Friday, July 11, 2025
முகப்பு பதிவு பக்கம் 393

அவர்கள் பழத்தைப் பிழிந்து சாறு எடுப்பது போல் நம் ரத்தத்தைக் கசக்கிப் பிழிகிறார்கள்

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 27

மாக்சிம் கார்க்கி

வள் வெளியே வந்தபோது, எங்கு பார்த்தாலும் அவள் எதிர்பார்த்த இரைச்சல், உத்வேகமயமான ஜனங்களின் கூச்சல் நிறைந்து ஒலித்தது. வாசல் நடைகளிலும், ஜன்னல்களிலும் கூட்டம் கூட்டமாக நின்றவாறு பாவெலையும் அந்திரேயையும் ஜனங்கள் ஆவல் நிறைந்த கண்களுடன் பார்ப்பதைக் கண்டதும் அவளது கண்கள் இருண்டு, அந்த இருளில் ஏதோ ஒரு புது நிற ஒளி நிழலிட்டு ஆடுவது போல் அவளுக்குத் தோன்றியது.

ஜனங்கள் அவர்களோடு குசலம் விசாரித்துக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் அன்று சேமம் விசாரித்த பாவனையில் ஏதோ ஒரு புதிய அர்த்தம் பொதிந்திருப்பதாகத் தோன்றியது. அவர்கள் அமைதியோடு சொன்ன வார்த்தைகள் அவள் காதில் அரை குறையாக விழுந்தன.

“அதோ, தலைவர்கள் போகிறார்கள்.”

”நமக்குத் தலைவர்கள் யாரென்றே தெரியாது.”

“நான் ஒன்றும் தப்பாய்ச் சொல்லவில்லையே.”

வேறொரு வாசலிலிருந்து யாரோ உரக்கச் சத்தமிட்டுச் சொன்னார்கள்:
“போலீஸார் அவர்களைப் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள்; அத்துடன் அவர்கள் தொலைந்தார்கள்”

“அவர்கள்தான் ஏற்கெனவே இவர்களைக் கொண்டு போனார்களே!’

ஒரு பெண்ணின் அழுகுரல் ஜன்னல் வழியாகப் பாய்ந்து வந்து தெருவில் எதிரொலித்தது.

”நீ செய்யப்போகிற காரியத்தை யோசித்துப்பார். நீ ஒன்றும் கல்யாணமாகாத தனிக்கட்டைப் பிரம்மச்சாரியில்லை!”

அவர்கள் அந்த நொண்டி ஜோசிமவ் வீட்டின் முன்பாகச் சென்றார்கள். ஜோசிமவ் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது காலை முறித்துக் கொண்டுவிட்டான். அதிலிருந்து அவன் நொண்டியாய்ப் போனான்; தொழிற்சாலை மாதாமாதம் அவனுக்குக் கொடுக்கும் ஓய்வுச் சம்பளத்தில் காலம் தள்ளி வருபவன் அவன்.

”பாவெல்!” என்று தன் தலையை ஜன்னல் வழியாக வெளியே நீட்டிக்கொண்டு கத்தினான் அவன். “அடே போக்கிரி அவர்கள் உன் கழுத்தை முறித்து விடுவார்களடா. உனக்கு என்ன நேரப் போகிறது பார்!”

தாய் ஒரு கணம் நடுநடுங்கி, பிரமையடித்து நின்றாள். அவள் உள்ளத்தில் கூர்மையான கோப உணர்ச்சி ஒரு கணம் ஊடுருவிச் சென்றது. அவள் அந்த நொண்டியின் கொழுத்துத் தொள தொளத்த முகத்தைப் பார்த்தாள். அவன் ஏதோ திட்டிவிட்டு தலையை உள்ளே இழுத்துக்கொண்டான். அவள் வெகு வேகமாக நடந்து சென்று தன் மகனை எட்டிப் பிடித்தாள். அவனுக்குப் பின்னாலேயே நடந்தாள். கொஞ்சம் கூடப் பிந்தாமல் நடக்க முயன்றாள்.

பாவெலும் அந்திரேயும் எதைப்பற்றியும் கவலை கொண்டதாகவோ கவனித்ததாகவோ தெரியவில்லை. அவர்களைக் குறித்துச் சொல்லப்படும் பேச்சுக்கள் கூட அவர்கள் காதில் விழவில்லை. அவர்கள் அமைதியாகவும் அவசரமில்லாமலும் நடந்து சென்றார்கள். போகும் வழியில் அவர்களை மிரோனவ் நிறுத்தினான். அவன் ஒரு அடக்கமான மத்திம வயது ஆசாமி. அவனது நேர்மையும் நாணயமும் பொருந்திய வாழ்வினால் எல்லோரிடமும் நன்மதிப்பு பெற்றிருந்தான்.

”நீங்கள் கூட வேலைக்குப் போகவில்லையா. தனீலோ இவானவிச்?” என்று கேட்டான் பாவெல் .

“இல்லை. என் மனைவிக்கு இது பிரசவ நேரம். மேலும், எல்லோரும் இப்படி உற்சாகமாயிருக்கிற நாளிலே….” அவன் தனது தோழர்களை ஒரு முறை சுற்றிப் பார்த்து விட்டுத் தணிந்த குரலில் சொன்னான்.

”நீங்கள் இன்று தொழிற்சாலை மானேஜருக்கு ஏதோ தொந்தரவு கொடுக்கப் போவதாக, சில ஜன்னல்களை உடைத்தெறியப் போவதாக, பேச்சு நடமாடுகிறதே. உண்மைதானா?” என்று கேட்டான்.

”நாங்கள் ஒன்றும் குடிகாரர்களில்லையே” என்றான் பாவெல்.

”நாங்கள் வெறுமனே தெருவழியே அணிவகுத்துச் செல்லுவோம். கொடிகளைத் தாங்கிக் கொண்டும், பாட்டுக்களைப் பாடிக்கொண்டும் செல்லத்தான் உத்தேசம்” என்றான் ஹஹோல். ”நீங்கள் எங்கள் பாட்டுக்களைக் கேளுங்கள். அதுதான் எங்கள் நம்பிக்கையின், கொள்கையின் குரல்!”

“உங்கள் கொள்கையெல்லாம் எனக்குத் தெரியும் என்று ஏதோ சிந்தித்தவாறே சொன்னான் மிரோனவ். ”பிறகு நான்தான் எங்கள் பத்திரிகைகளைப் படிக்கிறேனே. ஆ! பெலகேயா நீலவ்னா! நீயுமா?’ என்று தாயைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு சத்தமிட்டான்; “நீயுமா இந்தப் புரட்சியில் கலந்துவிட்டாய்?”

“சாவதற்கு முன்னால் நான் ஒரு முறையேனும் சத்தியத்தோடு அணி வகுத்துச் செல்ல வேண்டும்!”

”அடி சக்கை! ஆனால், நீதான் தொழிற்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பிரசுரங்களைக் கொண்டு வந்தாய் என்று அவர்கள் சொல்லிக் கொள்வது உண்மை என்றுதான் தோன்றுகிறது.”

“யார் அப்படிச் சொன்னது?” என்று கேட்டான் பாவெல்.

“ஹம். அவர்கள் அப்படித்தான் சொன்னார்கள். சரி, நான் வருகிறேன். நீங்கள் கட்டுப்பாடோடு நடந்து கொள்ளுங்கள்.”

தாய் அமைதியோடு புன்னகை புரிந்தாள். அவர்கள் தன்னைப்பற்று அப்படிப் பேசிக் கொண்டார்கள் என்பதைக் கேட்பதற்கு அவளுக்கு ஆனந்தமாயிருந்தது.

“நீயும் கூடச் சிறைக்குப் போவாய், அம்மா!” என்று சிரித்துக் கொண்டே சொன்னான். பாவெல்.

சூரியன் மேலெழுந்தது. வசந்த பருவத்தின் புதுமையிலே தனது கதகதப்பைப் பொழியத் தொடங்கியது. மேகங்கள் கலைந்து போய்விட்டன. அவற்றின் நிழல்கள் தெளிவற்று உலைந்து போய்விட்டன. மேகங்கள் தெருவுக்கு மேலாக மெதுவாக நகர்ந்து. வீட்டுக் கூரைகள் மீதும், மனிதர்கள் மீதும் தவழ்ந்து. அந்தக் குடியிருப்பு முழுவதையுமே தூசி தும்பு இல்லாமல் துடைத்துச் சுத்தப்படுத்துவது போலவும், மக்களது முகங்களில் காணப்பட்ட சோர்வையும் களைப்பையும் நீக்கிக் களைத்துவிடுவது போலவும் தோன்றியது. எல்லாமே ஒரே குதூகலமயமாய்த் தோன்றியது. குரல்கள் பலத்து ஒலித்தன; ஆலையின் யந்திர ஒலத்தை மக்கள் ஆரவாரக் குரல்கள் அமுங்கடித்து விழுங்கிவிட்டன

மீண்டும் ஜன்னல்களிலிருந்தும் வாயிற் புறங்களிலிருந்தும் ஜனங்கள் பேசிக்கொள்ளும் பல்வேறு பேச்சுக்கள் தாயின் காதில் விழத்தொடங்கின. அந்தப் பேச்சுக்களில் சில விஷம் தோய்ந்ததாகவும், பயமுறுத்துவதாயும் இருந்தன. சில உற்சாகமும் சிந்தனையும் நிறைந்து ஒலித்தன. ஆனால் இந்தத் தடவை அவளுக்கு அந்தப் பேச்சுக்களை வெறுமனே கேட்டுக்கொண்டு மட்டும் போக முடியவில்லை. அந்தந்தப் பேச்சுக்குத் தக்கவாறு எதிருரை கூறவும் விளக்கவும், வந்தனம் கூறவும் விரும்பினாள் அவள். பொதுவாக அன்றைய தினத்தின் பல்வேறான வாழ்க்கை அம்சங்களிலேயும் அவள் பங்கெடுத்துக் கொள்ள விரும்பினாள்.

ஒரு சின்னச் சந்து திரும்பும் மூலையில் சுமார் நூறு பேர்கள் கூடி நின்றார்கள். அவர்களுக்கு மத்தியிலிருந்து நிகலாய் வெஸோவ்ஷிகோவின் குரல் உரத்து ஓங்கி ஒலித்தது.

“அவர்கள் பழத்தைப் பிழிந்து சாறு எடுப்பது போல், நம் ரத்தத்தைக் கசக்கிப் பிழிகிறார்கள்” என்று சொன்னான் அவன். அவனது வார்த்தைகள் ஜனங்களது மூளையை முரட்டுத்தனமாகத் தாக்கின.

”அது சரிதான் ஆமாம்!” என்று பல்வேறு குரல்கள் ஒரே சமயத்தில் ஒலித்தன.

”இந்தப் பயல் ஏதோ தன்னாலான மட்டும் முயல்கிறான். இரு. நான் போய் அவனுக்கு உதவுகிறேன்” என்று சொன்னான் ஹஹோல்.

பாவெல் அவனைத் தடுத்து நிறுத்துவதற்கு முன்னால் அவன் தனது நெடிய மெலிந்த உடலோடு, ஒரு கார்க்கைத் திருகித் துளைத்துச் செல்லும் திறப்பான் போல. அந்தக் கூட்டத்துக்குள் ஊடுருவி உள்ளே சென்றுவிட்டான்.

“தோழர்களே! இன்று நாம் யார் என்பதைப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்துவதென்று முடிவு செய்திருக்கிறோம். இன்று நாம் நமது கொடியை உயர்த்துவோம். நமது கொடியை – அறிவு. நியாயம், சுதந்திரம் முதலியவற்றின் சின்னமான நமது கொடியை ஏந்திப்பிடிப்போம்!”

செழித்துக் கனத்த குரலில் அவன் சத்தமிட்டான்: “தோழர்களே! உலகில் பல்வேறு இன மக்கள் குடியிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். யூதர்கள், ஜெர்மானியர்கள், ஆங்கிலேயர்கள், தாத்தாரியர்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் நான் அதை நம்பவில்லை. உலகில் இனங்கள் இரண்டே இரண்டுதான் – ஒன்றுக்கொன்று ஒத்துக்கொள்ளாத இரண்டே மனித குலங்கள்தான் இருக்கின்றன. ஒன்று பணக்காரர் குலம்; மற்றொன்று பஞ்சை ஏழைகளின் குலம்! ஜனங்கள் வெவ்வேறு விதமாக உடை உடுத்தலாம்; வெவ்வேறு மாதிரியான மொழிகளில் பேசலாம். ஆனால் பிரஞ்சுக்காரராகட்டும். ஜெர்மானியராகட்டும். ஆங்கிலேயராகட்டும் – அவர்களில் பணக்காரராயிருப்பவர்கள் உழைக்கும் மக்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை மட்டும் நீங்கள் தெரிந்து கொண்டால், அவர்களை அனைவருமே தொழிலாளர்களை ஒன்று போலவே நடத்துகிறார்கள், என்பதை அவர்கள் தான் தொழிலாளரை உறிஞ்சிக் குடிக்கும் கொள்ளை நோய் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்!”

கூட்டத்தில் யாரோ சிரிப்பது கேட்டது.

”ஆனால், அதே சமயத்தில் – தாத்தாரியனானாலும், பிரஞ்சுக் காரனானாலும் அல்லது துருக்கியனானாலும் – எந்த நாட்டுத் தொழிலாளியானாலும் சரி அவர்களையும் நீங்கள் பாருங்கள். அப்படிப் பார்த்தால், ருஷியாவிலுள்ள தொழிலாளர்கள் எப்படி நாயினும் கேடு கெட்டு வாழ்கிறார்களோ அதே வாழ்க்கையைத்தான் சகல நாட்டுத் தொழிலாளர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்?”

அந்தச் சந்துப் பாதையில் மேலும் மேலும் ஜனங்கள் கூடினார்கள். அவர்கள் தங்கள் கழுத்துக்களை எட்டி நீட்டிக்கொண்டும் குதிக்காலால் எழும்பி நின்று கொண்டும் ஒரு வார்த்தை கூடப் பேசாது அவன் பேசுவதைக் கேட்டார்கள்.

அந்திரேய் தன் குரலை மேலும் உயர்த்தினான்,

“வெளி நாடுகளிலுள்ள தொழிலாள மக்கள் இச்சாதாரண உண்மையை ஏற்கெனவே தெரிந்து கொண்டுவிட்டார்கள். இன்று, இந்த மே மாதப் பிறப்பன்று……”

“போலீஸ்!” என்று யாரோ கத்தினார்கள்.

நாலு குதிரைப் போலீஸ்காரர்கள் அந்தச் சந்துக்கள் நேராக வந்து குதிரைகளைக் கூட்டத்துக்குள் செலுத்தினார்கள். தங்களது கையிலிருந்த சவுக்குகளால் வீசி விளாசி அறைந்து கொண்டு சத்தமிட்டார்கள்.

”கலைந்து போங்கள்!”

மக்கள் தங்கள் முகங்களைச் சுழித்துக்கொண்டே அந்தக் குதிரைகளுக்கு வழிவிட்டு ஒதுங்கினார்கள். சிலர் பக்கத்திலிருந்த வேலிப்புறத்தில் ஏறிக்கொண்டு விட்டார்கள்.

”அடடே! குதிரைகளின் முதுகிலே பன்றிகளைப் பாரு டோய்!” ‘வீராதி வீரருக்கு வழிவிடு’ என்று இவை கத்துவதைக் கேளுடோய்’!’ என்று எவனோ உரத்துக் கத்தினான்.

ஹஹோல் தெருவின் மத்தியில் அசையாது நின்று கொண்டிருந்தான். இரண்டு குதிரைகள் அவன் பக்கமாக தலையை அசைத்தாட்டிக்கொண்டே நெருங்கி வந்தன. அவன் ஒரு பக்கமாக ஒதுங்கினான். அந்த சமயத்தில் தாய் அவனது கையைப் பற்றி பிடித்து அவனைத் தன் பக்கமாக விருட்டென்று இழுத்தாள்.

“நீ பாவெல் பக்கமாக நிற்பதாய் எனக்கு வாக்குக் கொடுத்திருக்கிறாய். ஆனால், இங்கேயோ தன்னந்தனியாக எல்லாத் தொல்லைகளையும் நீயே ஏற்கிறாய்” என்று முணுமுணுத்தாள் அவள்.

”ஆயிரம் தடவை மன்னிப்புப் போதுமா?” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் ஹஹோல்.

ஒரு கனமான, பயங்கரமான நடுக்கம் நிறைந்த ஆயாச உணர்ச்சி தாயின் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து மேலெழும்பி அவளை ஆட்கொண்டது. அவளது தலை சுழன்றது. இன்பமும் துன்பமும் மாறிமாறி ஏதோ ஒரு மயக்கம் உண்டாயிற்று. மத்தியானச் சாப்பாட்டுக்கு எப்போதடா சங்கு அலறும் என்று ஆதங்கப்பட்டுத் தவித்தாள் அவள்.

அவர்கள் தேவாலயம் இருந்த சதுக்கத்துக்கு வந்து சேர்ந்தார்கள். தேவாலயச் சுற்றுப்புறத்தில் உற்சாகம் நிறைந்த இளைஞர்களும் குழந்தைகளுமாக சுமார் ஐநூறு பேர் கூடியிருந்தார்கள். கூட்டம் முன்னும் பின்னும் அலைமோதிக் கொண்டிருந்தது. மக்கள் பொறுமையற்று தங்கள் தலைகளை நிமிர்த்தி உயர்த்தித் தூரத்தையே ஏறிட்டுப் பார்த்து எதையோ எதிர்நோக்கித் தவித்துக்கொண்டு நின்றார்கள். ஒரே உத்வேக உணர்ச்சி எங்கும் பரிணமித்துப் பரந்தது. சிலர் செய்வது இன்னதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் பிரமாதமான தைரியசாலிகள் போலப் பாவனை பண்ணிக் கொண்டிருந்தார்கள். பெண்களின் கசமுசப்புக்குரல் மங்கியொலித்தது. அவர்கள் பக்கத்திலிருந்து ஆண்கள் விலகிச் சென்றார்கள்; வைது திட்டும் வசவுக் குரல்கள் மங்கி ஒலித்தன. அந்தக் கும்பிக் குமைந்து நின்ற கும்பலில் ஒரு இனந்தெரியாத வெறுப்புணர்ச்சி சலசலத்தது.

படிக்க:
சரிந்தது தென்னை மரங்கள் மட்டுமல்ல – ஒரு தலைமுறை உழைப்பும்தான் ! நேரடி ரிப்போர்ட் !
பாசிசத்தை வீழ்த்த நவம்பர் புரட்சி நாளில் சூளுரைப்போம் | கணேசன்

”மீத்யா!” என்று ஒரு ஒடுக்கக் குரல் கேட்டது. ‘உன்னைக் கவனித்துக் கொள்!”

”என்னைப் பற்றிக் கவலைப்படாதே” என்று ஒலித்தது பதில்.

சிஸோவின் அழுத்தமான குரல் அமைதியாகவும் ஆணித்தரமாகவும் ஒலித்தது: ”இல்லை. நாம் நமது பிள்ளைகளைப் புறக்கணித்து உதறித் தள்ளிவிடக்கூடாது. நம்மைவிட அவர்களுக்கு அதிகமாக அறிவு உண்டு. துணிச்சல் உண்டு. சாக்கடைக் காசு சம்பவத்தின்போது, அதைத் துணிந்து எதிர்த்து நின்றது யார்? அவர்கள் தான் அதை நாம் மறந்துவிடக்கூடாது. அவர்கள் அதற்காகச் சிறைக்குச் சென்றார்கள்; ஆனால் அதனால் பயன் அடைந்ததோ நாம் அனைவரும்தான்.”

ஜனங்களுடைய குரல்களையெல்லாம் விழுங்கியவாறு. ஆலைச் சங்கு தனது அழுமூஞ்சிக் குரலில் அலறியது. கூட்டத்தாரிடையே ஒரு சிறுநடுக்கம் குளிர்ந்தோடிப் பரவியது. உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து நின்றார்கள். ஒரு கணநேரம் எல்லோரும் வாய்மூடி கம்மென்று இருந்தார்கள். எல்லோரும் விழிப்போடு நின்றார்கள். பலருடைய முகங்கள் வெளுத்துப் பசந்தன.

“தோழர்களே!’ பாவெலின் செழுமையான மணிக்குரல் கணீரென ஒலித்தது. தாயின் கண்களில் கதகதப்பான நீர்த்திரை உறுத்துவது போலிருந்தது. அவன் விசுக்கென்று தாவிச் சென்று தன் மகனருகே நின்று கொண்டாள். எல்லோரும் பாவெலின் பக்கமாகத் திரும்பினார்கள்; காந்தத்தால் இழுக்கப்பட்ட இரும்புத் தூளைப் போல எல்லோரும் அவனைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டார்கள்.

தாய் அவனது முகத்தைப் பார்த்தாள். தைரியமும் கர்வமும் கனன்று பிரகாசிக்கும் அவனது கண்களை மட்டுமே கவனித்துப் பார்த்தாள்.

“தோழர்களே! இன்று நாம் யார் என்பதைப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்துவதென்று முடிவு செய்திருக்கிறோம். இன்று நாம் நமது கொடியை உயர்த்துவோம். நமது கொடியை – அறிவு. நியாயம், சுதந்திரம் முதலியவற்றின் சின்னமான நமது கொடியை ஏந்திப்பிடிப்போம்!”

திடீரென்று ஒரு வெள்ளையான கொடிக்கம்பம் வானில் மேலோங்கி, மீண்டும் கூட்டத்திடையே தாழ்ந்து இறங்கியது. அந்தக் கொடிக்கம்புக்கு வழிவிட்டு மக்கள் விலகினர். ஒரு கணநேரம் கழித்துத் தொழிலாளர் வர்க்கத்தின் விசாலமான செங்கொடி, அண்ணாந்து நோக்கும் மக்களின் முகங்களுக்கு மேலாக நிமிர்ந்து உயர்ந்தது; ஒரு பெரும் செம்பறவையைப் போல் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தது!

பாவெல் தன் கையை உயர்த்திக் கொடியை ஆட்டினான். பல பேருடைய கைகள் அந்த வெண்மையான கொடிக்கம்பைப் பற்றிப் பிடித்தன. அவற்றில் தாயின் கரமும் பங்கெடுத்துக் கொண்டிருந்தது.

”தொழிலாளர் வர்க்கம் நீடூழி வாழ்க!” என்று கோசமிட்டான் பாவெல்.

நூற்றுக் கணக்கான குரல்கள் அந்த கோஷத்தை எதிரொலித்தன.

”சோஷல் – டெமொக்ரடிக் தொழிலாளர் கட்சி நீடுழி வாழ்க! இதுதான் நமது கட்சி , தோழர்களே, நமது கருத்துக்களின் ஜீவ ஊற்று!”

ஜனக்கூட்டம் பொங்கியது; அந்தக் கொடியின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் அதனை நோக்கி விரைந்து சென்றனர். எனவே மாசின், சமோய்லவ், கூஸெவ் சகோதரர்கள் முதலியோர் அனைவரும் பாவெலை அடுத்து வந்து நின்று கொண்டார்கள். நிகலாய் தன் தலையைக் குனிந்து, கூட்டத்தைப் பிளந்து கொண்டு முன்னேறினான். தனக்கு இனந்தெரியாத வேறு சில உற்சாகம் நிறைந்த வாலிபர்கள் தன்னை நெருங்கித் தள்ளிக்கொண்டு முன்னேறுவதை தாய் உணர்ந்தாள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

ஆதிக்க சாதிவெறி – பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் | முகிலன் கேலிச்சித்திரங்கள்

சென்னையில் நடைபெற்ற நவம்பர் புரட்சிதின விழா நிகழ்வில் நடப்பு அரசியல் நிகழ்வுகள் மீதான எதிர்வினையாற்றும் விதமாக ஓவியர் முகிலனின் அரசியல் கேலிச்சித்திரங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் தொகுப்பு

ஆதிக்க சாதி வெறி

அரங்கேறி வரும் ஆணவப் படுகொலைகள்!
தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஏவப்படும் வன்கொடுமைகள்.

சபரிமலையில் பெண்கள் நுழையத் தடை

பெண் தீட்டு!

MeToo – பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்

பாரத மாதா பத்திரமா இருந்துக்கம்மா!
பாரதமாதாவும் MeToo-வும்!
இந்துத்துவ வெறியர்களால் குதறப்பட்ட ஆசிஃபா!
பிஞ்சை குதறிய மிருகங்களுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. கும்பல் தேசியக் கொடியுடன் ஊர்வலம்!
கயர்லாஞ்சி : சாதி இந்துக்களால் நிர்வாணமாக்கி பிறப்புறுப்பை சிதைத்து கொடூரமாகக் கொல்லப்பட்ட பையாலால் போட்மாங்கே குடும்பம்.
பெண்ணை வேட்டையாடும் ஆணாதிக்கச் சமூகம்!
சேலம் ராஜலட்சுமி கழுத்தறுத்து கொலை! சாதி வெறி – பாலியல் வன்முறையின் கூட்டணி!

ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. கும்பலின் காவி பாசிசம்

எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகளை குறி வைக்கும் திரிசூலம்!
ராம ராஜ்ஜியம்!
பார்ப்பன பாசிஸ்டுகளை எதிர்த்து நின்ற வீராங்கனை கவுரி லங்கேஷ் !
பலி பீடத்தில் ரோகித் வெமுலாக்கள்!
காக்கிச் சட்டைக்குள் ஒளிந்திருக்கும் காவி பாசிசம்!
காவிகளின் கட்டிலில் நீதி தேவதை!

கேலிச்சித்திரங்கள்: ஓவியர் முகிலன்

பார்ப்பனக் கொழுப்பை பட்டுத் தெரிந்து கொண்ட டிவிட்டர் சி.இ.ஓ !

‘பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம்’ என எழுதப்பட்ட பதாகையை பிடித்த காரணத்துக்காக டிவிட்டர் சமூக வலைத்தளத்தின் தலைமைச் செயல் அதிகாரி இந்துத்துவ லிபரல் பார்ப்பனர்களின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார். ”சாதி படிநிலையில் மேலே உள்ள பார்ப்பனர்களின் ஆணாதிக்கத்தனம் ஒழிக்கப்பட வேண்டும்” என பொருள்படி எழுதப்பட்ட அந்தப் பதாகையின் கருத்தை டிவிட்டரோ அதன் செயல் அதிகாரியோ பிரதிபலிக்கவில்லை என டிவிட்டர் இந்தியாவின் சட்டம் மற்றும் கொள்கை பிரிவு அதிகாரி விஜயா கட்டே தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இந்தியா வந்திருந்த டிவிட்டரின் தலைமைச் செயலதிகாரி ஜாக் டோர்சே, டிவிட்டர் தளத்தில் வலதுசாரி ட்ரோல்களால் தாக்குதலுக்குள்ளான பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் அடங்கிய பெண்கள் குழுவை சந்தித்துப் பேசினார். அப்போது, தலித் செயல்பாட்டாளர் ஒருவர் கொடுத்த ‘பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம்’ என்ற பதாகையுடன் டிவிட்டர் செயல் அதிகாரி நின்ற படம் டிவிட்டரில் வெளியானது. அந்த டிவிட்டர் பதிவையொட்டி பிரபலமான லிபரல் பார்ப்பனர்கள் பலர் இது பார்ப்பனர்களுக்கு எதிராக உள்ளதாகவும் இதை எப்படி டிவிட்டர் செயல் அதிகாரி ஆதரிக்கலாம் என்றும் பொரிந்து தள்ளினர்.

இந்து மதம் என்ற அடைப்புக்குள் அனைவரையும் ஒற்றை கலாச்சாரம் மற்றும் அரசியலின் கீழ் அணிதிரட்ட விரும்பும் இந்து தேசியவாதிகள், மேல்சாதியை சேர்ந்தவர்களே டிவிட்டர் செயல் அதிகாரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

சித்ரா சுப்ரமணியன் என்ற லிபரல் பார்ப்பன பத்திரிகையாளர், “பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம் என்பது வன்முறையை தூண்டுவதாக இல்லையா? டிவிட்டர் போன்ற செல்வாக்குமிக்க தளம் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்” என கேட்கிறார்.

முன்னாள் இன்போசிஸ் அதிகாரி டி. வி. மோகன்தாஸ் பை, வலதுசாரி எழுத்தாளர் ராஜுவ் மல்ஹோத்ரா, பார்ப்பன கருத்தாளர் சுமந்த் சி ராமன், முன்னாள் நீதிபதி ’லிபரல் பார்ப்பனர்’ மார்க்கண்டேய கட்ஜு ஆகியோர் இது பார்ப்பனர்கள் மீதான தாக்குதல் என பாய்ந்திருக்கிறார்கள்.

வலதுசாரி, லிபரல் பார்ப்பனர்கள் நான்கைந்து பேரின் டிவிட்டுகள், டிவிட்டர் அதிகாரிகளை மன்னிப்புக் கேட்க வைக்கப் போதுமானதாக இருக்கிறது.  உடனே, டிவிட்டர் இந்தியாவின் அதிகாரியும் மன்னிப்புக் கேட்கிறார்.

“இந்திய சமூகத்தில் வெறும் 3% மட்டுமே பிரதிநிதித்துவம் உள்ள பார்ப்பனர்கள் எத்தகைய செல்வாக்கு மிக்கவர்கள் என்பது இந்த விவகாரத்தின் மூலம் வெளிவந்துள்ளது” என முகப்பு செய்தி வெளியிட்டுள்ளது டெலிகிராப் நாளிதழ்.

படிக்க:
♦ லிபரல் பார்ப்பனராவது எப்படி? வாழ்ந்து காட்டுகிறார் கட்ஜு
♦ நாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் !

பார்ப்பன ஆணாதிக்கத்தை நொறுக்குவோம் என்பது எப்படி பார்ப்பனர்களுக்கு எதிரானதாக இருக்க முடியும் என சமூக ஊடகங்களில் பலர் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். சித்ரா சுப்ரமணியனின் டிவிட்டுக்கு பத்திரிகையாளர் அனு பூயான், ‘பார்ப்பனர்கள் என்பது பெயர் சொல், பார்ப்பனீயம் என்பது வினைச் சொல். இதை புரியாததுபோல் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்துவதுதான் ஆபத்தானது. நீங்கள் பார்ப்பனிய ஆணாதிக்கம் இல்லவே இல்லை என்று சொல்கிறீர்களா?’ என  எதிர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம் என்பது பார்ப்பனர்களுக்கு எதிரானது என முழங்கிய நான்கைந்து அறிவுஜீவிகளுக்கு எதிராக #SmashBrahminicalPatriarchy என்ற ஹேஷ்டேக்கில் மக்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

அவற்றில் சில உங்கள் பார்வைக்கு:

“தலித்துகளுக்கு அவர்கள் என்ன செய்திருக்கிறார்களோ அது தங்களுக்கு இறுதியில் நேர்ந்துவிடுமோ என்று பார்ப்பன மேலாதிக்கவாதிகள் கவலைப்படுகிறார்கள். அதன் விளைவாகவே இத்தகைய கோபம் உண்டாகிறது”

இந்தியாவின் சாதிய பாலியல் வன்கொடுமைகள் குறித்த விவாதத்தை திசைதிருப்ப சாதிய ட்ரோல்கள் செய்யும் இடையூறு இது.

இந்த துணைக் கண்டத்தின் ஆணாதிக்கம் சாதியத்துடன் கட்டப்பட்டது. சாதியத்தை கருத்தியல் கருவியாக இரண்டாயிரம் ஆண்டுகளாக இயக்குவது பார்ப்பன ஆண்களே.

பார்ப்பனராக இருப்பது எப்படி? கல்வியறிவு பெறுங்கள். அம்பேத்கர், தலித் எழுத்தாளர்களை படியுங்கள்.  கொடூரமான மேலாதிக்கத்துடன் பார்ப்பனிய ஆணாதிக்கம் எப்படி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மனக் கதவுகளை திறந்து பாருங்கள்.

நீங்கள் சாதியை ஒழிக்கும்போது, பார்ப்பனராக இருப்பதை மறுப்பீர்கள். நீங்கள் பார்ப்பனராக இருப்பதை நிறுத்திக் கொண்டால், பார்ப்பனிய ஆணாதிக்கம் என அழைப்பதில் அர்த்தமிருக்காது. இப்போது உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என தெரிந்திருக்கும்.

‘பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம்’ என்பதற்கு மன்னிப்பு கேட்பது  ‘வெள்ளை மேலாதிக்கத்தை நொறுக்குவோம்’ என்பதற்கு மன்னிப்பு கேட்பதைப் போல..

‘பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம்’ என்பதற்காக மனவருத்தத்துக்கு உள்ளான பார்ப்பனர்களே தயவு செய்து டிவிட்டரை விட்டு வெளியேறுங்கள்.

பார்ப்பனிய ஆணாதிக்கம் எத்தகையது என்பதை பார்ப்பன பெண் உமா சக்ரவர்த்தி எழுதியிருக்கிறார்…படியுங்கள்

பார்ப்பனிய ஆணாதிக்கமே ஆர்.எஸ்.எஸ்ஸின் அடிப்படை கருத்தியல். சாதியமும் பாலின மேலாதிக்கமும் அதன் மரபணுவில் உள்ளவை. அது பாலின அடிப்படையில் வேறுபாடுகளை உருவாக்குகிறது. பெண்களுக்கு வீட்டுப்பணிகளை தருகிறது. அதோடு, ஒருபோதும் தலித் ஒருவர் சர்-சங்-சலாக்காக(ஆர்.எஸ்.எஸ். தலைவராக) முடியாது.

இப்படி டிவிட்டர் முழுவதும் வலதுசாரி, லிபரல் பார்ப்பனர்களுக்கு பதிலடி கொடுக்கும் பல பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. தமிழ் முகநூல் பக்கத்திலும் #SmashBrahminicalPatriarchy என்ற ஹேஷ்டேக்கில் எழுதிவருகிறார்கள்.

“பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம்” என்ற வாசகம் பொறித்த அட்டையை கையில் பிடித்திருந்ததற்காக, டிவிட்டர்-ன் தலைமை நிர்வாக இயக்குனரான ஜாக் டோர்செய்-ஐ மன்னிப்புக் கேட்க வைத்திருக்கிறார்கள் பார்ப்பனர்கள். இந்திய மக்கட்தொகையில் வெறும் 3% மட்டுமே இருக்கும் சிறும்பான்மையினரான பார்ப்பனர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அந்த வாசகம் இருப்பதாகவும், ஒரு சர்வதேச நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருக்கும் அவர் அதனை வைத்திருப்பது உலக சிறும்பான்மையினருக்கே எதிரான ஆதிக்க போக்காக இருக்கிறதென்றும் ஒரு நாள் முழுக்க ட்வீட் செய்து மன்னிப்பு கோர செய்திருக்கிறார்கள்.

உலகின் ஒட்டுமொத்த மனிதத்தன்மையற்ற குரூர செய்கைகளுக்கு எதிராக , ஆதிக்கத்தின் – பெண்ணடிமைத்தனத்தின் பிறப்பிடமான பார்ப்பனியத்தை எதிர்த்தால், பார்ப்பனர்கள் மன்னிப்பு கேட்கச் செய்வார்கள் என்றால், அதனை மீண்டும் மீண்டும் எதிர்ப்பது நம் ஒவ்வொருரின் தலையாய கடமையாகும்.

பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம்! #SmashBrahminicalPatriarchy என்கிறார் செயல்பாட்டாளர் கிருபா முனுசாமி.

படிக்க:
♦ ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் !
♦ வாங்கோ நீங்க ஐயரா ஐயங்காரா ?

பத்திரிகையாளர் நந்தினி வெள்ளைச்சாமியின் பதிவு இது:

“கடந்த வாரம் டெல்லி வந்திருந்த டிவிட்டர் சிஇஓ ஜாக் டோர்சே, பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்தார். அப்போது, தலித் செயற்பாட்டாளர் ஒருவர் ‘Smash Brahminical Patriarchy’ என எழுதப்பட்ட பதாகையை ஜாக்கிடம் கொடுத்து புகைப்படம் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைக்கண்டு கொதித்துப்போன சங்கிகள், வலது அமைப்பைச் சேர்ந்தவர்கள் டிவிட்டர் மீதும் ஜாக் மீதும் கோபம் கொண்டு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அப்படி பதிவுகளை வெளியிடுபவர்கள், ”உரிமைகள் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களாக” கூறிக் கொள்பவர்களாகவே இருக்கிறார்கள். ‘எழுத்தாளர்’ ராஜீவ் மல்ஹோத்ரா, ‘தி நியூஸ் மினிட்’ இணை நிறுவனர் சித்ரா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அடக்கம். நம்மூர் ‘சமூக செயற்பாட்டாளர்’ கஸ்தூரி, ‘அரசியல் விமர்சகர்’ சுமந்த் சி.ராமனும் இதில் அடக்கம்.

இது மார்க்கண்டே கட்ஜூவின் கதறல்.. ஊடகவியலாளர் பர்கா தத்தும் அந்த புகைப்படத்தில் இருந்தது அவரை மிகவும் பாதித்திருக்கிறது. “அப்படி பண்ணாதீங்க ஜாக்”னு பர்கா தத் ஜாக்கிட்ட சொல்லிருக்கணுமாம்.”

வெறும் 3 சதவீதம் மட்டுமே உள்ள பார்ப்பனர்கள் அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு மீதியுள்ள 97 சதவீத மக்களை ஆள்கிறார்கள். இந்த மேலாதிக்கத்தை கேள்வி கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? பார்ப்பன மேலாதிக்கத்தை நொறுக்குவோம் என்பதில் என்ன தவறு இருக்கிறது? ஆம். இந்த மேலாதிக்க அமைப்பை நொறுக்கத்தான் வேண்டும்’ என அம்பேத்கரிய சிந்தனையாளர்கள் கூறுவதை செயல்படுத்த வேண்டிய தருணம் இது என்பதை பலரும் வலியுறுத்துகிறார்கள்.

மண்ணில் புதைந்திருந்த மரவள்ளிக் கிழங்குகளும் தப்பவில்லை! நேரடி ரிப்போர்ட்

ஞ்சை டெல்டா மாவட்டங்களில் விவசாயம் என்றதும் நமது நினைவுக்கு வருவது நெற்பயிற்தான். ஆனால் இந்த கஜா புயலின் தாண்டவத்துக்குப் பின்னர்தான் இங்கு நடக்கும் தென்னை விவசாயம் பலருக்கும் தெரிய வந்துள்ளது. நம்ப முடியாத காவிரி ஆற்று தண்ணீர், விளைவித்தாலும் விலை போகாத நெற்பயிர், காசு கிடைக்காத கரும்பு என இப்பகுதி விவசாயிகள் தென்னையை நோக்கி நெட்டித் தள்ளப்படுகின்றனர்.

இவர்களை ஏதோ ஒரு வகையில் விவசாயத்தில் இருத்து பிடித்து வைத்திருப்பதில் தென்னைக்கும், கடலைக்கும் ஒரு பங்கு உண்டு. அதேபோல கடந்த 20 ஆண்டுகளில் இப்பகுதி விவசாயிகள் மரவள்ளி கிழங்கையும் பரவலாக பயிரிட்டு வருகின்றனர்.

கருவக்குறிச்சி பகுதியைப் பொருத்தவரை இளைஞர்கள் பலரும் கடன் வாங்கி வெளிநாடுகளுக்குச் சென்று, அதிலும் குறிப்பாக சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கடும் உழைப்பு கோரும் கட்டிட வேலை போன்ற வேலைகளுக்குச் சென்று சில ஆண்டுகள் உழைத்து இங்கு வந்து தென்னை விவசாயம் மேற்கொள்கின்றனர். தற்போது தென்னந்தோப்புகளும் விலையேறிப் போனதால், புதிதாக தலையெடுக்கும் விவசாயிகளால் அதையும் செய்ய முடிவதில்லை. இவர்களுக்கு தற்போதுள்ள மாற்றுப் பயிர் மரவள்ளியாகத் தான் உள்ளது.

தஞ்சை மாவட்டம் கருவாக்குறிச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் மரவள்ளி பயிர் செய்யப்பட்டுள்ளது. இது பத்துமாத பயிர். நிலத்தை பண்படுத்துவது தொடங்கி மீண்டும் நிலத்தை அறுவடைக்குப் பின் சரி செய்வதுவரை, கிட்டத்தட்ட ஒருவருடம் இதில் உழைப்பு செலுத்த வேண்டியுள்ளது. இதனைப் பதியமிட்டு விவசாயம் செய்ய ஆரம்பிக்கும் காலத்தில் வருமானம் இருக்காது. அச்செலவீனங்களை ஈடுகட்ட அதனுடன் ஊடுபயிராக வேர்கடலை பயிரிடுகின்றனர். இவ்வாறு ஏதோ ஒருவகையில் விவசாயத்தை இப்பகுதி மக்கள் விடாப்பிடியாக செய்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழகத்தின் சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில்தான் மரவள்ளி சாகுபடி அதிகம் என்பதால் இந்தக் கிழங்குகளை இப்பகுதிக்கு வந்து சேலம் மாவட்ட வியாபாரிகள் தான் வாங்கிச் செல்கின்றனர். தற்போது ஏதாவது கைகொடுக்கும் என பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி பயிர்களையும் கூட இந்த கஜா புயல் நிலைகுலைத்துப் போட்டுள்ளது.

இந்த நிலையில்தான் கருவாக்குறிச்சி பகுதியில் மரவள்ளிக் கிழங்கு பயிரிட்டுள்ள ரவிச்சந்திரன் என்பவரைப் பார்த்தோம்.

அவரும் அப்பகுதி விவசாயிகளைப் போன்றே கடந்த இரு ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை பார்த்துவிட்டு கடந்த ஆண்டுதான் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கு முன்பே அவருடைய குடும்பத்துக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை நான்கு இலட்சத்துக்கு ஒத்திக்கு (லீசுக்கு) விட்டுள்ளனர். தற்போது சிங்கப்பூரில் கஷ்டப்பட்டு அதில் சேமித்த பணத்தை வைத்து நிலத்தின் ஒருபகுதியை மீட்டு அதில் மரவள்ளி போட்டுள்ளார். அதிலிருந்து வரும் வருமானத்தில் வாங்கிய கடனை அடைத்து மீண்டும் சில காலம் வெளிநாடு சென்று சம்பாதித்து நிலத்தை முழுவதுமாக மீட்கலாம் என்ற கனவோடு வந்துள்ளார். தற்போது அவரின் கனவில் மண்ணை வாரி இறைத்துள்ளத்துள்ளது கஜா புயல்.

“தாய் தகப்பன விட்டு, பொண்டாட்டி புள்ளைகள பாக்காம சிங்கப்பூரு போயி கொஞ்ச நஞ்சம் சேத்து வெச்சி. இங்கே.. வந்து ஏதாவது பன்னலாமுன்னு பாத்தா இப்ப இந்த புயல் வந்து எல்லாத்தயும் கெடுத்துடுச்சி. இந்த வருசம் நல்லாவே கிழங்கு புடிச்சிது. ஆனா நமக்கு கட்டுபடியாகுற வெல கிடைக்கல. சரி கொஞ்சம் காத்திருந்து வெல கிடைக்கும்போது இத வித்துடலாமுன்னு பாத்தா எல்லாம் வீணாயிடும் போலருக்கு சார்…”

புயலால தென்னை போன்ற மரங்களுக்குதானே அதிக பாதிப்பு, மரவள்ளிக்கு எப்படி இழப்பு..?

“ஆமாங்க இங்கே.. தென்ன முழுசா போச்சி… ரொம்ப பெரிய பாதிப்புதான். அதே போல மரவள்ளியும் பாதிச்சி இருக்கு. இது மேலாப்புல.. வேர் வச்சி கொஞ்சத்துலேயே கெழங்கு புடிக்குங்க.. அதனால அடிச்ச காத்துக்கு அப்புடியே பெறட்டிகிட்டு கெழங்கெல்லாம் வெளிய வந்து நிக்குது. இது இப்புடி வெளிய வந்தா சீக்கிரமே கெட்டு போயிடும். பெறவு வெல கெடைக்காது.. எல்லாம் வீண்தான்.”

சரிங்க பொதுவா கிழங்கு கொஞ்சம் தாங்குமே… என வாயெடுத்த உடனே “கிழங்கு பொருத்தவரை தாக்குபுடிக்கும்தான் ஆனா இந்த வருசம் வெல சரியா இல்லாம முன்னாடியே புடுங்கி ஏத்தி இருக்க வேண்டியது தள்ளி போச்சி. இப்ப வெளிய நீட்டிட்டு இருக்கிற கெழங்க காவந்து பன்றதே ரொம்ப கஷ்டமா இருக்கு.. ஆடு, மாடு வந்தா மேஞ்சி நாசமாக்கிடும். ஏன்னா இது அதுகளுக்கு ரொம்ப புடிக்கும். நாங்களே கழிச்சி போடுற கெழங்குகள மாட்டுக்குத்தான் போடுரோம். நல்ல பால் சுரக்கும். அதே போல எலி, அணில்னு எல்லாம் சேந்துச்சுன்னா மொத்தமும் நட்டம் தான். இன்னும் ஒரு வாரத்துக்குள்ள எப்புடியாவுது இத ஏத்தலன்னா எல்லாம் பாழ்தான்”

சரி இத எப்புடி நீங்க விக்குறீங்க.. இங்கயே பக்கத்துல சந்தைகள் உண்டா?

“இத பொருத்தவரைக்கும் இங்க எதும் எங்களால விக்க முடியாது. எதாவது சும்மா யாராச்சும் கேட்டா கொஞ்சங் குடுக்க முடியும். மத்தபடி இதுக்கு சேலம் ஆத்தூர் பக்கத்துல இருந்துதான் வியாபாரிங்க வருவாங்க. அங்கதான் கெழங்கு மாவு ஆலைங்க இருக்கு.. அது இல்லாம அங்க இருந்துதான் கேரளாவுக்கு சிப்ஸ் போட போகுது. அந்த சிப்ஸ் வெளிநாடுகளுக்கு போகும். அதுவும் கூட வியாபாரிங்க இங்க வந்து அவுங்களுக்கு கட்டுபடியாகுற வெலக்கிதான் வாங்கிட்டு போவாங்க.”

நீங்க எவ்வளவு ஏக்கர் இந்த மரவள்ளி போட்டு இருக்கீங்க?

“நம்மள்து 3 ½ ஏக்கர் போட்டு இருக்கோம்.”

அதுல இருந்து எவ்வளவு கிழங்கு கெடைக்கும்.. எவ்ளோ வருமானம் வரும்?

“சார் இந்த கெழங்கு போட சுமார் 70,000/- செலவு ஆகும். ஒருவருச வேல.. சுமாரா நம்ம நெலத்துல மட்டும் ஐம்பது டன்னுக்கு நெருக்கமா வரும். அதுக்கு ஏத்தமாதிரி ஒரு டன்னுக்கு 5,000 ரூபா வெல போச்சின்னா அது நல்ல வருமானம்னு சொல்லலாம்ங்க.. இப்ப 4,000-க்கு கூட யாரும் வியாவாரிங்க வரமாட்டேங்குறாங்க. இப்ப இந்த புயல் பாதிப்பால வியாபாரிங்க இன்னும் அடிமட்ட ரேட்டுக்கு கேப்பாங்க. சரி முழுக்க நட்டமா போறதுக்கு ஏதாவது வந்த வெலைக்கு தள்ளலாம்முன்னு பாத்தாகூட வியாபாரிங்க வரதுக்கு இன்னும் எத்தன நாளாகுமுன்னு தெரியலங்க.

நெலத்த உழுது பக்குவப்படுத்துறது, பதியம் போடுறது, பாத்தி கட்டுறது, மருந்தடிப்பது, அப்புறம் கெழங்கு புடுங்குறது, ஏத்துகூலி இதெல்லாம் இருக்கு அதுமட்டுமில்ல புடுங்கி போட்ட பின்ன இந்த குச்சியெல்லாம் ஏறகட்டனும் அதுக்கு ஆளு கூலி. இப்புடி ஒரு எழுபது எழுபத்தஞ்சு ரூபா (ரூ. 70,000 முதல் 75,000 வரை) செலவு வந்துடும். இப்புடி இருக்கும் போது டன் ஐயாயிரம் கெடச்சா 50 டன்னுக்கு ரெண்டரை லச்சம் வரும். அதுல செலவக் கழிச்சா எவ்வளவு வரும்முன்னு பாருங்க.

படிக்க:
சரிந்தது தென்னை மரங்கள் மட்டுமல்ல – ஒரு தலைமுறை உழைப்பும்தான் ! நேரடி ரிப்போர்ட் !
எது முன்னெச்சரிக்கை ? எது சிறந்த அரசு ? எது நிவாரணப் பணி ? குமுறுகிறார் ஒரு விவசாயி !

ஒரு ஒன்னு எண்பது (ரூ 1,80,000) வரும்.. அத மாசமுன்னு பிரிச்சா 15,000/- ரூபாதான் வரும் இதுக்கே எங்க அப்பா, சம்சாரம் எல்லாரும் வேல பாக்கணும். இதுலதான் ஒரு வருசத்துக்கு குடும்ப செலவ பாக்கணும் பொறவு நல்லது கெட்டது செய்யனும் இது எல்லாத்துக்கு கடன் வாங்கணும். அது எல்லாம் இத நம்பிதான் கணக்கு பண்ணி இருப்போம்.

இதுதான் வருசாவருசம் எங்க நெலமையா இருக்கு. வெளிநாட்டுக்கு போயி ஏதாவது கொஞ்சம் சேத்துட்டு வந்தாதா பரவால்லாம இருக்கு அதுவும் கடன குடுக்கறதுக்கு பத்தாம தான் இருந்துட்டு வந்தது ‘ஏதோ ஓங்கி அடிக்கிறத கொஞ்சம் தாங்கி புடிக்கிறதா’ இருந்துச்சி இந்த மரவள்ளி கிழங்கு. இந்தவருசம் அதுவும் போச்சி…

விலைவாசி நிலவரம் : இந்தியா – உலகம் | பொது அறிவு வினாடி வினா 17

விலைவாசி நிலவரம் அன்றாடம் மாறிக் கொண்டே இருக்கிறது. அதுவும் ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள இந்தியா போன்ற நாடுகளில் அதன் மாற்றங்களும், வேறுபாடுகளும் அபரிதமானவை. அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்ற துறைகளில் பணியாற்றுவோர் அடிப்படையாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய விசயம் இந்த விலைவாசி நிலவரம். ஆனால் அனேகருக்கு அவை குத்து மதிப்பாகவே தெரியும். குடும்ப சுமையை சுமக்கும் பெண்கள் அன்றாட சமையல் பொருட்களின் விலைவாசியை நன்கு அறிவார்கள். பெரும்பாலான ஆண்கள் அறிய மாட்டார்கள். இவையன்றி தத்தமது வாழ்க்கைக்கு தேவைப்படாத பொருட்கள், சேவைகள் குறித்து மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

அல்ஜசீரா தனது இணையதளத்தில் உலக நாடுகளில் நிலவும் விலை நிலவரத்தை வினாடி வினாவாக கேட்டிருக்கிறது. அதில் இந்தியா மற்றும் சில நாடுகளின் நிலவரங்களை எங்களது சரிபார்ப்போடு இணைத்து இங்கே கேள்விகளாக கேட்டிருக்கிறோம். விலை நிலவரம் அனைத்தும் இந்திய ரூபாயில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த விலையை இந்தியாவின் சராசரி விலையாக கருத வேண்டும். தமிழகம் – சென்னை நிலவரத்தை வைத்து மட்டுமல்ல, ஒரிசா – பீகார் போன்ற பின்தங்கிய மாநிலங்களின் நிலவரத்தையும் சேர்த்துதான் இந்தியாவின் விலைவாசி நிலவரம் இருக்கிறது. இங்கே ஒருசில தமிழக நிலவர கேள்விகளையும் இணைத்துள்ளோம். இன்றைய சமூகத்தின் விலைவாசி குறித்த உங்களது பார்வைக்கு ஒரு தேர்வு!  முயன்று பாருங்கள்!

படிக்க :
♦ பெண்களுக்கு எதிரான வன்முறைகள் : பொது அறிவு வினாடி வினா 13
♦ குடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11

கேள்விகள்:

  1. உலக நாடுகளில் அரிசியின் விலை குறைவாக உள்ள நாடு எது?
  2. இந்தியாவில் ஒரு டசன் முட்டைகளின் விலை என்ன?
  3. சரவணபவன் போன்ற முதல் தர உணவகங்களில் ஒரு மதிய சாப்பாட்டின் சராசரி விலை என்ன?
  4. உலகிலேயே ஒரு லிட்டர் பாலின் விலை குறைவாக உள்ள நாடு எது?
  5. இந்தியாவின் பெருநகரங்களின் மையப்பகுதியில் ஒரு படுக்கையறை கொண்ட அப்பார்ட்மெண்ட் வீட்டின் சராசரி மாத வாடகை என்ன?
  6. உலகிலேயே ஒரு டசன் முட்டை விலை குறைவாக உள்ள நாடு எது?
  7. இந்தியாவில் ஒரு கிலோ உருளைக் கிழங்கின் விலை (இன்றைய நிலவரம்) என்ன?
  8. உடற்பயிற்சிக்கூடத்தின் உறுப்பினராக இருப்பதற்கு செலுத்த வேண்டிய தொகையின் உலக சராசரி என்ன?
  9. இந்தியாவில் ஒரு கிலோ ஆப்பிளின் தற்போதைய சராசரி விலை என்ன?
  10. உலக அளவில் ஒரு கிலோ அரிசியின் சராசரி விலை என்ன?
  11. இந்தியவில் நடுத்தரமான ஒரு தனியார் மழலையர் பள்ளியின் மாதக் கட்டணம் என்ன?
  12. உலகில் எந்த நாட்டில் ஒரு பாக்கெட் சிகரெட்டின் விலை அதிகம்?
  13. இந்தியாவில் ஒரு கிலோ மாட்டுக்கறியின் சராசரி விலை என்ன?
  14. உலகிலேயே அதிவேக இணையத்திற்கு அதிக கட்டணம் வாங்கும் நாடு எது?
  15. இந்தியாவில் அன்லிமிட்டட் அதிவேக இணைய இணைப்பின் சராசரி மாத கட்டணம் எவ்வளவு?
  16. உலகிலேயே ஒரு பாக்கெட் ரொட்டியின் விலை அதிகம் உள்ள நாடு எது?
  17. இந்தியாவில் ஒரு சினிமா திரையரங்க டிக்கெட்டின் சராசரி விலை என்ன?
  18. திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் ஒரு வடை / பஜ்ஜி / போண்டா-வின் குறைந்தபட்ச விலை என்ன?
  19. தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் ஒரு கிலோ ஸ்வீட் அல்லது காரத்தின் விலை என்ன?
  20. தமிழகத்தில் ஆவின் பால் லிட்டர் ஒன்றின் குறைந்தபட்ச விலை என்ன?

கேள்விகளுக்கு பதிலளிக்க :

நீங்கள் பங்கெடுப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களையும் இந்த வினாடி வினாவில் பங்கேற்கச் செய்யுங்கள் !

மன்னார்குடி : ஒரு மின்கம்பம் நட 5 மணிநேரம் ஆகிறது – என்ன செய்வது ? நேரடி ரிப்போர்ட்

ஜா புயலுக்கு பின்னர் காவிரி டெல்டா மாவட்டங்களின் பல கிராமங்கள் அனைத்து தொடர்புகளில் இருந்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. தற்போது நான்கு நாட்களாக அந்தந்த கிராம மக்களே களத்தில் இறங்கி சாலைப் போக்குவரத்து, மற்றும் தங்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி இருந்தும் வேலைகளை முடிக்க முடியவில்லை.

குறைந்தபட்சம் முக்கிய சாலைகளில் விழுந்திருந்த மரத்தை மட்டும் அதன் ஓரமாகவே ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இன்னும் அந்த வேலையையே செய்ய முடியாமல் பல நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களும் இருக்கிறது. இந்த  இடங்களில் ஆட்கள் பற்றாக்குறையால் பெரிய அளவுக்கு செய்ய முடியவில்லை.

அரசே நிவாரணப் பணிகளை மேற்கொண்டால் ஒழிய அவை சாத்தியமில்லை என்னும் அளவிற்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது. முக்கியமாக மின் கம்பங்கள் அனைத்தும் சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கின்றன. பல முக்கியமான சாலைகளையே சீரமைக்காத அரசு நிச்சயம் குக்கிராமங்களை கண்டு கொள்ளப்போவதில்லை என்பது மட்டும் உறுதி.

திருவாருர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவில் உள்ள பல கிராமங்கள் வெளிச்சத்தை பார்த்து ஐந்து நாட்கள் ஆகிறது. இன்னும் பார்ப்பதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை. இதற்கே இந்த தாலுகாவில் பாதிப்புகள் அதிகம்தான் என்றாலும் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, போன்ற பகுதிகளைவிட குறைவுதான். இருப்பினும் இந்த இடத்தை சீரமைக்கவே தடுமாறி வருகிறது அரசு. குறைந்தபட்சம் மின்துறை ஊழியர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு பணியாற்றி வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு உரிய தேவையைக்கூட பூர்த்தி செய்யவில்லை அரசு. கிராம மக்களே அவர்களுக்கு உணவும், தங்குவதற்கு இடமும் கொடுத்து, அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

கடலூரில் இருந்து வந்திருந்த மின் ஊழியர்கள், “நாங்க இருபது பேர் 18-ம் தேதிதான் வந்தோம். வந்ததுல இருந்து இரண்டு நாள்ல 13 போஸ்ட் தான் நட முடிஞ்சது. ஒரு போஸ்ட் நடறதுக்கு அஞ்சி மணி நேரம் ஆவுது. என்ன பண்ண முடியும். இயந்திரம் இருந்தா மட்டும் போதாது. மனித உழைப்பு அவசியமா இருக்கு. அது ரொம்ப குறைவா இருக்கு. இருந்தாலும் எங்களால எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு வேலை செய்யுறோம். மழை பெய்யிறதால தரையும் ஈரமா இருக்கு. போஸ்ட்ட தூக்கி நட்டதும் மேல ஏற முடியல. சாய ஆரம்பிச்சிடுது. அதுக்கேத்த நேரம் ஒதுக்குறதே போதும்னு ஆகிடுது. மம்மட்டி, கட்டப்பாரை எதுவும் போதுமானதாவும் இல்ல. அதுவே பெரிய பிரச்சனை. காலையில ஏழரை மணிக்கு வேலைய ஆரம்பிச்சா நைட்டு எட்டு மணி வரைக்கும் போகுது… குடிக்க தண்ணி கூட இல்ல. இருப்பினும் மக்கள் படுற கஷ்டத்தை பாக்க முடியல…. இப்ப செய்யிற வேலை ஒரு வருஷத்துக்கான வேலை. இது இன்னும் எத்தன நாள்ல முடியும்னு சொல்ல முடியாது. அந்த அளவுக்கு சேதாரம் ஆகி இருக்கு” என்கிறார்கள்.

இந்த தாலுகாவில் வசிக்கும் மக்கள் என்ன சொல்கிறார்கள்… பார்க்கலாம்!

பாலன் – வடுவூர்.

புயல் அடிச்சி ஓஞ்சதும் நாங்களே எங்க கிராமத்தை சரி செய்ய ஆரம்பிச்சிட்டோம். முதல்ல வீட்டுல இருந்த மரத்தை எல்லாம் சரி செய்தோம். அது வரைக்கும் அரசாங்கத்துல இருந்து யாரும் வர்ல. அப்புறம் நாங்களே ஈ.பி ஆபிசுக்கு போயிட்டு எழுதி கொடுத்தோம். அதுக்கப்புறமா வந்தாங்க. மொத்தம் 240 போஸ்ட் எங்க ஊர்ல. அதுல 140 வரைக்கும் சாஞ்சிடுச்சி. எங்க பக்கம் எல்லாம் முடிய எத்தன நாள் ஆவும்னு தெரியல.

புருஷோத்தமன் மற்றும் ராமகிருஷ்னன், மூவர் கோட்டை.

வடுவூர் முதல் கொண்டையார் வரை மின்சாரம் வந்து விட்டதாக சொல்கிறார்கள்… இன்னும் இரண்டு நாட்களில் எங்களுக்கும் வந்து விடும் என்று சொல்கிறார்கள். எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இருந்தாலும் அதனை நம்புகிறோம்.  இன்னும் நான்கு கிலோ மீட்டர் வரை சரி செய்ய வேண்டும். நாங்களே சாலையில் இருந்த மரங்களை அறுத்து வழியை ஏற்படுத்தினோம். ஊரே சேர்ந்து இருபதாயிரம் செலவு பண்ணி சாலையை சீரமைச்சி இருக்கோம்.

படிக்க:
சுனாமியில் பெற்றோரை பலி கொடுத்த பாத்திமா கஜா புயலில் பிள்ளையைப் பறி கொடுத்தார் ! நேரடி ரிப்போர்ட்
மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?

குடி தண்ணீர் கிடையாது. இந்த ஆத்து தண்ணி மட்டும் இல்லையென்றால் எங்க கதை சிரிப்பாய் சிரித்து விட்டிருக்கும். 200 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்கிறது. அதனை இறைக்க கரண்ட் இல்லாம கஷ்டப்பட்டுட்டு இருக்கோம். வெளியில தனியார் வந்து டேங்கை நிரப்ப மணிக்கு 1500 ரூபா கேக்குறான். பேட்டரிக்கு சார்ஜர் ஏத்த 500 லிருந்து 750 வரைக்கும் வாங்குறானுங்க.. இன்னா பன்ன முடியும்???

ஒக்கநாடு கீழையூர் பெண்கள்

புதிய வீடு கட்டும்போது அமைக்கப்பட்ட பயன்படுத்தப்படாத செப்டிக் தொட்டியில் இருந்த தண்ணீரை எடுத்துக் கொண்டிருந்தனர். “இப்படி ஒரு நிலை வரும்னு நாங்க நெனச்சிக்கூட பார்த்ததில்ல. மூனு நாளா தண்ணிக்கு எங்க எங்கயோ அலஞ்சி கெடந்தோம். இந்த தொட்டி இருக்கிற நெனப்பே வர்ல…. முன்னமே தெரிஞ்சிருந்தா எங்கயும் அலஞ்சிருக்க மாட்டோம்”.

பாலமுருகன், தி.மு.க., ஒக்கநாடு பஞ்சாயத்து.

எங்க பஞ்சாயத்துல 150 கிராமம் இருக்கு சார். மொத்தமா நாற்பதாயிரத்துக்கு மேல் தென்னை மரங்கள் அடியோட புடுங்கி கிடக்கு.  50 ஈ.பி பாயிண்ட்ல 30 பாயிண்ட் சேதமடைந்து இருக்கு. கிட்டதட்ட 7000 போஸ்ட் மொத்தமா முறிஞ்சிடுச்சி. இப்ப இருப்பு இருக்கிறது வெறும் 1500 தான். அரசாங்கம் அறிவிப்புல தான் இருக்கே தவிர செயல்பாட்டுல இல்ல. புயல் வந்து 4 நாள் ஆவுது. இதுவரைக்கும் 25% வேலைதான் முடிஞ்சிருக்கு. இன்னும் முழுசா முடிய 45 நாள் ஆகும். மெட்டிரியல் இருந்தா 15 நாள்ல முடிஞ்சிடும்.ஆனா அதுக்கேத்த மெட்டிரியல் இல்ல. கணக்கெடுப்புக்கு வரல, பாதிக்கப்பட்டவங்கள பார்க்க வரல…. எதுவுமே செய்யல. மக்களே எல்லாத்தையும் செஞ்சிக்குறாங்க.  மின் ஊழியர்களுக்கு கிராம மக்கள்தான் முடிஞ்சத செய்யுறாங்க!

சசிக்குமார்- முக்குளம் சாத்தனூர்.

வீடு இடிஞ்சி விழும்போதெல்லாம் என் பசங்களோட இந்த வீட்டுக்குள்ளே தான் சார் இருந்தேன். ஆடு, மாடு கட்டியிருந்த கொட்டாவும் சாஞ்சிடுச்சி. எப்படியோ உசுரு மிஞ்சினதே என் புள்ளங்களோட நல்ல நேரம்தான்.

சாமி அய்யா- சிவக்குமார்-இளையராஜா- முக்குளம் சாத்தனூர்.

நீடாமங்கலம் யூனியன்ல 38 பஞ்சாயத்து, 100-க்கும் மேற்பட்ட கிராமம் இருக்கு சார். ஆனா இது வரைக்கும் எந்த அதிகாரியும் வந்து பாக்கல. எங்க ஊரு வி.ஏ.ஒ. மட்டும் வந்து பார்த்து குறிச்சிக்கினு போனாரு. அவ்ளோதான். அவரும் இன்னும் வர்ல. ஓவேல்குடி, முக்குளம், தளிக்கோட்டை, கருவாக்குறிச்சி காலனி, முக்குளம் தர்காசு இத சுத்தி இருக்க எந்த ஊர்லயும் வேலை நடக்கல…. இங்க அதிகம் தென்னை இல்ல.. ஆனா சோளம், நெல்லு, கடலை, மரவள்ளி இந்த மாதிரிதான் பயிர் வச்சிருக்கோம். வேற எந்த பொழப்பும் இங்க இல்ல. அப்படி இருக்கும்போது அரசாங்கம் வர வேணாமா? நாங்க மத்த நேரத்துல எதுவும் கேட்கல. இப்ப தண்ணி கூட இல்லாம இருக்கோம். இப்பயாவது வந்து உதவ வேணாமா? இங்க எல்லாம் அதிகம் குடிசைதான். எல்லா வீடும் தரை மட்டமா ஆயிடுச்சி. ஒரு ஆறுதலுக்காவது வர வேணாமா சார்… அதான் இப்ப எல்லா ஊர் மக்களும் போயிட்டு மன்னார்குடியில சாலை மறியல் பண்ணிட்டு வந்தோம்.!

எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாளும் வந்து விட்டது !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 26

மாக்சிம் கார்க்கி

நாட்கள் வெகு வேகமாகக் கழிந்து சென்றன. அந்த வேகத்தில் மே தினத்தின் வரவைப் பற்றிச் சிந்திப்பதற்குக்கூடத் தாய்க்கு நேரம் கிடைக்கவில்லை. ஆனால் இரவில் மட்டும், பகல் முழுதும் ஓடியாடி, வேலை செய்து ஓய்ந்து களைத்துப் படுக்கையில் சாய்ந்தபிறகு மாத்திரம், அவள் இதயத்தில் இனந்தெரியாத ஒரு மங்கிய வேதனை இலேசாக எழும்.

”அது மட்டும் சீக்கிரம் வந்துவிட்டால்…”

காலையில் ஆலைச் சங்கு அலறியது. அந்திரேயும் அவளது மகன் பாவெலும் சீக்கிரமே தங்கள் சாப்பாட்டை முடித்துவிட்டு வேலைக்குச் செல்வார்கள். அவளுக்கு ஏதாவது பதிற்றுக் கணக்கான வேலைகளை விட்டுச் செல்வார்கள். பகல் முழுதும் அவள் கூண்டுக்குள் அகப்பட்ட அணிற் குஞ்சு மாதிரி ஓடியாடி வேலை செய்வாள். சாப்பாடு தயாரிப்பாள். பசை காய்ச்சுவாள், சுவரொட்டி விளம்பரங்களுக்கு மை தயாரிப்பாள். திடீர் திடீரென்று எங்கிருந்தோ வந்து தோன்றி பாவெலுக்குப் பல செய்திகளைக் கொண்டு வந்துவிட்டு, மாயமாக மறைந்து செல்லும் இனந்தெரியாத மனிதர் பலரை வரவேற்பாள். அவர்கள் வந்து சென்ற பிறகு அவர்களுக்கிருந்த பரபரப்பு அவள் மனதிலும் குடிபுகுந்துவிடும்.

அநேகமாக ஒவ்வொருநாள் இரவும் தொழிலாளரை மே தினக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளும் சுவரொட்டி அறிக்கைகள் வேலிப் புறங்களிலும் போலீஸ் நிலையக் கதவுகளிலும் ஒட்டப்பட்டு வந்தன. ஒவ்வொரு நாளும் அம்மாதிரியான அறிக்கைகள் தொழிற்சாலையிலும் காணப்பட்டன. காலையில் போலீஸ்காரர்கள் தொழிலாளர் குடியிருப்பு வட்டாரத்துக்கு வந்து, அந்த அறிக்கைகளைக் கிழித்தெறிவார்கள். சுரண்டியெடுப்பார்கள். ஆனால் மத்தியானச் சாப்பாட்டு வேளையில் புதுப்பிரசுரங்கள் காற்று வாக்கில் பறந்து போகிறவர் காலடியில் விழுந்து புரளும். நகரிலிருந்து துப்பறியும் குழுவினர் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் மூலைக்கு மூலை நின்றுகொண்டு சாப்பாட்டு வேளையில் தொழிற்சாலைக்கு உற்சாகமாய்ப் போவதும் வருவதுமாய் இருக்கும் தொழிலாளர்கள் ஒவ்வொருவருடைய முகங்களையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். நிலைமையைச் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் போலீஸ்காரர்களின் பரிதாபகரமான நிலையைக் கண்டு ஒவ்வொருவரும் ஆனந்தப்பட்டார்கள். வயதான தொழிலாளர்கள்கூடச் சிரித்துக்கொண்டே தமக்குள் பேசிக் கொண்டார்கள்.

“இவர்கள் செய்கிற காரியத்தைத்தான் பாரேன்!”

எங்கு பார்த்தாலும் தொழிலாளர்கள் கும்பல் கும்பலாக நின்று மே தின அறைகூவலைப் பற்றி காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். வாழ்க்கை எங்கும் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அந்த வசந்த பருவத்தில் வாழ்க்கை அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனெனில் எல்லோருடைய மனத்திலும் ஒரு புதிய உணர்ச்சி பூத்துக் கிளர்ந்தது. சிலருக்கு முன்னிருந்ததைவிட பன்மடங்கான எரிச்சலும் புகைச்சலும்தான் மனத்தில் மூண்டது; அவர்கள் இந்தப் புரட்சிக்காரர்களை வாயாரச் சபித்தார்கள். சிலருக்கு ஒரு மங்கிய கவலையும் இனந்தெரியாத நம்பிக்கையுணர்ச்சியும் ஏற்பட்டன. சிலர் – அதாவது மிகவும் குறைந்த ஒருசிலர் மட்டும் – தாம்தான் இந்த ஜனங்களைக் கிளறிவிட்டதற்குப் பொறுப்பாளிகள் என்ற உணர்வினால் உள்ளுக்குள் மிகுந்த பூரிப்பும் உற்சாகமும் கொண்டு திரிந்தார்கள்.

பாவெலுக்கும் அந்திரேய்க்கும் இப்போது எல்லாம் தூங்குவதற்குக்கூட முடியவில்லை. அவர்கள் காலை நேரத்தில்தான் திரும்பி வருவார்கள். வெளுத்துக் களைத்து என்னவோபோல் வந்து சேர்வார்கள். ஊரின் ஒதுக்குப்புறங்களிலும் காடுகளிலும் அவர்கள் கூட்டங்கள் நடத்தி வந்தார்கள் என்பது தாய்க்குத் தெரியும். குடியிருப்பைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் குதிரைப் போலீஸ்காரர்கள் இரவெல்லாம் ரோந்து சுற்றிக்கொண்டிருந்தார்கள் என்பதும், துப்பறியும் வேவுகாரர்கள் எங்குப் பார்த்தாலும் ஊர்ந்து திரிந்து தனியாகச் செல்லும் தொழிலாளர்களை வழிமறித்து அவர்களைச் சோதனை போடுவதும் கூட்டங்கூட்டமாக வரும் தொழிலாளர்களைக் கலைந்து போகுமாறு செய்வதும் சில சமயங்களில் சிலரைக் கைது செய்து கொண்டு போவதுமாக இருக்கிறார்கள் என்பதும் அவளுக்குத் தெரியும். எந்த நேரத்திலும் கைதாகக் கூடிய நிரந்தரமான அபாயத்தில்தான் பாவெலும் அந்திரேயும் இருந்தார்கள் என்பதும் அவளுக்குத் தெரியும். அவர்கள் அப்படிக் கைதாக நேர்ந்தாலும், அவள் அதையும் வரவேற்கத்தான் செய்வாள். பின்னால் வரப்போகும் பெரும் ஆபத்துக்கு ஆளாவதைவிட, இப்போதே கைதாகிவிடும் ஆபத்து மேலானது என்பது அவள் எண்ணம்.

என்ன காரணத்தினாலோ இஸாயின் கொலை விஷயம் மறைக்கப்பட்டுவிட்டது. இரண்டு நாட்களாய் உள்ளூர்ப் போலீஸ்காரர்கள் புலன் விசாரித்தார்கள். சுமார் ஒரு டஜன் தொழிலாளர்களைக் கண்டு விசாரணை செய்த பின்னர் அவர்கள் அந்தக் கொலை வழக்கை விட்டுவிட்டார்கள்.

மரியா கோர்சுனவா தாயோடு பேசியபோது, போலீஸ்காரர்களின் அபிப்பிராயத்தை வெளியிட்டுச் சொன்னாள். மற்றவர்களோடு எவ்வளவு சுமூகமாகப் பழகி வந்தாளோ, அதே மாதிரி அவள் போலீஸ்காரர்களிடமும் பழகி வந்ததால் அவர்களது அபிப்பிராயம் அவளுக்கும் தெரிய நேர்ந்தது.

“கொலைகாரனை எப்படித்தான் கண்டுபிடிப்பது? என்று காலையில் சுமார் நூறு பேர் இஸாயைப் பார்த்திருக்கிறார்கள். அவர்களின் தொண்ணூறு பேர் அவனைத் தாங்களே ஒழித்துக்கட்ட நேர்ந்திருந்தால், அது குறித்துச் சந்தோஷப்பட்டிருப்பார்கள். அவனும்தான் என்ன? ஏழு வருஷ காலமாய் ஒவ்வொருத்தரையும் என்ன பாடு படுத்தி வைத்தான்.”

ஹஹோல் இப்போது எவ்வளவோ மாறிப் போய்விட்டான். அவனது முகம் மெலிந்து ஒட்டிப் போயிற்று. கண்ணிமைகள் கனத்துத் தடித்துப்போய்விட்டன. எனவே, அவன் அவனது பெரிய கண்களில் பாதியை மூடிக் கவிந்துவிட்டன. அவனது நாசியோரங்களிலிருந்து வாயை நோக்கி மெல்லிய வரிக்கோடுகள் விழுந்திருந்தன. அவன் வழக்கமான விஷயங்களைப் பற்றி மிகவும் குறைவாகப் பேசினான். அறிவும் சுதந்திரமும் ஆட்சி செலுத்தும் வெற்றி மகோன்னதமான எதிர்காலத்தைப் பற்றி தனது ஆசைக் கனவை அவன் மற்றவர்களிடம் எடுத்துக் சொல்லி அவர்களை மெய்சிலிர்க்கச் செய்யும்போதும், அவன் அதிகமான ஆர்வத்தோடு பேசினான்.

இஸாயின் மரணத்தைப் பற்றிய பேச்சு தேய்ந்து இற்றுக் செத்துப்போனவுடன், அவன் ஒரு கசந்த புன்னகையுடன் சொன்னான்:

”அவர்கள் மக்களை மட்டும்தான் மதிக்கவில்லை என்பது அல்ல. மக்களின் மீது ஏவிவிடும் வேட்டை நாய்களாக உபயோகிக்கும் தங்களது கைக்கூலிகளைக்கூட அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். அக் கைக்கூலிகள் தொலைந்து போனதற்காக அவர்கள் வருந்தமாட்டார்கள்; தங்கள் காசு தொலைந்து போனால்தான் வருத்தப்படுவார்கள்!”

“இந்தப் பேச்சு போதும், அந்திரேய்!” என்று உறுதியுடன் கூறினான் பாவெல்.

உளுத்து அழுகி ஓடாகிப் போனதைத் தொட்டாலே உதிர்ந்து பொடியாய்ப் போய்விடும். அவ்வளவுதான்” என்றாள் தாய்.

“இதெல்லாம் உண்மைதான். ஆனால் இது மட்டும் ஆறுதல் தராது” என்று சோர்வோடு பதில் சொன்னான் ஹஹோல்

அவன் இதையே பல தடவை சொல்லி வந்தான். எனினும் அதைச் சொல்லும்போது, முன்னிருந்ததைவிட வார்த்தைகள் அனைத்தையும் அடக்கிய விசேஷமான அர்த்தத்துடன் கடுப்புக் காரவேகமும் பெற்று ஒலித்தன.

வெகு நாட்களாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாளும் வந்துவிட்டது – மே தினம்! மே மாதப் பிறப்பு!

ஆலைச் சங்கு வழக்கம் போலவே அலறியது. கடந்த இரவு முழுவதும் கண்ணையே இமைக்காது விழித்துக் கிடந்த தாய் சங்குச் சத்தம் கேட்டதும் உடனே படுக்கையிலிருந்து துள்ளியெழுந்து முந்தின நாள் மாலையில் தயாரித்து வைத்திருந்த தேநீரை கொதிக்க வைத்தாள். வழக்கம்போலவே தன் மகன் படுத்திருக்கும் அறைக் கதவைத் தட்ட நினைத்தாள். ஆனால் கதவைத் தட்டி அவனை எழுப்பாமலிருப்பது நல்லது என்று எண்ணியவளாய் ஏதோ பல்லவிக்காரியைப் போல, தன் கையை மோவாயில் கொடுத்துத் தாங்கிக்கொண்டு ஜன்னலருகே சென்று கீழே உட்கார்ந்தாள்.

வெளிறிய நீல வானத்தில் ரோஜா நிறமும் வெண்மையும் கலந்து மேகப் படலங்கள் மிதந்து சென்றன. ஆலைச் சங்கின் அலறலால் பயந்தடித்துக்கொண்டு பறந்தோடும் ஒரு பெரிய பறவைக் கூட்டம் போலத் தோன்றியது அந்த மேகக் கூட்டம். தாய் அந்த மேகத் திரளைப் பார்த்தாள். தனது இதயத்தில் எழுந்த சிந்தனைகளோடு தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள். அவளது தலை கனத்துப் போயிருந்தது. இரவு முழுவதும் தூங்காததனால் கண்கள் வறண்டு சிவந்து கனன்று போயிருந்தன. அவளது இதயத்தில் எதோ ஒரு அதிசயமான அமைதி குடிகொண்டிருந்தது. அவளது மனதில் சாதாரணமான எண்ணங்கள் நிரம்பித் ததும்பிச் சுறுசுறுப்போடு இயங்கிக்கொண்டிருந்தன.

“நான் தேநீரை ரொம்ப சீக்கிரம் கொதிக்க வைத்தேன். தண்ணீர் பூராவும் சீக்கிரம் கொதித்துக் காய்ந்துவிடும்…… அவர்கள் இருவரும் மிகவும் களைத்துப் போயிருக்கிறார்கள். இன்றைக்குக் காலையிலாவது அவர்கள் கூடக் கொஞ்ச நேரம் தூங்கட்டும்……”

காலைக் கதிரவனின் இளங்கதிர்க் கீற்று மிகுந்த உவகையோடு ஜன்னலின் மேலாக எட்டிப் பார்த்தது. அந்தக் கதிரை நோக்கித் தன் கையை நீட்டினாள் தாய். அவளது சருமத்தின் மீது அந்த இளங்கதிர் தோய்ந்து அதனால் சிறிது கதகதப்பு ஏற்பட்டபோது அவள் தனது மறு கையால் அந்தக் கதகதப்பான பாகத்தைத் தடவிக் கொடுத்துக் கொண்டாள். அதேவேளையில் சிந்தனைவயப்பட்டு லேசாக சிரித்துக் கொண்டாள். பிறகு அவள் அங்கிருந்து எழுந்து தேநீர்ப் பாத்திரத்தின் குழாயைச் சுத்தம் செய்யாமல் திருகிவிட்டாள். பின்பு முகம் கை கழுவிவிட்டு தன் முன்னால் கையால் சிலுவை கீறிக்கொண்டு பிரார்த்திக்கத் தொடங்கினாள்.

அவள் முகம் ஒளிபெற்றது. வலது புருவம் ஏறியேறி இறங்கிக் கொண்டிருந்தது.

ஆலைச் சங்கின் இரண்டாவது ஓசை அவ்வளவு உரத்துக் கேட்கவில்லை. அதில் பழைய அதிகாரத் தொனியும் தொனிக்கவில்லை. அதனது கனத்த ஈரம் படிந்த குரலில் சிறு நடுக்கம் தென்பட்டது. வழக்கத்துக்கு மீறி அது வெகுநேரம் அலறிக் கொண்டிருப்பதாகத் தாய்க்குப்பட்டது.

அடுத்த அறையிலிருந்து ஹஹோலின் தெளிவான ஆழ்ந்த குரல் ஒலித்தது.

”கேட்கிறதா, பாவெல்?”

யாரோ தரைமீது நடந்து செல்வது கேட்டது. அவர்களில் யாரோ ஒருவர் நிம்மதியோடு கொட்டாவிவிடும் ஓசையும் கேட்டது.

“தேநீர் தயார்” என்று கத்தினாள் தாய்.

”நாங்கள் எழுந்து விட்டோம்” என்று உற்சாகமாகப் பதிலளித்தான் பாவெல்.

”சூரியன் உதயமாகிவிட்டது. வானத்தில் ஒரே மேகமாயிருக்கிறது. இன்றைக்கு மேகமில்லாது இருந்தால் நன்றாயிருக்கும் என்றான் ஹஹோல்.

படிக்க:
தென்னை விவசாயி ராஜேந்திரன் : வங்கி கடன், சிங்கப்பூர் உழைப்பு, தொழிலாளி சேமிப்பு – அத்தனையும் அழிந்தது !
பரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா ? மறுக்கிறதா ?

அவன் தூக்கக் கலக்கம் தெளியாது முகத்தைச் சுழித்துக்கொண்டு சமையலறைக்கு தடுமாறிக்கொண்டே ஆனால், உற்சாகமாக வந்தான்.

“வணக்கம். அம்மா? எப்படித் தூங்கினீர்கள்?”

தாய் அவனருகே சென்று மெதுவாக சொன்னாள்,

“நீ அவன் பக்கமாகவே போகவேண்டும், அந்தியூஷா.”

“நிச்சயமாய்” என்றான் ஹஹோல். ‘அம்மா, ஒன்று மட்டும் உங்களுக்கு நிச்சயமாயிருக்கட்டும். நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும்வரையிலும், ஒருவர் பக்கம் ஒருவராகத்தான் இருவருமே முன்னேறிச் செல்வோம். தெரிந்ததா?”

“நீங்கள் இரண்டு பேரும் என்ன குசுகுசுக்கிறீர்கள்?’ என்று கேட்டான் பாவெல்.

”ஒன்றுமில்லை, பாஷா!”

”வேறொன்றுமில்லை. என்னைக் கொஞ்சம் நன்றாக முகத்தைக் கழுவிக்கொண்டு போகச் சொல்கிறாள். அப்படிப் போனால்தான் பெண்கள் எல்லாம் என்னைப் பார்த்து மயங்குவார்கள்?” என்று கூறிக்கொண்டே ஹஹோல் முகம் கை கழுவுவதற்காக வாசற்பக்கத்துக்குச் சென்றான்.

“துயில் கலைந்து அணியில் சேர விரைந்து வாரும் தோழர்காள்!” என்று லேசாகப் பாடினாள் பாவெல்.

நேரம் ஆக ஆகப் பொழுதும் நன்கு புலர்ந்து வானம் நிர்மலமாயிற்று. மேகத் திரள்கள் காற்றால் தள்ளப்பட்டு ஒதுங்கி ஓடிவிட்டன. சாப்பாட்டு மேஜையைத் தயார் செய்யும் போது தாய் எதையெதையோ எண்ணித் தலையை அசைத்துக்கொண்டாள். அவளுக்கு எல்லாம் ஒரே அதிசயமாயிருந்தது. அவர்கள் இருவரும் அன்று காலையில் கேலியும் கிண்டலுமாய்ச் சிரித்துப் பேசிப் பொழுதைப் போக்கினார்கள்; ஆனால் நண்பகலில் அவர்களுக்கு என்ன ஆபத்து காத்திருக்கிறது என்பதோ அவருக்கும் தெரியாது. இருந்தாலும். அவள் அதனால் கலவரமடையவில்லை. அமைதியாகவும் குஷியாகவும் இருந்தாள்.

”அவர்கள் மக்களை மட்டும்தான் மதிக்கவில்லை என்பது அல்ல. மக்களின் மீது ஏவிவிடும் வேட்டை நாய்களாக உபயோகிக்கும் தங்களது கைக்கூலிகளைக்கூட அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். அக் கைக்கூலிகள் தொலைந்து போனதற்காக அவர்கள் வருந்தமாட்டார்கள்; தங்கள் காசு தொலைந்து போனால்தான் வருத்தப்படுவார்கள்!”

காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதற்கென்று நெடுநேரம் தேநீர் அருந்தினார்கள். பாவெல் தனது கோப்பையிலிருந்து சர்க்கரையை வழக்கம் போலவே மிகவும் மெதுவாகக் கலக்கிக் கரைத்தான். ரொட்டியின் மீது உப்பைச் சரிசமமாகத் தூவிக்கொண்டான். அதுதான் அவனுக்கு எப்போதும் பிடித்த பொருள். ஹஹோல் மேஜைக்கடியில் கால்களை அப்படியும் இப்படியும் மாற்றி மாற்றி வைத்துக் கொண்டிருந்தான். அவனுக்குத் தன் கால்களை எப்படி வைத்தாலும் செளகரியமாயிருப்பதாகத் தோன்றவில்லை. தேநீரில் பட்டுப் பிரதிபலிக்கும் சூரிய ஒளி சுவரிலும் முகட்டிலும் ஆடியசைந்து நர்த்தனம் புரிவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“நான் பத்து வயதுப் பையனாக இருக்கும்போது, எனக்குச் சூரியனை ஓர் கண்ணாடிக் கிளாசுக்கள் பிடித்து வைத்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்ததுண்டு” என்றான் அவன். “எனவே நான் ஒரு கிளாஸை எடுத்துக் கொண்டு சூரியன் விழும் இடத்துக்குச் சென்று கண்ணாடிக் கிளாஸால் டபக்கென்று அமுக்கிப் பிடித்தேன். கண்ணாடி உடைந்து என் கையில்தான் காயம்பட்டது. அத்துடன் வீட்டிலும் அடி வேறு விழுந்தது. அடிபட்ட பிறகு நான் வீட்டு முற்றத்துக்கு வந்தேன். அப்போது சூரியன் ஒரு சேற்றுக் குட்டையில் தெரிந்தது.

உடனே என் ஆத்திரத்தையெல்லாம் வைத்துக் கொண்டு அந்தச் சூரியனை மிதிமிதியென்று மிதித்துத் தள்ளிவிட்டேன். என் மேல் காலெல்லாம் சேறு தெறித்துப் பாழாயிற்று. இதற்காக நான் மீண்டும் ஒருமுறை அடி வாங்கினேன். அந்தச் சூரியனைப் பழிவாங்க எனக்கு ஒரே ஒரு வழிதான் பட்டது. சூரியனைப் பார்த்து நாக்கைத் துருத்தி வக்கணை காட்டினேன். “ஏ சிவந்த தலைப் பிசாசே எனக்கு இந்த அடி ஒண்ணும் வலிக்கலே வலிக்கவே இல்லை!” என்று கத்தினேன். அதில் எனக்கு ஓரளவு ஆறுதல் கிடைத்தது.”

”நீ ஏன் அதைச் சிவந்த தலைப் பிசாசு என்றாய்?” என்று கேட்டுச் சிரித்தான் பாவெல்.

“அதற்குக் காரணம் வேறு, எங்கள் வீட்டுக்கு எதிர்த்தாற்போல் ஒரு பெரிய சிவந்த தலைக் கொல்லன் இருந்தான். அவன் தாடியும் சிவப்பு. அவன் ஒரு குஷிப் பேர்வழி. அன்பானவன். சூரியன் அவனைப் போலவே இருந்ததாக எனக்குத் தோன்றியது.”

தாய்க்கு இந்த வேடிக்கைப் பேச்சுக்களைக் கேட்பதற்குப் பொறுமையில்லை. எனவே, அவள் பொறுமையிழந்து கேட்டாள்.

“இன்றைக்கு நீங்கள் எப்படி அணிவகுத்துப் போகப் போகிறீர்கள்? அதைப்பற்றி ஏன் பேசவில்லை?”

“அதெல்லாம் ஏற்கெனவே முடிவு பண்ணி ஏற்பாடாகிவிட்டது. அதை இப்போது போட்டுக் குழப்புவானேன்?” என்று அமைதியாகச் சொன்னாள் ஹஹோல். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தால் நாங்களெல்லாம் கைதாகிவிட்டாலும் நிகலாய் இவானவிச் உன்னிடம் வந்து இனி ஆக வேண்டியதைக் கூறுவான். அம்மா!”

“ரொம்ப நல்லது” என்று பெருமூச்சுடன் சொன்னாள் தாய்.

“நாம் கொஞ்ச நேரம் உலாவிவிட்டு வந்தாலென்ன?” என்று ஏதோ நினைவாய்ச் சொன்னான் பாவெல்.

”இப்போது வீட்டிலேயே இருப்பதுதான் நல்லது. நேரம் வருவதற்கு முன்னாலேயே போலீஸ்காரர்களின் கண்களை ஏன் உறுத்தவேண்டும் என்கிறாள். உன்னை அவர்களுக்கு ஏற்கெனவே நன்றாய்த் தெரியும்” என்றான் அந்திரேய்.

பியோதர் மாசின் அவசர அவசரமாக உள்ளே வந்தான். அவனது முகம் பிரகாசமுற்றுக் கன்னங்கள் சிவந்து காணப்பட்டன. அவனது ஆனந்தமயமான உத்வேகம் அவர்களது காத்துக்கிடக்கும் சங்கடத்தை தளர்த்தியது.

“எல்லாம் ஆரம்பமாகிவிட்டது. ஜனங்கள் எழுச்சி பெற்றுவிட்டார்கள்! முகங்கள் எல்லாம் வெட்டரிவாள் மாதிரி கூர்மை பெற்றுப் பிரகாசிக்க அவர்கள் தெருவிலே வந்து கூடிவிட்டார்கள். நிகலாய் வெஸோவ்ஷிகோல், வசீலி கூஸெவ், சமோயலவ் எல்லோரும் தொழிற்சாலை வாசலில் நின்று கொண்டு பிரசங்கம் செய்கிறார்கள். எவ்வளவு தொழிலாளர்கள் வீட்டுக்குத் திரும்பிப் போய்விட்டார்கள்! வாருங்கள், போவதற்கு நேரமாகிவிட்டது. அப்போதே மணி பத்தடித்துவிட்டது” என்றான் அவன்.

”சரி. நான் போகிறேன்” என்று உறுதியாகச் சொன்னான் பாவெல்.

“பாருங்களேன்! மத்தியானத்துக்கு மேல் தொழிற்சாலையில் உள்ளவர்கள் அத்தனை பேரும் வெளிவந்து விடுவார்கள்” என்றான் பியோதர்.

அவன் ஒடினான்.

”அவன் காற்றில் எரியும் மெழுகுவர்த்தி மாதிரி இருக்கிறான்” என்றாள் தாய். பிறகு அவள் அங்கிருந்து எழுந்து சமையலறைக்குள் உடை மாற்றிக்கொள்ளப் போனாள்.

”எங்கே புறப்படுகிறார்கள், அம்மா?” என்று கேட்டான் அந்திரேய்.

”உங்களோடுதான்” என்று பதிலளித்தாள் தாய்.

அந்திரேய் தன் மீசையை இழுத்து விட்டவாறே பாவெலைப் பார்த்தான். பாவெல் தனது தலைமயிரைப் பலமாகக் கோதி விட்டவாறே தாயிடம் போனான்.

“அம்மா, நானும் உன்னிடம் எதுவும் பேசமாட்டேன்; நீயும் என்னிடம் எதுவும் பேசக்கூடாது. சரிதானே?”

“ரொம்ப சரி, ரொம்ப சரி. கடவுள் உங்களுக்கு அருள் செய்யட்டும்” என்று முனகினாள் அவள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

பாசிசத்தை வீழ்த்த நவம்பர் புரட்சி நாளில் சூளுரைப்போம் | கணேசன்

க்களை மரணக்குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம்! என்ற முழக்கத்தை முன் வைத்து, ரசியப் புரட்சியின் நோக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக நவம்பர் புரட்சிதின விழாவைக் கொண்டாடின, ம.க.இ.க., பு.மா.இ.மு., பெ.வி.மு. உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள்.

சென்னையில், கடந்த நவம்பர் 11 அன்று நடைபெற்ற விழாவில், பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் பங்கேற்று ஆற்றிய உரையின் காணொளி!

இன்று உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்கள் முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு பலியாகி வருகின்றனர். இன்று முதலாளித்துவம் உயிர் வாழ்வதற்காக உலகம் முழுவதிலும் மதவெறி, இனவெறி பாசிஸ்டுகளை ஆட்சி அதிகாரத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அன்று இனவெறி பாசிஸ்டான கொடுங்கோலன் ஹிட்லரைக் கண்டு உலகமே அச்சத்தில் இருந்த போது, அந்த ஹிட்லரை ஓட ஓட விரட்டி இந்த பூமிப் பந்தை மீட்டது ஸ்டாலின் தலைமையிலான மக்கள் ராணுவம். இன்று இந்தியாவின் மதவெறி பாசிஸ்டான மோடியை மட்டுமல்ல, உலகம் முழுதும் பல்வேறு நாடுகளை ஆக்கிரமித்துள்ள பாசிசத்தை எவ்வாறு வீழ்த்தப்போகிறோம் என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக உரையாற்றியிருக்கிறார்.

அவரது உரையின் காணொளி!

பாருங்கள்! பகிருங்கள்!!

சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும் | மருத்துவர் B.R.J. கண்ணன்

ர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்பது என்ன? சர்க்கரைக்கும் சர்க்கரை நோய்க்கும் என்ன தொடர்பு? மாவுச்சத்துள்ள உணவுப் பொருட்களை சேர்த்துக்கொண்டாலும் சர்க்கரை கூடுமா? வாழ்க்கை முறையில் மேற்கொள்ளும் சில மாற்றங்களின் மூலமாகவே எவ்வாறு சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பதை விளக்குகிறார், மருத்துவர் B.R.J. கண்ணன்.

மருத்துவர் B.R.J. கண்ணன்.

ர்க்கரை கட்டுக்குள் வரவில்லையா ? மருத்துவர் சொன்ன அத்தனையும் பின்பற்றிய பின்னும் சர்க்கரை தொடர்கிறது எனில் உங்களுக்கு அவசியமான வீடியோ இது.

முதலில் சர்க்கரை நோய் / நீரிழிவு நோய் என்றால் என்ன ?

நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் மாவுப்பொருள், கொழுப்பு, புரதம் ஆகியவை இருக்கின்றன. மாவுப் பொருளைப் பொருத்தவரையில், உடலில் சீரணிக்கப்பட்ட பிறகு அது சர்க்கரையாக மாறி இரத்ததில் சேரும். நமது உடல் அதை உபயோகிக்க வேண்டும். இந்த செயல்நடக்க நமது உடலில் இன்சுலின் சுரக்க வேண்டும். இன்சுலின் இருந்தும் அது உபயோகிக்கப் படவில்லை என்றாலோ, நம் உடலில் இன்சுலின் குறைவாக சுரந்தாலோ, இரத்ததில் சர்க்கரை தேங்கி நிற்கும். அதுதான் சர்க்கரை நோய்.

இதனடிப்படையில் பார்த்தால், உடலில் சர்க்கரை தேங்கினால்தான் சர்க்கரை நோய் வரும் என்பது தெரிகிறது. சர்க்கரை, நாம் உட்கொள்ளும் மாவுப் பொருளில் இருக்கிறது. ஒருவருக்கு மீன் சாப்பிட்டால் உடலில் தடிப்பு / அலர்ஜி வரும் எனில், அவரிடம் மீன் சாப்பிடாதீர்கள் என்போம். மீன் சாப்பிட்டால்தான் அவரது நோய் வெளிப்படும். மீன் சாப்பிடவில்லையெனில் வெளிப்படாது. அதுப்போலதான் இங்கும். நாம் உட்கொள்ளும் உணவில் சர்க்கரை அளவு இருந்தால் மட்டுமே இரத்தத்தில் சர்க்கரை ஏறும்.

ஒரு பிரச்சினை ஏற்படுகிறது என்றால், அதன் மூலத்தைக் கண்டறிந்து அதனை தடுத்து நிறுத்துவது போல, இங்கும் இரத்தத்தில் சர்க்கரை சேர்வதைத் தடுக்க, உட்கொள்ளும் உணவில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வேண்டும். பிரச்சினையின் அடிப்படைக் காரணத்தைக் கட்டுப்படுத்தாமல் இதற்கு தீர்வு கிடையாது.

”நான் காஃபி, டீ சர்க்கரை போடுவதில்லை, இனிப்பு சாப்பிடுவதில்லை” என பலர் சொல்கின்றனர். இனிப்பு யாரும் தினமும் சாப்பிடுவது கிடையாது. அதே போல காபி, டீயில் போடப்படும் சர்க்கரையும் உடலில் பெருமளவு சர்க்கரையை சேர்ப்பதில்லை. இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல், சோறு, ரவை ஆகிய அனைத்திலும் சர்க்கரை இருக்கிறது.

நாம் காலையிலிருந்து இரவு வரை உண்ணும் உணவில் 50%தான் மாவுப்பொருள் இருக்க வேண்டும் என்ற ஒரு விதி இருக்கிறது. ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது?. காலையில் இட்லி தோசை, மதியம் சாதம், இரவு சப்பாத்தி என கணக்கிட்டால் மொத்தம் 85 – 90 % மாவுப் பொருட்களையே உணவாக எடுத்துக் கொள்கிறோம்.

தென் இந்தியா, வட இந்தியா என அனைவரும் மாவுப் பொருட்களையே உணவாக எடுத்துக் கொள்கின்றனர். அதன் காரணமாகவே இந்தியாவில் பொதுவாகவே சர்க்கரை நோய் மக்களிடம் அதிகமாக இருக்கிறது. ஆகவே எப்படி இதைக் குறைப்பது?

முதலில் உணவில் சர்க்கரையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொள்ளவேண்டும். அரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, திணை, குதிரைவாலி, வரகு, ஓட்ஸ் அனைத்தும் சர்க்கரைதான். அதாவது மாவுப் பொருட்கள்.

படிக்க:
அறிவும், ஆரோக்கியமும் செழிக்கச் செய்த ஆசான்கள் – திப்பு
அறிவியல் பார்வையில் ஹோமியோபதி – சித்தா – ஆயர்வேதம் – யுனானி

எனில் நாம் சாப்பிட ஒன்றுமே இல்லையா எனக் கேள்வி எழலாம். அப்படி கிடையாது. நாம் அத்தகைய உணவுகளை நினைத்துப் பார்ப்பது கிடையாது. காலையில் இரண்டு முட்டை, ஒரு கோப்பை பால். அல்லது பயிர்வகைகளில் ஏதாவது சாப்பிட்டுக் கொள்ளலாம். ஒரு கோப்பை பழவகைகள் அல்லது கட்டித் தயிர் ஒரு கோப்பை சாப்பிடலாம். இது போல நாமே நமது உணவுப் பழக்கத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம். அதில் மாவுப் பொருட்கள் குறைவாக உள்ளதா என்பதை மட்டும் பார்த்துக் கொள்ளவேண்டும்.

மதிய உணவிற்கு கீரை, காய்கறி, தயிர், போன்றவையே எடுத்துக் கொள்ள வேண்டும். வேண்டுமென்றால் ஓரத்தில் ஒரு தேக்கரண்டி சோறு வைத்துக் கொள்ளவும். முட்டைக் கோஸ் பொறியல், எண்ணெய் கத்தரிக்காய், தயிர் போன்றவை மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். முடியாது என நினைக்காமல், முயன்றால் இவ்வுணவிற்கு பழகி விடலாம்.

இரவுக்கு சுண்டல், பச்சைபட்டாணி, பட்டர் பீன்ஸ், பன்னீர், காளான் என நாமே திட்டமிட்டு உண்ண வேண்டும். தோசை, சப்பாத்தி எடுக்கக் கூடாது. அசைவம் சாப்பிட வேண்டுமெனில் அதுவும் எடுத்துக் கொள்ளலாம்.

கோழி சாப்பிடவேண்டும் என விரும்பினால், கோழி வாங்கி வெங்காயம் போட்டு சமைத்து சாப்பிடலாம். ஆனால் சோறு போட்டு சாப்பிடக் கூடாது.

அசைவ உணவு சாப்பிடுகிறோம் என சொல்லிக் கொண்டு ஒரு 100 கிராம் சிக்கன் சாப்பிட்டால், அரைக்கிலோ அல்லது ஒரு கிலோ சோறு சாப்பிடுகிறோம். நாம் சாப்பிடும் சோறு / பிரியாணிதான் நமக்கு நோயைக் கொண்டுவருகிறது. ஆனால் பழியை நாம் சிக்கன் மீது போடுகிறோம்.

வாரம் இருமுறை அசைவம் சாப்பிட வேண்டும் என தோன்றினால் சாப்பிடலாம். ஆனால் சோறு சேர்க்கக் கூடாது. இடையில் பசித்தால், வெள்ளரிப் பிஞ்சு கேரட், தேங்காய், உலர் பழங்கள், போன்றவை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பிஸ்கட், ரஸ்க், சிப்ஸ் போன்றவை எடுத்துக் கொள்ளக்கூடாது.

சமைக்க நெய் எண்ணெய் எதுவேண்டுமானாலும் உபயோகிக்கலாம். அது போதுமான கொழுப்புச் சத்தை கொடுக்கும். இதைத் தொடர்ந்தால் கண்டிப்பாக சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வந்து தீரும். இதைத் தொடங்கினால், முதலில் ஒரு வாரத்துக்கு கடினமாக இருக்கும். அதன் பிறகு சிறப்பாக உணர ஆரம்பிப்பீர்கள். உடல் இதனை எளிமையாக ஏற்றுக் கொள்ளும். ஆனால் மனம்தான் ஏற்றுக் கொள்ளாது.

இதில் முக்கியமான விசயம் என்னவெனில், எந்தெந்த வீட்டில் குடும்பத் தலைவியர் இதன் அருமையை உணர்ந்திருக்கிறார்களோ, அவர்கள் சரியாக உணவை மாற்றிக் கொடுக்கிறார்கள். அவர்களுக்கும் அவர்களது கணவருக்கும் சர்க்கரை குறைகிறது.

இதுபோன்ற உணவு முறையை பின்பற்றிவிட்டு, 100 – 110 யூனிட் இன்சுலின் போட்டவர்கள் 5 – 10 யூனிட்டுக்கு குறைத்திருக்கிறார்கள். 1-2 மாத்திரை போட்டவர்கள் மாத்திரையே இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள். சர்க்கரை இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள். இது அறிவியல் சார்ந்த தீர்வு.

காணொளியைக் காண

மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

மன்னார்குடி கருவாக்குறிச்சி : என்னோட குலசாமி உயிரு என் கையிலயே போயிருச்சு | காணொளி | படங்கள்

புயலின்போது மரம் விழுந்து இறந்துபோன சிறுவன் கணேசன்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, கருவாக்குறிச்சி கிராமம் கஜா புயலால் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. பல்வேறு வீடுகள் சேதமடந்துள்ளது. தென்னந்தோப்புகள் கடுமையான பாதிப்படைந்துள்ளன. மரங்களை அப்புறப்படுத்த முடியாமல், வீடுகளை சரிசெய்ய முடியாமல் தவிக்கின்றனர் மக்கள். புயலுக்குப் பின் அமைதி இன்னும் திரும்பவில்லை! அரசின் நிவாரணப்பணி எட்டாத மற்றுமொரு கிராமமிது.

இந்த கிராமத்தில் மரம் விழுந்ததில் அடிபட்டு இறந்துபோனான் சிறுவன் கணேசன். “என்னோட குல சாமி உயிரு என் கையிலேயே போயிருச்சு” என்று கதறுகிறார் சிறுவனின் தாய்.

புயலின்போது மரம் விழுந்து இறந்துபோன சிறுவன் கணேசன்.
புயலின்போது மரம்விழுந்து இறந்துபோன சிறுவன் கணேசனின் குடும்பம்.
தென்னை விவசாயத்தின் அழிவு.
புயலுக்கு பின் இத்தனை நாட்கள் கடந்தும் குடிசை வீடுகளை சரிசெய்ய முடியாத நிலை.

படிக்க:
புயல் எவ்வாறு தோன்றுகிறது ? காணொளி
அரசால் வஞ்சிக்கப்படும் காவிரி டெல்டா மக்களுக்கு தோள் கொடுப்போம் !

மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் ஊர் மக்கள்.

***

வாய்க்கா தண்ணிய வடிகட்டி குடிச்சிட்டிருக்கோம்

”சொந்த செலவில் 25,000 செலவு பண்ணி ரோட்டை சரி செஞ்சிருக்கோம். குடிக்க தண்ணியில்ல. வாய்க்கா தண்ணிய வடிகட்டி குடிச்சிட்டிருக்கோம். போர் தண்ணி ஒரு டேங்க் – ஆவது ரொம்பட்டுமேனு மணிக்கு ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு ஜெனரேட்டர் வாடகைக்கு வாங்கியாந்திருக்கோம். நாலு நாலுக்கு அப்புறம் இப்பத்தான் இ.பி. காரங்களே பத்து பேரு வந்துருக்காங்க. அதிகாரிங்க இதுவரைக்கும் யாரும் எங்கள வந்து பாக்கவுமில்லை. என்ன ஏதுனு கேக்கவுமில்லை.”

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, மூவர் கோட்டை கிராமத்தில் ஏற்பட்டுள்ள கஜா புயல் பாதிப்புகளையும் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் விவரிக்கிறார், அக்கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன்.

படங்கள், காணொளி:

கருணையுள்ள கடவுளே ! அவர்களுக்கு நல்லது செய் ! அவர்களைக் காப்பாற்று !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 25 (தொடர்ச்சி)

மாக்சிம் கார்க்கி
”பூமி எங்கிருந்து வந்தது என்பதைப் பற்றி முஜீக்குக்குக் கவலை கிடையாது” என்று உரத்த பெருமூச்சுடன் பேசத் தொடங்கினான் ரீபின்: “அது கைக்குக் கை எப்படி மாறுகிறது என்பதும், மக்களிடமிருந்து பண்ணையார் எப்படி அதைத் தட்டிப் பறிக்கிறார் என்பதைப் பற்றியும்தான் அவனுக்குக் கவலை. பூமி சுற்றிக் கொண்டிருந்தாலும், சுற்றாமல் அப்படியே நின்றாலும் அவனைப் பொருத்தவரையில் ஒன்றுதான்.

அந்தப் பூமி அவன் காலடியிலேயே கிடந்தாலும் சரி, அல்லது ஆகாசத்தோடு போய் ஒட்டிக்கொண்டாலும் சரி. அவனுக்கு அது நன்றாகச் சாப்பாடு மட்டும் போட்டால் போதும்!

”அடிமை வாழ்வின் சரித்திரம்” என்ற ஒரு புத்தகத்தின் தலைப்பைப் பார்த்து வாசித்தான் எபீம். “இதென்ன, நம்மைப் பற்றிய புத்தகமா?”

“நீ உன் வாத்தியத்தையே வாசித்துக் கொண்டிரு. பூமியில் அறைந்தாற்போல் அசைவற்று நிற்பவர்களைத் தவிர, மற்றவர்கள் உன் பாட்டுக்குத் தக்கபடி ஆட்டம் ஆடுவார்கள். நமக்குக் கீழே பூமி இருக்கிறது என்பதை நாம் உணரவில்லை என்று ரீபின் சொன்னதில் தவறில்லை.

”இந்தப் புத்தகத்தில் நமது ருஷ்ய அடிமை வாழ்வைப் பற்றி ஒரு அத்தியாயம் இருக்கிறது” என்று கூறிக்கொண்டே பாவெல் அவனிடம் வேறொரு புத்தகத்தை எடுத்து நீட்டினான். எபீம் அந்தப் புத்தகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். பிறகு அதைக் கீழே வைத்துவிட்டுச் சொன்னான்.

”இதெல்லாம் பழைய காலத்து விவகாரம்.”

“சரி, உங்களுக்குச் சொந்தமாக நிலம் ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டான் பாவெல்.

“இருக்கிறது. எனக்கும் என் சகோதரர் இருவருக்கும் சுமார் பத்தரை ஏக்கர் நிலம் இருக்கிறது. எல்லாம் ஒரே மணல் வெளி. பாத்திரம் விளக்க உதவுமே ஒழிய, பயிர் செய்ய உதவாத மண்.”

ஒரு கணம் கழித்து மீண்டும் அவன் பேசத் தொடங்கினான்.

”நான் நிலத்தை விட்டுவிட்டேன். அதை வைத்துக் கொண்டு என்ன பிரயோஜனம்? சும்மா நம்மை வேலையில்லாமல் கட்டித்தான் போடும், உணவு தராது. நாலு வருஷ காலமாய், நான் பண்ணைக் கூலியாளாகத்தான் வேலை பார்த்து வருகிறேன். மழைக்காலத்துக்குப் பிறகு நான் ராணுவ சேவைக்கும் செல்ல வேண்டும். ‘பட்டாளத்துக்குப் போகாதே. இப்போதெல்லாம் சிப்பாய்களைக் கொண்டு ஜனங்களை அடிக்கச் சொல்லுகிறார்களாம்’ என்று மாமா மிகயீல் சொன்னார். ஆனால் நான் போய்ச் சேரத்தான் எண்ணியிருக்கிறேன். ஸ்திபான் ராசின், புகச்சோவ் முதலியவர்கள் காலத்திலும் கூட, பட்டாளத்துக்காரர்கள் ஜனங்களை அடித்து நொறுக்கத்தான் செய்தார்கள். இதுக்கொரு முடிவுகட்ட வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று அவன் பாவெலைக் கூர்ந்து பார்த்தவாறே கேட்டான்.

”ஆமாம். காலம் மாறத் தொடங்கிவிட்டது!” என்று இளம் புன்னகையுடன் சொன்னான் பாவெல். ”ஆனால் காலத்தைப் பரிபூரணமாக மாற்றுவது மிகவும் கடினமான காரியம். நான் சிப்பாய்களிடம் என்ன சொல்ல வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.”

”நாங்கள் அதைக் கற்றுக் கொள்வோம்” என்றான் எபீம்.

“ஆனால், ராணுவ அதிகாரிகள் அதைக் கண்டுபிடித்து விட்டார்களோ, அப்புறம் உங்களைச் சுட்டுக் கொன்று விடுவார்கள்” என்று எபீமைக் குறுகுறுவென்று பார்த்துக்கொண்டே சொன்னான் பாவெல்.

“ஆமாம், அவர்களிடம் இரக்கச் சித்தத்தை எதிர்பார்க்க முடியாது” என்று அந்தப் பையன் அமைதியுடன் ஆமோதித்துக்கொண்டே மீண்டும் புத்தகங்களைக் கவனிக்கத் தொடங்கினான்.

“தேநீர் அருந்து, எபீம்” என்றான் ரீபின். ”நாம் சீக்கிரம் புறப்பட வேண்டும்.”

“அதற்கென்ன? போவோம். அது சரி, புரட்சி என்பது என்ன? பெருங்கலகமா?” என்றான் எபீம்.

அதற்குள் அந்திரேய் அங்கு வந்து சேர்ந்தான். குளித்துவிட்டு வந்ததால் அவனது உடம்பெல்லாம் சிவந்துபோய் ஆவியெழும்பிக் கொண்டிருந்தது. முகத்தில் சோர்ந்த பாவம் காணப்பட்டது. அவன் ஒன்றுமே பேசாமல் எபீமோடு கைகுலுக்கிவிட்டு ரீபினுக்கு அடுத்தாற்போல் உட்கார்ந்தான். ரீபினைப் பார்த்ததும் லேசாகச் சிரித்துக் கொண்டான்.

”நீ ஏன் உற்சாகமே அற்றுப் போயிருக்கிறாய்?” என்று அவனது முழங்காலில் தட்டிக்கொண்டே கேட்டான் ரீபின்.

“ஒன்றுமில்லையே” என்றான் ஹஹோல்.

“அவனும் ஒரு தொழிலாளிதானா?” என்று அந்திரேயைப் பார்த்துக் கேட்டான் எபீம்.

“ஆமாம். எதற்காகக் கேட்கிறாய்?” என்றான் அந்திரேய்.

“இல்லை. அவன் இதற்கு முன் எந்த ஆலைத் தொழிலாளியையும் பார்த்ததே இல்லை. அவனுக்கு அவர்களைப் பற்றி ஒரு தனி அபிப்பிராயம்” என்றான் ரீபின்.

“எப்படிப்பட்ட அபிப்பிராயம்?” என்றான் பாவெல்.

“உங்கள் எலும்புகள் கூர்மையானவை. ஆனால் விவசாயியின் எலும்புகள் மொட்டையானவை” என்று அந்திரேயைக் கூர்ந்து பார்த்தபடி சொன்னான் எபீம்.

“முஜிக் தன் கால்களை நிலத்தில் நன்றாகப் பதிய ஊன்றி நிற்கிறான் – நிலம் அவனுக்குச் சொந்தமில்லாவிட்டாலும், நிலத்தில் நிற்கும் உணர்ச்சி மட்டும் அவனை விட்டு நீங்குவதில்லை. அவன் பூமியைத் தொட்டு உணர்கிறான். ஆனால் ஆலைத் தொழிலாளியோ, அப்படியல்ல. அவன் ஒரு சுதந்திரமான பறவை. நிலம், வீடு என்று எந்தப் பற்றுதலும் அவனுக்கு கிடையாது. இன்றைக்கு இங்கே, நாளைக்கு எங்கேயோ? ஒரு பெண்ணின் ஆசைகூட, அவனை ஒரே இடத்தில் இருத்தி வைத்துவிட முடியாது. அவனுக்கும் அவளுக்கும் ஏதாவது ஒரு சின்னத் தகராறு வந்தாலும் போதும். உடனே அவளை விட்டு விலகி, வேறொரு இடத்தைத் தேடிப் புறப்பட்டுப் போய்விடுவான். ஆனால் முஜீக் அப்படியல்ல. இடத்திலிருந்து நகராமல் தன்னைச் சுற்றி மேன்மைப்படுத்திக் கொள்ள திரும்புவான். சரி, இதோ உன் அம்மா வந்துவிட்டாள்” என்று பேசி முடித்தான் ரீபின்.

நாம் பூமியில் காலூன்றி வெறுமனே நிற்கக்கூடாது. பூமியையே அசைக்க வேண்டும். நாம் அசைக்கிற அமைப்பில், அதனோடு ஒட்டிக்கிடந்து உழலுகின்ற மக்களை உலுக்கி, பிடி தவறச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால்தான் அவர்கள் அந்தப் பிடிப்பிலிருந்து விடுதலைப் பெறுவார்கள்…”

“சரி, எனக்கு ஒரு புத்தகம் இரவல் கொடுப்பீர்களா?” என்று பாவெலிடம் நெருங்கி வந்து கேட்டான் எபீம்.

“தாராளமாய்” என்றான் பாவெல்.

அந்தப் பையனின் கண்கள் பிரகாசம் அடைந்தன.

”நான் திருப்பித் தந்துவிடுவேன்” என்று அவன் அவசர அவசரமாக பாவெலுக்கு உறுதி கூற முனைந்தான். “எங்களூர்காரர்கள் இந்தப் பிரதேசத்துக்குத் தார் எண்ணெய் ஏற்றிக் கொண்டு அடிக்கடி வருவார்கள். அவர்கள் மூலம் கொடுத்தனுப்புகிறேன்.”

“சரி, போக நேரமாச்சு” என்று தனது கோட்டையும் பெல்டையும் எடுத்து மாட்டிக்கொண்டு கூறினான் ரீபின் .

“இதோ, படிக்கப் போகிறேன்” என்று ஒரு புத்தகத்தைச் சுட்டிக் காட்டியவாறு புன்னகையோடு கூறினான் எபீம்.

அவர்கள் சென்றவுடன் பாவெல் உணர்ச்சிவயப்பட்டவனாக அந்திரேயின் பக்கம் திரும்பினான்.

”இவர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று மகிழ்ச்சி பொங்கக் கேட்டான்.

”ஹூம்” என்று முனகினான் ஹஹோல். ”இரண்டு புயல் மேகங்கள் மாதிரிதான்!”

“மிகயீல் இருக்கிறானே. அவனைப் பார்த்தால் தொழிற்சாலையிலேயே வேலை பார்த்தவன் மாதிரி தோன்றவில்லை – அசல் முஜீக் ரொம்பப் பயங்கரமான ஆசாமி” என்றாள் தாய்.

“நீ இங்கே இல்லாமல் போனது ரொம்ப மோசம்” என்று அந்திரேயை நோக்கி, பாவெல் சொன்னான். அந்திரேய் மேஜைக்கு எதிராக அமர்ந்து, தன் எதிரே இருந்த தேநீர்க் கோப்பையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பாவெல் மேலும் பேசினான். ”நீ அடிக்கடி மனித இதயத்தைப் பற்றிப் பேசுகிறாயே. அவன் இதயத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீ கொஞ்சமாவது பார்த்திருக்க வேண்டும். பின் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் படபடவென்று பொரிந்து தள்ளி, என்னைத் திணற அடித்துவிட்டான். அவனுக்குப் பதில் சொல்லக்கூட எனக்கு வாயெழவில்லை. அவன் இந்த மனித ராசியை எவ்வளவு கேவலமாக மதிக்கிறான்? மனித குலத்திடமே அவனுக்கு நம்பிக்கை இல்லை. அம்மா சொன்னது ரொம்ப சரி. ஏதோ ஒரு பயங்கரமான சக்திதான் அவனுள் குடிகொண்டிருக்கிறது!”

”நானும் அதைக் கவனித்தேன்” என்று உணர்ச்சியற்றுக் கூறினான் ஹஹோல். “ஆட்சியாளர்கள் மக்களின் மனத்தில் விஷத்தை ஏற்றிவிட்டார்கள். மக்கள் மட்டும் ஒன்றுதிரண்டு கிளர்ந்தெழுந்தால், எல்லாவற்றையும் நொறுக்கித் தள்ளிவிடுவார்கள். அவர்களுக்கு வெறும் நிலம்தான் வேண்டும்; அந்த நிலத்தை வெறுமனே போட்டிருக்கவும் அவர்கள் செய்வார்கள். எல்லாவற்றையும் கிழித்தெறிந்து விடுவார்கள்.”

அவன் மெதுவாகவே பேசினான்; அவன் மனதில் வேறு ஏதோ ஒரு சிந்தனை ஊடாடிக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. தாய் வந்து அவனது தோளைத் தட்டிக் கொடுத்தாள்.

“தைரியமாயிரு, அந்தியூஷா” என்றாள் தாய்.

‘கொஞ்சம் பொறு, அம்மா’ என்று மிகுந்த பரிவோடு கூறினாள் அவன். திடீரென்று அவன் உத்வேக உணர்ச்சியோடு மேஜை மீது ஓங்கிக் குத்திக்கொண்டே பேசினான். ”அது உண்மைதான் பாவெல்! முஜீக் மட்டும் விழித்தெழுந்தால் அவனது நிலத்தைத் தரிசாகவே போட்டுவிடுவான். கொள்ளை நோய்க்குப் பிறகு மிஞ்சும் சாம்பலைப் போல, சகலவற்றையும் சுட்டெரித்துச் சாம்பலாக்கி, தான் பட்ட சிரமத்தின் வடுக்களையெல்லாம் தூர்த்துத் துடைத்துவிடுவான்!”

“அதன் பின் அவன் நம் வழிக்கு வந்து சேருவான்” என்று மெதுவாகச் சொன்னான் பாவெல்.

”ஆனால் அந்த மாதிரி நடக்காதபடி பார்த்துக்கொள்வதுதான் நமது வேலை. அவனைச் சரியான பாதையில் செலுத்துவதற்கு அவனை இழுத்துப்பிடிப்பது நமது வேலை. மற்றவர்களைவிட நாம்தான் அவனுக்கு மிகவும் நெருங்கியவர்கள். அவன் நம்மை நம்புவான். பின்பற்றுவான்.”

‘ரீபின் கிராமத்துக்கென்று ஒரு பத்திரிகை வெளியிடும்படி சொன்னான்” என்றான் பாவெல்.

“செய்ய வேண்டியதுதான்”
”அவனோடு நான் விவாதியாமல் போனது பெருந்தவறு” என்று லேசாகச் சிரித்துக்கொண்டே சொன்னான் பாவெல்.

“பரவாயில்லை, இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது” என்று அமைதியாகக் கூறிக்கொண்டே, தன் தலைமயிரைக் கோதிக் கொடுத்தான் ஹஹோல். “நீ உன் வாத்தியத்தையே வாசித்துக் கொண்டிரு. பூமியில் அறைந்தாற்போல் அசைவற்று நிற்பவர்களைத் தவிர, மற்றவர்கள் உன் பாட்டுக்குத் தக்கபடி ஆட்டம் ஆடுவார்கள். நமக்குக் கீழே பூமி இருக்கிறது என்பதை நாம் உணரவில்லை என்று ரீபின் சொன்னதில் தவறில்லை. மேலும், நாம் பூமியில் காலூன்றி வெறுமனே நிற்கக்கூடாது. பூமியையே அசைக்க வேண்டும். நாம் அசைக்கிற அமைப்பில், அதனோடு ஒட்டிக்கிடந்து உழலுகின்ற மக்களை உலுக்கி, பிடி தவறச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால்தான் அவர்கள் அந்தப் பிடிப்பிலிருந்து விடுதலைப் பெறுவார்கள்…”

படிக்க:
எச்ச ராஜாவோடு ஒரு ’ ஆன்டி இந்தியன் ’ நேருக்கு நேர் ! காணொளி
#MeToo : உழைக்கும் வர்க்கப் பெண்களின் பகிர்வுகள் !

“உனக்கு எல்லாமே எளிதாக இருக்கிறது அந்தியூஷா” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் தாய்.

“ஆமாம். வாழ்க்கையைப் போல்” என்றான் ஹஹோல்.

சில நிமிஷம் கழித்து அவன் பேசினாள்.

”சரி. நான் வயல் வெளியில் கொஞ்சம் உலாவி வரப்போகிறேன்.”

“குளித்த பிறகா? காற்று வேறு அடிக்கிறது. சளிப்பிடிக்கும்” என்று எச்சரித்தாள் தாய்.”

“கொஞ்சம் காற்றாடி வந்தால்தான் தேவலை” என்றான் அவன்.

“சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள். கொஞ்சம் பாடேன்!” என்றான் பாவெல்.

“வேண்டாம். நான் போகிறேன்.”

அவன் தனது உடைகளை மாட்டிக்கொண்டு ஒன்றுமே பேசாமல் வெளிக் கிளம்பினான்.

“அவன் மனம் என்னவோ சங்கடப்படுகிறது” என்று பெருமூச்சுடன் சொன்னாள் தாய்.

“அந்தச் சம்பவம் நடந்ததிலிருந்து நீ அவன் மீது அதிகமான அன்போடு நடந்து கொள்கிறாய். அதைப்பற்றி எனக்கு மிகுந்த சந்தோஷம் என்றான் பாவெல்.

”நானா? எனக்கு அப்படியொன்றும் தெரியவில்லை. என்னவோ அவனை எனக்கு ரொம்பவும் பிடித்துப்போயிற்று. எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை.”

“உனக்கு மிகவும் அன்பான மனம், அம்மா” என்று மெதுவாகச் சொன்னான் பாவெல்.

”நான் மட்டும் உனக்கு – உன் தோழர்கள் அனைவருக்கும் – உதவ முடிந்தால், கொஞ்சமேனும் உதவி செய்ய முடிந்தால் எப்படி உதவுவது என்பது மட்டும் தெரிந்தால்?”

“கவலைப்படாதே, அம்மா நீ தெரிந்து கொள்வாய்.”

”எனக்கு அது மட்டும் தெரிந்துவிட்டால் அப்புறம் கவலையே இராது” என்று சிறு சிரிப்புடன் கூறினாள் தாய்.

“சரி, அம்மா. இந்தப் பேச்சை விட்டுவிடுவோம். ஆனால் ஒன்று மட்டும் ஞாபத்தில் வைத்துக்கொள். உனக்கு நான் மிகவும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டவன்.”

அவள் பேசாது சமையலறைக்குள் சென்றாள். தன் கண்களில் பொங்கும் கண்ணீரை அவன் பார்த்துவிடக்கூடாதே என்ற அங்கலாய்ப்பு அவளுக்கு.

அன்று இரவு ஹஹோல் வெகு நேரம் கழித்துத்தான் வீடு திரும்பினான். வந்தவுடனேயே அவன் படுக்கச் சென்றுவிட்டான்.

“நான் இன்றைக்குப் பத்து மைலாவது நடந்திருப்பேன்.”

“அதனால் பலன் இருந்ததா?” என்று கேட்டான் பாவெல்.

”தொந்தரவு பண்ணாதே, எனக்குத் தூக்கம் வருகிறது.”

அவன் அதற்குப் பிறகு எதுவுமே பேசவில்லை.

சிறிது நேரம் கழித்து, நிகலாய் வெஸோவ்ஷிகோவ் உள்ளே வந்தான். அவனது ஆடைகள் கிழிந்து கந்தல் கந்தலாயிருந்தன. ஒரே அழுக்குமயமாகவும் அதிருப்தி நிறைந்தவனாகவும் அவன் வந்து சேர்ந்தான்.

“இஸாயை யார் கொன்றார்கள் என்று கேள்விப்பட்டாயா?” என்று பாவெலிடம் கேட்டுக்கொண்டே அவன் அறைக்குள் நடக்க ஆரம்பித்தான்.

”இல்லை” என்று சுருக்கமாக விடையளித்தான் பாவெல்.

“எவனோ ஒருவன் வேண்டா வெறுப்பாக இந்தக் காரியத்தில் முந்திவிட்டான். நானே அந்தப் பயலைத் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று இருந்தேன். நான்தான் அதைச் செய்திருக்க வேண்டும். அதற்கு நான்தான் தகுந்த ஆசாமி.”

”அந்தப் பேச்சை விடு, நிகலாய்” என்று நட்புரிமை தொனிக்கும் குரலில் சொன்னான் பாவெல்.

“நான் நினைத்தேன்’ என்று அன்போடு பேச ஆரம்பித்தாள் தாய். ‘உனக்கு மிகவும் மிருதுவான மனம் இருக்கிறது. நீ ஏன் இப்படி விலங்கு மாதிரி கர்ஜிக்கிறாய்?”

அந்தச் சமயத்தில் நிகலாயைப் பார்க்க அவளுக்குப் பிடித்திருந்தது. அவனது அம்மைத் தழும்பு விழுந்த முகம் கூடக் கவர்ச்சிகரமாகத் தோன்றியது.

“இந்த மாதிரிக் காரியங்களுக்குத் தவிர, வேறு எதற்கும் நான் லாயக்கில்லை’ என்று தன் தோளைச் சிலுப்பிக்கொண்டே சொன்னான் நிகலாய். ‘நானும் நினைத்து நினைத்துப் பார்க்கிறேன். இந்த உலகில் என் இடம் எது என்று. ஆனால் எனக்கு ஒரு இடமும் இல்லை. ஜனங்களோடு பேசத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் எப்படிப் பேசுவது என்பது எனக்குத் தெரியாது. எல்லாம் எனக்குப் புரிகிறது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எல்லாம் பார்த்து அனுதாபம் கொள்கிறேன். என்றாலும் அதை வாய்விட்டுச் சொல்லத் தெரியவில்லை. நான் ஒரு ஊமைப்பிறவி.”

அவன் பாவெலிடம் திரும்பினான்; உடனே தன் கண்களைத் தாழ்த்தி, மேஜையையே துளைத்துவிடுவது போல் வெறித்துப் பார்த்தான். பிறகு அவரது இயற்கையான குரலுக்கு மாறான மழலைக் குரலில் பேசத் தொடங்கினான்.

”தம்பி, எனக்கு ஏதாவது பெரிய வேலையாகக் கொடு. இந்த மாதிரி, எந்தவிதக் குறிக்கோளுமற்று என்னால் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. நீங்கள் அனைவரும் உங்கள் வேலைகளிலேயே மூழ்கியிருக்கிறீர்கள். உங்களது இயக்கம் எப்படி வளர்ந்து மலர்கிறது என்பதை நான் பார்க்கத்தான் செய்கிறேன். ஆனால் நான் மட்டும் ஒரு பக்கமாக ஒதுங்கி நிற்கிறேன். வெறுமனே மரங்களைச் சுமந்து திரிவதோடு முடிந்து விடுகிறது என் பிழைப்பு. இந்தப் பிழைப்பு ஒருவனுக்கு வாழ்வளித்துவிடாது. எனக்கு வேறு ஏதாவது கடினமான பெரிதான வேலை கொடு.”

பாவெல் அவனது கையை எட்டிப் பிடித்து அவனைத் தன்னருகே இழுத்தான்.

“சரி தருகிறேன்.”

இடையிலிருந்த மறைவுக்கு அப்பாலிருந்து ஹஹோலின் குரல் கேட்டது.

“நான் உனக்கு அச்சுக் கோக்கிற வேலை சொல்லித் தருகிறேன், நிக்லாய். உனக்கு அது பிடிக்குமா?”

நிகலாய் ஹஹோலிடம் பேசினான்:

“நீ மட்டும் எனக்குக் கற்றுக் கொடுத்துவிட்டால் – உனக்கு நான் என் கத்தியைப் பரிசளித்து விடுகிறேன்” என்றான் அவன்.

”உன் கத்தியைக் கொண்டு உடைப்பிலே போடு” என்று கடகடவென்று சிரித்தவாறே கத்தினான் ஹஹோல்.

“இல்லை, அது ஒரு நல்ல கத்தி” என்றான் நிகலாய். பாவெலும் சிரிக்க ஆரம்பித்தான்.

“நீங்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கவா செய்கிறீர்கள்!” அறையின் மத்தியில் நின்றவாறே கேட்டான் நிகவாய்.

“ஆமாம் அப்பா, ஆமாம்!” என்று படுக்கையை விட்டுத் துள்ளி யெழுந்தவாறே சொன்னான் ஹஹோல். “சரி வா. வயல்வெளிப் பக்கம் உலாவிவிட்டு வரலாம். நிலா அருமையாகக் காய்கிறது. வருகிறாயா?”

“சரி” என்றான் பாவெல்.

“நானும் வருகிறேன் என்றான் நிக்கலாய். ”ஹஹோல், உன் சிரிப்பு எனக்குப் பிடித்திருக்கிறது.”

“நீ பரிசு கொடுப்பதாகச் சொல்வது எனக்குப் பிடித்திருக்கிறது” என்றான் ஹஹோல் சிரித்துக்கொண்டே.

அவன் சமையலறைக்குள் சென்று உடை உடுத்திக்கொண்டான்.

“மேலே ஏதாவது போர்வையைப் போட்டுக்கொள்” என்று அவசர அவசரமாகச் சொன்னாள் தாய்.

அவர்கள் மூவரும் வெளியே சென்ற பிறகு அவள் ஜன்னலருகே சென்று அவர்கள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு சுவரிலிருந்த விக்ரகத்தை நோக்கி வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள்:

“”கருணையுள்ள கடவுளே! அவர்களுக்கு நல்லது செய் அவர்களைக் காப்பாற்று…”

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

காற்று மாசுபாடு : தில்லியில் வாழ்வது தினசரி 20 சிகரெட் புகைப்பதற்கு சமம் !

லைநகர் தில்லியின் காற்று மாசுபாடு அபாயகரமான எல்லைக் கோட்டைத் தொட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO) 1600 உலக நகரங்களை உள்ளடக்கி நடத்திய ஆய்வு ஒன்றின்படி, பெருநகரங்களிலேயே ஆக மோசமான நிலையில் தில்லியின் காற்றுச் சூழல் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் மக்கள் காற்று மாசினால் இறந்து போகின்றனர் என்றும் காற்று மாசுபாடு தான் ஐந்தாவது பெரிய ஆட்கொல்லி எனவும் தெரிய வந்துள்ளது.

கடந்த அக்டோபர் 28-ம் தேதி நுரையீரல் பாதுகாப்பு மையம் (Lung Care Foundation) எனும் அரசுசாரா தொண்டு நிறுவனம் தில்லியில் மருத்துவர்கள் கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் உரையாற்றிய அவ்வமைப்பின் நிறுவனரும் கங்காராம் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவருமான அரவந்த் குமார், தில்லியின் காற்று மாசுபாட்டின் விளைவு சராசரியாக நாளொன்றுக்கு 14ல் இருந்து 20 சிகரெட்டுகளைப் புகைப்பதற்கு ஒப்பானது எனக் குறிப்பிட்டார்.

மேலும், அதே நிகழ்வின் போது சாதாரண நுரையீரல் ஒன்றின் படத்தையும் பாதிக்கப்பட்ட நுரையீரல் ஒன்றின் படத்தையும் ஒப்பிட்டுப் பேசிய அவர், கடந்த 30 ஆண்டுகளில் தில்லியைச் சேர்ந்தவர்களின் நுரையீரலின் நிறம் மாறி வருவதைக் குறிப்பிட்டார். பொதுவாக புகைப் பழக்கம் உள்ளவர்களின் நுரையீரல்களில் தெரியும் கருப்புத் திட்டுக்கள் புகைப்பழக்கம் இல்லாதவர்களின் நுரையீரல்களிலும் தெரிவதாக அவர் அப்போது தெரிவித்தார்.

தில்லியின் காற்று மாசுபாடு அளவு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பொதுவாக 101ல் இருந்து 200 புள்ளிகளாகவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அதிகபட்சமாக 500 புள்ளிகள் வரை உயர்வதாகவும் பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. காற்றில் உள்ள பி.எம் 2.5 மற்றும் பி.எம் 10 துகள்களின் அளவு ஒரு க்யூபிக் மீட்டருக்கு 999 மைக்ரோ கிராம் அளவுக்கு இந்த மாதங்களில் அதிகரிப்பது தெரியவந்துள்ளது. இதன் அனுமதிக்கப்பட்ட அளவு 60-ல் இருந்து 100 வரை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வருடத்தின் பிந்தைய 3 மாதங்களில் தில்லியின் காற்று மாசுபாடு அதிகரிப்பதற்கான காரணமாக சூழலியல் ஆர்வலர்கள் குறிப்பிடுவது அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளை. அதாவது இம்மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நவம்பர் மாதத்தின் முதலிரு வாரங்களில் ஏற்கனவே அறுவடையான நெற்பயிரின் மீதங்களை மீண்டும் சாகுபடி செய்வதற்கு முன் தீயிட்டுக் கொளுத்துகின்றனர். அவ்வாறு கொளுத்தப்படும் போது எழும் புகை காற்றின் போக்கில் தில்லியின் மேல் கவிந்து அந்நகரின் காற்று மாசுபாட்டிற்கு காரணமாகி விடுகின்றது என்கின்றனர்.

சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு மையத்தின் (Environment Pollution Control Authority (EPCA)) அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி பஞ்சாபில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர்களிலும், ஹரியாணாவில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர்களிலும் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றது. இவ்விரு மாநிலங்களிலும், நெல் அறுவடைக்குப் பின் மொத்தம் 32 மில்லியன் டன் பயிர்க் கழிவுகள் உருவாகின்றன. இந்தக் கழிவுகளை எரிப்பது தில்லியின் காற்று மாசில் சுமார் 30 சதவீத அளவுக்கு பங்களிப்பு செய்வதாக கான்பூர் ஐ.ஐ.டி. மாணவர்கள் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. அதே போல் தேசிய சூழற் பொறியியல் ஆராய்ச்சி மையம் (National Environment Engineering Research Institute) வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றின்படி, தில்லியின் காற்றில் கலந்துள்ள பி.எம் 2.5 துகள்கள் பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் இருந்தே 60 சதவீதம் வருவதாகத் தெரிவிக்கின்றது.

இந்த விவரங்களை வைத்துக் கொண்டு சூழலியல்வாதிகளும், தில்லி ஆம் ஆத்மி கட்சியினரும் வெளியிடும் கருத்துக்கள் அனைத்தும் பஞ்சாப் ஹரியாணா மாநில விவசாயிகளை வில்லன்களாக்குகின்றன. மேலும் பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளும் ஆணைகளும் பயிர்க்கழிவுகளை எரிக்கத் தடை விதிக்கின்றன. ஹரியாணா மற்றும் பஞ்சாப் அரசுகள் பயிர்க் கழிவுகள் எரிப்பதற்கு தடை விதித்துள்ளதோடு, மீறி எரிக்கும் விவசாயிகளுக்கு அபராதமும் விதிக்கின்றன. ஆனால், உண்மை என்ன?

மேலே அளிக்கப்பட்டுள்ள விவரங்களில் இருந்தே கூட, தில்லியின் காற்று மாசுபாட்டிற்கு விவசாயிகள் பிரதான காரணம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும். நகரமயமாக்கம், அதிகரித்து வரும் கார்கள் உள்ளிட்ட போக்குவரத்து சாதனங்களின் அதிகரிப்பு, ஆலைக் கழிவுகள் போன்றவை காற்று மாசுபாட்டிற்கும் இன்னபிற சூழலியல் மாசுபாட்டிற்கும் பிரதானமான காரணங்களாக விளங்குகின்றன. இவற்றிற்கு அடுத்த இடத்தில் தான் ஹரியாணா – பஞ்சாப் விவசாயிகள் பயிர்க் கழிவுகளைத் தீயிட்டுக் கொளுத்துவது வருகின்றது. எனினும், அந்த இரண்டாம்பட்ச காரணத்தின் கர்த்தாக்களுக்கு ஏதும் சதி நோக்கங்கள் உள்ளனவா?

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையைச் சேர்ந்த நிருபர் ஒருவர், தடைகளை மீறியும் பயிர்க் கழிவுகளை விவசாயிகள் எரிப்பது ஏன் என்பதைக் கண்டறிய நேரடியாக இம்மாநிலங்களுக்கு பயணம் செய்துள்ளார். அவரிடம் பேசிய ஹரியாணாவைச் சேர்ந்த கேரதி லால் (65 வயது) என்கிற விவசாயி, முன்பெல்லாம் விவசாயக் கூலிகளை பணிக்கமர்த்தி பயிர்க் கழிவுகளை அகற்றியதாகவும், பின்னர் கூலி விவசாயிகளை அமர்த்திக் கொள்வது செலவு பிடிக்கக் கூடியதான போது இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டது என்கிறார். இயந்திரங்கள் அறுவடையான பயிர்களின் மேற்பகுதியை மட்டும் வெட்டி நீக்கக் கூடியதாகவும், அதன் அடிப்புறத்தைப் பிடுங்கி எடுக்கும் தன்மையில் இல்லாமலும் இருக்கின்றன. பயிர்க் கழிவுகளை வேரோடு பிடுங்கி அகற்றும் இயந்திரங்களின் விலையோ நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விலை கூடியதாக இருக்கின்றது.

எனவே இருக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழிகள் இல்லை. பீகார் – உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து விவசாயக் கூலிகளாக பஞ்சாப் சென்று கொண்டிருந்த கூலித் தொழிலாளர்களின் சம்பளங்களும் உயர்ந்து விட்டன. விவசாயக் கூலியாகச் செல்வதை விட நகர்ப்புறங்களில் கூலி வேலைகளில் ஈடுபடுவதால் அதிக சம்பளம் கிடைப்பதால் பெரும்பாலானவர்கள் விவசாயக் கூலி வேலைகளைத் தவிர்க்கின்றனர்.

ஆக, வேறு வழியின்றி இருக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தியே பயிர்க் கழிவுகளை வேர்ப் பகுதிக்கு சற்று மேலாக வெட்டி நீக்குகின்றனர். இயந்திரங்களால் அகற்ற முடியாத பயிர்க் கழிவுகளின் அடிப் பகுதி மற்றும் வேர்ப் பகுதிகளை எரியூட்டுகின்றனர். ஆக விவசாயிகளைப் பொருத்த வரை பயிர்க் கழிவுகளை எரியூட்டி தில்லி வாழ் மேன்மக்களைக் கொன்றொழிக்க வேண்டும் என்கிற சதித் திட்டம் ஏதுமில்லை. நிலத்தை சாகுபடிக்குத் தயாரிப்பதற்கான செலவை ஈடுகட்டும் அளவுக்கு விவசாயம் இலாபகரமாக இல்லாததே முதன்மைக் காரணம்.

இதில் , ஹரியானா – பஞ்சாபில் இருந்து கிளம்பும் புகை விவசாயத்தை அழிவுக்குத் தள்ளும் பொருளாதார முடிவுகளை எடுக்கும் கோமான்கள் வீற்றிருக்கும் தில்லியைச் சூழ்வது ஒரு முரண் நகை. அல்லது கவித்துவ நீதி என்றும் சொல்லலாம்.

எனவே புகைமூட்டத்தில் இருந்து தில்லியைக் காப்பாற்ற வேண்டும் என்றால் விவசாயத்தை இலாபகரமான தொழிலாக உயர்த்துவதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை.

செய்தி ஆதாரம்:
‘Pollution in Delhi akin to smoking 15-20 cigarettes a day’
We didn’t start the fire

மோடி ஊழலை மறைக்கும் மீடியா | பெண்ணை வேட்டையாடும் ஓநாய்கள் | கேலிச்சித்திரம்

மோடி அரசின் ஊழலை மறைக்கும் மீடியா

கேலிச்சித்திரம்: சர்தார்

பெண் இனத்தை வேட்டையாடும் சமூக ஓநாய்கள்

கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்

படிக்க:
போலீசு – ஊடகம் – ஹிப்ஹாப்களின் உண்மை முகம் – கேலிச்சித்திரங்கள்
ஆதிக்க சாதிவெறிக்கு எதிராக முகிலனின் கருத்தோவியங்கள் !

எது முன்னெச்சரிக்கை ? எது சிறந்த அரசு ? எது நிவாரணப் பணி ? குமுறுகிறார் ஒரு விவசாயி !

ட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி ஒருவரிடம் தொலைபேசி வழியாக வினவு செய்தியாளர் எடுத்த நேர்காணல், இது. பட்டுக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் இழப்பு, அதனைக் கண்டுகொள்ளாமல் நிவாரணப் பணிகளை ஆமை வேகத்தில் செய்யும் அரசு நிர்வாகம் ஆகியவை குறித்து தமது சொந்த அனுபவத்திலிருந்து விவரிக்கிறார் அவர்.

*****

எல்லா மரமும் போச்சு, ஒன்னு ரெண்டு மரம்தான் நிக்குது. எந்த மரமும் இல்ல.  புயல் கரையேறிய அதிராம்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டை 15 கிலோ மீட்டர் தூரத்தில்தான் உள்ளது. பேராவூரணி 2 கிலோ மீட்டர்ல இருக்கு. இங்க பாதிப்பில்லாத வீடு எதுவுமில்லை. பட்டுக்கோட்டையில மட்டும் சுமாரா 12,000 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட போஸ்ட் கம்பம் விழுந்துடுச்சி. இது வந்து எங்கூர் மின்சார ஊழியர் சொன்னது. எங்க ஊரு அலிவளத்தில் மட்டுமே 60 போஸ்ட் மரம் விழுந்திருக்கு.

இங்க குட்டை ரக தென்னை மரம் எல்லாம் முறிஞ்சி போயிடுச்சி.  பழைய தென்னை எல்லாம் உறுதியா இருக்கும்.  இப்ப உள்ள தென்னையின் தண்டு பகுதி வலிமை இல்லாம இருக்கு. அதுல காய் காய்ப்பு திறனை அதிகப்படுத்தி இருக்காங்க.  அதுகிட்ட நோய் எதிர்ப்பு சக்தியே இல்லை. மொத்த மரமும் முறிஞ்சி ரெண்டா விழுந்திருச்சி. அதாவது இந்த தென்னை மரத்தை மட்டும் நம்பி இருந்த பல குடும்பங்கள் கண்ணீரோடு அமர்ந்திருக்கு.

குடி தண்ணிக்கு என்ன பன்றீங்க?

குடி தண்ணிக்கு பழைய டேங்குல  தண்ணிய சுட வச்சி குடிச்சி கிட்டு இருக்கோம். இப்பதான் இரண்டு பாட்டிலு 50 ரூபாய்க்கு வாங்கிட்டு வறேன். இரண்டு லிட்டர் தான். காசு இல்லாதவங்க இன்னா பன்றாங்கன்னா கும்பகோணத்துல போயிட்டு தண்ணி தூக்கிட்டு வராங்க.

நீங்க போயிட்டு வாங்கிட்டு வறிங்களா?

இல்ல. வாட்டர் ஏஜெண்ட் போயிட்டு வாங்கிட்டு வராரு. நான் போயிட்டு ஒரு கேன் அறுபது ரூபா கொடுத்து வாங்கிட்டு வரேன். இது உள்ளூர் கம்பனி. எங்க ஊர்ல 120 கிலோ மீட்டர் வேகத்துல புயல் அடிச்சிது. இன்னொரு விசயம் புயல் அடிக்கும்னு எச்சரிக்கை கொடுத்தாங்க. ஆனா அதோட எதிர் திசையில வெற்றிடத்தை நிரப்பு ஒரு புயல் வரும்னு எந்த மீடியாவும் சொல்லவில்லை. எல்லாம் அடிச்ச பிறகு தான் சொல்றாங்க.  எதிர் திசையில அடிச்ச காத்துதான் மிகபெரிய பாதிப்பை எற்படுத்தினது. மூன்றறை மணிக்கு அடித்த புயலின் பாதிப்பு கம்மி தான். எதிர் திசையில புயல் அடிக்கவும் இரண்டு பக்கத்து மரங்களும் முறிஞ்சிடுச்சி.

பஞ்சாயத்து போர்டுல யாருமெ இல்ல. அவங்கள எதுவ்மெ கேட்க முடியாது. ஏன்னா உள்ளாட்சி தேர்தலே நடக்கல. அதிகாரிகள் எல்லாருக்கும் ஒன்னாம் தேதி ஆனா சம்பளம் வந்துடும். அதனால் அவங்களால் இந்த வலியை உணர முடியல.  நம்ம ஏழை குடும்பத்துல பிறந்ததால் அந்த வலியை உணர்ந்து உங்ககிட்ட பேசுறேன்.

இப்ப கவர்ன்மெண்டு தான் சொல்லுதுல்ல எல்லா முன்னெச்சரிக்கையும் எடுத்துட்டோம்னு?

காவிரி டெல்டா மாவட்டங்களை அலட்சியப்படுத்திட்டாங்க. அது மிகப்பெரிய தவறு. ஏன்னா இதுவரை கடந்த காலங்கள் பாத்திங்கன்னா புயல் வர்ரதுக்கு முன்ன மழை பேஞ்சுக்குட்டுத்தா இருக்கும், அப்போ புயல்னு ஒரு பயம் இருக்கும், இப்போ முத நாள் சாயங்காலம் வரை வெயிலடிக்கிறதல அத நம்ப முடில. இதே பாலசந்தர் (வானிலை ஆய்வுமைய அதிகாரி) என்ன சொல்ராரு, பாம்பனுக்கும் ராமேஸ்வரத்துக்கும் நடுவுல கரைய கடக்கும்ன்றாரு, அவரு வேதாராண்யத்தயே கடைசில தான் சொன்னாரு, அதே பிரதீப் ஜான் என்ன சொல்ராரு வேதாராண்யத்துல கரையை கடக்கும்ன்றாரு, அப்போ வந்து ஒரு புரிதல் இல்லாம இருக்கு ஏன்னா காற்று வந்து திசை மாறிப் போய்டுச்சு, அப்படிம்பாங்க. இன்னோன்னு, இந்த அபிராமண்டலத்துல புயல் கடக்கலாம்ன்ர வாய்ப்பே சொல்லல அவுங்க. ஆனா, அபிராமண்டலத்துல ஒரு குறிப்பிட்ட அளவு காற்று கரைய கடந்துருக்கு. இப்போ வந்து வேதாராண்யம்தான் தனித்தீவாய்டுச்சுன்னு சொல்றாங்க, ஆனா பட்டுக்கோட்டையும் வந்து மிகப்பெரிய தனித்தீவா இருக்கு. பொருளாதார சேதமும் மிகப்பெரிய அளவுல ஏற்பட்டிருக்கு. ஏன்னா கரையை ஒட்டிதா நாங்க இருக்குறோம்.

புயலோட கண் பகுதில இருந்து 20 கி.மீ. ல இருக்குறோம். அதுனால மிகப்பெரும் பாதிப்பு, இன்னும் வந்து கரண்ட்டு வர்றதுக்கு 20 நாள் ஆகும்ன்றதுக்கு என்ன பண்றதுன்னே தெரியல!

படிக்க:
குஜராத் கலவரத்தில் மோடிதான் குற்றவாளி – விசாரணைக்கு வருகிறது வழக்கு !
சைவ உணவுப் பழக்கத்தால் உடல், மனநலக் குறைபாடு ஏற்படுமா ?

பட்டுக்கோட்டைல கரண்ட் இருக்கா?

இல்லை, பட்டுக்கோட்டைல கரண்ட் இல்லை, மூணு நாள் ஆவுது, எல்லோரும் வந்து குளத்துலதா குளிக்கிறாங்க. நகரத்துல இருந்து கிராமத்துக்கு வந்து குளுச்சுட்டு போறாங்க.  நான் போய் இப்பத்தா குளுச்சுட்டு வந்தேன்.

எங்க போய் குளுச்சுட்டு வந்தீங்க?

நான் போய் எங்க அம்மா ஊர்ல போய் குளுச்சுட்டு வந்தேன். அங்க குளத்துல பாத்திங்கன்னா ஒரே கும்பலா இருக்கு. ஆண்கள் பெண்கள் எல்லா குளிச்சுட்டு போராங்க. அங்கருந்து காரெடுத்துட்டு இங்க வந்து குளிச்சுட்டு போராங்க. ஏன்னா உள்ள தண்ணிக்கான வசதியே கிடையாது. ஜெனரேட்டர் வந்து வீட்டுக்கு 500 ரூபா போட்டு இப்பத்தா பம்பு செட் வச்சு தண்ணி ஏத்துறதுக்கு முயற்சி பண்ணீட்டிருக்காங்க.  தன்னார்வலர்களா வந்து வீட்டுக்கு 100 ரூபான்னு வசூல் பண்ணிட்டு போராங்க.

சரி இப்ப ஜெனரேட்டரை காசு போட்டு வாங்கிட்டு வந்துட்டாங்க எப்புடி தண்ணி ஏத்துவாங்க.?

ஊர் டேங்க்ல தண்ணி வண்டிய கூட்டிட்டு வந்து, ஜெனரேட்டர் மூலமா ஊர்ல இருக்க மோட்டார் வச்சு மேல ஏத்த முயற்சி பன்னீட்டு இருக்காங்க. இப்ப மிகப்பெரிய பிரச்சனை குடிதண்ணி.

அப்போ சமைக்கிரதுக்கு தண்ணீ?

அதுக்கு அரும்பாடு பட்டுட்டுதா இருக்கோம்.

சாப்பாடு உணவு பொருள் அதெல்லாம்?

எனக்காவது வீடு இருக்கு, தண்ணீய பத்தி யோசிக்கிறேன், நிறையா பேத்துக்கு வீடே இல்லையே. அவுங்கள்லா தூங்குறதுக்கே கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க. அருகிலுள்ள பள்ளிகளுக்கெல்லாம் அனுப்பிருக்காங்க, அங்க தண்ணி, அரிசி, பருப்புலாம் யாரு அனுப்புறது. பிரசிடெண்ட் இருந்தா யாரு அவரை கேக்கலாம், வார்டு மெம்பர் இருந்தா அவரை கேக்கலாம்.

ஒரு பள்ளிகூடத்துல சுத்தி உள்ள ஊர்ல பாதிக்கப்பட்ட மக்களைலா கூப்ட்டு அடைச்சு வச்சுருக்காங்க, அவுங்களுக்கு தண்ணீர், உணவெல்லாம் ஏற்பாடு பண்றதுக்கு பொறுப்பான நபர் இல்லை அந்த ஊருக்கான தலைவரை கேக்கலாம்னா அவருக்கு இதுல அக்கரயில்லை.

பொறுப்பான அதிகாரிகங்க இல்லை. அதிகாரிகள் என்னன்னா ஜீப்பவிட்டு இறங்கவே யோசிக்கிறாங்க. இப்ப எங்க ஊர்ல இருக்க பள்ளில சத்துணவுக்கு வெச்சுருந்ததைத்தான்  எல்லாரும் சாப்புட்டுட்டு இருக்காங்க, யாரை கேக்குரதுன்னு தெரியாம, அவுங்களாதா காலிகூடத்த திறந்து சமைச்சு சாப்புட்டுட்டு இருக்காங்க. எல்லா ஊர்லையும் இதான் நடக்குது.

தென்னை மரங்கள் பாத்தீனா மிகப்பெரிய அழிவ சந்திச்சுருக்கு. ஒரு தோப்புல 500 மரம் இருக்குன்னா, 75% மரங்கள் போய்டுச்சு, மீதி உள்ள மரத்துக்கும் குருத்து வந்து ரெண்டு பக்கமும் திருகியிருக்கு, அப்படி திருகிப் போச்சுன்னா அதுவும் நிலைக்கிரதுக்கான வாய்ப்பு கம்மீன்னு சொல்ராங்க. இப்ப விவசாயிகள் வந்து விழுந்து கிடக்குர மரங்களை அகற்றுனா போதும்ன்றாங்க. ஆனா உணவுப் பொருளுக்கு யாரும் கையேந்தல, தண்ணீருக்குத்தா மிகப்பெரிய பிரச்சனையாயிருக்கு.

மரங்களை அகத்துரதுல என்ன பிரச்சனை இப்ப?

ஒவ்வோரு மரமுமே வந்து அறுத்தான் தூக்கமுடியும், அருக்குறதுக்கான எந்திரமில்லையே.

ஒவ்வொடு ஊர்லையும் குறைஞ்சது எத்தனை மரம் அறுக்குற எந்திரமிருக்கு?

எந்த ஊர்லையும் எந்திரமில்லை, இது வந்து மரம் வெட்டுற நபர்கள் மட்டும்தா வெச்சுருந்தாங்க, மிஷின் இருந்தாலும் இங்க தேவை அதிகமா இருக்கு. அதுனால ஊர்ல இருக்க தன்னார்வலர்கள் சேர்ந்து வரிசையா யார் யார் வீட்டுக்கு பாதையில்லையோ அதை மட்டும் மிஷின்ன வெச்சு ஏற்படுத்தி குடுத்தாங்க. டூ வீலர் போறதுக்கான வழிகள், நானே இப்ப ரெண்டு நாள் கழுச்சு வண்டி எடுத்துட்டுப் போய் குளிக்க முடிஞ்சுது. ஏன்னா எங்க வீட்டை சுத்தி மரமா இருந்துச்சு. அந்த மரம் எல்லாமே மிகப்பெரிய மரங்கள், வீட்டை சுத்தி இவ்வளவு பெரிய மரம் இருக்கனால, ரம்பமே, அருவாளோ வெச்சு வெட்ட முடியலை. அதுக்கு இந்த மெஷின்தான் தேவைப்படுது. அதுக்கு இந்த பெட்ரோல், டீசல் ஊத்த வேண்டியிருக்கு. பல மரங்கள் கம்பில சுத்தி போஸ்ட் மரத்த சாச்சிருக்கு.

இப்போ உங்க ஊர்ல 70,80 போஸ்ட்டுமரம் விழுந்துருச்சுனா உங்க ஊர்ல இருக்க போஸ்ட்டு மரத்த மட்டும் நட்டு இந்த கம்பிய மாட்டிட்டா கரண்ட்டு வந்துருமா.?

வராது. ஏன்னா இப்ப வந்து பட்டுக்கோட்டைல இருக்கக்கூடிய மின் பகிர்மான இடத்துலையே பாதிப்பு ஏற்பட்டிருக்கு. அப்ப அந்த மின் பகிர்மான இடத்துல இருந்து ஒவ்வொரு ஸ்டெப்பா கொண்டு வரனும். ஏன்னா கொலாப்ஸ்ன்றது, ஒரு ஏரியா மட்டுமில்ல மொத்தமா ஒரு 20கி,மீ அருந்திறுக்கும் போது, புதுசா மறு நிர்மாணம்தான் பண்ண முடியும். பட்டுக்கோட்டை வந்து மிகப்பெரிய நகரம். பட்டுக்கோட்டைய சுத்தி ஒரு முப்பது, நாற்பது கிராமங்களுக்கு இதுதான் நடைமுறை. ஏன்னா சுத்தி நாற்பது ஊருன்னா நாற்பது ஊருக்குமான கனெக்ஷனும் கட்டாயிருக்கு. இனி எல்லாம் புதுசா போடுர மாதிரிதான்.

எல்லா டிரான்ஸ்பாரம்முமே குப்புற தரையில கிடக்குது. நெடுஞ்சாலைத்துறை வந்து ஈசியா வேலை பாத்துருக்கு. என்ன காரணம்ன்னா அவுங்க வந்து 3 பொக்லைன் வெச்சு பூரா ஒதுக்கி வெச்சுட்டு போய்ட்டாங்க, பஸ் போய்டுச்சு.  அவுங்க வேலை ஈசியா முடிஞ்சிருச்சு. பெருமாள் கோயில்ல மிகப் பெரிய ஒரு போராட்டம் ரோட்ல உக்காந்தாங்க. பட்டுக்கோட்டைலிருந்து 3 கி.மீ தள்ளி புதுக்கோட்டை போர வழில 2 மணி நேரமா போக்குவரத்து பாதிப்பு. இந்த போராட்டம் அடிப்படை வசதிக்கான போராட்டம். நேத்து வரை எனக்கு 300 தென்னை மரமிருக்குன்னு சொன்ன ஆளு இப்போ வந்து ஒன்னுமே இல்லாம இருக்காப்ல.

ஒரு ஒரு ஏக்கர் தென்னை மரம் ஒருத்தர்ட்ட இருக்குன்னா அவருக்கு வருஷத்துக்கு எத்தனை வெட்டு?

3 மாசத்துக்கு ஒரு வெட்டுன்னா, வருசத்துக்கு 4 வெட்டு.

ஒரு வெட்டுக்கு ஒரு ஏக்கருக்கு தோராயமா எவ்வளவு கிடைக்கும்?

தோராயமா 30,000 ரூபாய் கிடைக்கும்.  ஒருவெட்டுக்கு 30,000ன்னா, வருஷத்துக்கு சராசரியா 80,000 குறைஞ்சது கிடைக்கும்.

இங்க சராசரியா 4, 5 ஏக்கர் வெச்சுருக்காங்கள்ல?

ஆமா, எல்லாம் 4, 5 ஏக்கர்னு வெச்சுருக்க ஆளுங்கதா, நிறையா பாதிக்கப்பட்டிருக்காங்க..

தென்னை மரங்கள் நம்ம கவனத்துல இருக்கு மத்த மரங்களும் வந்து பாதிப்புதானே?

என்னன்னா நானே ஆச்சிரியப்படுறேன். அவ்வளவு ஸ்ட்ராங்கான தேக்கு மரமே வந்து வேரோட சாஞ்சு போச்சு. தேக்கு மரம் வேர் ஸ்ட்ராங்குன்னு நினைச்சேன். இன்னோன்னு முக்கியமா, பட்டுக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகள்ல இந்த கூரையில போடுற சீட்டு போடுவோம்ல மேல, ஒரு 2 லட்ச ரூவா செலவு பண்ணி சீட்டு போட்டமோ, அங்கங்கெல்லாம் அனைத்து சீட்டுமே  போய்டுச்சு, எங்க வீடு உட்பட.

ஆனா அதிகாலையில புயல் அடிச்சதுனால அந்த டாட்டா சீட்டு தூக்கியெறியப்பட்டதுனால உயிர் சேதம் எதுவும் ஏற்படல. இதே புயல் வந்து பகல்ல அடிச்சிருந்ததுன்னா, டாட்டா சீட்டு, டாட்டா கம்பியினால, மிகப்பெரிய உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். அந்த சீட்டு, அந்த ஆங்கிள் எல்லாமே காஸ்ட்லி, எல்லா 4 கி.மீ.-க்கு தூக்கி எரியப்பட்டிருக்கு.

பட்டுக் கோட்டை மசூதி

பட்டுக்கோட்டையில மசூதி இடிஞ்சிருக்கு, அப்புறம், மின் டவர்லா காத்து உள்ள போய் வெளிய வர்றது மாதிரி இருக்கும். அதையுமே வந்து புயல் தாக்கிருக்கு. புயலுக்கு அப்பறம் ஒரு மழைகூடயில்லை. பட்டுகோட்டையில மிகப்புரிய தட்டுப்பாடு எதுக்குன்னா, மெழுகுவர்த்தி. எல்லாம் அந்த குத்து விளக்கத்தான் பயன் படுத்தீட்டிருக்காங்க எண்ணைய ஊத்தி. ஏன்னா இப்ப யாரு வீட்லையும் கரண்டில்லை.

விவசாயிங்களுக்கு ஒரு பத்து பதினைஞ்சு வருஷம் உழைச்சு வாங்குன சொத்தெல்லாம் போய்டுச்சு. இவுங்கள நம்பி வேலை பாக்குர கூலி தொழிலாளர்கள் அவுங்களோட நிலமை என்ன?

இப்ப என்னன்னா, ஒவ்வொரு தென்னந் தோப்புக்குள்ளையும், அம்பலக்கார் குடும்பம்தா தங்கியிருக்கும், அவுங்கதா மேக்சிமம் அந்த தோப்ப பாத்துகுவாங்க. அவுங்க வந்து அங்க இந்த மட்டையெடுத்து போட்டு அவுங்க குடுக்குர காசை வாங்கிட்டு அமைதியா வாழ்ந்துட்டிருந்தவுங்க. அவுங்களோட வாழ்க்கைதான், எதிர்காலமே இல்லாம நிக்கிது.

அவுங்கள்லா உள்ளூர சேர்ந்தவுங்கள்லா வெளியூர சேர்ந்தவங்களா ?

அவுங்கள்ல சில பேர் உள்ளூர்லயே தங்கியிருப்பாங்க, சில பேர் உள்ளுக்குள்ளையே ஆடு வளத்துக்குட்டு மாடு வளத்துக்குட்டு இருப்பாங்., அவுங்கள்லாம், அந்த முதலாளியையும் அந்த தென்னந்தோப்பையும் சார்ந்து வாழ்ரவங்கதான். அந்த குடும்பங்களுக்கு இப்ப எதிர்காலம் வந்து கேள்விக்குரிய நிக்கிது.

ஏன்ன டெல்டா விவசாயிகள் வந்து உணவுக்கு வந்து யாருகிட்டையும் கையேந்தல. ஏன்னா எல்லார்ட்டையும் உணவுப்பொருள் வந்து இருக்கு. ஆனா குடி தண்ணீருக்கு கையேந்தி நிக்குறாங்க. நம்ப சமூகத்துல என்னன்னா, மின்சக்தி இல்லைன்னா மாற்று எரிசக்தி என்னன்னு யாரும் யோசிக்கவேயில்லையே. அந்த நேரத்துல தான்னே யோசிக்கோம். நம்ம0 யூ.பி.எஸ் மட்டும்தா வாங்கி வச்சோம், அது ஒரு மணி நேரம் கூட நிக்கலையே.

செல்போன் சார்ஜ்க்கெல்லாம் என்ன பன்றாங்க?

நானே பவர் பேங்க வச்சு ரெண்டு நாள் போட்டேன், இங்க தனியார் பள்ளிங்கள்ல ஜெனேரேட்டர் இருக்கு. அங்கதா போய் போட்டுக்குறோம். முற்றிலும் தொலை தொடர்பு வந்து துண்டிக்கப்பட்டிருக்கு.

இப்ப ஒரு வாரம் கழுச்சு எல்லா துணி தொவைக்கனும், கரண்ட் வர்ரதுக்கு ஒருமாசம் ஆகும் போல இருக்கு?

அருகில் இருக்கிற, ஏரி குளங்கள்ளதான் மக்கள் துணி தொவச்சுட்டிருக்காங்க. அதுதா ஒரே சோர்ஸ். பட்டுக்கோட்டைல, நேத்து நால்ல டைல்ஸ் போட்ட பாத்ரூம்ல குளிச்சவன் பூராம், குளத்துல இறங்கி மேல் வரையும் சோப்பு போட்டு குளுச்சுட்டு, கரைல நின்னு துவட்டீட்டு போரான்.

படிக்க:
♦ மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?
கஜா புயல் : கலங்கி நிற்கும் மக்களுக்கு கை கொடுப்போம்

பட்டுக்கோட்டய சுத்தி குளத்துல இறங்கி குளிக்க வர்ராங்கன்னா எந்த ஊர் குளத்துல குளிக்கிறாங்க?

பட்டுக்கோட்டை மெயின், கரிக்காடு இங்க உள்ளவங்கெல்லாம் காட்டாற்று மஹாராஜா ஆற்றுல குளிச்சுட்டு போராங்க. புயல்ல பஸ் கூட விழுந்துச்சுல, அந்த ஆற போய் பாத்திங்கன்னா ஒரே ஜே ஜே ஜேன்னு இருக்கு கூட்டம்.

தண்ணி வருதா என்ன ஆத்துல?

ஆத்துல தண்ணி வருது. மழை பேஞ்ச தண்ணி சேர்ந்து ஓடியாருது, நான் போய் நரி மேட்ல குளுச்சேன், ஆண்களும், பெண்களும் சேர்ந்து ஒரே இடத்துல தான் குளிக்க வேண்டியிருக்கு. நகரத்து பெண்களுக்கு குளத்துல குளிக்கிறது பழக்கப்படாம இருக்கு, இங்க எங்க ஊரு பொண்ணுங்க பாவாடைய நெஞ்சுவர கட்டீட்டு குளிச்சுட்டு போவுது, இதுங்களுக்கு அது பழக்கப்படாம இருக்கு. டவுன் ஆண்களுக்கு நீச்சல் தெரியல, நம்ம போரோம் டைவ் அடுச்சுட்டு குளிச்சுட்டு வாரோம், அவுங்களுக்கு சிரமம். இப்புடி நிறையா இடர்பாடுகள் இருக்கு.  மீடியாக்கள் வந்து பட்டுக்கோட்டையில 20% பாதிப்புதா ஏற்பட்டிருக்குன்னு போட்டுறுக்காங்களே எவன் வந்து பாத்தான் இங்க. இது வந்து மன ரீதியா மக்களை வருத்துது. மக்கள் வந்து மீடியாக்கள் மேல கடும் கோவமா இருக்காங்க. ஏன்னா இந்த அடிப்படை தேவையான உணவு, உடை. இருப்பிடம் இதுல பாதிப்பு வரும் போது அடுத்த கட்டமா வந்து போராடத்தான் தோணும். அவனுடைய தேவை கிடைச்சா போராட மாட்டான்.

இந்த அடிப்படை தேவைகள் பால், தண்ணீர்லாம் விலை அதிகமா விக்கிறாங்களா?

ஆமா அது உண்மை. என்னன்னா, ஒரு சில பேர் ஒரு நல்ல எண்ணத்துல குடுக்குராங்க, இதுதா சந்தர்ப்பம்னு பஜ்ஜிய 10 ருவாய்க்கும், தண்ணிய 30 ரூவாய்க்கும் விக்கிர குரூப்புமிருக்கு.

இன்னோரு ஊர்ல இருக்க மக்கள், பிரச்சனை சரியாவுர வரைலயும் உள்ளூர்ல இருக்க மாட்லருந்து பால் கரந்து யாரும் விக்கக்கூடாது, நம்ம சொந்த பயன்பாட்டுக்கு மட்டும்தா பயன்படுத்தனும்னு கூட்டம் போட்டு முடிவெடுத்தாங்களா?

அது வந்து கிராமங்கள்ல ஒரு ஜாதியா இருக்க மக்கள்தான் அப்படி பன்னிக்குராங்க, ரெண்டு மூனு ஜாதிங்க கலந்திருக்க ஊர்ல இந்த மாதிரியானது நடக்க வாய்ப்பில்ல ஏன்னா, ஏ நம்ப ஊட்டினது அங்க போகனும்னு நினைக்கிரான். அதுவும் நல்லா உத்து பாத்திங்கன்னா ஒன்னு கள்ளர் ஊட்டு குடும்பமா இருக்கும் இல்லை தேவர் ஊட்டு குடும்பமா இருக்கும்.

எந்த கம்யூனிட்டி அங்க ஜாஸ்தி?

இங்க பட்டுக்கோட்டைய பொருத்தளவு மூணு ஜாதி அதிகமாயிருக்கு, வெள்ளாளர்தான், முஸ்லி33னு சொல்லுவாங்க அதுல அவுங்கதா அதிகம், ப்ளஸ் தேவரு, கள்ளரு, செட்டியூல்டு அப்புறம் அம்பலக்காரங்க, இடையர், கோனார் கொஞ்சம் அதிகமா இருக்காங்க.

பள்ளிகூடங்க நிலைமை என்ன?

எல்லா பள்ளிகளயுமே மரங்கள் வந்து உடைஞ்சு, ஆள் நுழைய முடியாமதா இருக்கு. பட்டுக்கோட்டைல வந்து கல்வித்துறையோ, மாவட்ட கல்வி அலுவலரோ, மாவட்ட முதன்மை கல்வு அலுவலரோ பள்ளி என்ன கண்டிசன்ல இருக்குன்னு யாரும் கேக்கல. பள்ளிகள்ல இருக்க மரங்கள்ல வெட்டியெடுக்க ஒருவாரம் ஆகும், அதுக்கான முன்னெச்சரிக்கைய யாரும் ஒன்னும் செய்யலை. இதுனால பள்ளிகள்லாம் துவங்குவதற்கு மினிமம் 15 நாள் ஆகும்.

மரங்களை வெட்டி யெடுக்க கலெக்ட்டர் என்ன பன்னாரு, இன்னும் சி.ஓ வே வந்து பாக்கலை. சி.ஓ வும் பாக்கலை, டி.ஓ வும் பாக்கல.  அனைத்து பள்ளிகள்ளயுமே அந்த ஊரு மக்கள்தான் தங்கியிருக்கு.

எடப்பாடி அரசு கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்ல நல்லா செயல்பட்டதா, ஸ்டாலின், தமிழிசையெல்லாம் பாராட்றாங்க அத பத்தி என்ன நினைக்கிறீங்க?

கஜா புயல் முன்னெச்சரிக்கை வந்து பாலசந்தர் வந்து ரெண்டு நாள் தூங்காம இருந்தாரு இதுலா வந்து சேட்டிலைட் மூலமா பாத்து சொன்னது, இவுங்க வந்து மனிதர்களாக, என்னத்த கொண்டு போய் சேர்த்தாங்கன்றது முதல் கேள்வி. உணவு பொருட்களாய் கொண்டு போய் சேர்த்தாங்களா, தண்ணீர்லா டேங்க்ல சேமிச்சு வெச்சாங்களா, உணவுப் பொருள்ல முகாம் மாறி அமைச்சு எல்லா இடங்களுக்கும் கொண்டுபோய் சேர்த்தாங்களா. இல்லை. இவுங்க வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைனு எதை சொல்றாங்கன்னா. வானிலைல டி.வில உக்காந்து வசிக்கிறத முன்னெச்சரிக்கைன்னு சொல்றாங்க. முன்னெச்சரிக்கைனா எந்தெந்த ஊர்ல கிராமங்கள்ள எச்சரிக்கையோ, அங்கங்கெல்லாம் மண்டபத்த புடுச்சு, மக்களை தங்கவெச்சு அவுங்களுக்கு உணவு பொருட்களை குடுத்து, அவுங்களுக்கு முழு வசதிய பன்னிக்குடுக்குறதுதான் சிறந்து செயல் படக்கூடிய அரசோட இலட்சணம். தவிற நீங்க வந்து டி.வில சொல்லக்கூடியத வெச்சு நேத்து வந்துவிஜயபாஸ்க்கர் வந்து 108 கண்ட்ரோல்லையும், பாலசந்தர் வந்து மெட்ராலஜிக்கள் டிப்பார்ட்மெண்ட்லையும் உக்காந்துக்குட்டு செயல் படுறது எப்படி வந்து சிறந்த அரசாக இருக்க முடியும்? மக்களோட இருக்கனும், மற்ற மாவட்டங்கள்ளையும் உள்ள அனைத்து விதமான ஊழியர்களையும் கொண்டாந்து புயல் பாதிக்கப்பட்ட இடத்துல சேர்க்கனும். சென்னைல நடந்த துரித நடவடிக்கைகள்ல 0.01% கூட டெல்டா மாவட்டங்கள்ல நடக்கலை.

வெளியூர்லருந்து மக்கள் யாராவது உதவுக்கு வர்ராங்களா?

வரலை, நாங்க வந்து உணவு எதிர்பாக்கலை முக்கியமா மரங்களை வந்து அகற்றனும், குடிதண்ணீருக்கான மின்சார வசதி, அதை சரி பன்னனும், 32 மாவட்டங்கள்ல 5 மாவட்டம் பாதிக்கப் பட்டிருக்கு, மத்த மாவட்டங்கள்ல உள்ள அனைத்து விதமான மின் ஊழியர்களையும் இங்க வந்து இறக்கி ஒரு போர்க்கால நடவடிக்கைல மீட்பு பணி நடக்கனும். பேரிடர் மீட்புக்குழுன்ரது கடல்ல போய் மீட்டுட்டு வர்ரது மட்டுமில்ல, மக்களோட அடிப்படை தேவை என்ன பாதிக்கப்பட்டிருக்கோ அதை சரி செய்யுரதுதான் பேரிடர் மீட்புக்குழு. பேரிடர் மீட்புக்குழு குறுக்க உள்ள கம்பியக்கூட இன்னும் அகற்றலையே.

பட்டுக்கோட்டைல ஆறாயிரத்துக்கு மேற்பட்ட மரங்களும் கம்பி வயர்களும் அறுந்து கிடக்கு, இது எதையுமே அகற்றல, அப்ப இது என்ன பேரிடர் மீட்புக்குழு? இது எப்படி சிறந்த அரசா செயல்படும்? விழுந்தது விழுந்த படிதாங்கிடக்கு. ஒன்னு கம்பிய தாண்டிப் போரான், இல்ல குனுஞ்சு போரான். அத அவுக்க கூட ஆளில்லையே. ரைட்டு ஒரு மாவட்டமே பாதிக்கப்பட்டிருக்குன்னு சொல்லுவீங்க, ஒரு அறிவிப்பு வெளியிடலாமே, இத்தனை ஆட்களை கூட்டிட்டு வந்து இந்த பணியை செய்யப்போரோம்னு, இத்தனாந் தேதிக்குள்ள சரி பன்னிடுவோம்னு சொன்ன அந்த நம்பிக்கையோட இருப்போமே, அத கூட செய்யாதத எப்புடி சிறந்த மீட்புப்பணினு சொல்ல முடியும் ? சொல்லவே முடியாது.

பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் ! புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

பார்ப்பன பாசிசம்

பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம்

பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் ! புதிய ஜனநாயகம் நவம்பர் 2018 இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

1. ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு: தொடருகிறது விடுதலைப் போராட்டம்!
தனியார்மயம் தாராளமயம் என்ற மறுகாலனிய கொள்ளைக்கு எதிராக இந்திய மக்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய தருணமிது.

2. “ஜனநாயகத்தின் நிறுவனங்களால் தேசத்துக்கு ஆபத்து!” – பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம்!

3. அம்பானி-அதானி-ஆர்.எஸ்.எஸ். கூட்டணி ஆக்கிரமிப்பில் ரிசர்வ் வங்கி: ரிசர்வ் வங்கியா, ரிலையன்ஸ் வங்கியா?
ரிசர்வ் வங்கியைத் தனது தலையாட்டி பொம்மையாக மாற்றுவதன் மூலம், பொதுத்துறை வங்கிகளை கார்ப்பரேட் முதலாளிகள் மொத்தமாக விழுங்கிவிடும் சூழலை உருவாக்கிடத் திட்டமிடுகிறது, மோடி அரசு.

4. எது மத உரிமை? வழிபடும் உரிமையா, தடுக்கும் உரிமையா?
ஜனநாயகத்துக்கான போராட்டம் கீழிருந்து நடக்காத வரையில், மேலிருந்து இயற்றப்படும் முற்போக்குச் சட்டங்களோ, தீர்ப்புகளோ ஏட்டுச் சுரைக்காயாக மட்டுமே இருக்கும்.

5. நரேந்திர மோடி: காவலாளியல்ல, கொள்ளையன்!
பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தன்னைக் காவலாளி எனக் கூறி வருகிறார். ஆனால், அவர் கொள்ளைக்கூட்டத் தலைவன் என்பதை எடுத்துக்காட்டுகிறது, வாராக் கடன் தள்ளுபடி.

6. கொள்ளையிடு இந்தியா! தப்பியோடு இந்தியா!
வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு ஓடிப்போனவர்களுள் பலர் குஜராத்திகளாக உள்ளனர். இந்தக் களவாணித்தனத்தைத்தான் மோடியின் குஜராத் மாடல் என்பதா?

7. வல்லரசுக் கனவின் விபரீத விளைவுகள் !
அடிக்கட்டுமானத் துறையின் வளர்ச்சி நாட்டை எங்கோ கொண்டுபோய்விடும் என ஆளுங்கும்பல் வாதிட்டு வருவது மிகப்பெரும் மோசடி என்பதை நிரூபிக்கிறது ஐ.எல்.அண்ட் எஃப்.எஸ். (I.L.& F.S.) நிறுவனத்தின் திவால் நிலை.

8. உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம்!
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்குப் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி விடும் அறைகூவல்.

9. சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம்
– ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஓர் நேர்காணல்

மின்னூல்:

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart