இன்முகத்தோடு காலை வணக்கம் செலுத்திக் கொள்ளும் மாணவர்கள்.
அரசுப் பள்ளி என்ற தலைப்பில் வாசகர் துன்மதி குமரவேல் அனுப்பிய படங்கள் இவை. அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் ஒழுங்காக வருவதில்லை எனக் காரணம் காட்டி படிப்படியாக மூடிக்கொண்டிருக்கிறது அரசு. ஆனால், எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற எத்தனையோ அரசுப் பள்ளிகள் நமக்கு தெரியமலேயே இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றது.
இப்பள்ளிகள் பல அந்தந்த ஊர்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்களின் முன்முயற்சியால் சிறப்பாக நடக்கின்றன. அலங்காரங்கள் ஏதுமின்றி அழகாக செயல்படும் பள்ளிகளை நாம் முதலில் பார்வையிட வேண்டும்.இங்கே நாம் பார்ப்பது வேலூர் மாவட்டத்தில் உள்ள திருமால்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி. தனியார் பள்ளிகளின் புரட்டு சாதனைகளை விளம்பரங்களாக திணிப்பார்கள். அரசுப் பள்ளிகளின் சாதனையை நாம்தான் பரப்ப வேண்டும்.
திருமால்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி – பசுமையாக இருக்கிறது.பள்ளிக்கு ஆர்வத்தோடு வரும் மாணவர்கள்.இன்முகத்தோடு காலை வணக்கம் செலுத்தும் மாணவர்கள். குறைவான மாணவர்கள் இருந்தாலும் அணிவகுப்பின் நேர்த்திக்கு குறைவில்லை!“நீ ஏன் அந்த மாணவியுடன் பேசினாய்” என்று ஆண் மாணவர்களுக்கு தண்டனை கொடுக்கின்றன தனியார் பள்ளிகள். ஆனால், ஆண் – பெண் பேதமின்றி அருகருகே உட்கார வைத்து சமத்துவத்தைக் கற்றுக்கொடுக்கிறது அரசுப் பள்ளிகள்.ஏழெட்டு பேர் பைக்குகளில் சாகசம் காட்டுவது, வானத்திலிருந்து பாதுகாப்பாக கடலில் விழுவது என ’சாகசங்களுக்காக’ பல கோடி ரூபாய்கள் செலவு செய்து கோட்டைகளில் குடியரசுத் தினம் கொண்டாடப்படுகிறது. மறுபுறம், கரும்பலகைக்கு பெயின்ட் அடிக்கக்கூட வழியில்லாமல் இருந்தாலும் உற்சாகமாய்க் குடியரசைக் கொண்டாடும் அரசுப் பள்ளிகள்.நீங்கள் நினைவுகூறும் பள்ளிப் பருவத்தின் இனிமைகளை உங்கள் குழந்தைகளும் சுவைக்க வேண்டுமா? வாருங்கள், அரசுப் பள்ளிகளை நோக்கி…இன்றைய செய்தி, அறிவிப்புகள், பிறந்த நாள் வாழ்த்து எல்லாம் காலை வணக்க நிகழ்வில் உண்டு. பங்கேற்பதற்கு அனைவருக்கும் வாய்ப்பும் உண்டு.
படங்கள்: துன்மதி குமரவேல்
நீங்களும் புகைப்படம் அனுப்ப வேண்டுமா? அடுத்த வாரம் விளையாடும் குழந்தைகள் எனும் தலைப்பில் படமெடுத்து அனுப்புங்கள்! விவரங்களுக்கு இணைப்பை அழுத்துங்கள்!
ஆர்.எஸ்.எஸ். தமிழக தலைமையும், துக்ளக் குருமூர்த்தி சூப்பர் தலைமையும் இணைந்து,10-வது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி 2019, ஜனவரி 30 முதல் பிப்ரவரி 4 வரை சென்னையில் நடத்தின. சென்னை தாம்பரம் வேளச்சேரி சாலையில் 20 ஏக்கர் பரப்பளவுள்ள குருநானக் கல்லூரி வளாகத்திற்குள் 400 கடைகளை உள்ளடக்கியது இக்கண்காட்சி. அப்பட்டமான பிற்போக்கு சிந்தனை – பண்பாடுகளை முன்னிறுத்தும் இக்கண்காட்சிக்கு அனைத்து நாளிதழ்களும் போட்டி போட்டுக் கொண்டு செய்தி வரிசையில் இலவச விளம்பரங்களை அளித்தன.
ஜீவராசிகளை பேணுதல், பெற்றோர் பெரியோர் மற்றும் ஆசிரியரை வணங்குதல், பெண்மையை போற்றுதல், சுற்றுச்சூழலை பராமரித்தல், நாட்டுப்பற்று வளர்த்தல், வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல், என்ற தலைப்புகளில் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தேறின. தலைப்புக்கள் இப்படி இருந்தாலும் ஒவ்வொன்றிலும் இந்துத்துவாவின் மறைமுக பார்ப்பனிய பிற்போக்குத்தனங்கள் அப்பட்டமாக இருந்தன.
மராட்டியம், கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தெலுங்கானா, குஜராத் மற்றும் தமிழகத்தின் சாதிய அமைப்புகள் அனைத்தும் அங்கு கடை போட்டன. தமிழ்நாட்டில் உள்ள கொங்கு வேளாளர், ராஜ கம்பளத்தார், மறவர், வெள்ளாள முதலியார், கவுண்டர், வன்னியர், இன்னும் தமிழகத்தின் பல சாதி அமைப்புகளும் தங்களுடைய சாதிய பராக்கிரமங்களை பல்வேறு மாடல்களில் கடைவிரித்தன.
(பெரிதாகப் பார்க்க படத்தின் மீது அழுத்தவும் )
இந்நிகழ்ச்சியை காண நாம் சென்றபோது அங்கு கண்டகாட்சி நம்மை திடுக்கிட வைத்தது. நடைபயில ஆரம்பிக்கும் பள்ளி குழந்தைகள் இருந்து பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை ஏறக்குறைய கூட்டத்தில் பாதிப்பேர் பள்ளி சீருடையில் வந்திருந்தனர். உயர்ஜாதி கல்லூரி மாணவர்கள், இளம் பெண்கள் கேன்டீனில் வாங்கிய டில்லி அப்பளத்தை கடித்துக் கொண்டு சுற்றிக்கொண்டிருந்தனர். வயதான மாமிகளும் கறுப்பு சூத்திரர்களும் ஆன்மீகத்தை தேடி இங்கும் அங்கும் அல்லாடிக் கொண்டிருந்தனர்.
நவராத்திரி பூஜை, ஸ்ரீ கிருஷ்ண சம்ஸ்கார யோகா, பாரதிய சம்ஸ்கார, பரதமுனிவர் நடனம், விநாயகர் அகவல், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், நாம சங்கீர்த்தனம், திருவிளக்கு பூஜை, லலிதா சகஸ்ரநாம பாராயணம், மங்கள தீர்த்தம், கலச யாத்திரை என்று தெருகோடி கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நிரல்கள் மொத்தம் ஆன்மீக மற்றும் சேவை நிகழ்ச்சியாக நடந்து கொண்டிருந்தது. அறிவியல், சுதந்திரம், பண்பாடு, என்று வார்த்தைகளைத்தூவி பல்வேறு பார்ப்பன, ஆதிக்க சாதிய பெருமைகள் ஒலி, ஒளி காட்சியாக ஓடிக்கொண்டிருந்தன.
கார்ப்பரேட் சாமியா ரவிசங்கரின் வாழும் கலை மகாமித்தியங்கள், ஜக்கி வாசுதேவ் ஈஷா யோகா வகைப்பட்ட சூட்சுமங்கள், மாதா அமிர்தானந்தமயி-யின் சென்டிமெண்ட் கட்டிப்பிடி வைத்தியங்கள், ஆர்.எஸ்.எஸ்.-ன் பழங்குடி அமைப்பான வனவாசி சேவா கேந்திராவின் காட்டுக்குள்ளே இந்துத்துவா…. இந்தப் பெரிய கம்பெனிகளோடு சென்னை அசோக்நகர் ஆஞ்சநேயர் பக்த சபா, ஸ்ரீ பூர்ண மகா மேரு டிரஸ்ட், பிரணவ ஆசிரமம், இந்து தர்மா வித்யாபீடம், சம்ஸ்கிருத பாரதி, ஸ்ரீ ஓம்காரம் இறை பணி மன்றம், இப்படி பல நூறு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு சில்லறை அமைப்புகள் தமிழகத்தின் பலமூலைகளிலிருந்து வந்து இந்துத்துவ பார்ப்பனியத்தின் மகிமையை மணம் பரப்பின. கூடவே யோகக்கலையை இரண்டு வினாடியில் கற்றுக் கொள்வது எப்படி? உடலின் அனைத்து உபாதைகளையும் மூச்சுப் பயிற்சியில் தீர்த்துக்கொள்வது எப்படி? என்று பாடம் எடுத்தனர்.
ஞானோதயம் யோகா, உடல் பாதுகாப்பு உயர்தவம், ஆனந்தம், இறைநிலை, முக்தி அடைவது எப்படி? அதற்கு தேவைப்படும் காலம் பணம் எவ்வளவு என்று விளக்கம் கொடுத்தனர். அஸ்வினி யோகி என்ற பெண் தொண்டர், தன் உடலை வளைத்து நிகழ்த்தும் யோகக்கலையை பல்வேறு கோணங்களில் படம் பிடித்து வழவழ தாள்களில் விநியோகித்தனர்.
பழந்திருக்கோயில்களில் திருப்பணி சங்கம், தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு என்று திடீர் அமைப்பினர் நமது பாரம்பரியமான திருக்கோயில் கோபுரத்தில் காவி கொடியை பறக்கவிட வேண்டும், கிராமப்புறங்களில் கோயில் இல்லாத இடங்களில் திருக்கோயில்களில் கட்டித்தர வேண்டும் அதற்காக அரசாங்கம் நிதி ஒதுக்க வேண்டும், ஒவ்வொருவரும் நம் குலதெய்வ கோயிலை மீட்போம், இந்துக்கள் அனைவரும் ஒன்றாக இருந்து இந்து சாம்ராஜ்யம் படைத்திடுவோம், என்று இவர்கள் தினுசு தினுசாக பயமுறுத்தினர். இந்த இந்து திருக்கோயில் கூட்டமைப்புகள் எந்த அரசியல் சார்ந்தது இல்லை என்று பல கலர்களில் பிரசுரம் வினியோகித்து பேசிப்பார்த்தால் தங்களை அப்பட்டமான அம்பி சங்கிகளாக காட்டிக் கொண்டனர். ஐயரு மரு வெச்சு மாறு வேசத்துல வந்து பேசுறாராம்.
கண்ணன் வழி நடப்போம் காமதேனுவாக பசுக்களை பேணி பராமரிப்போம், ‘அர்ஜென்ட் டு சேவ் கவ்ஸ்’, இலாபகரமாக கோசாலை ஒரு வழிகாட்டி, பஞ்சகவ்விய பொருட்கள் தயாரிப்பு முறைகள், வாஸ்து தோஷம் நீக்கி லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும் கோமதி சக்கரம், கோமாதா பசுவின் சக்தி இந்த கோமதி சக்கரத்தில் உள்ளதால் புண்ணியம் கிடைக்கும்,அயோத்தியா, மதுரா, ஹரிதுவார், காசி, காஞ்சி, துவாரகை போன்ற ஏழு சாஸ்திரங்களை வணங்கிய பலன் கிடைக்கும் என்று வந்திருக்கும் மக்களை கவர இன்ஸ்டன்ட் ஆன்மீக பலன்களை அள்ளி விட்டனர். இரண்டே நிமிடத்தில் மாகி நூடில்ஸ் போல, ப்ரூ காஃபி போல இரண்டே மணிநேரத்தில் இந்தக் கண்காட்சியில் சுற்றினால் நமது நனவிலி மனதில் இந்துத்துவம் வேராய் நுழைவது உறுதி.
தயாரிக்க தேவையான பொருட்கள் கோமூத்திரம் 2 லிட்டர், இதே மாதிரி ஷாம்பு தயாரிக்க தேவையான கோமூத்திரம், கோமூத்திரத்தில் உள்ள தாதுப் பொருட்கள், பசு பாதுகாப்பு மற்றும் பசு பொருள் தயாரிப்பு பயிற்சி ஆலோசனை மையம் என்று கண்காட்சியில் மூத்திரத்தை ஏமாந்தவர்களின் தலையில் கட்டினர்.
அடுத்து பியூர் பிரேயர் செய்வது எப்படி? தன்வந்திரி ஹோமம், நவ சண்டி ஹோமம், சுத்த புருஷ ஹோமம் செய்வது எப்படி? என்று தெரிந்துக் கொள்ள ஶ்ரீ யூ ட்யூப் சேனலை இலவசமாக பாருங்கள்! அதில், சபரிமலை உட்பட பல கோயில்களில் ஐதீகங்கள் உடைக்கலாமா? இந்து தெய்வங்கள் அவமானப் படுத்தலாமா? சங்க இலக்கியங்களும் இதிகாசங்களும் திருமுறைகளும் வேதங்களும் சிதைக்கலாமா? இந்து ஆலயங்கள் சூறையாடப்படலாமா? இந்துப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்யும் மோசடி நடக்கலாமா? ஆசை காட்டி அச்சுறுத்தி ஏமாற்றி அப்பாவி இந்துக்கள் மதம் மாற்றபடலாமா?
நம் தாய்மொழி அழிவதை கண்டுகொள்ளாமல் விட்டு விடலாமா ? இந்து வேறு தமிழ் வேறு என்பது சரியா? விடை காண ஶ்ரீ யூ ட்யூப் டிவி சேனலில் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், என்று போவோரை வழி மறித்தனர்.
அடுத்த கடையில், நவகிரக ஸ்தலங்களைப் பார்க்க விரும்புவோர் கீழே உள்ள எண்ணுக்கு அழைக்கவும் என்றனர். அடுத்தக் கடையில் 10 நாளில் சமஸ்கிருதம் கற்றுக்கொள்வது எப்படி? கட்டணமும் இல்லை! சமஸ்கிருத மொழியில் முன் அனுபவமும் தேவை இல்லை! என்றனர்.
எந்தப் பக்கம் திரும்பினாலும் விடுவதாக இல்லை. சுவாமி விவேகானந்தா ‘ரூரல் டெவலப்மெண்ட் அண்ட் எஜிகேசன். அவைல் டேக்ஸ் எக்ஸம்சன்‘ கடைகள். 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனிவாச பெருமாள் ஆலய திருப்பணிக்கு கைங்கரியம் கொடுங்கள் 10,000 வழங்குபவர் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்படும் என்று சொல்லும் கடைகள்.
யாருமே அறியாத சிவரகசியம்! இன்புற வாழ மனிதனுக்கு அறிவு போதாது! இந்த தத்துவமும் அடங்கிய 10 சிடி, சிறப்பு சலுகை ஆயிரம் ரூபாய் இல்லை, வெறும் 400 ரூபாய்! என அழைக்கும் கடைகள். ஸ்ரீ லட்சுமி இயற்கை மூலிகை ஒரு மண்டலம், 48 நாட்கள் அருந்தி வர கிடைக்கும் பயன்கள்! அவற்றை ருசி பார்க்க சாம்பிள் கொடுக்கும் கடைகள்.
அகில உலக இந்து சேவா சேனாவில் இந்து திருக்கோயில் இறைப்பணி, சித்த மருத்துவம், தற்காப்பு, பாரம்பரிய கலைகள், இயற்கை வாழ்வியல், சட்ட விழிப்புணர்வு, மனித உரிமை பெற அனைத்து இந்து சமூகத்தை சார்ந்த ஆர்வலர்கள் மற்றும் இறை பக்தர்கள் அனைவரும் தங்களையும் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் அகில உலக இந்து சேவா சேனாவில் இணைந்து இறைத்தொண்டு புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம். உடனே அடையாள அட்டை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்! என்று அழைக்கும் கடைகள்.
ஓம் நமோ நாராயணி ஸ்ரீ நாராயணி பீடம். ஸ்ரீ நாராயணி மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்… இப்படிக்கு ஸ்ரீநாராயணி பக்த சபா. என்று அறிவிக்கும் கடைகள். கோயில் இறைவன் கோயில் இறைப்பணி செய்ய கீழ்கண்ட வங்கிகளில் காணிக்கை செலுத்துங்கள். இப்படிக்கு பழந்திருக்கோயில்கள் திருப்பணி சங்கம், சிவாலயங்களில் விளக்கு ஏற்றும் குழு.. என்று முகவரி கொடுக்கும் கடைகள்.
இவ்வளவு நாளும் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கைலாச நாதர் கோயில் திருச்சி ஶ்ரீரங்கம் கோயில் குளங்களைச் சுற்றிப் போடப்பட்ட கடைகளை மொத்தமாக வாரி வந்து ஆன்மீக மற்றும் சேவைக்கண்காட்சி என்று நிரப்பி விட்டனர். உண்மையில் அவர்களது நோக்கம் எல்லா சாதிய சங்கங்களுக்கு கடை விரித்துக் கொடுப்பதுதான்! அதன் மூலம் அவர்களைத் தங்கள் அடியாளாக பயன்படுத்துவதுதான்! அதை கறுப்பு சூத்திரர்களிடமிருந்து மறைக்க இந்த கண்கட்டு வித்தை. ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் தங்களை மறைக்க முகத்தில் மரு ஒட்டியிருந்தாலும் வழக்கம்போல் தங்கள் கொண்டையை மறைக்க மறந்து விட்டார்கள்!
கண்காட்சியை சுற்றி வந்த நாம் நமக்கும் ஒரு கடை வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கண்காட்சி நிர்வாகியிடம் பணிவாக பிட்டுப் போட்டோம். அவர் நீங்கள் எந்த ஊர் என்று விசாரித்து சரி உங்கள் பெயரில் ட்ரஸ்ட் பதிவு பண்ணியிருக்கீறீர்களா? அது இருந்தால் இங்கு நுழையலாம் அப்படி வந்துவிட்டால் கடைக்கு வாடகை கிடையாது. மொத்தமும் இலவசமாக கிடைக்கும். கடையில் வேலைச் செய்யும் இருவருக்கு தினமும் சாப்பாடும் இலவசம். அப்படி இல்லையென்றால் நீங்கள் குறைந்தது ஏதாவது தர்ம காரியங்கள் செய்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு உழவாரப்பணி போல் கோயில் பராமரிக்கும் பணி இப்படி ஏதாவது செய்திருந்து அதற்கு போட்டோ அல்லது ஏதாவது அதற்கு அத்தாட்சி (விளம்பரம் நகல்) இருக்க வேண்டும். அப்படியிருந்தால் நீங்கள் மொத்தமாக வெறும் 5,000 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். ஆனால், இப்போதே அதற்கான அப்ளிகேஷன் கொடுத்தால்தான் அடுத்த கண்காட்சியில் இடம் கிடைக்கும்.
நாங்களும் உங்களைப்பற்றி முழுமையாக விசாரித்து தான் (உள்ளூர் சங்கிகளின் அத்தாட்சி கடிதம் அவசியம்) முடிவெடுப்போம். ஏனென்றால் போன ஆண்டு கண்காட்சி நடத்துவதற்கு எங்களுக்கு ஆன செலவு வெறும் இரண்டரைகோடி (ரூபாய்) தான் இந்த ஆண்டு செலவு ஐந்து கோடி ஆகி விட்டது! நாங்களும் சமாளிக்க வேண்டும் இல்லையா? எல்லாவற்றுக்கும் ஸ்பான்சர்வாள்தான் செய்கிறாள்.
எதுவும் இங்கு மறைவாக கிடையாது. எல்லாவற்றுக்கும் ப்ளக்ஸ் அடித்து இங்கு வைத்திருக்கிறோம் பாருங்கோ… என்றார். என் போன் நம்பர் இதுதான் மேற்கொண்டு பேசுவோம் என்றார். சரி என்று நாமும் விடைபெற்றோம்!
வெளியில் அந்த பிளக்ஸ் பேனரைத் தேடினோம். உண்மையாகவே இருந்தது. ஆனால், அந்த கணக்கு உண்மையா என்று தெரியாது! அப்படியே அங்கு நிறுத்தியிருந்த பல ரதங்களை பார்த்து பிரமித்தோம். நாம் வீட்டு வாசலில் நாம் செருப்பு விடுவதுபோல் ஒவ்வொரு சாமியாரும் அவர்கள் வந்ததற்கு அடையாளமாக ஒரு ரதத்தை நிறுத்தியிருந்தனர். அதில் அமர்ந்திருந்த அந்த ரத ஓட்டுனரிடம் (டிரைவர்) பேச்சுக் கொடுத்தோம். ஒருவருக்கும் தமிழ் புரியவில்லை. இந்தி, தெலுங்கு என்று பல பாஷைகளில் நம்மை விசாரித்தனர். கடைசியில் தெலுங்குக்காரர் நம்மிடம் மாட்டினார். பேசினோம்.
ஈ வண்டி ஏ மாடல்? ஈ வண்டி அந்தும் பெநத்த மாடல் எய்சர். ஈ வண்டி டப்பு எந்த தேலுசா? 10 லேக்ஸ்! அன்னி ஈ டேகரேசன் 20 லேக்ஸ்! மா ஊரு தெலுங்கானா. ஈ வண்டி ஆ கவமெண்ட் சப்ளை சேசின்னு.. மா க்கூட கவர்மர்ன்ட் ஸ்டாப். என்று பாதி ஆங்கிலத்தில் கலந்து நமக்கு புரிய வைத்தார்.
ஒரு ரதத்திற்கு இருபது இலட்சம் செலவழிக்கும் இந்த காவி பண்ணையார்கள் மக்களிடம் உண்டியலில் காசு வசூலித்து கட்சி நடத்தும் கம்யூனிஸ்களைப் பார்த்து, கிண்டல் செய்வதற்கு ஒரு அடிப்படை நியாயம் இருக்கிறதல்லவா! மெல்ல அங்கிருந்து நடையைக் கட்டினோம்.
வரும் வழியில் பல காட்சிகள் மனதில் ஒடின! கண்காட்சியில் பசு புனிதம் பற்றி விளக்கி காட்சிக்கு வைத்திருந்த பல படங்களில் நாட்டில் வாழும் மொத்த சூத்திரர்களையும் பசு மாதாவின் ரத்தத்தைக் குடிக்கும் அசுரர்கள் போல் காட்சிப்படுத்தியிருந்தனர். அவர்களின் கண்காட்சியின் அஜெண்டா நமக்கு தெளிவாக புரிந்தது. அவர்கள் கொண்டையை வழக்கம் போல் ஆன்மீகம், சேவைக் கண்காட்சி என்ற வார்த்தைகளைக் கொண்டு மறைக்கிறார்கள்.
எடப்பாடியின் ஆட்சியில் எட்டுத் திக்கும் சங்கிகள் வளர்கின்றனர். அடுத்த ஆண்டு இந்த கண்காட்சியை முற்போக்கு அமைப்புகள் அனைவரும் சேர்ந்து மக்களை அணிதிரட்டி மூடுவதற்கு வழி உண்டா என்று பார்க்க வேண்டும். இல்லையேல் சாதா இந்துக்கள் சங்கி இந்துக்களாக மாற்றப்படுவார்கள், எச்சரிக்கை!
பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட உரிமைச் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்யக் கோரி மதுரையில் எதிர்வரும் பிப்ரவரி 08, 2019 வெள்ளிக்கிழமை அன்று மாலை 05:00 மணியளவில் கண்டனக் கூட்டம் நடைபெற உள்ளது.
மக்கள் சிவில் உரிமைக் கழகம் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் இணைந்து நடத்தும் இந்த கண்டனக் கூட்டம், மதுரை மாநகர், கே.கே.நகரில் உள்ள கிருஷ்ணய்யர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
அறிவிக்கப்படாத அவசர நிலை – அச்சமின்றி ஓரடி முன்னால் …
பீமா கோரேகன் பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட உரிமை செயல்பாட்டாளர்களை விடுதலை செய்! வழக்கை ரத்து செய்!
ஐ.ஐ.எம். பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டெவை கைது செய்யாதே!
பாசிச ஊஃபா (UAPA) சட்டத்தை நீக்கு!
அடக்குமுறைக்கு அஞ்சாமல் எதிர்த்து நிற்போம்!
கண்டனக் கூட்டம்
இடம் : கிருஷ்ணய்யர் அரங்கம், கே.கே.நகர், மதுரை.
நேரம் : பிப்ரவரி 08, 2019, வெள்ளிக் கிழமை , மாலை 05.00 மணி
நிகழ்ச்சி நிரல்
தலைமை : பேராசிரியர் முரளி வரவேற்புரை : பேரா.கிருஷ்ணசாமி
உரை :
எழுத்தாளர் லிபி ஆரண்யா
வழக்கறிஞர்.நாகை.திருவள்ளுவன்
எழுத்தாளர் முத்து கிருஷ்ணன்
வழக்கறிஞர் வாஞ்சி நாதன்
நன்றியுரை: பேரா.சீனிவாசன்
*****
நண்பர்களே,
பீமா கொரேகான் வழக்கில், பிப். 2, 2019 அன்று அதிகாலையில் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே கைது செய்யப்பட்டு, தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளார். பிப்.12-க்குப் பின் மீண்டும் கைதாக வாய்ப்புள்ளது. பாஜக – ஆர்எஸ்எஸ்-ன் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தியா முழுவதுமுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட் 28, 2018 அன்று மக்கள் உரிமை செயல்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், வெர்னான் கன்சால்வேஸ், அருண் பெரெய்ரா, கவுதம் நவ்லகா, எழுத்தாளர் வரவர ராவ் ஆகியோரும் பீமா கொரேகான் வழக்கில், ஊபா(UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பீமா கொரேகான் நிகழ்வு : 1818, ஜனவரி 1 அன்று மகாராட்டிர மாநிலம் பீமா கொரேகானில் நடந்த போரில், ஆங்கிலேயப் படையில் இணைந்த தலித் மக்கள் தங்களைக் காலம் காலமாக ஒடுக்கிவந்த, மேல்சாதி பேஷ்வா ஆட்சியாளர்களை வென்றார்கள். அந்தப் போரின் 200-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு, கடந்த டிசம்பர் 31, 2017 அன்று நூற்றுக்கும் மேலான தலித் – மனித உரிமை – தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் முற்போக்காளர்களை உள்ளடங்கிய எல்கர் பரிசத்(Elgar Parisad) அமைப்பால் நடத்தப்பட்டது. எல்கர் பரிசத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி. பி. சாவந்த், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கோல்சே படேல் ஆகியோரும் உறுப்பினர்கள்.
சாதி ஆதிக்கத்துக்கு எதிராக லட்சக்கணக்கான தலித் மக்களும் – முற்போக்காளர்களும் இணைந்து பங்கேற்கும் நிகழ்வாக பீமா கொரேகான் வளர்வதைக் கண்டு அச்சமுற்ற ஆர்.எஸ்.எஸ் – பாஜக, சாதிப் பிரச்சனையைத் தூண்டி தனது பினாமி அமைப்புகள் மூலம் ஜன 1, 2018 அன்று நிகழ்வில் பங்கேற்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக் கணக்கானோர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, வன்முறை நிகழ்த்தியவர்களை விட்டுவிட்டு, ஆர் எஸ் எஸ் – பாஜக-வை அரசியல் ரீதியாக எதிர்ப்போரை குறிவைத்து ஓராண்டுக்குப்பின் வழக்கில் சேர்த்துக் கைது செய்கிறது.
இந்தக் கைதுகள் எளிதில் கடந்து போகக் கூடியவை அல்ல. பீமா கொரேகான் போன்ற பொய் வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட பேராசிரியர் சாய்பாபா ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் உள்ளார். வழக்கு, கைதின் வதை குறித்து பேரா. ஆனந்தின் வார்த்தைகளைக் கேளுங்கள்…
“என்னுடைய நம்பிக்கை முற்றிலும் நொறுங்கியிருக்கிறநிலையில் புனே நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றம் வரை பிணையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை இந்தக் கைது என்பது கடுமையான சிறை வாழ்க்கை மட்டுமல்ல, அது என்னுடைய உடலில் ஒரு பகுதியாகிவிட்ட லேப் டாப் – இடமிருந்து என்னை பிரித்து வைக்கும், என்னுடைய வாழ்வின் பகுதியாக உள்ள நூலகத்திடமிருந்து என்னை பிரித்துவிடும். பாபாசாகேப் அம்பேத்கரின் பேத்தியான என்னுடைய மனைவி, கடந்த ஆகஸ்டு மாதத்திலிருந்து, எனக்கு நடந்து கொண்டிருப்பவற்றை அறிந்து மிகுந்த துயருற்றிருக்கிறார்.
ஏழ்மையிலும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வருகிற நான், அறிவார்ந்த சாதனைகள் மூலம் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் தேர்ச்சி பெற்றேன். என்னை சூழ்ந்துள்ள சமூக முரண்பாடுகளை கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் ஆடம்பரமான வாழ்க்கை எனக்கு எளிதாகவே கிடைத்திருக்கும்.
இருப்பினும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான உணர்வுடன், குடும்பத்தை இயக்குவதற்கான பொருளீட்டினால் மட்டும் போதும் என முடிவு செய்து, என்னுடைய நேரத்தை அறிவார்ந்த பங்களிப்பு செய்வதற்கு ஒதுக்கினேன். இந்த உலகத்தை சற்றே மேம்படுத்த என்னால் சாத்தியமானது இதுதான்.
எந்த நாட்டுக்காக என்னுடைய தொழில்முறை வாழ்க்கை முழுவதும் உழைத்தேனோ அதே நாட்டின் அரசு இயந்திரம் எனக்கு எதிராகத் திரும்பும் என்று மோசமான கனவிலும்கூட நான் நினைத்து பார்த்ததில்லை.
இந்த நாட்டை சமத்துவமற்ற உலகமாக மாற்றிக்கொண்டிருக்கும் திருடர்களையும் கொள்ளையர்களையும் பாதுகாக்கும் அரசு இயந்திரம், அப்பாவி மக்களை குற்றவாளிகளாக்கி பழிவாங்குகிறது. சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவில், ஜனநாயகத்தின் அத்தனை கண்ணியத்தையும் பின் தள்ளிவிட்டு அரசை விமர்சிப்பவர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு சுமத்தப்படும் மிக மோசமான சதி குற்றச்சாட்டு இதுவாகத்தான் இருக்கும்.
இப்போது பீமா கோரேகன் வழக்கு மிக முக்கியமான கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது. என்னுடைய அப்பாவித்தனமான நம்பிக்கைகள் அனைத்தும் உடைந்து போயுள்ளன. நான் உடனடியாககைது செய்யப்படலாம்என்பது துயரத்தைத் தருகிறது. இது போன்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே ஒன்பது பேர் சிறையில் இருக்கிறார்கள். சட்ட நடைமுறைகளால் அவர்கள் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். என்னைப் போல அல்லாமல், அவர்கள் உங்களிடம் உதவி கேட்கும் வாய்ப்பைப் பெறவில்லை.
நீங்கள் எனக்கு ஆதரவாக என்னுடன் நிற்பது எனக்கு மட்டுமல்ல, என்னுடைய குடும்பத்துக்கும் ஆற்றலை அளிக்கும். அதோடு, இந்தியாவில் தங்களுக்கு எதிராக குரல் எழுப்பும் மக்களை சித்திரவதை செய்யும் பாசிச ஆட்சியாளர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லும்.
எனவே, தயவுசெய்து கையெழுத்து இயக்கத்தை ஒருங்கிணையுங்கள், அறிக்கைகளை வெளிவிடுங்கள், கட்டுரைகள் எழுதுங்கள் … உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு வழிமுறையில் இந்த படுமோசமான செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பொதுமக்களின் சீற்றத்தை வெளிப்படுத்துங்கள்.”
பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே மேற்கண்டவாறு ஓர் உருக்கமான, எதார்த்தமான கடிதத்தை நாட்டு மக்களின் பார்வைக்கு முன்வைத்துள்ளார். அறிவுத்துறை சார்ந்த உரிமை செயல்பாட்டாளர்களின் குரல்வளையை நெறிக்கும் பாசிசப் போக்கை எதிர்த்து அச்சமின்றி ஓர் அடி முன் வைப்போம். வாருங்கள் நண்பர்களே !
இவண்
மக்கள் சிவில் உரிமைக் கழகம்(PUCL), தொடர்புக்கு :94438 52788
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்(PRPC), தொடர்புக்கு :73393 26807
சின்னத்தம்பி என்று பேர்வைக்கப்பட்ட யானை இன்னும் உயிரோடிருப்பதால் ஒருவாரமாக லைவிலும் நம் டைம்லைன்களிலும் விடாப்பிடியாக பொறுமையாக யாருக்கும் தொந்தரவின்றி நடந்துகொண்டேயிருக்கிறான். இல்லையென்றால் சின்னத்தம்பிக்கான கவன ஆயுள் ஒன்றரை நாள்தான்.
பொதுவாக இப்படியெல்லாம் ஆவதில்லை. தன் வழித்தடங்களை இழந்துவிட்ட சின்னத்தம்பிகள் தண்டவாளங்களில் சிக்கியோ ரயில்மோதியோ, மின்வேலிகளைத் தீண்டியோ மரணிப்பதுதான் வழக்கம். கோவைப்பகுதியில் அப்படி தன் குட்டிகளோடு மரணித்த எத்தனையோ சின்னத்தம்பிகளின் கதைகள் உண்டு.
பேர்தான் பேருயிர்… ஆனால் மிகமிக அவமானகரமான மரணங்கள்தான் நம்முடைய யானைகளுக்கு நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. சின்னதம்பிக்கு அப்படி எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் சிலநாள்களாக மனம் பதைபதைக்கிறது.
கோவை – வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்துள்ள பிரம்மாண்டமான ஈஷா யோகா மையம்
பிரதமர் தொடங்கி முதலமைச்சர் வரை ஆதரவு திரட்டி காடுகளை வளைத்துப்போட்டு ஆன்மிகம் வளர்க்கிற ஜக்கி காருண்யா மாதிரியான பெரியதம்பிகளின் மெகா ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்காமல் விட்டால் இன்னும் பல சின்னத்தம்பிகளும் இப்படி திக்குத்தெரியாது நாட்டில் அலைய நேரிடும். போலவே, எல்லா சின்னத்தம்பிகளுக்கும் இப்படி பிழைத்திருக்கும் வாய்ப்புகளும் அமையாது.
வன ஆக்கிரமிப்புகள் பற்றியும், யானை வழித்தடங்கள் குறித்தும், காட்டுயிர் குறித்த சிந்தனைகள் குறித்தெல்லாம் நிறைய நிறைய உரையாடுவதற்கான வாய்ப்பை சின்னத்தம்பி உருவாக்கியிருக்கிறான். ஆனால், சின்னத்தம்பியும் இன்னுமொரு டிக்டொக் வைரல் வீடியோவாகவே நம்மிடம் கடந்துசெல்கிறான். காட்டுயிர்களுக்கான வாழ்விட உரிமை குறித்த விவாதங்களை கிளப்பியிருக்க வேண்டிய சின்னத்தம்பியின் கதை வணிக பரபரப்புகளுக்கானதாக மட்டுமே மாறியிருக்கிறது.
அது எப்படி பெருவணிக நிறுவனங்களின் மதபிரச்சார சங்கங்களின் வன ஆக்கிரமிப்புகள் பற்றி ஒருவார்த்தைகூட பேசாமல் சின்னத்தம்பி பற்றி 24 மணிநேரமும் நம்மால் பேச முடிகிறது?
சின்ன தம்பி…. காடுகளின் பேருயிரான யானைகளின் வாழ்வு எவ்வளவு பரிதாபத்திற்குரியதாகவும், போராட்டத்திற்குரியதாகவும் மாறியிருக்கிறது என்பதற்கு நம் கண்முன்னே… நிறுத்தப்பட்டிருக்கும் துயர்மிகுந்த சாட்சி. மயக்க ஊசியால் அதன் நினைவை சிதைத்து, பொக்லைனால் தந்தங்களை உடைத்து, கும்கியால் உடலை கிழித்து ஏதோ… அடிமைகளை வதைத்து நாடு கடத்துவதைப் போல, அந்த கம்பீரமான காட்டு யானையை அதன் வாழ்விடத்திலிருந்து அகற்றிய காட்சி, யானைகளுக்கு எதிராக தொடரும் அரக்கத்தனத்தின் நீட்சியாக ஊடகங்களில் பதிவாகியிருக்கிறது.
அத்தனை கொடூர வதைகளுக்குப் பிறகும், அந்த யானை தன் வாழ்விடம் தேடி தவிப்போடு அலைகிறது. ஒவ்வொரு நாளும் அதைப் பற்றி வரும் செய்திகள் பதைபதைக்க வைக்கும் வேளையில் இதே போன்ற முயற்சிக்கு சில ஆண்டுக்கு முன் பரிதாபமாக பலியான மதுக்கரை மகாராஜா நினைவில் வந்து அச்சுறுத்துகிறது. சின்ன தம்பியை அதன் போக்கில் விட்டால் மனிதர்களுக்கு ஆபத்து என்று பதறுகிறார்கள் சிலர். சின்ன தம்பியை அதன் இடத்திலேயே விட்டுவிடுங்கள் என்று கதறுகிறார்கள் சிலர். ஒற்றை ஆளாக ஒட்டுமொத்த தமிழகத்திலும் உணர்வுப் போராட்டைத்தை மூட்டியிருக்கிறது சின்ன தம்பி. ஏன் இந்த அவலம்.? இது சின்ன தம்பிக்கு மட்டுமான பிரச்னையா? இல்லை, சின்ன தம்பியால் மட்டுமே வந்த பிரச்னையா?
சூழலியலாளர் சலீம் அலி இவ்வாறு எழுதுகிறார்… ‘மலை இறங்குவதும், ஏறுவதும் யானைகளின் அடிப்படை குணம். அவை ஒரே இடத்தில் நிலையாக வாழக்கூடியவை அல்ல. மனிதர்களில் நாடோடிகள் போல, யானைகள் காடோடிகள்! ஆனால், ‘ஊருக்குள் புகுந்து மிரட்டும் யானைகள்’ என்றும், ‘யானைகள் அட்டகாசம்’ என்றும் தொடர்ந்து யானைகளை மனிதர்களின் எதிரிகளாகச் சித்திரித்துக் கொண்டிருக்கிறோம். மக்களோ, பயிர் வயல்களில் நுழைந்துவிட்ட யானைகளை விரட்டியடிக்கிறார்கள். பயிர்கள் நாசமான விவசாயிகள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வேதனையில் யானைகள் மீது சினம்கொள்கின்றனர். ஆனால், இவர்கள் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டிய உண்மை ஒன்று உள்ளது. யானைகள் ஒன்றும் பொழுதுபோகாமல் ஊருக்குள் ‘வாக்கிங்’ வரவில்லை.
அவற்றுக்கு உணவு வேண்டும். அத்தனை பெரிய உடலின் முழுமையான இயக்கங்களுக்கு, ஒரு யானைக்கு நாளன்றுக்கு சுமார் 200 கிலோ உணவு தேவைப்படும். அந்த அளவு உணவு காட்டில் கிடைக்காதபோது, அவை நகர்ந்து வேறு இடங்களுக்கு வருகின்றன. இந்த எளிய உண்மையை நாம் தொடர்ந்து மறுத்துவருகிறோம்.
கடந்த 15 ஆண்டுகளாக தமிழக வனப்பகுதியில், வனவிலங்குகளைப் பாதுகாக்க கடுமையான சட்டங்கள் இயற்றி, அதைக் கறாராக நடைமுறைப்படுத்தியும் இருக்கிறார்கள்.
பொதுமக்கள் காடுகளுக்குள் நுழைவது பல அடுக்குகளில் கட்டுப்படுத்தப்படுகிறது. துப்பாக்கி உரிமங்கள் தொடர்ந்து குறைக்கப்படுகின்றன. இதன் விளைவாக தமிழகக் காடுகளில் ‘வேட்டை’ என்பது கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டு, வனவிலங்குகளின் எண்ணிக்கைப் பெருகத் தொடங்கியுள்ளது. இந்த அம்சத்தில் வனத்துறை வெற்றி பெற்றுள்ளது. ஆனால், விலங்குகளின் எண்ணிக்கைப் பெருக்கத்துக்கு ஏற்ப, அவற்றுக்கான மேய்ச்சல் நிலங்கள் பெருகவில்லை. ஒரு யானையின் மேய்ச்சலுக்குத் தோராயமாக 2 ஏக்கர் தேவை என்று வைத்துக்கொள்வோம். புதிதாக 300 யானைகள் உருவாகியுள்ளன என்றால், 600 ஏக்கர் தேவை. ஆனால், நம்மிடம் உள்ள காடுகளின் பரப்பளவில் மாற்றம் இல்லை. சொல்லப்போனால், பல இடங்களில் தேயிலை எஸ்டேட், ரியல் எஸ்டேட் என்று அவை அழிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், குறைந்த மேய்ச்சல் நிலத்தை அதிக யானைகள் பங்கிட்டுக்கொள்ளும்போது இயல்பாகவே உணவுப் போட்டியும் பற்றாக்குறையும் உருவாகும். இதனால் காட்டில் உணவு உள்ள மற்ற இடங்களைத் தேடி யானைகள் நகர்ந்து செல்கின்றன. அப்படித்தான் காடுகளை ஒட்டியுள்ள ஊர்களுக்கும், பயிர் வயல்களுக்கும் யானைகள் வருகின்றன. அப்படி அவை வருவது, கால் போன போக்கில் வருவது அல்ல.
மேட்டுப்பாளையம் பகுதியில் சமீபத்தில் ஒரு யானை நள்ளிரவில் வந்து நின்றது. விசாரித்தால் 50 ஆண்டுகளுக்கு முன்பு அது யானை வழித்தடமாக இருந்துள்ளது. யானைகளின் ஜீன்களில், அதன் பாரம்பரிய வழித்தடங்களின் பாதைகள் பொதிந்துள்ளன. பல தலைமுறைகளுக்கு முந்தைய வழித்தடத்தைக்கூட ஒரு யானையால் கண்டடைய முடியும். ஆனால், அந்த வழித்தடங்கள் மிக மோசமாகச் சிதைக்கப்பட்டுள்ளன. காடுகளுக்குள் விதிமுறைகளை மீறி ஏராளமான கட்டடங்களைக் கட்டி யானைகளின் பாதையை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால் குழம்பிப்போகும் யானைகள் தடம் மாறி ஊருக்குள் வருவதும் நடக்கிறது.
எப்படி இருப்பினும் இந்த விஷயத்தில் நாம் புரிந்துகொள்ளவேண்டியது… யானைக் கூட்டம் ஒன்று ஊருக்குள் வந்துவிட்டது என்றால் ஒன்று… அதன் வழித்தடம் மறிக்கப்பட்டதால் வழிமாறி வந்திருக்க வேண்டும், இல்லையெனில் நாம் ஆக்கிரமித்து வைத்திருக்கும் இடம் அதன் பாரம்பரிய வழித்தடத்தில் வருகிறது என்று பொருள். அவற்றை அப்படியே விட்டால், அதன்போக்கில் கடந்துசென்று, ஏதோ ஓர் இடத்தில் காட்டுடன் இணைந்துவிடும். மாறாக விரட்டிவிடுகிறேன் என்று வெடி வெடித்து விரட்டினால், வழித்தடம் குழம்பி மேற்கொண்டு அங்கேயேதான் சுற்றிக்கொண்டிருக்கும்.
இன்று தமிழ்நாட்டில் சுமார் 3,000 யானைகளும், கேரளாவில் சுமார் 2,000 யானைகளும், கர்நாடகாவில் சுமார் 1,500 யானைகளும் உள்ளன. இவை, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உணவு கிடைக்கும் இடங்களை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கின்றன; நகர வேண்டும். அதுதான் ஆரோக்கியமான காட்டுக்கு அழகு. இதற்கு இடையூறு செய்யும் வன ஆக்கிரமிப்புகள் அனைத்தும் ஈவு இரக்கமின்றி அகற்றப்பட வேண்டும். யானைகளின் பாதுகாப்புக்கு இதுவே முதல்படி!”
இந்த முதல்படியில் அடியை எடுத்து வைக்காமல் சின்ன தம்பியை கும்கியாக மாற்றுவதாலோ… கொடூரமான முறையில் காட்டுக்குள் விரட்டுவதாலோ பிரச்னை தீர்ந்துவிடாது. ஏனென்றால், இது ஒரே ஒரு சின்ன தம்பி யானையின் பிரச்னை அல்ல. ஒட்டுமொத்த யானைகளின் தீராத வலியும் வேதனையும்; கேள்விக்குள்ளாகியிருக்கும் அவற்றின் எதிர்கால வாழ்வும்!
காந்தி, 1948 ஜனவரி 30-ஆம் தேதி அன்று நாதுராம் கோட்சேவால் டெல்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த படுகொலை நடந்து நான்கு நாட்கள் கழித்து பிப்ரவரி 3-ஆம் தேதி கோல்வாக்கர் கைது செய்யப்பட்டார். மறுநாள் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. அரசின் அறிவிக்கை, ஆர்.எஸ்.எஸ். ஏன் தடை செய்யப்பட்டது என விளக்கியது. “விரும்பத்தகாத மற்றும் மிக மோசமான ஆபத்தான நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ஈடுபட்டார்கள்” என கூறியது அந்த அறிக்கை. விவரமாக அந்த அமைப்பின் படுபயங்கரமான நடவடிக்கைகளை பட்டியலிட்டது.
“ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் கலவரம் செய்தல், கொள்ளை, கொலை, வழிப்பறி, சட்டவிரோதமாக ஆயுதங்களை வெடிபொருட்களை சேகரித்தல் போன்ற வன்முறைகளில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவர்கள் தீவிரவாத செயல்களைத் தூண்டுவிதமாக துண்டுச்சீட்டு விநியோகித்து மக்களை கொலை செய்யவும் ஆயுதங்களை சேகரிக்கவும் அரசு, போலீசு மற்றும் ராணுவத்துக்கு எதிராக அதிருப்தியை தூண்டியதும் தெரியவந்துள்ளது” என்றது அரசின் அறிவிக்கை.
எம்.எஸ்.கோல்வால்கர்
அரசின் நடவடிக்கைகள் ஆர்.எஸ். எஸ். இருப்புக்கு சவாலாக இருந்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ்ஸின் சர்சங்சலக் (அகில இந்தியத் தலைவர்)-ஆக இருந்த எம்.எஸ்.கோல்வால்கர், இந்த நெருக்கடி நிலையிலிருந்து இந்த அமைப்பை காப்பாற்றத் திறமையுடன் காய் நகர்த்தினார். அடுத்த ஆண்டுக்குள் அந்த அமைப்பு பழைய நிலைக்கு வந்தது. இதைச் செய்ய, அறிக்கைகள், விவாதங்கள் மற்றும் அரசியல் ரீதியிலான முயற்சிகள் மூலம் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கலவையான அணிதிரட்டல்களை பயன்படுத்தினார். அப்போதைய துணை பிரதமர் வல்லபாய் பட்டேல், இந்த அமைப்பின் இருப்பை தக்கவைத்ததில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.
ஆர்.எஸ். எஸ். தடைசெய்யப்பட்ட அடுத்த நாள், கோல்வால்கர் கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்தி, அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “ஆர்.எஸ்.எஸ். சட்டத்துக்கு கட்டுப்பட்டே அனைத்து செயல்பாடுகளையும் செய்கிறது” என்றார்.
“அரசு, ஆர்.எஸ்.எஸ்-ஐ சட்டவிரோத அமைப்பாக அறிவித்த நிலையில், தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஆர்.எஸ்.எஸ்-ஐ கலைத்து விடுவதே நல்லது. ஆனால் அதே நேரத்தில் இந்த அமைப்புக்கு எதிராக சொல்லப்பட்ட அனைத்து குற்றச் சாட்டுக்களையும் மறுக்கிறோம்” என்றது கோல்வால்கரின் அறிக்கை.
‘ஆர்.எஸ்.எஸ்-சின் ஆரம்ப நாட்கள்’ என்ற நூலில் வால்டர் ஆண்டர்சன் மற்றும் ஸ்ரீதர் டி தம்லே, “இந்த அறிவுத்தல் மற்றும் தடையையும் மீறி, அதிக எண்ணிக்கையிலான சுவயம் சேவக்குகள் (ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள்) சந்தித்துக் கொள்வதைத் தொடர்ந்தார்கள்” என்று பதிவு செய்திருக்கின்றனர். இந்த அமைப்பின் அனைத்து மட்ட அதிகாரிகளும் கைது செய்யப்பட்ட நிலையில், இளம் உறுப்பினர்கள் அமைப்பின் ரகசிய இயந்திரத்தை கட்டியெழுப்பி, பராமரித்தார்கள் என்கிறது அந்த நூல்.
காந்தி படுகொலைக்கான உடனடி திட்டம் இந்து மகாசபையின் ஒரு பிரிவினரால் தீட்டப்பட்டு, குற்றம் நடப்பதற்கான சூழலை உருவாக்கியதில் ஆர்.எஸ்.எஸ். முக்கிய பங்காற்றியது சில நாட்களில் தெளிவாக தெரிய வந்தது.
1948 ஜூலை 18-ஆம் தேதியிட்டு, இந்து மகா சபையின் முன்னாள் தலைவர் சியாம் பிரசாத் முகர்ஜி, உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு எழுதிய கடிதத்தில் காந்தி படுகொலையில் இந்து மகா சபை மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கை எழுதியிருந்தார்.
காந்தி – கோட்சே
“இந்த இரண்டு அமைப்புகளின் செயல்பாடுகளின் விளைவாக, குறிப்பாக அந்த முன்னாள் உறுப்பினர் (கோட்சே) மூலம் நாட்டில் இத்தகைய சூழல் உருவாகி, இந்த சோகம் நடக்க காரணமாகி விட்டது. இந்து மகா சபையில் தீவிரமாக இயங்கிய ஒரு பிரிவு இந்தச் சதியில் ஈடுபட்டது குறித்து எனக்கு சந்தேகம் ஏதுமில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்பாடுகள் அரசுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. நாங்கள் திரட்டிய தகவல்களின்படி, தடை செய்யப்பட்டிருந்தாலும் கூட இந்த செயல்பாடுகளை நிறுத்தியிருக்க முடியாது.” என சியாம் பிரசாத்தின் கடிதம் சொன்னது.
ஆர்.எஸ்.எஸ். வன்முறையை தூண்டியதற்கு இவை ஆதாரங்களாக இருந்த போதிலும் ஆர்.எஸ்.எஸ்-சின் உறுப்பினர்களுக்கு காந்தி படுகொலையில் நேரடியாக தொடர்பிருந்ததற்கான சாட்சியங்கள் எதுவும் அரசுக்கு கிடைக்கவில்லை. எனவே, பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டனர்.
பொது நிகழ்ச்சிகளில் பேசக்கூடாது, அரசு ஒப்புதல் இல்லாமல் எதையும் அச்சிட்டு வெளியிடக் கூடாது போன்ற நிபந்தனைகளுடன் கோல்வால்கரும் ஆகஸ்டு மாதம் விடுவிக்கப்பட்டார். அதே ஆண்டின் இறுதியில் பட்டேல், ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகள் குறித்து கோல்வாக்கருக்கு எழுதினார். அதில், “இந்துக்களை ஒருங்கிணைப்பது அவர்களுக்கு உதவுவது ஒரு விசயம். ஆனால், இவர்களுடைய துன்பங்களுக்காக அப்பாவியான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை பழிவாங்குகிறேன் என்பது வேறு விசயம்” என்றார் பட்டேல்.
“காங்கிரசை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நச்சுத்தனமான கருத்துக்களை எந்தவித நாகரிகமும் பாராமல் ஆளுமைகளை அவமதிக்கும் விதமாக ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்வது மக்களிடம் அமைதியின்மையை ஏற்படுத்தியிருக்கிறது” எனவும் அந்தக் கடித்ததில் எழுதுகிறார்.
இந்த அமைப்பைச் சேர்ந்த தலைவர்களின் பேச்சு முழுமையும் “மத விசத்தை” பரப்புக் கூடியவை என்கிற பட்டேல், இந்துக்களை கவரவும் அவர்களை பாதுகாக்கவும் இத்தகைய விசத்தை பரப்ப வேண்டிய அவசியமில்லை என்கிறார்.
“இதன் விளைவாகத்தான் காந்தியின் மதிப்பில்லா உயிரை தியாகம் செய்து நாடு துயரப்படுகிறது. இப்போது அரசும் மக்களும் ஆர்.எஸ். எஸ்-ஐ எதிர்க்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் காந்திஜியின் கொலையை இனிப்புகள் வழங்கிக் கொண்டாடியதைக் கண்டு எதிர்க்கட்சிகள் தீவிரமாக இருக்கின்றன.” (பட்டேலின் உள்ளே இருக்கும் இந்துத்துவம் வெளிப்படுவதை இதில் காணலாம்.)
“இந்த நிலையில் அரசு, ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாதது. ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய வழிகளை மாற்றிக்கொள்ளும் எனக் கருதியது அரசு. ஆனால், பழையபடி அவர்கள் தங்களுடைய செயல்பாடுகளை தொடர்கிறார்கள் என்றே எனக்கு தகவல் வருகிறது” என்றது பட்டேலின் கடிதம்.
அக்டோபர் மாதம், கோல்வால்கருக்கு விதிக்கப்பட்ட பயண தடை நீக்கப்பட்டது. டெல்லிக்குச் சென்று அரசுடன் விவாதித்தார், ஆனால் பலன்கள் ஏதும் கிடைக்கவில்லை. கோல்வாக்கார் மீண்டும் கைதுசெய்யப்பட்டார், நாக்பூருக்கு திரும்பினார்.
இந்த இக்கட்டான மற்றும் குழப்பான சூழ்நிலையில், கோல்வாக்கர் ஆர்.எஸ்.எஸ்ஸின் எதிர்காலத்துக்காக திட்டமிட்டார். ஆர்.எஸ்.எஸ்-ஆதரவாளர்களிடமிருந்து ஒரு கோரிக்கை வந்தது. அதில், “ஆர்.எஸ்.எஸ்-ஐ அரசியல் கட்சியாக மாற்றும் யோசனை தெரிவிக்கப்பட்டது. அதாவது அரசியல் கட்சியாக மட்டுமே செயல்படும். பக்தியுடனான கலாச்சார பணிகள் எதையும் செய்ய முடியாது என்பதே அந்த யோசனை. இது ஏற்றுக் கொள்ள முடியாதது” என்ற கோல்வால்கர், “கலாச்சார பணிகள், அரசியலை விட்டு விலகி இருக்க வேண்டும். எந்த அரசியல் கட்சியோடு இணைந்திருக்கக் கூடாது. எனவே, இந்த யோசனை மக்களுக்கு விருப்பமானது அல்ல என தெரிவிக்கிறேன்” என நிராகரிக்கிறார்.
ஆர்.எஸ். எஸ். மீதான தடையை நீக்க சத்தியாகிரக போராட்டத்தை டெல்லியில் டிசம்பர் 9-ஆம் தேதி தொடங்கினார் கோல்வாக்கர். இது அவருக்கு கைக் கொடுத்தது. கிட்டத்தட்ட 6000 பேர் அதில் கலந்துகொண்டார்கள் என ஆர். எஸ்.எஸ். கூறுகிறது. பட்டேலும் அதனுடன் நெருக்கம் காட்டுவதில் ஆர்வமாக இருந்தார்.
அந்த சமயத்தில் அரசுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். மத்திய குழு உறுப்பினராக இருந்த ஏக்நாத் ரனாடே-விடம் பட்டேல், ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் காங்கிரசில் இணைந்து அக்கட்சியின் அமைப்பு ரீதியிலான கட்டுமானத்துக்கு உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டதாக ஆண்டர்சன் மற்றும் தம்லே தங்களது நூலில் சுட்டிக் காட்டுகிறார்கள். நேருவின் சில கொள்கைகளை எதிர்க்க ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை பட்டேல் பயன்படுத்திக் கொள்ள நினைத்தார் என அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அம்மைப்பின் தலைவர் சொன்னதாக நூலாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் சில உண்மைகள் இருக்கலாம். ஆர்.எஸ்.எஸ். பற்றி கூறிவரும் கருத்துக்கு ஆதாரம் தரும்படி கோல்வால்கர், தொடர்ந்து பட்டேலுக்கு எழுதிக் கொண்டிருந்தார். துணை பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்த பட்டேலுக்கு அரசிடமிருந்த ஆதாரங்கள் குறித்து தெரியும். ஆனால், ஏன் அவர் அதை கோல்வால்கருக்கோ அல்லது வெளிப்படையாகவோ தெரிவிக்கவில்லை என்பது புலனாகவில்லை.
ஆர்.எஸ். எஸ். மீதான பட்டேலின் ஆர்வம், அடுத்த ஆண்டு, ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கப்பட்டதில் தெரிந்தது. நேரு வெளிநாட்டில் இருந்த போது, ஆர்.எஸ். எஸ். உறுப்பினர்கள் காங்கிரசில் இணைய அக்கட்சி அனுமதித்தது. இந்த முடிவு பட்டேலின் ஆதரவாளர்களால் ஆதரிக்கப்பட்டது, நேருவின் ஆதரவாளர்களால் எதிர்க்கப்பட்டது. ஒரு மாதம் கழித்து, நேரு நாடு திரும்பியவுடன் ஆர்.எஸ். எஸ்-சிலிருந்து விலகினால் மட்டுமே கட்சியில் சேர முடியும் என்ற திருத்ததுடன் அந்த முடிவு நடைமுறைக்கு வந்தது.
ஆர்.எஸ். எஸ். மீதான தடையை நீக்க அரசு ஒரு நிபந்தனையை விதித்தது. அந்த அமைப்பு தனது கொள்கை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்பதே அது. அப்போது கோல்வாக்கர், “இந்த சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. சமூக, கலச்சார துறைகளில் மட்டுமே இது சேவை செய்யும்” என எழுதினார். அதோடு, அமைப்பின் உறுப்பினர்கள், தனி நபர்களாக எந்த அரசியல் கட்சியிலும் சேரலாம் என்றும் தேசிய நலன்களை தவிர்த்து, வன்முறை அல்லது தலைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் மத, இன வெறுப்பை தூண்டும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
சிறையில் அடைத்த ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்த சாவர்க்கர் வழி வாரிசுகள், தங்களுடைய தடையை நீக்க இந்திய அரசிடமும் சரணடைந்து ஒரு பம்மாத்து அறிவிப்பை கொடுத்திருக்கிறார்கள். காந்தி கொலையை திட்டமிட்டார்கள், அதை விரும்பினார்கள் என்பதும் இயக்கம் மீதான தடை வந்த பிறகு தடை செய்தவன் காலில் விழுவதும் ஒரு பாசிஸ்டின் குணநலன்கள். மேலும் காங்கிரசின் இந்துத்துவ சார்பும் இந்த பிரச்சினையில் இருக்கிறது. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ்-ஐ ஆதரித்த வல்லபாய் பட்டேல் அன்று ஆர்.எஸ்.எஸ் மீதான தடை நீக்க பாடுபட்டதும், இன்று குஜராத்தில் அவருக்கு மோடி அண்ட் கோ சிலை எழுப்புவதும் நடந்திருக்கிறது.
மேலும் தடையை நீக்க நாங்கள் அரசியல் கட்சியாக மாற மாட்டோம், காங்கிரசிடம் சேருவோம் என்றெல்லாம் இந்த ‘வீரர்க்ள்’ ஜெயா காரில் விழும் ஓபிஎஸ்-ஐ போல விழுந்திருக்கிறார்கள். எமர்ஜென்சி காலத்தில் இந்திராவால் தடை செய்யப் பட்ட போதும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் தேவரஸ் இதே போன்றதொரு கடிதத்தை இந்திரா காந்திக்கு அனுப்பியிருந்தார். அதில் இந்திராவை காளி, துர்க்கை, பாரதமாதா என்றெல்லாம் புரட்சித் தலைவியை வழிபடும் ஈ.பி.எஸ் போல கவிதை பாடியிருக்கிறார். இப்படி ஆளும் வர்க்கத்தின் ஆதரவோடு காந்தியை கொலை செய்து அதை ஒட்டிய தடையை ’சாமர்த்தியமாக’ நீக்கி பிறகு இந்திய வரலாற்றில் நாடெங்கும் பார்ப்பனியத்தின் பேரில் கலவரங்களும் படுகொலைகளும் நிகழ்த்தி வருகிறார்கள்.இந்த வரலாற்றுக்கு பொருத்தமாகத்தான் காந்தி கொலைக்கு பிறகு இவர்கள் மீதான தடை நீக்கம் நடந்திருக்கிறது.
– வினவு
கட்டுரை : ஹர்தோஷ் சிங் பால்
தமிழாக்கம் : கலைமதி நன்றி:கேரவன்
வில்லவன்குழந்தைகளை அடித்து வளர்ப்பது குறித்த இருவேறு கருத்துக்கள் ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் இருக்கின்றன. ஆனால் யதார்த்தத்தில் ஆகப்பெரும்பான்மையோரால் அடிக்காமல் பிள்ளைகளை வளர்க்க முடிவதில்லை. பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது சட்டபூர்வமாக தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் என் அறிவுக்கு எட்டியவரை எல்லா பள்ளிகளிலும் ஆசிரியர்கள் குழந்தைகளை அடிக்கும் வழக்கம் இருக்கிறது. (அதி மேட்டுக்குடி பள்ளிகளில் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்) வீடுகளிலும் இதே நிலைதான்.
இன்றைய பெற்றோர்கள் பலரும் அடிவாங்கி வளர்ந்தவர்கள். அடிக்காமல் வளர்க்க வேண்டும் எனும் உன்னத நிலைக்கும் அடிக்காமல் வளர்க்கத் தெரியாத யதார்த்த நிலைக்கும் இடையே இன்றைய பெற்றோர்கள் அல்லாடுகிறார்கள். ஆகவே அவர்களில் பலர் ஒரு புதிய நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள் ”பிள்ளைகளை வேறு யாரும் அடிக்கக்கூடாது” என்பதுதான் அது. இப்படியான குழப்பங்கள் ஆசிரியர்களிடம் இல்லை. அடிக்கக்கூடாதுங்கறது கருத்தளவில் சரிதான், ஆனால் இன்றைய பிள்ளைகளை அடிக்காமல் திருத்த முடியாது எனும் தீர்மானத்தில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். பள்ளிகளில் தண்டனை கடுமையாக இருந்த காலத்தில் கல்வித் தரம் சிறப்பாக இருந்ததாக அவர்கள் தீர்மானமாக நம்புகிறார்கள்.
இப்போது பிள்ளைகள் வீட்டில் அடிவாங்குவது பிரச்சினையாவதில்லை, ஆசிரியர்கள் அடிப்பதில்தான் பல சிக்கல்கள் வருகிறது. மாணவனை அடித்து மெமோ வாங்கிய ஆசிரியர்களை பார்த்திருக்கிறேன். ஒரு காவல்துறை அதிகாரி தன் மகனை அடித்து தண்டித்த ஆசிரியரை அடிக்க பள்ளி வாசலில் அடியாட்களை நிறுத்திய சம்பவத்தை கேட்டிருக்கிறேன். பத்து வயது சிறுமி தன்னை அடித்த ஆசிரியருக்கு பாடம் கற்பிக்க கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டைவிட்டு ஓடியிருக்கிறார் (நான் காணாமல் போக போகிறேன். என்னை $%@ மிஸ் திட்டிவிட்டார் – இதுதான் கடிதம்). கடுமையாக அடித்துவிட்டு அறைக்கு வந்த பின் பயந்து புலம்பிய ஆசிரியர்களை பார்த்ததுண்டு (இனிமே எதுவும் பண்ணக்கூடாது சார். யாரு எக்கேடு கெட்டா என்னன்னு இருக்கணும்).
சென்னிமலை அரசு பள்ளியில் மாணவர்களை அடித்த ஆசிரியையை தண்டிக்கக்கோரி திரண்ட பெற்றோர்கள்.
இதைத்தவிர வேறு பல சிக்கல்களும் வருகின்றன. அடிக்கு மட்டுமே அடங்கிப் பழகிய மாணவர்கள் பூஞ்சையான, அடிக்க யோசிக்கும் ஆசிரியர்கள் வரும்போது கட்டுப்பாடற்று குறும்பு செய்கிறார்கள். அடித்தால்தான் இங்கே குப்பை கொட்ட முடியும் எனும் எண்ணத்தை அது வலுப்படுத்துகிறது. அடி வாங்க துணிந்துவிட்ட மாணவர்களை கட்டுப்படுத்த எந்த டெக்னிக்கும் பள்ளிகளில் இல்லை. ஆரம்பப்பள்ளியில் அடித்து மாணவர்களை கட்டுப்படுத்துவது எளிதாக இருக்கிறது. அதே மாணவர்கள் மேல் வகுப்புக்களுக்கு வரும்போது அடிப்பது பெருமளவு உதவுவதில்லை.
குழந்தைகளை அடிப்பது எனும் செயலை மூன்று வேறுபட்ட கோணங்களில் நம்மால் விவாதிக்க இயலும்.
• உடல்ரீதியாக தண்டிப்பதை ஏன் நம்மால் தவிர்க்க முடியவில்லை? • அடிக்காமல் வளர்ப்பது சாத்தியமா? • அடித்து வளர்ப்பதன் பின்விளைவுகள் என்ன?
உடல்ரீதியான தண்டனைகளே பிள்ளைகளை திருத்தும் எனும் அழுத்தமான நம்பிக்கை நம் சமூகத்தில் இருந்தது. ஆகவே அதனை எந்த குற்ற உணர்வும் இன்றி நாம் செய்து வந்திருக்கிறோம். இப்போது அது தவறோ எனும் சந்தேகம் பரவலாக எழுந்திருக்கிறது. இவை அறிவியல்பூர்வமான தரவுகளை மட்டுமே வைத்து எழுபவை அல்ல. குடும்பத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை ஒன்று அல்லது இரண்டாக சுருங்கியிருக்கிறது. அவர்கள் மீது செய்யப்படும் முதலீடு கணிசமாக உயர்ந்திருக்கிறது. அதீத எதிர்பார்ப்பு மற்றும் அதீத பயம் ஆகியவை மிகை முதலீட்டின் தவிர்க்க முடியாத பக்கவிளைவுகள். பிள்ளைகளை அடிப்பதால் எதிர்பார்த்தது கிடைக்காமல் போய்விடுமோ அல்லது முதலீட்டுக்கு சேதம் வந்துவிடுமோ எனும் அச்சம் வருகிறது (அடிச்சு ஏதாவது ஆயிடுச்சுன்னா? அடிச்சதால கோபப்பட்டு ஏதாவது பண்ணிக்கிட்டான்னா?). கூடுதலாக, அடிப்பது நல்லதல்ல எனும் செய்தியும் அவர்களை அரைகுறையாகவேனும் வந்தடைகிறது.
மிகை முதலீடு, மிகை எதிர்பார்ப்பு ஆகியவை பெற்றோருக்கு கடுமையான பதட்டத்தை உருவாக்குகிறது. முன்பிருந்த இணக்கமான சமூக சூழல் இன்று இல்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்புகூட குழந்தைகள் தெருவில் அதிக நேரம் விளையாடவும் அருகே வசிக்கும் குடும்பத்தவரால் பார்த்துக்கொள்ளப்படவுமான சூழல் இருந்தது. இப்போது பார்த்துக்கொள்வது என்பது முற்று முழுதாக பெற்றோர்களின் சுமை. தெருக்கள் விளையாட உகந்ததாக இல்லாத பாதுகாப்பற்ற இடமாகியிருக்கிறது. ஆகவே சிறார்கள் தமது குறும்பை முழுமையாக வீட்டுக்குள்ளேயே காட்டவேண்டிய நிலை உருவாகிறது. இவை எல்லாம் சேர்ந்து பெற்றோரின் மன அழுத்தத்தை உச்சத்துக்கு கொண்டு செல்கின்றன.
பிள்ளைகள் வீட்டில் அடிவாங்குவது பிரச்சினையாவதில்லை, ஆசிரியர்கள் அடிப்பதில்தான் பல சிக்கல்கள் வருகிறது. மாணவனை அடித்து மெமோ வாங்கிய ஆசிரியர்களை பார்த்திருக்கிறேன். ஒரு காவல்துறை அதிகாரி தன் மகனை அடித்து தண்டித்த ஆசிரியரை அடிக்க பள்ளி வாசலில் அடியாட்களை நிறுத்திய சம்பவத்தை கேட்டிருக்கிறேன்.
இத்தகைய பெற்றோர்கள் மிக சுலபத்தில் கோபப்பட்டு குழந்தைகளை அடிக்கிறார்கள் (காரணம் அவர்கள்தான் எளிய இலக்கு). மிகச்சிறு வயதிலேயே உடல்ரீதியாக தண்டிக்கப்படுவதால் அடிவாங்கினால் மட்டுமே கட்டுக்குள் வரும் பிள்ளைகளை கணிசமாக உருவாக்கி பள்ளிக்கு அனுப்புகிறது நமது சமூகம். இப்படியான பிள்ளைகளை கட்டுப்படுத்த எல்.கே.ஜி. ஆசிரியருக்கு மாற்று வழிகள் இல்லை. ஒருவேளை அவர் மிகைக் குறும்பு குழந்தைகளை மன்னித்து அவகாசம் கொடுத்து திருத்த முற்பட்டால், அந்த குழந்தைகளால் பாதிக்கப்படும் மாணவர்களின் பெற்றோர்கள் அந்த ஆசிரியரை தொலைத்துவிடுவார்கள் (மற்ற பிள்ளைகளை முரட்டுத்தனமாக அடிக்கின்ற குழந்தைகள் எல்லா பள்ளிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். யாராவது அடித்தால் நீயும் திருப்பி அடி என பெற்றோர் சொல்லிக்கொடுப்பதால் ஆரம்ப வகுப்புக்களிலேயே சண்டைகள் தீவிரமாகிறது என்கிறார் 21 ஆண்டுகளாக கேஜி வகுப்புகளைக் கையாளும் மூத்த ஆசிரியர் ஒருவர்).
முன்பு குறிப்பிட்ட கடுமையான புறச்சூழல் பெற்றோருக்கு மட்டுமானதல்ல, ஆசிரியர்களும் அவ்வாறான நிலையில்தான் வாழ்கிறார்கள். ஆகவே அவர்களும் நிதானமாக நிர்வகிக்க முடியாதவர்களாகி குழந்தைகளை அடித்து மட்டுமே கையாளும் நிலைக்கு செல்கிறார்கள்.
இதன் விளைவுகள் பலவும் மோசமானவை. முதலில் மாணவர்களை கட்டுப்படுத்துவது ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டைக் காட்டிலும் சிக்கலாகிக்கொண்டே வருகிறது. ஒரு ஆசிரியரின் கண்காணிப்பு இல்லா நிலையில் வகுப்பறைகள் எந்த அசம்பாவிதமும் நிகழலாம் எனும் அளவுக்கு செல்கிறது. ஓடி விளையாடி காயமடைவது, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது என்பது மட்டுமின்றி இதில் பங்கேற்காத மாணவர்களும் காயமடைவது நடக்கிறது. ஆரம்ப வகுப்புக்களில் முரட்டுக்குழந்தைகள் எண்ணிக்கை அதிகம். அவர்களை அடித்து ஒழுங்குபடுத்துவது எனும் தற்காலிக தீர்வை ஆசிரியர்கள் கைக்கொள்ளும்போது அவர் தன்னை அறியாமல் மேல் வகுப்புகளின் சூழலை மோசமாக்குகிறார்.
அடிப்பதன் மூலம் நம்மால் பிரச்சினையை ஒத்தி வைக்க மட்டுமே முடியும். அந்த கால இடைவெளியில் அப்பிரச்சினை தீவிரமாகிவிடுகிறது. சகிக்க முடியாத அளவுக்கு குறும்பு (அல்லது வேறு சேட்டைகள்) செய்யும் மாணவர்கள் வீட்டிலும் பள்ளியிலும் நிறைய தண்டனை பெறுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், அப்படி அடிவாங்கி திருந்திய மாணவர்கள் யாரையும் நான் பார்த்ததில்லை. அப்படி யாரையேனும் பார்த்தவர்களையும் நான் பார்த்ததில்லை.
மேல் வகுப்புகளில் அடி வாங்க துணிந்துவிட்ட மாணவர்களை கட்டுப்படுத்த எந்த வழிகளும் இருப்பதில்லை. இன்னும் கடுமையாக அடிப்பது மற்றும் பெற்றோர்களை வரவழைத்து எச்சரிப்பது இதுமட்டுமே மேல்/உயர் நிலை வகுப்புக்களில் உள்ள வாய்ப்பு. சமயங்களில் மாணவர்களுக்கு இடையேயான சண்டை பெற்றோர்கள் இடையேயான சண்டையாக மாறுகிறது. பள்ளிகளில் ஆய்வுகள் நடத்தும் மாணவர்கள் மற்றும் ஆற்றுப்படுத்துனர்கள் தங்களால் வகுப்புகளை கையாளவே முடிவதில்லை என குற்றம்சாட்டுகிறார்கள். ஒரு ஆண் உடற்கல்வி ஆசிரியர் இல்லாமல் இத்தகைய வேலைகளை எந்த வகைப் பள்ளிகளிலும் செய்ய முடிவதில்லை என்பதே கள நிலவரம்.
இவையெல்லாம் கண்ணுக்கு தெரிந்த பின்விளைவுகள். இன்னொரு விளைவு இன்னும் ஆபத்தானது. அடிக்கு பயப்படாத மாணவர்கள் ஆசிரியரை ஒரு கையறு நிலைக்கு தள்ளுகிறார்கள். அப்போது அந்த மாணவர்கள் ஆசியரை வென்றுவிட்டதாக நினைத்துக்கொள்கிறார்கள். பிறகு அந்த வெற்றியின் சுவையை அனுபவிப்பதற்காகவே மேலும் மேலும் குறும்பு செய்கிறார்கள். சக மாணவர்களிடம் ”கெத்து” காட்டுவதற்காகவே ஆசிரியரை எரிச்சலுக்கு உள்ளாக்கும் மாணவர்கள் பலர் உண்டு. பாடத்தை கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்த மாணவனை ஆசிரியர் ஒருவர் ‘’இங்க வாடா’’ என அழைத்தபோது “என் மேல கைவச்சா காலி” எனும் சினிமா பாட்டை பாடிக்கொண்டு வந்திருக்கிறார். “என்ன சொன்னே?” என கேட்டபோது “சும்மா பாடினேன் சார்” என பதில் சொல்லியிருக்கிறார். இதெல்லாம் அடித்தாலும் பரவாயில்லை எனும் தயாரிப்போடு செய்யப்படும் ஹீரோயிசம். இப்படியான மாணவர்களிடம் இயல்பாகவே ஒரு குழு சேர்ந்துகொள்கிறது. இவர்கள் மற்ற மாணவர்களுக்கும் இடையூறாக இருப்பதால் வகுப்பறைக்குள்ளும் பூசல்கள் முளைக்கின்றன.
போய்த் தொலைங்க சனியனுங்களே எனும் விரக்தி நிலைக்கு ஆசிரியர்கள் செல்லும்போது அது கற்கும் ஆர்வமுள்ள மாணவர்களையும் பாதிக்கின்றது. கற்பிக்கும் சூழலை கொண்டுவருவதற்காக அதிகம் மெனக்கெட வேண்டியிருப்பதால் பாடத்திற்கான அவகாசம் குறைகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது சராசரி மாணவர்கள்தான். அவர்களால் இந்த சேட்டைக்கார கும்பலிலும் சேர முடியாது; விரைவாக நடத்தப்படும் பாடங்களும் புரியாது. ஒரு வகுப்பறை எல்லா தரப்பு மாணவர்களையும் உள்ளடக்கியது. ஆனால் இப்படி அடிவாங்க துணிந்த கட்டுப்படாத மாணவர்கள் மூலம் வகுப்பறையின் சமநிலை குலைகிறது. இத்தகைய மாணவர்களையே பள்ளிகள் அதிகமாக ஆற்றுப்படுத்துனரிடம் அனுப்புகின்றன. நானறிந்தவரை எந்த ஆற்றுப்படுத்துனரும் இப்படியான மாணவர்களிடம் நேர்மறையான மாற்றத்தை கொண்டுவர முடிந்ததாக சொல்லவில்லை.
அடிப்பதை சட்டபூர்வமாக தடுத்து அதனை கடுமையாக பின்பற்றினால் என்ன நடக்கும்?
அப்படி பின்பற்றப்படும் இடங்களில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொண்டால் இது உருப்படியான யோசனையா எனும் முடிவுக்கு வரலாம். மூன்றாண்டுகளுக்கு முன்பு அடிக்கவே அடிக்காத பள்ளி என அறியப்பட்ட பிரீமியம் பள்ளியொன்றில் இப்போது அந்த ”சட்டம்” பயன்பாட்டில் இல்லை. அதில் கறாராக இருக்கும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நிலைப்பதில்லை. அதி மேட்டுக்குடி பள்ளிகளில் ஆசிரியர்கள் கண்டும் காணாமல் போகும் வாய்ப்பை தெரிவு செய்கிறார்கள். அப்படியான பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் வகுப்புப் பாடங்களை எழுதாத மாணவர்களின் நோட்டை வீட்டுக்கு எடுத்துசென்று அவரே எழுதிக்கொண்டு வருகிறார். அடித்து கண்டிக்க முடியவில்லை பள்ளிக்கும் பதில் சொல்ல வேண்டும் எனும் நிலையில் அவருக்கு இந்த வாய்ப்பு மட்டுமே மிச்சமாக இருக்கிறது. மிக ஆபாசமான கமெண்ட்டுகளை கேட்டுவிட்டு அதை கவனிக்காததுபோல சென்றுவிடுகிறோம் என சில ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள் (இந்த நிலை எலீட் பள்ளிகளில் மட்டுமல்ல, சமீபத்தில் வெளியான அரசுப்பள்ளி மாணவர்களின் டிக்டாக் வீடியோ ஒன்று அவர்கள் ஆசிரியர் வகுப்பில் இருக்கையிலேயே அவரை சுற்றி ஆடிப்பாடுவதை காட்டியது. அப்போதும் ஆசிரியர் அமைதியாக அவர் வேலையை பார்க்கிறார்).
இத்தகைய அதி மேட்டுக்குடி பள்ளிகளில் உள்ள மிகைக் குறும்பு மற்றும் மோசமான நடத்தை கொண்ட மாணவர்களால் பாதிக்கப்படும் மாணவர்களை பாதுகாக்க உருப்படியான எந்த வழியும் இல்லை. அப்படியான பள்ளி ஒன்றில் இருந்து “நல்லா அடிக்கிற” பள்ளியை தேடி வந்து சேர்ந்த மாணவரை சில மாதங்களுக்கு முன்பு சந்தித்தேன். இப்போதான் பயமில்லாம பள்ளிக்கு வருகிறேன் என மகிழ்கிறார் அவர் (கெடுவினையாக அங்கேயும் அவர் மகிழ்ச்சி நீடிப்பதற்கான வாய்ப்பு அடுத்தடுத்த ஆண்டுகளில் குறைவு).
அடிக்கு பயப்படாத மாணவர்கள் ஆசிரியரை ஒரு கையறு நிலைக்கு தள்ளுகிறார்கள். அப்போது அந்த மாணவர்கள் ஆசியரை வென்றுவிட்டதாக நினைத்துக்கொள்கிறார்கள். பிறகு அந்த வெற்றியின் சுவையை அனுபவிப்பதற்காகவே மேலும் மேலும் குறும்பு செய்கிறார்கள்.
மாணவர்கள் அளவுக்கு மீறி குறும்பு செய்வது, விரும்பத்தகாத நடத்தைகள் மற்றும் உடல்ரீதியாக தண்டிப்பது ஆகியவை பல்வேறு காரணிகள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் விளைவுகள். அதனை ஒற்றைப் பிரச்சினையாக கருதுவதே அறிவீனம். அதனை ஒற்றை சட்டத்தின் மூலம் களைய முனைவது இன்னும் கோமாளித்தனமான முடிவு. மாணவர்கள் தொடர்பான எந்த ஒரு முடிவும் பல்வேறு தரப்பினரின் பங்கேற்புடனான விவாதங்களுக்கும் ஆய்வுகளுக்கும் பிறகே செய்யப்பட வேண்டும். தான்தோன்றித்தனமான முடிவுக்குப்பிறகான கடும் உழைப்புகூட சொதப்பும் என்பதற்கு நமது 11-ம் வகுப்பு புதிய பாடங்கள் ஒரு உதாரணம்.
நீட்டை மனதில் வைத்து பாடங்கள் கடுமையானதாக மாற்றப்பட்டிருக்கிறது. (உயிரியல் பாடம் மொத்தமாக ஆயிரத்து சொச்சம் பக்கங்கள், இயற்பியலில் வாக்கியங்கள் குறைக்கப்பட்டு சமன்பாடுகளும் கணக்கீடுகளும் மிகுந்திருக்கின்றன). ஆனால் அதே நீட் கணிதம் – உயிரியல் – வேதியியல் பாடப் பிரிவின் டிமாண்டை குறைத்திருக்கிறது (சேர்க்கையில் ஏறத்தாழ 30 சதம் வீழ்ச்சி). அக்கவுண்டன்சி, காமர்ஸ் போன்ற பிரிவுகளுக்கு அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் செல்வதால், மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள் முதல் குரூப்பை நாடுகிறார்கள். அதாவது நன்றாக படிப்பவர்களுக்கு ஒப்பீட்டளவில் எளிய பாடமும் சுமாராக படிப்பவர்களுக்கு மிகக்கடுமையான பாடச்சுமையும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முரண்பாட்டால் ஆசிரியர் மாணவர் என இரு தரப்பும் தண்டனை அனுபவிக்கின்றன. போன ஆண்டு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த சிக்கல் பூதாகரமாக வெளிப்படும் வாய்ப்பு இருந்தது. ஆனால், மதிப்பெண் தாராளமாக வழங்கப்பட்டு நிலைமை தற்காலிகமாக சமாளிக்கப்பட்டது. இந்த வருடம் +2 தேர்வுகள் நியாயமாக மதிப்பிடப்பட்டால் கணிதம் & அறிவியல் பிரிவில் 60% தேர்ச்சியே அதிகம்.
அரசு பள்ளியொன்றில் மனநல மருத்துவரின் ஆலோசனை.
இப்படித்தான் கல்வி சார்ந்த பல மாற்றங்கள் பயன்பாட்டுக்கு ஆகாததாக செயல்படுத்தப்படுகின்றன. மாணவர்களை அடிக்காமல் வளர்ப்பது என்பது இன்றைய பள்ளிச் சூழலில் சாத்தியமே இல்லாதது. காரணம் அதில் பெற்றோர், அரசு, பள்ளி என பல தரப்பும் சம்மந்தப்பட்டிருக்கிறது. ஒரு சமூகமாக நமது நம்பிக்கை, பழக்கம், அறஉணர்வு ஆகியவற்றுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கிருக்கிறது. இவை எது குறித்தும் கவலைப்படாமல் அதனை ஒரு ஆசிரியரின் கடமை என தள்ளிவிட்டால் நம்மால் ஒருபோதும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. மாறாக அதன் மூலம் உங்கள் பிள்ளைகளின் கல்விச்சூழலை நீங்கள் இன்னும் மோசமாக்குவீர்கள்.
பின்குறிப்பு : ஒரு ஆற்றுப்படுத்துனராக எனது பணி அனுபவத்தின் மூலமும் ஏனைய ஆற்றுப்படுத்துனர்கள் பகிர்ந்தவற்றின் மூலமும் எழுதப்பட்ட கருத்துக்கள் இவை. பெருமளவு மத்திய மற்றும் உயர்மத்தியதர வர்க்க பிள்ளைகள் உள்ள பள்ளிகளின் சூழலில் இருந்து பெறப்பட்ட தரவுகளே இதன் அடிப்படை. வேறு வகையான பள்ளிகளில் சூழல் வேறாக இருக்கலாம். அங்கிருக்கும் சிக்கல்கள் மற்றும் அதற்கான பரிந்துரைகள் முற்றிலும் வேறாக இருக்கலாம். எல்லா இடங்களுக்கும் பொருந்தக்கூடிய சில ஆலோசனைகளும் (பெற்றோர்கள் – ஆசிரியர்களுக்கானவை) இருக்கின்றன. ஆனால், அதற்கு கல்விப் புலத்தில் இருக்கும் ஏனைய பிரச்சினைகளை ஓரளவுக்கு புரிந்துகொள்வது அவசியம். அடுத்தடுத்த பதிவுகளில் அவற்றை பார்த்துவிட்டு இதற்கு நாம் என்ன செய்யலாம் எனும் பரிந்துரைகளை விவாதிக்கலாம்.
வில்லவன்
அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்”எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.
ஐ.டி. ஊழியர்கள் மட்டுமல்ல, மக்களும் கூட சினிமாவில் ஹீரோ ‘கெத்து’ காட்டுவதை விரும்புகின்றனர். இதில் ஐ.டி ஊழியர்களுக்கு அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், மல்டிப்ளக்ஸ் என கூடுதல் வாய்ப்புகள் உண்டு. வெள்ளித்திரையில் கொடுமை கண்டு பொங்கும் ஹீரோக்களின் ஆக்சன் காட்சிகளை ரசிப்பவர்கள், தாங்கள் பணி நீக்கம் செய்யப்படும்போது ஹாரர் மூவி (Horror Movie) போல பலிகடா ஆவது ஏன் ? இதோ ஒரு அனுபவம் !
12 ஆண்டுகாலமாக வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் எனது ஐ.டி. துறை வாழ்க்கையில் Lay Off என்ற பயங்கரத்தை நேரில் கண்டதில்லை. “அவரை வேலையை விட்டு நிறுத்திவிட்டார்கள், இவரை துரத்தி விட்டார்கள்” என்பது போன்ற இரண்டாம் கட்ட ஆதாரங்களை மட்டுமே கேள்விப்பட்டுள்ளேன்.
ஆனால், சில நாட்களுக்கு முன்னர் மதியம் என்னோடு உணவு உண்டவர் இன்று என்னோடு அலுவலகத்தில் இல்லை. இப்போது வீட்டில் இருக்கிறார். பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். எத்தனை நாள் வீட்டில் இருக்க அவரால் இயலும்? அவர் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க மனம் பதறுகிறது. திடீரென ஒருவர் எப்படி செல்லாக்காசாக மாறிவிட்டார் என்பதை நம்ப மனமில்லை. பதற்றம் நிறைந்த சூழல்.
ஜனவரி 30-ம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்ட செய்தி எங்களுக்கு மூன்று நாட்கள் கழித்துதான் தெரிந்தது. தெரிந்தவுடன் எனக்குள் பதற்றம். இப்படி கருவேப்பிலை போல் உயிருள்ள ஓர் மனிதனை எப்படி திடீரென குப்பையாக மாற்ற முடிகிறது என்ற கேள்வியும் பதற்றமும் என்னுள் எழுந்தது, என்னால் இயல்பாக இருக்க இயலவில்லை.
நிறுவனங்களின் இலாபவெறி கண்டு வெறுப்படைந்தேன். மனிதத்தன்மையற்ற, நேர்மையற்ற இதுபோன்ற செயல்பாடுகளால் எரிச்சலடைந்தேன். அந்த நபரின் நிலையில் என்னைப் பொருத்திப் பார்த்து, வரும் பதற்றத்தை கண்டுணர்ந்தேன்.
அந்த நபரோடு, அவர் LayOff பண்ணப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர்தான் எனக்கு அறிமுகம். தான் LayOff பண்ணப்படலாம் என்ற முன்பயம் அவருக்கு இருந்தது.
ஏனெனில், கடந்த இரு (Performance Rating Cycle) பணி தரநிலைகளில், வேலையில் முன்னேற்றம் தேவை (Need Improvement) என்ற மதிப்பீடு தரப்பட்டு இருந்தது. மேலும் கடந்த ஆண்டிற்கான பணித்தரநிலை மதிப்பீட்டை எதிர்த்து மேல்முறையீடு செய்து தோல்வியடைந்திருந்தார். எனவே, பணி நீக்கம் இன்றோ நாளையோ என்ற மனநிலையில்தான் அவர் இருந்தார். இது போன்ற சூழலில் அவரை சிலர் (என்னைப் பற்றி அறிமுகம் இருந்த பரஸ்பர நண்பர்கள்) என்னிடம் அறிமுகப்படுத்தி ஆலோசனை பெற அறிவுறுத்தினர்.
அலுவலகத்தில் அரசியல், தொழிலாளர் நல உரிமை, சட்டங்கள் பற்றி மற்றவர்களிடம் பேசுவதுண்டு. எனவே, அந்த அடிப்படையில் அவர் என்னைச் சந்தித்தார். அந்த சந்திப்பின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும், அதையும் மீறி பணி நீக்கம் செய்யப்பட்டால் அதை எதிர்ப்பது எப்படி என்றும், NDLF, FITE போன்ற தகவல் தொழில்நுட்பத் துறை தொழிலாளர் சங்கங்கள் பற்றியும், கடந்த சில ஆண்டுகளில் பெருநிறுவனங்களை எதிர்த்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் கதை பற்றியும் எடுத்துச் சொன்னேன். NDLF, FITE ஆகியவற்றின் தொடர்பு எண்களைத் தந்து அவற்றில் ஏதாவது ஒன்றில் (அவருக்கு எது பிடிக்கிறதோ அதில்) சேரச் சொன்னேன்.
(கோப்புப் படம்)
பணி நீக்கம் செய்யப்படும் சூழல் வருமாயின் அது போன்ற HR உடனான சந்திப்புகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும், என்ன சொன்னாலும் “பணிவிலகல் கடிதம் கொடுக்காதே” என்றும் அறிவுறுத்தி இருந்தேன். அப்படியே பணி நீக்கம் செய்ய வேண்டும் என முடிவு செய்தால் அவர்களை (நிறுவனத்தை) பணிநீக்க ஆணையை அனுப்பச் சொல் என்றும் அறிவுறுத்தி இருந்தேன். மேலும், இன்றுள்ள தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி வாய்ப்புள்ள ஆதாரங்களை திரட்டவும் அறிவுறுத்தினேன்.
இவ்வளவு அறிவுறுத்தலுக்கும் ஆலோசனைக்குப் பின்னரும் ஏன் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார் என்ற சந்தேகம் எனக்கு வந்தது.
அவர் பணிநீக்கம் செய்யப்பட்ட சில நாட்கள் கழித்து அவரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பின்னர் “இவரைப் போன்ற தன்னுரிமை பற்றிய விழிப்புணர்வு இல்லாத அடிமைகள் இருக்கும் வரை” இலாபவெறி பிடித்த, நேர்மையற்ற தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களை கிள்ளுக்கீரை போன்று நடத்துவது தொடரும் என்று உறுதிப்படுத்திக்கொண்டேன்.
நடந்தது என்னவெனில் பணிநீக்கம் செய்யபடப்போகிற அந்த நாளின் காலையிலே (HR) மனிதவள துறை நிர்வாகியோடு சந்திப்பு உறுதியாகிவிட்டது. அந்த சந்திப்பு பணிநீக்கம் தொடர்பானது என்று அவர் கணித்துள்ளார். அன்று மதிய உணவை எங்களோடு இணைந்துதான் உண்டார். அப்போது பதற்றத்தில் இருந்தார் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். எங்களோடு எதைப்பற்றியும் அவர் பேசவில்லை. அன்று மாலை அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
மனிதவள நிர்வாகியுடனான சந்திப்பில் “உங்களை பணி நீக்கம் செய்யப்போகிறோம், நீங்கள் பணிவிலகல் கடிதம் எழுதிக் கொடுத்துவிடுங்கள்” என்று மனிதவள நிர்வாகி சொல்லியுள்ளார். அதற்குப் பதிலீடாக மூன்று மாத சம்பளம் தருவோம் என்ற உத்திரவாதத்தை தந்துள்ளனர்.
பணிவிலகல் கடிதத்தை எழுதி வாங்கிக்கொண்ட அடுத்த நிமிடம் அவரிடம் இருந்து அடையாள அட்டையைப் (ID Card) பெற்றுக்கொண்டு காவலாளி (Security) துணைகொண்டு அவரை அலுவலக வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.
(கோப்புப் படம்)
அதன்பின்னர் அவர் அலுவலகம் வராததால் இரண்டு நாட்களாக அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் இயலவில்லை. பின்னர் ஒருவழியாக மூன்றாம் நாள் அவரைத் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டறிந்த பின்னர், “இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, NDLF நண்பர்களிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறேன், அவர்கள் உங்களை வழிநடத்துவார்கள், அவர்களோடு இணைந்தால் வழிபிறக்கும் என்று (Guide) அறிவுறுத்திய போதும், “இன்னும் சில நாட்களில் பதிலீட்டுத் தொகையை (Compensation package) பெற்றுக்கொண்ட பின்னர் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்” என்று சொன்னவரை பணிநீக்கம் செய்யாமல் என்ன செய்வார்கள்?
என்ன நண்பர்களே, இவரைப் போன்று தன்னுரிமை பற்றி விழிப்புணர்வு இல்லாத அடிமைத் தொழிலாளர்கள் உள்ளவரை இலாபவெறி தனியார் நிறுவனங்களின் இலாபவேட்டை தொடரும் தானே?
உங்களுக்கு சந்தேகம் உண்டா? எனக்கு இல்லை.
உள்ளம் நிறைந்த அன்புடனும், நெஞ்சம் நிறைந்த நன்றியுடனும்,
நாம் இதற்கு முன்பு பேசிய உணவுமுறை அனைத்தும் அனைவருக்கும் பொதுவானவை அதாவது சர்க்கரை நோய் உள்ளவர்கள், இல்லாதவர்கள் மாரடைப்பு உள்ளவர்கள் இல்லாதவர்கள் என அனைவருக்குமானது. அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது, சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவு முறை.
சிறுநீரக பாதிப்பிற்குப்பின் நீங்கள் மருத்துவரிடம் செல்கிறீர்கள் என்றால் உடனே அவர் உங்களுக்கு உப்பு சத்து அதிகமாக உள்ளது என்று கூறுவார், அதைத்தொடர்ந்து நீங்கள் மருத்துவர் கூறி விட்டார் என்பதற்காக உணவில் உப்புச் சுவையை குறைத்துக் கொள்வீர்கள் இது தவறான ஒரு செயல்.
நம் உணவில் இருக்கக்கூடிய உப்பானது சோடியம் ஆகும். இந்த உப்பு சத்து இல்லாமல் நமது உடலில் உள்ள எந்த செல்களும் இயங்காது மருத்துவர் கூறிய உப்பானது இந்த உப்பு அல்ல அவர் கூறியது யூரியா கிரியாட்டினின் இந்த வகையான உப்பு. இந்த வகையான உப்பு நம் உடலில் உண்டாகும் கழிவுகளிலிருந்து உற்பத்தியாகக் கூடியது. இந்த வகையான உப்பை நமது சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியவில்லை. ஆகையால் இது நம் ரத்தத்தில் கலக்கிறது இந்த உப்பு சோடியம் வகை ஆகாது.
இந்த இரண்டையும் பிரித்துப் பார்க்காமல் நம் உணவில் உப்புச் சுவையை சேர்க்காமல் இருப்பது நம் உடலை மேலும் வலுவிழக்கச் செய்யும். இந்த சிறுநீரக நோய்க்கு பல படிநிலைகள் உண்டு. ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு வகையான உணவு பழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும். அனைத்து படிநிலைக்கும் பொதுவான ஒரு உணவுப் பழக்கம் ஒன்று கிடையாது. உதாரணத்திற்கு கிரியாட்டினின் அளவு இரண்டு புள்ளியை தாண்டினால் மருத்துவர் உணவில் உப்பு சுவை சேர்ப்பதை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துவார். அது எந்த அளவு என்று நாம் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.
இன்னும் விரிவாக கூற வேண்டுமென்றால் சிறுநீரக கோளாறு உள்ள சில பேருக்கு சிறுநீரானது வழக்கத்திற்கு மாறாக அதிகமாக வெளியேறும். அதாவது, உடம்பில் உள்ள சோடியம் அதிக அளவு வெளியேறும். அந்த வகையானவர்கள் உணவில் அதிக உப்பு சுவையை சேர்த்துக் கொள்ள நேரிடும் இது மிகவும் சிக்கலாக தென்படுகிறது அல்லவா. ஆகையால் சிலபேருக்கு உப்பு சுவையை குறைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், சிறுநீரகம் மூலம் சோடியம் அதிகம் வெளியேறும் நபர்களுக்கு உப்புச் சுவையை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. நாம் எந்த படிநிலையில் உள்ளோம் என்பதைப் பொறுத்து இது மாறுபடும். ஆகையால் பொதுவாக உப்பில்லாமல் உணவை சேர்த்துக் கொள்வது என்பது தவறான செயல். இது முதலில் நாம் தெளிய வேண்டிய ஒன்று.
இரண்டாவது வகையான உப்பு பொட்டாசியம். இதுவும் நம் உடலில் அவசியமான ஒன்றாகும். ஆனால், குறிப்பிட்ட அளவைவிட இது அதிகமாக இருத்தல் கூடாது. பொட்டாசியமானது நம் உடலில் இருந்து வெளியேற இரண்டு வழிகள்தான் உள்ளது. ஒன்று, சிறுநீரகம் மூலம் வெளியேறுவது மற்றொன்று மலம் கழிப்பதன் மூலம் வெளியேறுவது. நம் உணவில் பொட்டாசியம் எதிலெல்லாம் அதிக அளவு உள்ளதோ அதை நாம் முடிந்த அளவு குறைத்துக் கொள்வது நல்லது. முழுதாக பொட்டாசியம் உள்ள உணவுகளை சேர்க்கக்கூடாது என்று நாம் கூறவில்லை. உதாரணத்திற்கு காய்கறி, பழங்கள், இளநீர் ஆகியவற்றில் கூட பொட்டாசியம் உள்ளது. இதை நாம் முழுவதும் தவிர்க்கப்போவது கிடையாது. எந்த அளவு என்பதைத்தான் நாம் முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு மருத்துவர் கூறும் உணவுப் பொருட்களை குறிப்பெடுத்துக் கொள்வது நல்லது. சிறுநீரகக் கோளாறு கொண்டவர்களுக்கு மலச்சிக்கல் இயல்பாக இருக்கக்கூடியதாகும்.
மலச்சிக்கல் அனைவருக்கும் பொதுவானது எனினும் சிறுநீரக கோளாறு கொண்டவர்கள் அது இயல்பான ஒன்றாக அமையும். ஆதலால் மலச்சிக்கல் நீங்க வேண்டும் என எண்ணி வாழைப்பழம் போன்றவற்றை நாம் எடுத்துக் கொள்வதுண்டு. ஆனால், அதில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. எனவே எவற்றிலெல்லாம் பொட்டாசியம் அதிகம் உள்ளது எவற்றில் குறைவு என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, பாஸ்பரஸ். இதைப்பற்றி பெரிதும் குழம்பிக் கொள்ள வேண்டாம். எந்த வகை உணவுகளில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளதோ, அதே உணவுகளில் பாஸ்பரசும் அதே அளவு இருக்கும். நாம் உண்ணும்போது நம் உடலானது இதை எந்த அளவுக்கு உள் வாங்கிக்கொள்ளும் என்பதற்கு ஏற்றவாறு மருத்துவர் நமக்கு மருந்துகளை கொடுப்பார். அவற்றை நாம் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து நாம் பார்க்கவிருப்பது புரதம். பொதுவாக சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு ஒரு பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. புரதம் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அது. நாம் அன்றாடம் சொற்ப அளவுதான் உணவில் புரதம் எடுத்துக் கொள்கிறோம். உதாரணத்திற்கு, இட்லி – தோசை ஆகியவற்றில் இரண்டு கிராம்தான் புரதம் உள்ளது. அடுத்து அரிசியில் 100 கிராமில் 3 கிராம்தான் புரதம் உள்ளது. சிறுதானியங்கள் 100 கிராமில் 10 கிராம் புரதம் உள்ளது. அசைவ உணவுகளில் இது 25 கிராம் உள்ளது. மாமிச உணவுகளில் அதிக அளவு புரதம் உள்ளது. வெளிநாடுகளில் அவர்களது அன்றாட உணவில் போர்க், முட்டை என மாமிசங்களை சேர்த்துக் கொள்கிறார்கள், ஆகையால் அவர்களுக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்படும்போது புரதம் குறைவாக எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுவது சரிதான். நம்மைப் பொருத்தவரை ஏற்கனவே புரதம் குறைவாக உண்கிறோம் சராசரியாக ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் புரதம் என்ற விகிதத்தில் நம் உடலில் புரதம் சேர வேண்டும்.
ஆனால் நாம் உண்ணும் உணவில் அந்த அளவிற்கு புரதம் இல்லை. ஒரு கை நிறைய பருப்பை உண்டால்தான் அது 40 கிராம் புரதத்தை நம் உடலில் சேர்க்கும். நாம் அவ்வளவு உண்பதில்லை. சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர் என்றால் 60 கிலோ உடலுக்கு 60 கிராம் புரதம் என்பது சராசரியான அளவு. இது இவர்களுக்கு 40 கிராம் என்று குறையும். இந்த 40 கிராம் நம் உடலில் சேர்வது கடினமான ஓர் இலக்கு. இவர்களிடம் இதையும் குறைக்குமாறு அறிவுறுத்துவது சிக்கலை உண்டாக்கும். ஏனென்றால் நாம் ஏற்கனவே குறைவான புரதம்தான் உண்டு வருகிறோம். ஆகவே எந்த அளவிற்கு நம் உடலில் புரதச்சத்து உள்ளது என்பதை கண்டறிந்து அதற்கேற்றவாறுதான் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு பரிசோதித்த பின் சிலருக்கு புரதச் சத்தானது, மேலும் தேவைப்படுவதாக இருக்கலாம். உதாரணத்திற்கு, நான் மேலே கூறியது போல் ஒரு கிலோ எடைக்கு 1.3 கிராம் புரதம் தேவைப்படலாம்.
ஆனால் சிலர் புரதச் சத்தை குறைத்துக்கொள்ள அறிவுறுத்துவது தவறான செயலாகும். ஆகையால் சிறுநீரகம் பாதிப்படைந்தவராக இருந்தாலும் சராசரியாக 40 கிராம் புரதம் தேவைப்படுகிறது சிறுநீரக நோய் முற்றிப்போய் டயாலிசிஸ் நிலையில், மேலும் புரதம் தேவைப்படுகிறது. நோய் முற்றிப்போய் இறக்கும் நபர்களுக்கு புரதச்சத்து குறைபாடு முக்கியமான ஒன்று என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, தண்ணீர் எந்த அளவிற்கு உட்கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம். சாதாரண மக்களுக்கு இதில் எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டோர் தன் உடலில் எந்த அளவிற்கு நீர் வெளியேறுகிறதோ அதைவிட 200-300 மில்லி ஏனும் அதிகம் உட்கொள்ள வேண்டும். உதாரணமாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஒரு லிட்டர் சிறுநீர் வெளியேறுகிறது என்றால் ஒரு நாளைக்கு அவர் ஒரு லிட்டர், 300 மில்லி தண்ணீர் அருந்த வேண்டும். ஆனால், முகம், பாதங்கள் வீங்கி, உடலும் நீர்க்கோர்வையால் பருத்து உள்ளதெனில் அவர்கள் குறைவான அளவு தண்ணீர் பருக வேண்டும். அப்போதுதான் அவர்கள் உடலில் உள்ள நீரானது வெளியேறும். இவ்வாறு உள்ளவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு லிட்டர் சிறுநீர் வெளியேறுகிறது என்றால் 700 மில்லி தண்ணீர் அருந்தினால் போதுமானது. இதுவும் மருத்துவர் ஆலோசனைப்படி அமைய வேண்டும்.
நாம் கூறியதை தொகுப்பாகக் கூறவேண்டுமெனில் முதலில் உப்பை தேவை இல்லாமல் குறைக்கக் கூடாது. பொட்டாசியம் அளவு சரியாக உட்கொள்ள வேண்டும். பாஸ்பரஸ் நம் உடலில் சேர்வதை கவனமாக கணக்கில் கொள்ள வேண்டும். புரதச்சத்து உணவுகளை தேவை இல்லாமல் குறைக்கவும் கூடாது, அதிகப்படுத்தவும் கூடாது. தண்ணீர் முறையான கணக்கீட்டின்படி பருக வேண்டும். இதுவும் நாம் எந்த நிலையில் அதாவது எந்த படிநிலையில் உள்ளோம் என்பதை பொருத்து அது அமையும்.
அதை உங்கள் மருத்துவரே தீர்மானிப்பார். இந்த ஒட்டுமொத்த கருத்து உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
கங்கையில் நூற்றுக்கணக்கான மக்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அதற்கு நேர் திசையில் இருந்த சாலையில் ஒன்றிரண்டு பேர் நடந்து வருவதும் சில வாகனங்கள் வருவதும் போவதுமாக இருந்தது. அங்கு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்சில் இருந்து இறங்கினார் மருத்துவ உதவியாளர் ஆனந்த் குமார். பைசாபத் ஊரை சேர்ந்த ஆனந்த் கவுட் சாதியை சார்ந்தவர்.
ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ஆனந்த்.
“பார்ப்பனர்கள் மற்றும் சத்ரியர்களின் வீட்டிற்கு தண்ணீர் கொண்டு போய் கொடுக்கும் சாதியாக இருந்திருக்கிறோம். இப்பொழுதே அந்த முறையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு எல்லோரும் வெவ்வேறு தொழிலுக்கு போயிட்டு இருக்கோம்” என்றார் ஆனந்த்.
பார்ப்பன – சத்ரியர்களின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு சேவகம் செய்வதற்கென ஒரு சாதியை சார்ந்த மக்கள் வாழ்கிறார்கள் என்றால் அந்த சமூகம் எந்தளவிற்கு பின் தங்கியுள்ளது என்பதற்கு இதுவே மேலான சாட்சி. அங்கே எந்த சாதியாக இருந்தாலும் தன் சாதியை சொல்லுவதற்கு தயங்குவதே இல்லை. அந்த அளவிற்கு சாதி கட்டமைப்பு இறுக்கமாக இருப்பதை காணமுடிகிறது.
ஆனந்திடம் கும்பமேளா குறித்து கேட்டபோது, “இந்தமுறை சிறப்பாக பண்ணியிருக்காங்க. 108 ஆம்புலன்ஸ் விழாவில் எல்லா இடத்திலயும் நிறுத்தி வச்சிருக்காங்க. எங்க வேலைக்கு சிறப்பு ஊதியமாக ரூ.200 தருவதாக சொன்னார்கள். ஆனால், அது எல்லோருக்கும் கிடைக்கல. எனக்கும் வர்ல. எனக்கு மாத சம்பளம் ரூ.9500 தர்றாங்க. அதவச்சிதான் எனக்கான செலவை பார்த்துக்கிறேன். இங்க இருக்க எல்லா டிரைவரும் அப்படித்தான் இருக்காங்க.
எங்களுக்கு இந்த இடத்தில் தங்குவதற்கு எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை. ஏன்னு கேட்டா, “இது எமர்ஜென்ஸி வேலை. அதனால நீங்க வண்டியிலேயே படுத்துக்கொள்ளுங்கள்’னு சொல்றாங்க.
சாப்பாடு, தண்ணீர் உள்ளிட்ட செலவுக்கு அந்த 200 ரூபாயில்தான் பாத்துக்கனும்னு சொன்னாங்க. ஆனா அந்த பணம் கொடுக்கமாட்றாங்க. இது எங்களுக்கு சிரமமா இருக்கு. அதேபோல காலையில எழுந்து குளிக்க கொள்ள எந்த வசதியும் இல்ல. பாத்ரூம் கூட போக முடியவில்லை. அங்க போனா அதுக்கு முறையா பக்கெட் இல்ல. அவசரத்துக்கு வரவங்க சின்ன சின்ன பாட்டில்ல தண்ணி எடுத்துட்டு வந்து வேலையை முடிச்சிக்கிறாங்க. அதை ஒழுங்கா சுத்தம் செய்யிறது இல்ல. அப்புறம் எப்படி நாங்க பயன்படுத்த முடியும்?
கும்பமேளாவுக்காக திரிவேணி சங்கமம் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிவறைகள்: போதிய பராமரிப்பின்றி மூடப்பட்டுள்ளது.
சுத்தம் செய்ய ஆட்கள் இருக்குன்னு சொல்றாங்க. ஆனால், சுத்தம் செய்யிற மாதிரி தெரியவில்லை. எல்லா இடத்துலயும் சுத்தமில்லாத பாத்ரூமை கயிறு போட்டு கட்டி வைச்சிருப்பாங்க. பார்த்திருப்பீங்க.
பயன்படுத்த இலாயக்கற்ற கழிவறை.
இந்த கும்பமேளாவுல எல்லாத்துக்கும் காசுதான். பெரிய பெரிய உணவகங்களுக்கு சுமார் 40 லட்சம் வரை கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். எனக்கு தெரியவில்லை. இந்த பணத்தை எல்லாம் அரசு அதிகாரி, காண்ட்ராக்டர்கள்தான் சாப்பிடுகிறார்கள்.
அரசு 100 ரூபாய் ஒதுக்கினால் அதில் 40 தான் மக்களுக்கு கிடைக்கிறது. மீதி எல்லாம் அவர்களே சுருட்டிக் கொள்கிறார்கள். அதுதான் இங்கே நடக்கிறது. இன்னும் சிலர் கடைகளை காண்ட்ராக்ட் எடுத்து அதிக வாடகைக்கு அவர்கள் விடுகிறார்கள். அரசு வாகனத்தில் அதிகாரி வீட்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் வந்து குளித்து விட்டு செல்கிறார்கள்” என்று பொறிந்து தள்ளினார்.
“சரி, இங்க நீங்க வேறு என்னவெல்லாம் பிரச்சனைய சந்திக்கிறீங்க?”
இங்கே வண்டி ஓட்டுறது ரொம்ப சிரமாக இருக்கு. எல்லா இடத்துலேயும் பேரிகார்டர் தடுப்புக்கள் போட்டு வச்சிருக்காங்க. யாருக்காவது உடம்பு முடியலனா அவசரத்துக்கு கொண்டு போயி சேக்க முடியல. இன்னொரு பக்கம் போலீஸ் பிரச்சனையா இருக்கு. எப்படி போனாலும் இது வி.ஐ.பி போற வழி. அதனால வேறபக்கமா போ’ன்னு என்று திருப்பி அனுப்பிடுறாங்க. இதுவே எங்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கு.
கோடிகளில் கொட்டி செய்யப்பட்ட கும்பமேளா ஏற்பாடுகள்.
இங்க டூட்டி போட்டதுல இருந்து உடம்பு முடியலன்னு அதிகமா வந்தது பெண்கள் தான். அதிலும் குறிப்பாக வயசானவங்க மற்றும் புதுசா வந்து குளிக்கிறவங்க. பழக்கமில்லாதவர்கள் குளிர் நீரில் இறங்கிடுறாங்க.. அவங்களால குளிர தாக்கு பிடிக்க முடியறதில்ல. அதேமாதிரி குளிச்ச பின்னாடி ஈரத்துணியோடு இருப்பதால உடல் டெப்ரேச்சர் குறைஞ்சிடுது. அதுவும் இரவு மற்றும் அதிகாலையில்தான்.
போன ஜனவரி 15-ம் தேதி இந்த பிரச்சனையால தூக்கிட்டு வந்த இரண்டு பெண்களை வண்டிக்குள்ளயே வச்சிகிட்டு யமுனா செக்டார்ல 40 நிமிடம் சுத்திக் கொண்டு இருந்தேன். அதுக்கு காரணம் போலீஸ் வண்டிய விடாமா திருப்பி விட்டதாலதான்.
மருத்துவத்தை பொருத்தவரை கோல்டன் ஹவர்னு சொல்லுவாங்க. ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. ஆனால், அதுகுறித்த கவலையே பாதுகாப்புக்கு இருக்கும் போலீசுக்கு இல்லை” என்றார்.
தெரு விளக்குகள் இல்லா இருண்ட அலகாபாத்தின் வீதிகள்.
இந்த விழாவில் எந்த குறையும் வந்துடக்கூடாதுன்னு தாராளமா செலவு பண்ணியிருக்காங்க. ஆனா அலகாபாத்துல அடிப்படை வசதிகள் இல்லை, தெரு விளக்குகள் இல்ல. எப்பொழுதும் வாகனத்துல பயணிக்கும் நீங்க வெளிச்சம் இல்லாததைப் பற்றி என்ன நெனக்கிறீங்க?
இது வெத்து செலவுதான். இந்த காசை உட்கட்டமைப்பை விரிவுபடுத்த செலவிட்டிருக்கலாம். தெருவிளக்கு இல்லைங்கிறது பெரும் குறைதான். ஆனா எங்களுக்கு பழகிடுச்சி.
கும்பமேளாவிற்கு வந்த மக்கள் இந்தமுறை சிறப்பாக செய்திருப்பதாக சொல்கிறார்களே.. அடுத்தமுறை யோகி வருவாரா?
நிச்சயம் இல்லை.
“ஏன்?”
இந்த ஆட்சி மீது விவசாயிகளுக்கு நிறைய வெறுப்பு இருக்கிறது. கடன் தள்ளுபடி செய்வதாக சொல்லி செய்யவில்லை. சமீபமாக கடன் வாங்கிய விவசாயிகள் கடனையும் ரத்து செய்யவில்லை. யார் வாங்கிய கடனை சுத்தமாக கட்டவில்லையோ அவர்களுக்கு தள்ளுபடியாகியுள்ளது. அவர்கள் எல்லாம் பெரிய பெரிய பண்ணையார்கள். மூன்று, நான்கு வருஷமா இவர்கள் கடனே கட்டாதவர்கள்.
“கவ் ரக்ஷன் திட்டத்தைப் பற்றி என்ன நெனக்கிறீங்க? எந்த அளவிற்கு அதற்கு ஆதரவு உள்ளது?”
அதுவும் பெரிய பிரச்சனையாக உள்ளது. மாடு விற்க முடியவில்லை. எங்க ஊர்லயே நிறைய பேருக்கு பிரச்சனையா இருக்கு. மாட்டை அப்படியே விட்டுவிடவும் மனசு வரல. அதேசமயம் வீட்டிலேயே கட்டி பராமரிக்கவும் முடியல. நிறைய செலவாகுது. அதனால் மொத்தமாக ஒரு தடுப்பு கட்டி அதில் மாட்டை கட்டிவிடுகிறார்கள். யோகி பசு பாதுகாப்பு மையம் வைப்பதாக சொன்னார். அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
“ஆண்டி ரோமியோ ஸ்குவாடு இன்னும் இருகிறதா?”
ஆரம்பித்த கொஞ்ச நாள்லயே முடிவுக்கு வந்து விட்டது. காரணம் பொது இடத்தில் அண்ணன் தங்கையாக இருக்கும்பட்சத்தில் அது பிரச்சினையாகி விடுகிறது. அதனால் அது முடிவுக்கு வந்துவிட்டது. இன்னொருபக்கம் காதல் திருமணம் என்பது எங்கள் ஊரில் 10% கூட இருக்காது. கலப்பு திருமணம் சுத்தமாக இல்லை” என்றவரிடம் அடுத்த முறை யோகிக்கு ஓட்டு போடுவீங்களா என்றால்… சிரிக்கிறார்.
இந்தி மேலாதிக்கவாதிகள், இந்தியாவைத் துண்டாட நினைக்கிறார்கள் !
“வங்காளிகளின் தேசப் பற்று குறித்து இவர்கள் கேள்வியெழுப்புகிறார்கள். அவர்கள் அந்தமானுக்குச் சென்று, அங்குள்ள செல்லுலார் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுகளில் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக சுதந்திரப் போராட்டத்தில் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். சுதந்திரப் போராட்டம் நடந்தபோது, தொழில்நடத்தி பணம் சம்பாதித்து நிம்மதியாக இருந்தவர்கள் வங்காளிகளுக்கு தேசப் பற்று குறித்து பாடம் நடத்துகிறார்கள்.
இந்தி மேலாதிக்கவாதிகள், இந்தியாவைத் துண்டாட நினைக்கிறார்கள். அரசியலமைப்பை உடைக்க நினைக்கிறார்கள். அதற்கு அனுமதிக்க முடியாது. மிக மோசமான அரசியல்சாஸன நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தால் 2014-ல் நடந்ததுதான் கடைசியாக சுதந்திரமாக நடந்த தேர்தலாக இருக்கும். 130 கோடி மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையை இழந்தார்கள் என்றால், அது மனித குலத்திற்கே பிரச்சனை என்று அர்த்தம்.”
நன்றி :முரளிதரன் காசி விஸ்வநாதன் ஃபேஸ்புக் பதிவிலிருந்து…
*****
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மொழியுரிமைப் போராளி அம்மாநில நிகழ்வுகள் குறித்து BBC -க்கு அளித்த பேட்டி பின்வருமாறு :
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சி.பி.ஐ. நடவடிக்கைகளுக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது மத்திய – மாநில அரசுகளின் உறவு குறித்த கேள்விகளை நாடு முழுவதும் எழுப்பியிருக்கிறது.
டாக்டர் கார்கா சாட்டர்ஜி
இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மொழியுரிமை மற்றும் கூட்டாட்சி விவகாரங்களில் ஆர்வம் செலுத்துபவரான டாக்டர் கார்கா சாட்டர்ஜி -யுடன் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன். அவரின் பேட்டியிலிருந்து.
கேள்வி : தற்போது மேற்கு வங்கத்தில் நடக்கும் சம்பவங்களை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில் : மேற்கு வங்கத்தில் இப்போது நடப்பதை புரிந்துகொள்ள, கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதைப் தெரிந்துகொள்ள வேண்டும். சாரதா சிட்ஃபண்ட் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட முகுல் ராய், போன வருடம் பா.ஜ.க-வில் சேர்ந்தார். இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் முகுல் ராயும் மாநில பா.ஜ.க பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியாவும் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று வெளியானது. அதில், சில ஐ.பி.எஸ். அதிகாரிகளை சி.பி.ஐ மூலம் கண்காணிக்கும்படி முகுல் ராய் சொல்கிறார்.
இரண்டாவதாக, பிப்ரவரி மாத துவக்கத்தில் தாக்கூர் நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, இந்த ராஜீவ் குமாரை எதிரி என்பதைப்போல குறிப்பிடுகிறார்.
அடுத்த இரண்டு நாட்களில், அதுவும் ஞாயிற்றுக் கிழமையன்று ராஜீவ் குமாரை விசாரிக்க வருகிறது சி.பி.ஐ.; 40 பேர் சி.பி.ஐ. அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு எவ்வித தேடுதல் ஆணையும் இன்றி வருகிறார்கள். இத்தனைக்கும் பிப்ரவரி 12-ஆம் தேதிவரை, தன்னை விசாரிக்கக்கூடாது என கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலிருந்து தடை ஆணையைப் பெற்றிருக்கிறார் ராஜீவ் குமார்.
கொல்கத்தா காவல் ஆணையர் ராஜுவ் குமார்
ஐந்தாண்டுகளுக்கு முன்பாக இந்த சாரதா சிட் ஃபண்ட் வழக்கை மாநில காவல்துறையிடமிருந்து சி.பி.ஐ-க்கு நீதிமன்றம் மாற்றியது. அப்போது மாநில காவல்துறை தன் வசமுள்ள ஆதாரங்களை ஒப்படைக்க வேண்டும்.
ஆனால், ஐந்தாண்டுகளாக சும்மா இருந்துவிட்டு, தேர்தல் நெருங்கும்போது மம்தா பானர்ஜியை குறிவைக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக என்ன செய்துகொண்டிருந்தார்கள்? இந்த வழக்கு நிச்சயம் தேர்தலுக்கு முன்பாக முடியாது என எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதற்கு முன்பாக சாரதா வழக்கில் பெரிய ஆட்களைக் கைதுசெய்திருக்கிறோம் என்பதைப்போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறார்கள்.
நம் கூட்டாட்சி அமைப்பைக் குலைக்கப்படுவதை எதிர்க்கும் ஒரு மாநிலத்திற்கு எதிராக இவர்கள் இந்த யுத்தத்தை துவங்கியிருக்கிறார்கள். இந்த வழக்கில் இதுவரை ஒரு குற்றப் பத்திரிகைகூட தாக்கல் செய்யப்படவில்லை. இந்த ஐந்தாண்டுகளாக திருணாமூல் தலைவர்களை, அக்கட்சியின் ராஜ்ய சபா தலைவர் உட்பட, அழைத்துச் செல்வது, விசாரிப்பது, துன்புறுத்துவது என்றே செயல்பட்டுவந்தார்கள். இந்த ஐந்து ஆண்டுகளாக திருணாமூலுக்கு எதிராக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமே இவர்கள் நோக்கமாக இருந்தது.
ஆனால், இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் முகுல்ராய், பா.ஜ.க-வில் சேர்ந்த பிறகு அவர் மீது எந்த வழக்கும் இல்லை. ஆக, சி.பி.ஐ. முழுக்க முழுக்க ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தப்படுகிறது. மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சி, ஒரு மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும்போது, மாநில அரசின் மீது ஊழல் புகார் வந்தால் அதை சி.பி.ஐ. விசாரிக்காது. உதாரணமாக, மத்தியப் பிரதேசத்தில் முதல்வரும் அவர் மனைவியும் வியாபம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்கள். ஆனால், எந்த விசாரணையும் நடக்கவில்லை.
சாரதா சிட்ஃபண்ட் விவகாரத்தில் ஊழலே நடக்கவில்லையென நான் சொல்லவில்லை. ஆனால், மத்திய அரசின் மீது ஊழல் புகார் வந்தால் எந்த அமைப்பிடம் செல்வது? சி.என். அண்ணாதுரை சொன்னதைப்போல, இறையாண்மை என்பது மத்தியில் மட்டும் நிலைகொண்டிருக்கவில்லை. மாநிலங்களிடமும் பகிரப்பட்டிருக்கிறது. மத்திய அரசு தவறு செய்தால் யார் கேட்பது? இதெல்லாம் அரசியல் சாசன சிக்கல்கள்.
சி.பி.ஐ. போன்றவை ஒரு கட்சியின் ஆட்சியே நாடு முழுவதும் இருக்கும் என்ற காங்கிரஸ் காலத்து நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அமைப்புகள். ஆனால், மாநிலக் கட்சிகள் அதிகாரத்தையும் வலுவையும் பெற்றிருக்கும் நிலையில், ஒட்டுமொத்த சூழலும் மாறியிருக்கிறது. ஆகவே சட்டம் – ஒழுங்கு, குற்றம் போன்றவற்றை புலனாய்வு செய்ய மத்திய அமைப்புகள் தேவையா என மறு பரிசீலனை செய்ய வேண்டும். மாநில அரசுகள், மாநில காவல்துறைகளை கைப்பாவையாக பயன்படுத்துமென்றால், மத்திய அமைப்புகளை மத்திய அரசு கைப்பாவையாக பயன்படுத்தாதா? இப்போது நடப்பது என்னவென்றால், மேற்கு வங்கத்தில் ஆட்சியை கலைக்க ஒரு சாக்கைத் தேடுகிறது பா.ஜ.க. ஏனென்றால் அக்கட்சியால் ஜனநாயக ரீதியாக அங்கு ஒருபோதும் வெல்ல முடியாது.
கேள்வி : சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் கூடாது என்றால், பல மாநிலங்களை இணைத்துச் செயல்படும் குற்றங்களை எப்படி விசாரிப்பது?
பதில் : எந்த அமைப்பாக இருந்தாலும் அது அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் வரக்கூடாது. ஆனால், நம்மைப் போன்ற பரந்துபட்ட அரசியல் கட்சிகளைக் கொண்ட நாட்டில், எந்த அமைப்பாவது அரசியல் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்க முடியுமா? யு.பி.எஸ்.சி, சி.பி.ஐ. போன்றவை விதிப்படி பார்த்தால் சுயாதீனத் தன்மை கொண்டவைதான். ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது? மத்திய அரசுக்கு கேள்வியே கேட்க முடியாத அதிகாரங்கள் இருக்கும்; ஆனால், மாநில அரசுக்கு அப்படி ஏதும் இருக்காது என்பது எப்படி சரியாக இருக்கும்? உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் தவறுகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதிகளே பேசுகிறார்களே…
கேள்வி : தற்போதைய சூழலை மம்தா தேர்தலுக்காக பயன்படுத்திக்கொள்கிறார் என்று சொல்லலாமா?
பதில் : ஒரு அரசியல் தலைவர் அப்படித்தான் செய்வார். இப்போது சி.பி.ஐ. அலுவலகங்களுக்கு மத்திய பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது சரியா? மாநிலத்தில் யாருக்காவது பாதுகாப்பு வேண்டுமென்றால் மாநில காவல்துறையைத்தானே அணுக வேண்டும்?
மாநிலத்தில் உள்ள ஒரு காவல்துறை அதிகாரி ஆதாரங்களை அழிக்கிறார் என மத்திய அரசு குற்றம்சாட்டினால், மாநிலத்தில் இருப்பவர்கள் அதை அரசியல் ரீதியாக பயன்படுத்தத்தான் பார்ப்பார்கள். ஆக, தீர்வு என்பது அரசியல் ரீதியான தீர்வாகத்தான் இருக்க முடியும்.
கேள்வி : மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒடுக்க தன் பதவியைப் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. குறிப்பாக, எதிர்க்கட்சியினர் வரும்போது அவர்களது ஹெலிகாப்டரை இறங்கவிடாமல் தடுப்பது போன்றவை சரியா?
பதில் : இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று பிரசாரம். மற்றொன்று உண்மை. இந்த விவகாரத்தில், எதிர்கட்சியினரின் ஹெலிகாப்டரை இறங்கவிடாமல் செய்தார் என்பது பிரசாரம். இரண்டுபேரது ஹெலிகாப்டர்கள் இறங்க அனுமதிக்கப்படவில்லையென்பதுதான் பரவலாகப் பேசப்படுகிறது. முதலாவதாக அமித்ஷாவின் ஹெலிகாப்டர். அந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, பராமரிப்புப் பணி நடந்துவந்த ஏர் ஸ்ட்ரிப்பில் அவர் இறங்க விரும்பினார்.
மம்தா பானர்ஜிகூட அங்கே இறங்க அனுமதிக்கப்படவில்லை. அவர் அருகில் உள்ள வேறொரு ஹெலிபேடில்தான் இறங்கினார். அதேபோல, அமித்ஷாவுக்கும் வேறொரு ஹெலிபேடில் இறங்கும்படி சொல்லப்பட்டது. பிறகு, அவர் ஒதுக்கப்பட்ட இடத்தில் இறங்கி, கூட்டத்தை நடத்திவிட்டுத்தானே சென்றார்.
அவர் இறங்க அனுமதிக்கப்படவில்லையென்று பிரசாரம் செய்த தில்லி ஊடகங்கள் அவர் வேறொரு இடத்தில் தரையிறங்கியதை சொல்லினவா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். தில்லி ஊடகங்கள் இயங்கும் விதம் மிக ஆச்சரியகரமானது. அவர்கள் மக்களின் மறதியின் மீது நம்பிக்கை வைத்து செயல்படுகிறார்கள்.
ஒரே செய்தியை மக்கள் பின்தொடர்ந்து கடைசிவரை செல்வதில்லை என்பதை மனதில்கொண்டு செயல்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் புதிய புதிய செய்திகளை வைத்து பிரச்சாரம் செய்வதன் மூலம் அரக்கர்களை உருவாக்குகிறார்கள்.
யோகி ஆதித்யநாத் விவகாரத்திலும் இதேதான் சொல்லப்பட்டது. வேறொரு இடத்தில் இறங்கி காரில் வரும்படி கூறப்பட்டது. பிரதமரெல்லாம் வந்து செல்லவில்லையா? இவர்கள் ஏன் எப்போதும் ஹெலிகாப்டரில் வருகிறார்கள்? ஏன் சாதாரண விமானங்களைப் பயன்படுத்துவதில்லை? அதில் வந்து, காரில் ஒரு மணி நேரம் – இரண்டு மணி நேரம் பயணம் செய்து, சென்றடைய வேண்டிய இடத்திற்குச் செல்லலாமே?
தில்லியிலிருந்து வந்து, ஒரு இரண்டு மணி நேரம்கூட இங்கே செலவழிக்க முடியாது என்றால், வங்க மக்கள் உங்கள் அரசியலை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்தீர்களா?
பா.ஜ.க. ஆளும் அசாமில், 38 லட்சம் வங்காளிகள் – இவர்களில் 28 லட்சம் பேர் இந்து வங்காளிகள் – பெயர் இந்தியக் குடிமக்களின் தேசிய பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இவர்கள் குடிமக்கள் இல்லையென ஆக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பகுதியில் வசிக்கும் வங்காளிகளைக் குறிவைத்து இந்த வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது. அங்கே வங்காளிகளுக்காக திருணமூல் காங்கிரஸ் கட்சி பணியாற்றிவருகிறது.
ஆகவே தனது கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களை, எம்.எல்.ஏ, அமைச்சர்களை அசாமின் சில்சோருக்கு அக்கட்சி அனுப்பியது. ஆனால், அவர்கள் விமான நிலையத்தைவிட்டு வெளியில் வரக்கூட அனுமதிக்கப்படவில்லை. அப்படியே திருப்பி அனுப்பப்பட்டார்கள். இது தொடர்பாக தில்லி ஊடகங்கள் நாள் முழுவதும் எப்போதாவது செய்தி வெளியிட்டனவா? அசாம் தனி நாடா என்று கேள்வியெழுப்பினவா?
அந்தமான் சிறைச்சாலை
வங்காளிகளின் தேசப் பற்று குறித்து இவர்கள் கேள்வியெழுப்புகிறார்கள். அவர்கள் அந்தமானுக்குச் சென்று, அங்குள்ள செல்லுலார் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுகளில் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக சுதந்திரப் போராட்டத்தில் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். சுதந்திரப் போராட்டம் நடந்தபோது, தொழில்நடத்தி பணம் சம்பாதித்து நிம்மதியாக இருந்தவர்கள் வங்காளிகளுக்கு தேசப் பற்று குறித்து பாடம் நடத்துகிறார்கள்.
இந்தி மேலாதிக்கவாதிகள், இந்தியாவைத் துண்டாட நினைக்கிறார்கள். அரசியலமைப்பை உடைக்க நினைக்கிறார்கள். அதற்கு அனுமதிக்க முடியாது. மிக மோசமான அரசியல்சாசன நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தால் 2014-ல் நடந்ததுதான் கடைசியாக சுதந்திரமாக நடந்த தேர்தலாக இருக்கும். 130 கோடி மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையை இழந்தார்கள் என்றால், அது மனித குலத்திற்கே பிரச்சனை என்று அர்த்தம்.
கேள்வி : சாரதா சிட்பண்ட் விவகாரத்தில் தற்போதைய ஆணையர் ராஜீவ் குமார் மீது குற்றம்சாட்டப்பட்டால், அவரை விசாரிக்க அனுமதிக்க வேண்டியதுதானே முறை? அதற்கு ஏன் இவ்வளவு பெரிய பிரச்சனை செய்ய வேண்டும்?
பதில் : அவர் குற்றம்சாட்டப்பட்டவராக இருந்தால், நீதிமன்றத்தில் அனுமதிபெற்று நடவடிக்கை எடுக்கலாமே, யார் தடுத்தது? இதற்கென குற்றவியல் நடைமுறைச் சட்டம் இருக்கிறது. உலகில் எங்கெல்லாம் பாசிசம் ஆட்சிசெய்கிறதோ, அவர்கள் எல்லாம் ஊழல், உடனடி நீதி ஆகியவற்றை சொல்லித்தான் எல்லா அட்டகாசங்களையும் செய்கிறார்கள். எல்லா இடங்களிலும் இதைத்தான் செய்கிறார்கள். குடியரசின் அர்த்தம் அதுவல்ல.
கேள்வி : ஆனால், மத்திய அரசின் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் வரும்போது அவர்களை இவ்வாறு தடுப்பது சரியா?
பதில் : அவர்கள் மத்திய அரசின் காவலர்கள் அல்ல. தில்லி சிறப்பு காவல் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட காவல்துறை அது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தில்லி காவல்துறை, அவ்வளவுதான். மத்திய அரசிலிருந்து யார் வந்தாலும் அவர்கள் புனிதமானவர்களா, மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் புனிதமற்றவர்களா? இந்தச் சிந்தனை எப்படி வருகிறது?
கேள்வி : ஒரு கட்டத்தில் இந்த விவகாரத்தில் மம்தா சி.பி.ஐ. விசாரணையைக் கோருகிறார். பிறகு வேண்டாம் என்கிறார்…
பதில் : மம்தா பானர்ஜி எதிர்க் கட்சியாக இருக்கும்போது சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்றார். அதைத் தன் அரசியலுக்கு பயன்படுத்த விரும்பினார். இப்போது பா.ஜ.க-வும் அதையே செய்கிறது. யார் வேண்டுமானாலும் இப்படி அரசியலுக்கு பயன்படுத்துவார்கள் என்றால் எதற்காக அப்படி ஒரு அமைப்பு இருக்க வேண்டும்? அது ஒரு அரசியல் அமைப்பு. அந்த அமைப்பை மத்தியில் ஆட்சியிலிருக்கும் அரசு பயன்படுத்திவருகிறது. அதன் பற்களை உடைக்க வேண்டும். அவ்வளவுதான்.
கேள்வி : இந்தப் பிரச்சனைக்கு எப்படி முடிவு வருமென நினைக்கிறீர்கள்?
பதில் : இரண்டுவிதங்களில் இருக்கலாம். முதலாவதாக, அவர்கள் நீதிமன்றத்தை அணுகி, ராஜீவ் குமாரை வாக்குமூலம் அளிக்க உத்தரவிடக் கோரியிருக்கவேண்டும். முன்பே அதைச் செய்திருக்க வேண்டும். ராஜீவ் குமார் சாட்சியங்களை அழித்திருந்தால் அது மிகப் பெரிய குற்றம். ஆனால், அதை வைத்து அரசியல் செய்வது அதைவிட மிகப் பெரிய குற்றம்.
வன்முறையை அரங்கேற்றி விட்டு பழியை எதிர்த்தரப்பினர் மீது போட்டு அடக்குமுறையை தொடுப்பது, ஹிட்லர் காலம் தொட்டு பாசிஸ்டுகள் கடைபிடிக்கும் அணுகு முறை. இதில் பார்ப்பன பாசிஸ்டுகளும் விதிவிலக்கல்ல.
2018 ஜனவரி 1-ம் தேதியன்று தலித் இயக்கங்கள் நடத்திய பீமா கோரேகான் 200-ம் ஆண்டு நினைவுதின நிகழ்ச்சியில், இலட்சக்கணக்கான தலித் மக்கள் கலந்து கொண்டதால், ஆத்திரம் கொண்ட இந்துவெறி அமைப்புகள் திட்டமிட்டே வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டன.
அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியவர்கள், மோடியைக் கொலை செய்ய சதி செய்தவர்கள், மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்று பொய்க்குற்றம் சாட்டி, ஜூன் 7-ம் தேதியன்று 5 பேரை கைது செய்தது மகாராட்டிர போலீஸ்.
கைது செய்யப்பட்டவர்களில் தலித் அறிஞர்கள், வழக்கறிஞர்கள், சமூக செயற் பாட்டாளர்கள் அனைவரும் இருக்கிறார்கள். முற்போக்கு அறிஞர்களான தபோல்கர், கல்புர்கி, கெளரி லங்கேஷைக் கொன்ற சங்க பரிவாரத்தினர், அடுத்த கட்டமாக செயற் பாட்டாளர்களை கைது செய்து சிறையில் அடைக்க திட்டமிடுகிறார்கள்.
மோடியைக் கொல்லச் சதி எனக் குற்றம் சாட்டி, இந்தக் கைது நடவடிக்கைக்கு அரசு தரப்பு கொடுத்த ஆதாரம் ஒரு மொட்டைக் கடிதம். இதன் நம்பகத்தன்மையை முன்னாள் உயர் போலீஸ் அதிகாரிகளே ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பாஜக செய்தித் தொடர்பாளர்களும், மோடி ஆதரவு ஊடகங்களும் இந்த அபாண்டத்தை முன் வைத்து கூப்பாடு போடுகிறார்கள். ஜனநாயகத்தின் தூண்கள் என்று கூறப்படும் நாடாளுமன்றம், நீதிமன்றம், நிர்வாக எந்திரம், ஊடகங்கள் ஆகியவை அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகள் ஊடுருவியிருக்கிறார்கள்.
கஜா புயலால் வாழ்விழந்த தஞ்சை விவசாயிகள், சாகர் மாலா திட்டத்தால் பாதிக்கப்படும் மீனவர்கள், பண மதிப்பழிப்பாலும், ஜி.எஸ்.டி-யாலும் தொழிலே அழிந்துபோன சிறு உற்பத்தியாளர்கள் – வணிகர்கள், வேலைவாய்ப்பு என்ற மோடியின் வாக்குறுதியை நம்பி ஏமாந்த இளைஞர்கள், நீட்- தனியார் கல்விக்கொள்ளைக்கு இரையாகும் மாணவர்கள் என மக்களிடம் அம்பலப்பட்டு வருகிறது மோடி அரசு.
இந்நிலையில்தான் பாஜக.வின் வளர்ச்சி சவடாலையும், பார்ப்பனிய பண்பாட்டு தாக்குதலையும் அம்பலப்படுத்தும் அறிவுத்துறையினரை ஒடுக்க, மோடி அரசு முயல்கிறது. நமது நாடு ஒரு பாசிச அபாயத்தை எதிர்கொள்ளும் உண்மையையும், அதை முறியடிக்க வேண்டிய கடமையையும் இந்தத் தொகுப்பு நினைவுபடுத்துகிறது.
தோழமையுடன் புதிய கலாச்சாரம்.
மோடியைக் கொல்ல சதியா ? – புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2019 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு ‘Add to cart’ அழுத்துங்கள்
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)
“மோடியைக் கொல்ல சதியா ? “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
பார்ப்பன பாசிஸ்டுகளை எதிர்த்து நின்ற வீராங்கனை கவுரி லங்கேஷ் !
ஜனநாயகத்தின் நிறுவனங்களால் தேசத்துக்கு ஆபத்து ! பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் !!
பாசிசம்: அச்சமும் அச்சுறுத்தலும் !
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினால் ஊபா சட்டத்தில் கைதா ?
மோடி அரசின் பாசிசத்திற்கு பச்சைக் கொடி காட்டும் உச்ச நீதிமன்றம்
அவசர நிலை : ஆர்.எஸ்.எஸ் அன்றும் இன்றும்
மோடி அரசின் எமர்ஜென்சி : அருந்ததி ராய் – பிரசாந்த் பூசன் – ராமச்சந்திர குஹா கண்டனம் !
ஆனந்த் தெல்தும்ப்டேவுக்கு எதிரான பொய் வழக்கை ரத்து செய்! ஊபா உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை ரத்து செய் !
அண்டப்புளுகர் அர்னாப் கோஸ்வாமியை அம்பலப்படுத்துகிறார் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ்
தோழர் கோபட் காந்தியை சிறைப்படுத்திக் கொல்லாதே! விடுதலை செய்!
தீஸ்தா செதல்வாட் கைது முயற்சி : பாசிச மோடியின் பழிதீர்க்கும் வெறி !
கவுரி லங்கேஷ் கொலையாளிகளின் ஹிட் லிஸ்ட்டில் முதல் இடத்தில் கிரிஷ் கர்னாட்
மோடியைக் கொல்ல சதியா ? ஜனநாயக உரிமைகளைக் கொல்ல மோடியின் சதியா?
பிணியொன்று நம்மை பீடித்துள்ளது!
கல்புர்கி கொலை : இந்து மதவெறி – ஆதிக்க சாதிவெறியின் அட்டூழியம் !
பேராசிரியை நந்தினி சுந்தர் மீது கொலை வழக்கு – பாஜக பாசிசம் !
தலித் மாணவன் ரோகித் வெமுலாவைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் !
ஜே.என்.யு. மாணவர் உமருக்கு துப்பாக்கிக் குண்டு !! இதுதான் மோடியின் சுதந்திரதினச் செய்தி !
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
₹1,500.00–₹6,000.00Price range: ₹1,500.00 through ₹6,000.00
SKU: N/A
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
தமிழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்கள் இலவசமாய் வழங்க உதவுங்கள் !
மாணவர்களிடம் சமூக அக்கறையை வளர்க்கும் முயற்சி இது !
வசதி வாய்ந்த நடுத்தர வர்க்கத்தின் மாணவர்கள் உயர்கல்வி கல்லூரிகளில் பொறியியல் படிக்கின்றனர். வசதியற்ற தமிழ் மாணவர்கள் அரசு கல்லூரிகளில் கலைப் பாடங்களை படிக்கின்றனர். இம்மாணவர்களைத்தான் பொறுக்கிகளாக ஊடகங்கள் கட்டியமைக்கின்றன. மக்களும் நம்புகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடையை உடைத்து சிறை சென்றனர். முள்ளிவாய்க்கால் போரின் போது இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்காக களமிறங்கி தீவிரமாக போராடியவர்களும் இவர்களே!
அரசியல் ஆர்வமும், சமூக அக்கறையும் இம்மாணவர்களிடம் இயல்பாக இருக்கிறது. அதை அறிந்து வளர்த்து அழகான குடிமக்களாக மாற்றுவது நமது கடமை! வினவு சார்பில் மாதம் ஒரு புதிய கலாச்சாரம் நூல் வெளியிடப்படுகிறது. குறிப்பிட்ட தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 80 பக்கங்களில் அழகிய கட்டமைப்பில் வெறும் 30 ரூபாய்க்கு வெளியிடுகிறோம். இலாப நோக்கமின்றி அடக்கவிலையில்தான் இந்த நூல்கள் வெளியிடப்படுகின்றன.
தமிழ் பதிப்பகச் சூழலில் இந்த விலை மலிவான ஒன்று என்பது மிகையல்ல. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிடப்படும் இந்நூல்களில் அரசியல், சமூகம், பண்பாடு குறித்த தலைப்புகள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக மாணவர்களுக்கு பொருத்தமான நுகர்வு பண்பாடு, சாதி மதம், கல்வி, சினிமா, காவி அரசியல் போன்ற தலைப்புகளும் உள்ளன.
அரசு கலைக்கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்நூல்களை இலவசமாக விநியோகிக்க உங்கள் உதவி தேவை! பட்டியலில் உள்ள கல்லூரிகளை தெரிவு செய்து, எவ்வளவு நூல்கள் விநியோகிக்கப்பட வேண்டுமென்ற எண்ணிக்கையை தெரிவு செய்து நீங்கள் பணம் கட்டலாம்.
பட்டியலில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் மூலம் நூல்களை விநியோகிப்போம். அது குறித்த புகைப்படம், செய்தி வினவு தளத்தில் வெளியாகும். மாதந்தோறும் குறிப்பிட்ட கல்லூரி மாணவர்களுக்கு நீங்கள் நிரந்தரமாகவும் புத்தகம் அளிக்க முடியும்.
உதவுங்கள்!
மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்
₹1,500.00–₹6,000.00Price range: ₹1,500.00 through ₹6,000.00
சென்னை 42-வது புத்தகக் காட்சி பற்றியும் கீழைக்காற்று அரங்கிற்கு வருகை தந்திருந்த வாசகர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கிறார் தோழர் துரை. சண்முகம்.
‘’கீழைக்காற்று அரங்கிற்கு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், திரைத்துறையினர், தோழர்கள் என பலரும் வருகை தந்திருந்தனர். ஏதோ புத்தகம் வாங்குவதற்கான வருகையாக என்றில்லாமல், ஒரு புதிய அரசியல் கருத்து உரையாடலை நோக்கி வந்ததாகவே பார்க்கிறேன்.
வாசகர்களை வெறும் நுகர்வோராக மட்டும் கருத முடியாது. அவர்களுக்குத் தேவையான கருத்து நம்மிடம் இருக்கிறதா? என்பதை புத்தக வெளியீட்டாளர்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதனை வணிகம் சார்ந்த நடவடிக்கையாக மட்டும் சுருக்கி புரிந்து கொள்ள முடியாது. இது கருத்துலகம். இன்றைய தலைமுறையினருக்கு என்ன மாதிரியான கருத்தும் சிந்தனையும் தேவைப்படுகிறது. அதனோடு தொடர்புடையவர்களாக புத்தக வெளியீட்டாளர்கள் இருக்கிறோமா? என்பதை பரிசீலித்து பார்ப்பதற்கான வாய்ப்பாகவும் இந்தப் புத்தகக் கண்காட்சியைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
மார்க்சிம் கார்க்கி சொல்வதைப்போல உலகத்திலேயே சிறந்த கருத்து மனிதன் என்பார். அவர்களது நடைமுறைக்கும் சிந்தனைக்கும் தேவைப்படும் தொடர்புடைய ஒரு கருத்தை தரக்கூடிய இடத்தில் நூல் வெளியீட்டாளர்கள் இருக்க வேண்டும்.
எண்ணற்ற இளைஞர்கள் வருகை தந்திருந்தார்கள். இளைஞர்களுக்குத் தேவைப்படுவோராக நாங்கள் இருந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. விழுப்புரம், விருத்தாசலம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தோழர்கள், இளைஞர்கள், மாணவர்கள் குறிப்பாக முதல் பட்டதாரி மாணவர்கள் பலர் வந்திருந்தனர். நிறைய படிக்க வேண்டும் என்று விருப்பப்படுவர்களுக்கு பொருளாதாரம் இல்லை. புத்தக அலமாரியைப் பார்ப்பார்கள். எல்லாம் நல்ல நூல்களாக இருக்கிறது. இவற்றையெல்லாம் வாங்குவதற்குத்தான் எங்களிடம் பணமில்லை என்று வெளிப்படையாகவே பல இளைஞர்கள் சொன்னார்கள். இந்தக் குழந்தையை தூக்கி கொஞ்சுவதற்கு வாய்ப்பில்லையே என்ற ஏக்கத்தை அவர்களிடம் உணர முடிந்தது.
நிறைய நூலைப் படித்துவிட்டு முதுகுக்குப் பின்னால் அடுக்கி வைத்துவிட்டு உட்கார்ந்து இருப்பதனால் என்ன பயன்? படிப்பின் தேவையை எனக்கானதாக மட்டுமில்லாமல், நான் வாழக்கூடிய சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டுமென்ற அந்த இளைஞர்களின் புரிதல் முன்னுதாரணமானது.
இன்னொரு சம்பவம், 50 வயதைக் கடந்த முதிய தம்பதியினர் வந்திருந்து நூல்களை தேர்வு செய்தனர். பார்ப்பவர்களுக்கு வயதான காலத்தில் பொழுது போகாமல் நூல் வாங்கிப் படிப்பதாக எண்ணத் தோன்றும். ஆனால், அவர் சொன்னார் “இதையெல்லாம் படிக்க முடிகிறதா? என்று கேட்கிறீர்கள். இதையெல்லாம் இதுவரை நான் படிக்காமல் இருந்திருக்கிறேன் என்றுதான் நான் பார்க்கிறேன் என்றார்.’’
இவை போன்ற இன்னும் பல சுவாரசியமான புத்தகக் காட்சி அனுபவங்களை பகிர்கிறார் தோழர் துரை. சண்முகம்.
சென்னை குருநானக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10-வது இந்து ஆன்மீகக் கண்காட்சி நடைபெற்று முடிந்திருக்கிறது. தமிழகத்தின் அனைத்து மடாதிபதிகள் தொடங்கி சாதி சங்கங்கள் வரை அக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. “இந்து என்றால் சாதி- சாதி என்றால் இந்து” இதுதான் இந்துத்துவத்தின் மூலமந்திரம். அதனால்தான் “ஆன்மீக” கண்காட்சியில் சாதி சங்கங்ளுக்கு பிரதான இடம் ஒதுக்கியிருந்தனர். இவர்கள் சொல்லும் ‘இந்து ஒற்றுமை’ என்பது உண்மையில் சாதிகளின் ஒற்றுமையே!
என்னதான் சாதி வெறியனாக இருந்தாலும் பொதுவில் தன் சாதியை சொல்லத் தயங்கும் ஒரு மாநிலத்தில் சாதி சங்கங்ளுக்கு ஸ்டால் ஒதுக்கித் தரப்படுகிறது என்றால்… இதனை வேறு யாரால் இவ்வளவு அழுத்தமாக செய்ய முடியும்? நிச்சயம் ஆர்.எஸ்.எஸ்தான்.
பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த கண்காட்சியின் புரவலர்கள் யார் தெரியுமா? டாஃபே, ஜி.எம்.ஆர், லார்சன் & டியூப்ரோ, பாரத் ஃபோர்ஜ், அசோக் லேலாண்ட், எஸ்ஸார், ஜெம் கிரானைட், டிவிஎஸ், ஸ்ரீராம் பைனான்ஸ் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் துக்ளக் ஆசிரியர் குருமுரூத்தியின் ஆணைக்கிணங்க நிதியால் கண்காட்சியை ஆசிர்வதித்திருந்தன.
ஆன்மீக கண்காட்சியில் சாதி சங்கங்கள் :
1 of 3
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தமிழக மண்ணில் காலூன்ற துடிக்கும் சங்க பரிவார் கூட்டம் இதுபோன்ற கண்காட்சியின் மூலம் நடுத்தர இந்துக்களுக்கு வலைவீசி வருகிறது. வட இந்தியாவைபோன்று இங்கு பக்தி மூடநம்பிக்கையில் ஊறித்திளைப்பவர்கள் குறைவு. இங்கே பக்தி-இறை நம்பிக்கை இருந்தாலும் கூடவே பகுத்தறிவும் கொஞ்சமாவது இருப்பதால் ஏமாற்றுவது குறித்து சங்கிகள் தினுசு தினுசாக யோசித்து வருகின்றனர்.
அதனால்தான் “தத்துவார்த்த” ஆன்மீக ஆசாமிகளுக்கும், யோகா மற்றும் தியான பீடங்கள் மற்றும் “உயர்” சாதி சங்களுக்கும் கணிசமான ஸ்டால்களை ஒதுக்கியுள்ளனர். அரங்கத்தில் ஓரளவு அறியப்பட்ட வரலாற்று பிரபலங்களை இந்துவாக மாற்றி அவர்களுக்கு வரலாற்றுக்குறிப்புடன் கூடிய பதாகைகளையும் வைத்திருந்தனர்.
எந்த ஸ்டாலை அணுகினாலும் அன்பான அணுகுமுறையும், கனிவான பேச்சும்… நம்மை மென்மையாக இந்துத்துவத்தை நோக்கி இழுக்கும் படியாகவே உள்ளது. யோகா, தியானம், சமஸ்கிருதம், மன நிம்மதியுடன் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்று டெம்பிளேட் அட்வைசுகள் ஏராளம். “எல்லாம் இலவசம் நீங்க வந்தா மட்டும் போதும்” என்ற ஒரு பேக்கேஜும் கூடவே இருப்பதால் அந்த இலவசத்தில் “இந்து வெறியூட்டும்” ஐட்டங்களை நைசாக சேர்த்திருந்தார்கள்.
அந்த அரங்கத்தில் பகத்சிங் பற்றியும், வேலு நாச்சியார் பற்றியும் ஒளிப்படங்கள் போடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அதில் இருந்த பெண்ணிடம் பேசியபோது சொன்னார். “இங்க வரக்கூடிய பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் சுற்றி பார்த்தால் ஒரே ஆன்மீகமா இருக்கேன்னு வெறுப்பாகிடுறாங்க. அதனாலதான் ஒரு மாற்றுக்காக இதை போடுறோம்” என்றார்.
கொஞ்சம் தள்ளி இருந்த ஒரு ஸ்டாலில் வரலாற்று விளக்க ஓவியத்தில் பகத்சிங் படம் இருந்தது. அந்த ஸ்டால் குருநானக் கல்லூரியின் சார்பாக போட்டிருந்தனர். அவர்களிடம், ஆன்மீக கண்காட்சியில பகத்சிங் படம் போட்டிருக்கிங்களே ஆன்மீகத்துக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டோம்
“குருநானக் தான் சீக்கிய மதத்தை தோற்றுவிச்சாரு… முகலாயர்களின் ஆட்சியில சீக்கியர்களை மதம் மாற சொன்னாங்க. அவங்க முடியாதுன்னு சொன்னதால ரொம்ப துன்புறுத்தினாங்க. நெறைய சீக்கியர்களை கொலை பண்ணினாங்க. அதை விளக்கத்தான் இந்த படங்கள் இருக்கு” என்று தடுமாறி சொன்னார். ஒரு கல்லூரியின் ஸ்டாலே இப்படி அப்பட்டமாக வரலாற்றை திரித்து பேசும் போது நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டமெல்லாம் எவ்வளவு பயங்கரமாக இருக்கும்?
அது இருக்கட்டும் மேடம். இதுல பகத்சிங் எங்க வந்தாரு?
“அவரும் ஒரு சீக்கியர்தான்… இந்திய விடுதலைப் போராட்டத்துல கலந்துகிட்டாரு… இங்க நிறைய படம் இருக்கு. அதை பாத்துகிட்டே வந்திங்கன்னா இதெல்லாம் புரியும். இருங்க சார், இங்க ஒரு சார் இருந்தாரே… ம்… அவர்தான் இதெல்லாம் விளக்குவாரு… அவரையும் காணோம்.” என ஒரு சிரமத்துடன் சொல்லிவிட்டு அமர்ந்தார். பொய்யுரைப்பதற்கு இத்தனை குறைவான பில்டப் வார்த்தைகளே போதுமென்றால், இந்து ஆன்மீகக் கண்காட்சி மூலம் எத்தனை எத்தனை வகை வாட்ஸ் அப் வதந்திகளெல்லாம் செய்தி – வரலாறு – தத்துவமாக மக்கள் காதில் கொட்டப்பட்டிருக்கும்?
இன்னொரு இடத்தில் சென்னை பிரமிட் ஆன்மீக மன்ற இயக்கம் சார்பாக, வரும் போகும் அனைவரையும் இழுத்து இரண்டு நிமிட தியானப் பயிற்சியை அளித்துக் கொண்டிருந்தனர். அருகே நோட்டிசு கொடுத்துக்கொண்டிருந்தவரிடம் கேட்டபோது சொன்னார். “மனம் அமைதியா இருக்கும், நினைவாற்றல் அதிகரிக்கும்.. அதுகுத்தான் சார் தியானம். நீங்க வாங்க. உங்களுக்கும் சொல்லிக் கொடுப்பாங்க” என்றார்
பிரமிட் ஆன்மீக மன்ற இயக்க அரங்கு
வேற என்ன எல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க…
“உங்க ஆரோக்கியத்துக்காக தியானத்தோட சேத்து சைவ உணவு பழக்கத்தையும் சொல்லிக் கொடுப்போம். உலகத்துலேயே சிறந்தது சைவ உணவுப் பழக்கம்தான். அது அகிம்சைய சொல்லித்தருது. எந்த ஒரு உயிரையும் கொல்லக்கூடாது சார்… இப்போ நாம காய்கறிய நறுக்குவோம் அது எதுனா சத்தம் போடுதா? இல்ல.. அது சாத்வீகமான உணவு. இதே நான்-வெஜ்லாம் ஒரு உயிர கதற வைக்குது பாத்தீங்களா.. அதனால அதெல்லாம் சாப்பிடக்கூடாது. உடல் ஆரோக்கியத்துக்கு சைவ உணவு பழக்கம், நல்ல மனநலத்துக்கு தியானம்.. இதெல்லாம் கத்துகுடுக்குறோம். தியானத்தால நாம சுத்தமான காத்த சுவாசிக்க முடியும் சார்..” மாட்டுக்கறி மகத்துவங்களை எப்படி நைசாக சைவம் – அசைவம் என்று பேஷாக பேசுகிறார்கள் பாருங்கள்!
இவர்கள் சொல்லும் “மன நிம்மதி” எந்த பிரச்சனையைப் பற்றியும் பேசாமல் – கண்டுகொள்ளாமல் – இருந்தாலே போதும் என்பது மட்டும் புரிந்தது.
தியானத்தின் மூலம் சுத்தமான காத்து கெடைக்கும், மனசு அமைதியா இருக்கும்னு சொல்றீங்க… சென்னையில எங்க போனாலும் பொல்யூசன்தான் அதிகமா இருக்கு.. இதுவே பெரும் பிரச்சனையா இருக்கே..?
“அதை எல்லாம் பெரிசா எடுத்துக்கவே கூடாது சார். இப்ப நான் இருக்கேன். இங்க வந்துதுல இருந்து ஆரோக்கியமாதான் இருக்கேன். நமக்கு நிம்மதிதான் சார் முக்கியம்” என்று திரும்பத்திரும்ப சொன்னார். எப்படி மாற்றிக் கேட்டாலும் அவர் இதையே வேறு வேறு வார்த்தைகளில் கீறல் விழாத ரிக்கார்டாகவே ஓதினார். இவர்கள் சொல்லும் “மன நிம்மதி” எந்த பிரச்சனையைப் பற்றியும் வெளிப்படையாக பேசாமல் – கேள்வி கேட்காமல் – கண்டுகொள்ளாமல் – இருந்தாலே போதும் என்பது மட்டும் புரிந்தது.
அடுத்த வரிசையில் விலங்குகள் பாதுகாப்பிற்காக இருந்த ஸ்டாலில் ஒரு முதியவர் வருபவர்கள் அனைவரிடமும் நோட்டிசு கொடுத்து விளக்கிக் கொண்டிருந்தார்.
மாட்டு மூத்திர ஆராய்ச்சி அரங்கம்
“நாங்க 800 மாடுகள பராமரிக்கிறோம். நாம மாட்டுகிட்ட இருந்து எல்லாத்தையும் பெறுகிறோம். ஆனா கடைசியில அதை அம்போன்னு விட்டுடுறோம். அப்படி இல்லாம அதையெல்லாம் வச்சு பராமரிக்கணும்… அததான் நாங்க செய்யுறோம் சார்.. இது மாதிரி மாடுகளை பராமரிக்க ஆகுற செலவு வருசத்துக்கு ரெண்டு லட்சம். தினமும் ஒரு மாட்டுக்கு 50 ரூபா. மாசத்துக்கு 1500 ரூபா. வருஷத்துக்கு 18,000 ரூபா ஆகர்..றது சார்” என தொடர்ந்தார்.
சரி நாங்க என்ன பண்ணனும்… அந்த மாடுகளை வாங்கிட்டு போயி வளக்கனுமா?
உ.பி.-ல யோகி சார் கோசாலை கட்டி தர்ரதா சொன்னாரு. அதே மாதிரி நீங்களும் அரசுகிட்ட டிமாண்ட் வக்கலாமே..
நமக்கு வாய்-வயிறு இருக்க மாதிரி அதுக்கும் இருக்குதானே…ன்னு சொல்லிக்கொண்டே அந்த வழியாக சென்றவரை வம்படியாக இழுத்து அவரிடம் பேச ஆரம்பித்துவிட்டு சாதூர்யமாக நம்மை புறக்கணித்தார் அந்த விலங்கு பாதுகாவலர். முந்தையதில் சைவ உணவின் மகத்துவமாக விஷம் பாய்ச்சியவர்கள் இங்கே கோமாதாவை சென்டிமெண்ட்டாக மார்கெட்டிங் செய்து வந்தார்கள்.
ஈஷா மையம்
ஈஷா மையம் – கர்ம யோகி ஜக்கி வாசுதேவ் கம்பெனி, இரண்டு மூன்று ஸ்டால்களை சேர்த்து எடுத்து பெரிய குடில் போட்டிருந்தார்கள். அந்த அரங்கில் முன்னே இருந்த பெரிய டிஜிட்டல் திரையில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார் ஜக்கி… அதில் பணியாளர்களே பத்து பேர் இருப்பார்கள். வரிசையாக பள்ளி சிறுவர்கள் இந்த மையத்திற்கு வந்து கொண்டிருக்க அவர்களிடம் நோட்டிசு கொடுத்துக் கொண்டிருந்தனர் ஒரு பிரிவினர். இந்தக் கண்காட்சிக்கு தினசரி பல்வேறு பள்ளிகளின் குழந்தைகள் பள்ளி நிர்வாகத்தின் மூலம் அழைத்து வரப்பட்டிருந்தனர். பள்ளிகளின் மதச்சார்பின்மை எப்படி இளித்துக் கொண்டிருக்கிறது பாருங்கள்!
ஜக்கி கம்பெனியார் “வரும் மஹா சிவராத்திரி அன்னைக்கு எல்லா ஊர்ல இருந்தும் அழைச்சிண்டு போகறதுக்கு பஸ் ஏற்பாடு பண்ணியிருக்கோம். நீங்க அவசியம் வரணும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
என்னடா இது…. பைசா செலவில்லாம கூட்டிட்டு போறதா சொல்றாங்க. என்ன ஏதுன்னு விசாரிக்க அவர்களிடம் சென்றதும்.
நீங்க எந்த ஏரியா? என்றார்கள். ஏரியா பேரை சொன்னதும்.. “ஒன்னும் பிரச்சனை இல்ல. அங்கேயே பஸ் வரும். நீங்க உங்க பேர், போன் நம்பர்லாம் கொடுங்க.. நாங்க கூப்பிடுவோம்” என்றார்கள்.
“சரி சார்… நீங்க வாங்க. இந்த செலவினங்களுக்கு உங்களால் முடிஞ்ச தொகை எதாவது பண்ணுங்க” என்றார்கள். சிவராத்திரி தரிசனம் இலவசமென்றாலும் தரிசனத்திற்கான நிதியை விலை போல உடனே சொன்னது சுவாரசியமாக இருந்தது. ஒண்ணு வாங்கினால் ஒண்ணு இலவசம் என்ற வணிகச் சந்தை உத்தி ஆன்மீகச் சந்தையிலும் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தது. காசே கொடுக்கவில்லை என்றாலும் ஃபோன் நம்பர் வருவதே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.
அதே போல ஆர்.எஸ்.எஸ்-ஸின் சமஸ்கிருத பாரதிக்கும் பெரிய ஸ்டால் போடிருந்தார்கள். கையில் இருந்த நோட்டிசைக் கொடுத்து சமஸ்கிருதம் சொல்லித்தறோம். 20 நாள்ல பேசக் கத்துக்கலாம். அனைத்தும் ஃப்ரிதான் என்றார்.
சார், இத கத்துக்க கஸ்டமா இருக்கும்னு சொல்றாங்களே?
சமஸ்கிருத பாரதி
“அப்படி எல்லாம் கிடையாது. நானே இங்க வந்துதான் கத்துகிட்டேன். எனக்கு சமஸ்கிருதம் சுத்தமா தெரியாது. இப்ப ஓரளவுக்கு பேசுறேன். படிக்கிறேன்” என்றார்.
ஆக்சுவலா எனக்கு இந்தி கத்துக்கிறதுலதான் விருப்பம், அதெல்லாம் சொல்லிக் கொடுப்பிங்களா?
“அது சொல்லித்தர மாட்டோம். ஆனா இரண்டும் ஒரே மாதிரிதான் இருக்கும். எல்லா மொழியிலும் சமஸ்கிருதம் இருக்கிறதால, அதைவிட இதத்தான் ஈசியா கத்துக்க முடியும். கொஞ்சம் பிக்கப் ஆகிட்டிங்கன்னா உங்களுக்கு அடுத்தடுத்த லெவல்ல எக்ஸாம் வச்சி சர்டிஃபிகேட் கொடுத்துவோம்” என்றார்.
சரிங்க சார். இத கத்துக்கனும்னா எதாவது குறிப்பிட்ட சாதியாதான் இருக்கனுமா?
இல்ல… சாதி எல்லாம் பிரச்சனையே இல்ல. எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்கிறோம் என்று நம்மை தொட்டு தட்டிக் கொடுத்தார். செத்தமொழி சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு கொட்டிக் கொடுக்கும் பல நூறு கோடி ரூபாயில் சங்கிகளின் இந்த சம்ஸ்கிருத பாரதியும் வளமாக வாழ்கிறது. பத்தே நாட்களில் சமஸ்கிருதம் எனும் இன்ஸ்டண்ட் திறமையை பத்தே நாட்களில் ஆங்கிலம் பேசலாம் போல அப்பாவிகளை ஓரளவிற்காவது ஈர்த்திருக்க வாய்ப்புண்டு.
கொஞ்சம் தள்ளி வனவாசி சேவா கேந்திரான்னு ஒரு ஸ்டால் இருந்தது. இந்த கேந்திரம்தான் ஆர்.எஸ்.எஸ் சார்பாக பழங்குடி மக்களிடம் இயங்குகிற முக்கியமான பரிவார் உறுப்பு.
அந்த அரங்கில் இருந்த அண்ணன் ரொம்ப அமைதியா பேசினாரு. “நாங்க மலைவாழ் மக்கள் மத்தியில வேலை செய்யிறோம். கிரிஸ்டின்காரங்க அந்த மக்கள் கிட்ட போயி மதமாற்றம் செய்யுறாங்க. அப்படி பண்ண முடியாம செய்யிறதுதான் வேலை. அதனால மலைவாழ் மக்களுக்களுக்கான உதவிகளை செஞ்சிட்டு வறோம்” என்றார்.
எனக்கும் இது மாதிரி பன்னனும்னு ஆசைதான். அதுக்கு என்ன பண்றதுன்னு சொல்றிங்களா?
“இதைப் பத்தி பேசனும்னா ஒருத்தரோட காண்டாக்ட் நம்பர் தறேன். அவருதான் ஆற்.எஸ்.எஸ்-சோட பிரச்சாரக். அவர் இதைப் பத்தி முழுசா சொல்வாரு. அவர்கிட்ட பேசுங்க” என்று சொல்லி நம்பரைக் கொடுத்தார்.
சுருங்கச் சொன்னால் பக்தி, ஆன்மீகம், யோகா, சுய முன்னேற்றம், உணவு – உடல்நலம், கல்வி – வரலாறு என்ற பெயரில் வளைத்து வளைத்து பார்ப்பனியத்தின் நிகழ்ச்சி நிரல்கள் அனைத்தும் அங்கே மக்களை வெறியூட்டிக் கொண்டிருந்தன. அங்கே கடை போட்டவர்களுக்கு அரங்குகள் இலவசம் அல்லது மிகக் குறைந்த வாடகை. பணியாளர்களுக்கு பேட்டா, உணவு அனைத்தும் இலவசம். சாதி முதல் ஃபிராடான சித்த வைத்தியர்கள், ஜோசியர்கள் வரை பெட்டிக் கடை முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைத்தையும் இணைத்திருந்தார்கள்.
ஏதோ ஒரு கண்காட்சி என்று வேடிக்கை பார்க்க வந்த கூட்டம்தான் அதிகம். ஆனால் அந்த வேடிக்கையுணர்வில் கொஞ்சமோ நிறையவோ இந்துத்துவ விசம் கலக்க ஆரம்பித்திருக்கிறது.
சோசலிச அரசுகளின் அரசியல் சார்ந்த சரிவுகளைக் கண்டு மகிழ்ச்சியுற்ற முதலாளிய மீட்பர்கள் அச்சரிவை சோசலிசப் பொருளாதார அமைப்பின் வீழ்ச்சியாக மட்டுமே அதிகம் விமர்சித்தனர். கிழக்கு ஜெர்மனியின் சுவர் உடைப்பு, சோவியத் ஒன்றியத்தின் தகர்வு, சீனாவின் முதலாளிய மீட்பு போன்றவற்றை தூக்கிப் பிடித்துக் கொண்டாடியது ஒருபுறம், மறுபுறம் உலகமயமாக்கல் மூலம் வரப்போகும் செழிப்பான வாழ்க்கை என்கின்ற மாயை. கடந்த 30 ஆண்டுகளாக இதை உருமியடித்த ஊடகங்களும் முதலாளிய அறிஞர்களும் இன்று அமைதியாக முணுமுணுக்கின்றனர்.
அமெரிக்காவும், அய்ரோப்பாவும் முட்டி நிற்கும் சுவர் இரும்பாலானது என்பது இப்பொழுதுதான் அவர்களுக்கு உறைக்கத் துவங்கியுள்ளது. இவர்களால் சவக்குழிக்கு அனுப்பப்பட்டு விட்டதாகக் கூறப்பட்ட மார்க்சிடம் மீண்டும் அவர்களே தீர்வைத் தேடுகின்றனர். மீண்டும் மார்க்சியத்தை இந்தப் பின்னணியில் பயில்வது அவசியம். (நூலுக்கான பதிப்புரையிலிருந்து)
*****
இஸ்ட்வன் மெசரோசின் மூலதனத்தின் அமைப்பு நெருக்கடி என்னும் நூலில் உள்ள இரண்டு நேர்காணல்களின் மொழியாக்கமே இந்தச் சிறு நூல். முதலாளிய அமைப்பின் நெருக்கடி பற்றி சோசலிஸ்ட் ரெவ்யூ இதழில் வந்த நேர்காணலிலும், இந்தச் சூழலில் நம் முன் உள்ள கடமைகள் பற்றி டிபேட் சோசலிஸ்டா இதழில் வந்த நேர்காணலிலும் அவர் பேசுகிறார்.
…. உலகம் முழுவதும் முதலாளியம் தனது இலாப வெறிக்காக இன்று மனித சமூகத்தை ஓட்டாண்டியாக்கி வருகிறது : பூமியிலுள்ள இயற்கை வளங்களைக் கொடூரமாகவும், வேகமாகவும் அழித்து வருகிறது. அதன் மூலம் எதிர்கால மனித சமூகத்தின் இருப்புக்கான அடிப்படையையே அழித்து வருகிறது. உலக முதலாளியத்திற்குத் தலைமை தாங்கும் அமெரிக்கா தனது இலாபத்திற்காக ஆக்கிரமிப்பு யுத்தங்களில் ஈடுபட்டு வருகிறது. தனது இலாபத்திற்காக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் அது தயாராக உள்ளது. இவ்வகையில் முதலாளியத்தின் இலாபவெறி இன்று மனித குலத்தை அழிவின் எல்லைக்குக் கொண்டு சென்றுள்ளது. இவை எல்லாம் முதலாளிய அமைப்பில் உள்ள நெருக்கடியின் விளைவுகள் என்கிறார் மெசரோஸ்.
இந்தப் பின்னணியில்தான் நாம் இந்தியப் பொருளாதாரத்தையும் காண வேண்டும். இந்தப் புவிக் கோளத்தின் மீதுள்ள எந்த ஒரு நாடும் உலகு தழுவிய பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. இந்தியா அதற்கு விதி விலக்காக இருக்க முடியாது.
ஏகாதிபத்திய ஆக்டோபசின் கால்களில் சிக்கிக் கொண்டுள்ள இந்தியப் பொருளாதாரம் இன்று பெரும் நெருக்கடியில் மாட்டிக் கொண்டுள்ளது. பொதுச் சொத்துக்களைத் தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தல், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் நிலங்களைக் கைப்பற்றி அவர்களைப் பஞ்சை பராரியாக்குதல், இலாப நோக்கத்திற்காகக் கட்டுப்பாடற்ற பொருள் இறக்குமதி, அந்நிய மூலதனத்திற்கு கதவை அகலத் திறந்துவிட்டதன் மூலம் இந்திய மக்களின் உபரி உழைப்பு இலாபமாக வெளிநாடுகளுக்கு வெளியேறுதல், அந்நிய நிதி நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தையைக் கொள்ளையடிக்க வழிவகுத்தல், உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி, பண வீக்கம், ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி, விலைவாசி ஏற்றம், நடப்புக் கணக்கில் கடும் பற்றாக்குறை, இலட்சம் கோடிகள் என்ற அளவில் ஊழல் இவைதான் இன்றைய இந்தியப் பொருளாதாரத்தின் சித்திரம்.
1990-களின் உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும், தனியார்மயமாக்கலும் இந்தியாவைச் சொர்க்க பூமியாக்கிவிடும் என ஒளிமயமான சித்திரங்களைத் தீட்டிய முதலாளிய ஊடகங்கள் இன்று ஒப்பாரி வைக்கின்றன. அழுது புலம்புகின்றன. ஏதாவது அதிசயம் நடந்து இந்த கடுமையான நெருக்கடியிலிருந்து நாம் தப்பிக்க முடியாதா என முதலாளியப் பொருளாதார மேதைகள் ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆட்சியாளர்களோ பொருளாதாரத்தின் இந்தச் சீரழிந்த நிலைக்குக் காரணமான ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு முடிவுகட்டாமல் மேன்மேலும் அந்நிய மூலதனத்திற்கு கதவைத் திறந்து விடுவதன் மூலம் நமது மக்களை மேன்மேலும் அழிக்கவும் வழி வகுத்து வருகின்றனர். மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது எழுந்துள்ள அதிருப்தியையும், கோபத்தையும் திசை திருப்பவும், சாந்தப்படுத்தவும் கிராமப்புற வேலை உத்திரவாதத் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், அம்மா உணவகம் போன்ற கீனிசிய ஒடுக்கு எடுக்கும் வேலைகளைச் செய்து வருகின்றனர்.
ஆனால், உலகம் தழுவிய அளவில் இன்று முதலாளியம் எதிர்கொண்டுள்ள நெருக்கடி ஆழமானது என்கிறார் மெசரோஸ். இது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்பொழுது முதலாளியம் எதிர்கொள்ளும் நெருக்கடி போன்றதல்ல….
…. பாராளுமன்றவாதத்திலும், தொழிற்சங்கவாதத்திலும் வீழ்ந்துள்ள சீர்திருத்தவாதத் தலைமையிலிருந்து பாட்டாளி வர்க்கம் விடுபட வேண்டும். இன்று பாட்டாளி வர்க்கத்தின் செயல்பாடு தொழிற்சங்கக் கிளை என்றும் அரசியல் கிளை என்றும் இரு பிரிவுகளாக உள்ளன. தொழிற்சங்கக் கிளை கூலி உயர்வுப் போராட்டத்தோடு தமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் சீர்திருத்தவாத அரசியல் பிரிவோ முதலாளியப் பாராளுமன்றத்தின் விதிகளுக்கு உட்பட்டு மூலதனத்தின் நலனுக்குச் சேவை செய்வதாக மாறி விடுகிறது. மூலதனத்தின் ஆதிக்கத்திலிருந்து கூலி அடிமைத்தனத்தை விடுவிக்க வேண்டும் என்ற ஒட்டு மொத்த சமூக விடுதலைக்கான இலட்சியம் கை விடப்பட்டுள்ளது…. (இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் குறிப்பிலிருந்து…)
நூல்: முதலாளிய அமைப்பின் நெருக்கடியும் நம் முன் உள்ள கடமைகளும் ஆசிரியர்: இஸ்ட்வன் மெசரோஸ் தமிழில்: மு.வசந்தகுமார்
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி:99623 90277