Sunday, June 21, 2026
முகப்பு பதிவு பக்கம் 148

இலங்கை அரசின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட (ATA) வரைவு: ஐ.எம்.எப்-ன் (IMF) வேட்டைக்காக இலங்கை மக்கள் மீதான கொடும் தாக்குதல்

மார்ச் 21 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மசோதா (ATA – Anti-Terrorism Act) கொண்டு வரப்பட்டிருக்கிறது. இலங்கையில் ஏற்கனவே 1979 ஆம் ஆண்டில்  பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PTA – Prevention of Terrorism Act) ஒன்று கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் துணைகொண்டு குறிப்பாக தேசிய இன உரிமைகளுக்காக போராடிய தமிழ் இளைஞர்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டனர்.

இதன் பின்னர் 2019 ல் புதிதாக ஒரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை (CTA) கொண்டு வர எடுக்கப்பட்ட இலங்கை அரசின் முயற்சி மக்கள் போராட்டத்தால் முறியடிக்கப்பட்டது.

தற்போது மீண்டும் இலங்கை அரசு கொண்டு வரவுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) என்பது இலங்கையின் இரண்டேகால் கோடி மக்களையும் பயங்கரவாதிகளாக சித்தரித்து வடிவமைக்கப்பட்டுள்ள சட்ட வரைவாகும். பயங்கரவாதம் என்றால் என்ன என்பது பற்றிய வரைவிலக்கணங்களைக் கூட வரையறுக்காமல் இச்சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்தை எதிர்த்துப் பேசுகின்ற, விமர்சிக்கின்ற, தவறுகளை ஜனநாயகரீதியாக முன்வைக்கின்ற அனைவரையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கின்ற காட்டுமிராண்டித்தனமான சட்டமாக இது கொண்டு வரப்பட இருக்கிறது.

படிக்க: மலையகத் தமிழ் மக்களை “இலங்கை வாழ் இந்தியத் தமிழர்” என குறிப்பிடுவது திட்டமிட்ட உள்நோக்கமுடையது | இலங்கை பு.ஜ.மா.லெ. கட்சி

இலங்கை அரசு கொண்டுவரவுள்ள சட்டத்தின் மூலம் சாதாரண சப் இன்ஸ்பெக்டர் ஒரு இலங்கை குடிமகனின் ஆடையைக் கழற்றி பரிசோதனை செய்யும் அதிகாரம் வழங்கப்படுகிறது. கைவிரல் ரேகையைப் பெற வேண்டுமானால் நீதிமன்றத்தில் சென்று அனுமதி பெற வேண்டும் என்ற நிலையை மாற்றி சாதாரண போலீசுக்கு அந்த வாய்ப்பை இச்சட்டம் வழங்குகிறது. இச்சட்டம் போலீசு அதிகாரிகளுக்கு மிகப்பெரிய அதிகாரத்தை வழங்குகிறது.

இலங்கையினுடைய அதிபர் நினைத்தால் எந்த ஒரு அரசியல் கட்சியையும், இயக்கத்தையும், தொழிற்சங்க இயக்கத்தையும் பயங்கரவாத அமைப்பு என அறிவித்து தடை செய்யக் கூடிய வாய்ப்பை இச்சட்டம் வழங்குகிறது. இம்முடிவை பரிசீலிக்க முறையிட வேண்டுமென்றாலும் இலங்கை அதிபரிடம்தான் முறையிட வேண்டும்.

இச்சட்டமசோதா நிறைவேற்றப்பட்டால், மக்கள் ஜனநாயக ரீதியாக பேசவோ, கருத்து தெரிவிக்கவோ முடியாத நிலை ஏற்படும். சங்கம் அமைக்க முடியாது. ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து பணியாற்ற முடியாது. துண்டுப் பிரசுரம் விநியோகிப்பதும், சுவரொட்டி ஒட்டுவதையும்கூட பயங்கரவாத நடவடிக்கையாக முத்திரை குத்த முடியும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையே  (PTA) அகற்ற வேண்டும் என்று அரசியல் இயக்கங்களும், மக்களும், சர்வதேச இயக்கங்களும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிற சூழ்நிலையில் இப்புதிய சட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது.

படிக்க: புரட்சிகர கட்சிக்காக ஏங்கும் இலங்கை மக்கள் போராட்டம் !

இப்புதிய சட்டத்தைக் கொண்டு வர தேவை என்ன? இலங்கையின் பொருளாதாரம் திவாலான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, அமெரிக்க அடியாளான ஐஎம்எப் (IMF) எனப்படும் உலக நாணய நிதியத்தின் கட்டுப்பாட்டில் இலங்கை அரசு கொண்டு வரப்பட்டுள்ளது. அரசின் அனைத்துத் துறைகளையும் தனியார்மயப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை ஐஎம்எப் இலங்கை அரசுக்கு விதித்திருக்கிறது.

இந்த நிபந்தனைகள் இலங்கை அரசால் வலுக்கட்டாயமாக நிறைவேற்றுகின்ற போக்கில் மக்கள் பன்மடங்காக கிளர்ந்தெழுவார்கள். அப்படி கிளர்ந்தெழுகின்ற மக்களை கொடூரமாக ஒடுக்குவதற்கே உத்தசே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) என்ற பெயரில் ஒரு சட்டத்தை இலங்கை அரசு கொண்டு வர இருக்கிறது.  இலங்கையில் உள்ள அனைத்து புரட்சிகர ஜனநாயக இயக்கங்களும், அரசியல் கட்சிகளும், உழைக்கும் மக்கள் அனைவரும் இச்சட்டத்தை முறியடிப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

மோடி அரசை விமர்சிக்கின்ற அரசியல் தலைவர்கள், அறிவுஜீவிகள், தொழிற்சங்கவாதிகள், தனிநபர்கள்  என அனைவரும் இந்தியாவில் ஊபா எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் வாயிலாக வரைமுறையின்றி ஒடுக்கப்படுவதை நாம் அறிவோம். ஏற்கனவே ஊபா சட்டத்தை (Unlawful Activities Prevention Act) மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் எதிர்க்கும் நிலையில், ஊபா சட்டம் குறித்து சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற காரணத்திற்காகவே ஒருவரை கைது செய்ய முடியும் என்று கூறுகிறது. ஏகாதிபத்திய கார்ப்பரேட் கும்பல், அதானி – அம்பானி கும்பல் ஆகியோரின் நலனுக்காக நாட்டின் வளங்களையும், அரசுத்துறைகளையும் தனியார்மயப்படுத்தி மக்கள் வாழ்வை சூறையாடும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் சூழலில் பாசிசமயமாகிவரும் அரசுகளிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

இந்தியாவில் உள்ள புரட்சிகர ஜனநாயக இயக்கங்கள், அறிவுஜீவிகள், உழைக்கும் மக்கள் அரசியல் கட்சிகள் என அனைவரும் இலங்கை அரசைக் கண்டனம் செய்ய வேண்டும். உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை (ATA) திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும். போராடும் இலங்கை மக்களுக்கு துணை நிற்க வேண்டும்.

நாடு முழுவதும் இலங்கை மக்களின் கடும் எதிர்ப்பாலும் எதிர்க்கட்சிகளும் வழக்கறிஞர்களும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாலும் இச்சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை தற்காலிகமாக தாமதப்படுத்தியுள்ளது இலங்கை அரசு.

அய்யனார்

Fascist Forces Encircling: Tamil Nadu won’t fall! Fight Relentlessly! | Pamphlet

Dear Working People!

Tamil Nadu always been a protesting site, then and now.
The name itself is a protesting weapon.
Yes, “Long Live Tamil Nadu!”
This has been the slogan of Tamil Nadu people during Pongal.

Not just election, Hindi also represent power.
This is known to Amit Shah.
And the Tamil Nadu people also understand it well.

The saffron mob was stunned
by the protests that took place in Tamil Nadu.
“Anti-Hindi sentiments have not yet faded”
This has shocked them.
Yes, Tamil Nadu is still protesting,
And we should be proud of that.

The ideology of Hindu – Hindi – India
is not only anti-Tamil Nadu, but also anti-Tamil
Tholkappiyam, Tirukkural, Sitham,
Samarasa Sanmarga – Tamil tradition
Yes, these are anti-Veda anti-brahminist tradition.

We seized Karnataka,
Next is Tamil Nadu and Kerala
cackled Modi-Amit Shah mob
But years passed by
In Tamil Nadu, BJP is wobbling
even to save the party.
Journey that started in Karnataka,
got stagnated in Karnataka.
Because, this is Tamil Nadu.

RSS rallies in every district
to instigate riots;
spread ethnic hate against
North Indian workers and Arunthathiyars;

Manu Dharma dishonouring women
Empty screams to arrest
Thiruma and A Raja who roared against it;
Creating panics through
Kovai car cylinder blast – Islamic terrorism;
Rumours on religious conversion when a
girl student died.. nothing worked.
Because, this is Tamil Nadu.

Arjun Sampath mob tried
saffronising Ambedkar
and tried to garland him.
Tamil Nadu gave them slipper shots.
Saffron fascist mob was shocked.

Saffron mob born in Tamil Nadu
tries to proselytize Tamil and Thiruvalluvar.
They have a treacherous mind.
Saffron mob pretends to give up
their lives for the sake of Tamil.
This is a Brahministic trick to persuade.

Sama, Dana, Beda, Danda were used
against Tamil Nadu
by the RSS mob.
But these became ineffective
like shooting with a bubble gun.
Because, this is Tamil Nadu.

But, the RSS – BJP; Ambani – Adani fascist mob
haven’t given up.

Parandur airport, Chennai-Salem eight-lane expressway,
hydrocarbon projects to destroy the delta…
Numerous such projects are carried out
to destroy farming in Tamil Nadu.

Thoothukudi Sterlite is for Agarwal..
Katupalli Port is for Adani..
Kavuthi-Vediyappan Hills is for Jindal..
Numerous Marwari, Gujarati, Sindhi, Brahmin, Baniya corporates
are exploiting the country.

A spy called RN Ravi
is the Governor of Tamil Nadu
The spies are infiltrating in
Police, Judiciary and civil administration.
Caste associations, rowdy mobs,
YouTube and cinema celebrities…
The sanghi mob tied everything
to penetrate Tamil Nadu.

The Modi – Nimmi mob is sucking
the blood of the states through GST,
and giving it as feast to
Ambani and Adani.
The backbones of the states are broken by
turning the workers into bonded labourers,
turning the farmers into dead meat,
throwing away fishermen and tribals,
amending hundreds of laws.

Through new laws like NEET, New Education Policy
the nervous system of states are being cut.
Imposing its fascist One Language, One Culture, One Religion
by destroying various linguistic, ethnic and cultural specialties.

The fascist mob roars 2024, One Nation One Election
is the establishment of Hindu Rashtra fascist monarchy
Ambani, Agarwal, Adani will be the Gods.
The RSS – BJP will be its foot soldiers.

Many states of the country are suppressed.
Some states had adhered.
What is Tamil Nadu going to do?
What are we, the Tamil people, going to do?

This is the soil of Tamil Sangams.
This is the soil where Siddhar, Valluvar and Vallalar lived.
This is where Periyar built his self-respect force.
This is the land which said “Pirappokkum ellaa uyirkkum” (By birth all are equal).
Keezhadi and Adichanallur are our traditions.

Pulithevan, Ondiveeran, Kattabomman, Velu Nachiyar, Marudhu Brothers,
Chinnamalai, Sundaralinganar, Azhagumuthu Kon, VOC, Singaravelu…
Our conscience for liberation is strong.

These discrete traditions of Tamil Nadu
act as as the nightmare of the RSS mob.

Let’s pledge on May 1,
The proletarian historical victory day!

Let’s make RSS’s nightmares come true!
Let’s the streets resound with:
Tamil Nadu won’t fall,
Fight relentlessly!

***

Let’s smash RSS – BJP; Ambani – Adani Fascism!
Let’s establish Anti-Fascist Democratic Republic!

  • RSS infiltration will destroy
    Mother tongue and
    Motherland!
  • Let’s uproot Hindi hegemony!
    Let’s uphold Tamil!
  • Let’s reject Hindu – Hindi – Hindurashtra which is against various nationality – ethnicity – culture
  • Let’s vanquish the attacks on Muslims, Christians and Dalits who are treated as second class citizens!
  • Let’s chase away the RSS – BJP,
    the henchmen of Marwari, Gujarati, Brahmin, Baniya corporates!
    Let’s uphold the anti-aryan anti-brahminist tradition of
    Valluvar, Vallalar, Siddhar, Periyar, Ambedkar!
  • Let’s take the tradition of freedom struggle of Pulithevan,
    Ondiveeran, Kattabomman, Velu Nachiyar, Marudhu Brothers,
    Dheeran Chinnamalai, Sundaralingam, Tipu Sultan, VOC, Singaravelu!
    Let’s smash Privatisation – Liberalisation – Globalisation!
  • Let’s get rid of the myths on pseudo -democratic structure!
    Let’s struggle to establish an anti-Fascist Democratic Republic!

On May 1!
Proletarian historical victory day!
Down with RSS – BJP; Ambani – Adani Fascism!

Fascist Forces Encircling:
Tamil Nadu won’t fall!
Fight Relentlessly!

Rally – Conference – Cultural Event
Palangantham, Near Natraj Theatre,
Madurai.

We welcome all the revolutionary and democratic forces!

People’s Art and Literary Association,
Revolutionary Students – Youth Front,
New Democratic Labour Front (State Coordination Committee),
People’s Power,
Tamil Nadu – Puducherry.

9791653200, 9444836642,
7397404242, 996236631



மதுரை : சாதித் தீண்டாமை வன்கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறும் அவலம்

மிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சாதித்தீண்டாமை வன்கொடுமைகள் முற்போக்கு, ஜனநாயக சிந்தனை கொண்ட, மனிதநேயமுள்ள அனைவரையும் வெட்கித் தலைகுனிய வைக்கிறது.

வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமையின் மீதான விவாதங்கள் கனன்று கொண்டிருக்கும்போதே அதே அளவுக்கு இணையாக மதுரையில் நடக்கும் சம்பவங்கள் தமிழகம் வேகமாக பின்னோக்கிச் செல்வதை உணர்த்துகின்றன.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பழையூர் பஞ்சாயத்து தலைவர் வித்யா, பட்டியல் வகுப்பைச் சார்ந்தவர். அவருக்கு அப்பஞ்சாயத்தில் இருக்கும் ஆதிக்கசாதியினர் இழைத்த கொடுமைகள் வேங்கைவயலை விட கொடுமையாக உள்ளது. “பழையூர் ரேசன் கடை முன்புள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கழித்தது, அதே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் பைப் லைன்களை அறுத்தது, சாதியைச் சொல்லித் திட்டியது, ஊராட்சி மன்ற வாசலில் மலம் கழித்தது, கிராமசபைக் கூட்டம் நடத்த விடாமல் தடுப்பது, குளியல் தொட்டியில் 15 தடவை மலம் கழித்தது” ஆகிய கொடூரமான வன்கொடுமைகள் மூலம் தன்னைப் பணி செய்யவிடாமல் தடுப்பதாக வித்யா கூறுகிறார். “வன்கொடுமை திருத்தச்சட்டத்தின் கீழ் சாதிவெறிக் கும்பலை கைது செய்ய வேண்டும், சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” எனவும் தமிழ்நாடு அரசிற்கு புகார் அனுப்பியுள்ளார்.

“பழையூரில் ஆதிக்கசாதியைச் சார்ந்த இரண்டு சாதியினருக்கு தனியே சமுதாயக் கூடம் உள்ளது. தற்போது அனைத்து சாதி மக்களுக்கும் பொதுவான சமுதாயக்கூடம் ஒன்று அரசின் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இதனால் தங்களது வருமானம் பாதிக்கப்படும் என்று ஆதிக்கசாதியினர் இவ்வன்கொடுமைகளை செய்திருக்கலாம்” என இது  குறித்து விசாரணை நடத்திய மதுரை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவின் டி.எஸ்.பி கருப்பையா மாவட்ட கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். பொருளாதாரம் என்பதைத் தாண்டி பட்டியலின மக்களும், தாங்களும் ஒரே இடத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதா என்ற சாதித் தீண்டாமை கண்ணோட்டமே முக்கியமான காரணமாக இருக்க முடியும்.

படிக்க: மதுரை: தலித்துகள் மீதான ஆதிக்க சாதியினரின் கொலைவெறித் தாக்குதல்!

போலீசோ, சாப்டூர் காவல்நிலையத்தில் வித்யா கொடுத்த புகாரின் மீது எப்.ஐ.ஆர் பதிந்து நடவடிக்கை எடுக்காமல், வெறும் மனு ரசீதை மட்டும் கொடுத்துவிட்டு இருதரப்பையும் கூட்டி சமாதானம் பேசியுள்ளது.

இதேபோல் மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், அச்சம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும் பட்டியலின மாணவர்கள் அன்புதாஸ், சக்திவேல் இருவரும் அங்குள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர்.

மார்ச் 21 அன்று  மாணவர்கள் இருவரும் அருகில் உள்ள ஆலம்பட்டிக்கு சென்று அங்குள்ள ஆதிக்க சாதியைச் சார்ந்த சந்தோஷ் என்பவரது கடையில் மிட்டாய் வாங்கியுள்ளனர். மாணவர்கள் இருவரையும் மிட்டாய் திருடியதாகக் குற்றம் சுமத்தி, சந்தோஷும் அவரது உறவினர்களும் தூணில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இதன் பின்னர் மாணவர் சக்திவேலின் உறவினர் ஒருவர், தாக்கியவர்களிடம் சமாதானம் பேசி, கட்டி வைத்து தாக்கப்பட்ட மாணவர்களை விடுவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் நல விடுதியின் காப்பாளர் விஜயன்,  மாணவர்கள் இருவரையும் விடுதியை விட்டு அனுப்பியுள்ளார்.

இச்செய்தி ஊடகங்களில் வெளியானதால், குற்றவாளி சந்தோஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குழந்தைகள் மீதான வன்முறை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்படவில்லை. ஆதிதிராவிடர் நல விடுதி காப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தச் செய்திகளும் ஏப்ரல் 3 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக கள ஆய்வு மேற்கோண்டபோதுதான் தெரிய வந்துள்ளது.

படிக்க: மலத்தைவிடக் கொடியது சாதிய அரசு!

தொடர்ந்து நடைபெறும் இத்தகைய தீண்டாமை வன்கொடுமைக் குற்றங்களில் அரிதினும் அரிதாகவே குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதிகார வர்க்கமே சாதிவெறியர்களை பாதுகாக்கும் இடமாகவும் உள்ளது. வேங்கைவயல் சம்பவம் சமீபத்திய உதாரணம். இவையனைத்தும் ஆதிக்கசாதி வெறியர்களுக்கு மேலும் உரமேற்றுகிறது.

ஒரு பக்கம் தமிழ்நாடு, வடமாநிலங்களை விட முன்னேறியுள்ளது என்று சொல்லிக் கொண்டாலும், சாதி ஒடுக்குமுறைகளில் முன்னணியிலேயே உள்ளது என்பது சமூகத்தை ஜனநாயகப்படுத்த வேண்டிய தேவையை ஆழமாக உணர்த்துகிறது.

இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக போராடும் அதேசமயம், சாதி ஏற்றத்தாழ்வை நிலைநிறுத்தும் பார்ப்பனிய வர்ணாஸ்ரமக் கட்டமைப்பின் யோக்கியதையை உழைக்கும் மக்களிடம் தொடர்ச்சியாக, இயக்கமாக அம்பலப்படுத்த வேண்டும். அதோடு சாதி ஏற்றத்தாழ்வைப் பாதுகாக்கும் இந்த அரசுக்கட்டமைப்பை அகற்றுவதே நமது இலக்காக இருக்க வேண்டும்.

இனியன்

வீழாது தமிழ்நாடு – HD Video Song | பாடல் தொகுப்பு 1 | ம.க.இ.க சிவப்பு அலை | PALA Red Wave Official Song

வினவு யூடியூப் சேனலில் ம.க.இ.க சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழுவின் “வீழாது தமிழ்நாடு” பாடல்

வீழாது தமிழ்நாடு – HD Video Song | பாடல் தொகுப்பு 1
ம.க.இ.க சிவப்பு அலை | Red Wave Official Song

பாருங்கள் ! பகிருங்கள் !!

வேதாந்தா ஸ்டெர்லைட்டின் ஏஜெண்ட் ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டைவிட்டு வெளியேறு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

06.04.2023

தூத்துக்குடி போராளிகளின் ஒப்பற்ற தியாகத்தை இழிவுபடுத்தாதே!
வேதாந்தா ஸ்டெர்லைட்டின் ஏஜெண்ட் ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டைவிட்டு வெளியேறு!

கண்டன அறிக்கை

ல ஆண்டுகளாக தூத்துக்குடி மக்களையும் மண்ணையும் நாசமாக்கிய ஸ்டெர்லைட் வேதாந்தா காப்பர் நிறுவனத்துக்கு எதிராக 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி லட்சத்திற்கும் மேற்பட்ட தூத்துக்குடி மக்கள் வீரம் செறிந்த போராட்டம் நடத்தினர்.

கார்ப்பரேட் வேதாந்தாவின் அடியாட் படையாக செயல்பட்டு போலீசு துப்பாக்கி குண்டுகள் பொழிந்தது. 15 பேர் வரை துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகிப் போயினர். நூற்றுக்கணக்கானவர்கள் சிறைப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். இவ்வளவு பாதிப்புகளை மேற்கொண்டபோதும் ஸ்டெர்லைட்டை மூடாமல் தியாகிகளின் உடல்களைப்பெற மாட்டோம் என்று உறுதியாய் இருந்தனர் மக்கள். அப்படிப்பட்ட வீரம் செறிந்த போராட்டம் நடத்தியதன் விளைவாகத்தான் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் இழுத்து மூடப்பட்டது.

படிக்க : கொலைகார ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி! போராடும் தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்போம்! | மக்கள் அதிகாரம்

6 ஆண்டுகள் ஆன பிறகும் கூட இப்போது வரை ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரச்சாரத்துக்கோ ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் நினைவு நாளுக்கு போலீஸ் அனுமதி கொடுப்பதில்லை. மாறாக ஸ்டெர்லைட் ஆதரவு பிரச்சாரங்களை போலீசும் அரசு நிர்வாகமும் தொடர்ந்து அனுமதிக்கிறது.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் ஆளுநராக செயல்படும் ஆர்.என்.ரவி “வெளிநாட்டு நிதியில் பணம் பெற்று மக்களை தூண்டிவிட்டு அதனால் ஸ்டெர்லைட் மூடப்பட்டது” என்கிறார். ஆர்.என்.ரவியும் அவரின் தலைவர்களான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல் தமிழ்நாட்டு மக்களின் எதிரி என்பதை எப்போதும் நிரூபித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டுக்கு மோடி வருகின்ற வேளையில் ஆர்.என்.ரவி எதையும் தெரியாமல் உளரவில்லை ஆர்.என்.ரவியின் கருத்துதான் மோடியின் கருத்தும் ஆகும். எப்போதும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வை கொச்சைப்படுத்துவதும் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவும் செயல்படக் கூடிய இந்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தமிழ்நாட்டு மக்களால் முறியடிக்கப்பட வேண்டும் என்பதே ரவியின் பேச்சு நமக்கு உணர்த்தக்கூடிய உண்மை.

இனியும் இந்த ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உண்டு கொழுத்து தமிழ்நாட்டு மக்களையும் தியாகிகளையும் இழிவுபடுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஆகவே ஆர்.என்.ரவி உடனடியாக தமிழ்நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும். அது தொடர்பான சட்டசபையிலே தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் மருது
செய்தி தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு –  புதுவை
99623 66321.

டெல்டாவை பாதுகாப்போம்! || தோழர் மருது || வீடியோ

மிழ்நாடு தஞ்சை டெல்டா பகுதியை ஒழித்துக்கட்டுவதற்காக மோடி அரசு திட்டமிட்டிருக்கிறது. குறிப்பிட்ட பகுதிகளை தெரிவு செய்து நிலக்கரி சுரங்கம் அமைக்க நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாடின் டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிக்கப்பட்டுள்ள நிலையிலும் சூறையாட வருகிறார்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

இவங்க எல்லாம் சங்கிங்க | ம.க.இ.க சிவப்பு அலை | RED Wave | PALA Song | Audio Launch

மார்ச் 30 அன்று “சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு” என்ற பாடல் இசை வெளியீட்டு விழா மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்ப்பில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழுவினரால் வெளியிடப்பட்ட “இவங்க எல்லாம் சங்கிங்க” என்ற பாடல் காணொலி வடிவில் இங்கே வெளியிடுகிறோம்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணம்! ஏன் அவசியம்?

டந்த நான்கு மாதங்களில் எனது நட்பு வட்டத்தில் இருக்கும் நண்பர்கள் சிலர் சாதி மறுப்பு திருமணம் செய்திருக்கிறார்கள். ஆனால் அதில் ஒன்று கூட சடங்கு மறுப்பு, சுயமரியாதை திருமணமாக இருக்கவில்லை என்பதுதான் வருத்தம்.

இது பற்றி நண்பர்கள் சொல்லும்போது, “சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விருப்பம்தான். ஆனால் குடும்பத்தினரை உறவினர்களை அதற்கு சம்மதிக்க வைப்பது இயலாத காரியம்” என்றனர்.

இப்படி சொன்ன நண்பர்கள் அனைவரும் பெரியாரியம், மார்க்சியம் போன்ற கருத்துக்களை வாசிக்கக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அமைப்புக்களில் சேர்ந்து இயங்கக் கூடியவர்கள் அல்ல.

இவர்களுக்கு சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணத்தின் நோக்கமும் முக்கியத்துவமும் புரியவில்லை என்பது ஒருபக்கமிருக்கட்டும், இங்கே குறிப்பான பிரச்சினை என்னவென்றால், இந்த நண்பர்கள் அமைப்புக்களில் இயங்காத காரணத்தால் சாதியும் மதமும் சமூகத்தில் எப்படி நிறுவனமயமாக இயங்குகிறது என்ற கள யதார்த்தம் இவர்களுக்கு புலப்படுவதில்லை.

தாங்கள் பேசுவது முற்போக்கான கருத்து அதனால் தங்களது பெற்றோர்களை தங்களது வழிக்கு கொண்டுவந்து விடலாம் என்று இவர்கள் நினைக்கின்றனர். ஆனால் குடும்பம் எப்படி நிறுவனமயப்பட்ட அதிகாரமாக இருக்கிறது என்பதை நண்பர்கள் புரிந்துகொள்வதில்லை. அந்த அதிகார மையத்தை உதிரிகளாக இருக்கும் நமது நண்பர்களால் எதிர்கொள்ள முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

படிக்க: சமுதாயப் புரட்சிப் பிரகடனமாய் சாதி – தீண்டாமை மறுப்பு மணவிழா!

மேலும் சாதியை ஒரு பிரச்சினையாக கருதாமல் காதல் திருமணங்களுக்கு ஒப்புக்கொள்ளும் பெற்றோர்கள் கூட, ஏன் சடங்கு மறுப்பை ஏற்றுக்கொள்வதில்லை என்பதில் இருந்துதான் குடும்பம் உறவினர்கள் என்ற வடிவத்தில் யதார்த்த வாழ்வில் சாதி எப்படி நிறுவனமயப்பட்ட அதிகாரமாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

சமீபத்தில் “நடுவயதுப் பார்ப்பார் மறைவழி காட்டிடத் தீவலம் செய்து” நடந்தி வைத்த, அதாவது பார்ப்பன சடங்குகளைப் பின்பற்றி நடத்தி வைத்த, தமது மகனின் திருமணம் பற்றி எழுத்தாளர் பெருமாள் முருகன் அருஞ்சொல் இணைய இதழில் ஒரு சுயவிளக்கக் கட்டுரையை எழுதியிருந்தார்.

அவரது திருமணமும் அவரது மகனின் திருமணமும் சடங்கு மறுப்பு முறையில் இல்லாமல் போனதற்கான காரணங்களாக அவர் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது இரண்டு விஷயங்கள் தான்.

ஒன்று சடங்கு செய்ய வேண்டும் என்ற உறவினர்களின் “அன்புக் கட்டளைகளை” மீற முடியாமல் இருப்பது, மற்றொன்று சடங்கு மறுப்பு செய்வதில் இரு வீட்டாருக்கும் இருக்கு சிக்கல்கள் என்று இரண்டை பற்றிதான் எழுதுகிறார்.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நமது எளிய நண்பர்களும், சமூகத்தின் “முன்னோடிகள்” ஆன எழுத்தாளர்களும் எதிர்கொள்ளவது ஒரே விதமான பிரச்சினையைதான். ஆனால் பெருமாள் முருகன் அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. “சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணங்களில் உறவினர்களுக்கு எந்த பங்கு இல்லை. பெற்றோருக்கூட இடமில்லை. பரிதாபமாக ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒலிவாங்கியை பிடித்து வெகுநேரம் முழங்கும் அரசியல் பரப்புரை மேடையாக மணமேடை மாறிவிடுகிறது” என்று தனது ஆதங்கத்தை பதிவு செய்கிறார்.

படிக்க: சாதி – தீண்டாமை ஒழிப்பு புரட்சிகர மணவிழாக்கள் நடந்த 25 ஆம் ஆண்டை நினைவு கூர்வோம்!

இங்கே சாதியை சடங்கு வழியாக கட்டிக் காக்கும் சாதாரண சாதியவாதிக்கும் இந்த ’முற்போக்கு எழுத்தாளருக்கும்’ எந்த வேறுபாடும் இல்லை. ஏன் இவர் திருமணத்தில் உறவினர்களின், பெற்றோரின் “இடங்கள்” பற்றி இவ்வளவு கவலைப்படுகிறார்? சடங்கு சாதியை எப்படி தக்கவைப்பதாக உள்ளது? என்ற கேள்விகளுக்கு நாம் விடை சொல்ல வேண்டியிருக்கிறது.

முதலில், “சடங்கு” என்பது ஒரு அதிகார மையத்தை பொது வெளியில் நிறுவிக் கொள்வது என்று அர்த்தம். உதாரணமாக, ஆதியில் பழங்குடி மக்கள் மழை வேண்டி தாங்கள் புரியும் நடனம் தான் “சடங்காக” இருந்தது. அதை அந்த பழங்குடி இனத் தலைவர் தான் தொடங்கி வைப்பார்.

பின்னர் அதில் மற்றவர்களும் கலந்து கொண்டு நடனமாட வேண்டும். இதில் முதலில் நடனம் புரியும் உரிமை “தலைவருக்கே உண்டு”. ஒவ்வொரு முறை அந்த தலைவர் தான் முதலில் நடனம் புரிந்து “நான் தான் தலைவர்” என்று பொதுவில் நிறுவிக்கொள்வது தான் சடங்காக இருந்தது.

இந்த சடங்கு தான் தற்போது “ஆகம விதிகள்” என்ற பெயரில் சூத்திரர்கள் கோவில் கருவறைக்குள் வரக்கூடாது, சிதம்பரம் கோவிலில் தமிழில் பாடக்கூடாது என்பதாக பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தது. இதுதான் சடங்கு முறையில் நடக்கும் திருமணங்களிலும் நிகழ்கிறது.

ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு விதமான சடங்கு இருக்கிறது. அதை பொதுவில் நிகழ்த்திக் காட்டுவதன் மூலமாக தங்கள் சாதியை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். இதன் வழி சாதியை, மதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட சாதியில் குறிப்பிட்ட உறவு முறைகள் முக்கியத்துவமுடையதாக இருக்கிறது.

சில சாதிகளில் “தாய்மாமன் உறவு”, சில சாதிகளில் “சித்தாப்பா, பெரியப்பா உறவு”. இப்போது சடங்கு மறுப்பு திருமணம் செய்தால் இந்த நபர்களுக்கான முக்கியத்துவம் இருக்காது. இது யதார்த்தத்தில் சாதி வழங்கும் சிறப்புரிமைகளை மறுப்பதாக இருக்கிறது. இது சாதியத்திற்கு நிறுவன ரீதியான அடியாகும்.

இவ்வாறு “சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணம்” என்பது பொது வெளியில் சாதி அதிகார மையங்களை கேள்விக்குள்ளாக்குவது என்பதாகும், சாதியின் அதிகாரத்தை கீழறுப்பதாகும். இதில் தான் சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணத்தின் முக்கியத்துவம் உள்ளது.

இதனால்தான் நாம் “சடங்கு மறுப்பு திருமணம்” செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறோம். வறட்டு கௌரவத்திற்காக அல்ல. “மணமேடை அரசியல் முழங்கும் மேடையாக மாறுவது”, “சடங்கு மறுப்பு திருமணத்தின்போது உறவினர்களின் மனம் நொந்து கொள்வது” எல்லாம் பெருமாள் முருகனுக்கு பிடிக்கவில்லை என்றால் அது சாதி அவருக்கு தரும் சிறப்புரிமைகளை அவர் இழக்க விரும்பவில்லை என்றே பொருள்படுகிறது.

இதில் அதிகம் விவாதிக்க ஒன்றுமில்லை. ஆனால் “சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணம்” இத்தனை முக்கியத்துவமுடையது என்று நாம் விளக்கிய பிறகும், யதார்த்த வாழ்க்கையில் அதை நண்பர்களால் சாத்தியப்படுத்திக் காட்ட தடையாக இருப்பது குடும்பம், உறவினர்கள் என்ற அதிகார நிறுவனங்கள்தான். அதை உதிரிகளாக நாம் எதிர்கொள்ள முடியாது என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

படிக்க: தினமலர் | திருமணம் – பொது வாழ்க்கை | கொரோனா வைரஸ் | அர்ஜுன் ரெட்டி | சாதி மறுப்பு | கேள்வி – பதில் !

முற்போக்கு இயக்கங்களை சுற்றி சித்தாந்த ரீதியாக, அமைப்பு ரீதியாக அணி திரளும்போதே ஓர் நிறுவனமயப்படுத்தப்பட்ட அதிகாரத்தை நம்மால் எதிர்கொள்ள முடியும். அமைப்பில் இணைந்து பணி செய்ய முடியாத நண்பர்கள், முற்போக்கு இயக்கங்களின் நட்பு சக்திகளாக அணி திரள்வதில் எந்த பிரச்சினையும் இருக்கப்போவதில்லை.

ஒரு அமைப்பின் பத்திரிகையை சந்தா செலுத்தி வாங்குவது, அந்த அமைப்பு நடத்தும் கூட்டங்களில் முடிந்த வரை பங்கேற்பது, அந்த அமைப்புத் தோழர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது என முற்போக்கு இயக்கங்களின் நட்பு சக்திகளாக இருப்பதன் வழியாகவே சாதிய மத அதிகார மையங்களை எதிர்கொள்ள முடியும்.

இந்துத்துவ பாசிச சக்தி அதிகாரத்தில் இருக்கும் இந்த சூழலில் நம் வாழ்வில் ஒவ்வொரு அரங்கிலும் பிற்போக்கு தாக்குதல்களை சந்தித்து வருகிறோம். இந்த நிலையில் வெறுமனே வாய் வீச்சில் மட்டும் முற்போக்காக இருந்தால் போதாது. சங்கப் பரிவார அமைப்புகளில் இருப்பவர்கள் அமைப்பு ரீதியாக செயல்படும் போது, முற்போக்கு பேசும் நாம் உதிரிகளாக இருப்பதில் பயன் எதுவுமில்லை.

அதனால் அரசியல் இயக்கங்களில் இணைந்து அல்லது அரசியல் இயக்கங்களை சுற்றி நட்பு சக்திகளாக திரண்டு சாதி – சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணம் போன்ற அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்தி சாதியையும் மதத்தையும் அமைப்பு ரீதியாக எதிர்கொள்வோம் நண்பர்களே. காவி பாசிசத்தை வீழ்த்துவதில் கலாச்சாரத்தின் பங்கு இன்றியமையாதது.

ராஜன்

ஏப்ரல் 11 : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களின் கோட்டை முற்றுகைப் போராட்டம் வெல்லட்டும்!

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவை, முடக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசு உடனே வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக வரன் முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் ஏப்ரல் 11 அன்று சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் 84-வது பக்கத்தில் 309–வது வாக்குறுதியாக பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் நெருங்கும் நிலையிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அதேபோல் பணிநிரந்தரக் கோரிக்கைகளும் முன்னேற்றமில்லாமல் தேங்கிக் கிடக்கின்றன.

படிக்க : என்.சி.இ.ஆர்.டி (NCERT)-யின் பாடத்திட்ட நீக்க அறிவிப்பு! காவி பாசிஸ்டுகளின் பாய்ச்சல் நடவடிக்கை!

தனியார் மயத்தை தீவிரமாக அமல்படுத்துவதன் மூலம் கார்ப்பரேட் கும்பல்கள் கொள்ளையடிக்கவும், அதன் அடுத்த கட்டமாக கார்ப்பரேட் கும்பல் அரசுத் துறைகளை கைப்பற்றி கொள்வது என்ற அடிப்படையில் இருந்தே மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அதிகப்படியான நிதி செலவாகிறது, அரசிடம் நிதி பற்றாக்குறை உள்ளது என்ற காரணத்தைக் காட்டி வாஜ்பாய் தலைமையிலான ஒன்றிய அரசு 2004-ஆம் ஆண்டு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது. இதைக் காரணம் காட்டியே தமிழக அரசும் பேசுகிறது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஓய்வூதியத்திற்கு அரசு பொறுப்பு என்ற விதி தளர்த்தப்பட்டு, தனியார் காப்பீடு நிறுவனங்கள் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. தனியார் காப்பீடு நிறுவனங்கள் ஊழியர்களின் சேமிப்பை பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் சூதாடி கொள்ளையடிக்கவே வழிவகை செய்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசின் எல்லாத் துறைகளுக்கும் அவுட்சோர்சிங் முறையில்தான் வேலைக்கு எடுக்கிறார்கள். உலகின் பல நாடுகளிலும் இந்த அவுட்சோர்சிங் வேலைமுறையே பெருமளவில் கோலோச்சுகிறது. கார்ப்பரேட் கும்பல்களின் நரவேட்டைக்காக தொழிலாளர்கள் எந்த உரிமையும் இன்றி வரைமுறையற்று சுரண்டப்படுவதற்கே இந்த அவுட்சோர்சிங் முறை.

புதிய ஓய்வூதிய திட்டத்தின் படி ஓய்வூதியத்திற்கு அரசு பொறுப்பு என்ற விதி தளர்த்தப்பட்டு தனியார் காப்பீடு நிறுவனங்கள் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. ஓய்வூதியத்தில் பங்களிப்பு செலுத்துவதிலிருந்து அரசு ஒதுங்கிக் கொண்டது. புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி தொழிலாளர்களின் வருமானத்திலிருந்து ஓய்வூதியத்திற்கான தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. தனியார் காப்பீடு நிறுவனங்கள் ஊழியர்களின் சேமிப்பை பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் சூதாடி கொள்ளை அடிக்கவே வழிவகை செய்கிறது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் போராடி வரும் நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கை மூலம் அதானியின் ஊழல் அம்பலப்பட்ட பிறகும், ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி(EPF)-யை அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட் ஆகியவற்றின் பங்குகளில் அதிகளவு முதலீடு செய்துள்ளது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO). நாட்டை வரைமுறையற்று சூறையாடி வரும் ஒரு கிரிமனலுக்கு 27.73 கோடி ஊழியர்களின் சேமிப்பைத்  தூக்கிக் கொடுக்கும் இந்நடவடிக்கை கிரிமனல் தன்மையானது.

இன்று உலகளாவிய அளவிலும் பல நாட்டு அரசாங்கங்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்களின் ஓய்வூதியங்களை கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்கேற்ற திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. இதை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் எழுச்சியாக நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, பிரான்சில் ஓய்வூதியத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவதாக கூறி, பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தையே மறுக்கும் வகையில் புதிய திட்டத்தை அந்நாட்டு அதிபர் மக்ரோன் கொண்டு வர முயல்கிறார். இப்புதிய திட்டத்தின்படி ஓய்வூதியம் பெறுவதற்கான வயது 62-ல் இருந்து 64-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

படிக்க : பாலியல் குற்றவாளிகளை பாதுகாத்து வந்த கலாஷேத்ரா நிர்வாகம்!

பல்வேறு அடக்குமுறைகளை மக்ரோன் அரசு ஏவிவிட்ட போதும் லட்சக்கணக்கான பிரான்சின் தொழிலாளர்கள் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்திக் கொண்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் தொழிற்சாலைகளை முடக்கியுள்ளனர். சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து எரிபொருள் வெளியேறாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பேரணிகளில் பங்கேற்கின்றனர்.

இந்தப் போராட்டங்களில் பங்கேற்கும் சிஜிடி சங்கத்தின் தலைவர் லாரென்ட் பெர்ஜெர், ‘ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக இருக்கும் நாட்டின் அனைத்து ஊழியர்கள், குடிமக்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களை போராட்டக்களத்திற்கு வந்து தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று அழைக்கிறேன். மிகப்பெரிய சமூக இயக்கம் இன்று உருவாகியுள்ளது. இதற்கு அரசியல் ரீதியான பதிலை எதிர்பார்க்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

நம் நாட்டில் நடக்கும் அரசு ஊழியர்களின் போராட்டங்கள், கோரிக்கைகளுக்கான போராட்டங்களாக மட்டுமல்லாமல் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளின் சூறையாடலுக்காக ஒன்றிய, மாநில அரசுகள் அமல்படுத்தி வரும் தனியார்மயக் கொள்கைகளை வீழ்த்துகின்ற அரசியல் போராட்டங்களாக பரிணமிக்கும் பொழுது தான் சரியான தீர்வை நோக்கி நகர முடியும்.

சிவக்குமார்

திரிபுரா : அதிகாரத் திமிரில் விவசாயிகளை தாக்கும் காவி பாசிஸ்டுகள்!

ரண்டாவது முறையாக திரிபுராவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பல் சி.பி.எம் ஊழியர்கள் மீதும், அலுவலகங்கள் மற்றும் அவர்களின் சொத்துக்களின் மீதும் இடைவிடாது தாக்குதல் தொடுத்து வருகிறது.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மார்ச் 2 முதலாகவே இத்தாக்குதல் தொடர்கிறது. சி.பி.எம் ஊழியர்கள் மட்டுமல்லாமல், விவசாயிகள் சங்கம் மீதும் கொடூரத் தாக்குதலை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தொடுத்து வருகிறது.

மார்ச் 27 அன்று கோவாய் மாவட்டத்தில் விவசாயிகள் மீது மிகப்பெரும் வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டுள்ளது. கிலடலி பகுதியில் வசிக்கும் நிவேஷ் சர்கார் என்ற விவசாயியின் பவர் டிரில்லர் இயந்திரத்தை எரித்துள்ளனர். அன்றே, விவசாயிகளின் மீன்தொட்டிகளில் விசம் கலந்து மொத்த மீன்களும் இறந்து போனதால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். ஏழை விவசாயிகளின் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளையும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

படிக்க : திரிபுரா தேர்தல்: பாசிசத்தின் புதிய மாடல்!

விவசாயிகள் இடது முன்னணிக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது, அப்படி ஆதரவு தெரிவித்தால் இதுதான் கதி என்று பா.ஜ.க குண்டர்கள் மிரட்டி வருகின்றனர்.

எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என்ற தனது காவி பாசிசத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே திட்டமிட்ட முறையில் பாசிச குண்டர் படைகளின் இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் வாழ முடியாது என்ற அச்ச உணர்வை ஊட்டவே இவ்வளவு திமிராக விவசாயிகளைத் தாக்குகிறார்கள், காவி பாசிச குண்டர்கள்.

திரிபுராவில் இன்று நடப்பது, நாளை நாடு முழுக்க இருக்கும் விவசாயிகளுக்கும் நடக்கும். இதோ தங்களின் ஆதிக்கத்துக்கு அடங்காத தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அறிவிப்பாணை வெளியிட்டு எக்காளமிடுகிறது மோடி – அமித்ஷா கும்பல்.

புதிய வேளாண் சட்டத்திற்கெதிராக டெல்லியில் கோடிக்கணக்கான விவசாயிகள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டத்தின்போது விவசாயிகளின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறிய மோடி கும்பல் இன்று வரை நிறைவேற்றாமல் நயவஞ்சகமாக இழுத்தடித்து வருகிறது. கார்ப்பரேட் முதலாளிகளின் நலனே தனது லட்சியமாக கொண்டு இயங்கி வரும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல், இயல்பாகவே விவசாயிகளை தனது எதிரியாக கருதுகிறது.

படிக்க : திரிபுரா மாடல் தேர்தல் வன்முறை : பாசிஸ்டுகள் கற்றுத்தரும் பாடம் என்ன?

இத்தகைய விவசாயிகளின் விரோதிகளை சட்டப்பூர்வ வழிமுறைகளில் வீழ்த்த முடியும், தண்டிக்க முடியும் என்று யாராவது எண்ணினால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்காது.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தங்கள் ஊருக்குள் நுழையக் கூடாது, நுழைந்தால் ஓட ஓட விரட்டுவோம் என்று விவசாயிகள் போராட்டத்தின்போது, பஞ்சாப் விவசாயிகள் தீர்ப்பு எழுதினார்களே, அதைப்போல் நாடு முழுவதும் விவசாயிகள் இந்தக் கேடுகெட்ட மிருகங்களை விரட்டியடிக்க வேண்டும். எந்த ஊரிலும் நுழைய முடியாதவாறு செய்ய வேண்டும். அதற்கான போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்.

அய்யனார்

New Democracy – March 2023 | Magazine

New Democracy March – 2023 Printed issue has now published. We ask readers and comrades to buy, read and support.

New Democracy (Puthiya Jananayagam) March – 2023

List of Articles Present in this Issue :

Oxfam Report: This is Modi’s ‘New India’
‘Hindu Rashtra’: A Nation of the Adanis!
”One Nation, One Election”: Hindu Rashtra gateway to turn states into graveyards!
Judiciary always served its Conqueror!
”One Nation”: Tamilnadu resists!
Chhattisgarh: Rising Attacks on Christian Adivasis by Saffron Fascists!
The Telecommunication Bill, 2022: A move to establish fascist dictatorship!
Subsiding Joshimath: A disaster in the name of ‘development’!
The saffron fascist mob taking root in the US!
Tripura Model Electoral Violence: Lessons the Fascists teach us!

To get Free e-magazine, mail us : puthiyajananayagam@gmail.com

To Get the Magazine by Post :
Contribution : Rs. 25
Pay through G-Pay : 94446 32561

Make Payment and send your address details along with Payment receipt to our email : puthiyajananayagam@gmail.com

சாதிய படிநிலையை அமல்படுத்தும் ஹைதராபாத் பல்கலைக்கழகம்!

0

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு (பிஎச்டி) சேர்க்கையின் போது சாதி அடிப்படையில் நேர்காணல் மதிப்பெண்கள் வழங்கப்படுவதாக அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு (Ambedkar Students’ Association) குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அவ்வமைப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் துறை வாரியாகப் பெற்ற பி.எச்.டி விண்ணப்பதாரர்களின் நேர்காணல் மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் விவரங்களின் அடிப்படையில் இவ்வறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக கணினி அறிவியல், உயிர்வேதியியல், இயற்பியல், தாவர அறிவியல், மின்னணுவியல், பயன்பாட்டுக் கணிதம் மற்றும் நுண்ணுயிரியல் ஆகிய ஏழு துறைகளில் சாதி அடிப்படையில் நேர்காணல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

‘உயர் சாதியினர்’ நுழைவதற்காக இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பட்டியல் சாதிகள் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் திட்டமிட்டே வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.

படிக்க : காஷ்மீரைப் பற்றி பேசாதே : மிரட்டும் திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம் !

மாணவர்களின் நேர்காணல் மதிப்பெண்கள் சாதிப் படிநிலையின் அடிப்படையில் அமைந்துள்ளதாக அவ்வறிக்கை அதிர்ச்சியூட்டும் தகவல்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, கணினி அறிவியல் துறையில் முதல் ஐந்து ‘உயர் சாதி’ மாணவர்கள் பெற்ற சராசரி நுழைவுத் தேர்வு மதிப்பெண் 41.4; அதில் அவர்களின் நேர்காணல் மதிப்பெண்களின் சராசரி 24.6. ஆனால், சராசரி நுழைவுத் தேர்வு மதிப்பெண் 40 பெற்றிருந்த ஓ.பி.சி விண்ணப்பதாரர்களுக்கு, சராசரி நேர்காணல் மதிப்பெண்ணாக 17.2‌ என்ற குறைந்த மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

இதேபோல, பட்டியல் சாதி விண்ணப்பதாரர்களின் சராசரி நுழைவுத் தேர்வு மதிப்பெண் 30.2 ஆக இருந்தது. ஆனால், அவர்களின் நேர்காணல் மதிப்பெண்களின் சராசரியோ வெறும் 12 மட்டுமே. பட்டியல் பழங்குடியின விண்ணப்பதாரர்களின் சராசரி நுழைவுத் தேர்வு மதிப்பெண் 25.4; சராசரி நேர்காணல் மதிப்பெண் வெறும் 6.6 மட்டுமே. கணினி அறிவியல் துறை மட்டுமல்ல, மேலே குறிப்பிடப்பட்டிருந்த மற்ற ஆறு துறைகளிலும் இதே நிலைதான்.

மேற்குறிப்பிட்ட ஏழு துறைகளில் பொதுப் பிரிவின் கீழ்வரும் 28 பி.எச்.டி இடங்களில் 27 இடங்கள் ‘உயர் சாதி’ மாணவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளன. ஒப்பீட்டளவில் பார்க்கும்போது, மீதமுள்ள துறைகளில், 79 இடங்களில் 45 இடங்கள் மட்டுமே ‘உயர் சாதி’ மாணவர்களால் நிரப்பப்பட்டுள்ளன.

மேலும், “இது சமூக நீதிக் கொள்கையை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும். இடஒதுக்கீட்டின் கீழ் வரும் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் குறைந்தபட்ச பங்கேற்பை உறுதி செய்வதற்காக நேர்மறையாக இடஒதுக்கீட்டு கொள்கையானது கொண்டுவரப்பட்டது. ஆனால், பல்கலைக்கழகமோ இடஒதுக்கீட்டின் கீழ் வரும் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களை அந்த குறைந்தபட்ச அளவோடு மட்டும் நிறுத்திக் கொள்ள எதிர்மறையாகப் பயன்படுத்துகிறது” என்று அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பின் அறிக்கை கூறுகிறது.

இந்த ஏழு துறைகளைத் தவிர, வேறு துறைகளிலும் தீவிர சாதிய பாகுபாடுகள் காட்டப்பட்டுள்ளதற்கான சில எடுத்துக்காட்டுகள் உள்ளன. மெட்டீரியல் இன்ஜினியரிங் (Material Engineering) துறையில் பி.எச்.டி நேர்காணலுக்குத் தோன்றிய நான்கு பட்டியல் சாதிப் பிரிவு மாணவர்களுக்கு 30-க்கு வெறும் 0.3, 1.9, 2.1 மற்றும் 8.4 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதே‌ துறையில், எழுத்துத் தேர்வில் 41.25 மதிப்பெண் பெற்ற ஓ.பி.சி மாணவருக்கு நேர்காணலில் வெறும் 2.4 மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

படிக்க : மோடி குறித்த பிபிசி ஆவணப்படம்: திரையிட்ட மாணவர்களை ஒடுக்கும் டெல்லி பல்கலை!

இடஒதுக்கீடு பெறும் பிரிவுகளைச் சேர்ந்த ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் பொதுப் பிரிவில் பி.எச்.டி இடங்களை பெறாமல் தடுப்பதற்காகவே பல்கலைக்கழகம் நேர்காணல் மதிப்பெண்களை குறைத்து வழங்குவதாக அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகிறது. மேலும், இந்த ஏழு துறைகளில் காட்டப்படும் அதீத சாதிய பாகுபாடுகளை விசாரிக்க ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரதிநிதிகளையும் மாணவர் அமைப்பு பிரதிநிதியையும் கொண்டு ஒரு குழுவை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

பார்ப்பன பாசிஸ்டுகளின் ஆணைக்கிணங்க அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த ரோஹித் வெமுலாவை கொலை செய்த பல்கலைக்கழகம் தான் ஹைதராபாத் பல்கலைக்கழகம். அங்கு தொடர்ந்து சாதிய பாகுபாடுகள் காட்டப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் மீது சாதிய பாகுபாடுகள் காட்டப்படுவது என்பதோடு, தற்போது ‘உயர் சாதி’ அல்லாத மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பு இடங்களை பெறுவதற்கே தடையை ஏற்படுத்துகிறது பல்கலைக்கழக நிர்வாகம்.

மனு (அ)நீதி போதிக்கும் சாதிய படிநிலைகளை அப்படியே அமல்படுத்தப்படுகிறது. பாசிச மோடி ஆட்சியின் கீழ், ஹைதராபாத் பல்கலைக்கழகம் உட்பட மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் இப்போக்கு அதிகரித்து வருகிறது.

பொம்மி

பாலியல் குற்றவாளிகளை பாதுகாத்து வந்த கலாஷேத்ரா நிர்வாகம்!

ல்வி நிலையங்கள் மற்றும் வேலை செய்யும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல்கள், வன்கொடுமைகள் போன்றவை நடப்பதற்கு அந்த குற்றங்களை செய்யும் “வக்கிர புத்தியுடைய தனிநபர்கள்” மட்டுமே காரணம் என்று மேலோட்டமாக பார்க்க முடியாது. கல்வி நிலையங்கள் மற்றும் பணியிடங்களில் நிறுவனமயமாக்கப்பட்ட அதிகாரத்தின் பின்னணியில் ஒளிந்து கொண்டுதான் இதுபோன்ற பாலியல் குற்றங்களை செய்கிறார்கள்.

எளிமையான ஒரு கேள்வியை கேட்டுக்கொள்வோம். ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஒருவன் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் பேசுகிறான் அல்லது செயல்படுகிறான், பாலியல் துன்புறுத்தல்கள், உருவக்கேலி போன்றவற்றை செய்கிறான் என்றால் அங்கே பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். அந்த குற்றவாளியை செருப்பால்  அடிப்பார்கள்.

ஆனால், ஒரு நிறுவனத்தில் மேலாளராக உள்ள ஒருவர் சக ஊழியர்களிடம் அல்லது ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் தவறாக நடக்க தொடர்ந்து முயற்சி செய்கிறார். அங்கே என்ன நடக்கும்? அந்த உயர்நிலை அதிகாரத்தில் உள்ளவர்­களை பாதிக்கப்பட்டவர்களால் கேள்வி கேட்க முடியாது. அப்படி கேள்வி கேட்டால் வேலை போகும் அபாயம் உள்ளது. பயிலவிடாமல் செய்யும் அபாயம் உள்ளது.

ஒன்று, நம் மீது யாரும் குற்றம் சுமத்த மாட்டார்கள், மற்றொன்று அப்படியே குற்றம் சுமத்தப்பட்டாலும் நிறுவனம் நமக்கு ஆதரவாக இருக்கும் என்ற துணிச்சலில்தான் இந்த வக்கிர புத்தியுடைய குற்றவாளிகள் தைரியமாக தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல்களை செய்து வருகின்றனர். இந்தப் பின்னணியில்தான் சென்னை கலாஷேத்ராவில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய விவகாரத்தை நாம் பார்க்க வேண்டும்.

படிக்க : கலாஷேத்ரா: ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கிரிமினல் கூடாரங்களே! | மக்கள் அதிகாரம் கண்டனம்

சென்னை கலாஷேத்ரா நிறுவனத்தில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பாலியல் தொல்லைகள் நடந்து வருவது தற்போதுதான் ஊடகத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. ஆனால், இதற்காக பாதிக்கப்பட்ட மாணவிகள் கடந்த டிசம்பர் மாதம் முதலே, இதை நிறுவனத்தின் கவனத்திற்கும் பொது சமூகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்ல, போராடி வந்திருக்கிறார்கள்.

பரதநாட்டிய நடனம் மற்றும் கர்நாடக இசைக்கான இந்தியாவின் முதன்மையான நிறுவனமான கலாஷேத்ரா அறக்கட்டளை அறியப்படுகிறது. மேலும் இது மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குவது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் ஊழியர்களும் மாணவர்களும் பரீட்சைகளைப் புறக்கணித்து, மார்ச் 30 (வியாழக்கிழமை) அன்று நிறுவனத்தின் வளாகத்தில் இரவு முழுவதும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

நிறுவனத்தின் நான்கு ஆசிரியர்களான ஹரி பத்மன், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராடினார்கள்.

இதற்கிடையில், கலாஷேத்ரா அறக்கட்டளையின் உள் புகார்கள் குழு (Internal Complaints Committee) பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொடுமைகள் தொடர்பாக மேலும் மூன்று புகார்களைப் பெற்றுள்ளது. இந்த முறை புகார் கொடுத்த பாதிக்கப்பட்டவர் அனைவரும் ஆண்கள்.

ஆனால், இந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி புகார்களில் இருந்து  ஹரி பத்மனை பாதுகாக்க இந்த கலாஷேத்ரா நிறுவனம் அனைத்து வழிகளிலும் செயல்பட்டுள்ளது.

மாணவர்களால் கொடுக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய புகாரை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது கலாஷேத்ரா நிறுவனத்தின் உள் புகார்கள் குழு. அதுபற்றி, கலாஷேத்ரா கூறும்போது, ​​“கடந்த சில மாதங்களாக, கலாஷேத்ரா அறக்கட்டளையை இழிவுபடுத்தும் நோக்கில், சமூக ஊடகங்கள் மூலம் பெரும்பாலும் வதந்திகள் மற்றும் குற்றச்சாட்டுகளைப் பரப்ப ஒரு ஒருங்கிணைந்த மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கலாஷேத்ரா அறக்கட்டளையை பாதுகாப்பற்ற சூழல் என்று பொய்யாகக் காட்டுவதன் மூலம் கலாஷேத்ரா அறக்கட்டளையை அவமதிப்பதை நோக்கமாகக் கொண்டு அவை பெரும்பாலும் தயாரிக்கப்பட்டதாகத் தோன்றியது. நிறுவனத்தின் உள் புகார்கள் குழு விசாரணையை சுயமாக எடுத்து, முழுமையான விசாரணைக்குப் பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மேலும் இந்தக் குழு குற்றச்சாட்டுகளில் தகுதியைக் காணவில்லை” என்கிறது.

அதவாது, அந்த நபர் மீது வைக்கப்பட்ட குற்றம்சாட்டை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என கூறி கலாக்ஷேத்ரா நிறுவனத்தின் உள் புகார்கள் குழு  ஹரி பத்மனுக்கு “உத்தமர் பட்டம் (Clean Chit)” வழங்கியிருக்கிறது.

மேலும், கலாஷேத்ரா தனது இணையதளத்தில் தங்கள் குறிப்பில் இந்த விவகாரத்தைப் பற்றி பேசுவதற்கு எதிராக ஒரு  உத்தரவை பிறப்பித்துள்ளது. “கிசுகிசுக்கள், வதந்திகளைப் பரப்புதல் ஆகியவை கற்றல் சூழலில் நம்பமுடியாத அளவிற்கு நச்சுத்தன்மை வாய்ந்தவை. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப் படுகிறது” என்று குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தங்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி புகார் தெரிவிப்பவர்கள் மீதே சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டும் தொனியில் இருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செய்யபடும் படி ஒரு சில மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

“அவரது [குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரின்] முன்னிலையில் நாங்கள் பாதுகாப்பாக உணர்கிறோம் என்று அறிவிக்கும் கடிதங்களில் கையெழுத்திட மூத்த மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது” என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு ஊழியர் கூறினார்.

இவையெல்லாம் குற்றவாளியை காப்பாற்ற கலாஷேத்ரா நிறுவனம் செயல்பட்டதன் சமீபத்திய உதாரணங்கள்தான். ஆனால் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய புகார்கள் டிசம்பர் மாதமே விவாதம் பொருளாக மாறிவிட்டது.

கிறிஸ்துமஸுக்கு ஒரு நாள் முன்பு, கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குனர் லீலா சாம்சன், பத்தாண்டுகளுக்கும் மேலாக மாணவர்களை துன்புறுத்தியும், தொல்லைகள் கொடுத்தும் வந்த ஒரு ஆசிரியரைப் பற்றி ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு எழுதினார்.

“மிக உயர்ந்த கலை மற்றும் சிந்தனையின் புகலிடமாக உள்ள ஒரு பொது நிறுவனம், இப்போது இளம் பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதைப் பற்றி கண்களை மூடிக்கொண்டதாக இருக்கிறது. அந்த இளம் பெண்கள் பாதிக்கப்படக் கூடியவர்கள். அவர்கள் இன்னும் பெரியவர்களாகவில்லை. ஊழியர்களில் ஒரு ஆண் உறுப்பினர் அவர்களை அச்சுறுத்துவதும் துன்புறுத்துவதும் அறியப்பட்டிருக்கிறது” என்ற லீலா சாம்சன் பதிவிட்டிருந்தார்.

லீலா சாம்சன் அந்த பதிவை விரைவில் நீக்கிவிட்டார், ஆனால் அது ஏற்கனவே ஒரு சலசலப்பான விவாதங்களை ஏற்படுத்திவிட்டது. அந்தப் பதிவு ஸ்கிரீன் ஷாட்கள் எடுக்கப்பட்டு  மாணவர்களாலும்  முன்னாள் மாணவர்களாலும் பிற சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டது. இது பாதிக்கப்பட்ட மற்ற மாணவர்களை, தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்ளத்  தைரியம் கொடுத்தது.

மேலும் இதை பற்றி விவாதிக்கவே மாணவர்கள் மத்தியில் செயல்படாமல் இருந்த வாட்ஸ்அப் குழுக்கள் மீண்டும் உயிர்த்தெழுந்தன. ஏனெனில் மாணவர்கள் இந்த விஷயம் இந்த விவாதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை சரியாக உணர்த்திருந்தனர். இதனால் இணையத்தில் இதற்கென ஒரு குழுவை உருவாக்கி நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி பதிவு செய்தனர்.

ஒவ்வொருமுறை தாங்கள் பாதிக்கப்பட்டது குறித்து நிறுவனத்திடம் புகார்கள் அளித்த மாணவர்கள் நிறுவனம் கண்டு கொள்ளவில்லை. நிறுவனம் தொடர்ந்து ஹரி பத்மனுக்கு ஆதரவாக இருந்ததாலும், இந்த புகார்களை வெளியில் சொன்னால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டிருக்கும் என்று நிறுவனம் மாணவர்களை மிரட்டியதாலும் தான்‌ மாணவர்கள் இணையத்தில் தங்களது புகார்களை பதிவு செய்தனர். ஆனால் இதைத் தான் கலாஷேத்ரா நிறுவனத்தின் பெயரை கெடுக்க சதி நடப்பதாக சொல்லி நீலிக்கண்ணீர் வடிக்கிறது நிறுவனம்.

கலாஷேத்ரா 8 மார்ச் 2023 அன்று மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூத்த ஆசிரியர் ஒருவரை மகளிர் தினத்தன்று கல்லூரியின் இயக்குனரால் கௌரவிக்கப்பட்டது தான் மாணவர்களை நாம் எப்படிப்பட்ட பாதுகாப்பற்ற இடத்தில் இருக்கிறோம் என்று உணரச் செய்தது. இதுதான் மாணவர்கள்  தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய கதைகள் இணையதளத்தில் அநாமதேயமாக எழுதி எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

ஆனால் இந்த எதிர்ப்புணர்வுனை மழுங்கடிக்கதான் நிறுவனத்தின் உள் புகார்கள் குழு விசாரணையை நடத்தி குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது “தவறில்லை” என பாராட்டு பத்திரம் வாசித்தது.

இதனை தொடர்ந்து தான் மார்ச் மாத இறுதியில் சென்னை கலாஷேத்ராவில் மாணவர்களால் இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. ஆசிரிய உறுப்பினர் மற்றும் மூன்று கலைஞர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல், உடலை ரீதியாக அவமானப்படுத்துதல் மற்றும் வாய்மொழி வழியாக அவமானப்படுத்துதல் ஆகியவற்றைக் கண்டித்து சுமார் 200 மாணவர்கள் போராட்டம் நடத்திய பிறகு, உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது சென்னை போலீசுத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

சுமார் 90 மாணவிகள் தங்கள் மீது ஏவப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி  வெள்ளிக்கிழமை (மார்ச்-31) தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவரிடம் எழுத்துப்பூர்வ புகார்களை அளித்துள்ளனர்.

பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய புகார்கள்  எழுந்தபோதிலும், தேசிய மகளிர் ஆணையம் இந்த குற்றச்சாட்டுகளை செவ்வியல் கலைகளுக்கான நாட்டின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனத்தை இழிவுபடுத்தும் வகையில் செய்யப்படும் தவறான பிரச்சாரம் என்று கூறியது.

படிக்க : சுவர் விளம்பரத்தை அழித்த ஆர்.எஸ்.எஸ்-பாஜக பாசிச கும்பலும் அதற்கு அடியாள் வேலை பார்க்கும் போலீசும்!

கலாஷேத்ராவில் பல ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் மற்றும் இனப் பாகுபாடுகளை எதிர்கொண்டதாக, வாய்மொழியாக புகார் அளித்தும், நிறுவனம் அலட்சியமாகவும் பதிலளிக்காமலும் இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நிறுவனத்தின் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், கொடுக்கப்பட்ட புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமலும், குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு ஆதரவாக செயல்பட்டதற்காகவும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹரி பத்மன் மற்றும் பிற மூன்று பேர் மீதுதான் பாலியல் துன்புறுத்தல்கள் செயத்தாக புகார்கள் எழுந்துள்ளன. ஆனால் ஒட்டுமொத்த கலாஷேத்ரா நிறுவனமும் அதற்கு மேலாக தேசிய மகளிர் ஆணையமும் இந்த புகார்கள் பொய்யானவை என திசைதிருப்பப் பார்க்கிறது.

ஹரி பத்மன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அவரை இன்னும் கைது செய்யவில்லை. ஏப்ரல் 03-ஆம் தேதி செய்தியின் படி, அவர் ஹைதராபாத்தில் இருந்து தலைமறைவாகிவிட்டார். மீண்டும் 03/04/23 மதிய வேளையில் சென்னையில் கைது செய்யப்பட்டிருக்கிறான். ஓட்டுனர் உரிமம் இல்லாமல், தலைக்கவசம் இல்லாமல் வண்டி ஓட்டும் அப்பாவிகளை பிடிப்பதில் காட்டும் அக்கறையை போலீசுத்துறை இதுபோன்ற பெரிய விஷயத்தில் காட்டுவதில்லை என்பது தற்செயலானது அல்ல.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாலியல் துன்புறுத்தல்கள் கலாஷேத்ராவில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதனை அம்பலப்படுத்தி நூற்றுக்கணக்கான நபர்கள் போராடுகிறார்கள். 90-க்கு அதிகமான எழுத்து பூர்வ புகார்கள் வந்துள்ளன.‌  அந்த ஒற்றை நபர் மீது வழக்கு பதியவும் கைது செய்யுமே இவ்வளவு போராட வேண்டியிருக்கிறது. இதில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டு மாணவர்களுக்காக பாதுகாப்பான கல்விச் சூழல் உருவாக்கித் தரப்படும் என்பது நாம் எப்படி உறுதியாக நம்ப முடியும். நம்முடைய போராட்டத்தை தவிர இந்த கட்டமைப்பில் வேறு எதுவொன்றாலும் நமக்கான தீர்வை கொடுக்க முடியாது என்பதற்கு இந்த கலாஷேத்ரா விவகாரம் மற்றுமொரு சாட்சியம்.

ராஜன்­­­­­­

டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்! தமிழ்நாட்டை சூறையாட வரும் பாசிசக் கும்பலை முறியடிப்போம்! || மக்கள் அதிகாரம்

05.04.2023

டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்!
தமிழ்நாட்டை சூறையாட வரும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க;
அம்பானி – அதானி பாசிசக் கும்பலை முறியடிப்போம்!

பத்திரிகை செய்தி

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை வளங்களை சூறையாட கார்ப்பரேட்டுகள் எத்தணித்தபோது அதற்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி டெல்டாவையும் விவசாயிகளையும் காப்பாற்றியது தமிழ்நாடு.

மக்கள் போராட்டங்களின் விளைவாகவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

படிக்க : வீழாது தமிழ்நாடு எங்களில் கோட்டை | ம.க.இ.க சிவப்பு அலை | RED Wave | Pala Gana Song | Audio Launch

அனைத்து இயற்கை கனிம வளங்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் அம்பானி – அதானி பாசிச கார்ப்பரேட் கும்பலுக்கு விற்பதையே ஒரே வேலையாக கொண்டிருக்கிறது மோடி – அமித்ஷா பாசிச ஆட்சி.

தமிழ்நாட்டு அரசுக்கு தெரியாமல் தமிழ்நாட்டு அரசை கேட்காமல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளான டெல்டா மாவட்டங்களில் சேத்தியா தோப்பு, வடசேரி, மைக்கேல்பட்டி ஆகிய பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் கொடுத்துள்ளது. இது தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஒன்றிய அரசு விடுத்துள்ள சவால் ஆகும்.

2024 ஆம் தேர்தலில் வெற்றி வாகை சூடி இந்துராஷ்டிரத்தை அமைக்கும் கனவில் துடிக்கும்  ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச கும்பலுக்கு தேர்தலுக்கு முன்னரே தமிழ்நாட்டின் ஓர்மையை ஒழித்துக் கட்டுவதும் இயற்கை வளங்கள் பொதுத்துறை நிறுவனங்களை அம்பானி, அதானிக்கு தாரை வார்ப்பது முக்கியமான கடமையாக உள்ளது.

டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மோடியின் இந்த சதித்திட்டத்தை நிச்சயம் முறியடிப்பார்கள் என்று மக்கள் அதிகாரம் தெரிவித்துக் கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2023 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2023 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ.20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

ஏப்ரல் – 2023 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜி.பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ. 20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

♦ தலையங்கம் : ராகுல் தகுதி நீக்கம் : நாடாளுமன்றத்தை முடக்கினால், மக்கள் மன்றத்தில் முழங்குவோம்!

♦ சர்வதேச சட்டங்கள் அனுமதி : பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் கட்டற்ற சுரண்டலுக்கான திறவுகோல்!

♦ இது பாசிஸ்டுகளுக்கான ‘ஜனநாயகம்’! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவோம்!

♦ கார்ப்பரேட்மயம் : நேற்று பள்ளிக்கல்வித்துறை! இன்று போக்குவரத்துத்துறை! நாளை?

♦ “ஈரோடு பட்டி ஃபார்முலா” : புழுத்து நாறிக்கொண்டிருக்கும் ‘தேர்தல் ஜனநாயகத்தின்’ மற்றொரு பரிணாமம்!

♦ தொடர்ந்து திவாலாகிவரும் அமெரிக்க வங்கிகள் : வெடிக்கக் காத்திருக்கும் உலகப் பொருளாதாரம்!

♦ “ஸ்டிங் ஆப்பரேஷன்” : ஊடக புரோக்கர்களும் ஊடுருவும் பாசிசமும்!

♦ திரிபுரா, நாகலாந்து, மேகாலாயா தேர்தல் முடிவுகள் : எச்சரிக்கை, பரவிவருகிறது பாசிசம்!

♦ ஐ.எம்.எஃப்-வின் மறுகாலனியாக்கத் தாக்குதல்களுக்கு எதிராக கிளர்ந்தெழும் இலங்கை!

♦ மீண்டும் மண்டைக்காடு கலவர அபாயம் : தமிழ்நாடே விழித்துக்கொள்!

♦ ஏப்ரல் 2, 2023. பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 2

♦ பரந்தூர் முதல் ஓசூர் சிப்காட் வரை : கார்ப்பரேட் சேவையில் தி.மு.க!