மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து சென்னையில் நவம்பர் புரட்சிதின விழாவைக் கொண்டாடின.
இந்நிகழ்ச்சியில், சென்னை ம.க.இ.க. இளந்தோழர்கள் பரவிவரும் பாலியல் வன்கொடுமை, பார்ப்பன பாசிசம் போன்ற சமூக அநீதிகளுக்கு எதிராகப் பாடல், பேச்சு, நடனம், நாடகம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். இக்கலை நிகழ்ச்சிகளின் தொகுப்பு காணொளி!
கடந்த 22.09.2018 முதல் நடந்துவந்த யமஹா தொழிலாளர்களின் போராட்டமானது ஐம்பது நாட்களைக் கடந்து தற்போது ஒரு முடிவை எட்டியுள்ளது.
நவம்பர் 9 அன்று மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் யமஹா பிரச்சனை குறித்த சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. தண்டனையாக, இடைநீக்கம் செய்யப்பட்ட இரண்டு தொழிலாளர்களையும் இடைநீக்க நிலைக்கு மாற்றி உள் விசாரணை நடத்துவதென்று நிர்வாகம் நிலையெடுத்ததாகவும், ஆனால், யூனியன் அமைக்கும் முயற்சிக்காக தண்டனை நடவடிக்கைக்கு ஆளான தொழிலாளர்களை எந்த தண்டனையும் இன்றி வேலைக்கு அனுமதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொழிலாளர்கள் உறுதியாக நின்றனர்.
அடுத்த கூட்டம் நவம்பர் 14 அன்று நடந்தது. இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் அளிப்பதாகவும், அவர்களுக்கான உள் விசாரணையின் முடிவில் அவர்கள் மீது தண்டனை நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்றும் நிலையெடுத்த யமஹா நிர்வாகம், வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை இடைநீக்கம் செய்யப்பட்டவர்களாக மாற்றுவோம் என்று உறுதியாக நின்றது. இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் உள் விசாரணை முடிந்த பின்னர் ஆலை பணிக்கு திரும்புவர். மேலும், பெரும்பான்மை சங்கத்துடன் தொழில் பிரச்சனைகள் குறித்துப் பேசுவதாகவும், வேலைநிறுத்தம் செய்தமைக்காக தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்றும் நிர்வாகம் ஒப்புக்கொண்டது. நவம்பர் 16 அன்று தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினார்கள்.
இந்தப் போராட்டமானது முழு வெற்றியடையவில்லை என்றாலும் குறிப்பிட்ட அளவுக்கு யமஹா நிர்வாகத்தை தொழிலாளிகள் பணிய வைத்திருக்கின்றனர். இந்த போராட்டத்தின் சிறப்பம்சம் என்பது தொழிலாளிகள் இறுதிவரை உறுதியாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடினர்.
தங்களது அடிப்படை உரிமைகளை மறுக்கப் படுப்பது, திறன்மிக்க தொழிலாளிகளை கழிவறையை சுத்தம் செய்யவைப்பது, சிறு தவறுகளுக்குக் கூட அவர்களை அவமானப்படுத்தி கூனிக்குறுக வைப்பது. ஆகிய கொடுமைகளுக்கெதிராக, சி.ஐ.டி.யு தலைமையில் தொழிற்சங்கம் துவங்கினர் யமஹா தொழிலாளிகள்.
அதன் விளைவாக தொழிற்சங்க நிர்வாகிகளான இரண்டு தொழிலாளிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். சகதொழிலாளிகள் அநியாயமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டதைக் கண்டித்து அவர்கள் தங்கள் போராட்டத்தைத் துவங்கினர். இது குறித்து ஏற்கனவே கட்டுரை வெளியிட்டுள்ளோம்.
அதன் பின்னர் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தைப் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்தனர். மேலும் அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள், கட்சிகள் என அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு பெருக ஆரம்பித்தது.
ஒரு பக்கம் மக்கள் மத்தியில் போராட்டங்கள் நிகழ்ந்துகொண்டிருந்த அதே நேரத்தில் சி.ஐ.டி.யு சங்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தொழிலாளர் நல ஆணையத்தில் பேச்சுவார்த்தை நடத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
டி.எம்.எஸ். வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை துணை ஆணையாளர் முன்னிலையில் நடைபெற்ற பல்வேறுகட்ட பேச்சுவார்த்தையின் போது ஆலை நிர்வாகம் தனது தரப்பில் இருந்து முறையாக அதிகாரிகள் யாரையும் அனுப்பாமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தனர். அதன் பின்னர் தொழிலாளர் நலத்துறையின் தொடர் வற்புறுத்தலின் காரணமாக யமஹா தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு மனிதவளத்துறை அதிகாரிகள் வந்தனர்.
பேச்சுவார்த்தைக்கு வருகின்ற மனிதவள அதிகாரி பிடி கொடுக்காது இருப்பதும், பதில் கூறாமல் இழுத்தடிப்பதுமாக செயல்பட்டுள்ளார். அதையும் தாண்டி சமரசம் செய்துகொள்ளலாம் என போகிற போக்கில் தெரிவிப்பது. அதன் பின்னர் நான் மட்டும் முடிவு செய்ய முடியாது நிர்வாகத்திடம் பேச வேண்டும் என பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கும் வேலையை மட்டுமே செய்துவந்துள்ளார்.
இடையில் அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி தொழிலாளர்கள் பணிக்கு மீண்டும் செல்லலாம், என தொழிலாளர் துறை அதிகாரி அறிவித்தார், அதனடிப்படையில் வேலைக்கு சென்ற தொழிலாளர்களை மன்னிப்புக் கடிதம் எழுதித் தந்தால் தான் பணியில் சேர்த்துக் கொள்வோம் என தெரிவித்தது நிர்வாகம்.
தங்கள் உரிமையைக் கேட்டதைத் தவிர வேறு எந்த குற்றமும் செய்யாத தொழிலாளிகள் நாங்கள் ஏன் மன்னிப்புக் கடிதம் எழுதித் தரவேண்டும் என கேட்டுள்ளனர். பின்னர் அவர்களை போலீசைக் கொண்டு அப்புறப்படுத்தியது ஆலை நிர்வாகம். கார்ப்பரேட்டுகளுக்காக காவிகள் நடத்தும் ஆட்சியில் உரிமை கேட்பது குற்றம்தான்.
இவ்வாறு தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்ந்து முடிவு எட்டப்படாத நிலையில் மீண்டும், அக்டோபர் 10-அன்று தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது நிர்வாகத் தரப்பில் இருந்து வந்த மனிதவள அதிகாரி கிளிப்பிள்ளை மாதிரி மீண்டும், “யமஹா-வின் உலகளாவிய நிர்வாகிகளுடன் பேசிதான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறி இரண்டுநாள் அவகாசம் கேட்டார். அதற்கு அரசுத்தரப்பில் இருந்து அவகாசம் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் நடந்த பல்வேறு பேச்சுவார்த்தை முயற்சிகளும் தோல்வியை அடைந்தன. இந்நிலையில் யமஹா தொழிலாளர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தலைமையில் காஞ்சிபுரத்தில் அக், 30, 2018 அன்று அனைத்துக் கட்சிகள் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் விளைவாகப் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தாம்பரம் நகராட்சி அரங்கில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், 31.10.2018 அன்று ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர், தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், சி.ஐ.டி.யு. தலைவர்கள் மற்றும் யமஹா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு தொடர்ந்து மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை என தொழிலாளர்கள் இழுத்தடிக்கப்பட்டனர். இந்த இழுத்தடிப்பு நடவடிக்கை என்பது தொழிலாளர்களின் போராட்ட உறுதியை குலைக்கும் என யமஹா நிர்வாகம் கருதியிருக்கலாம். ஆனால் தொழிலாளர்களின் உறுதி குலையாது தொடர்ந்து தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
அதன் விளைவாக இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவேண்டிய கட்டாயம் ஏற்பட்ட சூழலில் மீண்டும் 14.11.2018 அன்று பேச்சுவார்த்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
அதில் தொழிலாளர்களின் கோரிக்கையான தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை யமஹா தரப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்ட்து.
மேலும் இரு தொழிற்சங்க நிர்வாகிகளின் டிஸ்மிஸ் உத்திரவை ரத்து செய்து அவர்களை இரண்டுமாதம் தற்காலிக பணி நீக்கத்துக்கு பிறகு பணியில் சேர்த்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளனர். மேலும் இந்த காலத்தில் அவர்களுக்கு இழப்பீடாக இரண்டுமாத சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவித்தனர். அந்த வகையில் தற்போது தொழிலாளிகள் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர்.
யமஹா தொழிலாளர்களின் இந்த போராட்டமானது ஒரகடம் பகுதி முழுக்க உள்ள தொழிலாளிகள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
பொ.வேல்சாமிதமிழ்நாட்டு தேவதாசி மரபின் வரலாறுக் குறித்து ஆய்வுச் சொற்பொழிவிற்கு என்னை அழைத்திருக்கின்றனர். இது தொடர்பான பல்வேறு வரலாற்றுத் தரவுகளைச் சேகரித்துக் கொண்டுள்ளேன். சங்க இலக்கியமான புறநானூற்றுப் பாடல்களிலேயே இதற்கான வித்துக்கள் காணப்படுகின்றன. தொடர்ந்து வந்த காலங்களில் களப்பிரர் காலம் தவிர்த்து மற்ற காலம் முழுமையும் தேவதாசி மரபு வேகமாக வளர்ந்து வந்துள்ளது. அந்த வளர்ச்சிக்கு தமிழ்நாட்டுக் கோவில்கள் நிலைக்களமாக இருந்துள்ளன.
1 of 2
இந்தக் காலங்களில் பல குடும்பத்தினர் தங்கள் பெண்களை தேவதாசிகளாக ஆக்கிய பதிவுகளும் வறுமையின் காரணமாக தங்கள் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரையும் குறிப்பிட்ட கோவிலுக்கு விற்றுக்கொண்டு அடிமைகளாகி தேவதாசிகளாக மாறியவர்களின் வரலாறும் பதிவாகி உள்ளன. உச்சக்கட்டமாக 18, 19-ம் நூற்றாண்டுகளில் பச்சிளம் பெண்குழந்தைகளை கோவிலுக்கு விற்பனை செய்து அவர்களை தேவதாசிகளாக்கிய பதிவுகள் மோடி ஆவணங்களில் (மராட்டி மொழியை எழுதப் பயன்படும் சுருக்கெழுத்து முறைகளில் ஒன்று மோடி எழுத்துமுறை) பதிவாகி உள்ளன.
அப்படியான பதிவுகளில் ஒன்றில் இவ்வாறு தாசிகளாக ஆவதற்கு விற்கப்படும் குழந்தைகளின் தகுதிகளாகக் கூறப்பட்டுள்ள ஒரு தகுதியாக மேற்கண்ட வாசகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பக்கத்தைப் படத்தில் கொடுத்துள்ளேன். இதுபோன்ற பல செய்திகளும் இன்னும் பல்வேறுபட்ட தமிழக வரலாறு குறித்த வியப்பான செய்திகளும் இந்நூலில் பல்வேறு இடங்களில் பேசப்பட்டுள்ளதால் ”தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்” என்ற இந்த நூலை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள இணைப்பைக் கொடுத்துள்ளேன்.
பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:
கடந்த நவம்பர் 7 ஆம் தேதி அன்று சென்னை மதுரவாயல் பகுதியில் நவம்பர் புரட்சி நாளையொட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
1 of 7
காலை 8 மணிக்கு மதுரவாயல் ரேசன்கடை பேருந்து நிறுத்தம் அருகில் பறை இசையுடன் கொடியேற்றும் நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சி நடைபெரும் இடம் ஆசான்களின் படங்கள், பலூன், தோரணங்கள் கட்டப்பட்டு கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பு.மா.இ.மு.-வின் சென்னை கிளை செயலாளர் தோழர் சாரதி நிகழ்ச்சியை தலைமை ஏற்று நடத்தினார். பறை இசையுடன் துவங்கிய நிகழ்ச்சியில் அமைப்பின் பாடல்கள் பாடப்பட்டது. பு.மா.இ.மு.வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் செங்கொடி ஏற்றி உரையாற்றினார். அதன் பின் இனிப்புகள் வழங்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்சியில் 100-க்கும் மேற்பட்ட தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
காலை 10 மணிக்கு மதுரவாயல் நொளம்பூர் பகுதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நொளம்பூர் கிளை செயலாளர் தோழர் கணேசன் தலைமை தாங்கினார். பறையிசை இசைக்கப்பட்ட பின் செங்கொடியேற்றப்பட்டது. இனிப்புகள் வழங்கியதுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
1 of 5
மதியம் 2 மணிக்கு மதுரவாயல் பிள்ளையார்கோவில் தெரு பகுதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் மாட்டுகறித்திருவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சியை பிள்ளையார்கோவில் தெரு கிளை செயலாளர் தோழர் செந்தில் தலைமையேற்று நடத்தினார். கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதன் பின் மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது. உணவுத் திருவிழாவில் தோழர்கள் பகுதிமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
நவம்பர் விழா நிகழ்ச்சிகள்
மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து சென்னையில் நவம்பர் விழா நிகழ்ச்சியை நடத்தின.
நவம்பர் புரட்சியினை நினைவுகூரும் வகையில் நடத்தப்படும் குடும்பவிழாவை நடத்தக்கூட அனுமதி மறுத்தனர் போலீசார். மண்டப உரிமையாளரை மிரட்டுவது என்ற அளவிற்கு இறங்கி கீழ்த்தரமாக நடந்துகொண்டனர். இத்தகைய அரசின் அடக்குமுறைகளை கடந்து, திட்டமிட்ட படி நவம்பர் 11 ஆம் தேதியன்று சென்னையில் திருமண மண்டபம் ஒன்றில் நவம்பர் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
1 of 5
தோழர் செல்வி
தோழர் சாரதி
தோழர் கணேசன்
இந்த நிகழ்ச்சிக்கு தோழர் சாரதி தலைமை தாங்கி நடத்தினார். பெண்கள் விடுதலை முன்னணியின் சென்னைக் கிளை செயலாளர் தோழர் செல்வி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சமூக அநீதிகளுக்கு அதிராக இசை சமர் பறை இசைக்குழுவின் பறை முழங்கியது. சென்னை ம.க.இ.க. இளந்தோழர்கள் பரவிவரும் பாலியல் வன்கொடுமை, பார்ப்பன பாசிசம் போன்ற சமூக அநீதிகளுக்கு எதிராக பாடல், பேச்சு, நடனம், நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
“நவம்பர் 7 என்ற தினமின்று – மக்கள் விடுதலைக்கான தினமொன்று !” என்ற பாடலும் “நாங்க தொட்டா சாமி கெட்டா போகும் ? தொட்டால் என்னடா ? ” என்ற பாடலும் “நீரில்லா நெல்வயலும் வெம்பி அழுகுதம்மா!” என்ற பாடலும் சேர்த்து மூன்று புதிய பாடல்களை தயாரித்து பாடினர்.
1 of 2
பு.மா.இ.மு.வின் பள்ளி மாணவிகள் “காடுகளைந்தோம்” என்ற அமைப்பின் பாடலுக்கு நடனமாடினர். கல்லூரி மாணவர்கள் “பாசிச பா.ஜ.க.வும் நாட்டுல பன்னுராங்க அராஜகமும்” என்ற கானா பாடலை எழுதி பாடினர். சட்டக்கல்லூரி மாணவி பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான “இது நீ வாழ அருகதை இல்லா பூமியோ” என்ற பாடலை எழுதி பாடினார்.
1 of 8
சென்னை சட்டக்கல்லூரி மற்றும் தியாகராயா கல்லூரி மாணவர்கள் இணைந்து சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக ஓர் நாடகத்தை அரங்கேற்றினர். சென்னை பெ.வி.மு தோழர்கள் சமரிமலைக்கு பெண்களை அனுமதிக்கக்கூடாது என சொல்லும் இந்துதுவக்கும்பலுக்கு எதிராக ஓர் நாடகம் அரங்கேற்றினர்.
தொழிலாளர்களுக்கு நடக்கும் அடக்குமுறைகளை பற்றி பு.ஜ.தொ.மு-வின் தோழர் தெய்வீகன் உரையாற்றினார். இறுதியில் “ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் முறியடிப்போம்” என்ற தலைப்பில் பு.மா.இ.மு.வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் சிறப்புரையாற்றினார்.
1 of 7
நூற்றுக்கணக்கான தோழர்கள் குடும்பத்துடன் பங்கேற்ற விழாவாக இது அமைந்திருந்தது.
***
புதுச்சேரி
எதுவெல்லாம் சாத்தியமற்றது என முதலாளிகளும், மதவாதிகளும் சொல்லி வந்தனரோ அதை எல்லாம் சாதித்துக் காட்டியது லெனின் தலைமையிலான ரசியப் பாட்டாளி வர்க்க அரசு.
இன்று உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்கள் முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு பலியாகி வருகின்றனர். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதைப் போல தான் உருவாக்கிய நெருக்கடியைத் தீர்க்க முயன்று, மீண்டும் நெருக்கடிகள் அதிகமாகி சிக்கித் தவிக்கிறது முதலாளித்துவம். இன்று முதலாளித்துவம் உயிர் வாழ்வதற்காக உலகம் முழுவதிலும் மதவெறி, இனவெறி பாசிஸ்டுகளை ஆட்சி அதிகாரத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
1 of 4
அன்று இனவெறி பாசிஸ்டான கொடுங்கோலன் ஹிட்லரைக் கண்டு உலகமே அச்சத்தில் இருந்த போது, அந்த ஹிட்லரை ஓட ஓட விரட்டி இந்த பூமிப் பந்தை மீட்டது ஸ்டாலின் தலைமையிலான மக்கள் ராணுவம். இன்று இந்தியாவின் மதவெறி பாசிஸ்டான மோடியை மட்டுமல்ல, உலகம் முழுதும் பல்வேறு நாடுகளை ஆக்கிரமித்துள்ள பாசிசத்தை வீழ்த்துவதற்கு தேவை மீண்டும் ஒரு மக்கள் புரட்சி.
எனவே, மக்களை மரணக்குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம்! என்ற முழக்கத்தை முன் வைத்து, ரசியப் புரட்சியின் நோக்கத்தை மக்கள் மத்தியில் தொழிலாளர் குடும்பங்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியுடன் இணைந்து தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள், குழந்தைகள் பங்கேற்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி மாட்டுக்கறி விருந்துடன் குடும்ப தின விழாவாக கொண்டாடியது.
1 of 4
கடந்த நவம்பர் 11 அன்று புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் நடைபெற்ற அரங்கக்கூட்டத்திற்கு பு.ஜ.தொ.மு. தலைவர், தோழர் சரவணன் தலைமை தாங்கினார். பு.மா.இ.மு. புதுச்சேரி அமைப்பாளர் தோழர் மோகன், பு.ஜ.தொ.மு. தமிழ்நாடு மாநில இணைச் செயலாளர் தோழர் பழனிச்சாமி, பு.ஜ.தொ.மு. புதுச்சேரி இணைச் செயலாளர் தோழர் ஆனந்தகுமார் ஆகியோர் உரையாற்றினர். கூட்டத்தில் ஆதரவாளர்கள், தொழிலாளர்களின் குடும்பங்கள் உட்பட 250 பேர் கலந்து கொண்டனர்.
1 of 2
முன்னதாக, நவம்பர் – 4 அன்று வாலிபால் போட்டியும், நவம்பர்-7 அன்று குழந்தைகளுக்கான ஓவியம், கதை போட்டிகளும், ஓட்டப்பந்தயம், சதுரங்கம் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டது. கூட்டத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், தனியார் கல்வியும், வேலையில்லாத் திண்டாட்டமும் என்பதை விளக்கும் வகையில் நாடகம் நடத்தப்பட்டது. தொழிலாளர்கள் ஆர்வத்துடன் நிகழ்ச்சியை பார்த்தனர். மாட்டுக்கறி விருந்துடன் விழா நிறைவு பெற்றது. வந்திருந்த அனைவர் மத்தியில் நவம்பர் புரட்சி தினத்தின் அவசியத்தை பதிவு செய்யும் வகையில் நிகழ்ச்சி அமைந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கீரமங்கலம் ஆகிய கிராமங்களில் நிவாரணப்பணிகள் நடைபெறாததையும், சேதங்களை குறைத்து மதிப்பிட்டதையும் கண்டித்து கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் அங்கு வந்திருந்த வட்டாட்சியர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் படைகளைக் குவித்த போலீசு மக்களின் மீது கடும் தாக்குதலைத் தொடுத்தது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் வீட்டிற்குள் புகுந்து அப்பகுதி ஆண்கள் அனைவரையும் கைது செய்தது போலீசு.
கஜா புயலின் தாக்குதலில் மிகவும் சீர்குலைந்த பகுதிகளுல் ஒன்று கொத்தமங்கலம். இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50,000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெல், வாழை, பலா, தென்னை, மலர்கள், அனைத்தும் நாசமடைந்துவிட்டன. புயல் முடிந்து 2 நாள் வரையில் அரசு அதிகாரிகளோ ஆட்சியாளர்களோ தலைகாட்டவில்லை. அடிப்படை வசதிகளும், எவ்வித நிவாரணமும் கூட இல்லாமல் மக்கள் தவித்துள்ளனர்.
ஆலங்குடி வட்டாட்சியர் ரத்தினாவதி தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பார்வையிட கடந்த நவம்பர்17,2018 அன்று சென்றுள்ளனர். மேலும், அங்கு புயலால் ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடுகையில் மிகக் குறைவான அலவுக்கே சேதக் கணக்கீடு எடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கொத்தமங்கலம் மக்கள் வட்டாட்சியர் வாகனத்தை சிறைபிடித்தனர்.
அங்கு உடனடியாக டி.எஸ்.பி. அய்யனார் தலைமையில் போலீசு குவிக்கப்பட்டது. மேலும் அங்கு முற்றுகையிட்ட மக்களை தாக்கியது போலீசு. இதன் மூலம் அப்பகுதியில் கலவரச்சூழலை உருவாக்கியது போலீசு.
மேலும் அரசு வாகனங்களை பொதுமக்கள் தீயிட்டுக் கொழுத்தியதாக அரசுத் தரப்பு கூறியுள்ளது. இதையடுத்து திருச்சி டிஐஜி லலிதா லட்சுமி தலைமையில் அங்கு குவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான போலீசு கும்பல், கொத்தமங்கலம் மக்களின் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ளது. வீடுவீடாகச் சென்று கிராமத்திலிருக்கும் ஆண்கள் அனைவரையும் கைது செய்துள்ளது போலீசு. இதனை பதிவு செய்த ஜெயா நியூஸ் தொலைக்காட்சி நிருபரையும் தாக்கி அவரது புகைப்படக் கருவியை கைப்பற்றியது போலீசு.
கொத்தமங்கலம் போலீசு வெறியாட்டம்
1 of 4
நன்றி: புகைப்படம்: : ப.சிதம்பரம் முகநூல்)
*****
தஞ்சை ஒரத்தநாடு, பாப்பாநாடு பகுதிகளிலும், புயல் முடிந்து 2 நாட்கள் ஆன நிலையில் எந்த ஒரு நிவாரண நடவடிக்கையும் செய்யாத அரசைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அப்பகுதி மக்கள்.
புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் தங்களது பகுதிகளில், பெரிய பாதிப்பு எதுவுமில்லை என எழுதிய காரணத்தால் செய்தித் தாள்களை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர், செம்போடை மக்கள்.
1 of 4
நன்றி : செய்தி, புகைப்படம் – ஏழுமலை குட்டி (முகநூல்)
*****
வேதாரண்யத்தில் பெரிய அளவில் புயல் பாதிப்பில்லை, மக்கள் இயல்பாக இருக்கிறார்கள் என்று “பொய் செய்தி” வெளியிட்ட #தினத்தந்தி (தந்திTV) நாளிதழை மக்கள் கொழுத்தும் காட்சிதான் இது. மக்களுக்கு எதிரான பொய் செய்திகளை வெளியிடும் மானங்கெட்ட ஊடகங்களை மக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டதையே இந்த நிகழ்வு உறுதிப்படுத்துகிறது
நன்றி: அன்சாரி முஹம்மது
*****
40 ஆயிரம் மரங்கள் சாஞ்சி போச்சி எங்க ஊர்லே. ஆன, 4 ஆயிரம் மரந்தான் சாஞ்சி போச்சின்னு ஊருக்குள்ளே வரமல் கணக்கெடுத்த கலைக்டரை நேரில் வரவைக்க, புனல்வாசலில் சாலை மறியல். ஆரம்பம் இங்கிருந்தே தொடங்கட்டும்.
நன்றி :சங்கர் அஸ்வின் (முகநூலில்)
*****
புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் இருக்கும் அகதிகள் முகாமிலிருந்து கூக்குரல்கள் சிலவற்றைக் கேட்டேன். இதுவரை எந்த அதிகாரிகளும் அந்தப் பக்கம் வரவில்லை. அடிப்படை வசதிகள் என்பதே சுத்தமாக இல்லை. அவர்கள் இருக்கும் குடிசைகளைப் பார்த்தேன். சாக்குப் பையை வைத்து படல் எழுப்பியிருந்தார்கள். வீட்டில் பாதி ஓடுகளே உண்டு. மிச்சமெல்லாம் சாக்குப் படல்தான்.
மிக மோசமான தார்மீகமற்ற செயலை எந்தக் கூச்சமும் இல்லாமல் எல்லா அரசுகளும் செய்திருக்கின்றன. அப்போது கெடுபிடிகள் நிறைந்த நேரம். நினைத்த மாதிரி எல்லாம் அகதிகள் முகாமிற்குள் நுழைந்து விட முடியாது. இப்போதும் அப்படித்தானா என்று தெரியாது.
இந்தயிடத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். ரெண்டு பிரசெண்ட் என்றெல்லாம் ஆயிரம் கிண்டலடிக்கலாம். இந்த மாதிரியான தார்மீகச் செயல்களுக்கெல்லாம் கம்யூனிஸ்ட்கள் ஓடி வந்து நிற்பார்கள். அப்படி அவர்கள் அநீதிகளின் போது குரல் கொடுக்கும் போதெல்லாம் எங்களை மாதிரியான பத்திரிகையாளர்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். அடியாழ உந்துதலோடு அக்காரியங்களில் ஈடுபடுவதைப் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன்.
அப்படித்தான் மதுரையில் எம்.பியாக இருந்த மோகன் மண்டபம் அகதிகள் முகாமிற்கு எங்களை அழைத்துச் சென்றார். அவரது சுமோவிற்குள் என்னையும் கானுயிர் புகைப்படத் துறையில் பல்வேறு விருதுகள் பெற்ற, புகைப்படக்காரர் மதுரை செந்தில் குமரனையும் மறைத்து ஒளித்துக் கொண்டு போய் முகாமிற்குள் கொண்டு போய் விட்டார்.
45 நிமிடத்தில் திரும்பி வந்து விட வேண்டுமென ஏற்பாடு. மோகன் வெளியே காவலர்களுடன் பேச்சுக் கொடுத்து நின்று தாக்காட்டிக் கொண்டிருந்தார். ஒரு பறவையின் வேகத்தில் முகாமிற்குள் பறந்தான் செந்தில். அவனது புகைப்படக் கருவிகளை வேகமாக கழற்றி மாட்டிய லாவகம் இன்றும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.
அதுவரை அப்படி ஒரு மோசமான மனிதக் குடியிருப்புகளை நான் பார்த்ததே இல்லை. என் சின்ன வயதில் பன்றிக் குடில்கள் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். அவை அதைப் போலவே இருந்தன. உண்மையிலேயே மனதில் துயரம் உருள்வதை உணர்ந்தேன். அதற்குள்தான் தாம்பத்யம் துவங்கி எல்லாவற்றையும் முடித்துக் கொள்ள வேண்டும்.
வெளியில் சுதந்திரமாகப் போய் விட முடியாது. மிகச் சொற்பமான உதவித் தொகையே கிடைத்தது அப்போதும். அந்தக் கட்டுரை இந்தியாடுடேவில் வெளி வந்த பிறகு, அதை முன்னிறுத்தி ரவிக்குமார் சார் சட்டசபையில் பேசி அதன் காரணமாக, அவர் தலைமையில் என்று நினைக்கிறேன், குழுவொன்று போடப்பட்டது. தி.மு.க ஆட்சிக் காலம்.
கொஞ்சம் தொகையை ஏற்றித் தந்தார்கள். அதை வைத்தெல்லாம் நிம்மதியாய்ப் பொங்கிச் சாப்பிட முடியாது. நம்மை நம்பி வந்தவர்களை அரைப் பட்டினியில் போடுவது முறைதானா? அங்குள்ள பெண்களை ரௌடிகள் மிரட்டுகின்றனர். மற்றவர்களை விட அவர்களுக்கு கூலி குறைவாகவே தரப்படுகிறது. அரசுத் தரப்பிலும் ஆயிரம் மிரட்டல்கள். எல்லா முகாம்களுமே பாம்புகள் குடியிருக்கும் புதர்களைச் சுற்றி அமைக்கப்பட்டவை.
இன்றைய மழையில் பார்த்த குடிசைகள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தனவோ, அப்படியே இருந்தன. தலைக்கு மேல் ஒரு நிம்மதியான கூரைக்காகத்தானே மனிதர்கள் உலகெங்கும் ஓடுகிறார்கள். அதை உறுதிப் படுத்துவது ஒரு அரசின் தார்மீகக் கடமையல்லவா? ஆயிரம் அரசியல் காரணங்கள் இருக்கலாம்.
அடிப்படையில் ஒரு மனிதனை எப்படி நடத்த வேண்டும். லண்டனில் ஒளிந்திருக்கும் மல்லையாவை அடைக்க நினைக்கும் சிறைச்சாலை எப்படி இருக்கிறது என லண்டன் கேட்கிறது. அவசர அவசரமாக தூசு தட்டிக் கட்டி வீடியோவைக் காட்டுகிறது இந்திய அரசு. அதைப் பார்த்தே இலண்டனில் சிரிக்கிறார்கள்.
சிறைச்சாலையையே சொர்க்க புரியாக்கிக் காட்டுகிற வல்லமை கொண்ட அரசிற்கு நம்மை நம்பி வந்த வாழ்ந்து கெட்டவர்களுக்கு தலைக்கு மேல் ஒரு நிம்மதியான கூரையை உண்டு பண்ணித்தர மனமில்லை. நேர்மையற்ற செயல்தானே இது? உள்ளூரிலேயே அகதிகளை உருவாக்கும் அரசிடம் வேறு என்ன எதிர்பார்க்க?
அந்தப் பயணத்தில் தனுஷ்கோடி கடலடியில் ஒரு அதிகாலை நேரத்தில் நின்றிருந்தேன். சுழற்றி அடிக்கிற கடலலையையே அங்கேதான் முதல் தடவையாகப் பார்த்தேன். அந்தச் சத்தத்தை அருகில் இருந்து கேட்டேன். அந்தப் பேரோசை அந்நிய நிலத்தில் கால் வைக்கும் எல்லா அகதிகளின் நெஞ்சிலும் அறைந்து கொண்டே இருக்கும். மனிதர்களிடம் நீதியைக் கோரும் பேரோசை அது.
நன்றி:சரவணன் சந்திரன் (முகநூலில்)
*****
என் சொந்த கிராமம் சூரப்பள்ளத்தில் (பட்டுக்கோட்டை தாலுக்கா) விளை நிலங்கள் சுடுகாடு போல ஆகியிருக்கின்றன. மாத அருப்பு இருபதாயிரத்திற்கு தென்னையை நம்பி இருந்த பல சொந்தங்கள் அதிர்ச்சியில் தேங்கிப்போயிருக்கிறார்கள். கறவை மாடுகள் செத்துப்போயிருக்கின்றன. குடி நீர் இணைப்பு முற்றிலுமாக துண்டாகியிருக்கிறது. அரசு சாலைகளின் ஓரத்திலிருக்கும் வெள்ளை கோட்டு எல்லையை தாண்டி விழுந்த மரங்களை அப்புறப்படுத்தலில் மட்டுமே கவனம் கொள்கிறது. செத்த மரங்களை போக்குவரத்து இடையூறு என்ற அளவில் மட்டும் பார்க்கும் தொணியில் பணிகள் நடக்கின்றன என்று அறிகிறேன். குடி நீரையும் மின்சாரத்தையும் கொடுத்துவிட்டு அரசு ஒதுங்கிவிட்டால் இதைவிட மிக பெரிய துரோகம் எதுவுமே இருக்கமுடியாது. இன்றைய நிலைப்படி குடி நீரையும் ஊரில் டாங்கர் வைத்திருக்கின்ற அண்ணன் ஒருவர் சொந்த செலவில் எல்லோருக்கும் கொண்டுவந்திருக்கிறார்.
விழுந்த ஒவ்வொரு தென்னை மரமும் பல குடும்பங்களின் ஒரு வேளை சோறு. போர்க்கால அடிப்படையில் ரொட்டிகளையும், குடி நீரையும், மின்சாரத்தையும் கொடுத்துவிட்டு அரசு கிளம்பிய பின்னர் பட்டுக்கோட்டை, அதிராமப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவுர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி சார்ந்த கிராமங்களில் இனி வாரம் ஒரு விவசாய பட்டினி தற்கொலை நடக்கும். மீளவே முடியாத பெருந்துயரத்தில் தத்தளிக்கும் எங்கள் ஊர்களைப் பற்றி, நிழலுக்கு நின்ற மரங்களை வர்தாவில் பறிகொடுத்தவர்களுக்கு புரியவே புரியாது.
நான் உங்களிடம் இங்கு வந்து துணி, உணவு, பால், மருந்துகள் கேட்கவில்லை. அதை நீந்தி கடக்க எங்களுக்கு தெரியும். தோள்கொடுக்க நல்லுள்ளங்கள் இருக்கிறார்கள். நான் எனக்கு ஃபேஸ்புக்கில் சமுதாய பொறுப்புள்ள நண்பர்களை வைத்திருக்கிறேன் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களிடம் பிச்சை கேட்கிறேன். உங்களுக்கு சாத்தியமான களங்களில் எங்கள் ஊர்களைப் பற்றி கொஞ்சம் எழுதுங்கள். நீங்கள் அச்சு அல்லது காட்சி ஊடகத்தில் இருப்பவரெனில் அருள்கூர்ந்து உங்கள் கவனத்தை எங்கள் பக்கம் திருப்புங்கள். முதல்வரா எதிர்கட்சி தலைவரா என்று எங்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள். உங்களால் முடிந்தால் குறைந்தது பத்தாண்டு முதலீடான முறிந்து போன எங்கள் ஒவ்வொரு தென்னைக்கும் எங்களுக்கான நிவாரணம் வாங்கிக்கொடுக்க எங்களுக்காக குரல் கொடுங்கள். ஆம். ஒவ்வொரு தென்னைக்கும். செத்துப்போன மாடுகளுக்கும், சேதமான வீடுகளுக்கும் நிவாரணம் கோர எங்களுடன் நில்லுங்கள். உங்களால் முடிந்தால் குறைந்தது ஒரு தற்கொலையையாவது தடுத்து நிறுத்த உதவி செய்யுங்கள். நீங்களும் சேர்ந்து தட்டினால்தான் கதவுகள் திறக்கப்படும். நயந்தாராகளுக்கு அடுத்த வருடமும் பிறந்த நாள் வரும். கொஞ்சம் கருணை காட்டுங்கள்
நன்றி: மயிலன் சின்னப்பன் (முகநூலில்)
*****
திருச்சி மேலகொண்டையம்பேட்டை வடக்குதெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 30) விவசாயியான இவருக்குத் திருமணமாகி இரண்டேகால் வயதில் தனுஷிகாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. திம்மராயர் சமுத்திரம் பகுதியில் இவருக்குத் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இதில் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்றுக் கடந்த ஜூன் மாதம் வாழை பயிரிட்டு இருந்தார்.
இதனிடையே தற்போது வீசிய கஜா புயலின் காரணமாக இவரது வாழை மரங்கள் முற்றிலும் சாய்ந்து நாசமானது. மேலும் தன்னுடைய நிலத்தைச் சென்று நேரில் பார்த்த செல்வராஜ் வாழைகளும் முழுவதும் சேதம் அடைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் ஏற்கனவே இரண்டு லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளநிலையில், தற்போது கூடுதல் சுமையாகக் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணத்துடன் மனமுடைந்தார். தனது நண்பர்களுக்கு தொலைப்பேசியில் தற்கொலை செய்து வருவதாகத் தெரிவித்து விட்டு, பின்னர் நேற்று இரவு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே எஸ்.ஐ ஜான்சன் தலைமையிலான போலீசார் சுடலை செல்வராஜின் உடலைக் கைப்பற்றி நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதல்வர் முதல்கட்ட விசாரணையில் செல்வராஜ் அந்த பகுதியில் வாட்டர் கேன் பிசினஸ் செய்ததாகவும் கூடவே அவருக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயி பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
நன்றி :விகடன்
****
அடிப்படை உரிமைகளுக்காகவும், நியாயமான உரிமைகளுக்காகவும் போராடிய மக்களின் மீது வெறிகொண்டு தாக்குதல் நடத்தியிருக்கும் எடப்பாடி கும்பலோ ஊடகங்களின் துதிபாடலில் மெய்மறந்து லயித்துக் கொண்டே அரசு விழாக்களில் கலந்து கொண்டு வலம் வருகிறது. புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு, இந்த அரசின் கண்டுங்காணாத போக்கால் இரண்டு நாட்களுக்குப் பின்னும் அடிப்படை வசதிகள் கூட கிடைக்கப்பெறாமல் தவிக்கும் மக்களைத் தாக்குவதற்கு எவ்வளவு வக்கரிப்புள்ள மனம் வேண்டும் ?
மாக்சிம் கார்க்கிவாசல் புறத்தில் யாரோ திடீரென வருவது கேட்டது. அவர்கள் இருவரும் திடுக்கிட்டு எழுந்து ஒருவரையொருவர் திருகத் திருகப் பார்த்துக்கொண்டனர்.
கதவை மெதுவாகத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் ரீபின்.
“வந்து விட்டேன்!” என்று புன்னகையோடு தலைநிமிர்ந்து சொன்னான் ரீபின். ”அங்கும் இங்கும் எங்கும் போனான் தாமஸ்; ஆடியோடித் திரும்பி வந்தான் தாமஸ்!” (1)
அவன் ஒரு கம்பளிக் கோட்டு போட்டிருந்தான். அதன் மீது தார் எண்ணெய் படிந்திருந்தது. காலிலே ஒரு ஜோடி கட்டைப் பாதரட்சைகள், தலையிலே ஒரு கம்பளித் தொப்பி. அவனது இடைவாரிலே இரண்டு கையுறைகள் தொங்கிக் கொண்டிருந்தன.
“புத்தகங்களைத் தவிர, இங்கு புதிதாக ஒன்றையும் காணோம். சரி, எனக்கு நீ எல்லா விவரத்தையும் சொல்லு.”
”உடல்நலம் எப்படி? பாவெல். உன்னை விடுதலை பண்ணிவிட்டார்களா? ரொம்ப நல்லது. என்ன பெலகேயா நீலவ்னா சௌக்கியமாயிருக்கிறாயா?” அவன் தன் வெள்ளைப் பல்லெல்லாம் தெரிய இளித்துச் சிரித்தான். அவனது குரல் முன்னைவிடக் கனிந்திருந்தது. அவனது முகத்தில் அளவுக்கு மீறி தாடி வளர்ந்து மண்டியிருந்தது.
அவனைப் பார்த்ததில் தாய்க்குச் சந்தோஷம். அவனது கருத்துப்போன அகன்ற கையைப் பற்றிப் பிடிப்பதற்காக அவள் அவன் அருகே சென்றாள்.
”அம்மாடி” என்று ஆழ்ந்த பெருமூச்சு விட்டாள் அவள். அப்படிப் பெருமூச்சு விடும்போது, தார் எண்ணெயின் கார நெடி அவளது சுவாசத்தில் நிரம்பிக் கமறியது. “உன்னைப் பார்த்ததில் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா?”
“ஆமாம் நான் பழையபடியும் முஜீக் ஆகிறேன். நீங்களெல்லாம் கனவான்களாகிக்கொண்டிருக்கிறீர்கள். நான் மட்டும் எதிர்மாறான திசையில் போய்க்கொண்டிருக்கிறேன்!”
அவன் தன் பலநிறச் சட்டையை ஒழுங்குபடுத்தியவாறு அறைக்குள் நடந்தான்; சுற்றுமுற்றும் பார்த்தான்.
“புத்தகங்களைத் தவிர, இங்கு புதிதாக ஒன்றையும் காணோம். சரி, எனக்கு நீ எல்லா விவரத்தையும் சொல்லு.”
அவன் தன் கால்களை அகட்டிப் போட்டவாறு உட்கார்ந்து முழங்கால்களைக் கைகளால் கட்டிக்கொண்டு, தனது கரிய கண்களால் பாவெலையே பார்த்தவாறு அவன் சொல்லப்போகும் பதிலை எதிர்நோக்கிப் புன்னகை செய்தபடி இருந்தான்.
“எல்லாம் நன்றாய்த்தானிருக்கிறது” என்றான் பாவெல்.
“உழுகிறோம், விதைக்கிறோம், கதிர்கண்டு களிக்கிறோம்; வடிக்கிறோம் பிரை, தூங்கிக் கழிக்கிறோம் நாளை – அப்படியா?” என்று கூறிச் சிரித்தான் ரீபின்.
“சரி. நீங்கள் எப்படிக் காலத்தைப் போக்குகிறீர்கள், மிகயில் இவானவிச்?” என்று அவனுக்கு எதிராக உட்கார்ந்தான் பாவெல்.
“நான் ஒழுங்காகத்தான் காலம் தள்ளுகிறேன். எகில்தேயவோ என்னும் ஊரில் வசிக்கிறேன். அந்த ஊரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா? நல்ல ஊர்; சின்னப் பட்டணம். வருஷத்திலே இரண்டு சந்தை கூடும். சுமார் இரண்டாயிரம் பேர் வசிக்கிறார்கள். எல்லோரும் மோசமான ஜனங்கள். அவர்களுக்குச் சொந்தத்தில் நிலம் கிடையாது. எல்லாம் குத்தகை நிலம்தான். செழிப்பானதல்ல; அட்டை போன்ற ஒரு பண்ணைக்காரனிடம் நானும் வேலைக்குச் சேர்ந்திருக்கிறேன். பிணத்தை மொய்க்கும் ஈக்கள் போல அவர்கள் அங்கு ஏராளம். நிலக்கரியை எரித்து தார் எண்ணெய் வடிக்கிறோம். இங்கே சம்பாதித்ததில் அங்கே கால்வாசிதான் சம்பாத்தியம். வேலையோ இரண்டு மடங்கு கஷ்டம்! ஹூம்! எங்களை உறிஞ்சித் தீர்க்கிறானே நிலச்சுவான்தார் – அவனிடம் நாங்கள் ஏழுபேர் வேலை பார்க்கிறோம். அவர்கள் எல்லாரும் நல்லவர்கள், இளவட்டங்கள். என்னைத் தவிர மற்றவரெல்லாம் உள்ளூர் ஆட்கள். எல்லோருக்கும் எழுதப்படிக்கத் தெரியும். அவர்களில் ஒருவன் பெயர் எபீம். அவன் கொஞ்சம் தலைக்கனம் பிடித்த பயல். அவனோடு மாரடிப்பது எப்படி என்பது பெரிய பிரச்சினை!”
”உங்கள் வேலையெல்லாம் எப்படி? அவர்களோடு நமது கொள்கையை நீங்கள் விவாதிப்பதுண்டா?” என்று ஆர்வத்தோடு கேட்டான் பாவெல்.
”நான் ஒன்றும் பேசாமல் சும்மா இருக்கவில்லை. ஆமாம். நீயும் தெரிந்துகொள். நீ கொடுத்த பிரசுரங்கள் – முப்பத்திநாலா? – அத்தனையும் என் வசம் இருக்கின்றன. ஆனால், நான் பிரச்சாரம் செய்வதெல்லாம் பைபிளைத்தான். பைபிளிலும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. பெரிய புத்தகம்; மேலும் அரசாங்கச் சார்புள்ள புத்தகம். பாதிரி சைனாடின் அங்கீகாரம் பெற்ற புத்தகம். அதில் யாரும் லகுவில் நம்பிக்கை கொண்டுவிடுவார்கள்.”
அவன் சிரித்துக்கொண்டே பாவெலை நோக்கிக் கண்ணைச் சிமிட்டினான்.
“ஆனால், அதுமட்டும் போதாது. நான் உன்னிடம் புத்தகங்கள் வாங்கிக் கொண்டு போகத்தான் வந்தேன். என்னோடு எபீமும் வந்திருக்கிறான். அவர்கள் எங்களை ஒரு வண்டி தார் எண்ணெயைக் கொண்டு போகச் சொன்னார்கள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு உன் வீட்டுக்குப் பக்கமாக வந்தோம்; வந்து சேர்ந்தோம். சரி, எபீம் வருவதற்குள் நீ எனக்குப் புத்தகங்களை எடுத்துக் கொடு. அவனுக்கு இந்த விஷயமெல்லாம் ரொம்பத் தெரியக்கூடாது.”
“உழுகிறோம், விதைக்கிறோம், கதிர்கண்டு களிக்கிறோம்; வடிக்கிறோம் பிரை, தூங்கிக் கழிக்கிறோம் நாளை – அப்படியா?” என்று கூறிச் சிரித்தான் ரீபின்.
தாய் ரீபினையே பார்த்தாள். அவனது ஆடையணிகளின் மாறுதல்களைத் தவிர வேறு ஏதோ முறையிலும்கூட அவன் மாறிப்போயிருப்பது போல் அவளுக்குத் தோன்றியது. அவனது பாவனைகூட முன்னை மாதிரி அழுத்தமுடையதாக இல்லை. கண்களில் ஏதோ கள்ளத்தனம் நடமாடியது. முன்னைப்போல் அவை விரிந்து நோக்கவில்லை.
“அம்மா, போய் அந்தப் புத்தகங்களை வாங்கி வருகிறீர்களா? அங்குள்ளவர்களுக்கு எந்தப் புத்தகங்கள் என்பது தெரியும். நாட்டுப்புறத்துக்கு அனுப்ப வேண்டிய புத்தகங்கள் என்று மட்டும் சொன்னால் போதும்” என்று சொன்னான் பாவெல்.
”அதற்கென்ன? தேநீர் கொதித்து முடிந்தவுடன் உடனே போகிறேன்” என்றாள் தாய்.
“என்ன பெலகேயா நீலவ்னா, இந்த விவகாரத்தில் நீயும் கலந்துவிட்டாயா?” என்று கேட்டுச் சிரித்தான் ரீபின்; “ஹூம். அங்குள்ள ஜனங்களில் எத்தனையோ பேருக்குப் புத்தகங்கள் தேவை. படிக்க வேண்டும் என்ற ஆர்வம். உள்ளூரில் ஓர் உபாத்தியாயர் இருக்கிறார். இது அவருடைய வேலை. ரொம்ப நல்லவர். அவரும் தேவாலய குருக்கள் வழியில் வந்தவர் என்று சொல்லிக்கொள்கிறார்கள். சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் ஓர் உபாத்தியாயினியும் இருக்கிறாள். ஆனால் அவர்கள் தடை செய்யப்பட்ட புத்தகங்களைத் தொடுவதில்லை. வேலை போய்விடும் என்ற பயம். ஆனால், எனக்கு அந்தத் தடை பண்ணப்பட்ட புத்தகங்கள்தான் தேவை. கொஞ்சம் காரசாரமான புத்தகங்கள்தான் நல்லது. நான் அவற்றைப் பையப்பைய அவர்கள் மத்தியில் பரப்பிடுவேன். போலீஸ்காரரோ, தேவாலயக் குருக்களோ அந்தப் புத்தகங்களைக் காண நேர்ந்தால், என்னைக் குற்றம் கூறுவார்களா? அந்த உபாத்தியாயர்கள் பாடுதான் ஆபத்து. அதற்குள் நான் சமயம் பார்த்து ஒதுங்கியிருந்துவிடுவேன்.”
அவன் தனது புத்திசாலித்தனத்தை எண்ணித் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
”கரடி போலப் பாவனை, குள்ள நரியைப் போல வாழ்க்கை” என்று நினைத்தாள் தாய்.
”இந்த மாதிரிச் சட்ட விரோதமான புத்தகங்களைப் பரப்பியதாக உபாத்தியாயர்கள் மீது சந்தேகப்பட்டால், அவர்களைச் சிறையில் போடுவார்கள் என்று எண்ணுகிறீர்களா?” என்று கேட்டான் பாவெல்.
”நிச்சயமாய்ப் போடத்தான் போடுவார்கள். அதனால் என்ன?” என்றான் ரீபின்.
“நீ ஒரு எமகாதகப் பேர்வழி!” என்று முழங்காலில் தட்டிக் கொடுத்துக் கொண்டு சிரித்துச் சொன்னான் ரீபின். “என்னை யார் சந்தேகப்படுவது? முஜீக்குகள் இந்த மாதிரி விவகாரங்களில் ஈடுபடமாட்டார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். புத்தகங்கள் என்பது படித்த சீமான்களின் விவகாரம். அவர்கள்தான் அதற்குப் பதில் அளிக்க வேண்டும்.”
ரீபின் சொல்வதை பாவெல் புரிந்து கொள்ளவில்லை என உணர்ந்தாள் தாய். பாவெல் தனது கண்களைச் சுருக்கி விழிப்பதை அவள் கண்டாள். அவன் கோபமுற்றிருப்பதை உணர்ந்தாள்.
”மிகயில் இவானவிச் இந்த வேலையைத் தானே செய்துவிட்டு, பிறர்மீது பழியைப் போடப் பார்க்கிறாரோ…” என்று மெதுவாகவும், எச்சரிக்கையாகவும் சொன்னாள் தாய்.
”அதுதான் சங்கதி!” என்று தன் தாடியைத் தட்டிவிட்டுக்கொண்டு கூறினான் ரீபின். ”தற்காலிகமாக
“அம்மா!” என்று வறண்ட குரலில் சொன்னான் பாவெல்: “நம்மில் யாராவது ஒருவன் – அந்திரேய் என்றுதான் வைத்துக் கொள்ளேன் – ஏதாவது ஒன்றைச் செய்துவிட்டு எனக்குப் பின்னால் வந்து ஒளிந்து கொண்டான் என்று வைத்துக்கொள், அப்புறம் அவனுக்குப் பதில் என்னைச் சிறைக்குக் கொண்டு போகிறார்கள் என்று நினைத்துப் பார், உனக்கு என்ன உணர்ச்சியம்மா உண்டாகும்?”
தாய் திடுக்கிட்டு, ஒன்றும் புரியாதவளாய் மகனைப் பார்த்தாள்.
”தோழனுக்குத் தோழன் இப்படித் துரோகம் செய்ய முடியுமா? சே! அது என்ன வேலை?” என்று தலையை அசைத்துவிட்டுச் சொன்னாள் அவள்.
”ஆஹா! பாவெல், உன்னை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்” என்று இழுத்தான் ரீபின். பிறகு அவன் தாயின் பக்கம் திரும்பி, கேலியாகக் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு, “இது ஒரு நாசூக்கான விவகாரம்தான், அம்மா” என்றான். மீண்டும் அவன் பாவெலை நோக்கித் திரும்பி, உபதேசம் பண்ணுகிற தோரணையில், பேச ஆரம்பித்தான். “தம்பி உன் எண்ணங்கள் எல்லாம் இன்னும் பிஞ்சாய்த்தானிருக்கின்றன, பழுக்கவில்லை. சட்டவிரோதமான காரியம் என்று வரும்போது, கெளரவத்தையோ, நாணயத்தையோ பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நீயே யோசித்துப்பார். முதன் முதல் அவர்கள் சிறையில் தள்ளப்போவது எவன் கையில் புத்தகம் இருந்ததோ அவனைத்தான்; உபாத்தியாயர்களை அல்ல. இது முதலாவது. இரண்டாவது, உபாத்தியாயர்கள் அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்களை மட்டுமே கற்றுக்கொடுக்கிறார்கள் என்றே வைத்துக்கொள். அந்தப் புத்தகங்களிலும் தடை செய்யப்பட்ட புத்தகங்களில் உள்ள உண்மைகள் இருக்கத்தான் செய்யும். வார்த்தைகள்தான் வித்தியாசமாயிருக்கும். விஷயம் ஒன்றுதான். வேண்டுமானால், நீ தரும் புத்தகங்களில் இருப்பதைவிட, அதில் உண்மை கொஞ்சம் குறைவாக இருக்கலாம். சுருங்கச் சொன்னால், நான் எந்தக் கொள்கைக்காக வாழ்கிறேனோ அதே கொள்கைக்காகத்தான் அவர்களும் வேலை செய்கிறார்கள். அவர்கள் சுற்றி வளைத்துத் திரிகிறார்கள். நான் நேர் பாதையில், விரைந்து முன்னேறிப் போகிறேன். அவ்வளவுதான்.
முதலாளிகளின் கண்ணோட்டத்தின்படி பார்த்தால், எங்கள் இருவரையுமே தண்டிக்க வேண்டியதுதான். சரிதானே? இது இரண்டாவது. மூன்றாவதாக ஒரு விஷயம் இருக்கிறது. அவர்களுக்கும் எனக்கும் தொடர்பே கிடையாது. நடந்து செல்லும் தரைப்படை குதிரைப்படையாட்களோடு சிநேகம் கொள்ள முடியாது. முஜீக்காயிருந்தால் நான் அந்த மாதிரி நடந்து கொள்ள மாட்டேன். ஆனால் அந்த உபாத்தியாயரோ ஒரு பாதிரியாரின் பிள்ளை, உபாத்தியாயினியோ ஒரு பண்ணையாரின் மகள். அவர்கள் இருவரும் ஜனங்களை ஏன் தூண்டிவிடப் போகிறார்கள்? என்னைப் போன்ற ஒரு முஜீக்குக்கு அந்தக் கனவான்களின் மனதில் இருப்பது எட்டாது.
எனக்கு நான் செய்கின்ற காரியம் நன்றாய்த் தெரியும். அவர்கள் – அந்தப் படித்த சீமான்கள் – எதை நோக்கிச் செல்கிறார்கள் என்பது எனக்குக் கொஞ்சம்கூடத் தெரியாத, புரியாத விஷயம். ஆயிரம் வருஷ காலமாக அந்தக் கனவான்கள் தங்கள் இடத்தில் சுகமாக வாழ்ந்து கொண்டு, முஜீக்குகளின் முதுகுத்தோலை உரித்தெடுக்கிறார்கள். இப்போது மட்டும் அவர்கள் திடுதிப்பென்று முஜீக்குகளின் கண்களை மறைத்திருக்கும் திரைகளைத் தங்கள் கைகளாலேயே விலக்கிவிடுவார்களா? எனக்கு அந்த மாதிரியான கட்டுக் கதைகளில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. அவர்கள் அப்படிச் செய்வார்கள் என்று சொல்வது அபாரமான கற்பனை. ஆமாம்! சீமான்களுக்கும் எனக்கும் வெகு தூரம். நீ குளிர்காலத்தில் வயல்வெளி வழியாகக் குறுக்கே நடந்து செல்கிறாய் என்று வைத்துக்கொள். ரோட்டுக்கரைக்கு வந்தவுடன் உனக்கு எதிராக ஏதோ ஒன்று தெரிகிறது என்றும் நினைத்துப் பார். அதென்ன அது? ஒரு நரி, அல்லது ஓநாய்; இல்லாவிட்டால் ஒரு நாயாக இருக்கும். என்னவென்று தெரியவில்லை.”
தாய் தன் மகனைப் பார்த்தாள். அவன் மகிழ்ச்சியற்றுக் காணப்பட்டான்.
ரீபினின் கண்களில் ஒரு கரிய ஒளி பிரசாசித்தது. அவன் ஆத்ம திருப்தியோடு பாவெலையே பார்த்துக்கொண்டும் தாடியைத் தடவிக்கொடுத்துக் கொண்டும் இருந்தான்.
எல்லோரும் மோசமான ஜனங்கள். அவர்களுக்குச் சொந்தத்தில் நிலம் கிடையாது. எல்லாம் குத்தகை நிலம்தான். செழிப்பானதல்ல; அட்டை போன்ற ஒரு பண்ணைக்காரனிடம் நானும் வேலைக்குச் சேர்ந்திருக்கிறேன். பிணத்தை மொய்க்கும் ஈக்கள் போல அவர்கள் அங்கு ஏராளம்.
”நல்லொழுக்கத்தைப் பற்றி நினைப்பதற்கு இது காலமில்லை” என்று தொடங்கினான் ரீபின்; “வாழ்க்கையோ ஒரே சிரமமயமாயிருக்கிறது. நாய்கள் ஒன்று கூடினால் ஆட்டு மந்தையாகிவிடாது. ஒவ்வொரு நாயும் அதனதன் இஷ்டப்படி குலைத்துத்தள்ளும்.
“சாதாரண மக்களின் நலத்துக்காக, படித்த சீமான்களில் பல பேர் மரணத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்” என்று தனக்குத் தெரிந்தவர்கள் முகங்களையெல்லாம் மனக் கண் முன் கண்டவாறே பேசினாள் தாய்; “அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையுமே சிறையில் கழித்துவிடுகிறார்களே…..”
“அவர்களெல்லாம் ஒரு தனி ரகம்’ என்றான் ரீபின். ”முஜீக் பணக்காரனாகி, படித்த கனவான்களோடு சரிசமானம் பெறுகிறான். படித்த கனவான்கள் ஏழைகளாகி. முஜீக்குகளின் நிலைக்குத் தாழ்ந்துவிடுகிறார்கள். பணமில்லாவிட்டால் மனம் சுத்தமாயிருக்கும். பாவெல், நீ எனக்குச் சொன்ன விஷயம் ஞாபகம் இருக்கிறதா? ஒரு மனிதன் எப்படி வாழ்கிறானோ, அப்படியேதான் சிந்திக்கிறான் என்று சொன்னாயே, அதுதான் சங்கதி தொழிலாளி ‘இல்லை’ என்று ஒரு விஷயத்தைச் சொன்னால், முதலாளி அதே விஷயத்தை இருக்கிறது’ என்பான். தொழிலாளி ‘ஆம்’ என்று சொன்னால் முதலாளி தன் குணத்துக்கேற்ப ‘இல்லை’ என்று கத்துவான். இதே முரண்பாடுதான் முஜீக்குகளுக்கும் படித்த சீமான்களுக்கும் இடையில் நிலவுகிறது. முஜீக் ஒருவன் வயிறு நிறையச் சாப்பிடுவதைப் பார்த்தால் உடனே பண்ணையாருக்கு வயிற்றைக் கலக்கிவிடும். ஒவ்வொரு வர்க்கத்திலும் சில நாய்ப் பிறவிகள் இருக்கத்தான் இருப்பார்கள். நான் ஒன்றும் எல்லா முஜீக்குகளுக்காகவும் பரிந்து பேசவில்லை … ”
அவன் தனது பலம் பொருந்திய கரிய முகத்தைத் தொங்கவிட்டவாறே எழுந்து நின்றான். பற்களைப் பட்டென்று கடித்த மாதிரி, அவனது தாடி நடுங்கி அசைந்தது. எழுந்து நின்று கொண்டு அவன் மெதுவான தொனியில் மேலும் பேசினான்.
“ஐந்து வருஷ காலமாக நான் ஒவ்வொரு தொழிற்சாலையாய் இடம் மாறித் திரிந்தேன். கிராமப்புறம் எப்படி இருக்கும் என்பதே எனக்கு மறந்து போயிற்று. கிராமத்துக்குச் சென்று அங்குள்ள நிலைமையைப் பார்த்தபோது, அந்தச் சூழ்நிலையில் உயிரோடுகூட வாழ முடியாது என்று உணர்ந்தேன். புரிகிறதா? என்னால் வாழ முடியவே இல்லை. நீ இங்கே வாழ்கிறாய். அங்கு நடக்கின்ற அநியாயங்கள் எல்லாம் உனக்குத் தெரியாது. அங்கே பசிக் கொடுமை மக்களை நிழல் போலத் தொடர்ந்து வாட்டுகிறது. தின்பதற்கு ஒரு ரொட்டி, சீனி எதுவுமே – கிடைப்பதில்லை. கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. பசிப்பேய் அவர்களது இதயங்களையே தின்று விழுங்குகிறது, முகங்களைக் கோரமாக்குகிறது. அந்த ஜனங்கள் வாழவில்லை; எட்டாத தேவைகளில் அழுகிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதேசமயம் அவர்களைச் சுற்றியுள்ள அதிகாரிகளோ, அவர்கள் கையில் ஒரு சிறு ரொட்டித் துண்டுகூடச் சிக்கிவிடாதபடி, கழுகுகளைப் போலக் கண்காணித்து வருகிறார்கள். அப்படியே தப்பித்தவறி ஒரு முஜிக்கின் கையில் கொஞ்சம் உணவு கிட்டிவிட்டால், உடனே அதனைத் தட்டிப் பறிப்பதோடு, அவனது கன்னத்திலும் அறைகிறார்கள்……..”
ரீபின் மேசை மீது கையைத் தாங்கியவாறு திரும்பி பாவெலை நோக்கித் தலையைச் சாய்த்தான்.
“அந்தக் கொடிய வாழ்க்கையைக் கண்டு என் வயிறுகூட உள்ளடங்கிப் போயிற்று. அந்த வாழ்க்கையை என்னால் தாங்க முடியாது என்று நினைத்தேன். அப்புறம் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்: ‘இல்லை. நீ அப்படிச் செய்யக்கூடாது. மனதைத் தளரவிடக்கூடாது. இந்த வாழ்விலிருந்து நீ பிரிந்து செல்லக்கூடாது. உன்னால் அவர்களுக்கு உணவு அளிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் நீ அவர்களைச் சிந்திக்க வைக்க வேண்டும்! அதனாலேயே அங்கு தங்கினேன். மக்களுக்காகவும், மக்களின் மீதும் எனக்கு ஏற்பட்டுள்ள பகைமை, வெறுப்பு எல்லாம் என் இதயத்துக்குள்ளே பொருமிப் புகைந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வெறுப்புணர்ச்சி இன்னும் என் மனதை ஏன் இதயத்தைக் கத்தி போல் குத்திக் கொண்டிருக்கிறது!”
மெதுவாக அவன் பாவெலின் அருகே சென்று அவனது தோள் மீது கையைப் போட்டான். அவனது நெற்றியிலிருந்து வியர்வை வழிந்தது. கைகள் நடுங்கியது.
“பாவெல், எனக்கு உன் உதவி தேவை. நீ எனக்குப் புத்தகங்கள் கொடு ஒரு முறை படித்தாலும், இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவித்து, சிந்தித்துச் சிந்தித்து வெறி கொள்ளச் செய்யும் புத்தகங்களாகக் கொடு. அவர்களது மூளையிலே ஒரு முள்ளம் பன்றியைக் குடியேற்ற வேண்டும். தனது முட்களைச் சிலிர்த்துக்கொண்டு நிற்கும் முள்ளம் பன்றி! அப்போதுதான் அவர்கள் விழிப்படைவார்கள். உங்களுக்காக எழுதுகின்ற நகரவாசிகளிடம் கிராமாந்திர ஜனங்களுக்காகவும் ஏதேனும் புத்தகங்கள் எழுதச் சொல். அவர்கள் எழுதுகின்ற எழுத்துக்கள் ஒரே துடிப்பும் உணர்ச்சியும் உஷ்ணமும் பொருந்தியனவாக இருக்கட்டும். கொள்கைக்காகக் கொலை செய்யவும் தயாராகும் வெறியை அந்த நூல்கள் மக்களுக்கு உண்டாக்கட்டும்.”
அவன் தன் கையை உயர்த்தி, ஒவ்வொரு வார்த்தையையும் நிதானமாக நிறுத்தி, தெளிவோடு அழுத்தத்தோடு சொல்ல ஆரம்பித்தான்.
“ஐந்து வருஷ காலமாக நான் ஒவ்வொரு தொழிற்சாலையாய் இடம் மாறித் திரிந்தேன். கிராமப்புறம் எப்படி இருக்கும் என்பதே எனக்கு மறந்து போயிற்று. கிராமத்துக்குச் சென்று அங்குள்ள நிலைமையைப் பார்த்தபோது, அந்தச் சூழ்நிலையில் உயிரோடுகூட வாழ முடியாது என்று உணர்ந்தேன். புரிகிறதா?
“மரணம்தான் மரணத்தை வெல்லும்! அதாவது மக்களை மறுவாழ்வு எடுக்கச் செய்வதற்காக, மக்கள் சாகத்தான் வேண்டும்! பூமிப் பரப்பிலுள்ள லட்சோபலட்சமான மக்கள் புனர்ஜென்மம் எடுத்து, புதுவாழ்வு வாழ்வதற்காக, நம்மில் ஆயிரம் பேராவது சாகத் தயாராயிருப்போம்! அதுதான் சங்கதி. மக்களின் புனர்ஜென்மத்துக்காக, விழிப்புப் பெற்ற மக்கள் குலத்தின் எழுச்சிக்காகச் சாவது மிகவும் சுலபம்!”
தாய் தேநீர்ப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்தாள். ரீபினை ஏறிட்டுப் பார்த்தாள். அவனது பேச்சின் கனமும் வேகமும் அவளை அழுத்தி நசுக்கிக்கொண்டிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவனைப் பார்த்தவுடன் தனது கணவனை ஞாபகமூட்டும் ஏதோ ஓர் அம்சத்தை அவனிடம் காண்பது போலிருந்தது. அவளது கணவனும் இப்படித்தான். தன் பற்களைத் திறந்து காட்டிக் கொண்டிருப்பான், தனது சட்டைக் கைகளைச் சுருட்டி விடும்போது, இந்த மாதிரித்தான் கையை வீசிக்கொள்வான். அவனிடமும் இதே மாதிரிதான் பொறுமையற்ற கொடூரம் காணப்பட்டது. அது ஒரு ஊமைக் கொடூரம். ஆனால் இதுவோ ஊமையல்ல. இவனைக் கண்டு, அவளுக்குப் பயம் தோன்றவில்லை.
“நாம் இதைச் செய்யத்தான் வேண்டும்” என்று தன் தலையை ஆட்டிக்கொண்டே சொன்னான் பாவெல். ”நீங்கள் எங்களுக்குச் சகல புள்ளி விவரங்களையும் கொடுங்கள். நாங்கள் உங்களுக்காக ஒரு பத்திரிகையை நடத்துவோம்.”
தாய்க்குத் தன் மகனைப் பார்த்ததும் உள்ளூர மகிழ்ச்சி பொங்கிச் சிரிப்புப் பிறந்தது. அவள் எதுவுமே பேசாமல் உடை உடுத்திக் கொண்டு வீட்டைவிட்டுக் கிளம்பிப் போனாள்.
”நல்லது! நாங்கள் உனக்குச் சகல விவரங்களும் அனுப்புகிறோம், வாண்டுப் பிள்ளைகளுக்குக் கூடப் புரியும்படியாக, அவ்வளவு எளிமையான நடையில் நீங்கள் புத்தகங்களை எழுதி வெளியிடுங்கள்” என்றான் ரீபின்.
சமையலறையின் கதவு திறந்தது. யாரோ உள்ளே வந்தார்கள்.
சமையலறைப் பக்கம் கண்ணைத் திருப்பிய ரீபின், “இவன்தான் எபீம்! இங்கே வா எபீம்! இவன்தான் எபீம்! இதுதான், பாவெல்! இவனைப்பற்றி உனக்குச் சொல்லியிருக்கிறேன்” என்று அறிமுகப்படுத்தி வைத்தான் ரீபின்.
பாவெலுக்கு முன்னால் உயரமாகவும் பரந்த முகமும் அழகிய கேசமும் உடையவனாயிருந்த எபீம் நின்றான். சின்னஞ்சிறு கம்பளிக் கோட்டு அணிந்திருந்தான். ஒரு கையில் தன் தொப்பியைப் பிடித்தவாறு, அவன் தன் கண்களைத் தாழ்த்திச் சுருக்கிப் பாவெலைப் பார்த்தான். அவனைப் பார்த்தால் அவன் மிகவும் பலம் பொருந்தியவனாயிருக்க வேண்டும் எனத் தோன்றியது.
”உங்களைச் சந்தித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்று கரகரத்த குரலில் கூறினான் அவன். பாவெலோடு அவன் கை குலுக்கிய பிறகு, இரு கைகளாலும் சிலிர்த்து நிற்கும் தன் தலைமயிரைக் கோதிவிட்டுக் கொண்டான். பிறகு அறையைச் சுற்றுமுற்றும் பார்த்தான். அங்குள்ள புத்தகங்கள் கண்ணில் பட்டதும், அவன் அவற்றை நோக்கி மெதுவாய்ச் செல்ல ஆரம்பித்தான்.
“அவற்றைப் பார்த்துவிட்டான்!” என்று பாவெலை நோக்கிக் கண்ணைச் சிமிட்டிக்கொண்டே சொன்னான் ரீபின். எபீம் திரும்பி ரீபினைப் பார்த்தான், பிறகு புத்தகங்களைக் கவனிக்க ஆரம்பித்தான்.
“படிப்பதற்கு எவ்வளவு விஷயம் இருக்கிறது!” என்று வியந்து கூறினான் அவன். “ஆனால் உங்களுக்குப் படிப்பதற்கு நேரமே கிடையாது. நீங்கள் மட்டும் கிராமத்தில் வாழ்ந்தால் படிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கும்…”
“ஆமாம். நிறைய நேரம். குறைய ஆசை! இல்லையா?” என்றான் பாவெல்.
“ஏன்? அங்குப் படிக்க வேண்டுமென்ற ஆசை அதிகம்தான்” என்று தன் மோவாயைத் தடவி விட்டவாறு சொன்னான் அந்தப் பையன். “அங்குள்ள மனிதர்களும் தங்கள் மூளைக்கு வேலை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ‘புவி இயல்’ இதென்ன புத்தகம்?”
பாவெல் விளக்கினான்.
”எங்களுக்கு இது தேவையில்லை” என்று கூறிக்கொண்டே அந்தப் பையன் அந்தப் புத்தகத்தை மீண்டும் அலமாரியிலேயே வைத்துவிட்டான்.
(தொடரும்)
அடிக் குறிப்புகள்:
(1) இது ஒரு பாட்டு மாதிரியான பழமொழி. போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு’ என்ற நம் நாட்டு வழக்கை ஒத்திருப்பது. (மொ -ர்.)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
கஜா புயல் மீட்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு பிச்சு உதறுகிறதாம். சொல்வது யார்? தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின். ஸ்டாலின் அறிக்கை வெளியான அன்று எடப்பாடி பழனிச்சாமி, சேலத்தில் மாமனார் வீட்டில் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மக்கள் தண்ணீருக்கும், உணவுக்கும் தத்தளித்துக் கொண்டிருக்கும் அடுத்த நாளும் கூட கோயில் கொடை விருந்து உண்டுவிட்டு, தன் புகழ்பாடும் மூன்று நிகழ்ச்சிகளில் சேலத்தில் பங்கேற்றுக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், இவர்கள் சொல்கிறார்கள், தமிழ்நாடு அரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பின்னி எடுத்துவிட்டதாம்.
‘தி.மு.க.வே பாராட்டிவிட்டதே..’ என்று கமல்ஹாசன் பாராட்டுகிறார். ‘உலக நாயகனே பாராட்டிவிட்டாரே..’ என்று ரஜினிகாந்த் பாராட்டுகிறார். வரிசையாக பா.ம.க. ராமதாஸ், திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன் எல்லோரும் உள்ளேன் அய்யா சொல்கின்றனர். ‘எடப்பாடியை பாராட்டிய ஸ்டாலினை பாராட்டுகிறேன்’ என்று நடுவில் சைக்கிள் ஓட்டுகிறார் தமிழிசை. இவர்கள் எல்லோரும் பாராட்டும் போது நாம் மட்டும் எப்படி சும்மாயிருப்பது என்று டி.டி.வி. தினகரன் வேறு பாராட்டுகிறார். சும்மா இருக்கும்போதே எடப்பாடியின் திருவடியில் பஜனை பாடும் தமிழக அமைச்சர்கள், ’கஜா புயலையே கூஜா தூக்க வைத்த எடப்பாடியார்’ என்று எதுகை மோனையில் குதூகலிக்கின்றனர்.
இப்படி ஆளாளுக்கு பாராட்டும் அளவுக்கு இந்த அரசு அப்படி என்ன செய்துவிட்டது என்று பார்த்தால், உண்மையிலேயே எதுவும் செய்யவில்லை. கடந்த கால புயல்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டார்களாம். கத்துக்கிட்டு? மக்கள் எல்லோரையும் அழைத்துச் சென்று நிவாரண மையங்களில் அடைத்து வைத்ததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. மக்களை பிடித்து மண்டபத்தில் அடைத்து வைப்பதைத்தான் இவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சாலைகளில் வீழ்ந்து கிடக்கும் மரங்கள்
நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, தலைஞாயிறு, வேதாரண்யம், கோடியக்கரை, வாய்மேடு, முத்துப்பேட்டை, தம்பிக்கோட்டை, மதுக்கூர், பாப்பாநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், மசூதிப்பட்டினம்… என கீழத் தஞ்சையின் அடிப்பகுதி முழுக்க சிதைந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின் கணிசமான பகுதிகள் இருந்த இடம் தெரியாமல் சிதைக்கப் பட்டிருக்கிறது. ஒரு மரம் மட்டை மிச்சமில்லை. எங்கு திரும்பினாலும் பெரிய, பெரிய மரங்கள் வீழ்ந்து கிடக்கின்றன. எந்த சாலையிலும் செல்ல முடியவில்லை. ஒரு ஊரையும் இன்னொரு ஊரையும் இணைக்கும் அனைத்து சாலைகளிலும் மரங்கள், மரங்கள், மரங்கள். உடைந்து தொங்கியபடி, வேறோடு பிடுங்கப்பட்டு… விதம்விதமாக வீழ்ந்து கிடக்கின்றன. மக்கள் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர முடியவில்லை.
பெரும்பாலான வீடுகள் உடைந்து தொங்குகின்றன. சமைக்க எந்தப் பொருளும் இல்லை. அடுப்பு பற்ற வைக்க விறகு இல்லை. குடிக்க நீரில்லை. நோய்க்கு மருந்தில்லை. அனைத்து பெட்ரோல் பங்குகளும் உடைந்து கிடக்கின்றன. பெட்ரோல் இல்லை என்பதால் வண்டிகளை இயக்க முடியவில்லை. மரங்களை வெட்டுவதற்கு உரிய கருவிகள் ஒற்றைப் படை எண்ணிக்கையில்தான் இருக்கின்றன. அவற்றை இயக்கவும் மின்வசதி இல்லை. ஜெனரேட்டர் வசதியுடன் இயக்கலாம் என்றால், அதற்கு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு.
மின்வசதி இல்லை என்பதால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு. செல்போன் சார்ஜ் செய்ய இயலாததாலும், ஏராளமான செல்போன் கோபுரங்கள் உடைந்து வீழ்ந்து விட்டதாலும் தொலைதொடர்பு துண்டிக்கப் பட்டிருக்கிறது. இறந்து கிடக்கும் கால்நடைகளை அப்புறப்படுத்த முடியவில்லை. ஆயிரக்கணக்கான வீடுகள், பல நூறு கடைகள் உடைந்து நொறுங்கிக் கிடக்கின்றன. ஒரு கோழிப் பண்ணையில் வளர்க்கப்பட்ட மொத்த கோழிகளும் செத்துவிட்டன. பல லட்சம் செலவு செய்து அமைக்கப்படும் பாலிஹவுஸ் என்ற நவீன வேளாண்மைக்கான கூரைகள் உடைந்து தொங்குகின்றன. எல்லா புயல்களிலும், எப்போதும் துயரத்தை சுமக்கும் மீனவர்கள், கஜா புயலிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வலைகள், படகுகளுக்கு கடும் சேதம். எந்தப் பக்கம் திரும்பினாலும் மின் கம்பங்கள் சரிந்து கிடக்கின்றன. மேலே சொன்ன அனைத்துப் பகுதிகளிலுமே மின் கம்பங்களும், அவற்றின் ஒயர்களும் அறுந்து கிடக்கின்றன. மறுபடியும் மின் இணைப்பு தருவதற்கு மாதக் கணக்கில் ஆகும்.
பிய்த்தெறியப்பட்ட ஓடுகள் – கூரைகள்
ஒரு புயல் ஏற்பட்டால் என்னென்ன துன்பங்கள் ஏற்படுமோ, அனைத்தையும் அதிக விழுக்காட்டில் மக்கள் சந்தித்து வருகின்றனர். ஆனால், அரசுத் தரப்பிலோ, எக்கச்சக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவிட்டதாக பெருமை பட்டுக்கொள்கிறார்கள். குடிநீர், உணவு, பால், குழந்தைகளுக்கான மருந்துப் பொருட்கள்… இவற்றை உரிய எண்ணிக்கையிலும், அனைத்துப் பகுதிகளுக்கும் கிடைக்கும் வகையிலும் ஏற்பாடு செய்வதுதானே முன்னெச்சரிக்கை நடவடிக்கை? அதை ஒரு இடத்தில் கூட இவர்கள் செய்யவில்லை. புதுக்கோட்டை பகுதியில் ஒரு தண்ணீர் கேன் 200 ரூபாய்க்கு விற்கிறார்கள்.
புயல் என்றால் காற்று வீசி மரங்கள் விழும். அவற்றை உடனே வெட்டி அப்புறப்படுத்த நவீன கட்டிங் இயந்திரங்கள் தேவை. இது புயலுக்கு செய்ய வேண்டிய அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கை. ‘முந்தைய புயலில் இருந்து நாங்கள் பாடம் படித்தோம்’ என்று சொல்வது உண்மையானால், ’தானே’ ‘வர்தா’ புயலில் இருந்து, கட்டிங் இயந்திரங்களின் அவசியத்தை கற்றிருக்க வேண்டும். மக்களை பிடித்து மண்டபத்தில் அடைத்துவிட்டு, வானிலை ஆய்வு மைய அறிக்கையை ஊடகங்களிடம் படித்துக் காட்டுவதற்கு அமைச்சர் எதற்கு? ’நாங்கள் மட்டும் வழக்கம் போல் இருந்திருந்தால் பொருட்சேதத்துடன் சேர்த்து அதிக உயிர்ச்சேதமும் அல்லவா ஏற்பட்டிருக்கும்? அப்படி விடாமல் இந்தமுறை மண்டபத்தில் அடைத்து வைத்து பொறுப்புடன் நடந்துகொண்டிருக்கிறோம்’ என்பது அவர்களின் உள்மன எண்ணம். ’நீங்கள் உயிர் பிழைத்திருப்பது நாங்கள் போட்ட பிச்சை’ என்பது அதன் மறுபொருள்.
கொடுத்ததற்கும் மேலாக கூவும் ஊடகங்கள்
சாதாரண நாளிலேயே எடப்பாடி அரசுக்கு ஜால்ரா அடிப்பதில் தமிழ் தொலைக்காட்சிஊடகங்களிடையே கடும் போட்டி நிலவும். ஸ்டாலின் முதல் தமிழிசை வரை எல்லோரும் பாராட்டி வேறு விட்டார்கள்… கேட்கவா வேண்டும்? இவர்கள் தங்கள் பங்குக்கு ஜால்ரா சத்தத்தை காது ஜவ்வு கிழியும் அளவுக்கு அடித்து கிளப்புகிறார்கள். நியூஸ் 7, புதிய தலைமுறை, தந்தி… என எந்த டி.வி.யும் தப்பவில்லை. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் இந்த எடப்பாடி அரசின் போலீஸ் மக்களை சுட்டு வீழ்த்தியபோது, கேமராவை வேறுபக்கம் திருப்பிக்கொண்ட இவர்கள், எட்டுவழிச் சாலை விவகாரத்தில் மக்கள் போராட்டங்களை போலீஸ் படை கொண்டு அடக்கி ஒடுக்கியபோது கேமராவை வேறுபக்கம் திருப்பிக் கொண்ட இவர்கள்… ’கஜா புயலில் தமிழக அரசின் புயல்வேக நடவடிக்கைகளை பாரீர்’ என்று இடைவிடாமல் நேரலை செய்கிறார்கள். அமைச்சர்கள் எந்தப் பக்கம் போனாலும் பின்னாலேயே செல்கின்றனர். எடப்பாடியை போற்றி புகழ்ந்து விவாத நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
‘ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் விழுந்து கிடப்பதால்தான் அரசின் உதவிகள் மக்களுக்கு சென்று சேர்வதில் தாமதம் ஏற்படுகிறது’ என்று மீண்டும், மீண்டும் ஒளிபரப்புகின்றனர். மரங்கள் இல்லை என்றால் தமிழக அரசு இன்னும் வேகத்துடன் செயல்பட்டிருக்கும் என்பது இதன் பொருள். ஆனால் மக்களோ, இந்த ஆபாசமான பாராட்டுரைகளை கண்டு கொந்தளிக்கின்றனர். 32-க்கும் அதிகான உயிரிழப்பு; 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முகாம்களில் வசிக்கும் நிலைமை. ஒரு சோத்துப் பொட்டலம் கூட கிடைக்கவில்லை என்ற உண்மையை நேருக்கு நேர் பார்க்கும் அவர்கள், ஊரே சேர்ந்து தமிழக அரசை பாராட்டுவதைப் பார்த்து ஆத்திரம் கொள்கின்றனர்.
மவுலிவாக்கம் கட்டிட விபத்து
மக்கள் துயரத்தில் வாடிக் கொண்டிருக்கும்போது தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளும் இந்த ஆபாசமான பண்பு இவர்களின் தலைவியான ஜெயலலிதாவுக்கு உரியது. 61 உயிர்களை பலிகொண்ட சென்னை, மவுலிவாக்கம் கட்டட விபத்தின்போது, அந்த துயரத்தின் கண்ணீர் காயும் முன்பே அந்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு பாராட்டுவிழா நடத்திய பெருமாட்டி அவர். அவர் வழி வந்தவர்கள், இழவு வீட்டில் மரியாதை தேடிக்கொள்ள துடிக்கின்றனர்.
ஒக்கிபுயலை இதே எடப்பாடி அரசு எத்தனை கேவலமாக கையாண்டது என்று நமக்குத் தெரியும். இன்னும் சில தினங்களில் ஒக்கி புயல் அடித்து ஓராண்டு வரப்போகிறது. இப்போது வரை அந்த தென்முனை மீனவர்களின் துயரங்களுக்கு மருந்தில்லை. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து மீனவர்களை திட்டமிட்டு கைவிட்டன. அவர்கள் இந்திய பெருங்கடலில் அவலத்திலும், அவலமாக செத்து மிதந்த கோரத்தை இன்னும் எத்தனை ஆண்டுகளாயினும் மறக்க இயலாது. அப்போது ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் கூத்தடித்துக் கொண்டிருந்த இந்த கொள்ளைக் கூட்ட கிரிமினல்கள் இப்போது கஜா புயலில் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள்.
மக்களிடம் அனைத்து வகைகளிலும் நம்பிக்கையை இழந்துவிட்ட இந்த எடப்பாடி அரசே தமிழ்நாட்டுக்கு ஒரு இயற்கை பேரிடர்தான்.
மீண்டுமொரு சாதி ஆணவப் படுகொலை தமிழகத்தில் நடந்தேறியிருக்கிறது. ஓசூர் அருகே உள்ள சூடு்கொண்டபள்ளி கிராமத்தைச் சார்ந்த வன்னியர் சாதியைச் சேர்ந்த சுவாதியும், பறையர் சாதி இளைஞர் நந்தீஸ் என்பவரும் காதலித்து, மூன்று மாதங்களுக்கு முன்பு ஊரைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருப்பூர் சென்று தங்கி வாழ்க்கை நடத்தியர்கள், மீண்டும் ஒசூருக்கு திரும்பி வந்துள்ளனர்.
ஒசூரில் உள்ள மரக்கடை ஒன்றில் நந்தீஸ் வேலைப் பார்த்துவந்த நிலையில், சென்ற வாரம் இருவரும் காணாமல் போயிருக்கின்றனர். 13.11.2018 அன்று, நந்தீஸும் சுவாதியும் கர்நாடகா மாண்டியா பகுதியில் காவேரி ஆற்றின் கரையில் பிணமாக கரை ஒதுங்கியுள்ளனர்.
இருவரும் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதும், முகங்கள் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக எரிக்கப்பட்டிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட சுவாதி மூன்றுமாத கர்ப்பமாக இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அவமானத்தின் அடையாளமாக சுவாதி மொட்டையடிக்கப்பட்டும் அவர் அணிந்திருந்த தாலியால் கழுத்து இறுக்கப்பட்டும் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். ஒரு ரவுடி கும்பல் மூலம் சுவாதியின் பெற்றோர் இக்கொலையை நடத்தியிருப்பதும் தெரிய வந்துள்ளது.
தங்களுக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு தன் குடும்பமே காரணம் என காவல் நிலையத்தில் சுவாதி புகார் அளித்திருக்கிறார். இந்நிலையில் சுவாதியின் அப்பா ஸ்ரீனிவாசன், சகோதரர்கள் வெங்கடேஷ், அஸ்வதப்பா, உறவினர்கள் கிருஷ்ணன், வெங்கட்ராஜ், ஓட்டுநர் சாமிநாதன் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஸ்ரீனிவாசன் ஆவணப்படுகொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்தக் கொடூர கொலைகளைக் கண்டித்தும், காரணமான சாதி வெறியர்களைக் கண்டித்தும், ஆணவப் படுகொலைகளைக் கண்டுகொள்ளாத தமிழக அரசு குறித்து முகநூலில் எழுதப்பட்ட சில பதிவுகள் இங்கே…
சிவபாலன் இளங்கோவன்:
“Caste is the state of mind” என்கிறார் அம்பேத்கர். எவ்வளவு கூர்மையான விவரிப்பு!
மற்றவர்களை போல அவர் ‘சாதி ஒரு மனநோய்’ என சொல்லவில்லை, மாறாக மிக மிக நுணுக்கமாக அது ஒரு ‘மனநிலை’ என்கிறார். நோய்கள் குணமடையக்கூடியன ஆனால் மனநிலை மாறாதது. நோய் என்பது நமது விருப்பத்தை தாண்டி, நமது கட்டுபாட்டை தாண்டி நம்மில் நிகழ்வது. ஒரு நோயில் இருந்து விடுபடவே ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான். ஆனால் மனநிலை அப்படியல்ல அது விரும்பி ஏற்றுக்கொள்வது அல்லது விரும்பி உள்வாங்கிக்கொள்வது. ஏதோ சில சாதகங்களுக்காக ஒரு மனநிலையை ஒரு மனிதன் தனக்குள் விரும்பி வரித்துக்கொள்கிறான். சாதி அது போன்ற ஒரு மனநிலை தான். அதன் வழியே கிடைக்கும் ஆதாயத்திற்காக ஒருவன் விரும்பி அதை தரித்துக்கொள்கிறான். இங்கு ஆதாயம் என்பது வேறொன்றுமல்ல இன்னொரு மனிதனை அதன்பொருட்டு பிரித்துப்பார்ப்பதே, அவன் மீது சாதி ரீதியாக தனக்கு கிடைத்த ஆதாயத்தை பிரயோகிப்பதே.
இன்னும் நுணுக்கமாக பார்த்தால் அம்பேத்கர் இதை ‘trait’ என சொல்லவில்லை. ‘state’ என்று தான் விழிக்கிறார். ‘trait’ என்பது மரபணுவில் (Genes) பதிந்தது, மரபு ரீதியாக வருவது அதாவது ஒருவனுடைய ‘trait’ என்பது அவன் பிறப்பதற்கு முன்பே தீர்மானிக்கப்படுகிறது. ‘state’ என்பது கற்றுக்கொள்வது. ஒருவன் பிறந்ததற்கு பிறகு இந்த சமூகத்திடம் இருந்து கற்று கொண்டதில் தனக்கு தேவையானதை, சாதகமானதை உள்வாங்கிக்கொண்டு அதை எப்போதும் வெளிப்படுத்தி கொண்டிருப்பது தான் ‘state’. அம்பேத்கர் சாதிய மனநிலை என்பது மரபணுவில் கடத்தப்படும் பண்பல்ல மேலும் ஒருவன் பிறக்கும் போது அத்தகைய மனநிலை ஏதுமற்றவனாக தான் பிறக்கிறான் ஆனால் அவன் வளரும்போது இந்த சமூகம் இந்த மனநிலையை அவனுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக புகுத்திவிடுகிறது என்கிறார்.
சாதிய மனநிலை ஒருவனுக்கு வந்ததுக்கு சாதிய சமூகம் மட்டுமே காரணம். ஒருவன் இத்தகைய மனநிலையை தனக்குள் கொள்ளும்போது அவன் அதை மட்டுமே பிரதானமாக கொண்டு சக மனிதன் மீதுள்ள கரிசனத்தை நிராகரிக்கிறான். சகமனிதன் மீதான கரிசனம் மற்றும் சகமனிதர்களுடன் இணைந்திருத்தல் தான் “Socialization”ல் பிரதானமானது. “Human are social animal” என்ற கூற்றுப்படி பார்த்தால் இந்த “Socialization” அவ்வளவு முக்கியமானது. சாதி என்பது இந்த “Socialization”க்கு நேர் எதிரானது. சாதிய மனநிலையை கொண்டிருக்கும் ஒருவன் “Human are social animal” என்ற பண்புகளற்று போகிறான், அதன் படி அவன் வெறும் மிருகம் என்ற பதத்திற்கு உள்ளே தான் வருகிறான். அப்போது அவன் வெளிப்படுத்தும் பண்புகளும் மிருகத்தை ஒத்தவையாகவே இருக்கின்றன.
இந்த மிருகங்களிடம் இருந்து மனிதர்களை காப்பது இன்றைய காலகட்டத்தில் மனிதனுக்கு முன் உள்ள மிகப்பெரிய சவால். அதற்கான வேலையை இந்த சமூகத்தில் படிந்துள்ள சாதிய விழுமியங்களை தகர்ப்பதில் இருந்தே தொடங்க வேண்டும். அதை நோக்கி முற்போக்கு இயக்கங்கள் செயல்பட வேண்டும். குறிப்பாக பெரியாரிய இயக்கங்கள் வெறும் ‘கடவுள் மறுப்பு’ பிரச்சாரங்களில் இருந்து வெளியே வந்து நேரடியாக சாதிய பண்பாடுகளை, பெருமிதங்களை, புனிதங்களை இளைய தலைமுறைகளிடம் அம்பலப்படுத்த வேண்டும். அதற்கான பிரச்சாரங்களை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வீதிகளிலும் செய்திட வேண்டும். அதில் ஒருங்கிணைந்து செயல்பட நாம் எல்லாரும் தயாராக வேண்டும்.
சாதியை அழிக்கும் புயல் எந்த வங்கக்கடலில் இருந்து தொடங்காது, அதை நம் மனதில் இருந்தே கொள்ள வேண்டும். ஏனென்றால் “Caste is the state of mind”.
ஜாதி-மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்கள் ஜாதியை விட்டொழித்துவிட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், பருகும் தண்ணீரிலிருந்து, கடைசியாய் போய்சேரும் சுடுகாடு வரையிலும் ஜாதி இருக்கிறதே அதை என்ன செய்ய?
கிருபா முனுசாமி:
தொடர்ந்து நிகழ்ந்தேறும் ஜாதிய ஆணவ படுகொலைகள் குறித்தோ, ஒடுக்கப்பட்ட பெண்கள் – சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகள் குறித்தோ எதுவுமே எழுத முடியாத ஒரு கையாலாகாத மனநிலையில் இருந்தேன். ஆனால், நேற்று வெளிவந்த ஓசூர் ஜாதி மறுப்பு தம்பதிகளின் சிதைந்த உடல்களை கண்டபிறகு அமைதியாக இருக்க முடியவில்லை. நான், ஒரு தனிநபராகவே, கிட்டத்தட்ட 8 ஆண்டுகாலமாக ஜாதியையும், அதன் அடிப்படையிலான வன்முறைகளையும் எழுதிய வண்ணமே இருக்கிறேன். எனக்கு முன்பிருந்தே பல ஆண்டுக்காலங்களாக எழுதிவரும் முன்னோடிகளையும் பார்க்கின்றேன். ஜாதி ஒழிப்பிற்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்த பெருந்தலைவர்களும், அவர்தம் தொண்டர்களும் நம் சமூகத்தில் இருந்துவந்து தான் இருக்கிறார்கள். வடஇந்தியாவையும், மற்ற பிற இனங்களையும் ஒப்பிடும் பொழுது, தமிழ்நாடு மிகவும் முன்னேறிய மாநிலமாகவும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரீகமடைந்தது தமிழ்க்குடி என்றும் பெருமை பேசி வந்தாலும், ஜாதிய வன்கொடுமையில் தமிழகம் சளைத்ததாக தெரியவில்லை.
கல்வி-பொருளாதார முன்னேற்றம் அடைந்தவர்கள் இவ்வித ஜாதிவெறிக்கு விதிவிலக்கா என்றால், அதுவும் இல்லை! அவரவர் அளவில், அவரவர் எல்லைகளில் ஜாதியை மிகவும் இறுக்கமாக பற்றிக்கொள்பவர்களாக அவர்களும் இருக்கிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு? ஜாதி-மறுப்பு திருமணங்கள் என்று மட்டும் நாம் எண்ணுகிறோம் என்றால், சிக்கல் நம்மிடமும் இருக்கிறது. நம் சிந்தனையை விரிவுப்படுத்த வேண்டிய தேவை மேலோங்கி இருக்கிறது.
சுசீலா ஆனந்த்:
சேரிகளை,குடிசைப் பகுதிகளை கைவிட்ட இடது, பெரியாரிய சிந்தனையாளர்கள் தான் கேட்பாரற்று நடக்கும் ஆணவ கொலைகளுக்குக் காரணம். அந்த பலவீனத்தை மறைக்கவே சாதி ஓட்டுகளால் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தை நெருக்கும் வேஷங்கட்டி முகநூலில் இறங்கி இருக்கிறோம். ஒவ்வொரு படுகொலையின் போதும் அவர்கள் வீடுகள் போய் கேதம் விசாரித்து விட்டு வருவதை அரசியல் செயல்பாடாக கருதி திருப்தி கொள்கிறோம்.
சமூகநீதிக்கான அரசியல் செயல்பாடென்பது சேரியென்றும் / குடிசைப் பகுதியென்றும் ஊர்களின் / நகரங்களின் ஒடுக்கப்பட்டோர் குடியிருப்பு பகுதிகளில் இயக்கம் கட்டுவது!! அதற்கான திட்டம் வகுப்பது!! ஆங்கிலத்தில் இதைத் தான் strategy என்பார்கள். இருக்கிறதா நம்மிடம்?
தொலைத்த இடத்தில் தேடாமல் தேடும் இடத்தில் கிடைக்குமா சமநீதி? 😡 ஒன்பதோடு பத்தாக கடக்கவிருக்கும் ஒசூர் சாதி ஆணவப்படுகொலை நினைவாக…
மற்றொரு ஆணவக்கொலை. திருமணம் முடிந்த மகளையும், அவளது கணவனையும் வெட்டி ஆற்றில் போடும் மனம் எப்படி தாய், தந்தை பாசம் கொண்டதாக இருக்க முடியும். உண்மையில் இத்தகைய மேல்தள மனதிற்குள் இருப்பது சாதி என்கிற ஆணவம் மட்டுமே. பாசம் என்பதெல்லாம் உள்ளுர சொத்துடமை, சாதிய ஆணவம் சார்ந்த உறவுகளை மறைக்கும் பொதுச்சொல். இ்ங்கு சொத்து என்பது தனது மகள், தனது சாதி, அதன் பெருமிதம் என்கிற பண்பாட்டுப் பெருமதிகள். இந்திய சாதியத்தில் உயர்சாதி-தாழந்தசாதி என்கிற பண்பாட்டு ஆதிக்கம் அதிகம். அது ஒரு பண்பாட்டு மூலதனமாகவே மாறி, ஒவ்வொரு உடலிலும் சாதியாக முதலீடாகியுள்ளது. வெட்கமறுவதற்க்குகூட லாயக்கற்ற ஒரு சமூகமாக மாறிக்கொண்டுள்ளது.
அடிப்படையான பிரச்சனை 1948-ல் உருவான ஃபோர்ட் பவுண்டேஷனும், அதன் பல வடிவங்களில் உலக அளவில் உருவான என்ஜிவோ இயக்கங்களுமே. அவற்றின் நோக்கம் புரட்சிகர சிந்தனைக்கு மாற்றாக சீர்திருத்த வாதத்தை முன்வைப்பதும், புரட்சிகர அமைப்புகளுக்கு மாற்றாக சீர்திருத்த அமைப்புகள், சட்டவாத அமைப்புகள், தீண்டாமை ஒழிப்பு இயக்கங்கள் இப்படி பல வடிவங்களில் செயல்படுவது. அறிவுஜீவிகள் தளத்தில் அறிவை அடகுவாங்கி அவர்கள் வழியாக என்ஜிவோ தனது கருத்தியல் தளத்தை ஒரு அரசியல் ஆழ்மனதாக உருவாக்கி உள்ளது. அதுதான இடதுகளின் தோல்வி.
விநாயக முருகன்:
தமிழ்நாட்டில் ஒருகாலத்தில் பெண் சிசுக்கொலைகள் அதிகம் இருந்தன. அதற்கான சிறப்புச்சட்டம் இயற்றி இப்போது அது முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று சொன்னாலே அந்த ஸ்கேனிங் செண்டரை இழுத்து மூடி மருத்துவரையும் உள்ளே தூக்கி வைத்து விடுவார்கள். மெடிக்கல் கவுன்சில் அவர்களது டாக்டர் பட்டத்தை பத்தாண்டுகளுக்கு (என்று நினைக்கிறேன்) ரத்து செய்துவிடுவார்கள். இதற்கு பயந்துக்கொண்டே யாரும் இப்போது அதை செய்வதில்லை. ஜாதிய படுகொலைகளுக்கும் இதுபோன்றதொரு சிறப்புச்சட்டம் கொண்டுவர படவேண்டும். அதை மற்ற கொலைகேஸ் போல விசாரிக்கக்கூடாது. சிறப்பு சட்டம் மூலம் இரண்டு மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்கபட வேண்டும். குறிப்பாக பெண்ணின் அல்லது ஆணின் பெற்றோரை (தேவைப்பட்டால் இரண்டு பேர்களையும் சேர்த்தே) முதன்மை குற்றவாளியாக்கி தண்டனை கொடுக்கப்படும்வரை ஜாமீனில் வெளிவரமுடியாத அளவுக்கு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். இதுபோன்ற சிறப்புச்சட்டம் பற்றி உச்சநீதிமன்றமே ஏற்கனவே சொல்லியுள்ளது.
‘வயதுவந்த இருவர் மனம் ஒப்பித் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தால் அதற்கு குடும்பத்தின் அனுமதியோ, சாதி, சமூகம் ஆகியவற்றின் அனுமதியோ தேவை இல்லை’ எனத் தெளிவாகக் கூறியிருக்கும் உச்சநீதிமன்றம், ஆணவக் கொலையைத் தடுப்பதற்காகவும், அதனால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும் , அந்தக் குற்றத்தில் ஈடுபடுகிறவர்களைத் தண்டிப்பதற்காகவும் சிறப்பு சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் இயற்றவேண்டும் என பரிந்துரை செய்திருக்கிறது. அப்படியான சட்டம் இயற்றப்படும் வரை மத்திய, மாநில அரசுகள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
தடுப்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள், தண்டிக்கும் நடவடிக்கைகள் என மூன்று தலைப்புகளில் வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் அளித்திருக்கிறது.
சாதி பஞ்சாயத்துகளைத் தடுப்பதற்கு சிஆர்பிசி 144 பிரிவின்கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கலாம், பிரிவு 151ன் கீழ் கைதும் செய்யலாம் எனக் கூறியிருக்கும் உச்சநீதிமன்றம், சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளைப் பாதுகாக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை உள்ளடக்கிய சிறப்புப் பிரிவையும் பாதுகாப்பு இல்லங்களையும் ஏற்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆணவக் குற்றங்களைத் தடுக்கத் தவறும் அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுத்துத் தண்டிக்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. இந்த உத்தரவு இனிமேல் பதியப்படும் வழக்குகளுக்கு மட்டுமின்றி ஏற்கனவே கிடப்பில் இருக்கும் வழக்குகளுக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு வாரங்களுக்குள் அனைத்து மாநில அரசுகளும் இதை நடைமுறைப் படுத்தவேண்டும் எனவும் கண்டிப்போடு உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனாலும் இன்னமும் எதுவும் விடிந்தபாடில்லை. சிறப்புச்சட்டம் வந்து சிலர் உள்ளே போகும் வரை இங்கு கொலைகள் விழுந்தபடிதான் இருக்கும்.
ஒசூரில் இரண்டு இந்துக்கள் திருமணம் செய்ததால், கொலை செய்து ஆற்றில் வீசியிருக்கிறார்கள். இந்துக்கள் கட்சி என தம்பட்டம் அடிக்கும் பாஜக எங்கே? இந்துக்களுக்காக போராடுவதாக சொல்லும் ஆர்.எஸ்.எஸ் சங்கீ அடிமைகள் எங்கே?
கோபாலகிருஷ்ணன் சங்கரநாராயணன்:
டிவிட்டர் ஐடி இருந்தால், இயக்குநர் பா. ரஞ்சித் ஓசூர் ஆணவக் கொலையால் வெகுண்டெழுந்து போட்டிருக்கும் ட்வீட்களுக்கு வரும் கமெண்டுகளைப் பாருங்கள்.
மிகப் பெரும்பாலானவை, ‘நீ சாதிய வெச்சுப் படம் எடுக்கறத நிறுத்து’, ‘நீதான் சாதியப் பிடிச்சுக்கிட்டுத் தொங்கற’ வகையிலானவைதான். இப்படிச் சொல்பவர்கள் பெரும்பாலானோர் அஜித், விஜய், விக்ரம், யுவன் சங்கர் ராஜா படங்களை ப்ரொஃபைல் பிக்காக வைத்திருக்கும் இளைஞர்கள். சிலர் வெளிப்படையாகவே சுயசாதிப் பெருமை பேசும் கயவர்கள். அவர்களும் இளைஞர்களாகவே இருக்கக்கூடும். அடுத்தத் தலைமுறையையும் சாதி வெறித் தின்றுகொண்டிருக்கிறது. அதைத் தடுக்க என்ன செய்யப் போகிறோம்?
தலித் என்பது சாதி அல்ல. அது சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்களைக் குறிப்பிடுவதற்கான சொல் என்ற மிக எளிய விஷயத்தைக்கூட இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் அறியமாட்டார்கள். இந்தியா முழுவதும் இதே நிலைதான். ‘Dalit girl commits suicide’ என்று செய்தித்தாள்கள், இணையதளங்கள் செய்திவெளியிட்டால், அதற்கு வரும் 95% எதிர்வினைகள், ‘இதில் எங்கிருந்து சாதி வந்தது?’ என்று கேட்பதாகத்தான் இருக்கும்.
சம்பந்தப்பட்ட செய்தியாளரை, செய்தித் தளத்தைச் சாதியவாதி, சாதி வெறிபிடித்தவர் என்று வசைபாடுவதாகவும் இருக்கும். ஒவ்வொரு முறை அவற்றைப் பார்க்கும்போதும் அது குறித்த ஆற்றாமைப் பொங்கிவரும். ஆனால் எதுவும் செய்ய முடியாது. என்னதான் செய்யப் போகிறோம்?
தலித் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பிரத்யேகமானவை, சாதிய சமூகத்தில் அவர்களில் பலருக்கு நிம்மதியாக வாழ்வதே அன்றாடப் போராட்டம், இதைப் பேசுவது அந்தச் சாதிகளுக்குப் பரிந்து பேசுவதாகாது, அந்த மக்களும் மற்றவர்களைப் போல் வாழ வேண்டும் என்றும், நாம் நாகரீகமானவர்கள் என்று நமக்கு நாமே உறுதி செய்துகொள்வதற்கான உணர்வென்றும், சாதிமய இந்தியாவின் பெரும்பான்மையான இளைஞர்களுக்கு எப்படிப் புரியவைக்கப் போகிறோம்?
சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்கள் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களைக் காட்டிலும் உடல் நலனும் ஆயுளும் குறைவாக பெற்றிருக்கிறார்கள் என்கிறது ஆஸ்திரிய மருத்துவ பல்கலைக்கழக ஆய்வு. இறைச்சி உண்ணாதவர்களுக்கு உடல் மற்றும் மனநல குறைபாடுக்கான சாத்தியங்கள் அதிகளவு உள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த கிராஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன. சைவ உணவு பட்டியலில் நல்ல கொழுப்புச் சத்து குறைவாக உள்ளதும், அதிகப்படியாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் உண்பதும் கேன்சர், ஒவ்வாமை மற்றும் மன அழுத்தம், பதட்டம் போன்ற மனநல பிரச்சினைகளை உண்டாக்க வாய்ப்புள்ளது என்கிறது மருத்துவப் பல்கலை ஆய்வு.
இறைச்சி உண்பவர்கள், காய்கறிகள் உண்பவர்களின் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் வேறுபாடுகளை ஆராய்ந்ததில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன. காய்கறிகளை உண்பவர்கள் குறைவான மது அருந்துவதாகவும் சராசரி உடல் எடையைவிட குறைவான எடையை கொண்டுள்ளதாகவும் இந்த ஆய்வு சொல்கிறது. ஒட்டுமொத்தத்தில் இவர்களின் உடல் நலனும் மனநலனும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். குறைவான இறைச்சி உண்பவர்களும்கூட உடல்நலனில் அக்கறை செலுத்தாதவர்களாக இருக்கிறார்களாம்.
“எங்களுடைய ஆய்வின்படி, காய்கறிகளை உண்ணும் ஆஸ்திரிய இளம்பருவத்தினர் குறைவான ஆரோக்கியம் உள்ளவர்கள். (புற்றுநோய், ஒவ்வாமை, மனநல குறைபாடுகளை பெற்றிருக்கிறார்கள்) மேலும் அவர்கள் வாழ்க்கைத் தரம் சிறப்பாக இல்லை. அவர்களுக்கு அதிகப்படியான மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது” என ஆய்வின் முடிவில் ஆய்வாளர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இந்துத்துவ அடிப்படைவாதிகள் சைவமே சிறந்தது என முன்னெடுக்கிற அரசியல் மூலம் பெரும்பகுதி உழைக்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது. குறிப்பாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சைவ உணவுப் பழக்கம் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. ஹரியாணா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உத்தர பிரதேசம் ஆகியவற்றில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் சைவம் உண்ணுகிறவர்களாக உள்ளார்கள்.
குரங்கிலிருந்து மனிதர்களை பரிணமிக்கச் செய்ததில் இறைச்சியின் பங்கு முக்கியமானது என அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன. உண்மையில், சங்கிகளின் சிந்திக்க திராணியற்ற ‘மாட்டு மூளை’க்கு அவர்களின் சைவ உணவுதான் காரணமா என்பதை ஆய்வுக்கு உட்படுத்தினால், நிச்சயம் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரக்கூடும்.
மார்க்ஸ் பிறந்தார் – 22 (கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)
9. ஒரு மேதையும் அவருடைய சூழலும் – 2
மார்க்ஸ் மிகவும் அடக்கமான முறையில் வாழ்க்கை நடத்தி வந்தார் என்றாலும் அரசியல் அகதிகளுக்கு அவர் குடும்பத்தில் இடமும் உணவும் ஆறுதலும் தவறாமல் கிடைக்கும்.
வில்ஹெல்ம் லீப்க்னெஹ்ட் பிற்காலத்தில் பின்வருமாறு நினைவுகூர்ந்தார்:
“எங்கள் (ஜெர்மனியிலிருந்து ஓடி வந்த இளம் அகதிகள் – ஆசிரியர்) மீது மார்க்சைக் காட்டிலும் திருமதி மார்க்ஸ் தான் அதிக வன்மையான முறையில் கூட ஆதிக்கம் செலுத்தினார். அந்த அம்மையாரிடம் பெருமிதம், தன் சொந்த கெளரவத்தைப் பற்றிய உணர்வு இருந்தது…. அந்த அம்மையார் சில சமயங்களில் எனது காட்டுமிராண்டிகளை அடக்கி மென்மையாக்கிய இஃபிஜீனியாவாக, வேறு சமயங்களில் மனப்போராட்டம் மற்றும் சந்தேகங்களில் அறுக்கப்பட்ட மனிதனிடம் அமைதியை ஏற்படுத்துகின்ற எலியனோராக இருந்தார்கள்;எனக்குத் தாயாக, நண்பராக, துணைவராக, ஆலோசகராக இருந்தார்கள் பெண்ணைப் பற்றிய இலட்சிய வடிவமாக இருந்தார்கள்; இன்றும் அப்படியே நினைக்கிறேன், நான் லண்டனில் தார்மிக முறையிலும் உடல்நலத்திலும் சீர்குலைந்து விடாதிருந்தேன் என்றால் அதற்காக அந்த அம்மையாருக்கே நான் நன்றி செலுத்துவேன், இதை நான் பன்முறை சொல்வேன்.”(1)
வில்ஹெல்ம் லீப்க்னெஹ்ட்
ஜென்னியின் அசாதாரணமான அழகும் அறிவும் மார்க்சைச் சந்திக்க வருபவர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு அதிகமான மகிழ்ச்சியைக் கொடுத்தன. ஹேய்னெயும் ஹேர்வெக்கும் ஃபிரெய்லிக்ராத்தும் ஜென்னியைப் போற்றினார்கள். மிக அடக்கமான அரசியல்வாதிகள் கூட ஜென்னியைப் பற்றிப் பேசுகின்ற பொழுது கவிஞர்களாக மாறினார்கள்.
முதலாவது அகிலத்தின் அமைப்பாளரும் தையற்காரருமான பிரெடெரிக் லெஸ்னர் பின்வருமாறு எழுதுகிறார்:
“நம்பகமான ஒவ்வொரு தோழருக்கும் மார்க்சின் வீடு எப்போதும் திறந்தே இருந்தது. மற்ற பலரையும் போலவே மார்க்ஸ் குடும்பத்தாருடன் மகிழ்ச்சிகரமாகக் கழித்த பல மணி நேரங்களை நான் என்றுமே மறக்கமாட்டேன். குறிப்பாகத் திருமதி மார்க்ஸ் பிரகாசமான பிரதிபலிப்பை ஏற்படுத்தினார், அவர் உயர்ந்த அழகான பெண்மணி, மிகவும் பிரசித்தி பெற்றிருந்தாலும், மிக நல்ல பண்புடையவர்; அன்புடன், சிரிக்கப் பேசி அளவளாவும் தன்மையுடையவர், வீண் பெருமையும் திமிரும் இல்லாதவராகத் திகழ்ந்தார்.
அவர் முன் எவரும் சொந்தத் தாய் அல்லது சகோதரி முன் இருப்பது போன்று உணர்வார்கள். அவர் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் மிகுந்த உற்சாகம் காட்டி வந்தார்.
பூர்ஷ்வா வர்க்கத்திற்கு எதிராகக். கிடைக்கும் வெற்றிகள், எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி, அவருக்கு மிகப் பெரிய திருப்தியையும் மகிழ்ச்சியையும் கொடுத்தன.”(2)
தன் கணவர் சம்பந்தப்பட்ட ஒவ்வொன்றுமே மற்றவர்களைக் காட்டிலும் ஜென்னியைத்தான் அதிகமாகப் பாதித்தது. ஜெர்மனியின் பிற் போக்குவாதப் பத்திரிகைகள் 1848-ம் வருடப் புரட்சிக்காரர்களைப் பற்றி அவதூறு செய்த பொழுது, விஷத்தில் தோய்க்கப்பட்ட அம்புகள் மார்க்சைக் குறிபார்த்துத் தொடுக்கப்பட்ட பொழுது ஜென்னியே மிகவும் பாதிக்கப்பட்டாள், நோயில் விழுந்தாள்.
மூலதனத்தின் முதல் தொகுதி வெளியிடப்பட்ட பிறகு, சகாப்த முக்கியத்துவம் நிறைந்த இப்புத்தகத்தை ஜெர்மனியில் முற்றிலும் புறக்கணித்து விட்டார்களே என்று ஜென்னி மிகவும் வருந்தினாள். மார்க்சின் மேதைக்குத் தகுந்த அங்கீகாரம் இல்லையே என்பதைப் பற்றி அவள் வேதனைப்பட்டாள்.
தன் மரணத்துக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் மார்க்சைப் பற்றிச் சிறிய குறிப்பு வெளியிடப்பட்டிருந்ததைப் பார்த்து ஒரு குழந்தையைப் போல மகிழ்ச்சி அடைந்தாள். ஜென்னியின் மரணத்துக்குப் பிறகு மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் இச்சம்பவத்தை வேதனையுடன் நினைவுகூர்ந்தார்.
1881-ம் வருடத்தின் கடைசியில் ஜென்னி மரணமடைந்த பொழுது எங்கெல்ஸ் இனி மூரும் (மார்க்சுக்கு அவர் குடும்பத்தில் கொடுக்கப்பட்டிருந்த செல்லப் பெயர். -ப-ர்) இறந்து விட்டார்” என்று கூறினார்.
இதைக் கேட்ட மற்றவர்கள் திகைப்படைந்தனர். மார்க்சும் ஜென்னியும் ஒருவர் இல்லாமல் மற்றொருவர் மெய்யாகவே வாழ முடியாது, மார்க்ஸ் இனி மேல் உயிர்தரிக்க மாட்டார் என்பதை எங்கெல்ஸ் நன்றாக அறிந்திருந்தார். அவர் கூறியபடி நடந்தது.
மனிதகுலம் காதலைப் பற்றி பல கதைகளையும் காவியங்களையும் தொல்கதைகளையும் படைத்திருக்கிறது. அவற்றில் மார்க்ஸ்-ஜென்னி காதல் கதை மிக மேன்மையானது. மார்க்ஸ் நண்பர்களிடம் காலப் போக்கில் மாற்றமடையாத பாசத்துடன் பழகினார்.
மார்க்சும் எங்கெல்சும் தங்களுக்கு ஏற்பட்ட எல்லாச் சோதனைகளையும் ஒன்றாகவே சகித்துக் கொண்டார்கள், அவர்கள் ஒருவரையொருவர் அதிககாலத்துக்குப் பிரிந்திருக்கமாட்டார்கள், தங்களுடைய பொது இலட்சியத்துக்காக இணைந்து பாடுபட்டார்கள்.
மார்க்சின் வாழ்க்கை வெளித்தோற்றத்தில் பளபளப்பான வர்ணங்களோ, அசாதாரணமான சம்பவங்களோ இல்லாமற் தோன்றலாம். ஆனால் புரட்சிக்காரர், அரசியல் போராட்டக்காரர், கட்டுரையாளர், விஞ்ஞானி என்ற முறையில் அவருடைய வாழ்க்கையில் ஆன்மிகப் பரபரப்பு நிறைந்திருக்கிறது. அதில் உணர்ச்சிக் கொந்தளிப்புகள், போராட்டம், துணிவுடைமை, உண்மைக்கும் பாட்டாளி வர்க்க இலட்சியத்துக்கும் தன்னலமற்ற சேவை ஆகியன இருக்கின்றன.
மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ்
அவருடைய வாழ்க்கை என்பது ஐரோப்பியத் தொழிலாளர்களின் வர்க்க உணர்வின் உருவாக்கத்தின் மொத்த வரலாற்றுச் சகாப்தமே. அவர்தான் கம்யூனிஸ்டுச் சங்கம் என்ற பெயரில் கம்யூனிஸ்டுக் கட்சியின் சிறு கிளையை முதன்முறையாக அமைத்தவர், சமூகத்தைத் திருத்தியமைப்பதற்குரிய போராட்டத்துக்கு உத்வேகமூட்டுகின்ற, தெளிவான வேலைத்திட்டமாகிய கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையை – எங்கெல்சின் துணையுடன் – தயாரித்தளித்தவர்.
Neue Rheinische Zeitungஇல் அவர் எழுதிய கட்டுரைகள் 1848-ம் வருடப் புரட்சியின் போது துணிகரமாகப் போராடுவதற்கு எழுச்சியூட்டின. 1864-ம் வருடத்தின் இலையுதிர்காலத்துக்குப் பிறகு முதலாவது அகிலத்தின் பணிகளுக்கு முழுமையான கவனம் செலுத்துவதற்காக அவர் தன்னுடைய விஞ்ஞான ஆராய்ச்சிகளை நிறுத்தி வைத்தார். முதலாவது அகிலத்தின் இதயமாக அவர் விளங்கினார்.
பல்வேறு நாடுகளிலிருந்த தொழிலாளர் இயக்கத்தை ஒன்றுபடுத்தி, பாட்டாளி வர்க்கத் தன்மையில்லாத, மார்க்சுக்கு முந்திய சோஷலிசத்தின் பல்வேறு வடிவங்களையும் (மாஜினி, புரூதோன், பக்கூனின், இங்கிலாந்தின் மிதவாதத் தொழிற்சங்க இயக்கம், ஜெர்மனியில் லஸ்ஸால் வாதிகளின் வலதுசாரித் திருப்பம், இதரவை) கூட்டு நடவடிக்கையினுள் கொணர்வதற்கு முயற்சி செய்து, இக்குறுங்குழுக்கள் மற்றும் மரபுகள் அனைத்தின் தத்துவங்களையும் எதிர்த்துப் போராடி மார்க்ஸ் பல்வேறு நாடுகளிலும் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் ஒன்றுபட்ட செயல்தந்திரத்தை உருவாக்கினார். பாரிசில் கம்யூன்வாதிகள் நடத்திய புரட்சிகரமான சண்டைகளை அவர் இளமை வேகத்தோடு கவனித்தார். கம்யூன் நடவடிக்கைகளை ஆராய்ந்தார்.
மார்க்ஸ் மக்களிடமிருந்து ஒதுங்கித் தந்தக் கோபுரத்தில் வசித்த விஞ்ஞானி என்று கூறுகின்ற முதலாளி வர்க்கக் கற்பனையை இவை அனைத்தும் மறுக்கின்றன. விஞ்ஞான உலகக் கண்ணோட்டத்தை விரித்துரைக்கின்ற மாபெரும் இலட்சியத்துக்காகத் தன்னுடைய வாழ்க்கையில் கணிசமான பகுதியை அர்ப்பணித்த மார்க்ஸ் நேரடியான அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான வேலைகளுக்குக் காலம் செலவிடுவதற்குச் சிறிதும் தயங்கவில்லை.
மார்க்சின் நண்பர்களில் ஒருவரான லுட்விக் கூகல்மன் மார்க்ஸ் அரசியல் பிரச்சாரம் செய்வதில் ஈடுபடக் கூடாது, மூலதனத்தின் மூன்றாவது தொகுதியை எழுதி முடிப்பதில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும், ஏனென்றால் புரட்சி இலட்சியத்துக்கு இது மிகவும் முக்கியமானது என்று அவரிடம் வாதாடிய பொழுது மார்க்ஸ் ஆத்திரமடைந்தார், அவருடன் தன்னுடைய உறவுகளை முறித்துக் கொண்டார்.
அவருடைய அரசியல் வாழ்க்கையை விஞ்ஞான வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாது; ஒரு துறையில் அவருடைய நடவடிக்கை மறு துறையில் அவருடைய நடவடிக்கைக்கு உரமாகவும் தூண்டுகோலாகவும் இருந்தது. இரண்டு துறைகளிலும் இலட்சியங்கள் மற்றும் வழிமுறைகளின் தூய்மைக்காக மார்க்ஸ் ஈவிரக்கமின்றிப் போராடினார். அத்தூய்மையிலிருந்து பிறழ்வது அவமானகரமானது என்று கருதினார்.
தனிப்பட்ட புகழ் மற்றும் அந்தஸ்தை அடைவதற்காகப் புரட்சிகரமான கோஷங்களை உபயோகிப்பது பாட்டாளி வர்க்க இலட்சியத்துக்குச் செய்யப்படுகின்ற மிகக் கேவலமான துரோகம் என்று மார்க்ஸ் கருதினார். வாயாடித்தனமான அரசியல் சூழ்ச்சிக்காரர்கள் ஆர்ப்பாட்டமான சொற்றொடர்களுக்குப் பின்னால் தங்களுடைய திறன்மையின்மையையும் சூன்யத்தையும் மறைத்துக் கொள்கிறார்கள்.
இவர்களுடைய போலிப் புகழை மார்க்ஸ் வெறுத்தார். இவை அனைத்துக்கும் பின்னால் அருவருப்புத் தருகின்ற போலித்தனமான அற்பவாதம் இருப்பதை மார்க்ஸ் தவறாமல் கண்டுபிடித்தார். மார்க்ஸ் வீண் வார்த்தைகளையும் ஆர்ப்பாட்டமான நடிப்பையும் மன்னிக்கமாட்டார்.
ஃபெர்னாண்டு லஸ்ஸால்
ஜெர்மானிய சமூக-ஜனநாயகவாதிகளின் தலைவரான ஃபெர்னாண்டு லஸ்ஸால் மலிவான முறையில் புகழ் பெறுவதற்காகப் பாடுபடுவதையும் அவருடைய அகம்பாவத்தையும், விளையாட்டுதனத்தையும் உணர்ச்சிப் பசப்பையும் கூலிப் புத்தியையும் வீரப்பெருந்தகையின் நடையுடை பாவனைகளையும் கலந்து கிராமந்தர நடிகர் மேதை மற்றும் பிரபுவின் பாத்திரத்தை நடிப்பதைப் போல அவர் நடந்து கொள்வதையும் மார்க்சும் ஏங்கெல்சும் இரக்கமின்றி கேலி செய்தார்கள். அந்த “மார்கிஸ் போஸாவைக்” குறிப்பதற்காக அவர்கள் உபயோகித்த கிண்டலான பட்டப் பெயர்கள் எண்ணிலடர்கா!
பிரெஞ்சு முதலாளித்துவ அரசியல்வாதியும் வரலாற்றாசிரியரான லுயீ பிளாங்கைப் பற்றியும் மார்க்ஸ் இதே மாதிரியான அணுகுமுறையைக் கடைப்பிடைத்தார்.
“…. எங்களில் எவரும் வெகுஜனப் புகழைத் தூசியளவு கூட மதித்ததில்லை. இதற்குச் சான்று; உதாரணமாக, அகிலம் இருந்த காலத்தில் பல நாடுகளிலுமிருந்து எண்ணற்ற பாராட்டுகள் எனக்கு வந்ததுண்டு; நான் தனிநபர் வழிபாட்டை வெறுத்த காரணத்தால் இப்பாராட்டுக்களில் ஒன்றுகூட விளம்பரமாகப் பயன்படுவதற்கு நான் அனுமதித்ததில்லை; நான் அவற்றுக்குப் பதிலும் எழுதவில்லை, அப்படிப் பதிலளித்திருந்தாலும் அது அவர்களைக் குட்டுவதற்காகவே இருக்கும்.
எங்கெல்சும் நானும் முதன்முறையாக கம்யூனிஸ்டுகளின் இரகசியச் சங்கத்தில் (கம்யூனிஸ்டு சங்கம். –ப-ர்.) சேர்ந்த பொழுது அதிகாரத்தை வகிப்பவர்களிடம் குருட்டுத்தனமான மூடநம்பிக்கைகளை ஊக்குவிக்க முற்படுகின்ற அனைத்தும் விதிமுறைகளிலிருந்து நீக்கப்படுவதை நிபந்தனையாக முன்வைத்தோம்.”(3)
ஒரு நபர் எதை விரும்புகிறார் என்பதைக் கொண்டு மட்டுமல்லாமல் அவர் எதை வெறுக்கிறார் என்பதைக் கொண்டும், எதற்கு அனுதாபம் காட்டுகிறார் என்பதை மட்டுமல்லாமல் எதை அருவருப்பாகக் கருதுகிறார் என்பதைக் கொண்டும் அவர் எப்படிப்பட்டவர் என்று கூற முடியும். உங்கள் எதிரி யார் என்பதைச் சொல்லுங்கள், நீங்கள்யார் என்று நான் சொல்கிறேன்.
குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளில் ஒருவரான கார்ல் ஹுர்த்ஸ் 1848-இல் கொலோனில் ஜனநாயகச் சங்கங்களின் காங்கிரசில் கார்ல் மார்க்ஸ் சொற்பொழிவாற்றியதைக் கேட்டார்.
மார்க்ஸ் “Burger (முதலாளி, அற்பவாதி) என்ற சொல்லை எவ்வளவு தீவிரமான அருவருப்புடன் உச்சரித்தார் என்பதை அவர் தன்னுடைய வாழ்க்கை முழுவதிலும் மறக்கவில்லை. மார்க்ஸ் தன் கட்டுரைகளிலும் புத்தகங்களிலும் கடிதங்களிலும் ஏராளமான அற்பவாதிகளுக்கு அவரவர் தகுதிக்குத் தகுந்தவாறு பரிசு வழங்கியிருக்கிறார். அந்த நபர் தன்னுடைய விமர்சனத்துக்குத் தகுதியுடையவரா என்பதைப் பற்றி மார்க்சுக்கு அக்கறையில்லை. அதன் பலனாகப் பல அனுமதேயங்கள் மார்க்சினால் விமர்சிக்கப்படுகின்ற புகழைப் பெற்றார்கள்.
லேஸ் ஸிங்கைப் பற்றி ஹேய்னெ பின்வருமாறு கூறியது மார்க்சுக்கு முற்றிலும் பொருந்தும்: “அவர் தன் எதிரிகளை அழிக்கின்ற பொழுது அவர்களை அமரர்களாக்கினார்.” இந்த அற்பமான எழுத்தாளர்களை மார்க்ஸ் தன்னுடைய அறிவார்ந்த இகழ்ச்சிக்கு, மேன்மையான நகைச்சுவைக்கு இலக்காக்கினார்; அம்பரில் புதைந்திருக்கும் கொசுக்களைப் போல அவர்கள் இப்பொழுது அவருடைய நூல்களில் நிரந்தரமாகப் பாதுகாக்கப்பட்டிருக்கிருர்கள்.”(4)
மார்க்சின் வாழ்க்கை முழுவதிலும் அற்பவாதிகள் (மூன்றாம் நெப்போலியன் முதல் பத்திரிகை நிருபர்கள் வரை) அவதூறுகள், ஒடுக்கு முறைகள், பொய்களின் மூலமாக அவரைப் பழிவாங்குவதற்கு முயற்சி செய்தார்கள்; அவை பலனளிக்கவில்லை என்றால் அவருடைய புத்தகங்களை முற்றிலும் புறக்கணித்துவிடுவதன் மூலம் பழிவாங்கினார்கள்.
எனினும் எல்லாக் கடுமையான சோதனைகளுக்குப் பிறகும் எந்த விஷயத்திலும் மார்க்ஸ் அற்பவாதிக்கு விட்டுக் கொடுக்கவில்லை, “அற்பவாதிக்குக் கீழ்நிலையில்” இருக்கவில்லை, எப்பொழுதுமே அவனுடன் போராடுவதற்குத் தயாராக இருந்தார். “ஆம், எப்படியிருந்தபோதிலும் அற்பவாதிக்குக் கீழே இருப்பதைக் காட்டிலும் அற்பவாதிக்கு எதிர்ப்பு என்பது நமக்கு நல்ல மூதுரையாகும்.”(5) என்று மார்க்ஸ் ஒரு கடிதத்தில் எழுதினார்.
அரசியல் துறையில் அற்பவாதி, விஞ்ஞானத் துறையில் அற்பவாதி ஆகிய இருவரிடமும் மார்க்ஸ் ஒரே அளவுக்கு இரக்கமின்றி நடந்து கொண்டார்.
விஞ்ஞானத் துறையில் அற்பவாதம் கவனிக்கப்பட்ட விவரங்களிலிருந்து தப்ப முடியாத முடிவுகளைப் பெறுவதற்கு அஞ்சுகின்ற, விஞ்ஞானத்துக்கு அப்பாலுள்ள எல்லாக் கருத்துக்களையும் புறக்கணித்து விஷயங்களின் தர்க்கவியலைத் தயக்கமில்லாமல் பின்பற்றிச் செல்ல அஞ்சுகின்ற கோழைத்தனமாக, சிந்தனைக் கயமையாக வெளிப்பட்டது.
அற்பவாதி விஞ்ஞானத் துறையில் உண்மையைத் தேடுவதற்கு மாறாக, உண்மையை மறைப்பதிலும் திரித்துக் கூறுவதிலும் அக்கறை காட்டுகிறார். தன்னுடைய நேர்மையற்ற மழுப்பலின் மூலம் ஆளும் வர்க்கத்தினருடைய நிலையையும் அதன் மூலம் தன்னுடைய நிலையையும் வலுப்படுத்துவதற்குப் பாடுபடுகிறார். உண்மைப்-போலியான பேச்சுக்குப் போலி விஞ்ஞான உடையை மாட்டுவதன் மூலம் அவர் உண்மையைக் குழிதோண்டிப் புதைக்கிறார்.
அற்பவாதி விஞ்ஞானத்தைக் கருவியாக உபயோகித்து விஞ்ஞானத்துக்குச் சம்பந்தமில்லாத தன்னுடைய சொந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சிக்கிறார். அவர் “கீழான நோக்கங்களுக்கு” அதை உபயோகிக்கிறார். “ஆனால் ஒரு மனிதர் விஞ்ஞானத்தை விஞ்ஞானத்திலிருந்து வருவிக்கப்படாத ஒரு கருத்துக்கு, (அது எவ்வளவு தவறானதாக இருந்தாலும்) வெளியே, அந்நிய, வெளிப்புற நலன்களிலிருந்து வருவிக்கப்பட்ட கருத்துக்குத் தகவமைக்க முயற்சிக்கும் பொழுது நான் அந்த நபர் இழிவானவர் என்கிறேன்.”(6)
இவை சவுக்கால் அடிப்பதைப் போன்ற, கன்னத்தில் அறைவதைப் போன்ற சொற்கள். மால்தஸ், ரொஷேர் மற்றும் பாஸ்தியாவைப் போன்ற விஞ்ஞானப் புரட்டர்களை நோக்கி மார்க்ஸ் இந்தக் கணைகளை வீசுகிறார். பாதிரியாரான மால்தசைப் பற்றி மார்க்ஸ் அளவிட முடியாத அருவருப்பை அடைகிறார்; ஏனென்றால் “இந்தக் கழிசடை” கொடுக்கப்பட்ட விஞ்ஞானக் கருதுகோள்களிலிருந்து (அவற்றை அவர் தவறாமல் திருடுகிறார்) ஆளும் வர்க்கங்கள் “விரும்பக் கூடிய” முடிவுகளையே வருவிக்கிறார்(7)
இந்த வர்க்கங்களை “மனதில் நினைத்துக் கொண்டு” விஞ்ஞான முடிவுகளைத் தயாரிக்கிறார், ஆனால் அவருடைய முடிவுகள் “ஒடுக்கப்பட்டிருக்கின்ற வர்க்கங்களைப் பொறுத்தமட்டில் இரக்கமற்றவையாகும்”. “இங்கே அவர் இரக்கமில்லாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் இரக்கமில்லாதவரைப் போல பாவனை செய்கிறார்: அதில் அவருக்கு இருள்கவிந்த மகிழ்ச்சி இருக்கிறது…”(8)
விஞ்ஞானத் துறையில் இத்தகைய விஞ்ஞானி அடுத்தவருடைய உழைப்பை அபகரிப்பது வழக்கம்; ஆனால் இங்கும் அவர் தனக்கு உண்மையானவராக நடந்து கொள்கிறார். “ஒரு கருத்தைக் கண்டுபிடிப்பவர் முழுமையான நேர்மையுடன் அதை மிகைப்படுத்திக் கூறலாம்: காப்பியடிப்பவர் அதை மிகைப்படுத்துகின்ற பொழுது அத்தகைய மிகைப்படுத்துதலே அவர் ஒரு தொழிலாக மாற்றிவிடுகிறார்.”(9)
விஞ்ஞானத் துறையில் சிந்தனைக் கயமையை இப்படி ஆவேசமாகக் கண்டிக்கும் பொழுது மார்க்ஸ் தன்னுடைய வெறுப்புக்களை மட்டுமல்லாமல் அனுதாபங்களையும் – உண்மையான விஞ்ஞானியைப் பற்றி, தன்னலமற்ற முறையில் உண்மைக்குச் சேவை புரிவதைப் பற்றித் தன்னுடைய கருத்தை – வெளிக்காட்டுகிறார்.
குறிப்புகள்;
(1)F. Lassalle, Nachgelassene Briefe und Schriften, stuttgart-Berlin, 1922, Bd, III, S. 355.
(2)W. Lienknecht, Karl Marx zum Gedachtnis. Ein Lebensabriss und Erinnerungen, Nurnberg, 1896, S. 65-66.
(3)மார்க்சையும் எங்கெல்சையும் பற்றிய நினைவுக் குறிப்புகள்,முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1973,பக்கம் 246.
(4)Marx, Engels, Selected Correspondence, Moscow, 1957, p. 291.
(5)Heines Werke imfunf Banden, Bd, 5, Weimer, 1956, S. 90.
(6) Marx, Engles, Werke, Bd, 30, S. 495.
(7)Karl Marx, Theories Of Surplus-value, Part II, Moscow, 1975, p. 119.
(8) Ibid., p. 118.
(9) Ibid., p. 120.
– தொடரும்
நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.
நூல் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம்இடமாற்றம்செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே) 1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்) பேச – (தற்காலிகமாக) : 99623 90277
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.
தாய் திடுக்கிட்டாள். அவளது மனத்தில் கொலைகாரனின் பெயர் மின்னிப் பளிச்சிட்டு மறைந்தது.
“யார் கொலை செய்தது?” என்று கேட்டுக்கொண்டே ஒரு போர்வையை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டாள் தாய்.
“கொன்றவன் அவன் பக்கத்திலே உட்கார்ந்து ஒப்பாரி வைக்கவில்லை. கொன்று தள்ளிவிட்டு ஓடியே போய்விட்டான்!”
அவர்கள் இருவரும் தெருவழியே போய்க்கொண்டிருக்கும்போது மரியா மீண்டும் தொடர்ந்து பேசினாள்.
“இனிமேல், அவர்கள் மூலை முடுக்கெல்லாம் தேடி அலசிப் பார்த்து கொன்றவனைக் கண்டுபிடிக்க முனைவார்கள். உன்னுடைய ஆட்கள் நேற்றிரவு வீட்டுக்குள்ளே இருந்தது நல்ல காலத்துக்குத்தான். அதற்கு நானே சாட்சி. நான் இரவு நடுநிசிக்குப் பிறகு வீட்டுக்கு வந்தேன். அப்போது உன் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்த்தேன். நீங்கள் அனைவரும் மேஜையைச் சுற்றி உட்கார்ந்திருந்தீர்கள்…”
“நீ என்ன சொல்கிறாய் மரியா? அவர்களை எப்படிச் சந்தேகிக்க முடியும்?” என்று பயத்தால் வெலவெலத்துப் போய்க் கேட்டாள் தாய்.
“பின்னே? யார்தான் கொன்றிருப்பார்கள்? எல்லாம் உன் சகாக்களோடு” என்று தீர்மானமாகச் சொன்னாள் மரியா: ”அவன் உங்களை வேவு பார்த்துத் திரிந்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே…”
தாய் திடுக்கிட்டு நின்றாள். அவள் தொண்டை அடைத்தது. தன் நெஞ்சை ஒரு கையினால் அழுத்திப் பிடித்துக்கொண்டாள்.
“அதனால் என்ன? வீணாகப் பயப்படாதே. அவனுக்கு இந்தக் கதி கிடைத்தது ரொம்ப சரி. சீக்கிரம் வா. இல்லையென்றால் அவர்கள் உடலை அப்புறப்படுத்திவிடுவார்கள்” என்றாள் மரியா.
நிகலாய் வெஸோவ்ஷிகோவைப் பற்றிய சந்தேகம் தாயினது கால்களை பின்னுக்கு இழுத்து நிறுத்துவதுபோல் தோன்றியது.
“அவன்தான். அவன் இவ்வளவு தூரத்துக்குப் போய்விட்டானா?” என்று தனக்குள் நினைத்துக்கொண்டாள் தாய்.
தொழிற்சாலை மதில் சுவர்களுக்குப் பக்கத்தில் சமீபத்தில்தான் எரிந்து சாம்பலாய்ப் போய் மூளியாய் நின்ற ஒரு வீட்டுக்குப் பக்கத்தில், ஒரே கூட்டமாக ஜனங்கள் நின்று கொண்டிருந்தார்கள். தேனீக்களைப் போல இரைந்து கொண்டும், எரிந்து கருகிப்போன மரக்கட்டைகளின் மீது ஏறி நடந்து கொண்டும், சாம்பல் குவியலைக் கிளறிக்கொண்டும் ஜனங்கள் மொய்த்தனர். அங்கு எத்தனையோ பெண்களும், குழந்தைகளும், கடைக்காரர்களும், சாரயக்கடைப் பையன்களும், போலீஸ்காரர்களும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களோடு மார்பகம் நிறைய மெடல்களும், அடர்ந்து சுருண்ட வெள்ளி நிறத் தாடியும் கொண்ட உயரமான கிழவன் மூமூ அரசியல் போலீஸ்காரன் ஒருவனும் நின்றுகொண்டிருந்தான்.
பாதியுடம்பு தரையில் கிடந்தவாறும் பாதியுடம்பு உட்கார்ந்த பாவனையிலும் இஸாய் கிடந்தான். அவனது முதுகு ஒரு கருகிப்போன கட்டையின் மீது சாய்ந்திருந்தது. தலை வலது தோளின் மீது சாய்ந்து சரிந்து கிடந்தது. வலது கை, கால்சராய்ப் பைக்குள் புகுத்தப்பட்டவாறு இருந்தது. இடது கரத்தின் விரல்கள் மண்ணையள்ளி இறுகப் பிடித்திருந்தன.
தேனீக்களைப் போல இரைந்து கொண்டும், எரிந்து கருகிப்போன மரக்கட்டைகளின் மீது ஏறி நடந்து கொண்டும், சாம்பல் குவியலைக் கிளறிக்கொண்டும் ஜனங்கள் மொய்த்தனர்.
தாய் அவனது முகத்தைப் பார்த்தாள். நீண்டு பரந்து கிடக்கும் அவனது கால்களுக்கிடையே கிடக்கும் தொப்பியை வெறித்துப் பார்ப்பதுபோல் அவனது ஒரு கண் பிதுங்கி நின்றது. வாய் ஏதோ வியப்புற்றது போல் பாதி திறந்து தொங்கியது. அவனது சிவந்த தாடி ஒருபுறமாக சாய்ந்து ஒட்டி நின்றது. மெலிந்த உடம்பும் குறுகிய தலையும் புள்ளி விழுந்த ஒட்டிய முகமும் மரணத்தினால் மேலும் குறுகிச் சிறுத்துவிட்டது போலத் தோன்றின. தாய் தனக்கு நேராகக் கையால் சிலுவை கீறிவிட்டுப் பெருமூச்செறிந்தான். உயிரோடிருந்த காலத்தில் அவனைக் கண்டாலே அவளுக்கு வெறுப்புத்தான் தோன்றும். இப்போதோ அவனுக்காக ஒருவித அனுதாப உணர்ச்சி அவள் உள்ளத்தில் தோன்றியது.
“காட்டிக் கொடுக்கிற பயலுக்குப் பாடம் கற்றுக் கொடுத்தாகிவிட்டது” என்று யாரோ ஒருவன் வக்கிரமாகச் சொல்லிக்கொண்டான்.
அந்த அரசியல் போலீஸ்காரன் பெண்கள் கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னே சென்றான்.
“யாரது? யார் இப்படிச் சொன்னது?” என்று அவன் பயங்கரமாகக் கேட்டான்.
அவனது முன்னிலையில் ஜனங்கள் பயந்து கலைந்து சென்றார்கள். சிலர் ஓடியே போய்விட்டார்கள். யாரோ ஒருவன் வர்மத்தோடு சிரித்துக்கொண்டான்.
தாய் வீட்டிற்குத் திரும்பினாள்.
“அவனுக்காக யாருமே வருத்தப்படவில்லை” என்று தனக்குள் நினைத்துக்கொண்டாள் அவள்.
அவளது கண்களுக்கு முன்னால், நிகலாயின் தடித்த உருவம் தோன்றுவது போலிருந்தது. அவன் தனது ஈரமும் இரக்கமுமற்ற குறுகிய கண்களால் அவளை வெறித்து நோக்குவது போலவும் ஏதோ அடிபட்டுவிட்டதுபோல் வலது கையை நொண்டி நொண்டி வீசி வருவதுபோலவும் அவளுக்குப் பிரமை தட்டியது.
அந்திரேயும் பாலெலும் வந்தவுடனே, அவள் அவர்களிடம் அந்த விஷயத்தைப் பற்றி அவசர அவசரமாக விசாரித்தாள்.
“இஷாயைக் கொன்றதற்காக யாரையாவது கைது செய்திருக்கிறார்களா?”
“இதுவரை ஒன்றும் கோள்விப்படவில்லை” என்றான் ஹஹோல்.
அவர்கள் இருவரும் மிகவும் மனம் கசந்து போயிருக்கிறார்கள் என்பதை அவள் அறிந்துகொண்டாள்.
“யாராவது நிகலாயின் பேரை வெளியிட்டார்களா?” என்று மெதுவாகக் கேட்டாள் தாய்.
“இல்லை” என்றான் மகன். அவனது கண்கள் நிலைகுத்தி நின்றன. அவனது குரலில் தெளிவு இருந்தது. “அவர்கள் அவனை சந்தேகிப்பதாய்த் தெரியவில்லை. அவன் இங்கு இல்லை. நேற்று மத்தியானம் அவன் ஆற்றுக்குப் போனான். போனவன் இன்னும் திரும்பவில்லை. நான் அவனைப்பற்றி விசாரித்தேன்……”
“எல்லாம் கடவுள் அருள், அவன் அருள்” என்று நிம்மதி நிறைந்து பெருமூச்செறிந்தாள் தாய்.
ஹஹோல் அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டுத் தலையைக் கவிழ்ந்துகொண்டான்.
“அங்கே அவன் கிடக்கிறான். என்ன நடந்துவிட்டது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் வியந்து விழிப்பது போலக் கிடக்கிறான்” என்று லேசாகப் பேசத் தொடங்கினாள் தாய்: “அவனுக்காக யாருமே வருத்தப்படக் காணோம். யாருமே ஒரு நல்ல வார்த்தை சொல்லக் காணோம். அவன் அவ்வளவு சிறுமைப்பட்டுக் கவனிப்பாரற்றுக் கிடக்கிறான். என்னவோ ஒரு உடைந்து விழுந்த உதவாக்கரைச் சாமானைப்போல் நாதியற்றுக் கிடக்கிறான்.”
சாப்பாட்டு வேளையின்போது, பாவெல் திடீரெனத் தன் கையிலிருந்த கரண்டியை விட்டெறிந்துவிட்டுக் கத்தத் தொடங்கினான்.
“இது எனக்குப் புரியவே மாட்டேனென்கிறது!”
“எது?” என்று கேட்டான் ஹஹோல்.
ஒரு மனிதன் தன்னுடைய சகமனிதர்கள் மீது காட்டு மிருகத்தைப்போல் பாய்ந்து கடித்துத் தின்ன முனைந்தால், அவனை நான் மிருகத்தைக் கொல்வதைப்போல் கொன்று தீர்க்கத்தான் செய்வேன்.
”நாம் உணவுக்காகக் கால்நடைகளைக் கொல்கிறோம். அதுவே மோசம். காட்டு மிருகங்களால் ஆபத்து வருமென்று தெரிந்தால் அவற்றையும் நாம் கொன்று தீர்க்கிறோம். அது சரிதான். அது எனக்கும் புரிகிறது. ஒரு மனிதன் தன்னுடைய சகமனிதர்கள் மீது காட்டு மிருகத்தைப்போல் பாய்ந்து கடித்துத் தின்ன முனைந்தால், அவனை நான் மிருகத்தைக் கொல்வதைப்போல் கொன்று தீர்க்கத்தான் செய்வேன். ஆனால் இவனை மாதிரி அனுதாபத்துக்குரிய ஒரு ஜந்துவைத் தீர்த்துக் கட்டுவதென்றால்? இவனை எப்படித்தான் ஒருவன் தாக்க நினைப்பான்?
ஹஹோல் தன் தோள்களைக் குலுக்கிக்கொண்டான்.
“இவனும் ஒரு காட்டு மிருகத்தைப்போல மோசமானவன்தான்” என்றான் ஹஹோல், “நாம் கொசுவை எதற்காகக் கொல்கிறோம்? நம்முடைய உடம்பிலிருந்து அது ஒரு துளி ரத்தத்தை உறிஞ்சிவிட்டது என்பதற்குத்தானே?”
”அது உண்மைதான். நான் அதைச் சொல்லவில்லை. அது எவ்வளவு அருவருப்புத் தரும் விஷயம் என்பதைத்தான் குறிப்பிட்டேன்.”
“வேறு வழியில்லை” என்று அந்திரேய் மீண்டும் தன் தோளைக் குலுக்கிவிட்டுச் சொன்னான்.
“அந்த மாதிரி ஜந்துவை நீ கொல்லுவாயா?” என்று சிறிது நேரம் கழித்துக் கேட்டான் பாவெல்.
ஹஹோல் தனது அகன்ற கண்களால் பாவெலையே வெறித்துப் பார்த்தான். பிறகு தாயின் பக்கம் திடீரெனத் தன் பார்வையைத் திருப்பினான்.
”நம்முடைய கொள்கையின் நலத்துக்காகவும், என்னுடைய தோழர்களின் நலத்துக்காகவும் நான் எதையுமே செய்வேன்” என்று துக்கமும் உறுதியும் தோய்ந்த குரலில் சொன்னான் அந்திரேய்; “அதற்காக, நான் என் சொந்த மகனைக் கூடக் கொல்லுவேன்!”
”ஆ! அந்திரியூஷா!” என்று திகைத்துப்போய் வாய்க்குள் முணுமுணுத்தாள் தாய்.
“வேறு வழியில்லை, அம்மா” என்று கூறி அவன் புன்னகை புரிந்தான். ”நமது வாழ்க்கை அப்படிப்பட்டது.”
“நீ சொல்வது சரி. வாழ்க்கை அப்படிப்பட்டதுதான்!” என்றான் பாவெல்.
இதயத்துக்குள்ளே ஏதோ ஒன்று தட்டியெழுப்பிய மாதிரி திடீரென உத்வேக ஆவேசத்தோடு துள்ளியெழுந்தான் ஹஹோல்.
“அதற்கு நாமென்ன செய்ய முடியும்?” என்று கைகளை ஆட்டிக்கொண்டே சத்தமிட்டான் ஹஹோல். “மக்கள் இனத்தை நாம் அனைவரும் மனப்பூர்வமாக ஒருவருக்கொருவர் நேசிக்கப்போகும் காலத்தைத் துரிதப்படுத்துவதற்காக, நாம் சிலரைப் பகைத்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. நம்முடைய முன்னேற்றப் பாதையில் முட்டுக்கட்டை போடுபவர்களை நாம் துடைத்துத் தீர்த்துவிடத்தான் வேண்டும். தனக்குச் சுகவாழ்வும் பெயரும் கிட்ட வேண்டும் என்பதற்காக. எவனொருவன் பணத்தை வாங்கிக்கொண்டு மக்களை விலைக்குக் காட்டிக் கொடுக்கிறானோ, அவனை நாம் அழித்துத்தான் தீரவேண்டும். நேர்மையான மனிதர்களின் மார்க்கத்தை எவனாவது ஒரு யூதாஸ்* வழிமறித்தால், அவர்களைக் காட்டிக்கொடுப்பதாகச் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தால், அவனை ஒழித்துக் கட்டத்தான் நான் முனைவேன்! அவனை ஒழித்துக்கட்டாவிட்டால், நானும் ஒரு யூதாஸ் மாதிரியே ஆகிவிடுவேன்! அப்படிச் செய்ய எனக்கு உரிமை கிடையாது என்கிறாயா?
ஆனால் நம்மை அடக்கியாள்கிறார்களே, நமது முதலாளிகள், – அவர்களுக்கு மட்டும் உரிமை இருக்கிறதா? படைபலத்தையும் கொலையாளிகளையும் வைத்திருக்க, சிறைக் கூடங்களையும் விபசார விடுதிகளையும் நாடு கடத்தும் இடங்களையும் வைத்திருக்க, தங்களது சுகபோகத்தையும் பாதுகாப்பையும் அரணிட்டுப் பாதுகாக்கும் சகலவிதமான கொலைச் சாதனங்களையும் வைத்துக்கொண்டிருக்க, அவர்களுக்கு மட்டும் என்ன உரிமை இருக்கிறது? சில சமயங்களில் அவர்களது ஆயுதத்தையே பிரயோகிக்க வேண்டிய நிர்ப்பந்தச் சங்கடத்துக்கு நான் ஆளானேன் என்றால் அது என்னுடைய தவறா? என்னுடைய குற்றமா? இல்லை. நானும் அதை உபயோகிப்பேன். அவர்கள் நம்மை நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தால் நானும் சும்மாயிருக்கமாட்டேன். நானும் என் கையை ஓங்குவேன். அந்த உரிமை எனக்கு உண்டு….. அவர்களில் ஒருவரையேனும் நான் ஒரே போடாய்ப் போட்டுக் கொல்லுவேன். எனக்குப் பக்கத்தில் வரும் பகைவனின் தலையை நான் நொறுக்கத்தான் செய்வேன். மற்றவர்களைவிட, எனது வாழ்க்கை லட்சியத்துக்கு அதிகமான தீங்கிழைக்க முனையும் அந்தப் பகைவனை நான் அறையத்தான் செய்வேன். வாழ்க்கை அப்படி அமைந்து கிடக்கிறது.
மக்கள் இனத்தை நாம் அனைவரும் மனப்பூர்வமாக ஒருவருக்கொருவர் நேசிக்கப்போகும் காலத்தைத் துரிதப்படுத்துவதற்காக, நாம் சிலரைப் பகைத்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. நம்முடைய முன்னேற்றப் பாதையில் முட்டுக்கட்டை போடுபவர்களை நாம் துடைத்துத் தீர்த்துவிடத்தான் வேண்டும்.
ஆனால் அந்த மாதிரி வாழ்க்கையை நான் விரோதிக்கத்தான் செய்கிறேன்; அந்த மாதிரி இருப்பதற்கு நான் விரும்பவும்தான் இல்லை. அவர்களது ரத்தத்தால் எந்தவிதப் பயனும் விளைந்துவிடப் போவதில்லை. அது வெறும் விருதா ரத்தம். விளைவற்ற ரத்தம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நமது ரத்தம் மட்டும் பூமியில் மழை மாதிரி பொழிந்து கொட்டுமேயானால், நாம் சிந்திய ரத்தத்திலிருந்து உண்மை பிறக்கும்; சத்தியம் அவதாரம் செய்யும்! ஆனால் அவர்களது நாற்றம்பிடித்த ரத்தமோ எந்தவித மச்ச அடையாள மறுக்கள் ஏதுமின்றி மண்ணோடு மண்ணாய் மறைந்து மக்கிப்போய்விடும்! எனக்கு அது தெரியும். இருந்தாலும் இந்தப் பாபத்தை நான் என் தலையில் ஏற்றுக்கொள்கிறேன். கொலை செய்துதான் ஆக வேண்டுமென்றிருந்தால், நான் கொல்லத்தான் செய்வேன். ஞாபகம் இருக்கட்டும்! நான் எனக்காகத்தான் பேசிக்கொள்கிறேன். எனது பாபம் என்னுடனேயே சாகும். அந்தப் பாபம் எதிர்காலத்தில் கறைபடியச் செய்யாமல் தொலையும்! அந்தப் பாபம் என்னைத் தவிர, வேறு எவரையும், வேறு எந்த ஆத்மாவையும் கறைப்படுத்தாது மறைந்து மாயும்!”
அவன் அறைக்குள்ளே கீழும் மேலும் உலவினான். எதையோ வெட்டித் தள்ளுவது மாதிரி – தன் இதயத்திலிருந்து எதையோ வெட்டித் தள்ளுவது மாதிரி – கைகளை வீசிக்கொண்டான். தாய் அவனைப் பீதியும் துக்கமும் கலந்த மனத்தோடு பார்த்தாள். அவனது இதயத்துக்குள்ளே ஏதோ ஒரு பலத்த காயம் ஏற்பட்டு, அவனை வேதனைப்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதை மட்டும் அவள் உணர்ந்தாள். அந்தக் கொலையைப் பற்றிய இருண்ட பயங்கர ஆபத்தான எண்ணங்கள் அவளை விட்டுப் பிரிந்தன. நிகலாய் வெஸோவ் ஷிகோவ் அந்தக் குற்றத்தைச் செய்திராவிட்டால், பாவெலின் நண்பர்களில் மற்றவர் எவருமே அதைச் செய்யக்கூடியவர்கள் அல்ல. பாவெல் தன் தலையைத் தொங்கப்போட்டவாறு ஹஹோலின் பலம் பொருந்திய அழுத்தம் வாய்ந்த பேச்சைக் கேட்டவாறு இருந்தான்.
“தங்கு தடையற்று நீ முன்னேறிச் செல்ல வேண்டுமானால், சமயங்களில் நீ உன் விருப்பத்துக்கு மாறான காரியங்களைக்கூடச் செய்யவேண்டும். அதற்காக நீ சகலத்தையும், உன் பரிபூரண இதயத்தையும் விட்டுக்கொடுக்கத் தயாராயிருக்க வேண்டும். கொள்கைக்காக நீ உன் உயிரை இழப்பது மிகவும் லேசான காரியம். அதைவிட மகத்தானவற்றை, உன்னுடைய சொந்த வாழ்வில் உனக்கு மிகவும் அருமையும் விருப்பமும் நிறைந்தவற்றைக்கூட நீ தியாகம் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட மகத்தான தியாகத்தினால்தான், நீ எந்த ஒரு சத்தியத்துக்காகப் போராடுகிறாயோ அந்தச் சத்தியம் எப்படி ஒரு மகாசக்தியாக வளர்ந்தோங்கிப் பெருகுகிறது என்பதை உன்னால் பார்க்க முடியும். அந்தச் சத்தியம்தான் இந்த உலகத்தில் உனக்கு மிகவும் அருமை வாய்ந்த அரிய பொருளாக இருக்கும்!”
அவன் அறையின் மத்தியில் சட்டென நின்றான். முகமெல்லாம் வெளுத்துப்போய், கண்களைப் பாதி மூடியவாறு கையை உயர்த்தி அமைதி நிறைந்த உறுதியோடு மேலும் பேசத் தொடங்கினான்.
“மக்கள் தங்கள் அழகைத் தாமே பார்த்து வியக்கின்ற காலம். மற்றவர்களுக்கெல்லாம் தாம் தனித்தனித் தாரகைகளைப்போல் ஒளி வீசப்போகும் காலம் வரத்தான் போகிறது என்பது எனக்குத் தெரியும். அந்தப் புண்ணிய காலத்தில் உலகத்தில் சுதந்திர மனிதர்கள் நிறைந்திருப்பார்கள்; அந்த மனிதர்கள் தமது சுதந்திரத்தால் பெருமை அடைவார்கள். சகல மக்களின் இதயங்களும் திறந்த வெள்ளை இதயங்களாக இருக்கும். அந்த இதயங்களில் பொறாமை இருக்காது; பகைமையைப் பற்றிய அறிவு கூட இருக்காது. அப்போது வாழ்க்கை என்பது மனித குலத்துக்காக மகத்தான சேவையாக மாறிவிடும்; மனிதனது உருவம் மகோன்னதச் சிகரத்தில், வானத்தை முட்டும் கொடுமுடிவரையில் உயர்ந்து சென்று கொலு அமரும். ஏனெனில் சுதந்திர புருஷர்களுக்கு எந்தச் சிகரமும் எந்த உயரமும் எட்டாத தூரமல்ல; தொலைவல்ல. அப்போது, மக்கள் அனைவரும் அழகின் பொருட்டு சத்தியத்தோடு, சுதந்திரத்தோடு வாழ்வார்கள். உலகத்தைத் தங்களது இதயங்களால் பரிபூரணமாக அதிகப்படியாகத் தழுவி, அதனை முழுமனத்தோடு காதலிப்பவர்களே அந்த மனிதர்களில் மகோன்னதப் புருஷர்களாக விளங்குவார்கள்; எவர் மிகுந்த சுதந்திரமாக வாழ்கிறாரோ அவரிடமே மகோன்னதமான அழகு குடி வாழ்கிறது. அவர்களே அந்தப் புத்துயிரின் புண்ணிய புருஷர்கள்; மகாபுருஷர்கள்!”
அவன் ஒரு நிமிஷ நேரம் மெளனமாயிருந்தான். பிறகு மீண்டும் நிமிர்ந்து நின்றுகொண்டு, தனது ஆத்மாவின் அடித்தளத்திலிருந்து எழும் குரலோடு பேசத் தொடங்கினான்.
“அந்தப் பெரு வாழ்வுக்காக – நான் எதையும் செய்யச் சித்தமாயிருக்கிறேன்………”
அவனது முகம் சிலிர்த்து நடுங்கியது, பெரிது பெரிதான கண்ணீர்த் துளிகள் கன்னங்களில் வழிந்தோடியது.
பாவெலின் முகம் வெளுத்தது. அவன் தலையை நிமிர்த்தி, தனது அகன்ற கண்களால் அவனைப் பார்த்தான். ஏதோ ஒரு இருண்ட பீதி தன் மனத்தில் திடீரெனக் கவிந்து பெருகுவது மாதிரி உணர்ந்த தாய் திடுக்கிட்டு நாற்காலியை விட்டுத் துள்ளியெழுந்தாள்.
“இதென்ன, அந்திரேய்?” என்று மெதுவாகக் கேட்டான் பாவெல்.
ஹஹோல் தன் தலையை மட்டும் குலுக்கியசைத்துவிட்டு, உடம்பை விறைப்பாக நிமிர்த்தி நின்றவாறு தாயை ஏறிட்டுப் பார்த்தான். ”ஆமாம், என் கண்ணால் பார்த்தேன். நானறிவேன்.”
அவள் ஓடோடிப் போய் அவனது கைகளை இறுகப் பற்றினாள். அவன் தனது வலது கையை விடுவிக்க முயன்றான். ஆனால், அவளோ அவனது கைகளை இறுகப் பிடித்தவாறு இரகசியமாகச் சொன்னாள்:
”உஷ்! ஐயோ, என் கண்ணே! என் அருமை மகனே…”
“ஒரு நிமிஷம் பொறுங்கள். அது எப்படி நடந்தது என்று நான் சொல்கிறேன்” என்று கரகரத்துச் சொன்னான் ஹஹோல்.
“இல்லை, வேண்டாம். வேண்டவே வேண்டாம். அந்தியூஷா” என்று அவள் தனது நீர் நிறைந்த கண்களோடு அவனைப் பார்த்து முணுமுணுத்தாள்.
பாவெல் மெதுவாக நெருங்கி வந்தான். அவனது கண்களிலும் ஈரம் கசிந்திருந்தது. அவனது முகம் வெளுத்திருந்தது. அவன் லேசாகச் சிரித்துக்கொண்டே சொன்னான்.
“நீதானோ என்று அம்மா பயந்துவிட்டாள்!”
”நானா – நானா பயந்தேன்? நான் அதை நம்பவே மாட்டேன். என் கண்ணாலே பார்த்தால் கூட நான் நம்பமாட்டேன்!”
“பொறுங்கள்” என்று தன் தலையை உலுப்பிக் கொண்டும் கைகளை விடுவிக்க முயன்று கொண்டும் சொன்னான் ஹஹோல்.
“அது நான் இல்லை. ஆனால் நான் அதைத் தடுத்திருக்க முடியும் …….”
”அந்திரேய் வாயை மூடு” என்றான் பாவெல்.
அவன் தன் நண்பனது கையை ஒரு கையால் பற்றிப் பிடித்தான், மறுகையை ஹஹோலின் தோளின்மீது போட்டு, நடுநடுங்கும் அவனது நெடிய உருவத்தை தடவிக்கொடுத்தான். அந்திரேய் பாவெலின் பக்கம் திரும்பி உடைந்து கரகரக்கும் குரலில் பேசினான்.
தனக்குச் சுகவாழ்வும் பெயரும் கிட்ட வேண்டும் என்பதற்காக. எவனொருவன் பணத்தை வாங்கிக்கொண்டு மக்களை விலைக்குக் காட்டிக் கொடுக்கிறானோ, அவனை நாம் அழித்துத்தான் தீரவேண்டும்.
“பாவெல், அப்படி நடக்கவேண்டும் என்று நான் விரும்பியிருக்க மாட்டேன் என்பது உனக்குத் தெரியும், நடந்தது இதுதான். நீ போன பிறகு நான் திராகுனவுடன் அந்த மூலையில் நின்றுகொண்டிருந்தேன். அப்போது இஸாய் வந்தான். எங்களைக் கண்டதும் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்று கொண்டு எங்களை ஓரக்கண் போட்டுச் சிரித்தான். ‘அவனைப் பார். அவன் இரலெல்லாம் என் பின்னாலேயே சுற்றித் திரிகிறான். ‘அவனை நான் அடிக்காமல் விடப்போவதில்லை’ என்றான் திராகுனவ். பிறகு அவன் போய்விட்டான். வீட்டுக்குத்தான் போகிறான் என்று நான் நினைத்தேன். பிறகு இஸாய் என்னிடம் வந்தான் ……..”
“அந்த நாயைப் போல், அவனைப்போல் என்னை இதுவரை எவனுமே அவமானப்படுத்தியதில்லை.”
தாய் பேசாது மேஜைப் பக்கமாக வந்து அவனை உட்கார வைத்தாள். அவனருகிலே வந்து அவனது தோளோடு தோள் உரசி ஒட்டிக்கொண்டிருக்க அவளும் உட்கார்ந்து கொண்டாள். பாவெல் வெறுமனே நின்றவாறு, தன் தாடியை உவகையற்று இழுத்து உருவிவிட்டுக்கொண்டிருந்தான்.
“அவர்களுக்கு நம் அனைவரது பெயர்களும் தெரியுமென்றும், போலீஸ் பட்டியலில் நம்முடைய பெயர்களெல்லாம் இருக்கின்றன வென்றும், மே தினக் கொண்டாட்டத்திற்கு முன்னால் நம்மையெல்லாம் அவர்கள் உள்ளே தள்ளப் போவதாகவும் அவன் என்னிடம் சொன்னான். நான் பதில் பேசவில்லை. வெறுமனே அவனைப் பார்த்துச் சிரித்தேன். ஆனால் என் உள்ளமோ உள்ளூரக் கொதித்துக் கொண்டிருந்தது. நான் ஒரு புத்திசாலிப் பையன் என்றும், இந்த மாதிரி வழியில் செல்வது தவறு என்றும், எனக்கு அவன் போதிக்க ஆரம்பித்துவிட்டான். மேலும் நான் இந்த வழியைக் கைவிட்டு விட்டு ……..”
அவன் பேச்சை நிறுத்திவிட்டு, இடது கையால் முகத்தைத் துடைத்துக்கொண்டான். அவனது கண்களில் ஏதோ ஒரு வறண்ட பிரகாசம் பளிச்சிட்டது.
“எனக்குப் புரிகிறது” என்றான் பாவெல்.
“இதைக் கைவிட்டு விட்டு, நான் சட்ட உத்தியோகம் பார்ப்பது நல்லது என்று சொன்னான் அவன்!” என்றான் ஹஹோல்.
ஹஹோல் தன் முஷ்டியை ஓங்கி ஆட்டினான்.
”சட்டம் நாசமாய்ப் போக!” அவன் பற்களை இறுகக் கடித்தவாறே பேசினான். “அவன் என் முகத்தில் அறைந்திருந்தால் கூட, எனக்கு – ஒருவேளை அவனுக்கும் – எளிதாக இருந்திருக்கும். ஆனால் அந்தப் பயலோ என் இதயத்தில் அவனது நாற்றம் பிடித்த எச்சிலைக் காறித் துப்பிவிட்டான். அந்த வேதனையை என்னால் தாங்க முடியவில்லை.”
அந்திரேய் பாவெலிடமிருந்து தன் கையை வெடுக்கென்று பிடுங்கினான், அதன் பின் கசப்பும் கரகரப்பும் நிறைந்த குரலில் பேசத் தொடங்கினான்:
”நான் அவனது முகத்தில் ஓங்கியறைந்துவிட்டு, விலகிப் போனேன். அப்போது எனக்குப் பின்னால், “மாட்டிக் கொண்டாயா?” என்று திராகுனவ் மெதுவாகச் சொல்லியது எனக்குக் கேட்டது. அவன் அந்த மூலையிலேயே காத்துக்கொண்டிருந்தான் போலும்…”
சிறிது நேரம் கழித்து, ஹஹோல் மீண்டும் தொடர்ந்து பேசினான். ”நான் திரும்பியே பார்க்கவில்லை. என் மனதில் மட்டும் என்னமோ ஒரு உணர்ச்சி அடி விழுந்த சத்தத்தை மட்டும் நான் கேட்டேன். இருந்தாலும் ஏதோ ஒரு தவளையை மிதித்துவிட்ட மாதிரி அருவருப்போடு நான் என் வழியே நடந்தேன். வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது, திடீரென்று ஜனங்கள் சத்தம் போட்டுக்கொண்டு வந்தார்கள்.
‘இலாயைக் கொன்றுவிட்டார்கள்’ என்று சத்தம் கேட்டது. என்னால் அதை நம்ப முடியவில்லை. எனது கையில் வலியெடுத்தது, என்னால் வேலையைப் பார்க்க முடியவில்லை. எனக்கு உண்மையில் வலி இருந்ததா என்பது தெரியாது. இருந்தாலும், என் கை மரத்துத் திமிர்பிடித்துப் போயிற்று…”
அவன் தன் கையை வெறித்துப் பார்த்துக்கொண்டான்.
“என் கையில் படிந்துவிட்ட இந்தக் கறையை என் வாழ்நாள் முழுவதுமே என்னால் கழுவிவிட முடியாது.”
“ஆனால் உன் இதயம் பரிசுத்தமாய் இருக்கிறதே!” என்று மிருதுவாகச் சொன்னாள் தாய்.
“நான் அதற்காக என்மீது குறை கூறிக்கொள்ளவில்லை. இல்லவே இல்லை” என்று உறுதியாகச் சொன்னான் ஹஹோல்.
“இந்தச் சம்பவம் அருவருக்கத்தக்க சம்பவம். இந்த வேண்டாத விவகாரத்தில் நான் சம்பந்தப்பட்டிருக்க வேண்டாம்.”
“நீ சொல்வது எனக்குப் புரியவில்லை” என்று தோளை உலுப்பியவாறு சொன்னான் பாவெல், “நீ அவனைக் கொல்லவில்லை. அப்படியே செய்திருந்தாலும்……”
”கேளு. தம்பி! ஒரு கொலை நடந்து கொண்டிருப்பது தெரிந்தும், அதைத் தடுப்பதற்கு எதுவும் செய்யாமல் சும்மாயிருப்பதென்றால்…..”
”எனக்குப் புரியவேயில்லை” என்று பாவெல் அழுத்திக் கூறினான். பின் சிறிது யோசனைக்குப் பின்பு, ”அதாவது புரிகிறது. ஆனால் வருந்துவதற்கு ஒன்றும் இல்லை.”
“நான் குளிக்கிற இடத்துக்குப் போகப்போகிறேன்” என்றான் அந்திரேய். அவன் லேசாகச் சிரித்தான். பிறகு தன் துணிமணிகளைச் சேகரித்துக் கொண்டு, உற்சாகமேயற்று வீட்டைவிட்டு வெளியில் சென்றான்.
தாய் அன்பு ததும்பும் கண்களோடு அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
”நீ என்ன வேண்டுமானாலும் சொல்லு, பாவெல்” என்று பேசத் தொடங்கினாள் தாய். “ஒரு மனிதனைக் கொலை செய்வது மகா பாபம் என்று எனக்குத் தெரியத்தான் செய்கிறது. என்றாலும் நான் யாரையுமே குற்றஞ்சாட்ட மாட்டேன். நான் இஸாயிக்காக அனுதாபப்படுகிறேன். அவன் ஒரு குள்ளப்பிறவி. அவனை இன்று பார்த்தபொழுது, அவன் என்னைப் பார்த்துச் சொன்ன விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. உன்னைத் தூக்கில் போடப் போவதாக அவன் என்னைப் பயமுறுத்தினான். ஆனால், அவன் இப்போது செத்துப்போய் விட்டான். அவன் மறைந்து போனான் என்பதற்காக சந்தோஷப்படவோ, அவன் சொன்ன சொல்லுக்காக அவனைப் பகைப்பதற்கோ என்னால் முடியாது. அப்போது நான் அவன் மீது அனுதாபம் கொண்டேன். இப்போது அந்த அனுதாபம் கூட இல்லை …….”
அவன் மீண்டும் மௌனமாகிச் சிந்தனையில் ஆழ்ந்தான். பிறகு வியப்பு நிறைந்த புன்னகையோடு மேலும் பேசினான்:
”அட கடவுளே பாஷாக்கண்ணு! நான் சொல்வதையெல்லாம் கேட்கிறாயா?”
உண்மையில் அவள் பேச்சை அவன் கேட்கவில்லை. எனவே அவன் முகத்தைச் சுழித்துக்கொண்டே பதில் சொன்னான். தரையைப் பார்த்தவாறே நடந்து கொண்டிருந்த பாவெல் பின்வருமாறு சொன்னான்:
”இதுதானம்மா வாழ்க்கை! ஜனங்கள் ஒருவருக்கொருவர் எப்படி புதிருமாய் நிற்கிறார்கள் என்பதைப் பார்த்தாயா? நீ உன் விருப்பத்துக்கு விரோதமாக ஒருவனை அடித்து வீழ்த்திவிடுகிறாய். ஆனால் தாக்கப்படுவது யார்? உனக்கு இருக்கும் உரிமைகளைவிட எந்த அளவிலும் அதிக உரிமையற்ற ஓர் அப்பாவிப் பிராணியையா தாக்குவது? இந்தச் சந்தர்ப்பத்தில் அவன் உன்னைவிட அதிருஷ்டக் குறைவான பிறவி; காரணம் – அவன் ஒரு முட்டாள். போலீஸ், அரசியல் போலீஸ், ஒற்றர்கள் எல்லோரும் நமது எதிரிகள். ஆனால், அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே. நம்மைப்போலவே, ரத்தம் உறிஞ்சப்படும் வர்க்கம்தானே. அவர்களையும் மனிதர்களாகக் கருதுவதில்லை. உலகம் அப்படியிருக்கிறது. ஒரே மாதிரி இருக்கிறது! ஆனால் அந்த முதலாளிகளோ ஜனங்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை மூட்டிவிடுகிறார்கள். பயத்தினாலும், அறிவின்மையாலும் ஜனங்களின் கண்களைக் குருடாக்கி, கையையும் காலையும் தளையிட்டுக் கட்டி, மக்களைக் கசக்கிப் பிழிந்து ரத்தத்தை உறிஞ்சித் தீர்க்கிறார்கள். மக்களை ஒருவருக்கொருவர் உதைக்கவும், நசுக்கவும் தூண்டிவிடுகிறார்கள்; அவர்கள் மக்களைத் துப்பாக்கிகளாகவும், குண்டாந்தடிகளாகவும், கற்களாகவும் உருமாற்றி, ‘பார்! இது தானடா அரசு என்று கூறுகிறார்கள்.”
அவன் தன் தாயருகே சென்றான். பிறகு பேசினான்.
“அது மகா பாவம், அம்மா! லட்சோப லட்சம் மக்களைக் கொன்று குவிக்கும் பஞ்சமாபாதகப் படுகொலை! மனித இதயங்களைக் கொன்று தள்ளும் கோரக் கொலை …… நான் சொல்வது புரிகிறதா, அம்மா? அவர்கள், இதயங்களைக் கொல்லும் ஈவிரக்கமற்ற கொலைகாரர்கள்! அவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறதா? நாம் ஒருவனைத் தாக்கினால், அதை எண்ணி வருந்துகிறோம், வெட்கப்படுகிறோம்; நாம் அனைவருமே அப்படிப்பட்ட செயலை அருவருத்து வெறுத்துத் தள்ளுகிறோம். ஆனால் அவர்களோ ஆயிரக்கணக்கான மக்களை அமைதியாக, ஈவிரக்கமற்று, ஈர நெஞ்சமற்று, வேதனையற்று – சொல்லப் போனால் பரிபூரணமான இதய திருப்தியோடு – கொன்று தள்ளுகிறார்கள்! அவர்கள் ஜனங்களைக் கசக்கிப் பிழிந்து உயிரைப் பருகுவதற்குரிய ஒரே காரணம் என்ன தெரியுமா? தங்களது தங்கத்தையும், வெள்ளியையும், சொத்து சுகங்களையும் பாதுகாப்பதற்காக. நம் மீது அவர்கள் செலுத்தும் அதிகாரத்தை ஆட்சியை நிலைக்கவைக்கும் சகல சட்டதிட்டங்களையும் பாதுகாத்துப் போற்றி வளர்ப்பதற்காகவேதான். அம்மா, நீ இதைக் கொஞ்சம் யோசித்துப்பார். மக்கள் குலத்தைக் கொன்று குவிப்பதும், மக்கள் குலத்தின் இதயங்களைச் சின்னாபின்னப்படுத்துவதுமான காரியத்தை அவர்கள் எதற்காகச் செய்கிறார்கள்? தங்கள் இனத்தையோ தங்கள் உயிரையோ பாதுகாப்பதற்கான தற்காப்பு முயற்சி அல்ல அது! ஆனால், தங்கள் உடைமைகளைப் பாதுகாப்பதற்காகத்தான் அவர்கள் இப்படிப்பட்ட கோரக் கொலையில் ஈடுபடுகிறார்கள். தங்கள் இதயத்துக்குள்ளே இருப்பதை அவர்கள் பாதுகாக்க விரும்பவில்லை. இதயத்துக்கு வெளியேயுள்ள பொருள்களைத்தான் அவர்கள் காப்பாற்ற எண்ணுகிறார்கள்…”
அவன் அவளது கரங்களை எடுத்து, அவற்றை அழுத்திப்பிடித்தவாறு பேசினான்:
”நீ மட்டும் இந்தச் செய்கையிலுள்ள கசப்பையெல்லாம் உணர்ந்துவிட்டால், இந்தச் செய்கையின் வெட்ககரமான கேவல நிலையை உணர்ந்துவிட்டால், நாங்கள் எந்த சத்தியத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதை லகுவில் புரிந்து கொள்வாய். அந்தச் சத்தியம் எவ்வளவு மகத்தானது, புனிதமானது, அருமையானது என்பதையும் நீ கண்டு கொள்வாய்!”
தாய் உணர்ச்சி வசப்பட்டு எழுந்தாள். தனது இதயத்தையும் தன் மகனது இதயத்தையும் ஒன்றாக்கி ஒரே ஜோதியாக, பிரகாசமான ஏக ஜோதிப் பிழம்பாக ஆக்கிவிட வேண்டும் என்ற ஆசை அவள் மனத்தில் நிறைந்து நின்றது.
”கொஞ்சம் பொறு , பாவெல்” என்று சிரமத்தோடு முனகினாள் அவள், “என்னால் அதை உணர முடியும் …… கொஞ்சம் பொறுத்திரு.”
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இடைவேளை நேரம். எனக்குள் ஒரு பதற்றம் உருவாகியிருந்தது. எந்த தவறும் இழைக்காத, தன் காதலை கூட வெளிப்படுத்தாத, ஒரு பெண்ணால் ‘காதலிக்கப்பட்ட’ குற்றத்துக்காக அடித்து நொறுக்கப்படும் பரியேறும் பெருமாள், முகத்தில் ஒண்ணுக்கு அடித்து அவமானப்படுத்தப்படுகிறான்.
அவமானம் என்ற சொல் அந்த காட்சி ஏற்படுத்திய தாக்கத்தை போதுமான அளவுக்கு விளக்கவில்லை. அது எண்ணிப் பார்க்க முடியாத அமைதியின்மையை, கொந்தளிப்பை உருவாக்கியிருந்தது.
இடைவேளைக்குப் பிறகான படம் தொடங்கியது. தன்னை இழிவு செய்தோரை நாயகன் ஏதாவது செய்வான் என எதிர்பார்த்தேன்; செய்ய வேண்டும் என விரும்பினேன். அப்படி எதுவும் நடக்கவில்லை. அவன் மீது அடுத்தடுத்த அவமானங்கள்; தாக்குதல்கள். கொலை முயற்சி வரை செல்கிறது. அப்போதும் அவன் எதுவும் செய்யவில்லை.
‘ஊர் நண்பர்கள், கல்லூரி வட்டம் எல்லாம் இருக்கிறதே… இவன் ஏன் சகித்துக் கொண்டு போகிறான்?’ என என் மனம் படபடத்தது. ‘இது என்ன யதார்த்தமா? சினிமாதானே… அதிலாவது எதிர்த்து அடித்தால் என்ன?’ என நினைத்தேன். பரியன் அப்போதும் சகித்துக் கொண்டு போனான்.
கல்லூரி வளாகத்துக்குள் அவனுடைய தந்தையின் வேட்டியை உருவி ஓட விடுகின்றனர். பார்ப்போர் எவரையும் சாட்டையால் அடிக்கும் காட்சி இது. இதற்கு முன் தன் சுயமரியாதைக்கு நேர்ந்த அவமானத்தை பொறுத்துக் கொண்ட பரியன், தன் தந்தைக்கு நேர்ந்த இழிவு பொறுக்காது இம்முறை கத்தியை எடுக்கிறான். ‘உன் அப்பாவுக்கு இப்படி நடக்குறது ஒண்ணும் புதுசு இல்லையே’ என அவனுடைய தாய் அமைதிப்படுத்துகிறாள். ‘குடியானவங்களை எதிர்த்துக்கிட்டு ஊருக்குள்ள இருக்க முடியுமா? அனுசரிச்சுப் போப்பா’ என்ற கிராமத்து தலித் அம்மாவின் குரலாய் அது வெளிப்படுகிறது.
இறுதிக் காட்சியில் அவன் மீது நிகழ்த்தப்படும் கொலைமுயற்சியை முறியடிக்கிறான். அவனும் எதிர்த்தரப்பும் இரண்டு தேநீர் குவளைகளுடன் அமர்கிறார்கள். ‘காலம் மாறும்’ என்கிறது எதிர்த்தரப்பு. ‘நீங்க அடக்குற வரைக்கும் எதுவும் மாறாது’ என்கிறான் பரியன். இருவரும் அவரவர் மனநிலையுடன் எதிர்காலத்தை நோக்கி நடந்து செல்கின்றனர். மேசையில் இருக்கும் இரண்டு தேநீர் குவளைகளுக்கு மத்தியில், சமாதானத்தின் வெள்ளைக்கொடியாய், ஒரு வெண்ணிற மலர் அசைந்தாடியபடி கிடக்கிறது.
படம் பார்க்கும் போது அதுவும் யதார்த்தத்தை அழுத்தமாகவும், கலை நயத்தோடும் கூறும் ஒரு படைப்பில் நாம் விலகி நின்று பார்ப்பது சிரமம். அப்படி நான் ஒன்றிய பட அனுபவத்தையும், பின்னர் அசை போட்டு வந்த கருத்துக்களையும் இணைத்து யோசிக்கிறேன்.
படத்தின் முதல் பாதியில் எனக்குள் எழுந்திருந்த கொந்தளிப்பும், கோபமும் படம் முடியும் போது இல்லை. அப்போது இருந்த மனநிலை அவநம்பிக்கை மட்டுமே. ‘இதுதான் ஊர். இப்படித்தான் இருக்கிறது சூழல். இதற்குள் உன்னால் எதுவும் செய்ய முடியாது. எப்படியாவது படித்து ஏதேனும் செய்து ஊரை விட்டு கிளம்பு’ என்ற ஒருவிதமான அவலம் கலந்த எண்ணமே எஞ்சியிருந்தது.
இயக்குனர் மாரி செல்வராஜ், தன்னுடைய பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் உருவாக்க விரும்பிய கலை – அனுபவம் – கண்ணோட்டம் வேறொன்றாகக் கூட இருக்கலாம். ஆனால் எனக்கு மட்டுமல்ல… நான் உரையாடிய பல நண்பர்களுக்கும் மேற்கண்ட அவல – தன்னிரக்க மனநிலையைதான் படம் ஏற்படுத்துகிறது.
ஒரு திரைப்படம் இத்தகைய அவ நம்பிக்கையை உருவாக்கலாமா? அல்லது இதை வெறும் அவநம்பிக்கை என்று உணர்வது தவறா?
பொதுவில் ஹீரோ அனைத்து வில்லன்களையும் அடித்து நொறுக்கி நீதியை நிலை நாட்டும் கதை அனுபவத்திலேயே நாம் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம். அத்துடன் கொஞ்சம் முற்போக்கு அரசியலும் அறிமுகமாகும் போது என்ன தோன்றும்? ஒரு தலித் இளைஞன் தன் மீது கணந்தோறும் நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளுக்கு இவ்வாறுதான் எதிர்வினையாற்ற வேண்டுமா? ‘காலம் மாறும்’ என எதிர்த்தரப்பு வாய்விட்டு சொல்வதற்கே இத்தனை இழிவுகள் சுமக்க வேண்டுமாயின், உண்மையாகவே காலம் மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? இப்படிப் பல கேள்விகள்.
அதேநேரம் இந்த திரைப்படத்தின் சித்தரிப்பு ஒரு சமூக யதார்த்தம் இல்லையா என்ற கேள்வியும் இணைந்தே எழுகிறது. இந்தப் படமும் கூட பெருமளவு தனது பேசுபொருளில் யதார்த்த வாழ்விற்கு நாணயமாகவே பயணிக்கிறது.
ஒரு தலித் இளைஞன் தன் மீது நிகழ்த்தப்படும் சாதிய வன்கொடுமைகளை அந்த இடத்திலேயே எதிர்த்துக் கேட்பதற்குரிய சமூக சூழல் இங்கு இல்லை என்பது ஓர் உண்மை. அல்லது அப்படிக் கேட்க முடியுமாயின் அந்த சமூகச் சூழலில் இத்தகைய சாதிய வன்கொடுமைகள் பெரிய அளவுக்கு இருக்க வாய்ப்பில்லை.
இப்பூமியில் பிறந்த அந்தக் கணத்தில் இருந்தே சாதியின் விதவிதமான, நுணுக்கமான இழிவுகளை, அவமானங்களை, ஆதிக்கக் கூறுகளை சுமக்குமாறே ஒரு தலித் சமூகக் கட்டுப்பாடுகளால் வளர்க்கப்படுகிறான். அது சமூக இயங்கியலின் பிரிக்கவியலாத ஒரு பகுதியாக, செயலில், உணவில், பேச்சில், உடையில், கல்வியில், பண்பாட்டில் ஒட்டியிருக்கிறது. ஆகவே சகித்துக் கொள்வதும், பொறுத்துக் கொள்வதும் அவனுடைய சுய உணர்ச்சியின் தேர்வு இல்லை. புற உலக யதார்த்தத்தின் நிர்ப்பந்தம். இன்னொரு விதமாகச் சொன்னால் இத்தகைய அடிமை உலகிற்கு வெளியே ஒரு ஜனநாயக வெளிக்கு அறிமுகமாகும் போதுதான் அவன் தன் நிலையை உணர்ந்து கொதிக்கிறான். இதைத்தான் மாரி செல்வராஜின் திரைப்படமும் சித்தரிக்கிறது.
சட்டக் கல்லூரி எனும் ஜனநாயக வெளியில் பரியனின் சுயம் முட்டி மோதி பல்வேறு அளவுகளில் பரிணமிக்கிறது. இதுவரையிலான தமிழ் சினிமாவை எடுத்துக்கொண்டால் தலித் Vs தலித் அல்லாதோர் என்பதையே முழு நீள கதைக் களமாகக் கொண்டு வெளிவந்த திரைப்படங்கள் மிக சொற்பம். அதையே ஒரு தலித்தின் பார்வையில் வெளிப்படுத்தும் படங்கள் இன்னும் அரிது. அந்த வகையில் பரியேறும் பெருமாள் சாதிய சமூகத்தின் யதார்த்தத்தை நெருக்கமாக காட்சிப் படுத்துகிறது. அந்த அனுபவப் பார்வை அனைத்து மக்களிடமும் சங்கமிக்கும் போதுதான் பல்வேறு பிரச்சினைகளே என்னவென்று புரியும்.
அதேநேரம் இதைத் தமிழகம் தழுவிய தலித் வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றம் எனவும் கருத முடியாது. தன்னை சாதிவெறியோடு சிலர் தாக்கியதை கதாநாயகன் சொல்லும்போது, ‘எவம்ல உன்னை அடிச்சது… உன் காலேஜ்ல நம்ம பயக இருப்பாம்ல… அவனுங்களை கூட்டிட்டுப் போ… அவன் வரலன்னா நான் ஊர்லேர்ந்து அழைச்சுட்டு வர்றேன்’ என கோபம் கொப்பளிக்க ஓர் புளியங்குளம் இளைஞர் சொல்கிறார். கொங்கு மண்டலத்தில் இப்படி ஓர் அருந்தியர் இளைஞர் சொல்வதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. திருச்சி, தஞ்சையில் ஒரு பறையர் இளைஞரை இப்படி கல்லூரியில் அடித்து, அவர் ஆள் சேர்த்துக் கொண்டு திருப்பித் தாக்கிவிட முடியாது.
ஆனால் தென் தமிழக நிலைமை இதிலிருந்து வேறுபட்டிருக்கிறது. தேவேந்திர குல வேளாளர் மக்கள், தென் தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட, தீண்டத்தகாத பிரிவினராகவே நடத்தப்படுகின்றனர் என்ற போதிலும், எதிர்த்து நின்று திருப்பித் தாக்கும் வலிமையை அவர்கள் கடந்த கால நிகழ்வுகளினூடே பெற்றுள்ளனர்.
கொஞ்சம் நிலவுடைமை விவசாயத்தாலும், பெரும் எண்ணிக்கையில் நகரங்களுக்குச் சென்று பொருளீட்டிய முன்னேற்றத்தாலும், சில பல பகுதிகளில் அவர்கள் பெரும்பான்மையாக வாழ்வதாலும் இந்த திருப்பித் தாக்கும் சக்தியை பெற்றிருக்கின்றனர். 1990-களின் மத்தியில் கொடியங்குளத்தில் துவங்கி நடந்த தென் மாவட்ட ‘கலவரங்களு’க்குப் பிறகு அவர்களுடைய சமூக வாழ்வின் தன்மை மாறியிருக்கிறது என்றும் சொல்லலாம்.
தனக்கு கிடைத்த முதல் பட வாய்ப்பை, தான் நம்பும் அரசியலை பேசுவதற்காக மாரி செல்வராஜ் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் சாதிய உள்ளடக்கம் கொண்ட கதைகளை கையாளும் போது ஊரைவிட்டு தள்ளி வைப்பதற்கான சாத்தியம் அதிகம் இருக்கிறது என்றாலும் கூட, உறுதியாக இப்படி ஒரு கதைக் களத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர். அத்தகைய உறுதியைக் கொடுப்பதற்கு இயக்குநர் ரஞ்சித் தயாரிப்பாளராகவும் கிடைத்திருக்கிறார்.
ஆனால், ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்துக்கு ஏன் எதிர்ப்புகள் வரவில்லை? திரைப்படங்களில் தங்கள் சாதிப் பெயர் வெளிப்பட்டாலே துள்ளிக் குதிக்கும் சாதி வெறியர்களை நாம் காண்கிறோம். வசனத்தில் ஒரு சொல் இடம் பெற்றாலே கடும் எதிர்ப்புகள் எழும். இந்த திரைப்படம் நேரடியாக சாதியைக் கையாள்கிறது; தலித்கள் எப்படி அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்று சித்தரிக்கிறது. படத்தில் வரும் ஆதிக்க சாதித் தரப்பு தென் மாவட்ட தேவர்கள் என்பதை குறியீடுகளால் உணர்த்துகிறது. எனினும் எந்த சிறு எதிர்ப்பும் எழாதது ஏன்? மேலும் தேவர் மகன் 2, சண்டியர் படங்களுக்காக ‘வீறு’ கொண்டு எழுந்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் இப்படத்தினை எதிர்க்கவில்லை.
தாங்கள் தலித்துக்களே இல்லை என்று பா.ஜ.க-வுடன் பயணிக்கும் அவரது ஆதரவாளர்கள் இப்படத்தில் சித்தரிக்கப்படும் கொடூரமான காட்சிகளால் தமது சாதியினர் இழிவுபடுத்தப்படுவதாகவும், தங்கள் சாதி அப்படிப்பட்டது இல்லை, தாங்கள் ஆண்ட பரம்பரை என்றும் மற்ற தலித்துக்கள் மீதான சாதிய கொடூரங்கள் தங்களுக்கு பொருந்தாது என்றும் எவரும் எதிர்க்கவில்லை. இருப்பினும் இதை விட முக்கியமானது ஆதிக்க சாதி பக்கமிருந்து எதிர்ப்பு வரவில்லை. ஏன்?
தேவர்கள் என்று இல்லை… பொதுவாக ஓர் ஆதிக்க சாதி விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டால், இதர ஆதிக்கத் தரப்பும் ஓரணியில் இணைந்து கொள்ளும். தருமபுரி இளவரசன் – திவ்யா பிரச்னையின் போது, ராமதாஸ் உடன் கவுண்டர் சங்கங்களும், தேவர் அமைப்புகளும் கை கோர்த்துக் கொண்டன. அடக்கும் தரப்பு என்ற அடிப்படையில் இந்த இணைவு நடக்கிறது. அப்படி, பரியேறும் பெருமாள் விசயத்தில் எந்த ஆதிக்க சாதியினரும் எதிர்க்குரல் எழுப்பவில்லை என்பது மட்டுமல்ல… கணிசமானோர் ஆதரிக்கவும் செய்கின்றனர்.
அப்படியானால் இயக்குனர் மாரி செல்வராஜும், தயாரிப்பாளர் பா.ரஞ்சித்தும் இப்படத்தின் மூலம் நிகழ்த்த விரும்பிய உரையாடல் வெற்றியடைந்திருக்கிறதா ?
‘கலையின் வழியே அரசியல் கருத்துக்களை வீச்சுடன் பரப்ப முடியும். சமூக மாற்றத்தில் கலையின் பங்கு அரசியல் இயக்கங்களை விட முதன்மையானது’ என இயக்குனர் பா.ரஞ்சித் பல்வேறு சந்தர்ப்பங்களில் வேறு வேறு வார்த்தைகளில் கூறியிருக்கிறார். இந்தப் படமும் சாதிய சமூகத்தை ஒரு கணம் அழுத்தமாக சிந்திக்க வைப்பதால் இது வெற்றி என்றே அவரும், மாரி செல்வராஜும் நினைக்க கூடும். இப்படத்திற்கு வந்த பாராட்டுக்களும் (ஆதிக்க சாதியில் பிறந்தோரின் பாராட்டுக்கள்) அவர்களை அப்படி நினைக்க வைக்கும்.
சாதி வெறியில் திளைத்திருக்கும் வெறியர்களை கலையால் ஓர் அங்குலம் கூட அசைக்க முடியாது என்பது ஒருபுறமிருக்க, அத்தகைய சாதிவெறி இல்லாமலும், அதேநேரம் சாதிய அடையாளம் தரும் மரபுவழி ஆதாயங்களை துறக்க முடியாமலும் இருக்கும் மவுனப் பெரும்பான்மையின் உள்ளத்தை இப்படம் அசைத்திருக்குமா?
இல்லை. எதிர்க்கப்பட வேண்டிய அளவுக்கு ‘பரியேறும் பெருமாள்’ எந்த சேதாரத்தையும் அம்மக்களிடம் ஏற்படுத்தி விடவில்லை. அவர்களுடைய சாதி ஆதிக்கம் அளித்திருக்கும் வாழ்க்கையின் சின்னஞ்சிறு செங்கல்லை கூட இது அசைக்கவில்லை. ஊருக்கு நடுவில் நின்று ‘இவன் என்னை ஒடுக்குகிறான், இழிவு செய்கிறான்’ என்று பரியன் கத்துவதால் ஒடுக்கும் தரப்பை சேர்ந்தவன் அவமானம் அடைந்து, குற்றவுணர்வு கொண்டு திருந்துவான் என நாம் எதிர்பார்க்கலாம். அல்லது கொடுரமான சாதிவெறியின் உள்ளத்தை ஒரு கணம் உலுக்கலாம் என்று எதிர்பார்ப்பதும் தவறில்லை.
ஆனால் அரிவாளால் சாதி பேசாமல், சாதி தரும் பொருளாயாத வசதியால் அமைதியாக சாதி பெருமிதத்தை பேசும் மக்களின் உளவியல் கோட்டையை இந்தப் படம் தொட்டுப் பார்க்கவில்லை. சாதி வெறியர்களைப் பொறுத்தவரை ‘நாம் அன்றாடம் செய்வதை இந்தப் படத்தின் திரையில் காட்டுகிறார்கள். இதைப் பார்த்து இன்னும் கொஞ்சம் அச்சம் ஏற்பட்டால் நல்லதுதான்’ என்றே நினைப்பார்கள்.
சாதி வெறியற்ற ‘அமைதியான’ சாதி ஆதிக்க மக்களோ “எதற்கு காதல், கலப்பு மணம் என்று பிரச்சினை? இப்போதைக்கு அவரவர் சாதியில் மணம் முடிப்போம். ஏதோ காலம் மாறி இந்தப் பிரச்சினை மாறினால் மாறட்டும்” என்று ஏற்கெனவே அவர்கள் வைத்திருக்கும் சிந்தனையை இப்படம் ஊக்குவிக்கிறது. படத்தின் வழியாகவும் இதை பார்க்கலாம்.
கோபமிருந்தாலும் சில இடங்களில் முதிர்ச்சி தரும் பணிவுடன் ஆதிக்கசாதி வெறியர்களிடம் மண்டியிடுகிறான் பரியேறும் பெருமாள். குட்டக் குட்ட குனியும் பரியன், தன் மீது இரக்கத்தை கோரும் பலவீனமான தாழ்வுணர்ச்சியை படம் நெடுக வெளிப்படுத்துகிறான். தன் மீதான வலிகளையும் அவமானங்களையும் சகித்துக் கொண்டு மனதுக்குள்ளேயே குமைவதால் எதிர்த்தரப்புக்கு என்ன இழப்பு? எவ்வளவு அடித்தாலும் தாங்கும் தலித் மக்களை ஆதிக்க சாதி மனம் விரும்பவே செய்யும். அடித்து கை வலிக்கும் தருணத்தில் சற்றே பச்சாதாபம் கொள்ளும். பரியன் மீது நாயகியின் அப்பா கொள்ளும் பரிவு இத்தகையதே. அந்தப் பரிவைத்தான் அரிவாள் தூக்காத சாதிய சமூகமும் வெளிப்படுத்துகிறது.
கதாநாயகி குடும்பத்தின் சாதிப் பெருமைக்கு சின்னஞ்சிறு பங்கம் கூட ஏற்படாத வண்ணம் கதாநாயகனின் நடத்தை இருப்பதால்தான், ‘வாயேன் டீ சாப்பிடலாம்’ என அழைக்கிறார் அந்த தந்தை. தாங்கள் நடத்திய சாதிக் கொடுமைகளை தன் மகளிடம் சொல்லாமல் இருந்ததற்காக ‘தேங்க்ஸ்’ சொல்லும் அவர், கூப்பிட்டு வைத்து முகத்தில் ஒண்ணுக்கு அடித்ததற்காக ஒரு ‘சாரி’ கூட சொல்லவில்லை. சமூகத்தில் இன்னும் அந்த அளவுக்கு இணக்கம் ஏற்பட்டுவிடவில்லை என்பதால் இதை இயக்குநர் தெரிந்தே செய்த தவறாகவும் கொள்ள முடியாது. ஆனால் இவர்கள் இருவரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு குவளை தேநீர் அருந்தி சாதியொழிப்புப் பற்றி உரையாடினால் அது எப்படி இருக்கும்? அதிகபட்சம், ‘நீங்களா பார்த்து சாதி வெறியை விட்டுருங்க சார்’ என பரியன் வேண்டுகோள் வைக்கலாம். அதைத் தாண்டி வேறு என்ன செய்ய முடியும்?
இறுதிக்காட்சிக்கு முந்திய காட்சியில், உடைக்கப்பட்ட கார் கண்ணாடி வழியே, நாயகியின் அப்பாவை நோக்கி பரியன் காறி உமிழ்கிறான். அது எதிர்ப்பின் வடிவமாக அல்ல… கையறு நிலையில் மண்ணை வாரித் தூற்றுவதைப் போல்தான் பார்வையாளர் மனதில் தங்குகிறது. மொத்தத்தில் ஒரு தலித் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று ஓர் ஆதிக்க சாதி மனம் விரும்புகிறதோ, அதை திரையில் நிகழ்த்திக் காட்டுகிறது இந்தப் படம். ஆகவே இதை எதிர்க்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு எழவில்லை.
“…மேலும் குறிப்பாக யாருடைய மனதையும் புண்படுத்தாமல், ஒரு கீறல் கூட விழாமல் இப்படத்தை எடுத்ததற்காக வாழ்த்துகள்…” என்று இயக்குநர் பாரதிராஜா இப்படத்தையும் இயக்குநர் மாரி செல்வராஜையும் ‘மனதாரா’ பாராட்டியிருக்கிறார். ஆம். இப்படம் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை!
அப்படியானால் பரியன் என்ன செய்திருக்க வேண்டும்? எதிர்த்து அடித்திருக்க வேண்டுமா?
‘திமிறி எழு, திருப்பி அடி’ என்று இங்கே தலித் இயக்கங்கள் 1990-களில் முன்வைத்த முழக்கம் இப்போது துடிப்புடன் இல்லை. அப்போது அவர்கள் தமது பகுதிகளில் மட்டும் பேசினார்கள். தேர்தலை புறக்கணித்திருந்தார்கள். பின்னர் தேர்தல் அரசியலில் சங்கமித்த பிறகு ஆதிக்க சாதியோடு பெரிய அளவுக்கு முரண்படாமல் இருந்தால்தான் ஆளும் வர்க்க அரசியலில் நீடிக்க முடியும் என்பதை பட்டுணர்ந்தார்கள். இன்று திருமாவளவனை ஆதரிக்கும் ‘பிற சமூக’ சமூகவலைத்தள முற்போக்காளர்களும் கூட அவரை ஆளும் வர்க்க அரசியல் கட்சிகள் கொஞ்சம் விட்டுக்கொடுத்து ஏற்க வேண்டும் என்பதாக மன்றாடுகிறார்களே தவிர அதை ஆணையிடும் நிலையில் இல்லை.
அரசியல், சமூக, பொருளாதார கட்டுமானங்களால் மக்களின் மனங்களில் ஆழப் பதிந்துள்ள சாதியை வெறுமனே மனித மூளைகளில் பதிந்துள்ள தவறான கருத்தாகவே மேற்கண்ட பார்வை கருதுகிறது. ஆகவே கருத்து மாற்றமும், அதற்கான பிரச்சாரமும், இணைந்த செயல்பாடுகளுமே பொருத்தமான வடிவங்கள் என்பதால், ‘திருப்பித்தாக்கு’ என்பதை சமூக யதார்த்தத்தை மீறிய கற்பனை எதிர்பார்ப்பாக விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமல்ல… ரஞ்சித் போன்றவர்களும் கருதுகிறார்கள். இது சாதி ஆதிக்க சமூக யதார்த்தத்தின் விளைவா இல்லை அந்த யதார்த்தத்தை தவறாக புரிந்து கொண்ட அரசியலின் விளைவா?
பரியேறும் பெருமாள் சாதிவெறியை எதிர்த்து ஏன் சாகசங்கள் செய்யவில்லை என்பல்ல நமது விமர்சனம். ஆனால் கற்பனையில் கூட நடக்காதென தோற்றமளிக்கும் சாதி ஆதிக்கத்தை எதிர்க்கும் பாதை எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதையே இந்த விமர்சனம் படத்தினூடாக முன் வைக்கிறது.
மாரி செல்வராஜ் சித்தரித்துள்ள பரியன் கதாபாத்திரம், இழிவுகளை சுமந்து கொண்டு, எப்பாடுபட்டாவது படிப்பின் துணையுடன் முன் செல்ல எத்தனிக்கிறது. இதுவும் கூட ஒரு யதார்த்தம்தான். அதாவது தமது வறிய பொருளாதார நிலையை படிப்பு – வேலை வாய்ப்புகளால் உயர்த்திக் கொள்வதன் மூலம் சாதிய இழிவுகளை மெல்ல மெல்ல குறைக்கவோ மறுக்கவோ முடியும் என்ற மனநிலை அது. சாதி அமைப்பின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் தலித் இளைஞர்கள், எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு எப்படியாவது கல்வியின் கரம் பற்றி தப்பிக்க முயல்கின்றனர். அப்படி சாதிக் கொடுமையை சகித்துக் கொண்டு படித்து முன்னேறுவது சாத்தியமா என்றால் சாத்தியம்தான், ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் வரும் அந்த சட்டக் கல்லூரி முதல்வரைப் போல.
அவர் ஒரு காலத்தில் செருப்பு தைப்பவரின் மகன். அவரே சொல்வதைப் போல, ‘பன்னி மாதிரி என்னை தொரத்தி தொரத்தி அடிப்பானுவ.. ஒரு கட்டத்துல சுதாரிச்சேன். எது முக்கியம்னு தெரிஞ்சுக்கிட்டு பேய் மாதிரி படிச்சேன். அன்னைக்கு என்னை அடிச்சு தொரத்துவனவன்லாம் இன்னைக்கு அய்யா, சாமின்னு சலாம் போடுறான்’ என்கிறார். ஆனால், அவர் பெற்ற கல்வியின் அறிவால், தன் மாணவனுக்கு நேரும் வன்கொடுமையை அவரால் தடுக்க முடியவில்லை. ‘ரூம்ல தூக்கு மாட்டிக்கிட்டு சாவறதை விட அடிதடில செத்தா பரவாயில்ல’ என்றுதான் கையறு நிலையுடன் சொல்ல முடிகிறது. இந்த கையறு நிலையை வெளிப்படுத்த அவருக்கு கல்வி எதற்கு?
ஆகவேதான் சமூக பொருளாதார விடுதலை என்பது வெறும் படிப்பு – வேலைகளால் வந்து விடுவதில்லை. அது அரசியல் விடுதலை எனும் போராட்டங்களோடு இணைக்கப்படாத வரை பெரிய பயனில்லை. ஏனெனில் இந்தியாவில் வர்க்கமும் சாதியும் ஒன்று என்பதற்கு ஆகப் பொருத்தமான உதாரணங்களில் தலித்துக்கள் முதன்மையானவர்கள்.
தலித்துக்கள் மட்டுமல்ல சூத்திர சாதிகளில் உள்ள கணிசமான மக்களும் வறிய நிலையில்தான் இருக்கிறார்கள். இந்த சாதிகளில் 5 அல்லது 10 சதவீதம் பேர் படித்து ஆளானாலும் மீதிப் பேரின் விடுதலை எப்படி என்பதே நம் கேள்வி. பரியேறும் பெருமாள் திரைப்படமும் அப்துல்கலாம், எம்.எஸ்.உதயமூர்த்தி, நீயா நானா கோபிநாத் போன்ற டெம்ப்ளேட்டுகளின் தனி மனித முன்னேற்றத்தைப் பரிந்துரைக்கிறது.
உண்மையில், “அடிச்சுகிட்டு செத்தா பரவாயில்ல, அவன (ஆதிக்க சாதி) அடக்க முடியல, இவன (பரியன்) மட்டும் அடங்கிப் போகச் சொல்லணுமா” என்று கல்லூரி முதல்வர் சொல்லும் போது திரையரங்கில் கைத்தட்டல் பறக்கிறது. சொல்வது ‘கல்வியால் முன்னேறிய பிரின்சிபல்’ என்பதால் அல்ல. அதுதான் யதார்த்தம் என்பதால். ஒருவேளை, இதே வசனத்தை பரியனின் அப்பா பேசியிருந்தால் (சொல்ல வாய்ப்பில்லை என்றாலும்) கை தட்டல் இன்னும் கூடுதலாக கிடைத்திருக்கக் கூடும்.
படத்தின் கதையோட்டத்தோடு முரண்பட்டாலும் இதுவும் தவிர்க்க முடியாத ஒரு யதார்த்தம்தான்.இதன்படி படைப்பில் தோன்றும் இயக்குநர், தயாரிப்பாளரின் இந்தப் பார்வைப் பழுதிற்கு இந்த சேம் சைடு கோலை உதாரணமாக சொல்லலாம்.
*****
‘ஏன் எல்லாவற்றையும் பொருத்துக் கொண்டேன்?’ என்ற கேள்விக்கு பரியன் பாத்திரம் நேரடியாக பதில் சொல்கிறது. இறுதிக் காட்சிக்கு முந்தைய சண்டையில், உடைந்த கார் கண்ணாடியின் வழியே நாயகியின் அப்பாவை நோக்கி பரியன் பேசும்போது, ‘நீங்கள் எனக்கு இழைத்த சாதிய இழிவுகளை உங்கள் மகளிடம் சொல்லியிருந்தால் அவள் உங்களை அப்பா என்று அழைத்திருக்க மாட்டாள். கேவலமாக மதித்திருப்பாள். முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டு தானும் தூக்கில் தொங்கியிருப்பாள். அதனால்தான் எல்லாவற்றையும் பொருத்துக் கொண்டேன்’ என்று சொல்லி விட்டு, ‘உன் சாதிப் பெருமை நான் போட்ட பிச்சை’ என்கிறான் நாயகன். அதாவது ‘நான் சாதி இழிவை ஏற்றுக் கொள்வதால்தான் நீ சாதிப் பெருமிதத்துடன் இருக்க முடிகிறது’. இதை ‘காதலி’க்காக செய்யப்படும் தியாகமென்று மட்டும் குறுக்கி விட முடியாது
இத்தகைய சிவாஜி கணேசன் சென்டிமெண்ட் பார்வை மூலம் ஆதிக்க சாதி மன அமைப்பில் வாழ்வோரை என்ன செய்ய முடியும்? என்ன உரையாடல் நடத்த முடியும்? “எதற்கு பிரச்சினை, தனித்தனியாக அவரவர் வேலையை பாருங்கள், காலம் மாறும்” என்று அனைவரும் வழமையான உலகத்திற்கு திரும்புவதைத் தவிர இப்படம் வேறு புதிய மருந்து எதையம் தரவில்லை. இந்தப் பழுதான கண்ணோட்டம் மாரி செல்வராஜுடையது மட்டுமன்று… பலர் இதை ஒத்த கருத்துக்களை சொல்கின்றனர்.
‘ஊருக்கு வெளியே சேரி இருப்பதால், நீங்கள் எங்களை ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள் என்று பொருள் இல்லை. சேரிதான் ஊர். ஊரை நாங்கள் ஒதுக்கி வைத்திருக்கிறோம்’ என்று சிலர் சொல்வதுண்டு. ஆண்ட சாதி பெருமிதம் பேசும் மனநிலையின் அப்பாவித்தனமான எதிர் விளைவு இது. ஊர் பொதுக்கோயிலில் தலித்களை விடுவதில்லை என்றால், அந்த கோயிலில் சமமான வழிபாட்டு உரிமையை பெற போராட வேண்டும். மாறாக அர்ஜுன் சம்பத் கும்பல் பரிந்துரைப்பதைப் போல, தலித்கள் தனியே கோயில் கட்டிக்கொள்வது இதற்கு தீர்வு அல்ல. அப்படி கோயில் கட்டிக் கொள்வதால் அந்த சமூக தீண்டாமை முடிவுக்கு வருவதும் இல்லை.
சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், ‘பெண்கள் மட்டும் செல்லும் வகையில் சில குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கித் தரலாம்’ என்று ஒருவர் சொன்னார். லிபரல் தன்மையுள்ள இந்த கருத்து, சம அளவுக்கு தீண்டாமையை அங்கீகரிக்கிறது. ‘ஜல்லிக்கட்டில் ஆதிக்க சாதியினர் மட்டுமே காளையைப் பிடிக்க முடியும் என்றால், தலித்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஒரு தனி ஜல்லிக்கட்டு நடத்துவோம்’ என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது சிலர் பேசினார்கள்.
இவை அனைத்துமே சமத்துவத்தை கோரும் சாதி ஒழிப்புக்கு பதில், தனித்தனியாக சாதிகள் தமது ஏற்றத்தாழ்வான படிநிலையோடு வாழ்வதற்கு வழி கோலுகின்றன. எனவே, ‘உன் சாதிப்பெருமை நான் போட்ட பிச்சை’ என்பது இழிவையே, கம்பீரமாக முன்வைக்கும் மோசமான ஓர் அடிமையின் மனநிலை. ‘அதுதான் யதார்த்தம்’ என்றால் சாதி ஆதிக்கமும் கூட யதார்த்தம்தான் என நாம் கடந்து போய்விடலாமா?
இதன்படி, ‘அம்பானி கோடீஸ்வரனாக இருப்பது நான் போட்ட பிச்சை’ என ஒரு தொழிலாளி பெருமிதம் அடைய வேண்டும். ‘ஆணாதிக்கம் நாங்கள் போட்ட பிச்சை’ என்று பெண்கள் பெருமிதம் கொள்ள வேண்டும்.
வேறு என்ன செய்திருக்க முடியும்? மாரி செல்வராஜ் எடுக்காத படத்துக்கு நாம் விமர்சனம் எழுத முடியாது. ஆனால் அவர் எடுத்துள்ள படத்திலேயே, அவர் கையாண்டுள்ள கதையிலேயே சமத்துவத்திற்காக போராடச் சாத்தியமுள்ள களம் இருக்கிறது. பரியனின் நண்பனாக வரும் ஆனந்த் என்ற பாத்திரம், படத்தில் வெறும் காமெடியனாக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
ஒரே ஒரு காட்சியில், ‘நான் சாதி பார்த்தா உன்னிடம் பழகுகிறேன்?’ என்று கேட்கிறார். உண்மையில் அது ஒரு நம்பிக்கையான குரல். ஆனந்த் பொய் சொல்லவில்லை. தமிழக கல்லூரிகளில் பல ஆனந்த்துகளை நாம் பார்க்க முடியும். அவர்கள் சாதி ஒழிப்பு அரசியல் பேசுவோராக இருப்பதில்லை என்றாலும், மாற்றத்தை விரும்பும் செயல்துடிப்பு மிக்க அந்த வயதுதான், ஆயிரம் கால ஆதிக்க உணர்வை மீறிச் செல்லும் உத்வேகத்தையும் அளிக்கிறது. மேலும், உழைக்கும் வர்க்கம் என்ற அளவில் எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுடன் ஓர் ஐக்கியத்தை உருவாக்கிக் கொள்வது ஒப்பீட்டளவில் எளிது. இதற்கான சாத்தியம் கதையின் உள்ளடக்கத்திலேயே இருந்தும் கூட இயக்குனர் அதை நிராகரிக்கிறார்.
ஆனந்தின் தந்தை கவுன்சிலர், அவரது அரசியல் செல்வாக்கால் சட்டக் கல்லூரியில் சீட் வாங்குகிறார், பட்டத்தையும் முடித்து விடுவார் என்ற சித்தரிப்புகளையெல்லாம் செய்த இயக்குநர், பரியன் எனும் இளைஞனின் போராட்டத்தில் ஏன் ஆனந்துகளை சேர்க்கவில்லை? சொல்லப் போனால் இந்தப் படமே பரியனின் பிரச்சினையை பரியனின் பார்வையில் அல்லாது ஆனந்தின் பார்வையில் சொல்லியிருக்கலாமோ என்று கூடத் தோன்றுகிறது. தமிழ்வழிக் கல்வி, ஆங்கிலப் பிரச்சினையால் பொறுமை இழக்கும் பிரச்சினையும் பரியனுக்கு மட்டுமே உரியதல்ல. அதில் ஆனந்துகள் அனைவரும் வருகிறார்கள்.
தொடந்து கொலை செய்யும் அந்த முதியவர் பாத்திரம், பரியனின் புகைப்படத்தைப் பார்த்து, ‘இந்தப் பையன் நல்லவனாச்சேப்பா.. நான் வேணும்னா பேசிப் பார்க்கட்டுமா?’ என்று கேட்கிறார். அது ஓர் முக்கியமான இடம். சாதிவெறி பிடித்த ஒரு கொடூர கொலைகாரன் என்ற போதிலும், அடியாழத்தில் புதைந்துள்ள வர்க்க உணர்வில் இருந்து பிறக்கும் அந்த குரலை பின் தொடரும் வண்ணம் படத்தில் கதையோ காட்சிகளோ இடம் பெறவில்லை. அதற்கு இயக்குனர் அனுமதிக்கவில்லை.
‘சாதி ஒழிப்பை சேரியில் பேசாதீர்கள். ஊரில் போய் பேசுங்கள்’ என்று பா.ரஞ்சித் பல மேடைகளில் பேசுகிறார். அதன்படி பார்த்தாலும் இந்தப்படம் அப்படிப் பேசவில்லை. அல்லது ரஞ்சித் சொல்லும் பொருள், ஊரில் சென்று ‘இனியாவது திருந்துங்கடா’ என்று கேட்பதாக இருக்கிறது. நாம் சொல்வது, இனியாவது நாம் சேராவிட்டால் முன்னேற்றமில்லை என்பதே.
ஆதிக்க சாதி வெறியின் கொடூரத்தையும் அதனால் அல்லலுறும் ஒரு தலித் இளைஞனின் அவலத்தை மட்டுமே இப்படம் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது. ஆனால் ஆதிக்க சாதியின் ஏழைகளையும், ஏழ்மையிலிருந்து விடுபடுவதற்காக போராடும் தலித் மக்களையும் இணைக்கும் யதார்த்தத்தை இப்படம் கடந்து போகிறது.
விடுதலைக்கு வழி காட்டும் இந்த யதார்த்தம் நம் கண்ணுக்கு சட்டெனத் தெரிந்து விடாது. தெரிய விரும்புவோர் வர்க்க அரசியலோடு களத்தில் பயணிப்பதைத் தவிர வேறு வழிகள் இல்லை.
சென்னையில் மகஇக, புமாஇமு, புஜதொமு, பெவிமு ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து நடத்திய நவம்பர் புரட்சி தினவிழாவில் எச்ச ராஜாவை பேட்டி காண்கிறார் ஒரு ’ஆன்டி இந்தியன்’ நிருபர்.
சபரிமலையில் பெண்கள் அனுமதி குறித்தும், கேரள வெள்ளத்தில் சவுதி உதவித்தொகையை மறுத்தது குறித்தும் ஒவ்வொரு இந்தியரின் அக்கவுண்டிலும் 15 லட்சம் போடுவதாக சொன்னது குறித்தும் அசராமல் பதில் சொல்கிறார் எச்ச ராஜா.
முசுலீம்கள், தலித் மக்களின் மீதான தாக்குதல்கள் குறித்தும், ஜி.எஸ்.டி குறித்த கேள்விகளுக்கு எச்ச ராஜா அளிக்கும் பதில்தான் உச்சகட்டம். காணொளி:
மறைந்த சொத்துக் குவிப்பு குற்றவாளி A1 ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அ.தி.மு.க. என்ற கட்சி அமளிதுமளியாகி, ஒருவழியாக பா.ஜ.க.வின் மற்றொரு அணியாக மாறி ஆட்சி செய்து வருகிறது. ஆட்சிக்கு வந்தநாள் முதல் இவர்களின் அக்கப்போர் மற்றும் கொள்ளையை தமிழகமே அறியும். ஜெயா தொலைக்காட்சியும், ‘’நமது எம்.ஜி.ஆர்” என்ற பத்திரிக்கையும் ஜெயாவின் மரணத்திற்கு பிறகு மன்னார்குடி கும்பல் வசப்படுத்திக் கொண்டதால் கடந்த பிப்ரவரி மாதம் ஜெயாவின் பிறந்த நாளில் “நமது அம்மா” என்ற பத்திரிகையை எடப்பாடி ஓபீஎஸ் அணி தொடங்கியது. தற்பொழுது “நியூஸ் ஜெ” என்ற செய்தி தொலைக்காட்சியையும் தொடங்கி இருக்கிறார்கள்.
இந்த தொலைக்காட்சிக்கு கவுண்டர் அணியின் கலை அணியான சிவக்குமார் – சூர்யா – கார்த்தி அணியினர் ஆலோசனை அளித்திருக்கிறதாம். பிறகு முக்கியமான பத்திரிகையாளர்கள் பலரை பணியில் அமர்த்தியிருக்கின்றனர். கொள்ளைப் பணத்தில் ஊதியம் வாங்கும் அந்த ஊடகவியலாளர்களிடம்தான் இனி நாம் ஊடக அறம் குறித்து பாடம் கேட்க வேண்டும்.
ஆனால் அதிமுக அரசும் கட்சியும் எப்படி ஒரு தொலைக்காட்சியை கார்ப்பரேட் தரத்தில் திடீரென உருவாக்கியது என்பது ஆச்சரியமான ஒன்றல்ல. பணந்தானே நிரந்தரமான தரம்!
ஆற்றுநீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் திட்டத்தை அறிமுகப்படுத்திய அறிவியல் விஞ்ஞானி செல்லூர் ராஜு முதல் நொய்யல் ஆற்றில் நுரை பொங்குவதற்கு மக்கள் சோப்பு போட்டு குளிப்பதே காரணம் என்று சொன்ன சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் வரை தமிழக மீம் கிரியேட்டர்களுக்கு அளப்பரிய சேவையை செய்து வருகின்றனர். ஆனால் இந்த நகைச்சுவைகளுக்கு பின்னால் கொள்ளையோ கொள்ளை என அதிமுக கும்பல் முழு தமிழகத்தையும் வழித்து துடைத்து வருகிறது.
அந்தக் கொள்ளைக்கு ஏற்படும் எதிர்ப்பை சமாளிக்க இப்போது அல்ட்ரா மாடர்னாக நியூஸ் சானலை துவங்கியிருக்கிறார்கள்.
கடந்த 12-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் இந்த சேனலுக்கான லோகோ மற்றும் இணையதள தொடக்க விழா நடைபெற்றது. இது முதல் நாளிலேயே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு விட்டது. காரணம், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதை உடனுக்குடன் “நியூஸ் ஜெ” டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். அதில் “நாட்டை ஆளும் மன்னனின் வால் (வாள்) முனையை விட பேனாவின் கூர் முனை வலிமையானது” என்பதை எழுத்து பிழையுடன் அப்பக்கத்தில் வெளிவந்ததைப் பார்த்து இணையவாசிகள் அனைவரும் கலாய்த்து விட்டார்கள். இனி நியூஸ் ஜே சானல் எடிட்டர்கள் இத்தவறு இல்லாமல் மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவின் தரத்தில் அதிமுக நியுசை ஒளிபரப்புவார்கள்.
1 of 2
சேனலுக்கான துவக்க விழா சென்னை ராஜ முத்தையா சாலையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கத்தில் 14.11.2018 அன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக அண்ணா சாலையில் இருக்கும் பல்லவன் பணிமனையில் இருந்து ஸ்டேடியம் வரை போலிசை குவித்து போக்குவரத்துக்கும், குத்தாட்டத்தை பார்ப்பவர்களுக்கும் இடையூறு இல்லாமல் ஒழுங்குபடுத்தினர்.
முன்னதாக காலையில் அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் ஜெயாவின் பழைய சிலையை அகற்றி விட்டு புதிய சிலையை பழனிச்சாமியும்-பன்னீர்செல்வமும் திறந்து வைத்தனர். திறப்பதற்கு முன் ஒரு துண்டை போட்டு சிலையை மூடினார்கள். இந்த துண்டுதான் நேற்றைய மீம்களுக்கு ஃபுல் சப்ளை!
இந்த கூத்து முடிந்ததும், மாலை துவக்க விழாவில் கலந்து கொள்வது திட்டம். இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்களை வரவழைத்து இருக்கிறார்கள். தாரை தப்பட்டைகள், மேளம்தாளம் முழங்க விழா ஆரம்பித்தது. தாண்டியா மேளம், கொக்காலி கட்டை ஆட்டம், குதிரை சாரட், கேரளா செண்டை மேளம், பங்கரா டான்ஸ், கரகாட்டம், தாண்டியா கேர்ள்ஸ், நடன குதிரை, பேண்டு வாத்தியம், வெல்கம் கேர்ள்ஸ், மயிலாட்டம், ஒயிலாட்டம் என அனைத்து ஆட்டக்காரர்களையும் அழைத்து வந்து ரணகளப்படுத்தி இருந்தனர். ஆட்டக்காரர்கள் கூலிக்கு வந்திருந்தாலும் உண்மையில் வாங்கிய பணத்திற்காக ’உயிரைக் கொடுத்து’ வேலை செய்தார்கள். போக்குவரத்து நெரிசல், சத்தத்திலும் தளராமல் தொண்டர்களை குஷிபடுத்தினர். ஒருவேளை சம்பளம் டபுளோ இல்லை அரசு ஆளும் கட்சி விழா என்ற பயமோ தெரியவில்லை.
கட்சித் தொண்டர்கள் அத்தனை பேரும் மிதமிஞ்சிய மப்பில் இருந்ததால் யாரிடமும் பேச முடியவில்லை. வருபவர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கவே விதவிதமான நடனங்கள். இந்த குத்தாட்டங்களை பார்த்து ரசித்தவாறே அரங்கத்தினுள் சென்றனர். அரங்கத்தினுள்ளும் “ஆடலும் பாடலும்” நிகழ்ச்சி என்று ஒரே அமர்களம்தான்.
முக்கியமாக கட்சியின் தேசிய கீதமான “ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்.. சுகம்..” என்ற பாடல் தவறாமல் இடம் பெற்றது. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்த தேசிய கீதம் நமது காதுகளை பஞ்சராக்குமோ தெரியவில்லை.
1 of 2
இந்த புதிய சேனலின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்று இருப்பவர், அம்மாவால் அடிப்படை உறுப்பினர் பதவிகூட பிடுங்கப்பட்டு கடைசி வாய்ப்பாக கடந்த சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் மீண்டும் பதவிக்கு வந்த விழுப்புரம் சி.வி.சண்முகத்தின் தம்பி சி.வி. ராதாகிருஷ்ணன் என்பதால் கணிசமான ஆட்கள் விழுப்புரத்தில் இருந்து அழைத்து வந்திருந்தனர்.
1 of 2
வந்திருந்த பலரும் பாவம்…! வயதானவர்கள்…! வெறும் 200 ரூபாய்க்கு அழைத்து வரப்பட்டதாக கூறினார்கள். இதுபோக சரக்கு மற்றும் உணவு தனி. “எதற்காக வந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. கூப்பிட்டார்கள் வந்தோம்” என்று கணிசமானவர்களும், “டி.வி தொடங்குறாங்க.. அதனால வந்தோம்” என வெகுசிலரும் வெகுளித்தனமாக கூறினார்கள்.
அதேபோல், காலையில் திறக்கப்பட்ட அம்மா சிலை பத்தி என்ன நினைக்கிறீங்க ? என்றோம். “அதெல்லாம் எங்களுக்கு எதுவும் தெரியாது” என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு அரக்க பரக்க கிளம்பினார்கள். அதைவிடக் கொடுமை, நடக்க முடியாதவர்களையும், தூக்கிப் போட்டு வந்திருக்கிறார்கள் என்பதுதான். பேருந்தை விட்டு இறங்ககூட முடியாமல் அதற்குள்ளேயே அமர்ந்திருந்தார்கள். எங்களைப் பார்த்ததும் கையெடுத்து கும்பிட்டுக் கொண்டே, “நடக்க முடியாம உக்காந்துட்டோம்” என்றார்கள் முதியவர்கள்.
இதுதான் அ.தி.மு.க..குத்தாட்டம், குடி, கொள்ளைப்பணம் என்ற அம்மாவின் கொள்கை தவறாமல் எடப்பாடி ஓபிஎஸ் கும்பல் ஆட்சி செய்து வருகிறது.
#மீ டூ இயக்கம் சமீபத்தில் துவங்கப்பட்டதாக இருக்கலாம், ஆனால் அது இந்தியாவுக்குப் புதிதல்ல. இதற்கு முன்பே பன்வாரி தேவி பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டத்தைத் துவங்கியிருந்தார்.
ராஜஸ்தானின் கிராமம் ஒன்றைச் சேர்ந்த பன்வாரிதேவி அங்கே “சாத்தின்” என்கிற மக்கள் நலப் பணியாளராக வேலை செய்து வந்தார். தனது பணியின் ஒரு அங்கமாக அக்கிராமத்தில் நடக்கவிருந்த குழந்தைத் திருமணம் ஒன்றைத் தடுத்து நிறுத்தியதால் ஆதிக்க சாதியினரால் கூட்டு வல்லுறவு செய்யப்பட்டார்.
பன்வாரி தேவியைப் போல் ஒவ்வொரு உழைக்கும் வர்க்கப் பெண்ணிடமும் நம்மிடம் பகிர்ந்து கொள்ள ஒரு #மீ டூ கதை புதைந்து கிடக்கின்றது. குடும்பமே நம்பிக் கொண்டிருக்கும் இப்பெண்களின் குறைந்த கூலி, பணிப் பாதுகாப்பின்மை, சமூகப் பாதுகாப்பின்மை போன்றவைகளோடு சாதி மற்றும் வர்க்க ஒடுக்குமுறைகளையும் இவர்கள் எதிர் கொள்கின்றனர். இவைதான் தங்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை எதிர்த்துப் பேசாமல் இப்பெண்களை மௌனிக்க வைக்கின்றன.
எந்தக் குறிப்பிட்ட பெண்ணாலும் #மீடூ இயக்கம் முன்னெடுக்கப்படவில்லை. தங்களிடம் அத்துமீறிய ஆண்களைக் குறித்த விவரங்களை அம்பலப்படுத்தும் ஒவ்வொரு பெண்ணும் அதைத் தங்கள் சொந்த இயக்கமாக ஏற்றுக் கொள்கின்றனர். பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக போராடும் பெண்கள் ஒவ்வொருவரையும் இந்தப் போக்கு மிக இறுக்கமாக பிணைத்துள்ளது.
அதே போல் ‘அவள் ஆபாசமாக உடையணிந்தோ, ஆணைக் கவரும் விதமாக நடந்து கொண்டோ, பெண்ணின் குணக் கேட்டினாலோ, அவளே விரும்பியதாலோ’தான் பாலியல் அத்துமீறல் நடந்தது என பொதுவாக பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து சொல்லப்படும் பொய்களையும் இந்த இயக்கம் தகர்த்துள்ளது.
பாலியல் அத்துமீறல் என்பது மிகச் சாதாரணமாக எல்லா இடங்களிலும் நடந்து கொண்டிருப்பதை இவ்வியக்கம் வெளிப்படுத்தியுள்ளது. அதேபோல் பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கவுரவமும், அவளுடைய குடும்ப கவுரவமும் பறிபோய் விடும் என்கிற கட்டுப்பெட்டித்தனமான கற்பனைகளையும் இவ்வியக்கம் கலைத்துள்ளது. தங்களுடைய தனிப்பட்ட பாதுகாப்பு, பணிப் பாதுகாப்பு மற்றும் மன நிம்மதி என அனைத்தையும் பணயம் வைத்து பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக பெண்கள் எழுந்து நிற்கின்றனர்.
விசாகா வழிகாட்டுதல்கள் மற்றும் பாலியல் குற்றத் தடுப்பு மற்றும் நிவாரணச் சட்டம் (2013) போன்றவைகள் இருந்தாலும், உழைக்கும் வர்க்கப் பெண்கள் பணியிடங்களில் சந்திக்கும் பாலியல் அத்துமீறல்களுக்காக நீதி வேண்டிப் போராடியே வருகின்றனர். நம் கண்ணுக்குத் தெரியாத பல பணிச் சூழல்களிலும், இறுக்கமான வர்க்க, சாதி மற்றும் ஆணாதிக்க கண்ணோட்டம் நிலவும் இடங்களிலும் சட்டம் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.
வீட்டுப் பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள், துப்புரவுத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளிகள் போன்ற இடங்களில் இவ்வாறான சூழலே நிலவுகின்றன. இந்த துறைகளில் எல்லாம் கீழ்மட்ட அளவில் புகார் தெரிவிக்க காகித அளவிலான கமிட்டிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மாதிரியான சூழலில் உழைக்கும் வர்க்கப் பெண்கள் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக தொழிற்சங்கங்களின் மூலமே போராடுகின்றனர்.
கடந்த நவம்பர் 3ம் தேதி மாலை, அனைத்திந்திய முற்போக்குப் பெண்கள் சங்கம் (AIPWA), பெங்களூர் மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர் சங்கம், பின்னலாடைத் தொழிலாளர் சங்கம், வீட்டுப் பணியாளர் உரிமைச் சங்கம் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்களோடு இணைந்து “#மீடூ : உழைக்கும் வர்க்கப் பெண்களின் பகிர்வுகள்” எனும் நிகழ்ச்சி ஒன்றை பெங்களூரில் ஏற்பாடு செய்தது.
பல்வேறு பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்களது பணிச் சூழலும் வேலையின் தன்மையும் பாலியல் அத்துமீறல்களுக்கு ஏதுவானதாக இருப்பதைக் குறித்துப் பேசினர். பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக குரல் எழுப்பினால் வேலை இழப்பும், சம்பள இழப்புமே தங்களது பணிச் சூழலில் இயல்பாக எதிர்கொள்ள வேண்டிய எதார்த்தம் என்பதைக் குறிப்பிட்டனர்.
ரத்னா என்கிற துப்புரவுத் தொழிலாளி தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். “ஐந்து மாதங்களாக தரப்படாத எங்களது கூலியைக் கேட்டதற்கு சூப்பர்வைசர் தனது கால் சட்டையை பொது இடத்தில் அவிழ்த்துக் காட்டினார்” எனக் குறிப்பிட்டார் ரத்னா. தனது எஜமானரின் மகன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை அவரிடம் சொன்னபோது தான் வேலையை விட்டு நீக்கப்பட்டதாகச் சொன்னார் தாஹிரா எனும் வீட்டுப் பணியாளர்.
ஓசூரைச் சேர்ந்த பின்னலாடை நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ராஜேஷ்வரி, தான் பணிபுரியும் ஆலையின் மேலாளர்கள் எப்படியெல்லாம் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவார்கள் என்பதை விளக்கினார். ”நான் ஆலையில் பணிபுரியத் தகுதியில்லை என்றும் பணம் சம்பாதிக்க ரோட்டில் நிற்க வேண்டும் என்றும் என்னிடம் சொன்னார்கள். அதே போல் பின்னலாடை நிறுவனங்கள் நிறுவப்பட்டிருக்கும் விதத்தின் காரணமாகவே நாங்கள் உடல் ரீதியான தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்றார் ராஜேஷ்வரி.
உழைக்கும் வர்க்கப் பெண்கள் தங்களுக்கு நிகழும் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் மூலம் போரட ஆரம்பித்துள்ளனர்.
பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடையே மட்டும் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதில்லை, பயணிகளால் பெண் நடத்துநர்கள் அடையும் தொல்லைகள் மிக அதிகம் என்கிறார் பெங்களூரு மாநகராட்சி பேருந்துக் கழகத்தில் பணிபுரியும் பெண் மெக்கானிக் பர்வீன்.
“நாங்கள் சில வேளைகளில் குடிகாரர்களையும் கையாள வேண்டியுள்ளது. பேருந்துச் சீட்டு வழங்கியதில் வசூலான ஆயிரக்கணக்கான ரூபாய்கள் எங்கள் பையில் இருக்கும். அது போன்ற சமயங்களில் பாலியல் அத்துமீறல் செய்பவர்களோடு சண்டைக்குப் போனால், அந்த சச்சரவில் பணத்தை இழக்க வேண்டியிருக்கும். பின்னர் அந்தப் பணத்தையும் எங்கள் கையில் இருந்தே கட்ட வேண்டியிருக்கும் என்பதாலேதான் பெண் நடத்துநர்கள் பாலியல் தொந்திரவுகளை கண்டும் காணாமலும் கடந்து போகின்றனர்” எனக் குறிப்பிடுகிறார் பர்வீன்.
இந்த நிகழ்வில் மூன்றாம் பாலினத்தவர், பாலியல் தொழில் செய்பவர்கள் மற்றும் மாணவர்களும் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்திரவுகளைக் குறித்துப் பேசினர். “நான் ஒரு ஊடக நிறுவனத்தில் வேலை செய்து வந்த போது பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். பின்னர் நான் அந்த சம்பவத்தைக் குறித்து பிரச்சினை செய்து விடுவேன் என்கிற அச்சத்தில் வேலையை விட்டே நீக்கி விட்டனர்.
எங்களைப் போன்றவர்கள் போலீசிடமும் புகார் அளிக்க முடியாது; ஏனெனில் அவர்களும் எங்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவார்கள். நாங்களெல்லாம் அத்துமீறுவதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என போலீசார் சொல்வார்கள். #மீடு இயக்கம் பாலியல் சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களின் துயரங்களை கருத்தில் கொள்ளவில்லை” எனப் பேசினார் சானா என்கிற திருநங்கை.
பாலியல் தொழில் செய்பவர்கள் மேல் நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்கிறார் மது பூஷன் என்கிற சமூக செயல்பாட்டாளர்.
வீட்டுப் பணியாளர்களின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்களைக் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளிடம் புகாரளித்தால் அவர்கள் அதைக் கண்டு கொள்ள மறுப்பதாக குறிப்பிட்டார் பெண்கள் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த பாரிஜாதம். “அவர்களும் பாரபட்சமாகவே அணுகுகின்றனர்” என்கிறார் பாரிஜாதம்.
நவம்பர் 3-ம் தேதியன்று நடந்த நிகழ்வில் பகிர்ந்து கொள்ளப்பட்ட அனுபவங்களைத் தொகுத்து அறிக்கை ஒன்றைத் தயாரித்து கர்நாடக அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையிடமும், கர்நாடக மாநில பெண்கள் கமிஷன், பெங்களூரு மாநகராட்சியின் புகார் பிரிவு மற்றும் பெங்களூர் மாநகரப் பேருந்துக் கழகம் ஆகிய அமைப்புகளிடம் சமர்பிக்க திட்டமிட்டுள்ளது அனைத்திந்திய முற்போக்கு பெண்கள் சங்கம். தமிழாக்கம் :