Tuesday, June 30, 2026
முகப்பு பதிவு பக்கம் 301

நூல் அறிமுகம் : கூலி உழைப்பும் மூலதனமும் | மனிதன் உருவானதில் உழைப்பின் பாத்திரம்

சமீபத்தில், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் வரியை குறைத்ததுடன், பெரு நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளையும் அறிவித்தார். பொருளாதார மந்தநிலையால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நிர்மலா சீதாரமனின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்திற்குள்ளானது. இதற்கு பதிலாக விவசாயிகளின் கடன்களை ரத்து செய்திருக்கலாம் என்று சிலர் கூறினர். எந்த அரசாங்கமாக இருந்தாலும் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை வழங்குவதே அவர்களின் நோக்கமாக இருப்பதாக சிலர் கூறினர். கார்ப்பரேட்டுகளுக்கு வரியை குறைப்பதால் பொதுமக்களுக்கு என்ன லாபம் என்று பலர் கேள்வி எழுப்பினர்.

இந்த விமர்சனங்கள் நியாயமாக தோன்றினாலும், நிர்மலா சீதாராமன் தரப்பிலும் ஒரு நியாயம் உள்ளது. அந்த நியாயத்தை புரிந்துகொண்டால்தான் அது உண்மையிலேயே நியாயமா, இல்லையா என்ற முடிவுக்கு வர முடியும். அதாவது, தர்க்க ரீதியில் அதை தவறு என்று நிறுவமுடியும்.

ரோம் பற்றி எரியும்போது, நீரோ மன்னன் ஃபிடில் வாசித்த கதையோடு, நிர்மலா சீதாராமனின் நடவடிக்கையை ஒப்பிட முடியுமா? அவ்வாறு ஒப்பிடுவதே சரி என்று நீங்கள் நினைத்தால், ரோம் ஏன் பற்றி எரிகிறது என்பதை முதலில் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நீரோ மன்னன் ஃபிடில் வாசித்த பிறகு ரோம் பற்றி எரியவில்லை. நகரம் பற்றி எரியத்தொடங்கிய பிறகே, அவன் ஃபீடில் வாசிக்கத் தொடங்கினான். தீயை அணைப்பதற்கான நடவடிக்கையை எடுக்காமல், ஃபிடில் வாசித்ததை வேண்டுமென்றால் குற்றம் என்று சொல்லலாம். ஆனால், நகரம் பற்றி எரிய யார் காரணம்?

“அரசாங்கம், அரசாளவேண்டுமே தவிர, வியாபாரத்தில் ஈடுபடக் கூடாது” என்று கூறும் சில அறிவாளிகள் “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு” என்ற குறளையும் சரி என்று கூறுகிறார்கள். பொருளீட்டும் வழிகளை அதிகரித்து, அதை பாதுகாத்து முறையாக செலவிடுதே சிறந்த அரசு என்று வள்ளுவர் கூறுகிறார். ஒரு வாதத்திற்கு, பொருளீட்டுவதென்பது, வரி வசூலை மட்டுமே குறிப்பதாக எடுத்துக்கொண்டால், கார்ப்பரேட்டுகளின் வரியை குறைப்பது அரசுக்கு வரும் வருமானத்தை குறைப்பதல்லவா? பொருளீட்டுவதென்பது, வரி வசூலை மட்டுமே குறிப்பிடவில்லை என்றால், அரசாங்கம் வியாபாரத்தில் ஈடுபடக் கூடாது என்ற கூற்று தவறல்லவா? முன்னதற்கு, பின்னது முற்றிலும் முரணாக உள்ளது. ஆகவே, இந்த இரண்டும் சரி என்று கூறுபவர்கள் முரண்பாடுகளின் மொத்த உருவமல்லவா?

உண்மையில் நமது அரசாங்கம் எப்படி பொருளீட்டுகிறது? அதை எப்படி மக்களுக்கு செலவழிக்கிறது?

படிக்க :
♦ பொருளாதார வீழ்ச்சி : மறைக்கும் நிர்மலா ! வீதிக்கு வரும் ஆதாரங்கள் !
♦ சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !

பொருளீட்டல் என்பது பெரும்பாலும் வரி வசூலையே நம்பியுள்ளது. இயற்கை வளங்களின் மூலமும், லாபம் தரும் ஒரு சில பொதுத்துறை நிறுவனங்கள் மூலமும் வருமானம் ஈட்டப்படுகிறது. இந்த வருமானம் அரசாங்கத்தை நடத்தவும், பெயரளவிலான நலத்திட்டங்களை வழங்கவும் மக்களின் சில அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது. மற்றபடி, மக்களின் அனைத்து தேவைகளையும் அரசாங்கம் பூர்த்தி செய்வதில்லை. மாறாக, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த சேவைகளும், படிப்படியாக நிறுத்தப்பட்டு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்கு விற்கப்பட்டு வருகின்றன. இயற்கை வளங்களும், அதன் உண்மையன மதிப்பை விட மிகவும் சொற்பமான விலைக்கு தனியாருக்கு தாரைவார்க்கப்படுகின்றன.

இதனால் அரசு, மக்களுக்கு வழங்கிவந்த இலவச அல்லது நியாயமான விலையிலான சேவைகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. அடிப்படையாக அரசு வழங்க வேண்டிய நல்ல வாழும் சூழலும், கல்வியும், சுகாதாரமும் கூட பணம் கொடுத்தால் மட்டுமே கிடைக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், “அரசாங்கம், அரசாளவேண்டுமே தவிர, வியாபாரத்தில் ஈடுபடக் கூடாது” என்ற குறிக்கோள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

சரி, இந்த குறிக்கோளை வகுத்தது யார்? இந்த குறிக்கோளை நோக்கி அரசாங்கத்தை செலுத்துவது எது?

உழைப்பு என்ற உயிர்ப்பான செயல்பாடே, மனித வாழ்க்கையின் அடிப்படையாகும். உண்மையில், உழைப்பே மனிதனை மனிதனாக மாற்றியது. அப்படிப்பட்ட உன்னதமான உழைப்புச் சக்தியை முதலாளியிடம் விற்பதன் மூலம், அவரிடமிருந்த தொழிலாளி கூலியைப் பெருகிறார். அதைக்கொண்டு உயிர்வாழ தேவையான பொருட்களை வாங்கிக்கொள்கிறார். உழைப்புச் சக்திக்கு ஈடாக முதலாளி வழங்கும் கூலி, ஒரு தொழிலாளியை தொடர்ந்து தொழிலாளியாக மட்டுமே வைத்துக்கொள்வதற்கு போதுமானதாக உள்ளது. அதுவும், தொழில்துறை சிறந்த விளங்கும் காலங்களில் மட்டுமே இது சாத்தியமாகிறது. தொழில்துறையில் அடிக்கடி நிகழும் நெருக்கடிகளின்போது கூலியின் அளவு குறைகிறது. அத்துடன், ஒரு மிகப்பெரிய தொழிலாளர் கூட்டம் வேலையை இழக்கிறது. லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட முதலாளி வர்க்கம், அதைப் பெருக்குவதற்காக செய்யும் சித்து விளையாட்டுகள் தொழிலாளர்களை பாதிக்கிறது.

தொழில்துறை ஏற்றமாக இருக்கும் காலங்களில் தொழிலாளர்களின் வாழ்நிலையில் மாற்றம் நிகழ்கிறதா? என்று கேட்டால் அதுவும் இல்லை என்றே கூறவேண்டும். ஏனென்றால், தொழில்துறை ஏற்றம் கண்ட காலத்திலும்கூட, லாபம் அல்லது கொள்ளை லாபம் மட்டுமே முதலாளிகளின் நோக்கமாக உள்ளது. அப்படியிருக்க, முதலாளி அடையும் லாபத்தோடும், அதனால் அவன் அனுபவிக்கும் சுகபோகங்களோடும் ஒப்பிட்டால், தொழிலாளர்களுக்கு உயர்த்தி வழங்கப்படும் கூலி மிக மிக சொற்பமே. தொழில்துறை ஏற்றத்தால் சமூகத்தில் நிகழ்ந்துள்ள மாற்றத்துடனும், புதிய நுகர்பொருட்களின் வருகையுடனும் ஒப்பிட்டால் உண்மையில் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு சில ஆயிரம் ரூபாய் கூலி உயர்ந்துள்ளதே தவிர, அதன் மதிப்பின் அடிப்படையில் பார்க்கப்போனால் உண்மையில் கூலி குறைந்துள்ளதை புரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு, மூலதனத்தை வைத்துக்கொண்டு, லாபத்தை பெருக்குவதற்காக வழிதேடி அலையும் முதலாளிகளுக்கு வழியை ஏற்படுத்திக்கொடுக்கவே அரசுதுறைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகின்றன. தனியார் முதலீடு பெருகினால், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று இந்த கீழ்த்தரமான செயலுக்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது. இது ஒரு தனிப்பட்ட நபரின் தவறால் நிகழ்வதில்லை. இதுவே ஒட்டுமொத்த சமூகத்தின் விதியாக உள்ளது. ஆகவே, யார் ஆட்சியில் இருந்தாலும் சமூகத்தை இயக்கும் விதி என்ற அடிப்படையில் அவர்கள் இதைத்தான் செய்ய வேண்டும். முன்னர் மன்மோகன் செய்தார். பின்னர் சிதம்பரம் செய்தார். அருண்ஜெட்லிக்குப் பிறகு இப்போது நிர்மலா சீதாராமன் அதை செய்கிறார். இவர்கள் அனைவரும் பின்பற்றும் அந்த சமூக இயக்கத்தின் விதியே முதலாளித்துவம்.

படிக்க :
♦ மனிதனை நாயாகப் பயிற்றுவிக்கிறது முதலாளித்துவம் ! தோழர் மருதையன்
♦ மாவோவின் சீனாவில் மக்களை பட்டினியில் தள்ளிய முதலாளித்துவ பாதையாளர்கள்

அரசு மக்களுக்கு செய்ய நினைப்பதை முதலாளிகளுக்க செய்ய வேண்டும். முதலாளிகள் அதைக்கொண்டு தங்கள் தொழில்துறையை பெருக்குவார்கள். இதனால், வேலைவாய்ப்பு பெருகும். கூலி உயரும். மக்களின் வாழ்நிலையும் உயரும். இந்த விதியையே அனைத்து அரசுகளும் பின்பற்றுகின்றன. இதன் அடிப்படையில்தான், வேலை வாய்ப்பை பெருக்குவதற்காக, கார்ப்பரேட் வரியை நிர்மலா சீதாராமன் குறைத்துள்ளார். இதுதான் அவர் தரப்பில் முன்வைக்கப்படும் நியாயம்.

ஆனால், லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு முதலாளித்துவம், அந்த லாபத்தை பெருக்கும் பேராசையில் இந்த விதியை தொடர்ந்து மீறுகிறது. இதனால், மக்கள் கூட்டம் கூட்டமாக வேலை இழக்கின்றனர். ஒருவேளை உணவுக்கு கூட வழியில்லாமல் அலைகின்றனர். ஆனால், மறுபுறம் முதலாளிகள் கற்பனை செய்து பார்க்க முடியாது அளவு செல்வத்தை சேர்த்து சுகபோகமாக வாழ்கின்றனர். இவை அனைத்தையும் அறிந்திருந்தும், முதலாளிகளுக்கு அரசு தொடர்ந்து சலுகை வழங்கி வருகிறது. அத்துடன், பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது.

நிர்மலா சீதாராமனை பொருத்தவரை அவர் செய்ய நினைத்ததன் நோக்கம் சரிதான். ஆனால் அது எதிர்பார்த்த விளைவைத் தராது என்பது அவருக்கே தெரியும். இருந்தபோதும் முதலாளித்துவம் என்ற விதி, அதை செய்ய நிர்பந்திக்கிறது. முதலாளித்துவத்தின் பிரதிநிதி என்ற அடிப்படையில் அவர் அதை செய்தே ஆகவேண்டும்.

ரோமை சுருட்டி விழுங்கிய பெருந்தீயோடு, முதலாளித்துவத்தை ஒப்பிடலாம். இந்தப் பெருந்தீ, இன்று உருவானதில்லை. 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பற்றத்தொடங்கி, அவ்வபோது கனன்றபடியும், பெரும்பாலும் சுவாலையை விரித்தும் தொடர்ந்து எரிந்து வருகிறது. தீயின் தன்மையை அறியாமல், தீ எப்படி உருவானது என்பதையும் அறியாமல், அவ்வபோது ஃபிடில் வாசிப்பவர்களை மட்டுமே குற்றம் சொல்வதுடன் இந்த மிகப்பெரிய பேரவலம் மறைக்கப்படுகிறது.

தூரத்தில் நிற்கும் பார்வையாளர்கள் இதன் உஷ்ணத்தை உணராமல் இருக்கலாம். ஆனால், உள்ளே வெந்துகொண்டிருப்பவர்கள் தீயை எதிர்த்து போராட துணிந்துவிட்டார்கள். அந்த கூட்டத்தில் பலர், முன்னாள் பார்வையாளர்கள் என்றபடியால், பரவி வரும் தீ, இன்றைய பார்வையாளர்களையும் வெகு சீக்கிரத்தில் போராட்டத்தின் பக்கம் ஈர்க்கும் நாள் தொலைவில் இல்லை.

170 ஆண்டுகளுக்கு முன், கார்ல் மார்க்ஸ் எழுதிய “கூலியுழைப்பும் மூலதனமும்” என்ற புத்தகம், நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் வரியை குறைத்ததற்கான அடிப்படையை விளக்குகிறது. மன்மோகன் சிங் உலகமயமாக்களுக்கு இந்தியாவை திறந்துவிட்டதன் பொதுவான நோக்கத்தை புரிவைக்கிறது. இது தொடர்வதால் நிகழும் பயங்கரத்தை கூறுவதுடன், இது இப்படியே தொடராது என்பதையும் தத்துவார்த்தமாக புரியவைக்கிறது.

மார்க்சியத்தின் மற்றொரு கர்த்தா ஏங்கெல்ஸ் எழுதிய “மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பு வகித்த பாத்திரம்” என்ற கட்டுரை, உழைப்பே அனைத்திற்கும் அடிப்படை என்று வாதிடுகிறது. உழைப்பு என்ற உயிர்ப்பான செயல்பாடே குரங்கிலிருந்து மனிதன் உருவானதற்கு அடிப்படைக் காரணம் என்று கூறுகிறது. மனித சமூகம் உருவானதற்கு உழைப்பும், உழைப்புக் கருவிகளும் எவ்வாறு காரணமாக அமைந்தன என்பதை விளக்குகிறது. இயற்கையின் மீது மனிதன் ஆற்றும் வினையும், அதற்கு எதிர்வினையாக, இயற்கை மனிதனை தண்டிப்பதைப் பற்றியும் பேசுகிறது. எதிர்வினையைப் பற்றி கவலையில்லாமல், இயற்கையை அழிப்பதால் ஏற்படும் விளைவே, எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல், லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் முதலாளியத்தால் ஏற்படும் என்று கூறுகிறது. இறுதியாக, இந்த ஆபத்திலிருந்து மனித சமூகத்தை பாதுகாக்க, தற்போதைய சமூக கட்டமைப்பு முழுவதிலும் ஒரு புரட்சி தேவை என்று கூறுகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த புத்தகங்கள், இதுவரை எளிமையாக்கப்படாதது மிகவும் வருத்தத்திற்குரியது. பொருள் முதல்வாதமே மார்க்சியத்தின் அடிப்படையாகும். ஆனால், அதை மறுக்கும் வகையில், மார்க்சிய ஆசான்கள் எழுதிய வாக்கிய அமைப்புகளை மாற்றினால்கூட பெரும்பாவம் என்பது போல், அந்த மொழிபெயர்ப்புகள் கடினமாகவே விடப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியும், அதைத்தொடர்ந்து மக்கள் நடத்தும் வீரம் செறிந்த போராட்டங்களும், கம்யூனிச தத்துவத்தின்கீழ் அனைவரும் அணிதிரளும் காலம் தொலைவில் இல்லை என்பதை உணர்த்துகின்றன. அந்த வரலாற்றுத் தருணத்தை விரைவில் அடைய வேண்டுமென்றால், தத்துவம் மக்களிடம் விரைவாக சென்றுசேர வேண்டும். அதற்கு, மார்க்சிய ஆசான்களின் எழுத்துகள் மக்கள் மொழில் எளிமையாக்கப்பட வேண்டும்.

இந்த வரலாற்று தேவையை உணர்ந்து பணியாற்றும் சக தோழர்களுக்கு தோள்கொடுக்கும் முயற்சியாக கார்ல் மார்க்ஸ் எழுதிய “கூலியுழைப்பும், மூலதனமும்”, ஏங்கெல்ஸ் எழுதிய “மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பு வகித்த பாத்திரம்” ஆகிய இரண்டு நூல்களை எளிய தமிழ்நடையில் மொழிபெயர்த்ததுடன் எளிய விளக்கங்களையும் சேர்த்துள்ளேன். என் அறிவுக்கு எட்டியவகையில், கருத்துகள் மாறாமல், பிழை ஏதும் இல்லாமல், முடிந்தவரையில் எளிமைப்படுத்தியுள்ளேன்.

இந்த இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா, வரும் வெள்ளிக்கிழமை (10.01.2020) மாலை 6 மணிக்கு, புத்தக கண்காட்சி அரங்கில், “போதி வனம்” (கடை எண்: 201) பதிப்பகத்தில் நடைபெறவுள்ளது என்பதை மகிச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஊக்கமளித்த “மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின்” தோழர்களுக்கும், மொழிபெயர்ப்பை சரிபார்த்து தந்த தோழர் பாஸ்கர் மற்றும் தோழர் அ.கா.ஈஸ்வரன் அவர்களுக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்.

இது ஒரு இயக்கமாக்கப்பட்டு அனைத்து தத்துவார்த்த எழுத்துகளும் விரைவில் எளிமையாக்கப்படும் என்று நம்பிக்கையுடன் !

முகநூலில் – அசீப்

இந்தியா 2020 : அப்துல் கலாமின் வல்லரசுக் கனவு என்ன ஆனது ?

0

டுமையான பொருளாதார மந்தநிலை, அதிகரித்து வரும் வறுமை நிலை மற்றும் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் என கொந்தளிப்பான நிலையில் இந்தியா 2020-ம் ஆண்டிற்குள் நுழைகிறது.

2020 – இந்தியா ஒரு வல்லரசாக மாறும் ஆண்டாக இருக்கும் என்று மில்லினியம் தொடங்கிய காலக்கட்டத்தில் சிலர் நம்பினர் என்பதை நினைவுகூர்வது தற்போது வினோதமாகத் தோன்றலாம்.

நாம் இப்போது 2020-ல் இருப்பதால், அது உண்மை இல்லை என்று நமக்குத் தெரியும். ஒரு வல்லரசாக இல்லாமல், உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வாழ்க்கைத் தரம் குறைவாக உள்ளது என்பதே நிதர்சனமாக உள்ளது.

ஒரு சொடுக்கில் அல்லது கண் அசைவில் ஏழை நாட்டை வல்லரசாக மாற்றிவிடுவோம் என ஏமாற்றிக்கொண்டிருந்த, அதிக எண்ணிக்கையிலான இந்திய உயரடுக்கினர் இறுகப்பற்றியிருந்த பகுத்தறிவற்ற களிப்பை இங்கே திரும்பிப் பார்ப்போம்.

ஏவுகணை மனிதன்

இதையெல்லாம் ஆரம்பித்தவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த நேரத்தில், கலாம் இந்தியாவின் ஏவுகணை திட்டம் மற்றும் போக்ரான்- II அணுசக்தி சோதனைகளுடன் தொடர்புடைய ஒரு அறிவியலாளர் மற்றும் நிர்வாகியாக இருந்தவர். பின்னர் அவர் இந்திய ஒன்றியத்தின் குடியரசுத் தலைவராக பணியாற்றினார்.

1998-ம் ஆண்டில், கலாம் மற்றுமொரு அரசாங்க அறிவியலாளர் ஒய்.எஸ். ராஜன் ஆகியோர் இந்தியா 2020 : எ விஷன் ஃபார் தி நியூ மில்லினியம் என்ற புத்தகத்தை இணைந்து எழுதினர்.

1998 -ம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் வெளியான அப்துல் கலாம் அவர்களின் பேட்டி.

புத்தகத்தில் ஒரு எளிய செய்தி இருந்தது: “2020-க்குள் அல்லது அதற்கு முன்பு ஒரு வளர்ந்த நாடாவது வெறும் ஒரு கனவு அல்ல. இது பல இந்தியர்களின் மனதில் வெறும் ஆர்வமாகக்கூட இருக்க தேவையில்லை. ஆனால், நாம் அனைவரும் எடுத்துக்கொண்டு சாதிக்கக்கூடிய ஒரு பணி இது”

புத்தகத்தின் பெரும்பகுதி நம்பிக்கையூட்டும் முன்னறிவிப்புகளின் தொகுப்பாகும், இது எந்தவொரு பொருத்தமான தரவையும் விட அதிகமாக தேசபக்தியின் உணர்ச்சியால் முழுவதுமாக இயக்கப்பட்டதாக இருந்தது. பல வழிகளில், புத்தகத்தின் பாணி இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு ஸ்மார்ட்போன்களை மூழ்கடித்துக்கொண்டிருக்கும் மில்லியன் கணக்கான தேசபக்தி வாட்ஸ்அப் செய்திகளுக்கு ஒரு நீண்ட முன்னோடி வடிவமாகும்.

உதாரணமாக, கலாம் மற்றும் ராஜன், “நேரடி பொருளாதார நடவடிக்கைகளில் அதிகமான பெண்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பு உள்ளது” என்றும் – மிகவும் நம்பமுடியாத அளவிற்கு – “2007 – 2008 -க்குள் வறுமை முற்றிலுமாக அகற்றப்படுவதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன” என்றும் கருதினர்.

2008 முதல் 12 ஆண்டுகளில், இந்தியாவில் வறுமை ஒழிக்கப்படவில்லை என்பது வெளிப்படையானது மட்டுமல்ல, இதுபோன்ற கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் அதிகமான பெண்கள் பணியிடங்களில் நுழைவதை விட, உண்மையில், இந்தியாவின் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2017-18-ம் ஆண்டில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள எட்டு நாடுகளில் மட்டுமே இந்தியாவை விட பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பு விகிதம் குறைவாக உள்ளது. வீட்டை விட்டு வெளியேறி, பணியிடங்களுக்குச் செல்வதில், தெற்காசியாவிலேயே இந்திய பெண்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். கலாம் மற்றும் ராஜன் ஆகியோர் தங்களது சுதந்திரமான கணிப்புகளைச் செய்யும்போது, இந்திய ஆணாதிக்கத்தின் ஆழமான வேரூன்றிய வலிமையை மறந்துவிட்டதாகத் தெரிகிறது.

படிக்க:
பீகார் : தேசியக் கொடி ஏந்தியவரை கொடூரமாகக் கொன்ற காவி குண்டர்கள் !
♦ அப்துல் கலாம் கனவை நிறைவேற்ற அமலா பால்!

கூட்டு மாயை !

குழப்பத்தை விட, இந்த நம்பமுடியாத இலக்குகள் உண்மையில் அந்த நேரத்தில் பாராட்டுக்களைப் பெற்றன. “இந்த சிக்கலான காலங்களில், இந்தியா சூப்பர் பவர் தகுதியை அடைய இன்னும் இரண்டு தசாப்தங்களே தொலைவில் உள்ளன என்கிற கருதுகோளை, உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களின் தெளிவான தொகுப்புகளை கொண்டு ஆய்வு செய்திருப்பது அரிதான ஒன்றாகவே உள்ளது” என ‘இந்தியா 2020’க்கான அறிமுகத்தை டைம்ஸ் ஆப் இந்தியா எழுதியது.

இந்தப் பாராட்டு, கலாமை தனது இலக்குகளை இன்னும் வியக்க வைக்கும் அளவில் ஊக்குவிக்கும் துரதிர்ஷ்டவசமான விளைவைக் கொண்டிருந்தது. 2008-ம் ஆண்டில், தனது புத்தகம் வெளியிடப்பட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, கலாம் இந்தியா 2012-ம் ஆண்டிலேயே வல்லரசு ஆகிவிடும் என்றார். “2020-ம் ஆண்டளவில் இந்தியா ஒரு வல்லரசாக மாற வேண்டும் என்று நான் கற்பனை செய்திருந்தாலும், இளைஞர்களின் அணுகுமுறையும் நம்பிக்கையும், அனைத்தையும் சரியான முறையில் வெல்லும் துடிப்பும், ஐந்தாண்டுகளுக்குள் நாட்டை உலகளாவிய தலைமையாகவும், சூப்பர் பவராகவும் மாற்றும்” என்று அப்போதைய முன்னாள் ஜனாதிபதி தனது தன்னம்பிக்கையை தானே பாராட்டும் வகையில் கூறினார்.

இந்தியா ஒரு முழுமையான வளர்ந்த தொழில்மயமாக்கப்பட்ட பொருளாதாரம் மற்றும் வல்லரசாக மாறுவதற்கு மிக அருகில் உள்ளது; கொள்கை மற்றும் அரசியலில் மிக உயர்ந்த மட்டங்களில் நுழைந்துள்ளது என்பன போன்ற – நடைமுறைக்கு எட்டாத – கற்பனைகள் உருவாக்கப்பட்டன. 2002-ம் ஆண்டில், பிரதமர் வாஜ்பாயி தனது சுதந்திர தின உரையில் அரசாங்கத்தின் நோக்கம் 2020-க்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த தேசமாக மாற்றுவதே’ என்றார்.

வாஜ்பாயின் கீழ், திட்ட ஆணையம் 2002-ல் ‘இந்தியா விஷன் 2020’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை ‘டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நூலான, இந்தியா 2020 : புதிய மில்லினியத்திற்கான ஒரு பார்வை’ என்பதை அங்கீகரிப்பதாக இருந்தது.

தவறான நம்பிக்கை

திட்ட ஆணையம் அங்கீகரித்ததன் காரணத்தால் அது கலாமின் சூத்திரப்படி இந்தியாவை வல்லரசாக்கும் திட்டம் என்ற பொருளல்ல. எவ்வாறாயினும், இருபது ஆண்டுகளில் ஒரு ஏழை நாடு எவ்வளவு சாதிக்க முடியும் என்கிற பகுத்தறிவற்ற நம்பிக்கை (Pollyannaishly) தொடர்வதாகவே இருந்தது.

இந்தியா 2020-ஐ போலவே, இந்த அறிக்கை வாட்ஸ்-அப்பின் மொக்கையான தேசபக்தி தகவலைப் போல உள்ளது. இந்தியா முழுவதும் பயணம் செய்த மெக்காலே பிரபு, ‘ஒரு பிச்சைக்காரன்; ஒரு திருடன் கூட நாட்டில் இல்லை’ எனவும் காரணம் நாட்டின் ‘ஆன்மீக – கலாச்சார பாரம்பரியமே’ எனவும் சொன்னதாக வாட்சப்பில் சுற்றிக்கொண்டிருக்கும் மொக்கையான தேசபக்தி தகவல்களைப்போல உள்ளது இந்த அறிக்கை.

அறிக்கையின் உண்மையான கணிப்புகள் அதே வெகுளித்தனமான வகையில் தொடர்கின்றன. அறிக்கை நம்பிக்கையுடன் கூறுகிறது, “இந்தியா குறைந்த வருமானம் கொண்ட நாட்டிலிருந்து உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடாக மாறும்”. நிச்சயமாக அது நடக்கவில்லை. இன்றைய நிலவரப்படி, இந்தியா ஒரு உயர்-நடுத்தர வருமான நாடாக இருப்பதில் இருந்து வெகு தொலைவில் உள்ளது (அதில் நுழைய நாட்டின் அதன் மூலதன வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும்). இந்தியாவின் பிரிட்டீஷ் ராஜ்ஜிய உடன்பிறப்புகளான பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தை போலவே, இந்தியாவும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடு. இருப்பினும், இந்தியாவின் சிறிய தெற்கு அண்டை நாடான இலங்கை வல்லரசு தீர்க்கதரிசனங்களால் அறியப்படாமல் அமைதியாக 2019-ம் ஆண்டில் ஒரு உயர் நடுத்தர வருமான நாடாக மாறியது.

படிக்க:
NRC – NPR-ஐ தமிழகத்தில் அமல்படுத்தாதே ! மக்கள் அதிகாரம் பேரணி !
♦ வினவு 2019 – அதிகம் வாசிக்கப்பட்ட 10 பதிவுகள் !

மேலும்: “புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான மகத்தான வாய்ப்புகளுடன் இணைந்து, வேலைவாய்ப்பின்மை 2020-க்குள் கிட்டத்தட்ட அகற்றப்படலாம்”. 2020-ம் ஆண்டில் இதைப் படிக்கும்போது, அத்தகைய “மகத்தான வாய்ப்புகள்” எதுவும் இல்லை என்பது நமக்குத் தெரியும். வியட்நாம் அல்லது வங்க தேசத்தை போலன்றி, இந்தியா வெகுஜன உற்பத்தித் தொழில்களை உருவாக்க முடியவில்லை. உண்மையில், அதிக மதிப்புள்ள நாணயத்தாள்களை மதிப்பிழக்கச் செய்த மோடி அரசாங்கத்தின் பேரழிவுகரமான நடவடிக்கையைத் தொடர்ந்து, 2017-18-ம் ஆண்டில் வேலையின்மை விகிதம் 45 ஆண்டுகளைக் காட்டிலும் உச்சத்தில் இருந்தது.

ஒரு கட்டத்தில், இது இந்தியாவின் 2020 இலக்குகளை பட்டியலிடுகிறது, “இந்தக் குறிப்பு நிலைகளை அடைவது மட்டுமல்லாமல், பல சந்தர்ப்பங்களில் அவற்றை மிஞ்சும்”. நம்பிக்கை தவறாக இருந்தது. 2020-ம் ஆண்டில் இந்தியா எந்த திட்ட ஆணையத்தின் இலக்குகளையும் எட்டவில்லை.

எடுத்துக்காட்டாக, 2020-ம் ஆண்டில் இந்தியாவின் பெண் வயதுவந்தோரின் கல்வியறிவு விகிதம் 94% ஆக இருக்கும் என்று அறிக்கை கணித்தது. ஆனால் முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இது 65% மட்டுமே. குழந்தை இறப்பு 1000 பிறப்புகளுக்கு 22.5 ஆக இருக்கும் என்று விஷன் 2020 கணித்துள்ளது. ஆனால் 2017-ம் ஆண்டின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் இது 33 ஆக உள்ளது, இது உலக சராசரியை விட அதிகம். வயதுக்கான எடையின் அடிப்படையில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு 8% மட்டுமே இருக்கும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது. உண்மையில், இது 32.7% என்ற கணிப்பை விட நான்கு மடங்கு அதிகமாகும் (2020-ம் ஆண்டில் இந்தியா உலகிலேயே மிகவும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள சமூகங்களில் ஒன்றாகும்).

மீம்களில் நுழைந்த ‘சூப்பர் பவர்’!

சூப்பர் பவர் 2020 கணிப்புகள் பலனளிக்கவில்லை என்றாலும், அவை பயனுள்ள எதையும் விளைவிக்கவில்லை என்று அர்த்தமல்ல. முன்னறிவிப்பு மிகவும் மோசமாக இருந்ததன் விளைவாக, அதில் ஒரு முரண்பாட்டின் வளமான ஆதாரத்தைக் கண்டது இணையம்: மீம் உருவாக்குபவர்களுக்கு சரியான மூலப்பொருள் கிடைத்தது.

‘2020-க்குள் சூப்பர் பவர்’ மீம்கள் இரண்டு பதிப்புகள் வெளிவந்தன. ஒன்று சர்வதேச செய்தி பலகைகளான ரெடிட் மற்றும் 4சான் போன்றவற்றில் பரவி, சூப்பர் பவர் அந்தஸ்து குறித்த இந்தியாவின் உரிமை கோரல்களை கேலி செய்தது. திறந்த வெளியில் மலம் கழிக்கும் நெருக்கடியை வளர்ந்து வரும் ஒரு வல்லரசின் வழக்கத்திற்கு மாறாக அடிப்படை பிரச்சினையாக மீம்கள் காட்டின.

இவ்வளவு குறுகிய காலத்தில் தங்கள் நாடு வளர்ச்சியடையாத நிலையிலிருந்து வல்லரசாக மாறியதாக இந்தியர்கள் கேலி செய்தனர். டிசம்பர் 31, 2019 என்றும் ஜனவரி 1, 2020 என்றும் தேதியிட்டு முந்தைய படங்களையும் பிந்தைய படங்களாக வளர்ந்த நாடுகள் அல்லது கிராபிக்ஸ் செய்யப்பட்ட படங்களையும் பகிர்ந்தனர்.

விளைவுகள்

அசல் சூப்பர் பவர் 2020 கணிப்பு பொய்த்து போயிருந்தாலும், அதன் பதிப்புகள் தொடர்ந்து உயிர்வாழ்கின்றன (அவை இப்போது மிகக் குறைவாகவே அவ்வப்போது எழுந்தாலும்கூட). 2019 மக்களவைத் தேர்தலின் போது, பாஜக தலைவர் அமித் ஷா, நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக வாக்களித்தால் 2024-க்குள் இந்தியா ஒரு வல்லரசாக மாறும் என்று வாக்காளர்களுக்கு உறுதியளித்தார். முன்னதாக 2018-ம் ஆண்டில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், கலாமின் “விஷன் 2020”-ஐ மோடி நிறைவேற்றுவார் என்று கூறினார் . இருப்பினும், புத்திசாலித்தனமாக எந்த ஆண்டுக்குள் என அவர் குறிப்பிடவில்லை.

இவற்றில் சில வேடிக்கையானவை அல்லது அபத்தமானவை என்று தோன்றலாம். உண்மையில் அதில் சில அபத்தமானவைதான். ஆயினும்கூட, இந்த “சூப்பர் பவர் 2020” வணிகத்துடன் தொடர்புடைய உண்மையான விளைவுகளைகூட சொல்வதில்லை. கடந்த இரண்டு தசாப்தங்களாக, பல இந்திய கொள்கை வகுப்பாளர்கள் அபத்தமாக அடைய முடியாத இலக்குகளின் அடிப்படையில் திட்டங்களை வடிவமைத்து வந்ததாக தெரிகிறது.

சுதந்திரத்திற்குப் பிறகு முதல் சில தசாப்தங்களில், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகள் இந்தியாவை கடந்தன. இப்போது, பொருளாதார வல்லுனர் அமர்த்தியா சென் போன்ற வல்லுநர்கள் தன் தெற்காசிய அண்டை நாடுகளான வங்க தேசம், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளிடமிருந்தும் இந்தியா பின்னோக்கி போய்க் கொண்டிருப்பதாக எச்சரிக்கிறார்கள்.

இந்த நிலையில், இரண்டாவது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா, துயரமளிக்கும் விதமாக இன்னமும் தனது வல்லரசு கனவை தொடர்ந்து கொண்டிருக்கிறது.


கட்டுரை: சோயிப் டானியல்
தமிழாக்கம் :
கலைமதி
நன்றி: ஸ்க்ரால்.

எது உங்களது புத்தாண்டுப் புரட்சி ?

1

டந்த ஆண்டு (2019) மனச்சோர்வுடன் முடிந்தாலும் நம்பிக்கையான ஒரு குறிப்பையும் அது விட்டுச் சென்றுள்ளது. அரசாங்கம் அதன் ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் உறுதியாக இருப்பதை அது காட்டியுள்ளது. மேலும், தான் விரும்பியதைச் செய்வதற்கான முழுமையான உரிமையை தேர்தல் வெற்றி அளிக்கிறது என்பதிலும் அரசாங்கம் உறுதியாக உள்ளது. இது சாத்தியமான எல்லா வழிகளிலும் முசுலீம்களையே குறிவைக்க விரும்புகிறது. ஏனென்றால் சங்க பரிவாரின் முக்கியக் கோட்பாடே எப்போதும் அதுதான். அந்த திசையில் குடியுரிமை திருத்த சட்டம் – குடிமக்கள் தேசிய பதிவேடு ஒரு முக்கியமான படியாகும்.

இது இந்தியாவுக்கு மிகவும் கவலையளிக்கும் நிலையாகும். ஆனால், மக்கள் பெருமளவில் இதற்கு எதிர்வினையாற்றிய விதத்தில் நம்பிக்கை ஏற்படுகிறது. நாடு முழுவதும் குடிமக்கள் சினத்தில் எழுந்துள்ளனர், CAA – NRC-க்கு எதிராக மட்டுமல்லாமல், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய சமுதாயத்திற்குள் வளர்ந்து வரும் ஆபத்தான பிரிவினை நிலைமைக்கு எதிராகவும் தங்கள் எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்துள்ளனர். எதிர்ப்பு அணிவகுப்புகளில் இந்திய அரசியலமைப்பின் முன்னுரை வாசிக்கப்படுவது தற்செயலானவை அல்ல – 70 ஆண்டுகளாக நாட்டை ஒன்றாக வைத்திருக்கும் கொள்கைகள் மற்றும் மதிப்புகளின் தொகுப்பைக் காப்பாற்றுவதற்கே இந்த யுத்தம் என்பதை குடிமக்கள் அறிவார்கள். பாஜகவும் அதன் அதிகாரம் மிக்க தலைவர்களும் அந்த மதிப்புகளை அழிக்க விரும்புகிறார்கள். ஆனால் குடிமக்கள் அவற்றைக் காக்கவும் பாதுகாக்கவும் விரும்புகிறார்கள்.

எல்லோரும் பரபரப்புக்கும் சோர்வுக்கும் உள்ளாகி போராட்டங்கள் சோர்வை எட்டினாலும் இந்த உள்ளொலி தொடர வேண்டும்; சிதறக்கூடாது.  சங்க பரிவாரம் தாம் கற்பனை செய்துகொண்டிருக்கும் இந்து ராஷ்டிரத்தை அடைவதற்கான தனது இடைவிடாத பயணத்தை எப்போதும் நிறுத்தாது என்பது தெளிவாகிறது. அவர்கள் உருவாக்க விரும்பும் சமுதாயத்தைப் பற்றிய தெளிவான பார்வையும், எதையும் தங்கள் வழியில் வர விடக்கூடாது என்பதற்கான  உறுதியும் கொண்ட மொத்த விசுவாசிகளின் பரந்த இராணுவத்தையும் கடந்த தொண்ணூறு ஆண்டுகால மூளைச் சலவை உருவாக்கியுள்ளது.

படிக்க :
♦ CAA எதிர்ப்புக் கோலம் : கருத்துரிமையை காலில் போட்டு மிதிக்கும் தமிழகப் போலீசு !
♦ குடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் !

அவர்களைப் பொறுத்தவரை, அது வெற்றியைப் பெறுவது மட்டுமல்ல; மதச்சார்பற்ற, தாராளமய ஜனநாயகத்திலிருந்து தொடங்கி அவர்கள் வெறுக்கிற அனைத்தையும் மொத்தமாக அழிப்பதும் ஆகும். குடிமக்கள் அதைப் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த ஆண்டு, அரச அதிகாரத்தால் உயர்த்தப்பட்ட, சங்க இயந்திரங்கள் அந்த இலக்குகளை இன்னும் தீவிரமாகவும் இரக்கமின்றியும் தொடரும். நேரம் முடிந்துவிட்டதைப் போல, ஒரு அவசர உணர்வு அவர்களிடம் இருக்கிறது.

நரேந்திர மோடியின் முதல் அரசாங்கத்தில் அது தடத்தைக் கண்டுபிடித்தது; இப்போது இது தரையில் ஓடுகிறது. 2019-ம் ஆண்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சில மாதங்களுக்குள், புதிய அரசாங்கம் காஷ்மீருடனான 70 ஆண்டுகால அரசியலமைப்பு ஏற்பாட்டை மாற்றுவதாக அறிவித்து ஒரு முழு மாநிலத்தையும் முடக்கியது. பின்னர் டிசம்பரில், குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இடையில், அயோத்தியில் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படுகிறது; பொது சிவில் சட்டம் போன்ற முடிக்கப்படாத பணியும், இன்னும் பலவும் உள்ளன. அவை விரைவில் அடையப்படும்.

பொது சமூகமும் இந்திய குடிமக்களும் அதை எவ்வாறு எதிர்ப்பார்கள்? இது முக்கியமான கேள்வியாக இருக்கும், ஏனென்றால் போராட்டங்களுக்கு அவற்றிற்குரிய இடம் உண்டு; நிச்சயமாக அரசாங்கத்தை அவை திணறடித்தன. ஆனால், அவை மட்டும் போதுமானதாக இருக்காது. வீதியில் உருவாகும் அழுத்தம் ஒரு பிரச்சினையில் கவனம் செலுத்துகிறது, ஆனால் அது அடிப்படையில் விஷயங்களை மாற்றாது. அரசாங்கம் இப்போது தனது அடியில் பின்தங்கியுள்ளது என்பது வெளிப்படையானது. CAA-க்கு ஆதரவாக தொண்டர்களின் பலவீனமான அணிவகுப்புகளையோ அல்லது ஜக்கி வாசுதேவ் போன்றவர்களின் ஆதரவையோ மட்டும் கொண்டு மிகவும் அவநம்பிக்கையுடன் இருக்கிறது அரசாங்கம். ஆனால், ஆர்ப்பாட்டங்கள் நிறுத்தப்பட்டாலோ அல்லது மெதுவாக வந்தாலோ, அரசாங்கம் புதுப்பிக்கப்பட்ட சக்தியுடன் முன்னேறும்.

எனவே, பரந்த அளவிலான அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பொதுக் கருத்தை உருவாக்குதல், பிரச்சாரத்தை எதிர்கொள்வது, சக்திவாய்ந்த பொதுக் குரல்களின் ஆதரவைப் பெறுதல், சட்ட நடவடிக்கைகள் கூட – இவை அனைத்தும் எதிர்வரும் சவால்களை எதிர்கொள்ள பயன்படுத்தப்பட வேண்டும். போராட்ட அணிவகுப்புகளின் ஆற்றல் உண்மையின் அடிப்படையிலும் தன்னிச்சையாகவும் அடையாளம் காணக்கூடிய தலைவர்கள் இல்லாமல் இருக்கிறது – எல்லோரும் இப்போது இணைந்திருக்கிறார்கள். திரைக்குப் பின்னால், குடிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல் செயல்பாட்டாளர்கள் மக்களை ஊக்குவிக்க கடுமையாக பணியாற்றுவதோடு தொண்டர்களை வழங்குகின்றனர்.

இப்போது தலைவர்கள் தோன்ற வேண்டும், கட்டமைப்புகள் வைக்கப்பட வேண்டும். இந்தியா என்கிற கருத்தாக்கத்துக்காக யோசனைக்காக போராட விரும்பும் அனைவருக்கும் இது நெருக்கடி நேரமாக இருக்கும்.

ஏற்கெனவே சிவில் சமூக அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பு பற்றிய பேச்சு உள்ளது, ஆனால் அரசியல் கட்சிகள் இல்லாமல், அவர்களால் சிறிய அளவிலேயே செயல்பட முடியும். அரசியல்வாதிகளின் வலிமை என்னவென்றால், அவர்கள் தங்கள் தொகுதிகளுக்கு செய்தியை எடுத்துச் செல்ல முடியும். அரசியல்வாதிகள் பிரச்சினையின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள், அவர்களை வெளியே வைக்க வேண்டும் என்று சிவில் சமூக ஆர்வலர்களால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு நம்பிக்கை உள்ளது. ஜெயபிரகாஷ் நாராயணனின் ‘முழுமையான புரட்சி’ மற்றும் உலகெங்கிலும் இதுபோன்ற பல இயக்கங்கள் அந்த கருத்தை பரப்பியுள்ளன. இந்தியாவில் அரசியல்வாதிகளை கேலி செய்வது எளிதானது, பெரும்பாலும் அவர்கள் அதற்கு தகுதியானவர்கள். ஆனால் அவை ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாகும். கேரளாவில் பினராயி விஜயன் அல்லது உண்மையில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி போன்ற அரசியல்வாதிகள் இல்லாமல், பாஜகவுக்கு ஆதரவாக நின்றிருந்தால், CAA-NRC க்கு எதிரான எந்தவொரு போராட்டமும் மிகவும் பலவீனமாக இருந்திருக்கும்.

படிக்க:
♦ ஜே.என்.யூ : ஏ.பி.வி.பி. குண்டர்கள் வெறியாட்டம் ! கொலைவெறி தாக்குதல்கள் !
♦ பொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு : அமெரிக்காவின் நாட்டாமை !

போர்கள் தெருவில் அல்லது உண்மையில் சமூக ஊடகங்களில் வெல்லப்படுகின்றன என்று நினைப்பது தவறு. டிவிட்டர் போக்குகள் செய்தியின் முறையீட்டை விரிவுபடுத்த உதவும், ஆனால் அடிமட்டத்தில் கடுமையான வேலைக்கு தொண்டர்கள் தேவை. ஒழுங்காக பயன்படுத்தப்பட்டால், அரசியல் அமைப்புகள் ஒரு சிறந்த வளமாக இருக்கக்கூடும். ஏனென்றால் ஒருகட்டத்தில், போர் என்பது அரசியல் ரீதியாக போராட வேண்டியிருக்கும். அவர்களின் பங்கில், அரசியல்வாதிகள் எழுந்து நிற்க வேண்டும் – அவர்களில் பலர் இதுவரை கலவையான செய்தியை அனுப்பியுள்ளனர் அல்லது பாஜகவை எதிர்ப்பதில் தெளிவற்ற தன்மையைக் காட்டியுள்ளனர், மேலும் முக்கியமான சந்தர்ப்பங்களில் அவர்கள் எந்தப் பக்கத்தை ஆதரிப்பார்கள் என்று கூறப்படவில்லை.

குடிமக்கள் சக்தியுடன் இணைந்து அனைத்து முக்கிய பங்குதாரர்களையும் உள்ளடக்கிய நன்கு திட்டமிடப்பட்ட ஒரு திட்டத்தின் கலவையானது, தீங்கு விளைவிக்கும் CAA-NRC-ன் தாக்குதலை எதிர்ப்பதில் நிச்சயமாக ஒரு வல்லமைமிக்க சக்தியாக இருக்கக்கூடும். ஆனால், இது உடனடியாக எதிர்கொள்ளவிருக்கிற தேசிய மக்கள் தொகைப் பதிவை மறந்துவிடக் கூடாது.

மாசேதுங் கூறியிருப்பது போல, “புரட்சி என்பது ஒரு மாலைநேர விருந்து அல்ல, அல்லது ஒரு கட்டுரை எழுதுவது அல்ல. ஒரு ஓவியம் தீட்டுவதோ அல்லது தையல் வேலை செய்வதோ அல்ல; அது அவ்வளவு பண்பானதாக இருக்காது; அவ்வளவு ஓய்வானதாகவோ, மிருதுவானதாகவோ இருக்காது. அவ்வளவு அமைதியானதாக, இரக்கமுடையதாக, மரியாதையானதாக இருக்காது. இன்னும் அடக்கமானதாகவோ, பெருந்தன்மை வாய்ந்ததாகவோ இருக்காது.”

இது ஒரு புரட்சி அல்ல, அது ஒரு துணிகர முயற்சியும் அல்ல. ஆனால் அது ஒரு போர், இந்திய விழுமியங்களையும், அடிப்படைக் கொள்கைகளையும் நிலைநிறுத்துவதற்கான போர். தேசபக்தி கொண்ட இந்தியர் முசுலீம்களை – அல்லது வேறு யாரையும் – இரண்டாம் தர குடிமக்களாக குறைக்க விரும்பமாட்டார். எல்லா மதத்தினரும் தெருவுக்கு வந்துள்ளனர். ஏனெனில் அவர்கள் ஒரு ‘முஸ்லீம்’ காரணத்திற்காக போராடவில்லை; ஆனால் அவர்கள் இந்தியாவுக்காக நிற்கிறார்கள். இந்த அளவிலான அகில இந்திய உற்சாகம் நீண்டகாலமாக இல்லாத ஒன்று.

அதுவே தன்னளவில் புரட்சிகரமானது.  அந்த உள்ளொலியுடன்  இந்த நாடு புதிய ஆண்டிற்குள் நுழைய வேண்டும்.

கட்டுரையாளர் : சித்தார்த் பாட்டியா
தமிழாக்கம் : அனிதா
நன்றி : தி வயர்.

ஒப்பந்த சாகுபடிச் சட்டம் : விவசாயிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் பொறி !

ஒப்பந்த சாகுபடிச் சட்டம்  : விவசாயிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் பொறி !

மிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல்) என்ற சட்டத்தை கடந்த அக்டோபர் 30  நிறைவேற்றியிருக்கிறது தமிழக அரசு. கடந்த 2018, மே மாதத்திலேயே மைய அரசு இந்தச் சட்டத்தை இயற்றியிருந்தாலும், மாநிலங்களைப் பொருத்தவரையில் தமிழகத்தில்தான் முதன்முதலாக நிறைவேற்றப்பட்டுள்ளது. விளைச்சல் அதிகமாகி விலை வீழ்ச்சி ஏற்படும் காலங்களில் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்கவும், உரிய விலை கிடைப்பதை உத்தரவாதம் செய்யவும் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறுகிறது, தமிழக அரசு.

இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மாநில அளவில் அதிகார அமைப்பு ஒன்று உருவாக்கப்படும். இதில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, வருவாய் நிர்வாகத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த ஐந்து அரசு அதிகாரிகள்; நிறுவனம் அல்லது கொள்முதலாளர் பிரதிநிதிகள் இருவர், விவசாயிகள் அல்லது உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் பிரதிநிதிகள் இருவர், வேளாண் வல்லுநர் ஒருவர் என அரசால் முன்மொழியப்படும் ஐந்து பேர் என மொத்தம் 10 பேர் அங்கம் வகிப்பர். ஒப்பந்தச் சாகுபடி தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளிலும் இந்த அமைப்பு தலையிட்டுத் தீர்த்து வைக்கும் அதிகாரம் கொண்டதாக இருக்கும் என்று சட்டவிதிகள் கூறுகின்றன.

சத்தியமங்கலத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட பருத்தி விவசாயிகள்.

”இந்த சட்டத்தின்படி, கொள்முதலாளர்  அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும்  விவசாயிகள் அல்லது உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், தங்களது விளைபொருட்கள்  அல்லது கால்நடைகள் அல்லது கால்நடைகளிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை,  ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட அன்று நிர்ணயம் செய்யப்பட்ட விலையிலேயே பரிமாற்றம் செய்வதற்குப்  பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு அப்பால், இச்சட்டம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும்” எனக் கூறுகிறது தமிழக அரசு. மேலும், ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விலையைப் பெறுவதில் விவசாயிகளுக்குச் சிக்கல் ஏற்பட்டால், அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக நின்று உரிய விலை கிடைக்க உத்தரவாதம் செய்யும் என்றும் தமிழக அரசு கூறுகிறது.

”தமிழக அரசின் இந்தப் பிரகடனங்களைக் கேட்கும்போது கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்” என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. ஒப்பந்த சாகுபடி மூலம் விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்கப் போவதாகவும், அப்படி நிர்ணயிக்கப்பட்ட விலையை எந்தச் சூழ்நிலையிலும் பெற்றுக் கொடுக்கப் போவதாகவும் சொல்லும் மத்திய அரசுகள், விளைபொருட்களுக்குத் தாங்கள் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலை விடயத்தில் இதனைக் கடைப்பிடிக்கிறார்களா?

நெல், கோதுமை, பருத்தி உள்ளிட்ட 23 பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை மைய அரசு தீர்மானிக்கிறது. இந்த விலை உற்பத்திச் செலவை ஈடுகட்டக் கூடியதாக, விவசாயிகளுக்கு நியாயமான இலாபம் தரத்தக்கதாக இருக்கிறதா? சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைப்படி நெல் விவசாயிகளுக்கு 50 சதவீத இலாபம் கிடைக்கும்படி விலை நிர்ணயிக்க வேண்டுமென்றால், இந்த ஆண்டு ஒரு குவிண்டால் நெல்லின் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,428/- என நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மோடி அரசு நிர்ணயித்திருக்கும் விலை ரூ.1,815/- இதனால் உழவர்களுக்கு ஏற்படக்கூடிய இழப்பு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.613/- நெல்லுக்கு மட்டும் அல்ல, அரசால் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் 23 பயிர்களுக்கும் இதேநிலைதான். விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு நியாயமான இலாபம் தரத்தக்க விலையை நிர்ணயம் செய்ய மறுத்துவரும் அரசு, ஒப்பந்த சாகுபடிச் சட்டத்தின் கீழ் தனியாரிடமிருந்து விவசாயிகள் கோரும் விலையைப் பெற்றுத் தரும் என நம்ப இயலுமா?

நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிடக் கோரி கரும்பு விவசாயிகள் எடப்பாடி வீட்டை முற்றுகையிட்டு நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

23 பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை மைய அரசு நிர்ணயித்தாலும், இப்பயிர்கள் அனைத்தையும் மைய, மாநில அரசுகள் கொள்முதல் செய்வதில்லை. நெல்லும் கோதுமையும் மட்டும்தான் கொள்முதல் செய்யப்படுகிறது. இப்பயிர்களும்கூட முழுமையாகக் கொள்முதல் செய்யப்படுவதில்லை. மொத்த விளைச்சலில் அதிகபட்சம் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது. எஞ்சிய விளைச்சலை விவசாயிகள் வெளிச்சந்தையில்தான், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாகவோ அல்லது இடைத்தரகர்கள் வழியாகவோ விற்றுக்கொள்ள வேண்டும். அப்படி விற்கும்போது, வியாபாரிகள், இடைத்தரகர்கள் வைப்பதுதான் விலை.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களோ விவசாயிகளைச் சுரண்டும் கொள்ளைக் கூடாரமாக மாறி வெகுநாளாகிவிட்டது. அங்குள்ள அதிகாரிகள் மண்டி வியாபாரிகளின் ஏஜெண்டுகளாகச் செயல்படுகிறார்களேயன்றி, விவசாயிகள் மீது கிஞ்சித்தும் அக்கறை காட்டுவது கிடையாது.

கடந்த ஜூன் மாதம் 19 தேதி ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ஒரு குவிண்டாலுக்குக் குறைந்தபட்சம் ரூ.3,500/- அதிகபட்சமாக ரூ.4,500/- என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டது. ஜூன் 19 முந்தைய வார ஏலத்தில் ரூ.6000/- விற்பனையான பருத்தி அடுத்த வாரமே ரூ.2,500 வரை சரிந்து விழுந்தது. இந்த அடிமாட்டு விலையை ஏற்க மறுத்த விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்ட பிறகுதான் மறுஏலம் நடத்த அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.

இப்படி ஒவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு பயிருக்கும் அரசு நிர்ணயித்த விலைகூடக் கிடைக்காமல் விவசாயிகள் நட்டமடைவது பொருளாதார விதி போலவே மாறிவிட்டது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அரசின் பொதுக் கொள்முதலை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று நீண்டகாலமாக விவசாயிகள் கோரி வருகின்றனர். ஆனால், அரசோ விவசாயிகளின் கோரிக்கைக்கு நேர் எதிராகக் கொள்முதலில் மேலும் தனியாரின் ஆதிக்கத்தைத் தீவிரப்படுத்தக் கூடிய சட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விலையைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால், அரசு விவசாயிகளின் பக்கம் நிற்கும் என்பதைக் கேட்கும்போது, கரும்பாலை அதிபர்கள் தமக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையைத் தரக் கோரி கரும்பு விவசாயிகள் நடத்திவரும் போராட்டங்கள் தான் நமது நினைவுக்கு வந்து போகின்றன.

தமிழகத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் மட்டும் 2013 முதல் 2016 வரை மாநில அரசு அறிவித்த பரிந்துரை விலையை விவசாயிகளுக்குத் தராமல், ரூ.1217 கோடி வரை பாக்கி வைத்துள்ளனர்.  கரும்புக்கு அரசால் நிர்ணயிக்கப்படும் விலையை ஆலை அதிபர்கள் உரிய கால வரம்புக்குள் தராவிட்டால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சட்டம் சொல்கிறது. ஆனால், நிலுவையைத் தரக் கோரிப் போராடும் விவசாயிகளின் மீதுதான் சட்டம் பாய்ந்திருக்கிறதேயொழிய, எந்தவொரு ஆலை அதிபரும் நிலுவையைத் தராத குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டதில்லை. மாறாக, அரசு அவர்களுக்குப் பணச் சலுகைகளை வாரியிறைத்திருக்கிறது.

ஒப்பந்த சாகுபடிச் சட்டத்தில் கொள்முதலாளர் அல்லது உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் என அரசு பொதுவாகக் குறிப்பிட்டாலும், இச்சட்டத்தைப் பயன்படுத்த முனைப்பு காட்டுபவை பேயர், இமாலயா ஹெல்த்கேர், ஐ.டி.சி., இந்துஸ்தான் யூனிலீவர், அதானி குழுமம் போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் என்கிறார் வேளாண் எழுத்தாளர் பாமயன்.

ஒப்பந்தச் சாகுபடிச் சட்டத்தின் மூலம் விவசாயிகளின் வீடுகளில் பாலும் தேனும் பெருகி ஓடப் போவதைப் போல அரசு கூறினாலும், அனுபவங்கள் அதற்கு நேர்எதிராக, விவசாயிகளுக்குப் பாதகமாக, மென்மேலும் அவர்களை நட்டமடையச் செய்வதாக, கடனாளியாக மாற்றுவதாகத்தான் அமைந்திருக்கிறது.

எடுத்துக்காட்டாக, பாரம்பரியமாக நெல் விளைவித்து வந்த தாய்லாந்து விவசாயிகளை, கரும்பு பயிரிடுவதன் மூலம் அதிக இலாபம் கிடைக்குமென ஆசைகாட்டி, அவர்களை ஒப்பந்த விவசாயத்தில் இறக்கிவிட்டது, தாய்லாந்து அரசு. நவீன தொழில்நுட்பங்கள் மூலம் ஏக்கருக்கு 10 டன்கள் வரை கூடுதலாக விளைந்து விவசாயிகளுக்கு அதிகப்படியான பணம் கிடைத்ததாகக் கூறினார்கள். ஆனால், குறைவாக விளைவித்தபோது கடனின்றி இருந்த விவசாயிகள், ஒப்பந்த விவசாயம் மூலம் கூடுதலாக விளைவித்தாலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் வலைக்குள் சிக்கிக் கொண்டதையும், உலக அளவில் ஒப்பந்த விவசாய முறையால் விவசாயிகளுக்கு நன்மை இல்லை என்ற அனுபவத்தையும் பாமயன் சுட்டிக்காட்டுகிறார்.

குஜராத்தில் பெப்சி நிறுவனம் தனது அனுமதியின்றி, தனது உருளைக்கிழங்கு ரகத்தைத் தன்னோடு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளாத விவசாயிகள் பயிரிட்டதாகக் குற்றஞ்சுமத்தி, பல கோடி ரூபாய் நட்ட ஈடு கேட்டதும், அதனை எதிர்த்து விவசாயிகள் போராடிய பிறகுதான் அந்நிறுவனம் பின்வாங்கியது என்பதும் நம் நாட்டு அனுபவம்.

ஒப்பந்த சாகுபடி சட்டத்தின்படி, நிறுவனங்கள் தாங்கள் விரும்பும் பயிர் வகைகளை உற்பத்தி செய்து கொடுக்க விவசாயிகளுடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளும். இதற்கான விதை, உரம், பூச்சிக் கொல்லிகள், பிற தொழிநுட்பங்கள் ஆகியவற்றை இந்த நிறுவனங்களே வழங்கவும் சட்டம் இடமளிக்கிறது. இந்த உள்ளீடு பொருட்களுக்கான தொகையை, அறுவடை முடிந்த பின்னரோ அல்லது இடையிலோ நிறுவனங்கள் வசூல் செய்து கொள்ளவும், விவசாயிகள் அதனைக் கட்ட முடியாது போனால், நிலக் குத்தகைக்கு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.

இதன் மூலம் எதை விதைக்க வேண்டும், எந்தவிதமான உள்ளீடு பொருட்களைப் பயிர்களுக்குப் போட வேண்டும் என விவசாயிகள் சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமை பறிக்கப்படுவதோடு, சிறு, நடுத்தர விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் குத்தகை விவசாயிகளாக மாற்றப்படும் அபாயமும் ஒளிந்திருக்கிறது. மத்திய கால பண்ணையார்கள் இடத்தில் இப்பொழுது கார்ப்பரேட் நிறுவனங்களைக் கொண்டுவந்து வைக்கிறது, இச்சட்டம்.

படிக்க :
அருந்ததி ராய் : மக்களை சிரிக்க சொல்வது கிரிமினல் குற்றமா ?
இந்த அடக்குமுறை காலனிய ஆட்சியில்கூட கிடையாது : வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் !

”குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்து, பொதுக்கொள்முதலை விரிவுபடுத்து, தரமான விதை மற்றும் உள்ளீடு பொருட்களை மானிய விலையில் வழங்கு” என்பவைதான் விவசாயிகளின் கோரிக்கை. ”குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற பெயரில் விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பதை நிறுத்து, பொதுக் கொள்முதலைக் கைவிடு, கொள்முதல் செய்வது மற்றும் உணவு தானியங்களை சேமிப்பது ஆகிய இரண்டிலும் தனியார் நிறுவனங்களை அனுமதி” என்பதுதான் கார்ப்பரேட்டு முதலாளி வர்க்கத்தின் கோரிக்கை. விவசாயிகளின் நலனைக் காப்பது என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளின் கோரிக்கையை சட்டமாக்கி, ஒப்பந்த சாகுபடி என்னும் சிலந்தி வலைக்குள் விவசாயிகளைத் தள்ளத் துடிக்கிறது அரசு.

அமுதன்.

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

“ஸ்டாலின் பிறந்த மண்” – ஜோர்ஜியா பயணக் கதை | கலையரசன்

2

கலையரசன்

லகில் அதிகம் அறியப்படாத நாடுகளில் ஒன்று ஜோர்ஜியா. அறிந்தவர்களும் அதை ஒரு “ஐரோப்பிய நாடு” என நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அது ஆசியாக் கண்டத்தில் இருக்கிறது! அதன் பூகோள அமைவிடம் காரணமாக அயலில் உள்ள வல்லரசுகளின் மேலாதிக்க வெறிக்குள் அகப்பட்டு நசுக்கப் பட்டு வந்தது. இப்போது தனிநாடாக இருந்தாலும் அயலில் உள்ள ரஷ்யாவுடன் பகைத்துக் கொண்டு, தொலைதூரத்தில் உள்ள அமெரிக்காவுடன் கைகோர்த்துள்ளது. நேட்டோ படைகளையும் வரவேற்று வைத்திருக்கிறது. இதன் விளைவாக 2008-ம் ஆண்டு நடந்த போர் ஜோர்ஜியா மீது சர்வதேச நாடுகளின் கவனத்தை குவிக்க வைத்தது.

சோவியத் யூனியன் இருந்த காலத்தில், ஜோர்ஜியாவும் ஒரு சோவியத் குடியரசாக பிரகடனப் படுத்தப் பட்டிருந்தது. இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் உலகில் சக்திவாய்ந்த அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கிய சோவியத் அதிபர் ஸ்டாலின் ஒரு ஜோர்ஜிய இனத்தவர் என்பது பலருக்குத் தெரியாது. சார் மன்னன் காலத்து ரஷ்ய சாம்ராஜ்யத்தில் பிறந்த, அங்கிருந்த சிறுபான்மை மொழிகளில் ஒன்றான ஜோர்ஜிய மொழி பேசும் ஒருவரை, பெரும்பான்மை ரஷ்யர்கள் தமது தலைவராக ஏற்றுக் கொள்வார்கள் என்பது நினைத்துப் பார்க்க முடியாத விடயம் தான். ஆனால், உலக வரலாற்றில் அந்த அதிசயம் நடந்தது. அதற்குக் காரணம், ஸ்டாலினே ஓரிடத்தில் எழுதியது மாதிரி, “இன்றுள்ள தேசிய இன உணர்வுகள் யாவும் முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியினால் ஏற்பட்ட பக்க விளைவுகளே!” அந்த விளைவுகள் என்னவென்பதையும், அவற்றின் இன்றைய நிலைப்பாடுகளையும் இந்தப் பயணக் கட்டுரையில் ஓரளவு அலசி இருக்கிறேன்.

ஜோர்ஜியாவுக்கு சுற்றுலாப் பயணியாக செல்வதற்கு பெருமளவு பணம் வைத்திருக்கத் தேவையில்லை. ஹங்கேரியின் மலிவு விலை விமான நிறுவனமான விஸ் எயர், ஐரோப்பாவின் மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் பயண சேவைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. நம்பினால் நம்புங்கள், எனக்கு ஏற்பட்ட டிக்கட் செலவு வெறும் ஐம்பது யூரோக்கள் மட்டுமே! பொதுவாக டிசம்பர் மாதத் தொடக்கம் சுற்றுலாக் காலம் இல்லையென்பதால் விலைகள் குறைக்கப் படுவது வழமை.

ஜோர்ஜியாவில் தங்குவதற்கும், சுற்றிப் பார்ப்பதற்கும் அதிக செலவு பிடிக்காது. கடந்த பத்து வருடங்களில் தான் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனை பல இடங்களிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஹோட்டல்களை தவிர்த்து, ஹொஸ்டலில் தங்குவதற்கு நாளொன்றுக்கு சராசரி பத்து யூரோ போதும். பதிவு செய்வதற்கும் அதிக கேள்விகள் கேட்பதில்லை. ஒரு தடவை, கூட்டைசி எனும் நகரில் ஒரு குடும்பம் நடத்தும் சிறிய ஹொஸ்டல் அறையில் தங்கி இருந்தேன். “பதிவு செய்வீர்களா?” என்று கேட்டதற்கு “அப்படி என்றால் என்ன?” என்று திருப்பிக் கேட்டார்கள். இந்த விடயத்தில் அரசு அதிக கட்டுப்பாடுகள் விதிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

முதலில் ஒரு விடயத்தை சொல்ல மறந்து விட்டேன். ஜோர்ஜியா பயணம் செய்பவர்கள் கையில் யூரோ, டாலர், பவுன் நாணயத் தாள்களை வைத்திருக்க வேண்டும். மூலைக்கு மூலை உள்ள நாணய மாற்று கடைகளில் கொடுத்து உள்ளூர் நாணயமான லாரிக்கு மாற்றிக் கொள்ளலாம். ஒரு யூரோ/டாலர் மூன்று லாரிகள் என்று அண்ணளவாக கணக்குப் போடலாம். அங்குள்ள வங்கி ATM களில் கிரெடிட் கார்ட் தவிர வங்கி அட்டையையும் பாவிக்க முடியாது. சர்வதேச வங்கித் தொடர்புகளில் ஜோர்ஜிய வங்கிகள் இணைக்கப் படவில்லை போலிருக்கிறது. எயர்போர்ட்டில் வந்திறங்கியவுடனேயே குடிவரவு அலுவலகர்கள் எம்மிடம் பணம் இருக்கிறதா என்று விசாரிக்கிறார்கள்.

படிக்க:
வளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் – சில குறிப்புகள் | கலையரசன்
♦ CAA – NPR – NRC எதிர்ப்பு போராட்டங்களுடன் தொடங்கிய புத்தாண்டு !

பல நாடுகளை சேர்ந்த பாஸ்போர்ட்களுக்கு விமான நிலையத்தில் இறங்கியவுடன் இலவச விசா அடித்துக் கொடுக்கிறார்கள். இந்தியா, இலங்கையில் இருந்து வருபவர்களுக்கும் விசா கட்டுப்பாடுகள் குறைவு. தலைநகர் திபிலிசியில் பல இந்திய சுற்றுலாப் பயணிகளை காணக் கூடியதாக இருந்தது. குறைந்த செலவில் படிக்கலாம் என்பதற்காக மாணவர் விசாவில் வந்தவர்களையும் சந்தித்தேன்.

திபிலிசி நகர மத்தியில் இருந்த இந்திய உணவு விடுதிக்கு முன்னால், இரண்டு இந்திய, பங்களாதேஷ் இளைஞர்கள் வாடிக்கையாளர்களை கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுத்த நேரம், அவர்கள் அந்நாட்டில் படிக்கவென வந்து வேலை செய்வதை அறிந்து கொண்டேன். நாளொன்றுக்கு நாற்பது லாரிகள் சம்பளமாக கிடைக்கிறதாம். அந்த ரெஸ்டாரன்ட் உரிமையாளர் ஒரு கேரளாக் காரர். அங்கு சென்று பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரம் அவரும் வந்து கதைத்தார்.

ஜோர்ஜியாவில், அதுவும் மொழி தெரியாத ஒரு நாட்டில் தனியாகப் பயணம் செய்வது ஒரு பெரிய சாகசம் எனலாம். இங்கே நான் பாதுகாப்புப் பிரச்சினைகள் பற்றிக் கூறவில்லை. பலர் நினைப்பதற்கு மாறாக பாதுகாப்பாக பயணம் செய்யலாம். நாம் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வுடன் விழிப்புடன் இருந்தால் போதும். அது எல்லா நாடுகளுக்கும் பொதுவானது. லண்டன், பாரிஸ் நகரம் என்றாலும், நாம் தான் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும்.

நான் சென்று இறங்கிய கூட்டைசி (Kutaisi) சர்வதேச விமான நிலையம் பெரும்பாலும் மலிவு விலை விமான சேவைக்காக கட்டப் பட்டிருக்க வேண்டும். அங்கே பெரும்பாலும் ஹங்கேரியின் விஸ் எயர் (Wizz air) தான் வருகின்றது. விமான நிலையத்தில் இருந்து தலைநகர் திபிலிசிக்கு (Tbilisi) எந்நேரமும் பேருந்து சேவைகள் உள்ளன. ஒவ்வொரு விமானமும் வந்திறங்கும் நேரம் பார்த்து பஸ் ஓடுகிறது. திபிலிசி செல்வதற்கு சுமார் நான்கு மணி நேரம் எடுக்கிறது. இடையில் அரை மணித்தியாலம் சாப்பாட்டு இடைவேளை விடுகிறார்கள். டிக்கட் விலை இருபது லாரிகள்.

படிக்க:
சபரிமலைத் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தின் கபடத்தனமும்
♦ சிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்

மொபைல் பாவனையாளர்கள் ரோமிங் செலவுகளை தவிர்க்கும் பொருட்டு, உள்ளூர் சிம் கார்ட் வாங்கிப் போடுவது நல்லது. அதை விமான நிலையத்திலேயே வாங்க முடியும். சிம் காரட்டுடன் 2GB இன்டர்நெட் ஐந்து லாரிக்கு கிடைக்கிறது. Bee line நிறுவனம் வழங்கும் சேவை சிறந்தது என்று சொல்கிறார்கள். மொபைல் தொலைபேசி வணிகத்தை பொறுத்த வரையில் ஜோர்ஜியா மிகவும் பின்தங்கியுள்ளது. பத்து வருடங்களுக்கு முன்னர் பாவனையில் இருந்த தொலைபேசிகளை தான் இப்போதும் அங்கே பலர் பாவிக்கிறார்கள். பெரும்பாலான ஜோர்ஜியர்களின் வாங்கும்திறனும் குறைவு தான்.

மேற்கு ஐரோப்பாவுக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையில் மூன்று மணிநேர வித்தியாசம். நான் திபிலிசி போய்ச் சேர்ந்த நேரம் அதிகாலை ஏழு மணி. இருப்பினும் ஒன்றரை மில்லியன் சனத்தொகை கொண்ட அந்த நகரம் அப்போதும் உறங்கிக் கொண்டிருந்தது. ஒரு டாக்சியை பிடித்து நகர மத்தியில் இருந்த புஷ்கின் சாலையில் உள்ள ஹொஸ்டல் ஒன்றில் சென்று தங்கினேன். புஷ்கின் சாலை சார் மன்னன் காலத்தில் இருந்தே இயங்கிக் கொண்டிருக்கும் சுறுசுறுப்பான வீதி. அதற்கு அருகில் தான் திபிலிசி பழைய நகரம் உள்ளது.

திபிலிசி செல்லும் சுற்றுலாப் பயணிகள் யாரும் பழைய நகரத்தை பார்க்காமல் திரும்ப மாட்டார்கள். மிகவும் அழகான இடம். பழைய கோட்டை ஒன்றின் இடிபாடுகளை கொண்ட குன்றின் உச்சியை நோக்கி கேபிள் கார் செல்கிறது. நரிகலா (Narikala) எனும் பெயருடைய கோட்டை ஆயிரம் வருடங்களுக்கும் மேல் பழமையானது. அடிப்படை கட்டுமானம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த ஈரானிய- சசானிய சாம்ராஜ்ய காலத்தில் கட்டப்பட்டது. பிற்காலத்தில் ஈரான் பாக்தாத்தை தலைநகராகக் கொண்ட இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்த காலத்திலும், ஆட்சியாளர்களின் கைமாறிய போதிலும் நரிகலா கோட்டை பாவனையில் இருந்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் பாவனையில் இருந்த கோட்டைக்கு நீர் விநியோகம் செய்வதற்கு ஒரு இரகசிய சுரங்க வழி இருந்ததாம்.

நரிகலா கோட்டைக்கு அருகில், நவீன காலத்தில் கட்டப்பட்ட “சுதந்திர தேவி” சிலை உள்ளது. ஒரு கையில் வாளுடன் குன்றின் உச்சியில் நின்று கொண்டே திபிலிசி நகரை பார்க்கும் வகையில் கட்டப் பட்ட சிலை, ஜோர்ஜிய தேசியவாதத்தை பிரதிபலிப்பதை வேறெந்த விசேடமும் அதில் இல்லை. குன்றின் மறு பக்கத்தில் கீழே இறங்கிச் சென்றால் தாவரவியல் பூங்கா இருக்கிறது. அதிலிருந்து நடந்து சென்றால் மீண்டும் திபிலிசி பழைய நகரத்தை அடையலாம்.

இந்த இடத்தில் திபிலிசி நகரம் பற்றி சில குறிப்புகளை எழுதுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். ஜோர்ஜியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள திபிலிசி நகரமும், அதை அண்டிய பிரதேசங்களும் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் சுதந்திரமான மன்னராட்சியாக இருந்து வந்தது. அப்போது ஜோர்ஜியாவை ஆண்ட கடைசி மன்னன் இரண்டாம் இராக்லி, இஸ்லாமிய ஓட்டோமான் சாம்ராஜ்ய விஸ்தரிப்புக்கு அஞ்சி, கிறிஸ்தவ ரஷ்ய சாம்ராஜ்யத்தின் உதவியை நாடினான். அப்போது மதம் தான் அரசியல் முடிவுகளை தீர்மானிக்கும் காரணியாக இருந்துள்ளது. எது எப்படியோ அன்றிலிருந்து ஜோர்ஜியா ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகி விட்டது.

அயல் நாடான ஆர்மேனியா மாதிரி, ஜோர்ஜியாவில் உள்ளவர்களும் தாமே ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் என்று பெருமை பேசுவதுண்டு. அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. கிரேக்க அல்லது ரஷ்ய ஒர்தொடக்ஸ் பாணி கிறிஸ்தவத்தை பின்பற்றும் ஜோர்ஜியாவில், தனித்துவமான திருச்சபை உள்ளது. அதாவது ஜோர்ஜியாவை மட்டும் மையமாகக் கொண்ட மத நிறுவனம். அன்றிருந்த கிறிஸ்தவ மடாதிபதிகள் ஜோர்ஜிய மொழியை மட்டும் வளர்க்கவில்லை. ரஷ்ய மொழிக்கும் பெருமளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

படிக்க:
சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள் ! | கலையரசன்
♦ மோகன் பகவத்தின் இந்தியாவில் எல்லோருமே இந்து தான் : காஞ்சா அய்லய்யா

அன்றைய ஜோர்ஜியா ரஷ்ய சக்கரவர்த்தியின் ஆளுகையின் கீழ் இருந்தாலும், பிற பிரதேசங்களில் நடந்த மாதிரி அதை ஒரு காலனியாக்கி, ரஷ்யர்களை அங்கு கொண்டு சென்று குடியேற்றவில்லை. ரஷ்ய படையினரை வைத்திருந்து பராமரித்ததை தவிர, ஜோர்ஜியாவின் அரசியலிலோ, அல்லது பொருளாதாரத்திலோ ரஷ்யர்கள் பெருமளவு செல்வாக்கு செலுத்தவில்லை. “ரஷ்ய மயமாக்கல்” என்று சொல்லக் கூடிய அளவுக்கு, ஜோர்ஜியர்கள் ரஷ்ய மொழியை படிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டாக்கியவர்கள் ஜோர்ஜிய கிறிஸ்தவ மடாதிபதிகள் தான். அதற்குக் காரணம், அன்றைய காலகட்டத்தில் ரஷ்யன் ஒரு வளர்ச்சி அடைந்த, சர்வதேச தொடர்புகளுக்கு உதவும் மொழியாகக் கருதப் பட்டது. அதாவது, இந்தியர்கள், இலங்கையர்கள் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படித்த மாதிரி, ஜோர்ஜியர்கள் ரஷ்ய மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

அன்றிருந்த ரஷ்ய சாம்ராஜ்யம் மன்னராட்சியாக இருந்தாலும், அதற்குள் முதலாளித்துவ பொருளாதாரம் சுதந்திரமாக வளர்ந்து கொண்டிருந்தது. ஜோர்ஜியாவில் மூலதனத்தை குவித்த பெரும் முதலாளிகள் பெரும்பாலும் ஆர்மேனியர்கள், அல்லது யூதர்களாக இருந்தார்கள். இப்போதும் திபிலிசி நகரில் இலட்சக்கணக்கான ஆர்மேனியர்கள் வசிக்கிறார்கள். நான் ஒரு முடிதிருத்தும் கடைக்கு சென்றிருந்த நேரம், எனக்கு முடி வெட்டிய பையன் ஓர் ஆர்மேனியன். தனது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி எல்லாம் ஜோர்ஜியாவில் பிறந்து வளர்ந்ததாக கூறினான். அதாவது, தாங்கள் அண்மையில் ஆர்மேனியாவில் இருந்து வந்த வந்தேறுகுடிகள் அல்ல, ஜோர்ஜியாவின் பூர்வ குடிகள் என்பதை அழுத்தமாக சொல்ல விரும்பினான்.

அந்த ஆர்மேனிய முடி திருத்தும் தொழிலாளியுடன் பேச்சுக் கொடுத்த நேரம் பல விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. ஓரளவு சமாளிக்கும் அளவுக்கு ஆங்கிலம் பேசத் தெரிந்து வைத்திருந்தான். தனக்கு ஆங்கிலத்தை தவிர, ஆர்மேனியன், ஜோர்ஜியன், ரஷ்யன் ஆகிய நான்கு மொழிகளும் தெரியும் என்றான். தானும் வேறு சிலரும் சேர்ந்து அந்தக் கடையை நடத்துவதாகவும், நாளொன்றுக்கு பதின்மூன்று மணிநேரம் வேலை செய்வதாகவும், அப்போது தான் ஓரளவு சம்பாதிக்கலாம் எனவும் தெரிவித்தான். ஜோர்ஜிய இனத்தவர்கள் எப்போது பார்த்தாலும் இந்நாட்டில் வேலை இல்லை என்று முறையிடுகிறார்கள். அவர்களுக்கு சாப்பிடுவதையும், வைன் குடிப்பதையும் தவிர வேறெந்த வேலையும் தெரியாது. பலர் இங்கே வேறு நாடுகளில் இருந்து வந்து வேலை செய்து நன்றாக சம்பாதிக்கிறார்கள். ஜோர்ஜியர்களுக்கு அந்தத் திறமை இல்லை. இவை அந்த ஆர்மேனிய பையனின் கருத்துக்கள்.

மேற்குறிப்பிட்ட உரையாடலில் தெரிவிக்கப் பட்ட விடயங்கள், நான் அடுத்து எழுதப் போகும் திபிலிசி தேசிய நூதனசாலையின் அரசியலை புரிந்து கொள்ள பெரிதும் உதவும் என நினைக்கிறேன். அங்கு பல அருமையான ஆவணங்கள் சேகரிக்கப் பட்டு பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், அல்லது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஜோர்ஜிய மக்களின் ஆடை, அணிகலன்கள், வீட்டில் பாவித்த உடைமைகள் போன்றனவற்றை கண்டு களிக்கலாம். அத்துடன் அன்று வாழ்ந்த மக்களின் பாரம்பரிய வீடுகள், மற்றும் தொழிலகங்களின் மாதிரிகளும் செய்து வைக்கப் பட்டுள்ளன. அவற்றை நேரில் பார்ப்பது போன்று தத்ரூபமாக வடிவமைத்து உள்ளனர்.

இந்த நூதனசாலையை பார்வையிட்டுக் கொண்டிருந்த நேரம் ஓர் உண்மை மூளைக்குள் பளிச்சிட்டது. இவற்றில் ஏதோ ஓர் ஒற்றுமை அல்லது சிறப்பம்சம் உள்ளது. என்ன அது? அங்கு காட்சிக்கு வைக்கப் பட்டிருந்த பொருட்கள், ஆடைகள் எல்லாமே வசதியான மேல்தட்டு வர்க்கத்தினர் பாவித்தவை. அதாவது, அந்தக் காலத்திலேயே ஜோர்ஜிய மேட்டுக்குடியினர் எந்தளவு சிறப்பாக வாழ்ந்தனர் என்பதை காட்டுகிறார்கள். உண்மையில், ஜோர்ஜிய இனத்தவர்களில் வசதி படைத்தவர்கள் ஒன்றில் சிறிய தொழிலதிபராக அல்லது கடை வியாபாரி போன்றவர்கள் தான். அதாவது, இடைத்தர முதலாளித்துவ வர்க்கம். மார்க்சிய சொல்லாடலில் குட்டி பூர்ஷுவா எனப்படுவோர்.

இடைத்தர முதலாளிகள் பெரும்பாலும் தளபாடங்கள் செய்வது, ஆடை தைப்பது, ஆபரணங்கள் செய்வது, நிலவிரிப்பு (Carpet) பின்னுவது போன்ற தொழிற்துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். அனேகமாக இவர்களது தொழிலகமும், கடையும் ஒரே இடத்தில் இருக்கும். அவர்களுக்கு கீழே இரண்டு, மூன்று பேர் வேலை செய்வார்கள். அவர்களில் சிலர் நன்றாக சம்பாதித்து பணக்காரர்களாக இருப்பார்கள். “அதிர்ஷ்டம் இல்லாத” பலர் ஏழைகளாக இருப்பார்கள். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியாக இருந்த தனது தந்தையும், இது போன்று தனியாக தொழிலகம் நடத்தும் கனவுடன், குட்டி முதலாளித்துவ சிந்தனையுடன் வாழ்ந்ததாக ஸ்டாலின் தனது சுயசரிதையில் பதிவு செய்துள்ளார்.

அதிகம் பேசுவானேன். நமது இன்றைய சூழலிலேயே இதற்கு உதாரணம் காட்டலாம். தமிழர்களில் தொழில் முனைவோராக உள்ளவர்கள், ஒரு கடை போட்டு, இரண்டு பேரை வேலைக்கு வைத்திருப்பதால் தம்மை முதலாளிகளாக கருதிக் கொள்வார்கள். அப்படித் தான் அன்றிருந்த ஆரம்ப காலகட்ட முதலாளித்துவம் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், பிரித்தானியா, பிரான்ஸ் உட்பட, பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அப்படியான சிறு தொழில் முனைவோர் பிற்காலத்தில் பெரும் தொழிலதிபர்களாக வந்ததிருந்தனர். அதே பாணியை பின்பற்றி தாமும் ஒரு வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடாக வந்திருப்போம் என்ற செய்தியை, இந்த நூதனசாலை மூலமாக இன்றுள்ள ஜோர்ஜிய அரசு நமக்கு தெரிவிக்கிறது.

அந்தக் காலகட்டத்தில் ஜோர்ஜியாவில் வாழ்ந்த சிறு தொழில் முனைவோரும் தமது நலன் பேணும் சங்கங்களை உருவாக்கி வைத்திருந்தனர். அந்தப் புகைப் படங்கள் எல்லாம் திபிலிசி நூதனசாலையில் வைக்கப் பட்டுள்ளன. கவனிக்கவும், அவை தொழிற் சங்கங்கள் அல்ல. அதாவது, தொழிலாளர்களின் சங்கம் அல்ல. அவர்களை வேலைக்கு வைத்திருந்த முதலாளிகளின் சங்கங்கள். அதே நூதனசாலையில் இன்னொரு பக்கத்தில் பங்குச் சந்தை இருந்தமைக்கான ஆதாரம் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதாவது, ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளை வாங்கியதற்கான சான்றிதழ். அதில் ரஷ்யன், பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருந்தது. அதாவது, அவை இரண்டும் வர்த்தகத் தொடர்புகளுக்கான சர்வதேச மொழிகளாக கருதப் பட்டன. அதைத் தவிர ஜோர்ஜிய, ஆர்மேனிய, அசேரி மொழிகளில் சுருக்கமான விபரமும் அந்த சான்றிதழில் எழுதப் பட்டுள்ளது.

எனது பயணத் திட்டத்தில் மிகக் குறைந்த நாட்களே இருந்த படியால், அடுத்த நாளே திபிலிசியை விட்டு வெளியேறத் தீர்மானித்தேன். குறிப்பாக ஸ்டாலின் பிறந்த இடமான கோரிக்கு செல்வதே நோக்கம். அங்கு எப்படிப் போகலாம் என்று ஹொஸ்டல் வரவேற்பளராக இருந்த பெண்ணிடம் விசாரித்து விபரங்களை பெற்றுக் கொண்டேன். அருகிலேயே “சுதந்திர சதுக்கம்” எனப்படும் ஐந்து சாலைகள் சந்திக்கும் பெரிய சந்தி உள்ளது. அதில் ஒரு பக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. மெட்ரோ ரயில் பிடித்து, டிடுபே (Didube) எனும் இடத்தில் இறங்க வேண்டும். அங்கு தான் பல நகரங்களுக்கும் செல்லும் மினிபஸ் சேவை நடக்கிறது. கோரி எனும் சிறிய நகரம், திபிலிசி மாகாணத்தை சேர்ந்த பகுதி தான். சுமார் எழுபது கிலோ மீட்டர் தூரம். மினிபஸ் கட்டணம் ஐந்து லாரிகள் மட்டுமே.

ஜோர்ஜியாவில் ஸ்டாலின் வாழ்ந்த காலத்திலும் கோரியில் இருந்து வரும் வண்டிகள் டிடுபே தரிப்பிடத்திற்கு தான் வந்து நிற்கும். ஸ்டாலின் கோரியில் பிறந்து வளர்ந்தாலும், பருவ வயதை அடைந்ததும் தந்தையுடன் திபிலிசிக்கு வந்து செருப்புத் தைக்கும் தொழில் செய்துள்ளார். பிற்காலத்தில், ஒரு கிறிஸ்தவ மடாலயத்தில் பாதிரியாவதற்காக மதக் கல்வி கற்ற காலத்திலும், அங்கிருந்து வெளியேறி புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொழுதும் திபிலிசியில் தங்கி இருந்துள்ளார்.

அப்போது ஸ்டாலின் புஷ்கின் சாலையில் தான் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்தார். ஸ்டாலின் படித்த மடாலயம் இப்போதும் பெருமளவு சுற்றுலாப் பயணிகள் நடமாடும் பழைய நகரத்தில் உள்ளது. அது தற்போது மியூசியமாக மாறிவிட்டது. அந்தக் காலகட்டத்தில், திபிலிசி நகர மத்தியில் இருந்த புஷ்கின் சாலை, ஏழை உழைக்கும் வர்க்க மக்கள் வாழ்ந்த அழுக்கான கட்டிடங்களை கொண்ட தெருவாக இருந்தது. இன்று அவையெல்லாம் திருத்தப்பட்டு பணக்காரர்கள் குடியிருக்கும் ஆடம்பர கட்டிடங்களாக மாற்றப் பட்டு விட்டன.

ஜோர்ஜியாவில் “மாட்ரூஷ்கா” என அழைக்கப் படும் மினி பஸ், அல்லது ஷெயர் டாக்சியில் பயணம் செய்வது மிகவும் மலிவானது. நம்ப முடியாத அளவுக்கு செலவு குறைவு. ஆனால், ஒரு பிரச்சினை. இடத்தின் பெயரைக் குறிப்பிடும் மட்டைகளில் ஜோர்ஜிய மொழி மட்டுமே எழுதப் பட்டிருக்கும். கோரி, பாதுமி, கூட்டைசி போன்ற பெரிய நகரங்களுக்கு செல்லும் மினி பஸ்களில் சிலநேரம் ஆங்கில(லத்தீன்) எழுத்துக்கள் காணப்படும். ஆகவே, எந்த இடத்திற்குப் போவது என்றாலும் முன்கூட்டியே அங்கு நிற்கும் டிரைவர்களிடம் விசாரிப்பது நல்லது. இங்கேயும் மொழிப்பிரச்சினை எழும். அவர்களில் யாருக்கும் பெரும்பாலும் ஒரு சொல் கூட ஆங்கிலம் தெரியாது. கொஞ்சம் ரஷ்யன் தெரிந்தால் சமாளிக்கலாம். இருப்பினும், நாங்கள் போக வேண்டிய இடத்தின் பெயரை அழுத்தம் திருத்தமாக உச்சரித்தாலே அவர்கள் புரிந்து கொள்வார்கள். அவர்களது பாஷையில் ஏதோ சொல்லி எங்களை கூட்டிச் சென்று அந்த இடத்திற்கு செல்லும் மினி பஸ்ஸில் ஏற்றி விடுவார்கள். எம்மூரில் நடப்பது மாதிரி, மினி பஸ் தரிப்பிடத்தில் கூவிக்கூவி ஆட்களை சேர்ப்பதற்கும் சிலர் அங்கே நிற்பார்கள். ஆகவே நாங்கள் எந்தப் பயமும் இல்லாமல் தைரியமாக தனியாகப் பயணம் செய்யலாம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றை அழுத்தவும் )

(தொடரும்)

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் ! சிஏஏ-வுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் !

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடெங்கிலும் நடைபெற்றுவரும் போராட்டத்தின் தொடர்ச்சியாக, தமிழகத்தில் வழக்கறிஞர்களும் போராடத்தொடங்கியுள்ளனர். கடந்த ஜனவரி-03 அன்று சென்னை, திருச்சி, கோவை மற்றும் கும்பகோணம் ஆகிய பகுதிகளில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

சென்னை:

“மகத்தான நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம்!” என்ற முழக்கத்தின் அடிப்படையில், சென்னை வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் இணைந்து சென்னை உயர்நீதிமன்ற நுழைவு வாயிலில் 03.01.2020 அன்று காலை 10.30 மனியளவில் மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் CAA – NRC – NPR ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்”, ”நான் இந்தியக் குடிமகன்” என்பது உள்ளிட்ட முழக்க பதாகைகளைத் தாங்கி நின்றனர். இதில் மூத்த வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

கோவை:

”ஈழத்தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கு” – கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு 03.01.2020 அன்று வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

திருச்சி:

”மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தாதே! இந்தியாவை மதவாத நாடாக மாற்றாதே!! மக்களை முள்வேளிக்குள் அடைக்காதே!” – திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

கும்பகோணம்:

”2020 – மகிழ்ச்சியில்லா புத்தாண்டு” – கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தொகுப்பு :

சீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்

ரிசிக் கப்பலில் சுட்டது முதல் பன்றி வேட்டைக்குச் சென்றது வரை சீமான் சொல்லும் அத்துணை பொய்களையும் புரட்டுகளையும், சீமானின் அன்புத் தம்பிகள் கண்களை மூடிக் கொண்டு நம்புவதற்கான காரணம் என்ன ? சீமான் தான் தமிழகத்தை காக்க வந்த ஒரே மீட்பர் என அவர்கள் ஏன் நினைக்கிறார்கள் ?

நாம் தமிழர் கட்சியின் அன்புத் தம்பிகளின் சீமான் ஆதரவு மனநிலையின் பின்னணி என்ன ? விவரிக்கிறார் மனநல ஆற்றுப்படுத்துநர் வில்லவன்.

பாருங்கள் ! பகிருங்கள் !

வினவு செய்திப் பிரிவு

பொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு : அமெரிக்காவின் நாட்டாமை !

பொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு  : அமெரிக்காவின் நாட்டாமை!

மெரிக்க ஏகாதிபத்தியத்தால் தூண்டிவிடப்பட்ட தேர்தல் முறைகேடு புகார், கலவரங்கள், இராணுவ நெருக்கடி  ஆகியவற்றால் நிர்பந்திக்கப்பட்ட பொலிவிய இடதுசாரித் தலைவர் ஈவா மொரேலஸ், கடந்த நவம்பர் 10-ம் தேதியன்று அதிபர் பதவியிலிருந்து விலகி,  நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

ஈவா மொரேலஸ்.

பொலிவியாவின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினாரான பூர்வீகப் பழங்குடிகள் மத்தியில் இருந்து அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட முதல்நபர் மொரேலஸ். சோசலிசத்துக்கான இயக்கம் என்ற இடதுசாரிக்கட்சியைச் சேர்ந்த மொரேல்ஸ் 2006-ம் ஆண்டில் முதல்முறை அதிபரானவுடனேயே, சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி எண்ணெய்  எரிவாயு உற்பத்தியை நாட்டுடைமை ஆக்கி, அரசு நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இத்துறையிலிருந்த வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான வரி மற்றும் உரிமத் தொகையைக் கடுமையாக உயர்த்தியதன் மூலம் 82% அளவுக்கு அரசு வருமானம் அதிகரித்தது. இதன் மூலம் கிடைத்த பெருமளவு நிதி மக்கள்நலத் திட்டங்களுக்கு செலவிடப்பட்டது. தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் உயர்வு, சமூக நலத்திட்டங்களுக்கான அரசு பங்களிப்பு அதிகரிப்பு ஆகியவை காரணமாக மக்களின் உண்மை ஊதியம் 60% அதிகரித்தது. அதே சமயத்தில் தீவிர வறுமை 60% குறைக்கப்பட்டது. அரசே முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம், பெண்கள் குழந்தைகள் பராமரிப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கும் கிராமங்களின் உள்கட்டமைப்பு வசதிக்கும் முன்னுரிமை கொடுத்தார் மொரேலஸ். கல்வி, சுகாதாரம் சார்ந்த சமூகநலத் திட்டங்களுக்கு கியூபாவும் வெனிசுலாவும் மிகவும் உறுதுணையாக இருந்தன.

நெடுங்காலமாக எவ்வித முக்கியத்துவமும் அளிக்கப்படாத பெரும்பான்மை பழங்குடி மக்களை சமமாக அங்கீகரிக்கும் விதமாக பொலிவியாவை பல்தேசிய இன நாடாகவும், பழங்குடிகளின் விபாலா கொடியை பொலிவிய தேசியக் கொடிகளுல் ஒன்றாகவும் அறிவித்தார். இனரீதியான ஒடுக்குமுறையை மேற்கொள்வது சட்டவிரோதம் எனவும் அறிவித்து நடைமுறைப்படுத்தினார். அரசு மற்றும் தனியார் கட்டுபாட்டில் இருந்த சுமார் 134 மில்லியன் ஏக்கர் நிலத்தை நிலமற்ற ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுத்தார். இவை, அதுவரை அரசியல் பொருளாதார ரீதியாக ஆதிக்கம் செலுத்திவந்த நகர்ப்புறங்களைச் சேர்ந்த சிறுபான்மை ஸ்பானிய மேட்டுக்குடிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் வெறுப்பை உருவாக்கியது.

2010-ம் ஆண்டுக்கு முன்பே காஸ்ட்ரோ, சாவேஸ், மொரேலஸ் உள்ளிட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகளின் இடதுசாரித் தலைவர்கள், தங்களுக்குள் ஒரு கூட்டணியை உருவாக்கிக் கொண்டு புதிய தாரளாவாதக் கொள்கைகளை நிராகரித்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை எதிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மொரேலஸின் முதல் பதவிக்காலத்தில், முந்தைய ஆட்சியாளர்களது ஒப்பந்தங்களை நிராகரித்து, உலகவங்கி மற்றும் ஐ.எம்.எப்.பின் ஆதிக்கத்தில் இருந்து முதல்நாடாக பொலிவியா விடுவித்துக் கொண்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுதந்திர வர்த்தக வளையத்துக்குள்ளும் பொலிவியா வர மறுத்துவிட்டது. 2008-ல் தனது ஆட்சியைக் கவிழ்க்கும் சதியில் ஈடுபட்ட அமெரிக்கத் தூதரை நாட்டை விட்டு வெளியேற்றியதோடு, அமெரிக்காவுடனான  தூதரக உறவுகளையும் மொரேலஸ் முறித்துக் கொண்டார்.

சமீப ஆண்டுகளில், மின்சாரக் கார்கள் மற்றும் செல்போன் பேட்டரிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் முதன்மையான தனிமமான லித்தியம், உலகின் மொத்த அளவில் 50 சதவீத அளவுக்கு (90 இலட்சம் டன்கள்) பொலிவியாவில் இருப்பது கண்டறியப்பட்டது. மொரேலஸ், தனது நாடு வெறும் மூலப்பொருட்களின் ஏற்றுமதியாளராக மட்டும் இருப்பதை விரும்பவில்லை. மாறாக, லித்தியம் சம்பந்தப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட செயல்களின் முழு சங்கிலியும் நடைபெறும் மையமாக மாற்ற விரும்பினார். உதாரணமாக, பொலிவியாவில் பேட்டரி ஆலைகள் மற்றும் கார் தொழிற்சாலைகளை உருவாக்குவது இதில் அடங்கும், இது பொலிவியர்களுக்கு வேலைவாய்ப்பையும் செல்வத்தையும் உருவாக்கும் என்று நம்பினார். ஏற்கெனவே, கடந்த 2018 டிசம்பரில் ACISA என்னும் ஜெர்மானிய தயாரிப்பு நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முயற்சியில் இவ்வாண்டு நவம்பர் 4-ம் தேதி இறங்கினார். இதற்கு மாறாக சீன நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடுவதில் ஆர்வம் காட்டினார்.

இதையடுத்த ஒருவார காலத்தில்தான் மொரேலஸ் தன் மீதான தேர்தல் முறைகேடு புகார் காரணமாக பதவி விலக நேர்ந்தது. இலத்தீன் அமெரிக்க நாடுகள் மீதான தனது பிடியை இறுக்கவும், கம்யூனிசம் பரவாமல் தடுக்கவும் 1948-ல் அமெரிக்கா உருவாக்கிய “அமெரிக்க அரசுகளின் அமைப்பு”, மொரேல்ஸ் தரப்பு தேர்தலில் முறைகேடுகள் செய்ததற்கான ‘வலுவான’ ஆதாரங்கள்  இருப்பதாகக் குற்றம் சாட்டியது. தேர்தல் ‘முறைகேடு புகார் கிளம்பியவுடன், தமது அரசியல் மேலாதிக்கத்தை மீட்கும் தருணத்திற்காகக் காத்திருந்த வலதுசாரி எதிர்க்கட்சிகள் மறுதேர்தல் நடத்தக் கோரி கலவரங்களைத் தூண்டிவிட்டன. காவல்துறையோ வலதுசாரி கும்பல்கள் நடத்தும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த மறுத்துவிட்டது. பொதுமக்களின் மீதான தாக்குதலை விரும்பாத மொரேல்ஸ், மறுதேர்தல் நடத்துவதற்கு ஒப்புக் கொண்ட நிலையில், எதிர்க்கட்சிகள் அவரை இராஜினாமா செய்யக்கோரி கலவரத்தைத் தொடர்ந்தனர். இறுதியாக இராணுவத் தளபதி வில்லியம்ஸ் கலிமான், பதவி விலகச் சொல்லி வலியுறுத்திய நிலையில், உயிருக்கு ஆபத்தான சூழலில், கடந்த நவம்பர் 10-ம் தேதியன்று அதிபர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, மெக்சிகோவில் அரசியல் அடைக்கலம் புகுந்துள்ளார் ஈவா மொரேல்ஸ்.

இடைக்கால அதிபராக ‘அறிவித்துக்கொண்ட ஜீனைன் ஆனெஸ்.

இதையடுத்து உடனடியாக, பழங்குடி மக்களுக்கு எதிரான வெறுப்பை வெளிப்படையாகக் கக்கியவரும் எதிர்க்கட்சி செனட் உறுப்பினருமான ஜீனைன் ஆனெஸ் என்ற பெண்மணி, தன்னைத்தானே இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டார். இதை அமெரிக்கா உடனடியாக வரவேற்றுள்ளது. உள்நாட்டுப்போரை பொலிவிய மக்கள் மீது திணித்து, அமெரிக்க ஏகாதிபத்தியமும் உள்நாட்டு மேட்டுக்குடி இனவெறிக் கும்பலும் தமது அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள முயன்று வருகின்றன.

அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள், ஏழை நாடுகளின் மீது திணித்துவரும் தனியார்மயம் என்ற பொருளாதாரக் கட்டுமானம் எந்தளவிற்கு மக்களுக்கு எதிரானது என்பதை உணர்ந்த மக்கள் உலகெங்கும் போராட்டங்களைக் கட்டியமைத்து வருகின்றனர். அப்பொருளாதாரக் கொள்கைக்கு மாற்றாக, மக்கள் நலன் சார்ந்த –  அது சோசலிசப் பொருளாதாரம்கூட அல்ல  – பொருளாதாரத் திட்டத்தை அமல்படுத்த முயன்றார், மொரேலஸ். தனது நலனுக்கு எதிரான இதை அமெரிக்கா விரும்பவில்லை.

அமெரிக்கா விரும்புகிற விதத்தில்தான் எந்தவொரு நாடும் தனது பொருளாதாரக் கொள்கைகளை வகுத்துச் செயல்படுத்த வேண்டுமென்றால், அந்நாட்டின் சுதந்திரம் அர்த்தமற்றுப் போகிறது. மொரேலஸ் தலைமையிலான பொலிவியா தனது சுதந்திரத்தையும், இறையாண்மையையும் காத்துக்கொள்ள விரும்பியது. இவற்றை அனுமதிக்க மறுத்து சதிவேலைகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம், பொலிவியாவில் தனது அடாவடித்தனத்தை மறைத்துக் கொள்ள கையாண்ட வழிமுறைகள்தான் தேர்தல் முறைகேடு, ஊழல் புகார்கள், இறுதியாக ஆட்சிக் கவிழ்ப்பு.

படிக்க:
அருந்ததி ராய் : மக்களை சிரிக்க சொல்வது கிரிமினல் குற்றமா ?
இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – புதிய தொடர்

பொலிவியாவில் மட்டுமல்ல, வெனிசுலாவிலும் இதே போன்றதோர் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்த முயன்று வருகிறது, அமெரிக்கா. மக்கள் நலனை முன்னிறுத்தும் ஆட்சியாளர்களை ஒழித்துக்கட்டுவதன் மூலம் தென்னமெரிக்க நாடுகளை மீண்டும் ‘வாழைப்பழக் குடியரசு’ நாடுகளாக மாற்றிவிட வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் இறுதி நோக்கம்.

வசந்தன்

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

NRC – NPR-ஐ தமிழகத்தில் அமல்படுத்தாதே ! மக்கள் அதிகாரம் பேரணி !

NRC -க்கு வழிவகுக்கும் அபாயகரமான தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (NPR) தமிழகத்தில் அமல்படுத்தாதே !

சட்டமன்றம் நோக்கிப் பேரணி…

நாள் : 6.01.2020, திங்கள் காலை 11 மணி.
பேரணி தொடங்குமிடம் : சேப்பாக்கம் (விருந்தினர் மாளிகை அருகில்), சென்னை.

அன்பார்ந்த நண்பர்களே!

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) எதிர்த்து இன்று நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. நாடு பாசிசத்தை நோக்கிச் செல்கிறது என்ற அபாயத்தை புரிந்து கொண்ட உயர் கல்வி நிறுவன மாணவர்கள், அறிவுத் துறையினர் இன்று வீதியில் இறங்கி ரத்தம் சிந்தி போராடி வருகிறார்கள்.

இதுவரை போலீசு துப்பாக்கி சூட்டிற்கு 25 பேர் பலியாகி உள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உறுதியாகப் போராடி வரும் மாணவர்களை போலீசும், சங்பரிவார் கும்பலும் சேர்ந்து கொண்டு தாக்குகின்றன. இவர்களே திட்டமிட்டு கலவரத்தை நடத்தி விட்டு போராடும் மக்களை பார்த்து வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என பச்சையாக பொய் சொல்கிறார்கள்.

காஷ்மீர், முத்தலாக், பாபர் மசூதி, போல் CAA – NRC – NPR-ஐ எளிதில் அமல்படுத்தி விடலாம் என இருமாப்பு கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-விற்கு மாணவர்களும் மக்களும் சரியான பாடம் புகட்டி உள்ளனர்.

பிரதமர் மோடி NRC பற்றி நாங்கள் கலந்து பேசவில்லை என்கிறார். NPR மூலம் சேகரித்த தகவல்களை வைத்தே NRC முடிவு செய்வோம் என பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகிறார். பாரதத்தை, இந்துத்வாவை ஏற்பவர்கள்தான் இந்தியர்கள் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறு கிறார். இந்துத்வாவையும், கார்ப்பரேட்டுகளையும் எதிர்க்கும் பகுத்தறிவாளர்கள், கம்யூனிஸ்டுகள், அறிவு ஜீவிகள், மாட்டுக்கறி உண்பவர்கள் என அனவரையும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தேசத்துரோகிககள், அந்நிய கைக்கூலிகள் என்று பேசி வருகின்றனர். இவர்களையெல்லாம் NPR மூலம் சந்தேகத்துக்குரியவர்கள் எனச் சொல்லி நமது மூதாதையர்களின் பிறப்பிடம், வாழ்விடத்தை நம்மையே நிரூபிக்க சொல்வார்கள். இல்லையேல் குடியுரிமையை பறித்து அகதிகள் வதை முகாமில் அடைப்பார்கள்.

NPR-ல் தொகுப்பான அடையாளத் தரவுகள் பெறும் பொருட்டு பெயர், வயது, பாலினம் என வழக்கமாக கேட்கப்படும் 12 கேள்விகளோடு கூடுதலாக, பெற்றோர்கள் பிறப்பிடம், ஆதார் விபரங்கள், செல்போன் எண், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றையும் கொடுக்க வேண்டும். இதை வைத்து தேசிய அளவிலும், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், உள்ளூர் அளவிலும் பதிவேடுகள் தயாரிக்கும்போது சரிபார்க்கும் நடைமுறை கடைபிடிக்கப்படும். அப்போது சந்தேகத்திற்குரிய நபர் என யாரையும் தனியாகப் பிரித்து இந்தியர்கள்தான் என்பதை நிரூபிக்க சொல்வார்கள். ஆக, யார் இந்திய குடிமக்கள் என்பதை அதிகாரிகள்தான் தீர்மானிப்பார்கள்.

தேசிய மக்கள் தொகை பதிவேடும், சென்சஸ் கணக்கெடுப்பும் ஒன்று என பேசுவது மக்களை ஏமாற்றும் மோசடி. 1948 சென்சஸ் சட்டப்படி மேற்கொள்ளப்படுகிறது. அதன் விபரங்கள் ரகசியமானவை. வேறு எதற்கும் அதை பயன்படுத்தலாகாது. ஆனால் தேசிய மக்கள் தொகை பதிவேடு 1955 குடியுரிமைச் சட்டத்தில் 2003-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் ”சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அல்லது சட்டவிரோதமாக இடம் பெயர்ந்தவர்கள்” என்ற திருத்தத்தை சேர்த்தார்கள். அதன்படி செய்யப்படும் NPR தகவல்களை NRC-யுடன் இணைத்து யாரையும் குடியுரிமையற்றவர்களாக்க முடியும். இது மிகவும் அபாயகரமானது.

படிக்க :
பென்னாகரம் : குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய் ! பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம் பேரணி – ஆர்ப்பாட்டம்
♦ இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டத்தை பற்ற வைத்த புதிய குடியுரிமை சட்டம் !

இப்படித்தான் பாசிச ஹிட்லர் ஜெர்மனியில் குடியுரிமைச் சட்டத்தின் மூலம் யூதர்களின் குடியுரிமையைப் பறித்தான். மியான்மர் அரசு ரோஹிங்கியா முசுலீம்களை நாடற்றவர்களாக்கியது. அதுபோல் பா.ஜ.க அரசின் இந்த CAA – NRC – NPR ஆகியவை இஸ்லாமியர்கள், இந்துக்களில் உழைக்கும் மக்கள் ஆகியோரின் குடியுரிமையைப் பறித்து வதை முகாம்களில் அடைக்கும் இந்துராஷ்டிர திட்டமேயாகும். ஜெர்மனியில் “யூத இனப்படுகொலைகள், விஷவாயு கூடங்களிலிருந்து தொடங்கவில்லை. வெறுப்பான பேச்சுக்களின் வழியே வெகு காலத்திற்கு முன்பே தொடங்கி விட்டது” என இனப்படுகொலை தடுப்பு நாளில் ஐ.நா. பொதுச்செயலாளர் பேசியுள்ளதை இதனுடன் இணைத்துப் பாருங்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அசாமில் NRC அமல்படுத்தியதில் முன்னாள் ஜனாதிபதி பக்ரூதின் அலி அகமது குடும்பத்தினர், முன்னாள் இராணுவ அதிகாரி குடும்பத்தினர் குடியுரிமை மறுக்கப்பட்டு தடுப்பு முகாமில் இருக்கிறார்கள். மேலும் 19 லட்சம் பேர் குடியுரிமை அற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள் . இதில் CAA மூலம் 10 இலட்சம் இந்துக்கள் மட்டும் குடியுரிமை பெற்று விடுவார்கள். மீதி 9 இலட்சம் முசுலீம்களை முதலில் தடுப்பு முகாமில் அடைப்பார்கள். இறுதியில் ஹிட்லரைப் போல் விஷவாயு செலுத்தி கொல்வார்களா?

பா.ஜ.க அரசின் இந்த அபாயகரமான திட்டங்களை மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநில முதல்வர்கள் அமல்படுத்த முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், எடப்பாடி அதிமுக அரசு, அடிமைத்தனத்துடன் பாராளுமன்றத்தில் CAA – வை ஆதரித்து வாக்களித்ததுள்ளது . ஒருவேளை அதிமுக, பா.ம.க இந்த CAA – வை எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்தச் சட்டம் தோல்வி அடைந்திருக்கும்.

யார் அகதிகள் ? கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக சொந்த நாட்டில் வாழ வழியின்றி பிற நாடுகளுக்கு ஓடுபவர்கள்தான். இத்தகைய மக்களுக்கு குடியுரிமை கொடுப்பதுதான் மனிதாபிமானம், இயற்கை நீதி. ஆளும் வர்க்கம் தனக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்த்துக் கொள்ள உழைக்கும் மக்களை தேவையற்றவர்களாக ஆக்குகிறார்கள். அதற்காகத்தான் தீவிரவாத பீதியூட்டி, மத பாகுபாட்டைக்காட்டி குடியுரிமையைப் பறித்து மக்களை அடக்கி ஒடுக்க வருகிறது CAA – NRC – NPR.

இந்தியாவில் பிழைப்புத் தேடி குடும்பத்தோடு பல கோடி பேர் ஊர் ஊராக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இலட்சக்கணக்கான மக்கள் வீடற்று சாலையோரங்களில் வாழ்கிறார்கள். இவர்களுக்கு ஏது ஆவணம் ? ஏது நிலையான முகவரி ? நாடு முழுவதும் இன்று பல மாநகரங்களில் ஸ்மார்ட் சிட்டி அமைக்க இடையூறாக உள்ள பல லட்சம் ஏழை மக்கள் NPR மூலம் குடியுரிமை பறிக்கப்பட்டு தடுப்பு வதை முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள். அதிலும் அவர்கள் இஸ்லாமியர்கள், தலித்துகளாக இருந்தால் பா.ஜ.க அரசு – அதிகாரிகள், சங்பரிவார் கும்பல் எப்படி நடத்துவார்கள்? என யோசித்துப் பாருங்கள். பசு மாட்டை வைத்து கும்பல் கொலைகளில் ஈடுபட்டவர்கள் குடியுரிமைச் சட்டத்தை வைத்தும் கொலை அரசியல் செய்யமாட்டார்களா?

NPR தகவல் சேகரிக்க அதிகாரிகள் உங்கள் வீடுகளுக்கு வரும்போது, “இது எங்கள் நாடு, எங்கள் ஊர், ரத்தம் சிந்தி கட்டமைத்தது நாங்கள், கட்டிக் காப்பது நாங்கள் ; நீ யார் எங்களின் குடியுரிமையை கேள்வி கேட்க?” என அடித்துத் துரத்த வேண்டும். இம்முறை விடக் கூடாது. காவி பாசிசத்திற்கு பாடை கட்டியாக வேண்டும். உண்மையான ஜனநாயகத்தை மாபெரும் மக்கள் போராட்டத்தின் மூலம் கட்டியமைக்க வேண்டும்.

படிக்க :
நெல்லை கண்ணன் கைது – மக்கள் அதிகாரம் கண்டனம் !
♦ CAA – NPR – NRC எதிர்ப்பு போராட்டங்களுடன் தொடங்கிய புத்தாண்டு !

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை அடியோடு அழிக்கின்ற CAA – NRC – NPR-ஐ திரும்பப் பெற வேண்டும் என நாடு முழுவதும் பல தரப்பினர் தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள். தீராத பொருளாதார நெருக்கடியால் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு மக்கள் பிரச்சினைகள் எரிபொருளாக போராட்டத்தை உந்தித் தள்ளுகின்றன. மக்கள் எதிர்ப்பின் காரணமாக பல மாநில கட்சிகள் தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொண்டு இந்தச் சட்டங்களை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளன. தமிழகத்திலும் இந்த நிலை வர வேண்டும்.

தமிழக மக்களே!

  • தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு யாரும் எந்த தகவலையும் தரக்கூடாது என உறுதியேற்போம் !
  • “தமிழகத்தில் (NPR) தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம்” என எடப்பாடி அரசு அறிவிக்கும் வரையில் அனைவரும் போராட்டங்களைத் தொடருவோம் !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321.

நூல் அறிமுகம் : கோபுரத் தற்கொலைகள் | ஆ சிவசுப்பிரமணியன்

காலத்தால் முந்திய தமிழ்நாட்டுச் சமயங்கள் வரிசையில் சைவமும் வைணவமும் இடம்பெறுகின்றன. இவை இரண்டும் வேதங்களின் மேன்மையை ஏற்றுக் கொண்டவை. இதன் அடிப்படையில் இவற்றை வைதீக மரபைச் சார்ந்தவை எனலாம். இவற்றிற்கு மாறான அவைதீக (வைதீகமற்ற) சமயங்களான சமணம், பௌத்தம், ஆசீவகம், சாங்கியம், தாந்ரிகம் ஆகிய சமயங்களும் தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்தன.

பல்லவர் காலத்தில் சைவமும் வைணவமும் அரசின் ஆதரவைப் பெற்றுத் தம்மைப் பலப்படுத்திக் கொண்டன. பிற்காலச் சோழர் காலத்தில் சைவம், அவைதீக சமயங்களை மட்டுமின்றி, வைணவத்தையும் ஓரங்கட்டிவிட்டுத் தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டது. கிட்டத்தட்ட அரசு மதம் என்று சொல்லத்தக்க நிலையை அது பெற்றிருந்தது என்றாலும்; வைணவம் தன்னைத் தக்கவைத்துக் கொள்வதில் வெற்றிபெற்றது.

இவ்விரு சமயங்களின் மேல்நிலைக் குழு போன்று விளங்கிய பார்ப்பனர்களைத் தாண்டி பல்வேறு சமூகக் குழுக்களையும் தம்முள் இவை இணைத்துக்கொண்டன.

தமிழ் நாட்டின் சமூக வரலாற்றில் ஆதிக்கம் செலுத்திய சைவம், வைணவம் தொடர்பான நான்கு கட்டுரைகளும் மேட்டிமையோரின் ஆதிக்கம் இவ்விரு சமயங்களில் தொடர்வதை விளக்கும் ஒரு கட்டுரையும் அடித்தள மக்களின் சமய வாழ்வில் அரசின் துணையுடன் இவை தலையிட்ட நிகழ்வு குறித்த ஒரு கட்டுரையும் இவ்விரு சமயங்களும் போற்றி வளர்க்கும் மரபுக்கெதிரான கலகக் குரலாய் ஒலித்த சித்தர் பாடல்கள் குறித்த கட்டுரையொன்றும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

முதற்கட்டுரையான ‘சைவம் உறிஞ்சிய நடுகல் வழிபாடு’ … கொலை அல்லது தற்கொலையின் வாயிலாக இறந்தோருக்கு நடுகல் நாட்டி வழிபடுவது பண்டைத் தமிழர் மரபு. போரில் இறந்துவிட்ட வீரர்கள் நடுகல் நட்டு வழிபட்டமை குறித்த செய்திகள் சங்க இலக்கியத்தில் தொல்காப்பியத்திலும் இடம்பெற்றுள்ளன… தொன்மை வாய்ந்த நடுகல் வழிபாட்டைச் சோழர் ஆட்சியில் ஏற்றம் பெற்றிருந்த சைவம் எவ்வாறு மாற்றியமைத்துக் கொண்டது என்பதை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

‘பக்தி இயக்கத்தில் தீண்டப்படாதார்’ என்னும் இரண்டாவது கட்டுரை… வருண வட்டத்திற்கு வெளியே ‘அவருணர்கள்’ (வருண மற்றவர்கள்) என்று முத்திரை குத்தி ஓரங்கட்டப்பட்ட மக்கள் பிரிவை சைவமும் வைணவமும் சில சூழல்களில் ஏற்றுக்கொண்டுள்ளன. இதற்கான காரணத்தை இக்கட்டுரை ஆராய்கிறது.

மூன்றாவது கட்டுரையான ‘தமிழ் வைணவத்தில் சூத்திரர் நிலை’ … ஏவல் செய்யப் பிறந்தவன் என்று மனுதர்மத்தாலும் பகவத் கீதையாலும் குறிப்பிடப்படும் சூத்திரர்களுக்குத் தமிழ் வைணவத்தில் வழங்கப்பட்ட இடத்தை இக்கட்டுரை ஆராய்கிறது.

சைவ வைணவக் கோவில்களின் முக்கிய உறுப்பாகக் காட்சிதரும் பிரம்மாண்டமான கோபுரங்களில் ஏறி நின்று, கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டோர் குறித்த செய்திகளைக் கல்வெட்டுகளின் துணையுடன் நான்காவது கட்டுரையான ‘கோபுரத் தற்கொலைகள் ‘ ஆராய்கிறது.

வேத கலாச்சாரம்

… அ.தி.மு.க. ஆட்சியின்போது ‘விலங்கு உயிர்ப்பலித் தடைச்சட்டம்’ தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்க எதிராக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக் கிளையின் சார்பில் ‘விலங்கு உயிர்ப்பலித் தடைச்சட்டத்தின் அரசியல்’ என்னும் தலைப்பில் குறுநூல் ஒன்று வெளியிடப்பட்டது. அதுவே இங்கு ஐந்தாவது கட்டுரையாக இடம் பெற்றுள்ளது. நாட்டார் சமயத்தை வைதீகமயமாக்கும் முயற்சியையும் இதற்குள் ஆதிக்க அரசியல் மறைந்திருப்பதையும் இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

… கோவில் கருவறைக்குள் சென்று பூசை செய்யும் உரிமை அனைத்து சாதியினருக்கும் கிட்டாத நிலை இன்றும் உள்ளது. மறுக்கப்பட்ட உரிமையாக அன்றி பறிக்கப்பட்ட உரிமையாகவே இதைக் கொள்ள வேண்டும். ஆனால் ‘பேர் கொண்ட பார்ப்பனர்கள் ‘ தம் தனி உரிமையாகக் கருவறைக்குள் நுழைவதை வைத்துள்ளனர். அரசு உருவாக்கும் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இச் செய்திகளை ‘அர்ச்சகரும் சாதியும்’ என்ற ஆறாவது கட்டுரை விளக்குகிறது.

சமய எல்லைக்குள் இருந்துகொண்டே சமயச் சடங்குகள் – சாதி – துறவு ஆகியனவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்த சித்தர்கள் குறித்து ‘சித்தர்கள்; மீறலே மரபாய்’ என்ற தலைப்பிலான ஏழாவது கட்டுரை பேசுகிறது. (நூலின் முன்னுரையிலிருந்து …)

சித்தர்கள் : மீறலே மரபாய்

எந்தவொரு சமூகமும் தனக்கெனச் சில மரபுகளைப் பாரம்பரியமாகக் கொண்டிருக்கும். மரபு என்பதில் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள் தகவுகள் (மதிப்புகள்), நடத்தை விதிகள், மரபுசார் சட்டங்கள் (Customery Laws) நெறிமுறைகள் (Norms) ஆகியன அடங்கும். இவையனைத்தும் ஒரு தலை முறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குப் பெரும்பாலும் நினைவுகளின் வாயிலாக வழங்கப்படுகின்றன.

… மரபு என்று கூறும்போது அது முற்போக்கானதா? பிற்போக்கானதா? என்பதை முடிவு செய்வதவசியம். ஏனெனில், மரபு என்னும் பெயரில் அனைத்தையும் புனிதமானதாகப் போற்றிப் பாதுகாப்பது சமூக வளர்ச்சிக்குப் பொருந்தாத ஒன்று. ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப மரபுகள் மாறும் தன்மையன. என்றாலும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துவோர் தம் ஆதிக்கத்திற்குத் துணைபுரியும் என்றால் பழைய மரபுகள் தொடர்வதையே வலியுறுத்துவர். அதனை மீறவிடாது பார்த்துக்கொள்வர். தம் ஆதிக்கத்திற்கு உதவுமென்றால் மரபுகளில் ஏற்படும் மாறுதல்களை ஏற்றுக்கொள்வர். எனவே, மரபுகளுக்குப் பின்னால் ஆதிக்க அரசியல் மறைந்துள்ளது. ஆதிக்க அரசியல் எதிர்ப்பு என்பது, மேட்டிமையோர் போற்றிப் பேணும் மரபுகளுக்கு எதிரானதாகவே அமையும். இந்தியச் சமூக வரலாற்றில் மரபு தொடர்பாகப் பின்வரும் மூன்று நிலைகள் இருந்துள்ளன.

(அ) மாற்றுக் கருத்து (Dissent) (ஆ) எதிர்ப்பு (Protest)  (இ) சீர்திருத்தம் (Reform)

இவை மூன்றும் ஒரு சமூகத்தின் மரபுகளை மாற்றியமைப்பதிலும், அழிப்பதிலும் புதிதாக உருவாக்குவதிலும் துணை நின்றுள்ளன. ஒரு சமூகத்தில் நீண்டகாலமாகப் பேணப்படும் மரபுகள் தம் நலனுக்கு எதிரானவை என்று அடித்தள மக்கள் அல்லது அம்மரபுகளினால் பாதிக்கப்படுவோர் கருதத் தொடங்கும்போது மாற்றுக் கருத்து உருவாகிறது. சமூக நிலைமையைப் பொறுத்து மாற்றுக் கருத்து வளர்ச்சியடைந்து எதிர்ப்பாக வெளிப்படும். சாதகமான சூழல் உருப்பெறவில்லை என்றால் மாற்றுக் கருத்தாகவே தொடரும்.

படிக்க :
நெல்லை கண்ணன் கைது ! பாஜக ‘சிறப்புச்’ சேவையில் தமிழக அரசும் நிர்வாகமும் !
இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டத்தை பற்ற வைத்த புதிய குடியுரிமை சட்டம் !

மாற்றுக் கருத்து எதிர்ப்பாக வெளிப்படும்போது, எதிர்ப்பாளர்களுடன் சமரசஞ்செய்து கொள்ளும் வழிமுறையாக ஆள்வோரும் அவர்களைச் சார்ந்து நிற்கும் மேட்டிமையோரும் சில சீர்திருத்தங்களை, அறிமுகப்படுத்துவர் அல்லது அடக்கு முறையை ஏவுவர். எனவே, ஒரு சமூகத்தில் சமூக மாறுதல்களுக்கான தூண்டுகோலாக மரபு மீறலும் அதையொட்டி நிகழும் மக்கள் எழுச்சியும் காரணமாக அமைகின்றன. மக்கள் எழுச்சியானது அமைப்பு சார்ந்தும் திட்டவட்டமான கோட்பாடுகள் சார்ந்தும் வெளிப்படாவிட்டால் வெறும் கலகமாக மட்டுமே மடிந்துபோகும்.

ஆ. சிவ சுப்பிரமணியன்.

தமிழ்ச் சமூக வரலாற்றில் மரபு மீறுவதை நோக்கமாகக் கொண்டு, குரல் எழுப்பியவர்களுள் சித்தர்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றனர். இவர்கள் அனைவரும் இறை நம்பிக்கை உடையவர்கள். என்றாலும் அந்த எல்லைக்குள் நின்றுகொண்டே சமூக வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக இருந்த பல மரபுகளுக்கு எதிராக உரக்கக்குரல் எழுப்பியுள்ளனர். சித்தர்களைப் பொறுத்தளவில் செல்லரித்துப்போன மரபுகளை மீறுவதை அல்லது எதிர்ப்பதை ஒரு மரபாகக் கொண்டிருந்தனர். இச்செயல்தான் ஏனைய சமயவாதிகளிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக்காட்டுகின்றது. அவர்களது மரபுமீறியச் செயல்களாக;

(அ) சாதிய எதிர்ப்பு (ஆ) சமயச் சடங்குகள் எதிர்ப்பு (இ) வடமொழி எதிர்ப்பு – ஆகியன அமைகின்றன. சித்தர்கள் அனைவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களல்லர் என்றாலும் பெரும்பாலான சித்தர்களிடம் மேற்கூறிய மரபுமீறல்கள் காணப்படுகின்றன. இதன் அடிப்படையில் மரபுமீறலையே மரபாகக் கொண்டவர்கள் என்று இவர்களை அழைப்பது பொருத்தமானதாகும்.

நூல் : கோபுரத் தற்கொலைகள்
ஆசிரியர் : ஆ. சிவசுப்பிரமணியன்

வெளியீடு : பரிசல்,
எண் : 176, Q பிளாக், தொல்காப்பியர் தெரு,
எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், சென்னை – 600 106.
தொலைபேசி எண் : 9382853646

பக்கங்கள்: 104
விலை: ரூ 100.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : commonfolks | panuval

வேத காலத்திலேயே கடவுள் மறுப்பு தோன்றி விட்டது

0
நா. வானமாமலை

இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – பாகம் – 04

முதல் பாகம்

கடவுள் கருத்தின் துவக்கமும் நாத்திகத்தின் தோற்றமும்

“வேத காலத்திலேயே கடவுள் மறுப்பு தோன்றி விட்டது” என்று கார்பே என்னும் இந்திய ஆய்வாளர் கூறுகிறார். வேதகாலத்தில் ‘சர்வ வல்லமையுள்ள கடவுள்’ என்ற கருத்தே தோன்றவில்லை. “கண்ணால் காணாததை நம்பாதே” என்பது போன்ற கருத்துக்கள் தோன்றிவிட்டன. வேத யக்ஞச் சடங்குகளைப் பல கடவுளர்களுக்குச் செய்து செழிப்பும், செல்வமும் பெற விரும்பிய இனக்குழு மக்களுக்கு லோகாயதர்கள் வருணன், அக்கினி போன்ற தெய்வங்கள் இல்லை என்று சொல்ல இக்கருத்துக்கள் எழுந்தன. இவையே நாத்திகம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. இது சர்வ வல்லமையுள்ள கடவுளை மறுப்பதாக ஆகாது. நமது வரலாற்று முற்காலத்தைப் பற்றி நாம் அறிய அறிய, அக்காலத்தின் ஒரு கட்டத்தில் ‘கடவுள்’ என்ற கருத்தே இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுவோம்.

கார்பே , ரிக்வேதச் செய்யுள் ஒன்றைச் சான்றாகக் காட்டுகிறார். “இந்திரன் என்றோர் தெய்வமில்லை” என்ற கருத்துடைய இச்செய்யுளின் பொருளைப் புரிந்து கொள்ளாமல் இதனை நாத்திக வாதம் ரிக் வேதகாலத்திலேயே தோன்றிவிட்டது என்ற தம் முடிவுக்குச் சான்றாக கார்பே காட்டுகிறார். உண்மையில் இது இந்திரனைப் புகழ்ந்து கூறும் ஒரு செய்யுளாகும். இந்திரனைக் குறை கூறுவதென்பது இந்திரனது இருப்பில் நம்பிக்கையிருந்தால் தானே சாத்தியம்?

இந்திரன் இருப்பையே சந்தேகிக்கிற செய்யுள்கள் ரிக் வேதத்தில் உள்ளன. உதாரணமாக, “வீரர்களே, இந்திரன் இருப்பது உண்மையானால் அவனது புகழைப் பாடுங்கள். நாமா என்னும் ரிஷி,

“இந்திரன் என்று எவரும் இல்லை. யார் அவனைக் கண்டார்கள். யார் புகழை நீங்கள் பாடப் போகிறீர்கள்?” என்று சொல்லுகிறார். (ரிக்வேதம் VIII 100)

இந்தச் சந்தேகம் ‘ஒரு கடவுள்’ என்ற கொள்கைக்கு வழிவகுத்ததா, அல்லது ‘கடவுள் இல்லை’ என்ற கொள்கைக்கு வழிவகுத்ததா என்பதே கேள்வி. வரலாற்று ‘முற்காலக் கடவுளர்களை’ப் பற்றிய நம்பிக்கை மறுக்கப்பட்டு, ‘ஒரே கடவுள்’ என்ற கொள்கை பிறந்தது. ஆகவே இந்த சந்தேகங்கள் முற்கால பல தெய்வ வணக்கத்தை மறுக்கவே பிறந்தது. எனவே இக்கருத்துக்கள் ஆத்திக முற்கால கருத்துக்கள். இவை நாத்திகமன்று.

வேதச் சிந்தனைகள் வளர்ச்சி பெற்று ‘ஒரு கடவுள்’ கொள்கை தோன்றியது. இதற்குக் காரணம் இனக்குழு அமைப்புகள், அழிந்தும், அழிக்கப்பட்டும் அரசுகள் தோன்றியதே. அரசு மக்களை ஒரு வர்க்கத்திற்கு வன்முறையால் பணிய வைக்கும் கருவி. அது மக்கள் மனத்தைப் பணியவைக்கச் சமயங்களைத் துணையாக நாடிற்று. மனத்தில் ‘பல கடவுளர்’ (Polyheism) பக்தி இருந்ததை ஒரே கடவுளாக மாற்ற அது தத்துவத் துறையில் முயற்சி செய்தது. இது ஒன்றேதான் ஒரு கடவுள் வணக்கம் தோன்றக் காரணம் என்று நான் கூறவில்லை. அரசுகள் தோன்றிய பகுதிகளில், ஒரே கடவுள் வணக்கமும் தோன்றியது.

படிக்க :
நெல்லை கண்ணன் கைது ! பாஜக ‘சிறப்புச்’ சேவையில் தமிழக அரசும் நிர்வாகமும் !
பெசன்ட் நகர் கோலம் : பாகிஸ்தான் சதி என்கிறது சங்கி போலீசு !

ரிக்வேதம் 1,000 செய்யுள்கள் கொண்ட ஒரு தொகை நூல். ஒவ்வொரு செய்யுளின் காலமும் இன்னும் ஆராய்ச்சியால் அறியப்படவில்லை. ஆயினும் வேதப் பாடல்களின் உள்ளடக்கத்தைக் கவனித்தால் அவற்றின் வளர்ச்சிமுறைப் போக்கை நம்மால் அறிய முடியும், வேதங்களின் துவக்க காலத்தில் பல்வேறு இயல்புகள் உடையதாக நம்பப்பட்ட பல்வேறு தேவதைகள் வணக்கத்திற்குரியனவாக இருந்தன. இவற்றிற்கு ஆன்மீக முக்கியத்துவம் இல்லை. பண்டமாற்று விவகாரம் போல சில கொடைகளை மனிதர்கள் தெய்வங்களுக்குக் கொடுத்து, சில வரங்களைப் பெற முயன்றார்கள். மாபெரும் ஆற்றல், இத்தேவதைகளுக்கு இருந்ததாக அவற்றை வணங்கும் மக்கள் நம்பவில்லை. இவ்வேதங்களிலேயே, இத்தேவதைகள் முக்கியத்துவம் இழந்து ஒரு தெய்வ நம்பிக்கை தோன்றுகிற கட்டத்தைக் குறிக்கும் பாடல்களும் உள்ளன. ‘ஒரே கடவுள்’ நம்பிக்கை ரிக்வேதச் செய்யுள்களிலேயே முழு உருவம் பெற்றதா என்ற கேள்வி முக்கியமானதல்ல. ரிக்வேதத்தில் இந்த மாற்றத்துக்குரிய முன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்கிற நிலைமைகளை வேதப் பாடல்களின் உள்ளடக்கத்தின் வளர்ச்சிப் போக்கு குறிப்பிடுகிறது.

இது குறித்து வின்டர் நிட்ஸ் கூறுகிறார்: “மிகவும் உயர்ந்த, மிகவும் வலிமையுடைய இந்திரன் என்னும் தெய்வத்தின் மீது வேதகால மக்கள் நம்பிக்கையிழக்கத் தொடங்கினர். அது போன்ற பல தெய்வங்களின் மீதும் நம்பிக்கைக் குறைந்தது. இதனால் யக்ஞங்கள் புரிவது, தேவதைகளைத் தங்களோடு விருந்துண்ண அழைப்பது போன்ற சடங்குகளின் மீது நம்பிக்கை தளர்ந்தது. இந்த யக்ஞங்களையெல்லாம், சர்வ வல்லமை படைத்த ஒரு தெய்வத்துக்காகச் செய்து வரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை புதிதாகத் தோன்றியது. எனவே ‘பிராஜாபதி’ (மனிதனைப் படைத்தவன்) என்ற கருத்து உருவாகியது. படைப்பாளி என்ற கருத்தின் உதயமே, ‘ஒரு கடவுள்’ வணக்கத்தின் துவக்கம். இவருக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டன; பிராமணஸ்பதி, பிருகஸ்பதி, விஸ்வகர்மன் முதலிய பெயர்களில் அவர் இயல்புத் தொகுப்பான கடவுள் எனக் கருதப்பட்டார். இயற்கைத் தெய்வங்கள், அவருடைய பல அம்சங்களாகக் கருதப்பட்டன. ரிக் வேதத்திலேயே இதற்குச் சான்றுகள் உள்ளன.

ராமானுஜர்.

அவரை இந்திரர் என்றும், மித்திரர் என்றும், வருணர் என்றும், அக்னி என்றும் அழைக்கிறார்கள். அவரை கருட் மாத் என்றும் பெயர் சொல்லுகிறார்கள். ஒரே ஒருவருக்குத் தான் கவிகள் பல பெயர்களைக் கொடுத்திருக்கிறார்கள் – அக்னி, யமன், மதாரீஸ்வன்.

இத்தகைய ஒரு கடவுள் கொள்கை பின்னும் வளர்ச்சியடைந்து ரிக்வேதத்தின் பிற்காலச் செய்யுள்களில் ‘பிரம்மம்’ என்ற கருத்தாக உருவாயிற்று. இது குணங்களற்றது. தெளிவற்றது. ஆயினும் இது ஒன்றே உண்மை. இதினின்றும் தோன்றிய மாயையில் பிரம்மம் பிரதிபலிப்பதால் தான் பிரபஞ்சம் தோற்றம் கொள்கிறது. இக்கொள்கை ஒரு கடவுள் கொள்கையின் வளர்ச்சிநிலை.

இதனை ஒரு கடவுள் கொள்கையாக ராமானுஜர் மாற்றினார். குணமற்ற பிரம்மத்திற்கு நற்குணங்களை ஏற்றி அவர் சகுணப் பிரம்மம் என்ற கருத்தைப் படைத்தார்.

‘ஒரு கடவுள்’ என்ற கொள்கையை மறுக்கவே நாத்திகம் தோன்றியது. பின்னர் தோன்றிய பிரம்மம், ஒரே கடவுள் என்ற கொள்கைகளை மறுக்கவும் நாத்திகம் தன் வாதங்களை வளர்த்துக் கொண்டது.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

இந்திய நாத்திகமும்
மார்க்சீயத் தத்துவமும்

நா. வானமாமலை
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

நெல்லை கண்ணன் கைது – மக்கள் அதிகாரம் கண்டனம் !

PP Letter head தேதி : 02.01.2020

பத்திரிகை செய்தி

திரு. நெல்லை கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டதையும், மிகவும் தொலைவில் உள்ள சேலம் சிறைக்கு மாற்றியிருப்பதையும் மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது!

திரு. நெல்லைக் கண்ணன்.

மிழகம் நன்கறிந்த இலக்கியக் சொற்பொழிவாளரும், காங்கிரசு கட்சியின் தமிழகத் தலைவர்களில் ஒருவருமான நெல்லை கண்ணன் அவர்கள் எவ்வித உள்நோக்கமின்றி மோடி, அமித்ஷா குறித்து வேடிக்கையாகப் பேசியதைக் காரணம் காட்டி குற்றம் புரியத் தூண்டுதல், இருவேறு பிரிவினரிடையே மோதலை உருவாக்குவது ஆகிய பிரிவுகளின் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார். இது முழுக்க முழுக்க பாஜக -வினர் செய்த ரவுடித்தனத்திற்குப் பிறகு பணிந்து தமிழகக் காவல்துறை எடுத்திருக்கும் அநியாயமான நடவடிக்கை.

திரு. நெல்லை கண்ணன் அவர்கள் பேசியதைவிட மிகக் கொடூர வன்மத்துடன் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பாஜக-வினர் பேசி வருவது மட்டுமல்லாது பல கொலைகளையும் பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் அரங்கேற்றி வருகின்றனர். அவ்வாறு கொலை செய்தவர்களுக்கு  பாஜக அமைச்சரே மாலை போட்டு வரவேற்கிறார். தமிழகத்தில் பாஜக-வின் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் கவிஞர் வைரமுத்துவைக் கொலை செய்ய வேண்டுமென்று பகிரங்கமாகப் பேசினார்.

எச்.ராஜா மாணவர்கள் போராட்டத்தின் போது கல் வீசுபவர்கள் மீது குண்டு வீசுவோம் எனப் பேசினார். மெரினாவில் எவ்விதப் போராட்டமும் நடத்தக் கூடாது என உயர்நீதிமன்றத் தடை இருக்கும் போது அதை துச்சமாக மதித்து எச்.ராஜா, இல. கணேசன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். இவற்றை காவல்துறை சற்றும் கண்டுகொள்வதில்லை. தமிழகக் காவல்துறை முழுவதும் பாஜக-வின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகிறது.

படிக்க:
நெல்லை கண்ணன் கைது ! பாஜக ‘சிறப்புச்’ சேவையில் தமிழக அரசும் நிர்வாகமும் !
♦ பெசன்ட் நகர் கோலம் : பாகிஸ்தான் சதி என்கிறது சங்கி போலீசு !

திரு நெல்லை கண்ணனைக் கைது செய்யும் போது பாஜக காலிகள் அவரைத் தாக்க முனைந்தபோதும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, திரு நெல்லை கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டதையும் அவரை துன்புறுத்தும் நோக்கில் வயது முதிர்ந்த ஒரு தலைவரை தொலைதூர சேலம் சிறைக்கு மாற்றியிருப்பதையும் மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அவர் மீதான வழக்கை உடனே திரும்பப்பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டுமெனெ வலியுறுத்துகிறது.

ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகவும், பாஜகவின் அடியாளாகவும் செயல்படும் தமிழகக் காவல்துறையையும் வன்மையாகக் கண்டிக்கிறது.

தோழமையுடன்
தோழர் காளியப்பன்,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம

பிரெடெரிக் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!

பிரெடெரிக் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!

வம்பர் – 28, 2019 – பிரெடெரிக் எங்கெல்ஸின் இருநூறாவது பிறந்த தினம். கார்ல் மார்க்சின் இணையபிரியா நண்பராக மட்டுமல்ல, கம்யூனிசத் தத்துவத்தை இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையிலமைந்த அறிவியலாக, பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராயுதமாக, மார்க்சுடன் இணைந்து வளர்த்தெடுத்தவர் பிரெடெரிக் எங்கெல்ஸ்.

ஆலை முதலாளியின் மகனாகப் பிறந்த அவர், ஆலைத் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான பிதாமகன்களுள் ஒருவராக உருவெடுத்தது வரலாற்றில் நிகழ்ந்த முரண் அதிசயம்.

கம்யூனிஸ்ட் லீக் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கம்யூனிஸ்டுகளின் பொது வேலைத்திட்டமாக மார்க்சும் எங்கெல்சும் இணைந்து எழுதி முன்வைத்ததுதான், காலத்தால் அழியாத கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை. தொழிலாளி வர்க்கத்தின் பைபிளைப் படைத்தபோது எங்கெல்ஸின் வயது 28.

எங்கெல்ஸ்க்கு முன்பே மிகப் பலர் பாட்டாளி வர்க்கத்தின் துன்ப துயரங்களை வர்ணித்து, அதற்கு உதவி புரிய வேண்டியதின் அவசியத்தை எடுத்துச் சொல்லியுள்ளனர். பாட்டாளி வர்க்கம் துன்பதுயரங்களை அனுபவிக்கும் வர்க்கம் மட்டுமல்ல, உண்மையிலே பாட்டாளி வர்க்கத்தின் வெட்கக்கேடான பொருளாதார நிலைமை தடுக்க முடியாத வகையில் அதை முன்தள்ளிச் செல்கிறது, தனது இறுதி விடுதலைக்காகப் போராடும்படி நிர்ப்பந்திக்கிறது என்று எங்கெல்சுதான் முதன்முதலாகச் சொன்னவர் என்கிறார், லெனின்.

படிக்க:
மூலதனம் நூலின் 150 வது ஆண்டு ! நவம்பர் புரட்சியின் 100 வது ஆண்டு !!
மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !

எங்கெல்ஸ் தொழிலாளி வர்க்கத்தின் நிலை குறித்து 24 வயதிலேயே செறிவான கட்டுரைகளை எழுதத் தொடங்கிவிட்டார் என்பது மட்டுமல்ல; அறிவியலுக்கு புறம்பான வகையிலும், கற்பனையான செயல்திட்டங்களோடும், கருத்துமுதல்வாத – இயக்க மறுப்பியல் சிந்தனைகளோடு முன்வைக்கப்பட்ட சித்தாந்தப் போக்குகளை சமரசமின்றி எதிர்த்துப் போராடியிருக்கிறார்; சளைக்காமல் எழுதியிருக்கிறார்.

புனித குடும்பம் அல்லது விமர்சன பகுப்பாய்வின் மீதான விமர்சனம், ஜெர்மானிய சித்தாந்தம், டூரிங்குக்கு மறுப்பு போன்ற நூல்கள் இத்தத்துவார்த்த போராட்டத்தின் சாட்சியமாக விளங்குகின்றன. இவை தவிர, மானுடவியலையும் அறிவியலையும் நிலைநாட்டுகிற, மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம், குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. அவரது படைப்புகள் பாட்டாளி வர்க்கத்திற்கு அரசியல் வழிகாட்டும் வரலாற்றுப் பொக்கிஷங்கள்.

மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் மூலதனத்தின் முதல் தொகுதி மட்டுமே வெளியாகியிருந்த சூழலில், எஞ்சிய இரு தொகுதிகளையும் பெரும் இடர்ப்பாடுகளைக் கடந்து வெளியிட்டவர் எங்கெல்ஸ். இதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், மார்க்ஸ் போன்ற மாமனிதரின் ஒவ்வொரு பொன்னான வார்த்தையும் மிகவும் முக்கியமானது. “இவ்வாறு கடினமாக உழைப்பதை நான் மிகவும் மகிழ்ச்சியான தருணமாகவே கருதுகிறேன். ஏனென்றால், என் நீண்ட நாள் நண்பன் மீண்டும் என்னருகில் இருப்பதாகவே உணருகிறேன்” என நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டிருக்கிறார், எங்கெல்ஸ்.

எங்கெல்ஸை நாம் ஏன் நினைவு கூற வேண்டும்? விடையளிக்கிறார், லெனின். தொழிலாளி வர்க்கம் தன்னைத்தானே அறிந்து கொள்ளுமாறு, தன்னைப் பற்றிய உணர்வு கொள்ளுமாறு அவர்கள் போதித்தார்கள்; மேலும், கனவுகள் இருந்த இடத்தில் அறிவியலை நிலைநாட்டினார்கள். ஆகவேதான், எங்கெல்சின் பெயரும் வாழ்க்கையும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெரிந்திருக்க வேண்டும்.

– ஆசிரியர் குழு.

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மமின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

12 வயது சிறுவன் கைது : மோடி சேவையில் பீகார் போலீசு !

0

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்களின் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பீகாரின் அவுரங்காபாத்தில் நடைபெற்ற போராட்டங்களின்போது, போலீசு மிருகத்தனமான தாக்குதல்களை நடத்தியதோடு, முசுலீம்களை தொடர்பே இல்லாமல் வேண்டுமென்றே கைதும் செய்துள்ளது.

டிசம்பர் 21 அன்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் ‘பீகார் முழுஅடைப்புக்கு’ அழைப்பு விடுத்திருந்தது. போராட்டக்காரர்கள் அணிவகுத்து சென்றபோது, அதைத் தடுக்க போலீசு கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியது. போராட்டக்காரர்கள் எதிர் தாக்குதலாக தெருக்களில் நுழைந்து, ரயில் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். நகரத்தின் நியூ காசி மொல்லா, ஷா-கஞ்ச், பதான் டோலி, ஆசாத் நகர், இஸ்மாயில் டோலி மற்றும் ஃபாரூக்கி மொல்லா பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

வழக்கம்போல, போராட்டக்காரர்கள் மீதே அத்தனை பழியையும் போடப்பட்டது போலீசு. ஆனால், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ காட்சிகள் பீகார் போலீசு, கார்களையும் பைக்குகளையும் அடித்து நொறுக்குவதைக் காட்டின.

இந்நிலையில் டிசம்பர் 21 முதல் பல்வேறு வழக்குகளில் 45 பேர் கல் வீச்சில் ஈடுபட்டதாக போலீசு தரப்பில் சொல்லப்பட்டது. இதில் பெரும்பாலானோர் அப்பாவிகள் எனத் தெரியவந்துள்ளது.

அவுரங்காபாத் நகரின் காலனியில் இருந்து டிசம்பர் 21 மதியம் ஷாபாஸ் நவாப் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரது மூத்த சகோதரர் சாஜிப், கல் வீசியவர்களில் ஷாபாஸ் இல்லை என்று கூறினார்.

ஷாபாஸ் கொடூரமாக தாக்கப்பட்ட காட்சி.

டிசம்பர் 21 அன்று தனது தாயிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், தனது சகோதரர் கைது செய்யப்பட்டதாக சாஜிப் கூறுகிறார். அவர்களது வீட்டின் அருகே அவர்களது காரை நிறுத்தும்போது ஷாபாஸ் கைது செய்யப்பட்டிருக்கிறார். “என் அம்மா தொலைபேசியில் அழுது, ஷாபாஸ் கொடூரமாக தாக்கப்பட்டதாகக் கூறினார். எனது தந்தை ஃபெரோஸ் ஆதில், அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை அவரை விட்டுவிடும்படி அவர்களிடம் கெஞ்சினார்” என்று சாஜீப் கூறுகிறார்.

காட்சி ஆதாரங்களுடன் அவரது குடும்பத்தினர் போலீசை கேட்டபோதும், ஷாபாஸின் பெயர் எஃப்.ஐ.ஆர்.-ல் 25-வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அவரைப் போன்ற பலர் இந்தப் பட்டியலில் இருக்கக்கூடும் என்று அவரது குடும்பம் அஞ்சுகிறது. கல் எறிந்தவர்களாக கைதானவர்களின் புகைப்படங்கள் நாளிதழ்களில் வெளியாகின.

படிக்க :
பெசன்ட் நகர் கோலம் : பாகிஸ்தான் சதி என்கிறது சங்கி போலீசு !
“கோட்சேயின் மேற்கோளை கூறுங்கள்” : கேரள ஆளுநருக்கு வரலாற்றாய்வாளர் இர்பான் ஹபீப் பதிலடி !

பதினாறு வயது மசூத் பைசலின் கதை ஷாபாஸின் கதையோடு ஒத்திருக்கிறது. வன்முறை நாளில் குரேஷி நகரில் டியூசனை முடித்து விட்டு வந்த மெஹபூப் ஆலமின் மகன் பைசல் காணாமல் போனார்.

கணினி ஆசிரியராக இருக்கும் பைசலின் மாமா மஹ்மூத் ஆலம், பதான் டோலியில் உள்ள பைசலின் வீட்டிற்கு செல்லும் வழியில் போலீசு தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதாக சொல்கிறார். “அவர் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர் தனது தந்தையுடன் தொலைபேசியில் பேசியிருந்தார். அவரது அழைப்பு பதிவுகளைக் கண்டுபிடிப்பதன் மூலம் இதைச் சரிபார்க்கலாம். ஈ-டிவி பீகார் செய்தி சேனலில், பைசலை காவல்துறையினர் கொடூரமாக தாக்கும் காட்சிகளைக் கண்டோம்” என்கிறார் மஹ்மூத்.

போலீசாரால் தாக்கப்பட்ட ஃபைசல்.

போலீசார் அடித்ததில் அவரது இடது மணிக்கட்டு எலும்பு முறிந்துள்ளது. அவரது உடலில் சித்திரவதை அடையாளங்களையும் காணலாம் என்கிறார் மஹ்மூத். “அவர் சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கைதானது உறுதிசெய்யப்பட்ட உடனேயே நான் காவல் நிலையத்திற்கு விரைந்தேன், அவர் காயங்களுடன் மயக்கத்தில் கிடப்பதைக் கண்டேன்” என்கிறார் அவர்.

பைசலுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், அவர் இன்னும் போலீஸ் காவலில்தான் உள்ளார் என்கிறார் மஹ்மூத்.

அவுரங்காபாத் நகரத்தின் இஸ்லாம் டோலி பகுதியில் சைபர் கபே ஒன்றை நடத்தி வரும் முகமது இனாம் உல்-ரப் இதேபோன்ற அனுபவத்தை விவரிக்கிறார். த வயர் உடனான உரையாடலில் முகமது இனாம், “மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்தின் போது பிற்பகல் நேரத்தில், ஒரு சில போலீசார் எங்கள் வீட்டிற்கு அருகில் எங்களை அடிக்கத் தொடங்கினர். எதிர்த்தபோது, அவர்கள் மிகவும் ஆக்ரோஷமாகி, வன்முறை சம்பவத்தை காரணம் காட்டி எங்களை வீடுகளுக்குள் தள்ளினர். இரண்டு மணி நேரம் கழித்து, மாலை 5 மணியளவில், 50-60 காவல்துறையினர் எனது இல்லத்திற்குள் நுழைந்து எங்கள் தண்ணீர் குழாயை உடைத்து எங்கள் வீட்டின் வாசல் கதவை உடைக்கத் தொடங்கினர். அவர்கள் என் சகோதரி, தாய் மற்றும் அத்தை ஆகியோரைத் தள்ளி, வன்முறை மற்றும் கல் வீச்சில் ஈடுபட்ட குற்றவாளிகள் யார் எனக் கேட்டார்கள்”.

படிக்க :
இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டத்தை பற்ற வைத்த புதிய குடியுரிமை சட்டம் !
♦ குடியுரிமை திருத்தச் சட்டம் : உத்தர பிரதேசத்தில் போலீசு நடத்திய படுகொலைகள் !

ஒரு பெண் கான்ஸ்டபிள்கூட இல்லாமல், இனாமின் வீட்டை போலீசார் சோதனை எனும் பெயரில் சூறையாடியுள்ளனர். மேலும் அவரது 12 வயது சகோதரர் சதாமை கைது செய்த பின்னரே இதை அவர்கள் நிறுத்தியுள்ளனர். ஆனால் , “எஃப்.ஐ.ஆரில் அவரது வயதை ’19’ என்று எழுதினர்” என்கிறார் இனாம்.

சதாம் உசேனின் பள்ளி சான்றிதழ்.

பள்ளி சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை விவரங்களின்படி சதாம் உசேனின் வயது 12 என்பதை த வயர் உறுதி செய்துள்ளது. இனாமின் வீட்டில் இருந்து அவரது மாமா, மைத்துனர் மற்றும் இரண்டு இளைய சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு, அவுரங்காபாத் வகுப்புவாத கலவரங்களுக்காக தலைப்பு செய்திகளில் வந்தது. டிசம்பர் 21-க்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், குடியுரிமை சட்ட போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. முசுலீம் இளைஞர்களை குறிவைத்தே பீகார் காவல்துறையினர் இந்த வன்முறை சம்பவங்களையும், கைதுகளை செய்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

CAA-NRC க்கு எதிரான போராட்டங்களின் போது வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக முசாபர்பூர், கோபால்கஞ்ச், பகல்பூர், பாட்னா, புல்வாரி ஷரிஃப், மற்றும் சிவான் உள்ளிட்ட பீகாரின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 1,550 பேர் கைது செய்யப்பட்டதாக மாநில போலீஸ் பதிவுகள் கூறுகின்றன.

போராடும் முசுலீம்கள் மீது பாஜக ஆளும் மாநிலங்களில் கொலைவெறி தாக்குதல் நடத்தி, சுட்டுக்கொல்லப்படுவதை அம்மாநில அரசுகள் திட்டமிட்டே செய்கின்றன. மத்திய பாஜக அரசின் பினாமிகளாக ஆட்சி நடத்தும் பீகார், தமிழகம் போன்ற மாநிலங்களில் அப்பாவிகள் கைது செய்யப்படுவதும் – கோலம் போட்டதற்கெல்லாம் கைதுகள் நடத்தப்படுவதும் – கைதானவர்களுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு என போலீசே வதந்தி கிளப்புவதும் நடக்கிறது. பாஜக ஒழிந்தது என தேர்தல் அரசியலை மட்டும் வைத்து மேப் வரைந்து மகிழ்ச்சி கொள்ள ஏதுவுமில்லை.


செய்தி கட்டுரை: சவுரவ் குமார்

அனிதா
நன்றி : தி வயர்

பெசன்ட் நகர் கோலம் : பாகிஸ்தான் சதி என்கிறது சங்கி போலீசு !

0

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த டிச-29 அன்று சென்னை பெசன்ட் நகரில் NO CAA, NO NRC, NO NPR என்ற வாசகங்களுடன் கோலம் போட்டதற்காக கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவரான காயத்ரி கந்தாதே என்பவருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு அமைப்புடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கொளுத்திப் போட்டிருக்கிறார், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்.

சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்.

ஹெச்.ராஜா, அர்ஜூன் சம்பத், கோலாகல சீனிவாசன் போன்றவர்கள் இவ்வாறு கொளுத்தி போட்டிருந்தால் கூட, சங்கிகளோட வேலையே இதுதானே என்று சட்டை செய்யாமல் கடந்து போயிருக்கலாம். போலீசு தரப்பில் வழங்கப்படும் வழக்கமான அறிக்கையாகக்கூட இல்லாமல், பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி போலீஸ் கமிசனரே நேரில் தோன்றி பேசியிருக்கிறார். காயத்ரி கந்தாதேவின் முகநூல் பக்கத்தில் அவரே பதிவிட்டிருந்த ஆதாரங்களைக் காட்டியும், சில வீடியோ காட்சிகளை போட்டுக்காட்டியும் பத்திரிகையாளர்களிடம் விளக்கியிருக்கிறார் கமிஷனர்.

ஹெச்.ராஜாவும், ராகவன்களும் பேச வேண்டிய டயலாக்குகளை பிபின் ராவத்தும், விஸ்வநாதன்களும் பேச தொடங்கிவிட்டார்களோ..? என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது !

பத்திரிகையாளர்களிடம் அவர் கொடுத்த விளக்கத்தில், “அவர்களுக்கு பாகிஸ்தான் அமைப்புகளோடு தொடர்பு இருக்கிறது; அவர்கள் பொது இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக கோலம் போட்டார்கள்; ஒரு வீட்டின் முன் ஏற்கெனவே போடப்பட்டிருந்த கோலத்தின் அருகே NO CAA, NO NRC, NO NPR போன்ற வாசகங்களை இவர்கள் எழுதியுள்ளார்கள்; இதனை தட்டிக்கேட்ட அந்த வீட்டின் உரிமையாளருடன் இவர்கள் சண்டையிட்டார்கள்… இது தொடர்பான புகாரின் பேரில்தான் அந்த 8 பேர் கைது செய்யப்பட்டார்கள்” என்கிறார் அவர். மிக முக்கியமாக, கோலம் போட்டதற்காக போலீசு கைது செய்தது என பேசுவது சரியல்ல என்பதை அழுத்தம் கொடுத்து பேசி, அதை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

படிக்க:
பாபர் மசூதி இடிப்பு வழக்கு : மறுக்கப்படும் நீதி !
♦ CAA எதிர்ப்புக் கோலம் : கருத்துரிமையை காலில் போட்டு மிதிக்கும் தமிழகப் போலீசு !

பெசன்ட் நகரில் கோலம் போட்ட காயத்ரிக்கு, பாகிஸ்தான் ‘கனெக்சன்’ இருப்பதாக ஏ.கே.விஸ்வநாதன் குறிப்பிடும் அமைப்பான “Bytes for all” என்பது, இணைய சுதந்திரத்துக்கான அமைப்பு. பாகிஸ்தானில் இருப்பவன் எல்லாம் தீவிரவாதிகள் என்று ராம ரவிக்குமார் போன்றோர் நேற்றுவரை தொலைக்காட்சி விவாதங்களில் பேசி வந்ததைத்தான், இன்று போலீசாரே பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி பேசத்தொடங்கியிருக்கின்றனர்.

இதே விவகாரம் தொடர்பாக ஜன-1 அன்று வெளியான தமிழ் இந்து நாளிதழ், கோலம் போடுவது தொடர்பாகக் கைது செய்யப்பட்டது தொடர்பான போலீசு விளக்கத்தை செய்தியாக  வெளியிட்டிருந்தது.

அந்தச் செய்தியின் தலைப்பாக, “திமுக-வினர் வீட்டில் கோலம் போட எந்தத் தடையும் இல்லை – காவல் துறை அதிகாரிகள் தகவல்” என்று விஷமத்தனமான வகையில் தலைப்பிட்டிருந்தது. போலீசு பொதுவாகக் கொடுத்த விளக்கத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில்  இந்தத் தலைப்பை வைத்துள்ளது தமிழ் இந்து.

இது ஏதோ, கோலம் போடுவது தொடர்பான பிரச்சினை என்பதாகவும், இந்தப் போராட்டம் தி.மு.க.-வினரால் மட்டுமே நடத்தப்படும் போராட்டம் என்பதாகவும் பொருள்படும் வண்ணம் தலைப்பைப் போட்டு பாஜகவின் தமிழக நிகழ்ச்சிநிரலுக்கு ஜிங்ஞ்சா போட்டிருக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், அதனைத் தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு என்ற மோடி – அமித்ஷா கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நாடெங்கிலும் நடைபெற்றுவரும் போராட்டத்தின் தொடர்ச்சிதான் பெசன்ட்நகரில் மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் தொடங்கிவைத்த கோலம் போடும் போராட்டம். தீவிரவாதிகளைப் போல, மாணவர்களை போலீசு நடத்திய விதத்தை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சியினரும், ஜனநாயக சக்திகளும் கண்டித்த பின்னரே அவர்களை போலீசு நிலையத்தோடு, விடுவித்தது போலீசு.

8 மாணவர்களோடு, பெசண்ட் நகரோடு முடிந்திருக்க வேண்டிய விவகாரம் இன்று தமிழகமெங்கும் மக்கள் போராட்டமாக மாறியிருப்பதை கண்டுதான் இவர்கள் அலறுகிறார்கள். அந்த செய்தியாளர் சந்திப்பில் ஆதாரம் என்று சம்பந்தப்பட்ட நபர்கள் யாரும் இல்லாத ஒரு காணொளியைக் காட்டியும், பாகிஸ்தான் பூச்சாண்டியைக் காட்டியும் பிறரை பயமுறுத்த எண்ணுகிறார்கள்.

படிக்க:
வீதி தோறும் என்.ஆர்.சி எதிர்ப்பு போராட்டக் கோலங்கள் !
♦ அமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா ?

மார்கழி மாதம் கோலம் போடுவது ஐ.பி.சி.க்குள் அடங்குமா? கோலத்தை தெருவில் போட்டார்களா? வீட்டில் போட்டார்களா? என்பதா பிரச்சினை?

அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பான வகையில், மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சாமானிய மக்கள் தங்களது எதிர்ப்பை – மாற்றுக்கருத்தை முன்வைக்கும் உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பதுதானே இங்கே பிரச்சினை.

பாகிஸ்தான் கணெக்சன் எல்லாம் ஒருபக்கம் கிடக்கட்டும்; தமிழக மக்கள் தங்கள் சொந்தக் கைக்காசை போட்டு … தமது வீட்டுக்கு எதிரிலேயே இருக்கக்கூடிய ஒரு அண்ணாச்சி கடையில் கோலமாவை வாங்கி வந்து … ஏதோ தமக்கு தெரிந்த நாலு புள்ளி கோலத்தை, தன் வீட்டு வாசலில் போட்டு … கோலத்துக்கு நடுவில் ”NO CAA, NO NRC, NO NPR ” என்று எழுதுகிறார்கள் எனில் போலீசார் அமைதியாக இருந்துவிடுவார்களா? கோலம் போட்ட பத்தே நிமிடத்தில் ஏட்டய்யாவுக்கு போட்டியா ஏ.சி., டி.சி. ஐயாக்கள் அவர்கள் வீட்டு கதவை தட்ட மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்? அப்படிச் செய்வோம் என்று கூறி மிரட்டவே இந்த பத்திரிகையாளர் சந்திப்பு !

மோடி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டமாகட்டும்; அடுத்தடுத்து அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ள என்.ஆர்.சி., என்.பி.ஆர். போன்ற நடவடிக்கைகளாகட்டும் இவையனைத்தும் அரசியல் சாசனத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குபவை; இட்லரின் இனவழிப்பு நடவடிக்கைக்கு சற்றும் குறைவில்லாதவை என்று அறிவுத்துறையினரும் ஜனநாயக சக்திகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

சாமான்யனின் வாழ்வுரிமையை பறித்து நாடற்றவனாக மாற்றப்படும் அபாயத்தை எதிர்த்து நிற்கும் உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பதுதானே இங்கே எழுப்பப்படும் கேள்வி.

இங்கே அரசியல் சாசனத்தை குப்பையில் வீசிவிட்டு, தமது இந்துராஷ்டிர செயல் தந்திரத்தை கையில் வைத்துக்கொண்டு செயல்படும் அமித்ஷா – மோடி கும்பலின் நடவடிக்கைகள்தானே சட்டவிரோதமானவை. நாட்டின் அமைதியை குலைத்து மக்களை போராடத் தூண்டிவிடும் குற்றவாளிகளும் அவர்கள்தானே?

நாட்டின் குடிமகனுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளைப் பயன்படுத்தித்தான், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மாற்றுக் கருத்தை முன்வைத்தாலே தேசவிரோதியென்று முத்திரைகுத்தி கைது செய்து வருகிறது, மோடி – அமித்ஷா கும்பல். இக்கும்பலின் விசுவாசமிக்க அடிமை எடப்பாடி அரசு, தன் பங்கிற்கு தமிழகத்தில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு மக்கள் போராட்டங்களை ஒடுக்கி வருகிறது.

”அடிமை எடப்பாடி அரசு” என்ற வார்த்தைக்கும் கீழான தமிழ்ச்சொல்லைத் தேடவைத்துவிட்டார், ஏ.கே.விஸ்வநாதன்.


இளங்கதிர்.