Sunday, June 28, 2026
முகப்பு பதிவு பக்கம் 355

காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !

வேண்டாம் ஹைட்ரோ கார்பன் ! எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !!

பொன் விளைந்த பூமியாக இருந்த நைஜர் டெல்டா, எண்ணெய்க் கிணறுகளால் மனிதர்கள் வாழத் தகுதியற்ற பூமியாக மாறிவிட்டது.

கோய் ஆற்றின் கரையில் நிற்கும் எரிக் தூவின் முகம் வியர்வையில் மின்னுகிறது. ஆறும் மின்னுகிறது. அதன் மீது எண்ணெய்ப் படலம். என் பெற்றோர் மிகச்சிறந்த விவசாயிகள்” என்று சொல்லியபடியே ஆற்றோரம் இருக்கும் தனது வயல்வெளியைக் காட்டுகிறார். எங்கும் களைகள் மட்டுமே முளைத்திருக்கின்றன. கடலை, சோளம், மரவள்ளி, கருணைக் கிழங்கு என்று அனைத்தும் விளைந்த நிலம் அது. எங்களுக்குச் சாப்பிடுவதற்கும், விற்பதற்கும், சேமிப்பதற்கும் போதுமான விளைச்சல் இருந்தது. நிலம் வளமாக இருந்தது. இங்கே விவசாயிகள் ஒருபோதும் ஏழையாக இருந்ததில்லை.”

நைஜர் டெல்டா
நைஜர் டெல்டாவை காட்டும் வரைப்படம்

அதெல்லாம் ராயல் டச்சு ஷெல் நிறுவனம் 1950 அங்கே எண்ணெயைக் கண்டுபிடிக்கும் வரைதான். எங்கள் கிராமத்திலிருந்து 70 மைல் தூரத்தில் அவர்கள் எண்ணெயைக் கண்டுபிடித்தார்கள். 80-களின் தொடக்கத்தில்தான் எங்கள் வயல்களில் எண்ணெய் படிவதை நாங்கள் பார்த்தோம். விளைச்சல் மெதுவாகத்தான் குறையத் தொடங்கியது. ஆனால், வரவிருக்கும் அபாயத்தை அப்போது நாங்கள் புரிந்து கொள்ளவில்லை” என்றார் எரிக்.

அந்த டெல்டா பகுதி முழுவதும் குறுக்கு நெடுக்காக ஷெல் நிறுவனத்தின் எண்ணெய்க் குழாய்கள் வந்தன. குழாய்களிலிருந்து எண்ணெய் கசிவது வழக்கமாகிவிட்டது. ஒருபுறம் இப்படி விவசாயம் அழிந்து கொண்டிருக்க, மறுபுறம் டெல்டாவிலிருந்து விவசாயிகளை மொத்தமாக வெளியேற்றுவதற்கான சட்டத்தை இயற்றியது நைஜீரிய அரசு. நாட்டின் நிலம் அனைத்தும் அரசுக்கே சொந்தம்” என்ற கோட்பாட்டின்படி, நிலத்தின் மதிப்புக்கு இழப்பீடு தரவியலாது என்றும், நிலத்தை கையகப்படுத்தும் ஆண்டில் விளைந்த பயிர்களின் மதிப்பு என்னவோ அதன் அடிப்படையில் கணக்கிட்டு மட்டுமே இழப்பீடு என்றும் அறிவித்தது நைஜீரிய அரசு.

மார்ச் 1993-ல், 3 இலட்சம் ஒகோனி இன மக்கள் கென் சரோ  விவா தலைமையில் மாபெரும் அமைதிவழிப் போராட்டத்தை தொடங்கினர். அதன் விளைவாக ஒகோனி பிராந்தியத்தில் இருந்த 30 எண்ணெய்க் கிணறுகளை ஷெல் நிறுவனம் மூடவேண்டியதாயிற்று. இப்போராட்டத்தைத் தொடர்ந்து கொடிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது நைஜீரிய அரசு. கென் சரோவிவா உட்பட, ஒகோனி மக்கள் வாழ்வுரிமைக்கான இயக்கத்தின் தலைவர்கள் 8 பேர் மீது ஒரு பொய்வழக்கில் கொலைக்குற்றம் சாட்டித் தூக்கிலிட்டது நைஜீரிய அரசு. உலகம் முழுவதும் இதற்குக் கண்டனங்கள் எழுந்தன.

மாசடைந்த ஆறு. இந்த ஆற்று நீரைக் குடிக்கவோ அல்லது நீந்தவோ, மீன் பிடிக்கவோ கூடாது என எச்சரிக்கும் விளம்பரப்பலகை.

2004-ல் ஏற்பட்ட மிகப்பெரிய எண்ணெய்க் கசிவின் காரணமாக சுமார் 40 ஏக்கர் மாங்குரோவ் காடுகள் நாட்கணக்கில் தீப்பிடித்து எரிந்தன. கோய் கிராமத்தின் வயல்களுக்கும் அந்தத் தீ பரவியது. ஆறுகளிலும் ஓடைகளிலும் இருந்த மீன்கள் அழிந்தன. 2007-ல் மறுபடியும் எண்ணெய்க் கசிவு, மீண்டும் மாங்குரோவ் காடுகள் எரிந்தன. மர்மமான இருமல், புற்றுநோய், நுரையீரல் நோய், பார்வையிழப்பு உள்ளிட்ட இனம்புரியாத பல நோய்கள் பரவத்தொடங்கின. அங்கே வாழவே முடியாது என்ற நிலையில் மொத்த மக்களும் கிராமத்தை விட்டு வெளியேறினர்.

கோய் என்பது இப்போது ஒரு பேய்க் கிராமம். ”தடை செய்யப்பட்ட பகுதி. அருகே வராதீர்கள்” என்று ஒரு எச்சரிக்கைப் பலகையை அந்தக் கிராமத்தில் வைத்திருக்கிறது நைஜீரிய அரசு. இது ஒரு கிராமத்தின் கதை மட்டுமல்ல. நைஜர் டெல்டாவின் கதை.

படிக்க :
♦ இந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை !
♦ அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ?

30,000 சதுர மைல் பரப்புள்ள நைஜர் நதியின் டெல்டா ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரியது. உலகின் 3-வது மிகப்பெரிய சதுப்புநிலமும், மாங்குரோவ் காடுகளும் கொண்டது. 3 கோடி மக்கட்தொகை கொண்ட இந்த டெல்டாவின் 60% மக்கள் சுயசார்பு விவசாயிகள் மற்றும் மீனவர்கள்.

உலகிலேயே எண்ணெயால் சூழல் மாசுபடுத்தப்பட்ட பிராந்தியங்களில் நைஜர் டெல்டா முக்கியமான இடத்தில் இருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட இடங்களில் கூட இன்றளவும் மண்ணும் நிலத்தடி நீரும் பெரிதும் மாசுபட்டே இருக்கின்றன என்கிறது 2011-ம் ஆண்டு ஐ.நா நடத்திய ஆய்வு. இன்றைக்கும் சராசரியாக ஆண்டொன்றுக்கு 1.1 கோடி காலன் எண்ணெய்க் குழாய்களிலிருந்து கசிந்து நைஜர் டெல்டாவை நாசமாக்கிக்  கொண்டிருக்கிறது.

கென் சரோ விவா
நைஜர் டெல்டாவை சீரழித்த ஷெல் எண்ணெய் நிறுவனத்தை எதிர்த்து ஒகோனி இன மக்களை அணித் திரட்டிப் போரடியதற்காக நைஜீரிய இராணுவ சர்வாதிகார அரசால் தூக்கிலிடப்பட்ட போராளி கென் சரோ விவா

சூழலை நாசப்படுத்துவது மட்டுமின்றி, சமூகத்தையும் நாசமாக்குகின்றன எண்ணெய் நிறுவனங்கள். இன்று நைஜீரியாவில் எண்ணெய்த் திருட்டு என்பது ஆண்டொன்றுக்கு 60,000 கோடி ரூபாய் புழங்குகின்ற தொழில். ஆயுதம் தாங்கிய கூலிப்படைகள், சர்வதேச கார்ட்டல்கள், அரசு பாதுகாப்புப் படையினருக்கான இலஞ்சம் எனப் பல கோடி ரூபாய் புழங்கும் இந்த தொழிலில் சுமார் 26,000 பேர் வேலை செய்கின்றனர். 60,000 கோடி ரூபாயில் 80% அரசியல்வாதிகள், இராணுவம் மற்றும் எண்ணெய் வளத்துறையின் அதிகாரவர்க்கத்தினருக்குத்தான் செல்கிறது.

எண்ணெய்க் கசிவு மட்டுமல்ல பிரச்சினை. எண்ணெய்க் கிணறுகளிலிருந்து நிரந்தரமாக எரிகின்ற எரிவாயுத் தீயின் காரணமாக, சூழல் வெப்பமடைவது மட்டுமல்ல, அது அமில மழையாகவும் பூமிக்குத் திரும்ப வருகிறது. நைஜீரிய அரசின் கணக்குப்படியே ஆண்டொன்றுக்கு 31.3 கோடி கன அடி எரிவாயு எரிக்கப்பட்டு, 1.65 கோடி டன் கரியமிலவாயு டெல்டா பகுதியின் காற்றில் கலந்து வருகிறது.

இவ்வாறு சூழல் மாசுபடுவதன் விளைவாக டெல்டா பகுதியில் எங்கு திரும்பினாலும் தோல் நோய்கள், ஆஸ்துமா, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களைக் காணமுடிகிறது. அதுமட்டுமல்ல, விளைச்சல் கடுமையாக வீழ்ச்சியடைந்து விட்டது. எண்ணெய் கசிவையும் மீறி வளரும் தானியங்கள் எண்ணெயையும் உட்கொண்டு வளர்கின்றன. இந்த ஆறுகளிலும் ஓடைகளிலும் வளரும் மீன்களிலும் எண்ணெயின் வீச்சம் தெரிகிறது. இந்த தானியத்தையும் மீனையும்தான் மக்கள் சாப்பிடுகிறார்கள்.

விளைவு, இந்தப் பகுதியில் மக்களின் ஆயுட்காலமே குறைந்து விட்டது. நைஜீரிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 65 ஆண்டுகள். நைஜர் டெல்டாவில் சராசரி ஆயுட்காலம் 40 முதல் 43 ஆண்டுகள்தான்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்த ஓடைகளில் மீனும் நத்தையும் பிடித்து அதை விற்றுப் பிழைக்கும் பெண்கள் இங்கே ஏராளம். இந்த தொழில் செய்யும் பெண்கள் தோல் நோய் முதல் இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பலவிதமான நோய்களால் பாதிக்கப்படுவதும் சகஜம்.  ஒரு பெண் கருவுற்றாள். ‘‘உன் குழந்தை பிழைக்க வேண்டுமானால்,  ஓடையில் மீன் பிடிக்கப் போகாதே என்று எச்சரித்திருக்கிறார் மருத்துவர். ஆனால், அந்தப் பெண்ணுக்கு அந்த வேலை தவிர வேறு வழியில்லாத காரணத்தால், தொடர்ந்து மீன் பிடிக்கப் போனாள். விளைவு குழந்தை பிறந்த 6 மணி நேரத்தில் இறந்து விட்டது. நீ சுவாசித்த நச்சுக்காற்றுதான் உன் மகனைக் கொன்று விட்டது” என்று மருத்துவர் சொன்னதைக் கேட்டு உடைந்து அழுதாளாம் அந்தப் பெண். இதுபோல ஓராயிரம் கதைகள்.

இச்சூழல் மக்கள் மத்தியில் தோற்றுவித்த கோபத்தின் விளைவாக 2006-ம் ஆண்டில் நைஜர் டெல்டா மீட்பு இயக்கம்” என்ற பெயரில் பல ஆயுதக்குழுக்கள் தோன்றின. அவை நைஜீரிய அரசையும் போலீசையும் எதிர்த்து மோதின. 3 ஆண்டுகள் இந்த மோதல் தொடர்ந்தது. பிறகு 2009-ல் இந்த ஆயுதக் குழுக்களுடன் அரசு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டது.

ஒகோனி இன மக்கள் ஆர்ப்பாட்டம்
நைஜர் டெல்டா பகுதியில் ஷெல் நிறுவனம் நடத்திய பச்சைப் படுகொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கிற்கு ஆதரவு தரக்கோரி ஒகோனி இன மக்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

அந்த ஒப்பந்தத்தின்படி 30,000 முன்னாள் ‘போராளிகளுக்கு மாதம் தோறும் உதவித்தொகை, தொழில் பயிற்சி, எண்ணெய்க் குழாய்களைப் பாதுகாப்பதற்கான காண்டிராக்டுகள்” ஆகியவற்றைக் கொடுத்து அவர்களை பன்னாட்டு நிறுவனங்களின் கூலிப்படையாக மாற்றிவிட்டது நைஜீரிய அரசு. இதன் விளைவாகப் போராடிய இளைஞர்களில் பலர் மாஃபியா தலைவர்களாக மாறினர்.

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தபோது மாத உதவித்தொகையை அரசால் கொடுக்க முடியவில்லை. உடனே ’முன்னாள் போராளிகள்’ மீண்டும் ஆயுதம் ஏந்தினர். குழாய்களை உடைக்கத் தொடங்கினர். உடனே பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கான பாக்கியை செட்டில் செய்தது அரசு. வாழ்விழந்த மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், போராட்டத்தை ஊழல்படுத்தியதன் மூலம் தனக்கான கைக்கூலிகளை அரசும் பன்னாட்டு நிறுவனங்களும் உருவாக்கிக் கொண்டன.

படிக்க :
♦ இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே ?
♦ ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா !

ஷெல் நிறுவனத்துக்கு எதிராக மட்டும் சுமார் 1000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெரும்பாலான வழக்குகள் தள்ளுபடியாகின்றன அல்லது சிறிய இழப்பீட்டுக்குப்பின் முடிக்கப்படுகின்றன. மற்றவை ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றன.

ஷெல் நிறுவனம், ஆறுகளையும் வயல்களையும் மாசுபடுத்தியதற்கு இழப்பீடு கேட்டும், அவற்றைச் சுத்தம் செய்யக் கோரியும் 1997 எரிக்கின் தந்தை வழக்கு தொடுத்தார். 21 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த வழக்கு முடியவில்லை. ஆனால், பார்வை இழந்து, நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு எரிக்கின் தந்தை இறந்து போனார். இப்போது எரிக் அந்த வழக்கை தொடர்ந்து நடத்துகிறார்.

மீத்தேன் திட்டம்
எரிக் தூ

இத்தகைய வழக்குகளில் ஷெல் நிறுவனம் ஒரு மோசடியான வாதத்தை வழக்கமாக முன்வைக்கும். எண்ணெய்க் கசிவுக்கு நாங்கள் பொறுப்பல்ல. எண்ணெய்த் திருடர்கள் குழாய்களைச் சேதப்படுத்துவதுதான் காரணம்” என்று வாதிடும்.

ஒரு வாதத்துக்கு அதனை ஏற்றுக் கொண்டாலும், விளைநிலத்திலிருந்து விவசாயிகளை விரட்டி விட்டு, எண்ணெய்க் குழாய் போட்டால், பெண்டு பிள்ளைகளுக்குச் சோறு போடுவதற்காகச் சிலர் திருடத்தானே செய்வார்கள்?

ஆறுகளில் படிந்து விட்ட எண்ணெயை அகற்றுவோம்; விளை நிலத்தைச் சுத்தம் செய்து மீட்டுருவாக்கம் செய்வோம்; மீண்டும் மாங்குரோவ் காடுகளை உருவாக்குவோம்” என்று கூறுகிறது ஐ.நா-வின் ஹைட்ரோ கார்பன் மாசு அகற்றும் திட்டம். அவர்களது கணக்குப்படியே இதற்கு 30 ஆண்டுகள் ஆகுமாம்.

இன்று அப்பகுதி மக்கள் குடிக்கும் தண்ணீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 900 மடங்கு அதிகமாக பென்சீன் கலந்திருக்கிறது. நல்ல குடிநீருக்கும் வழியில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சோதனைகூடச் செய்யப்படவில்லை.

“என்னையே எடுத்துக் கொள்ளுங்கள், நான் ஒரு வசதியான விவசாயியின் மகன். ஆனால், எனக்குக் கிடைத்திருக்கும் சொத்து – வறுமை. பலருக்கு வேலை கொடுத்த நான் இன்று வேலை தேடுகிறேன். குழந்தைகளுக்குச் சோறு போட முடியவில்லை, படிக்கவைக்க முடியவில்லை. என்னுடைய தந்தை வாழ்நாள் முழுவதும் போராடி, நீதியைக் கண்ணால் காணாமலேயே செத்துப்போனார். இப்போது நான் போராடிக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை நான் செத்துவிட்டாலும், என் பிள்ளைகள் போராட்டத்தைத் தொடருவார்கள்” என்றார் எரிக் தூ.

அஜித்

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

மகாராட்டிரா : விவசாயிகளின் மயான பூமி !

காராட்டிராவில் கடந்த 2015 முதல் 2018 வரை 12,021 விவசாயிகள் தற்கொலை மூலம் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர். இந்தக் காலகட்டத்தில் நீங்கள் உங்களது  வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் கடக்கும் போது மகாராட்டிராவில் மட்டும் எட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

மகாராட்டிராவில் பா.ஜ.க தலைமையிலான தேவேந்திர பட்னாவிஸ் அரசு 2014 நவம்பர் முதல் ஆட்சி செய்து வருகிறது. சென்ற வாரத்தில் சட்டமன்றத்தில் மாநில  நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் தற்கொலை செய்து கொண்ட 12,021 விவசாயிகளில் 6,888 தற்கொலை சாவுகள் மட்டுமே மாவட்ட கமிட்டிகளின் ஆய்வின் படி அரசு உதவி பெறுவதற்கு தகுதியானவை என்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறார்.

அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், தற்கொலை செய்து கொண்ட 12,021 விவசாயிகளில்  6845 விவசாயிகளின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் நிதி உதவி செய்து இருப்பதாக கூறியிருக்கிறார். இன்னும் மூன்று மாதங்களில் மகாராட்டிரா சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிற நிலையில்  முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் விவசாயக் கடன் தள்ளுபடித் தொகையை ரூ. 8000 கோடி அதிகப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

படிக்க :
♦ இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே ?
♦ இந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை !

மகாராட்டிராவில் பா.ஜ.க ஆட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு ஜுன் மாதம், 50 இலட்சம் விவசாயிகளுக்காக ரூபாய் இருபத்தி நான்காயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடித் தொகையாக அறிவிக்கப்பட்டது.   இதுவரை 43.32 லட்சம் விவசாயிகள் இவ்விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தின் படி பயனுடைந்துள்ளதாகவும், மற்ற விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மீதித் தொகை செலுத்தப்பட இருப்பதாகவும் கூறுகிறார் தேவேந்திர பட்னாவிஸ்.

ஆனால் 2017 ஜூன் மாத விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்திற்குப் பின்னரும் 4500 விவசாயிகள் தற்கொலைகள் நடந்துள்ளன. இது கடந்த 2015 முதல் 2018 வரை நடந்த 12,021 விவசாயிகளின் தற்கொலையில் 32 விழுக்காடாகும்.

விவசாய நலிவையும்  விவசாயிகளின் தற்கொலைகளையும் பிரிக்கும் ஆளும் வர்க்க கும்பலின் நரித்தனம்:

இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான 610 விவசாயிகளின் தற்கொலை சாவுகளில் 192 விவசாயிகள் மட்டுமே அரசு அளிக்கும் நிதி உதவி பெறத் தகுதியானவர்கள். அதில் 96 பேர் இதற்கு தகுதியற்றவர்கள், மீதி 323 பேரின் தற்கொலை சாவுகளை விசாரித்து வருவதாக கூறியுள்ளது பா.ஜ.க. தலைமையிலான  மாநில அரசு. கடந்த 2014 நவம்பரில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க தலைமையிலான அரசு விவசாயிகளின் தற்கொலைகளை கொச்சைப்படுத்தி, அத்தற்கொலைகள் விவசாயம் சார்ந்தது இல்லை என்று  பொய்யுரைப்பதில் நரித்தனமாக செயல்படுகிறது.

கடந்த 2014 முதல் 2018 வரையிலும்,  தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின்  எண்ணிக்கையும், அவர்களில் மகாராட்டிரா அரசின் நிதி உதவி பெறுவதற்கு  தகுதியானவர்களாக தேர்வு செய்தவர்களின் எண்ணிக்கையையும் கீழே உள்ள படத்தில் ஆண்டுவாரியாக பார்க்கலாம்.

மகாராஷ்டிர விவசாயிகள் தற்கொலை
படம் -நன்றி: இந்து ஆங்கிலம்

தற்கொலை செய்து கொண்ட ஒவ்வொரு விவசாயியும்  தங்கள் நிலத்தை, பயிரை தனது பிள்ளைகள் போல ஒவ்வொரு பருவத்திலும்  நேசித்தவர்கள். அளப்பரிய விவசாய அனுபவம் பெற்றவர்கள். இவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் உழைப்பின் மூலம் மக்களுக்கு உணவு வழங்கிய சமூக மனிதர்கள். சாகும்போது தன் நிலத்தில்தான் உயிர் விட வேண்டும் என்று மாய்ந்தவர்கள் ஏராளம்.

ஆனால் விவசாயிகளை ஒரு சடப் பொருளாகவும், அவர்களை சந்தைக்கேற்ப உழைத்துத் தரும் ஒரு பிண்டமாகவும் ஆளும் வர்க்கக் கும்பல் பார்க்கிறது. விவசாயிகளைக் கொலையும் செய்துவிட்டு, நிவாரணத்திற்காக வகை பிரிக்கும் கொலைகார அரசாக ஆட்சியில் அமர்ந்திருக்கிறது பா.ஜ.க மாநில அரசு.

விவசாயக் கடன் தள்ளுபடி – விவசாயிகளை மீட்க வந்த ரட்சகனா ? இல்லை தேர்தலில் ஓட்டுப் பொறுக்கவா ?

விவசாய நெருக்கடிக்கு நிவாரணம், தற்கொலைக்கு நிதி உதவி என்பது விவசாயப் பிரச்சினைக்குத் தீர்வுபோல ஆளும் வர்க்கம் பரப்பி வருகிறது. இது புண்ணுக்குத் புணுகு தடவுவது போன்றது.

விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தை ஆளும் மாநில அரசு அமல்படுத்தும் போது, அந்தந்த மாநில எதிர்க்கட்சிகள் கடன் தள்ளுபடி திட்டம் அனைத்து விவசாயிகளையும்  சென்றடையவில்லை என்று கூப்பாடு போடுவதும், அனைத்து மாநிலக் கட்சிகளும் வித்தியாசமின்றி, தங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக விவசாய கடன் தள்ளுபடித் திட்டத்தை அறிவிப்பதும் நடைபெறுகிறது.

இதுவரை  இந்தியாவில் அறிவிக்கப்பட்ட 18 விவசாயக் கடன் தள்ளுபடி திட்டங்களுக்கும் தேர்தலுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 18 திட்டங்களில் பெரும்பான்மையானவை தேர்தல் வாக்குறுதியாகவும், தேர்தல் வெற்றித் திட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

விவசாய கடன் தள்ளுபடி
நன்றி: EPW –ஜூன் 8, 2019,

மகாராட்டிராவில் தொடர்ச்சியாக பல வருடங்களாக வறட்சி இருந்தாலும், விவசாயிகளைக் காக்க வந்த இரட்சகன் என்று கூறிக்கொண்டு 2014 நவம்பரில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க மாநில அரசு விவசாயிகளின் பல கட்டப் போராட்டத்திற்குப் பின் 2017-ல்தான் விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்தை அறிவித்தது. இப்போது இன்னும் 3 மாதங்களில் தேர்தல் நடைபெறவிருக்கிற நிலையில் கடன் தள்ளுபடித் தொகையில் கூடுதலாக ரூ. 8000 கோடி அதிகப்படுத்தியிருக்கிறது. சென்ற காங்கிரஸ் ஆட்சியின் போது தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் தற்கொலைகளை விட  மகாராட்டிரா பா.ஜ.க அரசின் ஆட்சியில்தான் விவசாயிகள்  தற்கொலைகள் இரட்டிப்பாகியிருக்கிறது.

விவசாய கடன் தள்ளுபடித் திட்டங்கள் சென்றடைய வேண்டிய விவசாயிகளைச் சேராமல், மடைமாற்றி விடப்படுகிறது. தங்கள் விவசாயக் கடன் தள்ளுபடியைக் கோரி விவசாயிகள், வங்கிகளின் வாயிலில் அலைந்து அலைந்து மனம் வெம்பி போயுள்ளனர்.

ashok manwar
அசோக் மன்வர்

அதற்கு உதாரணமாக, மகாராட்டிரா மாநிலத்தில் நடைபெற்ற இச்சம்பவமே சாட்சி: அசோக் மன்வர் என்ற மகாராட்டிராவின் வாசிம் மாவட்டத்தை சேர்ந்த  விவசாயி, முதலமைச்சர் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் ரூ. 1.4 லட்சத்திற்கு, விவசாயக் கடன் தள்ளுபடி சான்றிதழ் பெற்றிருக்கிறார். இந்த சான்றிதழ் கடந்த 2018 தீபாவளி அன்று மும்பையில் வைத்து அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அசோக்கிற்கு ரூ. 1.4 லட்சத்திற்குப் பதிலாக ரூ. 77,000-க்கு மட்டும்தான் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. மீதித் தொகையை தள்ளுபடி செய்ய அவர் மாவட்ட ஆட்சித் தலைவர் வரை சென்றும் பயனில்லை. இதனால் அவர் தன் கிராமத்திலிருந்து மும்பைக்கு வந்து முதலமைச்சரை சந்திக்கமுடியாமல், எதிர்க்கட்சித் தலைவர் தனஞ்செய் முண்டேவை சந்தித்து முறையிட்டு உள்ளார். தனஞ்செய் சந்திப்புக்கு பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, போலீசு அவரை ஒரு வேனில் ஏற்றி, மரைன் டிரைவ் காவல் நிலையத்தில் வைத்து மூன்று மணி நேர விசாரணைக்குப் பின் விடுவித்திருக்கிறது.

“ஊடகங்களா உனது கடனை தள்ளுபடி செய்கிறது? நீ தற்கொலை செய்து கொள்ள இங்கு வந்தாயா?” என்று போலீசு தொடர்ச்சியான கேள்விகளால் அவரை துளைத்தெடுத்துள்ளது. மறுபடியும் விசாரணைக்கு அழைத்துச் செல்வார்களோ, இல்லை வழக்கு பதிவு செய்வார்களோ என்ற பயத்திலும்,  இந்த விசாரணைக்குப் பின் போலீசால் தனக்கு அச்சுறுத்தல் நேருமோ என்ற அச்சத்திலும் அசோக் இருக்கிறார். தன்னுடைய ரூ. 1.4 லட்சம் கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும்,  இந்தக் கடனுக்கு வட்டி முழுவதும் தான் வங்கியில் செலுத்த இருப்பதாகவும் கூறுகிறார் அவர்.

எந்த கார்ப்பரேட் முதலாளியாவது, தன்னுடைய கடனை தள்ளுபடி செய்ய வீதிக்கு வந்திருக்கிறானா? இல்லை கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறானா? ஆனால் இந்தியாவில் மட்டும் தனியார்மயம் தாராளமயம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு மூன்று லட்சத்திற்கு அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து இருக்கிறார்கள்.

farmers suicide

பிரதான் மந்திரி பாசல் யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள  பயிர்க் காப்பிட்டுத் திட்டத்தின் படி பயிர் சேதங்களுக்கு வழங்கக் கூடிய தொகையில் மகாராட்டிராவில் மட்டும் 2018 டிசம்பர் வரை ரூ. 1416 கோடி நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடனும், அக்கடனுக்குத்  தள்ளுபடியும் அளவில்லாமல் வழங்கப்படுகிறது.

தொடர்ச்சியான வறட்சி, பயிர் சேதம், இடுபொருட்களின் விலை அதிகரிப்பு, வங்கிகளில் கடன் கிடைக்காமல் கந்து வட்டிகாரர்களிடம் கடன் சுமை, விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தின் தோல்வி, விவசாயம் பொய்த்துப் போனதால் பிற வேலைகளுக்கும் வழியில்லாமை, விளை பொருட்களின் விலை வீழ்ச்சி, விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை இல்லாமை போன்ற காரணங்கள் விவசாயிகளை வாழ வழிவிடாமல் மேலும் மேலும்  கடன் சுமையை சுமத்துகின்றன.

இடுபொருட்களின் விலைஉயர்வும், விவசாய விளைப் பொருட்களின் விலைகளை  தீர்மானிக்கும் அதிகாரமும் ஆட்சியாளர்கள், வர்த்தக சூதாடிகள், கார்ப்பரேட்  முதலாளிகள் கையில் குவிந்து உள்ளது.

இந்த அதிகாரத்தை அவர்களிடமிருந்து பறித்து, விவசாயிகள் அவற்றை தீர்மானிக்கும்  அதிகார சக்திகளாக மாறுவதுதான் விவசாய நெருக்கடிக்கு தீர்வாக இருக்க முடியும்.!

பரணிதரன்

செய்தி ஆதாரம் :
♦ 12,021 Farmers Committed Suicide Under the BJP Regime in Maharashtra
♦ The Politics of Farm Loan Waivers A Comparative Study
♦ Between 2015 and 2018, More Than 12,000 Farmers Killed Themselves in Maharashtra
♦ Maharashtra: CM Fadnavis’ plan to expand farm loan waiver to cost Rs 8,000 crore
♦ Maharashtra Farmer Comes To Mumbai With Loan Waiver Complaint, Detained
♦ Over 12,000 farmers died of suicide in three years in Maharashtra: Subhash Deshmukh

மழையில் கரையும் தார் சாலை ! | பாகலூர் பகுதி மக்கள் போராட்டம்

மல்லசமுத்திரம் – முகலப்பள்ளி இடையே போடப்பட்ட சாலை தார் சாலை அல்ல பேப்பர் சாலை ! – மக்கள் போராட்டம்

பாகலூருக்கு அருகே உள்ள மல்லசமுத்திரம், குடிசெட்லு, ஒத்தரப்பள்ளி, கணகண்டப்பள்ளி, ஆலூர் மற்றும் முகலப்பள்ளி ஆகிய கிராம உழைக்கும் மக்கள் புழங்கக்கூடிய சாலைகள் முழுவதும் தற்போது தார்ச்சாலைகளாக மாற்றப்பட்டதாக சொல்லப்படுகின்றன. ஆனால், உண்மையில் இந்த தார்ச்சாலைகள் மக்கள் பயன்பாட்டுக்கு சிறிதும் பயன்படாதவண்ணம் அதிகாரிகளின் கொள்ளைகளுக்கு கணக்குக் காட்டுவதற்கென்றே போடப்பட்ட சாலைகளாக உள்ளன.

“இங்கே இப்பகுதியில் போடப்பட்ட சாலை தார் சாலை அல்ல பேப்பர் சாலை!” என்று கோபத்துடன் குமுறுகின்றனர் இப்பகுதிவாழ் உழைக்கின்ற மக்கள். இந்நிலையில் மக்களின் கோபக்கனலை எதிரொலிக்கும் வண்ணம் இப்பகுதியில் செயல்பட்டு வருகின்ற மக்கள் அதிகாரத்தின் செயல்வீரர்கள் நேரில் சென்று மக்களை சந்தித்தும், கள ஆய்வு செய்தும் மக்களை திரட்டி போராடிவருகின்றனர்.

அந்தவகையில் மல்லசந்திரம் – முகலப்பள்ளி இடையே போடப்பட்ட சாலை தார் சாலை அல்ல! பேப்பர் சாலை! – என்ற முழக்கத்தை முன்வைத்து ஆயிரக்கணக்கில் துண்டறிக்கைகள் தமிழிலும், தெலுங்கிலும் அச்சிட்டு அப்பகுதி மக்களிடையே விநியோகித்து பிரச்சாரம் செய்தனர்.

அதன் அடிப்படையில் திட்டமிட்டப்படி கடந்த 20.06.2019 அன்று காலை 11.00 மணியளவில் மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தை பாகலூர் சர்க்கிள் அருகே நடத்தினர். பாகலூர் பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பினை சேர்ந்த தோழர் இரவிச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு-வைச் சேர்ந்த தோழர் சங்கர், மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர் இராமசாமி, முகலப்பள்ளி கிராம விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயி திரு. இராமசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக, மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த தோழர் ஜெயராமன் நன்றியுரையாற்றினார்.

தோழர் இரவிச்சந்திரன் தனது தலைமையுரையில்; “ஆர்ப்பாட்டம் மக்களின் ஆதரவுடன் நடத்தப்படவுள்ள செய்தியறிந்த அதிகாரிகள். உடனே தொடர்பு கொண்டு விரைவில் தரமான தார்ச்சாலையாக போடப்போகிறோம் என்றும், அதனால் தாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டாம் என நைச்சியமாக பேசிச் சென்றதை அம்பலப்படுத்திப் பேசினார்.

மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர் இராமசாமி தனது உரையில், போடப்பட்ட தார்ச்சாலையின் அவலத்தை படம்பிடித்து மனுவாக தந்தும், வாட்சப்பில் அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தும் பலமுறை வற்புறுத்தியும் பலனில்லாமல் போன அனுபவத்தை பட்டியலிட்டு பதிவுசெய்து பேசினார்.

விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயி திரு. இராமசாமி தனது உரையில் இப்பகுதிவாழ் உழைக்கின்ற மக்கள் இச்சாலையினால் அவதியுறும் கிராம மக்களின் துன்ப துயரங்களை பட்டியலிட்டு பகிர்ந்துச்சென்றார்.

படிக்க:
எட்டு வழிச் சாலைன்னு நிலத்த பிடுங்குறான் ராமர் சிலைன்னு வீட்ட இடிக்கிறான் !
♦ தேசிய கல்விக் கொள்கை 2019 | CCCE கலந்துரையாடல் – செய்தி | படங்கள்

தோழர் சங்கர் தனது கண்டன உரையில் மக்களிடம் வரி வாங்கி வயிறு வளர்க்கும் இந்த அரசு, சாதாரண தார்ச்சாலைக்கூட ஒழுங்காக அமைத்துத் தராது தோற்றுப் போயிருக்கிறது. இதுவே கார்ப்பரேட்டிற்கு என்றால் ஓடோடிச்சென்று எட்டுவழிச்சாலை முதற்கொண்டு அனைத்தும் செய்து கொடுத்து கார்ப்பரேட்டின் அடியாளாகத் தன்னை காட்டிக்கொள்கிறது என்பதை விவரங்களுடன் பேசினார்.

இந்நிலையில் மக்களாகிய நம்மிடையே உள்ள ஒரே ஆயுதம் இதனை நாம் மக்கள் அதிகாரமாக ஒன்றுபட்டு எதிர்த்துப் போராடுவது ஒன்றுதான் நம்மிடையே உள்ள தீர்வு என்று பேசினார்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

***

துண்டறிக்கை :

மல்லசந்திரம் – முகலப்பள்ளி இடையே போடப்பட்ட சாலை தார் சாலை அல்ல பேப்பர் சாலை!

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், குடிசெட்லுவிலிருந்து மல்லசமுத்திரம் வரை 40 லட்சத்துக்கு மேல் செலவு செய்து தார்சாலை போடப்பட்டுள்ளது.

மேடு, பள்ளங்கள் நிறைந்ததாகவும், பல இடங்களில் தடுப்புச் சுவர் கட்டப்படாமலும், தரமற்றதாகவும் இருக்கிறது இந்தச் சாலை. ஒரு நாள் பெய்த மழைக்கே சாலையில் அரிப்பு ஏற்பட்டு ஆங்காங்கே விரிசல் விட்டு, சாலையோரத்தில் போடப்பட்ட மண் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

அதிக பள்ளம் உள்ள இடங்களில் சிறு பாலங்கள் அமைக்காததால் மேட்டு நிலத்தில் இருந்து வரும் மழைநீர், ரோட்டின் மேல் ஓடி 200 அடி தூரத்திற்கு தார்ச்சாலை சேறும் சகதியுமாக மாறுவதும், ரோடு அறுந்து காணாமல் போகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 28 லட்சம் செலவில் முகலப்பள்ளியில் போடப்பட்டிருக்கும் ஒரு கிலோ மீட்டர் சாலையோ இதைவிட மோசமான நிலையில் இருக்கிறது.

இதுமட்டுமன்றி மல்லசந்திரத்துக்கும் முகலப்பள்ளிக்கும் இடையில் 200 அடி தூரத்திற்கு மட்டும் சாலை அமைக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். இருபுறமும் புதுரோடு போட்டுவிட்டு, இடையில் ஏன் போடவில்லை என ஊர்மக்கள் கேட்டால், 2 கிலோ மீட்டருக்கு மட்டும்தான் ரோடு போட ஒப்பந்தமாகியுள்ளது என்கிறார்கள். 200 அடி தூரத்திற்கு மட்டும் தனியாக டெண்டர் விட்டு, தாரும் ஜல்லியும் வாங்கி, ரோலர் கொண்டு வந்து வேலை செய்வார்களா? இந்த லட்சணத்தில்தான் அரசாங்க வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகளும் காண்ட்ராக்டர்களும்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் போடப்பட்ட துண்டறிக்கைகள் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

விதை, உரம், பூச்சிக்கொல்லி, டிராக்டருக்கு டீசல் என எல்லாவற்றுக்கும் வரி கட்டி, விளைந்த பொருளை எடுத்துச் செல்லும்போது டோல்கேட்டிலும் தண்டம் கட்டும் விவசாயிக்கு, முதுகெலும்பை பதம்பார்க்கும் தரமற்ற சாலை! சேலம் உருக்காலையை விழுங்கி, காடுகள், மலைகளை அழித்து கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் ஜிண்டால் கார்ப்பரேட் கம்பெனிக்கோ எட்டு வழிச்சாலை! இப்போது தெரிகிறதா, இந்த அரசு யாருக்காக வேலை செய்கிறது என்று?

மல்லசந்திரம் வழியாகத்தான் ஒத்தரப்பள்ளி, கணகொண்டப்பள்ளி, முகலப்பள்ளி ஆகிய ஊர்களை சேர்ந்த விவசாயிகள் தினம்தோறும் காய்கறிகள் எடுத்து செல்கிறார்கள். பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பல பள்ளி வாகனங்களும் செல்கின்றன. இப்படி விவசாயிகள் அன்றாடம் பயன்படுத்தும் சாலைகளைத் தரங்கெட்ட வகையில் போடுவதுதான் புதிய இந்தியாவா?

படிக்க:
காவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா ?
♦ நாசகாரத் திட்டங்களை கைவிடு ! கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்

குடிசெட்டிலு – மல்லசந்திரம் இடையிலான இந்த சாலையை தரமான தார்சாலையாக போட வேண்டும். பக்கவாட்டில் தடுப்பு சுவர் அமைத்துத் தரவேண்டும். சிறுபாலங்கள் அமைத்து மழை நீர் ஓடுவதை முறைப்படுத்த வேண்டும். என பல மாதங்களாக பி.டி.ஓ -வுக்கு போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்புவது, நேரிலேயே அழைத்துச் சென்று காட்டுவது என எல்லாவற்றையும் செய்த பிறகும், இப்படி தரமற்ற சாலை அமைத்து உள்ளனர் என்றால் அந்த தைரியம் எங்கிருந்து வந்தது?

ஏன் இந்த அலட்சியம்? சாலைக்காக உத்தரவில் கையெழுத்துப் போடும் அதிகாரிகளோ சாலை போடும் காண்டிராக்ட்ரையோ மக்கள் கேள்வி கேட்க முடியாது. மீறி கேட்டால் போலீசை வைத்து பொய் கேஸ் போட்டு மிரட்ட முடியும் என்கிற தைரியத்தில்தான் கொள்ளையடிக்கிறார்கள். கேள்வி கேட்போரை மிரட்டுகிறார்கள். நமது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும், அரசு அதிகாரிகளை கேள்வி கேட்கவும், தவறு செய்தால் தட்டிக் கேட்கவும் மக்கள் வீதிக்கு வராமல் இந்த இழிநிலைக்கு முடிவு கட்ட முடியாது.! வாருங்கள் அணிதிரள்வோம்!

  • அதிகாரிகள் – காண்ட்ராக்டர்கள் கூட்டு கொள்ளையடிப்பதையும், தரமற்ற பேப்பர் சாலை போடுவதையும் தடுத்து நிறுத்துவோம்!
  • கிராமங்கள்தோறும் தரமான சாலைகள் அமைக்கப் போராடுவோம்!
  • 40%, 50% கமிஷன் வாங்கும் அரசு அதிகாரிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்யப் போராடுவோம்!

போராட்டத்தின் போது எழுப்பப்பட்ட முழக்கங்கள் :

மக்கள் அதிகாரம், வாழ்க!
மக்கள் அதிகாரம், வாழ்க!

பேப்பர்சாலை! பேப்பர்சாலை!
மல்லசந்திரம் – முகலப்பள்ளியில்
போடப்பட்டது தார்ச்சாலை அல்ல!
பேப்பர்சாலை! பேப்பர்சாலை!

செல்லூர் ராஜு-வின் தெர்மாக்கோலு
காத்துல பறந்தது, காத்துல பறந்தது!
மல்லசந்திரத்தில் போட்ட சாலை,
மக்கள் வரிப்பணத்தில் போட்ட சாலை,
மழையில் கரையுது, மழையில் கரையுது!

ஓட்டு போட்டு, வரிப்பணம் கட்டி
ஊருக்கே சோறு போடும்
விவசாயிக்கு மரணச்சாலை!
காடு, மலையை வெட்டியெடுத்து
கனிம வளத்தைக் கொள்ளையடிக்கும்
கார்ப்பரேட்டு கம்பெனிகளுக்கு
ஆறுவழி, எட்டுவழி!
யாரு கேட்டா? யாரு கேட்டா?

கூட்டுக் கொள்ளை! கூட்டுக் கொள்ளை!
அதிகாரிகள், அரசியல்வாதிகள்
சேர்ந்து நடத்தும் கூட்டுக் கொள்ளை!
டெண்டருக்கே பத்து பர்சண்டு!
ரோடு போட்டா அம்பது பர்சண்டு!
அநியாயக் கொள்ளை! அநியாயக் கொள்ளை!

அம்பலப்படுத்துவோம்! அம்பலப்படுத்துவோம்!
ஏசி ரூம்ல உக்காந்துகிட்டு,
ஓசி சோத்த தின்னுகிட்டு,
ஊர்க்காசுல மஞ்ச குளிக்கும்,
ஊழல்பேர்வழிகளை அம்பலப்படுத்துவோம்!

தட்டிக் கேட்போம்! தட்டிக் கேட்போம்!
வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி,
லஞ்ச ஊழலில் மூழ்கித் திளைக்கும்
அதிகாரிகளைத் தட்டிக் கேட்போம்!

வரவைப்போம்! வரவைப்போம்!
மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல
ஆணவம் பிடித்த அதிகாரிகளை,
அதிகாரத் திமிர் பிடித்த அதிகாரிகளை
வீதிக்கு வரவைப்போம்!
தகர்த்தெறிவோம்! தகர்த்தெறிவோம்!
ஆளும் தகுதி இழந்துவிட்ட,
மக்கள் எதிரி ஆகிவிட்ட
மக்கள்விரோத அரசமைப்பைத்
தகர்த்தெறிவோம்! தகர்த்தெறிவோம்!

கையில் எடுப்போம்! கையில் எடுப்போம்!
மக்கள் அதிகாரத்தைக் கையில் எடுப்போம்!

மக்களுக்கு சேவை செய்ய மறுக்கின்ற,
பதில் சொல்ல மறுக்கின்ற
அதிகாரிகள், அரசியல்வாதிகளைத்
தேர்ந்தெடுக்க – திருப்பியழைக்க
மக்களுக்கு அதிகாரம் உள்ள
அரசமைப்பைக் கட்டியமைப்போம்!

மக்கள் அதிகாரம், வாழ்க!
மக்கள் அதிகாரம், வாழ்க!

தகவல் :
மக்கள் அதிகாரம்
பாகலூர் பகுதி, 
தருமபுரி மண்டலம்.
தொடர்பு எண்: 9790138614, 9942953018.

தேசிய கல்விக் கொள்கை 2019 | CCCE கலந்துரையாடல் – செய்தி | படங்கள்

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு சார்பாக தேசிய கல்விக் கொள்கை 2019 பற்றிய கலந்துரையாடல் கூட்டம் 20.06.2019 அன்று பெரியார் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரா. அரசு தலைமை தாங்கினார். பேரா. கதிரவன், பேரா. கருணானந்தன், பேரா. சிவக்குமார், டாக்டர். இரவீந்திரநாத், தோழர். கணேசன் மற்றும் தோழர். தினேஷ் ஆகியோர் உரையாற்றினர்.

பேச்சாளர்கள் தேசிய கல்விக் கொள்கையின் பாதகங்களை விளக்கி பேசினர்.

பேராசிரியர் அரசு

பேராசிரியர் அரசு தனது தலைமையுரையில், தேசிய கல்விக் கொள்கையில் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு (UGC) பதிலாக தேசியக் கல்வி ஆணையம் (NEC) என்ற அமைப்பு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக பிரதமரும் துணைத்தலைவராக கல்வி அமைச்சரும் இருப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இது பேராபத்தானதாகும்.

உயர்கல்வியை தற்போது நிர்வகிக்கின்ற UGC ஒரு தன்னாட்சி அமைப்பு. அதன் தலைவராக கல்வியாளர்களே இருப்பார்கள். ஆனால் கல்விக் கொள்கை பரிந்துரைப்படி NEC ஆளும் அரசின் கைப்பாவையாக இருக்கும். ஏறத்தாழ BJP-யின் கிளை அமைப்பாகவே செயல்படும் என்று விளக்கி பேசினார்.

டாக்டர். இரவீந்திரநாத் பேசும்போது தேசிய கல்விக் கொள்கையில் சிறுவயதிலிருந்தே இந்துத்துவ கருத்துகளை திணிப்பதற்காக திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றார். மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக தொண்டர்கள் நியமிக்கப்படுவார்கள் என கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. தொண்டர்கள் என்ற போர்வையில் RSS அமைப்பைச் சேர்ந்த நபர்களை ஆசிரியர்களாக நியமிப்பார்கள்.

மருத்துவக் கல்வியை பொருத்தவரை, நவீன அறிவியல் அடிப்படையிலான மருத்துவமுறைக்கு பதிலாக அறிவியல் அல்லாதவற்றை மருத்துவம் எனக் கூறி நடைமுறைப்படுத்துவார்கள். உதாரணமாக மோடி அரசு அறிவித்துள்ள தேசிய மருத்துவ ஆணையத்தில் உள்ள 24 பேர் குழு மருத்துவக் கல்வியை கட்டுப்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது. அதில் நான்கு பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்.

டாக்டர். இரவீந்திரநாத்

இதனை கட்டுப்படுத்தக்கூடிய மொத்த அதிகாரமும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு உள்ளது. இதன் விளைவாக பிஜேபி அரசு நேரடியாக பழைய புராணங்களில் சொல்லப்பட்டதெனக் கூறி அறியலற்ற விசயங்களை எளிதாக நடைமுறைப்படுத்துவர். உதாரணமாக இராஜஸ்தான் மாநிலத்தின் பிஜேபி ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் லைசாலுக்கு பதிலாக மாட்டு மூத்திரத்தைக் கொண்டு தரையை சுத்தம் செய்ய வேண்டும் என அமைச்சர் கூறினார்.
தேசிய கல்விக் கொள்கையிலே மருத்துவக் கல்லூரிகள் தாங்களே கல்விக்கட்டணத்தையும் பாடத்திட்டங்களையும் முடிவு செய்துகொள்ளலாம் எனக் கூறுகிறது.

மோடி அரசு சமீபத்தில் கார்ப்பரேட்கள் லாப நோக்கில் மருத்துவக் கல்லூரியை தொடங்கலாம் என அறிவித்துள்ளது. அதேபோல 600 மாவட்ட அரசு மருத்துவமனைகளை அரசு – தனியார் கூட்டின் மூலம் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளது. இதன்மூலம் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் தனியார்களுக்கு கொடுக்கப்படும்.

தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைப்படி கல்விக் கட்டணத்தையும் பாடத் திட்டத்தையும் அவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம். இதன் வாயிலாக சாதாரண மக்கள் மருத்துவப் படிப்பிற்குச் செல்ல முடியாத நிலையே ஏற்படும். எனவே தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் வந்துள்ள இந்த சதியை நாம் முடியடிக்க வேண்டும் எனப் பேசினார்.

பேராசிரியர் கதிரவன் பேசுகையில் தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ள தேசிய ஆராய்ச்சி அமைப்பை பற்றி விரிவாகப் பேசினார்.

தற்போது அரசு நடத்துகின்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஆராய்ச்சி நிதிக்கான வரவு செலவு கணக்குகள் மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளைக் கொண்டு சரிபார்க்கப்படுகிறது. ஆனால் தனியார் கல்வி நிறுவனங்கள் தாங்களே கணக்காளர்களைக் கொண்டு ஆராய்ச்சி நிதியை பயன்படுத்தியதாக கணக்கு காட்டுகின்றனர். இதில் அரசு தலையிடுவதில்லை. தனியார் பல்கலைக்கழகங்கள் நடத்துகின்றவர்கள் அதன் மூலம் வரும் லாபத்தைக் கொண்டு பல்வேறு தொழில்களை செய்கின்றனர் (சினிமா எடுப்பது, ஹோட்டல், போக்குவரத்து).

பேராசிரியர் கதிரவன்

தேசிய கல்விக் கொள்கையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை ஒரே மாதிரி நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்காக 20,000 கோடி ஒதுக்கப்பட்டால் 10,000 கோடி ரூபாய் தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். இது தனியார்களுக்கு சாதகமாகவே அமையும்.

கல்லூரிகள் தாங்களாகவே படிப்புச் சான்றிதழ்களை வழங்கிக் கொள்ளலாம் (degree granting colleges), கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் தனியார் நிறுவனங்களையும் அனுமதிப்பது போன்ற பரிந்துரைகள் உயர்கல்வியின் தரத்தை மேலும் மோசமாக்குவதோடு தனியார் கல்வி நிறுவனங்களின் தீவிரக் கொள்ளைக்கே ஆதரவாக அமையும் என்று விளக்கினார்.

அடுத்து பேசிய பேராசிரியர் கருணானந்தன் இந்துத்துவ கார்ப்பரேட் கூட்டணிதான் இந்த கல்விக் கொள்கை, இது ஒரே நாடு, ஒரே மொழி என்பதற்கான கல்விக் கொள்கை என்றார்.

இந்த கல்விக் கொள்கை முற்றிலுமாக மையப்படுத்துதலையே முன்வைக்கிறது. 40,000-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் 800 பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் பிரதமரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் விளைவாக கல்வி மாநில பட்டியலிருந்து மையப் பட்டியலுக்கு மாற்றப்படும். நமக்கு எவ்விதமான கல்வி வேண்டும் என்று நாம்தான் (மாநில அரசுதான்) முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நமக்கு வேண்டியதைப் பெற முடியும். ஆனால் தற்போது ஆளுகின்ற அடிமை அரசுக்கோ மாநில சுயாட்சி பற்றி எந்த அக்கறையும் கிடையாது. தங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தால் போதும் என்று இருக்கின்றனர்.

பேராசிரியர் கருணானந்தன்

பள்ளி மாணவர்களுக்கு பல மொழிகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இதன் வழியே சமஸ்கிருதத்தை திணிப்பதுதான் இவர்கள் நோக்கம். பழைய பண்பாடு, இந்திய பெருமிதம், பழைய அறிவியல் பற்றியெல்லாம் கல்விக் கொள்கை பேசுகிறது. இவைகளனைத்தும் உண்மை பிரச்சினைகளிலிருந்தும் விடுதலை உணர்விலிருந்தும் நம்மை மாற்ற நினைக்கின்ற முயற்சி. எனவே இக்கல்விக் கொள்கையில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்பதெல்லாம் பொருளற்றது.

இக்கல்விக் கொள்கையை முற்றிலுமாக நாம் நிராகரிக்க வேண்டும். நமக்கான கல்விக் கொள்கையை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். மத்தியில் யாரோ ஒருவர் தீர்மானிப்பதை அனுமதிக்க முடியாது என்று கூறினார்.

1986 கல்விக் கொள்கை வந்த போது ஆசிரியர் சங்கங்கள் போராடின. இறுதியில் ஊதிய உயர்வுக்காக கல்விக் கொள்கையை ஒப்புக்கொள்வதாக கையெழுத்திட்டனர். ஆனால் தற்போது ஆசிரியர் சங்கங்கள் கல்விக் கொள்கையைப் பற்றிப் பேசக்கூட இல்லை. இது போன்ற கூட்டங்கள் அவர்களுக்கு உத்வேகத்தை வழங்கலாம் என கூறி முடித்தார்.

அடுத்து பேசிய பேராசிரியர்  சிவக்குமார், சில அமைப்புகள் தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ள இந்தி திணிப்பை எதிர்கின்ற அளவிற்கு தனியார்மயத்தை குறித்துப் பேசுவதில்லை. காரணம் அவர்கள் தனியார் கல்லூரிகள் நடத்துகின்றனர். இப்போக்கு தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டத்தை கட்டுவதற்கு தடையாக உள்ளது. 2000-ம் ஆண்டிலிருந்தே கல்வி குறித்து வந்த அறிக்கைகள் கல்வியாளர்களால் உருவாக்கப்படவில்லை.

பேராசிரியர்  சிவக்குமார்

முதலாளிகளை தலைவர்களாகக் கொண்டே உருவாக்கப்பட்டு வருகிறது. இவர்களின் பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்தியும் வருகிறது. பொதுவாக ஒரு நாட்டின் கல்விக் கொள்கைகள் அதன் ஆளும் வர்க்கங்களின் நலன்களை ஒட்டியே உருவாக்கப்படும். அதனடிப்படையில் பார்க்கும்போது தற்போதைய கல்விக் கொள்கை நான்காவது தொழிற்புரட்சியை கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

பொறியியல், அறிவியல் படிக்கும் மாணவர்கள் கலை, சமூக அறிவியல் பாடங்களையும் சேர்த்து சொல்லிக் கொடுக்க வேண்டும் அப்போதுதான் புதியவற்றை படைக்கின்ற ஆற்றல் உள்ள மாணவர்களை உருவாக்க முடியும் என்ற கருத்து உலக வர்த்தகக் கழகத்திலும்(WTO), உலகப் பொருளாதார மன்றத்திலும் (WEF) பேசிவருகிறார்கள். அதையே தற்போது கல்விக் கொள்கையும் பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

தோழர் கணேசன்

புரட்சிகர மாணவர் இளைஞர் முண்ணனியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன், தேசிய கல்விக் கொள்கையில் இரு முக்கிய அபாயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்று கல்வியை காவிமயமாக்குவது மற்றொன்று இந்திய உயர்கல்வி சந்தையை சர்வதே சந்தையோடு இணைப்பது, அதாவது உயர்கல்வியை சர்வதேசமயமாக்குவது. இதனை முறியடிக்க தேசிய கல்விக் கொள்கை குறித்த அபாயத்தை RSYF மாணவர்களிடம் எடுத்துச் செல்லும் எனக் கூறினார்.

தோழர் தினேஷ்

அகில இந்திய மாணவர் பெருமன்றத்தின் தேசியச் செயலாளர் தோழர் தினேஷ், தேசிய கல்விக் கொள்கையில் பள்ளிக் கல்வி குறித்து முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளைப் பற்றி பேசினார். தற்போதுள்ள கட்டமைப்பை மாற்றி பள்ளிக் கல்வியில் 5+3+3+4 என்பதை கல்விக் கொள்கை முன்வைக்கிறது. மூன்று வயதிலிருந்தே கல்வி கட்டாயம் எனக் கூறுகிறது. எட்டாம் வகுப்பிற்கு மேல் தொழிற்கல்வி மற்றும் இளங்கலை படிப்பில் சேர்வதற்கு நீட் போன்ற பொதுத் தேர்வு போன்ற பரிந்துரைகளின் பாதகங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

கூட்டத்தில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். பெரும்பான்மையாக கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இறுதியில் பேரா. அரசு அவர்களின் நன்றி உரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.

தகவல் :
பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, (CCCE)

இத்தாலிய பாசிஸ்டுக் கட்சி ஒரு பூர்ஷுவாக் கட்சி !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 3 | பாகம் – 15

டோக்ளியாட்டி

த்தாலிய பூர்ஷுவாக்கள் ஓர் ஒருங்கிணைந்த அரசியல் அமைப்பைப் பெற்றிருந்தனர். ஆனால், அது ஒரு அரசியல் கட்சி அல்ல. அது ஃப்ரீமசோன்றி அல்லது கூட்டுரிமைக் கழகம் என்று பெயர் பெற்றிருந்தது. யுத்தத்திற்கு முன்னர் ஃப்ரீமசோன்றிதான் பூர்ஷுவாக்களின் ஒரே முழுமையான அரசியல் அமைப்பாக இருந்து வந்தது. இத்தாலியை ஒன்றுபடுத்தும் போராட்டத்தில் அது தலையாய பங்கு கொண்டது. இத்தாலியின் தேச விடுதலை இயக்கத்துக்கான போராட்டத்திலும் முக்கிய பங்கு வகித்தது. அது மட்டுமன்றி, இத்தாலிய பூர்ஷுவாக்களின் பல்வேறு பிரிவுகளை அரசியல் ரீதியில் ஒற்றுமைப்படுத்துவதிலும், குட்டிபூர்ஷுவாக்கள், மத்தியதர பூர்ஷுவாக்கள் மீது பெரும் பூர்ஷுவாக்களின் செல்வாக்கை நிலைநாட்டுவதிலும் அது குறிப்பிடத்தக்க பங்காற்றிற்று.

அக்காலத்தில் ஃப்ரிமசோன்றியின் இயைபு குறித்த புள்ளி விவரங்கள் ஏதும் எனக்குத் தெரிந்தவரை கிடைக்கவில்லை. ஆனால் அவ்வாறு ஒருக்கால் சர்வே புள்ளி விவரங்கள் கிடைக்குமானால் குட்டிபூர்ஷுவாக்களும் ஊதியம் பெறும் ஊழியர்களும் பெரும் எண்ணிக்கையில் அதில் இருந்திருப்பது தெரியவரும். இந்த விஷயத்தை அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் துல்லியமாக இதே கூறுகள் பின்னால் தேசியப் பாசிஸ்டுக் கட்சியிலும் இடம் பெற்றதை நீங்கள் காணுவீர்கள்.

குட்டிப் பூர்ஷுவாக்கள் ஃப்ரீமசோன்றியில் ஏன் சேர்ந்தார்கள்? சட்டம் என்பது சரிவர மதிக்கப்படாத ஒரு சமுதாயத்தில், ஆளுபவர்களாலும் ஆளப்படுபவர்களாலும் அந்தச் சட்டம் அடிக்கடி மீறப்படும் ஒரு சமுதாயத்தில் ஃப்ரீமசோன்றி தங்களுடைய குழுக்களைப் பாதுகாக்கக்கூடிய ஓர் அமைப்பு என்று கருதியதாலேயே குட்டி பூர்ஷுவாக்கள் அதில் தம்மை இணைத்துக் கொண்டனர். அது ஒரு பரஸ்பர உதவிக்கழகமாக இருந்து வந்தது. ஊதியம் பெறும் ஊழியர்கள் தங்கள் வேலைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அதில் சேர்ந்தனர். இதன் மூலம் சிலர் உயர்பதவிகளையும் பெற முடிந்தது. விவசாயத்துறை பூர்ஷுவாக்களும் தொழிலதிபர்களும் கூட ஃப்ரீமசோன்றியில் சேர்ந்திருந்தனர். யுத்த முற்கால இத்தாலிய சமுதாயத்தில் மிகவும் விரிவான ஒன்றிணைந்த அமைப்பாக இதனைப் பூர்ஷுவாக்கள் கருதினர்.

முதலாளிகளின் கூட்டுரிமைக் கழகம். (freemasonry)

யுத்தப் பிற்காலத்தில் இரண்டு பெரிய கட்சிகள் அரசியல் அரங்கில் தோன்றின. யுத்தத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்த சோஷலிஸ்டுக் கட்சி போர் தொடங்குவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே பூர்ஷுவாக்களுடன் தனக்கிருந்த தொடர்பைத் துண்டித்துக் கொண்டது (உண்மையில் ஃப்ரீமசோன்றியுடனான அதன் தொடர்பு போர் தொடங்குவதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் முடிவுக்கு வந்தது). அது வர்க்க உணர்வு கொண்ட ஒரு சுதந்திரமான கட்சியாக இத்தாலி முழுவதும் வியாபித்திருந்தது. அதே சமயம் பாப்புலர் கட்சியும் இத்தாலியில் செயல்பட்டு வந்தது.

பாப்புலர் கட்சி இத்தாலிய சமுதாயத்தில் ஒரு புதிய நிகழ்வுப் போக்காகும். நகரப்புற, கிராமப்புற குட்டி பூர்ஷுவாப் பகுதியினரையும் விவசாயிகளையும் அதுவரை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அடித்தளமாக இருந்த ஏனைய பகுதியினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக, அரசியல் கட்சியாக அது உருவெடுத்தது. அதுவரை இந்த நகர்ப்புற, கிராமப்புற குட்டி பூர்ஷுவாப் பகுதியினரின் ஆதரவில்தான் எல்லாக் கட்சிகளும் இயங்கி வந்தன.

பாப்புலர் கட்சி தனக்கே உரிய ஒரு வேலைத் திட்டத்துடன் மத சார்புடைய அமைப்பாக உருவெடுத்தது. சோஷலிஸ்டுக் கட்சியின் முன்னேற்றத்தை, வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் ஓர் அமைப்பாக பாப்புலர் கட்சி இருக்க வேண்டும் என்பதே கத்தோலிக்க திருச்சபையின் விருப்பம். இந்தக் குறிக்கோள் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதே சமயம் பிளவுபடும் போக்கை இது வெளிப்படுத்திற்று. இத்தாலிய பூர்ஷுவாக் கட்சிகளின் பாரம்பரியப்படி அது பிளவுபடவும் செய்தது. யுத்தப் பிற்கால நெருக்கடி முற்றுவதற்கு இதுவும் காரணமாகும்.

ஆக, யுத்தத்திற்குப் பிறகு தங்களது சொந்த அரசியல் நிறுவனத்தை உருவாக்கிக் கொள்ளும் பிரச்சினை பூர்ஷுவாக்களுக்கு ஏற்பட்டது.

ஆரம்பத்தில் பாசிஸ்டுக் கட்சி இந்தப் பணியை வரித்துக் கொள்ளவில்லை. பூர்ஷுவா வர்க்கத்தின் மிகவும் பிற்போக்குப் பகுதியினரது சர்வாதிகாரத்தை நிலைநாட்டும் பொருட்டும், அந்தச் சர்வாதிகாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டும் தொழிலாளர்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது அது இந்தப் பணியை ஏற்றுக் கொண்டது.

தொடக்க காலத்தில் பாசிஸ்டுக் கட்சி எப்படி இருந்தது என்பதை ஏற்கெனவே பார்த்தோம்.

பாசிஸ்டுக் கட்சிக் கருவாகி உருவாகி வளர்ந்து வலுப்பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னரும் பின்னரும் அதன் நிலைமை எவ்வாறிருந்தது என்பதை இப்போது பார்ப்போம். அகஸ்டியோவில் நடைபெற்ற பாசிஸ்டுக் கட்சியின் மூன்றாவது காங்கிரசின்போது, அதாவது ரோம் காங்கிரசின்போது அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் நம்மிடம் இருக்கின்றன.

சட்டம் என்பது சரிவர மதிக்கப்படாத ஒரு சமுதாயத்தில், ஆளுபவர்களாலும் ஆளப்படுபவர்களாலும் அந்தச் சட்டம் அடிக்கடி மீறப்படும் ஒரு சமுதாயத்தில் ஃப்ரீமசோன்றி தங்களுடைய குழுக்களைப் பாதுகாக்கக்கூடிய ஓர் அமைப்பு என்று கருதியதாலேயே குட்டி பூர்ஷுவாக்கள் அதில் தம்மை இணைத்துக் கொண்டனர்.

இதன்படி கட்சியின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 1 இலட்சத்து 51 ஆயிரம். இவர்களில் 14 ஆயிரம் பேர் வணிகர்கள் (வணிகர் என்ற சுட்டுப் பெயர் பல்வேறு பகுதியினரையும் குறிக்கும் என்பதையும் இவர்கள் செல்வந்தர்கள் என்பதையும் கருத்திற்கொள்ள வேண்டும்), 4 ஆயிரம் பேர் தொழிலதிபர்கள், 18 ஆயிரம் பேர் நிலக்கிழார்கள், 21 ஆயிரம் பேர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், 10 ஆயிரம் பேர் வாழ்க்கைத் தொழிலாளர்கள், 7 ஆயிரம் பேர் அதிகாரிகள், 15 ஆயிரம் பேர் ஊதியம் பெறும் ஊழியர்கள், 25 ஆயிரம் பேர் ஆலைத் தொழிலாளர்கள், 27 ஆயிரம் பேர் விவசாயத் தொழிலாளர்கள்.

இந்தப் புள்ளி விவரங்களைச் சற்று மிகையானதாக எடுத்துக் கொண்டு பார்த்தாலும் கூட, உறுப்பினர்களில் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் விவசாயத் தொழிலாளர்கள் என்பதைக் காணலாம். இந்த விவசாயத் தொழிலாளர்கள் பெரும்பாலும் எமிலியாவைச் சேர்ந்தவர்கள். கிராமப்புறக் குட்டி பூர்ஷுவா மற்றும் மத்தியதர பூர்ஷுவா பிரிவின் கீழ் வருபவர்கள். பாசிச வளர்ச்சியின் முதல் கட்டத்தில் அதன் பிரதான வெகுஜன அடித்தளமாக இருந்தவர்கள்.

தொழிலதிபர்கள், வணிகர்கள், நிலக்கிழார்கள், மாணவர்கள் (முதலில் குறிப்பிடப்பட்டவர்களின் புதல்வர்கள்), வாழ்க்கைத் தொழிலாளர்கள் இவர்கள் எல்லோரையும் சேர்த்துக் கணக்கிட்டால் 67 ஆயிரம் பேராகிறது. அதாவது மொத்த எண்ணிக்கையில் பாதி ஆகிறது. அடுத்து 22 ஆயிரம் ஊழியர்களையும், அதிகாரிகளையும் எடுத்துக் கொண்டால் இதுவும் பெரும் எண்ணிக்கையை எட்டுகிறது. 25 ஆயிரம் தொழில்துறைத் தொழிலாளர்களும் மாலுமிகளும் உறுப்பினர்களாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதுதான் மிகவும் ஐயத்துக்குரியதாக இருக்கிறது.

படிக்க:
இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே ?
ஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை !

எனினும் இதனை உண்மை என்று எடுத்துக்கொண்டால்கூட ஒட்டுமொத்த சதவீதத்தில் இந்த 25 ஆயிரம் பேர் கட்சியின் இயல்பை நிர்ணயிப்பவர்கள் அல்ல என்பது தெளிவு. உண்மையில் 67 ஆயிரம் பூர்ஷுவாக்களும் 22 ஆயிரம் ஊழியர்களும்தான் கட்சிக்கு அதன் இயல்பை அளிக்கிறார்கள். ஆக, பாசிஸ்டுக் கட்சி மிகப்பெரும்பாலும் பூர்ஷுவாக் கட்சி என்பதும், ஊதியம் பெறும் ஊழியர்கள் மீது வலுவான செல்வாக்கு செலுத்துகிறது என்பதும், அதன் கிளைகள் தொழிலாளி வர்க்கத்தின் மீதும் விவசாயத் தொழிலாளர்கள் மீதும் வியாபித்துள்ளன என்பதும் இதிலிருந்து புலனாகும்.

(தொடரும்)

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே ?

1

இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த தங்கம், வைரம், வைடூரியம் போன்ற நவரத்தின ஆபரணங்கள் எங்கே..?

நண்பர்களே….

பொ.வேல்சாமி

ஞ்சை பெரிய கோவிலுக்கு இராஜராஜ சோழனும் அவருடைய அக்காள் குந்தவை நாச்சியாரும் மற்றும் பலரும் கொடுத்த பல்வேறு வகையான ஆபரணங்களைப் பற்றிய தகவல்களை இராஜராஜ சோழன் வெட்டிய கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. குறைந்தபட்சம் அந்த ஆபரணங்களை ஒரு லாரியிலாவது ஏற்ற வேண்டும். இராஜராஜ சோழன் காலத்திற்கு பின்னர் வந்த ஆட்சியாளர்களும் இறுதியாக ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள் காலம் வரையில் அந்த ஆபரணங்கள் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. மராட்டிய மன்னர்களும் ஏராளமான நிலங்களையும் நகைகளையும் தஞ்சை பெரிய கோவிலுக்கு அளித்த கல்வெட்டுகளும் உள்ளன. இந்த நிலங்களும் நகைகளும் எங்கே போயின..?

படிக்க:
அரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 !
இந்திய நாடு அடி(மை) மாடு ! புதிய ஜனநாயகம் ஜூன் 2019

இதே போன்று ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் திருப்பதி கோவிலுக்கும் சோழர் காலத்திலிருந்து 19-ம் நூற்றாண்டு வரை பல்வேறு வகையான நில தானங்களையும் பெரு மதிப்புள்ள ஆபரணங்களையும் பல மன்னர்கள் கொடுத்துள்ளனர். “கோயிலொழுகுஎன்ற நூலில் ஸ்ரீரங்கம் கோவில் பெற்ற தானங்களும் அக்கோவில் சார்ந்த பல வரலாற்று நிகழ்வுகளும் கடந்த 1000 ஆண்டுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே போன்று திருப்பதி கோவிலில் வரலாற்றுக் காலங்களில் பதிவு செய்யப்பட்ட நூலைதிருமலை ஒழுகுஎன்று குறிப்பிட்டுள்ளார்கள். இந்த இரண்டு பதிவுகளிலும் சொல்லப்பட்ட சொத்துகளும் நகைகளும் இன்றும் அந்தந்த கோவில்களில் உள்ளன. தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் ஏன் இவை இல்லை..?

ஸ்ரீரங்கம், திருப்பதி கோவில்களில் காலங்காலமாகப் பதிவு செய்யப்பட்ட செய்திகள் நூலாக வெளிவந்துள்ளன. அந்த இரண்டு நூல்களின் இணைப்பை உங்களுக்கு கொடுத்துள்ளேன். மேலும் இராஜராஜ சோழன் கொடுத்த ஆபரணங்களைப் பற்றிய கல்வெட்டுகள் ஒரு தனித் தொகுதியாகதஞ்சை பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் பாகம் 1 ” (தானங்களைப் பற்றியது) வெளிவந்துள்ளது. அந்த நூலின் இணைப்பையும் கீழே உங்களுக்குக் கொடுத்துள்ளேன்.

(கீழுள்ள கோப்புகளை தரவிறக்கம் செய்ய, லிங்கின் மீது அழுத்தி, Free Download பட்டனை அழுத்தவும்)

தஞ்சை பெரிய கோவிலுக்கு இராஜராஜ சோழன் கொடுத்த தங்கம் வைரம் வைடூரியம் முத்து பவளம் போன்ற இரத்தினங்களால் செய்த நகைகளின் தொகுதிகளைக் கூறும் கல்வெட்டுகள் தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுகள்

கோயிலொழுகு (ஸ்ரீரங்கம் கோவில் வரலாற்றுப் பதிவு – 1000 ஆண்டு காலத்துப் பதிவுகள்)

1976-ல் பதிப்பிக்கப்பட்டது கோயிலொழுகு – 1976

திருமலை ஒழுகு (திருப்பதி கோவில் வரலாற்றுப் பதிவு – 1000 ஆண்டு காலத்துப் பதிவுகள்) திருமலை ஒழுகு

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

காவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா ?

ச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளைக்கூடப் பின்பற்ற மறுப்பதன் மூலம் கர்நாடகாவிற்குச் சாதகமாகச் செயல்படுகிறது, காவிரி ஆணையம்.

“காவிரியில் தமிழகத்திற்குரிய ஜூன் மாத ஒதுக்கீடான 9.19 டி.எம்.சி. நீரைக் கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும்” என மே மாத இறுதியில் நடந்த காவிரி ஆணையக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. எனினும், ஜூன் மாதம் தொடங்கிப் பத்து நாட்கள் கடந்த பிறகும் ஒரு டி.எம்.சி. தண்ணீர்கூடக் கர்நாடகாவிலிருந்து மேட்டூர் அணைக்கு வந்துசேரவில்லை. இதுவரை வந்த நீரின் அளவு 0.76 டி.எம்.சி.தான் எனப் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. வந்து சேர்ந்த நீரின் அளவைப் பார்த்தால், அது கர்நாடக அணைகளில் இருந்து கசிந்து வெளியேறிய நீராகத்தான் இருக்குமேயொழிய, திறந்துவிடப்பட்ட நீராக இருக்க வாய்ப்பேயில்லை.

காவிரி ஆணையம்
குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்.

காவிரிப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள், தீர்ப்புகளைக்கூடக் கழிப்பறைக் காகிதம் போலத் துடைத்துப் போடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் கர்நாடக அரசு, ஒரு பல்லில்லாத ஆணையத்தின் உத்தரவுக்கு என்ன மதிப்பைத் தந்துவிடப் போகிறது? காவிரி ஆணையத்தின் கூட்டம் முடிந்த மறுநிமிடமே, கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.சிவக்குமார், ஆணையத்தின் முடிவு குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும்” என அறிவித்தார். இதன் பொருள், தண்ணீரைத் திறந்துவிட முடியாது என்பது தவிர வேறெதுவுமாக இருக்க முடியாது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தும் பொறுப்பும் கடமையும் காவிரி ஆணையத்திற்கு மட்டுமே உண்டு.  எனினும், இவ்வாணையம் காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் உள்ள அணைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தோடு அமைக்கப்படவில்லை. மேலும், இவ்வாணையம் அமைக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு வருடம் முடிந்துவிட்ட பிறகும்கூட, ஆணையத்திற்கான முழுநேரத் தலைவரை மோடி அரசு நியமிக்கவில்லை. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைமையகம் பெங்களூருவில் அமைக்கப்படவில்லை. இவற்றைச் செய்து முடிப்பதற்கான அறிகுறிகளும் இதுவரை தென்படவில்லை. காவிரி ஆணையம் தப்பித்தவறிக்கூடத் தமிழகத்திற்குச் சாதகமாக நடந்துவிடக் கூடாது என்பதுதான் இந்த இழுத்தடிப்பின் பின்னுள்ள உள்நோக்கம். காவிரி ஆணையமும் மோடி அரசின் இந்த உள்நோக்கத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில்தான் செயல்பட்டு வருகிறது.

காவிரி ஆணையம் சூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் முடிய பத்து நாட்களுக்கு ஒருமுறை கூடி, கர்நாடகம் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடுவதைக் கண்காணித்து, அதற்கேற்ப உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், ஆணையமோ கடந்த ஆண்டில் ஜூலையில் ஒருமுறை கூடியது. அதன் பின்னர் டிசம்பரில்தான் மற்றொருமுறை கூடியது. தமிழகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் குறுவை சாகுபடிக்காக ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும் எனக் கோரிய பிறகுதான் கடந்த மே மாத இறுதியில் ஆணையம் கூடியிருக்கிறது.

படிக்க :
♦ காவிரி : தொடருகிறது வஞ்சனை !
♦ காவிரி : வஞ்சிக்கப்படும் தமிழகம் !

காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் உள்ள அணைகளில் காணப்படும் நீர்வரத்து எவ்வளவு, எவ்வளவு நீரை, எதற்காக கர்நாடக அரசு வெளியேற்றுகிறது, அணையின் நீர் இருப்பு எவ்வளவு என்பதையெல்லாம் ஆணையம் மாதாமாதம் கண்காணித்துப் பதிவு செய்ய வேண்டும். ஆனால், இந்த விதிமுறையை ஆணையம் நடைமுறைப்படுத்துவதேயில்லை.

குறிப்பாக, கர்நாடக அரசு கோடை கால சாகுபடிக்குக் காவிரியிலிருந்து எவ்வளவு நீரை எடுத்துப் பயன்படுத்துகிறது என்பதை ஆணையம் கண்காணிப்பதேயில்லை. மேலும், அம்மாநில அரசு காவிரி நீரைச் சட்டவிரோதமான முறையில் ஏரிகளுக்குக் கடத்திக்கொண்டு போய் பதுக்கி வைப்பதையும் ஆணையம் கண்டுகொள்வதேயில்லை.

கடந்த ஐந்து மாதங்களில் காவிரி ஆணையம் ஒருமுறைகூடக் கூடவில்லை. கடந்த அக்டோபர் 2018 தொடங்கி மே 2019 முடியவுள்ள எட்டு மாதங்களில் கர்நாடகம் தர வேண்டிய 51.61 டி.எம்.சி. நீரைத் தமிழகத்திற்குப் பெற்றுத் தருவது குறித்து ஆணையம் அக்கறை கொள்ளவில்லை. பா.ஜ.க.-வின் பினாமியான எடப்பாடி அரசும் அந்நிலுவை நீர் குறித்து வாய் திறக்கவில்லை.

கடந்த மே மாத இறுதியில் நடந்த ஆணையத்தின் கூட்டத்தில் இந்த நிலுவை நீர் பற்றி விவாதிக்க முன்வராத ஆணையம், மேகேதாட்டு அணை தொடர்பாக விவாதிப்பதை நிகழ்ச்சி நிரலில் ஒன்றாக முன்வைக்க முயன்று, பின்னர் தமிழக அரசின் எதிர்ப்பின் காரணமாகப் பின்வாங்கிக் கொண்டது.

இப்படி மைய அரசும் காவிரி ஆணையமும் கர்நாடகாவிற்குச் சாதகமாகவே நடந்து வருவதால்தான், தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்குரிய பங்கைத் திறந்துவிடும் அளவிற்குத் தனது அணைகளில் தண்ணீர் இல்லை” எனத் துணிந்து சொல்கிறது, கர்நாடக அரசு. வறட்சி காலத்திலும்கூட, கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பை அதற்கேற்ற விதத்தில் (distress formula) காவிரிப் பாசன மாநிலங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், கர்நாடகாவோ காவிரி ஆற்றைத் தனக்கு மட்டுமே பாத்தியப்பட்ட சொத்தாகவும், அதில் தமிழகத்திற்கு எள்ளளவும் உரிமை கிடையாது என்றும் திமிர்த்தனமாகவே நடந்து வருகிறது.

கர்நாடக அரசு கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்திற்குக் காவிரியில் திறந்துவிட்டுள்ள நீரின் அளவையும், அந்நீர் திறந்துவிடப்பட்ட காலமுறையையும் அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், தன்னால் தேக்க முடியாத உபரி நீரைத் திறந்துவிட்டிருக்கும் உண்மையையும், காவிரியின் மீதான தமிழகத்தின் உரிமையை மறுத்து, தமிழகத்தை உபரி நீரை வெளியேற்றும் வடிகாலாக மாற்றியிருக்கும் அவலத்தையும் யாரும் விளங்கிக் கொள்ள முடியும்.

காவிரிப் பிரச்சினை
குறுவை சாகுபடிக்கு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிடக்கோரி கல்லணையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்திய தென்னிந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த விவசாயிகள்.

உச்ச நீதிமன்றம் காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்குப் பாதகமான தீர்ப்பை அளிக்கிறது. மைய அரசோ ஒரு பல்லில்லாத ஆணையத்தை அமைக்கிறது. கர்நாடகமோ எதற்கும் கட்டுப்படாமல் அடாவடித்தனமாகச் செயல்படுகிறது. இந்த ஆட்டத்தைத் தமிழகம் இன்னும் எத்துணை நாட்களுக்குச் சகித்துப் போக முடியும்?

தமிழகம் குறுவை சாகுபடியை முற்றிலுமாகக் கைவிட்டுவிட வேண்டும் என்பதுதான் கர்நாடகாவின் இறுதி நோக்கம். ஏனென்றால் குறுவை சாகுபடி நடக்கும் ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் முடியவுள்ள மாதங்களில்தான் கர்நாடகம் தனது அணைகளிலிருந்து 143 டி.எம்.சி. நீரைத் தமிழகத்திற்குத் திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

“தனது அணைகளில் போதிய அளவு நீரில்லை” என்ற காரணத்தைக் கூறியே, கடந்த ஏழு ஆண்டுகளாகத் தனது நோக்கத்தை வெற்றிகரமாகத் தமிழகத்தின் மீது திணித்துவிட்டது, கர்நாடகா. இந்த ஆண்டாவது குறுவை பயிரிடுவதற்குரிய நீரைக் கர்நாடகாவிடமிருந்து பெற்றுத் தருமாறு டெல்டா விவசாயிகள் கோரிவரும்போது, அதனை உத்தரவாதப்படுத்தாத மைய அரசு, கிருஷ்ணா நதி நீர் இணைப்புப் பற்றி வாய்ப்பந்தல் போடுகிறது.

தமிழகம் தனக்குரிய காவிரி நீரைக் கேட்டால், மோடி அரசோ கானல் நீரைக் காட்டும் மோசடியில் இறங்குகிறது. இந்த நதி நீர் இணைப்பு என்பது காவிரியில் தமிழகத்திற்குரிய வரலாற்றுரீதியான, நியாயமான, சட்டரீதியான பங்கை மறுக்கும் நயவஞ்சகமாகும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படிக் கர்நாடகம் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடாவிட்டால், அது குறுவை சாகுபடியில் ஈடுபடும் டெல்டா மாவட்ட விவசாயிகளை மட்டும் பாதிக்கப் போவதில்லை. குடிநீருக்குக் காவிரியை நம்பியிருக்கும் தமிழகத்தின் 24 மாவட்ட மக்களையும் நா வறண்டு சாகச் செய்யும்.

படிக்க:
♦ அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ?
♦ அதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் !

காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கை கர்நாடகம் திறந்துவிடுவதை உத்தரவாதப்படுத்த மறுக்கும் மைய அரசுதான், டெல்டா மாவட்டங்களின் நிலத்திலும், கடலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அடுத்தடுத்துத் திணிக்கிறது. தமிழக மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்ற மறுக்கும் மைய அரசுதான் தமிழக விவசாயிகளின் நிலங்களை ஆக்கிரமித்து எரிவாயுக் குழாய்களைப் பதிக்கிறது, மின்கோபுரங்களை அமைக்கிறது.

இவை ஒவ்வொன்றும் தனித்தனியான பிரச்சினைகள் அல்ல. தனித்தனியான போராட்டங்களுக்குப் பதிலாக ஒருங்கிணைந்த முறையில் தமிழகம் தழுவிப் போராடுவது மூலம்தான் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசைப் பணிய வைக்க முடியும்.

ரஹீம்

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

விண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்

செல்போன்களை அதிகம் பயன்படுத்துவதால் மண்டைக்குள் ‘கொம்பு’ முளைக்கிறது!
– ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சுற்றுலா பயணிகள் செல்ல நாசா அனுமதி!

கருத்துப்படங்கள் : வேலன்

நூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள்

சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள் : உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை

சுற்றுச்சூழல் சட்டங்கள் குறித்த இந்த நூல் முயற்சி, சூழல் ஆர்வலர்களுக்கு சட்டத்தை அறிமுகப்படுத்தும் எளிய முயற்சியே. எனவே, இது முழுமையானதல்ல. சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு சட்டம் குறித்த ஒரு அறிமுகத்தை கொடுப்பது மட்டுமே இந்த முயற்சியின் நோக்கம். (நூலின் அறிமுகப்பகுதியிலிருந்து…)

தொழில் வளர்ச்சி என்ற பெயரில் காடுகளும், நீர்நிலைகளும், மற்ற இயற்கை வளங்களும் அழிக்கப்படுகின்றன. மேலும் இயந்திரமயமாதல், நகரமயமாதல், தொழில்மயமாதல் உள்ளிட்ட காரணங்களால் நிலம், நீர், காற்று உள்ளிட்ட அனைத்தும் மாசுபடுத்தப்படுகின்றன. அரசு, தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோரின் பொறுப்பற்ற போக்கால் ரசாயனக் கழிவுகள், மின்னணுக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், அணு (உலை)க் கழிவுகள் போன்ற துறை சார்ந்த கழிவுகளும் பெருகி மனிதர்களோடு இப்பூவுலகில் வாழும் அனைத்து உயிரிகளின் உயிருக்கும், நல்வாழ்வுக்கும் உலை வைத்துக் கொண்டிருக்கின்றன.

அரசு அமைப்புகளோ, பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களை அழிப்பதையும், சூழலை மாசுபடுத்துவதையும் ஆதரிக்கும் போக்கிலேயே தொடர்ந்து செயல்படுகின்றன. இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் அவை போன்ற தவிர்க்க முடியாத சில அமைப்புகளின் நெருக்குதல் காரணமாக சுற்றுச்சூழல் சட்டத்தை பெயரளவில் இயற்றிவிட்டு அவற்றை செயல்படுத்த முடியாத நிலைக்கு தள்ளுவதிலேயே அரசு அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

சேலம் எட்டுவழிச்சாலைக்காக பறிக்கப்பட்ட பசுமை வயல்கள்.

நீதித்துறையிலும் பெரும்பாலான நீதிபதிகள் பொருளாதார வளர்ச்சிக்காக சுற்றுச்சூழலை பாதிப்பதில் தவறில்லை என்ற கருத்தையே கொண்டுள்ளனர். ஆனால் இத்தகைய நீதிபதிகளுக்கு இடையிலும்கூட வி.ஆர்.கிருஷ்ணய்யர், பி.என்.பகவதி உள்ளிட்ட நீதிபதிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அயராது பாடுபட்டுள்ளனர். உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எம்.சி. மேத்தா போன்றவர்களும் சுற்றுச்சூழல் சட்டவியலை வளர்த்தெடுப்பதில் பெரும்பங்கு வகித்துள்ளனர்.

இத்தகைய நன்முயற்சிகள் நடைபெற்று வந்தாலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முதன்மை பொறுப்பு கொண்ட அரசுத்துறைகள் சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற சட்டவிரோத அநீதிகளுக்குத் துணைபோவதில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் மாசுக்கட்டுப்பாடு வாரியம் வந்தநிலையில்தான் பாலாறு பாழ்பட்டுபோனது. வேலூர் பகுதியின் நிலம் தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் நஞ்சானது. கரூர், திருப்பூர் போன்ற இடங்களின் நிலத்தடி நீர்கூட மாசுபட்டது. இவை சில உதாரணங்கள்தான். சொல்வதற்கு இன்னும் ஏளாளமிருக்கிறது.

இந்த சுற்றுச்சூழல் சீரழிவுகளுக்கு அரசுத்துறைகளும், தனியார் துறையில் உள்ள பெருவணிக நிறுவனங்களும் முதன்மை காரணமாக இருந்தாலும், அப்பகுதியில் வசிக்கும் குடிமக்களுக்கு இதில் பங்கே இல்லை என்று முற்றிலுமாக புறம் தள்ளிவிட முடியாது. சுற்றுச்சூழல் குறித்த புரிதலின்மை, புரிந்திருந்தாலும் சீர்கேடுகள் நடக்கும்போது செயலற்று இருத்தல், சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு எதிராக போராடுபவர்களை ஏளனமாக பார்த்து அவர்களை தனிமைப்படுத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளும் குற்றச்செயல்களே! இவை மறைமுகமாக அல்ல … நேரடியாகவே சூழலை சீரழிப்பவர்களுக்கு உதவி செய்யும் செயல்களாகும். (நூலிலிருந்து பக்.14-15)

… இந்தியாவில் 1972-ம் ஆண்டில் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டமும், 1974-ம் ஆண்டில் தண்ணீர் (பாதுகாப்பு மற்றும் மாசுத்தடுப்பு)ச் சட்டமும், 1981-ம் ஆண்டில் காற்று (பாதுகாப்பு மற்றும் மாசுத்தடுப்பு)ச் சட்டமும், 1986-ம் ஆண்டில் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு)ச் சட்டமும் உருவாக்கப்பட்டன.

தண்ணீர் (பாதுகாப்பு மற்றும் மாசுத்தடுப்பு)ச் சட்டம் – 1974

நகர்ப்புற, தொழில்மய உலகில் உருவாகும் மாசுகளை கட்டுப்படுத்த உருவான முதல் சட்டமாக, தண்ணீர் (பாதுகாப்பு மற்றும் மாசுத்தடுப்பு)ச் சட்டம் 1974ஐக் கூறலாம். இந்த சட்டத்தில்தான் ”மாசுபடுதல்” என்றால் என்னவென்று வரையறை செய்யப்பட்டது.

இதன்படி, ”பொது உடல்நலம் அல்லது பாதுகாப்பு அல்லது வீட்டு, வணிக, தொழில், வேளாண் அல்லது மற்ற சட்டமுறையானச் செயல்களின் பயன்களுக்கு, அல்லது விலங்குகள் அல்லது தாவரங்கள் அல்லது நீரில் வாழும் உயிரினங்கள் ஆகியவற்றின் வாழ்க்கைக்கு அல்லது நலத்திற்கு தொல்லை ஏற்படுத்தக்கூடிய அல்லது கேடு அல்லது ஊறு விளைவிக்கும் வகையில் தண்ணீரின் தூய்மையைக் கெடுத்தல் அல்லது தண்ணீரின் இயற்பியல், வேதியியல் அல்லது உயிரியியல் கூறுகளை மாறச் செய்தல் அல்லது நேரடியாக அல்லது மறைமுகமாக சாக்கடை அல்லது தொழில்கழிவு (trade effulent) பொருள்களை அல்லது ஏதாவது ஒரு திரவ, வாயு அல்லது திடப்பொருளை தண்ணீரில் வெளியேற்றுதல் ‘மாசுபடுதல்’ ஆகும்.

இவ்வாறு தண்ணீர் மாசுபடுதலை தடுக்க மத்திய அளவிலும், மாநில அளவிலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை உருவாக்க இந்த சட்டம் வழிவகுத்தது. (நூலிலிருந்து பக்.30-31)

காற்று (பாதுகாப்பு மற்றும் மாசுத்தடுப்பு)ச் சட்டம் 1981

காற்று மாசுபாடு என்பது உண்மையில் நம் நாட்டில் வேறு எங்கும் இல்லாத சமத்துவத்தை நடைமுறைப்படுத்துகிறது. ஏழை, பணக்காரன் போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் பாதிக்கும் அம்சம் காற்று மாசுபாடுதான்.

காற்றில் இயல்பாகவே சல்பர் டை ஆக்ஸைட், ஹைட்ரஜன் சல்பைட், கார்பன் மோனாக்ஸைட் போன்ற தீய விளைவுகளை ஏற்படுத்தும் வாயுக்கள் உள்ளன. இவற்றோடு புறவெளியிலிருந்து வெளியாகும் காஸ்மிக் கதிர்கள் காற்றுவெளியில் புகுகின்றன. நம்மை சுற்றியுள்ள மண்ணிலிருந்து ரேடியம், யுரேனியம், தோரியம் போன்றவை கதிரியக்கத்தை உருவாக்குகின்றன. வாகனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை மேலும் பல நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுப் பொருட்களை வெளியிட்டு காற்றை மாசுபடுத்துகின்றன. எனவே காற்று மாசுபாட்டை நெறிப்படுத்த வேண்டும் என்ற கருத்து மேலோங்கியது.

இந்த சட்டத்தின்படி, ”மனித உயிர்களுக்கு அல்லது மற்ற உயிரினங்களுக்கு அல்லது தாவரங்களுக்கு அல்லது சுற்றுச்சூழலுக்கு ஊறுவிளைவிக்கும் அல்லது ஊறு விளைவிக்கும் வகையில் அடர்த்தியாக காற்று வெளியில் தங்கியிருக்கும் இரைச்சல் உள்ளிட்ட ஏதாவது ஒரு திட, திரவ, அல்லது வாயுப்பொருள் காற்று மாசுக்களை உருவாக்கும் பொருள்” என வரையறை செய்யப்பட்டது. … ஏறத்தாழ தண்ணீர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினை ஒத்த அதிகாரங்களே இந்த காற்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் வழங்கப்பட்டன. (நூலிலிருந்து பக்.37-38)

சுற்றுச்சூழல் (பாதுகாப்பு)ச் சட்டம், 1986

தண்ணீர் மற்றும் காற்று ஆகியவற்றில் ஏற்படும் மாசுக்களை கட்டுப்பட்டுத்த வாரியங்கள் உருவாக்கப்பட்டாலும், மீதமிருக்கும் வேறுவகையான மாசுக்களை கண்டறிந்து, அவற்றையும் தடுப்பதற்கான  தேவை இருப்பது உணரப்பட்டது.

படிக்க:
அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ?
அதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் !

இதைத் தொடர்ந்து 1986-ம் ஆண்டில் ”சுற்றுச்சூழல்(பாதுகாப்பு)ச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தில் தண்ணீர், காற்று உள்ளிட்ட அனைத்து வகையான மாசுக்களை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அமைப்பதற்கான வழிவகை கண்டறியப்பட்டது.

மேலும் இந்த சட்டத்தில்தான், ”சுற்றுச்சூழல்” என்ற சொல்லுக்கான வரையறை முதல்முறையாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், ”தண்ணீர், காற்றும் மற்றும் நிலம் மேலும் மனித உயிர்கள், மற்ற உயிருள்ள படைப்புகள், தாவரங்கள், நுண்ணுயிர்கள், சொத்து ஆகியவற்றோடு இவை ஒன்றுக்கொன்று கொண்டுள்ள தொடர்பு ஆகிய அனைத்தும் இணைந்ததே சுற்றுச்சூழல்” ஆகும்.

நூல் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள் :
உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை
ஆசிரியர் : வழக்குரைஞர் சுந்தரராஜன்

வெளியீடு : பூவுலகின் நண்பர்கள்,
106/1, கனகதுர்கா வணிக வளாகம், கங்கையம்மன் கோயில் தெரு,
வடபழனி, சென்னை – 600 026.
தொலைபேசி எண்: 044 – 4380 9132 | 98416 24006.
மின்னஞ்சல் : info@poovulagu.org

பக்கங்கள்: 96
விலை: ரூ 70.00 (முதற் பதிப்பு)

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

புதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் !

0
தோழர் சிநேகா, பு.மா.இ.மு.

“பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை மறுக்கும், புதிய கல்விக் கொள்கை – 2019-ஐ நிராகரிப்போம் !” என்கிற தலைப்பில் பு.மா.இ.மு. தலைமையில் ம.க.இ.க. உள்ளிட்ட  தோழமை அமைப்புகளின் பங்கேற்புடன் மதுரை கோரிப்பாளையம், பள்ளிவாசல் தெரு பகுதியில், கடந்த 21.06.2019, வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தோழர் ரவி, பு.மா.இ.மு.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை பகுதி பு.மா.இ.மு. தோழர் ரவி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் “அரசுப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இவையெல்லாம் மூடப்படும் அபாயம் தற்போது நமது கண்முன்னே உள்ளது.  இந்த கல்விக்கொள்கை அம்பானி, பிர்லா மற்றும் கார்ப்பரேட்டுகள் நலனுக்கானது. பல தேசிய இனங்களின்  மொழி, கலாச்சாரம், பண்பாடு இவற்றை அழித்து ஒரே மொழி, கலாச்சாரம், பண்பாடு கொண்ட  இந்து‍, இந்தி, இந்தியா என்ற இந்துத்துவ சித்தாந்தத்தை இந்த கல்விக்கொள்கையின் மூலமாக திணிக்கத் தீவிரமாக முயற்சி  செய்கிறது RSS, BJP கும்பல். நீட் தேர்வு மூலமாக காசிருந்தால்தான் மருத்துவர் ஆக முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். விளைவு மாணவி அனிதா தொடங்கி தொடர்ச்சியான தற்கொலைகள். இந்த வருடம் நான்கு மாணவிகள் அப்படி இறந்துள்ளார்கள். அதே போன்ற‌ நிலையை ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை கொண்டு வருவதே இந்த புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். இந்த அபாயகரமான திட்டத்தை ஜல்லிக்கட்டு போராட்டம் போல மக்கள் ஒன்று சேர்ந்துதான் முறியடிக்க முடியும்” என பேசி முடித்தார்.

பேராசிரியர் ராஜமாணிக்கம் பொன்னையா, (ஓய்வு).

அடுத்ததாக, ஓய்வு பெற்ற பேராசிரியர் ராஜமாணிக்கம் பொன்னையா அவர்கள் பேசியபோது “புதிய கல்விக்கொள்கை என்பது இந்திய அரசு அமைத்த மூன்றாவது கல்விக்கொள்கை. முதலில் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த மெக்காலே கல்விக் கொள்கை. இந்த கல்விக் கொள்கையின் நோக்கம் ஆங்கிலேய ஆட்சிக்கு தேவையான அடிமைகளை உருவாக்குவதே. பின் 1966-ல் கோத்தாரி கமிசன் அடிப்படையில் கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டது. இந்த கல்விக் கொள்கை கல்வி நிலையங்களை அதிகரிக்க வேண்டும்; மாணவர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்றது; கல்வி தேசியமயமானது. இந்த காலகட்டத்தில் பல பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அதே சமயம் சுயசார்பான பொருளாதார கொள்கை இந்திய அரசால் பின்பற்றப்பட்டது.

ஆனால் இருபது ஆண்டுகளுக்கு முன் உலகமயமாக்கல் பொருளாதார கொள்கையாக அமல்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாவட்டந்தோறும் நவோதயா பள்ளிகளைக் கொண்டு வர மத்திய அரசு முயற்சித்தது.  தமிழகத்தில் உள்ளே  விடவில்லை. நவோதயா பள்ளிகள் அடிப்படையிலேயே சமமற்ற கல்வியை வழங்கியது. உலகமயமாக்கல் காலத்தில் கஸ்தூரி ரங்கன் அறிக்கை மூலமாக புதிய உலகக் கட்டமைப்பை உருவாக்க முயற்சிக்கிறார்கள். நவீன தாராளமயத்தில் உற்பத்தி பற்றி கவலையில்லை. இந்தியாவை நுகர்வு இந்தியாவாக மாற்ற ஏதுவான கல்விக் கட்டமைப்பை தந்துவிட்டு உயர்கல்வியை வணிகமயமாக்குவதுதான் திட்டம். இந்த கல்வித் துறையை கலைத்து விட்டு மத்திய கல்வி கமிசன் அமைத்து கல்லூரிக் கல்வியை சிதறடிக்கிறார்கள். மிகப்பெரிய பாகுபாடுடையதாக கல்வியை மாற்றுகிறார்கள். இந்தியை திணிப்பது முதல் பழங்கதைகளையும், புராணங்களையும் கொண்டு வருகிறார்கள். 3 வயதிலிருந்தே தொழில் கல்வியை கொண்டு வருகிறார்கள். +2 முடித்து தேசிய தகுதித் தேர்வை கொண்டு வருகிறார்கள். வேதகால சமுதாயத்தை தாராளமயத்திற்கு ஏற்ப புதிய கல்விக் கொள்கையில் கொண்டு வருகிறார்கள். இதை தடுத்து நிறுத்திட வேண்டும்” என பேசி முடித்தார்.

தோழர் கதிரவன், மாநில செயற்குழு உறுப்பினர், ம.க.இ.க.

அடுத்ததாக தோழர் கதிரவன், மாநில செயற்குழு உறுப்பினர், ம.க.இ.க. அவர்கள் பேசியதாவது, “1986 – களில் புதிய கல்விக்கொள்கை, புதிய மருந்துக்கொள்கை புதிய ஜவுளிக்கொள்கை ஆகியவற்றை எதிர்த்து அரசியல் மாநாடு நடத்தினோம். டங்கல் திட்டத்தில் கையெழுத்துப்போட இந்தியாவை ஏகாதிபத்தியங்கள் அழுத்திக் கொண்டிருந்த காலகட்டம் அது. இன்று உலக வங்கி உலகை கிராமமாக ஆக்கிவிட்டது. நவீன smart city அமைக்கிறார்கள். இது காசுள்ளவர்களுக்கான நகரம். இதுபோல இந்தக் கல்விக்கொள்கை காசு இருப்பவன் மட்டுமே படிக்க முடியும். என் மொழியை அழிக்க வருகிறது செத்துப்போன சமஸ்கிருதம். ஆட்சி அலங்காரத்திற்கு கொண்டு வரப்பார்க்கிறார்கள். கல்வி உரிமையை பறிக்கும் இந்தத் திட்டம் ஆபத்தானது. இத்திட்டத்தை முறியடிப்போம்” என பேசி முடித்தார்.

தோழர் சிநேகா, பு.மா.இ.மு.

தோழர் சிநேகா, பு.மா.இ.மு. அவர்கள் பேசியபோது, “கல்வி நிறுவனங்கள் இப்போதே கட்டணக் கொள்ளையடிக்கிறார்கள். இந்தாண்டு இதுவரை பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயிக்காமல் கட்டணக் கொள்ளையை வேடிக்கை பார்க்கிறது அரசு. புதிய கல்விக் கொள்கையின் ஷரத்து 334, இட ஒதுக்கீடு அவசியம் இல்லை என்கிறது. டாஸ்மாக்கிற்கு இலக்கு வைத்து விற்பனை செய்யும் அரசு, சாதாரண மக்கள் படிக்கக்கூடிய அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்தாமல் இழுத்து மூடப்பார்க்கிறது. இந்த புதிய கல்விக் கொள்கையை முறியடித்தே ஆக வேண்டும்” எனப் பேசி முடித்தார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் அ.சீனிவாசன், (ஓய்வு), அவர்கள் பேசியதாவது ‘‘1975-க்கு பின்னால் மாநில ஆட்சிக்கு உட்பட்டிருந்த கல்வி மத்திய பட்டியலுக்குக் கொண்டுவரப்பட்டது. இதில் மாநிலம் தலையிட முடியாததாக ஆகியது. இன்று இந்த புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தை இந்தி ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் தரவில்லை. பன்நெடுங்காலமாக இருந்து வந்த கருத்துக்களைத்தான் கொள்கையாக முன்வைக்கிறார்கள். சமஸ்கிருத, இதிகாச, புராணக் கல்வியை கொண்டு வருகிறார்கள். சுயநிதி கல்லூரிகள், பள்ளிகள் எம்.ஜி.ஆரால் கொண்டு வரப்பட்டன. இன்று கல்வியே முழுவதுமாக வணிகமயமாகிறது இதை அனைவரும் சேர்ந்து எதிர்த்து நின்று முறியடிக்க வேண்டும்” என பேசினார்.

தோழர் ஆசை, செக்கானூரணி, பகுதி ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம் அவர்கள் பேசியதாவது, ‘‘489 பக்க வரைவு அறிக்கையில், நம் பிள்ளைகள் முட்டாள்கள் என்றும் 5,8 -வது படித்த பின் வீட்டு வேலை செய்யவும், தொழிற்சாலைகளில் அடிமை வேலைகளில் ஈடுபடவும்தான் இலாயக்கு என்கிறார்கள். வேதகால கல்விமுறை எப்படி இருந்தது. உயர் சாதியினருக்கு இரண்டு வகையான கல்வி இருந்தது. அது சத்ரியர்களுக்கு சண்டை போடும் கல்வி.  வைசிய கல்வி வணிக பிரிவினருக்கு. அடிமைகளுக்கு, உழைத்து வாழ்ந்தவர்களுக்கு கல்வி கொடுக்கப்படவில்லை. இதையேதான் புதிய கல்விக்கொள்கையும் கொண்டு வரப்போகிறது. இந்திய அரசியல் சாசனத்தில் சொன்ன விசயங்களை குழி தோண்டிப் புதைத்து விட்டார்கள். இனி பெரும்பான்மையான மக்களுக்கு கல்வியை மறுப்பதே கல்விக் கொள்கை. இதை மக்கள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்.’’ என பேசினார்.

படிக்க:
புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! புதிய கலாச்சாரம் நூல் !
தமிழில் தேசியக் கல்விக் கொள்கை 2019 – பிடிஎஃப் டவுண்லோடு

இறுதியாக நன்றியுரை நிகழ்த்திய நெல்லைப் பகுதி பு.மா.இ.மு. தோழர் சிவா, ‘‘நீதிமன்றங்கள் மூலமாக இந்த கல்விக்கொள்கையை இரத்து செய்ய முடியாது. ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போன்ற மக்கள் போராட்டங்களின் மூலமாகத்தான் முறியடிக்க முடியும்.’’ என பேசி நிறைவு செய்தார்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

சிரிப்பு , மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 03

தூக்கம் மற்றும் சோர்வின் கடவுளாகிய மோர்பேயை வகுப்பறையிலிருந்து விரட்டும் பொருட்டு மோமூஸ் எனும் சிரிப்பு, மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும். குழந்தைகள் பாடவேளைகளில் எப்போது மகிழ்ச்சி யடைகின்றனர்?

என்னிடம் கால்பந்து உள்ளது. “நான்கையும் ஐந்தையும் கூட்டினால் எவ்வளவு வரும்?” கால்பந்து அறையின் வலது மூலைக்குச் செல்கிறது. யார் இதைப் பிடிக்கின்றார்களோ அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

“ஒன்பது!” என்று அதைப் பிடித்த சிறுவன் பதில் கூறிவிட்டு பந்தைத் திரும்பி எறிந்தான்.

“ஒன்பதிற்கும் மூன்றிற்கும் இடையிலான வித்தியாசம் எட்டு. சரியா?” பந்து நடு பெஞ்சுகளை நோக்கிச் செல்கிறது.

“தப்பு! ஒன்பதிற்கும் மூன்றிற்கும் இடையிலான வித்தியாசம் ஆறு.” பந்து திரும்ப என்னிடம் வருகிறது.

“எந்த மூன்று எண்களைச் சேர்த்தால் பத்து வரும்?”

“ஏன் பந்து?” என்று எனக்கு மறுப்புத் தெரிவிக்கக் கூடும். “இக்கணக்குகளை பந்து இன்றித் தீர்க்க முடியாதா?”

நிச்சயமாக பந்தின்றியே பதில் சொல்லியிருப்பார்கள். ஆனால் உற்சாகம் இருந்திருக்காது.

“தலையைத் தொங்கப் போடுங்கள். கண்களை மூடுங்கள்… நான் உங்களுக்குக் கணக்குகளைச் சொல்வேன். நீங்கள் தலையை உயர்த்தாமல் விடையைக் கை விரல்களால் காட்டுங்கள்.”

குழந்தைகள் தலைகளைத் தொங்கப் போட்டனர், கண்களை மூடிக் கொண்டனர். நான் மெதுவான குரலில் சொல்கிறேன்:

“நான் ஒரு எண்ணை மனதில் வைத்திருக்கிறேன். இதனுடன் 3 ஐச் சேர்த்தால் 8 வரும். என் மனதில் உள்ள எண் எது?”

ஐந்து விரல்களுடன் பலர் கைகளை உயர்த்துகின்றனர். கையை உயர்த்திய ஒவ்வொருவரையும் நான் அணுகி, விரல்களைத் தொட்டபடியே மெதுவாகக் கூறுகிறேன்: “சரி! தவறு! சரி! நன்கு யோசி!”

“நான் ஒரு எண்ணை நினைத்துள்ளேன். இதிலிருந்து 4 ஐக் கழித்தால் 3 எஞ்சும். நான் நினைத்துள்ள எண் எது?”

இப்போது குழந்தைகள் இரு கரங்களையும் உயர்த்தி நான் நினைத்த எண்ணை விரல்களால் காட்டுகின்றனர். “சரி! சரி! தவறு! சரி!” மீண்டும் நான் அவர்களின் விரல்களைத் தடவியபடியே காதுகளில் கூறுகிறேன்.

தலைகளைத் தொங்கப்போடுமாறு ஏன் நான் குழந்தைகளிடம் கூறுகிறேன்? சாதாரணமாக உட்கார்ந்த நிலையில் இவர்களால் கணக்குகளைப் போட முடியாதா என்ன? நிச்சயமாக முடியும். ஆனால் இந்த உற்சாகம் இருக்காது.

“இதே போன்ற கணக்குகளை நீங்கள் எனக்குச் சொல்லுங்கள்” என்று நான் குழந்தைகளிடம் கூறுகிறேன்.

“2 + 8 ன் கூட்டுத் தொகையையும் 6 + 4 ன் கூட்டுத் தொகையையும் ஒப்பிடுங்கள்” என்று ஒரு சிறுவன் கூறுவான்.

“வெகு சுலபம்!” என்று கரும்பலகையில் கணக்கை எழுதியபடியே உச்சரிக்கிறேன்: “2+8 > 6+4. யாராவது இதை விடக் கடினமான கணக்கைச் சொல்லுங்கள்.”

ஆனால் குழந்தைகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். “என்ன விஷயம்?.. ஓ, மன்னியுங்கள், ‘குறைவானது’ என குறியிட வேண்டுமல்லவா…” வகுப்பறையில் மீண்டும் அதிருப்தி.

“என்ன நடந்தது?… தவறா?” என்று கரும்பலகையில் எழுதியதைக் கவனமாகப் பார்ப்பது போல் பாவனை செய்கிறேன். “ஆமாம்… 2 ஐயும் 8 ஐயும் கூட்டினால் 11 வரும், 6 ஐயும் 4 ஐயும் கூட்டினால் 10 வரும்.” எனவே, “பெரியது” என்ற குறிக்குப் பதில் “’சிறியது” என்ற குறியை இடுகிறேன்.

“இரண்டும் சமமானவை…. சமம் என்ற குறியிட வேண்டும். சமக்குறி… பத்தும் பத்தும் சமம்!” என்று குழந்தைகள் கத்துகின்றனர்.

படிக்க:
அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ?
இந்திய நாடு அடி(மை) மாடு ! புதிய ஜனநாயகம் ஜூன் 2019

குழந்தைகளுடைய “கலகத்தின்” காரணம் எனக்கு ஒரு வழியாகப் புரிகிறது .

“மன்னியுங்கள்! இங்கே சமக்குறி அல்லவா இருக்க வேண்டும். பத்தும் பத்தும் சமம்…”

இது என்ன சொந்த செல்வாக்கைக் குறைத்துக் கொள்ளும் முறை என்று நீங்கள் கேட்கக்கூடும். எதற்கு இந்த நடிப்பு? “2 +8-ன் கூட்டுத் தொகைக்கும் 6+4-ன் கூட்டுத் தொகைக்கும் இடையில் என்ன குறியிட வேண்டும்?” என்று சாதாரணமாகக் கேட்டிருந்தால் அவர்கள் எவ்விதக் குழப்பமும் இன்றி சமக்குறி இட வேண்டுமெனக் கூறியிருப்பார்கள். விஷயம் அத்துடன் முடிந்திருக்கும். இங்கோ குழந்தைகள் பொங்கியெழுகின்றனர், வகுப்பறையில் ஒரே சத்தம்! இதெல்லாம் எதற்கு?

ஆம், மற்ற ஆசிரியர்கள் பல சமயங்களில் இன்னமும் பின்பற்றும் சடத்துவம் பலமானது. இதைப் பற்றி மாபெரும் ருஷ்ய எழுத்தாளரும் ஆசிரியருமான லேவ் டால்ஸ்டாய் பின்வருமாறு கூறினார்: குழந்தைகள் படிக்க வசதியான வகையில் பள்ளிகள் அமைக்கப்படுவதில்லை , மாறாக, ஆசிரியர்களுக்குச் சொல்லித் தர வசதியாகப் பள்ளி அமைக்கப்படுகிறது.

ஒரு ஆசிரியரைப் பொறுத்தமட்டில், திட்டவட்டமான கேள்விகளைக் குழந்தைகளிடம் கேட்டு அதற்கு சரியான, தெளிவான, முழு பதில்களைப் பெறுவது எளிது. குழந்தைகள் படித்தாக வேண்டும், அவர்களுக்கு வேறு வழியில்லை. எனவே, கேள்வி கேள், அவர்கள் மண்டைகளைப் பிய்த்துக் கொள்ளட்டும். பின் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் குறுகிய, நீண்ட நேரங்களுக்கு அவர்கள் எதைப் படித்துள்ளார்கள் என்று கேள்விகள் கேள். எவ்வித தந்திரங்களும் தேவையில்லை. “சொல்லித் தருவது ஆசிரியர்களுக்கு வசதியாக இருக்கும் பொருட்டு” எல்லாவற்றையும் சுலபமாக முடித்து விடலாம்.

விஞ்ஞான அறிவை கிரகிப்பது, பன்முகத் திறமைகளை வளர்ப்பதன் அவசியம் பற்றி ஏதாவது அவசரமாகக் கூற அஞ்சுகிறேன். ஞானம், திறமைகள், பழக்கங்கள்! மனிதன் வாழ்விலும் வேலையிலும் ஆக்கப் பணியிலும் இவை எவ்வளவு முக்கியமானவை! பல பொருட்களையுடைய எண்களில் வெளிப்படும் இவை எல்லாம் மிகுந்திருந்த போதிலும் இவை மட்டுமே தனிநபரை உருவாக்கப் போதாதவை. குறிப்பிட்ட அளவு ஞானம் இல்லாவிடில் தனிநபர் நிலவ முடியாது, ஆனால் வளமிகு ஞானம் மட்டுமே தனிநபரை உருவாக்கி விடுவதில்லை. ஏனெனில், யதார்த்தத்தின் பால், மனிதர்களின் பால், சுற்றியுள்ளவர்களின் பால், ஞானத்தின் பால் மனிதனுக்கு உள்ள உறவுதான் இவனைத் தனி நபராக்குகிறது. தன் செயல் முனைப்பு மற்றும் உலகக் கண்ணோட்டத்தால்தான் அவன் தனிநபராகிறான். தனிநபர் என்பது போராடும் மனிதனைக் குறிக்குமே தவிர சற்றும் பிறழாது கண் மூடித்தனமாகத் தன் கடமைகளை நிறைவேற்றுபவனைக் குறிக்காது. போராளியாக விளங்க நவீன, பன்முக ஞானமும், மாறி வரும் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் இவற்றைப் பயன்படுத்தும் திறமைகளும் பழக்கங்களும் தேவை.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ?

‘அர்ஜுன் ரெட்டி’ என்ற சூப்பர் ஹிட் படம், இந்தியில் ‘கபீர் சிங்’ என்ற பெயரில் தற்போது வெளியாகியிருக்கிறது. விரைவில் ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் தமிழிலும் வெளியாக உள்ளது. அர்ஜுன் ரெட்டி வெளியானபோது, சில விமர்சங்கள் தவிர்த்து தென்னிந்திய மக்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

பெண்கள் அர்ஜுன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடித்த விஜய் தேவரகொண்டா-வை உடனடியாக தங்களுடைய கனவு நாயகனாக வரித்துக்கொண்டார்கள். நூற்றாண்டு கால இந்திய சினிமா வரலாற்றில் நிறைய தேவரகொண்டாக்கள் வந்திருக்கிறார்கள். எனவே, இதெல்லாம் வழமையாக நடக்கக்கூடியதுதான்.

சூப்பர் ஹிட் சினிமா, கதாநாயகனை கொண்டாடும் சமூகம்… இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, அர்ஜுன் ரெட்டிபோல ஒரு கணவன் அல்லது காதலனுடன் ஒரு பெண் வாழ நேர்ந்தால் எப்படியிருக்கும் என யாரேனும் சிந்தித்ததுண்டா? அப்படி சிந்தித்தவர்கள், அப்படிப்பட்ட ஒரு ஆணழகனு-டன் (சதை முறுக்கேறிய, பார்த்தவுடன் காதல் கொள்ளத்தூண்டும் ஒருவரை ‘ஆணழகன்’ என சொல்கிறார்கள் இல்லையா?)  வாழ நேர்ந்தால் அந்த வாழ்க்கை ‘ஸோ ரொமாண்டிக்’ என குதூகலிக்கக்கூடும். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் இந்தப் பதிவு.

என் பெயர் ‘அ’ அல்லது ‘ஆ’ என ஏதோ ஒன்று என வைத்துக்கொள்ளுங்கள். என்னுடைய பெயர் இங்கு முக்கியமல்ல, நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதுதான் முக்கியம். விசயத்துக்கு வருகிறேன்… நான் அர்ஜுன் ரெட்டியில் வருகிற நாயகிபோல, தலை நிமிர்ந்து (இதெல்லாம் ஒரு பெருமையா, அடிமைத்தனம் – அவமானம் என்பதை உணர்வதற்குள் 35 வருடங்கள் ஓடிவிட்டன) நடக்காத பெண்.

பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தது பெண்கள் பள்ளியில். பெண்கள் பள்ளியில் படித்தாலுமேகூட பதின்பருவ காதல்கூட வந்ததில்லை. நடுத்தரக் குடும்பங்களில் இயல்பாகவே இருக்கும் காதல் குறித்த எச்சரிக்கைகள் எனக்கும் விடப்பட்டுக்கொண்டே இருந்தன. நல்ல மதிப்பெண் வாங்குவது, பொறியியல் கல்லூரிக்குப் போவது, இது மட்டும்தான் அப்போதைய இலக்கு.

பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் பள்ளி அளவில் இரண்டாம் இடம் பெற்றவள். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், படிப்பு – மதிப்பெண் போன்றவை வாழ்க்கையின் நல்லது கெட்டதுகளை ஒருபோதும் சொல்லிக்கொடுப்பதில்லை. வீட்டிலும் அப்படித்தான் வெற்று எச்சரிக்கைகள்தான் வந்துகொண்டிருக்குமே தவிர, வெளிப்படையாக எதையும் சொல்ல மாட்டார்கள்.

படிக்க:
மம்பட்டி அறுவாவ வித்து குடிக்கிற குடியானவன் குடும்பத்த காப்பாத்துவானா ?
♦ பொள்ளாச்சி : பெண்கள் அடக்க ஒடுக்கமாக வாழ்வது தீர்வாகுமா ?

பள்ளிப் படிப்பு முடிந்ததும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். ஒரு சிறு நகரத்திலிருந்து பெருநகரத்துக்கு முதன்முறையாக வருகிறேன். விடுதியில் தங்கிப் படித்தாலும் பெற்றோரின் முழுநேர கண்காணிப்பிலிருந்து தப்பிக்கிறோம் என்கிற எண்ணம் சுதந்திர உணர்வைக் கொடுத்தது. ஆண்களுடன் படிக்கிறேன், பழகுகிறேன். கூச்ச உணர்வும் இல்லை, ஈர்ப்பும் இல்லை; எச்சரிக்கை உணர்வு அதிகமாகவே இருந்தது.

பிறகு ஒரு நிறுவனத்தில் பணிக்குச் சேர்கிறேன். முதல் இரண்டு ஆண்டுகள் பணியைக் கற்றுக்கொள்வதிலும் தக்க வைத்துக்கொள்வதிலும் அதிக நேரத்தை எடுத்துக்கொண்டன. காதல் பற்றியெல்லாம் நினைக்க நேரமே இல்லை. அதன் பின், வழக்கமான பணி வாழ்க்கையில், பெற்றோரை விட்டு தள்ளியிருக்கும் சூழலில் நேர்ந்த தனிமை. சாதாரணமாக சாப்பீட்டீர்களா என்று கேட்டால்கூட மிகப்பெரும் ஆறுதலாக இருக்கும். அப்படியொருவர் மீது ஈர்ப்பு அல்லது காதல் என்று சொல்லமுடியாத ஒரு உணர்வு. அது அடுத்தக்கட்டத்துக்குப் போகாமல் அப்படியே முடிந்தது.

அதன் பிறகுதான் கதாநாயகன் அர்ஜுன் ரெட்டியை சந்திக்கிறேன். நான் பணியாற்றிய நிறுவனத்தில் அர்ஜுன் ரெட்டி, வேறொரு பிரிவில் வேலைப் பார்த்தார். ஒரு புராஜெக்ட்டுக்காக இருவரும் ஒன்றாக வேலைப் பார்க்க நேர்ந்தது. அர்ஜுன் ரெட்டி நல்ல உயரம்; முறுக்கேறிய உடல்வாகு; நன்றாகப் பாடுவார். ஆரம்பக்கட்ட ஈர்ப்புக்கு இதுபோதுமானது என்கிறது அறிவியல். எனக்கும் அப்படித்தான்.

அர்ஜுன் ரெட்டிக்கு என் மீது ஈர்ப்பு வர ‘அப்பாவிப் பெண்’ தோற்றம் போதுமானதாக இருந்திருக்கிறது. தான் சொன்னதைக் கேட்டு நடக்கும் ஒரு தலையாட்டி பொம்மையாக வேண்டும். எந்தவகையான மீறலிலும் ஈடுபடாத அடிமையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அதன் பொருள். ஈர்ப்பு காதலாக முகிழ்ந்த காலத்தில் அர்ஜுன் ரெட்டி தன்னைப் பற்றிய ‘உண்மை’களை சொல்கிறார். தான் ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்ததாகவும் அந்தப் பெண்ணின் பெற்றோர் அவர்கள் இருவரையும் கட்டாயப்படுத்தி பிரித்துவிட்டதாகவும் சொல்கிறார்.

என்னை முற்போக்கானவள் என்று சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. என்னுடைய ’டிராக் ரெக்கார்ட்’ கடைந்தெடுத்த கட்டுப்பெட்டித்தனமான பின்னணியுடையது. எனவே, ஆண்களின் பலதார மணம், பல பெண்களுடன் உறவு என்பது இந்திய சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை. அத்தகைய சமூகத்தில் வளர்ந்த நான், அர்ஜுன் ரெட்டியின் முந்தைய வாழ்க்கை குறித்து, கவலை கொள்ளவில்லை. பரிவு கொண்டேன், காதல் மேலும் கூடியது.

அதே நேரத்தில், அர்ஜுன் ரெட்டி கடைந்தெடுத்த ஆணாதிக்கவாதி என்பதை அறியாமல் ஒரு நபர் மீது எனக்கிருந்த ஈர்ப்பும் காதலுமல்லாத உணர்வு குறித்து பகிர்ந்துகொண்டேன். திருமணத்துக்கு முன், அர்ஜுன் ரெட்டிக்கு அது ஒரு விடயமாகவே தெரியவில்லை. அர்ஜுன் ரெட்டியின் பரந்த மனப்பான்மையை எண்ணி பெருமை கொண்டேன்.

பணிக்குச் செல்ல ஆரம்பித்த ஓரிரு ஆண்டுகளிலேயே திருமண அழுத்தம் தர ஆரம்பித்துவிட்டனர் பெற்றோர். திருமணம் வேண்டாம் என்று ஒருமுறை சொன்னபோது என் அம்மா, திருமணம் செய்துகொள்ளாதவர்களுக்கு சுடுகாட்டில் இடம் கிடைக்காது என்றார். எந்த விலை கொடுத்தேனும், எப்பாடுபட்டாவது தங்களுடைய பிள்ளைகளுக்கு ‘காலாகாலத்தில்’ திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்பதுதான் பெரும்பாலான பெற்றோரின் எதிர்பார்ப்பு. இது குழந்தைகள் மீதான அக்கறை என்பது போய், இறுதியில் அது அழுத்தமாகவே மாறிவிடுகிறது.

இத்தகைய சூழலில், திருமணத்தை தள்ளிப்போட்டவள், திருமணம் செய்துகொள்கிறேன் என்கிறாளே என்ற விதத்தில் என்னுடைய திருமணத்துக்கு உடனே ஒப்புதல் அளித்தார்கள். திருமணத்துக்கு முந்தைய நாள், அர்ஜுன் ரெட்டி, மதுபோதையில் இந்தத் திருமணத்தை நிறுத்திவிடுவோம் என்றார். முந்தைய காதல் பிரிவை மறக்கமுடியாமல் அர்ஜுன் ரெட்டி தவிப்பதாக நினைத்தேன். திருமணம் ஆன நான்கைந்து மணி நேரத்திலேயே அர்ஜுன் ரெட்டியின் நிஜமான முகத்தை தரிசிக்க முடிந்தது.

படிக்க:
பாரதி : ஒரு அபலையின் கதை! – சந்தனமுல்லை
♦ ஆணாதிக்கத்தைப் புரிந்து கொள்ள பெண்களைப் பேசவிடு!

அர்ஜுன் ரெட்டியால் குடிக்காமல் இருக்க முடியாது; அதனால் தொட்டதெற்கெல்லாம் கோபம் வரும். பெண்கள் வீட்டு வேலை செய்வதற்கென்றே பிறந்த அடிமைகள் என்பது அர்ஜுன் ரெட்டியின் அசைக்க முடியாத நம்பிக்கை. முந்தைய நாள் இரவு திருமணத்தை நிறுத்திவிடலாம் என்று சொன்னதற்குக் காரணம் நான் அர்ஜுன் ரெட்டிக்கு முன்பு ஒருவர் மீது நான் ஈர்ப்பு கொண்டதுதானாம். நான் அதிர்ச்சியில் உறைந்து நின்றேன். ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ தன் பாலின் மீதோ எதிர்பாலின் மீதோ ஈர்ப்பு வராமல் இருக்குமா? இதெல்லாம் ஒரு விசயமா என்றபோது, அப்படியெல்லாம் இல்லை, நீ அவனுடன் எப்படியெல்லாம் கற்பனையில் வாழ்ந்திருப்பாய் என்றார் அர்ஜுன் ரெட்டி. ஒரு ஆணாதிக்க சைக்கோவால் மட்டுமே இப்படி கேட்க முடியும்.

ஆணாதிக்க சைக்கோக்களைக் கொண்ட சமூகத்தில் அர்ஜுன் ரெட்டியின் சைக்கோத்தனத்தை சகித்து வாழ முயற்சித்தேன். முதல் நாளே பிரச்சினை என்பதை யாரிடம் சொல்வது, ஊரிலிருந்து வந்திருந்த பெற்றோர் வீடுகூட போய் சேர்ந்திருக்க மாட்டார்களே… அடுத்த சில மணி நேரத்தில் அர்ஜுன் ரெட்டி வந்து மன்னிப்பு கேட்டார். இனி அப்படி பேசமாட்டேன் என்ற அர்ஜுன் ரெட்டி கட்டியணைத்த போது, சினிமாக்களில் காட்டப்படுவதுபோல ரொமாண்டிக்காக இருந்திருக்கும் என நினைக்கிறீர்களா? பயமும் பீதியுமாக இருந்தது.

அர்ஜுன் ரெட்டி போன்ற ஆணாதிக்க சைக்கோக்களை அவர்களுடைய சூழலும் சேர்ந்தே உருவாக்குகிறது. அப்படிப்பட்ட சூழலில் குறைந்தபட்ச மரியாதை உணர்வுடன் வளர்ந்த பெண்களால் வாழ்வது இயலாத விடயம். பிரச்சினை எங்கிருந்து கிளம்பும் எப்படி முடியும் என்று தீர்மானிக்க முடியாது. எதற்காக அடிவிழும் என்று அனுமானிக்க முடியாது. பயத்துடனே வாழ வேண்டும். அர்ஜுன் ரெட்டி போன்ற குடிகாரர்களின் வாழ்க்கையில் சிக்கிக் கொண்டால், இதெல்லாம் நடக்குமா என கற்பனையில்கூட நினைத்திராத விடயங்கள் நடக்கும்.

அர்ஜுன் ரெட்டி எப்போது படுக்க அழைத்தாலும் படுக்க வேண்டும். உங்கள் விருப்பம், நிராகரிப்பு குறித்து அங்கே எந்தவித அனுசரணையும் இருக்காது. உங்களுக்கு மாதவிடாய் காலம் என்பது பற்றியோ, பகலாக இருக்கிறதே என்பது பற்றியோ, நள்ளிரவு 3 மணி, ஆழ்ந்த உறக்கத்துக்கு போய்விட்ட 12 மணிக்கு எழுப்பி உறவுக்கு அழைத்தாலும் நீங்கள் மறுக்க முடியாது. அப்படி மறுத்தால் நாகூசும் வார்த்தைகளால் நீங்கள் அர்ச்சிக்கப்படுவீர்கள். உங்களுக்கு யாருடனோ கள்ளத்தொடர்பு இருப்பதாக உறுதிபடுத்தப்படும். சில சமயங்களில் அடியும் விழும். இது ரொமாண்டிக்காக இருக்கும் என உங்களால் மெய்சிலிர்க்க முடிகிறதா?

அர்ஜுன் ரெட்டி போன்ற போதைக்கு அடிமையான ஒருவனால், குறைந்தபட்சம் மனிதனாகக்கூட நடந்துக்கொள்ள முடியாது. கூடவே, மற்றொரு போதையான ஆணாதிக்க திமிரும் சேர்ந்துகொள்ளும்போது விளைவுகள் விபரீதமானவை. ‘திருத்திவிடுவேன்’, ‘திருந்திவிடுவான்’ என சொல்வது உங்களுக்கு நீங்களே குழிவெட்டிக்கொள்வதுபோலத்தான்.

இப்படியான உறவிலிருந்து எளிதாக வந்துவிடலாமே என நீங்கள் கேட்கக்கூடும். இந்திய சமூகத்தில் திருமணம் என்பது ஒரு பொறி. அதில் சிக்கிக்கொண்டவர்கள் வெளிவருவது அத்தனை எளிதல்ல. திருமணமான ஒரு மாதத்தில் என்னைப் பார்க்க வந்த அம்மாவிடம், அர்ஜுன் ரெட்டி ‘உங்கள் பெண் பல ஆண்களுடன் சுற்றியவள்’ என ஒரே போடாக போட்டார். அதற்கு அம்மா, “டாக்டர் கிட்ட சர்டிபிகேட் வாங்கிட்டு வந்தா என் பொண்ணு நல்லவன்னு ஒத்துகுவியாப்பா” என்றார் அப்பாவித்தனமாக. முதன்முறையாக அந்த நிமிடம் அம்மாவை வெறுத்தேன்.

எப்படியாவது திருமணம் செய்துவிட வேண்டும்; திருமணத்தில் ஏதேனும் பிரச்சினை வந்தால், அதை அப்படியே அடக்கிவிட்டு, அந்த வாழ்க்கையை தொடர வேண்டும். இதைத்தான் சமூகம் விரும்புகிறது. அம்மாவும் இந்த சமூகத்திலிருந்து வந்தவர்தான். இங்கே திருமண உறவில் வல்லுறவு, வன்முறை என்பது இயல்பானதாகவே இருக்கிறது.

திருமண உறவில் இருந்த அப்பா, வேறொரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று பிரச்சினையானதாக அம்மா ஒரு முறை பகிர்ந்துகொண்டார். அவருக்கு அப்பா மீது கோபம் இருந்தது. ஆனால், அப்பாவுடனான உறவை முறித்துக்கொள்ளும் தன்மானம் அவருக்கு இல்லை. அதேபோல், அர்ஜுன் ரெட்டியும் ஒரு பெண்ணிடம் நடந்துகொள்கிறார். நான் சகித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் வதை செய்யும் இந்த குடும்ப அமைப்பிலிருந்து என்னால் தப்ப முடியவில்லை. இறுதியில் அம்மாவின் நகலாக நான் மாறிப்போனேன்.

அர்ஜுன் ரெட்டிகளை சகித்துக்கொள்கிற பெண்கள் இப்படித்தான் வழிவழியாக உருவாக்கப்படுகிறார்கள். அர்ஜுன் ரெட்டி போன்ற கடைந்தெடுத்த ஆணாதிக்க சினிமா வெற்றிபெறுவதும், அது பல மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்படுவதும் சமூகத்தின் சீழ்பிடித்த நிலையைத்தான் காட்டுகிறது.

அர்ஜுன் ரெட்டி போன்ற கதாபாத்திரத்தை கதாநாயகனாக பெண்கள் வரித்துக்கொள்வதைப் பார்க்கும்போது பயமே மேலிடுகிறது. அப்படிப்பட்டவர்களை ஒரு கணமேனும் இந்தப் பதிவு சிந்திக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதை எழுதியிருக்கிறேன்.

நன்றி,

தமிழரசி

அதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் !

ட்டிஸ்கர் பழங்குடிகள் தங்களுடைய போராட்டத்தின் மூலம் அம்மாநிலத்தின் தந்தவாடா பகுதியில் உள்ள பைலாடிலா மலைப்பகுதியில் அமைய இருந்த அதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை அமைய விடாமல் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

அம்மக்களின் தொடர்ச்சியான ஆறு நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு சட்டிஸ்கர்  மாநில காங்கிரஸ் முதலமைச்சர் பூபேஷ் பாகல் சுரங்கம் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

இரும்புத்தாது சுரங்கப் பின்னணி :

இம்மாநிலத்தில் கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க ஆட்சிக் காலத்தில் 2014-ம் ஆண்டு அங்குள்ள கிராம சபை மூலமாக இந்த சுரங்கத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போதைய போராட்டத்தில் பங்கெடுத்த பழங்குடிகள் அந்த கிராம சபை என்பது ஒரு மோசடி. கிராம சபைத் தீர்மானத்தில் 104 பேர்தான் கையொப்பமிட்டுள்ளனர். ஆனால் நாங்கள் 600 வாக்காளர்கள் உள்ளோம். இது எப்படி ஒரு கிராம சபைத் தீர்மானமாக இருக்க முடியும் என்கிறார்கள்?

வனத்துறை கடந்த 2015-ம் ஆண்டு 315.813 ஹெக்டர் பரப்பளவில் பைலாடிலா மலைப் பகுதி எண் 13-ல் இரும்பு தாது சுரங்கம் எடுப்பதற்கு அனுமதி வழங்கியது. இந்த 13 பிரிவு மலைப்பகுதியில் 25 கோடி டன் இரும்புத்தாது இருப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதானி

இதற்காக மத்திய அரசின் தேசிய கனிம வளர்ச்சி நிறுவனமும், மாநில அரசின் சட்டிஸ்கர் கனிம வளர்ச்சி நிறுவனமும் (51:49 என்ற பங்கின் அடிப்படையில்) சேர்ந்து கூட்டு நிறுவனமாக NCL  என்ற நிறுவனத்தை உருவாக்கியது. பின்னர் 2018 டிசம்பரில் 25 வருட குத்தகைக்கு அதானி குழுமத்திற்கு (MDO –Mineral development cum Operator) இந்த மலைப்பகுதி எண் 13  வழங்கப்பட்டது.

இது கடந்த ஆண்டு நடைபெற்ற அம்மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அவசரமாக அக்குழுமத்திற்கு வழங்கப்பட்டு இருக்கிறது. சட்டிஸ்கரின் முன்னாள் பா.ஜ.க முதலமைச்சர் ராமன் சிங் ஆட்சியின்போது அதிகாரவர்க்கத்தின் தலையீட்டின் பேரில் இந்த குத்தகை வழங்கப்பட்டிருக்கிறது.

இச்சுரங்கத் திட்டத்திற்காக இக்காடுகளில் சுமார் 25,000 மரங்களை  வெட்ட வேண்டியதிருக்கும். இதுவரை சுமார் 10,000 மரங்கள் வெட்டப்பட்டு இருக்கின்றன. சுரங்கத்திற்காக சாலை அமைக்கும் பணியும் தீவிரமாக நடைப்பெற்று வந்தது.

சட்டிஸ்கர் பழங்குடிகளின் நம்பிக்கை : 

பழங்குடிகள் இந்த மலையில் தங்கள் தெய்வம் வசித்து வருவதாக நம்புகிறார்கள்.  “எங்கள் தெய்வமான பீத்தோர் ராணி இந்த மலையில் வாழ்கிறார். பீத்தோர் ராணி எங்கள் வன தேவதை. அவர் எங்கள் தெய்வம் நந்தராஜின் துணை. எங்கள் கடவுள் நந்தராஜும், பீத்தோர் ராணியும் இந்த மலைகள் எங்கும் வியாபித்து இருக்கிறார்கள். அவர்கள் எங்கள் ஒவ்வொரு பாடலிலும் இருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் நாங்கள் இல்லை. அரசுக்கு இது ஒரு இரும்புத்தாது மலை எண் 13. ஆனால் இது எங்களுக்கு வாழ்விடம்.” என்று பழங்குடிகள் போராட்டத்தின் போது தெரிவித்தனர்

படிக்க:
தூத்துக்குடி – நியமகிரி : வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள் ! புதிய கலாச்சாரம் மின்னூல்
♦ ஆஸ்திரேலியா நிலக்கரிச் சுரங்கத்தில் சொந்தப் பணத்தை போடுவாராம் அதானி !

பைலாடிலா மலைப்பகுதியில் உள்ள மற்ற இடங்களில் பல வருடங்களாக NMDC மூலம் இரும்புத்தாது வெட்டி எடுக்கும் பணி நடைபெற்று வந்தாலும், இந்த 13 எண் மலைப் பகுதியில் தங்கள் தெய்வம் வாழ்வதாக நம்புவதால், அவர்கள் இந்த மலைப்பகுதியில் தாது வெட்டி எடுக்க அனுமதிக்கப் போவதில்லை என்று கூறுகிறார்கள்.

மேலும் புதியதாக NCL என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டதும், மலையின் குத்தகையை அதானி குழுமத்திற்கு கொடுத்ததும், பழங்குடிகளின் போராட்டத்தை தீவிரப்படுத்தியிருக்கிறது.

சட்டிஸ்கர் பழங்குடிகளின் போராட்டம் :

தந்தவாடா, சுக்மா, பிஜப்பூர்  மாவட்டங்களில் உள்ள, 200 கிராமங்களிலிருந்து திரண்ட சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பழங்குடிகள் தேசிய கனிம வளர்ச்சி நிறுவனத்தின் (NMDC) முன்பு சங்க்யூத் பஞ்சாயத் சமிதி என்ற அமைப்பின் கீழ் ஜூன் 7-ம் தேதி போராட்டத்தை தொடங்கினர்.

NMDC யிலிருந்து சுமார் 60 கீ.மீ. தூரத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு வாரத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை தங்கள் தலையில் சுமந்து கொண்டு, நடந்தே NMDC வாயிலுக்கு வில், அம்புகளோடு வந்தடைந்தனர்.

பழங்குடி மக்களின் முற்றுகைப் போராட்டம் (கோப்புப் படம்)

NMDC  சோதனைச் சாவடியை மறித்தும், இரும்புத்தாது சுரங்கத் தொழிலாளர்களை வனப்பகுதிக்கு உள்ளே அனுமதிக்காமலும் போராடியுள்ளனர். இந்தப் போராட்டத்தை கண்டு பயந்த சட்டிஸ்கர் மாநில அரசு, பழங்குடிகளின் தலைவர்கள் மற்றும் பஸ்தர் காங்கிரஸ் மக்களவை எம்.பி தீபக் பாஜ்  ஆகியோரிடம் நடத்திய பேச்சுவார்த்தை மூலம், தற்காலிகமாக இரும்புத்தாது சுரங்கம் சம்பந்தமான அனைத்து விதமான வேலைகளையும் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டு இருக்கிறது. சட்டிஸ்கர் முன்னாள் முதலமைச்சர் அஜித் யோகி பழங்குடிகளுக்கு ஆதரவாக போராட்டக்களத்திற்கு வந்துள்ளார்.

சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதை தடுக்கவும், அப்போது இருந்த கிராம சபை எடுத்த உத்தரவிற்கா விசாரணை கமிட்டி அமைக்கவும் சட்டிஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் உத்தரவிட்டுள்ளார்.

அதானி குழுமத்திற்கு வழங்கிய குத்தகையை மறுபரிசீலனை செய்ய இருப்பதாக பூபேஷ் கூறுகிறார். NMDC என்பது மத்திய அரசின் கீழ் செயல்படுவதால் மாநில அரசின் கீழ் மட்டும் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது என்கிறது சட்டிஸ்கர் மாநில அரசு. இதில் என்ன சிறப்பம்சம் என்றால் NCL-ன்  இயக்குநர்களில் ஒருவராக பூபேஷ் பாகல் இருக்கிறார்.

ஜனதா காங்கிரஸ் சட்டிஸ்கர் கட்சியைச் சேர்ந்த அமித் ஜோகி பூபேஷ்க்கும், அதானி சகோதரர்களுக்கும் இடையே நடைபெற்ற  திரைமறைவு பேச்சுவார்த்தையை சட்டிஸ்கர் மக்களுக்கு விளக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறார்.

படிக்க:
அசாம் : 51 பேரைக் காவு வாங்கிய தேசிய குடிமக்கள் பதிவு !
♦ ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை ! பழிவாங்கும் மோடி அரசு !

தந்தவாடாவில் பல்லிளிக்கும் அரசு கட்டமைப்பின் தோல்வி :

  • கிராம சபை என்ற அரசு உறுப்பு எவ்வாறு புரையோடி உள்ளது என்பது அது வழங்கிய ஒப்புதல் மூலம் தெளிவாகி உள்ளது. மற்றும் அதை எவ்வாறு எளிதாக வளைக்க முடியும் என்பதற்கான ஒரு உதாரணமாக இது இருக்கிறது.
  • பா.ஜ.க அல்லது காங்கிரஸ் என்று யார் ஆட்சிக்கு வந்தாலும் பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை கார்பரேட் நிறுவனங்களுக்கு சூறையாட அனுமதி வழங்குவதில் போட்டிதான் நடக்கிறது என்பதும் இதில் தெளிவாகிறது.
சட்டிஸ்கர் முதல்வர் பூபேஷ்

தந்தவாடா எஸ்.பி. அபிசேக் பல்லவ் தாங்கள் போராட்டக் களத்தில் மாவோயிஸ்ட்டுகளின் துண்டறிக்கைகளை கண்டறிந்து உள்ளதாகவும், மாவோயிஸ்ட்டுகள் போராட்டத்தை தூண்டுவதாகவும் கூறியுள்ளார்.

சங்க்யூத்  சர்பந்த் ஜன் சங்கர்ஸ் சமிதி என்ற அமைப்பின் தலைவர், நாங்கள் எப்போதல்லாம் எங்கள் உரிமைகளுக்காக போராடுகிறோமோ அப்பொழுதெல்லாம் அவர்கள் இதை வழக்கமாக சொல்வார்கள். நாங்கள் எங்கள் உரிமைகளுக்காக, எங்கள் காடுகளுக்காக, பூமிக்காக, தெய்வத்திற்காக போராடுகிறோம் என்கிறார்.

தந்தவாடாவில் நிறைந்து  இருப்பது கனிம வளங்கள் மட்டுமில்லை!  பீத்தோர் ராணியும், பழங்குடி மக்களின் போராட்டச் சிந்தனையும்தான்!!

பரணிதரன்

செய்தி ஆதாரம் :
Why is Bhupesh Baghel silent on his alleged meeting with Adani officials?
Chhattisgarh mining protests continue on Day 5
♦ Chhattisgarh stops iron ore mining at in Bailadila after tribal protests 
♦ After protests by tribals Chhattisgarh stops mining in Bailadila hills
Dantewada Tribal Protest Enters Fifth Day Against Adani Mining on Hill

இந்திய நாடு அடி(மை) மாடு ! புதிய ஜனநாயகம் ஜூன் 2019

இந்திய நாடு அடி(மை) மாடு ! புதிய ஜனநாயகம் ஜூன் 2019

  1. ஒரு ஏழை முசுலீம் பயங்கரவாதியாக ஆக்கப்பட்ட கதை!
    “தொலைக்காட்சிகளில் தீவிரவாதியாக அடையாளப் படுத்தப்பட்டு விட்டதால், தன்னை யாராவது அடித்தே கொன்றுவிடக்கூடும்” என்ற அச்சத்தில் இருக்கிறார், ரியாஸ் அகமது.
  2.  இந்திய நாடு அடி(மை) மாடு!
    இராமனை விடவும் பாரதிய ஜனதாவின் வெற்றிக்குப் பெரிதும் பயன்பட்ட மாடுதான் சங்கப் பரிவாரத்தின் பக்திக்கு உரியது என்றால், அது மிகையல்ல.
  3. கமண்டலும் மண்டலும் இணைந்த பா.ஜ.க.வின் சாதி அரசியல்!
    பா.ஜ.க. அமைத்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேசிய சாதிக் கூட்டணி எனக் குறிப்பிடுமளவுக்குப் பல்வேறு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளை உள்வாங்கியிருக்கிறது.
  4.  மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம்!
    இந்து மதவெறி பயங்கரவாதத்தைச் சகஜமாக எடுத்துக்கொள்ளும் மனோநிலைக்கு வடமாநில இந்துக்கள் ஆட்பட்டிருப்பதுதான் கவலைக்குரிய விடயம்.
  5.  மோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம்!
    மோடியை இன்னமும் மீட்பராகக் கருதும் அளவிற்கு வட இந்திய மக்களிடம் அரசியல் அறியாமை ஆழமாக வேர்விட்டிருக்கிறது.
  6.  தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி: மோடி வித்தைகள் பலிக்காது!
    பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மென்மேலும் சலுகைகள் அளிப்பது என்பதைத் தவிர, வேறு தீர்வுகள் மோடியிடம் கிடையாது.
  7.  முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடியும் பாசிசத்தின் வெற்றியும்
    முதலாளித்துவம், தனது நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள மோடி போன்ற பாசிஸ்டுகளைத்தான் மக்கள் முன் மாற்றாக நிறுத்துகிறது.
  8.  மேற்கு வங்கம் : சிவப்பு காவியாக மாறியது எப்படி?
    சட்டத்தின் ஆட்சியை யாரேனும் நிலைநாட்ட மாட்டார்களா என்று மே.வங்க மக்கள் ஏங்கிக்கொண்டிருந்த சூழல், வங்கத்தில் பா.ஜ.க. காலூன்றுவதற்குப் பொருத்தமான தருணமாக அமைந்துவிட்டது.
  9.  காவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா?
    உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளைக்கூடப் பின்பற்ற மறுப்பதன் மூலம் கர்நாடகாவிற்குச் சாதகமாகச் செயல்படுகிறது, காவிரி ஆணையம்.
  10.  ஈழப் போர்க் குற்ற விசாரணை : இலங்கைக்குச் சலுகை! ஈழத் தமிழருக்கு வஞ்சனை!
    ஈழப் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், காகிதத் தீர்மானமாகவே இருந்து வருகிறது.
  11.  இரான் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் அடுத்த இலக்கு!
    இரானில் அமெரிக்க அடிவருடிகளை ஆட்சியில் அமர்த்தவே, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து, போர் அச்சுறுத்தல்களையும் ஏவிவிட்டிருக்கிறது, அமெரிக்கா.
  12.  மோடி இந்தியப் பிரதமரானார் ! அதானி உலகக் கோடீசுவரரானார் !
    அதானி குழுமத்தின் அபரிதமான வீக்கத்தின் பின்னே, ஊழல் கறைபடியாத உத்தமர் மோடியின் திருவிளையாடல்கள் மறைந்துள்ளன.
  13.  வேண்டாம் ஹைட்ரோ கார்பன் ! எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !
    பொன் விளைந்த பூமியாக இருந்த நைஜர் டெல்டா, எண்ணெய்க் கிணறுகளால் மனிதர்கள் வாழத் தகுதியற்ற பூமியாக மாறிவிட்டது.
  14. டெல்டாவின் அழிவு ! | வேதாந்தாவின் வளர்ச்சி !
    நைஜீரியாவில் ஒகோனி மக்களுக்கும், நைஜர் டெல்டாவுக்கும் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்கள் என்ன செய்தனவோ, அதைத்தான் வேதாந்தா நிறுவனம் நமக்கும் செய்யும்.

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

கேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் – இராமாயணம் !

கேள்வி : //தரகு முதலாளித்துவம் தரகு ஏகாதிபத்தியமாக வளருமா? இரண்டிற்கும் என்ன வேறுபாடுகள்?//

– காலன்

ன்புள்ள காலன்,

ரகு முதலாளித்துவம் என்பது ஏகாதிபத்தியங்களின் கீழ் நிதி, தொழில் நுட்பம் இதர வகைகளில் அவர்களைச் சார்ந்து இருக்கும் முதலாளித்துவம் ஆகும். தரகு என்ற சொல்லே அதைத்தான் உணர்த்துகிறது.

ஏகாதிபத்தியம் என்பது உற்பத்தியில் ஏகபோகம்; ஆலை மூலதனத்துடன் வங்கி மூலனதனம் கலந்து நிதி மூலதனம் உருவாதல்; நிதிமூலதன ஆதிக்க கும்பல்களின் தோற்றம், மூலதனத்தை ஏற்றுமதி செய்வது, சர்வதேசியக் கூட்டுக் கம்பெனிகள் உருவெடுத்தமை, நாடுகளுக்கிடையே பிரதேச வரையறைக்கான, செல்வாக்கு மண்டலத்திற்கான போட்டி, உலகைப் பங்கீடு செய்து கொண்டது பூர்த்தியாகி இருந்தால், இனி மறுபங்கீடு செய்து கொள்ளப் போட்டி தொடங்குதல், உலகப் போரில் இறங்குதல் என்பவை ஆகும்.

2015 -ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையின் போது வரிசையில் நின்று அவரைச் சந்தித்த இந்திய தரகு முதலாளிகள். (கோப்புப் படம்)

நமது நாட்டில் இருக்கும் தரகு முதலாளிகள் தற்போது தேசங்கடந்து தமது தொழில் விரிவாக்கத்தைக் கொண்டிருந்தாலும், அன்னிய நிறுவனங்களை விலைக்கு வாங்கினாலும் அடிப்படையில் ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பல்களிடம் கடன் வாங்கியும், தொழில் நுட்ப ரீதியாக சார்ந்துமே செயல்படுகின்றனர். எனவே இவர்கள் ஏகாதிபத்திய நாட்டின் ஏக போக முதலாளிகள் எனும் வகையினத்திற்குள் வரமாட்டார்கள்.

♦ ♦ ♦

கேள்வி : //how to study socialism & communism? சோசலிசம் – கம்யூனிசத்தை எப்படி கற்பது?//

– காலன்

ன்புள்ள காலன்,

மார்க்சியம் கற்பது குறித்து இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவி செய்யும் :

♦ மார்க்சியம் கற்பதற்கு கட்சி உறுப்பினராக இருப்பது நிபந்தனையா ?

இதைத் படியுங்கள், பிறகு எங்களது மின்னஞ்சல் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். எங்கள் தோழர்களோடு இணைந்து நீங்களும் மார்க்சியம் கற்கலாம்.

♦ ♦ ♦

கேள்வி : // கேலிக்கூத்தாக்கும் அரசியல் கட்சி கூட்டணிகளை தவிர்க்க – கட்சிகள் “தனித்தே போட்டியிட வேண்டும்” என்று உத்தரவு இட தேர்தல் கமிஷனுக்கு திராணி உண்டா.. ? //

– எஸ். செல்வராஜன்.

ன்புள்ள செல்வராஜன்,

இந்திய தேர்தல் கமிஷனின் அதிகாரம் தேர்தலை தேர்தல் விதிமுறைகள், வழிமுறைகளோடு நடத்துவதை மட்டுமே கொண்டிருக்கிறது. நீங்கள் கூறுகின்றபடி நடக்க வேண்டுமென்றால் அரசியல் சாசன சட்டத்தில் திருத்தங்கள் போடப்பட்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.

மற்றபடி தேர்தல் கூட்டணிகள், விலகல்கள், பேச்சுவார்த்தைகள் அனைத்தும் ஆளுங்கட்சி அரசாங்கத்தின் அதிகார வர்க்கங்கள், உளவுத்துறைகளை வைத்து நடத்துகின்றன. சென்ற தேர்தலில் தேர்தல் கமிஷன் எப்படி பாஜக கமிஷனாக செயல்பட்டது என்பதை அறிவோம்.

♦ ♦ ♦

கேள்வி : //வரும் தேர்தலில் இந்திய அளவில் பாஜக வெற்றியை தக்க வைக்குமா?//

– திலீபன் மோகன்

ன்புள்ள திலீபன் மோகன்,

தற்போது பாஜக வெற்றியடைந்திருப்பதை நீங்களே அறிவீர்கள். வெற்றிக்கு பிறகு மோடி அரசு தனது முந்தைய ஆட்சிக் காலத்தில் செய்த அடக்குமுறைகளை தீவிரமாக செய்யத் துவங்கியிருக்கிறது.

வெளிப்படையான பயங்கரவாதிகளே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு உறுப்பினர்களாக ஆகியிருக்கிறார்கள். பாஜக உறுப்பினர்கள் கீழவையில் பதவிப் பிரமாணம் எடுக்கும் போது ஜெய் ஸ்ரீராம் என முழங்குகிறார்கள்!

♦ ♦ ♦

கேள்வி : //உங்களது தளத்தில் நம் நாட்டின் குறைகள் மட்டுமே வெளிவருகின்றன. ஏன் நம் நாட்டில் நிறைகள் எதுவும் நடக்கவில்லையா, ஏன் அவற்றை பதிவிடுவதில்லை?//

– விஷ்ணுகுமார்

அன்புள்ள விஷ்ணுகுமார்,

நாடு என்பது என்ன? அது அங்கே இருக்கும் மக்களைக் குறிக்கிறது. அந்த மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை வினவு போன்ற மாற்று ஊடகங்கள் தெரிவிக்க விரும்புகின்றன.

அதில் அம்பானி, அதானி, டாடா, அகர்வால் போன்ற முதலாளிகள் சீரும் சிறப்புமாக வாழும்போது பெரும்பான்மை மக்கள் இந்த கோடை காலத்தில் தண்ணீருக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த முரண்பாட்டை உள்ளது உள்ளபடி வெளியிடுவது சரிதானே? அடிப்படை குடிநீருக்கே இந்தக் கதி என்றால் கல்வி, சுகாதாரம், வேலை, இருப்பிடம் அனைத்திலும் நமது மக்கள் நிற்கதியாகத்தானே நிற்கிறார்கள்.

அண்டப்புளுகன் அர்னாப்

இந்தக் குறைகளை வெளியிடுவதன் நோக்கம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு எதிர்காலத்தில் அவர்கள் தமக்கான வாழ்வை நிர்ணயம் செய்யும் வண்ணம் புரட்சி செய்ய வேண்டும் என்பதே. ‘நல்லதொரு குடும்பம், ஹார்லிக்ஸ் குடும்பம்’ போன்றவை விளம்பர மாயையகளே!

ஆளும் வர்க்க ஊடகங்களோ இதற்கு நேர்மாறான செய்திகளை வெளியிடுகின்றது. மோடி அரசு அமெரிக்க அடிவருடியாக செயல்படுகிறது என்று நாம் சொன்னால், தினமலரோ, அர்னாப் கோஸ்வாமியோ வெளிநாடுகளில் மோடி சுற்றுப் பயணம் செய்து நம் நாட்டின் மதிப்பை பன்மடங்கு உயர்த்திருக்கிறார் என்பார்கள். இறுதியில் நேர்மறை செய்திகள் என்பது இப்படித்தான் பொய்யும் புரட்டுமாக இருக்கின்றன.

♦ ♦ ♦

கேள்வி : //தமிழ்த் தேசியம் இங்கு சாதிய தேசியமாக, பிற்போக்குத் தேசியமாக (தியாகு போன்றவர்களைத் தவிர) இருக்கும் நிலையில், முற்றிலும் மாறுபட்ட ஒரு வடிவத்தையும் விமர்சனங்களையும் முன்வைத்து தமிழ்த்தேசியம் பேசும் தேவேந்திர குல வேளார்களின் (உள் நோக்கத்துடன் சாதியை குறிப்பிடவில்லை) கண்ணோட்டம், குறைபாடு, சிக்கல்கள் பற்றி வினவின் பார்வை என்ன?//

– மோகன்

ன்புள்ள மோகன்,

தேவேந்திர குல வேளாளர்கள் மாறுபட்ட வடிவத்தில் முன் வைக்கும் தமிழ் தேசியம் என்ன? எங்கே அப்படிச் சொல்லியிருக்கிறார்கள்? அதன் இணைப்பு ஏதும் அனுப்ப இயலுமா?

புதிய தமிழகம் – டாக்டர் கிருஷ்ணசாமி நேரடியாக பாஜக அடிமையாக மாறியதுதான் சமீபத்திய செய்தி. இதைத்தாண்டி தமிழ்த்தேசியம் பேசும் தேவேந்திர குல வேளாளர்கள் யார்?

♦ ♦ ♦

கேள்வி : //ராமன் கொன்றது அவரது மகன்கள் லவ, குசா என்ற செய்தி உண்மையா?அதன் ஆதாரம் என்ன?//

– அபுசார்

ன்புள்ள அபுசார்,

தோராயமாக ஒரு கணக்கீட்டின் படி இராமயணக் கதையினைக் கூறும் நூல்கள் பல்வேறு மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்டவை இருக்கின்றன. அவற்றில் வால்மீகி ராமாயணம் பழமையானது.

இந்தியாவிலேயே தமிழில் கம்பர், இந்தியில் துளசிதாசர், மலையாளத்தில் எழுத்தச்சன், அசாமியில் மாதவ் கங்குனி, ஒரியாவில் பலராம்தாஸ் போன்றோர் அதை மறுபடைப்பாக்கம் செய்துள்ளார்கள்.

இதன்றி பர்மா, இந்தோனேசியா, கம்போடியா, லாவோஸ், பிலிப்பைன்ஸ், இலங்கை, நேபாள், தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், மங்கோலியா, வியட்நாம் போன்ற நாடுகளிலும் இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட கதைகள் இயற்றப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் வால்மீகி இயற்றிய ராமாயணத்திலிருந்து சிறிதோ, பெரிதோ மாறுபட்டும் இருக்கின்றன. வால்மீகி ராமாயணத்திலேயே முதல் காண்டமான பால காண்டம், இறுதி காண்டமான உத்தர காண்டம் இரண்டும் வால்மீகியால் எழுதப்பட்டதல்ல என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மற்ற காண்டங்களோடு உள்ள மொழிநடையும், கதையிலும் மாறுபாடு இருப்பதால் அப்படி கூறுகின்றனர்.

உத்தரக் காண்டத்தின் படி இராமன் சீதையின் மேல் சந்தேகம் கொண்டு காட்டில் விட்டுவிடுகிறான். அங்கே வால்மீகி ஆசிரமத்தில் சீதைக்கு லவன், குசன் எனும் இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றனர். ராமனின் அசுவமேத யாகக் குதிரையை அவர்கள் கானகத்தில் கட்டி வைக்க, பிறகு ராமனின் சகோதர்களான இலக்குமணன், பரதன், சத்துருக்கனன் ஆகியோர் இரட்டையர்களோடு போரிட்டு தோற்க, பின்பு ராமனே வந்து சண்டை போடுவதாக ஒட்டக்கூத்தர் கதை சொல்கிறார்.

இராமனின் கதை இப்படி வெவ்வேறு நாடுகளின் பண்பாடுக்கேற்ப வேறு வேறு வடிவங்களை எடுக்கின்றன. ஒரு ராமாயணத்தில் ராமனும் சீதையும் சகோதர சகோதரிகளாக இருக்கின்றனர். எனவே நீங்கள் கேட்டிருப்பது போல ஏதாவது ஒரு இராம கதையில் இருந்திருக்கலாம். எங்களுக்குத் தெரியவில்லை.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்