Tuesday, August 12, 2025
முகப்பு பதிவு பக்கம் 266

செபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் !

“செபாஸ்டியன் அன் சன்ஸ் : மிருதங்கத்தை உருவாக்கித் தருவோரின் சுருக்கமான வரலாறு” என்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்வு கடந்த 02.02.2020 அன்று ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் அரங்கில் நடைபெற்றது. அந்நிகழ்வில் நூலின் ஆசிரியர் டி.எம். கிருஷ்ணா மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தொல். திருமாவளவன் மற்றும் திரு. ராஜ்மோகன் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அந்நிகழ்வின் வீடியோக்கள்.

மிருதங்கம் படைப்போரின் சமூக வரலாறு !

“செபாஸ்டியன் அன் சன்ஸ்: மிருதங்கத்தை உருவாக்கித் தருவோரின் சுருக்கமான வரலாறு” என்பது டி.எம்.கிருஷ்ணாவின் புதிய நூல். கர்நாடக இசைக் கச்சேரிகளிலும் பரத நாட்டிய நிகழ்ச்சிகளிலும் முதன்மையாக பயன்படுத்தப்படும் தாளக்கருவி மிருதங்கம். அதைத் தயாரிப்பவர்களின் வரலாற்றையும், அவர்களுக்கும் மிருதங்கம் வாசிப்போருக்கும் இடையிலான உறவையும் சமூக – வரலாற்றுப் பின்னணியுடன் உணர்த்தும் இந்த நூலின் வெளியீட்டு விழாவின் சுருக்கப்பட்ட காணொளி பதிவு !

படிக்க:
கோமாதாவுக்கும் பிராமணனுக்கும் இடையில் … | டி.எம்.கிருஷ்ணா
எமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா. வைகை

மிருதங்கத்திற்கே இந்த நிலை என்றால் பறைக்கு ?

இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட தொல் திருமாவளவன் அவர்கள் பேசுகையில், நூல் ஆசிரியர் டி.எம். கிருஷ்ணா அவர்களின் முயற்சியைப் பாராட்டியும். இசைக் கலைஞருக்கும், இசைக் கருவியை உருவாக்கித் தருபவர்களுக்கும் இடையிலான சமூக இடைவெளியைப் பேசும் இந்நூல், ஒரு சமூக வரலாற்றையும் சேர்த்தே பேசுகிறது. என்றும்.

மேலும் இன்றளவும் பறை என்பது இழிவாகப் பார்க்கப்படும் சமூக அவலத்தையும் தனது உரையில் குறிப்பிட்டு பேசினார் தொல். திருமாவளவன்.

திருமாவளவனை ஏன் அழைத்தீர்கள் ? | கேள்வி பதில்

“செபாஸ்டியன் அண்டு சன்ஸ்” நூல் வெளியீட்டு விழா ஏற்கனவே கலாக்ஷேத்ராவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்து பத்திரிக்கையில் இந்நிகழ்வு குறித்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து. கலாக்ஷேத்ரா அனுமதியை இரத்து செய்தது. அதற்கு காரணம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அழைக்கப்பட்டது தான் என பேசப்பட்டது.

அது குறித்து, கேள்வி – பதில் நிக்ழச்சியை ஒருங்கிணைத்த கவிதா முரளிதரன் அவர்களின் கேள்விகளுக்கு தொல். திருமாவளவன் பதில் அளித்துள்ளார் !

அனைத்து காணொளிகளையும் பகிருங்கள் !

தொகுப்பு:

தமிழர் வரலாறும் பண்பாடும் | நா. வானமாமலை – புதிய தொடர்

3
நா. வானமாமலை

பேராசிரியர் நா.வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் நூலைத் தொடர்ந்து, அவரது முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகளுள் ஒன்றான ”தமிழர் வரலாறும் பண்பாடும்” என்ற இந்நூலை தொடராக வெளியிடுகிறோம். அவரது ஆராய்ச்சிக் கட்டுரைகளை தொகுத்து, தனிநூலாக 1966-ம் ஆண்டில் என்.சி.பி.எச். வெளியிட்டிருந்தது.

வரலாறு என்று பள்ளிப் பாடங்களில் சொல்லித்தரப்படும் ”சிற்சில அரசர்கள், கவிஞர்கள், போர்வீரர்கள், அமைச்சர்கள் ஆகியோரது வாழ்க்கைக் குறிப்புகள் தான் தமிழ்நாட்டின் முழுமையான சரித்திரமா?” எனக் கேள்வியெழுப்பும் பேராசிரியர் வானமாமலை, ”மனிதன் உலகில் தோன்றிய காலத்திலிருந்து உணவையும், உடையையும், இயற்கையினின்றும் பெற பல முறைகளில் முயன்றிருக்கிறான். அவ்வாறு மனிதன் இயற்கையோடு போராட்டம் நிகழ்த்தும் காலத்தில் இயற்கையின் இயக்க விதிகளை அறிந்து கொண்டு அதனைத் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்து கொள்ளப் பயன்படுத்துகிறான். இவற்றை உற்பத்தி சக்திகள் என்று நாம் அழைக்கிறோம். அவை வளர்ந்து கொண்டே செல்லுகின்றன. அவற்றின் வளர்ச்சியால் மனித சமூகம் மாறுகிறது.” என்ற கோணத்தில் அதாவது மனித சமூகத்தின் வளர்ச்சிப் போக்கிலிருந்து வரலாற்றை அணுக வேண்டுமென்கிறார்.

இத்தகைய மார்க்சிய நோக்கில் சமூகத்தில் மக்கள் எந்தவகையில் உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள், உற்பத்திப் பொருள்களை எவ்வாறு தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள், மனிதர்களிடையே எத்தகைய உறவுமுறை பின்பற்றப்படுகிறது என்பதிலிருந்தும் வர்க்கங்களை பற்றிய பார்வையிலிருந்தும் தமிழர்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் இந்நூலில் உள்ள பல்வேறு கட்டுரைகளில் எடுத்துரைக்கிறார், பேராசிரியர் வானமாமலை.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களில் இந்தத் தொடர் வெளியாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் !

தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ! நன்றி !

தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 01

பதிப்புரை

பேராசிரியர் நா. வானமாமலை

ண்பர் திரு. நா. வானமாமலை அவர்கள் தமிழக கிராமிய இலக்கியங்களில் நல்ல ஈடுபாடும் புலமையும் பெற்றவர். ‘தமிழர் வரலாறும் பண்பாடும்’ என்ற இவ்வாராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பில் காணப்படும் கட்டுரைகள் சமுதாயத்தை முழுக் கோணத்திலும் ஆராய்ந்து சிறப்புச் செய்கின்றன.

இத்தொகுப்பின் முதல் கட்டுரை சமுதாய மாற்றங்களைப் புதிய அடிப்படையில் அணுகி, ‘தமிழக வரலாறு’ படைக்க வேண்டியதன் அவசியத்தை அழகுற வலியுறுத்துகிறது.

பண்டை வரலாற்றின் அரசியல், மொழி, கலை, இலக்கியம் முதலிய தமிழ்ப் பண்பாட்டினை இக்கட்டுரைத் தொகுப்பு புதிய பார்வையோடு ஆராய்கிறது. தமிழர் வரலாற்றை வரைவதற்கு இந்நூல் ஒரு தூண்டுகோலாக அமையுமென்று நம்புகிறோம்.

பதிப்பகத்தார்

பண்டைத் தமிழர் வரலாறு தேவை

யர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், இன்று இந்திய வரலாறு கற்பிக்கப்படுகிறது. இந்திய வரலாற்றுப் பாடப் புத்தகங்களை நீங்கள் படித்துப் பார்த்தால் பண்டைத் தமிழ் நாட்டின் வரலாற்றுக்கென, பத்துப் பதினைந்து பக்கங்கள் ஒதுக்கப்படிருக்கும். அப்பக்கங்களை வரிவிடாமல் வாசித்தால் கீழ்க்கண்ட செய்திகள் காணப்படும்.

“தமிழ்நாடு இந்திய நாட்டின் தென் பகுதியில் உள்ளதோர் பிரிவு. பழமையான நாகரிகம் படைத்த நாடு. சங்க காலம் எனப்படும் பழமையான காலத்தில் பல நூல்கள் தோன்றின. அவற்றுள் திருக்குறளை இயற்றியவர் வள்ளுவர் என்பார். பிற்காலத்தில் தமிழ் நாட்டில் முடியுடை வேந்தர் மூவர் ஆண்டனர். சோழருள் கரிகாலனும் ராஜராஜனும், ராஜேந்திரனும் புகழ் பெற்றவர்கள். சேரருள் செங்குட்டுவன் சிறந்தவன். பாண்டியருள் குறிப்பிடத்தக்கவர் யாருமில்லை. சோழர் பெருவாழ்வு வாழ்ந்த காலத்தில் கம்பன் தோன்றினான். சமணத்தை முறியடித்து சைவ வைணவ மதங்கள் தோன்றின. தமிழ் நாட்டின் வடபிரிவில் பல நூற்றாண்டுகளாக பல்லவர் செங்கோல் செலுத்தினர்.”

இதற்குமேல் தமிழ் நாட்டின் பழம் பெரும் பண்பாட்டைப் பற்றியோ, இலக்கிய வளத்தைப் பற்றியோ, இவ்விரண்டையும் உருவாக்கிய தமிழினத்தவரைப் பற்றியோ, அவர்களது சமூக வாழ்க்கையில் நூற்றாண்டு நூற்றாண்டுகளாக ஏற்பட்டு வந்த மாறுதல்களைப் பற்றியோ, அம்மாறுதல்களுக்குரிய காரணங்கள் எவை என்பன பற்றியோ, இந்நூல்கள் எதுவும் கூறுவதில்லை.

தமிழர் வரலாறு இவ்வளவுதானா; சிற்சில அரசர்கள், கவிஞர்கள், போர்வீரர்கள், அமைச்சர்கள் ஆகியோரது வாழ்க்கைக் குறிப்புகள் தான் தமிழ்நாட்டின் முழுமையான சரித்திரமா? தமிழ்நாட்டின் சமூக வாழ்க்கையையும், பண்பாட்டையும், இலக்கிய வளத்தையும் கலைச்செல்வத்தையும், உருவாக்கியவர்கள் குறிப்பிட்ட நூற்றுக்கணக்கான புகழ் பெற்ற மனிதர்கள்தானா என்ற கேள்விகள் தமிழர் வரலாறு பற்றி எழுந்துள்ள சில நூல்களைப் படிக்கும்போது நமக்குத் தோன்றுகின்றன.

தமிழ் நாட்டின் வரலாறு பற்றி இந்திய வரலாற்றுப் பாடப்புத்தகங்களைத் தவிர வேறு பல நூல்கள் சென்ற ஐம்பது ஆண்டுகளில் வெளியாகியுள்ளன என்பதை நான் மறக்கவில்லை. சங்க காலத்தைப் பற்றி ‘1800 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்’ என்ற ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கனகசபைப் பிள்ளையின் நூலும், சமணர்களது ஆதிக்கத்தைப் பற்றி சக்கரவர்த்தி நயினார் அவர்கள் எழுதிய நூல்களும், சோழ வம்சத்தைப் பற்றி கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் எழுதிய நூல்களும், பல்லவர் வரலாறு பற்றி பி.டி. ஸ்ரீனிவாச அய்யங்கார் எழுதிய நூல்களும், இன்னும் பலவும் தமிழாராய்ச்சியாளர்களுக்குப் பழக்கமானவையே. ஆயினும் இவையாவும் முழுமையான தமிழர் வரலாறு ஆகா. குறிப்பிட்ட சரித்திர காலங்களின் நிகழ்ச்சிகளை இவை விவரிக்கின்றன என்பது உண்மையே. ஆனால் தமிழர் சமூகம் எவ்வாறு மாறி வந்துள்ளது என்பதையும், அம்மாறுதல்களுக்கு அடிப்படையான காரணங்கள் யாவை என்பதையும், இந்நூல்கள் சுட்டிக் காட்டவில்லை.

ஆகவே முழுமையான தமிழர் வரலாறு ஒரு புதிய அடிப்படையில் எழுதப்பட வேண்டும்.

இதுவரை பொதுவாக எந்த அடிப்படையில் வரலாற்று நூல்கள் எழுதப்பட்டுள்ளன? ‘பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை மகா புருஷர்கள் தோன்றுகிறார்கள், அவர்களே நாட்டின் வரலாற்றை உருவாக்குபவர்கள்’ என்பர் ஒரு சாரார். இக்கொள்கையின்படி இரு மகா புருஷர்கள் தோன்றுவதற்கு இடைப்பட்ட பல நூற்றாண்டுகளில் வாழும் மக்கள் வாயில்லாப் பூச்சிகள் சொல்வதைச் செய்து வாழும் இயந்திரங்கள் ஆட்டி வைக்கிறபடி ஆடுகிறவர்கள். ‘சமூக மாறுதல்கள், சரித்திர மாறுதல்கள் நிகழ்வது தீடீர்ப் பிரளயம் போன்ற புரட்சிகளால்’ என்பர் மற்றோர் சாரார். இப்பிரளயங்கள் யாராலும் உருவாக்க முடியாத எரிமலைகளைப் போல பழைமையைத் தகர்த்து புதுமையை நிறுவுகின்றன என்று தங்கள் கொள்கைக்கு அவர்கள் விரிவுரை கூறுவார்கள்.

படிக்க:
வரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் !
வரலாறு : முகலாயர்கள் இந்தியர்கள் இல்லையா ?

இவை செல்லரித்துப் போன கொள்கைகள். மார்க்ஸீயவாதிகள் இக்கொள்கைகளை எதிர்த்துத் தாக்கி முறியடித்து விட்டார்கள். மகா புருஷர்கள் சமூக உணர்வின் சிருஷ்டிகள். அவ்வக்காலச் சமூக உணர்வின் சிறந்த பிரதிநிதிகள் என்ற உண்மையை அவர்கள் நிரூபித்து விட்டார்கள். இதே போல் நம் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் சூட்சுமமான கருவிகள் மூலம் அறியக் கூடிய பல மாறுதல்களின் கடைசி விளைவே பூகம்பமும், எரிமலையின் சீற்றமுமென விஞ்ஞானிகள் முடிவு கட்டியுள்ளார்கள். அதேபோல்தான் சமூக விஞ்ஞானிகளும் படிப்படியான பல சமூக மாறுதல்களின் இறுதிக் கட்டமே புரட்சிகரமான மாறுதல் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். ஆகையால் மேற்சொன்ன அடிப்படைகளில் தமிழர் வரலாறு என்ற மாளிகையைக் கட்ட முடியாது.

பின் எந்த அடிப்படையில் தமிழர் வரலாறு எழுதப்பட வேண்டும்? வாழ்க்கை நிலைமைகளில் ஏற்படும் மாறுதல்களே, சமூக மாறுதலாகப் பரிணமிக்கின்றன. வாழ்க்கை நிலைமைகள் என்றால் என்ன? மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் உணவு, உடை, உறைவிடம் முதலியன. இம்மூன்றும் இன்றி மனிதன் வாழ முடியாது. மனிதன் உலகில் தோன்றிய காலத்திலிருந்து உணவையும், உடையையும், இயற்கையினின்றும் பெற பல முறைகளில் முயன்றிருக்கிறான். அவ்வாறு மனிதன் இயற்கையோடு போராட்டம் நிகழ்த்தும் காலத்தில் இயற்கையின் இயக்க விதிகளை அறிந்து கொண்டு அதனைத் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்து கொள்ளப் பயன்படுத்துகிறான். இவற்றை உற்பத்தி சக்திகள் என்று நாம் அழைக்கிறோம். அவை வளர்ந்து கொண்டே செல்லுகின்றன. அவற்றின் வளர்ச்சியால் மனித சமூகம் மாறுகிறது. ஆகவே உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி சரித்திர மாறுதல்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு பெறுகிறது. அவற்றின் வளர்ச்சியில் ஒரு கட்டத்தில் அவற்றைத் தமக்கு உடைமையாகக் கொண்ட ஒரு வர்க்கமும், அவற்றைப் பயன்படுத்தி வேலை செய்யும் மற்றொரு வர்க்கமும் தோன்றுகின்றன. இவ்விரு வர்க்கங்களுக்கிடையே இயற்கையில் இருக்கும் முரண்பாடுகள் காரணமாகப் போராட்டம் நிகழ்கிறது. அப்போராட்டங்களின் விளைவாக சமூக மாறுதல்கள் தோன்றுகின்றன.

இவ்வடிப்படையில் தமிழரது சமூக மாறுதல்களைக் கவனிப்போம்.

தமிழர் வாழ்க்கை முதன் முதலில் மலைச் சாரல்களிலே தோன்றிற்று. அப்பொழுது அவர்கள் வேட்டையாடி உணவைப் பெற்றனர். வில், அம்பு, ஈட்டி, கவண்கற்கள் முதலியவற்றைக் கருவிகளாகப் பயன்படுத்தினர். காய், கனி, கிழங்குகளைத் தேடி அலைந்தனர். மிகச்சிறிய அளவில் புன்செய் பயிர் செய்யவும் அறிந்திருந்தனர். புல் பூண்டுகள், இலைத் தழைகளால் வேயப்பட்ட குடிசைகளில் குடியிருந்தனர். இக்கூட்டத்தார் குறவர், எயினர் எனப்படுவர். அவர் கூட்டுண்டு வாழ்ந்தனர். வேலன் என்ற தெய்வத்தைப் போற்றினர். தம்மைப் போன்ற ஒரு கடவுளை மலைநாட்டு மக்கள் கற்பனையில் உருவாக்கினர். அவர்களுடைய வாழ்க்கையை மிகப் பழமை வாய்ந்த தமிழ் நூல்கள் குறிஞ்சித் திணையில் விவரிக்கின்றன. அவர்களுடைய மண வாழ்க்கையைப் பற்றியும், பொழுது போக்குகளைப் பற்றியும், சிற்சில செய்திகளை சங்க நூல்கள் நமக்கு அறிவிக்கின்றன. புராதன தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையை மேலும் ஆராய்வது அவசியம். அதற்குத் தொல்காப்பியம், பத்துப் பாட்டு, புறநானூறு போன்ற நூல்கள் துணை செய்வன.

இதன் பின்னர் இயற்கையின் கருணையை நம்பி வாழ்ந்த கூட்டத்தார் ஆடு மாடு வளர்க்கத் தொடங்கினர். ஆடு மாடுகளுக்கு வேண்டிய தீனியையும் தங்களுக்கு வேண்டிய உணவையும் பயிர் செய்து பெற முயன்றனர். ஆட்டுத் தோலை உடையாகத் தைத்துக் கொண்டனர். செருப்புத் தைத்துக் கொண்டனர். குழல் என்னும் இன்னிசைக் கருவியைக் கண்டுபிடித்தனர். வேலை செய்த களைப்புத் தீரவும், மழை வளம் வேண்டியும், மால் என்னும் தெய்வத்தை வேண்டிக் கூத்தாடினர். மால் பசு நிலைகளைப் புரக்கும் கடவுள். இவ்வாழ்க்கையை முல்லை நில வாழ்க்கையென்று சங்க நூல்கள் கூறுகின்றன. இவர்களுக்கும் மலை நாட்டு மக்களுக்கும் சிறிதளவு பண்டமாற்று வாணிபம் நிகழ்ந்திருக்க வேண்டும். மலைநாட்டார் தேனும் தினையும் கொடுத்துத் தோலுடையும் கயிறும் பெற்றார்கள். மலைநாட்டினரும், காட்டுச் சாதியினரும், சேர்ந்து விழாக்கள் நடத்துவதுண்டு. அவற்றில் ‘சல்லிக் கட்டு’ என்று இன்று அழைக்கப்படும் ’கொல்லேறு தழுவுதல்’ என்ற விளையாட்டு நடத்தப் பெறும். பாணர், பாணியர் ஆகிய கலைஞர்களது பாட்டும் கூத்தும் நடைபெறும்.

(தொடரும்)

……………………………………………………………………………………………….. அடுத்த பாகம் »

தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பாதங்கள் சொல்லும் பாடம் !

ந்தக் கால்கள் யாருடையது ? இந்த கால்களைக் கொண்ட மனிதரை சமீபத்தில் கிளினிக்கில் சந்தித்தேன். இந்த கால்களைக் கண்ட மாத்திரத்தில் இவரது கதையை கேட்க வேண்டும் என்று தோன்றினால், இவரது கதையைப் பகிர்கிறேன்.

இதில் நமக்கும் படிப்பினைகள் உண்டு;

இந்த கால்களைக் கண்டதும்… என்ன வேலை செய்கிறீர்கள் ஐயா என்றேன் ?

முதலில் எதுவும் சொல்லாமல் மழுப்பிய அவர் பிறகு “சாக்கடை அள்ளுற வேலை பாக்குறேன் ஐயா…” என்று மிகவும் குறுகிய குரலில் கூறினார்.

நான் கூறினேன் “ஐயா.. துப்புறவுப்பணியாளர்னு சொல்லுங்க. தூய்மைக் காவலர்னு சொல்லுங்க.. சங்கடப்படாதீங்கய்யா” என்றேன்.

50 களில் உள்ள அந்த மனிதர் கடந்த முப்பது வருடங்களாக நகராட்சி துப்புறவு பணியாளராக பணிபுரிகிறார். முப்பது ஆண்டுகள் ஆகியும் நிரந்தர வேலை இல்லாமல் தற்காலிக ஒப்பந்த முறை ஊழியராகவே இருக்கிறார்.

தினமும் 200 ரூபாய்க்குள்ளாகவே வருமானம். ஞாயிறு உட்பட வேலை உண்டு. வேலைக்கு செல்லாவிட்டால் கூலி கிடையாது.

அவரது பிள்ளைகள் பற்றி விசாரித்தேன்.

பையன்கள் மூன்று பேர், பெண்கள் இருவர்..

படிக்க:
அண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா ? மாநில உரிமை பறிப்பா ? | EBook Download
♦ என்ன குற்றம் செய்தாள் இச்சிறுமி ?

அனைவருக்கும் திருமணம் நடந்து பேரன் பேத்திகள் பார்த்து விட்டார். ஆனாலும் தனது பிள்ளைகளில் யாரையும் படிக்க வைக்க முடியவில்லை என்ற கவலை அவருக்கு.

இப்போது பேரன் பேத்திகள் அரசு பள்ளியில் பயில்வதாக கூறினார்.

இதற்கு முன்… அதாவது முப்பது வருடங்களுக்கு முன் என்ன செய்தார் என்று கேட்டேன்.

தனது தாய், தந்தையை தான் நேரில் பார்த்தில்லை என்றும் தான் ஏழு வயதில் இருந்து மைசூரில் உள்ள ஒருவர் தோட்டத்தில் கொத்தடிமையாக வேலை செய்து வருவதாகவும் கூறினார்.

சிறிது காலம் கோலார் தங்க வயல்களில் வேலை என அடுத்து தப்பியோடி தமிழகம் வந்து சேர்ந்துள்ளார்.

நான் கேட்டேன்?

ஏன் உங்கள் பிள்ளைகள் படிக்கவில்லை ஐயா?

என் பிள்ளைங்க படிக்குற காலத்துல சோத்துக்கே வழியில்லய்யா.. அதுனால அவய்ங்கல சீக்கிரம் வேலைக்கு போகச்சொல்ல வேண்டியதா போச்சு..

இப்ப என் பேரன் பேத்திக காலத்துல ஓரளவு சோத்துக்கு குறையில்லாம இருக்கோம். அதுனால படிக்க போகுதுங்க. அங்கயே சோறும் போடுறாங்கள்லய்யா.. அதுவும் தான் காரணம்..

“சரிங்கய்யா.. உங்க பேரன் பேத்திகள பனிரென்டாம் வகுப்பு வரை படிக்க வைப்பீங்களா? ”

“ஏனுங்கய்யா.. அதுக்கு மேலயும் படிக்க வைப்பேன். என் பேத்தி ஒன்னு நம்ம கவர்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜ்ல மேற்படிப்பு படிக்குதுங்க”

“அருமைங்கய்யா… படிச்சா கொஞ்சம் கொஞ்சமா நம்ம கஷ்டம்லாம் போய்டும்.. தொடர்ந்து பேரன் பேத்திகள படிக்க வைங்க.. அவுங்க படிக்கற வரைக்கும் படிக்கட்டும்.. அதான் சரி”

“கண்டிப்பா படிக்க வைப்போம்யா.. எத்தன நாளைக்கு தான் இந்த வேலையே பாக்குறதுங்கய்யா…”

“…………”

நான் நினைத்துக்கொண்டேன்

படிக்க:
WHO : இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கு பத்தாண்டு ஊதியத்தை ஒதுக்க வேண்டும் !
♦ நீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி

நீட் மட்டும் இல்லாமல் இருந்தால் இவருடைய பேரன் பேத்திகளில் கூட ஒருவர் மருத்துவராகியிருக்க முடியும்…

மீண்டும் நினைத்தேன்

நீட் ஒருநாள் இல்லாமல் போனால்
இவருடைய பேத்திகள் பேரன்களில் யாரோ ஒருவர் மருத்துவர் ஆகக் கூடும்.

நீட் ஒழிந்தது என்ற நாள்
என் வாழ்வில் கொண்டாட்டத்துடன் இருக்கும்.

நீட் ஒரு சமூக நீதிக்கொல்லி

விடை தேடும் வினாக்களாய்
நம்முடன் நிற்கின்றன
நனவாகும் கனாக்கள்….

கனவுடன் 😌

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

நூல் அறிமுகம் : வேதாந்தத்தின் கலாசார அரசியல்

வேதாந்தம் இந்திய வைதீகத்தின் முதன்மையான தத்துவம். வேதாந்தம் உபநிடதங்களில் தோற்றம் பெற்றது. பிரம்மசூத்திரம், பகவத்கீதை ஆகியவற்றின் வழி அது முழு உருப்பெற்றது. இடைக்கால இந்தியாவில் சங்கரர், ராமானுஜர், மத்வர், நிம்பர்கர், பாஸ்கரர் போன்ற பல உரையாசிரியர்கள் மூலம் அது பல புதிய வடிவங்களைப் பெற்றது. அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் என்று பல போக்குகளாக அது பிரிந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வேதாந்தம் மீண்டும் இந்திய வைதீக மீட்டுருவாக்கத்தில் பங்கேற்றது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் தத்துவம் என்ற முகத்தையும் அது ஒரு கட்டத்தில் பெற்றது. இருபதாம் நூற்றாண்டில் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் போன்ற கல்வியாளர்களாலும் காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற மடாதிபதிகளாலும் புது விளக்கங்களைப் பெற்றது.

இவ்வாறாக, நீண்ட நெடிய இந்திய வரலாற்றில் வேதாந்தம் பலவகையாக தனது கலாசார அரசியலை நடத்தி வந்துள்ளது. இன்றைய இந்துத்துவச் சூழல்களில் வேதாந்தத்தின் வேர்களையும் வெவ்வேறு காலகட்டங்களில் அதன் புது உருவங்களையும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வேதாந்தத்தின் கலாசார அரசியல் எனும் இச்சிறு நூல் அந்நோக்கத்தையே முன்னிறுத்துகிறது.

இந்திய வைதீகத்தின் முதல் நூல்கள் வேதங்கள். ரிக், யஜூர், சாம, அதர்வணம் என அவை நால் வகைப்படும். இவை தத்துவ நூல்கள் அல்ல; சடங்கியல் நூல்கள். வேதகால ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்னரே இவற்றில் பலயாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆரிய நாடோடி இனக்குழுக்கள் யக்ஞங்களை மையப்படுத்தி இயற்றிய சடங்குப் பாடல்களே வேதங்கள். யக்ஞங்கள், அவற்றில் ஏற்றப்படும் நெருப்பு (அக்னி), யக்ஞங்களில் பாடப்படும் பாடல்கள் (மந்திரங்கள்), பாடல்களில் அழைக்கப்படும் வானத்து தெய்வங்களான இந்திரன், வர்ணன், வாயு, சூரியன், சந்திரன், அஸ்வினி, மாருதி போன்றோர் என்பதாக வேதங்களின் உள்கட்டமைப்பு அமைந்திருந்தது. யக்ஞம், அக்னி, மந்திரங்கள் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாக்கும் சமூகப் பிரிவினராக பிராமணர் என்ற முதல்வர்ணம் ஆரிய இனக்குழு மக்களிடையில் தோன்றியிருக்க வேண்டும்.

வேதகால ஆரியர்கள் வடமேற்கு இந்தியா வழியாக உள்ளே நுழைந்து, அங்குமிங்குமாக சில காலம் அலைந்து, இறுதியில் யமுனை நதிக்கும் மேற்கு கங்கைக்கும் இடைப்பட்ட நிலப்பகுதிகளில் குடியேறினார்கள். இறக்கை கட்டிய வெறும் வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் இல்லாத ஆரிய இனக்குழுக்கள் கங்கை – யமுனை நதிக்கரைகளில் நிலைத்த வாழ்க்கையைத் தொடங்கின.

கங்கை – யமுனைக் கரைகளில் வாழத் தொடங்கிய அக்காலத்தில்தான் ஆரியர்கள் தமது வேதப் பாடல்களுக்குப் புனிதத் தன்மையை ஏற்றத் தொடங்கினார்கள். வேதங்கள் மனிதர்களால் இயற்றப்பட்டவை அல்ல என்றும் அவை தேவ ரிஷிகளால் கேட்கப்பட்டவை’ (சுருதி) என்றும் அறிவிக்கத் தொடங்கினர். ‘அபௌருஷ்ய’ என்ற சொல்லால் வேதங்களைக் குறிக்கத் தொடங்கினார்கள். அபௌருஷ்ய எனில் “மனிதத் தன்மை அற்ற” என்ற பொருள். அதாவது, வேதங்கள் தெய்வத் தன்மை கொண்டவை என்ற அலங்காரச் சொல் வேதங்களுக்குச் சூட்டப்பட்டுள்ளது. வேதங்களுக்கு இப்படிப்பட்ட புனிதத்தன்மை ஏற்றப்பட்டது ஏன்? (நூலிலிருந்து பக்.3-4)

… பக்தி தென்னாட்டில் தோன்றியது என்று சில பிற்கால புராணங்கள் குறிப்பிடுகின்றன. பக்தி எனும் பெண் தாமிரபரணி நதிக்கரையில் தோன்றி, தனது இரு பிள்ளைகளுடன் முதலில் வடமேற்கு இந்தியாவிலும் பின்னர் வட இந்தியாவிலும் பரவிச் சென்றாள் என்று அவை குறிப்பிடுகின்றன. தென்னாடு, வங்காளம் ஆகிய இடங்களில் அதிக எச்சங்கள் காணப்படும் சைவசமயத்தின் சிவன் வைதீக மரபால் ஆரம்பத்தில் பெரிதும் புறக்கணிக்கப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது. சிவன் தோலை ஆடையாக அணிந்தவன். தோல் கருவியான உடுக்கை ஏந்தியவன், இடுகாடு சுடுகாடு ஆகியவற்றில் அலைபவன், அவன் மகாயோகி, வைத்தீஸ்வரன், பூத கணங்களின் தலைவன் என்பன போன்ற அடையாளங்கள் எல்லாம் அவனை வைதீக மரபுக்கு வெளியில் நிறுத்தி வைக்கின்றன. வேத கேள்விகளின் அவிர்பாகம் பலமுறை மறுக்கப்பட்ட தெய்வம் சிவன். பிராமணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் கொண்டவன் சிவன். பக்தி ஒரு சூத்திர மரபு எனக் கூறி ஆரம்ப காலம் தொட்டு வைதீகமரபு அதனை ஒதுக்கி வைத்தது. ஆனால், பக்தியின் வெகுசன செல்வாக்கு வேதாந்தத்திற்கு அதனைத் தவிர்க்க முடியாததாக்கியது.

பக்தியை வேதாந்தம் உள்வாங்கத் தொடங்கியதன் முதல் குறிப்புகளைப் பகவத்கீதையில் காணுகின்றோம். பக்தி வேதாந்தம் வடக்கில் பகவத்கீதையிலிருந்து தொடங்கியது எனக் கூறலாம். பகவத் கீதை பிரம்மத்தை விஷ்ணுவோடு சமப்படுத்துகிறது. விஷ்ணுவை உணர்ச்சிவசப்பட்டு பணிந்து வணங்குதல், வழிபடுதல் ஆகியவையே பக்தி என அது விளக்குகிறது. “எந்தெந்த வடிவில் இறைவனை வணங்கினாலும் எல்லா வழிபாடுகளும் இறுதியில் என்னையே வந்து சேருகின்றன” என்ற அகலமான அணுகுமுறையை விஷ்ணு பகவத்கீதையில் முன்வைக்கிறார். இது தாராளத்தன்மை கொண்டதாகக் காட்சியளிக்கும். ஆனால் ஏராளமான வட்டார வழிபாடுகளைச் செரித்து அகப்படுத்தும் ஒரு பேரிறைக் கொள்கை. அத்தோடு பகவத்கீதையின் புதிய ஏற்பாடான அவதாரக் கொள்கையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பக்தர்கள் இறைவனின் முன் தம்மை முழுவதும் இழந்து சராணாகதி அடைதல் என்ற கோட்பாடும் கீதையில் பேசப்படுகிறது. (நூலிலிருந்து பக். 33-34)

டி.டி.கோசாம்பி.

… இந்திய நில உடமை மேலிருந்தும் கீழிருந்தும் இருவகையாகக் கட்டி எழுப்பப்பட்டன என்று டி.டி.கோசாம்பியும் குறிப்பிடுவார். “மேலிருந்து” என்பதை பிராமணியத்தன்மை கொண்டிருந்த மேட்டுக்குடிக் கருத்தியல்களிலிருந்து பரவிய சாதிய அமைப்பு முறை என்று புரிந்துகொள்ள வேண்டும். பக்தி இயக்கம் வேதாந்தமயப்படுத்தப்படுவதை, வெகுசனங்களுக்குள் சாதியம் திணிக்கப்படுவதை “மேலிருந்து” உருவாக்கப்பட்ட நில உடமை எனப் புரிந்து கொள்ள வேண்டும். உழவுத் தொழிலின் பரவலால் நில உடமை தோன்றுவதையும் வட்டார மேட்டுக்குடிகள் உருவாவதையும் “கீழிருந்து” தோன்றிய நில உடமை எனக் கொள்ளல் வேண்டும். பக்தி இயக்கம் மடங்களின் தலைமையை ஏற்பதும், கோயில் பொருளாதாரத்தின் தோற்றமும் “கீழிருந்து” தோன்றிய நில உடமை முறையின் அடையாளங்களாகும். திருத்தொண்டர்களின் வைசம் இக்காலத்தில் சித்தாந்த சைவமாக நிறுவனப்படுகிறது. உழவுத்தொழில் சார்ந்த வேளாளர் வட்டங்கள் இக்காலத்தில் சைவ வேளாளராகவும் அசைவ வேளாளராகவும் இரண்டுபட்டனர். வைதீகம் முன்மொழிந்த சாதிமுறைமை இப்போது இவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. இது கீழிருந்து தோன்றிய நிலப்பிரபுத்துவம்.

படிக்க:
வரலாறு: ம.க.இ.க.வின் கிடா வெட்டும் போராட்டம்
கீழடி : ஆரிய – சமஸ்கிருத – பார்ப்பனப் புரட்டுகள் தவிடுபொடி !

வேதாந்தத்திற்கு வெகுசன வடிவம் ஏன் தேவைப்பட்டது? வேதாந்தம் என்பது ஒருவகை சமூக உறவின் கருத்தியல் வடிவம். பிராமணர்களின் சுதர்மத்தையும் பிற மக்கள் கூட்டங்களின் சுதர்மங்களையும் வரையறுத்துக் காட்டும் கருத்தியல் அது. வெவ்வேறு சமூக வர்க்கங்களுக்கிடையில் கலாசாரத் தடைகளைக்கொண்ட ஏற்பாடு அது. தமதுசுதர்மத்தைக் காத்துக்கொள்ள பிறரது சுதர்மங்களை நிர்ணயித்த ஏற்பாடு அது. வேதாந்தத்தின் வெகுசன வடிவம் வருண – சாதி அமைப்பு குறித்த வெகுசன அங்கீகாரம். வேதாந்தத்தின் வெகுசன வடிவம் சைவத்திற்கு எதிராகவும் பழங்குடிகளுக்கு எதிராகவும் வெகுசனங்களைத் திரட்டுவதற்கும் உதவுவது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து வேதாந்தத்தின் வெகுசன வடிவம் “இந்து” என்ற புதிய பேரடையாளம் ஒன்றை உருவாக்கியது. இது இந்து தேசியம் என்ற நேரடிவடிவிலும் இந்திய தேசியம் என்ற மறைமுக வடிவிலும் தொழில்பட்டிருக்கிறது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், மேற்கத்தியப் பண்பாடு, விவசாயிகள், பழங்குடிகள் ஆகியோருக்கு எதிரான வெகுசனத் திரட்சிக்கும் இது பயன்பட்டிருக்கிறது. (நூலிலிருந்து பக்.39-40)

நூல் : வேதாந்தத்தின் கலாசார அரசியல்
ஆசிரியர் : ந.முத்துமோகன்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410
மின்னஞ்சல் : info@ncbh.in

பக்கங்கள்: 40
விலை: ரூ 20.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : noolulagam

கருத்துக் கணிப்பு : சி.ஏ.ஏ-வுக்கு ரஜினி ஆதரவு சரியா தவறா ?

கருத்துக் கணிப்பு : சி.ஏ.ஏ-வுக்கு ரஜினி ஆதரவு சரியா தவறா ?

விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடக்கிறது. ரஜினிக்கோ வருமான வரி வழக்கிலிருந்து விடுதலை. கந்து வட்டிக் கடனால் சம்பாதித்ததை ஏற்றுக் கொண்ட மத்திய அரசுக்கு நன்றிக் கடனோடு வீட்டு வாசலில் போற்றி புராணம் பாடுகிறார். சிஏஏ-வை ஆதரிக்கிறார். முஸ்லீம்களுக்கு ஆபத்தில்லை என்கிறார். மாணவர்கள் பெரியவர்களிடம் விசயங்களை தெரிந்து கொண்டால் போராட மாட்டார்கள் என்கிறார்.

எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டால் வாழ்க்கை முடிந்து விடுமென்று மாணவர்களை அச்சுறுத்துகிறார். பணமதிப்பழிப்போ, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டமோ, சிஏஏ எதிர்ப்பு போராட்டமோ உடனே பாஜக சார்பில் கூப்பிடாமலேயே ஆஜராகிறார் ரஜினி. ஆன்மீக அரசியல் என்றால் அதில் காவி பஜனை இல்லாமலா போகும்?

 

இன்றைய கேள்வி :

சி.ஏ.ஏ.-வை ரஜினி ஆதரிப்பது…

♦ கண்டிக்கத்தக்கது
♦ வரவேற்கத்தக்கது

வாக்களியுங்கள் !

முகநூலில் வாக்களிக்க :

டிவிட்டரில் வாக்களிக்க :

யூ-டியூபில் வாக்களிக்க :

இங்கே அழுத்தவும்

அண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா ? மாநில உரிமை பறிப்பா ? | EBook Download

அண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா? மாநில உரிமை பறிப்பா?

ந்திய உயர்கல்வி நிறுவனங்களை குறிவைத்து மோடி அரசு கொண்டுவந்துள்ள Institute of Eminence – IoE திட்டம் குறித்தும்; குறிப்பாக தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் அண்ணா பல்கலை தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்தும் விளக்கி தொடர்ச்சியாக கருத்தரங்குகளை நடத்திவரும் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவினர் (Coordination Committee for Common Education – CCCE) சிறு நூல் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.

இத்திட்டம் மற்றும் அதன் அபாயங்கள் குறித்து அடிப்படையான புரிதலை வழங்குகிறது, இச்சிறுநூல். கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட வெகுமக்களிடம் இவை குறித்த விழிப்புணர்வு சென்றடைய வேண்டுமென்ற நோக்கில்,  CCCE அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க அந்நூலின் மொத்தப் பகுதியையும் இங்கே பதிவிடுகிறோம். படியுங்கள்! பகிருங்கள்!!

பி.டி.எஃப் கோப்பாக தரவிறக்கம் செய்ய :

அண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா? மாநில உரிமை பறிப்பா?

ண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்புக் கல்வி நிறுவனம் (Institute of Eminence – IoE) என்ற சிறப்புத் தகுதியைப் பெறுவதையொட்டி பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கு ‘கல்வியாளர்களான’ ஐந்து அமைச்சர்கள் மற்றும் மூன்று செயலாளர்களை கொண்ட ஒரு குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது . இக்குழு அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாகங்களை (CEG, ACT, SAP, MIT) மட்டும் தனியாக பிரிப்பது மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க புதிய பல்கலைக்கழகத்தை தொடங்குவது தொடர்பான பரிந்துரைகளை தமிழக அரசுக்கு வழங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்திய உயர்கல்வி நிறுவனங்களை உலகத்தர வரிசைப் பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டுமென்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு IoE என்ற திட்டத்தை 2016 ஆம் ஆண்டு மோடி அரசு அறிவித்தது. அதன்படி இந்தியாவிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில், 10 அரசு மற்றும் 10 தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் என 20 உயர்கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அவைகளை உலகத்தர வரிசைப் பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் கொண்டு செல்வதே இத்திட்டத்தின் இலக்கு. இதற்கென புதிய விதிமுறைகளை 2017 ஆம் ஆண்டு, UGC (Institutions of Eminence Deemed to be Universities) Regulations, 2017, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டது. அத்திட்டத்தின் கீழ் அண்ணா பல்கலைக்கழகமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசிடமிருந்து நிதிப்பங்களிப்பு தொடர்பான ஒப்புதல் கிடைத்த உடன் உயர் சிறப்புத் கல்வி நிறுவனம் (Institute ofEminence – IoE) என்ற சிறப்புத் தகுதி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் என மனிதவள மேம்பாட்டு

அமைச்சகம் அறிவித்தது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி வழங்கி இரண்டாகப் பிரித்தால் இடஒதுக்கீடு பாதிக்கப்படும் என்று கல்வியாளர்களும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் அச்சம் தெரிவிக்கிறனர். ஆனால், இதுகுறித்து எந்தவித கவலையும் இன்றி ஐந்து அமைச்சர்களைக் கொண்ட குழுவை அமைத்து சிறப்புத் தகுதி பெறுவதற்கான வேலைகளை முடுக்கியுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும் அண்ணா பல்கலைக்கழகம்

IoE – இல் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 உயர்கல்வி நிறுவனங்களையும் நிர்வகிப்பதற்கு Empowered Expert Committee – EEC என்ற குழுவை மோடி அரசு உருவாக்கியுள்ளது. இக்குழு loE – இல் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பல்கலைக்கழகங்களின் ஆண்டு வரவு-செலவு கணக்கை பார்வையிடுவது; ஒவ்வொரு வருடமும் இப்பல்கலைக்கழகங்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்துள்ளனவா எனச் சோதித்தறிவது; இதில் தவறுகின்ற பல்கலைக்கழகங்களுக்கு அபராதங்களை நிர்ணயிப்பது போன்ற பணிகளை செய்யும். இதில் மாநில அரசுக்கோ பல்கலைக்கழக மானியக் குழுவிற்கோ எவ்வித அதிகாரமும் கிடையாது. EEC உறுப்பினர்கள் உயர் பதவிகளுக்கான நியமனம் தொடர்பான கேபினட் கமிட்டியினால் (Appointment Committee of Cabinet – ACC) நியமிக்கப்படுவார்கள். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை உறுப்பினர்களாக கொண்ட ACC கமிட்டியானது இந்திய அரசின் உயர் பதவிகளுக்கான அதிகாரிகளை பரிந்துரைக்கும் அமைப்பாகும். உதாரணமாக ரிசர்வ் வங்கியின் கவர்னர், பாதுகாப்புக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (DRDO) தலைவர் போன்றவர்கள் இக்குழுவாலே நியமிக்கப்படுகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழகம் மோடி மற்றும் அமித்ஷா – வின் கட்டுப்பாட்டின் கீழ் செல்கிறது என்றே சொல்லலாம். EEC – இன் தற்போதைய தலைவராக RSS ஆதரவாளரான முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர்தான் சமஸ்கிருதத்தையும் வேத-புராண குப்பைகளையும் கல்லூரிகளில் கட்டாய பாடமாக வைக்க பரிந்துரைத்தவர். மேலும் இரு அமெரிக்க பேராசிரியர்கள் உறுப்பினராக உள்ளனர்.

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப கல்லூரிகளில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகம் 1978-ல் தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசினுடைய பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் நிதியுதவிகளின் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் உயர்நிலையை எட்டியுள்ளது. மேலும் தமிழ்நாட்டினுடைய சமூக – பொருளாதார வளர்ச்சியில், அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு மிக முக்கியமானதாகும். தற்போது மத்திய அரசு ‘உலகத் தரம்’ என்ற போர்வையில் அண்ணா பல்கலைக்கழகத்தை பறித்துக்கொள்ள முயற்சிக்கிறது. இது பற்றி எவ்விதக் கவலையும் கொள்ளாத அடிமை எடப்பாடி அரசோ அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு தாரைவார்ப்பதற்கான வேலைகளை மறைமுகமாக செய்து வருகிறது. அது மட்டுமல்லாமல், நீட் தேர்வு பற்றிய உண்மைகளை மறைத்ததைப் போல அண்ணா பல்கலைக்கழக விசயத்திலும் உண்மைகளை மறைத்து மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் பல்கலைக்கழகம் இருக்கும் என்று மக்களிடம் பொய் சொல்லிவருகிறது.

எங்கிருந்து 1,750 கோடியை ஒதுக்குவது?

சிறப்புத் தகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 அரசு உயர்கல்வி நிறுவனங்களில் 8 மத்திய அரசினுடையது 2 மாநில அரசினுடையது. ஒன்று அண்ணா பல்கலைக்கழகம் மற்றொன்று மேற்கு வங்காளத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகம். மாநில பல்கலைக்கழகங்களை பொறுத்தவரை பல்கலைக்கழக தர மேம்பாட்டிற்கு மாநில அரசும் நிதி பங்களிப்பு செய்ய வேண்டுமென்ற புதிய நிபந்தனையை மத்திய அரசு விதித்துள்ளது. இவ்விரு பல்கலைக்கழகங்களும் IoE – இல் சொல்லப்பட்டுள்ள இலக்கை அடைய 2000 கோடிக்கு மேல் நிதி தேவை என இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த ஆண்டு செய்தி வெளியிட்டது (ஆகஸ்டு 11, 2019). எனவே, மத்திய அரசு தருகின்ற 1000 கோடிக்கு மேல் செலவாகும் தொகையை மாநில அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். இது பெரும் நிதிச் சுமை என்பதால் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி வேண்டாம் என மேற்குவங்க அரசு அறிவித்திருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தரத்தினை மேம்படுத்த 2750 கோடி நிதி தேவை. மத்திய அரசின் நிதியுதவி போக மீதமுள்ள 1750 கோடியை தமிழக அரசுதான் வழங்க வேண்டும். அதாவது வருடத்திற்கு 300 கோடியிலிருந்து 400 கோடி ரூபாய் தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே நிதி ஒதுக்க வேண்டும்.

தமிழக உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் 98 அரசு கலைக் கல்லூரிகள் 39 உறுப்புக் கல்லூரிகள் 161 அரசு உதவி பெறும் கல்லூரிகள் என 300-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவைகளை நிர்வகிக்கும் உயர்கல்வித் துறைக்கு கடந்த ஆண்டு 4584.10 கோடியை தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியது.

இதில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளம், புதியக் கட்டிடங்கள் மற்றும் ஆய்வக செலவினங்கள் போக பல்கலைக்கழக மேம்பாட்டிற்காக வழங்கப்படும் தொகுப்பு நல்கைத் தொகையாக (Block grant) 13 பல்கலைக்கழகங்களுக்கும் சேர்த்து 538.10 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு மிகக்குறைவானதாகும். தற்போதைய நிலையில் பல்கலைக்கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளதாக தமிழக அரசே ஒப்புக்கொள்கிறது. திவாலாகும் நிலையில் உள்ள சென்னை பல்கலைக்கழகமே இதற்கு சிறந்த உதாரணம். அரசு ஒதுக்குகின்ற நிதிப் போதாமையால் மாணவர்களிடமிருந்து அதிக கல்விக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் வசூலிப்பதன் மூலமே பல்கலைக்கழகங்கள் தங்களின் செலவை ஈடுகட்டுகின்றன.

மேலும் கடந்த நான்கு வருடங்களாக தமிழக அரசு அறிவித்த புதிய அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் புதிய பாடப்பிரிவுகளுக்கான கட்டிடங்கள், ஆய்வகங்கள் மற்றும் பேராசிரியர்கள் நியமனங்கள் போன்ற அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மட்டும் சிறப்புத் தகுதி என்ற பெயரில் 1750 கோடிக்கு மேல் நிதி வழங்க தமிழக அரசு ஆர்வம் காட்டிவருகிறது. இதற்கான நிதி எவ்வாறு திரட்ட முடியும்? மற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியைக் குறைப்பதன் மூலமும் மாணவர்களின் கட்டணங்களை அதிகரிப்பதன் மூலமுமே இந்த நிதியை திரட்டப் போகிறார்கள் என்பதே உண்மை .

நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை

IoE தகுதி பெற்ற பல்கலைக்கழகங்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு மாணவர் எண்ணிக்கையில் 30% வெளிநாட்டு மாணவர்களை அனுமதித்துக் கொள்ளலாம். பேராசிரியர் நியமனங்களில் 25% வரை வெளிநாட்டு பேராசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம்; மாணவர் சேர்க்கை முற்றிலும் திறமை அடிப்படையிலேயே (merit based system) இருக்க வேண்டும் அதற்கான முறையை பல்கலைக்கழகமே தீர்மானித்துக் கொள்ளலாம் என விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

IoE இன் நோக்கமே இருபது பல்கலைக்கழகங்களும் உலகத் தர வரிசைப்பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் வரவேண்டும் என்பதுதான். எனவே தமிழகம் மட்டுமில்லாது பிற மாநிலங்களிலிருந்தும் நாடுகளிலிருந்தும் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் அனுமதித்தாக வேண்டும். ஆனால் தமிழகத்தில் 69% இடதுக்கீடு உள்ளது. மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையும் நடைபெறுகிறது. இந்நிலையில் மற்ற மாநிலத்தவர்களையும் அனுமதித்தால் எதனடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துவார்கள்? நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதே மத்திய அரசு கடைபிடித்துவரும் நடைமுறை. எனவே அண்ணா பல்கலைக்கழகத்திலும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.களில் உள்ளது போல இந்திய அளவிலான நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். மேலும் நீட் தேர்வை போல பொறியியல் படிப்புகளுக்கும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என மோடி அரசு கூறிவருவதை பொருத்திப் பார்த்தால் இந்த அபாயம் புரியும்.

தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. படிக்கின்ற மாணவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கிராமப்புற, சமுதாய பொருளாதார நிலைகளில் பின்தங்கிய மற்றும் விவசாய குடும்ப சூழலில் இருந்து வந்தவர்கள். நீட் தேர்வைப் போல நுழைவுத்தேர்வு முறை அமல்படுத்தப்பட்டால் பயிற்சி வகுப்புகளுக்கு பல இலட்சங்களை கட்டி படிக்கக்கூடிய வசதி உல்ளவர்கள் மட்டுமே வருங்காலங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க முடியும். இந்த “சிறப்புத் தகுதி” வாயிலாக ஏழை, கிராமப்புற மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். திறமை என்ற போர்வையில் ஐ.ஐ.டி.களைப் போல பணம் உள்ளவர்களுக்கே அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வி என்ற நிலை உருவாகும். மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு எவ்விதமான அநீதியை தமிழக மாணவர்களுக்கு செய்ததோ அதுபோன்றதொரு அநீதியை தற்போது ‘சிறப்புத் தகுதி’ என்ற பெயரில் பொறியியல் படிப்பிற்கும் மோடி – எடப்பாடி அரசுகள் செய்ய முயல்கிறது.

69% இடஒதுக்கீட்டுக்கு வேட்டு

மாணவர் சேர்க்கை மற்றும் ஆசிரியர் பணிநியமனங்களில் 69% இடஒதுக்கீடு தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. இது மற்ற மாநிலங்களிலுள்ள இடஒதுக்கீட்டு அளவை விட அதிகமாகும். மேலும் உள் இடஓதுக்கீடும் தமிழகத்தில் உள்ளது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலோ 49.5% இடஒதுக்கீடு மட்டுமே நடைமுறையில் உள்ளது. சிறப்புத் தகுதியின் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செல்வதாலும் பிற மாநில மாணவர்களை அனுமதிப்பது கட்டயம் என்பதாலும் முழுமையாக 69% இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது. மொத்த மாணவர் எண்ணிக்கையில் ஒரு சிறு பகுதியை தமிழகத்திற்கு ஒதுக்குவார்கள். அல்லது மொத்தமாக மத்திய அரசினுடைய 49.5% இடஒதுக்கீட்டையே நடைமுறைப்படுத்துவது என்ற வகையில் இடஒதுக்கீடு இருக்கும்.

பேராசிரியர் பணிநியமனத்தில் 69% இடஒதுக்கீட்டை பின்பற்றுவதற்கும் வாய்ப்புகள் குறைவாகும். கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு தொடர்பாக சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்தது. (THE CENTRAL EDUCATIONAL INSTITUTIONS (RESERVATION IN TEACHERS’ CADRE) ACT, 2019). அதன்படி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் அல்லது Potential for Excellence மற்றும் சிறப்புத் தகுதி வழங்கப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொண்டுவந்த இடஒதுக்கீடு திருத்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி நிறுவனங்கள் தங்களின் இலக்கை அடைய ‘திறமை’ அடிப்படையில் பணிநியமனம் செய்துக் கொள்ளலாம். அதனால்தான் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது இன்றுவரை சவாலாக உள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்திற்கு IoE என்ற சிறப்புத் தகுதி வழங்கப்படுவதினால், உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுக்குள் வருவதற்கு ‘திறமை’ அடிப்படையில் பேராசிரியர்களை நியமிப்பது கட்டாயமாக்கப்படும். ஆகவே பேராசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறை நீக்கப்பட்டு ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.களைப் போல ‘திறமை’ என்ற போர்வையில் பார்ப்பனர்களோ, வெளிநாட்டு வாழ் இந்தியர்களோ (NRI) அல்லது தொழிற்சாலையில் அனுபவம் பெற்றவர்களோதான் பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். உண்மை இப்படி இருக்க தமிழக உயர்கல்வித்துறை செயலாளரோ 69% இடஒதுக்கீட்டுக்கு சிக்கல் வராது என மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக சொல்லி நயவஞ்சக நாடகமாடுகிறார்.

பல மடங்கு உயரும் கல்விக் கட்டணம் சிறப்புத் உயர்நிலை பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அக்கல்வி நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் அதில் அரசு தலையிடாது என விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை மாநில அரசே தீர்மானிக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கு ஆண்டு கல்விக் கட்டணம் 29,000 ரூபாயாகவும், முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான ஆண்டு கல்விக் கட்டணம் 50,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி வழங்கப்படுவதினால் கல்விக் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்படும். இக்கல்லூரிகளுக்கு முழுமையான நிதி தன்னாட்சி (Financial autonomy) வழங்கப்படுவதினால் அக்கல்வி நிறுவனங்களே தங்களுக்கு தேவையான நிதியை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஒருமுறை வழங்கக்கூடிய நிதியை தாண்டி மத்திய மாநில அரசுகள் நிதி உதவி செய்யாது. இதுவே நிதி தன்னாட்சிக்கான அடிப்படையாகும். சிறப்பு உயர்நிலை பெறும் பல்கலைக்கழகங்களுக்கு மத்திய மாநில அரசுகளால் வழங்கப்படும் நிதியைக் கொண்டு புதிய கட்டிடங்கள் மற்றும் ஆய்வகங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பேராசிரியர்களுக்கான சம்பளம், பேராசிரியர்களுக்கான ஊக்கத்தொகை, பல்கலைக்கழக பராமரிப்புச் செலவுகள் மற்றும் கடனை செலுத்துவது (HEFA loan) ஆகியவற்றுக்கான நிதியை மாணவர்களின் கல்விக்கட்டணம் மற்றும் ஆராய்ச்சிலிருந்து பெறப்படும் வருமானம் ஆகியவற்றிலிருந்து திரட்டிக்கொள்ள வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு.

இதனை தேசிய முக்கியத்துவம் கொண்ட கல்லூரிகளான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எம்.- களில் அமல்படுத்தி வருகின்றன. உதாரணமாக கடந்த பத்து வருடங்களில் ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி.களில் B.Tech படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் 25,000 லிருந்து 2 இலட்சமாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் M.Tech படிப்பிற்கான கல்விக்கட்டணம் 20,000 இலிருந்து 2 இலட்சமாக IT Council உயர்த்தியது. கடந்த ஆண்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட 2019-2024 ஆண்டிற்கான செயல்திட்ட அறிக்கையில் B.Tech கல்விக்கட்டணத்தை 4 இலட்சமாக உயர்த்த பரிந்துரைத்துள்ளது.சிறப்புத் தகுதி பெற்ற கல்லூரிகளுக்கு நிதி தன்னாட்சி கட்டாயம் என்பதால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் கல்விக்கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகும். தற்போது 30000 ரூபாயாக உள்ளகல்விக்கட்டணம் சில வருடங்களுக்குள் 3 இலட்சமாக உயரும் அபாயம் உள்ளது.

யார் நலனுக்காக ‘சிறப்புத் தகுதி’?

சிறப்புத் தகுதியின் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் உலகத்தரத்திற்கு மேம்படுத்தப்படுவதினால் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகம் பயனடைவார்கள் என்று ஆட்சியாளர்கள் வாதாடுகின்றனர். இந்த வார்த்தைகளுக்கு சிலர் பலியாகின்றார்கள்.

ஆனால் பொது நுழைவுதேர்வு, 69% இடஒதுக்கீடு நீக்கப்படுவது, அதீத கல்விக்கட்டணம், மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுவது போன்ற பேராபத்துகள் எந்த வகையில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நன்மை செய்யும். அரசு சொல்வதைக் கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கின்றனர். தரமான இலவச உயர் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இங்கே ‘தரம்’ என்ற போர்வையில் கிராமப்புற, சமுதாய – பொருளாதார நிலைகளில் பிந்தங்கிய சூழலில் இருந்து வரக்கூடிய மாணவர்களை பொறியியல் கல்வியில் இருந்தே வெளியேற்றுக்கின்ற சதித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. உலகத் தரம் என்ற போர்வையில் யாருடைய நலனுக்காக இது கொண்டு வரப்படுகிறது?

கடந்த பத்து வருட காலமாகவே இந்திய பல்கலைக் கழகங்களை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவது என்ற பெயரில் பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக மோடி ஆட்சியில் அந்நடவடிக்கைகள் எல்லாம் (GAIN, IDE, NIRF, SWAYAM, Study in India, SPARC, PMRF, IMPRINT) செயல் வடிவம் பெற்றுவருகின்றன. அதில் ஒன்றுதான் சிறப்புத் தகுதி எனும் IOE  திட்டமும். இந்திய பல்கலைக்கழகங்களை வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கக் கூடிய சந்தையாக மாற்றுவதும் அதன் மூலம் கொள்ளை இலாபமீட்டுவதுமே இவர்களின் நோக்கம்.

உலக தரவரிசைப் பட்டியலில் முதல் 100 பல்கலைக் கழகங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ளன. இப்பல்கலைக்கழகங்களில் இலட்சக்கனக்கான வெளிநாட்டு மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். இம்மாணவர்களின் மூலம் பல்லாயிரம் கோடிகளை அப்பல்கலைக்கழகங்கள் வருவாயாக ஈட்டுகின்றனர். உதாரணமாக அமெரிக்காவில் மட்டும் 10 இலட்சம் வெளிநாட்டு மாணவர்கள் உயர்கல்வி படிக்கின்றனர். இதன் மூலம் 44.7 பில்லியன் டாலர் (3.19 லட்சம் கோடி) வருவாய் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு கிடைக்கிறது (பிஸினெஸ் டுடே, நவம்பர் 18, 2019). இதில் 2 இலட்சம் இந்திய மாணவர்களும் அடக்கம். கல்விக்கட்டணங்கள் மற்றும் இதர செலவுகள் மூலம் இந்திய மாணவர்கள் மட்டும் ஒவ்வொரு வருடமும் 30 ஆயிரம் கோடிக்கு மேல் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கின்றனர்.

இவ்வருவாயின் பெரும் பகுதி அமெரிக்காவிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரி முதலாளிகளின் பைகளுக்கே செல்கின்றன. தரமான உயர்கல்வி என்ற போர்வையிலேயே அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் பின்தங்கிய நாடுகளிலிருந்து மாணவர்களை ஈர்ப்பதன் மூலம் கொள்ளை இலாபம் ஈட்டுகின்றன. இதற்காகவே பல்கலைக்கழகங்களுக்கான தரப்பட்டியலும் தயாரிக்கப்படுகிறது. இப்பல்கலைக்கழக உலக தரவரிசையை தனியார் தரமதிப்பீட்டு நிறுவனங்களே (TIMES Ranking, QS Ranking) நிர்ணயிக்கின்றன. இந்நிறுவனங்கள் நிதிமூலதனங்களோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவை. உதாரணமாக TIMES நிறுவனமானது அமெரிக்காவிலுள்ள TPG Capital என்ற தனியார் முதலீட்டு (private equity) நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். பல்கலைக்கழகத்தின் தரத்தினை நிர்ணயிப்பதற்காக இந்நிறுவனங்கள் வகுத்துள்ள அளவுகோல்கள் பெரும்பாலும் ஆராய்ச்சிக் கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், ஆராய்ச்சி கட்டுரை வெளியிடும் பதிப்பகத்தார், பன்னாட்டு கல்வி முதலாளிகள், தனியார் முதலீட்டு நிறுவனங்கள் ஆகியோரின் நலன்களில் இருந்தே வகுக்கப்படுகிறது.

இந்தியாவிலும் உயர்கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து அவற்றை உலகத்தர வரிசை பட்டியலில் முதல் 200 இடங்களுக்குள் கொண்டு வருவதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் சார்க் நாடுகளிலிருந்து மாணவர்களை இந்தியாவில் உயர்கல்வி படிக்க ஈர்ப்பதன் வாயிலாக அதிக லாபம் ஈட்டமுடியும் என்ற நோக்கத்திலிருந்தே பல்கலைக்கழக சிறப்புத் தகுதி (IoE) திட்டம் முன்வைக்கப்படுகிறது. இதற்காக Study in India என்ற திட்டத்தின் மூலம் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் படிக்க வரும் 1000 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க 300 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் நம்முடைய மாணவர்களுக்கான (தாழ்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் மற்றும் சிறுபான்மை மாணவர்களின் ஆராய்ச்சி படிப்புகளுக்காக வழங்கப்படும் தொகை) கல்வி உதவித்தொகையை படிப்படியாக குறைத்து வருகிறது மோடி அரசு. பார்ப்பனியத்தால் பல நூற்றாண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு வந்துள்ள இந்திய சமூகத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய முதலாளிகளின் இலாப வெறிக்காக அந்நாடுகளில் அமல்படுத்தப்படும் திட்டத்தை இந்தியாவிலும் நடைமுறைப்படுத்துவது எவ்விதத்தில் சரி?

படிக்க:
கல்வி உரிமையை பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம் !
தரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் நவீன வடிவங்கள் !

IoE திட்டத்தில் தேர்ந்தெடுப்பட்டுள்ள 10 தனியார் பல்கலைக்கழகங்களில் 5 பல்கலைக்கழகங்கள் அம்பானி, மிட்டல் உள்ளிட்ட பெரு முதலாளிகளுக்கு சொந்தமானது. கடந்த 15 வருடங்களுக்குள்ளாக ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகங்கள் நூற்றாண்டைக் கண்ட பல அரசு பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளை விட சிறந்தவைகளாக மோடி அரசால் அறிவிக்கப்படுகின்றன. அதன் உச்சமாக கட்டிடமே கட்டப்படாத அம்பானியின் ஜியோ பல்கலைக்கழகத்திற்கும் மிட்டலின் பாரதி பல்கலைக்கழகத்திற்கும் மத்திய அரசு உயர் சிறப்புத் தகுதியை கொடுத்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 அரசு பல்கலைக்கழங்களைத் தவிர உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஜாமியா மில்லியா, டில்லியில் உள்ள அலிகார், தமிழகத்தில் உள்ள பாரதியார், சென்னை பல்கலைக்கழகம், ஆந்திரா பல்கலைக்கழகம் மற்றும் ஐந்து ஐ.ஐ.டி.கள், இரண்டு என்.ஐ.டி.கள் உட்பட 48 அரசு உயர்கல்வி நிறுவனங்களை IOE திட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முன்பே குறிப்பிட்டது போல இப்பல்கலைக்கழகங்கள் அரசின்கட்டுப்பாட்டின்கீழ் வராது, ஏறத்தாழ தனியார் பல்கலைக்கழங்களை போலவே செயல்படும். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி இவர்கள் தங்களுக்கான நிதியை உயர்கல்வி நிதி ஆணையத்திடமிருந்து (HEFA) கடனாகவோ அல்லது கார்ப்பரேட்டுகளிடமிருந்து நன்கொடையாகவோ (Philontharphy) பெற்றுக்கொள்ளவேண்டும். IoE, உயர்கல்வியை சர்வதேசியமாக்கல் (Internationalization of Higher Education) என்ற திட்டங்களின் மூலம் இந்திய முதலாளிகள் பெரும் கொள்ளையடிப்பதை உத்திரவாதப்படுத்துவதோடு முன்னணியான அரசு பல்கலைக்கழகங்களையும் கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்ப்பதற்கான வேலையையும் மோடி அரசு செய்துள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கான சிறப்புத்தகுதி எனும் IOE திட்டம், உயர் கல்வியை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியாகும். தரமான மற்றும் இலவச உயர் கல்வியை அனைவருக்கும் வழங்க வேண்டியது அரசின் கடமை. அதற்கு கோத்தாரி குழு பரிந்துரைத்ததை போல GDP-இல் 6% கல்விக்காக மத்திய அரசு ஒதுக்க வேண்டும். ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக 3% க்கும் குறைவாகவே மத்திய மாநில அரசுகள் ஒதுக்கியுள்ளன. மேலும் மோடி ஆட்சியில் உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு படிபடியாக குறைக்கப்பட்டும் வருகிறது. உலகவங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் வழிகாட்டுதல்படி கடந்த முப்பது ஆண்டுகளாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட வரும் தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கையின் விளைவாக 70 சதவிகித உயர்கல்வி நிறுவனங்கள் தனியாரிடம் உள்ளன. எஞ்சியுள்ள அரசுப் பல்கலைக்கழகங்களையும் உலகத்தரம் என்ற போர்வையில், கார்பரேட்டுகளிடம் தாரை வார்ப்பதற்கான ஒரு முயற்சியாக IOE திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

69% இடஒதுக்கீடு, கல்வி உதவித்தொகைகள் போன்ற சமூகநீதி கொள்கைகளினால் பின்தங்கிய சமூக-பொருளாதார நிலைமைகளில் இருந்து வந்த லட்சக்கனக்கான மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல அரசு பல்கலைக் கழகங்களின் மூலம் உயர்கல்வி பெற்றுள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் உயர்கல்வி பெற்றவர்கள் (Gross Enrollment Ratio-49%) உள்ளனர். ஆனால் தற்போது உயர் சிறப்புத் கல்வி நிறுவனம் என்ற பெயரில் அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்வதும் அதை மறைமுகமாக தனியார்மயப்படுத்துவம் அரங்கேற்றப்படுகிறது. மோடி மற்றும் எடப்பாடி அரசுகளின் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை முறியடிக்க மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து போராடுவது மிக  அவசியமாகும்.

நன்றி :
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – சென்னை,
Coordination Committee for Common Education – CCCE, Chennai,
தொடர்புக்கு : 94892 35387, 7299361319.

என்ன குற்றம் செய்தாள் இச்சிறுமி ?

டந்த 4 நாட்களாய் இந்த செய்தி என்னை அலைக்கழித்துக் கொண்டே இருக்கிறது. தொடர் செய்திகளை படிக்கையில் கண்களில் நீர் முட்டுகிறது. இதெல்லாம் உண்மையில் நடக்கிறதா அல்லது நாம்தான் வேறு ஏதேனும் ஒரு உலகத்தில் இருக்கிறோமா என்பது தெரியவில்லை. இவையே மனசை பிசைகிறது என்றால் இன்னும் இன்னும் பாக்கி இருக்கோ என எண்ணுகையில்….

என் பெரிய குழந்தை வயது(11) இருக்கும் அந்த பெண் குழந்தைக்கு, காவல்துறையின் விசாரணை வளையத்தில் அந்தப் பெண்ணும் அவள் தோழிகளும் அவள் பள்ளியும். ஆமாம், பள்ளிக்கு வந்து அவள் வயதை ஒத்த குழந்தைகளை அதாவது 4, 5 & 6-ம் வகுப்புகளில் படிக்கிற குழந்தைகளை, பள்ளிக்கு வந்து சுமார் 45 நிமிடம் – 3 மணி நேரம் என குறுக்கு விசாரணை தொடர்ந்து நான்காவது நாளாய்.

இவ்வளவிற்கும் அந்தக் குழுந்தைகளின் ஆசிரியர்களோ அல்லது பள்ளி நிர்வாகமோ இக்குழந்தைகளுடன் இல்லாமல் ஒரு “மேக் ஷிப்ட் விசாரணை ரூமில்” விசாரிக்கப்படுகிறார்கள். பள்ளியில் ஒரு “தற்காலிக விசாரணை ரூம்” என்பது ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் இருந்ததா என நண்பர்கள் தெரியப்படுத்தவும். அக்குழந்தைக்கு தந்தை இல்லை. விவசாயம் நொடித்துப் போக கணவர் இறக்க வேறு வழியின்றி நிலத்தை குத்தகைக்கு விட்டு அக்குழந்தையின் கல்விக்காக அரசு உதவிப் பெறும் இந்த சிறுபான்மைப் பள்ளியில் ஏகப்பட்ட கனவுகளை நெஞ்சில் சுமந்து சேர்த்த அந்த எழுத்தறிவற்ற தாய் இப்பொழுது ஜெயிலில். அவருடன் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையும். பெயில் கிடைக்கவில்லை ஏனென்றால் ‘ஜட்ஜ் அய்யா’ விடுப்பில் இருக்கிறார்.

“அம்மா எங்கு இருக்கிறார்” எனவும், இரவிலும் எழுந்து “நான் செய்தது தப்புதான், எனக்கு எதுவும் வேண்டாம் என் அம்மா மட்டும் போதும்” என அரற்றியவாறு கொடும் நாட்களை உற்றார் தூரத்தில் இருப்பதால் வீடு வாடகைக்கு கொடுத்த அந்த பெரிய மனதுக்காரரின் வீட்டில் இருக்கும் அந்தப் பெண்ணின் அழுகுரலுக்கு இந்த நாகரிக சமூகத்தில் எங்கே இருக்கிறது பதில்?

படிக்க:
10 வயதுக் குழந்தைகளை தொடர்ந்து மிரட்டும் கர்நாடக காவிப் போலீசு !
♦ பேயாக மாறி போலீசுக்கே போக்கு காட்டிய அக்காக்கிய் !

செய்த குற்றம்தான் என்ன? அக்குழந்தைகள் அப்பள்ளியில் ஒரு நாடகத்தை நடத்தினர். அந்த நாடகத்தில் அக்குழந்தை பேசிய வசனமே இந்நிலையை குழந்தைக்கு தருவித்து இருக்கிறது. அந்த வசனம், “ஆவணங்கள் எங்கே என கேட்பவரிடம், செருப்பை காட்டுவோம்” என்பதுதான். இப்போது புரிந்திருக்குமே உங்களுக்கு.

இது தேசவிரோத செயல் என “சமூக செயற்பாட்டாளர்” ஒருவர் காவல்துறையில் முறையிட கர்நாடக மாநிலம் பிடார் மாவட்ட காவல்துறை நிர்வாகம் விரைந்து செயல்பட்டு உள்ளது. ஆம், விரைந்து உடனே பள்ளிக்கு சென்று அக்குழந்தையை விசாரணை செய்ய, ஆம் நான்தான் சொன்னேன், என் அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் என அக்குழந்தை சொல்ல, பின் நடந்தது எல்லாம் தான் நீங்கள் முன்பு படித்தது.

இதில் சோகம் என்னவென்றால், “ஏன் தப்பா” என அக்குழந்தை கேட்க, “இல்லையா..?” என போலீஸ் வினவ, “அப்படியென்றால் சாரி” என அக்குழந்தை சொல்லியும், “நீங்கள் பெரும் குற்றம் இழைத்திருக்கிறீர்கள், தேசத்தின் தலைமை சேவகரை அவமானப்படுத்தி இருக்கிறீர்கள்…”

CAA, NPR, NRC என்பவைக்கு எதிராக பேசி தேசத்துரோக செயலில் ஈடுபட்ட அக்குழந்தையின் தாயையும், அப்பள்ளியின் தலைமை ஆசிரியையும் ஜெயிலில் அடைத்து, தேசத்திற்கு நன்மை செய்திருக்கிறது காவல்துறை. இதுவரை சமூக வலைத்தளங்களில் அக்குழந்தை பலமுறை “ஐயாம் சாரி, ஐயாம் சாரி” என அரற்றியிருக்கிறது. இன்னும் அந்த தாயும், தலைமை ஆசிரியையும் ஜெயிலில்.

“சாதாரண பாஷை புரிய வில்லை என்றால், துப்பாக்கி பாஷையில் பேசலாம்” என தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு மாநிலத்தின் முதல்வர் ஆன யோகி ஆதித்யநாத் பேசுகிறார். நாட்டின் மத்திய மந்திரி ஒருவர் தேசவிரோதிகளை என்ன செய்யலாம், என கேட்டு “துப்பாக்கி கொண்டு கொல்லலாம்” என பதில் வர புளங்காகிதம் அடைகிறார். அவரது இக்குரலுக்கு பின் அமைதியாய் போராடி வரும் ஷாஹின் பாத் இஸ்லாமியப் பெண்கள் பகுதியில் ஜாமியா பல்கலைக்கு அருகே மூன்று முறை துப்பாக்கி சூடு நடத்தபட்டிருக்கிறது, சில நபர்களால். “டுக்டே கேங்” கூட்டத்திற்கு பாடம் புகட்டுவோம் என நாட்டின் உள்துறை அமைச்சர் சொல்ல, அன்று மாலை ஜே.என்.யூ பல்கலையில் ஆயுதம் தாங்கிய கும்பல் தாக்குதல் நடத்தி மாணவர் ஆசிரியர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது.

துர்காவாஹினி என்ற பெயரில் சென்ற ஆண்டும் அதற்கு முன்னரும் துர்கா பூஜையின் போது கையில் வாளுடன் பெண் குழந்தைகள் ஏராளமானோர் ஊர்வலம் சென்றனர். ஆனால், யோகி ஆதித்யநாத் தொடங்கி எவரும் கைது ஏன் வழக்கு கூட போடப்படவில்லை. அவர்கள் அனைவரும் தங்களது வெறுப்பு பேச்சுக்களை தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர்.

படிக்க:
ஜாமியா பல்கலை மாணவர்கள் மீது இந்துத்துவக் கிரிமினல் துப்பாக்கிச் சூடு ! ஒரு மாணவர் படுகாயம் !
♦ CAA –க்கு எதிராக மலெர்கொட்லா வீதிகளில் திரண்ட 20,000 பஞ்சாப் உழவர்களும் பெண்களும் !

இது ஏதோ அந்தக் காலம் இல்லை, அம்மாநிலம் இல்லை அம்மாவட்ட செய்தித்தாள் பதிப்பில் ஒரு பெட்டி செய்தியாய் வந்து எவர் கண்ணிலும் படாமல் போக. நான்கு நாட்களாய் டிவிட்டரில் வலம் வந்து, தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகள் செய்திகளாக்கி, இதோ நேற்று என்.டி.டிவியில் பிரைம் டைம் செய்தியாகவும், தனது வலைத்தளத்தின் முகப்பு செய்தியாகவும் இட்டு இருக்கிறது. சமூக வலைத்தள காலத்தில் செய்திகள் வெகு விரைவாக திரும்ப திரும்ப கவனம் பெறும் வேளையில் பிடார் பள்ளி அந்த பெண் குழந்தை செய்ததாக சொல்லும் தவறை அவள் மன்னிப்பு கோரிவிட்டாளே என்றாவது இரங்கி மன்னித்து விடும் அரசு இன்று இருக்கிறதா என்ன? நீதிமன்றங்கள் இருக்கிறதா என்ன?

காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம், நோக்கும் இடத்தில் எல்லாம் நாமன்றி வேறில்லை என அன்றே இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தேச விரோத செயல் புரிந்திட்ட பாரதியின் வரிகளில் தான் மீண்டும் நாம் தஞ்சம் அடைய வேண்டி இருக்கிறது, “பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்…”

நன்றி : முகநூலில் Ram Gopal

disclaimer

இந்தியாவின் செய்தித்தாள் துறை செத்துக் கொண்டிருக்கிறதா ?

0

ந்தியாவின் நான்காவது தூண் உடனடி ஆபத்தில் உள்ளது. நாடு முழுவதும் பல செய்தித்தாள்கள் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றன. சுருங்கிவரும் வாசகர்கள், விளம்பர வருவாய், உயரும் செலவுகள், நம்பகத்தன்மை குறைதல் மற்றும் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களின் தாக்குதல் ஆகியவை அவர்களின் நிதி ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்திய வாசகர் கணக்கெடுப்பு சமீபத்தில் வெளிப்படுத்திய தகவல்கள், அவர்களின் எதிர்காலம் மிகவும் இருண்டதாக இருப்பதைக் காட்டுகிறது.

இதைக் கவனியுங்கள். நாட்டின் மிகப் பரவலாக விற்பனையாகும் செய்தித்தாள், டைனிக் ஜக்ரான், 2019 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சராசரியாக 1.75 கோடி வாசகர்களைக் கொண்டிருந்தது. இரண்டாவது காலாண்டில் இருந்து 3.6 சதவீதம் குறைந்தது, முதல் காலாண்டில் 13.6 சதவீதம் குறைந்தது. சராசரி வெளியீட்டு வாசகர்களின் எண்ணிக்கை முந்தைய நாள் செய்தித்தாளைப் படித்த வாசகர்களின் எண்ணிக்கையாகும், மொத்த வாசகர்களின் எண்ணிக்கை முந்தைய 30 நாட்களில் ஒரு முறையாவது செய்தித்தாள் படித்தவர்களின் எண்ணிக்கையாகும்.

இது மற்ற செய்தித்தாள்களிலும் இதே போன்ற நிலைமைதான் உள்ளது. ஐ.ஆர்.எஸ். தரவுகளின்படி, இந்துஸ்தானின் சராசரி வெளியீட்டு வாசகர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் 21 சதவீதம் சரிந்து 1.46 கோடியாக இருந்தது, அதே காலகட்டத்தில் அமர் உஜாலா 4.8 சதவீதம் குறைந்துது, மலையாள மனோரமா எட்டு சதவீதமும், ராஜஸ்தான் பத்ரிகா 10 சதவீதமும், ஈனாடு 21 சதவீதமும் குறைந்துள்ளது.

வாசகர்களின் எண்ணிக்கையில் சரிவு இருந்தபோதிலும், டைனிக் ஜாக்ரான் தினசரி இந்தியாவின் மிகவும் பரவலாகப் படிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மலையாள மனோரமா பிராந்திய தினசரிகளில் மிகவும் பரவலாகப் படிக்கப்படுகிறது, சராசரியாக 89.81 லட்சம் வாசகர்களைக் கொண்டுள்ளது.

நாட்டில் நான்கு செய்தித்தாள்கள் – டைனிக் பாஸ்கர், தினத்தந்தி, டைம்ஸ் ஆஃப் இந்தியா, லோக்மத் – மூன்றாம் காலாண்டில் அவர்களின் வாசகர்களின் எண்ணிக்கை ஓரளவு வளர்ச்சியைக் கண்டுள்ளன.. அதன் வாசகர்களின் எண்ணிக்கையில் 0.55% அதிகரித்து – மொத்தம் 58.21 லட்சம் பேர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரி மிகவும் பரவலாகப் படிக்கப்படும் ஆங்கில தினசரியாக உள்ளது.

மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தாவின் பெரிய மூன்று சந்தைகளில், ஒவ்வொரு முன்னணி ஆங்கில நாளிதழும் அதன் வாசகர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் கண்டுள்ளன. டைம்ஸ் ஆஃப் இந்தியா மும்பை சந்தையை 12.92 லட்சம் வாசகர்களுடன் தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது. இது இரண்டாவது காலாண்டில் 13.17 லட்சமாக இருந்தது. அதன் நெருங்கிய போட்டியாளர் இந்துஸ்தான் டைம்ஸ், அதன் சராசரி வாசகர்களின் எண்ணிக்கை இரண்டாவது காலாண்டில் சுமார் 8.69 லட்சத்திலிருந்து மூன்றாவது காலாண்டில் 8.59 லட்சமாகக் குறைந்தது.

படிக்க :
தினமலர் | திருமணம் – பொது வாழ்க்கை | கொரோனா வைரஸ் | அர்ஜுன் ரெட்டி | சாதி மறுப்பு | கேள்வி – பதில் !
♦ இந்தியாவில் புற்றுநோயின் தாக்கம் : அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட் !

டெல்லியில், டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் தலா மூன்று சதவீத வாசகர்களின் எண்ணிக்கையை முறையே 10.76 லட்சம் மற்றும் 9.28 லட்சமாகக் குறைத்துள்ளன. இருப்பினும், மும்பையைப் போலவே, அவர்கள் ஆங்கில சந்தையில் முதலிடத்தில் உள்ளனர்.

எனவே, இந்தியாவின் செய்தித்தாள் துறையில் இரங்கற்பா எழுதுவதற்கான நேரம் இதுதானா? ஊடக கருத்தாளராகவும் தொழில்முனைவோராகவும் மாறிய செய்தித்தாள் ஆசிரியர் பிரதியுமான் மகேஸ்வரி, இது மிக ஆரம்பம் என நம்புகிறார்.
“ஆனால் தற்போதுள்ள அச்சு துறையில் இருப்பவர்கள் செய்தி தளத்தில் நிலைத்திருக்க 360 கோணத்தில் பிரச்சினைகளை சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். முதலில் இது ஒரு வலுவான டிஜிட்டல் நிறுவனமாக, நிகழ்வுகள் மற்றும் ஈடுபாடுகளைச் செய்தல் மற்றும் தொலைக்காட்சிகளில், வானொலிகளில் உள்ளடக்க இணைப்புகள் மற்றும் செய்தி அடிப்படையிலான நிகழ்ச்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்” என்று அவர் யோசனை கூறுகிறார்.

ஒரே இரவில் மூடப்படும் பத்திரிகைகள்!

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட டெக்கான் க்ரானிகல் மற்றும் மும்பையை தளமாகக் கொண்ட டி.என்.ஏ ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பணப் பிரச்சினையில் சிக்கியுள்ள டெக்கான் க்ரானிகல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் டெக்கான் க்ரானிக்கல் மற்றும் ஏசியன் ஏஜ் பல பதிப்புகளை நிறுத்தியுள்ள நிலையில், டி.என்.ஏ அச்சு பதிப்பை இடைநிறுத்தியுள்ளது; ஒரே இரவில் பல பத்திரிகையாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

டி.சி.எச்.எல் சமீபத்தில் கேரளா மற்றும் பெங்களூரில் டெக்கான் க்ரானிகல் பதிப்புகளையும், மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஏசியன் பதிப்புகளையும் மூடியது. நிதி நெருக்கடி ஆழமடைவதால், ஹைதராபாத், விஜயவாடா, சென்னை மற்றும் கரீம்நகர் ஆகிய பதிப்புகள் மட்டும் லாபகரமாக உள்ளதால் அவற்றை தக்க வைத்துக் கொள்ள நிறுவனம் நினைப்பதாக டி.சி.எச்.எல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவற்றின் பதிப்புகள் மூடப்பட்ட பின்னர், டி.சி.எச்.எல் ஊழியர்கள் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுகினர். பணியகங்களை மூடிவிட்டு ஊழியர்களை இடம் மாற்றுவதற்கான முடிவு சட்டவிரோதமானது என்று புகார் கூறினர். இப்போதைக்கு அவர்களுக்கு தங்குமிட உத்தரவு கிடைத்துள்ளது.

டி.சி.எச்.எல் அதன் கடன்களை வழங்கத் தவறியதால் 2017 ஆம் ஆண்டில் திவாலானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், இது திவாலான நிலை மற்றும் திவால்நிலைக் குறியீட்டின் கீழ் நடவடிக்கைகள் மூலம் சென்றது. ஜூன் 2019-ல், கொல்கத்தாவை தளமாகக் கொண்ட ஸ்ரே மல்டிபிள் அசெட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் டிரஸ்டின் விஷன் இந்தியா ஃபண்ட் நிறுவனம் கையகப்படுத்த என்.சி.எல்.டி ஒப்புதல் அளித்தது. டி.சி.எச்.எல் நிறுவனத்தில் ரூ. 408 கோடியை முதலீடு செய்ய ஸ்ரே முன்மொழிந்தது, அதன் கடன் வட்டி உட்பட ரூ. 8,180 கோடியாக இருந்தது. சுவாரஸ்யமாக, ஸ்ரே இன்னும் பொறுப்பேற்கவில்லை.

டி.சி.எச்.எல் இன் பெரும்பாலான ஊழியர்களுக்கு ஐந்து-ஆறு மாதங்களுக்கு சம்பளம் நிலுவையில் உள்ளது. என்.சி.எல்.டி.யின் தங்கும் உத்தரவு எங்களுக்கு ஒரு ஆசுவாசத்தைக் கொடுத்துள்ளதாக ஒரு டெக்கான் க்ரானிகில் பத்திரிகையாளர் கூறுகிறார். மும்பை மற்றும் கேரள அலுவலகங்களில் இருந்து அதிகமான ஊழியர்கள் சட்டப் போரில் சேர வாய்ப்புள்ளது. “ஸ்ரே மல்டிபிள் அசெட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் டிரஸ்டின் விஷன் இந்தியா ஃபண்ட், டி.சி.எச்.எல். ஐ கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது, இதுவரையில் பொறுப்பேற்கவில்லை. எனவே, நிறுவனத்தின் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்படுவது சட்டவிரோதமானது. ”

படிக்க :
காஷ்மீர் 100-ம் நாள் இணையம் தடை | பத்திரிகையாளர் போராட்டம் !
♦ பாஜகவை விமர்சித்த ராகுல் பஜாஜ் மீது சமூக ஊடகங்களில் காவி ட்ரோல் படை தாக்குதல் !

14 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை மற்றும் அகமதாபாத்தில் டி.என்.ஏ அச்சு பதிப்புகளை மூடியபோது, அது நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களை வேலையில்லாமல் செய்தது. அவர்களில் பெரும்பாலானோர் இன்னும் வேலை தேட முடியாமல் தவிக்கின்றனர். ஆனால், டி.என்.ஏ அச்சகத்தின் தொழிலாளர்கள் மும்பையில் உள்ள தொழிலாளர் ஆணையத்திடம் சாதகமான தீர்ப்பைப் பெற்றுள்ளனர்.

புனேவில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் கேரளாவின் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் முன்னாள் ஆசிரியர் வினோத் மேத்யூ கூறுகையில், இது டி.என்.ஏ மற்றும் டெக்கான் குரோனிக்கிள் மட்டுமல்ல, எல்லோரும் சிரமப்படுகிறார்கள். தொழிலில் அதிர்வு ஏற்கனவே தொடங்கிவிட்டது. தெற்கில், விளம்பர வருவாய் குறைந்துவிட்டது. பல செய்தித்தாள்கள் பண நெருக்கடியை எதிர்கொள்கின்றன, சம்பளத்தை தாமதப்படுத்துகின்றன என்கிறார்.

நொறுங்கும் தொழில்

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் செய்தித்தாள் மீது 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டது, இது ஜூலை 2019 இல் வழங்கப்பட்டது. ஏற்கனவே போராடி வரும் செய்தித்தாள்களுக்கு இது பெரும் அடியாகும். இந்திய செய்தித்தாள் சங்கத்தின் பலமுறை கோரிக்கை விட்டதைத் தொடர்ந்து, கடந்த வாரம் வெளியிடப்பட்ட இந்த ஆண்டு பட்ஜெட்டில் வரி ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொழில்துறையில் பலர் இது சற்று தாமதமானது என்று நம்புகிறார்கள். உள்நாட்டு செய்தித்தாள் உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பது தனது அரசாங்கத்தின் கடமை என்று கூறினாலும் பல மாதங்களாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரியைத் திரும்பப் பெற மறுத்துவிட்டார்.

இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 மில்லியன் டன் செய்தித்தாள் அச்சு தாள்கள் தேவை இருந்தபோதும் நிர்மலா சீதாராமன் கண்டுகொள்ளவில்லை. ஆனால், உள்நாட்டு ஆலைகள் ஒரு மில்லியன் டன் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். மேலும், இது உள்நாட்டு செய்தித்தாளின் தரம் இறக்குமதி செய்யப்பட்ட வகைகளை விட கணிசமாக தரம் குறைவாக இருந்தது. சிறிய மற்றும் நடுத்தர செய்தித்தாள்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் இறக்குமதி வரி திரும்பப் பெறப்படாவிட்டால் அவற்றில் பல மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் இவர்கள் கணித்திருந்தார்கள்.

“செய்தித்தாள் மற்றும் பத்திரிகைகளின் வெளியீட்டாளர்கள் குறைந்த விளம்பர வருவாய் மற்றும் அதிக செயல்பாட்டு செலவுகள் போன்றவை உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்கனவே கடுமையான துயரங்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். புழக்கத்தில் வருவாய் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது, டிஜிட்டல் மீடியாவின் தாக்குதலுக்கு நன்றி” என இந்திய செய்தித்தாள் சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது .

செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளை மூடுவது நூற்றுக்கணக்கான நிருபர்கள், ஆசிரியர்கள் மற்றும் வடிவமைப்பு கலைஞர்களைத் தவிர, பிற ஊழியர்களை வேலையிலிருந்து வெளியேற்றுகிறது. பொருளாதார மந்தநிலை மீட்புக்கான அறிகுறிகளைக் காட்டாத நிலையில், பெரும்பாலான பெரிய விளம்பரதாரர்கள் தங்கள் விளம்பர செலவினங்களைக் குறைத்து விஷயங்களை மோசமாக்கியுள்ளனர். “பொருளாதார மந்தநிலை முக்கிய குற்றவாளி. சந்தை மிகவும் மோசமாக உள்ளது. செய்தித்தாள்கள் மட்டுமல்ல, டிவி சேனல்களும்கூட மோசமாக பாதிக்கப்படுகின்றன” என்று மும்பையில் ஒரு ஊடக நிர்வாகி கூறுகிறார்.

படிக்க :
ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் !
♦ நாட்டில் வன்முறைச் சூழலை உருவாக்கியிருக்கிறது பாஜக : மோடிக்கு பெண்கள் கடிதம் !

செய்தித்தாள்கள் இன்னும் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் விளம்பரங்களை ஈர்க்கின்றன என்றாலும், “அச்சு ஊடகங்கள் நிலையான சரிவில் உள்ளன” என்று மேலும் அவர் கூறினார்.

டெக்கான் க்ரானிகலில் தனது வேலையை இழந்த ஒரு மூத்த ஆசிரியர் கூறுகையில், “பத்திரிகையாளர்களுக்கு, குறிப்பாக அனுபவம் வாய்ந்த கைகளுக்கு இன்று குறைவான வேலைகளே உள்ளன. சாலையில் பலரைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது” என்கிறார் அவர்.

“மறுபுறம், நாடெங்கிலும் உள்ள ஏராளமான பத்திரிகை பள்ளிகள் பத்திரிகையாளர்களாக விரும்புகிறவர்களை தேடிக்கொண்டிருக்கின்றன, மேலும் நுழைவு நிலை சம்பளமும் குறைந்து வருகிறது.”

பல ஊடக நிறுவனங்கள் ஆட்சேர்ப்பை முடக்கியுள்ளன அல்லது “விலையுயர்ந்த” அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு பதிலாக குறைவான சம்பளம் பெறும் அனுபவம் குறைந்தவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன.

அச்சு ஊடகங்களின் சூரிய அஸ்தமனத்தை இந்தியா எவ்வளவு காலம் தாமதப்படுத்த முடியும்? இதுதான் தற்போது கேட்கப்பட வேண்டிய பொருத்தமான கேள்வி.


கட்டுரை: ஆண்டோ டி. ஜோசப்
தமிழாக்கம் : 
கலைமதி
நன்றி :  நியூஸ் லாண்ட்ரி. 

பேயாக மாறி போலீசுக்கே போக்கு காட்டிய அக்காக்கிய் !

நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 13

கிர்யூஷ்கின் சந்தில் ரோந்து சுற்றிக் கொண்டிருந்த போலீஸ்காரன், அந்தப் பேயைக் குற்றம் இழைக்கப்பட்ட இடத்திலேயே, முன்பு புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்து விட்டுத் தற்போது ஓய்வு பெற்றிருந்த இசைஞன் ஒருவன் மேலிருந்து ப்ரீஸ் கோட்டை அது உருவப்பார்த்த சமயத்தில், லபக்கெனக் காலரைப் பற்றிக் கையும் மெய்யுமாகப் பிடித்துவிட்டான். காலரைப் பற்றிப் பிடித்தவன், கூப்பாடு போட்டு இன்னும் இரண்டு போலீஸ்காரர்களை உதவிக்கு அழைத்து, திருட்டுப் பேயைப் பிடித்துக் கொள்ளும்படி அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, ஆயுளில் ஆறுமுறை கடுங்குளிர் தாக்கி மரத்துப் போயிருந்த மூக்கு மறுபடியும் விறைத்துப் போகும் முன் சூடேற்றுவதற்காக, காலணிக்குள் வைத்திருந்த பொடி டப்பியை எடுத்துத் திறந்தான்; அந்தப் பொடி பேயால் கூடத் தாங்க முடியாத அளவு காட்டமானது போலும்.

போலீஸ்காரன் வலது நாசித்துவாரத்தை விரலால் அழுத்திக்கொண்டு இடது நாசித்துவாரத்துக்குள் அரைக்கையளவு மூக்குத்தூளை உறிஞ்சி இழுப்பதற்குள் பேய் பலமாகத் தும்மிய தும்மலில் மூவர் கண்களிலும் சளி சிதறிவிட்டது. அவர்கள் கண்களைத் துடைத்துக்கொள்வதற்காக முட்டிகளை உயர்த்திய போது பேய் இருந்த சுவடு தெரியாமல் மறைந்து போய்விடவே, அது தங்கள் கைகளில் உண்மையாகவே பிடிபட்டதா இல்லையா என்று அவர்களுக்கே புரியவில்லை. அது முதல் போலீஸ்காரர்களுக்குப் பேய் என்றாலே குலை பதறலாயிற்று, எனவே அவர்கள் உயிருள்ளவர்களைக் கூடக் கைது செய்வதற்கு அஞ்சி, தொலைவிலிருந்த படியே, “யாரடா அது, டேய்! வழியைப் பார்த்து நட, ஊம்!” என்று அதட்டுவதோடு நிறுத்திக் கொண்டார்கள். எழுத்தனின் பேயோ, கலீன்கின் பாலத்துக்கு அப்பாலும் வளையவரத் தொடங்கி, பயந்த சுபாவமுள்ள மக்கள் எல்லாருக்கும் கலவரமும் திகிலும் விளைவித்தது.

முற்றிலும் உண்மையான இக்கதைக்கு அதிசயத் திருப்பம் ஏற்பட மெய்யாகவே காரணமாயிருந்த முக்கிய நபரை நாம் ஒரேயடியாக மறந்து விட்டோமே. முதலாவதாக ஒரு விஷயத்தைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுவது நியாயமாக நமது கடமை எனக் கருதுகிறோம். அதாவது தான் கடுமையாக விளாசிய அக்காக்கிய் அகன்ற பின்பு முக்கிய நபருக்கு மனத்தை என்னவோ செய்தது. பிறர்மீது அனுதாபம் அவரது இயல்புக்குப் புறம்பானதல்ல; அவருடைய இதயத்தில் பரிவுள்ள தூண்டல்கள் பல எழுவதுண்டு; அவரது பதவிதான் அவற்றை வெளிக் கிளம்பவொட்டாமல் தடுத்து விடும். தாம் நீண்ட காலமாகப் பார்க்காத நண்பர் சென்றதுமே முக்கிய நபருக்கு பாவம் அக்காக்கியைக் குறித்துக் கவலைகூட உண்டாயிற்று.

படிக்க:
ஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை !
சவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் !

அன்று முதல், சோகை பிடித்த அக்காக்கியின் உருவம், அதிகாரபூர்வமான கடிந்துரையைத் தாங்கத் திறனற்ற அந்த எழுத்தனின் உருவம், அவர் மனத்தைவிட்டு அகலவே இல்லை. அவனைப் பற்றிய எண்ணம் உள்ளத்தை ஒரேயடியாக உலப்பவே, அவர் தமது எழுத்தர்களில் ஒருவனை அக்காக்கிய் வீட்டிற்கு அனுப்பி, அவன் எப்படி, என்ன நிலையில் இருக்கிறான், அவனது கோட்டு கிடைத்து விட்டதா, அவனுக்கு உண்மையாகவே உதவி செய்ய முடியுமா முடியாதா என்று தெரிந்துவரச் சொன்னார். அக்காக்கிய் ஜுரம் காரணமாகத் திடீர் மரணம் எய்தியதை அறிந்ததும் அவருடைய மனச்சாட்சி நாள் பூராவும் அவரை உறுத்தியது, அவர் நிம்மதியின்றி உழன்றார். கொஞ்சம் உற்சாகம் பெறும் பொருட்டும் மகிழ்வற்ற நினைவுகளை மறக்கும் நோக்கத்துடனும் அவர் மாலையில் தமது நண்பர் ஒருவர் இல்லத்துக்குச் சென்றார். அங்கே நிறையப் பெயர் குழுமியிருப்பதையும், அதையும் விட மேலாக அவர்கள் எல்லாரும் அநேகமாகத் தமக்குச் சமமான பதவி வகிப்பவர்களே, எனவே தாம் கட்டிப்போட்டது போலிருக்கத் தேவையில்லை என்பதையும் கண்டார்.

இதனால் அவரது மன நிலைமையில் அற்புதமான மாறுதல் விளைந்தது. அவர் தங்கு தடையின்றி எல்லாருடனும் கலகலவென்று பழகினார், சுமுகமாகப் பேசினார், அன்பொழுக அளவளாவினார், மாலைப் பொழுதை இன்பமாகக் கழித்தார். சாப்பாட்டின் போது இரண்டு கிளாஸ் ஷாம்பெயின் அருந்தினார் – துன்ப நினைவுகளை அகற்ற இது கைகண்ட மருந்து என்பது யாவரும் அறிந்ததே. அன்றிரவைக் கழிப்பது பற்றிய அவரது திட்டம் ஷாம்பெயின் காரணமாகச் சற்று மாறுதல் அடைந்தது, அதாவது, உடனே வீட்டுக்குப் போகாமல், தமது தோழியான கரோலினா இவானொவ்னா என்ற சீமாட்டியின் (இவள் ஜெர்மானிய வமிசத்தில் வந்தவள் என்று தோன்றுகிறது; முக்கிய நபர் இவளுடன் மிகமிக நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார்) வீட்டுக்குச் செல்வது என்று தீர்மானித்தார்.

முக்கிய நபர் இளைஞர் அன்று என்பதையும், நல்ல கணவர், குடும்பப்பற்றுள்ள தகுந்த தந்தை என்பதையும் இங்கே சொல்லிவிட வேண்டும். இரண்டு மகன்களும் (அவர்களில் ஒருவன் அரசாங்க ஊழியன்), அழகிய தோற்றமுள்ள பதினாறு வயதுப் பெண்ணும் (இவளுடைய மூக்கு ஒரு சொல்லுக்கு வளைவானதென்றாலும் பார்வைக்கு நன்றாயிருந்தது) தினந்தோறும் காலையில் அவரிடம் வந்து, அவர் கையை முத்தமிட்டு, “bonjour, papa” என்று பிரெஞ்சு மொழியில் வணக்கம் தெரிவிப்பார்கள். இன்னும் இளமை குன்றாமலும் கண்ணுக்கு லட்சணமாயுமிருந்த அவரது மனைவி முதலில் தம் கையை அவர் முத்தமிடுவதற்காக நீட்டிவிட்டு அப்புறம் அதைத் திருப்பி அவர் கையை முத்தமிடுவாள். முக்கிய நபர் மெல்லியல்பு வாய்ந்த இக்குடும்பப்பழக்கங்களால் மன நிறைவு கொண்டிருந்த போதிலும், நகரின் வேறொரு பகுதியில், வெறுமனே நட்புக்காக மட்டும் தோழி ஒருத்தியை வைத்துக் கொள்வது முறையே எனக் கருதினார். இந்தத் தோழி அவருடைய மனைவியைக் காட்டிலும் இளமையானவளும் அல்லள், அழகியும் அல்லள்; ஆயினும் இம்மாதிரி விஷயங்கள் உலகில் நடப்பது இயல்புதானே, அவற்றைப் பற்றித் தீர்ப்புக் கூறுவதற்கு நாம் யார்?

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. கடைசி பாகம் »

தினமலர் | திருமணம் – பொது வாழ்க்கை | கொரோனா வைரஸ் | அர்ஜுன் ரெட்டி | சாதி மறுப்பு | கேள்வி – பதில் !

கேள்வி : போராடும் மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டவனின் முகத்தை மங்கலாக்கி தினமலர் வெளியிட்டுள்ளதே..”உண்மையின் உரைகல்லை” என்ன செய்யலாம்?

சி. நெப்போலியன்.

ன்புள்ள நெப்போலியன்,

தினமலர் மட்டுமல்லாமல் இந்து தமிழ் திசை, ஸ்க்ரால் உள்ளிட்ட பெரும்பாலான ஊடகங்கள் அந்தக் காவித் தீவிரவாதியின் புகைப்படத்தை முகத்தை மங்கலாக்கியே வெளியிட்டிருந்தனர். காரணம் சுட்டவனுக்கு வயது 18 நெருங்கவில்லையாம்.

சும்மாவே காவிகளைக் காப்பாற்றும் பத்திரிகை, இப்படி ஒரு முகாந்திரம் இருக்கையில் அந்த காவித் தீவிரவாதியின் முகத்தைக் காட்டுவார்களா என்ன? நீங்கள் கூறுவது போல, பொய்மையின் உரைகல் மட்டுமல்ல, த்மிழ் திசை உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளும் நடுநிலை எனக் கூறிக்கொண்டு காவிகளுக்குச் சேவை புரிகின்றன. குறிப்பாக, ‘பொய்மையின் உரைகல்” காவிகளுக்காக நடத்தப்படும் ‘கட்சி’ சார்பற்ற நாளிதழ்! ‘நடுநிலைமையில்’ நின்று கொண்டு சங்கிகளுக்காக பஜனை செய்யும் தினசரி! நாமும் நடுநிலை என்ற பெயரில் வெளிவரும் காவிகளின் தினசரி தினமலரையும், இந்து தமிழ் திசையையும் அம்பலப்படுத்துவதை கடமையாகச் செய்ய வேண்டும்.

நன்றி !

♦ ♦ ♦

கேள்வி : ஆதித்ய வர்மா.. தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி மற்றும் ஹிந்தி கன்னடம் என்று பல மொழிகளில் பரவிக் கொண்டிருக்கும் திரைப்படம். இளைஞர்களை குறிவைக்கும் இப்படம் மணிரத்னம், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் செல்வராகவன் ஆகியோரின் சீரழிவு திரைப்படங்களைக் காட்டிலும் ஆபாச வக்கிரமாக இருக்கிறது என்று என் மனைவி கூறுகிறார்.

கல்லூரி மாணவர்களிடையே தாக்கத்தை உண்டாக்கிய இப்படம் ஏன் வினவால் கவனிக்கப்படாமல் இருக்கிறது?

S. கார்த்திகேயன்

ன்புள்ள கார்த்திகேயன்,

முற்றிலும் கவனிக்ககாமல் இல்லை. அர்ஜூன் ரெட்டி படம் குறித்து தமிழரசி என்பவரால் தனது அனுபவத்தோடு இணைத்து எழுதப்பட்ட இக்கட்டுரை ஓரளவு பேசுகிறது.

இன்றைய ஃபாஸ்ட் புட், டாஸ்மாக் கலாச்சாரத்திற்கு அடிமைப்படும் இளைஞர்களின் கோபம், பெண்களை வேட்டையாடி காதலிக்கும் அநாகரிகம், இவையெல்லாம் ஒரு படமாக நம் இளைஞர்களை ஏன் ஈர்க்கிறது என்பது தனியே பேசப்பட வேண்டிய விசயம். அர்ஜூன் ரெட்டி ஒரு ஆணழகன், முன் கோபி, குடிப்பான், நினைத்ததை சாதிப்பான் போன்றவை ஒரு பெண்ணுக்கு எப்படி இருக்கும் என்பதை மேற்கண்ட கட்டுரையில் தமிழரசி விளக்கியிருக்கிறார்.

இத்தகைய எழுதத்தக்க படங்கள் குறித்து அவ்வப்போது நினைவுபடுத்துங்களேன்! கண்டிப்பாக எழுதுகிறோம்.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : கொரோனா வைரஸை சீனாவே உருவாக்கி வைத்திருந்ததாக செய்திகள் வருகிறதே அது உண்மைதானா?

சி. நெப்போலியன்.

ன்புள்ள நெப்போலியன்,

பாம்பு, பல்லிகளை சாப்பிடும் தேசமென்று பொதுப்புத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் சீனா குறித்த வாட்சப் வதந்தி இது. கொரோனா வைரஸ் குறித்தும், அதன் வரலாற்றையும் விளக்கும் விக்கி பீடியாவின் ஆங்கில தமிழ் கட்டுரைகளை படித்துப் பாருங்கள்!

கொரோனா வைரசால் சீனாவில் நூற்றுக்கணக்கானோர் இறந்து போயிருக்கிறார்கள். போர்க்கால அடிப்படையில் இந்த வைரசை கட்டுப்படுத்திய சீன அரசை ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனமே பாராட்டியிருக்கிறது. ஒருவேளை இந்த வைரஸ் இந்தியாவில் பரவியிருந்தால் நிச்சயம் பேரழிவுதான்.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : தோழர்களுக்கு வணக்கம். மகேஸ்வரியின் மகள். நான் திருமணம் வேண்டாம் என்று சொல்லும் காரணத்தை குறிப்பிடாமல் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கான காரணத்தை அவர்கள் சொல்லியிருக்க வேண்டும். இல்லை நீங்களாவது அவர்களை கேள்வி கேட்பதோடு நிறுத்தி இருக்கலாம். முழு காரணமும் தெரியாமல் பதிலளித்து இருக்க வேண்டியதில்லை. ஒரு பெண் ஒன்று பிடிக்காத ஒன்றை படித்து கொண்டோ அல்லது ஒரு நபருக்கு மனைவியாக இருந்து கொண்டுதான் பொது வெளியில் மக்களுக்காக இருக்க வேண்டுமா என்ன?

குழலி

ன்புள்ள குழலி,

கேள்வியில் இருந்து இன்ன காரணம்தான் என்று குறிப்பாக முடிவெடுக்க முடியவில்லை. குத்துமதிப்பாக மக்களுக்காக பணியாற்றும் ஒரு பெண்ணுக்கு திருமணம் தேவையில்லை என்று உங்களது வார்த்தைகளில் இருந்து புரிந்து கொள்கிறோம். அதை பொறுமையாக பெற்றோரிடம் பேசுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் தெரிவு.

அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் ஒரு பெண் ஆளுமை மலருவதற்கு திருமணமும், குடும்பமும் மிகப்பெரும் தடையாக இருப்பது உண்மை. அதை ஆழமாகவும், தத்துவ நோக்கிலும் புரிந்து கொண்டு முடிவெடுத்தால் பிரச்சினையில்லை. இளைமையில் முடிவு வேகமாக இருக்கும். கூடவே அது விவேகமாகவும் இருப்பின் முதுமை வரை நம் வாழ்க்கை நம் கட்டுப்பாட்டிலும் சுதந்திரமாகவும் இருக்கும்.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : சாதி மறுப்பாளராக இருக்கும் பெற்றோர் தம் குழந்தையை சாதியற்றவர் என்று பள்ளியில் சேர்க்கும் போது இட ஒதுக்கீட்டை சொல்லித்தான் பள்ளி நிர்வாகம் பயமுறுத்துகிறது. அதை புறம் தள்ளி பள்ளியில் சேர்க்கும் போது இதர எனும் பிரிவில் சேர்த்துக் கொள்கிறார்கள். பள்ளிப்படிப்பு முடிந்து பட்டப்படிப்பு தொடங்கும் போது இட ஒதுக்கீடு இல்லாதால் நம் குழந்தைகள் ‘அவாள்’ குழந்தைகளுடன் போட்டி போடும் நிலை வரும். மாணவர்களின் எதிர்காலம் என்னாவது?

பூங்கோதை

ன்புள்ள பூங்கோதை,

இட ஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் மனச் சாந்திக்காக அளிக்கப்பட்ட ஒரு தற்காலிக ஏற்பாடு. அதனால் நூற்றுக்கு நூறு மக்கள் முன்னேறி விடுவதில்லை. சாதி என்பது வர்க்கத்தோடும் தொடர்புடையது. எந்தப் பள்ளியில் சேர்க்கிறோம் என்பதிலேயே அது தெரிந்து விடுகிறது. இருப்பினும் அன்றாடம் கூலி வேலை செய்யும் ஏழைகளாக இருந்தாலும் அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் விரும்புவதில்லை. ஆங்கில வழிக் கல்வியில் தனியார் பள்ளியில் சேர்க்கவே விரும்புகிறார்கள். அப்படியும் வழியில்லாத மக்களே தமது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அரசு பள்ளியில் படித்துக் கொண்டு நீட் தேர்வில் போட்டி போட முடியாது என்பது நடுத்தர வர்க்கத்திற்கு நன்றாகவே தெரியும்.

பார்ப்பன இதர ‘மேல்’சாதி மக்கள் சாதி ரீதியாக மட்டுமல்ல வர்க்க ரீதியாகவே பொதுவில் வசதியாக இருக்கிறார்கள். எனவே இட ஒதுக்கீடு இன்றி அவர்களோடு போட்டி போடுவது என்பது சாதி ரீதியாக மட்டுமல்ல, வர்க்க ரீதியாகவும்தான். இன்றைக்கு பெரும்பான்மை ஏழை மக்கள் சாதி ரீதியாகத்தான் தமது பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அதனாலேயே அவர்களது வாழ்வில் வசந்தம் வந்து விடுவதில்லை. பெண்களாக இருப்பின் பள்ளி இறுதியோடு கல்வி முடிந்து விடும். ஆண்களாக இருந்தால் கொஞ்சம் பச்சையப்பா வரை எட்டிப் பார்க்கலாம். இதை விடுத்து பொறியியலோ, மருத்துவமோ இதர உயர் படிப்புகளோ அவர்களது கற்பனைக்கும் எட்டாத ஒன்று.

எனவே இட ஒதுக்கீடு இருக்கும் போதே இதுதான் ஏழை மக்களின் நிலைமை. மட்டுமல்ல நடுத்தர வர்க்கத்திற்கும் அதுதான் யதார்த்தம். இந்நிலையில் இட ஒதுக்கீடு இன்றி நமது குழந்தைகள் எதிர்காலத்தை இழந்து விடும் என்று பயப்படவேண்டியதில்லை. எல்லோருக்கும் கிடைக்கும் வாழ்க்கை நமக்கும் உண்டு. எல்லோருக்கும் இருக்கும் அபாயம் நமக்கும் இருக்கும்.

பிள்ளைகளை சாதியற்றவர்களாக பள்ளிகளில் சேர்ப்பது சாதியற்ற சமூகத்திற்கு தேவைப்படும் ஒரு தொடக்கம். அதன்படி சமூகத்தில் உங்களுக்கு உயர்ந்த இடம் எதிர்காலத்தில் காத்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய நாகரீக சமூகத்தின் வேர்களாக மாறுவதற்கு இட ஒதுக்கீடு போன்ற உரிமைகளை இழந்தால்தான் என்ன? எந்த ஒன்றையும் ஏதோ ஒன்றை இழந்துதான் பெற முடியும்.

இன்றைக்கு அரசு அனைத்தையும் தனியார்மயமாக்கி வரும் சூழலில் இட ஒதுக்கீடே கேள்விக்குரியதாக மாறிவிட்டது. காசு இருப்பவனே சமூகத்தில் வாழ முடியும் என்று ஆக்கிவிட்டார்கள். இட ஒதுக்கீடு இருப்பதால் நாம் அப்பல்லோவிற்கு போக முடிவதில்லை. அரசு மருத்துவமனைகளை நோக்கியே தள்ளப்படுகிறோம். இட ஒதுக்கீடு இருப்பதாலேயே பெரும்பாலான மக்கள் மிகப்பெரும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு சென்று தமது பொருட்களை வாங்குவதில்லை. ரேசன் கடைகளிலும் அருகாமை அண்ணாச்சி கடைகளில் கடன் வைத்தும்தான் வாங்குகிறார்கள்.

படிக்க :
திருமண நெருக்கடி | சாதியற்றவர்க்கு இடஒதுக்கீடு | துக்ளக் | கேள்வி – பதில் !
♦ இந்தியாவில் புற்றுநோயின் தாக்கம் : அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட் !

உங்களது பிள்ளை இட ஒதுக்கீட்டினாலும், பொருளாதார வசதியினாலும் ஒரு பல் மருத்துவராகத்தான் ஆகவேண்டுமென்பதில்லை. ஒரு பாலிடெக்னிக்கில் படித்து ஒரு தொழிலாளியாகக் கூட ஆகலாம். இந்த உலகமே தொழிலாளிகளின் வியர்வையில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது எனும் போது நாம் ஏசி அறை மேன் மக்களின் கருத்துகளுக்காக அச்சப்பட வேண்டியதில்லை.

சாதியற்றவர் எனும் பிரச்சினை வெறும் பள்ளியோடு முடிந்து விடும் ஒன்றில்லை. சமூகம் அதை ஆயிரத்தெட்டு முறைகளில் எதிர்த்து பயமுறுத்தும். நல்லது கெட்டது என்றால் எட்டிப் பார்ப்பதற்கு சொந்த பந்தம் இருக்காது. உறவினர் கூட்டத்தில் இருந்து தனிமைப்படுவோம். நாளைக்கு திருமணமே பிரச்சினையாகும்.

இப்படியாக சமூகத்தின் முற்போக்கு நகர்விற்கு தடைகள் ஏராளமிருக்கிறது. சாதியற்ற சமூகமாக மாறுவதற்கு இந்த தடைகளை தாண்டினால் மட்டுமே சாத்தியம். அதன் துவக்கப் புள்ளிகளாக இருப்பதற்கு முதலில் பெருமைப்படுங்கள்!

உங்கள் குழந்தைகள் அவற்றின் திறமை விருப்பத்திற்கு ஏற்ப படிக்கட்டும். அதற்கு உங்களால் முடியும் வரை உதவுங்கள்! முடியாத போது விளக்குங்கள். நம் குழந்தைகளை நல்ல சமூக மனிதர்களாக வளர்ப்பதுதான் முதன்மையான பிரச்சினை. அதில் வெற்றி பெறும் போது இந்த மனமாச்சரியங்களுக்கு இடமில்லை.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

மோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை ! புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு

நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை பெருகியுள்ளது என இந்திய அரசின் ஆவணங்களே தெரிவிக்கின்றன. சந்தை தேக்கநிலை காரணமாக சிறு தொழில் நிறுவனங்கள் முதல் பெரும் ஆலைகள் வரை உற்பத்தி முடங்கிப் போயுள்ளது.

ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்குவதற்குக் கூட இயலாத நிலைக்கு ஏழைகள் தள்ளப்பட்டுள்ளனர். இன்னொருபுறம் சாதாரண மக்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு கற்பனைக்கு எட்டாதபடி அதிகரித்துள்ளது. இந்தியாவில், சுமார் 70% பொதுமக்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பைவிட நான்கு மடங்கு அதிகமான சொத்துக்கள் வெறும் 1% பணக்காரர்களிடம் குவிந்துள்ளது என்கிறது சர்வதேச ஆக்ஸ்ஃபாம் அறிக்கை.

பெரும்பான்மை மக்களிடமிருந்து சுரண்டப்படும் பணம், தொடர்ந்து சிறு எண்ணிக்கையிலான பணக்காரர்களிடம் போய்க் குவிவதையே இது காட்டுகிறது. இந்தத் தொடர் நச்சுச் சுழலின் விளைவாக வேலைவாய்ப்பின்மை, வேலையிழப்பு, தொழில் முடக்கம் என நேரடியாகப் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்தான்.

இச்சூழலிலிருந்து தம்மைக் காக்க வக்கற்ற – தம்மை மேலும் மேலும் சுரண்டும் – இந்த அரசுக் கட்டமைப்புக்கு எதிராக மக்கள் இயல்பாகவே கொந்தளிப்பில் உள்ளனர். மக்களின் கோபத்தை, மத அரசியலைக் கொண்டு திசை திருப்ப முயற்சிக்கிறது சங்கபரிவாரக் கும்பல்.

அதன் ஒரு பகுதியாகவே, பொருளாதார நெருக்கடி முற்றியிருக்கும் நேரத்தில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுதல், குடியுரிமை சட்டத் திருத்தம் உள்ளிட்ட மக்களைப் பிளவுபடுத்தும் வேலைகளை நடைமுறைப்படுத்துகிறது பாஜக. இந்த நடவடிக்கைகள் எல்லாம், பெரும் பான்மை இந்து மக்களை, முஸ்லீம் தீவிரவாதத்திலிருந்து காப்பதற்காகவே எடுக்கப்படுவதாக சங்கப் பரிவாரக் கும்பல் பிரச்சாரம் செய்கிறது.

நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில், சங்கப் பரிவாரத்தின் இக் கட்டுக்கதைகளை ஏற்றுக் கொள்ள மக்கள் தயாராக இல்லை. அதுவே, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரானப் போராட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களும் மோடி அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.

குடியுரிமைச் சட்டத்தை முகாந்திரமாகக் கொண்டு நாடெங்கும் துவங்கியிருக்கும் இந்தப் போராட்டத்தை, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டமாக விரிவாக எடுத்துச் செல்வதே இன்று நம் முன் உள்ள கடமையாகும்! அதற்கு இந்தத் தொகுப்பு பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகிறோம்!

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

***

மோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை ! – புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் ! உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

அச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

மின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

“ மோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை !  ” நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
♦ பொருளாதார மந்தமும் மோடியின் சவடால்களும்: துக்ளக் பாதி! இட்லர் பாதி!!
♦ 45 ஆண்டு சாதனையை முறியடித்த மோடி: ஆறரை கோடிப் பேருக்கு வேலையில்லை!
♦ வாகன விற்பனையில் மந்த நிலை: 32,000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்!
♦ 50 இலட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு!
♦  பொருளாதார நெருக்கடி: முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது!
♦ வேலையில்லா திண்டாட்டம்: தீர்க்க என்ன வழி? (கேள்வி-பதில்)
♦ ஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம்!
♦ இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி!
♦  அசோக் லேலாண்ட்: மிகை உற்பத்தி! வேலை நாள் குறைப்பு சதி!
♦ மோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம்!
♦ தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன? (கேள்வி – பதில்)
♦ எடப்பாடியின் பொங்கல் பரிசு மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன்!
♦ பொருளாதார நெருக்கடி: அபிஜித் பானர்ஜியிடம் நிரந்தரத் தீர்வு உண்டா ?
♦ காஷ்மீரில் ரூ. 10,000 கோடி பொருளாதார இழப்பு!
♦ NRC: இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா?
♦ CEO- வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம் – ஆக்ஸ்ஃ பாம் அறிக்கை !
♦ அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை : நாம் எதிர்பார்த்ததைவிட நிலைமை மோசமாகவே இருக்கிறது!

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

 

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.

வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

____________

புதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

 

LIC தனியார்மயம் : பொன் முட்டையிடும் வாத்தை அறுக்கும் மத்திய அரசு

ந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் எனப்படும் எல்ஐசி ஒரு பொன் முட்டையிடும் வாத்து. அதன் பங்குகளை விற்கப்போவதாக பா.ஜ.க. அரசு அறிவித்திருக்கிறது. எந்த விவசாயியும் ஒருபோதும் விதை நெல்லை விற்க மாட்டார். மத்திய அரசு அதைத்தான் செய்யப்போகிறது.

எல்ஐசி ஒரு அற்புதமான நிறுவனம். அதைப் பற்றிய சில தகவல்களைப் பாருங்கள். இனிமேல் ஒருபோதும் இப்படி ஒரு அரசு நிறுவனத்தை உருவாக்க முடியாது.

1. இந்தியாவின் காப்பீடு சந்தையில் 70 சதவீதம் எல்.ஐ.சி.யின் பிடியில் உள்ளது. எப்போதெல்லாம் அரசு நிதி நெருக்கடியை சந்திக்கிறதோ அப்போதெல்லாம் ஒரு நல்ல நண்பனை போல வந்து எல்.ஐ.சி. காப்பாற்றும்.

2. நேரு பிரதமராக இருக்கும்போது அவரது மருமகனான ஃபெரோஸ் காந்தி காப்பீட்டுத் துறையில் நடைபெற்ற மோசடிகள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்ப, 1956-ல் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு, இந்தியாவில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டன. எல்.ஐ.சி. உருவானது.

3. 2015-ல் ஓஎன்ஜிசியின் பங்குகளை பங்குச் சந்தையில் விற்றபோது எல்.ஐ.சி அந்த நிறுவனத்தில் 1.4 பில்லியன் டாலர் முதலீடு செய்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஐடிபிஐ வங்கி வாராக் கடன்களில் மூழ்கியபோது எல்.ஐ.சி. மீண்டும் வந்து காப்பாற்றியது.

4. 2019, நவம்பர் 30 வரையில் எல்.ஐ.சியின் பங்கு காப்பீட்டு சந்தையில் 76.28 சதவீதம் இருந்தது. 2019 நிதியாண்டில் எல்.ஐ.சி 3.37 லட்சம் கோடி ரூபாய் வாடிக்கையாளர்களின் பீரிமியத்திலிருந்தும் 2.2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டிலிருந்து கிடைக்கும் ஆதாயத்திலும் வருமானம் ஈட்டியுள்ளது.

5. 2019-ம் ஆண்டின் நிதியாண்டில் எல்.ஐ.சி பங்கு சந்தையில் 28.32 லட்சம் கோடி ரூபாயும், கடனாக 1.17 லட்சம் கோடி ரூபாயும் மற்றும் 34,849 கோடி ரூபாயை பண சந்தையிலும் முதலீடு செய்துள்ளது.

6. எல்.ஐ.சியின் மொத்த சொத்து 36 லட்சம் கோடி ரூபாய் ஆகும். அதன் கடன் வெறும் 4 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே.

படிக்க:
LIC நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய நீரவ் மோடி ! புதிய அதிர்ச்சி !
இந்திய நாடு, அடி(மை) மாடு !

7. ஒவ்வொரு வருடமும் அரசு பத்திரங்களிலும் பங்கு சந்தைகளிலும் எல்.ஐ.சி 55 முதல் 65 ஆயிரம் கோடி முதலீடுகளை செய்கிறது.

8. 2009-லிருந்து வருவாய் பற்றாக்குறையைக் குறைக்க அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்றபோதெல்லாம் எல்.ஐ.சிதான் அதை வாங்க முன்வரும் முதல் நிறுவனமாக இருந்தது. 2009லிருந்து 2012 வரை பொதுத்துறையின் பங்குகளை விற்றதில் அரசு 9 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு எல்.ஐ.சியின் பங்கு ஆகும். ஓஎன்ஜிசியின் பங்குகளை விற்க முடிவு செய்தபோது, அதனை வாங்க யாரும் வராத நிலையில், எல்ஐசி முன்வந்து வாங்கியது.

9. எல்ஐசியில் காப்பீட்டு தொகை மற்றும் போனஸுக்கு மத்திய அரசே பொறுப்பு என எல்.ஐ.சி சட்டத்தின் 37-வது பிரிவு கூறுகிறது. மற்ற தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் இது கிடையாது.

மோடி அரசின் முடிவை கண்டித்து, எல்.ஐ.சி. அதிகாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

10. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் எல்.ஐ.சி.யின் செயல்பாடுகள் சுணக்கமடைய செய்யப்பட்டுள்ளன. 2019 மார்ச் மாத ஆண்டு அறிக்கையின் படி முதலீட்டு விகிதத்தில் வருவாய் ஈட்டாத சொத்துகளில் மதிப்பு 6.15 சதவீதமாக மாறியுள்ளது. 2014-15ல் இது 3.30 சதவீதமாக இருந்தது. அதாவது கடைசி ஐந்து நிதியாண்டில் 100 சதவீதமாக உயர்ந்துள்ளது.

11. எல்.ஐ.சியின் இந்த நிலைக்கு காரணம் எல்.ஐ.சி முதலீடுசெய்ய வைக்கப்பட்ட பெரும்பாலான நிறுவனங்களின் நிலை மோசமாகியிருப்பதுதான். இதில் திவான் ஹவுசிங் ரிலையன்ஸ், இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் மற்றும் பிராமல் கேபிடல் ஆகியவையும் அடக்கம்.

12. பல அரசு நிறுவனங்களை விற்று அரசின் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க முயல்கிறது மத்திய அரசு. ஆனால், வருடாவருடம் அதனால் இலக்குகளை எட்ட முடியாத நிலையில், எல்ஐசியை குறிவைத்திருக்கிறது மத்திய அரசு.

இது தொடர்பாக வெளியான பிபிசியின் கட்டுரைக்கான இணைப்பு :
இந்தியாவின் பொக்கிஷமான எல்.ஐ.சி-யின் பங்குகளை மத்திய அரசு விற்பது ஏன்?

நன்றி : முகநூலில் Muralidharan Kasi Viswanathan

disclaimer

உழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் – 55

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 55

உழைப்புப் பிரிவினை

அ.அனிக்கின்

டம் ஸ்மித் உழைப்புப் பிரிவினையைச் சமூக உழைப்பின் உற்பத்தித் திறனின் வளர்ச்சியில் முக்கியமான காரணியாகச் சித்திரிக்கிறார். கருவிகளும் இயந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டதையும் அவை அபிவிருத்தி செய்யப்பட்டதையும் அவர் உழைப்புப் பிரிவினையோடு இணைக்கிறார்.

ஸ்மித் குண்டூசி தொழிற்சாலையைப் பற்றிய அவருடைய பிரபலமான உதாரணத்தைக் கூறுகிறார்; அந்தத் தொழிற்சாலையில் தொழிலாளர்களின் சிறப்புத் தேர்ச்சியினாலும் நடவடிக்கைகள் அவர்களுக்கிடையே பிரித்துக் கொடுக்கப்பட்டிருப்பதனாலும் உற்பத்தி பல மடங்கு அதிகரிப்பது சாத்தியமானதாகக் கூறுகிறார். அவருடைய புத்தகம் நெடுகிலும் உழைப்புப் பிரிவினை என்பது ஒரு வகையான வரலாற்று ரீதியான முப்பட்டைக் கண்ணாடியாக இருக்கிறது; அதன் மூலமாகவே அவர் பொருளாதார நிகழ்வுப் போக்குகளை ஆராய்கிறார்.

சமூகத்தின் “செல்வம்”, அதாவது பொருள்களின் உற்பத்தி மற்றும் நுகர்வின் அளவு இரண்டு காரணிகளைப் பொறுத்திருக்கிறது என்று ஸ்மித் எழுதுகிறார்.

1) மக்கள் தொகையில் பயனுள்ள உழைப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் விகித அளவு.
2) உழைப்பின் உற்பத்தித் திறன் ஆகியவை அக்காரணிகளாகும்.

இரண்டாவது காரணியே ஒப்பிட முடியாத அளவுக்கு மிக முக்கியமானது என்று அவர் தொலைநோக்கோடு நம்பினார். உற்பத்தித் திறனை நிர்ணயிப்பது எது என்ற கேள்வியைக் கேட்டு அதற்கு உழைப்புப் பிரிவினையே என்ற பதிலைக் கொடுக்கிறார். இந்தப் பதில் அவருடைய காலத்துக்கு முற்றிலும் தர்க்க ரீதியானதாகும். முதலாளித்துவ வளர்ச்சியில் பட்டறைத் தொழில் கட்டத்தில், இயந்திரங்கள் இன்னும் அபூர்வமாகவும் உடல் உழைப்பே மேலோங்கியுமிருந்த காலத்தில், உற்பத்தித் திறனின் வளர்ச்சியில் முக்கியமான காரணியாக இருந்தது உழைப்புப் பிரிவினைதான்.

உழைப்புப் பிரிவினை இரு விதமாக இருக்கலாம். ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கின்ற தொழிலாளர்கள் வெவ்வேறு நடவடிக்கைகளில் சிறப்பான அனுபவம் பெறுகின்றனர்; எல்லோரும் சேர்ந்து ஒரு பூர்த்தியடைந்த பொருளை, உதாரணமாகக் குண்டூசியைத் தயாரிக்கின்றனர். இது ஒரு வகை.

அடுத்தது சமூகத்தில் தனி ஆலைகளுக்கும் பிரிவுகளுக்கும் இடையே உள்ள உழைப்புப் பிரிவினை – முற்றிலும் வேறு விதமான தாகும். கால்நடைகளை வளர்ப்பவர் கால்நடைகளை வளர்க்கிறார்; அவற்றைக் கசாப்புக் கடைக்காரரிடம் இறைச்சிக்காக விற்பனை செய்கிறார். கசாப்புக் கடைக்காரர் அவற்றைக் கொன்று அவற்றின் தோலைத் தோல் வியாபாரியிடம் விற்பனை செய்கிறார். அவர் அந்தத் தோலைப் பதனிட்டு செருப்புத் தைப்பவரிடம் விற்பனை செய்கிறார்……

ஸ்மித் இந்த இரண்டு வகைகளைச் சேர்ந்த உழைப்புப் பிரிவினையையும் குழப்பிக் கொள்கிறார். முதல் வகையில் வாங்குவதும் விற்பனை செய்வதும் இல்லை, ஆனால் இரண்டாவது வகையில் அவை உள்ளன-அவற்றுக்கிடையே உள்ள இந்த அடிப்படையான வேறுபாட்டை அவர் பார்க்கவில்லை. அவர் மொத்த சமூகத்தையுமே ஒரு பிரம்மாண்டமான தொழிற்சாலையாகவும் உழைப்புப் பிரிவினை என்பது “நாடுகளின் செல்வத்தின்” நன்மைக்காக மனிதர்கள் ஈடுபடுகின்ற பொருளாதார ஒத்துழைப்பின் சர்வாம்ச வடிவமாகவும் கருதினார். அவர் முதலாளித்துவ சமூகத்தை சாத்தியமான ஒரே சமூகமாகவும் இயற்கையானதாகவும் அழிவில்லாததாகவும் பொதுவான முறையில் கருதினார். உண்மையில் ஸ்மித் கண்ட உழைப்புப் பிரிவினை தனி வகையில் முதலாளித்துவ ரீதியானது என்பது அதன் முக்கியமான கூறுகளையும் விளைவுகளையும் நிர்ணயிக்கிறது. அது ஏதோ சமூகத்தின் முன்னேற்றத்தை மட்டும் ஊக்குவிக்கவில்லை ; மூலதனத்துக்கு உழைப்பு கீழ்ப்படுவதை வளர்த்து வலுப்படுத்தியது.

படிக்க :
இந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன ? | பொ.வேல்சாமி
♦ மோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு !

மற்ற பல பிரச்சினைகளைப் போலவே இந்தப் பிரச்சினையிலும் ஸ்மித் இரு பக்கத்தன்மை கொண்டவராக இருக்கிறார். அவர் தம்முடைய நூலின் தொடக்கத்தில் முதலாளித்துவ உழைப்புப் பிரிவினையை வாயாரப் புகழ்கிறார்; ஆனால் இன்னொரு பகுதியில் அது தொழிலாளியின் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறதென்று வாதிடுகிறார்.

“உழைப்புப் பிரிவினை முன்னேற்றமடைகின்ற பொழுது உழைத்துப் பிழைக்கின்ற மிகப் பெரும் பகுதியினர், அதாவது மக்களில் பெருந்திரளானவர்களின் வேலையானது ஒரு சில மிகச் சுலபமான – பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு நடவடிக்கைகளோடு நின்றுவிடுகிறது….. அவனுடைய (தொழிலாளியினுடைய-ஆ-ர்) சொந்தத் தொழிலில் அவனுக்குள்ள கைத்திறன் அவனுடைய அறிவு, சமூக, போராட்டத் தகுதிகளை இழந்து இவ்விதமாக அடையப்படுவது போலத் தோன்றுகிறது. ஆனால் முன்னேற்றமும் நாகரிகமும் அடைந்த ஒவ்வொரு சமூகத்திலும் உழைக்கின்ற ஏழைகள், அதாவது மக்களில் மிகப்பெரும் பகுதியினருக்கு ஏற்படுகின்ற நிலை இது தான். இதைத் தடுப்பதற்கு அரசாங்கம் ஏதேனும் முயற்சிகளைச் செய்யவில்லை என்றால் இந்த நிலை தவிர்க்க முடியாததாகும்.” (1) மூலதனத்துக்கு, முதலாளித்துவ உற்பத்திக்கு எந்த ஆதரவும் இல்லாத ஒட்டுப் பகுதியாக, மார்க்ஸ் குறிப்பிட்ட “பகுதி உழைப்பாளியாகத்” தொழிலாளி மாற்றப்படுகிறான்.

இந்த மேற்கோளின் கடைசி வாக்கியம் நம் கவனத்தைக் கவர்கிறது. சுதந்திர உற்பத்திக்கு நிபந்தனையில்லாமல் ஆதரவு கொடுக்கின்ற ஒருவரிடம் இதை நாம் எதிர்பார்க்கவில்லை. முதலாளித்துவத்திடம் ஒரு ஆபத்தான போக்கு இருப்பதை ஸ்மித் உணர்ந்திருக்கிறார் என்பதே இங்கேயுள்ள உண்மையாகும். எல்லாவற்றையுமே இயல்பான போக்கைப் பின்பற்றுமாறு விட்டுவிட்டால் மக்கள் தொகையில் கணிசமான பகுதி சீரழிந்து விடுகிற ஆபத்து ஏற்படும். இதைத் தடுப்பதற்கு அரசைத் தவிர வேறு விதமான எந்த சக்தியையும் அவர் பார்க்க முடியவில்லை.

உழைப்புப் பிரிவினையையும் பண்டப் பரிவர்த்தனையின் நிகழ்ச்சிப் போக்கையும் வர்ணித்த பிறகு ஸ்மித் பணத்தைப் பற்றிய பிரச்சினையை எழுப்புகிறார். பணம் இல்லையென்றால் முறையான பரிவர்த்தனை என்பது இயலாததாகும். அவர் நான்காம் அத்தியாயத்தில் பணத்தின் தன்மையையும் மற்ற பண்டங்களிலிருந்து வேறுபட்ட ஒரு விசேஷமான பண்டமாக – எக்காலத்துக்கும் உரிய சமமதிப்பு என்பதாக அது தோற்றமெடுத்த வரலாற்றையும் உணர்வு பூர்வமாக விவாதிக்கிறார். இது ஒரு சிறிய அத்தியாயமாகும். ஸ்மித் பணத்தையும் கடன் வசதியையும் பற்றி அடிக்கடி எழுதுகிறார். எனினும் இந்தப் பொருளாதார இனங்கள் அவருடைய எழுத்தில் அற்பமான பாத்திரத்தையே வகிக்கின்றன.

படிக்க :
முதலாளிகளின் மூலதனம் எங்கிருந்து வந்தது?
♦ நடுநிசி நடுவழியில் மேல்கோட்டை பறித்த வழிப்பறிக்காரர்கள் !

பணத்தைப் பொருளாதார நிகழ்வுப் போக்குகளை சுலபமாக்குகின்ற தொழில் நுட்பக் கருவியாக மட்டுமே அவர் பார்க்கிறார்; அதை “செலாவணியின் மாபெரும் சக்கரம்” என்று அழைக்கிறார். கடன் வசதியை மூலதனத்தைச் சுறுசுறுப்பாக்குகின்ற சாதனமாக மட்டுமே கருதுகின்றார், அதைப் பற்றி ஒரு சிறிதே கவனம் செலுத்துகிறார். அவர் பணத்தையும் கடன் வசதியையும் உற்பத்தியிலிருந்து பரிணமிக்கச் செய்தார், உற்பத்தியோடு சார்ந்த வகையில் அவற்றின் கீழ்நிலைப் பாத்திரத்தைக் கண்டார் என்பதில் தான் அவர் கருத்துக்களின் சிறப்பு அடங்கியிருக்கிறது. ஆனால் இவையும் ஒரு தரப்பான, குறுகிய கருத்துக்களாக இருந்தன. பணவியல் மற்றும் கடன் காரணிகள் அடைகின்ற சுதந்திரத்தையும் உற்பத்தியின் மீது அவை செலுத்துகின்ற தலைகீழான மாபெரும் தாக்கத்தைப் பற்றியும் அவர் குறைத்து மதிப்பிட்டார்.

நாடுகளின் செல்வத்தின் முதல் நான்கு அத்தியாயங்களும் படிப்பதற்குச் சுலபமானவை, அவற்றிலுள்ள செய்திகளும் சுவாரசியமானவை. ஸ்மித்தினுடைய போதனையின் மூலப் பகுதியான மதிப்புத் தத்துவத்துக்கு அவை ஒரு விதத்தில் அறிமுகமாகப் பயன்படுகின்றன. அதன் தொடக்கத்தில் இந்தப் பொருள் “மிக அதிகமான அளவுக்கு சூக்குமத்தன்மை” கொண்டிருக்கின்ற படியால் வாசகர் “பொறுமையாகவும் கவனத்தோடும்” படிக்க வேண்டுமென்று ஸ்மித் மனதாரக் கேட்டுக் கொள்கிறார்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1) A. Smith, The Wealth of Nations, Vol. II, London, 1924, pp. 263, 264.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

கம்யூனிஸ்ட்டுகள் | பெண்ணியம் | தேவேந்திர குல வேளாளர் | தமிழ் தேசியர்கள் | கேள்வி பதில்

கேள்வி :
1.கம்யூனிஸ்டுகள் குறித்து உங்கள் பார்வை?
2.தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியமைக்க என்ன உத்தியை கடைபிடிக்க வேண்டும்..?
சக்திவேல்

அன்புள்ள சக்திவேல்,
தேர்தல் அரசியலில் இருக்கும் கம்யூனிஸ்டுகளையே நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். தேர்தல் அரசியலை மறுத்து செயல்படும் மார்க்சிய லெனினிய கம்யூனிசக் கட்சிகளும் இந்தியாவில் இருக்கின்றன. ஒரு சில மாநிலங்களில் ஓரளவு செல்வாக்கோடும் இருக்கின்றனர். தேர்தல் அரசியலில் ஈடுபடும் கம்யூனிஸ்டுகளில் சிபிஎம், சிபிஐ இரு கட்சிகளும் முதன்மையானவை. தற்போது கேரளாவைத் தாண்டி அவர்கள் ஆட்சி புரியும் மாநிலம் ஏதுமில்லை. கடந்த காலத்தில் ஆட்சி செய்த திரிபுராவையும், மேற்கு வங்கத்தையும் அவர்கள் இழந்திருக்கிறார்கள்.

தேர்தல் அரசியலில் இருக்கும் கம்யூனிஸ்டுகளின் தோல்விக்கு அவர்கள் மற்ற வாக்கரசியல் கட்சிகளை நம்பியும், கூட்டணி வைத்தும் செயல்படுவது ஒரு காரணம். கம்யூனிஸ்டுகளுக்கென்று தனித்திட்டம், கொள்கை, செயல்பாடு என்ற முறையில் அவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவில்லை. அவர்களது தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் போன்றவை அந்தந்த பிரிவின் பொருளாதாரப் போராட்டங்களை மட்டும் நடத்துகின்றன. அரசியல் ரீதியாக இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வரும் அரசியல் போராட்டங்களை மைய ரீதியாக நடத்துவதில்லை. அப்படி ஒரு பார்வையுமில்லை. மக்களும் கம்யூனிஸ்டுகள் நல்லவர்கள், ஆனால் ஆட்சி அமைக்க அவர்கள் தேவையில்லை என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்திலும் திமுக, அதிமுக-வை நம்பி மாறி மாறிக் கூட்டணி வைத்துக்கொண்டு ஒரு சில தொகுதிகளை பெறுவதே பெரும் சிரமம் என்ற நிலையில்தான் இங்குள்ள கம்யூனிஸ்டு கட்சிகள் இருக்கின்றன. அடிப்படையில் இந்தியாவில் எப்படி புரட்சி செய்யப் போகிறோம், அதற்கு எப்படி மக்களைத் திரட்டப் போகிறோம் என்ற பார்வையின்றி வெறும் வாக்கரசியல் வளையத்தில் மட்டும் வலம் வருவதனால் அவர்கள் தேய்ந்து போய்விட்டார்கள். ஆகவே அவர்கள் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது என்பது சாத்தியமில்லை. அக்கட்சிகளுக்குள்ளே அணிகளிடம் இது குறித்த அரசியல் விவாதம், போராட்டம் நடந்து ஏதும் மாற்றம் வந்தாலொழிய வேறு ஒளிமயமான எதிர்காலம் இல்லை.

நன்றி!

o0o0o

கேள்வி:
குறிப்பிட்ட கோட்பாடுகளை பேசும் போது இஸம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தன் வாழ்வை தனக்கேற்றபடி வாழ நினைத்து போராடும் பெண்களை பெண்ணியவாதி(feminist) என்று கூறுவதன் நோக்கம் என்ன?
ச. தி. அன்பரசி

அன்புள்ள அன்பரசி,

இஸத்திற்கு நீங்கள் சொல்லும் விளக்கம் பெண்ணியம் அல்லது ஃபெமினிசத்திற்கும் பொருந்தும். பெண்ணியமும் தனக்கென்று சில அடிப்படைக் கோட்பாடுகளை வைத்திருக்கிறது. அதே நேரம் அவை உலகில் ஒரே மாதிரியான புரிதலில் ஏற்றுக் கொண்டிருக்கப்படவில்லை. பெண்ணியத்திற்குள்ளேயே பல கருத்து வேறுபாடுகளையும் முன்வைக்கிறார்கள்.

முதன்மையான ஆணாதிக்க சமூக அமைப்பே பெண்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் என்று பெண்ணியம் கருதுகிறது. அது ஈராக் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போராக இருந்தாலும், வெனிசுலாவில் நடக்கும் வறுமைக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும், ஒரு பெண்ணுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறையாக இருந்தாலும், அனைத்து துறைகளிலும் நிலவும் பாலியல் ரீதியான பாகுபாடுகளாக இருந்தாலும் இப்படி பார்க்கிறார்கள்.

எனினும் இந்த உலகம் ஆண்கள் X பெண்கள் என்ற முரண்பாட்டினால் மட்டும் இயங்கவில்லை. முதன்மையாக சொத்துடமை X சொத்தின்மை என்ற முரண்பாட்டினால் இயங்குவதாக கம்யூனிஸ்டுகள் கருதுகிறோம். ஈராக் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போர் என்பது ஒரு ஏழை மூன்றாம் உலக நாட்டின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றவும், வளைகுடாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கை நிலை நிறுத்தவுமே அன்றி வேறு அல்ல. ஆக்கிரமிப்பு போரின் பாதிப்பு ஈராக்கின் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் சேர்ந்தே அழிவுகளைக் கொண்டு வருகிறது.

அதே நேரம் இந்தியாவின் பார்ப்பனிய சமூக அமைப்பாக இருந்தாலும் சரி, அமெரிக்காவின் முதலாளித்துவ சமூக அமைப்பாக இருந்தாலும் சரி இரண்டிலும் கணிசமான அளவுக்கு ஆணாதிக்கம் கோலேச்சுகிறது. அதை இல்லை என்று மறுக்க முடியாது.

குடிசைப் பகுதியில் இருக்கும் பெண்ணுக்கும், மாளிகையில் வசிக்கும் பெண்ணுக்கும் பெண்ணுரிமையின் பிரச்சினைகள் ஒரே போன்று இருப்பதில்லை. அதே போன்று பொதுப்பிரிவில் வரும் ஆதிக்க சாதிப் பெண்களுக்கும், பட்டியலினப் பிரிவில் வரும் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கும் ஒரே போல சமூக அந்தஸ்து, பிரச்சினைகள் இருப்பதில்லை. இப்படி பெண்களுக்குள்ளேயே வர்க்கம், சாதி அடிப்படையில் பிரச்சினைகள் வேறுபடுகின்றன. சில பெண்ணியவாதிகள் இதை அங்கீகரித்தாலும் அடிப்படையில் பாலின பாகுபாட்டையே முதன்மையாக முன்வைக்கிறார்கள்.

படிக்க :
♦ ‘மகாபாரதத்தில் பெண்கள்’ – உரையை ரத்து செய்த சங்கிகள் ! காரணம் என்ன ?
♦ பொள்ளாச்சி பாலியல் குற்றத்துக்கு பெண்கள் தான் காரணம் ! இயக்குநர் கே. பாக்கியராஜ் பேச்சு !

நீங்கள் குறிப்பிடுவது போல தனக்கென்று ஒரு தனி வாழ்க்கையை அமைத்துக் கொள்வது மட்டும் பெண்ணியவாதிகளின் பணியல்ல. அவர்கள் சமூக ரீதியாகவும் பணியாற்றுகிறார்கள். பணியாற்ற வேண்டும். தாங்கள் கொண்டிருக்கும் குறிக்கோளிற்காக சிலர் களத்திலும் வேலை செய்கிறார்கள். இந்தியாவில் அப்படி குறிப்பிட்டுச் சொல்லும் பெண்ணிய அமைப்புகள் இல்லையென்றாலும் மேற்குலகில் இருந்திருக்கின்றன. தற்போது பொதுவில் பெண்ணியவாதக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வோர் தனிநபர்களாக இருந்தாலும் தங்களை பெண்ணியவாதி என்று அழைத்துக் கொள்கிறார்கள்.

பெண்ணியவாதம் ஒரு பெண்ணின் தனி உரிமைக்கான வாழ்வியல் என்பது தனிநபர் உரிமை பற்றி மட்டும் பேசும் கருத்தாக சுருங்கி விடுகிறது. மாறாக அது சமூகத்தில் பெண்களின் உரிமைகளுக்கான இசமாக இருக்கும் போது சமூக மாற்றத்தில் அதற்கும் ஒரு பங்கிருக்கிறது. அத்தகைய சமூக நோக்கிலான பெண்ணிய அமைப்புகளை கம்யூனிசம் நேச சக்தியாகவே பார்க்கிறது, கொள்கையில் வேறுபாடு இருந்தாலும்!

நன்றி!

o0o0o

கேள்வி:
தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் இழுத்தடிக்கப் படுகிறது?
அசோக்

அன்புள்ள அசோக்,

பாஜக எஜமானர்களின் விசுவாசமான அடிமையாக புதிய தமிழகம் கிருஷ்ணசாமி அரசியல் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது நீங்கள் குறிப்பிடும் பெயர் மாற்றம் ஏன் இழுபடுகிறது, எங்களுக்கும் புரியவில்லை.

o0o0o

கேள்வி:
இன்று தஞ்சை கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய் என்று போராடும் தமிழ்தேசிய தலைவர்கள் அன்று சிதம்பரம் கோவிலில் ஐயா ஆறுமுகசாமியோடு தமிழில் பாட சிற்றம்பலம் ஏறாதது ஏன்?

சி. நெப்போலியன்

அன்புள்ள நெப்போலியன்,

இப்படி எதிர்மறையாகப் பார்க்கத் தேவையில்லை. சிதம்பரம் கோவில் தமிழ் பாடும் போராட்டம், திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம், அனைத்து சாதி அர்ச்சகர் போராட்டம், தமிழ் மக்கள் இசை விழா என்று பார்ப்பனியத்திற்கு எதிரான தமிழ் மக்களின் பண்பாட்டுப் போராட்டத்தை ம.க.இ.க. மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் தீவிரமாக நடத்தின. அன்றைக்கு தமிழ் தேசியர்கள் அவற்றில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் தார்மீக ரீதியான ஆதரவைத் தந்தார்கள். இன்றைக்கு அவர்கள் தஞ்சை குடமுழுக்கு போராட்டத்தை முன்னின்று நடத்துவதை நாம் வரவேற்க வேண்டும். தமிழ் மக்களின் தன்னுரிமைப் போராட்டத்தில் பார்ப்பனியத்திற்கு எதிராக போராட வேண்டிய அவசியத்தை அவர்களும் புரிந்து கொண்டிருப்பது நல்ல விசயம்தானே?

o0o0o

TNPSC மோசடி : இது வெறும் ஊழல் அல்ல ! உங்கள் உழைப்பை அழிப்பது !

12

மிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகி வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழக அரசுப் பணிகளுக்குத் தேவையானவர்களை குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 3 மற்றும் குரூப் 4 ஆகிய போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு தேர்வாணையம் ஏற்படுத்தப்பட்டது.  இந்தத் தேர்வுகளில் வெல்பவர்கள் அரசு அலுவலகங்களில் உதவியாளர் முதல் வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளில் அமர்த்தப்படுவர்.

கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குரூப் 4 எனும் நான்காம் நிலை அரசுப் பணியாளர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் நவம்பர் மாதம் வெளியானது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், சர்வேயர், தட்டச்சர் போன்ற பணிகளுக்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வு 5,575 மையங்களில் நடந்தது; மொத்தம் 16,29,865 பேர் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் வெளியாக அதன் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட போது அதில் முதல் 100 இடங்களில் இருந்தவர்களில் 35 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரண்டு இடங்களில் இருந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களாக இருந்தனர். இவர்களில் பலர் வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

இவ்வாறு வேறு மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் வந்து தேர்வெழுதியவர்கள் அதற்காக சொன்ன காரணமும் ஒரே போல் இருக்கவே, இதில் முறைகேடு இருப்பதாக மற்ற போட்டியாளர்கள் கூறினர். இதையடுத்து, தேர்வாணையம் சிபிசிஐடி விசாரணை கோரியது. போலீசார் நடத்திய விசாரணையில் 99 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

படிக்க :
♦ நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !
♦ வியாபம் ஊழல் : பார்ப்பன கிரிமினல்தனம் !

முறைகேடுகளில் ஈடுபட்டவர்களின் மேல் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார்,  இதுவரை தேர்வர்கள் உட்பட 14 பேரை கைது செய்துள்ளனர். மேலும், கீழக்கரை வட்டாட்சியர் வீரராஜ், ராமேஸ்வரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி ஆகியோர் விசாரணை செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குற்றம் எவ்வாறு நடந்தது என்பதற்கு சிபிசிஐடி போலீசார் எழுதியுள்ள திரைக்கதை நமது சந்தேகத்தை மேலும் அதிகரிப்பதாக உள்ளது.

முதலிடம் பெற்ற 100 பேரின் தேர்வுத் தாள்கள் சோதிக்கப்பட்டபோது, அதில் 52 பேரின் தேர்வுத் தாள்கள் மாயமாகும் மையால் முதலில் நிரப்பப்பட்டு, பிறகு திருத்தம் செய்யப்பட்டது என்பது தெரியவந்தாம். அதாவது முதலில் மாயமாகும் மையால் எழுதி, அந்த விடைத்தாள்கள் திருத்தும் மையத்திற்கு வந்து சேரும் இடைவெளியில் நல்ல மையால் எழுதப்பட்டது என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதில் ஓம் கந்தன் என்பரே மூளை என்பதாகச் சொல்லி கைதுள்ளனர் போலீசார். ஓம் கந்தனும், சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்கிற இடைத்தரகரும் சேர்ந்துதான் இந்த முறைகேட்டை நடத்தியுள்ளனர்.

மாதிரி படம்
மாதிரி படம்

ராமேஸ்வரம், கீழக்கரை பகுதி தேர்வு மையத்தில் தனக்கு பணம் கொடுத்தவர்களை தேர்வெழுதச் செய்த ஜெயக்குமார், தன்னிடம் பணம் கொடுத்தவர்களுக்கு, எழுதி சிறிது நேரத்தில் மாயமாகும் பேனாக்களைக் கொடுத்துள்ளார். ‘மேஜிக்’ பேனாக்களால் நிரப்பப்பட்ட விடைத்தாள்கள் தேர்வு முடிந்த பின் ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்தில் பத்திரமாக வைக்கப்பட்டன. விடைத்தாள்களை அங்கிருந்து சென்னை தேர்வாணையத்திற்கு கொண்டு செல்லும் பணியில் உள்ள மாணிக்கவேலு என்பவரின் உதவியாளர்தான் ஓம் கந்தன்.

குறிப்பிட்ட நாளில் விடைத்தாள் பண்டல்கள் ஒரு தனியார் சரக்கு வாகனத்தில் ஏற்றி போலீசு பாதுகாப்புடன் சென்னைக்குப் அனுப்பப்பட்டன. உடன் மாணிக்க வேலுவும், ஓம் கந்தனும் சென்றுள்ளனர். சென்னை வரும் வழியில் சிவகங்கையில் தேர்வெழுதியவர்களின் விடைத்தாள்களும் அதே வாகனத்தில் ஏற்றப்பட்டன. இந்த வாகனத்தை ஜெயக்குமார் தனது காரில் பின் தொடர்ந்தார். விடைத்தாள்களை ஏற்றிவந்த வாகனம் சிவகங்கையைத் தாண்டிய பிறகு, சிறிது தூரத்தில் உணவிற்கென நிறுத்தினார் ஓம் கந்தன்.

மற்றவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வண்டிக்கு திரும்பிய ஓம் கந்தன், குறிப்பிட்ட பண்டல்களை எடுத்து ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளார். அந்த விடைத்தாள்கள் மேஜிக் மையால் எழுதப்பட்டு அழிந்து போனவை; அதில் ஜெயக்குமார் சரியான பதிலை எழுதியுள்ளார். எப்படி? சென்னை வரும் வழியில் ஓடும் காரில் வைத்தே எழுதியுள்ளார். பின்னர் மீண்டும் அதிகாலை விழுப்புரம் அருகில் உள்ள விக்ரவாண்டியில் விடைத்தாள்களின் வாகனம் மீண்டும் தேனீர் கடை ஒன்றில் நிறுத்தப்பட்டது. அப்போது ஜெயக்குமாரிடமிருந்து திருத்தப்பட்ட விடைத்தாள்களை ஓம் கந்தன் பெற்று மற்ற பண்டில்களோடு சேர்த்துள்ளார்.

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தை விஞ்சும் இந்த சாகசத்தில் ஈடுபட்டதற்காக தேர்வாணையத்தில் எழுத்தராக பணிபுரியும் ஓம் கந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பிறரும் இதே போல் கடை நிலை ஊழியர்களும், இடைத்தரகர்களும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

o0o

இதற்கிடையே கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி நடந்த குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேற்படி தேர்வில் தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 56 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். கடந்த 2018-ம் ஆண்டு குரூப்-2ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்கள் தற்போது தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.

2017-ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வில் சுமார் 42 பேர் முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் வடிவு, சென்னை பட்டினப்பாக்கம் பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஞானசம்பந்தம், செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஆனந்தன் ஆகியோர் குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் கைதாகி உள்ளனனர்.

இந்த முறைகேட்டிலும் குரூப்-4 தேர்வில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் மற்றும் போலீஸ்காரர் சித்தாண்டி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. குரூப்-2ஏ தேர்வு எழுதியவர்களிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு மோசடியை அரங்கேற்றி இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குரூப்-4 விடைத்தாள்கள் ஓடும் வாகனத்தில் திருத்தப்பட்டது போன்றே குரூப்-2ஏ தேர்வு விடைத்தாள்களும் ஓடும் வாகனத்தில் திருத்தப்பட்டுள்ளன. இதில் “மேஜிக்” மை உபயோகப்படுத்தப்படவில்லை. மாறாக, தெரியாத கேள்விகளுக்கான பதில்களை எழுதாமல் விட்டுள்ளனர். நம் ஜெயக்குமார், ஓடும் காரில் வைத்து அந்த வினாக்களுக்கான பதிலை நிரப்பியுள்ளார்.

o0o

கைது செய்யப்பட்டிருப்பவர்கள் அனைவரும் கடைநிலை ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். அரசுப் பணியிடங்கள் நிரப்புவதில் லஞ்சம் விளையாடும் என்பது யாருக்கும் தெரியாத இரகசியம் அல்ல. பாமர மக்களுக்கே இந்த விசயம் தெரியும். மேலும், கொடுக்கப்படும் லஞ்சம் யார் வழியாக யார் யாரையெல்லாம் சென்றடையும் என்பதும் தெரிந்த விசயங்கள்தான். இந்த முறை ஒருபடி மேல் சென்று தேர்விலேயே முறைகேடுகள் செய்துள்ளார்கள் என்பதுதான் வேறுபாடு.

மத்தியபிரதேச மாநில தேர்வாணையமான “வியாபம்” நடத்திய தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் வெளியாகி நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை நாம் மறந்திருக்க மாட்டோம். ஏறக்குறைய இங்கும் அதே பாணியில்தான் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்தளவுக்கு துணிகரமாக முறைகேடுகளும், மோசடிகளும் நடைபெறுகிறது என்றால் அதை வெறுமனே கடைநிலை ஊழியர்கள் மட்டும் திட்டமிட்டு செயல்படுத்தி விட முடியாது. விடைத்தாள் பண்டில்களின் பாதுகாப்புக்கு போலீசார் இருக்கும் போது அதை இடையே “தேனீர் இடைவெளியின்” போது கைப்பற்றுவதோ மீண்டும் இன்னொரு ”தேனீர் இடைவெளியின்” போது மாற்றி வைப்பதோ சாத்தியமல்ல.

படிக்க :
♦ ஆர்.எஸ்.எஸ் ஹெட்கேவாரா – சுயமரியாதை பெரியாரா ? யாரை தெரிவு செய்வது ?
♦ வெடியோசையில் உயிர்த்தெழும் காந்தி | மனுஷ்ய புத்திரன் கவிதை

இந்த விவகாரத்தை நியாயமாக விசாரித்தால் இதில் சம்பந்தப்பட்ட பெரிய தலைகளின் பெயர்கள் அம்பலமாகும். ஆனால் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி புரட்சித்தலைவின் ஆசியும், மத்திய அரசின் ஆதரவும் பெற்றது என்பதை வைத்துப் பார்க்கும்போது இந்த வழக்கும் மத்திய பிரதேசத்தின் வியாபம் ஊழல் விசாரணை சென்ற திசையில் தான் செல்லும் என்பதை சொல்லத் தேவையில்லை.

இது வெறுமனே ஊழல் அல்ல; தங்களின் வேலை வாய்ப்புகளை கொள்ளையடிக்கும் முயற்சி என்பதை மக்கள் உணர வேண்டும். அதே போல் இப்படி முறைகேடான வழிகளில் அரசு பதவிக்கு வருபவர்கள்தான் அரசு திட்டங்களை செயல்படுத்தப் போகிறார்கள் என்றால், அந்த திட்டங்கள் எந்தளவுக்கு நியாயமாக செயல்படுத்தப்படும் என்பதையும் மக்கள் புரிந்து கொண்டு களத்தில் இறங்கிப் போராட வேண்டும்.

மித்ரன்