிகள் எடப்பாடி வீட்டை முற்றுகையிட்டு நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

23 பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை மைய அரசு நிர்ணயித்தாலும், இப்பயிர்கள் அனைத்தையும் மைய, மாநில அரசுகள் கொள்முதல் செய்வதில்லை. நெல்லும் கோதுமையும் மட்டும்தான் கொள்முதல் செய்யப்படுகிறது. இப்பயிர்களும்கூட முழுமையாகக் கொள்முதல் செய்யப்படுவதில்லை. மொத்த விளைச்சலில் அதிகபட்சம் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது. எஞ்சிய விளைச்சலை விவசாயிகள் வெளிச்சந்தையில்தான், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாகவோ அல்லது இடைத்தரகர்கள் வழியாகவோ விற்றுக்கொள்ள வேண்டும். அப்படி விற்கும்போது, வியாபாரிகள், இடைத்தரகர்கள் வைப்பதுதான் விலை.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களோ விவசாயிகளைச் சுரண்டும் கொள்ளைக் கூடாரமாக மாறி வெகுநாளாகிவிட்டது. அங்குள்ள அதிகாரிகள் மண்டி வியாபாரிகளின் ஏஜெண்டுகளாகச் செயல்படுகிறார்களேயன்றி, விவசாயிகள் மீது கிஞ்சித்தும் அக்கறை காட்டுவது கிடையாது.

கடந்த ஜூன் மாதம் 19 தேதி ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ஒரு குவிண்டாலுக்குக் குறைந்தபட்சம் ரூ.3,500/- அதிகபட்சமாக ரூ.4,500/- என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டது. ஜூன் 19 முந்தைய வார ஏலத்தில் ரூ.6000/- விற்பனையான பருத்தி அடுத்த வாரமே ரூ.2,500 வரை சரிந்து விழுந்தது. இந்த அடிமாட்டு விலையை ஏற்க மறுத்த விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்ட பிறகுதான் மறுஏலம் நடத்த அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.

இப்படி ஒவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு பயிருக்கும் அரசு நிர்ணயித்த விலைகூடக் கிடைக்காமல் விவசாயிகள் நட்டமடைவது பொருளாதார விதி போலவே மாறிவிட்டது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அரசின் பொதுக் கொள்முதலை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று நீண்டகாலமாக விவசாயிகள் கோரி வருகின்றனர். ஆனால், அரசோ விவசாயிகளின் கோரிக்கைக்கு நேர் எதிராகக் கொள்முதலில் மேலும் தனியாரின் ஆதிக்கத்தைத் தீவிரப்படுத்தக் கூடிய சட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விலையைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால், அரசு விவசாயிகளின் பக்கம் நிற்கும் என்பதைக் கேட்கும்போது, கரும்பாலை அதிபர்கள் தமக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையைத் தரக் கோரி கரும்பு விவசாயிகள் நடத்திவரும் போராட்டங்கள் தான் நமது நினைவுக்கு வந்து போகின்றன.

தமிழகத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் மட்டும் 2013 முதல் 2016 வரை மாநில அரசு அறிவித்த பரிந்துரை விலையை விவசாயிகளுக்குத் தராமல், ரூ.1217 கோடி வரை பாக்கி வைத்துள்ளனர்.  கரும்புக்கு அரசால் நிர்ணயிக்கப்படும் விலையை ஆலை அதிபர்கள் உரிய கால வரம்புக்குள் தராவிட்டால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சட்டம் சொல்கிறது. ஆனால், நிலுவையைத் தரக் கோரிப் போராடும் விவசாயிகளின் மீதுதான் சட்டம் பாய்ந்திருக்கிறதேயொழிய, எந்தவொரு ஆலை அதிபரும் நிலுவையைத் தராத குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டதில்லை. மாறாக, அரசு அவர்களுக்குப் பணச் சலுகைகளை வாரியிறைத்திருக்கிறது.

ஒப்பந்த சாகுபடிச் சட்டத்தில் கொள்முதலாளர் அல்லது உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் என அரசு பொதுவாகக் குறிப்பிட்டாலும், இச்சட்டத்தைப் பயன்படுத்த முனைப்பு காட்டுபவை பேயர், இமாலயா ஹெல்த்கேர், ஐ.டி.சி., இந்துஸ்தான் யூனிலீவர், அதானி குழுமம் போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் என்கிறார் வேளாண் எழுத்தாளர் பாமயன்.

ஒப்பந்தச் சாகுபடிச் சட்டத்தின் மூலம் விவசாயிகளின் வீடுகளில் பாலும் தேனும் பெருகி ஓடப் போவதைப் போல அரசு கூறினாலும், அனுபவங்கள் அதற்கு நேர்எதிராக, விவசாயிகளுக்குப் பாதகமாக, மென்மேலும் அவர்களை நட்டமடையச் செய்வதாக, கடனாளியாக மாற்றுவதாகத்தான் அமைந்திருக்கிறது.

எடுத்துக்காட்டாக, பாரம்பரியமாக நெல் விளைவித்து வந்த தாய்லாந்து விவசாயிகளை, கரும்பு பயிரிடுவதன் மூலம் அதிக இலாபம் கிடைக்குமென ஆசைகாட்டி, அவர்களை ஒப்பந்த விவசாயத்தில் இறக்கிவிட்டது, தாய்லாந்து அரசு. நவீன தொழில்நுட்பங்கள் மூலம் ஏக்கருக்கு 10 டன்கள் வரை கூடுதலாக விளைந்து விவசாயிகளுக்கு அதிகப்படியான பணம் கிடைத்ததாகக் கூறினார்கள். ஆனால், குறைவாக விளைவித்தபோது கடனின்றி இருந்த விவசாயிகள், ஒப்பந்த விவசாயம் மூலம் கூடுதலாக விளைவித்தாலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் வலைக்குள் சிக்கிக் கொண்டதையும், உலக அளவில் ஒப்பந்த விவசாய முறையால் விவசாயிகளுக்கு நன்மை இல்லை என்ற அனுபவத்தையும் பாமயன் சுட்டிக்காட்டுகிறார்.

குஜராத்தில் பெப்சி நிறுவனம் தனது அனுமதியின்றி, தனது உருளைக்கிழங்கு ரகத்தைத் தன்னோடு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளாத விவசாயிகள் பயிரிட்டதாகக் குற்றஞ்சுமத்தி, பல கோடி ரூபாய் நட்ட ஈடு கேட்டதும், அதனை எதிர்த்து விவசாயிகள் போராடிய பிறகுதான் அந்நிறுவனம் பின்வாங்கியது என்பதும் நம் நாட்டு அனுபவம்.

ஒப்பந்த சாகுபடி சட்டத்தின்படி, நிறுவனங்கள் தாங்கள் விரும்பும் பயிர் வகைகளை உற்பத்தி செய்து கொடுக்க விவசாயிகளுடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளும். இதற்கான விதை, உரம், பூச்சிக் கொல்லிகள், பிற தொழிநுட்பங்கள் ஆகியவற்றை இந்த நிறுவனங்களே வழங்கவும் சட்டம் இடமளிக்கிறது. இந்த உள்ளீடு பொருட்களுக்கான தொகையை, அறுவடை முடிந்த பின்னரோ அல்லது இடையிலோ நிறுவனங்கள் வசூல் செய்து கொள்ளவும், விவசாயிகள் அதனைக் கட்ட முடியாது போனால், நிலக் குத்தகைக்கு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.

இதன் மூலம் எதை விதைக்க வேண்டும், எந்தவிதமான உள்ளீடு பொருட்களைப் பயிர்களுக்குப் போட வேண்டும் என விவசாயிகள் சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமை பறிக்கப்படுவதோடு, சிறு, நடுத்தர விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் குத்தகை விவசாயிகளாக மாற்றப்படும் அபாயமும் ஒளிந்திருக்கிறது. மத்திய கால பண்ணையார்கள் இடத்தில் இப்பொழுது கார்ப்பரேட் நிறுவனங்களைக் கொண்டுவந்து வைக்கிறது, இச்சட்டம்.

படிக்க :
அருந்ததி ராய் : மக்களை சிரிக்க சொல்வது கிரிமினல் குற்றமா ?
இந்த அடக்குமுறை காலனிய ஆட்சியில்கூட கிடையாது : வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் !

”குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்து, பொதுக்கொள்முதலை விரிவுபடுத்து, தரமான விதை மற்றும் உள்ளீடு பொருட்களை மானிய விலையில் வழங்கு” என்பவைதான் விவசாயிகளின் கோரிக்கை. ”குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற பெயரில் விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பதை நிறுத்து, பொதுக் கொள்முதலைக் கைவிடு, கொள்முதல் செய்வது மற்றும் உணவு தானியங்களை சேமிப்பது ஆகிய இரண்டிலும் தனியார் நிறுவனங்களை அனுமதி” என்பதுதான் கார்ப்பரேட்டு முதலாளி வர்க்கத்தின் கோரிக்கை. விவசாயிகளின் நலனைக் காப்பது என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளின் கோரிக்கையை சட்டமாக்கி, ஒப்பந்த சாகுபடி என்னும் சிலந்தி வலைக்குள் விவசாயிகளைத் தள்ளத் துடிக்கிறது அரசு.

அமுதன்.

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

“ஸ்டாலின் பிறந்த மண்” – ஜோர்ஜியா பயணக் கதை | கலையரசன்

2

கலையரசன்

லகில் அதிகம் அறியப்படாத நாடுகளில் ஒன்று ஜோர்ஜியா. அறிந்தவர்களும் அதை ஒரு “ஐரோப்பிய நாடு” என நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அது ஆசியாக் கண்டத்தில் இருக்கிறது! அதன் பூகோள அமைவிடம் காரணமாக அயலில் உள்ள வல்லரசுகளின் மேலாதிக்க வெறிக்குள் அகப்பட்டு நசுக்கப் பட்டு வந்தது. இப்போது தனிநாடாக இருந்தாலும் அயலில் உள்ள ரஷ்யாவுடன் பகைத்துக் கொண்டு, தொலைதூரத்தில் உள்ள அமெரிக்காவுடன் கைகோர்த்துள்ளது. நேட்டோ படைகளையும் வரவேற்று வைத்திருக்கிறது. இதன் விளைவாக 2008-ம் ஆண்டு நடந்த போர் ஜோர்ஜியா மீது சர்வதேச நாடுகளின் கவனத்தை குவிக்க வைத்தது.

சோவியத் யூனியன் இருந்த காலத்தில், ஜோர்ஜியாவும் ஒரு சோவியத் குடியரசாக பிரகடனப் படுத்தப் பட்டிருந்தது. இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் உலகில் சக்திவாய்ந்த அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கிய சோவியத் அதிபர் ஸ்டாலின் ஒரு ஜோர்ஜிய இனத்தவர் என்பது பலருக்குத் தெரியாது. சார் மன்னன் காலத்து ரஷ்ய சாம்ராஜ்யத்தில் பிறந்த, அங்கிருந்த சிறுபான்மை மொழிகளில் ஒன்றான ஜோர்ஜிய மொழி பேசும் ஒருவரை, பெரும்பான்மை ரஷ்யர்கள் தமது தலைவராக ஏற்றுக் கொள்வார்கள் என்பது நினைத்துப் பார்க்க முடியாத விடயம் தான். ஆனால், உலக வரலாற்றில் அந்த அதிசயம் நடந்தது. அதற்குக் காரணம், ஸ்டாலினே ஓரிடத்தில் எழுதியது மாதிரி, “இன்றுள்ள தேசிய இன உணர்வுகள் யாவும் முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியினால் ஏற்பட்ட பக்க விளைவுகளே!” அந்த விளைவுகள் என்னவென்பதையும், அவற்றின் இன்றைய நிலைப்பாடுகளையும் இந்தப் பயணக் கட்டுரையில் ஓரளவு அலசி இருக்கிறேன்.

ஜோர்ஜியாவுக்கு சுற்றுலாப் பயணியாக செல்வதற்கு பெருமளவு பணம் வைத்திருக்கத் தேவையில்லை. ஹங்கேரியின் மலிவு விலை விமான நிறுவனமான விஸ் எயர், ஐரோப்பாவின் மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் பயண சேவைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. நம்பினால் நம்புங்கள், எனக்கு ஏற்பட்ட டிக்கட் செலவு வெறும் ஐம்பது யூரோக்கள் மட்டுமே! பொதுவாக டிசம்பர் மாதத் தொடக்கம் சுற்றுலாக் காலம் இல்லையென்பதால் விலைகள் குறைக்கப் படுவது வழமை.

ஜோர்ஜியாவில் தங்குவதற்கும், சுற்றிப் பார்ப்பதற்கும் அதிக செலவு பிடிக்காது. கடந்த பத்து வருடங்களில் தான் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனை பல இடங்களிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஹோட்டல்களை தவிர்த்து, ஹொஸ்டலில் தங்குவதற்கு நாளொன்றுக்கு சராசரி பத்து யூரோ போதும். பதிவு செய்வதற்கும் அதிக கேள்விகள் கேட்பதில்லை. ஒரு தடவை, கூட்டைசி எனும் நகரில் ஒரு குடும்பம் நடத்தும் சிறிய ஹொஸ்டல் அறையில் தங்கி இருந்தேன். “பதிவு செய்வீர்களா?” என்று கேட்டதற்கு “அப்படி என்றால் என்ன?” என்று திருப்பிக் கேட்டார்கள். இந்த விடயத்தில் அரசு அதிக கட்டுப்பாடுகள் விதிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

முதலில் ஒரு விடயத்தை சொல்ல மறந்து விட்டேன். ஜோர்ஜியா பயணம் செய்பவர்கள் கையில் யூரோ, டாலர், பவுன் நாணயத் தாள்களை வைத்திருக்க வேண்டும். மூலைக்கு மூலை உள்ள நாணய மாற்று கடைகளில் கொடுத்து உள்ளூர் நாணயமான லாரிக்கு மாற்றிக் கொள்ளலாம். ஒரு யூரோ/டாலர் மூன்று லாரிகள் என்று அண்ணளவாக கணக்குப் போடலாம். அங்குள்ள வங்கி ATM களில் கிரெடிட் கார்ட் தவிர வங்கி அட்டையையும் பாவிக்க முடியாது. சர்வதேச வங்கித் தொடர்புகளில் ஜோர்ஜிய வங்கிகள் இணைக்கப் படவில்லை போலிருக்கிறது. எயர்போர்ட்டில் வந்திறங்கியவுடனேயே குடிவரவு அலுவலகர்கள் எம்மிடம் பணம் இருக்கிறதா என்று விசாரிக்கிறார்கள்.

படிக்க:
வளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் – சில குறிப்புகள் | கலையரசன்
♦ CAA – NPR – NRC எதிர்ப்பு போராட்டங்களுடன் தொடங்கிய புத்தாண்டு !

பல நாடுகளை சேர்ந்த பாஸ்போர்ட்களுக்கு விமான நிலையத்தில் இறங்கியவுடன் இலவச விசா அடித்துக் கொடுக்கிறார்கள். இந்தியா, இலங்கையில் இருந்து வருபவர்களுக்கும் விசா கட்டுப்பாடுகள் குறைவு. தலைநகர் திபிலிசியில் பல இந்திய சுற்றுலாப் பயணிகளை காணக் கூடியதாக இருந்தது. குறைந்த செலவில் படிக்கலாம் என்பதற்காக மாணவர் விசாவில் வந்தவர்களையும் சந்தித்தேன்.

திபிலிசி நகர மத்தியில் இருந்த இந்திய உணவு விடுதிக்கு முன்னால், இரண்டு இந்திய, பங்களாதேஷ் இளைஞர்கள் வாடிக்கையாளர்களை கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுத்த நேரம், அவர்கள் அந்நாட்டில் படிக்கவென வந்து வேலை செய்வதை அறிந்து கொண்டேன். நாளொன்றுக்கு நாற்பது லாரிகள் சம்பளமாக கிடைக்கிறதாம். அந்த ரெஸ்டாரன்ட் உரிமையாளர் ஒரு கேரளாக் காரர். அங்கு சென்று பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரம் அவரும் வந்து கதைத்தார்.

ஜோர்ஜியாவில், அதுவும் மொழி தெரியாத ஒரு நாட்டில் தனியாகப் பயணம் செய்வது ஒரு பெரிய சாகசம் எனலாம். இங்கே நான் பாதுகாப்புப் பிரச்சினைகள் பற்றிக் கூறவில்லை. பலர் நினைப்பதற்கு மாறாக பாதுகாப்பாக பயணம் செய்யலாம். நாம் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வுடன் விழிப்புடன் இருந்தால் போதும். அது எல்லா நாடுகளுக்கும் பொதுவானது. லண்டன், பாரிஸ் நகரம் என்றாலும், நாம் தான் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும்.

நான் சென்று இறங்கிய கூட்டைசி (Kutaisi) சர்வதேச விமான நிலையம் பெரும்பாலும் மலிவு விலை விமான சேவைக்காக கட்டப் பட்டிருக்க வேண்டும். அங்கே பெரும்பாலும் ஹங்கேரியின் விஸ் எயர் (Wizz air) தான் வருகின்றது. விமான நிலையத்தில் இருந்து தலைநகர் திபிலிசிக்கு (Tbilisi) எந்நேரமும் பேருந்து சேவைகள் உள்ளன. ஒவ்வொரு விமானமும் வந்திறங்கும் நேரம் பார்த்து பஸ் ஓடுகிறது. திபிலிசி செல்வதற்கு சுமார் நான்கு மணி நேரம் எடுக்கிறது. இடையில் அரை மணித்தியாலம் சாப்பாட்டு இடைவேளை விடுகிறார்கள். டிக்கட் விலை இருபது லாரிகள்.

படிக்க:
சபரிமலைத் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தின் கபடத்தனமும்
♦ சிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்

மொபைல் பாவனையாளர்கள் ரோமிங் செலவுகளை தவிர்க்கும் பொருட்டு, உள்ளூர் சிம் கார்ட் வாங்கிப் போடுவது நல்லது. அதை விமான நிலையத்திலேயே வாங்க முடியும். சிம் காரட்டுடன் 2GB இன்டர்நெட் ஐந்து லாரிக்கு கிடைக்கிறது. Bee line நிறுவனம் வழங்கும் சேவை சிறந்தது என்று சொல்கிறார்கள். மொபைல் தொலைபேசி வணிகத்தை பொறுத்த வரையில் ஜோர்ஜியா மிகவும் பின்தங்கியுள்ளது. பத்து வருடங்களுக்கு முன்னர் பாவனையில் இருந்த தொலைபேசிகளை தான் இப்போதும் அங்கே பலர் பாவிக்கிறார்கள். பெரும்பாலான ஜோர்ஜியர்களின் வாங்கும்திறனும் குறைவு தான்.

மேற்கு ஐரோப்பாவுக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையில் மூன்று மணிநேர வித்தியாசம். நான் திபிலிசி போய்ச் சேர்ந்த நேரம் அதிகாலை ஏழு மணி. இருப்பினும் ஒன்றரை மில்லியன் சனத்தொகை கொண்ட அந்த நகரம் அப்போதும் உறங்கிக் கொண்டிருந்தது. ஒரு டாக்சியை பிடித்து நகர மத்தியில் இருந்த புஷ்கின் சாலையில் உள்ள ஹொஸ்டல் ஒன்றில் சென்று தங்கினேன். புஷ்கின் சாலை சார் மன்னன் காலத்தில் இருந்தே இயங்கிக் கொண்டிருக்கும் சுறுசுறுப்பான வீதி. அதற்கு அருகில் தான் திபிலிசி பழைய நகரம் உள்ளது.

திபிலிசி செல்லும் சுற்றுலாப் பயணிகள் யாரும் பழைய நகரத்தை பார்க்காமல் திரும்ப மாட்டார்கள். மிகவும் அழகான இடம். பழைய கோட்டை ஒன்றின் இடிபாடுகளை கொண்ட குன்றின் உச்சியை நோக்கி கேபிள் கார் செல்கிறது. நரிகலா (Narikala) எனும் பெயருடைய கோட்டை ஆயிரம் வருடங்களுக்கும் மேல் பழமையானது. அடிப்படை கட்டுமானம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த ஈரானிய- சசானிய சாம்ராஜ்ய காலத்தில் கட்டப்பட்டது. பிற்காலத்தில் ஈரான் பாக்தாத்தை தலைநகராகக் கொண்ட இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்த காலத்திலும், ஆட்சியாளர்களின் கைமாறிய போதிலும் நரிகலா கோட்டை பாவனையில் இருந்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் பாவனையில் இருந்த கோட்டைக்கு நீர் விநியோகம் செய்வதற்கு ஒரு இரகசிய சுரங்க வழி இருந்ததாம்.

நரிகலா கோட்டைக்கு அருகில், நவீன காலத்தில் கட்டப்பட்ட “சுதந்திர தேவி” சிலை உள்ளது. ஒரு கையில் வாளுடன் குன்றின் உச்சியில் நின்று கொண்டே திபிலிசி நகரை பார்க்கும் வகையில் கட்டப் பட்ட சிலை, ஜோர்ஜிய தேசியவாதத்தை பிரதிபலிப்பதை வேறெந்த விசேடமும் அதில் இல்லை. குன்றின் மறு பக்கத்தில் கீழே இறங்கிச் சென்றால் தாவரவியல் பூங்கா இருக்கிறது. அதிலிருந்து நடந்து சென்றால் மீண்டும் திபிலிசி பழைய நகரத்தை அடையலாம்.

இந்த இடத்தில் திபிலிசி நகரம் பற்றி சில குறிப்புகளை எழுதுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். ஜோர்ஜியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள திபிலிசி நகரமும், அதை அண்டிய பிரதேசங்களும் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் சுதந்திரமான மன்னராட்சியாக இருந்து வந்தது. அப்போது ஜோர்ஜியாவை ஆண்ட கடைசி மன்னன் இரண்டாம் இராக்லி, இஸ்லாமிய ஓட்டோமான் சாம்ராஜ்ய விஸ்தரிப்புக்கு அஞ்சி, கிறிஸ்தவ ரஷ்ய சாம்ராஜ்யத்தின் உதவியை நாடினான். அப்போது மதம் தான் அரசியல் முடிவுகளை தீர்மானிக்கும் காரணியாக இருந்துள்ளது. எது எப்படியோ அன்றிலிருந்து ஜோர்ஜியா ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகி விட்டது.

அயல் நாடான ஆர்மேனியா மாதிரி, ஜோர்ஜியாவில் உள்ளவர்களும் தாமே ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் என்று பெருமை பேசுவதுண்டு. அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. கிரேக்க அல்லது ரஷ்ய ஒர்தொடக்ஸ் பாணி கிறிஸ்தவத்தை பின்பற்றும் ஜோர்ஜியாவில், தனித்துவமான திருச்சபை உள்ளது. அதாவது ஜோர்ஜியாவை மட்டும் மையமாகக் கொண்ட மத நிறுவனம். அன்றிருந்த கிறிஸ்தவ மடாதிபதிகள் ஜோர்ஜிய மொழியை மட்டும் வளர்க்கவில்லை. ரஷ்ய மொழிக்கும் பெருமளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

படிக்க:
சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள் ! | கலையரசன்
♦ மோகன் பகவத்தின் இந்தியாவில் எல்லோருமே இந்து தான் : காஞ்சா அய்லய்யா

அன்றைய ஜோர்ஜியா ரஷ்ய சக்கரவர்த்தியின் ஆளுகையின் கீழ் இருந்தாலும், பிற பிரதேசங்களில் நடந்த மாதிரி அதை ஒரு காலனியாக்கி, ரஷ்யர்களை அங்கு கொண்டு சென்று குடியேற்றவில்லை. ரஷ்ய படையினரை வைத்திருந்து பராமரித்ததை தவிர, ஜோர்ஜியாவின் அரசியலிலோ, அல்லது பொருளாதாரத்திலோ ரஷ்யர்கள் பெருமளவு செல்வாக்கு செலுத்தவில்லை. “ரஷ்ய மயமாக்கல்” என்று சொல்லக் கூடிய அளவுக்கு, ஜோர்ஜியர்கள் ரஷ்ய மொழியை படிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டாக்கியவர்கள் ஜோர்ஜிய கிறிஸ்தவ மடாதிபதிகள் தான். அதற்குக் காரணம், அன்றைய காலகட்டத்தில் ரஷ்யன் ஒரு வளர்ச்சி அடைந்த, சர்வதேச தொடர்புகளுக்கு உதவும் மொழியாகக் கருதப் பட்டது. அதாவது, இந்தியர்கள், இலங்கையர்கள் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படித்த மாதிரி, ஜோர்ஜியர்கள் ரஷ்ய மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

அன்றிருந்த ரஷ்ய சாம்ராஜ்யம் மன்னராட்சியாக இருந்தாலும், அதற்குள் முதலாளித்துவ பொருளாதாரம் சுதந்திரமாக வளர்ந்து கொண்டிருந்தது. ஜோர்ஜியாவில் மூலதனத்தை குவித்த பெரும் முதலாளிகள் பெரும்பாலும் ஆர்மேனியர்கள், அல்லது யூதர்களாக இருந்தார்கள். இப்போதும் திபிலிசி நகரில் இலட்சக்கணக்கான ஆர்மேனியர்கள் வசிக்கிறார்கள். நான் ஒரு முடிதிருத்தும் கடைக்கு சென்றிருந்த நேரம், எனக்கு முடி வெட்டிய பையன் ஓர் ஆர்மேனியன். தனது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி எல்லாம் ஜோர்ஜியாவில் பிறந்து வளர்ந்ததாக கூறினான். அதாவது, தாங்கள் அண்மையில் ஆர்மேனியாவில் இருந்து வந்த வந்தேறுகுடிகள் அல்ல, ஜோர்ஜியாவின் பூர்வ குடிகள் என்பதை அழுத்தமாக சொல்ல விரும்பினான்.

அந்த ஆர்மேனிய முடி திருத்தும் தொழிலாளியுடன் பேச்சுக் கொடுத்த நேரம் பல விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. ஓரளவு சமாளிக்கும் அளவுக்கு ஆங்கிலம் பேசத் தெரிந்து வைத்திருந்தான். தனக்கு ஆங்கிலத்தை தவிர, ஆர்மேனியன், ஜோர்ஜியன், ரஷ்யன் ஆகிய நான்கு மொழிகளும் தெரியும் என்றான். தானும் வேறு சிலரும் சேர்ந்து அந்தக் கடையை நடத்துவதாகவும், நாளொன்றுக்கு பதின்மூன்று மணிநேரம் வேலை செய்வதாகவும், அப்போது தான் ஓரளவு சம்பாதிக்கலாம் எனவும் தெரிவித்தான். ஜோர்ஜிய இனத்தவர்கள் எப்போது பார்த்தாலும் இந்நாட்டில் வேலை இல்லை என்று முறையிடுகிறார்கள். அவர்களுக்கு சாப்பிடுவதையும், வைன் குடிப்பதையும் தவிர வேறெந்த வேலையும் தெரியாது. பலர் இங்கே வேறு நாடுகளில் இருந்து வந்து வேலை செய்து நன்றாக சம்பாதிக்கிறார்கள். ஜோர்ஜியர்களுக்கு அந்தத் திறமை இல்லை. இவை அந்த ஆர்மேனிய பையனின் கருத்துக்கள்.

மேற்குறிப்பிட்ட உரையாடலில் தெரிவிக்கப் பட்ட விடயங்கள், நான் அடுத்து எழுதப் போகும் திபிலிசி தேசிய நூதனசாலையின் அரசியலை புரிந்து கொள்ள பெரிதும் உதவும் என நினைக்கிறேன். அங்கு பல அருமையான ஆவணங்கள் சேகரிக்கப் பட்டு பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், அல்லது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஜோர்ஜிய மக்களின் ஆடை, அணிகலன்கள், வீட்டில் பாவித்த உடைமைகள் போன்றனவற்றை கண்டு களிக்கலாம். அத்துடன் அன்று வாழ்ந்த மக்களின் பாரம்பரிய வீடுகள், மற்றும் தொழிலகங்களின் மாதிரிகளும் செய்து வைக்கப் பட்டுள்ளன. அவற்றை நேரில் பார்ப்பது போன்று தத்ரூபமாக வடிவமைத்து உள்ளனர்.

இந்த நூதனசாலையை பார்வையிட்டுக் கொண்டிருந்த நேரம் ஓர் உண்மை மூளைக்குள் பளிச்சிட்டது. இவற்றில் ஏதோ ஓர் ஒற்றுமை அல்லது சிறப்பம்சம் உள்ளது. என்ன அது? அங்கு காட்சிக்கு வைக்கப் பட்டிருந்த பொருட்கள், ஆடைகள் எல்லாமே வசதியான மேல்தட்டு வர்க்கத்தினர் பாவித்தவை. அதாவது, அந்தக் காலத்திலேயே ஜோர்ஜிய மேட்டுக்குடியினர் எந்தளவு சிறப்பாக வாழ்ந்தனர் என்பதை காட்டுகிறார்கள். உண்மையில், ஜோர்ஜிய இனத்தவர்களில் வசதி படைத்தவர்கள் ஒன்றில் சிறிய தொழிலதிபராக அல்லது கடை வியாபாரி போன்றவர்கள் தான். அதாவது, இடைத்தர முதலாளித்துவ வர்க்கம். மார்க்சிய சொல்லாடலில் குட்டி பூர்ஷுவா எனப்படுவோர்.

இடைத்தர முதலாளிகள் பெரும்பாலும் தளபாடங்கள் செய்வது, ஆடை தைப்பது, ஆபரணங்கள் செய்வது, நிலவிரிப்பு (Carpet) பின்னுவது போன்ற தொழிற்துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். அனேகமாக இவர்களது தொழிலகமும், கடையும் ஒரே இடத்தில் இருக்கும். அவர்களுக்கு கீழே இரண்டு, மூன்று பேர் வேலை செய்வார்கள். அவர்களில் சிலர் நன்றாக சம்பாதித்து பணக்காரர்களாக இருப்பார்கள். “அதிர்ஷ்டம் இல்லாத” பலர் ஏழைகளாக இருப்பார்கள். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியாக இருந்த தனது தந்தையும், இது போன்று தனியாக தொழிலகம் நடத்தும் கனவுடன், குட்டி முதலாளித்துவ சிந்தனையுடன் வாழ்ந்ததாக ஸ்டாலின் தனது சுயசரிதையில் பதிவு செய்துள்ளார்.

அதிகம் பேசுவானேன். நமது இன்றைய சூழலிலேயே இதற்கு உதாரணம் காட்டலாம். தமிழர்களில் தொழில் முனைவோராக உள்ளவர்கள், ஒரு கடை போட்டு, இரண்டு பேரை வேலைக்கு வைத்திருப்பதால் தம்மை முதலாளிகளாக கருதிக் கொள்வார்கள். அப்படித் தான் அன்றிருந்த ஆரம்ப காலகட்ட முதலாளித்துவம் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், பிரித்தானியா, பிரான்ஸ் உட்பட, பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அப்படியான சிறு தொழில் முனைவோர் பிற்காலத்தில் பெரும் தொழிலதிபர்களாக வந்ததிருந்தனர். அதே பாணியை பின்பற்றி தாமும் ஒரு வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடாக வந்திருப்போம் என்ற செய்தியை, இந்த நூதனசாலை மூலமாக இன்றுள்ள ஜோர்ஜிய அரசு நமக்கு தெரிவிக்கிறது.

அந்தக் காலகட்டத்தில் ஜோர்ஜியாவில் வாழ்ந்த சிறு தொழில் முனைவோரும் தமது நலன் பேணும் சங்கங்களை உருவாக்கி வைத்திருந்தனர். அந்தப் புகைப் படங்கள் எல்லாம் திபிலிசி நூதனசாலையில் வைக்கப் பட்டுள்ளன. கவனிக்கவும், அவை தொழிற் சங்கங்கள் அல்ல. அதாவது, தொழிலாளர்களின் சங்கம் அல்ல. அவர்களை வேலைக்கு வைத்திருந்த முதலாளிகளின் சங்கங்கள். அதே நூதனசாலையில் இன்னொரு பக்கத்தில் பங்குச் சந்தை இருந்தமைக்கான ஆதாரம் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதாவது, ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளை வாங்கியதற்கான சான்றிதழ். அதில் ரஷ்யன், பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருந்தது. அதாவது, அவை இரண்டும் வர்த்தகத் தொடர்புகளுக்கான சர்வதேச மொழிகளாக கருதப் பட்டன. அதைத் தவிர ஜோர்ஜிய, ஆர்மேனிய, அசேரி மொழிகளில் சுருக்கமான விபரமும் அந்த சான்றிதழில் எழுதப் பட்டுள்ளது.

எனது பயணத் திட்டத்தில் மிகக் குறைந்த நாட்களே இருந்த படியால், அடுத்த நாளே திபிலிசியை விட்டு வெளியேறத் தீர்மானித்தேன். குறிப்பாக ஸ்டாலின் பிறந்த இடமான கோரிக்கு செல்வதே நோக்கம். அங்கு எப்படிப் போகலாம் என்று ஹொஸ்டல் வரவேற்பளராக இருந்த பெண்ணிடம் விசாரித்து விபரங்களை பெற்றுக் கொண்டேன். அருகிலேயே “சுதந்திர சதுக்கம்” எனப்படும் ஐந்து சாலைகள் சந்திக்கும் பெரிய சந்தி உள்ளது. அதில் ஒரு பக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. மெட்ரோ ரயில் பிடித்து, டிடுபே (Didube) எனும் இடத்தில் இறங்க வேண்டும். அங்கு தான் பல நகரங்களுக்கும் செல்லும் மினிபஸ் சேவை நடக்கிறது. கோரி எனும் சிறிய நகரம், திபிலிசி மாகாணத்தை சேர்ந்த பகுதி தான். சுமார் எழுபது கிலோ மீட்டர் தூரம். மினிபஸ் கட்டணம் ஐந்து லாரிகள் மட்டுமே.

ஜோர்ஜியாவில் ஸ்டாலின் வாழ்ந்த காலத்திலும் கோரியில் இருந்து வரும் வண்டிகள் டிடுபே தரிப்பிடத்திற்கு தான் வந்து நிற்கும். ஸ்டாலின் கோரியில் பிறந்து வளர்ந்தாலும், பருவ வயதை அடைந்ததும் தந்தையுடன் திபிலிசிக்கு வந்து செருப்புத் தைக்கும் தொழில் செய்துள்ளார். பிற்காலத்தில், ஒரு கிறிஸ்தவ மடாலயத்தில் பாதிரியாவதற்காக மதக் கல்வி கற்ற காலத்திலும், அங்கிருந்து வெளியேறி புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொழுதும் திபிலிசியில் தங்கி இருந்துள்ளார்.

அப்போது ஸ்டாலின் புஷ்கின் சாலையில் தான் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்தார். ஸ்டாலின் படித்த மடாலயம் இப்போதும் பெருமளவு சுற்றுலாப் பயணிகள் நடமாடும் பழைய நகரத்தில் உள்ளது. அது தற்போது மியூசியமாக மாறிவிட்டது. அந்தக் காலகட்டத்தில், திபிலிசி நகர மத்தியில் இருந்த புஷ்கின் சாலை, ஏழை உழைக்கும் வர்க்க மக்கள் வாழ்ந்த அழுக்கான கட்டிடங்களை கொண்ட தெருவாக இருந்தது. இன்று அவையெல்லாம் திருத்தப்பட்டு பணக்காரர்கள் குடியிருக்கும் ஆடம்பர கட்டிடங்களாக மாற்றப் பட்டு விட்டன.

ஜோர்ஜியாவில் “மாட்ரூஷ்கா” என அழைக்கப் படும் மினி பஸ், அல்லது ஷெயர் டாக்சியில் பயணம் செய்வது மிகவும் மலிவானது. நம்ப முடியாத அளவுக்கு செலவு குறைவு. ஆனால், ஒரு பிரச்சினை. இடத்தின் பெயரைக் குறிப்பிடும் மட்டைகளில் ஜோர்ஜிய மொழி மட்டுமே எழுதப் பட்டிருக்கும். கோரி, பாதுமி, கூட்டைசி போன்ற பெரிய நகரங்களுக்கு செல்லும் மினி பஸ்களில் சிலநேரம் ஆங்கில(லத்தீன்) எழுத்துக்கள் காணப்படும். ஆகவே, எந்த இடத்திற்குப் போவது என்றாலும் முன்கூட்டியே அங்கு நிற்கும் டிரைவர்களிடம் விசாரிப்பது நல்லது. இங்கேயும் மொழிப்பிரச்சினை எழும். அவர்களில் யாருக்கும் பெரும்பாலும் ஒரு சொல் கூட ஆங்கிலம் தெரியாது. கொஞ்சம் ரஷ்யன் தெரிந்தால் சமாளிக்கலாம். இருப்பினும், நாங்கள் போக வேண்டிய இடத்தின் பெயரை அழுத்தம் திருத்தமாக உச்சரித்தாலே அவர்கள் புரிந்து கொள்வார்கள். அவர்களது பாஷையில் ஏதோ சொல்லி எங்களை கூட்டிச் சென்று அந்த இடத்திற்கு செல்லும் மினி பஸ்ஸில் ஏற்றி விடுவார்கள். எம்மூரில் நடப்பது மாதிரி, மினி பஸ் தரிப்பிடத்தில் கூவிக்கூவி ஆட்களை சேர்ப்பதற்கும் சிலர் அங்கே நிற்பார்கள். ஆகவே நாங்கள் எந்தப் பயமும் இல்லாமல் தைரியமாக தனியாகப் பயணம் செய்யலாம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றை அழுத்தவும் )

(தொடரும்)

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.