Saturday, May 24, 2025
முகப்பு பதிவு பக்கம் 341

வாசகர் புகைப்படம் : கோடையும் தண்ணீரும் !

கோடையும் தண்ணீரும் ! என்ற தலைப்பில் வாசகர்கள் அனுப்பியிருந்த புகைப்படங்களின் தொகுப்பு !

தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கும் பாசன வாய்க்கால் … வாய்க்காலின் நிலை இதுவெனில், கழனியில் காயும் பயிர்களின் கதி?
இடம் : கடலங்குடி, தஞ்சை மாவட்டம்.
படம்: தமிழ்

♣ ♣ ♣

நீரில்லா கொள்ளிடம் … பழுதடைந்த கட்டுமானங்கள் … என்று தீரும் இந்த அவலம்?
இடம் : அணைக்கரை, தஞ்சை.
படம்: தமிழ்

♣ ♣ ♣

கரை புரண்டோடும் கொள்ளிடம் சிற்றோடையாகியதோ?
இடம் : அணைக்கரை, தஞ்சை.
படம்: தமிழ்

♣ ♣ ♣

குடிக்கவும் தண்ணியில்ல! குளிக்கவும் தண்ணியில்ல! அதுக்கும் தண்ணியில்ல! எங்கடா வளர்ச்சி வளர்ச்சினு கத்துனீங்களே, எங்கள இந்த நிலைமைக்கு ஆக்கதானா?

இடம் : திருவாரூர்.
படம்: பாரி

♣ ♣ ♣

பார்ப்பனியத்தின் கொடுமையில் சிக்கித் தவித்த மக்களுக்காக போராடிய அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அடிக்கும் வெயிலின் கொடுமையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு மோர் வழங்கும் ஆட்டோ தொழிலாளர்கள்…

இடம் : சென்னை-எழும்பூர், இரயில் நிலையம் அருகே …
படம்: அன்பு

♣ ♣ ♣

மோர், இளநீர், நுங்கு சர்பத் எல்லாம் ஆன்லைன்ல ஆர்டர் பண்ண வசதியில்லப்பா… பக்கெட் தண்ணியே போதும்…
இடம் : மதுரை
படம்: இரணியன்

♣ ♣ ♣

தொகுப்பு:


வாசகர் புகைப்படம் பகுதிக்கு புகைப்படம் அனுப்பும் வாசகர்கள், vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள். கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்!

மோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் …

மோடியின் ஆட்சியை வரவேற்பவர்கள் யார் ? எதிர்ப்பவர்கள் யார் ? சென்னை மக்களின் பார்வை என்ன ?

சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் மக்களை நேரடியாக சந்தித்து வினவு செய்தியாளர்கள் எடுத்த நேர்காணல் காணொளி !

நம் குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல உணவுமுறை எது ?

நாம் உணவு தயாரிக்கிறோம் என்றால் அது சீக்கிரம் கெட்டுப் போய்விடும் .. ஏனென்றால் அதில் பாக்டீரியாக்கள் சீக்கிரம் வந்து தோன்றுகின்றன. ஆனால் இப்போது பாக்கெட் உணவை பார்த்தீர்களென்றால் வருடக்கணக்கில் கெட்டுப்போகாமல் அப்படியே உள்ளது.

உதாரணத்திற்கு ஐஸ்கிரீம் வருடக்கணக்கில் அப்படியே உள்ளது. காரணம் அந்த உணவை கெட்டுப்போகாமல் இருக்க சில கலவைகளை சேர்க்கிறார்கள் இவை உடலுக்கு கேன்சர் செல்களை உண்டுபண்ணும் என்று கூறுகிறார்கள் இதற்கு உங்கள் பதில்?

விடை : இதை பற்றி நாம் முன்னரே பேசி உள்ளோம். எண்ணெயில் ஆரம்பித்து இதைக் கூறி உள்ளேன். எண்ணெயில் செய்த பொருள்களை அன்றைக்கே சாப்பிட வேண்டும். எண்ணெயில் செய்த பொருள்களை 3 நாட்கள் வைத்து சாப்பிட்டால் சேஃப் கிடையாது. வீட்டில் வடை சாப்பிடுகிறோம் என்றால் ஒரு நான்கு ஐந்து… வரை உண்ணலாம். ஆனால் வெளியில் சென்று மிக்சர் முறுக்கு போன்ற வகைகளை சாப்பிட வேண்டாம்.

ஐஸ் கிரீமில் transplants உள்ளது. ஒரு உணவு கெட்டுப் போகாமல் இருக்க வேண்டுமென்றால் அதில் உப்பு அதிக அளவில் இருக்க வேண்டும். இல்லையென்றால், transplants அதிக அளவில் இருக்க வேண்டும், அதுவும் இல்லை என்றால் கெட்டுப் போகாமலிருக்க கெமிக்கல்கள் அதிகம் இருக்க வேண்டும். இவை இல்லாமல் உணவானது கெடாமல் இருக்காது. உணவை அன்றைக்கே ஃபிரஷ்ஷாக உண்ணப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஒரு உணவை மூன்று நான்கு நாட்கள் வைத்து உண்பதை தவிர்க்க வேண்டும். இப்போது, கீரை வாங்குகிறோம் என்றால் அதை அன்றைக்கே உண்ணவேண்டும் பிரிட்ஜில் வைத்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் கழித்து உண்பதை தவிர்க்க வேண்டும். இப்படி உண்டால் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது.

அரிசியைப் போலவே மக்களுக்கு எண்ணெயைப் பற்றியும் பயம் உள்ளது. சிலர் நல்லெண்ணெய் சாப்பிட்டால் நல்லது என்கிறார்கள். சிலர் ரீஃபைண்ட் ஆயில் சாப்பிட்டால் நல்லது என்கிறார்கள். சிலர் சன்பிளவர் ஆயில் சாப்பிட்டால் நல்லது என்கிறார்கள் இதில் எந்த வகை எண்ணெய் நல்லது…?

விடை : எண்ணெய், வெண்ணை எல்லாமே பிரஷ்ஷாக அன்றைக்கே உண்ணும்போது நல்லதுதான். இதை நாம் ஏற்கனவே கூறியுள்ளோம். இதில் சிலவற்றில் சாச்சுரேட்டட் ஃபேட் அதிகமாக இருக்கும், இன்னும் சிலவற்றில் அன்சாச்சுரேட்டட் பேட் அதிகமாக இருக்கும்.

நமது உடலுக்கு எல்லாமே தேவை. சாச்சுரேட்டட் ஃபேட், அன்சாச்சுரேட்டட், ஒமேகா 3  என எல்லாமும் தேவை. எண்ணெய்யைப் பொறுத்தவரை இதுதான் நல்ல எண்ணெய் என யாரும் கூற முடியாது. நாம் வழக்கமாக உபயோகிக்கும் எல்லா எண்ணெயும் நல்லதுதான்.

நல்லெண்ணெய் நாம் வழக்கமாக பயன்படுத்துவதில் ஒன்று… இது நல்லதுதான். நாம் உபயோகிக்கும் கடலை எண்ணெயும் நல்ல எண்ணெய்தான். ஆனால், புதிதாக வந்திருக்கிற சன்பிளவர் ஆயிலில்தான் சந்தேகம் உள்ளது. இதில் அன்சாச்சுரேட்டட் பேட் அதிகமாக உள்ளதாக கூறுகிறார்கள். ஒரு காலத்தில் நல்லெண்ணெய் மீது ஏற்படுத்தப்பட்ட பயத்தினால்தான் இந்த சன்பிளவர் ஆயில் பிரபலமானது.

நல்லெண்ணெய், கடலை எண்ணெய் இவற்றை மாற்றி மாற்றி உபயோகித்துக் கொள்ளலாம். நல்லெண்ணெய் தொடர்ந்து உபயோகித்து வந்தாலும் தீங்கு கிடையாது. அவர்கள்.. கூறுவதால் நாம் ஆலிவ் ஆயில் உபயோகிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆலிவ் ஆயிலை பொருத்தவரை அது மெடிட்டேரியன் அந்தப் பகுதியை சேர்ந்த மக்களுக்கு அது நல்லது. அந்தப் பகுதியில் வாழும் மக்கள் அவர்களது பழக்க வழக்கம் உணவு முறை அதற்கு ஏற்றாற்போல் ஆலிவ் ஆயில் அவர்களுக்கு உகந்ததானது.

அப்படி ஆலிவ் ஆயில், நல்ல ஆயில் என்றால் எல்லா இடங்களிலும் அவை முளைத்திருக்க வேண்டும் அல்லவா. நமது பாரம்பரியத்தின்படி நல்லெண்ணெய் நமக்கு நல்லது. கடலெண்ணெய்யும் நல்லது.  சில பேர் டால்டா உபயோகிக்கலாமா என்று கேட்கிறார்கள். இது தவறு. நாம் டிரான்ஸ்ஃபேட் என்று அடிக்கடி கூறுகிறோம். இந்த டால்டா முழுக்க முழுக்க டிரான்ஸ்ஃபேட்டாலானது.

வெளியில் விற்கக்கூடிய பல பொருள்களில் கெடாமல் இருப்பதற்காக டால்டா உபயோகிக்கப்படுகிறது. நாம் முன்னரே கூறியது போல் டால்டாவில் டிரான்ஸ் பேட்  உள்ளது. அதனால் நாம் வெளியில் சென்று ஸ்வீட் சாப்பிட்டோம் என்றால் அதில் டால்டா இருக்கும், ஆனால் வீட்டில் செய்தால் அதில் டால்டா இருக்காது நெய் அல்லது எண்ணெய் இருக்கும் இதுதான் வேறுபாடு. எனவே எண்ணெயைப் பொறுத்தவரை நமது பாரம்பரிய எண்ணெய்களாகிய நல்லெண்ணெய் கடலெண்ணெய் கொஞ்சம் ரீஃப்ண்ட் ஆயிலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

படிக்க :
♦ சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்
♦ மனதைக் கலங்கச் செய்த மதிய உணவுப் பிரச்சினை !

எந்த எண்ணெயும் கெடுதல் கிடையாது, எண்ணெய்யை சுழற்சி முறையில் உபயோகித்தல் நல்லது என்று கூறினீர்கள். நன்றி ! என்னிடம் சிகிச்சைக்காக வருபவர்களிடம் எல்டிஎல் கொலஸ்ட்ரால் நார்மலாக உள்ளது. ஆனால்  ட்ரைகிளிசரைட்ஸ் அதிகமாக உள்ளது. ஏன்?

விடை : கேள்வி நான் மீண்டும் ஒருமுறை கூறிவிடுகிறேன். கெட்ட கொலஸ்ட்ரால் இரண்டு உண்டு ஒன்று எல்டிஎல் கொலஸ்ட்ரால் மற்றொன்று ட்ரைகிளிசரைட்ஸ் கொலஸ்ட்ரால். பெரும்பாலான கொலஸ்ட்ரால் சம்பந்தப்பட்ட நோயாளிகளிடம்  ட்ரைகிளிசரைட்ஸ் அதிகளவிலும் எல்டிஎல் கொலஸ்ட்ரால் குறைவாகவும் உள்ளது.

இது ஏன் என்றால்… இந்த ட்ரைகிளிசரைட்ஸை உற்பத்தி செய்வது நமது கல்லீரல். இதை எதிலிருந்து உற்பத்தி செய்கிறது என்றால் மாவுப்பொருள் அதாவது கார்போஹைட்ரேட். இதற்கு விடை மிகவும் எளிதானது. நாம் என்னதான் மருந்து மாத்திரை உட்கொண்டாலும், நம் உணவில் மாவுப்பொருள் அதாவது கார்போஹைட்ரேட்டை குறைத்தால் இதற்கு தனி சிகிச்சை தேவையில்லை.

நாம் முன்னரே கூறியது போல் உணவில் சர்க்கரை சம்பந்தமான கார்போஹைட்ரேட் பொருட்களைக் குறைத்து பேலன்ஸ் டயட்டிற்கு மாறினால் இந்த கொலஸ்ட்ரால் எளிதாக குறையும்.

எல்லா நோய்க்கும் தீர்வு எனக் கூறி சில உணவுப் பொருட்கள்  தற்போது பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் வந்ததுதான் ஆப்பிள் சிட் வினிகர். இது வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சாப்பிடலாம் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவு எல்லாவற்றுக்கும் தீர்வு என கூறுகிறார்கள் இதைப்பற்றி தங்களது கருத்து.

விடை : இந்த ஆப்பிள் சிட் வினிகர்  நீங்கள் கூறுவது போல் பிரபலமாகி வருகிறது. இதை உண்டால் கொழுப்பு கரையும் என்றும் கூறுகிறார்கள். கொழுப்பு கரைந்து எங்கு செல்லும் ? வாய் வழியாகவா ? அல்லது மலம் வழியாகவா? எங்கு செல்லும் இது தவறு. இதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கும் எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.

சிலர் கூறுவதுபோல் அதையும் இதையும் இரவில் ஊற வைத்து  ஒரு ஸ்பூன் குடித்தால் கொழுப்பு கரையும் என கூறுவதை எவ்வாறு நம்புகிறீர்கள்? இது எவ்வாறு இதயத்தில் அடைப்பட்டிருக்கும் கொழுப்பை கரைக்கும் கரைப்பான்? அது எந்த வழியாக வெளியே தள்ளும்? இந்த முறை ஹெல்த் டிப்ஸ் எல்லாம் நிறைய பேர் கூறுவார்கள். அது உண்மையாக இருந்தால் அது உங்களுக்குத் தானாகவே வந்து சேரும். காரணம் இதை சிலபேர் உபயோகித்தார்கள் அதன் மூலம் பலன் அடைவார்கள் அந்த பலனே உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பார்கள். அவ்வாறு இல்லை என்றால் அதை உபயோகித்து பலன் தரவில்லை என்பது பொருள்.

இதுபோல் தவறான அறிவியல் பூர்வமற்ற தகவல்களை நான் ஊக்கப்படுத்துவதில்லை. இது தவறானது மட்டுமன்றி அவர்களுக்கு தவறான நம்பிக்கையையும் தருகிறது சரியான தீர்வை நோக்கி போகவிடாமல் அவர்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறது. எனவே இது போன்ற விஷயங்களுக்கு நாம் போகாமல் இருப்பது நல்லது.

பொதுவாக 30, 35 வயதை தாண்டியவர்களுக்கான உணவுமுறைகளை நீங்கள் கூறுகிறீர்கள். அதேபோல் சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற நல்ல உணவு முறையைக் கூறினால் நன்றாக இருக்கும்.

விடை : குழந்தைகளுக்கு எந்த உணவை உண்டாலும் செரிக்கும். ஆனால், வயதானவர்களுக்கு அப்படி இல்லை. நீங்கள் பார்த்தீர்கள் என்றால் முப்பது முப்பத்தைந்து வயது உடையவர்களுடைய உணவை விட அதிகமாக 15 வயதுடைய நபர் உண்டு கொண்டிருப்பார். ஆனால் ஒல்லியாகத்தான் இருப்பார்.

பொதுவாக 22 – 23 வயது வரைதான் வளர்ச்சி விகிதம். அதற்குப் பிறகு கிடையாது. ஆனால் நம்மில் பல பேர் 23 வயதில் உண்ட உணவையே தொடர்ந்து 24 வயதை தாண்டியும் உண்டு கொண்டே இருப்பார்கள். அதனால்தான் தொப்பை உடல் பருமன் முதலியன வருகின்றன. திருமணத்திற்கு பிறகு பெண்கள் உடல் பருமன் ஆவதற்கும் இதுதான் காரணம். ஆனால் குழந்தை பிறந்ததால்தான் என்று குழந்தை மீது பழி சுமத்துகிறார்கள்.

Muthaiya Street Angels Kids
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான். உணவுமுறையிலும் கூட.

24 வயதுக்கு பிறகு நமது உடலில் மெட்டபாலிஸம் குறைகிறது. தேவையானது குறைகிறது என்பதுதான் காரணம். 18 – 20 வயது நிரம்பியவர்கள் என்ன உணவு உண்கிறார்களோ அதில் மூன்றில் இரண்டு பங்கு உணவுதான் நாம் உண்ண வேண்டும்.  அவ்வாறு உண்டு வந்தால் நமது உடலானது ஒல்லியாகவும் வலுவாகவும் இருக்கும்.

குழந்தைகளைப் பொறுத்தவரையில் நான் கூறிய உணவுமுறையில் எந்த வகையான மற்றும் தேவையான தொகையை நாம் குறைக்க வேண்டியதில்லை. குறைக்க வேண்டியது தவறான உணவு முறையைத்தான் அதாவது பாக்கெட் உணவுகளைத் தான்.  பேக் செய்யப்பட்ட உணவை மட்டும் தவிர்த்தால் உங்களது குழந்தையின் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும். ஏனென்றால் இயற்கையான உணவில் நல்லது கெட்டது என எதுவும் கிடையாது.

பெரியவர்களுக்கு தான் மூன்று வேளையும் அரிசி உணவுகளை சாப்பிட வேண்டாம் என கூறுகிறோம். ஏனென்றால் குழந்தைகளை பொருத்தவரை அவர்கள் ஓடி ஆடிக் கொண்டே இருப்பார்கள் அவர்களுக்கு செரிமானம் ஆகிவிடும். மேலும் உணவு தேவை படும்போது கேட்டு வாங்கி சாப்பிட்டும் கொள்வார்கள். எனவே குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்கள் குண்டாக இல்லாமல் ஒல்லியாக இருந்தால் அவர்களுக்கு நாம் என்ன உணவு வேண்டுமானாலும் வழங்கலாம். பாக்கெட் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பதில் மட்டும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அசைவ உணவுகள் எது வேண்டுமானாலும் முட்டை, சிக்கன் உட்பட உண்டு கொள்ளலாம் எனக் கூறினீர்கள். ஆனால் சிக்கன் செயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது, முட்டையும் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவது கிடையாது. இதை உண்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதைப் பற்றி கூறுங்கள்?

விடை : நான் கூறிய சரிவிகித உணவைப் பொறுத்தவரை நாம் தொடர்ந்து சிக்கனை சாப்பிடப் போவதில்லை. எனவே, அவ்வாறு தொடர்ந்து அசைவ உணவுகளை உண்பவர்கள்தான் இதில் கவலை கொள்ள வேண்டும். சரிவிகித உணவைப் பொறுத்தவரை நாம் வாரத்திற்கு ஒரு முறை தான் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளப் போகிறோம் அதனால் அதில் எந்த பாதிப்பும் இல்லை.

பேலியோ டயட் பற்றி அறிந்திருப்பீர்கள். அவர்கள் முழுக்க முழுக்க அசைவ உணவுகளை மட்டுமே உண்பார்கள். அவர்கள்தான் இதைப்பற்றி கவலை கொள்ள வேண்டும். அந்தப் பேலியோ டயட் உணவு முறை வெற்றி பெறக் காரணம், கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்டதால் அல்ல, மாறாக அவர்கள் மாவு பொருட்களை குறைத்தது தான். எனவே காலை முட்டை, மதியம் போர்க், இரவுக்கு மாட்டுக்கறி என நாள் முழுவதும் அசைவ உணவுகளை உண்டால்தான் நாம் இந்த அசைவ உணவு நல்லதா இல்லையா என்று கவலைப்பட வேண்டியது உள்ளது.

எனவே வாரம் ஒருமுறை அல்லது இருமுறை மட்டும் எடுத்துக்கொள்பவர்கள் இதைப் பற்றி பெரிதும் கவலைப்படத் தேவையில்லை. நான் முன்னமே கூறியதுபோல் இந்த அசைவ உணவுகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ரசாயன பொருட்கள் கலந்து இருப்பது உண்மையா? இல்லையா? என்பதை உறுதியாகக் கூற முடியாது; அதை ஒரு அரசாங்க நிறுவனமோ அல்லது ஒரு பரிசோதனைக் கூடமோ பரிசோதித்துக் கூறினால்தான் நாம் அதிலிருந்து கூற முடியும்.

அதைவிடுத்து யூகத்தின் மூலம் நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது. ஆனால் ஒன்றை நாம் கூற முடியும். இலை தழைகள் போன்ற மரக்கறி உணவின் மூலம் உருவாகக்கூடிய கொழுப்பும் புரதமும் உடலுக்கு தீங்கானது அல்ல என்பது நிரூபனமான ஒன்றுதான்.  அதனால்தான் நான் பருப்புகளையும் நவதானியங்களையும் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறேன்.

சனிக்கிழமை இரவானால் அசைவ உணவு உண்டு ஆகவேண்டும் … ஞாயிற்றுக்கிழமை காலையா அசைவ உணவு உண்டு ஆகவேண்டும்… அதிலும் குறிப்பாக பொறிக்கப்பட்ட உணவாக இருக்க வேண்டும். சொமேட்டோ, உபர் ஈட்ஸ் போன்றவற்றின் வருகைக்கு பிறகு ஒரு பட்டனை அழுத்தினால் ருசியான உணவு வீடு தேடி வருகிறது. பீட்சா, பர்கர் இப்போது எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டோம். எப்போதாவது என்று நீங்கள் கூறுகிற உணவுகள் இப்போது அடிக்கடி எடுத்துக் கொள்ளும் உணவாக மாறிவிட்டது இதற்கு நேர்மாறான உணவு முறையை நீங்கள் கூறினால் நன்றாக இருக்கும்.

விடை : உதாரணத்திற்கு எங்கள் வீட்டில் அவ்வாறு கிடையாது. வெளியில் சென்று உணவு உண்பது என்றால் அது ஆறு மாதத்திற்கு ஒரு முறைதான். கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் எனது மகன் வெளியில் போய் உண்டு வா. நான் வேலையாக இருக்கிறேன் என்றால் போகமாட்டான். நீங்கள் வழக்கமாக தயாரிக்கும்  உணவு வகையை செய்யுங்கள் நான் உண்கிறேன் என்பான்.

இவையெல்லாம் நாம் எப்படி நிலைமையை கையாள்கிறோம் என்பதைப் பொருத்து தான். குழந்தைகள் முதலில் அழுவார்கள். பின்பு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் நீங்கள் நிலைமையை கையாளாமல் தவிர்த்து விடுவீர்கள் என்றால் அப்போது தான் பிரச்சினை வருகிறது. உதாரணத்திற்கு உங்களால் ஏதாவது செய்து கொடுக்க முடியும் என்றாலும் அவசரத்திற்காக சொமேட்டோ போன்றவற்றின் மூலம் ஆர்டர் செய்கிறீர்கள் என்றால், நாளை நிலைமை உங்களுக்கு வசமாக இருந்தும், மீண்டும் நேற்று எளிதாக இருந்தது என்று சொல்லி ஆர்டர் பண்ணுவீர்கள். நீங்கள்தான் நிலைமை கையாளாமல் தவிர்த்து விடுகிறீர்கள்.

நிறைய குழந்தைகளுக்கு இவ்வாறு விசயங்கள் (ஆன்லைன் ஆர்டர்) இருக்கிறது என்று தெரிய வருவது நம் மூலமாகத்தான். ஒரு குழந்தை பச்சை உணவை தவிர்த்தது என்றால் நீங்கள் “பச்சை உனக்கு பிடிக்காதா? இந்தா… மஞ்சள்” என்று குழந்தைக்கு பழக்கப்படுத்துகிறீர்கள் என்றால் அடுத்த முறை அந்த குழந்தை பச்சை உணவை விரும்பாது. குழந்தைக்கு நாம் புதிதாக கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. குழந்தைகள் நம்மை பார்த்துதான் கற்கிறார்கள்.

நாம் நிலைமையை சரியாகக் கையாண்டால் குழந்தைகள் நம்மை பார்த்துக் கற்றுக் கொள்வார்கள். முதலில் கடுமையாக இருப்பினும் பின்பு பழகிக் கொள்வார்கள். என்ன புதிய உணவுகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இருப்பனவற்றை உண்டால் போதும்.

உதாரணத்திற்கு நான் எனது நோயாளிகளிடம் “பூசணிக்காய் எப்போது சமைக்கிறீர்கள் ?” என்று கேட்டால் என்னை பார்த்து சிரிப்பார்கள். கொத்தவரங்கா சாப்பிட்டீர்களா என்றால் மீண்டும் என்னைப் பார்த்து, “வாங்குவோம் சார்” என்பார்கள். “புடலங்காய் என்று ஒன்று இருக்கிறது தெரியுமா?” என்றால் தெரியும் என்பார்கள் . இதையெல்லாம் மறந்து விட்டோம் இது என்ன மீண்டும் கொண்டு வந்தால் போதும். சுழற்சி முறையில் 20 – 25 காய்கறிகள் உள்ளன.

படிக்க :
♦ பாஷாணத்தில் புழுத்த புழுக்கள் யார் ?
♦ உடல் பருமன் : வரலாற்றில் பாடம் படிப்போம் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

இன்று ஒரு காய்கறியை சாப்பிடுகிறோம் என்றால் மீண்டும் இருபது நாள் கழித்துதான் அது நம் உணவுக்கு வர வேண்டும். இவ்வாறு சுழற்சி முறையில் ஒரு நாளைக்கு ஒரு காய்கறி என சமைக்க ஆரம்பித்தோமானால் ருசியாகவும் இருக்கும். நாம் மீண்டும் மீண்டும் செய்யும்போதுதான் ருசியும் கூடும். நாளை ஒருவர் சௌசௌவை வாங்கி சமைக்கப் போகிறார் என்றால், ஐந்து வருடம் கழித்து தான் சௌசௌவை பார்க்கிறார் என்றால் நாளை இது ருசியாக இருக்க வேண்டும் என எண்ணினால் அது முடியுமா? எல்லாவற்றையும் நாம் சுழற்சி முறையில் கொண்டு வந்து விட்டோம் என்றால் நாம் அதை விட்டுப் போக மாட்டோம். இதுதான் இதற்கு பதில்.

நாம் நிறைய விஷயங்களை இங்கு பேசிவிட்டோம். எல்லாவற்றையும் முழுமையாக கூறி விட்டோம் என்று நம்மால் கூற முடியாது. ஆனால், உணவு பற்றிய தவறான சிந்தனைகளை நீக்க வேண்டும் என்பதே குறிக்கோள். மேலும், உணவைப் பற்றிய பயம் வேண்டாம், எல்லாவற்றையும் உண்ணலாம் என்று கூறுகிறோம். நாம் குறிப்பாக கவனிக்கத்தக்கது தேவைக்குக் குறைவாக உள்ள புரதத்தையும், கொழுப்பையும் கூட்டவேண்டும். தேவைக்கு அதிகமாக உள்ள கார்போஹைட்ரேட் மாவுச் சத்தை குறைக்க வேண்டும். இதுதான் இந்த உணவு பற்றிய கேள்வி பதிலினுடைய சுருக்கம்.

ஒரு சிறிய கதையைக் கூறி விடுகிறேன். ஒரு பெரிய யானையை சிறிய கயிற்றில் கட்டி வைத்து இருப்பார் ஒரு பாகன். அவரைப் பார்த்து, “இவ்வளவு பெரிய யானையை, இந்த சிறிய கயிற்றில் கட்டி வைத்து இருக்கிறீர்கள். அந்த யானையால் அதைத் தாண்டி வர முடியவில்லையே  ஏன் ?” என்று கேட்பார்கள்.

அதற்கு அந்தப் பாகன், “ அந்த யானை சிறியதாக இருக்கும்போதே கட்டிய கயிறு அது. அந்த யானை அப்போது முயற்சி செய்து வெளியே வர முடியவில்லை. இன்றும் அது தன்னால் வெளியே வர முடியாது என்று எண்ணியே அங்கு நின்று கொண்டிருக்கிறது.” என்றார்.

அதேபோல் நாம் சிறுவர்கள் இதைக் கொடுத்தால்தான் உண்பார்கள் இந்த வகையான உணவைத்தான் அவர்கள் உண்பார்கள் என எண்ணிக்கொண்டு நாம் அவர்களுக்கு தீங்கான உணவுகளையே பழக்கி வருகிறோம். எனவே அவர்களுக்கு இயற்கையான ஒரு உணவை, நல்ல உணவை கொடுத்தோம் என்றால் அவர்கள் அதற்குப் பழகிக் கொள்வார்கள்.

நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.


வாங்கிவிட்டீர்களா ?
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்

ராஜாவாக இருப்பதைவிட ரிஷியாக இருப்பதே மேல் …

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 10


காட்சி : 14

இடம் : ஆஸ்ரமம்.
உறுப்பினர்கள் : காகப்பட்டர் – ரங்குபட்டர் – சிஷ்யர்கள்.

(சிஷ்யர்கள் வேதம் ஓதிக் கொண்டிருக்கின்றனர். காது கொடுத்துக் கேட்க முடியாத நிலையில் ரங்குபட்டர் வந்து..)

ரங்குபட்டர் : ஏண்டாப்பா பிரகஸ்பதிகளே ! காது குடையறது ! போதும், நீங்க போட்ட கூச்சல். அரிதுயில் செய்யும் ஸ்ரீமன் நாராயணமூர்த்தி காதில் கூட விழுந்திருக்கும். போதும், நிறுத்திவிட்டுப் போய் சமையல் காரியத்தைக் கவனியுங்கோ. சதா சர்வ காலமும் ஆகா ஊகூண்ணு கூவிண்டிருக்கிறது போதும்… போங்கள்…

சிஷ்யன் : குரு பாடம் படியுங்கள் என்கிறார்…

ரங்குபட்டர் : இப்போ இந்த குரு சொல்றார்; போதும், நீங்கள் பாடம் படிச்சதுண்ணு . எழுந்திருங்கள். மகா பெரிய ஞானஸ்தாள்தான்.

(சீடர்கள் போக)

தலைவலி வந்துடறது இங்கே. காலை முதல் மாலை வரை ஒரே காது குடைச்சல். இந்தப் ப்ரகிருதிகள் ப்ராணனை வாட்டிண்டிருக்க இந்தக் கருமம் எப்பத்தாந் தருமோ தெரியல்லே நமக்கு. இந்தக் குருவுக்கோ …

(காகப்பட்டர் வருகிறார்)

காகப்பட்டர் : ரங்குபட்டர் என்னடாப்பா குருவுக்கு அர்ச்சனை?

(ரங்குபட்டர் அவர் காலில் விழுந்து)

ரங்குபட்டர் : நான் ஒண்ணும் அபசாரமா பேசிடலே ஸ்வாமி

காகப்பட்டர் : ரங்குபட்டர் இந்த உபசாரமெல்லாம் வேண்டாம். நெடு நாட்களாக நோக்கு விசாரம் இருக்கு என்பது தெரியும் நேக்கு.

ரங்குபட்டர் : என் மனசை அறிஞ்சிண்டிருக்கேள். மகான் அல்லவோ தாங்கள் விசாரம் இருப்பது உண்மைதான். ஆனால்…

காகப்பட்டர் : ஆனால் என்ன?

ரங்குபட்டர் : அந்த விசாரம் என் பொருட்டல்ல. சகல சாஸ்திர சம்பன்னராகிய தங்கள் பொருட்டுத்தான் விசாரப்படுகிறேன்.

காகப்பட்டர் : என் பொருட்டு என்னடாப்பா விசாரம்?

ரங்குபட்டர் : ஏனிராது குரு சாமான்யளெல்லாம் எவ்வளவோ சம்பத்துக்களுடன் வாழறா. அரண்மனைகளிலே வாசம் செய்துண்டு. நந்தவனங்களிலே அப்சரஸ் போன்ற ஸ்திரீ ரத்னங்களோடு உலாவிண்டு.

(இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு ஒரு சீடன் நிற்பதைக் கவனித்த ரங்குபட்டர் அவனைப் பார்த்து) டேய், மண்டு நாங்கள் ஏதாவது பேசிண்டிருந்தா நீ கேட்டிண்டிருக்கணுமோ? போடா உள்ளே…

(சீடன் போகிறான்)

கேட்டேளோ அப்சரஸ் போன்ற ஸ்திரீ ரத்னங்களோட உலாவிண்டு ஆனந்தமா காலம் கழிக்கிறா…

காகப்பட்டர் : ஆமாம்… அதனால் என்ன? அதற்குத்தான் ராஜயோகம் என்று பெயர்.

ரங்குபட்டர் : பெயர் எதுவானாலும் இருக்கட்டும் ஸ்வாமி. அவ்விதமான ஆனந்தம் கிஞ்சித்தேனும் என் போன்றவாளுக்குத் தேவையில்லை. நான் சாமத்துக்கும் யஜுருக்கும் வித்யாசம் தெரியாத மண்டு. ஆனால் நாலு வேதத்தையும் நாற்பத்தெட்டுவித பாஷ்யத்தோடு உபதேசிக்கக்கூடிய தங்களைப் போன்ற தன்யாளுக்கு இந்த ராஜபோகத்திலே ஆயிரத்திலே ஒரு பங்கு இருக்கப்படாதோ? இல்லையே என்பதுதான் நேக்குள்ள விசாரம். . .

காகப்பட்டர் : டே, ரங்குபட்டர். உன் குரு பக்தி இருக்கே. அது கேட்க நேக்கு பரம்மானந்தமா இருக்கு. இருக்கட்டும்; ராஜபோகம் இருக்கே, அது என்ன பிரமாதம்..

ரங்குபட்டர் : என்ன ஸ்வாமி இது. சாமான்யாளுக்குச் சொல்றதையே நேக்கும் சொல்றளே நானுங்கூடத்தான் தங்கள் உபதேசத்தின்படி லோகம் மாயை, ஆனந்தம் என்பது அநித்யம், போக போகாதிகள் வீண் சொப்பனம், இந்திரியச் சேட்டைகள் ஆகாது என்றெல்லாம் பாமராளுக்குக் கூறுகிறேன். அதே விஷயத்தை நேக்கும் சொல்றேளே ! மாயா வாதம் மனத் திருப்தி தருமா?

காகப்பட்டர் : நான் மாயைப் பற்றித் சொல்லவில்லை. ராஜபோகம் நிலையானதுதான்; சந்தோஷமானதுதான். ஆனா ப்ரமாதமில்லே. ஏன் அப்படிச் சொல்றேன் என்கிறியோ? அந்த ராஜபோகத்துக்கு லவலேசமும் குறைந்ததல்ல நமக்கு இருப்பது…

ரங்குபட்டர் : இந்தப் பர்ணசாலையை அரண்மனையாகவும், இந்தச் சீடர்களைச் சேடிகளாகவும் நினைத்துக் கொள்ள வேண்டுமென்கிறீராக்கும்.

எவன் ஜெயித்தாலும் தோற்றாலும் நமக்குக் கவலை கிடையாது. சண்டைக்குக் கிளம்பும்போது ராஜன் நம்முடைய ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டுதான் போவான். அவன் யுத்த களத்திலே மாண்டு போகிறான் என்று வைத்துக் கொள். ஜெயித்த ராஜா முதலில் நம்மை நமஸ்கரித்து, நம்முடைய ஆசிர்வாதம் பெற்ற பிறகுதான் மகுடம் புனைவான்.

காகப்பட்டர் : இல்லை. ஒரு ராஜாவுக்கு ஒரு ராஜ்யம் நமக்கோ எல்லா ராஜ்யங்களும் சொந்தம். அரசனுக்கு ஒரு அரண்மனை. அத்தனை அரண்மனைகளிலும் நாம் கம்பீரமாகச் செல்லலாம். ஒரு ராஜா மற்றொரு ராஜாவிடத்திலே அன்பு காட்டுவான் மேலுக்கு. உள்ளே பகை புகையும். சமயம் வாய்த்த போது சத்ரு ஆவான். நமக்கோ எல்லா ராஜாக்களும் நமஸ்காரம் செய்வா. ஒரு ராஜாவும் நம்மைத் சத்ருவா கருதமாட்டான்.

ஒரு ராஜாவுக்கு ராஜபோகம் இருப்பது போலவே ரணயோகமும் உண்டு. அதாவது சண்டை வந்துவிடும். ஆபத்து வரும். நமக்கோ ராஜாதி ராஜாக்கள் ரணகளத்திலே மண்டை பிளக்க சண்டை போட்டுக் கொண்டாலும் கவலை இல்லை. யுத்தம் நமக்குக் கிடையாது. யுத்த சமயத்திலே வெட்டு, குத்து யார் யாருக்கோ இருக்கும். நம்மை அண்டாது. எவன் ஜெயித்தாலும் தோற்றாலும் நமக்குக் கவலை கிடையாது. சண்டைக்குக் கிளம்பும்போது ராஜன் நம்முடைய ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டுதான் போவான். அவன் யுத்த களத்திலே மாண்டு போகிறான் என்று வைத்துக் கொள். ஜெயித்த ராஜா முதலில் நம்மை நமஸ்கரித்து, நம்முடைய ஆசிர்வாதம் பெற்ற பிறகுதான் மகுடம் புனைவான். பைத்தியக்காரா! ராஜபோகம் ஆனந்தத்துக்கு மட்டுமல்லடா ; ஆபத்துக்கும் அது இருப்பிடம்

(புலித்தோலைக் காட்டி) இதோ பார் இது என்ன?

ரங்குபட்டர் : என்ன ஸ்வாமி இது! என்னை முட்டாள் என்று எண்ணிக் கொண்டாலும் பரவாயில்லை. கேவலம் குருடன் என்று தீர்மானித்து விட்டீர் போலிருக்கிறதே இது என்னவென்று கேட்கிறீரே இது புலித்தோல் இது கூடவா தெரியாது.

காகப்பட்டர் : இது தெரிகிறதே தவிர இது உபதேசம் செய்கிற பாடம் தெரியவில்லையே நோக்கு.

ரங்குபட்டர் : என்ன புலித்தோல் உபதேசம் செய்கிறதா?

காகப்பட்டர் : ஏன் செய்யவில்லை? அரச போகத்துக்கும், ஆரிய யோகத்துக்கும் உள்ள தாரதம்யத்தைத்தானே புலித் தோல் உபதேசம் செய்கிறது.

ரங்குபட்டர் : என்ன ஸ்வாமி இது வேடிக்கை பேசுகிறீர்.

காகப்பட்டர் : ரங்குபட்டர் வேடிக்கை இல்லை. புலித்தோலைப் பார். இது நமக்கு ஆசனம். சொர்ண சிங்காதனத்தின் மீதிருந்து செங்கோல் செலுத்துகிற மகாராஜனும் கூட இந்தப் புலித்தோல் ஆசனத்தில் அமரும் நமக்கு மரியாதை காட்டுவான். இது கேவலம், மிருகத்தின் தோல். ஆனால், மன்னாதி மன்னரும் இதன் முன் மண்டியிடுகிறார்கள்.
இல்லையா?

ரங்குபட்டர் : ஆமாம் குருவே

காகப்பட்டர் : இப்போது யோசித்துப்பார். தங்க சிம்மாசனத்தில் அமர்ந்தாலும் நமது திருப்பாதத்தை வணங்கும் ராஜனுடைய யோகம் பெரிதா? தோலின் மீதமர்ந்து – அரசர்களுடைய முடியைக் காலிலே காணும் நம்முடைய யோகம் பெரிதா?

ரங்குபட்டர் : உண்மைதான் குருவே !

காகப்பட்டர் : அதுமட்டுமல்ல அரசர்களை அஞ்சலி செய்யச் சொல்லும் இந்த அற்புதமான ஆசனம் இருக்கிறதே இது ஒரு காலத்தில் ஆரண்யத்திலே உலவிக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் நாம் அதன் அருகே கூட செல்ல முடியாது. முடியுமோ ?

ரங்குபட்டர் : எலியைக் கண்டாலே சில சமயம் மிரள்கிறோமோ புலியிடம் பயமில்லாமல் இருக்குமா ஸ்வாமி?

காகப்பட்டர் : அப்படிப்பட்ட புலியின் தோல் மீது நாம் உட்கார்ந்திருக்கிறோம். பூபதிகள் நமக்குப் பூஜை செய்கிறார்கள். முட்டாளே இது உண்மையான யோகமா? ராஜபோகம் உண்மையா?

ரங்குபட்டர் : விஷயம் பிரமாதமாய் இருக்கிறதே !

காகப்பட்டர் : இன்னமும் கேள்! இவ்வளவு திவ்யமான ஆசனத்தை நாம் அனாயாசமாகப் பெற்றோம். இல்லையா? காட்டிலே புலி உலாவிற்று. அதை வேட்டையாடியது நாமல்ல. புலியின் பற்களால் கடியுண்டவர்கள். நகங்களால் கீறுபட்டவர்கள். ஏன், புலிக்கே இரையானவர்கள் வேறு வேறு. கடைசியில் புலியை எவனோ கொன்றான். எவ்வளவோ கஷ்டத்துக்குப் பிறகு. யாரவன்? – தெரியாது. புலியைக் கொன்ற வீரனை மக்கள் மறந்துவிடுவார். ஆனால், அந்தப் புலித்தோல் நமக்குத் தானமாகத் தரப்பட்டதும் அதன் மீது அமரும் நமக்கு மக்களும் மன்னரும் மரியாதை செய்கின்றனர். பார்த்தாயா, நமக்கிருக்கும் யோகம் எப்படிப்பட்டது என்பதை . ராஜபோகம் ரமணீயமானது தான். ஆனால், அது படமெடுத்தாடும் நாகம் போன்றது. எந்தச் சமயத்தில் விஷப்பல் பதியுமோ என்ற பயத்தோடு தான் எந்த அரசனும் இருக்க வேண்டும். நமக்கு இருக்கும் யோகம் அப்படியல்ல. துன்பமில்லாத இன்பம். மாசு இல்லாத மாணிக்கம். முள்ளில்லாத ரோஜா – இந்த மகத்தான வித்தியாசத்தைத் தெரிந்துக் கொள். ராஜாவாக இருப்பதைவிட ரிஷியாக இருப்பதே மேல். அரச வாழ்வை விட ஆஸ்ரம வாழ்வு அனந்த கோடி தடவை மேல், அசடே! ஆரியனாகப் பிறந்தும் அரச போகத்திலே ஆசை வைக்கிறாயே. ஆரியம் விதைக்காது விளையும் கழனி. வெட்டாது ஊற்றெடுக்கும் தடாகம்…

ரங்குபட்டர் : குருவே! உணர்ந்து கொண்டேன். உண்மையிலேயே நான் ராஜ போகம் சிலாக்கியமானது என்று தான் எண்ணிக் கொண்டிருந்தேன். தாங்கள் செய்த உபதேசத்தால் தெளிவு பெற்றேன். அரச போகம், ஆரிய யோகத்துக்கு ஈடாகாது.

காகப்பட்டர் : உணர்ந்து கொண்டாயா ? ஆரிய யோகம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொண்டாயல்லவா?

ரங்குபட்டர் : ஆகா! நன்றாகத் தெரிந்து கொண்டேன். ஆரிய யோகம் சாமான்யமானதல்ல. தாங்கள் கூறியபடி, அது முள்ளில்லாத ரோஜாதான்.

காகப்பட்டர் : ரோஜா மட்டுமல்ல. அது வாடாத மல்லி.

ரங்குபட்டர் : பொருத்தமான உபமானம். அது வாடாத மல்லிகை தான்.

காகப்பட்டர் : அதுவும் நாம் தேடாதது.

ரங்குபட்டர் : ஆமாம்! அதைப் பெற நாம் அலைத்து தேடி அலுப்ப தில்லைதான்.

காகப்பட்டர் : அப்படிப்பட்ட ஆரிய வாழ்வை அற்பமென்று கருதினாயே!

ரங்குபட்டர் : நான் அசடன் குருவே. அண்ட சராசரங்களிலும் ஆரிய யோகத்துக்கு ஈடேதும் கிடையாது என்பதை இப்போது அறிந்து கொண்டேன்.

காகப்பட்டர் : தன்யனானாய் ரங்குபட்டர்! தலைமுறை தலைமுறையாக நமக்குக் கிடைத்துள்ள இந்த வாழ்வு சாமான்ய மானதல்ல; சகலருக்கும் சித்திக்கக் கூடியதுமல்ல..

ரங்குபட்டர் : குருதேவா! அதிக உபதேசம் ஏன்… ஆரியம் சாமான்யமானதல்ல. அது விலையில்லா மாணிக்கம்; முதலில்லா வியாபாரம்.

காகப்பட்டர் : டேய், ரங்குபட்டர்! அசடோ! முதல்லா வியாபாரம் என்று சொல்லாதே. அர்த்தம் அவ்வளவு நன்னா இராது.

ரங்குபட்டர் : வெளியே சொல்வேனா குரு. நமக்குள் கூறிக் கொண்டதுதானே.

காட்சி : 15
இடம் : பாலாஜி வீடு
உறுப்பினர்கள் : பாலாஜி, பகதூர்.

பாலாஜி : பகதூர்! பாடங்களை விரைவாய் கற்றுக் கொள்ளணும், தெரிந்ததா? இப்படி நெட்டை மரம் போல் நின்று கொண்டிருந்தாயோ, இந்துமதியை அவன் தட்டிக்கிட்டுப் போய்விடுவான்.

பகதூர் : பாலாஜி, எனக்குச் சில சமயங்களிலே இந்துவைக் பார்க்கக்கூட பயமா இருக்கு,

பாலாஜி : என்னடா பயம்? அவ பொம்பளைதானே?

பகதூர் : அவ பார்வை ஒரு விதமா இருக்கு பாலாஜி.

பாலாஜி : எப்படிடா இருக்கு ஏமாளி?

பகதூர் : டேய், பகதூர் உன் சேஷ்டைகளைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஜாக்கிரதையாக நடந்து கொள்’ அப்படின்னு பயங்காட்டுவது போல் இருக்கு பாலாஜி.

பாலாஜி : அது வெறும் பாவனைடா, பாவனை அவளுக்கு அந்தப் பய மோகன் மேலே கொஞ்சம் அன்பு. அவனோ ராஜ்ய காரியங்களிலேயே மூழ்கிக் கெடக்கிறான். ஆகவே அவனிடத்திலே ஆசை குறையும். நீ மட்டும் கொஞ்சம் சமார்த்தியமாக நடந்து கொண்டால் ஜெயம் நிச்சயம்.

படிக்க:
தேர்தல் ஆணையமே … நடையைக் கட்டு !
நோட்டால குத்துனாலும் குத்துவேன்… தாமரையில குத்த மாட்டேன் | காணொளி

பகதூர் : சண்டையிலே கூட சீக்கிரமா ஜெயிச்சுடலாம் போல இருக்கு. இந்தக் காதல் விஷயம் அவ்வளவு சுலபமா இல்லியே.

பாலாஜி : சரி சரி பேசிக்கிட்டே பொழுதை ஒட்டாதே, ஆரம்பி, பாடத்தைக் கடைசி வரை பதுமையாவே பேசிக்கிட்டிருந்தா போதுமா? பதுமை பாடம் முடிச்சதும் நிஜமாகவே ஒரு பெண்ணிடம் இந்தப் பாடத்தை நடத்த வேண்டும். அந்தப் பாடம் முடிந்த பிறகு இந்து மதியிடமே உன் திறமையைக் காட்ட வேண்டும்.

பகதூர் : சரி, பாலாஜி ஆரம்பிக்கிறேன். முக்கனியே! சக்கரையே!

பாலாஜி : பகதூர்! அந்தப் பாடம் வேண்டாம். காதல் சம்பாஷணை நடத்துவோம். நான் பதுமைக்குப் பின்புறமிருந்து பேசுவேன். ஆம், அதாவது நீ காதலன்; நான் காதலி .

பகதூர் : அய்யோ நீ காதலியாகிவிட்டால் எனக்குக் காதலே வேண்டாம்டா பாலாஜி.

பாலாஜி : போதும், வாயை மூடிக்கொண்டு பேசு.

பகதூர் : வாயை மூடிக்கொண்டு எப்படிப் பேசுவது?

பாலாஜி : ம்…. நேரமாகிறது.

பகதூர் : சரி கண்ணே கனிரசமே! உன்னை நான் காதலிக்கிறேன்.

பாலாஜி : என்னையா?

பகதூர் : ஆம். உன்னைத்தான் உல்லாசி! உன்னைத்தான் உயிரே!

பாலாஜி : உண்மையாகவா?

பகதூர் : ஆம். இந்தச் சோலையிலே, அதோ, கொஞ்சி விளையாடும் கிளிகள் சாட்சி. கூவும் குயில்கள் சாட்சி. உன்னை நான் உண்மையாகவே காதலிக்கிறேன்.

பாலாஜி : டேய், பகதூர்! இவ்வளவு உருக்கமா பேசிட்டாயோ, இந்துமதி உனக்குத்தான் சம்மதித்து விடுவாள். உன்பாடு அதிர்ஷ்டம்தான். வா, போவோம்.

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

விளை நிலங்களில் குழாய் அமைக்கும் ஓ.என்.ஜி.சி : சீர்காழி நாங்கூர் கிராம மக்கள் போராட்டம் !

நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா நாங்கூர் கிராமத்தில் கடந்த 13.04.2019 அன்று ஓ.என்.ஜி.சி நிறுவனம், வேதாந்தா கம்பெனிக்காக பெட்ரோலிய பொருட்கள் எடுத்து செல்வதற்காக விவசாய நிலங்களை அழித்து குழாய் போட முயன்றது.

நாங்கூரில் குழாய்களைப் போடும்போதே விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள், என 500-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வேலையைத் தடுத்து நிறுத்தினர். குழாய்களை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினார்கள், கடுமையாக முழக்கமிட்டு போராடினார்கள். உடனே டி.எஸ்.பி தலைமையில் ஆறு ஸ்டேசன் போலீசும் வந்து மக்களை மிரட்டிப் பார்த்தது.

ஆனால், மக்கள் மிரட்டல்களுக்கு அஞ்சவில்லை. ”இந்த பகுதியில் உள்ள குழாய்களை அப்புறப்படுத்தினால்தான் நாங்கள் கலைந்து செல்வோம்.” என உறுதியாக போராடியதால் போலீசும் வட்டாட்சியரும் இந்த நிலங்களில் உள்ள குழாய்களை மக்கள் முன்னே அப்புறப்படுத்தினார்கள். ”தேர்தல் முடிந்தபின்னர், மக்களிடம் கருத்து கேட்ட பிறகே வேலையை தொடர்வோம்” என்று எழுதி கொடுத்ததையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

விவசாயிகள் போராட்ட களத்திற்கு தண்ணீர் கொடுப்பது, சாமியானா பந்தல் அமைப்பது, உணவு ஏற்பாடு செய்வது ஆகியவற்றை தாங்களாகவே மக்கள் செய்தனர். ஒரு திருவிழாபோல் போராட்டம் நடந்து முடிந்தது.

“தேர்தல் முடிந்ததும் மீண்டும் குழாய் போடுவார்கள்; அதை விடக்கூடாது மக்களை திரட்டி மீண்டும் போராடுவோம்!” என்று அறிவித்ததோடு, நாங்கூர் கிராமத்தையடுத்த நாராயணபுரத்தில் ஓ.என்.ஜி.சி.க்காக நடைபெற்றுக் கொண்டிருந்த வேலைகளையும் தன்னெழுச்சியாக தடுத்து நிறுத்தினார்கள், சுற்றுவட்டார கிராம மக்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதைத் தொடர்ந்து நாராயணபுரத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய் பதிக்கும் பணியைத் தடுத்து நிறுத்தியதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் ரவி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த முன்னணியாளர்கள் 12 நபர்களின் பெயரைக் குறிப்பிட்டும் மற்றும் பெயர் குறிப்பிடாமல் இன்னும் பலர் என்ற வார்த்தையை சேர்த்தும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது, திருவெண்காடு போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

டெல்டாவை அழிக்கும் நாசகார திட்டங்களை ஒழிப்பதற்கு தேர்தல் முடியும்வரை காத்திருக்கத் தேவையில்லை என்பதை இப்போராட்டம் நிரூபித்துக் காட்டியுள்ளது!


தகவல் :
மக்கள் அதிகாரம்,
சீர்காழி.

தேர்தல் ஆணையமே … நடையைக் கட்டு !

முழுக்க நனைந்தபிறகும் முக்காடு போட்டுக் கொண்டு நிற்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். சட்டப்படி, அது ஒரு தன்னாட்சி அமைப்பு. இந்திய அரசியல் சாசனம் அப்படித்தான் சொல்கிறது. ஆனால், நடைமுறையில் அது பா.ஜ.க-வின் கூட்டணி கட்சிகளில் ஒன்றாகவே செயல்பட்டு, ‘கொண்டை’யை மறைக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது.

மோடி நாட்டைச் சுற்றி முடிக்கும் வரை தேர்தல் தேதியை அறிவிக்காமல் தள்ளிப்போட்டது; கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கியதில் கடைப்பிடித்த அழுகுணி ஆட்டம்; அரசின் அத்தனை துறைகளும் ஆளும்கட்சிக்கு சார்பாகவும் எதிர்கட்சிகளை ஒடுக்கவும் பயன்படுத்தப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் பக்கச்சார்பு; தமிழ்நாட்டில் மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை ஏப்ரல் 18 அன்று நடத்தாமல் இழுத்தடித்து அறிவித்திருக்கும் சகுனித்தனம்… என தனது ஒவ்வொரு செயலிலும் தேர்தல் ஆணையம், பா.ஜ.க.வின் ஜி-டீம் (G Team – Government Team) ஆகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

2016 சட்டமன்றத் தேர்தலின் பொழுது தேர்தல் பறக்கும் படையால் தடுத்துச் சிறைவைக்கப்பட்ட கண்டெய்னர் லாரிகள் (கோப்புப் படம்)

நாடாளுமன்றத் தேர்தலுடன், தமிழ்நாட்டில் காலி யாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். (சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. மறைந்ததை அடுத்து, இவை 22 தொகுதிகளாயின) இந்தத் தொகுதிகளில் தி.மு.க. விருப்ப மனுகூட வாங்கத் தொடங்கிவிட்டது. ஆனால், ஆணையம் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் அறிவித்தது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம் தொகுதிகளில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அங்கு தேர்தல் இல்லையாம்.

ஒட்டப்பிடாரத்தில், எதிர்த்தரப்பு வேட்பாளர் வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களை மறைத்துவிட்டார் என்பது டாக்டர் கிருஷ்ணசாமியின் வழக்கு. அரவக்குறிச்சியில் தி.மு.க., அ.தி.மு.க. இரு தரப்பு வேட்பாளர்களும் வாக்குக்குப் பணம் கொடுத்ததை எதிர்த்து ஒரு சுயேச்சை வேட்பாளரின் வழக்கு. திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க.வின் ஏ.கே.போஸுக்கு இரட்டை இலை ஒதுக்கக்கோரிய கடிதத்தில் இருந்தது ஜெயலலிதாவின் கைரேகையா எனச் சந்தேகம் எழுப்பிய டாக்டர் சரவணனின் வழக்கு. இப்படி ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாத காரணங்களைக் கொண்ட இந்த மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் தேர்தலை ஏப்ரல் 18 அன்று நடத்தாமல், நிறுத்தி வைத்ததன் காரணம் என்ன?

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தேர்தல் படிவத்தில் ஜெயாவின் கைரேகை.

ஒரே காரணம்தான். எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை இண்டு இடுக்குகளில் நுழைந்தாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற துடிப்பு. 22 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று அனைத்திலும் தி.மு.க. வெற்றிபெற்றால், மாநிலத்தில் ஆட்சி மாற்றத்துக்கான வாய்ப்பு அதிகம். ஆகவே, தேர்தல் நடைபெறும் தொகுதிகளின் எண்ணிக்கையை முடிந்தவரைக்கும் குறைப்பதன் மூலம், ஆளும் அ.தி.மு.க.வின் ஆட்சிக்காலம் நூலிழையில் தப்பிப் பிழைத்திருக்கத் தேர்தல் ஆணையம் வழி அமைத்துக் கொடுத்தது. அதனால், வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தேர்தல் நடத்த முடியாது என்பது போங்கு.

2001-ஆம் ஆண்டு ஆண்டிபட்டி, புவனகிரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை ஆகிய நான்கு தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தார். இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவது சட்டவிரோதம் என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றது. 15 ஆண்டுகளாக இந்த நான்கு தொகுதிகளுக்கும் தேர்தலே நடத்தவில்லையா?

படிக்க:
♦ ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து : அதே ஆம்பூர் பிரியாணி அதே தேர்தல் ஆணையம் !
♦ தேர்தல் – 2019 : அரசுக் கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு | மக்கள் அதிகாரம்

இதில் திருப்பரங்குன்றம் தொகுதி இன்னும் விசேசமானது. 2016 சட்டமன்றத் தேர்தலில் இங்கு சீனிவேல் என்பவர் அ.தி.மு.க. சார்பில் வெற்றிபெற்றார். பதவியேற்பதற்கு முன்பே அவர் மரணம் அடைந்தார். இதனால் அதே ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி திருப்பரங்குன்றத்துக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் ஏ.கே.போஸ் போட்டியிட்டார். இவருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரிய கடிதத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்துக்குப் பதிலாக கைரேகை இடம் பெற்றிருந்தது. அப்போது ஜெயலலிதா அப்பல்லோவில், கோடி ரூபாய் மதிப்புள்ள இட்லியும் சட்னியும் சாப்பிட்டுக்கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

தேர்தலுக்குப் பிறகு டிசம்பர் 5-ஆம் தேதி அவர் மரணம் அடைந்தார். இடைத்தேர்தலின் முடிவில் ஏ.கே.போஸ் வெற்றிபெற்ற பிறகு, அது ஜெயலலிதாவின் கைரேகைதானா என்பதில் சந்தேகம் எழுப்பிய தி.மு.க. வேட்பாளர் சரவணன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே ஏ.கே.? போஸும் மரணம் அடைந்தார்.

இந்நிலையில்தான், மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கிடையாது என்பது உறுதியான அடுத்த சில நாட்களில் திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு வந்தது. “அது ஜெயலலிதாவின் கைரேகைதான் என்பதற்கு உரிய ஆதாரம் இல்லை” என்று சொன்ன நீதிமன்றம், ஏ.கே.போஸின் வெற்றி செல்லாது என்று அறிவித்தது. அது மட்டுமல்ல, “அந்த நேரத்தில் மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ராஜேஷ் லக்கானி, அரசின் முதன்மை செயலாளர் ஆகியோர் ஆளும் அரசுடன் கூட்டுச் சதியில் ஈடுபட்டிருந்தனரா?” என்றும் கேள்வி எழுப்பியது.

ஜெயலலிதாவிடமிருந்து உருட்டப்பட்ட கைரேகையை அங்கீகரித்த முன்னாள் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி.

தேர்தல் ஆணையமும், ஆளும் கட்சியும் இணைந்து கூட்டுச்சதி என்பது மிகக் கடுமையான சொற்பிரயோகம். நியாயமாக, ‘நடுநிலை குமார்’ தேர்தல் ஆணையம் இதற்குக் கோபப்பட்டிருக்க வேண்டும். ஆவேசத்துடன் சென்று, “அது ஜெயலலிதாவின் கைரேகைதான்” என்பதைச் சட்டப்படி நிரூபித்திருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையமோ எருமை மாட்டில் மழை பெய்தது போல, பா.ஜ.க.வின் அடுத்த அசைன்மெண்ட்டுக்குள் சென்றுவிட்டது.

வேட்புமனுவில் இருந்தது ஜெயலலிதாவின் கை ரேகை இல்லை என்றால், அது யாருடையது? ஒரு முதலமைச்சரின் கைரேகையில் பித்தலாட்டம் செய்ய முடியும் எனில், அதைச் செய்தவர்கள் மாபெரும் குற்றவாளிகள் அல்லவா? அப்படியே அது ஜெயலலிதாவின் கைரேகைதான் என்றாலும், அவர் சுயநினைவுடன் இருக்கும்போது, அவருடைய சம்மதத்துடன் பெறப்பட்டதா? அல்லது சுயநினைவின்றி மயங்கிக்கிடக்கும்போது அவருக்கே தெரியாமல் உருட்டப்பட்டதா? கைரேகை அவர் வைத்ததுதான் என்றால், கைரேகை வைக்கும் அளவுக்கு சுய உணர்வுடன் இருந்த ஒருவரால் கையெழுத்துப் போட முடியாதா?

2016 நவம்பர் காலகட்டத்தின் தமிழக அரசியல் சூழலை ஒரு கணம் மனதில் கொண்டு வாருங்கள். அப்பல்லோவில் ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பாக எண்ணற்ற ஊகங்கள் வந்து கொண்டிருந்த சமயம். அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதே மர்மமாக இருந்த நேரம். நியாயமாக, “வேட்புமனுவில் இருப்பது ஜெயலிதாவின் கைரேகையா?” என்ற சந்தேகம் தேர்தல் ஆணையத்துக்கு வந்திருக்க வேண்டும். எப்போதும் கையெழுத்துப் போடுபவர் இந்த முறை ஏன் கைநாட்டு வைத்திருக்கிறார் என்ற கேள்வி மிக அடிப்படையானது. ஆனால், ஆணையம் மௌனமாக அனைத்தையும் ஏற்றுக்கொண்டு தேர்தலை நடத்தியது.

அப்படியானால், தேர்தல் ஆணையத்தின் பணிதான் என்ன? ஆண்டு முழுவதும் உறைநிலை கோமாவில் இருக்கும் ஆணையம் தேர்தல் காலத்தில் திடீரென உயிர்த்தெழுந்து சூப்பர் ஹீரோ அவதாரம் எடுப்பதன் அரசியல் அர்த்தம் என்ன? “இங்கு தேர்தல் முறையாக, விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறது” என்ற தோற்ற மயக்கத்தை ஏற்படுத்த ஆணையம் முயல்கிறது. ஆனால், இம்முறை இந்த நாடகம் மிகவும் பரிதாபகரமான முறையில் அம்பலப்பட்டு நிற்கிறது. தேர்தல் ஆணையம் ஒரு பஃபூன் என்ற நிலையில் இருந்து, ஆளும்கட்சியின் ஆணைக்கு அடிபணியும் ஓர் அடியாள் என்பது திட்டவட்டமாக அம்பலப்பட்டிருக்கிறது. மாநில அளவிலும், தேசிய அளவிலும் ஒவ்வொரு நாளும் வெளிவரும் செய்திகளே இதற்கான உதாரணங்கள்.

தினகரன் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், தமிழகத்திலுள்ள 18 சட்டமன்றத் தொகுதிகள் கடந்த 20 மாதங்களாகக் காலியாக உள்ளன. அத்தகுதி நீக்கத்தை ஆறு மாதங்களுக்கு முன்பே உயர்நீதி மன்றம் உறுதி செய்து விட்ட நிலையிலும் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தேர்தலை நடத்த முன்வரவில்லை. அதேபொழுதில், இந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் குஜராத்தில் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்குத் தாவினார்கள். அந்த மூன்று தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23-இல் தேர்தல். குஜராத்துக்கு வந்தால் ரத்தம், தமிழ்நாட்டுக்கு வந்தால் தக் காளி சட்னியா?

கோவா மாநில முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் மரணமடைந்து, அவரது சடலம் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பே, அவர் உறுப்பினராக இருந்த சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் சூலூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் இழுத்தடிக்கப்பட்டு, வேறுவழியின்றித் தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் என்ன நடந்தது? விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கடைசி நேரம் வரை இழுத்தடித்துப் பானைச் சின்னம் ஒதுக்கினார்கள். தினகரனுக்கு, வேட்புமனு தாக்கல் எல்லாம் முடிந்து உச்சநீதி மன்றம் சொன்னபிறகு, பரிசுப்பெட்டி என்ற பொதுச் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால், தினகரனுக்கு தர மறுத்த குக்கர் சின்னத்தை, அவரது கட்சி வேட்பாளர்களை எதிர்த்து அதே பெயருடன் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். இவ்வளவு விசுவாசத்துடன் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்குப் பணிபுரியும் தேர்தல் ஆணையத்துக்கு, கூட்டணியில் இரண்டு சீட்டுகள் ஒதுக்காதது மட்டும்தான் பாக்கி.

எனினும், இப்படி அபாண்டமாக நாம் குற்றம் சொல்லிவிட முடியாதவாறு சில அதிரடிகளைச் செய்வதற்கும் ஆணையம் தவறுவது இல்லை. தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்தப் பிறகு, நாடு முழுவதும் எதிர்கட்சியினரின் வீடுகள், நிறுவனங்கள் மீது வருமான வரித் துறையினரின் தொடர் சோதனைகள் நடைபெற்றன. வேலூரில், தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்குச் சொந்தமான கல்லூரிகள், நிறுவனங்களில் சோதனை, மத்தியப்பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத்தின் நெருங்கிய நண்பர்களின் வீடுகளில் சோதனை… என்ற இந்த சோதனைகளை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

எதிர்த்தரப்பை பழிவாங்கும் நோக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த துரைமுருகன் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை.

உடனே தேர்தல் ஆணையம், வருமான வரித்துறைக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. “இது தேர்தல் காலம் என்பதால் வருமான வரித்துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும்” என்பது அந்த நோட்டீஸின் உள்ளடக்கம். இதைச் சொல்வதற்குத் தேர்தல் ஆணையத்துக்கு ஏதாவது அருகதை இருக்கிறதா?

தேர்தல் காலத்தில் ஒரு வேட்பாளர் 10 விநாடிக்கு ஒரு ரேடியோ விளம்பரம் கொடுத்தால் கூட ஆணையத்துக்குக் கணக்குக் காட்ட வேண்டும். ஆனால், “நமோ டி.வி.” என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சி திடீரென ஒளிபரப்பைத் தொடங்கியிருக்கிறது. மோடியின் உருவத்தையே “லோகோ”வாகக் கொண்டு, 24 மணி நேரமும் மோடி புகழ் பாடி, பா.ஜ.க. சாதனைகளைப் பஜனை செய்து கொண்டிருக்கிறது. டாடா ஸ்கை, ஏர்டெல் உள்ளிட்ட அனைத்து டி.டி.ஹெச். சேவைகளிலும் திடீரென வரத் தொடங்கியுள்ள “நமோ டி.வி”க்கு மைய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகமோ, தேசியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமோ அனுமதியோ, உரிமமோ வழங்கவில்லை. ஆனாலும், ஒளிபரப்பாகிறது. கேட்டால், டி.டி.ஹெச். சேவையை வழங்கிவரும் நிறுவனங்கள், “இது ஒரு சிறப்பு சேவை ஒளிபரப்பு” என்று பதில் சொல்கிறார்கள். இந்தச் “சிறப்புச் சேவை”, வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்றும்கூடத் தொடரும். தேர்தல் ஆணையத்தால் என்ன செய்து விட முடியும்? அதிகபட்சம் ரிமோட்டை எடுத்து சேனலை மாற்றலாம். வேறு எதுவும் செய்ய முடியாது.

நரேந்திர மோடியை சகலகலா வல்லவனாகக் காட்டும் பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்திற்குக் கடைசி நேரத்தில்தான் தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

PM Narendra Modi என்ற பெயரில் மோடியின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக வெளியாகிறது. இதைத் தேர்தல் ஆணையம் தடுக்குமா? முடியுமா? இந்திய இராணுவத்தை “மோடியின் சேனை” என்று அழைக்கிறார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத். இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? “வாக்குச் சாவடிகளில் நாம்தான் இருப்போம்… நாம்தான் இருப்போம்… நான் சொல்வது புரிகிறதா?” எனத் திறந்த மேடையில் வாக்குச்சாவடியைக் கைப்பற்ற அழைப்பு விடுத்தார் பா.ம.க.வின் அன்புமணி. அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

தி.மு.க.வின் ஜெகத்ரட்சகன், இலங்கையில் 26 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். “அவை என் குடும்பத்துக்குச் சொந்தமானதுதான்” என்று பேட்டியும் கொடுத்திருக்கிறார். ஆனால், சொத்து மதிப்பில் இதைக் குறிப்பிடவில்லை. இதற்காக ஜெகத்ரட்சகனின் மீது நடவடிக்கை எடுப்பார்களா? இது எதுவும் நடக்கப்போவது இல்லை.

எதிர்கட்சிகளை நோக்கி, “சபரிமலையைப் பற்றிப் பேசக்கூடாது. அது மதப் பிரச்சினையைத் தூண்டி விடுவதாகிவிடும்” என்கிறது தேர்தல் ஆணையம். ஆனால், பா.ஜ.க., தனது தேர்தல் அறிக்கையிலேயே ராமர் கோயில் கட்டப்படும் என வாக்குறுதி அளிக்கிறது. இது மத உணர்வைத் தூண்டுவது ஆகாதா? புல்வாமா தாக்குதலை தொடர்ந்து தேசப்பக்தியை விற்பனை சரக்காக்குவது தடைசெய்வதற்குத் தகுதியானது இல்லையா?

பார்ப்பன இந்து மதத்தில் பாவங்களுக்கு ஏற்ற பரிகாரங்கள் உண்டு. மேற்கண்ட பாவங்களுக்கெல்லாம் பரிகாரம் தேடிக்கொள்ளும் முகமாகத்தான் தமிழகத்தின் நான்கு தொகுதிகளுக்குத் திடீரெனத் தேர்தல் அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது போலும்.

படிக்க:
♦ விதிமீறல்களுடன் ஒளிபரப்பைத் தொடங்கிய நமோ டிவி : கண்டுங்காணாத தேர்தல் ஆணையம் !
♦ பாடலை திருடிய பாஜக : பாட்டுக்கு பாகிஸ்தான் ! ஓட்டுக்கு போர் வெறி !

இப்படிப் பச்சையாகவும் தரம் தாழ்ந்தும் காவி பாசிஸ்டுகளுக்குச் சொம்படிக்கும் இழிவான நிலையில் ஆணையம் இருக்க, தேர்தல் ஆணையர்களோ ஊர் இன்னமும் தங்களை நம்புவதாக நினைத்துக்கொண்டு, யாராவது 50 ஆயிரம், 60 ஆயிரம் கொண்டு செல்பவர்களை பிடித்துவைத்துக்கொண்டு சீன் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நடந்த பணப்பட்டுவாடா தொடர்பாகச் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை (கோப்புப் படம்)

முதலாளித்துவ அறிவு ஜீவிகளோ, இந்த உண்மைகளையெல்லாம் விழுங்கிக் கொண்டு, எப்படியாவது சுதந்திரமான, வெளிப்படையான தேர்தல் நடைபெறுவதை அதிகாரிகள் உத்தரவாதப்படுத்த வேண்டும். ஏனென்றால், ஒரு சொட்டு மையின் மூலம்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியே ஒரு பேச்சுக்காக, இந்த முதலாளித்துவ அறிவுஜீவிகளின் பிதற்றல்களை நாம் உண்மையாக எடுத்துக் கொள்வோம் எனில், அதற்கு முதலில் செய்ய வேண்டியது, தேர்தல் ஆணையமே, நடையைக் கட்டு எனக் குரல் கொடுப்பதுதான்.

– செழியன்

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2019

 

மோடி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு : உண்மை நிலவரம் என்ன ?

1

மீபத்தில் தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி, தங்கள் ஆட்சிதான் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கியது என பெருமிதத்துடன் பேசினார்.  மோடிக்கு வாக்கு கேட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த மாலன் உள்ளிட்டவர்கள் பாஜக ஆட்சியில் பெண்களுக்கு ‘நிறைய’ செய்துள்ளதாக குறிப்பிட்டனர். ஒன்றுமே செய்யாதபோதும் செய்ததாக சொல்லிக்கொள்வதில் இந்துத்துவ கும்பலுக்கு நிகர் அவர்களேதான்.

2012-ம் ஆண்டு, டெல்லியில் நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த ‘நிர்பயா’ நினைவாக, பெண்கள் பாதுகாப்புக்கு தொடர்பான திட்டங்களுக்கு உருவாக்கப்பட்டது ‘நிர்பயா நிதி’. ஆண்டுதோறும் பட்ஜெட்டில் இதற்கென மத்திய அரசு நிதி ஒதுக்கப்படுகிறது.

இந்த நிதியை மோடி அரசு எப்படி பயன்படுத்தியிருக்கிறது என்பதை அறியும்பொருட்டு த வயர் இணையதளம், தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விண்ணப்பித்து தகவலைப் பெற்றுள்ளது. ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்கு கல்வி தருவோம்’ என முழங்கிய மோடி, ‘நிர்பயா நிதி’க்கு ரூ. 3600 கோடி ஒதுக்குவதாக அறிவித்திருந்தார்.

ஆனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் அளித்த தகவலில் ஆகஸ்ட் 3, 2018 வரையான காலத்தில் ரூ. 979.70 கோடி மட்டுமே தரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்தத் தொகையில் ரூ. 825 கோடி ஐந்து பெரிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் Emergency Response Support System (ERSS) என்ற திட்டத்துக்கு 2016-17 ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட ரூ. 321.69 கோடிக்கு பதிலாக ரூ. 273.36 கோடி மட்டுமே தரப்பட்டுள்ளது. அதாவது மொத்த தொகையில் 85% மட்டுமே தரப்பட்டுள்ளது.

மீண்டும் 2016-17ஆண்டில் இதே திட்டத்துக்காக ரூ. 217 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. 2017-18 ஆண்டில் இது ரூ. 55.39 கோடியாக குறைத்து மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

மாநிலங்களுக்கு பெண்களின் அவசரகால உதவிக்கு உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தை இதுவரை இரண்டு மாநிலங்கள் மட்டுமே பயன்படுத்தியுள்ளன. ஹிமாச்சல பிரதேசம், நவம்பர் 28-ம் தேதி, 2018 அவசர அழைப்பு எண் 112-ஐ இந்த திட்டத்தின் கீழ் ரூ. 4.20 கோடி செலவில் அறிமுகப்படுத்தியது.  நாகாலாந்து, டிசம்பர் 1, 2018-ம் ஆண்டு ரூ. 4.88 கோடி செலவில் அவசர எண் வசதியை அறிமுகப்படுத்தியது.

பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத்,  ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டம் இதுவரை கொண்டுவரப்படவில்லை. மோடியின் வெற்று முழக்கங்களின் பட்டியலில் பெண்களை பாதுகாப்போம்; பெண்களுக்கு கல்வி தருவோம் என்ற முழக்கமும் இணைந்துவிட்டதைத்தான் இது காட்டுகிறது.

படிக்க:
♦ பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் மோடி அரசின் இலட்சணம் !
♦ பா.ஜ.க மாநிலங்களில் பெண் குழந்தைகளுக்கு இடமில்லை !

பாதிக்கப்பட்டோருக்கான மத்திய அரசின் நிதி (Central Victim Compensation Fund -CVCF)-யும் இப்படித்தான் பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது. 2016-ம் ஆண்டு 29 மாநிலங்களுக்கும் 7 யூனியன் பிரதேசங்களுக்கும் சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கென ரூ. 200 கோடி நிவாரண நிதி ஒதுக்கியது மத்திய அரசு.  அரசு ஆணைப்படி, உத்தர பிரதேசம் அதிகப்படியாக, ரூ. 28.10 கோடி நிதி பெற்றது. அதற்கு அடுத்த நிலையில், மத்திய பிரதேசமும் மகாராஷ்டிரமும் முறையே ரூ. 21.80 கோடியும் ரூ. 17.65 கோடியும் நிதி பெற்றன.

தேசிய குற்ற ஆவண பணியகத்தின் 2016-ம் ஆண்டு அறிக்கை, 2016-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 55.2 %-ஆக உயர்ந்துள்ளதைக் கூறியது. கணவர் மட்டும் அவரது குடும்பத்தினரால் பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்கள் 33 சதவீதமாக உள்ளதாகவும் அறிக்கை கூறியது.

2016-ம் ஆண்டில் மட்டும் 38,947 பாலியல் வல்லுறவு குற்றங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், ஒவ்வொரு மணி நேரமும் நான்கு பெண்கள் இந்த குற்றத்துக்கு ஆளாவதாகவும் அறிக்கை சொன்னது.

நிலைமை இவ்வாறு இருக்க, பாதிக்கப்பட்ட பெண்களில் 25% பேருக்கு நிவாரணம் வழங்க மாநில அரசு முடிவு செய்தாலுமேகூட, தலா ஒருவருக்கு ரூ. 3 லட்சம் என வைத்துக்கொண்டால் மொத்தமாக ரூ. 292 கோடி தேவை.

ஆனால், இந்தத் திட்டத்தால் எத்தனை பெண்கள் நிவாரணம் பெற்றார்கள் என்ற தகவலை அரசு அளிக்கவில்லை. பத்து விதமான குற்றங்களுக்கு நிவாரண நிதி அளிக்கப்படும் நிலையில், யாருக்கு எவ்வளவு அளிக்கப்பட்டிருக்கிறது என்கிற தகவலைக்கூட அரசு சொல்லவில்லை.

அதுபோல, Integrated Emergency Response System (IERMS) திட்டத்தை அமலாக்குவதற்காக 2016-17 ஆண்டில் ரூ. 50 கோடியும் 2017-18 ஆண்டில் ரூ. 100 கோடியும் ஒதுக்கப்பட்டதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர், மக்களவையில் எழுத்துபூர்வமான பதிலில் தெரிவித்திருந்தார்.

ஆனால், ரயில்வே அமைச்சகம் அளித்த ஆர்.டி.ஐ தகவலில் ரூ.50 கோடி மட்டுமே பெறப்பட்டதாக தெரிவித்துள்ளது. எனில், மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தவறான தகவலை அளித்தாரா? சரி, இந்த நிதியையாவது ரயில்வே துறை பயன்படுத்தியா என்றால் அதுவும் இல்லை. 67 பிரிவுகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்காக டெண்டர் கோரப்பட்டது மட்டும்தான் இதுவரை இந்த திட்டம் அமலாக்கப்பட்டதன் நிலை.

ஒரு நிறுத்த மையம் (One-Stop Centre) :

2015-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி இந்த திட்டத்துக்கு அனுமதி கிடைத்தது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரே இடத்தில் மருத்துவ உதவி, சட்ட உதவி, காவல்துறை உதவி உள்ளிட்ட உதவிகளை தருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.

ஒரே நேரத்தில் நாடு முழுக்க இந்த திட்டம் அமலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்காக ரூ. 867.74 கோடி ஒதுக்கப்பட்டது. ஆகஸ்டு 2018 வரை இந்த திட்டத்துக்காக ரூ. 109 கோடியை மட்டுமே அரசு விடுவித்துள்ளது.

படிக்க:
♦ மோடி ஆதரவாளர்கள் எப்படி உருவாகிறார்கள் ?
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?

நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 718 மையங்களில் 232 மையங்கள் மட்டுமே தற்போது செயல்படுபடுகின்றன. 536 மையங்களுக்கு மட்டும் தற்போது அனுமதி தரப்பட்டுள்ளது.  2017-ஆம் ஆண்டு போபாலில் ஒரு மையம் அமைக்கப்பட்டு செயல்பட ஆரம்பித்தது.  இதுநாள் வரை மாநிலத்தின் வேறு எந்த இடத்திலும் மையங்கள் திறக்கப்படவில்லை.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணைய குற்றங்களை தடுத்தல் :

உள்துறை அமைச்சகம் இந்த திட்டத்துக்கு பொறுப்பேற்றுக்கொண்டது. 2017-18 ஆண்டில் ரூ. 94.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அமைச்சகத்தின் இணையம் தெரிவிப்பதன்படி, ரூ. 6 கோடி செலவில் 45,000 போலீசு அதிகாரிகள், வழக்கறிகள் மற்றும் நீதிமன்ற அதிகாரிகளுக்கு 2020 மார்ச் வரை பயிற்சி அளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரை மேகாலயாவில் 23 போலீசு அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட ஒரே ஒரு பயிற்சி முகாம் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.

மீதமுள்ள ரூ. 87.12 கோடி மாநிலங்களில் இணைய தடயவியல் ஆய்வகங்கள் அமைக்கவும் தடயவியல் ஆலோசகர்களை நியமிக்கவும் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அப்படியான ஆய்வகங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை.

ஆவணங்கள், அரசின் தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது மோடி தலைமையிலான அரசு, ஒதுக்கப்பட்ட நிதியைக்கூட சரியாக பயன்படுத்தாமல் வீணாக்கியுள்ளது. உண்மை இப்படியிருக்க, ‘பெண்கள் பாதுகாப்புக்கான அரசு’ என வெற்று முழக்கங்களையும் பிரச்சார கூட்டங்களில் விண்ணை முட்டும் அறிவித்தல்களையும் செய்துகொண்டிருக்கிறார் மோடி.


அனிதா
செய்தி:
த வயர்

வைர நகைகள் அணிந்தால் குழந்தை பிறக்காதாம் | மனு நீதியும் சுக்கிர நீதியும்

2

1865-ல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மனுதரும சாஸ்திரம் பற்றிய குறிப்பும் – உங்களுக்கான இணைப்பும்

ண்பர்களே….

திராவிடர் கழகம் வெளியிட்ட அசல் மனுதரும சாஸ்திரம் என்ற நூலின் ஆய்வுரையில் இந்நூல் முதன்முதலாக 1919-ல் வெளிவந்ததாக கி.வீரமணி அவர்கள் எழுதியுள்ளார். அது சரியான தகவல் இல்லை என்றும் 1907-ல் வந்ததுதான் முதல் பதிப்பு என்றும் நான் முன்பு பதிவிட்டிருந்தேன். அப்பொழுது நான் சொன்னதுதான் சரி என்று கருதினேன். ஆனால் நான் கருதியது எவ்வளவு பிழையானது என்பதை 1865-ல் வெளிவந்த இந்நூலின் பதிப்பு உணர்த்தியது. (அறிதோறும் அறியாமை கண்டற்றால்…) தொடர்ந்து ஆராய்ச்சி செய்வதுதான் உண்மைகளை வெளிபடுத்துமே தவிர நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் அல்ல என்பதை இந்த நூல் எனக்கு உணர்த்தியது.

மிகவும் அழகாகவும் தெளிவாகவும் ஒளிநகல் செய்யப்பட்ட இந்த நூலில் உள்ள உரைநடை இன்றும் படிப்பதற்கு அலுப்பில்லாமல் இருப்பது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படியான ஒரு நூலை நீங்களும் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும், என்பதற்காக இதன் இணைப்பைக் கொடுத்துள்ளேன்

o0o0o0o

படிக்க :
♦ பாஷாணத்தில் புழுத்த புழுக்கள் யார் ?
♦ தேர்தலுக்காக பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் மோடி அரசு !

வைர நகைகள் அணிந்தால் குழந்தை பிறக்காது – ”சுக்கிர நீதி” (பக்.189)

ண்பர்களே…

முந்தைய பதிவில் கொடுத்த ”மனுநீதி” நூலை பதிவிறக்கம் செய்து வாசித்திருப்பீர்கள். மனுநீதிக்கு மூலமான நூலாக சுக்கிர நீதியைக் கூறுவார்கள். வடமொழியில் எழுதப்பட்ட இந்த நூலை 1926-ல் பெரும்புலவர் கதிரேசன் செட்டியார் மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்தார். இந்நூலை மேலைச் சிவபுரி சன்மார்க்கச் சபை வெளியிட்டுள்ளது. பல்வேறு வகையான சுவையான செய்திகளை உள்ளடக்கியுள்ள இந்த நூலை பரிமேலழகர் தான் எழுதிய திருக்குறள் உரையில் மேற்கோளாகப் பயன்படுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சுவையான நூலை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ள வசதியாக இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

நன்றி : முகநூலில் – பொ.வேல்சாமி

நோட்டால குத்துனாலும் குத்துவேன்… தாமரையில குத்த மாட்டேன் | காணொளி

நோட்டாவுல குத்துனாலும் குத்துவேனே தவிர தாமரையில் குத்தமாட்டேன் :

சென்னை வாழ் மக்களிடம், ”இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தாமரை மலருமா, மலராதா?” என்ற கேள்வியோடு  சென்னை கோயம்பேடு, கிண்டி ஆகிய பகுதிகளில் வினவு செய்தியாளர்கள் எடுத்த நேர்காணலின் ஒரு பகுதி (இரண்டு காணொளிகள்) !

பாருங்கள் ! பகிருங்கள் !

பிஜேபி-ய பத்தி இங்க வந்து பேசாத ! செருப்படிதான் விழும் !

பாருங்கள் ! பகிருங்கள் !

நேர்காணல் : வினவு களச் செய்தியாளர்கள்

மோடி ஆதரவாளர்கள் எப்படி உருவாகிறார்கள் ?

8

டந்த 5 ஆண்டுகளாக பல தரப்பில் இருந்தும் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் கேள்வி, மோடி மோசமானவர் என்றால் எப்படி அவர் தொடர்ந்து வெற்றி பெற முடிகிறது?

மோடி ஆதரவாளர்கள் இதை நக்கலாகவும், எதிர் தரப்பில் இருப்பவர்கள் குழப்பத்திலும் கேட்கிறார்கள். காரணமே இல்லாமலா ஒருவரை இத்தனை பேர் ஆதரிப்பார்களா எனும் குழப்பம் ஏனையோருக்கு இருக்கிறது.

எல்லாவற்றையும் கடந்து மோடி / பாஜக ஆதரவு கும்பலை பகுதி வாரியாக பிரித்து அதன் பின்னணியை புரிந்து கொள்வது நமக்கு அவசியமாகிறது. இல்லாவிட்டால் இந்த கும்பலை அம்பலப்படுத்துவது பெரும் சிரமமளிப்பதாக இருக்கும். மேலோட்டமான பார்வையில்கூட மோடி / பாஜக ஆதரவு நிலைப்பாடு என்பது பல வகையினரால் பல்வேறு நோக்கங்களுக்காக எடுக்கப்படுகிறது என்பது புரியும்.

முதல் வகையினர் ஆல் பர்ப்பஸ் பார்ப்பனர்கள் !

பார்ப்பனர்கள் பாஜக உறவு என்பது தந்தைக்கும் மகனுக்குமான உறவு. நான்கு வயது ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தஷ்வந்தின் அப்பா ஏன் குற்றவாளி என தெரிந்தே தன் மகனை ஜாமீனில் எடுத்தார்? ஆண்டாளுக்காக கொதித்த மயிலை ஆன்மாக்கள் அவர்கள் ஜாதியில் பிறந்த நித்யஸ்ரீ மகாதேவனை சங்கப் பரிவார காலிகள் ட்ரால் செய்தபோது ஏன் அமைதியாக இருந்தார்கள்?

காரணம் மிக எளியது, பாஜக அவர்கள் பிள்ளை. அது பொறுக்கியோ தறுதலையோ எதுவானாலும் பிரச்சினையில்லை. பிரச்சினைகளில் இருந்து தப்பிச் செல்லும் இயல்புடைய பார்ப்பனர்கள்கூட அசிங்கப்பட வேண்டியிருக்கும் என்றாலும் பாஜகவை தாங்கிப் பிடிப்பது இதனால்தான். அவர்கள் பிள்ளையை அவர்களால் ஒருபோதும் விட்டுத்தர இயலாது.

சுமன் சி ராமன், பானுகோம்ஸ், பத்ரிசேஷாத்ரி – பாஜக ஆதரவு ஊடக நிலைய வித்வான்கள்!

குஜராத் கலவரம் தொடங்கி போனவாரம் தாக்கப்பட்ட முஸ்லீம் முதியவர் வரை எல்லா பிரச்சினைகளை எழுப்பினாலும் அவர்கள் அதெல்லாம் தவறுதான் என பெயரளவுக்குகூட ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

இந்தியாவில் இருக்கும் பல கட்சிகளின் அரசியல் அதிகாரம் மெல்ல மெல்ல இடை சாதி மக்கள் கைகளுக்குச் சென்றுவிட்டது. பார்ப்பன அதிகாரத்தை வெறித்தனமாக காப்பது பாஜக மட்டுமே. இப்போதும் உயரதிகாரிகள் லாபி அனேகமாக அவர்கள் வசம்தான் இருக்கிறது (நீங்கள் பாஜகவை குறை சொன்னால்கூட சகித்துக் கொள்வார்கள், ஆனால் அதிகாரிகள் வர்க்கத்தை குறை சொன்னால் உங்களை வார்த்தைகளாலேயே சம்ஹாரம் செய்து விடுவார்கள், சந்தேகம் இருந்தால் வெங்கடேஷ், பத்ரி வகையறாக்கள் பங்கேற்ற விவாதத்தில் தேர்தல் கமிஷன், நீதிமன்றங்களை விமர்சனம் செய்யப்பட்டபோது என்ன நடந்தது என்று தேடிப் பாருங்கள்).

படிக்க:
♦ மோடி : விளம்பர அரிப்பும் … அதிகாரக் கொழுப்பும் !
♦ ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் !

தங்கள் அரசியல் அதிகாரத்தை காத்துக் கொள்ள இருக்கும் கடைசி வாய்ப்பு பாஜகதான். அதனால்தான் தங்கள் நம்பகத்தன்மை போனாலும் பரவாயில்லை என முடிவெடுத்து நடுநிலை வேடமிடும் பார்ப்பனர்கள்கூட பாஜகவுக்காக வேலை செய்கிறார்கள். பத்ரி தன்னை ஜனநாயகவாதியாக காட்டிக் கொள்ள அதிகம் மெனக்கெடுபவர், அவர் எந்தெந்த விசயங்களில் மவுனமாக இருக்கிறார் என்று பாருங்கள். காரணம்கூட சொல்லாமல் நான் பாஜகவுக்கு ஓட்டு போடப் போகிறேன் என்று என்று ஏன் சொல்கிறார் என யோசியுங்கள்.

ஒயிட் ஸ்கின் சைக்கோக்களை நகலெடுக்கும் ஒயிட்போர்டு சைக்கோக்கள்.

திராவிட இயக்க எழுச்சிக்குப் பிறகு பெருமளவில் உருவான நியோ மிடில் கிளாசின் (புதிய நடுத்தர வர்க்கம்) ஒரு பகுதிக்கு எப்படியாவது தாமும் ஒரு பார்ப்பனராகிவிடும் வெறி இருந்தது. துக்ளக் வாங்குவது, பார்ப்பன தெய்வங்களை சுவீகரித்துக் கொள்வது என்பதில் தொடங்கி அய்யருங்க என்ன பாவம் பண்ணினாங்க என அக்ரஹாரத்தை தடவிக் கொடுப்பதுவரை அவர்கள் செயல்பாடுகள் யாவும் பார்ப்பன அங்கீகாரத்தை யாசிப்பதையே பெருமிதமாகக் கொண்டிருந்தன.

ஒயிட்போர்டு சைக்கோ மாரிதாஸ்

இந்த வகைமாதிரியின் ஒரு புளுக்கைதான் ஒயிட்போர்டு சைக்கோ மாரிதாஸ். இப்படி வீதிக்கு இரண்டு ஒயிட்போர்டு சைக்கோக்கள் உலவுகின்றன, வாட்சாப்பிலோ குழுவுக்கு நான்கு திரிகின்றன. தடவிக் கொடுத்தால் குரைக்கும் நாயாக இவர்களை பார்ப்பனியம் பயன்படுத்துகிறது.

அய்யரே தடவிக்கொடுக்குறாரே என இவர்கள் பரவசம் கொள்வதால் “அவன் உன்னை நாயாக நடத்துகிறானே” எனும் நமது ஓலம் அவர்களுக்கு கேட்பதே இல்லை. இப்படிப்பட்ட பார்ப்பன-நாடார், பார்ப்பன-தேவர், பார்ப்பன-கவுண்டர் தொடங்கி பார்ப்பன-தலித் வரை எல்லா உப பிரிவுகளும் காணக் கிடைக்கின்றன. இவர்களுக்கு தேவையெல்லாம் பார்ப்பன அங்கீகாரம் மட்டுமே.

போட்டியை வெறுக்கும் இன்னொரு மத்தியதர பிரிவு !

இன்னொரு பிரிவுக்கு பார்ப்பன அங்கீகாரம் பிரதானம் அல்ல. ஆனால் அவர்களுக்கு எல்லா வாழ்வியல் வசதிகளும் இருக்கும். அதற்கு இணையாக மற்றவர்கள் வருவதை இவர்கள் விரும்புவதில்லை.

நான் கஷ்டப்பட்டு படிப்பதை நீ ஓசியில் படிப்பாயா என்பது போன்ற ஒப்பீடுகள் இவர்களை செலுத்தும். சமச்சீர் கல்வி அறிமுகமான போது உன் பிள்ளையும் என் பிள்ளையும் ஒன்னா என இவர்கள் வெளிப்படுத்திய அசூயைதான் இவர்களது நிஜ முகம்.

இடஒதுக்கீடு, இலவச திட்டங்கள், உதவித்தொகை என ஏழைகளுக்கு பயன்படும் எல்லாமே இவர்களது பொறாமைத்தீயில் பெட்ரோல் ஊற்றுகிறது. “அவா அவா… அவா அவா இடத்துலதான் இருக்கனும்…” எனும் பாஜகவின் சித்தாந்தம் இவர்களுக்கு ஒரு ஆறுதலைக் கொடுக்கிறது. அதனை மறைத்துக் கொள்ள இலவசம் ஒருத்தனை சோம்பேறியாக்கிடும் எனும் மந்திரத்தை இவர்கள் அடிக்கடி உச்சாடானம் செய்வார்கள்.

வளர்ச்சிக்காக பாஜக-வை ஆதரிக்கிறேன் என்பார்கள் வேற எந்த கட்சிதான் கொலை செய்யல என சமாதானம் பேசுவார்கள். அப்பட்டமான சுயநலம் பச்சையான பொறாமை இவைதான் இவர்களை பாஜகவுக்கு நெருக்கமாக கொண்டு போய் நிறுத்துகிறது. இவர்களுக்கு பாஜகவின் கொலைகளோ சுரண்டலோ ஒரு பொருட்டே அல்ல, ஆனால் ஏழைகள் மீதான இவர்களது அசூயைக்கு பாஜக தீனிபோடுவதால் அதற்கு கைமாறாக பாஜகவுக்கு இவர்கள் முட்டுக் கொடுப்பார்கள்.

பேராசைக்கார மிடில் கிளாஸ் !

நவ மத்தியதர வர்கத்தின் பெரும்பான்மைப் பிரிவுக்கு உள்ள பெரிய பலவீனம் பேராசை. ஏதோ ஒரு வகையில் நமக்கு அதிருஷ்டம் அடிக்காதா எனும் ஏக்கம் இவர்களுக்கு உண்டு. புதிய கடவுள்கள், சாமியார்களை நோக்கி ஓடுவது, உங்களுக்கு ஆன்லைன் லாட்டரி விழுந்திருக்கிறது என்றால் கண்ணை மூடிக் கொண்டு நம்புவது இப்படியான சேட்டைகளை பெருமளவுக்கு செய்வது இந்த வர்க்கமே.

மோடியின் மதவாத முகம் நம்மை ஒன்றும் செய்து விடாது எனும் அபார நம்பிக்கை இவர்களிடம் இருந்தது. பெரும் பணக்காரர்கள் பாஜகவை ஆதரிப்பதில் அவர்களுக்கு ஒரு பொருளாதார நலன் இருக்கிறது. ஒரு இரக்கமற்ற அடியாளைப் போல அவர்களால் பெரும் கோடீஸ்வரர்களுக்கு சேவை செய்ய இயலும்…

ஆனால் இந்த மிடில் கிளாஸ் தமது அல்ப அரிப்புகளுக்காக பாஜகவை ஆதரிக்கிறது. பாஜக நமக்கு விசுவாசமான நாய் போல இருக்கும் எனும் நம்பிக்கை இந்த வர்க்கத்தவர் பலருக்கும் 2014-ல் இருந்தது. ஆனால் காலம் இன்று அவர்களை பாஜகவின் நாயாக மாற்றியிருக்கிறது. யார் நாசமாய் போனால் என்ன மோடி வந்தால் நாடு குஜராத்தைப்போல தொழில் வளர்ச்சியை சந்திக்கும், அதனால் நம் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கண்மூடித்தனமாக நம்பியவர்கள் இவர்கள். இன்பத்தை அள்ளித்தரும் சின்னவீடாக பாஜகவை அன்று கருதினார்கள்.

இப்போது அதே சின்னவீடு மேற்கொண்டு சுரண்டாமல் இருந்தால் சரி எனும் நிலைக்கு அதில் பலரும் வந்திருக்கிறார்கள். இந்த வகை மிடில் கிளாஸ் மட்டும்தான் மோடி நம் முகத்தில் பீயை அப்பிவிட்டார் என உணர்ந்து கொண்டிருக்கிறது. ஏனைய வகையினர் எல்லோரும் அது பீயல்ல பிரசாதம்தான் என வெறித்தனமாக நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த வர்க்கம்தான் நமது வாக்கு வங்கி என்பதை தெளிவாக அறிந்ததால்தான் மோடி தனது கோவை கூட்டத்தில் மிடில்கிளாசை இலக்கு வைத்து பேசினார். மேலும் ராகுலின் வாக்குறுதியை மறைமுகமாக சொல்லி (ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய் கொடுக்கும் திட்டம்) அது உங்கள் (மிடில் கிளாஸ்) வரிச்சுமையை கூட்டும் என பயமுறுத்தினார்.

வெறும் மத்தியதர வர்க்கம் மட்டும் பாஜகவை தாங்கிப் பிடிக்கும் காரணியல்ல. பார்ப்பனர்கள் எப்படி மத்தியதர வர்க்கத்தின் மாடலாக இருக்கிறார்களோ அவ்வாறே ஏழைகள் மத்தியதர வர்க்கத்தை தமது மாடலாக கருதுகிறார்கள். ஆகவே இவர்கள் சரியென நம்பும் அரசியல் கருத்துக்களை அவர்களும் நம்பி விடுகிறார்கள். இவையெல்லாம் பாஜகவை வெளியில் இருந்து ஆதரிக்கும் கூட்டம். ஆனால் பாஜவுக்காக களமாடும் சக்திகள் எங்கிருந்து முளைக்கின்றன?

பலவீனமான சுயமரியாதை கொண்ட அடையாமின்றி அல்லாடும் இளைஞர்/மாணவர்களே பாஜகவின் இலக்கு.

இன்றைய நிலையில் சிறார்களிடம் அதிகம் வேலை பார்ப்பது பாஜக கும்பல்தான். யோகா, மோட்டிவேஷன் வகுப்புக்கள் போன்ற பல லேபிள்களோடு பள்ளிகளை மென் இந்துத்துவ கும்பல்கள் அணுகுகின்றன. யோகா பயிற்சிகள் ஊடாக இந்து மத பெருமிதங்கள் இந்திய பெருமிதங்களாக கற்பிக்கப்படும். இந்தியா இதுவரை எந்த நாட்டின் மீதும் போர் தொடுத்ததில்லை, நவீன கண்டுபிடிப்புக்கள் எல்லாமே வேதத்தில் இருக்கிறது போன்ற எண்ணற்ற பிளா.. பிளாக்கள்… கொட்டப்படும்.

பல பேராசிரியர்களே இந்துத்துவ விஷமத்துடன் பேசியதை பார்த்திருக்கிறேன். சிறார்கள் கிரிக்கெட்டுக்கு ரசிகனானதைப்போல தம்மையறியாமல் இந்த பெருமிதத்துக்கு ரசிகனாகிறார்கள். பிறகு வெளியே உலவும் மிதமான கொடூர கும்பல் இந்து மதம் ஆபத்தில் இருப்பதாக பிரச்சாரம் செய்யும்.

தனியார் பள்ளிகளில் இத்தகைய பிரச்சாரம் மூலம் பாஜகவுக்கு நிதியளிக்கும் கும்பலையும் இணையப் போராளிகளையும் உருவாக்குகிறார்கள். களப் பணியாளர்களை (அதாவது கலவரம் செய்வோரை) உருவாக்க கோயில் திருவிழாக்கள் ஊடுருவி ஆள் பிடிப்பது, பிள்ளையார் ஊர்வலம் மூலம் ஆள்பிடிப்பது ஆகியவற்றை செய்வார்கள். இவற்றின் இலக்கு ஏழை குழந்தைகள்தான். ஏழைப் பெற்றோர்கள் வெள்ளேந்தியாக சாமி காரியம் என அதற்கு அனுப்பி வைப்பார்கள். நான் பார்த்தவரை எந்த மிடில்கிளாஸ் பிள்ளையும் விநாயகன் ஊர்வலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதில்லை. அங்கே மதவெறி மட்டுமல்ல சரக்கும் அறிமுகமாகிறது.

பலவீனமான சுயமரியாதை கொண்ட அடையாளமின்றி அல்லாடும் இளைஞர் /மாணவர்களே பாஜகவின் இலக்கு.

இதில் அதிகம் சிக்குவது தனிப்பட்ட எந்த அடையாளமும் இல்லாத (உதாரணம் : கல்வியில் சிறப்பாக இருக்கிறேன் என்றோ விளையாட்டில் சிறப்பானவன் என்றோ சொல்லிக் கொள்ள முடியாத ) மாணவர்களும் இளைஞர்களும்தான். அவர்களுக்கு ஒரு இந்துத்துவ போராளி எனும் அடையாளம் ஒரு நிறைவை கொடுக்கிறது. கோயில் விழா பேனர்களிலோ அல்லது சாதிச்சங்க பொறுப்பிலோ உட்கார வைக்கும்போது உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. கள்ளர், கவுண்டர், வன்னியர் போன்ற சாதிச்சங்களில் இந்த கும்பலின் ஊடுருவல் மிகத்தீவிரமாக இருக்கிறது. ஏனைய சாதிகளிலும் இருக்கலாம், எனக்கு நேரடியாக தென்படவில்லை. இப்படி பரவசமூட்டப்பட்ட அடையாளச் சிக்கல் கொண்ட மாணவர்கள்/ இளைஞர்கள் அந்த பரவசத்தை பெறும் பொருட்டு மேலும் மேலும் இந்துத்துவச் சார்பையும் பிற மத வெறுப்பையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.

ஆனால் பார்ப்பன சாந்த சொரூப பாஜக ஆதரவாளரைவிட இவர்களுக்கு விஷம் கம்மிதான். சாதிவெறி, இஸ்லாமிய வெறுப்பை வேறு வழிகளில் கற்றுக் கொண்டவர்களும் இந்த கும்பல்களில் வந்து ஐக்கியமாகிறார்கள். இதற்கான பயிற்சி சிலருக்கு வீடுகளில் கிடைக்கிறது வேறு சிலருக்கு அவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பிறரால் கிடைக்கிறது. பிற மத வெறுப்பு கொண்ட ஆசிரியர்கள் எனக்கும் வாய்த்திருக்கிறார்கள். (குறிப்பு : உங்கள் பிள்ளை ஏதேனும் வித்யாலயாவில் படித்துக் கொண்டிருந்தால், இல்லை யோகா கற்பதாக சொன்னால் அவர்களை தொடர்ந்து கண்காணியுங்கள். விநாயகர் சதுர்தி பஜனைகளில் பங்கேற்றால் சந்தேகமே வேண்டாம் நோய் தொற்றிவிட்டது என்று பொருள்.)

தமிழகத்தில் இந்துத்துவ இன்ஃபெக்ஷன் பல்வேறு வகை மாதிரிகளில் பல்வேறு அளவுகளில் ஊடுருவியிருக்கிறது. அதில் மிக அபாயகரமான ஊடுருவல் இப்படி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இடையே நிகழ்வதுதான்.

இதனை எதிர்கொள்ள நாம் என்ன செய்யலாம்?

மேற்சொன்ன பிரிவினரில் அனேகமானவர்களை நீங்கள் மாற்ற இயலாது. இவர்களால் மூளைச்சலவை செய்யப்படும் ஆட்களை காப்பாற்ற இயலும். இப்போது இந்துத்துவ கும்பலின் களம் ஃபேஸ்புக் அல்ல. அவர்கள் ஜாகை முழுக்க வாட்சப்தான். காலை எழுந்ததுமே கருணாநிதியை திட்டியும் இந்துமதம் அபாயத்தில் இருப்பதாகவுமான செய்திகளை நீங்கள் எல்லா குழுக்களிலும் காண இயலும்.

படிக்க:
♦ மங்காத்தா முதல் மோடி வரை நமக்கு சொல்வது ஒன்றுதான் : “எதுவும் தவறில்லை”
♦ மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது !

இத்தகைய வீடியோக்கள் சிறார்களது வாட்சப் குழுக்களிலும் காண முடிகிறது. இவர்களோடு விவாதிக்க அவசியமில்லை, ஆனால் அதே குழுக்களில் பாஜகவை அம்பலப்படுத்தும் பதிவுகளை பகிருங்கள். எளிய வாக்கியங்களில் சுருக்கமாக எழுதப்பட்டால் இன்னும் சிறப்பு.

சாத்தியமுள்ளவர்கள் 3 அல்லது 4 நிமிட வீடியோக்களில் அதனை செய்யுங்கள். அல்லது அப்படி செய்ய வாய்ப்புள்ளவர்களை செய்யும்படி கேளுங்கள். பொதுப்படையான கருத்துக்களைவிட ஒவ்வொரு பிரிவு மக்களையும் அவர்கள் எப்படி வஞ்சிக்கிறார்கள் என விளக்கலாம். இது பொதுப்படையான கருத்துக்களைவிட வலுவானது. குழுவாக நடக்கும் விவாதங்களில் நாகரீகம் கருதி ஒதுங்காதீர்கள். அழுத்தமாக நேரடியாக உங்கள் தரப்பை சொல்லுங்கள். பார்த்துக் கொண்டிருக்கும் விவரம் அறியாத ஒருவனை அவர்கள் மதத் தீவிரவாதியாக்குவதைவிட நமக்கு ஒரு சங்கி நண்பனின் இழப்பு ஒன்றும் பெரிதல்ல (வழக்கமாக இத்தகைய விவாதங்களில் ஒரு மூத்த மாமா, விவாதத்தில் வெல்பவன் நண்பனை இழப்பான் என அறிவுரை சொல்வார். நிச்சயம் அது சங்கிகள் பலவீனமடையும் தருணத்தில் வெளிப்படும். ஷெத்த மூடுங்க என அப்போது நாகரீகமாக சொல்லலாம், தோஷமில்லை).

பெண்களை மட்டமாக கருதுபவர்கள் சங்கிகள் என்பதால் அவர்களிடம் இந்த நச்சுப் பிரச்சாரம் இன்னமும் முழுமையாக சென்று சேரவில்லை. ஆகவே குடும்பம் அலுவலகம் என வாய்ப்புள்ள இடங்களில் பெண்களிடம் பாஜகவின் நிஜ முகத்தை அம்பலப்படுத்துங்கள். குஜராத் கலவரம் முதல் பசு குண்டர்களின் கொலைகள் வரை எல்லாவற்றையும் பேசுங்கள். தெரிந்தவர்கள், உறவினர்களின் பிள்ளைகள் யாரேனும் பிள்ளையார் பொறுக்கிகளோடு சகவாசம் வைத்திருந்தால் அதன் கொடூரமான பின்விளைவுகளை பெற்றோரிடம் விளக்குங்கள்.

உங்கள் பிள்ளைகளை மதச்சார்பற்றவர்களாக வளர்ப்பதைவிட முக்கியம் அவர்கள் அதனை துணிவோடு பேசுபவர்களாக வளர்ப்பது. அவர்கள் பள்ளிகளில் நண்பர்களோடு உரையாடட்டும். வாய்ப்பிருந்தால் சிறார்களுக்கு அவர்களை வெளிப்படுத்தும் மாற்று வாய்ப்புக்களை உருவாக்க முயலுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக உங்களை அடிப்படைவாதத்தின் எதிரி என்று வெளிப்படையாக அடையாளப்படுத்துங்கள். வெளியே பலரும் அப்படியான முன்மாதிரி நபருக்காக காத்திருக்கிறார்கள். இதன் மூலம் அப்படியான பல ஆட்களை நம்மால் செயல்பாட்டுக்கு கொண்டுவர இயலும்.

பாஜக எதிர்ப்பு என்பது வெறுமனே தேர்தலோடு முடிந்துபோகும் விசயமல்ல. அது தேர்தலால் வீழ்த்தக்கூடிய கிரிமினல் கும்பலும் அல்ல. இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நீடிக்க வேண்டிய வேலை அது. கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக தமிழகத்தில் மோடி சித்தாந்தரீதியாக எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளாக மிக தீவிரமாக அது நடந்தது. அதன் விளைவுதான் கோ பேக் மோடி எனும் வீச்சான எதிர் நடவடிக்கையாக இன்று மாறியிருக்கிறது. அதுதான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் மோடியை எதிர்ப்பதற்கான உத்வேகத்தை கொடுத்திருக்கிறது.

பாஜக – ஆர்.எஸ்.எஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதுதான் இந்திய குழந்தைகளுக்கு நம்மால் கொடுக்க முடிகிற மிகப்பெரிய பரிசு. அதனை உருவாக்க உழைப்பது என்பது வெறும் சித்தாந்தம் அல்ல அடுத்த தலைமுறைக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமை.

வில்லவன் இராமதாஸ்

நிகழ்வெல்லைத் தொலைநோக்கியும் ! ஐன்ஸ்டைனும் !

ங்களால் இதை நம்ப முடிகிறதா? உங்கள் அப்பாவின் அப்பாவின் அப்பா அதாவது உங்கள் பூட்டன், தன் இளமைக் காலத்தில், அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று சொன்னால், அது எவ்வளவு பழமையானதாக உங்களுக்குத் தோன்றும்.

இன்றைய உலகின் அனைத்து நவீனக் கருவிகளையும் கைக்கொண்டிருக்கும் நீங்கள், இயற்கையை மட்டுமே துணையாகக் கொண்டிருந்த, அந்தப் பூட்டனின் சாதனையை ஒரு ஏளனச் சிரிப்புடனே பார்ப்பீர்கள். அவரிடம் என்ன இருந்திருக்கும்? கணணி இல்லை. மொபைல் போன் இல்லை. எதுவுமே இல்லை. இருந்ததெல்லாம் இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் மட்டுமே!

அந்தக் காலத்தைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்? அப்படியான ஒரு காலத்தில், கிட்டத்தட்ட நூற்றி நான்கு வருடத்திற்கு முன்னர், 1915-ம் ஆண்டு அல்பேர்ட் ஐன்ஸ்டைன் என்னும் ஒருவர், வெறும் கணிதத்தை மட்டும் வைத்துக் கொண்டு, விண்வெளிபற்றிய ஒரு கோட்பாட்டை உருவாக்கினார். அப்போது, அவரிடம் கணணி இருக்கவில்லை. கால்குலேட்டர் இருக்கவில்லை தொலைக்காட்சியும் இருக்கவில்லை. இன்றுபோல உடனுக்குடன் சொல்லிவிடக்கூடிய மீடியாக்களும் இல்லை. தன் மூளையில் விண்வெளிபற்றிய எண்ணங்களைப் படமாகச் சித்தரித்துக் கணிதச் சமன்பாடுகளை மட்டும் வைத்துக்கொண்டு அந்தக் கோட்பாடு உருவாக்கினார்.

விண்வெளியிலிருக்கும் அதி எடைகொண்ட பொருளானது அந்த விண்வெளியில் ஒரு குழியை உருவாக்கும் என்றார். அதுவே, எல்லையில்லா எடைகொண்டு அந்தப் பொருள் இருந்துவிட்டால், ஏற்படும் குழியானது, ஒருமைப் புள்ளியொன்றை அடையும் வரை ஆழமாகிச் செல்லும். அந்தக் குழியிலிருந்து ஒளிகூடத் தப்பிச்செல்ல முடியாது என்றார்.

இதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழியை நாம் உருவாக்க வேண்டுமென்றால், எங்கே உருவாக்க முடியும்? பூமியின் மண் தரையில் ஒரு குழியை உருவாக்க முடியும். எந்தவொரு திடமான பொருளிலும், ஏதோவொரு விதத்தில் நம்மால் குழியை உருவாக்கிவிட முடியும். கடல் நீரில் ஒரு குழியை உருவாக்க முடியுமா? முடியாதல்லவா? அதை உங்களால் கற்பனை செய்து பார்க்கவே முடியாது.

ஆனால், ஒரு கப்பலைக் கடலில் விடும்போது, அது நிற்குமிடத்தில், அதன் எடைக்கேற்பத் தண்ணீர் குழிகிறது. இப்போது யோசித்துப் பாருங்கள். தண்ணீரில் நம்மால் குழியை உருவாக்க முடியுமா? முடியுமென்றுதானே தோன்றுகிறது. கப்பல்களின் எடை அதிகரிப்புக்கு ஏற்ப அது ஏற்படுத்தும் குழியும் ஆழமாக இருக்கும். இதே அடிப்படையில், விண்வெளியிலுள்ள கோள்கள், நட்சத்திரங்கள், கருந்துளைகள் அனைத்தும் விண்வெளியில் குழிகளை ஏற்படுத்துகின்றன என்று ஐன்ஸ்டைன் சொன்னார்.

இப்படி அவர் சொன்னதை எவராலும் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நாம் பார்ப்பது வானம். வானத்தில் நட்சத்திரங்கள். அப்படி இப்படியென்று நினைத்துக் கொண்டிருக்கையில், அங்கே வானம் என்ற ஒன்று இல்லை. இருப்பது, இரப்பர் பாய்போன்ற ஒன்றுதான். அந்தப் பாயிலேயே, நட்சத்திரம் போன்றவை இருக்கின்றன. அவை, அந்தப் பாயில் பெருங்குழிகளை ஏற்படுத்துகின்றன என்று ஐன்ஸ்டைன் சொன்னார்.

“என்ன, விண்வெளியில் குழியா? அது எப்படிச் சாத்தியம்? பூமியில் குழி இருப்பது சரி. ஏன் கடலில் கப்பல் குழி ஏற்படுத்துகிறது என்பதும் சரிதான். ஆனால், விண்வெளியில் குழியை எப்படி ஏற்படுத்த முடியும்? இவரென்ன இரப்பர் பாய், மென் சவ்வு, அது இது என்று சொல்கிறாரே! எந்தப் பாயையும் நாம் காணவில்லையே!” என்று சொல்லி திகைத்து நின்றது உலகம்.

அத்துடன் ஐன்ஸ்டைன் சொன்ன இன்னொன்றையும் கேட்டு அறிவியல் உலகமே பதைத்துப் போனது. 350 வருடங்களுக்கு மேலாக நம்பிக்கொண்டிருந்த ஒன்றை இல்லையென்று சொல்கிறாரே இவர் என்று தடுமாறியது.

படிக்க:
ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு அலைகள் – ஒரு எளிய விளக்கம்
♦ கடவுள் இருட்டு ! அறிவியல் வெளிச்சம் ! – நூல் அறிமுகம்

1680-ம் ஆண்டளவுகளில், ஐசாக் நியூட்டனால் புவியீர்ப்புவிசைக்கான புரட்சிகரக் கருதுகோள் வெளியிடப்பட்டது. அந்தக் கருதுகோளையே மாற்றிச் சொன்னார் ஐன்ஸ்டைன். ஐசாக் நியூட்டன் சொல்லியிருந்த புவியீர்ப்புவிசைபற்றிய கோட்பாட்டையே நம்பிவந்தவர்களுக்கு, ஐன்ஸ்டைன் தடைக்கல் போட்டார். மேலே சொன்னதுபோல, அதி எடைகொண்ட ஒவ்வொரு பொருளும் விண்வெளியில் ஏற்படுத்தும் குழிவே, அப்பொருளை நோக்கிய ஈர்ப்பை உருவாக்குகிறது என்றார்.

உதாரணமாகப் பூமியானது, விண்வெளியில் ஏற்படுத்தியிருக்கும் குழிவின் வளைவுக்குள் அகப்பட்டுக்கொண்ட சந்திரன், அந்தக் குழியினுள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கிறது. இதுவே பூமிக்கும், சந்திரனுக்குமான ஈர்ப்புக்கான காரணம். இதுபோலவே, சூரியன் ஏற்படுத்தியிருக்கும் பெருங்குழியில், பூமி உட்பட ஏனைய ஏழு கோள்களும் அகப்பட்டபடி சூரியனைச் சுற்றுகின்றன. நியூட்டனின் ஈர்ப்புவிசைக் கொள்கைக்கு மாற்றாக ஐன்ஸ்டைன் முன்வைத்ததை, ஏற்க முடியாமலும், விலக்க முடியாமலும் தவித்தது உலகம்.

காலம் செல்லச் செல்ல ஐன்ஸ்டைன் கூறிய ஈர்ப்புக் கோட்பாடு சரியெனப் புரிந்துகொண்டது உலகம். அதன் நீட்சியாக ஐன்ஸ்டைன் சொல்லியிருந்ததுதான் கருந்துளைகான வித்தாகியது. கருந்துளைக்கு எல்லையில்லா அதியீர்ப்பு உண்டு என்பதால், அது விண்வெளியில் நினைக்கவே முடியாத ஆழம்வரை பெருங்குழியை ஏற்படுத்தும். அந்தக் குழியின் முடிவு, ஒற்றைப் பரிமாணமுள்ள ஒருமைப்புள்ளியாக இருக்கும் என்றார்.

கருந்துளைபற்றி இவ்வளவு விவரமாக விளக்கிச் சொன்னாரேயொழிய, அவர் இருக்கும்வரை அப்படியானதொன்று உண்மையில் இருக்கிறது என்பதை நிறுவவே முடியவில்லை. ஒருகட்டத்தில் கருந்துளை என்ற ஒன்று இல்லையென்ற சந்தேகம்கூட அவருக்குத் தோன்றியது. ஆனால், இன்று நூற்றுநான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த மாமேதை சொன்ன கருங்குழியை, அவர் சொன்னபடியே கண்டுபிடித்திருக்கிறோம்.

இதுவரை அப்படியானதொன்று இருக்கிறது என்று அடித்துச் சொன்னாலும், அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது அதைக் கண்டுபிடித்து, அதன் உருவத்தையும் படமெடுத்திருக்கிறோம். மனித குலத்தின் மாபெரும் சாதனை அது.

எப்படி அதைக் கண்டுபிடித்தோம்? அது இன்றைய விஞ்ஞானிகளின் அற்புதமான புரட்சிச் சிந்தனையால் சாத்தியமாயிற்று. எப்படி?

உலகிலேயே மிகப்பெரிய காணொளிப்பெட்டியை (Television) துபாய் மோலில் வைத்திருக்கிறார்கள். அது ஒரேயொரு காணொளிப் பெட்டியாக இருந்தாலும். சற்றே உற்று நோக்கினால், ஆயிரம் சிறிய காணொளிப் பெட்டிகளை ஒன்றிணைத்து உருவாக்கியது என்று தெரியவரும். அதாவது ஆயிரம் சிறிய காணொளிப்பெட்டிகள் சேர்ந்து ஒரு மிகப்பெரிய காணொளிப்பெட்டியாக மாறியிருக்கிறது. இதுபோன்ற பெரிய திரைகளை நீங்களும் விழாக்களில் கண்டிருப்பீர்கள்.

‘நிகழ்வு எல்லைத் தொலைநோக்கி’ அமைந்துள்ள பகுதியை சுட்டும் படம்.

சமீபத்தில் நீங்கள் பார்த்த ‘சூப்பர் டிலக்ஸ்’ படத்திலும் ஒன்று சொல்வார்கள். பல நுண்ணுயிரிகள் ஒன்றாகச் சேர்ந்து உருவாக்கப்பட்டவன்தான் மனிதன் என்னும் ஒரு உயிர் என்பார்கள். இவற்றைச் சரியாக நீங்கள் புரிந்துகொண்டால் போதும். கருந்துளையைக் கண்டுபிடிப்பதற்கான அடிப்படையையும் புரிந்துகொள்ளலாம். அதாவது 55 மில்லியன் ஒளி வருட தூரத்திற்கு அப்பால் இருக்கும் ஒரு கருந்துளையைப் பார்ப்பதென்றால், நாம் இதுவரை கண்டுபிடித்திருக்கும் எந்தத் தொலைநோக்கியாலும் சாத்தியமேயில்லாதது. அதற்குப் பூமியளவு பெரிய தொலைநோக்கி தேவைப்படும். அப்படியொரு தொலைநோக்கியையை நான் மேலே சொன்ன உத்தி முறையால் உருவாக்கியிருக்கிறார்கள். அந்தத் தொலைநோக்கிதான் ‘நிகழ்வு எல்லைத் தொலைநோக்கி’ (Event Horizon Telescope – EHT). இது உலகின் பல இடங்களில் பரந்துபட்டுள்ள எட்டு மிகப்பெரிய தொலைநோக்கிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட மாபெரும் தொலைநோக்கி.

நிகழ்வெல்லைத் தொலைநோக்கிகள் பற்றிப் பலர் பலவிதமான கட்டுரைகள் எழுதிவிட்டதால், பொதுவானவற்றைத் தவிர்த்து, உங்கள் சந்தேகங்களுக்கான விடைகளை மட்டும் இங்கு தந்திருக்கிறேன்.

நீண்டு பரந்திருக்கும் மெரினாக் கடற்கரைக்குச் செல்லுங்கள். அங்கு யாருமே இல்லை. நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள். உங்கள் கையில் இருக்கும் கடுகை எடுத்து மணல் பரப்பில் வையுங்கள். சற்றுத் தள்ளிச் சென்று கடுகைப் பாருங்கள். அப்போது கடுகு உங்களுக்குத் தெரிகிறதென்றே வைத்த்துக் கொள்வோம். நூறு மீட்டர் தொலைவுக்குச் சென்று பாருங்கள் . இப்போது கடுகு தெரியுமா? இன்னும் சற்றுத் தொலைவாக, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்து பார்க்கிறீர்கள். இப்போது கடுகைப் பார்க்க முயல்வதென்னும்போதே உங்களுக்குச் சிரிப்பு வரும்.

இதுவே 13000 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து பார்க்கிறீர்கள் என்றால், அங்கு கடுகில்லை, மெரினா கடற்கரைகூட இல்லை, சென்னையே தெரியாதல்லவா? ஆனால், பதின்மூன்றாயிரம் கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து, ஒரு கடுகை நாம் பார்த்திருக்கிறோம். பார்த்தது கடுகல்ல, இராட்சசன். 55 மில்லியன் ஒளிவருடங்களுக்கு அப்பால் இருக்கும் இராட்சசன். ’மெஸ்ஸியர் 87’ (Messier 87. சுருக்கமாக M87) என்னும் உடுத்திரளின் கருவாக அமைந்திருக்கும் கருங்குழியே அந்த இராட்சசன்.

அது என்ன இராட்சசக் கருங்குழி? சாதாரனமாகப் பல மில்லியன் கருங்குழிகள் நம் பால்வெளி உடுத்திரளிலேயே நிறைந்திருக்கின்றன. அவையெல்லாம் ‘சூசூ டிவி’ பார்க்கும் குட்டிப் பாப்பாக்கள். பெரிய நட்சத்திரங்கள் இறந்து உருவாகும் குழந்தைகள். ஒரு பேச்சுக்கு, நம் சூரியன் இறந்து கருங்குழியானால் (சூரியன் கருங்குழி ஆகாது. அதற்கான போதிய எடை அதற்கு இல்லை), வெறும் 3கிமீ அளவுள்ள கருங்குழியாகவே இருக்கும்.

இதுபோன்ற சாதாரணப் பால் குடிகள் நிறைந்ததுதான் பால்வெளி. அவற்றையெல்லாம் பார்க்கவே முடியாது. சில கிலோமீட்டர் அளவுள்ள கருந்துளைகளைக் கண்டுபிடிப்பது சிரமமானது. கருப்பானாலும் களையாயிருப்பது இராட்சச கருங்குழிகள் மட்டுமே. ஒவ்வொரு உடுத்திரளும் (Galaxy), தன் மையக்கருவாக ஒரு இராட்சச கருங்குழியைக் கொண்டிருக்கும். அப்படியான ஒன்றைத்தான், M87 உடுத்திரளின் மத்தியில் நாம் கண்டிருக்கிறோம்.

M87 இன் மையக் கருங்குழியானது, சூரிய எடையைப்போல் ஆறரை பில்லியன் மடங்கு பெரியது. அதன் விட்டம் 20 பில்லியன் கிலோமீட்டர்கள். அதைச் சுற்றிவரும் ஒளித்துகள்களுடன் சேர்த்து, 100 பில்லியன் கிலோமீட்டர் விட்டம் கொண்டது. இதுவே, 550 பில்லியன் பில்லியன் கிலோமீட்டர்களுக்கு அப்பால், ஒரு கடுகை 13000 கிலோமீட்டர் தொலைவிலிருந்து பார்ப்பது போன்று தெரிகிறது. இப்போது சொல்லுங்கள். இவ்வளவு தூரத்திலிருந்து எடுக்கப்படும் படம், எப்படித் துல்லியமாகத் தெரியும்? இந்தளவு துல்லியத்தைப் பெறுவதற்கே எவ்வளவு மெனக்கெடல்? அதுமட்டுமல்ல.

“இப்படியான துல்லியமற்ற படத்தை எடுத்துவிட்டா இப்படித் துள்ளுகிறார்கள்?” என்று சிலர் எள்ளி நகைக்கிறார்கள். உங்கள் வீட்டில் சுழன்று கொண்டிருக்கும் காற்றாடியைத் (Fan) துல்லியமாகப் படமெடுத்துத் தரும்படி சொன்னால், அந்தக் காற்றாடி சுழலாமல் இருக்கும்போது படமெடுத்துத் தருவீர்கள். அதுவே, காற்றாடி சுற்றிக் கொண்டிருக்கும்போது படமெடுத்திருந்தால், துல்லியமாகத் தெரிந்திருக்குமா? இல்லையல்லவா? ‘என்னிடம் வேகமாக அசையும் பொருட்களைப் படமெடுக்கக்கூடிய நவீன கமெரா இருக்கிறது. அதனால். காற்றாடி சுற்றிக் கொண்டிருக்கும்போதே நிலையான படத்தை என்னால் எடுக்க முடியும்’ என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், அதுவும் ஒரு குறிப்பிட்ட வேகம் வரைதான் முடியும்.

M87 கருங்குழியானது, கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதை எப்படி நிலையான கருங்குழியாகப் படமெடுக்க முடியும்? இதுவரை நாம் பார்த்திருந்த கருங்குழிகளின் படங்கள் அனைத்துமே கணணியால் உருவாக்கப்பட்ட மாதிரிப் படங்கள். அவை நிலையாக இருக்கக்கூடியதாகக் கருதும் கருங்குழியின் படங்கள். ஆனால், இப்போது பெறப்பட்டது நிஜமான கருங்குழி. பாலே நடனமாடும் பெண்போல அதிவேகமாகச் சுழன்று கொண்டிருக்கும் கருங்குழி.

சந்திர கிரகணத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் மறைக்கப்பட்ட நிலையில் கருமையாகப் பார்ப்பது சூரியனின் நிழல்தான் என்றாலும், உண்மையில் அங்கு தெரிவது சந்திரன்தான். இந்த நிலையை நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டால், இனி நான் சொல்லப் போவதையும் புரிந்து கொள்வீர்கள். ஒரு கரிய நிறப் பொருளை உங்களால் படமெடுக்கவே முடியாது. அதற்கு அந்தப் பொருளிலிருந்து ஒளி வரவேண்டும். எந்த ஒளியையும் வெளியே விடாத கருங்குழியை எப்படிப் படமெடுக்க முடியும்? M87 கருங்குழியின் நிழலானது, அதன் நிகழ்வு எல்லையில் (Event horizon) விழும்போது பெறப்பட்ட தோற்றத்தையே நாம் படம் பிடித்திருக்கிறோம்.

இதுவும் ஒருவகை நிழல்தான். ஆனாலும், அங்கு தெரிவது என்னவோ கருங்குழியின் தோற்றம்தான். அதிர்ஸ்டவசமாக M87-ஐத் தூசுத் துணிக்கைகளும், வாயுத் துகள்களும் சூழ்ந்திருக்கின்றன. அங்கிருக்கும் அதிவெப்பத்தினால் அவை ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. M87-ன் ஈர்ப்பினால் வளைக்கப்பட்ட காலவெளியின் (Space time) ஊடாக, அந்த ஒளிரும் துகள்களும் நெருப்பு வளையமாகச் சுற்றுகின்றன. அதுவே, M87 ஐக் கண்டுபிடிக்கவும், படமெடுக்கவும் நமக்கு வாய்ப்புகளைக் கொடுத்திருக்கின்றது.

இவையெல்லாவற்றையும் சாத்தியமாக்கியது நிகழ்வெல்லைத் தொலைநோக்கித் திட்டம்தான். இன்றுவரை உலகின் மிக முக்கியமான எட்டுத் தொலைநோக்கிகளை ஒன்றுசேர்த்து இந்த நிகழ்வெல்லைத் தொலைநோக்கி உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும். அதன் துல்லியத்தை மேலும் அதிகரிக்கலாம். அதிகரிக்கவும் வேண்டும். இவற்றுடன் மேலும் சில தொலைநோக்கிகளை இணைந்தால், வானியல் ஆராய்ச்சியில் பல மைல் கற்களைத் தொட்டுவிடலாம். இன்னும் நாம் பார்த்துத் தெளிவடைய வேண்டிய பொருட்கள் விண்வெளியில் நிறையவே உண்டு.

குவேசார்கள், பல்சார்கள் என்று பலவகை விண் பொருட்கள் ஜாலம் காட்டியபடி இருக்கின்றன. அதிகம் ஏன், வோர்ம் ஹோல்களகூட இருக்கின்றனவா என்று பார்த்துவிடலாம். ஆனாலும், கருங்குழிகள்பற்றி இன்னும் நிறைய அறிந்துகொள்ள வேண்டும். நம் சொந்தப் பால்வெளியின் மையக் கருங்குழி பற்றியும் அறிய வேண்டும். பதினாறு வருடங்களாகச் சஜிட்டாரியஸ் A வழியாக அந்தக் கருங்குழியைக் கவனித்துக் கொண்டுதான் வருகிறார்கள். அங்கு பல நட்சத்திரங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை வித்தியாசமான முறையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அதிலிருந்து, அந்த இடம் ஒரு இராட்சசக் கருங்குழியெனக் கணித்துள்ளார்கள். அதுவே பால்வெளியின் மையமும்கூட. அந்தக் கருங்குழியைச் சுற்றும் S2 என்னும் நட்சத்திரம் அந்தக் கருங்குழியின் ஈர்ப்பினால் கவரப்பட்டு, அதை 2.5% ஒளியின் வேகத்தில் நெருங்கிக் கொண்டு செல்வதை அவதானித்துக் கொண்டு இருக்கிறார்கள். யாருக்குத் தெரியும், என்றாவது ஒருநாள் அந்த S2 நட்சத்திரம், கருங்குழியின் நிகழ்வு எல்லையைத் தொடும்போது வானவேடிக்கைகள் நிகழலாம். அப்போது இதுபோன்ற நெருப்பு வளையம் அங்கும் தோன்றலாம்.

இறுதியாக ஒன்று. 55 மில்லியன் ஒளிவருடங்களுக்கு அப்பால் இருக்கும் கருங்குழியை நாம் இன்று பார்க்கிறோம் என்றால், அது 55 மில்லியன் வருடங்களுக்கு முன்னிருந்த கருங்குழியின் படமாகத்தான் இருக்கும். அங்கிருந்து ஒளி, பூமியை வந்தடைய 55 மில்லியன் வருடங்கள் தேவை. அதனால், அந்தக் கருங்குழி இன்று இருக்கிறதா, இல்லையா? என்ற கேள்வியெல்லாம் கேட்டு நாம் குழம்பிவிடத் தேவையில்லை. பிரபஞ்ச விதியின் அடிப்படையே அதுதான். அனைத்தும் இறந்தகாலம்தான். நாம் எதையும் நிகழ்காலத்தில் பார்ப்பதில்லை. உங்கள் அருகிலிருக்கும் மனைவியைக்கூட. ஒளி உங்களை வந்தடைய எடுக்கும் நேரத்தின் அளவான காலத்தை இழந்தே நாம் எதையும் பார்க்கிறோம்.

படிக்க:
செயற்கை முளையம் : தோற்றத்தின் இரகசியத்தை உடைக்கும் விஞ்ஞான வளர்ச்சி
♦ ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் !

இப்போது அது அங்கே இருக்கிறதா என்ற கேள்வியுடன் வானத்தைப் பார்த்தால், நான்கு ஐந்து நட்சத்திரங்களைத் தவிர ஏனைய அனைத்து நட்சத்திரங்களும் இப்போது இருக்கின்றனவா என்பதை உங்கள் வாழ்நாளில் தெரிந்து கொள்ளவே முடியாது. அதைத் தெரிந்து கொள்பவர்கள் உங்களுக்குப் பின்னர் வரும் சந்ததியினராக மட்டுமே இருக்கும். காரணம், நான்கு ஐந்து நட்சத்திரங்களைத் தவிர ஏனைய அனைத்து நட்சத்திரங்களும் நூறு ஒளியாண்டுகளுக்கு அப்பால்தான் இருக்கின்றன. அம்மி மிதித்த பின் நாம் பார்க்கும் அருந்ததி நட்சத்திரம்கூட அங்கு இருக்கிறதா என்று நமக்குத் தெரியவே தெரியாது.

இயற்பியலில் ஆழமாகச் சென்று சிந்திக்கும்போது, வாழ்க்கையின் சுவாரஷ்யங்களும், பயமுறுத்தல்களும் நம்மைவிட்டு நழுவிப் போய்விடும். இவற்றையெல்லாம் ஒரு அறிவாகப் பார்த்துவிட்டு விலகிவிடலாம். இயற்பியல் அவ்வளவு வலிமைமிக்க உண்மைகளைச் சொல்லக்கூடியது. நாம் நம்பும் உண்மைகளே, உண்மைகள் இல்லை என்று நிரூபிக்கக்கூடியது. அதனால், அவற்றைப் பற்றி ஒருவர் விளக்கும்போது, அதைக் கேட்டுவிட்டு, ‘வாவ்!’ என்ற ஆச்சரியத்துடன் நகர்ந்துவிடுங்கள். அதையே தூக்கிக்கொண்டு செல்லாதீர்கள்.

இனி… 55 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் வந்தது நீங்கள் நினைப்பது போன்று ஒளியல்ல. முதலில் நீங்கள் நினைக்கும் ஒளியென்பது ஏழு வர்ணங்களைக் கொண்ட, ‘காணும் ஒளிக்கற்றைதான்’ (Visible Spectrum). இது ஒரு ஒளியலையின் நூறில் ஒரு பங்குகூட இல்லாதது. 99 சதவீதமான ஒளியை நாம் கண்ணால் காணமுடியாது. அவை, காமா ஒளிக்கற்றை, எக்ஸ் ஒளிக்கற்றை, ஊதா கடந்த ஒளிக்கற்றை, இன்பிரா சிகப்பு ஒளிக்கற்ரை, மைக்ரோ அலை, வானொலி அலை, நெடு வானொலி அலையெனப் பலவகைகளில் நீண்டுகொண்டே போகின்றது.

இதில், வானொலி அலைகளைப் பயன்படுத்தியே நாம் தொலைநோக்கிகளால் நெடுந்தூரமிருக்கும் பொருட்களைப் பார்க்கிறோம். இவையே பின்னர் கணணிகள் மூலம் படங்களாக மாற்றிக் கொள்ளப்படுகின்றன. வானொலி அலைகள் அதிக அலைநீளம் கொண்டவை என்பதால், நெடுந்தூரம் பயனிக்கக் கூடியவை. M87 ஐயும் இந்த அலைகள் மூலமே கண்டுகொண்டோம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Raj Siva

ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் !

“ஜாலியன் வாலாபாக் அருகில் உள்ள எங்கள் வீட்டில் நான் அமர்ந்து இருந்தேன்.  திடீரென துப்பாக்கிகள் சுடும் சத்தங்கள் கேட்டன. அஞ்சிப் பதறி எழுந்தேன். என் கணவர் அங்கேதான் சென்று இருந்தார். பயம் நெஞ்சைக் கவ்வியது. ஓரிரு மணி நேரத்திற்குப் பின் சில பெண்களை அழைத்துக் கொண்டு அங்கே சென்றேன். போகும் வழியெங்கும் சாலையில் பலர் இரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தனர். பலர், உதவி கேட்டு அலறினர். அங்கே ஜாலியன் வாலாபாக்கில் குவியல் குவியலாக பிணங்கள் இருந்தன. ஒரு குவியலின் அருகே என் கணவரின் உடல் கிடைத்தது. நான் இரத்தக் களறியில் பிணங்களுக்கு நடுவே தாண்டிச் செல்ல வேண்டிருந்தது.”

“சற்று நேரத்திற்கு பின் லாலா சுந்தர்தாஸின் பிள்ளைகள் இருவரும் வந்தனர். என் கணவரின் உடலை எடுத்துச் செல்ல ஒரு கட்டில் எடுத்து வருமாறு அவர்களை கேட்டுக் கொண்டேன். இரு பையன்களும் போய்விட்டனர். அந்தப் பெண்களையும் அனுப்பிவிட்டேன். அப்போது மாலை எட்டு மணியை நெருங்கிக் கொண்டு இருந்தது.  ஊரடங்குச் சட்டத்திற்கு அஞ்சி யாரும் வீட்டிற்கு வெளியே தலை காட்டவில்லை.  அங்கேயே நின்று கொண்டு இருந்தேன். எதிர்பார்த்தபடி, காத்திருந்தபடி, அழுதபடி…”

“எட்டரை மணி இருக்கும்.  ஒரு சர்தார்ஜி அங்கு வந்தார்.  இன்னும் சில மனிதர்கள் வந்தனர்.  பிணங்களுக்கு இடையே எதையோ அல்லது யாரையோ தேடினர். என் கணவரின் உடலை ஏதேனும் ஒரு உலர்ந்த இடத்தில் வைக்க உதவுமாறு அந்த சர்தார்ஜியிடம் கேட்டேன். அவர் உடல் கிடந்த இடத்தில் ஒரே இரத்தச் சகதியாக இருந்தது. உடலின் தலைப்பகுதியை சர்தார் தூக்கினார். நான் கால்களை பிடித்து தூக்கினேன். அங்கிருந்த மரக்கட்டைகள் மீது உடலை கிடத்தினோம்.”

“இரவு பத்துமணி. லாலா சுந்தர்தாஸின் மகன்களை காணவில்லை. எழுந்து கட்ரா ஆப்லோவாவின் திசையில் செல்லத் துவங்கினேன். அங்கே டாக்கூர் துவாராவில் உள்ள மாணவர்களிடம் உதவி கேட்க நினைத்தேன். சில அடிகள்தான் சென்று இருப்பேன்.  ஒரு வீட்டின் ஜன்னல் வழியே ” எங்கே போகிறாய்?” என ஒருவர் கேட்டார்.  கணவரின் உடலை அகற்ற உதவி கேட்டுப் போவதைப் பற்றி அவரிடம் கூறினேன். “எட்டு மணிக்கு மேல் யாரும் வரமாட்டார்களே!” என அவர் கூறினார்.  சற்று தூரத்தில் ஹுக்கா புகைத்துக் கொண்டிருந்த சில பெரியவர்களிடம் என் நிலைமையை கூறி உதவி கேட்டேன்.  “பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது.  இங்கே யாருக்கும் குண்டு வாங்கிச் சாக விருப்பம் இல்லை” என்றனர்.”

“திரும்பி வந்து கணவரின் உடலருகே அமர்ந்தேன்.  ஒரு சிறிய மூங்கில் பிளாச்சு கிடைத்தது. அதை வைத்து நாய்களை விரட்டியபடி இரவு முழுவதையும் கழித்தேன்.  அருகில் சிலர் வலி தாங்க முடியாமல் அரற்றிக் கொண்டிருந்தனர்.  ஒரு எருமை மாடும் வலியால் துடித்துக் கொண்டிருந்தது.  பன்னிரெண்டு வயது பையன் ஒருவன் வேதனையில், “என்னை விட்டு போய்விடாதீர்கள்” என கத்திக் கொண்டு இருந்தான்.  குளிருக்காக என் துப்பட்டாவை எடுத்து அவன் மேல் போர்த்தினேன்.  தண்ணீர் கேட்டான்.  அங்கு ஏது தண்ணீர்?”

படிக்க:
♦ ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !
♦ பட்டேல் சிலைக்கு 3000 கோடி – ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு 1 ரூபாய் கூட இல்லை !

“இரவு நகர்ந்தது.  ஓலங்கள் தற்போது அவ்வளவாக இல்லை.  மணிக்கொருமுறை பெரிய கடிகாரத்தின் ‘டண், டண்’ ஒலி கேட்டுக் கொண்டிருந்தது.  இரண்டு மணி இருக்கும்.  குண்டு காயம் பட்ட ஒருவர், பிணங்களுக்கு அடியில் மாட்டிக் கொண்டுவிட்ட தனது காலை வெளியே எடுக்க உதவும் படி கேட்டார்.  சூல்தான் கிராமத்தை சேர்ந்தவராம்.  இரத்தம் தோய்ந்த அவரது உடையை பற்றிக் கொண்டு கால்களை மேலே தூக்கிவிட்டேன்.  அதற்குப் பின் காலை ஐந்தரை மணிவரை வேறு யாரும் அங்கே வரவில்லை.

ஆறு மணி சுமாருக்கு லாலா சுந்தர்தாஸும் அவரது பையன்களும் வந்தனர். உடன் எங்கள் தெருவைச் சேர்ந்த சிலர் ஒரு கட்டிலை எடுத்து வந்திருந்தனர். என் கணவரின் உடலை வீட்டிற்கு எடுத்து வந்தோம். திடலில் இன்னும் பலர் தம் உறவினர்களை தேடிக் கொண்டு உள்ளனர். இரவு முழுவதையும் நான் அங்கே கழித்தேன். என்னுள் எழுந்த உணர்ச்சிகளை விவரிக்க இயலாது. என்னைச் சுற்றிலும் குவியல் குவியலாய் பிணங்கள். அவற்றில் சிலர் அறியாச் சிறுவர்கள். இரவு முழுவதும் அந்த தண்ணியில்லாக் காட்டில் நாய்களின் குரைப்பொலியும், கழுதைகளின் கத்தல்களும், உயிருக்குப் போராடியவர்களின் மரண ஓலங்களும் தவிர வேறு ஏதும் இல்லை. அந்த இரவை எப்படி கழித்தேன் என்பது எனக்குத் தெரியும். கடவுளுக்குத் தெரியும்…”

-ரத்தன் தேவி
(ஜாலியன்வாலா பாக் படுகொலையில் தன் கணவரை இழந்தவர்.)

***

ப்படித்தான் அது தொடங்கியது.

லாப வெறி பிடித்த ஏகாதிபத்தியங்கள், உலகை பங்கு போட்டுக் கொள்ள உலக யுத்ததில் ஈடுபட்டன. முதலாம் உலக யுத்தம்.  ஜெர்மனிக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், தனக்காக யுத்தம் செய்ய தனது காலனி நாடுகளை மேலும் அதிகமாக சூறையாடியது.

இந்திய இளைஞர்கள் இலட்சக்கணக்கானோரை கிராமம் கிராமமாக வேட்டையாடி கட்டாயப் படுத்தி இராணுவத்தில் சேர்த்து யுத்தத்திற்கு அனுப்பியது.

தனது யுத்த தேவைகளுக்காக, ‘யுத்த நிதி’ என்ற பெயரில் மாபெரும் வழிப்பறிக் கொள்ளையை நடத்தியது.  யுத்த காலத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து பிரிட்டன் அள்ளிச்சென்ற பணம் பத்துகோடி பவுன் தொகைக்கும் மேலானது.

விளைந்த தானியங்களை அள்ளிச் சென்றது.  இதனால் கடும் விலைவாசி உயர்வு. மருத்துவ வசதிகள் போதாததால், காலரா, மலேரியா, இன்புளூயன்சா போன்ற நோய்கள் பரவின. யுத்த காலத்தில் மட்டும் கொள்ளை நோய்களால், ஒன்றரை கோடி இந்தியர்கள் மாண்டுள்ளனர்.

பிரிட்டிஷ் அரசோ மேலும் மேலும் சுரண்டியது. எதிர்த்தவர்களை சிறப்பு அடக்குமுறைச் சட்டங்கள் இயற்றி, கைது செய்து சிறையில் அடைத்தது. மக்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தனர்.

1917, நவம்பர் 7.  ரஷ்யாவில் பாட்டாளிவர்க்கப் புரட்சி வெற்றி பெற்றது.  உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் நெஞ்சில் நம்பிக்கையை விதைத்தது.  இந்திய மக்களும் ரஷ்யப் புரட்சியால் உந்தப்பட்டனர். மக்களின் போராட்டங்கள் தீவிரமாகின.

யுத்தகால கருப்புச் சட்டங்கள் மக்கள் மீது பாய்ந்தன. நவம்பர் 11- 1918-ல் உலக யுத்தம் முடிவுற்ற போது, ‘சுயராஜ்ஜியம் கிடைக்கும்’ என்று மக்கள் நம்பினர். ஆனால், மார்ச் 10 – 1919 அன்று, ‘தீவிரவாத நடவடிக்கைகள் சட்டம்’ என்ற கருப்புச் சட்டத்தை இயற்றியது பிரிட்டிஷ் அரசு.  பிரிட்டிஷ் நீதிபதி சர். ஸிட்னி ஆர்தர் டைலர் ரெளலட் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளே அந்தக் கருப்புச் சட்டம்.  தலைவரின் பெயரால் ‘ரெளலட் சட்டம்’ என்று அழைக்கப்பட்டது.

இந்த சட்டத்தின்படி, யாரை வேண்டுமானாலும், எந்தவித ஆதாரமும் இல்லாமல் கைது செய்ய முடியும், கைது செய்யப்பட்டவர்களை விசாரணையே செய்யாமல் இரண்டு ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்க முடியும்.

யுத்தகால காலனிய சுரண்டல்களால், கொதித்துப் போய் இருந்த மக்களுக்கு, ‘சுயராச்சியம் கிடைக்கும்’ என நம்பிக்கொண்டிருந்த மக்களுக்கு கிடைத்ததெல்லாம் இந்த அடக்குறை கருப்புச் சட்டம்தான்.

கொதித்துப் போன மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.  மார்ச் 30 அன்று பொது வேலை நிறுத்தம் நடத்த அறைகூவியது காங்கிரசு கட்சி.

அந்நாளில் பஞ்சாப் மாகாணத்தின் லெப்டினன்ட் கவர்னர் ஆக இருந்தவர், சர்.மைக்கேல் பிரான்ஸிஸ் ஓ’டையர்.  அடக்குமுறைகளுக்கு பெயர் போன, கொடூரமான ஒரு அராஜகப் பேர்வழி அவர்.

மார்ச் 29-1919 அமிர்தசரஸ் நகரின் ஜாலியன்வாலா பாக் திடலில் பொதுக்கூட்டம் நடக்கிறது. அமிர்தசரஸ் மக்களின் மரியாதைக்குரிய தலைவர்களான வழக்கறிஞர். முனைவர். சைஃபூதீன் கிச்லூ மற்றும் மருத்துவர். சத்யபால் ஆகியோர் போராட்டத்தின் முக்கியத்துவம் பற்றி எழுச்சி உரை ஆற்றுகிறார்கள்.

அன்று இரவு, மரு. சத்யபால் பொது நிகழ்சிகளில் பேசக்கூடாது என அவருக்கு வாய்ப்பூட்டுச் சட்டம் போடுகிறது அரசு. மார்ச் 30 -1919. பொது வேலை நிறுத்தம் நாடெங்கிலும் முழு வெற்றி பெறுகிறது.

டில்லியில் அன்று காலை நடந்த போராட்டப் பேரணியை வழிமறித்து துப்பாக்கிச் சூடு நடத்தியது பிரிட்டிஷ் அரசு. 8 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

அன்று மாலையே, துப்பாக்கிச் சூட்டை கண்டித்து டில்லியில் கண்டனக் கூட்டம் திரு.ஸ்ரத்தானந்தா தலைமையில் நடத்தப் பட்டது.  கூட்டம் முடிந்ததும், மக்கள் பேரணியாக சென்றனர். சாந்தினி செளக் பகுதியில் பேரணியை வழிமறித்தது ஏகாதிபத்தியப் படை. மக்கள் கலைய மறுத்து எதிர்த்து நின்றனர். பிரச்சினையை பெரிதாக்க விரும்பாத இராணுவம் திரும்பிச் சென்றது.

ஜாலியன்வாலா பாக் திடலில், வழக்கறிஞர் சைஃபூதின் கிச்லூ தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கிச்லூவுக்கும் வாய்ப்பூட்டு போடுகிறது அரசு.

டில்லி துப்பாக்கிச் சூடு நாடெங்கும் மக்களை கொதித்தெழச் செய்தது.  குறிப்பாக பஞ்சாப் மக்கள் கொதி நிலையின் உச்சத்தில் இருந்தனர்.

மார்ச் 31-1919. டில்லியில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

ஏப்ரல் 2-1919. ஜாலியன்வாலா பாக்கில் காங்கிரசு பேச்சாளர் சத்யதேவ் உரையாற்றுகிறார். அஹிம்சை முறையில் போராட வலியுறுத்துகிறார்.

ஏப்ரல் 5-1919. மறு நாள் ஏப்ரல் 6 அன்று நடக்க இருந்த இரண்டாவது பொது வேலை நிறுத்தத்தை சீர்குலைக்க பிரிட்டிஷ் கைக்கூலிகளை ஏவி விடுகிறார் லெப். கவர்னர் சர். மைக்கேல் ஓ’டையர். பஞ்சாபில் நுழைய காந்திக்கு தடை விதிக்கப்படுகிறது.

அமிர்தசரஸ் துணை கண்காணிப்பாளரும், மறுநாள் நடக்க இருக்கும் பொது வேலை நிறுத்தத்தை சீர்குலைக்க பிரிட்டிஷ் அடிவருடிகளைத் தூண்டி விடுகிறார்.  நகரம் முழுவதும் ‘மறு நாள் போராட்டம்’ ரத்து செய்யப்பட்டதாக செய்தி பரவுகிறது.  உடனே, இளைஞர்கள் பலர் திரண்டு, வீடு வீடாகச் சென்று ‘மறு நாள் போராட்டம் நடப்பது உறுதி, துரோகிகளின் புரளியை நம்பவேண்டாம்’ என்ற செய்தியை மக்களிடம் கொண்டு செல்கின்றனர்.

படிக்க:
♦ என் அம்பேத்கர் எங்கே இருக்கிறார் !
♦ பகத்சிங் என்றால்.. தத்துவம், வீரம், தியாகம்…….. !

ஏப்ரல் 6 – 1919. பொது வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி பெறுகிறது.  ஒரு சின்னஞ்சிறிய கடை கூட திறக்கப் படவில்லை.  எங்கும் எந்த ஒரு தொழிலும் நடக்கவில்லை.

மாலையில், ஜாலியன் வாலா பாக்கில் பொதுக் கூட்டம்.  ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளம்.  உரைகள், கவிதைகள் எல்லாம் போக மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

1) ரவுலட் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

2) சத்யபால், கிச்லூ மீதான வாய்ப்பூட்டு இரத்து செய்யப் பட வேண்டும்.

3) தொடரும் சத்யாகிரகப் போராட்டங்களுக்காக குழு ஒன்று உருவாக்க வேண்டும்.

கூட்டத் தலைவர், வழக்கறிஞர் பதர்-உல்-இஸ்லாம் அலிகான், அகிம்சையை வலியுறுத்தி பேசுகிறார்.

ஏப்ரல் 7-1919. லாகூர் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் லெப். கவர்னர் சர். மைக்கேல் ஓ’டையர், ‘கலகம் விளைவிக்கும்’ தலைவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் பாயும் என அச்சுறுத்துகிறார்.

ஏப்ரல் 8-1919. அமிர்தசரஸ் துணைக் கண்காணிப்பாளர், நிலைமை மோசமடைந்து வருவதாகவும், கூடுதல் படைகளை அமிர்தசரசிற்கு அனுப்பும் படியும் மைக்கேல் ஓ’டையர் -க்கு கடிதம் எழுதுகிறார்.

ஏப்ரல் 9-1919. இராமநவமி திருவிழா. இந்துக்களின் இந்த விழாவில் பல்லாயிரம் இசுலாமிய மக்கள் கலந்து கொள்கின்றனர். திருவிழா ஊர்வலத்திலும் அனைத்து மத மக்களும் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொள்கின்றனர். இந்த ஒற்றுமை பற்றிய செய்தி மைக்கேல் ஓ’டையர் -க்கு போகிறது.  ஒற்றுமை அவரை பீதி கொள்ளச் செய்கிறது.

ஏப்ரல் 10-1919. துணைக் கண்காணிப்பாளர் அழைப்பின் பெயரில், அவரைக் காண சத்யபாலும், கிச்லூவும் செல்கின்றனர். மைக்கேல் ஓ’டையரின் ஆணைப்படி அவர்கள் இருவரையும் கைது செய்து தர்மசாலாவில் சிறை வைக்கின்றனர்.

கொதித்துப் போன மக்கள் துணைக் கண்காணிப்பாளர் பங்களாவையும், நீதிமன்றத்தையும் நோக்கி பேரணியாக செல்கிறார்கள்.  ஊர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.

எல்லா இடங்களிலும் தயாராக இருந்தது வெள்ளை போலீசு.  போலீசு படையும், அவர்களின் குதிரைப் படையும் மக்களின்மீது தாக்குதல் தொடுக்கின்றன.

மக்களின் உணர்வு நிலை மாறிக் கொண்டே இருந்தது.  தம் தலைவர்களை விடுவிக்க முடியாத கோபம் ஒருபுறம்.  போலீசு தாக்குதலில் தம் மண்டைகள் உடைவது மறுபுறம் என கொதித்துப் போய் இருந்தனர்.

அப்பொழுதும், அகிம்சையை பின்பற்றி அமைதியாக அடிபட்ட தம் தோழர்களை அழைத்துக் கொண்டு ஹால்பஜார் நோக்கிச் சென்றனர். அப்பொழுது, நகரெங்கும் சாலைத் தடையரண்களை வெள்ளை அரசு அமைத்து வரும் செய்தி வந்தது. எரிகின்ற நெருப்பில் எண்ணை வார்த்தது போல் ஆனது.

கொதித்துக் கொண்டிருந்த மக்கள் அப்பொழுதும் வன்முறையைத் தவிர்க்க, கேரேஜ் பாலம் என்ற நடை பாலம் நோக்கி பயணப்பட்டனர். இப்பொழுது மக்களின் கைகளில் கம்புகள் இருந்தன. பாலத்தின் ஒருபுறம் அடக்குமுறைக்கு ஆளான மக்கள்.  மறுபுறம் துணைக் கண்காணிப்பாளர் இர்விங்-உடன் ஆயுதம் தாங்கிய படைப் பிரிவு.

வழக்கறிஞர்கள் ஸலாரியாவும் மக்புல் மஹ்மூத்தும் இரண்டு தரப்பிலும் இருந்த இறுக்கத்தை தளர்த்தப் படாத பாடு பட்டனர். அவர்களின் முயற்சிகளுக்கு நாட்டுப் பற்றாளர்கள் கட்டுப்பட்டனர்.  ஆனால், ஏகாதிபத்தியப் படைகளின் நோக்கம் வேறு.

மக்கள் கூட்டத்தில் இருந்து கற்களும் கழிகளும் வீசப்பட்டதாகக் கூறி, போலீசு சுட்டுத் தள்ளியது. இருபது நாட்டுப் பற்றாளர்கள் இன்னுயிர் ஈத்தனர்.  பலர் படுகாயம் அடைந்தனர். காயம்பட்டவர்களை மருத்துவ நிலையம் கொண்டு செல்ல முயன்றார் மக்பூல்.

நாட்டுப் பற்றாளர்களுக்கு உதவிகள் ஏதும் செய்யக் கூடாதெனற உத்தரவை முன்னரே போட்டிருந்தார் ஆங்கில அதிகாரி பலோமர். மருத்துவ உதவி கூட ஏதும் நாட்டுப் பற்றாளர்களுக்கு கிடைக்கவில்லை. மக்களின் சினம் எல்லை தாண்டியது.

சிலர் தந்தி நிலையத்தை முற்றுகை இட்டனர். ஆனால், இரயில் நிலையத்தில் இருந்த படைப்பிரிவு தந்தி நிலையம் வந்ததால், தந்தி அதிகாரி உயிர் தப்பினார். அதேநேரம், இரயில் நிலையம் சென்றது வேறு ஒரு மக்கள் குழு. நிலைய சூப்பரிண்டெண்டண்ட் எப்படியோ தப்பி விட்டார்.  ஆனால், ஒரு வெள்ளை கார்ட் பலியானார்.

நேஷனல் வங்கியில் மூன்று பேர் மரணம் தழுவினர்.  வங்கிக் கட்டிடமும், அதன் சேமிப்புக் கிடஙகும் (ஜவுளி ஆடைகள் சேமிப்புக் கிடங்கு) தீக்கிரையாகின. அல்லையன்ஸ் வங்கி மேலாளர் கொல்லப்பட்டார்.  வங்கியின் பணக் காப்பகம் சூறையாடப்பட்டது. சார்ட்டர்ட் வங்கியும் தாக்குதலுக்கு ஆளானது.  ஆனால், உயிர் மற்றும் பொருள் இழப்பு ஏதுமில்லை.

ஷேர்வுட் என்ற கன்னியாஸ்திரி, ஒரு குறுகிய தெருவில் தாக்கப்பட்டார்.  அவரை ஒரு குடும்பம் பாதுகாத்து, பின்னர் மருத்துவ நிலையம் சேர்த்தது. அமைதியாக போராடிய மக்கள் மீது, வன்முறை ஏவி, அவர்களை வன்முறையாளர்களாக்கியது அரசு.

வெள்ளையர் வன்முறையில் இருபது நாட்டுப் பற்றாளர்களும், மக்களின் எதிர் வன்முறையில் 4 வெள்ளையரும் பலியாகினர்.

வன்முறையில் மக்கள் ஈடுபட்டதாக கூறி, மக்கள் மீது அரச வன்முறையை ஏவுவது, ஆண்டாண்டு காலமாக அரசு பயன்படுத்தும் தந்திரம்தான்.  தாமிரபரணி, பரமக்குடி, லால்கர் முதல் தூத்துக்குடி வரை, அரசை பொறுத்தவரை தம் உரிமைக்காக போராடும் மக்கள் தானே வன்முறையாளர்கள்.

ஏப்ரல் 11-1919. உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய நான்கு பேருக்கு மேல் உடன் செல்லக் கூடாது. ஒரு பிணத்திற்கும், இன்னொரு பிணத்திற்கும் இடையில் 15 நிமிட இடைவெளி வேண்டும். அடக்கங்களை மதியம் இரண்டு மணிக்குள் முடிக்க வேண்டும். இரண்டு மணிக்கு விசில் ஊதப்படும் போது, கூட்டம் கலைந்து விட வேண்டும். மீறினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்.

எந்த ஒரு இடத்திலும் நான்கு பேருக்கு மேல் கூடி நிற்கக் கூடாது. மீறினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும். இவை துணை கண்காணிப்பாளரின் உத்தரவுகள்.

அன்று மாலை, ஜலந்தர் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் எட்வர்ட் ஹாரி டயர் அமிர்தசரசின் பொறுப்பை ஏற்றார்.

ஏப்ரல் 12-1919. நகர் முழுவதும் இராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. நகரம் விமானங்கள் மூலம் கண்காணிக்கப் பட்டது. மக்களை மிரட்ட ஜெனரல் டயர் தன் படைகளுடன் நகர வீதிகளில் இராணுவ அணிவகுப்பை நடத்தினார்.  ஓரிடத்தில் மக்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.  ஆனாலும் எதிர்ப்பு என்பது பெரிய அளவில் இல்லை.

அதே நேரம், எந்தத் தொழிலும் நடக்கவில்லை. எந்தக் கடையும் திறக்கவில்லை.  வெற்றி கிட்டும்வரை பொது வேலை நிறுத்தம்தான் என மக்கள் முடிவு செய்து விட்டனர்.

ஏப்ரல் 13-1919. அன்று பஞ்சாபியரின் புத்தாண்டான பைசாகி திருவிழா.  இந்து, முசுலீம், சீக்கியர் என அனைவரும் ஒரே தட்டில் உண்டு, ஒரே குவளையில் நீர் அருந்தும் திருநாள். பல்லாயிரக்கணக்கில் மக்கள் பொற்கோவிலில் கூடினர்.

இன்றும், ஜெனரல் டயர் மிரட்டல் இராணுவ அணிவகுப்பை நடத்தினார். அணிவகுப்புக்கு பின்னர், ‘நான்கு பேருக்கு மேல் மக்கள் கூட்டம் கூடுவது குற்றம், மீறினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்’ என்று தமுக்கடித்து அறிவித்தது பிரிட்டிஷ் அரசு.

சற்று நேரத்தில், காலி தகர டப்பாக்களை அடித்தபடி இளைஞர் கூட்டம் வீதிகளில் இறங்கியது. மாலை 4.30 மணிக்கு ஜாலியன்வாலா பாக்கில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள மக்களை அறை கூவினர். திட்டமிட்டபடி சரியான நேரத்தில் ஜாலியன்வாலா பாக்கில் கூட்டம் துவங்கியது.

சற்று நேரத்தில் அங்கே டயரும் இராணுவமும் நுழைந்தனர். துப்பாக்கிகள் சீறின. சில ஆயிரம் பேர் செத்துப் போனார்கள். பல ஆயிரம் பேர் படுகாயம் அடந்தனர். தோட்டாக்கள் தீரும் வரை பத்து பதினைந்து நிமிடங்கள் சுட்டுத் தள்ளிவிட்டு, கிளம்பிச் சென்றனர் டயரும் இராணுவத்தினரும்.

*****

இந்த படுகொலையை அஞ்சி, நடுங்கி ஒடுங்கிவிடவில்லை பஞ்சாப் மக்கள். பொது வேலை நிறுத்தம் தொடர்ந்தது. கடையை திறக்க மறுத்த வணிகர்களை அடித்து உதைத்து, வீதிகள் வழியே புழுக்களைப் போல ஊர்ந்து போக வைத்தான் வெள்ளையன்.

தொழில்கள் ஏதும் நடக்கவில்லை. கம்பத்தில் கட்டி சவுக்கால் அடித்தான். பணியவில்லை பஞ்சாப். விலங்குகள் போல இரும்புக் கூண்டுகளில் அடைத்தான். பள்ளி மாணவர்களை பல மைல் தூரம் நடக்க வைத்து, தன் யூனியன்  ஜாக் கொடியை வணங்க வைத்தான்.

குடிநீரையும் மின்சாரத்தையும் நிறுத்தினான். குஜ்ரன்வாலா வயல்களில் உழைத்துக் கொண்டு இருந்த விவசாயிகள் இருபது பேரை காரணம் ஏதும் இன்றி சுட்டுக் கொன்றான். குஜ்ரன்வாலா, காசூர், லாகூரில் விமானங்கள் மூலம் குண்டு வீசி மக்களைக் கொன்றான். பஞ்சாப் பணியவில்லை.

இந்தக் காலகட்டம் முழுவதும் நாட்டின் பிற பகுதிகளிடம் இருந்து பஞ்சாப் துண்டிக்கப் பட்டு இருந்தது. பஞ்சாப் செய்திகள் வெளியே கசிந்த போது, நாடே பதறித் துடித்தது. பஞ்சாப் படுகொலை பற்றி விசாரிக்க குழு அமைத்தது காங்கிரசு கட்சி.

படிக்க:
♦ அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்
♦ பணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா | அம்பலப்படுத்தும் காங்கிரஸ்

“லெப்.கவர்னர் மைக்கேல் ஓ’டையரும், ஜெனரல் டயரும்தான் குற்றவாளிகள்” என ஆணித்தரமாக கூறியது காங்கிரசு குழு அறிக்கை. ஹாண்டர் பிரபு தலைமையில் குழு அமைத்து விசாரித்தது பிரிட்டிஷ் அரசு.

“ஓ’டையர் குற்றமற்றவர்.  ஆனால், ஜெனரல் டயர் குற்றவாளி” என்றது ஹண்டர் குழு. ஹண்டர் குழு அறிக்கையை ஏற்று, ஜெனரல் டயரை பதவி விலகக் கோரியது பிரிட்டிஷ் மக்களவை (House of Commons). ஆனால், அரசரவையோ (House of Lords) ஜெனரல் டயர் மீது நடவடிக்கை கூடாது என தடை போட்டது. மேலும் அந்த கசாப்புக் கடைக் காரனை, ‘இங்கிலாந்தின் மாவீரன்’ என்றும் கொண்டாடியது.

இதோ, நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜாலியன்வாலா பாக் படுகொலைகளுக்காக 10-04-2019 அன்று வருத்தம் தெரிவித்துள்ளார் பிரிட்டன் பிரதமர்.

உத்தம் சிங்கையும் பகத்சிங்கையும் உருவாக்கியது அன்றைய ஜாலியன் வாலா பாக்  படுகொலை. அதன் நூறாம் ஆண்டு நிறைவில் நாம் பல நூறு பகத் சிங்-களாய் எழுந்து நிற்போம் !


தொகுப்பு : வினவு செய்திப் பிரிவு

என் அம்பேத்கர் எங்கே இருக்கிறார் !

ன் அம்பேத்கர், அவர் சிலைகளில் குடியிருப்பதில்லை, பௌத்த மடாலய சடங்குகளின் மலர்களின் வாசனையில் அவர் வசிப்பதில்லை..

கூட்டமொன்றில் உரையாற்றும் அம்பேத்கர்.

சங் பரிவார கும்பலிடம் தலித் அரசியலின் பெயரில் சரணடையும் கும்பலின் வீட்டு வரவேற்பறையில் வரவேற்கும் படங்களில் அவர் வாழ்வதில்லை..

தங்களுடைய சுயநல வர்க்க நோக்கத்திற்காக, ஆளும் வர்க்கத்திற்கு மக்களை காட்டி கொடுப்பதற்கே, தங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு செருப்பை உருவாக்கி, அதற்கும் பொருந்தும்படி மக்களின் கால்களை வெட்டி சுகம் காணும் கயவர்களிடம் கண்டிப்பாக இல்லை..

சொந்த வர்க்க நலன்களுக்காக வர்க்கக் கண்ணோட்டத்தை மறுக்கும் என்.ஜி.ஓ கும்பல்களில் பிரச்சார நிகழ்ச்சி நிரலில் அவர் கிஞ்சித்தும் இருப்பதில்லை…

படிக்க :
♦ பாஜகவுக்கு வாக்களித்தால் டீ விற்க வைத்து விடுவார்கள் | ஒரு உழவரின் தற்கொலைக் குறிப்பு !
♦ மோடி : விளம்பர அரிப்பும் … அதிகாரக் கொழுப்பும் !

அவர் நேர்மையில் குடியிருக்கிறார், தன் மக்களின் துன்பத்திலிருந்து தன்னுடைய அரசியல் நோக்கங்களை உருவாக்கி கொண்ட நேர்மையில் இருக்கிறார், தன்னை பற்றி அவர் தொடர்ந்து செய்துகொண்டு வந்த சுயவிமர்சனத்தில் இருக்கிறார்.

உரிமையோடு அவரோடு முரண்படும் வெளியை உருவாக்கித் தந்த, அவர் கைநீட்டி எனக்கு கைகாட்டிய பாதை இடது அரசியல் பாதைதான்…

அதை மறுக்கும் எவரொருவரும் அரசியல் பகையாளியே…

நன்றி : ஃபேஸ்புக்கில் மகிழ்நன் பா.ம

சிவாஜி முடிதரிக்க வேண்டுமாம் ! சூத்ரனுக்கு ராஜாபிஷேகமா ?

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 9


காட்சி : 13

இடம் : வீதி
உறுப்பினர்கள் : பட்டர்கள், சிட்னீஸ்

(பட்டர்களைத் தூது அனுப்புவது)

சிட்னீஸ் : பிராமணோத்தமர்களே நீங்கள் மேற்கொண்டுள்ள காரியம் மிக மிக முக்கியமானது ; மகத்தானது; புனிதமானது; மராட்டிய மண்டல ஏட்டிலே தனி இடம் பெறும் சிலாக்கியமான காரியம்.

பாலச்சந்திரப்பட்டர் : பூர்ண சந்திரனைப் பார்த்து ரசிக்கும்படி விளக்கு கொண்டு வந்து தருவது போல் இருக்கிறது தங்கள் பேச்சு. சிவாஜி மகாராஜனாக முடிதரித்துக் கொள்ள வேண்டுமென்பதில் எங்களுக்கு அக்கறை இல்லையா என்ன ?

கேசவப்பட்டர் : நாங்கள் மராட்டிய மண்ணிலே பிறக்கவில்லையா? எங்களுக்கு அந்த எண்ணம் ஏற்படாமல் இருக்குமா?

பாலச்சந்திரப்பட்டர் : சிவாஜியின் உப்பைத் தின்று வாழும் நாங்கள் இந்த உதவிகூடச் செய்யாமல் இருப்போமா?

சிட்னீஸ் : பூரிப்படைகிறேன் பூசுரரே … உங்கள் மொழி கேட்டு மகிழ்கிறேன். மராட்டியத்துக்குப் புது வாழ்வு அளிக்கும் பொறுப்பு உங்களிடம் இருக்கிறது.

கேசவப்பட்டர் : பொறுப்பை மறந்துவிடக் கூடியவர்களா நாங்கள்?

சிட்னீஸ் : பொற்காலம் தோன்றப் போகிறது. உங்கள் பேருதவியால்.

பாலச்சந்திரப்பட்டர் : தோன்றாமல் என்ன?

சிட்னீஸ் : பிராமணோத்தமர்களே! மாவீரர் தலைவன் மணி முடி தரித்துக் கொள்வது கூடாது. ஏனெனில், அவர் சூத்திரர் என்று இங்கு சில சூது மதியினர் பேசினரே!

பாலச்சந்திரப்பட்டர் : சூதுமதியினர், சூழ்ச்சித் திறத்தினர் என்றெல்லாம் ஏன் அவர்களைத் தூஷிக்கிறீர் சிட்னீஸ்? அவர்கள் சாஸ்திரத்தை தானே எடுத்துக் காட்டுகிறார்கள்.

சிட்னீஸ் : இப்பேர்ப்பட்ட சமயத்திலா? இப்படிப்பட்ட காரியத்துக்கா?

கேசவப்பட்டர் : சமயம், சந்தர்ப்பம், தயவு , தாட்சண்யம், இவைகளை எல்லாம் பார்த்து நடந்துண்டால் சாஸ்திரம் நிலைக்குமோ சிட்னீஸ், சத்தியம் தழைக்குமோ?! தேவதாப்ரீதி முக்கியமான கடமையாயிற்றே. மற்றவர்களுக்கு எப்படியோ – முப்பிரிவினரான எமக்கு தேவதாப்ரீதிதான் முக்கியமான கடமை.

பாலச்சந்திரப்பட்டர் : வீண் விவாதம் ஏன் சிட்னீசிடம்? சாஸ்திரத்தைப் பற்றி சம்வாதம் செய்கிறீரே, கேசவப் பட்டரே, அவருக்கு என்ன தெரியும்? வேதாகம விசேஷாதிகளைப்பற்றி, அவர் உம்மைப் போல் வேத பாராயணம் செய்தவரா? வீரர். அவரிடம் பேசுவதானால் ரத, கஜ, துரக, பதாதிகளைப் பற்றிப் பேசலாம்.

சிட்னீஸ் : அது உங்களுக்குப் புரியாதே.

கேசவப்ப்பட்டர் : எங்களுக்கு அது ஏன் சிட்னீஸ்? நமக்குள் வீண் விவாதம் செய்வது சரியா? சத்ரபதி சிவாஜிக்குச் சாஸ்திரோத்தமாக மகுடாபிஷேகம் நடந்தாக வேண்டும் என்று விரும்புகிறீர். அனைவருக்கும் அதே ஆசைதான். எங்களுக்கும் தான் இதற்கான சம்மதம், ஆதரவு, உத்தரவு பெற்றுக் கொண்டு வரவேண்டும், காசிவாசி காகப்பட்டரிடமிருந்து அவ்வளவுதானே?

சிட்னீஸ் : அவ்வளவுதான்.

கேசவப்பட்டர்: செல்கிறோம் காசி நோக்கி..

சிட்னீஸ் : சென்று கூறுங்கள் – காகப்பட்டரிடம், நமது வீரத் தலைவனின் குண விசேஷங்களை ஆற்றல் மிக்க நமது தலைவர் அடிமைத்தனத்தை ஓட்ட அரும்பாடுபட்ட வீரத்தை விளக்குங்கள். அவருடைய ஆற்றலைக் கண்டு பாரத் வர்ஷத்தை அடிமைப்படுத்திய பாதுஷாக்களெல்லாம் பயந்து போனதைக் கூறுங்கள். அவருடைய சொல் கேட்டால் சோர்ந்த உள்ளங்களிலேயும் புது எழுச்சி சேரும் என்பதைக் கூறுங்கள். ஏழை ஜாகிர்தாரின் மகன், ஏவல் செய்து பிழைத்தாக வேண்டியவன், உழவன். இவனால் என்ன சாதிக்க முடியும்’ என்று பலர் பலவிதமாகப் பேசிய போதிலும் சுதந்திரப் போரை நடத்தி மலைமலையாக வந்த எதிர்ப்புகளைத் தூள்தூளாக்கி மராட்டியத்தை மற்றாரிடமிருந்து மீட்ட மாண்பை எடுத்துச் சொல்லுங்கள்.

கேசவப்பட்டர் : சொல்கிறோம். சொல்கிறோம்… சொல்லாமலா இருப்போம்.

சிட்னீஸ் : கூடுதலாகக் கூற வேண்டாம் மறையவரே! உண்மையை உரைத்தால் போதும். நமது நாட்களிலே நாம் மராட்டியத்திலே கண்ட காட்சியைக் கூறினால் போதும். சிவாஜியைக் காசிவாசி சாமான்யர் என்று எண்ணிவிடக்கூடாது. ஒரு சாம்ராஜ்யத்தின் சிருஷ்டிகர்த்தா நம் சிவாஜி என்பதை அவர் அறிய வேண்டும். அஞ்சாநெஞ்சனின் அறிவாற்றலைக் கூறுங்கள். அறநெறி கொண்டவர் என்பதைக் கூறுங்கள்.

கேசவப்பட்டர் : தாராளமாக! பசு, பெண்டீர், பிராமணர் எனும் மூன்று சிரேஷ்ட ஜீவன்களிடமும் பக்தி கொண்ட சனாதனி சிவாஜி என்பதையும் கூறுகிறோம்.

பாலச்சந்திரப்பட்டர் : கூறவேண்டும் கேசவப்பட்டரே ! சிவாஜியின் வீர தீர பராக்கிரமத்தை மட்டும் கூறினால் போதாது. அப்படிச் சொன்னால் இணையில்லா வீரர் அனேகரை அறிவேன் என்று ஒரே வார்த்தையில் கூறிவிடுவார்.

கேசவப்பட்டர் : அப்படிச் சொல்லும். பாலச்சந்திரரே! நாம் அதிகமாக விளக்க வேண்டியது சிவாஜியின் வீரத்தைப் பற்றி அல்ல. அவருடைய பகவத் பக்தி. சனாதன சேவா உணர்ச்சி, பிராமண பக்தி இவைகளை விரிவாகக் கூறினால்தான் காகப்பட்டரின் மனதை மகிழ்விக்க முடியும்.

சிட்னீஸ் : மறைவல்லோரே, எம் முறையில் பேசினால் ஜெயம் நிச்சயமோ, அம்முறையில் பேசி காகப்பட்டரின் சம்மதம் பெற்று வாருங்கள். மராட்டியத்துக்குப் புதிய ஜீவன் அளியுங்கள். போய் வாருங்கள்.

(சொல்லிவிட்டு சிட்னீஸ் போகிறான். பாலச்சந்திரப்பட்டர் அவன் போன திசையைப் பார்த்து முறைத்து நிற்க)

கேசவப்பட்டர் : ஒய், புறப்படும் புறப்படும்! என்ன ஒய் அவன் போன திசையை நோக்கி ஏன் அப்படி பார்க்கிறீர்?

பாலச்சந்திரப்பட்டர்: முட்டாள், முடிதரிக்க வேண்டுமாம் சிவாஜி. அதற்குப் போக வேண்டுமாம்! சூத்ரனுக்கு ராஜாபிஷேகம்! அதற்கு நாம் பிராமணாள் சேவை செய்ய வேண்டுமாம். அவ்வளவு மண்டைக்கர்வம் ஒய்! யுத்தத்திலே ஏதோ ஜெயம் கிடைத்துவிட்டதாலேயே இந்த வீரர்களெல்லாம் கொக்கரிக்க ஆரம்பிச்சுட்டா .

கேசவப்பட்டர் : ஏன் ஒய்! போக சம்மதம் இல்லேன்னா அதை அப்பவே அவனிடம் சொல்லிவிடுவது தானே?

பாலச்சந்திரப்பட்டர் : மந்த புத்தி ஒய், உமக்கு போக இஷ்டமில்லேன்னா வேறு ஏவனாவது போஜன பிரியனாகப் பிடித்து அனுப்பிவிடமாட்டானா நாம் போனால்தானே நல்லது. இந்தக் காரியத்தை எந்த விதமாக முடிக்க வேண்டுமோ அவ்விதம் செய்ய காகப்பட்டரிடம் சம்மதம் அல்லவா வேண்டுமாம் பட்டாபிஷேகத்துக்கு. வாரும் ஒய் காகப் பட்டரிடம் சென்று கூறுவோம் மராட்டியத்தின் நிலையை .. மட்டம் தட்டுவோம், இந்த மாவீரர்களை …

கேசவப்பட்டர் : ஒய்! நீர் பேசுவதைப் பார்த்தால் விபரீதமாக இருக்கிறதே. சிவாஜி பட்டாபிஷேகம் செய்து கொள்வதற்குக் காகப்பட்டரின் சம்மதத்தை எப்படியாவது பெற்று வருவதாகக் கூறினீர் அவனிடம்.

பாலச்சந்திரப்பட்டர்: ஆமாம் அவனிடம் சொன்னேன். அசடு ஒய் நீர்… சொன்னால்?

கேசவப்பட்டர் : அப்படி என்றால்?

பாலச்சந்திரப்பட்டர் : ராஜ்யம்… பூஜ்யம் ஒய்! பூஜ்யம். அவா ஆசையிலே மண் விழச் செய்கிறேன். வாரும்.

(போகிறார்கள்)

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

ஒடுக்குமுறைகளைக் கடந்து நெல்லை மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !

கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில் ! என்ற திருச்சி மாநாட்டின் அறைகூவலையொட்டி நெல்லையில் மக்கள் அதிகாரம் சார்பாக 11.04.19 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இப்பொதுக் கூட்டத்திற்கு நெல்லை பகுதி மக்கள் அதிகாரம் தோழர் செ.முருகன் தலைமை வகித்தார். தோழர் அன்பு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். சி.ராஜூ சிறப்புரை ஆற்றினார். இறுதியாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தோழர் முருகன் தனது தலைமையுரையில், கார்ப்பரேட் – காவி பாசிசம் மிக கொடூரமான ஆபத்து எனவும், எனவே அதை முறியடிக்க எந்த தடைகளையும் தாண்டிச் செல்ல வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினார். விவசாயிகளின் பிரச்சினையை ஏறிட்டும் பார்க்காத அதிகாரிகள், தாமிரபரணியில் கோக் நிறுவனத்திற்கு தண்ணீர் எடுக்க ஒத்துழைப்பதை சுட்டிக்காட்டிப் பேசினார்.

மேலும் தொடர்ந்து தென்மாவட்டங்களில் நிலவி வரும் அரசின் அடக்குமுறைகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார். இந்த அடக்குமுறைகளையெல்லாம் முறியடிக்கும் வல்லமை இந்த மண்ணிற்கு உண்டு, ஏனெனில் சுதந்திரப் போரின் பல தியாகிகளை இந்த மண் ஈன்றெடுத்துள்ளது. அந்த வழியில் நாமும் பயணிப்போம் என்று கூறி தனது உரையை முடித்தார்.

அடுத்து சிறப்புரையாற்றிய தோழர் சி.ராஜூ கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிப்பதற்கு தேர்தல் பயன்படாது. அரசின் எல்லா நிர்வாக அமைப்புகளையும் பாசிஸ்டுகள் கைப்பற்றிக் கொண்ட சூழலில் மக்கள் போராட்டங்கள் மூலமாகத்தான் முறியடிக்க முடியும் என்பதை நிறுவிப் பேசினார். கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு அதிகார வர்க்கம் எப்படி கிரிமினல் கும்பலைப் போல கைக்கூலியாக வேலை செய்கிறது என்பதைப் பற்றிப் பேசினார்.

அதிகார வர்க்கத்தை மக்கள் தேர்ந்தெடுக்க முடியாது. திருப்பி அழைக்கவும் முடியாது. அரசின் கொள்கைகளை மக்கள் முடிவு செய்ய முடியாது. இவற்றிற்கெல்லாம் தேர்தல் வைப்பார்களா? என்று கேள்வி எழுப்பினார். ஆக மிகக் கொடூரமான கார்ப்பரேட் காவி பாசிசத்தையும் வீழ்த்துவதற்கான களத்தில் முன்னே நிற்பதற்கு மக்கள் அதிகாரம் தயாராக உள்ளது. பின்தொடர மக்கள் தயாராக வேண்டும் என்று அறைகூவல் விடுத்து தனது உரையை முடித்தார்.

தோழர் ராஜு உரை :

 

இறுதியாக, ம.க.இ.க கலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகள் வந்திருந்தவர்களுக்கு அரசியல் உணர்வூட்டின. நிகழ்ச்சி முடிந்த பின்னரும் புதிதாக வந்த நிறைய பேர் ஆர்வத்தோடு வந்து பேசிச் சென்றனர்.

காவல்துறை அனுமதி மறுத்து, நீதிமன்றத்தில் இரண்டு வாய்தா வாங்கி இறுதியாக நான்கு நாட்களுக்கு முன்புதான் அனுமதி கிடைத்தது. அதுவும் 2 மணி நேரம் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவு. நகர் முழுக்க ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் தேர்தலைக் காரணம் காட்டி போலீசால் மொத்தமாக கிழிக்கப்பட்டன. நிகழ்ச்சி தொடங்கும் போதே 30 -க்கும் மேற்பட்ட உளவுத் துறையினரும், 80 -க்கும் காவல்துறையினரும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் குவிந்து விட்டனர்.

இத்தனை ஒடுக்குமுறைகளையும் கடந்து நெல்லை மக்களின் திரளான பங்கேற்போடும் ஆர்வத்தோடும் பொதுக்கூட்டம் சிறப்புற நடந்து முடிந்தது. கார்ப்பரேட் காவி பாசிசத்தை எதிர்த்து நிற்பதற்கான உறுதியை பொதுக்கூட்டம் வந்திருந்தவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் என்பதில் மிகையில்லை.