Saturday, June 27, 2026
முகப்பு பதிவு பக்கம் 170

ராஜீவ் கொலை வழக்கில் மிக நீண்ட காலமாக சிறையிலடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் ஆறு பேரும் விடுதலை! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

11.11.2022

ராஜீவ் கொலை வழக்கில் மிக நீண்ட காலமாக சிறையிலடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் ஆறு பேரும் விடுதலை!

தவறேதும் செய்யாமல் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் இஸ்லாமிய கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்!

தமிழின விரோத ஆளுநர் விரட்டியடிக்கப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை!

பத்திரிகை செய்தி!

இன்றைய தினம்(11.11.2022) உச்ச நீதிமன்றத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த, நளினி, ராபர்ட் பயாஸ், முருகன் ரவிச்சந்திரன், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதனை மக்கள் அதிகாரம் வரவேற்பதுடன், கோவை குண்டுவெடிப்பு வழக்கு என்ற பெயரில் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிறிதும் குற்றமற்ற இஸ்லாமிய கைதிகள் அனைவரையும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

வழக்கம்போல ஆறு தமிழர்கள் விடுதலையை தமிழின விரோத காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. இதையெல்லாம் பொருட்டாக கருத வேண்டியது இல்லை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஒட்டுமொத்த தமிழகமே குற்றவாளியாக்கப்பட்டது. இதை காரணமாக வைத்துக் கொண்டு அன்றைய காங்கிரஸ் அரசும் ஜெயலலிதாவும் சேர்ந்து கொண்டு திமுகவை ஒழித்துக் கட்டுவதற்கு எல்லா விதமான வன்முறையையும் சதி செயலையும் செய்தார்கள். தமிழ்நாடு முழுவதும் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் உள்ளிட்ட தமிழின ஆதரவாளர்கள், கம்யூனிஸ்டுகள் என பலரும் கைது செய்யப்பட்டார்கள்,
தொடர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட ஏழு தமிழர்களும் விடுதலை ஆக வேண்டியது என்பது அரசியல் உரிமையே தவிர கருணையின் பாற்பட்டதல்ல.

படிக்க : பேரறிவாளன் விடுதலை: “சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியா”?

இதனை வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக போராடியும் வந்திருக்கின்றன.

மேலும் ஈழத்தில் அமைதியை உண்டாக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இந்திய அமைதிப்படையை அனுப்பியதற்கு எதிராகவே ராஜீவ் காந்தி கொலை நடந்தது என்பதை எமது தோழமை அமைப்புகள் மற்றும் புதிய ஜனநாயகம் இதழ் அக்காலக்கட்டத்திலேயே பதிவு செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு முழுவதும் பெரியாரிய அமைப்புகள், புரட்சிகர அமைப்புகள், தமிழின அமைப்புகள் என அனைவருமே ஏழு தமிழர் விடுதலைக்காக தொடர்ச்சியாக போராடி வந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஏழு தமிழரின் விடுதலைக்காக துணை நின்றார்கள் என்பதே உண்மை.

ஏழு தமிழர்கள் விடுதலைக்காக, அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தின் தோழர் செங்கொடி தன் உயிரை ஈந்தார். அதற்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய எழுச்சியே அவர்களின் தூக்கு தண்டனையை நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதற்கிடையில் பலமுறை பேரறிவாளன், நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்திற்கு சென்ற பொழுதும் அவர்களின் விடுதலை மறுக்கப்பட்டே வந்தது. எனினும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டுமுறை ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, 2021 ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், தான் தமிழர்களுக்கு எதிரானவர்தான் என்பதை ஆர்.என்.ரவி மீண்டும் நிரூபித்தார்.

படிக்க : பேரறிவாளன் விடுதலை ; நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய் ! | மக்கள் அதிகாரம்

குறிப்பாக பேரறிவாளன் வழக்கில் அவரை விடுதலை செய்த உச்சநீதிமன்றம், மாநில அரசின் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஆளுநருக்கு உரிமை இல்லை என்று குட்டு வைத்த போதும் திருந்தாத ஜென்மமாக நடந்து கொண்டதுடன் தமிழ் இனத்துக்கும் தமிழர்களுக்கும் எதிரான எல்லா விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் ஆளுநர்.

ஆகவே தற்போது தமிழர் அறுவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பதன் மூலம் அநியாயமாக தமிழர் எழுவரும் சிறையில் இருப்பதற்கு ஆளுநரும் முக்கியமான காரணமாகிறார். தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கக் கூடிய வரவேற்கக் கூடிய இந்த எழுவரின் விடுதலையை ஆளுநர் எதிர்க்கிறார் என்றால் அவருக்கு எதற்கு தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சொகுசு உல்லாச வாழ்க்கை?

ஒரு ஆளுநர் செய்ய வேண்டிய வேலையை உச்சநீதிமன்றம் செய்கிறது என்றால் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஆளுநருக்கு ஏன் ஊதியம் அளிக்க வேண்டும்? இனியும் தமிழ்நாட்டுக்கு ஆளுநராக ரவி நீடிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதுடன் அது தொடர்பாக மக்கள் மன்றத்தில் பரந்துபட்ட பிரச்சாரத்தையும் தமிழ்நாடு அரசு கொண்டு செல்ல வேண்டும். நாகலாந்து மக்களால் விரட்டியடிக்கப்பட்டது போல தமிழ்நாட்டு மக்களால் இந்த ஆளுநர் விரட்டியடிக்கப்படும் காலம் வெகு தூரம் இல்லை என்பது மட்டும் உண்மை.

தோழமையுடன்
தோழர் மருது
செய்தித் தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

மதுரை திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 6 தொழிலாளர் உடல் சிதறி பலி

துரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் வியாழனன்று நிகழ்ந்த  கோர வெடி  விபத்தில் 6 பேர் உடல் சிதறிப் பலியாகினர். திருமங்கலம் அருகே  வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகுசிறையில்  தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.  இந்த ஆலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வேலைசெய்து வந்தனர். நவம்பர் 10 வியாழனன்று வழக்கம்போல் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு ஆலையில் உள்ள இரண்டு கட்டிடங்களில் வேலைசெய்து வந்தனர். பகல் 12.30 மணி யளவில் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்தக் கட்டடம் முழுவதும் சிதறி தரைமட்டமானது. இந்த விபத்தில் வடக்கம்பட்டியைச் சேர்ந்த அம்மாவாசி (50), வல்லரசு (18), கோபி (19) மற்றும் புளிய கவுண்டன்பட்டி மகாலட்சுமி (50),  அழகு சிறையைச் சேர்ந்த பிரேமா (50), விக்னேஷ் (19) ஆகிய 6 தொழிலாளர்கள்  பலியாகினர்.

மேலும் அழகுசிறையைச் சேர்ந்த அங்கம்மாள், கருப்பசாமி, நாகலட்சுமி, மகாலெட்சுமி, ஜெயப்பாண்டி, பச்சையக்காள், கருப்பசாமி, அன்னலட்சுமி, மாயத்தேவர், பாண்டியம்மாள், பேச்சியம்மாள் உள்ளிட்ட 15 பேர் படுகாயமடைந்த நிலையில் மதுரை  ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர  சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உசிலம்பட்டி, திருமங்கலம் தீயணைப்புத் துறையினர் மற்றும் திருமங்கலம், சிந்துபட்டி காவல்துறையினர் பலியானவர்களின் உடல்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

நன்றி: தீக்கதிர்

10% இடஒதுக்கீடு செல்லும்: காவிகளின் ஊதுகுழலாக ஒலிக்கும் உச்சநீதிமன்றம்!

0

ல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு (EWS) செல்லும் என்று உச்ச நீதிமன்றம் நவம்பர் 7 அன்று தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி. பர்திவாலா ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை (basic structure of Constitution) மீறவில்லை என்று தீர்ப்பளித்துள்ளார். நீதிபதிகள் யுயு லலித், ரவீந்திர பட் ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்தனர். ஆகவே 3:2 என்ற விகிதத்தில் வெளியாகியுள்ள இந்தத் தீர்ப்பினால், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுத்த 103ஆவது அரசியல் சாசன திருத்தச் சட்டம் செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளது.

நீதிபதி ரவீந்திர பட் தனது மாறுபட்ட தீர்ப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட சினோ கமிஷன் அறிக்கையை சுட்டிக் காட்டி இருக்கிறார். அவ்வறிக்கையின்படி, நாடு முழுவதும் 31.7 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர்.

இதில் தாழ்த்தப்பட்டோரின் (SC) எண்ணிக்கை 7.74 சதவீதம் ஆகும்; அதாவது அந்த சமுதாய மக்கள் தொகையில் 38 சதவீதம் பேர் வறுமையில் உள்ளனர். பழங்குடிகளில் (ST) 48 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளனர்; அதாவது அந்த சமுதாயத்தின் மக்கள் தொகையில் 4.25 கோடி பேர். பிற்படுத்தப்பட்டோரில் (OBC) 33.1 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர்; அதாவது அந்த சமுதாயத்தின் மக்கள் தொகையில் 13.86 கோடி பேர். பொது பிரிவினரில் (உயர் சாதிகளில்) 5.5 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர்; அதாவது அந்த சமுதாய மக்களில் 18.2 சதவீதத்தினர். இந்தப் புள்ளிவிவரங்களை அவர் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், நீதிபதி ரவீந்திர பட் “பொருளாதார ரீதியான பின்னடைவு தான் இந்த குறிப்பிட்ட இட ஒதுக்கீட்டின் முதுகெலும்பாக இருக்கும் போது இதில் பட்டியலினம், பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விடுத்து மேற்கொள்ளப்பட்ட திருத்தம் அரசியல் சாசனத்திற்கு ஏற்புடையதல்ல; அனுமதிக்கதக்கதும் அல்ல” என்றும் “சமூகத்தில் அனைத்துப் பிரிவினரும் முன்னேற வேண்டும். அதுதான் உண்மையான சமத்துவம் என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்றும் கூறியுள்ளார்.

தலைமை நீதிபதி யு.யு. லலித் தனது தீர்ப்பினை வெளியிடாமல் நீதிபதி ரவீந்திர பட்டின் அவர்களின் தீர்ப்பை தான் முழுமையாக ஆமோதிப்பதாகக் கூறிவிட்டார்.

படிக்க: இட ஒதுக்கீடு : சலுகையா ? அடக்குமுறைக்கு எதிராக போராடி பெற்ற உரிமையா ?

மோடி அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரியிலேயே இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது. ஆனால், தீர்ப்பு வருவதற்கு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த காலகட்டத்தில், அதாவது உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு பற்றிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போதே, மத்திய பல்கலைக்கழகங்களிலும் சில மாநில பல்கலைக்கழகங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்படி நடைமுறைப்படுத்துவதற்கு தடை இல்லை என்றும் உச்சநீதிமன்றம் அப்போது கூறியிருந்தது. தற்போது மோடி அரசின் முடிவு சரி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் “இந்தத் தீர்ப்பு சமூக நீதித் தத்துவத்திற்கு நேர் முரணானது” என்று கூறியுள்ளார். விசிக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாகக் கூறியிருக்கின்றன. சிபிஐ கட்சியும் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், இட ஒதுக்கீட்டு பிரச்சினைகளை நீதிமன்றத்தில் தீர்த்து விட முடியாது என்றும் அரசியல் களத்தில் வைத்துத் தான் தீர்க்க முடியும் என்றும் கூறினார். காங்கிரஸ் மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் தங்கள் நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

பாஜக அரசு தனியார்மயக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருவதால், பொதுத்துறை நிறுவனங்கள் இருக்குமா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது. அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு என்பது மிகவும் சுருங்கி விட்டது. இதில் பார்ப்பன, உயர்சாதியை சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது என்பது, இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழித்துக் கட்டி, அனைத்து துறைகளிலும் பாசிச சக்திகளை நிரப்பும் செயலாகும்.

பொம்மி

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2022 | மின்னிதழ்

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

நவம்பர் – 2022 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜி−பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் :

தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ. 20

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

 

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

♦ தலையங்கம் : தூத்துக்குடி தியாகிகள் புகழ் ஓங்குக! கார்ப்பரேட் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வெல்க!

♦ கார்ப்பரேட் கொள்ளை எதிர்ப்பையும் உள்ளடக்கையதே பாசிச எதிர்ப்பு!

♦ இலவச எதிர்ப்பும் சமூக நலத்திட்ட ஒழிப்பும்!

♦ மீண்டும் முட்டுச்சந்தில் ஏகாதிபத்திய முதலாளித்துவம்! இது உலகப் பாட்டாளிகள் முன்கை எடுக்கும் தருணம்!

♦ சமூக ஊடகங்களின் மீது பாசிச ஒடுக்குமுறையை ஏவும் ஆண்டை நீதிபதிகள்!

♦ அதானி: உலகப் பணக்காரன் அல்ல; உலகப் பாட்டாளி வர்க்கத்தின் எதிரி!

♦ பார்ப்பன – பனியாக்கள் பிடியில் இந்திய ஊடகங்கள்!

♦ கட்டாய வாக்களிப்பு: போலி ஜனநாயகத்தின் இறுதி எல்லையில் பாசிசம்!

♦ ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: மதவாத கும்பலுக்கு எதிரான ஜனநாயகப் போர்!

♦ சாதி – தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக சாதி – தீண்டாமை ஒழிப்பு புரட்சிகர மணவிழாக்கள் நடந்த 25ஆம் ஆண்டை நினைவு கூர்வோம்!

♦ ஐ.டி.ஊழியர்களை மிரட்டும் மூன்லைட்டிங்!

தூத்துக்குடி தியாகிகள் புகழ் ஓங்குக! கார்ப்பரேட் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வெல்க!

டந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டு விசாரணை அறிக்கைகள் விவாதிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டு வெளியாகி இருக்கின்றன. ஒன்று, கார்ப்பரேட் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய தூத்துக்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு படுகொலை தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை. இன்னொன்று, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் கொள்ளைக்கூட்டத்தின் தலைவியும் பாசிஸ்டுமான ஜெயலலிதாவின் ‘மர்ம’ மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி  ஆணையத்தின் அறிக்கை.

ஜெயா எப்படி செத்தால் நமக்கென்ன என்று கடந்து செல்லாமல், அவரது மரணத்திலுள்ள மர்மத்தைக் கண்டறிய வேண்டுமென்று பலரும் கூப்பாடு போட்டதன் விளைவாகவும், அதிமுகவில் ஒருவரையொருவர் எப்போதும் காலை வாரி விடுவதற்காகவும், மக்களைப் பரபரப்பாக எப்போதும் வைத்திருப்பதே சுரண்டலின் தேவை என்பதற்காகவும் மட்டுமே அமைக்கப்பட்டது ஆறுமுகசாமி ஆணையம்.

ஆனால், அருணா ஜெகதீசன் ஆணையம் அப்படி பரபரப்புக்காக அமைக்கப்பட்டதல்ல. தூத்துக்குடியின் நீர், நிலம், காற்று என அனைத்தையும் நஞ்சாக்கி மக்களுக்கு புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களைத் திணித்து வந்தது அனில் அகர்வால்-ன் வேதாந்தா ஸ்டெர்லைட் கம்பெனி. ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி சுமார் 30 ஆண்டுகளாக மக்கள் நடத்தி வந்த போராட்டங்களின் ஒரு கட்டமே, “லட்சம் மக்கள் கூடுவோம்! ஸ்டெர்லைட்டை மூடுவோம்!” என்ற முழக்கத்தை முன்வைத்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மே 22, 2018 அன்று நடத்திய ஆட்சியர் அலுவலக முற்றுகை. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக இனி யாரும் போராடக்கூடாது என்பதற்காக, அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி, டிஐஜி, ஐஜி, தூத்துக்குடி கலெக்டர், எஸ்.பி உள்ளிட்டோர் திட்டமிட்டு, மே 22 அன்றும் அதைத்தொடர்ந்த நாட்களிலும் கொடும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளை ஏவினர். அதையே தூத்துக்குடி மாடல் என்று சொல்லுமளவுக்கு கொடூரமான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டனர்.

படிக்க : தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரசு பயங்கரவாதப் படுகொலைகள் | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

அமைதியாகப் போராடிய மக்கள் மீது பூங்காவில் மறைந்திருந்தும், வாகனங்கள் மீதேறியும், மிக அருகில் இருந்தும்,  துப்பாக்கியால் சுட்டும், அடித்தும் கொன்றது கார்ப்பரேட் ஸ்டெர்லைட்டின் கூலிப்படையான போலீசு. ஸ்டெர்லைட்டை மூட வேண்டும், அரசு பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தி, கொல்லப்பட்ட தியாகிகளின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்தனர் தூத்துக்குடி மக்கள். அவர்களுக்கு ஆதரவாக மொத்த தமிழ்நாடும் திரண்டிருந்தது. இதனால் வேறு வழியின்றி அமைக்கப்பட்டதுதான் அருணா ஜெகதீசன் ஆணையம்.

ஆறுமுகசாமி ஆணையமும் அருணா ஜெகதீசன் ஆணையமும் அடிப்படையில் வெவ்வேறு நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டவை. முன்னது அரசியல் சதுரங்கத்துக்காகவும் பின்னது மக்கள் போராட்டங்களின் நிர்ப்பந்தங்களால் அமைக்கப்பட்டதுமாகும். அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மே 18, 2022 அன்றும், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை ஆகஸ்ட் 27, 2022 அன்றும் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால் இரு அறிக்கைகளையும் ஒரே நேரத்தில் வெளியிட்டதன் மூலம், கார்ப்பரேட்டுக்காக அரசு நடத்திய பயங்கரவாத நடவடிக்கைகள் – அதன் பரிமாணங்கள் – சதிகள் அனைத்தும் மக்களின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டன. பாசிச ஜெயாவின் மரணம் குறித்த கிசுகிசுக்களால் தூத்துக்குடி தியாகிகளின் மரண ஓலம் அடக்கப்பட்டு விட்டது.

***

அரசால் அமைக்கப்படும் விசாரணை ஆணையங்கள், பொதுவாகவே ஒரு பிரச்சினையை மூடி மறைப்பதற்கும் தள்ளிப்போட்டு மக்களின் நினைவிலிருந்து மறக்கடிப்பதற்குமானவையே. இதுவரை பல விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டிருப்பினும், அனைத்து ஆணைய அறிக்கைகளும் அரசால் வெளியிடப்படவுமில்லை; அவ்வாறு வெளியிடப்பட்ட அனைத்து அறிக்கைகளையும் அரசு நிறைவேற்றிடவுமில்லை; வெளியிட்டே தீர வேண்டிய அவசியமும் இல்லை என்பதால்தான் விசாரணை ஆணையங்களே அமைக்கப்படுகின்றன.

நான்காண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையும்கூட தானாக வெளியாகிவிடவில்லை. ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்த விசாரணை அறிக்கையை வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் சில பகுதிகளை ஊடகவியலாளர் இளங்கோவன் ராஜசேகரன் வெளிக்கொணர்ந்தார். ஆகையால், வேறு வழியின்றியே அந்த விசாரணை அறிக்கை சட்ட மன்றத்தில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கிறது.

அருணா ஜெகதீசன் அறிக்கையிலும், அந்த அறிக்கை வெளிவந்த பின்னர் நடத்தப்பட்ட விவாதங்களிலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்பது தனிப்பட்ட சில போலீசு உயரதிகாரிகளின் பொறுப்பற்ற அல்லது குரூரமான நடவடிக்கையாக மட்டுமே சித்தரிக்கப்படுகின்றது.  ஆனால், கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக இனி தமிழ்நாட்டில் எவ்விதப் போராட்டமும் நடைபெறக்கூடாது என்பதற்காக, ஒட்டுமொத்த அரசு எந்திரமே மேற்கொண்ட அரசு பயங்கரவாத நடவடிக்கைகளின் தொடக்கம்தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்பதை அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் நிரூபித்துள்ளன. தூத்துக்குடியை போலீசு கட்டுப்பாட்டில் கொண்டுவந்து நூற்றுக்கணக்கானோரை வீடு புகுந்து கைது – சித்திரவதை செய்தது; கைது செய்யப்பட்ட ஒவ்வொருவரின் மீதும் நூற்றுக்கு மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்தது; இப்போதுவரை ஸ்டெர்லைட் ஆதரவு பிரச்சாரத்துக்கு அனுமதி; ஸ்டெர்லைட் எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு அனுமதி மறுப்பு ஆகிய தொடர் நடவடிக்கைகள் வெறும் வன்முறை மட்டுமல்ல, இது அரசு பயங்கரவாதம் என்பதற்கான சாட்சிகளே.

அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் மூலம், போலீசின் திட்டமிட்ட துப்பாக்கிச்சூடு, எடப்பாடி பழனிச்சாமி, ரஜினி உள்ளிட்டோரின் பொய்கள் ஆகியவை அம்பலத்துக்கு வந்திருக்கின்றன. அன்றைய ஐஜி, டிஐஜி உள்ளிட்ட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவ்வறிக்கை பரிந்துரை செய்திருக்கிறது. 4 போலீசுக்காரர்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அன்றைக்கு டிஐஜி, ஐஜி, எஸ்.பி ஆக இருந்து தற்போது பதவி உயர்வு பெற்றுள்ளவர்களிடம் கருத்துக் கேட்கப்படும் என்றும் அரசு கூறியிருக்கிறது.

திடீரென்று நடைபெற்ற போலீசின் தாக்குதலாக இருப்பின், அதைக் கையாளும் வழிமுறை வேறு. ஆனால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடோ அரசு பயங்கரவாத நடவடிக்கையாகும்.

2009 தமிழீழப் படுகொலை தொடர்பாக யாரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க முடியும்? மஹிந்த ராஜபக்சே போய் ரணில் ஆட்சிக்கு வந்தாலும்கூட சிங்கள இனவெறி அரசு, அப்படுகொலைகளுக்காக யாரையும் பலி கொடுக்காது. ஏனெனில் அது சிங்கள இனவெறி அரசு, ஏகாதிபத்திய நாடுகளுடன் இணைந்து தமிழ் மக்கள் மீது நடத்திய படுகொலை. அது போலத்தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடும். கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக அரசே முன்னின்று நடத்திய பயங்கரவாதப் படுகொலைக்கு அந்த அரசால் எப்படி நீதி வழங்க முடியும்?

***

“போலீசை தாக்கிய பின்னர்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது, இந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர்” என்று கூறிய ரஜினி; “13 பேர் சுட்டுக் கொல்லப்படவில்லை என்றால் ஆயிரம் பேர் இறந்திருப்பார்கள்” என்று கூறிய அன்றைய பிஜேபியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்; “ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும்” என்று அண்மையில் பேசிய அர்ஜுன் சம்பத், இந்து முன்னணி உள்ளிட்ட அனைவருமே இந்த அரசு பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புடையவர்களே.

ஸ்டெர்லைட் கார்ப்பரேட் ஆலைக்காக மக்கள் மீது அரசு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டம் இயற்றப்பட வேண்டும். போலீசால் கொல்லப்பட்ட தியாகிகளுக்கு அரசால் மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும். இவைகளெல்லாம் சாதாரணமாக கோரிக்கை வைத்து பெற்றுவிடக்கூடிய விசயங்கள் அல்ல. அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை வெளிவந்த போது தமிழ்நாட்டில் மாபெரும் போராட்டங்கள் கிளர்ந்து வெடித்திருக்க வேண்டும். அப்போராட்டத் தீயின் சூட்டில் அதிகாரவர்க்கம் குலைநடுங்கி  தூத்துக்குடி அரச பயங்கரவாத குற்றவாளிகளைத் தண்டித்திருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டிலோ ஜெயலலிதாவின் மர்ம மரண கிசுகிசுக்கள் அல்லவா விதந்தோதப்பட்டுக் கொண்டிருந்தன. மயான அமைதியைக் கூட சிறு ஒலிக்கீறல் தகர்த்துவிடும். ஆனால் மர்மம் – பரபரப்பு என்ற சாக்கடைச் சகதிக்குள் நம்மை மூழ்கடிக்கும் ஆளும்வர்க்க ஊடகங்களை என்ன செய்வது? செவிட்டில் அறைவதைத் தவிர..

படிக்க : மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகியவற்றை தடை செய்ய சொல்லும் பயங்கரவாதி அர்ஜுன் சம்பத்தை கைது செய் !

தூத்துக்குடியில் நடைபெற்றது வன்முறை மட்டுமல்ல; அது ஸ்டெர்லைட் என்ற கார்ப்பரேட்டுக்காக இந்த அரசு நடத்திய பயங்கரவாதப் படுகொலை. இதைத்தான் நாம் தமிழ்நாட்டு மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

தூத்துக்குடி தியாகிகள் தங்கள் இன்னுயிரை ஈந்தும், தூத்துக்குடி மக்கள் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டும் நமக்கு பலவற்றை கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

பற்றிப்படரும் பாசிசச் சூழலில் நம்பிக்கை ஏதுமற்ற தருணத்தில்தான், “லட்சம் மக்கள் கூடுவோம்! ஸ்டெர்லைட்டை மூடுவோம்!” என்ற முழக்கத்தை முன்வைத்து மே 22 துப்பாக்கிச்சூட்டையும், அதற்கு பின்னாலான அனைத்து அடக்குமுறைகளையும் நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டு சாதித்துக் காட்டியிருக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள்.

கார்ப்பரேட் வேதாந்தாவின் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும் அரசு பயங்கரவாத அடக்குமுறைக்கு அஞ்சாமல் வாயிலும் மார்பிலும் குண்டுகள் தாங்கிய தூத்துக்குடி தியாகிகளே நம்முடைய தியாகச்சுடர்கள். சொல்லொணா துயரங்களோடு, உறுதியாக அரசு பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொண்ட தூத்துக்குடி மக்களே நம்முடைய நாயகர்கள். அவர்கள் கற்றுத்தந்த மக்கள் ஒற்றுமையை, கார்ப்பரேட் எதிர்ப்புப் போராட்ட வழியை நெஞ்சிலேந்தி, காவி – கார்ப்பரேட் பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைப்பதே தற்போதைய தேவை.

10% இட ஒதுக்கீட்டை உறுதி செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

09.11.2022

10% இட ஒதுக்கீட்டை உறுதி செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு!
ஆர்.எஸ்.எஸ்-பாஜக; அம்பானி-அதானி பாசிசக் கும்பலின் அடுத்த கட்ட நகர்வு !

பத்திரிகை செய்தி

யர்சாதியினரில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டை (Economically Weaker Sections -EWS10%) உறுதிசெய்து, 103-வது சட்ட திருத்தத்தையும் ஆதரித்து தீர்ப்பளித்திருக்கிறது, 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு.

ஏற்கனவே சில ஆண்டுகளாகவே பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் என்று கூறப்படும் நபர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 60 புள்ளிகள் தேவை என்றால் அதுவே பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 28 புள்ளிகளாக இருக்கின்றது.

இடஒதுக்கீடு என்பது சமூகத்தில் சாதிரீதியாக பின் தங்கியவருக்கு ஒதுக்கீடு அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதுதான்.

எல்லாத் துறைகளிலும் பார்ப்பனர்கள் வீற்றிருந்த காலத்தில்தான் பார்ப்பனரல்லாத சாதியினர் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டுமென்ற உரிமைக்காக போராடி பெற்றனர். அதன் காரணமாக தற்பொழுது தங்களை ஆண்ட சாதி என்று கூறிக் கொள்ளும் பலரும் கல்வி அறிவு பெறவும் வேலை வாய்ப்பு பெறவும் தொடங்கினர்.

படிக்க : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி: பயங்கரவாத அமைப்பை தடை செய்வது தான் முதல் தேவை! | மருது வீடியோ

அவ்வாறு கல்வி அறிவும் வேலை வாய்ப்பும் பெற்றவர்கள் அரசு கட்டமைப்பை குறிப்பாக பொதுத் துறையை குறிப்பிட்ட அளவில் பலப்படுத்தினர்.

ஒட்டுமொத்த நாட்டையும் அம்பானி-அதானி பாசிச கும்பலுக்கு தாரை வளர்ப்பதையே லட்சியமாகக் கொண்டிருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி பாசிச கும்பலுக்கு இனியும் இடஒதுக்கீடு, ஜனநாயகம், உரிமைகள் என்று பேசிக் கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வேலைவாய்ப்பு கல்வி மற்றும் அரசு துறைகள் அனைத்திலும் இயல்பிலேயே பார்ப்பன பாசிச சிந்தனை உள்ளவர்களை நிரப்புவதன் மூலம் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள துடிக்கிறது கார்ப்பரேட் கும்பல்.

முன்பு தன்னை ஒரு ஜனநாயக நாடாக காட்டிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்த காரணத்தினாலேயே  வேறுவழியின்றி இடஒதுக்கீடு கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய ஆளும் வர்க்கம் தள்ளப்பட்டது.

இனியும் ஜனநாயக உரிமைகள் என்று பேசிக் கொண்டிருந்தால் அதானி-அம்பானி பாசிச கும்பலுக்கு நாட்டை விற்பதில் தடங்கல்கள் ஏற்படும்.

மக்களின் அனைத்து உரிமைகளும் தொழிலாளிகளின் அனைத்து உரிமைகளும் படிப்படியாக எவ்வாறு  பறிக்கப்பட்டு வருகின்றதோ அதன் ஒரு பகுதியாகவே தற்பொழுது இடஒதுக்கீட்டு உரிமையும் பறிக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்டபோது தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று பிச்சை எடுத்து அதனை சாதித்துக் காட்டிய பார்ப்பன கும்பல், கார்ப்பரேட்டின் தேவைக்காக தற்பொழுது இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டுவதன் மூலம் ஒட்டுமொத்த பெரும்பான்மையான உழைக்கும் மக்களை அத்துக் கூலிகளாகவும் கல்வியறிவற்ற பாமரர்களாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தின் காரணமாக அனைத்து அரசு துறைகளும் அவுட்சோர்சிங் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இடஒதுக்கீட்டு நோக்கமே கேள்விக்குள்ளாக்கப்பட்டு தான் கொண்டிருக்கிறது.

அரசு வேலை, இலவச கல்வி என்பது மறுகாலனியாக்கச் சூழலில் சட்டரீதியான இடஒதுக்கீடு என்பதை பெயரளவில் வைத்து கொண்டு மட்டும் என்ன செய்ய முடியும் என்ற நிலைதான் தற்போது இருக்கிறது.

படிக்க: ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி, அம்பானி- அதானி பாசிசம் ஒழிக! அக்டோபர்- 11 சமூக நல்லிணக்கப் பேரணி வெல்க!

இடஒதுக்கீட்டை ஒழிப்பதே ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி பாசிச கும்பலுக்கும் அதானி-அம்பானி பாசிச கும்பலுக்கும் தேவையாக இருக்கிறது. அதனால்தான் இந்த காலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. உறுதி செய்தும் இருக்கிறது உச்ச நீதிமன்றம்.

இந்திய நாட்டின் வருமான உச்ச வரிவரம்பே ரூ2.5 லட்சமாக இருக்கும் பொழுது பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் என்று கூறிக்கொள்ள கூடியவர்களுக்கு மட்டும் வரிவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்தி இருப்பது என்பது ஒன்றே இந்த அரசு பார்ப்பனர்களுக்காக மட்டுமே இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த அநீதியான தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதும் மறுசீராய்வு செய்வதும் எவ்விதத்திலும் பலனளிக்க போவதில்லை. ஏனெனில் அனைத்து துறைகளும் ஆர்.எஸ்.எஸ் மயமாக்கப்பட்டு இருப்பதுபோல நீதித்துறையும் அதன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. மாறாக பெருந்திரளான மக்கள் போராட்டங்கள் வழியாகத்தான் அதுவும் ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி; அம்பானி-அதானி பாசிசத்தை வீழ்த்துகின்ற போராட்டத்தின் பகுதியாகத்தான் மக்கள் இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும்  பெறமுடியும்.

அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பது நம்முடைய தலையாயப்பணியாக இருக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல்செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு-புதுவை
9962366321.

கலவரத்தைத் தூண்டும் பயங்கரவாத அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ்! | தோழர் அமிர்தா வீடியோ

ங்கு இருக்கக்கூடிய நிர்வாகத் துறையை – அரசுத் துறையாக இருக்கட்டும், போலீசுத் துறையாக இருக்கட்டும், நீதிமன்றமாக இருக்கட்டும் – ஒட்டுமொத்தமாக ஆர்.எஸ்.எஸ் கைப்பற்றிக் கொண்டு அவர்கள் நினைத்ததை சாதித்துக்கொள்கிறார்கள். என்.ஐ.ஏ என்பதே மத்திய அரசின் கைப்பாவையாகத் தான் செயல்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதன் மூலம் பெட்ரோல் விலை அதிகரிப்பு, சிலிண்டர் விலை அதிகரிப்பு பற்றி மக்களுக்கு சொல்லப்போகிறார்களா? இல்லை. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க எப்பொழுதும் மக்களுக்கு எதிராகத்தான் இருந்திருக்கிறது.

ஜனநாயக சக்திகளாகிய நாங்கள் அரங்கக் கூட்டம், ஆர்ப்பாட்டம் ,போராட்டம் என்று அனுமதி கேட்டால் கிடையாது; ஜனநாயகமாக பேசுவதற்கு அனுமதி கிடையாது; ஆனால் மூன்று தடவை தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்புக்கு அனுமதி கொடுத்துள்ளனர். கலவரத்தை தூண்டும் பயங்கரவாத அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ்!

2000 ஆண்டுகளாக பல்வேறு சீர்திருத்தக் கருத்துகளை பேசிக்கொண்டிருக்கும் மாநிலம் தான் தமிழ்நாடு. ஆனால் ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை   என்ன? இவர்களுடைய கொள்கை சிறுபான்மையினர்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், உழைக்கும்  மக்களுக்கும்,  கம்யூனிஸ்டுகளுக்கும், பழங்குடியின மக்களுக்கும் எதிரானது.

ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துராஷ்டிர திட்டத்தை முறியடிக்க ஜனநாயக சக்திகள் முன்னின்று பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைக்க வேண்டி இருக்கிறது என்பதை தமிழ்க்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள் பதிவு செய்துள்ளார்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நவம்பர் 7: ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! | மதுரை-சென்னை அரங்கக் கூட்டம்!

நவம்பர் 7 ரசிய சோசலிச புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்!
ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம்!

மதுரையில் அரங்கக் கூட்டம்

தோழர்கள் வரைந்த ஓவியங்கள், காவி-கார்ப்பரேட் பாசிஸ்டுகளை அம்பலப்படுத்தக்கூடிய காட்சிப்படங்கள், ஆசான்களின் மேற்கோள்கள், தோழர் லெனின் ஸ்டாலின் உருவப்படங்கள் வைத்து அரங்கம் தயாரானது.

காலை 11:00 மணிக்கு துவங்கிய அரங்கக் கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம், மதுரை மண்டல இணைச் செயலாளர், தோழர் சிவகாமு அவர்கள் தலைமை தாங்கினார்.

ரசிய சோசலிச புரட்சி நாளை நினைவு கூர்ந்து, நமது நாட்டில் நிலவக் கூடிய காவி-கார்ப்பரேட் பாசிச சக்திகளின் நடவடிக்கையும், உலக அளவில் நிலவக்கூடிய பொருளாதார நெருக்கடிகளையும் எப்படி முதலாளித்துவம் தோற்றுப்போய் அழுகி நாறுகிறது என்பதை அம்பலப்படுத்தி சோசலிச சமுதாயத்தை நோக்கி முன்னேறுவதே மாற்று என பேசி முடித்தார்.

அடுத்ததாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் சங்கர் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி பேசினார். அதில் வேலை இல்லாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் 2018-2020 வரை மட்டும் 9,170 பேர்; கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டவர்கள் 16,019 பேர், பணமதிப்பிழப்பு ஜி.எஸ்.டி போன்றவற்றால் சிறுதொழில்கள் அழிந்து ஏராளமானோர் வேலையை இழந்துள்ளனர்.

இதுபோக அசோக் லேலண்ட், பார்லே ஜி போன்ற நிறுவனங்களில் தொழிலாளர்கள் வேலையைவிட்டு துரத்தப்பட்டுள்ளனர். அதானி போன்றவர்களுக்கு கடனை தள்ளுபடி செய்து உலகப் பணக்காரர்களாக மாற்றியிருக்கும் அரசு, கார்ப்பரேட்டுக்கானது என அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்ததாக தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், இஸ்கத் அவர்கள், “இளைய சமுதாயம் கல்வியின் பக்கம் செல்கிறதா? போதையின் பக்கம் செல்கிறதா? என்ற கேள்வியுடன் ஆரம்பித்து, தமிழகம் கேரளாவில் அதிகமான போதைப் பொருட்கள் விற்கப்படுவதை அம்பலப்படுத்தினார். தமிழகத்தில்தான் 18 வயது இளைஞன் போதையில் 11 வயது சிறுவனை அடித்தே கொன்றுள்ளான். 128 பள்ளிகளில் நடத்திய ஆய்வில் 5000-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் போதைப்பொருள் பழக்கம் உள்ளது. பல்வேறு சமூக சீரழிவுகளையும் அதற்கு காரணமான போதையையும் அம்பலப்படுத்தினார். மேலும் அதிகாரபோதை இந்த நாட்டை பிடித்து ஆட்டுவதைப் பற்றியும் விரிவாகப் பேசி இந்த நாட்டிற்கு புரட்சிகள் தேவைப்படுகிறது, அதை இளைஞர்கள் கையில் எடுக்க வேண்டும் என்பதை விளக்கி பேசினார்.

அடுத்ததாக பேசிய பெரியவர் பூபாலன் அவர்கள், அறிவியலின் தேவை பற்றியும் அது முதலில் குழந்தைகளிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பது பற்றியும் கேள்வி பதில் உடன் உரையாடினார். இப்படிப்பட்ட அறிவியல் பூர்வமான கல்வியை குழந்தைகளுக்கு ஊட்டுவதன் மூலமாகத்தான் காவிக் கும்பலின் பொய்களையும் புரட்டுகளையும் மாணவர்கள் எதிர்த்து கேள்வி கேட்பார்கள். இதுவே மார்க்சியம் கற்றுக் கொள்வதற்கும் உலகை மாற்றுவதற்கும் அவசியமானது, இந்த அறிவியல் பூர்வமான பார்வையை நாம் அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என உற்சாகமூட்டும் விதத்தில் பேசி முடித்தார்.

அடுத்ததாக தமிழ் புலிகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் முத்துக்குமார் அவர்கள், “ஆரிய பார்ப்பன புரட்டுகளை அம்பலப்படுத்தி பேசினார். உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்ற பெயரில் நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை அம்பலப்படுத்தி பேசினார். மேலும், பார்ப்பனியம் என்பது சமத்துவத்திற்கு எதிரானது ஒவ்வொரு சாதிக்கு கீழும் இன்னொரு சாதி என்ற படிநிலை அமைப்பை கொண்டது. அது எதார்த்தத்தில் அனைத்து இடங்களிலும் நிலவுகிறது என்பதை பல்வேறு நடைமுறை சம்பவங்களுடன் எடுத்துக்காட்டினார். அனைத்து விதமான சமத்துவத்திற்கு எதிரான பொய்களையும் புரட்டுகளையும் கொண்டது பார்ப்பனியம், சாதி அமைப்பு அதை ஒழித்துக்கட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பேசி முடித்தார்.

ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சந்தானம் அவர்கள், “அன்றைக்கு பாசிசத்தை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்த ரசிய சோசலிசப் புரட்சியைபோல், ஒன்றிய அரசின் பாசிச நடவடிக்கையை முறியடிக்க நாம் இந்த அரங்க கூட்டத்தில் உறுதி ஏற்போம். மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இரண்டு ஆண்டுகளாக டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள். பல்வேறு மாநில மக்களும் அங்குபோய் விவசாயிகளை பார்த்து ஆதரவு தெரிவித்தனர். ஆனால், மோடி அவர்கள் விவசாயிகளை ஒருமுறைக்கூட சந்திக்கவில்லை. அதனால்தான் சொல்கிறோம் இது கார்ப்பரேட்டுகளுக்கான அரசு. பாசிச மோடியை பணிய வைத்த விவசாயிகளின் போராட்டத்தைப்போல் ஓர் போராட்டத்தை கட்டியமைப்போம் என அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்ததாக இளம் தோழர் ஜான்சி அவர்கள், அதிக அளவு காடுகள் அழிக்கப்படுகிறது; மணல் உருவாக லட்சம் ஆண்டுகள் ஆகிறது ஆனால் அதை கொள்ளையடித்து கொண்டு போகிறார்கள். தொழிற்சாலை கழிவுகள் கடல்களில் கொட்டப்படும் கழிவுகள் அனைத்தும் மக்களின் வாழும் காலத்தை குறைத்து நோயாளிகளாக மாற்றுகிறது; இதற்கு இந்த முதலாளித்துவ சமுதாய அமைப்பின் லாபவெறிதான் முக்கியமான காரணம் என பேசி முடித்தார்.

தமிழகத்தின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபு பற்றி தோழர் கதிர் பேசினார். அவர் உரையில், “சித்தர்கள், வைகுந்தர், வள்ளலார், பெரியார் என பலரும் தொடர்ச்சியாக பார்ப்பனிய எதிர்ப்பு மரபை, அவர்கள் செய்து காட்டியதை தொகுத்து பேசினார். காவி பாசிசக் கும்பலுக்கு எதிராக  உழைக்கும் மக்களிடம் இதைக்கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் பேசி முடித்தார்.

தோழர் சே, ரசிய புரட்சியையும் அதன் சாதனைகளைப் பற்றியும் இன்று நாம் செய்ய வேண்டியதை பற்றியும் மிகவும் உற்சாகமாக கவிதை வாசித்தார்.

அடுத்ததாக தோழர் மருது, சினிமா போதை நுகர்வு கலாச்சாரம் பற்றி பேசினார். ஒரு ஹீரோ பண்ணக்கூடிய சாகசத்தை நாமும் பண்ண தோன்றுகிறது. சரக்கு அடிக்கிறார்கள் ஓப்பன் தி டாஸ்மார்க் என பாட்டு போடுகிறார்கள் இப்படி வெளிப்படையாகவே போதையையும் நுகர்வு கலாச்சாரத்தையும் திணிக்கிறார்கள். போதையும் நுகர்வு கலாச்சாரமும் ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழிக்கிறது. இதை தீர்ப்பதற்கு வழி சோசலிசம் தான் என பேசி முடித்தார்.

அடுத்ததாக பேசிய போடி, மக்கள் அதிகாரம் தோழர் ஏ.டி.கணேசன் அவர்கள் ரசிய புரட்சி ஏன் நடந்தது? தோழர் லெனின் ஸ்டாலின் வழியில் நாமும் பயணிக்க வேண்டும் என்பதையும் தன் சொந்த வாழ்வில் சிபிஐ,சிபிஎம் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து செயல்பட்டு  பிறகு வெளியேவந்து அமைப்பில் சேர்ந்து செயல்பட்ட அனுபவத்தையும் பேசினார்.

அடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப் அவர்கள், “ஒரு லட்சம் மனுஸ்மிருதியை விநியோகித்ததை பற்றியும் அது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய மக்களுக்குமே எதிரானது என்பதை அம்பலப்படுத்தினார். 10% உயர் சாதியினருக்கான இடஒதுக்கீடு நீதிபதிகளுக்கும் பொருந்துமா என்று கேட்டால் இல்லை என்கிறார்கள். ஏனென்றால் அது அறிவு சார்ந்தவர்கள் இருக்கும் இடமாம் அப்படி என்றால் நமக்கெல்லாம் அறிவு இல்லையா? என்பதை கேள்வியாக எழுப்பினார். 1925-ல் தோன்றிய கம்யூனிச இயக்கம் இந்தியாவில் ஆட்சியைப் பிடித்து இருக்க வேண்டும், என்று கம்யூனிச இயக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார். அந்த காலகட்டங்களில் அசுரகானம் தான் சேரிகளில் தேசிய கீதமாக இருந்தது. மக்கள் அதிகாரம் முன்னெடுக்கும் அனைத்து விஷயங்களிலும் துணை நிற்போம் என உறுதி கூறினார்.

அடுத்ததாக தோழர் செந்தில், அன்ன வயல் நாவல் குறித்து பேசும்போது இந்த புத்தகம் பாசிசத்திற்கு எதிராக முன்னிறுத்தப்பட வேண்டியது அன்றைய ரசியாவில் ஒரு கிராமத்தில் கூட்டுப் பண்ணை விவசாயத்தை எப்படி நிறுவினார்கள். அதன் மூலமாக பாசிஸ்டுகளுக்கு எதிராக எப்படி போராடினார்கள் என்பதைப் பற்றியும் விரிவாக பேசுகிறது.

ரசிய புரட்சி முடிந்த பிறகு நிலம் இல்லாதவர்களுக்கு நிலத்தை பிரித்து கொடுத்தது அடுத்த கட்டமாக கூட்டுப் பண்ணைகளை உருவாக்கியது. அங்கு டிராக்டர்கள் கொண்டு வந்தது பற்றி எல்லாம் நேரடி காட்சிபோல் இந்த புத்தகத்தில் காண்பித்துள்ளார்கள்.

சோசலிச ரசியாவில் என்ன மாற்றத்தை நிகழ்த்தினார்கள் என கேட்பவர்கள், இந்த புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும். பனிக்காலத்தில் அறுவடை செய்ய முடியாது என்பதை உணர்ந்து தீவிரமாக வேலைசெய்து கொண்டிருப்பார்கள், அதைத் தொடர்ந்து யுத்தம் வந்துவிடும் மக்களிடம்தான் ஆயுதங்கள் இருக்கும்; மக்கள் அனைவரும் போர்க்களத்திற்கு செல்வார்கள். யாரும் பின்வாங்கவில்லை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது என பேசி பல்வேறு ரஷ்ய நாவல்களையும் படிக்க வேண்டும் என்ற கூறினார்.

அடுத்ததாக தோழர் ரகு, பகத்சிங்கின் மொத்த வாழ்வையும் தொகுத்து பேசினார். இன்றைய ஏகாதிபத்திய சூழலில் நாமும் பகத்சிங்-ஆக மாற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி பேசினார்.

அடுத்ததாக தோழர் ராம், பிரியாணி என்ற சிறுகதையை அனைவரும் கவனிக்கும் விதத்தில் சிறப்பாக பேசினார். இது உழைக்கும் மக்களின் கடின வாழ்வையும் இழப்புகளையும் அழுத்தமாக பதிவு செய்யும் விதமாக இருந்தது.

அடுத்ததாக பேசிய தோழர் அன்பு, கல்வியில் திணிக்கப்படும் காவிமயம் ஒட்டுமொத்த மாணவர்களையும் சிந்திக்கவிடாமல் தடுப்பதற்கான ஏற்பாடு. அதனால்தான் சாவர்க்கர் புல் புல் பறவை மீது பறந்ததாக பாடத்திட்டத்தில் கொண்டு வருகிறார்கள். பகத்சிங் பெரியார் போன்றவர்களின் பாடங்களை கர்நாடக பாடப்புத்தகத்திலிருந்து நீக்குகிறார்கள். இதை முறியடிக்க நாமும் மக்களை திரட்ட வேண்டும் என்பதை பேசி முடித்தார்.

அடுத்ததாக எரிகாற்றுக் குழாய் எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் கதிரேசன் செல்வராஜ் பேசும்போது, எரிவாயு குழாய் பதிப்பை தங்கள் கிராமத்தில் எப்படி திட்டமிட்டு கொண்டு வந்தார்கள் விவசாய நிலங்களை அழித்தார்கள் அதற்கு எதிராக தொடர்ச்சியாக மக்கள் அதிகாரம் தோழர்களுடன் எப்படி பயணித்தோம் என்ற அனுபவத்தை பேசினார். மக்களிடம் அனைத்து உலக அரசியல் விஷயங்களையும் நாம் கொண்டு செல்ல வேண்டிய தேவையும் அதை கிராமங்களிலும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார். நம்மிடம் கருத்து ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும் களத்தில் முதலில் இறங்கி செயல்பட வேண்டும், அங்கு பேசிக் கொள்வோம் என ஒரு பாசிச எதிர்ப்பு கூட்டமைப்புக்கு முன்மாதிரியாக பேசி முடித்தார்.

அடுத்ததாக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் ரவி பேசும்போது உலகப் பொருளாதார நெருக்கடியை பற்றியும் அது ஏற்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய விளைவுகளைப் பற்றியும், இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு முதலாளித்துவ சமூக அமைப்பை தூக்கி எறிய வேண்டும். அதன் இடத்தில் சோசலிசத்தை நிறுவ வேண்டும் அதற்கு புரட்சி செய்ய வேண்டும் என்பதை பேசி முடித்தார்.

இறுதியாக பேசிய மக்கள் அதிகாரம், மாநில இணைச் செயலாளர் தோழர்.குருசாமி அவர்கள் பேசும்போது, ரஷ்யா – சீனா போன்ற நாடுகள் மீண்டும் முதலாளித்துவமாக மாறியபோது ஏகாதிபத்தியங்கள் நாடுபிடிக்கும் கொள்கையில் மீண்டும் இறங்கியது. அன்றைக்கு ஹிட்லர் போன்ற பாசிஸ்டுகளை சவக்குழிக்கு அனுப்பியது சோசலிச முகாம்தான். இன்று முதலாளித்துவத்தை ஜெயிக்க முடியாது என்பதை இப்போது ஓடிப்போனவர்கள் சொல்கிறார்கள். இதனை நம் தோழர்கள் சொல்வது கிடையாது. இதுபோல தோழர் லெனினுடன் கூட கடைசி வரை காட்டிக் கொடுப்பவர்கள் இருந்தார்கள். ரஷ்யா சீனாவைப்போல் இங்கு புரட்சி நடக்கவில்லை என பேசினார், புரட்சிகர கட்சிகளும் தலைவர்களும் அங்கு இருந்ததுபோல் இங்கு இல்லை என்பதுதான் எதார்த்தம். அப்படி என்றால் நாம் போல்ஷ்விக் கட்சியைப் போன்று முன்மாதிரியான தலைவர்களாக இருக்க வேண்டும். புரட்சி நடக்க வேண்டும் என்றால் சிறந்த கம்யூனிஸ்டுகள் தேவை புரட்சியாளனுக்கு ஓய்வு இல்லை சிந்தனை என்பது இளமையானது. உலகம் முழுவதிலும் ஸ்டாலினை சர்வாதிகாரி என்றார்கள்; ஸ்டாலின் மீது கோபம் கொண்டார்கள் ஆனால் உழைக்கும் மக்கள் என்றும் ஸ்டாலின் மீது கோபம் கொண்டதில்லை. ஏனென்றால் அவர்தான் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட். உலகம் முழுவதும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியபோது, அதையெல்லாம் இல்லாமல் சோசலிச ரஷ்யா கடந்தது சென்றது. அப்படி இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் தீர்வு இல்லை. அதற்கு வெளியில் நாம் அனைவரும் களத்தில் இறங்க வேண்டும். காவி-கார்ப்பரேட் பாசிஸ்டுகளை விரட்டி அடிக்க வேண்டும் அதை நம்மால் தான் செய்ய முடியும் என்பதை உறுதியாக பேசினார்.

பெண் தோழர்களின் குழு பாடல்களும், இளம் தோழர்களின் பாடல்களும் அனைவரையும் உற்சாகப்படுத்தியது. மதியம் அனைவருக்கும் மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது.

இறுதியாக மக்கள் அதிகாரம் தோழர் நாகராஜ் மிகவும் எழுச்சிகரமாக ஆசான்களின் மேற்கோள்களை குறிப்பிட்டு நன்றி கூறினார்.

பேச்சு, கவிதை, பாடல், கதை, ஓவியம், அனுபவங்கள் என பல்வேறு வகைகளிலும் தோழர்கள் உற்சாகத்துடனும் முன்னேற்றியுடனும் கலந்து கொண்டது அனைவரையும் உற்சாகப்படுத்தி நிகழ்ச்சி முடிவடைந்தது.

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்.

***

சென்னையில் அரங்கக் கூட்டம்!

ரசிய சோசலிச புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அதானி – அம்பானி பாசிசம் முறியடிப்போம்! என்ற தலைப்பின் கீழ் சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக பட்டாபிராம் பகுதியில் ரசிய புரட்சி நாள் விழா நடைபெற்றது.

விழா பறை இசையுடன் துவங்கியது, விழாவிற்கு பு.ஜ.தொ.மு-வின் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் து.லெட்சுமணன் தலைமையேற்று நடத்தினார். பு.மா.இ.மு-வின் மாநில செயலாளர் தோழர் துணைவேந்தன் அவர்கள் உரையாற்றினார். அடுத்ததாக மக்கள் அதிகாரம் மாநிலச் செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள் தனது உரையில் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு போராட்ட சூழல்கள் அதன் காரணம் என்ன என்பதையும் விளக்கி பேசினார்.

குழந்தைகள் கவிதை வாசிப்பு, ஓவியம் மூலமாக சமூக பிரச்சினைகளை எடுத்துரைத்து பேசியது சிறப்பாக அமைந்தது. விழாவிற்கு வந்திருந்த அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. சென்னை மாவட்ட மக்கள் அதிகாரம் இணைச் செயலாளர் தோழர் புவனேஸ்வரன் நன்றி உரையுடன் கூட்டம் முடிவுற்றது.

This slideshow requires JavaScript.

தகவல்: பு.ஜ.தொ.மு (மாநில ஒருங்கிணைப்புக்குழு)

இஸ்ரேல்: பாசிஸ்டுகளுடன் கூட்டணியமைத்த நெத்தன்யாஹூ!

0

ஸ்ரேலில் சமீபத்தில் வெளியான தேர்தல் முடிவுகளின் படி பென்ஜமின் நெத்தன்யாஹூ (Benjamin Netanyahu) மீண்டும் பிரதமர் ஆகிறார். மதவாத சியோனிச கட்சியுடன் (Religious Zionism) கூட்டணி அமைப்பதன் மூலம் தற்போது மீண்டும் ஆட்சியமைக்க உள்ளார். இந்த சியோனிச கட்சி என்பது ஒரு பாசிச கட்சியாகும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் இஸ்ரேலில் நடைபெற்ற ஐந்தாவது தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு அந்நாட்டில் ஸ்திரத்தன்மையற்ற அரசியல் சூழல் நிலவுகிறது. கடந்த முறை, ஆட்சியிலிருந்த கூட்டணியில் ஒரு இடதுசாரி கட்சி இடம்பெற்றிருந்ததால் இந்திய இடதுசாரிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால், அது வெறும் கானல்நீர் என்பது விரைவில் தெளிவாகிவிட்டது.

குறிப்பாக, தொடர்ந்து பாலஸ்தீனத்தின் இறையாண்மையைப் பறித்து அதனை ஒரு காலனியாக நடத்தி வரும் பிராந்திய மேலாதிக்க வல்லரசாகிய இஸ்ரேலில் ஜனநாயகத்திற்கான போராட்டங்கள் இருந்தாலும், இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு ஜனநாயகமான அரசியல் கட்சிகள் இல்லை என்பதே எதார்த்தம். இதைத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் நமக்கு மீண்டும் உணர்த்துகின்றன.

நெத்தன்யாஹூ 1996 இல் இஸ்ரேலின் இளம் பிரதமரானார். 1996 – 1999 மற்றும் 2009 – 2021 என நீண்ட காலம் அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்துள்ளார். 17 மாதங்களாக ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்த அவர் தற்போது மீண்டும் பிரதமராகவுள்ளார்.

நெத்தன்யாஹூவின் லிகுட் கட்சி (Likud Party) 32 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இது கடந்தாண்டு தேர்தலை விட இரண்டு இடங்கள் அதிகமாகும். பாசிச கட்சியான மதவாத சியோனிசம் 14 இடங்களைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது. கடந்தாண்டுத் தேர்தலைவிட எட்டு இடங்கள் அதிகம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. லிகுட் கட்சியும் பாசிச மதவாத சியோனிச கட்சியும் அமைக்கும் கூட்டணியில் மற்ற மதவாதக் கட்சிகளான யுனைடெட் டோரா ஜூடாயிசம் (United Torah Judaism UTJ) — 7 இடங்கள் — மற்றும் ஷாஸ் (Shas) — 11 இடங்கள் —ஆகியவை இணையவுள்ளன. 120 இடங்கள் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசட்டில் (Knesset) இதன்மூலம் இவர்களுக்குப் பெரும்பான்மை (64 இடங்கள்) கிடைக்கும்.

படிக்க: காசா: “பிள்ளைக்கறி திங்கும் யூத இனவெறி பிடித்த இசுரேல்”

இஸ்ரேலின் ‘இடதுசாரிகள்’ படுதோல்வி அடைந்துள்ளனர். 1968 முதல் 1977 வரை ஆட்சியில் இருந்த தொழிற்கட்சி (Israeli Labor Party — “HaAvoda”) வெறும் நான்கு இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.

காபந்து பிரதமரும் எதிர் அணியின் தலைமையில் உள்ள யெஷ் அடிட் கட்சியின் (Yesh Atid) தலைவருமான யெயர் லாபிட்-ஆல் (Yair Lapid) ஒரு வலுவான கூட்டணி அமைக்க இயலவில்லை. அவரது கட்சி, கடந்தாண்டு தேர்தலை விட ஏழு இடங்கள் அதிகமாகப் பெற்று 24 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

மதவாத சியோனிச கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் ஜூயுஸ் பவர் (Jewish Power) கட்சியின் தலைவரான இடாமர் பென்-க்விரின் (Itamar Ben-Gvir), அரபுகள் மீதான வெறுப்புப் பேச்சுக்கு இழிபுகழ் பெற்றவர். பாலஸ்தீனியர்கள்மீது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது, “அரபுகளுக்கு மரணம்” (Death to the Arabs) என்று முழங்கியது என அவரது யூத மதவெறிக்கு பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். பாருச் கோல்ட்ஸ்டைன்-ஐ (Baruch Goldstein) முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுபவர். 1994 ஆம் ஆண்டில் வழிபாடு நடத்திக் கொண்டிருந்த பாலஸ்தீனியர்களை கண்மூடித்தனமாக சுட்டு 29 பேரை படுகொலை செய்து, 125 பேரை காயமடையச் செய்த இஸ்ரேலிய-அமெரிக்க பயங்கரவாதிதான் அந்த பாருச் கோல்ட்ஸ்டைன்.

நெத்தன்யாஹூ ஆட்சியிலும் சரி யெயர் லாபிட் ஆட்சியிலும் சரி பாலஸ்தீனியர்கள் கடுமையாகவே ஒடுக்கப்பட்டனர். 2005 – 2009 காலகட்டத்தில், லாபிட்டின் கூட்டணி ஆட்சியின் போதுதான், பாலஸ்தீனியர்களை கொலை செய்வது அவர்களின் வீடுகளை இடிப்பது அவர்களை கைது செய்வது போன்ற ஒடுக்குமுறைகள் அதிகமாக நடைபெற்றன. ஆகவே, இஸ்ரேலில் யார் ஆட்சி அமைந்தாலும் பாலஸ்தீனியர்களுக்கு விடிவு இல்லை என்பது மட்டும் உறுதி. பாசிஸ்டுகளின் கூட்டணியோடு ஆட்சியமைவதால், தற்போது ஒடுக்குமுறை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

படிக்க: இலங்கையில் ‘சீன உளவுக் கப்பல்’: மக்களைத் திசைதிருப்பிய ஆளும் வர்க்க ஊடகங்கள்!!

ஐரோப்பாவில் வளர்ந்து வரும் பாசிசம்!

நவ-பாசிசம் ஐரோப்பாவில் அதிதீவிரமாக வளர்ந்து வருகிறது. கடந்த ஓராண்டில் நடைபெற்ற தேர்தல்களில், பாசிச சக்திகள் பெருமளவு முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. குறிப்பாக இத்தாலி, ஹங்கேரி, போலந்து, பிரான்ஸ், ஸ்வீடன், செக் குடியரசு, போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் அதி தீவிரமாக வளர்ந்துள்ளன.

இத்தாலி நாட்டில், கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் பிரதர்ஸ் ஆப் இத்தாலி (Brothers of Italy) என்ற பாசிச கட்சியைச் சேர்ந்த ஜார்ஜியா மெலோனி (Giorgia Meloni) வெற்றி பெற்று அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆகியுள்ளார். தான் ஒரு பாசிஸ்ட் அல்ல என்று அவர் கூறிக் கொள்கிறார். ஆனால், அவரது கட்சியானது, இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு முசோலினியின் பாசிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளால் தொடங்கப்பட்ட இத்தாலிய சமூக இயக்கம் (Italian Social Movement – MSI) என்ற கட்சியில் தனது வேர்களைக் கொண்டுள்ளது.

மெலோனியின் கட்சியின்கீழ் முசோலினியின் பேத்தியான ராச்செல் (Rachele) மற்றும் கொள்ளுப்பேரனான சீசெர் (Caio Giulio Cesare) ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறார்கள். முசோலினியின் பாசிஸ்ட் கட்சியின் கொடியில் இருக்கும் ‘மூவர்ண சுடர்’ பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சிக் கொடியிலும் இடம்பெற்றுள்ளது. மெலோனியிடம் முசோலினி குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது “முசோலினி தான்செய்த அனைத்தையும் இத்தாலிக்காகவே செய்தார்” என்று பதில் அளித்தார். மேலும், ‘கடவுள், தேசபக்திமிக்க நாடு மற்றும் குடும்பம்’ என்ற பழமையான பாசிச முழக்கம்தான் அவரது முழக்கமாக இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியில் அமையும் அதிதீவிர வலதுசாரி அரசாங்கம் இதுவாகும்.

2010 ஆம் ஆண்டிலிருந்து ஹங்கேரியன் பிரதமராக இருக்கும் விக்டர் ஆர்பன் (Viktor Orban), கடந்த ஜூலை மாதத்தில் நாசிகளின் கொள்கையான இனத் தூய்மைவாதம் பற்றிப் பேசியுள்ளார். அவரது பேச்சு மிகுந்த கண்டனங்களுக்கு ஆளானது. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஹங்கேரியில் மட்டும் 75,000 – 1,00,000 யூதர்கள் நாசிகளால் படுகொலை (Holocaust) செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாட்டில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் நவ-பாசிச அதிபர் வேட்பாளர் மரின் லு பென்(Marine Le Pen), 2017 ஆம் ஆண்டுத் தேர்தலின் போது தான் பெற்ற வாக்குகளை விட கிட்டத்தட்ட முப்பது லட்சம் வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ளார்.

சிறந்த ஜனநாயக நாடுகள் என்று கருதப்படும் ஸ்காண்டிநேவியா நாடுகளில் ஒன்றான ஸ்வீடனில், ஸ்வீடன் டெமாக்ரட்ஸ் (Sweden Democrats – SD) என்ற நவ-பாசிச கட்சி 20.5 சதவிகித வாக்குகளைப் பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக மாறியுள்ளது. அக்கட்சியின் ஆதரவுடன் தான் அந்நாட்டின் தற்போதைய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே வலதுசாரிகள் ஆட்சி புரியும் செக் குடியரசு நாட்டில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், பாசிச சக்திகள் கணிசமான அளவு வளர்ச்சி கண்டுள்ளன. போர்ச்சுகல் நாட்டில், வென்டூரா (André Ventura) தலைமையிலான அதி தீவிர வலதுசாரி கட்சி மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. போலந்து நாட்டின் பிரதமர் தீவிர வலது சரியாகவும், நாசி ஆதரவு மற்றும் யூத வெறுப்பு கொண்டவராகவும் உள்ளார்.

படிக்க: பட்டினியின் பிடியில் ஆஸ்திரேலியா !

பாசிசத்தின் வளர்ச்சிக்கான கூறுகள்

அன்று, அதாவது நூறாண்டுகளுக்கு முன்பு ஹிட்லர் – முசோலினி காலத்தில் இருந்த பாசிசத்திற்கும், இன்று இருக்கும் நவ-பாசிசத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இன்றைய சூழலுக்கு ஏற்ப பாசிசம் தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது என்று கூறலாம்.

அன்று, ஐரோப்பிய கம்யூனிஸ்டு கட்சிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதைத் தடுப்பதற்காக தொழிலதிபர்களாலும் வங்கியாளர்களாலும் பாசிசம் வளர்த்தெடுக்கப்பட்டது. இன்று, மீளமுடியாத நெருக்கடியில் சிக்கியுள்ள ஏகாதிபத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக, நிதி மூலதனத்தால் நவ-பாசிசம் வளர்த்தெடுக்கப்படுகிறது. வாரி இறைக்கப்படும் நிதியைக் கொண்டும் கார்ப்பரேட்டுகளால் கட்டுப்படுத்தப்படும் ஊடகங்களின் துணை வேண்டும் நவ-பாசிசம் வளர்த்தெடுக்கப்படுகிறது.

அன்றும் சரி இன்றும் சரி, அதிதீவிர தேசியவாதம், கம்யூனிஸ்டுகள் மீதான வெறுப்பு, புலம்பெயர்ந்த மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு போன்றவற்றை பரப்புவதன் மூலம் பாசிசம் வளர்கிறது. அன்று யூதர்கள் எதிரிகளாக சித்தரிக்கப்பட்டனர்; இன்று யூதர்களுக்கு பதிலாக முஸ்லிம்கள் எதிரிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். மூன்றாம் பாலினத்தவர்களை (LGBTQIA+) இழிவாக சித்தரித்து, அவர்களின் உரிமைகளை மறுக்கும் போக்கும் காணப்படுகிறது.

அன்றும் கம்யூனிசம் தான் — சோவியத் ரஷ்யா தான் — பாசிசத்தைக் களத்தில் நின்று மோதி வீழ்த்தியது. இன்றும் பாசிஸ்டுகளை வீழ்த்த வேண்டிய கடமை கம்யூனிஸ்டுகளின் தோள்கள் மீதுதான் இருக்கிறது!

பொம்மி

ஊடகத்துறையில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரம் | மருது வீடியோ

மிழ்நாட்டில் ஆக்டோபஸ் போல எல்லா துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ் நுழைந்து விட்டது. இங்கு இருக்க கூடிய பாலிமர், நியூஸ் தமிழ் சேனல்கள் ஆர்.எஸ்.எஸ் கருத்தையே பேசிக்கொண்டிருக்கிறார்கள். எதை சொல்ல வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்று ஊடகத்துறையை, ஊடகமுதலாளிகளின்  கட்டுபாட்டின் கீழ் கொண்டுவந்துவிட்டனர்.

பத்திரிகையாளர்ளுக்கு சோறா? தன்மானமா? என்றால் தன்மானம்தான் முக்கியம்.

கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு பின் யூடியூப் சேனல் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துவிட்டது. இதை போட்டால் தடை செய்து விடுவார்களா என்று சிந்திக்கும் அளவில் பாசிச நெருக்கடியை ஆர்.எஸ்.ஏஸ் உருவாக்கி இருக்கிறது.

உலகம் முழுவதும் பாசிசம் நெருங்கி வருகிறது. எலான் மாஸ்க் டிவிட்டரை வாங்கியவுடன் டிரம்ப் வாழ்த்து சொன்னார். இனி டிவிட்டரில் அமித்ஷா, அண்ணாமலை, அம்பானி, மோடி பேசலாம்? ஆனால் நம்மை போன்றவர்கள் பேச முடியுமா?

போராட்டங்கள் தனியாகவும் கட்சிகள் தனியாகவும் இருக்கிறோம். ஆகையால் நாம் ஒரு நிறுவனமாக இருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு நிறுவனம். அரசு என்பது ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு எதிரான பாசிச எதிர்ப்பையே நாம் ஒரு நிறுவனமாக இருக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் ஊடகத்துறையில் ஊடுருவி இருப்பதை குறித்து RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மேற்கு சிங்பூமில் ஜார்க்கண்ட் அரசை எதிர்த்து பழங்குடிகள் போராட்டம்!

0

மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் புனிதமாகக் கருதும் ஒரு நிலத்தை ஜார்க்கண்ட் மாநில அரசு சில கார்ப்பரேட் குழுமங்களுக்கு கையகப்படுத்தித் தர முடிவு செய்தது. அரசின் இந்த நடவடிக்கையை மக்கள் கடுமையாக எதிர்த்தனர். ஹேமந்த் சோரன் (Hemant Soren) அரசாங்கம் அப்பகுதி கிராம சபைகளின் ஒப்புதலைப் பெறாமலேயே, அந்த அரசு நிலத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவாக்க முடிவு செய்தது. இதை எதிர்த்து, கடந்த அக்டோபர் மாதத்தில், பெரும் அளவிலான போராட்டங்கள் நடைபெற்றன.

அக்டோபர் 16 அன்று ஆயிரக்கணக்கான பழங்குடிகள் குந்தபானி வட்டத்தில் (Khuntpani block) உள்ள லோஹர்டா (Loharda) பஞ்சாயத்தில் ஆயுதமேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசு மற்றும் நிர்வாகத்தின் உத்தரவுகளைப் பொருட்படுத்தாமல், தேசிய நெடுஞ்சாலை NH-75 ஐ மறித்து, போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். அக்டோபர் 10-ம் தேதி அன்றே மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலையை மறிக்கக் கூடாது என்று கடிதம் எழுதியிருந்தது. மக்கள் அதைக் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்துவிட்டுப் போராட்டத்தில் இறங்கினர்.

தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கவிருந்த அந்த நிலமானது, ஹோ (Ho) என்ற பழங்குடியின மக்களுக்குப் புனிதமான ஒரு இடமாகும். இந்தப் பகுதியில் அமைந்துள்ள ஜாத்ராபாரு குன்று (Jatrabaru hillock) ஹோ சமூகத்தினரின் வழிபாட்டுத் தலமாகும். வருடா வருடம் மாகே திருவிழாவைத் (Maghe festival) தொடர்ந்து இந்தக் குன்றின் மீது ஜாத்ரா வழிபாடு (Jatra worship) நடத்தப்படும்.

தனியாருக்கு இந்த நிலங்களைக் கொடுத்து, மானியங்கள் வழங்கி, தொழில் பூங்காக்கள் அமைத்து உட்கட்டமைப்பை மேம்படுத்தப் போவதாக ஜார்க்கண்ட் அரசாங்கம் கூறுகிறது.  அதற்கான திட்ட வரைவுக்கு  செப்டம்பர் மாதத்தில் ஜார்க்கண்ட் அமைச்சரவை ஒப்புதலும் அளித்துவிட்டது. இத்திட்டத்திற்குத் தேவையான நிலத்தை ஜார்க்கண்ட் தொழில்துறை பகுதி மேம்பாட்டு ஆணையம் (Jharkhand Industrial Area Development Authority) கையகப்படுத்தி வழங்கும்.

இத்திட்டத்திற்காக தேர்வுசெய்யப்பட்டுள்ள குந்தபானி வட்டத்தைச் சேர்ந்த பகுதிகள் ’புனித தலம்’ என்பதோடு மட்டுமல்லாமல் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பங்களிப்பு செலுத்தும் முக்கியமான பகுதியாகும். மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்ப்பதற்கு அவ்விடத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள்; காலங்காலமாக பயன்படுத்தி வரும் இடுகாடும் அந்த புனித மலைக்கு அருகாமையில்தான் அமைந்துள்ளது; மேலும் அங்கு பல மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளும் இருக்கின்றன.

நிலத்தை கையகப்படுத்த அரசு முயல்வதானது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்று அங்குள்ள பழங்குடி மக்கள் கூறுகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகமோ, தற்போது கையகப்படுத்துவதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலம் ஏற்கனவே அரசுக்குச் சொந்தமானது என்றும், 189.63 ஹெக்டேர் கொண்ட ஒரு பார்சல் நவம்பர் 2017-லேயே தொழில்துறைக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் கூறுகிறது.

2011 – 2013-க்கு இடைப்பட்ட காலத்தில், பாஜகவின் அர்ஜுன் முண்டா முதல்வராக இருந்தபோது, மாவோயிஸ்ட் நடவடிக்கைகளைத் தடுப்பது என்ற பெயரில் நரவேட்டையாடும் நோக்கில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் (Indian Reserve Battalion) என்ற சிறப்பு ஆயுதப்படையை உருவாக்கத் திட்டமிட்டனர். அதற்காக, குந்தபானி வட்டத்தில் உள்ள இந்தப் பகுதியில்தான் 70.82 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தி இந்த சிறப்புப் படைக்கான தலைமையிடத்தை அமைக்க முடிவு செய்தனர். மக்களின் வீரியமிக்க போராட்டங்களைத் தொடர்ந்து இத்திட்டம் கைவிடப்பட்டது.

சூழ்ச்சி செய்து பழங்குடி மக்களை ஏமாற்றி நிலங்களைக் கையகப்படுத்துவதை மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மட்டும் அரசு செய்யவில்லை. ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதுமே மக்களை ஏமாற்றி அரசும் நில மோசடிக்காரர்களும் நிலங்களை கையகப்படுத்துவதானது அதிக அளவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பழங்குடிகளை ஏமாற்றுவதானது எந்த அளவிற்கு நடக்கிறது என்றால், 2015-ல் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கும் அளவிற்கு நடக்கிறது.

2017 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த பாஜகவைச் சேர்ந்த ரகுபர் தாஸ் (Raghubar Das) குந்தபானி வட்டத்தில் தொழில் பூங்கா அமைப்பதற்காக நிலத்தை கையகப்படுத்த முயன்றார். மக்கள் தீவிரமாக போராட்டங்களில் இறங்கி சாலைகளை மறித்ததன் மூலம் இத்திட்டத்தை முறியடித்தனர்.

இந்திய அரசால் வெளியிடப்பட்ட 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி, மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் வசிப்பவர்களில் 26.68 சதவீதத்தினர் பழங்குடியினர் ஆவர். இந்த மாவட்டம் அரசியலமைப்பு சாசனத்தின் அட்டவணை 5-ன் (Schedule 5) கீழ் வருவதால், அங்குள்ள மக்களுக்கு நிலத்தின் மீது சிறப்பு உரிமைகள் உள்ளன.

பஞ்சாயத்துகள் (பட்டியலிடப்பட்ட பகுதிகளின் விரிவாக்கம்) சட்டம் 1996-ன் படி, அட்டவணை 5 இன் கீழ் வரும் நிலத்தை கையகப்படுத்த வேண்டுமானால், அங்குள்ள கிராம சபைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால் மாவட்ட நிர்வாகம் இந்த சட்டத்தைப் பின்பற்றவில்லை; அந்த நிலம் அரசிற்குச் சொந்தமான நிலம் என்பதால் கிராம சபைகளின் ஒப்புதல் தேவை இல்லை என்று கூறுவிட்டது. என்னவொரு பித்தலாட்டம்!

படிக்க: தேர்தல் தீர்வாகுமா ? ஜார்கண்ட் அனுபவம் !

ஜார்க்கண்ட்-ஒடிசா எல்லையில் உள்ள மேற்கு சிங்பூம், இரும்புத்தாது சுண்ணாம்புக்கல், மாங்கனீசு மற்றும் தங்கம் போன்ற கனிம வளங்களைக் கொண்ட பகுதியாகும். தற்போது போராட்டம் நடந்த இந்தப் பகுதி இந்தியாவின் முதல் பழங்குடி ஜனாதிபதியான திரௌபதி முர்முவின் சொந்த கிராமத்திலிருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது. நிச்சயமாக அவர் இந்த பிரச்சனையை கண்டுகொள்ளப் போவதில்லை. இந்தப் பகுதி, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வரும் தற்போதைய பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும் உள்ள அர்ஜுன் முண்டாவின் மக்களவைத் தொகுதியாகும். கார்ப்பரேட் கைக்கூலியான பாஜகவை சேர்ந்த இவரும் இம்மக்களின் பிரச்சினை குறித்து வாய்திறக்கப் போவதில்லை.

பொம்மி

நவம்பர் 7 – ஆவணப்படம் | November 7 – Documentary

சோசலிச ரசியாவே நமது வழிகாட்டி!

ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்காக நடந்த முதல் உலப்போரின் போது, தோழர் லெனின் தலைமையில் ரசிய உழைப்பாளி மக்கள், சொந்த நாட்டில் முதலாளித்துவத்தை வீழ்த்தி சோசலிப் புரட்சியை நடத்தினர். உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிலைநாட்டினர். அதைபோல, நாஜி ஹிட்லர் – பாசிச முசோலினி தலைமையில் மீண்டுமொரு கொள்ளைக்கார போரை – இரண்டாம் உலகப்போரை ஏகாதிபத்தியங்கள் கட்டவிழ்த்து விட்டபோது, தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோசலிச ரசியாவின் 200 இலட்சம் பாட்டாளிகள் தங்களது இன்னுயிரை தியாகம் செய்து பாசிசத்திடமிருந்து உலக மக்களைக் காத்தனர்.

இத்தகைய, உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்களும் தியாகங்களுமே இந்தியாவைச் சூழ்ந்துவரும் பாசிசத்தையும் கிள்ளியெறியும்.

***

Socialist Russia is our guide!

At the time of First World War, which was fought by the imperialisms on who should plunder, the Russian working class under the leadership of Comrade Lenin defeated capitalism and orchestrated the Socialist Revolution and established people’s power. Likewise, during the Second World War, which again fought for plundering by the imperialisms, 2 crore Russian people under the leadership of Comrade Stalin sacrificed their lives and saved the people of the world.

Such united struggles and sacrifices of the working people alone can throw away the fascism that is surrounding India.

***

நவம்பர் புரட்சியை மீண்டும் இவ்வுலகம் எதிர்நோக்கி இருக்கிறது என்பதை உலகம் முழுவதும் நடைபெரும் பல்வேறு போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அதனை உணர்த்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது இந்த ஆவணப்படம்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

  • காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
  • போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பின் மீதுள்ள மாயையை உதறியெறிவோம்!
  • பாசிச எதிர்ப்பு ஜனநாயக் குடியரசைக் கட்டியமைப்போம்!
  • ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசம் முறியடிப்போம்!
  • பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியாக ஒன்றிணைவோம்!
  • பாசிச எதிர்ப்பு மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்போம்!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக்குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.

தொடர்புக்கு :- 9791653200, 9444836642, 7397404242, 9962366321

  • Let’s smash Saffron-Corporate fascism!
  • Let’s throw away the illusions on the pseudo-democratic State structure!
  • Let’s establish an anti-Fascist Democratic Republic!
  • Let’s smash RSS-BJP; Ambani-Adani fascism!
  • Let’s unite as anti-Fascist People’s Front!
  • Let’s build an anti-Fascist people’s uprising!

People’s Art and Literary Association
Revolutionary Students – Youth Front
New Democratic Labour Front
(State Co-ordination Committee)
Makkal Athikaram, Tamilnadu – Puducherry

Contact:- 9791653200, 9444836642, 7397404242, 9962366321

Let’s uphold the day of Russian Socialist Revolution! Let’s smash RSS-BJP; Ambani-Adani fascism! | Pamphlet

November 7: Let’s uphold the day of Russian Socialist Revolution!

December 21: Let’s remember the birth anniversary of our mentor Comrade Stalin, who defeated Hitler-Mussolini fascism!

Collapse of small scale businesses – unemployment – Price rise – Fascist repressions:

Let’s smash RSS-BJP; Ambani-Adani fascism!
Let’s uphold the day of Russian Socialist Revolution!

November – December 2022

Hall meetings | Street Corner Meetings | Cultural events

Dear working people!

We should learn from the Great October Socialist Revolution that took place in Russia on November 7, 1917. We are shouldering the obligation of defeating the saffron-corporate fascism that is intimidating the country on the birth anniversary of our mentor Comrade Stalin, who defeated the Hitler-Mussolini fascism that intimidated the entire world.

Eight years of fascist devilish rule:

The Modi government plundered Rs 20 lakh crore – through digitalization of the economy, the GST which destroyed the MSME sector, Cess, Excise duty on petrol-diesel, etc., – by exploiting the livelihoods of the working people and bestowed it to the corporates. It made the state governments subservient and collects tributes from them.

The Modi government is preventing its own people from doing small-scale businesses, preventing people from agriculture, depriving the tribes their land rights, preventing the use of underground water and is amending the laws to benefit the corporates such as Ambani, Adani, Vedanta and Mittal. The farm laws, Environmental Impact Assessment notification, the new Labour Codes, the New Education Policy, the Electricity (Amendment) Bill, and National Monetization Pipeline which gifts public sector enterprises to the corporates – are only a few droplets among Modi’s fascist schemes.

Yes, Modi’s rule has brought the country to the brink of disaster!

Is Modi creating a heaven or a Somalia?

For the last eight years, MSME and handcrafts, which generated majority of the employment, were being crushed by corporate plundering. As a result of this, there is unprecedented rise in unemployment. Modi regime promised to create a heaven. But, scarcity and hunger deaths are on the rise and the country is in the danger of turning into a Somalia. Even the tyrannical RSS mob has come to a stage that this truth can’t be hidden anymore. That’s why, it is shedding crocodile tears that more than 20 crore people are reeling under poverty and 4 crore youth are unemployed.

In this situation, the US imperialism is increasing the value of dollar. And because of this, there is rise in inflation worldwide. The RBI governor, who did not have the guts to condemn the dishonest practices of the United States, is saying that the global economy is in the eye of a new storm. As a result of this, India is going to face a food scarcity. The Modi-Nirmala Sitharaman mob is trying to avert from its responsibility by citing this as a reason.

Modi is boasting that India had become the 5th largest economy in the world. But the truth is that, India has turned into just another Sri Lanka.

RSS-BJP; Ambani-Adani Fascism

The recolonizational policies of privatization-liberalization-globalization are being imposed in India from the 1990s by the imperialist countries including the US with the intent to loot the backward and growing economies like India. The BJP regime is in the forefront in distributing this loot to the corporate bosses like Ambani, Adani, Vedanta, Mittal and Tata with Marwari, Parsi, Brahmin, Bania and Sindhi backgrounds.

The RSS’s ideology is caste-based varnashrama – Brahminical terrorism which is based on inequality and is anti-democratic in nature. The Hindu Rashtra policy which is a manifestation of this forms the base for their pro-corporate stance. That’s why, in order to protect the corporate plundering, Brahminical fascism and corporate fascism are acting conjointly.

The RSS has infiltrated in the Sate machinery and in all sectors of the society through constitutional means; the Constitution itself is intended to protect private property and exploitation. The fascist mob is destroying even the democratic features which existed for at least namesake, in order to carry out corporate plundering and its Hindu Rashtra intent without any hurdle.

Projecting Muslims as enemies and dividing the people, indulging in pre-planned riots against them; beating up and killing minorities, tribes and dalits; raping and killing of girls and women – these incidents have become day-to-day events in the BJP-ruled states and the entire society is being kept in a tensed state by the RSS sangh parivar mob.

This country is only for the dominant castes including the Brahmins and the upper class. For others, i.e., the working people it’s a burial ground. This is the Hindu Rashtra that the saffrons are trying to establish.

Socialist Russia is our guide!

At the time of First World War, which was fought by the imperialisms on who should plunder, the Russian working class under the leadership of Comrade Lenin defeated capitalism and orchestrated the Socialist Revolution and established people’s power. Likewise, during the Second World War, which again fought for plundering by the imperialisms, 2 crore Russian people under the leadership of Comrade Stalin sacrificed their lives and saved the people of the world.

Such united struggles and sacrifices of the working people alone can throw away the fascism that is surrounding India.

Let the protests rise into uprisings!

The protests against RSS-BJP; Ambani-Adani fascism across the country are growing. In Tamilnadu also people from all walks – farmers, labourers, fishermen, sanitation workers, students, nurses and professors – are protesting in many places including Kallakurichi, Ulundurpet, Parandur, Puducherry and Coimbatore. The anti-fascist forces are protesting against the fascistic actions of the RSS-BJP. It is imperative of the time that those who fight fascism should come together and form anti-fascist united fronts and anti-fascist people’s front to fight fascism. It is important to cultivate these protests into uprisings to achieve our goal of defeating fascism.

The RSS-BJP mob has intensely indulged in conspiracies to lay its base in Tamilnadu. Let’s make it clear to them again that Tamilnadu will never surrender! Let’s cultivate people’s protests into big uprisings! Let’s uproot RSS-BJP; Ambani-Adani fascism!

  • Let’s smash Saffron-Corporate fascism!
  • Let’s throw away the illusions on the pseudo-democratic State structure!
  • Let’s establish an anti-Fascist Democratic Republic!
  • Let’s smash RSS-BJP; Ambani-Adani fascism!
  • Let’s unite as anti-Fascist People’s Front!
  • Let’s build an anti-Fascist people’s uprising!

People’s Art and Literary Association
Revolutionary Students – Youth Front
New Democratic Labour Front
(State Co-ordination Committee)
Makkal Athikaram, Tamilnadu – Puducherry

Contact:- 9791653200, 9444836642, 7397404242, 9962366321

ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் மறைமுகமாக நடைமுறை படுத்தப்படுகின்றன!

0

த்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் மறைமுகமாக அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாட்டு நெல் விவசாயிகள் சந்தேகிக்கின்றனர். தமிழ்நாட்டு விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் விதைப்பு – அறுவடை மற்றும் கொள்முதல் நடக்கும் காலங்களில் பருவம் தவறிய மழையினால் பாதிக்கப்படுகின்றனர். நேரடி கொள்முதல் நிலையத்தில் (Direct Procurement Centre DPC) போதுமான சேமிப்பு வசதிகள் இல்லாததால் நெல் மூட்டைகள் நனைந்து போகின்றன. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் (PMFBY) கீழ் கிடைக்கும் பற்றாக்குறையான தாமதமான பயிர் சேதத்திற்கான இழப்பீடு விவசாயிகளை மேலும் கடனுக்குள் தள்ளுவதாக உள்ளது.

அரசு நெல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யாமல், தனியார் கொள்முதலை நோக்கி உந்தித் தள்ளுவதானது திரும்பப் பெறப்பட்ட வேளாண் சட்டங்களை வேறு வடிவங்களில் நடைமுறைப்படுத்துகிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

நெல் கொள்முதல் செய்யப்படும் முறையே விவசாயிகளுக்கு பெரும் பிரச்சனையாகத்தான் உள்ளது. கொள்முதல் செய்வதற்கான போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பது, கொள்முதல் செய்வதை தாமதமாக்குவது, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கிடங்குக்கு அனுப்புவது என அனைத்தும் விவசாயிகளை பதட்டத்திற்கு ஆளாக்குவதாகவே உள்ளது.

கடந்த அக்டோபர் இரண்டாவது வாரத்தின் போது திடீரென கொட்டி தீர்த்த மழையானது, நேரடி கொள்முதல் நிலையத்திற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த நெல்லை நினைத்துவிட்டது. பருவ மழையும் தொடங்கி விட்டதால், ஈரப்பதம் அனுமதிக்கப்பட்ட அளவிற்க்குள் இருப்பதை உறுதி செய்வதற்காக நெல்லை உலர்த்த வேண்டியுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள்.

அனுமதிக்கப்பட்ட ஈரப்பதத்தின் அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்துமாறு மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் மத்திய அரசோ அதிகபட்ச ஈரப்பதம் 19 சதவீதம்தான் என முடிவு செய்தது. ஈரப்பதம் 17 சதவீதமாக இருந்தால் சாதாரண ரக நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2,040 எனவும், சன்ன ரகத்துக்கு ரூ.2,060 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈரப்பதம் 17-18 சதவீதம் இருந்தால், சாதா ரகத்துக்கு ரூ.2,019.60 எனவும், சன்ன ரகத்துக்கு ரூ. 2,039.40 எனவும், ஈரப்பதம்18-19 சதவீதம் இருந்தால், சாதா ரகத்துக்கு ரூ.1,999.20 எனவும், சன்ன ரகத்துக்கு ரூ.2,018.80 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

படிக்க: மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தும் சதி எனக்கூறி எம்.எஸ்.பி(MSP) குழுவை நிராகரித்த எஸ்.கே.எம்!

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதை நோக்கமாகக் கொண்ட, மோடி அரசால் மிகவும் மெச்சப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், 2020-21 சம்பா அறுவடை பருவத்தில் பயிர்கள் சேதமடைந்ததற்கே இன்னும் இழப்பீடு வழங்கவில்லை.

“இழப்பீட்டுத் தொகை விநியோகம் அக்டோபர் 11, 2021 அன்று தொடங்கியது. ஆனால் ஒரு வருடம் கடந்தும் இன்னும் கொடுத்து முடிக்கப்படவில்லை. இந்த வகையான தாமதத்தை விவசாயிகளால் எப்படித் தாக்குப்பிடிக்க முடியும்?” என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS) தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் செந்தில்குமார் கூறுகிறார். சேதமடைந்த நெல் நாற்றுகளுக்கான இடுபொருள் செலவுக்கு ஏக்கருக்கு ரூ.6,038 மட்டுமே மானியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், AIKS-ன் கோரிக்கையோ ஏக்கருக்கு ரூ.25,000 ஆகும்.

“இடுபொருள் மற்றும் விவசாய கூலிக்கான செலவினங்கள் அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு, நாங்கள் மானியம் கோரினோம். ஆனால் அரசாங்கம் கோரிய தொகையில் 25 சதவீதத்தை மட்டுமே மானியமாக அறிவித்தது; அந்தத் தொகை கூட இன்னும் வழங்கப்படவில்லை. சேத மதிப்பீட்டிற்கான மத்திய அரசின் குழு பார்வையிட்ட பகுதிகளுக்குக் கூட இழப்பீடு சென்றடையவில்லை” என்று குமார் மேலும் கூறினார்.

“விவசாயிகள் செலுத்திய பிரீமியத்தை தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் உறிஞ்சிக்கொண்டு நல்ல இலாபம் ஈட்டுகின்றன. பல பயிர்களுக்கான பிரீமியங்களை கணக்கிடுவதில் வெளிப்படைத்தன்மையும் இல்லை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 1.33 லட்சம் விவசாயிகள் 856 வருவாய் கிராமங்களில் இருந்து சுமார் ரூ. 17.94 கோடியை பிரீமியமாக செலுத்தியிருக்கும் நிலையில், ஏழு கிராமங்களுக்கு மட்டும் ரூ. 36 லட்சம் காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் கணக்கிடப்பட்டால், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் ஈட்டும் இலாபத்தை மதிப்பிட்டுக் கொள்ளலாம்” என்றார் அவர்.

படிக்க: வேளாண் சட்டங்கள் வாபஸ் : மோடியை பணியவைத்த விவசாயிகள் போராட்டம்!

இந்திய உணவுக் கழக செயலாளர் அண்மையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கத்தில் பேசிய போது, தனியார் திறம்பட கொள்முதல் செய்யும் போது அரசு ஏன் தலையிட வேண்டும் என்று பேசினார்.

அறுவடை செய்யப்பட்ட 1,22,22,463 டன் நெல்லில் சுமார் 42,55,135 டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது; மேலும் 70 லட்சம் நெல் விவசாயிகளில், 6,72,791 பேர் மட்டுமே நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்றுள்ளனர் என்றும், பெரும்பாலான விவசாயிகள் இன்னும் அரசாங்க கொள்முதல் செயல்முறைக்கு வெளியே உள்ளனர் என்றும் AIKS குற்றம் சாட்டுகிறது.

கொள்முதலைக் குறைத்துக் கொள்ளும் அரசின் இத்தகைய நடவடிக்கைகள் விவசாயத் துறையில் இருந்து அரசு விலகிச் செல்வதையே காட்டுகிறது. இது ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்களை மறைமுகமாக மாற்று வழிகளில் நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறில்லை.


பொம்மி

செய்தி ஆதாரம்: நியூஸ் கிளிக்

பொய், பித்தலாட்டம், கலவரம் இவைதான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் அரசியல் ! | ரவி வீடியோ

த வயர் இணையதளம் பா.ஜ.க.வின் அமித் மாள்வியாவை அம்பலப்படுத்தி கட்டுரை வெளியிட்டது என்பதற்காக அதன் மீது பல்வேறு அடக்குமுறைகளை ஏவியுள்ளது மோடி அரசு. இது இந்தியாவின் சுதந்திர ஊடகங்களுக்கு ஓர் எச்சரிக்கை.

மேலும் தமிழகத்தில் பொய், பித்தலாட்டங்களை செய்து கலவரத்தை தூண்டி காலூன்றத்துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி சங்க பரிவார கும்பல். ஒரு பக்கம் ஆர்.என்.ரவி மறுபக்கம் அண்ணாமலை என தொடர்ந்து தமிழகத்தின் அரசியல் சூழலை மாற்ற முயற்சிக்கிறார்கள். இவ்விதம் பாசிச சக்திகள் வளர்ச்சியடைந்தால் ஜனநயாகம் கருத்துரிமை, அடிப்படை உரிமைகள் என அமைத்து போகும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இந்த காவி – கார்ப்பரேட் பாசிச சக்திகளுக்கு எதிராக தமிழகத்தின் ஜனநாயக சக்திகளும் உழைக்கும் மக்களும் ஒன்றினைய வேண்டியது அவசியம் என்று இந்த காணொலியில் எச்சரிக்கிறார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின், மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் ரவி அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!