Friday, July 11, 2025
முகப்பு பதிவு பக்கம் 392

டிகிரி காஃபி டிஸ்கசனும் ஹீரோ அந்தர குருசாமி உருவாக்கமும்

0

காரைக்குடி கோலா உருண்டையும் கோடம்பாக்கம் கதை இலாகாவும் ! நாடகம் பாகம் 2

முதல் பாகத்தின் இணைப்பு : பாகம் – 1

முதன்மைப் பாத்திரங்கள்: எழுத்தாளர் சுயமோகன், இயக்குநர் முறுக்குதாஸ், முறுக்குதாஸின் தனி உதவியாளர்கள் ஜகன், ஜோதி. நான்கு வருங்கால இயக்குநர்கள் பீட்டர், பல்லவன், தொல்காப்பியன், ஜிப்பா மணி மற்றும் தயாரிப்பு நிர்வாகி நிக்கில், தயாரிப்பு உதவியாளர் – கற்பூரம் என்ற செல்லம்.

காட்சி 7:  கதை துவங்கும் படலம்
இடம்: பிஷர்மேன் கோவ் விடுதியின் லக்சுரி அறை
நேரம்: மாலை 8 மணி

உதவி இயக்குநர்கள் நால்வரோடு, இயக்குநர் முறுக்குதாஸ் மற்றும் எழுத்தாளர் சுயமோகனும் விடுதி அறையின் முதல் அறையில் திண்டு மெத்தையில் அமர்ந்திருக்கின்றனர். திண்டின் மூலையில் இயக்குநரும், வயிற்றுப் பகுதியில் நான்கு இயக்குநர்களும் அமர்ந்திருக்கின்றனர். மூட்டு வலி காரணமாக சுயமோகன் மட்டும் சிங்கிள் சீட் சோபாவில் காலை நீட்டியபடி அமர்ந்திருக்கிறார்.

தொல்காப்பியன்: (சுயமோகனைப் பார்த்து) டைரக்டர் சாருக்கு ஃபேவரேட் நம்பர் 7-தான். கூட்டு நம்பர் 7 வர்ற மாறி ஃபர்ஸ்ட் ஃப்ளோர் 106, செகண்ட் ஃப்ளோர் 205, தெர்டு ஃப்ளோர் 304 கிடைக்கல. நிக்கில்-கிட்ட முன்னமே சொல்லியும் கோட்ட விட்டார். கடைசியல 203-ன்னு ஐஞ்சாம் நம்பர்தான் கிடைச்சிருக்கு! இது பெரிய குத்தமில்ல. “மாஜினி” படத்துக்கும் கூட்டு நம்பர் ராசி எண் 7 கிடைக்கலே. அவசரத்துக்கு டிரைடண்ட் ஓட்டல்ல இதே ஐஞ்சாம் நம்பர்லதான் ரூம் போட்டோம். படமும் மரண மாஸா ஓடிச்சு!

சுயமோகன்: பரவாயில்லை தொல்காப்பியன், அதிர்ஷடம்கிறது நம்பர்ல இல்லே, நம்ம கிரியேட்டிவிட்டியில இருக்குறத அழகா சொன்னீங்க. மகாபாரதத்துலயும் எண்கள், அவைகள் சொல்ற நல்ல காலம், கெட்ட காலத்துக்கு நிறைய தத்துவம் இருக்கு.

சூதாட்டத்துல தோத்த பிறகு பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வாழவும், ஓர் ஆண்டு யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழவும் ஒப்பந்தம் போட்டாங்க. மொத்தம் 14 வருசத்தை முடிச்சுட்டு வந்து கேட்டால், நாட்டையும் செல்வத்தையும்  அவங்களுக்கு தருவதா கௌவரர்கள் அக்ரிமெண்ட் போட்டாங்க.

பாரத மரபுல ராமாயண வனவாசம் 12 வருசம், மகாபாரத வனவாசம் 13, 14 வருசம் இந்த மூன்று எண்களுமே ரொம்ப முக்கியம். வெஸ்டர்ன் கன்ட்ரிஸ்ல பாத்தீங்கன்னா எல்லா ஓட்டலுங்கள்ளேயும் 13-ஆம் நம்பர் அறை இருக்காது. நம்ம நாட்டுலயம் அந்த காலனிய அடிமைத்தனத்தோட விருட்சமாக அதை ஃபாலோ பண்றாங்க. நம்பர் 13-ன்றது கிறிஸ்டியானிட்டி மரபுப்படி சாத்தானோட எண்.

(பிறகு தான் படித்திருந்த விக்கி மேட்டர் திடீரென நினைவுக்கு வர உடனே ஐ ஃபோனில் எடுத்து வாசிக்கிறார்.)

Some believe this is unlucky because one of those thirteen, Judas Iscariot, was the betrayer of Jesus Christ. From the 1890s, a number of English language sources relate the “unlucky” thirteen to an idea that at the Last Supper, Judas, the disciple who betrayed Jesus, was the 13th to sit at the table.

இப்படித்தான் ஏசுவைக் காட்டிக் கொடுத்த துரோகி யூதாஸ் அந்த விருந்து மேசையில 13-ஆவது இடத்துல உக்காராறு. அதான் பின்னாடி செமிட்டிக் மத வரலாற்றுல துரதிர்ஷ்டமான நம்பரா மாத்தீட்டாங்க.

தொல்காப்பியன் மைண்ட் வாய்ஸ்: டைரக்டரை குளிப்பாட்டுறதுக்கு நம்ம குத்தாலத்து துண்டோட வந்தா இந்த ஆள் மெயின் ஃபால்ஸ் அருவியே எடுத்துணு வர்ராறு….

முறுக்குதாஸ்: (சுயமோகனைப் பாத்து) சார், இதே டீடெயிலை நம்ம ஹீரோ கேரக்டருல எடுத்துனு வந்தீங்கன்ன படம் எங்கயோ போகும். அடுத்த புராக்ஜ்ட்ல, சூப்பர் ஸ்டார் சாருக்குதான் நம்ம கால்ஷீட்டு!

ரைட்டர் சார், இப்ப உங்ககிட்ட ஒண்ணு சொல்றேன். நம்ம படத்தோட ஹீரோ சார் 2:30 மணி நேர படத்துக்காக மட்டும் நம்மகிட்ட வர்ல! கால்ஷீட்டும் கொடுக்கல. அவர் மைண்ட ரீட் பண்ண லெவல்ல வெச்சு நான் சொல்றேன். அவரு மைண்டை ரஜினி சாரோட “காலா” படம்தான் டிஸ்டர்ப் பண்ணுது. கபாலியால ஏற்கனவே நம்ம ஹீரோ மெர்சலாயிட்டாரு!.

கபாலி, காலா படத்தால ரஞ்சித்தோட கேரியர் பிரமோட் ஆச்சோ இல்லையோ, சூப்பர் ஸ்டாரோட கேரியர் கோடம்பாக்கத்தலேர்ந்து கோட்டைக்கு தாவிருச்சு! நம்ம ஹீரோ தளபதி சார், அதை கரெக்டா ஸ்மெல் பண்ணிட்டார். அவர் டேஸ்ட்ட கதையில நாமளும் கரெக்டா ஃபாலோ பண்ணனும் சார்!

ஜிப்பா மணி: சரியான இடத்துல ஸ்பீடு பிரேக்க போட்டீங்க டைரக்டர் சார். இல்லேன்னா கதையில கவுந்திட்டிருப்போம் சார். ஹீரோவுக்குன்னு நினைச்சு கோக்கு மாக்கா ஒரு ஒன்லைன்ல சிக்கியிருப்போம். உங்க ’தாட்டு’-ன்றது ரஜினி திங்க் பண்ற லெவல் சார்! விளையாட்டுக்கு சொல்லலை, வரலாற்ற சொல்றேன்!

இருபது வருசத்துக்கு முன்னால ஒரு படம் பண்றதுக்கு சுந்தர் சி-யை கூப்புடுராறு ரஜினி சார்! அவராண்ட ரஜினி சார் ஒரு ஒன்லைன சொல்ராறு! அதான் சார் அருணாச்சலம் படம்! அந்தக் கதை சுந்தர் சி சாருக்கு சுத்தமா புடிக்கல. ஆனா ரஜின சாரண்ட அதக் காமிச்சிக்கல. “கதை சூப்பரோ சூப்பருன்னு” சொல்ராறு! காரணம், ரஜினி சாரப் பத்தி அவருக்கு பஞ்சு அருணாசலம் அண்ணேன் ஏற்கனவே சொல்லியிருக்காறு. சூப்பர் ஸ்டாரு எடுத்த முடிவ யாருக்காகவும் எதுக்காவும் மாத்திக்க மாட்டாறு! அத பிடிக்காதவங்க கோடி கோடியா கொட்டிக் கொடுத்தாலும் அவங்க கூட டிராவல் பண்ண மாட்டாறு!

இது சுந்தர் சி சாருக்கு ஞாபகம் வந்து வாய உடாம உசாராணாறு! அதுனால அவர் அந்த படத்துக்கு டைரக்டரு ஆனாரு! அது மட்டுமில்ல, சூப்பர் ஸ்டார் சொன்ன கதைய பாலிஷ் போட்டு அவருக்கு புதுசா திருப்பிக் கொடுத்தாரு! ரஜினி சார் ஏற்கனவே நடிச்ச கதையெல்லாம் ஏழையா இருந்து பணக்காரனா ஆவாரு. இந்தக் கதையில இவர் பணக்காரனா இருந்து, செலவு பண்ணி ஏழையா ஆவாறு! புது ஒன்லைன் சார் இது!

முறுக்குதாஸ்: ரைட்டர் சார், இதான் சினிமா! ஒன்லைனே நம்மள பெரட்டிடும்! நம்மதான் உசாரா ஆவணும்! என்னோட முதல் படம் தீனா – தல சார் படம் 2001-ல வந்தது. இன்னமும் ஃபீல்டுல கிண்ணுண்ணு நிக்கறோம்ல. நாம சொல்லலை, நம்ம ஒர்க் சொல்லுது சார்!

அடுத்து ரமணா படத்துல விஜய்காந்த் சாரோட பொலிட்டிகல் கேரியருக்கு ஒரு டேக் ஆஃப் கொடுத்தோம்! அத வெச்சி புரட்சிக் கலைஞர் கோட்டையில கொடியேத்திருப்பாரு சார், கெடுத்தது அவரோட மச்சான் சதீஸ்!

சுயமோகன்: சரியா சொன்னீங்க சார்! உங்கள மாறி தமிழ் சினிமாவோட தலையெழுத்தை மாத்துன ஜாம்பவான்கள் எல்லாம் சொந்த சுகம், குடும்பம், குழந்தைங்கன்னு போயிருந்தா தமிழ் சினிமா நொடிஞ்சு போயிருக்கும். வாழ்க்கை, கலை வாழ்க்கை இரண்டுலயும் நம்மளோட உறவுகள பாத்து பாலன்ஸ் பண்ணனும் சார்! மகாபாரதம்கிற காவியமே இந்த உறவுச் சிக்கலில் இருந்துதான் வீரிட்டுக் கிளம்பிச்சு!

கீதையில பாத்தீங்கன்னா கிருஷ்ணன் “வருந்த தகாதவர்களுக்காக நீ வருந்துகிறாய். நீ  அறிவுடையவர் என்று சொல்லிக் கொள்பவர்களின் வார்த்தைகளைப் பேசுகிறாய். எனினும், உண்மையில் அறிவுள்ளவர்கள், இறந்தவர்களுக்காகவோ, வாழ்பவர்களுக்காகவோ வருந்துவதில்லை.

நானோ, நீயோ, மனிதர்களின் ஆட்சியாளர்களான இவர்களோ எப்போதும் இருந்ததில்லைன்னு” உறவுகளோட தற்காலிக சாஸ்வதத்தை அழகா விளக்குறார்.

முறுக்குதாஸ் மைண்ட் வாய்ஸ்: ஒண்ணுமே புரியலயே. ஒன்லைனுக்குள்ள போறதுக்குள்ள ஃபீல்ட விட்டே போயிருவேன் போலருக்கே!

முறுக்குதாஸ்: நீங்க சொல்றது நீட்டா இருக்கு சார். இதுல இருந்தே பல கதைங்களுக்கு ஒன் லைன பிடிக்கலாம்! ஆனா நம்ம கதையில ஹீரோ மண்ணுலதான் வாழ்றாரு! விண்ணுலகத்துல இருந்து வரல! முதல்ல நாம தரையில நிக்கணும் சார்! தூங்கும் போது கூட காலாட்டிக்கிணே இருக்கணும், இல்லாட்டி பாடை கட்டிருவானுங்க. அதான் சினிமா! உங்களுக்கு தெரியாதது இல்லே!

பல்லவன்:  ரைட்டர் சார்! இப்ப ட்ரண்டுக்கு சினிமா ஹீரோன்னா நம்ம பக்கத்து வீட்டு பையனாட்டம் இருக்கணும். கதைன்னா நம்ம வீட்டுல நடக்குற கதை மாதிரி ஃபீலாகணும்! இப்ப பேசறது உங்க சரக்குதான் சார். நீங்க எழுதாத கதையா? “அறம்” கதைங்கள்ள ஏதாச்சும் ஒன்னை திருப்பிப் போடுங்க சார்!

நம்ம கதை கள்ளவோட்டு கதை. அதால நல்ல ஓட்டு போட்டாலும் நாடு திருந்தாதுங்கிற மேட்டரை எந்தக் காரணத்துக்காகவும் இந்தக் கதைக்குள்ள நாம சொல்லக்கூடாது! இதான் சார் கதையோட அறம்! நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்ல! இதுல நீங்க லெஜ்ண்டு!

முறுக்குதாஸ்: பிடிச்சிட்டம்பா பல்லவா! இப்ப நீ சொன்னத அதே டோன்ல திரும்பவும் சொல்லு! டக்குணு சொல்லு!

பல்லவன் மைண்ட் வாய்ஸ்: என்னா சொன்னேன், ஒண்ணுமே சொல்லலையே! ரைட்டருக்கு ஒரு பிரேக் போடப் போனா இப்ப கிணத்துல விழுந்த கதையாயிருச்சே!

சுயமோகன்: கத இப்பதான் தெளிவா ஒரு ஸ்படிகம் போல தெரியுது. சபரி நதியை ராமன் கடக்குறப்போ அந்த நதி சான்றோரின் அறிவு போல ஆழமாவும், பளிச்சுனு ஸ்படிகமாவும் ஓடியதுன்னு கம்பர் சொன்னது நம்ம கதைக்கும் பொருந்தும் சார்!

கள்ள ஓட்டை எதிர்க்குது நல்ல ஓட்டு. கோழைத்தனத்தை எதிர்க்குது தைரியம், கெட்டதை எதிர்க்குது நல்லது, வில்லனை எதிர்த்து நாயகன். அந்த எதிர்ப்புக்கு பலமா ஒரு அறத்த செட் பண்ற எல்லா வாய்ப்பும் நம்ம கதையில இருக்கு! இப்டியே கன்டினியூ பண்ணலாம் சார்!

முறுக்குதாஸ்: சூப்பர் சார்! தம்பி செல்லத்த சூடா டிகிரி காஃபிய எடுத்துணு வரச் சொல்லுங்க!

(நல்லவேளை நம்ம தலை தப்பியதென்று செல்லத்தை அழைக்க விரைகிறார் பல்லவன்)

சுயமோகன்: சார், நம்ம ஹீரோ பக்கத்து வீட்டு பையன் மாதிரின்னா லயோலா விசுவல் கம்யூனிகேசன்ல படிக்கிற மாதிரி வெக்கலாமா? என்னோட பையன் ஆஜிதன் இப்போ மணிசாருகிட்டதான் இருக்கான். அங்க லயோலா விசுவல் ஸ்டூன்ஸ் டெய்லி பத்து பேர் வந்து சான்ஸ் கேக்க கார்ல வருவாங்க. அவங்களோட கேரக்டர இழைச்சு செஞ்சுரலாம் சார்!

முறுக்குதாஸ்: சார், நம்ப படத்தோட பட்ஜெட் 150 கோடி! 200 வரைக்கும் அத இழுத்துகிணு போலாம்! ஹீரோவ யூ.எஸ்-ஐயும் தாண்டி எங்க தேடலாம்ணு யோசிக்கிறேன். ஆனா இப்போதைக்கு அமெரிக்காவ தவிர வேற பெட்டரான எடம் தெரியல. அங்க இருந்து வாரார் சார் ஹீரோ! ஓட்டுப் போடறதுக்கு மட்டும்தான் வராறு! ஓபனிங்கிலேயே ஒரு டிவிஸ்ட்ட போட்டு அங்கயே கட் பண்றோம்.

ஹீரோ தரை இறங்குற ஃபிளைட்டோட சவுண்ட் பேக்ரவுண்டுல கேக்குது. அப்போ மும்பை, டெல்லி, கல்கத்தா, பெங்களூரு எல்லா சிட்டியிலயும் கார்ப்பரேட் கம்பெனிங்க அர்ஜண்ட் மீட்டிங்க போடுறாங்க!

சுயமோகன்: (குறுக்கிட்டு) சார், அவரை நானோ டெக்னாலாஜியில நோபல் பரிசு வாங்குற நாமினேஷன்ல இருக்குறாரு. அப்டியே உலகம் வியக்குற ஒரு டேட்டா சயிண்டிஸ்ட்டா காமிக்கலாமா?

பீட்டர்: ரைட்டர் சார், அல்ரெடி ஷங்கர் சார் இதே காரக்டரை காட்டிட்டாறு. எந்திரன்ல ரஜினி சார், ரோபா சயிண்டிஸ்ட்டா வராறு.  நம்ம தளபதி சார, நோபல் சயிண்டிஸ்ட்டா போட்டா ஏஜ் செட்டாகாது! அவருக்கு யூத் கெட்டப்புதான் செட்டாகும்.

தொல்காப்பியன்: டைரக்டர் சார், சி.ஐ.ஏ படைக்கு கமாண்டோ பயிற்சி கொடுக்கிற பெரிய கமாண்டோவோ காட்லாமா? யூத்துக்கு யூத்து, பிரெயினுக்கு பிரெய்னுன்னு, எல்லாத்தையும் கட் ஷாட்ல கொண்டாந்துரலாம்.

ஜிப்பா மணி: ஏம்பா தொல்லு, சி.ஐ.ஏ கமாண்டோ என்னா ஜிப்பா போட்டுக்கினா வருவாறு? சிக்ஸ் பேக் பாடி, ஆறடி உயரம் வேணாமா? நம்ம ஹீரோவை, காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரித்தான் ஏத்துக்குவாங்க!

(அந்நேரத்தில் உதவியாளர் செல்லம் உள்ளே வந்து டிகிரி காஃபி கோப்பைகளை வைக்கிறார்.)

முறுக்குதாஸ்: இல்லப்பா மணி, இதெல்லாம் பல ஜானர்ல பாத்துட்டோம். இன்னும் புதுசா வேணும்பா! இங்க எல்லா சிட்டியிலயும் கார்ப்பரேட்காரங்க, மீட்டிங்கில என்ன பேசுவாங்க! ஹீரோவ பாராட்டியா, புகழ்ந்தா, இல்லே அவர வரவேற்கிறதுக்கா? அந்த இடத்துல ட்ரீட்மெண்ட் என்ன?

(உதவி இயக்குநர்கள் நால்வரும், சுயமோகனும் எது சொன்னால் சரியாக இருக்குமென்று மோட்டு வளையைப் பார்க்க நிமிர்ந்தனர். பிறகுதான் அனைவருக்கும் நாம் இருப்பது ஒரு நட்சத்திர விடுதியென்பது தெரிய வந்தது. இயக்குநர் கேட்ட கேள்விக்கு யார் முதலில் சரியாகச் சொல்வது என்ற போட்டிக்கான அவஸ்தை தொடர்ந்தது)

முறுக்குதாஸ்: இது எப்டின்னு பாருங்க. அமெரிக்காவுலேர்ந்து வர்ற நம்ம ஹீரோவப் பாத்து எல்லாரும் பயப்படறாங்க! டெரர்ராவுறாங்க! என்ன நடக்குமோன்னு த்ரில்லாவுறாங்க!

சுயமோகன் மைண்ட் வாய்ஸ்: வர்றது ஹீரோவா, வில்லனா? ரொம்ப கன்பியூஸ் பண்றாரே! இருந்தாலும் டைரக்டர் என்னமோ முடிவு பண்ணிருக்காரு! நமக்குதான் சிக்க மாட்டேங்குது.

சுயமோகன்:  சார், நீங்க சொல்லும் போதே ஒவ்வொரு ஃபிரேமும் த்ரில்லா இருக்கு. உண்மையிலேயே ப்ளைட்ல வர்றது ஹீரோவா, வில்லனான்னு இன்னம் எனக்கு தெளிவு வரலை சார்! உங்ககிட்ட நான் உண்மைய சொல்றதுல வெட்கப்படறதுக்கு என்ன இருக்கு!

முறுக்குதாஸ்: சார், நம்ம ஹீரோ கார்ப்பரேட்டையே காலி பண்ற ஒரு கார்ப்பரேட் கில்லாடி. யாரும் நினைச்சுப் பாத்துராத மண்ட! அவன் மூளையைச் சொல்றேன் சார்!

சுயமோகன்: இப்ப புரியுது சார், பிடிச்சுட்டேன் சார்! லைஃப் ஜாக்கெட்டயும் கொடுத்து கடல்ல தள்ளி விடுறீங்க! கில்லாடி சார் நீங்க! என்னோட குரு நித்ய சைதன்ய யதியும் இப்படித்தான் மனவெளி புரளுகின்ற அத்துவானக் காட்டுல தள்ளிவிட்டு பனித்துளியில பிரம்ம ரகசியத்தை பாக்குற டெக்னிக்கை சொல்லிக் கொடுப்பாறு! கலை வேறயா இருந்தாலும் நீங்களும் சிலையை ஆழமா செதுக்குறீங்க சார்!

பீட்டர்: அப்புறம் என்ன சார், எல்லா சிட்டியிலயும் எம்.பி.ஏ பிசினஸ் படிக்கிற ஸ்டூடன்ஸ் பேசிக்கிற மாதிரி டயலாக்க கடகடன்னு எழுதிடுவீங்க!

சுயமோகன்: ஆமாமா, ஏற்கனவே மனசுல எழுதிட்டேன். பெங்களூரு ஐ.ஐ.எம்.-ல ஒரு புரபசர் நம்ம ஹீரோவோட கார்ப்பரேட் சாதனைகளை ஸ்டூடன்சுகிட்ட பேசுறாரு. மும்பையில நம்ம ஹீரோவ ஃபாலோ பண்ற ஸ்டூடன்சுக்கு ஒரு அசைன்ட்மெண்ட்டே கொடுக்கிறாங்க. ஹைதராபாத்துல ஒரு சீமாட்டி ஹீரோ காலி செஞ்ச போட்டி பிராண்டுகளோட கதையை சொல்றாங்க… இப்படியே போயிடலாம் சார்.

(அப்போது ஃபோனோடு முறுக்குதாஸின் உதவியாளர் ஜகன் வருகிறார்)

ஜகன்: அமீர்கான் சார் கூப்புடுராறு சார்! ஏற்கனவே ரெண்டு வாட்டி பேசுனாறு. நீங்க பிசின்னு நான் உங்கள டிஸ்டர்ப் பண்ணல! ஹீரோ (தளபதி) சாரோட நீங்க புதுசா படம் பண்றீங்களாம், அதைப் பத்தி உடனே பேசணும்கிறார்!

முறுக்குதாஸ்: (சுயமோகனைப் பார்த்து) பாருங்க சார், இப்பதான் கதை ஓபனிங்க பிடிச்சோம். அதுக்குள்ள பாலிவுட்லேர்ந்து ரைட்ஸ் கேட்டு ஃபோன்!… பிரச்சினையே இதான் சார்! இந்த அன்புத் தொல்லதான் நம்மள நிக்காம உழைச்சுக்கிட்டே இருக்கச் சொல்லது!

ரைட்டர் சார், நீங்க என்ன மாதிரியே சிந்திக்கிறீங்க. நீங்க ஒரு இலக்கியவாதின்னு மணி சார் சொன்னப்ப நான் கொஞ்சம் பயந்தேன். இப்பதான் தெரியுது. எதுல ஊத்துனாலும் தண்ணி மாறி அந்த ஷேப்புக்கு கரெக்டா அடாப்ட் ஆகிக்கிறீங்க. எனக்கு கதை பிரச்சன வுட்டுது. இந்த ஓபனீங்க நாலு சீனா டெவலப் பண்றீங்க! வழக்கமான கதை ஸ்ட்ரெக்சர் உங்களுக்குத் தெரியும். இதுல முதல் பிளாட் என்னானு நான் யோசனை பண்ணி வெச்சிருக்கேன். அமீர் சார் விசயத்தை பாத்துட்டு சீக்கிரம் உங்களோட ஜாயிண்ட் பண்றேன்.

(முறுக்குதாஸ் உதவியாளருடன் அவசரமாக வெளியே செல்கிறார்.)

காட்சி முடிகிறது.

காட்சி 9 – கண்ணீர் ஊற்றுப்படலம்

இடம்: ஃபிஷர்மேன் கோவ் விடுதியோடு இணைந்திருக்கும் வங்க கடற்கரை
நேரம்: இரவு 10: 45 மணி

நான்கு உதவி இயக்குநர்களும் சுயமோகனும் மணலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். நடுவில் ஒரு பழக்கூடை இருக்கிறது.

பீட்டர்: ரைட்டர் சார், டைரக்டர் சார் அடுத்த சீன்ல, ஹீரோ எந்த பூத்துல ஓட்டு போடுறாருன்னு அந்த லொகேசன டீடெய்ல் பண்ணச் சொல்லிருக்கார். கார்ப்பரேட் சி.இ.ஓ-ங்கிறதால நாம அண்ணா நகர், அடையாறு, சாந்தோம், ஆழ்வார்பேட்டன்னு யோசிக்கலாமா?

தொல்காப்பியன்: பீட்டர், இது ஹீரோயின் அறிமுகம் இல்லை. ஹீரோ இன்ட்ரடக்சன். அதுவும் கார்ப்பரேட் கம்பெனிகளே பயந்து நடுங்குற ஒரு ஹீரோ. அவரை ஹை கிளாஸ் மக்கள் கொண்டாடுனாலும், ஆக்சுவலா அவரோட வேரப் பாத்தீங்கன்னா பக்கா லோ கிளாஸ். அது படிச்சவங்களும், பாமர மக்களும் மீட் பண்ற பாயிண்டா இருந்தா நல்லதுப்பா!

சுயமோகன்: அந்த இடம் ஹிஸ்டாரிக்கலாவும் இருந்தா கேரக்டர் கனம் கூடுமில்லையா?

ஜிப்பா மணி: சார் பின்னிட்டீங்க. லொகேஷனயே கேரக்டரா மாத்துறீங்க! நாங்க பரங்கிமலையில பத்துப்படி ஏறதுக்குள்ள எங்களுக்கு மூச்சு வாங்குது. நிமிந்து பாத்தா நீங்க எவரெஸ்ட்டுல அசால்ட்டா நிக்கிறீங்க!

சுயமோகன்: (மகிழ்ச்சியான படைப்பு அவஸ்தை + நிம்மதியான பெருமூச்சுடன் நிதானமாக பேச ஆரம்பிக்கிறார்) அது வந்து பாத்தீங்கண்ணா “கருப்பு யானை” நாவல் எழுதுறப்பவே மெட்ராசோட ஹிஸ்டரியை ஜீரணிச்சிட்டேன். சென்னை திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப்பள்ளிதான் சார் நம்ம ஹீரோ வோட்டுப் போடற பூத். அந்த ஸ்கூலுக்கு அப்படி என்ன சிறப்புன்னு கேக்கிறீங்களா?

“கருப்பு யானை” நாவல் ராயப்பேட்டை பிரஸ்ல பிரிண்ட் ஆயிகிட்டிருந்துச்சு. அதோட மை காயறதுக்குள்ள ஆழ்வார்பேட்டையில இருக்குற கமல் சார் வாங்கி படிச்சிருக்கார். இதை அவரோட 59-வது பிறந்த நாள் பார்ட்டியில எங்கிட்ட சொன்னாரு. அவரே படிச்ச ஸ்கூலு சார் அது.

அவரு மட்டுமா கர்நாட சங்கீத வித்வான் ஜி.என்.பாலசுப்ரமணியம், நோபல் பரிசு சந்திரசேகர், பழம்பெரும் நடிகர் எஸ்.வி.ரங்கா ராவ் இவங்கெல்லாம் நடமாடுன குருகுலம் சார் அது.

பீட்டர்: சார் என்ன சொன்னாலும் இந்த ஸ்கூலும் இன்னொரு ஆழ்வார்பேட்டை மாறியே ஃபீலாகுது!

பல்லவன்: பீட்டர் அந்த ஸ்கூலுக்கு வர பசங்களப் பாத்தீங்கண்ணா, அயோத்யா குப்பம், மாட்டான் குப்பம், ஜாம் பஜார், ஐஸ் ஹவுஸ் எல்லாம் தரை ரேட்டுப்பா!

சுயமோகன்: (மகிழ்ச்சியோடு மெல்லிய புன்னகையுடன்) பல்லவன், “கருப்பு யானையை” அட்டை டூ அட்டை படிச்சிருக்கீங்க! நாவலோட பிளாட்டே திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ்தான். ஆனா முக்கியமான ஒன்ன எல்லாரும்  மிஸ் பண்றீங்க!

நம்ம தேசியக் கவி பாரதியாரு, லாவண்யான்னு ஒரு யானை அடிச்சு செத்துப் போனாரு. அந்த புண்ணிய பூமிதான் திருவல்லிக்கேணி.

ஜிப்பா மணி: சார், திருவல்லிக்கேணின்னா எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் பாய் கடை  பீஃப் பிரியாணிதான். அந்த பிளேட்டுக்கு வெளிய எங்க பார்வை போனதே இல்ல சார்!

தொல்காப்பியன்: ரைட்டர் சார், நீங்க ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க. இந்த ஹீரோ அறிமுக பிளாகை நீங்க ஊதித் தள்ளிருவீங்க! நாம, டைரக்டர் சாருக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் சார்! ஓட்டுப் போட வந்த ஹீரோ, ஒரு கள்ள ஓட்டுதான….. அப்டீன்னு போகமா பயங்கரமா கோபப்படுறாரு. அந்த கோபத்தை ஸ்ட்ராங்கா நாம ஜஸ்டிபைஃ பண்ணனும் சார்!

பல்லவன்: ஆடியன்ஸ் கதறணும் சார்! இந்த அரசியல்வாதிங்கள விடக்குடாதுன்னு ஹீரோவப் பாத்து ஆடியன்சு கத்தணும் சார்! அதுக்கு வெயிட்டா ஒரு சீன் பிடிங்க சார்!

சுயமோகன்: அப்டியா, யோசிப்போம். இப்போ ஒரு வருசத்துக்குள்ள தமிழ் மனங்கள ஆழமா பாதிச்ச சம்பவங்கள்னு பாத்தா நிறைய இருக்கு! என்னோட அணுக்கமான வாசகருங்க கடலூர் சீனி, கோவை அரங்கப்பன் சொன்னத வெச்சுப் பாத்தா தூத்துக்கடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்ல ஒரு பெண்ணோட வாயில சுட்டாங்களே அதை சீனா வெச்சுரலாமா?

பீட்டர்: வெச்சுக்கலாம் சார். பட், தேவையில்லாம நம்ம மேல ஒரு பிளாக் மார்க் விழுந்துரும். அர்பன் நக்சலைட்டுங்கள ஆதரிக்கிறோம்னு சொல்லிடுவாங்க. ஆடியன்சு கதறணும், ஆனா அதுக்கு காரணத்த நாம சொல்லக் கூடாது. இவன்தான்னு நாம யாரையும் பழி போடக் கூடாது. அதுல நாம உசாரா இருக்கணும். ஆடியன்சுக்கு அவங்க மேலேயே கோபம் வரணும்! அதான் சார் கதையில நமக்கும் பிசினசுக்கும் பாதுகாப்பான ஏரியா!   

சுயமோகன்: சரி, அப்டின்னா ஒண்ணு பண்ணாலம். திருநெல்வேலி கலெக்டர் ஆபீசுல தீக்குளிச்ச இசக்கி முத்து ஃபேமிலி கதையை அப்டியே சென்னைக்கு மாத்திருவோம். அந்தக் கதைய ஹீரோவோட டிரைவர் சொல்ற மாறி வெச்சுரலாம். கதையைக் கேட்டு ஹீரோ ஷாக் ஆகுறார். இதுக்கு மக்கள் அப்போ என்ன பண்ணாங்க்கன்னு கேக்குறார். எல்லாரும் இந்த நியூச வாட்ஸ்ப்புல ஃபார்வர்டு பண்ணாங்க, வேற ஒண்ணும் பண்ணலேன்னு டிரைவர் சொல்றதா முடிச்சிடலாம்.

ஜிப்பா மணி: இப்ப பாத்து டைரக்டர் சார் இல்லையே சார். இருந்தா உங்களை தூக்கி கொண்டாடுவாரு சார். இந்த டர்னிங் பாயிண்டில கதை  மேல போயிடும் சார். மணி 1.30 ஆவுது. நாங்கதான் ராக்கோழி, நீங்க போய் ரெஸ்ட் எடுங்க சார்!

சுயமோகன்: நானாவாது படுக்குறதாவது! இனிமேதான் என்னோட தாய் வீட்டுக்கு போவணும். இலக்கியப் பணி தலைக்கு மேல இருக்கு.

(லேசான சோர்வுடன் சுயமோகன் படுக்கை அறைக்கு திரும்புகிறார்)

ஜிப்பா மணி: புரடெக்சன் செல்லம், மத்தியானமே எங்கிட்ட தனியா சொன்னான். ஏதோ மீதி அரை பாட்டில் ஃபாரின் சரக்கு இருக்காம். அதையாவது ஓபன் பண்லாம்.

தொல்காப்பியன்:  ரைட்டர் சார் சொன்ன கந்துவட்டி சீன் லைன் ஓக்கேதான். ஆனா ஹீரோ அமெரிக்காவுல இருந்து 15,000 கி.மீட்டர் பறந்து ஓட்டுப் போடறதுக்கு வராறாம். வரவருக்கு இசக்கிமுத்து செத்த கதைய அவர் டிரைவருதான் சொல்வாராம். ஏன் ஜனங்க இதுக்கு கொதிக்கலேன்னு ஹீரோ கேப்பாராம்,. வாட்ஸ் அப்லயே கொதிச்சிட்டாங்கன்னு டிரைவரு சொல்வராம். உடனே ஹீரோ ஃபீல் பண்ணுவாராம்.

சரி, இந்த ஹீரோ சார் மட்டும் அமெரிக்காவுல அப்ப என்ன புடுங்குனாருன்னு டிரைவரு ஃபீல் பண்ண மாட்டாரா?

காட்சி முடிகிறது

(தொடரும்)

  • தம்பி அழகு மதி – காளமேகம் அண்ணாச்சி

கஜா புயல் : எடப்பாடி பறந்து பார்த்தார் – மோடி வராமலேயே பார்த்தார்

ஜா புயல் ஏற்படுத்திய இழப்பால் தஞ்சை டெல்டா மாவட்டங்களில் இருந்து மக்கள் படும் அவதிகள் எந்த வகைப்படுத்தலிலும் அடங்க மறுக்கிறது. வீடிழந்தோர், வாழ்விழந்தோர், எதிர்காலம் கேள்விக்குறியானோர் என்ற பட்டியலில் தற்போது தற்கொலைகளும் சேர்ந்துள்ளன.

விவசாயி சுந்தர்ராஜன்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். விவசாயியான இவரின் வயது 57. இவர் தனக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலத்தில் தென்னை சாகுபடி செய்திருந்தார். தென்னை மரங்களில் பெரும்பாலானவை கஜா புயலில் முறிந்து விழுந்தன. அன்றிலிருந்து சுந்தர்ராஜனும் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் 21.11.2018 அன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இரவில் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடினாலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இறுதியில் சுந்தர்ராஜன் நேற்று 22.11.2018 காலை ஊரின் அருகே உள்ள ஒரு குளக்கரையில் பிணமாக கிடந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், தென்னை மரங்கள் சாய்ந்ததால் சுந்தர்ராஜன் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. அவருக்கு அம்சவள்ளி என்ற மனைவியும், சுதா என்ற மகளும், பிரபாகரன் என்ற மகனும் உள்ளனர். மரங்கள் முறிந்து விழுவதற்கு ஒரு புயல் போதுமானது என்றால் அந்த முறிவை சந்திக்கும் மக்களை தூக்கி நிறுத்த இங்கு எந்த ஆதார நம்பிக்கையும் இல்லை. இதுதான் நமது அரசு – சமுதாயத்தின் இலட்சணம்.

படிக்க:
♦ விவசாயிகள் கடன் தள்ளுபடியை விமர்சிக்கும் அரை வேக்காடுகள் !
♦ பயிருக்காக போராடிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் !

சுந்தரராஜனைப் போன்று மன உளைச்சலில் மரணத்தை தேடுவோர் எத்தனை பேர் இருப்பார்கள்?

ஒரத்தநாடு அருகே உள்ள கீழவன்னிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் 52 வயதான சிவாஜி. இவரது 1 ஏக்கர் தென்னந் தோப்பை கஜா புயல் தாக்கியதில் வீட்டோடு மரங்களும் சரிந்தன. வீடில்லாத நிலையில் இவர் தனது தம்பி வீட்டில் தங்கி இருந்தார்.

விவசாயி சிவாஜி மாரடைப்பில் மரணம்

நேற்று 22.11.2018 காலை தனது தோப்புக்குச் சென்று சாய்ந்து கிடந்த தென்னை மரங்களை பார்வையிட்டவர், வீடு திரும்பினாலும் தொடர் வேதனையில் அதிர்ச்சியடைந்து கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் மயங்கி இறந்து போனார். இவருக்கு குணமதி என்ற மனைவியும், ஆனந்தன், கார்த்தி என்ற மகன்களும், பாரதி என்ற மகளும் உள்ளனர். சிவாஜியின் வேதனையை புரிந்து கொண்டு அவரது வாழ்வைத் திருப்பித் தரும் நம்பிக்கையை தருவதற்கு இங்கு யாரும் இல்லை.

தமிழகத்தை ஆளும் எடப்பாடி குறுநில மன்னர்களது குழாமின் கடிவாளத்தை வைத்திருக்கும் பாஜக ஆளுநர் புரோகித்தும் கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்றார். அதிகாரிகள், காவலர்கள் படை சூழ நான்கு அடி நடந்து மூன்று மாவட்டங்களிலும் மூன்று இடங்களைப் பார்வையிட்டார். சில இடங்களில் அவரை சுற்றி வளைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். ஓரிடத்தில் அவரது பவனி பரிவார ஊர்வலத்தை எதிர்த்து சாலை மறியல் செய்தார்கள். அவருக்கு மக்கள் காண்பித்த இந்த எதிர்ப்பை “நிவாரணப் பணிகள் குறித்து கவர்னர் ஆய்வு செய்தார்” என்று ஊடகங்கள் தலைப்பை போடுகின்றன.

பரிவாரங்கள் புடைசூழ புரோஹித் ‘ஆய்வு’ப் பணி

அது மட்டுமா, சில இடங்களில் கையறு நிலையில் இருக்கும் பெண்கள் கதறியதை காலில் விழுந்து கதறினார்கள் என்று ஊடகங்கள் செய்தி போடுகின்றன. ஒரு ஹெக்டேர் நெற்பயிருக்கு ஒரு இலட்சமும், ஒரு ஹெக்டேர் தென்னைக்கு 10 லட்ச ரூபாயும் நிவாரணமாக வழங்க வேண்டுமென்று சில அப்பாவி விவசாயிகள் ஆளுநரிடம் கேட்டிருக்கின்றனர். அவரோ எல்லாம் நல்லபடியாக நடக்குமென்று ஆசியளித்து விட்டு தனது ‘ஆய்வு’ப்பணியை முடித்து விட்டு திரும்பினார்.

கஜா புயலின் சேதம் பிரம்மாண்டமாக இருந்தாலும், அந்த சேதத்தின் வீச்சு எப்படி என்று தமிழக அரசுக்குத் தெரியாது. இன்று வரை பெரும்பாலான கிராமங்களில் அரசின் நிவாரணப் பணிகளோ, அதிகாரிகளோ எட்டிப் பார்த்து விடவில்லை. இந்நிலையில் குடிசைகள், தென்னை, வாழை, நெற்பயிர், படகுகள், வலைகள், சிறு தொழில்கள், கூலித் தொழிலாளிகள் என இலட்சகணக்கான வாழ்க்கை குறித்து தமிழக அரசுக்கு எதுவும் தெரியாது.

ஆரம்ப நாட்களில் மக்கள் அமைச்சர் வந்த இடங்களில் எல்லாம் மறித்தார்கள். இதனால் ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்த்த எடப்பாடி அதையும் பாதியிலேயே முடித்து விட்டு திரும்பினார். ஏனெனில் நாகையில் மழையாம். கொட்டும் மழையில் மக்கள் அங்கே தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, சுற்றியடித்த புயலில் அவர்களது வாழ்க்கை சின்னா பின்னமாயிருக்கும் போது அதை நேரில் சென்று கூட எட்டிப் பார்க்க வக்கற்றது இந்த அதிமுக கொள்ளைக் கூட்டம்.

படிக்க:
♦ அரசாங்கம் குடிக்கத் தண்ணி கூட கொடுக்காதா | அதிராம்பட்டினம் கமலா | காணொளி
♦ தென்னை விவசாயி ராஜேந்திரன் : வங்கி கடன், சிங்கப்பூர் உழைப்பு, தொழிலாளி சேமிப்பு – அத்தனையும் அழிந்தது !

ஹெலிகாப்டரிலேயே சேதத்தை பார்த்து விட்டேன் என்று எடப்பாடி சொல்வதற்கு எவ்வளவு வன்மம் வேண்டும்? ஆயிரம் கோடி ரூபாயை நிவாரண நிதியாக ஒதுக்கியதாக கூறும் எடப்பாடி, தில்லி சென்று தனது பாஜக எஜமானர்களை சந்தித்து 15,000 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார். நான்கு மாநில தேர்தலுக்காக வார்டு வார்டாக சுற்றும்  மோடி, வழக்கம் போல இந்த பேரிடர் பாதித்த பகுதிகளை பார்ப்பதற்கு வரவில்லை. ஆனாலும் தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறதாம்.

எடப்பாடிக்கே தெரியாத அவர் பார்க்காத அவரது அரசாங்கம் கணக்கீடு செய்யாத பாதிப்புகள் குறித்து அவர் தில்லிக்கு ஒரு கணக்கு கொடுத்து நிவராணம் கேட்பாராம். ஏற்கனவே வர்தா, தானே, ஒக்கி புயலில் தமிழக அரசு கேட்ட தொகையில் 20-ல் ஒரு பங்கு மட்டும் மத்திய அரசு வழங்கியிருக்கிறது. பட்டேல் சிலைக்கு 3000 கோடி, நீரவ் மோடிக்கு 12,000 கோடி, மல்லையாவுக்கு 8,000 கோடி என்று அள்ளிக் கொடுத்தவர்கள் முக்கால் கோடி மக்கள் தொகையைக் கொண்ட டெல்டா மாவட்டங்களுக்கு என்ன ஒரு 500 கோடி ரூபாய் கொடுத்தால் அதிகம்.

தேசியப் பேரிடர் மோடியிடம் நிவாரணம் கேட்கும் தமிழகப் பேரிடர் எடப்பாடி

பிறகு எடப்பாடி கெஞ்சிக் கேட்ட பிறகு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசின் குழுவை அனுப்புவதாக மோடி பெரிய மனதுடன் சம்மதித்தாராம். வருகை தரும் மத்திய குழுவுக்கு உள்துறை அமைச்சகத்தின் நீதித்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமை வகிக்கிறாராம். அவர்கள் இன்று 23.11.2018 சென்னை வந்து விருந்தினர் மாளிகையில் அறுசுவை விருந்துண்டு, நாளை தஞ்சை சென்று பெரிய கோவிலில் வழிபட்டு பிறகு முதன்மைச் சாலையில் கேமராக்களோடு ஒரு வயல் பிக்னிக் செல்வார்கள். ஜிலேபியையும், சமோசாவையும் மட்டும் அறிந்தவர்களுக்கு நெல்லென்ன, தென்னை என்ன, மீனவர் வலை என்ன எல்லாம் ஏதோ ஒரு நேட்டிவிட்டி படம் பார்ப்பது போலத் தெரியும். பச்சை பசுமைகளை பார்த்து விட்டு சில பல செல்ஃபிக்களை எடுத்து விட்டு அவர்கள் திரும்புவார்கள். பிறகு பேரம் பேசும் தமிழக அரசு அதிகாரிகளோடு புன்சிரிப்புடன், போதும்ஜி ஒரு 300 கோடி ரூபாயை வெச்சுக்குங்க, இதுவே அதிகம் என்பார்கள்.

தி.மு.க ஆட்சியில் கொடுத்ததை விட நாங்கள் அதிகம் கொடுத்திருக்கிறோம் என்று கூவுகிறார் எடப்பாடி. இறந்தவர்களுக்கு பத்து இலட்ச ரூபாய், படுகாயம் அடைந்தோருக்கு ஒரு லட்சம், இறந்து போன மாடுகளுக்கு 30,000 ரூபாய், ஆடுகளுக்கு 3,000 ரூபாய், முழுவதும் சேதமடைந்த குடிசைகளுக்கு 10,000 ரூபாய், பாதி சேதமடைந்தால் 4,100 ரூபாய் என்றெல்லாம் கூறியிருக்கிறார். பாதிப்படைந்த கிராமங்களில் பலவற்றுக்கு கிராம நிர்வாக அதிகாரிகளே இன்னும் வராத நிலையில் இந்த இழப்பீட்டை எப்படி கணக்கீடு செய்வார்கள்? அதுவரை செத்துப்போன மாடு – ஆடுகளையும், சரிந்து கிடக்கும் மரங்களையும், பயிர்களையும் வைத்திருக்க வேண்டுமா?

படிக்க:
♦ மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?

♦ எடப்பாடியும் ஜெயலலிதாவும் ஒண்ணு ! இதை அறியாதவன் வாயில மண்ணு !

எதை எதை வைத்து இழப்பீடு கணக்கிடுவார்கள், அதை யார் முடிவு செய்வார்கள்? ஒக்கி புயலின் போது ஏதோ ஏலம் விடுவதைப் போல உயிரிழந்தவர்களுக்கு நாளொரு தொகையை மாற்றி மாற்றி ஏற்றினார் எடப்பாடி. அதுவும் கேரள அரசு காணாமல் போன மீனவர்களுக்கு 20 இலட்ச ரூபாய் என அறிவித்த பிறகுதான்.

அரசின் இலட்சணம் இதுவென்றால் நமக்கு இன்றாவது ஏதாவது நிவாரணம் வராதா என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறர்கள் டெல்டா மக்கள். சில நேரம் கோபமாய் போராடுகிறார்கள், சாலை மறியல் செய்கிறார்கள். இழந்த 20 வருட வாழ்க்கையை எப்படி மீட்க முடியும் என்ற கேள்விக்கு அவர்களிடம் விடையில்லை. ஆனால் என்ன செய்ய முடியும் என்று உழல்கிறார்கள். இனி மீத்தேன் எடுப்பதற்கு விவசாயம் தடையில்லை எனுமளவுக்கு தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக நிலைய வித்வான்கள், ”லா பாயிண்டுகளை” அடுக்குகிறார்கள். டெல்டா தத்தளித்துக் கொண்டிருக்கும் போது பாஜக மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் சபரிமலை சென்று அங்கு காரில் போக முடியவில்லை என்று ஒரு ஐபிஎஸ் அதிகாரியுடன் விவாதித்தாராம். அமைச்சரை எவன் கேள்வி கேட்டான் என்று இன்று குமரியில் வேலை நிறுத்தமாம். எத்தனை கொடிய மனம் இவர்களுக்கு?

இயற்கை சீற்றம் ஏற்படுத்திய அழிவுக்கு அரசு எப்படிக் கொடுக்க முடியும் என்று கத்துகிறார்கள். ஆம் இந்த அரசுகளே பெரும் இயற்கைப் பேரிடர் எனும் போது மக்களுக்கு கஜா புயல் எனும் இயற்கை பேரிடர் பெரிய பேரிடரல்ல. இன்று வரையிலும் டெல்டா மாவட்டங்களில் மக்கள் பெருங்கோபத்தோடும் எல்லா இடங்களிலும் சாலை மறியல் நடப்பதாவும் செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன. சிதறிக் கிடக்கும் இப்போராட்டங்கள் ஒன்றிணையும் போது அது கஜா புயலை விட பெரும் சக்தியுடன் கிளம்பும். மக்களை கிள்ளுக்கீரையாக நினைக்கும் அரசுகளுக்கு அப்போதுதான் மக்கள் சக்தியின் வலிமை புரியும்.

கஜா புயல் நிவாரணப் பணிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள்

மிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள் கஜா புயலில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் தங்கி நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும் இவர்களுடன் இணைந்து வேலை செய்து வருகின்றனர்.

உருக்குலைந்த வீடுகளையும், சரிந்து விழுந்த மரங்களையும் அப்புறப்படுத்தும் பணியை பிரதானமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அனுப்பிவைக்கப்படும் நிவாரணப் பொருட்களை சேகரித்து, மக்களின் தேவையறிந்து சீராக விநியோகித்து வருகின்றனர்.

சீரமைப்புப் பணி

வேதாரண்யம் பகுதியில் சேதமடைந்த வீடுகளையும் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் தோழர்கள்.

வேதாரண்யம், ஆயற்குளம் கைகாட்டி பகுதியில் சீரமைப்புப் பணியில் ஈடுபடும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மற்றும் அண்ணாமலை பல்கலைகழக மாணவர்கள்.

This slideshow requires JavaScript.

மீட்புப் பணியில் மாணவர்கள், இளைஞர்கள் களமிறங்குவோம்!
தேர்வுகளை தள்ளிவை! பு.மா.இ.மு. கோரிக்கை!!

நிவாரணப் பொருட்கள் விநியோகம்

சேகரித்த பொருட்களை தேவைக்கேற்ப கொடுப்பதற்காக வகை பிரிக்கும் பணியில் தோழர்கள்.

பட்டுக்கோட்டை வட்டார கிராமங்களில் விநியோகம்.

நிவாரண பொருட்கள் சேகரிப்பு

திருச்சியில் நிவாரண பொருட்கள் சேகரிப்பு
விருத்தாசலம்

மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டலம் சார்பாக அனுப்பிவைக்கப்பட்ட பொருட்கள்.

சுல்தான் பாய் அன்பாய் கொடுத்த 140 பாய்கள்

ஞ்சையில் கஜா புயலால் துயறுரும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களைத் திரட்டிக்கொண்டிருக்கிறோம். நேற்று இரவு வேதாரண்யத்திலிருந்து தோழர் தனியரசு, உடனடியாக மக்கள் படுக்க கோரைப்பாய்கள் வேண்டுமெனக் கேட்டார். எனவே பாய் மொத்த வியாபாரம் செய்யும் சுல்தான் பாயை அணுகினோம்.

இவர் முன்னரே மிகச்சிறிய குறையுள்ள 40 புதிய பிளாஸ்டிக் பாய்களை இலவசமாகவே கொடுத்திருந்தார். ஒரு பாய் ரூ.100 என முடிவாயிற்று. எவ்வளவு தேவையெனக்கேட்டார். “தேவை நிறைய, ஆனால் இப்போது எங்களிடம் இருக்கும் பணத்திற்கேற்ப பாய்களைக் கொடுங்கள்” என தோழர் காளியப்பன் கூறிவிட்டு உதவிகள் கோரியும் நிவாரணப் பணிகள் குறித்தும், தொடர்ந்து பலருடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.

படிக்க:
கஜா : ஆமை வேகத்தில் நிவாரணப் பணிகள் !
மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?

இதை கவனித்துக்கொண்டிருந்த சுல்தான்பாய் தோழர் காளியப்பனிடம் வந்து 100 பாய்களை இலவசமாகவே தந்துவிடுகிறேன் எனக் கூறிவிட்டு பாய்கட்டுகளை வெளியே எடுத்துவைத்துவிட்டு அதற்கு விளக்கம் சொன்னார்.

“வங்கியொன்றில் எனது மகளுக்காக பணம் சேமித்தேன். அதற்கு வட்டியாக ரூ. 10000 சேர்ந்திருக்கிறது. நாங்கள் வட்டி வாங்கமாட்டோம். அதனால் வங்கிக்கணக்கில் சேரும் வட்டியை பொதுக்காரியங்களுக்குச் செலவிடுவோமேயன்றி சொந்தக் காரியங்களுக்குப் பயன்படுத்தமாட்டோம்” எனக் கூறிவிட்டு ”கஜா புயலுக்கு உதவியதாகக் கணக்கெழுதிக்கொள்ளட்டுமா?” என மிகுந்த தயக்கத்துடன் கேட்டார்.

“உண்மையைத்தானே எழுதப்போகிறீர்கள், அதற்கென்ன தயக்கம்?” எனச் சொல்லிவிட்டு நன்றியுடன் விடைபெற்றோம்.

உதவ விரும்புவோர் எமது தோழர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

மக்கள் அதிகாரம், சென்னை – 9176 801656
மக்கள் அதிகாரம், திருவாரூர் – 9962 366321, 9626 352829
பு.மா.இ.மு., வேதாரண்யம் – 6383 461270
தகவல்:

ஊழல் – வணிகம் – காவிமயமான கல்வி – நெல்லை கருத்தரங்க செய்தி

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் நெல்லைப் பகுதியின் சார்பில் கடந்த நவம்பர் 10-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று மாலை 5.00 மணி அளவில் நெல்லை சகுந்தலா இன்டர்நேசனில் உள்ள அரங்கில் ‘’உயர்கல்வி எதிர்கொள்ளும் நெருக்கடிகள்’’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

தூய சவேரியார் கல்லுாரியின் பொருளியல் துறை பேராசிரியர் அமலநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த் துறைத்தலைவர் பேரா. தொ. பரமசிவன், சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த் துறைத்தலைவர் பேரா. வீ. அரசு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கணிதவியல் துறை பேரா. சோமசுந்தரம் மற்றும் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் முனைவர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். ஏறத்தாழ 75 பேர் பங்கேற்ற இக்கருத்தரங்கம் இரண்டரை மணி நேரம் நடைபெற்றது. நெல்லைப் பகுதியின் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், உயர் ஆய்வு மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

தலைமையுரை ஆற்றிய பேரா. அமலநாதன், உயர் கல்வியானது பெரும்பான்மை மக்கள் அறியாதவாறு அவர்களின் நலன்களுக்கு எதிராக எத்தகைய மாற்றங்களுக்கு தொடர்ச்சியாக உட்படுத்தப்பட்டு வருகிறது என்பதையும், இத்தகைய மக்களுக்கு எதிரான வணிகம் சார்ந்த மாற்றங்களை எதிர்கொள்வதில் ஆசிரிய அமைப்புகள் பலவீனமாக இருக்கின்றன என்பதையும், பொது வெளியில் அனைவரும் சேர்ந்த ஒரு அமைப்பின் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினார்.

ஊழல் – வணிகம் – காவிமயமான கல்வி

இக்கருத்தரங்கில் வாழ்த்திப் பேசிய பேரா. தொ. பரமசிவன், கல்லூரி, பல்கலைக் கழகங்களில் கல்வி சார்ந்த மாணவர் – ஆசிரியர் பிரச்சினைகளில் மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து பல்வேறு காலங்களில் போராடியதே நம் தமிழக மண்ணின் வரலாறு என்று குறிப்பிட்டார்.

கல்வி நிறுவனங்கள் தொடர்ச்சியாக வணிகமயமாகி வருவதுடன், சாதி சார்ந்தும் நடத்தப்படுவது தமிழகத்தின் நடைமுறையாக உள்ளதாகக் குறிப்பிட்டார். இத்தகைய போக்கிற்கு அதிகார வர்க்கம் பேரளவு உடந்தையாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

பேரா. தொ. பரமசிவன்

பல்கலைக்கழகங்களில் பெரிய அளவில் ஊழல் இருப்பதையும், துணைவேந்தர்கள் நியமனத்திலும் பேரளவு ஊழல் இருப்பதையும் ஆளுநரே ஒத்துக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டினார். காவிக் கலாச்சாரவாதிகளை திருப்திப்படுத்தும் நோக்கில் துணைவேந்தர்கள் செயல்படுவதையும், அது ஆசிரியச் சமூகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளதையும் குறிப்பிட்டார் பேரா. பரமசிவன் அவர்கள்.

இத்தகைய உயர்கல்விச் சீரழிவு குறித்து சிந்திக்கவும், பங்கேற்கவும் வந்திருக்கின்ற சமூக உணர்வாளர்களான பேராசிரியர்களையும் மாணவர்களையும் நான் பாராட்டுகிறேன் என்று தனது வாழ்த்துரையை நிறைவு செய்தார் பேரா. தொ. பரமசிவன் அவர்கள். உடல்நிலை சரியில்லாத நிலையிலும், கருத்தரங்கில் வந்து பேரா. தொ. பரமசிவன் அவர்கள் கலந்து கொண்டது பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்தியது.

தமிழகத்தில் பெருகிவரும் தனியார் கல்வி வணிகம்

அடுத்ததாக ‘தமிழகத்தில் பெருகிவரும் தனியார் கல்வி வணிகம்’ எனும் தலைப்பில் பேரா. வீ. அரசு தனது சிறப்புரையாற்றினார். தமிழகத்தில் உயர்கல்வியைத் தனியார் மயமாக்கும் போக்கினை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னை பச்சையப்பா கல்வி அறக்கட்டளை போன்றவை எப்படித் தொடங்கி உயர்கல்வியைச் சீரழித்தன? கல்வியை சுரண்டலுக்கான மாதிரி நிறுவனங்களாக அவை எப்படி இருந்தன என்பதை குறிப்பிட்டு தனது உரையைத் தொடங்கினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகமானது ஆசிரியர்க்கான பணியிடங்களை எப்படி விற்பனைப் பொருளாக மாற்றி கல்வியை, அரசு நிதியை நாசமாக்கின என்பதைக் கூறினார்.

பேரா. வீ. அரசு

நிலவுடைமையாளர்களும், மிகப்பெரிய தொழிலதிபர்களும், சாராய வியாபாரிகளும், எம்.ஜி.ஆர். போன்றோரிடம் அடியாட்களாக இருந்தவர்களும் பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கி இன்று கல்வித் தந்தையர்களாக மாறிவிட்டனர் என்பதையும், அவர்களால் எப்படி அரசு புறம்போக்கு இடங்களும், ஏரிகளும், நீர் நிலைகளும் ஆக்ரமிக்கப்பட்டு, கல்வி நிறுவனங்கள் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம், சங்கரா பல்கலைக்கழகம், சத்தியபாமா, சாஸ்திரா பல்கலைக்கழகங்களாக வளர்ந்தன என்பதையும் தெளிவுபடுத்தினார்.

இத்தகைய பல்வேறு தனியார் பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ். – ன் சாகா பயிற்சி நடத்தும் அளவிற்கு காவிமயமாக்கப்பட்டு வருவதையும் குறிப்பிட்டார். தமிழகத்தில் எம்.ஜி.ஆர். காலத்தில் தொடங்க அனுமதிக்கப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் இன்று எண்ணிக்கையில் 850-ஐத் தாண்டி விட்டது. எந்தத் தரமும், தொழில்நுட்ப வசதியும், திறன்பயிற்சி இன்றியும் புற்றீசல்களாக வளர்ந்து வருகின்ற இத்தனியார் பொறியியல் கல்லூரிகளின் இன்றைய நிலை என்பது திறனற்ற வேலையில்லாப் பட்டதாரிகளை வெளியே அனுப்பும் வேலையை மட்டுமே செய்வதாகக் குறிப்பிட்டார். மாணவர்களிடமிருந்து கட்டணத்தைப் பெற்று பல்கலைக்கழகங்கள் தனது நிதியை பார்த்துக்கொள்ளுமாறு இன்றைய அரசுகள் கட்டாயப்படுத்துகின்றன. எத்தனையோ நாடுகளில் அருகில் உள்ள இலங்கை உட்பட உயர்கல்வியை இலவசமாக வழங்கி வருகின்றன. இத்தகைய மோசமான வணிகமய நெருக்கடிக்குள் சிக்கி இருக்கின்ற உயர்கல்வியை நம்மை போன்ற அனைவரும் இணைந்து போராடி மீட்க வேண்டும் என்று சொல்லி தனது உரையை நிறைவு செய்தார் பேரா. வீ. அரசு அவர்கள்.

தேவை : கல்வியாளர்களின் சுதந்திரமான, அச்சமற்ற, எதற்கும் விலைபோகாத உண்மைக் குரல்கள்!

பேரா. கருணானந்தன்.

இக்கருத்தரங்கிற்கு வாழ்த்துரையை சென்னை விவேகானந்தா கல்லூரியின் மேனாள் வரலாற்றுத்துறையின் தலைவர் பேரா. கருணானந்தன் அனுப்பி இருந்தார். தனது வாழ்த்துச் செய்தியில் இன்றைய நமது சமூகம் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. நெருக்கடியான சூழலில், சமூகத்தின் மனசாட்சியாக இருக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு இருக்கின்றது. பெரும்பாலான ஊடகங்கள் கார்ப்பரேட்டுகளின் குரல்களாகி சீரழிந்திருக்கின்ற இச்சூழலில், கல்வியாளர்களின் சுதந்திரமான, அச்சமற்ற, எதற்கும் விலைபோகாத உண்மைக் குரல்கள் நம் மக்களுக்கு உண்மையைத் தெளிவுபடுத்தவும், நம்பிக்கை ஊட்டவும் பெரிதும் உதவும். நமது நாட்டின், நாட்டு மக்களின் நிகழ்கால, எதிர்கால நலன்களுக்கு நம்மால் ஆன சிறிய பணி இது. உங்கள் பணிக்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்திருந்தார்.

ஊழல், பாலியல் முறைகேடு – சீரழிக்கப்படும் பல்கலைக்கழகங்கள்

‘ஊழல், பாலியல் முறைகேடு – சீரழிக்கப்படும் பல்கலைக்கழகங்கள்’ எனும் தலைப்பில் பேரா. சோமசுந்தரம் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். கல்வி நிறுவனங்களில் நடைபெற்றுவரும் பல்வேறு சீர்கேடுகளுக்கு ஆசிரியர்களாகிய நாமும் பொறுப்பேற்க வேண்டும். ஆசிரியர்கள் அமைதியாகவும், சீரழிவின் ஒரு பகுதியாகவும் இருந்தால் அது கல்வியையும் சீரழிக்கும். கல்வி நிறுவனங்களில் தவறுகள் நடைபெறும்போது அது குறித்து வெட்கப்படும் மனநிலை அன்று ஆசிரியர் சமூகத்திடம் இருந்தது. இன்று பணம் கொடுத்து ஆசிரியப் பணிக்குள் போவது என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. தவறுகளுக்கு எதிரான அறச்சீற்றம் ஆசிரியர்களுக்கு வர வேண்டும். அத்தகைய அறநெறியும், போராட்டமும், கல்வி நிறுவனங்களது ஊழல் மற்றும் பாலியல் சீர்கேடுகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட வேண்டும். அதற்காக நாம் ஒன்றிணைந்து போராடுவோம் என்று கூறினார் பேரா. சோமசுந்தரம்.

காவிமயமாக்கப்படும் உயர் கல்வி

நிறைவாக ‘காவிமயமாக்கப்படும் உயர் கல்வி’ எனும் தலைப்பில் முனைவர் இரமேஷ் கீழ்கண்ட தனது கருத்துரையை வழங்கினார். காவிமயமாகிவரும் உயர் கல்வி என்பது தனியார்மயம், ஊழல், பாலியல் மயமாகிவரும் உயர்கல்வி என்பதோடு தொடர்புடையதே. கடந்த பத்து வருடங்களாக கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பல்வேறு நியமனங்கள் அனைத்தும் தகுதியற்ற நபர்களையே நியமிப்பதாகவே இருக்கிறது. நெல்லை துணைவேந்தர் சாமியாடியது என்பது பல்கலைக்கழகங்களின் தன்மையை, தரத்தை சீரழிப்பதாக இருக்கிறது. பி.ஜே.பி. அரசு வந்த பிறகு இத்தகைய சீரழிவுப் போக்குகள் இன்னும் அதிகமாக நடக்கிறது.

முனைவர் ரமேஷ்.

தனது பல்வேறு மூட நம்பிக்கைகளை, அறிவியலுக்கு முரணான பிற்போக்கு கருத்துக்களை உயர்கல்வியின் பெரும் பொறுப்புகளில் இருக்கின்ற அமைச்சர்கள், அதிகாரிகள் பிதற்றுவதன் மூலம் அதையே உயர்கல்வியின் ஒரு அறிவாக மாற்ற முயற்சி செய்கின்றனர். இந்திய அளவிலும், தமிழக அளவிலும் மத பிற்போக்குவாதிகளின் நிகழ்ச்சி நிரல் என்பது உயர்கல்வி நிறுவனங்களில் மட்டுமல்ல, பள்ளி நிறுவனங்களிலும் திணிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கல்வி வட்டத்தில், ஆசிரியர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் வகுப்பு எடுக்கும் அவலம். ஆசிரியர்களது எதிர்ப்பிற்கு பின் அது விலக்கி கொள்ளப்படுகிறது. வரலாற்றை திரிப்பது, பொய்யான தகவல்களை உண்மையெனச் சொல்வது, சாதிப்பிரிவினைக்குக் காரணம் நம்மை ஆண்ட வெள்ளையர்கள் என்று சொல்வது என்ற உண்மைக்கு எதிரான தகவல்களை தொடர்ந்து பரப்பும் திருட்டுத்தனத்தை பார்ப்பனியவாதிகள் செய்து கொண்டே இருக்கின்றனர்.

பார்ப்பனியமயம் அல்லது காவிமயம் என்பதை அதோடு மட்டும் வைத்து நாம் பார்க்கக் கூடாது. மாறாக அது முழுமையாக தனியார்மயத்தை ஆதரித்து அதை வளர்க்கக் கூடியதாக இருக்கின்றது. அனைவருக்குமான கல்வி என்பதை மறுத்து, சிலருக்கான கல்வி எனும் பார்ப்பனிய சித்தாந்தத்தின் வழியில் தனியார்மயத்தை வேகமாக வளர்த்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவாரக் கும்பல்.

இவர்கள் தனியார்மயத்திற்கான, ஏகாதிபத்திய கட்டமைப்பிற்கான தரகு வேலையை மட்டுமே செய்கின்றனர். கடந்த அக்டோபர் மாத இறுதியில் ஹரித்துவாரில் நடைபெற்ற உயர்கல்விக்கான மாநாட்டில், பி.ஜே.பி. ஆளுகின்ற மாநிலங்களின் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் மத்திய உயர்கல்விக்கான அமைச்சர்கள், பி.ஜே.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ன் பிரதிநிதிகள், உயர்கல்வி செயலர்கள் கலந்து கொண்டனர். இதில் இவர்கள் பேசியது, ‘இந்திய உயர்கல்வியை இந்திய பாரம்பரிய கல்வியைக் கொடுக்கும் அமைப்பாக மாற்ற வேண்டும்’ என்பதே. ‘பாரம்பரிய கல்வி என்பது சமஸ்கிருதம், இராமாயணம், மகாபாரதம், வேதகால கருத்துக்கள், அதன் பார்ப்பனிய மதிப்பீடுகள் ஆகியவற்றைப் புகுத்துவது என்பதே இவர்கள் குறிப்பிடுகிற இந்திய பாரம்பரியக் கல்வி என்பதாகும்.

தனியார்மயம் என்பது பார்ப்பனியத்தின் அனைத்துக் கூறுகளையும் திட்டமிட்டுப் புகுத்துவதற்கு அவர்களுக்குப் பயன்படுகிறது என்பதே அவர்கள் தனியார்மயத்தை ஆதரிப்பதன் காரணம். காவிமயத்தின், தனியார்மயத்தின் நலன்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்துள்ளது என்பதை நாம் உணர வேண்டும். இதை எதிர்கொள்வதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், வெகுஜன அமைப்பினர் ஆகிய அனைவரையும் உள்ளடக்கிய போராட்ட முறையே சரியானதாக இருக்கும் என்று முனைவர் இரமேஷ் கூறினார்.

படிக்க:
உதயமானது பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு !
கல்வி உரிமையைப் பறிக்கும் உயர் கல்வி ஆணைய மசோதா !

கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் பேரா. நவநீதன் நன்றி கூறினார். தனது நன்றி உரையில், ‘சுயநிதிக் கல்லூரிகளில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் எப்படி கொத்தடிமையாக நடத்தப்படுகின்றனர், நிரந்தரமற்ற பணி, முறைப்படுத்தப்படாத ஊதிய உயர்வு, கல்வி ஆண்டின் இறுதியில் ஊதியத்தின் நிச்சமற்ற தன்மை ஆகியன குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

தகவல்: பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, நெல்லை.

பெண்கள் தற்கொலை : உலக சராசரியை விட இந்தியாவில் 210% அதிகம் !

ந்தியப் பெண்கள் கல்வி கற்றிருந்தாலோ, பொருளாதார விடுதலை அடைந்திருந்தாலோ, தற்போதைய நிலையை விட குடும்ப வன்முறைக்கு குறைவாக ஆட்பட்டாலோ, பெண்களின் தற்கொலை விகிதமும் பெருவாரியாக குறைய வாய்ப்பிருக்கிறது என துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த செப்டம்பர் 2018-ல் பிரபல மருத்துவ இதழான லான்செட்டில் “பாலின வேறுபாடு மற்றும் இந்தியாவின் தற்கொலை மரணங்களின் நிலைமாற்றம் : உலகளாவிய நோய் பெரும்சுமை குறித்த ஆய்வு (1990-2016)” வெளியானது.

உலகில் தற்கொலை செய்து கொள்ளும் 10 பெண்களில் நால்வர் இந்தியப் பெண்கள்

அந்த அறிக்கையில், கடந்த 2016-ல் மட்டும் ஒரு லட்சத்திற்கு 15 பேர் என்ற கணக்கில் இந்தியாவில் பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது, உலக அளவில் பெண்கள் தற்கொலையின் சராசரியை விட 2.1 மடங்கு அதிகமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியா உலக அளவில் ஆறாவது இடம் வகிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

உலக அளவில் பெண்களை தற்கொலையிலிருந்து திருமணங்கள் தடுத்துவரும் நிலையில், இந்தியாவில் திருமணமான பெண்களே அதிக அளவில் தற்கொலை செய்திருக்கிறார்கள் எனக் குறிப்பிடுகிறது இந்த ஆய்வு.  குடும்பத்தால் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்கள், குழந்தைத் திருமணம், சிறுவயதில் தாய்மை அடைதல், தாழ்ந்த சமூக நிலை, குடும்ப வன்முறை மற்றும் பொருளாதார விடுதலையின்மை ஆகியவையே திருமணமான பெண்களின் தற்கொலைக்கு மிக முக்கிய காரணிகளாக அமைகின்றன என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

படிக்க:
♦ பெண்கள் மீதான பாலியல் வன்முறை | தியாகு | ஓவியா உரை
♦ பாலியல் வல்லுறவுக்கு காரணம் பெண்களே – அரியானா பாஜக முதல்வர்

பால்ய திருமணம் மற்றும் தாழ்ந்த சமூக நிலை:

சமீபத்தில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப மற்றும் சுகாதார கணக்கெடுப்பில், இந்தியாவில், 27% பெண்களுக்கு 18 வயது பூர்த்தியாகும் முன்பே திருமணம் முடிவடைவதும், அதில் 8% பெண்கள் 15 முதல் 19 வயதிற்குள்ளாகவே தாய்மையை அடைவதும் தெரிய வந்துள்ளது.

பெண்கள் மீதான குடும்ப வன்முறை அவர்களை தற்கொலைக்குத் தள்ளுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது

மேலும், பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையானது அவர்களை தற்கொலைக்கு தூண்டுவதில் பெரும்பங்காற்றுகிறது. திருமணமான பெண்களில் சுமார் 29% பேர் தங்கள் கணவன்மார்களாலேயே வன்முறைக்குட்படுத்தப்படுகின்றனர். சுமார் 3% பேர் மகப்பேறு காலத்தில் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலான பெண்கள் 15 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட பெண்களில், வெறும் 36% பெண்களே 10-ம் வகுப்பிற்கு மேல் கல்வி பயின்றவர்கள் ஆவர்.  இத்தகவல் மூலம் நாம் தெரிந்துகொள்வ து என்னவெனில், குழந்தைத் திருமணம், சிறுவயதில் தாய்மையடைதல் மற்றும் வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் பெரும்பாலும் கல்வி மற்றும் பொருளாதார விடுதலையற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான்.

ஸ்னேகா(SNEHA) இந்தியா மற்றும் வி.எச்.எஸ் (Voluntary Health Services), சென்னை ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான லக்ஷ்மி விஜயக்குமார் கூறுகையில், “ஆண்களைப்போல் அல்லாமல் கல்வி என்பது பெண்களை தற்கொலையில் இருந்து தடுக்கும் ஒரு கருவியாக உள்ளது” என்றார். மேலும், ஆண்கள் தற்கொலைக்கு கடன் தொல்லைகளே பொதுவான காரணமாக இருப்பதாகவும் பெண்களுக்கு திருமணப் பிரச்சினைகளே காரணமாகவும் உள்ளது என்றும் குறிப்பிடுகிறார்.

குழந்தைத் திருமணங்களைத் தடுப்பது, பெண் கல்வியை ஊக்குவிப்பது மற்றும் வரதட்சணைக் கொடுமைகளை இல்லாதொழிப்பதன் மூலம்தான் இந்த தற்கொலைகளை தடுக்க முடியும் என்கிறார் லட்சுமி விஜயகுமார்.

ஆண்களின் மதுப் பழக்கம் பெண்களின் தற்கொலைக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது.

பெண் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கும், பெண்களின் தற்கொலைக்கும் மற்றுமொரு நேரடி காரணமாக அமைவது ஆண்களிடம் நிலவும் மதுப் பழக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

திருமணத்திற்கு பிறகு ஏற்படும் பாலியல் வன்முறைகள் மற்றும் ஆணாதிக்க வன்முறைகளை குறைப்பதன் மூலம் பெண்கள் தற்கொலையைக் குறைக்க முடியும். ஒரு தோராய மதிப்பீட்டின்படி, பாலியல் துன்புறுத்தல்கள் இல்லாமலிருந்தால் பெண்களின் மொத்த வாழ்நாள் பொழுதில் தற்கொலை முயற்சி வீதம் 28 %  குறையும்.

ஆண் பெண் வேறுபாடு

பெண்களின் தற்கொலை வீதம் குறைந்துள்ள அதே வேளையில் ஆண்களின் தற்கொலை வீதம் 30 வருடங்களாக குறையாமல் அதே நிலையில் உள்ளது.

பெண்களின் தற்கொலை வீதம் 1990-ல் 100,000-க்கு 20 பேர் என்றிருந்தது. கடந்த 2016-ம் ஆண்டு 100,000-க்கு 15 என்ற வீதத்தில் அது குறைந்துள்ளது. ஆனால் ஆண்களின் தற்கொலை வீதத்தில் எவ்வித வேறுபாடும் ஏற்படவில்லை. கடந்த 1990-ம் ஆண்டு 1,00,000-க்கு 22-ஆக இருந்தது 2016-ம் ஆண்டில் 21-ஆகவே இருக்கிறது.

உலக அளவில் ஆண்களின் தற்கொலை வீதம் பெண்களை விட 200% அதிகமாக உள்ளது. இந்தியாவில்தான் பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களின் தற்கொலை வீதம் வெறும் 50% மட்டுமே அதிகமாக உள்ளது.

15 முதல் 3 வயதில் ஏற்படும் மரணங்களுக்கான காரணங்களில், தற்கொலைதான் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. இவ்வயதுக்குட்பட்ட ஆண்களின் மரணங்களில் 58% மரணங்கள் தற்கொலையாகவும், பெண்களில் 71% மரணங்கள் தற்கொலையாகவும் அமைகின்றன.

படிக்க:
♦ சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா? ஆர்.எஸ்.எஸ்.ஸா? | துரை சண்முகம் | காணொளி
♦ நந்தினியைக் கொன்ற இந்து முன்னணி – ஆவணப்படம்

கணக்கில் காட்டப்படாத பெண்களின் தற்கொலைகள்

இந்த கணக்கீடுகள் அனைத்தும் இந்தியாவில் நிகழும் தற்கொலைகளின் பரப்பை புரிந்து கொள்ள உதவினாலும், இந்தக் கணக்கீடுகளில் தற்கொலை முயற்சிகள் மற்றும் கணக்கில் வராத தற்கொலைகள் விடுபட்டுள்ளன.

குடும்ப அமைப்பில் திருமணமான ஏழு ஆண்டுகளுக்குள் பெண் தற்கொலை செய்து கொண்டால், கணவனின் குடும்பம் பொறுப்பேற்க வேண்டும் என்பதால், பல தற்கொலைகள் வெளியில் சொல்லப்படாமலேயே போகின்றன.

கல்வி, திருமணம் என எல்லாவற்றிலும் பெண்கள் பெற்றோர்களின் வன்முறையை சந்திக்கிறார்கள்

கடந்த 2014-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மதிப்பீட்டின்படி தேசிய குற்றப்பிரிவு ஆணையத்தில் பதியப்பட்ட பெண்கள் தற்கொலைகளின் எண்ணிக்கையை விட மதிப்பிடப்பட்ட தற்கொலைகளின் எண்ணிக்கை 37%  அதிகமாக உள்ளது.  இதே வேறுபாடு ஆண்களின் தற்கொலை வீதத்தில் 25% அதிகமாக ஆக உள்ளது.

CEHAT- என்ற அமைப்பின் ஒருங்கினைப்பாளரான சங்கீதா ரெஜெ கூறுகையில், விசமருந்தி தற்கொலைக்கு முயற்சிக்கும் சம்பவங்கள் பெரும்பாலும், எதிர்பாராதவிதமாக விஷமருந்திய சம்பவங்களாக காட்டப்படுகின்றன எனத் தெரிவித்தார்.

இவ்வாறு ’தற்செயலாக விஷம் குடித்த’ நிகழ்வு என்ற அடிப்படையில் மட்டும் மாதத்திற்கு சராசரியாக 25 பெண்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இதில் குறிப்பாக 15-19 வயதுக்குட்பட்ட இளம்பெண்களின் மரணத்தில் 17%  மரணங்கள் தற்கொலையால் நிகழ்கிறது.

மேலும் ரெஜெ கூறுகையில், “ பெற்றோரின் தாக்குதல்கள் குறித்து பெருமளவில் பேசப்படுவதில்லை. ஆனால் பெற்றோர்கள் கடுமையாக தாக்குபவர்களாகவும், இவ்வயதினரை கட்டுப்படுத்துபவர்களாகவும் இருக்கின்றனர்.  இந்த இளம்பெண்கள் தங்கள் பெற்றோர்களைத் தாண்டி தன்னிச்சையாக வும் சுதந்திரமாகவும் முடிவெடுக்க முடியாதவர்களாய் உள்ளனர்” என்றார். தேசிய சுகாதார கணக்கீட்டின் படி, பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டும், தாக்குதலில் 30%  தங்கள் பெற்றோர்களால் நிகழ்த்தப்படுகின்றது.

பிராந்திய வேறுபாடு

இந்தியாவின் 31 மாநிலங்களில் 26-ல் 15-29 வயதுடையவர்கள் மரணத்தில் தற்கொலையே பெரும்பங்கு வகிக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், தற்கொலை வீதம் வளர்ந்த, வளரும் மாநிலங்களை விட பின் தங்கிய மாநிலங்களில் குறைவாக உள்ளது.

நன்றி : படம் – லான்செட் மருத்துவ இதழ்

தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்காளம், திரிபுரா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் தற்கொலையில் முன்னணி மாநிலங்களாக உள்ளன.

“வளர்ந்த மாநிலங்களில் நகரமயமாக்கலும் அதன் நீட்சியாக ஏற்படும் ஜன நெருக்கடி, சிறிய குடும்ப அமைப்பு முறை மற்றும் அதீத செலவுகள் முதலியன தற்கொலைக்கான அடிப்படை காரணங்களை கட்டியமைக்கின்றன” என்று இந்திய பொது சுகாதார மையத்தின் பேராசிரியர் ராக்கி டண்டொனா கூறுகிறார்.

1996-2016 காலகட்டத்தில் உத்திரகாண்ட் (45%), சிக்கிம் (43%), ஹிமாச்சல பிரதேசம் (40%) மற்றும் நாகாலாந்து (40%) ஆகிய மாநிலங்களில் தற்கொலை விகிதம் வெகுவாக குறைந்திருக்கிறது.

இந்தியாவில் தற்கொலைகள் குறித்து மேலும் ஆய்வுகள் தேவை:

15-39 வயதுக்குட்டவர்களின் மரணத்திற்கு தற்கொலை பிரதான காரணியாக உள்ளது. ஆனால் இது பற்றியான ஆய்வுகள் குறைவாக உள்ளன.  விவசாயிகள் மரணம் குறித்த பொதுமக்களின் கவனத்தைத் தவிர தற்கொலையிலிருந்து அவர்களை எப்படித் தடுப்பது என்பது குறித்த ஆய்வுகள் தேவை.

படிக்க:
♦ மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?
♦ நாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் !

கடந்த இருபது ஆண்டுகளில் ஆண்களின் தற்கொலை வீதம் குறையாதது குறித்து விரிவாகப் பார்க்க வேண்டியது இருக்கிறது. “இந்தியாவில் ஆண்களில் தற்கொலைகள் குறித்துப் பார்க்கையில் இளம் ஆண்கள் மிகவும் பாதிப்புக்க்குள்ளாகக் கூடியவர்களாக இருக்கின்றனர். மேலும் திருமணம் அவர்களை தற்கொலையிலிருந்து தடுக்கக் கூடியதாக இல்லை.” என்கிறது லான்செட் இதழின் ஆய்வு.

ஆண்கள் மன அழுத்தத்தை உள்ளுக்குள் வைத்துக் கொள்ளவே முயற்சிக்கின்றனர். உணர்ச்சி சார்ந்த பிரச்சினைகளில் உதவி கேட்பதில் தயக்கம் கொள்கின்றனர். “பல சம்பவங்களில் ஆண்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்புவரை அவர்கள் பிரச்சினையில் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை.” என்கிறார் ராக்கி டன்டொனா.

கடந்த 2017-ம் ஆண்டு தற்கொலைகளை குற்றமற்றதாக்கியது, அதே போல தேசிய மனநலச் சட்டத்தைக் கொண்டுவந்தது ஆகிய நடவடிக்கைகள், மனநல சிகிச்சை கிடைப்பதற்கான வழிகளை மேம்படுத்தக்கூடும். மேலும் இது தற்கொலைக்கு முயன்றவர்களின் மீதான களங்கத்தையும் தற்கொலைகள் குறித்த முறையாக தெரிவிக்காமலிருப்பதையும் குறைக்கக்கூடும் என்கிறது லான்செட் ஆய்வு.

”தற்கொலையை தேசிய சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக முதலில் அறிவிக்க வேண்டும்” என்கிறார் ஹார்வர்டு சான் பொதுநல கல்விநிலையத்தின் உலகளாவிய சுகாதார மற்றும் மக்கள்தொகைத் துறையின் பேராசிரியர் விக்ரம் பட்டேல் தெரிவித்துள்ளார். இவர் இந்தியாவில் தற்கொலைகள் குறித்து 2014-ம் ஆண்டு ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, கடந்த பத்தாண்டுகளில் தற்கொலை விகிதத்தைக்  குறைந்திருக்கும் சீனா மற்றும் இலங்கையிலிருந்து, எவ்விதமான தலையீடுகள் தற்கொலையை குறைத்திருக்கின்றன எனக் கண்டறிவதில் உத்வேகம் பெறவேண்டும் என்கிறார் விக்ரம் பட்டேல்.

*****

இந்த ஆய்வுகளில் பல்வேறு விசயங்கள் தெரிய வந்துள்ளன. குறிப்பாக நகரமயமான / நகரமயமாகும் மாநிலங்களில் தற்கொலை விகிதங்கள் அதிகமாக இருக்கின்றன. தகவல் தொழில்நுட்பப் பணியாக இருந்தாலும் சரி, ஆலைப்பணியாக இருந்தாலும் சரி, பிழிந்தெடுத்து சக்கையாக வெளியே அனுப்புகின்றன தனியார் நிறுவனங்கள். ஒரு பக்கம் வேலை அழுத்தமும் மறுபக்கம் பெரும் நுகர்வு வெறி உருவாக்கும் விரக்தியும் சேர்ந்து தற்கொலையை நோக்கித் தள்ளுகின்றன. இதற்கு தோதாக இந்திய மக்களின் மனதை நோய்வாய்ப்பட்டதாகவே பார்ப்பனியம் வைத்திருக்கிறது.

இந்தியாவில் பெண்களை, பெற்றோர்களும், சுற்றமும் அவர்களைப் பெருமளவில் ஒடுக்குவதிலும் முடக்குவதிலுமே கவனம் செலுத்துகின்றனர். அவர்களின் படிப்பை நிர்ணயித்துக் கொள்வதிலும், வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதிலும் முடிவுகளை பெற்றோரும் உற்றார் உறவினருமே முடிவெடுக்கின்றனர். பெண்களை பிள்ளை பெற்றுத்தரும் இயந்திரமாக மட்டுமே பார்க்கும் பார்ப்பனியம் இந்திய சமூகத்தில் ஊறிப் போயிருப்பதன் வெளிப்பாடு இது.

இந்திய ஆண்களின் தற்கொலையில் பெரும்பங்கு வகிப்பவை கடன் தொல்லைகளே என்கின்றனர் ஆய்வாளர்கள். இன்று புகுத்தப்பட்டிருக்கும் தனியார்மயம் தாராளமயத்தின் காரணமாக விவசாயம், சிறு தொழில்கள் அனைத்தும் கடுமையான நட்டத்தையே சந்திக்கின்றன. கடன் வாங்கி வட்டி கட்ட முடியாத ஆண்கள், வேறுவழியின்றி தற்கொலை முடிவெடுக்கின்றனர். இதை அரசே நடத்தும் மதுக்கடைகள் திட்டமிட்டு ஊக்குவிக்கின்றன.

முதலாளித்துவத்தையும், பார்ப்பனியத்தையும் ஒழித்துக்கட்டாமல் மனித உயிர்களின் இழப்பை எத்தனை சட்டங்கள் போட்டாலும் இந்தியாவில் தடுக்க முடியுமா என்ன?

நன்றி : IndiaSpend
சுருக்கப்பட்ட தமிழாக்கம்:

கிறிஸ்துவுக்காக மக்கள் செத்திராவிட்டால் கிருஸ்துவே இருந்திருக்க மாட்டார்

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 27 (தொடர்ச்சி)

மாக்சிம் கார்க்கி

”உலக தொழிலாளிகள் நீடூழி வாழ்க!” என்று கோசமிட்டான் பாவெல்.

உவகையும் சக்தியும் நிறைந்து விளங்கும் ஆயிரக்கணக்கான மக்களின் உள்ளத்தைக் கிளறும் ஜெயகோஷம் எதிரொலித்து விம்மியது.

தாய் நிகலாயின் கரத்தையும் வேறு யாரோ ஒருவனுடைய கரத்தையும் பற்றிப் பிடித்துக்கொண்டாள். கண்ணீர் முட்டித் ததும்பத் தொண்டை அடைத்துத் திணறினாள் அவள்; எனினும் அவள் கூச்சலிடவில்லை. அவளது முழங்கால்கள் நடுநடுங்கின. துடிதுடிக்கும் தன் உதடுகளை அசைத்து அவள் ஏதோ முணுமுணுத்தாள்.

“என் அருமைப் பிள்ளைகளே……”

நிகலாவின் அம்மை விழுந்த முகத்தில் ஒரு பரந்த புன்னகை பளிச்சிட்டுத் தோன்றியது. கொடியைப் பார்த்தவாறே அவன் எதோ முணுமுணுத்துக் கொண்டு அதை நோக்கிக் கையை நீட்டினான். திடீரென்று அதே கையால் தாயின் கழுத்தைச் சுற்றி வளைத்து அவளை முத்தமிட்டான். பிறகு கடகடவென்று சிரித்தான்.

“தோழர்களே!” என்று அந்தக் கூட்டத்தினரின் கர்ஜனைக்கிடையிலே குறுக்கிட்டு அமைதியாகச் சொன்னான் அந்திரேய்; “தோழர்களே! இன்று ஒரு புதிய கடவுளின் பேரால் அறிவும் ஒளியும் தரும் புதிய ஆண்டவனின் பேரால், சத்தியமும் நன்மையுமே உருவான சாமியின் பேரால் நாம் ஒரு அறப்போர் தொடங்கியிருக்கிறோம். நமது இறுதி லட்சியம் வெகு தொலைவில் இருக்கிறது. ஆனால் நமக்குக் கிடைக்கவிருக்கும் முள் கிரீடமோ(1) கையெட்டுத் தூரத்தில் தான் இருக்கிறது. சத்தியத்தின் வெற்றியில், உண்மையின் வெற்றியில் எவருக்கேனும் நம்பிக்கை குறைவாயிருந்தால், இந்தச் சத்தியத்துக்காகத் தங்களது வாழ்க்கையையே அர்ப்பணம் செய்ய எவருக்கேனும் தைரியம் அற்றிருந்தால், தன்னுடைய சுய பலத்திலேயே எவருக்கேனும் அவநம்பிக்கையிருந்தால், துன்பத்தைக் கண்டு எவரேனும் அஞ்சினால், தயை செய்து அவர்கள் ஒருபுறமாக ஒதுங்கி நிற்கட்டும். நமது வெற்றியிலே நம்பிக்கை கொள்பவர்களை மட்டுமே நாம் கேட்டுக் கொள்கிறோம். அறைகூவல் விடுக்கிறோம். எங்களது லட்சியத்தைக் காண முடியாதவர்களுக்கு எங்களோடு அணிவகுத்து முன்னேறுவதற்கும் உரிமை கிடையாது. ஏனெனில் அப்படிப்பட்டவர்களுக்குப் பின்னால் துயரம்தான் காத்து நிற்கும். எங்களது அணிவகுப்பில் சேருங்கள். தோழர்களே! சுதந்திர மக்களின் விழா நாள் நீடூழி வாழ்க! மே தினம் நீடூழி வாழ்க!”

கூட்டம் மேலும் அதிகரித்துக் குழுமியது. பாவெல் கொடியைத் தூக்கிப் பிடித்தான்; அவன் அதை உயரத் தூக்கியவாறு முன்னேறிச் சென்ற போது அந்தக் கொடியில் சூரிய ஒளி பட்டுப் பிரகாசித்தது: அந்தக் கொடி உவகையும் ஒளியும் நிறைந்து புன்னகை செய்தது.

பியோதர் மாசின் பாட ஆரம்பித்தான்.

போதும். போதும்! நேற்றையுலகின்
பொய்மை தன்னைப் போக்கவே……

பல்வேறு குரல்கள் அவனோடு சேர்ந்து, அந்தப் பாட்டின் அடுத்த அடியைப் பாடின;

பாத மண்ணை உதறித் தள்ளிப்
படையில் சேர வருகுவீர்

தாய் மாசினுக்குப் பின்னால் நடந்து வந்தாள். அவளது உதடுகளில் உவகை நிறைந்த புன்னகை பளிச்சிட்டது; அவனுக்கு முன்னால் சென்றுகொண்டிருக்கும் தன் மகனின் தலையையும், கொடியையும் அவள் மிகவும் சிரமப்பட்டு ஏறிட்டுப் பார்த்தாள். அவளைச் சுற்றி எங்குப் பார்த்தாலும் மகிழ்ச்சி நிறைந்த முகங்களும் பிரகாசமான கண்களுமே தெரிந்தன; அந்த முகங்களுக்கும் கண்களுக்கும் முன்னால் அவளது மகன் பாவெலும் அந்திரேயும் முன்னேறிச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் பாடிக்கொண்டே செல்வதை அவளால் கேட்க முடிந்தது. அந்திரேயின் இனிமையான குரல் பாவெலது கனத்த குரலோடு கலந்து கொண்டிருந்தது,

பட்டினியும் பசியுமாகப்
பாடுபடும் தோழர்காள்!
துயில் கலைந்து அணியில் சேர
விரைந்து வாரும் தோழர்காள்!

மக்கள் அந்தச் செங்கொடியை நோக்கி விரைந்தோடி வந்தார்கள். ஓடி வரும்போதே அவர்கள் உற்சாகத்தோடு சத்தமிட்டார்கள், பின்னர் அவர்களும் அந்தப் பாட்டை உரத்த குரலில் பாட ஆரம்பித்தார்கள். எந்தப் பாடலை அவர்கள் தங்கள் தங்கள் வீட்டுக்குள் வெளிக்குத் தெரியாமல் பாடி வந்தார்களோ, அதே பாடல் இன்று தெருவில் எந்தவிதத் தங்குத் தடையுமற்று, பிரம்மாண்டமான அசுர வேகத்தோடு பொங்கிப் பிரவகித்து ஒலித்தது. கட்டுப்படுத்த முடியாத துணிவாற்றலோடு ஒலித்து விம்மியது. மேலும் அந்தப் பாடல் எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் நெடிய பாதையில் வந்து கூடும்படி மக்களை அறைகூவி அழைத்தது. அந்தப் பாதை எவ்வளவு கரடு முரடான பாதையென்பதையும், அவர்களுக்கு வெளிப்படையாகச் சொல்லியது. அந்தப் பாடலின் நிதானமான செந்தழல் உளுத்து ஒடாகி உதவாக்கரையான சகலவற்றையும், அழுகி இறுகி அடைந்து போன சம்பிரதாய உணர்ச்சிகளின் குப்பை கூளங்களையும், மக்களின் மனத்திலே ஊடாடும் புதியதின் பயபீதியையும் பற்றிப் பிடித்து, அவற்றைச் சுட்டுச் சாம்பலாக்கிப் பொசுக்கித் தள்ளியது.

படிக்க:
ஆட்டுக்கறிய நாய்க்கறின்னு கூவுனவன் எவன்டா ?
விஞ்ஞானிகள் அறிக்கை : நவீன முதலாளித்துவம் ஒழியாமல் உலகைக் காப்பாற்ற முடியாது !

பயமும் மகிழ்ச்சியும் கலந்த ஏதோ ஒரு முகம் திடீரென்று தாயின் அருகே வந்து எட்டிப் பார்த்தது. பிறகு நடுநடுங்கி உடைத்துப்போன குரலில் கேட்டது,

“மீத்யா! நீ எங்கே போகிறாய்?”

”அவன் போகட்டும்” என்று சொன்னாள் தாய். “நீ அவனைப்பற்றிக் கவலைப்படாதே. நானும் கூடத்தான் முதலில் பயந்து போனேன். அதோ முன்னால், கொடியைப் பிடித்துக் கொண்டு போகிறான் பார். அவன் தான் என் மகன்!”

“ஏ முட்டாள்களே! எங்கேயடா போகிறீர்கள்? அங்கே சிப்பாய்கள் நிற்கிறார்களடா!”.

நெட்டையாகவும் ஒல்லியாகவும் இருந்த அந்தப் பெண் பிள்ளை தாயின் கரத்தைத் தனது எலும்புக் கரத்தால் திடீரெனப் பற்றிப் பிடித்துக்கொண்டு சத்தமிட்டாள்:
”ஆஹா! அவர்கள் பாடுவதைக் கேளம்மா. என் மகனும் கூடப் பாடுகிறான்!”

”நீ ஒன்றும் பயப்படாதே” என்று சொன்னாள் தாய்; ”இது ஒரு புனிதமான காரியம். நினைத்துப்பார். கிறிஸ்துவுக்காக மக்கள் செத்திராவிட்டால், கிருஸ்துவே இருந்திருக்கமாட்டார்!”

இந்த எண்ணம் அவள் மனத்தில் திடீரென்று பளிச்சிட்டுத் தோன்றியது. அந்த எண்ணத்தில் பொதிந்திருந்த தெளிவான, எளிதான உண்மையை உணர்ந்து, அவள் ஒரே புளகாங்கிதம் எய்தினாள். தனது கையை அழுத்தமாகப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தாள்.

“ஆமாம். கிறிஸ்துவுக்காக மக்கள் சென்று செத்திராவிட்டால் கிறிஸ்துவே இருந்திருக்கமாட்டார்!” என்று வியப்பு நிறைந்த புன்னகையோடு திரும்பவும் அதைக் கூறிக்கொண்டாள்.

சிஸோவ் அவள் பக்கமாக வந்தான்.

“இன்று பகிரங்கமாகவே புறப்பட்டுவிட்டீர்களா?’ என்று சொல்லிக்கொண்டே அவன் தன் தொப்பியை எடுத்து அந்தப் பாட்டின் சத்தத்திற்குத் தக்கவாறு ஆட்டிக்கொண்டான். ”பாட்டா பாடுகிறார்கள்! ஆஹா, இது எவ்வளவு அருமையான பாட்டு, அம்மா!”

பேரணியில் சேர வீரர்
ஜாரரசன் கேட்கிறான்;
ஜாரரசன் போர் நடத்தத்
தாரும் உங்கள் மக்களை!

“இவர்களுக்குக் கொஞ்சம் கூடப் பயமில்லையே!” என்றான் சிஸோவ்; “செத்துப்போன என் மகன் மட்டும் இருந்தால்…”

தாயின் உள்ளம் படபடத்துத் துடித்தது; எனவே அவள் வேகமாகச் சொல்ல முடியாமல் பின் தங்கிவிட்டாள். ஜனக்கூட்டம் அவளை நெருக்கித்தள்ளி, ஒரு வேலிப்புறமாக நெட்டித் தள்ளியது. அவளைக் கடந்து ஒரு பெரிய ஜனத்திரள் அலைமோதிக்கொண்டு முன்னேறியது. அந்தக் கூட்டத்தில் நிறைய பேர் இருந்தார்கள். அதைக் கண்டு அவள் ஆனந்தமுற்றாள்.

துயில் கலைந்து அணியில் சேர
விரைந்து வாரும் தோழர்காள்!

ஏதோ ஒரு பிரம்மாண்டமான பித்தளையாலான எக்காளம் தனது அகன்ற வாயின் வழியாக, அந்தப் பாடலைப் பொழிந்து தள்ளுவது போலவும், அந்த எக்காள நாதத்தைக் கேட்டு ஜனங்கள் விழித்தெழுவது போலவும் விழித்தெழுந்து போருக்குக் கிளம்புவது போலவும் தோன்றியது. மேலும் அந்த எக்காள் முழக்கம் மற்றவர்களின் உள்ளத்தில், ஏதோ ஒரு இனந்தெரியாத இன்ப உணர்ச்சியையும் புதுமையையும் ஆர்வம் மிகுந்த குறுகுறுப்பையும் உண்டாக்குவது போலவும் தோன்றியது. ஒரு பக்கத்தில் அந்த நாதம் சிலர் மனத்தில் தைரியமற்ற நம்பிக்கைகளுக்கு இடம் கொடுத்தது. சிலர் மனத்தில், அவர்களது உள்ளத்தினுள்ளே நெடுங்காலமாகப் புழுங்கித் தவித்த கோப உணர்ச்சியையெல்லாம் மடை திறந்த வெள்ளமாகத் திறந்து விட்டுக்கொண்டிருந்தது.

காற்றிலே அசைந்தாடும் அந்தச் செங்கொடியையே எல்லோரும் ஏறிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“அதோ அவர்கள் போகிறார்கள்!” என்று யாரோ தன்னை மறந்த வெறிக்குரலில் கத்தினான். “தம்பிகளா! நீங்கள் அழகாயிருக்கிறீர்களாடா!”

அந்த மனிதனின் உள்ளத்தில் வார்த்தைகளின் சக்திக்கு மீறி வாய்விட்டுச் சொல்ல முடியாத எதோ ஒரு உணர்ச்சி மேலிட்டுப் பொங்கியது. எனவே அந்த உணர்ச்சியை வெளியிடுவதற்காக அவன் ஏதோ வஞ்சினமாகச் சபதம் சொல்லிக்கொண்டான். ஆனால் சூரிய உஷ்ணத்தால் கலைக்கப்பட்ட நாகப்பாம்பைப் போல் இருண்டு போன குருட்டுத்தனமான அடிமைத்தனம் நிறைந்த குரோத உணர்ச்சி புஸ்ஸென்று சீறி விஷ வார்த்தைகளைக் கக்கிற்று.

“மதத் துரோகிகள்!” என்று ஒரு வீட்டு ஜன்னலிலிருந்தவாறு தனது முஷ்டியை ஆட்டிக்கொண்டே ஒருவன் சத்தமிட்டடான்.

“சக்கரவர்த்திக்கு எதிராக, ஜார் மகாராஜனுக்கு எதிராகக் கிளம்புவதா? கலகம் செய்வதா?” என்று கூரிய குரல் தாயின் காதில் மாறி மாறி ஒலித்தது.

ஆணும் பெண்ணுமாக ஜனக்கூட்டம் தாயைக் கடந்து செல்லும்போது, அவள் கலவரமடைந்த பல முகங்களைக் கண்டாள். அந்த ஜனத்திரள் உருகி வழியும் எரிமலைக் குழம்பு போல் மேலும் மேலும் பொங்கி வந்தது. அந்தப் பாட்டினால் தனக்கு முன்னேயுள்ள சகல தடைகளையும் துடைத்துத் தூர்த்து, தனது மகத்தான சக்தியினால், நான் செல்லும் பாதையைத் தங்கு தடையற்றதாகச் செய்யும் அந்தப் பாட்டினால் – ஜனங்கள் கவர்ந்திழுக்கப்பட்டுச் சென்று கொண்டிருந்தார்கள்.

கொள்ளையும் கொலையும் நடத்தும் கொடியின் நிழலிலே நின்று அவர்கள் நம்மை எதிர்ப்பதைக் கைவிட்டு, சுதந்திரக் கொடியான நமது கொடியின் கீழ் வந்து, நம்முடன் கையோடு கைகோத்து, அணிவகுத்து நிற்க, அவர்களும் வந்து சேருவதற்கு இன்னும் அதிக நாள் இல்லை.

தூரத்திலே தலைக்கு மேலாக நிமிர்ந்து தோன்றும் அந்தச் செங்கொடியை அவள் பார்த்தபோது, தன் மனக்கண் முன்னால் தன் மகனது முகத்தையும் – அவனது தாமிர நிறமான நெற்றியும், நம்பிக்கையும் ஒளியாகப் பிரகாசமுற்ற அவனது கண்களும் – அவளது மனக்கண்ணில் தோன்றின.

கூட்டம் முழுவதும் அவளைக் கடந்து முன்னேறிச் சென்ற பின், அவள் அந்தக் கூட்டத்தின் பின்னால் வந்த ஜனங்களைப் பார்த்தாள். அவர்கள் அவசரம் ஏதுமின்றி சாவதானமாக நடந்து வந்தார்கள். அந்த அணிவகுப்பினால் நேரவிருக்கும் அபாயத்தைப் பற்றித் தெரிந்து கொண்டவர்கள் மாதிரி அதை எதிர்நோக்கி, விருப்பற்றுத் திருக்கத் திருக அங்குமிங்கும் பார்த்தவாறு அவர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுக்கும் ஏதேதோ விஷயங்கள் ஏற்கெனவே தெரிந்திருந்த பாவனையில் தீர்மானமாகப் பேசிக்கொண்டார்கள்.

”பள்ளிக்கூடத்திலே ஒரு பட்டாளம் தங்கியிருக்கிறது, இன்னொரு பட்டாளம் தொழிற்சாலையிலே தயாராய்க் காத்திருக்கிறது.”

”கவர்னர் வந்துவிட்டார்.”

அப்படியா?” “அவரை என் கண்ணாலேயே பார்த்தேன். இப்போதுதான் வந்தார்.”

”அவர்கள் நம்மைக் கண்டு பயப்படத்தான் செய்கிறார்கள். யோசித்துப் பார். இல்லையென்றால், கவர்னரும் சிப்பாய்களும் எதற்கு?” என்று ஒருவன் சொன்னான்.. சொல்லிவிட்டு உற்சாகத்தோடு ஏதோ வர்மம் கூறிக்கொண்டான்.

“அருமைப் பிள்ளைகளா!” என்று நினைத்துக் கொண்டாள் தாய்.

ஆனால் அவள் கேட்ட வார்த்தைகள் உயிரற்று உணர்வற்று ஒலிப்பவைபோல் இருந்தன. எனவே அந்தக் கூட்டத்தினரிடமிருந்து விலகிப் போவதற்காக நடையை எட்டிப்போட்டாள். அவர்கள் மிகவும் மெதுவாக ஆடியசைந்து நடந்து வந்ததால், அவள் அவர்களை முந்தி முன்னேறிச் செல்வதில் சிரமம் எதுவும் ஏற்படவில்லை .

திடீரென்று அந்த ஊர்வலம் எதனோடோ அதி கேவமாக மோதிக் கொண்டது போலத் தோன்றியது. அந்த அணிவகுப்பு முழுவதுமே திடுக்கிட்டுப் பின்னடித்தது. பய பீதி நிறைந்த கசமுசப்புக் குரல் லேசாக எழுந்து பார்த்தது. அந்தப் பாட்டும் கூட நடுநடுங்கி ஒலித்தது. இருந்தாலும் அந்த நடுக்கத்தைப் போக்குவதற்காக, சிலர் மிகவும் உரத்த குரலிலும், துரித கதியான சப்தத்திலும் அதைப் பாடத் தொடங்கினார்கள். ஆனால், மீண்டும் அந்தப் பாட்டு உள்வாங்கி மங்கியது. ஒருவர் பின் ஒருவராக அந்த மக்கள் பாடுவதை நிறுத்தத் தொடங்கினார்கள். அந்தப் பாட்டைப் பழைய உச்ச நிலைக்கு கொண்டு வருவதற்காக, சிலர் மட்டும் உத்வேகம் நிறைந்தவாறு பாடும் குரல் மட்டும் கேட்டது.

பட்டினியும் பசியுமாகப்
பாடுபடும் தோழர்காள்…..
துயில் கலைந்து அணியில் சேர
விரைந்து வாரும் தோழர்காள்!

ஆனால் இந்தப் பொது முழக்கத்தில் ஒத்துழைப்பும் இல்லை உறுதி பெற்ற நம்பிக்கையும் இல்லை. ஏற்கெனவே அவர்களது குரல்களில் பயபீதி புரையோடிவிட்டது.

முன்புறத்தை தாயினால் பார்க்க முடியாததாலும் என்ன நேர்ந்துவிட்டது என்பதை அறிய முடியாததாலும் அவள் அந்தக் கூட்டத்தினரை முட்டித் தள்ளிக்கொண்டு, கூட்டத்தினூடே, புகுந்து முன்னே செல்ல முனைந்தாள். அவள் முன்னேற முன்னேற ஜனக்கூட்டம் அவளைப் பின்னடித்துத் தள்ளியது; அவர்களில் சிலர் முகத்தைச் சுழித்தார்கள். சிலர் தங்கள் தலைகளைத் தொங்கவிட்டுக் கொண்டார்கள். சிலர் அசட்டுத்தனமாய்ப் புன்னகை செய்தார்கள்; இன்னும் சிலர் கேலியாகச் சீட்டியடித்துக் கொண்டிருந்தார்கள். அவள் அவர்களது முகங்களைப் பார்த்தாள். அவளது கண்கள். வினாத் தொடுத்தான். வேண்டுதல் செய்தன. அழைப்பு விடுத்தன.

”தோழர்களே!” பாவெலின் குரல் கேட்டது. “ராணுவ வீரர்களும் நம்மைப்போல் மனிதர்கள்தான் அவர்கள் தம்மைத் தொடமாட்டார்கள்! அவர்கள் எதற்காக நம்மைத் தொட வேண்டும்? எல்லோருக்கும் பயன்பெறக்கூடிய உண்மையை நாம் எடுத்துக் கூறுவதற்காகவா? அந்த உண்மை நமக்கு எவ்வளவு தேவையோ, அவ்வளவு அவர்களுக்கும் தேவை. அந்தத் தேவையை அவர்கள் இன்னும் உணராமல் இருக்கலாம். ஆனால் கொள்ளையும் கொலையும் நடத்தும் கொடியின் நிழலிலே நின்று அவர்கள் நம்மை எதிர்ப்பதைக் கைவிட்டு, சுதந்திரக் கொடியான நமது கொடியின் கீழ் வந்து, நம்முடன் கையோடு கைகோத்து, அணிவகுத்து நிற்க, அவர்களும் வந்து சேருவதற்கு இன்னும் அதிக நாள் இல்லை. அவர்கள் இந்த உண்மையை உணரும் காலத்தைத் துரிதப்படுத்துவதற்காக, நாம் நமது முன்னணியைவிடாது முன்னேறிச் செல்ல வேண்டும். முன்னேற வேண்டும். தோழர்களே! முன்னேற வேண்டும்!”

படிக்க:
எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !
சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !

பாவெலின் குரல் உறுதி நிறைந்து ஒலித்தது. அவனது சொற்கள் தெளிவாகவும் கூர்மையாகவும் ஒலித்தன. எனினும், கூட்டம் கலைந்துவிட்டது. ஒருவர் பின் ஒருவராக அணி வகுப்பிலிருந்து வெளியே வந்து, வீடுகளை நோக்கி வேலிப்புறமாக ஒதுங்கி நழுவிச் செல்லத் தொடங்கினார்கள். இப்போது அந்த ஊர்வலம் கூரிய மூக்குடனும் அகன்ற உடலுடனும் இருப்பது போலத் தோன்றியது. அதன் தலைப்புறத்தில் பாவெல் நின்றுகொண்டிருந்தான், அவனுக்கு மேலாக, தொழிலாளி மக்களின் செங்கொடி பிரகாசமாக ஒளிசிதறிப் படபடத்துக்கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தின் நிலையைப் பற்றி வேறொரு உவமை கூடச் சொல்லலாம். ஏதோ ஒரு கரிய பறவை தனது அகன்ற சிறகுகளை விரித்து உயர்த்திப் பறப்பதற்குத் தயாராக நிற்பது போலிருந்தது அந்தக் கூட்டம். அந்தப் பறவையின் அலகைப்போல் நின்றிருந்தான் பாவெல்….

(தொடரும்)

அடிக் குறிப்புகள்:
(1) கிறிஸ்துவுக்கு முள் கீரிடம் சூட்டப்பட்டது. இங்கு உவமையாகக் கையாளப்படுகிறது. – (மொ -ர்.)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

டி.சி.எஸ் நிறுவனத்தில் இந்த ஆண்டு குறைந்த ஊதியத்தில் 28,000 கூடுதல் அடிமைகள் !

டி.சி.எஸ் நிறுவனம் வழக்கமாக பட்டதாரிகளை மொத்த எண்ணிக்கையில் வேலைக்கு எடுத்து வருகிறது – 2017-ம் ஆண்டில் 20,000 பட்டதாரிகளையும் 2016-ம் ஆண்டில் 35,000 பட்டதாரிகளையும் வேலைக்கு எடுத்தது. 2015-ம் ஆண்டு 40,000 பட்டதாரிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

2018-ஆம் ஆண்டில் 1,800 பொறியியல் கல்லூரிகளில் 2.7 லட்சம் மாணவர்களில்  28,000 பட்டதாரிகளை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளனர். 50,000 பேர் நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்பெல்லாம், சுமார் 400 கல்லூரிகளில் வளாக நேர்காணல் மூலம் புதிய பட்டதாரிகளை பணியமர்த்தி வந்தது.

இங்கே முக்கிய பிரச்சினை வேலையற்ற பொறியியல் பட்டதாரிகளின் ரிசர்வ் பட்டாளமாகும். டி.சி.எஸ் 10 விண்ணப்பதாரர்களில் 1 பொறியியலாளரை தேர்வு செய்கிறது. தனியார் (இலாபத்திற்கான) பொறியியல் கல்லூரிகள் தொடர்பான  அரசின் கொள்கை இந்திய இளைஞர்களை ஐ.டி நிறுவனங்களுக்கு குறைந்த சம்பளத்தில் வழங்குவதற்கு வழிவகுத்தது. வேலைக்கு போட்டியிடும் பட்டதாரிகள் எண்ணிக்கையை அளவுக்கு அதிகமாக ஆக்கி அனைவருக்கும் சம்பளத்தை குறைக்க வழிவகுக்கிறது.

டி.சி.எஸ் இந்த ஆண்டு வேலைக்கு எடுக்கும் 28,000 ஊழியாளர்களில், 1000 பேருக்கும் மட்டும் ஒரு வருடத்திற்கு 6 லட்சம் ரூபாய் ஆரம்ப சம்பளத்தில் அதன் டிஜிட்டல் பிசினஸ் பிரிவில் அமர்த்தவிருக்கிறது. இது ஒரு திறமையான ஐ.டி ஊழியருக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தை (வருடத்திருக்கு 12 இலட்சம்) விட குறைவாகவே உள்ளது. மீதி 27,000 பேருக்கு இதை விடக் குறைந்த சம்பளமே வழங்கப்படும்.

படிக்க :
♦ வெல்லம் தின்னும் டி.சி.எஸ் – விரல் சூப்பும் ஊழியர்கள் !
♦ 40 வயதுக்கு மேல் ஐ.டி துறையில் வேலை இல்லை – பங்கஜ்

முக்கியமாக, இந்த பட்டதாரிகளுக்கு டி.சி.எஸ் கொடுப்பதை வாங்கிக்கொள்வதைத் தவிர வேறெந்த வழியில்லை.  திறமையுள்ள ஊழியர்களுக்கு அரசு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிப்பது இல்லாததால், நிறுவனங்களால் இன்னும் அதிகமாக கொடுக்க முடியும் என்றாலும் நிறுவனங்கள் ஏழை படித்த இளைஞர்களின் நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஒருவேளை தேவையை மட்டும் பூர்த்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28,000 பணியிடங்களுக்கு 30,000 விண்ணப்பங்கள் மட்டுமே வந்திருக்கும், நிறுவனம் அதிக ஊதியம் (வருடத்திற்கு ரூ 10 லட்சம்?) கொடுக்க வேண்டியிருந்திருக்கும்.

மற்றவர்கள்? அவர்களுக்கு மற்ற துறைகளில் வாய்ப்புகளை வழங்கியிருக்க வேண்டும்.

நடைமுறையில், பொறியியல் பட்டதாரிகளின் சம்பளத்தை குறைத்துக் கொடுத்து ஏமாற்றி ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை சம்பாதித்து (அதன் மூலம் இந்தியாவை ஏழை நாடாக்கி) மேற்கத்திய வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் சேவை வழங்கும் வாய்ப்பை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்திய அரசு வழங்கியிருக்கிறது.

ஒரு ஆரம்பநிலை திறன் ஊழியரின் சம்பளம் 2001-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை வருடத்திற்கு 3.3 இலட்சம் ரூபாய் என்றே தொடர்ந்தால் அது அடிப்படையில் அடிமைத்தனமே. 2001-ம் ஆண்டில் 3.3 இலட்சம் ரூபாய் என்பது தற்போது, 12 இலட்சம் ரூபாய்க்கு சமமானதாகும். மேலும் விவரங்களுக்கு டி.சி.எஸ் : இந்தியாவை ஏழையாக்கும் அயல் சேவை திருப்பணி! என்ற கட்டுரையை படிக்கவும்.  டி.சி.எஸ் ஒவ்வொரு ஆண்டும் ஆரம்ப நிலை ஊதியத்தை உயர்த்தாமல் இருப்பதால் அது இந்தியாவை எப்படி வறுமையை நோக்கித் தள்ளுகின்றது என்று அந்தக் கட்டுரை பேசுகிறது அறியலாம். இப்படி தொடங்கும் அடிமைத்தனம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அனைத்து மட்டங்களுக்கும் கடத்தப்படுகிறது.

காலின்ஸ் அகராதியில் அடிமைத்தனம் பற்றி சில வரையறைகள் :

  • “செல்வாக்கிற்கு கீழ்ப்படிதல் அல்லது நிபந்தனைக்கு அடிபணிதல்”
  • “குறைந்த ஊதியத்திற்கு மோசமான சூழ்நிலையில் வேலை செய்வது”
  • “ஒரு நபர் மற்றொருவர் மீது முழுமையான அதிகாரத்தை செலுத்துதல், அவருடைய வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் செல்வத்தைக் கட்டுப்படுத்துதல்”

1650-ம் ஆண்டில் வெள்ளையர்கள் இந்தியாவுக்கு வந்து இந்திய அடிமைகளை உருவாக்கினர். இது இரண்டாம் உலகப் போர் வரை தொடர்ந்தது, பின்னர் வெள்ளையர்கள் இந்தியா போன்ற நாடுகளை விட்டு தங்கள் சொந்த நாட்டிற்கு சென்றனர்.

1600-களில் வெள்ளையர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து ஆட்களை வாங்கி அமெரிக்கா என்ற ஒரு நாட்டைக் கட்டத் தொடங்கினார். ஆபிரகாம் லிங்கன் போன்றவர்கள் இதற்கெதிராக போராடி மாற்றும் வரை இந்த நிலைமை நிலவியது.

1950-களில் வெள்ளையர்கள் தங்கள் நாட்டில் இருந்து கொண்டே அடிமைகளை அவரவர் சொந்த நாடுகளில் இருக்க விட்டனர், நடுவில் இணைய இணைப்பை மட்டும் ஏற்படுத்திக்கொண்டனர். அடிமைத்தனம் வெர்சன் 1.0-லிருந்து 3.0-ற்கு மாற்றப்பட்டது, ஆனால் அடிமைத்தனம் தொடர்கிறது. டாட்டா, பிரேம்ஜி, நாராயண மூர்த்தி போன்றவர்கள் இந்த அடிமைத்தனத்திற்கு உதவியதோடு ஆன்லைன் அடிமைகளுக்கு கங்காணிகளாக இருப்பதன் மூலமும் தங்களை பணக்காரர்களாக்கிக்  கொண்டார்கள்.

– பிரசாந்த்
மொழிபெயர்ப்பு : மணி
நன்றி : new-democrats

ஏரிப்புறக்கரை : புயல்ல வீடு போனது பிரச்சினையில்லை படகு போனதுதான் கவலையா இருக்கு

ட்டுக்கோட்டை – அதிராம்பட்டினத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரைக்கு அருகாமையில் உள்ளது ஏரிப்புறக்கரை. அதிக அளவில் மீனவர்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் வசிக்கும் கிராமம். கிராமத்திற்குள் நுழைந்தால் வீதியெங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக குழுமியிருக்கிறார்கள். வருபவர்கள் அதிகாரிகளா? நிவாரணம் கொடுக்க வரும் தன்னார்வலர்களா? என்ற எதிர்பார்ப்பு அவர்களுடைய கவலை தோய்ந்த முகத்தில் தெரிகிறது.

பெரும்பாலும் கூரை வீடுகள், ஓட்டு வீடுகள்தான். அங்கொன்றும், இங்கொன்றுமாக மெத்தை வீடுகள் அவ்வளவுதான். எந்த வீட்டின் மீதும் கூரையும் இல்லை, ஓடும் இல்லை… மொத்தமும் வாரி சுருட்டிக்கொண்டு சென்றுள்ளது கஜா.

ஏதோ ஒரு தொண்டு நிறுவனம் பொருட்கள் கொடுக்க வருவதாக சொன்னதும் சில நிமிடங்களுக்குள் மொத்த கிராமத்தினரும் நீண்ட வரிசைக்கு வந்து விட்டனர். அவர்களை எல்லாம் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர் சில இளைஞர்கள்.

சற்றுதொலைவில் பேருந்து நிறுத்தத்தின் கீழ் அமர்ந்திருந்த  ஊர் பெரியவர்கள்  மற்றும் மீனவ கிராம தலைவர் ராஜேந்திரனிடம் பேசினோம். “இங்க  ரெண்டு பகுதி இருக்கு. ஏரிப்புறக்கரை, காரையூர்தோப்பு. இந்த இரண்டு ஏரியாவுலயும் மொத்தம் 500 மீனவக் குடும்பம் இருக்கு. மொத்த மக்கள் தொகை 2,000 பேர். எல்லாரும் கடலுக்கு மட்டும்தான் போவோம்.  அதேமாதிரி தாழ்த்தப்பட்ட மக்கள் 400 குடும்பம், 1,800 பேர் இருக்காங்க.  இவங்களோட வேலை விவசாயம். அதுபோக மீனவர்களுக்கு உதவியாளர்களா வருவாங்க. அக்கம்பக்கமா எந்த வேலை இருந்தாலும் போயிடுவாங்க.

ராஜேந்திரன்.

இந்த ஒரு ஊர் மட்டுமில்ல.. காந்தி நகர்ல இருந்து கண்டியன் கொல்லை வரை 1,500 மீனவக் குடும்பம் இருக்கும். கீழத்தோட்டம் மட்டும் கடற்கரை பகுதி. இந்த மொத்த ஏரியாவுலயும் பில்டிங் வீட்ட தவிர மற்ற அனைத்து வீடும் பெருமளவு அழிஞ்சிடுச்சி. எங்களுக்கு கடலை நம்பித்தான் வாழ்க்கையே இருக்கு. கடல் இல்லனா நாங்க இல்ல. இந்த புயலால மொத்த படகும், வலையையும் இழந்து நிக்கிறோம். விவசாயிகளுக்கு எப்படி வீடும், நிலமும் சேதமோ, அதே மாதிரி எங்களுக்கு படகும், வலையும் டேமேஜ் ஆகிடுச்சி.

இங்க மொத்தம் 98 பைபர் படகு இருக்கு. அதை நம்பி 1,000 லேபர் இருக்காங்க. ஒரு படகு மூனு லட்சம் இஞ்சினையும் சேர்த்து.  ஒருமுறை படகை ரிப்பேர் பண்ணனும்னா ஒன்னரை இலட்சம் செலவாகும். இஞ்சினை மட்டும் செலவு பாக்கனும்னா இருபதாயிரம் ஆகும்.  இப்ப இந்த புயலால 85% படகு சேதமாகிடுச்சி. இப்ப ஓரளவுக்கு ஒட்டத்துல ஒரு பத்து படகுதான் இருக்கு. அதே மாதிரி வலை யாருக்கும் மிஞ்சல. எல்லாம் சேதமாகிடுச்சி. அடிச்ச காத்துல சேத்துக்குள்ள போயிட்டு பூந்துகிச்சி. இழுத்தா எதுவும் வர்ல. அப்படியே வந்தாலும் எல்லாம் நரம்பு வலை தானே… அறுத்துக்கினு வருது.  இப்ப வலையோட சேர்த்து ஒரு படகு வாங்கனும்னா அஞ்சி லட்சம் ஆவும். எங்கப் போறது?

ஒரு அஞ்சாறு பேரு மட்டும் 2, 3 படகு வச்சிருக்காங்க. இந்த ரெண்டு மூனு இருக்கவங்களுக்கு ஒன்னாவது மிஞ்சிச்சின்னா ஆறுதலா இருந்திருக்கும். அதுவும் இல்ல. எல்லாமும் இழப்பாயிடுச்சி. ஒரு மீனவனுக்கு வீடு மாடி வீடா, கூரை வீடா என்பது பிரச்சனை இல்ல. அதுல அவன் மதிப்பு இல்ல. அவன் எத்தன படகு வச்சிருக்கான் என்பதுல தான் இருக்கு. அதனால இந்த புயல்ல வீடு போனது கூட கவலை இல்ல. ஆனா படகு போனதுதான் ரொம்ப மனவேதனையா இருக்கு.

அரசுதான் நிவாரணம் அறிவிச்சி இருக்கே?

கவர்மெண்ட் அறிவிச்சிருக்க இந்த நிவாரணம், முழுசா சேதமடைஞ்ச போட்டுக்கு 85  ஆயிரம்னு சொல்லிருக்கு. இது நான்குல ஒரு பங்குதான். இத வச்சிக்கினு எப்படி படக வாங்குறது? இல்ல படகத்தான் எப்படி சீர்திருத்தம் பண்றது?

எங்க ஏரியா எம்.எல்.ஏ-வைப் பார்த்து நஷ்டஈடு பத்தாது. உயர்த்த சொல்லி பேசலாம்னு இருக்கோம். அப்பவும் எந்த நடவடிக்கையும் எடுக்கலனா தஞ்சை மாவட்ட மீனவர்கள் எல்லாம் சேர்ந்து மீன்வளத்துறை அமைச்சரை சந்திக்கலாம்னு இருக்கோம்.

நிவாரண பணிகள், உணவு தங்குமிடம் எல்லாம் எப்படி இருக்கு?

ஒருவேளை சாப்பாடு மட்டும் முகாமுக்கு அனுப்பிடுவாங்க. இப்ப பிஸ்கட் குடுத்திருக்காங்க. மத்தபடி வேற எதையும் செய்யிறது இல்ல.  இங்க மொத்தம் அஞ்சி முகாம்கள் இருக்கு. இரண்டு மீனவர்களுக்கு. மூன்று தலித் மக்களுக்கு இருக்கு.  இரண்டு வேளைக்கு கிராமத்து சார்பாதான் சாப்பாடு சமச்சி போடுறோம்.  கஜா புயல் வந்த பிறகு இந்த முன்னெச்செரிக்கை அறிவிப்பைத் தவிர வேற எதுவும் செய்யல. இதுவரைக்கும் ஆளும் அரசு ஒருத்தன் கூட வந்தும் பாக்கல.

கடலுக்கு போற ஒருத்தனுக்கும் யாருமே துணை இல்ல. போட், வலை, ஐ.டி கார்ட் இழந்தா உடனடியா தரனும். அவனோட வாழ்க்கையே அதுலதான் இருக்கு அப்படின்னு எந்த அரசும் சிந்திக்காது. இது வரைக்கும் சாப்பாடே முறையா தரல. இவனுக என்ன பண்ணிடப்போறனுங்க?

புயல் வந்த நாள்ல இருந்து கடல் பக்கம் போக புடிக்காம வீட்டுலயே முடங்கிட்டோம். வேறபோக்கு இல்ல. கவுந்துகிடந்த படகை எல்லாம் இப்பதான் நிமித்தி வச்சோம். இன்னும் சில படகு எங்க தூக்கி போட்டு கெடக்கோன்னு தெரியல.

இந்த துறை அதிகாரிங்க வந்து கணக்கெடுத்துனு போனாத்தானே ஏதாவது ஆறுதலாவது இருக்கும்.  எவனும் வந்து கணக்கெடுக்கல. எங்களுக்கு தெரிஞ்ச அனைத்து மட்டத்திலும் சொல்லிட்டோம். இதுவரைக்கும் ஒருத்தனும் வர்லன்னா பாத்துக்கோங்களேன். இப்படியே இருந்தா எங்க வாழ்வாதாரம் என்ன ஆவுறது?

நாங்க ஏற்கனவே வேலை இல்லாம இருக்கோம். ஒரு மீனவனுக்கு வருஷத்துல 6 மாசத்துக்கு தான் வேலை. மீன்பிடிக்க தடை, விழாக்காலம், மழைக்காலம்னு ஒரு ஆறு மாசம் சும்மாவே போயிடும். ஒரு நாளைக்கு கடலுக்கு போனா 1000 ரூபா கெடைக்கும். இன்னொரு நாளைக்கு 10000 ரூபா கெடக்கும்… அந்த சமயம் கெடக்கிற பணத்த வச்சிதான் வேலை இல்லாத நாள ஓட்டிக்கிட்டு இருந்தோம். இப்ப அதுவும் இல்ல.

இன்னொரு பிரச்சனை என்னன்னா, கொஞ்சம் பணக்கார மீனவங்க எல்லோரும் விசைப்படகுல போயிட்டு இரட்டை மடி வலையை வீசி மீன் பிடிக்கிறாங்க. இந்த வலையில மாட்டுன மீனு எதுவும் மிஞ்சாது. முட்டை முதல் குஞ்சி வரை வாறி இழுத்து வந்துடும். இந்த இரட்டை மடி வலை பயன்படுத்த அரசால் தடை விதிக்கப்பட்டிருக்கு. இருந்தும் அதை சில மீனவர்கள் பயன்படுத்துறாங்க. அதுக்குப்புறம் கடலுக்கு போற நாட்டுப்படகு மீனவனுக்கு மீனு கெடக்காது.

படிக்க:
அதிராம்பட்டினம் மீனவர்கள் : கடனில் ஓடிய வாழ்க்கை இனி பெருங்கடனில் போய் நிற்கும்
கடலோர மேலாண்மை திட்டத்தை எதிர்க்கும் சென்னை மண்டல மீனவர்கள்

இந்த விசைப்படகால ஏற்கனவே எங்களுக்கு சிக்கல்தான். இப்ப இந்த புயல் ஒரு சேதாரம்.. இயற்கை ஒரு பாதிப்புனா. அரசாங்கமும் பெரிய பாதிப்பாதான் இருக்கு. எங்களோட வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராட்டம் பண்ணுறதைத் தவிர வேற வழியில்லை” என்கிறார்கள்.

ஆட்டுக்கறிய நாய்க்கறின்னு கூவுனவன் எவன்டா ?

“ஜோத்பூரிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்” என நவம்பர் 17 அன்று ஊடகங்கள் பரபரப்பைக் கிளப்பின. சில ஊடகங்கள் 1000 கிலோ என்றும் வேறு சில 2000 கிலோ நாய்க்கறி என்றும் மனம் போன போக்கில் செய்திகளை வெளியிட்டன.

வழக்கமாக போலீசு கூறும் கட்டுக்கதைகளை அப்படியே ’க்’, ’ச்’ விடாமல் வெளியிடும் ஊடகங்களுக்கு, இது போன்ற நடுத்தர வர்க்கத்தை நடுங்கச் செய்யும் பரபரப்புச் செய்தி என்றால் சும்மாவா? அதுவும் சைவ உணவு வெறியர்களாக அசைவத்தின் மீது வன்மம் கக்கும் பார்ப்பன ஊடகங்களுக்கு சொல்லவா வேண்டும்? இவ்விவகாரம் ஊடகங்களில் இருந்து உடனடியாக சமூக வலைத்தளங்களுக்குப் பரவி அங்கும் நாய்க்கறியே பேச்சானது. மீம் கிரியேட்டர்கள் நாய்க்கறிக்கும் மீம்களை தட்டிவிடத் துவங்கினர். கூடுதலாக வாட்சப் வதந்திகளும் பஞ்சமில்லாமல் பறந்தன. பார்ப்பனிய கார்ப்பரேட் ஊடகங்கள்தான் வாட்சப் வதந்திகளையும் உருவாக்குகின்றன என்பது இங்கேயும் நிரூபிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட இறைச்சி

ஜோத்பூரிலிருந்து சென்னைக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சுமார் 1000 கிலோ இறைச்சி வந்த பெட்டிகளை கடந்த நவம்பர் 17-ம் தேதியன்று ரயில்வே போலீசு பரிசோதித்தது. அந்த இறைச்சி வந்த பார்சலை பிரித்துப் பார்த்ததும் அதில் இருக்கும் இறைச்சி குறித்து சந்தேகம் இருப்பதாகக் கூறி உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளை பரிசோதிக்க அழைத்தது. கூடுதலாக ஊடகங்களில் நாய்க்கறி கைப்பற்றப்பட்டது என்ற வதந்தியை செய்தியாக கிளப்பிவிட்டது போலீசு. இல்லை போலீசின் பெயரில் விலங்கு நல ஆர்வலர்களாக நடிக்கும் பார்ப்பனிய என்ஜிவோக்காளவும் இருக்கலாம். ஒரு சிலர் போலீசு மாமூல் பிரச்சினை காரணமாக இச்செய்தி வெளிவந்ததாக கூறுகின்றனர்.

நாய்க்கறியல்ல என்று நேர்காணல் அளிக்கும் சகிலா

இந்நிலையில் ஜோத்பூரிலிருந்து கறியை ஆர்டர் செய்திருந்த சகிலா என்பவர், அந்த பார்சலில் வந்தவை அனைத்தும் ஆட்டுக்கறிதான் என்றும் சந்தேகம் இருந்தால் அந்த கறியை பரிசோதனைச் சாலையில் கொடுத்து பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறினார். இதை சவாலாகவும் வீடியா ஆதாரங்களுடனும் கூறினார். மேலும் அவர்களுக்கு மாமூல் கொடுக்காததால்தான் இப்படி புரளியைக் கிளப்பியுள்ளனர் என்றும் கூறினார்.

ஆனால் ஊடகங்கள் சகிலாவின் தரப்பு வாதத்தை மழுங்கடித்துவிட்டு போலீசு கிளப்பிவிட்ட சந்தேகத்தை மட்டும் பிடித்துக் கொண்டன. அனைத்து செய்தி ஊடகங்களும் இந்தச் செய்தியை பரபரப்பு செய்தியாக்கியதன் தொடர்ச்சியாக அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் ஆட்டுக்கறி விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர், வியாபாரிகள்.

”நாங்கள் அதை துவக்கத்திலிருந்தே சர்ச்சைக்குரிய கறி என்றுதான் கூறிவந்தோம்.” – ரயில்வே பாதுகாப்புப்படை எஸ்.பி லூயிஸ் அமுதன் – மீசையில் மண் ஒட்டவில்லை

நாய்க்கறி சந்தேகத்தைக் கிளப்பிவிட்ட ரயில்வே போலீசு, அதன் பின்னர் ஊடகங்களுக்கு கொடுத்த நேர்காணல் அனைத்திலும், உணவுத்துறை அதிகாரிகள் அந்த ‘சந்தேகத்திற்குரிய’ இறைச்சியை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றிருப்பதாகவும், தாங்கள் ஆரம்பத்திலிருந்தே அதனை சந்தேகத்திற்குரிய இறைச்சி என்றே குறிப்பிட்டு வந்ததாகவும் கூறியிருக்கிறது.

தொடங்கி வைத்த ரயில்வே போலீசே ‘ஜகா’ வாங்கிய பின்னரும், ஊடகங்கள் அதனை விட்டபாடில்லை. ஆய்வு முடிவுகளில் ’அது நாய்க்கறி இல்லை’ என வந்தாலும் ஊடகங்கள் அதனை ஆட்டுக்கறி என்று நம்பத் தயாரில்லை என்பது அவர்களது செய்திகளில் பளிச்சென தெரிகின்றது.

இன்று (22-11-2018) மதியம்வரை அது என்ன இறைச்சி என உறுதியாகாத நிலையில், புதிய தலைமுறை இணையதளத்தில் நவம்பர் 22, அன்று காலையில் வெளியிட்ட, ‘நாய்க்கறி விவகாரம்: ராஜஸ்தான் சென்றது தனிப்படை’ என்ற தலைப்புக் கொண்ட செய்தியை, “ஜோத்பூரிலிருந்து சென்னைக்கு வந்த ரயிலில் நாய்க்கறி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்” என்றே தொடங்குகிறது.

படிக்க:
♦ மாட்டுக்கறித் தடையால் ஆதாயம் யாருக்கு ? – மனலி சக்ரவர்த்தி
♦ மாட்டுக்கறி தின்னா உனக்கென்னடா ? சிவவிடுதி லட்சுமி பேசுகிறார் – வீடியோ

வதந்தியைக் கிளப்பிவிட்ட போலீசே ’சந்தேகத்திற்குரிய இறைச்சி’ எனக் கூறிய பின்னரும் அதை நாய்க்கறி என்றே 22-11-2018 அன்று காலையில் எழுதியிருக்கிறது பாஜக கூட்டணியில் இருக்கும் பச்சமுத்துவின் புதிய தலைமுறை. மாலையில் ஆட்டுக்கறி என்று உறுதி செய்யப்பட்ட பின்னர், நல்லபிள்ளையாக ”நாய்க்கறி அல்ல, ஆட்டிறைச்சிதான்” என்ற செய்தியோடு நிறுத்திக் கொண்டது. ஒரு தன்னிலை விளக்கமும் இல்லை.

ஒருவேளை இவ்விவகாரத்தில் ’சகிலா’ என்பவர் சம்பந்தப்படாமல் இருந்திருந்து, ஒரு ‘ஹரிஹரன்’ சம்பந்தப்பட்டிருந்தால், ஊடக அறத்தின்படி சந்தேகத்திற்குரிய இறைச்சி என புதிய தலைமுறை செய்தி வெளியிட்டிருக்கலாம்.

அது நாய்க்கறியா என சந்தேகத்தை கிளப்பிவிட்ட போலீசு, இப்போது அந்த விவகாரத்தை விட்டுவிட்டு, ’மீன்’ என்ற பெயரில் ஏன் பார்சல் ’புக்’ செய்யப்பட்டது என்ற புதிய பஞ்சாயத்தை முன் வைத்து பார்சல் ’புக்’ செய்தவரைக் கைது செய்ய ராஜஸ்தான் விரைந்திருக்கிறதாம்.

இதுகுறித்து தமிழ்நாடு இறைச்சி விற்பனையாளர் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “ஆய்வு செய்யாமல் ஒரு இறைச்சியை நாய் இறைச்சி என்று எவ்வாறு செய்திபரப்பலாம்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஹைதர் அலி இது குறித்துக் கூறுகையில், “ இராஜஸ்தானின் வெள்ளாடு வகையின் வால் ஒரு அடி வரையில் வளரக் கூடியவை. தமிழக வெள்ளாடு வகைகள் குட்டை வால் கொண்டவை. வடமாநிலங்களில் ஆட்டின் விலை குறைவாக இருப்பதாலும், இந்த ஆட்டின் சுவை நன்றாக இருக்கும் என்பதாலும் இந்த ஆட்டையே பெரும் ஹோட்டல்களுக்கு சப்ளை செய்கின்றனர். இதில் ஆட்டுக்கறியை நாய்க்கறி என்று புரளியைக் கிளப்பிவிட்ட ரயில்வே அதிகாரிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது ஆட்டுக்கறியாக இல்லாமல் நாய்க்கறியாக இருந்திருந்தால், வியாபாரிகள் மறியல் போராட்டம் செய்திருக்க மாட்டார்களல்லவா ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து நக்கீரன் இணையதளம், தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர், ராயபுரம் ஏ.அலி-யிடம் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளது.

இக்காணொளியில் வால் நீளமான ஆடுகள், சென்னையில் உரிக்கப்படும் காட்சியை பேட்டியின் இடையே காட்டுகிறார் அலி. அதில் காணப்படும் ஆடுகளின் வால் பெரியதாகவே இருக்கிறது.

அது ஆட்டுக்கறியா ? நாய்க்கறியா ? என்ற கேள்விக்கு உணவுப் பாதுகாப்புத்துறை பதிலளிக்கவில்லை என்று நியாயம் பேசிய போலீசு இன்று ஆய்வறிக்கையில் ஆட்டுக்கறி என்று வந்த பிறகு மீன் என்று வழக்கு போடுகிறது.

இந்த மோசடி ஒன்றும் புதிதல்ல. அக்லக் கொலையில் முதல் ஆய்வில் ஆட்டுக்கறியாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது, அடுத்த ஆய்வில் மாட்டுக்கறியாக உயிர்த்தெழுந்து வந்து அறிக்கையில் அமர்ந்தது போல, இங்கும் தாமதமாக வரவிருக்கும் ஆய்வு அறிக்கையில் நாய்க்கறி ஏதேனும் உயிர்த்தெழுமோ என்றெல்லாம் சந்தேகங்கள் அவாளின் மனதை ஆக்கிரமித்திருந்த சூழலில் அது ஆட்டுக்கறிதான் என ஆய்வறிக்கை தெளிவாகக் கூறியிருக்கிறது.

இந்த ஆட்டுக்கறியை , நாய்க்கறி என்பதாக உறுதியாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் அனைத்து துவாரங்களையும் மூடிக் கொண்டு அமைதியாக இருக்கின்றன . மவுனத்தைக் கலைக்க வேண்டியது நாம்தான்! உரக்கக் கேட்போம் “ஆட்டுக்கறிய நாய்க்கறின்னு கூவுனது எவன்டா ?”

விஞ்ஞானிகள் அறிக்கை : நவீன முதலாளித்துவம் ஒழியாமல் உலகைக் காப்பாற்ற முடியாது !

“மலிவான ஆற்றலின் சகாப்தம் ஒரு முடிவுக்கு வருகிறது. சமூகங்கள், ஆற்றல் பயன்பாடு மற்றும் உள்கட்டமைப்பை மறுவடிவமைக்க வேண்டும் அல்லது அப்படி செய்யத் தவறியதற்கான கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட புதிய ஆய்வு ஒன்றின் முடிவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

உலகளாவிய நீடித்து நிலைக்கத்தக்க மேம்பாடு குறித்த அறிக்கைக்காக (Global Sustainable Development Report) ஐ.நா. கேட்டுக்கொண்டதற்கிணங்க பின்லாந்தின் பயாஸ் ஆய்வுக்கூடத்தைச் (BIOS Research Unit) சேர்ந்த உயிரியற்பியல் (BioPhysicist) விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை 2019-ம் ஆண்டு வெளியிடப்பட இருக்கிறது.

இந்த அறிக்கை சில துல்லியமான முன்னனுமானங்களைக் கொண்டுள்ளது. இன்று மேலாதிக்கத்தில் பொருளாதாரத் தத்துவங்களும், நவீன முதலாளித்துவக் கருத்தாக்கங்களும், சமூகத்திற்கு புதைப்படிவ எரிபொருட்கள் (பெட்ரோலிய) உள்ளிட்ட மலிவான ஆற்றல் இன்று போல என்றுமே கிடைத்துக்கொண்டே இருக்கும் என்ற தவறான அனுமானத்தைக் கொண்டிருக்கின்றன. அதன் காரணமாகவே அத்தத்துவங்களும், கருத்தாக்கங்களும் இன்றைய சூழலுக்கு போதுமானவையாக இல்லை என்ற வாதத்தை விஞ்ஞானிகள் குழுவினர் முன்வைகின்றனர். மேலும் காலநிலை மாற்றங்கள் உள்ளிட்ட திரும்பப்பெறப்பட முடியாத எதிர் விளைவுகள் மற்றும் கட்டுப்பாடில்லா நுகர்வு மற்றும் வளர்ச்சியின் விளைவாக ஏற்படும் சமூக அரசியல் பின்விளைவுகளை, இந்த கருத்தாக்கங்கள் கணக்கில் கொள்வதில்லை என்றும் கூறினார்கள்.

படிக்க:
ரஃபேல் : பொறுப்பைத் துறந்த பிரான்ஸ் – பாஜக முகத்தில் கரி
பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் ! புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

“மனிதகுல வரலாற்றில் முதன்முறையாக குறைவான ஆற்றல் செயல்திறன் கொண்ட ஆற்றல் வளங்களுக்கு பொருளாதாரங்கள் மாறுவேண்டியிருக்கிறது. அதன் காரணமாக அடிப்படையான மற்றும் இதர மனித நடவடிக்கைகளுக்கு போதுமான ஆற்றலை உற்பத்தி செய்வதற்கு மிக அதிக முயற்சிகளை மனித சமூகங்கள் செய்ய வேண்டியிருக்கிறது” என்று அறிக்கையில் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே புதிய ஆட்சிமுறை வடிவங்கள் மற்றும் பொருளாதார கொள்கைகளைப் பற்றி சிந்திப்பதற்கு விஞ்ஞானிகள் குழு உலக சமூகங்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

“ குறிப்பாக எதிர்வரும் காலக்கட்டத்திற்கான, பரவலாக பொருந்தக்கூடிய பொருளாதார வடிவங்கள் (economic models) எதுவும் வடிவமைக்கப்படவில்லை என்று உறுதியாக கூற முடியும்” எனக் குறிப்பிட்டு, உலகப் பொருளாதாரம் ஒரு புதிய சகாப்தத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். ”எங்களது கவனம் முழுதும் மாற்றம் நடக்க உள்ள அடுத்த சில பத்தாண்டுகளைப் பற்றியே இருக்கிறது“ என்கின்றனர் அக்குழுவினர்.

இதற்கு என்ன செய்ய வேண்டும் ? இதுகுறித்த முக்கியப் பிரச்சினைகள் சிலவற்றை விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்

குறைவான ஆற்றல் பயன்படுத்துதல் மற்றும் ஆற்றல் உள்கட்டமைப்பை உருமாற்றுதல் :

வாகனப் புகை

காலநிலை மாற்றத்தின் எதிர்விளைவுகளை மட்டுப்படுத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் உதவக்கூடும். ஆனால் இவற்றில் முதலீட்டுக்கும் கிடைக்கும் ஆற்றலுக்குமான (energy return on investment) விகிதம் மிகக் குறைவு. அதாவது புதைவடிவ எரிபொருள் மூலங்களை விட புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் பெறுவதற்கு முதலீட்டு செலவு அதிகம். வளர்ந்து கொண்டிருக்கும் ஆற்றல் தேவையை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அல்லது ஏனைய குறை கரியமில ஆற்றல் தீர்வுகளால் பூர்த்தி செய்ய முடியாது என்று கூற முடியாவிட்டாலும் மிகவும் கடினம்” என்று விஞ்ஞானிகள் குழு கருதுகிறது. இந்த அப்பட்டமான உண்மை காரணமாக “மொத்த ஆற்றல் பயன்பாட்டை குறைப்பதற்கு கணிசமாக அழுத்தம் தேவைப்படுகிறது” என்று அவர்கள் கருதுகிறார்கள்.

திறன் மிக்க குறைவான பயணம்:

 உலகிலுள்ள அனைத்து நகரங்களிலும் நடத்தல், மிதி வண்டி ஒட்டுதல் மற்றும் மின்மயப்படுத்தப்பட்ட பொது போக்குவரத்து பயன்பாட்டிற்கு வலியுறுத்த வேண்டும். இதற்கு சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து பயன்பாடுகளை குறைக்க வேண்டும். மேலும் நகர கட்டுமான திட்டங்கள் மற்றும் வண்டி தயாரிப்பு, இருப்புப்பாதைகள், சாலைகள் மற்றும் மின்னேற்ற நிலையங்கள் (charging stations) உள்ளிட்ட போக்குவரத்து உள்கட்டமைப்புகளில் மாற்றங்கள் தேவை.

உணவுப்பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெறுதல்:  

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் உணவுப்பொருட்கள் உற்பத்தியில் கண்டிப்பாக தன்னிறைவு பெற வேண்டும். ஏனெனில் வருங்காலத்தில் உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்வதற்கு சில பகுதிகளை மட்டுமே நம்பி இருப்பது பேராபத்து என்றும் கூறுகின்றனர். மேலும் பால் மற்றும் இறைச்சி பயன்பாட்டிலிருந்து பெரும்பாலும் தாவர உணவு பயன்பாட்டிற்கு மாற வேண்டும் என்றும் ஆலோசனை கூறுகின்றனர் .

நீடித்து நிற்கும் மர வீடுகளை கட்டுதல்:

சிமெண்ட் ஆலையிலிருந்து வெளிவரும் புகை

 “தற்போது சிமிட்டிக்கலவை மற்றும் எஃகு பயன்பாடு கட்டுமானத் துறையில் மேலாதிக்கம் செலுத்துகிறது. அதன் உற்பத்தி மற்றும் இதர சுழற்சி முறைகள் ஆற்றலை அதிக அளவில் பயன்படுத்துகின்றன. எனவே கரியமில வாயு மற்றும் இன்னப்பிற மாசுக்கள் உருவாக்கத்திற்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு இவை பங்காற்றுகின்றன” என்று விஞ்ஞானிகள் குழு கூறியிருக்கிறது. இதற்கு மாறாக நீடித்து நிற்கும் மரத்தாலான கட்டிடங்கள் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுக்குள் வைக்க உதவும் என்று அறிவுறுத்தினார்கள்.

மேற்சொன்ன மாற்றங்களை செய்வதற்கு முன்னெப்போதுமில்லாத அளவிற்கு நடவடிக்கைகள் தேவை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

“சந்தை அடிப்படையிலான நடவடிக்கை போதுமானது அல்ல. ஒரு விரிவான பார்வையுடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்ட திட்டங்கள் இருக்க வேண்டும். இல்லையெனில், உலகளாவிய நீடித்து நிலைப்பதற்கான குறிக்கோள்களை அடைவதற்கான விரைவான அமைப்புமுறை மாற்றம் சாத்தியமே இல்லாமல் போகும்” என்று எச்சரித்துள்ளனர்.

படிக்க:
♦ காற்று மாசுபாடு : தில்லியில் வாழ்வது தினசரி 20 சிகரெட் புகைப்பதற்கு சமம் !
♦ வல்லரசு இந்தியாவின் வளர்ச்சி : காற்று மாசுபாட்டில் மட்டும்தான் !

ஒவ்வொரு சமூகமும் நிலையான பொருளாதாரத்தை அடைவதற்கு சொந்தமாக தீர்வுகளை கண்டறிய வேண்டும் என்று அறிஞர்கள் குழு அறிவுறுத்தியுள்ளது. எனினும் அதன் மாற்றங்களின் ஒவ்வொரு நிலையிலும் அரசின் தலையீடு தேவைப்படக்கூடும்.

நீடித்து நிலைத்திருத்தலுக்கான மாற்றங்களை தொடங்குவதற்கு முன்னேறிய அரசுகளே முன்னிலை வகிக்க வேண்டும். ஒருபுறம் மிகப்பெரிய பொது முதலீட்டு திட்டங்களையும் மறுபுறம் கடுமையான கட்டுப்பாட்டுகள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு திட்டங்களையும் செயல்படுத்த மிகப்பெரிய பொருளாதார கொள்கை தேவைப்படுகிறது. நவீன உலகப்பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவிலான நீடித்து நிலைத்திருத்தலுக்கான மாற்றத்திற்கு நிதி அளிப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் தேவையான சட்ட அதிகாரமும் திறனும் அரசுகளுக்கு மட்டுமே இருக்கின்றன.

கட்டுப்பாடில்லா நுகர்வு மற்றும் வளர்ச்சியின் விளைவாக ஏற்படும் சமூக அரசியல் பின்விளைவுகளை, முதலாளித்துவம் கணக்கில் கொள்வதில்லை

சுமார் 15,000 விஞ்ஞானிகளைக் கொண்ட உலக விஞ்ஞானிகள் கூட்டணி (the Alliance of World Scientists) எந்தெந்த வழிகளிலெல்லாம் மனிதனின் நடவடிக்கைகள் உயிர்க்கோளத்தை அரிக்கின்றன என்பதை விளக்கி ‘மனிதநேயத்திற்கான எச்சரிக்கை’ (Warning to Humanity) என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தனர். இந்த அறிக்கை வெளியிடப்பட்டு ஓராண்டிற்குள்ளேயே பின்லாந்து விஞ்ஞானிகள் குழுவின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

விஞ்ஞானிகள் ஐந்து வகையான பரந்துபட்ட தீர்வுகளை முன் வைக்கின்றனர்:

  1. சுற்றுச்சூழலை கெடுக்கும் செயல்பாடுகளை நாம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மேலும் நாம் சார்ந்திருக்கும் இப்புவியின் சூழல் அமைப்பின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும். சான்றாக புதைப்படிவ எரிபொருளுக்கு மாற்றாக தீங்கற்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களுக்கு மாறுவதன் மூலம் பசுமைக் குடில் வாயுக்களை குறைப்பதுடன் நீர், நிலம் மாசுபடுதலையும் கட்டுப்படுத்த வேண்டும். மூன்றாம் உலக நாடுகளின் தேவைக்கேற்ப அதாவது அளவில் சிறிய மற்றும் எளிமையான ஆற்றல் வளங்களை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். காடுகளை அழித்தல், விவசாய நிலங்களை அழித்தல், நிலம் மற்றும் கடல் சார்ந்த தாவர மற்றும் விலங்கு இனங்கள் அழிக்கப்படுவதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும்.
  2. மனித சமூகத்திற்கு இன்றியமையாத வளங்களை நாம் திறம்பட கையாள வேண்டும். ஆற்றல், நீர் மற்றும் ஏனைய வளங்களை திறம்பட பயன்படுத்துவதற்கும் அவற்றை பாதுகாப்பதற்கும் மறுசுழற்சி செய்வதற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
  3. மக்கள்தொகையை கட்டுக்குள் வைக்க வேண்டும். மேம்பட்ட சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளின் அவசியத்தை அனைத்து நாடுகளும் உணரும் போதும் திறமையான, தன்னார்வ குடும்ப திட்டமிடலை மேற்கொள்ளும் போதும் மட்டுமே இது சாத்தியமாகும்.
  4. வறுமையை குறைத்து முடிவில் இல்லாதொழிக்க வேண்டும். “இது போன்ற துணிச்சலான இலக்குகள் நம்முடைய நாட்டிற்கு தேவை என்று நான் நம்புகிறேன்” என்று தி எர்த் நிறுவனத்தின்(The Earth Institute) முன்னாள் இயக்குனரான ஜெஃப்ரி சாக்ஸ் கூறுகிறார். வரும் 2030-ம் ஆண்டிற்குள் வறுமையை குறைந்தது பாதியாக குறைக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
  5. நாம் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் மேலும் குழந்தைகளைப் பெறுவதற்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை பெண்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும். பெண்களுக்கு கல்வியறிவு கிடைக்கும் போது அவர்களுக்கு குறைவான குழந்தைகளே இருக்கும். அக்குழந்தைகளுக்கு அதிக வளங்கள் கிடைப்பதால் நல்லவிதமாக பேணப்பட்டு முன்னேற்றம் அடைவார்கள்” என்று பில் நியே (Bill Nye) கூறுகிறார். மேலும், “எந்த அளவிற்கு பெண்கள் வேகமாக கல்வியறிவை பெறுகிறார்களோ அந்த அளவிற்கு ஒவ்வொரு மனிதருக்கும் வரும் காலங்களில் அதிக வளங்கள் கிடைப்பதை அறிவியல் கல்வி வழியாக நாங்கள் செய்ய விரும்புகிறோம்” என்கிறார்.

அறிவியலாளர்கள் சுற்றி வளைத்துக் கூறும் கருத்து என்ன? உலகைக் காக்க அதன் இயற்கை வளத்தை காப்பாற்ற, இருக்கின்ற வளங்களை அனைத்து மக்களுக்கும் பகிர்ந்து கொடுக்க உலகளாவிய பொருளாதார கொள்கைகள், முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அந்தக் கொள்கை சந்தைப் பொருளாதாரத்திற்கு எதிராக இருக்கும். எனில் அதன் பெயர் சோசலிசம்.

நன்றி: BigThink
தமிழாக்கம்:

மரணம் ஒரு வடிகட்டி | ஃபருக் அப்துல்லா

னது கிளினிக்கிற்கு கடந்த சில வருடங்களாக நோய் நிமித்தம் சந்திக்கும் பெண்மணியின் கதை;

ப்போது வந்தாலும் தனது கணவரை பற்றியும் அவரது குடிப்பழக்கம் எப்படி தங்கள் வாழ்க்கையை சீரழிக்கிறது என்றும் என்னிடம் கூற ஒரு நிமிட கதையாவது வைத்திருப்பார்.

அந்த சிறுகதைகளை கேட்பதைத் தவிர அவருக்கு வேறெதுவும் என்னால் செய்ய இயலாத போதும்.. நான் அந்த கதைகளுக்கு செவி கொடுப்பதே அவருக்கு ஆறுதலாய் அமைந்ததென்பதை உணர்ந்தேன்.

இப்படியாக சில சமயம் கணவர் உடன் வரும்போது என்னிடம் கூறி அவரது கணவரை கண்டிக்க கூறுவார்.

நானும் என்னால் இயன்ற அளவு அவரது கணவரை குடியின் கொடூரங்களை கூறி விடுங்களேன்; என்று அச்சமூட்டி, எச்சரித்து பிறகு சில காலம் கெஞ்சி, கொஞ்சியும் கூறினாலும் குடியை அவர் நிறுத்தியபாடில்லை.

குடி நோய் சூழ் கொண்ட மனிதனுக்கு மருத்துவனே எதிரியாகத்தான் தெரிவான்.
காரணம் அவன்தானே சதா குடிக்காதே என்று பயமுறுத்திக் கொண்டே இருக்கிறான்.

சில மாதம் முன்னர் கணவனும் மனைவியும் என்னை சந்திக்க வந்திருந்தபோது நிகழ்ந்த நிகழ்வை உரையாடலாய் காண்போம்

“சார்..
குடிச்சுட்டு ரோட்டுல அம்மணமா படுத்துக்கிறார்.. என்னை அடிக்குறாரு . வீட்டுல கல்யாணம் பண்ற வயசுல ரெண்டு பொம்பள பிள்ளைங்க இருக்கு சார்..

இவரு தொல்லை தாங்க முடியல சார்.. நாங்க எல்லாரும் மருந்து சாப்ட்டு சாகலாம்னு இருக்கோம்.. இவரு குடிய விடனும்.. இல்லனா நாங்க உசுர விடனும்.. அசிங்கமா இருக்கு சார் ” என்று புலம்பினார்

“ஐயா.. ஏன் இப்டி உங்க குடும்பத்த இவ்ளோ கஷ்டப்படுத்தி நீங்க மட்டும் சந்தோசமா குடிக்கிறீங்க? நான் பெரியாஸ்பத்திரிக்கு எழுதித்தரேன். குடி மறக்க வைக்குற வார்டு இருக்கு அங்க அட்மிட் ஆகுங்க.. புது மனுசனா வெளிய வரலாம்.. ”

“சரி சார்.. அட்மிட் ஆகிக்கிறேன்.. எழுதிக்கொடுங்க.. என்ன நெனச்சா எனக்கே வெறுப்பா இருக்கு .. குடிய விட்ரலாம்ல சார்.. என் புள்ளைங்களே என்ன கண்டா பயந்து ஓடுது”

படிக்க:
♦ மதுவை ஒழிக்க முடியுமா ?
♦ மாறிவரும் சூழலில் மனநலமும் நம் செயல்பாடும் !

“கண்டிப்பா வெளிய வந்துரலாம் ..போய் அட்மிட் ஆகுங்க உடனே”

சில வாரங்கள் முன்பு அவரது மனைவி வந்தார் முதுகு வலி என்று;

“சார்.. அந்த பாழாப்போனவன் திரும்பவும் குடிக்க ஆரம்பிச்சுட்டான் சார்..
நேத்து வீட்டுக்கு வந்து பிள்ளைங்கள கேவல கேவலமா கேக்குறான். பிள்ளைங்களாம் ஒரே அழுகை.. என்னனு கேட்டதுக்கு.. என்னை கீழ தள்ளிவிட்டு மண்டை ஒடஞ்சிருச்சு சார். பெரியாஸ்பத்திரிக்கு போய் நைட் தையல் போட்டுட்டு வந்தேன்.
முதுகு நல்லா வலிக்குது.”

“மா.. உங்க நிலைமைய நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு. பேசாம போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுங்கம்மா.. உங்க சொந்த ஊரு எது. அங்க போய் இருங்க.. அது தான் உங்களுக்கும் உங்க பிள்ளைங்களுக்கும் நல்லது போல தெரியுது”

“எனக்குனு நாதி இல்ல சார். இந்த ஆள லவ் பண்ணி வீட்ட எதிர்த்து கல்யாணம் பண்ணேன். நல்லாதான் இருந்தான். இந்த பாழாப்போன ஃப்ரெண்ட்ஸ்னு நாலு பேரு. சேர்ந்து தண்ணி.. தண்ணினு எங்க உசுர வாங்குறான். எப்ப அவனுக்கு சாவு வரும்னு இருக்கு. நிம்மதியா தாலிய அறுத்துப்போட்டுட்டு இருந்துருவேன் சார்” என்று கதறி அழுதார்..

அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தேன், சில நாட்கள் முன்பு
என்னை சந்தித்தார் அந்த பெண்மணி

” என்னமா.. வீட்டுக்காரரு என்ன பண்றாரு இப்ப? கொஞ்சம் பரவாயில்லையா..? ”

“போன வாரம் தான் சார் இறந்து போனாரு.. குடிச்சுட்டு வண்டில வீட்டுக்கு வரும் போது ரோட்டுல அடிபட்டு சார்…”

நான் ” ஐயோ… கவலைப்படாதீங்கமா.. நீங்க அவரால பல கொடுமைகளை அனுபவிச்சுருக்கீங்க.. நீங்க கடைசியா என்ன பாக்கும் போது கூட சாவு வந்தாதான் நிம்மதியா இருப்பேன்னு சொன்னீங்க.. அதுவே நடந்துருச்சு.. கஷ்டமா இருக்குமா”

“சார்..அப்டியா சொன்னேன்.. தெரியாம அப்டி சொல்லிட்டேன் சார்.. குடிச்சாலும் கொடுமைபடுத்துனாலும் எனக்குனு சொல்லிக்குறதுக்கு அவரு இருந்தாரு.. இப்ப நாங்கலாம் அனாதி ஆயிட்டோமே சார்.. “

“……………..”

“என்ன குடிச்சுட்டு வந்தாலும் அடிச்சாலும் வீட்டுக்கு தேவையானத செஞ்சுடுவாரு சார். தினக்கூலிய என் கைல குடுத்துட்டு தான் குடிக்கவே வாங்கிட்டு போவாரு.. நான் பட்டினியா கெடந்தா தாங்க மாட்டாரு சார்.. குடி மட்டும் இல்லனா என் கூட இருந்துருப்பாருல சார்”

என்ன பேசுவது என்று எனக்கு இப்போது வரை தெரியவில்லை. ஒரு துளி கண்ணீரை தவிர எனக்கு வேறு பேசவும் தோணவில்லை. நிச்சயம் மரணம் ஓர் வடிகட்டி தான் என்பதை உணர்ந்த தருணம்.

ஆயிரம் வலிகள் ஒருவர் நமக்கு தந்திருந்தாலும் அவரை பிரிந்த பின் அவர் தந்த இன்பங்களை மனம் தேடுவது மனித இயல்பு.

மரணம் ஒரு வடிகட்டி

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., சிவகங்கை.

அதிராம்பட்டினம் மீனவர்கள் : கடனில் ஓடிய வாழ்க்கை இனி பெருங்கடனில் போய் நிற்கும்

மிழகத்தின் கிழக்கே நீண்டு நெடிந்து படர்ந்துள்ள வங்காள விரிகுடா கடற்கரையையொட்டி அமைந்துள்ள முக்கிய நகரங்களில் ஒன்று அதிராம்பட்டினம். அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் கடற்புறத்தை ஒட்டி அமைந்துள்ள மீனவர் கிராமம் ஏரிப்புறக்கரை.

இங்கு சுமார் இருநூற்றுக்கும் அதிகமான மீனவக்குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நூற்றுக்கும் அதிகமான நாட்டுப்படகு (ஃபைபர் போட்) வைத்து மீன்பிடித்துத் தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். தற்போதைய கஜா புயலானது இவர்களின் வாழ்க்கையையும் விட்டு வைக்கவில்லை.

அங்கு நாம் பார்த்துப் பழகிய மெரினா போன்றோ அல்லது புதுச்சேரி போன்றோ கடற்கரையானது காணப்படவில்லை. ஒரு வாய்க்காலில் ஃபைபர் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்க்கும் போது ஆங்காங்கே குப்புறக் கிடந்த படகுகள் மற்றும் சிதறிக் கிடந்த வலைகளைக் காண முடிந்தது.

சுற்றுவட்டாரத்தில் பெரும்பாலான மக்கள் எங்களை விடவும், மீனவ மக்களுக்கு அதிக பாதிப்பு எனத் தங்களின் சொந்த பாதிப்பையும் கூட பின்னால் வைத்துதான் பேசினர். அப்போது அங்கு தனது வலைகளை சீர்படுத்திக்கொண்டிருந்த மீனவர் சங்கரிடம் விசாரித்த போது அவர் விவரிக்கத் தொடங்கினார்.

மீனவர் சங்கர்.

“இன்னைக்குதான் எங்க படகுகளையெல்லாம் மேல ஏத்தி வச்சி இருக்கோம். புயல்ல அப்புடியே தண்ணில தலகுப்புற கிடந்தது இந்த படகெல்லாம். அப்புடி நிலமை இருந்த போதும் கூட அரசாங்கத்துல இருந்து யாரும் வரல…

அதுக்குப்பின்னாடி நாங்க இந்த ECR ரோட்டுல உக்காந்த பொறவுதான் ஆர்.டி.ஓ., கலெக்டரு எல்லாம் வந்தாங்க. ஆனா யாரும் இங்க வந்து முறையா பாக்கல. எங்ககிட்ட எத்தன படகு சேதமுன்னு கேட்டு எழுதிகிட்டு போயிட்டாங்க. அதுக்கப்புறம் இன்னைக்குத்தான் ஜே.சி.பி.-ய கொண்டாந்து தண்ணில கெடந்த படகுகளை மேல ஏத்தி போட்டாங்க. அதுக்கப்புறம் நாங்க பாத்து எது.. எது எங்களோட வலை, பொட்டின்னு தேடி எடுத்துவச்சி பழுது பாத்துட்டு இருக்கோம்.” என்றார்.

சரி உங்க ஊரப் பத்தி, தொழில பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்…

“எங்க ஊரு பேரு ஏரிப்புறக்கரை… இங்க சுத்தி ரெண்டுபக்கமும் பெரும்பாலும் விவசாயம்தான் செய்யுறாங்க… நடுவுல மட்டும் நாங்க ஒரு இருநூறு குடும்பத்துக்கு மேல மீனவர்கள் வாழ்ந்துட்டு வாரோம்.

என்ன எங்க தொழிலு கடலுக்கு போயி கிடைக்கிற இறாலு.. நண்டு.. அப்பைக்கப்ப கொஞ்சம் மீனு கிடைக்கும். அத கொண்டாந்து இங்க அதிரம்பட்டனத்துல வித்து வாழ்க்கைய ஓட்டிகிட்டு இருக்கோம்.

இங்க உள்ள மீனவர்கள் பொருத்த வரைக்கும் விசைப் படகு மாதிரி தங்கி மீன் பிடிப்பது கிடையாது. ஒரே நாள்ல காலைல 4 மணிக்கு கிளம்புனா போற தூரத்த பொறுத்து அன்னைக்கு சாயங்காலம் 3 மணில இருந்து 6 மணி வாக்குல திரும்பி வந்துடுவோம். இங்க கரையில வியாபாரிங்க பைக்குல வந்து எங்க மீன வாங்கிட்டு போயி அதிராம்பட்டினம் மார்க்கெட்டுல விப்பாங்க.

எங்க தொழில பொருத்தவரைக்கும் எல்லாமே கடன்லதான் ஓடிகிட்டு இருக்கு. நாங்க ஒரு ஐம்பதாயிரம் ஒருலச்சமுன்னு வலையும் கடன்லதான் வாங்கி இருக்கோம். கடலுக்கு நாங்க ஒரு 3 – 4 பேர் போனாத்தான் எங்களுக்கு வேலைகள் பாக்குறதுக்கு வசதியா இருக்கும். கெடைக்குற வருமானத்த பங்கு பிரிச்சிப்போம். ஆனா சரியா மீன் கிடைக்காம போச்சுன்னா எங்களுக்கு ஒன்னும் கிடைக்காது. அதனால இப்பல்லாம் ஒரு படகுக்கு 2 பேர் ஒருத்தருன்னுதான் போறோம்.

மீனவர் ரகுராமன்.

நாங்க கடல்ல 15 நாட்டிக்கல் வரைக்கும் கூட போவோம். சில நேரங்கள்ல மீன் கிடைக்காம இன்னும் உள்ளார போறதும் உண்டு. அப்பத்தான் வலைய சீர் செய்யுறதுக்கு, படகு மெயிண்டன் பன்னுறதுக்குன்னு கொஞ்சம் பணத்த ஒதுக்க முடியும்.

படிக்க:
அதிமுக குண்டர்களை விடுவித்த மோடியின் அடிமை அரசு எழுவர் விடுதலையை மறுப்பது ஏன் ?
ஒக்கி புயல் பேரழிவு குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை !

அதே போல வலைகள அப்பய்க்கப்ப சீர்படுத்தனும் ஏன்னா ஒருமுறை மீன் பிடிச்சா அதுக்கப்புறம் வலையில் இருக்குற ஓட்ட பெருசா போயிடும். அடுத்தமுறை அந்த வலைய போட்டமுன்னா மீனோ இல்ல நண்டோ வலையில தங்காது. அதுமாதிரி வலை அழிஞ்சி போகும்போது அதுக்கு திரும்பவும் கடன் வாங்கிதான் வலை வாங்கி போடனும். சில நேரம் கடல்ல வலை இழுத்துகிட்டு போயிடும். அதுக்கு அடையாளமா ஒரு கொடி கட்டி கடல்ல கொம்ப போட்டுடுவோம். பல ஆயிரம் மதிப்பு இருக்கக்கூடிய வலைகளுக்கு அடையாளம் பாதுகாப்பு எல்லாமே இந்த ஒரு கொம்பு மட்டும்தான்.

ஏது எப்படியோ எங்களுக்கு வருமானம் வருதோ இல்லையோ கடன்மட்டும் ஏறிகிட்டு இருக்கும். வர வருமானம் பூரா அந்த கடனுக்கு வட்டிகட்டுறது அன்னாட குடும்ப செலவுக்குதான் சரியா இருக்கும்.

அந்த வருமானமும் எல்லா நாள்லயும் இருக்காது. ஏன்னா இங்க பக்கத்துல மல்லிப்பட்டனத்துல விசைப்படகுகள் அதிகம். அதனால மீன்பிடிக்குறதுல எங்களுக்குள்ள பிரச்சினை வரக்கூடாதுன்னு அவங்க ஒரு நாள் நாங்க ஒரு நாளுன்னு மாத்தி மாத்தி போறதால மாசம் 15 நாள் தான் வேலை இருக்கும்.

அதுக்கப்புறம் புயல் அறிவிப்புன்னு அரசாங்கம் சொல்லிடுச்சின்னா நாங்க கடலுக்கு போக மாட்டோம். அப்ப வருமானம் போயிடும். இதுமாதிரிதான் எங்க வாழ்க்கயே கடல்ல அன்னாடம் காய்ச்சியாக மாறி இருக்கு.

அதுமட்டும் இல்லாம கொஞ்சம் மீன் ஏதாவது கிடைக்குமுன்னு முன்ன போனா இலங்கை கடற்படை வந்து புடிச்சிட்டு போயிடும். எங்க பொருளுக்கும் உயிருக்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது.

இந்த புயலால உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு …

“பொதுவாவே மழைபேஞ்ச்சா இங்க இந்த வாய்க்கால் பூரா நிறைஞ்சிடும். ஆனா அது கொஞ்ச நாள்ல இறங்கிடும். அப்ப நிறுத்தி வச்சி இருக்குற படகுகள் கொஞ்சம் ஒன்னோட ஒன்னு மோதுறதால பாதிக்கும் அத நாங்களே சரி பண்ணிப்போம். ஆனா இந்த மாதிரி ஒரு புயல நான் பாத்ததில்ல. எங்க அப்பா தாத்தா காலத்துல என்ன நடந்துச்சோ தெரியாது. இதுதான் பெரிய பாதிப்பு.

அரசாங்கம் புயல் எச்சரிக்க குடுத்ததும் பலரும் இங்க இருக்குற புயல் கட்டிடத்துல தங்கிட்டோம். படகுகளையும் மேல ஏத்தி கட்டிட்டோம். ஆனாலும் படகுகள் எதையும் காப்பாத்த முடியல. எல்லாம் தண்ணியில பெறண்டு போயி அதுல இருந்த வலை, பாக்ஸ் (பெட்டி) எல்லாமும் வாய்க்கால்ல கெடந்துது.”

இப்ப ஏற்பட்ட பாதிப்புகள சரி செய்ய என்ன பண்ணனும்?

“இப்ப பாத்தா எல்லா போட்டும் சேதமாகி போயி இருக்கு. இந்த படக வச்சிகிட்டு நாம கடலுக்குள்ள போக முடியாது. அதனால அதுல இருக்குற ஓட்டைகள சரி பண்ணனும் அதுக்கு கொறஞ்சது ஒரு இருபதாயிரம் வரைக்கு செலவாகும். எஞ்சின் தான் ரொம்ப முக்கியமானது. அது இப்ப தண்ணில மூழ்கிப் போனதால எல்லாத்தையும் பிரிச்சி ரிப்பேர் செய்யனும். அதுக்கே, 30,000/- ஆயிடும். வலைகளெல்லாம் இப்ப எதுக்கும் பிரயோஜனம் இல்லாம போயிட்டு. வலைகள் வாங்கனுமுன்னா அது கொறஞ்சது நாப்பதாயிரம் வரைக்கும் ஆயிடும். நாங்க ஒரு ஐம்பதாயிரத்துல இருந்து ஒரு இலட்சம் வரைக்கும் அவுங்கவுங்க பாதிப்ப பொருத்து செலவு பண்ணனும்.

இதெல்லாம் சரி செஞ்சி தொழிலுக்கு போகறதுக்கு கொறஞ்சது ரெண்டுமாசம் ஆயிடும். இப்ப ஒரு பத்து நாளைக்கு அரசாங்கம் சோறு போடும். ஆனா, அதுக்கப்புறம் நாங்க என்ன செய்யுறது. திரும்பவும் படகு, வலை, குடும்ப செலவு எல்லாத்துக்கும் கடன் தான். இந்த கடன்லயே எங்க ஆயிசு போயிடும் போல இருக்கு.”

அரசாங்கம் நிவாரணம் எல்லாம் உங்களுக்கு சரியா கிடைக்கும்னு நினைக்குறீங்களா?

“அரசாங்கத்த தவிர வேற யாரும் எங்களுக்கு நிவாரணம் தரமுடியாது. ஏன்னா, இன்னிக்கு பல ஊர்கள்ல இருந்தும் காலேஜி பசங்க, முசுலீம் அமைப்புகள் எல்லாம் வந்து சாப்பாடு போடுறது பெட்சீட் துணி மணி எல்லாம் செய்யுறாங்க. அது ஜனங்களா தன்னார்வமா வந்து செய்யுறது. அத சும்மா சொல்லக்கூடாது ரொம்ப உதவி பண்ணுறாங்க ஆனா அது மட்டும் எப்புடி நிவாரணமாகும்? எங்களுக்கு வாழ்வாதாரத்த உத்திரவாதம் செஞ்சா தானே நாங்க பொழைக்க முடியும்.

ஏதாவது செய்யணுமுன்னு நாங்க எதிர்பாத்துகிட்டு தான் இருக்கோம். எங்களுக்கும் அரசாங்கத்தவிட வேற வழி ஏதுமில்ல… ஆனா செய்யுமான்னு தெரியல… செய்யலன்னா திரும்பவும் போராட்டம்தான் செய்யணும்..

இது வரைக்கும் கடற்கரையில மட்டும் தான் பாதிப்பு இருக்கும். ஆனா இந்த முறை மேல ஏரி பூரா ஊரையும் நாசம் பண்ணி இருக்கு. தென்னை, நெல் எல்லாம் வீணா போயி இருக்கு. அங்கயும் போய் பாருங்க கொஞ்சம்…” என தனது வாழ்க்கை சோகத்திலும் அடுத்தவர் பாதிப்பையும் தன் பாதிப்பாக பார்க்கின்றனர் மீனவ மக்கள்.

சென்னை பெருவெள்ளத்தின் போதும், கேரள வெள்ளத்தின் போதும் யாரும் கேட்காமலேயே ஓடோடி வந்த மீனவ மக்களை வர்தா புயலின் போதும் சரி, ஒக்கி புயலின் போதும் சரி நிற்கதியாய் தவிக்கவிட்டது இந்த அரசாங்கம். அந்த வரிசையில் கஜா புயலையும் சேர்த்து விட்டார்கள்.

எச்சரிக்கை ! விரைவில் உங்கள் மூளையின் நினைவுகள் கடத்தப்படலாம் !

னித மூளைதான், ஊடுறுவல் மற்றும் தகவல் திருட்டின் அடுத்த கட்ட இலக்காக இருக்கக்கூடும் என இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அவர்கள் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில், நரம்பு மண்டல பதிய தொழில்நுட்பங்களின் (neural implant technologies) மூலமாக நமது நினைவை வெளிப்படுத்தவோ, இழக்கவோ செய்யக்கூடிய அபாயங்கள் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கெனவே அடிப்படையான மூளை பதியங்கள் இங்கு இருந்தாலும், தற்போதைய அறிவியல் வளர்ச்சி, நினைவகத்தின் வேதிவினைகளில் நிபுணத்துவம் பெறும் அபாயத்தின் முனைக்கு வந்துவிட்டதைக் காட்டுகிறது.

தற்போது, ஆழ் மூளை தூண்டுதல் (Deep Brain Stimulation) எனும் சிகிச்சை முறையில், உடலில் ஒரு கருவி வைக்கப்பட்டு, குறிப்பான இடங்களில் பொருத்தப்படும் அதன் மின்வாய்களின் மூலம் மின் தூண்டுதல்களை செலுத்தி நரம்பு மண்டலத்தை சிதைக்கும்  நடுக்குவாத (Parkinson’s) நோய்க்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது.

கருப்பு ஆடி (Black Mirror) எனும் தொலைக்காட்சி தொடர்களில் காட்டப்படும் நினைவுப் பதிய கருவிகள் தற்போது நடைமுறையில் உள்ள DBS அமைப்பு முறையினாலெயே கூடுமானவரையில் உருவாக்கப்பட்டிருக்கும். இத்தகைய அமைப்பு முறைகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து காஸ்பெர்ஸ்கி ஆய்வகமும் (Kaspersky Labs) ஆக்ஸ்போர்ட பல்கலைக்கழகமும் இணைந்து ஆய்வு மேற்கொண்டன. அவர்களது ஆய்வு முடிவுகள் மிகவும் சிறப்பாக வெளிவந்துள்ளன.

படிக்க:
♦ வரலாற்றுப் பார்வையில் E = mc2 – வீடியோவும் விளக்கமும்
♦ டார்வின், உயிரினங்களின் தோற்றம், இயற்கைத் தேர்வு – ஒரு அறிமுகம்

அவர்களின் அனுமானப்படி, நினைவக பதியக் கருவிகளை பொருத்தி நினைவை கட்டுப்படுத்தக் கூடிய தொழில்நுட்பம் அடுத்த இருபது ஆண்டுகளில் கிடைத்துவிடும்.  அமெரிக்க பாதுகாப்புத் துறையின் மேம்பட்ட ஆராய்ச்சி திட்டங்கள் முகமையால் (Defense Advanced Research Projects Agency) நிதியளிக்கப்பட்ட ஆய்வு சமீபத்தில், மூளை குறியாக்க மின் குறியீடுகளை மனிதனிடமிருந்து பிரித்து அவர்களுக்கே திருப்பி அனுப்பச் செய்வதன் மூலம் மூளையின் குறை நேர நினைவு (short-term memory)  செயல்திறனை 37 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே இருக்கும் பதியங்களில், பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் வலுவற்ற நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள். மருத்துவர்கள் மற்றும் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் பயன்படுத்தும் மருத்துவ மேலாண்மைக் கருவிகளுடன் தகவல் பரிமாற்றத்துக்காக  இணைகையில் இத்தகைய பாதுகாப்பு அபாயங்கள் இருக்கின்றன.  இத்தகைய கருவிகளில் தற்போது நடைமுறையில் உள்ள அதிநவீன கருவிகள் கூட புளூடூத் தொழில்நுட்பத்திலேயே தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன. இந்த புளூடூத் தொழில்நுட்பம், புகழ் பெற்றதாகவும், எளிமையானதாகவும் இருப்பினும் இது பாதுகாப்புக் குறைபாடு கொண்டதாகவே இருக்கிறது

தகவல் திருட்டை தடுக்கும் வழிதான் என்ன?

கெடு நோக்கம் கொண்டவர்கள் இந்த கருவியின் கட்டுப்பாட்டை ஊடுறுவி கைப்பற்றுவது மட்டுமல்லாமல், உடலுக்கு வலியையும் உடலின் இயக்கத்தை சீர்குலைக்கவும் செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல், தொழில்நுட்பம் போதுமான அளவுக்கு வளர்ந்த பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகளை கைப்பற்றுவதன் மூலம் பணயத்தொகை கேட்டு அவர்களை மிரட்டவும் முடியும் என்று அவ்வறிக்கை எச்சரிக்கை செய்கிறது.

அத்தகைய கருவிகளுக்கு இயல்பாகவே ஒரு பின்வாசல் வழி ஒன்று தேவைப்படுகிறது. நெருக்கடி நேரத்தில் மருத்துவ நிபுணர்கள் அதன் வழியாக அக்கருவியை அணுக முடியும். அதே நேரத்தில் இதில் உள்ள சிக்கலையும் ஆராய்ச்சிக் குழு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. விஐபி நோயாளி ஒருவரின் கருவியை அணுகும் வழியை ஒருவருக்கு மருத்துவ நிபுணர்கள் விற்பதை எதுவும் தடுக்கப் போவது இல்லை. அதே போல, தயாரிப்பின் போது அமைக்கப்பட்ட கடவுச்சொல்லை (factory-preset password) மாற்றுவதற்கு மறந்து போவதை தடுக்கப் போவது இல்லை.

படிக்க:
♦ பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் ! புதிய ஜனநாயகம் நவம்பர் 2018
♦ மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?

இதுவரையிலும் நரம்புமண்டல தூண்டுதல் கருவிகளைக் குறிவைத்து தாக்குதல்கள் நடைபெறாமல் இருப்பதற்கு, அத்தொழில்நுட்பம் இன்னமும் பரவலாகாமல் இருப்பதே காரணம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். தாக்கம் ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளை காலம் கடப்பதற்கு முன்னரே சரி செய்வதற்கான நேரம் இன்னமும் இருக்கிறது.

நன்றி : RT.COM
தமிழாக்கம்:

அதிமுக குண்டர்களை விடுவித்த மோடியின் அடிமை அரசு எழுவர் விடுதலையை மறுப்பது ஏன் ?

மூன்று அதிமுக குண்டர்களின் விடுதலைக்கு என்னவெல்லாம் பொழிப்புரை போடுகிறார்கள்? சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கில் ஏ1 குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் மறைந்து போன ஜெயா! அந்தப் பெரும் கொள்ளையில் கொசுறு வழக்குதான் கொடைக்கானல் ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு. நீதிமன்றத்தால் 2000-ம் ஆண்டில் ஜெயாவிற்கு தண்டனை விதிக்கப்பட்ட போது அதிமுக காலிகள் மாநிலம் முழுவதும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

எரித்துக் கொல்லப்பட்ட 3 மாணவிகள் மற்றும் எரிக்கப்பட்ட பேருந்து

அப்போது கோவை வேளாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் சுற்றுலா சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். தருமபுரியில் அப்பேருந்தை வழிமறித்த அதிமுக காலிகள் தீவைத்தனர். இதில் மூன்று மாணவிகள் பரிதாபமாக உடல் கருகி பலியாகினர்.

இந்த வழக்கில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இவர்கள்தான் எம்.ஜி.ஆர் எனும் பாசிசக் கோமாளியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசால் தற்போது விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

எடப்பாடி – மோடி அரசுகள் கூட்டாக நடத்திய இந்த கேடுகெட்ட செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட அப்பாவிகள் ஏழு பேர் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்தும் விடுதலை செய்யப்படாத நிலையில் மேற்கண்ட மூன்று பேர் எப்படி விடுதலை செய்யப்பட்டனர் என்று பலரும் கேள்விகள் எழுப்பினர்.

படிக்க:
♦ செத்தும் கெடுத்த ஜெயா ! – அழுகி நாறும் அதிமுக !
♦ ஜெயா எப்படிச் செத்தால் நமக்கென்ன ?

இதற்கு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சார்பில் தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் ஆளுநர் விளக்கமளித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு 1858 கைதிகளை 161-வது பிரிவின் கீழ் விடுவிக்குமாறு ஆளுநருக்கு தமிழக அரசு பிப்ரவரி மாதம் கோப்பு அனுப்பியதாம். அதில் 5 ஆண்டுகளுக்கு பதில் 10 ஆண்டுகள் நிறைவு செய்த கைதிகளைத்தான் விடுவிக்க வேண்டுமென ஆளுநர் மாளிகை கூறியதால் மே 3 அன்று புதிய ஆணை தமிழக அரசால் வெளியிடப்பட்டதாம். இதன் பிறகு ஒவ்வொரு கைதிக்கென தனித்தனி கோப்புக்கள் சிறைத்துறை டிஜிபி தலைமை தாங்கிய குழுவால் அனுப்பப்பட்டதாம். அதன்படி ஆளுநரின் ஒப்புதலோடு இதுவரை 1627 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனராம்.

மூன்று மாணவிகளை பேருந்தோடு  எரித்த அதிமுக காலிகள்

அதில் மூன்று அ.தி.மு.க கைதிகளின் விவரங்களை பரிசீலித்த ஆளுநர் திருப்பி அனுப்பினாராம். அதே கோப்பை தமிழக அரசு அக்டோபர் மாதம் 25 அன்று மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியதாம். பிறகு தமிழக அரசின் தலைமைச் செயலர், தலைமை வழக்கறிஞர், உள்துறை செயலர் ஆகியோர் அக்டோபர் 31 அன்று ஆளுநரை சந்தித்து விளக்கமளித்தனராம். அதிமுக ரவுடிகள் மூன்று பேரும் கும்பல் மனநிலையில் அப்படி செய்துவிட்டதாக சுட்டிக் காட்டினராம். பிறகு ஆளுநர் வழக்கறிஞரின் கருத்தைக் கேட்டாராம்.

ஆளுநர் புரோகித்துக்கு தலைமை வழக்கறிஞர் சில முக்கியமான ’லா பாயிண்டு’களை தெளிவாக்கினாராம். “இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டபோது தெரிவிக்கப்பட்ட ஐந்து கருத்துக்களாவன: 1. பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்க வேண்டும் என்ற கும்பல் மனநிலையில் செய்யப்பட்ட நடவடிக்கையின்போது மரணங்கள் ஏற்பட்டன. 2. அரசியல் தலைவர் தண்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்க அவர்கள் விரும்பினர். 3. கொல்லப்பட்டவர்களை இவர்கள் முன்பின் அறியாதவர்கள் 4. முன்கூட்டிய திட்டமிடல் ஏதும் இல்லை. 5. எல்லாமே ஒரு கணத்தில் நடந்துவிட்டது.”

அதற்கப்பால் தெளிவான ஆளுநர், ”அரசு வகுத்த விதிமுறைகளுக்குள் இந்த மூவரும் வருவர்” என வழக்கறிஞர் சொல்லியதை ஏற்று விடுவிக்கும் ஆணையை பிறப்பித்தாராம்.

படிக்க:
♦ சொத்துக் குவிப்பு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் இரண்டு குமாரசாமிகள் !
♦ மனு நீதி மன்றம் : சொத்துக் குவிப்பு வழக்கு உணர்த்தும் உண்மைகள் !

இந்திய அரசியல் சட்டம் குடியரசுத் தலைவருக்கும் மாநில ஆளுநர்களுக்கும் சில நீதித்துறை அதிகாரங்களை வழங்கியிருக்கிறது. குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் அளிக்கப்பட்ட தண்டனைகளுக்கு மன்னிப்பு வழங்கவும் அவற்றை நிறுத்தி வைக்கவும், குறைக்கவுமான அதிகாரம் குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு உண்டு.

அரசியல் சட்டப் பிரிவு 72-ன்படி குடியரசுத் தலைவரும், பிரிவு 161-ன்படி மாநில ஆளுநர்களும் அந்த அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். குடியரசுத் தலைவர் மரண தண்டனைக்கும்கூட மன்னிப்பு வழங்க முடியும். ஆளுநர்கள் மரண தண்டனை தவிர்த்த மற்ற தண்டனைகளை மன்னிக்கவும் குறைக்கவும் மட்டுமே அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். இவை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால் இந்த நிர்வாக அதிகாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்தான் மூலம்தான் நடைபெறுமே அன்றி குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ தன் விருப்பப்படி செய்ய முடியாத ஒன்று.

இந்திய ரப்பர் ஸ்டாம்ப் ராம்நாத் கோவிந்த் மற்றும் தமிழக ரப்பர் ஸ்டாம்ப் பன்வாரிலால் புரோஹித்

ரப்பர் ஸ்டாம்ப் எனும் விதி இங்கேயும் செயல்பட்டுத்தான் ஆகவேண்டும். அதிகபட்சம் இவர்கள் அமைச்சரவை அனுப்பும் பரிந்துரைகளை திருப்பி அனுப்பலாமே அன்றி அவற்றை மறுக்க முடியாது. அந்தபடிக்கு இந்த மூவர் விடுதலைக்கு ஆளுநர் அளித்திருக்கும் விளக்கத்தை பார்த்தால் அது ஏதோ அவரது தீவிர கருணை மற்றும் சட்ட ஆராய்ச்சியின் படி அளிக்கப்பட்டதைப் போன்ற தோற்றம் தருகிறது. இப்படி விளக்கும் கூறுவதே முதலில் பாரிய தவறு.

ஏனெனில் சிறைவாசிகளை விடுவிக்கக் கோரும் அரசின் பரிந்துரைகள் டெக்னிக்கலாக சரியாக இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். ஆயுள் தண்டணைக் குறைப்பு என்றால் பத்து ஆண்டுகள் சிறையில் இருந்திருக்க வேண்டும் என்று சில விதிகள் வைத்திருக்கிறார்கள். அவற்றைத்தான் ஆளுநர் சரிபார்க்க வேண்டுமே அன்றி குற்றவாளிகள் யார் அவர்களது குற்றம் என்ன என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை.

அப்படிப் பார்த்தால் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிக்கிய அப்பாவிகள் எழுவரையும், இந்துமதவெறியர்களின் செல்வாக்கால் தமிழக அரசாங்கங்கள் கடந்த ஆண்டுகளில் சிறைபிடித்த நூற்றுக்கணக்கான முசுலீம் கைதிகளையும் அல்லவா விடுவித்திருக்க வேண்டும்? அவர்களை என் விடுவிக்கவில்லை?

கேட்டால் அடிமை எடப்பாடி அரசின் டி.வி நிலைய வித்வான்கள் எழுவர் விடுதலைக்கு நாங்கள் பரிந்துரை அனுப்பிவிட்டோம், ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும், அவர் தாமதப்படுத்துவதற்கு காரணம் டில்லிதான் என்று கையைத் தூக்குகிறார்கள். அப்படித் தூக்கும் போது அவர்களது உடைகளும் கீழே கழன்று அம்மணமாக விழுவது கூட அவர்களுக்குத் தெரியவில்லை.

ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருக்கும் எழுவர்

மக்கள் அதிகாரம் அமைப்பு இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”விசாரணை அதிகாரிகளின் சுயபரிசீலனை வாக்குமூலங்கள், இராசிவ் காந்தி குடும்பத்தினரின் மன்னிப்பு, உச்ச நீதிமன்றத்தின் சாதகமான தீர்ப்பு, விடுதலைக்கான தமிழக அரசின் பரிந்துரை… என அ.தி.மு.க. கொலையாளிகளை விட இராசிவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களின் விடுதலைக்கான காரணிகளே இங்கு அதிகமாக உள்ளன. ஆயினும், இவர்கள் தமிழின உணர்வாளர்கள் என்பதாலேயே, எல்.டி.டி.இ., தீவிரவாதம், பிரிவினைவாதம், தேசப்பாதுகாப்பு போன்ற பூச்சாண்டி வேலைகளைக் காட்டி இவர்களின் விடுதலை திட்டமிட்டவகையில் தள்ளிப்போடப்பட்டு வருகின்றது.” என்று குற்றம்சாட்டியிருக்கிறது.

மேலும், “தமிழர்களின் மீதான வன்மம் காரணமாக இவர்களின் விடுதலை இனியும் தாமதிக்கப்படுமானால் அது ஒட்டுமொத்தத் தமிழர்களையும் போராட்டக் களத்திற்குத் தள்ளுவதாகவே அமையும்” என்று எச்சரித்திருக்கிறது மக்கள் அதிகாரம்.

பிரிவு 161-ன்படி விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசின் கீழ் மட்டுமே வரும். அதற்கு ஆளுநர் எனும் ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை போட்டு அங்கீரிக்கத்தான் வேண்டும். அதற்கு தில்லி மோடி அரசு உத்தரவு வேண்டும் என்றால் இவர்கள் என்ன எழவுக்கு கோட்டையில் குந்தியிருக்கிறார்கள்? இப்படி ஒரு வாதம் விளக்கம், மம்தா ஆளும் வங்கத்திலோ, சந்திரபாபு நாயுடு ஆளும் ஆந்திரத்திலோ வருமா என்று பலர் எடப்பாடி அடிமைகளைக் கேட்கின்றனர்.

ஆனால் எடப்பாடி கும்பலோ தனது கட்சி கும்பலை திருப்திப் படுத்துவதற்காக மூவர் விடுதலையை பயன்படுத்துவதோடு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்து பொறுக்கித் தின்ன காத்திருப்பதால் தனது அடிமைத்தனம் எனும் அம்மணத்தை வெட்கமின்றி ஏற்கிறது.

படிக்க:
♦ மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன
♦ ரேஷனை ஒழித்துக்கட்டு ! பா.ஜ.க.வின் கட்டளைக்கு எடப்பாடி போட்ட சலாம் !!

இந்த அடிமைகள் பேசத்தவறிய லா பாயிண்டுகளை பாஜக எஜமான்கள் அள்ளி விடுகிறார்கள். எழுவர் விடுதலை என்பது பயங்கரவாத வழக்கு தொடர்புடையதாம். அதில் சிபிஐ, இதர தேசிய முகமைகள் விசாரித்திருப்பதால் மாநில அரசு தலையிட முடியாதாம். இந்த அத்துப் போன வாதங்களையெல்லாம் மறுத்து உச்சநீதிமன்றம் தெளிவாக கூறிவிட்டதே என்றால், ஏன் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

இவர்களே ஒரு பயங்கரவாதிகள் என்பது ஒருபுறமிருக்க, ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே எனும் பயங்கரவாதியை அன்றைக்கிருந்த காங்கிரசு கட்சியின் மராட்டிய அரசு பத்தாண்டு முடிந்தது என்று விடுதலை செய்தது. இதற்கு மேல் புருலீயா ஆயுத வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ராஜீவ் கொலை வழக்கு கூட பிரிவு 302-ன் கீழ் தான் நடந்தது. அது குறித்த ஜெயின் கமிஷன் அறிக்கை மீதான விசாரணை இன்னும் முடியவில்லை. இவர்களது பொய்க் குற்றசாட்டிற்காக 27 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்பது மிகப்பெரும் அநீதியல்லவா?

பாஜக பாசிஸ்டுகளின் ராமராஜ்ஜியம்

பாஜக பாசிஸ்டுகளைப் பொறுத்தவரை எழுவர் விடுதலை செய்யப்பட்டால் தமிழகத்தில் இந்துத்துவ எதிர்ப்பு அலை இன்னும் அதிகமாய் ஓங்கும். அதனால் தேர்தலில் தமது ஆதாயம குறையுமென்பதோடு, பாஜக எதிர்ப்பு அரசியல் போராட்டங்களை வளரவிடாமல் தடுப்பதற்கும் இந்த அக்கிரமத்தை செய்கின்றனர்.

மேலும் கும்பல் வன்முறை மனநிலை எனும் இந்த விளக்கத்தின்படி பார்த்தால் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி இந்துமதவெறியர்கள் தினசரி பத்து பேர்களைக் கொன்றாலும் ஒன்றும் பிரச்சினை இல்லை. இப்போதே அவர்களை முறையாக கைது செய்து வழக்கு போடுவது இல்லை என்பதோடு எதிர்காலத்தில் யாராவது அப்படி போட்டாலும் ஆளுநர்கள் விடுவித்து விடுவார்கள்.

இந்த நாட்டின் அரசமைப்பு சட்டப்படி நடக்கவில்லை என்பதோடு, சட்டத்தை மீறுகின்ற முதல் அமைப்பாகவும் அதுதான் இருக்கிறது. எழுவர் விடுதலைக்காக தமிழகம் வீதிக்கு வந்து போராடாத வரை பாஜக பாசிஸ்டுகள் அடிமை எடப்பாடி மூலம் அதை தடுக்கவே செய்வார்கள்!

ஜனநாயகத்தின் நிறுவனங்களால் தேசத்துக்கு ஆபத்து ! பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் !!

சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா, “பிரதமர் அலுவலகம் சட்டவிரோதமாகவும் உள்நோக்கத்துடனும் தன்னைப் பதவியிலிருந்து அகற்றியிருப்பதாக” மோடி அரசின் மீது உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருக்கிறார்.

“ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிட்டால் அர்ஜென்டினாவைப் போன்ற பொருளாதார- அரசியல் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்” என்று மோடி அரசை எச்சரிக்கிறார் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா. “வாராக்கடன் என்று பல்லாயிரம் கோடி நிலுவை வைத்திருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் பட்டியலைக் கொடுக்குமாறு” ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும், பிரதமர் அலுவலகம் மற்றும் நிதியமைச்சகத்துக்கும் நோட்டீசு அனுப்புகிறார் தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆசார்யா.

2014 -இல் மோடி பிரதமர் நாற்காலியில் அமர்ந்தபோது அரங்கேற்றிய நாடகங்களை இப்போது சற்று நினைவு படுத்திப் பாருங்கள். “ஊழலற்றவர், உறுதியானவர், விரைந்து முடிவெடுப்பவர், மந்திரிகளையும் அதிகாரிகளையும் கண்ணில் விரல் விட்டு ஆட்டக்கூடியவர், ஒவ்வொரு நாளும் அவர்கள் என்ன உண்கிறார்கள், என்ன உடுத்துகிறார்கள் என்பது வரை கண்காணித்து இயக்கக் கூடியவர்” என்றெல்லாம் ஆளும் வர்க்க ஊடகங்களால் ஊதி உப்ப வைக்கப்பட்ட மோடியின் பிம்பம் காற்றுப் போன பலூனாக மாறிவருகிறது.

***

“மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷியிடம் 5 கோடி ரூபாய் இலஞ்சம் வாங்கியதாக” தனக்குக் கீழே உள்ள சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்கிறார், சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா. அஸ்தானாவின் கீழிருந்த டி.எஸ்.பி. தேவேந்திரகுமாரை, “மிரட்டிப் பணம் பறித்த குற்றம், ஆவணங்களைத் திருத்திய குற்றம்” ஆகியவற்றுக்காக கைது செய்து, சி.பி.ஐ. அலுவலகத்துக்குள்ளேயே சி.பி.ஐ. ரெய்டு நடத்துகிறது. இதை எதிர்கொள்ள, “அலோக் வர்மாவும் இலஞ்சம் வாங்கியிருப்பதாக” ஊழல் கண்காணிப்பு இயக்குநர் கே.வி.சவுத்ரியிடம் புகார் கொடுக்கிறார் அஸ்தானா.

(இடமிருந்து) மோடி அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, அமலாக்கத்துறை இணை இயக்குநர் ராஜேஸ்வர் சிங், சிபிஐ துணைக் கண்கானிப்பாளர் அஜய்குமார் பஸ்லி.

அஸ்தானா மீது அலோக் வர்மா தாக்கல் செய்திருக்கும் முதல் தகவல் அறிக்கையில், துபாயில் மொயின் குரேஷி ஆட்களிடம் இலஞ்சம் வாங்கிய விவகாரத்தில் “ரா” நிறுவனத்தின் சிறப்பு இயக்குநர் சமந்த் குமார் கோயலின் பெயர் இருக்கிறது. இதற்குப் பதிலடியாக, “அலோக் வர்மாவுக்கு நெருக்கமான அமலாக்கத்துறை (Enforcement Directorate) இணை இயக்குநர் ராஜேஸ்வர் சிங்கிற்கு பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. உடன் தொடர்பு இருப்பதாக”க் குற்றம் சாட்டுகிறது “ரா’’. “ஊழல் பேர்வழிகளுடன் சேர்ந்து கொண்டு தன்னைப் பழிவாங்குவதாக” வருவாய்த்துறை செயலர் ஹஸ்முக் அதியா மீது குற்றம் சாட்டுகிறார் அமலாக்கத்துறை இணை இயக்குநர் ராஜேஸ்வர் சிங்.

படிக்க :
♦ சிக்கினார் மோடியின் எடுபிடி சிபிஐ இயக்குனர் அஸ்தானா !
♦ பிர்லா – சஹாரா ஆவணங்கள் : மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது !

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும், ஊழல் ஒழிப்பாளர்கள் என்றும் கூறப்படும் அமலாக்கத்துறை, ஊழல் கண்காணிப்புத் துறை, ரா, சி.பி.ஐ. போன்ற நிறுவனங்களின் உண்மையான யோக்கியதையையும், மோடியால் எல்லா பதவிகளிலும் திணிக்கப்பட்டுள்ள குஜராத்தைச் சேர்ந்த கூலிப்படை அதிகாரிகளின் யோக்கியதையையும் மேற்சொன்ன நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

***

ற்போது குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் மோடியின் ‘குஜராத் இறக்குமதி’ யான அஸ்தானா, கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு வழக்கையும் லாலுவுக்கு எதிரான வழக்கையும் கையாண்டவர்; மல்லையா வழக்கைக் கையாள்பவர்.
6000 கோடி வங்கிக்கடனை ஏமாற்றி விட்டு வெளிநாட்டுக்குத் தப்பிய குஜராத் முதலாளி சந்தேசராவின் லஞ்ச டயரியில் இடம்பெற்றவர்; தனது மகள் திருமணத்தை சந்தேசராவுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் நடத்தியவர்.

ஊழல் கண்காணிப்பு இயக்குநராக மோடியால் நியமிக்கப்பட்டிருக்கும் கே.வி சவுத்திரி, வருமானவரித் துறையின் தலைமை இயக்குநர் பதவியில் இருந்த போது, ராடியா டேப் , ஸ்டாக் குரு ஊழல், எச்.எஸ்.பி.சி. கருப்பு பண வழக்குகள் போன்றவற்றைக் கிடப்பில் போட்டவர்.

மோடியின் இன்னொரு ‘குஜராத் இறக்குமதி’யான வருவாய்த்துறை செயலர் ஹஸ்முக் அதியா என்பவரோ, வங்கி மோசடி குற்றவாளிகளான நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோருக்கு உதவி செய்ததாக குற்றம் சாட்டப்படுபவர்.

மோடியின் நம்பகமான அதிகாரிகள் எனப்படுவோர், குஜராத் தரகு முதலாளிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் அதிகார வர்க்கத்துடன் கொண்டிருக்கும் நேரடி உறவுக்கான நிரூபணங்கள். சரியாகச் சொல்வதெனில், இப்போதைக்கு நமக்குத் தெரிய வந்திருக்கும் சில நிரூபணங்கள்.

***

யக்குநர் அலோக் வர்மா, சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் அஸ்தானா மீது இலஞ்ச வழக்குப் பதிவு செய்து, அவர் விசாரித்து வந்த வழக்குகளான அகஸ்தா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வழக்கு, மல்லையா வழக்கு, நிலக்கரி ஊழல், ராபர்ட் வத்ரா வழக்கு, தயாநிதி மாறன் வழக்கு ஆகியவற்றை அவரிடமிருந்து பறித்தவுடனே, அலோக் வர்மா, அஸ்தானா ஆகிய இருவரின் பதவிகளையும் முடக்குவதாக நள்ளிரவு 12.30-க்கு உத்தரவு பிறப்பிக்கிறார் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சவுத்திரி.

(இடமிருந்து) மோடிக்கு நெருக்கமானவரும் இலஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளவருமான சிபிஐ சிறப்பு இயக்க்நர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ துணைக் கண்காணிப்பாளர் தேவேந்திர குமார், வருவாய்த்துறை செயலர் ஹஸ்முக் அதியா, ‘ரா’ நிறுவனத்தின் சிறப்பு இயக்குநர் சமந்த் குமார் கோயல் மற்றும் சிபிஐ-யின் பொறுப்பு இயக்குநர் நாகேஸ்வர ராவ்.

அந்த இடத்தில் சி.பி.ஐ. இன் தற்காலிக இயக்குநராக நாகேஸ்வர ராவை நியமித்து நள்ளிரவு 1 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கிறார் மோடி. உடனே நள்ளிரவில் ஐ.பி., ரா ஆட்களுடன் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரால் சி.பி.ஐ. அலுவலகம் முற்றுகை யிடப்படுகிறது. அலோக் வர்மாவின் பதவி முடக்க உத்தரவு இரவு 2.30-க்கு அவரது வீட்டில் வழங்கப்படுகிறது.

இரவு ஒரு மணிக்குப் பதவியேற்ற நாகேஸ்வர ராவ், அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த 11 அதிகாரிகளுக்கும் இரவோடு இரவாக மாற்றல் உத்தரவு பிறப்பிக்கிறார். அதிகாலையில் அலோக் வர்மாவின் வீட்டை ஐ.பி. அதிகாரிகள் உளவு பார்க்கிறார்கள். அவர்களை விரட்டிப் பிடித்து, டெல்லி போலீசிடம் ஒப்படைக்கின்றனர் அலோக் வர்மாவின் பாதுகாப்பு அதிகாரிகள்.

நடந்திருக்கும் இந்த சம்பவங்கள் அனைத்தும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் நடைபெறும் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாதவை. “ஒரு ஜனநாயக நாட்டில் நடக்க முடியாதவை” எனக் கருதப்படுபவை.

***

ங்களது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், கிரிமினல் நடவடிக்கைகளை மறைத்துக் கொள்ளவும் பார்ப்பன பாசிசக் கும்பல் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை நிரூபிப்பதற்கான சான்றுகள் வந்தவண்ணமிருக்கின்றன.

அஸ்தானாவின் ஊழல் குறித்து நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்திருக்கும் ஐதராபாத்தை சேர்ந்த சதீஷ்பாபு சனா என்பவர், “தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை” என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்து விட்டுத் தலைமறைவாகியிருக்கிறார்.

படிக்க :
♦ சி.பி.ஐ. ராகேஷ் அஸ்தானா வழக்கில் உயிருக்கு ஆபத்தென சனா புகார் !
♦ குஜராத் : அரசமைப்பையே குற்றக் கும்பலாக்கும் சட்டம் !

இந்த வழக்கை விசாரித்த அதிகாரியும் தற்போது அந்தமானுக்கு மாற்றப்பட்டிருப்பவருமான டி.எஸ்.பி. அஜய் குமார் பஸ்ஸியும் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். “அஸ்தானாவின் ஊழலுக்கும் அதில் “ரா” அதிகாரிகள் தொடர்புக்கும் ஆதாரம் இருப்பதாகவும், தான் மாற்றல் செய்யப்பட்டுவிட்டதால், தற்போது அந்த வழக்கைக் கையாளும் அதிகாரிகள் சாட்சியங்களை அழித்து விடுவார்கள் என்றும், தன்னுடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும்” தனது மனுவில் அவர் கூறுகிறார்.

இந்த நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் இதே வேளையில், “குஜராத் பா.ஜ.க. அமைச்சர் ஹரேன் பாண்டியாவை கொலை செய்யும் காண்டிராக்டை டி.ஜி.பி. வன்சாராதான் தனக்கு ஒப்படைத்தார்” என்று சோரபுதீன் சிறையில் தன்னிடம் கூறியதாக, சோரபுதீன் கொலை வழக்கை விசாரித்து வரும் மும்பை நீதிமன்றத்தில் நவம்பர் 5 ஆம் தேதியன்று கூறியிருக்கிறார் அரசு தரப்பு சாட்சியான ஆசம்கான்.

சனாதன் சன்ஸ்தா பயங்கரவாதிகளும், பா.ஜ.க. அரசும் வேறு வேறு என்றும், என்ன இருந்தாலும் அரசமைப்பு சட்டத்துக்கும் மரபுகளுக்கும் கட்டுப்பட்டுத்தான் பா.ஜ.க. அரசு ஆட்சி நடத்தியாக வேண்டும் என்றும் நம்பிக் கொண்டிருந்த பல பேருடைய மூட நம்பிக்கைகளையும் மோடி – அமித் ஷா கும்பல் தகர்த்து வருகின்றது.

அரசமைப்பின் எல்லா நிறுவனங்களும் பார்ப்பன பாசிஸ்டுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மோடி – அமித் ஷா கும்பலின் கூலிப்படையாக செயல்பட்ட குஜராத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மைய அரசின் அதிகாரத்தை ஆக்கிரமித்திருக்கின்றனர். அந்த வகையில், 2014 தேர்தலின்போது மோடி அளித்த ஒரு வாக்குறுதி நிறைவேறியிருக்கிறது. “குஜராத் மாடல்” அதன் உண்மையான பொருளில் இந்தியாவின் மீது திணிக்கப்படுகின்றது.

***

ற்றப்படி எல்லா வாக்குறுதிகளும் பொய்த்துவிட்டன. எல்லா முனைகளிலும் தோல்வி! பண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் இருந்த நிலையிலிருந்தும் அழிக்கப்பட்ட சிறுதொழில்கள் – விவசாயம், அதிகரிக்கும் வேலையின்மை, விவசாய விளைபொருட்களின் விலை வீழ்ச்சி, பெட்ரோல் விலையில் மோடி நடத்தும் கொள்ளை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அரசு ஆசியுடன் அடுத்தடுத்து தப்பியோடும் வங்கிக் கொள்ளையர்கள், ரியல் எஸ்டேட் வீழ்ச்சி… எனப் பொருளாதாரம் பேரழிவின் விளிம்பில் நிற்கிறது.

அம்பானி உள்ளிட்ட குஜராத்தி பனியா முதலாளிகளுக்குக் கஜானாவைக் கொள்ளையடித்து வழங்குவதுதான் மோடி – அமித் ஷா கும்பலின் நோக்கம் என்பதைத் துலக்கமாக நிரூபிக்கிறது ரஃபேல் ஊழல்.

படிக்க :
♦ மோடி அரசின் ரஃபேல் ஊழலுக்கு முன்னால் போபர்ஸ் எல்லாம் ஜுஜூபி !
♦ ரஃபேல் விமானம் : மூட்டைப் பூச்சி மிசின் தயாரிக்க அம்பானிக்கு அள்ளிக் கொடுக்கும் மோடி

2013-இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அடைந்த தோல்விகளைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான தோல்வியை மோடி அரசு எதிர்கொண்டிருக்கிறது. சொல்லிக்கொள்ளப்படும் ஜனநாயக நிறுவனங்களை ஆக்கிரமிப்பதையும், சிதைப்பதையும் அப்பட்டமாகவும் திமிர்த்தனமாகவும் அரங்கேற்றி வருகிறது.

ஆளும் வர்க்கம் விரும்பியவாறு பொருளாதாரத்தைத் தேக்க நிலையிலிருந்து மீட்பதற்கும் மோடியால் இயலவில்லை. இவையனைத்தும் நிரூபிக்கப்பட்ட பின்னரும், ஆளும் வர்க்கம் மோடியைக் கைவிடவில்லை. மோடி – அமித் ஷா கும்பலின் குற்றங்கள், தோல்விகள் அனைத்தையும் மறைத்து, இந்த அரசைப் பாதுகாக்க முனைந்து நிற்கின்றன கார்ப்பரேட் ஊடகங்கள்.

“இந்தச் சூழலில், நாடு முன்னேற வேண்டுமென்றால் இன்னும் பத்து ஆண்டுகளுக்காவது உறுதியான ஆட்சி தேவை” என்று கூறியிருக்கிறார் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல். இதனை பாசிசக் கும்பலின் கருத்து என்று மட்டும் கருதி ஒதுக்கிவிட முடியாது. அது ஆளும் வர்க்கத்தின் கருத்தும்கூட.

பொதுச்சொத்துகள், வங்கிப்பணம், அரசு கஜானா ஆகியவற்றின் மீது அவர்கள் நடத்திவரும் தீவட்டிக் கொள்ளையைத் தலைமை தாங்கி நடத்திக் கொடுப்பதற்கும், மக்களை ஒடுக்குவதற்கும், திசை திருப்புவதற்கும் அவர்களின் முதல் தெரிவு பார்ப்பனப் பாசிசம்தான்.

எனினும், மோடி அரசு மக்களின் வெறுப்புக்கு இலக்காகி இருப்பதை ஆளும் வர்க்கத்தினரால் மறுக்கவியலவில்லை. “என்ன செய்வது, மோடிக்கு வேறு மாற்று இல்லையே” என அவநம்பிக்கையைப் பரப்புவதன் மூலம், பார்ப்பன பாசிசத்தை ஏற்றுக் கொள்வதற்கு மக்களுடைய மனதைப் பக்குவப்படுத்துகிறார்கள்.

***

க்களைத் திசை திருப்புவதற்கும், இந்து தேசவெறி, மதவெறிக்கு பலியாக்குவதற்கும் வேறொரு உத்தியை ஆர்.எஸ்.எஸ். கையாள்கிறது. உச்ச நீதிமன்றத்தின் சபரிமலை தீர்ப்பு, பட்டாசு தீர்ப்பு போன்றவற்றையும், அயோத்தி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாததையும் காட்டி, “இந்த ஜனநாயகத்தின் நிறுவனங்கள் இந்துக்களின் உணர்வுக்கு எதிராக இருப்பதாக” பரப்புரை செய்கிறது.

உத்திர பிரதேசத்தில் ஊர்களுக்கு சமஸ்கிருத பெயர் மாற்றம், ராமன் சிலை, அயோத்தி கோயில் என்று மதவெறியைக் கிளப்புகிறது. “நிறுவனங்களைப் பாதுகாப்பது முக்கியம்தான். ஆனால் நிறுவனங்களை விடத் தேசம் பெரிது” என்று எச்சரிக்கிறார் அருண் ஜெட்லி.

“அர்பன் நக்சல்களால் தேசத்துக்கு ஆபத்து” என்று தொடங்கி, இப்போது, தான் கோரிய வண்ணம் பணத்தை விடுவிக்க மறுக்கும் ரிசர்வ் வங்கி, தனக்குக் கட்டுப்பட மறுக்கும் சி.பி.ஐ. தலைமை, தொந்தரவு கொடுக்கும் தகவல் ஆணையம், இந்துக்களின் உணர்வை மதிக்காத நீதிமன்றம், பிறகு எதிர்க்கட்சிகள் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நிறுவனங்களை”த் ‘தேசத்தின் எதிரி’யாகச் சித்தரிக்கும் திசையில் பார்ப்பன பாசிசத்தின் அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.

புதிய ஜனநாயகம், நவம்பர் 2018

மின்னூல்:

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart