Wednesday, June 24, 2026
முகப்பு பதிவு பக்கம் 410

தோழர்களே ! உங்கள் சக்தியை ஏன் விரயம் செய்கிறீர்கள் ?

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 41 (தொடர்ச்சி)

மாக்சிம் கார்க்கி
தாய் ஒருபுறமாக நெருக்கித் தள்ளப்பட்டாள். அவள் பயத்தால் ஒரு சிலுவையின் மீது போய்ச் சாய்ந்து ஏதோ ஓர் அடியை எதிர்நோக்கி கண்களை மூடி நின்றாள். குழம்பிப்போன குரலோசை அவளது காதுகளைச் செவிடுபடச் செய்தது. பூமியே அவளது காலடியை விட்டு அகன்று செல்வதாக ஒரு பிரமை. பயத்தினால் அவளுக்கு மூச்செடுக்கவே முடியாமல் திக்குமுக்காடியது. போலீஸ் விசிலின் சப்தம் ஆபத்தை அறிவித்து ஒலித்தது. முரட்டுக் குரல்கள் உத்தரவு போட்டன. பெண்களின் கூச்சல் பீதியடித்துக் கதறின; வேலிக் கம்பிகள் முறிந்து துண்டாயின. கனத்த பூட்ஸ் காலடிகள் வறண்ட பூமியில் ஓங்கியறைந்து ஒலித்தன. இந்தக் களேபரம் அதிக நேரம் நீடித்தது. எனவே அவள் இந்தப் பயபீதியால் அஞ்சி நடுங்கிப்போய் கண்களை மூடியவாறே அதிக நேரம் நின்று கொண்டிருக்க இயலவில்லை.

அவள் ஏறிட்டுப் பார்த்தாள். கூச்சலிட்டுக் கொண்டும் தன் கைகளை முன்னே நீட்டிக்கொண்டும் பாய்ந்து ஓடினாள். கொஞ்ச தூரத்தில், சமாதிக் குழிகளுக்கு இடையேயுள்ள குறுகிய சந்தில், போலீசார் அந்த நீண்ட கேசமுடைய இளைஞனைச் சுற்றி வளைத்துக் கொண்டு நின்றார்கள். அவனைக் காப்பாற்றுவதற்காக நாலாபுறத்திலிருந்தும் சாடி முன்னேறி வரும் ஜனங்களை அடித்து விரட்டிக் கொண்டிருந்தார்கள். உரிய வாள்கள் மனிதத் தலைகளுக்கு மேலாகப் பளபளத்து மின்னி திடீரெனக் கூட்டத்தினர் மத்தியில் குதித்துப் பாய்ந்தன. ஒடிந்த வேலிக் கம்பிகளும், கம்புகளும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டன. கூச்சலிடும் ஜனங்கள் வெளுத்த முகமுடைய அந்த இளைஞனைச் சுற்றிலும் வெறியாட்டம் ஆடிக்கொண்டு குமைந்து கூடினார்கள். இந்த வெறியுணர்ச்சிக் களேபரப் புயலுக்கு மத்தியில் அந்த இளைஞனது பலம் வாய்ந்த குரல் ஓங்கி ஒலித்தது:

”தோழர்களே! உங்கள் சக்தியை ஏன் விரயம் செய்கிறீர்கள்?”

அவனது வார்த்தைகள் தெளிவு தருவனவாக ஒலித்தன. ஜனங்கள் தங்கள் கைகளிலிருந்த கழிகளையும் கம்புகளையும் விட்டெறிந்துவிட்டு, ஒருவர் பின் ஒருவராக ஓட ஆரம்பித்தார்கள். ஆனால் தாயோ ஏதோ ஒரு தடுக்க முடியாத சக்தியால் தூண்டப்பெற்று முன்னோக்கி முண்டிச் சென்று கொண்டிருந்தாள். பின்னால் சரிந்துபோன தொப்பியோடு நிகலாய் இவானவிச் அந்த வெறிகொண்ட ஜனக்கூட்டத்தை விலக்கித் தள்ளிக் கொண்டிருப்பதை அவள் கண்டாள்.

”உங்களுக்கு என்ன பைத்தியமா? அமைதியாயிருங்கள்!” என்று கத்தினான் அவன்.

அவனது ஒரு கை செக்கச் சிவந்து காணப்படுவதாகத் தாய்க்குத் தோன்றியது.

“நிகலாய் இவானவிச் இங்கிருந்து போய்விடுங்கள்” என்று அவனை நோக்கி ஓடிக்கொண்டே கத்தினாள் தாய்.

“நீங்கள் எங்கே போகிறீர்கள்? அவர்கள் உங்களைத் தாக்குவார்கள்”

அவளது தோள்மீது ஒரு கரம் விழுந்தது. திரும்பினாள்; அவளுக்கு அடுத்தாற்போல் தலையிலே தொப்பியற்றுக் கலைந்துபோன தலைமயிரோடு சோபியா நின்றுகொண்டிருந்தாள்; அவள் ஒரு பையனைத் தன் கையில் பிடித்துக்கொண்டு நின்றாள். அந்தப் பையன் இன்னும் வாலிப வயதை எட்டிப்பிடிக்காத, பால்மணம் மாறாதவனாயிருந்தான். அவன் தன் முகத்திலுள்ள ரத்தத்தைத் துடைத்துக்கொண்டே, துடிதுடிக்கும் உதடுகளால் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்:

”என்னைப் போகவிடுங்கள் …… எனக்கு ஒன்றுமில்லை …..”

”இவனைப் பார்த்துக்கொள்ளுங்கள், நம் வீட்டுக்குக் கொண்டு போங்கள். இதோ கைக்குட்டை; அவன் முகத்தில் ஒரு கட்டுப்போடுங்கள்’ என்று படபடத்துக் கூறினாள் சோபியா. பிறகு அவள் அந்தப் பையனின் கையைத் தாயின் கையில் பிடித்து ஒப்படைத்துவிட்டு ஓடினாள். ஓடும்போதே சொன்னாள்:

“சீக்கிரமாகப் போய்விடுங்கள். இல்லையென்றால் அவர்கள் உங்களைக் கைது செய்துவிடுவார்கள்”

இடுகாட்டின் நாலாபுறங்களிலும் ஜனங்கள் சிதறியடித்து ஓடினார்கள், போலீஸ்காரர்கள் சமாதி மேடுகளின் மேலெல்லாம் ஏறிக் குதித்து ஓடினார்கள். அவர்களது நீண்ட சாம்பல் நிறச் சட்டைகள் முழங்கால் வரையிலும் தொங்கி, முட்டிக் கால்களைத் தட்டின, அவர்கள் தங்கள் வாள்களைச் சுழற்றிக்கொண்டும். வாய்க்கு வந்தபடி சத்தமிட்டுக்கொண்டும் தாவித் தாவிப் பின்தொடர்ந்தார்கள். அந்தப் பையன் அவர்களை உர்ரென்று முறைத்துப் பார்த்தான்.

”சீக்கிரம், சீக்கிரம், புறப்படு” என்று அவனது முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டே கத்தினாள் தாய்.

“என்னைப் பற்றிக் கவலைப்படாதே — இது ஒன்றும் வலிக்கவில்லை” என்று முணுமுணுத்துக்கொண்டே அவன் வாயிலிருந்த ரத்தத்தைக் கக்கினான். “அவன் வாளின் கைப்பிடியால் என்னை ஓர் அடி கொடுத்தான். ஆனால் பதிலுக்கு என்னிடம் அவனும் வாங்கிக் கட்டிக்கொண்டான். நான் ஒரு கழியினால் அவனை ஒரு விளாசு விளாசினேன்; பயல் கதறி ஊளையிட்டான். நீங்கள் கொஞ்சம் பொறுங்கள்” என்று அவன் தனது ரத்தம் தோய்ந்த முஷ்டியை உலுக்கியாட்டிக் கொண்டே கத்தினான். “வரப்போகிற சண்டையை நினைத்துப் பார்த்தால், இது என்ன பிரமாதம்? நாங்கள் —- தொழிலாளர்களாகிய நாங்கள் அனைவரும் கிளர்ந்தெழும்போது, உங்களையெல்லாம் சண்டை போடாமலே துடைத்துத் தூர்த்துவிடுகிறோம்!”

”புறப்படு சீக்கிரம்” என்று அவனை அவசரப்படுத்திக்கொண்டே, இடுகாட்டின் வேலிப்புறமாகவுள்ள சிறு வாசலை நோக்கி நடந்தாள் தாய். வெளியேயுள்ள பரந்த வயல்வெளியில் போலீஸ்காரர்கள் பதுங்கிக் காத்திருந்து, ஜனங்கள் இடுகாட்டைவிட்டு வெளியே வந்ததும், பாய்ந்து தாக்குவதற்குத் தயாராக இருப்பார்கள் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால், அவள் அந்த வாசலுக்கு வந்ததும், ரொம்பவும் ஜாக்கிரதையோடு இலையுதிர்காலத்தின் இருள் போர்வை போர்த்திருந்த வெளியைப் பார்த்தாள். அங்கு யாரையும் காணோம், மெளனமே நிலவியது. அவளுக்குத் தைரியம் வந்தது.

“சரி, இப்படி வா. முகத்தில் ஒரு கட்டுப் போடுகிறேன்” என்று சொன்னாள் தாய்.

”அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள் — இதைக் கண்டு நான் ஒன்றும் வெட்கப்படவில்லை” என்றான் அவன். “இது ஒரு சரியான நேர்மையான சண்டை. அவன் என்னை அடித்தான். பதிலுக்கு நானும் அவனை அடித்துவிட்டேன்!”

ஆனால் தாய் விறுவிறென்று அவனது முகத்திலிருந்த காயத்துக்குக் கட்டுப்போட்டாள். ரத்தத்தைக் கண்ணால் கண்டதும் அவள் மனத்தில் ஓர் அனுதாப உணர்ச்சி ஏற்பட்டது. அவளது கைவிரல்கள் வெதுவெதுப்பான அந்தச் செங்குருதியின் பிசுபிசுப்பை உணர்ந்தபோது, அவளது உடம்பெல்லாம் ஒரு குளிர்நடுக்கம் பரவிச் சிலிர்த்தோடியது. அவசர அவசரமாக, வாயே பேசாமல் அவள் அந்தச் சிறுவனை வயல்வெளியின் குறுக்காக இழுத்துக்கொண்டு ஓடினாள்.

“தோழரே, என்னை எங்கே கொண்டு போகிறீர்கள்?” என்று தன் வாயின்மீது போட்டிருந்த கட்டை அவிழ்த்துக்கொண்டே கிண்டலாகக் கேட்டான். அவன். “உங்கள் உதவியில்லாமலே, நான் போய்விடுவேனே.”

ஆனால் அவனது கரங்கள் நடுநடுங்குவதையும், கால்கள் பலமிழந்து தடுமாறுவதையும் அவள் கண்டாள். பலமற்ற மெல்லிய குரலில் அவன் பேசிக்கொண்டும் கேள்விகள் கேட்டுக்கொண்டும் விரைவாக வந்தான். தான் கேட்கும் கேள்விகளின் பதிலுக்காகக் கூட அவன் காத்திராமல் பேசினான்:

“நீங்கள் யார்? நான் ஒரு தகரத் தொழிலாளி. என் பேர் இவான். இகோர் இவானவிச்சின் கல்விக்குழாத்தில் நாங்கள் மூன்று பேர் இருந்தோம். மூன்று பேரும் தகரத் தொழிலாளிகள். ஆனால் நாங்கள் மொத்தத்தில் பதினோரு பேர். எங்களுக்கு அவர் மீது ஒரே பிரியம். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் – எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட ……”

ஒரு தெருவுக்கு வந்ததும் தாய் ஒரு வண்டியை வாடகைக்கு அமர்த்தினாள். இவானை அதில் ஏற்றி உட்காரவைத்தவுடன் அவள்: ”இனிமேல் ஒன்றும் பேசாதே” என்று மெதுவாகச் சொல்லிவிட்டு மீண்டும் அந்தக் கைக்குட்டையால் அவனது வாயில் ஒரு கட்டுப்போட்டாள்.

படிக்க:
மக்கள் மருத்துவர் 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் மறைந்தார் ! நேரடி ரிப்போர்ட்
1984 சீக்கியர் படுகொலைகளில் ஆர்.எஸ். எஸ். – பா.ஜ.க. வின் பங்கு !

அவன் தன் கையைத் தன் முகத்துக்குக் கொண்டு போனான். அந்தக் கட்டை அலைத்து அவிழ்க்கச் சக்தியற்று மீண்டும் தன் கையை மடிமீது நழுவவிட்டான். இருந்தாலும் அந்தக் கட்டோடேயே அவன் முணுமுணுத்துப் பேசத் தொடங்கினான்:

”அருமைப் பயல்களா, இதை மட்டும் நான் மறந்துவிடுவேன் என்று நினைக்காதீர்கள்…… முன்னால் தித்தோவிச் என்ற ஒரு மாணவர் எங்களுக்கு வகுப்பு நடத்தினார். அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிப் பாடம் சொன்னார்……… பிறகு அவர்கள் அவரையும் கைது செய்துவிட்டார்கள்………”

தாய் இவானைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டு, அவனது தலையை இழுத்து மார்போடு அணைத்துக்கொண்டாள். திடீரென அந்தப் பையன் கிறங்கி விழுந்து மெளனமாகிக் கிடந்தான். பயபீதியால் செய்வது இன்னதென்று அறியாமல் திகைத்தாள் தாய். ஒவ்வொரு பக்கத்திலும் பார்த்துக்கொண்டாள். எங்கோ ஒரு மூலையிலிருந்து கிளம்பி, போலீஸ்காரர்கள் தன்னைப் பின்தொடர்ந்து வருவதாக அவளுக்குத் தோன்றியது. அவர்கள் ஓடோடியும் வந்து, இவானின் கட்டுப்போட்ட தலையைப் பிடித்து இழுத்துப்போட்டு அவனைக் கொல்லப் போவதாகத் தோன்றியது.

“குடித்திருக்கிறானா?” என்று வண்டிக்காரன் தன் இடத்தைவிட்டுத் திரும்பி புன்னகை செய்து கொண்டே கேட்டான்.

“ரொம்ப ரொம்பக் குடித்துவிட்டான்” என்று பெருமூச்சோடு சொன்னாள் தாய்.

“இது யார் உங்கள் மகனா?”

“ஆமாம். ஒரு செருப்புத் தொழிலாளி. நான் ஒரு சமையற்காரி.”

”கஷ்டமான வாழ்க்கைதான், இல்லையா?”

அவன் தன் சாட்டையை ஒரு சுண்டுச் சுண்டி வாங்கினான். மீண்டும் அந்த வண்டிக்காரன் திரும்பவும் பேசினான்:

”கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இடுகாட்டில் நடந்த கலவரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டீர்களா? அவர்கள் யாரோ ஓர் அரசியல்வாதியை, அதிகாரிகளுக்கு எதிராக வேலை செய்த ஓர் அரசியல்வாதியைப் புதைக்கச் சென்றார்கள் போலிருக்கிறது. அங்கு அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சண்டை. அந்த அரசியல்வாதியைச் சேர்ந்த நண்பர்கள்தாம் அவனைப் புதைக்கப் போனார்களாம். அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள். ‘மக்களை ஏழைகளாக்கும் அதிகாரிகள் ஒழிக’ என்று அவர்கள் கத்தினார்களாம். உடனே போலீஸார் வந்து, அவர்களை அடிக்கத் தொடங்கினார்களாம். சிலர் படுகாயம் அடைந்ததாகக் கூடச் சொல்லிக் கொள்கிறார்கள். போலீஸ்காரர்களுக்கும் அடி விழுந்ததாம். அவன் ஒரு கணநேரம் மெளனமாயிருந்தான். பிறகு விசித்திரமான குரலில் வருத்தத்துடன் தலையை ஆட்டிக்கொண்டே பேசத் தொடங்கினான். “செத்தவர்களை அடக்கம் செய்வதோ இப்படி இருக்கிறது! செத்தவர்களுக்கோ அமைதியே கிடையாது!”

வண்டிச் சரளைக் கற்களில் ஏறி விழும்போது, இவானின் தலை தாயின் மார்போடு மெதுவாக மோதிக்கொண்டது. வண்டிக்காரன் பெட்டியில் பாதி திரும்பியவாறு உட்கார்ந்து ஏதேதோ பேசி வந்தான்.

“ஜனங்களுக்குப் பொறுமையின்மை ஏற்பட்டுவிட்டது. உலகில் எங்கு பார்த்தாலும் ஒரே களேபரம்தான் தலைதூக்கி வருகிறது. நேற்று ராத்திரி என் அடுத்த வீட்டுக்காரன் வீட்டுக்குப் போலீஸார் வந்து, விடியும் வரை எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுச் சோதனை போட்டார்கள். அப்புறம் ஒரு கொல்லுலைத் தொழிலாளியைத் தங்களோடு கொண்டு போய்விட்டார்கள். அவனை இரவு வேளையிலே ஆற்றங்கரைக்குக் கொண்டுபோய் நீரில் அமுக்கிக் கொன்றுவிடுவார்கள் என்று ஜனங்கள் பேசிக்கொள்கிறார்கள். அந்தக் கொல்லன் ரொம்ப நல்லவன்.”

“அவன் பேர் என்ன?” என்று கேட்டாள் தாய்.

அந்த கொல்லன் பேரா? சவேல். சவேல் எவ்சென்கோ. சிறு வயசுதான். இருந்தாலும், அவனுக்கு நிறைய விஷயம் தெரியும். விஷயங்களைத் தெரிந்துகொள்ளவே இங்கே அனுமதி கிடையாது என்றுதான் தோன்றுகிறது. அவன் எங்களிடம் வந்து பேசுவான். வண்டிக்காரர்களே உங்கள் வாழ்க்கை எப்படிப்பட்டது? என்பான். ‘உண்மையைச் சொல்லப்போனால் எங்கள் வாழ்க்கை நாயினும் கேடான வாழ்க்கைதான்’ என்று நாங்கள் சொல்லுவோம்.”

“நிறுத்து’ என்றாள் தாய்.

வண்டி நின்றதால் ஏற்பட்ட குலுங்கலில் இவான் விழித்துக்கொண்டு லேசாக முனகினான்.

“விழித்துக்கொண்டானா?” என்றான் வண்டிக்காரன்: “தம்பி, ஓட்கா வேணுமா. ஓட்கா!”

மிகுந்த சிரமத்தோடு இவான் நடந்துகொண்டே தன்னைத் தாங்கிப் பிடிக்கும் தாயை நோக்கிச் சொன்னான்:

“பரவாயில்லை. என்னால் முடியும்.”

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

ஸ்டெர்லைட்டை விரட்டுவோம் | சென்னையில் டிசம்பர் 29 மக்கள் அதிகாரம் கூட்டம்

14 பேரின் உயிர்த்தியாகம் வீண்போகலாமா?
தனிச்சட்டம் இயற்று – ஸ்டெர்லைட்டை விரட்டு !
மே-22 துப்பாக்கிச்சூடு படுகொலை – போலீசாரை கைது செய்!

அரங்கக் கூட்டம்
டிசம்பர்-29, 2018 மாலை 4 மணி
சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம்.

பல்வேறு கட்சி மற்றும் அமைப்புத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்! அனைவரும் வாரீர்!

ன்பார்ந்த தமிழக மக்களே!

டெல்லி தேசிய பசுமைத்தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை மீ்ண்டும் திறக்கலாம் என உத்திரவிட்டுள்ளது. இது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். பசுமைத் தீர்ப்பாயம்  தனது அதிகார வரம்பை மீறி தமிழக அரசின் ஆணையை ரத்து செய்தது. மக்கள் தரப்பில் வாதிட அனுமதி மறுத்தது. ஆய்வுக்குழுவில் தமிழக நீதிபதிகளை நியமிக்ககூடாது என்ற ஸ்டெர்லைட் வாதத்தை ஏற்றது. தீர்ப்பாய நீதிபதி உத்திரவிடும் முன் அதன் நகல் ஸ்டெர்லைட் இணைய தளத்தில் வெளியானது. இப்படி ஆரம்பம் முதலே ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பாயம் செயல்பட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கோயல் ஆர்.எஸ்.எஸ். சார்பாளர் மட்டுமல்ல. பா.ஜ.க அரசின் ஆசி பெற்றவர். ஆய்வுக்குழுவில் இருந்த நீதிபதி தருண் அகர்வால் பி.எப். பணம் கையாடல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். ஸ்டெர்லைட் வழக்கை தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரிக்காமல் டெல்லி அமர்வில் விசாரித்தார்கள். எனவேதான் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக வழங்கப்பட்ட பசுமைத்தீர்ப்பாயத்தின் உத்திரவு அநீதியானது அதை ஏற்க கூடாது என்கிறோம்.

போலீசு எத்தகைய அடக்குமுறைகள் செலுத்தினாலும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் என எச்சரிக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள். மக்கள் அதிகாரம் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம் மறியல் செய்தது. பசுமைத்தீர்ப்பாய உத்திரவை கண்டித்தும், தனிச்சட்டம் இயற்றக்கோரியும் தூத்துக்குடியில் பிரசுரம் கொடுத்ததற்காக மக்கள் அதிகாரம் தோழர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் போலீசாரின் தடைகளைத் தாண்டி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். அனைத்துக் கட்சிகளும் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என குரல்  கொடுக்கின்றன. இந்நிலையில்தான் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஸ்டெர்லைட்டை திறக்க வேண்டும் என்ற உத்திரவிற்கு நான்கு வார காலம் தடைவிதித்துள்ளது. ஆனால், தமிழக அரசோ கள்ள மவுனம் சாதிக்கிறது.

ஏன் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் மட்டுமே வெளியிடப்படும்  ஆர்சனிக், காரியம் போன்ற ஆபத்தான நச்சு கழிவுகள், காற்றில் பரவுகிறது. நிலத்தடி நீரில் கலக்கிறது. இதனால் சுவாசக்கோளாறு, சிறுநீரகக் கோளாறு, கேன்சர், கர்ப்பப்பை சிதைவு போன்ற கோடிய நோய்கள் ஏற்பட காரணமாகிறது. ஆர்சனிக், காரியத்தால் நிச்சயமாக சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலையை மே மாதம் மூடிய பிறகு தூத்துக்குடியில் காற்றின் மாசு அளவு குறைந்துள்ளது என ஆய்வறிக்கை சொல்கிறது.

படிக்க:
கொலைகார ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்த சில விபத்துக்கள் – ஒரு பார்வை !
ஸ்டெர்லைட் போராட்டம் : கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் இராஜு | காணொளி

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து அறுபது சதவீதத்திற்கு மேல் காப்பர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உள்நாட்டுத்தேவை குறைவுதான். இலாப வெறிக்காக தரம் குறைந்த நச்சுத்தன்மை அதிகம் வாய்ந்த மூலப்பொருள்கள் தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்படுகின்றன. அபாயகரமான இந்த நச்சுக் கழிவுகளை யாரிடம் எவ்வளவு விற்றார்கள்? எந்த விபரமும் தமிழக அரசுக்கு இதுவரை தெரியாது.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமல் 5 ஆண்டுகள் சட்டவிரோதமாக இந்த ஆலை இயங்கியுள்ளது. 25 மீட்டருக்கு பசுமையை ஏற்படுத்த வேண்டும், ஜிப்சம் பாண்டு கட்ட வேண்டும், காற்று, நீரில் மாசு கலந்திருப்பது குறித்த ஆய்வை அரசு ஆய்வகத்தில் செய்து காட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட எந்தவொரு விதிமுறையையும் இதுவரை ஸ்டெர்லைட் கடைபிடிக்கவில்லை.

இப்போது, ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று மக்களை கேட்கிறது.  சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின்படி ஸ்டெர்லைட்தான் எங்களால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று நிரூபிக்க வேண்டும். தவறினால் ஆலையை மூடலாம். இதுதான் சட்டம். ஆனால், இந்த சட்டத்தை அமுல்படுத்த  வேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையோடு கூட்டு சேர்ந்து விதிமுறைகளை மீறியுள்ளது. இதனால் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு இல்லை என்று சொல்ல முடியுமா? ஸ்டெர்லைட் ஆலை தொழில் முறை தொடர் குற்றவாளி. இனி மன்னிப்பே கிடையாது. தமிழகத்திலிருந்து நிரந்தரமாக விரட்டியடிக்கப்பட வேண்டும்.

துப்பாக்கிச் சூடு படுகொலையை கண்டிக்காத, ஸ்டெர்லைட்டை ஆதரிக்கும் ஒரே கட்சி பா.ஜ.க. பிரதமர் மோடி இலண்டன் சென்ற போது அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்து கொண்டவர் வேதாந்தா நிறுவனத்தின் முதலாளி அனில் அகர்வால். இவர் பா.ஜ.க. விற்கு பெரும் தொகையை தேர்தல் நிதியாக கொடுத்துள்ளார். அந்த பி.ஜே.பி யின் ஆசிபெற்றதுதான் தமிழக எடப்பாடி அரசு.

தமிழக போலீசார் அருகிலிருந்து தலையின் பின்பக்கத்தில் குறி பார்த்து அதிநவீன துப்பாக்கியால் சுட்டு கொன்றார்கள். இது திட்டமிட்ட படுகொலை என போஸ்ட் மார்ட்டம் அறிக்கை சொல்கிறது. இதுவரை எந்தப் போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. கைது செய்யப்பட வில்லை. எந்த போலீசார் மீதும் கொலை வழக்குக்கூட பதிவு செய்யப்படவில்லை.

பிரசுரத்தை  தரவிறக்கம் செய்ய  இங்கே அழுத்தவும்.

ஸ்டெர்லைட்டு ஆலைக்காகத்தான் நம் மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். பெண்கள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள் என 14 பேரை உயிர்த்தியாகம் செய்துள்ளோம். ஆலையை மீண்டும் திறக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. கூடவே கூடாது.

இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசு கொடுத்த இருபது இலட்சம் இழப்பீடு தொகையை நாங்களும் தர தயாராக இருக்கிறோம் என ஸ்டெர்லைட் சி.இ.ஓ. சொல்கிறார். தூத்துக்குடி மக்களின் மேம்பாட்டிற்காக, மருத்து செலவிற்காக, குடிநீர் தேவைக்காக நாங்கள் செலவு செய்ய தயாராக இருக்கிறோம் என அறிவித்து பணம் திண்ணி கழுகுகளை உருவாக்க முயல்கிறான். மக்கள் கோரிக்கை பணம், நிவாரணம் அல்ல. மக்களை கொல்லும் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றுவதுதான். தமிழக சட்ட மன்றத்தில் இதற்கான சிறப்புச்சட்டம் இயற்றும் வரை நந்திகிராம் சிங்கூர் போல் மக்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் பற்றிப் படர வேண்டும்.

மக்கள் அதிகாரம் – சென்னை மண்டலம்,
தொடர்புக்கு: 91768 01656.


இதையும் பாருங்க:

லட்சம் மக்கள் கூடுவோம்! ஸ்டெர்லைட்டை மூடுவோம்

புதைந்தது உடலல்ல விதையான வீரமடா

ஏத்திவிடு ஐயப்பா … தூக்கிவிடு ஐயப்பா … கோவன் பாடல்

க்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் 15-ஆம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு கடந்த டிச 16 அன்று மதுரையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் ம.க.இ.க. மையக் கலைக்குழுத் தோழர்களின் கலைநிகழ்ச்சியும் இடம்பெற்றிருந்தது.

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதைத் தடுக்கும் பாஜக உள்ளிட்ட சங் பரிவார கும்பலை அம்பலப்படுத்தி கலைக்குழுவினர் பாடிய பாடல்…

பாருங்கள்! பகிருங்கள்!!

பாடல் வரிகள்:
ஏத்திவிடு ஐயப்பா… தூக்கிவிடு ஐயப்பா..!
எலக்சனுல பி.ஜே.பி.ய ஐயப்பா…
நீ இல்லேன்னா… டெபாசிட் நையப்பா…

டீமானிடேசன் பெயிலியராச்சி…
ஜி.எஸ்.டி. கொண்டுவந்து உள்ளதும் போச்சி…
ரஃபேலுல இமேஜி டேமேஜி ஆச்சி…
வார்டு எலக்சனுல அஞ்சே ஓட்டு மானமே போச்சி…

மாட்டுக்கறி மேட்டரு போனியாகல…
மாவோயிஸ்டுனு ஊதினாலும் புகையவே இல்லை..
மேக் இன் இந்தியா யாரும் நம்பல…
இப்ப நாப்கின்தான் கிடச்சிருக்கு மோடி கையில…

ஆர்.பி.ஐ.ய தொடச்சாலும் பணமதிப்பு சரியிது…
சி.பி.ஐ. ய உடச்சாலும் பழைய கேசு தொரத்துது…
98 எலக்சனுக்கு அயோத்தி கிடைச்சது…
இப்போ 2019க்கு சாமிசரணம் மன்னிச்சிரு…

தொகுப்பு: வினவு களச்செய்தியாளர்.


இதையும் பாருங்க:

சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா

45 -ஆவது பெரியார் நினைவுநாள் தொடரும் நினைவுகள்… | துரை சண்முகம்

5
trichy periyaar rally

நினைத்தாலே
இயக்கும்!
பெரியார் சிந்தனை.

நினைத்தாலே
முடிக்கும்
பெரியார் செயல்.

Thanthai Periyarநினைத்தாலே
பூக்கும்
பெரியார் கேள்விகள்.

நினைத்தாலே
இணைக்கும்
பெரியார் பதில்கள்.

நினைத்தாலே
வலிக்கும்
பெரியார் பாடுகள்.

நினைத்தாலே
சிலிர்க்கும்
பெரியார் தேடல்கள்.

நினைத்தாலே
அணைக்கும்
பெரியார் வார்த்தைகள்.

நினைத்தாலே
கட்டுடைக்கும்
பெரியார் கருத்துகள்.

நினைத்தாலே
அச்சம் அறும்
பெரியார் பேச்சு.

நினைத்தாலே
நமதாகும்
பெரியார் மூச்சு.

நினைத்தாலே
மதம் உடையும்
பெரியார் பாதை.

நினைத்தாலே
சாதி கூசும்
பெரியார் பார்வை.

நினைத்தாலே
காதல் வரும்
பெரியார் அறிவு.

நினைத்தாலே
உறவாகும்
பெரியார் தெளிவு.

நினைத்தாலே
பனிக்கும்
பெரியார் அன்பு.

trichy periyaar rallyநினைத்தாலே
பிறக்கும்
பெரியார் தெம்பு.

நினைத்தாலே
பலர்க்கும்
பெரியார் சுயமரியாதை.

நினைத்தாலே
வெளுக்கும்
பெரியார் தர்க்கம்.

நினைத்தாலே
சுரக்கும்
பெரியார் மனிதநேயம்.

நினைத்தாலே
துளிர்க்கும்
பெரியார் உணர்வு நயம்.

நினைத்தாலே
அழைக்கும்
பெரியார் களம்.

நினைத்தாலே
தொடரும்……
இது
பெரியார் நிலம்!


கவிஞர் துரை. சண்முகம்

கேள்வி பதில் : நவீன அறிவியல் யுகத்தில் புதிய மதங்கள் தோன்றுமா?

கேள்வி: இந்த நவீன அறிவியல் யுகத்தில் இனிமேலும் புதிய மதங்கள் தோன்றி பெரும்பாலான மக்களை ஆட்கொள்ளுமா?

– சத்யன் கோபிநாதன்

ன்புள்ள சத்தியன் கோபிநாதன்,

புதிய மதங்கள் தோன்றுவதை பார்ப்பதற்கு முன்னால் இருக்கின்ற மதங்களின் நிலவரத்தை பார்ப்போம். பொதுவான புள்ளிவிவரங்களின்படி உலக மக்கள் தொகையில் கிறித்தவ மதத்தை சார்ந்தோர் 33%, முஸ்லீம்கள் 24%, இந்துக்கள் 16%, புத்த மதத்தினர் 7%, நாட்டுப்புற மதங்களை சார்ந்தோர் 6 சதவீதமாகவும் இருக்கின்றனர். மதம் சாராதோர் 16% பேர் இருக்கிறார்கள். இந்த புள்ளிவிவரம் தோராயமானது தான்.

உலக மக்கள் தொகையில் மதரீதியான இந்த விகித்தை வைத்து எதிர்காலத்தில் எந்த மதம் அதிக எண்ணிக்கையில் இருக்கும் என்று பலர் கணிக்கின்றனர். அமெரிக்கா தோற்றுவித்த இசுலாமிய பயங்கரவாதம் எனும் வகையினத்திற்கு பின்னர் முசுலீம்கள் குறித்த கட்டுக்கதைகள் அதிகம் பரப்பப்படுகிறது. அதன் பொருட்டு முசுலீம் மதத்தினர் எதிர்காலத்தில் அதிகரித்தால் என்ன செய்வது என்ற ‘பயத்தில்’ மேற்கண்ட ஆய்வுகள் முன்வைக்கப்படுகின்றன. மறுபுறம் இசுலாமிய மதவாதம் பேசுவோர் தங்களது மதம் பரவுகிறது என்ற கோணத்தில் அதை பெரிதுபடுத்துகின்றனர்.

கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுவோர் வளர்ந்த நாடுகளில் இருக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் இருக்கும் இஸ்லாம் வளரும் நாடுகளில் இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் மக்கள் தொகை வளர்ச்சி குறைவாகவும், வளரும் நாடுகளில் அதிகமாக இருப்பதால் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவோர் 2050 ஆம் ஆண்டில் முதல் இடத்திற்கு வருவார்கள் என்று குத்து மதிப்பாக கணிக்கிறார்கள் அல்லது ‘எச்சரிக்கை’ செய்கிறார்கள்.

superstitions in religionஅதே நேரம் அரசியல் சமூக பொருளாதார பிரச்சினைகள் காரணமாக மக்கள் மரித்துப் போவது வளரும் நாடுகளில் அதிகம் என்பதால் இந்த முன்கணிப்பு வரம்பிற்குட்பட்டதே எனவும் சொல்கிறார்கள்.

ஏனெனில், வளருகின்ற நாடுகள் பிரிவில்தான் ஈராக், பாலஸ்தீனம், சிரியா லெபனான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் இருக்கின்றன. இங்கே கடந்த 30 ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்படுவதை நாம் பார்த்து வருகிறோம். மாறாக, வளர்ந்த மேற்குலக நாடுகளில் கிறிஸ்தவ மக்கள் அப்படி மரிப்பதில்லை. கல்வியறிவு காரணமாக மக்கள் தொகை அதிகரிப்பும் குறைவாக இருக்கிறது.

பின்தங்கிய பொருளாதாரம், கல்வியறிவு இன்மை, வேலையின்மை காரணமாக ஆப்ரிக்க, ஆசிய நாடுகளில் மக்கள் தொகை அதிகரிப்பு அதிகமாக இருக்கிறது. கூடவே இந்நாடுகளில் பிரசவ கால மரணங்களும், குழந்தை மரணங்களும், ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிரச்சினைகளும் அதிகம்.

நீங்கள் குறிப்பிடும் நவீன அறிவியல் யுகம் என்பதை அறிவியல் தொழில்நுட்ப புரட்சியின் காலம் என வைத்துக் கொள்ளலாம். அதன்படி தொழிற்சாலைகளில் தானியங்கி உற்பத்தி முறையும் செயற்கை நுண்ணறிவும் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் இணையதளங்கள் சமூக வலைதளங்கள் பிரம்மாண்டமாக வளர்ந்து வருகின்றன. மக்களிடம் கருத்துருவாக்கம் செய்யும் ஊடகங்களும் மேற்கண்ட இணைய வகைப்பட்ட வழியிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கின்றன.

அமெரிக்க தேர்தலில் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் எப்படிப் பணியாற்றியது என்பதறிவோம். சமூக வலைத்தளங்களின் மூலம் சரியான கருத்துக்களைவிட தவறான கருத்துக்களை அதிக வேகத்தில் பரவச் செய்ய முடியும். இந்தியாவில் வாட்ஸ் அப் வதந்திகள் மூலமாக கும்பல் கொலைகள் சமீப ஆண்டுகளில் அதிகரித்திருக்கின்றன. முந்தைய காலத்தில் பார்ப்பனிய சமூக அமைப்பின் படிநிலை காரணமாக இந்த கும்பல் கொலைகள் நடந்தன.

மேலும் ஒரு நாட்டில் இருக்கும் ஆளும்வர்க்கத்தின் அரசியலை எதிர்த்துப் போராடும் முற்போக்கு அரசியலை விட பிற்போக்கு அரசியல் வளர்வதற்கு இந்த நவீன யுகம் அதிகம் பயன்படுகிறது. அது மதம், சாதி, இனம் என தலை எடுத்து வருகின்றது. அரசியலில் மட்டுமல்ல மருத்துவம், உடல்நலம், தொழில்துறை, இயற்கை, சூழலியல், கல்வி என பல துறைகளிலும் முற்போக்கு மற்றும் பிற்போக்கு கருத்துக்கள் மக்களிடையே செல்கின்றன. ஆயினும் வாழ்க்கைப் பிரச்சினை காரணமாக மாற்றுக்களை தேடி ஓடும் மக்களை திசை திருப்புவதற்கு பிற்போக்கு கருத்துக்கள் கணிசமாக பயன்படுகின்றன.

முதலாளிகளின் சம்மேளனத்தில் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர்
முதலாளிகளின் சம்மேளனத்தில் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர்

நிறுவனமயமான மதங்களின் பணிகள் பல காலாவதியாகி வரும் நிலையில் மதங்களிலும் பல்வேறு மாற்றங்கள் நடக்கின்றன. ஒரு மதத்திற்குள்ளேயே பழைய ஆதீனங்கள் பழைய மடங்கள் பழைய சிந்தனைகள் காலாவதியாகி புதிய நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. சங்கர மடம் பழைய மரபு என்றால் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கிவாசுதேவ், பாபா ராம்தேவ் போன்றோர் புதிய ஆதினங்களாய் தலையெடுத்து பன்னாட்டு நிறுவனங்களைப் போல சந்தைப்படுத்துகின்றனர்.

சோவியத் சமூக ஏகாதிபத்தியம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த பிறகு அமெரிக்கா உதவியுடன் சவுதி அரேபியா தோற்றுவித்த வகாபிய முசுலீம் கடுங்கோட்பாட்டு வாதம் இன்று பல நாடுகளில் பல குழுக்களை தோற்றுவித்திருக்கிறது. நம்மூர் தவ்ஹீத் ஜமாஅத் முதல் பாரசீகத்தில் மக்களை பாடுபடுத்தும் ஐ.எஸ். வரை அத்தகைய குழுக்கள் இன்னமும் செல்வாக்கோடு இருக்கின்றன. கிறிஸ்தவ மதத்தில் பெந்தகோஸ்தே வகையிலான கடுங்கோட்பாட்டு குழுக்கள் வளரும் நாடுகளில் பிரபலமாகி வருகின்றனர். பெந்தகோஸ்தே மற்றும் பல்வேறு பிற்போக்கு மதக்குழுக்கள் அமெரிக்காவிலும் பிரபலம்.  இவர்களன்றி அந்தந்த மரபு சார்ந்து இயற்கை, சுகாதாரம், மனநலம் பேசும் குழுவினரும் புதிய மதங்கள் போல இருக்கின்றனர். சான்றாக தமிழகத்தில் ஹீலர் பாஸ்கர்.

90களின் தீவிரமான உலகமயத்திற்கு பின்னர் உலகில் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள் பல மடங்கு அதிகரித்திருக்கின்றன. சுவாசிக்கும்  காற்று முதல், தூக்கி எறியப்படும் வேலை முதல் அன்றாடம் பிரச்சினைகள் வரிசை கட்டி வீட்டுக் கதவை தட்டி வருகின்றன. அடிப்படை சமூக மாற்றம் என்பது மக்களின் கண்ணுக்கு எட்டிய  வரை இல்லாத போது அவர்கள் தங்கள் அருகாமையில் இருக்கும் இத்தகைய புதிய அப்போஸ்தலர்களை நாடிப் போகின்றனர். ஒரு அப்போஸ்தலர் காலாவதியானால் புதியவர் உடன் வருகிறார். பழையை வெர்சனை மேம்படுத்தி அதற்கடுத்த வெர்சன் வரும் வரை இவர் இருப்பார்.

முதல் உலகப் போர் தோற்றுவித்த பெரும் அழிவு, உயிர்ப்பலிக்கு பிறகு உலக மக்களின் நம்பிக்கையின்மை அதிகரித்தது. அதன் வழியில் புதுப்புது சித்தாந்தங்கள், கலை முயற்சிகள் அனைத்தும் மக்களின் விரக்திக்கு வடிகாலைத் தேடின. நேரெதிராக ரசியாவில் கம்யூனிஸ்டுகள் நடத்திய புரட்சி நேர்மறையில் உலக மக்களின் வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மேற்குலகில் முதலாளித்துவதற்கு தீர்வு என பல்வேறு “கல்ட்” எனப்படும் தீவிர வழிபாட்டுக் குழுக்கள் உருவாகின. 1960-களில் உலக அளவில் தோன்றிய முதலாளித்துவ நெருக்கடிக்கு பிறகு இத்தகைய முயற்சிகள் கொஞ்சம் நடைமுறைக்கு முயன்றன. இயற்கையை ஆராதிப்பது, இயற்கை சாகசம், ஹிப்பிக்கள், ஹரே ராம் ஹரே கிருஷ்ணா என இவர்கள் விதவிதமாக தோன்றினார்கள். அதே காலகட்டத்தில் ஓஷோ ரஜ்னீஷை நோக்கி மேற்குலகினர் நாடி வந்தனர்.

எனினும், இந்த பரிசோதனை முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. கற்பனையான தீர்வுகளும், கனவில் முன்வைக்கப்படும் ஆசைகளும் மண்ணில் வெகுகாலம் நீடித்திருப்பதில்லை. இன்றைக்கு உலகமயம் தீவிரமடைந்திருக்கும் காலத்தில் வளரும் நாடுகளைச் சேர்ந்த மக்கள் மேற்குலகை நோக்கி அகதிகளாய் பெரும் எண்ணிக்கையில் ஓடுகின்றனர். மேற்குலகிலோ வேலை வாய்ப்பு இன்மை, விலை வாசி உயர்வு, நலத்திட்டங்கள் பறிப்பு என நடுத்தர மக்களும் போராடுகின்றனர்.

படிக்க:
கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
தாலிபான்கள் பாகிஸ்தானில் மட்டுமா ?

புதிய அப்போஸ்தலர்களின் பலம் என்ன? வாழ்க்கைப் பிரச்சினைகளை விரிவாக விளக்கி அதற்கு ஒரு தீர்வு இருப்பதாக கற்பனையில் நம்ப வைக்கிறார்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்வது இசுலாத்திற்கு விரோதமானது இல்லை என ஜைனுலாபிதீன் சுற்றி வளைத்து சொல்வார். விலைவாசி உயர்வுக்கு எதிராகவோ, பரீட்சையில் தேர்வாகவோ ஆண்டவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்களென நாலுமாவடி லாசாரஸ் கூறுகிறார். இந்து மத நவீன சாமியார்களோ யோகம், தியானம், வாழ்வியல் கலை என வேறு கற்பனை உலகத்தை முன்வைக்கின்றனர்.

முற்போக்கு அரசியல் முகாம் செய்கின்ற பிரச்சாரத்தை விட இவர்களது பிரச்சாரம் வலுவாக இருக்கிறது. காரணம் முற்போக்கு அரசியல் முகாம் உண்மையான தீர்வுகளை முன்வைப்பதால் அவை உடனுக்குடன் ஆத்ம சாந்தியை அளிப்பதில்லை. அப்போஸ்தலர்களோ இன்ஸ்டன்ட் தீர்வினை மனதில் காட்டுகிறார்கள்.

பெந்தகோஸ்தே பாதிரியார்கள் நள்ளிரவில் கண்ணீர் விட்டு அழுமாறும், முஸ்லிம்கள் குர்ஆனிலும் ஹதீஸிலும் விடுதலையை தேடுமாறும், இந்து மத சாமியார்களோ கர்மவினை விதியை காட்டி கடமையை செய்யுமாறும் கோருகிறார்கள்.

இதனாலேயே இந்த புதிய இறைத்தூதர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தழைத்தோங்குவது சாத்தியமில்லை. வாழ்க்கைச் சிக்கலே மதத்தை நோக்கி ஓடவைக்கிறது. வாழ்வியல் வரம்புகளுக்குட்பட்டதே மதத்திற்கான இடம்.  அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் ஒரு தொழிலாளி புனிதப்பயணம் என்பதற்காக மெக்காவிற்கோ வாடிகன் நகரத்திகோ காசி ராமேஸ்வரத்திற்கோ சென்று விட முடியாது.

தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு வாழ்க்கைப் பிரச்சனைகள் முற்றும் போது மக்கள் இரண்டில் ஒன்று பார்ப்போம் என போராடுகிறார்கள். இன்று பிரான்சில் நடக்கும் மஞ்சள் சட்டை போராட்டம் அத்தகையதுதான். பூலோக சொர்க்கமாக கருதப்படும் அமெரிக்காவில் கூட முதலாளித்துவம் ஒழிக என வால்வீதியிலேயே முழங்குகிறார்கள் மக்கள். அத்தகைய நேரங்களில் எவரும் தேவாலயங்களை நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

சபரிமலை , அயோத்தி : நீதித்துறையை மிரட்டும் மத அடிப்படைவாதிகள் !

மிழகத்தில் செயல்பட்டுவரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் 15-ஆம் ஆண்டு விழா கடந்த டிசம்பர் 16 அன்று மதுரையில் நடைபெற்றது.

சபரிமலை, அயோத்தி : நீதித்துறையை மிரட்டும் மத அடிப்படைவாதிகள்!”, ” சமூக சிந்தனையாளர்கள் கவுரி லங்கேஷ், கல்புர்கி, தபோல்கர், பன்சாரே படுகொலையும் ‘சத்ர தர்மா சாதனா’ கொலை நூலும்!” என்பது உள்ளிட்ட தலைப்புகளில் அறிவுத்துறையினர் பங்கேற்று கருத்துரையாற்றினர்.

பார்ப்பன இந்து மதவெறி பாசிசம் அதிகாரத்தில் இருந்து வரும் சூழலில் அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள ஜனநாயகக் கொள்கைகளுக்கு பேரபாயம் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மை இந்துக்களின் நம்பிக்கை என்ற அடிப்படையில் சங்கப் பரிவாரங்கள் நேரடியாக அரசியல் சட்டத்தின் மீது தாக்குதல் தொடுப்பதும் அதனை மோடி அரசு ஆதரித்து ஊக்கமளிப்பதும் வேகமாக வளர்ந்து வருகிறது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்த பின்பும் இன்று வரை அதை அமல்படுத்தவிடாமல் ஆட்டம் போடுகிறது ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள்.

மோடியை விமர்சிக்கும் அல்லது அவர்களின் ஊழல் முறைகேடுகளை அம் பலப்படுத்தும் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ‘சொல் பேச்சைக் கேட்க மறுக்கும்’ லோயா போன்ற நீதிபதிகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

படிக்க:
ஏண்ணே கொரங்குலேந்து மனுசன் வந்தானா சாதி வந்துச்சா ?
பொருளாதாரம் : முதலாளித்துவ அறிஞர் உலகம் மார்க்சை நிராகரிக்க முடியுமா ?

இந்திய ஜனநாயகத்திற்குப் பார்ப்பன இந்து மதவெறி பாசிச சக்திகளால் பேராபத்து ஏற்பட்டுள்ள இந்தச்சூழலில் அறிவுத் துறை சார்ந்த வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், மக்களின் வாழ்வுரிமை காக்க என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக அமைந்திருந்தது இக்கருத்தரங்கம்.

இக்கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன், வழக்கறிஞர் தி. லஜபதிராய் ஆகியோரின் உரை இப்பதிவில் இடம்பெறுகிறது.

சபரிமலை : தீண்டாமை!
வழக்கறிஞர் வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

சபரிமலை, அயோத்தி : நீதித்துறையை மிரட்டும் மத அடிப்படைவாதிகள்!
கருத்துரை: வழக்கறிஞர் தி. லஜபதிராய், உயர்நீதிமன்றம், மதுரை.

தொகுப்பு: வினவு களச்செய்தியாளர்கள்.

மதத்தின் தடைகளைத் தகர்த்து கால்பந்து விளையாட்டில் சாதிக்கும் ஈரான் பெண்கள்

சிய பெண்களுக்கான கபடிப் போட்டியில் 28 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியை வீழ்த்தி தங்கம் வென்றது ஈரான். பெண்களின் விளையாட்டு உரிமைகளை வென்றெடுக்கும் விதமாக, தற்போது கால்பந்து விளையாடும் உரிமைகளையும் வென்றுள்ளனர் ஈரானிய பெண்கள்.

உலகில் உள்ள அனைத்து மதங்களையும் ஆணாதிக்கத்தையும் பிரித்துப் பார்க்க இயலாது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றில் கூட கிறித்தவ மதம் கேள்விக்குள்ளாக்கப்பட்டதின் விளைவாகவே பெண்களுக்கான சமத்துவம் கிடைக்கப் பெற்றது. இந்திய அளவில் பார்க்கும்போது பார்ப்பனிய இந்து மதத்தை எதிர்த்து  பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றதாலேயே பெண்கள் விளையாட்டு மற்றும் கல்வித் துறைகளில் பங்கேற்க முடிந்தது.

சமீப ஆண்டுகளில்தான் ஈரான் நாட்டு அரசாங்கம் ஆண்கள் கால்பந்து சாம்பியன்ஸ் லீக் போட்டி நடைபெறும் அரங்குகளில் பெண்களும் அமர்ந்து பார்க்கலாம் என்ற அனுமதியை வழங்கியிருந்தது. தற்போது அந்த சாம்பியன்ஸ் லீக் விளையாட்டையே விளையாடலாம் என்ற அனுமதி கிடைத்த நிலையில் வீரர்களின் (பெண் வீரர்கள்) மகிழ்ச்சி பெரும் கொண்டாட்டமாக பார்க்கப்படுகிறது.

படிக்க:
சொராபுதீன் என்கவுண்டர் : 22 பேரும் விடுதலை ! நீதி தேவதைக்கு தூக்கு !
மக்கள் மருத்துவர் 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் மறைந்தார் ! நேரடி ரிப்போர்ட்

கடந்த நவம்பர் (13.11.2018) மாதம், ஈரானிய பெண்கள் கால்பந்து அணி தாய்லாந்து நாட்டில் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று ஒன்றில் வெற்றி பெற்றிருக்கிறது.

19 வயதினருக்குட்பட்ட ஈரான் பெண்கள் கால்பந்து அணியினர், ஆசிய கால்பந்து சாம்பியன் போட்டிகளுக்காக நடைபெறும் ஆட்டங்களில், அவர்கள் இடம் பெறும் குழுக்களில் முதலிடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் 16 வயதினருக்குட்பட்ட ஈரான் பெண்கள் கால்பந்து அணியினரும் தங்கள் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆசிய கால்பந்து சாம்பியன் போட்டியில் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளனர்.

ஈரான் போன்ற இசுலாமிய நாடுகளில் மத அடிப்படைவாதமே ஆட்சியில் இருந்து வரும் நிலையிலும், விளையாட்டின் போது அணியக்கூடிய உடைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தாலும் அவையனைத்துக்கும் அப்பாற்பட்டு ஈரானிய பெண்கள் விளையாட்டுத்துறைகளில் சாதித்து வருகின்றனர் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகிறது.

கட்டாயூன் கொஸ்றோயர் (Katayoun Khosrowyar):

இவர் ஈரானிய அமெரிக்க வேதிப் பொறியியல் வல்லுனர். தற்போது 19 வயதுக்குட்பட்ட ஈரானிய பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்டு வருகிறார். பிஃபா (FIFA) நிர்வாகம் ஈரான் பெண்கள் கால்பந்து அணிக்காக இவர் மேற்கொண்டு வரும் முயற்சிகளை வெகுவாகப் பாராட்டியிருக்கிறது.

கால்பந்து லீக் போட்டிகளில் விளையாடி தேசிய அளவில் இடம்பெற வேண்டும் என்ற ஆர்வம் ஈரானிய பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

ஈரானின் வடக்கு பிராந்தியத்தில் காஸ்பியன் கடலையொட்டி அமைந்துள்ள பந்தார் அன்சாலி  என்ற நகரத்திலுள்ள மலாவன் பெண்கள் கால்பந்து அணியினர்தான், அந்நாட்டு அரசின் அறிவிப்பால் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். ஏனென்றால் இந்த கால்பந்து அணி கடந்த 2016-ம் ஆண்டு முதல் லீக் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. ஒரு கப்பல் எதிர்பாராத புயலால் தாக்கப்படும் நிலையில் தேவையில்லாதவற்றை வீசி எறிந்தால் தான் கப்பல் அழிவிலிருந்து பாதுகாக்கப்படும் என்று கூறி கால்பந்து அணியில் பெண்கள் நீடிக்கக்கூடாது என்று தடைவிதித்திருந்தார் அப்போதைய  மலாவன் அணியின் தலைமை செயல் அதிகாரி.

இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் இப்போது இந்த அணியை முன்னாள் கால்பந்து வீராங்கனையான மரியம் இராண்டூஸ்ட் வாங்கியதோடன்றி தானே அந்த அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். தடை விதிக்கப்பட்டிருந்த காலத்திற்கு முன்பும் இவரே பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

அல்ஜசீரா இணையதளத்திற்கு மரியம் இராண்டுஸ்ட் அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில் ’ இந்த அணி கடந்து வந்த பாதை என்பது மிகக்கடினமான ஒன்று; ஒரு சிறைக்கைதிக்கு என்ன சுதந்திரம் கிடைக்குமோ அந்த அளவு சுதந்திரம் தான் எங்களுக்கும் கிடைத்தது. இங்கு விளையாடும் பெண்களில் அனேகமானோர் படித்துக் கொண்டே விளையாட்டிலும் ஈடுபடுகின்றனர். ஆண்களைப் போன்றே எங்களாலும் கால்பந்து விளையாட்டை சிறப்பாக விளையாட முடியும் என்கிறார்.

ரம்மியமான இயற்கைச் சூழலில் மலாவன் கால்பந்து அணியினர்.

25 வீரர்களைக் கொண்டு 2002-ம் ஆண்டு வாக்கில் ஆரம்பிக்கப்பட்ட மலாவன் கால்பந்து அணி பல தடைகளைத் தாண்டி இப்போது மறுபடியும் விளையாட்டுக் களத்தில்.

ஈரானியப் பெண்கள் 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிப்போட்டிகளில் முன்னேறுவது இளம் வீரர்களிடையை மிகப்பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லீக் போட்டிகளுக்கான தயாரிப்பில் மலாவன் அணியினர்

பந்தார் அன்சாலி பகுதியில் மிகவும் பிரபலமான விளையாட்டாக அறியப்படுவது கால்பந்து விளையாட்டு.  அனுமதித்தால் சாதிக்க முடியாதவர்களா பெண்கள்?

தேசிய அணிக்காக விளையாடிய பல ஆண்கள் பயிற்சியாளர் மரியம்-இன் தந்தை உட்பட இந்த விளையாட்டு மைதானத்தில் கால்பதித்தவர்கள் தாம்…

ஊதா நிற உடையில் இருப்பவர் தான் பயிற்சியாளர் மரியம். தன் அணியின் வீராங்கனைகளுடன் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

1976-ம் ஆண்டு நடைபெற்ற ஹஃப்சி கோப்பை கால்பந்து போட்டியில் மலாவன் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துசென்றதும் இதே மரியம் தான்.

சிறுவயது முதலே தனது தந்தை விளையாடும் போட்டிகளை ஆர்வமுடன் இரசித்ததால் தான் இந்த விளையாட்டு மீது ஆர்வம் வந்தது என்கிறார்.

மலாவன் அணியின் பயிற்சியாளராக 14 வருடங்களாகப் பணியாற்றி வரும் மரியம் இளம் தலைமுறை வீரர்களுடன்…

தடை நீங்கியதால் ஏற்படும் உற்சாகத்தை வெற்றிகளாய் மாற்றிடுவோம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கிறார் மரியம்….

நன்றி: அல்ஜசீரா
தமிழாக்கம்: வரதன்

பொருளாதாரம் : முதலாளித்துவ அறிஞர் உலகம் மார்க்சை நிராகரிக்க முடியுமா ?

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 2

நூலாசிரியர் அறிமுக உரையின் இரண்டாம் பாகம் இங்கே இடம்பெறுகிறது.  மார்க்சை முதலாளித்துவ கல்வி உலகம் நிராகரிப்பதற்கு பெரு முயற்சி செய்தாலும் தவிர்க்கவியலாமல் அவர்கள் மார்க்சை படித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். சில உண்மைகைள மறுக்க முடியாமலும் இருக்கிறார்கள். இந்த முரண்பாடு இப்பகுதியில் விளக்கப்படுகிறது. அறிமுக உரையின் இறுதி அடுத்த பாகமாக வர இருக்கிறது. அதில் 17 – 19 -ம் நூற்றாண்டுகளில் அரசியல் பொருளாதார வரலாற்றின் சுருக்கத்தை ஆசிரியர் விளக்குகிறார்.

மார்க்சும் அவருக்கு முன்பிருந்தவர்களும் !

அ.அனிக்கின்
த்துவஞானம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் ஆகியவை மார்க்சியத்தின் மூன்று உட்கூறுகளாகும். மார்க்சியத் தத்துவம் என்பது இயக்கவியல், வரலாற்றுப் பொருள்முதல்வாதமாகும். சமூக வளர்ச்சி அதன் பொருளாதார அடுக்கமைவில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பது வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் முக்கியமான கோட்பாடாகும்.

அரசியல் பொருளாதாரம் இந்த அடுக்கமைவை ஆராய்ந்து, சமூக பொருளாதார உருவமைப்புகளின் இயக்கத்தின் விதிகளையும் ஒரு உருவமைப்பிலிருந்து மற்றொரு உருவமைப்புக்கு மாறுகின்ற விதிகளையும் வெளிக்காட்டுகிறது. விஞ்ஞான கம்யூனிசம் என்பது சோஷலிசப் புரட்சி, புதிய கம்யூனிஸ்ட் சமூகத்தை நிர்மாணிக்கின்ற முறைகள், இந்த சமூகத்தின் ஆதாரக் கட்டங்களையும் கூறுகளையும் எடுத்துரைக்கும் போதனையாகும்.

மார்க்சியத்தின் மூன்று உட்கூறுகளில் ஒவ்வொன்றும் முந்திய சிந்தனையாளர்களின் முற்போக்கான கருத்துக்களின் வளர்ச்சியாகவும் ஒரு உலக விஞ்ஞானத்தின் வளர்ச்சியாகவும் இருக்கிறது. இந்த மூன்று உட்கூறுகளும் மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களோடு பொருந்துகின்றன. வி.இ.லெனின் எழுதியதுபோல, ”பத்தொன்பதாம் நூற்றாண்டில் மூன்று முக்கியமான தத்துவப் போக்குகள் இருந்தன. அவை மனிதகுலத்தின் மிக முன்னேற்றமடைந்த மூன்று நாடுகளைச் சேர்ந்தவையாகும். அவை, மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானம், மூலச்சிறப்புள்ள ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பொதுவாக பிரெஞ்சு புரட்சிப் போதனைகளுடன் இணைந்த பிரெஞ்சு சோஷலிசம் என்பவையாகும். இந்த மூன்று தத்துவப் போக்குகளையும் தொடர்ந்து ஆராய்ந்து, அவற்றிற்கு முழு நிறைவை அளித்த மேதை மார்க்ஸ் .”(1)

ஆடம் ஸ்மித் – காரல் மார்க்ஸ் – டேவிட் ரிக்கார்டோ

இந்தப் பிரபலமான கருத்துரை – அதன் சகலவிதமான ஆழத்திலும் ஸ்தூலத்தன்மையிலும் – பிரதானமாக மார்க்ஸ் எழுதிய புத்தகங்களிலேயே வெளிப்படுகிறது. ஹெகல் மற்றும் ஃபாயர்பாஹ், ஸ்மித் மற்றும் ரிக்கார்டோ, சான் – சிமோன் மற்றும் ஃபூரியே ஆகியோரிடமிருந்து தான் பெற்றிருக்கும் ஒவ்வொரு கருத்தையும் மார்க்ஸ் சிறந்த ஆராய்ச்சி நுட்பத்தோடு விவரமாக எழுதியிருக்கிறார். மார்க்சிடம் இருந்த பல குணங்களில் ஆராய்ச்சி நேர்மை குறிப்பிடத்தக்க அளவுக்கு முக்கியமானதாகும். குறிப்பாக, பதினெட்டாம் நூற்றாண்டிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற் பாதியிலும் வெளிவந்திருந்த எல்லாப் பொருளாதார நூல்களையுமே அவர் நன்கு படித்திருந்தார்.

மார்க்ஸ் எழுதிய முக்கியமான விஞ்ஞான நூலாகிய மூலதனம் ”அரசியல் பொருளாதாரத்துக்கு ஒரு விமரிசனம்” என்ற துணைத் தலைப்பைக் கொண்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தின் நான்காவது பகுதிக்கு ”உபரி மதிப்புத் தத்துவங்கள்” என்று பெயர்; இதில் முந்திய அரசியல் பொருளாதாரம் அனைத்துமே விமரிசன ஆய்வுக்கு உட்படுத்தப் படுகிறது. இங்கே ஒவ்வொரு எழுத்தாளரிடமிருந்தும் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் முக்கியமான கடமையைத் – முதலாளித்துவ உற்பத்தி முறையின் இயக்க விதியை வெளிப்படுத்துவது – தீர்ப்பதற்கு ஏதாவதொரு அளவுக்கு உதவி செய்கின்ற விஞ்ஞானக் கூறுகளைப் பிரித்தெடுப்பது மார்க்சின் முக்கியமான முறையாக இருந்தது. அதே சமயத்தில் சென்ற காலத்தைச் சேர்ந்த இந்த அரசியல் பொருளாதார நிபுணர்களின் கருத்துக்களில் இருந்த முதலாளித்துவக் குறைபாடுகளையும் மாறுபாடுகளையும் அவர் விளக்கினார்.

மார்க்ஸ் ஒரு வகையான அரசியல் பொருளாதார விமரிசனத்துக்குக் கணிசமான இடம் ஒதுக்கினார்; ஏனென்றால் அதன் நோக்கம் உண்மையான விஞ்ஞானப் பகுப்பாய்வு அல்ல; முதலாளித்துவ அமைப்பை நியாயப்படுத்துவதும் பகிரங்கமாக ஆதரிப்பதுமே. அவர் அதைக் கொச்சையானது என்று குறிப்பிட்டார். முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் இந்தப் போக்கின் முக்கியமான பிரதிநிதிகளுக்கு இந்த நூலில் கணிசமாக இடம் கொடுக்கப்பட்டிருப்பது இயற்கையானதே. முதலாளித்துவப் பொருளாதார  நிபுணர்கள் முதலாளித்துவ சமூகத்தைப் பற்றிப் பறைசாற்றிய கருத்துக்களை விமரிசனம் செய்யும்பொழுது மார்க்ஸ் பாட்டாளி வர்க்க அரசியல் பொருளாதாரத்தை வளர்த்துச் சென்றார்.

படிக்க:
♦ கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !
♦ மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய காதல் கடிதம் !

மார்க்ஸ் எழுதிய மூலதனத்தையும் மற்ற பொருளாதார நூல்களையும் படிக்கின்ற வாசகருக்கு சென்ற காலத்திய விஞ்ஞானப் பிரமுகர்களின் காட்சிக்கூடம் முழுவதுமே காட்டப்படுகிறது. மற்ற விஞ்ஞானங்கள் ஒவ்வொன்றையும் போல, அங்கீகரிக்கப்பட்ட தலைவர்கள் மட்டுமல்லாமல், அதிகமாக வெளியே தெரிந்திராத பல அறிஞர்களின் முயற்சிகளும் அரசியல் பொருளாதாரத்தை வளர்த்தன் மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரம் என்பது ஒன்றரை நூற்றாண்டுக் காலத்துக்கு மிக விரிவான ஒரு போக்காக இருந்தது; அதனுள் அதிகமான எண்ணிக்கையைக் கொண்ட பல அறிஞர்கள் ஆராய்ச்சிகளைச் செய்தார்கள்; தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை எழுதினார்கள். உதாரணமாக, ஆடம் ஸ்மித்துக்கு முன்பிருந்த பல தலைமுறைகளைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள்தான் அவருக்குத் தளத்தை நன்றாகத் தயாரித்துக் கொடுத்தார்கள். எனவே இந்த நூலின் ஆசிரியர் மிகச் சிறப்புடைய அறிஞர்களின் வாழ்க்கை மற்றும் கருத்துக்களில் முக்கியமாக கவனம் செலுத்துவதோடு, அதிகமாக வெளியில் தெரியாத ஆனால் முக்கியத்துவமுடைய பல சிந்தனையாளர்களின் பங்கையும் குறிப்பிட்ட அளவுக்காவது எடுத்துக் கூற முயன்றிருக்கிறார்.

ஒரு விஞ்ஞானம் என்ற வகையில் அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியின் உருவரையை இன்னும் முழுமையாகக் கொடுப்பதே அதன் நோக்கம். இந்த அறிஞர்கள் வாழ்ந்து பாடுபட்டு உழைத்த காலத்தையும், சமூக மற்றும் அறிவுத்துறைச் சூழலையும் விளக்குவது அவசியமாகும்.

அரசியல் பொருளாதார வரலாற்றை ஸ்மித், கெனே, ரிக்கார்டோ ஆகியோரின் நூல்களோடு நிறுத்திவிடுவது கணிதத்தின் மொத்த வரலாறுமே டெகார்ட், நியூட்டன், லப்ளாஸ் ஆகியோரது கண்டுபிடிப்புகளில் அடங்கியிருக்கிறது என்று சொல்லுவதைப் போன்று தவறுடையதாகும். பதினேழாம் நூற்றாண்டின் ஓவியக் கலை வரலாற்றை எழுதுபவர்கள் மாபெரும் ஓவியரான ரெம்பிரான்ட்டைப் பற்றி எழுதுவதோடு “சிறிய டச்சுக்காரர்கள்” எனப்படும் ஓவியர்களின் பங்கையும் அங்கீகரிக்கிறார்கள்.

முதலாளித்துவ விஞ்ஞானமும் பிரச்சாரமும் ஒரு நூற்றாண்டுக் காலத்துக்கும் அதிகமாகவே விஞ்ஞானி என்ற முறையில் மார்க்சின் வரலாற்றுச் சிறப்பான பாத்திரத்தைச் சிதைப்பதற்கு முயன்று வந்திருக்கிறது. இங்கே இரண்டுவிதமான அணுகுமுறைகளை ஒருவர் தெளிவாக வேறுபடுத்திக்காண முடியும். முதல் அணுகுமுறை மார்க்சையும் அவருடைய புரட்சிகரமான போதனையையும் புறக்கணிக்கிறது; அவர் மிகக் குறைவான விஞ்ஞான முக்கியத்துவம் கொண்டவர் அல்லது “மேற்கத்திய கலாச்சார மரபுக்கு” வெளியே உள்ளவர், எனவே “உண்மையான” விஞ்ஞானத்துக்கு வெளியே இருப்பவர் என்று எடுத்துக் காட்டுகிறது. இங்கே மார்க்சுக்கும் அவருக்கு முந்தியவர்களுக்கும், குறிப்பாக மூலச்சிறப்புடைய முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களுக்கும் இடையே உள்ள இணைப்பு அலட்சியப் படுத்தப்படுகிறது, குறைவாக மதிப்பிடப்படுகிறது.

எனினும் சமீபகாலங்களில் இரண்டாவது அணுகுமுறையே அதிகம் பின்பற்றப்படுகிறது. இதன்படி மார்க்ஸ் ஒரு சாதாரணமான (அல்லது அசாதரணமானவராகக் கூட) ஹெகல் ஆதரவாளராக அல்லது ரிக்கார்டோவாதியாகக் காட்டப்படுகிறார். ரிக்கார்டோவுடனும் மொத்த மூலச்சிறப்பு மரபோடும் மார்க்ஸ் கொண்டிருந்த நெருக்கம் வன்மையான அழுத்தத்தோடு எடுத்துக் கூறப்படுகிறது; அரசியல் பொருளாதாரத்தில் மார்க்ஸ் ஏற்படுத்திய திருப்புமுனையின் புரட்சிகரமான தன்மை மழுப்பப்படுகிறது. ஜே.ஏ.ஷும்பீட்டர் இத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறார்; இவர் பொருளாதாரச் சிந்தனையின் வரலாறு பற்றி இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்திருக் கும் முதலாளித்துவப் புத்தகங்களில் மிகப் பெரியதொரு புத்தகத்தை எழுதியவர். இவர் மார்க்சை ரிக்கார்டோவாதி என்று கூறுகிறார்; மார்க்சின் பொருளாதார போதனை ரிக்கார்டோவின் போதனையிலிருந்து சிறிதும் வேறுபட்டிருக்கவில்லை; எனவே அதிலுள்ள அத்தனை குறைபாடுகளும் இதிலும் உள்ளன என்று குறிப்பிடுகிறார். ஆனால் அவர்கூட மார்க்ஸ் “இந்த (ரிக்கார்டோவின் – ஆசிரியர்) வடிவங்களை மாற்றியமைத்துக் கொண்டார்; கடைசியில் மிக அதிகமாக வேறுபடக் கூடிய முடிவுகளுக்கு வந்தார்”(2) என்று எழுதுகிறார்.

மார்க்சியத்தை நவீன முதலாளித்துவ சமூகவியலோடும் அரசியல் பொருளாதாரத்தோடும் சமரசப்படுத்த முடியும்; ஏனென்றால் அவை அனைத்தும் ஒரே தோற்றுவாயிலிருந்து புறப்பட்டவை என்று அடித்துச் சொல்லப்படுகிறது. இந்த நம்பிக்கையை நாம் அடிக்கடி சந்திக்கிறோம். பிரிட்டிஷ் லேபர் கட்சியின் பிரபலமான தத்துவாசிரியரான ஜான் ஸ்ட்ரேச்சி, ”மார்க்சியம் மேற்கத்திய கலாச்சார மரபுகளிலிருந்து தோன்றிய போதிலும், அதிலிருந்து வெகுதூரத்துக்கு விலகிப் போய்விட்டது. எனவே அந்த மேற்கத்திய கலாச்சார மரபுகளோடு மார்க்சியத்தை மறு இணைப்புச் செய்கின்ற அத்தியாவசியமான போக்கில் அது ஒரு ஆரம்ப நடவடிக்கை”(3) என்று தன்னுடைய புத்தகத்தைப் பற்றித் தான் கருதுவதாக எழுதுகிறார்.

சமீப வருடங்களில் முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் மார்க்ஸ் பற்றியும் மார்க்சியத்தைப் பற்றியும் கணிசமான அளவுக்கு அக்கறை பெருகியிருப்பது நமக்குத் தெரிந்ததே. மார்க்சின் போதனையில் உள்ள தனிக் கூறுகளைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது அநேகமாக அவர்கள் எல்லோரிடமும் உள்ள பொதுவான அம்சமாகும். அடிப்படையான வளர்ச்சிப் பிரச்சினைகளில் (பொருளாதார வளர்ச்சி, குவிப்பு, தேசிய வருமானத்தைப் பகிர்ந்தளித்தல்) பின்பற்றப்பட வேண்டிய பொருளாதாரக் கொள்கையைப் பற்றித் தம்முடைய சிபாரிசுகளைத் தயாரிக்கும்பொழுது, அன்றுள்ள நிலைமைகளைப் பற்றி யதார்த்தரீதியாக மதிப்பிடுவது அவசியமாவதால், அதிகமான தொலைநோக்குடைய அறிஞர்கள் மார்க்சிய ஆராய்ச்சியின் முறைகளாலும் முடிவுகளாலும் அடிக்கடி கவரப்படுகிறார்கள்.

ஆர்.எல்.ஹெய்ல்ப்ரோனர்

மார்க்சியம் பற்றிய அக்கறை இப்படி வளர்ச்சி அடைந்திருப்பதற்கு உதாரணமாக ஆர்.எல்.ஹெய்ல்ப்ரோனர் எழுதிய, இன்றுவரையிலுமுள்ள பொருளாதாரச் சிந்தனையின் வளர்ச்சியைப் பற்றிய வரலாற்று நூலைக் கூறலாம். இந்தப் புத்தகத்தில் மார்க்சின் வாழ்க்கை மற்றும் அவருடைய பணிகளைப் பற்றி சுவையான வர்ணனையுடன் எழுதப்பட்டிருக்கிறது. இதுவரை முதலாளித்துவ அமைப்பைப் பற்றிச் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் மார்க்சியப் பொருளாதார ஆராய்ச்சியே மிகத் தீவிரமானது, மிகவும் ஊடுருவிச் செல்வது என்று அவர் குறிப்பிடுகிறார். ”இது தலையை ஆட்டிக் கொண்டு, நாக்கைச் சப்பிக் கொண்டு தார்மிக அடிப்படையில் செய்யப்படும் ஆராய்ச்சி அல்ல…. அது அதிகமான உணர்ச்சியைக் கொண்டிருந்தபோதிலும் விருப்பு வெறுப்பற்ற மதிப்பீட்டைச் செய்கிறது. இந்தக் காரணத்துக்காகவே அதனுடைய சோர்வூட்டுகின்ற முடிவுகளைப் பற்றி நாம் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.”(4)

சமீப காலத்தில் மேற்கு நாடுகளில் தோன்றியிருக்கும் “தீவிரமான” அரசியல் பொருளாதாரம் மரபுவழிப்பட்ட கோட்பாடுகளின் ஏற்றுக் கொள்ளப்பட்ட தன்மைகளுக்கு மறுப்பைத் தெரிவிக்கிறது. சமூக – பொருளாதார ஆராய்ச்சியை நிராகரித்ததற்காகவும் வடிவங்களையே முக்கியமாகக் கொண்டதற்காகவும் அவற்றின் மலட்டுத் தன்மைக்காகவும் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் பொருளாதாரத்தின் முக்கியமான மரபுகளை இந்தப் போக்கின் பிரதிநிதிகள் குறிப்பிடத்தக்க வகையில் விமர்சிக்கிறார்கள். மார்க்சை ரிக்கார்டோவுடன் இணைக்கின்ற – சமூகத்தில் வருமானங்கள் பகிர்ந்து கொடுக்கப்படுவது பற்றிய பிரச்சினையை வர்க்க ஆய்வு செய்கின்ற அணுகுமுறையின் வன்மையை அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இவ்விதமான நிகழ்வுப் போக்குகள் இயற்கையாகவே வரவேற்கப்பட வேண்டியவை. எனினும் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தையும் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தையும் ஒரே விஞ்ஞான முறையாக “இணைக்கின்ற” கருத்து கண்டிப்பாக நிராகரிக்கப்பட வேண்டும். மார்க்சியவாதிகளுக்குப் பொருளாதாரத் தத்துவம் என்பது சமூகத்தைப் புரட்சிகரமாக மாற்றி அமைப்பதற்கான அவசியத்தை வாதிடுகின்ற அடிப்படையாக இருக்கிறது; ஆனால் முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் இவர்களில் தீவிரவாதிகளும் அடங்குவர் – இந்த முடிவுகளுக்கு வருவதில்லை.

கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளி வர்க்க இயக்கத்திலுள்ள சீர்திருத்தவாதமும் அதனோடு தொடர்புடைய வலதுசாரி சந்தர்ப்பவாதமும் மார்க்சியத்தை பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூகச் சிந்தனையின் மனிதாபிமான, மிதவாத மரபில் மட்டுமே வேரூன்றியிருக்கின்ற போக்காகக் கருதுவதற்கு முற்படுகின்றது. மார்க்சியம் பிரதானமாகத் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரமான சித்தாந்தம் என்பதும் மிதவாதத்தின் எந்த வடிவத்திலிருந்தும் கோட்பாட்டளவில் முற்றிலும் வேறாக இருப்பது என்பதும் மழுப்பப்படுகிறது. மார்க்சியத் தத்துவம் அதன் புரட்சிகரமான நடவடிக்கையிலிருந்து அடிக்கடி பிரிக்கப்படுகிறது.

பெருந்திரளான மக்களிடம் மார்க்சிய – லெனினியக் கோட்பாடுகளைப் பரப்புவதில் “இடதுசாரி” திருத்தல்வாதத்தையும் வறட்டுச் சூத்திரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவது அதிக முக்கியமானது. இந்தப் போக்குகளின் பிரதிநிதிகள் மார்க்சியத்துக்கு முந்தியவர்களின் கொள்கைகளையும் கருத்துக்களையும் புறக்கணிக்க முயல்கிறார்கள். சமூக வளர்ச்சி என்பது புறவயமான விதிகளுக்கு ஏற்ப நடைபெறுகின்ற நிகழ்வுப் போக்கு என்ற மார்க்சியக் கருத்தை, அதன் விஞ்ஞான ஆராய்ச்சிப் பகுதியின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டுவதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள். பொருளாதாரத்தில் மனம்போனவாதமும் அரசியலில் வீரசாகசமும் “இடதுசாரி” திருத்தல்வாதத்தின் குறியடையாளங்களாகும்.

புரூதோன்

மார்க்சியத்தை புரூதோன், கிரொபோட்கின் ஆகியோரது – இவர்களுக்கும் மார்க்சுக்கும் பல அம்சங்கள் ஒத்துவருவதாகச் சொல்லப்படுகிறது – அராஜகவாதக் கருத்துக்களோடு இணைப்பவர்களைப் ”புதிய இடது” அணியினரிடம் பார்க்கிறோம். ஆனால் மார்க்சும் எங்கெல்சும் புரூதோனையும் அவருடைய போதனையையும் எதிர்த்துப் பல வருடங்களுக்கு மேல் உக்கிரமான போர் நடத்தியது எல்லோரும் அறிந்த உண்மையாகும்.

முதலாளித்துவக் கலாச்சாரத்தின் எல்லா அம்சங்களையும் கூறுகளையும் நிராகரிக்கும்பொழுது ”எதிர்க் கலாச்சாரம்” என்ற கருத்து சில சமயங்களில் வளர்ச்சி அடைகிறது. ஒரு புதிய, முதலாளித்துவ எதிர்ப்புக் கலாச்சாரத்தை வெறும் காற்றைக் கொண்டு நிர்மாணிப்பதற்குச் செய்யப்படுகின்ற முயற்சிகளின் பொருந்தாத் தன்மையையும் தீமைகளையும் மார்க்சிய லெனினியம் தத்துவத்திலும் நடைமுறையிலும் விளக்கிக் காட்டியிருக்கிறது. புதிய கலாச்சாரம் பழையதை ஒரரேயடியாக நிராகரித்துவிடுவதில்லை, ஆனால் அதிலுள்ள மிகச் சிறந்த, முற்போக்கான கூறுகளைப் பயன்படுத்துகிறது.

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர் முதலாளித்துவ அமைப்பு சரியானதே என்று காட்டும் நோக்கத்தைக் கொண்ட முதலாளித்துவப் பொருளாதாரத் தத்துவங்களை அம்பலப்படுத்தி விமரிசனம் செய்தார்கள்; அவற்றின் சமூகத் தோற்றுவாய்களையும் நோக்கங்களையும், பொருளாதார வளர்ச்சியைப் பற்றிய விதிகளையும் நிகழ்வுப் போக்குகளையும் பற்றி அவர்களுடைய மேலெழுந்தவாரியான, விஞ்ஞானத்துக்குப் புறம்பான கருத்துக்களை வெளியே கொண்டு வந்தார்கள்.

தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு ஆபத்தேற்படுத்துகின்ற, அதன் புரட்சிகரமான கடமைகளிலிருந்து தைத் திசை திருப்புகின்ற சித்தாந்தத்தின் மீது அவர்களுடைய தாக்குதல் எத்தகைய சமரசத்துக்கும் இடமில்லாத வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில் முதலாளித்துவப் பொருளாதாரக் கருது கோள்களிலிருந்து புறவய யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள உதவுகின்ற பகுத்தறிவுக்கு ஏற்ற கூறுகளைத் தேர்ந்தெடுப்பதை மார்க்சிய மூலவர்கள் தங்களுடைய விமரிசனத்தின் நோக்கமாகக் கொண்டிருந்தனர். முதலாளித்துவ அறிஞர்களின் ஸ்தூலமான பொருளாதார எழுத்துக்களைப் படிக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் குறிப்பிட்ட விதத்தில் வற்புறுத்தினார்கள்.

(தொடரும்…)

அடுத்த பகுதியில் பார்க்க இருக்கும் தலைப்பு : மூன்று நூற்றாண்டுகள் 

அடிக்குறிப்பு:
1) V.I. Lenin, Collected Works, Vol. 21, p.50
2) J.Schumpeter, History of Economic Analysis, N.Y., 1955, p.390.
3) J.strachey, Contemporary capitalism, London, 1956, pp. 14-15.
4) R.Heilbroner, The Worldly Philosophers. The Lives. Times and Ideas of the Great Economic thinkers, 3rd ed., N.Y., 1968, p. 153.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

உங்களில் அநேகர் சத்தியத்துக்காகப் போராடவே இல்லை !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 41

மாக்சிம் கார்க்கி
றுநாள் காலையில் ஆஸ்பத்திரியின் வெளிவாசலுக்கருகே சுமார் முப்பது நாற்பது பேர் நின்றுகொண்டிருந்தார்கள். தங்கள் தோழனின் சவப்பெட்டியைப் பெற்றுத் தூக்கிச் செல்வதற்காக அவர்கள் காத்து நின்றார்கள். அவர்களைச் சுற்றிலும் உளவாளிகள் திரிந்து கொண்டிருந்தார்கள். ஜனங்கள் பேசுகின்ற பேச்சையும், முகபாவங்களையும் நடவடிக்கைகளையும் அவர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். தெருவுக்கு அப்பால் எதிர்த்திசையில் ஒரு போலீஸ் படை இடைகளிலே ரிவால்வர்கள் சகிதம் நின்று கொண்டிருந்தது. அந்த உளவாளிகளின் துணிச்சலைக் கண்டும், போலீஸ்காரர்களின் ஏளனமான புன்னகையைக் கண்டும் ஜனங்களுக்கு ஆத்திரம் மூண்டு கொண்டு வந்தது. போலீஸ்காரர்கள் எந்த நிமிஷத்திலும் தம் சக்தியை வெளியிடத் தயாராய்த் துடிதுடித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் தங்களது ஆத்திரத்தைக் கேலியும் கிண்டலுமாகப் பேசி மறைக்க முயன்றார்கள். சிலர் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை ஏறிட்டுப் பார்த்துக்கொண்டிருக்க விரும்பாமல், தங்கள் தலைகளைத் தொங்கவிட்டு, தரையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வேறு சிலர் தங்களது உணர்ச்சிகளை அடக்க முடியாமல், வாய்ச் சொல்லைத் தவிர எந்தவித ஆயுதமுமற்ற மக்களைக் கண்டு பயந்து நடுங்கும் அதிகாரிகளை நோக்கிக் குத்தலாகப் பேசினார்கள். மக்களது காலடியிலே காற்றினால் பறந்து வந்து விழுந்த பழுத்து வதங்கிய இலைகள் பரவிக்கிடந்த தெருவின் சாம்பல் நிறச் சரளைகளின் மீது இலையுதிர்காலத்தின் வெளிறிய நீலவானம் பளபளத்து ஒளிர்ந்தது.

தாய் கூட்டத்தினிடையே நின்று, தன்னைச் சுற்றியுள்ள பரிச்சயமான முகங்களைக் கண்டு வருத்தத்தோடு நினைத்துக் கொண்டாள்.

”நீங்கள் ஒன்றும் அதிகம் பேர் வரவில்லை. தொழிலாளர்களே ரொம்ப ரொம்பக் குறைச்சல்……..”

கதவுகள் திறந்தன. சிவப்பு நாடாக்களால் கட்டப்பெற்ற மலர் வளையங்கள் சுற்றிய சவப்பெட்டியின் மேற்பகுதியைச் சிலபேர் வெளியே கொண்டுவந்தார்கள். குழுமி நின்ற ஜனங்கள் உடனே தங்கள் தொப்பிகளை அகற்றி அதற்கு மரியாதை செலுத்தினார்கள். அவர்கள் செய்த இந்தச் செய்கை ஒரு பறவைக் கூட்டம் திடீரென கணத்தில் சிறகை விரித்துப் பறக்கத் தொடங்குவது போலத் தோன்றியது. சிவந்த முகத்தில் கறுத்த பெரிய மீசை கொண்ட ஒரு நெட்டையான போலீஸ் அதிகாரி விறுவிறென்று கூட்டத்தினரை நோக்கி நடந்து வந்தான். அவனுக்குப் பின்னால் ஜனங்களைப் பிளந்து தள்ளிக்கொண்டும், தங்களது பூட்ஸ் கால்களை ஓங்கி மிதித்துக்கொண்டும் சிப்பாய்கள் சிலர் வந்தார்கள்.

“அந்த நாடாக்களைத் தூர எடு!” என்று கரகரத்த குரலில் உத்தரவிட்டான் அந்த அதிகாரி.

ஆணும் பெண்ணும் அவனைச் சுற்றி நெருங்கிச் சூழ்ந்தார்கள். ஆத்திரத்தோடு பேசினார்கள். தங்கள் கைகளை அசைத்து வீசி ஒருவரையொருவர் முண்டியடித்து முன்னேறினார்கள். தாயின் கண் முன்னால் உணர்ச்சி வசப்பட்டு வெளுத்துப்போன முகங்களும் துடிதுடிக்கும் உதடுகளும் பிரகாசித்தன. ஒரு பெண்ணின் கன்னங்களில் அவமானத்தால் ஏற்பட்ட கண்ணீர் பொங்கி வழிந்து உருண்டோடியது.

”அடக்குமுறை ஒழிக!” என்று ஒரு இளங்குரல் கோஷமிட்டது. எனினும் அந்தக் கோஷம் அங்கு நடந்துகொண்டிருந்த வாக்குவாதத்தில் அமிழ்ந்து அடங்கிவிட்டது.

தாயின் உள்ளத்தில் சுருக்கென்று வேதனை தோன்றியது. அவள் தனக்கு அடுத்தாற்போல் நின்றுகொண்டிருந்த எளிய உடைதரித்த இளைஞனைப் பார்த்தாள்.

”சவச் சடங்கைக்கூட தோழர்களின் இஷ்டம்போல் நடத்துவதற்கு விடமாட்டேனென்கிறார்கள்” என்று அவள் ஆக்ரோஷத்தோடு சொன்னாள். “இது ஓர் அவமானம்!”

வெறுப்புணர்ச்சி மேலோங்கியது, ஜனங்களது தலைகளுக்கு மேலாகச் சவப்பெட்டியின் மூடி அசைந்தது. அதிலுள்ள சிவப்பு நாடாக்கள் காற்றில் அசைந்தாடின. அந்தப் பட்டு நாடாக்கள் ஜனத்திரளுக்கு மேலாகப் படபடத்து ஒலித்தன.

போலீசாருக்கும் ஜனக்கூட்டத்துக்கும் கலவரம் ஏற்படக்கூடும் என்ற பயம் தாயின் மனத்தில் ஏற்பட்டது. எனவே அவள் ஏதேதோ முணுமுணுத்துக்கொண்டே அங்குமிங்கும் விறுவிறென நடந்து திரிந்தாள்.

படிக்க:
கேள்வி பதில் : வணிக ஊடக பத்திரிகையாளர் – மாற்று ஊடக பத்திரிகையாளர் என்ன வேறுபாடு ?
ஸ்டெர்லைட் போராட்டம் : கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் இராஜு | காணொளி

”அவர்கள் அப்படி விரும்பினால் அவர்கள் இஷ்டப்படியே நடந்து தொலையட்டுமே! வேண்டுமானால், அவர்கள் அந்த நாடாக்களை எடுத்துக்கொள்ளட்டுமே! நாம்தான் கொஞ்சம் விட்டுக்கொடுப்போமே!”

யாரோ ஒருவனின் கூர்மையும் பலமும் கொண்ட குரல் அங்கு நிலவிய சப்தத்தை விழுங்கி மேலோங்கி ஒலித்தது:

”எங்களது தோழனை, உங்களது சித்திரவதையால் உயிர் நீத்த எங்களது தோழனை கல்லறைக்கு வழியனுப்பி வைக்கும் எங்கள் உரிமையைத்தான் நாங்கள் கோருகிறோம்…”

ஓர் உரத்த பாட்டுக்குரல் ஒலிக்க ஆரம்பித்தது:

இணையும் ஈடும் இல்லாத
இந்தப் போரில் நீங்களெல்லாம்
பணயம் வைத்தே உம்முயிரைப்
பலியாய்க் கொடுத்தீர் கொடுத்தீரே!

“நாடாக்களை எடு! அவற்றை வெட்டித்தள்ளு, யாகவ்லெவ்!”

உருவிய வாள்வீச்சு ஒலித்து இரைந்தது. கூச்சல்களை எதிர்பார்த்து தாய் தன் கண்களை மூடிக்கொண்டாள். ஆனால் ஜனங்களோ முணுமுணுக்கத்தான் செய்தார்கள். சீற்றங்கொண்ட ஓநாய்களைப்போல் உறுமினார்கள். பிறகு அவர்கள் மெளனமாகத் தங்கள் தலைகளைத் தொங்கப்போட்டவாறே விலகி நடந்தார்கள். அவர்களது காலடியோசை தெரு முழுதும் நிரம்பி ஒலித்தது.

அலங்கோலமாக்கப்பட்ட சவப்பெட்டியின் மேலிருந்து கசங்கிப்போன பூமாலைகள் ஜனக்கூட்டத்தின் தலைகளுக்கு மேலாக உதிர்ந்து மிதந்தன. அவர்களுக்குப் பக்கத்தில் குதிரைப் போலீஸ்காரர்கள் பாராக் கொடுத்து உலாவிக் கொண்டிருந்தார்கள். தாய் நடைபாதை வழியாக நடந்து வந்தாள். அவளால் இப்போது சவப்பெட்டியைக்கூடக் காண முடியவில்லை. அந்தச் சவப்பெட்டியைச் சுற்றிலும் தெரு முழுவதுமே முன்னும் பின்னும் ஜனத்திரள் பெருகி வந்தது. சாம்பல் நிறம் படைத்த குதிரைப் போலீஸ்காரர்கள் பின்புறத்திலும் வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அதே சமயம் இருமருங்கும் போலீஸ்காரர்கள் தங்களது உடைவாளின் கைப்பிடியில் கைகளைப் போட்டவாறே நடந்து வந்துகொண்டிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் துப்பறிபவர்களின் கூரிய கண்கள் ஜனங்களின் முகங்களைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே வருவதைத் தாய் கண்டாள்.

சென்று வாராய், தோழனே!
சென்று வாராய். தோழனே!

என்று இரு சோகக் குரல்கள் பாடின.

”பாட்டில்லாமலே போகலாம்” என்று யாரோ கத்தினார்கள். “பெரியோர்களே, நாம் மௌனமாகவே செல்வோம்.”

அந்தக் குரலில் ஏதோ ஓர் உறுதியும் அழுத்தமும் இருந்தது. அந்தச் சோக கீதம் திடீரென்று நின்றது. பேச்சுக்குரல் அடங்கியது. சரளைக் கற்கள் பாவிய தெருவில் ஒரே கதியில் செல்லும் மங்கிய காலடியோசை மட்டுமே கேட்டது. இந்த ஓசை ஜனங்களுக்கு மேலாக எழுந்து நிர்மலமான வானமண்டலத்தில் மிதந்து, எங்கோ தூரத் தொலைவில் பெய்யும் புயல் மழையின் இடியோசையைப் போல், காற்றை நடுக்கி உலுக்கியது. ஒரு பலத்த குளிர்காற்று உரத்து வீசி, தெருப்புழுதியையும் குப்பை கூளங்களையும் வாரியள்ளி ஜனங்களின் மீது எரிச்சலோடு வீசியெறிந்தது. அவர்களது தலைமீதும், சட்டை துணிமணிகள் மீதும் வீசியடித்து கண்களை இறுக மூடச் செய்தது. மார்பில் ஓங்கியறைந்தது, காலைச்சுற்றி வளைத்து வீசியது…….

அந்த மெளன ஊர்வலம் பாதிரிகள் யாருமின்றி, இதயத்தைக் கவ்வும் இனிய கீதம் எதுவுமின்றிச் சென்றது. அந்த ஊர்வலமும், ஊர்வலத்தில் தோன்றிய சிந்தனை தோய்ந்த முகங்களும், நெரிந்த நெற்றிகளும் தாயின் உள்ளத்தில் பயங்கர உணர்ச்சியை நிரப்பின. மெது மெதுவாகப் பல சிந்தனைகள் அவள் மனத்தில் வட்டமிட்டான். அந்தச் சிந்தனைகளை அவள் சோகம் தோய்ந்த வார்த்தைகளால் பொதிந்து தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

“உங்களில் அநேகர் சத்தியத்துக்காகப் போராடவே இல்லை…”

அவள் குனிந்த தலையோடு நடந்து சென்றாள். அவர்கள் இகோரைப் புதைக்கச் செல்வதாகவே அவளுக்குத் தோன்றவில்லை. ஆனால் தனக்கு மிகவும் அத்தியாவசியமான அருமையான நெருங்கிய ஏதோ ஒன்றைத்தான் அவர்கள் புதைக்கப் போவதாக அவளுக்குப்பட்டது. அவள் நிராதரவான உணர்ச்சிக்கு ஆளானாள். அந்தக் காரியத்துக்கு, தான் அன்னியமாகப் போனது மாதிரி உணர்ந்தாள். இகோரை வழியனுப்பும் இந்த மனிதர்களுடன் ஒத்துப்போகாத ஒரு சமனமற்ற கவலையுணர்ச்சி அவள் இதயத்தில் நிரம்பி நின்றது.

“உண்மைதான். இகோர் கடவுள் இருப்பதாக நம்பியதில்லை. இந்த மனிதர்களும்தான் நம்பவில்லை……..” என்று அவள் தனக்குள் நினைத்துக்கொண்டாள்.

அந்த எண்ணத்தையே மேலும் மேலும் தொடர விரும்பவில்லை. தனது இதயத்தை அழுத்திக் கொண்டிருக்கும் பெரும் பார உணர்ச்சியிலிருந்து விடுபடுவதற்கு முயன்றவாறே அவள் பெருமூச்செறிந்தாள்.

‘கடவுளே! அருமை ஏசுநாதரே! நானும் கூடவா இப்படி இருப்பேன்……”

அவர்கள் இடுகாட்டை அடைந்தார்கள். சமாதிகளுக்கு மத்தியில் செல்லும் ஒடுங்கிய நடைபாதைகளைச் சுற்றி வளைத்து நடந்து, கடைசியாக, சிறு வெள்ளைநிறச் சிலுவைகளாகக் காணப்படும் ஒரு பரந்த வெட்டவெளிக்கு வந்து சேர்ந்தார்கள். சவக்குழியைச் சுற்றி அவர்கள் மெளனமாகவே குழுமினார்கள். சமாதிகளுக்கு மத்தியில் வந்து சேர்ந்த அந்த உயிருள்ள மனிதர்களின் ஆழ்ந்த மெளனம். வெகு பயங்கரமாக தோன்றியது. இந்தப் பயங்கரச் சூழ்நிலை தாயின் இதயத்தை நடுக்கியது. அந்தச் சிலுவைகளுக்கு ஊடாகக் காற்று ஊளையிட்டு, இரைந்து வீசிற்று: சவப்பெட்டியின் மீது கிடந்த கசங்கிய மலர்களை உலைத்தெறிந்தது.

போலீஸ்காரர்கள் அணிவகுத்து நின்று தங்கள் தலைவனையே பார்த்தவாறு நின்றார்கள். கரிய புருவங்களும், நீளமான தலைமயிரும், நெடிய தோற்றமும் கொண்ட ஒரு வெளிறிய வாலிபன் சவக்குழியின் தலைமாட்டருகே போய் நின்றான். அதே சமயத்தில் அந்தப் போலீஸ் அதிகாரியின் முரட்டுக் குரல் சத்தமிட்டது:

”பெரியோர்களே…..”

“தோழர்களே!” என்று அந்தக் கரிய புருவமுடைய இளைஞன் தெளிந்த உரத்த குரலில் பேசத் தொடங்கினான்.

“ஒரு நிமிஷம்” என்றான் அதிகாரி: ”இங்கு நீங்கள் எந்தவிதமான பிரசங்கமும் செய்ய நான் அனுமதிக்க முடியாது. எனவே உங்களை எச்சரிக்கிறேன்.”

“நான் ஒரு சில வார்த்தைகள் மாத்திரம் கூறி முடித்துவிடுகிறேன்” என்று அந்த இளைஞன் அமைதியாகச் சொன்னான். பிறகு பேசத் தொடங்கினான். “தோழர்களே! நம்முடைய நண்பனும் நல்லாசிரியனுமாக விளங்கிய இந்தத் தோழனின் சமாதியருகே நாம் ஒரு பிரதிக்ஞை செய்வோம். அவனது கொள்கைகளை நாம் என்றும் மறக்கமாட்டோம். நாம் அனைவரும் நம்மில் ஒவ்வொருவரும் நமது தாய்நாட்டின் சீர்கேட்டுக்கெல்லாம் மூலகாரணமான இந்தத் தீமையை, இந்த அடக்குமுறை ஆட்சியை, ஏதேச்சதிகார ஆட்சியை சவக்குழி தோண்டிப் புதைப்பதற்கே நமது ஆயுட்காலம் முழுவதும் என்றென்றும் இடையறாது, போராடிப் பாடுபடுவோம்”

“அவனைக் கைது செய்” என்று அதிகாரி கத்தினான். ஆனால் அவனது குரல் அப்போது எழுந்த கோஷப் பேரொலியில் முங்கி முழுகிவிட்டது.

“ஏதேச்சதிகாரம் அடியோடு ஒழிக”

போலீஸ்காரர்கள் ஜனக்கூட்டத்தைப் பிளந்து கொண்டு அந்தப் பிரசங்கியை நோக்கிச் சென்றார்கள். அவனோ தன்னைச் சுற்றிச் சூழ்ந்து நெருங்கி நின்று தனக்குப் பாதுகாப்பளித்துக்கொண்டிருக்கும் ஜனக்கூட்டத்துக்கு மத்தியிலிருந்து கைகளை வீசி ஆட்டிக் கோஷமிட்டான்.

‘சுதந்திரம் நீடூழி வாழ்க!

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

கேள்வி பதில் : வணிக ஊடக பத்திரிகையாளர் – மாற்று ஊடக பத்திரிகையாளர் என்ன வேறுபாடு ?

வணிக பத்திரிகையில் வேலை பார்க்கும் பத்திரிகையாளருக்கும், வினவு மாதிரி மாற்று பத்திரிகையில் வேலை பார்க்கும் பத்திரிகையாளருக்கும் என்ன வேறுபாடு?

– ஜேம்ஸ்

ன்புள்ள ஜேம்ஸ்,

வணிக பத்திரிகையில் சேர பட்டப் படிப்போ அல்லது பத்திரிகைத் துறையிலோ படித்திருக்க  வேண்டும். மாற்று ஊடக பத்திரிகையாளராக பரிணமிப்பத்தற்கு ஆர்வமும் பொதுநல நாட்டமும் வேண்டும். வணிக ஊடக பத்திரிக்கையாளர் துறை சார்ந்த திறமை அடிப்படையிலும் மாற்று உலக பத்திரிகையாளர் குறைந்தபட்ச திறமையோடு ஆர்வம் அர்ப்பணிப்பு அடிப்படையிலும் பணியாற்றுகிறார்கள். முன்னவருக்கு இது தொழில். பின்னவருக்கு இது கடமை.

ஸ்டெர்லைட் விளம்பரம்.

கார்ப்பரேட் ஊடகங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து விளம்பரம் பெறுகின்றன. கடந்த சில தினங்களாக “உண்மை வென்றது” என்ற முதல் பக்க விளம்பரத்தை ஸ்டெர்லைட் நிறுவனம் எல்லா தமிழ் ஊடகங்களுக்கும் அளித்திருக்கிறது. இந்நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை எதிர்த்து தூத்துக்குடியில் நடக்கும் போராட்டத்தை வணிக ஊடகங்கள் பெயருக்கு காட்டுவார்களே அன்றி முக்கியத்துவம் கொடுத்து காட்ட மாட்டார்கள். காலம் செல்லச் செல்ல இந்த விதிகள் – கட்டுப்பாடுகள் வணிக ஊடக பத்திரிகையாளர்களின் ஆழ்மனதில் டிஎன்ஏ போல பதிந்து விடும்.

வணிக ஊடக பத்திரிக்கையாளர் தனது நிர்வாகம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளுக்கு இடையில் எழுதும் ’கலை’யை பயில்கிறார். மாற்று ஊடக பத்திரிகையாளரைப் பொறுத்த வரை அரசும், போலீசுமே அதிகம் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதால் அவற்றை உடைப்பதே அவரது முதன்மைப் பணி. கார்ல் மார்க்ஸ் ஜெர்மனியில் ஒரு பத்திரிகையில் பணியாற்றும் போது வனத்தில் சுள்ளி சேகரிக்கும் மக்களை ஒடுக்கும் அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து எழுதியதால் கைது செய்யப்படுகிறார். கவுரி லங்கேஷோ சுட்டுக் கொல்லப்படுகிறார். எனவே முன்னவரின் கட்டுப்பாடு என்பது ஆளும் வர்க்கம் வேண்டுகின்ற சுயதணிக்கையாக அவருடைய பணியில் இருக்கிறது. பின்னவரின் கட்டுப்பாடு என்பது அவரது பணியை முடக்கும் வண்ணம் அரசால் ஏவப்படுகிறது.

ஸ்டெர்லைட் விளம்பரத்திற்கு முன்னே, பெட்டி செய்தியாக சுருங்கிப் போன கடையடைப்பு போராட்டப் பதிவு.

கார்ப்பரேட் ஊடகங்களின் பாலபாடம் பொதுமக்களுக்கு புரியும் படியும் எளிமையாகவும் கவர்ச்சியாகவும் எழுத வேண்டும். மாற்று ஊடக பத்திரிக்கையாளர்கள் மக்களுக்கு எது தேவையோ அதை அவர்களிடம் கொண்டு செல்லும் வகையில் எழுத வேண்டும். முன்னவர் நிலவும் பொதுப்புத்தியை வைத்துக் கொண்டு அதனோடு முரண்படாமல் எழுதிச் செல்வார். பின்னவர் பொதுப்புத்தியை எதிர்த்து எழுத வேண்டியிருப்பதால் அவரது எழுத்து நிறைய சர்ச்சைகளை எதிர் கொள்ளும். முன்னவர் மக்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது எப்படிச் சொல்லவேண்டும் என்பதில் தேர்ந்தவராக இருப்பார். பின்னவர் மாற்றத்தை நோக்கி எழுதுவதால் மக்களின் மனநிலை குறித்த பிடிமானம் ஓரளவிற்கே இருக்கும். அதனால் இவர் மக்கள் விரும்பும் வகையில் எழுதுவதை தொடர் முயற்சியில் கற்றுக் கொள்வார்.

வணிக ஊடக பத்திரிக்கையாளர் தனது எழுத்து திறமையால் ஊடக உலகில் பிரபலமாகி தன்னை முன்னிறுத்திக் கொள்ள முடியும். அதன் மூலம் அடுத்தடுத்த உயர்பதவிகளையோ அல்லது சினிமா வாய்ப்புகள், தனி ஊடக நிறுவனத்தை ஆரம்பிப்பது என பயணிக்க முடியும். மாற்றுப் பத்திரிகையாளர் தனது ஊடகம் முன்வைக்கும் கருத்து – இலட்சியத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதைக் கடமையாகக் கொண்டுள்ளார். அவருக்கு தனிப்பட்ட பிரபலம், புகழ், அடுத்தடுத்த உயர்பதவிகளுக்குச் செல்லுதல் போன்றவை தேவையும் இல்லை – வாய்ப்பும் இல்லை. அவருக்கும் அதில் பெரிய விருப்பம் இருக்காது. முன்னவர் தன் எழுத்து மக்களால் பாராட்டப்படுவதை அதிகம் விரும்புவார். பின்னவருக்கும் அந்த விருப்பம் இருந்தாலும் முதன்மையாய் தன் எழுத்து மக்களிடம் உரிய மாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே மகிழ்வார்.

வணிக ஊடக பத்திரிகையாளர் நிர்வாக வரம்புகளுக்கு உட்பட்டு தனது எழுத்தை நேர்த்தியாக எழுதும் கலையில் முன்னேறுவது சில காலம் மட்டுமே இருக்கும். பிறகு அந்த தனித்திறமை கார்ப்பரேட் ஊடகங்களின் சமரசத்தோடு இணைந்து பயணிப்பதால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவரது எழுத்து தேங்கி விடுகிறது. மாற்றுப் பத்திரிகையாளருக்கு நிர்வாக சமரச வரம்புகள் இல்லை என்றாலும் அவர் பொதுமக்களிடம் தனது கருத்தைக் கொண்டு செல்வது என்ற முறையில் அமெச்சூராக ஆரம்பித்து  பிறகு தொழில்முறை பத்திரிகையாளர் என்ற நிலையை நோக்கி பயணிப்பார். இந்த அம்சத்தில் இவர் வளர்கிறார். முன்னவர் தேய்கிறார்.

கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்.

வணிக ஊடக பத்திரிகையாளர் தனது செய்திகளுக்கான மூலாதாரங்களைப் பெரும் செய்தி நிறுவனங்கள், போலீஸ், நீதிமன்றம், அரசுத்துறைகள், பெரிய கட்சிகள், பிரபலங்கள் போன்றோரிடமிருந்து பெறுவார். மாற்றுப் பத்திரிகையாளர் ஒரு போலீசு தரும் செய்தியை மூலாதாரமாக வைத்துக் கொள்ள மாட்டார். நேரடியாக மக்களிடம் சென்று விசாரிப்பார். அல்லது ஊடகங்களில் வரும் செய்திகளை பகுத்தாராய்ந்து உண்மையை கண்டுபிடிப்பார்.

கார்ப்பரேட் ஊடக பத்திரிகையாளர் தனது தொழில் நிமித்தமாக கட்சித் தலைவர்கள் உயர் அதிகாரிகள் திரை நட்சத்திரங்கள் ஆகியோரை அடிக்கடி சந்திப்பார். இந்த சந்திப்பின் மூலமாக அவர் மெல்லமெல்ல ஆளும் வர்க்க அரசியல் சட்டகத்தில் நுழைந்து இந்த அமைப்பில் தானும் ஒர் அங்கம், பெரிய அளவில் முரண்பட முடியாது என ’தெளிவு’ பெறுவார். பிரபலங்களை பார்க்க வேண்டிய தேவை மாற்று ஊடக பத்திரிக்கையாளருக்கு அதிகம் இல்லை. ஏனெனில் மேற்கண்ட நபர்கள் அனைவரும் முன்வைக்கும் கருத்துக்களை விமர்சனப் பார்வையோடு ஆய்வு செய்து உண்மையை கண்டுபிடிப்பதுதான் அவரது பணியாக இருக்கிறது.

மாற்று ஊடக பத்திரிகையாளர் தனது எழுத்துப் பயணத்தில் பொதுவான பார்வையிலிருந்து குறிப்பான பார்வையை நோக்கி பயணிப்பார். சமூகம் பற்றிய அவரது பொதுக்கருத்துக்கள் பின்பு சமூக மாற்றம் என்ற நிலையில் குறிப்பான கருத்துக்களை நோக்கி பயணிக்கும். ஆனால் வணிக பத்திரிகையாளரோ வேலையில் சேரும் போது இருக்கும் குறிப்பான அவரது பார்வையை கருத்தை பணிக்காலத்தில் இழந்து வணிக ஊடகங்களின் பொதுவான பார்வை எனும் பொதுத்தன்மையை ஏற்பார்.

ஊடகம் ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனும் இடம் உருவாக்கியிருக்கும் பல்வேறு சலுகைகள் உரிமைகளை வணிக பத்திரிகையாளர் பயன்படுத்திக் கொள்வார். அவரது இரு சக்கர வாகனத்தில் மீடியா என்ற பெயரை வைத்துக் கொண்டு அவர் பல இடங்களுக்கு எளிதில் செல்ல முடியும். மற்ற சாதாரண மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத சிவில் சமூக மற்றும் அரசு தொடர்புடைய பணிகள் பலவற்றை எளிதில் செய்து விட முடியும். வீடு ஒதுக்கீடு முதல் ரயில் முன்பதிவு வரை அனேக சலுகைகளை அவர் எளிதில் பெற முடியும்.

தஞ்சை ம.க.இ.க. சார்பில் பத்திரிகையாளர்கள் பங்கேற்புடன் நடத்தப்பட்ட கௌரிலங்கேஷ் நினைவேந்தல் நிகழ்வு.

மாறாக, மாற்று ஊடக பத்திரிகையாளர் ஒரு ஊடகவியலாளர் எனும் தகுதிகள் கிடைக்கும் சலுகைகள் உரிமைகள் எவற்றையும் பயன்படுத்த முடியாது. அவர் அரசு, அதிகார வர்க்கம் போட்டிருக்கும் தடுப்பரண்களை தாண்டித்தான் செய்தி சேகரிக்க முடியும். பத்திரிகையாளர் எனும் பதவி வணிக ஊடகங்களில் ஒரு அதிகாரம் என்றால் மாற்று ஊடகங்களில் அது அதிகாரத்திற்கு எதிரான போராட்டம் எனலாம்.

தனது சொந்தப் பார்வையை இழக்காமல் கார்ப்பரேட் உலகின் சமரசங்களால் வெறுப்படையும் ஒரு வணிக பத்திரிகையாளர் மாற்று ஊடகங்களை நோக்கி வரும்போது ஒரு வைரம் போல மிளிர்வார், பணியாற்றுவார். மாற்று ஊடகங்கள் கோரும் அர்ப்பணிப்பை தர முடியாமல், மக்கள் நலனிலிருந்து பின்வாங்கும் ஒரு மாற்று ஊடக பத்திரிகையாளர், வணிக ஊடகங்களை நோக்கி  பயணித்தால் விரைவிலேயே சமரசங்களில் சாதனை படைத்து ஆளும் வர்க்கம், பத்திரிகை நிர்வாகம் கோரும் ’திறமையினை’ அடைவார்.

வணிகப் பத்திரிகையில் சேரும் ஒருவர் அடிப்படை வர்க்கத்தினராக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் தனது வர்க்கப் பார்வையை இழந்து ஆளும் வர்க்க பார்வைக்கு தயாராகி விடுவார். மாறாக வசதியான நடுத்தர வர்க்கத்தில் இருந்து மாற்று ஊடகங்களில் சேரும் ஒருவர் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் பார்வையை மெல்ல மெல்ல பெறுவார்.

கார்ப்பரேட் ஊடகங்களுக்கு பெரும் வலைப்பின்னல் இருப்பதால் நேரடி செய்திகள், நேரடி நிகழ்வுகள், நேரடி கள அறிக்கைகள் அனைத்தையும் ஒரு ஊடகவியலாளர் செய்ய முடியும். மாற்று ஊடகங்களுக்கு அந்த வலைப்பின்னல் இல்லை என்பதால் ஒரு பத்திரிகையாளர் பெரும் ஊடக செய்திகளைப் படித்து தனது கண்ணோட்டத்தில்  மறு ஆக்கம் செய்ய வேண்டியிருக்கும்.

வணிகப் பத்திரிகையில் சேரும் ஒருவர் பத்திரிகைத் துறையின் அனுபவங்கள், நேர்த்தியினைக் கற்றுக் கொள்வதற்கு துறை சார்ந்த சூழலில் நிறைய வாய்ப்பு இருக்கிறது. மாற்று ஊடகங்களில் அவை ஒருவரது தனிப்பட்ட முயற்சியாக மட்டுமே இருக்கிறது, சூழலில் இல்லை.

படிக்க:
ஊடகங்களை மிரட்டுகிறது காவிக் கும்பல் – குரல் பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம் !
மாற்று ஊடகம் இல்லையே என்று கவலைப்படும் நண்பர்களுக்கு….. | மு.வி. நந்தினி

இங்கே நாம் பார்த்திருக்கும் ஒப்பீடு இந்தியா போன்ற இன்னமும் ஜனநாயகம் முழுமையடையாத நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும். முதலாளித்துவ நாடுகளில் இந்த ஒப்பீடு சிறிதோ கணிசமாகவோ வேறுபடும்.

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும்  கேட்கலாம்:

தங்களின் கேள்விகளை பதிவு செய்யுங்கள்

ஸ்டெர்லைட் போராட்டம் : கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் இராஜு | காணொளி

ஸ்டெர்லைட்டால் பாதிப்பு என்பதற்கு என்ன ஆதாரம் ?

  • ஸ்டெர்லைட் ஆலையினால் என்ன பாதிப்பு?
  • தாமிர ஆலையை மூடினால், தாமிரம் பற்றாகுறை ஏற்படும். அங்கு வேலை செய்யும் குடும்பங்கள் பாதிக்கப்படும் அல்லவா?
  • தூத்துக்குடி மக்களுக்கு ஸ்டெர்லைட்டால் பாதிப்பு என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா ? ஆர்சானிக், காரியம் போன்ற இரசாயனங்கள் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் இராஜு ! பாருங்கள் பகிருங்கள் !

***

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் யாருக்கானது ?

  • NGT வழங்கியது சட்டரீதியான தீர்ப்புதானே? பின் ஏன் NGT-யை எதிர்கிறீர்கள்? தீர்ப்பு வெளியிடப்படும் முன்பே ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பை வெளியிட்டது. கோயல் நியமனம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
  • தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் NGT எப்படி தலையிட முடியாது என்றால், நீங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாமே? NGT–க்கு அதிகாரம் இருக்கா? “மூடியது மூடியது தான் திறக்கவே முடியாது” என ஜெயக்குமார் கூறுவதை நம்பலாமா?
  • அனைத்து கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய முன்னணி கட்டி போராடுவீர்களா? தேசிய பசுமை தீர்ப்பாயம் கார்பரேட்டுக்கானதா? அபாயகரமான இந்த சூழலில் நிரந்தரமாக மூடுவது சாத்தியமா?

பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் இராஜு ! பாருங்கள் பகிருங்கள் !

***

அனில் அகர்வால் மட்டும்தான் கொடூர முதலாளியா ?

  • அனில் அகர்வால் மட்டும்தான் கொடூர முதலாளியா? வேறு யாரையும் எதிர்த்து போராட மாட்டீர்களா?
  • ஏன் நீங்கள் வைகுண்டராஜன் செய்யும் தாது மணல் கொள்ளையைப் பற்றி பேசுவதில்லை?
  • ஸ்டெர்லைட் மட்டும் அல்ல, பெரிய தொழிற்சாலைகளிலும் விபத்து, காற்று மாசுபடுவது இயல்பான ஒன்றுதானே? இவ்வாறு ஒவ்வொரு ஆலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் தொழில் உற்பத்தி பாதிக்காதா?
  • மீண்டும் போராட்டத்தில் அரசு துப்பாக்கிச்சூடு நடத்தலாம். அப்போது தமிழக மக்கள் எப்படி வினையாற்றுவது? பிற தமிழக மக்கள் ஏன் ஆர்வம் காட்டவில்லை? மக்கள் அதிகாரம் மற்ற கட்சிகளுடன் சேர்ந்து ஏன் போராடக் கூடாது?
  • தேர்தல் கட்சிகள் தங்கள் கட்சி தொண்டர்களைக் களத்தில் இறக்கி ஏன் தீவிரமாக போராடவில்லை?

பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் இராஜு ! பாருங்கள் பகிருங்கள் !

நூல் அறிமுகம் : கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர்

மிழகத்தின் வேளாண் நிலவரத்தை கூர்ந்து கவனித்து வந்திருப்பவர்கள் இந்த செய்தியை அறிந்திருக்கலாம். தமிழகத்தின் காவிரி பாசன உழவர்கள் அணையிலிருந்து நீரை திறந்து விடுமாறு போராட்டம் நடத்த கர்நாடக காவிரிப் பாசன உழவர்களோ நீரை திறக்கக்கூடாது என்று போராடுவார்கள். ஓர் அணைக்கு மேல் பகுதியில் இருப்பவர்கள் அணையைத் திறக்கக்கூடாது என்றும் அவ்வணைக்கு கீழ்ப் பகுதியில் இருப்பவர்கள் திறக்க வேண்டும் என்றும் போராடுவது பொதுவாகவே உலகெங்கும் காணப்படும் வேளாண்மை அரசியல். இதற்கு முற்றிலும் முரணாக ஓர் அணை இருக்கிறது. அந்த அணைக்கு மேல் பகுதியில் இருப்பவர்கள் அணையிலிருந்து நீரை திறந்துவிட வேண்டும் என போராட்டம் நடத்த அந்த அணைக்கு கீழ் பகுதியில் இருப்பவர்களோ அணையைத் திறக்கக்கூடாது என்று போராட்டம் நடத்துகிறார்கள். இந்த விநோத காட்சி நடைபெறும் இடம் நம் தமிழகம் தான். அந்த அணை திருப்பூர் நகருக்கு 26 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஓரத்துப்பாளையம் அணை.

காவிரியின் துணை ஆறான நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில் தான் திருப்பூரின் சாயப் பட்டறை கழிவுகள் மொத்தமும் தேங்குகிறது. இதனால் நீர் நஞ்சாகி அணைக்கு மேல் பகுதியில் உள்ள வேளாண் பயிர்கள் கால்நடைகள் மற்றும் குடிநீரும் பாழாகிவிட்டன. இதே நச்சு நீரை திறந்துவிட்டால் கீழ் பகுதி மக்களுக்கும் இதே பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே அணை நீரை திறக்கக்கூடாது என்கிறார்கள். இப்பிரச்சினையை தீர்க்க தெரியாமல் விழிக்கும் அரசோ காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் அணை நீரை திறந்து விடுவதன் மூலம் இப்பிரச்சனையை தொடர்ந்து சமாளித்து வருகிறது.

இதற்கு மூலக் காரணமான திருப்பூரின் பின்னலாடை தொழிலை இன்றைய தேதியில் வருடத்துக்கு 12,000 கோடி அந்நிய செலவாணியை ஈட்டித் தருகிறது என்பதற்காக அரசு சீராட்டி வருகிறது.

இது நியாயம்தானே என்று தோன்றலாம். ஆனால் நாம் இன்னும் சற்று ஆழமாக யோசித்தோமானால், சில உண்மைகளை எளிதாக புரிந்து கொள்ளலாம். பருத்தியை விளைவிக்க தெரிந்த மேல் நாட்டினருக்கு பின்னலாடை தொழில் நுட்பத்தை அறிந்திருக்கும் மேல் நாட்டினருக்கு அதற்கான எந்திரங்களை உற்பத்தி செய்து தரும் மேல் நாட்டினருக்கு இந்த பின்னலாடைகளை மட்டும் அங்கேயே தயாரிக்க தெரியாதா என்ன? பின் ஏன் அதை இங்கு உற்பத்தி செய்து வாங்கிக் கொள்கிறார்கள்?

தாகத்திற்கா தண்ணீர் லாபத்துக்கா ? – கோவன் பாடல் !

இதே போல் உலக அளவில் காலணி தயாரிப்புக்கு புகழ்பெற்ற நாடு இத்தாலி. ஆனால் இந்த நாட்டுக்கு பதப்படுத்தப்பட்ட தோல்கள் ஏற்றுமதி செய்யப்படுவது நம் பாலாற்றங்கரையை நாசம் செய்த வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை போன்ற ஊர்கள்தான். இந்த இத்தாலி நாடு கச்சாப் பொருளான பதப்படுத்தப்படாத தோல்களை அப்படியே இறக்குமதி செய்துகொண்டு அதை இத்தாலியில் பதப்படுத்திக் கொண்டு காலணிகளை தயாரித்தால் கூடுதலான அந்நிய செலவாணியை மிச்சப்படுத்தி கொள்ளலாம் அல்லவா? பின் ஏன் அவர்கள் அதை செய்வதில்லை?

ஆற்றில் கலக்கப்படும் சாயப்பட்டறை கழிவு நீர்.

இக்கேள்விக்கு வழமையான விடையாக முன்னிறுத்தப்படும் ‘மலிவான மனித வளம் இங்கு கிடைக்கிறது’ என்ற ஒற்றைப் பொருள் தன்மையை கொண்ட அரசியல் சொற்றொடரை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு வேறுசில வினாக்களை நாம் எழுப்பிப் பார்க்கலாம். கோதுமை உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதோடு அதை ஏற்றுமதியும் செய்து வந்த நாடு சவுதி அரேபியா. தற்சமயம் அந்நாடு கோதுமையை இறக்குமதி செய்து கொள்கிறது. ஏன்?

சீனர்களுக்கு மிகவும் விருப்பமான உணவு பன்றி இறைச்சி. ஆனால் சீன அரசாங்கம் பன்றி இறைச்சி உற்பத்தியைக் கட்டுப்படுத்தி வருகிறது. ஏன்? சிக்கன நீர் பாசன வேளாண்மைக்கு புகழ் பெற்ற இஸ்ரேல் பல வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்தாலும் ஆரஞ்சுப் பழங்களை அது ஏற்றுமதி செய்வதில்லை. ஏன்? இப்படியாக பல ஏன்?-களை எழுப்பிக் கொண்டே செல்ல முடியும். இத்தகைய வினாக்களுக்கான விடைகளில்தான் ஓர் அரசியல் ஒளிந்திருக்கிறது. அதுதான் நீர் அரசியல். (நூலிலிருந்து பக். 5 – 7)

ஒரு நவீன உணவகத்தில் ஒரு குவளை பீரும், ஒரு பர்கரும் சுவைக்கும் இளைஞன் மறை நீராக ஒரு குவளை பீரில் 75 லிட்டரும், ஒரு பர்கரில் 2500 லிட்டர் நீருமாக சேர்த்து மொத்தம் 2575 லிட்டர் நீரை காலிசெய்கிறான். போன தலைமுறை வரை பசியாற ஒரு கோப்பை தேநீரும் ஒரு வடையும் சாப்பிட்டவர்கள்தான் இவர்கள். இவ்வளவுக்கும் பால் கலக்காத ஒரு கோப்பை தேநீரில் கூட 30 லி மறைநீர் இருந்தாலும் அந்த உணவு முறைக்கு தேநீர் எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது. மேய்ச்சல் நிலத்தில் தானாக மேய்ந்து வீடு திரும்பும் பசுவிடமிருந்து பால் கறந்து குடிக்கும் போது நமது நீர் காணாமல் போகவில்லை. செயற்கை தீவனமிட்டு வளர்த்து, பால் கறந்து, பதப்படுத்தி, ஞெகிழியில் சிப்பமிட்டு வரும் ஒரு கோப்பை பால் 208 லிட்டர் மறை நீரை விழுங்கிக் கொண்டிருக்கிறது.

படிக்க:
முன்பு பயிருக்கு தண்ணீர் கேட்டோம் இன்று உயிருக்கு தண்ணீர் கேட்கிறோம்
நீர்நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும் !

நீரே தேவைப்படாத பனையிலிருந்து வெல்லத்தை எடுத்து தேநீரோ, காப்பியோ தயாரித்து குடித்து வந்த சமூகம் முழுக்க முழுக்க வெள்ளை சீனிக்கு மாற்றப்பட்டுவிட்ட பிறகு ஒரு குடும்பம் வாங்கும் ஒவ்வொரு கிலோ சீனியிலும் 1653 லிட்டர் நீர் மறைந்துள்ளது. அது போலவே பனை வெல்லத்தில் தயாரிக்கப்பட்ட கடலை மிட்டாய் சாப்பிட்டு வளர்ந்த தலைமுறை நவீன வாழ்க்கைக்கு மாறிய பிறகு தன் குழந்தைக்கு வாங்கி கொடுக்கும் சாக்லேட்டுகள் ஒரு கிலோவுக்கு 26,450 லிட்டர் நீரை உட்கொண்ட பிறகுதான் வெளிவருகிறது.

இன்று பிரட் ரொட்டி ஒரு நவீன, சிற்றுண்டி. ஒரு குடும்பம் ஒரு பாக்கெட் பிரட் வாங்கி சாண்ட்விச் தயாரித்து அத்துடன் ஒரு லிட்டர் கோக் வாங்கி அருந்துவதை நகர்ப்புறங்களில் சாதாரணமாகவே காணமுடிகிறது. ஒரே ஒரு துண்டு பிரட்டில் மட்டும் 40 லிட்டர் மறை நீர் உள்ளது. அப்படியானால் குறைந்தது 15 துண்டுகள் கொண்ட ஒரு உறையில் 600 லிட்டர் மறை நீர் இருக்கிறது. அது மட்டுமல்ல ஒரு லிட்டர் கோக் தயாரிக்க 56 லிட்டர் நன்னீர் கழிவு நீராக மாற்றப்படுகிறது என்பதையும் சேர்த்துதான் நாம் கணக்கிட வேண்டும்.

தன் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டியது ஒவ்வொரு நாட்டினுடைய கடமை. ஆனால் நமது நாட்டின் எந்த ஒரு அரசும் இதுவரை அதை நிறைவேற்றாமல் குடிநீரை வணிக பொருளாக்கி தனியார் முதலாளிகள் ‘பிழைக்க’ வழி செய்து கொடுத்துள்ளது. உரிமையோடு அரசை தட்டி கேட்டு குடிநீரை கேட்டு பெறவேண்டிய நாமோ நவீன வாழ்க்கை மோகத்தில் மயங்கி போத்தல் நீரை விலைக்கு வாங்கி குடித்து திரிகிறோம். அந்த ஒவ்வொரு லிட்டர் நீரும் கூட தலா 3 லிட்டர் நன்னீரை வீணாக்கித்தான் தயார் செய்யப்படுகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? (நூலிலிருந்து பக். 22 – 23)

நூல்: கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர்
ஆசிரியர்: நக்கீரன்

வெளியீடு: இயல்வாகை பதிப்பகம்,
எண்:25, மாந்தோப்பு, ப.உ.ச. நகர், போளூர் சாலை, திருவண்ணாமலை – 1.
தொலைபேசி: 8056205053, 9659721222
மின்னஞ்சல்: kawthihills@gmail.com

பக்கங்கள்: 28
விலை: ரூ 15.00

இணையத்தில் வாங்க: marinabooks | udumalai

வினவு மின் நூல்கள் (e books)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

 

சொராபுதீன் என்கவுண்டர் : 22 பேரும் விடுதலை ! நீதி தேவதைக்கு தூக்கு !

2

சொராபுதீன் ஷேக், அவருடைய மனைவி கவுசர் பீ, உதவியாளர் துளசிராம் பிரஜாபதி ஆகியோர் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரையும் விடுவித்துள்ளது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

“கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் போதுமானதாக இல்லை” எனக் கூறி இவர்கள் அனைவரையும் விடுவித்தார் சிறப்பு நீதிபதி எஸ். ஜே. சர்மா.  “சிபிஐ தரப்பு இந்த வழக்கை நிரூபிக்க முயன்றிருக்கிறது. ஆனால் இந்த ஆதாரங்கள், மூன்று குற்றப்பத்திரிகைகள் பதிவு செய்யப்பட்டபோது, குற்றச்சாட்டை நிரூபிக்க சந்தேகத்தைக் கடந்து அதில் போதுமான ஆதாரங்கள் இல்லை. மூன்று விசாரணைகள் நடந்தபோது, ஆதாரம் குறைவாக உள்ளது” என 500 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பில் கூறியிருக்கிறார் நீதிபதி.

போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட சொராபுதீன் கவுசர் பீ

“துளசிராம் பிரஜாபதியின் கடத்தல் கதையும் நிரூபிக்கப்படவில்லை. சிபிஐ தாக்கல் செய்த மூன்றாவது குற்றப்பத்திரிகையில் சொராபுதீன் மற்றும் கவுசர் பீ- வுடன் மூன்றாவது நபராக பிரஜாபதி பேருந்தில் ஹைதராபாத்திலிருந்து சங்க்லி சென்று கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் அடிப்படையில் அவர் பேருந்தில் இல்லை. 2005, நவம்பர் 26-ஆம் தேதி அவர், நேரடியாக பில்வாராவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்” என தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

போதிய ஆதாரங்கள் சாட்சியங்கள் இல்லை என கூறியுள்ள நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக வருந்துவதாக கண்ணீர் சிந்துகிறது. “சொராபுதீன் மற்றும் பிரஜாபதி குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக பிரஜாபதியின் தாய் நர்மதா பாய்க்கு என்னுடைய வருத்தங்கள். ஆனால், குற்றம்சாட்டப்பட்ட எந்த நபருக்கும் எதிரான ஆதாரங்கள் எதுவும் இல்லை” என கைவிரித்திருக்கிறார் நீதிபதி.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்…

  1. எம். எல். பால் – அப்போது காவல் துணை கண்காணிப்பாளராக இருந்தவர், குஜராத் ஏடிஎஸ்,
  2. என். எச். தாபி – காவல் ஆய்வாளர், குஜராத் ஏடிஎஸ்
  3. பாலகிருஷ்ண சவுபே – அப்போது குஜராத்தில் காவல் ஆய்வாளராக இருந்தவர்; இப்போது ஆய்வாளர்.
  4. அப்துல் ரஹ்மான் – காவல் ஆய்வாளர், ராஜஸ்தான்
  5. ஹிமான்சு சிங் ரஜாவத் – துணை ஆய்வாளர், ராஜஸ்தான்
  6. ஷியாம் சிங் சரண் -காவல் ஆய்வாளர், ராஜஸ்தான்
  7. அஜய் குமார் பார்மர், காவல் ஆய்வாளர், குஜராத்
  8. சாந்தாராம் சர்மா – காவலர், குஜராத்
  9. நரேஷ் சவுகான் – காவல் ஆய்வாளர், குஜராத்
  10. விஜய் குமார் ரதோடு – ஆய்வாளர், குஜராத்
  11. ராஜேந்திர குமார் ஜிராவாலா – ஆஸ்ரம் பண்ணையின் உரிமையாளர். கவுசரி பீ நான்கு நாட்கள் இங்கே அடைத்து வைக்கப்பட்டு, பிற்கு கொல்லப்பட்டார்.
  12. காட்டாமநேனி ஸ்ரீனிவாச ராவ் – துணை ஆய்வாளர், ஆந்திரா
  13. ஆஷிஷ் பாண்டியா – துணை ஆய்வாளர், குஜராத்
  14. யுவேந்தர் சிங் சவுகான் – காவலர், ராஜஸ்தான்
  15. நாராயண் சிங் சவுகான் – துணை கண்காணிப்பாளர், ராஜஸ்தான்
  16. கர்தார் சிங் ஜாட் – காவலர், ராஜஸ்தான்
  17. ஜெதுசிங் சோலன்கி – காவலர், குஜராத்
  18. கன்ஜிபாய் கட்சி – காவலர், குஜராத்
  19. வினோத்குமார் லிம்பாசியா – ஆய்வாளர், குஜராத்
  20. கிரண்சிங் சவுகான் – தலைமை காவலர், குஜராத்
  21. கிரண்சிங் சிசோடியா – காவலர், குஜராத்
  22. ரமன்பாய் பட்டேல் – துணை கண்காணிப்பாளர், குஜராத்

இந்த 22 பேரும் சதித் திட்டம் தீட்டுதல், கொலை, சாட்சியங்களை அழித்தல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.  “சொரபுதீனும் அவருடைய மனைவியும் பேருந்திலிருந்து கடத்தப்பட்டது தொடர்பாக மூன்று சாட்சியங்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டன. அது தவிர, தங்களுடைய வழக்கை நிரூபிக்க வேறு ஆதாரமே இவர்களிடம் இல்லை” என்கிறார் நீதிபதி.

படிக்க:
சொராபுதீன் கொலை வழக்கையே கொன்ற அமித் ஷா- மோடி கும்பல்
நீதிபதி லோயா மரணம் : மீண்டும் விசாரணை தேவை – முன்னாள் நீதிபதி ஏ.பி.ஷா

வழக்கு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்டவர்களின் மிரட்டல் காரணமாக பகுதி அளவே சாட்சியங்கள் அளித்ததாகக் கூறி, இரண்டு முக்கியமான சாட்சியங்கள் மீண்டும் சாட்சியளிக்க நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டிருந்தனர். அதை ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

சிபிஐ தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில் 38 பேரின் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆதாரம் வேண்டும் எனக் கூறி 16 பேரை நீதிமன்றம் விடுவித்தது.  பாஜக தலைவர் அமித் ஷா, ராஜஸ்தான் உள்துறை அமைச்சராக இருந்த குலாப்சந்த் கட்டாரியா, குஜராத்தின் முன்னாள் காவல்துறை தலைவர் பி. சி. பாண்டே, குஜராத்தின் முன்னாள் மூத்த போலீசு அதிகார் டி. ஜி. வன்சாரா ஆகியோர் விடுவிக்கப்பட்டவர்களில் முக்கியமானோர்.

வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட வன்சாரா

முன்பே விடுவிக்கப்பட்ட போதும், இன்று வழங்கிய தீர்ப்பில் டி.ஜி. வன்சாராவுக்கு முலாம் பூசும் வேலையைச் செய்திருக்கிறது நீதிமன்றம். பிரஜாபதி கொலை செய்யப்படும் முன் குற்றம்சாட்டப்பட்ட ஆஷிஷ் பாண்டியா, வன்சாராவுடன் தொடர்பு கொண்டதை நிரூபிக்கவில்லை. சிபிஐ தரப்பில், விடுவிப்பில் செல்ல இருந்த ஆஷிஷ் பாண்டியாவை பிரஜாபதியை கொல்ல பணித்தார் வன்சாரா என குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

2012-ஆம் ஆண்டு நீதிபதி ஜே.டி. உத்பட் விசாரிக்க ஆரம்பித்த இந்த வழக்கு, அவருக்குப் பின் பி.எச். லோயா விசாரித்தார். 2014-ஆம் ஆண்டு மர்மமான முறையில் லோயா கொல்லப்பட்டார். அதன் பின் மதன் கோசாவி கைகளில் வழக்கு சென்றது. 2017 ஜூன் மாதம் அமித் ஷா உள்ளிட்ட பெருந்தலைகள் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

அதன் பின் பொறுப்பேற்ற நீதிபதி ரேவதி மொஹிடே, ஊடகங்கள் இந்த வழக்கு விசாரணை குறித்த செய்தி சேகரிக்க கட்டுப்பாடுகள் விதித்தார்.  தீர்ப்பு வழங்கும் இன்றைய நாளில்கூட பல முக்கிய சாட்சியங்கள் மீண்டும் சாட்சியளிக்க விண்ணப்பித்திருந்தனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்களை மிரட்டியதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதுபோல, பிரஜாபதியின் தாய் நர்மதபாய், தான் மிரட்டப்பட்டதாக நீதிமன்றத்திடம் முறையிட்டிருந்தார். ஆனால் இவற்றில் எதையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

வளைந்து கொடுக்காததால் மோடி கும்பலால் பழி வாங்கப்பட்ட ரஜ்னீஷ் ராய்

இந்நிலையில், சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் டி.ஜி. வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகளை கைது செய்த ரஜ்னீஷ் ராய் என்ற விசாரணை அதிகாரியை பணி இடைநீக்கம் செய்துள்ளது மத்திய அரசு.  கடந்த ஆகஸ்ட் மாதம் விருப்ப ஓய்வு பெறுவதாக உள்துறை அமைச்சகத்துக்கு எழுதியிருந்த ரஜ்னீஷின் மனுவை நிராகரித்துவிட்டது. விருப்ப ஓய்வுக்கு அவர் விண்ணப்பித்தபிறகு அலுவகம் வருவதை அவர் நிறுத்தியதால், அவரை பணிநீக்கம் செய்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி படுகொலைகளை நடத்தி முடித்த காவிகும்பல், இப்போது மத்தியில் ஆட்சியமைத்து தன்னுடைய ரத்தக்கறையை மறைத்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் காவிகும்பலின் ரத்தவெறி அடங்கவில்லை, மேலும் மேலும் கொலைகள், மிரட்டல்கள், பழிவாங்கல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

தமிழாக்கம் : கலைமதி
நன்றி: தி வயர்

கஜா புயலுக்கு பட்டை நாமம் – சோமநாதர் கோவிலுக்கு தங்கக் கூரை !

1

“சோம்நாத் கோவிலை 17 முறை சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக பழி வாங்கும் உணர்ச்சி மக்களுக்கு இருக்கக்கூடாது” என்று கூறிய அமித்ஷா கோவிலை தங்கத்தால் வேய்ந்து அதன் பழம்பெருமையையும் புகழையும் முழுமையாக மீட்க முடியும் என்று கடந்த டிசம்பர் 6, 2018 அன்று கூறியிருக்கிறார்.

“இப்போது ஒவ்வொரு ஆண்டும், ஒரு கோடி மக்கள் சோம்நாத் கோவிலுக்கு வருகிறார்கள். சிறப்பான வசதிகள் பல இங்கே இருக்கின்றன. ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளை சுற்றுலா வசதிகளை செய்து தர எல்லா முயற்சிகளையும் செய்கிறது. ஆனால் என்னைப் போன்ற சிறு வயதிலிருந்து இந்த கோயில் மீது ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு தங்கத்தால் இந்த கோவிலை வேயாத வரை இது முழுமையடையாது.

சோமநாதர் ஆலயத்தின் உள்ளே தங்கம் பதிக்கப்பட்ட பிரகாரம்

எண்ணிலடங்கா மக்களின் உறுதிப்பாடும் இதுதான்.. இந்த இடத்தின் பெருமையையும் புகழையும் அழிக்க முயற்சித்தவர்களை பழிவாங்க முடியாது. அதே போல பழிவாங்கும் உணர்ச்சியையும் நாம் கொண்டிருக்க முடியாது. இதன் பெருமையையும் புகழையும் மீட்கும் ஒரு உறுதியான தீர்மானம் மட்டுமே இதற்கு உண்மையான பதிலாக இருக்க முடியும்” என்று கோவில் நடைபாதைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசியுள்ளார்.

கஜினி முகமது இப்போதில்லை என்றாலும் முசுலீம்கள் இருக்கிறார்கள் என்பதை மறைமுகமாக நினைவுபடுத்தி மிரட்டுகிறார் அமித்ஷா. அடுத்த வரியிலேயே தங்கக் கூரை வேய அறைகூவல்! முன்னது மறைமுகமா நடக்கும், பின்னது வெளிப்படையாக நடக்கும்.

சோம்நாத் கோவிலில் தொடங்கி கபிலா, சரஸ்வதி மற்றும் ஹிரன் ஆகிய ஆறுகள் சந்திக்கும் முக்கூடல் (Triveni Sangam) வரை 1.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட நடைபாதை முடிகிறது. இந்நடைப்பாதையானது சுமார் 45 கோடி ரூபாய் மதிப்பில் ஒவ்வொரு 200 மீட்டர் தொலைவிலும் வேலைப்பாடுமிக்க இருக்கை அமர்வு வசதியுடன் அமைக்கப்படுகிறது. அங்கு உட்கார்ந்து கடலைக் காண்பதுடன் பல்வேறு கோவில்களையும் மக்கள் தரிசிக்கலாம். சமய சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்குடன் ஆன்மிக பயண புத்துணர்ச்சியாக்கம் மற்றும் ஆன்மிக ஊக்குவிப்பு இயக்கம் (PRASAD) என்ற திட்டத்தின் பெயரில் சுற்றுலாத்துறை அமைச்சகம் இதற்கு நிதி வழங்கி வருகிறது.

இந்த கோவில் 11-ம் நூற்றாண்டு முதல் 18-ம் நூற்றாண்டு வரை எப்படி முஸ்லிம் அந்நியர்களால் அடித்து நொறுக்கப்பட்டது என்பதை பற்றிக் கூறிய அமித்ஷா அப்படி தாக்கப்பட்ட போதிலும் அதை மீண்டும் மீண்டும் மக்கள் கட்டியமைத்ததாக கூறினார். “ஆனால் ஒவ்வொரு முறையும் பீனிக்ஸ் பறவை போல கோவில் எழுந்தது. இன்று பெருமைமிக்க இந்த கோவில், உலகம் பார்க்க நிற்பதை நாம் காண முடியும்” என்றும் கூறினார்.

படிக்க:
கஜினி முகமது : கல்வெட்டு உண்மைகள் ! பாடநூல் புரட்டுகள் !
சைவ சித்தாந்தம் இந்து மதத்திற்கு தொடர்புடையதா ? பேரா. வீ.அரசு உரை | காணொளி

ஆனால் இதே காலக்கட்டத்தில் இந்து மன்னர்களும் பல்வேறு இந்து கோயில்களையும், சமண பவுத்த விகாரங்களையும் அடித்து நொறுக்கி கொள்ளையடித்ததை இங்கே ஒப்பு நோக்கி அன்று நிலவிய காலக்கட்டத்தை புரிந்து கொள்வது அவசியமானது. அக்காலத்தில் மன்னர்களின் பொக்கிஷக் கருவறையாக கோவில்கள் இருந்தன. படையெடுத்து வரும் மன்னர்கள் கோவில்களை கொள்ளையடித்தால்தான் பொக்கிஷங்களை கைப்பற்ற முடியும். இதில் இந்து, முஸ்லீம் மன்னர்களிடத்தில் மத பேதம் இல்லை.

“மக்களின் பெருமைக்குரிய சின்னமாக இந்த கோயில் இருந்ததால் விடுதலைக்கு பின்னர் தலைவர்கள் அதை புதுப்பிக்கும் வேலையை எடுத்தனர். 1947 விடுதலைக்கு பிறகு தொலைநோக்கு பார்வை கொண்ட ஜாம்சாஹிப் (நவாநகரை ஆட்சி செய்தவர்), சர்தார் வல்லபாய் படேல், கே.எம் முன்ஷி ஆகிய தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர்கள் வெறுமனே விடுதலை அடைவதின் போதாமையை அறிந்திருந்தனர். மக்கள் தங்களது சொந்த பெருமையை மீட்டெடுப்பதுவும் இன்றியமையாதது என சிந்தித்தனர்” என்று அவர் கூறினார்.

ஆனால் ஷா கூறும் இந்த தலைவர்களின் யோக்கியதை என்னவென்று அனைவருக்கும் தெரியும். சான்றாக, நேரு அமைச்சரவையில் உணவு மற்றும் விவசாயத் துறை அமைச்சராக இருந்த முன்ஷி, குஜராத்தின் பெருமை (Gujarati Asmita) குறித்த கட்டுக்கதைகளை எழுதி குஜராத் மக்கள் மனதில் முஸ்லீம் மக்களை பற்றிய விரோத போக்கை வளர்த்தவர்களில் முதன்மையானவர். “ஆயிரம் ஆண்டுகளாக முகமதியர்கள் அழித்த சோம்நாத் கோயிலின் நினைவுகள் மறக்க முடியா ஒரு பேரிடராக இந்து இனத்தின் கூட்டு மனசாட்சிக்குள் எரிந்து புதைந்துள்ளது” என்று சோம்நாத் கோவில் பற்றி முன்ஷி கூறியது இங்கே ஒப்பு நோக்கத்தக்கது.

வழிபாட்டு இடங்களை தூய்மையாக வைத்திருக்கவும், அவற்றை எளிதில் அணுகவும் மற்றும் அவற்றின் மத இன்றியமையாமையை மீட்டெடுக்கவும், சமய சுற்றுலாவை ஊக்குவிக்கவும் பிரசாத் (PRASAD) திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொடங்கியிருக்கிறது என்று பா.ஜ.க தலைவர் அமித்ஷா தனது தங்கத்திட்டத்தை நியாயப்படுத்துகிறார்.

ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையின் குழு உறுப்பினராக அமித்ஷா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இணைந்தார். பிரதமர் நரேந்திர மோடி, மூத்த பா.ஜ.க தலைவர் அத்வானி மற்றும் முன்னாள் முதலமைச்சர் கேசுபாய் படேல் ஆகியோர் ஏனைய குழு உறுப்பினர்களாக இருக்கின்றனர். பா.ஜ.க தலைவரது கருத்து இராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்பாக வெளிவந்தது.

கோவிலுக்கு நன்கொடை நிறைய வருவதாகவும் அதைக்கொண்டு கருவறை மற்றும் சில தூண்கள் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது என்றும் முன்னாள் குஜராத் தலைமை செயலாளரும் கோவில் செயலாளருமான பிரவின் லஹரி கூறினார்.

பட்டேல் சிலைக்கு 3000 கோடி ரூபாயில் சிலை, அயோத்தியில் ராமர் சிலைக்கு எத்தனையோ ஆயிரம் கோடியில் சிலை என்ற வரிசையில் சோமநாத் கோவிலின் தங்கக் கூரை சேர்கிறது. கஜா புயலுக்கு இதுவரை நிவாரணம் தராமல் நீதிமன்றத்தில் தெனாவெட்டாக பதிலளிக்கும் மத்திய அரசு குஜராத் சோமநாத் கோவிலுக்கு மட்டும் அள்ளிக் கொடுக்க நினைக்கிறது. பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, விவசாயக் கடன் என மோடி அரசின் தாக்குதல்களில் வாழ்விழந்த கோடிக்கணக்கான மக்களை இதை விட கொச்சைப்படுத்த முடியுமா என்ன?

தமிழாக்கம்: சுகுமார்

நன்றி:
இந்தியன் எக்ஸ்பிரஸ், தி வயர்

ஸ்டெர்லைட்டை திறக்காதே ! தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் :

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பதை கண்டித்து போராடிய மாணவர்களை கைது செய்த தமிழக அரசைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 21-12-2018 அன்று காலை புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி சார்பாக கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் மணியரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பதை கண்டித்தும், மாணவர்களை விடுவிக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய தோழர் மணியரசன் “ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதுதான் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 14 பேருக்கு கிடைக்கும் உரிய நீதி ஆகும். அதனைப் பெற ஜாலியன்வாலாபாக் படுகொலையின்போது பகத்சிங் எப்படி போராட முன்வந்தாரோ, அதுபோல் இன்று இளைஞர்கள் முன் வரவேண்டும். மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும்” என்று மாணவர்களுக்கு அறைகூவல் விடுத்தார்

தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

****

மாநிலக் கல்லூரி, சென்னை :

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டத்தை நடத்தினார்கள். இப்போராட்டத்தை மாணவர்கள் நடத்திக் கொண்டிருக்கையிலேயே போலீசு ஜீப் அங்கு வந்து நிறுத்தப்பட்டது. கூடுதலாக மாணவர்கள் வந்து சேராமல் தடுப்பதற்காகவே, மிரட்டும் வகையில் போலீசு வாகனம் போராட்டம் நடந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தது.

தகவல்: அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம்

****

திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி :

ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் சார்பாக “தமிழன்னா வெயிட்டு – ஸ்டெர்லைட்டை விரட்டு – எடப்பாடிய மிரட்டு – தனிச்சட்டம் இயற்று” என்கிற முழக்கத்தின் கீழ் மாணவர்கள் திரளாக ஸ்டெர்லெட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்.  ஆசிரியர்கள் , போலீசு, உளவு போலீசு ஆகியோரைத் தாண்டி மாணவர்கள் உறுதியாக நின்று இப்போராட்டம் நடத்தப்பட்டது.

கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் பேரணியாக சென்று கல்லூரி அதிர முழக்கமிட்டனர். ஸ்டெர்லெட்டை விரட்டும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும், “நாங்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள்” என்றும் உறுதிபட தெரிவித்தனர்.

தகவல் : ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு,
திருச்சி.
99431 76246

****