Friday, July 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 415

சோபியாவின் நான்கு சொற்கள் – அடக்கப்படும் தமிழ் மக்களின் பெருங்குரல் !

எந்த இடத்தில் எதை சொல்வது என்று தெரிய வேண்டாமா?
பறக்கும் விமானத்தில் அப்படி சத்தம் போடலாமா?
மற்ற கட்சித் தலைவர்களை நோக்கி இப்படி சொல்லிவிட முடியுமா?

– என இதில் கலர் கலராக தொழில்நுட்பக் காரணங்களை கண்டுபிடித்து அலசுவோர் பலரையும் பார்க்கிறோம்.

தங்கள் மூளையில் உதிக்கும் கருத்து, வாய்க்கு வந்து சேரும் முன்பு, உதிர்க்கப்போகும் சொற்களுக்கு இ.பி.கோ.வில் எந்த செக்‌ஷன் என்று சிந்திப்பவர்கள்

இத்தகைய சிந்தனை கொண்டவர்கள் எந்த காலத்திலும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்த தடையையும் தாண்டப் போவது இல்லை. அவர்கள், தங்கள் மூளையில் உதிக்கும் கருத்து, வாய்க்கு வந்து சேரும் முன்பு, உதிர்க்கப்போகும் சொற்களுக்கு இ.பி.கோ.வில் எந்த செக்‌ஷன் என்று சிந்திப்பவர்கள். அத்தகைய காரியவாதிகளுக்கு சோபியாவின் சுயமரியாதை மிக்க முழக்கத்தின் உணர்ச்சியை புரிந்துகொள்ள இயலாது.

தான் வாழ்ந்த மண்ணை நஞ்சாக்கி, பல்லாயிரம் மக்களை நோயாளிகளாக மாற்றி, குழந்தைகளுக்குக் கூட புற்றுநோயை கொண்டுவரும் ஸ்டெர்லைட் என்ற கொடிய ஆலையின் நேரடி சாட்சியம், சோபியா. கனடாவில் படித்துக் கொண்டிருந்த போதிலும், அவரது மனம் தூத்துக்குடியின் ஒவ்வோர் அசைவோடும் இணைந்திருந்தது என்பதை அவர் எழுதியுள்ள பதிவுகளும், கட்டுரைகளும் சொல்கின்றன. மே 22-ம் தேதி மஞ்சள் சட்டை அணிந்த தமிழக காவல்துறையின் கூலிப்படை, போராடிய மக்களைக் குறிபார்த்து சுட்டு வீழ்த்திய காட்சிகளைக் கண்டு நமக்கு மனம் கொதித்ததுபோல, சோபியாவும் ஆத்திரம் கொண்டார்.

ஒரு நாளோடு முடியவில்லை… அடுத்தடுத்த நாட்களும் வீதி வீதியாக, வீடு வீடாக விரட்டிச்சென்று மக்களை நரவேட்டையாடிய, இளைஞர்களை இழுத்துப்போட்டு அடித்துக்கொலை செய்த இந்த காவல்துறையை இன்னும் எத்தனை காலம் ஆனாலும் யாராலும் மறக்க இயலாது. அப்படி இருக்கும்போது தன் சொந்த ஊரின் மீது நீங்கா நேசம் கொண்ட, தன் மண்ணின் மக்கள் மீது காதல் கொண்ட சோபியாவின் மனதில் அந்த துப்பாக்கி சூடும், போலீஸின் அடாவடி வன்முறைகளும் எத்தகைய ஆறாத காயத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியது இல்லை. அதே துயருடன் அவர் கனடாவில் இருந்து சென்னை வந்திறங்கி, தூத்துக்குடி விமானத்தில் ஏறுகிறார். அங்கே தமிழிசை சவுந்தர்ராஜனைப் பார்க்கிறார்.

தமிழிசை யார்? தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை இந்த கணம் வரை நியாயப்படுத்தி வரும் ஒரு கட்சியின் மாநிலத் தலைவர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசை பின்னின்று இயக்கும் ஒரு கட்சியின் தலைவர். அவரை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் போது சோபியாவின் மனதில் ஏற்பட்ட கொந்தளிப்பு என்பது மிக இயல்பானது. தனது சொந்தங்களைக் கொலை செய்த ஒரு கொலைகாரனை கண்ணெதிரே காண்கையில் உருவாகும் மனக் கொந்தளிப்பு அது. மனித மனதின் ஆதாரமான நீதியுணர்ச்சி. அந்த நேரத்தில் அதை வெளிப்படுத்தினால் விளைவுகள் என்னவாகும் என்று அவர் கணக்கு போடவில்லை. மாறாக கணக்கு போட்டவர் தமிழிசை சவுந்தர்ராஜன்.

தமிழிசையை கதறவிட்ட சோபியா

தான் சார்ந்த ஒரு கட்சியை பாசிச கட்சி என்று தன் கண்ணெதிரே ஒரு பெண் முழக்கமிடுகிறாள். அதுவும், கனவான்கள் பயணிக்கிற விமானப் பயணத்தில், ‘பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக’ என்ற சத்தம், தமிழிசைக்கு எப்படி துளியும் எதிர்பாராத ஒன்றாகவும், திடுக்கிட வைத்த துர்கனவாகவும் இருந்திருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆகாயத்தில் ஒலித்த அந்த போர்க்குரலை அங்கேயே எதிர்கொள்ளும் திராணி தமிழிசைக்கு இல்லாமல் போனது ஏன்? ’சோபியாவுக்கு இங்கிதம் இல்லை;  தமிழிசைக்கு சபை நாகரிகம் தெரிந்துள்ளது’ என இதை புரிந்துகொள்வதா?

பார்ப்பனியத்தின் பெயரால் இந்தியாவை வதைத்து வரும் ஒரு பாசிசக் கட்சி தலைவரிடம் நாகரீகத்தை எதிர்பார்ப்பதே அநாகரீகம். எனினும் அந்த அநாகரீகங்களையே நாகரீகம் என நம்பும் சில அப்பாவிகளுக்காக தமிழைசை ‘நாகரீகமாக’ நடந்து கொண்டால் எப்படி இருக்குமென கற்பனை  செய்து பார்ப்போம்.

அதன்படி சோபியாவை அழைத்து, “உங்கள் கோபத்துக்கு என்ன காரணம்?” என்று விசாரித்திருக்கலாம். பா.ஜ.க. செய்து கொண்டிருப்பது பாசிச ஆட்சி இல்லை என்று அவர் நம்புவதை விளக்கியிருக்கலாம். எதையும் செய்யவில்லை என்பதுடன், விமானம் தரையிரங்கும் வரையிலும் காத்திருந்து தன் கட்சிக்காரர்கள் நிற்கும் இடத்தை வந்தடைந்தவுடன் கோபத்தை வெளிப்படுத்துவது ஏன்? ஏனெனில் சோபியாவுக்கு வந்த கோபம் மிக இயல்பானது. தமிழிசைக்கு வந்த கோபம் செயற்கையானது; காரியவாதமானது. அடியாட்களின் பலத்தில் கொலேச்சும் ஒரு சர்வாதிகாரியுடையது.

ஒருவேளை விமானத்துக்கு உள்ளேயே தமிழிசை தனது கூச்சலை நிகழ்த்தியிருந்தால் என்ன நடந்திருக்கும்? ’உங்க அளவுக்கு அந்தப் பொண்ணுக்கு அறிவில்லை மேடம்’ என்ற பெண் காவலரின் உள்குத்தையும், ‘அறிவெல்லாம் இருக்கு. அதனாலதான் பா.ஜ.க. ஆட்சி ஒழிகன்னு கத்துது’ என்ற தமிழிசையின் சொந்த உள்குத்தையும் பார்க்கும் வாய்ப்பை இழந்திருப்போம் என்பதைத் தவிர ஆகாயத்தில் உண்மையிலேயே என்ன நடந்திருக்கும்?

இது ஒரு சுவாரஸ்யமான யூகம்தான். ஆனால் ஒருவேளை அப்படி நடந்திருந்தால் பறக்கும் விமானத்துக்குள் சோபியாவுக்கான ஆதரவுக் குரல்கள் ஒரு சிலவேனும் எழுந்திருக்கும் என்பது நிச்சயம். அவரது முழக்கத்துக்கு விமானத்தின் இதர பயணிகளில் ஒருவர் கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மற்ற பயணிகளின் அடியாழத்தில் புதைந்துகிடந்த பேசாக்குரலின் சாட்சியாகவே சோபியா ஓங்கி ஒலித்திருக்கிறார்.

உண்மையில் சோபியா செய்ததும், அதற்கு பொதுவெளியில் கிடைக்கும் ஆதரவும் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய நிலைமைகளில் மட்டுமே சாத்தியம். அறிவுஜீவிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் என்பதைத் தாண்டி, தமிழ் சிவில் சமூகம் சோபியாவின் பக்கம் நிற்கிறது. அவரது உணர்ச்சியுடன் தன்னை மிக இயல்பாக ஐக்கியப்படுத்திக்கொள்கிறது. ஆனால் இது வட இந்தியாவில் சாத்தியம் இல்லை. சோபியா ஒரு வட இந்தியராக இருந்திருந்தால் இந்நேரம் அவர் லூயிஸ் சோபியா என்ற பெயருக்காகவே மத அடையாளம் முன்னிருத்தப்பட்டு முத்திரை குத்தப்பட்டிருப்பார்.

சோபியாவின் ‘பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக’ என்ற நான்கு சொற்கள், உறைந்து கிடந்த தமிழ் பொது மனநிலைக்கு ஓர் உத்வேகத்தை தந்துள்ளது. தூத்துக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னால், எட்டுவழிச் சாலைக்கு ஆதரவாக யாரேனும் வாய் திறந்தாலே நடக்கும் கைதுகளுக்குப் பின்னால்… சமூக ஊடகங்களில் கூட அரசுக்கு எதிரான எதிர்ப்புணர்வை வெளிப்படையாக முன்வைக்கும் தன்மை மட்டுப்பட்டிருந்தது. அந்த மடையை சோபியா திறந்துவிட்டிருக்கிறார்.

என் மகள் சட்டத்துக்குப் புறம்பான வகையில் எந்த செயலிலும் ஈடுபடவில்லை – சோபியாவின் தந்தை

தன் செயலுக்கு மன்னிப்புத் தெரிவிக்க சோபியா மறுத்திருக்கிறார். “நான் வெளிப்படுத்தியது இயல்பான பேச்சுரிமை” என்கிறார் அவர். “என் மகள் சட்டத்துக்குப் புறம்பான வகையில் எந்த செயலிலும் ஈடுபடவில்லை. ஒரேயொரு அவச்சொல்லை கூட பேசவில்லை” என்கிறார் சோபியாவின் தந்தையும் மருத்துவருமான கிருஷ்ணசாமி. ஆனால், இந்த அரசு சோபியாவை எளிதில் விட்டுவிடாது. கனடாவில் மீதமிருக்கும் அவரது ஆய்வுப் படிப்பை தொடர்வதற்கு தன்னால் இயன்ற அனைத்து வழிகளிலும் இடையூறைத் தரும். அதை மோடியின் ஒன்னாம் நம்பர் அடிமையான எடப்பாடி மிகுந்த மகிழ்ச்சியுடன் செய்வார். இதன் முதல் கட்டமாக சோபியாவின் பாஸ்போட்டை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்கு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆகவே சமூக ஊடகங்களின் ஒருநாள் கொண்டாட்டமாக சோபியா செய்தி முடிந்துவிடாமல் அவருக்காக நாம் தொடர்ந்து பேச வேண்டும்.

தமிழ்நாட்டில் தொட்டதெல்லாம் பூம்ராங் ஆக மாறி பா.ஜ.க.வை திருப்பித் தாக்கியபோதிலும், தொடர்ந்து எதிர்மறை செய்திகளில் அடிபடுவது குறித்து அவர்களுக்கு எந்த வெட்கமும் இல்லை. ஒரு வார்டு தேர்தலில் கூட வெற்றிபெற இயலாது என்று தெரிந்துவிட்ட பின்பு, தேர்தலுக்கு அப்பாற்பட்ட சமூக உடைப்பை உருவாக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். இறுகிப்போன இந்து மதவாத உணர்ச்சியை இன்னும் ஒருபடி வெறியேற்றவும், தேசியவெறியின் பெயரால் நடுத்தர வர்க்க உணர்வுகளை திசைதிருப்பவும், இவற்றுக்கு முட்டுக்கொடுக்கும் லிபரல்வாதிகளை ஊடகங்களில் உலவவிடவும் இதுபோன்ற தருணங்களை பயன்படுத்திக்கொள்கின்றனர்.

நாம் இவர்கள் அத்தனை பேரையும் அம்பலப்படுத்தும் வாய்ப்பாக இதை எடுத்துக்கொள்ள வேண்டும். ‘பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக’ என்ற முழக்கத்தை சொல்ல வேண்டியது தமிழிசைக்கு எதிராக மட்டுமல்ல. அது பொன்னாருக்கு எதிராக, எச்.ராஜாவுக்கு எதிராக, கே.டி.ராகவனுக்கு எதிராக, நாராயணன் திருப்பதிக்கு எதிராக, பத்திரிகையாளர் மாலனுக்கு எதிராக, குருமூர்த்திக்கு எதிராக, எஸ்.வி.சேகருக்கு எதிராக… இன்னும் பலருக்கு எதிராக எழுப்பப்பட வேண்டிய முழக்கம்.

உரக்க முழங்குவோம், ‘பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக’! 

  • வழுதி

திருச்சி மக்கள் அதிகாரம் மாநாட்டிற்கு போலீசு தடை

கருத்து சுதந்திரம்  – போலீசார் புது விளக்கம்

“சட்டத்தை மீறுவதற்கு உரிமை கோருவதாக உள்ளது“ என்று கூறி மக்கள் அதிகாரம் மாநாட்டிற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

செப்டம்பர் 8 திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அடக்குமுறைதான் ஜனநாயகமா? சாதாரண மக்கள் சட்டப்படியேகூட வாழமுடியவில்லை இந்த நிலை நீடிக்கலாமா? என மாநாடு நடத்த திட்டமிட்டு, தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்த நிலையில் போலீசார் விசித்திரமான காரணங்களை சொல்லி அனுமதி மறுத்துள்ளனர்.

விவசாயியை வாழவிடு – தஞ்சையில் நடைபெற்ற மாநாடு

மோடி அரசிற்கு எதிராக எழுதினால், பேசினால், சிந்தித்தால், செயல்பட்டால் அவர்கள் தீவிரவாதி என முத்திரை குத்தி தாக்குதல் நடத்தும் இன்றைய பா.ஜ.க. அரசின் பாசிச நடவடிக்கை பரவிவரும் சூழலில், போராடும் மக்களை சுட்டுக்கொல்வதும், தேசதுரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பதும் தவறில்லை என ஆட்சியாளர்கள் பேசிவரும் நிலையில் “அடக்குமுறைதான் ஜனநாயகமா?“ என்ற தலைப்பில் நடத்தப்படவிருக்கிறது இந்த மாநாடு.  இதில்,  நடைபெறும் மாநாட்டில் தி.மு.க., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்.,  சி.பி.ஐ. எம்.எல்., த.தே.வி.இ. மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் என பல தரப்பினர் பங்கேற்கவிருக்கின்றனர்.

திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நிகழ்ச்சியை நடத்துவதற்கு முறையாக விண்ணப்பித்த பின்னர் மொத்தம் 19 கேள்விகள் அடங்கிய ஒரு கடிதத்தை அனுப்பியது திருச்சி மாநகர காவல்துறை.

“அடக்குமுறைதான் ஜனநாயகமா? என்பதன் விளக்கம் என்ன? சாதாரண மக்கள் சட்டப்படியேகூட வாழ முடியவில்லை என்பதன் விளக்கம் என்ன? மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களின் நோக்கம், மைய கருத்துக்கள் என்ன? எவ்வளவு நபர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் அதில் ஆண்கள் பெண்கள் எத்தனை பேர்? என 19 கேள்விகள் கேட்டு திருச்சி மாநாகர போலீசார் கடிதம் கொடுத்தனர். இத்தைகய கேள்விகளைக் கேட்கும் அதிகாரம் போலீசுக்கு கிடையாது. இதற்கு எந்த சட்டத்திலும் இல்லை. இவ்வாறு கேட்பதே பேச்சுரிமை கருத்துரிமைக்கு எதிரானது என்ற ஆட்சேபணையுடன் காவல்துறையில் கடிதத்திற்கு பதில் எழுதி கொடுத்தோம்.

இதற்கு முன்னரும், மூடு டாஸ்மாக்கை, விவசாயியை வாழவிடு மாநாடுகள் மற்றும் பல பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி தருவதற்கு முன்னால், போலீசாரால் “என்ன பேச போகிறீர்கள், பாடல் வரிகள் என்ன? மாநாட்டில் பங்கேற்பவர்களின் முகவரி செல் நம்பர் என்ன “ என்பன போன்ற மோசமான கேள்விகள் கேட்கப்பட்டன. இப்படிக் கேள்வி கேட்பது, பின்னர் அனுமதி மறுப்பது, பிறகு உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அனுமதி பெற்று நாங்கள் கூட்டம் நடத்துவது என்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது.

ஒவ்வொரு முறையும் நீதிமன்ற அனுமதி பெற்றுதான் மக்கள் அதிகாரம் பல கூட்டங்களை நடத்தி வருகிறது. எந்த நீதிபதியும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக ஏன் இப்படிபட்ட கேள்விகள் கேட்கிறீர்கள் என காவல்துறையிடம் கேள்வி எழுப்பியதில்லை. கண்டித்ததுமில்லை.

செப்டம்பர் 8 திருச்சி மாநாட்டிற்கு போலீசார் கொடுத்த அனுமதி மறுப்பு உத்திரவில் காவல்துறை சொல்லியிருக்கும் காரணங்களில் முக்கியமானவை கீழ்வருமாறு –

1 கேட்கபட்ட கேள்விகளுக்கு சரியான முழுமையான பதில்கள் தங்களால் அளிக்கப்படவில்லை.

2 உயர்நீதிமன்ற உத்திரவு பெற்று நடத்தப்பட்ட திருச்சி உறையூர் பொதுக்கூட்டத்தில் அத்துமீறி பேசி உள்ளதாக ம.க.இ.க., வி.சி.க., தி.வி.க., த.வி.ச. ஆகிய அமைப்புகளை சேர்ந்த எட்டு பேர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

3 திருச்சி மாநகரின் அழகை சீர்குலைக்கும் வகையில் பொய்யான தகவல்களை போஸ்டராக ஒட்டி உள்ளீர்கள் என ஒருங்கிணைப்பாளர் செழியன் மீது வழக்கு உள்ளது.

4 தங்கள் அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டம், போராட்டங்களின் போது அரசு உழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தாக திருச்சியில் 4 வழக்குகள் உள்ளது.

5 மேலும் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் , புதுக்கோட்டை, தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி,  சென்னை என பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 48 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளதாக தெரிகிறது.

6 திருச்சி ம.க.இ.க. ஜீவா மீது ஒரு போஸ்டர் ஒட்டியதற்காக ஒன்பது ஸ்டேசன்களில் மாநகரின் அழகை சீர்குலைத்ததாக வழக்கு உள்ளது.

7 தங்கள் அமைப்பின் செயல்பாடு நேரடியாக அரசாங்கத்தை எதிர்ப்பதாகவும், அரசின் திட்டங்களை செயல்படவிடாமல் தடுப்பதும் மக்களிடம் தவறான கருத்துகளை பரப்பும் செயல்பாடாகவும் தெரிகிறது.

8 பல வழக்குகளில் தங்கள் அமைப்பினர், குற்றவாளிகளாக இருக்கும் பட்சத்தில் தாங்கள் கோரி உள்ள இந்த அடக்குமுறைதான் ஜனநாயகமா? என்ற சிறப்பு மாநாட்டிற்கு அனுமதி கொடுத்தால் அது தாங்கள் மேலும் ஒரு நிகழ்வில் சட்ட மீறல் நடவடிக்கையில் ஈடுபட வழிவகுப்பதாக அமைந்து விடுமோ என்று தோன்றுகிறது. எனவே தங்கள் அமைப்பின் நடவடிக்கை சட்டத்தை மீறுவதற்கு உரிமை கோருவதாக உள்ளது. எனவே சிறப்பு மாநாடு நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது.

இவைதான் அனுமதி மறுப்புக்கான காரணங்களாம்.

ஜனநாயக உரிமையும் கிடையாது ஒரு வெங்காயமும் கிடையாது என்பதை இதைவிட பச்சையாகவும், வெளிப்படையாகவும் சொல்லமுடியுமா?

போலீசாரின் இந்த உத்திரவிற்கு எதிராக உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வேறு தேதியில் மாநாட்டை நடத்துவோம்.

மேலும் கடந்த பல மாதங்களாகவே தமிழகத்தில் எந்த ஊரிலும் பொதுக்கூட்டம் நடத்த மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு போலீசார் அனுமதி தருவதில்லை. அரங்குகளில் கூட்டம் நடத்த போலீஸ் அனுமதி தேவையில்லை. ஆனால்  மண்டப உரிமையாளரை மிரட்டி கூட்டம் நடத்தவிடாமல் தடுக்கின்றனர்.

கருத்து சுதந்திரம் அனைத்து வழிகளிலும் மறுக்கப்படும் போது விமானத்தில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் எண்ணற்ற சோபியாக்கள் முழக்கமிடத்தான் செய்வார்கள்.

வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

அடுத்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுமா ? இலண்டன் பேராசிரியர் ஜேம்ஸ் மேனர்

பாசிச பா.ஜ.க வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காணாமல் போகும் என்கிறார் இலண்டன் பல்கலை பேராசிரியர்!

‘பாசிச பா.ஜ.க ஒழிக’ என முழக்கமிட்ட காரணத்துக்காக 15 நாள் சிறைக்காவலில் அடைக்கப்பட்டிருக்கிறார் ஆய்வு மாணவர் சோபியா. அவர் எழுப்பிய முழக்கத்தை இப்போது முழு இந்தியாவும் சமூக ஊடகங்களில் எழுப்பிக்கொண்டிருக்கிறது.  சமீபத்தில் மோடியை கொல்ல சதி என்கிற பெயரில் கைதான செயல்பாட்டாளர்கள் குறித்த ஆங்கில ஊடக செய்தி ஒன்றில், பெரும்பாலான பின்னூட்டங்கள் மோடி தன்னுடைய கையாலாகா தனத்தை மறைக்கத்தான் இந்த ‘கொலைப்பழி’ நாடகத்தை போடுகிறார் என்பதை சுட்டுவதாக இருந்தன. மோடி ஆட்சிக்கு வந்த பின், இணைய ஊடகத்தில் மோடி ட்ரால்களின் ஆட்சியாகத்தான் இருந்தது. சமீபகாலமாக அந்த ட்ரெண்ட் மாறியிருக்கிறது. மோடி ட்ரால்களாக இருந்த, நடுத்தர வர்க்கம் சொந்த பாதிப்பிலிருந்து பாடம் கற்றிருப்பதை, அவர்களின் மோடி எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. இதன் காரணமாக ‘பாசிச பா.ஜ.க. வரும் தேர்தலில் ஒழிந்துபோகும்’ என்கிறார் ஜேம்ஸ் மேனர் என்கிற இலண்டன் பல்கலைக்கழக பேராசிரியர்.♦♦♦

ர் ஆண்டுக்கு முன் பா.ஜ.க, வரப்போகிற தேர்தலில் தன் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும் என நம்பியது. ஆனால் சமீபத்திய கருத்து கணிப்புகள், பா.ஜ.க தேய்ந்து வருவதை சொல்கின்றன. மக்களவையில் தனிப் பெரும்பான்மையுள்ள கட்சி, இப்போது தள்ளாட்டத்தை சந்திக்கிறது.  பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்தாலும் அவர்கள் பிரதமரை மாற்றச் சொல்லி கோரிக்கை வைக்கக்கூடும்.

லோக்நீதி என்ற அமைப்பு மே மாதம் வெளியிட்ட கருத்து கணிப்பில் 22% தலித்துகள் பா.ஜ.க.வை ஆதரித்திருந்தனர். கடந்த ஜனவரி வெளியான முடிவைக் காட்டிலும் இது 8% குறைந்திருந்தது. இதுபோல பழங்குடியினரின் ஆதரவும் குறைந்திருந்தது. விவசாயிகளின் ஆதரவு ஒரே வருடத்தில் 49% சதவீதத்திலிருந்து 29% சதவீதமாக குறைந்திருப்பது தெரிந்தது.

மேலும் சில சரிவுகள்…

61%  பேர் இந்த அரசு விலைவாசியை நிர்வகிப்பதில் கோட்டைவிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

55% பேர் ஊழலை ஒழிக்க இந்த அரசு போதிய முயற்சிகள் எடுக்கவில்லை என்கிறார்கள்.

61% பேர் இந்த அரசே ஊழல் அரசுதான் என்கிறார்கள்.

64% பேர் பா.ஜ.க ஆட்சியில் வளர்ச்சி எதிர்மறையாக உள்ளதாக சொல்கிறார்கள்.

57% பேர் 2014 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சொன்ன வேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன் என்ற வாக்குறுதி காற்றோடு கலந்துவிட்டதாக கருதுகிறார்கள்.

47% பேர் இந்த அரசின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்கிறார்கள். முந்தைய  கணிப்பில் 27% பேர் மட்டுமே இப்படி சொல்லியிருந்தார்கள்.

38% பேர், 2014ல் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக்கு வாக்களித்தவர்கள்,     வரப்போகிற தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

மாநிலத்துக்கு மாநிலம் பா.ஜ.க.வின் வளர்ச்சியை கணக்கில் எடுத்தால், இதே போன்ற முடிவுக்கு வரமுடியும். பா.ஜ.க.வுக்கு சாதகமான மாநிலங்களிலிருந்து இதைத் தொடங்கலாம். கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பா.ஜ.க வென்றது. ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்-ஐ குறைத்து மதிப்பிட முடியாது, ஆனாலும், பா.ஜ.க. 10 லிருந்து 15 இடங்களை வெல்ல வாய்ப்புண்டு.

வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு சாதகமான சூழல் உள்ளது. அசாமில் 14 இடங்களில் 7 இடங்களை வென்றது. இது மேலும் அதிகரிக்கலாம் என்றாலும் கருத்து கணிப்பு பின்னடைவு உள்ளதைக் காட்டுகிறது. சிறு மாநிலங்களில் 10க்கு 1 இடத்தில் வென்றது பா.ஜ.க. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு. மேற்கு வங்கத்தில் இரண்டு இடங்களை மட்டுமே பெற்ற பா.ஜ.க, வரவிருக்கிற தேர்தலில் கூடுதல் இடங்கள் கிடைக்கலாம்.

இவற்றை ஒட்டுமொத்தமாக சேர்த்தால் வெறும் 87 எம்.பிக்கள் மட்டுமே கிடைப்பார்கள். 326 இடங்களை ஒப்பிடும்போது இது மிக மிகக் குறைவு. பா.ஜ.க சில அல்லது பல இடங்களை இழக்கலாம்.

டெல்லியில் ஏழுக்கு ஏழு இடங்களை பெற்றது, அதில் இழப்பு ஏற்படலாம். ஹரியானா (10 இடங்களில் முந்தைய தேர்தலில் பெற்றது 7), சத்தீஸ்கர் (11-10), குஜராத் (26-26), ஹிமாச்சல் பிரதேசம் (4-4). மொத்தமுள்ள 63 இடங்களில் பல இடங்களை பா.ஜ.க. இழக்கும்.

பீகாரில் கடந்த தேர்தலில் 40 இடங்களில் 22ல் வென்றது. அதில் 9 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்குப் போனது. ஜார்க்கண்ட்(14-12), கர்நாடகா(28-17). இந்த மாநிலங்களிலும் பா.ஜ.கவுக்கு இழப்பு ஏற்படலாம். குறிப்பாக, பீகாரில் இழப்பு அதிகமாகவே இருக்கும். காங்கிரசுக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்குமான கூட்டணி குறைந்தபட்சம் தேர்தல் முடியும் வரை நீடிக்கும் என எதிர்ப்பார்க்கலாம். இந்தக் கூட்டணி கணிசமான இடங்களைப் பெற வாய்ப்புண்டு. மகாராஷ்டிரத்தில் சிவசேனையுடன் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், 47 இடங்களில் 23 இடங்களைப் பெற்ற கணக்கு வெகுவாக குறையக்கூடும். அப்படியே கூட்டணி அமைந்து விட்டாலும், இவர்களை எதிர்த்துப் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்களைப் பொறுத்தே இவர்களது வெற்றி அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இந்த மாநிலங்களில் மொத்தம் 129 இடங்கள் உள்ளன.

சமாஜ்வாதி கட்சிக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே கூட்டணி ஏற்பட்டால், உத்திரபிரதேசத்தில் பா.ஜ.கவுக்கு கடும் பின்னடைவு ஏற்படும். இதில் காங்கிரசும் ராஷ்ட்ரிய லோக் தளமும் இணைந்தால், கடந்த தேர்தலில் பா.ஜ.க வென்ற 71 தொகுதிகளில் பல தொகுதிகளை இழக்கும்.

இறுதியாக, பா.ஜ.க.வுக்கு மிக மிக சாதகமான இரண்டு மாநிலங்களில் அது கடுமையான பின்னடைவை சந்திக்கும் என கருத்து கணிப்பு அறிவிக்கிறது. மத்திய பிரதேசத்தில் கடந்த முறை 29 இடங்களில் 27 தொகுதிகளை வென்றது. அங்கே தற்போது காங்கிரசுக்கு சாதகமான அலை வீசிக்கொண்டிருக்கிறது. ராஜஸ்தானில் கடந்த முறை மொத்தமுள்ள 25 தொகுதிகளையும் வென்றது. ராஜஸ்தானில் பா.ஜ.க. முதல்வராக முதல்முறை வசுந்தரா ராஜே சிந்தியா தேர்வு செய்யப்பட்டபோது என்னென்ன குளறுபடி செய்து ஆட்சியை இழந்தாரோ அதுபோன்ற சூழல் இப்போதும் நிலவுகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுவதோடு, கணிசமான மக்களவை தொகுதிகளையும் பெறும். பா.ஜ.க. பெற்ற 52 இடங்களில் கணிசமானதை இழக்கும்.

தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மொத்தமுள்ள 102 தொகுதிகளில் கடந்த தேர்தலில் பா.ஜ.க. நான்கு இடங்களை மட்டுமே வென்றது. ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்த பா.ஜ.க. 2 இடங்களில் வென்றது. 2019-ல் இந்த எண்ணிக்கை சற்று கூடும் என எதிர்பார்க்கலாம்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 87 இடங்கள் புதிதாக கிடைத்தாலும், முன்பு கிடைத்த 326 தொகுதிகளின் எண்ணிகையில் பெரும் சரிவு இருக்கும்.

ஆட்சியமைக்கப் போதுமான 272 தொகுதிகளை பா.ஜ.க. பெறுவதுகூட முடியாத நிலைமைதான் என தெளிவாகத் தெரிகிறது. ஆனால், கூட்டணி ஆட்சியமைக்க போதுமான இடங்கள் நிச்சயம் கிடைக்கும். ஆனால் மோடியின் மீது ஆழ்ந்த விரக்தியில் இருக்கும் கூட்டணி கட்சியினரிடம் கடுமையான பேரத்தை பா.ஜ.க. நடத்த வேண்டியிருக்கும். 200-க்கு மேற்பட்ட இடங்களை பா.ஜ.க. பெற்றால், கூட்டணி கட்சியினர் மோடியை மாற்றச் சொல்வார்கள். ஆர்.எஸ்.எஸ் அதற்கு தயாராகவே இருக்கும். 200-க்கும் கீழே எண்ணிக்கை குறைந்தால் கூட்டணி ஆட்சியமைவதும் கடினம்தான்.

இது மாறக்கூடிய நிலைமைதான். அமித் ஷாவின் தந்திரங்கள் பா.ஜ.க.வுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தக்கூடியதுதான். குஜராத், உத்திரபிரதேசத்துக்கு வெளியே ஏராளமான வகுப்புவாதத்தைத் தூண்டும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. எதிர்பாராத நிகழ்வுகள் பா.ஜ.க.வுக்கும் உதவலாம். ஊடகங்களை வளைத்துப் போடுவதன் மூலம் மோடி பிம்பம் இன்னமும் வசீகரிப்பதாக காட்டப்படுகிறது. ஆனால், பா.ஜ.க.வின் முழக்கமான எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா, காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதுதான் உண்மையான ஆபத்தில் உள்ளது.

நன்றி: ஜேம்ஸ் மேனர் எழுதி த வயரில் வெளியான கட்டுரை
For the BJP, a Troubling National Election Outlook

தமிழாக்கம்: கலைமதி

தமிழக சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு செலுத்தும் சித்தாந்தம் எது ? கருத்துக் கணிப்பு

தூத்துக்குடியில் நமது சோஃபியா கால்வைத்த போது இந்த அளவிற்கு இணையப் பெருவெளியில் கழுவிக் கழுவி ஊற்றப்படுவோம் என்பதை பா.ஜ.க. நினைத்திருக்காது.

“கேரளாவில் பா.ஜ.க. அரசு மீது வெறுப்பு வருவதற்கு ஒரு பெருமழையும், வெள்ளமும் வந்து அழிக்க வேண்டியிருந்தது. தமிழகத்தில் அதை ஒரு பெண் சாதித்து விட்டார்” என்று டிவிட்டரில் ஒரு கேரள நண்பர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் சோஃபியாவின் விமான யுத்தத்திற்கு முன்பேயே அது பெருமளவு நடந்திருக்கிறது.

மோடி ஆட்சியேற்ற பின்பு தமிழகம் ஒரு புதிய பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்திருக்கிறது. அட்ரசே இல்லாத பா.ஜ.க., ஊடகங்களை மிரட்டியும், அ.தி.மு.க-வை ஏவியும் தன்னை தமிழகத்தில் நிறுத்திக் கொள்ள தீவிரமாக முயன்று வருகிறது. அதே நேரம் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மீதான வெறுப்பும் தமிழகத்தில் வளர ஆரம்பித்திருக்கிறது. மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழக மக்களிடையே பொதுவில் அரசியல் விவாதங்களை அதிகரிக்கவும், அரசியல் நிகழ்வுகளை கவனிக்கவும் வைத்திருக்கிறது.

குறிப்பாக இணையத்தில் அரசியல் சார்ந்த விவாதங்கள் பல்வேறு வடிவங்களில் – மீம்ஸ் – செய்தி – குறிப்பு – கட்டுரை – வீடியோ – விவாதம் என அதிகரித்திருக்கின்றது. சமூக வலைத்தளங்களில் பல்வேறு அரசியல் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் மோடி அரசின் மீது விமர்சனங்களை வைப்பதோடு தங்களுக்குள்ளும் உரையாடுகின்றன.

கேள்வி இதுதான்:

தமிழக  சமூக வலைத்தளங்களில் மக்களிடையே செல்வாக்கு செலுத்தும் சித்தாந்தம் எது?

  • கம்யூனிசம்
  • திராவிடம்
  • தமிழ் தேசியம்
  • தலித் அரசியல்
  • இந்துத்துவம்

ட்விட்டரில் வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

ஃபேஸ்புக்கில் வாக்களிக்க:

  • வினவு செய்திப் பிரிவு

இனி மோடி படத்தைப் பார்த்து சிரிச்சாக் கூட ஜெயிலுதான் ! கேலிச்சித்திரங்கள்

பாசிச பா.ஜ.க. ஒழிக!

பா.ஜ.க.-வின் அடிமையல்ல, தமிழகம்!
கைகளை உயர்த்துவோம், உரக்க முழங்குவோம்!
பாசிச பா.ஜ.க. ஒழிக!

___________________________________

இல.கணேசன், ஆவேசம்!

ஷோபியா பின்னாடி கூடும் கூட்டம் எங்களுக்குப் பின்னால் ஏன் வரவில்லை? இல.கணேசன், ஆவேசம்!

___________________________________

இனி சிரிச்சாகூட ஜெயிலுதான்.

(ஜெயிலில் கைதிகளுக்கிடையே நடைபெறும் உரையாடல்)
கைதி-1: நீங்கள்லாம் ஏன்பா ஜெயிலுக்கு வந்தீங்க ?
கைதி-2: நான் மோடிய பத்தி ஒரு ஜோக் சொன்னேன்
கைதி-3: நான் அந்த ஜோக்கை கேட்டேன்.
கைதி-4: நான் அந்த ஜோக்குக்கு சிரிச்சேன்.

___________________________________

புதிய இந்தியா

புதிய இந்தியாவிற்கு உங்களை வரவேற்கிறோம்.
கும்பல் கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர் – பிணையில்
சமூக செயற்பாட்டாளர் – சிறையில்

___________________________________

நகர்ப்புற நக்சல்

(இரயில் பயணத்தில் இரு பயணிகள்)
பயணி-1: ஷ்…ஷ்.. பாரு அவன் ஒரு புத்தகம் படிச்சிகிட்டு இருக்கான்.
பயணி-2: ஷ்..ஷ்.. அவன் ஒரு நகர்ப்புற நக்சலாத்தான் இருப்பான்.

கருத்துப்படங்கள்: வேலன் மற்றும் இணையம்.

சுங்கச்சாவடியில் நிற்காமல் எந்த வழக்கில் தீர்ப்பளிக்க விரைகிறார்கள் நமது நீதிபதிகள் ?

நீதிமன்றங்களின் சமீபத்திய தீர்ப்புகள்:

தீர்ப்பு 1: இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் (தலை கவசம்) அணிய வேண்டும்.

தீர்ப்பு 2: நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் நீதிபதிகள் நின்று செல்வதால் நேரம் விரயம் ஆகிறது. அதனால் நீதிபதிகளுக்கும் மற்ற விஐபி-களுக்கும் தனி வழி அமைக்க வேண்டும்.ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது உள்ளபடியே நல்ல எண்ணம்தான். இரு சக்கர வாகனம் ஓட்டும் சாதாரண மக்களின் உயிர்களை காக்க நல்ல எண்ணத்துடன் சொல்லப்பட்ட தீர்ப்பு தான். ஆனால் நீதிமன்றங்கள் யாரை ஒழுங்குபடுத்துவதில் வேகமாகவும் ஆர்வமாகவும் இருக்கின்றன என்பது கவனிக்க வேண்டியது.

பள்ளி – கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் பேருந்தில் பயணம் செய்வதில்லை. படிக்கட்டுகளில்தான் பயணிக்கின்றனர்

எந்த நகரத்துக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். பள்ளிகள் கல்லூரிகள் துவங்கும் நேரத்தில் பள்ளி கல்லூரி வழியாக செல்லும் பேருந்துகள் நிரம்பி வழியும். மாணவர்கள் மாணவிகள் என அனைவரும் படிகளில் பயணம் மேற்கொள்வதைப் பார்க்கலாம். அரசு பேருந்துகளில் மட்டுமல்ல, தனியார் பேருந்துகளிலும் இப்படித்தான் செல்கிறார்கள். மிகவும் சிரமப்பட்டு செல்வது மட்டுமல்லாமல், இப்படி செல்வதால் விபத்துகளும் நடப்பதுண்டு.

இதே போல மழைக் காலங்களில் சாலைகள் பழுதடைந்து சரி செய்யப் படாமல் விபத்துகள் நிகழ்ந்து அதிலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் உயிரிழப்பதும் ஆண்டுதோறும் நடக்கும் விடயம் தான்.

நீதிபதி ஹெல்மெட்டுக்கு மட்டுமே கவலைப்படுவார்.

ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சட்டம் இருப்பதுபோல பேருந்தில் அதிக பயணிகளை ஏற்றிச்செல்லக் கூடாது என்றும் சட்டம் இருக்கிறது. அதிகம் ஏற்றிச் சென்றால் அதற்கேற்ற தண்டனையையும் சட்டம் கூறுகிறது.
ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த இருக்கும் முனைப்பும் வேகமும் அதிக பயணிகள் சட்டத்தை அமல்படுத்துவதில் ஏனோ இருப்பதில்லை. இரண்டு சட்டங்களும் பின்பற்றப்படாததாலும் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. ஆனால் ஒரு சட்டம்தான் அவர்களுக்கு முக்கியமாக தோன்றுகிறது. இதனால் நமக்கு புரிவது என்ன?

எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு: “ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி (பூசாரி)”.

உத்தரவுகளும் சட்டங்களும் எளியவர்களுக்கு மட்டும்தான் போல. அரசுக்கோ பணம் படைத்தவர்களுக்கோ எந்த சட்டமும் அமல்படுத்தப்படுவது இல்லை. ஏன் என்ற கேள்வியை யார் கேட்க முடியும்! கேட்டால் மாண்பு குறைந்துவிடும். அவமதிப்பாகி விடும்.

வேகமாக தீர்ப்பளிப்பதைப் பற்றி சில செய்திகளை பார்ப்போம்.

18 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு :

கடந்த 2017-ம் ஆண்டு, செப்டெம்பர் 19, 20-ல் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். கடந்த ஜனவரி 2018-ல் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுகிறது. பிறகு அந்த தீர்ப்பு ஜூன் 2018-ல்தான் வருகிறது. கடந்த 2018 ஜூலை இறுதியில் மூன்றாம் நீதிபதி முன் வாதங்கள் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி. பழைய ’சாதனைகளின்’படி பார்த்தால் டிசம்பர் அல்லது ஜனவரி 2019-ல்தான் தீர்ப்பு வரும். சாதாரணமாக யாரைக் கேட்டாலும் மணிக்கணக்கில் பதில் சொல்லக்கூடிய ஒரு கேள்விக்கு ஒரு வருடம் ஆகியும் இன்னும் பதில் இல்லை.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில் நடக்க வேண்டியது. தேர்தல் முறையாக நடக்கவில்லை என்று வழக்கு தொடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அக்டோபர் 2018 ஆகப் போகிறது இன்னும் தேர்தல் நடத்தியபாடு இல்லை.

18 எம்.எல்.ஏ-க்கள் இல்லை, அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை, உள்ளாட்சி தேர்தல்கள் நடக்கவில்லை. இவை அனைத்துக்கும், தேர்தல் ஜனநாயகம் கிட்டத்தட்ட அனைத்து நிலைகளிலும் செயல்படாமல் இருப்பதற்குக் காரணம், வழக்குகள் நீதி மன்றங்களில் நிலுவையில் இருப்பதுதான்.

ஜெயா வழக்கு :

1996-ல் சுப்பிரமணிய சாமி ஜெயாவுக்கு எதிராக வழக்கு தொடுக்கிறார். 1991-96 ஜெயா முதல்வராக இருந்தபொழுது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்பது வழக்கு. 2000 வாக்கில் முதல்முறையாக தீர்ப்பு வருகிறது. அதனால் 2001 தேர்தலில் வெற்றி பெற்றும் முதல்வராக முடியாமல் (பின்னாள்) தர்மயுத்த நாயகன் முதல்வர் ஆகிறார்.

பிறகு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டு, பல கூத்துகளுக்கு பிறகு, 2014-ல் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பளிக்கிறது. உடனே மேல்முறையீடு. சில நாட்களில் உச்ச நீதிமன்றம் பிணை வழங்குகிறது.
பிறகு உச்ச நீதிமன்றம் விசாரித்து, ஜெயா கடந்த 2016-ல் இறந்த பின்னர் 2017-ல் இறுதித் தீர்ப்பு வருகிறது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாரா இல்லையா என்று தீர்ப்பளிக்க 20 ஆண்டுகள். இந்த 20 ஆண்டுகளில் அவர், மூன்று முறை முதல்வர் ஆகி, பிறகு இறந்தே போய்விட்டார். ஆனால் சொத்து சேர்த்தாரா இல்லையா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைப் போன்று வழக்குகளுக்கு விரைவாக தீர்ப்பளிக்க விரைவாக செல்லவேண்டி உள்ளது. சுங்கச்சாவடிகளில் எல்லாம் நின்றால் நேரம் விரயமாகிறது. அதனால்தான் தனி வழி வழங்கப்பட வேண்டும்.

நீதிபதிகள் பற்றி மட்டும்தான் எழுதப்பட்டிருக்கிறது என்றாலும், இது ஆள்பவர்கள் அனைவருக்கும் பொருந்தும். எத்தனை சலுகைகள், எத்தனை சிறப்பு வழிகள்!

எங்கோ படித்தது – ‘சாலைகளில் அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் செல்லும் வாகனங்களில் உள்ள வேகம் ஏனோ அவர்கள் செய்யும் செயல்களில் இருப்பதில்லை, ஆட்சியில் இருப்பதில்லை!’

நன்றி : Arun Karthik முகநூல் பக்கம்

அச்சுறுத்தும் பாசிசம் | ஆனந்த் தெல்தும்டே பங்கேற்கும் மக்கள் அதிகாரம் அரங்கக் கூட்டம்

மக்கள் அதிகாரம்

அச்சுறுத்தும் பாசிசம்செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல் !

அரங்கக் கூட்டம்

  • இடம் : சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை
  • நாள் : 08.09.2018, சனிக்கிழமை
  • நேரம் : மாலை 4.00 மணி

நிகழ்ச்சி தலைமை:

ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

கருத்துரை:

  • பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே
    பொதுச் செயலாளர் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு, கோவா
  • பேராசிரியர் முரளி
    பொதுச் செயலாளர், பி.யு.சி.எல், தமிழ்நாடு & புதுவை
  • தியாகு
    தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்
  • மருதையன்
    பொதுச் செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்

நன்றியுரை:

வெற்றிவேல் செழியன்
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

பாசிசத்தை முறியடிக்க ஒன்றிணைவோம்!

அனைவரும் வாரீர்!

தகவல்:

மக்கள் அதிகாரம் – சென்னை
தொடர்புக்கு : 91768 01656

குறிப்பு : இந்நிகழ்ச்சி வினவு நேரலையில் ஒளிபரப்பப்படும்

குட்கா இழிபுகழ் விஜயபாஸ்கரின் ஊரில் மக்கள் வாழ் நிலைமை !

விலை இல்லாத நெல்லும், வேலை கிடைக்காத படிப்பும், அமைச்சரின் சாதனையும் – ஒரு ஐ.டி. ஊழியரின் அனுபவம்!

டந்த வாரம் ஊருக்கு சென்றிருந்தபோது, எனது தந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்திருந்த காரணத்தால், அன்றைய தினம் நடைபெற்ற அவர் நண்பர் வீட்டு திருமணத்தில் நான் சென்று கலந்து கொள்ள வேண்டி இருந்தது. திருமணம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் நடைபெற்றது, திருமணத்திற்கு தலைமை, சுகாதாரத் துறை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர்.

குட்கா புகழ் அமைச்சர் திரு. விஜயபாஸ்கர்

தாலி எடுத்துக்கொடுத்து, திருமணத்தை நடத்தி முடித்துவிட்டு மணமகளின் தந்தையையும் (அ.தி.மு.க), மணமக்களையும் வாழ்த்திப் பேசிவிட்டு, தங்கள் ஆட்சியின் ‘சாதனைகளை’ விளக்கிப் பேசினார். அதாவது “எங்கள் (‘அம்மா’வின் மற்றும் அவர் இறந்த பின்னர் நடக்கும் ‘எடுபிடி’/’பினாமி’) ஆட்சியில் தமிழகம் முழுவதும் அரசானது பல்வேறு ‘சாதனைகளை’ நிகழ்த்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தத் தொகுதியில் புதிதாக அரசு கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, காவிரி கூட்டு குடிநீர் மற்றும் இன்னும் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது” என்றவாறு அமைச்சரின் பேச்சானது கட்சிக்காரர்களிடம் கரவொலி பாராட்டு பெற்றது.

ஏனோ கட்சி சார்பற்ற மக்களிடம் (குறிப்பாக சிறு குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளிகள்) இருந்து எந்த ஒரு உணர்ச்சியையும் காண முடியவில்லை. அவர்கள் அமைச்சரின் பேச்சை ஏற்றுக் கொள்கிறார்களா, இல்லையா என்பதை அவர்களின் முகத்தில் காண முடியவில்லை.

எனது பக்கத்தில் அமர்ந்திருந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் “என்னங்க, அமைச்சர் இந்தப் பகுதிக்கு இவ்வளவு நல்லது பண்ணி இருக்காரு. அப்புறம் என்ன கவலை உங்களுக்கு?” என நான் கேட்டேன். மணல் மாபியா சேகர் ரெட்டி கும்பலுடன் கூட்டணி வைத்து கொள்ளை அடித்தது தொடங்கி குட்கா ஊழல் மேட்டர் வரை வருங்காலத்தில் வரலாற்றுப் பாடங்களாக அமையப்போகும் அமைச்சரின் ‘வரவு செலவு’ விவரங்களை – அந்த சரித்திர சாதனைகளை எனக்கு தெரிந்ததை விட நிறையவே அவர் விவரித்தார்.

அமைச்சர் எந்தெந்த வகையிலெல்லாம் ‘உழைத்து’ தன் பெயரிலும் தனது பினாமி பெயரிலும் சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார் என்பதை அம்மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர். “அமைச்சர் பெரிய மலை முழுங்கி, ஊழல் பேர்வழின்னு தெரிஞ்சும் உங்களுக்கு அவர் மீது கோவம் வரலையா” என்றால், ஒன்று, தங்களின் விதியை நொந்து கொள்கிறார்கள் அல்லது அமைச்சர் ஊழல் செய்வதையும், இதுவரையில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதையும் அவரின் தனித் திறமையாக பார்க்கிறார்கள் என்ற பரிதாபமான நிலையை அவரின் பேச்சிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது.

மாதிரிப் படம்

மேலும், அப்பெரியவரின் அருகில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் தமது ஊர் மக்கள், குறிப்பாக கல்லூரி படிப்பு முடித்த இளைஞர்களின் நிலையை கூறினார். வயல் காடுகளில் கஷ்டப்பட்டு உழைத்து B.E, B.Sc, M.Sc, MBA, MCA, மற்றும் Diploma என்று படிக்க வைக்கப்பட்ட இளைஞர்கள், தாங்கள் படித்த படிப்பிற்கு தகுதியான வேலை கிடைக்காத காரணத்தினால் திருப்பூர் சாயப்பட்டறை, சென்னையில் Credit Card Marketing, உள்ளூரில் இருந்தால் திருமணங்களுக்கு கூலிக்கு சமையல் வேலை செய்யச் செல்வது, மளிகைக் கடை வேலை, கடைசிக் கட்டமாக சிங்கப்பூர் அல்லது Gulf நாடுகளுக்கு வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். இதுதான் அப்பகுதி சிறுகுறு விவசாயிகளின் வாரிசுகளான முதல் தலைமுறை பட்டதாரிகளின் நிலைமை.

என்னிடம் பேசிய அந்த இளைஞர் கூட இன்ஜினியரிங் முடித்திருக்கிறார். தனது கல்லூரியில் Campus Interview-க்கு எந்த நிறுவனமும் வரவில்லை என்பதால் சென்னை சென்று அங்கு தங்கி சில மாதங்கள் வேலை தேடி இருக்கிறார். தனது படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லையென்ற படியால் இப்பொழுது சிவில் சர்விஸ் தேர்வுக்கு Coaching செல்வதாக கூறினார்.

தங்கள் இரத்தத்தை வியர்வையாக சிந்தி நெல், கரும்பு, வேர்க்கடலை, மற்றும் இன்னும் பல உணவு பொருள்களை விளைவித்த விவசாயி உரிய விலை கிடைக்காமல் சுரண்டப்படுகிறார். விவசாயம் என்றால் வாழ்நாள் முழுவதும் கடினமே, உழைப்புக்கேற்ற உயர்வு இல்லை என்பதையும், அவர்களின் தலைமுறையில் பட்டதாரிகள் அரசு வேலை பெற்று சலுகைகள் பெற்றதை பொருத்திப் பார்த்து, ”எனக்குத்தான் அந்த ’கொடுப்பினை’ இல்லை, ஆனால் என் பிள்ளைகள் என்னை போல் கஷ்டப்படக் கூடாது/ சுரண்டப்படக்கூடாது, அவர்களை கஷ்டப்பட்டு படிக்கவைத்து ஒரு நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும்” என்று படிக்க வைத்தனர்.

ஆனால் அவர்களது பிள்ளைகளோ அதற்கு எதிர்மாறாக, படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லாமல் கிடைத்த வேலைக்கு அதாவது தினக் கூலிகளாக சென்று கொண்டு இருக்கிறார்கள். எதிர்காலம் எப்படி இருக்குமென்று தெரியாமல் புலம்பித் திரியும் நிலைமையே மிச்சமாக உள்ளது.

அந்த பகுதியில் நடக்கும் விவசாயம் பற்றி விசாரித்தபோது கிடைத்த விவரங்கள், அதாவது 1996 வரை அப்பகுதியில் விவசாயமானது 90% வானம் பார்த்த பூமியாகத்தான் இருந்திருக்கிறது. கொல்லை (புன்செய்) பகுதிகளில் கிணற்று பாசனமாகவும், அதுவும் மரணப் படுக்கையில் இருந்த தருணம். வயல்(நன்செய்) பகுதிகள் மழை பெய்து நிரம்பியிருந்தால் ஏரி பாசனமாகவும், அதைவிடுத்து ஒரு சில விவசாயிகளிடம் டீசல் பம்ப் மோட்டார் கொண்ட ஆழ்துளை கிணற்று பாசனமாகவும் இருந்திருக்கிறது.

1996 ஆரம்ப கட்டங்களில், மின்சார வாரியம் புதிய திட்டத்தை அப்பகுதியில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ரூபாய் 50,000 கட்டினாலே உடனடி மின் இணைப்பு கிடைக்கும் என்பது தான் அந்தத் திட்டம். பல விவசாயிகள் கடன் வாங்கி தங்கள் விவசாயத்திற்கு மின் இணைப்பு பெற்றிருக்கிறார்கள். 3 Phase Supply 12 மணி நேரம் மட்டும் இருந்திருக்கிறது, அடுத்த சில வருடங்களில் அது 20 மணி நேரமாக உயர்த்தப்பட்டு விவசாயம் முப்போகமும் செய்யப்பட்டு வந்திருக்கிறது.

2008-க்கு பிறகு தமிழ்நாட்டில் ஏற்பட்ட மின் தட்டுப்பாடு காரணமாக, குறிப்பாக கிராமங்களில் கடுமையான மின்வெட்டு, அதிலும் 3 Phase மிகவும் குறைவான நேர Supply தான் இருந்திருக்கிறது. முப்போகமும் விளைந்த பூமி இப்பொழுது ஒரு போகத்திற்கே ‘முக்குகிறது’ என்றும், பாதி வயல்கள் தரிசாகவும் (அதில் கருவேல மரங்கள் வளர்ந்து அப்பகுதியின் ‘பசுமையை’ இன்னும் நிலை நாட்டி வருகின்றன), மிச்சம் மீதியில் நெல் அல்லது சவுக்கு விவசாயம் அதுவும் ஏனோ தானோ என்று தான் நடப்பதாக கூறினார்.

“இந்த கல்யாணத்திற்கு வந்திருக்கவங்கள்ல முக்கால்வாசி பேரு வீட்ல ரேஷன் அரிசி சாப்பாடுதான், அந்த அரிசியின் லட்சணம் எப்படி இருக்கும்னு உங்களுக்கு தனியாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ரேஷன் அரிசி ஒருவேளை நிறுத்தப்பட்டால் ஊரில் முக்கால்வாசி மக்கள் பட்டினியாக கிடக்க வேண்டி வரும் அல்லது ஊரை காலி செய்து விட்டு எதாவது நகரத்திற்கு கூலி வேலைக்குச் செல்லும் நிலைமைதான் ஏற்படும்” என்றார்.

விவசாயிகள் இந்த கார்ப்பரேட் அரசாலும், தனியார் வியாபாரிகளாலும் சுரண்டப்பட்டு வருகிறார்கள். உண்மையில் தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பதை இன்னும் விவசாயிகள் உணரவில்லை. மாறாக விவசாயம் என்றால் நஷ்டமே என்ற நிலைப்பாடு மட்டுமே உறுதியாக உள்ளது. இப்பொழுது அவர்களின் பிள்ளைகள் வேலை வாய்ப்பற்றும் தனியார் சிறு முதலாளிகளால் சுரண்டப்பட்டும் வருகிறார்கள்.

புழுத்துப் போன ரேஷன் அரிசி சோறுதான், மிஞ்சிப் போனால் கலைஞர் வீடு அல்லது ‘அம்மாவின்’ பசுமை வீடு. ஆனால் தாம் இந்த அரசுக்கு தமது உழைப்பின் மூலம் அளித்த வருமானங்கள் ஏராளம் என்பதை உணர்ந்து இருந்தால் அமைச்சரின் பேச்சுக்கு இவர்களின் எதிர்வினை என்னவாய் இருந்திருக்கும்?

மக்களின் வரிப் பணத்தில் அமைச்சர்களுக்கு வீடு, மாதம் லகரங்களில் சம்பளம், கோடி கணக்கில் கமிஷன்கள், கமிஷன்களை முறைப்படுத்த IAS படித்த அதிகாரி, அவருக்கும் நமது வரி பணத்தில் சம்பளம், அரசு வாகனம், வீடு… இன்னும் பல சலுகைகள். அவர்களின் சொகுசுக்கு குறைவு இல்லாமல் செவ்வனே செய்து வைத்துள்ளது, இந்த ‘ஜனநாயக’ அமைப்பு. இவர்கள் மக்களின் பிரதிநிதியாம்? இவர்கள் தான் மக்களுக்கு ‘சேவை’ செய்பவர்களாம்!

அமைச்சர் அவர்களே, நீங்கள் சாதித்ததாக கூறுகிறீர்களே அந்தக் கல்லூரியில் படிக்க வைத்து தங்களது குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி என்ற பெருமையை பெற்று விட்டார்கள் அப்பகுதி விவசாயிகளின் பிள்ளைகள். ஆனால் அவர்களுக்கான வேலை?

அமைச்சர் அவர்களே, நீங்கள் MBBS படித்துள்ளதாக கேள்விப் பட்டேன், அதனால் உங்களிடமே இதை கேட்டு விடலாம், “நீங்கள் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து முடிக்கிறீர்கள், அன்று மாலையே நீங்கள் செய்த அறுவை சிகிச்சைக்காக உங்களுக்கு விருந்து வைக்கப்படுகிறது.

நீங்களும் அவ்விருந்தில் கலந்துகொண்டு உங்களின் அறுவை சிகிச்சை சாதனையை பெருமைபடக் கூறுகிறீர்கள், மக்களும் அதை ரசிக்கிறார்கள், ஆனால் உங்களுக்கு உண்மை தெரியுமா? உங்களிடம் ஆபரேஷன் செய்து கொண்டவர் உயிரிழந்து விட்டார் என்பதுதான் அது.

இன்னும் பரிதாபத்துக்குரிய நிலை என்ன தெரியுமா, உங்களிடம் ஆபரேஷன் செய்து கொண்டவர் செத்துவிட்டார் என்று தெரிந்தும், மக்கள் உங்களின் சாதனையை ரசித்து கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான்.”

  • பாமரன்

நன்றி : new-democrats

அனிதாவின் சொந்த கிராமத்தில் முதலாம் ஆண்டு நினைவேந்தல் | பு.மா.இ.மு.

1

நீட் எதிர்ப்பு போராளி மாணவி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி!

நீட் எதிர்ப்பு போராளி மாணவி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி அனிதாவின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமுர் கிராமத்தில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர்.

மருத்துவக்கல்வியிலிருந்து விரட்ட நீட் தேர்வு! பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களை உயர்கல்வியிலிருந்து விரட்ட உயர்கல்வி ஆணையம்.
உயர்கல்வியை கார்ப்பரேட், காவிமயமாக்கத் துடிக்கும் மோடி எடப்பாடி அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இறுதியில் அனிதாவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி இரங்கல் செலுத்தினர்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, விருத்தாசலம். 97888 08110

***

மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம்!

மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம்! என்கிற முழக்கத்தின் கீழ் தமிழகம் முழுவதும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தமிழகம் முழுவதும் வீச்சான பிரச்சாரத்தை மேற்கொண்டும் கருத்தரங்கம், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அதனுடைய ஒரு பகுதியாக தருமபுரி பெரியார் மன்றத்தில் 31.08.2018 அன்று மாலை அரங்க கூட்டத்தை நடத்தினர்.

பு.மா.இ.மு மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் சத்தியநாதன், தனது தலைமை உரையில், ”UGC – யை குறித்து பெரும்பான்மை மாணவர்கருக்கு தெரியாத நிலை உள்ளது. இதனை வீச்சாக எடுத்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் நாடு முழுவதும் போராட்டங்களை அடக்குவது , கைது ,
சிறை என தொடர்ந்து வருகிறது. எனவே கருத்துரிமை பறிப்பதற்கு எதிராக மாணவர்கள் பெற்றோர்கள் சங்கமாக சேர வேண்டிய தருணமிது” என்றார்.

பு.மா.இ.மு கரூர் மாவட்ட அமைப்பாளர தோழர் சுரேந்தர் பேசுகையில் ”20 லட்சம் கோடி வருவாய் இலக்கை அடைய இந்த திட்டத்தை கொண்டு வருகிறார்கள்.” என்பதைக் குறிப்பிட்டு, கல்வி வியாபாரமயமாக்கப்படுவதை அம்பலப்படுத்தினார்.திராவிட கழக மாணவர் அணி தருமபுரி மாவட்ட செயலாளர் தோழர் செல்லதுரை பேசுகையில், ”கல்வி மட்டும் தான் சுய ஒழுக்கம், தனி மனித ஒழுக்கம் , பகுத்தறிவை தரக்கூடியது. அதனை பறிப்பதை அனுமதிக்க முடியாது. பெரியாரும், அம்பேத்கரும் இல்லை என்றால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி பெ ற்றிருக்க முடியாது. ஊழல்வாதிதான் உயர் கல்வி துறை அமைச்சர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. ” என்று கேள்வி எழுப்பினார்.

சென்னை ஐ. ஐ.டி. அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் நிறுவன உறுப்பினர், முனைவர் ரமேஷ் சிறப்புரையாற்றினார். ”இந்தியா முழுவதும் 40,000 கல்லூரிகள் 180 பல்கலை கழகங்கள் இருக்கிறது. இதனை பல்கலைக்கழக மானியக் குழு தான் கட்டுப்படுத்துகிறது. இதனை பறித்து கல்வியை சந்தை மயமாக்குவது, கார்ப்பரேட்டு மயமாக்குவதுதான் இந்த உயர் கல்வி ஆணைய மசோதாவின் நோக்கம். தன்னாட்சியை கல்லூரிகளுக்கு வழங்குவதால் ஏழை மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படிக்க முடியாத நிலை உருவாகும். ”நீட்”டினால் எப்படி அனிதா படிக்க முடியவில்லையோ?அது போல தான் பெரும்பாண்மை மாணவர்களுக்கும் ஏற்படும். எல்லா விதிமுறைகளையும் கார்ப்பரேட்களுக்காக தளர்த்தி விட்டார்கள். பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கூட்டமைப்பை உருவாக்கத் தவறினால் மருத்துவக் கனவுக்கு எப்படி நீட் மூலம் சவக்குழி தோண்டினார்களோ? அதே போல் சாதாரணமாக டிகிரி படிப்பதற்கும் சவக்குழி தோண்டுவார்கள். எனவே இதை எதிர்த்துப் போராடாமல் இலவசக் கல்வி, தரமானக் கல்வியை பெற முடியாது” என்று அறைகூவல் விடுத்தார்.

பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன்,படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுக்காமல் உயர்கல்வி படித்தவர்கள் ஓட்டலில் வேலை பார்க்கும் நிலையிருப்பதையும்; மாணவர்கள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த மக்களத் வாழ்வாதாரமும் பறிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார். மேலும், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து கூட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,தருமபுரி. தொடர்புக்கு: 81 480 55 539.

அச்சுறுத்தும் உபா சட்டம் ! மதுரை வழக்கறிஞர்கள் – பேராசிரியர்கள் – எழுத்தாளர்கள் கண்டனம் !

னித உரிமை செயற்பாட்டாளர்கள் கைதை கண்டித்து மதுரையில் செப்-08 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வழக்கறிஞர்கள் – பேராசிரியர்கள் – எழுத்தாளர்கள் வெளியிட்ட கண்டன கூட்டறிக்கை.

-o0o-

என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் – பேராசிரியர்கள் – எழுத்தாளர்கள் வெளியிடும் கண்டன கூட்டறிக்கை.ஆகஸ்ட் 28, 2018 அன்று மக்கள் உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சுதா பரத்வாஜ், வெர்னான் கன்சால்வேஸ், அருண் பெரெய்ரா, கவுதம் நவ்லகா மற்றும் எழுத்தாளர் வரவர ராவ் ஆகியோரை ஊஃபா (UAPA) சட்டத்தின் கீழ் குற்ற எண். 4/2018 வழக்கில் கைது செய்துள்ளது மகாராட்டிரா காவல்துறை. கோவா ஐ.ஐ.எம். பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டெ, பாதிரியார் ஸ்தான் சாமி உள்ளிட்டோரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களது உடைமைகள் காவல்துறையால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டாக ஊடகங்களில் பரப்பப்பட்டது ‘மோடியை கொல்லச் சதி செய்தார்கள்’ என்பதே. உண்மையில் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டது பீமா கோரேகான் சம்பவத்திற்காக. தற்போது இரண்டையும் இணைத்து செய்தி பரப்பப்படுகிறது.

பீமா கோரேகன் நிகழ்வு:

1818 ஜனவரி 1 அன்று மகாராஷ்டிரா மாநிலம் பீமா கோரேகானில் நடந்த போரில், ஆங்கிலேயப் படையில் இணைந்த தலித் மக்கள் தங்களைக் காலம் காலமாக ஒடுக்கிவந்த, மேல்சாதி பேஷ்வா ஆட்சியாளர்களை வென்றார்கள். அந்தப் போரின் 200-ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு, கடந்த டிசம்பர்,31,2017-இல் நூறுக்கும் மேலான தலித் – மனித உரிமை – தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் முற்போக்காளர்கள் உள்ளடங்கிய எல்கர் பரிசத் (Elgar Parisad) அமைப்பால் நடத்தப்பட்டது. எல்கர் பரிசத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.சாவந்த், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கோல்சே படேல் ஆகியோரும் உறுப்பினர்கள்.

2018 ஜனவரி 1 ஆம் தேதியன்று தலித் இயக்கங்கள் நடத்திய பீமா கோரேகான் 200 ஆம் ஆண்டு
நினைவு தின நிகழ்ச்சியில் திரண்ட இலட்சக்கணக்கான தலித் மக்கள்.

சாதி ஆதிக்கத்துக்கு எதிராக இலட்சக்கணக்கான தலித் மக்களும்- முற்போக்காளர்களும் இணைந்து பங்கேற்கும் நிகழ்வாக பீமா கோரேகான் வளர்வதைக் கண்டு அச்சமுற்ற ஆர்.எஸ். எஸ். – பா.ஜ.க., சாதிப் பிரச்சனையைத் தூண்டி தனது பினாமி அமைப்புகள் மூலம் டிச-31, 2017 அன்று நிகழ்வில் பங்கேற்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக் கணக்கானோர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, வன்முறை நிகழ்த்தியவர்களை விட்டுவிட்டு, ஆர்.எஸ். எஸ். – பா.ஜ.க. – வை அரசியல் ரீதியாக எதிர்ப்போரை குறிவைத்து ஓராண்டுக்குப்பின் வழக்கில் சேர்த்துக் கைது செய்கிறது.

கைதிற்கு ஆதாரம் இல்லை – அரசியல் சட்டத்திற்கு எதிரானது

  1. டிச, 31, 2017 பீமா கோரேகன் நிகழ்வில் கைதான 5 செயல்பாட்டாளர்களும் பங்கேற்கவில்லை.
  1. கு.எண்.4/2018 முதல் தகவல் அறிக்கையில் கைதானவர்கள் பெயர்கள் இல்லை.
  1. கைது – உச்சநீதிமன்றத்தின் அர்னேஷ் குமார் – எதிர் – பீகார் அரசு மற்றும் டாக்டர் சுபாஷ் காசிநாத் மகாஜன் – எதிர் – மகாராஷ்ட்ரா அரசு வழக்குகளின் தீர்ப்புகளுக்கு எதிரானது.
  1. கைது – அரசியல் சட்டத்தின் சரத்துகள் 14,19 & 21 மற்றும் சர்வதேச அரசியல் & மனித உரிமை பிரகடனம்,1976-க்கு எதிரானது.
  1. கைதை நியாயப்படுத்த மகாராஷ்டிர மாநில ஏ.டி.ஜி.பி. பரம்பீர்சிங் பத்திரிக்கையாளர்களிடம் காட்டிய “மோடி கொலை சதிக் கடிதம்” இன்றுவரை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை. ஆனால் ரிபப்ளிக் டி.வி. அர்னாப் கோஸ்வாமியிடம் உள்ளது.
  1. “மோடி கொலை சதிக் கடிதம்” கு.எண். 4/2018 & பீமா கோரேகன் வழக்குகளில் இல்லை. குறைந்தபட்சம் கடிதம் தொடர்பாக ஒரு முதல் தகவல் அறிக்கை கூட இல்லை.
  1. மோடியை கொல்லச் சதி செய்தார்கள் – ரஷ்யா – சீனாவிலிருந்து, நேபாளம் வழியாக ஆயுதம் கடத்த முயற்சித்தார்கள் – கம்யூட்டர் ஹார்ட் டிஸ்குகளில் படம் இருந்தது – என்ற கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை.
  1. பீமாகோரேகன் நிகழ்வில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆஜரான வழக்கறிஞர்களை அதே வழக்கில் சேர்ப்பது இந்திய சாட்சியச் சட்டம், வழக்கறிஞர்கள் சட்டம், 1961–க்கு எதிரானது. வழக்கறிஞர்களின் தொழில் உரிமையைப் பறிப்பது.

கருப்பு சட்டம் ஊபா (UAPA)

மக்கள் உரிமைச் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்ற ஊபா சட்டத்தின் கீழ். இச்சட்டத்தின்கீழ் பிணை வாங்குவது கடினம். 1967-லிருந்து இன்றுவரை “ஊபா” சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அரசியல் சட்டம் வழங்கும் கருத்துரிமையை மறைமுகமாக ஒழித்துள்ளது. போராடும் அமைப்புகள், மக்களைக் குறிவைத்துக் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் உரிய தெளிவின்றி, எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட ஊபா சட்டப்படி “நாட்டின் பொருளாதார பாதுகாப்புக்கு எதிரான செயல்கள், அத்தியாவசியப் பொருட்களைத் தடை செய்தல் ஆகியவை பயங்கரவாதக் குற்றம். இதன்மூலம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், விவசாயிகள், மீனவர்கள் போராட்டம் என அனைத்தும் பயங்கரவாதச் செயல்கள்தான். இதற்கு ஆயுள் தண்டனை விதிக்கலாம். ஜாமீன் இன்றி 180 நாட்கள் சிறை, 30 நாட்கள் போலீசு காவல் என எல்லாம் உண்டு.

இச்சட்டத்தில்தான் மாவோயிஸ்டுகளுக்கு ஆஜரான மதுரை வழக்கறிஞர் திரு.முருகன் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாய் சிறையில் உள்ளார். ஏற்கனவே மருத்துவர் பிநாயக் சென், பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்டோர் ஊபா சட்டத்தில் தண்டிக்கப்பட்டுள்ளனர். தடா, பொடாவைப் போன்றே ஊபா சட்டமும் முழுக்க முழுக்க அரசின் பழி வாங்கும் நடவடிக்கைக்கு மட்டுமே உபயோகிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2014-ஆம் ஆண்டில் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 72.7% பேர் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். பலரும் சிறையில் வாடி வருகிறார்கள். அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளான கருத்துரிமை, வாழ்வுரிமை நீடிக்க ஊபா சட்டம் நீக்கப்பட வேண்டும்.

சீர்குலைக்கப்படும் சட்டத்தின் ஆட்சி

இந்தியாவில் நடைபெறுவது மோடி – அமித்சா ஆட்சி அல்ல – அது சட்டத்தின் ஆட்சி. சட்டமே மேலானது. சட்டத்தின் ஆட்சிதான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் தற்போதைய மத்திய 7 மாநில பா.ஜ.க. அரசுகள், கட்சி மற்றும் துணை அமைப்புகள் நிகழ்த்திவரும் வன்முறைகள் அரசியலமைப்பின் அடிப்படையிலான சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டவையாக உள்ளன. இந்த சீர்குலைவு வேலை ஒருங்கிணைந்த திட்டத்தின் அடிப்படையில் அரசின் உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் நிகழ்த்தப்படுகின்றன. வெளியிலிருந்து பசு பாதுகாவலர்கள், சனாதன் சன்ஸ்தா என்ற வடிவங்களிலும், உள்ளிருந்து போலி என்கவுன்டர், தேசிய பாதுகாப்பு, ஊபா சட்டக் கைதுகள் என்ற முறையிலும் நடைபெறுகிறது. இந்த அநீதிகளை எதிர்ப்பவர்கள் “தேச விரோதிகள், பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள், இந்து விரோதிகள், நகர்ப்புற நக்சல்கள்” என முத்திரை குத்தி ஊபா போன்ற கருப்புச் சட்டங்கள் மூலம் ஒடுக்கப்படுகின்றனர். ஆனால், நேரடியாக கலவரம், கொலை நடவடிக்கைகளில் ஈடுபடும் சனதான் சன்ஸ்தா, பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகள் மீது எப்போதும் ஊபா சட்டம் பாய்வதில்லை. மாறாக குற்றங்கள் மறைக்கப்படுகின்றன.பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணக் கொள்ளை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் தோல்வியைத் தழுவியுள்ள மோடி அரசு அதனை மடைமாற்றம் செய்யவும், தன்னை எதிர்ப்பவர்களை அச்சுறுத்தவும்தான் கைது நடவடிக்கைகளைப் பயன்படுத்துகிறது.

பா.ஜ.க.வின் மறைமுக ஆட்சி நடைபெறும் தமிழகத்திலும் ஒடுக்குமுறை உச்சத்தில் உள்ளது. ஸ்டெர்லைட், எட்டு வழிச் சாலை, பா.ஜ.க.-வை எதிர்ப்போர் என அனைவரும் தேசிய பாதுகாப்புச் சட்டம், ஊபாவில் கைது செய்யப்பட்டு வதைக்கப்படுகின்றனர். வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் மிரட்டப்படுகின்றனர். இந்த நிலை நீடித்தால் சட்டத்தின் ஆட்சி என்ற நிலை மாறி சர்வாதிகாரம் நிலைகொள்ளும். போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிபோகும்.

எனவே நாங்கள் அனைவரும், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைதையும், சட்டத்தின் ஆட்சி சீர்குலைக்கப்படுவதையும் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த அநீதிகளுக்கு எதிராக, அரசியல் சட்டம் – சட்டத்தின் ஆட்சியைக் காக்க அனைத்துத் தரப்பு மக்களும் போராட வேண்டுமென அறைகூவி அழைக்கிறோம். இன்று நாம் போராடா விட்டால் நாளை ஊபா நம்மீதுதான் என எச்சரிக்கிறோம்.

-o0o-

வழக்கறிஞர்கள் – பேராசிரியர்கள்- எழுத்தாளர்கள்

வழக்கறிஞர் லஜபதிராய்
மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான்
வழக்கறிஞர் ஹென்றி டிபேன்
வழக்கறிஞர் மகபூப் பாட்சா
வழக்கறிஞர் திருநாவுக்கரசு
வழக்கறிஞர் ஜான் வின்சென்ட்
வழக்கறிஞர் ராமச்சந்திரன்
வழக்கறிஞர் ஆறுமுகம்
வழக்கறிஞர் ஆனந்த முனிராஜன்
வழக்கறிஞர் கனகவேல்
வழக்கறிஞர் இராஜேந்திரன்
வழக்கறிஞர் வாஞ்சி நாதன்

-o0o-

பேராசிரியர் முரளி
பேராசிரியர் சீனிவாசன்
பேராசிரியர் விஜயகுமார்
பேராசிரியர் புவனேசுவரன்

-o0o-

எழுத்தாளர் முத்துகிருஷ்ணன்
நாடக ஆசிரியர் பேரா.இராமசாமி
எழுத்தாளர் லிபிஆரண்யா

தகவல்: பேராசிரியர் முரளி, மதுரை.

உங்கள் ஜனநாயகத்தின் மீது கொஞ்சம் மூத்திரம் பெய்து கொள்கிறேன் | சுகிர்தராணி

னி நான்
மாட்டுக்கறி சாப்பிட மாட்டேன்
நீட்டுக்காகப் போராட மாட்டேன்
பசுவைக் கொல்ல மாட்டேன்
குசுவையும் விட மாட்டேன்

ஸ்டெர்லைட்டுக்காக குண்டடிபட்டு
சாக மாட்டேன்
பெட்ரோல் விலை ஏறினால்
நியுட்ரினோ சோதனை செய்தால்
மூச்சுக் காட்ட மாட்டேன்.
எட்டுவழிச் சாலை போட்டால்
நடைபயணம் செல்ல மாட்டேன்
மீத்தேன் எடுத்தால் சத்தம் போட மாட்டேன்

கோடிகோடியாய் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தால் ஒன்றும் சொல்ல மாட்டேன்.
மலம் அள்ளும் தொழிலை ஒழிக்கச் சொல்லிக் கேட்க மாட்டேன்
மணல் கொள்ளையையும்
கண்டு கொள்ள மாட்டேன்
காவிரியில் தண்ணீர் விடாவிட்டால் வழக்குத் தொடுக்க மாட்டேன்
சொந்தக்காரர்களுக்கு ஒப்பந்தம் கொடுத்தால்
வாய் திறந்து கேட்க மாட்டேன்

விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால்
யாரையும் பொறுப்பேற்கச் சொல்ல மாட்டேன்
மீனவர்கள் கைது செய்யப் பட்டால்
உரிமைக்காக கொடி பிடிக்க மாட்டேன்
ஓகி புயலில் ‘ஒருத்தரும் வரலே’ என்றால் ஆவணப் படம் எடுக்க மாட்டேன்
ஈழத்திற்கு ஐநாவில் பேச மாட்டேன்
வெள்ள நிவாரணத்திற்கு நிதி திரட்ட மாட்டேன்

பேராசிரியர்கள் பாலியல் தொல்லை செய்தால்
காட்டிக் கொடுக்க மாட்டேன்.
இரத ஊர்வலத்திற்குக் குறுக்கே நிற்க மாட்டேன்
பொட்டு வைக்காமல் இருக்க மாட்டேன்
வங்கிகளில் கல்விக்கடன் கேட்க மாட்டேன்
சங்கிகள் என்று சொல்ல மாட்டேன்
காவி நிறம் பிடிக்காது எனத் தவிர்க்க மாட்டேன்
மாலை எட்டு மணிக்குமேல் எங்கும் செல்ல மாட்டேன்

பணமதிப்பிழப்பு செய்தாலும்
பண்பற்றவர்கள் எனக் கூற மாட்டேன்
மருத்துவமனைகளில் குழந்தைகள் இறந்தாலும்
சொந்தச் செலவில் சிலிண்டர் வாங்க மாட்டேன்
கெயில் கொண்டு வந்தால் மயிரேயென்று கத்த மாட்டேன்
சமூக விரோதிகள் என்றால்
சூடு சுரணை பார்க்க மாட்டேன்
வெளிநாட்டுக்குத் தப்பியோடியவர்களைக்
திரும்பக் கொண்டுவரச் சொல்லிக் கேட்க மாட்டேன்
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக்கக் கேட்க மாட்டேன்

தீட்டுக் காலத்தில் கோவிலுக்குப்
போக மாட்டேன்
இந்தித் திணிப்பு செய்தால்
மொழிப் போராட்டம் நடத்த மாட்டேன்
புருஷன் செத்தால் மறுமணம்
செய்து கொள்ள மாட்டேன்
ஊருக்குள் வரவிடுங்கள் எனக் கேட்க மாட்டேன்
சமத்துவச் சுடுகாடு ஒருபோதும் கோரமாட்டேன்
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையோடு நடக்க மாட்டேன்

சுகிர்தராணி

வன்புணர்வு செய்தாலும் எதிர்ப்புக்
காட்ட மாட்டேன்
சேரி நக்சலாக இருக்க மாட்டேன்
தாமரை தவிர வேறு பூவைச் சூட மாட்டேன்
சமூகநீதிப் பற்றிக் கவிதை எழுத மாட்டேன்
அம்பேத்கரியம் பேச மாட்டேன்
இந்தி எழுத்துகளைத் தார்பூசி அழிக்க மாட்டேன்
கொடி பிடித்துக் கோஷம் போட மாட்டேன்.
செத்தாலும் பௌத்தராகச் சாக மாட்டேன்

கொஞ்சம் பொறுங்கள்
அவசரமாய் வருகிறது
உங்கள் ஜனநாயகத்தின்மீது
கொஞ்சம் மூத்திரம் பெய்து கொள்கிறேன்.

நன்றி: சுகிர்தராணி

விக்கி லீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே நண்பர் சி.ஐ.ஏ-வால் கடத்தப் பட்டாரா ?

ஜூலியன் அசாஞ்சே-வின் சகதோழரும் இணைய பாதுகாப்பு நிபுணருமான அரிஜின் காம்புயிஸ் Arjien Kamphuis

விக்கி லீக்ஸ் புகழ் ஜூலியன் அசாஞ்சே-வின் சகதோழரும் இணைய பாதுகாப்பு நிபுணருமான அரிஜின் காம்புயிஸ் Arjien Kamphuis காணாமல் போயிருக்கிறார். நார்வே நாட்டின் போலீசார் அவரது மறைதல் குறித்து விசாரிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

அரிஜின் டச்சு நாட்டின் குடிமகனாவார். விக்கிலீக்ஸ நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுடன் தொடர்புடையவர். இவரது மறைதல் குறித்து டவிட்டரில் பலரும் அமெரிக்க உளவுத் துறை நிறுவனமான சி.ஐ.ஏ.-வை சந்தேகிக்கின்றனர்.

அரிஜின் இணையப் பாதுகாப்பு துறையில் வல்லுனர் என்பதோடு, புலனாய்வு பத்திரிகையாளர்கள் எப்படி அரசு உளவுத்துறைகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என ஒரு கையேட்டு புத்தகத்தின் சக ஆசிரியரும் கூட. கடந்த ஆகஸ்டு 20-ம் தேதியில் வடக்கு நார்வேயின் விடுதி ஒன்றிலிருந்து காலி செய்தவர் அதன் பிறகு தொடர்பில்லாமல் மறைந்து போனார்.

“என்னுடைய சிறந்த நண்பர் நார்வேயின் போடோவில் இருந்து மறைந்து போனார். சக ஊழியர்கள், குடும்பத்தினர் மிகவும் கவலையடைந்திருக்கின்றனர். தயவு செய்த பகிருங்கள்” என்று டிவிட்டரில் அவருடைய நண்பர் ஆன்சில்லா பகிர்ந்திருக்கிறார். மேலும் அவர் அந்த விடுதியிலிருந்து அரிஜின் ரயில் மூலம் ட்ரோன்தெம் நகருக்கு செல்வதாக திட்டமிட்டிருந்தார், இந்த ரயில் பயணம் பத்து மணி நேரமே பிடிக்கும் என்றும் கூறியிருக்கிறார். போடா நகரித்திலோ, ரயில் பயணத்திலோ அல்லது ட்ரோன்தெம் நகரிலோ அவர் காணாமல் போயிருக்கலாமென்று அவர் சந்தேகிக்கிறார்.

ஆன்சில்லாதான் இந்த தகவலை முதன்முறையாக டிவிட்டரில் அறிவித்தார். இவர் முன்பு டச்சு நாட்டைச் சேர்ந்த Dutch Pirate Party-யின் முன்னணியாளராக செயல்பட்டு வந்தவர். அந்தரங்க உரிமையை பாதுகாக்கும் செயற்பாட்டளரும் கூட.

விக்கிலீக்ஸ்-இன் டிவிட்டர் கணக்கிலிருந்தும் இச்செய்தியை பகிர்ந்திருக்கிறார்கள். நார்வே போலீசாரும் 47 வயது டச்சுக்காரரான அரிஜின் காணாமல் போனதை அடுத்து விசாரணையை துவக்கியிருப்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.

இவரது மறைதல் குறித்து சிலர், அவர் தொடர்பேதுமில்லாத மலைப்பகுதிக்குச் சென்றதால் இருக்குமென்கிறார்கள். சிலரோ அவரது விக்கி லீக்ஸ் தொடர்பால் இது ஒரு அமெரிக்காவின் சதியாக இருக்கும் என்கிறார்கள். இன்னும் ஒருவர், இது விக்கி லீக்சின் மறைபுலனாய்வு நடவடிக்கையின் ஒரு அங்கமாக இருக்கும், அவர் முக்கியமான ஒரு பணிக்காக தொடர்பில்லாத நிலையை உருவாக்கியிருக்கலாமோ என்று கேட்கிறார்.

விக்கி லீக்சின் ஆதரவாளர்களோ அவர் கடத்திக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சுகின்றனர். ஏனெனில் “பத்திரிகையாளர்களுக்கான தகவல் பாதுகாப்பு” எனும் அவரது ( இப்புத்தகத்தின் ஆசிரியர் இருவரில் இவரும் ஒருவர்) கையேட்டு புத்தகம் அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும் வண்ணம் அவர் வெளியிட்டுள்ளார். தங்களது அடையாளத்தை மறைத்துக் கொண்டு புலனாய்வு செய்தியாளர்கள் செயல்படவேண்டிய முறை பற்றி அவர் அதில் விரிவாகவும் எளிமையாகவும், நுணுக்கமாகவும் விவரித்துள்ளார். அந்த நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையை கீழே இணைத்துள்ளோம். விரைவில் அவரது கருத்துக்களை தமிழில் அறியத் தருகிறோம்.

அதில் “உங்களது அந்தரங்கம் மற்றும் உங்கள் ஆதாரங்கள் – ஆதாரங்களைத் தருவோரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக, பத்திரிகையாளர்களுக்கான தகவல் பாதுகாப்பு எனும் இந்தக் கையேடு உங்களது குரல் – எழுத்தை மறைக்க முடியாத படியும், அறிய முடியாதபடியும், அடையாளமற்ற அனாமதேயமாகவும் மாற்றுவதற்கு நிச்சயம் உதவும்” என்கிறார்.

மேலும், “இதுவரை எதையும் உருவாக்கிய அனைவரையும் போலவே, நமக்கு முன் வந்த ஆயிரம் தலைமுறையினரது தோளில் நின்று கொண்டுதான் நாமும் எதையும் செய்ய முடியும். அதனால், இந்தப் புத்தகமும் அனைத்து மின்னணு வடிவங்களிலும் எந்த வரம்புமின்றி இலவசமாகவும் கிடைக்கும்” என்கிறார்.

மேலும் இந்த மின்னணு பாதுகாப்பு என்பது ஏதோ கம்யூட்டர் சயின்ஸ் படித்தோரும், முனைவர் படிப்புக்குமான ஆய்வு செய்வோரும்தான் செய்ய முடியும் என்பதல்ல. நீங்களும் செய்யக் கூடிய எளிமையான காரியமே என்று இளம் பத்திரிகையாளர்களை உற்சாகப்படுத்துகிறார்.

இத்தகைய சமூக விழுமியங்கள் தாங்கிய ஒரு அறிஞர் காணாமல் போனதுதான் நமக்கு அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. தற்போது இவர் காணாமல் போனதற்கு குறிப்பான காரணங்கள் தெரியவில்லை. அவை அவருடைய தொழில் நிமித்தமான, தனிப்பட்ட காரணங்களுக்காக்கவா என்பதும் தெரியாது. ஆனால் இத்தகைய நல்லவர்களை உலக மக்களின் முன்னேற்றத்திற்காக சுயநலமில்லாமலும், அறிவுப் பூர்வமாகவும் பாடுபடுவர்களை அமெரிக்க அரசு சும்மா விடுமா என்ன? அவரது நண்பர்களது கவலையைப் பார்த்தால் இந்த காணாமல் போனது சதி நடவடிக்கையோடு இருக்குமென்றே எண்ணத் தோன்றுகிறது.

என்.எஸ்.ஏ எனப்படும் அமெரிக்க அரசின் தேசியப் பாதுகாப்பு முகமையின் உலக ஒட்டுக் கேட்டலை அம்பலப்படுத்தியதற்காக்க அசாஞ்சேயும், ஸ்னோடனும் இன்றும் வேட்டையாடப்படுகிறார்கள். அரிஜின் போன்ற ஆய்வாளர்களும் விதி விலக்கல்ல! ஒரு வேளை சி.ஐ.ஏ-தான் இவரது மறைவிற்கு காரணம் என்றால் உலக மக்கள் பின்னொரு நாளில் அமெரிக்க அரசுக்கு விதிக்கப் போகும் தண்டனையில் இக்குற்றமும் நிச்சயம் வரும்!

Preface – Arjen

Over the last 12 months all the most extreme paranoid fears of privacy activists and information security experts have turned out to be but cuddly little problems compared to the reality of industrialised espionage on the entire planet. Anyone who has kept abreast of the ongoing revelations as a journalist with the desire to protect their sources and their stories from government or corporate snoopers may have felt despair. Is everything with a chip and a battery spying on us? When considering most offthe-shelf computing devices such as laptops, tablets and smartphones, the situation is indeed dire. But there are steps you can take and those steps are not expensive nor do they require a PhD in computer science.

Using a computer system that can withstand all but the most advanced attacks by the most advanced nation state-level attackers is well within the reach of everyone. That is, anyone who is willing to spend a few days learning to use software that is free of cost and hardware that is already available to you or that can be bought for under £200. This handbook can get you started on understanding how to secure your data and communications and those of your sources, and to use tools and methods that have been proven to work in the most extreme situations by experts all over the world. Depending on your pre-existing computer skills this may be a bit of a learning experience, but trust that many have gone before you who also did not consider themselves experts and yet they managed to become comfortable with the concepts and tools described in this book. If you are a journalist in the 21 st century, you need these tools.

After all, William Randolph Hearst said decades ago: journalism is writing down what powerful people and institutions do not want written. If you don’t consider yourself to be a journalist but merely insist on actually having the right to privacy guaranteed to you under the UN Declaration Of Human Rights [1948] Article 12 – this book is for you too. Like almost everyone who ever created anything, we could only do so by standing on the shoulders of a thousand generations that came before us. Thus, this book will be forever freely available in a range of electronic formats without any restrictions. If the format you would like is missing, just let us know.

If you appreciate this work, please spread it around as much as possible and help us make the next version better. Constructive feedback of any kind is most welcome. The problem will keep developing and so will our response. Please contribute to sharing this knowledge and promoting these tools in any way you can.

Arjen Kamphuis

  • வினவு செய்திப் பிரிவு

மேலும் படிக்க:

அனிதாவின் மரணத்திற்கு இன்று ஒரு வயது | மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன்

னிதாவின் மரணத்திற்கு
இன்றோடு ஒரு வயதாகிறது
அனிதாவின் மரணத்தின்
முதல் பிறந்த தினத்தில்
ஆயிரம் இரவுகளைப் பிழிந்த
அடர் கறுப்பு வண்ணத்தில்
புத்தாடை வாங்குகிறோம்
ஆயிரம் கசப்புகளின்
சாரத்தாலான
பிறந்த நாள் கேக் ஒன்றை வாங்குகிறோம்

ஒரு வயதாகும் அனிதாவின் மரணம்
மெளனமாக நம்மையே
உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கிறது
நம் கையாலாகாததனத்தை
கேலி செய்வதுபோல
ஒரு வறண்ட புன்னகையை உதிர்க்கிறது
நீதியின் தந்திகள் அறுபட்ட வீணைகளிலிருந்து
சிலேட்டில் ஆணியால் எழுதுவது போன்ற
சங்கீதங்கள் எழுகின்றன
என் பற்கள் கூசுகின்றன
அதிலிருந்துதான் நாம் அனிதாவின் மரணத்தின்
முதலாம் பிறந்த தின வாழ்த்துப் பாடலை
இசைக்க இருக்கிறோம்

பத்ம வியூகத்தில்
அபிமன்யுவை கொன்றதுபோலவே
அனிதாவைக் கொன்றீர்கள்
நீங்கள் தந்திரமாக
உருவாக்கிய சக்கர வளையங்களை உடைக்க
கடைசிவரை போராடினாள்

கடைசியில் மலைமுகட்டில் மோதி
உயிரைவிடும் ஒரு பறவைபோல
தன்னை அழித்துக்கொண்டாள்
அது துரோகத்திற்கு எதிரான
கடைசி எதிர்ப்பு
அது அநீதிக்கு எதிரான
கடைசிக் கண்டனம்
வரலாற்றின் அரண்களை
தாண்ட முயன்றவர்கள்
வரலாற்றின் பலிபீடங்களில்
ரத்தம் சிந்துகிறார்கள்

ஒரு வயதாகும் அனிதாவின் மரணம்
ஒரு குழந்தை வளர்வதுபோல
நம் நெஞ்சில் வளர்கிறது
ஒரு குழந்தையைவிட வேகமாக வளர்கிறது
ஒரு வனத்தில் மூண்ட நெருப்பைவிட வேகமாக வளர்கிறது

அனிதாவின் மரணத்தின்
முதலாம் பிறந்த தினத்தில்
அதற்கு நீங்கள் என்ன பரிசு தருவீர்கள்?
ஒரு ஸ்டெதாஸ்கோப்?
ஒரு ரத்த அழுத்தம் அளக்கும் கருவி?
ஒரு சிரிஞ்ச்?
ஒரு அறுவை சிகிட்சை கத்தி?
ஒரு பிரிஸ்க்ரிப்ஷன் காகிதம்?
இல்லை
தலைமுறைகளின் பூட்டை உடைக்கும் ஒரு சுத்தியல்
அடிமைச் சங்கிலியறுக்கும் ஒரு வாள்
அன்று கொல்லும் அரசை நின்றுகொல்லும் ஒரு முழக்கம்
நீதியின் இருண்ட வீட்டில் ஏற்ற ஒரு விளக்கு
சீசஸருக்கு உரியதை சீஸருக்கு அளியுங்கள்
அனிதாவிற்கு உரியதை அனிதாவுக்கு அளியுங்கள்

நன்றி: மனுஷ்ய புத்திரன்

இனி அம்பானிகள்தான் கல்வியின் அதிபதிகள் – எச்சரிக்கும் பேராசிரியர்கள் !

1

துரையில், கடந்த ஆகஸ்ட் 28 அன்று, – ஆம் தேதி, மதுரை மாட்டுத்தாவணி இராமசுப்பு அரங்கத்தில் “உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம்!” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழுவின் துணைத்தலைவர் பேரா.விஜயகுமார்; மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர், பேராசிரியர் இரா. முரளி, மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின், அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியர் இரா.பவணந்தி வேம்புலு ஆகியோர் ஆற்றிய உரை.

பேரா.விஜயகுமார், துணைத்தலைவர், மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு.

கல்வியாளர்களை விரட்டும் உயர் கல்வி ஆணைய மசோதா!

பேரா.விஜயகுமார்

இன்று நாம் பேச வேண்டிய முக்கியமான பிரச்சினையை சரியாக ஆராய்ந்து இந்த மசோதாவை முறியடிக்க அறைகூவி உள்ளார்கள்.  ஏனெனில் கல்வி பறிபோய்விட்டால் அவ்வளவு தான்.  நாம் நம்மை அறியாமலேயே அடிமையாக அதுவே போதும்.  நான் மூன்று விசயங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவது, பல்கலை மானியக்குழு என்பது கல்வியாளர்களால் நிரம்பிய ஒரு அமைப்பு.  நிதி ஒதுக்கீட்டைத் தவிர அரசுக்கு அதில் வேலை இல்லை.  ஆனால் இந்த மசோதாவின் படி உயர்கல்வி ஆணையத்தில் கல்வியாளர்களுக்கு இடமே இல்லை.  சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தொழில் அதிபர்களும் தான் ஆணையத்தில் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனில் இதன் யோக்கியதையை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.  ஏற்கனவே வாஜ்பாய் காலத்தில் அம்பானி-குமாரமங்கலம் பிர்லா தலைமையில் கல்வி வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது.  அதே போல், இனி தொழிலதிபர்கள் எல்லாம் ஒன்று கூடி தங்களது நிறுவனங்களுக்கு திட்டமிடுவதைப் போல, நம்முடைய கல்வியின் மூலமாக எப்படி இலாபம் பார்க்கலாம் என திட்டமிடுவார்கள்.

இரண்டாவதாக, பொதுவாவே ஒரு சட்டம் உருவாக்கப்படும்போதே, அதிலிருந்து தப்பிக்க ஒரு ஓட்டையை விட்டுவைப்பது போல், இந்த மசோதாவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை படித்துப் பார்த்தால் – அந்த ஆணையம் ஒரு ஆய்வு செய்யும் அமைப்பாக மட்டும் இருக்குமே ஒழிய, தற்போதைய மானியக் குழு போல நிர்வகிக்கும் அமைப்பாக இருக்க முடியாது.  உதாரணத்திற்கு தங்களுடைய தேவைக்கு ஒத்துவராத பாடம் ஒன்றை அதைத் தடுப்பதற்கு மட்டுமே இந்த ஆணையத்தை பயன்படுத்த முடியும்.  மற்றபடி, ஒரு தொழில் நிறுவனத்தின் நிர்வாகத்தில் எப்படி அரசு தலையிட முடியாதோ அதே போல் நம் கல்வி அமைப்பை கார்ப்பரேட் பல்கலைக்கழகங்கள் தம் விருப்பம் போல் இலாப நோக்கோடு நடத்திக் கொள்ளும்.மூன்றாவதாக, வர்க்கம் சார்ந்த ஒரு அரசு, தம்முடைய வர்க்கம் சார்ந்த கோட்பாடுகளை கொண்டு செல்ல பயன்படுத்துவது, முதலும் கடைசியுமாக கல்வி அமைப்பு தான்.

தற்போது உள்ள மனுதர்ம வாதிகள் தமது இந்துத்துவ காவி கொள்கைகளை கொண்டு செல்ல இந்த ஆணையத்தை பயன்படுத்துவார்கள். ஏற்கனவே ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுவுக்கு சிலை இருக்கிறது, ரோஹித் வெமுலா ஹைதராபாத்தில் கொல்லப்பட்டார், தமிழகத்தில் மூன்று கல்வி நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ். சார்பானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1998-இல் வாஜ்பாய் காலத்திலும் தங்களுடைய கோட்பாடுகளை கொண்டுவர முயற்சி செய்தார்கள்.  அதாவது, கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் இனி கல்வி நிலையங்களில் சரஸ்வதி வந்தனம் பாட வேண்டும் என கூறினார்கள்.  அப்போதைய கல்வி அமைச்சரும் தி.மு.க. வின் பொதுச்செயலருமான திரு.க.அன்பழகன் இதை எதிர்க்கவும், உடனே பின்வாங்கி விட்டார்கள்.  ஏனெனில், அப்போது அவர்களுக்கு பெரும்பான்மை பலம் கிடையாது.  இப்போது இருக்கிறது.  எனவே, செய்கிறார்கள்.  இன்னொரு புறம், ஆர்.எஸ்.எஸ்.- இல் கல்வியாளர்கள் என்று ஒருவரும் கிடையாது.  ‘கல்வியாளர்கள்’ என்று சொல்லி அவர்கள் அழைத்து வருபவர்கள் எல்லோரும் அடி முட்டாள்களாகவே இருப்பார்கள்.  தங்களுடைய கோட்பாடுகளை நம் மீது தினித்து நம்மை முட்டாளாக்க முயற்சிப்பதை நாம் முறியடிக்க வேண்டும்.

இறுதியாக,  மாநில பட்டியலில் இருந்து, மத்திய பட்டியலில் கல்வியை கொண்டு சென்று நம் கல்வி அமைப்பை சீர்குலைப்பது இந்திராகாந்தி அவசர நிலை காலத்தில் இருந்தே ஆரம்பித்து விட்டது.  எனவே இந்த மசோதாவை முறியடித்தே ஆக வேண்டும்.

***

பேராசிரியர் இரா. முரளி, மாநிலப் பொதுச்செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்.

தனியார் கல்வியை வளர்த்து இலவச கல்வியை ஒழிக்க போகிறார்கள்!

பேராசிரியர் இரா. முரளி

யு.ஜி.சி. ஆரம்பிக்கப்பட்ட போது அனைவருக்கும் ஒரு கனவு இருந்தது. இந்த நாட்டை ஒரு நாகரீக சமுதாயமாக மாற்றப் போகிறோம் என்று. அது 1956- இல். மாலைநேரக் கல்லூரி எல்லாம் முழுமையாக சேவை மனப்பான்மையோடு ஆரம்பிக்கப்பட்டது. காலையில் வேலை பார்த்துவிட்டு படிக்க வருபவர்களுக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் இருந்தது. அதையேதான் தற்போதும் கொண்டு வருகிறார்கள். ஆன்லைன் கோர்ஸ், பார்ட் டைம் கோர்ஸ்- வீக்லி, மந்த்லி கோர்ஸ் என்று – ஆனால் காசுக்காக.

இதை நீங்கள் பேராசிரியர்கள் ஊதிய – வேலை வித்தியாசத்திலேயே பார்க்கலாம். அரசு பேராசிரியர்கள் வாரத்திற்கு பதினைந்து மணிநேரம் வகுப்பெடுத்து அறுபதாயிரம் சம்பளம் வாங்குவார். ஆனால் ஒரு சுயநிதிக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் 36 மணிநேரம் வகுப்பெடுத்து 12 ஆயிரம் சம்பளம் வாங்குவார். இதுதான் இந்த மசோதா இந்தியாவெங்கும் உண்மையாக்க முயற்சி செய்கிறது – செய்யப் போவது.

இந்த தனியார் கல்வி அமைப்புகளுக்கு தமிழகத்தில் பிள்ளையார் சுழி போட்டதே எம்.ஜி.ஆர். தான்.  தன்னை மகானாக காட்டிக்கொள்ள சாராய வியாபாரிகளுக்கு எல்லாம் கல்லூரி துவங்க அனுமதி கொடுத்தார்.  உதாரணம், சாராய உடையார், ஜே.பி.ஆர். சத்யபாமா கல்லூரி. பொதுவாக உலக பொருளாதார அமைப்பு இன்று கார்ப்பரேட் நிறுவனங்களிடம் உள்ளது. அவர்கள் எல்லாத் துறையையும் தொழில்துறையாக மாற்றி இலாபம் பார்க்க முயற்சித்து GATT ஒப்பந்தத்தை கொண்டு வந்தார்கள். அதில் கல்வியையும் சேர்த்து இலாபம் பார்க்கலாம்– இனி அதுவும் ஒரு தொழில்துறைதான் – அத்தியாவசிய தேவை கிடையாது என்று அந்த GATT இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தனை நாடுகளும் சத்தமே இல்லாமல் அந்த சட்டத்தை கடனுக்காக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இந்திய அரசு உட்பட. எனவே தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களை பிசினஸ் பீஃல்டாக கல்வி அமைப்பு மாற்றியுள்ளது.

அமெரிக்காவின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்ட அந்த GATT ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதிலிருந்து நாட்டின் மொத்த வருமானத்தில் 6% – இருந்த கல்விக்கான பங்கு தற்போது 3% க்கும் கீழ் வந்துவிட்டது. இந்த ஆணையத்தை உருவாக்க காங்கிரஸ்  ஆட்சியிலேயே முயற்சி செய்தார்கள். ஆனால் தோல்வி அடைந்தவுடன் GATT -இல் குறிப்பிட்டதைப் போல கம்பெனிச் சட்டத்தில் கல்வியைக் கொண்டு வந்தார்கள். விளைவு, இஷ்டம் போல் வெளிநாட்டு மாணவர்களை அதிக கட்டணத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்று வந்துவிட்டது. இதை முதலில் செய்தது மெட்ராஸ் கிரிஸ்டியன் காலேஜ் மற்றும் மதுரைக் கல்லூரி( மெஜீரா) .

யு.ஜி.சி. -யை கலைத்து புதிய ஆணையத்தை அமைக்க என்ன செய்தார்கள் என்றால், முதலில் புதிய வேலை வாய்ப்பு அதிகம் உள்ள எந்த கோர்ஸையும் அரசுக் கல்லூரிகளில் கிடைக்கவிடாமல் செய்து அனைத்தையும் சுயநிதிக் கல்லூரிகளில் மட்டுமே கிடைக்கும்படி செய்தார்கள். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எல்லாம் பணம்தான் –  என்ன சும்மாவா கொடுக்கிறார்கள் என்ற மனநிலை –  விரக்தி வந்துவிட்டது. இதை தற்போது அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எனவே ஆர்.எஸ்.எஸ். –  பி.ஜே.பி.- யை பொருத்தவரை காவிமயம் என்பது வெறும் மேற்பூச்சு. கல்வியை வியாபாரமயமாக்குவதுதான் பிரதான நோக்கம்.

எனவே நம்முள் உள்ள தற்போதைய கேள்வி என்னவென்றால் வணிகமயம் மற்றும்  உலகமயத்தில் நம்முடைய அடையாளத்தை இழந்து நாம் கரையப் போகிறோமா? அல்லது இதை எதிர்த்து முறியடித்து நம்முடைய அடையாளத்தை மீட்கப் போகிறோமா? என்பதுதான்.

***

பேராசிரியர் இரா.பவணந்தி வேம்புலு, அரசியல் அறிவியல் துறை, தொலைநிலைக் கல்வி இயக்ககம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.

யார் கல்வி கொடுப்பது? அரசா? பணக்காரர்களா?

பேராசிரியர் இரா.பவணந்தி வேம்புலு

1830 -இல் கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்திய வைசிராயாக இருந்த லார்டு என்பவர்தான் இந்தியாவில் நவீனக் கல்வி அமைப்பை உருவாக்குகிறார். அப்போது இரண்டு அதிகாரிகளிடம் இதற்கான வரைவு அறிக்கையை அவர்களுடைய கண்ணோட்டத்தில் உருவாக்கிக் கொடுக்க ஆணையிடுகிறார். இருவரின் வரைவு அறிக்கையும் ஒரு கமிட்டியில் வைத்து விவாதிக்கப்படுகிறது. அப்போது காரசாரமாக விவாதம் நடைபெறுகிறது. ஒருவர் வில்லியம் ஆடம், இந்தியாவில் உயர்கல்வி என்ற ஒன்று இருந்தது என்றால் அது மடங்கள்தான். எனவே நாம் அதை எதையும் மாற்றாமல் மடங்களுக்கு நிதி தந்து விடலாம் என்கிறார். கூடுதலாக வேண்டுமானால் நமக்கு எத்தகைய கல்வி கற்ற ஆட்கள் வேண்டும் என்பதை வேண்டுமானால் கேட்டுப் பெறலாம் என்கிறார். ஆனால் நாம் மெக்காலேயை இப்போது திட்டினாலும் அப்போது அவர் சொல்லியதுதான் இன்று நாம் பெயரளவிற்காவது பெற்றுள்ள இந்த நவீன கல்வி.

மெக்காலே அரசுதான் கல்வியைக் கொடுக்க வேண்டும். நமக்கு எப்படிப்பட்ட கல்வியைக் கற்றவர்கள் வேண்டும் என்பது நமக்குத் தான் தெரியும். மேலும் அது நம்முடைய நாட்டில் நாம் செய்வது போலவே நம்முடைய கடமை என்கிறார். பின் கவர்னர் தன் அமைச்சரவையில் பேசுகிறார். வருமானம் எப்படி இதற்கு? அதனால் முடியாது என்கிறார். பிறகு கல்வி வரி போடுவோம் என்கிறார். அன்று வரி யாருக்கு  போட முடியும்? ஜமீன்தாருக்கு தானே. எனவே அவர்கள் அதை எதிர்த்தார்கள். பிறகு ஜமீன்தார்கள், அந்தப் பணத்தை எங்களிடம் கொடுங்கள் நாங்கள் கல்வி கொடுக்கிறோம் என்றனர். அன்றிலிருந்து இன்றுவரை இதுதான் நடக்கிறது.

யார் கல்வி கொடுப்பது? அரசா? பணக்காரர்களா? அதிலிருந்துதான் தற்போதைய அரசு – தனியார் கூட்டு (public-private partnership) பற்றி பேசுகிறார்கள். இதிலிருந்து நீங்கள் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட இரயத்துவாரி வரி வசூல் முறையும் கல்கத்தா போன்ற மாநிலங்களில் இருந்த ஜமீன்தாரி வரி வசூல் முறையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ்நாட்டில் மாணவர்கள் எண்ணிக்கை அன்றிலிருந்தே அதிகம் என்பது புரியும்.

பின் ‘ மாடர்ன் யுனிவர்சிட்டி சிஸ்டம்’  வந்த போது ‘ ‘மாடர்ன் அக்ரிகல்ச்சர்’ சொல்லிக் கொடுங்கள். அவன் படித்து எங்கள் நிலத்தில் அதை அப்ளை செய்யட்டும் என்றனர். அன்று ஜமீன்தார் இன்று கேப்பிட்டலிஸ்ட்.

பொதுவாக உயர்கல்வியில் மூன்று அடுக்குகள் உள்ளன.

  1. Formulation university courses.
  2. Professional university courses.
  3. Research university courses.

இதில் புரஃபசனல் கோர்சஸ் மட்டும் குறிப்பாக தம்மிடம் கோருகிறார்கள். ஏனெனில் அதுதான் பணம் சம்பாதிக்கும் வழி.

ஆனால் நான் கேட்பது என்னவென்றால், ஒரு முதலாளி என்றாலும் நாராயணசாமி போன்ற கார்ப்பரேட் ஆளுமைகளை உருவாக்கியது கூட நம்முடைய அரசு சார்ந்த கல்வி அமைப்புதானே. அரசு செய்ய முடியாது என்று அதே நாராயணசாமியே கோருகிறாரே ஏன்? இதுதான் பிசினஸ்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.