Thursday, July 10, 2025
முகப்பு பதிவு பக்கம் 399

மேற்கு தொடர்ச்சி மலை : செங்குத்து வாழ்க்கையின் படம் | ராஜ்

6

டப்பெட்டி திரைப்பட இயக்கம் சார்பாக மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் சென்னையில் பிரத்யேகக் காட்சியாக கடந்த அக்டோபர் 21-ம் தேதி திரையிடப்பட்டது.

தேனி மாவட்ட மலை மற்றும் அதனோடு தொடர்பு கொண்ட மக்களின் வாழ்க்கைப் போராட்டம் தான் கதை. வாழ்க்கை தேவைக்காக மலையேறுவது, மலை உச்சியில் கேரளப் பண்ணை நிலங்களில் வேலை செய்வது, சிறு விவசாயத்தில் ஈடுபடுவது, மலையடிவாரத்துக்கு திரும்புவது என்ற செங்குத்தான ஒரு வாழ்க்கையின் படம் பிடிப்பு மேற்கு தொடர்ச்சி மலை. வனகாளியின் உரையாடலிலும், ரங்கசாமியின் நடையிலும் மக்களின் வாழ்க்கைப்பாடு பார்வையாளர்களுக்கு கடத்தப்படுகிறது.

ரங்கசாமியின் வாழ்க்கை சிறு கனவுகளுடனும், ஏமாற்றங்களுடனும் நகர்கிறது. ஒரு சிறு காணி விவசாய பூமியையாவது சொந்தமாக வாங்குவது அவன் லட்சியம். முதல் முயற்சி பத்திரம் எழுதப்போகும் நாளன்று சம்பந்தப்பட்டவர் விற்க மறுப்பதால் தோல்வியடைகிறது. இரண்டாவது முயற்சி கைகூடும் நேரத்தில் துர்பாக்கியம் ஒன்று காத்திருக்கும். கொள்முதல் விலைக்கு வாங்கி வந்த ஏலக்காய் மூட்டை மலையிலிருந்து நழுவி சிதறும்.

மகளை திருமணம் செய்து வைக்க வேண்டிய நெருக்கடி நிலத்தை வைத்திருக்கும் பெண்ணிற்கு ஏற்படுவதால் மூன்றாம் முறை சற்றே குறைந்த விலைக்கு நிலம் ரங்கசாமிக்கு வந்து சேரும். தனது சொந்த நிலத்தில் முதல் விவசாயப் பரிசோதனையை ரங்கசாமி மேற்கொள்வார். புயல் மழையில் அவருடைய பயிர் முற்றாக அழிந்து விடும். பின்னர் பன்னாட்டு வீரிய விதைகளை கடனுக்கு வாங்கி பயிரிடுவார்.

இந்த நிலையில் ஒரு கொலை வழக்கில் ரங்கசாமி கைதாவார். அது இப்படத்தின் துணை கதைப்பொருளோடு தொடர்புடையது. அதன் நாயகன் சாக்கோ. சாக்கோ கேரள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். ரங்கசாமி மலையேறி கேரளப் பகுதியை கடக்கும் போது சாக்கோ தோன்றுவார்.

படிக்க :
மாபூமி – இந்தியப் புரட்சிக்கான ஒத்திகை – திரை விமரிசனம், வீடியோ!
ஆடுகளம்: மண்ணை விடுத்து சினிமாப் புனைவில் ஆடும் களம்!

கொடியேற்றுவது, ஊர்வலம் செல்வது, சங்கத்தில் இணைந்திருக்கும் தொழிலாளர்களை பிரித்து வேலைக்கு அனுப்புவது, முழக்கமிடுவது, போராடுவது என்ற செயல்திறமுள்ள வாழ்க்கை சாக்கோவினுடையது. முழங்கை வரை மடித்து விட்ட சட்டை, தூக்கி கட்டிய வேட்டி, கையில் ஒரு பை, மழையை எதிர்பார்த்து ஒரு குடை, தீவிரத்தை உணர்த்தும் குறுந்தாடி என்று சிக்கனமான தேகத்தில் சாக்கோ காட்சியளிக்கிறார்.

சாக்கோ எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறார். ரங்கசாமியும் கூட நடந்து கொண்டேதான் இருக்கிறார். தத்தமது லட்சியங்களை நோக்கிய தளராத நடை இருவருடையதும்.

இருவர் பயணமும் முடிவுறும் புள்ளியாக ஐந்து ஏக்கர் நிலப்பண்ணையாரின் கொலை இருக்கிறது. கட்சியின் கருங்காலி ஒருவரையும் சேர்த்துக் கொல்கிறார், சாக்கோ. இந்த இரு கொலைகளும் மொத்த நிகழ்ச்சிப்போக்கையும் கலைத்துப் போடுகிறது.

சாக்கோ சிறை சென்ற பிறகு அவர் முன்னெடுத்த போராட்டம் கைவிடப்படுகிறது. அவர் எதிர்த்து கொண்டிருந்தவை எல்லாம் அங்கு வந்து விடுகிறது. சிறை மீண்ட பிறகு சாக்கோ காட்டப்படவில்லை. ரங்கசாமி சிறைவாசத்துக்கு பிறகு எதுவும் பேசவில்லை. இருவரின் மவுனமும் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. ஒரு வேளை சாக்கோ பேசியிருந்தால் யாருக்கு எதிராக பேசியிருப்பார்? கம்யூனிசம் தொடர்பாக ரங்கசாமி என்ன நிலைப்பாட்டை பிற்பாடு கொண்டிருப்பார்?

எதிரியிடம் விலை போன கட்சியின் தோழனை கொலை செய்வது என்ற சாக்கோவின் முடிவு சரியா? விலை போன நபர் மீது கட்சியின் நிலைப்பாடென்ன? சாக்கோவின் கொலை ஒரு கையறு நிலையின் எதிர்வினையா? இவை சாக்கோ சார்ந்திருந்த கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் மீது திரைப்படம் கொண்டிருக்கும் மறைமுகமான விமர்சனமாகவும் நாம் பார்க்க முடியும்.

சாக்கோவின் செயல்பாடுகள் படத்தில் ஒரு அறக்குரலாக ஒலிக்கிறது. அதே நேரம் அவரது அரசியல் புரிதல் மீது கேள்விகள் எழாமலில்லை. ‘வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றிருப்பவன் கம்யூனிஸ்ட் அல்ல’ என்ற அவரது பஞ்ச் டயலாக் பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெறுகிறது. மலைக்கு சாலை அமைக்கும் திட்டத்தை சாக்கோ கடுமையாக எதிர்க்கிறார்.

நடந்தும், மாட்டுவண்டியிலும் அலைக்கழியும் மக்களின் வாழ்வை எளிதாக்கும் வகையில் வருகின்ற சாலை எதிர்க்கக்கூடியதா?

அச்சமின்றி நடமாடவும், விரைவாக செல்லவும், யானை போன்ற விலங்குகளிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவும், கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்யவும் சாலை அவசியம் அல்லவா? அது எட்டு வழிச்சாலை போன்ற உதவாக்கரை திட்டமல்லவே. ஒரு கம்யூனிஸ்டாக சாக்கோ போராடுவது பழைய நிலப்பிரபுத்துவ முறையை பாதுகாக்கவா என்ற கேள்வி இங்கு எழுகிறது.

நமது சமூக அமைப்பை ஒரே நேரத்தில் நிலப்பிரபுத்துவம் என்றோ, முதலாளித்துவம் என்றோ மட்டும் அறுதியிட முடியாத அளவுக்கு ஒரு கலவை நிலையில் இருக்கிறது. நவீனத்துவ வளர்ச்சி கண்ட ஒரு பகுதி நாற்புறமும் பழமையின் தாக்குதலுக்குள்ளாகிறது. பிறகொரு கட்டத்தில் அதன் செல்வாக்குக்குள் மறுபடியும் செல்வதை பார்க்கிறோம். ஓரடி முன்னால், ஈரடி பின்னால் என்ற ஆடுபுலி ஆட்டமாக இந்தியச் சமூகம் சுழல்கிறது.

தருமபுரி நாயக்கன் கொட்டாய் கலவரம் ஒரு சான்று. ஒரு காலத்தில் நக்சலிச கம்யூனிசம் செழித்தப்பகுதியா இது? என்று இந்துப் பத்திரிகையே கவலைப்படும் அளவுக்கு தான் நிலைமை இருக்கிறது. முதலாளித்துவம் சமச்சீரற்ற நிலையை மக்களிடம் மட்டும் ஏற்படுத்தவில்லை; அதன் நகர்வே கூட சமச்சீரற்று தான் உள்ளது.

எனவே சாலை அமைவதை தன்னிலையாக எதிர்ப்பது சரியானதா? அது தொடர்பான கொள்கை பயனுடைமை அடிப்படையில் எடுக்கப்பட வேண்டியதல்லவா? ரங்கசாமியின் குழந்தை வளர்கிறது. அவன் பள்ளிக்கு செல்ல வேண்டாமா? இந்த பிரச்சினைகளை சரிவர கவனத்தில் கொள்ளாததால் மேற்கு தொடர்ச்சி மலை காலமாற்றத்தில் காணாமல் போகிற ஒன்றின் மீதான இரங்கல் கவிதையாக இறுதியில் அர்த்தம் கொள்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் இயக்குநர் லெனின் பாரதி பயன்படுத்தியுள்ள சில திரைநுணுக்கங்கள் திரைமொழி சார்ந்து முக்கியத்துவம் பெறுபவை. யானைகள் பற்றிய சித்தரிப்பு குறிப்பிடும்படியான ஒன்று. படத்தில் கதைக்கப்படும் யானைகளை பார்க்க ஆர்வம் ஏற்படும். யானை ஒரு பெண்ணின் கணவனை அடித்துக் கொன்ற கதை ஊரில் பிரசித்தி பெற்றது. அப்பெண் பித்துப்பிடித்து மலையிலேயே தங்கி விடுவாள். ஒரு நாகத்தின் சீற்றத்தை அவள் அடைகாத்து வைத்திருப்பாள். யானைகள் அவளை தீண்டுவதில்லை.

படிக்க :
தேனி : சிறுவனைக் கொன்ற மதயானை – வேடிக்கை பார்க்கும் அரசு 
உசிலை வட்டார வெண்டைக்காய் விவசாயம் | படக் கட்டுரை

மலைக்கு சென்று திருமணப்பத்திரிகை வைக்க யானைக்கு பயந்து செல்ல மாட்டார் ஒருவர். பின்னர் ரங்கசாமியின் துணையுடன் மலையேறுவார். ஒரு தமிழ் மனத்திற்கு யானைகளை பற்றி சொல்ல யானைகளை காட்ட வேண்டியதில்லை. யானைகளை காட்டாமலே யானை பற்றிய கதைகள் பேய்த்தோற்றத்துடன் அச்சுறுத்துகின்றன.

இயக்குநர் லெனின் பாரதி

மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து நாம் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு முக்கியமான ஒன்றாக தமிழக – கேரள மக்களுக்கிடையே நிலவும் நல்லுறவு செய்தி உள்ளது. ஐந்து ஏக்கர் நிலத்தின் முதலாளி தொழிலாளர்களை பிரிக்க தந்திரமாக இனவாதத்தை கையிலெடுக்க முற்படும் போது சாக்கோ அதனை கடுமையாக எதிர்க்கிறார். இரு மாநில மக்களும் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்கிறார்கள். கேரளாவிடமிருந்து விடுவித்துக் கொண்டு தமிழகத்துடன் இணைந்த குமரிப்பகுதியில் காணப்படுவது போன்ற மலையாள வெறுப்பு அங்கில்லை.

ஜெயமோகன் கதைவசனம் எழுதிய ஒழிமுறி முதற்கொண்டு பல மலையாளப் படங்களில் தமிழ்ப்பேசும் மக்களை மட்டம் தட்டுவது, வில்லன்களாக சித்தரிப்பது போன்றவற்றை சர்வசாதரணமாக காணலாம். இந்த குறுகிய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க முடிந்தது மோசமான காலத்தின் சிறந்த ஒன்றாக இருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலை –யில் மனிதர்கள் பொதுவாக நல்லுள்ளம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். ஒருவர் துன்பத்தை மற்றவர்கள் புரிந்து கொள்வது, இயன்றவரை பிறருக்கு ஆதரவாக இருப்பது போன்ற எளிய மக்களுக்குரிய குணங்கள் உரிய கவனம் கொடுக்கப்பட்டுள்ளன. ரங்கசாமிக்கு பணத்தேவையை பூர்த்தி செய்ய ஒரு தோட்டத் தொழிலாளி ஒரு ஏலக்காய் மூட்டையை கொள்முதல் விலைக்கு கொடுத்துதவுகிறார். ரங்கசாமி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஒரு கடைக்காரப் பெண்மணி மிகவும் பிரயாசப்படுகிறார். ரங்கசாமிக்கு ஐந்து ஏக்கர் தோட்டத்தில் ஒரு வேலையும் சாக்கோவின் உதவியால் கிடைக்கிறது.

பொதுவாக இவர்கள் பழைய தலைமுறையை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஐந்து ஏக்கர் தோட்ட முதலாளியின் மகன் சாக்கோவையும், அவர் ஊடாக கம்யூனிசத்தையும் வெறுக்கிறான். ஐந்து ஏக்கரையும் அவன் பாகப்பிரிவினை செய்வதன் மூலமாக கம்யூனிச சங்கத்தை அவன் கலைக்க முற்படுகிறான். மனிதர்களுக்கிடையிலான உராய்வு திரைப்படத்தில் அங்கு தான் முதன்முறையாக தொடங்குகிறது.

அதற்கு முன்பு வரை அந்த உராய்வு மக்களுக்கும் இயற்கை அல்லது ஏழ்மைக்கும் இடையேயானதாக இருக்கிறது. கண்ணுக்கு தெரியாததாக இருந்த முரண் சுரண்டலாக, நிலப்பிரபுத்துவ வகைப்பட்ட ஒன்றாக பின்னர் உருவம் கொள்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் காரணகாரியம் சார்ந்து கேள்விகள் இருந்தாலும் அதன் திரைஅனுபவம் மார்க்சிய அழகியலாக இருப்பதை மறுப்பதற்கில்லை. இயக்குநர் ஜனநாதனின் புறம்போக்கு என்ற பொதுடமை அடிப்படையில் காந்திய சிந்தனையை முன்வைக்கின்ற திரைப்படம் தான் என்றாலும் அது மக்கள் போராளிகள் எல்லாம் அரசு சித்தரிப்பது போல அவ்வளவு மோசமானவர்களில்லை என்ற குறைந்தபட்ச உண்மையை உரத்து கூறுகிறது.

லெஃப்ட் ரைட் லெஃப்ட் என்ற திரைப்படம் கேரளாவில் மைய நீரோட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் உள்விவகாரங்களை விவாதிக்கும் முக்கியத் திரைப்படம். மேற்கு தொடர்ச்சி மலையின் கதைக்களன் வேறு என்றாலும் அதில் வரும் கருங்காலிப் பிரச்சினையை மேலதிகமாக புரிந்து கொள்ள லெஃப்ட் ரைட் லெஃப்ட் தான் உதவும்.

படிக்க :
போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம்
போலி கம்யூனிஸ்டுகளுக்கு தேவைப்படாத நிஜப் போராளி !

சமூகம் புறநிலையில் அடையும் பெயர்ச்சிக்காலத்தை மேற்கு தொடர்ச்சி மலை ஒரு கதைக்கருவாக கொண்டிருக்கிறது. ரங்கசாமியின் நிலம் அவனிடமிருந்து பறிக்கப்பட்டு காற்றாலைகள் அதில் முளைக்கின்றன. அங்கு செக்யூரிட்டி வேலைக்கு ரங்கசாமி ஒரு வாகனத்தில் ஏறி செல்கிறார். அவர் தலை கவிழ்ந்து இருக்கிறது. அவருக்கு மேலாக கேமரா உயர்கிறது. தனியார் நிறுவனம் ஆக்கிரமித்த மலையின் தற்போதைய அளவின் பிரம்மாண்டத்தை கேமரா காட்டுகிறது. வனகாளி விவரிக்கும் பாடுகளின் போதும் கேமரா உயர்ந்து மலையின் உரு அளவை குறைத்து காட்டும். அப்போது மலையின் வனப்பு ரொமாண்டிக் கவிஞர்களால் பாடப்பட்ட இசைகவிதையாக துலங்கும். மலை நிலப்பிரபுத்துவ வாழ்க்கை முறையில் கட்டுண்டு கிடக்கும்.

ஒன்று கொடூரமாகவும் மற்றொன்று அனுதாபத்துடனும் காட்டப்படுகிறது. இரண்டுமே இரு வேறு சுரண்டல் வடிவங்கள் தான் என்றாலும் மேற்கு தொடர்ச்சி மலை காலத்தால் நிற்காத இழப்பு ஒன்றின் வலியை சுமக்கிறது. செங்கொடியை எடுத்து நிலப்பிரபுத்துவம் மீது போர்த்தியுள்ளது.

ராஜ்

நீட் : மாணவர்களிடம் பணம் பறிக்கும் கோச்சிங் சென்டர்கள் | பேராசிரியர் கதிரவன் உரை | காணொளி

யர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் கடந்த அக்-27 அன்று சென்னையில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியிருந்தனர் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவினர்.

இக்கருத்தரங்கில், பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் பொருளாளர் பேராசிரியர் கதிரவன் உரையாற்றினார். அவர் பேசுகையில்,

”அரசு கிட்டத்தட்ட அனைத்தையும் தனியார்மயம் ஆக்கிவிட்டது. இனி புதியதாக எப்படி தனியார்மயப்படுத்துவது என்று சிந்தித்து நடைமுறைப்படுத்துகிறது அரசு.

தற்போது அனைத்து அரசு பல்கலைக்கழகங்களுக்கும் தன்னாட்சி அதிகாரம் வழங்கியுள்ளது. அதாவது அரசு பல்கலைக்கழகங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கு ஏற்ப உயர்த்த தன்னாட்சி வழங்கப்பட்டிருக்கிறது.

நீட் தேர்வு என்பது அரசு மருத்துவக் கல்லூரிகளை  தன்னாட்சிமயமாக்கி தனியார் கையில் ஒப்படைக்கும் வேலையின் ஒரு பகுதிதான். நீட் – பயிற்சி மையங்கள் புற்றீசல் போல முளைத்து வருகின்றன. பணம் உள்ளவன் மட்டும்தான் தனியார் பயிற்சி மையங்களுக்குச் செல்ல முடியும்.

தமிழகத்தில்தான் அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகள் இந்தியாவிலேயே அதிகம். இதுவரை இந்த நிறுவனங்கள் ஏழை மக்களுக்குச் சேவை செய்துவந்தன. இதனால் பயன்பெற்றவர்களுக்கு இருந்த சேவை மனப்பான்மையை ஒழுக்கவே, அனைத்தையும் வியாபாரமயமாக்குகிறார்கள்.

இதற்காகவே நீட் தேர்வுமுறை கொண்டு வரப்படுகிறது. புதியதாக ஒரு தேர்வுமுறை  கொண்டு வருவதற்கு வலுவான காரணம் கிடையாது. மருத்துவத் துறையில் மாணவர்கள் சேர்ப்பில் ஏற்கனவே இருந்த பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்த பின்பே ’நீட்’டுக்கு முந்தைய மருத்துவ ஆட்சேர்ப்பு முறை இருந்து வந்தது. இப்போது புதியதாக நீட் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன?

மருத்துவக் கல்வி உட்பட, மருத்துவத்துறையை தனியார்மயமாக்குவதுதான் அதன் நோக்கம். இப்போது ஃபிட்ஜீ போன்ற பல்வேறு நிறுவனங்கள், தனியார் பள்ளிகளோடு கூட்டு வைத்துக் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ நுழைவுத்தேர்வுப் பயிற்சியை வழங்குகின்றன.

சென்னையில் மட்டுமே 25 நிறுவனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனங்களும் 25 கிளைகள் வைத்திருக்கின்றன. சுமார் 7500 மாணவர்கள் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்கின்றனர். குறைந்த பட்சம் 75,000 முதல் 1,00,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இங்கு பயிற்சி கொடுக்க, ஐஐடி பேராசிரியர்கள், மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். சாதாரண பள்ளி மாணவர்களுக்கு இவர்கள் வந்து பாடம் வந்து எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அந்த அளவுக்கு கடினமான பாடத்திட்டத்தையே நீட் பாடத்திட்டமாக கொண்டு வந்திருக்கிறார்கள்.

மாணவர்களுக்கு மிகப்பெரிய அளவில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. சிபிஎஸ்ஈ பாடத்திட்டத்தில் இருந்து மிகக் குறைவான கேள்விகளே கேட்கப்படுகின்றன.  ஐஐடி பாடத்திட்டத்திலிருந்து கேட்கிறான். ஒரு மாணவன் இலட்சக்கணக்கில் செலவழித்துதான் மருத்துவராகப் படிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இப்படி பணம் செலவழித்து வருபவன் எப்படி சேவை மனப்பானமையோடு வேலை பார்க்க முடியும்?” என்று வினவினார்.

அவரது முழு உரையைக் காண ..

பாருங்கள் ! பகிருங்கள் !

வல்லரசு இந்தியாவில் விவசாயம் தேய்வது ஏன் ?

விவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை – பாகம் 1

முன்னுரை

த்திய மாநில அரசுகள் பல்வேறு மக்கள் “நலத்” திட்டங்களை கொண்டுவருகின்றன. அந்தத் திட்டங்களுக்காக விவசாயிகளின் விளைநிலங்கள் விலை கொடுத்து வாங்கப்படுகின்றன. வாங்கிய நிலங்களில் பல்வேறு கார்ப்பரேட் திட்டங்கள் முளைக்கின்றன.

பல ஆயிரம் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வாழ்விழக்கின்றனர். சிலநூறு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஆண்டு இறுதியில் அந்த கார்ப்பரேட்டுகளின் லாபம் நம்மை மலைக்க வைக்கிறது. சில வருடங்களில் அந்த கார்ப்பரேட்டுகளின் பங்குச் சந்தை மதிப்பு பல கோடி வளர்கிறது.

இதை வைத்து “நமது நாடு வளர்கிறது, வல்லரசாகப் போகிறது, உலக அரங்கில் வீறுநடை போடுகிறது” என்று பத்திரிகைகளும் ஊடகங்களும் எழுதுகின்றன.

 

2018 ஜூன் மாதம் அரசின் நில கையகப் படுத்தும் திட்டத்தை எதிர்த்துப் போராடும் ஜார்கண்ட் மக்கள்.

இதற்கிடையில் தேர்தல்கள் வருகின்றன, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம், லஞ்சத்தை ஒழிப்போம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்” என்று வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள் அரசியல்வாதிகள். ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் நிலம் கையகப்படுத்துவது, முதலாளிகளுக்கு வரி தள்ளுபடி செய்வது, வங்கிக் கடன்கள் தருவது, முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது என்று பிசியாகிவிடுகிறார்கள்.

நிலத்தை நம்பி வாழ்ந்து வந்த கோடிக்கணக்கான விவசாயிகளின் நிலை என்ன?
  • “என்ன செய்வது? விவசாயமும் கைகொடுக்கவில்லை, விளைவித்ததற்கு சரியான விலையும் கிடைப்பதில்லை, இயற்கையும் சோதிக்கிறது” என்று நிலத்தை கொடுத்துவிட்டு, “குடும்பத்தில் யாருக்காவது ஒருவருக்காவது வேலை கிடைக்காதா?” என்று காத்துக் கிடந்து ஏமாந்து போகின்றனர், ஒரு பிரிவினர்.
  • “பரம்பரை பரம்பரையாக நாங்கள் உழுது பயிரிட்ட நிலத்தை யாருக்கும் தரமாட்டோம்” என்று போராடி சிறை செல்கின்றனர் இன்னொரு பிரிவினர்.
  • வலுக்கட்டாயமாக கொடுத்தே ஆக வேண்டும் என்று காவல்துறை புடைசூழ பறித்துச் செல்லும் சூழலில் செய்வதறியாது கையறு நிலையில் கண்ணீர்சிந்தி ஆண்டவன் விட்ட வழியென்று வாழ்க்கையை ஓட்டுபவர்களும் உள்ளார்கள்.
நிலங்களை நாசமாக்கதே நெடுவாசல் மக்கள் போராட்டம்.

இதைப் பார்க்கும் அரசு ஊழியர்கள், வியாபாரிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் குடும்பத்திலிருந்து வந்துள்ள ஐ.டி ஊழியர்களுக்கு இந்த சம்பவங்களுக்கு பின்னால் என்ன நடக்கிறது என்று உணர முடிவதில்லை.

“அரசு என்ன ஓசியிலா நிலத்தை வாங்குகிறது? பணம் கொடுக்கிறார்களே, விவசாயமும் நட்டத்தில் தானே உள்ளது, கொடுத்துவிட்டு போக வேண்டியதுதானே?” என்றும் சிலர் நினைக்கிறார்கள்.

“நாட்டின் வளர்ச்சிக்காக என்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மத்திய மாநில அரசுகள் கொண்டு வருகிறார்கள். ஆனால் சில திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள். ஏன் போராடுகிறார்கள்” என்ற கேள்விக்கு விடை தேடும் முன்பே, அதே போன்று அடுத்து ஒரு திட்டம் வந்துவிடுகிறது, அதற்கு எதிரான போராட்டங்கள் துவங்கி விடுகின்றன.

படிக்க :
சிறப்புக் கட்டுரை : விவசாய நெருக்கடிக்குத் தீர்வு எந்தப் பாதையில் ?
நெடுவாசல்-ஹைட்ரோகார்பன் : மோடி அரசு திணிக்கும் கொள்ளிவாய்ப் பிசாசு !

உதாரணமாக தொடர்ச்சியாக நடந்து வரும் பல்வேறு விவசாயிகளின் போராட்டங்களை எடுத்துக் கொள்ளலாம். தஞ்சை டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள், தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள், 8 வழி சாலை திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடக்கின்றன.

அதேநேரம் சிலர்எதற்காக இந்த மக்கள், விவசாயிகள் இந்தத் திட்டங்களை எதிர்க்கிறார்கள் என்பதை ஐ.டி துறையை சார்ந்த நாம் புரிந்து கொள்வது கொஞ்சம் சிரமம்தான். ஒரு பக்கம் விவசாயிகள் சொல்லும் காரணங்களும், மறுபக்கம் அரசுதரப்பு நியாயங்களும் என்று மாறி மாறி நம்மை குழப்பி, எது சரியானது என்ற முடிவுக்கு வரமுடியாமல் உள்ளது.

  • நிவாரணத் தொகை கொடுக்கிறார்களே பிறகு ஏன் எதிர்க்கிறார்கள்?
  • விளை நிலங்களை ஓசியாகவா அரசு கேட்கிறது?
  • விவசாயத்தில் நட்டம் என்று சொல்கிறீர்களே, பிறகு ஏன் எதிர்க்கிறீர்கள்? நிலத்தை கொடுத்தால் என்ன? நாட்டுக்காகத்தானே கேட்கிறது அரசு?

போன்ற வாதங்களை முன் வைக்கிறனர். இவை அனைத்தையும் பற்றி பேசும் பதிவு இது.

*****

வணக்கம்.

நான் ஐ.டி யில் ஒர்க் பண்ணிக்கிட்டு இருக்கேன்; NDLF-ல் உறுப்பினராக இருக்கேன். எனக்கு சில தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு உள்ளது. தொண்டு நிறுவனங்கள் மூலமாக சில நல்ல விஷயங்களை செய்வேன்; தவறுன்னு படக்கூடிய சில விஷயங்களில் இருந்து விலகி இருப்பேன்.

எனவே நான் முழு நேர தொண்டு செய்யும் நபர் அல்ல.

இந்தப் பதிவில் அரசின் செயல் திட்டங்கள், அவற்றின் குறைகள், அதன் விளைவாக நடக்கக் கூடிய குற்றங்கள், அந்தக் குற்றங்களில் சில தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு பற்றி பேசப் போகிறேன்.

திரைகடலோடி தேடிய திரவியம்

ரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர், திருச்சியை சேர்ந்த இரண்டு பேர். இவங்க ஆறு பேரில் நான்கு பேர் விவசாயத்தை ஆதாரமாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

இரண்டு பேர் சமையல், பிளம்பிங், மெக்கானிக் போன்ற தொழில்களை செய்யும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் டிப்ளோமா முடித்தவர்கள்; அனைவரும் 35, 36 வயதை கடந்து, திருமணமாகி குழந்தை உள்ளவர்கள்.

போலி ஏஜென்ட் மூலமாக டூரிஸ்ட் விசாவில் மலேசியாவிற்கு (படம் இணையத்திலிருந்து)

இவர்கள் ஆறு பேரும் போலி ஏஜென்ட் மூலமாக டூரிஸ்ட் விசாவில் மலேசியாவிற்கு அனுப்பப் படுகிறார்கள். இது எப்படி நடக்குதுன்னு பலருக்குத் தெரியும். சுருக்கமா பார்க்கலாம்.

 

“உங்களிடம் ஒரு லட்சம் ரூபாயும் டிராவலுக்கு தனியாக காசும் பெற்றுக் கொண்டு மலேசியா விற்கு அனுப்பி வைப்போம். அங்கு போன பிறகு என்னுடைய நண்பர் வந்து அழைத்துக் கொள்வார். அவர் உங்களுக்கு வேலை வாங்கி தருவார். டூரிஸ்ட் விசா காலாவதி ஆவதற்குள் ஒர்க் பெர்மிட் போட்டு கொடுத்திடுவாங்க” என்று ஏஜென்டு மூலம் உறுதியளித்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இந்த வாக்குறுதிகளை நம்பி அங்கு போன பிறகு, ஒருவர் வந்து அதேபோல் அழைத்துச் செல்கிறார். சொன்ன வேலை வேறு; கொடுத்த வேலை வேறு. 6 மாதங்களாக கொத்தடிமைகளை போல் நடத்தப்படுகிறார்கள். சம்பளம் கிடையாது, தங்குவதற்கு இடமும், சாப்பாடும்தான். உணவும் 3 வேளை தரப்படுவதில்லை; வேலை நேரம் 10 மணி நேரத்திற்கும் மேல். சம்பளம் கேட்டால், வேலை செய்ய முடியாது என்று சொன்னால், “உங்களை கொலை செய்தால் கூட இங்கு கேட்க நாதி இல்லை” என்று மிரட்டப்படுகின்றனர்.

“நீங்கள் எல்லோரும் டூரிஸ்ட் விசாவில் வந்த நாய்கள், நீங்கள் செத்தா கூட அனாதை பொணமாத்தான் இருப்பீர்கள்” என்று மிரட்டப்படுகின்றனர்.

இந்த நிலையில் இருந்த இந்த 6 பேரும் வெவ்வேறு இடங்களிலிருந்து ஓடி வந்து ஒன்று சேர்ந்து அங்குள்ள உலக மனித நேய கழகத்தை அணுகுகிறார்கள். போலீசுக்கு தகவல் தரப்பட்டு சட்ட விரோத நுழைவு, சட்ட விரோத தங்கல் இதற்காக அபராதம் கட்டிவிட்டு, தொண்டு நிறுவனம் மூலமாக குடும்பத்தினருக்கு விபரம் தெரிவிக்கப்பட்டு இந்தியா வரவழைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் சொல்லப்படும் 6 பேரின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை. அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் பேசும்போது, இவர்கள் விவசாய பின்னணியிலிருந்து வந்தவர்கள் என்று தெரிந்தது.

படிக்க :
ஒரு சலவைத் தொழிலாளியின் சிங்கப்பூர் அனுபவம்
சிங்கப்பூர் சிறையில் 120 நாட்கள் !

விவசாயத்திலிருந்து சென்று ஏன் இவ்வாறு இன்னல்களுக்கு ஆளானார்கள் என்று யோசிக்கும்போது தான் இந்த பதிவை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இவர்கள் அரசின் செயல் திட்டத்தின் மூலமாகவோ, அல்லது அரசு சார்ந்த சுயநலவாதிகளின் விளையாட்டாலோ நிலத்தையும், விவசாயம் செய்யும் உரிமையும் இழந்தவர்கள்.

– சரவணன்
(தொடரும்)
நன்றி : new-democrats

உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் | முனைவர் ரமேஷ் உரை

யர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் கடந்த அக்-27 அன்று சென்னையில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியிருந்தனர் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவினர்.

இக்கருத்தரங்கில், ‘’உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள்‘’ என்ற தலைப்பில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக்குழுவின் துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.ரமேஷ் ஆற்றிய உரையின் காணொளி.

  • 85 சதவீத மாணவர்கள் திறமையற்றவர்கள் என்று இந்திய முதலாளிகளின் கூட்டமைப்பு சொல்கிறது.
  • இந்திய கல்வி சந்தையின் ஒட்டுமொத்த மதிப்பு கிட்டத்தட்ட பத்திலிருந்து 12 இலட்சம் கோடி ரூபாய்.
  • ஜியோ பல்கலை கழகத்துக்கு ஒரு செங்க கல்லு கூட கிடையாது. ஆனால், சிறந்த பல்கலைக் கழகமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • இதனுடைய நோக்கங்கள் என்ன? அரசு என்ன செய்ய நினைக்கிறது?
  • ஒட்டுமொத்தமாக கல்வியே கார்ப்பரேட்டுகளின் சூறையாடலுக்கு திறந்துவிடப்பட்டிருக்கிறது. இதனை நாம் கட்டாயம் தடுத்து நிறுத்தியாக வேண்டியிருக்கிறது. இல்லையென்றால், வருங்காலத்தில் இப்போ இருக்கிற கல்வி உரிமை கூட கிடைக்காமல் போய்விடும்.

#SaveUGC, #UGCScrapped, #SaveEducation,

முழுமையான காணொளி!

பாருங்கள்! பகிருங்கள்!!

படிக்க:
கல்வியில் தனியார்மயம் – ஒரு இந்திய வரலாறு! – பேரா அ. கருணானந்தம்
கலெக்டர் ரோகிணியின் தார்மீகக் கோபத்தினால் தலித் சிறுமி படுகொலைக்கு என்ன பயன் ?

மோடிக்கு விருதளிக்காதே ! தென் கொரிய மக்கள் ஆர்ப்பாட்டம் !

“சோல் அமைதி விருது” என்பது மிகவும் புனிதமான விருது, அதைத் தகுதி இல்லாதவர்க்கு வழங்குவதை நாங்கள் ஒரு பொழுதும் அனுமதிக்க மாட்டோம். தற்போழுது தேர்வாகி உள்ள இந்திய பிரதமர் மோதி இந்த விருதுக்கு எந்த விதத்திலும் தகுதி உடையவர் அல்ல’. பிரதமர் மோதி 2002 ல் குஜராத் முதல்வராக இருந்த பொழுது முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தில் அவரது அரசின் பங்கு மோசமானது. அப்பொழுது நடந்த இந்து முஸ்லீம் கலவரத்தில் தான் எதையும் கண்டுகொள்ளாத காரணத்தால் அப்பாவி முஸ்லீம் மக்கள் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்” என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

படிக்க:
வடகொரியா தயாரித்த பயங்கரமான ஆயுதம் ! புகைப்பட ஆதாரங்கள்
தென்கொரியா ஹூண்டாய் தொழிலாளர் போராட்டம் !

மேலும் அவர்கள் பிரதமர் மோதியை கொரியாவின் முன்னாள் அதிபர் சுன்-டூ-வான் அவர்களோடு ஒப்பிட்டு முழக்கமிட்டனர். அதிபர் சுன்-டூ-வான் என்பவர் 1980 ம் ஆண்டில் தான் அதிபராக இருந்த பொழுது நடந்த கொரிய இனப்படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக மோதி அவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது கிட்டத்தட்ட அதிபர் சுன்-டூ-வான் அவர்களுக்கு வழங்கப்படும் விருதைப் போன்றதாகும் என எச்சரித்தனர். அதுமட்டுமில்லாமல் இந்த விருது பிரதமர் மோதிக்கு வழங்கப்பட்டால் அது மற்ற சோல் அமைதி விருது பெற்றவர்களை அவமதிக்கும் செயலாகும், எனவே உடனடியாக இந்த முடிவைப் பரிசீலிக்க வேண்டும்” என்கிறார்கள் அவர்கள்.

நன்றி: முகநூலில் Muralidharan Kasi Viswanathan

கல்வி உரிமை பறிக்கும் மோடி அரசு | சிதம்பரம் கூட்டம் நேரலை | Live Streaming

  • கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும்  – உயர் கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம்!
  • உயர்கல்வி ஆணைய மசோதா 2018 : சிதைக்கப்படும் உயர்கல்வி கனவு!
     தடுக்க என்ன செய்யலாம்?

அரங்கக்கூட்டம்,
நவம்பர் – 1, 2018,
வியாழன் மாலை 5 மணி,
ஸ்ரீ தில்லை கோவிந்தராஜா மண்டபம்,
சிதம்பரம்.

தலைமை
தோழர் மா.மணியரசன்,
செயலாளர், பு.மா.இ.மு., கடலூர் மாவட்டம்.

உறையாற்றுவோர்

தோழர் டி.ஆர்.ஆனந்தமணி,
மாவட்ட துணை அமைப்பாளர்,
முற்போக்கு மாணவர் கழகம்,
கடலூர் மாவட்டம்.

தோழர் ர.வினோத்,
பல்கலைக் கழக பிரதிநிதி,
 இந்திய மாணவர் சங்கம்.

 திரு சி.விஜயகுமார்,
ஆய்வு மாணவர் வரலாற்றுத் துறை,
அண்ணாமலை பல்கலைக் கழகம்,
 சிதம்பரம்.

திரு சி.செந்தில்,
வழக்கறிஞர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
சிதம்பரம்.

திரு S.மணிவாசகம்,
ஆய்வு மாணவர் வரலாற்றுத் துறை,
அண்ணாமலை பல்கலைக் கழகம்,
சிதம்பரம்.

தோழர் த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

தொழில்நுட்ப பிரச்சினை இல்லை என்றால் இந்நிகழ்வு வினவு நேரலையில் ஒளிபரப்பாகும்.

படிக்க:
இனி அம்பானிகள்தான் கல்வியின் அதிபதிகள் – எச்சரிக்கும் பேராசிரியர்கள் !
கலெக்டர் ரோகிணியின் தார்மீகக் கோபத்தினால் தலித் சிறுமி படுகொலைக்கு என்ன பயன் ?

வினவோடு இணைந்திருங்கள்! வினவு செயலியை நண்பர்களுக்கு பரிந்துரையுங்கள்!!


கடலூர் மாவட்டம்,
97888 08110.

அம்மா ! இந்த உலகிலேயே உங்களைப் போல் அழகான பெண்மணியைக் காணமுடியாது !

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 14

ன்றைய பகலும், அந்த நாள் இரவும் மெதுவாகக் கழிந்தன. இதையும் விட மெதுவாக நகர்ந்தது அடுத்த நாள். யாராவது வருவார்கள் என்று அவள் எதிர்பார்த்தாள். யாருமே வரவில்லை. மாலை வந்தது. கருக்கிருளும் சூழ்ந்தது. குளிர் படிந்த மழை பெருமூச்செறிந்து கொண்டே சுவர்களிலும் சலசலத்துப் பெய்தது; புகைக்கூண்டு வழியாக ஊதக்காற்று ஊளையிட்டு அலறிற்று. தரைக்கடியிலே ஏதோ ஓடுவது போலிருந்தது.

மாக்சிம் கார்க்கி
கூரைச் சரிவிலிருந்து மழைத் துளிகள் சொட்டின; அவை சொட்டிச் சொட்டி விழும் ஓசையும், கடிகாரத்தின் பெண்டுல ஓசையும் ஒன்றோடு ஒன்றாய் முழங்கிக் கலந்து ஒலித்தன. அந்த வீடு முழுவதுமே லேசாகத் தலையசைத்து ஆடுவது போலத் தோன்றியது. மனத்திலே கவிந்திருந்த சோக உணர்ச்சியால் சுற்றுப்புறத்தில் இருந்து பழகிப்போன பொருள்கள் அனைத்தும் உயிரற்றனவாகவும், அன்னியமாகவும் தோற்றம் அளித்தன.

ஜன்னல் கதவில் யாரோ தட்டுகின்ற ஓசை கேட்டது. ஒரு தடவை, இரண்டு தடவை. அவளுக்கு அந்த மாதிரி ஓசை பழகிப்போனதுதான், எனவே அவள் அதைக் கேட்டுப் பயப்படுவதில்லை. ஆனால் அன்று அந்த ஓசையைக் கேட்டதும் இதயத்தில் இன்பவேதனை சில்லிட்டுக் குளிர, அவள் துள்ளி எழுந்தாள். தெளிவற்ற நம்பிக்கைகள் அவளை உடனே எழுந்து நிற்கச் செய்தன. தன் தோள் மீது ஒரு போர்வையை இழுத்துப் போட்டுக்கொண்டு அவள் கதவைத் திறந்தாள்.

சமோய்லவ் உள்ளே வந்தான்; அவனைத் தொடர்ந்து இன்னொருவனும் வந்தான். அவன் தன் தொப்பியை நெற்றிவரையிலும் இழுத்துவிட்டிருந்தான் கோட்டுக் காலரை மேல்நோக்கித் திருப்பி மடித்துக் கழுத்தையும் முகத்தையும் மூடியிருந்தான்.

“உங்களை எழுப்பிவிட்டோமா நாங்கள்” என்று வணக்கம் கூடச் சொல்லாமல் கேட்டான் சமோய்லவ் வழக்கத்துக்கு மாறாக. அன்று அவனது குரலில் ஆர்வமும் சோகமும் கலந்து தொனித்தன.

“நான் தூங்கவே இல்லை” என்று பதிலளித்துவிட்டு, அவர்களது பேச்சையே எதிர்நோக்கிக் கொண்டிருந்தாள்.

சமோய்லவின் கூட்டாளி தனது தொப்பியை அகற்றிவிட்டு, கரகரத்துச் சுவாசித்தான், தனது தடித்த கரத்தை நீட்டினான்.

“வணக்கம், அம்மா! என்னைத் தெரியவில்லையா?” என்று ஒரு பழைய நண்பனைப்போல் உரிமையோடு கேட்டான்.

“நீங்களா?” என்று காரணகாரியம் தெரியாது திடீரென எழுந்த உவப்போடு கேட்டாள் பெலகேயா; “‘இகோர் இவானவிச்சா?”

“அவனேதான்!” என்று பதிலளித்துவிட்டு அவன் தேவாலயப் பாடகர்களின் முடியைப் போல் வளர்ந்து இருந்த அவனது நீண்ட மயிர் நிறைந்த தலையைத் தாழ்த்தி வணங்கினான். அவனது முகத்தில் புன்னகை தவழ்ந்தது. அவனது சிறிய சாம்பல் நிறக் கண்கள் தாயைப் பரிவுடன் நோக்கின. அவன் ஒரு தேநீர்ப் பாத்திரத்தைப் போல் உருண்டையாகவும் சிறிதாகவும் தடித்த கழுத்தும் குட்டைக் கைகளும் உடையவனாகவும் இருந்தான். அவனது முகம் பிரகாசித்தது; நெஞ்சுக்குள்ளே ஏதோ கரகரத்து உறுமுவது போல அவன் ஓசையெழும்பச் சுவாசித்தான்.

“நீங்கள் அறைக்குள் போங்கள். நான் உடை மாற்றிக்கொண்டு வருகிறேன்” என்றாள் தாய்.

“நாங்கள் ஒன்று கேட்க வந்திருக்கிறோம்” என்ற அக்கறையோடு சொல்லிக்கொண்டே, புருவங்களுக்கு மேலாக அவளை ஒரு பார்வை பார்த்தான் சமோய்லவ்.

இகோர் இவானவிச் அடுத்த அறைக்குள் சென்று அங்கிருந்தே பேசத் தொடங்கினான்.

“இன்று காலை நிகலாய் இவானவிச் -அவனை உங்களுக்குத் தெரியுமல்லவா- அவன் சிறையிலிருந்து இன்று காலையில் வெளிவந்துவிட்டான், அம்மா..” என்று ஆரம்பித்தான் அவன்.

”அவன் சிறையிலிருந்ததே எனக்குத் தெரியாது” என்றாள் தாய்.

”இரண்டு மாதமும் பதினொரு நாளும் ஆகிறது. அவன் அங்கே அந்த ஹாஹோலைப் பார்த்தானாம். ஹஹோல் உங்களுக்குத் தன் வந்தனத்தைத் தெரிவிக்கச் சொன்னானாம். பாவெலும் சொல்லியனுப்பியிருக்கிறான். நீங்கள் வீணாகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாதென்று சொல்லியிருக்கிறான். அவன் தேர்ந்தெடுத்த மார்க்கத்தை வேறு யார் யார் தேர்ந்தெடுத்தாலும் அவர்களுக்குச் சிறையிலே சில காலம் ஓய்வு பெறும் ஆனந்தம் கிட்டும் என்பதையும் அவன் உங்களிடம் சொல்லச் சொல்லியிருக்கிறான். நம்முடைய முதலாளிகளின் தயவால் ஆனந்தம் கிட்டுவது நிச்சயமாம்! சரி நான் வந்த விஷயத்தைக் கவனிக்கிறேன். அம்மா. நேற்று மொத்தம் எத்தனை பேரைக் கைது செய்தார்கள், தெரியுமா?’

“ஏன்? பாவெலைத் தவிர, வேறு யாராவது உண்டா?” என்று கேட்டாள் தாய்.

“அவன் நாற்பத்தொன்பதாவது நபர் என்று அமைதியாய்க் குறுக்கிட்டுப் பேசினான் இகோர் இவானவிச், “தொழிற்சாலை நிர்வாகம் இன்னும் குறைந்த பட்சம் ஒரு டஜன் ஆட்களையாவது உள்ளே தள்ளும்! இதோ இந்த இளைஞனைக்கூட!”

“ஆமாம். என்னைக் கூடத்தான்” என்று சோர்ந்து போய்ச் சொன்னான் சமோய்லவ்.

பெலகேயாவுக்கு என்ன காரணத்தாலோ முன்னைவிடச் சுலபமாகச் சுவாசிக்க முடிந்தது.

‘நல்ல வேளை. அவன் மட்டும் அங்குத் தனியாகத் தவிக்க மாட்டான்” என்ற எண்ணம் அவள் மனத்தில் மின்னிட்டு மறைந்தது.

உடை உடுத்தி முடிந்தவுடன், அவர்களோடு கலந்துகொண்டாள் அவள்.

“இத்தனை பேரைக் கொண்டு போனால், அவர்களை அதிக நாள் உள்ளே வைத்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.”

”நீங்கள் சொல்வது ரொம்ப சரி” என்றான் இகோர் இவான்விச். “இந்த மாதிரியாக அவர்கள் கெடுபிடி செய்வதை மட்டும் நாம் தகர்த்துவிட்டால், அப்புறம் அவர்கள் தங்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு ஓட வேண்டியதுதான், ஆமாம். நாம் மாத்திரம் துண்டுப் பிரசுரங்களை வினியோகிப்பதை நிறுத்திவிட்டால், போலீஸ்காரர்கள் இதுதான் சாக்கு என்று பாவெலையும் அவனோடு சிறையில் தவிக்கும் தோழர்களையும் தாக்க முனைவார்கள்.”

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று பதறிப்போய்க் கேட்டாள் தாய்.

பாவெல் சிறைக்குள்ளே கிடந்தாலும், அவன் கை சிறைக்கு வெளியிலும் நீண்டு சென்று வேலை செய்யும் என்பதை அவர்கள் உணரட்டும், பார்க்கட்டும்!”

”சின்ன விஷயம் தான்!” என்று பதிலளித்தான் இகோர் இவானவிச். “சமயங்களில் போலீஸ்காரர்கள்கூட தர்க்க ரீதியாகச் சிந்திக்கிறார்கள். நீங்களே நினைத்துப் பாருங்களேன். பாவெல் இருந்தான் – துண்டுப் பிரசுரங்களும் அறிக்கைகளும் பரவிக் கொண்டிருந்தன. பாவெல் இல்லை – துண்டுப் பிரசுரமும் அறிக்கைகளும் இல்லை. எனவே அவன்தான் அவற்றைப் பரப்பினான், இல்லையா? அவர்கள் ஒவ்வொருவரையும் கடித்துக் குதறித் தீர்க்க முனைவார்கள். போலீஸ்காரர்கள் ஒருவனைச் சின்னாபின்னாமாக்குவதென்றால், அந்த மனிதன் இருந்த இடம் தெரியாமல் செய்துவிடுவார்கள். அதுதான் அவர்கள் வழக்கம்.”

”எனக்குப் புரிகிறது” என்று துக்கம் தோய்ந்த குரலில் சொன்னாள் தாய், “அட கடவுளே! நாம் இப்போது என்ன செய்வது?”

”அவர்கள் அநேகமாக எல்லாரையுமே பிடித்துவிட்டார்கள். அவர்கள் நாசமாய்ப் போக!” என்று சமையலறையிலிருந்து சமோய்லாவின் குரல் ஒலித்தது. “நாம் நமது வேலையைத் தொடர்ந்து நடத்த வேண்டியதுதான். இது நாம் கை கொண்டுள்ள லட்சியத்துக்காக மட்டும் அல்ல; நமது தோழர்களைக் காப்பாற்றுவதற்கும் கூடத்தான்.”

”ஆனால் வேலை செய்வதற்குத்தான் ஆளில்லை” என்று சிறு சிரிப்புடன் கூறினான் இகோர். “என்னிடம் அருமையான முதல் தரமான பிரசுரங்கள் எல்லாம் இருக்கின்றன; எல்லாம் என் கைப்பட எழுதியவை. ஆனால் அவற்றை எப்படித் தொழிற்சாலைக்குள்ளே கொண்டு செல்வது – அதுதான் இன்னும் தீராத பிரச்சினை?”

”அவர்கள் தொழிற்சாலை வாசலில் ஒவ்வொருவரையும் சோதனை போட்டுத்தான் உள்ளே விடுகிறார்கள்” என்றான் சமோய்லவ்.

அவர்கள் தன்னிடமிருந்து ஏதோ பதிலை எதிர்பார்ப்பதாகத் தாய்க்குத் தோன்றியது.

“எப்படி இதைச் செய்ய முடியும்? எப்படிச் செய்வது?” என்று ஆத்திரத்தோடு கேட்டாள் அவள்.

சமோய்லவ் வாசல் நடைக்கு வந்தான்.

“பெலகேயா நீலவ்னா, உணவு விற்கிறாளே, மரியா கோர்சுனவா அவளை உங்களுக்குத் தெரியும் அல்லவா?”

“ஆமாம். அதற்கென்ன?”

“அவளோடு பேசிப்பாருங்கள். ஒருவேளை அவள் அவற்றை உள்ளே கொண்டு போகக்கூடும்.”

ஒப்புக்கொள்ளாத பாவனையில் தாய் தலையை ஆட்டினாள்.

”இல்லையில்லை. அவள் ஒரு வாயாடி, அவள் அந்தப் பிரசுரங்களை என்னிடமிருந்துதான் பெற்றாள் என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டால் அந்தப் பிரசுரங்கள் இந்த வீட்டிலிருந்துதான் வந்தன என்பது தெரிய நேர்ந்தால் அது முடியவே முடியாது!”

பிறகு அவள் திடீரென்று ஏற்பட்ட உணர்ச்சி பரவசத்தோடு பேசினாள்.

”அவற்றை என்னிடம் கொடுங்கள். கொடுங்கள் என்னிடம்; நான் பார்த்துக்கொள்கிறேன். நான் ஒரு வழி செய்கிறேன் மரியாவை என்னை ஒரு கையாள் மாதிரிக் கூட்டிக் கொண்டு போகும்படி கேட்கிறேன். எனக்கும் பிழைப்புக்கு ஒரு வழி வேண்டும் அல்லவா? எனவே நானும் தொழிற்சாலையில் சாப்பாடு விற்கச் செல்கிறேன். அப்போது நான் சமாளித்துக்கொள்கிறேன்.”

தாய் புன்னகை செய்தாள். தொழிற்சாலைக்குள் துண்டுப் பிரசுரங்கள் பரவி வருவதை நிர்வாகஸ்தர்கள் கண்டால் அவர்கள் தன் மகனை மட்டும் குறைகூறிக்கொண்டிருக்க முடியாது என்பதை அவள் தெளிவாக உணர்ந்தாள்.

அவள் தன் கைகளை மார்போடு அணைத்துக்கொண்டு துடிதுடிப்போடு அவர்களுக்கு நம்பிக்கையூட்டினாள். எல்லாவற்றையும் தான் திறமையோடு, எவரும் காணாமல் செய்து முடிப்பதாகக் கூறினாள். முடிவாக அவள் ஒரே பரவசத்தோடு சொன்னாள்.

பாவெல் சிறைக்குள்ளே கிடந்தாலும், அவன் கை சிறைக்கு வெளியிலும் நீண்டு சென்று வேலை செய்யும் என்பதை அவர்கள் உணரட்டும், பார்க்கட்டும்!”

அவர்கள் மூவரும் தெம்பு பெற்று எழுந்தார்கள். இகோர் தனது இரு கைகளையும் பிசைந்து கொண்டு, புன்னகை செய்தவாறே சொன்னான்.

”அற்புதம்! அபாரம்! உங்கள் யோசனை எவ்வளவு மகத்தானது என்பது உங்களுக்கே தெரியாது! பிரமாதத்திலும் பிரமாதம்!’

”இந்தத் திட்டம் மட்டும் வெற்றிகரமாக நடந்தேறினால், நான் நிம்மதியாகத் தூங்கச் செல்வது போல், சிறைக்குள் தயங்காமல் செல்வேன்” என்று சமோய்லவும் கைகளைப் பிசைந்தவாறே சொன்னான்.

“அம்மா! இந்த உலகிலேயே உங்களைப்போல் அழகான பெண்மணியைக் காணமுடியாது” என்று கரகரத்துக் கத்தினான் இகோர்.

தாய் புன்னகை செய்தாள். தொழிற்சாலைக்குள் துண்டுப் பிரசுரங்கள் பரவி வருவதை நிர்வாகஸ்தர்கள் கண்டால் அவர்கள் தன் மகனை மட்டும் குறைகூறிக்கொண்டிருக்க முடியாது என்பதை அவள் தெளிவாக உணர்ந்தாள். தான் எடுத்துக்கொண்ட வேலையைத் தன்னால் சாமர்த்தியமாக நிறைவேற்றிவிட முடியும் என்று அவள் நம்பினாள்; அந்த நம்பிக்கையினால் ஏற்பட்ட உவகை அவளது உடல் முழுவதையுமே புல்லரிக்கச் செய்தது.

“நீங்கள் சிறைக்குப் போனால், பாவெலைச் சந்தித்து அவனுக்கு ஒரு அருமையான தாய் இருக்கிறாள் என்ற செய்தியைச் சொல்லுங்கள்” என்றான் இகோர்.

“அவனைப் பார்ப்பதுதான் என் முதல் வேலை” என்று சிரித்துக்கொண்டே சொன்னான் சமோய்லவ்.

“செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் நானே செய்கிறேன் என்பதையும் அவனிடம் சொல்லுங்கள், அவனுக்கும் அது தெரிந்திருக்கட்டும்” என்றாள் தாய்.

“அவர்கள் சமோய்லவைச் சிறைக்கு அனுப்பாவிட்டால்?” என்று கேட்டான் இகோர்.

”அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?” என்றாள் தாய்.

அவர்கள் இருவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள். அவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட தாய் தன் பேச்சின் தவறை உணர்ந்து அதை மழுப்புவதற்காகத் தானும் சிரித்துக்கொண்டாள்.

படிக்க:
மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய காதல் கடிதம் !
சோவியத் ரஷ்யாவில் முஸ்லீம்கள் – நூல் அறிமுகம்

“உங்கள் தொல்லைகளையே நீங்கள் கவனிப்பதால், ஊரார் தொல்லைகளை உங்களால் கவனிக்க முடியவில்லை” என்று கண்களைத் தாழ்த்திக்கொண்டு சொன்னாள் அவள்.

”அது இயற்கைதானே” என்று ஆரம்பித்தான் இகோர்: “நீங்கள் மாத்திரம் பாவெலையே எண்ணி எண்ணி வருத்தப்பட்டு மறுக்கவில்லையா? அவன் சிறையிலிருந்து வரும் போது கொஞ்சம் தேறிக்கூட வருவான். அங்கே நல்ல ஓய்வு கிடைக்கிறது. படிப்பதற்கு அவகாசமும் உண்டு. ஆனால் நம்மை மாதிரி ஆட்கள் வெளியில் இருந்தால் இந்த இரண்டு காரியத்துக்கும் நமக்கு இங்கு நேரமே கிடைப்பதில்லை. நான் மூன்று முறை சிறைக்குப் போயிருக்கிறேன். ஒவ்வொரு முறையிலும் என் இதயமும் சிந்தையும் எவ்வளவோ பயனடைந்திருக்கின்றன. அந்த அனுபவம் இன்ப அனுபவமாக இல்லாவிட்டாலும், பலன் என்னவோ நல்ல பலன் தான்!”

“நீங்கள் மூச்சு விடுவதற்கே திணறுகிறீர்களே!’ என்று அவனது எளிய முகத்தை அன்பு ததும்பப் பார்த்தவாறே கேட்டாள் தாய்.

”அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது” என்று ஒரு விரலை உயர்த்திக் காட்டிக்கொண்டே சொன்னான் அவன். “சரி, எல்லாம் ஒரு வழியாய் முடிந்தது என்றே நினைக்கிறேன் இல்லையா, அம்மா? நாளைக்கு உங்களிடம் அந்தச் சரக்குகள் வந்து சேரும். அப்புறம், யுகாந்திர இருளை அறுத்தெறியும் ரம்பம் மீண்டும் சுழலத் துவங்கும். பேச்சுச் சுதந்திரம் நீடூழி வாழ்க! தாயின் இதயம் நீடூழி வாழ்க நான் வருகிறேன். நாம் மீண்டும் சந்திப்போம்!”

”வருகிறேன்” என்று அவளது கையைப் பிடித்துக் குலுக்கிக் கொண்டே சொன்னான் சமோய்லவ். “என் தாயிடம் இந்த மாதிரி விஷயங்களை என்னால் சொல்லக்கூட முடியாது.”

”அவர்கள் எல்லாரும் ஒரு நாள் இதை உணரத்தான் போகிறார்கள்” என்று அவனை உற்சாகப்படுத்தும் முறையில் பேசினாள் பெலகேயா.

அவர்கள் சென்றவுடன் அவள் கதவைத் தாளிட்டாள்; அறைக்கு நடுவில் வந்து முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்தாள். வெளியே பெய்யும் மழையின் ஒலியையே சுருதியாகக் கொண்டு அவள் பிரார்த்தனையில் ஈடுபட்டாள். அப்பிரார்த்தனையில் வார்த்தைகள் இல்லை. அவளது வாழ்க்கையிலே பாவெல் புகுத்திவிட்ட மக்களைப் பற்றிய ஒரு பெரும் சிந்தனையே பிரார்த்தனையாயிற்று. அவளுக்கு எதிராக உள்ள தெய்வ விக்ரகங்களுக்கும் அவளுக்கும் இடையில் அந்த மக்கள் நகர்ந்து செல்வதாகப்பட்டது. அந்த மனிதர்கள் விசித்திரமாக ஒருவருக்கொருவர் நெருங்கியவர்களாக, ஆனால் தனியர்களாக இருந்தார்கள்.

அதிகாலையிலேயே அவள் மரியா கோர்சுனவாவைப் பார்க்கக் கிளம்பிப் போனாள்,

அந்தச் சாப்பாட்டுக்காரி வழக்கம் போல் ஒரே ஆரவாரத்தோடு அன்போடு தாயை வரவேற்றாள்.

முன்னேயெல்லாம் திருடினான் என்பதற்காக மனிதர்களைச் சிறையில் தள்ளினார்கள். இப்போதோ நியாயத்தை எடுத்துச் சொன்னால் உள்ளே போடுகிறார்கள். பாவெல் பெரிதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை. எல்லோருக்காகவும் அவன் கிளர்ந்தெழுந்தான்.

”வருத்தமாயிருக்கிறாயா?” என்று தனது எண்ணெய்க் கையால் தாயின் தோளைத் தட்டிக்கொண்டே கேட்டாள். “வருத்தப்படாதே. அவர்கள் அவனைப் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். இல்லையா? போனால் போகட்டும்! அது ஒன்றும் வெட்கப் படுவதற்குரிய விஷயமில்லை. முன்னேயெல்லாம் திருடினான் என்பதற்காக மனிதர்களைச் சிறையில் தள்ளினார்கள். இப்போதோ நியாயத்தை எடுத்துச் சொன்னால் உள்ளே போடுகிறார்கள். பாவெல் பெரிதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை. எல்லோருக்காகவும் அவன் கிளர்ந்தெழுந்தான். அனைவரும் அவனைப் புரிந்து கொள்கிறார்கள். அதனால் நீ அதை நினைத்து வருத்தப்படாதே. எல்லாரும் பேசுவதில்லை, ஆனால் நல்லவர் யார் என்று அனைவருக்கும் தெரிகிறது. நானே உன்னைப் பார்க்க வரவேண்டுமென்றிருந்தேன். ஆனால் நேரமே கிடைக்கவில்லை. சமையல் செய்வதற்கும் சாப்பாடு விற்பதற்குமே நாள் முழுதும் சரியாய்ப் போய்விடுகிறது. ஆனால் உனக்கு நன்றாகத் தெரியும் என்னதான் உழைத்தாலும், நான் என்னமோ பிச்சைக்காரியாய்த் தான் சாகப்போகிறேன். என் காதலர்களே என்னைத் தின்று தீர்த்துவிடுவார்கள். இங்கே கண்டால் இங்கே, அங்கே கண்டால் அங்கே – எங்கேயும் அவர்கள் என்னைப் பாச்சை மாதிரி பிய்த்துத்தான் பிடுங்குகிறார்கள். அப்படியும் இப்படியுமாய் நான் பத்து ரூபிளை வாயைக்கட்டி வயிற்றைக் கட்டுச் சேர்த்து வைத்திருந்தால், எவனாவது ஒரு துடைகாலி வந்து, அதையும் பிடுங்கி வாயில் போட்டுக்கொண்டு போய்விடுகிறான். பெண்ணாகப் பிறந்தாலே இந்தப் பிழைப்புத்தான். ஊம். என்ன கழிசடைப் பிழைப்பு! தனியாய் வாழ்வது சங்கடமாயிருக்கிறது; எவன் கூடவாவது வாழ்வது அதைவிடத் தொல்லையாயிருக்கிறது!”

“நான் உன்னிடம் ஒரு காரியமாக வந்தேன். நீ என்னை ஒரு கையாளாக அமர்த்திக்கொள்கிறாயா?” என்று மரியாவின் வாயளப்பிற்கிடையே குறுக்கிட்டுப் பேசினாள் தாய்.

“அது எப்படி?” என்றாள் மரியா. பெலகேயா விளக்கிச் சொன்னாள், மரியா தலையை அசைத்தாள்.

“நிச்சயமாய்” என்றாள் அவள். ”என் புருஷன் கண்ணிலே படாமல் நீ என்னை எப்படி மறைத்து வைத்திருந்தாய் என்பது நினைவிருக்கிறதா? சரி, இப்போது பசிக்குத் தெரியாமல் உன்னை நான் மறைத்து வைக்கிறேன். உன் மகன் எல்லாருடைய நன்மைக்காகவும் பாடுபட்டான். எனவே எல்லாரும் உனக்கு உதவத்தான் வேண்டும். அவன் ஓர் அருமையான பையன். எல்லாரும் அப்படித்தான் சொல்கிறார்கள், அவனுக்காக இரங்குகிறார்கள். இந்த மாதிரிக் கைது செய்து கொண்டே போவதால், முதலாளிகளுக்கு எந்த லாபமும் வரப்போவதில்லை. அதுமட்டும் நிச்சயம். தொழிற்சாலையில் என்ன நடக்கிறது என்பதை நீயே கவனித்துப்பார். எல்லாரும் உம்மென்று முறைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த முதலாளிகள் இருக்கிறார்களே, அவர்கள் என்ன நினைக்கிறார்கள், தெரியுமா? ஒரு மனிதனின் காலில் ஓங்கியடித்துவிட்டால், அவன் ஓடாமல் நின்றுவிடுவான் என்று பார்க்கிறார்கள். ஆனால் உண்மையில் பத்துப்பேரை அடித்தால், நூறு பேர் முறைத்துக்கொள்கிறார்கள்!”

இவர்களது உரையாடலின் பயனாக மறுநாள் முதற்கொண்டு தாய் தொழிற்சாலையில் மத்தியான வேளையில் இருந்தாள். மரியா தந்த இரண்டு கூடைச் சாப்பாட்டோடும் நின்றுகொண்டிருந்தாள். மரியாவோ சந்தைக்கு வியாபாரம் செய்யப் போய்விட்டாள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

#Metoo : இந்தியாவில் மீ டூ இயக்கத்தின் விளைவு என்ன ? ஒரு முழுமையான அறிக்கை !

ந்தியாவில் மீ டூ இயக்கம் கடந்த மூன்று வாரங்களாக பேசுபொருளாகியிருக்கிறது. இதுவரை பேசத்துணியாத பல துறைகளைச் சேர்ந்த பெண்கள் கூட்டுக்குரலாக பணியிடங்களில் ஆண்களால் எதிர்க்கொண்ட ஒடுக்குமுறை, பாலியல் வன்முறைகளைப் பேசினர். இதில் மோடி அரசில் பங்குபெற்றிருந்த அமைச்சர் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டும் அடக்கம்.

பாதிக்கப்பட்ட பெண்களின் அனுபவ பகிர்வுகளிலிருந்து அவர்கள் மிகுந்த சிரமங்களுக்கிடையேதான் பணியாற்றி வந்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. இந்த இயக்கம் பெண் பணியாளர்களின் உரிமைகள் குறித்த உரையாடலை உண்டாக்கியது. ஒடுக்குமுறை, வன்முறையற்ற, பாதுகாப்பான பணியிடத்தை பெண் பணியாளர்களுக்கு உருவாக்கித்தர வேண்டும் என்கிற பேச்சுக்களையும் அது உருவாக்கியது. சட்ட ரீதியாக அணுகுவது உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெறுவது குறித்தும் பேசப்பட்டது. இன்னொரு பக்கம், பெயர் சொல்லப்படாமல் வெளிவரும் புகார்களை கையாள்வது எப்படி எனவும் பேசினார்கள். தலித், ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களின் குரல்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள்.

எம்.ஜே.அக்பர்

இந்த இயக்கத்தின் மிகப் பெரிய வெளிப்பாடாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பரின் பதவி விலகலைச் சொல்லலாம். 1980-களிலிருந்து 1990-களின் தொடக்கம் வரை 16-க்கும் மேற்பட்ட பெண்கள் எம்.ஜே. அக்பர் மீது பாலியல் வன்கொடுமை குற்றம்சாட்டினர்.  பாஜகவில் இணையும் முன் டெல்லியில் பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது நடந்த சம்பவங்கள் இவை.  முதன்முதலில் இவர் பெயரைச் சொன்ன பத்திரிகையாளர் ப்ரியா ரமானி மீது இவர்  அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

மீ டூ இயக்கம் செப்டம்பர் 25-ஆம் தேதி வேகமெடுத்தது. பாலிவுட் நடிகர் தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா பட்டேகர் மீது பாலியல் வன்கொடுமை புகார் சொன்னார். இந்த சம்பவம் 10 ஆண்டுகளுக்கு முன் படப்பிடிப்பு தளத்தில் நடந்ததாக அவர் கூறினார். அதன்பின், அக்டோபர் 4-ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த மஹிமா குக்ரேஜா என்ற இளம் நகைச்சுவை நடிகர், தன் சக நகைச்சுவை நடிகரான உத்சவ் சக்ரவர்த்தி மீது பாலியல் ஒடுக்குமுறை கூறினார். உத்சவ் மீது மேலும் ஒரு பெண் குற்றம்சாட்டினார். அடுத்த நாள் பெங்களூருவைச் சேர்ந்த பகுதி நேர பத்திரிகையாளர் சந்தியா மேனன், மூன்று வெவ்வேறு பத்திரிகைகளில் தனக்கு நேர்ந்த பாலியல் ஒடுக்குமுறைகள் குறித்து எழுதினார். த வயரில் பணியாற்றும் அனு பூயான், வேறொரு பத்திரிகையில் தனக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அரசியல், ஊடகம், பொழுதுபோக்கு, கலை, சட்டம், விளையாட்டு, கல்வி, தொழில்துறை உள்ளிட்ட 14 துறைகளைச் சார்ந்த வெளியான மீ டூ குற்றச்சாட்டுக்களின் தொகுப்பு இங்கே…

பத்திரிகை துறையில் மீ டூ !

மீ டூ இயக்கத்தின் வாயிலாக வெளியான பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுக்களின் காரணமாக இந்தியாவின் மிகப்பெரிய, பழமையான ஆங்கில செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை இழந்துள்ளனர். அதோடு, பலர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு, நிறுவனத்துக்குள்ளே அல்லது வெளியே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

டி.என்.ஏ-வின் முன்னாள் ஆசிரியரும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஆசிரியராக பணியாற்றியவருமான கவுதம் அதிகாரி, US think-tank Centre for American Progress (CAP) என்ற அமைப்பிலிருந்து வெளியேறினார். இவர் மீது மூன்று பெண்கள், விருப்பத்துக்கு மாறாக வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தார் என குற்றம் சாட்டியிருந்தனர்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஹைதராபாத் பதிப்பின் ஆசிரியரான கே. ஆர். ஸ்ரீனிவாஸ் மீது பத்திரிகையாளர் சந்தியா மேனன் உள்ளிட்ட ஆறு பெண்கள்  அவருடைய தலைமையகத்தில் புகார் அனுப்பினர்.

த வயரில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீது, நிஷ்தா ஜெயின் என்ற திரை இயக்குநர் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் வினோத் துவாவின் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நிஷ்தா ஜெயின் அளித்த புகாரை விசாரிக்க தனி குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்ட பத்திரிகையாளர்கள் பிரசாந்த் ஜா (வலது மேல்), மாயங்க் ஜெயின் (இடது மேல்), கே.ஆர்.ஸ்ரீனிவாஸ் (இடது கீழ்), அனுராக் வர்மா (வலது கீழ்), கவுதம் அதிகாரி (நடுவில்)

ஹிந்துஸ்தான் டைம்ஸின் மூத்த பத்திரிகையாளர் பிரசாந்த் ஜா தன்னுடைய பதவியை விட்டு விலகினார். இவர் மீது வழக்கறிஞராக உள்ள அவந்திகா மேத்தா புகார் கூறியிருந்தார். இவர்கள் இருவருக்கிடையே நடந்த குறுஞ்செய்தி பறிமாற்றங்கள் பொதுவெளியில் வெளியானபோது,  தார்மீக அறத்தின் அடிப்படையில் பதவி விலகுவதாக பிரசாந்த் ஜா அப்போது கூறினார்.

பிஸினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகையின் நிருபர் மானக் ஜெயின் மீது தனது மறுப்பை தெரிவித்த போதும் பாலியல் உறவுக்கு அழைத்ததாக த வயரின் அனு பூயான் குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். இதனால் மானக் ஜெயின் பதவி விலகினார்.

தி இந்துவின் கவுரிதாசன் நாயர், யாமினி நாயர் மற்றும் சிலர் பாலியல் ரீதியாக தவறாக நடந்ததாக குற்றம் சாட்டியிருந்தனர். இதனால் இவரை அலுவலக விடுப்பில் அனுப்பியது தி இந்து.

என்டிடீவி தன்னுடைய பணியாளர் ஒருவருக்கு எதிரான பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டை விசாரிப்பதாக உறுதியளித்தது.

ஹஃபிங்டன் போஸ்ட் தன்னுடைய முன்னாள் பணியாளர்கள் அனுராக் வர்மா, உத்சவ் சக்ரவர்த்தி மீதான புகார்களை விசாரிக்க உள்விசாரணைக்குழு அமைத்திருப்பதாக கூறியது.

படிக்க :
நாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் ?
மீ டூ : நாம் யார் பக்கம் நிற்பது ? வில்லவன்

க்விண்ட் இணையதளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர், தன் சக பெண் பத்திரிகையாளரிடம் முறை தவறி நடந்து கொண்டதற்காக மன்னிப்புக் கேட்டார். மேக்நாத் போஸ் என்ற பத்திரிகையாளர் மீது ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் கல்லூரியில் உடன் படித்த பெண் அளித்த பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டின் காரணமாக நிர்வாக விடுப்பில் அனுப்பப்பட்டார்.

நியூஸ் லாண்ட்ரி இணையத்தளத்தில் பணியாற்றும் அலுவலர் மீது எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க உள் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலர்கள் பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுக்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர். டைம்ஸ் ஆஃப் இந்தியா மீ டூ குற்றச்சாட்டுக்களை முக்கியத்துவம் கொடுத்து கவனிப்பதாக அறிக்கை வெளியிட்டது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் பணியிடங்களில் பாலியல் ஒடுக்குமுறை குறித்த சிறப்பு பயிற்சி பட்டறைகளை நடத்துவதாக அறிவித்தது.

டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள். எடிட்டர்ஸ் கில்டு செய்தியறைகளில் நடக்கும் பாலியல் ஒடுக்குமுறை குறித்து அறிக்கை வெளியிட்டது.

மும்பை பத்திரிகையாளர் மன்றமும் ஊடக பெண்கள் நெட்வொர்க்கும் இணைந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிப்பதாக அளிக்கை வெளியிட்டன. பாலியல் ஒடுக்குமுறை தொடர்பான சட்டங்கள் குறித்த விவாதம் ஒன்றையும் நடத்தின.  இந்திய பத்திரிகையாளர் மன்றம், பெண் பத்திரிகையாளர் அமைப்பு, தெற்காசிய பெண் ஊடவியலாளர்கள் அமைப்பு ஆகியவை இணைந்து பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிரான சட்டங்கள் பணியிடங்களில் அமல்படுத்தப் படாததற்கு கண்டனம் தெரிவித்தன.

ஃபர்ஸ்போஸ்ட் இணையதளம் மீடூ உரையாடல் என்ற பெயரில் மீ டூ இயக்கத்தில் வெளியான பாலியல் ஒடுக்குமுறைகள் குறித்த நிகழ்ச்சியொன்றை நடத்தி வருகிறது.  இந்திய செய்தி அறைகளில் நடக்கும் பாலியல் ஒடுக்குமுறைகள் குறித்த சர்வே ஒன்றை நடத்திக்கொண்டிருக்கிறது ஊடக பெண்கள் நெட்வொர்க்.

அடித்தளத்தில் பணியாற்றும் பெண் பத்திரிகையாளர்களின் ‘கபார் லஹரியா’ என்ற அமைப்பைச் சேர்ந்த பெண் நிருபர்கள் பிந்தங்கிய, கிராமப்புறங்களில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படையாக எழுதியிருந்தனர்.

இப்போது ஏற்பட்டுக்கொண்டிருக்கும் விழிப்புணர்வு காரணமாக  போர்னோ வீடியோக்கள், பாலியல் நகைச்சுவை துணுக்குகள் அனுப்பிக்கொண்டிருந்த ஆண்கள், அதை நிறுத்தியிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

அரசியலில் மீ டூ !

ஏசியன் ஏஜ் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த எம்.ஜே. அக்பர் மீது இதுவரை 16 பெண்கள் பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுக்களை சொல்லியிருக்கிறார்கள். வெளியுறவுத் துறை இணை அமைச்சராக இருந்த அவர், இந்த குற்றச்சாட்டுக்களின் காரணமாக ராஜினாமா செய்தார்.  பத்திரிகையாளர் ப்ரியா ரமானி மீது அக்பர் தொடுத்திருக்கும் அவதூறு வழக்கை திரும்பப் பெற எடிட்டர் கில்டு கோரியிருந்தது.

மிண்ட் பத்திரிகையின் வாராந்திர இணைப்பான லாங்க்’ இல் ப்ரியா ரமானி பத்தி எழுதிவருகிறார். ப்ரியாவுக்கு தங்களுடைய ஆதரவை தரும் பொருட்டு, பத்தி எதுவும் வெளியிடாமல் அந்த இடத்தில் ‘நாங்கள் ப்ரியாவுடன் இருக்கிறோம்’ என்ற ஹேஷ் டேக் மட்டும் பிரசுரித்திருந்தது மிண்ட்.

பத்திரிகையாளர் அமைப்புகள் அனைத்தும் அமைச்சருக்கு எதிராக நின்றன. மணி கண்ட்ரோல் என்ற இணையதளத்தின் ஆசிரியர் சுசித்தா தலால் மற்றும் பத்திரிகையாளர் ஹரீந்தர் பவேஜா ஆகியோர் ப்ரியாவின் வழக்கு செலவுகளுக்காக நிதி திரட்டி தருவதாக அறிவித்தனர்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அக்பரின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பா விட்டாலும் பாலியல் ஒடுக்குமுறைகளை குறித்து பேசும் பெண்களின் மன உறுதியை பாராட்டினார். அதே சமயம் பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் மீ டூ இயக்கம் வக்கிரபுத்தி உள்ளவர்களின் செயல்பாடு என்றார்.

பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் மீ டூ இயக்கம் வக்கிரபுத்தி உள்ளவர்களின் செயல்பாடு என்றார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி, இந்த இயக்கத்தை அதரித்தார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அரசு பாலியல் ஒடுக்கு முறைகளை எதிர்க்கொள்ள  சட்ட மற்றும் அமைப்பு ரீதியிலான குழு ஒன்றை அமைத்தது. மேனகா காந்தி  பாலியல் ஒடுக்குமுறையில்லாத பணியிடத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுக்களை விசாரிக்க மூத்த நீதிபதி மற்றும் சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். ஊடக நிறுவனங்கள் மற்றும் மாநில, தேசிய கட்சிகள் பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுக்களை விசாரிக்க உள்விசாரணைக்குழு அமைக்க வேண்டும் எனவும் கோரினார்.

தேசிய பெண்கள் ஆணையம் பணியிடத்தில் பாலியல் ஒடுக்குமுறை குறித்து விசாரிக்க சிறப்பு மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டது. மின்னணு புகார் பெட்டி ஒன்றை அமைத்ததோடு, புகார் பதியப்பட்டவுடன் தொடர்புள்ள துறைக்கு அந்த புகாரை தானாகவே அனுப்பும் முறையையும் அறிமுகப்படுத்தியது.

டெல்லி பெண்கள் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால், பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டவர்களை விசாரிக்க தனி விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதோடு டெல்லி பெண்கள் ஆணையமும் மீ டூ புகார்களை அளிக்க தனி மின்னஞ்சல் முகவரியை ஏற்படுத்தியது.

அரசியல் தலைவர்கள் பலர் மீ டூ இயக்கத்தை பொதுப்படையாக ஆதரித்தாலும் வழக்கம்போல மோடி தனது வாயைத் திறக்கவில்லை. பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற வக்கிர புத்தி கொண்ட அரசியல்வாதிகள், பாதிக்கப்பட்ட பெண்களை வக்கிரபுத்தி படைத்தவர்கள் என குற்றமசாட்டினார்கள்.

அரசியல் தலைவர்கள் பலர் மீ டூ இயக்கத்தை பொதுப்படையாக ஆதரித்தாலும் வழக்கம்போல மோடி தனது வாயைத் திறக்கவில்லை.

இளைஞர் காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஃபெரோஸ் கான் என்பவர் பதவி விலகினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சச்சின் பைலட், சல்மான் குர்ஷித், விவேக் தன்ஹா, கபில் சிபல், ஸ்ரீனிவாஸ் பி.வி., சசி தரூர் போன்றோர் மீ டூ இயக்கத்தை வரவேற்றனர்.

மத்திய அமைச்சர் உமா பாரதி, இந்த இயக்கம் பணியிடத்தில் பெண்களுக்கு நல்லதொரு மாற்றத்தை உண்டாக்கும் என தெரிவித்தார். பாஜக எம்பிக்கள் மீனாட்சி லேகி மற்றும் பூனம் மஹாஜன் ஆகியோரு வரவேற்றனர்.

திமுக எம்.பி. கனிமொழி தனது ஆதரவை தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களை நம்ப வேண்டும் என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். மலையாள நடிகரும் சிபிஎம் எம்.எல்.ஏவுமான முகேஷ் குமாருக்கு எதிராக டெஸ் ஜோசப் என்பவர் சொன்ன குற்றச்சாட்டின் காரணமாக அவர் பதவி விலக வேண்டும் என கோரப்பட்டது.

பாலிவுட்டில் மீ டூ !

தனுஸ்ரீ தத்தா, நானா பட்டேகர் மீது சொன்ன குற்றச்சாட்டு இந்தியாவின் ஹார்வி ஹெயின்ஸ்டீன் தருணம் என பலரும் கூறுகிறார்கள். 2008-ஆம் ஆண்டு இதே குற்றச்சாட்டுக்களை தனுஸ்ரீ சொன்னபோது, எவரும் கண்டுகொள்ளவில்லை. இம்முறை ஊடகங்கள் இந்த விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டன.

நானா பட்டேகர் – இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி

’ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற படத்தின் படப்பிடிப்பின்போது நானா பட்டேகர் பாலியல் ஒடுக்குமுறையில் ஈடுபட்டதாக தனுஸ்ரீ குற்றம்சாட்டினார். இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி (அறிவுஜீவிகள், மனித உரிமை செயல்பாட்டாளர்களை அர்பன் நக்ஸல் என்ற முத்திரை குத்திய நபர்-அதே பெயரில் நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார்) மீது இழிவாக பேசுதல், ஒடுக்குமுறை புகாரை தனுஸ்ரீ கூறியிருந்தார்.

மகாராஷ்டிர பெண்கள் ஆணையம் நானா பட்டேகர், படத்தின் இயக்குநர் ராகேஷ் சாரங் மற்றும் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இவர் மூவர் மீதும் தயாரிப்பாளர் சாமீ சித்திக் மீதும் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இவர்கள் நால்வரும் தனுஸ்ரீ மீது வழக்கு தொடுத்துள்ளனர்.

சினிமா பெண்களுக்கான அமைப்பு தனுஸ்ரீக்கு ஆதரவளித்தது. சினிமா மற்றும் டிவி நடிகர்கள் சங்கம் 2008-ஆம் ஆண்டு தனுஸ்ரீ கொடுத்த புகாரை பதிய மறுத்ததற்காக மன்னிப்பு கோரியது. நானா பட்டேகர் மீதான போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்திழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்தது.  ஹைதராபாத்தைச் சேர்ந்த போராட்டக்குழுவினர் தனுஸ்ரீக்கு ஆதரவளித்தது.

அடுத்து பாலிவுட்டில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் பிரபல நடிகர் அலோக் நாத்.  எழுத்தாளர்-இயக்குநர்- தயாரிப்பாளர் வினிதா நந்தா இவர் மீது பாலியல் வல்லுறவு புகார் கூறியதோடு, காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்தார். நடிகர்கள் சந்தியா மிருதுள், தீபிகா அமீன் ஆகியோர் அலோக் நாத் மீது பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டைக்கூறினர். திரை எழுத்தாளர்கள் அமைப்பு, வினிதாவுக்கு ஆதரவளித்தது. விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும் எனவும் வலியுறுத்தியது. பிரதமர் நரேந்திர மோடிக்கு, வினிதா எழுதிய கடிதத்தில் நீதியை நிலைநாட்ட இந்தப் பிரச்சினையில் தலையிடுமாறு கோரியிருந்தார். (மோடியின் மவுனம் இன்னமும் கலையவில்லை.)

நடிகர் அலோக் நாத்

பாலிவுட்டில் குற்றச்சாட்டுக்கு உள்ளான மூன்றாவது பெரிய பெயர், இயக்குநர் சஜீத் கான். பத்திரிகையாளர் கரிஷ்மா உபாத்யாய், நடிகர்கள் ரேச்சர் ஒயிட், சிம்ரன் சூரி உள்ளிட்ட பலர் இவர் மீது குற்றம் சாட்டினர். இந்திய சினிமா இயக்குநர்கள் சங்கள், இந்த புகார்கள் குறித்து விளக்கம் அளிக்கும்படி சஜீத் கானுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

ஹவுஸ்ஃபுல்-4 படத்தின் இயக்குநராக பணியாற்ற இருந்த சஜீத் நீக்கப்பட்டார். நானா பட்டேகரும் இந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான அக்‌ஷய் குமார் இவர்கள் மீதான குற்றச்சாட்டு காரணமாக இவர்களை நீக்கினார்.

நான்காவது நபர், இயக்குநர் விகாஸ் பால். ஹஃபிங்டங் போஸ்ட் வெளியிட்ட விசாரணையில் ‘குவின்’ படப்பிடிப்பின்போது ஒரு பெண்ணை எத்தகைய ஒடுக்குமுறைக்கு ஆளாக்கினார் என தெரியவந்தது. இந்தப் படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த கங்கணா ரணவத், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவளித்தார். விகாஸ் தன்னிடம்கூட முறை தவறி நடந்ததாக கங்கணா பேசினார். அமேசான் பிரைம்-க்காக தயாரிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியிலிருந்து விகாஸ் நீக்கப்பட்டார். அனுராக் காஷ்யப், விக்ரமாதித்ய மோட்வானி, மது மண்டேனா, விகாஸ் பால் ஆகியோர் இணைந்து உருவாக்கிய தயாரிப்பு நிறுவனத்திலிருந்து விகாஸ் நீக்கப்பட்டார். நடிகர் ஹிரிதிக் ரோஷன், விகாஸ் இயக்கவிருந்த படத்திலிருந்து அவரை நீக்குமாறு தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டார்.

பாலிவுட்டைச் சேர்ந்த பலர் மீது இப்படிப்பட்ட புகார்கள் குவிந்தன. நடிகர் ரஜத் கபூர் மீதான புகார் காரணமாக அவர் நடிக்கவிருந்த படத்திலிருந்து நீக்கப்பட்டார். தன்னுடைய செயலுக்காக அவர் மன்னிப்பு கேட்டார்.

படிக்க :
#MeToo : படுக்கை அறைக்கு வந்தால் பாட வாய்ப்பு ! கர்நாடக சங்கீதத்தின் பார்ப்பன ராகம் !
#MeToo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை !

யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் வர்த்தக தலைவர் ஆசிஸ் பட்டேல் மீதான குற்றச்சாட்டின் காரணமாக அவர் நிர்வாக விடுவிப்பில் அனுப்பப்பட்டார். ஃபாஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், இயக்குநர் முகேஷ் சப்ராவை தங்களுடைய தயாரிப்பிலிருந்து நீக்கியது. நான்கு பெண்கள் புகார் அளித்ததன் காரணமாக திரை விமர்சகர் சிபாஜி ராய்சவுத்ரியின் ஒப்பந்ததை ரத்து செய்தது டைம்ஸ் நவ். இயக்குநர் ஈரே கவுடா மீதான குற்றச்சாட்டின் காரணமாக ‘பாலேகெம்பா’என்ற படத்தை திரை விழாக்களில் திரையிடப்போவதில்லை என அறிவித்தது அந்தப் பட தயாரிப்பு நிறுவனம்.

மீ டூ இயக்கத்தால் அம்பலப்பட்டு நிற்கும் பாலிவுட்.

தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவளிக்க மறுத்த அபிதாப் பச்சன், கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், பொத்தாம் பொதுவாக எந்த பெண்களும் பாதிக்கப்படக்கூடாது என அறிக்கை வெளியிட்டார். நடிகர் அமீர்கானும் இயக்குநர் கிரண் ராவும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் பெயர் குறிப்பிடாத ஒரு சகபணியாளருடன் இனி ஒருபோதும் பணிபுரியப்போவதில்லை என தெரிவித்தனர். இவர்கள் அடுத்து தயாரிக்க விருந்த படத்தை சுபாஷ் கபூர் இயக்கவிருந்தார். அவர் மீது பலர் புகார் கூறியிருந்தனர். இதுபோல பூஷன் குமார், ஏக்தா கபூர் ஆகியோரும் சுபாஷ் கபூரை தங்களுடைய தயாரிப்புகளிலிருந்து நீக்கினர்.

பாலிவுட் நடிகர்கள் எம்ரான் ஹாஸ்மி, ராதிகா ஆப்தே, ஃபர்ஹான் அக்தர், பிரியங்கா சோப்ரா, எழுத்தாளர் சோபா டே ஆகியோர் மீ டூ இயக்கத்தை ஆதரித்தனர். ஸ்டார் டிவி குழுமம் இந்த இயக்கத்தை ஆதரித்தது. கொங்கனா சென் சர்மா, நந்திதா தாஸ், கவுரி ஷிண்டே, சோனாலி போஸ், கிரண் ராவ், ஸோயா அக்தர் உள்ளிட்ட 11 பெண் இயக்குநர், குற்றம்சாட்டு நிரூபிக்கப்பட்ட நபர்களுடன் பணிபுரியப் போவதில்லை என அறிக்கை வெளியிட்டனர்.  நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து இந்தத் துறையில் உள்ள பாலியல் புகார்களை விசாரிக்க சிறப்புக்குழு அமைக்க ஒப்புக்கொண்டன.

தென்னிந்திய சினிமாவில் மீ டூ !

2017-ஆம் ஆண்டு மலையாள நடிகர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட குற்றச்சாட்டில் நடிகர் திலீப் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’விலிருந்து விலகினார். இவருடைய விலகலை தலைவராக உள்ள மோகன்லால் ஏற்றுக்கொண்டார். ஆனால் நடிகர் சங்கம் திலீப்புக்கு ஆதரவாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இதன்காரணமாக ‘அம்மா’விலிருந்து பலர் விலகினர்.

மலையாள நடிகர் திலீப்

மலையாள சினிமாவில் பணியாற்றும் பெண்கள் இணைந்து பெண்கள் அமைப்பொன்றை தொடங்கினர். இந்த அமைப்பு திலீப்புக்கு ஆதரவாக அம்மா செயல்படுவதாக குற்றம்சாட்டியது. பணியிடங்களில் பாலியல் ஒடுக்குமுறைகளை விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தில் சினிமா பெண்கள் அமைப்பு வழக்கு ஒன்றையும் கேரள உயர்நீதிமன்றத்தில் தொடுத்தது.

தெலுங்கு திரைப்பட உலகம், பெண்கள் தங்களுடைய புகார்களை தெரிவிக்க தொடர்புகொள்ள வேண்டியவர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டது. தெலுகு ஃபிலிம் சேம்பர், ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்திலும் புகார்களை பெற குழு அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது.

கன்னட நடிகர், இயக்குநர், தொழிற்நுட்ப கலைஞர்களைக் கொண்ட சுதந்திர அமைப்பொன்றை கன்னட சினிமா துறை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு இந்தத் துறை சார்ந்த பாலியல் ஒடுக்குமுறை புகார்களை பதிவு செய்து விசாரிக்கும்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தின் தலைவராக உள்ள விஷால், பாலியல் ஒடுக்குமுறை புகார்களை விசாரிக்க மூன்று நபர்கள் அடங்கிய குழு அமைத்துள்ளதாக அறிவித்தார்.  பாடகர் சின்மயி மற்றும் லீனா மணிமேகலைக்கு ஆதரவளிக்கும் வகையில் தென்னிந்திய சினிமா பெண்கள் அமைப்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. சின்மயி -உடன் மேலும் இரண்டு பெண்கள் கவிஞர் வைரமுத்து மீது குற்றம்சாட்டியிருந்தனர்.  லீனா மணிமேகலை இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டை கூறியிருந்தார். நடிகர் அமலா பால், லீனாவுக்கு ஆதரவளித்ததோடு, சுசு கணேசன் மீது குற்றம்சாட்டியிருந்தார்.

பொழுதுபோக்கு துறையில் மீ டூ !

சிறுமிகள் உள்பட பல பெண்கள் ஸ்டேண்ட் அப் காமெடியன் உத்சவ் சக்ரவர்த்தி மீது குற்றம் சாட்டியிருந்தனர். தன்னுடைய செயலுக்காக உத்சவ் மன்னிப்புக்கேட்டார்.  நகைச்சுவையாளர்கள் குழுமத்தின் நிறுவனராக உள்ள தன்மய் பட், உத்சவ் மீதான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அந்த குற்றச்சாட்டுக்களை கண்டுகொள்ளாமல் உத்சவு-க்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பதாக விமர்சிக்கப்பட்டார்.

இந்த அமைப்பின் நிகழ்ச்சியை ஹாட் ஸ்டார் ரத்து செய்தது. பழைய நிகழ்ச்சிகளையும் நீக்கியது. சக பெண் நகைச்சுவையாளரிடம் முறை தவறி நடந்துகொண்டதற்காக அதிதி மிட்டல் மன்னிப்புக்கேட்டார்.

குறும்பட தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் சிந்தன் ரூப்ரேல் தன் மீதான குற்றச்சாட்டுகள் காரணமாக பதவி விலகினார்.

படிக்க:
இந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் ? மு.வி.நந்தினி
உங்களுக்குள் ஒரு பாலியல் குற்றவாளி ! – புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2016

இசைத்துறையில் மீ டூ !

ஒளிப்படக்கலைஞர் நடாஷா ஹேம்ராஜ் , பாடகர்கள் சோனா மஹோபாத்ரா ஆகியோர் தெரிவித்த பாலியல் புகாரின் காரணமாக பாடகர் கைலாஷ் கெர் மன்னிப்புக் கேட்டார்.

அனு மாலிக்

பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டின் காரணமாக சோனி டிவி இந்தியன் ஐடல் நிகழ்ச்சியிலிருந்து இசையமைப்பாளர் அனு மாலிக்கை நீக்கியது

மீ டூ இயக்கத்தை ஆதரித்து ஏ. ஆர். ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். மியூசிக் அகாடமி குற்றச்சாட்டுக்கு உள்ளான கர்நாடக இசை துறையைச் சேர்ந்த என். ரவிக்கிரண், ஓ. எஸ். தியாகராஜன், மன்னார்குடி ஈஸ்வரன், ஸ்ரீமூசம் வி. ராஜாராவ், நாகை ஸ்ரீராம், ஆர். ரமேஷ், திருவாரூர் வைத்தியநாதன் ஆகியோரை இந்த ஆண்டு தன்னுடைய சபா நிகழ்ச்சியிலிருந்து நீக்குவதாக தெரிவித்தது.  கர்நாடக இசை கலைஞர்கள் கூட்டாக பாதிக்கப்பட்டவர்களை ஆதரிப்பதாக அறிக்கை வெளியிட்டது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் மீ டூ !

வீடியோ தன்னார்வலர் என்ற அமைப்பின் நிறுவனர்  ஸ்டாலின் கே. பத்மா மீது பல பெண்கள் பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டை கூறியிருந்தனர். இதனால் இவர் பதவி விலகினார். இந்த அமைப்பிலிருந்து தங்களுடைய உறவை துண்டித்துக் கொள்வதாக டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோசியல் ஸ்டடீஸ் மற்றும் ஸ்கூல் ஆஃப் மீடியா அண்ட் கல்ச்சர் நிறுவனங்கள் முடிவெடுத்தனர்.

ஸ்டாலின் கே. பத்மா

டீச் பார் இந்தியா என்ற நிறுவனம் தனது ஊழியர் மூவரை விடுப்பில் அனுப்பியது, அவர்கள் மீதான புகாரையும் நிறுவனம் விசாரிக்கிறது. மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குனர் மேத்யூ ஜேக்கப், பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகினார்.

தீபிகா படுகோனே-வின் லிவ் லவ் லாஃப் பவுண்டேஷன் தனது ட்ரஸ்டீ ஒருவரை பாலியல் ஒடுக்குமுறை புகார் காரணமாக பதவி விலகியதாக தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களுடைய அமைப்பு ஆதரவாக இருக்கும் எனவும் அறிவித்தது.

கலைத்துறையில் மீ டூ !

பிரபல ஓவியர் ஜதின் தாஸ் மீது நான்கு பெண்கள் புகார் கூறியிருந்தனர். இதற்காக இவர் பிறகு மன்னிப்பும் கேட்டார்.

ஓவியர் ரியாஸ் கோமு மீதான புகார் காரணமாக கொச்சி முசிறி பினாலே விழாக்குழுவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இவரும் மன்னிப்புக் கேட்டார். மீ டூ இயக்கத்தை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.

மும்பையைச் சேர்ந்த கலைக்கூடமான ‘டார்க்’, ஒளிப்படக் கலைஞர் ஷாகித் தத்தாவாலா மீதான புகார் காரணமாக அவருடைய காட்சியை ரத்து செய்தது.

இலக்கியத்தில் மீ டூ !

மீ டூ இயக்கத்தை ஆதரிக்கும் வகையில் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் எழுத்தாளர் ரஜினி ஜார்ஜ் குழு ஒன்றை தொடங்கினார். இந்தக் குழுவில் இதுவரை 500 முன்னணி ஓவியர்கள், எழுத்தாளர்கள் இணைந்துள்ளனர். மீ டூ இயக்கத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான எழுத்தாளர், பிரபலங்கள் எவரும் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு அழைக்கப்படவில்லை.

எழுத்தாளர் சச்சின் கார்க், முறைதவறி நடந்துகொண்டதற்காக ஒரு பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார். பெங்களூரு இலக்கிய விழாவின் நிறுவனரான சுபோத் சங்கர், பாலியல் புகாருக்கு உள்ளான எவருக்கும் வாய்ப்பளிக்கப்படாது என அறிவித்துள்ளார்.

சட்ட துறையில் மீ டூ !

சட்ட துறையைச் சேர்ந்த பல நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மீ டூ இயக்கத்துக்கு ஆதரவளித்துள்ளனர். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கவுதம் பட்டேல் ஆதரவளித்திருக்கிறார். சட்ட மாணவர் கோஷிகா கிருஷ்ணா என்பவர் மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சரவையில் பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவினரின் பெயரை நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் வெளியிட வலியுறுத்த வேண்டும் என மனு ஒன்றை அளித்திருக்கிறார்.

மாற்று சட்ட கருத்துக்களம் (Alternative Law Forum) பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி செய்வதாக அறிவித்துள்ளது. வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நீதிக்காக போராடிய தாலிப் உசைனுக்காக வழக்காடப் போவதில்லை என தெரிவித்திருக்கிறார். தாலிப் உசைன் மீது பாலியன் வல்லுறவு புகார் எழுந்த நிலையில் அவர் இப்படி அறிவித்திருக்கிறார்.

வர்த்தகம் மற்றும் விளம்பரத்துறை மீ டூ !

விளம்பர துறையைச் சேர்ந்த சுகைல் சேத் மீது பல பெண்கள் புகார் அளித்த நிலையில் குளோபல் மெண்டோர்ஷிப் பிளாட்ஃபார்ம், வேர்ல்டு உமன் ஃபவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் சுகைல் சேத் -உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளன. டாடா குழுமம், கோககோலா, மகேந்திரா குழுமம் ஆகியவையும் உறவை துண்டிப்பதாக அறிவித்துள்ளன.

சுகைல் சேத்

விளம்பரத்துறையைச் சேர்ந்த கார்த்திக் ஐயர், பிரவீன் தா, போதிசத்வா தாஸ்குப்தா, தினேஷ் சுவாமி ஆகியோர் பாலியல் ஒடுக்குமுறையை தவறான நடத்தை குற்றச்சாட்டின் காரணமாக பதவி விலகியுள்ளனர்.

முத்ரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்யூனிகேஷன் அகமதாபாத், அதன் இயக்குனர் பிரவீன் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டை விசாரிக்க முன்வந்துள்ளது.

டிடிபி முத்ரா குழுமம் தன்னுடைய ஊழியர் மூவருக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கிறது.

பாலிசி இந்தியா நிறுவனம் அதன் க்ரியேட்டிவ் இயக்குநர் இஷ்ரத் நவாஸ் மீதான குற்றச்சாட்டு காரணமாக அவரை நீக்கியுள்ளது. உடோப்பியா கம்யூனிகேஷன் இணை நிறுவனர், பாலியல் நடத்தை குற்றச்சாட்டு காரணமாக விடுப்பில் அனுப்பப்பட்டிருக்கிறார்.

விளம்பரம், வடிவமைப்பு மற்றும் ஊடக பெண்கள் அமைப்பு இந்தத் துறையில் உள்ள பாலியல் ஒடுக்குமுறை புகார்கள் மீது ஒருமுகப்பட்ட கவனம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பில்  விளம்பர ஊடக துறையைச் சேர்ந்த பிரபல பெண்கள் பலர் கையெழுத்திட்டுள்ளனர்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் ரங்கராஜ், பாலியல் ஒடுக்குமுறை புகார் காரணமாக விடுப்பில் அனுப்பப் பட்டிருக்கிறார். அவர் மீதான புகாரும் விசாரிக்கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான அஜித் தாக்கூர் பதவி விலகியிருக்கிறார். விபூ சர்மா என்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க அவர் பணிபுரியும் நிறுவனம் பெண்கள் மட்டுமே உள்ள விசாரணைக்குழு அமைத்துள்ளது.

ஐடிசி நிறுவனம் தன்னுடைய அனைத்து கிளைகளிலும் பாலியல் ஒடுக்குமுறைகளை விசாரிக்க குழு அமைத்துள்ளது.

விளையாட்டு துறையில்…

டென்னிஸ் விளையாட்டு வீரர் மகேஷ் பூபதி மீ டூ இயக்கத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். பிசிசிஐ செயல் இயக்குநர் ராகுல் ஜோக்ரி மீது பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டு வெளியான நிலையில், அவர் விடுவிப்பில் அனுப்பப் பட்டிருக்கிறார்.

கல்வி துறையில் மீ டூ !

கல்வி துறையில் புகார்கள் பெருகிவருவதன் காரணமாக, கல்வி அமைப்புகளில் பாதுகாப்பு அம்சங்களை உறுதிபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஐ.ஐ.எஸ்.சி பெங்களூருவைச் சேர்ந்த மூத்த கல்வியாளர் ஒருவர் மீது பிஎச்டி மாணவி ஒருவர் குற்றம்சாட்டினார்.

திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் பிஎஸ்ஸி மாணவி ஒருவர், பேராசிரியர் ஒருவர் மீது குற்றம்சாட்டியிருந்தார். அவரை நிர்வாகம் நீக்கியிருக்கிறது.

அசோகா பல்கலையைச் சேர்ந்த மாணவி ஒருவர், பாலியல் ஒடுக்குமுறை செய்யும் பேராசிரியரை கல்லூரி நிர்வாகம் காப்பாற்றுவது நிறுத்த வலியுறுத்தி கையெழுத்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். சிம்பாலிஸிஸ் செண்டர் பார் மீடியா அண்ட் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குனர் அனுபம் சித்தார்தா குற்றச்சாட்டு காரணமாக விடுவிப்பில் அனுப்பப்பட்டிருக்கிறார்.

பல கல்வி நிறுவனங்கள் கல்விக்கூடங்களில் பாலியல் ஒடுக்குமுறை குறித்த விவாதத்தை துவக்கியுள்ளன.  ஜம்மு காஷ்மீர் பள்ளி கல்வித்துறை மாவட்ட வாரியாக பாலியல் ஒடுக்குமுறைகளை விசாரிக்கும் கமிட்டி அமைக்க முடிவு செய்துள்ளது. ஹைதராபாத் உயர்நீதிமன்றம், பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தெலுங்கானா அரசிடம் தெரிவித்துள்ளது.

பொது சமூகத்தின் முன்னெடுப்புகள் !

சிறு சிறு குழுக்களாக பொது சமூகம் மீ டூ இயக்கத்தை ஆதரித்து வருகிறது. ‘ஐ வில் கோ அவுட்’, ஏஜெண்ட்ஸ் ஆப் இஸ்க் போன்ற அமைப்புக்கள்  பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வையும் ஆதரவையும் அளித்து வருகின்றன. டெல்லி ஆக்ஸ்போர்டு புத்தகநிலையம்  மீ டூ இயக்கம் குறித்தும் தண்டனைக்குரிய குற்றம் குறித்து உரையாடல் நிகழ்வை நடத்தியது.

பெண்ணிய அமைப்பான ‘ஷிரோஸ்’ பாதிக்கப்பட்ட பெண்கள் மீண்டுவந்த கதைகளை கேட்க உதவி எண்களை ஏற்படுத்தியுள்ளது. TheLifeofScience.com இணையதளம் அறிவியல் துறையில் உள்ள ஒடுக்குமுறைகளை பதிவு செய்ய விண்ணப்பங்களை உருவாக்கியுள்ளது.

படிக்க :
#MeToo எந்த துறையில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம் ? கருத்துக் கணிப்பு
ஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் !

தலித் வுமன் ஃபைட் என்ற அமைப்பு மீ டூ இயக்கத்தை ஆதரித்துள்ளது. காஷ்மீர் பெண்கள் அமைப்பு பாலியல் ஒடுக்குமுறைக்கு உள்ளானர்களின் பட்டியலை தயாரித்துள்ளது. பாலியல் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டு மீண்டவர் #MeTooK12 என்ற ஹேஷ்டேக்கின் மூலமாக இளம் தலைமுறையினருக்கு பாலியல் ஒடுக்குமுறை குறித்த விழிப்புணர்வையும் உரையாடலையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.

கத்தோலிக் திருச்சபையைச் சேர்ந்த மேகாலயா கிறித்துவ அமைப்பு, தன் உறுப்பினர் ஒருவர் மீதான பாலியல் வன்முறை புகாரை விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

மீ டூ இயக்கத்தின் மீது தமிழகத்தில் ஒரு எதிர்மறையான உணர்வே உள்ளது. இருவேறு நபர்களிக்கிடையேயான பிரச்சினையாக திரிக்கும் அயோக்கியத்தனத்தை பலரும் தொடக்கம் முதலே செய்து வருகிறார்கள். அதனால்தான் இதுவரை தமிழகத்தில் மீ டூ இயக்கம் குற்றம் சாட்டிய எவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நீண்ட பதிவை வாசித்த பிறகாவது இது இருவர் தொடர்பான பிரச்சினையல்ல, மீ டூ இயக்கம் பணிபுரியும் இடத்தில் பாலியல் சமத்துவத்துக்கான ஒரு போராட்டம் என்பதை புரிந்து கொள்வார்கள் என நம்பலாம்.

வரலாற்று காலம் தொட்டு பெண்ணுரிமைப் போராட்டங்கள் அவ்வளவு எளிதானதாக இருந்ததில்லை.

தொகுப்பு: கலைமதி

கலெக்டர் ரோகிணியின் தார்மீகக் கோபத்தினால் தலித் சிறுமி படுகொலைக்கு என்ன பயன் ?

சேலம் மாவட்டம் என்றதும் நமக்கு இரு விசயங்கள் நினைவுக்கு வரும். ஒன்று சேலம் மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர் என்ற அடைமொழியுடன் புகைப்படக்காரர் சகிதமாக வலம் வரும் ரோகிணி. இரண்டு எட்டு வழிச் சாலைக்கு எதிரான போராட்டம். தற்போது மூன்றாவதாக ஒரு செய்தி சேர்ந்திருக்கிறது.

அது தலித் சிறுமி ராஜலட்சுமி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம். பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக “மீ டூ” இயக்கம் அதிகம் பேசப்படும் காலத்தில் அதே பாலியல் வன்முறையால் கற்பனைக்கும் அப்பாற்பட்ட முறையில் கொல்லப்பட்டிருக்கிறார் அந்த 13 வயதுச் சிறுமி.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓட்டுநர் சாமிவேல். மனைவி சின்னப்பொண்ணு, ஒரு மகன், இரு மகள்கள். கடைசி மகளான ராஜலட்சுமி அருகாமை ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

கொல்லப்பட்ட சிறுமி ராஜலெட்சுமி – கொலைகாரன் தினேஷ்குமார்.

சாமிவேல் வீட்டிற்கு அருகே மனைவி சாரதாவுடன் குடியிருக்கிறார் தினேஷ் குமார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் வீட்டுக்கு ராஜலட்சுமி அவ்வப்போது தண்ணீர் பிடிக்க செல்வார். கடந்த சில நாட்களாக அச்சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல்களை செய்ய ஆரம்பித்திருக்கிறார் தினேஷ் குமார். ஆயுத பூஜை அன்று வீட்டில் தனியாக இருந்த தினேஷ் குமார் வீட்டிற்கு வந்த சிறுமியிடம் மேற்கண்டவாறு நடந்திருக்கிறார். இவற்றை பொதுவாக வெளியே சொல்லக் கூடாது என்று ஊட்டி வளர்க்கப்படும் சமூகத்தில், சொன்னால் தொலைச்சிருவேன் என்று மிரட்டப்படும் நிலையில் அச்சிறுமி இதை தனக்குள்ளேயே வைத்து குமுறியிருக்கிறார்.

வெளியே சொல்லாமல் அழுது அரற்றிய சிறுமி இறுதியில் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். அம்மாவும் இதை அப்பாவிடம் தெரிவிப்போம் என்று சமாதானப்படுத்தியிருக்கிறார். ஒரு கிராமத்து தாய் அதுவும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தனது மகளிடம் இத்தகைய பிரச்சினைகளை  வெளியே தெரியாமல் எப்படி சரி செய்வது என்பது ஏதோ விழிப்புணர்வு பற்றிய பிரச்சினை அல்ல. வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டம் அது.

தனது குற்றம் வெளியே தெரிய வந்த தினேஷ் குமார் ஆத்திரம் தலைக்கேறி சிறுமி தலையை துண்டாக்கி படுகொலை செய்திருக்கிறார். இப்படுகொலை தொடர்பாக நேரில் சென்ற எவிடன்ஸ் கதிரின் பதிவில் அந்த கொடூரமான தருணங்கள் இரத்த வாடையுடன் இருக்கிறது, படியுங்கள்.

“வீட்டிற்குள் வீச்சரிவாளோடு உள்ளே வருகிறான் தினேஷ்குமார். சின்னப்பொண்ணுவும் அவரது 13 வயது மகள் ராஜலெட்சுமியும் பூக்கட்டிக் கொண்டிருக்கின்றனர். ராஜலெட்சுமியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, உன்னை கொல்லாமல் விடமாட்டேன் பற தேவிடியா முண்ட என்று அரிவாளால் வெட்ட முயல, அவனது கால்களைப் பிடித்துக் கொண்டு என் மகளை ஒன்றும் செய்துவிடாதே என்று கெஞ்சுகிறார் சின்னப்பொண்ணு. தள்ளிப்போடி பறத் தேவிடியா என்று சொல்லிக் கொண்டே ராஜலெட்சுமியின் பின்கழுத்தில் ஓங்கி வெட்டுகிறான் தினேஷ்குமார். வெட்டப்பட்டு ரத்த கசிந்த நிலையில் கிடந்த ராஜலெட்சுமியை இழுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தவன் மறுபடியும் ஓங்கி அரிவாளால் வெட்டி தலையை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள தனது தோட்ட வீட்டிற்கு செல்கிறான். அங்கிருந்த தினேஷ்குமாரின் மனைவி சாரதாவும் தம்பி சசிக்குமாரும் இவளது தலையை ஏன் இங்கே கொண்டு வந்தாய்? ரோட்டில் வீச வேண்டியதுதானே என்று கூற ஆத்தூர் – தளவாய்பட்டி சாலையில் அந்த தலையை வீசிவிட்டு தினேஷ்குமாரும் சாரதாவும் சசிக்குமாரும் ஒரு வாகனத்தில் ஏறி காவல்நிலையம் செல்கின்றனர்.

கடந்த 22.10.2018 அன்று இரவு 7.30 மணிக்கு வீசப்பட்ட தலித் சிறுமி ராஜலெட்சுமியின் துண்டிக்கப்பட்ட தலை 2 மணிநேரம் கிடக்க ஒட்டுமொத்த தலித் மக்களும் என்ன செய்வதென்று தெரியாமல் வாயிலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு கதறிக் கொண்டிருந்தனர். இரவு 9.30 மணிக்கு அங்கு வந்த போலீசார் தலையையும் வெற்று உடலையும் தனித்தனியாக எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

ராஜலட்சுமியின் பெற்றோர்கள் சின்னபொண்ணு – சாமிவேல்.

என் மகள் ராஜலெட்சுமியின் தலையில்லாத முண்ட உடல் துடித்தது சார்… என் நெஞ்சுலயும் மடியிலயும் ஆசையா வளர்ந்த என் மகள கொன்னுட்டான் சார் அந்த படுபாவி என்று சின்னப்பொண்ணு என் கைகளைப் பிடித்து கதறியபோது ஒடிந்த கந்தலான அந்த தாயாரை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் தவித்து நின்று கொண்டிருந்தேன். மூன்று நாட்கள் ஆகிவிட்டது. வற்றிய குளத்தில் உள்ள இறுதி தண்ணியும் கசிவது போல அந்த தாயாரின் கண்களிலும் வெயில் படர்ந்த கண்ணீரை பார்க்க முடிந்தது.”

படிக்க:
ஆதிக்க சாதிவெறிக்கு எதிராக முகிலனின் கருத்தோவியங்கள் !
ஆதிக்க சாதிவெறியால் கொல்லப்பட்ட உபி தலித் சகோதரிகள் !

போலீசில் சரணடைவதற்காக செல்லும் போது வந்து இன்னும் இரண்டு பேரை வெட்டுவேன் என்று தினேஷ்குமார் மிரட்டியாவாறே சென்றிருக்கிறார். தற்போது அவரது மனைவி தனது  கணவனுக்கு மனச்சிதைவு நோய் உள்ளது, முனி பிடித்து விட்டது என்றெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார். சாதிவெறியும், பாலியல் வெறியும் பிடித்திருக்கிற சமூகத்திற்கு முனி பிடித்தால் என்ன, பிடிக்காவிட்டால் என்ன?

கொலை நடந்து இரண்டு மணிநேரம் கழித்துச் சென்ற போலீசு, தற்போது பாலியல் வன்முறை நடந்ததாக தெரியவில்லை, கொலை மட்டும்தான் விசாரித்து வருகிறோம் என்கிறது. ஃபோக்சோ சட்டத்தினை தவிர்த்து, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் மட்டும் வழக்கு பதிவு செய்திருக்கிறது போலீசு. சரி, இந்த சம்பவத்தில் பாலியல் வன்முறை இல்லை, இருக்கிறது என்று ஏன் முதலிலேயே தீர்ப்பு அளிக்க வேண்டும். விசாரித்த பிறகு தெரிவிப்போம் என்று கூட ஏன் சொல்லவில்லை? வன்கொடுமைப் பிரிவின் படியே பார்த்தாலும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி நேரடியா ஆய்விற்கு வந்திருக்க வேண்டும், வரவில்லை என்கிறார் எவிடன்ஸ் கதிர்.

ஆய்விற்கு வந்திருக்க வேண்டிய ஆட்சியர் ரோகிணி என்ன செய்கிறார்?

தினமலர் நாளிதழில், அக்டோபர் 31, 2018 தேதி அன்று (அதாவது ராஜலட்சுமி கொல்லப்பட்ட 22.10.2018 நாளுக்குப் பிறகு ஒரு வாரம்) “தார்மீக கோபமும் பெரிய அளவில் சாதிக்க உதவும்” என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இத்தகைய உபதேச முத்துக்களுக்காகவே தினமலரில் “சொல்கிறார்கள்” என்று ஒரு பத்தி வைத்திருக்கிறார்கள். அதில் ரோகிணி போல பல மேன்மக்கள் நமக்கு கருத்துரைப்பார்கள். உரைத்துவிட்டுப் போகட்டும்.

அதில் தார்மீகம் கோபம் என்று இருப்பதால் ஒரு வேளை தலித் சிறுமியைப் பற்றித்தான் ஏதும் எழுதியிருப்பாரோ என்று பார்த்தால், இல்லை, இல்லவே இல்லை.

அதில் அவரது மராட்டிய மாநிலத்தில் ரோகிணியின் தந்தை மிளகாய் விவசாயத்தை விட்டுவிட்டு திராட்சை வியாபாரியாக மாறிய வெற்றிக் கதையை விளக்கியிருக்கிறார். தனது கிராமத்து விவசாயிகள் சிரமப்படுவதைப் பார்த்து இதை யார் தீர்ப்பார்கள் என்று ரோகிணி கேட்க, அப்பாவோ கலெக்டர்தான் என்றாராம். பிறகு என்ன, மனதில் விழுந்த விதையால் ரோகிணி இன்று கலெக்டர்.

படிக்க:
நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட்
பிஞ்சுகளை குதறும் வெறியர்கள்…குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை!

ஒரு முறை ரோகிணியின் தந்தை மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு சென்று அதிகாரியைப் பார்க்கப் போனாராம். அதிகாரியோ, திராட்சை சாகுபடி தொடர்பான முக்கியமான கூட்டத்தில் இருக்கிறேன், மிளகாய் விவசாயிக்கு என்ன அவசரம், காத்திருங்கள் என்றாராம்.

இதனால் மிளகாய் என்றால் இளக்காரமா, திராட்சை என்றால் உசத்தியா என்று அப்பா பெருங்கோபம் அடைந்தாராம். எனவே அவர் மாவட்ட அதிகாரியிடம் சென்று சண்டை போட்டதாக எதிர்பார்க்க வேண்டாம். என்ன இருந்தாலும் திராட்சைதான் ஒயினுக்கு மூலம், மிளகாய் என்றுமே சைடு டிஷ் அல்லவா!

சரி நாமும் இனி மிளகாயை தலைமுழுகிவிட்டு, திராட்சைக்கு குடி பெயர்வோம் என திராட்சை விவசாயி ஆகி விட்டாராம். ஆரம்பத்தில் கிராமத்து மக்கள் இதை ஏதோ லூசு மாதிரி செய்கிறார் என ஒதுக்கினார்களாம். ஆனால் அடுத்த ஆண்டிலேயே அவர் திராட்சை சாகுபடியாளராக உயர்ந்து சாதித்தாராம்.

இந்தக் கதையின் நீதியாக “மனிதர்களுக்கு, தார்மீக கோபம் மிகவும் அவசியம். அந்தக் கோபம், நேர்மறையான திசையில் செலுத்தப்பட்டால், நம்மால், வாழ்க்கையில் பெரிய அளவில் சாதிக்க முடியும்!” என்கிறார் ரோகிணி.

முதலில் இந்தக் கதையில் இருப்பது தார்மீகக் கோபம் இல்லை. அடிமைத்தனம். என் மிளகாயை இழிவுபடுத்தினாயே என்று காரமான கோபத்திற்கு பதில், ரம்மியமான திராட்சைக்கு மாறுவோம் என்ற ஒரு பணக்கார விவசாயியின் அடிமைத்தனம். கிராமத்து மிளகாய் விவசாயிகளை திரட்டிக் கொண்டு நீதி கேட்காமால், திராட்சைக்காக அரசு ஓடி வருகிறது என்று மாறிக் கொள்வோம் என்பதெல்லாம் கோபமா?

அதனால்தான் ரோகிணி மேடம் சாமர்த்தியமாக தார்மீகக் கோபம், நேர்மறையான விளைவு என்று பாசிட்டிவ் எனர்ஜி பேசுகிறார். அதே மராட்டியத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் பட்டியல்தான் இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இதெல்லாம் நெகட்டிவ் எனர்ஜி போலும்.

தனது தந்தையின் காரியவாதத்தை தினமலரில் எழுதும் நேரம் கொண்ட ரோகிணி அவர்கள் ஒரு தலித் சிறுமியின் படுகொலைக்கு நேரில் போகாமல் இருந்தது ஏன்? எட்டு வழிச் சாலைப் போராட்டத்தை ஒடுக்கும் முகமாக அனைத்தும் அள்ளி வழங்கியிருக்கிறோம் என்று புள்ளிவிவரங்களால் அடுக்கிய இந்த மாவட்ட ஆட்சியர், இன்று ராஜலட்சுமி கொலை குறித்து என்ன விவரங்களை கையில் வைத்திருக்கிறார்?

கேமராவே வெட்கப்படும் அளவிற்கு போஸ் மேல் போஸ் கொடுத்து தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் இந்த அம்மையார், ஒரு தாயின் கண் முன்னாலேயே ஒரு மகள் தலை வெட்டி துடிக்கும் காட்சியை கற்பனையாவது செய்து பார்க்க முடியுமா?

ராஜலட்சுமியை இழந்து துடிக்கும் அந்தப் பெற்றோர் இனி தமது தார்மீகக் கோபத்தை  நேர்மறையில் செலுத்தி வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது என்று மேடம் ரோகிணியை விளக்கச் சொன்னால் கண்டிப்பாக விளக்குவார்.

மக்களுக்கு தார்மீக கோபம் வராத வரைக்கும் ராஜலட்சுமி கொலைக்கும் நீதி இல்லை! ரோகிணிக்களின் ‘தார்மீக’ கோபங்களும் நிற்கப் போவதில்லை!

மோடியின் தூய்மை இந்தியாவில் துப்புரவுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கே கணக்கில்லை !

சாக்கடைகளை தூர் வாரும் போது வெளிப்படும் விச வாயுக்களால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெரும் எண்ணிக்கையிலான துப்புரவு தொழிலாளர்கள் கடந்த சில ஆண்டுகளில் மரணமடைந்துள்ளனர்.

மிகச் சமீபத்தில், டெல்லியின் மோதி நகரில் உள்ள டி.எல்.எஃப் ரியல் எஸ்டேட் குடியிருப்பு வளாகத்தில் ஐந்து தொழிலாளர்கள் மரணமடைந்தனர். அவர்களில் யாரும் முறைப்படி துப்புரவுத் தொழிலாளர்களாக பணி புரியவில்லை என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டியிருக்கிறது.

துப்புரவுத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களைப் பற்றியும் மேலும் அவர்களை பாதுகாக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

தங்களது இன்னுயிரை இழந்த தொழிலாளர்களது குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றியும் கூட பேசப்படுகிறது. இருப்பினும், சாக்கடைகளை தூய்மைப்படுத்தும் போது மரணமடைந்திருக்கும் துப்புரவுத் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.

1993 – 2018 ஆண்டுகளுக்கிடையில், 666 துப்புரவுத் தொழிலாளர்கள் மரணமடைந்திருப்பதாக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் (Ministry of Social Justice and Empowerment) அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய துப்புரவுப் பணியாளர்கள் ஆணையம் (National Commission of Safai Karamcharis – NCSK) தெரிவித்துள்ளது.

படிக்க :
கர்நாடகா : சாக்கடை குழியில் இறங்க நிர்பந்திக்கப்பட்ட தொழிலாளி !
தலித்துகளின் உயிர்ப் பலி கேட்கும் சுவச்சு பாரத் !

1993 -ம் ஆண்டுக்குப் பிறகு சாக்கடைகளை தூய்மைப்படுத்தும் போது மரணமடைந்த தொழிலாளர்களது குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ‘துப்புரவுத் தொழிலாளர் சங்கம்’ (Safai Karamchari Andolan) எதிர் ‘இந்திய ஒன்றியம்’ வழக்கொன்றில் 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி வழங்கிய தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்து நான்கு ஆண்டுகள் ஓடி விட்டன. எனினும், இதற்குத் தேவையான தகவல்களை அனைத்து மாநிலங்களும் அளித்துவிடவில்லை. தகவல்கள் கிடைக்கப்பெற்ற மாநிலங்களிடமிருந்தும் கூட, மரணமடைந்தவர்களது எண்ணிக்கையை தாண்டி வேறு எதுவும் ஆணையத்திற்கு தெரியாது.

‘மோடியின் தூய்மை இந்தியாவில்’ கொல்லப்படும் தொழிலாளிகள் பற்றிய கனக்குகூட கிடையாது.

மரணமடைந்த தொழிலாளர்கள் யாவர், அவர்களது பெயர் என்ன, அவர்கள் எங்கிருந்து வந்தனர், அவர்களது குடும்பங்கள் என்ன, ஒருவேளை அவர்கள் இழப்பீடு பெற்றிருந்தால் எவ்வளவு பெற்றார்கள் என்பது உள்ளிட்ட – தொழிலாளர்களை அடையாளப்படுத்த தேவையான – எந்த தகவல்களும் ஆணையத்திற்கு தெரியவில்லை.

தொழிலாளர்களை அடையாளம் காண்பதும் இழப்பீடு பற்றிய தகவல்களை திரட்டும் பணியும் மிகவும் மெதுவாக நடைபெற்று வருவதாக NCSK -ன் துணை இயக்குனரான யாஸ்மின் சுல்தானா கூறுகிறார்.

“எத்தனை பேருக்கு இழப்பீடு கிடைத்தது என்ற தகவல்களை கேட்டு அனைத்து மாநிலங்களுக்கும் நாங்கள் கடிதம் எழுதிக்கொண்டிருகிறோம். இப்போதைக்கு சாக்கடைகள் தூய்மைப்படுத்தும் போது மூச்சுத்திணறி மரணமடைந்தவர்களது எண்ணிக்கையை மட்டுமே எங்களுக்கு அவர்கள் கொடுத்துள்ளார்கள்” என்று சுல்தானா கூறினார்.

ஆணையத்தின் தகவலின் படி, சாக்கடை தூய்மைப்படுத்தும் போது ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிக அளவில் அதாவது 192 பேர் தமிழ்நாட்டில் தான் மரணமடைந்துள்ளனர். இரண்டாவதாக குஜராத்தில் 122 பேர் மரணமடைந்துள்ளனர்.

மேலும் அரியானாவில் 54 பேர், கர்நாடகாவில் 69 பேர், உத்திரப்பிரதேசத்தில் 61 பேர், டெல்லியில் 39 பேர், இராஜஸ்தானில் 39 பேர், பஞ்சாப்பில் 29 பேர் மற்றும் மேற்கு வங்கத்தில் 10 பேர் மரணமடைந்துளதாக ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை 17 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் மட்டுமே இந்த தகவல்களை கொடுத்திருப்பதாக ஆணையம் கூறுகிறது. எண்ணிக்கை எப்படி கிடைத்தது என்று கேள்விக்கு, ஊடகங்களில் வெளி வந்த அறிக்கைகள் மற்றும் அந்தந்த மாநிலங்களுக்கு எழுதிய கடிதங்களில் இருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் எண்ணிகையை உறுதி செய்ததாக ஆணையம் கூறுகிறது.

எண்ணிக்கையை உறுதி செய்வதற்கு ஆணையத்தின் ஊழியர்கள் கள ஆய்வு ஏதேனும் நடத்தி இருக்கிறார்களா என்ற கேள்விக்கு, ஆய்வுகளை நடத்தவும், தகவல்களை பெறவும் மாநில அரசுகள், நகராட்சி நிறுவனங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதங்களின் மூலம் ஆணை பிறப்பிப்பது மட்டுமே தங்களது வேலை என்று ஆணையம் பதிலளித்தது.

இறந்தவர்களது பெயர், முகவரி, முதல் தகவல் அறிக்கைகள் மற்றும் இழப்பீடு உள்ளிட்ட தகவல்கள் குறித்து கேட்டபோது, அவர்களது எண்ணிக்கை மட்டுமே தங்களுக்கு தெரியும் என்று ஆணையம் தொடர்ந்து பதிலளித்தது. மற்ற தகவல்களையும் மெதுவாக சேகரித்து வருவதாக ஆணையம் மேலும் கூறியது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத்தொடர்ந்து மாநில அரசுகளிடமிருந்து தகவல்களை NCSK கேட்டிருக்கிறது. இதுவரையிலும், ஒட்டுமொத்தமாக நாட்டில் எத்தனை துப்புரவுத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பது கூட இந்த கமிசனுக்கு தெரியவில்லை.

படிக்க :
அது என்னா சார் எச்சி பாரத்து ?
சாக்கடைக் கொலைகள்!

பணி நிலையின் (வழக்கமான, தற்காலிக, நிரந்தர, ஒப்பந்த சேவை) அடிப்படையில் துப்புரவுத் தொழிலாளர்களது எண்ணிக்கை பற்றிய தகவல்களை கேட்டு மாநில அரசுகளுக்கு கடிதங்கள் எழுதியிருப்பதாகவும் பதிலுக்கு காத்திருப்பதாகவும் ஆணையம் கூறியது.

பெரும்பாலான குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு விட்டதாக கமிசனின் புதிய தலைவராக கடந்த 2017, மார்ச் 16-ம் தேதி பதவியேற்ற மன்ஹார் வால்ஜிபாய் சாலா கூறுகிறார். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் 10  இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது.

“மாநிலங்கள் முன்னெச்சரிக்கையாக நடக்கவில்லை. மரணமடைந்த துப்புரவுத் தொழிலாளர்களது எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். ஆனால் நமக்குத் தெரிந்தது இது மட்டும்தான். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் 10 இலட்சம் இழப்பீடு பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று அவர் கூறினார்.

கமிசனின் தகவலுக்கு முரணாக, 2000-ம் ஆண்டிலிருந்து நாடு முழுவதும் 1,760 துப்புரவுத் தொழிலாளர்கள் மரணமடைந்திருப்பதாக துப்புரவுத் தொழிலாளர்களுக்காகவும் கையால் மலமள்ளும் தொழிலாளர்களுக்காகவும் இயங்கி வரும் டெல்லியைச் சேர்ந்த “சபாய் கரம்சாரி அந்தோலன்” எனும் அமைப்பு கூறுகிறது.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் “எங்களை கொலை செய்யாதே” என்ற முழக்கத்தின் கீழ் துப்புரவுத் தொழிலாளர்களின் குடும்பத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் தனது மகன் அர்மான் புகைப்படத்துடன் நிற்கும் அவரது தாய். (படம் – நன்றி : நியூஸ்லாண்டரி)

ஆணையம் கூறும் எண்ணிக்கை முற்றிலும் தவறானது என்கிறார் சபாய் கரம்சாரி அந்தோலன் அமைப்பின் நிறுவனரான பெசவாடா வில்சன். “இத்தகவல் தவறானது. இது அவர்களால் அவசரகதியில் எடுக்கப்பட்டது. தற்போது வரையில் 666 அல்ல 1,760 தொழிலாளர்கள் தங்களது உயிரை இழந்துள்ளனர்” என்று அவர் கூறுகிறார்.

பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் உரிய இழப்பீடுகளை அவர்களுக்கு கொடுக்கவும் “சபாய் கரம்சாரி அந்தோலன்” போன்ற தொண்டு நிறுவனங்களிடம் ஆணையம் எப்போதாவது ஆலோசனை கேட்டதா என்று ஆணையத்தின் இயக்குனரிடம் கேட்டபோது, “ஆணையம் இனிமேல்தான் அதைச் செய்யும்” என்று மட்டுமே பதிலளித்தார்.

கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கும் போது 1993-ம் ஆண்டிற்குப் பிறகு சாக்கடை தூர்வாரும் பொது இறந்த தொழிலாளர்களை அடையாளம் காண எந்த மாநிலமும் அக்கறை கொள்ளவில்லை என்பது தெரிகிறது.  இதற்கு மாறாக, உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக, பெரும்பாலான மாநிலங்கள் 2013-ம் ஆண்டு முதல் நிகழ்ந்த சம்பவங்களிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே அடையாளம் கண்டுள்ளன.

பெரும்பாலான குடும்பங்களுக்கு முழுமையான இழப்பீடான 10 இலட்சம் இன்னும் கிடைக்கவில்லை. 10 இலட்சத்திற்கு குறைவாக இழப்பீடு பெற்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முழுமையான இழப்பீட்டை தர வலியுறுத்தி மாநில அரசுகளுக்கு கடிதங்கள் எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்று மன்ஹார் கூறினார்.

நடைமுறையில், வழிகாட்டுதல்கள் வழங்குவது மற்றும் அவற்றை கண்காணிப்பதைத் தாண்டி NCSK-வின் அதிகார வரம்பு இருக்கவில்லை. அந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த அதற்கு அதிகாரம் இல்லை. மாவட்ட அளவில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்த மட்டுமே அதிகாரி ஒருவருக்கு அதிகாரம் உள்ளது.

1994 -ம் ஆண்டு ஆகஸ்டு 12 -ம் தேதி சட்டபூர்வ அமைப்பாக உருவாக்கப்பட்ட NCSK  தொடர்ந்து மூன்று ஆண்டுகள் காலம் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் இந்த அறிவிப்பில் திருத்தங்கள் செய்ததன் மூலம் இதன் காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. தற்போது இந்த ஆணையம் சட்டபூர்வமற்று இயங்கி வருகிறது.

கையால் மலமள்ளுதலை தடை செய்ய 2013 -ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தின் படி எந்த மனிதரையும் சாக்கடைக்குள் அனுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. விரும்பத்தகாத இந்த செயலில் எவரையும் ஈடுபடுத்தும் முன்னர் 27 முன் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்கு பொறியாளர் ஒருவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஏதாவது விபத்து நேர்ந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவசர ஊர்தி ஒன்று அருகிலேயே இருக்க வேண்டும்.

ஆக்சிஜன் உருளை, பாதுகாப்பு முகமூடி மற்றும் முழங்கால் வரை காலணி என சாக்கடை தொட்டிகளை தூய்மைப்படுத்துவதற்கு தனிச்சிறப்பான அணிகலன்கள் தேவை என்று சட்டம் கட்டாயப்படுத்தியிருக்கிறது.

அவசரம் என்றால் வருவதற்கு மருத்துவ அவசர ஊர்திக்கு முன்கூட்டியே தகவல் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயினும், சமீபத்திய அறிக்கைகளின் படி, அரசு நிறுவனங்களோ அல்லது தனியார் நிறுவனங்களோ இந்த விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.

நன்றி : The Wire –  Centre Doesn’t Know How Many People Have Died Cleaning Sewers or Received Compensation
தமிழாக்கம்: வினவு செய்திப் பிரிவு

ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி ! அட அதாங்க சர்தாரு சிலை | ஆழி செந்தில்நாதன்

மோடி அரசால் வல்லபபாய் பட்டேலுக்கு வைக்கப்படுகிற மிகப்பெரிய சிலைக்கான பெயரான Statute of Unity என்பதை பல மொழிகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதில் என்ன வேடிக்கையென்றால், சீனம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, வங்காள மொழிகளில் Statue of Unity மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள்.

தமிழ், இந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் ஒலிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள். தமிழில் இது “ஸ்டேட்டுக்கே ஒப்பி. யூனிட்டி” என்று ஆகியிருக்கிறது!

(அரபி, உருது படிக்கமுடியவில்லை)

பாவிகளா, Google Translate இல் போட்டுப்பார்த்தால்கூட “ஒற்றுமை சிலை” என்று சரியாக வருகிறது.

சரிதான். இந்திக்கும் குஜராத்திக்குமே இந்த நிலைதான் என்றால், தமிழுக்கு கேட்பானேன்!

படிக்க:
சர்கார் படம் : கள்ள ஓட்டுக் கதை கள்ளக் கதையானது | வீடியோ | கருத்துக் கணிப்பு
சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி

பாவம், இந்தியை ஆதரித்த குஜராத்தியான பட்டேல். பரிதாபம், இந்திவெறிபிடித்த குஜராத்தி மோடி!

இந்த ஒலிபெயர்ப்பு விவகாரம் திட்டமிட்ட அவமதிப்பு இல்லை (ஏனென்றால் இந்தி. குஜராத்தியிலும் ரஷ்யனிலும்கூட அது ஒலிபெயர்க்கப்பட்டிருக்கிறது).

ஆனால் இது மிகமோசமான அலட்சியத்தின் வெளிப்பாடு. இந்தியாவின் “ஆட்சி” மொழிக்கே இந்த கதி என்றால் இந்த பலகையை வடிவமைத்தவர்கள், உருவாக்கியவர்கள், வைத்தவர்கள், அனுமதிப்பவர்களின் மனநிலையை இது காட்டுகிறது. அநேகமாக இவ்வளவு மோசமான மொழிக்கொள்கை உள்ள நாடு உலகில் வேறெங்கும் இருக்காது.

இந்த அழகில் ஓர் உயரமான சிலையை வைத்து நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காக்கப்போகிறார்களாம், வெட்கங்கெட்டவர்கள்!

(பி.கு: நண்பர் Thiru Yo சொன்னது போல, இந்தச் சிலையை மட்டுமல்ல, இந்த பலகையையும் சீனாவிலேயே செஞ்சிருக்காங்க போலிருக்கு. சீனாக்காரன் பழிவாங்கிட்டான். அவனோட சீன மொழியில் ஒழுங்காக மொழிபெயர்த்துவிட்டு, இந்தியாவின் “ராஷ்ட்டிரபாஷா”வில் ஒலிபெயர்த்திருக்கிறான்! மோடியின் தாய்மொழியையையும் விட்டுவைக்கவில்லை!. தேஷ்பக்தாள்ஸ் இதற்காக சீனாமீது படையெடுத்தால்கூட தப்பில்லை என்பேன்!)

முகநூலில்: ஆழி செந்தில்நாதன்

Plea submitted against Vedanta at the NGT by Makkal Athikaram

Makkal Athikaram supported the Tuticorin People’s protest against the Sterlite from the begining of their struggle. During the period October 26 – 28, Makkal Athikaaram intervened the  hearing of the appeal in VEDANTA Ltd. vs. STATE OF TAMILNADU case, before the National Green Tribunal. Here is the copy of the written submission submitted before the Principal bench of the  NGT.

*****

BEFORE THE HON’BLE COMMITTEE CONSTITUTED BY THE NATIONAL GREEN TRIBUNAL (PRINCIPAL BENCH)
IN APPEAL No.87/2018
VEDANTA Ltd. vs. STATE OF TAMILNADU & Ors
WRITTEN SUBMISSIONS OF INTERVENOR

Mr. S.RAJU
STATE CO-ORDINATOR
MAKKAL ATHIKARAM (PEOPLE‘S POWER)
TAMIL NADU

M/s. A. SURESH SAKTHI MURUGAN
COUNSEL FOR INTERVENOR
Mobile No: 9489235314

*****

BEFORE THE HON’BLE COMMITTEE CONSTITUTED BY THE NATIONAL GREEN TRIBUNAL (PRINCIPAL BENCH)
IN APPEAL No.87/2018
VEDANTA Ltd. vs. STATE OF TAMILNADU & Ors
WRITTEN SUBMISSIONS OF INTERVENOR Mr. S.RAJU

I) Hazardous Wastes Management

  1. M/s. Vedanta Ltd obtained Environmental Clearance for present production on 09.08.2007 from Ministry of Environment and Forests, Govt. of India. A specific condition. A(v) imposed that ETP cake and Scrubber cake shall be stored in secured landfill at the site till TSDF in Tamil Nadu is functional. The ground water quality around the landfill site shall be monitored and data be submitted to the Ministry/TNPCB. (Page No.263 of the Intervener’s Documents compilation)
  2. Hazardous Wastes Authorization for 5 years was obtained on 10.07.2008 from TNPCB. (Page No.451 of TN Govt Document compilation T1)

As per the authorization

  • The following shall be disposed in secured landfill after stabilization (Condition No.23)

(i) Arsenic bearing sludge (ETP Cake)                   – Semi Solid       – 43,800 T/year
(ii) Scrubber Cake                                             – Semi Solid        – 58,400 T/year
(iii) Spent Catalyst                                            – Solid          – 4 MT/ year
(iv) DM resin
(Toxic Metal containing residue from used-ion
Exchange material in water purification)                – Semi Solid – 5000 MT/year.

  • As per condition no.28 after carrying out Toxic Characteristics Leaching Procedure (TCLP) tests for the waste generated, only stabilized wastes meeting TCLP standards shall be disposed in the landfill.

Violations:

  • No valid HW authorization after 10.07.2013. Operated till 23.05.2018 for 58 months without authorization for collection, storage, transport & disposal in secured landfill of Hazardous Wastes of lakhs of tones.
  • No TCLP test and Ground Water analysis conducted and reports had been submitted to TNPCB and Ministry of Environment and Forests.
  • After the lapse of two years on 07.09.2015 only M/s.Vedanta Ltd submitted the application for renewal of Authorization in a prescribed form. In that application it is mentioned that Scrubber cake be disposed in onsite secured landfill. (Page No.438 of the Intervener’s Documents compilation)
  • In the application submitted on 31.01.2018 for renewal of CTO M/s.Vedanta Ltd mentioned about scrubber cake been dispose to beneficial users, but no valid agreement with the beneficial users quoting quantity of disposal has been annexed with the same. (Page No.458 of the Intervener’s Documents compilation)
  • TNPCB from 2016 to 2018 on various occasions while returning the application for renewal of HW Authorization, asked for the valid agreement with the beneficial users quoting quantity of disposal of scrubber cake, which not produced by the Unit. On this ground also TNPCB not renewed HW authorization. (Page No.467 of TN Govt Document compilation T1).
  • Violating the Environmental Clearance, HW authorization scrubber cake of 15,038.93 MT was sold to the beneficial users as claimed by M/s. Vedanta Ltd in the year 2016. (Page No.482 of TN Govt Document compilation T1).
  • No account for the generation of 29,057.13 MT of Scrubber Cake – 2016-17
    In the Hazardous Waste annual return submitted by M/s. Vedanta for April 2016 to March 2017 – Annual generation of Scrubber cake is shown as 15,645 MT/year only, which is not matched with the annual production of Copper Anodes of 3,35,266 MT/year. The consented quantity of production of Copper Anodes is 4,38,000 MT/year from which 7.5% be generated as Scrubber cake of 58,400 MT/year. While so for the production of Copper Anodes in the year 2016-2017, the Scrubber cake generation should be 44,702.13 MT/year. No account for the generation of 29,057.13 MT. (Page No.481 of TN Govt Document compilation T1).

Variation in Annual Generation of ETP Cake and Scrubber Cake:

From the NEERI 2011 report and the Annual HW returns submitted the following  tabular column drawn

Year Copper Concentrate
(in MT)
Anode production
(in MT)
ETP cake
(in MT)
Scrubber Cake
(in MT)
2008-09 10,47,300 3,02,688 28747 33473
2009-10 11,33,851 3,32,118 33012 37980.86
2010-11 10,52,432 3,02,170.79 12510 22613.99
2014-15   8,24,062 2,42,228 21975 25751
2015-16 11,74,955 3,45,372 33719 22051
2016-17 11,40,574 3,35,266 37050 15645

No account for difference in the generation of ETP Cake and Scrubber Cake. For the similar amount of Copper Concentration used and Copper Anode Produced, the generation of Hazardous Wastes varies in huge percentage. For ETP cake, comparison of 2008-09 with 2010-11 and for Scrubber cake comparison of 2009-10 with 2016-17 shows the variation which is much higher.

(NEERI 2011 Report – Page No.289 Table 4.1 r/w Page No.345 Table No.10.1 in the Intervener Compilation)
(Annual HW returns – Page No.480 to 490 in TN govt compilation T1)

II) Heavy Metal – Lead content in Ground water samples taken from Villages around M/s. Vedanta Ltd

0.05 mg / L- Drinking Water Standards

Place where ground water tested 1994
Base
Line – EIA
 1998
NEERI
Study
1999
NEERI
Study
2005 NEERI Study 2015
TNPCB Max
2016 TNPCB Max 2017 TNPCB Max Mar 2018 TNPCB
Kayaloorani (Bore well) 0.53 0.18 0.988 0.221 0.909 0.464
Kayaloorani (Dug Well) 0.5 0.267
Meelavittan (Borewell) <0.01 0.52 0.279 0.24 0.690 0.264 0.226 0.110
Madathur (Borewell) 0.52 0.407 0.11
Madathur
(Dug Well)
0.55 0.063 0.11
Madathur Entrance
(Open Well)
ND 0.946 0.27 0.227 0.217
Madathur
Opp to Koil (Open Well)
0.712 0.116 0.226 0.277
Kayaloorani 0.45 0.988 0.221 0.909 0.464
Kayaloorani (Kanagavel house) 0.36
T.V.Puram (Borewell) <0.01 0.35 0.65  0.36 0.908 0.55
Pandarampatti (Bore Well) 1.001 0.38 0.914 0.396
Silverpuram
(Bore Well)
ND 1.1 0.321 0.223 0.214
Kumareddiyaa Puram
(Bore Well)
0.997 0.297 0.886 0.386
  • Baseline Data : Page No.115 in TN Govt Document Compilation T1
  • NEERI Report 1998 : Table.6.13 in Page No.44 r/w Table.6.3 in page no.35 of Intervener Compilation
  • NEERI Report 1999 : Table.9 in Page No.87 r/w Table.7 in page no.85 of Intervener Compilation
  • NEERI Report 2005 : Table 5.5 in Page No.215 of Intervener Compilation
  • TNPCB Analysis: Page 90 to 97 in TN Govt Document Compilation T1

Health effects – Lead

A Health study published in support of National Institute of Health, United States of America says Lead exposure include the ingestion lead-contaminated food or drinking water and inhalation. It pervades almost ever organ and system in the Human Body, but the main target for lead toxicity is the Central Nervous System, both in adults and children. Lead is more toxic in young children and unborn children than in older children and adults. Brain damage, mental retardation, behavioral problems, developmental delays, violence, death at high levels of exposure, damage of sense organs, nerves controlling the body, impaired cognitive function, hearing and vision impairment. Other important health effects are renal diseases, cardiovascular outcomes, hypertension, infertility, muscle and joint pain, cataracts and memory & concentration problems.
(Annexed with this Written submissions)

Heavy Metals presence in the process including Lead

  • The chemical testing done by M/s. Vedanta Ltd in the year 2017 in its own lab shows that Lead content in its Copper Concentrate is 10 mg/kg to 10,000 mg/kg.
    (Page No.509 of TN Govt Compilation T1)
  • NEERI conducted an Environmental Audit in the year 2005 and reported the presence of heavy metals in the process.
Heavy Metals ISA-ESP Dust mg/kg Granulate Slag from RHF mg/kg ESP Dust mg/kg Granulated Slag from SCF
mg/kg
ETP Cake
mg/kg
Phospho
gypsum
mg/kg
Arsenic 2971 221 2747 204 432 40.25
Lead 25151 22 36946 165 67 29.31
Zinc 22734 15.35 21280 928 52 13.8
Nickel 176 220 19
Cadmium 5322 4992
Copper 304000 162 282000 3363 404 101


3)
 Zero Liquid Discharge not operated properly

[i] RO plant-II for treating effluents and MEE & Centrifuge not in operation

From 14.3.2017 inspection report point no.9 it is noted that Multiple Effect Evaporator (MEE) & Centrifuge were not in operation for days together.

[ii] RO-III has been removed and it was not functioned for many years

 From the TNPCB inspection report dt 14.03.2017

Not in operation. Mechanical Vapour Recompressor (MVR) and Centrifuge also not in operation. TNPCB consent order dt 13.04.2016 in Pg No. 268 of TN Govt Compilation T2 also noted that RO-III has been removed and directed to install the same.

In its compliance letter dt 31.01.2018 M/s. Vedanta Ltd stated that it installed RO-III and commissioned its operation.
(Page No.649 of TN Govt Document compilation T1 –Annexure 5G).

While it is found that RO-II and RO-III is not in operation, M/s. Vedanta Ltd statement recorded in the TNPCB inspection report dt 22.02.2018 that Ro-I was not in operation since the water is purchased from M/s. South Ganga desalination plant. R.O –II was not in operation since the treated effluent from ETP is treated in RO-III, because there is no storm water to be treated at present. If there is rain/storm, the storm water will be treated in the R.O –III. Since no rain at present this R.O-III is used for the treated effluent.

This clearly indicates that by misleading statements M/s. Vedanta Ltd is suppressed the fact that it’s ZLD is not properly operated, effluents were not treated properly.

[iii] No flow meter and log book maintenance

  • Separate flow meter at inlet and outlet of each ETP not provided
  • Log books for ETPs not maintained.

NEERI’s 1999 report’s finding on ZLD

“Required to maintain a log book recording the water intake and consumption vis-à-vis waste water generation which should be regularly inspected by the TNPCB followed by the submission of a report endorsing the zero discharge claimed to be practiced by the industry is true.”
(Page No.109 of the Intervener’s Documents compilation)

5) Higher quantity of accumulated Copper Slag leads to pollution:

In the NEERI 2005 Report, it is found that (i) the Granulated Slag from Rotary Holding Furnace (RHF) contains the predominant metals – arsenic (221 mg/kg), Lead (22 mg/kg), zinc (15.35 mg/kg) and copper (162 mg/kg). (ii) the Granulated Slag from Slag cleaning Furnace (SCF) contains the predominant metals – arsenic (204 mg/kg), Lead (165 mg/kg), Zinc (928 mg/kg), Nickel (176 mg/Kg) and Copper (162 mg/kg). Though concentration of Arsenic in Slag exceed the stipulated limit of 50 mg/kg, the Slag is not listed as Hazardous Waste due to the inert nature, high stability and poor leachability.  But the same time it is recommended that a decision to be taken by the TNPCB whether to designate the RHF slag as hazardous or otherwise as it is a high volume-low effect waste. (Page No.227, 228, 229, 230 of the Intervener Compilation).

On the other hand research studies submitted by the Govt of Tamil Nadu shows that Copper Slag can release these highly toxic elements into environment causing pollution. They are highly toxic if present overabundant. Moreover, in the Environmental Clearances dt 22.02.2008 and 01.01.2009, the MoEF imposed the condition that Only non-hazardous slag shall be used for road construction. TCLP test as per the CPCB guidelines shall be carried out before using slag for the road construction. Use of hazardous slag for road construction shall be immediately stopped. (page no.186 and 206 of TN Govt compilation T2).

For several years without any concern to environment M/s. Vedanta Ltd dumped the Copper Slag in various open places in lakhs of tons which caused significant pollution even if it is considered as Non- Hazardous waste. Moreover it is stated by Therku Veerapandiapuram (T.V.Puram) villagers that M/s. Vedanta Ltd dumped Hazardous Wastes, Gypsum around the factory premises, over that copper slag has been dumped in huge quantity.

  • Non- Responsibility of M/s. Vedanta Ltd in the removal of Copper Slag:

The NGT Southern Bench through its order dated 08.09.2017 in Application no.158 of 2017 (SZ) observed that if the copper slag dumped near Uppar Odai is not removed as per the undertaken given by the M/s. Vedanta Ltd to the District Collector, TNPCB has to take appropriate action. Till the closure of the Unit, no steps for removal of the copper slag has been taken by them.
(Page No.109 of the Intervener’s Documents compilation)

But this NGT order was suppressed by M/s. Vedanta Ltd before this Hon’ble Committee.

6) No clean chit given by the Supreme Court in its 2013 year Judgement

The Apex Court in its judgment came to a final conclusion that conditions imposed by the Environmental authorities for effective control of pollution is complied with and therefore permitted the functioning of the unit with a clarification that the judgment will not stand in the way of TNPCB issuing directions, including a direction for closure of the plant, for the production of environment in accordance with law.

In para no.45 of the judgment it is stated that “The NEERI reports of 1998, 1999, 2003 and 2005 show that the plant of the appellant did pollute the environment through emissions which did not conform to the standards laid down by the TNPCB under the Air Act and through discharge of effluent which did not conform to the standards laid down by the TNPCB under the Water Act. … On account of some of these deficiencies, TNPCB also did not renew the consent to operate for some periods and yet the appellants continued to operate its plant without such renewal.

            … For such damages caused to the environment from 1997 to 2012 and for operating the plant without a valid renewal for a fairly long period, the appellant company obviously is liable to compensate by paying damages.”

Finally, a compensation of 100 crores rupees has been imposed against M/s.Vedanta Ltd.

In this judgement in para no.40 it is also reiterated that “If, however, after the environmental clearance is granted under the Environment (Protection) Act, 1986 and the Rules and the notifications issued thereunder and after the consents granted under the Air Act and the Water Act, the industry continues to pollute the environment so as to affect the fundamental right to life under Article.21 of the Constitution …. As there were no other remedial measures to ensure that the industry maintains the standards of emission and effluent as laid down by law for safe environment. (As Supreme Court directed closure of tanneries polluting the waters of River Ganga in M.C.Mehta v. Union of India – 2010).

 Therefore M/s. Vedanta Ltd a habitual violator of all environmental norms polluting Water and Air and contaminating the soil, ground water and land in all aspects leading to serious health problems to the common public can not be permitted to refunction and the permanent closure is justifiable on all grounds.

Dated at Chennai on this the 28th Day of October 2018

S.Raju
State Co-Ordinator
Makkal Athikaram (People’s Power)
No.16, Mullai Nagar Commecial Complex
Ashok Nagar 2nd Avenue
Chennai – 600 083
Tamil Nadu.
9443260164

ஹரியானாவின் குத்துச் சண்டை வீரர் குல்ஃபி விற்கும் அவலம் !

“குத்துச் சண்டை வீரர்களை அதிகளவில் உருவாக்கி வரும் மாநிலமான  ஹரியானாவில், குத்துச் சண்டை வீரர் தினேஷ்குமார் குல்ஃபி ஐஸ் விற்கிறார்” என்ற செய்தி தற்பொழுது சமூக ஊடகங்களின் வாயிலாக தெரியவந்துள்ளது. குல்ஃபி ஐஸ் விற்பது ஒன்றும் இழிவானது அல்ல. ஆனால் ஒரு விளையாட்டு வீரர் அப்படி தொழில் மாற வேண்டிய அவசியம் என்ன?

குத்துச்சண்டை வீரர் தினேஷ்குமார் இதுவரை சர்வதேச அளவில் இந்தியாவிற்காக விளையாடி 17 தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கமும் பெற்றிருக்கிறார். இவருடைய திறமையை பாராட்டி இந்தியாவின் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான அர்ஜுனா விருதை கடந்த 2010 ஆம் ஆண்டு மத்திய அரசு வழங்கியிருக்கிறது.

இத்தனை தகுதிகளையும் உடைய ஒரு வீரர் குல்ஃபி ஐஸ் விற்கும் தொழிலை ஆரம்பித்ததற்கு காரணம், கடந்த 2014-ஆம் ஆண்டு தினேஷ்குமார் சென்ற கார் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகச்சை பெற்றிருக்கிறார். அத்துடன் முடிவுக்கு வந்தது அவரது குத்துச்சண்டை கனவு. விபத்தில் சிக்கிய தினேஷ்குமாரை அரசோ, விளையாட்டுத்துறையோ கண்டு கொள்ளவில்லை.

ஏற்கனவே, சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வாங்கிய கடனே ஏராளமாக இருந்திருக்கையில், அவருடைய சிகிச்சைக்கு வேண்டிய செலவுகளையும் கடன் வாங்கியே காப்பாற்றியிருக்கிறார் அவருடைய தந்தை. கடுமையான காயத்திலிருந்து மீண்டு வந்த தினேஷால் தன் தந்தை வாங்கிய கடனில் இருந்து மீண்டு வர முடியவில்லை.

படிக்க :
ஸ்வப்னா பர்மன் : ஒளிரும் வைரங்களில் ஒன்று
ஆசிய விளையாட்டுப் போட்டி இந்திய அணியை நிர்வகிக்கும் கிரிமினல்கள் !

தற்பொழுது உடல்நிலை முன்னேற்றமடைந்து மீண்டும் குத்துச்சண்டை போட்டியில் பங்கெடுக்கும் அளவுக்கு தினேஷ்குமார் தயாரானாலும், கடனுக்கான வட்டியே பெரும் தொகையாக மாதாமாதம் கட்டவேண்டிய நிலையில்தான் அவர் குல்பி ஐஸ் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஒரு குத்துச் சண்டை வீரனாவதற்குரிய தகுதி சாதரணமாக வந்து விடாது. பாக்சிங் கற்றுக் கொள்வதற்கு முன் செய்யப்படும் வார்ம்அப் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். பாக்சிங்கின் அடிப்படைகளான நிற்கும் நிலை, கால்களை நகர்த்துவது, அடிப்படையான குத்து முறைகளையும் கற்றுக் கொண்டு பின்னர் வேகத்தையும், துல்லியமாக தாக்கும் ஆற்றலையும், விளையாடும் போது உடலைச் சமநிலையுடன் வைத்துக்கொள்ள தயார்படுத்தியிருக்க வேண்டும். அதற்குறிய பயிற்சியை முடிக்கவே பல ஆண்டுகள் கடின உழைப்பு தேவைப்படும்.

அந்த உழைப்பின் பலனாக பெற்ற அனைத்து தகுதியையும் ஒரு விபத்தின் மூலம் இழந்துள்ளார் என்பதாக மட்டும் நாம் பார்க்க முடியாது. விளையாட்டுப் போட்டிகளையும், வீரர்களையும் ஊக்குவிப்பதற்கு தகுதியான அரசு இல்லை என்பதுதான் உண்மை.

“தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ள நான் ஒரு விபத்தினால் தொடர்ந்து என்னால் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டது. என் தந்தை வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவே நான் குல்ஃபி விற்கிறேன். முன்பு இருந்த மத்திய அரசும் தற்போதுள்ள உள்ள அரசும் என்னைக் கண்டு கொள்ளவில்லை. பல வீரர்களைச் சர்வதேசப் போட்டிகளுக்காகத் தயார் செய்யும் திறன் என்னிடம் உள்ளது.  எனக்கு உதவிகள் கிடைத்தால் நான் நிச்சயம் செய்வேன்” எனப் பத்திரிக்கைகளிடம் தெரிவித்திருக்கிறார் தினேஷ்.

திறமையான ஆட்டக்காரராக மட்டுமில்லாமல் ஒரு பயிற்சியாளராகவும் இருந்திருக்கிறார். “தன்னிடம் பயிற்சி பெற்ற பலர் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர் என்றும், அவர்களிடம் பணம் பெறாமல் இலவசமாக பயிற்சியும் அளித்ததாகவும்” கூறியிருக்கிறார்.

பொதுவாக இந்த மாதிரியான குத்துச் சண்டை விளையாட்டை அதிகம் தேர்ந்தெடுப்பவர்கள் வறிய நிலையில் இருப்பவர்கள்தான். மேல்தட்டு வர்க்கத்தில் இருந்து வரக்கூடிய யாரும் இந்த விளையாட்டை தேர்ந்தெடுப்பதில்லை. காரணம் ஒருபொழுதும் தங்களை வருத்திக் கொள்ளுவதை அவர்கள் விரும்புவதில்லை. அதனால்தான் கிரிக்கெட் பல நடுத்தர கோமான்களால் ரசிக்கப்படுகிறது. தோனி ஓய்வு பெறுவதையும், விராட் கோலி சதம் அடிப்பதையும் விவாதமாக்கும் ஊடங்கங்கள் தினேஷ்குமாரின் அவல நிலையை ஒரு பரிதாபத்திற்குரிய செய்தியாக சொல்லிவிட்டுக் கடந்து செல்கின்றன.

பன்னாட்டு நிறுவங்களின் விளம்பரத்திற்காகவும், வர்த்தக ஆதாயத்திற்காகவும் நடத்தப்படும் கிரிக்கெட்டைத் தவிர வேறு எந்த விளையாட்டிற்கும் இந்தியாவில் முக்கியத்துவம் தரப்படுவதில்லை. அதாவது கார்ப்பரேட்டுகளின் விளம்பர நோக்கதிற்கு பயன்படாத ஹாக்கி, கால்பந்து முதற்கொண்டு தடகளப் போட்டி வரை அனைத்தும் இரண்டாம்பட்சம்தான்.

எந்த விளையாட்டிற்கும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதோடு தேசிய அணி வீரர்களுக்கே அடிப்படையான பாதுகாப்பு உபகரணங்கள் கூட போதுமான அளவுக்கு இல்லை. விஞ்ஞானபூர்வமாக பயிற்சியளிக்கத் தகுதியான பயிற்சியாளர்களும் இல்லை. இன்னமும் பழைய முறையிலான பயிற்சியைத்தான் ஹாக்கி மற்றும் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டிற்கு வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். மற்றொருபுறம் பார்ப்பன விழுமியங்களால் கட்டப்பட்டிருக்கும் சாதி ஆதிக்கம் விளையாட்டுகளில் அதிகம் கோலோச்சுகிறது.

விளையாட்டு வீரர்கள் முதற்கொண்டு சங்கத்தலைவர்கள் வரை ஆதிக்க சாதி பெரிச்சாளிகள்தான். குறிப்பாக ஒலிம்பிக் கமிட்டி குழுவில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் ஊழல், சுரண்டல், கொள்ளை என அனைத்திலும் கரை கண்டவர்கள். இவர்களுக்கும் விளையாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஆனால் இவர்கள்தான் விளையாட்டு வீரர்கள் தேர்வுகுழுவில் ஆதிக்கம் செலுத்துவார்கள்.

படிக்க :
வீராங்கனை காஞ்சனமாலாவை பிச்சைக்காரியாய் பெர்லினில் அலைய விட்ட பாஜக அரசு !
ஆண்ட பரம்பரையால் அழிக்கப்படும் இந்திய விளையாட்டு !

எந்தவொரு பின்புலமும் இல்லாத ஏழை-எளிய ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் இதனையெல்லாம் தாண்டித்தான் தங்களுடைய திறமையாலும் விடாமுயற்சியாலும் ஜொலிக்கிறார்கள். அவர்களையும் ஓரம்கட்டி மூலையில் உட்காரவைத்து விடும் பார்ப்பனிய கட்டமைப்பு இருப்பதால், அவர்களும் நட்சத்திரங்களாக நீண்ட நாட்கள் ஜொலிப்பதில்லை. இறுதியாக விளையாடுவதற்கான வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் “ஸ்போர்ட்ஸ் கோட்டாவில்” அரசு வேலையை எதிர்பார்த்து…. அதுவும் கிடைக்காமல் விளையாட்டிலிருந்தே வெளியேறி விடுகிறார்கள். அல்லது திட்டமிட்டே வெளியேற்றப்படுகிறார்கள்.

இதற்கு முன்னோடியாக ஹாக்கி வீரர் பல்ஜித் சிங் , தமிழகத்தை சேர்ந்த தன்ராஜ் பிள்ளை, ஆஷா ராய் பி.டி உஷா, டிங்கோ சிங் போன்றோர்கள் ஓரம் கட்டப்பட்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் தற்பொழுது தினேஷ்குமார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!  நாக்பூரைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான நீச்சல் வீராங்கனை காஞ்சனமாலாவையும் இரக்கமில்லாமல் பெர்லினில் அலையவிட்ட நாடு இந்தியா என்பதையும்,  நாம் மறந்து விடக்கூடது!

Metoo வும் தமிழ் இலக்கியமும் | பொ வேல்சாமி

0

நண்பர்களே….

பொ.வேல்சாமி
டந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை விட metoo விவகாரத்தைப் பலரும் பரவலாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் இலக்கிய வரலாற்றில் Metoo வை போன்ற செய்திகள் சில ஆங்காங்கே பதிவாகி உள்ளன. அவற்றுள் பழந்தமிழ் நூலான அகநானூற்றின் 390 வது பாடலை metoo வுக்கு பொருத்தமான மிகப் பழமையான பாடல் என்று சொல்லலாம். அந்தப் பாடலில் ஒரு ஊருக்கு உப்பு விற்பனை செய்ய வந்த பழங்குடிப் பெண்ணிடம், உன் உடம்பின் விலை என்ன என்றுஉள்ளுர்இளைஞன் ஒருவன் கேட்கின்றான்.

சுமார் 200,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்றிலக்கியங்களிலும் இதையொட்டிய செய்திகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது 1957 இல் GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS LIBRARY வெளியிட்டுள்ளதூதுத் திரட்டுஎன்ற தொகுப்பு நூல். அத்தொகுப்பில் உள்ளசங்கரமூர்த்தி ஐயரவர்கள் விறலிவிடு தூதுஎன்ற நூலில் சில செய்திகள் பதிவாகி உள்ளன. Metoo போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களாக 1 அரசு அதிகாரிகள், 2 கோவில் அதிகாரிகள், 3 பணம் படைத்த பிரபுகள், 4 மிகப் பெரிய வணிகர்கள், 5 ஊர்கணக்குப் பிள்ளை, 6 கடைநிலை அரசு ஊழியர் 7 செல்வாக்குப் பெற்றபெரியமனிதர்கள் போன்ற பலருடைய குணாம்சங்களும் அவர்களை அனுசரிக்காத பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. இந்த நூலில் உள்ள அத்தகைய பகுதிகளில் (பக்.108,109,110,111) சிலவற்றை உங்கள் பார்வைக்கு பதிவிட்டுள்ளேன். இந்நூலினுள் பேசப்படும் பல செய்திகள் கொச்சையாகவும் பச்சையாகவும் உள்ளதால் நான் இதை இங்கு பதிவிடவில்லை. நூலை படிக்கவிரும்பும் நண்பர்களுக்கு இந்த இணைப்பை தருகிறேன். தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்: தூதுத்திரட்டு

படிக்க:
#MeToo : படுக்கை அறைக்கு வந்தால் பாட வாய்ப்பு ! கர்நாடக சங்கீதத்தின் பார்ப்பன ராகம் !
சென்னை பல்கலையில் வன்னிய சாதிச் சங்க விழா ! தரம் தாழ்ந்த கல்வித்துறை !

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

திருக்குறளும் எளிமையான தமிழ் இலக்கணமும் | பொ வேல்சாமி

2

நண்பர்களே….

பொ.வேல்சாமி
மாணவர் ஒருவர் தமிழ் இலக்கணத்தைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கின்றது ஐயா என்றார். இலக்கணத்தை எளிமையாகச் சொல்ல முடியுமா என்று கேட்டார். நான் அவரிடம் ஒரு திருக்குறளைச் சொன்னேன். அந்தக் குறள்,
எண் என்ப1 ஏனை எழுத்து என்ப2 இவ்விரண்டும்
கண் என்ப3 வாழும் உயிர்க்கு

இந்தக் குறளுக்கு பொருள் சொல்லுங்கள் என்று அவரிடம் கேட்டேன். அவர்எண் என்று சொல்லபடுபவையும், எழுத்து என்று சொல்லபடுபவையும் ஆகிய இரண்டும் உயிர்களுக்கு கண் என்று சொல்லுவார்கள்என்றார்.

தம்பி, இந்தக் குறளில் முதல் வரியில் வருகின்ற என்ப என்ற இரண்டு வார்த்தைகளுக்குசொல்லபடுபவைஎன்று பொருள் கூறினீர்கள். இரண்டாவது வரியில் வருகின்ற என்ப என்பதற்குசொல்லுவார்கள்என்று பொருள் கூறினீர்கள். சரி சொல்லபடுபவை என்பது என்ன என்று கேட்டேன். “அஃறிணைப் பன்மைப் பெயர்” (பலவின்பால் வினையாலணையும் பெயர்) என்றார். சொல்லுவார்கள் என்பதுஉயர்திணைப் பன்னை வினை” (பலர்பால் வினைமுற்று) என்றார்.

படிக்க:
தமிழ்நாட்டில் தமிழ் இல்லை ! ஒரு அமெரிக்கரின் அதிர்ச்சி !
உனக்கு கீதை எங்களுக்கு சங்க இலக்கியம் – பழ. கருப்பையா

சரி ஒரே சொல்லுக்கு இரண்டு விதமான அர்த்தங்களை இந்தக் குறளில் இருந்து நாம் பெறுகின்றோம். அப்படியானால் ஒரேசொல் இரு வேறுவிதமாகப் பொருள் கொள்ளப்படுவதை நாம் அறிகிறோம். அவ்விதமாக பொருள் கொள்ளப்படுவதை இலக்கணத்தில் வைத்து சொன்னால் உயர்திணை, அஃறிணை என்று இரு வேறு தன்மையை அச்சொல் பெறுகின்றது. தமிழ் இலக்கணத்தின் அடிப்படை என்பதை இலக்கண ஆசிரியர்கள் இவ்விதமாகத்தான் பொருள் கொண்டு அதற்கான கலைச் சொற்களை கையாண்டுள்ளனர். அத்தகைய கலைச்சொற்களுக்கான பொருளை நாம் தெரிந்து கொண்டு மொழியைப் பயின்றால் இலக்கணம் என்பதை ஓரளவு எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். இது ஆரம்ப நிலை. தொடர்ந்து நாம் கற்றுக்கொண்டே வந்தால் இலக்கணம் என்பது நமக்கு எளிமையாகி விடும். ஒரு இலக்கியம் பற்றிய நம்முடைய புரிதலையும் விரிவாக்கும்.

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்