Saturday, June 20, 2026
முகப்பு பதிவு பக்கம் 841

நூல் அறிமுகம்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்!

தெலுங்கானா

பெண் என்றால் ? வம்பு பேசுவாள், வாயாடுவாள், ஜாடை பேசுவாள், இல்லையென்றால் மாமியார், மருமகள், நாத்தனார், கணவன் என அணி பிரித்துக் கொண்டு தங்களுக்குள்ளாகவே ஒரு தர்மயுத்தத்தை நடத்திப் போராடுவாள்’. இன்னும் புத்திசாலிப் பெண்ணோ மத்தியான மகளிர் மட்டும் தொடரில் வந்து எம்பிராய்டு பின்னிக் காட்டுவாள். எப்படி வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் என்று விபரம் சொல்வாள்.அனைத்துக்கும் மேலே கள்ள உறவுக்கு பொறி பறக்க வசனம் பேசி புரட்சியே?’ செய்வாள்.. இப்படித்தான் தொலைக்காட்சிகளும், சினிமாக்களும் பெண்களை தமது வர்த்தக வட்டத்துக்குள் சுழல விட்டுக் காட்டுகின்றன.

ஆனால் தெலுங்கானாவின் உழைக்கும் வர்க்கத்துப் பெண்களோ எமது பேரழகும் ஆளுமையும் சமூக உணர்வில் வெளிப்படுகின்றதுஎன்று இரத்தசாட்சியாக நம்முன் வந்து உரக்கப் பேசுகிறார்கள். அவ்வாறு நடைமுறையில் வாழ்ந்த தெலுங்கானா பகுதி பெண்களின் வகை மாதிரியாக ஏழு பெண்களின் வாழ்க்கைக் கதையை நம்முன் நடத்திக் காட்டி, நமது வாழ்வின் அற்பக்கண்ணோட்டங்களைத் தகர்த்து எறிகின்றது ஒரு புத்தகம். அந்தப் புத்தகத்தின் பெயர் தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்”.

அளப்பரிய வீரமும், தியாகமும் ததும்பி நிற்கும் தெலுங்கானாவில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் மக்கள் அணிதிரண்டனர். நிலப்பிரபுக்களின் கேட்பாரற்ற கொடிய சுரண்டல், போலீசு இராணுவத்தின் அடக்குமுறைகள் படுகொலைகள் இவைகளைக் கண்டு பயப்படாமல், பணியாமல் நிலத்துக்காகவும், தங்கள் விடுதலைக்காகவும், அதிகாரத்திற்காகவும் ஆர்த்தெழுந்தது தெலுங்கானா. திருப்பித் தாக்கி திமிறி எழுந்த தெலுங்கானாவின் பெண்களில் ஒருவர்தான் இந்த நூலில் முதலில் நமக்கு அறிமுகமாகும் பண்டி ராஜக்கா. போராளிகளுக்கு சோளக்கதிரை சுமந்து சென்றபோது வழியிலேயே போலீசும், இராணுவமும் நிலப்பிரபுவின் ஆட்களோடு சேர்ந்துகொண்டு அவளைப் பிடித்து சித்திரவதை செய்கின்றார்கள். உதைத்தால் போராட்ட விபரங்களையும் கட்சி இரகசியங்களையும் காட்டிக்கொடுத்து விடுவாள் என்பது அவர்களது கணக்கு.

மேலும் பெண்தானே ! இரகசியம் காக்க மாட்டாள். கற்பழிப்பு வரை சென்றால் பயந்து விசயத்தை வெளியிடுவாள் என்று அந்தக் கயவர்கள் கடைசி எல்லை வரைக்கும் போனாலும் அவள் உடம்பிலிருந்து இரத்தத்தைத்தான் கறக்க முடிந்ததே ஒழிய, மக்கள் விடுதலைக்காகப் போராடும் கட்சியின் திட்டங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பெற முடியவில்லை.

ஆணாதிக்கத் திமிரோடு அந்த அயோக்கியர்கள் அந்தப் பெண்ணின் மேல் உடல்வதையில் மட்டுமல்ல, சொல்வதையிலும் இறங்கினார்கள். நிலப்பிரபுத்துவத்தின் எந்த அடக்குமுறைக்கும் பணியவில்லை பண்டி ராஜக்கா. பொதுவாழ்க்கைக்கு வந்து கட்சி, அரசியல் என்று செயல்படப் போனால் ஒரு பெண்ணின் ஒழுக்கத்துக்கே கேடு வந்து சேரும் என்று எக்கச்சக்கமாக யோசிக்கின்ற நடுத்தரவர்க்க மனநிலையாளர்கள் மத்தியில் பெண்டல பாடு என்ற சாதாரண கிராமத்துப் பெண்ணான ராஜக்கா எதிரிகளின் வதைமுகாமில் நேருக்குநேர் வாதம் செய்யும் துணிச்சலை நீங்களே பாருங்கள்.

என்னடி தேவடியா ? இனியாவது சொல்றியா ?” என்று போலீசு இன்ஸ்பெக்டர் அதட்டினான்.

என்ன சொல்லச் சொல்றீங்க ?” என்று கேட்டாள் அவள்.

உன்னோட ஆம்படயான்கள் சங்கதிதான்என்று தாஸ் என்கிற ஜமீன்தார் எகத்தாளமாகக் கூறினான்.

“.. .. அவ சும்மாவே சொல்லுவாளா சார் ? போட்டு நொறுக்குங்க ! பாருங்களேன் எவ்வளவு சதை போட்டிருக்கா ? இவளுக்குப் போராட்டக் குழுவில் பத்துப்பேர் ஆம்படையான்களாம் !என்று கூறி, ஜமீன்தார் தூண்டி விட்டான். (நூல்: பக்.7)

நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கினால் ஓவென்று அழுது தங்கள் வழிக்கு வந்து விடுவாள் என்ற அவர்களின் சம்பிரதாயமான கலாச்சாரத்தின் முகத்தில் காறித்துப்பும்படி முன்னை விடத் தீவிரமாகப் பேசினாள்.

ஒழுக்கமே இல்லாத நீ என்னை அவதூறு பேசறியா ? நீ பிழைக்கிற பிழைப்பு ஒழுக்கங்கெட்ட பிழைப்பு ! திங்கறதெல்லாம் இரத்தச்சோறு ! உன்னையும் உன் குடும்பத்தையும் யாருக்குத்தான் தெரியாது ? அப்படிப்பட்ட நீ, என்னைப்பத்தி அவதூறு பேசறியா ?” (நூல்: பக்.8).

ஒரு பெண் தனது குடும்ப நலனுக்காக வாழ்வதையும், கணவனது விருப்பப்படி இருப்பதே குடும்ப லட்சணம் என்று அவன் விருப்பப்படி தாசி வீட்டுக்குத் தூக்கிச் சென்றதை இலக்கியமாகப் புராணமாகப் பேசும் இந்த நாட்டில் தான் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும்போதும் தனது சமூகத்தின் மக்களுக்காக அனைத்து இன்னல்களையும் எதிர்கொண்டு சமூக உணர்வுடன் ஒரு பெண்ணால் போராட முடியும் என்பதை நடைமுறை சாத்தியமாக்கிக் காட்டுகிறாள் ராஜக்கா.அது மட்டுமல்ல.

பாவிகளா ! உங்களிடம் உள்ள மிருகத்தனத்தை எல்லாம் காட்டிடுங்க ! ஆனா நான் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் துரோகம் மட்டும் செய்வேன்னு நினைக்காதீங்க ! போராட்டக் குழுக்களுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன். நான் கட்சியிலே கத்துக் கொண்டது துரோகத்தை அல்ல. கொடுமைகளையும் அநியாயங்களையும் உயிரையும் பொருட்படுத்தாம எதிர்க்கிறதைத்தான் நான் கட்சியிலே கற்றுக் கொண்டேன்..

படிப்பும், தோழமையும், சமத்துவமும் கத்துக்கிட்டேன். உங்களையும் உங்களது கொடுமைகளையும் ஒருநாள் போராளிகள் கோதாவரி நதியிலே மூழ்கடிக்கத்தான் போறாங்க.. நான் உங்களுக்கு அடிபணிய மாட்டேன். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் துரோகம் செய்ய மாட்டேன்.என்று ஆவேசமாகக் கூறினாள் அவள். (நூல்: பக்.9)

இப்போதென்ன புரட்சியா வந்துவிட்டது ? வரும்போது நானும் மாறிக் கொள்கிறேன். அதுவரைக்கும் ஊரோடு ஒத்துப்போவதுதான் புத்திசாலித்தனம் என்று அநீதிக்கெதிராக சமரசமாக வாழ்வதையே சாமர்த்தியமாக வெளிப்படுத்துபவர்களின் மனப்போக்கை பண்டி ராஜக்காவின் இலட்சிய உறுதி இடித்துறைக்கிறது. கணவனுக்கு மனைவி துரோகம், மனைவிக்கு கணவன் துரோகம், குடும்பத்திற்கு மகன் துரோகம் என்பதே வாழும் கலையாக வளர்ந்து வரும் இந்த சமூகத்தில் கட்சிக்குத் துரோகம் செய்வதையே ஆகக் கேவலமாகக் கருதும் ராஜக்காவின் சமூக உணர்வு புதிய கலாச்சார விழுமியங்களையும் நம்முன் படைத்துக் காட்டுகிறது.

மகிழ்ச்சியான குடும்பம், அன்பான கணவன், ஆசையோடு பார்க்கின்ற அம்மா, அப்பா, தங்கையை விட்டுவிட்டு கட்சிக்காக போலீசிடம் சிக்கி.. அவமானப்பட்டு.. இது உனக்குத் தேவையா ?” என்று எவ்வளவோ நைச்சியமாகப் பேசியும், ராஜக்காளிடம் சராசரிப் பெண் உணர்வை விடக் கட்சியின் இலட்சிய உணர்வே மேலோங்கி இருப்பதை நேருக்கு நேர் பார்த்து வெறுத்துப் போன போலீசும், இராணுவமும் அவளைப் பன்னிரெண்டு நாட்கள் வதைமுகாமிலே வைத்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியும், இரவு முழுக்க ஏரித்தண்ணீரில் நிர்வாணமாக நிற்க வைத்தும் துன்புறுத்தினார்கள். ராஜக்காவின் போர்க்குணமோ எதிரிகளின் அதிகாரத்தை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தியதே ஒழிய மக்களுக்காகப் போராடும் அவளது நெஞ்சுறுதி இறுதி வரை தோற்கவே இல்லை.

எல்லா சித்திரவதைகளையும் கடந்து அவள் ஊருக்கு வரும்போது போலி கம்யூனிஸ்டுகளோ போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து ஆளும்வர்க்கத்தோடு சமரசமாகி தேர்தலில் பங்கெடுக்கப் போகின்றனர். கொள்கைக்குத் துரோகமிழைத்தவர்களைப் பார்த்து மனம் கசந்து போய் விடுகிறாள் ராஜக்கா. எதிரிகளிடம் அவள் பட்ட சித்திரவதையை விலாவாரியாக விவரித்த நூலாசிரியர் போராட்டத்தின் துரோகிகளால் அவள்பட்ட மனத்துயரை விவரிப்பதற்கு மனமின்றி ராஜக்காவின் வருத்தத்தை ஒரு சுமாரான தொனியில் பதிவு செய்துவிட்டு, போலிக் கம்யூனிஸ்டுகளுக்கே உரிய சரிக்கட்டும்நுணுக்கத்தோடு எந்த பரிசீலனையும் இன்றி கதையை முடிக்கிறார்.

ராஜக்காவின் வாழ்க்கைக் கதையில் இந்த இடத்தின் மூலம் போலிக் கம்யூனிஸ்டுகளையும் அவள் அம்பலப்படுத்தி விடுகின்றாள். இப்படி ராஜக்கா என்ற ஒரு பெண் மட்டுமல்ல, ரங்காபுரம் என்ற கிராமத்தில் வாழ்ந்த வெர்ரம்மா என்ற பெண்ணின் வழியாக அந்த வீட்டில் உள்ள வயதான மூதாட்டி உட்பட எப்படி மெல்ல மெல்ல போராட்டக் குழுவுக்கு ஆதரவாக தங்களது வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதையெல்லாம் எதார்த்தமாக அறிய முடிகின்றது. வீட்டுக்கு போலீசு வந்தாலே, குடும்ப கவுரவம் போச்சு ! நமக்கு இந்த புரட்சி அரசியல்லாம் வீண் வம்பு என்ற மதிப்பீட்டின் படி வாழச் சொல்லும் ராகவம்மா பாட்டியிடம், சீதாராமையா பேசும் வார்த்தைகள் பாட்டியை ஒத்த கருத்துடைய அனைவருக்கும் பதிலாக அமைகிறது. மக்கள், விவசாய சங்கத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியையும் அமைத்து கொடுமைகளை எதிர்த்துகிட்டு இருக்காங்க ! நாமும் அவங்களுக்கு துணையா நிற்போம். அவங்களோடேயே இன்ப துன்பங்களை அனுபவிப்போம். இதுதான் நம்ம குடும்பத்துக்கும் வம்சத்துக்கும் மதிப்பு தரும் ! ஊரோட ஒட்டித்தான் நாம் போகணும்என்று கூறினான் சீதாராமய்யா. (நூல்: பக்.34)

போராட்டக் குழுக்களுக்கு உதவி செய்வதிலும், கம்யூனிச லட்சியங்களை குடும்பப் பண்பாகக் கருதி செயல்படுவதிலும் தன்னிகரற்று விளங்கிய பெண்களில் நடிகட்டா கிராமத்தின் சலவைத் தொழிலாளியான லச்சம்மாவும் ஒருவர். லச்சம்மா போராட்டக்குழு தோழர்களுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்து போலீசு பட்டாளம் அவளை ஊருக்கு மத்தியில் நிர்வாணப்படுத்தி, தலைகீழே மரத்தில் தொங்கவிட்டு அடிக்கிறது. போராட்டக்குழுத் தோழர்கள் எங்கிருக்கிறார்கள்.. காட்டிக்கொடுஎன்று எவ்வளவோ கேவலமாக வைதும், அடித்தும் லச்சம்மாவோ மானத்தினும் பெரிதாக மக்களுக்காகப் போராடும் கட்சித் தோழர்களைப் பற்றி ஒரு வார்த்தையும் கூற மறுக்கிறாள். படிக்காத அந்த சலவைத் தொழிலாளி பட்ட சித்திரவதைகளை அறிந்து பார்க்க வரும் போராட்டக் குழுவைச் சேர்ந்த ராமுலம்மாவின் ஆறுதலுக்கு லச்சம்மாவின் பதிலைப் பாருங்கள். அதென்னம்மா ! அப்படிச் சொல்றே ! எனக்கு அவமானம் நேர்ந்தா, உங்களை ஏசுவானேன் ? என் ஒருத்திக்கு மட்டுமா, அவமானங்களும் கஷ்டங்களும் ? இந்த பாழாய்ப் போன அரசாங்கத்தாலே எல்லோருக்கும்தான் கஷ்டங்களும், அவமானங்களும் ? ..” (நூல்: பக்.75)

தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும்,.. புரட்சியும் போராட்டமும்என்று புத்திசாலித்தனமாகப் பேசும் படித்த வர்க்கத்தின் சுயநலத்தை இந்த இடத்தில் வெளுத்து வாங்கும் சலவைக்காரியாக உயர்ந்து நிற்கிறாள் லச்சம்மா. இதேபோல நரசம்பேட்டையை சேர்ந்த மல்லிகாம்பா, வாரங்கல் மத்திய சிறையில் அடக்குமுறைக்கு எதிராக உயிர்நீத்த ராம் பாயம்மா, சூர்யாபேட்டையைச் சேர்ந்த சிவம்மா, ஜனகாம் வட்டாரத்தைச் சேர்ந்த அகிலம்மா, .. இப்படி ஒவ்வொரு பெண்களும் வெவ்வேறு வகையில் தெலுங்கானா மக்கள் போராட்டத்தோடு தங்கள் வாழ்க்கையை இணைத்துக் கொண்டதை நமக்கு அறிமுகப்படுத்துகிறது என்ற வகையில் இந்நூலாசிரியரின் உழைப்பு வரவேற்கத் தகுந்ததாக உள்ளது. அதேவேளையில் தெலுங்கானாப் போராட்டத்தில் பங்கேற்ற தீரமிகு பெண்களின் போராட்ட மரபை, சீரழிந்து போன போலிக் கம்யூனிஸ்டுகள் தங்களுடையது எனப் பீற்றிக் கொள்வதற்கு எந்த நியாமும் இல்லை. ஏன் இப்படி எங்கள் கம்யூனிச லட்சியத்தை சீரழித்தீர்கள் ?” என்று தெலுங்கானாப் போரின் பெண்களின் வாரிசுகளாய் நாம் கேள்வி கேட்பதற்கான நியாயத்தை இந்நூல் வழங்குகிறது.

அறிந்தோ, அறியாமலோ இதற்கு உதவி செய்வதற்காக இந்நூலாசிரியரை நாம் பாராட்டலாம். தேர்தல் பாதைக்கு இழுத்துப் போய் தெலுங்கானாவின் இறுதி லட்சியத்தை மூழ்கடித்து விட்டோம் என்ற கனவில் மிதக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளின் கண்களை உறுத்தும்படி மேற்கு வங்கத்தின் நந்திகிராமிலும், லால்கரிலும் தெலுங்கானாப் போரின் தீரமிகு பெண்கள் மீண்டும் எழுந்து நிற்கிறார்கள்.இப்படி எல்லா இன்னல்களையும் எதிர்த்துப் போராடும் மனவலிமை ஒரு பெண்ணுக்கு எங்கிருந்து வந்தது என்று நீங்கள் கேட்டால், பண்டி ரமாக்காவும், லச்சம்மாவும், ராம் பாயம்மாவும் எங்களது வலிமை சமூக உணர்வில், கம்யூனிச சித்தாந்தத்தில் இருக்கிறது என்கிறார்கள் அழுத்தமாக. இது சாத்தியமா ? என்பவர்கள் அவர்களுடனேயே விவாதிக்க இந்தப் புத்தகத்திற்குள் செல்லுங்கள்.

  • நூலின் பெயர்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்
  • ஆசிரியரின் பெயர்: எம்.ஏ. பழனியப்பன்
  • விலை: ரூ. 50.00
  • வெளியீடு: அறிவுப் பதிப்பகம், சென்னை-14.
  • கிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002. பேச: 044-2841 2367.

______________________________________________________

-புதிய கலாச்சாரம், ஆகஸ்ட்டு’2009
______________________________________________________

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009 டவுன்லோட்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

  1. “முதலாளித்துவம் மக்களைக் கொல்லும், மக்களைக் காக்கும் கம்யூனிசமே வெல்லும்!” – புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சி நாள் சூளூரை
  2. விவசாயிகள் – மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் கருப்புச் சட்டங்கள்
  3. முல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்! சி.பி.எம். – இன் பித்தலாட்டம்!
  4. முனைவர் பாலகோபால்: மனித உரிமைகளுக்காகப் போராடிய மாவீரன்!
  5. கர்நாடக அரசை ஆட்டுவிக்கும் திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகள், ரெட்டி சகோதரர்களின் கிரிமினல் ஜாதகம்
  6. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்: நாட்டை வளைத்திருக்கும் ஒட்டுண்ணிகள்!
  7. தேவர் ஜெயந்தியும் ‘முற்போக்கு’ நரிகளும்
  8. மாஃபியா கும்பலின் பிடியில் திணறும் ‘செஞ்சீனம்’!
  9. இந்தியாவின் சீன எதிர்ப்புக் கூச்சல்கள்: தேச பக்தியா? பிராந்திய மேலாதிக்கமா?, சீனாவின் திபெத்தில் நடந்த இந்திய-அமெரிக்கக் கூட்டுச் சதிகள்
  10. தில்லை கோயிலை மீண்டும் கைப்பற்றாமல் தடுக்க… அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராவதற்கான தடையை உடைக்க…உச்சநீதிமன்றத்தில் வழக்கு! நிதி தாரீர்!!
  11. “லவ் ஜிகாத்” ஆர்.எஸ்.எஸ். – இன் அவதூறுக்கு நீதின்றமே பக்கமேளம்!
  12. ஏழைக்கு ஒரு நீதி; பணக்காரனுக்கு ஒரு நீதி. – இதுதான் சட்டத்தின் ஆட்சி!
  13. பொறுக்கி அரசியல்
  14. “வதை முகாம்களை நீக்கி ஈழத்தமிழ் மக்களை மீள் குடியமர்த்து! சிங்களக் குடியேற்றங்களை அகற்று! ராஜபக்சே அரசைப் போர்க்குற்றவாளியாக அறிவித்து நடவடிக்கை எடு!” – தமிழகமெங்கும் 16.12.09 அன்று புரட்சிகர அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டம்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

vote-012

தொடர்புடைய பதிவுகள்

புதிய ஜனநாயகம், நவம்பர்’ 2009 இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

ஈழம்: இந்திய அமைதிப்படையின் அட்டூழியம்… ஆரம்பம்!!

103

ஈழம்: இந்திய அமைதிப்படையின் அட்டூழியம்... ஆரம்பம்!!

ஈழத்தின் நினைவுகள் – பாகம் -8

vote-012காந்தி தேசத்தின் காவலர்கள்  ஈழத்தமிழர்களை சிங்கள பேரினவாதத்தின் வன்கொடுமைகளிலிருந்து காப்பாற்ற கருணைக்கொலை செய்திருந்தால் கூட நன்மைக்கே என்று நாங்கள் சந்தோசமாய் செத்திருப்போம். காலங்காலமாய் எங்களை  நம்பவைத்து  முதுகில் குத்தியே பழக்கப்பட்ட இந்தியா, ஈழத்தமிழனுக்கென்றே ஓர் கொம்பு சீவியது. அதுதான் இந்திய அமைதிப்படை. இந்தியாவில் காந்தியை பின்பற்றுபவர்களும் சரி, இலங்கையில் புத்தரின் பெயரால் ஆட்சி செய்பவர்களும் சரி இருசாராருமே எங்களின் இரத்தத்திலும், கண்ணீரிலும்தான் அதிக சந்தோசம் காண்பார்கள் போலும்.

ஏற்கனவே இலங்கை ராணுவத்தின் வன்கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்த எங்களை, இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்து ஈழத்தில் அப்பாவித் தமிழர்களான எங்கள் மீது போர்தொடுத்த கொடுமையை நாங்கள் சொல்லியழுதாலும் தீராது. இந்திய அமைதிப்படையை ஆங்கிலத்தில் Indian Peace Keeping Force-IPKF என்று கொண்டாலும், ஈழத்தமிழர்கள் சொல்வழக்கில் அது Indian People Killing Force என்றே சொல்லப்படுகிறது. அதாவது, ஈழத்தமிழர்களை கொல்வதற்கென்றே உருவாக்கப்பட்ட படை என்றுதான் சொல்வார்கள்.

எங்களுக்கு ஏற்கனவே தெரிந்த சிங்களராணுவமும், புதிதாக அமைதிப்படை என்ற பெயரில் வந்த இந்திய ராணுவமும் சரி ஒரே மாதிரித்தான் தெரிந்தார்கள். இந்திய அமைதிப்படை என்னும் போது, அது ஏனோ எங்களுக்கு அதிகமாகவே வலிக்கத்தான் செய்கிறது. ஒருவேளை அது தமிழ்நாடும், ஆறரை கோடி தமிழர்களும் இருந்தும் எங்களுக்கு இந்த அவலங்கள் நிகழ்ந்ததே என்ற ஈழத்தமிழர்களின் ஆதங்கமாக இருக்கலாம்.

ஏற்கனவே ஆண்டாண்டு காலமாய் ராணுவ அடக்குமுறையினாலும், ஒப்பரேஷன் லிபரேஷன் என்ற ராணுவ நடவடிக்கையாலும் சோர்ந்து போயிருந்த எங்களுக்கு இந்திய ராணுவத்தின் வருகை ஓர் தற்காலிக விடுதலையை தரும் என்றுதான் நம்பியிருந்தோம். வடமராட்சியிலிருந்து தென்மராட்சிக்கு போகும் போது இருந்த வலி திரும்பி வரும்போது ஏனோ அதிகமாகத் தெரியவில்லை. ஆனாலும், இதுவும் ராணுவம் என்கிற பயத்தை மட்டும் எங்களின் மனங்களிலிருந்து முற்றுமுழுதாக அகற்ற முடியவில்லை.

வழி நெடுக இந்திய ராணுவமும் எங்களை கொடுமைப்படுத்துமா என்றெல்லாம் கேள்விகேட்டே என் சித்தப்பாவின் உயிரை நான் எடுத்துவிட்டேன். அதற்கு அவர் அப்போது சொன்ன பதில்தான் அந்த வயதில் என்னை வாய்பிளந்து கேட்கவைத்தது. இந்தியா ராணுவத்தை அனுப்பியது ஈழத்தமிழர்கள் பாலுள்ள அக்கறையால் அல்ல. அது அவர்களின் தேசிய நலன் சார்ந்தது என்றார். எனக்கு அது அப்போது புரிந்த மாதிரியும் இருந்தது, புரியாத மாதிரியும் இருந்தது. மாணவப்பருவத்தில் படிப்பு, நட்பின் அரட்டைகள், இனிமையான எதிர்காலக் கனவுகள் இப்படித்தானே அநேகமானவர்களுக்கு வாழப்பிடிக்கும். நான் மட்டும் விதிவிலக்கா என்ன? போர் பூமியில் மாணவப்பருவத்தின் அத்தனை சந்தோசங்களையும் இழந்த எனக்கு அது ஏனோ ஓர் வடுவாக என்மனதில் இன்றுவரை பதிந்துதான் விட்டது.

சரி, இனிமேலாவது நாங்கள் பயமில்லாமல் பள்ளிக்கூடம் போகலாம், எங்கள் சொந்தமண்ணில் எங்களுக்கு பிடித்த இடங்களில் அடையாள அட்டை இல்லாமலே சுதந்திரமாய் நடமாடலாம், குண்டுச்சத்தங்கள் இல்லாமல் தூங்கலாம், குறிப்பாக பதுங்குகுழி வாழ்க்கையிலிருந்து விடுதலை, அடிக்கடி தலையை நிமிர்த்தி வானத்தைப் பார்த்து எப்போது தலை மீது குண்டுவிழும் என்று பயப்படத்தேவையில்லை, உலகில் பெரும்பான்மையான மக்களைப்போல் நாங்களும் ஓர் இயல்பு வாழ்க்கை வாழலாம் என்று, காந்திதேசத்தின் மகாத்மா எப்படி எதிர்கால இந்தியாவை கனவு கண்டாரோ அப்படியொரு வாழ்க்கையை நாங்கள் சொற்ப காலமெனும் ஈழத்தில் வாழப்போகிறோம் என்ற சந்தோசக் கற்பனையுடன்தான் வடமராட்சிக்கு திரும்பினேன். என் அத்தனை சந்தோசமும் அமைதிப்படை என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடங்கியிருந்தது.

அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் ஊர் திரும்ப ஆரம்பித்திருந்தார்கள். வழிநெடுக பார்த்தவர்களிடமெல்லாம் இந்தியராணுவம் நல்லவிதமாக நடந்துகொள்கிறார்களா என்றெல்லாம் விசாரித்தபடியே ஊர்வந்து சேர்ந்தோம். எல்லோரும் சொன்னது, “ஓம், ஓம் (ஆம்) ஒரு பிரச்சனையும் இல்லை. அவங்கள் நல்லவிதமாகத்தான் ஆக்களை நடத்துறாங்கள். நீங்கள் பயப்படாமல் போங்கோ” என்பதுதான். சிங்கள பேரினவாதத்தின் ராணுவ கைக்கூலிகளிடம்  மிதிபட்ட எங்களை யாராவது மனிதர்களாக மதித்தால் நிச்சயமாக கண்கலங்கி விடுவோம். ஆரம்பத்தில் இந்தியராணுவம் அப்படித்தான் எங்களை கண்கலங்க வைத்தார்கள். எங்களையும் மனிதர்களாக மதியுங்கள் என்பதுதானே எங்கள் அறுபது வருட கோரிக்கை.

எவ்வளவோ நாட்களுக்குப் பிறகு ஈழத்தில் அகாலமரணமான எங்களின் உறவுகளுக்காய் எந்த ராணுவ இடையூறுமின்றி, தலையில் குண்டு விழும் என்ற பயமின்றி  வாய்விட்டு அழமுடிந்தது இந்த நாட்களில்தான். இதற்காக இந்திய ராணுவத்திற்கு நாங்கள் நன்றி சொல்லியே தீரவேண்டும். ஆனால், பிற்காலத்தில் எங்களின் கண்ணீரின் காரணகர்த்தாக்களாகவும் இவர்களே இருந்தார்கள்  என்பது சோகத்திலும் சோகமான விடயம். ஊருக்கு வந்து எங்கள் வீட்டைப் பார்த்தபோது எங்களின் உரிமைகளைப் போலவே உடமைகளும் சிதைக்கப்பட்டும், சிதறடிக்கப்பட்டும் கிடந்தன.  ஊருக்கு வந்து சேர்ந்ததும் சிலகாலம் செத்தவீடு, துக்கவிசாரிப்புகள், உடைமைகளின் இழப்புகள், உடைந்த எங்களின் வீடுகளை சரிப்பண்ணி ஏதோ வீடு என்ற ஓர் கட்டிடத்தை உருவாக்குவது இப்படித்தான் நகர்ந்தது.

அது தவிர முகாமிலிருந்து முன்னேறிய சிங்கள ராணுவத்தால் ஆங்காங்கே புதைக்கப்பட்ட Land Mine என்று சொல்லப்படும் கண்ணிவெடிகளால் காலை இழந்த ஆடு, மாடு, மனிதர்கள் பற்றிய சோகம் ஒருபுறமும், தெருவில் இறங்கி நடந்தால் காலை இழந்துவிடுவோமோ என்ற பயமும் இருக்கத்தான் செய்தது. பேச்சுவழக்கில் கண்ணிவெடி, “மிதிவெடி” என்றே அழைக்கப்படுகிறது.  அப்படி கண்ணிவெடியில் மிதித்தால் என்ன செய்யவேண்டும் என்றும் பொதுவாகவே ஈழத்தமிழர்கள் அறிந்துதான் இருந்தார்கள். இந்த மிதிவெடிகளைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

போர் நடக்கும் இடங்களில் இவை பெரும்பாலும் விதைக்கப்படுகின்றன. இதனால் பலர் கால்களை இழந்து அங்கவீனர்கள் ஆகிறார்கள். ஒரு காலத்தில் இதைப் பற்றி விளம்பரப் படுத்த ஓர் உலகப்பிரபலம் வேண்டுமென்று யார் நினைத்தார்களோ, மறைந்த இங்கிலாந்தின் இளவரசி டயானாவை வைத்து பெருமளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அவரால் கண்ணிவெடியின் அவலத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்ட ஜெனீவாவில் ஐ. நா. சபையின் முன் மூன்றரை கால் நாற்காலி ஒன்று நிறுவப்பட்டு உள்ளது. ஈழத்திலும் இந்த கண்ணிவெடியால் பலர் கால்களை இழந்திருக்கிறார்கள்.

சரி, எதற்கு இப்போது இதைப்பற்றி பேசுகிறேன் என்றால் இன்று வன்னியில் மக்களை மீள்குடியேற்றம் செய்ய முடியாது என்று சிங்கள அரசு சொல்லும் நொண்டிக் காரணங்களில் ஒன்று இந்த மிதிவெடிகள்தான். ஐ. நாவும் தங்களிடம் அதை அகற்றும் பணிக்கு தர பணம் இல்லை என்கிறது. சிங்கள அரசும் யாரும் பணம் தரமாட்டார்களாம் என்று மூக்கால் அழுகிறது. அட, இவர்கள் சொல்லுமளவிற்கு அப்படியேதும் மிதிவெடிகள் இருந்தால்தானே யாராவது அதை அகற்ற முடியும். இப்படித்தான், வன்னியில் இல்லாத கண்ணிவெடியை இந்தியாவின் ஏறக்குறைய இரண்டாயிரம் ராணுவம் இன்றுவரை அகற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லப்படுகிறது.

எப்படியோ, இந்திய ராணுவம் புலிகளை அழிக்கவேண்டும் என்று வந்த நோக்கத்தின் முதல் கட்டவேலையை சுபமே தொடங்கினார்கள்.  இந்தியராணுவம் தெருவில் போவோர், வருவோரையெல்லாம் மறித்து ஜூஸ் கொடுத்தார்கள் எங்கள் ஊரில். “நீங்கள் ஒப்பரேஷன் லிபரேஷனால் நிறையக் கஷ்டங்களை அனுபவித்திருப்பீர்கள். உங்களுக்கு உதவத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். ஒன்றுக்கும் பயப்படாதீர்கள். என்ன உதவி வேண்டுமானாலும் எங்களின் முகாமில் வந்து தெரிவியுங்கள்” என்றெல்லாம் ஆரம்பத்தில் தேனொழுகப் பேசினார்கள். சிங்கள ராணுவம் இதையெல்லாம் சொல்லியிருந்தால் நாங்கள் நம்பியிருக்க மாட்டோம். இந்திய ராணுவம் சொன்ன போது அதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை.

அப்படி முகாமில் சென்று இவர்களோடு பேசியவர்களிடம் அவர்களின் அவலவாழ்வைப் பற்றி கேட்டதை விட புலிகளைப் பற்றித்தான் அதிகமாக இந்திய ராணுவம் கேட்டதாகச் சொன்னார்கள். வல்வெட்டித்துறையை சுற்றியிருந்த ஊர்களான பொலிகண்டி, உடுப்பிட்டி என்ற ஊர்களிலும் இந்திய ராணுவ முகாம்கள் இருந்தன. இவையிரண்டும் முற்றுமுழுதாக இந்தியராணுவம் மட்டுமே இருந்த முகாம்கள். அமைதிப்படைக்கு இந்த சிறிய ஊர்களில் இத்தனை  ராணுவமுகாம்கள் தேவையா என்ற கேள்விக்கெல்லாம் பதில் இந்திய மேலாதிக்க அரசியலைப் புரிந்தவர்களுக்கு கண்டிப்பாக புரியும்.

பொலிகண்டி முகாம் பொதுமக்களின் வீடுகளை மட்டுமே முகாமாக மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டு உரிமையாளர்கள் சிலர் போய் நியாயம் கேட்டபோது இந்தியராணுவத்தால் விரட்டியடிக்கப்பட்டார்கள். உடுப்பிட்டி இராணுவமுகாம் பெண்கள் பாடசாலை ஒன்றை இராணுவமுகாமாக மாற்றி விட்டு, ஒருபக்கம் தாங்கள் இருக்கிறோம் என்றும் மற்றபக்கம் பாடசாலையை நடத்தும் படியும் சொன்னார்கள். அப்படித்தான் சிலகாலம் நடந்தது. ஆனால், அங்கு கல்வி கற்க வந்த மாணவிகளிடம் இவர்கள் தகாத முறையில் நடக்க முற்பட்டதாகவும், மாணவிகளை கிண்டல் செய்வதாகவும் நிறையவே கேள்விப்பட்டேன். பெற்றோர் பெண் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவே பயந்தார்கள். பின்னாட்களில் அது முழுவதுமாக இந்திய ராணுவமுகாமாகவே மாற்றப்பட்டுவிட்டது.

வல்வெட்டித்துறை இராணுவ முகாமில் சிங்கள ராணுவமும், இந்திய ராணுவமும் சேர்ந்தே இருந்தார்கள். அதனால்தான் இருவருமே எங்களின் அன்பைப் பெறுவதில் போட்டி போட்டார்கள்.  ஒரு கட்டத்தில் எங்கள் மீது யார் அதிகம் அன்பாய் இருக்கிறார்கள் என்பதில் சிங்கள ராணுவத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையே போட்டியே வந்து காமெடி கலாட்டாக்களும் இடம்பெற்றது. இந்திய ராணுவம் ஜூஸ் கொடுத்தால், சிங்கள ராணுவம் ஜூசோடு ஏதாவது சாப்பாடும் கொடுத்தார்கள். முதன்முதலாக நாங்களும், சிங்கள சமூகமும் சகோதர உறவுகள் என்றார்கள். இந்திய ராணுவம் மூன்றாம் மனிதர்கள் என்றார்கள். இந்திய ராணுவத்தோடு பேசாதீர்கள், உங்களை எப்போதுமே நாங்கள்தான் காப்பாற்றுவோம் (அதன் பொருள் உங்களை நாங்கள் மட்டும்தான் அழிக்கலாம் என்பதுதான்)  என்றெல்லாம் அன்புக்கட்டளை போட்டார்கள்.

நாங்கள் தான் பலியாடுகள் ஆயிற்றே. எந்தப்பக்கம் தலையை ஆட்டினாலும் தலையை வெட்டுவார்கள். அதனால் தமிழ் சினிமா வடிவேல் கதாபாத்திரங்கள்  மாதிரி “ஆஹா” என்று முழித்து, பொதுவாக சிரித்து, பொதுவாக தலையை ஆட்டி பரிதாபத்திற்குரிய பிறவிகளாய் ஆனோம்.  ஆனால், இன்று சிங்கள சமூகமும் இந்தியாவும் சகோதர உறவுகள் போலவும், ஈழத்தமிழர்கள் மூன்றாம் தர பிரஜைகளாகவும் புறக்கணிக்கப்பட்டு விட்டோம். அதனை அப்படியே இவர்கள் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. எங்களை எங்கள் வழியில் விட்டுவிடுங்கள் என்பதுதான் என் கோரிக்கை.

அமைதிப்படை என்றால் போர் புரியும் இருதரப்பையும் போர் செய்யாமல் கண்காணிப்பதுதானே வேலை. இப்படித்தான் நாங்கள் ஆரம்பத்தில் நம்பினோம். இவர்கள் அமைதிப்படைக்குரிய ஐ. நா மற்றும் சர்வதேச விதிமுறைகளை மதித்து ஈழத்தில் அமைதியை நிலைநாட்டுவார்கள் என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால், இந்திய அமைதிப்படை என்ன செய்தது? போரை தடுக்க வந்தவர்களே எங்கள் மீது போர் தொடுத்தார்கள். தற்பாதுகாப்புக்கு மட்டுமே ஆயுதம் தரிக்கவேண்டியவர்கள் அத்தனை போராயுதங்களையும் எங்கள் மீது ஏவிவிடத் தவறவில்லை. யாழ்ப்பாணத்தில் விமானம் மூலம் குண்டு கூடப் போட்டார்கள். அடிக்கடி ரோந்து போகிறோம் பேர்வழி என்று வீதி வீதியாய் ஊவலம் போய் எங்கள் வயிற்றில் பீதியை கிளப்பினார்கள்.

தங்கள் பாதுகாப்புக்காக எங்களை கைதிகள் போல் பிடித்து வைத்தார்கள். ஒரு தடவையல்ல பலதடவை இப்படி நான் கைதியாக்கப்பட்டேன். கேட்பார் கேள்வியின்றி வீடு புகுந்து நேரம் காலமில்லாமல் வீட்டிலிருந்த என்னையும் என் தாயாரையும் அதேபோல் வீதியில் போனவர்களையும் இழுத்து வந்து ஓர் இடத்தில் கூட்டமாக இருத்தி வைப்பார்கள். பெரும்பாலும் ஆண்களைத்தான் கைது செய்தார்கள். எங்கள் வீட்டில் ஆண்கள் இல்லாததால் என் தாயார், தங்கை, நான் கைதிகளானோம்.

பெரும்பாலும் அன்றாடம் வேலைக்குப் போகிறவர்கள், பால் மற்றும் மரக்கறி விற்பவர்கள், வயதானவர்கள் இப்படித்தான் இவர்களிடம் மாட்டுவார்கள். இந்த வழியால் புலி போனதா என்று கேட்பார்கள். வீட்டிற்குள் இருக்கும் எனக்கு வீதியில் போனது புலியா  அல்லது பிசாசா என்று எப்படித்தெரியும்? இப்படித்தான் பதில் சொல்ல நினைப்பேன். ஆனால், என்னை பிறகு அடித்து விடுவார்கள் என்ற பயத்தினால் அடக்க ஒடுக்கமாக பதில் சொன்னேன். இளைஞர்கள் என்றால் அடித்துத்தான் கேள்வி கேட்டார்கள்.

இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கானால் இரத்தம் கொதிக்கும். யாருடைய மண்ணில் வந்து யார் யாரை அதிகாரம் செய்வது? இப்படி அன்று  மணிக்கணக்கில் வீதியில் ஓரத்தில் உட்கார்த்தி வைக்கப்பட்டிருக்கிறேன். என்னை சோதனை போடுகிறோம் என்று வரம்பு மீறிவிடுவார்களா என்று பயந்துகொண்டே ஒவ்வொரு நிமிடத்தையும் கழித்தேன். இந்திய ராணுவம் என்னிடம் வரம்பு மீறி நடந்த சம்பவங்களும் அடிக்கடி என் நினைவுகளில் வந்து வலியை கொடுக்காமல் இல்லை. ஆனாலும், என்னுடன் இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்களே என்ற தைரியம் வரும். இவர்கள் அங்கெ இங்கே பராக்கு பார்க்கும் நேரம், ஏன் எங்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று சன்னக்குரலில் ஒருவரையொருவர் கேட்டுக்கொள்வோம். சத்தமாய் ஏதாவது பேசினால் என்ன பேசினீர்கள் என்று ஒரே போடாய் போட்டுவிடுவார்கள்.

பசி, தாகம், இயற்கை உபாதை என்று எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு இந்தியராணுவ படை எங்களை போ என்று சொல்லும் வரை காத்திருக்க வேண்டும். சொந்த மண்ணிலேயே இன்னோர் நாட்டு ராணுவத்திடம் அடிமையாய் போன  அவலம் மனதில் எரிச்சலையும் கோபத்தையும்தான் கிளப்பியது. ஆனால் என்ன செய்ய முடியும். கைதிகளாய், கையாலாகாதவராய் அமைதியாய் இருந்தோம். மனம் வலித்தது. ஆனாலும், கண்ணீர் விடக்கூடாது என்ற உறுதியுடன் இருந்தேன்.

இந்தியராணுவம் சம்பந்தமான என் அனுபவத்தில் ஓர் சிறிய ஆறுதலான சம்பவமும் இருக்கத்தான் செய்தது. இந்திய அமைதிப்படையில் (?) தமிழ்நாட்டை சேர்ந்தவரும் ஒருவர் இருந்தார். என்ன இது தமிழ் பெண்களையும் வீதியில் கைதிகள் போல் உட்கார்த்தி வைத்திருக்கிறார்களே என்ற ஓர் ஆதங்கம் அல்லது இந்தியராணுவத்தின் பெயர் கெடப்போகிறதே என்ற கவலை எதுவோ ஒன்று அவரை எங்களுக்கு தன்னாலான உதவியை செய்யவேண்டும் என்று தூண்டியிருக்கலாம். ஒருநாள் வழக்கம் போல் வீதியில் மற்றவர்களுடன் உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்தேன். நாங்கள் மட்டுமே பெண்கள். இவர் தமிழர் என்று தெரிந்ததும் நான் இவரிடம் கெஞ்சுவது போல் கேட்டேன். எங்களை தயவு செய்து விட்டுவிடுங்கள் என்று.

இந்த தமிழ்நாட்டை சேர்ந்த சகோதரர் தலை மீது சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்கள் போல் (சீக்கியரோ?) தலைப்பாகை கட்டிய, சீருடையில் ஏதோ பட்டைகள் உள்ள ஓர் அதிகாரியிடம் சென்று அவருக்கு தெரிந்த ஹிந்தி அல்லது பஞ்சாபி மொழியில் ஏதோ உரையாடிக்கொண்டிருந்தார். இவர் பதுங்கிப் பதுங்கிப் பேசுவதும், அவர் கண்கள் சிவக்க, உரத்த குரலில் கடித்துக் குதறுவது போல் பதில் சொல்வதும் எனக்கு ஏனோ ஓர் தர்மசங்கடத்தை இவருக்கு உண்டாகி விட்டோமோ என்று தோன்றியது. அந்த அதிகாரியின் பேச்சும், அவர் நின்ற தோரணையும் அவ்வளவு பயத்தைக் கொடுத்தது எனக்கு. ஒருவாறாக திரும்பி வந்தவர் சொன்னார் “சரிம்மா, என்னோட வாங்க  உங்களை உங்க வீட்ல விடுறேன்” என்றார். நான் ஏதோ பெரிய மேதாவி போல் முந்திக்கொண்டு “உங்களுக்கு எதுக்கு சிரமம். நாங்களே போய்க்கறோம்” என்றேன்.

அவர் திரும்பி என்னை பார்த்து சிரித்துவிட்டு சொன்னார், “நீங்கள் தனியே போவதை இவர்கள் பார்த்தால் மறுபடியும் பிடித்து உட்கார்த்தி வைப்பார்கள் அதனால் தான் சொல்கிறேன் என்னோடு வாருங்கள் என்று”. அவர் சொல்வது சரியென்று தோன்றவே அவரோடு நடந்தோம். ஒரு இரண்டு நிமிட நடை என் வீட்டிற்கு. அப்படி தான் ஓர் நாள் என் மனதில் தோன்றியதை இவரிடம் கேட்டேன். “நீங்கள் எப்படி இந்த ராணுவத்தில்….” என்று. ஏனென்றால் என் கண்களுக்கு அவர் மிக நல்லவராகவே தோன்றினார். அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால், திரும்பி என்னை ஒருகணம் பார்த்துவிட்டு மறுபடியும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார். ஐயோ அந்த முகத்தில் தெரிந்த வலியை விவரிக்க எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை.

அந்த முகத்தில் ஈழத்தமிழர்கள் பற்றிய ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வலியைப் பார்த்தேன், உணர்ந்தேன். உண்மையில் ஈழத்தில் அமைதிதான் காக்கப்போகிறோம், ஈழத்தமிழர்களுக்கு உதவப்போகிறோம் என்று நம்பி வந்திருப்பார் போலும். ஆனால் நடந்தது தலைகீழாய் இருக்க, அந்த வலி அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. பேச்சை திசை திருப்ப “உங்க பேர் என்ன”? என்றேன். நான் இப்படித்தான் சிலசமயம் மனதில் படுவதை படக்கென்று யாரிடமாவது கேட்டுவிடும் பழக்கம் உள்ளவள். அவர் பெயர் சொல்லவில்லை. சரி எந்த ஊர் என்றாவது சொல்லுங்கள் என்றேன். தான் மானாமதுரையை சேர்ந்தவர் என்றார். ஒரு சில சமயங்களில் என் தங்கையையும் கைதியாக்கிய சந்தர்ப்பங்களில் இவர் தான் அவள் சிறுமி என்பதால் என் வீட்டிற்கு முன்னாலுள்ள சிறிய தாயார் வீட்டிற்கு போகச்சொல்லுவார். நானும் போகலாமா என்றால், உங்களை போக விடமாட்டார்கள் என்றார். சரி, எவ்வளவு தான் அவர் எனக்கு உதவ முடியும் என்று நினைத்துக்கொண்டேன்.

அந்த சகோதரர்தான் சில விடயங்களை கற்றுத்தந்தார். ராணுவம் வருவது தெரிந்தால் வீட்டிற்குள் இருக்காதீர்கள். தெருவில் வந்து நில்லுங்கள். வீட்டின் கதவுகளை மூடி வைத்தால் சந்தேகப்படுவார்கள் அதனால் திறந்தே வைத்திருங்கள், ராணுவம் ரோந்து வரும் போது முடியுமான வரைக்கும் அதிகாரியின் அருகிலேயே நில்லுங்கள் அப்படி என்றால் அவர்கள் உங்களுடன் தகாத முறையில் நடக்க பயப்படுவார்கள் என்று. ஆனால், அவருக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. அவரை சிறிது காலத்திற்கு பின் நான் ரோந்து வந்த ராணுவத்துடன் பார்க்கவில்லை. இந்தியராணுவம் பற்றிய நினைவு வரும்போதெல்லாம் இவரின் நினைவும் மறக்காமல் வரும் எனக்கு. நன்றிகள் சகோதரரே.

அன்று முதல் இன்றுவரை எல்லா அரசியல் மற்றும் ராணுவ விமர்சகர்களின் விமர்சனம் அல்லது ஒப்பீடு “ஈழம் இந்தியாவின் வியட்நாம்” என்பதுதான். அவர்கள் இந்தியா அல்லது இந்திய அமைதிப்படை (என்னைப்பொறுத்தவரை அது இந்திய ராணுவம்) ஈழத்தில் ஏன் தோற்றது என்று அதற்குரிய காரணத்தை அடுக்குகிறார்கள். இந்தியா தன் முழுப்பலத்தையும் அதாவது படை மற்றும் ஆயுத பலத்தை பிரயோகிக்கவில்லை என்று இவர்கள் சொல்லும் போது எனக்கு உண்மையிலேயே எரிச்சல்தான் வருகிறது. ஐயா, அறிவாளிகளே இந்திய ராணுவம் வந்தது “அமைதிப்படை” என்ற பெயரில். பிறகேன் நீங்கள் உங்கள் பலத்தை எங்கள் மீது மொத்தமாக பிரயோகிக்க முடியவில்லை என்று மூக்கால் அழுகிறீர்கள்? நீங்கள் கொஞ்சமாக பிரயோகித்த பலத்துக்கே நாங்கள் ஏறக்குறைய மூவாயிரம் அப்பாவிகளை இழந்து விட்டோம். இதில் முழுவதுமாக நீங்கள் படைப்பலத்தை காட்டினால் நாங்கள் என்னாகியிருப்போம்?

இந்தியாவின் வியட்நாம் ஈழம் என்றால் அதன் “மை லாய்” (Mai Lai)  கிராமங்களை பற்றியும் பேசுங்களேன். இந்தியாவின் வியட்நாமில் எங்கள் ஊர்கள் மை லாய் கிராமங்களாய் பலிகொள்ளப்பட்டதை, அப்பாவிகளின் உயிர்கள் காவு வாங்கப்பட்டதை இவர்கள் பேசமாட்டார்கள். வினவு எனக்கு கொடுத்த இந்த அருமையான சந்தர்ப்பத்தில் நானாவது அதன் வலிகளை நினைவு கூரலாம் என்று நினைக்கிறேன்.

தொடரும்

ரதி

தொடர்புடைய பதிவுகள்

ஈழம் – டி. அருள் எழிலனின் “பேரினவாதத்தின் ராஜா” நூல் வெளியீட்டு விழா!

7

perinavathathin-raja-arul-ezhilan

கலந்து கொள்பவர்கள் : தமிழருவி மணியன், பி.சி. வினோஜ்குமார், மீனா கந்தசாமி, பீர் முகம்மது, நடராஜா குருபரன், ரஞ்சிதா குணசேகரன், பாரதி தம்பி, ராஜுமூருகன், டி. அருள் எழிலன்.

நிகழ்வு: 06- 12 2009 ஞாயிறு, நேரம் மாலை 6.00 மணி,

இடம்: புக்பாயிண்ட் (ஸ்பென்சர் எதிரில்)  அண்ணாசாலை, சென்னை.

நிகழ்வும், ஏற்பாடும்: புலம் பதிப்பகம்.

எரிந்து கொண்டிருக்கும் இம்மக்களை விட்டு எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் நீதி பேசுகிறார்கள். பாசிசத்தின் காலடியில் அறம் செத்துக் கிடக்கிறது. பெரும்பான்மைவாதத்தின் சர்வாதிகார முகங்கள் ஜனநாயக முகமூடிகளை அணிகிறார்கள் இப்போது. நாடுகள் எரிந்து கொண்டிருக்கிறது. தேசிய வெறியால் ஈழ மக்களைச் சுட்டதும் இந்த நெருப்புதான். விஸ்தரிப்பு நோக்குடன் எவனெல்லாம் மக்களை நிலங்களிலிருந்து பிடுங்கி வீசுகிறானோ அவனெல்லாம் பேரினவாதிதான். ஆமாம் அதுதான் இப்போது ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

பி.டி. கத்திரிக்காய், இது முத்தாது… குத்தும் !!

121

பிடி கத்திரிக்காய்இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பூரில் பி.டி கத்திரிக்காய்க்கு எதிரான உழவர் உழைப்பாளர் கட்சியின் ஆர்பாட்டமொன்று நடைபெற்றது. அபாயகரமான சாயக்கழிவுகளுடன் அசால்ட்டாக வாழ்க்கை நடத்தும் எங்கள் கவனத்தை கத்திரிக்காயா திருப்பும் ?? கொடி புதுசாயிருக்கே என ஒருசிலர் கவனித்ததுதான் மிச்சம். ஆனால் சந்திராயன் மயில்சாமி அண்ணாதுரையை வாழ்த்துரை வழங்கச்செய்து பி.டி கத்திரிக்காய்க்கு மாபெரும் விளம்பரம் ஒன்றை செய்திருக்கிறது விவசாயப் பல்கலைக்கழகமும் அவர்களின் சமீபத்தைய குலசாமியான மான்சாண்டோவும். இதுவரை அப்துல் கலாமை உதாரணபுருஷனாக கொண்டிருந்து கொஞ்சம் சலித்துப்போயிருந்த மக்களின் புதிய கண்டுபிடிப்புதான் மயில்சாமி அண்ணாதுரை.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நான்கு பி.டி கத்திரிக்காய்களை கோவை வேளான் பல்கலைக்கழகம் அறிமுகம்  செய்திருப்பதாக சொல்லியிருக்கிறார் ம.சா.அ.து. இதுவரை உள்ளூரில் விளைந்த கத்திரிக்காயால் சுற்றுப்புறத்திற்கு என்ன கேடு வந்துவிட்டது என்பது சத்தியமாக எனக்குப் புரியவில்லை. அதையும் ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளரை வைத்து சொல்லச் சொல்வதன் காரணம் என்ன ?? ஏற்கனவே அணுசக்தி ஒப்பந்தத்திற்கு மார்கெட்டிங் செய்ய அப்துல் கலாமை அனுப்பினார்கள், இப்போது அண்ணாதுரையின் முறை.பி.டி கத்திரிக்காயின் நல்லதா கெட்டதா என விவாதிக்கும் முன் அதன் தேவையைப்பற்றி தெரிந்துகொள்வது முக்கியம். பெரிய அளவில் தட்டுப்பாடு வராத, பயிரிடப்படுவதிலும் ஒரு பெரிய முக்கியத்துவம் இல்லாத கத்திரிக்கு ( தங்கள் நிலத்தின் ஒரு பாகத்தில் மட்டுமே பெரும்பாலான விவசாயிகள் கத்திரியை பயிரிடுகிறார்கள் ) மரபணு மாற்றம் செய்வது என்பது ஒரு முன்னோட்டமே. அடுத்து வரப்போகும் மற்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கான தடைகளை இப்போதே கத்திரியை அனுப்பி ஆழம் பார்க்கிறார்கள். நமது கேனத்தனத்தினைப் பொறுத்து பி.டி நெல் உள்ளிட்ட மற்ற பயிர்கள் இன்னும் சுலபமாக உள்ளே நுழையும்.

இந்தியாவில்  மரபணு மாற்றம் செய்யப்பட்டு முதலில் பயன்பாட்டுக்கு வர இருப்பது கத்திரிக்காய்தான். பி.டி கத்திரிக்காய் உடலுக்கு ஏற்படுத்தும் கேடுகளைப்பற்றி ஆராயாமல் ஏதோ வீடு கட்டும் ஒப்புதலை வழங்குவதுபோல அதன் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்திருக்கிறது மத்திய மரபணுப் பொறியியல் ஒப்புதல் குழு ( genetic engineering approval committe ). கத்திரி மீதான ஆய்வு முடிவுகள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் அதன் பிறகு மக்களின் கருத்து கேட்கப்பட்ட பிறகே மத்திய அரசு முடிவெடுக்கும் என அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் பல்வேறு விளைவுகள் பற்றி ஆய்வு செய்ய  இந்தியாவில் வசதி இல்லை என்றும் உடனடியாக ஒரு ஆய்வகம் அமைக்கப்படவேண்டும் என மத்திய அரசை கோரியிருக்கிறார் புஷ்பா பார்கவா ( இவர் உச்ச நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட GEAC யின் பார்வையாளர் ). மத்திய அரசும் பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறது. அப்படியானால் ஜெயராம் ரமேஷ் மக்களுக்குத் தரப்போவது எந்த ஆய்வறிக்கை என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

உண்மையில் GEAC ஆய்வு என சொல்வது பி.டி கத்திரிக்காயை உருவாக்கிய மான்சாண்டோ செய்த ஆய்வைத்தான். அந்த ஆய்வு பத்து எலிகளைக் கொண்டு மூன்று மாதங்கள் மட்டும் நடைபெற்றது. இதில் நீண்டகால பாதிப்புகள் குறித்து எந்த தகவலை பெறமுடியும் ? முதலில் எலிகள் மீதும் பிறகு குரங்குகள் மீதும் ஆய்வுகள் செய்யப்படுவது வழக்கம். இப்போது இந்தியர்கள் கிடைத்துவிட்டதால் குரங்குகள் மீதான ஆய்வு தவிர்க்கப்பட்டு விட்டதுபோலும். விதைகளை மீண்டும் பயன்படுத்த முடியாமை, மகரந்த சேர்க்கை மூலம் மற்ற பயிர்களும் மலடாகும் போன்ற பிரச்சனைகள் பற்றி ஆய்வு செய்யும் சாத்தியம் இந்தியாவில் கண்ணுக்கெட்டியவரை கிடையாது. ரசாயன பூச்சிக்கொல்லிகள் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் அவற்றின் ஆபத்துக்கள் பற்றி பெரிய தெளிவு மக்களிடம் கிடையாது அல்லது அவர்களுக்கு விளக்கம் தரப்படவில்லை. தாய்ப்பால் முதல் அண்டார்டிகா வரை பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பு அறியப்பட்டபிறகும் அந்த விவரம் பெரும்பாலான பாமர மக்களுக்கு தெரியவில்லை. இதேகதைதான் பல ஆலைக்கழிவுகளின் விசயத்தில் இப்போதும் நடக்கிறது. இந்த லட்சணத்தில் மக்களிடம் கருத்து கேட்டு பி.டி கத்திரிக்காயை அனுமதிக்கப்போவதாக சொல்வது வேறு பயமுறுத்துகிறது.

இதன் இன்னொரு முகம் பொருளாதாரம் சார்ந்தது. விவசாயிகளை சகல வழிகளிலும் நிறுவனங்களை சார்ந்திருக்கச் செய்வது. ஏற்கனவே உரம் பூச்சி மருந்து என பல இடுபொருட்களுக்கு விவசாயிகள் அடிமையாக்கப்பட்டுவிட்டார்கள். விதைகளும் அந்த பட்டியலில் சேர்ந்துவிட்டால் தீர்ந்தது பிரச்சினை. எல்லா விவசாயியும் ஒப்பந்தப் பணியாளரைப்போல மாண்சான்டோவுக்கு வேலைசெய்ய வேண்டியதுதான். பி.டி பருத்தி விதைகள் அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் விலை 1750, அப்போது சாதாரண பருத்தி விதை முன்னூறு ரூபாய்கூட கிடையாது. அப்படி வாங்கியவர்களும் பெரிய மகசூல் எடுத்ததாக மான்சாண்டோவாலும்கூட நிரூபிக்க முடியவில்லை அவர்களின் உள்ளூர் எடுபிடிகளான வேளான் பல்கலை(ளை)க்கழகங்களாலும் நிரூபிக்க முடியவில்லை. பி.டி பருத்தியால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டார்கள். இப்போது கத்திரிக்காய் எத்தனை பேரை காவு வாங்கப்போகிறதோ தெரியாது. இது போதாதென்று இன்னும் ஐம்பத்தாறு பி.டி பயிர்கள் அறிமுகத்திற்காக காத்திருக்கின்றன.

விதை யார் கொடுத்தால் என்ன, கத்திரிக்காய் வழக்கம்போல கிடைக்கும்தானே என கேட்கவும் ஆட்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்க என்னிடமும் ஒரு கேள்வி உண்டு, உங்கள் பிள்ளை எங்கிருந்து வந்தால் என்ன ? அது உங்களுடையதாக இருக்க வேண்டுமென்று என்ன அவசியம் இருக்கிறது ?

விதைக்கான உரிமை பறிபோகும் வேளையில் விளைபொருளின் மீதான உரிமையையும் பறிக்க ஒரு சட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கரும்புக்கான நியாய ஆதரவு விலை அவசரச்சட்டம் என்பதுதான் அது. அதாவது இப்போது அமுலில் உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை விட சுமார் முன்னூறு ரூபாய் குறைவான விலையை ஒரு டன்னுக்கு “அவசரமாக” நிர்ணயம் செய்யும் சட்டம்தான் இப்போது பிரச்சினையாகியிருக்கிறது. ஒரு விளைபொருளின் விலையை குறைப்பதற்கு அவசர சட்டம் கொண்டு வர முயலும் ஒரே சாதனை அரசு இந்தியாவில்தான் இருக்கமுடியும். இத்தனைக்கும் கடந்த ஓராண்டில் மட்டும் சர்க்கரையின் சந்தை விலை கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது.ஒப்புக்குக்கூட எந்தவிதமான காரணமும் சொல்லாமல் விவசாயிகளிடம் பிக்பாக்கெட் அடிப்பதற்கு ஒப்பான ஒரு திட்டத்தை சட்டமாக கொண்டு வர முயற்சி செய்திருக்கிறது  காங்கிரஸ்.

ஏற்கனவே எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி திட்டமிட்டு குறைக்கப்பட்டு இறக்குமதி நிரந்தரமாகிவிட்டது. அடுத்து கரும்பு இறக்குமதி துவங்கியாயிற்று ( கரும்பு உற்பத்திப் பரப்பு 48% குறைந்துவிட்டதாக ( அல்லது குறைக்கப்பட்டுவிட்டதாக) மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அடுத்து அரிசி இறக்குமதிக்கு சாக்குப்பையை வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் பிரணாப் முகர்ஜி. மேற்கூறிய எல்லா பொருட்களும் சமீப காலமாக கடுமையான விலையேற்றத்தை சந்தித்திருக்கின்றன. விவசாயிக்கும் விவசாயத்திற்கும் எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் மறுநாள் பாதிக்கப்போவது சாதாரண நுகர்வோரான இந்தியக் குடிமகனைத்தான். மன்மோகனும், மாண்டெக் சிங்கும் இந்தியாவை பணம் படைத்தோருக்கு மட்டுமான ஒரு தேசமாக மாற்றும் வரை ஓயப்போவதில்லை. அதுவரை நம்மை திசைதிருப்ப இருக்கவே இருக்கிறது பாகிஸ்தான் தீவிரவாதம். அதுசரி செத்தாலும் உள்ளூர்காரனால் சாவதுதானே தேசபக்தி.

கரும்பு விலை சட்டத்தின் மூலம் நமக்கு இன்னொரு முக்கியமான பாடம் கிடைத்திருக்கிறது. டில்லியை ஒருநாள் முற்றுகையிட்டாலே ஒரு அராஜகமான சட்டத்தை நிறுத்த முடியும் என்பதுதான் அது.

-நன்றி வில்லவன்

படிக்க

குறிஞ்சிப்பண்: நீலகிரியின் மலையரசி கதறுகிறாள்!

17

குறிஞ்சிப்பண்: நீலகிரியின் மலையரசி கதறுகிறாள்!

vote-012மலைகளின் அரசி அழைக்கின்றாள்…
மேட்டுப்பாளையத்திலிருந்து மேலேறும் உங்களை
மலைவாழை மடல்கொண்டு விசிறி
காட்டுப்பூக்களின் நறுமணமும், பனிசுகமும்
நாடி நரம்புகள் எங்கும் தழுவி
மலைகளின் அரசி அழைக்கிறாள் உங்களை!

பள்ளத்தாக்கில் புகையும் கதைகள்…
யாரும் கேட்காமலே அதோ பாதாளத்தில்
எத்தனை இசைகள்…
பார்க்க பார்க்க புத்துணர்ச்சியூட்டும்
பச்சிலை கவிதைகள்..
பூவென நினைத்து கை வைத்தால்
பறக்கும் புதுவிதத் தும்பி
வண்ணப் பூச்சி என மெதுவாய் போய்
பிடித்தால் சிரிக்கும் பூ!

உயிரினச் சூழலின் ஒட்டுமொத்த அழகிலும்
மனதை இழப்போரே!
ஊட்டியை ஊட்டி வளர்த்தும்- நீங்கள்
துய்க்கும் அழகை தூக்கி நிறுத்திய
தொழிலாளர்களை அறிவீரா?

மலையும் மலைசார்ந்த இடமும்
குறிஞ்சி எனக் குறிப்பிடும் இலக்கியங்கள்-அது தொழிலாளர்
கொலையும் கொலைசார்ந்த இடமும் எனக் காட்டும் வரலாற்றின் இரத்தக் காயங்கள்.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் மலைக்கு ஏற
சாலை அமைக்கையில் சறுக்கி விழுந்து
நொறுங்கிச் சிதைந்த முகங்கள் எத்தனை?
காட்டு விலங்குகள் குதறி மலைப்பாம்புகள் கடித்து
அவர் வாயில் தள்ளிய நுரைகளின் விஷமேறி
நீலம் பாரித்தது வானம்.

வளைந்து செல்லும் பாதையின் வனப்பிற்காக
தம் இரத்தம் பிசைந்து கொடுத்த தொழிலாளர்
எலும்புகள் முறியும் சத்தம் கேட்டு
எங்கோ மலைமுகட்டுக்கு ஓடி
பீதியில் உறைந்தது மேகம்.

விழுந்து துடித்து வனாந்திரத்தில் அனாதையாய்
கதறியவர் குரல்கள் பாறையில் மோதி
கல்லாய் சமைந்தன கானகமெங்கும்.

சுரண்டலின் ருசி கண்ட வெள்ளைப் பன்றிகள்
மலைகளைக் குடைந்தன…
காடுகள் அழித்து பாறைகள் சிதைத்து
கடும் உழைப்பினால்
தொழிலாளர் நுரையீரலைக் கிழித்து,
காற்றும் ஒதுங்க அஞ்சும் மலைச்சரிவில்
தேயிலைப் பயிரிட அவர் கால்களை விரட்டின…
கூடையைத் தலையில் மாட்டி, தாய்பால் மாரில் கட்டி
தேயிலைப் பறிக்குமாறு கைகளை ஒடித்தன..

கோத்தகிரி, குன்னூர், கொடநாடு
தேயிலைத் தோட்டத்தை ரசிப்பவர்கள்…
உழைப்பின் சூழலை உணர்ந்ததுண்டா?

மலைப்பனியில் உறையும் நிலா
குளிருக்கு இறுக்கிய சிறகுகளை
எடுக்க முடியாத பறவைகள்…
ஓசை ஏதுமற்று வாய் கட்டிப்போன காற்று..
இந்தக் கொடும்பனியின் கொட்டமடக்கி
தேயிலைக் கொழுந்துகளை சூடேற்றும்
தொழிலாளர் கரம்பட்டே
உயிரினச்சூழல் உயிர்பெற்று விழித்தெழும்…
உழைப்பாளர் விடும் மூச்சின் வெம்மை பட்டே
சில்லிட்டுப் போன சூரியன் தைரியமாய் வெளியில் வரும்.

இதழருகே நீங்கள் எடுத்துச் செல்லும்
தேநீர் குவளையில் எழும்பும் ஆவி
எத்தனை தொழிலாளர்களுடையது தெரியுமா!

விரிந்த உலகத்தின் இயற்கையெல்லாம்
வியக்கும் அற்புதம் தொழிலாளி—- அவர் மேல்
தான் சரிந்து விழுந்ததாய்ச் சொல்லும்
கொலைப்பழி கேட்டு
மலைகளின் அரசி கதறுகிறாள்…

’’மலைவெளியோ.. சமவெளியோ
சாவது பெரிதும் தொழிலாளி
காரணம் யார்? முதலாளி!
மலைச்சரிவில் மட்டுமா? தேயிலை விலைச்சரிவிலும்
வீழ்ந்தாரே தொழிலாளி! காரணம் அந்த முதலாளி!
வரைமுறையற்ற நிலச் சுரண்டல் காடுகள் கொள்ளை
இயற்கையின் மடியில் வெடிவைக்கும் குவாரி, ரியல் எஸ்டேட்
நீலமலைத் திருடர்களின் சுரண்டலுக்கெதிராய் போராடாமல்
மண்ணை இழந்ததால் தன்னை இழந்தீர்!
எதை, எதையோ பார்த்தீர்கள் மலையேறி
எல்லோர்க்கும் எதிரி முதலாளித்துவம்
எனும் உண்மையைப் பார்க்க மறந்தீரே!

இனியேனும்.. எதிரியை ஒழிக்கப் பாருங்கள்
என் அழகின் சிரிப்பைத் தாருங்கள்!’’
அதோ.. மலைகளின் அரசி கதறுகிறாள்.

—– துரை.சண்முகம்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

ஸ்பெக்ட்ரம் ஊழல்- தி.மு.க.-காங்கிரசின் கூட்டுக் களவாணித்தனம்

vote-012கிணற்றில் போடப்பட்டக் கல்லைப் போல் கிடந்த அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஊழல் விவகாரம் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. இந்தியாவெங்கிலுமான தொலைபேசி சேவை 122 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட உரிமக் கட்டணத்தின்படி, 2008-இல் இந்த 122 மண்டலங்களும் முதலில் வருபவருக்கு முதலில் உரிமம் என்ற அடிப்படையில் 9 தனியார் நிறுவனங்களுக்கு (அந்நிய முதலீடும் இதில் உண்டு) விற்கப்பட்டுள்ளன.

ஒரு பொருள் 2001-இல் என்ன விலைக்கு விற்கப்பட்டதோ, அதே விலைக்கு 2008-இலும் விற்பதற்கு சந்தைப் பொருளாதாரம் இடம் தராது என்பது பாமரனுக்கும் தெரியும். ஆனால், சந்தையில் கிராக்கி அதிகமுள்ள இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வரிசையின் உரிமக் கட்டணமோ, 2008-இல் நிலவிய சந்தை மதிப்புக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படாமல், 2001-இல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின்படி விற்கப்பட்டுள்ளது. சந்தைப் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் வாய்ந்த மன்மோகன் சிங் அரசு, இந்தத் தவறை அறியாமலா செய்திருக்கும்?

அலைக்கற்றை வரிசைகளைப் பெற்ற ஒன்பது தனியார் நிறுவனங்களுமே இந்தப் பொன்னான வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டன. 13 மண்டலங்களை 1,537 கோடி ரூபாய்க்குப் பெற்ற “ஸ்வான்” என்ற நிறுவனம், அதில் 45 சதவீதத்தை மட்டும் 4,200 கோடி ரூபாய்க்கு “எடில்சலாட்” என்ற நிறுவனத்துக்கு விற்றுக் கொள்ளை இலாபம் அடைந்திருக்கிறது. 22 மண்டலங்களை 1,658 கோடி ரூபாய்க்குப் பெற்ற “யூனிடெக்” நிறுவனம், தனது 60 சதவீதப் பங்குகளை 6,100 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது. எனவே, அலைக்கற்றை விற்பனையில் ஊழலும், மோசடியும் நடந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க மூளையைக் கசக்கிப் புலனாய்வு நடத்த வேண்டிய அவசியமேயில்லை. தனியார்மயம் என்பதே சட்டப்படி நடக்கும் கொள்ளைதான் என்பதற்கு இந்த ஊழல் விவகாரம் இன்னுமொரு சான்றாய் அமைந்திருக்கிறது.

இந்த விற்பனையில் கிடைத்த இலஞ்சப் பணத்தை வாரியிறைத்துத்தான் தி.மு.க.-காங்கிரசு கூட்டணி, அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எதிர்பாராத வெற்றியை அடைந்தது என்பது ஊரறிந்த உண்மை. எனவே, காங்கிரசும் இந்தக் கொள்ளையில் பலன் அடைந்திருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது. ஆனால், கூட்டணியில் நிலவும் முட்டல் – மோதலின் காரணமாக, இந்த ஊழலின் முழுப் பொறுப்பையும் தி.மு.க.வைச் சேர்ந்த ராசாவின் தலையில் சுமத்திவிட முயலுகிறது, களவாணி காங்கிரசு. காங்கிரசுன் இந்த நரித்தனத்திற்கு எதிர்க்கட்சிகளும் தேசியப் பத்திரிகைகளும் முட்டுக் கொடுக்கின்றன.

ராசா தொடர்புடைய இந்த ஊழல் பத்திரிகைகளில் அலசப்பட்ட அளவிற்கு, கடந்த அக்டோபர் மாதம் அம்பலமான வேறு இரண்டு ஊழல்கள் குறித்து விரிவாக அலசப்படவில்லை. ஜார்கண்ட் மாநில சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக இருந்த மதுகோடா, பா.ஜ.க.வின் தயவில் அமைச்சராகி, பின்னர் காங்கிரசின் தயவில் அம்மாநில முதல்வராகி, ஆகஸ்டு 2006 முதல் ஜூன் 2008 முடிய ஆட்சி நடத்தினார். அவர் எம்.எல்.ஏ. ஆனபொழுது 40 இலட்சமாக இருந்த அவரது சொத்து மதிப்பு, அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்ட சமயத்தில் 400 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள தாதுப்பொருள் சுரங்கங்களைத் தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பட்டா போட்டுக் கொடுத்ததில் நடந்த முறைகேடுகள் காரணமாகத்தான் அவரது சொத்து மதிப்பு 1000 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த இலஞ்சப் பணத்தைக் கொண்டு, அவர் வெளிநாடுகளில் செய்துள்ள முதலீடுகள் குறித்து இப்பொழுது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்திய அரசுக்குச் சொந்தமான ஹைட்ரோகார்பன் இயக்குநரகத்தின் தலைவரான வீ.கே.சிபலின் மகளுக்கு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி மும்பய் நகரில் மிக நவீனமான வீடொன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். கோதாவரி படுகையில் கிடைக்கும் எரிவாயுவைப் பகிர்ந்து கொள்வதில் அம்பானி சகோதரர்களுக்கு இடையே நடந்து வரும் தகராறில், முகேஷ் அம்பானிக்கு சாதகமாக வீ.கே.சிபல் நடந்து வருவதற்காகக் கொடுக்கப்பட்ட சிறு அன்பளிப்புதான் இந்த வீடு. இந்த அன்பளிப்பு பற்றி இப்பொழுது மையப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

தனித்தனியாகத் தெரியும் இந்த மூன்று ஊழல்களுக்கும் இடையே இருக்கும் பொதுவான அம்சம் தனியார்மயம். தனியார்மயத்தின் பின், பொதுச் சொத்துக்களை விற்பதற்கு எடுக்கப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஊழலும் மோசடிகளும் நடந்திருப்பதற்குப் பல ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த மோசடிகள் மூலம் கிடைத்த எலும்புத் துண்டுகளைப் பொறுக்கிக் கொண்ட அதிகாரிகளும், ஓட்டுக்கட்சிகளும் அம்பலமான அளவிற்கு, கறித்துண்டு முழுவதையும் விழுங்கி ஏப்பம் விட்ட தரகு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி அடக்கியே வாசிக்கப்படுகின்றன. எனவே, ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், அதிகாரிகளையும் அமைச்சர்களையும் தண்டிக்கக் கோரினால் மட்டும் போதாது; ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் தனியார்மயத்தையும் ஒழிப்பதற்குப் போராட வேண்டும்.

–          புதிய ஜனநாயகம், நவம்பர்’ 2009

புதிய ஜனநாயகம் நவம்பர் 2009  மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

ஈழம்: இலண்டன் வானொலியில் தோழர் மருதையன் உரையாடல் – ஆடியோ

புதிய திசைகள் என்ற தமிழ் பேசும் மக்கள் புலம் பெயர் நாடுகளைச் சார்ந்த அமைப்பொன்று லண்டன் சூரியோதயம் – சன்றைஸ் (SUNRISE) வானொலியில் உரையாடல் ஒன்றை கடந்த வெள்ளி இரவு (20.11.09) அன்று நடத்தியது. மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலர் தோழர் மருதையன் உரையாடலில் கலந்துகொண்டார். இதன் ஆடியோ தொகுப்பை கீழே இணைத்துள்ளோம். ஈழம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு தோழர் மருதையன் தெரிவித்த கருத்துக்கள் சுமார் இரண்டு மணிநேர உரையாடலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கேளுங்கள், கருத்துக்களை தெரிவியுங்கள்.

Maruthaiyan_Interview_Nov_21.mp3

DOWN1

vote-012

தொடர்புடைய பதிவுகள்


இன அழிப்பின் பின்னணியில்

இப்போது ஒலிபரப்பில் அய்ரோப்பிய வானொலியில் தோழர் மருதையனோடு உரையாடல்

புதிய திசைகள் என்ற தமிழ் பேசும் மக்கள் புலம் பெயர் நாடுகளைச் சார்ந்த அமைப்பொன்று  சன்றைஸ் (SUNRISE) வானொலியில் கருத்து விவாதம் ஒன்றை  ஏற்பாடு செய்துள்ளது. மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் மருதையன் உரையாடலில் கலந்துகொள்கிறார்.  இப்போது நேரலையாக ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் இதை இணையத்தில் கேட்க mms://wma2.viastreaming.net/ltrlive

மேலும் விவரங்களுக்கு http://kuralweb.com/200911/discussion.aspx

பார்ப்பனியம் – ஒரு விவாதம்!

427

பார்ப்பனியம் – ஒரு விவாதம்! (அல்லது) ஆர்வியும் ஜெனோடைப்பும் !!

இந்தக்கட்டுரை குறித்து புதிய வாசகர்களுக்கு சிறு அறிமுகம். பார்ப்பனிய இந்து மதம் குறித்த எமது பதிவுகளின் விவாதத்தில் பங்கேற்கும் நண்பர் ஆர்வி பார்ப்பனியம் என்ற வார்த்தையில் எல்லா பார்ப்பனர்களையும் குற்றவாளிகளாக பார்ப்பது தவறு என்று வாதிடுகிறார். மருத்துவர் ருத்ரன் சென்ற ஆண்டு அவரது வலைப்பபதிவில்  ஆர்.வியின் கருத்தை அவரது  ஜேனாடைப்பே தீர்மானிக்கின்றது என்று எழுதியதை ஆர்வி பலமுறை கண்டித்திருக்கிறார். பார்ப்பனர்களின் சாதிய உயர்வு கண்ணோட்டம் பிறப்பிலா, வளர்ப்பிலா என்பதை விட பார்ப்பனிய சாதி அமைப்பு ஒழிக்கப்பட வேண்டியதா, நியாயப்படுத்த வேண்டியதா என்ற கேள்வியை இக்கட்டுரை முன்வைத்து வாதிடுகிறது.தன் சாதியினரைக் குற்றவாளிகள் என்று அழைப்பதால் வரும் கோபம் இந்த அநீதியான சாதி அமைப்பு அழியவேண்டும் என்று ஏன் வரவில்லை என்பதை இக்கட்டுரை கேள்வி கேட்கிறது.பார்ப்பனியம், ஜெனோடைப் குறித்து நாம் விவாதிக்க வேண்டிய மையமான கருத்து எது என்பதை கோடிட்டுக் காட்டுகிறது இக்கட்டுரை. நிதானமாக படியுங்கள். தெளிவாக கருத்துக்களை முன்வைத்து வாதிடுங்கள்.

வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதில், நிரூபிப்பதில் பயனில்லை. பிறப்பால் ஒரு மனிதனின் சிந்தனை தீர்மானிக்கப்படுவதில்லை என்று ஆர்வி கூறுகிறார். மகிழ்ச்சி. நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். இனி மேலே போவோம். வேறு எதனால் சிந்தனை தீர்மானிக்கப்படுகிறது என்று ஆர்வி கருதுகிறார்? சில மனிதர்கள் சில மாதிரி சிந்திப்பதற்கும், வேறு சிலர் வேறு மாதிரி சிந்திப்பதற்கும் என்ன காரணம்? அவர்களது அறிவா, அறியாமையா, நல்லெண்ணமா, விபத்தா, வாழ்நிலையா?

ஜெனோடைப் என்ற வார்த்தைக்கு மருத்துவ அகராதியில் பொருள் தேடுவது இருக்கட்டும். சமூகத்தைப் பார்ப்போம். ஏன் பெரும்பான்மையான பார்ப்பனர்கள் நடுத்தரவர்க்கமாகவும், பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினர் ஏழைகளாகவும் இருக்கின்றனர்? ஏன் சிறுபான்மையினரான பார்ப்பனர்கள் கூட விவசாயிகளாக இல்லை? ஏன் பெரும்பான்மையினரான பார்ப்பனர்களும், முதலியார்களும், செட்டியார்களும், வெள்ளாளக் கவுண்டர்களும் தங்களை உயர்ந்த சாதி என்று இன்னமும் கருதுகிறார்கள்? ஏன் பெரும்பான்மையான தலித்துகள் தங்களை தாழ்ந்த சாதி என்று முன்னர் கருதிக் கொண்டிருந்தார்கள்? ஏன் இப்போது அவ்வாறு கருதுவதில்லை?

இவற்றையெல்லாம் ஜெனோடைப் தீர்மானிக்கவில்லை என்பது உண்மையே. ஆனால் எது தீர்மானிக்கிறது, என்ன காரணம் என்ற கேள்விக்கு விடை வேண்டும்.

காரணம் எதுவாக இருந்தால் என்ன? வெங்காயம்! எதற்கு இந்த ஆராய்ச்சி என்ற அடுத்த கேள்வியும் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நோய்க்கு இதுதான் காரணம் என்று வேறுபட்ட காரணங்களை முன்வைத்து விவாதிக்கும் அறிவியலாளர்கள் எதற்காக அந்த விவாதத்தை நடத்துகிறார்கள்? தமது அறிவின் மேன்மையை நிரூபிக்கவா? அல்லது நோய் முதல் நாடுவதன் மூலம் அதற்கு மருந்து கண்டுபிடிக்கவா?

இந்த விவாதத்தில் காரணம் குறித்து இரு வேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால் விவாதிப்பவர்களிடையே நோக்கத்தில் ஒற்றுமை இருக்கிறதா? சாதி என்பது இந்த நாட்டையும் சமூகத்தையும் கெடுத்து, முடமாக்கி, சீரழித்துக் கொண்டிருக்கும் ஒரு சாபக்கேடு மட்டுமல்ல, ஒழுக்கக் கேடுகளிலெல்லாம் தலையாய ஒழுக்கக்கேடு என்பதை ஆர்வி ஒப்புக் கொள்கிறாரா? அதன்பால் மென்மையான அணுகுமுறையைக் காட்ட முடியாது. அதை ஈவு இரக்கமின்றி ஒழிக்க வேண்டும் என்பதில் உடன்படுகிறாரா? அப்படி ஒரு உடன்பாடு இருக்கும் பட்சத்தில் எப்படி அதை ஒழிக்கலாம் என்பது பற்றி நாம் விவாதிக்கலாம். எப்படித் தோன்றியது யார் காரணம் என்ற ஆராய்ச்சி அதற்காகத்தான். அதற்காக மட்டும்தான்.

இப்படி ஒரு நோக்கம் இல்லாமல் வெறும் அகெடமிக் இன்டெரெஸ்ட்டுக்காக நடத்தப்படும் விவாதமாக இது இருக்க முடியாது. அல்லது நீ பெரியவனா நான் பெரியவனா விவாதத்துக்கோ, வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதற்கோ இங்கு வேலை இல்லை.

ஜெனோடைப் என்று மருத்துவர் ருத்ரன் சொன்னது அறிவியல் பூர்வமாகத் தப்பு என்பதை வினவு ஒத்துக் கொள்கிறதா இல்லையா என்பதுதான் சாதிப்பிரச்சினை தொடர்பாக இப்போது ஆர்வியுடைய கவலை. ஜெனோடைப்பின் பெயரால் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை முடமாக்கி வைத்திருக்கும் சித்தாந்தம், மதம், சாதி அவற்றின் புனிதம் போன்ற கருத்துகள்;  இன்னமும் அவற்றை நியாயப்படுத்துவது மட்டுமல்ல, சூத்திரன் தொட்டால் சாமி தீட்டாகி விடும் என்று சுப்ரீம் கோர்ட் வரை போய் வாதாடுபவர்கள் .. இவர்களை என்ன செய்யலாம்? கருத்தை கருத்தால் வெல்ல வேண்டுமா, அல்லது இவர்கள் மீது வேறு எதையாவது பிரயோகிக்கலாமா, ஆர்வி எதை சிபாரிசு செய்கிறார்?

ஜெனோடைப் என்று ஒரு வார்த்தையை டாக்டர் ருத்ரன் சொன்னதற்கு வரிந்து கட்டிக் கொண்டு எழுதும் அளவுக்கு, அந்த ஜெனோடைப்பை சித்தாந்தமாக்கி பல நூற்றாண்டுகளாக அதனையே ஒரு மதமாகவும் உறுதிப்படுத்தியிருக்கும் நபர்கள், அவர்களில் பெரும்பாலோர் “தற்செயலாக” ஒரு சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பது ..என்பனவற்றைப் பற்றி ஆர்வி எவ்வளவு கவலைப்படுகிறார்? அல்லது கோபப்படுகிறார்?

இதனை எளிமைப்படுத்திக் கூறுவதானால், “பரப்பயலுக்கு அவ்வளவுதான் புத்தி” என்று இந்தக் கணம் வரை உயர்சாதியினர் என்று தம்மைக் கூறிக்கொள்வோர் பேசி வருவதில் பலருக்கு உறுத்தல் இல்லை. “மேல் சாதிகளை”ச் சேர்ந்த படித்த அறிவாளிகளைப் பொருத்தவரை அது முதியவர்களின் அறியாமை, அல்லது சம்பிரதாயப் பிடிப்பு இன்ன பிற, இன்னபிற. ஆனால் “பாப்பார புத்தி” என்று ஒரு சூத்திரனோ தலித்தோ போகிற போக்கில் சொல்லி விட்டால் கூட உடனே சுர் என்று வந்து விடுகிறது. உடனே இந்த ஜெனோடைப் கொள்கையை லண்டன் ராயல் இன்ஸ்டிடியூட்டின் லேப்புக்கு அனுப்பி நிரூபிக்கத் தயாரா என்ற அளவுக்கு தாண்டிக் குதிக்கிறார்கள். இது அறிவியல் மீது உள்ள பிடிப்பு தோற்றுவிக்கும் கோபமா, அல்லது வேறா? கொஞ்சம் நியாயமாக யோசித்துப் பார்த்தால், அல்லது சுய பரிசீலனை செய்து பார்த்தால் விடை கிடைக்கும்.

“நான் அப்படி இல்லை”, அல்லது “நான் சாதியை ஆதரிக்கவில்லை” என்ற எதிர்மறையான தன்னிலை விளக்க ஸ்டேட்மென்டுகள், தார்மிக ரீதியில் தன் நிலையை நியாயப்படுத்திக் கொள்ள மட்டுமே உதவும்.

“நான் அப்படி இல்லை” என்பது கிடக்கட்டும். என் சாதியைச் சேர்ந்தவர்கள் (பார்ப்பனர்களை மட்டும் சொல்லவில்லை) பெரும்பாலான பேர் என்னைப் போல ஏன் இல்லை என்ற கேள்விக்கு ஆர்வி போன்றோர் விடை தேடவேண்டும். “இட்ஸ் நாட் மை கப் ஆஃப் டீ” என்பது பதிலாக முடியாது. சாதிய சமுதாயத்தின் ஆதாயங்களை மரபுரிமையாக (இது ஜெனோடைப் அல்ல என்று கூறலாம், ஹெரெடிடரி பிரிவிலேஜ் என்று வாதிடலாம். பூவுன்னும் சொல்ல்லாம், புட்பம்னும் சொல்லலாம், அய்யிரு சொல்றமாதிரியும் சொல்லலாம்) அனுபவிக்கும் யாருக்கும் அப்படி ஒரு பதிலைச் சொல்லும் உரிமை கிடையாது. ஏனென்றால், you have grown, drinking from that cup.. அந்தக் கோப்பையிலிருந்து அருந்தித்தான் நீங்கள் இப்போதிருக்கும் நிலையை அடைந்திருக்கிறீர்கள்.

இந்தக் கோணத்திலிருந்து இப்பிரச்சினையைப் பார்த்தால் மட்டும்தான்

“ஆர்.எஸ்.எஸ் பற்றி எனக்கு அரசல் புரசலாகத்தான் தெரியும்” என்ற தனது கூற்று அறியாமை ignorance சார்ந்ததும் மன்னிக்கத்தக்கதும் அல்ல, மாறாக அறம் வழுவியது, immoral, எனவே குற்றவுணர்வு கொள்ளத்தக்கது என்பதை ஆர்வி புரிந்து கொள்ள முடியும். “மோடி பிரதமராக வேண்டும்” என்று “கருத்து” வைத்திருக்கும் டோண்டு ராகவன் தனக்கு ஃப்ரெண்டாக இருக்க முடியாது என்பதை ஆர்வி உணர்ந்து கொள்ளவும் முடியும்.

மொத்தத்தில், இந்த விவாதம் ஒரு அறிவுசார் சுய இன்ப நடவடிக்கையாக இருக்கக்கூடாது என்றால் விவாதத்தின் “உணர்ச்சி”, விவாதிப்பவர்களின் (கவனிக்க ஆர்வியை மட்டும் சொல்லவில்லை) அறிவை நெறிப்படுத்த வேண்டும். விவாதிப்பவர்களுக்கு ஒத்த நோக்கம் இருக்க வேண்டும்.

அப்படி ஒரு ஒத்த நோக்கம் இருப்பின், தன்னுடைய கூற்றை “சரி” என்று நிரூபித்துக் கொள்வதில் காட்டும் அக்கறையை விட, சமூகத்தில் உள்ள தவறைச் “சரி” செய்வதின் மீதான நமது அக்கறைக்கு முதலிடம் கொடுப்போம். அப்போது மட்டுமே நடுநிலையான, பக்கசார்பற்ற அறிவியல் ஆய்வுகளும் சாத்தியப்படும்.

டெண்டுல்கரின் டுபாக்கூர் தேசபக்தி!

127

சச்சின் டென்டுல்கரின் டுபாக்கூர் தேசபக்தி

vote-012தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கும் இந்தியாவை பார்ப்பனியத்தின் சாதி அமைப்பு, கிரிக்கெட் மோகம் என இரண்டு விசயங்கள் வலிமையாக இணைக்கின்றன. ஒன்று நிலப்பிரபுத்துவம் என்றால் மற்றது முதலாளித்துவம். இரண்டுக்கும் இரண்டு நாயகர்கள் ஒரு பிராண்டு மதிப்புடன் இந்தியாவெங்கும் சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பார்ப்பனியத்திற்கு ராமன், முதலாளித்துவத்திற்கு டெண்டுல்கர்.

ராமனுக்கு கோவில் என்று பாபர் மசூதியை இடித்து ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. ( இன்றைக்கு இந்தப் பருப்பு வேகவில்லை என்பது வேறுவிசயம்). ஆனால் முதலாளிகளால் முன்னிறுத்த்தப்பட்ட டெண்டுல்கரால் நுகர்வு கலாச்சாரப் பொருள்களின் விற்பனையில் கொடிகட்டிப் பறந்த முதலாளிகள் இன்றைக்கும் இந்த நட்சத்திர நாயகனுக்கு ஒளிவட்டம் போட்டே வருகிறார்கள்.

அதிலொன்றுதான் சச்சினின் இருபதாண்டு கிரிக்கெட் வாழ்க்கை. ஊடகங்கள் இதையே பல்வேறாக வியந்தோதி மாய்ந்து மாய்ந்து எழுதின, காட்டின. இந்த ஒளிவட்ட அத்தியாத்திற்கு ஏதாவது பேட்டி கொடுக்க வேண்டுமென்ற சடங்குப்படி சச்சின் சில வாக்கியங்களை கடமைக்காக உதிர்த்தார். அதிலொன்றும் புதுமையில்லை. “நான் மராட்டியன் என்பதற்கு பெருமைப்படுகிறேன், ஆனால் முதலில் நான் இந்தியன், மும்பை மாநகரம் எல்லா இந்தியர்களுக்கும் சொந்தமானது” இவைதான் நட்சத்திர நாயகன் உதிர்த்த தத்துவ முத்துக்கள். காலணாவுக்கு பிரயோசனமில்லாத இந்த வாக்கியங்களை பயங்கரமான அரசியல் சவடால்களாக ஊடகங்கள் கட்டியமைத்தன. அதற்கு உகந்த விதத்தில் காலாவதியான கிழட்டு நரி பால்தாக்கரே சில கருத்துக்களை சச்சினுக்கு எதிராக உதிர்த்தார்.

“சச்சின் தேவையில்லாமல் ஆடுகளத்திலிருந்து அரசியலுக்குள் நுழைகிறார். மராட்டியர்களுக்கு சொந்தமான மும்பையை இந்தியர்களுக்கு என்று சொன்னதால் அவர் மராட்டிய இதயங்களில் ரன் அவுட்டாகி விட்டார். மும்பையை பெறுவதற்காக 105 மராட்டியர்கள் உயிர் தியாகம் செய்திருக்கின்றனர். அந்தப் போராட்டம் நடைபெறும்போது அவர் பிறக்கக்கூட இல்லை.” இவைதான் வேலைவெட்டியில்லாத கிழடு பால்தாக்கரே சொன்ன பதிலடி.

இதை வைத்து சச்சின் மதவெறி, இனவெறி அமைப்புகளுக்கு எதிராக பெரும் போர் நடத்துவது போன்று ஊடகங்கள் பில்டப் கொடுத்தன. இந்த பில்டப்பில் மாதவராஜூம் சரண்டராகி நாயகனுக்கு தாங்கமுடியாத பாராட்டு பத்திரங்களை அள்ளி வீசுகிறார். வேறு எந்தப் பதிவர்களெல்லாம் இந்த ஜோடனையில் மனதை பறிகொடுத்தார்களோ தெரியவில்லை. அது என்னவோ போலிக் கம்யூனிஸ்டுகளுக்கும், நமக்கும் எல்லா பிரச்சினைகளிலும் மலையளவு வேறுபாடு இயல்பாகவே வருகிறது. போகட்டும். விசயத்திற்கு வருவோம்.

பால்தாக்கரேவின் சிவசேனா இயக்கம் தனது ‘வரலாற்றுக்’ கடமைகளை முடித்துவிட்டு, அதாவது இனவெறி, மதவெறிக் கலவரங்களை நடத்தி ஆட்சியைப் பிடித்து, இப்போது சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்து அய்யோ பாவம் என நாதியற்று கிடக்கிறது. பிரிந்து போன மருமகன் ராஜ்தாக்கரே சம்சா விற்கும் பீகாரி மக்களை மிருகத்தனமாக அடித்து தான்தான் மராட்டியர்களின் சேம்பியன் என சில சில்லறைகளை வைத்து காட்டிக்கொண்டார். அதன் தொடர்ச்சிதான் சட்டசபையில் இந்தியில் பதவிப்பிராமணம் எடுத்த சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ அபுஆஷ்மியைத் தாக்கி ரகளை செய்தது.

வளர்த்த கடா மார்பில் பாய்வது ஒரு புறம் என்றால் எந்த இனவெறியை வைத்து அரசியல் ஆதாயம் செய்தோமோ அதையே மருமகப்பிள்ளை அப்பட்டமாக போட்டிக்கு செய்வதை தாக்கரேவால் தாங்கமுடியவில்லை. இனவாதம் மராட்டியத்தில் இனிமேலும் எடுபடாது என்றாலும் அதற்கும் போட்டி என வந்து விட்ட பிறகு தாக்கரேவும் ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது. இச்சூழலில்தான் டெண்டுல்கரின் ஒண்ணுமில்லாத விசயத்திற்கு தாக்கரே பதிலடி கொடுத்து தான்தான் மராட்டியர்களின் நாட்டாமை என காட்டுவதற்கு முயன்றார்.

70களில் மும்பையில் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கை முறியடிக்க காங்கிரசாலும், முதலாளிகளாலும் வளர்த்து விடப்பட்ட இனவெறி சிவசேனா இப்போது முதலாளிகளுக்கு தேவைப்படவில்லை. போலிக் கம்யூனிஸ்டுகளும் தங்கள் செயல்பாடுகளால் முதலாளித்துவத்தை வெளிப்படையாக ஆதரிக்தகும் நிலைமைக்கு முன்னேறியிருக்கிறார்கள். இதுபோக  மராட்டிய மக்களும் பெரும்பான்மையாக இனவெறிக்கு  முன்பு போல ஆதரவு தருவதில்லை. இப்படி ஒரு சூழலில்தான் தாக்கரே எதாவது அவ்வப்போது பேசி நானும் உள்ளேன் ஐயா என்று காட்ட வேண்டியிருக்கிறது.

ஆனால் டெண்டுல்கரின் சூழலோ வேறுமாதிரி. கிரிக்கெட்டில் தனது ஆட்டத்தால் பிரபலமான அவரை முதலாளிகள் இந்திய அளவில் ஒருவெற்றிகரமான பிராண்டாக மாற்றி விட்டு ஆதாயம் பார்த்துவிட்டார்கள். சச்சினுக்கும் கிரிக்கெட் மூலம் வந்த வருவாயை விட விளம்பரங்கள் மூலம் வந்த வருவாய்தான் பல நூறு கோடிகள் இருக்கும். இப்படி தன்னை ஒரு பில்லியனராக மாற்றியது இந்திய அளவிலான சந்தை என்பதும் அவருக்கு புரியாத ஒன்றல்ல. அதனால்தான் தான் முதலில் இந்தியன் அப்புறம்தான் மாரட்டியன் என்று அவர் சொல்கிறார். அவரது இந்தியப் பற்றின் பின்னே ஒளிந்திருப்பது இந்தியாவின் நுகர்பொருள் சந்தையின் மதிப்பு.

காரணம் அவருக்கு மாபெரும் வருவாய் அளித்தது மராட்டிய இனமல்ல, இந்திய மக்கள். இந்திய அளவிலான புகழே அவரது பிராண்டு மதிப்பை பல மடங்கு உயர்த்தியது. இந்திய அளவிலான ரசிகர்களின் செல்வாக்கே சச்சினது மதிப்பை முதலாளிகளின் உலகத்தில் கொண்டு போய்சேர்த்தது. அவரது உடலில், உடையில் எல்லா பன்னாட்டு நிறுவனங்களது முத்திரையும் உள்ளன. அவர்   பெப்சிக்கும், அடிடாசுக்கும் மாய்ந்து மாய்ந்து போஸ் கொடுப்பதன் பொருள் என்ன?

மற்றபடி இந்த நாட்டின் ஜீவாதாரமான பிரச்சினைகள் எதற்கும் அவரிடமிருந்து ஒரு சொல் கூட அல்லது ஒரு சொட்டு கண்ணீர் கூட வந்ததில்லை. முக்கியமான பிரமுகர்கள் மட்டும் கலந்து கொண்ட அவரது திருமணத்தின் வி.ஐ.பியே பால்தாக்கரேவின் குடும்பத்தினர்தான். அதற்கு முன்னர்தான் மும்பையில் பலநூறு முசுலீம் மக்களைக் கொன்று சிவசேனா பெரும் கலவரத்தை முடித்திருந்தது. அந்த அநீதிக்காக கோபம் கொண்டிருந்தால் தாக்கரேவை எப்படி தனது திருமணத்திற்கு அழைத்திருக்க முடியும்? அப்போது மட்டுமல்ல பாபர்மசூதி இடிப்பை பற்றியோ, குஜராத் இனப்படுகொலை பற்றியோ, அல்லது விதர்பாவில் கொத்து கொத்தாய் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை பற்றிய இந்த இந்திய தேசபக்தர் ஒரு சொல் கூட சொல்லாதது மட்டுமல்ல அந்தக்காலங்களில் பன்னாட்டு முத்திரைகளுடன் கூடிய தனது உடையில் அகமதாபாத்திலும், மும்பையிலும் பவுண்டரி, சிக்சர்கள் அடித்து தனது நாயக இமேஜை கூட்டிக் கொண்டிருந்தார்.

இதுதான் டெண்டுல்கரின் தேசபக்தி எனும்போது அதை காறி உமிழ்வதை விடுத்து அவருக்கு புகழாரம் சூட்டுவதைத்தான் சகிக்க முடியவில்லை. டெண்டுல்கர் தனது வருவாய்க்கு விசுவாசமாக இருக்கிறார். அது முதலாளிகளின் கைக்குள் இருக்கும் இந்தியாவின் தேசபக்தி. மாறாக இந்திய மக்களின் இரத்தமும், சதையுமாய் இருக்கும் இந்திய மக்களது வாழக்கையோடு தொடர்புள்ள தேசபக்தியல்ல.

இந்துமதவெறியை எதிர்த்து எத்தனை அமைப்புகள், தனிநபர்கள் போராடி வருகிறார்கள்? அவர்களுக்கெல்லாம் இல்லாத விளம்பரம் ஒரு வாக்கியத்தை சொன்ன சச்சினுக்கு கிடைக்கிறது என்றால் இந்த நாட்டில் இந்துமதவெறியர்கள் யாரும் வெல்ல முடியாது என்றே அர்த்தம். ஏற்கனவே தோற்றிருக்கும் தாக்கரேவுக்கு எதிராக மாபெரும் போராளியாய் டெண்டுல்கரை நிறுத்துவதிலிருந்தே ஊடகங்களின் யோக்கியதை தெரிகிறதல்லவா? ஊடகங்களுக்கும் விளம்பரங்களின் வழி வரும் வருவாய்க்கு சச்சினும் காரணாமாக இருக்கிறார் என்பதால் அப்படி தாங்கமுடியாத அளவிற்கு சச்சினே வெட்கப்படுமளவுக்கு ஊதிப்பெருக்குகிறார்கள்.

டெண்டுல்கரை வைத்துத்தான் இந்திய தேசபக்தி அளவிடப்படும் என்றால் இந்தியாவை எந்த ‘கடவுளாலும்’ காப்பாற்ற முடியாது.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

ஈழம்- செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!

94

ஈழம் செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!

vote-012ஈழப் போர் துயரமான முறையில் முடிவுக்கு வந்திருக்கிறது. போர் நிறுத்தம் கேட்டு போராட வேண்டிய நேரத்தில் ஓட்டுச் சீட்டு சந்தர்ப்பவாத அரசியலில் சிக்கி  ஈழத் துரோகி கருணாநிதியோடும், உழைக்கும் மக்களுக்கே எதிரி ஜே ‘ வோடும் கைகோர்த்தவர்களும், ஈழப் பிணங்களை வைத்து ஆதாயமடையப் பார்த்தார்கள். ஒருவர் பதவியைக் காப்பாற்ற தொடர் நாடகங்களை நடத்தினார். இன்று வரை நடத்திக் கொண்டிருக்கிறார். இன்னொருவர் இதை வைத்து பதவிக்கு வரும் நோக்கத்திற்காகவே வெற்று வீர வசனங்களை உதிர்த்தார்.

மொத்தத்தில் ஈழ மக்கள் இந்திய, இலங்கை இராணுவங்களால் கொல்லப்பட்ட போது, அதை தங்களுக்கு ஆதாயமான ஒன்றாக மாற்றிக் கொண்ட சந்தர்ப்பவாதிகள் பிழைப்புவாதிகள் பலர். ஈழம் அவர்களுக்கு ஒரு கறவை மாடு. யானை இறந்தாலும் ஆயிரம் பொன் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் துடிக்கத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்ட ஈழம் எனும் பசுவின் மடியிலிருந்தும் கூட பால் கறக்க முடியும் என்பதை நமக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ஜெகத் கஸ்பார் எனும் பாதிரி.

“ஈழ மக்கள் மீதான படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்து, யுத்தக் குற்றவாளிகளுக்கு எதிராக நூறு பேர் கவிதை எழுதுகிறார்கள் நீங்கள் கவிதை கொடுக்க வேண்டும்” என்று த.செ.ஞானவேல் என்பவர் பலரிடமும் கேட்டிருந்தாராம். அவருக்காக ஆனந்தவிகடனின் திருமாவேலனும், டைம்ஸ் ஆப்ஃ இண்டியா இதழின் குணசேகரன் என்னும் பத்திரிகையாளரும் கூட இப்படிப் பலரிடமும் கவிதை கேட்டிருக்கிறார்கள். நூலை ஞானவேல் எனும் பத்திரிகையாளர் வெளியிடப் போவதாகச் சொல்லித்தான் அனைவரிடமும் கவிதை வாங்கியிருக்கிறார்கள்.

ஒரு வழியாக “ஈழம்…. மௌனத்தின் வலி” என்ற அந்தக் கவிதை நூல் இப்போது வெளிவந்திருக்கிறது. கிறிஸ்தவப் பாதிரி ஜெகத்கஸ்பர் ராஜ் என்பவருக்குச் சொந்தமான “நல்லேர் பதிப்பகம்” சார்பில் வெளிவந்திருக்கிறது இந்தக் கவிதை நூல். ஞானவேலோ  அவர் அமைப்பாளராக இருக்கும் “போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்போ” இந்நூலை வெளிக் கொண்டுவரவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதிகாரவர்க்கங்கள், புகழ்பெற்றவர்கள் என்னும் வரிசைப்படி கட்டமைக்கப்பட்டுள்ள அந்நூல் கமலஹாசன் முதல் ரஜினிகாந்த் வரை என்னும் அமைப்பில் பல நண்பர்கள் தோழர்கள், சமூக ஆர்வலர்களின் கவிதைகளோடு வெளிவந்திருக்கிறது.

ஈழம் செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!

“ஈழம்…. மௌனத்தின் வலி” என்னும் தலைப்பிலான அக்கவிதை நூலின் முதல் கவிதையை கமலஹாசனும், கடைசிக் கவிதையை ரஜினிகாந்தும் எழுதியிருக்கிறார்கள். கமல் எழுதிய கவிதை தெனாலி படப்பிடிப்பின் போது எழுதப்பட்டதாம். ரஜினிகாந்த் எழுதியுள்ள பஞ்ச் டயலாக் கவிதையை அவர் இவர்களுக்காவே எழுதிக் கொடுத்தாரா? அல்லது ஏதாவது மேடைகளில்  உதிர்த்த முத்தா ? என்று தெரியவில்லை. மற்றபடி தோழர் துரை.சண்முகம், இயக்குநர் கவிதா பாரதி, கலாப்பிரியா, ராஜுமூருகன் உள்ளிட்ட இன்னும் சிலரின் கவிதைகளைத் தவிர பெரும்பாலான கவிதைகள் மொக்கைகள்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் நிருபர் குணசேகரன், “ஈழம் தொடர்பான புகைப்படங்களைப் பொருத்தமான கவிதையுடன் வெளியிட இருப்பதாகவும், பத்திரிகையாளர்கள் சேர்ந்து வெளியிடும் இந்த கவிதை நூலுக்கு நீங்களும் ஒரு கவிதை தர வேண்டும்” என்று தோழர்.துரை சண்முகத்திடம் கவிதை ஒன்று கேட்டாராம். “தன்னார்வக் குழுக்கள் வெளியிடுவதாக இருந்தால் கவிதை தரமுடியாது. கவிதையில் ஒரு சொல்லைத் தணிக்கை செய்வதாக இருந்தாலும் கவிதை தர முடியாது” என்று குணசேகரனிடம் கூறியிருக்கிறார் துரை.சண்முகம். இரண்டிற்கும் குணசேகரன் உத்திரவாதம் கொடுத்ததன் அடிப்படையில் கவிதையையும் தந்திருக்கிறார்.

இரக்கம் காட்டுவதாய்
நீங்கள் ஒரு அறிக்கை விடுவதற்கு
இன்னும் எத்தனை வேண்டும் ஈழப்பிணங்கள்….

தேர்தல் செலவுக்காக
எங்கள் இரத்தத்தையே திருடிய உங்களிடம்
ஒப்படைக்க முடியாது கண்ணீரை

தலை சிதறிப் போனாலும்
எம் தலைமுறைகள் மறவாது
இந்திய கொலைக்கரம் முறிக்காமல்
எம் பிள்ளை துயிலாது

என்று துரை சண்முகம் எழுதிக் கொடுத்த கவிதை வரிகளில் “தேர்தலுக்காக” என்ற சொல்லும் “இந்திய கொலைக்கரம்” என்ற சொற்களும் வெட்டப்பட்டிருக்கின்றன. பத்திரிகையாளர்களுக்குப் பதிலாக வெளியீட்டாளராக ஜெகத் கஸ்பார் அவதரித்திருக்கிறார். இவ்விரு விசயங்கள் குறித்தும் உடனே குணசேகரனுக்கு போன் செய்து கேட்டாராம் துரை. சண்முகம். அதிர்ச்சி அடைந்த குணசேகரன், கவிதையை ஞானவேலிடம் கொடுத்ததாகவும் இந்த அயோக்கியத்தனம் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறி வருந்தினாராம்.

ரஜனிகாந்த் கமலஹாசன் போன்ற கவிஞர்கள் எல்லாம் எழுதப்போகிறார்கள் என்ற விசயமும் துரை சண்முகத்துக்கு சொல்லப்பட வில்லையாம்.   இயக்குநர் சேரன் போன்றவர்கள் எழுதிய அயோக்கியத்தனமான கவிதைகளும் உண்டு. அழுது வடிந்து ஈழத்துக்காக போலிக்கண்ணீர் வடிக்கிற தந்திரக் கவிதைகளும் உண்டு. நூறு ரூபாய் விலையில்,”மனித நேயமிக்க எவரும் மறுபதிப்புச் செய்யலாம்” என்னும் அறிவிப்போடு பளபள காகித்தத்தில் வெளிவந்திருக்கும் நூலை, கிறிஸ்தவப் பாதிரி ஜெகத்கஸ்பார் ராஜ் வெளியிடுகிறார் என்பது தெரிந்திருந்தால் பாதிக்கும் மேலானவர்கள் கவிதை கொடுத்திருக்க மாட்டார்கள். ஏன் ஞானவேல் இப்படிச் செய்தார் என்று பலரும் இப்போது புலம்பித்திரிகிறார்கள்.

ஞானவேல் பத்திரிகையாளரா? என்று சிலர் கேட்டார்கள். அவர் ஆனந்த விகடனில் நிருபராக வேலை பார்த்ததாகவும் அதில் கிடைத்த தொடர்புகள் மூலம் அதிகார மட்டங்களில் உறவுகளை வளர்த்த பிறகு கலைக்குடும்பமான நடிகர் சிவக்குமார், அவரின் வாரிசு நடிகர் சூர்யா ஆகியோரின் பி,ஆர்.ஓவாகவும், சூர்யா ரசிகர் மன்றம், அவர்களின் அறக்கட்டளை வேலைகளைக் கவனித்துக் கொள்வதாகவும், நடிகர் பிரகாஷ்ராஜிற்கும்  பி.ஆர்.ஓவாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். அவ்வப்போது “உழைப்பால் உயர்ந்த உத்தமர்கள்” என்னும் திடீர் பணக்காரர்கள் குறித்த தன்னம்பிகை கட்டுரைகளை சிலிர்க்க சிலிர்க்க உருட்டி உருட்டி எழுதுகிறவர் என்றும் நண்பர்கள் சொல்கிறார்கள்.

ஞானவேல் என்ற நபர் என்ன தொழில் செய்கிறார் என்பது இங்கு முக்கியமல்ல,  ஆனால் இன்றைய இவரது நடவடிக்கை ஈழப் பிரச்சனை என்னும் பொதுப் பிரச்சனையில் அசிங்கமான அவதாரமாக உருவெடுத்திருக்கிறது. ஈழப்போராட்டத்தை இங்குள்ள அதிகார பீடங்களிடமும்,  சந்தர்ப்பவாத  சாமியார்கள், பெரும் பண்ணைகளிடமும் கொண்டு போய் அடகு வைத்து இவர்களை ஈழ நாயகர்களாக உருவாக்குகிற ஆளும் வர்க்க நலன் சார்ந்த தந்திரமாக உருவெடுத்திருக்கிறது.

போருக்கு எதிரான பத்திரிகையாளர்  என்ற அமைப்பு என்ற ஒன்றைத் துவங்குவதோ, அதற்கு அமைப்பளாராக ஞானவேல் இருப்பதோ, ஈழத்துக்காக நூல் வெளியிடுவதோ தவறிலை, ஆனால் தனக்குத் தெரிந்த பணக்காரர்கள், ஆளும் வர்க்க அடிவருடிகள், நடிகர்கள், என்ற இவர்களின் பின்னணியில் ஜெகத் கஸ்பார் என்னும் ஆளும் கட்சி ஆதரவுபெற்ற ஒரு நபரின் நிதி உதவியோடு வெளியிடுவதும் , அதற்குப் பத்திரிகையாளர்களின் பெயரைப் பயன்படுத்திக் கொள்வதும்தான் இங்கு பிரச்சனை. ஞானவேல் “அகில இந்திய சூர்யா ரசிகர் மன்றம்” சார்பில் இதைச் செய்திருந்தால் யாரும் கேட்கப் போவதில்லை.

போருக்கு எதிரானவர்கள் யார்?

ஈழம் செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்மாவிலாறில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை நீடித்த இரண்டரை ஆண்டுகால இலங்கை அரசின் போர் என்பது வெறுமனே இலங்கை அரசின் போர் அல்ல. பிராந்திய வல்லரசுகளின் ஆதிக்க வெறியே ஈழத்தில் போர் வெறியாக மக்களைக் கொன்று தீர்த்தது. ஆனால் இப்பிராந்தியத்தில் வேறெந்த ஒரு நாட்டின் பங்களிப்பையும் விட இந்தியாவின் பங்களிப்பே வன்னிப் போரில் அதிகம்.

இவர்களே ஆயுதங்களைக் கொடுத்தார்கள், இவர்களே இராணுவத்தை அனுப்பினார்கள், இவர்களே இராணுவ டாங்கிகளையும், விமானங்களையும் அனுப்பினார்கள். இவர்களே கொலைகார பாசிஸ்டுகளான ராஜபட்சே சகோதர்களை பாதுகாத்தார்கள். போரை நிறுத்துங்கள் என்று தமிழகம் கேட்ட போது இறையாண்மையுள்ள இலங்கை தேசத்திற்குள் தலையிட மாட்டோம் என்றார்கள். போரை நடத்திய இந்திய, இலங்கை கூட்டு இராணுவப் படைகள் கொன்றொழித்தது புலிகளை மட்டுமல்ல ஐம்பதாயிரம் வன்னி மக்களையும்தான்; இனப்படுகொலையின் சூத்திரதாரி இலங்கை மட்டுமல்ல மத்திய ஆளும் காங்கிரஸ் கட்சியும்தான்.

போரை நிறுத்தாமல் அதை வேகமாக முடிக்க நெருக்கடி கொடுத்த இந்தியா இன்று ராஜபட்சேவுக்கும், சரத்பொன்சேகாவுக்குமிடையிலான போரை தீர்த்து வைக்க விரும்புகிறது. சமாதானம் பேசவே கொழும்பு சென்றிருக்கிறார் பிரணாப்முகர்ஜி. வன்னி மக்களைக் கொன்றொழித்த மத்திய காங்கிரஸ் அரசு, போர் நிறுத்தம் கோரிய ஜனநாயக சக்திகளின் நண்பனா? எதிரியா?

இதற்கும் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம். கட்டுரையை எழுத நினத்ததன் தேவையே அங்கிருந்துதான் உருவாகிறது. அதைச் சொல்வதற்கு முன்னால், வேறு சில விஷயங்களைப் பேசியே ஆகவேண்டும்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஏதோ ஒரு வகையில் மத்திய மாநில அரசு அதிகாரங்களை துய்த்து வரும் தி.மு.க இப்போது மாநிலத்தில் ஆளும் கட்சி, மத்தியில் ஆளும் கட்சியோடு பதவியை பங்கிட்டிருக்கும் கட்சி. தமிழகத்தில் போர் நிறுத்தம் கேட்ட போது கருணாநிதி தன் பதவி அதிகாரத்தைப்ப பாதுகாத்துக் கொள்வற்காக ஈழம் தொடர்பாக நாடகங்களை அரங்கேற்றினாரே தவிர கடைசி வரை ஈழ மக்களிடம் கரிசனம் காட்டவில்லை. மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற போது அவர் புலிகளின் சகோதரப் படுகொலை பற்றி பேசினார். வன்னி மக்களை காப்பாற்றுங்கள் என்ற போது பிரபாகரன் சர்வாதிகாரி என்றார். ஈழம் தொடர்பாக மத்திய அரசின் கொள்கையே மாநில அரசின் கொள்கை என்றார் கருணாநிதி.

கருணாநிதி மட்டுமல்ல அவரோடு அன்று  காங்கிரஸ் கூட்டணியில் இருந்த டாகடர் ராமதாஸ் கூட சூழலுக்கு தக்கவாறு பேசியே நாடகங்களை அரங்கேற்றினார்.போர் என்றால் மக்கள் மடியத்தான் செய்வார்கள் என்று பார்ப்பனத் திமிரோடு பேசிய ஜெயலலிதாவோ, கருணாநிதியின் பெயர் கெடுகிறது என்பதைத் தெரிந்து கொண்டு ஈழப் பிரச்சினையை கருணாநிதிக்கு எதிராக மடை மாற்றினார். மக்கள் அதை நம்பவில்லை என்பது தனிக்கதை.

கடைசியில் புலிக்கோஷமிட்டவர்களாலேயோ, நாடகங்களை நடத்தியவர்களாலேயோ, ஈழத் தமிழர்களை காப்பாற்ற முடியாது என்பதைத் தெரிந்து கொண்டோம். இவர்களால் உள்ளூர் தமிழர்களையும் காப்பாற்ற முடியாது என்பதை இன்றைக்கு மீனவர் பிரச்சனையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வைகோ, திருமா, கருணாநிதி, ஜே, நெடுமாறன், என எல்லா தலைகளும் சந்தர்ப்பவாதிகளே என்பதை தீயில் எரிந்து முத்துக்குமார் உணர்த்தினான். முத்துக்குமாரின் தியாகத்தை தற்கொலை என்றார் திமுகவின் அன்பழகன்.  இதெல்லாம் போரின் போது நடந்த சில கசப்பான உண்மைகள்.

ஜெகத்கஸ்பார் கும்பல் சொல்கிற மாதிரி அமைதியாக மௌனமாக இல்லாமல் தமிழகத்தின் இரண்டு துருவ அரசியல்வாதிகளுக்கு அப்பாற்பட்டு பல அமைப்புகளும்,வழக்கறிஞர்கள், மாணவர்கள், பெண்கள், மனித உரிமை அமைப்பினர், கண் தெரியாதவர்கள், தையல் கலைஞர்கள்,  விவசாயிகள், மீனவர்கள், என பலரும் போராடினார்கள். ஆனால் பத்திரிகையாளர்கள் மட்டும் போருக்கு எதிராக போராடவில்லை. ஒரு வேளை அப்போது இந்த அமைப்பு துவங்கப்பட்டு போருக்கு எதிராக போராடியிருந்தால் சீமானையும், கொளத்தூர் மணியையும், கோவை இராமகிருட்டிணனையும் ஏனைய தோழர்களையும் சிறையில் தள்ளி ஒடுக்கிய கருணாநிதி, இந்த பத்திரிகையாளர்களையும் உள்ளே தான் தள்ளியிருப்பார்.

ஈழப்போருக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்த  வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்றத்தில் எது கிடைத்ததோ, அதுவே பத்திரிகையாளர்களுக்கும் கிடைத்திருக்கும். போராட்டம் என்பதன் வலியறியாத பத்திரிகையாளர்கள் ஈழத்துக்காக போராடவில்லை என்றால், சில பிழைப்புவாத துரோகிகளோ அம்சாவின் காலடியில் விழுந்து கிடந்தார்கள். இது குறித்தெல்லாம் ஏற்கனவே விரிவாக வினவில் எழுதியிருக்கிறோம். போர் நடக்கும் போது மவுனமாக இருந்து விட்டு இப்போது போருக்கு எதிரான அமைப்பு என்று துவங்கியிருக்கிறார்களே, எந்த போருக்கு எதிரானது இந்த அமைப்பு என்று அதன் அமைப்பாளர் ஞானவேல் சொல்வாரா?

வடகிழக்கில் இந்தியப் படைகள் நடத்திக் கொண்டிருக்கிறதே அந்தப் போருக்கு எதிரானதா? அல்லது அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக ஈராக் மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்களே வீரம் செறிந்த போர், அந்தப் போருக்கு எதிரானதா? அல்லது ஆப்கான் போருக்கு எதிரானதா? அல்லது இந்திய அரசு விரும்பாத போராக  சரத்பொன்சேகாவிற்கும், ராஜபட்சேவுக்கும் இடையில் தற்போது நடக்கும் போருக்கு எதிரானதா?

ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி

ஈழம் செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்இன்று இந்தப் பாதிரியார் குறித்து எழுத பலரும் பயப்படுகிறார்கள். சிலர் இவர் பிரபாகரனோடு உண்டு உறங்கி வாழ்ந்தவர் என்று மிரட்சியோடு பார்க்கிறார்கள். இன்னும் சிலரோ இவர் கனிமொழி, கார்த்திக் சிதம்பரம், சிதம்பரம் என பெரிய இடத்து தொடர்புகள் உள்ளவர் அதனால் வம்பு வேண்டாம் என்று ஒதுங்குகிறார்கள். இன்னும் சிலரோ இவர் பின்னால் திருச்சபை இருக்கிறது. மிகப் பெரிய அதிகார பீடமது. அதனால் நாம் இவரை பகைத்துக் கொள்ள முடியாது என்று ஒதுங்குகிறார்கள். மே 18க்குப் பிறகு இவர் எழுதிய நக்கீரன் கட்டுரைகளை பதிவுலகில் பலர் வெளியிட்டு ஜெகத் கஸ்பாரை பிரபாகரன் ரேஞ்சுக்கு உயர்த்தினார்கள்.

கஸ்பாரைப் பொறுத்தவரை ஈழம் என்பது அவருக்கு “காலம் உருவாக்கித் தந்த கறவை மாடு. அவருக்கு ஈழத்தின் மீதோ, திமுக மீதோ, கருணாநிதியின் மீதோ அபிமானமோ, பற்றோ கிடையாது. பெரிய மனிதர்களின் பழக்கமும் தனது தன்னார்வக்குழுவுக்கு அதைப் பயன்படுத்திக்கொள்வதும்தான் ஜெகத்தின் நோக்கம்.

கஸ்பார் கிறிஸ்தவ நிறுவனமான வெரித்தாஸ் வானொலியில் பிலிப்பைன்சில் பணியாற்றிய போது புலிகளோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு வன்னி மக்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் புலத்து மக்களிடம் வசூலித்ததாகவும், பின்னர் அதில் நிதி தொடர்பான பிணக்கில் ஃபாதரை வன்னிகே அழைத்து புலிகள் எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுவதுண்டு. அதன் பின்னர் கஸ்பார் சாதித்து வந்த மௌனத்தின் உணைமையான வலி இதுதான்.

நீண்டகால மௌனத்திற்குப் பிறகு, புலிகள் இல்லாமல் போன பிறகு, புலிகள் பற்றி பேசத் தொடங்கியருக்கிறார் கஸ்பார். புலிகளோடு தான் மிக மிக நெருக்கமாக இருந்ததாக தொடர்ந்து எழுதுகிறார். கடந்து போன நிகழ்வுகள் குறித்து எழுதும் போது, அதை மறுக்கவோ, அல்லது உண்மைதான் என்று சொல்லவோ சம்பந்தப்பட்ட நபர்கள் இல்லை என்றால் இம்மாதிரி நபர்களுக்கு அதுவே கொண்டாட்டமாகிவிடுகிறது.

பிலிப்பைன்சில் இருக்கும் வெரித்தாஸ் வானொலி நிலையம் அமெரிக்க சி.ஐ.ஏவின் நிதி, கட்டுபாடுடன் ஆசியாவில் கம்யூனிசத்தையும், தேசிய விடுதலை இயக்கங்களையும் உளவறிந்து ஊடுறுவி, கண்காணத்து குலைப்பதற்கான பிரச்சாரத்தை செய்து வந்த நிறுவனம் என்பது பலருக்கும் தெரியாது.

இப்போது ஜெகத் இந்திய உளவு நிறுவனத்தில் உளவாளியாக இருப்பாரோ என்ற சந்தேகங்கள் புலத்து மக்களிடமிருந்து வெளிப்படுவதோடு, தமிழகத்திலும் கூட அப்படியான பேச்சுகள் அடிபடுகின்றன. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் மிக முக்கியமாக ஆராயப்பட வேண்டியது. மே-மாதம் வன்னிப் போர் துயரமான முறையில் – இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வன்னி மக்களையும் போராளிகளையும் ஈவிரக்கமற்ற முறையில் கொன்றொழித்து – முடிவுக்கு வந்த பிறகு வெளிவந்த  நக்கீரனில்  “வன்னியில் என்ன நடந்தது?”  என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்தது.

அக்கட்டுரையில் காங்கிரஸ் கட்சியின் பெரியவர் ஒருவரைத் தொடர்பு கொண்டு புலிகளின் சரணடைவுக்காக, தான்  முயற்சித்ததாகவும் தானே கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வெள்ளைக் கொடியோடு புலிகளை  சிங்கள இராணுவத்திடம் சரணடைய வைத்ததாகவும், ஆனால் இலங்கை அரசின் துரோகிகள்  நடேசனைக் கொன்று விட்டதாகவும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்  ஜெகத் கஸ்பார் . இதில் நமக்கு உறுத்துகிற ஒரு கேள்வி இருக்கிறது. சரண்டையச் சொல்லி புலிகளுக்கு ஆலோசனை அல்லது நிர்ப்பந்தம் கொடுத்த மூன்றாம் தரப்பு யார்?

பல நாட்களாக தூக்கமின்றி, உணவின்றி, போராடும் வலுவின்றி, காயங்களுக்கு மருந்தின்றி உளவியல் ரீதியாக பலவீனமாகிப் போயிருந்த போராளிகளை சரணடையச் சொல்லி கடிதம் தயாரித்த ஜெகத் அக்கடிதத்தை யாருக்காக, யாருடைய வழிகாட்டுதலின் பேரில் தயாரித்தார்? தான் ஏதோ புலிகளுக்கு உதவி புரிந்ததாகவும், ஆனால் ராஜபட்சே சகோதர்கள்தன் துரோகம் இழைத்து நடேசனைக் கொன்று விட்டதாகவும் கூறுகிறார். அப்படியே வைத்துக் கொண்டாலும். கடைசி நேரத்தில் ஜகத் கஸ்பார் தொடர்பு கொண்ட “அந்த டில்லி பெரியவர்” இந்த துரோகம் குறித்து என்ன சொன்னார்? அந்தப் பெரியவர் யார்? இந்தக் கபட நாடகம் குறித்து அந்தப் பெரியவருக்குத் தெரியாதா? தெரியாது என்று கஸ்பார் தேவ சாட்சியம் கூறுகிறாரா? ஒரு கொடூரமான அரசியல் படுகொலையை நடத்திவிட்டு, தான் நடத்திய திரை மறைவு பேரத்தை இன்னமும் இரகசியமாக வைத்துக் கொள்ளும் உரிமை கஸ்பாருக்கு உண்டா?

புலிகளின் பலவீனமான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை இலகுவாக வெல்ல இந்தியா பயன்படுத்தியிருக்கக் கூடிய தந்திரம்தான் இந்த “சரணடைவு நாடகம்” என்பதை இப்போதும் கூடவா ஒருவர் புரிந்து கொள்ள முடியாது? அதற்கு இந்திய வம்சாவளியினரான விஜய்நம்பியாரை இந்தியா பயன்படுத்திக் கொண்டது. அவரது சகோதரர் சதீஷ் நம்பியார் இலங்கை இராணுவத்தில் ஊதியம் பெறும் ஆலோசகராக இருக்க அவரது அண்ணனான விஜயநம்பியாரோ ஐநாவின் சார்பில் இலங்கையில் சமாதானம் பேசுகிறார். தம்பியின் கையில் துப்பாக்கி… அண்ணனின் கையில் சமாதானப்புறா….. இந்த சமாதானப்புறாவை வைத்து தமிழக சமாதானபுறாவான ஜெகத் கஸ்பர் மூலமாக புலிகளை வழிக்குக் கொண்டு வந்திருக்கிறது,  இந்திய. இலங்கை கூட்டு இராணுவம். இந்த திட்டம் குறித்து அன்றைக்கு எனக்குத் தெரியாது என்று கஸ்பார் சாதிக்கலாம். ஆனால் இன்றைக்கும் இது புரியவில்லை என்று அவர் வாதாடமுடியாது.

இந்தக் கொலை வெறித் திட்டம் குறித்த செய்திகள்  21-05-2009 தேதியிலேயே கசிந்தது. அன்றைய மன அழுத்தங்களில் யாரும் பெரிதாக அதை கண்டுகொள்ளவில்லை. அந்தச் செய்தியில் இருந்தது இதுதான். வற்புறுத்தலாக சமாதானச் செயலகத்தைச் சேர்ந்தவர்கள் சரணடைய நிர்பந்திக்கப்பட்டதாக தெரிவித்த செய்திகளில் உண்மை இருக்கத்தான் செய்தது. விரைந்து போரை முடிக்க இந்தியா இலங்கைக்கு கொடுத்த நெருக்கடியின் இன்னொரு தந்திரமே இந்த வற்புறுத்தலான சரணடைவு. ஜெகத் கஸ்பார் ராஜ் யாருக்காக நடேசனுக்கு இந்த வற்புறுத்தலைக் கொடுத்தார்? பின்னர் எதற்காக இப்போது ஈழத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்?

சில வருடங்களுக்கு முன்பு கிறிஸ்தவ திருச்சபையின் இதழான நம்வாழ்வு இதழில் புலிகளை மோசமாக சித்தரித்து கட்டுரை எழுதினார் இதே ஜெகத். அன்றைய மதுரை ஆர்ச் பிஷப் ஆரோக்கியசாமி இதனைக் கண்டிக்க, உடனே “மறுப்பு மாதிரி” ஒன்றை வெளியிட்டு சமாளித்தார். (இதற்கும் ஆரோக்கியசாமி தொடர்பாக சால்ஜாப்பு எதையும் ஜெகத் எழுதினால் அதை மறுக்க ஆரோக்கியசாமியும் உயிருடன் இல்லை)

சி.ஐ.ஏ புகழ் வெரித்தாஸ் வானொலியில் பணியாற்றிய இந்த அனுபவசாலியை இந்திய உளவு நிறுவனங்கள் கைவிடவில்லை என்பது இப்போது தெரிகிறது. சமாதானக் காலத்தில் புலிகளுடன் உறவு கொண்டு ஊடுறுவ அனுப்பியிருக்கிறது. ஆனால் இந்த வசூல் மன்னனின் உண்மை முகத்தைத் தெரிந்து கொண்ட புலிகள் இவரை பட்டும் படாமலும் ஒதுக்கி தங்கள் தேவைக்கு மட்டும் பயன்படுத்தப் பார்த்திருக்கின்றனர். கூடாநட்பு குழிபறித்து விட்டது.

இப்போது புலிகள் இல்லை. கஸ்பார் புலிகள் பற்றிப் பேசுகிறார். ஈழ மக்களுக்காக எதையாவது செய்யத் துடிக்கிறாராம். அதற்காகவே சிதம்பரத்தோடும், ஆளும் கட்சியோடும் நெருக்கமாக இருப்பதாக வேறு சொல்லிக் கொள்கிறார்.

ஞானவேல்.. வளர்ந்து வரும் ஜெகத் கஸ்பாரே!

ஈழம் செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!ஜெகத்தின் நல்லேர் பதிப்பகத்தின் நிதியில் பத்திரிகையாளர்களின் பெயரில் நூல் கொண்டு வந்திருப்பதன் மூலம் அதில் ஏழுதிய ஏராளமானவர்களையும் ஏமாற்றி, சக பத்திரிகையாளர்களையும் ஜெகத் கஸ்பாரோடு சேர்ந்து ஏமாற்றியிருக்கிறார் ஞானவேல். பொதுவாக எதிர்ப்பியக்கங்களின் போராட்ட வடிவங்களெல்லாம், இன்றைய அரசு அடக்குமுறைகளின் விளைவாக போர்க்குணமிக்க வடிவத்துக்கு மாறும் காலம் இது. அது போல அரசு அடக்குமுறைக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது, மனுக்கொடுப்பது, கண்ணீர் அஞசலி செலுத்துவது போன்ற அபத்த நாடகங்கள் இந்தியாவில் காமெடியாகிவிட்டது. மக்கள் இவ்வாறு போராடி போராடி அலுத்துப் போய்விட்டார்கள்.  அப்படி போராடுகிறவர்கள் மண்டையை பிளக்கிறது போலீஸ் அராஜகம். இப்போது இம்மாதிரி போராட்டங்களில் மக்கள் சலிப்படைந்து விட்டார்கள். அதனால்தான் போர் நடைபெற்ற காலத்தில் ஈழ ஆதரவுப் போராட்டங்களும் வன்முறை வடிவம் எடுத்தன. அப்போது ஜெகத் மௌன ஊர்வலம் நடத்தினார்.

அதாவது யாரைப் பற்றியும் எதுவும் பேசாமல் ஒரு ஊர்வலம். அதாவது கொலை செய்கிற இந்தியாவைப் பற்றிப் பேசக் கூடாது. கொலைகார அரசுகளைப் பற்றிப் பேசக் கூடாது. கொலைகார இந்திய அரசோடும், அதற்கு துணைபோகும் மாநில அரசோடும் சேர்ந்து கொண்டு “ஏதாவது” செய்ய வேண்டும். இதுதான் கஸ்பாரின் கொள்கை. அந்தக் கொள்கையை இப்படித்தானே அமல் படுத்த முடியும்?

மக்களின் எதிர்ப்பு வடிவங்களை அரசியல் அற்ற ஒன்றாக மாற்றுவதும் அதை அரசு நிறுனத்தின் ஒரு அங்கமாக மாற்றுவதும்தான் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரியின் வேலை. பெரும்பாலான கிறிஸ்தவ பாதிரிகளின் வேலையும் இதுதான்.

அயோக்கியத்தனத்தின் ஒரு போராட்ட வடிவமாக மௌன ஊர்வலத்தையும், மெழுகுவர்த்தி பிரார்த்தனயையும் நடத்தினார் ஜெகத். அதன் போருக்குப் பிந்தைய இன்னொரு வடிவம்தான் இந்த ”மௌனத்தின் வலி” நூல் வெளியீட்டு விழா. கருணாநிதின் பெயரை சரி செய்யும் முயற்சியும், போராட்டங்களை மடைமாற்றும் முயற்சியும் கூட இந்த விழாவில் இருக்கிறது. அதாவது அனைத்து பத்திரிகையாளர்களும், கலைத்துறையினரும், கவிஞர்களும், எழுத்தாளர்களும் எங்களின் பின்னால்  நிற்கிறார்கள் என்ற தோற்றத்தை ஞானவேலும், ஜெகத்தும் தோற்றுவித்திருக்கிறார்கள். கவிதை வெளியீட்டு விழாவில் பிரமுகர்கள் மேடையில் பேசினார்கள்.

பிரகாஷ்ராஜ் அவர் என்ன பேசினார் தெரியுமா? மௌனமாக இருந்து விட்டோம் என்று குறைபட்டார். ( மௌனமாக இருந்த ஞானவேல் பக்கத்தில் இருந்தார்) சிவக்குமார் பேசவே இல்லை ஏதோ கவிதை படித்தார். போலிச் சாமியார் சத்குரு ஜக்கி வாசுதேவ் “அன்பும் கருணையும் பொழியட்டும், மக்கள் போராடக் கூடாது, சேகுவேராவை யாரும் பின்பற்றக் கூடாது” என்றான் அந்த தாடிக்கார சொறி நாய்……”நான் விரைவில் ஈழ மக்களுக்காக ஒரு ப்ராஜக்ட் செய்யப் போகிறேன்” என்று ஆட்டையப் போட்டான் அந்தப் பாவி. ஏ.ஆர் முருகதாஸ் ஏதோ பேசினார்.

அந்த விழாவில் கடைசியாக நன்றி சொன்னது யார் தெரியுமா? மருத்துவர் எழிலன். அவர் திட்டக்குழு தலைவரும் தீவிர திமுக அனுதாபியுமான கருணாநிதியின் செல்லப் பிள்ளையுமான நாகநாதனின் மகனாம். துரோகங்களை என்ன மையிட்டு மறைத்தாலும் அது இந்த புயல் மழையில் கரைந்து கொண்டே இருக்கும்தானே? எவருடைய பேச்சிலும் அரசியல் இல்லை. போரின் இந்திய முகத்தை சுட்டிக் காட்டவோ, தமிழக துரோகத்தை தோலுரிக்கவோ முடியாத ஆளும் வர்க்க பெரும்பண்ணைகள் தங்களின் சந்தர்ப்பவாத ஆளும் வர்க்க நலனை முன்னெடுத்தே இதில் பேசினார்கள்.

வந்திருந்த கூட்டத்தில் பாதி அல்லேலுயா கோஷ்டிகள். மீதி பேர் சத்குருவின் பக்தர்களாம். கூட்டம் முடிந்ததும் சத்குருவைப் பார்த்து அழுது அரற்றினார்களாம். சத்குருவிடம் அழுதால் கஷ்டங்கள் மறைந்து விடும் என்று சாங்கியம் இருப்பதால் அப்படியாம். ஆக ஈழத்துக்காகப் போட்ட கூட்டத்தில் ஆடியன்ஸ் அழுதது சத்குருவுக்காக.

இந்த விழாவில் பேசிய கிறிஸ்தவ பிஷப் மலையப்பன் சின்னப்பா, இறைவன் ராஜபக்சேயை தண்டிப்பான் என்று பேசினார். தங்களைப் போன்ற யூதாஸ்களுக்கு என்ன தண்டனை என்பதை அவர் கூறவில்லை. கிறிஸ்தவத்துக்குள் இருக்கும் பெரும்பலான பாதிரிகள் சாதி வெறியர்கள். பண மோசடிப் பேர்வழிகள். கிறிஸ்தவ மீனவர்களுக்காக வந்த நிதிகளை பெருமவளவு மோசடி செய்த குற்றச்சாட்டுகள் பாதிரிகளுக்கு உண்டு. இந்த சென்னை மயிலை பிஷப் மலையப்பன் சின்னப்பாவோ திமுக ஆதரவாளர். ஆளும் கட்சியோடு தொடர்பு வைத்து தங்களின் மத நிறுவனங்களுக்கு அனுகூலங்களைப் பெற்று அதன் மூலம் தங்கள் வாழ்வையும் வளப்படுத்திக் கொண்டவர்கள் இவர்கள்.

ஜெகத் தனது “நாம்” அமைப்பின் நிகழ்ச்சிகளுக்கும்,இந்த மௌனத்தில் வலி நூலிற்கும் 68,லஸ் கோவில் சாலை என்னும் முகவரியைப் பயன்படுத்துகிறார். இது கிறிஸ்தவ நிறுவனமான சாந்தோம் கலைத் தொடர்பு நிலையத்தின் முகவரியாகும். ஆக ஜெகத்தின் இன்றைய ஈழம் சார்ந்த துரோகக் கருத்துக்களுக்கு வலிமை சேர்க்க கிறிஸ்தவ திருச்சபையின் ரப்பர் ஸ்டாம்ப்

இறுதியாக,

பத்திரிகையாளர்கள் ஈழத்துக்காக நூல் வெளியிடுவதோ, அதற்காக  போரடுவதோ தவறில்லை, ஆனால் போர் நடந்து கொண்டிருந்த போது இந்த பத்திரிகையாளர்கள் எங்கே போயிருந்தார்கள் ? போருக்கு எதிரானது என்று சொல்லப்படும் இந்நூல் நல்லேர் எனப்படும் ஜெகத்தின் பணத்தில் ஏன் வெளிவரவேண்டும்? “நாம்” அமைப்பின் நிறுவனர்களாக இருக்கும் கார்த்திக் சிதம்பரம் போன்ற ஈழக் கொலைகாரர்களின் பணம் “நாம்” அமைப்பிடம் இல்லை என்பதற்கு பத்திரிகையாளர்களின் பெயரில் ஜெகத்திற்கு பந்தி வைத்த ஞானவேல் ஏதாவது உத்திரவாதம் தருவாரா? அல்லது நல்லேர் பதிப்பகத்தின் செலவில் வெளிபட்டப்பட்டிருக்கும் இப்பணம் என்பது புலிகளை கடைசி நேரத்தில் எளிதாக சரணடைய வைத்ததற்காக இந்திய உளவு நிறுவனம் ஜெகத் கஸ்பருக்கு சன்மானமாக வழங்கப்பட்ட பணத்தில் இந்நூல் வெளியிடப்படவில்லை என்று உத்திரவாதத்தையாவது ஞானவேல் கொடுப்பாரா?

அன்பான ஈழத் தமிழர்களே!புலத்து மக்களே!  தமிழக மக்களே! வித விதமான குரலில் பேசி உங்கள் கழுத்த்தறுத்த இந்த துரோகிகளை இனம் காணுங்கள். இன்னும் நீங்கள் இவர்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றால் ஈழத்தில் எஞ்சியிருக்கும் உயிர்களைக் கூட இந்த இரத்த வெறியர்களிடம் நீங்கள் இழக்க வேண்டியிருக்கும். இந்தத்  துரோகிகளை இனங்கண்டு கொள்ளுங்கள். துரோகத்தை மறைக்க வித விதமான முகமூடிகளோடு வந்து தங்கள் கறைகளை கழுவ நினைக்கும் இந்த கைக்கூலிகளை அம்பலப்படுத்துங்கள். புதிய அரசியல் பாதையை உங்களின் சொந்த அரசியல் அறிவில் முன்னெடுங்கள்.

–          கட்டுரையாளர்: வெண்மணி

தொடர்புடைய பதிவுகள்

ஈழம் – வதை முகாம்களை எதிர்த்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !

vote-012வதை முகாம்களை நீக்கி ஈழத்தமிழ் மக்களை மீண்டும் குடியமர்த்தவும்,
ராஜபக்சே அரசை போர்க்குற்றவாளி என அறிவித்து,
நடவடிக்கை எடுக்கக் கோரி….

தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்
சென்னையில் 16.11.09 மாலை 4.30 மணிக்கு
மெமோரியல் ஹால் எதிரில்.

சிங்கள அரசே!
* ஈழத்தமிழ் மக்களை அடைத்து வைத்திருக்கும் வதைமுகாம்களை நீக்கு!
* மக்களை தத்தம் வசிப்பிடங்களில் மீள் குடியமர்த்து!
* அவர்களுடைய விவசாயம், தொழில்களை புனரமைத்துக் கொள்ள நிதி உதவி செய்!
*ஈழத்தமிழ்ப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள குடியேற்றங்களை அகற்று!

இந்திய அரசே!
* சிங்கள அரசின் தமிழின அழிப்புச்சதிக்கு துணை நிற்காதே!
* மேலாதிக்க நோக்கத்திற்காக ஈழத்தமிழ் பிரதேசங்களை ஆக்கிரமிக்காதே!

ஐக்கிய நாடுகள் மன்றமே!
* ராஜபக்சே அரசை போர்க்குற்றவாளி என அறிவித்து நடவடிக்கை எடு!
* வதை முகாம்களை நீக்கி ஈழத்தமிழ் மக்களை மீள் குடியமர்த்த நடவடிக்கை எடு!

உழைக்கும் மக்களே!
* பிழைப்புவாத ஓட்டுக்கட்சிகளின் வாய்ச்சவடால்களையும், கருணாநிதி அரசின் கபட நாடகத்தையும் முறியடிப்போம்!
* ஈழத்தமிழ் மக்கள் மீண்டும் தங்கள் வாழ்க்கையை தொடங்கும் வரை போராடுவோம்!

———————————————————————

மக்கள் கலை இலக்கியக் கழகம் – 94446 48879
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி – 94451 12675
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – 94448 34519
பெண்கள் விடுதலை முன்னணி

—————————————————————–

தொடர்புக்கு: அ. முகுந்தன், 110, இரண்டாவது மாடி, மாநகராட்சி வணிக வளாகம், 63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை – 24

ஈழம்: துயரங்களின் குவியல்!

13

ஈழம்: "ஆப்பரேஷன் லிபரேஷன்" – துயரங்களின் குவியல்!!

vote-012ஒப்பரேஷன் லிபரேஷன் என்ற தமிழின அழிப்பு நடவடிக்கையினால் நாங்கள் சொந்தமண்ணில் சொந்தவீடுகளிலிருந்து அகதிகளாய் விரட்டியடிக்கப்பட்டு பாடசாலைகளிலும் கோவில்களிலும் தஞ்சமடைந்தோம். வல்வெட்டித்துறையிலிருந்து பருத்தித்துறை அண்ணளவாக 7KM தூரம் இருக்கும். அவ்வளவு தூரத்தையும் நடந்தும், ஓடியும் கடந்து பருத்தித்துறையிலுள்ள புட்டளை மகாவித்தியாலயம் என்ற பாடசாலையை அடைந்தோம். உண்மையில் எங்கே போவது என்று தெரியாமல் தான் ஆரம்பத்தில் ஓடிக்கொண்டிருந்தோம். பிறகு ஒருவாறாக அவசரம், அவசரமாக முடிவெடுத்து சிங்கள ராணுவத்தின் துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்ட ஓர் இடத்தை தேர்வு செய்தோம். கோவில்கள் என்றால் நிச்சயம் குண்டு போடுவார்கள். அதனால் பாடசாலை ஒன்றில் புகுந்துகொள்வதே கொஞ்சமாவது பாதுகாப்பு என்று தோன்றியது.

இப்போது இதை எழுதுவதுவதை விட அந்த பதட்டமான நிமிடங்களில் உயிர் போகும் வேதனையாக இருந்தது. குண்டடிபட்டு உயிர் போனால் பரவாயில்லை. கை, கால் ஊனமாக ஓடவும் முடியாமல், மருத்துவ வசதியும் கிடைக்காமல் மற்றவர்களுக்கு பாரமாக ஏன் இருக்கவேண்டும் என்று தோன்றியது. எப்படியோ, ஏறக்குறைய நடைப்பிணங்கள் போல் புட்டளை மகாவித்தியாலயத்தை அடைந்தோம். நாங்கள் அங்கு சென்றபோது நன்றாகவே இருட்டிவிட்டிருந்தது. எந்தவொரு வெளிச்சமும் இல்லாமல் மனிதக்குரல்கள் பேச்சும் அழுகையுமாக கேட்டுக்கொண்டிருந்தது.

பெரியவர்களின் அழுகை, பேச்சுக்குரல்கள், குழந்தைகளின் அழுகை, எல்லாமே கலந்து எதோ ஒரு விவரிக்கமுடியாத வலி மனதைப்பிசைந்து கொண்டிருந்தது. ஒருவாறாக இருளில் தட்டி தடவி எதோ ஓர் வகுப்பறையில் ஒதுங்க கொஞ்சம் இடம் கிடைத்தது. பசி, தாகம், தூக்கம், வலி என்று எதுவுமே அறியாதபடி ராணுவம் எங்களை என்ன செய்யப்போகிறதோ என்ற பயம் மட்டுமே என்னையும் மற்றும் அனைவரையுமே வாட்டிக்கொண்டிருந்தது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று உயிர் பதைக்க காத்திருந்தோம்.

இப்போது இதை எழுதும் போது தான் தோன்றுகிறது. இதைத்தான் அவலம் என்பார்களா? என்னால் உண்மையிலேயே அந்த உணர்வை வார்த்தைகளில் வர்ணிக்க முடியவில்லை. ராணுவ அடக்குமுறைக்கு பணிந்து, பயந்து வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் ஏனோ உயிரை தக்கவைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு விதமாக என்மீதே எனக்கு வெறுப்பாகவும் இருந்தது. உயிரோடு இருப்பது கூட கோழைத்தனம் என்பது போலெல்லாம் சிந்திக்கத் தொடங்கினேன். முகாமில் இடப்பற்றாக்குறை காரணமாக ஆண், பெண் என்ற பேதங்கள் ஏதுமின்றி எல்லோரும் நெருக்கியடித்துக்கொண்டுதான் இருக்கவேண்டியிருந்தது.

பாடசாலை வகுப்பறையில் இருந்த தளபாடங்களை ஓர் ஓரமாக ஒதுக்கி விட்டு கட்டாந்தரையில் உட்கார்ந்தும், சிலர் தூங்கவும் முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். குழந்தைகள் பெரியவர்களின் மடிகளில் தூங்கிக்கொண்டிருந்தார்கள். என்ன நேரம் என்றும் தெரியவில்லை. தெரிந்து கொள்ளும் ஆவலும் யாருக்கும் இருக்கவில்லை. அங்கிருந்தவர்களில் பலர் தங்கள் மற்றைய உறவுகளுக்கு, அயலவர்களுக்கு என்ன நடந்ததோ என்றும், குண்டுவீச்சில் தங்கள் உறவுகளை பறிகொடுத்தவர்கள் அழுது புலம்பிக்கொண்டிருந்தார்கள். அதை தவிர வேறென்ன செய்யமுடியும்?

மலசல கூடம் எங்கேயிருக்கிறது என்றும் தெரியாது. தண்ணீர் எங்கே கிடைக்கும் என்றும் தெரியாது. தெரிந்தாலும் அந்த இருளில் ராணுவம் எங்கேயாவது மறைந்து நின்று தாக்குமோ என்ற பயப்பீதியில் யாருமே அதைப்பற்றியெல்லாம் பேசக்கூட நினைக்கவில்லை. பொழுது விடியட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று நானும் பொறுமையோடு காத்திருந்தேன். பொழுது மட்டும் தான் விடியும். ஈழத்தமிழர்களின் தலைவிதி விடியுமா என்ன? எவ்வளவு நேரம் சென்றிருக்குமோ தெரியவில்லை.

ஒருவாறாக சூரிய வெளிச்சம் தலைகாட்டத்தொடங்கியது. கூடவே சிங்களராணுவம் பற்றிய பயமும் அதிகரிக்கத் தொடங்கியது. எங்கும் மனிததலைகளாக தெரிந்தது. எள் போட்டால் எண்ணையாகும் அளவிற்கு மனிதர்களால் அந்த பாடசாலை நிரம்பி வழிந்தது. இயற்கை உபாதை வேறு உயிரை வாங்கிக்கொண்டிருந்தது. சரி என்ன செய்வதென்று முழித்துக்கொண்டு இருந்தவேளை எங்களுக்கு அருகில் இருந்தவர்கள் தங்கள் வீடு பாடசாலைக்கு முன்னால் இருப்பதாகவும், வேண்டுமானால் தங்களோடு வரும்படியும் கூறினார்கள். அந்த நேரத்தில் உண்மையில் அவர்களுக்கு நன்றி கூற வார்த்தைகள் கிடைக்கவில்லை எனக்கு.

அவர்கள் வீட்டிற்கு சென்று அவசரமாக காலைகடன்களை முடித்துக்கொண்டு மறுபடியும் அகதிமுகாமுக்கு திரும்பினோம். ஆனால், மக்கள் தொகை கூடிய பின் அவர்கள் எத்தனை பேரை தங்கள் வீடிற்கு அழைத்து செல்ல முடியும். அதனால் நாசூக்காக எங்களையும் வரவேண்டாம் என்று சொன்னார்கள். அவர்களை கோபித்துக்கொள்ளவும் முடியாது. அதனால், அந்த பாடாசாலைக்கு அருகிலுள்ள ஓர் சிறிய அதிகம் அடர்த்தியில்லாத பனங்கூடல் தான் மலசல கூடமாக மாறியது. ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், அதுவும் அதிகாலை ஒரு மூன்று மணியிலிருந்து ஐந்து மணிக்குள் போனால் தான் உண்டு. இல்லையென்றால் சூரிய வெளிச்சம் எங்களின் பிட்டங்களை படம் பிடித்துக் காட்டிவிடும். அந்த அகால நேரத்தில் எங்காவது மறைந்து நின்று சிங்களராணுவம் பிட்டத்தில் சுட்டுவிடுமே என்ற பயமும் கூட இருந்தது.

இது தவிர நான் மாற்றுடுப்புகள் இல்லாமலும், குளிக்க வசதிகள் இல்லாமலும், இயற்கை பெண்களுக்கு அளித்த தண்டனையினாலும் நாறிய கதையெல்லாம் இங்கே தவிர்த்திருக்கிறேன். பெண்களுக்கு மட்டுமே அந்த நரகவேதனை புரியும். என் அனுபவத்தை நான் தவிர்த்தாலும் எங்கள் சகோதரிகள் வதைமுகாம்களில் இதைவிட மோசமாகத்தான் இன்று பாதிக்கப்பட்டுகொண்டிருக்கிறார்கள். என் உறவினர் ஒருவர் சொன்னார் குளிப்பதற்கு தண்ணீரின்றி இருப்பதால், இவர்களுக்கு பக்கத்தில் போனாலே ஓர் விதமான நாற்றம் அவர்கள் உடம்பிலிருந்து வருவதாக. இதுவும் எங்களின் அவலத்தின் ஓர் அங்கம் தான்.

அப்போதெல்லாம் ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எந்தவொரு தொண்டு நிறுவனங்களும் இருந்ததில்லை. இப்போது வதைமுகாம்களில் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனாலும் அவர்களின் செயற்பாடுகள் சிங்கள அரசால் மட்டுப்படுத்தப்பட்டே இருக்கின்றன. வெறும் ஆயிரத்திச் சொச்ச மாணவர்களே படிக்கக்கூடிய எந்த வசதிகளும் அற்ற ஓர் பொது பாடசாலையில் எத்தனை ஆயிரம் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி ஒரு நாளையேனும் தள்ள முடியும்? வீட்டிலுள்ள பெரியவர்கள் தான் சாப்பாடு, தண்ணீர் என்ற பிரச்சனைகளைப் பற்றி பேசி அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கத்தொடங்கினார்கள்.

அந்த பாடசாலைக்கு அருகிலுள்ள வீடுகளிலுள்ள மக்கள் சில சமையல் பாத்திரங்களை கொடுத்தார்கள். அரிசி, மரக்கறி என்று ஏதோ கிடைத்ததை வீட்டிலுள்ள ஆண்கள் கொண்டுவந்தார்கள். எல்லாவற்றையும் ஒன்றாக அவித்து ஏதோ சாப்பாடு என்ற பெயரில் அரை வயிறும், கால்வயிறுமாக உண்டு உயிரை பிடித்து வைத்துக்கொண்டோம். கிடைத்த இரண்டு தட்டுக்களில் முறைவைத்து உணவு பரிமாறப்பட்டது. பெரியவர்கள் பரவாயில்லை. குழந்தைகள் அதையெல்லாம் சாப்பிடவும் கஷ்டப்பட்டு, வேறு உணவு கிடைக்காததால் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஈழத்தில் ரேஷன் கடைகளை பல நோக்கு கூட்டுறவு “சங்க கடை” என்றுதான் அழைப்பார்கள். உணவுப்பற்றாக்குறை காரணமாக அருகிலுள்ள ஊர்களிலிருந்த சங்க கடைகளை உடைத்து தான் அரிசி பருப்பு என்று முடியுமானவரை ஊர் விதானைகள் (கிராம சேவையாளர்கள்) மக்களுக்கு பகிர்ந்தளிக்க முயற்சி செய்தார்கள். ஆனால், அது வேறு விதமாகத்தான் முடிந்தது. ஒரு நாள் அங்கிருந்த மக்கள் ஓர் இடத்தில் உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதாக அந்த பக்கம் நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள்.

நானும் வரிசையில் நின்றால் ஏதாவது கிடைக்கும் என்று ஓடினேன். ஆனால், அங்கு நான் கண்ட அவலக்காட்சி என்னை தாக்கியதால் அப்படியே ஸ்தம்பித்து சிலை போல் நின்றுவிட்டேன். அப்படியே பார்த்துக்கொண்டே நின்றேன். அங்கே மக்கள் தொகையைவிட உணவின் அளவு மிகச்சிறியளவில் இருந்ததால் எல்லோரும் முண்டியடித்து ஒருவர் மேல் ஒருவர் விழுந்து, ஒருவர் கையில் இருந்ததை மற்றவர் பறித்தும் பெரிய போரே உணவுக்காக நடந்துகொண்டிருந்தது.

அந்த கூட்ட நெரிசலின் அடியில் இரண்டு பெண்மணிகள் ஒரு Lakspray பால் பெளடர் பையிற்காக தாங்கள் யாரென்றே தெரியாமல், ஒருவரையொருவர் பார்க்காமல் இழுபறி பட்டுக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் நின்ற எனக்குத்தானே தெரியும் அவர்கள் இருவருமே என் சிறியதாய்மார்கள் என்பது. ஒருவாறு ஒருவரை மற்றவருக்கு அடையாளம் காட்டி விலக்கிவிட்ட பிறகுதான் இருவருமே ஒருவரின் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டனர். இருவருமே ஒருவரின் குழந்தைகளுக்காகத்தான் பால்மா யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

இப்போது இதை நாங்கள் சொல்லி சிரித்துக்கொள்வதும் உண்டு. ஆனால், அந்த சந்தர்ப்பத்தில் அது வேதனையாக இருந்தது. நல்ல வேளை, அந்த சாப்பாடிற்கான போராட்டத்தில் கூட்டத்தில் நசுங்கி யாருமே இறக்கவில்லை என்றுதான் நிம்மதிப்பெருமூச்சு விட முடிந்தது. இது எங்கள் அவலத்தின் இன்னோர் வடிவம். எங்களை தெருநாய்களைப்போல் உணவிற்காகப் போட்டிபோடவைத்து பிறகு அதை காட்சியாக்கி தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்கிறது சிங்களப்பேரினவாதம். வன்னியிலும் இதைத்தானே செய்தார்கள். இன்னும் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அன்று எங்களுக்கு நல்லவேளையாக தண்ணீர் பிரச்சனை ஓரளவிற்கு சமாளிக்ககூடியதாகவே இருந்தது. பாடசாலையில் ஓர் துலா கிணறு ஒன்றிருந்தது. அதை யாரும் குளிப்பதற்கோ அல்லது வேறு தேவைகளுக்கோ பாவிக்காமல் குடிதண்ணீர் தேவைகளுக்கு மட்டுமே பாவிக்கும்படி யாரோ சொல்லியிருந்தார்கள். அதனால் ஓரளவிற்கு குடிதண்ணீர் பிரச்சனை இல்லாமல் இருந்தது. இன்று, வதைமுகாம்களில் குடிதண்ணீருக்காக நாட்கணக்கில் கூட அவர்கள் வரிசையில் வாடவேண்டிய அவலம். இவ்வாறாக முகாம்களில் எங்கள் அடிப்படைவசதிகள் பற்றிய அவலங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால், அதை அனுபவித்தால் தான் அதன் வலியை உணர முடியும். எங்கள் உறவுகளை மிருகக்காட்சி சாலையில் இருக்கும் மிருகங்கள் போல காட்சிப்பொருளாகவும், அந்த மிருகக்காட்சிசாலையின் காவலர்களான அரசியல்வாதிகள் அவ்வப்போது வந்து பார்வையிட்டு, கூடவே அறிக்கைகளும் விட்டு எங்களின் வலிகளுக்கு மென்மேலும் அவலச்சுவை கூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
அடிப்படை வசதிப்பிரச்சனைகள் ஒருபுறமிருக்க, ராணுவம் பற்றிய பயபீதியும் விவரிக்க முடியாத ஒன்றுதான். எங்களின் அவலங்களிலேயே வலிகூடிய அவலம் என்றால் அது ராணுவ அட்டூழியம் தான். முதலாவது நாள் ராணுவம் பற்றிய எந்தவொரு செய்தியும் யாருக்கும் தெரியாமல் ஏதோவொரு பதட்டத்துடனேயே பொழுது கழிந்துகொண்டிருந்தது. நிச்சயமாக ராணுவம் முகாமிற்குள் வரும் என்று சிறு குழந்தைக்குகூட தெரியும். இரண்டவது நாள் காலையில் நான் தங்கியிருந்த வகுப்பறையில் இருந்தேன். வேறேது போக்கிடம் எங்களுக்கு. திடீரென்று மக்களின் பேச்சொலிகள் அடங்கி, குழந்தைகளின் அழுகைச்சத்தமும் குறைந்து ஏதோவொரு அமைதி நிலவியது. பக்கென்று விவரிக்கமுடியாத பயத்தில் எனக்கு சர்வமும் அடங்கியது போலிருந்தது.

மரணத்தின் தூதுவர்கள் வந்துவிட்டார்கள் என்பதை அந்த திடீர் அமைதி என் செவிகளிலும், மனதிலும் அறைந்தாற்போல் சொல்லியது. குண்டுச்சத்தங்களை விடவும் இந்த அமைதி அதிக பயத்தை கொடுத்தது. என்னை சுற்றியுள்ளவர்களின் முகங்களையும் பார்த்தேன். பெரியவர்கள், சிறுவர்கள் என்று எல்லோருடைய முகங்களும் பயத்தில் இறுகிப்போயிருந்தன. எல்லோருடைய முகங்களிலும் தெரிந்தது பயம், பயம், வார்த்தைகளில் அடங்காத பயம் என்ற உணர்வுதான். மெதுவாக தலையை நிமிர்த்தி பார்த்தேன். வரிசையாக இரும்புத்தொப்பிகளும், துப்பாக்கிகளும் நரவேட்டைக்காய் முகாமிற்குள்ளே அணிவகுத்து வந்துகொண்டிருந்தன.

என்னை கற்பழித்துவிட்டு கொல்வார்களா? அல்லது போகிறபோக்கில் தெருநாயைப்போல் சுட்டுவிட்டுப்போவார்களா? என் சாவு எப்படியிருக்கும்? என்னை பிடித்துச்சென்றால் சித்திரவதை செய்வார்களா? ஐயோ, அதை எப்படி தாங்க முடியும்? பயப்பிராந்தியில் தாறுமாறாக என் மனதில் கேள்விகள் ஓடத்தொடங்கின.

சர்வநாடியும் அடங்கி ஒடுங்கிய படியே என்னைச்சுற்றி நடப்பதை ஊமைப்படம் போல் பார்த்துக்கொண்டிருந்தேன். ராணுவம் ஒவ்வொரு ஆண்மகனாக சுட்டுவிரலால் சுட்டி எழும்பச்சொல்லி, வரிசையாக நிற்கவைத்துக்கொண்டிருந்தார்கள். மாணவர்கள், திருமணமானவர்கள், திருமணமாகாதவர்கள் என்று எந்த வயது வித்தியாசம் இல்லாமல்தான் கைதுகள் நடந்துகொண்டிருந்தன. சில சகோதரர்களை என்ன காரணத்திற்கு என்று தெரியாமலே நிலத்தில் போட்டு தங்கள் சப்பாத்து கால்களால் மிதித்துக்கொண்டு இருந்தார்கள். அடிவாங்கியவர்கள் தங்கள் கைகளால் தடுக்க முயற்சி செய்தார்களேயன்றி ஏனோ வாய்விட்டு அழக்கூட திராணியற்றவர்களாக மிருகங்களாய் மிதிபட்டுக்கொண்டிருந்தார்கள்.

அந்த வெறி பிடித்த ராணுவத்தை யாரால் தடுக்க முடியும்? அன்றும் சரி, இன்று இதை எழுதும் போதும் சரி என் மனம் அந்த ரணத்தால் வலிக்கிறது. பேசாமல் எழுதுவதை மூட்டைகட்டிவிட்டு ஏதாவதொரு மூலையில் முடங்கி அழவேண்டும் போலுள்ளது. ஆனால், அழுவதால் மட்டும் எங்கள் வலி ஆறாது என்றும் என் அறிவுசார் மனம் சொல்கிறது. யாராவது பெண்களையும் பிடித்துச் செல்கிறார்களா என்று என் கண்கள் சுழன்று, சுழன்று தேடின. அப்படி யாரையும் அழைத்துச் செல்வதாக என் கண்ணில் படவில்லை.

ஆனாலும் என் சகோதரர்களின் நிலையைப் பார்க்கும் போது வேதனையாகத்தானிருந்தது. கைதாகிய சகோதரர்களை துப்பாக்கிகளால் நெட்டித்தள்ளியும், பிடரியில் அடித்தும் அடிமைகளாய் அழைத்துச் சென்றார்கள். இதில் எங்கள் வீட்டு ஆண்களும் அடங்குவர். ஆண்டுகள் கடந்தாலும் அவலங்கள் மட்டும் வதைமுகாம் வடிவில் இன்னும் தொடர்கதைகளாய் தொடர்கிறது. ஆண், பெண், வயதானவர்கள், சிறுவர்கள் என்ற எந்த வரையறைகளுமின்றி கைதுகள் நடக்கின்றன. இதற்கெல்லாம் யாரிடமும் நாங்கள் முறையிட முடிகிறதா? காப்பாற்றுங்கள் என்று அவலக்குரல் எழுப்பினாலே எங்கள் குரல்வளைகளை நெரிக்க அரசியல்வாதிகள் முதல் ராணுவம் வரை ஆளாளுக்கு முண்டியடித்துக்கொண்டு வரிசையில் நிற்கிறார்கள். .
ஏறக்குறைய அந்த முகாமிலுள்ள ஆண்கள் அனைவரும் ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், அடுத்த நொடியே பெண்களின் அழுகையொலிகள், ஒப்பாரிகள் என்று முகாமையே உலுக்கியது. “நாசமாப்போவான்கள்” என்று மண்ணைவாரி தூற்றிக்கொண்டிருந்தார்கள் சில தாய்மார்கள். கைதாகி அழைத்துச் செல்லப்பட்ட ஆண்களின் குழந்தைகள் சிலர் “அப்பா, அப்பா” என்று குழறி அழுதுகொண்டிருந்தார்கள். அதெல்லாம் ஒன்றும் சிங்கள ராணுவத்தின் மனதை கரைக்கவில்லை. ஒருவேளை கணவன் திரும்பி வராமலே போனால் ஆதரவில்லாமல் தன்னுடையதும், தன் குழந்தைகளினதும் வாழ்க்கை என்னாகுமோ என்ற விடைதெரியாத கேள்விகளுடன், அதை சொல்லியழத் தெரியாமல் எத்தனையோ மனைவிமார்களையும் பார்த்த போது………எனக்கு வார்த்தை வரவில்லை.

ஆனால், எல்லோருடைய மனதிலும் தொக்கி நின்ற கேள்வி என் மகன், என் கணவன், என் சகோதரன் உயிருடன் திரும்பி வருவானா என்பதுதான். என் உறவினர்களும் ஆளுக்கொரு மூலையில் இருந்து அழுதுகொண்டிருந்தார்கள். என் பாட்டி தான் கொஞ்சம் புலம்பிப் புலம்பி ஏதேதோ அரற்றிக்கொண்டிருந்தார். பக்கத்தில் சென்று “அழாதே” என்று சொன்னால் இயலாமையிலும் வேதனையிலும் பாட்டி கண்டபடி என்னை திட்டத்தொடங்குவார். அதனால், மூடிக்கொண்டு மூலையில் உட்கார்ந்தேன். விழியோரத்தில் கண்ணீர் மட்டும் என்னையும் அறியாமல் வழிந்து கொண்டிருந்தது.

அந்த அழுகை ஒலிகளுக்கு நடுவிலும் ஏதாவது துப்பாக்கிச் சத்தம் கேட்கிறதா என்று காதைக்கொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தேன். காரணம், சிங்கள ராணுவம் போகிற போக்கிலேயே பிடித்துச்சென்றவர்களை வீதியில் வைத்து சுட்டு எறிந்து விட்டும் செல்வார்கள். முகம் சிதைபடாமல் இருந்தால் உடனேயே யாரென்று அடையாளம் காணலாம். ஒப்பரேஷன் லிபரேஷன் போது இப்படி வீதிகளில் பலபேர் பிணங்களாய் ஆக்கப்பட்டவர்கள்தான்.

எங்களோடு அந்த பாடசாலை வகுப்பறையில் இருந்த ஓர் யாழ்ப்பாண பல்கலைக்கழ மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டு முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வீதியில் பிணமாய் கிடந்தார். அவரின் அங்க அடையாளங்களை வைத்துத்தான் அவரை குடும்பத்தினர் அடையாளம் கண்டுபிடித்தனர். அவரின் உறவினர்கள் எல்லோரும் இறுதியாய் தெருவிலேயே கூடியழுதுவிட்டு, பக்கத்திலேயே எங்கோ உடலைப் புதைத்துவிட்டு வந்தார்கள். ராணுவ கெடுபிடிகளால் உடல்களை பெரும்பாலும் அச்சமயத்தில் சுடுகாட்டிற்கு கொண்டுசென்று எரிக்கமுடியவில்லை.
சிங்கள ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் சிலர் அன்றே விடுதலை செய்யப்பட்டனர். சிலர் அடுத்தநாளும், சிலர் சில நாட்களின் பின்பும் விடுவிக்கப்பட்டனர். எங்கள் வீட்டை சேர்ந்தவர்கள் இரண்டு நாட்கள் கழித்து ராணுவத்திடம் நிறைய அடிவாங்கி முகாமிற்கு திரும்பி வந்தார்கள். நாங்கள் முகாமில் இருக்கும் வரை திரும்பி வராதவர்களும், திரும்பியே வராதவர்களும் கூட இருக்கிறரர்கள். ஒவ்வொரு பதிவிலும் இதைத்தானே சொல்கிறேன் என்று நீங்கள் நினைத்தாலும், ஈழத்தமிழர்கள் வாழ்வில் இது இன்று ஓர் அன்றாட நிகழ்வாகிப் போனதால் நான்/நாங்கள் தொடர்ந்தும் இதைப் பேசவேண்டியுள்ளது.

அந்த நாட்களில் ராணுவம் கைது செய்து கொண்டு போனாலும் யாரும் அவர்களின் முகாமிற்கு சென்று பார்க்கவோ பேசவோ முடியாது. எந்தவொரு அமைப்பிடமும் முறையிடவும் முடியாது. கைதானவர்கள் திரும்பி வந்தால் கண்டுகொள்ள வேண்டியதுதான். ஒரு மனைவி கணவன் இறந்து விட்டானா அல்லது உயிருடன் திரும்பி வருவானா என்று எவ்வளவு காலம் பதில் தெரியாமல் காத்திருக்க வேண்டும்? ஆனால், ஈழத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் இப்படி இன்றுவரை காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி சொல்லத்தொடங்கினால் முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே போகும் எங்கள் அவலங்களின் பட்டியல்.
எத்தனை நாட்கள் இப்படி ஓர் பாடசாலையில் எந்தவொரு அடிப்படைவசதி இல்லாமலும், ராணுவம் எப்போது வந்து யாரை கொண்டு போகுமோ என்ற பீதியுடனும் நாட்களை நகர்த்த முடியும். சிங்கள ராணுவம் வடமராட்சியை கைப்பற்றிய பின் யாழ்ப்பாண நகர்ப்பகுதியையும், தென்மராட்சியையும் கைப்பற்றும் என்றும் தெரியும். ஆனாலும், தற்காலிகமாக ராணுவத்திடமிருந்து தப்பிக்கொள்ள இந்த இரண்டில் ஓர் இடம்தான் கதி. யாழ்ப்பாணம் நகர்ப்பகுதிக்கு போக முடியாது. அது நீண்டவழி. போக்குவரத்து வசதியும் கிடையாது. அதனால், தென்மராட்சிக்கு போவதாக வீட்டில் முடிவெடுத்தார்கள். எங்களுக்கு அங்கு உறவினர்களோ அல்லது தெரிந்தவர்களோ கூட கிடையாது. குறைந்த பட்சம் ஓர் கோவிலோ, மடமோ ராணுவ அட்டூழியம் இல்லாத ஓர் இடமாக இருந்தால் போதுமென்றிருந்தது. தவிரவும், ராணுவம் வேறு எல்லோரும் வீடுகளுக்கு செல்லுங்கள் என்று அறிவித்திருந்தார்கள்.

ஆனால், வீடுகளுக்கு திரும்பிப் போவது என்பது ஏதோ கொலைக்களத்திற்கு போவது போன்ற ஓர் உணர்வாகவே இருந்தது. தென்மராட்சிக்கு போக முன்னர் ஒருதடவை மறுபடியும் வீட்டுக்கு போய் மாற்றுடுப்புகளாவது எடுத்துக்கொண்டு போகலாம் என்று என் தாயாரும், பாட்டியும் ஊருக்கு போகத் தீர்மானித்தார்கள். அவர்கள் வரும்வரை மீதிப்பேர் முகாமில் இருப்பது என்று முடிவெடுத்தோம். எங்களோடு வந்திருந்த சாமிமாமாவின் மனைவி தன்னை ராணுவம் சுட்டாலும் பரவாயில்லை என்று ஏற்கனவே கிளம்பிப் போய்விட்டிருந்தார்.
ஊருக்கு நடந்து போய் நடந்து வரவேண்டும். எந்தவொரு போக்குவரத்து ஊடகமும் கிடையாது. போனவர்கள் உயிருடன் திரும்பவேண்டுமே. போன இருவரும் திரும்பி வரும்வரை உயிர் பதைக்க காத்திருந்தோம். எனக்கு தந்தை இல்லை, தாயார் மட்டுமே. அந்த போர் சூழலில் வாழ்ந்ததாலோ என்னவோ எங்கள் ஈழப்பெண்கள் ஓரளவிற்கு பிரச்சனைகளை சமாளிக்கும் சாதுர்யமும் வலுவும் பெற்றிருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இல்லையென்றால் சிங்கள ராணுவத்தின் இரக்கமற்ற இயல்பு தெரிந்தும் யாரும் துணிந்து இப்படியெல்லாம் போவார்களா? இருவரும் போய் எங்கள் பைகளை மட்டும் எடுத்துக்கொண்டு திரும்பிவந்தார்கள்.

இருவருமே உடைமைகள் எரிக்கப்பட்டும் பல உயிர்கள் காவுவாங்கப்பட்டும் இருப்பதை பார்த்தும், கேட்டும் நிறையவே பயந்து போயிருந்தார்கள். எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக கிளம்பிப் போகவேண்டும் என்றார்கள். வடமராட்சியில் இருந்து தென்மராட்சிக்கு அண்ணளவாக 18KM இருக்கும் என்று நினைக்கிறேன். ஒருநாள், காலையில் முகாமில் இருந்து புறப்பட்டு நீண்டதூரம் முதலில் கடற்கரையோரமாகவும் பிறகு குறுக்குவழிகளின் ஊடாகவும் நடந்து தான் தென்மராட்சிக்கு போனோம்.

ஒருவேளை போகும் வழியில் ராணுவம் மறித்து அடையாள அட்டையிலுள்ள ஊருக்குப் போகாமல் ஏன் வேறு திசையில் போகிறீர்கள் என்று கேட்டால் எல்லோருமே ஒரே பதிலை சொல்லவேண்டும் என்று பேசிவைத்துக்கொண்டோம். ராணுவத்திற்கு பயந்துதான் ஊரை விட்டுபோகிறோம் என்று சொல்ல முடியுமா? ஊரில் எங்களின் வீடுகள் எரிந்துவிட்டது, குண்டுவீச்சில் உடைந்துவிட்டது இருக்க இடமில்லை அதனால் உறவினர் வீட்டுக்கு செல்வதாக எல்லோரும் ஒரே பதிலை சொல்லவேண்டும் என்று தீர்மானித்தோம். ஆனால், இதை ராணுவம் ஏற்றுக்கொள்ளுமா என்பதெல்லாம் வேறுகதை.

எங்கள் வீடு எரிக்கப்படவில்லை. ஆனால், வீட்டிலுள்ள அத்தனை பொருட்களுமே உடைக்கப்பட்டும், சில பொருட்கள் திருட்டுப்போயும் இருந்தன. நல்லவேளையாக ராணுவத்தின் கண்ணில் அகப்படாமலே ஒருவாறு தப்பிவிட்டோம். நாங்கள் போகும் வழியில் கடற்கரையோரத்தில் உள்ள ஊர்களுக்கு ராணுவம் இன்னும் செல்லாததால் அவர்களுக்கு ராணுவம் வடமராட்சியை கைப்பற்றியது தெரிந்திருக்கவில்லை. வெடிச்சத்தங்கள் நிறையவே கேட்டதாகச் சொன்னார்கள். எங்களையும், எங்களின் கோலங்களையும் பார்த்தவர்களுக்கு நாங்கள் எதையுமே அதிகம் விளக்கத்தேவையில்லாமல் இருந்தது. உங்களுக்கு பின்னால் நாங்களும் தென்மராட்சிக்கு வருவதுதான் நல்லது என்றார்கள்.
ஒருவாறாக தென்மராட்சியை அடைந்தபோது ஏதோ ஓர் நிம்மதியாக இருந்தது. தென்மராட்சியில் மிருசுவில் என்ற இடத்தில் தான் ஓர் வீதியோரமாக இருந்த புளியமரத்தின் கீழ் மூட்டை முடிச்சுகளோடு உட்கார்ந்திருந்தோம். அதற்கு மேல் எங்கே போவது என்று தெரியவில்லை. அந்த ஊரில் தங்குவற்கு அருகில் கோவில் அல்லது மடம் இப்படி ஏதாவது இருக்குமா என்று யாரையாவது கேட்கலாம் என்று, யாராவது வருகிறார்களா என்று வீதியோரத்தில் காத்துக்கிடந்தோம். இருட்ட வேறு தொடங்கியிருந்தது. கொஞ்சநேரம் கழித்து அந்த வழியில் சைக்கிளில் வந்த ஒருவர் எங்களிடம் வந்து, “எங்க வடமராட்சியில் இருந்து வாறியளோ”? என்றார். நாங்கள் பதில் சொன்னதும், “உங்களைப்போல் நிறையப்பேர் வந்திருக்கினம். இங்கேயே இருங்கோ நான் போய் உங்களுக்கு உதவி செய்ய ஆட்களை அனுப்புகிறேன்” என்றார்.

சிறிது நேரம் கழித்து சில இளைஞர்கள் சைக்கிளில் வந்தார்கள். எங்களை அழைத்துச் சென்று ஓர் வீட்டில் தங்க ஏற்பாடுகளை செய்தார்கள். அதை வீடு என்பதா என்றெல்லாம் எனக்கு சொல்லத்தெரியவில்லை. காரணம், அங்கிருந்தது ஒரேயொரு மூதாட்டி. அவர் ஏதோ தீட்சை பெற்றவராம். அவருடைய பரம்பரையில் எல்லோருமே சமாதியடைந்தவர்களாம். அவர் எங்களை பார்த்த பார்வையே ஏதோ விரோதியைப் பார்ப்பது போலிருந்தது. ஒருவேளை நாங்கள் அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுவோம் என்று நினைத்தாரோ தெரியவில்லை. ஆனாலும், அவர் எங்களை வெளியே போ என்றெல்லாம் சொல்லவில்லை.

எங்களை அழைத்து வந்தவர்கள் ஏற்கனவே அந்த மூதாட்டியின் ஆச்சார அனுஷ்டானங்களைப் பற்றி எச்சரிக்கை செய்து, அனுசரித்துப்போங்கள் என்று சொல்லியிருந்தார்கள். சிங்கள ராணுவத்தை விட இவரை அனுசரிப்பது ஒன்றும் எங்களுக்கு பிரச்சனை இல்லையே. அந்த இளைஞர்கள் எங்களிடம் சாப்பாட்டிற்கு சமையல் செலவுக்கு பணம் இருக்கிறதா என்றெல்லாம் திருப்பித் திருப்பி கேட்டார்கள். தொடர்ந்து இரண்டு நாட்கள் வந்து நாங்கள் எப்படியிருக்கிறோம் என்று விசாரித்துவிட்டுச் சென்றார்கள். அவர்கள் யார் என்று நாங்கள் கேட்டதிற்கு, தாங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என்றார்கள். அந்த மூதாட்டியும், அந்த ஊரில் எங்களுக்கு உதவியவர்களும் இன்றும் என் மனதில் இருக்கிறார்கள்.

அந்த மூதாட்டியின் ஆசாரத்திற்கு பங்கம் வராமல் முற்றத்திலேயே அடுப்பு மூட்டி சமையல் செய்தோம். முற்றத்திலேயே தூங்கினோம். நல்லவேளை அது மழைக்காலம் இல்லை. இப்படி கொஞ்ச நாட்கள் கழிந்தன. ஒருநாள் வழக்கம் போல் மல்லாக்காக படுத்துக்கொண்டு ஈழத்தமிழர்களுக்கு என்றைக்குமே இல்லாத எதிர்காலத்தை நினைத்து ஏதோ சிந்தனையில் இருந்தேன்.

வெளியே சென்றிருந்த என் சித்தப்பா வந்து, “சரி, சரி இந்தியன் ஆமி வந்திட்டானாம் எல்லாரும் வெளிக்கிடுங்கோ ஊருக்கு போவம்” என்றார். ஊருக்கு, எங்கள் சொந்த வீட்டிற்கு திரும்பிப் போகப்போகிறோம் என்று சந்தோசமாக இருந்தாலும் மறுபடியும் ஆமியா என்று ஏதோவொன்று முள்ளாய் என் அடிமனதில் தைத்தது.

தொடரும்

ரதி

தொடர்புடைய பதிவுகள்

பார்ப்பனியத்திடம் சரணடைந்த இஸ்லாம் !!

368

பதிப்புரை

ஸ்லாத்தின் சமூக சமத்துவ கோட்பாட்டுக்கு முற்றிலும் நேரெதிரான வகையில், இந்திய முஸ்லிம்களிடையே சாதிய வேற்றுமையும் பாரபட்சமும் புரையோடிப் போய் கிடக்கிறது. இது, பார்ப்பன இந்து மதத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டது மட்டுமல்ல; பல இஸ்லாமிய மன்னர்களும் உலேமாக்களும் இச்சாதிய பாரபட்சத்தை நியாயப்படுத்தி கட்டிக் காத்து வந்துள்ளனர். இந்த உண்மையையும், மனுவாத அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கம் எவ்வாறு இந்தியாவில் உருத்திரிக்கப்பட்டுள்ளது என்பதையும் வரலாற்றுப் பின்னணியுடன் வெளிக்கொணர்கிறார், இஸ்லாமிய இளைஞரான மசூத் ஆலம் ஃபலாஹி.

தற்போது டெல்லி நேரு பல்கலைக்கழகத்தின் அரபுமொழித் துறையில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மாணவராக உள்ள இவர், ஜாமியா உல்ஃபலா மதரசாவில் இஸ்லாமிய மார்க்கக் கல்வியைப் படித்து முடித்தவர். இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி மற்றும் சாதி அடிப்படையிலான இழிவுபடுத்தல்கள் பற்றி இவர் விரிவாக ஆய்ந்தெழுதியுள்ளார். கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் “”ஃபிராண்டியர்” (பிப்ரவரி 511, 2006) என்ற ஆங்கில வார இதழுக்கு அளித்த நேர்காணலில் அவர், இவை குறித்து அலசுகிறார். புறக்கணிக்கப்படும் பிரச்சினை குறித்த இச்சிறுவெளியீடு இந்துமதத்தின் கொடுமைகளை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு இஸ்லாத்திலும் மனு”தர்ம’ அடிகொடுக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், சாதியத்திற்கு எதிராகவும் விடாப்பிடியாகப் போராட விரிந்த பார்வையை அளிக்குமென்று நம்புகிறோம்.

-கீழைக்காற்று

இஸ்லாத்தில் மனுவாதிகள் : (இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி – தீண்டாமை குறித்து ஆய்வு செய்து, மசூத் ஆலம் ஃபலாஹி அளித்த நேர்காணல்)

vote-012கேள்வி:இந்திய முஸ்லீம்களிடையே சாதியம் என்ற பிரச்சினையை ஆய்வு செய்வதில் நீங்கள் எவ்வாறு அக்கறை காட்டத் தொடங்கினீர்கள்?

பதில்: பீகார் மாநிலத்திலுள்ள சீத்தாமரி என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். கிழக்கு உத்திரப்பிரதேசத்திலுள்ள மவுனத் பான்ஜன் என்ற ஊரில் எனது பள்ளிப் படிப்பை நான் முடித்தேன். பின்னர், இஸ்லாமிய உயர் கல்வி பெறுவதற்காக, ஆஜம்கார் மாவட்டத்தின் பிலாரியாகன்ஜ் எனும் ஊரிலுள்ள ஜாமியா உல்ஃபலா மதரசாவுக்குச் சென்றேன். 1999ஆம் ஆண்டில் ஃபசிலத் கல்வியை முடித்த நான், இளங்கலை பட்டப்படிப்புக்காக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அதன்பின்னர், புதுடெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து முதுகலைப் பட்டம் பெற்றேன்.

1996ஆம் ஆண்டில், ஜாமியா உல்ஃபலாவில் நான் மாணவனாக இருந்தபோது, “”குரானைப் பற்றிய ஓர் அறிமுகம்” என்ற ஒரு வார கால நிகழ்ச்சியை ஜமாத்இஇஸ்லாமிஹிந்த் என்ற அமைப்பு உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்திருந்தது. இதன் ஒரு பகுதியாக, முஸ்லிம்கள் அல்லாதோர் வாழும் பகுதிகளில் இஸ்லாமிய மதம் பற்றி விளக்குவதற்காக ஜமாத் தலைவர்கள் சென்றனர். குறிப்பாக, தலித்துகள் வாழும் பகுதிகளில் அவர்கள் கவனம் செலுத்தினர். இஸ்லாத்தின் பொதுக்கருத்தான சமூக ரீதியிலான சமத்துவம் பற்றி தலித்துகளிடம் அவர்கள் பேசினர்.

ஹக்கிம் அப்துர்ரவூஃப் என்ற மூத்த ஜமாத் தலைவர், பிலாரியாகன்ஜ்இல் உள்ள தலித்துகள் வாழும் சேரிப் பகுதிக்கு வந்தார். நான் படித்துக் கொண்டிருந்த மதரசாவும் இந்த ஊரில்தான் இருந்தது. இஸ்லாம் சமத்துவத்தைப் போதிக்கும் மதம் என்றும் சாதி, தீண்டாமை ஆகிய இழிவுகளுக்கு ஒரே தீர்வு இஸ்லாம்தான் என்றும் தலித்துகளிடம் அவர் கூறினார். தலித்துகள் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டு மதம் மாறுவார்களானால், முஸ்லிம்கள் அவர்களைக் கட்டித் தழுவி வரவேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.

அவ்வாறு அவர் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு தலித் இளைஞர் எழுந்து நின்று, அவரை நோக்கி, “”இஸ்லாம் என்பது சமத்துவத்தைப் போதிக்கும் மதம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், உங்களுடைய முஸ்லிம் சமுதாயம் சாதிகள் மலிந்ததாகவே இருக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் தமது சாதிக்கு வெளியில் திருமணம் செய்து கொள்வதில்லை; மற்ற பகுதிகளிலும் அநேகமாக இதே நிலைமைதான். இந்நிலையில், தலித்துகளாகிய நாங்கள் முஸ்லிம்களாக மதம் மாறினால், எங்களுடன் யார் மணஉறவு வைத்துக் கொள்வார்கள்? எங்களுடன் சமமாக அமர்ந்து யார் உணவருந்துவார்கள்?” என்று கேட்டார்.

அந்த இளைஞரின் வாதம், எனது நெற்றிப் பொட்டில் தாக்கியதைப் போலிருந்தது; என்னைச் சிந்திக்கத் தூண்டியது. அவர் கூறியது பெருமளவு உண்மை என்பது எனக்குத் தெரியும். அது முதற்கொண்டு, சாதிய அமைப்பின் வரலாறு பற்றிய பல்வேறு நூல்களை நான் படிக்கத் தொடங்கினேன். பல்வேறு இந்திய உலேமாக்களின் நூல்களையும் நான் ஆழ்ந்து படித்தேன். இந்த உலேமாக்கள், அவர்களது சீடர்கள் பலராலும் மிகச் சிறந்த அறிஞர்கள் என்று பெரிதும் மதிக்கப்பட்டவர்கள். மௌலவி அகமத் ரசாகான் பரேல்வி, மௌலவி அஷ்ரப் அலி பரூக்கி தான்வி முதலான இத்தகைய அறிஞர்களின் நூல்களையும் நான் படித்தேன்.

இந்த உலேமாக்களில் பலரும், பிறப்பு அடிப்படையிலான சாதிய மேன்மையை நடைமுறையில் ஆதரித்து வாதிடுவோராக இருப்பதைக் கண்டேன். இந்தச் சாதியக் கருத்தாக்கத்தின் அடிப்படையில், குரானுக்கு முற்றிலும் எதிரான வகையில் இவர்கள் ஃபத்வா வழங்கியுள்ளதை கண்டறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியடைந்தேன். அரபு மொழியில் காஃபா என்றழைக்கப்படுவதன் கருத்தாக்கத்தைத் துணையாதாரமாகக் கொண்டு, சாதியப் படிநிலை வரிசைப்படி, குழுக்களுக்கிடையே சாத்தியப்படும் மணஉறவுகளைப் பற்றிய விதிகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

இதன்படி, அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்த முஸ்லீம்கள் (சையத்துக்கள், ஷேக்குகள்), அரபுத் தோற்றுவாய் அல்லாதவர்களைவிட அதாவது அஜாமி முஸ்லிம்களைவிட உயர்வானவர்கள். அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்தவர் என உரிமை பாராட்டும் ஒரு ஆண், அஜாமி முஸ்லிம் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால் அஜாமி முஸ்லிமாக உள்ள ஒரு ஆண், அரபு வழித்தோன்றலான ஒரு முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. இது போலவே பத்தான் முஸ்லிம் ஆணொருவன், ஜுலாஹா (அன்சாரி), மன்சூரி (துனியா), ராயின் (குன்ஞ்ரா), குரைஷி (காஸி) இனப் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால், அன்சாரி, ராயின், மன்சூரி, குøரஷி ஆகிய இனக்குழுவைச் சேர்ந்த எந்தவொரு முஸ்லிம் ஆணும், பத்தான் முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. ஏனென்றால் இந்தச் சாதிகள் அனைத்தும் பத்தான்களுக்குக் கீழானவை — இவ்வாறாக இந்த உலேமாக்கள் வாதிட்டனர். ஒருவர் தமது சொந்தச் சாதியிலேயே திருமணம் செய்து கொள்வதுதான் சாலச் சிறந்தது என்று உலேமாக்களில் பலரும் நம்பினர்.

இஸ்லாமைப் பற்றிய எனது புரிதலுக்கு முற்றிலும் நேரெதிரானதாக அவர்களுடைய கருத்துக்கள் இருந்தன. அவர்களை முழுமையாகப் புரிந்து கொள்ள, அவர்களுடைய நூல்கள் எனக்குப் பெரிதும் உதவின. இந்தியாவில் உள்ள பல உலேமாக்கள் சாதிய அமைப்புக்குத் தவறாக இஸ்லாமியத் தன்மை வழங்குவதன் மூலம் அல்லது மதரீதியில் இசைவாணை வழங்குவதன் மூலம் சாதியத்தை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். இதை அறிந்த போது நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். இந்து மதத்தில் இன்னமும் நீடித்து வரும் சாதிய நடைமுறையிலிருந்து இது வேறுபட்டதல்ல. ஏனென்றால், இந்துமதம்தான் சாதிய வேறுபாட்டுக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கும் மதரீதியாக இசைவாணை வழங்குகிறது.

சாதியம் பற்றிய எண்ணற்ற இந்திய உலேமாக்களின் நூல்களைப் படித்த பிறகு, ஜமாத்இஇஸ்லாமி தலைவரிடம் அந்த தலித் இளைஞர் முன்வைத்த கேள்வி கிட்டத்தட்ட முழுமையாக சரியானதுதான் என்பதை நான் புரிந்து கொண்டேன். சாதிய அமைப்பை நியாயப்படுத்துவதற்கு இத்தகைய உலேமாக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை இப்படித் தவறாக வியாக்கியானம் செய்வார்களானால், இஸ்லாம் மதத்துக்கு மாறுவது பற்றி எந்த தலித் அக்கறையோடு பரிசீலிப்பார்? இந்த மௌலவிகளால் திரித்து முன்வைக்கப்படும் இஸ்லாமிய மார்க்கத்தை எந்த தலித் ஏற்றுக் கொள்வார்?

இந்திய முஸ்லிம்களிடையே சாதியம் என்ற பிரச்சினையானது, ஏதோ இந்து மதத்தின் தாக்கத்தினால் மட்டும் ஏற்பட்டதல்ல; சாதிய அமைப்பை இஸ்லாமிய சட்டம் அல்லது ஷரீஅத் இன் ஓர் அங்கம் எனத் தவறாகக் கருதும் பெரும்பாலான இந்திய உலேமாக்களின் செல்வாக்கும் இதற்குக் காரணமாகும். இஸ்லாமிய மார்க்கத்தை முற்றிலும் தவறாக வியாக்கியானம் செய்வதன் மூலம் இந்த மௌலவிகள் இஸ்லாத்துக்கு எவ்வளவு பெரிய இழுக்கைக் கொண்டு வந்துள்ளனர் என்பதை உணர்ந்தபோது, நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

கேள்வி: முஸ்லிம்களிடையே சாதிய பாரபட்சம் என்ற பிரச்சினையைப் பற்றி நீங்கள் எவ்வாறு எழுதத் தொடங்கினீர்கள்?

பதில்: சாதியையும் சாதிய பாரபட்சம் இழிவுபடுத்துதலையும், அப்பட்டமாக நியாயப்படுத்தி, மதரீதியில் சட்டபூர்வமாக்குவதற்கு இந்த உலேமாக்கள் முயற்சித்ததை அறிந்தபோது, இதைப் பற்றி எழுதுவது முக்கியத்துவம் வாய்ந்ததென நான் உணர்ந்தேன். இந்தப் பிரச்சினையைப் பற்றி எழுத முற்பட்டபோது, ஜாமியா உல்ஃபலாவில் பணியாற்றிய மௌலவி அனீஸ் அகமது சித்திகி ஃபலாஹி மதானி என்ற எனது மதிப்புக்குரிய ஆசிரியர், எனது சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருந்தார். அவர் எங்களுக்கு மதங்கள் குறித்த ஒப்பீடு என்ற பாடத்தைக் கற்பிப்பவராக இருந்தார். படிநிலையாக உள்ள சாதிய அமைப்பு முறையை இந்திய முஸ்லீம்கள் எவ்வாறு இஸ்லாத்தின் உள்ளார்ந்த ஆன்மீகமாக மாற்றிவிட்டார்கள் என்பதையும், இந்து மதத்தின் தாக்கம் இதற்கு ஓரளவுக்குக் காரணமாக இருந்தது என்பதையும் அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்.

இருப்பினும், முஸ்லிம் பத்திரிகைகளில் இந்தச் சாதியப் பிரச்சினை பற்றி அபூர்வமாகவே விவாதிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினையைப் பற்றி அவை முற்றாக மௌனம் சாதிக்கின்றன. இந்தியாவிலுள்ள பெரும்பாலான முஸ்லிம் பத்திரிகைகள் சுயநலவாதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன; வெளியிடப்படுகின்றன. மதரசாக்களில் அளிக்கப்படும் குறுகிய கண்ணோட்டமுடைய பயிற்சியின் காரணமாக, உண்மையிலேயே அவர்கள் விரும்பினாலும் கூட, இத்தகைய பிரச்சினைகளைப் பற்றி எழுத இயலாத நிலையிலேயே உலேமாக்கள் உள்ளனர்.

மேலும், இந்திய உலேமாக்கள் பெரும்பாலும் ஹனாஃபி மரபில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். சாதி அடிப்படையிலான பாரபட்சம் காட்டுவதற்கு இந்த ஹனாஃபி மரபானது, மதரீதியில் புனித இசைவைத் தவறாகக் கற்பித்து வருகிறது. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இது நடந்து வருகிறது. ஹனாஃபி மரபுவழி சார்ந்த அறிஞர்களின் படைப்புகளைப் பரிசீலித்தால் இது தெளிவாகத் தெரியும்.

இதனால்தான், மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டும் மிகப் பெருமளவுக்கு விவாதத்திற்குரியதுமான இச்சாதியப் பிரச்சினையைப் பற்றி எழுதும் தார்மீகக் கடமை எனக்கிருப்பதாக நான் உணர்ந்தேன். எனவே “”இந்தியாவில் முஸ்லிம்களும் தீண்டாமையும்” என்ற தலைப்பில் பல கட்டுரைகளை நான் தொடர்ச்சியாக எழுதினேன். அலிகாரைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞரும் ஜமாத்இஇஸ்லாமியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் ஃபரிடி என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் “”ஜிந்தகிஇநவ்” என்ற பத்திரிகையில் இவை வெளியாயின. பேரன்பு கொண்ட டாக்டர் ஃபரிடி இவற்றை வெளியிட்டு உதவினார். சாதிய பாரபட்சம்இழிவுபடுத்தலுக்கு மதரீதியில் இசைவாணை வழங்கும் உலேமாக்களைக் கடுமையாக விமர்சிப்பவையாக எனது சில கட்டுரைகள் இருந்தன.

கேள்வி: இந்தக் கட்டுரைகளின் மூலம் நீங்கள் வாதிட்டு நிலைநாட்ட முயற்சித்தது என்ன?

பதில்: இந்திய முஸ்லிம்களிடையே சாதி மற்றும் சாதிய அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதற்கான வரலாற்றுக் கண்ணோட்டத்தை அளிக்க நான் முயற்சித்தேன். இந்தியாவில் சாதிகளின் தோற்றம், சாதியை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பன மதத்தின் வளர்ச்சி; பவுத்தம், சீக்கியம், பக்தி இயக்கம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சாதிய எதிர்ப்பு இயக்கங்களின் பாத்திரம்; இந்தியாவில் இஸ்லாமிய மதம் பரவுதல்; குறிப்பாக, இஸ்லாத்தின் சமூக சமத்துவம் காரணமாக, அதன்பால் ஈர்க்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளிடையே இஸ்லாமிய பரவுதல் ஆகிய இவை பற்றி நான் ஆய்வு செய்தேன்.

மறுபுறம், இந்திய வரலாற்றில் “இஸ்லாமிய ஆட்சி’ என்று சொல்லப்படும் காலத்தில் எழுதப்பட்டு வெளியான நூல்களிலிருந்து பல்வேறு மேற்கோள்களை முன்வைத்து, முஸ்லிம் மன்னர்களும் பொதுவில் இஸ்லாமிய மேட்டுக்குடி ஆளும் கும்பல்களும் சாதிய அமைப்பை எவ்வாறு கட்டிக் காத்தனர் என்பதை நான் விளக்க முயற்சித்தேன். இந்துக்களில் “உயர்சாதியினர்’ என்று சொல்லப்படுபவர்களுடன் கள்ளக்கூட்டு சேர்ந்து, இந்து மற்றும் முஸ்லிம் மக்களில் “கீழ் சாதியினர்’ என்று சொல்லப்பட்டவர்களை எவ்வாறு ஒடுக்கினர் என்பதையும் நான் எடுத்துக் காட்ட முயற்சித்தேன்.

இந்த முஸ்லிம் மன்னர்களும் மேட்டுக்குடி ஆளுங்கும்பலும் கீழ்ச் சாதியினர் அல்லது ரஸில் சாதியினர் என்று சொல்லப்படுவர்களை அவர்கள் இந்துக்களானாலும், முஸ்லிம்களானாலும் கல்வி கற்க அனுமதித்ததில்லை; தங்களது அரசவைகளில் நுழையக்கூட அனுமதித்ததில்லை. இவை இந்து மற்றும் முஸ்லிம்களில் உயர்சாதியினருக்கு மட்டுமே என்று ஏகபோக உரிமை கொண்டாடினர். இந்த உண்மைகளை, முல்லா அப்துல் காதிர் பாவாயுனிஇன் “”முன்டாகாப் அல்தாவாரிக்”, மௌலவி சய்யத் ஜியாவுதீன் பார்னிஇன் “”தாரிக்இஃபிரோஸ் ஷாஹி”, குன்வர் மொகம்மத் அஷ்ரப்இன் “”இந்துஸ்தானி மாஷ்ரா அக்த்இஉஸ்தா மெய்ன்” ஆகிய நூல்கள் மிகத் தெளிவாகவே நிரூபித்துக் காட்டுகின்றன. இந்த மன்னர்களுக்கும் மேட்டுக்குடி ஆளுங்கும்பல்களுக்கும் இஸ்லாத்தைப் பற்றி முழுநிறைவாகத் தெரியாது. இஸ்லாமிய மார்க்கம் போதிக்கும் சமத்துவத்துக்கு அவர்கள் செவி சாய்த்ததுமில்லை.

இல்டுமிஷ், பால்பன் ஆகியோர் துருக்கிய அடிமை வம்சத்திலிருந்து வந்த சுல்தான்களாவர். அவர்களாவது சாதிய விவகாரங்களில் வேறுபட்டு நடந்திருக்க வேண்டுமென நாம் கருதலாம். ஆனால், அவர்களும்கூட கீழ்சாதியினர் என்றழைக்கப்பட்ட முஸ்லிம்களை அரசாங்கப் பணிகளில் அனுமதிக்க மறுத்தனர்.
இஸ்லாமிய அரசுகள் என்று சொல்லப்பட்ட அரசவைகளில் இருந்த எண்ணற்ற அறிஞர்களும் உலேமாக்களும் பராணி, ஃபரிஷ்டா இன்னும் இவர்களைப் போன்றவர்களும் “கீழ்’ சாதி அல்லது ரஸில் சாதி முஸ்லிம்கள் மீதான சாதிய ஒடுக்குமுறைக்கு மத ரீதியாக இசைவாணை வழங்கவே முயற்சித்தனர். ரஸில் (கீழ்) சாதியினர் என்றழைக்கப்பட்டவர்கள், அஷ்ரஃப் (மேல்) சாதியினர் என்றழைக்கப்பட்டவர்களுக்குச் சேவை செய்வதற்கென்றே இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்றுகூட பராணி வாதிட்டுள்ளார். கீழ் சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்றழைக்கப்பட்டவர்களின் குழந்தைகள் தமது முன்னோர்களின் பரம்பரைத் தொழிலை மட்டுமே செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இதற்கு மாறாக, தமது குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க எவராவது துணிந்து செயல்பட்டால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“”குரான், தொழுகை, நோன்பு ஆகியவற்றுக்கு அப்பால், மேலான அறிவை ரஸில் என்றழைக்கப்படும் கீழ் சாதியினருக்கு அளிக்கக் கூடாது; இவ்வாறு செய்வது நாய்கள், பன்றிகளின் முன்பு விலையுயர்ந்த முத்துக்களைப் பரப்பி வைப்பதைப் போன்றதாகும்!” இவ்வாறு மக்தும் ஜஹானியான்இஜஹாங்கஷ்ட் என்றழைக்கப்பட்ட சையத் ஜலாலுதீன் புகாரி என்ற பிரபலமான சூஃபி அறிஞர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதைப் பற்றி காஸி சஜ்ஜத் ஹுசைன் தனது “”சிராஜுல் ஹேதயா” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மது அருந்துபவர்கள், கந்து வட்டிக்காரர்கள் மட்டுமின்றி, நாவிதர்கள், பிணம் கழுவுபவர்கள், சாயத் தொழிலில் ஈடுபடுபவர்கள், தோல் பதனிடுபவர்கள், செருப்பு தைப்பவர்கள், வில் செய்பவர்கள், சலவைத் தொழிலாளிகள் முதலானோருடன் சேர்ந்து மேல்சாதி முஸ்லிம்கள் உணவருந்தக்கூடாது என்று இந்த பிரபலமான சூஃபி அறிஞர் வலியுறுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது. இவர் தமது வாதத்துக்கு வலுவூட்டுவதற்காக, இறைத்தூதர் முகமது நபிகளார் கூறியதாக ஒரு போலியான மரபை சான்றாதாரமாகக் கற்பிதம் செய்துக் காட்டியுள்ளார்.

மேல் சாதியினர் என்று கூறப்படுபவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்வதற்காகவே கீழ் சாதியினர் கடவுளால் படைக்கப்பட்டுள்ளனர் என்ற பார்ப்பனக் கோட்பாட்டைப் போன்றதுதான் இந்தக் கருத்து. பார்ப்பனர்களின் வேத நூலான மனுதர்மத்தின் நேரடி நகலைப் போன்றதுதான் இது! இதனால்தான் சாதிய பாரபட்சத்தை உயர்த்திப் பிடிக்கும் இத்தகைய உலேமாக்களை “”மனுவாதிகள்” என்று நான் அழைக்கிறேன். ஒடுக்கப்பட்ட சாதிகளிடம் பார்ப்பனர்கள் எத்தகைய மனப்பான்மையைக் கடைபிடிக்கிறார்களோ, அதிலிருந்து இந்த உலேமாக்களின் மனப்பான்மையை வேறுபடுத்திப் பார்க்கவே முடியாது.

“மாபெரும்’ மொகலாயப் பேரரசரான அக்பர், ரஸில் சாதியினர் என்றழைக்கப்படுவோருக்குக் கல்வி அளிக்கப்பட்டால், பேரரசின் அடித்தளமே ஆட்டங்கண்டுவிடும் என்று பிரகடனப்படுத்தியுள்ளதாக அப்துல் காதிர் படாயுனி தனது “”முன்டகாப்அல்தாவாரிஹ்” நூலில் குறிப்பிட்டுள்ளார். பேரரசர் ஒளரங்கசீப்இன் ஆணைப்படி தொகுக்கப்பட்ட “”ஃபடாவாஇஆலம்கிரி” என்ற ஹனாஃபி சட்டவியல் கருத்துரைத் தொகுதியில் “கீழ்’ சாதியினர் பற்றி இதேபோன்ற கருத்துக்கள் காணப்படுகின்றன. கடைசி மொகலாயப் பேரரசரான பகதூர்ஷா ஜாஃபரும் இவற்றிலிருந்து வேறுபட்டவராக இல்லை.

பல நூல்களைத் தேடிப்படிக்கும்போது, 24.5.1857 நாளிட்ட “”டெல்லி உருது அக்பர்”இல் ஒரு செய்தி அறிக்கையைக் கண்டேன். அது பின்வருமாறு கூறுகிறது: பிரிட்டிஷாருக்கு எதிரான எழுச்சியைத் தொடர்ந்து 500 பேர் கொண்ட படையொன்றைக் கட்டியமைக்க தயாரிப்புகளை மேற்கொள்ளுமாறு மாமன்னர் பகதூர்ஷா ஆணையிட்டார்; ஆனால், அந்தப் படையினர் அஷ்ரஃப் (மேல்) சாதியினராக இருக்க வேண்டும்; “கீழ்’ சாதியினர் எவரும் அதில் இருக்கக் கூடாது என்று குறிப்பாக உத்தரவிட்டார். —இதிலிருந்து தெரிவது என்ன? இந்தியாவில் “இஸ்லாமிய’ ஆட்சிக் காலத்தின் “பொற்காலம்’ என்று மிகப் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் எழுத்தாளர்கள் சளைக்காமல் ஏற்றிப் போற்றிய காலத்தின் நிலைமையே இதுதான். சாராம்சத்தில் இப்”பொற்கால’ ஆட்சிகள், மனுவாத முஸ்லிம்கள் மற்றும் இந்து மேட்டுக்குடியினரின் ஆட்சிகளாகவே இருந்தன. இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் இருந்த “கீழ்’ சாதியினர் என்று சொல்லப்படும் மக்களை, இந்த மேட்டுக்குடி கும்பல் ஆதிக்கம் செலுத்தி ஒடுக்கினர் என்பதே உண்மை.

பல மன்னர்களும், உலேமாக்களும் சாதிய அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்த போதிலும், அவர்களில் சிலர் இதற்கு எதிராகவும் இருந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, சுல்தான் முகமது காஸ்நவி தமது அடிமையான அயாஸ் என்பவரை பஞ்சாபின் ஆளுநராக நியமித்தார். ஹஜ்ஜம் எனப்படும் நாவிதர் சாதியைச் சேர்ந்த இந்துவான திலக் என்பவரைத் தமது தலைமைத் தளபதியாக நியமித்ததுடன் “”ராஜா” என்ற பட்டத்தையும் அவர் வழங்கினார். சுல்தான் சகாபுதீன் கோரி, தமது அடிமையான குத்புதீன் ஐபக் என்பவரை இந்தியாவில் தனது ஆளுநராக நியமித்தார். ஐபக், தனது அடிமையான சம்சுதீன் அல்டுமிஷ் என்பவரை குவாலியர், புலந்த்சாகர், படாயுன் ஆகிய பகுதிகளுக்கான ஆளுநராக நியமித்தார்.

சுல்தான் அலாவுதீன் கில்ஜி, பல உயர் பதவிகளில் சையதுகள் மற்றும் அஷ்ரஃப் என்றழைக்கப்பட்ட “மேல்’ சாதியினரை அமர்த்திய போதிலும், தனது வேலையாளான மாலிக் உத்துஜ்ஜார் ஹமீதுத்தீன் முல்பானி என்பவரைத் தலைமை நீதிபதியாக (காஸி உல் காஸட்) நியமித்தார். குஜராத்தின் புர்வா எனப்படும் சாமர் சாதியைச் சேர்ந்தவரும் இஸ்லாமிய மதத்துக்கு மாறியவருமான மாலிக் காபூர் என்பவரைத் தனது தலைமை அமைச்சராகவும் அவர் நியமித்தார். சுல்தான் முகமது பின் துக்ளக், சுல்தானா ரஸியா, சுல்தான் குத்புதீன் முபாரக் ஷா கில்ஜி ஆகியோரும் “கீழ்’ சாதியினர் என்று கூறப்படுபவர்களை உயர் பதவிகளில் அமர்த்தினர்.

கேள்வி: இந்திய வரலாற்றின் இடைக்காலத்தைச் சேர்ந்த “”மனுவாதி உலேமாக்கள்என்று உங்களால் அழைக்கப்படுபவர்கள், பார்ப்பனர்களைப் போலவே சாதிய பாரபட்சத்தை ஈவிரக்கமின்றி உறுதியாக உயர்த்திப் பிடித்த போதிலும், கீழ் சாதியினர் என்று கூறப்படும் கோடிக்கணக்கான இந்துக்கள் இஸ்லாமிய மதத்தை எப்படி ஏற்றுக் கொண்டனர்?

பதில்: இதற்கான காரணம், சாதிய பாரபட்சம் இந்துக்களிடம் இருப்பதைவிட, முஸ்லிம்களிடம் எப்போதும் கடுமை குறைவாக இருப்பதேயாகும். மேலும், இஸ்லாமிய மார்க்கத்தில் சாதிக்கு மதரீதியில் எப்போதுமே இசைவாணை கிடையாது என்பது இன்னொரு காரணமாகும். இந்திய முஸ்லிம்கள் மத்தியில் சாதி வேறுபாடுகள் பலமாக நீடித்து வந்துள்ள போதிலும், தீண்டாமை என்பது நடைமுறையில் அவர்கள் அறியாத விசயம்தான். இருப்பினும், மத்திய காலத்தைச் சேர்ந்த பல இஸ்லாமிய மன்னர்கள் கீழ்வர்க்கத்தினரை தமது அரசவைகளில் அடியெடுத்து வைக்க அனுமதித்ததில்லை; அல்லது, அப்படி ஒரு சிலர் அனுமதித்தாலும், அவர்கள் வாய்திறந்து பேசுவதற்கு அனுமதித்ததில்லை. ஏனெனில், அவர்கள் “புனித’ மற்றவர்களாக “அசுத்த’மானவர்களாகக் கருதப்பட்டனர் என்று பிரபல வரலாற்று ஆசிரியரான கன்வர் மொகம்மத் அஷ்ரஃப், தனது “”இந்துஸ்தானி மாஷ்ரா அக்த்இஉஸ்தா மெய்ன்” நூலில் குறிப்பிடுகிறார்.

கேள்வி: “இஸ்லாமியஆட்சிக் காலத்தைச் சேர்ந்த “மேல்சாதி முஸ்லிம் எழுத்தாளர்களும் உலேமாக்களும் சாதிய அமைப்புக்கு மதரீதியாக இசைவாணை வழங்க முயற்சித்திருக்கலாம். ஆனால், அதற்குப் பிந்தைய காலத்தில் இந்த நிலையிலிருந்து நிச்சயம் சில மாறுதல்கள் ஏற்பட்டிருக்க வேண்டுமே?

பதில்: இப்போது அந்த விசயத்துக்கு நான் வருகிறேன். “”ஜிந்தகிஇநவ்” இதழுக்கு நான் எழுதிய சில கட்டுரைகளில், காலனிய ஆட்சிக் காலத்தில் இருந்த பிரபலமான உலேமாக்கள் பற்றியும், இப்போதைய சமகால இந்தியாவிலுள்ள உலேமாக்கள் மற்றும் உலேமாக்களின் அமைப்புகள் பற்றியும் நான் பரிசீலித்தேன். பாரெல்விஸ், தியோபண்டிஸ், ஹல்இஹதித், ஜமாத்இஇஸ்லாமி, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் போன்ற அமைப்புகளைப் பரிசீலித்தேன். குறிப்பாக, திருமண உறவு பற்றிய விசயங்களில், இவர்கள் சமூக சமத்துவம் அல்லது காஃபா பற்றிய கருத்தாக்கத்தை எப்படிக் கையாண்டனர் என்பதைப் பரிசீலிப்பதில் நான் கவனத்தைக் குவித்தபோது, அவர்களுக்கிடையில் வியப்பிற்குரியதொரு கருத்தொற்றுமை நிலவுவதைக் கண்டேன்.

சாதியைச் சட்ட சம்மதம் கொண்டதாக்குவதற்கு காஃபா பற்றிய கருத்தாக்கத்தைத் தமது ஹனாஃபி மரபில் பாரெல்விஸ் மற்றும் தியோபண்டிஸ் அமைப்பினர் பயன்படுத்துகின்றனர். அஷ்ரப் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களின் மேன்மையையும் ரஸில் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களின் தாழ்நிலையையும் இவர்கள் சட்ட மரபாக்குகின்றனர். சமூகத் தகுதி பற்றிய விசயத்தில் ஹனாஃபி மரபினர் மிகவும் கறாராக இருக்கின்றனர். எனவே, காஃபா பற்றிய விசயத்தில் பிறப்பு அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாக்குகின்றனர். ஹனாஃபி சிந்தனை மரபு உருவான ஈராக்கைச் சேர்ந்த குஃபாவில் சமூக ஏற்றத்தாழ்வுகள் மலிந்திருந்ததும், அவற்றை அது நியாயப்படுத்த முனைந்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். சன்னி சட்டப்பள்ளியைப் பின்பற்றுகின்ற அராபிய மையத்துக்கு வெளியில் உருவாகி வளர்ந்த ஷஃபி, ஹன்பாலி போன்ற மரபுகளும் இதே கருத்தைத்தான் கொண்டுள்ளன.

ஆனால், இமாம் ஷஃபி, இமாம் அகமது பின் ஹன்பால் ஆகிய இருவரும் பிறப்பு அடிப்படையிலான காஃபாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிறப்பு அல்லது குடும்பத்தை அடிப்படையாக்குவதற்கு நேர்மாறாக, மாலிகி சிந்தனைப் பிரிவு விதிவிலக்காக நிமிர்ந்து நிற்கின்றது. காஃபாவைத் தீர்மானிப்பதில் பிறப்பை ஒரு காரணியாகக் கொள்ளாமல், கடவுட்பற்றையே அடிப்படைக் காரணியாக மாலிகி சிந்தனைப் பிரிவு கருதுகிறது. இதுதான் உண்மையான இஸ்லாமிய அளவுகோலாகும். மாலிகி சிந்தனைப் பிரிவைத் தோற்றுவித்தவரான இமாம் மாலிக் உண்மையான இஸ்லாமிய போதனையின் மையமான மெதினாவில் வாழ்ந்தது ஒருவேளை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஹனாஃபி மரபினர் தமது பெரும்பாலான மதரசாக்களில் பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற மடமையை இன்னமும் போதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நான் பயின்ற மதரசாவில் சாதி என்பது இஸ்லாமியத் தன்மையற்றது என்றும், அதை நாம் தகர்க்க வேண்டும் என்றும் நாங்கள் போதிக்கப்பட்டோம். ஆனால் தியோபண்டி மரபு மதரசாக்களில், பிறப்பை அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாகக் கொண்ட காஃபா என்ற பொருளில், “”சாதி என்பது இஸ்லாமியத் தன்மையுடையது” என்று கற்பிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால், இந்தியாவிலுள்ள மிக அதிக எண்ணிக்கையிலான பாரம்பரிய மதரசாக்கள், இந்த விசயத்தில் இஸ்லாமிய மார்க்கத்துக்கு உண்மையானவையாக இல்லாமல், ஹனாஃபி சட்டவியல் விதிகளின் அடிப்படையில் போதிப்பவையாக இருப்பதுதான். இதற்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளது.

18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷா வலியுல்லா, இந்தியாவின் பிரபலமான முன்னணி இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவர்; சன்னி பிரிவைச் சேர்ந்த சிந்தனை மரபினர் பலர், இவரைப் பெரிதும் மதித்தனர்; இவர் பிறப்பு அடிப்படையிலான காஃபாவை உறுதியாக ஆதரித்து உயர்த்திப் பிடித்தவராவார். காஃபா என்பது ஒருவரின் இயற்கையிலேயே உள்ளார்ந்து உறைந்திருப்பது என்றும், தமது சொந்த காஃபாவுக்கு வெளியில் மணஉறவு கொள்வதானது, கொலை செய்வதை விடவும் அபாயகரமானது என்றும் அவர் தனது “”ஹுஜ்ஜாத்துல்லா அல் பாலிகா”, “”ஃபிக்இஉமர்” ஆகிய நூல்களில் குறிப்பிட்டுள்ளார். இறை தூதருடன் இருந்த அவரது சகாக்களில் பலர் அடிமைப் பெண்களை மணந்த பல நிகழ்வுகள் இஸ்லாமிய வரலாற்றில் காணப்பட்ட போதிலும், இந்த அறிஞர் அதைப் பொருட்படுத்தவில்லை. இறைதூதர் நபிகளார், தமது அத்தை மகளான ஜைனப் பிந்த்இஜஹாஷ்க்கு விடுவிக்கப்பட்ட தனது அடிமையான சையத்ஐ மணமுடித்து வைத்தார். தனது மாமன் மகளான ஜுபா ஏ பிந்த்இஜுபைர்க்கு நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த மிக்தாத் என்பவரை மணமுடித்துள்ளார்.

தீவிர ஹனாஃபி ஆதரவாளர்களான தியோபண்டி மரபினர், பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற கருத்தாக்கத்தைத் தீவிரமாக ஆதரித்துச் செயல்படுத்துவோராக உள்ளனர். “”தியோபண்ட் இயக்கமும் சஹரான்பூர் முஸ்லிம்களும்” என்ற நூலின் பாகிஸ்தானிய ஆசிரியரான குலாம் முஸ்தஃபா, அதில் பின்வரும் முக்கிய விசயத்தைச் சொல்லியுள்ளார். தியோபண்ட் மதரசாவை நிறுவியவர்களில் ஒருவரும், ஷேக் சாதியைச் சேர்ந்தவருமான மௌலவி காசிம் நானோத்வி, நான்கு சாதியினரை மட்டுமே இறைவன் தமது மதத்துக்குச் சேவை செய்யப் படைத்துள்ளார் என்று அறிவித்துள்ளாராம்; சையத், ஷேக், மொகல், பத்தான் ஆகியவையே இந்நான்கு சாதிகளாம்!

தியோபண்டி மரபைச் சேர்ந்த மற்றொரு நூலாசிரியரும், தியோபண்ட் மதரசாவின் முதல் முஃப்தியுமான மௌலானா அஸிசுர் ரஹ்மான் உஸ்மானி, பின்வரும் முக்கிய விசயத்தைச் சொல்கிறார். அஷ்ரஃப் சாதியைச் சேர்ந்த ஒரு பெண், தனது தந்தை, பாட்டன் போன்ற தனது ஆண் காப்பாளனின் (அவ்லியா) அனுமதியின்றி, ரஸில் சாதியைச் சேர்ந்த ஒரு ஆண்மகனைத் திருமணம் செய்வாரானால், அந்தத் திருமணம் உண்மையிலேயே நடந்ததாகக் கருத முடியாது; எனவே, அந்தத் திருமணத்தை முறிப்பது (ஃபஸ்க்இநிக்காஹ்) என்ற பிரச்சினைக்கே இடமில்லை என்று அவர் அறிவிக்கிறார். தியோபண்ட் மதரசாவால் வெளியிடப்பட்ட “”ஃபடாவா இ தார்உல்உலும் தியோபண்ட்” என்ற தியோபண்டி ஆணைகளின் (ஃபத்வா) தொகுப்பில் இந்த விசயம் கூறப்பட்டுள்ளது.

அவர் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அவருடைய வாதத்திலிருந்து தெரிவது என்னவென்றால், இத்தகைய மண உறவுகளில் பிறக்கும் குழந்தைகள் முறைகேடாகப் பிறந்தவர்கள்; இத்தம்பதியினரும் ஒழுக்கக் கேடானவர்கள்; இவர்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி, நூறு கசையடி தரப்பட வேண்டும்! இருப்பினும், ஒரு “கீழ்’ சாதிப்பெண் தனது நெருங்கிய ஆண் காப்பாளனின் (அவ்லியா) அனுமதி இல்லாமலேயே “மேல்’ சாதி ஆண்மகனைத் திருமணம் செய்து கொள்ள இந்த உஸ்மானி அனுமதித்திருப்பார் என்பதை நாம் துணிந்து கூற முடியும். உண்மையில், இது பார்ப்பனிய மனோபாவத்தையும் அதேபோல முஸ்லிம்களிடம் உள்ளார்ந்து ஆழப்பதிந்துள்ள மூத்த குல ஆணாதிக்கத்தையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

தியோபண்டி மரபைச் சேர்ந்த இன்னுமொரு இஸ்லாமிய அறிஞரான மௌலவி முகம்மது சகாரியா சித்திகி என்பவர், இன்றைய உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய இயக்கமான தப்லிஹி ஜமாத் இன் தலைமைச் சித்தாந்தவாதியாவார். “”மெய்யான சமயப் பணிகளின் நற்பேறுகள்” என்ற தமது நூலில் அவர், “”முஸ்லிம்களின் ஒரு குழு, மெக்காவுக்குப் புனிதப் பயணம் (ஹஜ்) அல்லது வேறிடத்துக்குப் பயணம் மேற்கொள்ளுமானால், அவர்கள் தம்மில் ஒருவரைத் தலைவராக (அமிர்) நியமிக்க வேண்டும்; இந்தக் குழுவில் குரைஷி (சைய்யத் அல்லது ஷேக்) சாதியைச் சேர்ந்தவர் எவராவது இருப்பின், அவரையே தலைவராக நியமிப்பது சிறந்தது” என்று கூறுகிறார். அவர் முஸ்லிம்களை அஷ்ரஃப் (“மேல்’ சாதி) என்றும் அர்ஸல் (“கீழ்’ சாதி) என்றும் வகைப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முதலாவது அரசாங்க முஃப்தியாக (முஃப்திஇஆஜம்) பின்னாளில் அமர்த்தப்பட்ட தியோபண்டி முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி எழுதிய, “”நிஹாயத் அல்அராப் ஃபிகாயத் அல்நஸ்ப்” என்ற சர்ச்சைக்குரிய சாதி பற்றிய நூலையும் இவர் ஆதரித்தார். தியோபண்டி உலேமாக்கள் பலராலும் ஆதரிக்கப்பட்ட இந்த நூலில், அஷ்ரஃப் சாதிகள் என்றழைக்கப்பட்ட நான்கு வகை சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இறுதித் தீர்ப்பு நாளில் இறைவன் தனிச்சிறப்பாகக் கருணை காட்டுவார் என்று இந்த உஸ்மானி கூறியிருக்கிறார். முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி தமது இந்த நூலில், சக தியோபண்டி அறிஞரான அகமத் உஸ்மானி என்பவரின் ஒரு கட்டுரையும் இடம்பெறச் செய்திருந்தார். அந்தக் கட்டுரையில், “கீழ்’ சாதியினர் என்றழைக்கப்பட்டவர்கள் கல்வி கற்கத் தொடங்கியதால்தான் எல்லாவகையான இடர்ப்பாடுகளும் ஆரம்பித்தன என்று அகமது உஸ்மானி எழுதியிருக்கிறார்!

இன்னுமொரு முன்னணி தியோபண்டி அறிஞரான மௌலவி அஷ்ரஃப் அலி ஃபரூக்கி தான்வி என்பவர், முஸ்லிம் நெசவாளர்களைச் சிறுமைப்படுத்தும் சொற்களில் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் நெசவாளர்கள் தொழுகை செய்வது பற்றி தனது “”அல்ரஃபிக் ஃபிசவாய் அல்தாரிக்” நூலில் அவர் எள்ளி நகையாடினார். முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி என்பவரின் “”நிஹாயத் அல்அரப் ஃபிகாயத் அல்நஸ்ப்” என்ற நூலை ஆதரித்து, அவர் எழுதி “”வாஸ்லஸ் சபாப் ஃபி ஃபாஸ்லின் நஸ்ப்” என்ற தனது நூலில் நெசவாளர் சாதியினரை வெறுப்புடன் “”ஜுலாஹா” என்று குறிப்பிட்டார். அன்சாரிகள் (“”உதவி செய்பவர்கள்”) என்று நெசவாளர்கள் தம்மை அழைத்துக் கொள்வதை அவர் கண்டனம் செய்தார்.

இவ்வாறு அவர்கள் தம்மை அழைத்துக் கொள்வது, ஒருவர் தமது குடும்ப மரபை அல்லது பரம்பரையை மாற்றிக் கொள்ளும் செயலாகும்; மெக்காவிலிருந்து மெதினாவுக்குச் சென்று அங்கு இறைதூதர் வாழ்ந்தபோது அவருக்கு உதவி செய்த மெதினாவைச் சேர்ந்த அன்சார்களின் வழித்தோன்றல்கள் என்று உரிமை பாராட்டுவதாகும்; இது தவறானதும் தடை செய்யப்பட்டதுமாகும் என்று தான்வி வாதிட்டார். தமது வாதத்துக்கு வலுசேர்க்க, இறைதூதர் கூறியதாக ஒரு வழிவழிச் செய்தியை இட்டுக்கட்டி கூறினார். தனது தந்தையைத் தவிர வேறொருவருக்கு மகன் என்று உரிமை பாராட்டும் ஒருவன் விண்ணுலகை அடையமாட்டான் என்பதே இறைதூதர் கூறியதாகச் சொல்லப்படும் அந்த வழிவழிச் செய்தியாகும்.

ஷப்பிர் அகமது ஹக்கீம் என்ற முஸ்லிம் அறிஞர், தான்வியின் “மசாவத்இ பகார்இ ஷாரியத்” என்ற இன்னொரு நூலிலிருந்து ஒரு மேற்கோளை எடுத்தாண்டுள்ளார். ஜுலாஹாஸ் (நெசவாளர்கள்), நயிஸ் (நாவிதர்கள்) ஆகியோரைத் தூய முஸ்லிம்கள் தமது இல்லங்களில் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று தான்வி அதில் வாதிடுகிறார். மேலும், சைய்யது சாதி தந்தைக்கும் சைய்யது அல்லாத தாய்க்கும் பிறக்கும் குழந்தை தூய சைய்யது தம்பதியினருக்குப் பிறக்கும் குழந்தையைவிட சமூகத் தகுதி குறைந்தது என்று தான்வி “”பாஹிஸ்டி ஜேவார்” என்ற தனது நூலில் வன்மத்தோடு வாதிடுகிறார். இதே விசயத்தைத்தான் பிராமணர்கள் ஏற்றிப் போற்றும் மனுவும் தனது மனுதர்ம சாஸ்த்திரத்தில் (மனுஸ்மிருதி) சொல்லியிருக்கிறார்! சைய்யதுகள், ஷேக்குகள், மொகல்கள், பத்தான்கள் ஆகியோர் “மரியாதைக்குரிய மேல்குடி’ (ஷரிப்) சாதியினர் என்றும், எண்ணெய் பிழிபவர்கள் (டெலி), நெசவாளர்கள் (ஜுலாஹா) ஆகியோர் “கீழ்’ சாதிகள் (ரஸில் அக்வம்) என்றும் “”இம்தாத் உல்ஃபடாவா” என்ற தனது நூலில் தான்வி அறிவித்தார்.

இவர், இஸ்லாத்துக்கு மதம் மாறிய அராபியர் அல்லாதவர்களை “”நவ்முஸ்லிம்கள்” என்று குறிப்பிடுகிறார். காந்தானி முசல்மான் எனப்படும் பாரம்பரியமாக உறுதிப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் திருமண உறவுக்கான காஃபாவுக்கு, நவ்முஸ்லிம்கள் கருதத்தக்கவர்களே அல்ல என்று இவர் வாதிடுகிறார். பத்தான்கள் அரபுவழி வந்தவர்கள் அல்ல என்பதால் அவர்களும் நவ்முஸ்லிம்கள்தாம் என்கிறார். அரபுவழி வந்தவர்களான சையத்துகள், ஷேக்குகளின் காஃபா வேறானது; எனவே அவர்களுடன் நவ்முஸ்லிம்களான பத்தான்கள் கலப்பு மணம் புரியக்கூடாது என்று எச்சரிக்கிறார்.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் முதலாவது தலைவரும், தியோபந்த் மதரசாவின் துணைவேந்தருமான மௌலவி காரி மொகம்மது தய்யீப் சித்திகி என்பவரும்கூட, சாதியத்தின் ஆதரவாளராக இருந்தார். — இவை எனது ஆய்வில் நான் கண்டறிந்த உண்மைகளாகும்

நூல்: இஸ்லாத்தில் மனுவாதிகள் – வெளியீடு: கீழைக்காற்று பதிப்பகம் – விலை ரூ. 6.00

கிடைக்குமிடம்:
கீழைக்காற்று. 10, ஔலியா சாகிப் தெரு,  எல்லீசு சாலை, சென்னை – 600 002 தொலைபேசி – 044 2841 23677
மேலும் விவரங்களுக்கு

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்