Saturday, June 27, 2026
முகப்பு பதிவு பக்கம் 171

New Democracy – November 2022 | Magazine

New Democracy November – 2022 Printed issue has now published. We ask readers and comrades to buy, read and support.

New Democracy (Puthiya Jananayagam) November – 2022

List of Articles Present in this Issue :

  • Tamilnadu upholding its anti-brahministic heritage! The safforn mob getting humiliated!
  • Har Ghar Tiranga: The patriotic makeover of the fascists!
  • Identity Politics acting as Axe hafts in the hands of the Fascists!
  • RSS Terrorism emerging as an International threat!
  • Saffron Fascism ruling the country!
  • Is Traitor Savarkar a Freedom Fighter?
  • Bilkis Bano Case: Convicts released! Let’s rise against ‘Hindu Rashtra justice’!
  • Farmers on the rise after defeating a series of conspiracies of the saffron mob!
  • Electricity Amendment Bill 2022: Engulfing of Power sector by the Corporates!
  • Let’s unconditionally support the Kallakurichi struggle model! Let’s stand by the students and youth of Tamil Nadu!

To get Free e-magazine, mail us : puthiyajananayagam@gmail.com

To Get the Magazine by Post :
Contribution : Rs. 25
Pay through G-Pay : 94446 32561

Make Payment and send your address details along with Payment receipt to our email : puthiyajananayagam@gmail.com

சித்திக் கப்பனை திட்டமிட்டு வதைக்கும் அதிகார வர்க்கம் !

0

ட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) ‘பயங்கரவாதம்’ தொடர்பான பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டால் பிணையில் வெளிவருவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கிறது. இருப்பினும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, சித்திக் கப்பனுக்கு ஜாமீன் வழங்கியது.

டெல்லியைச் சேர்ந்த ஒரு மலையாள செய்தி இணையதளத்தில் பணிபுரிந்து வந்த சித்திக் கப்பன், கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க உத்தரப்பிரதேசம் சென்றார். அவரை ஹத்ராசுக்குள் நுழைய விடாமல் தடுத்த போலீசுத்துறையினர், “பொது அமைதிக்கு குந்தகம்” விளைவித்ததாகக் கூறி அவரைக் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெரிய சதித் திட்டத்தை அரங்கேற்ற, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (PFI) பின்னணியில் சித்திக் செயல்பட்டதாகக் கூறி, மதுரா போலீசுத்துறை அவர்மீது தேசத்துரோக சட்டத்தின் கீழும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழும் வழக்குப் பதிவு செய்தது.

கடந்து செப்டம்பர் 2022-ல் உச்சநீதிமன்றம் அவருக்குப் ஜாமீன் வழங்கிய போது, அவர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலத்தை சிறையில் கழித்திருந்தார். அந்த இரண்டாண்டு காலத்தில், அவர் தனது தாயாரை இழந்திருந்தார்; கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்; சிகிச்சையின் போது ஒரு தனியார் மருத்துவமனையில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தார்; அவருடைய மனைவி மற்றும் வழக்கறிஞரின் தொடர் போராட்டத்தால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அலகாபாத் உயர் நீதிமன்றமும் மதுரா கீழமை நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தன.

உச்சநீதிமன்றம் இந்த UAPA வழக்கைக் கையாண்ட விதம், ஊடக சுதந்திரத்திற்குக் கிடைத்த வெற்றியாக பத்திரிகையாளர்களால் பார்க்கப்பட்டது. ஜாமீன் வழங்கியதோடு, உச்ச நீதிமன்றம் “சித்திக் கப்பன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை உ.பி போலீசுத்துறையால் நிரூபிக்க முடியவில்லை. ஒவ்வொரு நபருக்கும் சுதந்திரமாக கருத்துத் தெரிவிக்க உரிமை உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்பதற்காக பொதுக் குரல் எழுப்ப முயன்றது சட்டத்தின் பார்வையில் குற்றமா?” என்று கேள்வியும் எழுப்பியது.

படிக்க: உ.பி: பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமின் மனுவை நிராகரித்த பாசிச நீதிமன்றம்!

தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சித்திக்கின் மனைவி ரைஹானா கப்பன் “அவருக்கு ஜாமீன் கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இரண்டு ஆண்டு கால போராட்டம். அவர் சிறையில் இருந்தது, எங்களின் இரண்டாண்டு வாழ்க்கை, நாங்கள் சந்தித்த துயரங்கள் – உடல், மன, பொருளாதார ரீதியிலான துயரங்கள் – எதுவுமே எளிதில் மறக்கக் கூடியது அல்ல. உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதானது, இந்த வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை என்பதைக் குறிக்கிறது; இது மிகுந்த ஆறுதலை அளிக்கிறது” என்று கூறினார்.

ஆனால் ரைஹானாவின் மகிழ்ச்சி குறுகிய காலத்திற்கே நீடித்தது. 760 நாட்கள் சிறை; கூடுதலாக உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி இரண்டு மாதங்களைக் கடந்தும் சித்திக் இன்னும் சிறையிலேயே வாடிக் கொண்டிருக்கிறார்.

எதனால் சித்திக் கப்பன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்?

சித்திக் கப்பன் 2020-ல் உத்தர பிரதேச போலீசுத்துறையால் கைது செய்யப்பட்ட போதே அமலாக்கத்துறையும் உள்ளே நுழைந்து கொண்டது. 2018-ல் பதியப்பட்ட வழக்கு ஒன்றில் சித்திக்கை குற்றஞ்சாட்டப்பட்டவராக சேர்த்து, பிப்ரவரி 6, 2021-ல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை.

பணமோசடி தடுப்பு சட்டத்தின் (PMLA) பிரிவுகள் 3 மற்றும் 4-ன் கீழ் சித்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உத்தர பிரதேச போலீசுத்துறை தொடுத்த UAPA வழக்கிலிருந்து செப்டம்பர் 9 அன்று உச்சநீதிமன்றம் சித்திக் கப்பனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது; ஆனால், அமலாக்கத்துறை தொடுத்த PMLA வழக்கில் ஜாமீன் வழங்க கருப்புப்பண மோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அக்டோபர் 31 அன்று மறுத்துவிட்டது.

அமலாக்கத்துறை 2018-இல் பதிவு செய்த வழக்கு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த 22 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் சித்திக் கப்பன் பெயர் இடம் பெறவில்லை. இந்த 2018 ஆம் ஆண்டில் பதியப்பட்ட வழக்கு, 2013 ஆம் ஆண்டு பதியப்பட்ட ஒரு வழக்கோடு தொடர்புடையது. ஆனால் அந்த வழக்கிலும் சித்திக் கப்பன் பெயர் இடம் பெறவில்லை. 2018-ல் அமலாக்கத்துறை தொடுத்த வழக்கிற்கும் 2020-ல் உத்தரப்பிரதேச போலீசுத்துறை தொடுத்த UAPA வழக்கிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

இதில் வேடிக்கையான விசயம் என்னவென்றால், அமலாக்கத் துறை கூறும் PFI-தொடர்பான வழக்கின் முக்கிய சதிகாரரான ராஃப் ஷெரீப் (KA Rauf Sherif) என்பவருக்கு, பிப்ரவரி 2021-லேயே எர்ணாகுளம் பண மோசடி தடுப்பு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது ஷெரீபோ உத்தரப்பிரதேச போலீசுத்துறையால் UAPA சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு லக்னோ மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

படிக்க: பத்திரிகையாளர் சித்திக் கப்பானை சித்திரவதை செய்த உ.பி போலீசு!

திட்டமிட்டே மறுக்கப்படும் நீதி!

சித்திக் கப்பனுக்கு PFI-யுடன் தொடர்பு இருக்கிறது என்ற அடிப்படையிலேயே அமலாக்கத்துறையின் வழங்கும் உத்தரப்பிரதேச போலீசுத்துறையின் UAPA வழக்கும் அமைந்துள்ளன. (சித்திக் அதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்).

UAPA வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமோ அவருக்கு ஜாமீன் வழங்கிவிட்டது. சித்திக்கின் வழக்கறிஞருக்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இருவரை தேடிப் பிடித்து பிணையமாக (surety) நிறுத்துவதற்கே பத்து நாட்கள் ஆகிவிட்டது. ஜாமீன் வழங்கப்பட்டு 50 நாட்களைக் கடந்தும் (நவம்பர் 1 வரை) சுயூரிட்டிக்களை சரி பார்க்காமல் வேண்டுமென்றே காலத்தைக் கடத்தினர்.

உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய பிறகே அமலாக்கத்துறையின் வழக்கு விசாரணைக்கு வந்தது. சித்திக்கின் PFI-தொடர்பு தொடர்பான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்ததை அறிந்திருந்தும், பண மோசடி தடுப்பு நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துவிட்டது.

நீதிமன்றங்களின் இந்த இரட்டை நிலைப்பாடுகள் எதை வெளிப்படுத்துகிறது என்றால், சித்திக் கப்பனை திட்டமிட்டே இந்த அரசு வதைக்கிறது என்பதைத்தான். ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமிக்கு மட்டும் ஒரே நாளில் அதிவிரைவாக ஜாமீன் கிடைத்தது. காலம் தாழ்த்தினால் அவரது கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு விடுமாம்!

ஊடகவியலாளராக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி, பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.விற்கு ஒத்திசைவாக நடந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் அல்லது UAPA போன்ற ஆள்தூக்கி சட்டங்களால் கைது செய்யப்பட்டு ஜாமீன் கூட வழங்கப்படாமல் சிறையிலேயே வைத்து வதைக்கப்படுவார்கள். இதுதான் இப்போதைய புது இந்தியா!


பொம்மி
மூலக்கட்டுரை: thequint

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி: பயங்கரவாத அமைப்பை தடை செய்வது தான் முதல் தேவை! | மருது வீடியோ

மிழக போலீசுத்துறை ஆர்.எஸ்.எஸ் பேரணியை தடை செய்யமுடியாத நிலையில்தான் இருக்கிறார்கள். அதனால்தான் மூன்று இடங்களில் பேரணி, இருப்பத்து மூன்று  இடத்தில் ஹால் மீட்டிங் நடத்திக் கொள்ளலாம் என்றும் மற்ற இடங்களில் நடத்த முடியாது என்றும் போலீஸ் தரப்பில் கூறினார்..

உண்மையில் ஆர்.எஸ்.எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பது ஊரறிந்த உண்மை. ஜனநாயக நாட்டில் ஆர்.எஸ்.எஸ் கொடுக்கிற உரிமையை ஏன் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கோ கொடுக்கலாமே என்றால் கொடுத்து விடுவார்களா?

எப்படிப்பட்ட பயங்கரவாத செயல்களை செய்துகொண்டு இருக்கின்றது என்று தமிழக அரசு ஒரு ஆவணப்படத்தை தயார் செய்து அந்த அமைப்பை தடைச் செய்வதுதான் முதல் தேவை.

அரசு அனுமதி கொடுக்கவில்லையென்றாலும் அவர்கள் ஷாகா போன்ற பயிற்சிகளை நடத்த ஆரம்பித்துவிட்டனர்.பொது வெளியில் சரியான அமைப்புபோல தோற்றத்தை ஏற்படுத்துவது தமிழகத்துக்கு ஒர் எச்சரிக்கை.

ஆர்.எஸ்.எஸ் ஒரு கலாச்சார அமைப்பா என்றால் இல்லை. நம் பண்பாட்டுக்கு எதிர் பண்பாடு தான் அவர்களுடைய பண்பாடு. நான்கு வர்ண கோட்பாட்டையும், சனதான தர்மத்தையும் ஆதரிக்கிற ஒரு அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ்.

மக்கள் மத்தியில் கலவரங்களை உருவாக்கி பயங்கரவாத சதி செயல்களை செய்து, கலவரங்களை உருவாக்கி திமுகவை மக்கள் மத்தியில் பலவீனப்படுத்துவதுதான் அவர்களுடைய திட்டம்.

தமிழ்நாட்டில் திருமாவளவன் வைத்த  தடை முழக்கம் முக்கிய பங்கு வகித்தது. ஆர்.எஸ்.எஸ் எதிராக இந்த பேரணியை அறிவிக்கமால் இருந்திருந்தால் என்னவாயிருக்கும்.

ஆர்.எஸ்.எஸ்-ன் பேரணிக்கு அனுமதி அளித்ததை கண்டித்தும், சங் பரிவார கும்பலின் பயங்கரவாத செயல்பாடுகள் குறித்து தமிழ் மின்ட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மோர்பி நகர் தொங்கு பாலம் விபத்து – அழுகி நாறுகிறது குஜராத் மாடல்!

0

கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி குஜராத்தின் மோர்பிநகர் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 140-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் காணாமல் போயுள்ளனர். இதில் ஒன்று முதல் பத்து வயதிற்குட்பட்ட 33 குழந்தைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

143 ஆண்டு பழமையான, 230 மீட்டர் நீளமுள்ள, இந்த தொங்கு பாலம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. பாலம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் ஒரு தனியார் ஒப்பந்ததாரரிடம் அதைப் புதுப்பிக்கும் பணி வழங்கப்பட்டது. டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்குமாறு அந்நிறுவனத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆனால், திட்டமிட்டதற்கு முன்னதாகவே பாலம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. புனரமைப்பு பணிகள் முடிந்து கடந்த அக்டோபர் 26 ஆம் தேதியில் குஜராத்தி புத்தாண்டன்று பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த விபத்தைத் தொடர்ந்து ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் மிகவும் வருத்தமுற்றதாகக் கூறும் பிரதமர் மோடி, சூறாவளியாய் சுழன்று தேர்தல் பிரச்சாரங்களிலும் திட்டங்களைத் தொடங்கி வைப்பதிலும் ஈடுபட்டு வருகிறார். குஜராத்தில் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் ஆடம்பரமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. மோடியை பிரமோட் செய்யும் வேலையும் சிறப்பாக நடந்தேறி வருகிறது.

படிக்க : குஜராத்: அரசின் அலட்சியத்தால் மோர்பி தொங்கு பாலம் விபத்து ! 141 பேர் மரணம் !

அதற்கேற்ற வகையில் ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன. ஆஜ் தக் (Aaj Tak) செய்தித் தொலைக்காட்சியை சேர்ந்த சுதீர் சௌதுரி (Sudhir Chaudhary) என்ற தொகுப்பாளர், பாலம் இடிந்து விழுந்ததற்கு மக்கள்தான் காரணம் என்று வாய் கூசாமல் பேசுகிறார். இதற்கு முன்னதாக இவர் மோடியின் எதிராளிகளை துவம்சம் செய்து, மோடியின் படுமோசமான முடிவுகளுக்கும்கூட சப்பைக்கட்டு கட்டி, மோடியை பிரமோஷன் செய்யும் வேலையை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோர்பிநகர் பாலத்தைப் புதுப்பிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனத்தைப் பற்றி நாம் இங்கு தெரிந்து கொள்வது அவசியம். ஓரேவா (Oreva) என்ற நிறுவனத்திடம் இந்தப் பணி மோர்பி நகராட்சியால் வழங்கப்பட்டது. இந்நிறுவனம் கடிகாரம் மற்றும் பைக்கு தயாரிக்கும் நிறுவனமாகும். எள்ளளவும் பாதுகாப்புத் துறைக்கு சம்பந்தமில்லாத அனில் அம்பானிக்கு ரஃபேல் ஒப்பந்தம் வழங்கப்பட்டதைப் போலவே, ஓரேவா நிறுவனத்திற்கு இந்த பாலத்தைப் புதுப்பிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

ஓரேவா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அஜந்தா மேனுஃபேக்ச்சரிங் பிரைவேட் லிமிடெட் (Ajanta Manufacturing Private Limited) கையொப்பமிட்ட சமீபத்திய ஒப்பந்தத்தின்படி, பாலத்தின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு, பாதுகாப்பு, டிக்கெட் வழங்குதல், சுத்தம் செய்தல் மற்றும் பணியாளர்கள் பணியமர்த்தல் உள்ளிட்டவற்றை நிர்வகிப்பதற்கான முழுப் பொறுப்பையும் 15 ஆண்டுகளுக்கு அந்நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தப் பாலத்தை புனரமைக்க செலவிட்ட தொகையை பயணிகளிடமிருந்து கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம் என்றும், 2037 வரை இந்த பாலத்தை பராமரிக்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தது.

ஆனால், ஓரேவா நிறுவனம் பாலத்தின் தரைப்பகுதியை மட்டுமே சீரமைத்திருந்தது. கேபிளை சரி செய்யவில்லை. புதிய தரைப்பகுதியின் எடை தாங்காமல் கேபிள் அறுந்து விழுந்துள்ளது. 2008-ல் இருந்தே ஓரேவா நிறுவனத்தால் இந்தப் பாலம் முறையாகப் பராமரிக்கப்படவில்லை.

ஓரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஜெய்சுக் படேல் (Jayasukh Bhai Patel), இந்த பாலத்தை புதுப்பிப்பதற்கும் பராமரிப்பதற்கும் ரூ.20 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் 15-20 ஆண்டுகள் வரை எந்த பிரச்சினையும் ஏற்படாது என்றும் கூறியிருந்தார். ஆனால், இந்த நிறுவனம் வெறும் ரூ.28 லட்சத்தை மட்டுமே செலவழித்துள்ளது என்பதை குஜராத் அரசாங்கமே தற்போது கூறுகிறது. கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் ஓரேவா நிறுவன முதலாளியோ நகராட்சி அதிகாரிகளோ யாருமில்லை.

பாலம் இடிந்ததற்கு முழுமுதற் காரணம் அந்த ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல்தான். இதைப் பற்றி மோடி வாய்கூடத் திறக்கவில்லை. இந்த விபத்து நடந்த அடுத்த நாளே பிரதமர் மோடி ஆறுதல் தெரிவிப்பதற்காக மோர்பி மருத்துவமனைக்குச் சென்றார். அவரது மனம் கோணாமல் இருப்பதற்காக மருத்துவமனைக்கு பெயிண்ட் அடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டிருந்தது.

படிக்க : ‘தி வயர்’ இணைய தளத்தின் மீதான அவதூறுகள், அடக்குமுறையை ஏவும் காவி பாசிச கும்பலை முறியடிப்போம்! | புமாஇமு

ஏப்ரல் 2016-ல் கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்தபோது பேசிய பிரதமர் மோடி “தேர்தல் நேரத்தில் பாலம் இடிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் மூலம் கடவுள் மக்களுக்கு சேதி அனுப்பியிருக்கிறார். இந்த பாலம் இடிந்து விழுந்ததை போல், மேற்குவங்கமும் நாளை இடிந்து விழும். அதிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள் என்று பாலம் விபத்தின் மூலம் கடவுள் சேதி அனுப்பியிருக்கிறார்” என்று கூறினார். மேலும், “இது கடவுள் செயல் அல்ல; ஊழலின் விளைவு” என்றும் கூறினார். தற்போது மோர்பிநகர் பாலம் இடிந்து விழுந்துள்ளதற்கு இது பொருந்தாது போலும்!

குஜராத்தின் பாஜக அரசாங்கமும் மோடியும் அம்பலப்பட்டுப் போயுள்ளனர். குஜராத் மாடல் அழுகி நாறுகிறது என்பதை இந்த சம்பவம் நமக்குத் தெட்டத் தெளிவாகக் காட்டுகிறது.

பொம்மி

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி: பயங்கரவாத அமைப்புக்கு அடிப்படை உரிமை கொடுக்கக் கூடாது! | மருது வீடியோ

வம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் அனுமதி அளித்துள்ளது போலீசு. தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு ஒரு நெருக்கடியை கொடுக்கிறதா?

ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பு பேரணி நடந்த உரிமை இருக்கிறதா என்று கேட்டால் உரிமை இல்லை என்று பொதுவாக கூறிவிடுவார்கள். ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு பயங்கரவாத அமைப்பு, அந்த அமைப்பிற்கு அடிப்படை உரிமைகளை பற்றி பேசமுடியாது.

எனவே ஒரு பயங்கரவாத அமைப்பிற்கு அடிப்படை உரிமைகளை காரணம் காட்டி அவர்களுக்கு இந்த அனுமதி கொடுத்தது என்பதே முதல் தவறு.

இதை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி ; அம்பானி – அதானி பாசிசம் என்றுதான் நாங்கள் சொல்கிறோம். இது தடைசெய்யப்பட வேண்டிய அமைப்பு. ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி சங் பரிவார கும்பலுக்கு எங்கேயும் அடிப்படை உரிமைகள் கொடுக்கப்படக்கூடாது என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.

துப்பாக்கியை எடுத்து கொண்டு அவர்கள் பேரணி நடத்துகிறார்கள். கத்தையை சுத்துக்கொண்டு பேரணி நடத்துகிறார்கள். இது ஒன்று போதும் இந்த கட்சியை – இந்த அமைப்பை – தடைசெய்வதற்கு!

தற்போது அண்ணாமலை, கோவை எரிவாயு உருளை வெடிப்பு பிரச்சினையில் போலீசு கண்ணில் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறார், எதுவுமே செய்யமுடியவில்லை. பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் இன்றைக்கு தமிழ்நாட்டை மிரட்டிக்கொண்டிருக்கிறது. அவர்கள் வெற்றிப்பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்-ன் பேரணிக்கு அனுமதி அளித்ததை கண்டித்தும், சங் பரிவார கும்பலின் பயங்கரவாத செயல்பாடுகள் குறித்து ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்….

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

‘தி வயர்’ இணைய தளத்தின் மீதான அவதூறுகள், அடக்குமுறையை ஏவும் காவி பாசிச கும்பலை முறியடிப்போம்! | புமாஇமு

0

03.11.2022

‘தி வயர்’ இணைய தளத்தின் மீதான அவதூறுகள் மற்றும்
ஆசிரியர்கள் மீதான அடக்குமுறையை ஏவும் காவி பாசிச கும்பலை முறியடிப்போம்!

கண்டன அறிக்கை !

‘தி வயர்’ இணையதளத்தின் ஆசிரியர்களின் வீடுகளில் டெல்லி போலீஸ் சோதனை நடத்தி லேப்டாப், மொபைல் போன் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளார்கள். பாஜக ஐடி விங் பொறுப்பாளர்  அமித் மாளவியா  கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே இது நடந்துள்ளது.

பாஜக ஐடி விங் பொறுப்பாளர் அமித் மாளவியா பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவுடன் வைத்திருந்த தொடர்பு, அதில் அவர் பெற்றிருந்த சிறப்பு சலுகை பற்றியும் அதன் மூலம் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான கருத்துகளை நீக்கி வந்தது பற்றியும் தொடர் கட்டுரைகளை வெளியிட்டு வந்தது தி வயர் இணையதளம்.

இந்த நிலையில் தி வயர் இணையதளத்தின் கருத்துக்கள் தவறானது என மெட்டா நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதன் பிறகு தி வயர் இணையதளம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியது. மேலும் அது சம்பந்தப்பட்ட கட்டுரைகளை இணைய பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளது. தவறான செய்திகளை வழங்கிய தேவேஷ்குமார் என்ற தனது நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர் மீதும் புகார் கொடுத்திருந்தது.

படிக்க : மாணவர்களுக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க மறுக்கும் அரசுக்கு என்ன தண்டனை? | புமாஇமு பத்திரிகை செய்தி

இதை ஏற்றுக்கொள்ளாத அமித் மாளவியா டெல்லி போலீசுத்துறையில் அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனை சட்டத்தின் 420 (மோசடி), 471 (போலி ஆவணங்களை பயன்படுத்துதல்), 120பி (குற்ற சதி) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் டெல்லி குற்றப் பிரிவு போலீசு, தி வயர் நிறுவனர் – ஆசிரியர்களான சித்தார்த் வரதராஜன், எம்.கே.வேணு, சித்தார்த் பாட்டியா மற்றும் துணை செய்தி ஆசிரியர் ஜான்வி சென் ஆகியோரின் வீடுகள் மற்றும் தி வயர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கையகப்படுத்தி சென்றுள்ளனர்.

தவறான செய்தி வெளியிட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பிறகும் தி வயர் இணையதளம் மீது பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலின் வன்மம் அடங்கவில்லை. ஏனென்றால் தொடர்ச்சியாக மோடி அரசின் தோல்விகள் பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பித்தலாட்டங்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வரும் ஒரு இணையதளம் என்பதால்தான் இந்த நடவடிக்கை.

அன்றாட நிகழ்வுகளில் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் பல்வேறு பொய் பித்தலாட்டங்களையும் பரப்பி அது எல்லாம் தவறு என தெரிந்தாலும் எந்த வகையிலும் அதற்காக பகிரங்க மன்னிப்பு கூறியதில்லை. தமிழகத்தில் தஞ்சாவூர் மைக்கேல் பட்டி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பி.ஜே.பி கும்பல் அது மதமாற்றத்தால்தான் தற்கொலை நிகழ்ந்தது என பல்வேறு பொய் செய்திகளையும் பரப்பினார்கள். அது தவறான செய்தி என நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகும், ஏதாவது பகிரங்க மன்னிப்பு கேட்டார்களா? இன்று வரை இல்லை.

டெல்லி ஜே.என்.யு-வில் கன்னையாகுமார் போன்ற மாணவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் போட்டார்கள் என பொய் செய்தி பரப்பினார்கள்.

2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் அதிகமான தொகுதிகளை வெற்றி பெறுவதற்காக இந்து முஸ்லிம் கலவரத்தை திட்டமிட்டு நடத்தினார்கள். அதுவும் போலி செய்தியின் அடிப்படையில்தான்.

இதுபோல, அடுக்கிக்கொண்டே போகலாம் அவ்வளவு கிரிமினல் பித்தலாட்டத்தனங்களை செய்துள்ளார்கள். இந்த பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் கும்பல். இதற்கெல்லாம் எங்கும் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

ஏன் இவர்களின் முன்னோடி கோட்சே காந்தியை சுட்டுக்கொன்றுவிட்டுதான் ஒரு முஸ்லிம் என்பதை கையில் பச்சை குத்திக் கொண்டு பொய் பிரச்சாரத்தில் இறங்கினார்.

பொய் பித்தலாட்டம் கலவரத்தில் கட்சியை வளர்த்தவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

படிக்க : இல்லம் தேடிக் கல்வி கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கை! | புமாஇமு கண்டனம்!

தி வயர் இணையதள சோதனையின்போது கைப்பற்றப்பட்ட லேப்டாப்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்றவற்றில் கூட பல்வேறு கபடத்தனங்களை செய்து வயர் இணையதளத்தின் மீதும் ஆசிரியர்களின் மீதும் அடக்குமுறையை தீவிர படுத்துவார்கள்.

இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு மக்களின் பிரச்சினைகளை பேசும் சமூக ஊடகங்களை ஒட்டுமொத்தமாக முடக்கும் வேலையை கூட துணிந்து இவர்கள் செய்வார்கள்.

இதைத்தான் இன்றைய ஆளும் வர்க்கமும் அரசு எந்திரமும் விரும்புகிறது. தங்களுடைய இந்துராஷ்டிர கனவுத் திட்டத்திற்கு  இப்படிப்பட்ட பொய் பிரச்சாரங்களும் அதை எதிர்த்து பேசுபவரை ஒடுக்குவதும் அவசியமாக உள்ளதால் இன்னும் மூர்க்கமாக அடக்குமுறையை ஏவுவார்கள்.

ஜனநாயக பாசிச எதிர்ப்பு முற்போக்கு சக்திகள் அனைவரும் ஓரணியில் திரண்டு தி வயர் இணையதளத்தின் மீதான அடக்குமுறைக்கு எதிராக களத்தில் இறங்குவோம். வதந்திகளையே வாழ்க்கையாக கொண்டிருக்கும் காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலை அம்பலப்படுத்தி தோலுரித்துக் காட்டுவோம்.

இவண்,
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு. 94448 36642.

நவ.13 : MASA குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கி பேரணி! | பு.ஜ.தொ.மு தமிழகம் முழுவதும் பிரச்சாரம்

தொழிலாளி வர்க்கத்தின் மீது கார்ப்பரேட்டுகளும், அரசும் நடத்தி வருகின்ற தாக்குதல்கள், ஒட்டுமொத்த உழைக்கும் மக்களது வாழ்வாதாரத்தை பறிக்கும் அவலம் ஆகியவற்றை எதிர்த்து புரட்சிகர எழுச்சியின் தலைமை சக்தியாக திகழும் தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டுவதும், போராட்டங்களை கட்டியமைப்பதும் முக்கிய தேவையாக இருக்கிறது.

இதை இலக்காக வைத்து அகில இந்திய அளவில் புரட்சிகர அரசியலின் அடிப்படையில் இயங்கி வருகின்ற 16 தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து தொழிலாளர் உரிமைகள் மற்றும் போராட்டங்களுக்கான இயக்கம் (Mazdoor Adhikar sankarsh Abhiyan – MASA) என்கிற கூட்டமைப்பு கட்டியமைக்கப்பட்டுள்ளது. பு.ஜ.தொ.மு, மாநில ஒருங்கிணைப்புக்குழுவும் இந்த கூட்டமைப்பின் உறுப்பு அமைப்பாக உள்ளது.

படிக்க : நவ.13 : நாடு தழுவிய தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் அறைகூவலுடன் குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கி பேரணி!

MASA சார்பில் எதிர்வரும் நவம்பர் 13 அன்று 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் குடியரசுத் தலைவர் இல்லத்தை நோக்கி மாபெரும் தொழிலாளர் பேரணி நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்திலிருந்து புறப்படும் இந்த பேரணி கீழ்க்காணும் 7 கோரிக்கைகளை ஏந்திச் செல்கிறது.

This slideshow requires JavaScript.

1) தொழிலாளருக்கு எதிரான சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறு!

2) பொதுத்துறைகளையும் வளங்களையும் தனியார்மயமாக்குவதை நிறுத்திடு!

3) தொழிற்சங்க உரிமை,போராடும் உரிமை,வேலை நிறுத்த உரிமை ஆகியவற்றை நிபந்தனையற்ற, அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமை என அறிவித்து உத்திரவாதம் செய்!

4) காண்டிராக்ட், நீம், FTE உள்ளிட்ட அனைத்து வேலைமுறைகளையும் ஒழித்திடு.

60 வயது வரை நிரந்தர வேலை, பணி ஓய்வுக்குப் பின்னர் பென்சன் பெறும் உரிமை ,மகப்பேறு விடுப்புரிமை, அனைத்து வகை சமூகப் பாதுகாப்பு மற்றும் பணியிடப் பாதுகாப்பு ஆகியவற்றை உத்திரவாதப்படுத்து!

5) சம வேலைக்கு சம ஊதியம், நாள் ஒன்றுக்கு  குறைந்தபட்ச  ஊதியம் ரூ.1000/  வேலையின்மைக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.15000,  ஊரகப் பணியாளர்களுக்கு சமூகப் பாதுகாப்புரிமை, பணிப் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, குடியிருப்பு, கல்வி, நலவாழ்வு ஆகியவற்றை உறுதிசெய்!

மேலும் அலைந்து திரியும் பணித்தன்மை கொண்ட ஜிக் ஊழியர்கள், அங்கன்வாடி, கிராம நலச் சேவகர்கள், சத்துணவு ஊழியர்கள், IT & ITES ஊழியர்கள், வீட்டு வேலைப்பணியாளர்கள் ஆகியோரை ” தொழிலாளர் ” என்கிற வரையறைக்குட்படுத்தி அனைத்து உரிமைகளையும் உத்திரவாதப்படுத்து!

6) உழைக்கும் மக்களிடையே வெறுப்பு, பிளவுப்படுத்தும் அரசியலை நிறுத்திடு!

7) பணவீக்கத்தை உடனடியாகக் கட்டுப்படுத்து

மேற்படி  கோரிக்கைகளை முன்வைத்து  MASA நாடு முழுவதும் மேற்கொண்டு வருகின்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் முன்னெடுத்து செல்கிறது. அதனடிப்படையில் பேருந்து, ரயில், குடியிருப்புப் பகுதி, ஆலை வாயில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக்குழு)
தொடர்பு எண் : 7397404242

அருணாச்சல பிரதேசத்தில் புறக்கணிக்கப்படும் சக்மா பழங்குடிகள்!

0

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (NCRB) தரவுகளின் படி, வடகிழக்கு இந்தியாவானது கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்தாவது ஆள் கடத்தலின் மையமாக விளங்கி வருகிறது. 2015-ல், இந்தியாவின் ஒட்டுமொத்த ஆள் கடத்தல் வழக்குகளில் அசாமின் பங்கு மட்டும் 22 சதவீதம். தற்போது வரை அசாமில் இந்த நிலைமையே நீடித்து வருகிறது.

ஆள் கடத்தல் அங்கு இவ்வளவு அதிகமாக இருப்பதற்கான காரணம் வேலைவாய்ப்பின்மையே. வேலைதேடும் இளம்பெண்களையும் இளைஞர்களையும் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ஏமாற்றி, பாலியல் தொழிலிலும் வீட்டு வேலை மற்றும் கட்டுமான தொழில்களிலும் அடிமைகளாக ஈடுபடுத்துகின்றனர்.

வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை அருணாச்சலப்பிரதேசம் பொருளாதார ரீதியாக மேம்பட்ட மாநிலமாக இருக்கிறது. அதனால் அங்கு வீட்டு வேலை மற்றும் கட்டுமானத் தொழிலுக்கான வேலையாட்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். இதன் காரணமாக அசாமிலிருந்து அருணாச்சலப்பிரதேசத்திற்கு அதிகமான அளவில் ஆள் கடத்தல் நடைபெறுகிறது.

கடந்த எட்டு ஆண்டுகளில் (2014-ல் இருந்து) பதிவு செய்யப்பட்டிருக்கும் அதிக அளவிலான ஆள் கடத்தல் வழக்குகள் உண்மையை பிரதிபலிக்கவில்லை. பெரும்பாலான வழக்குகள் ஆட்களை காணவில்லை என்ற அடிப்படையிலேயே பதிவு செய்யப்படுகிறது; ஆள் கடத்தல் என்ற பிரிவில் அல்ல. ஆனால், அவர்கள் நிரந்தரமாக காணாமல் போகிறார்கள் என்பதே கள யதார்த்தமாக உள்ளது.

படிக்க: ஒடிசா : சட்டவிரோதமாக நிலத்தை கையகப்படுத்தும் டால்மியா! பழங்குடி மக்கள் போராட்டம்!

அசாமில் சக்மா (Chakma) என்ற பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களே அதிக அளவில் அருணாச்சலப்பிரதேசத்துக்கு கடத்தப்படுகிறார்கள்; குறிப்பாக அம்மாநிலத்தின் தலைநகரான இட்டாநகருக்கு (Itanagar) கடத்தப்படுகிறார்கள். சக்மா சமூகத்தைச் சேர்ந்த மாணவர் தலைவர்களைக் கேட்டபோது, ஏராளமான குழந்தைகள் கடத்தப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சக்மா சமூக மக்களுக்கு அசாமில் குடியுரிமை இல்லாமல் இருப்பதாலும், அவர்கள் அங்கு மிகவும் பின்தங்கிய சமூகமாக இருப்பதாலும் பெரும்பாலான புகார்கள் பதிவு செய்யப்படுவதே இல்லை.

சமீபத்தில் பேசிய அருணாச்சலப்பிரதேச முதல்வர் பேமா காண்டு (Pema Khandu), தனது மாநிலத்தைச் சேர்ந்த சக்மா அகதிகளை இந்தியாவின் மற்ற பாகங்களுக்கு இடம் மாற்றுவது குறித்துப் பேசினார். இது அம்மக்களிடையே பெரிய கோபத்தை ஏற்படுத்தியது.

வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு பெளத்த இனக்குழுவான சக்மாக்கள், சிட்டகாங் மலைப்பகுதிகளிலிருந்து திரிபுரா மற்றும் மிசோரம் வழியாக 1964-இல் இந்தியாவுக்குள் நுழைந்தனர். அப்போதைய கிழக்கு பாகிஸ்தான் அரசாங்கம் கர்னாபுலி (Karnaphuli) ஆற்றின் மீது கப்தாய் அணையை (Kaptai Dam) அமைத்ததால் அவர்கள் இடம்பெயர்ந்தனர். பிரிவினைக்குப் பிறகு இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையின் காரணமாக இந்த சமூகம் அப்போதைய பாகிஸ்தான் அதிகாரிகளால் மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது.

1964 ஆம் ஆண்டில், கப்தாய் அணை கட்டியதன் காரணமாக இடம்பெயர்ந்த சக்மா அகதிகள் இந்தியாவுக்குள் நுழைந்தபோது, இந்திய அரசாங்கம் அவர்களில் ஒரு குழுவை அப்போதைய வடகிழக்கு எல்லைப்புற முகமையின் (North East Frontier Agency – NEFA) திராப் பள்ளத்தாக்கில் (Tirap valley) குடியமர்த்தியது; அந்த NEFA-தான் இன்றைய அருணாச்சலப்பிரதேசம்.

1987 ஆம் ஆண்டில் அருணாச்சலப்பிரதேசம் மாநில அந்தஸ்தைப் பெற்றதிலிருந்தே உள்ளூர் பழங்குடிகளால் சக்மா மக்கள் தொடர்ச்சியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.

1972-இல் இந்திய அரசாங்கம் சக்மா மக்களுக்கு குடியுரிமை வழங்குவதாக முடிவெடுத்தது. உச்சநீதிமன்றமும் 2015-இல் அம்மக்களுக்கு குடிமக்களுக்கான உரிமைகளை வழங்குமாறு அம்மாநில அரசிற்கு உத்தரவிட்டது. ஆனால் அம்மாநில அரசோ அனைத்து உத்தரவுகளையும் குப்பைத் தொட்டியில் போட்டது.

இந்தியாவில் சக்மா மக்களுக்கு எந்த உரிமையும் இல்லாததால், கடத்தப்பட்ட சக்மா குழந்தைகளைப் பற்றிய எந்த ஆவணங்களும் போலீசுத்துறையிடம் இல்லை. சங்லாங் (Changlang), நம்சாய் (Namsai) மற்றும் பப்பும் பரே (Papum Pare) ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சக்மா குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

சாங்லாங் மாவட்டத்தின் தியான் வட்டத்தில் (Diyon Circle) உள்ள ஆரண்யப்பூர் (Aranyapur), உதய்பூர் (Udaipur), தர்மாபூர் (Dharmapur), முடோய் டுவீப் (Mudoi Dweep) மற்றும் தும்பனி (Dumpani) ஆகிய கிராமங்களில் கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பமும் ஆள் கடத்தலுக்கு குழந்தைகளை இழந்துள்ளன. இந்தக் குழந்தைகளில் சிலர் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டு அடிமைத்தனம் மற்றும் மிருகத்தனமான துன்புறுத்தல்களிலிருந்து மீட்கப்பட்டாலும், பலர் காணாமல் போனவாரே உள்ளனர்.

படிக்க: ஒடிசா : ஜிண்டால் எஃகு ஆலைக்கு எதிராக போராடும் பழங்குடி மக்கள் – அடக்குமுறைகளை ஏவும் பாசிச அரசு !

சுமார் ஒரு ஆண்டிற்கு முன்பு, நம்பர் 2 ஜோதிபூர் கிராமத்தைச் (No. 2 Jyotipur village) சேர்ந்த 13 வயதான ரிது சக்மா (Ritu Chakma) நம்சாய்க்கு (Namsai) சென்றார். அவர் ஒரு நல்ல வாழ்க்கையைப் பெறுவார் என்று அவரது பெற்றோருக்கு உறுதியளிக்கப்பட்டது. ஆனால், ஒரு அறியப்படாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அப்பெண் குழந்தை, ஒவ்வொரு இரவும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது. அடையாளம் தெரியாத நபர் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசு மற்றும் குழந்தைகள் நல மையத்தால் மீட்கப்பட்ட அவர் இப்போது வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

அந்தப் பெண் குழந்தையின் தந்தையான அருண் குமார் சக்மா, நிலமற்ற ஒரு கூலித் தொழிலாளி. அவருக்கு ஆறு குழந்தைகள் இருப்பதால் தினக்கூலியை மட்டும் வைத்து குடும்பம் நடத்த இயலவில்லை. தனக்குத் தெரிந்த ஒரு நபரின் மூலமே தன் மகளை நம்சாய்க்கு வேலைக்கு அனுப்பி இருக்கிறார். இப்படி நடக்கும் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

குடியுரிமை இல்லாததால் அருண் குமார் சக்மாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ரேசன் கிடையாது; அரசின் மருத்துவக் காப்பீடு (Atal Amrit Abhiyan), பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் போன்ற எந்த திட்டத்தையும் பயன்படுத்திக் கொள்ளவும் இயலாது.

சக்மா மக்கள் குடியிருக்கும் கிராமங்கள் இன்னும் மின்சார வசதியோ குடிநீர் வசதியோ கூட இல்லாமல்தான் இருக்கின்றன. அவர்களுக்கு ஓட்டுரிமையும் இல்லை. ஆரண்யப்பூர் கிராமத்தில் 200 வீடுகளுக்கு ஒரு கிணறு மட்டுமே உள்ளது. அங்குள்ள பெண்கள் தண்ணீருக்காக தினமும் ஐந்து முதல் பத்து கிலோமீட்டர் வரை நடக்க வேண்டி உள்ளது. 1994-இல் பரவிய மலேரியா கொள்ளை நோய், அப்பகுதி மக்களை சராசரியாக வீட்டிற்கு ஒருவர் என்ற அளவில் கொன்றொழித்தது. அரசாங்கம் அவர்கள்மீது எந்த அளவிற்கு அக்கறை காட்டுகிறது என்பதற்கு இது ஒரு துலக்கமான சான்று.

குடியுரிமை இல்லாததாலும் இருப்பிடச் சான்றிதழ் இல்லாததாலும் சக்மா மக்கள், வேலை வாங்கித் தருவதாக கூறி ஆள் கடத்தலில் ஈடுபடும் கடத்தல்காரர்களை நம்புவதைத் தவிர வேறுவழியில்லை. அரசாங்கத்திற்கோ அவர்களைக் கண்டு கொள்ள நேரமும் இல்லை. அம்மக்களுக்கு வாக்குரிமையும் இல்லை. ‘ஜனநாயக’ இந்தியாவின் தனிச்சிறப்பிற்கு புறக்கணிக்கப்பட்ட சக்மா பழங்குடி மக்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!


பொம்மி

பட்டினியின் பிடியில் ஆஸ்திரேலியா !

0

பட்டினியில் உழலும் ஆஸ்திரேலியா:
20 லட்சம் குடும்பங்களும் 13 லட்சம் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

ஃபுட்பேங்க் (Foodbank) என்ற தொண்டு நிறுவனம் தனது வருடாந்திர பசி அறிக்கையை (Hunger Report) கடந்த அக்டோபரில் வெளியிட்டது. இந்த அறிக்கையில் உள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியூட்டுவனவாக உள்ளன. கடந்த 12 மாதங்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உணவிற்காக செலவழிக்க பணம் இல்லாததால் கடும் பட்டினியில் இருப்பதாகவும், பல நாட்கள் ஒரு வேளை உணவையே தவிர்ப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது; அதிலும் குறிப்பாக 13 லட்சம் குழந்தைகள் கடுமையான உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 11 முதல் 28 வரை, 18 வயதைக் கடந்த 4,024 ஆஸ்திரேலியர்களிடம் இணையவழியில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. கடந்த ஆண்டில் (2021-ல்) 17 சதவீத குடும்பங்கள் கடுமையான உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டிருந்தன; ஆனால் அது தற்போது (2022-ல்) 21 சதவீதமாக அதிகரித்துள்ளது.

குழந்தைகளைக் கொண்டுள்ள குடும்பங்களின் நிலைமையோ இன்னும் படுமோசமாக இருக்கிறது. குழந்தைகளை உடைய 32 சதவீத குடும்பங்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளன. இது தேசிய சராசரியான 21 சதவீதத்தை விட அதிகம்.

இதுகுறித்துப் பேட்டியளித்த ஃபுட்பேங்க் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பிரியன்னா கேசி (Brianna Casey) “அதிகரித்த உணவு மற்றும் மளிகைச் செலவுகள், அதிகரித்த எரிசக்தி செலவுகள் – மின்சாரம், பெட்ரோல் அல்லது வாகனத்திற்கான எரிபொருள் – மற்றும் அதிகரித்த வீட்டுச் செலவுகள் அனைத்தும் வாழ்க்கைச் செலவுகளை அதிகரிப்பதில் பங்காற்றுகின்றன. துரதிருஷ்டவசமாக, நிலைமை இன்னும் மோசமடைந்து வருவதாகத் தெரிகிறது” என்று கூறினார்.

படிக்க: உலக பட்டினிக் குறியீடு 2022 | 121 நாடுகளில் இந்தியா 107-வது இடம்!

அரசு திட்டங்களின் கீழ் வீட்டு வாடகை மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டும் நிதி தனக்கு கொஞ்சம் கூட பற்றவில்லை என்று கூறுகிறார் சார்லோட் என்ற பெண்மணி. இரண்டு பேர் கொண்ட தனது சிறிய வீட்டிற்கே 850 டாலர் மின் கட்டணம் வருவதாக அவர் கூறுகிறார். ஃபோன் பில், மளிகை போன்ற மற்ற செலவினங்களும் கூடியிருப்பதாக அவர் மேலும் கூறுகிறார்.

ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகத்தின் (Australian Bureau of Statistics – ABS) சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, பழங்கள் மற்றும் காய்கறிகள் கடந்த 12 மாதங்களில் (செப்டம்பர் காலாண்டு வரை) 16.2 சதவீத வருடாந்திர விலை உயர்வை சந்தித்திருக்கின்றன. அதே நேரத்தில், இறைச்சி மற்றும் கடல் உணவுகள் 7.3 சதவீதமும், ரொட்டிகள் மற்றும் தானியங்கள் 10 சதவீதமும், பால் பொருட்கள் 12.1 சதவீதமும் விலை ஏற்றம் கண்டுள்ளன. வீட்டு உபயோகப் பொருட்கள் 11.9 சதவீதமும், வீட்டுவசதி 10.5 சதவீதமும் அதிகரித்துள்ளது.

அங்குள்ள ஆஸ்திரேலிய அரசாங்கமோ இயற்கை சீற்றங்கள் மீது பழிபோட்டுத் தப்பித்துக் கொள்ள நினைக்கிறது. இந்தியாவின்‌ மோடி அரசாங்கம் எப்படி அனைத்துப் பிரச்சனைகளுக்கும் கொரோனாவை காரணம் காட்டியதோ, அதுபோலவே ஆஸ்திரேலியா உட்பட அனைத்து உலக நாடுகளும் கொரோனாவையே காரணம் காட்டுகின்றன.

படிக்க: நாட்டில் பட்டினிச் சாவே இல்லையாம் ! மோடி அரசின் பொய்யுரைகள் !

ஆஸ்திரேலியாவின் இந்த நிலைமைக்குக் காரணம் அங்கு மாறி மாறி ஆட்சி புரியும் தொழிலாளர் கட்சி (Australian Labor Party) மற்றும் லிபரல் கட்சிகளின் (Liberal Party of Australia) ஏகாதிபத்திய அடிவருடித்தனம்தான். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிற்கு அடியாளாக செயல்பட்டுவரும் ஆஸ்திரேலியா (AUKUS முத்தரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை), தீவிரமாக நவதாராளவாத கொள்கைகளையும் அமல்படுத்தி வருகிறது. இந்தக் கொள்கைகளால் ஏற்படும் பாதிப்புகளைத்தான் கொரோனா விரைவுபடுத்தி இருக்கிறது என்பதே எதார்த்த உண்மை.


பொம்மி

தமிழ்நாடு: கிறிஸ்துவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தும் காவிக் குண்டர்கள்!

மிழ்நாட்டின் தேர்தல் களம் என்று பார்க்கையில் பாரதிய ஜனதா கட்சிக்கு சொல்லிக்கொள்ளும்படி ஆதரவு இல்லை. ஆனால் அதன் இந்துத்துவா சித்தாந்தம் ‘திராவிட மரபு’ கொண்ட தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றி வளர்ந்து வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கிறிஸ்துவ நிறுவனங்களின் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தது. மோடி அதிகாரத்திற்கு வந்த 2014-ம் ஆண்டிலிருந்து கிறிஸ்துவர்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் பெருமளவு அதிகரித்துள்ளது என்று அம்மனு கூறுகிறது.

2019 ஆம் ஆண்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகளவு தாக்குதல்கள் நடத்தப்பட்ட மாநிலங்களில் உத்தர பிரதேசத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு உள்ளது. இதனை பொதுநல வழக்கு தாக்கல் செய்த நிறுவனங்களில் ஒன்றான ஐக்கிய கிறிஸ்தவ மன்றம் (United Christian Forum) இப்புள்ளி விவரங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளது. அந்த அட்டவணையில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்களாகும் அல்லது அதன் இந்துத்துவா சித்தாந்தம் உறுதியாக வேரூன்றியுள்ள மாநிலங்களாகும். ஆனால், இவ்விரு வகையினங்களில் வராத மாநிலமாக கருதப்படும் தமிழ்நாடு இப்பட்டிலியில் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இதுவரை 227 தாக்குதல் சம்பவங்கள் 2014-22 க்கு இடைப்பட்ட ஆண்டில் மட்டும் நிகழ்ந்துள்ளன. பாதிரியார்களும் தேவாலயங்களும் இந்துத்துவ குண்டர்களால் குறிவைத்து தாக்கப்படுகின்றன. மேலும் ஐக்கிய கிறிஸ்தவ மன்றம் 2015 ஆம் ஆண்டு முதல் ஒரு கட்டணம் இல்லா உதவி எண்ணை தொடங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டபூர்வ உதவிகளைச் செய்து வருகிறது. அந்நிறுவனம் தான், காவி குண்டர்களால் மத நம்பிக்கையாளர்கள் தாக்கப்படுவது, பிரார்த்தனைகளை சீர்குலைப்பது, பாதிரியார்கள் மற்றும் அவரது குடும்பங்களை துன்புறுத்துவது, தேவாலயங்களை நாசமாக்குவது போன்ற பல்வேறு சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் பட்டியலைத் தொகுத்துக் கொடுத்துள்ளது.

படிக்க: அதிகரித்துவரும் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் மீதான காவி குண்டர்களின் தாக்குதல்கள்!

இதில் பாதி (117) சம்பவங்கள் கொங்கு பகுதிகளில் தான் நிகழ்ந்துள்ளன; குறிப்பாக கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருப்பூர், மதுரையில் சில பகுதிகள். இதில் குறிப்பான விசயம் என்னவென்றால் இப்பகுதிகளில்தான், தேவர் மற்றும் கவுண்டர் போன்ற சாதிகள் ஆதிக்க சாதியாகவும், தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளாகவும் உள்ளன.

தி நியூஸ் மினிட் (The News Minute) குழு இக்குற்றச்சாட்டுகள் குறித்து களத்தில் இறங்கி விசாரிக்க முடிவு செய்தது. அதில், “எங்களால்(TNM)  மாநிலத்தின் உள்பகுதிகளில்  கிறிஸ்தவ எதிர்ப்பு மனநிலையை உறுதியாக உணர முடியவில்லை, ஆனால் மிஷனரிகளுக்கு விரோதமாக காவல்துறை வழக்கு பதிவு செய்வதை நாங்கள் கண்டுபிடித்தோம்”.

இதனைத் தொடர்ந்து நாங்கள் ஒரு பாதிரியாரை சந்தித்துக் கேட்டபொழுது அவர் கூறியது, “நாங்கள் மதமாற்றம் செய்வதாகக் கூறி பிரார்த்தனை நடத்தும் வாடகை வீட்டில் இருந்து உரிமையாளரால் வெளியேற்றப்பட்டோம். இதனைத் தொடர்ந்து காவி குண்டர்கள் எங்களை கடுமையாகத் தாக்கினார்கள். அதில் இந்து முன்னணி தான் முதன்மையாக இருந்தது”.

மேலும், இங்கு கலவரங்கள் ஒரே வடிவில் தான் நடக்கிறது என்றும் கூறினார். உதாரணமாக, மதமாற்றம் நடப்பதாகக் கூறி அண்டை வீட்டில் வசிப்பவர்களை காவிகள் தூண்டி விடுவது அதன் பிறகு தேவாலயங்கள், பிரார்த்தனைக் கூடங்கள் மற்றும் பாதிரியார்களை தாக்குவது; இதன் பிறகு போலீசு தலையிட்டு வன்முறைகளைத் தடுக்கப் போவதாகக் கூறி இடத்தின் உரிமையாளரைக் கட்டாயப்படுத்தி எங்களை வெளியேற்றுவது.

இதன் பிறகு நாங்கள் தமிழகத்தின் இந்துத்துவ சோதனைச் சாலையும் இந்து முன்னணியின் கோட்டையுமாகிய கோவைக்குச் சென்றோம்.ஏனென்றால், ஐக்கிய கிறிஸ்தவ மன்றத்தின் அறிக்கையின் படி கிறிஸ்தவர்களுக்கு எதிராக கோயம்புத்தூரில் தான் 42 குற்றங்கள் நடந்துள்ளது.

இந்து முன்னணி

ஆர்.எஸ்.எஸ் ஊழியரான ராமகோபாலானால் இந்து முன்னணி 1980-களில் தொடங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் மூலம் 1990-களில் பெருமளவு இந்து முன்னணி வளர்ந்தது. இதற்கு உறுதுணையாக அப்போதைய ஜெயலலிதா அரசு மறைமுகமாக ஆதரவை வழங்கியது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களின் ஒருங்கிணைப்பாளர் வேண்டுமென்றே ஊர்வலங்களை முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் செலுத்துவார். ஆதலால்  ஊர்வலங்கள் பெரும்பாலும் கலவரங்களில் முடிந்துவிடும். ஆனால் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில்  இருந்து இந்து முன்னணி கிறிஸ்துவர்கள் பக்கம் தனது பார்வைத் திருப்பியுள்ளது என்று உயர்மட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகிறார் என்று நியூஸ் மினிட் பதிவு செய்துள்ளது.

இந்து முன்னணி ஊழியர்கள் மிகவும் பயிற்சி பெற்றவர்கள் என்று போலீஸ் கூறுகிறது. “நீங்கள் இவர்களை கலவரம் நடக்கும் போது அரிதாகவே பார்க்க முடியும். இவர்கள் கலவரங்களில் தலைமை பாத்திரம் வகிப்பதில்லை. அவர்களுடைய பங்கு கலவரங்களை அமைதியாக இருந்து தூண்டி விடுவது மட்டுமே” என்று கோயம்புத்தூர் உயர் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

இந்து முன்னணி அமைப்பின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் நடராஜன், “கோவையில்  கிறிஸ்தவர்களை மட்டும் கண்காணிக்க  ஒவ்வொரு தெருவிலும் ஒரு நபரை நியமித்துள்ளோம். மேலும் 100 வார்டுகளிலும் ஒரு இந்து முன்னணியின் உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்து இல்லாத நபர் எந்த வார்டில் இருக்கிறார் என்பதும் தெரியும் அவர் மதமாற்றத்தில் ஈடுபடுகிறாரா அல்லது சாதாரண வாழ்க்கை வாழ்கிறாரா என்பதும் எங்களுக்கு உடனடியாக தெரிந்துவிடும்” என்று கூறிகிறார்.

(இதன்பிறகு தி நியூஸ் மினிட் குழு கோவிந்தராஜ் நடராஜனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேட்டி எடுத்தது. அப்போது கிறிஸ்தவர்களுக்கு எதிராக அணி திரட்டுவது தொடர்பாக ஒரு ஆங்கில செய்தி நிறுவனம் வந்திருப்பதை கண்டு இந்து முன்னணி உறுப்பினர்கள் சந்தேகத்துடனும் பதற்றத்துடனும் காணப்பட்டார்கள். ஆனால் கோவிந்தராஜ்   கிறிஸ்தவர்களுக்கு எதிராக இந்து முன்னணி பிரச்சாரம் செய்வதை பேசுவதற்காக ஆர்வமாக இருந்தார் என்று அந்த ஊடகம் பதிவு செய்துள்ளது).

கோவிந்தராஜ் அளித்த பேட்டியில், “இப்பகுதி முழுவதும் கவுண்டர் சாதியால் நிரம்பியது, உங்களால் இங்கே சாதி பாகுபாட்டை பார்க்க முடியாது. சில வருடங்களுக்கு முன்பு இரண்டு அல்லது மூன்று  கிறிஸ்தவ குடும்பங்கள்தான் இங்கு இருந்தன. ஆனால் தற்போது 40 குடும்பங்கள் கிறிஸ்துவத்தை நம்புகின்றனர்”. கடந்த சில வருடங்களாக மதமாற்றம் அதிக அளவில் நடந்துள்ளதாகவும் திமுக ஆட்சியில் அது உச்சத்திற்கு சென்று விட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

“இந்து முன்னணி தலைவர்கள் கலவரங்களில் ஈடுபடுவதில்லை. கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் சாமானிய இந்துக்கள் ஆற்றும் உடனடி எதிர்வினைகளே. இந்துக்களுக்கும் மதமாற்றம் செய்பவர்களுக்கும் ஏற்படும் பதற்றத்தை நம்மால் தடுக்க  முடியாது. பாதிரியார்கள் இந்துக் கடவுள்களை அவமதிப்பதை சாதாரண இந்துக்களால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்” என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

“நாங்கள் இந்து மதத்தைப் பற்றியும் பாரம்பரிய வழிபாடு முறைகளைப் பற்றியும் மக்களுக்குக் கற்றுக் கொடுக்கிறோம். நாங்கள் எங்களுடைய மதத்தின் நன்மைகளை தொகுத்து, துண்டறிக்கைகளாக தலித்துகளிடம் கொண்டு செல்கிறோம். இதன் மூலம் அவர்கள் விழிப்புணர்வு பெற்று பாதிரியார்களிடம் கேள்வி கேட்கின்றனர். மேலும் இந்து கடவுள்களை அவமதிப்பதற்கு எதிராக அவர்கள் பொருத்தமான பதில்களை கொடுக்கின்றனர்” என்றும் அவர் கூறுகிறார்.

இதன் பிறகு நியூஸ் மினிட் குழு இந்து முன்னணியின் கோவை பொதுச் செயலாளர் ஜெய்சங்கரை சந்தித்தது.

ஜெய் சங்கர் அளித்த பேட்டியில், “இந்து முன்னணிக்கும் கத்தோலிக்க மற்றும் புரோட்டஸ்டன்ட் பிரிவினருக்கும் எவ்வித பிரச்சனையும் கிடையாது. நாங்கள்  குறிப்பாக சுவிசேஷகர்கள் பெந்தெகொஸ்தே பிரிவினரைத்தான் கண்காணித்து வருகிறோம். இதனை நிரூபிக்கும் விதமாக ஜெய்சங்கர் அவருடைய ப்ரொடஸ்டன் கிறிஸ்துவ நண்பரான ஸ்டாலினை பேட்டியின்போது அழைத்து வந்தார். “இவன் என்னுடைய நண்பன் ஸ்டாலின். இவன்  கிறிஸ்தவன் தான். ஆனால் நாங்கள் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். இவன் என்னை கிறிஸ்துமஸுக்கு அழைப்பான், நான் இவனை பொங்கல் மற்றும் தீபாவளிக்கு அழைப்பேன்” என்று கூறினார். ஸ்டாலினும் இக்கூற்றை உற்சாகமாக ஏற்றுக் கொண்டு சுவிசேஷகர்களைக் கடுமையாக விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து நாங்கள் இந்து முன்னணியின் மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷை சந்தித்தோம். இவர் 25 ஆண்டு காலமாக இவ்வமைப்பில் வேலை செய்து வருகிறார்.

சதீஷ் கூறியது, “இம்மாநிலத்தில் 70-களின் இறுதியிலும் 80-களின் தொடக்கத்திலும் மதமாற்றம் என்பது உச்சத்திற்கு சென்று விட்டது. இந்து முன்னணி வந்த பிறகு இவ்விகிதங்கள் சரிய தொடங்கியது. இந்துக்களுக்கு ஒரு தூணாக இந்து முன்னணி தான் விளங்குகிறது”.

மேலும் அவர் கூறுகையில், “தூண்டுதலின் பெயரால்தான் மதமாற்றம் நடப்பதாக அவர் குற்றம் சாட்டுகிறார். இந்து நூலான மகாபாரதம் ராமாயணம் படிக்காத இந்துக்கள், மதம் மாறிய பிறகு முழு பைபிளையும் படித்து விடுகின்றார்கள். பணம் எவ்வாறு வேலை செய்கிறது என்று பாருங்கள்” என்று வருத்தப்படுகிறார்.

இந்து முன்னணி கவனித்து வரும் பகுதிகளை அவர் பட்டியலிட்டார். தலித்கள் மற்றும் ஆதிவாசிகள் அதிகம் வாழும் இடங்களான பேரூர், ஆலந்துறை, தொண்டாமுத்தூர், ஆனைகட்டி, புலிக்குளம், சிவானந்தா காலனி, சரவணம்பட்டி, அறிவொளி நகர், மைல்கல், செட்டிபாளையம், கலைஞர் நகர் மற்றும் சமத்துவபுரம்.

இதன்பிறகு நாங்கள் கோவை வழக்கறிஞர் ரா.முருகவேளிடம் பேட்டி எடுத்தோம். அவர் கூறியது, “அதிமுக ஆட்சியில் தான் மத நல்லிணக்கம் பெருமளவு சீரழிந்து போனது. எடப்பாடி பழனிச்சாமி பெயரில் கோவையில் பாஜகவின் ஆட்சி செய்து வந்தது. பல விஷயங்கள் மாறியும் மோசமடைந்து போய்விட்டது”.

“சுவிசேஷகர்கள் தெருக்களில் நற்செய்தி வாசகங்களை பிரச்சாரம் செய்வதையெல்லாம் முன்னால் எளிதாக பார்க்க முடியும். இந்து கோவில்களின் ரதங்கள் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல்  கிறிஸ்தவ தெருக்களில் செல்லும். ஆனால் மதமோதல்கள் அதிகமாகிவிட்ட இந்நிலையில் அந்நிகழ்வுகள் அனைத்தும் அரிதாகி விட்டது. தற்போது போலீசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மத மோதல்களை உருவாக்க இந்துத்துவ குண்டர்கள் வலுக்கட்டாயமாக ஊர்வலங்களை  கிறிஸ்தவ குடியிருப்புகளுக்குள் செலுத்துகின்றனர்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

படிக்க: கோவை இந்து முன்னணி கலவரம் – விரிவான ரிப்போர்ட்

அரசு என்ன செய்கிறது?

கிறிஸ்தவ நிறுவனங்கள் அளித்த இத்தகவல்கள் அனைத்தும் அரைவேக்காடு என்றும் ஊடகங்களில் திணிக்கப்பட்டது என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சகம்  கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தாக்க செய்த இந்த வாக்குமூலத்திற்கு உள்துறை அமைச்சகம் இவ்வாறு பதிலளித்துள்ளது: “இதுபோன்ற ஏமாற்று மனுக்களை வைத்துப் பார்க்கும் பொழுது இதன் பின்னால் மறைமுக நிகழ்ச்சி நிரல் இருக்குமோ என்று சந்தேகம் தோன்றுகிறது. மேலும் நாட்டின் அமைதித் தன்மையையும் பாதுகாப்பையும் கெடுக்க அந்நிய தலையீடுகள் இருக்குமோ என்றும் கேள்வி எழுகிறது”.

மாநிலத்தின் குற்ற புள்ளி விவரங்களைப் பார்க்கும் பொழுது மறுக்கமுடியாத உண்மைகள்  வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதில்  கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்கள் அரிதாகவே வெறுப்பு குற்றங்களாகவும் மத மோதல்களாகவும் பதிவு செய்யப்படுகிறது என்பதே அந்த உண்மை. முருகவேளின் கூற்றுப்படி தாக்கினவர்களுக்கும் தாக்கப்பட்டவர்களுக்கும் இடையில் சமரசம் செய்து வைத்து தரகு வேலையை போலீசு செய்து வருகிறது. வழக்குகளை பதிவு செய்யும்போது போலீசால்  வழக்குகள் குறைத்துக் காட்டப்படுகிறது.

சில சந்தர்ப்பங்களில் அவர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள மத வன்முறை சம்பந்தமான பிரிவில் வழக்குகளை பதிவு செய்வதில்லை. குறிப்பாக, 295 (வழிப்பாட்டை தலத்தை அசுத்தல் செய்தல்), 295A (மத உணர்வுகளை சீர்குலைத்தல்), 296 (மதக் கூட்டத்தை தொந்தரவு செய்தல்), 153 (கலகம் செய்வதற்கு தூண்டிவிடுதல்) மற்றும் 153A (மதம் சம்பந்தமாக விரோத உணர்ச்சிகளை தூண்டிவிடுதல்) போன்றவற்றில் வழக்குப்பதிவு செய்வதில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் முன்னாள் அரசு வழக்கறிஞருமாக இருந்த ஒருவர் கூறுகிறார்.

இக்குற்றச்சாட்டை டெல்டா பகுதிகளில் பாதிக்கப்பட்ட  கிறிஸ்தவர்களுக்கு சட்டபூர்வ உதவிகளை செய்து வரும் ஒரு வழக்கறிஞரும் ஏற்றுக்கொள்கிறார். இவர் கூறும்போது, “திட்டமிடப்பட்ட மத மோதல் குற்றங்களை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யும்போது மதக்கலவரங்கள் சார்ந்த சட்டத்தில் பதிவு செய்யாமல் தனிநபர்களுக்கு இடையில் நடக்கும் மோதலாகப் பதிவு செய்கின்றனர். இது போன்ற நடவடிக்கைகள் திராவிட கட்சிகளுக்கு மதசார்பற்ற மாநிலமாக காட்டுவதற்கும் உதவுகிறது”.

புதிய பக்தர்களை தேடும் சுவிஷேகர்களுக்கு இந்த வன்முறைகள் அனைத்தும் தொழில்சார்ந்த அச்சுறுத்தலாக உள்ளது.ஆனால் சிலர் இந்த துன்புறுத்தல்களை வரவேற்கின்றனர். தங்களின் விசுவாசத்தை நிரூபிக்க இது உதவுகிறது.சுவிஷேகர்கள் பிரார்த்தனைகள் நடத்தவும் புதிய தேவாலயங்கள் கட்டவும் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அனுமதி வாங்குவது என்பது பெரிய பிரச்சனையாக உள்ளது.

புதிய இடங்களில் பிரார்த்தனைகள் நடத்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் கட்டிட சட்டங்கள் கூறுகின்றன. இந்த அனுமதிகள் அரிதாகவே வழங்கப்படுகின்றன.

நாங்கள் சட்ட ஆய்வாளர் ஒருவரின் உதவியுடன் உயர்நீதிமன்ற இணைய தளத்திற்கு சென்றோம். அரசியலமைப்பின் சட்டம் 25-28 பிரிவின் கீழ் மத சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை வலியுறுத்தி  கிறிஸ்தவ அமைப்புகளால் குறைந்தது 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று நாங்கள் கண்டறிந்தோம்.

இந்த வழக்குகள், கிறிஸ்துவர்களால் மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. “ஒரு மத சிறுபான்மையினர் தனது வழிபாட்டிற்கு அனுமதி பெறுவதற்காக உயர்நீதிமன்றம் வரை செல்ல வேண்டும் என்பது, மத சிறுபான்மை சமூகம் வெறித்தனமான கும்பல்களால் துன்புறுத்தபப்படுவதைக் காட்டிலும்  அதிகார வர்க்கத்தால் அதிகமாக துன்புறுத்துகிறது என்பதைக் காட்டுகிறது”.

சட்ட ஆய்வாளரின் உதவியுடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் நீதிமன்றங்களால் தீர்க்கப்பட்ட 45 வழக்குகளின் பட்டியலை நாங்கள் தொகுத்தோம். 45 பேரில் 10 பேர் மட்டுமே  கிறிஸ்தவ மனுதாரர்களுக்கு ஆதரவாக இருந்தனர்.  திண்டுக்கல்லில் உள்ள பிலீவர்ஸ் சர்ச் தொடர்பான வழக்கில், மனுதாரர்களுக்கு 12 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 2020 பிப்ரவரியில் மாவட்ட காவல்துறை ஆணையர்க்கு உத்தரவிட்டது.  நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல்துறை ஆணையர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தேவாலயத்தின் விளம்பரதாரர்கள் தி நியூஸ் மினிட்-யிடம் கூறினர்.

மற்றொரு வழக்கில், வாணியம்பாடி நகருக்கு வெளியே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள தனது சொந்த நிலத்தில் பாழடைந்த இடத்தில் ஒரு தேவாலயத்தை பாதிரியார் ஆமோஸ் கட்டினார். இந்துத்துவாதிகளின் தொடர்பில் உள்ள ஒருவர், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்து, கட்டடத்தை இடிக்கக் கோரினார்.  ஆனால், காவல்துறை ஆணையர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் பிறகு இந்துத்துவாதிகள்  உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தபிறகு இவ்வழக்கு மீண்டும் காவல்துறை ஆணையரிடம் வந்தது. இந்த வழக்கில் உத்தரவு வரும்வரை பாதிரியார் பிரார்த்தனை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.

ஒரு கிராமத்தில் உள்ள  கிறிஸ்தவ சமூகத்துடன் தொடர்புடைய ஒருவர் கூறும்போது, “இங்கு 3 கோவில்கள் தனி நபர்களிடம் உள்ளது. அவர்கள் வழிபாடு நடத்த எந்த அனுமதியும் வாங்குவதில்லை. இதனைப் பார்க்கும் போது அனுமதி வாங்கும் சட்டங்கள் அனைத்தும் சிறுபான்மையினர்களுக்காக மட்டும் தான் என்று தோன்றுகிறது” என்று ஆதங்கத்தை வெளிபடுத்தினர்.

இவற்றை மொத்தமாக தொகுத்துப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருவதையும், இந்து முன்னணி போன்ற இந்துத்துவ கும்பல்கள் மதக் கலவரங்களை தூண்டி நடத்துவதையும், காவல்துறை அவற்றை மத மோதல்கள் என்று வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதையும் காணமுடிகிறது. தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ்-இன் இந்துத்துவா சித்தாந்தம் வேரூன்றி செழித்து வளரத் துவங்கியுள்ளதையே இது காட்டுகிறது.


ஹைதர்
நன்றி : தி நியூஸ் மினிட்

ஆதார் எண் இணைக்கும் பணி ஆசிரியருக்கு தேவையா? | ஆசிரியர் உமா மகேஸ்வரி | வீடியோ

தார் கார்டை வாக்காளர் அடையாள அட்டையில் இணைக்கும் வேலையில் ஆசிரியர்கள் ஈடுபடுவது அவர்களுக்கு பெரும் பணிச்சுமையாக இருக்கிறது. தினமும் நான்கு வகுப்புகளுக்கு பாடம் எடுக்கவேண்டி இருக்கிறது. இதனால் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதற்கு முன் தயாரிப்பு செய்யமுடியாமல் போகிறது. மாலையில் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் வேலைக்கு போகும்போது அங்கு இருக்கக்கூடிய மக்கள் வேலைக்கு போய்விடுவார்கள். மக்களின் பங்களா வீடுகள் முன்பு நின்று, வீட்டுல யாருங்க? நாங்க BLO வந்து இருக்கோம், கொஞ்சம் வெளியில வாங்க என்றும், ஒவ்வொரு வீட்டு கேட்டு [gate] முன்பும் நின்று குரல் கொடுத்தாலும் வீட்டு ஓனர்கள் எட்டிப் பார்ப்பதில்லை.

மாலை நான்கு மணியிலிருந்து ஏழு மணி வரை பகுதியில் வேலை செய்வோம். இப்படியாக இரவு ஒரு மணி வரை இந்த பணியை செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது. இதற்கு மத்தியில் கற்பித்தல் பணிக்கான திட்டமிடுதல், வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். வார இறுதியில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் என்று கல்வித் துறையில் அறிவிப்புகள் வந்தாலும் அதற்கு முழுமையாக வழிகாட்டலும் இல்லை.

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் ஆசிரியர் தேவையா? என்பது பற்றியும் அதில் ஆசிரியர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் பற்றியும் அரசுப் பள்ளி ஆசிரியர் உமா மகேஸ்வரி கீழ்க்கண்ட காணொலியில் விளக்குகிறார்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கிஃப்ட் ஐஎஃப்எஸ்சி: உயர் கல்வியை ஏகாதிபத்தியங்களின் சந்தையாக்கும் திட்டம்!

0

த்திய அரசு அக்டோபர் 12 ஆம் தேதி சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணைய (சர்வதேச கிளை வளாகங்கள் மற்றும் வெளிநாட்டு கல்வி மையங்களை அமைத்தல் மற்றும் இயக்குதல்) ஒழுங்குமுறைகள், 2022 என்ற தலைப்பில்  இந்திய அரசிதழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இந்த அறிவிப்பின்படி சர்வதேச கிளை வளாகங்கள் (International Branch Campuses – IBCs) மற்றும் வெளிநாட்டு கல்வி மையங்கள் (Offshore Education Centres – OECs) குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள Gujarat International Finance-Tec City-யில் (GIFT City) அமைக்கப்பட உள்ளன.

இதன்படி, வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் கிஃப்ட் சர்வதேச நிதி சேவைகள் மையத்தில் (GIFT International Financial Services Centre) தங்கள் சர்வதேச கிளை வளாகங்களை (IBCs) அமைத்துக் கொள்ளலாம். மேலும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அல்லாத கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு கல்வி மையங்களை (OECs) கிஃப்ட் சிட்டியில் அமைத்துக் கொள்ளலாம். இதன்மூலம் உலகத் தரத்திலான கல்வியை அளிக்கப் போகிறார்களாம்.

இந்தியாவில் வளாகத்தை (IBC) அமைக்க விரும்பும் வெளிநாட்டு பல்கலைக்கழகம் நிதி நிலைப்புத்தன்மை கொண்டதாகவும் QS உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் (QS World Universities ranking) முதல் 500 இடங்களுக்குள்ளும் இருக்க வேண்டும். ஆனால் வேடிக்கையாக, இவ்விதிமுறைகளின்படி, OEC-களை அமைக்கும் நிறுவனம் பல்கலைக்கழகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை; பெயரளவிற்கு ஏதாவது ஒரு கல்வி நிறுவனமாக இருந்தாலே போதுமானது.

படிக்க: உயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் !

இந்த வளாகங்கள் நிதி மேலாண்மை, ஃபின்டெக் (fintech), அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றிலும் ஆராய்ச்சி திட்டங்களை வழங்கிக் கொள்ளலாம். மேலும், இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நாடுகளில் என்னென்ன பாடத்திட்டங்களை வழங்குகின்றனவோ அதையேதான் இங்கும் வழங்க வேண்டும்.

பொதுவாக ஒரு வெளிநாட்டு பல்கலைக்கழகம் இந்தியாவில் தனது வளாகத்தை அமைக்க முற்பட்டால், சில முன் நிபந்தனைகளுக்கு உட்பட்டே அதை செய்ய முடியும். குறிப்பாக கட்டணம் மற்றும் நிர்வாகக் கட்டுப்பாடு, இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்துதல் போன்றவற்றுடன் லாப நோக்கற்ற நிறுவனமாகவும் (not-for-profit entity) அது இருக்க வேண்டும் என்பது முன்நிபந்தனை.

ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், லாபம் ஏதாவது இருப்பின் அதனைத் தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பிக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், தங்களுக்கு விருப்பமான கல்விக் கட்டணத்தை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளும் சுதந்திரத்தையும் வழங்கி இருக்கிறார்கள். பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission – UGC) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (All India Council for Technical Education – AICTE) ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்க வேண்டியதும் இல்லை; குஜராத்தின் காந்திநகரை தலைமை இடமாகக் கொண்ட சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணையம் (International Financial Services Centres Authority – IFSCA) தான் இவற்றைக் கட்டுப்படுத்தும்.

ஏற்கனவே இந்தியாவில் உள்ள IIT, IIM, IISER போன்ற உயர்கல்வி நிறுவனங்களே பார்ப்பன-உயர் சாதியை சேர்ந்தவர்கள் மற்றும் மேட்டுக்குடியினரின் ஆதிக்கத்திற்கான ஒன்றாக உள்ளது. அவை தொடர்ந்து நமது பிள்ளைகளை புறக்கணித்து வரும் கொலைநிலங்கலாக இருக்கின்றன. எந்தவித கட்டுப்பாடும் அற்ற IFSC மூலம் அமைக்கப்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு யாருக்காக சேவை செய்யும் என்பதைச் சொல்லவே தேவையில்லை.

படிக்க: புதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் !

சர்வதேச நிதி சேவைகள் மையம் (IFSC) என்பது சிறப்பு பொருளாதார மண்டல சட்டம், 2005-இன்கீழ் (Special Economic Zone Act, 2005) அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) என்பது தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கையின் கீழ் அமைக்கப்பட்ட ஏகாதிபத்தியத்தின் குட்டி காலனியாகும். கல்வித்துறையை ஏகாதிபத்திய சுரண்டலுக்கு முழுமையாக அர்ப்பணிக்கும் நடவடிக்கைகளின் அடுத்தகட்ட நகர்வே இந்த கிஃப்ட் சிட்டி!


பொம்மி

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் நவம்பர் – 2022 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561

வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

♦ தலையங்கம் : தூத்துக்குடி தியாகிகள் புகழ் ஓங்குக! கார்ப்பரேட் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வெல்க!

♦ கார்ப்பரேட் கொள்ளை எதிர்ப்பையும் உள்ளடக்கையதே பாசிச எதிர்ப்பு!

♦ இலவச எதிர்ப்பும் சமூக நலத்திட்ட ஒழிப்பும்!

♦ மீண்டும் முட்டுச்சந்தில் ஏகாதிபத்திய முதலாளித்துவம்! இது உலகப் பாட்டாளிகள் முன்கை எடுக்கும் தருணம்!

♦ சமூக ஊடகங்களின் மீது பாசிச ஒடுக்குமுறையை ஏவும் ஆண்டை நீதிபதிகள்!

♦ அதானி: உலகப் பணக்காரன் அல்ல; உலகப் பாட்டாளி வர்க்கத்தின் எதிரி!

♦ பார்ப்பன – பனியாக்கள் பிடியில் இந்திய ஊடகங்கள்!

♦ கட்டாய வாக்களிப்பு: போலி ஜனநாயகத்தின் இறுதி எல்லையில் பாசிசம்!

♦ ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: மதவாத கும்பலுக்கு எதிரான ஜனநாயகப் போர்!

♦ சாதி – தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக சாதி – தீண்டாமை ஒழிப்பு புரட்சிகர மணவிழாக்கள் நடந்த 25ஆம் ஆண்டை நினைவு கூர்வோம்!

♦ ஐ.டி.ஊழியர்களை மிரட்டும் மூன்லைட்டிங்!

நவம்பர் 7 – ஆவணப்படம் – விரைவில்…

போராட்டங்கள் எழுச்சிகளாக உயரட்டும்!

நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிச கும்பலுக்கு எதிரான போராட்டங்கள் வளர்ந்து வருகின்றன. தமிழகத்திலும் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, பரந்தூர், புதுச்சேரி, கோவை என பல பகுதிகளில் விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மாணவர்கள், செவிலியர்கள், பேராசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராடி வருகின்றனர். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.இன் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக பாசிச எதிர்ப்பு சக்திகள் போராடி வருகின்றனர். பாசிச ஆட்சியதிகாரத்திற்கு எதிராகப் போராடுகின்ற அனைவரும் ஒன்றிணைந்து பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்புகள், பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிகளை அமைத்துப் போராடுவது காலத்தின் கட்டாயமாகும். பாசிசத்தை முறியடிக்கும் இலக்கில் இந்தப் போராட்டங்களை மக்கள் எழுச்சிகளாக வளர்த்தெடுப்பது அவசியமாகும்.

நவம்பர் புரட்சியை மீண்டும் இவ்வுலகம் எதிர்நோக்கி இருக்கிறது என்பதை உலகம் முழுவதும் நடைபெரும் பல்வேறு போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அதனை உணர்த்தும் வகையில் ஆவணப்படம் வெளியிவரயிருக்கிறது. அதன் டீசர் வீடியோவை தற்போது வெளியிடுகிறோம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

 

’வல்லரசு இந்தியா’ யாருக்காக?

பிரிட்டனை பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் கடந்த மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் புள்ளிவிவரங்கள் அடிப்படையில், கடந்த ஆண்டின் இறுதி காலாண்டில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவிக்கிறது.

பத்தாண்டுகளுக்கு முன்பு 11வது இடத்திலிருந்த இந்தியா, இன்று 5ஆம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. மேலும் இந்த ஆண்டின் முதல் காலாண்டில், பிரிட்டனின் ஜி.டி.பி 816 பில்லியன் டாலராக இருந்த நிலையில், இந்தியாவின் ஜி.டி.பி மதிப்பு 854.7 பில்லியன் டாலராக உயர்ந்திருப்பதை ப்ளூம்பெர்க் அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய உலக பொருளாதார வல்லரசுகளுக்கு அடுத்த படியாக இந்தியா திகழ்வதாக பா.ஜ.க.வினர் பெருமை பொங்கி வருகிறார்கள்.

“நம்மை ஆண்டவர்கள், நமக்குப் பின்னால் இருக்கிறார்கள்” என்று இந்தியா பிரிட்டனை முந்திச் சென்றது குறித்து டுவீட் செய்திருக்கிறார் பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளரான சம்பித் பத்ரா.

“காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற 75வது அமுதப் பெருவிழா ஆண்டில், இந்தியா பிரிட்டனை விஞ்சி உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. இந்த முன்னேற்றம் சாதாரணமான சாதனையல்ல. இதற்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும்” – என்று குஜராத்தின் சூரத் நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசினார் மோடி.

மோடி, பா.ஜ.க.வினர் மட்டுமல்ல, அனில் அகர்வால், உதய் கோட்டக், ஆனந்த் மகிந்திரா உள்ளிட்ட இந்திய தரகு முதலாளிகளும் இச்செய்தியை ஒட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

“பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது பொருளாதாரமாக இந்தியா வளர்ந்தது என்பது நமது இந்தியாவின் வேகமான வளர்ச்சியில் ஒரு மைல்கல். இன்னும் சில ஆண்டுகளில் மூன்றாவது இடத்தில் இருப்போம்” என்று ட்வீட் செய்திருக்கிறார் அனில் அகர்வால்.

***

படிக்க: இந்தியாவைக் காப்பாற்றுவதற்கான போரை தொடங்க வேண்டும் | அருந்ததி ராய் | மணிவேல்

பெருமளவில் அந்நிய முதலீடுகளை ஈர்த்தல், ஏற்றுமதி அதிகரிப்பு, பெரும் பொருளாதார நிலைத்தன்மை (Macro economic stability), தனிநபர் நுகர்வு அதிகரிப்பு ஆகியவற்றில் பிரிட்டனை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது. இக்கூறுகளே இந்தியா 5வது பெரும் பொருளாதாரமாக முன்னுக்கு வரக் காரணம் எனக் கூறப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட உலகப் பொருளாதார வீழ்ச்சி, அதனைத் தொடர்ந்து ரஷ்யா-உக்ரைன் போர் ஏற்படுத்தியுள்ள நெருக்கடி ஆகியவற்றைக் கடந்து இந்தியா இச்சாதனையைப் படைத்துள்ளதாக ஆளும் வர்க்க ஊடகங்கள் சிலிர்கின்றன. பொருளாதாரத்தை மோடி அரசு மிகத் திறமையாக கையாண்டுள்ளதாகவும், இந்த அரசின் பொருளாதார சீர்திருத்தங்களே இந்தியாவை வளர்ச்சியை நோக்கி நெட்டித் தள்ளியுள்ளதாகவும் அவை கூறுகின்றன.

பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, வங்கிகள் இணைப்பு, பொதுத்துறைகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் தேசிய பணமாக்கல் திட்டம், புதிய திவால் சட்டம், தொழிலாளர் சட்டத் திருத்தம் மற்றும் ரியல் எஸ்டேட் முறைப்படுத்துதல் சட்டம் உள்ளிட்ட பொருளாதார சீரமைப்புகளால் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்திருப்பதாக ‘மோடினாமிக்ஸ்’ (Modinomics) அறிஞர்கள் கூறுகிறார்கள்.

மேலும், மோடி அரசின் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்ந்தால், 2014ல் மோடி கூறியதைப் போல 5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி வெகுதூரமில்லை என்றும் அவர்கள் வியக்கிறார்கள்.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு உறுப்பினரான ஆஷிமா கோயல், மென்மேலும் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி நகர தனியார்மயக் கொள்கைகளை தீவிரமாக அமலாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.

இதே வளர்ச்சி வீதம் தொடர்ந்தால், இன்னும் சில ஆண்டுகளில் ஜப்பானையும், ஜெர்மனியையும் பின்னுக்குத்தள்ளி இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறும் என்கிறார், நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் அரவிந்த் பனஹாரியா.

***

ஒரு நாட்டின் வளர்ச்சியை எதை வைத்து நாம் தீர்மானிப்பது. அந்நாட்டின் ஆகப் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளதோ, அதை வைத்துத்தான் மதிப்பிட முடியும். அதை நீக்கிவிட்டு பார்க்கும் எந்த புள்ளிவிவரங்களும் நம்மை ஏமாற்றுபவையே.

மோடி அரசால் கொண்டுவரப்பட்ட பணமதிப்பழிப்பும், ஜி.எஸ்.டி வரி விதிப்பும் இந்திய வேலைவாய்ப்பில் பெரும்பங்காற்றுகிற சிறுகுறு தொழில்களை பெருமளவில் அழித்துவிட்டது. பல சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. வேலைநாட்களும், தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டிருக்கின்றன. குற்றுயிரும் குலையுயிருமாக இத்தொழில் நிறுவனங்கள் போராடி வருகின்றன. ஒரு காலத்தில் திருப்பூர் சென்றால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நிலைமை ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்கு பிறகு தலைகீழாக மாறியிருக்கிறது.

கடந்த ஜூன் மாத கணக்கின்படி, புதிதாக 4 மில்லியன் உழைப்புச் சக்தி நாட்டில் உருவாகியிருக்கிறது. ஆனால், ஜூலையில் 397 மில்லியனாக இருந்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை 2 மில்லியன்கள் குறைந்து 394.6 மில்லியனாக இருக்கிறது. அந்நிய முதலீடுகள் அதிகரித்து தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவில் நாளுக்கு நாள் வேலையில்லா திண்டாட்டம் பெருகிவருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதக் கணக்கீட்டின்படி, இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 8.3 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. 12 மாதங்களில் இதுவே அதிகபட்சமாகும். குறிப்பாக, 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளம் வயதினர் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் 34 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது.

வேலையில்லா திண்டாட்டத்திற்கு போட்டியாக பணவீக்கமும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவும் உயர்ந்திருக்கின்றன. கடந்த ஜூலையில் பணவீக்கம் 7.7 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இதனால், காய்கறிகளின் விலை 10.90 சதவிகிதமாகவும், பருப்பு வகைகளின் விலை 6.09 சதவிகிதமாகவும், எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகளின் விலை 7.52 சதவிகிதமாகவும் அதிகரித்திருக்கிறது. எனவே எண்ணெய், அரிசி, கோதுமை, பருப்புகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை பலமடங்கு உயர்ந்திருக்கிறது.

வேலையின்மையும், விலைவாசி உயர்வும் இந்தியாவின் உழைக்கும் மக்களை வறுமைப் படுகுழிக்குள் தள்ளியிருக்கிறது. உலக வறுமை கடிகாரம் (World Poverty Clock) என்ற அமைப்பு ஜூலை மாதம் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளவில் அதீத வறுமை நாடான நைஜீரியாவை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது இந்தியா. 2021-ஆம் ஆண்டின் உலக பட்டினிக் குறியீட்டில் 116 நாடுகளில், இந்தியா 101- வது இடத்தில் இருக்கிறது.

உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை 2022-ன் படி, உலகளவில் அதீத ஏற்றத்தாழ்வு கொண்ட நாடாக இந்தியா வளர்ச்சியடைந்திருக்கிறது. பெரும் பணக்காரர்களைக் கொண்ட ஏழை நாடு என்று இந்தியாவைக் குறிப்பிடுகிறது இந்த அறிக்கை. இந்திய நாட்டின் வருமானத்தில் 57 சதவிகித மதிப்புள்ள சொத்து வெறும் 10 சதவிகித பணக்காரர்களிடம்  இருக்கிறது என்றும், அதிலும் இந்த சொத்தில் 22 சதவிகித சொத்து மதிப்பை வெறும் 1 சதவிகித பணக்காரர்கள் வைத்திருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியது.

இந்திய மக்கள் தொகையில் 1 சதவிகிதமான சிறு கும்பல் உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்க, 50 சதவிகித மக்களோ தங்கள் வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்ள போராடிக் கொண்டிருக்கின்றனர் என்கிறது மேற்படி அறிக்கை.

அம்பானியின் மனைவி 3 லட்சம் மதிப்புள்ள டீ குடிக்கிற நாட்டில்தான், போதிய ஊட்டச்சத்து கிடைக்காத காரணத்தால், பிறந்த ஒரு ஆண்டிற்குள் ஆயிரத்தில் 20 குழந்தைகள் பலியாகின்றன. ஒரு நாளைக்கு ரூ.1612 கோடிகள் சம்பாதிக்கும் அதானி வாழ்கிற நாட்டில்தான் ஒரு நாளைக்கு ரூ.178 (2022-ன் குறைந்தபட்ச சம்பளம்) சம்பாதிக்கிற கோடிக்கணக்கான மக்கள் வாழ்கின்றனர். நெஞ்சை வாட்டுகிற இந்த அவலநிலையே இந்தியாவின் உண்மை முகம்.

***

படிக்க: இந்தியா: காலநிலை பேரழிவு-வறுமையால் பாதிக்கப்படும் 222 மில்லியன் குழந்தைகள் !

இந்திய உழைக்கும் மக்களைப் பட்டினிக்கும், வேலையில்லா திண்டாட்டத்திற்கும் தள்ளிய மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளை கொழுத்து பருக்க வைத்துள்ளது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களுக்குள் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார் அதானி.

சுரங்கங்கள், துறைமுகங்கள், எரிவாயு, அனல் மற்றும் சூரிய மின்சாரம் உற்பத்தி உள்ளிட்டவற்றை அதானிக்குத் தாரை வார்த்துவருகிறது மோடி அரசு. ஏர் இந்தியாவை டாடாவிற்கு கொடுத்திருக்கிறது. பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்-க்கு 4ஜி சேவையைக் கூட வழங்காத மோடி அரசு, முகேஷ் அம்பானிக்கு 5ஜி சேவையை வழங்கி தொலைத் தொடர்பு துறையில் ஏகபோகமாக்கியிருக்கிறது.

மோடியின் வெளிநாட்டு பயணம் என்பதே, அம்பானிக்கும் அதானிக்கும் சர்வதேச அளவில் ‘தொழில் ஏற்பாடு’ செய்துகொடுப்பதாக இருக்கிறது. மோடியின் தலையீட்டால்தான் இலங்கையில் காற்றாலை மற்றும் சூரிய மின்சாரம் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அதானி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. இதுகுறித்து புதிய ஜனநாயகம் இதழில் எழுதியிக்கிறோம்.

அதானியின் உள்நாட்டு – வெளிநாட்டு முதலீடுகள் எதையும் தன் சொந்த பணத்தில் செய்யவில்லை, மாறாக பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கியே பல துறைகளிலும் முதலீடு செய்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில் அதானி வாங்கிய சுரங்கத்திற்கு 7,500 கோடி, பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ கொடுத்திருக்கிறது.

அதானி இதுவரை வைத்துள்ள கடன் மதிப்பு மட்டும் 30 பில்லியன் டாலருக்கும் அதிகம் என்கிறது 2015-ல் வெளிவந்த கடன் நிறுவன (House of Dept) அறிக்கை. அம்பானிக்கும் பொதுத்துறை வங்கிகள் எண்ணற்ற கடன்களை வாரிவழங்கியிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கிய கடன்களில், 9 இலட்சத்து 92 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

மோடியின் பொருளாதாரக் கொள்கைகள் அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் முதலாளிகளை உலக முதலாளிகளோடு போட்டிபோடும் அளவிற்கு பேணி வளர்த்துள்ளது. அதற்காக நாட்டிலுள்ள கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்க்கையை நரகத்தில் தள்ளியுள்ளது. ‘பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா வல்லரசாகிவிட்டது’ என்ற செய்திக்கு 99 சதவிகித உழைக்கும் மக்களாகிய நாம் தேச பக்தியால் சிலிர்க்க முடியுமா என்ன, இங்கு தேசம் என்பதே பாசிஸ்டுகளின் பொருளில் அம்பானியும் அதானியும் அல்லவா!


அப்பு