அண்ணா பல்கலைக் கழக இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளில் பகவத் கீதையைப் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது குறித்து தொலைக்காட்சிகளில் அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறின. காந்தியைக் கொலை செய்ய கோட்சேவைத் தூண்டிய ஒரு கொலை நூலை மாணவர்கள் படிப்பதா என பதறுகிறார்கள் பகுத்தறிவாளர்கள். அதுவும் அண்ணா பெயரில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்திலா என ஆதங்கப்படுகிறார்கள். நால் வருண சாதி அமைப்பை நியாயப்படுத்தும் பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்ப்பது பார்ப்பன மேலாண்மையை நிலை நாட்டுவதும் மறைமுகமாக சமஸ்கிருதத்தைப் புகுத்துவதும்தான் மோடி அரசின் நோக்கம் என்பதே பகவத் கீதையை எதிர்ப்போரின் கருத்தாக இருக்கிறது.
மோடி எதைச் செய்தாலும் எதிர்ப்பதே பெரியாரிஸ்டுகளின் வேலையாப் போச்சு என்கிறது பார்ப்பன தரப்பு. மானுடவியல், தனிமனித ஆளுமை, நிர்வாக மேலாண்மை குறித்துத் தெரிந்து கொள்ள ஏராளமான செய்திகள் கீதையில் கொட்டிக் கிடக்கிறது; மேலும் இந்து மதத்துக்கும் பகவத் கீதைக்கும் தொடர்பே கிடையாது; நால்வருண அமைப்பு என்பது செய்கிற தொழிலை அடிப்படையாகக் கொண்டது; வருண அமைப்புக்கும் சாதிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என அடித்துச் சொல்கிறார்கள். கீதை அனைவருக்குமான ஒரு பண்பாட்டு நூல். பிளாட்டோவையும் அரிஸ்டாட்டிலையும் படிக்கும் போது பகவத் கீதையை ஏன் படிக்கக் கூடாது என கேள்வி எழுப்புகிறது வலதுசாரி பார்ப்பனத் தரப்பு.
இதில் எந்தத் தரப்பு சொல்வது சரி. சாதாரண மக்களுக்கு பொறியியல் பாடத்திட்டம் குறித்த விவரம் தெரியாது. ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்பதைத்தவிர பகவத் கீதை பற்றி வேறு எதுவும் தெரியாது. “எதப் படிச்சா என்ன? வேலை கெடச்சா சரி!” என்பதைத் தாண்டி பொறியியல் மாணவர்களும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. மோடிகளும் எடப்பாடிகளும் நீடிக்கும் வரை யார் எதைப் படிச்சாலும் எந்த வேலைக்கும் உத்தரவாதம் இல்லை என்பது மட்டும்தான் தற்போதைக்கு எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இதுல மேலாண்மைக் கோட்பாடாம்! ஆளுமைத் திறனாம்! சோத்துக்கே வழியில்லையாம். ஆனால் சோக்குக்கு மட்டும் கொறச்சல் இல்ல!’
சரி! விசயத்துக்கு வருவோம்! பகுத்தறிவு தரப்பு குறித்து நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. பார்ப்பனர்களின் கருத்தை பரிசீலித்தாலே எது சரி என்பதை முடிவு செய்ய முடியும் எனக் கருதுகிறேன்.
பகவத் கீதைக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பே கிடையாது?
“ருக்ஸாம யஜூரேவ ச!” (கீதை: 9-17). இருக்கு, சாம, யஜூர் என்ற மூன்று வேதங்களும் நானேதான் என்கிறான் கிருஷ்ணன். “இருக்கு, எஜூர், சாம என்னும் பெயரையுடைய அநாதியான வேதத்தை அக்கினி, வாயு, சூரியன் இவர்கள் மூவரிடத்தினின்றும் (பிரம்மா) வெளிப்படுத்தினார்” (மனு:1-23) என்கிறான் மனு.
வேதங்கள், மனு தரும சாஸ்திரம், பகவத் கீதை இவை எல்லாம் இந்து மதத்தைப் பற்றிப் பேசாமல் கன்பூசியசிசமா பேசுகிறது? கீதைக்கும் இந்து மதத்திற்கும் உள்ள தொடர்பு குறித்த சான்றுகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் போது பகவத் கீதை ஒரு இந்து மத நூலே அல்ல என்று ஒருவன் பேசுகிறான் என்றால் அவனை சந்தேகப்பட வேண்டுமா? வேண்டாமா?
மனுதரும சாஸ்திரமும் கீதையும்!
“சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்” (கீதை: 4-13). “பார்ப்பனர், சத்திரியர். வைசியர், சூத்திரன் ஆகிய நான்கு வருணங்களையும்”, “கு ணகர்மவி பாக” (கீதை:4-13). “அவர்களுக்கான குணங்களையும் கர்மங்களையும் நானே படைத்தேன்” என்கிறான் கிருஷ்ணன். இதையேதான் “உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், துடை, கால் இவைகளினின்றும் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்” (மனு:1-31) என்கிறது மனுதரும சாஸ்திரம்.
“வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றல் – கற்பித்தல் இவை பார்ப்பனர்களுக்கு இயல்பாகவே உண்டான கர்மங்கள்” (கீதை:18-42), “கொடையும் ஆளும் தன்மையும் சத்திரியர்களுக்கு இயல்பான கர்மங்கள் ஆகும்” (கீதை:18-43), “உழவு செய்தலும், பொருட்களை வாங்கி விற்பதும் வைசியர்களுக்கு இயல்பாக உண்டான கர்மங்கள்” (கீதை:18-44), “மக்கள் அனைவருக்கும் சேவை புரிவது நான்காம் வர்ணத்தவர்களுக்கு இயல்பாக உண்டான கர்மம்” (கீதை:18-45) என கீதை சொல்கிறது.
இதையேதான் மனுதரும சாஸ்திரமும் சொல்கிறது. “இவர்களுக்கான கர்மங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்” (மனு: 1-87), “பார்ப்பானுக்கு வேதம் ஓதுவித்தல், யாகம் செய்தல்” (மனு:1-88), “சத்திரியனுக்கு மக்களைக் காத்தல், தானம் கொடுத்தல்” (மனு:1-89), “வைசியனுக்கு பயிரிடுதல், வாணிபம் செய்தல்” (1-90), “சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமை இன்றி பணி செய்வதை தருமமாக ஏற்படுத்தினார்” (மனு:1-91).
கீதையும் மனுதரும சாஸ்திரமும் வேறு வேறு அல்ல என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? மனுதர்மத்தை சுலபமாக புரிய வைக்க, பதிய வைக்க எழுதப்பட்ட ஒரு கோனார் உரைதான் கீதை.
தொழிலை மாற்றிக் கொண்டால் வருண சாதி மாறிவிடுமா?
இதில் தொழிலை மாற்றிக் கொண்டால் அதாவது பார்ப்பனன் பிறருக்கு சேவை செய்தால் அவன் சூத்திரனாகவும், சூத்திரன் வேதம் ஓதி யாகம் வளர்த்தால் அவன் பார்ப்பானாகவும் ஆக முடியும் என்று மூச்சு முட்ட பேசுகின்றனர் பார்ப்பனர்கள்.
இசைக் கருவிகளை வாசிப்பது பார்ப்பானின் தொழில் கிடையாது. வீணை, புல்லாங்குழல், வயலின், பக்க வாத்தியங்களான மிருதங்கம், கஞ்சிரா வாசிக்கிற பார்ப்பனர்கள் எல்லாம் இசைவேளாளர்களாக சாதி மாறிவிட்டார்களா? அப்படி மாற்றிக் கொண்ட ஒரு பார்ப்பானையாவது காட்ட முடியுமா?
இவர்கள் சொல்வது போல அப்படி எல்லாம் மாற்றிக் கொள்ள முடியாது. “பிறருடைய தர்மத்தைக் காட்டிலும் தன்னுடைய தர்மம் உயர்ந்தது” (கீதை:18-47), “தனக்குரிய இயல்பான கடமையை விட்டுவிடலாகாது” (கீதை:18-48), உன்னுடைய தொழில்தான் உயர்ந்தது, அதை விட்டுவிடாதே என வலியுறுத்துகிறான் கிருஷ்ணன்.
ஒரு வேளை ஏதோ ஒரு காரணத்திற்காக உனது தொழிலை நீ மாற்றிக் கொண்டால் உனது வருணம் மாறிவிடுமா? உனது தொழிலை நீ மாற்றிக் கொள்ள உனக்கு அதிகாரம் கிடையாது என்பதுதான் இந்து மத சாஸ்திரம். “பார்ப்பனன் தொழிலைச் செய்தாலும் சூத்திரன் பார்ப்பன சாதியாகமாட்டான். ஏனென்றால் அவனுக்கு பார்ப்பனச் சாதித் தொழிலில் அதிகாரமில்லையல்லவா. சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பார்ப்பனன் சூத்திரசாதியாகமாட்டான். ஏனென்றால் அவன் ஈனத் தொழிலைச் செய்தாலும் அவன் சாதி உயர்ந்ததல்லவா. இப்படியே இந்த விசயங்களை பிரம்மாவும் நிச்சயம் செய்திருக்கிறார். (மனு:10-73).
நீ உனது தொழிலை மாற்றிக் கொண்டாலும் உனது வருணம் – சாதி மாறாது என ஷேசாத்திரிகள், கோலாகலன்கள், இராமசுப்புக்களின் முகத்தில் கரியைப் பூசுகிறார் பிரம்மா.
இலட்சக்கணக்கான ஈராக் மக்கள் அரசிற்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போராட்டங்கள் வேலையின்மை, அரசு சேவைகள் செயலிழந்தமை, ஊழல் முதலியவற்றை எதிர்த்து நடைபெற்று வருகின்றன.
எண்ணெய் வளத்தில், உலகளவில் ஐந்தாவது இடத்தில் இருக்கக்கூடிய ஈராக் பல ஆண்டுகளாக அமெரிக்காவின் படையெடுப்பால் பல இன்னல்களை சந்தித்து வருகிறது. அதனால் ஈராக்கில் போராட்டம் புதிதில்லை என்றாலும், தற்போது நடைபெற்றுவரும் இந்தப் போராட்டம் அரசை கதிகலங்க வைத்துள்ளது. போராட்டத்தை ஒடுக்க ஈராக் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில், கடந்த அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து இதுவரை 104 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 6,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்ட 51 வயது பெரியவர், “நாங்கள் பட்டினியில் வாடுகிறோம். அதனால்தான் போராடுகிறோம். இங்கு எண்ணெய் கிணறுகள் அதிகம் இருக்கிறது. ஆனால் எங்களது நாடோ நலிவடைந்திருக்கிறது. என்ன நடக்கிறது, நாடு எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது?” என்கிறார்.
தலைக்குமேல் சூழ்ந்த வெள்ளைப் புகை. ஷோகிக்கு தப்பியோடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை. ஈராக் தலைநகர் பாக்தாத்தில், பாதுகாப்புப் படையினரால் அடுத்தடுத்து வீசப்படவிருக்கும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைக் கண்டு கொத்து கொத்தாக மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடுகின்றனர்.
“அரசு ஸ்னைப்பர்களால் (மறைந்திருந்துசுடுபவர்கள்) குறிவைக்கப்படாதவர்கள் அதிர்ஷ்டசாலிகள்” என்று தனது அருகில் முகமூடி அணிந்து ஓடும் நபரை பார்த்துக் கூறுகிறார் ஷோகி.
அரசியல் கட்சிகளால் இல்லாமல், வெகுஜன மக்களால் ஒருங்கிணைத்து நடத்தப்படுகிறது என்பதே இப்போராட்டத்தின் சிறப்பு. வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும், ஊழல் ஒழிய வேண்டும், மக்களது வாழ்க்கைத் தரம் உயரவேண்டும் என்று அவர்களது முழக்கங்கள் இருந்தாலும், அவர்களது முதன்மையான நோக்கம், இதற்கெல்லாம் மூலக் காரணமான ஈராக் பிரதமர் அடில் அப்துல் மக்தி பதவி விலக வேண்டும் என்பதே.
ஷியா ஆன்மீகத் தலைவரான கிராண்ட் அயதுல்லா அலி அல்-சிஸ்தானி, சில சீர்த்திருத்தங்கள் செயல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். ஈராக் ஜனாதிபதி பர்ஹாம் சாலிஹ் போன்றவர்கள், போராடும் மக்களுக்கு எதிரான அரசின் வன்முறையை கண்டித்ததோடு, மக்களின் அரசியலமைப்பு உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றனர்.
மேலும், அப்துல் மக்தி அரசை கலைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஷியா தலைவர் முக்ததா அல்-சதரும், கூறி வருகிறார்.
ஆனால், “எங்களுக்குச் சீர்த்திருத்தங்கள் தேவையில்லை; நாங்கள் முழுமையான மாற்றத்தை விரும்புகிறோம்; அதிகாரத்திற்கு உட்பட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்; கைகளில் இரத்தம் படிந்த கட்சியிலிருந்து இல்லாமல், புதிய நபர்களை நாங்கள் தேர்ந்தெடுக்க விரும்புகின்றோம்” என்கிற அவர், “இனி இழக்க ஏதுமில்லை; மானமுடன் இறப்பது மேல். நாங்கள் போராட்டத்தை தொடருவோம்” – என்று போராட்டக்காரர்களின் ஒருமித்தக் குரலாக, களப்போராளி ஷோகியின் குரல் ஒலிக்கிறது.
அரசிற்கு எதிரானப் போராட்டத்தில் காயமடைந்த சிறுவனை மீட்டுச் செல்லும் போராட்டக்காரர்.
இரண்டு நாட்கள் போராட்டத்திற்கு பிறகு கலவர பூமியாக மாறிய பாக்தாத்தில், எரியும் டயர்களுக்கு இடையில் ஓடும் சிறுமி.
வேலையின்மை, ஊழல் மற்றும் செயலிழந்துபோன அரசைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களை தங்களது ஆயுத பலத்தால் தடுத்து நிறுத்தும் ஈராக் பாதுகாப்புப் படையினர்.
ஈராக் பாதுகாப்புப் படையினரால் வீசப்பட்ட வெடித்த குண்டுகளின் குப்பிகளை காண்பிக்கிறார் போராட்டக்காரர்.
தலைநகர் பாக்தாத்தில் அக்டோபர் 1-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில், அரசுப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட போராளியின் இறுதி ஊர்வலம்.
போராட்டக்களத்தில் ஊழல், வேலையின்மை, செயலிழந்த அரசுக்கு எதிராக ஈராக் கொடியை ஏந்தி நிற்கும் போராளி.
பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட பெரியவர், ஆயுதங்களுக்கு அஞ்சாமல் தனது கைத்தடியை உயர்த்தி வீரமுழக்கமிடுகிறார்.
பாக்தாத்தில் துவங்கிய போராட்டம் தீயைப் போல நாடு முழுவதும் பரவியது. ஈராக் தெற்கு பகுதியில் தீப்பிழம்புகளுக்கு மத்தியில், முழக்க அட்டையை ஏந்தி நிற்கும் இளைஞர்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட ஈராக்கின் தென்பகுதி நகரமான நசீரியாவில், 8 போராளிகளும் ஒரு அரசு அதிகாரியும் இறந்த பிறகும்கூட தொடர்ந்து முன்னேறிச் செல்லும் மக்கள் போராட்டம்.
இன்றைய காலகட்டத்தில் இந்துத்துவ பாசிசம், நாடு முழுவதிலும் மட்டுமல்ல கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ஆதிக்கம் செலுத்தி மாணவர்களிடமும் ஒரு பிரிவினையை ஏற்படுத்துகின்றது.
கடந்தகால நிகழ்வாக டெல்லி பல்கலைக்கழகத்தில் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பு சாவர்க்கரின் சிலையை வைத்து சாவர்க்கரை ஒரு தியாகி போல சித்தரித்து மாணவர்களிடம் பிரிவினைவாத கருத்துக்களைத் தெரிவிக்கின்றன.
அதைப்போல கோவை அரசு கலைக் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறை சுவற்றில் விவேகானந்தர் படத்தை வரைந்து அதற்கு காவி வண்ணம் அடித்து சமூக வலைத்தளங்களில் பிரிவினைவாத கருத்துக்களை தொடர்ந்து பதிவிடுகின்றன.
கடந்த ஒரு வருட காலமாக கோவை அரசு கலைக் கல்லூரி சுவற்றில் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், போன்ற தலைவர்களின் உருவப்படங்கள் அந்தத் துறையை சேர்ந்த மாணவர்களால் வரையப்பட்டுள்ளது. அது அந்தத் துறையில் உள்ள மாணவர்களின் விருப்பத்தினால் வரையப்பட்டது. ஆனாலும் அதற்கு அத்துறைத்தலைவர் அனுமதி அளிக்கவில்லை. தடைகளை மீறி மாணவர்களின் விருப்பத்தின் பேரில் மூன்று வரலாற்று முக்கியத்துவம் மிக்க தலைவர்களின் படத்தை வரைந்தனர் மாணவர்கள்.
கோவை அரசு கலைக் கல்லூரி அரசியல் அறிவியல் துறை என்பது முற்போக்குக் கருத்துக்கள் நிறைந்த இடமாக இருந்து வந்தது. அதை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டது ஏபிவிபி மாணவர் அமைப்பு .
அவர்களின் திட்டத்தின் ஒரு பகுதியாக முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்த கணேசன் (கலை கணேசன்), மற்றும் கல்லூரியை சாராத மற்ற சில காவி குண்டர்களுடன் சேர்ந்து கொண்டு கல்லூரி விடுமுறை நாளான சனிக்கிழமை (28.09.2019) அன்று, மார்க்ஸ் படத்தை பாதி அழித்து விவேகானந்தர் காவி உடையில் நிற்பது போலவும், அதற்கு பின்புறம் கோவிலில் காவிக்கொடி பரப்பது போலவும் வரைந்துள்ளனர்.
1 of 3
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் மதரீதியான கருத்துக்களையும், மற்ற முற்போக்கு மாணவர் அமைப்பிற்கும், முற்போக்காளர்களுக்கு மிரட்டல் விடுவது போல தவறான கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டுள்ளனர்.
இந்தக் காவி விவேகானந்தரின் படம் வரைந்தால் சர்ச்சை ஏற்படும் என்று தெரிந்தே இதற்கு அனுமதி வழங்கியுள்ளார் துறைத் தலைவர் கனகராஜ்.
இவர் இலவச IAS பயிற்சி நடத்துவதாக தெரிவித்துக் கொண்டு, கல்லூரியில் உள்ள கட்டிடத்தில் மேலே உள்ள ஒரு பகுதியை வளைத்துப் போட்டு அதற்கு தன் பெயரை வைத்துக்கொண்ட ‘யோக்கியமானவர்’ ஆவார்.
அவர் பயிற்சியளிக்கும் இடம் உள்ளிட்டு, கல்லூரி முழுமையும் மாணவர்களின் சொத்து. அவர்களுடைய கட்டணத்தில் உருவான கல்லூரியின் வளாகத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்.
அதுமட்டுமல்ல இவர்தான் கல்லூரியில் ஏற்படும் சலசலப்புகளுக்கு முக்கிய காரணமானவர். அதிகார வர்க்கத் தாழ்வாரத்தில் தனது நெருக்கத்தை அதிகரித்துக் கொள்வதற்காக பல பிற்போக்கு, பாசிச சிந்தனை உள்ள நபர்களை பேச்சாளர்களாக அழைத்து நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார். இவரின் ஒப்புதலுடன் தான் காவி உடை அணிந்த விவேகானந்தர் படம் வரையப்பட்டுள்ளது.
கடந்த 30.09.2019 அன்று இது குறித்து துறையில் உள்ள மாணவர்கள் ஒரு புகார் கடிதம் எழுதி, அதில் மாணவர்கள் கையெழுத்திட்டு சர்ச்சைக்குரிய படமான காவி விவேகானந்தரை எடுக்கவேண்டும், என்ற புகார் கடிதத்தை துறைத் தலைவரிடம் கொடுத்தனர். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. நாங்கள் பேசி முடிவெடுத்து சொல்கிறோம். கமிட்டி அமைத்து முடிவு செய்கிறோம் என்றார்.
பின்பு மாணவர்கள் அந்த புகார் கடிதத்தை கல்லூரி முதல்வரிடம் கொடுத்தனர். வரும் வியாழன் விசாரணை குழு அமைக்கப்படும் என்றார். அதில் முடிவெடுத்து சொல்கிறோம் என துறைத் தலைவரும், கல்லூரி முதல்வரும் கூறியுள்ளனர். ஆனால் இன்னும் முடிவு எதையும் தெரிவிக்கவில்லை.
தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கோவை மாவட்டம். தொடர்புக்கு : 94451 12675.
இந்தியாவில் சிறுபான்மை இசுலாமியர்கள். தலித்துகள் மீது கும்பல் கொலைகள் அதிகரித்துவருவதை சுட்டிக்காட்டி இதனை உடனே தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்கள் ராமச்சந்திர குஹா, சுமித்சர்க்கார், அஷிஷ் நந்தி போன்ற அறிவுத்துறையினர், அடூர் கோபாலகிருஷ்னன், மனிரத்னம், சுபாமுட்கல், ரேவதி, ஷ்யாம்பெனகல் போன்ற திரையுலக பிரபலங்கள், பினாயக் சென் போன்ற புகழ் பெற்ற மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தையே குற்றமாக்கி பிகார் மாநில போலீசு வழக்குப் பதிந்துள்ளது. 120-பி,153-பி, 290, 297, 504 ஆகிய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் தேசத்துரோகம், பொது அமைதியைக் குலைத்தல், மத உணர்வைப் புண்படுத்தல், பிரதமரை இழிவுபடுத்துதல் என மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
தேசியக் குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ள ஆதாரங்களைச் சுட்டிக்காட்டியே இந்த வேண்டுகோளை அவர்கள் அனுப்பியுள்ளனர். ஆர்.எஸ். எஸ்., பா.ஜ.க.வினர் இத்தகைய கடிதத்தையும் விமர்சனத்தையும் குற்றமாகக்கருதுவது வியப்புக்குரியதல்ல. ஆனால், முசாபர்புர் நீதித்துறை நடுவர் எவ்விதப் பரிசீலனையுமின்றி வழக்குப் பதிய உத்தரவிடுவது மிகவும் ஆபத்தானது. தனக்கு எதிரான கருத்துக்கள், விமர்சனங்களை மோடி அரசு நீதித்துறையைக் கொண்டே ஒடுக்க முயல்வதன் துலக்கமான உதாரணம்தான் இந்த வழக்கு. எந்தவொரு அடிப்படை ஆதாரமுமின்றியும், எந்தவொரு நியாயமான சட்டபூர்வ செயலையும்கூட குற்றமாக்கி தண்டிக்க மோடி அரசு தயாராகிவிட்டதையே இந்த நடவடிக்கை காட்டுகிறது. இந்தியாவின் மதிப்பை 49 பேரும் குலைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் உண்மையாதெனில், சர்வதேச மனித உரிமைகள், இந்திய அரசியல் சட்டம், ஜனநாயக, தார்மீக நெறிகள் அனைத்தையும் நசுக்கி இந்தியாவைத் தலைகுனிய வைப்பது மோடி ஆட்சிதான். காஷ்மீரில் நடக்கும் கொடுமைகளை மோடியின் நண்பன் அமெரிக்காவே கண்டித்திருக்கிறது.
நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து ஆகப்பெரும்பாலான மக்கள் ஓட்டாண்டியாக்கப்பட்டுவரும் நிலையில் மக்கள் போராட்டங்களையும், போராளிகளையும் அச்சுறுத்தவே பிரபலங்கள் மீது வழக்குப் போடுகின்றனர். கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்ட இந்தியாவின் தலைசிறந்த அறிஞர்களும் மக்கள் உரிமைப் போராளிகளுமான வரவர ராவ், சுதா பரத்வாஜ் உள்ளிட்ட 10 பேர் எந்த அடிப்படையுமின்றி இன்றுவரை சிறை வைக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. குற்றவாளிகள் விடுவிக்கப்படுகின்றனர். வரும் நாட்கள் மிகவும் ஆபத்தானவையாக மாறிவருகின்றன. எனவே மோடி அரசின் பாசிச ஒடுக்குமுறையை முறியடிப்பதே இன்றைய உடனடித்தேவை. பாசிசம் கோழைத்தனத்தின் வெளிப்பாடு. மக்கள் போராட்டத்தின் முன் தோற்றதுதான் அதன் வரலாறு. எனவே பாசிச ஒடுக்குகுறையை முறியடிக்க அனைவரும் ஒன்றுபடுவோம்.
நன்றி.
காளியப்பன்,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.
99623 66321
உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 10-அ
“சரி, தோழர் சீனியர் லெப்டினன்ட்” என்று அவனை உற்சாகப்படுத்தினார் கப்பூஸ்தின். “இப்போது உட்காருங்கள். கலந்து ஆலோசிப்போம்” என்றார்.
“எதைப் பற்றி?”
“நாம் என்ன செய்வது என்பது பற்றி, வெளியே போவோமா? எனக்குப் புகை குடிக்க வேண்டும் போல இருக்கிறது, இங்கே குடிக்கக்கூடாது.”
மறைத்து மூடப்பட்டிருந்த விளக்குகளின் மங்கிய நீல வெளிச்சத்தில் அரையிருட்டாக இருந்த ஆளோடிக்கு வந்து ஜன்னல் அருகே நின்றார்கள் அவர்கள். கப்பூஸ்தின் சுங்கானை வாயில் வைத்து உறிஞ்சலானார். புகை இழுக்கும் போது சுங்கான் கனிகையில், அவரது சிந்தனை நிறைந்த அகன்ற முகம் அரையிருட்டிலிருந்து நொடிப்பொழுது வெளித் தெரிந்தது.
“உங்கள் குழு ஆசிரியருக்கு இன்று தண்டனை விதிக்கப் போகிறேன்” என்றார் அவர்.
“எதற்காக?”
“பள்ளித் தலைமை அதிகாரிகளின் அனுமதி பெறாமல் உங்களை விமானமோட்ட விட்டதற்காக … ஆமாம். என்னை ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்? உண்மையைச் சொன்னால் நான் இதுவரை உங்களுடன் அளவளாமல் இருந்ததற்காக என்னையே தண்டித்துக் கொள்ளவேண்டும். நேரமே கிடைக்கவில்லை, ஒழிவு இல்லை, உங்களோடு பேச வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன்… நல்லது, அது கிடக்கட்டும். விஷயம் என்னவென்றால் விமானம் ஓட்டுவது உங்களுக்கு அவ்வளவு லேசான காரியம் அல்ல. ஆமாம்… அதனால் தான் உங்கள் ஆசிரியருக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்கிறேன்.”
அலெக்ஸேய் பேசாதிருந்தான். சுங்கானைப் புகைத்தவாறு தன்னருகே நிற்கும் இந்த ஆள் எப்படிபட்டவர்? இவருக்கு என்ன வேண்டும், என்பதற்காக இவர் வந்திருக்கிறார்? இவர் இல்லாமலே மனது புளித்துப் போய்த் தற்கொலை செய்துகொள்ளலாம் போல இருக்கிறதே…….
அலெக்ஸேய்க்கு உள்ளூற ஆத்திரம் மண்டியிட்டுக் கொண்டு வந்தது. சிரமப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டான். அவன் துன்பத்தில் உழன்ற மாதங்கள் அவசரப்பட்டு எதையும் முடிவு செய்யாதிருக்கக் கற்பித்திருந்தன. தவிரவும், கமிஸார் வரபியோவை, அலெக்ஸேய் மனதுக்குள் எவரை உண்மை மனிதர் என்று அழைத்தானோ அந்தக் கமிஸாரை நினைவுபடுத்தும் இனந்தெரியாத ஏதோ ஒரு விஷயம் அசட்டுப்பிசட்டான இதே கப்பூஸ்தினிடம் இருந்தது. சுங்கானில் நெருப்பு பிரகாசமாகச் சுடர்விட்டு அணைந்தது. ஊடுருவி நோக்கும் அறிவார்ந்த விழிகள் கொண்ட, அகன்று பருத்த முகம் நீல மங்கலிலிருந்து வெளிப்பட்டுவிட்டு மறுபடி அதில் கரைந்தது.
“இதோ பாருங்கள் மெரேஸ்யெவ், நான் உங்களுக்குப் புகழுரை கூற விரும்பவில்லை. ஆனால் எப்படித்தான் சுற்றி வளைத்தாலும் முடிவில் கால்கள் இல்லாமல் சண்டை விமானம் ஓட்டும் ஒரே மனிதர் உலகில் நீங்கள் மட்டுமே. ஒரே மனிதர்!” சுங்கான் குழியில் துளைக்குள் மங்கிய விளக்கு வெளிச்சத்தில் பார்த்து விட்டுக் கவலையுடன் தலையை அசைத்தார் கப்பூஸ்தின். பின்பு பேச்சைத் தொடர்ந்தார்: “சண்டை விமானப் படைக்குத் திரும்புவதற்காக நீங்கள் செய்யும் பெருமுயற்சியைப் பற்றி இப்போது நான் பேசவில்லை. இது சந்தேகமின்றி அருஞ்செயல். ஆனால் இதில் தனிப்பட்டது எதுவும் இல்லை. இப்போது காலம் அத்தகையது – வெற்றியின் பொருட்டுத் தன்னால் முடிந்ததை எல்லாம் ஒவ்வொருவனும் செய்கிறான்…. அட இந்தப் பாழாய்ப் போகிற சுங்கானில் எது போய் அடைத்துக் கொண்டிருக்கிறது?”
அவர் மறுபடியும் சுங்கான் குழாயை நோண்டத் தலைப்பட்டார். இந்த வேலையில் அவர் ஒரேயடியாக ஆழ்ந்து விட்டார் போலத் தோன்றியது. அலெக்ஸேயோ, தெளிவற்ற முன்னுணர்வால் உந்தப்பட்டு அவர் என்ன சொல்லப் போகிறார் என்று இப்போது ஆவலே வடிவாய் எதிர்பார்த்தான்.
சுங்கானுடன் மல்லுக்கட்டுவதை நிறுத்தாமலே, தமது சொற்கள் எத்தகைய உளப்பதிவு ஏற்படுத்துகின்றன என்பது பற்றிய கவலை இன்றி, கப்பூஸ்தின் மேலே சொன்னார்:
“இங்கே விஷயம் உங்களை, சீனியர் லெப்டினன்ட் அலெக்ஸேய் மெரேஸ்யெவைப் பற்றியது அல்ல. மிகவும் உடல் நலம் வாய்ந்தவர்கள் மட்டுமே, அவர்களிலுங்கூட அதிகமாய்ப் போனால் நூற்றுக்கு ஒருவர் மட்டுமே அடைய முடியும் என்று உலகு எங்கும் இதுவரை எண்ணப்பட்டு வந்த சிறந்த தேர்ச்சியைக் கால்கள் இல்லாமலே நீங்கள் பெற்றுவிட்டீர்கள் என்பதுதான் விஷயம். நீங்கள் வெறும் பிரஜை மெரேஸ்யெவ் அல்ல, நீங்கள் மாபெரும் சோதனையாளர்… அப்படி வா வழிக்கு, கடைசியில் சுத்தமாகிவிட்டாயா? எதைப் போட்டு நான் இதை அடைத்துக்கொள்ளச் செய்யாதேனோ?… ஆக, விஷயம் இதுதான்: சாதாரண விமானி போன்று உங்களை நாங்கள் நடத்த முடியாது, அதற்கு எங்களுக்கு உரிமை கிடையாது. நீங்கள் மகத்தான சோதனை ஒன்றைத் திட்டமிட்டிருக்கிறீர்கள். முடிந்த வகையில் எல்லாம் உங்களுக்கு உதவ நாங்கள் கடமைப் பட்டிருக்கிறோம். ஆனால் எந்த வகையில்? அது தான் கேள்வி. நீங்களே சொல்லுங்கள், உங்களுக்கு எந்த விதத்தில் உதவ முடியும்?”
கப்பூஸ்தின் மீண்டும் சுங்கானில் புகையிலையை நிரப்பி அழுத்திப் புகைக்கத் தொடங்கினார். சுங்கானில் செவ்வொளிர்வு கனிந்து படர்வதும் மங்கிப் போவதுமாக, பருத்த மூக்குள்ள அந்த அகன்ற முகத்தை அரையிருட்டிலிருந்து வெளிக் கொணர்வதும் மறுபடி அதிலேயே ஆழ்த்திவிடுவதுமாக இருந்தது.
மெரேஸ்யெவின் பறப்பு எண்ணிக்கையை அதிகமாக்கும் படி பள்ளித் தலைவரிடம் பேசுவதாகக் கப்பூஸ்தின் வாக்களித்தார். தனக்குரிய பயிற்சித் திட்டத்தைத் தானே அமைத்துக் கொள்ளும் படி அவனுக்கு யோசனைக் கூறினார்.
“ஆனால் இதற்கு ஏகப்பட்ட பெட்ரோல் வீணாகுமே?” என்று தயக்கப்பட்டான் அலெக்ஸேய். பாந்தமற்ற இந்தச் சிறு மனிதர் தனது சந்தேகங்களை எவ்வளவு சுளுவாக, காரியரீதியாகத் தீர்த்து வைத்துவிட்டார் என்று வியந்தான்.
“பெட்ரோல் முக்கியமான பொருள் தான் – அதிலும் முக்கியமாக இப்போது. ஆனால் பெட்ரோலைவிட மதிப்புயர்ந்த பொருள்கள் உள்ளனவே.” இவ்வாறு சொல்லிவிட்டுக் கப்பூஸ்தின் வளைந்த சுங்கானிலிருந்து வெதுவெதுப்பான சாம்பலைத் தமது பூட்சுக் குதியில் அடித்து வெளியேற்ற முற்பட்டார்.
மறுநாள் முதல் அலெக்ஸேய் தனியாகப் பயிற்சி செய்யலானான். நடக்கவும் ஓடவும் நடனமாடவும் கற்றுக் கொண்ட போது செய்தது போல வெறும் பிடிவாதத்துடன் மட்டும் அவன் பாடுபடவில்லை. உண்மையான அகத்தூண்டல் அவனை ஆட்கொண்டுவிட்டது. பறப்புத் தொழில் நுட்பத்தைப் பகுத்தாயவும், அதன் எல்லா அம்சங்களையும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கவும், மிக மிகச் சிறு இயக்கங்கள், அசைவுகளாக அதைப் பாகுபடுத்தவும், ஒவ்வொரு அசைவையும் தனியாகப் பயின்று தேறவும் அவன் முயன்றான். பாலப் பருவத்தில் தானாகவே புரிந்துகொண்ட விஷயங்களை இப்போது ஆராய்ந்து கற்றான். ஆம், ஆராய்ந்து கற்றான். முன்பு அனுபவத்தாலும் பழக்கத்தாலும் தேர்ந்து கொண்டவற்றை இப்போது அறிவால் நுணுகித் தெரிந்து பயின்றான். விமானம் ஓட்டும் செயல்முறையை உறுப்பு அணைப்புள்ள அசைவுகளாகக் கூறுபடுத்தி, காலின் செயல் உணர்ச்சிகள் எல்லாவற்றையும் பாதங்களிலிருந்து கெண்டைக் கால்களுக்குக் கொண்டு வந்து, ஒவ்வோர் அசைவிலும் தனக்குத் தனிப்பட்ட தேர்ந்த திறமையை முயன்று ஏற்படுத்திக் கொண்டான்.
இது மிகவும் கடினமான, சள்ளைபிடித்த வேலையாக இருந்தது. அதன் விளைவுகள் தொடக்கத்தில் அனேகமாகத் தட்டுப்படவில்லை. எனினும் தடவைக்குத் தடவை விமானம் தன்னோடு மேலும் மேலும் இணைந்து ஒன்றாவது போலவும் தன் விருப்பத்திற்கு இணங்கச் செயல்படுவது போலவும் அலெக்ஸேய் உணர்ந்தான்.
“என்ன, எப்படியிருக்கிறது விஷயம், கலைவாணரே?” என்று அவனைத் தற்செயலாகச் சந்தித்தபோது வினவினார் கப்பூஸ்தின்.
மெரேஸ்யெவ் பெருவிரலை உயர்த்திக் காட்டினான், நன்றாக இருக்கிறது என்பதற்கு அறிகுறியாக. அவன் மிகைப்படுத்தவில்லை. விஷயம் நிரம்பச் சரளமாக இல்லவிடினும் நம்பிக்கையுடனும் திண்ணமாகவும் முன்னேறிக் கொண்டு தான் இருந்தது. எல்லாவற்றிலும் முக்கியமானது என்னவெனில், வெறிகொண்டு விரைந்தோடும் குதிரைமேல் ஒன்றும் ஏலாத, திராணியற்ற சவாரிக்காரன் அமர்ந்திருப்பது போன்று விமானத்தில் உணர்வதை இந்தப் பயிற்சிகளின் விளைவாக அலெக்ஸேய் விட்டுவிட்டான். தனது தேர்ந்த திறமையில் அவனுக்கு மீண்டும் நம்பிக்கை உண்டாயிற்று. விமானமோ, உயிர்ப் பிராணிபோல, தன்னை ஓட்டுபவன் நல்ல சவாரிக்காரன் என உணரும் குதிரை போல, வர வர அதிகக் கீழ்படிவு உள்ளதாயிற்று. தனது பறப்புப் பண்புகள் யாவற்றையும் விமானம் அலெக்ஸேய்க்குப் படிப்படியாக வெளிக்காட்டியது.
வணக்கம், நாம் இந்த அறிவியல் ஆரோக்கியம் சேனலில், அடுத்து சில காணொளிகளில் புற்றுநோய் சம்பந்தமான காணொளிகளை பதிவேற்றலாம் என முடிவெடுத்துள்ளோம்.
புற்றுநோய் என்றால் எல்லோருக்கும் ஒரு பயம் வந்துவிடுகிறது, அது ஒரு இறப்புச்சான்றிதழ் என எல்லோரும் முடிவெடுத்து விடுகிறோம். ஆனால், அது உண்மையில் அப்படி கிடையாது. இன்றைய அறிவியல் உலகில் பல புற்று நோய்கள் ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால் பூரணகுணம் என்பது சாத்தியமே.
அதேபோல, பல புற்றுநோய்களுக்கு மருந்துகளை உட்கொண்டு வாழ்நாளை நீட்டிக்க முடியும். சில புற்று நோய்கள் தான் ஆபத்தானவை என கூறுகிறோம். இதைப் பற்றி உங்களுக்கு விளக்கவே இந்த காணொளி மற்றும் அடுத்தடுத்த காணொளிகளை பதிவேற்ற உள்ளோம்.
இதைப் பற்றி விவாதிப்பதற்கு நம்முடன் மருத்துவர் அழகு கணேஷ் வந்துள்ளார், அவரை வரவேற்போம் வணக்கம்.
கேள்வி : //புற்றுநோய் என்றால் என்ன என்பதை மக்களுக்கு புரியும்படி எளிமையாக விளக்குங்கள்.//
நம் உடலில் உள்ள செல்கள் அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம் உண்டு. குறிப்பிட்ட காலம் வரை வளரும் பிறகு தானாகவே இறந்து போகும். இதுவே செல்லானது இறந்து போகாமல், மேலும் மேலும் வளர்வதையே புற்றுநோய் என நாம் கூறுகிறோம்.
என்ன கூற வருகிறோம் என்றால், நம் உடலில் செல்லானது, உருவாகி மறைவதும் மீண்டும் உருவாகுவதும் மறைவதும் என சுழற்சி முறையில் மாறிக்கொண்டே வருகிறது. இதுவே செல்லானது அழியாமல் வளர்ச்சி அடைந்து கொண்டே போனால், அதைத்தான் புற்று நோய் என கூறுகிறோம்.
கேள்வி ://புற்று நோய் எல்லோருக்கும் வர வாய்ப்புள்ளதா, அப்படி இல்லையென்றால் யாருக்கெல்லாம் வரும்.//
புற்று நோயானது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதற்கு ஆண், பெண், சிறியவர், பெரியவர், மத வேறுபாடுகள் ஆகியன கிடையாது.
கேள்வி : //எல்லோருக்கும் வரும் என தடாலடியாக கூறிவிட்டீர்கள். யாருக்கெல்லாம் வர வாய்ப்புகள் அதிகம். அந்த ரிஸ்க் ஃபேக்டர்-ஐ கூறி விளக்குங்கள்.//
முதலில் புகைப்பிடிப்பவர்கள் அல்லது புகையிலையை உட்கொள்பவர்கள் இவர்களுக்கு வாய்ப் புற்று நோய், கணைய புற்று நோய், சிறுநீரகப் புற்று நோய் ஆகியன வர வாய்ப்புகள் அதிகம். அடுத்ததாக உடல்பருமன் மற்றும் உடற்பயிற்சி – உடல் உழைப்பு ஆகியவற்றில் ஈடுபடாமல் இருப்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆண், பெண் இருபாலருக்கும் குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகம். அதேபோல சிலர் கெமிக்கல் தொழிற்சாலைகளிலும், டையிங் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர். இவர்களுக்கும் அது சார்ந்த புற்று நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.
கேள்வி : //முன்பைவிட தற்போது புற்றுநோய் அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் அறிவியல் நம்மிடம் உண்டு. இதை கணக்கில் கொண்டு தற்போது புற்றுநோய் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா குறைந்துள்ளதா? என்பதை கூறுங்கள்.//
இதை நாம் இரண்டாக பிரித்துப் பார்க்கலாம் முன்பெல்லாம் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 50 அல்லது 60தான். ஆனால், இன்றைக்கோ சராசரி ஆயுட்காலம் என்பது 70 அல்லது 80. ஒருவருடைய சராசரி ஆயுட்காலம் நீடிக்கும் பொழுது அவர்களுக்கான புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம். எளிமையாக கூற வேண்டுமானால், வயதாகும்போது புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம்.
தற்போது சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளதால் புற்றுநோயின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதேபோல் முந்தைய காலங்களில் காய்கறி ஆகட்டும் அல்லது உணவு பண்டங்கள் ஆகட்டும் உடனடியாக உண்ணும் பழக்கம் நம்மிடம் இருந்தது. ஆனால் இன்று அதை பதப்படுத்தி வைப்பதும் சீக்கிரம் கெடாமலிருக்க பூச்சிக்கொல்லிகளை சேர்க்கும் பழக்கமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவும் புற்றுநோயானது ஏற்படுகிறது.
கேள்வி : //அசைவம் உட்கொள்வதால் புற்றுநோய் உண்டாகுமா.//
அசைவம் என்று பொதுமைப்படுத்தி கூறிவிட முடியாது ரெட் மீட் அதாவது சிவப்பு மாமிசம் உட்கொள்வதால், குடல் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளது என கூறுகிறார்கள். எனவே அசைவம் மட்டும் உட்கொள்வதால் புற்றுநோய் வரும் என்பது கிடையாது. கூடுதலாக அசைவத்தோடு சேர்த்து பச்சை காய்கறிகள் உட்கொண்டால் புற்றுநோய் வரும் வாய்ப்பானது குறைகிறது.
கேள்வி : // புற்றுநோய்க்கான ஆரம்ப நிலை அறிகுறிகள் என்ன? ஆரம்பத்திலேயே அவற்றை கண்டுபிடிக்கும் கருவிகள் மற்றும் வாய்ப்புகள் நம்மிடம் உள்ளதா?//
இப்போது வாய் புற்றுநோய் என எடுத்துக் கொண்டோமானால், வாயில் ஏற்படும் புண் ஆறாமல் நீண்டகாலம் இருக்கும். குறிப்பாக வாயில் பல் அல்லது வேறெங்கிலும் புண்ணானது ஏற்பட்டால் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களில் அந்தக் காயமானது குணமாகும். அதுவே, நீண்டகாலம் ஆறாமல் இருந்தால் அது புற்றுநோயாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
அதேபோல் வயிற்றில் தொந்தரவு ஏற்படும் போது குடல் புண் அல்லது வாயு பிரச்சினையாக இருந்தால் அது அதிகபட்சம் நான்கு வாரங்களில் குணமடையும். அப்படி குணமடையாமல் நீண்டகாலமாக நீடித்தால் அது குடல் புற்று நோயாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். இதை நாம் எண்டாஸ்கோப்பி அல்லது வேறு பரிசோதனைகள் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக மார்பகப் புற்றுநோய் சிலருக்கு மார்பகங்களில் ஏதேனும் கட்டி சிறுவயதிலிருந்தே இருக்கிறது என்றால் அது பிரச்சினை இல்லை. அதுவே சிலருக்கு மார்பகங்களில் ரத்தம் கசிவது, புதிதாக கட்டி உருவாவது அல்லது நிறம் மாறுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டு நீண்டகாலமாக நீடித்தால் அது மார்பக புற்று நோயாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
அதேபோல் இருமல், சளி; பொதுவாக இருமல், சளி என்றால் அது 4 வாரங்கள் அல்லது 2 வாரங்களுக்குள் சரியாகும். அப்படி இல்லாமல் நீண்ட நாட்களாக நீடித்தால் அது நுரையீரல் புற்றுநோயாக இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இங்கு காச நோய்க்கும் இதே போன்ற அறிகுறிகள் தென்படும் ஆதலால் காசநோய்க்கான மருத்துவம் எடுத்துக் கொண்டு இருப்போருக்கும் அது நுரையீரல் புற்றுநோயாக இருக்கும் வாய்ப்புகளும் உண்டு.
சுருக்கமாக கூற வேண்டுமென்றால் நம் உடலில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மருத்துவரை அணுகவேண்டும். இரண்டு அல்லது நான்கு வாரங்கள் வரை அது குணமடைகிறதா என்று பார்க்கலாம். அப்படி குணமடையவில்லை என்றால் அந்த உறுப்பில் புற்றுநோய் பரிசோதனை செய்து கொண்டால், நாம் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும்.
ஒரு உதாரணத்தைக் கூறுகிறோம், ஒருவருக்கு உடலில் அனிமியா பாதிப்பு உள்ளது என்றால், அதனால் அவருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும், மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை நாம் உட்கொள்ளலாம். அப்படி உட்கொள்ளும் போது நமக்கு ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு கூட வேண்டும். அப்படி கூடவில்லை என்றால் நாம் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.
இதேபோல்தான் இன்னஇன்ன அறிகுறிகளால்தான் புற்றுநோய் ஏற்படும் என்று நாம் கூற முடியாது. எனவே நாம் எந்த நோயாக இருந்தாலும் அது குறிப்பிட்ட கால அளவில் குணமடையவில்லை என்றால் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். அவ்வாறு செய்யும்போது அதை எளிதில் குணப்படுத்த நம்மிடம் வசதிகள் உண்டு.
கேள்வி : //புற்று நோயை கண்டறிவதற்கான அடிப்படை பரிசோதனைகள் என்னென்ன என்பதை விளக்குங்கள்.//
அடிப்படை பரிசோதனையானது உடலிலுள்ள பாகங்களை பொறுத்து மாறுபடும். உதாரணத்திற்கு வாய்புற்றுநோயை கண்டறிவதற்கு மருத்துவர் டார்ச் லைட் அடித்து பார்த்தும் அல்லது தொட்டுப் பார்த்தும் கண்டறிந்து விடுவார் அப்படியும் தென்படவில்லையானால் ஒரு சிடி ஸ்கேன் மூலம் கண்டறிந்து விடுவார்.
அதுவே, மார்பகப் புற்றுநோயானால் ஒரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அல்லது மேமோகிராம் போதுமானவை. குடல் புற்று நோயானால் அது எண்டோஸ்கோபி பரிசோதனை மூலம் கண்டறிய முடியும். அதேபோல் மலக்குடல் புற்று நோயை கண்டறிய டொர்னோஸ்கோஃபி பரிசோதனை உண்டு.
அதேபோல் பெண் உறுப்புகள் சார்ந்த புற்று நோயைக் கண்டறிவதற்கு அல்ட்ராசவுண்ட் அல்லது சிடி ஸ்கேன் போதுமானவை. எந்த ஒரு உறுப்பாக இருந்தாலும் அது என்ன வகையான கட்டி என்று பரிசோதனை செய்து பார்ப்பதற்கு முதலில் இமேஜிங் என்ற பரிசோதனையை மேற்கொள்வார்கள். பிறகு பயாப்சிக் மேற்கொள்வார்கள்.
ஏனென்றால், எந்த ஒரு கட்டியாக இருந்தாலும், அதை நாம் புற்றுநோய் என கூறிவிடமுடியாது. பயாப்சி பரிசோதனை செய்து கொண்ட பிறகுதான் நாம் உறுதி செய்ய முடியும்.
கேள்வி : //பயாப்ஸி என்று கூறுகிறீர்களே அப்படி என்றால் என்ன.//
பயாப்ஸி என்பது திசு பரிசோதனை அதாவது உடம்பில் உருவாகக்கூடிய கட்டியின் ஒரு பகுதியை எடுத்து பரிசோதனை செய்வார்கள். பொதுமக்களிடம் உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால், பயாப்சி பரிசோதனை மேற்கொண்டால் கட்டி பரவும் என யூகிக்கிறார்கள். இது தவறு, இதற்குக் காரணம் பயாப்சி பரிசோதனை மேற்கொண்ட பின், அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடுவார்கள். அதுதான் கட்டி பரவுவதற்கான காரணமே தவிர, பயாப்சி பரிசோதனை மேற்கொள்வதால் கட்டி பரவாது.
பயாப்சி பரிசோதனை மேற்கொண்டால் தான், அது புற்றுநோயா, இல்லையா என்பதை நாம் உறுதி செய்ய முடியும். நாம் முன்னமே கூறியது போல் மார்பகங்களில் உண்டாகக்கூடிய கட்டியானது காச நோயாகவும் இருக்கலாம் அல்லது புற்று நோயாகவும் இருக்கலாம். அதை உறுதி செய்ய நாம் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். எனவே, பயாப்சி என்பது புற்றுநோயை கண்டறிவதற்கான அடிப்படை பரிசோதனை.
கேள்வி : //புற்றுநோய்க்கு என்ன வகையான மருத்துவம் மேற்கொள்வார்கள்? உதாரணத்திற்கு கட்டியை எடுத்து விடுகிறார்களே.. அதுதான் புற்றுநோய்க்கான மருத்துவமா? அல்லது வேறு என்ன என்பதை விளக்குங்கள்.//
முன்பு எப்படி என்றால் அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டியை அகற்றி விடுவதே மருத்துவமாக இருந்தது. ஆனால், இன்று அப்படி இல்லை. புற்று நோய்க்கான மருத்துவம் என எடுத்துக்கொண்டால், அதை நாம் மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.
ஒன்று அறுவைசிகிச்சை, இரண்டு புற்றுநோய்க்கான மருந்துகளை கொடுப்பது, மூன்றாவது கதிர்வீச்சு மூலம் புற்றுநோய் கட்டியை அகற்றுவது. அறுவை சிகிச்சையும் கதிர்வீச்சு முறையும் புற்றுநோய் உண்டான இடத்தை மட்டுமே மையமாக வைத்து மேற்கொள்ளும் மருத்துவம்.
அதேபோல் நாம் இரண்டாவதாகக் கூறிய கீமோதெரபி முறை, அந்தப் புற்றுநோய் உடம்பில் வேறு எங்கும் பரவி இருக்கிறது என்றால் அதற்காக மேற்கொள்ளப்படும் மருத்துவம். உடம்பில் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வகையான மருத்துவம் உண்டு, சிலவற்றிற்கு ஆரம்பநிலையிலேயே அறுவை சிகிச்சையானது மேற்கொள்ளப்படும். சிலவற்றிற்கு ஆரம்பத்தில் கீமோதெரபி மருத்துவம் மேற்கொண்டு கட்டியை சுருக்கி விட்டு பிறகு அறுவை சிகிச்சையை மேற் கொள்வோம். சிலவற்றிற்கு மூன்று முறையும் கலந்து மருத்துவம் மேற்கொள்ளப்படும். மிகவும் ஆரம்ப நிலையில் கண்டறியப்படும் புற்று நோய்க்கு மட்டுமே அறுவை சிகிச்சையானது போதுமானது.
இதில் நாம் என்ன எளிமையாக விளங்கிக் கொள்ளவேண்டும் என்றால், புற்றுநோய்க்கான வைத்தியம் நேரடியாக இதுதான் என்பது கிடையாது. முதலில் அந்த புற்றுநோய் அந்த இடத்தில் மட்டும்தான் உள்ளதா, அல்லது உடலில் பிற பாகங்களுக்கும் பரவி உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும்.
பிறகு நாம் மேல் கூறிய மூன்று வகையான புற்று நோய்க்கான மருத்துவத்தில் எதை மேற்கொள்வது என்பதை முடிவு செய்வதற்கு ஒரு குழு தேவைப்படும். அந்தக் குழுவில் அறுவை சிகிச்சை நிபுணர்களும், கீமோதெரபி மருத்துவர்களும் இடம்பெற வேண்டும். இதை ஏன் கூறுகிறேன் என்றால் சிலர் உடலில் ஏதோ ஒரு உறுப்பில் கட்டியை கண்டறிந்த பின் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு. சிறிது காலம் கழித்து உடலில் பிற பாகங்களில் கட்டி பரவி, ரொம்பவும் முற்றிய நிலையில் மருத்துவமனையை வந்து அடைகிறார்கள். இதைத் தவிர்ப்பதற்காகதான் கூறுகிறோம் அந்தந்த நிபுணர்களைக் கொண்ட குழுதான் இதை முடிவு செய்ய வேண்டும் என்று.
சுருக்கமாக ஒருங்கிணைந்த புற்றுநோய் மையத்திற்கு செல்வது நல்லது ஏனென்றால் அங்குதான் மூன்று துறைகளின் சேர்ந்த மருத்துவர்கள் கூடி முடிவு செய்வார்கள்.
கேள்வி : //நாம் கூறுகிறோம் அல்லவா இத்தனை வசதிகள் நம்மிடம் உண்டு என்று, இருந்தும் ஏன் மக்கள் காலம் கடந்து மருத்துவமனையை அடைகிறார்கள்.//
இது மிகவும் நல்ல கேள்வி, இதற்கு சோஷியல் ஸ்டிக்மா என்று பொருள். உதாரணத்திற்கு, ஒருவர் சர்க்கரைநோய் அல்லது மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றால் அதற்கான சிகிச்சை முறையையும் மேற்கொள்கிறார்கள் என்றால் அதைப்பற்றி பிறரிடமும் அல்லது நெருங்கியவர்களிடம் கலந்துரையாடுகிறார்.
சர்க்கரை நோய் என்றால் நான் அதற்காக இன்சுலின் எடுத்துக் கொண்டேன் என்றும், அதுவே மாரடைப்பு என்றால் அதற்காக நான் ஸ்டன்ட் வைத்துள்ளேன் என்றும், அது உடலுக்கு எந்த வகையான தீங்கும் ஏற்படுத்தாது என்றும் கலந்துரையாடுகிறார். இதுவே ஒருவர் தனக்கு புற்றுநோய்க்கான அறிகுறி நன்றாகவே தென்படுகிறது என்றாலும், அதை தனது காலத்தின் இறுதி கட்டம் என்று நினைத்துக்கொண்டு, பிறரிடமும் அல்லது நெருங்கியவர்களிடம் கூற அஞ்சுகிறார்கள்.
தன்னை இந்த சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கக் கூடிய ஒரு நோய் நம்மை பீடித்துவிட்டது என அஞ்சி யாரிடமும் கூறாமல் விட்டு விடுகிறார்கள். இந்த ஸ்டிக்மாதான் முதல் காரணம். படிக்காத மக்கள் மட்டுமல்ல படித்தவர்களும் இதையேதான் செய்கிறார்கள். ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருப்பார். ஆனால், முற்றிய நிலையில் மருத்துவரை அணுகுவார்.
நீங்களே இப்படி செய்யலாமா? என வினவினால், பக்கத்தில் இருப்பவர்களிடம் கூறினால் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கத்தில் கூறவில்லை என்பார். அவர்கள் தன்னை தன் பேரக் குழந்தைகளிடம் இருந்து ஒதுக்கி வைத்து விடுவார்களோ என அச்சப்படுகிறார்கள். சிலர் இதை தொற்றுநோய் போலவும் பாவிக்கிறார்கள். எனவேதான் அவர்கள் ஆரம்பநிலையில் அணுகாமல், நோய் முற்றிய நிலையில் வருகிறார்கள். அப்படி வரும்போது எங்களால் ஒன்றும் செய்யமுடியாமல் போய்விடுகிறது.
சுருக்கமாக மற்றும் என்றால் அதைப் பற்றி ஒருவர் மற்றவரிடம் கூறுகிறார் அவரும் அந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை அடைகிறார். ஆனால், புற்றுநோயைப் பொறுத்தவரை ஒருவர் தனக்கு இந்த தொல்லை இருக்கிறது என்பதையே உணர மறுக்கிறார். அப்படி வந்தாலும் அதை வெளியில் கூறுவதற்கு தயக்கம் காட்டுகிறார். எனவே மக்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை, மருத்துவர்கள் நாங்கள் ஓரளவுக்கு தான் முயற்சி செய்ய முடியும்.
மக்கள்தான் இதைப்பற்றிய விழிப்புணர்வு பெற்றவர்களாக மாறவேண்டும். எனவே முதலில் புற்றுநோய் என்றால் அது தொற்றுநோய் அல்லாமல் அதுவும் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற நோய்களைப் போன்ற ஒன்று தான் என்பதை உணரும் பக்குவம் வேண்டும்.
மருத்துவர் கூறிய உதாரணம் போல ஒருவர் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தால், அவரை குடும்பத்தில் உள்ள எல்லோரும் ஒரு தீண்டத்தகாதவர் போலவே கருதுவார்கள். ஒரு நிகழ்ச்சிக்குத் செல்கிறார் என்றால் அங்கும் அவரை தனிமைப்படுத்தி அறிவுரைகளை மட்டுமே கூறுவார்கள். இதன் காரணமாகவே அவர் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்வதை தவிர்த்து விடுவார். உண்மையில் அவர் புற்றுநோயால் அவஸ்தைப் படுவதை விட இந்த வகையான மன உளைச்சலால் அவஸ்தைப்படுவது தான் அதிகம். எனவே நாம் இவற்றில் இருந்து வெளியே வரவேண்டும்.
இதை தெரிவிக்கும்போதே நான் புற்றுநோய் பற்றிய மூடநம்பிக்கைகளையும் மக்களிடம் இருந்து அகற்ற வேண்டும் என விரும்புகிறேன். புற்று நோய் என்றால் வலி அதிகமாக இருக்கும் என எண்ணுகிறார்கள் அது தவறு, பெரும்பாலான கட்டிகள் வலியில்லாமல்தான் ஏற்படும். மிகவும் முற்றிய நிலையில் தான் வலியை ஏற்படுத்தும். இன்னும் சொல்லப் போனால் வலி உண்டாகக்கூடிய கட்டிகள் புற்று நோயாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. சீழ்க் கட்டி இருக்கிறது என்றால் அது வலியை ஏற்படுத்தும் பின்பு குணமாகும். அது புற்றுநோயாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. அதுவே எந்த வலியும் இல்லாமல் ஒரு கட்டி இருக்கிறது, வளர்கிறது என்றால் அதுதான் புற்றுநோயாக இருக்கக்கூடிய வாய்ப்பு அதிகம்.
கேள்வி ://கடைசியாக முடிப்பதற்கு முன் புற்றுநோய் பற்றி இணையதளத்தில் நாம் தேடுகிறோம் என்றால் நம்பத்தகுந்த இணையதளங்கள் சிலதை குறிப்பிடுங்கள்.//
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் அல்லது பாதிக்கப்படாதவர்களோ இணையதளத்தை அணுகினால் அதில் பெரும்பாலும் தவறான விஷயங்கள் தான் வரும், யாரோ ஒருவர் பிளாக் எழுதி இருந்தால் அதிலிருந்துதான் தகவல்கள் தென்படும்.
NCCN.ORGஎன்ற அனைத்துலக தகவல் மையம் உள்ளது. இந்த இணையதளத்தில் மருத்துவர்கள் என்ன செய்யவேண்டும் அல்லது நோயாளிகள் என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்பன போன்ற எல்லா விஷயங்களும் உள்ளது. இதை வாசிப்பதன் மூலம் நோயாளிகள் தான் சரியான மருத்துவத்தை தான் மேற்கொள்கிறோமா என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். இன்னொன்றுCANCER.ORG இது அமெரிக்க புற்றுநோய் அசோசியேஷனுடைய வலைத்தளம். இந்த இணையதளத்திலும் எளிய முறையில் ஒவ்வொரு புற்றுநோய்க்கும் என்ன வகையான மருத்துவம் என்பது போன்ற தகவல்கள் உள்ளன.
இதை நாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆனால், மருத்துவரை நோக்கி இதில் இப்படி உள்ளது நீங்கள் ஏன் இந்த மருத்துவத்தை மேற்கொள்கிறீர்கள் என கேட்கக்கூடாது. இதை நிலைமைகள் தான் தீர்மானிக்கும். இதைப்பற்றி நாம் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த வலைதளங்கள் உதவும். ஆனால், நமக்கு என்ன மருத்துவம் செய்ய வேண்டும் என்கிற தார்மீக உரிமை மருத்துவருக்குதான் உண்டு என்பதை உணர்ந்துகொண்டால், நமது மருத்துவம் எளிமையாக முடியும்.
இந்த காணொளியில் புற்றுநோய் பற்றிய ஒரு பொதுவான விவாதத்தை தான் தொடங்கியுள்ளோம். அடுத்த காணொளியில் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் பற்றிய முழு விளக்கங்களை எடுத்துரைக்கிறோம். நன்றி.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் கோ. பூவனூரில் 02.10.2019 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டார்கள். ஊர் பொதுமக்கள் சார்பில் தங்கள் அடிப்படைத் தேவைகளை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றினர்.
பிறகு ஊராட்சியில் வரவு செலவு கணக்குகளை காண்பிக்கும்படி ஊர் பொதுமக்கள் ஊராட்சி செயலாளரிடம் கேட்டனர். இதற்கு, முன்பு கடந்த 8 ஆண்டுகளாக வரவு செலவு கணக்குகளை காண்பித்ததே கிடையாது. ஆனாலும் பொதுமக்களும் மக்கள் அதிகாரம் தோழர்களும் குறைந்தபட்சம் நீங்கள் இந்த ஆண்டு வரையான வரவு செலவுகளைக் காட்டினால் மட்டுமே உங்களை வெளியே விடுவோம் இல்லை என்றால் இங்கேயே சிறை பிடிப்போம் என்று உறுதியாக அமர்ந்தனர்.
ஊராட்சி செயலாளரும், சிறப்பு அதிகாரியும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர். பொதுமக்கள் அதிகப்படியான கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கும் போது, 100 நாள் வேலைத்திட்டத்தின் பயனாளிகளாக இறந்தவர்கள், வெளியூர் மற்றும் வெளிநாடு சென்றவர்களைச் சேர்த்து, அவர்களது பெயரில் ஊதியப்பணம் செலுத்தப்பட்டதாக மோசடி நிகழ்ந்துள்ளதை தோழர்கள் அம்பலப்படுத்தினர். இதற்கு ஊராட்சி செயலாளர் “இதற்கும் எனக்கும் எந்த பொறுப்பும் கிடையாது…” என்று தட்டிக்கழித்தார்.
இதையடுத்து பொதுமக்கள் ஊழலை அம்பலப்படுத்தி கோஷமிட்டு தீர்மானம் நோட்டில் கையொப்பம் போட விடாமல் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து சென்றார்கள். இந்த செய்தியை கேட்டு புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் தினமலர், தினத்தந்தி ஆகிய பத்திரிகைகளில் மறுநாள் செய்தி வெளியிட்டன. இதை ஏற்க முடியாத ஊழல்வாதிகள், அரசு அதிகாரிகள் துணையோடு மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர் சங்கர் கணேஷ் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக மங்கலம்பேட்டை போலீசு நிலையத்தில் பொய் புகார் கொடுத்தனர். காலை 7 மணி அளவில் தோழரை கைது செய்து போலீசு நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.
இத்தகவலறிந்த அப்பகுதி ஒருங்கிணைப்பாளர், தோழர் பாலாஜி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் மற்றும் பிற தோழர்களும்; ஊர் பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் போலீசு நிலையத்திற்கு சென்றனர்.
பின்னர், ஆய்வாளரிடம் இது பொய்வழக்கு என்பதை சுட்டிக் காட்டி கைது செய்யப்பட்ட தோழரை விடுவிக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆய்வாளர் இரு தரப்பினரையும் விசாரணை செய்து வழக்கு ஏதும் போடாமல் தோழரை விடுவித்தார்.
ஊழல் செய்தவர்களை அம்பலப்படுத்தினால் அவர்கள் மீது பொய் வழக்கு, கைது ஆகிய நடவடிக்கைகள்தான் பாயும் என்பதை கண்கூடாக பார்த்த பொதுமக்கள், ஊழல்வாதிகளை தண்டிக்கும் அதிகாரம், மக்கள் போராட்டங்களின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்பதை உணர்ந்துள்ளனர்.
தகவல் : மக்கள் அதிகாரம் விருத்தாசலம் வட்டாரம்,
தொடர்புக்கு : 97912 86994
‘கருப்புப் பணக்காரர்களுக்கு எதிரான போர்’ என்று சென்ற வருடம் நவம்பர் 8 அன்று பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி (இப்படித்தான் இப்போதெல்லாம் அவருடைய கட்சிக்காரர்கள் அவரை விளிக்கிறார்கள்) அறிவித்தது சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முக்கியமான கொள்கை முடிவு. பேரழிவுமிக்க அணுஆயுதம் வெடிக்கும்போது ஏற்படும் கதிரியக்கம்போல் வெகுஜனங்களின் எல்லாப் பகுதியினரையும் கண்ணுக்குப் புலப்படாத பல்வேறு வகைகளில் ஒவ்வொரு நாளும் தாக்கி வருகிறது அந்த முடிவு. அவர்கள் உழைத்து ஈட்டிய பணத்தை அவர்களே எடுத்துப் பயன்படுத்தமுடியாத கொடுமைக்கு நடுவிலும்கூட, துணிச்சல்கார மோடி நம்மைச் சுரண்டி கொழுத்திருக்கும் பணக்காரர்களின் அடிமடியில் கை வைத்துவிட்டார், இனியெல்லாம் சுகமே என்று இன்றும் அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர் பாமரர் பலர்.
அவர் நடத்திய ‘துல்லியத் தாக்குதல்’ பெரும்பான்மை மக்களின்மீது தொடுக்கப்பட்டது. கருப்புப் பணம் என்பது கற்றை கற்றையாக ரூபாய் நோட்டுகளாக சினிமாத்தனமாக சுவரின் மீதுள்ள ஓவியத்தைச் சுழற்றும்போது திறக்கும் கதவுக்குப்பின் சிவப்பு வெளிச்சத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதல்ல; அவை நிலமாக, தங்கமாக மாற்றப்பட்டுவிட்டன; அல்லது ஹவாலா மற்றும் பிற வர்த்தக மோசடி நடைமுறைகளின் மூலமாக வரியில்லா சொர்க்கபுரிகளுக்குச் சென்று மீண்டும் அன்னிய மூலதனமாக அரசு விரிக்கும் சிவப்புக் கம்பளங்களின் மீது நடந்துவந்து நம் பொருளாதாரத்திற்குள் வந்துவிடுகின்றன.
கருப்புப் பணம் உற்பத்திக்கு உதவிசெய்யும் வகையிலான கொள்கைகளை வகுத்து, அமைப்புகளை ஏற்படுத்தி, சட்டங்களை வளைத்தும் அவற்றின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, கம்பெனிகளின் கணக்குகளில் தில்லுமுல்லு செய்து வரி ஏய்ப்புச் செய்யும் முறைகளைச் சொல்லிக்கொடுத்துப் பிழைக்கும் பெரும்பாலான அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், வக்கீல்களும், ஆடிட்டர்களும் பத்திரிகையாளர்களும் இன்ன பிற ‘அறிவுஜீவிகளும் மோடியின் ‘தாக்குதலினால் சிறிதளவும் பாதிக்கப்படப்போவதில்லை என்றெல்லாம் மக்களுக்கு அவர்கள் புரியும் மொழியில், எளிமையாக ஆனால் கோட்பாடுகள் நீர்த்துப்போகாத வகையில் சொல்லிக் கொடுக்க வெகுசிலரே இருக்கின்றனர்; இருந்தனர்.
அந்த வெகுசிலரில் ஒருவர்தான் ஜெயரஞ்சன். ஏற்கெனவே தொலைக்காட்சி விவாதங்களின் வாயிலாக பரவலாக அறியப்பட்டவராக இருந்தபோதிலும், நவம்பர் 8-க்குப் பிறகு இவர் விவாதங்களில் எடுத்துவைத்த வாதங்களின் எளிமையும், ஆழமும், அவற்றின் பின்னிருந்த தார்மீகக் கோபமும் அவரை ஒரு தமிழ்கூறும் நல்லுலகின் சூப்பர் ஸ்டாராகவே மாற்றிவிட்டன என்றால் மிகையல்ல…
மோடியின் நடவடிக்கை குறித்து இவர் முன்வைத்த கூர்மையான வாதங்கள் காணொளிகளாக ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டிருக்கின்றன, ஆயினும், அச்சில் இதை ஆவணப்படுத்தி இன்னும் பரந்துபட்ட மக்களிடையே கொண்டு செல்லவேண்டிய தேவையை உணர்ந்து மின்னம்பலம் இணைய இதழுக்காக கட்டுரைகளாக ஜெயரஞ்சன் எழுதினார். அவற்றை ஒரு தொகுப்பாகக் கொண்டுவரும் மின்னம்பலத்தின் முயற்சி இந்த காலகட்டத்தின் வரலாற்றுத் தேவை. (நூலின் முன்னுரையிலிருந்து…)
ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (UNCTAD) தற்போது தனது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இத்தகைய அறிக்கை வருடந்தோறும் வெளியிடப்படும் ஒன்றுதான். ஆனால் இந்த வருட அறிக்கை உலகைப் பிடித்திருக்கும் (குறிப்பாக, மேற்கு உலகம் மற்றும் சீனம்) மந்தநிலைக்கான காரணம் என்ன என்று அலசி ஆராய்ந்திருக்கிறது. ஆராய்ந்தபின், அது முன்வைக்கும் காரணம் இதுவரையிலும் கூறப்படாத ஒரு காரணமாகும்.
2015-ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் அளவைவிட உலக அளவில் நடந்த வர்த்தகத்தின் அளவு குறைவு. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் தேங்கியுள்ளன. இந்த நிலை 2016-ம் ஆண்டில் இன்னும் மோசமடையும், மோசமடைந்துள்ளது.
இதற்கு முதல் காரணமாக சுட்டப்படுவது, மேற்குலகில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியாகும். நிதி நெருக்கடியால் தேவையின் அளவு அதிகரிக்கவில்லை. சொல்லப்போனால் கடந்த சில வருடங்களாகவே, உலகளவில் ஏற்பட்ட தேவை அதிகரிப்பு என்பது வளரும் நாடுகளில் ஏற்பட்டதுதானே தவிர, வளர்ந்த நாடுகளில் தேவை உயரவேயில்லை. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் ஏற்பட்ட தேவையின் அதிகரிப்பு உலக அளவில் எதிரொலித்தது கவனத்தில் கொள்ளத்தக்கது. ஆனால் அதிலும் ஒரு மாற்றம் வந்துவிட்டது. சீனம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் உயர்ந்துவந்த தேவை தற்போது குறைந்துவிட்டது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்தது ஒரு காரணம். மற்றொன்று, உலகளவில் பண்டங்களின் விலையும் பெட்ரோலியப் பொருள்களின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியுமாகும்.
… பின் எதனால்தான் உலக வர்த்தகம் மந்தம் அடைந்துள்ளது? UNCTAD அறிக்கை கூறுவது யாதெனில், கூலி வருமானம் குறையத் தொடங்கியதால்தான் வர்த்தகம் குன்றியுள்ளது என்பதாகும். வளர்ந்த நாடுகளில் கூலி வருமானம் தேங்கிப்போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன அல்லது அவை குறையத் தொடங்கியுள்ளன. நாட்டின் மொத்த வருமானத்தில் கூலியின் பங்கு தொடர்ந்து குறைந்துகொண்டே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது, மேற்கு உலக வர்த்தக நாடுகளில் நிலவும் சூழல்.
வளரும் நாடுகளில் கூலி மட்டம் மிகப்பெரிய சவாலை சந்திக்கிறது. உலக அளவில் நிலவும் போட்டி சந்தை காரணமாக கூலிமட்டம் தொடர்ந்து குறைவாகவே வைக்கப்படுகிறது. கூலி சிறிது உயர்ந்தாலும் குறைவான கூலி இடங்கள் நோக்கி தொழில்கள் இடம் பெயர்கின்றன. அவ்வாறு இடம் பெயர்ந்தால் மட்டுமே அத்தொழில் போட்டி சந்தையில் பிழைத்திருக்க முடியும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும் அதே நேரத்தில், கூலி மட்டம் குறைவாக இருக்க இதுவே காரணமாகும். குறைந்த கூலிக்காக தொழில்கள் நாடுவிட்டு நாடு செல்வதால் கூலி உயர்வு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடுகிறது.
வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் நிலவும் இத்தகைய சூழலால், 2002-07 ஆண்டுகளில் கூலியின் பங்கு என்பது உலக அளவில் குறைந்துபோனது. இதே காலகட்டத்தில் உலகப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சியைக் கண்டபோதும் கூலியின் பங்கு குறைந்துபோனதுதான் மிகவும் அவலம். (நூலிலிருந்து பக்.156-157)
நூல் : இந்திய பொருளாதார மாற்றங்கள் – ஜெ. ஜெயரசஞ்சன் கட்டுரைகள் ஆசிரியர் : ஜெ. ஜெயரஞ்சன்
வெளியீடு : மின்னம்பலம் பதிப்பகம், 44, 3-வது மெயின்ரோடு, கஸ்தூரிபா நகர், சென்னை – 600 020. தொலைபேசி எண் : 044- 24421307 / 24422307 மின்னஞ்சல் : books@minnambalam.com
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 05
குழந்தைகளின் வயதுச் சிறப்பியல்புகளுக்கேற்ற வேகத்தில் பாடம் நடத்தும் கோட்பாடு
ஆசிரியர் எந்த வேகத்தில் பாடத்தை நடத்த வேண்டும் என்ற பிரச்சினை உள்ளதா என்ன? ஆசிரியரியல், போதனை முறை, தனிப்பட்ட முறைகள் ஆகியவை சம்பந்தமான பாட நூல்களின்படி பார்த்தால் இப்படிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை. ஒரு வேளை உண்மையிலேயே இல்லையோ? அப்படியெனில் இப்படிப்பட்டதொரு பரிசோதனையைச் செய்து பாருங்கள்: நீங்கள் அவசரப்படும் போது மிக மெதுவாகச் சென்று பாருங்கள். ஐந்து நிமிடங்கள் இப்படி நடந்து பாருங்கள் (இதற்கு மேல் அனேகமாக உங்களால் முடியாது), சாதாரண வேகத்தில் நடந்தால் ஏற்படுவதை விட இரு மடங்கு அதிக களைப்பு தோன்றும் என உறுதியாக நம்புகிறேன். அல்லது கூட இருப்பவருடன் மிக மெதுவாகப் பேசுங்கள்: நீங்கள் மட்டுமின்றி (சிந்தனையின் வேகத்திற்குத் தடையிடுவதால்) உங்களைக் கேட்பவரும் (நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ள மிகவும் பிரயாசைப்படுவதால்) களைத்துப் போவீர்கள். உங்களைக் கேட்பவர், அவருக்கு ஏற்ற அதிக வேகத்தில் பேசினால் கிரகிப்பதை விட மெதுவாகப் பேசும் போது குறைவாகவே கிரகிப்பார்.
ஆறு வயதுக் குழந்தையைக் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு ஓடாமல், அசையாமல், நேராக, அமைதியாக உட்காரச் சொல்லுங்களேன் பார்க்கலாம். இப்படிப்பட்ட “ஓய்வால்” குழந்தைக்கு ஏதாவது பயனுண்டா? இம்மாதிரியான ஒரு மணி நேர “ஓய்வை” அவனால் தாங்கத்தான் முடியுமா? குழந்தை ஓடுகிறான், குதிக்கிறான், அவசர அவசரமாக உரக்கப் பேசுகிறான், எப்போதும் எங்கோ விரைகிறான். ஆனால் இதையெல்லாம் அவன் வேண்டுமென்றே செய்யவில்லை. இவனுடைய வளர்ந்து வரும் தேவைகள் தான் இவ்வாறு ஓடவும் “பொங்கியெழவும்” வைக்கின்றன. அதனால் குழந்தையால் அங்குமிங்கும் ஓடித்திரியாமல், உணர்ச்சிகரமாக இல்லாமல் இருக்க முடியாது. அவன் வேகமாகத்தான் வளர்ந்து வலுப்பெறுகிறான், இந்த வேகம் அதிகமானதாக நமக்குப் படலாம், ஏனெனில் இது நமது அமைதியான வேகத்திற்கு ஏற்றதாயில்லை; ஆனால் இவ்வேகம் அவனுக்கு இயல்பானது, சாதாரணமானது. குழந்தைகளுக்கென தனியான உடற்கூறு ரீதியான வேகமும் மூளை ரீதியான வேகமும் உள்ளது என்பதை நமது அமைதி மறக்கச் செய்கிறது.
எனவே, பாடம் சொல்லித் தரும் வேகம், குழந்தைகளுடன் கலந்து பழகும் வேகம் எங்கெல்லாம் மெதுவான படக் காட்சிகளில் வரும் வேகத்தைப் போல் உள்ளதோ அங்கெல்லாம் குழந்தை களைப்படைவான், மெதுவாக நடக்கும்படி, அமைதியாக இருக்கும்படி, சத்தம் போடாதிருக்கும் படி அவனை கட்டாயப்படுத்தினால் எப்படிக் களைப்படைவானோ அதே மாதிரி களைப்படைவான். இறக்கைகள் மட்டும் இருந்தால் அவன் சிறகடித்துப் பறப்பான்!.. குழந்தைகளுடைய வளர்ச்சி வேகத்திற்கேற்ப, அவர்களுடைய உள்சக்திகளின் இயக்கத்திற்கேற்ப கல்வி போதிக்க வேண்டும்.
இசையில் உள்ளதைப் போன்றே கல்வி போதிக்கும் தத்துவத்திலும் நடைமுறையிலும் விஷயங்களைத் துல்லியமாகக் குறிப்பிடும் வழிகள் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!
எந்த ஒரு இசையமைப்பாளரும் இசையின் எந்தப் பகுதியை எப்படி, எந்த பாவனையில், எந்த வேகத்தில் இசைக்க வேண்டுமெனக் குறிப்பிடாமல் இசையை அமைப்பதில்லை. அப்போது தான் இசை முழுமை பெறும், கேட்பவரின் மனதையும் உணர்ச்சிகளையும் தொடும்.
சின்னஞ்சிறு மனிதனின் மனதையும் இதயத்தையும் பாடங்கள் கவருவதில் ஆசிரியர்களுக்கும் இதே மாதிரியான அக்கறையில்லையா என்ன! எனவே, ஒவ்வொரு போதனை விஷயத்தையும் (அல்லது “போதனை இசையையும்”) பாடத்தில் எந்த தொனியில், எந்த வேகத்தில் செய்வது என்று யோசித்து முடிவு செய்தால் நன்றாயிருக்குமோ! இவையெல்லாவற்றையும் வேகத்தின் நோக்கிலும் தொனியின் நோக்கிலும் தீர ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். நான் தனிப்பட்ட முறையில் எப்போதோ இதை நன்கு உணர்ந்து கொண்டேன்.
சில ஆண்டுகளுக்கு முன் வரை கூட, கணக்குகளை எப்படி குழந்தைகளுக்குத் தருவது, இந்த “இசையை” வகுப்பில் எப்படி இசைக்கப் போகிறேன் என்பதைப் பற்றியெல்லாம் நன்கு யோசிக்காமலேயே என்னால் பாடத் திட்டத்தை தீட்ட முடிந்திருந்தது. எப்படிப்பட்ட உணர்வற்ற தொனியில், எப்படிப்பட்ட வேகத்தில் நான் எளிய கணக்குகளை என் குழந்தைகளுக்குத் தந்தேன் என்று இப்போது யோசித்துப் பார்க்கும் போது, இவற்றைப் போட அவர்கள் ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டார்கள், ஏன் அவ்வளவு விருப்பமின்றி பாடங்களில் கலந்து கொண்டார்கள் என்று எனக்குப் புரிகிறது. அந்த வகுப்புகளை – போதனை முறையை – இப்போது போதனை “இசை” என்று என்னால் சொல்ல முடியாது. முன்னர் என் பாடங்களை நான் பின்வருமாறு நடத்தினேன்.
“என்னைப் பாருங்கள்!” என்று வகுப்பைப் பார்த்துக் கூறினேன். சிறிது இடைவெளி.. “கவனமாகக் கேளுங்கள்!…”
சொல்லித் தரும் தொனியில் அழுத்தந் திருத்தமாக உச்சரித்தேன்: “6 உடன் எதைச் சேர்த்தால் 10 வரும்?”
வகுப்பைச் சுற்றும் முற்றும் பார்த்தபடி சொன்னேன்: “சரி, லேரி! நீ சொல்!”
லேரி மெதுவாக, எச்சரிக்கையோடு சொல்கிறான்: “4 ஐக் கூட்ட வேண்டும்…”
நான் எரிச்சலோடு சொன்னேன்: “இல்லை, அப்படியில்லை! முழு பதிலைச் சொல்ல வேண்டுமென நான் சொல்லியிருக்கிறேன் அல்லவா!”
பின் மீண்டும் அதே மாதிரியான சொல்லித்தரும் தொனியில் அழுத்திக் கூறினேன்:
“ஆறுடன் சேர்க்க வேண்டும்….. கட்டளையிட்டேன்: தொடர்ந்து சொல்!” லேரி: “ஆறுடன் நான்கைச் சேர்த்தால் பத்து வரும்!” ஏளனமாக: “அப்படித்தான். உட்கார், எப்படி பதில் சொல்ல வேண்டுமென மறந்து விடாதே!”
இதே மாதிரியாகத் தொடரும்.
இதில் பொதுவாக விஞ்சி நிற்பது அதிகாரத் தொனி, பாடம் நடத்தப்படும் வேகம் மெதுவானது என்பதை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். புதியவற்றை அறியும் மகிழ்ச்சியும் ஆசிரியருடன் கலந்து பழகும் மகிழ்ச்சியும் குழந்தைகளுக்குக் கிட்டவில்லை என்பது ஒரு புறமிருக்க இப்படிப் பட்ட பாடங்கள் குழந்தைகளுக்குப் பிடிக்குமா என்ன!
இப்போது இதே மாதிரியான பாடத்தை இன்று நான் எப்படி நடத்துகிறேன் என்று பார்ப்போம்.
உறுதியோடு, விரைவாக, ஆர்வந்தரும் வகையில் சொல்கிறேன்:
மெதுவான குரலில், சற்றே எச்சரிக்கும் குரலில் சொல்கிறேன்:
“கணக்கைத் திரும்பச் சொல்ல மாட்டேன்!“ ,
மெதுவாக, அமைதியாக, சிறு இடைவெளிகளுடன் சொல்கிறேன்:
“நான் ஒரு எண்ணை நினைத்திருக்கிறேன்…. அதனுடன் 6 ஐச் சேர்த்தால் 10 வரும்.” விளையாட்டுத் தொனியில் கேட்கிறேன்:
“நான் நினைத்துள்ள எண் எது? விரல்களால் காட்டுங்கள்!“
குழந்தைகள் தலையை உயர்த்தாமல், கண்களைத் திறக்காமல் விடையை விரல்களால் காட்டுகின்றனர். விரைவாக வகுப்பு முழுவதையும் சுற்றி வந்து, ஒவ்வொரு குழந்தையையும் அணுகுகிறேன், மெதுவாக விரல்களைத் தொட்டு சன்னமான குரலில் சொல்கிறேன் (விடை சரியானதாக இருந்தால்):
“ஒவ்வொரு வரும் 1-லிருந்து 5-க்குள் எதையாவது ஒரு எண்ணை நினைத்துக் கொள்ளுங்கள்!”
இடைவெளி (எண்ணை நினைத்துக் கொள்ள அவகாசம் தருகிறேன்).
மெல்லிய குரலில் கேட்கிறேன்: “நினைத்து விட்டீர்களா ?”
குழந்தைகள் சன்னமான குரலில் பதில் சொல்கின்றனர்:
“நினைத்துக் கொண்டோம்.”
“அந்த எண்ணோடு 3-ஐக் கூட்டுங்கள்.” இடைவெளி (கூட்ட நேரம் தருகிறேன்). சன்னமான குரலில்: “கூட்டி விட்டீர்களா?”
குழந்தைகள் மெதுவாக: “கூட்டிவிட்டோம்.” கவர்ச்சிகரமாக, சன்னமான குரலில்: “இன்னும் 2-ஐக் கூட்டுங்கள்… கிடைத்த விடையிலிருந்து நீங்கள் முதலில் நினைத்த எண்ணைக் கழியுங்கள்!… இன்னும் 1-ஐக் கழியுங்கள்.”
இடைவெளி. “உங்களுக்குக் கிடைத்த விடையைச் சொல்லட்டுமா?” குழந்தைகள் ஆர்வமாக: “சொல்லுங்கள்!”
பாடம் நடத்தும் வேகமும் பாவனையும் தொனியும் குழந்தைகளிடம் கல்வியின் பாலான மகிழ்ச்சிகரமான உறவை வளர்ப்பதற்கும் அவர்கள் பாடங்களை முழுமையாக கிரகிக்கவும் பெரிதும் முக்கியமானது என்று நம்புகிறேன். எனவே, பாடவேளைகளில் பள்ளி மாணவர்களுக்கு எந்த வேகத்தில், எந்தத் தொனியில் பாடம் நடத்துவது, எந்த வேகத்தில் ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு மாறுவது என்பதையெல்லாம் விஞ்ஞான பூர்வமாக நிர்ணயிப்பது அவசியமாகி வருகிறது. இந்த விஷயத்தில் தான்தோன்றித்தனம், தன்னிச்சையான போக்கு, குறிப்பாக அறிவின்மை ஆட்சி செலுத்தக் கூடாது!
♦♦♦
தாழ்வாரத்தில் கரும்பலகையருகே ஒலிக்க வேண்டிய முன் தயாரிப்பையடுத்து தலா 35 நிமிடங்களுக்கு நான்கு பாடங்கள் நடக்கும் (ஜனவரி முதல் நான் மினி-பாடங்களை நடத்துவதில்லை). இரண்டு சிறு இடைவேளைகளும் ஒரு பெரிய இடைவேளையும் உண்டு. 122-வது பள்ளி நாளின் திட்டத்தில் நான் எழுதியுள்ளபடி இந்தப் பாடங்கள், இடைவேளைகளின் சாரத்தை விளக்குவேன்.
மராட்டியர்களைக் குறித்த வரலாற்றாசிரியர் ஜாதுநாத் சர்க்காரின் படைப்புகளிலிருந்து கீழே உள்ள பகுதிகளை கொடுக்கிறோம். ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசராக சிவாஜியை ஏற்றுக்கொள்வதில் இருந்த சாதியரீதியிலான சிக்கல்களை தன்னுடைய இரண்டு நூல்களில் இவர் ஆய்வு செய்துள்ளார்.
மராட்டிய சமூகத்தை மட்டுமல்ல, உண்மையில் இந்திய சமூகம் முழுமைக்குமான ஒரு ஆழமான ஆய்வு, நாட்டுப்பற்று என்ற பெயரில் புறக்கணிக்கப்படுகின்ற சில உண்மைகளை அம்பலப்படுத்துகிறது. சிவாஜியின் வெற்றிக்கு மிகப்பெரிய தடைகளாக முகலாயர்களோ அல்லது யூசுப் அடில் ஷாவோ (பீஜப்பூர் சுல்தான்), சித்திகளோ (ஆப்பிரிக்க பாண்டு இனக்குழுவை சேர்ந்தவர்கள்) அல்லது பரங்கியர்களோ அல்ல, மாறாக சொந்த நாட்டு மக்களே என்பதை நாம் உணர்கிறோம்.
ஏதோ 17-ம் நூற்றாண்டில் நடந்தது மட்டுமல்ல இன்றும் ஒரு இந்தியரின் வாழ்வில் மிகவும் ஆதிக்கம் செலுத்துகின்ற சக்தி மதமோ, நாடோ அல்ல சாதிதான் என்பதை புரிந்துகொள்ளாத குருடராக நாம் இருக்க முடியாது. பாடநூல்களில் மட்டுமே இருக்கும் இந்துக்களின் நான்கு வருணப்பிரிவுகளும் அதற்கு பொதுப்படையாக கொடுக்கப்படும் தத்துவ விளக்கங்களையும் சாதியாக புரிந்து கொள்ளக்கூடாது. உண்மையில் சாதி இருக்கிறது. அது மனித சமூகப்பிரிவுகள் மற்றும் துணைப்பிரிவுகள் அதனிலும் பிரிவுகள் (இன்னும் சரியாக சொல்வதானால் மரத்தின் கிளைகள் அல்லது இலைகள் என்று கூட நான் கூற வேண்டும்!) என்று அதனுள் ஒவ்வொரு சாதியும் பிளவுப்பட்டு, அதற்குள் கொள்வினை கொடுப்பினை செய்துக்கொள்வதும், சாப்பிடுவதும், குடிப்பதுவுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூக சக்தி தான் சாதி.
மேலும் பார்ப்பன சாதிகளில் ஒவ்வொரு துணைப்பிரிவும் கூட வைசியர் அல்லது சூத்திரர் போல முழுமையான தனிச்சாதிகளாக இருக்கின்றன. சான்றாக, வட இந்தியாவைச் சேர்ந்த கன்னியாகுப்ஜா மற்றும் சராயுபாரி பார்ப்பனர்கள். மகாராஷ்டிராவின் கொங்கனாஸ்தா மற்றும் தேசஸ்தா பார்ப்பனர்களை கூறலாம்.
சிவாஜிக்கு எதிரான தனிப்பட்ட பொறாமை:
பூணூலணியவும், சடங்குகளில் வேத உபநிடதங்களை உச்சரிக்கத் தகுதியுள்ள ஒரு சத்திரியனாக அங்கீகரிக்கப்படாதவரை தான் வெற்றிக்கொண்ட நிலப்பரப்புகளாலும், கொள்ளையடித்த புதையல்களாலும் சிவாஜி மனநிறைவு கொள்ளவியலாது. அந்த அங்கீகாரம் ஒரு பார்ப்பனரால் மட்டுமே அவருக்கு தர இயலும்.
பேஷ்வாக்கள் கொங்கன் பகுதியைச் சேர்ந்த பார்ப்பனர்கள். பேஸ்வா பார்ப்பனர்களின் உதிரம் தூய்மை குறைவானது என்று மேட்டு நிலத்தை (தேஷ்) சேர்ந்த பார்ப்பனர்கள் கருதினர். இதன் விளைவாக மராட்டியத்தில் பேஷ்வாக்களின் ஆட்சியின் அராசுக் கொள்கை தேசிய எல்லைகளை நோக்கி வழிகாட்டுவதற்குப் பதிலாக, ஒரு குடும்பம் அல்லது ஒரு சமூகக் குறும்பிரிவின் கவுரவத்தை மட்டும் உயர்த்திப் பிடிப்பதாகவே அமைந்தது.
கிட்டத்தட்ட தனது நாட்களின் இறுதி வரை, பொறாமை, அவதூறு, அலட்சியம் மற்றும் மராட்டிய குடும்பங்கள் சிலவற்றின் எதிர்ப்பையும் கூட எதிர்த்து சிவாஜி போராட வேண்டி இருந்தது. சிவாஜியின் சொந்த சகோதரர் வியன்கோஜி 1666-ல் பிஜாப்பூர் மீது முகலாய படையெடுப்பின் போது அவருக்கு எதிராக சண்டையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவாஜியின் மத சகிப்புத்தன்மையும் சமமாக கருதும் போக்கு :
ஒரு இந்துத் தலைவராக இருந்ததால் அல்ல, மாறாக அவர் ஒரு சிறந்த கணவராகவும், சிறந்த அரசராகவும், மற்றும் நிகரற்ற தேசத்தைக் கட்டமைப்பவராகவுமிருந்ததால் மட்டுமே வரலாற்றில் தகுதியுள்ளவர்களின் மண்டபத்தில் ஒரு உயர்ந்த பீடத்தில் சிவாஜி நிற்கிறார். அவர் தனது தாயிடம் மரியாதையுடனும், தனது குழந்தைகளிடம் அன்பாகவும், மனைவிகளுக்கு உண்மையாகவும் இருந்தார். மற்ற பெண்களுடனான தனது உறவில் மிகவும் தூய்மையானவராக இருந்தார். போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்ட பேரழகிகள் கூட அவரால் அம்மா என்றே அழைக்கப்பட்டனர். அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், ஒரு மிகச்சிறந்த அரசராகவும், அமைப்பாளராகவும் தன்னுடைய மேதமையை பறைசாற்றியுள்ளார். மத வெறித்தனம் கோலோச்சிய அக்காலத்தில் அனைத்து மதங்களையும் தாராளமாக சகித்துக்கொள்ளும் கொள்கையை பின்பற்றினார்.
இந்துக்கள் மீது தேர்தல் வரி விதிக்கப்படுவதை எதிர்த்து அரங்கசீப்பிற்கு எழுதிய கடிதம், சிவாஜியின் தெளிவான தர்க்கம், பொறுமையான மனநிலை மற்றும் அரசியல் ஞானத்தின் தலைசிறந்த படைப்பாகும். அவர் ஒரு இந்து பக்திமான் என்றாலும், ஒரு முசல்மானிடத்திலும் உண்மையான புனிதத்தை அவரால் அடையாளம் காண முடிந்தது. எனவே அவர் பாபா யாகுத் என்ற இசுலாமிய புனித மனிதருக்கு கெலேசியில் தர்க்காவை நிறுவினார். அவரது சேவையில் அனைத்து மதங்களுக்கும் சம வாய்ப்புகள் கிடைத்தன. அவர் குவாசி ஹைதர் என்ற முஸ்லீம் செயலாளரை நியமித்தார். சிவாஜியின் மரணத்திற்குப் பிறகு டெல்லி சென்ற அவர் முகலாயப் பேரரசின் தலைமை நீதிபதியாக உயர்ந்தார்.
சிவாஜியின் படையில் பல்வேறு முஸ்லிம் தலைவர்கள் இருந்தனர். அவரது படைத்தலைவராக இருந்த சித்தி மிஸ்ரி ஒரு அபிசீனியன். எந்த ஒரு பெண்ணை தொடவோ அல்லது முஸ்லிம் பள்ளிவாசலையோ, ஆசிரமத்தையோ கொள்ளையடிக்கவோ கூடாதென மராட்டிய படைவீரர்களுக்கு கண்டிப்பான கட்டளை இருந்தது. படையெடுப்பின் போது கைப்பற்றப்படும் முஸ்லிம்களின் புனித நூலான குரான் மரியாதையுடன் முஸ்லிகளிடம் ஒப்படைக்க கட்டளையிடப்பட்டிருந்தது.
சிவாஜியின் முடிசூட்டு விழா மற்றும் அதற்குப் பிறகு (1674-1676) :
சிவாஜி முடிசூடிக்கொள்ள விரும்பியது ஏன்?
சிவாஜி முடிசூடாமல் இருப்பதன் நடைமுறை சிக்கல்களை சிவாஜியும் அவரது அமைச்சர்களும் அவர் நீண்ட காலமாகவே உணர்ந்திருந்தனர். சிவாஜி, பல பகுதிகளைக் கைப்பற்றியதுடன் ஏராளமான செல்வங்களைச் சேகரித்திருந்தார் என்பது உண்மை. அவருக்கு ஒரு வலிமையான தரைப்படையும் கடற்படையும் இருந்தது. மேலும் ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாட்டை போலவே மனிதர்களது வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கும் சக்தி அவருக்கிருந்தது. ஆனால் கோட்பாட்டளவில் அல்லது முகலாயப் பேரரசரை பொறுத்தவரை அவர் வெறும் நிலக்கிழார் மட்டுமே. எந்தவொரு அரசரடனுமான சரிசமமான அரசியல் அங்கீகாரத்தை அவரால் பெற முடியவில்லை.
சிவாஜி வெறும் தனிப்பட்ட நபராக இருந்தவரை தன்னுடைய ஆதிக்கத்திலுள்ள மக்களின் விசுவாசத்தையும் பக்தியையும் கோர முடியவில்லை. ஒரு அரசருக்கு இருப்பது போல புனிதத்தன்மை அவரது வாக்குறுதிகளுக்கு இல்லை. அவர் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட முடியாது, சட்டப்பூர்வமாக மற்றும் நிரந்தரமாகவும் எந்த நிலத்தையும் அவரால் வழங்க முடியாது. அவரது வாளால் கைப்பற்றப்பட்ட பகுதிகள் அனைத்தும் அவரது சட்டபூர்வமான சொத்தாக மாற்ற முடியாது, நடைமுறையில் அவருக்கு அதிகாரம் இருக்கலாம். ஆனால் அவரது அதிகாரத்தின் கீழ் வாழும் மக்களால் முந்தைய அதிகார வர்க்கத்திடமிருந்த விசுவாசத்தை கைவிட முடியவில்லை அல்லது அவருக்கு கீழ்படிந்ததற்காக தேசத்துரோக குற்றச்சாட்டில் இருந்து விலக்கு பெற்றார்கள் என்பதையும் அவரால் உறுதிப்படுத்த முடியாது. அவருக்கான நிரந்தர அரசியல் ஆளுமையை ஒரு இறையாண்மையின் செயலாக சரிபார்க்கப்பட வேண்டும்.
காகா பட்டாவினால், சிவாஜி சத்திரியனாக அங்கீகரிக்கப்படுதல் :
ஆனால் இந்த இலட்சியத்தை அடைவதற்கு ஒன்று தடையாக இருந்தது. பண்டைய இந்து வேதங்களின்படி, சத்திரிய சாதியைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே சட்டப்பூர்வமாக அரசராக முடிசூட்டப்பட்டு இந்து சடங்குகளின் மரியாதைக்கு உரிமை கோர முடியும். போன்ஸலேக்கள் சத்திரியர்களோ, அல்லது வேறு இரட்டை பிறப்பு கொண்ட சாதியினரோ அல்ல மாறாக வெறும் உழவர்கள் தான். சிவாஜியின் கொள்ளு தாத்தாவும் அப்படியான ஒருவராக தான் இன்னமும் கருதப்படுகிறார். ஒரு சூத்திரன் எப்படி சத்திரியனுக்கான சடங்குகளுக்கு ஆசைப்பட முடியும்? சிவாஜி ஒரு சத்திரியன் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டால் மட்டுமே இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பார்ப்பனர்கள் அவரது முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டு அவரை வாழ்த்த முடியும்.
ஆகையால், எதிர்ப்புகள் அனைத்தையும் அமைதியாக்க முதலில் திறமையான ஒரு பண்டிதரின் ஆதரவைப் பெறுவது அவசியமாக இருந்தது, அப்படி ஒருவர் விஸ்வேஸ்வரில் வாழ்ந்து வருவது தெரிந்தது. பெனாரஸை சேர்ந்த அவரது பட்ட பெயர் காகா பட்டா. சர்ச்சைக்குரிய பெரும் சமற்கிருத அறிஞரான அவருக்கு நான்கு வேதங்களிலும், ஆறு தத்துவங்களிலும், அனைத்து இந்து மத இலக்கியங்களிலும் புலமை இருந்தது. பிரம்ம தேவா என்றும் அந்த காலத்தின் வியாஸர் என்றும் அவர் பிரபலமாக அறியப்பட்டார்.
சிவாஜியின் புத்திசாலித்தனமான செயலாளார் பாலாஜி ஆவ்ஜி மற்றும் இதர அதிகாரிகளால் புனையப்பட்ட போன்ஸ்லேயின் வம்ச வரலாற்றை காகா பட்டா ஏற்றுக்கொண்டார். சிவாஜி ஒரு தூய்மையான சத்திரியன் என்றும், உதய்பூரின் மகாராணாக்களின் நேரடி பாரம்பரியத்தை சேர்ந்தவர் என்றும், புராணக்கடவுளான இராமனின் பிரதிநிதி என்றும் அறிவித்தார்.
அவரது தடாலடியான இந்த அறிவிப்பிற்கு எராளமான பணம் கொடுக்கப்பட்டதுடன் சிவாஜியின் முடிச்சூட்டு விழாவின் முதன்மையான மதகுருவாகவும் அவர் மரியாதை செலுத்தப்பட்டார். அவரை வரவேற்க சதாரிவிலிருந்து பல மைல்களுக்கு அப்பால் சிவாஜியும் அவரது அதிகாரிகளும் சென்றனர்.
(சிவாஜியும் அவரது காலமும், நூலிலிருந்து – ஜாதுனாத் சர்கார்)
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட சோழகனூர் கிராமத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதே ஊரைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். இவர் அதிகாரிகளின் துணையோடு அவர்களுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு இந்த கிராமத்தையே கபளீகரம் செய்திருக்கிறார். “கண்ணும் கண்ணும்” படத்தில் வரும் நடிகர் வடிவேலுவின் “கிணத்தைக் காணோம்” காமெடி காட்சியைப்போல “வீட்டையே காணோம்” என்று சோழகனூர் கிராம மக்கள் அலறியடித்து போராடியிருக்கிறார்கள்.
சோழகனூரில், வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கும் மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின்கீழ் மத்திய மாநில அரசுகள் ஒதுக்கிய பசுமை வீடு மற்றும் தொகுப்பு வீடு கட்டித் தருவதில் சரவணன் கும்பல் பெரும் முறைகேடு செய்திருக்கிறது. இவ்வூரில் உள்ள இரு சமுதாயப் பிரிவினர்களுக்குமே சுமார் 15 வீடுகளைக் கட்டாமலேயே கட்டிமுடித்ததாகவும், மேலும் பத்து வீடுகள் அரைகுறையாக கட்டி உள்ள நிலையில் முழுமையாக முடிந்துவிட்டதாகவும் கணக்கு காண்பித்து மொத்தப் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர். ஊராட்சி செயலாளர் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர் வரை இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கியமாக ஓவர்சீயர் என்று சொல்லக்கக்கூடிய மேற்பார்வையிடும் அதிகாரியோ கட்டாத வீட்டை கட்டி முடித்து விட்டதாகவும், அதை தன் கண்ணால் பார்த்து விட்டதாகவும் ஒப்புதல் அளித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதுமட்டுமில்லாமல் 100 நாள் வேலை திட்டம், தெருவிளக்கு, பாசன வாய்க்கால்கள் அமைப்பது மற்றும் பராமரிப்பது, குடிதண்ணீர் வழங்குவது உட்பட அரசின் அத்தனை நலத்திட்டங்களிலும் முறைகேடு செய்து இந்த ஊராட்சியே ஊழலில் நாறிக் கொண்டிருக்கிறது.
மேலும், கிராம சபைக் கூட்டம் சரிவர நடத்துவது இல்லை. அப்படியே நடத்தினாலும் ஊருக்கு தெரிவிப்பதும் இல்லை. தனக்கு ஆதரவானவர்களை மட்டும் கொண்டு நடத்தியதாக கணக்குகாட்டி விடுவது. இதனால் கிராமத்தின் வளர்ச்சிப்பணிகள், அரசின் நலத்திட்டங்கள் குறித்து எதுவும் தெரிந்துகொள்ளவும் முடியவில்லை. இதுவே இந்த ஊரின் எழுதப்படாத நடைமுறை. இறுதியாக தனது நண்பர் கட்டி வரும் கடைக்கு மக்கள் பயன்பாட்டில் இருக்கும் பேருந்து நிறுத்தக் கட்டிடம் இடையூறாக இருப்பதால் அதனை இடிக்கவும் துணிந்திருக்கிறார். இந்த சம்பவம்தான் மக்களுக்கு கொதிப்பை ஏற்படுத்தியது.
இத்தனை குற்றங்களையும் செய்த ஊராட்சி செயலாளர் மற்றும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கடந்த மாதம் மனு கொடுத்தபோது நடவடிக்கை எடுப்பதாக கூறிய மாவட்ட ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் ஊராட்சியில் நடைப்பெற்றுள்ள வேலைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு போன்ற தகவல்களை கேட்டுபெற்று அதனடிப்படையிலும் உரிய ஆதாரங்களுடன் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கிராம மக்களின் இந்த நடவடிக்கைக்கு பிறகு மனு கொடுக்க யாரெல்லாம் சென்றார்களோ அவர்களை எல்லாம் ரவுடிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களைக் கொண்டு மிரட்டியும், அதே சமயம் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவராக சந்தித்து பணத்தை திருப்பி தருவதாகவும் போராட்டத்திற்கு யார் கூப்பிட்டாலும் போக வேண்டாம் என்று அவர்களை பணிய வைக்கும் முயற்சியையும் செய்தனர். ஆனால் இந்தப் போராட்டத்தை வழி நடத்துவது மக்கள் அதிகாரம் அமைப்புதான் என்று தெரிந்த பிறகு அவர்கள் பின்வாங்கிக் கொண்டனர்.
மலைக்க வைக்கும் ஆதாரங்கள் !
1 of 13
நடந்திருப்பது ஊழல்… கொள்ளை… இந்த ஊழலுக்கு எத்தனை பேர் ஆரத்தி எடுப்பார்கள் என்று தெரியவில்லை. இறுதியாக இவர்கள் கையில் எடுத்த ஆயுதம் சாதி. ஊராட்சி செயலாளரோ, தான் சார்ந்த சாதியைச் சொல்லி “என் வளர்ச்சி பிடிக்காமல் காழ்ப்புணர்வில் செய்கிறார்கள்” என்று புது புரளியை கிளப்பி சாதி மோதலை ஏற்படுத்தவும் முயற்சித்தார். அனைத்தும் இரு சமூகப் பிரிவு மக்களின் ஒற்றுமையால் முறியடிக்கப்பட்டது. ஏற்கெனவே அதே ஊரின் பள்ளிக்கூட பிரச்சினையில் அமைப்பின் வழிகாட்டலில் ஒற்றுமையுடன் போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
உண்மைநிலை இப்படி இருக்க சாதிய கண்ணோட்டத்தில் அணுகுவதாக சொல்வது நகைப்புக்குரியது. எந்தச் சாதியைக் காட்டி அனுதாபம் தேட செயலர் சரவணன் முயற்சிக்கிறாரோ அதே, “சுயசாதி” மக்களைத்தான் அதிகமாக சுரண்டி சொத்து சேர்த்திருக்கிறார். .
இப்பேர்பட்ட பகாசுர கொள்ளையில் ஈடுபட்ட – அதிகாரிகளுக்கு எதிராக கடந்த 25.09.2019-ம் தேதி மக்கள் அதிகாரம் சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து 29-ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பில் போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் 30.09.2019 அன்று விழுப்புரத்திலிருந்து சோழகனூர் கிராமம் வழியாக செல்லும் அரசு பேருந்தை ஊர் மக்கள் சிறைபிடித்து, ஊழல் செய்த அதிகாரிகளையும், ஊராட்சி செயலாளரையும் கைது செய்ய வேண்டும்; இவர்கள் கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சுமார் மூன்று மணி நேரம் போராட்டம் நடத்தப்பட்டது.
தகவலறிந்து வந்த போலீசு, “அனைவரும் கலைந்து செல்லுங்கள், இல்லை என்றால் அனைவர் மீதும் வழக்குப்போட்டு சிறையில் தள்ளிவிடுவோம்” என்று மிரட்டியது. போலீசின் மிரட்டலுக்கு அஞ்சாத கிராம மக்கள், “கோடிகளில் ஊழல் முறைகேடு செய்துள்ளனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாங்கள் மூன்று முறை மனு கொடுத்தும் ஊழல் குற்றவாளிகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கத் துப்பில்லை, பாதிக்கப்பட்ட எங்கள் மீது வழக்கு போடுவேன், கைது செய்வேன் என்கிறீர்களே வெட்கமாக இல்லையா? வழக்குப் போடுங்கள்… நாங்கள் அதற்கு தயாராகத்தான் இருக்கிறோம்” என்று சரமாரியாக கேள்வி கேட்ட மக்கள், “சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் வரை இங்கிருந்து கலைய மாட்டோம்” என்றவுடன் அவர்களுக்கு பதில் கூற முடியாமல் போலீசார் ஒதுங்கிக் நின்றனர்.
போராட்டம் தொடரவே AD மற்றும் BDO – வர, அவர்களிடம் நடந்த பேச்சுவார்த்தையில் “ஊர் பஞ்சாயத்தில் என்னென்ன முறைகேடுகள் நடந்துள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்; அதுவரை இந்த ஊராட்சி செயலாளர் மூலம் எந்த வேலையும் நடக்கக் கூடாது; ஆய்வு செய்து தண்டனை நிறைவேற்றும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம், நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் அரசாங்கத்திற்கு எந்த ஒத்துழைப்பும் தர மாட்டோம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்போம்” என்றும் மக்கள் உறுதியாகக் கூறினர்.
மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகள்.
மக்கள் போராட்டத்தின் வீரியத்தையும் நியாயத்தையும் அறிந்த அதிகாரிகள், “கண்டிப்பாக ஊராட்சி செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்வதாகவும், ஊழலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும், இந்த ஊழல் முறைகேடுகளை 5 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்துவோம்” என்றும் வாக்குறுதி அளித்தார்கள்.
அதிகாரிகள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாகவும், எந்த நடவடிக்கையும் இல்லை என்றால் மீண்டும் போராட்டத்தை தொடரலாம் என்றும் ஊர்மக்கள் முடிவெடுத்துள்ளனர். முதல் கட்டமான இந்த வெற்றி மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றாலும், சாதிய பாகுபாடுகளை கடந்து ஊழலுக்கு எதிராக இரு பிரிவினரும் இணைந்து நடத்தியதால்தான் இது சாத்தியமானது என்பதை உணர்ந்திருக்கிறார்கள். இந்த ஊர் மக்களின் ஒற்றுமைக்கு கிடைத்த இரண்டாவது வெற்றியாகும்.
ஊழல் தனிநபர்களின் பிரச்சனையல்ல!
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஊழல் – முறைகேடுகள் கோலியனூர் ஒன்றியத்தின் ஒரு முன்மாதிரிதான். இதே கோலியனூர் ஒன்றியத்தில் 45 பஞ்சாயத்துக்கள் உள்ளது. அதிலுள்ள சோழகனூர் பஞ்சாயத்தில் மட்டுமே இவ்வளவு முறைகேடுகள் என்றால் இந்த 45 பஞ்சாயத்திலும் எவ்வளவு கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள்.
தமிழகம் முழுவதும், நாடு முழுவதும் இந்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இப்படித்தான் மக்களின் வரி பணத்தை சூறையாடி கொழுக்கிறார்கள். மற்றொருபுறம் கார்ப்பரேட்டுகளுக்கும் வாரி வழங்குகிறார்கள்.
அதிகாரிகளை பணியவைத்த மக்கள் போராட்டம் !
1 of 4
அரசுக் கட்டமைப்பு ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாக கூறிக்கொண்டு, அதற்காக குறைந்தபட்சம் வகுக்கப்பட்ட கொள்கைகளையும், திட்டங்களையும் அவர்களே மதிக்காமல், அத்திட்டங்களை முழுமையாக அமுல்படுத்தாமலும், அதற்காக ஒதுக்கப்படும் சிறிதளவு நிதியையும் கொள்ளை அடித்துவிட்டு உழைக்கும் மக்களைப் பற்றி கவலையின்றி சுகபோகமாக வாழ்கின்றனர்.
இந்த ஊழல் முறைகேட்டினை சிறிய பிரச்சனையாக நினைத்து நாம் கடந்துவிட முடியாது. ஒட்டுமொத்த சமுக பொராளாதாரத்தையே சீர்குலைக்கும் செயலாகும். கீழிருந்து மேல் வரை சீரழிந்து மக்களுக்கு எதிரியாகிப்போன இந்த கட்டமைப்பு தோற்றுவிட்டதன் வெளிப்பாடு. இதனை தூக்கியெறிய உழைக்கும் மக்களாக ஒன்று திரள்வோம்.. மக்கள் அதிகார கமிட்டிகளை கட்டமைப்போம்.. உங்கள் ஊரின் பிரச்சனைக்கு தீர்வு காண்போம்.!
தகவல்:
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.
தொடர்புக்கு : 94865 97801
ஒரு காலத்தில் அதிக சம்பளத்துடனான வேலை வாய்ப்புகள் காரணமாக ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் புலம்பெயர்ந்து சென்று சோவியத் யூனியனில் குடியேறி இருந்தனர்! இன்று இதைச் சொன்னால் நம்புவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் முப்பதுகளில் இருந்த உலகம் வேறு.
அமெரிக்காவின் பங்குச் சந்தை நெருக்கடி காரணமாக, முதலாளித்துவப் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் சோவியத் சோஷலிச பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. அமெரிக்கப் பத்திரிகைகள் கூட அதைக் குறிப்பிடத் தவறவில்லை. உள்நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்துக் கொண்டிருக்கையில், சோவியத் யூனியனில் நாளுக்கொரு தொழிற்சாலை திறக்கப் படுவதாக தெரிவித்துக் கொண்டிருந்தன. இனிமேல் உலகம் முழுவதும் சோவியத்தின் சோஷலிச பொருளாதார மாதிரியை பின்பற்றுவது தான் ஒரே வழி என்பது பொதுவான வெகுஜன கருத்தாக இருந்தது.
இருபதுகளின் பிற்பகுதியில் ஸ்டாலின் கொண்டு வந்த ஐந்தாண்டுத் திட்டம் காரணமாக சோவியத் யூனியனின் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்தது. இது அன்று உலகம் முழுவதும் தெரிந்த உண்மை. சோவியத் பொருளாதாரம் எந்தளவுக்கு வளர்ந்தது என்றால், ஒரு கட்டத்தில் வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் கூட இல்லாத பற்றாக்குறை நிலவியது. சுரங்கத் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, ஜெர்மனியில் இருந்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் தருவிக்கப் பட்டிருந்தனர். ஏற்கனவே ஏராளமான ஜெர்மன் பொறியியலாளர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர்.
ஸ்டாலினின் ஐந்தாண்டுத் திட்டத்தினை, சோவியத் யூனியனின் தொழிற்புரட்சி என்று அழைக்கலாம். நாடு முழுவதும் விவசாயத்தை இயந்திரமயமாக்குவது அடிப்படையாக இருந்தது. கூட்டுத்துவ பொருளாதாரக் கட்டமைப்பில் இது இலகுவாக சாத்தியமானது. இருப்பினும் ஒரு பிரச்சினை இருந்தது. போதுமான அளவு டிராக்டர்கள், இயந்திரங்கள் இருக்கவில்லை. அவற்றைப் புதிதாக உற்பத்தி செய்ய வேண்டி இருந்தது. அதற்காக புதிய தொழிற்சாலைகளை கட்ட வேண்டும். அதற்குத் தேவையான தொழிநுட்ப நிபுணர்கள், தொழிற்தேர்ச்சி தொழிலாளர்கள் போன்றவற்றுக்கும் பற்றாக்குறை நிலவியது.
அன்றைய சோவியத் யூனியனில் பொறியியலாளர்களுக்கும் பற்றாக்குறை நிலவியது. புரட்சிக்குப் பிந்திய சமுதாயத்தில், பொறியியலாளர் போன்ற அதிக சம்பளம் கிடைக்கும் மத்தியதர வர்க்க வேலைகள் உயர்வாகக் கருதப் படவில்லை. சோவியத் யூனியன் தொழிலாளர்களின் நாடு என்பதால், உடல் உழைப்பாளிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப் பட்டது. ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் பொறியியலாளர் குறைவான சம்பளம் பெறுவதும், தொழிலாளி கூடுதலான சம்பளம் பெறுவதும் சாதாரணமான விடயம்.
அது மட்டுமல்ல, பொறியியலாளர், மருத்துவர் போன்ற மத்தியதர வர்க்க வேலைகளை செய்பவர்கள் குட்டி முதலாளித்துவ மனப்பான்மை கொண்டவர்களாக கருதப் பட்டனர். அதாவது, அவர்கள் உடல் உழைப்பாளிகளை விட அதிகம் சம்பாதிப்பதால் பாட்டாளி வர்க்கத்தை அவமதிப்பார்கள் என்பதும் பொதுப் புத்தியில் உறைந்திருந்தது. இது ஜார் மன்னன் காலத்தில் இருந்த வர்க்க ஏற்றத்தாழ்வாக இருந்தாலும், புரட்சி நடந்து பதின்மூன்று வருடங்களே நிறைவடைந்த நிலையில் வர்க்க முரண்பாடுகள் முற்றாக மறைந்திருக்கவில்லை.
இதனால் ஒரு தொழிற்சாலையில் பெரும் சேதம் விளைவிக்கும் விபத்து நடந்தால் முதலில் குற்றம் சாட்டப் படுபவர் ஒரு பொறியியலாளராக அல்லது முகாமையாளராக இருப்பார். அவர் வேண்டுமென்றே நாசகார வேலையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப் படவும் இடமுண்டு. இது போன்ற காரணங்களினாலும் பலர் பொறியியலாளர் வேலை செய்ய முன்வராமல் இருந்திருக்கலாம். எது எப்படி இருப்பினும், உள்நாட்டில் இல்லாத மனித வளத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அன்றைய சோவியத் யூனியனில் ஏற்பட்டிருந்தது.
ஏராளமான இலங்கையர்கள், இந்தியர்கள், வளைகுடா அரபு நாடுகளுக்கு வேலை தேடிச் செல்வது போன்று தான், அன்றைய காலத்தில் அமெரிக்கர்கள் சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்றனர். அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி, வேலையில்லாப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோவியத் யூனியன் பொன் விளையும் பூமியாகத் தெரிந்தது.
அன்றைய காலகட்டத்தில் முழு ஐரோப்பாவிலும் சோவியத் யூனியன் மட்டுமே பணக்கார நாடு என்று சொல்லும் தரத்தில் இருந்தது. பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் மிகவும் வறுமையான நிலையில் இருந்தன. அத்துடன் அமெரிக்காவில் ஏற்பட்ட முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப் பட்டிருந்தன. ஜெர்மனி, இத்தாலி, சுவீடன், நோர்வே, பிரித்தானியா போன்ற பல மேற்கத்திய நாடுகளில் இருந்து பொறியியலாளர்கள் வேலை தேடி சோவியத் யூனியனுக்கு சென்றனர்.
இருப்பினும், அமெரிக்க தொழில்நுட்ப அறிவுக்கு சோவியத் யூனியனில் அதிக மதிப்பு இருந்தது. ஆகையினால், சோவியத் யூனியன் நோக்கிப் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அமெரிக்கர்களின் சோவியத் நோக்கிய புலம்பெயர்வு, மூன்று வகையாக நடந்தது. ஒன்று, தாமாகவே வேலை தேடிச் சென்றவர்கள். இரண்டு, வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தக் கூலிகளாக அனுப்பப் பட்டவர்கள். மூன்று, அமெரிக்க நிறுவனங்களின் முதலீட்டில் உருவான தொழிற்துறை கட்டுமானங்களில் பணியாற்ற அனுப்பப் பட்டவர்கள்.
அன்றைய அமெரிக்காவில் நிலவிய கொடூரமான இனவெறிக் கொள்கை காரணமாக, ஏராளமான கறுப்பின மக்களும் சோவியத் யூனியனில் குடியேற விரும்பினார்கள். அங்கு அவர்கள் சம உரிமை பெற்ற மனிதர்களாக சகோதரத்துவ உணர்வுடன் நடத்தப் பட்டனர். அந்த வாழ்க்கையை அமெரிக்காவில் நினைத்துப் பார்க்கவே முடியாமல் இருந்தது. மேலும் சர்வதேச மட்டத்தில், “இனப்பாகுபாடு பாராட்டும் முதலாளித்துவ அமெரிக்காவை விட, சகல இனத்தவரையும் சமமாக நடத்தும் சோஷலிச சோவியத் நாடு சிறந்தது” என்று சோவியத் அரசு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது.
கறுப்பர், வெள்ளையர் பாகுபாடின்றி, தகுதி வாய்ந்த அனைவருக்கும் சோவியத் யூனியனில் வேலை வாய்ப்புக் கிடைத்தது. அமெரிக்காவில் தொழிற் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள், பொறியியலாளர்களுக்கு சோவியத் யூனியனில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. அதிக சம்பளமும் கிடைத்தது. சம்பளத்தில் ஒரு பகுதி அமெரிக்க வங்கிக் கணக்கில் வைப்பிலப் படும். அதை விட, மாதம் 200-300 ரூபிள்கள் கையில் கிடைக்கும்.
புலம்பெயர்ந்த அமெரிக்க தொழில்நுட்ப நிபுணர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம், சராசரி சோவியத் சம்பளத்தை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகம். இது வெளிநாட்டு தொழில் முகவருடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப் பட்டது. மேலும், சோவியத் நாட்டில் உணவுப் பொருட்கள் மிகவும் மலிவு. மருத்துவ வசதி இலவசம். பிள்ளைகளுக்கான கல்வியும் இலவசம். இப்படியான ஒரு வாழ்க்கை கிடைத்தால் யார் தான் மறுக்கப் போகிறார்கள்? ஒப்பந்தப் படி, ஓர் அமெரிக்க வேலையாள் வருடத்தில் ஒன்பது மாதங்கள் வேலை செய்ய வேண்டும். மூன்று மாதங்கள் அமெரிக்கா சென்று வரலாம்.
சோவியத் யூனியனுக்கு புலம்பெயர்ந்து சென்ற அமெரிக்கர்களை மூன்று வகையாக தரம் பிரிக்கலாம். அதிகமாக பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தில் சென்றவர்கள் தான் பெரும்பான்மை. குறிப்பிட்ட அளவினர் கம்யூனிச சித்தாந்தம் மீதான ஈடுபாடு காரணமாக சென்றனர். இவ்விரண்டு பிரிவினரும் யாருக்கும் எந்தத் தொந்தரவும் செய்யாமல் தாமுண்டு வேலையுண்டு என இருந்து விட்டனர். அதே நேரம், மலிவு விலையில் மது கிடைக்கிறது என்ற ஆசையில் சென்று, குடித்து விட்டு தகாராறுகளில் ஈடுபட்டவர்களும் உண்டு. அப்படியானவர்கள் எந்த மன்னிப்பும் இன்றி திருப்பி அனுப்பப் பட்டனர்.
அன்றைய உலகப் பொருளாதார நிலைமையில், மிகப் பெரிய அமெரிக்க முதலாளித்துவ நிறுவனங்கள் கூட சோவியத் யூனியனில் முதலிடுவதற்கு தாமாக விரும்பி முன்வந்தன. இது இரண்டு தரப்பிற்கும் ஆதாயம் கிடைக்கும் விடயம். சோவியத் அரசுக்கு அந்நிய தொழில்நுட்ப அறிவு ஆதாயமாகக் கிடைக்கிறது. அமெரிக்க நிறுவனத்தை பொறுத்தவரையில் நிலையான பொருளாதாரத்தை கொண்ட நாட்டில் முதலிட்டு இலாபம் சம்பாதிக்க முடிகிறது.
இந்த முதலீடுகள் அனைத்தும் Joint Venture பாணியிலான கூட்டு முயற்சியாக அமைந்திருந்தன. அதாவது, புதிதாக உருவாக்கப்படும் தொழிலகம் ஒன்றில் சோவியத் அரசும், வெளிநாட்டு நிறுவனமும் சரிசமமான பங்குகளில் முதலீடு செய்யும். தொழிலகத்தில் உற்பத்தி அதிகரிக்கும் நேரம் விற்பனையால் கிடைக்கும் இலாபப் பணம் சரிசமமாக பங்கிடப்படும். ஒப்பந்த காலம் வரையில், குறிப்பிட்ட அமெரிக்க நிறுவனம் தனது பங்குகளுக்கான இலாபத்தை எடுத்துக் கொள்ளலாம். ஒப்பந்தம் முடிந்த பின்னர் தொழிலகம் முழுவதும் சோவியத் அரசுடமையாகி விடும்.
1929 -ம் ஆண்டு சோவியத் அரசுக்கும் அமெரிக்க Ford நிறுவனத்திற்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் போடப் பட்டது. இதன் விளைவாக, நிஸ்னி நொவ்கொரொத் (Nizhny Novgorod) நகரில் ஒரு பிரமாண்டமான கார் தயாரிக்கும் தொழிற்சாலை கட்டப் பட்டது. இதற்காக பல நூற்றுக் கணக்கான அமெரிக்க பொறியியலாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் சோவியத் யூனியனில் தங்கி இருந்து வேலை செய்தனர். இதற்காக புதியதொரு நகரம் நிர்மாணிக்கப் பட்டது. தொழிற்சாலையில் வேலை செய்வோர் தங்குவதற்கான வீடுகள் மட்டுமல்லாது, மருத்துவமனைகள், பாடசாலைகள் போன்றனவும் புதிதாக கட்டப் பட்டன.
ஒப்பந்தப் படி, சோவியத் அரசு முதலாவது வருடம் குறிப்பிட்டளவு போர்ட் கார்களை வாங்குவதாக தீர்மானிக்கப் பட்டது. இரண்டாவது வருடம் அமெரிக்காவில் இருந்து தருவிக்கப் பட்ட வாகன உதிரிப் பாகங்கள் சோவியத் யூனியனில் பொருத்தப் படும். மூன்றாவது வருடம் சோவியத் உதிரிப் பாகங்களை கொண்டு அமெரிக்கக் கார் தயாரிக்கப் படும். நான்காவது வருடம் கார் முழுவதும் சோவியத் தயாரிப்பாகவே இருக்கும்.
GAZ (Gorkovsky Avtomobilny Zavod) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட வாகனம் ஒன்றின் புகைப்படம்.
ஒப்பந்தப் படி, பத்தாண்டுகளுக்குள் போர்ட் நிறுவனம் தனது பேட்டன்ட் உரிமையையும், தொழில்நுட்ப அறிவையும் சோவியத் அரசிடம் கொடுத்து விட வேண்டும். திட்டமிட்ட படி பத்தாண்டுகளுக்குள் தொழிற்சாலை முழுவதும் சோவியத் வசமாகியது. அன்று அமெரிக்கர்கள் கட்டிய கார் தொழிற்சாலை GAZ என்ற பெயரில் இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இடையில் முகாமைத்துவத்தில் பல மாற்றங்கள் நடந்திருந்தாலும், நிறுவனத்தின் பெயர் மாற்றப் பட்டிருந்தாலும், அது அமெரிக்கர்கள் கட்டிய தொழிற்சாலை என்ற வரலாற்று உண்மையை மறைக்க முடியாது.
ஸ்டாலின்கிராட் நகரில் டிராக்டர்கள் உற்பத்தி செய்வதற்காக கட்டப் பட்ட தொழிற்சாலை கூட அமெரிக்க தொழில்நுட்ப உதவியால் உருவானது தான். இன்று அது Volgograd Tractor Plant என்று அழைக்கப் படுகின்றது. அமெரிக்காவில் தொழிற்துறை வளாகம் கட்டுவதில் சிறந்து விளங்கிய, பிரபலமான Albert Kahn Associates Inc நிறுவனம் தான் அந்த டிராக்டர் தொழிற்சாலையை கட்டிக் கொடுத்தது. இதற்காக ஆயிரக் கணக்கான அமெரிக்க பொறியியலாளர்கள் தருவிக்கப் பட்டனர். முப்பதுகளில் உற்பத்தியை தொடங்கிய காலத்திலேயே மில்லியன் கணக்கான டிராக்டர்கள் உற்பத்தி செய்யப் பட்டு, சோவியத் நாடு முழுவதும் சேவையில் ஈடுபடுத்தப் பட்டன. இரண்டாம் உலகப்போரில் பெருமளவில் பாதிக்கப் பட்ட கட்டிடங்களில் டிராக்டர் தொழிற்சாலையும் ஒன்று. யுத்தம் முடிந்த பின்னர் மீளக் கட்டியெழுப்ப பட்டு தற்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
சோவியத் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அமெரிக்கர்கள் ஆற்றிய பங்களிப்பு மறைக்கப் பட்ட காரணம் என்ன? இரண்டாம் உலகப்போருக்கு பிந்திய காலத்தில் உருவான பனிப்போர், அமெரிக்காவையும், சோவியத் யூனியனையும் எதிரிகளாக்கி விட்டது. அதற்குப் பின்னர் எதிரி நாட்டுப் பிரஜைகள் தனது நாட்டில் இருப்பதை சோவியத் அரசு வெளிப்படுத்த விரும்பவில்லை. மறுபக்கத்தில், அமெரிக்க அரசு தனது நாட்டுப் பிரஜைகள் சோவியத் யூனியனின் இருந்தனர் என்ற தகவல்கள் முழுவதையும் இருட்டடிப்பு செய்தது. போரினால் பாதிக்கப் பட்ட அமெரிக்கப் பிரஜைகள் தாயகம் திரும்புவதற்கு உதவி கோரி தூதுவராலயத்திற்கு அனுப்பிய கடிதங்கள் கூட உதாசீனம் செய்யப் பட்டன.
இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்பிருந்தே புலம்பெயர்ந்த குடியேறிகளின் நிலைமை மிக மோசமாகி விட்டது. நாடு முழுவதும் நிலவிய போர்ச் சூழல் காரணமாக எல்லோர் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. தேசப் பாதுகாப்பை காரணமாகக் காட்டி நடந்த கைது நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டவரும் தப்பவில்லை. ஒரு சில அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டதும், ஏனையோர் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். மிகக் குறைந்த எண்ணிக்கையினர் மட்டுமே போர் முடிந்த பின்னரும் சோவியத் யூனியனில் தங்கி இருந்தனர்.
பின்குறிப்பு :இந்தக் கட்டுரைக்கான பல ஆதாரங்கள் அமெரிக்க ஊடகவியலாளர் H.R. Knickkerbocker எழுதிய De Roode Handel dreigt எனும் நூலில் இருந்து எடுத்திருக்கிறேன். நெதர்லாந்தில், டச்சு மொழிபெயர்ப்பின் இரண்டாம் பதிப்பாக A.W. Sijthoff’s uitgeversmij n.v. பதிப்பகத்தால் வெளியிடப் பட்டுள்ளது. தற்செயலாக ஒரு பழைய புத்தகக் கடையில் இந்த நூலை வாங்கினேன்.
கலையரசன்
கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.
“தமிழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்கள் இலவசமாய் வழங்க உதவுங்கள் !”என வாசகர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். அதனை ஏற்று, அறிவுடைநம்பி என்ற வாசகர், தஞ்சை குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி மாணவிகளுக்கு 150 புதிய கலாச்சாரம் இதழ்களை அன்பளிப்பாக வழங்க விருப்பம் தெரிவித்திருந்தார்.
இதன்படி, இதயத்தை மீட்பது எப்படி? மற்றும் போர்னோ : இருளில் சிக்கும் இளமை ஆகிய தலைப்பில் வெளிவந்த புதிய கலாச்சாரம் நூல்கள் தலா 50 அனுப்பி வைக்கப்பட்டன. மேற்கண்ட நூல்கள், தஞ்சை பகுதி ம.க.இ.க. தோழர்கள் உதவியுடன் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் விநியோகம் செய்யப்பட்டது. இதில் 20 பிரதிகள் கல்லூரி நூலகத்திற்கும் எஞ்சிய 80 பிரதிகள் மாணவிகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டது. மீதமுள்ள 50 நூல்கள் வரும் மாதத்தில் விநியோகிக்கப்படும்.
1 of 4
நீங்களும் உங்கள் பங்களிப்பாக புதிய கலாச்சாரம் வெளியீடுகளை மாணவர்களுக்கு வழங்குங்கள். நீங்கள் விரும்பிய கல்லூரிகளைத் தெரிவு செய்தும் பணம் அனுப்பலாம். கீழே உள்ள இணைப்பில் முழு விவரங்கள் உள்ளன. ஆதரவு தாருங்கள் !
மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்
₹1,500.00–₹6,000.00Price range: ₹1,500.00 through ₹6,000.00
உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 10
எஞ்சிய குளிர்காலத்தையும் வசந்த காலத் தொடக்கத்தையும் மெரேஸ்யெவ் சிறப்புப் பயிற்சிப் பள்ளியில் கழித்தான்.
விமானிகளின் பெரிய குழு ஒன்று அந்தச் சமயத்தில் புதிதாக விமானப்படையில் சேர்க்கப்பட்டு இருந்த “லா-5″ ரக சோவியத் சண்டை விமானத்தைச் செலுத்துவதற்குச் சிறப்புப் பயிற்சி பெற்று வந்தது. அலெக்ஸேய் மெரேஸ்யெவும் இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டான். பயிற்சி ஆழ்ந்த முறையில் நடந்தது. எஞ்சின், சாமான் பகுதி ஆகியவற்றை விமானிகள் நுணுகி ஆராய்ந்து தேர்ந்தார்கள், இயந்திர நுட்பத்தைப் பயின்றார்கள். தான் இராணுவத்துக்கு வெளியே இருந்த ஒப்பு நோக்கில் குறுகிய காலத்துக்குள் சோவியத் விமானத் தொழில் எவ்வளவு தூரம் முன்னேறிவிட்டது என்று விரிவுரைகளைக் கேட்கையில் அலெக்ஸேய் வியந்தான்.
யுத்த ஆரம்பத்தில் துணிகரப் புதுப்புனையாகத் தோன்றியது இப்போது மீள வகையின்றிப் பழையதாகிவிட்டது. துடியான “லாஸ்தச்கா” விமானங்களும் லேசான “மிக்” விமானங்களும் உயர்வெளிச் சண்டைக்கு ஏற்ப அமைக்கப்பட்டு, யுத்தத்தின் ஆரம்ப நாட்களில் தலைசிறந்த படைப்புக்களாகக் கருதப்பட்டன. அவை இப்போது நீக்கப்பட்டு விட்டன. அவற்றின் இடத்தில் சோவியத் தொழிற்சாலைகளில் யுத்த நாட்களில் உருவமைக்கப்பட்டு நம்பமுடியாத அளவு குறுகிய காலத்தில் பழகிக் கொள்ளப்பட்ட அற்புதமான நவீன ரக “யாக்” விமானங்களையும் “லா-5” விமானங்களையும் இரட்டை இருக்கைகள் கொண்ட “இல்” விமானங்களையும் உற்பத்தி செய்தன. இந்த “இல்” விமானங்கள் பறக்கும் டாங்கிகள். இவை தரையோடு தரையாகத் தாழ்வாகப் பறந்து வெடிகுண்டுகளையும் மெஷின்கன் குண்டுகளையும் பீரங்கிக் குண்டுகளையும் நேரே பகைவரின் தலைகளில் பொழிந்தன. ஜெர்மன் படை இவற்றுக்கு “ஷ்வார்த்ஸேர் தோத்”, அதாவது “கருஞ்சாவு” என்ற திகில் நிறைந்த பெயரிட்டிருந்தது. போரிடும் மக்களின் பேரறிவிலிருந்து உதித்த புது இயந்திரங்கள் விமானப் போரை எல்லையின்றிச் சிக்கல்கள் நிறைந்ததாக ஆக்கியிருந்தன. தனது விமானம் பற்றிய அறிவும் துணிவு நிறைந்த மனோதிடமும் மட்டுமின்றி, போர்க் களத்துக்கு மேலே விரைவாகத் திசையறியவும், விமானப் போரைத் தனித்தனி உறுப்புப் பகுதிகளாகப் பிரித்து அறியவும் தனது சொந்தப் பொறுப்பில் பெரும்பாலும் உத்தரவுக்குக் காத்திராமலே போர்முறைத் தீர்மானங்களை மேற்கொள்ளவும் நிறைவேற்றவும் வல்லமையும் பெற்றிருப்பது இப்போது விமானிக்கு இன்றியமையாததாக இருந்தது.
இவை எல்லாம் அசாதாரண அக்கறைக்கு உரியவைகளாக இருந்தன. ஆனாலும் போர்முனையில் பயங்கரமான தாக்குப் போர்கள் தணியாத உக்கிரத்துடன் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. அத்தகைய சமயத்தில், உயரமான, ஒளி நிறைந்த வகுப்பறையில் வசதியான கறுப்புப் பயிற்சி மேஜையருகே உட்கார்ந்து விரிவுரைகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில் அலெக்ஸேய் போர்க்களம் செல்வதற்கு, சண்டைச் சூழ்நிலைமைக்கு ஆவல் கொண்டு ஏங்கலானான்.
அலெக்ஸேயின் நல்லகாலம், மேஜர் ஸ்த்ருகோவும் அதே பள்ளியில் சிறப்புப் பயிற்சி பெற்று வந்தார். இருவரும் நெடுங்கால நண்பர்கள் என்ற முறையில் சந்தித்து அளவளாவினார்கள். ஸ்த்ருகோவ், அலெக்ஸேய்க்கு இரண்டொரு வாரங்கள் பின்பே பள்ளிக்கு வந்தார். ஆனால் உடனேயே அதன் தனி வகை வாழ்க்கை முறைக்குப் பழகிவிட்டார், போர்காலத்தில் வழக்கமாக எதிர்ப்படாத அதன் கண்டிப்பான சட்ட திட்டங்களுக்குத் தம்மை இசைவித்துக் கொண்டார். எல்லோரும் அவரைத் தம்மவராக மதிக்கலானார்கள். மெரேஸ்யெவின் மனநிலையை அவர் உடனே கண்டுகொண்டார். இரவுக் குளியலுக்குப் பிறகு அவர்கள் தங்கள் தங்கள் உறங்குமிடங்களுக்குச் செல்லுகையில் அவர் அலெக்ஸேயை விலாவில் இடித்து, “ஆத்திரப்படாதே, தம்பீ!. நாம் சேர்ந்து கொள்ளும் முன்பு யுத்தம் முடிந்து விடாது! பெர்லின் வரை முன்னேற இன்னும் எவ்வளவோ பாடுபட்டாக வேண்டுமே. அடி மேல் அடி வைத்து முன் செல்ல வேண்டும்! நாமும் சண்டை செய்வோம். தெவிட்டத் தெவிட்டச் சண்டை செய்வோம்” என்றார்.
மெரேஸ்யெவும் ஸ்த்ருகோவும் இருந்த வகுப்பு விமானிகள் பனிக்கால இறுதியில் பறப்புப் பயிற்சி தொடங்கலானார்கள். குட்டை இறக்கைகளும் சிறு உடலுமாக, வடிவமைப்பில் பறக்கும் மீனை ஒத்திருந்த “லா-5′ விமானத்தை அதற்குமுன்னரே அலெக்ஸேய் நன்கு அறிந்திருந்தான். இடைவேளைகளில் அடிக்கடி விமான நிலையத்துக்குப் போய், இந்த விமானங்கள் குறுகிய ஒட்டத்துக்குப் பின்னே வானில் கிளம்பி செங்குத்தாக உயரே செல்வதையும் இளநீல வயிறுகள் வெயிலில் மினுமினுக்கக் காற்றில் சுழல்வதையும் அவன் பார்ப்பதுண்டு. அவன் விமானத்தின் அருகே சென்று அதை நோட்டமிட்டான், அதன் இறக்கைகளைத் தடவினான், விலாவில் தட்டிக் கொடுத்தான் – ஏதோ அது விமானம் அல்ல போலவும், நன்கு பேணப்பட்ட அழகிய உயர் சாதிப் புரவி போலவும். இதற்குள் பறப்பு தொடங்கும் நேரம் வந்துவிட்டது. ஒவ்வொருவனும் விரைவில் தன் திறைமையைச் சோதித்துப் பார்க்க ஆசைப்பட்டான். இதற்காக வெளித் தெரியாத சச்சரவு தொடங்கிற்று. பயிற்சி ஆசிரியர் முதலில் ஸ்த்ருகோவை அழைத்தார். மேஜர் ஸ்த்ருகோவின் கண்கள் ஒளி வீசின. அவர் குறும்புப் புன்னகை புரிந்தார், இன்பக் கிளர்ச்சியுடன் சீழ்கையடித்தவாறே பாராஷூட் வார்களை இறுக்கிக் கொண்டு விமானி அறைக் கதவைச் சாத்தினார்.
பின்பு எஞ்சின் பயங்கரமாக இரைந்தது, விமானம் இடம் பெயர்ந்தது. இதோ அது வானவில் நிறங்களில் வெயிலில் பெருகிய வெண்பனித் துகள் படலத்தை வால்போலப் பின்னேவிட்டவாறு விமானத் திடலில் ஓடியது. அப்புறம் மேலே எழும்பி, இறக்கைகள் சூரிய கிரணங்கள் பட்டு மினுமினுக்க ஆகாயத்தில் தொங்கியது. ஸ்த்ருகோவ் விமான நிலையத்துக்கு மேலே நேர்க்குத்தான வில் வடிவக் கோடு வரைந்தார், சில அழகிய வளையங்கள் செய்தார், இறக்கைகள் கீழ்மேலாகும்படிப் புரண்டார், திட்டமிட்ட பயிற்சிக் கோவையின் எல்லா அம்சங்களையும் சிறந்த தேர்ச்சியுடன், உண்மையான கலையழகு திகழச் செய்துமுடித்தார், பார்வையிலிருந்து மறைந்தார், பின்பு திடீரெனப் பள்ளிக் கட்டிட முகட்டின் பின்னேயிருந்து வெளிப்பட்டு, எஞ்சின் இரைந்தொலிக்க, தொடங்கிடத்தில் காத்திருந்தவர்களின் தொப்பிகளை நசுக்கிவிடுபவர் போல அவ்வளவு தாழ்வாக முழுவேகத்துடன் விமானத் திடல் மேலே பாய்ந்து சென்றார். மறுபடி பார்வையிலிருந்து மறைந்தவர் மீண்டும் தென்பட்டுத் திண்ணமாகக் கீழிறங்கி உயரிய திறமையுடன் முப்புள்ளியிடத்தில் விமானத்தை இறக்கி நிறுத்தினார். குறும்பு செய்ய வாய்த்த சிறுவன் போன்று கிளர்ச்சி பொங்க, களி துள்ளியவாறு, இன்ப வெறியுடன் விமானி அறையிலிருந்து குதித்தார் ஸ்த்ருகோவ்.
விமானம் உண்மையிலேயே அருமையானது என்பதில் எல்லோரும் ஒருமனதாயிருந்தார்கள். அப்புறம் மெரேஸ்யெவின் முறை வந்தது. இயக்கு நெம்படிகளுடன் பொய்க்கால்களை வார்களால் இறுக்கிக் கொண்டு வானில் கிளம்பியதுமே இந்தக் குதிரையை கால்கள் அற்றவனான தன்னால் சமாளிக்க முடியும். ஆனால் அது அளவுக்கு மேல் துடியானது என்றும் இதனிடம் விசேஷ எச்சரிக்கை கடைபிடிப்பது அவசியம் என்றும் அவன் உணர்ந்தான்.
தரையிலிருந்து மேலே எழும்புகையில், வழக்கம் போல விமானத்துடன் அற்புதமான, முழுமையான தொடர்பை அவன் உணரவில்லை. பறப்பின் இன்பத்தைத் தருவதோ, இந்தத் தொடர்பு தான். இந்த விமானம் சிறந்த அமைப்பு. ஒவ்வொரு அசைவையும் மட்டுமே அல்ல, சுக்கான்கள் மீதிருந்த கைகளின் நடுக்கத்தையும் கூட விமானம் உணர்ந்து வானில் அதற்கேற்ற இயக்கத்தை வெளிப்படுத்தியது. விமானியின் செயல்பாட்டுக்கு ஏற்பச் செயல்படும் பாங்கில் அது உண்மையிலேயே பிடில் வாத்தியத்தை ஒத்திருந்தது. ஆனால் தனது கால்களின் இழப்பின் ஈடுசெய்ய முடியாமை, தனது பொய்க்கால்களின் பாங்கின்மை, அலெக்ஸேய்க்கு இப்பொழுது தான் சுள்ளென உறைத்தது. இந்த விமானத்தை இயக்குவதில் பொய்க்கால் – அது எல்லாவற்றிலும் சிறந்ததாயிருப்பினும், எவ்வளவு நிறையப் பயிற்சி செய்த போதிலும் – உயிரும் உணர்வும் மீள் விசையும் உள்ள நிஜக்காலுக்கு மாற்று ஆக முடியாது என்பதை அவன் புரிந்து கொண்டான்.
விமானம் இலேசாகவும் பிகுவுடனும் காற்றைத் துளைத்துச் சென்றது. இயக்கு நெம்படிகளின் ஒவ்வொரு அசைவுக்கும் ஏற்ப நன்கு செயல்பட்டது. ஆயினும் அலெக்ஸேய் அதை இயக்குவதற்கு அஞ்சினான். நேர்க்குத்தான வளையங்களில் கால்கள் தாமதித்து விடுவதையும் விமானிக்கு ஒரு வகை மறிவினை போலப் பழக்கமாகிவிடுகிற முரணற்ற ஒத்திசையை தாம் பெற முடியவில்லை என்பதையும் அவன் கண்டான். இந்தத் தாமதத்தின் விளைவாக நுண்செயலுள்ள விமானம் பம்பரம் போலச் சுழலத் தொடங்கக் கூடும், ஆபத்து நேரக்கூடும். தளை பூட்டப்பட்ட குதிரைப் போல உணர்ந்தான் அலெக்ஸேய். அவன் பயங்கொள்ளி அல்ல. தன் உயிருக்காக அவன் நடுங்கவில்லை. பாராஷூட்டைக் கூடச் சரிபார்த்துக் கொள்ளாமல் அவன் விமானத்தில் கிளம்பியிருந்தான். ஆனால் தனது அற்ப அஜாக்கிரதை கூடத் தனக்குச் சண்டை விமானப் படையிலிருந்து சீட்டைக் கிழித்து விடும், தனது பற்றுக்குரிய வேலையை அடையும் வழியை மூடிவிடும் என்பதனாலேயே அவன் பயந்தான். இரு மடங்கு ஜாக்கிரதையுடன் மனஞ்சோர்ந்த நிலையில் விமானத்தைத் தரையில் இறக்கினான். கால்களின் வளையாமை காரணமாக அவன் பிரேக்கைச் சட்டெனப் போட்டு விடவே விமானம் வெண்பனி மீது சில தடவைகள் பாங்கின்றி எகிறிக் குதித்தது.
பேசா வாயனாய், முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு விமானத்திலிருந்து இறங்கினான் அலெக்ஸேய். தோழர்களும் ஆசிரியருமே கூட, மெய்ப்புக்கு நடித்தவாறு போட்டி போட்டுக் கொண்டு அவனைப் புகழவும் வாழ்த்தவும் தலைப்பட்டார்கள். இந்தத் தயவு அலெக்ஸேயின் மனத்தைப் புண்படுத்த மட்டுமே செய்தது. இப்போது, சண்டை விமானத்தில் ஏறி அமர்ந்த பிறகு, தான் லாயக்கற்றவன் என்று காட்டிக் கொண்டது, அவனது அடிபட்ட விமானம் பைன் மரமுடிகளில் மோதி நொறுக்கிய அந்த மார்ச் மாதக் காலைக்குப் பிறகு யாவற்றிலும் கொடிய விபத்தாக இருந்தது. அலெக்ஸேய் பகலுணவு கொள்ளவில்லை. இரவுச் சாப்பாட்டுக்கும் வரவில்லை. பகல் வேளைகளில் தூங்கும் அறைகளில் இருப்பது பயிற்சிப் பள்ளி விதிகளின் படிக் கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டிருந்தது. எனினும் அவன் கைகளைத் தலைக்குகீழே வைத்தவாறு, பூட்சுகளைக் கழற்றாமலே கட்டிலில் படுத்துக் கிடந்தான். அவனது துயரத்தை அறிந்திருந்த பள்ளி முறையதிகாரிக்கோ, வழியே சென்ற கமாண்டர்களுக்கோ அவனைக் கடிந்து கொள்ள மனம் வரவில்லை. ஸ்த்ருகோவ் வந்து பேச்சுக் கொடுக்க முயன்றார். பதிலொன்றும் கிடைக்காமல் அனுதாபத்துடன் தலையை ஆட்டிவிட்டுப் போய்விட்டார்.
ஸ்த்ருகோவ் போனதுமே, அனேகமாக அவரைத் தொடர்ந்தாற்போல, மெரேஸ்யெவ் படுத்திருந்த அறைக்குள் வந்தார் லெப்டினன்ட் கர்னல் கப்பூஸ்தின். இவர் பயிற்சிப் பள்ளியின் அரசியல் துணைத் தலைவர். குட்டையான, பாங்கற்ற உடலைமைப்புள்ளவர் இவர். பருத்த மூக்குக் கண்ணாடி போட்டிருப்பார். நன்கு பொருந்தும் படி சரிப்படுத்ததப்படாத, சாக்கு மூட்டைப் போன்ற இராணுவச் சீருடை அணிந்திருப்பார். வெளித் தோற்றத்தில் பாங்கற்ற இதே மனிதர் சர்வதேச பிரச்சனைகள் பற்றி விரிவுரைகள் ஆற்றும்போது, ஒரு மாபெரும் யுத்தத்தில் பங்கெடுத்துக் கொள்வது குறித்துக் கேட்போரின் உள்ளங்கள் பெருமையால் பூரிக்கும்படி செய்துவிடுவார். எனவே இவருடைய விரிவுரைகளை மாணவர்கள் விருப்புடன் கேட்பார்கள். ஆனால் தலைமையதிகாரி என்ற வகையில் இவரை அவர்கள் அவ்வளவாக மதிப்பதில்லை. இவர் இராணுவச் சார்பற்றவர், விமானப்படைக்கு தற்செயலாக வந்திருப்பவர், விமானப் பறப்பு பற்றி எதுவும் புரியாதவர் என்ற எண்ணமே இதற்குக் காரணம். மெரேஸ்யெவைக் கவனிக்காமலே கப்பூஸ்தின் அந்த அறையைச் சுற்றிக் கண்ணோட்டினார், காற்றை முகர்ந்து பார்த்தார். திடீரெனக் கோபங்கொண்டார்.
“யார் அவன் இங்கே சிகரெட்டுக் குடித்தவன்? அதற்காகத்தான் புகைக்கும் அறைகள் இருக்கின்றனவே. தோழர் சீனியர் லெப்டினன்ட், இதற்கு என்ன அர்த்தம்?” என்றார்.
“நான் புகை பிடிப்பதில்லை” என்று கிடையை மாற்றாமலே ஏனோ தானோவென்று பதில் சொன்னான் அலெக்ஸேய்.
“ஆமாம் கட்டிலில் நீங்கள் எதற்காகப் படுத்திருக்கிறீர்கள்? விதிகள் உங்களுக்குத் தெரியாதா? பெரிய அதிகாரி வந்த போது நீங்கள் ஏன் எழுந்திருக்கவில்லை?… எழுந்து நில்லுங்கள்.”
இது கட்டளை அல்ல. மாறாக, இது நயப்பாங்குடன், அமைதியாகக் கூறப்பட்டது. எனினும் அலெக்ஸேய் சோர்வுடன் அதற்குக் கீழ்படிந்து கட்டிலின் பக்கத்தில் எழுந்து நின்றான்.
ரவுண்டப் புற்றுநோயை ஏற்படுத்தும் – அம்பலப்படுத்திய ஆராய்ச்சியாளர்களை ஒடுக்கும் மான்சாண்டோ
உலகின் மிகப்பெரிய வேளாண் வேதியியல் நிறுவனமான மான்சான்டோவின் தயாரிப்புகள் புற்றுநோயை உருவாக்குவதாக கூறிய ஆய்வாளர்களுக்கு எதிராக ஒரு முழுமையான போரினை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. அரசாங்கத்தையும் ஊடகங்களையும் கைக்குள் போட்டுக்கொண்டு தன்னுடைய தயாரிப்புகளுக்கு எவ்வித சிக்கலும் ஏற்படாமல் ஏமாற்றி வருகிறது என்பதை சமீபத்தில் வெளியான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
மான்சாண்டோ நிறுவனத்தின் களைக் கொல்லி. (மாதிரிப்படம்)
உலக சுகாதார நிறுவன புற்றுநோய் ஆராய்ச்சி பிரிவான சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையம் 2015-ம் ஆண்டு மான்சான்டோவின் புகழ்பெற்ற களைக்கொல்லியான ரவுண்டப், மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்குகிறது என்பதைக் கண்டறிந்தது. தொடர்ந்து அதற்கு எதிராக பல்வேறு தளங்களில் மான்சாண்டோ நிறுவனம் பரப்புரை செய்து வருகிறது என்பதை அதற்கெதிரான பல்லாயிரக்கணக்கான வழக்குகளின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
‘ரவுண்டப்’ களைக்கொல்லியில் உள்ள கிளைபோசேட் என்ற வேதிப் பொருள் புற்றுநோயை உண்டாக்குகிறது என்பதை ஐ.ஏ.ஆர்.சி (IARC)கண்டறிந்தது.
ஐ.ஏ.ஆர்.சி.-யின் ஆய்வுகளை தவறு என்று கூறவும் கிளைபோசேட்டிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவும் அரசாங்கத்திற்கு எந்த அளவிற்கு நெருக்கடியை மான்சான்டோ கொடுத்தது என்பதை நிறுவனத்திற்குள் பரிமாறிக்கொள்ளப்பட்ட மின்னஞ்சல்கள், நிறுவன கோப்புகள் மற்றும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆவணங்களை ‘தி இண்டெர்செப்ட்’ இணையதளம் முதலில் வெளிக்கொணர்ந்தது.
அரசாங்கத்தை வளைத்தல் :
நிறுவனத்திற்கு சாதகமான முடிவை எடுக்க அமெரிக்க அரசாங்கத்தை அணுகப்போவதாக ஒரு ஆவணம் கூறுகிறது. முதலில் ‘ஐ.ஏ.ஆர்.சி’-யை அணுகி கிளைபோசேட் குறித்து தெளிவுப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்த திட்டத்தை வகுத்தது. மேலும் அதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம், வேளாண்மைத் துறை, அமெரிக்க வர்த்தக பிரதிநிதியின் அலுவலகம், வெளியுறவுத்துறை, சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் திணைக்களம் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகியோர்களை தனக்கு சாதகமாக மாற்றியது குறித்தும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இன்னொரு மின்னஞ்சல் பரிமாற்றத்தின் படி, ஐ.ஏ.ஆர்.சி. -யின் ஆய்வினை முறியடிக்க கிளைபோசேட்டிற்கு ஆதரவாக ஊடகங்களில் விளம்பரங்கள் மற்றும் கருத்துரையாடல்களையும் மான்சாண்டொ வெளியிட்டது.
மான்சாண்டோவிடம் இருந்து ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள். ஐரோப்பாவில் நடந்த போராட்டக் காட்சி விளக்கம்.
மேலும் கூலிக்கு ஆட்களை அமர்த்தி ஒரு கடிதத்தை எழுதச் செய்து அதை காங்கிரஸ் உறுப்பினரான ராப் அடெர்ஹோல்ட் (R-AL) பெயரில் பொது சுகாதார ஆராய்ச்சி நிறுவனமும் ஐ.ஏ.ஆர்.சி. -யின் மிகப்பெரிய புரவலருமான தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) தலைவருக்கு அனுப்புவதற்கு திட்டமிட்டது. அந்த கடிதத்தில் கிளைபோசேட் விவகாரத்தில் சரியான முடிவு எடுக்காவிட்டால் என்.ஐ.எச் -க்கான நிதி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று எச்சரிக்கவும் திட்டமிடப்பட்டது.
மேலும் காங்கிரசு உறுப்பினர்களான ஜேசன் சாஃபெட்ஸ் (R-UT), ட்ரே கவுடி (R-SC) மற்றும் லாமர் ஸ்மித் (R-TX, இப்போது ஓய்வு பெற்றவர்) மற்றும் காங்கிரஸ் மேற்பார்வை மற்றும் அறிவியல் குழுக்களில் உள்ள குடியரசுக் கட்சி உறுப்பினர்களுடன் ஐ.ஏ.ஆர்.சிக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தொடர்ந்து ஒருங்கிணைப்பில் ஈடுபட்டது.
அது மட்டுமல்லாமல் கிளைபோசேட் பிரச்சினையில் கேள்வி எழுப்புவதற்கென்றே ஒரு முழுக்குழு கூட்டத்தையும் ஹவுஸ் சயின்ஸ் குழுத்தலைவராக ஸ்மித் அர்ப்பணித்தார். அதன் பின்னர் “ஐ.ஏ.ஆர்.சி ஆய்விலுள்ள குறைபாடுகளை சரிசெய்ய” வலியுறுத்தி நோர்வேயிலுள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு கடிதங்களை அனுப்பினார்.
வாஷிங்டன் மாநில சட்டமியற்றுபவர்களைக் (Washington State Legislature) கண்காணிக்கவும், அவர்களுடன் ஆலோசனை செய்யவும் இங்கிலாந்தின் தனியார் உளவுத்துறை அமைப்பான ஹக்லுய்ட்டுடன் மான்சாண்டொ ஒப்பந்தம் செய்ததாக இரண்டாவது ஆவண தொகுப்பு அம்பலப்படுத்தியிருக்கிறது. எவ்வித கூடுதல் கட்டுப்பாடும் மான்சாண்டோ மீது விதிக்கப்படாது என்று வெள்ளை மாளிகை அரசியல் ஆலோசகர் ஹக்லுய்ட்டிற்கு உறுதியளித்திருக்கிறார்.
சமீபத்தில் ‘தி கார்டியன்’ பத்திரிகைக்கு கிடைத்த ஆவணங்களின் படி காங்கிரஸை வளைப்பதையும் தாண்டி கிளைபோசேட்டின் ஆபத்துக்கள் குறித்து தகவல் வெளியிடும் பத்திரிகையாளர்கள், ஆர்வலர்களை கண்கானிக்க இணைவு மையத்தை (fusion center) ஏற்படுத்தியது மான்சண்டோவின் அரசியல் மற்றும் பொருளாதார வல்லமையை காட்டுகிறது.
சான்றாக, மன்சண்டோவை அம்பலப்படுத்தி “ஏமாற்று வேலை: ஒரு களைக்கொல்லி, புற்றுநோய் மற்றும் விஞ்ஞானத்தின் ஊழல் பற்றிய கதை – Whitewash: The Story of a Weed Killer, Cancer, and the Corruption of Science” என்ற தலைப்பில் பத்திரிகையாளார் கேரி கில்லாம் (Carey Gillam) 2017-ம் ஆண்டில் ஒரு நூலை எழுதியிருந்தார். அதை எதிர்கொள்ள அந்த நூல் குறித்து மோசமான விமர்சனங்களை வைப்பதற்கான நடவடிக்கைகளையும் அது மேற்கொண்டது. “கேரி கில்லாம் நூல்” என்ற தலைப்பில் அவரது நூலிற்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமான 20 வகையான நடவடிக்கைகளை பட்டியலிட்டு அதை மான்சாண்டோ பராமரித்தது குறிப்பிடத்தக்கது.
பத்திரிக்கையாளர் கேரி கில்லாம்
மேலும் கூகிள் நிறுவனத்திற்கு பணத்தை வாரியிறைத்து கில்லாமின் நூலை குறித்த மோசமான விமர்சனங்களை கூகிள் தேடு பொறியில் வருமாறு மான்சாண்டோ செய்தது. “மான்சாண்டோவிற்கு என்னுடைய நூலை பிடிக்காது என்பதும், எனக்கும் பதிப்பாளர்களுக்கும் அழுத்தம் கொடுத்து காலி செய்ய அது வேலை பார்த்தது என்பது எனக்கு எப்போதுமே தெரியும். ஆனால் பழி வாங்க இவ்வளவு பணத்தையும், நேரத்தையும், பலத்தையும் இவ்வளவு பெரிய நிறுவனம் செலவிடும் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இது மலைப்பூட்டுவதாக இருக்கிறது” என்றார் கில்லாம்.
டிவிட்டர் செயல்பாட்டாளரும், இசையமைப்பாளரும், நீண்ட நாட்களாக மாண்சண்டோவை விமர்சனம் செய்து வருபவரான நீல் யங்கையும் தொடர்ந்து அருகிலிருந்து இணைவு மையம் கண்காணித்து வந்தது. மேலும் அவரது பாடல் வரிகளையும் கூட அது ஆய்வு செய்தது.
மான்சண்டோவின் ‘ரவுண்டப்’ மற்றும் ‘ரேஞ்சர் ப்ரோ’ ஆகிய இரண்டு களைக்கொல்லிகளை பயன்படுத்தியதால் டிவெய்ன் ஜான்சன் என்ற அமெரிக்கருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. தொடர்ந்து நடத்திய வழக்கில் அவருக்கு 289 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று 2018, ஆகஸ்டு மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. புற்றுநோய்க்கான அறிகுறிகளை பார்த்தப்பிறகு மான்சண்டோவிடம் அவர் விளக்கம் கேட்டதற்கு அந்நிறுவனம் பதிலேதும் கூறவில்லை. ஆனால் அது புற்றுநோயை ஏற்படுத்தும் என்று நிறுவனத்திற்குள் நடந்த மின்னஞ்சல் பரிமாற்றங்கள் கூறுகின்றன. இப்போது வாழ்நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் ஜான்சனுக்கு முன்னரே இந்த தகவலை சொல்லியிருந்தால் அவர் மருத்துவம் பார்த்து புற்றுநோயை சரி செய்திருக்க முடியும்.
மான்சண்டோவின் மீது இதுபோன்று பல்லாயிரக்கணக்கான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவற்றில் ஜான்சன் போன்று விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருக்கு தற்காலிக வெற்றி கிடைத்திருக்கலாம். “வழக்கில் வெற்றிப்பெற்று விட்டேன். ஆனால் இழப்பீடு கிடைக்கும் வரை நான் உயிருடன் இருப்பேனா என்பது எனக்கு தெரியவில்லை” என்று டிவெய்ன் ஜான்சன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.ஆர்.சி.-யின் ஆய்வின் அடிப்படையில் ஃப்ரான்ஸில் மட்டுமே மான்சண்டோவின் ‘ரவுண்டப்’ தடை செய்யப்பட்டுள்ளது. தவறான விளம்பரங்கள் செய்வது, தவறான பரிசோதனை முடிவுகளை வெளியிடுவது, தன்னை அம்பலப்படுத்துபவர்களை பழி வாங்குவது என அதன் கொடூரமான முகம் தொடர்ந்து அம்பலப்படுத்தப்பட்டாலும் அரசாங்கங்களையும் ஊடகங்களையும் விலை பேசியோ, மிரட்டியோ அது தொடர்ந்து அடிபணிய வைக்கிறது.