Sunday, May 25, 2025
முகப்பு பதிவு பக்கம் 332

குழந்தைகளுக்குக் கணிதம் பிடிக்கின்றதா ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 7

பாடங்களுக்கு இடையிலான நேரத்தை – எப்படிப் பயன்படுத்துவது? (தொடர்ச்சி…)

“கணிதம் உங்களுக்குப் பிடிக்கின்றதா?”

‘பிடிக்கும்!” என்று உற்சாகமாக, ஒரே குரலில் பதில் வருகிறது.

ஏக்கா: “இதை எங்களுக்குச் சொல்லித் தருவீர்களா? : (சூத்திரங்களைக் காட்டுகிறாள்.)

“நீங்கள் இத்தகைய சூத்திரங்களைப் புரிந்து கொள்ளத் துவங்க நான் உங்களுக்குப் பயிற்சியளிக்கட்டுமா?”

மீண்டும் உற்சாகமும் ஏகோபித்த ஆமோதிப்பும்: ‘ஆமாம்!”

“சரி, ஆரம்பிப்போம்!… நேராக உட்காருங்கள்!… இந்த வடிவங்களைப் பாருங்கள், அவை எந்த வரிசையில் உள்ளன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.”

வடிவங்கள் வரையப்பட்டுள்ள சதுர அட்டைகளை நான் கரும்பலகையருகே வைக்கிறேன்:

‘ஞாபகம் வைத்துக் கொண்டீர்களா?… தலையைத் தொங்கப் போடுங்கள்….. கண்களை மூடுங்கள். தலையைத் தூக்குங்கள்…. வடிவங்களின் வரிசைக் கிரமத்தில் என்ன மாற்றம் என்று சொல்லுங்கள்.”

இப்போது இவற்றின் வரிசைக் கிரமம் பின்வருமாறு உள்ளது:

கீகா கரும்பலகையை நோக்கி ஓடி வந்து உரக்கச் சொல்லுகிறான்:

“நீங்கள் இதை மாற்றி விட்டீர்கள். இது இங்கே இருந்தது” (புள்ளியைக் காட்டுகிறான்), “A என்ற எழுத்து இங்கேயிருந்தது!” அவன் அவற்றைப் பழைய இடத்தில் திரும்ப வைக்கிறான்.

“வடிவங்கள் எந்த வரிசைக் கிரமத்தில் உள்ளன என்று மீண்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். தலையைக் கீழே போட்டுக் கண்களை மூடிக் கொள்ளுங்கள். எவற்றை நான் மாற்றி வைத்திருக்கிறேன் என்பதை என் காதில் மெதுவாகச் சொல்லுங்கள். தலையை உயர்த்திப் பாருங்கள்.” குழந்தைகளுடன் முணுமுணுவென்று பேசியபடியே நான் வகுப்பறையைச் சுற்றி வருகிறேன். ஒரு பதில் கூட சரியானதாக இல்லை. நான், வரிசைக் கிரமத்தில் ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை. என்ன விஷயம்? சிக்கலான கடமையா? இருக்க முடியாது. அனேகமாக, நான் இம்மாதிரி செய்ய முடியும் என்று எனது நம்பகமான குழந்தைகள் எண்ணியிருக்க மாட்டார்கள். எந்த மாற்றங்களைப் பற்றி நான் கூறினேனோ அவை இல்லாவிட்டாலும் கூட அவற்றை அவர்கள் தேடுகின்றனர்.

“இங்கு எதையும் நான் தொடவேயில்லை, எல்லாம் அதனதன் இடத்தில் இருந்தபடியே உள்ளன என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா, குழந்தைகளே?”

மாயா: “எல்லாம் அப்படியே உள்ளன என்பதை நான் கவனித்தேன், ஆனால் நான் நம்பவில்லை …”

தாத்தோ: “நீங்கள் கரும்பலகையருகே ஏதோ செய்ததைப் பார்த்தால், அங்கே எதையோ உண்மையிலேயே மாற்றி வைத்தீர்கள் என்று நினைத்தேன்….”

“அடுத்த முறை இன்னமும் கவனமாக இருங்கள். இப்போது அடுத்த பயிற்சிக்கு வருவோம்: எது அதிகம் என்று நீங்கள் சொல்ல வேண்டும்.”

குழந்தைகளின் முன் இரண்டு கரும்பலகைகள் உள்ளன. இடைவேளையின் போது இவற்றில் பலவற்றை வரைந்தேன்: எவ்வளவு, எது அதிகம், எதிலிருந்து, எங்கே அதிகம் (வலப்புறம், இடப்புறம், கீழே, மேலே) என்னும் கேள்விகளைக் கேட்க இவை வசதியாக இருக்கும். இவை எல்லாம் முதல் கரும்பலகையில் உள்ளன. அடுத்த கரும்பலகை பூராவும் பல வடிவங்கள் உள்ளன.

“எது எவ்வளவு” என்று குழந்தைகள் கண்டுபிடிக்க வேண்டும். முதல் கரும்பலகையின் மூன்றிலொரு பகுதியைத் திறந்து காட்டுகிறேன். “இங்கே எவ்வளவு வட்டங்கள் உள்ளன?” – “ஐந்து!” என்கின்றனர் குழந்தைகள்.

இதில் ஐந்தாவது எது என்று யாரால் சொல்ல முடியும்? பூஜ்ஜியம் முதல் ஒன்பது வரை எழுதப்பட்டுள்ள அட்டைகளைக் காட்டுகிறேன்.

‘அதோ, நடுவில் உள்ள அட்டை “ என்று பலர் பதில் கூறுகின்றனர்.

“இதுவா?” 3 என்று எழுதப்பட்டுள்ள அட்டையைக் காட்டுகிறேன்.

“இல்லை! அதற்கு அருகே உள்ளது!”

“ஓ, இதுவா!” என்றபடியே 4 என்று எழுதப்பட்ட அட்டையை எடுக்கிறேன்.

“இல்லை!” என்கிறாள் மாயா, “நீங்கள் தவறான அட்டையைக் காட்டுகின்றீர்கள். நான் காட்டட்டுமா?”

“தயவு செய்து, காட்டேன்!”

மாயா ஓடி வந்து 5 என்று எழுதப்பட்ட அட்டையை எடுக்கிறாள்.

“இது என்ன எண்?” என்று குழந்தைகளிடம் காட்டி கேட்கிறேன்.

“ஐந்து!” என்கின்றனர் அவர்கள். “நன்றி, மாயா,”

4 என்று எழுதப்பட்ட அட்டைக்குப் பதில் 5 என்று எழுதப்பட்ட அட்டையை நான் கரும்பலகையில் வைக்கிறேன். இப்போது எல்லாம் சரி.

முக்கோணங்கள் வரையப்பட்டுள்ள இடத்தைக் காட்டி, இதில் எவ்வளவு முக்கோணங்கள் உள்ளன என்று கேட்கிறேன்.

“நான்கு….. நான்கு!” என்று பலவாறாக பதில் வருகிறது.

“இதில் 4 எது? இதுவா?” – 2 என்ற எண்ணைக் காட்டியபடி நான் கேட்கிறேன்.

“இல்லை. இது இரண்டு.”

“ஒரு வேளை இதுவோ?” – 6 என்ற எண்ணைக் காட்டுகிறேன்.

“இல்லை….. அது ஆறு.”

“அப்படியானால், இதுவா?”

“இல்லை. இது ஏழு.”

குழந்தைகளுக்கு ஒரே உற்சாகம். 4 என்ற எண்ணை எனக்குக் காட்ட அவர்கள் துடிக்கின்றனர். மாக்தா ஓடி வந்து என் கையைப் பிடித்து 4 என்று எழுதப்பட்ட அட்டையைச் சுட்டிக் காட்டுகிறாள். “இதோ, இது தான் நான்கு!”

“4 என்ற எண்ணைக் கண்டுபிடிக்க உதவியதற்கு நன்றி, மாக்தா. இதில் எவ்வளவு சதுரங்கள் உள்ளன?”

“ஆறு!” என்று பதில் வருகிறது. 6 என்று எழுதப்பட்ட அட்டையை எடுத்து மற்ற எண்களின் அருகில் தலைகீழாக வைக்கிறேன். குழந்தைகள் உற்சாகமாக என்னைத் திருத்துகின்றனர்.

“இப்போது நீங்கள் வைத்துள்ளது ஒன்பது, அதைத் திருப்பி வைத்தால் தான் ஆறு வரும்.” நான் அப்படியே செய்கிறேன்.

கோத்தே நேர்க்கோடுகளைப் பார்த்தபடியே, அங்கே ஏழு நேர்க்கோடுகள் உள்ளன என்று கத்துகிறான்.

“இங்கே ஏழு நேர்க்கோடுகள் உள்ளன என்கிறான் கோத்தே, எனக்கோ இவை எட்டு என்று தோன்றுகிறது. யார் சொல்வது சரி?”

“நீங்கள் சொல்வது தான் சரி!” என்று பலர் யோசிக்காமலேயே கத்துகின்றனர்.

“கோத்தே தான் சரி!” என்று மிகச் சிலர் அவனைச் சுட்டிக்காட்டியபடி கூறுகின்றனர்.

மாயா கரும்பலகையை உற்றுக் கவனித்தபடி ஏதோ முணுமுணுக்கிறாள். அவள் இடத்திலிருந்து எழுந்து கூறுகிறாள்.

“நான் சொல்லட்டுமா?… அங்கே ஏழு நேர்க்கோடுகள் தான் உள்ளனவே தவிர எட்டு அல்ல. எனவே, கோத்தே தான் சரியே தவிர நீங்கள் அல்ல.”

படிக்க:
குழந்தைகளை அடிக்காத பள்ளிகள் சாத்தியமா ? | வில்லவன்
மிகக் கடினமான பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு : தற்செயலா ? சூழ்ச்சியா ?

“மாயா சொல்வதை நீங்கள் எல்லோரும் ஒப்புக் கொள்கின்றீர்களா?”

எனது ஆதரவாளர்கள் குறைந்து விட்டனர். ஏல்லா எழுந்து விரைவாக கரும்பலகையை அணுகி நேர்க்கோடுகளைத் தானாகவே எண்ணுகிறாள்.

“என்ன விஷயம், ஏல்லா?” “ஏழு நேர்க்கோடுகள் தான் உள்ளனவே தவிர எட்டு அல்ல!” என்று இப்படிச் சொல்லி விட்டு அவள் தன்னிடத்திற்கு ஓடுகிறாள்.

“வாருங்கள், எல்லோரும் சேர்ந்து எண்ணுவோம்.” நான் சுட்டுக் குச்சியின் உதவியால் ஒவ்வொரு நேர் கோடாகக் காட்டுகிறேன்.

”ஒன்று… இரண்டு… மூன்று!” என்று குழந்தைகள் ராகம் போட்டு எண்ணுகின்றனர்.

நான்காவது கோட்டைச் சுட்டிக் காட்டியதும் அதே இடத்தில் சற்று தாமதிக்கிறேன்.

மாதிரி படம்

“நான்கு… ஐந்து!” எனது சுட்டுக் குச்சி அசையாததையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள் தொடருகின்றனர். எல்லாம் குழம்பி விட்டது, இப்படித் தொடர முடியாது என்று மாயா எதிர்ப்பு தெரிவிக்கின்றாள். மீண்டும் ஆரம்பிக்கின்றோம். இப்போது எனது சுட்டுக் குச்சி வேகமாக நகருகிறது. “ஏழு” என்று ராகமான பதில் வந்ததும் மீண்டும் அதே நேர்க்கோடுகளைச் சுட்டிக் காட்டுவதைத் தொடருகிறேன். “எட்டு. ஒன்பது… பத்து… பதினொன்று!..”

ஆனால் படிப்படியாகக் குரல்கள் குறைகின்றன, மீண்டும் எல்லாம் குழம்பி விட்டது என்று பலருக்கு இறுதியாகப் புரிகின்றது. நேர்க்கோடுகளை எண்ண உதவி புரியுமாறு மாயாவை நான் கரும்பலகைக்கு அழைக்கிறேன். மூன்றாவது முறை மாயாவின் உதவியோடு எல்லாம் வெற்றிகரமாக முடிகிறது.

“நிச்சயமாக, ஏழு நேர்க்கோடுகள் தான் உள்ளனவே தவிர எட்டல்ல. கோத்தே சொன்னதுதான் சரி” என்று சொன்னபடியே நான் கரும்பலகையில் மற்ற எண்களின் அருகே 7 என்ற எண்ணையும் வைக்கிறேன். நான் தவறு செய்கிறேனா இல்லையா என்று குழந்தைகள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். “இது ஏழு அல்ல!” என்று கூட யாரோ கத்தினார்கள். ஆனால் மற்றவர்கள் இது ஏழுதான் என்று ஊர்ஜிதப்படுத்தினர்.

“இப்போது இப்புள்ளிகளைப் பாருங்கள். எவ்வளவு புள்ளிகள் உள்ளன என்று எண்ணி என் காதில் சொல்லுங்கள்!”

என்னைக் கூப்பிடுபவர்கள் அருகில் வேகமாகச் செல்கிறேன். கணித விஞ்ஞான துல்லியத்தின் எல்லா அடிப்படைகளையும் மீறும் பதில்கள் என் காதில் ஒலிக்கின்றன: “ஐந்து … ஒன்பது… பத்து… இருபது… நூறு… ஆயிரம்….. மில்லியன்!” தேயா, அங்கே ஏராளமான புள்ளிகள் உள்ளதால் அவற்றை எண்ணவே முடியாதெனக் கூறுகிறாள். நான் அவளுடைய பெஞ்ச் அருகே நிற்கிறேன்.

“தேயா, எல்லோருக்கும் கேட்கும்படி உரக்க பதில் சொல் பார்க்கலாம்: அங்கே எவ்வளவு புள்ளிகள்?”

“அங்கே ஏராளமான புள்ளிகள் உள்ளன, அவற்றை எண்ணுவதே கடினம்!”

நன்றி, தேயா!.. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?..”

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்

♦ ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு நினைவிடம் அமை!
♦ படுகொலைக்குக் காரணமான போலீசாருக்கு கொலை குற்றத்தில் தண்டனை வழங்கு!
♦ ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக அகற்ற தனிச்சட்டம் இயற்று!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்

22-05-2019
வள்ளுவர் கோட்டம்
சென்னை

ன்பார்ந்த நண்பர்களே !

1919-ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக்கில், கொடிய ஆள்தூக்கி ரவுலட் சட்டத்தை எதிர்த்து அமைதியாக ஆயுதமின்றி கூடிய பொதுமக்கள் மீது ஆங்கிலேய அதிகாரி ஜெனரல் டயர் துப்பாக்கி ரவைகள் தீரும் வரை கொடூரமாக சுட்டுத் தள்ளினான். ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இன்று நூறாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஜாலியன் வாலாபாக் தியாகிகள் நினைவிடத்தில் மக்களும் தலைவர்களும் ஏப்ரல் 13 அன்று அஞ்சலி செலுத்தினார்கள்.

தூத்துக்குடி படுகொலை என்பது இன்னொரு ஜாலியன் வாலாபாக். அது காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டம் என்றால் தூத்துக்குடி போராட்டம் வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிரான போராட்டம். ஆகவே, ஜாலியன் வாலாபாக் நினைவு நாளைப் போலவே, 2019 மே 22 அன்று தூத்துக்குடி போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தியாகிகளின் படங்களை வீதிகள்தோறும் வைத்து, ஜல்லிக்கட்டு மக்கள் எழுச்சியைப் போல தமிழகமே அந்தத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். ஜாலியன் வாலாபாக் போன்று ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தியாகிகளுக்கும் தூத்துக்குடியில் நினைவிடம் அமைக்க போராட வேண்டும்.

தூத்துக்குடி மக்களின் வீரம் செறிந்த போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி, எட்டுவழிச்சாலை, நெடுவாசல், கன்னியாகுமரி இனையம் துறைமுக விரிவாக்கம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களுக்கு உத்வேகத்தை அளித்திருக்கிறது. அதேபோல், கார்ப்பரேட் கொள்ளையை எதிர்த்து போராடினால் தூத்துக்குடி மாடல் அடக்குமுறைதான் வரும் என்று எச்சரிப்பதற்காகவே அந்தப் படுகொலை நடத்தப்பட்டிருக்கிறது. போராடிய மக்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டம், பல நூறு வழக் குகளில் சிறை, போராட்டத்துக்கு உதவி செய்த வழக்கறிஞர்களுக்கும் சிறை போன்ற அடக்குமுறைகள் ஏவப்பட்டிருக்கின்றன.

மே 22 தூத்துக்குடியில் நடந்ததை ஒரு கனம் நினைவுபடுத்தி பாருங்கள், குடிநீர், பால், உணவு எடுத்துக்கொண்டு குழந்தைகள், பெண்கள் முதியவர்கள் குடும்பத்து டன் திருவிழாவிற்கு செல்வது போல் இந்த அரசை நம்பி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடச் சென்றார்கள். அந்த மக்களைத்தான் வேனில் ஏறி நின்று எதிரிகளைச் சுடுவது போல் சுட்டுக்கொன்றிருக்கிறது போலீசு. அந்தக் கொலைகார போலீசார் அனைவரும் கொலைக் குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட வேண்டும்.

நடந்தது கூட்டத்தைக் கலைப்பதற்கான துப்பாக்கிச்சூடு அல்ல என்பதை பிரேத பரிசோதனை அறிக்கை நிரூபித்திருக்கிறது. மக்கள் மிக அருகிலிருந்து தலையிலும், வாயிலும் கழுத்திலும் குறிபார்த்து சுட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். கலைந்து ஓடிய மக்கள் பின்புறத்திலிருந்து சுடப்பட்டிருக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், இதுவரை எந்தக் கொலைகார போலீசாரும் சி.பி.ஐ. ஆல் விசாரிக்கப்படவில்லை. மாறாக, மக்களை ஃபோனில் அழைத்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஏன் போராடினீர்கள், எப்படி போராடினீர்கள்? என்று துருவித் துருவி விசாரித்து வருகிறது சி.பி.ஐ.

போராடிய மக்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை ஸ்டெர்லைட் ஆதரவு கூலிப்படையினர்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தாக்கி வாகனங்களை தீயிட்டு கொளுத்தினார்கள். இந்தச் சம்பவம் போலீசு உயர் அதிகாரிகளுக்கு முன்பே தெரியும் என்பது சிசிடிவி படக்காட்சிகள் மூலம் ஆதார பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது. ஆதாரத்தை தொகுத்து வெளியிட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன் இன்று வரை என்ன ஆனார் எனத் தெரியவில்லை.

தூத்துக்குடி மக்கள் மீது கடந்த ஓராண்டாக அறிவிக்கப்படாத எமர் ஜென்சி அமல்படுத்தபட்டு வருகிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் யாரும் எங்கும் சென்று எதையும் பேசக் கூடாது. வாட்ஸ் அப்பில் தகவல் பரிமாறக்கூடாது. வீட்டில் கருப்பு கொடி ஏற்றக்கூடாது . துண்டறிக்கை விநியோ கிக்கக் கூடாது. போஸ்டர் ஒட்டக்கூடாது. எதைச்செய்தாலும், தீவிரவாதிகளை காண்காணிப்பது போல் கண்காணித்து போலீசார் உடனே அழைத்து எச்சரிக்கிறார்கள், பொய் வழக்கு போடுகிறார்கள். போராட்டத்தில் முன்னணியாக உள்ள இளைஞர்களை கைது செய்து அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட அனைவரும் போலீசாரால் எந்த நேரமும் பின்தொடரப்பட்டு, அச்சத்தில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால், ஸ்டெர்லைட்டுக்கு எந்த விதத்தடையும் இல்லை , உயர்நீதிமன்ற நீதிபதியே போலீஸ் எஸ்.பி. முரளி ரம்பாவை நேரில் அழைத்து கண்டிக்கும் அளவிற்கு போலீசாரின் ஸ்டெர்லைட் ஆதரவு நடவடிக்கை இருந்து வருகிறது. போராடும் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க பல கோடி ரூபாயை வாரி இரைத்து எண்ணற்ற கூலிப்படையினரை மக்கள் மத்தியில் இறக்கி தனக்கு ஆதரவான பிரச்சாரத்தை பலவகைகளில் ஸ்டெர்லைட் நிர்வாகம் செய்து வருகிறது. தேர்தலுக்குப்பிறகு நீதிமன்ற உத்திரவு பெற்று மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்ற கருத்து மக்களிடம் பரப்பப்படுகிறது.

படிக்க:
ஒரு ஏழை அப்பாவி முசுலீம் தற்கொலைப் படை பயங்கரவாதியாக ஆக்கப்பட்ட கதை !
மே – 22 தியாகிகளுக்காக கூடி அழ கூட உரிமையில்லை ! தொடரும் ஸ்டெர்லைட் அடக்குமுறை !

இதனை ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது. வேதாந்தா என்பது பல நாடுகளின் அரசுகளையே விலை பேசுகின்ற பன்னாட்டு நிறுவனம், மோடி அரசைத் தனது கைப்பாவையாக வைத்திருக்கும் நிறுவனம். அத்தகையதொரு நிறுவனத்தை தமது வீரஞ்செறிந்த போராட்டத்தின் மூலம் மூட வைத்திருக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள். பல நாட்டு மக்களை அச்சுறுத்தி வரும் கொலை கார நிறுவனத்தை மண்டியிட வைத்த இந்தப் போராட்டத்தை உலகெங் கிலும் உள்ள மக்கள் வியந்து பாராட்டுகிறார்கள். தங்கள் இன்னுயிரை ஈந்து தமிழகத்தையே தலை நிமிர வைத்திருக்கிறார்கள் தூத்துக்குடி தியாகிகள்.

அந்தத் தியாகிகளை கவுரவிக்க , ஸ்டெர்லைட் ஆலையை வெளியேற்றுவதற்கு தூத்துக்குடி மக்களுக்குத் தமிழகமே துணை நிற்கும் என்பதை உணர்த்த மே 22 அன்று தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளின் படங்களை வைத்து நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.


மக்கள் அதிகாரம்,
சென்னை,
தொடர்புக்கு: 91768 01656

ஒரு ஏழை அப்பாவி முசுலீம் தற்கொலைப் படை பயங்கரவாதியாக ஆக்கப்பட்ட கதை !

டந்த சனிக்கிழமை முன்னிரவுப் பொழுதில், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவிலுள்ள ஆர்.டி.நகர் என்ற பகுதியிலுள்ள மசூதி அருகே பிச்சையெடுத்துக் கொண்டிருந்த 38 வயதான சஜ்ஜித் கான் என்ற முசுலீம் நபரைப் பயங்கரவாதி எனக் கூறிக் கைது செய்த பெங்களூரு போலீசார், பெங்களூரு நகரில் ஒரு தற்கொலைத் தாக்குதலை நடத்தும் நோக்கில் சஜ்ஜித் பெங்களூருவிற்கு வந்திருக்கக்கூடும் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தினர். சஜ்ஜித்துக்கு உதவியாக வந்த 50 வயதான மற்றொருவரை பெங்களூரு போலீசார் வலைவீசித் தேடிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.

தீவிரவாதிகளும் பயங்கரவாதிகளும் எந்த வேடத்தில் வேண்டுமானாலும் வரக்கூடும் அல்லவா! சஜ்ஜித் பிச்சைக்காரன் வேடத்தில் பெங்களூரு நகருக்குள் ஊடுருவிவிட்டதாகப் பீதி பரவியது.

தீவிரவாதி சஜ்ஜித் பிச்சைக்காரன் வேடத்தில் பெங்களூரு நகருக்குள் ஊடுருவிவிட்டதாக “நுணுக்கமாக”த் துப்பறிந்து கண்டுபிடித்து பீதி பரப்பிய தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள்.

சஜ்ஜித் பெங்களூரு நகருக்குள் ஊடுருவியிருப்பதை முதலில் கண்டுபிடித்தவர்கள் போலீசார் அல்ல. அதனை “நுணுக்கமாக”த் துப்பறிந்து கண்டுபிடித்தவைக் கன்னடத் தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள்.

சஜ்ஜித், தான் பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்படுவதற்கு ஒரு வாரம் முன்னதாக, மே 6 அன்று பெங்களூரு-கெம்பேகௌடா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வெளியே வரும்போது, அந்த ரயில் நிலையத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த மெட்டல் டிடெக்டர் நிலை பீப் என்ற ஒலியை ஏற்படுத்தியது. எனினும், அவர் அந்நிலையத்திலிருந்து வெளியேறிவிட்டார்.

இந்தக் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்தப் பதிவை ஒளிபரப்பிய கன்னட டி.வி.சேனல்கள், முசுலீம் தீவிரவாதியொருவர் பெங்களூரு நகருக்குள் ஊடுருவிவிட்டதாக பிரேக்கிங் நியூஸ் போட்டன. அதே காட்சியை ஒளிபரப்பிய மற்றொரு தொலைக்காட்சி ஊடகம், சஜ்ஜித்தைத் தொடர்ந்து அந்த ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்த மற்றொரு முசுலீமை, “முதலில் வெளியேறிய தீவிரவாதியின் உதவியாளர்” என அடையாளப்படுத்தியது.

மேலும், அத்தீவிரவாதி அந்த ரயில் நிலையத்தில் வேலை பார்க்கும் ஒரு துப்பரவு பணியாளரிடம், தான் ஒரு கோடி ரூபாய் பணம் தருவதாகவும், அதை வாங்கிக்கொண்டு தன்னை வெடிகுண்டோடு உள்ளே விட்டுவிட வேண்டுமென்று பேரம் பேசியதாகவும் தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

தாடி, குல்லா, குர்தா, கைலி, பீப் ஒலி இவற்றை மட்டுமே காரணமாக வைத்து, சஜ்ஜித்தைத் தீவிரவாதியெனக் கன்னடத் தொலைக்காட்சி ஊடகங்கள் கதை கட்டியுள்ளன.

வெறும் வாயை மெல்பவனுக்கு அவல் கிடைத்த கதையாக, தொலைக்காட்சி ஊடகங்கள் வெளியிட்ட இந்தச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு பெங்களூரு போலீசு தீவிரவாதியையும் அவரது உதவியாளரையும் தேடியலைந்து, ஆறு நாட்கள் கழித்து சஜ்ஜித் கானை மட்டும் ஆர்.டி. நகர் மசூதிக்கு அருகே வைத்துக் கைது செய்தது.

சஜ்ஜித்தை இரண்டு நாட்கள் போலீசு காவலில் வைத்து விசாரணை நடத்தியதில், சஜ்ஜித் தாடி வைத்திருந்த, குல்லாவும், குர்தாவும், கைலியும் அணிந்திருந்த முசுலீம் என்பதைத் தாண்டி, அவர் எந்தவொரு முசுலீம் தீவிரவாத அமைப்போடும் தொடர்பில் இருந்ததற்கோ, அவர் தற்கொலைத் தாக்குதலை நடத்தும் நோக்கில் பெங்களூருவிற்கு வந்ததற்கோ மயிரளவு ஆதாரம்கூட போலீசுக்குக் கிடைக்கவில்லை. மாறாக, சஜ்ஜித் பற்றிக் கிடைத்த உண்மைத் தகவல்கள் இவைதான்:

சஜ்ஜித், இராசஸ்தானிலுள்ள ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி. அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ரமலான் நோன்பு காலத்தில் பிச்சை எடுப்பதற்காக பெங்களூரு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். இப்பொழுதும் அவர், தனது மனைவியோடு மசூதி வாசல்களில் நின்றுகொண்டு தொழுகை முடித்துவரும் முசுலீம்களிடம் பிச்சை எடுப்பதற்காகவே பெங்களூரு வந்திருக்கிறார். அப்படியான பரம ஏழையான சஜ்ஜித்தைத்தான் ஊடகங்கள் தீவிரவாதியாகச் சித்தரித்துள்ளன. அதை நம்பிக்கொண்டு பெங்களூரு போலீசும் அவரைக் கைது செய்து, விசாரணை நடத்தியிருக்கிறது.

சஜ்ஜித், கெம்பேகவுடா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்த சமயத்தில், தான் பிச்சை எடுத்துச் சேர்த்த 150 ரூபாயை, நாணயங்களாகத் தனது இடுப்பில் முடிந்து வைத்திருந்தார். அந்தப் “பிச்சைக் காசுகள்”தான் பீப் ஒலி எழும்பவுதற்குக் காரணம். இந்த உண்மைகள் புறந்தள்ளப்பட்டு, தாடி, குல்லா, குர்தா, கைலி, பீப் ஒலி இவற்றை மட்டுமே காரணமாக வைத்து, சஜ்ஜித்தைத் தீவிரவாதியெனக் கன்னடத் தொலைக்காட்சி ஊடகங்கள் கதை கட்டியுள்ளன.

சஜ்ஜித்தின் உதவியாளர் என ஊடகங்களால் அடையாளப்படுத்தப்பட்டவர் ரியாஸ் அகமது. அவர் கடந்த முப்பது ஆண்டுகளாக பெங்களூரு நகரிலுள்ள மெஜஸ்டிக் பகுதியின் சாலையோரங்களில் கடை போட்டு கடிகாரங்களை விற்றுவரும் சிறிய வியாபாரி. தான் தீவிரவாதியின் உதவியாளராகச் சித்தகரிப்பட்டது தெரிந்தவுடன், தானே போலீசு நிலையத்திற்கு வந்து, தன்னைப் பற்றிய தகவல்களை போலீசிடம் தெரிவித்துச் சென்றார், அவர்.

“அன்றாடம் பிச்சை எடுத்து வாழ்க்கையை ஓட்டிவரும் தன்னால் யாருக்கேனும் ஒரு பைசாவாவது இலஞ்சம் தர முடியுமா?” எனக் கேள்வி எழுப்பும் சஜ்ஜித், “நடந்தவற்றை நினைத்து நான் அழத்தான் முடியும், இறைவனிடம் முறையிட முடியும், இதைத்தாண்டி, ஒரு சாதாரண ஏழையான என்னால் யார் மீதாவது கோபங்கொள்ள முடியுமா?” எனத் தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மனைவியோ, தனது கணவர் விடுவிக்கப்பட்ட பின்னர்கூட, போலீசு விசாரணை ஏற்படுத்திய அச்சத்திலிருந்து விடுபடவில்லை.

“தொலைக்காட்சிகளில் தீவிரவாதியாக அடையாளப்படுத்தப்பட்டுவிட்ட என்னை, அந்தக் காட்சிகளைப் பார்த்த யாராவது ஒருவர் அடித்தே கொன்றுவிடக் கூடுமோ?” என்ற அச்சத்தில் இருப்பதாகக் கூறுகிறார், ரியாஸ் அகமது.

“சந்தேகப்படுபவர்களை விசாரிக்காமல் இருக்க முடியுமா?” என சங்கிகளும் அவர்களது ஆதரவாளர்களும் இந்த விடயத்தை நியாயப்படுத்தக் கூடும். ஆனால், சஜ்ஜித் மீது ஊடகங்களும், போலீசும் சந்தேகப்படுவதற்கு அவரது மத அடையாளங்களைத் தாண்டி வேறெந்த அடிப்படையும் இல்லை என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது.

கோட்சே ஓர் இந்து தீவிரவாதி என்ற வரலாற்று உண்மையை மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன் சொன்னதற்காக, அவரது நாக்கை அறுத்துப் போடுமாறும், அவரை வீதியில் நடமாடவிடக் கூடாதென்றும் சங்கப் பரிவாரங்களும், அவர்களது ஆதரவாளர்களும் கூச்சல் போடுகிறார்கள். இந்துவாக இருப்பவர் பயங்கரவாதியாக இருக்க முடியாது என ஆவேசப்படுகிறார், பிரதமர் மோடி. மதத்தோடு தீவிரவாதத்தைத் தொடர்புபடுத்தக் கூடாது என நடுநிலையாளர்கள் போல வாதிடுகிறார்கள், ஆர்.எஸ்.எஸ்.-இன் அல்லக்கைகள்.

இந்து பயங்கரவாதி சாத்வி பிரக்யா சிங்

ஆனால், முசுலீம்கள் விடயத்திலோ தீவிரவாதம், பயங்கரவாதங்கள் குறித்த இந்த நியாயங்களையெல்லாம் தலைகீழாகத் திருப்பிப் போடுகிறது சங்கப் பரிவாரம். “முசுலீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல; ஆனால், தீவிரவாதிகள் அனைவரும் முசுலீம்களாக இருக்கிறார்கள்” எனக் குதர்க்க நியாயம் பேசி, முசுலீம் சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறது, ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதம், பயங்கரவாதத்தோடு முசுலீம் மதத்தைத் தொடர்புபடுத்துவதற்குத் தயங்காத சங்கப் பரிவாரமும் அவர்களது ஆதரவாளர்களும் இந்து பயங்கரவாதம் என்ற ஒன்று இருக்கவே முடியாது என வாதிடுகிறார்கள்.

தீவிரவாதியாக முத்திரை குத்தப்பட்ட சஜ்ஜித், தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக்கொண்டு, பீதியில் உறைந்து போன தனது மனைவியைத் தேற்ற முயன்று வருகிறார். சஜ்ஜித் மட்டுமல்ல, பயங்கரவாத வழக்குகளில் சிக்க வைக்கப்பட்ட அப்பாவி முசுலீம்கள், செய்யாத குற்றத்திற்குப் பல பத்தாண்டு காலம் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டு, அதற்குப் பிறகு நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்ட பிறகு, நடைப் பிணங்களாக காலந்தள்ள வேண்டியிருக்கிறது. நேர்மையற்ற முறையிலும் சட்டவிரோதமாகவும் தண்டிக்கப்பட்ட அவர்களுக்கு நிவாரண உதவி அளிக்கக்கூட நீதிமன்றங்களும் அரசும் மறுத்து வருகின்றன.

ஆனால், மாலேகான் குண்டு வெடிப்பு பயங்கரவாத வழக்கை எதிர்கொண்டுவரும் இந்து பயங்கரவாதியான சாத்வி பிரக்யா சிங்கோ போபால் தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளராக பா.ஜ.க.வால் நிறுத்தப்பட்டிருக்கிறார். இத்தகைய அநியாயத்தைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்ற தார்மீக எண்ணம்கூட இன்றிப் பெரும்பான்மையான இந்துக்கள் இந்த விடயத்தைக் கடந்து போகிறார்கள். சட்டப்படி இல்லையென்றாலும், தார்மீக அடிப்படையிலாவது பிரக்யா சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதைத் திரும்பப் பெறுங்கள் எனக் கூறும் மனதிடமின்றி, இந்திய அதிகார அமைப்புகள் அறவுணர்ச்சியை இழந்து நிற்கின்றன.

ஆர்.எஸ்.எஸ்.-இன் இந்து பயங்கரவாதத்தை சகஜமாக எடுத்துக்கொள்ளும் மனநிலைக்குப் பெரும்பான்மையான இந்துக்கள் ஆட்பட்டிருப்பதை பிரக்யா சிங்கின் போட்டி உள்ளிட்ட பல விடயங்கள் அடுத்தடுத்து எடுத்துக்காட்டுகின்றன. இந்த சகஜ மனநிலைதான் நமது காலத்தின் மிகப் பெரும் அபாயமாகும்.

– கீரன்

ஏப்ரல் மாதத்தில் மோடியை 722 மணி நேரம் ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள் !

0

தொலைக்காட்சி நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடியை சுமார் 722 மணி நேரம் திரையில் காட்டியிருக்கின்றன. கடந்த ஏப்ரல் 1, 2019 முதல் ஏப்ரல் 28, 2019 வரையில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இவ்விவரங்களை வெளிப்படுத்தியிருக்கிறது ஒளிபரப்பு பார்வையாளர் ஆய்வு நிறுவனம் (Broadcast Audience Research Council (BARC).)

akshay with modi
மோடியிடம் ‘அரசியல் அல்லாத பேட்டி’ எடுக்கும் நடிகர் அக்‌ஷய் குமார்

இந்தக் காலகட்டத்தில்தான் அதாவது இந்த 28 நாட்களுக்குள்ளாகத்தான் 722 மணிநேரம் தொலைக்காட்சி நிறுவனங்களால் மோடி காட்டப்பட்டிருக்கிறார். ஆனால் இதே தொலைக்காட்சி நிறுவனங்கள், இதே காலகட்டத்தில் ராகுல்காந்தியை வெறுமனே 252 மணிநேரத்திற்கும் குறைவாக மட்டுமே காட்டியுள்ளனர். அதாவது ராகுல்காந்தியை விட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமான நேரத்திற்கு இத்தொலைக்காட்சி நிறுவனங்கள் மோடியைக் காட்டியிருக்கின்றன. இத்தகவலை கடந்த திங்கள் அன்று டைனிக் பாஸ்கர் எனும் பத்திரிகை வெளியிட்டது.

இத்தனைக்கும் ராகுல்காந்தியும் மோடியும் இந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட சம அளவிலான பேரணிகளில் கலந்து கொண்டுள்ளனர். அதாவது ராகுல் காந்தி 65 பேரணிகளிலும், மோடி 64 பேரணிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

படிக்க:
மே – 22 தியாகிகளுக்காக கூடி அழ கூட உரிமையில்லை ! தொடரும் ஸ்டெர்லைட் அடக்குமுறை !
கல்லூரி மாணவி திலகவதி படுகொலை ! தீர்ப்புக்கு முன்பே தீ மூட்டும் சாதி வெறி !

பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷாவை சுமார் 124 மணிநேரங்கள் காட்டியுள்ள தொலைக்காட்சிகள், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை 84 மணிநேரம் மட்டுமே காட்டியிருக்கின்றன.

NaMo Tv
” நமோ டிவி ” மோடியின் விளம்பர சேனல்

முன்பெல்லாம் தேர்தல் காலம் ஆரம்பித்துவிட்டாலே வீதியில் போஸ்டர்களும் நோட்டீசுகளும் களைகட்ட ஆரம்பித்துவிடும். பல்வேறு விதமான சின்னங்கள், பல்வேறு வாக்குறுதிகள் என சுயேட்சை முதல் தேசியக் கட்சிகள் வரை அனைவரின் தேர்தல் பிரச்சாரமும் மக்களைச் சென்றடைவதற்கான வாய்ப்புகள் அகலத் திறந்திருந்தன.

ஆனால் தேர்தல் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் முதலில் சுவரெழுத்துக்களும், நோட்டீஸ்களும், சுவரொட்டிகளும் தடை செய்யப்பட்டன. ஆனால் இணையதளங்களிலும், பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பிரச்சாரம் செய்து கொள்ளலாம் என்றன தேர்தல் விதிமுறைகள். அதாவது அச்சு மற்றும் தொலைக்காட்சி, இணைய ஊடகங்களில் விளம்பரம் கொடுத்து பிரச்சாரம் செய்ய வசதியுள்ளவர்கள் மட்டும் போட்டியிடலாம் என்பதுதான் அதன் உள் அர்த்தம்.

தேர்தல் பிரச்சார முறை என்ற பெயரில் பல்வேறு கெடுபிடிகள் அமல்படுத்தப்பட்டன. இவை அனைத்துமே பணம் இல்லாதவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதை உறுதி செய்யும் வண்ணமே அமைந்திருந்தன.

மக்களிடம் யாருடைய பிரச்சாரத்தைச் சேர்க்க வேண்டும் என்பதை இன்று கார்ப்பரேட் ஊடகங்கள் தீர்மானிக்கின்றன. இணையதளம், தொலைக்காட்சி என மக்களை சென்றடையும் அனைத்து ஊடகங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது பாஜக.

இதற்காகவே சமூக வலைத்தளங்களில், திட்டமிட்டுச் செயல்படும் ட்ரோல் கும்பல்கள், பொய்ச் செய்தி பரப்புக் கும்பல்கள், பொதுக் கருத்தை உருவாக்கும் கும்பல்கள் என இணையத்தை ஆக்கிரமித்திருக்கிறது பாஜக கும்பல். தொலைக்காட்சி நிறுவனங்களோ, தமது கார்ப்பரேட் நலனுக்காக மோடியை அதிக நேரம் ஒளிபரப்புவது போன்றவற்றின் மூலம் மக்களின் மனதில் மோடி என்ற பாசிஸ்ட்டின் படையெடுப்புக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அதற்கான சிறந்த சாட்சிதான் இந்தப் புள்ளிவிவரங்கள்.

– நந்தன்

செய்தி ஆதாரம் :
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் : TV channels showed Modi for over 722 hours in April


தவறாமல் பாருங்க …

புருடா மன்னன் – Cloudy மோடி | கலாய் காணொளி

 

நாளுக்கு ஒரு நன்மை | அ முத்துலிங்கம்

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
நான் அப்போது பொஸ்டனில் இருந்தேன். எங்கள் வீட்டில் இரண்டு விதமான ஆட்கள் இருந்தார்கள். உட்கார்ந்து வேலைசெய்துவிட்டு நின்று இளைப்பாறுபவர்கள்; நின்று வேலை செய்துவிட்டு உட்கார்ந்து இளைப்பாறுபவர்கள். நான் மூன்றாவது வகை. நின்று இளைப்பாறிவிட்டு உட்கார்ந்து இளைப்பாறுபவன்.

அப்படியிருக்க அன்று அதிகாலை சூரியன் எழும்ப முன்னர் நான் எழும்பிவிட்டேன். கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அந்த நேரத்தில் யார் தட்டுவார்கள் என்று நான் யோசிக்கவில்லை. திறந்துவிட்டேன். பார்த்தால் என்னிலும் உயரமான ஒரு whitetail deer. ஆண் மான் என்றபடியால் இரண்டு பக்கமும் கிளைவிட்டு பரந்த கொம்புகளை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு நின்றது.

நான்கு கால்களையும் சரிசமமாக ஊன்றி பக்கவாட்டில் நின்று முகத்தை மாத்திரம் திருப்பி என்னை பார்த்தது. வீட்டு அபாய மணியை அணைக்க மறந்துவிட்டதால் அது அலறத்தொடங்கியது.  வீட்டில் அன்று தூங்கிய அத்தனை நின்று இளைப்பாறுபவர்களும், உட்கார்ந்து இளப்பாறுபவர்களும் ஓடிவந்தார்கள். அப்ஸராவும் ஓடிவந்து என்னைக் கடந்து போனாள். நான் அவளைத் தூக்கிய பிறகும் அவள் கால்கள் ஓடிக்கொண்டிருந்தன. இந்தச் சத்தத்திலும் கலவரத்திலும் மான் துள்ளித் திரும்பி ஓடிவிட்டது. அபாய மணியை அணைத்துவிட்டு மற்றவர்கள் திரும்ப படுக்கைக்குப் போய்விட்டார்கள். அப்ஸரா மாத்திரம் என்னுடன் தங்கினாள்.

அவளுக்கு வயது ஐந்து. அறிவாளி. பிரச்சினைகள் என்றால் நான் ஆலோசனை கேட்பது அவளிடம்தான். எதற்காக மான் வந்து கதவை தட்டியிருக்கும் என்றேன். அது திரும்பி ஓடிவிட்ட துக்கம் என்னிலும் பார்க்க அவளுக்கு அதிகம். கண்களில் நீர் தளும்பி நின்றது. வீட்டுக்கு பின்னால் இருக்கும் காட்டில் பல மான்கள் வாழ்ந்தன. அவ்வப்போது அவை வரும், ஆனால் கதவை தட்டுவதில்லை. அப்ஸரா யோசித்துவிட்டு காலை வணக்கம் சொல்வதற்காக இருக்கலாம் என்றாள். நான் சரி அப்படித்தான் இருக்கும் என்று சொல்லி சிரிப்பு காட்டினேன். அவளும் சிரித்தாள். வந்த கண்ணீரைக் காணவில்லை. எப்படியோ கண்ணீரை கண்களால் உறிஞ்சி உள்ளே இழுத்துவிட்டாள்.

பெற்றோர் தூங்கும்போது முழு வீடும் அவளுக்குத்தான் சொந்தம். ‘இன்று என்ன நல்வினை?’ என்றாள். பூஞ்செடிக்கு தண்ணீர் ஊற்றலாம் என்று சொன்னேன். அவள் சின்னத் தலையை ஆட்டிவிட்டு போனாள். நாளுக்கு ஒரேயொரு நன்மை செய்தால் போதும் என்பது அவள் கற்றுக்கொண்டது.

நான் சிறுவயதில் படித்த பள்ளிக்கூடத்தில் ஒரு வாத்தியார் படிப்பித்தார். காந்தி வாத்தியார் என்று பெயர். ஐந்தடி நாலு அங்குலம் உயரம் இருப்பார். மேல்சட்டை அணியமாட்டார். இரண்டே இரண்டு வேட்டிகள் அவரிடம் இருந்தன. ஒன்று கிழிந்தால்தான் இன்னொரு புதிசு வாங்குவார். காந்திபோல ஒரு போர்வைதான். உரத்துப் பேசத் தெரியாது. சிரிக்கும்போதுகூட  இரண்டு ஸ்வரத்தில் மட்டும் சிரிப்பார். காந்தி வைத்திருந்ததுபோல உயரமான தடியை அவர் வைத்திருக்கவில்லை. மற்றும்படிக்கு காந்தியைப் போலவே நடந்துகொண்டார். அவர் என் அண்ணனைப் படிப்பித்தார்; தங்கையை படிப்பித்தார்; தம்பியை படிப்பித்தார். ஆனால், என் வகுப்பை அவர் படிப்பிக்கவே இல்லை. ஆனாலும் எனக்கு அவரிலே பிரியம் இருந்தது. அவர் அந்த வயதில் எனக்கு சொன்னது ‘ஒரு நாளைக்கு ஒரு நன்மை செய்தால் போதும்’ என்பது. அது சொல்லி பல வருடங்களாகிவிட்டது என்றாலும் அதை இன்னும் அவ்வப்போது நான் கடைப்பிடித்து வந்தேன். அப்ஸராவுக்கும் சொல்லியிருந்தேன். பெரிதாக ஒன்றும் இல்லை. பெரியவர்களுக்கு வணக்கம் சொல்வது; அஞ்சல் பெண்ணுக்கு நன்றி கூறுவது; முன்பின் தெரியாத ஒருவரைப் பார்த்து முறுவல் செய்வது. அவ்வளவுதான். அப்ஸரா ஒவ்வொரு செடியாக தண்ணீர் ஊற்றி வந்தாள். செடிக்கு போன தண்ணீரிலும் பார்க்க வெளியே அதிகமாக நீர் பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் என் நண்பர் தொலைபேசியில் அழைத்திருந்தார். ஏதோ பேச்சில் காந்தி வாத்தியாருடைய பெயர் வந்தது. அவரும் மனைவியும் கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்றார். எனக்கு காந்தி வாத்தியாருடன் 50 வருடங்களுக்கு மேலாக தொடர்பே இல்லை. எனினும் இன்றைய என் நன்மை இதுதான் என்று தீர்மானித்து நண்பரிடம் முகவரி பெற்று காந்தி வாத்தியாருக்கு என்னால் இயன்ற சிறு தொகை பணம் அனுப்பிவைத்தேன். இங்கே சிறுதொகை ஆனால், இலங்கையில் அது பெரும் கொடை. அனுப்பியதுடன் அதை மறந்துபோனேன்.

அவர் பற்றிய சின்னச் சின்ன சம்பவங்களை மறக்க முடியவில்லை. நான் புதுப் பாடப் புத்தகம் வாங்கியதும் அதற்கு மாட்டுத்தாள் கடதாசியில் உறைபோட்டு கொண்டுபோய் என்னுடைய பெயரை எழுத காந்தி வாத்தியாரிடம் கொடுப்பேன். புத்தகங்களில் பெயர் எழுதித் தருவது அவர்தான். அவர் என் பெயரை நான் எதிர்பார்த்த மாதிரி முன்பக்கத்திலோ, மட்டையிலோ எழுதாமல் இருபதாம் பக்கத்தில் எழுதினார். ஏன் என்று கேட்க பதில் சொல்லவில்லை. ஆனால், ‘புத்தகம் பத்திரம்’ என்றார். அப்பொழுது எங்கள் பள்ளிக்கூடத்தில் புத்தகங்கள் களவு போய்க்கொண்டிருந்தன. இரண்டே இரண்டு நாளில் என் புத்தகமும் களவு போனது. நான் காந்தி வாத்தியாரிடம் போய் முறைப்பாடு செய்தேன். அங்கே படிப்பித்த எல்லா வாத்தியார்களிலும் இவரிடம் தான் பிரம்பு என்ற பொருள் இல்லை, அடிக்கவும் மாட்டார். ஆனாலும் இவரைத்தான் நான் தெரிவு செய்தேன்.

மாணவர்களிடம் அவர் கேட்கும் முதல் கேள்வி ‘இன்று என்ன நன்மை செய்தாய்?’ ஒரு நாளைக்கு ஒரு நன்மை என்பது அவர் உபதேசம். ஒரு மாணவன் ‘ஏன் சேர் இரண்டு நன்மை செய்யக்கூடாதா?’ என்று கேட்டான். அவர் ‘அது பேராசை, ஒரு நாளைக்கு ஒன்று போதும்’ என்பார்.

காந்தி வாத்தியார் எங்கள் வகுப்புக்குள் நுழைந்து எல்லோருடைய புத்தகங்களையும் வாங்கி ஒற்றையை தட்டிப் பரிசோதித்த பின்னர் திருப்பி கொடுத்துவிட்டு போனார். பள்ளிக்கூடம் முடிந்த பிறகு என்னையும், எப்பொழுதும் வகுப்பில் கடைசி வாங்கில் குடியிருக்கும் கிருட்டிணபிள்ளை என்பவனையும் தன் வகுப்பறைக்கு கூப்பிட்டார். கிருட்டிணபிள்ளை உயரமானவன். ஒரு கண்ணாடி யன்னலுக்கு பின்னால் நின்று முகத்தை அழுத்திப் பார்ப்பதுபோல சப்பையான முகம். அவன் முன்னாலே ஏதோ பரிசு வாங்கப் புறப்பட்டதுபோல நடந்துபோக நான் பின்னால் போனேன்.  அவனுடைய புத்தகத்தில் இருபதாம் பக்கம் கிழிக்கப்பட்டிருந்தது. அந்தப் புத்தகத்தை எடுத்து காந்தி வாத்தியார் என்னிடம் தந்தார். அவனுக்கு ஒரு புதுப் புத்தகம் தன் காசில் வாங்கிக் கொடுத்தார். கிருட்டிணபிள்ளை ஓர் அடி பின்னுக்கு நகர்ந்து விம்மத் தொடங்கினான். காந்தி வாத்தியார் சொன்ன அறிவுரை இதுதான். ‘நீ படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டது நல்லது. ஆனால், களவெடுத்ததுதான் பிழை.’ அங்கே நடந்த விசயம் எங்கள் மூவரையும் தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது.

‘தாங்கள் மனமுவந்து மன நிறைவோடு அனுப்பிய பணம் வங்கிமூலம் பெற்றுக்கொண்டேன். நீங்கள் உங்களைப் பல வகையிலும், பல நிகழ்ச்சிகளிலும் நினைவூட்டி எழுதி அறிமுகப்படுத்தியிருந்தீர்கள். ஆனால், நீங்கள் யாரென்று எனக்கு ஞாபகமில்லை. என்னை மன்னியுங்கள்.’

அவர் வெள்ளிக்கிழமைகளில் முழு நாளும் உபவாசம் இருப்பது மாணவர்களுக்கு தெரியும். ‘பசிக்காதா சேர், உங்களுக்கு நோய் பிடிக்காதா?’ என்று கேட்பார்கள். அவர் சொல்வார், போன சனிக்கிழமையில் இருந்து அடுத்த வெள்ளிக்கிழமை நான் விரதம் என்பது எனக்கு தெரியும். என் வயிற்றுக்கும் தெரியும். அது தன்னைத் தயார் செய்துவிடும். எதிர்பார்ப்புத்தான் பசியைக் கொண்டுவருகிறது. எங்கள் ஊரில் வரும் நோய்களில் பாதிக்குமேல் தண்ணீரால் வருபவை. தண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள், பாதி நோய் போய்விடும் என்பார். அனைத்து மாணவர்களும் வீடுகளில் போய் தங்கள் தாய்மார்களை தொந்திரவு செய்வார்கள். தண்ணீரைச் சுடவைத்தால்தான் குடிப்பேன் என்று அடம் பிடிப்பார்கள். அடுத்தநாள் பெற்றோர்கள் தலைமையாசிரியருக்கு முறைப்பாடு கொண்டுவருவது நிச்சயம்.

காந்தி வாத்தியாருக்கு கடிதம் போட்டு பல வாரங்களாகியும் பதில் இல்லை. அவர் இருப்பது திருக்கோணமலையில். அங்கே நிலவரங்கள் சரியில்லை என்று தமிழ் தினசரிகளில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஆள் கடத்தலும் குண்டு வெடிப்புகளும் குறைந்தபாடில்லை. கடிதம் போய்ச் சேர்ந்ததோ என்றுகூடத் தெரியாது. ஒரு பதில் வந்தால் நிம்மதியாக இருக்குமே என்று நினைத்துக்கொண்டேன்.

ஆறு மாதம் கழித்து அப்ஸரா ஒரு நீலநிற வான்கடிதத்தை தூக்கிக்கொண்டு வந்து அஞ்சல் பெண் தந்ததாகச் சொல்லிக் கொடுத்தாள். அஞ்சல் பெண்ணுக்கு நன்றி சொன்னாயா என்று கேட்டேன், சொன்னேன் என்றாள். அன்றைய நாளின் நன்மை அவளுக்கு முடிந்துவிட்டது. வான்கடிதத்தை பிரிப்பதற்கு நிறைந்த பொது அறிவும், பொறுமையும் தேவை. சிறு கவனயீனமும் கடிதத்தை மூன்று துண்டுகளாக கிழித்துவிடும்.

காந்தி வாத்தியார்தான் எழுதியிருந்தார். ஒரு 15 வயதுப் பெண்ணின் கையெழுத்துப்போல ஓர் எழுத்தோடு ஒன்று முட்டாமல் வட்ட வட்டமான எழுத்துக்கள். ‘அன்புள்ள ஐயா’ என்று கடிதம் தொடங்கியதும் எனக்கு துணுக்கென்றது. நான் என்னை யாரென்று அவருக்கு நினைவூட்டுவதற்காக என் தங்கையைப் பற்றியும், தம்பியைப் பற்றியும், அண்ணனைப்பற்றியும் எழுதியிருந்தேன். நான் அவரிடம் ‘சத்திய சோதனை’ புத்தகம் பரிசு பெற்றதையும் ஞாபகப்படுத்தியிருந்தேன். ‘தங்களுடைய கடிதம் எனக்கு பெரிய மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் தந்தது. அத்தோடு அதிசயமாகவும் இருந்தது. தங்கள் கடிதத்தை என் மனைவிக்கு வாசித்துக் காட்டினேன். அவர் மிகவும் சந்தோசப்பட்டார். இரண்டு நாள் கழித்து அவர் சிவபதம் அடைந்தார். அவருக்கு வயது 84. எனக்கு 90 நடக்கிறது.’ இப்படி தொடர்ந்து அவர் பல விசயங்களை நீலக் கடிதத்தின் ஓர் ஓரத்தில் இருந்து மறு ஓரம் வரை நெருக்கி நெருக்கி, கடிதத்தின் முழுப்பெறுமதியையும் பெறும்விதமாக  எழுதியிருந்தார். தான் வெள்ளிக்கிழமைகளில் நீராகாரம் மட்டுமே அருந்துவதாகவும் கடந்த 65 வருடங்களில் ஒரு நாள்கூட அதில் தவறியதில்லை என்றும் எழுதியிருந்தார். நடப்பது கஷ்டமாக இருக்கிறதாம். யாரோவுடைய சைக்கிள் பாரிலும், மோட்டார்சைக்கிள் பின் சீட்டிலும் அமர்ந்து வெளியே பயணம் செய்வதாகவும் தூர இடம் என்றால் ஓட்டோவில் போவதாகவும் கடிதத்தில் கூறியிருந்தார்.

படிக்க:
முதல் காதல் அபத்தமா ? அழியா நினைவா ? | மு.வி. நந்தினி
இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கை குண்டுவெடிப்புகளும் !

‘ஒரு நாளில் 24 மணி. ஆறு மணி சாப்பாட்டுக்காக உழைக்கவேண்டும். ஆறு மணி சுயகருமங்கள். ஆறு மணி நித்திரை. ஆறு மணி நாட்டு மக்களுக்கு சேவை.’ சனங்களுக்கு சேவை செய்யாத ஒவ்வொரு மணி நேரமும் கடவுளிடமிருந்து தூரமாகவும், மரணத்துக்கு கிட்டவாகவும் தான் நகர்வதை உணருவதாக அவர் சொன்னது நினைவுக்கு வந்தது. அவருடைய இந்தக் கொள்கையில் கடந்த 65 வருடங்களில் ஒரு மாற்றம்கூட இல்லை என்பதையும் எனக்கு தெரிவித்திருந்தார்.

காந்தி வாத்தியார் கடிதத்தை இப்படி முடித்திருந்தார்.

‘தாங்கள் மனமுவந்து மன நிறைவோடு அனுப்பிய பணம் வங்கிமூலம் பெற்றுக்கொண்டேன். நீங்கள் உங்களைப் பல வகையிலும், பல நிகழ்ச்சிகளிலும் நினைவூட்டி எழுதி அறிமுகப்படுத்தியிருந்தீர்கள். ஆனால், நீங்கள் யாரென்று எனக்கு ஞாபகமில்லை. என்னை மன்னியுங்கள்.’

அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு :
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

மே – 22 தியாகிகளுக்காக கூடி அழ கூட உரிமையில்லை ! தொடரும் ஸ்டெர்லைட்  அடக்குமுறை !

அச்சுறுத்தும் போலீசு, தொடரும் ஸ்டெர்லைட்  அடக்குமுறை ! மே – 22 தியாகிகளுக்காக கூடி அழ கூட உரிமையில்லை !

டந்த ஓராண்டு காலமாக  ஒரு உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனத்தை  இயங்காமல் தடுத்து நிறுத்த முடியுமா? என பலரும் கேள்வி எழுப்பிய இடத்தில் தங்களின் வீரம் செரிந்த போராட்டத்தினால் ஸ்டெர்லைட்டை இயங்காமல் இன்று வரையிலும் தடுத்து   நிறுத்தியுள்ளனர் தூத்துக்குடி மக்கள்.

கடந்த 2018 மே 22-க்குப் பிறகு தூத்துக்குடி என்பது ஸ்டெர்லைட்டுக்கு எதிரான கருத்துக்களை யார் பேசினாலும், அவர்கள் காவல்துறையின் அடக்குமுறையைச் சந்தித்தாக வேண்டும் என்ற எழுதப்படாதச் சட்டம் தூத்துக்குடியில் இன்று வரை அமலில் உள்ளது.

ஒவ்வொரு நாளும் காவல்துறையின் அச்சுறுத்தலும், பொய்வழக்கும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மே 22-ல் நிலம், நீர், காற்றை நஞ்சாக்கும் நாசகார ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என போராடியவர்களில் 15 அப்பாவி மக்களை ஸ்டெர்லைட் –  கைக்கூலியான காவல்துறை சுட்டு வீழ்த்தியது.

இந்நிலையில் மண்ணையும், மக்களையும் பாதுகாக்க தங்களின் இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்த தூத்துக்குடி மக்கள் சார்பாக, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கான வேலைகளை முன்னெடுத்து செய்துகொண்டிருந்தது.

படிக்க:
மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்துவோம் ! தூத்துக்குடி மக்கள் அறைகூவல் !
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்

அதிலிருந்து ஒருபக்கம் ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக உள்ளவர்களுக்கு பணம் வாரியிறைக்கப்படுகிறது. மறுபக்கம் கூட்டமைப்பில் உள்ள முன்னணியாளர்கள், மக்கள் என அனைத்து தரப்பினரையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் தனது ஏவல்படையான போலீசை வைத்து பொய் வழக்கு போடுவது, நள்ளிரவில் ஒவ்வொரு முன்னணியாளர்களுக்கும் ஒரு போலீசை போட்டு கண்கானிப்பது, அவர்களின் வீடுகளுக்கு சென்று மிரட்டுவது என அச்சுறுத்திவருகிறது.

இழந்த சொந்தங்களுக்காக ஒரு நாள் கூடி அழ கூட உரிமையில்லாத நிலையை தூத்துக்குடியில் உருவாக்க எத்தணித்துக்கொண்டிருக்கிறது ஸ்டெர்லைட்டும், போலீசும்.

வீரத்தின் விளைநிலமான தூத்துக்குடி, ஸ்டெர்லைட்டின் நயவஞ்சகத்துக்கும், போலிசின் அடக்குமுறைக்கும் ஒருபோதும் அடிபனியாது!

அடக்குமுறையால் தூத்துக்குடி மக்களின் வீரத்தையும், போர்க்குணமிக்க போராட்ட உணர்வையும் தடுக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால்,  ஒருபோதும் நடக்காது என நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கான வேலைகளை  கொண்டுசெல்வதில்  கூட்டமைப்பு நிர்வாகிகளும், மக்களும்  முன்பை விட உறுதியாகவும், உற்சாகமாகவும் தங்களை   ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் : 
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு,
தூத்துக்குடி.


இதையும் பாருங்க …

தூத்துக்குடி : புதைந்தது உடலல்ல விதையான வீரமடா | ம.க.இ.க. பாடல்

ஐயோ அசைவையே காணோமே உயிரோடுதான் இருக்கிறானா ?

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 14

டுத்த இரண்டு மூன்று நாட்கள் வெப்பம் மிகுந்த அடர்ந்த மூட்டம் சூழ்ந்திருந்தது. அப்போது நடந்தவற்றை அலெக்ஸேய் தெளிவின்றி மங்கலாகவே கண்டான். எதார்த்த நிகழ்ச்சிகளும் ஜன்னிக் கனவுகளும் ஒன்றோடொன்று கலந்து குழம்பின. உண்மைச் சம்பவங்களைக் கோவையாக வரிசைப்படுத்திக் கொள்வது வெகு நாட்கள் சென்ற பின்னரே அவனுக்கு இயன்றது.

அகதிக் கிராமம் நெடுங்கால பைன் மரக்காட்டில் வாழ்ந்தது. ஊசியிலைகளால் வேயப்பட்டு, இன்னும் முற்றும் உருகாத வெண்பனிப் போர்வை அணிந்திருந்த நிலவறை வீடுகளை முதல் பார்வையில் கண்டு கொள்வதே கடினமாயிருந்தது. அவற்றிலிருந்து வந்த புகை தரையிலிருந்து கிளம்புவது போல் தோற்றமளித்தது.

கிராமவாசிகள் மிகப் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் ஒரு சில கிழவர்களுமே, எங்கிருந்தோ வந்த சோவியத் விமானி ஒருவனை காட்டிலிருந்து வண்டியில் மிஹாய்லா எடுத்துக் கொண்டு வருகிறார் என்ற தகவலை அறிந்ததும் அவர்கள் எல்லோரும் எதிர்கொள்ள விரைந்தார்கள். ஸ்லெட்ஜை இழுத்துக் கொண்டு மூவர் வருவது மரங்களின் ஊடாகத் தென்பட்டதும் பெண்கள், ஸ்லெட்ஜை சூழ்ந்து கொண்டார்கள். கால்களுக்கு இடையே புகுந்த சிறுவர் சிறுமியரை அடித்தும் நெட்டித் தள்ளியும் அப்பால் அகற்றியவாறு ஸ்லெட்ஜைச் சுவர் போலச் சூழ்ந்து கொண்டு, புலம்புவதும் முறையிடுவதும் அழுவதுமாக நடந்தார்கள். எல்லாருமே கந்தை ஆடைகளை அணிந்திருந்தார்கள். எல்லோருமே ஒரு மாதிரி வயது முதிர்ந்தவர்களாகக் காணப்பட்டார்கள். நிலவறை வீடுகளின் புகைக்கரி அவர்கள் முகங்களில் அப்பியிருந்தது. கண்களின் ஒளியைக் கொண்டும் பழுப்பு முகங்களில் வெண்மையாகத் துலங்கிய பற்களைக் கொண்டும்தான் இளநங்கையை முதியவளிலிருந்து இனம் பிரித்துக் கண்டுகொள்ள முடிந்தது.

”பெண்டுகளா, அடப் பெண்டுகளா! என்ன கூட்டம் போடுகிறீர்கள் இங்கே, எதற்காக? இதென்ன, நாடக மேடை என்ற எண்ணமா? தமாஷாகவா? அட கால்களுக்கு அடியில் நுழையாதீர்கள், ஆட்டுக் கூட்டங்களா – ஆண்டவா, மன்னிப்பாயாக – அரைப் பைத்தியங்களா!” என்று மிஹாய்லா தமது கழுத்துப் பட்டையை லாவகமாக அழுத்தியவாறு இறைந்தார்.

கூட்டத்தினரின் பேச்சுக்கள் அலெக்ஸேயின் காதுகளை எட்டின:

“ஐயோ, எப்படித் துரும்பாக இளைத்திருக்கிறான் பாரேன்! அசைவையே காணோமே, உயிரோடுதான் இருக்கிறானா?”

“நினைவிழந்து கிடக்கிறான். இவனுக்கு என்ன நேர்ந்தது? ஐயோ பெண்டுகளே, எப்படி இளைத்திருக்கிறான், எப்படி எலும்பும் தோலுமாக இருக்கிறான்!”

அப்புறம் வியப்பு அலை சற்று அடங்கியது. இந்த விமானிக்கு நேர்ந்தது என்ன என்று தெரியாவிட்டாலும் பயங்கரமாக இருக்கும் எனப் புலப்பட்டது. பெண்கள் அதனால் மலைத்துப் போனார்கள். ஸ்லெட்ஜ் காட்டோரமாக இழுத்து வரப்பட்டு நிலவறை கிராமத்தை மெதுவாக நெருங்கிக் கொண்டிருக்கையில், அலெக்ஸேயை யார் வீட்டில் தங்கவைப்பது என்பது பற்றி விவாதம் தொடங்கிவிட்டது.

“என் வீடு உலர்ந்திருக்கிறது. மணல் பரப்பியிருக்கிறது, நல்ல காற்றோட்டம் உண்டு… என் வீட்டில் சிறு அடுப்பும் இருக்கிறது” என்று கூறினாள் பளிச்சிடும் வெண்விழிகளும் வட்ட முகமும் கொண்ட சிறுகூடான ஒரு மாது.

“அடுப்பாம், அடுப்பு! எத்தனை பேர் உங்கள் வீட்டில் வசிக்கிறார்கள்? புழுக்கமே ஆளைக் கொன்றுவிடுமே! மிஹாய்லா, என் வீட்டில் தங்கவை. என் மூன்று மகன்கள் செஞ்சேனையில் இருக்கிறார்கள். கொஞ்சம் போல கோதுமை மாவு மிஞ்சியிருக்கிறது. இவனுக்கு தோசை சுட்டுப் போடுவேன்!”

“இல்லை, இல்லை, என் வீட்டில் தங்கட்டும்! எங்கள் வீடு விசாலம். நாங்கள் இரண்டு பேர் தான் வசிக்கிறோம். இடம் நிறைய இருக்கிறது. தோசை சுட்டு எங்கள் வீட்டுக்கு எடுத்து வா. எங்கே சாப்பிட்டாலும் இவனுக்கு ஒன்று தானே. நாங்கள் இவனைச் சொஸ்தப் படுத்துவோம். பனிப்பதம் செய்த மீனும் வெண் காளான் வற்றலும் என்னிடம் இருக்கிறது. மீன் குழம்பும் காளான் சூப்பும் வைத்துத் தருவேன்.”

“இவன் மீன் குழம்பு சாப்பிடுகிறது எங்கே? பிழைப்போமா மாட்டோமா என்று கிடக்கிறான்! எங்கள் வீட்டுக்கு இவனைக் கொண்டு வாரும் மிஹாய்லா மாமா, எங்களிடம் பசு மாடு இருக்கிறது, பால் கிடைக்கும்!”

ஆனால், மிஹாய்லாவோ கிராமத்தின் நடுவில் இருந்த தனது நிலவறை வீட்டுக்கு ஸ்லெட்ஜை இழுத்துச் சென்றார்.

அலெக்ஸேய் நினைவுப்படுத்திக் கொண்டான்: இருண்ட, சிறு நிலவறை வளையில் அவன் படுத்திருந்தான். சுவரில் நுழைக்கப்பட்டிருந்த சிறாய் விளக்குச் சற்றே புகைந்து சரசரப்புடன் பொறிகள் சிந்தியவாறு எரிகிறது. அதன் வெளிச்சத்தில் தெரிகின்ற நிலவறையில் உள்ள சாமான்கள்; மரக்கட்டையைத் தரையில் புதைத்து அதன் மேல் ஜெர்மானியச் சுரங்க வெடிப் பெட்டிப் பலகைகளைப் பொருத்திச் செய்யப்பட்டிருந்த மேஜை, அதன் அருகே மனைகளுக்குப் பதிலாக முண்டுக்கட்டைகள். மேஜை மேல் குனிந்தவாறு அமர்ந்திருக்கிறாள் கிழவி போன்று கறுப்பு உடை அணிந்த, ஒடிசலான ஒரு பெண். மிஹாய்லா தாத்தாவின் இளைய மாற்றுப் பெண் வார்யா இவள். அடர்த்தியற்ற சுருட்டை வெண்மயிர் படிந்த கிழவரின் தலையும் தெரிகிறது.

வைக்கோல் நிரப்பிய கோடிட்ட மெத்தை மேல் படுத்திருக்கிறான் அலெக்ஸேய். பல்வண்ண ஒட்டுக்கள் போட்ட அதே ஆட்டுத்தோல் கோட்டையே அவன் போர்த்திருக்கிறான். உடம்பெல்லாம் கற்களால் அடித்து நொறுக்கப்பட்டது போல் வலிக்கிறது. உள்ளங்கால்களில் சுடு செங்கற்கள் கட்டப்பட்டிருப்பது போலக் கால்கள் காந்துகின்றன. எனினும், நம்மை ஒருவரும் தொடமாட்டார்கள், இயங்கவோ, சிந்தனை செய்யவோ, அஞ்சவோ தேவையில்லை என்பதைத் தெரிந்துக் கொண்டு இந்த மாதிரி அசையாமல் கிடப்பது இன்பமாய் இருக்கிறது.

அலெக்ஸேய் கண்களை மூடிக் கொள்கிறான். கறுப்பு ஜெர்மன் கழுகுச் சின்னம் பொறித்த சாக்குத் துணியால் உறை தைக்கப்பட்ட திறந்த கதவின் வழியாக திடீரெனக் குளிர் காற்று குப்பென வீசவே அவன் கண்களைத் திறந்தான். மேஜை அருகில் இருக்கிறாள் யாரோ ஒரு மாது. மேஜை மேல் ஒரு சாக்குப்பையை வைத்துவிட்டு, அதைத் திரும்ப எடுத்துக் கொண்டு விடுவோமோ எனத் தயங்குபவள் போல அதன் மேல் கைகளை வைத்தவாறு பெருமூச்செறிகிறாள். பின்பு வார்யாவிடம் சொல்லுகிறாள்:

“இது ரவை. சமாதான காலம் முதலே கோஸ்த்யாவுக்காகப் பத்திரப்படுத்தி வைத்திருந்தோம். இப்போதோ அவனுக்கு ஒன்றும் தேவையில்லை. நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். விருந்தாளிக்குப் பொங்கல் சமைத்துப் போடுங்கள். சின்னப் பிள்ளைகளுக்கு ஏற்றது ரவைப் பொங்கல். இவருக்கு இப்போது இது சரியாயிருக்கும்.”

இப்படிச் சொல்லிவிட்டு, தனது ஏக்கத்தை எல்லோர் மீதும் பரப்பியவாறு திரும்பி மெதுவாக வெளியேறுகிறாள் அவள். அப்பறம் ஒருத்தி மீன் கொண்டு வருகிறாள். மற்றொருத்தி கணப்புக் கல்லில் சுட்ட தோசைகள் கொண்டு வருகிறாள். அவற்றின் வெதுவெதுப்பான, புளித்த கோதுமை மணம் நிலவறை முழுவதிலும் பரவுகிறது.

ஆகா, பெண்களே, பெண்களே! விலைமதிப்பில்லாத மாணிக்கங்கள் நீங்கள்!… ருஷ்யப் பெண் விலை மதிக்க முடியாத இரத்தினம் என்கிறேன்… தன்னிடம் உள்ளதை எல்லாம் அள்ளித் தந்துவிடுவாள், தலையைக் கூடக் கொடுத்து விடுவாள் நமது பெண்.

செர்யோன்காவும் பேத்யாவும் வருகிறார்கள். குடியானவர்களுக்குரிய நிதானத்துடன் செர்யோன்கா வாயிலருகே தலையிவிருந்து தொப்பியைக் கழற்றிக் கையில் பிடித்துக் கொண்டு, “உங்களுக்கு வணக்கம் என்று சொல்லி மேஜை மேல் இரண்டு சர்க்கரைக் கட்டிகளைப் போடுகிறான், மட்டப் புகையிலைத் துணுக்குகளும் தவிடும் அவற்றில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. “அம்மா கொடுத்தனுப்பினாள். சர்க்கரை உடம்புக்கு நல்லது, சாப்பிடுங்கள்” என்று கூறிவிட்டுத் தாத்தாவை நோக்கிக் காரியப்பாங்குடன் சொன்னான்: “எரிந்த கிராமத்துக்கு மறுபடி போனோம். இரும்புச் சட்டி ஒன்றைத் தேடி எடுத்தோம். ரொம்ப கரிந்து போகாத இரண்டு மண் வாரிகளும் காம்பு இல்லாத கோடாரியும் கிடைத்தன. கொண்டு வந்தோம், பயன்படும்.”

வெகு நேரத்துக்குப் பிறகுதான், இதை எல்லாம் எண்ணிப் பார்த்த போதுதான், கிராமத்தினர் தனக்குக் கொண்டு வந்து அளித்த பரிசுகள் எவ்வளவு மதிப்புமிக்கவை என்பதை அலெக்ஸேயால் அறிந்து கொள்ள முடிந்தது. இந்தக் குளிர் காலத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு கிராமவாசிகள் பட்டினியால் மடிந்து போனார்கள். ஒரு ஆளையோ அல்லது இருவரையோ கூட அடக்கம் செய்யாத குடும்பம் ஒன்று கூட குடியிருப்பில் இல்லை.

“ஆகா, பெண்களே, பெண்களே! விலைமதிப்பில்லாத மாணிக்கங்கள் நீங்கள்! என்ன, கேட்டாயா, அலெக்ஸேய், ருஷ்யப் பெண் விலை மதிக்க முடியாத இரத்தினம் என்கிறேன். அவள் நெஞ்சு இளகிவிட்டதோ, தன்னிடம் உள்ளதை எல்லாம் அள்ளித் தந்துவிடுவாள், தலையைக் கூடக் கொடுத்து விடுவாள் நமது பெண். ஊம்? இல்லையா?” அலெக்ஸேய்க்குக் கொடுக்கப்பட்ட இந்தப் பரிசுகளை எல்லாம் ஏற்றுக் கொண்டு மிஹாய்லா தாத்தா இவ்வாறு திரும்பத் திரும்ப உரைத்தார். பின்பு தமக்கு எப்போதும் இருக்கும் வேலையில் மீண்டும் ஈடுபட்டார்: சேணத்தைச் செப்பனிட்டார், நுகவார்களைத் தைத்தார், அல்லது தேய்ந்து போன நமுதா ஜோடிகளுக்கு அடிகள் தைத்தார். “தம்பீ, அலெக்ஸேய், வேலையிலும் இவள், அது தான் நமது பெண் பிள்ளை, நமக்கு சளைக்க மாட்டாள். சில வேளைகளிலோ வேலையில் ஆண்களையே முந்தி விடுவாள்! இந்தப் பெண்களின் நாக்கு இருக்கிறதே, அதுதான் பொல்லாதது. என்னை முட்டாளாக அடித்து விட்டார்கள். என்னை என் வீட்டுக்காரி அனீஸியா காலமானதும் நான், பாவி, நினைத்துக் கொண்டேன்: ‘ஆண்டவா, போற்றி, சந்தடி இல்லாமல் நிம்மதியாய் வாழ்வேன்!’ என்று. ஆண்டவன் இதற்கு என்னைத் தண்டித்து விட்டான். எங்கள் கிராம ஆண்களில் இராணுவத்தில் எடுத்துக் கொள்ளப்படாமல் பாக்கி இருந்தவர்கள் எல்லோரும், ஜெர்மானியர்கள் வந்ததும் கொரில்லாப் படைகளில் சேர்ந்துவிட்டார்கள். நானோ, செய்த பெரும் பாவத்துக்குத் தண்டனையாகப் போலும், பெண்கள் கூட்டத்துக்குக் கமாண்டர் ஆகிவிட்டேன் – ஆட்டு மந்தையில் கடா போல… ஓ ஹோ-ஹோ!”

தன்னை ஆழ்ந்த வியப்புக்கு உள்ளாக்கிய எத்தனையோ விஷயங்களை அலெக்ஸேய் இந்தக் காட்டுக் குடியிருப்பில் கண்டான். ப்ளாவ்னி கிராமத்தில் வாழ்ந்த மக்களுக்கு வீடுகளோ, வேளாண்மைக் கருவிகளோ, கால்நடைகளோ, அன்றாடத் தேவைக்கான தட்டுமுட்டுச் சாமான்களோ, உடைகளோ, எதுவுமே – பல தலைமுறைகளின் உழைப்பால் சேகரிக்கப்பட்டிருந்தவை எவையுமே – இல்லாதவாறு அடித்துவிட்டார்கள் பாசிஸ்டுகள்.

மக்கள் இப்போது காட்டில் வசித்தார்கள். பெருந்துன்பத்தில் உழன்றார்கள். ஹிட்லர் படையினர் தங்களை கண்டுபிடித்து விடுவார்களோ என்ற அச்சத்தால் ஒவ்வொரு கணமும் கவலையுற்றனர். ஆனால், ஆறுமாத வசவு திட்டுகளுக்கும் விவாதங்களுக்கும் பிறகு, ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதாம் ஆண்டில் முன்னணி ஊழியர்களால் எப்படியோ ஒரு விதமாக நிறுவப்பட்ட கூட்டுப்பண்ணை தகர்ந்து விடவில்லை. மாறாக, போரினால் ஏற்பட்ட பெரும் விபத்து மக்களை முன்னிலும் நெருக்கமாக ஒற்றுமைப்படுத்தியது.

நிலவறை வீடுகளைக் கூட மக்கள் ஒன்று சேர்ந்து தோண்டி அமைத்துக் கொண்டார்கள். அவற்றில் பழங்கால முறைப்படி குடியேற விடாமல் வேலைக் குழு முறைப்படி ஒழுங்காகக் குடியேறினார்கள். தனது கொலையுண்ட மருமகனின் இடத்தில் கூட்டுப்பண்ணைத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் மிஹாய்லா தாத்தா. கூட்டுப்பண்ணை பழக்கவழக்கங்களை அவர் சிரத்தையுடன் கடைப்பிடித்தார். காட்டின் நடுவே பைன் மரத் தோப்புக்குள் விரட்டப்பட்டு நிலவறை வீடுகளில் வசித்த கிராமத்தினர் வேலைக் குழுக்களாகவும் பிரிவுகளாகவும் அமைந்து வசந்த கால வேளாண்மைக்கு ஆயத்தம் செய்யலானார்கள்.

தப்பி ஓடிய பிறகு தங்களிடம் மிஞ்சியிருந்த தானியங்களை, பட்டினியால் தவித்துக் கொண்டிருந்த குடியான மாதர்கள் பொது நிலவறையில் ஒரு மணி கூட விடாமல் கொண்டு சேர்த்தார்கள். ஜெர்மானியர் கைகளில் அகப்படாமல் உரிய நேரத்தில் காட்டுக்கு ஓட்டி வரப்பட்ட பசுக்களின் கன்றுகளைப் பராமரிப்பதற்குக் கண்டிப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆட்கள் பட்டினி கிடந்தார்கள், ஆனால் பொது கால்நடைகளை உணவுக்காகக் கொல்லவில்லை. உயிரையே இழக்க நேரிடும் அபாயத்தை மேற்கொண்டு சிறுவர்கள் தீக்கிரையான கிராமத்துக்குப் போய் எரிபாடுகளைத் தோண்டி நெருப்புச் சூட்டால் நீலம் பாரித்திருந்த கலப்பைகளை எடுத்து வந்தார்கள். அவற்றில் ஓரளவு உருப்படியாக இருந்தவற்றிற்கு மரக் கைபிடிகள் செய்து பொருத்தினார்கள். சாக்குத்துணிகளால் நுகங்கள் செய்தார்கள், வசந்த காலத்தில் பசுக்களைக் கட்டி உழுவதற்காக. பெண்களின் வேலைக் குழுக்கள் முறை வைத்துக் கொண்டு ஏரிகளில் மீன் பிடித்து குளிர்காலம் பூராவும் கிராமத்திற்கு உணவளித்தன.

மிஹாய்லா தாத்தா “தன் பெண்களைப் பற்றி முணு முணுப்பார். அலெக்ஸேய்க்குப் பிடிபடாத ஏதேனும் வேளாண்மை விவகாரங்களைப் பற்றி அவர்கள் அவருடைய நிலவறையில் நீண்ட வாக்குவாதங்கள் நடக்கும் போது காதுகளைப் பொத்திக் கொள்வார். சில வேளைகளில் தம்மை மீறிய கோபம் காரணமாக உச்சக் குரலில் அவர்களை அதட்டுவார். ஆயினும் இந்த மாதர்களை மதிக்க அவருக்கு இயன்றது. அலெக்ஸேய் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு சில வேளைகளில் “பெண் ஜன்மங்களை” வானளாவப் புகழ்வார்.

“நீயேதான் பாரேன் அலெக்ஸேய், என் அருமை நண்பா, என்ன நேர்ந்திருக்கிறது என்பதை. தலைமுறை தலைமுறையாகப் பெண்ணின் சுபாவம் சிறு துண்டைக் கூட இரண்டு கைகளாலும் இறுகப்பற்றிக் கொள்வதுதான். ஊம்? அப்படித்தானே. ஏன்? கஞ்சத்தனமா? இல்லை. அவளுக்கு அந்தத் துண்டு விலைமிக்கது, குழந்தைகளுக்கு ஊட்டுபவள் பெண் தானே, என்னதான் சொன்னாலும் குடும்பத்தை நிர்வகிப்பவள் அவள் தானே, அதனால் தான் பொருள்கள் விஷயத்தில் அவளுக்கு அவ்வளவு கரிசனம்.

இப்போது கேள், விஷயம் என்ன என்பதை நீயே பார்க்கிறாய், பொறுக்குகளைக் கூடக் கணக்கிட்டுச் செலவிடுகிறோம். பஞ்சமான பஞ்சமில்லை! இந்த நிலைமையில் திடீரென்று கொரில்லா வீரர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். நடந்தது ஜனவரியில், இவர்கள் எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் அல்ல. எங்கள் ஆட்கள் ஒலேனினோ பக்கத்தில் எங்கோயோ சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வேறு ஆட்கள், ஏதோ ரயில் பாதையைச் சேர்ந்தவர்கள். நல்லது. வந்து சேர்ந்தார்கள். ‘பட்டினியால் தவிக்கிறோம்’ என்றார்கள்.

எங்கள் பெண்கள் அடுத்த நாள் பைகள் நிறைய உணவுப் பண்டங்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டார்கள். சொந்தக் குழந்தைகள் சோகைப் பிடித்து ஊதிப் போயிருக்கின்றன, நிற்கவே முடியாமல் தள்ளாடுகின்றன. ஊம்? அப்படித்தானே?….. இது தான் சேதி! நான் மட்டும் படைத் தலைவனாக இருந்தால், ஜெர்மானியர்களை நாம் விரட்டியடித்துமே என் படையிலுள்ள தலைசிறந்த வீரர்களைத் திரட்டி, ஒரு பெண்ணை முன்னால் நிறுத்தி அவளுக்கு எதிரே, ருஷ்யப் பெண்ணுக்கு எதிரே அணிவகுத்து நடந்து இராணுவ மரியாதை செய்யும்படி கட்டளை இடுவேன், நமது பெண்ணுக்கு!”

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

கல்லூரி மாணவி திலகவதி படுகொலை ! தீர்ப்புக்கு முன்பே தீ மூட்டும் சாதி வெறி !

தேதி : 15.05.2019

பத்திரிக்கைச் செய்தி!

கடலூர் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி – கல்லூரி மாணவி திலகவதி படுகொலை ! ஆணவக்கொலையா? – காதல் கொலையா?

தீர்ப்பு வரட்டும்! அதற்கு முன் தீ மூட்ட வேண்டாம் !

ந்த குற்றமும் செய்யாத மாணவி திலகவதியின் மரணம் நெஞ்சை உலுக்குகிறது. இனிமேல் யாரும் இது போன்று சாகக் கூடாது என சாதிக்கு அப்பாற்பட்டு நாம் அனைவருமே விரும்புகிறோம். ஆனால், அதற்கு எந்த உத்திரவாதமும் இல்லாத நிலையில் நாம் வாழ்கிறோம்.

எந்தவித திருமணமானாலும் அது இரு தனிநபர்கள் சம்பந்தப்பட்டது அல்லது இரு குடும்பத்தினர் சம்பந்தபட்டது மட்டுமே என்று பார்ப்பதற்கு நாம் பழக வேண்டும். நாடக காதல், ஒரு தலைகாதல், என்ற சாதிவெறிக்கு நாம் தூண்டில் இறையாகக் கூடாது.

மே மாதம் 8-ம் தேதி மாலை 5:00 மணியளவில் விருத்தாசலம் தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் இரண்டாமாண்டு படித்து வரும் திலகவதி என்ற மாணவி கருவேப்பிலங்குறிச்சியில் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மாணவி திலகவதி

திலகவதியின் பெற்றோர் சுந்தரமூர்த்தி – கொளஞ்சி கூலி தொழில் செய்து வரும் அடித்தட்டு குடும்பத்தினர். இந்த கொலையைச் செய்ததாக, பள்ளியில் அவருடன் ஒன்றாக படித்து பழகி வந்த ஆகாஷ் என்ற கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து சிறையிலடைத்து உள்ளனர். கொலை செய்யப்பட்டவர் வன்னியர், கொலை குற்றம் சாட்டபட்டவர் தலித் என்பதால் சாதி அரசியல் உள்ளே நுழைந்து இரு சமூகத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது.

தலித் மக்கள் வாழும் பகுதியான (ஆகாஷ் ஊர்) பேரளையூர் கிராமத்தில் அச்சத்தின் காரணமாக ஆண்கள் – இளைஞர்கள் அனைவரும் வெளியூர் சென்று விட்டனர். பெண்களும் சிறுவர்களும் மட்டுமே உள்ளனர். இத்தகைய அச்சத்திற்கு யார் காரணம்? யார் பொறுப்பேற்பது? அரசா? ஆதிக்கசாதி வெறியர்களா?

இது காதல் கொலையா அல்லது ஆணவக்கொலையா என்பது விசாரணைக்குப் பின்னர்தான் தெரியவரும். ஆனால், அதற்கு முன்னரே மருத்துவர் ராமதாஸ் அவர்கள் திலகவதியின் கொலைக்கு வழக்கம் போல் தலித் மக்கள் மீது குற்றஞ்சாட்ட முயல்வதுடன், பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தை இதற்காக களத்தில் முடுக்கி விட்டுள்ளார்.

படிக்க:
சாதி உங்களுக்கு என்ன செய்தது ?
♦ சாதி வெறியை ஊதிவிடும் தேவராட்டம்

தன் சொந்த சாதியில் மணம் முடிக்க வேண்டும் என சராசரியாக சிந்திக்கும் பெற்றோரை சாதிவெறியர்களாக மாற்ற முயற்சிக்கிறார். முஸ்லீம்களை எதிரியாக காட்டி வளரும் பா.ஜ.கவின் மதவெறி அரசியல் போல தலித்துக்களை எதிரியாக காட்டி சாதிவெறி அரசியலை வளர்க்க முயல்கிறார் மருத்துவர் ராமதாஸ். இதற்காக தலித் அல்லாத அனைத்து சாதியினரையும் துணைக்கு அழைக்கிறார்.

திலகவதியின் கொலைக்கு காரணமான குற்றவாளி யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது. கொலையை நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லாத நிலையில் கைது செய்யப்பட்டிருக்கும் ஆகாஷ்தான் உண்மைக் குற்றவாளியா அல்லது இது திலகவதியின் உறவினர்களால் செய்யப்பட்ட ஆணவக் கொலையா என்பது விசாரிக்கப்படவேண்டும்.

கொலை செய்ததை ஆகாஷே ஒப்புக்கொள்வதாக ஒரு வீடியோவை பதிவு செய்து போலீசார் அதனை வெளியில் பரவ விட்டிருக்கின்றனர். இத்தகைய சாட்சியத்தை நீதிமன்றம் ஏற்காது என்பது போலீசாருக்கு நன்கு தெரியும். இருந்த போதிலும் சட்டவிரோதமாக ஒரு தரப்பிற்கு ஆதரவாக வீடியோவை வெளியிட்டு, பதற்ற நிலையை உருவாக்கியிருக்கின்றனர். இந்த நடவடிக்கை அனைவருக்கும் போலீசார் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் மூலம் சிறப்பு விசாரணைக்கு உத்திரவிட வேண்டியது அவசியமானதாகும்.

ஆகாஷ் திலகவதி இருவரும் பழகி வந்ததும், ஒன்றாகப் பள்ளியில் படித்து வந்ததும், அடிக்கடி திலகவதியின் வீட்டிற்கு ஆகாஷ் செல்வதும் இரு தரப்பு பெற்றோர்களுக்கும் தெரியும். இவர்கள் பழகியது ஊரில் உள்ள அனைவருக்கும் தெரியும். இரு குடும்பங்களுமே ஏழைகள். “திலகவதியை ஆகாஷ் கொலை செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஆகாஷ் அத்தகைய சுபாவம் உடையவன் அல்ல. கொலை நடந்த நேரத்தில் ஆகாஷ் பேரளையூர் என்ற தனது கிராமத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தான்” என்று அந்த ஊரைச் சேர்ந்த மக்கள் கூறுகின்றனர்.

கண்ணகி – முருகேசன்

நாடகக்காதல் என்ற பிரச்சாரத்தை நம்புகிறவர்கள் கண்ணகி முருகேசன் கொலையை நினைத்துப் பார்க்க வேண்டும். 2003 -ல் விருத்தாசலத்தில் தலித் இளைஞர் பொறியியல் பட்டதாரி முருகேசன். வன்னியர் வகுப்பை சேர்ந்த கண்ணகி  வணிகவியல் பட்டதாரி. இவர்களது காதலின் எதிர்வினையாக, இருவர் வாயிலும் விஷம் ஊற்றி உயிரோடு எரித்துக்கொல்லப்பட்னர்.

இருவரின் பெற்றோரிடமும் ஒப்புதல் வாக்குமூலம் பெற்று அவர்களையே குற்றவாளியாக்கி குற்றப்பத்திரிக்கையையும் தாக்கல் செய்து போலீசார் வழக்கை முடித்தனர். பிறகு சி.பி.ஐ விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. பெண்ணின் தந்தை சகோதரன் உள்பட 15 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து அதனுடன் சாட்சியத்தை அழிக்க முயன்றதாக விருத்தாசலம் போலீசு ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளரையும் அந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்து உள்ளது சி.பி.ஐ. 16 ஆண்டுகள் ஆனபிறகும் கண்ணகி முருகேசன் வழக்கு நீதிக்காக காத்திருக்கிறது.

பருவம் வராத காதலும் பாலியல் சார்ந்த குற்றங்களும் இன்று மென்மேலும் அதிகரித்து வருகின்றன. ஆபாச நுகர்வு வெறி கலாச்சார சீரழிவிற்கு அனைவரும் விட்டில் பூச்சிகளாக பலியாகின்றனர். சாதியோ, வயதோ, பதவியோ இந்த சீரழிவுக்குத் தடையாக இல்லை.

உள்ளூர் மாஜிஸ்டிரேட் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி வரை பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.  ஏட்டு முதல் தனக்கு கீழ் உள்ள எஸ்.பி-யை பாலியல் துன்புறுத்தல் செய்த ஐ.ஜி வரை, பாலியல் புகாரில் உள்ளனர். 3 வயது குழந்தை முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை வல்லுறவு – கொலை செய்யப்பட்டு வருகின்றனர். பாலியல் நுகர்வு வெறியாலும் பக்குவமின்மையாலும் பல கொலைகளும் தற்கொலைகளும் தினம்தோறும் நடக்கின்றன. இந்த சூழ்நிலை, பெண்களை மட்டுமல்ல நம் அனைவரையும் அச்சுறுத்துகிறது.

பொள்ளாச்சி பாலியல் வல்லுறவுக் குற்றத்தில் 250 -க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பெண்களை வீடியோ படம் எடுத்து வைத்துக் கொண்டு அதைக்காட்டி அவர்களை விலை மாதர்களாக விலைபேசியது என்பது கொலைக்குற்றத்தைக் காட்டிலும்  கொடிய குற்றம். ஆனால் பேருக்கு சிலரை கைது செய்து அந்தக் குற்றக்கும்பலை போலீசு பாதுகாக்கிறது. இந்தக் கிரிமினல்களின் சாதி என்ன என்ற கேள்வியையோ, பாதிக்கப்பட்ட பெண்களின் சாதி என்ன என்ற கேள்வியையோ யாரும் எழுப்பவில்லை.

இங்கே நடந்திருப்பது ஒரு கொலைக்குற்றம். நேர்மையான விசாரணை உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கட்டும். அதற்கு முன்னர் இத்தகைய சம்பவங்களை சாதியப் பார்வையில் பார்க்க சொல்லித் தூண்டிவிடும் சாதிவெறி அரசியலை நாம் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.

எனவே;

  • திலகவதியின் படுகொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்.
  • தங்களது இரு மகள்களையும் இழந்து தவிக்கும் திலகவதியின் பெற்றோர்களுக்கு தமிழக அரசு மாதம் தோறும் உதவித் தொகை வழங்குவதுடன், உரிய அரசு வேலை வழங்க ஆவண செய்ய வேண்டும்.
  • அதிகரித்து வரும் பாலியல் ஆபாச நுகர்வு வெறி குற்றங்களுக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அரசை நிர்பந்தித்து போராட வேண்டும்.
  • காதல் தற்கொலை, கொலை சம்பவங்களில் சாதி மத வெறி அரசியலை தூண்டி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் சாதிக்கட்சிகள், சாதிசங்கங்களை அனைத்து தரப்பு மக்களும் புறக்கணிக்க வேண்டும்.

தோழமையுடன்,
வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.

ஆரிய யோகத்தின் அற்புத சக்தியைப் பாரடா !

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 15


காட்சி : 22

இடம் : ஆஸ்ரமம்
உறுப்பினர்கள் : காகப்பட்டர், ரங்கு பட்டர்

காகப்பட்டர் : காடு, மேடு என்று பாராமல் களத்திலே நின்று போரிட்டான். ஆனால், நமது காலடியில் வீழ்ந்தால் தான் ராஜ்யம் அவனுக்கு… ரங்கு பட்டர், என்னடா சொல்றே இப்போ?

ரங்கு பட்டர் : சொல்றதா? ஆனந்தத் தாண்டவமாடலாமான்னு – தோன்றது, குருதேவா. நினைக்க நினைக்க நேக்கு ஆச்சர்யமாய் இருக்கு. புனா எங்கே இருக்கு ? காசி எங்கே இருக்கு? மண்டலம் அங்கே இருக்கு. ஆனா அதை …

காகப்பட்டர் : பரிசுத்தமாக்க இங்கே நம்மிடமிருக்கும் கமண்டல தீர்த்தம் தேவைப்படுகிறது.

ரங்கு பட்டர் : ஆச்சர்யமா இருக்கு ஸ்வாமி!

காகப்பட்டர் : ஆரிய யோகத்தின் அற்புத சக்தியைப் பாரடா அசடே

ரங்கு பட்டர் : ராஜ்யம் சம்பாதிக்க அவன் பட்டபாடு எவ்வளவு? கொட்டிய ரத்தம் எவ்வளவு?

காகப்பட்டர் : மாவீரன்! மராட்டியத்தைப் பிழைக்க வைத்த வீரன் என்று மண்டலமெல்லாம் புகழ்கிறதாம் அவனை . அவன், அசட்டு ரங்கு பட்டர், அந்த வெற்றி வீரன் இந்த வேதிய குலத்தினிடம் தஞ்சம் புகுந்தாக வேண்டி வருகிறது. தெரிந்து கொள்ளடா தெளிவற்றவனே.

ரங்கு பட்டர் : ஆமாம் ஸ்வாமி! அவன் வீராதி வீரனாகத் தான் இருக்கிறான். என்றாலும் அவனை நம்முடைய ஆரிய சோதராள் எதிர்க்கிறாளே, தெரியுமா!

காகப்பட்டர் : ஏண்டா தைரியம் வராது? பைத்தியமே! எவ்வளவு பெரிய வீராதி வீரனாக இருந்தாலும், சிவாஜியாகட்டும், வேறே எந்த ஜீயாகட்டும் மனிதன்தானே? நாம் பூதேவாடா ! பூதேவா! மனிதர்களுக்கு மேம்பட்டா . அதுதானே சாஸ்திரம். அந்த சாஸ்திர பலம் இருக்கும் போது எப்படிப்பட்ட சூராதி சூரனையும் ஏன் நாம் எதிர்க்க முடியாது?

ரங்கு பட்டர் : சூட்சம பலம் இருக்கு ஸ்வாமி நம்மிடம்.

காகப்பட்டர் : சந்தேகமென்ன? நால்வகைச் சேனைகள் உண்டு, அவனிடம், சிவாஜியிடம் ; நம்மிடம் நாலு வேதங்கள். அஸ்திர சாஸ்திரம் அவனிடம் ; ஆகம சாஸ்திரம் நம்மிடம் . வாள் ஏந்துகிறான் அவன்! கூர்மையான வாள்; கேவலம் புல்லைத்தான் ஏந்துகிறோம் நாம். உலர்ந்து போன புல்லடா, புல். ஆனால் பாரடா மண்டூ ! புல் ஏந்தியின் ஆசி கிடைத்தால்தான் அவன் பூபதி ஆக முடியும். பூகரரிடம் ஒலையனுப்பினேன் முதலில்,
சம்மதம் தர முடியாது பட்டாபிஷேகத்திற்கு என்று.

ரங்கு பட்டர் : ஆமாம் நானும் கூட கொஞ்சம் பயந்துதான் போனேன். உம்முடைய சம்மதம் கிடைக்கப் போனா என் தலையிலே கிரீடம் ஏறாமலா போகும்னு கோபமாகப் பேசிவிட்டு, எங்கே அவர் மகுடாபிஷேகம் செய்துண்டுடறாளோன்னு நினைச்சேன்.

காகப்பட்டர் : முடியுமா? அப்படி அவர் துணிஞ்சி செய்றதுன்னு ஆரம்பிச்சா நம்ம படைகள் சும்மா இருக்குமா? ஏண்டா, பேந்தப் பேந்த விழிக்கிறே? நமக்கு ஏது மராட்டியத்தில் படையின்னு விழிக்கிறியா? படைன்னா நான் நம்ம ஆரியச் சோதராளைச் சொல்றேண்டா. அவா சும்மா விட்டு விடுவாளோ? பாவி நீசன் சண்டாளன் அப்படி இப்படின்னு கூச்சலைக் கிளப்பினான்னா, பரத கண்டமே பயத்தாலே கிடுகிடுண்ணு ஆடும்டா ஆடும் !

ரங்கு பட்டர் : அதனாலேதான் மறுபடியும் தூதுவனை அனுப்பினா உம்மிடம்.

காகப்பட்டர் : நானும் இதற்குள் கொஞ்சம் தீர்க்கமா யோசித்துப் பார்த்தேன். இந்தப் பட்டாபிஷேகத்திற்குச் சம்மதம் தந்து, கூட இருந்து காரியத்தைச் செய்தா விஷேசமான பலன் இருக்கு. பரத கண்டம் முழுவதும் நம்ம கீர்த்தி பரவும். அது சாதாரணம். நம்மவர் எங்கே இருந்தாலும் தலை நிமிர்ந்து நடப்பாளோண்ணோ ? மதிப்பு எவ்வளவு அதிகமாகும். அதைக் கணக்கிட்டுப் பார்த்ததாலே தான் நானும் சரி! பட்டாபிஷேகத்துக்குச் சம்மதிக்கிறேன்னு புதிய தூதுவன் நீலோஜியிடம் சொல்லி அனுப்பினேன். தெரிகிறதா?

ரங்கு பட்டர் : தெரிகிறது ஸ்வாமி தெரிகிறது. ஆனால் திகிலும் பிறக்கிறது.

காகப்பட்டர் : திகிலா? ஏண்டா மண்டு, ஏண்டா திகில் ?

ரங்கு பட்டர் : இந்தச் சூட்சமம் அவாளுக்கும் தெரிந்துவிடுமானால், நம்ம கதி என்னங்கிற திகில்தான்.

காகப்பட்டர் : வீண் பயம்டா உனக்கு நமது புராண, இதிகாசாதிகளை , நீ சாமான்யமானவைன்னு எண்ணிண்டிருக்கே. டே ரங்கு, அவைகளுக்கு ஜீவன் உள்ளமட்டும், நாம் என்ன சொன்னாலும் இவர் கேட்பா என்ன செய்தாலும் தகும். டே, ரங்கு சொன்னா உடனே காதிலே கேட்கப் பிடிக்காத, சகிக்க முடியாத விஷயங்கன்னு சில உண்டோ , இல்லையோ.

ரங்கு பட்டர் : சிலவா? பல உண்டு ஸ்வாமி!

காகப்பட்டர் : உதாரணமாக… பஞ்சமா பாதகம் இருக்கு.

ரங்கு பட்டர் : ஆமாம்! கொலை, களவு, கட்குடி, சூதாட்டம்.

காகப்பட்டர் : ஆமாண்டா என்னடா நேக்குப் பாடம் சொல்ல ஆரம்பிக்கிறே? இவைகளைக் கேட்டாலே பதறுவா. பழிப்பா, இகழுவாளோண்ணோ ?

ரங்கு பட்டர் : ஆமாம் நம்ம சாஸ்திராதிகளும் பஞ்சமா பாதகங்கள் கூடாதுண்ணுதான் சொல்லிண்டு வர்றது.

வாள் ஏந்துகிறான் அவன்! கூர்மையான வாள்; கேவலம் புல்லைத்தான் ஏந்துகிறோம் நாம். உலர்ந்து போன புல்லடா, புல். ஆனால் பாரடா மண்டூ ! புல் ஏந்தியின் ஆசி கிடைத்தால்தான் அவன் பூபதி ஆக முடியும்.

காகப்பட்டர் : சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. சாமான்யருக்கும் தெரியும். ஆனா டே, ரங்கு பட்டர் குரு பத்தினியைக் கெடுத்த சந்திரன். ரிஷி பத்தினியைக் கெடுத்த இந்திரன், விருந்தையைத் தேடிக் கொடுத்த விஷ்ணு, சப்த ரிஷிகளின் பத்தினிமார் மீது மோகம் கொண்ட அக்கினி, மகளை மனைவியாக்கிக் கொண்ட பிரம்மா, தாரகா வனத்து ரிஷிப் பத்தினிகளைக் கொடுத்த சிவன் – இப்படித் தேவர் மூவரைப் பற்றிக் கூறப்பட்டிருக் கேல்லோ – பஞ்சமா பதாகத்திலே லேசானவைகளா இவை?

ரங்கு பட்டர் : ஆமாம், ஸ்வாமி! சில சமயம் நேக்கு நெசமாகச் சொல்றேன். அதையெல்லாம் நெனைச்சுண்டா, சகிக்க முடியறதில்லே. நாக்கைப் பிடுங்கிண்டு சாகலாமான்னு தோன்றது.

காகப்பட்டர் : உனக்குத் தோன்றதுடா அப்படி. ஆனா மகா ஜனங்க என்ன சொல்றா? ஏதாவது பதைக்கிறாளா? பதற்றாளா? சேச்சோ இப்படிப்பட்ட பஞ்சமா பாதகம் செய்ததாகவா பகவானைப் பத்தின சேதிகள் இருப்பதுண்ணு கேக்கறாளா? கொஞ்சமாவது கூசறாளா?

ரங்கு பட்டர் : இல்லையே ஸ்வாமி அதுதானே ஆச்சர்யமா இருக்கு.

காகப்பட்டர் : எப்படிடா அவா பதற முடியும்? பகவானுடைய லீலா விநோதங்கள்ணு இவைகளைப் பத்தி புராணம் சொல்றது . புராணங்களை சிரவணம் செய்தாலே போற கதிக்கு நல்லதுண்ணா சாஸ்திரம் சொல்றது. அப்படி இருக்கும் போது எப்படிடா மகாஜனங்க இவைகளை ஏற்றுக் கொள்ளாமலிருப்பா? பார்த்தாயோ நமது புராணாதிகளுக்கு உள்ள சக்தியை. பஞ்சமா பாதகம் ததும்பும்டா கதைகளிலே ஆனா அவைகளைப் பஞ்சாமிர்தமா எண்ணிப் பருகுறாளோண்ணோ மகாஜனங்க? பார்க்கிறாயோண்ணோ !

ரங்கு பட்டர் : ஆமாம் ஸ்வாமி!

காகப்பட்டர் : அப்படி இருக்க, நம்ம புராணம், இதிகாச சாஸ்திரம் இவைகளெல்லாம் இப்படி இருக்கும் போது மராட்டிய மண்டலத்துக்கு மகாராஜனாக சிவாஜி நம்முடைய சம்மதம் கேட்காமல் இருப்பானோ? ஒவ்வொரு கோட்டையைப் பிடிக்கிற போதும் கொக்கரிச்சிருப்பா ஜெயவிஜீ பவ என்று. ஊர்களைப் பிடிக்கும் போது உற்சவம் நடத்தி இருப்பா. அந்தக் களிப்பினிலே களத்திலே பிணமான மகனைக் கூட தந்தை மறந்திருப்பான். ரத்தத்தை ஆறுபோல் ஓடவிட்டு, பிணங்களை மலை மலையாகப் போட்டு வெற்றி முரசு கொட்டியிருப்பார்; சங்கம் ஊதியிருப்பா, ஜெயம் ஜெயம்ணு. அந்தப் பெரிய சாம்ராஜ்யத்தை ரங்கு பட்டர், உன் குரு, படை எடுக்காமலே, இருந்த இடத்திலிருந்தே ஜெயித்து விடுகிறதைப் பாருடா. இது தானடா மண்டு ஆரிய யோகம்.

ரங்கு பட்டர் : இந்த அண்ட சராசரங்களிலே இதற்கு ஈடு கிடையாது குருதேவா.

காகப்பட்டர் : ஒரு பெரிய சாம்ராஜ்யாதிபதியை நான் விரும்பினால் பூபதியாக்க முடியும். எனக்கு இஷ்டமில்லேன்னா அவனையே பாபியாக்க முடியும். நீ இந்த ஆரிய வாழ்வை அற்பமென்று கருதி ராஜயோகம் கேட்டாயோடா ராஜயோகம்! எத்தனை ராஜாக்கள் வேண்டுமடா, உனக்குப் பணிவிடை செய்ய? புறப்படு ரங்கு, மராட்டியத்தின் மீது படையெடுப்போம். கட்டு மூட்டையை ! கொட்டு முரசை ; ஒஹோ இங்கே இல்லையா? அது சரி வா அங்கே போய் அவன் அரண்மனையிலேயே உள்ள முரசையே கொட்டுவோம். நம்ம ஜெயத்தைத் தெரிவிக்க நாம் சிரமப்பட்டுக் கொட்டுவானேன். அவர்களையே விட்டுக் கொட்டச் செய்வோம் புறப்படு.

♦ ♦ ♦

காட்சி : 23
இடம் : வீதி
உறுப்பினர்கள் : சிட்னீஸ், வீரர்கள்

சிட்னீஸ் : வீரர்களே! காசிவாசி காகப்பட்டருக்கு அமோகமான வரவேற்பு நடத்த வேண்டும், திருவிழா போல் இருக்க வேண்டும்; எங்கு பார்த்தாலும் மகர தோரணங்கள். கொடிகள் அசைந்தாடியபடி இருக்க வேண்டும் அவரை வரவேற்பு செய்வதைப் போல ஆலயங்களில் எல்லாம் பூசை! சத்திரம், சாவடிகளிலெல்லாம் சமாராதனை நடத்த வேண்டும்.

வீரன் – 1 : தேவேந்திர பட்டணம் போல சிங்காரித்து வைத்திருக்கிறோம் நகரத்தை .

சிட்னீஸ் : காகப்பட்டர்பட்டரின் வரவேற்பு வைபவத்திலே சங்கீத வித்வான்கள் இருக்க வேண்டும். கவிவாணர்கள் – இயற்றும் புதிய கவிதைகளை அவர்கள் இனிய இசையுடன் சேர்த்துப் பாட வேண்டும்.

வீரன் – 2 : குறைவில்லாதபடி ஏற்பாடு செய்துவிடுகிறோம்.

சிட்னீஸ் : முக்கியமான விஷயம். பிராமணர்களிடம் மிகவும் பயபக்தி விசுவாசத்துடன் மக்கள் நடந்துக் கொள்ள வேண்டும். அவர்கள் மனம் கோணும்படி யாரும் நடந்து கொள்ளக் கூடாது. வருகிறவன் காகப்பட்டர். ஆரியகுலத் தலைவர். ஆகவே ஆரியர்களிடம் தனியான அக்கறை அவருக்கு இருக்கும். அதை அறிந்து நடந்து கொள்ள வேண்டும்

வீரன் – 1 : ஆகட்டும் எங்களால் ஒரு தகராறும் வராது.

சிட்னீஸ் : காகபட்டரின் மனம் மகிழ வேண்டும். மகுடாபிஷேகம் நடைபெற்று மாவீரன் சிவாஜி மகாராஜனானால்தான் மராட்டியமும் மகிழும்; பரதகண்டமும் பூரிப்படையும். ஆகவே, இந்த வரவேற்றைப் பொருத்திருக்கிறது. மராட்டியத்தின் எதிர்கால வாழ்வு. இதையறிந்து காரியங்களைக் கவனியுங்கள். போய்வாருங்கள்.

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

தமிழையும் ஏழைகளையும் கல்வியிலிருந்து ஒழித்துக்கட்ட சதி | புமாஇமு கண்டனம் | காணொளி

0

மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உயர்த்தும் அண்ணா பல்கலைக் கழகம் !

ண்ணா பல்கலைக் கழகம் இந்த ஆண்டு முதல் கல்விக் கட்டணத்தை சுமார் 130% அதிகரித்திருக்கிறது. இது கிராமப்புறங்களிலிருந்தும், ஏழைக் குடும்பங்களிலிருந்தும் கல்வி பயில வரும் மாணவர்களை உயர்கல்வியை விட்டே விரட்டும் சதிச்செயலாகும். அண்ணா பல்கலையின் சதிச் செயலை அம்பலப்படுத்துகிறார், புமாஇமு-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன்.

பாருங்கள் ! பகிருங்கள் !

 

மோடி கூட்டணியுடன் தமிழை அழிக்கத் திட்டமிடும் தமிழக பள்ளிக் கல்வித்துறை !

மிழக பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் ஒரு பரிந்துரையை வெளியிட்டுள்ளது. உயர்நிலைப் பள்ளியில் மொழிப் பாடத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் எதாவது ஒரு மொழியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்று மாற்றம் கொண்டுவரப் பரிந்துரைத்துள்ளது. ஏற்கெனவே மக்கள் மத்தியில் ஆங்கில மாயையைப் பரப்பிவிட்டு தமிழ் வழிக் கல்வியை ஒழித்துக் கட்டியிருக்கிறது அரசு.

இந்நிலையில் மொழிப்பாடத்தில் தொற்றிக் கொண்டிருக்கும் தமிழையும் ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டும் இந்தச் சதியை அமல்படுத்தத் துடிக்கிறது காவிகளின் அடிமை எடுபிடி அதிமுக அரசு. இதனை எதிர்த்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டத்தைத் தொடங்குவோம் என்று அறைகூவல் விடுக்கிறார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் !

பாருங்கள் ! பகிருங்கள் !

ரஞ்சன் கோகோய் : நீதி செத்துவிட்டது ! நீதிபதிகள் வாழ்க !

1

”நீதி செத்து விட்டது. நீதிபதிகள் வாழ்க” என்கிறது வயர் இணையதளத்தில் வெளியான கட்டுரை ஒன்றின் தலைப்பு. இன்றைக்கு இந்திய நீதித்துறை வந்து சேர்ந்திருக்கும் இழிந்த நிலைக்கு அந்தத் தலைப்பு மிகவும் பொருத்தமானது. “பாமர மக்களின் இறுதி நம்பிக்கை” எனச் சொல்லப்பட்ட நீதித்துறை தன்னளவில் ஒரு கட்டப்பஞ்சாயத்துக் கும்பலாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை புரியாதவர்களுக்கும் புரிய வைத்திருக்கின்றன கடந்த மூன்று வார நிகழ்வுகள்.

உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிந்து தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள பெண் ஊழியர் ஒருவர் கடந்த ஏப்ரல் 19-ம் தேதியன்று பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை எழுப்புகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் 10 மற்றும் 11-ம் தேதிகளில் தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறலை வாக்குமூலமாக (affidavit) தயாரித்து உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளுக்கும், ஊடகங்களுக்கும் அனுப்புகிறார். இவ்வாறான பாலியல் அத்துமீறல்கள் குறித்த புகார்கள் எழும் போதெல்லாம் கூடவே தோன்றும் ஒரு கேள்வி, ”ஏன் இத்தனை தாமதமாக குற்றச்சாட்டு எழுப்பப்படுகின்றது?” என்பதே. அந்தக் கேள்விக்கான விடையை அவரது வாக்குமூலத்திலிருந்தே நாம் பார்க்கலாம். அந்த வாக்குமூலம் ஒரு உண்மைக் கதையைச் சொல்கிறது. அது உண்மையானது மட்டுமல்ல துயரமானது.

இது தனக்கு இழைக்கப்பட்ட அநீக்கு நீதி வேண்டியதால் அல்ல – மாறாக அந்த அநீதிக்கு உடன்பட்டுப் போகவில்லை என்பதால் ஒரு குடும்பமே வல்லூறுகளால் சிதைக்கப்பட்ட கதை. வேலை இழப்புகள், பொருளாதார இழப்பு, உடல் ரீதியிலும், உளவியல் ரீதியிலும் சித்திரவதைகள், பொய் வழக்குகள் என நீளும் அதிகாரத்தின் இரத்த வெறி பிடித்த கரங்கள் ஒரு குடும்பத்தை நிர்கதியாக்கிய கதை. அனைத்து முனைகளிலும் நம்பிக்கை இழந்த அந்தப் பெண் இப்போது “நான் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை.. தேவையெல்லாம் நீதி ஒன்றுதான்” என ஓடுவதை நிறுத்தி விட்டு தன்னைத் துரத்திக் கொண்டிருக்கும் வேட்டை நாய்களை எதிர்நோக்கித் திரும்பியிருக்கிறார்.

♦ ♦ ♦

தில்லியைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு இப்போது 35 வயது. ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட தலித். திருமணமான புதிதில் தனியார் துறையில் வேலை பார்த்து வந்துள்ளார். கணவருக்கு காவல்துறையில் வேலை – கான்ஸ்டபிள். ஒரு பெண் குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆனபோது வேலையிலும் தொடர்ந்து கொண்டு குழந்தையையும் பராமரிப்பது சிரமமாக இருக்கவே வேலையை இராஜினாமா செய்கிறார். குழந்தையை கவனித்துக் கொண்டே அரசு வேலைக்கு முயற்சித்து வந்தவருக்கு, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பணி வாய்ப்பு இருப்பது தொடர்பான பத்திரிகை விளம்பரம் கணவரின் மூலம் தெரிய வருகிறது.

அந்தப் பணிக்கு விண்ணப்பித்து அதற்கான தேர்வில் வெல்லும் அந்தப் பெண், 2014-ம் ஆண்டு மே மாதம் பணியில் சேர்கிறார். உச்சநீதிமன்றத்தில் பணி என்றதும், சட்டம் குறித்த படிப்பு அவசியம் எனக் கருதி 2015-ம் ஆண்டு சட்டக் கல்லூரியிலும் சேர்கிறார். உச்சநீதிமன்ற நூலகத்தில் தட்டச்சு செய்வது மற்றும் ஆவணப் பராமரிப்பு, நீதிபதிகளுக்குத் தேவையான நூல்களை எடுத்துக் கொடுப்பது போன்றவை இவருக்கான பணி. இதையடுத்து நீதிபதிகளின் அவைகளில் வாய்ப்பும் இவருக்குக் கிடைக்கிறது. 2014-15 மற்றும் 2015-16 ஆகிய வருடங்களில் இவரது செயல்பாடு சிறப்பாக இருந்ததாக, அந்தந்த வருடங்களின் பணி மதிப்பீட்டு ஆவணங்களில் (appraisal) குறிப்பிடப்பட்டுள்ளது.

2016 அக்டோபர் மாதம், நீதிபதி ரஞ்சன் கோகோயின் அவையில் பணியமர்த்தப்படுகிறார். அதன்பின் மெல்ல மெல்ல இவர்மேல் நீதிபதியின் அக்கறை திரும்புகின்றது. குறிப்பான புத்தகங்களைத் தேடி எடுத்துக் கொடுப்பது, தீர்ப்பு விவரங்களை தேடிக் கொடுப்பது என நேரடியாக நீதிபதியே சில வேலைகளை அளிக்கிறார். ஒரு கட்டத்தில் இவரோடு பேசுவதற்காக செல்பேசி ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். வெகு சிலருடன் மட்டுமே தொடர்பு கொள்ளும் செல்பேசி எண்ணில் இருந்து வாட்சப் மூலம் பேசத் துவங்கியிருக்கிறார் கோகோய்.

அந்த செல்பேசியை எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கும் ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் நீதிபதி. குடும்பத்தினர், நண்பர்களின் முன் பேசக் கூடாது, வாட்சப் மூலம் மட்டுமே பேச வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வாட்சப்பில் பேசுவது மறையாக்கம் செய்யப்பட்டிருக்கும் என்பதோடு அதை பதிவு செய்வதும் எளிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது. வேலை நேரத்தில் பேசுவதைத் தாண்டி இரவு நேரங்களிலும் ஏதாவது ஒரு முகாந்திரத்தை ஏற்படுத்திக் கொண்டு பேசி வந்துள்ளார் கோகோய்.

2018 ஆகஸ்ட் மாதம் முதல் அந்தப் பெண்ணின் பணியிடத்தை தனது இருப்பிட அலுவலகத்திற்கே மாற்றியுள்ளார் கோகோய். அவர் நீதிமன்றத்திற்கு கிளம்புவதற்கு முன்பே பணிக்கு வரவேண்டும், நீதிமன்றத்தில் இருந்து வீடு திரும்பிய பின்னரே இவர் கிளம்பிச் செல்ல முடியும். ஒரு கட்டத்தில் ஒவ்வொரு நாள் காலையிலும் “காலை வணக்கம்” என்றும் இரவு வீடு திரும்பியதை தெரிவிக்கவும் வாட்சப் மூலம் மெசேஜ் அனுப்ப வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மதிப்பு மிக்க ஒரு பதவியில் இருக்கிறவர், 64 வயதனவர் என்பதால் நீதிபதியின் இது மாதிரியான கோரிக்கைகளுக்கு உள்நோக்கம் எதுவும் இருப்பதாக அந்தப் பெண் சந்தேகிக்கவில்லை. மாறாக, வேலையில் ஜூனியரான தனக்கு ஒரு தலைமை நீதிபதியின் கீழ் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்திருப்பதையும், அதன் மூலம் சட்ட நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள முடிவதையும் எண்ணி அவர் பெருமிதம் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், எதிர்கால திட்டங்கள் குறித்து நீதிபதி கேட்டறிந்துள்ளார். அதன்படி அவரது மாற்றுத்திறனாளி சகோதரர் ஒருவர் வேலையின்றி இருப்பதை அறிந்து கொண்ட தலைமை நீதிபதி, தனது பதவிக்கென இருக்கும் ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி அவருக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார். அக்டோபர் 3-ம் (2018) தேதி தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட ரஞ்சன் கோகோய், சரியாக ஒரே வாரத்தில் அந்தப் பெண்ணின் சகோதரருக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார்.

அக்டோபர் 10-ம் தேதி பணி நியமன உத்தரவுடன் தனது வீட்டுக்கு வந்த நீதிபதி அந்தப் பெண்ணை தனது அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளார். மருத்துவ பரிசோதனையின் படி அவரது சகோதரருக்கு போதிய உடல் தகுதி இல்லை என்றாலும் தனது செல்வாக்கின் மூலம் வேலை வாங்கிக் கொடுத்திருப்பதாக சொன்ன நிதிபதி, இதற்காக எனக்கு என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்டுள்ளார். அதற்கு பதிலாக நன்றியுடன் இருப்பேன் என அந்தப் பெண் தெரிவித்திருக்கிறார்.

அப்போது தனது இருக்கையில் இருந்து எழுந்து அந்தப் பெண்ணை நெருங்கிய தலைமை நீதிபதி அவரது முதுகை வருடிக் கொடுத்து, கன்னத்தைக் கிள்ளியிருக்கிறார். நீதிபதியின் செயலால் உறைந்து போயிருக்கிறார் அந்தப் பெண். அதை கவனித்த நீதிபதி, இப்படித்தான் என் மகளிடமும் நடந்து கொள்வேன் என சிரித்தபடி கூறியுள்ளார். மேலும், தனக்கு என்ன கைமாறு செய்யப் போகிறாய் என்பதை மறுநாள் எழுதி எடுத்து வருமாறு கூறிச் சென்றுள்ளார்.

இதற்கு மறுநாள், அக்டோபர் 11-ம் தேதி காலை, அந்தப் பெண்ணை தனது அலுவலக அறைக்கு அழைத்த நீதிபதி மீண்டும் அதே பேச்சை எடுத்துள்ளார் – “எனக்கு என்ன கைமாறு செய்யப் போகிறாய்?”. மீண்டும் அந்தப் பெண் உங்களுக்கு நன்றியுடையவர்களாக எங்கள் குடும்பம் இருக்கும் எனக் கூறியிருக்கிறார். நீதிபதி சொன்னது போல் ஒரு துண்டுச் சீட்டில் எழுதி எடுத்துச் சென்றுள்ளார். அதை ஏறெடுத்துப் பார்க்காத தலைமை நீதிபதி, அந்தப் பெண்ணின் அருகில் சென்று கட்டிப்பிடித்துக் கொண்டே “எனக்கு இதுதான் தேவை” என்றுள்ளார். அதிர்ச்சியில் என்ன செய்வதெனத் தெரியாமல் ஒரு கணம் உறைந்து விட்ட அந்தப் பெண் உடனே சுதாரித்துக் கொண்டு நீதிபதியைப் பிடித்து தள்ளி விட்டுள்ளார். அதில் ரஞ்சன் கோகோயின் தலை புத்தக அலமாரியில் இடித்துக் கொண்டிருக்கிறது. உடனே அங்கிருந்து வெளியேறி தனது அலுவலக அறைக்குச் சென்றுள்ளார் அந்த பெண்.

நாட்டிலேயே உச்சபட்ச அதிகாரம் கொண்ட ஒருவர் – இந்த நாட்டின் தலைமை நீதிபதியே தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்ட அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியாமல் உடைந்து போயிருக்கிறார் அந்தப் பெண். சிறிது நேரம் கழித்து தனது அலுவல் அறைக்கு வருமாறு நீதிபதி அழைக்கவே அங்கே சென்றுள்ளார். அங்கே நடந்ததை அப்படியே மறந்து விடும்படியும், வெளியே சொன்னால் உனது குடும்பம் நிம்மதியாக இருக்காது என்றும் நீதிபதி மிரட்டியுள்ளார். மேலும், அவரது கையில் ஒரு வெள்ளைத் தாளைக் கொடுத்து தான் சொல்லும்படி எழுதுமாறு கேட்டுள்ளார். என்ன செய்வதெனத் தெரியாத குழப்பத்தில் அந்தப் பெண் நீதிபதி சொல்வதை எழுதியுள்ளார். அந்த சம்பவத்தையே தலைகீழாக திருப்பி, அந்தப் பெண் தான் நீதிபதியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதைப் போல் சித்தரிக்கும் விதமாக கோகோய் எழுதி வாங்கியுள்ளார்.

அன்றைக்கு இரவு வீடு திரும்பியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது

♦ ♦ ♦

திலக் நகர் காவல் நிலைய பொறுப்பதிகாரி அந்தப் பெண்ணின் அக்கம் பக்கம் வீட்டாரிடமும், அவர் இருந்த குடியிருப்பின் நலச் சங்கத் தலைவரிடமும் தொலைபேசியில் அழைத்து அவருக்கும் அவரது கணவருக்கும் ஏதேனும் பிரச்சினைகள் இருந்ததா என விசாரித்துள்ளார். பணி முடிந்து வீடு திரும்பிய அப்பெண்ணிடம் இவ்வாறு விசாரிக்கப்பட்டதை அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இனிமேலும் தலைமை நீதிபதியின் வீட்டில் பணி புரிய முடியாது என முடிவெடுத்த அப்பெண் உடனே ரஞ்சன் கோகோயை அழைத்து தனது முடிவைத் தெரிவிக்க முயன்றுள்ளார். தொலைபேசியை நீதிபதி எடுக்கவில்லை; ஆனால் சிறிது நேரம் கழித்து நீதிபதியின் உதவியாளர் அழைத்து இரவு நேரங்களில் நீதிபதியை அழைக்கக் கூடாது என மிரட்டியுள்ளார்.

மறுநாளில் இருந்து நீதிபதியின் நடத்தையில் பெரும் மாற்றங்கள் தெரியத் துவங்கியுள்ளது. எப்போதும் தனியே அழைத்துப் பேசும் நீதிபதி, அன்றிலிருந்து யாராவது ஒருவரை உடன் வைத்துக் கொண்டே பேசியிருக்கிறார். அறையின் கதவைத் திறந்தே வைத்திருக்கிறார். மற்றபடி வழக்கம் போல் “காலை வணக்கம்” தெரிவித்து மெசேஜ் அனுப்ப வேண்டும் எனவும், மற்ற வேலைகளும் எப்போதும் போல் நடக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். தொடர்ந்த நாட்கள் மிக இறுக்கமாகச் சென்றுள்ளன. அக்டோபர் 22 (2018) தசரா விடுமுறைகளுக்குப் பின் நீதிமன்றம் செயல்படத் துவங்கிய முதல் நாளிலேயே அந்தப் பெண் பணியிட மாறுதல் செய்யப்படுகிறார்.

சில நாட்கள் கழித்து அந்த பெண்ணின் புதிய வேலை இடத்திற்கு வேறு இரண்டு நீதிபதிகளோடு சென்ற ரஞ்சன் கோகோய், அவரது வேலையை அனைவரின் முன்பும் பாராட்டி பேசியுள்ளார். பிறகு தனியே அழைத்து மீண்டும் தனது நீதி அவையில் பணிபுரிய முடியுமா எனக் கேட்டுள்ளார். அதை மறுத்து விட்ட அப்பெண், தான் தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையே திருப்தியளிப்பதாகச் சொல்லியுள்ளார்.

அதைத் தொடர்ந்து அவர் பிரச்சினைகளின் நீண்ட வரிசை ஒன்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. குறுகிய நாட்களுக்குள் ஒவ்வொரு துறையாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 16-ம் தேதியன்று அவரது இருக்கையை எடுத்து பொருட்கள் நிர்வகிக்கும் அறைக்குள் போட்டிருக்கிறார்கள். நவம்பர் 17-ம் தேதி (சனிக்கிழமை) நீதிமன்றம் அரை நாள் செயல்படும். அன்றைக்கு அவரின் மகளுடைய பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்காக அரை நாள் விடுப்பு எடுத்துள்ளார்.

அன்றைக்கு மாலை அவரை உடனடியாக நீதிமன்றம் வருமாறு அழைத்துள்ளனர். ஆனால், குழந்தையை அழைத்துச் செல்ல கணவர் வரவில்லை என்பதைச் சொல்லி வர முடியாத நிலையை விளக்கியிருக்கிறார். நவம்பர் 19-ம் தேதி உச்சநீதிமன்றப் பதிவாளர் நடத்தை விதிகளின் கீழ் விளக்க கடிதம் (மெமோ) ஒன்றை அனுப்பியுள்ளார். அதாவது, முறையற்ற விடுமுறை எடுப்பது, பணியிட மாற்றத்துக்கு உட்பட மறுப்பது, உயரதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கீழ்படிய மறுப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என அதில் கேட்டுள்ளார் உச்சநீதிமன்ற பதிவாளர். இதற்கு 22-ம் தேதி பதிலளித்த அப்பெண், தான் உயரதிகாரிகளின் உத்தரவுகள் எதையும் மீறவில்லை எனவும், பணியிட இருக்கை மாற்றத்திற்காக யாரையும் அணுகவில்லை எனவும், 17-ம் தேதி குழந்தையின் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்காக விடுப்பு கேட்டிருந்ததையும் தனது பதிலில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், அவரது பதில் திருப்தியளிக்கவில்லை என மற்றும் ஒரு மெமோ அனுப்பியுள்ளார் பதிவாளர். மறுநாள் அவரிடம் பணி இடைநீக்க உத்தரவை அளித்துள்ளனர். டிசம்பர் பத்தாம் தேதி துறைவாரியான நடவடிக்கை மற்றும் விசாரணை குறித்த கடிதம் ஒன்று வந்துள்ளது. அதற்கு பதிலளித்த அப்பெண், தன் சார்பில் வாதாட ராஜ்யசபை ஊழியர் லக்‌ஷ்மன் சிங் நெகியை அனுமதிக்க வேண்டியுள்ளார் – இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கக் கூடியதே என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அவ்வாறான அனுமதி அவருக்கு கிட்டவில்லை.

இதற்கிடையே டிசம்பர் 17-ம் தேதியன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு வந்துள்ளது. குறிப்பிட்ட நாளில் விசாரணைக்காக உச்சநீதிமன்ற வளாகம் சென்ற அந்தப் பெண்ணுக்கு திடீரென அச்சத் தாக்குதல் (panic attack) ஏற்பட்டுள்ளது. மயங்கி விழுந்த அவரை அங்கிருந்த ஊழியர்கள் ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், மயக்கடைவதற்கு முன்பே தான் வளாகத்திற்குள் வந்து விட்ட தகவலை அலுவலக உதவியாளரின் மூலம் விசாரணை அதிகாரிக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

படிக்க:
“ராடாரேந்திர மோடி !” – மோடியை வறுத்தெடுத்த வலைத்தளவாசிகள் !
ஒரு விரல் புரட்சியால் ஈரானிடம் எண்ணெய் வாங்க முடியுமா ?

அதற்கு மறுநாள் விசாரணை அதிகாரி கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அதில் விசாரணைக்கு அவர் வரவில்லை எனவும், குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது (ஏப்ரல் 19-ம் தேதி) அந்தப் பெண் அனுப்பிய வாக்குமூலப் பிரமாணத்தில் அவர் மருத்துவமனைக்கு மயங்கிய நிலையில் கொண்டு செல்லப்பட்டது குறித்தும், தனது நிலை அங்கிருந்த ஊழியர்களுக்கு தெரிந்தது குறித்தும், மருத்துவமனையின் பரிசோதனை அறிக்கை போன்றவற்றையும் இணைத்துள்ளார். இறுதியாக டிசம்பர் 21-ம் தேதி அவரது வேலை பறிக்கப்படுகிறது.

திட்டமிடப்பட்ட சதி நோக்குடன் அந்தப் பெண்ணின் வேலை பறிக்கப்பட்டதோடு வேட்டை நாய்களின் வெறி அடங்கவில்லை. அவரது குடும்பத்தினரும் அநியாயமான முறையில் பழிவாங்கப்பட்டுள்ளனர்.

♦ ♦ ♦

டிசம்பர் 28ம் தேதி தில்லி காவல் துறையில் பணிபுரிந்து வந்த அவரது கணவர் மற்றும் சகோதரர் எவ்வித காரணங்களும் சொல்லப்படாமல் பணி இடை நீக்கம் செய்யப்படுகின்றனர். தனிப்பட்ட முறையில் அவர்கள் என்ன காரணம் என்று கேட்ட போது, “மேலிடத்தில் இருந்து வரும் அழுத்தம்” என்று சொல்லப்பட்டுள்ளது. அன்றைக்கே உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொள்ளும் அப்பெண்ணின் கணவர், “தங்கள் வாழ்க்கையே சீரழிந்து போய் விட்டது”, எனக் கதறி ரஞ்சன் கோகோயைச் சந்திக்க உதவுமாறு கேட்டுள்ளார். தனக்கு ஏதும் தெரியாது என்று தொலைபேசியைத் தொடர்பைத் துண்டித்துக் கொண்ட அந்த அதிகாரி, அதன் பின் இவரது எண்ணை பிளாக் செய்துள்ளார்.

டிசம்பர் 28-ம் தேதி பணி இடைநீக்கம் செய்யப்பட்ட அவருக்கு அதற்கான விளக்கம் ஜனவரி 2-ம் தேதிதான் அதிகார்ப்பூர்வமாக மாவட்ட கண்காணிப்பாளரிடம் இருந்து கிடைக்கிறது. அதாவது, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகத்திற்கு தேவையற்ற முறையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதே பணி இடை நீக்கத்திற்கு காரணம் என்றது அந்த விளக்க கடிதம். மீண்டும் ஜனவரி 9-ம் தேதி மற்றுமொரு விளக்க கடிதம் அளிக்கப்படுகிறது; அதில், அப்பெண்ணின் கணவருக்கும் சகோதரருக்கும் உள்ளூர் சூதாட்டக் கும்பலோடு தொடர்பு இருந்ததே பணி இடை நீக்கத்திற்கு காரணம் என்கிறது. மேலும் 2012-ம் ஆண்டு இவர்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கும் ஒரு காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், அந்த வழக்கு அப்போதே தீர்க்கப்பட்டு விட்டது என்கிறார் அப்பெண்.

ஜனவரி 10-ம் தேதி திலக் மார்க் காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் இருந்து அப்பெண்ணின் கணவருக்கு அழைப்பு வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டால் எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடும் என்று அந்த அதிகாரி ஆலோசனை கூறுகிறார். அதற்குத் தயார் என முன்வரும் கணவர், அந்த உரையாடலை பதிவு செய்து வைத்துக் கொள்கிறார். ஜனவரி 11-ம் தேதி மீண்டும் திலக் மார்க் காவல் நிலையத்திற்கு கணவருடன் செல்கிறார் அப்பெண். பொறுப்பதிகாரி சோலங்கி தனது தொலைபேசியின் மூலம் உச்சநீதிமன்றப் பதிவாளர் தீபக் ஜெயினிடம் எப்படி எப்போது தலைமை நீதிபதி வீட்டுக்குச் செல்வது எனக் கேட்கிறார். பின்னர் தனது சொந்தக் காரில் இவர்களை நீதிபதியின் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.

நீதிபதியின் வீட்டிற்கு இவர்கள் சென்றபோது அங்கே ரஞ்சன் கோகோய் இல்லை. மாறாக உச்சநீதிமன்ற பதிவாளர் தீபக் ஜெயினும் கோகோயின் மனைவியும் இருந்துள்ளனர். இவர்களைப் பார்த்த கோகோயின் மனைவி, “மூக்கு தரையில் பட குப்புற விழுந்து மன்னிப்புக் கேள்” எனக் கேட்டிருக்கிறார். அதன்படி மன்னிப்புக் கேட்டுள்ளனர் இருவரும். மீண்டும் அவர்களைக் காவல் நிலையம் அழைத்து வந்த சோலங்கி, இனிமேல் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்றும் மீண்டும் பழைய வாழ்க்கை கிடைத்து விடும் என்றெல்லாம் உறுதி கூறுகிறார். மேலும், இந்தப் பிரச்சினை குறித்து யாரிடமும் பேசக் கூடாது என்றெல்லாம் அறிவுறுத்துகிறார். இந்த உரையாடலையும் தம்பதியினர் பதிவு செய்து வைத்துள்ளனர்.

ஆனால் சொன்னபடி எந்த வகையிலும் பிரச்சினைகள் ஓய்ந்தபாடில்லை. ஜனவரி 14-ம் தேதி அவருடைய மாற்றுத் திறனாளி சகோதரரின் வேலை பறிக்கப்படுகிறது. தொடர்ந்த நாட்களில் அச்சத் தாக்குதலும், உளவியல் அழுத்தங்களும் அதிகரிக்கின்றன. ஒருகட்டத்தில் அவருடைய ஒரு காது கேட்கும் திறனை இழக்கிறது. கோகோயின் மனைவியை அந்தப் பெண் சந்தித்த பின், சரியாக ஐம்பது நாட்கள் கழித்து (மார்ச் 3-ம் தேதி) தில்லி திலக் மார்க் காவல் நிலையத்தில் அந்தப் பெண்ணின் மீது முதல் தகவல் அறிக்கை ஒன்று பதிவு செய்யப்படுகிறது. அதாவது ஹரியாணாவைச் சேர்ந்த நவீன் குமார் என்பவரிடம் உச்சநீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்று ஏமாற்றியதாகப் புகார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், லஞ்சம் கொடுப்பதே குற்றம் என்ற நிலையில் புகாரளித்தவரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, ராஜஸ்தானில் உள்ள தனது பூர்வீக கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந்த அந்தப் பெண்ணை கைது செய்ய ஒரு விசேட போலீசு படை அங்கே விரைகிறது. அந்தப் பெண், அவரது கணவர், வழக்குடன் எந்த தொடர்பும் இல்லாத அவரது சகோதரி என அனைவரையும் விலங்கு பூட்டிக் கைது செய்கிறது போலீசு. இதில் அந்தப் பெண்ணின் காலில் விலங்கைப் பூட்டி அதை போலீசு ஜீப்பின் இருக்கையோடு பிணைத்த நிலையில் அங்கிருந்து தில்லிக்கு அழைத்து வந்துள்ளனர். ஏறக்குறைய ஒரு பயங்கரவாதக் கும்பலைக் கையாள்வதைப் போல் அந்தக் குடும்பத்தை அன்றைக்கு அலைக்கழித்துள்ளது போலீசு.

அதன்பின் திகாரில் அடைக்கப்பட்ட அந்தப் பெண்ணின் மேல் உடல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் ஏராளமான சித்திரவதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதற்கிடையே தற்போது கேரவன், தி வயர், லீஃப்லெட் போன்ற பத்திரிகையைச் சேர்ந்த நிருபர்கள் புகாரளித்த நவீன் குமாரைச் சந்தித்து பேசியுள்ளனர். வழக்கு குறித்தும், தனது புகார் குறித்தும் முன்னுக்குப் பின் முரணாக பேசும் நவீன் குமார், இந்த வழக்கை நடத்த வேண்டும் என்பதிலோ, ஏமாற்றப்பட்ட தனக்கு “நீதி” கிடைக்க வேண்டும் என்பதிலோ எந்த முனைப்பும் காட்டவில்லை என்பதை பத்திரிகையாளர்கள் பதிவு செய்துள்ளனர். மிகத் துலக்கமாகத் தெரியும் உண்மை என்னவென்றால், அந்தப் பெண்ணை வேட்டையாடும் ஒரே நோக்கத்திற்காகவே இந்த வழக்கை ஜோடித்துள்ளனர்.

சிறையில் இருந்து பிணையில் வெளி வந்திருக்கும் அந்தப் பெண் இப்போது ஒரு முடிவுக்கு வந்து விட்டார். இழப்பதற்கு எதுவுமே இல்லாத வகையில் அவரிடமிருந்த அனைத்தும் பறிக்கப்பட்டு விட்டன. வேலைகள் பறிக்கப்பட்டு பொருளாதார ரீதியில் நொறுக்கப்பட்டு விட்ட அந்தக் குடும்பத்தின் நிம்மதியும் சீர்குலைக்கப்பட்டு விட்டது. வயர், கேரவன் உள்ளிட்ட பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ள அந்தப் பெண்ணிடம் ”தலித் பின்னணி கொண்ட நீங்கள் சமூகத்தில் ஒரு இடத்தைப் பிடிக்க நிறைய போராடியிருப்பீர்கள், அதைப் பற்றி சொல்லுங்கள்” என கேட்டனர் பத்திரிகையாளர்கள். அதற்கு அந்தப் பெண் அளித்த பதில் –

“சாதியைத் தெரிந்து கொண்ட பின் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். அதன் பின் உங்களுக்கு எந்த முக்கியத்துவமும் கிடைக்காது. உங்கள் வேலையில் அசாதாரணமான சாதனைகள் புரியாவிட்டால் வாழ்க்கையில் எதுவுமே கிடைக்காது. நான் எனது சாதி அடையாளத்தை பின்னுக்குப் போட்டு விட்டு மற்ற “சாதாரண மனிதர்களைப்” போல் நடக்க வேண்டும் என்றே முயற்சித்தேன்.

எனக்கு தனியார் பள்ளியில் கல்வி கிடைக்கவில்லை. எங்களைப் போன்றவர்கள் எங்கே போய் படிக்க முடியுமோ அங்கே படித்தேன் – அரசுப் பள்ளியில்தான் படித்தேன். சில நேரம் இதையெல்லாம் நான் மறைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. நீங்கள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தால் மற்றவர்கள் உங்களை விட்டு விலகிச் சென்று விடுவார்கள்.”

பேட்டியின் மற்றோர் இடத்தில்….

”நான் ஒரு விளையாட்டு வீராங்கனை. கூடைப் பந்தாட்டம் மற்றும் நீச்சல் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். நான் எதைச் செய்தாலும், அதில் 100 சதவீத திறமையை வெளிப்படுத்துவேன். கோகோயின் அலுவலகத்திலும் அப்படித்தான். எனது 100 சதவீத திறமையை வேலையில் வெளிப்படுத்தினேன்”

சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து போராடி தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருந்தார் அந்தப் பெண். இன்றைக்கு அவையத்தனையும் அதிகாரப் பசி கொண்ட ஓநாய்கள் குதறிப் போட்டு விட்டன. அவரே சொல்வது போல் இனி அவர் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை; ஆனால் அடைவதற்கு நீதி உள்ளது.

ஆனால் அவருக்கு நீதி கிடைக்குமா?

♦ ♦ ♦

ந்தப் பெண்ணின் வாக்குமூலம் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அனைவருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அனுப்பப்பட்டு அவை பொதுவெளியிலும் வெளியாகின. உடனடியாக தன்னையும் உள்ளடக்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒன்றை ஏற்படுத்திய ரஞ்சன் கோகோய், தன் மீதான புகாரை தானே விசாரித்தார். இது கிராமத்து நாட்டாமைகளின் பஞ்சாயத்துகளில் கூட காணக் கிடைக்காத ஒரு காட்சி. விசாரணையின் முடிவில் தன்னுடைய சொற்ப வங்கிக் கையிருப்பை தனது யோக்கியதாம்சத்துக்கு சாட்சியாக சுட்டிக்காட்டினார் ரஞ்சன் கோகோய். மேலும், பத்திரிகைகள் இந்தக் குற்றச்சாட்டுகளை விவாதிக்கக் கூடாதென்றும், புகாரை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட மற்றுமொரு அமர்வு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முதலாவதாக அமைக்கப்பட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வால், மற்றுமொரு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வும், இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதியை வீழ்த்தும் சதி இருப்பதாக போடப்பட்ட பொதுநல வழக்கை விசாரிக்க மூன்றாவதாக ஒரு அமர்வும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் இரண்டாவதாக அமைக்கப்பட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதிபதிகள் பாப்டே, ரமணா மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோரை கொண்டு அமைக்கப்பட்டது. இதில் நீதிபதி ரமணா ரஞ்சன் கோகோய்க்கு நெருக்கமானவர் என்பதையும், பாலியல் புகாரை விசாரிக்கும் கமிட்டியில் பெரும்பான்மையாக ஆண்களே இருப்பதையும் சுட்டிக்காட்டி அந்தப் பெண் ஆட்சேபித்தார். அதையடுத்து ரமணா அந்த அமர்விலிருந்து விலகிக் கொள்ள, அந்த இடத்திற்கு தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் “மனசாட்சி” புகழ் இந்திரா பானர்ஜி நியமிக்கப்படுகிறார்.

இந்த அமர்வு இரண்டுமுறை அந்தப் பெண்ணை அழைத்து விசாரித்துள்ளது. முதல் நாளன்று நடந்த விவகாரங்களை அப்படியே சொல்லுமாறு அவரிடம் கேட்டுவிட்டு இந்த வழக்கின் சாதகபாதகங்கள், என்னென்ன சாத்தியங்கள் உள்ளன என்பதைப் பற்றியெல்லாம் “எடுத்து” எடுத்து சொல்லியிருக்கிறார்கள். இரண்டாம் நாள் அந்தப் பெண்ணை மிரட்டும் விதமாக கறாராக பேசியிருக்கின்றனர். இந்த விசாரணையின் போது அந்தப் பெண் தன்னுடன் ஒரு வழக்குரைஞரை வைத்துக் கொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விவாதிக்கப்படும் விசயங்களில் நிறைய சட்ட மொழியில் இருப்பதால் ஒரு வழக்குரைஞர் தேவை என்பதை முதல் நாளில் இருந்தே அந்தப் பெண் வலியுறுத்தி உள்ளார். மேலும், கடந்த சில மாதங்களாக நடந்த கொடூரங்களின் விளைவாக ஏற்பட்ட மன அழுத்தத்தில் தனது ஒரு காது கேட்கும் திறனை முற்றிலுமாக இழந்து விட்டதால் தன்னுடன் ஒரு வழக்கறிஞர் இருந்தால்தான் நீதிபதிகள் கேட்கும் கேள்விகளைப் புரிந்து கொண்டு பதில் அளிக்க முடியும் என்றும் முன்வைத்துள்ளார்.

அதே போல் விசாரணையின் விவரங்கள், விசாரணையின் போது தனது தரப்பில் சொல்லப்பட்டவைகளை பதிவு செய்து அளிக்க வேண்டும் என்றும், ரஞ்சன் கோகோய் தன்னிடம் தொலைபேசியில் பேசிய விவரங்களை தொலைத்தொடர்புத் துறையிடம் இருந்து பெற்று அதையும் சாட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அந்தப் பெண் கோரியுள்ளார். இவையனைத்தும் நியாயமான கோரிக்கைகள். எனினும் இவையனைத்தையும் மேன்மை தங்கிய நீதிபதிகள் நிராகரித்துள்ளனர். வேறு வழியின்றி மூன்றாம் விசாரணையின் போது தனக்கு இந்த அமர்வின் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி விசாரணையில் இருந்து விலகியுள்ளார் அந்தப் பெண்.

அதன் பின் ரஞ்சன் கோகோயையும் விசாரிப்பதாக ஒரு நாடகத்தை நடத்தி விட்டு “அவர் மேல் எந்தக் குற்றமும் இல்லை” என்பதை அந்த அமர்வு ஒருதலைபட்சமான முறையில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அந்தப் பெண் தன்னந்தனியாக ஒரு தரப்பாக நிற்க அவருக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற பதிவாளர், காவல் துறை என அரசின் உறுப்புகள் அனைத்தும் ஒரே தரப்பாக கரம் கோர்த்து நின்றன.

பாதிக்கப்பட்ட, காது கேளாத ஒரு பெண்ணுக்கு வழக்கறிஞரை அமர்த்தும் உரிமையைக் கூட மறுத்து விட்டு ஒரு தலைப்பட்சமாக நடந்த விசாரணையையும், இந்த தீர்ப்பையும் கண்டித்து ஜனநாயகத்தில் இன்னும் நம்பிக்கை கொண்டவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர் – அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தது போலீசு.

அக்டோபர் 10 மற்றும் 11-ம் தேதிகளில் ரஞ்சன் கோகோயின் வீட்டில் உள்ள அலுவலக அறையின் பூட்டிய கதவுகளுக்குப் பின்னே நடந்தவைகளுக்கு சாட்சிகள் இல்லை. ஆனால், அந்தக் கதவு திறந்த பின் அதற்கு வெளியே நடந்த அனைத்திற்கும் சந்தர்ப்ப சாட்சியங்கள் உள்ளன. அந்தப் பெண் ஓட ஓட விரட்டப்பட்டுள்ளார்; அவரது குடும்பமே குறிவைத்து தாக்கப்பட்டிருக்கிறது. அவரது குற்றச்சாட்டை குற்றவாளிகளே முன்னின்று விசாரித்து தங்களுக்கே சாதகமான தீர்ப்பை எழுதிக் கொண்டனர். இவையனைத்தும் பட்டப்பகல் வெளிச்சத்தில் நடந்துள்ளது.

படிக்க:
இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி : செல்லூர் ராஜுவா ? மோடியா ? கருத்துக் கணிப்பு
மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்துவோம் ! தூத்துக்குடி மக்கள் அறைகூவல் !

இப்படி வேட்டையாடப்படுவதற்கு அந்தப் பெண் செய்த குற்றம் என்ன? ஜனநாயகத்தின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட “தூணின்” முன் அடிபணிந்து போக மறுத்ததைத் தவிர அந்தப் பெண் யாதொரு குற்றத்தையும் செய்திருக்கவில்லை. எனினும் அவர் ஓட ஓட விரட்டப்பட்டுள்ளார். அவர் கடும் உழைப்பின் மூலம் உருவாக்கிய அனைத்தும் அழித்து நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. யார் தரப்பில் நியாயம் உள்ளது, யார் தரப்பில் உண்மை உள்ளது என்பதற்கு இந்த சந்தர்ப்ப சாட்சியங்களே போதுமானவை.

இயேசுவின் புகழ்பெற்ற பிரசங்கம் ஒன்றில் இவ்வாறாகச் சொல்வார் – ”உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்? அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்றார்.

அனைத்தையும் இழந்து விட்டு நீதியும் மறுக்கப்பட்டு அழுது கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் கண்ணீர்  இந்திய நீதித்துறை சாரமற்றுப் போய் விட்டதை நமக்கு உணர்த்துகின்றது.

♦ ♦ ♦

னநாயகத்துக்கு ஆபத்து என்று பத்திரிகையாளர்களை அழைத்துக் குரல் கொடுத்த 4 நீதிபதிகளில் கோகோயும் ஒருவர். இதற்கு முந்தைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை எதிர்த்துத்தான் அவர் குரல் கொடுத்தார்.

போலி மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான வழக்கில், லஞ்சம் வாங்கிக்கொடுத்த இடைத்தரகரான ஒரு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை கையும் களவுமாகப் பிடித்து விட்டது சிபிஐ. மருத்துவக் கல்லூரி தீர்ப்பை வழங்கியவரை தீபக் மிஸ்ரா. குற்றச்சாட்டே அவருக்கு எதிராகத்தான் என்பது தெளிவாகத் தெரிந்த நிலையிலும் தனக்கு எதிரான வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று அவரே தீர்மானித்ததுதான் அன்றைய பிரச்சினை. இந்த ஊழலில் தீபக் மிஸ்ரா மோடி அரசிடம் சிக்கிக்கொண்டிருந்த நிலையில்தான், லோயா மரணம் தொடர்பான வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் சமாதி கட்டியது. அவரை நாடாளுமன்றக் கண்டனத்திலிருந்து காப்பாற்றி விட்டது மோடி அரசு.

அதற்கு முந்தைய தலைமை நீதிபதி தத்து ஜெயலலிதாவுக்கு ஒரு வரியில் பிணை வழங்கிய உத்தமர். அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தார் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜு ஆதாரங்களுடன் குற்றம் சாட்டினார். எதுவும் நடக்கவில்லை.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் மூன்றில் ஒரு பங்கினர் மேல் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடுத்து போடப்பட்ட வழக்கு பல ஆண்டுகளாக அங்கே தூங்குகிறது.

நாலும் மூணும் எட்டு என்று ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி குமாரசாமி மட்டுமல்ல, எண்ணற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் புகார்கள் உள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களும், ஊழல் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தொழில் முறை கிரிமினல்களும் மபியா கும்பல்களும் நீதியை விலை பேசி வாங்குவது நாடறிந்த ரகசியம்.

உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியவர்களும், அதனை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்களும்தான் துன்புறுத்தப் பட்டிருக்கின்றனரேயன்றி, எந்த நீதிபதியும் தண்டிக்கப்பட்டதில்லை.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுமாக மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதலின்றி உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்கவியலாது என்ற சட்டப் பாதுகாப்பு, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பேணும் பொருட்டும், ஜனநாயகத்தின் மற்ற இரு தூண்களான நாடாளுமன்றமும், நிர்வாக எந்திரமும் அத்து மீறும்போது, அரசமைப்பு சட்டத்தையும் மக்கள் உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கத்துக்காகத்தான் வழங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அரசமைப்பு சட்டத்துக்கும் மக்கள் உரிமைகளுக்கும் எதிராகவும், கார்ப்பரேட் கொள்ளைகளுக்கும் அரச பயங்கரவாதத்துக்கும் ஆதரவாகவும்தான் எண்ணற்ற தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கியிருக்கின்றன. 20 லட்சம் பழங்குடி மக்களை வெளியேற்றும் தீர்ப்பு, நர்மதா அணைக்கட்டு தீர்ப்பு, கூடங்குளம் தீர்ப்பு, ஆதார் தீர்ப்பு, நீட் தீர்ப்பு, அப்சல் குரு – எழுவர் விடுதலை தீர்ப்புகள், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு ஆதரவான தீர்ப்பு, பாபர் மசூதி நிலத்தை அபகரிக்கும் தீர்ப்பு, தில்லை கோயிலை தீட்சிதருக்கு வழங்கும் தீர்ப்பு, அனைத்து சாதியினரையும் அரச்சகராக்க மறுக்கும் தீர்ப்பு, பார்ப்பனிய ஆதிக்கத்தை நியாயப்படுத்தும் தீர்ப்புகள் என்று இவற்றைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

மக்களுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் வழங்கப்படும் தீர்ப்புகளை அரசுகள் அமல்படுத்துவதே இல்லை. அவற்றை  நீதிமன்றங்கள் கண்டு கொள்வதும் இல்லை. ஐகோர்ட் அதிரடி, சுப்ரீம் கோர்ட் சாட்டையடி என்ற மாலைப் பத்திரிகை சுவரொட்டிகளையும் நீதிமன்ற தீர்ப்புகளைத் தொடர்ந்து நடைபெறும் தொலைக்காட்சி விவாதங்களையும் நம்புகிறவர்கள் பாமரத்தனமான மூடர்கள் என்றே சொல்ல வேண்டும்.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் ஒருவரையொருவர் பிளாக்மெயில் செய்து தங்களது ஊழல்களையும் முறைகேடுகளையும் மறைத்துக் கொள்வதற்குத்தான் தாங்கள் பெற்றிருக்கும் சிறப்புரிமைகளைப் பயன்படுத்துகிறார்களேயன்றி மக்கள் நலனுக்காக அல்ல.

கோகோய் விவகாரத்தில் அந்த பரிதாபத்துக்குரிய பெண்ணை வேட்டையாடுவதில் போலீசு நீதிபதிக்குத் துணை நின்றிருப்பதும், “நீதித்துறையின் மாண்பைக் காப்பாற்ற” மோடி அரசு கோகோயை ஆதரிப்பதும், ஆகப்பெரும்பான்மையான ஊடகங்கள் பிரச்சினையை அடக்கி வாசிப்பதும் மேற்சொன்ன உண்மையைத்தான் நிரூபிக்கின்றன.

இந்த அரசுக்கட்டமைப்பின் உறுப்புகள் தமது நோக்கங்களாகவும், தாங்கள் பெற்றிருக்கும் அதிகாரத்துக்கான நியாயங்களாகவும் கூறி வந்த அனைத்தும் அம்பலமாகிவிட்டன. இந்த அரசுக்கட்டமைப்பு முழுவதும் திவாலாகி நிலைகுலைந்து தோற்றுவிட்டது.

இந்த சூழல் இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். அரசமைப்பின் உறுப்புகளில் சங்க பரிவாரத்தினரை நிரப்புவதன் மூலம் அவற்றைக் காவிமயமாக்குவது ஒரு வழி. அதை எதிர்த்து சில கட்சிகளும் அறிவுத்துறையினரும்  குரலாவது எழுப்புகிறார்கள்.

ஊழல்-கிரிமினல்மயமாகியிருக்கும் நீதிபதிகளையும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், அமைச்சர்களையும், போலீசு அதிகாரிகளையும் தங்கள் கையாட்களாக மாற்றிக்கொள்வதன் மூலம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வது இன்னொரு வழி. இந்தக் கட்டமைப்பின் அங்கமாக இருக்கும் கட்சிகள் எதுவும் இதை எதிர்த்துக் குரல் எழுப்ப இயலாது. எல்லாக் கட்சிகளும் கோகோய் விவகாரத்தில் மவுனம் சாதிப்பது இதற்கு இன்னொரு சான்று.

இந்த அரசுக் கட்டமைவுக்கு வெளியே, நிறுவப்படும் மக்கள் அதிகாரம்தான் தீர்வு – இந்தக் கட்டமைப்புக்குள் தீர்வு தேட இயலாது என்று கூறுவதை காரிய சாத்தியமற்றது என்றும், இதற்கு உள்ளேதான் தீர்வைத் தேடவேண்டும் என்றும்  கூறுபவர்கள் இந்தப் பெண்ணுக்குப் பதில் சொல்லட்டும்.

“உங்களிடம் எனக்கு நீதி கிடைக்காது” என்று மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் முகத்தில் அறைந்தாற்போல கூறிவிட்டு நீதிமன்ற அறையை விட்டு வெளியே வந்திருக்கிறார் அந்த தலித் பெண்.

நீதி வேண்டுபவர்கள் இந்த அரசுக் கட்டமைப்புக்கு வெளியே அதனைத் தேடுங்கள் என்பதுதான் இந்தப் பெண்ணின் கதையிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய நீதி.

சாக்கியன்

புருடா மன்னன் – Cloudy மோடி | காணொளி

னைவருக்கும் காதில் பூ சுற்றும் திறன் கொண்டவர்களை புருடா மன்னன் என்று அழைப்பதுண்டு. நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது பெருமைகளையும் பராக்கிரமங்களையும் இருபத்திமூன்றாம் புலிகேசியைப் போல ஒரு இந்தித் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார்.

பேட்டியில் தாம் 1987-88-ம் ஆண்டிலேயே டிஜிட்டல் கேமராவை வைத்திருந்ததாகவும், பாலாக்கோட் தாக்குதலுக்குத் தான்தாம் ஐடியா கொடுத்ததாகவும் பேட்டியளித்தார். பேட்டி வெளியான மறுநிமிடம் தொடங்கி உலகமே நமது ’பி.எம்’ மோடியை புருடா மோடியாக அடையாளம் கண்டுகொள்ளத் தொடங்கிவிட்டது.

அப்படி அந்தப் பேட்டியில் என்னதான் சொன்னார் மோடி… ’தரமான’ மொழிபெயர்ப்போடு ஒரு ’தரமான சம்பவம்’..

பாருங்கள் ! பகிருங்கள் !

 

புர்கா தடை என்னும் அக்கினி | ஸர்மிளா ஸெய்யித்

”புர்கா / நிகாப் இல்லாமல் வெளியே வரவே மாட்டேன்” என்று ஐந்து பெண் மக்களின் தாயொருவர் அடம்பிடித்து அழுதபடி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றார் என்ற செய்தி காது வழியாக நுழைந்தபோது மூளையின் நரம்புத் தொகுதிகளில் ஒரு பெருத்த வலியை உணர்ந்தேன். எமது பெண்களை ஆணாதிக்கம் கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் இடம் இதுதான். ”பாதுகாப்புக் காரணங்களுக்காக புர்கா / நிகாப் தடை செய்யப்பட்டுள்ளதனால் பெண்கள் இவற்றை  அணிந்து கொண்டு வெளியே வராதீர்கள், வீடுகளிலேயே இருந்துவிடுங்கள்” என்று மிக எளிதாக ஆண்கள் தீர்மானம் இயற்றிவிட்டார்கள். அவர்களுக்குத் தெரியாது புர்கா / நிகாபை பாதுகாப்புக் கவசமாக கருதி அணிகின்ற பெண்களும் இருக்கிறார்கள் என்று. பெண்கள் என்றாலே அவர்கள் வெளியுலகம் மறுக்கப்பட்டவர்கள் என ஆண்களின் புத்தியில் வேரோடிப்போயிருக்கும் ஆதிக்க சிந்தனையிலிருந்தே இதுபோன்ற அறிவித்தல்கள் வர முடியும்.

இதைப் பற்றி உரையாடிக் கொண்டிருக்கும்போது  முஸ்லீமல்லாத  தோழியொருத்தி கேட்டாள் ”புர்கா / நிகாப் இல்லாமல் வரவே மாட்டேன் என்கிற பெண்கள் நிஜமாகவே இருக்கிறார்களா?” என்று. ”ஆமாம் இருக்கிறார்கள். இதில் என்ன ஆச்சரியம், சீத்தை உடுத்திப் பழகிய ஆச்சியிடம்,  சீத்தையைத் தடை செய்தாயிற்று. இனி நீ கழிசன்தான் உடுத்த வேண்டும் என்று சொன்னால் ஆச்சி ஏற்பாரா?” எனக்கேட்டேன்.

”அது எப்படி முடியும், சீத்தை அவருக்குச் சௌகரியமான உடை. பழக்கமான உடை. பழக்கமற்ற, அசௌகரியமானதா  இல்லையா என்றே தெரியாத ஒன்றைச் சீத்தைக்குப் பதிலாக அவர் எப்படி ஏற்பார்?” என்றாள் பதிலுக்கு.

”இங்கேயும் அப்படித்தான், சௌகரியமான பழக்கமானதென்று இத்தனை காலமும் உடுத்திப் பழகிய புர்கா / நிகாபை ஒரே நாளில் தடை செய்தால் எப்படி அவர்களால் இயல்பு நிலைக்கு வரமுடியும்? சாதாரணமாக ஏற்கமுடியும்?”

நமக்கெல்லாம் புர்கா / நிகாப் ஒரு கறுத்த அல்லது அடர்ந்த நிறத்திலான அங்கி. கனமான ஓர் உடை. அதனுள் பெண்கள் அவிந்து புழுங்குகிறார்கள் என்ற அனுதாபம் வேறு. ஆனால், அணிகிறவர்களுக்கோ பல நியாயங்கள். அது கலாசாரம், அடையாளம், பாதுகாப்பு, சமூக அங்கீகாரம், கௌரவம். இந்த நியாயங்களின் அடிப்படையில்தான் இந்த உடையை அவள் இத்தனை காலம் தோளில் சுமந்தாள். தற்துணிவுடன் வீதிகளில் இறங்கி நடந்தாள். இதையெல்லாம் எப்படி ஒரே நாளில் விட்டுத்தந்துவிட்டுச் ”சரிதான்” என்று கடப்பாள்?

புர்கா / நிகாப் தடை செய்வதற்கு முன்பு இதுபற்றிய கலந்துரையாடல் பெண்கள் மட்டங்களில் நடந்திருக்கவேண்டும். தடைக்கான காரணம் பாதுகாப்பு என்று குறிப்பிடப்பட்டபடியால் (அது நியாயமற்ற பொய்யான காரணம்)  அது முறையான வழியில் பரீட்சாத்திக்கப்பட்டிருக்க வேண்டும். பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு முகத்திரையை விலக்கி அடையாளத்தை உறுதி செய்ய பெண்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்க வேண்டும். இவை எவையும் நிகழ்த்தப்படவில்லை. இந்தப் படிமுறை ஒழுங்கில் நடவடிக்கைகள் நடந்திருந்தால் முகத்திரை அணியும் பெண்கள் இயல்பாக்கம் அடைய வழி உண்டாகியிருக்கும்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்திரையை விலக்குவதற்கு பெண்கள் மறுத்திருந்தாலோ அல்லது பெரும் அச்சுறுத்தலை உருவாக்கும் விதத்தில் செயற்பட்டிருந்தாலோ முகத்திரையைத் தடை செய்வதற்கு நியாயங்கள் இருந்திருக்கும். இங்கு அப்படியெந்த நியாயமும் சொல்வதற்கில்லை. இப்போது, எவர் வேண்டுமென்றாலும் பெண்களின் பர்தாவைக் கழற்றி எறியலாம் என்ற நிலையை அரசு ஏற்படுத்தியிருக்கிறது. வீதியிலோ பொது இடங்களிலோ அவர்களை அவமானப்படுத்தலாம் என்ற வன்முறை கட்டவிழ்க்கப்பட்டிருக்கிறது. புர்கா / நிகாப் என்பதன் அர்த்தப்பாடு புரியாமலும், வர்த்தமானி அறிவித்தலைப் பொருட்படுத்தாமலும் பல அரச ஸ்தாபனங்களில் ”ஹிஜா”பிற்கு எதிரான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

மருத்துவமனைகள், பாடசாலைகள், பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள், கச்சேரிகள் என்று எல்லா இடங்களிலும் இந்த அத்துமீறல் நடக்கிறது. இராணுவச் சிப்பாய் துப்பாக்கியினால் நிகாபை இழுத்துக் களைந்த சம்பவம் புத்தளத்தில் பதிவாகியது. அதே பிரதேசத்தில் பிறப்புப் பதிவைப் பெறுவதற்குச் சென்ற பெண் ஹிஜாப் முதற் கொண்டு உடுத்தியிருந்த அபாயா வரை கழற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறாள். பல பாடசாலைகளில் ஆசிரியைகள் மீதும் இவ்வாறான வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் பாய்ந்துள்ளன. பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள் முஸ்லிம் பெண்களின் உடை தொடர்பாக பல எழுதப்படாத விதிகளை தங்கள் சௌகரியம்போல உருவாக்கி வருகின்றன.

அரச மருத்துவமனைகளுக்குச் செல்லும் முஸ்லீம் பெண்களின் வருகை கணிசமானதாக குறைந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து வரும் செய்திகளில் இருந்து அறியமுடிகின்றது. அரச மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காகச் செல்கின்ற பெண்கள் வசதிபடைத்தவர்களோ, ஜம்மியத்துல் உலமா சபை உறுப்பினர்களின் மனைவியரோ அமைச்சர்களின், பாராளுமன்ற உறுப்பினர்களின் மனைவிகளோ அல்ல. உழைக்கும் வர்க்க எளிய மக்கள்தான் அரச மருத்துவமனைகளுக்குச் செல்கின்றார்கள். புர்கா தடை என்பது வெறுமனே அரசியல் கலாச்சார பிரச்சினை மட்டுமல்ல. இதுவொரு வர்க்க விவகாரமும் கூட.

புர்கா அணிகின்ற பெண்களில் 75% நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இந்த உடைக்குப் பின்னால் பொருளாதாரக் காரணங்களும் இருக்கின்றன. புர்கா தடையினால் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் பெண்கள் சிகிக்சைக்கு என்ன செய்வார்கள்? எங்கு செல்வார்கள்? தனியார் மருத்துவமனைகள் பாதுகாப்புப் பரிசோதனைகளுக்குப் பின்பு புர்காவுடனேயே பெண்களை உள்ளே அனுமதிக்கிறது. ஏன்? ஏனென்றால் அவர்கள் பணம் செலுத்தியே அங்கு செல்கின்றார்கள். ஆக, பணமிருந்தால் புர்கா தடையைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால், ஏழை எளிய மக்கள் எங்கு போவார்கள்? இவர்களேதான் அரச பேருந்துகளில் பயணிப்பவர்களும். நம் நாட்டின் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களைப் போல பஜரோக்களில் பறப்பவர்கள் அல்ல இந்தப் பெண்கள்.

மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் பெண்கள் பலர் வேலைக்குச் செல்வதற்குத் தயங்குகின்றனர். ஏன், வெளியேறுவதற்கே தயங்குகின்றனர். குற்றவாளிகளாக நடத்தப்படும் இந்த நிலையை சாதாரண ஒன்றாக எந்தப் பெண்ணாலுமே ஏற்க முடியாது.

ஆங்கிலத்தில் சொல்வார்கள். ”Put yourself in their shoes”. அதாவது, மற்றொருவரின் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள அந்தச் சூழ்நிலையில் தன்னைத்தானே பிரதியீடு செய்ய, அவர்களின் கண்ணோட்டத்தைப் புரிந்து கொள்ள தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு தங்கள் கால்களை அடுத்தவரின் சப்பாத்துக்களில் வைத்துப் பாருங்கள் என்கிற அர்த்தம். புர்கா / நிகாப் பிரச்சினையை இந்தப் பார்வையில்தான் அணுகவேண்டும்.

இந்நாட்களில் நான் அதிகம் எதிர்கொள்ளும் கேள்விகளில் ஒன்று, ”நீங்கள் புர்கா / நிகாப்  போன்ற உடைகளில் விருப்பமற்றவர். அப்படியிருந்தும் இப்போது இந்த உடைக்கு ஆதரவாகப் பேசுவது ஏன்?”

உண்மையில் இப்போதும் புர்கா / நிகாப் என்கின்ற இந்த ஆடைக்காகப் பேசவில்லை. பெண்களுக்காகத்தான் பேசுகிறேன். இந்த ஆடையில் நான் விருப்பமற்றவளாக இருப்பதும், அணியாதிருப்பதும் அணிகின்ற பெண்களின் உளவியலைப் புரிந்துகொள்வதிலிருந்தும் என்னைத் தடுக்கவோ பின்வாங்கச் செய்யவோ இல்லை. அவர்களின் காலணிகளுக்குள் எனது பாதங்களை விட்டுப் பார்க்க  முடிகின்றது. முன்பு பேசியதும் பெண்களுக்காகத்தான். அப்போதும் இந்த உடை பெண்களின் தெரிவாக இருக்கவில்லை. இப்போதும் இது பெண்களின் தெரிவாக இல்லை. ஆண்களின் இசைக்கு ஆடும் இலத்திரனியல் பொம்மைகளாகப் பெண்கள் இருக்கக்கூடாது என்பதே  அன்று பேசியதற்கும் இன்று பேசுவதற்குமான பொதுவான காரணம்.

கல்வி VS புர்கா என்று வரும்போது பெண்கள் புர்காவைத் தெரிவு செய்யும் நிலையில் இருக்கின்றனர். தொழில் VS புர்கா வருமிடத்திலும் பெண்கள் புர்காவையே தெரிவு செய்கின்ற நிலையில் உள்ளனர். முஸ்லீம் சமூகம் பெண்கள் வலுவடைய (Empower) இடமளிக்கவில்லை என்பதற்கு இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்? புர்கா என்பது ஒரு பெண்ணின் அடையாளமாக இருக்கமுடியாது. அவள்தான் அவளது அடையாளம். புர்கா ஒரு பெண்ணின் ஆளுமையை (Personality)  தீர்மானிக்க முடியாது. ஆளுமை என்பது அவள் அணிகின்ற உடையில் மட்டுமே இருக்கக்கூடியதில்லை. அவள்தான் ஆளுமை! இந்த எளிய சமன்பாட்டைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனம் பெண்களுக்கு இல்லாது போய்விட்டது இன்னொரு துயரம். ஆண்களின் திணிப்பையும், தன் மீதான அடக்குமுறைகளையும் எதிர்கொள்வதற்கு அறிவும் தெளிவும் இல்லாமல் ஒரு உடையைப் பிடித்துத் தொங்குகிற நிலைக்கு பெண்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறோம்.

”நீ சொல்கிறபோது அணியவும், நீ சொல்கிறபோது கழற்றவும் செய்யும் இந்த உடையைப் பிடி”  என்று களைந்து ஆண்களின் முகத்தில் வீசியெறிந்துவிட்டு நடக்கும் மனத்துணிவு இத்தனைக்குப் பிறகும் ஒரு பெண்ணுக்குக்கூட வரவில்லை.

ஆண்கள் வன்முறைகளின் உற்பத்தியாளர்கள். போர்களைத் துவக்குகிறவர்கள். இவர்களின் இந்த அனைத்துச் செயல்களும் நெறிப்பது பெண்களின் கழுத்துக்களைத்தான். ”கழுத்து இருகி மூச்சே போனாலும் பரவாயில்லை இன்னும் இறுக்கிப் பிடியுங்கள்” என்று கெஞ்சக்கூடிய சுயமிழந்த பெண்களைக் கொண்ட ஒரே நூற்றாண்டு இதுவாகத்தான் இருக்கமுடியும்.

பெண்களின் உடைகளை களைந்து தங்களின் ஆதிகால வெறுப்பையும் இனவெறியையும் தீர்த்துக் கொள்கிறவர்கள் இந்த நூற்றாண்டில் இதே நாட்டில்தான் நம்மோடு வாழ்கிறார்கள். முஸ்லீம் சமூகத்தின் மீது இருந்துவந்த நீண்ட காலப் புகை கொளுந்து விட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. சிங்களப் பேரினவாதம் கனவு காண்பதுபோல இந்த தீ முஸ்லீம் சமூகத்தை மட்டுமே எரித்து சாம்பலாக்கி அணைந்துவிடுமா என்பதே இங்குள்ள மிகப்பெரிய கேள்வி.

படிக்க:
2010-ல் இசுலாமியப் பெண்கள்: மதமும் வாழ்க்கையும் !!
வஹாபியிசத்தை வரவேற்றார்களா இலங்கை முஸ்லீம்கள் ?

முஸ்லீம் இளைஞர்களை தீவிரவாதத்தின் பால் இன்னும் இன்னும் இழுபட்டுச் செல்வதற்கு ஏதுவாகவே இந்த செயற்பாடுகளை அதிகார சக்திகள் ஏவிவிட்டுள்ளதா என்பதுகூட சாத்தியமான சந்தேகமே. தனது சகோதரியோ, தாயோ மனைவியோ கொல்லப்பட்டால்கூட ஒரு ஆண் பொறுத்துக்கொள்வான். ஆனால், அவள் அவமானப்படுத்தப்படுவதை அவளது ஆடை களையப்படுவதை அவனால் நீண்ட காலத்திற்குப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. இது ஆசிய நாட்டு ஆண்களின் மிக எளிய உளவியல் சமன்பாடு.  இந்த உளவியலோடு விளையாடுவது ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும்.

முஸ்லீம் சமூகத்தை முழுவதும் ஓரம்கட்டி ISIS தீவிரவாதத்தை இலங்கையிலிருந்து ஒழிக்கலாம் என்பது சிங்களப் பேரினவாதத்தின் பகல் கனவு. கண்ணுக்குத் தெரியாத எதிரியைத் தாக்கமுடியாத இயலாமையை கண்ணுக்கு எதிரில் இருக்கும் அப்பாவி மக்களின் மீது திணிப்பதுபோன்ற கோழைத்தனமான ஒரு செயற்பாட்டை முன்னெடுப்பதைவிடவும் தரம்குறைந்த நிலை வேறொன்றுமேயில்லை. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிற்பாடு இடம்பெற்ற கைதுகள் பலவும் முஸ்லீம் சமூகத்தவர்களின் ஒத்துழைப்புடன் நடந்தவை. ஆயுதங்களையெல்லாம் கைப்பற்றிச் சுத்திகரிப்புச் செய்தாயிற்று என்ற துணிவில் பேரினவாதிகள் ஆடும் ஆட்டம் இது. பேரினவாதத்திற்கு இது பேரிழப்பாக முடிவது மட்டுமல்ல இந்த நாட்டின் அமைதியைக் குலைத்து மக்கள் ஒற்றுமையாக பாதுகாப்பாக வாழமுடியாத சுடுகாட்டில் அரசியல் பிழைப்பு நடத்துவதற்கே இட்டுச் செல்லும்.

ஸர்மிளா ஸெய்யித்

அச்சில் வராத தொல்காப்பிய இளம்பூரணர் எழுத்ததிகார உரை !

“இன்றுவரை அச்சில் வராத” தொல்காப்பிய இளம்பூரணர் எழுத்ததிகார உரை முழுமைக்குமான மிகச் சிறந்த விளக்கம். (ஆசிரியர் பெயர் தெரியவில்லை)

ண்பர்களே….

பொ.வேல்சாமி
தொல்காப்பிய இலக்கண நூலுக்கு எழுதப்பட்ட உரைகளுள் மிகப் பழமையானதும் தமிழ் மரபில் நின்று எழுதப்பட்டதுமான அரிய உரை என்பது இளம்பூரணர் எழுதியது. இந்த உரை நூல் 1868-ல் முதல்முதலாக அச்சாகியது. பின்னர் 1928-ல் தேசபக்தர் வ.உ.சிதம்பரம் பிள்ளை இந்நூலை அச்சிட்டார். 1969-ல் பேராசிரியர், அடிகளாசிரியர் சிறப்பான ஆய்வுப்பதிப்பை வெளியிட்டுள்ளார். 1969-ல் பேராசிரியர் கு.சுந்தரமூர்த்தி மாணவர்களுக்கு பயன்படும்படியான ஒரு பதிப்பையும் வெளியிட்டுள்ளார்.

இப்பொழுது பேராசிரியர், கோபாலைய்யர், பேராசிரியர் கங்காதரன் அவர்களால் மிகச் சிறப்பாக ஆராயப்பட்ட ”தொல்காப்பிய எழுத்ததிகார உரைக்கொத்து“ நமக்கு கிடைக்கிறது.

இந்தப் பதிப்புகளுக்கிடையே தமிழ் இலக்கண உலகமறியாத ஒரு இளம்பூரணர் உரைக்கான விளக்க நூல் ஒன்று கையெழுத்துப் பிரதியிலேயே காணக் கிடைக்கிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தமிழ் இலக்கணக் கல்வி மரபு சாரந்த பல செய்திகளுக்கான விளக்கங்களும் தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்கு நச்சினார்கினியர் எழுதிய உரையை ஒப்பிட்டும் நவீன மொழியில் கருத்துக்களை மேற்கோள் காட்டியும் சுவையாக எழுதப்பட்டுள்ளது. இதை எழுதிய அறிஞர் யாரென்று குறிப்பிடப்படவில்லை. நான் ஆராய்ந்துப் பார்த்ததில் இந்த விளக்கத்தை எழுதியிருப்பவர் பெரும் இலக்கணப் புலவர் வேங்கடராஜூலு ரெட்டியாராக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஏனென்றால் 1944-ல் ரெட்டியார் எழுதிய எழுத்ததிகார ஆய்வு என்ற நூலில் உள்ள கருத்துக்களும் குற்றியலுகரம் பற்றிய கருத்துக்களும் ரெட்டியார்தான் இந்த விளக்கத்தை எழுதியிருப்பார் என்பதை வலியுறுத்துகின்றன. இந்த கையெழுத்துப் பிரதியில் ரெட்டியார் பலமுறை குறிப்பிடப்படுவதும் இக்கருத்துக்கு அரண் சேர்க்கிறது.

குறிப்பு : 162, 214 பக்கங்கள் உள்ள இரண்டு தொல்காப்பிய எழுத்ததிகார இளம்பூரணம் விளக்க உரை கையெழுத்துப் பிரதிகளை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்வதற்கு வசதியாக அதன் இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் …

நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.

கோவை சட்டக் கல்லூரி மாணவர்களைப் பழி வாங்காதே | புமாஇமு

0

கண்டன அறிக்கை !

தேதி: 14.5.2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை எதிர்த்து போராடிய மாணவர்கள் 68 பேரை தேர்வு எழுதவிடாமல் பழிவாங்கிய கோவை சட்டக் கல்லூரி நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்!

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை எதிர்த்து கடந்த மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராடினார்கள். அதன்போது கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் 14- 3- 2019 அன்று சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை முன்நின்று நடத்தியதாகக் கூறி சுமார் 167 மாணவர்கள் மீது காவல்துறையும்,  கல்லூரி நிர்வாகமும் சேர்ந்து பொய் வழக்குப் போட்டது. குறிப்பாக 17 மாணவர்களை குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது கல்லூரி நிர்வாகம்.

இந்தப் பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும் என மாணவர்கள் தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினார்கள். அதன் பிறகு மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்கிறோம். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்தப் பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று கல்லூரி முதல்வர் கே. கோபாலகிருஷ்ணன் அவர்கள் எழுத்துப்பூர்வமாக 20-3- 2019 அன்று கடிதம் கொடுத்துள்ளார்.

படிக்க :
♦ பொள்ளாச்சி : குற்றவாளிகளைப் பாதுகாக்கும் சௌக்கிதார்கள் | மருதையன் நேர்காணல் | காணொளி
♦ பொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா ?

ஆனால், தற்போது 68 மாணவர்களை தேர்வு எழுதவிடாமல் தடுத்து, மீண்டும் அந்த செமஸ்டரிலேயே படிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளது  கல்லூரி நிர்வாகம். குறிப்பாக பல்கலைக்கழகத் தேர்வு தொடங்க ஒரு வாரம் மட்டுமே இருக்கும் சமயத்தில், திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின், நிர்வாகத்தின் தவறுகளை எதிர்க்கும் மாணவர்களின் எதிர்காலத்தை பாழக்கும் வகையில் தேர்வு எழுதவிடாமல், மீண்டும் அதே செமஸ்டரில் படிக்கும் வேண்டும் என உத்தரவிட்டிருக்கும் கல்லூரி முதல்வர் கே. கோபாலகிருஷ்ணன் செயலை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

அதேபோல், ’’இது எனது சொந்த ஊர். இது என்னுடைய கல்லூரி. என்னை பகைத்துக் கொண்ட அவர்கள் யாரையும் நான் படிக்க விடமாட்டேன்’’ என கல்லூரி முதல்வர் கே.கோபாலகிருஷ்ணன் ஒரு பண்ணையாரைப்போல மிரட்டுவதாக மாணவர்கள் தெரிவிக்கிறார்கள்.

சட்டக்கல்லூரி விதியின் படி பொறுப்பு முதல்வராக ஒருவர் 3 ஆண்டுகள் மட்டும்தான் பொறுப்பில் இருக்க முடியும்.  ஆனால் கே.  கோபாலகிருஷ்ணன் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் சட்டக்கல்லூரியின் விதிக்குப் புறம்பாக பொறுப்பு முதல்வராக நீடிக்கிறார். ஆளும் கட்சியில் செல்வாக்கு, அதிகார, பண பலம்தான் இதற்கெல்லாம் காரணம். இப்படிப்பட்ட கிரிமனல்கள் ஒரு கல்லூரியின் முதல்வராக இருந்தால் அந்தக் கல்லூரியும், மாணவர்களும் எப்படி உருப்பட முடியும்?

எனவே, கே. கோபாலகிருஷ்ணனை கல்லூரி முதல்வர் பொறுப்பில் இருந்து விடுவித்து புதிய தகுதியான முதல்வரை உடனே நியமனம் செய்ய வேண்டும்.  மாணவர்கள் தேர்வு எழுத தடைவிதித்து அதே செமஸ்ட்ரிலேயே அவர்கள் மீண்டும் படிக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக அனைத்து பேராசிரியர்களும், கல்லூரி மாணவர்களும்,  மாணவர் அமைப்புகளும்,  ஜனநாயக சக்திகளும் குரல் கொடுக்க வேண்டும் என எமது புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் கோருகிறோம்.

இவண்
த. கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.