பிஸியோகிராட்டுகள் தமது கொள்கையின் முதலாளித்துவ உள்ளடக்கத்தை நிலப்பிரபுத்துவ உடைகளைக் கொண்டு மறைத்துக் கொண்டது அந்தக் கொள்கையின் ஒரு கூறாகும். நிகரப் பொருளின் மீது மட்டுமே வரி விதிக்கப்பட வேண்டுமென்று கெனே விரும்பினார்; எனினும் அவர் பிரதானமாக ஆட்சியிலிருப்பவர்களின் நல்லெண்ணத்துக்கு வேண்டுகோள் விடுத்தார், நிலவரியின் மூலம் அதிகமான வருமானம் கிடைக்கும், அதிக வலுவான நிலப்பிரபுக்கள் ஏற்படுவார்கள் என்று அவர்களிடம் உறுதியாகக் கூறினார்.
அவருடைய ”தந்திரம்” பெருமளவுக்கு வெற்றியடைந்தது. அன்று ஆட்சியை வகித்தவர்களுடைய குருட்டுத்தனம் மட்டும் அதற்குக் காரணமல்ல; முதலாளித்துவச் சீர்திருத்தங்களின் மூலமாகத்தான் நிலப்பிரபுக்களை உண்மையிலேயே காப்பாற்ற முடியும் என்பதே அதற்குக் காரணம். இத்தகைய சீர்திருத்தங்கள் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டிருந்தன; ஆனால் அந்தச் சூழ்நிலைகள் வேறு விதமானவை என்பது உண்மையே. ஆனால் டாக்டர் கெனே இந்தக் கசப்பான மருந்தில் இனிப்பைச் சேர்த்து அழகான காகிதத்தைச் சுற்றி அதை மறைத்துக் கொடுத்தார்!
ஆரம்ப வருடங்களில் பிஸியோகிராட்டிய மரபு மிக அதிகமான வெற்றியைப் பெற்றது. கோமகன்களும் மார்கீஸ்களும் அதற்கு ஆதரவு கொடுத்தார்கள், அந்நிய நாடுகளைச் சேர்ந்த அரசர்களும் அதைப் பற்றி அக்கறை எடுத்துக் கொண்டார்கள். அதே சமயத்தில் டிட்ரோ உட்பட அறிவியக்கத்தைச் சேர்ந்த தத்துவஞானிகளும் அதை உயர்வானதாகக் கருதினார்கள். மேல் வர்க்கத்தைச் சேர்ந்த சிந்திக்கக் கூடியவர்கள், வளர்ச்சியடைந்து வருகின்ற முதலாளி வர்க்கம் ஆகிய இருவரது ஆதரவும் தங்களுக்குக் கிடைக்குமாறு செய்வதில் பிஸியோகிராட்டுகள் முதலில் வெற்றியடைந்தார்கள்.
அறுபதுக்களிலிருந்து பொறுக்கியெடுக்கப் பட்ட சிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட வெர்சேய் ”மாடியறை மன்றம்” தவிர பாரிஸ் நகரத்தில் மார்கீஸ் மிரா போவின் மாளிகையில் பொதுமக்கள் கலந்து கொள்ளக் கூடிய பிஸியோகிராட்டிய நிலையமும் ஆரம்பிக்கப்பட்டது. இங்கே கெனேயின் சீடர்கள் (அவர் எப்பொழுதாவது அபூர்வமாகவே வருவார்) தங்களுடைய ஆசானின் கருத்துக்களை விளக்கிக் கூறுவதிலும் பரப்புவதிலும் ஈடுபட்டிருந்தார்கள்; புதிய ஆதரவாளர்களைத் திரட்டினார்கள், பிஸியோகிராட்டுகள் குழுவில் மிக முக்கியமான சிலரில் டுபோன் டெ நெமூர் என்ற இளைஞர் இருந்தார்; (1)இவரோடு லெமெர்ஸியே டெ லா ரிவியேர் மற்றும் கெனேயின் மிக நெருங்கிய நண்பர்கள் சிலரும் உண்டு. இந்த சிலரைச் சுற்றி கெனேயுடன் அவ்வளவு நெருக்கம் இல்லாதிருக்கின்ற குழு உறுப்பினர்களும் பலவிதமான அனுதாபிகளும் ஆதரவாளர்களும் இருந்தனர்.
இவர்கள் மத்தியில் டியுர்கோ சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தார். அவர் பகுதியளவுக்கு பிஸியோகிராட்டுகளைச் சேர்ந்தவர்; ஆனால் ஆசானுடைய சார்பில் பேசுபவராக மட்டுமே அவரைக் கருத முடியாத அளவுக்கு சிறப்பும் சுதந்திரமும் கொண்ட சிந்தனையாளராக இருந்தார். கெனேயின் அமைப்பு கட்டிறுக்கமாக இருந்தபடியால் டியுர்கோவால் கூட அதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது பிஸியோகிராட்டிய மரபையும் அதன் தலைவரையும் வேறு விதமாகப் பார்க்குமாறு நம்மை நிர்ப்பந்திக்கிறது.
கெனேயின் மாணவர்களின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும், தங்களது ஆசானிடம் அவர்கள் கொண்டிருந்த வரம்பற்ற பக்தியும் நமது மதிப்பைத் தூண்டுவது இயற்கையானதே. ஆனால் காலப்போக்கில் இதுவே இந்த மரபின் பலவீனமாக மாறியது. கெனேயின் கருத்துக்களை – அவருடைய வாக்கியங்களைக் கூட அப்படியே – திருப்பிச் சொல்லுவதும் விளக்கி எழுதுவதுமே அவர்களுடைய நடவடிக்கையாக இருந்தது. அவருடைய கருத்துக்கள் வறட்டுத்தனமான சூத்திரங்களாக மென்மேலும் இறுகிப் போய்விட்டன. மிராபோவின் மாளிகையில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை மாலையில் நடைபெற்ற கூட்டங்களில் புதிய சிந்தனையும் விவாதமும் நடைபெறுவதற்குப் பதிலாக ஆராதனைச் சடங்குகள் மென்மேலும் அதிகரித்தன. பிஸியோகிரஸி ஒரு வகையான மதமாக மாறிக் கொண்டிருந்தது, மிரா போவின் மாளிகை அதை வழிபடும் ஆலயமாக, செவ்வாய்க் கிழமை மாலைகள் பிரார்த்தனை நேரமாக மாறின.
ஒத்த கருத்துடையவர்களின் குழுவாக முன்பு இருந்த அமைப்பு இப்பொழுது கண்டிப்பான வறட்டுச் சூத்திரத்தில் வெறித்தனமான நம்பிக்கை கொண்டவர்களின் கோஷ்டியாக மாறியது; தங்களிடமிருந்து மாறுபட்ட கருத்துக்கள் அனைத்தையும் அவர்கள் நிராகரித்தார்கள். பிஸியோகிராட்டுகளின் புத்தகங்களை வெளியிடுகின்ற பொறுப்பு டுபோனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அவர் தன்னிடம் வந்த ஒவ்வொரு பிரசுரத்திலும் பிஸியோக்ரஸிக்கு அழுத்தம் கொடுத்துத் “திருத்தி வெளியிட்டார்”. அவர் கெனேயைக் காட்டிலும் உயர்ந்த பிஸியோகிராட்டாகத் தன்னைக் கருதிக் கொண்டதும் கெனேயின் ஆரம்ப நூல்களை வெளியிடுவதற்கு மறுத்ததும் வேடிக்கையானதே (அவற்றை எழுதிய காலத்தில் கெனே இன்னும் சரியான பிஸியோகிராட்டாக இருக்கவில்லை என்று டுபோன் கருதினார்).
கெனேயின் குணாம்சத்தில் இருந்த சில கூறுகள் இத்தகைய நிலைமைகள் ஏற்படுவதற்கு உதவி செய்தன. டி. ரோஸென்பெர்க் தம்முடைய அரசியல் பொருளாதாரத்தின் வரலாறு என்ற புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார்:
“அரசியல் பொருளாதாரத்தைப் படைத்தவர் என்ற பெருமையை கெனே வில்லியம் பெட்டியோடு பகிர்ந்து கொள்கிறார்; ஆனால் அவர் பெட்டியைப் போன்றிருக்கவில்லை. கெனே அசைக்க முடியாத கோட்பாடுகளைக் கொண்டவர்; அவர் வறட்டுச் சூத்திரவாதத்திலும் வறட்டுக் கோட்பாட்டுவாதத்திலும் அதிகமான நம்பிக்கை வைக்கத் தயாராக இருந்தார்” (2) கால வளர்ச்சியில் இந்தப் போக்கு இன்னும் அதிகரித்தது; தம் குழுவினரின் பக்தியும் இதை ஊக்குவித்தது. புதிய விஞ்ஞானத்தின் கருத்துக்கள் “சுயமாகவே தெளிவானவை” என்று அவர் நம்பியதனால், மற்ற கருத்துக்களை அவர் சகித்துக் கொள்ளவில்லை; அவருடைய குழுவினரும் அவரிடமிருந்த இந்தப் போக்கை அதிகமான அளவுக்கு பலப்படுத்தினார்கள். தன்னுடைய போதனை – காலம், இடம், நிலைமைகள் என்ற கட்டுப்பாடுகளை மீறி – எக்காலத்துக்கும் உரியவை என்று கெனே உறுதியாக நம்பினார்.
பிரான்சுவா கெனே
அவரிடமிருந்த அடக்கம் சிறிதும் குறைந்து விடவில்லை, அவர் புகழைத் தேடவில்லை; ஆனால் புகழ் அவரைத் தேடி வந்தது. அவர் தன்னுடைய சீடர்களைக் குறைவாக மதிக்கவில்லை; ஆனால் அவர்களே தங்களைக் குறைவாக மதித்துக் கொண்டார்கள். தன்னுடைய வாழ்க்கையின் கடைசி வருடங்களில் கெனே சகித்துக் கொள்ள முடியாத அளவுக்குப் பிடிவாதம் உடையவரானார். அவர் தன்னுடைய எழுபத்தாறாம் வயதில் கணித ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்; வடிவியல் கணிதத்தில் தான் மாபெரும் கண்டுபிடிப்புகளைச் செய்திருப்பதாக அவர் நம்பினார். இந்தக் கண்டு பிடிப்புகள் அத்தனையும் குப்பையென்று அலம்பேர் கருதினார்.
இந்தக் கருத்துக்களை அவர் எடுத்துக் கூறிய புத்தகத்தை வெளியிட வேண்டாம், அவ்வாறு வெளியிட்டால் நகைப்புக்கு ஆளாக நேரிடும் என்று அவருடைய நண்பர்கள் வயோதிகரான கெனேயிடம் ஏகமனதாக எடுத்துச் சொன்னார்கள்; அதை வெளியிடுவதைத் தடுப்பதற்கு எல்லா முயற்சி களையும் செய்தார்கள். ஆனால் பலனில்லை. 1773-ம் வருடத்தில் அந்தப் புத்தகம் வெளியிடப்பட்ட பொழுது டியுர்கோ அதிகமாக வேதனைப்பட்டார். ”எல்லாவிதமான அதிர்ச்சிகளையும் ஒழிக்கின்ற அதிர்ச்சி இது. சூரியன் தன் ஒளியை இழந்துவிட்டது” என்று அவர் கூறினார். இதற்குப் பதில் கூறுவதற்கு ஒரு ருஷ்யப் பழமொழியை உபயோகிக்கலாம்: சூரியனிடமும் கரும்புள்ளிகள் உண்டு.
1774-ம் வருடம் டிசம்பர் மாதத்தில் கெனே வெர்சேயில் மரணமடைந்தார். அவர் காலி செய்த இடத்தை நிரப்புவதற்கு ஒருவரைக் கண்டு பிடிக்க பிஸியோகிராட்டுகளால் முடியவில்லை. மேலும் அதற்கு முன்பாகவே அவர்களுக்கு அதிகமான வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. 1774-1776-ம் வருடங்களில் டியுர்கோ பதவி வகித்த காலத்தில் அவர்களுடைய நம்பிக்கைகளும் நடவடிக்கைகளும் புத்துயிர் பெற்றன; ஆனால் அவர் பதவியிலிருந்து ஓய்வு கொடுக்கப் பட்ட பொழுது அவர்கள் பலமாக அடிவாங்கியது போல உணர்ந்தனர். உண்மையைச் சொல்வதென்றால் இது பிஸியோகிராட்டுகளின் முடிவாக இருந்தது.
மேலும் 1776-ம் வருடத்தில் ஆடம் ஸ்மித் எழுதிய நாடுகளின் செல்வம் என்ற புத்தகம் வெளிவந்தது. இவர்களுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பிரெஞ்சுப் பொருளியலாளர்கள் – ஸிஸ்மான்டி, ஸேய், முதலியோர் – பிஸியோகிராட்டுகளுக்குப் பதிலாக ஸ்மித்தை நோக்கித் திரும்பினார்கள். 1815ம் வருடத்தில் வயோதிகரான டுபோன் ஸேய்க்கு எழுதிய கடிதத்தில், கெனேயின் பாலைக் குடித்து வளர்ந்துவிட்டு இப்பொழுது “பாலூட்டிய செவிலியை” ஒதுக்குவதாகக் குறை கூறினார். கெனேயின் பாலைக் குடித்த பிறகு நான் அதிகமான ரொட்டியும் இறைச்சியும் சாப்பிட்டு வளர்ந்திருக்கிறேன், அதாவது ஸ்மித்தையும் மற்ற புதிய பொருளாதார நிபுணர்களையும் படித்து வளர்ந்திருக்கிறேன் என்று ஸேய் அவருக்குப் பதிலளித்தார்.
18-ம் நூற்றாண்டின் எழுபதுக்களில் பிஸியோகிராட்டுகளின் வீழ்ச்சிக்கு அவர்களுடைய குறைபாடுகள் மட்டும் காரணமென்று சொல்ல முடியாது. அவர்கள் மிகவும் கூர்மையாக விமர்சிக்கப்பட்டார்கள், எல்லாத் திசைகளிலிருந்தும் இப்படி விமர்சனங்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். அரசவையில் அவர்களுக்கிருந்த ஆதரவு போனதும் பிற்போக்குத்தனமான நிலப்பிரபுத்துவ சக்திகள் அவர்களைக் குறிவைத்துத் தாக்கின. அதே சமயத்தில் அறிவியக்கத்தின் இடதுசாரி அணியைச் சேர்ந்த எழுத்தாளர்களும் அவர்களைக் குறை கூறினார்கள்.
(தொடரும்…)
அடிக்குறிப்புகள் :
(1) பிரான்சில் புரட்சிக்குப் பிறகு டுபோன் நாட்டை விட்டு அமெரிக்காவுக்குப் போனார். அங்கே அவருடைய மகன் ஆரம்பித்த தொழில் காலப் போக்கில் ‘டுபோன் டெ நெமூர் அன்ட் கம்பெனி” என்ற பிரம்மாண்டமான இரசாயன ஏகபோகக் கம்பெனியாக வளர்ச்சியடைந்தது.
(2) டி. ரோஸென்பெர்க், அரசியல் பொருளாதாரத்தின் வரலாறு, முதல் புத்தகம், மாஸ்கோ , 1940, பக்கம் 88 (ருஷ்ய மொழியில் எழுதப்பட்டது).
நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
“ஐ லவ் யூ.” – இதுவரை என்னிடம் யாரும் சொல்லாத வார்த்தையை சொல்லிச்சு அந்தப் புள்ள.
இட் அது, பட் ஆனால், வாட் என்ன, மீனிங் அர்த்தம். இத திருக்குறள் மாதிரி ஒரு ரைமிங்கா பள்ளி வயசுல சொல்லி பழகின ஞாபகம். அம்புட்டுதான் நம்மோட ஆங்கில மொழி அறிவு. நெலமெ இப்புடி இருக்க ஒரிசா, ஹிந்தி, ஆங்கிலம் அத்தனையும் பேசுற அந்த புள்ளய பாத்ததும் பத்தடி தூரம் ஒதுங்கத்தான் தோணுச்சு. பெறவு வேற வழியில்லாம நெருங்கி பழக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுப் போச்சு.
“ஹாய் ஆண்டி. குட்மார்னிங்”
மொதமொத அந்த புள்ள வாயால இந்த வார்த்தைய கேட்டதும் கடும் கோவம் எனக்கு. பத்து வயசு இடைவெளிதான் இருக்கும் ரெண்டு பேத்துக்கும். அதுக்கு போயி ஆண்டின்னா கோபம் வராதா பின்னே. சரி ஆரம்பத்துலேயே முகத்த காட்ட வேண்டான்னு… வேண்டா வெறுப்பா சிரிச்சுகிட்டே தலையாட்டி வச்சேன்.
ஆனா அந்த புள்ள “ஆண்டி”ன்னு கூப்புட்டா அம்புட்டு அழகாருக்கும்.
பொண்ணுக்கு பூர்வீகம் ஒடிசா. கல்யாணம் முடிஞ்ச ரெண்டு வருசமா வாழ்க்கை சென்னையில. இந்த ரெண்டு வருசத்துல நண்பர்னு சொல்லிக்க சென்னையில யாரும் இல்ல. மொழி பிரச்சனையால அக்கம் பக்கம் பழகாம ஒண்டியாவே பொழுத கழிச்சிருக்கு இந்த புள்ள.
ஹாய், குட்மார்னிங், ஹவ்வார் யூ, பை….ய்ய்ய்…. இப்புடியே மூணு வாரம் ஓடிருச்சு. அன்னைக்கும் வழக்கம் போல பை….ய்ய்…. சொல்லிட்டு வெளிய போனாங்க கணவன் மனைவி ரெண்டு பேரும். போன ரெண்டு மணி நேரத்தில அந்த பொண்ணுக்கு கால் பாதத்துலேருந்து முட்டி வரைக்கும் மாவு கட்டு போட்டு கைத்தாங்கலா கூட்டிட்டு வந்தாரு வீட்டுக்காரு.
இங்கிலீஷுல “ஆண்டி வலி தாங்க முடியல ஆண்டி…..” ஓன்னு ஒரே அழுக.
ஒரு நிமிசம் என்ன செய்றதுன்னு புரியல. கனத்த ஒடம்பு வேற எப்புடியோ நானும் அவங்க கணவருமா சேந்து அந்த பொண்ண மாடிக்கி தூக்கிட்டோம். அன்னைக்கிக் கூட லீவு இல்லாமெ அலுவலகம் போக வேண்டிய நிர்பந்தம் அவங்க வீட்டுக்காரருக்கு. அடுத்து வந்த நாட்கள்ல அந்த பொண்ணுக்கு வாங்கிங் ஸ்டிக் உதவியோட சேத்து என்னோட உதவியும் கொஞ்சம் தேவப்பட்டுச்சு.
என்ன ஒரு பிரச்சனன்னா ஒருத்தர் சொல்றத ஒருத்தர் புரிஞ்சுக்க ரொம்ப செரமப்படுவோம். அந்த பொண்ணு தமிழ கொல பண்றது மாறி நானு ஆங்கிலத்த கொல பண்ணுவேன். ஒரே நாடு ஒரே மொழின்னு சொல்றாங்கலே அப்புடி இருந்துருந்தா இப்புடி ஒரு சோதன நமக்கு வந்துருக்காதேன்னு கூட அந்த சமயம் தடுமாறிப் போனேன். ஆனா தட்டுத்தடுமாறி புரிஞ்சுகிட்டு நாங்க பேசுன பேச்சு சுவாரசியத்தையும் எங்களுக்குள்ள ஒரு நெருக்கத்தையும் உண்டு பண்ணிச்சு.
“அய்யய்யோ இதுல என்ன இருக்கு. நீங்க சாமி பிரசாதமா நெனச்சு குடுத்திங்க.. நானு தின்பண்டமா நெனச்சு வாங்கிகிட்டேன். இதுல என்ன இருக்கு அதுக்காக நீங்க குடுக்காமெ இருந்துட போறீங்க. எனக்கு எந்த பிரச்சனையும் கெடையாது.”
அடுத்து வந்த ஆயுத பூசை, கோகுலாஷ்டமி எல்லாத்துக்கும் வீட்டுக்கு பலகாரம் வந்தது. கடகடன்னு நாளு ஓடிச்சி நடைபயிற்சி போனோம். ஒவ்வொரு நாளும் ஒரு வித பேச்சு எங்களுக்குள்ள.
“ஆண்டி தமிழ் நாட்டுல கலைஞர், அம்மா ஜெயலலிதா இவங்களதான் நெறைய பாக்க முடியுது .. மோடிய எங்கயுமே பாக்க முடியலையே ஏன்?”
“தமிழ் நாட்டுல திராவிட அரசியல்தான் மக்கள் மத்தியில செல்வாக்கு. அவங்க ரெண்டு பேருமே திராவிட கட்சிய சேந்தவங்க. மோடி மதவாத கட்சி மதத்த அடிப்படையா வச்சு பிரிவினைய ஏற்படுத்துறவரு.. அதனால அவரு செல்வாக்கு இங்க எடுபடல.
இன்னொரு முக்கியமான காரணம் பெரியாரு. இது பெரியாரு பெறந்த மண். இங்க சாதி மத அடிப்படையில ஆள் சேக்குறது அவ்வளவு ஈசியான காரியம் கெடையாது.”
பெரியாரா? பெரியாருன்னா யாரு அவருக்கு அரசியல்ல என்ன ரோலு?
“தனித்தனியா பிரிச்சு சொல்ல தேவையில்ல ஈசியா புரிஞ்சுக்கனுன்னா பி.ஜே.பி-க்கி முதல் எதிரி தமிழ்நாட்டுல பெரியாருதான். தாடியும் கைத்தடியுமா முதுமையான ஆளு பெரியாரு இன்னைக்கி அவரோட கருத்து இளைஞர்கள் மத்தியில…” ஆர்வமா சொல்ல ஆரம்பிக்கும் போது நாங்க ஒரு கோயில கடந்து போனோம்.
“சாரி ஆண்டி ஒரு நிமிசம் வெய்ட் பண்ணுங்க சாமி கும்பிட்டு வந்தர்ரே”ன்னு வழியில இருந்த புள்ளையாரு கோயிலுக்குள்ள பொசுக்குன்னு போயிருச்சு அந்த பொண்ணு.
திரும்பி வந்ததும் “தமிழ் நாட்டுல கோயிலெல்லாம் நீட்டா சுத்தமா இருக்கு ஆண்டி எங்க பக்கம் கோமாதான்னு கோயிலுக்கு மாட்ட நேந்துவிட்டு பராமரிப்பு இல்லாம கோயில் வளாகம் பூறா சாணிய போட்டுவச்சு வர்ரவங்க அத மிதிச்சி ஒரே அசிங்கமா கெடக்கும். உங்க கோயில் சூப்பரா இருக்கு.”
“அதிகமாதா கேட்டாங்க பிறகு நாங்களும் ஒங்காளுங்கதான் பாத்து கேளுங்கன்னு அம்மா சொன்னதுக்கப்புறம் வந்தவங்க கொஞ்சம் கொறச்சுகிட்டாங்க.”
“ஐயரா நீங்க” மனசுகுள்ள படக்குன்னுச்சு எப்புடிடா நம்ம வீட்டு சாப்பாட்ட சாப்புட்டாங்க. ரொம்ப ஆச்சாரம் பாப்பாங்களேன்னு தோனுச்சு. அந்த பொண்ணே எம்மன ஓட்டத்த புரிஞ்சுகிச்சு.
“அம்மாதான் ஓல்டு டைப்பு ஆண்டி. பூஜா ஹோமம் அப்புடி இப்புடின்னு ஓவரா பண்ணுவாங்க. எனக்கு ஒங்களாட்டமும் இருக்க முடியல அம்மாவாட்டமும் இருக்க முடியல.. ரெண்டுக்கும் நடுவுல. வெளியூர் வேல, ப்ரண்ட்ஸ், பார்ட்டி அப்புடி இப்புடி கல்ச்சர் மாறி போச்சு. வீட்டுல நான்வெஜ் சமைக்கிறதில்ல ஆசப்பட்டா ஓட்டல்ல வாங்கி சாப்பிட்டுப்போம். கேக்க கூச்சமாருக்கு ஆண்டி. இந்த ஏரியாவுல நல்ல பிரியாணி எங்க கெடைக்கும்.”
“இப்பதான் எது வேணுமோ ஆர்டர் பண்ணுனா வீட்டுக்கே வருதே அப்பறமென்ன கவலை.”
“என்னோட ஹஸ்பெண்ட் ஃபேமிலி விவசாய பின்னணி. அவருக்கு தேவைக்கி அதிகமா இப்புடியெல்லாம் செலவு பண்ணா பிடிக்காது. எங்க அம்மா வீட்டுசைடுல மாச சம்பளம், பிசினசுன்னு கொஞ்சம் ஆடம்பரம். ஆரம்பத்துல எனக்கு அவர் கூட ஒத்து போக செரமமா இருந்துச்சு. போகப்போக எளிமைய புரிஞ்சுக்க அரம்பிச்சுட்டேன். இப்ப சந்தோசமா இருக்கேங்க ஆண்டி.”
“கேக்கவே ஆனந்தமா இருக்கு இதே சந்தோசம் உங்க வாழ்க்க பூறா இருக்கனும்”
“தேங்க்யூ! தமிழ்நாடுல எனக்கு ஒரு ப்ரண்ட்டு கெடச்சதுல ரொம்ப ஹாப்பி இருக்கு. ஐ லவ் யூ ஆண்டி”
இத்தன வயசுல மொதமுறையா அந்த வார்த்தைய கேட்டதும் கூச்சம் கலந்த சந்தோசத்தோட வீட்டுக்கு போனேன்.
கடந்த வாரம் 17 நாட்களே வயதான ஒரு பெண் சிசுவை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர், என்ற செய்தியைப் படித்ததில் இருந்து வெகு நாட்களாக எழுத வேண்டி இருந்த இந்த கட்டுரையை எழுத ஆரம்பிக்கிறேன்.
நான் மாவட்ட அளவிலான சுகாதார இயக்கத்தின் துணை மேலாளராக பணி புரிகையில் பல சிசு மரண ஆய்வுகளில் (Infant death audit) பங்கேற்றுள்ளேன். அந்த ஆய்வுகளில், ஒரு வயதுக்குட்பட்ட சிசுக்களின் மரணங்கள் அனைத்தும் அக்குவேறு ஆணிவேராக ஆராயப்படும்.
ஆட்சியர், இணை இயக்குநர் சுகாதாரம், துணை இயக்குநர் சுகாதார நலப்பணிகள், குழந்தைகள் மற்றும் மகப்பேறு நல துறைத்தலைவர்கள் போன்ற அனுபவத்திலும் அறிவிலும் சிறந்த மக்கள் ஆய்வு செய்வர்.
எங்கு தவறு நடந்தது?
அந்த சிசுவை காப்பாற்றியிருக்க முடியுமா?
யாருடைய தவறால் இது நடந்தது?
என்றெல்லாம் ஆராயப்பட்டு முடிவுகள் அந்த மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவர்களுக்கு செயல்வடிவமாக மாற்றி அனுப்பப்படும். இதன் மூலம் புது protocol கள் உருவாகும்.
இதில் பல நேரங்களில் அனுபவம் வாய்ந்த மக்கள் கூறக்கேட்டதுண்டு. “Unless proved otherwise, a female infant death should be considered as an infanticide” அதாவது வேறு காரணங்களினால் மரணமடைந்தது என்று நிரூபணமாகாதவரை, அனைத்து பெண் சிசு மரணமும் சிசுக்கொலையாகவே கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இந்த காலத்துலயுமா சார் இதெல்லாம் நடக்குது? என்று கேட்போருக்கு தான் இந்த செய்தியை பகிர்ந்துள்ளேன்.
சென்னை, ராம்நாடு முதலிய எட்டு மாவட்டங்களில் கடந்த மூன்று வருடங்களில் இல்லாத அளவு பெண் பிறப்பு குறைந்துள்ளது. நமது தமிழ்நாட்டில் ஒவ்வொரு 1000 ஆண்குழந்தைக்கும் 936 பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கின்றன. அதுவும் சில மாவட்டங்களில் 900க்கும் கீழ் இருக்கிறது.
எதனால் இந்த ஏற்றத்தாழ்வு?
நமக்கு பக்கத்தில் இருக்கும் கேரளாவில் ஒவ்வொரு 1000 ஆண் பிள்ளைகளுக்கும் 1084 பெண் பிள்ளைகள் பிறக்கிறார்கள். ஆனால் நமது மாநிலத்தில் 936 : 1000 என்ற வேறுபாடு இருக்கிறது.
இது பாலின ஏற்றத்தாழ்வு (gender imbalance) நிலைக்கு வழிவகுக்கும். இங்கு நிலவும் இந்த பாலின ஏற்றத்தாழ்வுக்கு முக்கிய காரணம்.
1. வரதட்சணை தரும் பயம்.
2. பெண் குழந்தைகள் கடின வேலைகளுக்கு உதவ மாட்டார்கள்.
3. ஆண் பிள்ளைதான் வாரிசு. அவனால் தான் பரம்பரையை அடுத்த நிலைக்கு. கொண்டு செல்ல முடியும் என்ற மூடநம்பிக்கை. இதனால் வரும் சமூக அழுத்தம்.
இதனால் பெண் குழந்தைகள் கருவிலேயே கண்டறிந்து கொல்லப்படுகிறார்கள். ஸ்கேன் மூலம் குழந்தையின் பாலினம் கண்டறியப்படுகிறது. கண்டறியப்பட்டவுடன்
குறியற்ற பெண் சிசு என்றால் குறி எதுவும் இல்லாமல் கொல்லப்படுகிறது.
மீறிப்பிறந்த பெண் குழந்தைகள் எங்காவது பொது நவீன கக்கூஸ்களில் கழிக்கப்படுகின்றன அல்லது குப்பைத்தொட்டியில் அந்த ஏரியா தெரு நாய்களுக்கு இரவு விருந்தாக்கப்படுகின்றன.
எனது இந்த பதிவின் முக்கிய நோக்கம், இந்த பாலின ஏற்றத்தாழ்வினால் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி பேசுவது தான்.
உலகளாவிய ஆய்வுகளின் முடிவுகளில் ஆரோக்கியமான பாலின விகிதம் என்பது ஒவ்வொரு 1000 பெண் குழந்தை பிறப்பிக்கும் 1005 ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பது தான்.
இந்த 1.05 என்ற பெண்களுக்கு ஆண்கள் விகிதம் அனைத்து வயதுகளிலும் சரியாக பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் இந்தியாவில் இந்த விகிதம் 1.07 முதல் 1.14 என்ற அளவில் அதிகமாக இருக்கிறது.
இதனால் என்ன நடக்கும் தெரியுமா?
♦ 15 முதல் 20 சதவிகிதம் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் கிடைக்க மாட்டார்கள் இதனால் திருமணம் செய்யும் வயதைத்தாண்டி முதிர் கண்ணன்களாய் பல ஆண்கள் வாழும் நிலை ஏற்படும். இதை நாம் கண் கூடாக பார்த்து வருகிறோம்
இதன் விளைவாக ஆண்கள் மனத்தாழ்வு நிலைக்கு செல்ல வாய்ப்புண்டு. மது / புகை போன்ற வஸ்துக்களுக்கு அடிமையாவதுண்டு. திருமணம் அல்லாத உறவுகளை நாட அதிக வாய்ப்பு உருவாகிறது. திருமணமான பெண்களின் வாழ்க்கையில் நுழைந்து அவர்கள் வாழ்க்கையில் விளையாட வாய்ப்புள்ளது.
இவையனைத்தையும் அன்றாட நிகழ்வுகளில் நாம் கண்டுதான் வருகிறோம்.
♦ அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நடந்த ஆய்வில் ஆண்கள் பிறப்பு விகிதம் சராசரியை விட அதிகமாக உள்ள இடங்களில் எல்லாம் கற்பழிப்பு குற்றங்கள் அதிகமாக நடந்தேறின என்கிறது ஆய்வு.
அதாவது ஆண்கள் விகிதம் அதிகமானால் பெண்களுக்கு எதிரான வண்புணர்வு / கற்பழிப்பு குற்றங்கள் அதிகமாகும் என்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.
இதை derangement in operational sex ratio என்கிறார்கள். அதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் எத்தனை குழந்தை பிறக்க வைக்கும் தகுதியுடைய ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதைப்பொறுத்து அங்கே ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கை அமையும் என்கிறார்கள்.
ஒரு ஊரில் வயதுக்கு வந்த பாலுறவுக்கு தகுதியான ஆண்கள் 100 பேர் இருக்கிறார்கள், இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதே ஊரில் வயதுக்கு வந்த பாலுறவுக்கு தகுதியான வயதில் 80 பெண்கள் தான் இருக்கிறார்கள் என்றால் அங்கே
♦ திருமணத்திற்கு முன்பே பாலுறவு கொள்ளும் நிகழ்வுகள் (premarital sexual contact).
♦ அதனால் ஏற்படும் கர்ப்பங்கள் (premarital conception).
♦ அதனால் நிகழ்த்தப்படும் கருக்கலைப்புகள் (abortions),
என்று ஒரு வட்டம் நடந்து கொண்டே இருக்கும்.
மேலும் அந்த ஊர் பொருளாதாரத்தில் நலிவுற்று இருந்தால் அந்த இளைஞர்களுக்கு வேலை இல்லாததால் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவார்கள்.
சிறுபான்மையாக இருக்கும் பெண்கள் மீது Eve teasing கூட்டு பலாத்காரம்
போன்ற விசயங்களை மது / புகை / கஞ்சா போன்ற அடிமைத்தனங்களில் சிக்கி விளைவிப்பார்கள் என்கிறது ஆய்வு முடிவுகள்.
மேலும்,
♦ அந்த பகுதியின் பெண்களுக்கு சரியான கணவனை தேர்ந்தெடுக்க போதுமான வாயப்பு வழங்கப்பட மாட்டாது.
♦ சரியான படிப்பு இல்லாத, திருமணத்தகுதி இன்னும் வராத, உழைத்து தன்னை காப்பாற்ற இயலாத ஒருவரை கணவனாக அவள் ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவாள்.
♦ இதனால் மிக அதிகமான அளவில் விவாகரத்துகள் இல்லறங்களில் நிகழும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், வரதட்சணை கொடுமைகள் அதனால் கொலைகள், தற்கொலைகள் (ஆண் பெண் இருதரப்பிலும் நிகழலாம்) அதிகரிக்கும்.
ஒவ்வொரு நான்கு நிமிடத்திற்கு ஒரு பெண் குழந்தை என வருடம் 1,32,000 பெண் குழந்தைகளை கொல்லும் தேசமான நாம் இதைப்பற்றி சிந்தித்தே ஆக வேண்டும்.
யாராவது ஆண் குழந்தை தான் வேண்டும் என்று கேட்கும் தாய் இருந்தால்… இந்த பதிவை அவர்களிடம் படித்துக் காட்டுங்கள்.
பெண்கள் இல்லாத ஊரில் ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது…
இதுவே வரலாற்றுப்பாடம் …
நன்றி :ஃபேஸ்புக்கில் –Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.
பி.எம்.சி. வங்கி முறைகேடு : வெளியே தெரியும் பனிமுகடு !
மகாராஷ்டிரா மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி, எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கு எந்தவொரு வணிக நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என ரிசர்வ் வங்கி செப்டெம்பர் மாத இறுதியில் உத்தரவு பிறப்பித்ததோடு, அவ்வங்கியைத் தனது முழுக் கட்டுப்பாட்டின் கீழும் கொண்டுவந்திருக்கிறது. அவ்வங்கி கடன்களை வழங்கியதிலும் வாராக் கடன்களை ரிசர்வ் வங்கியின் ஆய்விலிருந்து மறைப்பதிலும் பல முறைகேடுகளைச் செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
அவ்வங்கியை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில் ரிசர்வ் வங்கி எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையால் அவ்வங்கியை மோசடி செய்த கார்ப்பரேட் முதலாளிகளோ, அவர்களுக்குத் துணையாக இருந்த அதிகார வர்க்கமோ பாதிக்கப்படவில்லை. மாறாக, இந்தக் கசப்பு மருந்தால் உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் அந்த வங்கியைப் பெரிதும் நம்பித் தமது பணத்தைப் போட்டு வைத்திருந்த மிகச் சாதாரணமான வியாபாரிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்தான்.
பி.எம்.சி. வங்கியின் முன்பாக அணிதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள்.
அவ்வங்கியில் கணக்கு வைத்திருக்கும் யாரும் 1,000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது என முதலில் உத்தரவிட்டது ரிசர்வ் வங்கி. இதனை எதிர்த்து அவ்வங்கியின் வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் போராடிய பிறகு, இந்தத் தொகை 10,000,- 25,000 என அடுத்தடுத்து அதிகரிக்கப்பட்டது. எனினும், இவ்வங்கியில் நிரந்தர வைப்புக் கணக்குகளில் (Fixed Deposits) தமது வாழ்நாள் சேமிப்பைப் போட்டு வைத்திருக்கும் பொதுமக்கள் தமது சேமிப்புத் திரும்பக் கிடைக்குமா என்ற அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர்.
இவ்வங்கியில் 74 இலட்ச ரூபாய் வரை சேமிப்புக் கணக்குகளில் போட்டு வைத்திருக்கும் தாமினி ஷா, “எனது மகள், தனது மேல்படிப்புக்காக வெளிநாடு செல்வதற்கு இந்தச் சேமிப்பைத்தான் நம்பியிருந்தேன். அவளின் கனவு சிதைந்துபோய்விடுமோ?” என அஞ்சிக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சலிமா குரேஷி, “எனது கதிரியக்கச் சிகிச்சைக்கு இவ்வங்கியில் போட்டு வைத்திருக்கும் சேமிப்புக்களைத்தான் நம்பியிருக்கின்றேன். அது கிடைக்காமல் போனால், எனது சிகிச்சையை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை” என உடைந்துபோய்க் கூறுகிறார்.
“ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளால் இவ்வங்கியில் போட்டு வைத்துள்ள பணத்தை எடுக்க முடியாததால், தினந்தோறும் வியாபாரத்தை நடத்த முடியாமல் தடுமாறுகிறோம்” எனக் கூறி, அவ்வங்கியின் கல்யாண் கிளையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள், காய்கறி வணிகர்கள்.
இப்படி ஓராயிரம் அழுகுரல்கள் கேட்டுவரும்போது, அரசோ, அவ்வங்கியின் முன்னாள் தலைவர் வார்யம் சிங், முன்னாள் மேலாண்மை இயக்குநர் ஜாய் தாமஸ் மற்றும் கடன் வாங்கி ஏப்பம் விட்ட ஹெச்.டி.ஐ.எல். நிறுவன முதலாளிகள் ராகேஷ் வாதவான், அவரது மகன் சாரங் வாதவான் ஆகிய நால்வரைக் கைது செய்திருப்பதையும், 3,500 கோடி ரூபாய் பெறுமான அக்கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துக்களை முடக்கியிருப்பதையும் காட்டிச் சமாதானப்படுத்த முயலுகிறது.
எத்துணையோ வங்கி மோசடிகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், பி.எம்.சி. வங்கி திவால் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் கதை தனி விதமானது. இந்த வங்கி கொடுத்திருக்கும் 8,880 கோடி ரூபாய் கடனில் அடிக்கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஹெச்.டி.ஐ.எல். குழுமத்திற்குக் கொடுத்துள்ள கடன் மட்டும் 6,500 கோடி ரூபாய். அதாவது, மொத்தக் கடனில் 73 சதவீதம். இப்படி ஒரே நிறுவனத்திற்குக் கடனை வாரிக்கொடுப்பது வங்கி விதிமுறைகளுக்கு எதிரானது என்கிறார்கள், நிதி ஆலோசகர்கள்.
பி.எம்.சி.வங்கியைப் பொருத்தவரை ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்திற்குக் கடன் கொடுப்பதில் எந்தவொரு விதிமுறையும் பின்பற்றப்பட்டதே கிடையாது. காரணம், இந்த வங்கியை மறைமுகமாக இயக்கி வந்ததே அந்த நிறுவனம்தான். குறிப்பாக, தற்பொழுது கைது செய்யப்பட்டிருக்கும் இவ்வங்கியின் முன்னாள் தலைவர் வார்யம் சிங், ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்தில் 2015-ஆம் ஆண்டு வரை அதன் இயக்குநர்களுள் ஒருவராக இருந்திருக்கிறார். அது மட்டுமல்ல, அந்நிறுவனத்திலும், அதன் குழும நிறுவனங்களிலும் பங்குதாரராகவும் இருந்திருக்கிறார். மேலும், ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்தின் முதலாளியான ராகேஷ் வாதவானின் சகோதரரும் தற்பொழுது திவாலாகிவிட்ட திவான் ஹவுசிங் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான காலஞ்சென்ற ராஜேஷ் வாதவானும் இவ்வங்கியின் இயக்குநர்களுள் ஒருவராக இருந்திருக்கிறார்.
ஹெச்.டி.ஐ.எல்.-க்கு அளிக்கப்பட்டிருக்கும் கடன்களுள் பெரும்பாலானவை பி.எம்.சி. வங்கியின் இயக்குநர்களுக்கே தெரியாமல் சதித்தனமாக வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் கடன்கள் ரிசர்வ் வங்கிக்குத் தெரியாமலும் மறைக்கப்பட்டு வரவு-செலவு அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன்கள், 21,000-க்கும் அதிகமான போலி நிறுவனங்கள் பெயரில் கணக்குகள் தொடங்கப்பட்டு, அந்நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்தது போலக் காட்டப்பட்டிருக்கிறது. மேலும், ரிசர்வ் வங்கியின் ஆய்வின்போது வெறும் 200 கோடி ரூபாய் அளவிற்குத்தான் ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்தின் வாராக் கடன் இருப்பதாக மோசடி அறிக்கைத் தரப்பட்டிருக்கிறது.
ஊரை அடித்து உலையில் போட்ட காசில் ஹெச்.டி.ஐ.எல். நிறுவன முதலாளி ராகேஷ் வாதவான் கட்டியிருக்கும் 22 அறைகளைக் கொண்ட சொகுசு பங்களா.
கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்துவந்திருக்கும் இம்மோசடிகள் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட எந்தவொரு அரசின் ஆய்விலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் ஆச்சரியமானது. இவ்வளவு ஏன், ஹெச்.டி.ஐ.எல். நிறுவனம் கடன் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்தி வருவது போலக் காட்டுவதற்காக, அந்நிறுவனத்திற்குப் புதிதாக 96 கோடி ரூபாய் அளவிற்குக் கடனாகக் கொடுத்து, அதனைத் தவணைத் தொகையாகத் திரும்ப வாங்கியிருக்கிறது, வங்கி நிர்வாகம்.
தவணைத் தொகையைக் கட்டத் தவறும் விவசாயிகளின் டிராக்டர்கள் தூக்கப்படுகின்றன. அவர்கள் அடித்து அவமானப்படுத்தப்பட்டுத் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். கல்விக் கடன் வாங்கிய மாணவர்கள், அவர்களது பெற்றோர்களின் புகைப்படங்கள் வங்கி வாசலில் ஓட்டப்பட்டு அவமதிக்கப்படுகிறார்கள். சிறுதொழில் நிறுவனங்கள் கடன் தவணை தவறும்போது சீல் வைக்கப்படுகின்றன. ஆனால், கார்ப்பரேட் முதலாளிகளுக்கோ கடனை வாரி வழங்குவதில் மட்டுமல்ல, கடன் தவணையைத் திருப்பிச் செலுத்துவதிலும் முறைகேடான சலுகைகள் காட்டப்படுகின்றன.
இம்மோசடிகளெல்லாம் ஏதோவொரு வங்கியில் மட்டும் நடைபெற்றிருப்பதாகக் கருத முடியாது. ரிசர்வ் வங்கி பி.எம்.சி. வங்கியையும் உள்ளிட்டு 24 நகரக் கூட்டுறவு வங்கிகளைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருக்கிறது. பல பொதுத்துறை வங்கிகள் புதிதாகக் கடன் கொடுப்பதற்குக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. லட்சுமி விலாஸ் வங்கி, யெஸ் வங்கி உள்ளிட்ட தனியார் வங்கிகள் வாராக் கடன் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் இரகசியங்கள் பத்திரிகைகளில் கசிந்து வெளியே வருகின்றன.
“ஆசிய-பசிபிக் பகுதியிலேயே இந்திய வங்கிகள்தான் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், இதற்கு ஒரு சில நிறுவனங்களுக்கே கடன்கள் வாரி வழங்கப்பட்டிருப்பதுதான் காரணமென்றும்” மூடிஸ் தர நிர்ணயக் கழகம் கூறியிருக்கிறது. இந்த மோசடிகளை மூடிமறைக்கும் நோக்கில்தான் பொதுத்துறை வங்கிகளை இணைத்திருக்கிறது, மைய அரசு.
பொருளாதார வளர்ச்சியைச் சாதிப்பது என்ற பெயரில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வங்கிக் கடன்கள் வாரி வழங்கப்பட்டன. அந்தக் கடன்கள் அனைத்தும் வாராக் கடன்களாக மாறிப் பொதுத்துறை வங்கிகள் திவால் நிலைக்குத் தள்ளப்பட்ட பின், அவற்றின் நிர்வாகம் சரியில்லை எனக் கூறப்பட்டு, அதற்குத் தீர்வாக வங்கிகளைத் தனியார்மயமாக்கும் திட்டம் அரங்கேற்றப்படுகிறது.
வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டிலும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழும் இயங்கிவரும்போதே இத்துணை தூரத்திற்கு கார்ப்பரேட் கொள்ளை நடந்திருக்கிறது என்றால், பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டால், பொதுமக்களின் சேமிப்புகளுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும்?
திருடனின் கையில் பெட்டிச் சாவியை ஒப்படைப்பதற்கும் வங்கி தனியார்மயத்திற்கும் இடையே வேறுபாடு காண முயலுவது மதியீனம்!
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
நீதித்துறை முதல் ஐஐடி வரையிலான காவி பாசிசத்தை எதிர்த்துநில் !
கண்டன ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி – இறுதி தீர்ப்பு : முடிவல்ல – தொடக்கம் !
அடுத்து மதுரா – காசி !
உச்சநீதிமன்ற தீப்பு : வரலாற்றின் அடிப்படையில் அல்ல புராணங்களின் அடிப்படையே !
வாழ்க்கைக்காக போராடும் மக்களை அடக்கி சொற்ப ஜனநாயக உரிமையை பறித்த காவி பாசிச ஆட்சிக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் !
1 of 5
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
***
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டது சிறுபான்மை இசுலாமிய மக்களின் உரிமையை பறிக்கும் விதமாகவும் புராண கட்டுக்கதைகளின் அடிப்படையில் உள்ளதை கண்டித்து திருச்சி மண்டல மக்கள் அதிகாரம் சார்பாக திருச்சி மரக்கடை பேருந்து நிறுத்தத்திலிருந்து முழக்க மிட்டு ஊர்வலமாக சிறிது தூரம் சென்று ராமகிருஷ்ணா தியேட்டர் அருகில் 19-11-2019 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை தலைமையேற்று நடத்திய, மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் ராஜா, ”பாபர் மசூதி இடிக்கப்பட்டது அநீதியானது, தீர்ப்பு பற்றி பேச கருத்து சுதந்திரம் இல்லை. போலீசு அனுமதி மறுக்கிறது ஆர்ப்பாட்டபோஸ்டர்களை கிழிக்கிறது” என கண்டித்தும், ஆர்ப்பாட்டத்தில் பல கட்சியினர், அமைப்பினர் கலந்துகொண்டதற்கு நன்றியும்தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தை கட்சியின் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தோழர் தமிழாதன் மற்றும் தோழர் லாரன்ஸ், முரசு தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ம.ப. சின்னத்துரை, தந்தை பெரியார் திராவிடக் கழகம் மாநகரத் தலைவர் தோழர் வின்சென்ட், மக்கள் கூட்டணி தோழர் ஜோசப், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தோழர் சம்சுதின், தமிழ் புலிகள் கட்சியின் தோழர் ஜான் பாட்ஷா, ம.க.இ.க. மாவட்ட செயலர் தோழர் ஜீவா, தோழர் பாடகர் கோவன், புஜதொமு நிர்வாகிகள் தோழர் சுந்தர்ராஜ், உத்திராபதி, பழனிச்சாமி, மணலிதாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
”மோடி அரசு இந்திய நாட்டில் பல மொழி, கலாச்சாரம் பேசும் நாட்டில் மக்களிடம் பகைமையை வளர்க்கும் விதமாக இந்த தீர்ப்பு உள்ளது. இதை வி.சி.க. சார்பாக கண்டிக்கிறோம். மக்கள் அதிகாரம் மற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து நடத்துகின்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எங்கள் ஆதரவு எப்போது இருக்கும்” என தோழர் தமிழாதன் பேசினார்.
”முசுலீம் சட்டவாரியம் மறுசீராய்வு மனு தாக்கல் செய்கின்றனர். அதுவரை இந்த தீர்ப்பை அமுல்படுத்தக் கூடாது என்றும், Rss, BJP இந்தியாவில் இந்து ராஷ்டிடிரத்தை அமுல்படுத்துவதை அனுமதிக்கவிட மாட்டோம். சிறுபான்மை மக்களின் உரிமையை மறுக்கும் இந்த தீர்ப்பு மதச்சார்பற்ற நாடு மற்றும் அரசியலமைப்பின் மீது . நம்பிக்கையின் மீது விழந்த பேரிடியாக பார்க்க வேண்டுமென” தோழர் செழியன் பேசினார்.
முழக்கமிட்டு கொண்டே தோழர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். போலீசு ஊர்வலத்தை தடுத்தும், மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர்கள், கட்சியினர் அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் சிறைவைக்கப்பட்டனர்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய தோழர்கள், தமிழ் புலிகள் கட்சி தோழர்கள், திராவிடர் விடுதலை கழகத் தோழர்களும் மண்டபத்திற்கு வந்து தங்களதுஆதரவை தெரிவித்து பேசினர். கொடி, பேனர் முழக்க அட்டை, முழக்கம் போன்றவை எழச்சியுடன் ஆர்ப்பாட்டம் இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் ஆர்ப்பாட்டத்த உரைகளை நின்று கவனித்தனர்.
“இது முடிவல்ல ! தொடக்கம்… !” என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் சூளுரைத்தனர்.
1 of 4
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், திருச்சி மண்டலம், திருச்சி – 94454 75157. மணப்பாறை – 99443 55790. கரூர் – 97913 01097.
பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் கருத்துக்கள், செயல்பாடுகள் போன்றவை குறித்து சமீபகாலத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பெரியாரைக் குறித்து அதிகம் எழுதாத வார இதழ்கள் கூட அவருடைய வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தை வெளியிட்டுள்ளன. இந்திய அரசியல் சமூக வானில் ‘சமூக நீதி’ என்ற அம்சம் மேலோங்கியிருப்பதன் பின்னணியில் காணும் பொழுது இது இயற்கையானதே.
பெரியாரைக் குறித்த விவாதங்களில் எதிரும் புதிருமான கருத்தோட்டங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆய்வாளர்கள் சிலர், பெரியாருடைய சிந்தனை மற்றும் செயல்பாட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் கேள்விக்குரியதாக்குகின்றனர். மற்றும் பலர், இதை ஏற்கவில்லை. பெரியாரின் செயல்பாடுகள் நியாயமானதே, காலத்திற்கு ஏற்புடையதே என்று வலியுறுத்துகின்றனர்.
இந்தச் சூழலில் இந்நூல் வெளியாகின்றது. எவறொருவருடைய கருத்தும் அவர் வாழ்ந்த காலத்தின் பின்னணியில் காணப்படுதல் இன்றியமையாதது. அவ்வாறு செய்யும்பொழுதுதான் அவருடைய கருத்தின் பரிணாம வளர்ச்சியைக் காணமுடியும். அன்றைய சமூக அரசியல் நிலைமையின் வளர்ச்சிப்போக்கை அவரது கருத்து பிரதிபலிக்கிறதா, அதற்கு உறுதுணையாக உள்ளதா என்பதைக் கொண்டுதான் ஒருவருடைய கருத்து மதிப்பிடப்படுகின்றது.
… சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு என்பதிலும் பகுத்தறிவுப் பிரச்சாரம் என்பதிலும் அவர் விடாப்பிடியாக இருந்தார். சமூக சீர்திருத்தம் என்பதுதான் அவரது பணியின் தொடர் பின்னலாக இருந்தது. தன்னுடைய தத்துவ, அரசியல் கண்ணோட்டங்களை, சமூக சீர்திருத்தம் என்பதற்குத்தான் உட்படுத்தினார். அதுதான், அவரது முதன்மையான லட்சியமாக இருந்தது. (நூலாசிரியரின் அறிமுக உரையிலிருந்து…)
பெரியாரைப் பற்றிக் கூறும் பொழுது ஒரு விசயத்தை எவ்விதத் தயக்கமுமின்றி, ஐயத்திற்கிடமின்றிக் கூறமுடியும். தமிழகத்தில் அவர் காலத்தவரில் இதிகாச புராணங்களை தமிழில் அதிகமாகப் படித்தவர் அவரைவிட வேறு யாரும் இருக்க முடியாதென்பதை உறுதியாகக் கூற முடியும்.
வைஸ்ணவப் பிரச்சாரகர்கள் ராமாயணம், பாகவதம், திவ்யப் பிரபந்தங்களைப் படித்து அவற்றை விளக்கினார்கள் என்றால் சைவர்களோ தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், கந்த புராணம் என்று அவற்றில் திளைத்து பிரச்சாரம் செய்தனர். ‘வீரசைவரான’ கிருபானந்த வாரியார் சைவம், வைணவம் இரண்டின் சிறப்பை மட்டும் விளக்கும் தொழில் முறைப் பிரச்சாரகராக விளங்கினார். அவர் ராமாயணத்தையும் போற்றினார். கந்தபுராணத்தையும் பாராட்டினார்.
ஆனால் பெரியாரோ இவ்விரு பகுதிகளையும் சேர்ந்த நூல்கள் அனைத்தையும் தொடர்ந்து படித்துக் கொண்டேயிருந்தார். அவற்றில் சொல்லப்பட்டிருந்த பகுத்தறிவுக்கு ஒவ்வாத சம்பவங்களை சுட்டிக் காட்டி, அவற்றை மூடத்தனம் என்று விமர்சித்தார். அவர் கொடுத்த உதாரணங்கள் அனைத்தும் புராணங்களிலும், பக்தி நூல்களிலும் சொல்லப்பட்டவையே. அவராக எதையும் இட்டுக் கட்டிக் கூறியதில்லை .
… பெரியார் ஏன் புராணங்களை எதிர்த்தார்? ஏன் கடவுள் மறுப்புச் செய்தார்? இந்திய சமூகத்தில் நால்வர்ண முறை உயிர்விளைவான சாதீய முறையும் மக்களின் ஒரு பகுதியினருக்கு சமூக மேலாதிக்கம் அளித்து மிகப்பெரும் மக்களை அவர்களுக்கு கீழ்ப்பட்டவர்களாக ஆக்குகிறது. சக மிகப் பெரும் பகுதி மக்களான அடித்தட்டு மக்களுக்கு முறையை மறுத்ததன் மூலம் அரசியல், பொருளாதார மேலாதிக்கம் செலுத்துகிறது. அந்தப் பெருவாரியான மக்களுக்கு சமஉரிமை, சமநீதி சமவாழ்க்கை வாய்ப்பு கிடைக்க வேண்டுமானால், பிராமண மேலாதிக்கம் என்றழைக்கப்படும் சமூக மேலாதிக்கத்தை ஒழிக்க வேண்டும், அதைச் செய்ய வேண்டுமானால் இரண்டு காரியங்களைச் செய்யவேண்டும் என்று பெரியார் கருதினார்.
ஒன்று, பிராமண மேலாதிக்கத்திற்குத் துணை நிற்கும் புராணங்கள், பக்திக் கதைகளை அம்பலப்படுத்திக் கடவுள் என்று கூறுவது கட்டுக்கதை என்று விளக்க வேண்டும்.
இரண்டு, கடவுள் பயம், கடவுள் தண்டனை போன்ற பயமுறுத்தல்களால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிந்தனைப்பயம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும் பகுதி மக்களிடம் கடவுள், புராணம் போன்றவற்றை அம்பலப்படுத்தி அவர்களை ‘சிந்தனைச் சிறை’யிலிருந்து மீட்க வேண்டும். சமூக நீதிக்கான போராட்டத்தில் ஈடுபடச் செய்ய வேண்டும் என்பதாகும்.
இந்தக் காரணங்களை முன்னிட்டே பெரியார் இந்த வகைப்பட்ட நூல்களைப் படித்தார். அவற்றிற்கெதிராகப் பிரச்சாரம் செய்தார். அவரது இந்தப் பிரச்சாரத்திற்கு ஆதரவு இருந்தது. அதைவிட பல மடங்கு எதிர்ப்பும் இருந்தது. சில இடங்களில் கல்லடியும் பட வேண்டியிருந்தது, வசைச் சொற்களையும் தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. எதையும் அவர் பொருட்படுத்தவில்லை. (நூலிலிருந்து பக்.169-170)
பெரியார் பழுத்த நாத்திகர் என்றாலுங்கூட, கடவுள் நம்பிக்கை அறவே இல்லாதவர் என்றாலுங்கூட அவை நாகரீகம், மற்றவர்களை மதிக்கின்ற மாண்பு உடையவர்… அவருடைய கையிலேயே சில நேரங்களில் திருநீறு கொடுப்பதும் உண்டு. அதை மரியாதையாக வாங்கி மற்றவர்களிடத்திலேயே பெரியார் அவர்கள் கொடுப்பதும் உண்டு. திருநீறா தொட மாட்டேன் என்று அவர் மறுத்தது கிடையாது. (நூலிலிருந்து பக்.185)
பிராமணரல்லாத மக்களுக்கு அரசாங்கப் பணிகளில் உரிய பங்கு கிடைக்க வேண்டுமென்பதற்காகத் தொடர்ந்து போராடிய பெருமை பெரியாருக்கு உண்டென்பதை யாரும் மறுக்க இயலாது.
… நீதிக் கட்சி ஆட்சியிலிருந்த காலத்தில் சில சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அவை ஏட்டளவிலேயே நின்றன.
… 1928ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அமைச்சர் முத்தையா முதலியார் தனது இலாக்காவில் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பின்வரும் விகிதத்தில் இருக்க வேண்டுமென்று சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
… இந்தியா சுதந்திரமடைந்து புதிய அரசியல் சட்டம் ஏற்கப்பட்டு பின்பு 1950-ம் ஆண்டில் இரண்டு பேர் சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டம் செல்லாது என்று வழக்குத் தொடர்ந்தனர்.
… உச்சநீதி மன்றமும் இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்துவிட்டது. இதைக் கண்ட பெரியார், ஒரு போராட்டத்தை நடத்தாமல் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முடியாது என்ற முடிவுக்கு வந்து அவ்வாண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் தேதியன்று திருச்சியில் ஒரு பெரும் மாநாட்டைக் கூட்டினார். இட ஒதுக்கீட்டு உத்தரவு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு உடனடியாக அமுலுக்குக் கொண்டு வரப்பட்ட வேண்டுமென்று இந்த மாநாடு கோரியது. இதில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும், தமிழறிஞர்களும் கலந்து கொண்டனர்.
இந்தப் பிரச்சினை தமிழகத்தில் மிகப் பெரும் பிரச்னையாக உருவாகப் போகிறது என்பதைக் கண்ட மத்திய அரசாங்கம், தனது உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலை தமிழகத்திற்கு அனுப்பியது. அவர் வந்து இங்குள்ள நிலைமையைக் கண்டறிந்து திரும்பிச் சென்றபின், இது குறித்து அரசியல் சட்டத்திற்கு ஒரு திருத்தம் கொண்டு வருவதென மத்திய அரசாங்கம் முடிவெடுத்தது. அதன்படி கொண்டு வந்து நிறைவேற்றியது.
இந்த அரசியல் சட்டத் திருத்தமானது, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியிலும் பின் தங்கியுள்ள சமூகங்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் விசேஷ சலுகைகளைக் கொடுக்க மாநில அரசாங்கங்களுக்கு உரிமை கொடுக்கிறது. இந்திய அரசியல் சட்டத்திற்கு முதல் திருத்தம் பெரியாரின் தொடர்ந்த முயற்சி காரணமாக கொண்டு வரப்பட்டது எனவே இடஒதுக்கீட்டுக் கொள்கையின் முன்னோடியாக பெரியார் கருதப்படுவதில் வியப்பதற்கேதுமில்லை. (நூலிலிருந்து பக்.204-206)
நூல் : ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும் ஆசிரியர் : என். ராமகிருஷ்ணன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018. தொலைபேசி எண் : 044 -24332424 மின்னஞ்சல் : thamizhbooks@gmail.com
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 07
நீங்கள் இல்லாத வெற்று வகுப்பில் எனக்குச் சலிப்பாக உள்ளது
இன்று எங்கள் பள்ளி வாழ்க்கையின் கடைசி 170வது – நாள்.
குழந்தைகள் வரும் முன் எல்லாவற்றையும் தயார் செய்யும் பொருட்டு நான் மிகவும் சீக்கிரமாகவே வந்து விட்டேன்.
தாழ்வாரத்தில் உள்ள கரும்பலகையில் குழந்தைகள் இந்தக் கல்வியாண்டில் எழுத்துப் பயிற்சியிலும் கணிதப் பாடத்திலும் செய்த முதல் மற்றும் கடைசி வேலைகளை வைக்கிறேன். முதல் எழுத்துப் பயிற்சியின் போது (செப்டம்பர் மாதம் 8-ம் தேதி) தெளிவற்ற கையெழுத்தில் குழந்தைகள், எழுத்துகளுக்குப் பதில் வட்டங்களால் முதல் வார்த்தைகளை “எழுதியுள்ளனர்”: நான்கு வட்டங்கள் “அம்மா“, “அப்பா“, ஐந்து வட்டங்கள் – ”தாயகம்”… கடைசி வேலையை இவர்கள் நேற்று செய்தார்கள். “நான் பள்ளியில் என்ன கற்றுக் கொண்டேன்” எனும் தலைப்பிலான கட்டுரையாகும் இது. கணிதப் பாடத்தில் முதல் பயிற்சி (செப்டம்பர் 9) “ஒன்று” என்னும் எண் வரிசையாக எழுதுதல், வரைகணித வடிவங்களுக்கு வண்ணம் பூசுதல். கடைசி கணிதப் பாடத்தில் (மே 16-ம் தேதி) தாமே உருவாக்கிய கணக்குகளைப் போட்டனர், வரைகணித வடிவங்களை வரைந்தனர். ஒவ்வொரு குழந்தையின் இந்த 4 வேலைகளும் இன்று ஸ்டேன்டில் உள்ளன. அதே சுவரில் ஒரு பெரிய வெள்ளைத் தாளை மாட்டி, அருகே மேசையில் வண்ணப் பென்சில்களை வைத்தேன். தாளின் மேல் “எனது பள்ளி வாழ்க்கை“ என்று எழுதப்பட்டுள்ளது; இதில் குழந்தைகள் வரைய வேண்டும். தாழ்வாரத்திலும் வகுப்பறையிலும் புகைப்படங்களை மாட்டினேன். இதில் ஒவ்வொரு குழந்தையும் அவனுடைய பள்ளி வாழ்க்கையின் ஒரு தருணத்தில் காட்சியளிக்கிறான் – சிலர் யோசனையில் மூழ்கியிருக்கின்றனர், சிலர் இடத்திலிருந்து எழுந்து ஏதோ கத்துகின்றனர், சிலர் கொட்டாவி விடுகின்றனர், சிலர் அருகில் உள்ளவருடன் பேசுகின்றனர், சிலர் நடனமாடுகின்றனர், சிலர் பூங்காவில் எறும்புகளைக் கவனிக்கின்றனர்… இப்படங்களை இதற்கு முன் குழந்தைகள் பார்க்கவில்லை. ஒரு சிறு ஆல்பம் நான் தயாரித்தேன், அதில் 40 பக்கங்கள், செப்டெம்பரின் முதல் நாட்களில் ஒவ்வொரு குழந்தையும் “நான் சிறுவனாக இருந்த போது” என்ற தலைப்பில் சொன்னவற்றைப் பற்றிக் குறிப்புகள் எழுதியுள்ளேன்.
இந்த அதிசயங்களின் மூலம் குழந்தைகள் எப்படி வளர்ந்துள்ளனர் என்று அவர்களுக்குக் காட்டவும், பெற்றோர்களுக்கு அவர்களின் குழந்தைகள் எப்படி மாறி, பெரியவர்களாகி விட்டனர் என்று காட்டவும், நான் என்ன சாதித்துள்ளேன் என்று பார்க்கவும் நான் விரும்புகிறேன்.
எல்லாம் செய்தாகி விட்டது. நான் வெற்று வகுப்பில் குழந்தைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். டெஸ்குகளைப் பார்க்கிறேன்.
இதோ இது மாரிக்கா உட்காருமிடம். இந்தச் சின்னஞ் சிறு மாணவி வகுப்பறையில் நுழைந்ததுமே என்னிடம் வந்து, “வணக்கம்!” என்று சொல்லுவாள், பின் என்னைப் பற்றி ஏதாவது கேட்பாள். நான் ஏதாவது புதிதாக அணிந்திருந்தால் கண்டிப்பாகச் சொல்லுவாள்:
“இன்று எவ்வளவு அழகாக இருக்கின்றீர்கள்!” பின் புதிய பொருளைத் தொட்டுப் பார்ப்பாள். “உனக்காகத்தான் இன்று நான் அழகாக உடையணிந்து வந்திருக்கிறேன். உனக்குப் பிடித்துள்ளதா?” என்று பதில் சொல்வேன்.
அவள் புன்முறுவல் பூத்தபடி என்னைக் கட்டிக் கொள்வாள்.
சமீபத்தில் ஒரு நாள் அவள் அம்மா வந்து, பள்ளி நேரத்திற்கு முன்னதாகவே மாரிக்காவை வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பினாள்.
“இல்லை, நான் போகமாட்டேன்!” என்று மாரிக்கா உறுதியாக மறுத்து விட்டாள்.
அம்மா என்னென்னவோ சொல்லிப் பார்த்தாள். ஒன்றும் பயன் தரவில்லை.
“ஏன் பிடிவாதம் பிடிக்கிறாய்?” என்று அம்மா கோபமாகக் கேட்டாள்.
“நான் பிடிவாதம் பிடிக்கவில்லை! இது பள்ளிக்கூடம்!”
“அப்படியெனில் இனி உன்னைப் பள்ளிக்கே அழைத்து வர மாட்டேன்.”
“அழைத்து வர மாட்டாயா? நான் உன்னை வேலைக்குப் போக விடாவிடில் எப்படியிருக்கும்?”
நான் மாரிக்காவிடம் அம்மா சொல்லுவதைக் கேட்குமாறு கூறவில்லை என்ற அதிருப்தியோடும், இன்னும் ஒரு முறை மகளை அழைத்துச் செல்ல பள்ளிக்கு வர வேண்டுமே என்ற எண்ணத்தோடும் அம்மா திரும்பிச் சென்றாள்.
இதோ இங்குதான் சுருட்டை முடியுடைய, ஓய்வற்று அலைந்து திரியும் சிறுவன் அமர்ந்திருப்பான். இவன் விஷயத்தில் எனது போதனை முறை எதுவும் பலிக்கவில்லை.
நவம்பர் இறுதியில் கூட அவனால் வார்த்தையில் ஒலிகளைப் பிரிக்க இயலவில்லை, எழுத்துகளையும் எண்களையும் குழப்பினான், எந்த எழுத்தையும் எண்ணையும் காட்டினாலும் அது நான்கு என்றான். பிப்ரவரி ஆரம்பத்தில் ஒரு சில எழுத்துகளைக் கற்றுக் கொண்டாலும் இவற்றைக் கொண்ட எளிய அசைகளைக் கூட அவனால் படிக்க இயலவில்லை. நான் அவனை எதையாவது வரையச் சொன்ன போது அவன் ஒரு தாறுமாறான வடிவத்தை வரைந்தான், அது ஒரு முக்கோணம் போலிருந்தது, அதன் ஓரத்தில் சிறு வட்டங்கள் இருந்தன. “இது வீடு, இந்த வட்டங்கள் சக்கரங்கள்” என்றான் அவன். பின் இதே மாதிரி வரைந்து, பந்தயக் கார் என்றான். அனேகமாக, இந்தப் பல்பொருள் படத்திலும் பல அர்த்தமுள்ள “நான்கு” என்ற எண்ணிலும் ஏதோ ஒரு விசேஷ அர்த்தம் இருக்க வேண்டும், இதை நான் கண்டுணர வேண்டும்.
நீண்ட காலத்திற்கு அவனால் வகுப்பு ஒழுங்கு முறைகளுக்குப் பழகிக் கொள்ள முடியவில்லை. தானாக எழுந்து வகுப்பில் அங்குமிங்கும் நடந்தான், மேல்கோட்டை எடுத்து அறையின் நடுவில் உதறுவான். ஒரு முறை அவன் வகுப்பில் விசிலடிக்கத் துவங்கிய போது மற்ற குழந்தைகளே அவனிடம் தொந்தரவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொண்டனர். அவனிடம் அன்புடன் நடந்து கொள்ளுமாறும் அக்கறை காட்டுமாறும் குழந்தைகளிடம் சொல்ல நான் பெரும் பாடுபடவேண்டியிருந்தது.
சிறுவனே, இந்தக் கோடை விடுமுறையின் போது நிறைய புத்தகங்களைப் படித்து, நிபுணர்களுடன் கலந்து பேசி செப்டம்பரில் உனக்கான ஒரு போதனை முறையுடன் கண்டிப்பாக வருவேன். இயற்கையன்னை உனக்குத் தராததை அல்லது பறித்துக் கொண்டதைத் திரும்பப் பெறுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எல்லாம் சரியாகி விடும் என்ற நன்னம்பிக்கை எனக்குள்ளது. ஏனெனில் இது இல்லாவிடில் உனக்கு உதவ முடியாது. மேலும் நீயும் அன்பானவனாகி, படிப்படியாக படிப்பின் மீது ஆர்வம் காட்டுவதால் எனக்கு நம்பிக்கை ஊட்டுகிறாய். நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம்! எனக்கு வேறு வழியில்லை!…..
இதோ இந்தக் கடைசி டெஸ்க் தாத்தோவின் இடம்.
“தாத்தோ, நீ என்ன படிக்கிறாய்?“
“டாமஸ் ஸாயரின் அதிசாகசங்கள்”.
இது நவம்பரில் நடந்தது.
“இப்போது என்ன படிக்கிறாய், தாத்தோ?”
“கேக்கெல்பெரி ஃபினின் அதிசாகசங்கள்”.
இது ஜனவரியில் நடந்தது.
“தாத்தோ, உன் கைகளில் என்ன புத்தகம்?”
“ரகசியத் தீவு”.
“இதை நீ படிக்கிறாயா?”
பாதி படித்து விட்டேன். பெரிதும் சுவாரசியமாக உள்ளது!
இது ஏப்ரலில் நடந்தது. அனேகமாக, இன்று தாத்தோ தான் கோடை விடுமுறையில் எந்தப் புத்தகங்களைப் படிக்கப் போகிறான் என்று கூறுவான். சண்டை போடாமல் இரு, நீ படித்த புத்தகங்களைப் பற்றி நண்பர்களுக்குச் சொல், நான் உனக்கு சிக்கலான கணக்குகளைக் கொண்டு வந்து தருவேன். கொண்டு வரட்டுமா?..
…இதோ இந்த இடத்தில் இன்று யாரும் உட்கார மாட்டார்கள், ஒரு மாதமாக இந்த இடம் காலியாக உள்ளது. அம்மா தன் மகனோடு மாஸ்கோவிற்குச் சென்று விட்டாள். குழந்தைகள் இச்சிறுவனை அடிக்கடி நினைத்துப் பார்த்து ஏங்குகின்றனர். சமீபத்தில் தேன்கோ என்னிடம் சொன்னான்: “நேற்று எனக்கு ஒரு கனவு வந்தது. அவன் நம்மிடம் திரும்பி வந்து அற்புதமான கவிதைகளைப் படித்தான். அவனால் எப்படி இவ்வளவு கவிதைகளைப் படிக்க முடிந்தது என்று நாம் ஆச்சரியப்பட்டோம். நாம் கை தட்டினோம், பின் நான் விழித்துக் கொண்டேன்!”
நேற்று கணிதப் பாடத்தில் குழந்தைகளுக்கு மிகவும் சிக்கலான ஒரு கணக்கைத் தந்தேன். “கரும்பலகையில் நான் இரண்டு கோடுகளை வரைந்திருக்கிறேன். நீங்கள் இவற்றைக் கற்பனையில் பார்க்க வேண்டும், ஏனெனில் இவற்றை நான் இப்போது காட்டப் போவதில்லை. ஒரு கோட்டின் நீளம் “x” செ.மீ., மற்றதன் நீளம் 15 செ.மீ., இரண்டின் நீளத்தையும் சேர்த்தால் 22 செ.மீ. வரும். முதல் கோட்டின் நீளம் எவ்வளவு?” கணக்கை எழுத்து வடிவில் எழுதாமல் அவர்களால் இதைப் போட முடியவில்லை. அப்போது ஏக்கா சொன்னாள்: “இப்போது அவன் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும், அவன் இக்கணக்கைப் போட்டிருப்பான்”. ஆம், இந்தச் சிறுவனின் தந்தை தான் தன் மகனைப் பற்றி யோசிக்காமல், தாயை விவாகரத்து செய்தார். அத்தாய் மகனுடன் மாஸ்கோ சென்றாள்.
சிறுவனே! நிச்சயம் நீ நல்ல மனிதனாவாய், மனிதர்களின் மீது உள்ள நம்பிக்கையை இழக்காதே! தந்தை இப்படி யோசனையின்றி நடந்து கொண்டதால் உனக்கு மிகவும் பிடித்தமான நபரை நீ இழந்து விட்டாய். நமது உண்மையான ஆண் பிள்ளை சங்கத்தில் உனக்குத்தான் முதன் முதலாக புரோமித்தியஸ் பட்டம் வழங்கினோம். நீ புரோமித்தியஸ் போல் வளர்ந்து பெரியவனாவாய், சிறுவனே! நாங்கள் உனக்கு அடிக்கடி கடிதங்களை எழுதுவோம். நேற்று உனது 38 வகுப்பு நண்பர்களும் உனக்கு கடிதங்களை எழுதினார்கள். அவர்கள் என்ன எழுதினார்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் இந்த 38 சந்தோஷ செய்திகளும் ஏற்கெனவே விமானத் தபாலில் அனுப்பப்பட்டு விட்டன என்று நம்புகிறேன்…
…நடுவரிசையில் உள்ள இந்த இரண்டாவது டெஸ்கும் இன்று காலியாக இருக்கும். இங்கிருந்த சிறுமியை போர்டிங் பள்ளியில் சேர்த்து விட்டனர். இவளுக்காகவும் குழந்தைகள் ஏங்குகின்றனர். இவளுக்கும் 38 கடிதங்கள் அனுப்பப்பட்டன. நானும் அந்த போர்டிங் பள்ளி இயக்குநருக்கு எழுதினேன்… நாளை நானே நேரில் சென்று பேசுவது நல்லது…
…மூன்றாவது வரிசை, மூன்றாவது டெஸ்க். இங்கே கோச்சா உட்காருகிறான்.
அவன் எப்போதும் எதையாவது, ஆமையை அல்லது சிவப்புக் கல்லைத் தேடுவான்.
சமீபத்தில் ஏதோ தலைமையகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொன்னான்.
“என்ன தலைமையகம்?” என்றேன் நான்.
“பூமியடித் தலைமையகம். நாங்கள் ஒரு குழியைக் கண்டுபிடித்தோம். அதன் மீது பெரிய அட்டைகளைப் போட்டு மூடினோம். அதைப் பெரிது செய்ய ஆரம்பித்தோம், அப்போது ஒரு செத்த நாயைக் கண்டுபிடித்தோம். அதை வெளியில் இழுத்தோம்.”
“யார் அந்த ’நாங்கள்’?”
“அது ரகசியம், ஆனால் உங்களுக்குச் சொல்லுவேன். தலைமையகத்தில் நான் இவர்களைச் சேர்த்திருக்கிறேன்…” அவன் தன் ஆறு நண்பர்களின் பெயர்களை என் காதில் சொன்னான்.
“நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?”
“இன்னமும் தெரியாது!”
இவனுடன் என்ன செய்வதென எனக்குத் தெரியும். நீங்களே செய்த விளையாட்டுப் பறவைகளின் பந்தயம் நடத்துமாறு அல்லது விண்வெளிவீரர்கள் பற்றிய கண்காட்சி நடத்துமாறு அல்லது 1941-1945-ல் பாசிசத்திற்கு எதிராக நடந்த மாபெரும் தேசபக்த யுத்த சம்பவங்கள் பற்றித் தாத்தாமார்களிடமிருந்து அறியுமாறு அல்லது கதைப் போட்டி நடத்துமாறு திடீரென உங்களுக்கு ரகசிய கட்டளைகளைப் பிறப்பிக்கலாமே! இதைப் பற்றி விரிவாகப் பேச இப்போது முடியாது, மீண்டும் கூடும் போது பேசுவோம்.
ஆனால் உனக்கு நமது பொது ரகசியம் பற்றி தெரியாது! நாங்கள் எல்லோரும் உனக்கு ”எதிராக” சதி செய்துள்ளோம்!
“வலேரி மாமா வந்து விட்டார்!” என்று உன் தந்தை வகுப்பறையில் நுழைந்ததும் எல்லா குழந்தைகளும் கத்தினார்கள்.
உன் நண்பர்களும் நீயும் பள்ளி வாயிலருகே அவருக்காக அடிக்கடி காத்திருக்கின்றீர்கள். அவர் உங்களுக்கான இசையுடன் மட்டுமின்றி அன்புடன், பாசத்துடன், புன்முறுவலுடன் எப்போதும் வருவார். அவர் இசையைப் பற்றி சுவாரசியமாக விளக்கினார், பியானோவில் உங்களுக்காக வாசித்துக் காட்டினார், இசை நாடக ஒத்திகைகளை நடத்தினார்… ஆனால் உன் குடும்பத்தில் நடந்த சோகத்தைப் பற்றி உனக்கு மட்டும் தான் தெரியாது.
“அவருக்கு ஒரு விபத்து நேர்ந்து தொலைதூர நகரத்தில் மருத்துவமனையில் இருக்கிறார். குணமாகும் வரை நீண்ட நாட்களுக்கு அவர் அங்கிருப்பார்!” என்று உன்னிடம் இப்படிச் சொன்னார்கள்.
அன்றைய தினம் (நீ பள்ளியில் இல்லை) நடந்ததைக் கேள்விப்பட்டதும் குழந்தைகள் அழுதனர். உனது மென்மையான இதயத்தில் காயம் ஏற்படாமலிருக்க, உரிய நேரம் வரை இந்தப் புனிதமான பொய்யைக் காப்பதென நாங்கள் முடிவு செய்தோம்.
…இங்கே தேயா உட்காருகிறாள். எங்கே நிமிர்ந்து நேராக உட்கார்! எழுதும் போது கூன் போடக் கூடாது!..
…இது தீத்தோவின் டெஸ்க். ஆண் பிள்ளையாக இரு! இருட்டில் பயப்படாதே!..
…இங்கே ரூசிக்கோ உட்காருகிறான். உனது முன் யோசனையும் திறமையும் எனக்கு மகிழ்ச்சி தருகின்றன. ஆனால் ஏன் பொய் சொல்கிறாய்? இந்தத் தீய பழக்கத்திலிருந்து உன்னை விடுவிக்க நான் வழிகளைத் தேடுகிறேன்…
…இது நீயாவின் இடம். நீ என்ன வரைகிறாய்? கையில் பூ ஏந்திய ஒரு சிறுவனின் படமா? இதை யாருக்குப் பரிசளிக்கப் போகிறாய்? எனக்கா? நன்றி, நீயா! இதை என் அறையில் மாட்டி வைப்பேன்!..
…அருகே நாத்தோவின் இடம். நீ என்ன முணுமுணுக்கிறாய்? புதிய கவிதைகளைப் படித்து விட்டாயா? எப்போது எங்களுக்கு இவற்றைச் சொல்வாய்? இப்போதா?…
…இந்த டெஸ்கில் விக்டர் உட்காருகிறான். என்ன விஷயம், சிறுவனே? நான் உனக்கு ஒரு சிக்கலான கணக்கைத் தரட்டுமா? இது என்னிடம் தயாராயுள்ளது. மேசையிலிருந்து எடுத்துக் கொள்!..
…இது இலிக்கோவின் இடம். ஜார்ஜிய மொழி உச்சரிப்பை நன்கு கற்றுக் கொண்டாயா?..
…இங்கே எலேனா உட்காருகிறாள். அதிகமாக வெட்கப்படாதே! பயப்படாதே, உன் திறமைகளை நம்பு!
…இது ஏல்லாவின் இடம். உன் தங்கை பேச ஆரம்பித்து விட்டாளா? அவள் பேசும் முதல் வார்த்தை என்ன என்று கவனித்து சொல். என் வாழ்த்துகளை அவளுக்குச் சொல்!..
…இங்கே கோத்தே உட்காருகிறான். எங்கே பியானோவில் உன் பாட்டை வாசி, எல்லோரும் உன்னைக் கேட்கின்றனர்…
…இங்கே கீகா உட்காருகிறான். நீ ஏன் இன்று சோகமாக இருக்கிறாய்? அம்மாவை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றார்களா? வருத்தப்படாதே, அவளுக்கு விரைவில் உடல் நலம் சரியாகி விடும்! அவளுக்கு உனது கதையைப் பரிசாக எடுத்துச் செல். இது அவளுக்குப் பிடிக்கும்!..
…இது ஏக்காவின் இடம். தேன்கோவையும் கோத்தேயையும் மன்னிக்க வேண்டும் என்கிறாயா? அவர்கள் இனி இப்படி செய்ய மாட்டார்களா? சரி, நல்லது…
…இது தேக்காவின் இடம். நீ என்ன எழுதியிருக்கிறாய்? 2,500+2,500= 5,000? அற்புதம், சரி! ஏன் சாக்பீசால் டெஸ்கில் எழுதுகிறாய்?.. இங்கே… ஆனால் வகுப்பில் ஒருவரும் இதுவரை இல்லை. குழந்தைகளே, விரைவாக வாருங்கள்! நீங்கள் இல்லாத வெற்று வகுப்பில் எனக்குச் சலிப்பாக உள்ளது!
அயோத்தி விவகாரம் நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் இடையே நடக்கும் போர் : வரலாற்றாசிரியர் டி. என். ஜா
பிரபல வரலாற்றாசிரியர் திவேந்திர நாரயண் ஜா, ஆரம்ப கால இந்திய வரலாற்றில் பொருளாயத கலாச்சாரம் குறித்த ஆய்வுகளுக்கு முன்னோடியாக இருந்தவர். தனது 35 ஆண்டுகால கல்வி துறைசார்ந்த பணியில் பண்டைய கால இந்தியாவின் சமூக, பொருளாதார சூழல் குறித்து ஆழமான ஆய்வைச் செய்தவர். தொழில்முறை வரலாற்றாசிரியரான இவர், வரலாற்று ஆய்வுகளிலிருந்து சமகாலத்தில் எழும் அரசியல் விவாதங்களில் தொடர்ச்சியாக தனது கருத்தினை சொல்லிவருபவர்.
வரலாற்றாசிரியர் திவேந்திர நாரயண் ஜா (டி.என். ஜா)
விளைவாக, இந்துத்துவ கும்பலின் தொடர்ச்சியான தாக்குதலை எதிர்கொண்டுவருபவர். உதாரணத்துக்கு பண்டைய இந்தியாவின் உணவுப் பழக்கமாக மாட்டிறைச்சி உண்பது இருந்தது குறித்த ‘The Myth of the Holy Cow’ நூலில் பல வரலாற்று ஆதாரங்களோடு எழுதியபோது, இவருடைய கருத்தை ஏற்க மறுத்த காவிகள் இவரைக் குறிவைத்தனர். நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு எப்போதும் வரலாற்று ஆதாரங்களுக்கே இவர் முக்கியத்துவம் கொடுத்தார்.
பாபர் மசூதிக்கு அடியில் ஒரு இந்து கோயில் இருப்பதாக வெளியான ஒரு அறிக்கையை நிராகரித்து வரலாறு மற்றும் தொல்பொருள் சான்றுகளை ஆராய்ந்த ஒரு சுயாதீன குழுவில் இவரும் ஒருவர்.
தி வயர் இணையதளத்துக்கு (உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன்) அளித்த பேட்டியிலும், பாபர் மசூதிக்கு அடியில் இந்து கோயில் இருந்தது என்பதற்கான கோட்பாட்டை இவர் மறுத்தார். இந்திய தொல்பொருள் ஆய்வகம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது, ராமஜென்மபூமி – பாபர் மசூதி விசயத்தில் இந்து முசுலீம் மோதலாக சங்க பரிவாரத்துக்கு எப்படி உதவியது என்பது குறித்தும் இவர் பேசியிருக்கிறார்.
***
விரைவில் உச்சநீதிமன்றம் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீது தீர்ப்பளிக்க இருக்கிறது. எனவே, இது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. ஒரு தொழில்ரீதியான வரலாற்றாசிரியர் என்றவகையில் நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அயோத்தி விவகாரம் நெருப்பின் மேலே பல காலமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்துக்களும் முசுலீம்களும் பிரச்சினைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். முன்பே, ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல்களில் சொன்னதுபோல, நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் இடையே நடக்கும் போராகத்தான் நான் இதைப் பார்க்கிறேன்.
அயோத்தியில் பிரச்சினைக்குரிய 2.77 ஏக்கர் சுற்றளவுக்குள்தான் ராமன் பிறந்தார் என்பதை நிரூபிக்கவே சாத்தியமில்லை. இந்த நம்பிக்கையில் எந்தவித எதார்த்தமும் இல்லை. நம்பிக்கையின் அடிப்படையில் வரலாற்றை எழுத முடியாது என்பதை தொழில்முறை வரலாற்றாசிரியாகச் சொல்கிறேன். இங்கே எழுதப்பட்டவை அல்லது சொல்லப்பட்டவை அனைத்தும் கற்பனாவாதத்தின் அடிப்படையாகக் கொண்டவை.
‘ராமஜென்மபூமி – பாபர் மசூதி : நாட்டுக்கு ஒரு வரலாற்றாசிரியரின் அறிக்கை’ என்ற வரலாற்றாசிரியர்களைக் கொண்ட குழுவில் நீங்களும் இருந்தீர்கள். உங்களுடைய முக்கியமான கண்டுபிடிப்பு என்ன?
முதலில், ஒருவிசயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். சூரஜ் பன், அதர் அலி, ஆர். எஸ். சர்மாவுடன் நானும் சேர்ந்து இந்த அறிக்கையை உருவாக்கினோம். அரசு அல்லது இந்த விவகாரத்தில் தொடர்புடைய இரண்டு தரப்பினரிடமிருந்து எந்தவித ஒத்துழைப்பையும் பெறாமல் சுயாதீனமாகவே இந்த அறிக்கையை தயாரித்தோம். எழுத்துப்பூர்வமான, தொல்பொருள் ஆதாரங்களின் அடிப்படையில் மசூதிக்கு அடியில் இந்து கோயில் இல்லை என்ற முடிவுக்கு வந்தோம்.
இந்த மோதலை இந்திய தொல்பொருள் ஆய்வகம் வளர்ப்பதை எப்படி பார்க்கிறீர்கள். இந்திய தொல்பொருள் ஆய்வகம் வெளியிட்ட அறிக்கையில் பாபர் மசூதி, இந்து கோயிலின் நான்கு தூண்களின் மேல் கட்டப்பட்டது எனக் கூறியது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
தூண்களின் அடிப்படையில் அங்கே கோயில் இருந்ததாக இந்திய தொல்பொருள் ஆய்வகமும், ஒரு இந்து கட்சியும் வாதிட்டன. இதில் சில விசயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் முன்னாள் தலைவராக இருந்த பி.பி. லால், முதன் முதலில் ஆயோத்தியில் ஆய்வு மேற்கொண்டவர்; இவர் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது முதல் விசயம். தனது முதல் அறிக்கையில் தூண்கள் இருப்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை.
1988-ம் ஆண்டு Indian Council of Historical Research கருத்தரங்கில் ஒரு ஆய்வுக்கட்டுரையை சமர்பித்தார். அதிலும் தூண்கள் குறித்து எதுவும் இல்லை. இராமாயணத்தின் வரலாற்று தன்மை குறித்து உரையாற்றிய அவர், தூண்கள் குறித்து பேசவேயில்லை.
அக்டோபர் 1990-ல் ஆர்.எஸ்.எஸ். இவருடைய ஆய்வுக்கட்டுரை ஒன்றை பிரசுரித்தது. அதில், மசூதிக்கு அருகில் தூண் போன்ற அமைப்பு இருப்பதாகக் கூறியிருந்தார். அயோத்தியில் அகழாய்வு நடத்தி 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படிச் சொல்கிறார்! அறிஞர்கள் வளர்ந்துகொண்டே இருப்பார்கள், அவர்களுடைய கருத்துக்களும் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், லால் வெறித்தனமான வேகத்துடன் வளர்ந்துவிட்டார். இதுதான் இவருடைய தூண் குறித்த கண்டுபிடிப்பை சந்தேகத்துக்குரியதாக மாற்றுகிறது.
இரண்டாவதாக, மசூதியின் நுழைவாயில் உள்ள இசுலாமிய சித்திரங்கள் இல்லாத 14 கருப்பு தூண்கள், அலங்காரத்துக்காக அமைக்கப்பட்டவை; கட்டடத்தின் வலுவை தாங்குவதற்கு நிறுத்தப்பட்டவை அல்ல. இதுபற்றி நாங்கள் நால்வரும் ஆராய விரும்பினோம். ஆனால், இந்திய தொல்பொருள் ஆய்வகம், அகழாய்வு குறிப்புகளை தர மறுத்துவிட்டது.
இந்திய தொல்பொருள் ஆய்வகம், தனது அறிக்கையை வரலாற்றாசிரியருக்கும் அகழ்வாராய்ச்சியாளருக்கும் வழங்கவில்லையா?
நீதிமன்றம் சொன்ன அகழ்வாய்வின் இறுதி அறிக்கையை நான் பார்க்கவில்லை. ஆனால், இந்த அறிக்கையைப் படித்த அகழ்வாராய்ச்சியாளர்களும் வரலாற்றாசிரியர்கள் அதை நிராகரித்துவிட்டார்கள். முதலாவதாக, இந்த அகழாய்வை செய்த இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் அறிவியல் முறைப்படி ஆய்வை செய்யவில்லை. இரண்டாவதாக, இங்கே கோயில் இருந்தது என்கிற முன் அனுமானத்தின் அடிப்படையில் இவர்கள் அகழ்வாய்வில் ஈடுபட்டார்கள். மூன்றாவதாக, இந்த அறிக்கை ஆதாரங்களை புறந்தள்ளுகிறது. உதாரணத்துக்கு, இங்கே கண்டெடுக்கப்பட்ட விலங்குகளின் எலும்புகள், மண்பானைகள், வழவழப்பான தரை ஓடுகள் குறித்து அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
பெரும்பான்மை இந்தியர்கள், சொல்லப்போனால் நீதிமன்றங்களும்கூட வரலாறு / வரலாற்று ஆதாரங்களை புறம்தள்ளிய நம்பிக்கையின் அடிப்படையிலான கருத்தின் மூலம், பாபர் மசூதி இடிக்கப்பட்டதை புரிந்துகொள்கிறார்கள். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்து கட்சிகளின் நம்பிக்கையை மட்டும்தான் கருத்தில் கொண்டது என்பது என் பார்வை. வரலாற்று சான்றுகள் முற்றிலும் புறம்தள்ளப்பட்டு, குப்பையில் போடப்பட்டன.
ராம ஜென்மபூமிக்கு மேலேதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்கிற கருத்தாக்கம் எப்படி பிரபலமானது? இந்திய வரலாற்றில் ராமர் கோயில்கள் குறித்த எழுத்துப்பூர்வமான, பிற ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா?
சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஸ்கந்த புராணம்தான் கடவுள் ராமர் பிறந்த இடம் அயோத்தி என முதன்முதலில் பேசியது. இதன் பல பதிப்புகளில், பெரும்பான்மையும் திருத்தல்களே அதிகம். ஸ்கந்த புராணத்தின் பகுதியாக வரும் அயோத்தியமகத்மியா முழுமையும் 18-ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சேர்க்கப்பட்டதாக இருக்கலாம்,
அதன் உள் சான்றுகளின் அடிப்படையில் ஆராயும்போது, இது 1600 (கி.மு.)க்கு முந்தையது அல்ல. 30-க்கும் மேற்பட்ட புனித தலங்களைக் குறிப்பிடுகிறது, இதில் ஒன்று ஜன்மஸ்தலம். ஆர்வத்துக்குரியவகையில், உரையை தொகுத்தவர்கள் எட்டு வசனங்களை ஜன்மஸ்தலத்துக்கும் 100 வசனங்களை ராமர் சொர்க்கத்திற்குச் சென்றதாக குறிப்பிடும் இடத்தும் எழுதியிருக்கிறார்கள். அந்த இடம் ஸ்வர்க்கத்துவாரா என்று அழைக்கப்படுகிறது. வி.எச். பி உள்ளிட்ட பிற இந்துத்துவ அமைப்புகள் முதன்மைப்படுத்திக் கூறும் இந்த ஸ்கந்த புராணம், ராமரின் பிறப்பைவிட மரணத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
ஸ்கந்த புராணத்தை தொகுத்தவர்களுக்கு அவர் பிறந்த இடத்தைவிட மரணித்த இடம் முக்கியமாகப் பட்டிருக்கிறது. மேலும், ஸ்வர்க்கத்துவாரா, சராயு நதிக்கரையில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது ராமர் பிறந்த இடம் எனக் கூறிக்கொள்ளும் மசூதி இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது.
1765-க்கு முன்னர் அயோத்திக்கு வருகை தந்த பிரெஞ்சு ஜேசுட் பாதிரியார், அவர்தான் முதல்முறையாக சிதிலமடைந்த கோயிலின் மீது மசூதி நிர்மாணிக்கப்படுவதாகச் சொன்னார். ஆனால், அது பிரபலமடைய காலம் பிடித்தது.
வரலாற்று நூல்களில் அயோத்தி எப்போதும் ஒரு யாத்திரை தளமாகக் கருதப்பட்டதா? துளசி தாஸின் ராம்சரித்மானாஸ் அயோத்தி குறித்து என்ன சொல்கிறது?
பண்டைய காலங்களில் அயோத்தி ஒரு இந்து புனித யாத்திரை தளமாக இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது 18-ம் நூற்றாண்டின் இறுதியில்கூட பிரபலமாகவில்லை. கொண்டாடப்பட்ட ராம்சரித்மானாஸ் நூலில் ஆசிரியர் துளசிதாஸ், அயோத்தியை யாத்திரை தளமாகக் குறிப்பிடவில்லை. அவர் பிரயாக் யாத்திரைக்கான பிரதான இடமாக இருந்தது என்று மட்டும்தான் குறிப்பிடுகிறார்.
அயோத்தி பிற மதங்களான சமணம் அல்லது பவுத்த மதத்தின் மையமாக இருந்திருக்க வாய்ப்புண்டா?
அயோத்தி மத்திய காலங்களில் முக்கியமான பவுத்த மையமாக இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. ஏழாம் நூற்றாண்டில் ஹர்ஸ்வர்த்தன் காலத்தில் இந்தியா வந்த சீன யாத்திரிகர் இவான் சுவாங், இங்கே பவுத்தர்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இங்கே 100 பவுத்த மடாலங்களும் பத்து பார்ப்பன கடவுளர்களின் கோயில்கள் மட்டுமே இருந்ததாக பதிவு செய்திருக்கிறார்.
பவுத்த மற்றும் சமண உரைகளில் அயோத்தி, சாகெட் என்ற பெயரில் அறியப்படுகிறது. மேலும், தொடக்ககால தீர்த்தங்கரான ரிஷப்நாத் பிறந்த இடம் என்றும் சமணர்கள் கோருகிறார்கள். இரண்டு யூத தீர்க்கதரிசிகள் அயோத்தியில் புதைக்கப்பட்டிருப்பதாகவும் அபு ஃபசல் குறிப்பிட்டிருக்கிறார். எனவே, இந்த நகரம் பல மதங்களின் முக்கியத்துவம் வாய்ந்த புனித இடமாகும்.
எப்படி, எப்போது அயோத்தி விவகாரம், மதப் பிரச்சினையாக உருவெடுத்தது என நீங்கள் நினைக்கிறீர்கள். உண்மையில், இந்துத்துவ குழுக்கள் இப்போது, பாபர் மட்டுமல்ல, முசுலீம் ஆட்சியாளர்களான அவுரங்கசீப், திப்பு சுல்தான் ஆகியோரும் கோயில்களை அழித்ததாக கோருகிறார்கள்…?
முசுலீம் ஆட்சியாளர் இந்து கோயில்களை அழித்தார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், கோயில்களையோ அல்லது வழிபாட்டுத் தலங்களையோ அழிப்பதில் இந்துக்கள் மிகவும் இழிவானவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சமணர்கள் மற்றும் பவுத்தர்களின் எண்ணற்ற மத தலங்களை அவர்கள் அழித்தார்கள் என்பதை நிரூபிக்க முடியும். நாட்டில் யார் அதிகமாக கோயில்களை அழித்தார்கள் என்பது நிச்சயமாக ஆய்வுக்குரிய விசயம்.
இடைக்கால இந்தியாவில் வகுப்புவாத மோதல் நடந்ததற்கு அதிக ஆதாரங்கள் இல்லை. ஆனால், ஆயோத்தியில் இந்து முசுலீம் மோதல் 1855-ம் ஆண்டு நடந்தது. இந்தப் பிரச்சினை அவாத் நவாபின் அதிகாரிகளால் தீர்த்து வைக்கப்பட்டது. சீதா கி ரசோய் என்று அழைக்கப்படும் சிலைகள் மசூதிக்கு வெளியே வைக்க அனுமதித்தன் மூலம் நவாப்பின் அதிகாரிகள் பிரச்சினையை தீர்த்துக் கொண்டனர். வக்ஃபு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.
1885-ம் ஆண்டில் பைசாபாத்தின் துணை நீதிபதியும் அவாத் நீதி ஆணையரும் முசுலீம்கள் தொடர்ந்து மசூதியை வைத்திருப்பது என்றும், சீதா கி ரசோய் இந்துக்களிடமும் தருவதாக நிலப்பிரச்சினையை தீர்த்து வைத்தனர். இந்த விவகாரம் 1930-களில் மீண்டும் எழுந்தபோது, சூழ்நிலை மாறியிருந்தது, மதவாதம் வளர்ந்திருந்தது.
விவகாரத்தின் வகுப்புவாதத்தில் மைல்கல்லாக 1949 டிசம்பரில், ராமரின் சிலை மறைமுகமாக மசூதிக்குள் வைக்கப்பட்டது. 1984-ம் ஆண்டு, பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற முழக்கத்துடன் விசுவ இந்து பரிசத் உருவானபோது, இந்த விவகாரத்தில் வகுப்புவாதம் எதிர்பாராத ஊக்கத்தைப் பெற்றது.
சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் கோயில் அழிப்பு கோட்பாடு குறித்து ஆய்வு செய்த அறிஞர்கள் இருந்தார்களா? வங்காள மருத்துவ சேவையில் பணிபுரிந்த ஸ்கார்டிஷ் மருத்துவர் பிரான்சிஸ் புக்கனன் 1810-ல் அயோத்திக்கு சென்றதாகவும் இந்தக் கோட்பாட்டை குப்பையில் தள்ளியதாகவும் நீங்கள் ஒரு முறை சொன்னது நினைவிலிருக்கிறது.
நிச்சயமாக, எச். எம். எலியட் மற்றும் ஜான் டாசன், முசுலீம் ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்ட கோயில்கள் குறித்து 1871-ல் எழுதியிருக்கிறார்கள். ஆனால், இந்தப் பிரச்சினைகள் அவர்கள் ஆராயவில்லை. இருப்பினும், அவர்கள் அழிக்கப்பட்டது என்பதன் உண்மையை குறிப்பிட்டிருக்கலாம். இந்து கோயில்களின் அழிவு /அவதூது குறித்து சொன்ன முக்கியமான வரலாற்றாசிரியர் ஜாதுநாத் சர்க்கார் ஆவார்.
இடிப்பைத் தொடர்ந்து நடந்த முழு நீதிமன்ற நடவடிக்கைகளிலும் நீதிமன்றங்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் அகழ்வாராய்ச்சியாளர்களை உள்ளடக்கியிருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா?
நிச்சயமாக, நீதிமன்ற நடவடிக்கைகளில் வரலாற்றாசிரியர்களை கலந்தாலோசித்திருக்க வேண்டும். மசூதிக்கு அடியில் கோயில் இருந்ததா? என்பதை தீர்மானிக்கும் பணியை சர்வதேச நிபுணர்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஒரு வரலாற்று உண்மையின் மேல், நீதிமன்றம் மட்டும் தீர்ப்பை வழங்கிவிட முடியாது. ஆனால், வரலாற்றாசிரியர்கள் மற்றும் அகழ்வாராய்ச்சியாளர்களின் அறிக்கையை வெறும் கருத்தாக நிராகரிக்கும் நீதித்துறையிலிருந்து ஒருவர் என்ன எதிர்பார்க்க முடியும்?
உங்கள் குழு நீங்கள் ஆராய்ந்த அறிக்கையை இந்திய அரசாங்கத்திடம் சமர்பித்தது. அதற்கு அரசாங்கம் சொன்ன பதில் என்ன?
எங்கள் அறிக்கையை அயோத்தி பிரிவின் பொறுப்பாளராக இருந்த திரு வி.கே. தால் மூலம் இந்திய அரசாங்கத்திடம் சமர்பித்தோம். அவரிடமிருந்தோ அல்லது அரசாங்கத்தின் வேறு எவரிடமிருந்தும் எந்த பதிலும் வரவில்லை.
இறுதியாக, வரலாற்றின் மாறுபட்ட கண்ணோட்டங்களுக்கிடையில் ஒரு சாதாரண நபர் எப்படி தனது கருத்தை உருவாக்கிக் கொள்கிறார்? அயோத்தியில் ராமர் கோயில் உள்ளது என நம்புகிறவர்கள், மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் மட்டுமே அங்கே கோயில் இல்லை என சொல்வதாகக் கூறுகின்றனர்?
சாதாரண நபருக்கு கற்றுத்தர வேண்டும். மேலும் அவர்கள் பகுத்தறிவு பார்வையில் அதை ஏற்க வேண்டும். என்னிடம் தயாராக இதற்கொரு பதில் இல்லை. ஆனால், தவறு செய்யாதீர்கள். அங்கே கோயில் இல்லை என்பது பரப்புரை செய்யப்பட்டதற்கு மார்க்சியவாதிகள் பொறுப்பல்ல. இந்துத்துவ குழுக்கள்தான், தங்களுடைய வழக்கை வாதிக்க முடியாமல், மார்க்சியத்தின் மீதான அச்சத்தில் இப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
நேர்காணல்: Ajoy Ashirwad Mahaprashasta.
தமிழாக்கம் : அனிதா நன்றி :தி வயர்.
ஃபாத்திமாவைப் பற்றி படித்து விளங்கிக் கொண்டதை எழுதியிருக்கிறேன். ஃபாத்திமாவிற்கு ஒரு இரட்டைச் சகோதரி இருக்கிறார். தாய், தந்தை, சகோதரி, தம்பி என அனைவரிடமும் அன்பாக இருந்த பெண். இந்தக் குடும்பம் சவுதியில் இருந்திருக்கிறது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதுதான் குடும்பம் கேரளா திரும்பியிருக்கிறது.
சிவில் சர்வீஸ் படிக்கும் ஆசையில் பத்தாம் வகுப்பிற்குப் பின் ஸ்டேட் போர்டிற்கு மாறியிருக்கிறார். இவருடைய இரட்டைச் சகோதரி ஆயிஷா சட்டம் படிக்கிறார்.
ஃபாத்திமா இறந்தது 9 நவம்பர் அன்று. நவம்பர் 8-ம் தேதி சவுதியில் இருந்த தந்தையோடு வீடியோ காலில் பேசியிருக்கிறார். பேசும்போது நிறைய அழுதிருக்கிறார். அப்போது மூக்குத்தி அணிந்த ஒரு பெண் ஃபாத்திமாவை சமாதானப் படுத்தியிருக்கிறார். அந்தப் பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறார் ஃபாத்திமாவின் தந்தை. அந்தப் பேச்சின் சாரம் என்னவென்று தெரியவில்லை.
ஃபாத்திமா படித்துக் கொண்டிருந்தது இண்டிக்ரேட்டட் எம்.ஏ. பிறர் குறிப்பிட்டுள்ள படி வீட்டைப் பிரிந்த மனச் சோர்வால் அவர் இறந்திருக்க வாய்ப்பில்லை என்கிறது அவர் குடும்பம். ஏனெனில் நவம்பர் 15 செமஸ்டர் தேர்வு; 27 -ம் தேதி அவர் விடுமுறைக்கு வீட்டிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
ஃபாத்திமாவின் மரணத்தை ஒரு நிகழ்வாகவே அவர் துறையும், நிர்வாகமும், சக மாணவர்களும் கண்டு கொள்ளவில்லை என்கிறது அவர் குடும்பம்.
அவர் மரணத்திற்கு முன் போனை ஒரு நாள் அணைத்து வைத்திருக்கிறார். எது அவரை பயமுறுத்தியது என்ற கேள்வி இருக்கிறது.
லாஜிக் பாடத்தில் இண்டர்னல் தேர்வு நடந்திருக்கிறது. அதில் இருபதுக்கு 13 மதிப்பெண்கள் வாங்கினார் ஃபாத்திமா. அப்படியும் அவர்தான் வகுப்பில் முதல். தனக்கு 18 மதிப்பெண்கள் வரவேண்டியது என துறைத் தலைவரிடம் அப்பீல் செய்திருக்கிறார். துறைத் தலைவர் அதை ஏற்று வழிமொழிந்திருக்கிறார். சம்பந்தப் பட்ட பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் இது குறித்து தன்னை நவம்பர் 11 -ம் தேதி சந்திக்கும்படி மெயில் அனுப்பியிருக்கிறார். ஆனால் அந்த சந்திப்பு நடக்கும் முன்பே ஃபாத்திமா மரணமடைந்து விட்டார். சுதர்சனிடம் பயம் கொண்டிருந்தார் ஃபாத்திமா. அதைத் தன் பெற்றோரிடம் சொல்லியிருந்திருக்கிறார்.
ஃபாத்திமாவின் செல்பேசி காவல் நிலையத்து மேசையில் சார்ஜ் இல்லாமல் கிடந்திருக்கிறது. அங்கு சென்ற குடும்பம் அதைப் பார்த்திருக்கிறது. ஆயிசாவும் அதே போல் ஒரு செல்பேசியைப் பயன்படுத்தியதால் தன் சார்ஜரை வைத்து சார்ஜ் செய்திருக்கிறார். அப்போது போன் லாக் செய்யப்படாமல் இருந்திருக்கிறது. அதில்தான் தன் மரணத்திற்குக் காரணம் சுதர்சன் பதமனாபன் என்ற செய்தி இருந்தது.
வேறு பல ஆசிரியர்களையும் இணைத்து இணையத்தில் பரப்பப்பட்ட போலி மரண வாக்குமூலம்
ஃபாத்திமா எழுதியதாகச் சொல்லப்படும் இன்னொரு குறிப்பு பொய்யானது. அந்த அலங்கார ஆங்கிலம் ஃபாத்திமாவின் மொழியுமல்ல. அந்த மற்ற இரு பேராசிரியர்களையும் அவர் குற்றம் சாட்டவில்லை. இதில் யாருக்கு, என்ன நோக்கம் என யோசிக்க வேண்டி இருக்கிறது.
ஃபாத்திமாவின் தந்தை சுதர்சன் தவிர இன்னும் சிலருக்கு இந்த மரணத்தில் தொடர்பு இருக்கிறது எனச் சொல்கிறார்.
என் பெயரே எனக்குப் பிரச்சினை என்ற வாக்கியத்தைத் தன் பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார் ஃபாத்திமா.
ஐ.ஐ.டி.யின் பழைய மாணவர்கள் இங்கு தற்கொலை என்பது எப்போதும் நடக்கக் கூடியது.இத்தனை நாட்கள் அதன் மேல் ஊடக வெளிச்சம் விழுந்ததில்லை என்கிறார்கள்.
இங்கு உயர்த்திக் கொண்ட சமூகம்தான் பெரும்பான்மை. எனவே ஆசிரியர்களுக்கு அந்தப் பக்கச்சார்பு உண்டு என்கிறார்கள் பழைய மாண்வர்கள். சுதர்சன் ஈகோ பிடித்த மனிதர் எனச் சொன்ன பழைய மாணவர்களும் உண்டு. அவர் ஜெர்மனி சென்ற போது ஹிட்லரின் கேஸ் சேம்பரின் முன் விக்டரி சைகை காட்டி ஒளிப்படம் எடுத்திருந்தார் எனச் சொல்கிறார்கள் பழைய மாண்வர்கள்.
ஃபாத்திமாவின் தாய்க்கு தூக்க மருந்து கொடுத்து அமைதிப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இனி ஒரு ஆயிஷா தன்னில் ஒரு பாதியான ஃபாத்திமாவை இழக்கக் கூடாது என்கிறார் அவர் சகோதரி. அவர் தந்தை என் பொன்மோளுக்கு நியாயம் கிடைக்கும்வரை நான் சென்னையை விடப் போவதில்லை என்கிறார்.
எல்லாவற்றையும் நோட்ஸ் எடுக்கும் வழக்கம் உள்ள ஃபாத்திமா இறப்பதற்கு முன் 28 நாட்களின் நிகழ்வையும் நோட்ஸ் எடுத்திருக்கிறார். அது அப்படியே விசாரணைக்குப் பயன்படட்டும் என நம்பிக்கை கொள்வோம்.
பல வருடங்களுக்கு முன் எனக்குத் தெரிந்தவர் ஐ.ஐ.டி.யின் மன நல ஆலோசகராக இருந்தார். அவர் சொன்னவற்றில் இருந்து அந்த வளாகத்தின் சிக்கல்கள் எனக்கு விளங்கியது.
பலிபீடங்களான உயர்கல்வி நிறுவனங்கள்!
என் முதுகலை ஆய்வின்போது ஐ.ஐ.டி.யின் humanities துறையின் பேராசிரியர்கள் எனக்கு உதவியிருக்கிறார்கள். அதன் பிறகும் அத்துறையின் செமினார்களுக்குப் போய் வந்திருக்கிறேன். ஆனால் பின்னாளில் ஐ.ஐ.டி.யின் பொறியியல் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த போது சமூக பொறுப்பும், sensitivity இல்லாத அறிவும் எதற்கு எனவும் யோசித்திருக்கிறேன்.
ஐ.ஐ.டி. மட்டுமல்ல மாணவத் தற்கொலை எங்கு நடந்தாலும் அது அநியாயம். ஆனால் கல்வியை வெறும் வியாபாரம் ஆக்கியது , ரசீது இல்லாமல் அநியாயக் கட்டணம் வசூலிப்பது, சாராய முதலாளி, மணற் கொள்ளைக்காரர்கள், முன்னாள் அடியாட்கள் கல்விக்கூடம் நடத்துவது , மதிப்பீடு இல்லாத சில ஆசிரியர்கள், சில மாணவர்கள் என இருக்கும் சூழலில் என்ன எதிர்பார்க்க முடியும்?
ஆனால், ஐ.ஐ.டி. அரசுப் பணத்தில் நடக்கிறது. எனவே அச்சூழலின் அரசியல் பற்றிப் பேச மக்களுக்கு உரிமை உண்டு.
கீதா நாராயணன்.
ஐ.ஐ.டி.யில் இருக்கும் மாணவர்களிடம் விரிவாக விசாரணை செய்யுங்கள். Objectively approach the issue of discrimination and violence!
எங்கு மாணவத் தற்கொலை நடந்தாலும் அந்த வளாகத்தின் சூழல் குறித்து விரிவான ஆய்வு வேண்டும்.
இன்னொன்று நானும், நாராயணனும் பல மாணவர்களுக்கு mentor ஆக இருந்திருக்கிறோம். சின்னஞ்சிறு ஊரிலிருந்து ஆங்கிலம் தெரியாமல்,முதல் தலைமுறையாய் படிக்க வரும் மாணவர்களுக்கு வழிகாட்டும் செயல் அது. அப்படி வரும் மாணவர்களின் மன நிலை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து சொல்கிறேன். ஒரு கல்வி நிறுவனம் மாணவர்களை ஆற்றுப்படுத்த ஆலோசனை மையங்களை நடத்த வேண்டும். இது அந்த திருச்சி மாணவிக்காக! It is the duty of our education ministry to invest on it.
பெரியாரியர்கள் மற்றும் அம்பேத்கரியர்கள் குறித்து அவதூறாகப் பேசிய யோகா சாமியார் பாபா ராம்தேவ்-ஐக் கண்டித்து சமூக வலைத்தளமான ட்விட்டரில் #arrestRamdev என்ற ஹேஷ்டேக் ஞாயிற்றுக்கிழமை டிரெண்டானது.
கடந்த திங்கள்கிழமை (நவம்பர் 11), ரிபப்ளிக் டிவியின் நேர்காணல் ஒன்றில், சாதி எதிர்ப்பு தலைவர்களான அம்பேத்கர் மற்றும் பெரியாரை பின்பற்றுகிறவர்கள் அறிவுசார் தீவிரவாதத்தை முன்னெடுப்பதாகவும் ‘அறிவுசார் தீவிரவாதம்’ என்ற வார்த்தையை தானே உருவாக்கியதாகவும் கூறினார்.
முன்னதாக, அயோத்தி தீர்ப்பை அடுத்து ரிபப்ளிக் டிவி அர்னாப்பு, ராம்தேவும் குதூகலித்ததைக் (கேமராக்கள் முன் ராம்தேவ், அர்னாப்பை தூக்கி குதூகலித்தார்) கேலி செய்து, சமூக ஊடகங்களில் மீம்கள் உலாவந்தன. இந்த மீம்களை ராம்தேவின் பேட்டிக்கு முன் தொகுப்பாக வெளியிட்டது ரிபப்ளிக் டிவி.
இந்நிலையில், சமூகத்தின் மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்கள் இழிபடுத்திய ராம்தேவை கைது செய்ய வலியுறுத்தியும் அவருடைய பொருட்களை புறக்கணிக்கக்கோரியும் ட்விட்டரில் பலர் கருத்திட்டனர்.
வழக்கமாக பெரியார் – அம்பேத்கரை காவிகள் இழிபடுத்தும்போதெல்லாம் தென்னக மக்களே அதிகமாக கொதிப்படைவார்கள். ஆனால், இம்முறை ராம்தேவுக்கு பதிலடி வடநாட்டவர்களிடமிருந்தே அதிகம் வந்தது.
தலித் பிரச்சினைகள் குறித்து ட்விட்டரில் எழுதிவரும் பத்திரிகையாளர் திலீப் மண்டல், ராம்தேவின் தடித்தனம் குறித்து நிறைய ட்விட்டகளைப் பதிவு செய்தார்.
அரசியல் செயல்பாட்டாளர் ஹன்ஸ்ராஜ் மீனா, நேர்காணலில் வீடியோ பகிர்வை வெளியிட்டு ‘பெரியார் அம்பேத்கர் இழிபடுத்தி, எங்களை அறிவுசார் தீவிரவாதிகள் என அழைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார்.
प्रिय, रामदेव (@yogrishiramdev) आपने अब तक माफी नहीं माँगी, आपकी ये हिम्मत? ये हिम्मत आती कहाँ से हैं? सत्ता व हुक्मरानों से। ध्यान रहें, हम सबको झुकाने जानते हैं। पेरियार,अम्बेडकर, मूलनिवासी अस्मिता पर वाहयत टिप्पणी और हमें वैचारिक आंतकवादी कहना बर्दाश्त नहीं। #shutdownPatanjalipic.twitter.com/1ZrviDrOt1
அதுபோல, பலர் ட்விட்டரில் தங்களுடைய எதிர்ப்புக்குரலை பதிவு செய்தனர். “ராம்தேவ் நம்முடைய மரியாதைக்குரிய பெரியார் அம்பேத்கர் பிர்சாவை அவமதித்துவிட்டார். ராம்தேவ்-ஐயும் அவருடைய பொருட்களையும் நாம் புறக்கணிக்க வேண்டும். அவர் மீது வழக்கு தொடர வேண்டும். நாங்கள் ராம்தேவ் கைது செய்யப்பட வேண்டும் என விரும்புகிறோம்” என தெரிவிக்கிறார் சுனில் குமார் மீனா.
கப்பார்: ராம்தேவ் யாதவ் என்ற பெயரிலேயே ஒரு களங்கம் உள்ளது. அவர் கூட்டமைப்பின் அடிமை. அவர் பகுஜனில் பிறந்த ஒரு துரோகி. அனைத்து பகுஜன்களும் நம்முடைய பெரிய மனிதர்களை அவதூறை செய்ய யாருக்கும் துணிவில்லை என்பதை இவர்களுக்கு நிரூபிக்க வேண்டும். அவர்களுடைய காதுகளை அடையுங்கள்…
தலித் வாய்ஸ் : ராம்தேவின் கூற்றுப்படி, அறிவுசார் தீவிரவாதம் என்பது…
நீங்கள் அம்பேத்கரியர் எனில்
நீங்கள் பெரியாரியர் எனில்
சமூக நீதி நம்புகிறவர் எனில்
பெண்ணியத்தை நம்புகிறவர் எனில்
ஜனநாயகத்தை நம்புகிறவர் எனில்
தாராளவாதத்தை நம்புகிறவர் எனில் நீங்கள் அறிவுசார் தீவிரவாதி.
நீங்கள் நம்பினால், பதஞ்சலி பொருட்களை புறக்கணியுங்கள்.
What is intellectual terrorism according to Ramdev
1. If you are Ambedkarite 2. If you're Periyariest 3. If you believe in Social Justice 4. If you believe in feminism 5. If you believe in democracy 6. If you believe in liberalism
கவுதம் பாரதி : இப்போது ராம்தேவ் ஒத்துழைப்பின் அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டார். அவர் எப்போதும் தான் சார்ந்திருக்கிற பகுஜன் சமூகத்திற்கு எதிராகவே பேசுகிறார். இப்போது அவர் எங்கள் தலைவர்களை அவமதித்துள்ளார். அவர் மீது வழக்கு தொடரப்படவேண்டும்.
Now Ramdev has crossed all the limits of sycophancy. He always speaks against the bahujan community, which he belongs himself. Now he has insulted our great icons. He should be detailed and prosecuted. @dilipmandal#arrestramdevpic.twitter.com/v7N8oWVBYZ
‘எதற்காக #ArrestRamdev என்பதை மக்கள் ட்ரெண்டாக்கிக் கொண்டிருக்கிறார்? எப்படியென்றாலும், கருப்பு பணம், உள்நாட்டு பொருட்கள் என்ற பெயரில் பொய்யான ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்து மோசடி செய்யும், முட்டாளாக்கும் அவரை கைது செய்யுங்கள் என்கிறார் ரிஸ்வான்.
இப்படி மக்களை கொதிப்படைய வைத்த ராம்தேவ் அந்த நேர்காணலில், பெரியாரை பின்பற்றுகிறவர்கள் எதிர்மறைத்தன்மையை அதிகரித்துவிட்டதாக கூறினார்.
“பெரியாரை ஆதரிப்பவர்கள் கடவுளை பின்பற்றுகிறவர்களை முட்டாள்கள் என்கிறார்கள். அவரை வணங்குகிறவர்களை குற்றவாளி ஆக்குகின்றனர். கடவுளை தீயசக்தி என்பதுபோன்ற முட்டாள்தனமான கருத்துக்களை சொல்கிறார்கள்” என பிதற்றிய ராம்தேவ்.
’நமக்கு லெனின், மார்க்ஸ், மாவோ தேவையில்லை. இந்திய கலாச்சாரத்துக்கு எதிரான பார்வை அவர்களுடையது. இவர்களை பின்பற்றுகிறவர்கள் மோசமானவர்கள்’ எனவும் கூறினார்.
மேலும், இவர்களைப் போன்ற தலைவர்களைப் பின்பற்றுகிறவர்கள் நாட்டை பிரிப்பதாகவும் இவர்களை குறிக்க அறிவுசார் தீவிரவாதிகள் என்ற சொல்லை உருவாக்கியதாகவும் கூறினார்.
‘அர்பன் நக்ஸல்கள்’ என தங்களை எதிர்ப்போரை அழைத்து வந்த காவிகும்பல், இப்போது ‘அறிவுசார் தீவிரவாதிகள்’ என்பதையும் அந்தப் பட்டியலில் சேர்த்துள்ளது. நகர்ப்புற நக்ஸல்கள் என்றாலும் அறிவுசாரி தீவிரவாதிகள் என்றாலும் காவிகளுக்கு எதிராக மக்களே திரண்டு வந்து பதிலடி கொடுக்கிறார்கள். இதற்கு காவி ஆட்சியாளர்களின் பின் ஓடி ஓளிந்துகொண்டிருக்கும் ராம்தேவே சாட்சி.
ஆகஸ்ட் பிற்பகுதியில், குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டுவதற்காக அதன் மதகுகள் மூடப்பட்டன. அவ்வணையின் நீர் மட்டம் உயர உயர, நர்மதா நதி பாய்ந்துவரும் மத்தியப் பிரதேசம், தார் மாவட்டத்திலுள்ள சிகால்டா உள்ளிட்ட 178 கிராமங்களுக்குள் நதி நீர் புகுந்து, அம்மக்கள் அனைவரையும் நிர்க்கதியாக்கிவிட்டது.
“அரசு அணையை நிரப்பி எங்களை மூழ்கடிக்குமென்றும், பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கானோருக்கு நிவாரணம் வழங்காமல் கைவிடுமென்றும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை” எனக் கலக்கத்துடன் கூறுகிறார், பாரத் என்ற மீனவர். தனது வாழ்க்கையே தொலைந்து போன நிலையிலும் பூனையொன்று பசியாறுவதற்காக, ஆற்றுநீரில் மூழ்கிப்போன ஒரு தகரக் கொட்டகையின் உச்சியில் ஒரு ரொட்டித் துண்டை எடுத்து வைத்திருந்தார், அவர்.
1989- அணை கட்டுவதற்காக இந்தப் பகுதியிலிருந்து இடம் பெயரச் செய்யப்பட்ட 32,000 குடும்பங்களில் பெரும்பாலானோருக்குச் சட்டப்படி வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை, மாற்றுக் குடியிருப்புகள், நிலங்கள் உள்ளிட்டவை எவையும் இன்னமும் வழங்கப்படவில்லை. வீட்டுமனை கொடுக்கப்பட்டிருந்தால், வீடு கட்டத் தேவையான பணம் கொடுக்கப்படவில்லை; விளைநிலம் கொடுக்கப்பட்டிருந்தால், அதில் பாதியளவு நிலம் பயிர் விளையாத மலட்டு பூமி. இதுதான் மக்களுக்குக் கிடைத்திருக்கும் நிவாரண உதவிகளின் இலட்சணம்.
ஆனால், நர்மதா கட்டுப்பாட்டு ஆணையமோ, இந்த அணைக்கட்டால் பாதிக்கப்பட்ட குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த 230 கிராமங்களில் வாழ்ந்து வந்த 2.5 இலட்சம் மக்களுக்கும் அனைத்து இழப்பீடுகளும் வழங்கப்பட்டு விட்டதாகவும், நிலுவை ஏதுமில்லை என்றும் கூறுகிறது. ஆணையத்தின் கோப்புகள் இந்தக் கிராமங்களில் யாரும் வசிக்கவில்லை என்று கூறுகின்றன. அதனால் அணையின் முழுக் கொள்ளளவிற்கு நீரை நிரப்பிக் கொள்ள குஜராத் அரசிற்கு அனுமதியும் அளித்தது.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அணையின் திறனைப் பரிசோதிப்பதற்காக, அதன் முழு உயரத்திற்கும் (138.68மீ) நீரைத் தேக்கி மதகுகளையும் மூடியதாகச் சொல்கிறது குஜராத் அரசு. உண்மையில் அது மோடியின் பிறந்தநாளுக்காக குஜராத் அரசு அளித்த பரிசு. மோடியை மகிழ்விக்க அணையை நிரப்பிய குஜராத் முதல்வர் மறுபுறத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை ஆற்று நீரில் மூழ்கடித்துவிட்டார்.
மோடி தனது பிறந்த நாளான செப்டம்பர் 17, 2019 அன்று நர்மதை ஆற்றில் மலர்தூவிக் கொண்டாடிவிட்டுச் சென்ற சில தினங்களில், வெள்ளப்பெருக்கால் மார்பளவு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த தனது கால்நடைகளை மீட்டெடுக்க போராடினார், பவாதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோலு அம்பாராம்.
காபர் கேடா பகுதியைச் சேர்ந்த 65 வயதான விவசாயி நத்து சீதாராம் முகாட்டி, தனது 2.5 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த மிளகாய் ஆற்று நீரில் முழ்கிப் போனதால், ஒரே நாளில் 1.5 இலட்சம் ரூபாயை இழந்துவிட்டதாகக் கூறி கதறுகிறார்.
செழிப்பான கிராமங்கள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் தண்ணீருக்குள் மூழ்கி மடிந்துபோயின. மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காகப் பல கிராமங்களும், கிராம மக்களும் அவர்களின் வாழ்வாதாரங்களும் நீரால் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
1961-ல் ஜவஹர்லால் நேரு நர்மதா அணைக்கு அடிக்கல் நாட்டியபோதே, அணையால் பாதிப்பு ஏற்படுமோ என பயப்பட்ட மக்கள், 1990-களில் அது உண்மையானதைக் கண்டனர். 18 இலட்சம் ஹெக்டேர் விளைநிலங்களின் பாசன வசதிக்காகவும், 1450 மெகாவாட் மின் உற்பத்திக்காகவும் வறண்ட கட்ச், சௌராஷ்டிரா கிராமங்களின் நீர்த் தேவைக்காகவும் இந்த அணை கட்டப்பட்டிருக்கிறதெனக் கூறப்பட்டாலும், கட்ச், சௌராஷ்டிரா பகுதி மக்களின் குடிநீர்த் தேவையைக்கூட இந்த அணை இன்றுவரை பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை.
ம.பி. மாநிலம் – சோட்டா பர்தா கிராமத்தில் மூழ்கிப்போன வீடுகள் – குடும்பங்கள் குறித்து நடைபெற்ற கணக்கெடுப்பு.
முப்பதாண்டு கால சட்டப் போராட்டங்கள், பேரணிகள், உண்ணாவிரதப் போரட்டங்களால் தடைபட்டு வந்த அணை கட்டுமானப் பணிகள் மோடி பிரதமரான பின்னர் (2014) துரித கதியில் நடந்தேறின. 2017-ல் தனது பிறந்தநாளின்போது அணையை திறந்து வைத்தபோதுகூட, இந்த அணையால் காலி செய்யப்பட்ட 230 கிராமங்கள் மற்றும் இடப்பெயர்வுக்கு ஆளான 2.5 இலட்சம் மக்களுள் பெரும்பாலோருக்கு நிவாரணம் ஏதும் கொடுக்கப்படவில்லை.
இப்போது வெள்ளத்தால் மேலும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். தன் மூன்று ஏக்கர் விளைநிலத்தையும் வீட்டையும் இழந்த அம்பாராம் “இந்த அரசு எங்களை எறும்புகளைப் போல வெளியேற்றும் என்பதை எதிர்பார்க்கவில்லை” எனக் கலங்குகிறார்.
2017-ல் மத்தியப் பிரதேச அரசால் கட்டப்பட்ட தகரக் கொட்டகையில் நூற்றுக்கணக்கான கிராம மக்களுடன் வாழ்ந்து வரும் அவர், வேலை தேடி அல்லாடுவதாகக் கூறுகிறார். அவரது அழுகுரலைக் கேட்டு ஓடிவந்த மற்றவர்கள், அம்பாராமை பேட்டி எடுத்துக் கொண்டிருந்த பெண் பத்திரிகையாளர் ரோஹிணி மோகனை அரசு அதிகாரியாக நினைத்து, “எங்கள் வீட்டு மனைகளைக் கொடுங்கள், எத்தனை வருடங்கள் இதற்கு? எங்கள் பெயர்களையும், எண்களையும் குறித்துக் கொள்ளுங்கள் அம்மா” எனப் படபடவென்று பொரிந்து தள்ளினர்.
இந்த அணையால் நர்மதா பள்ளத்தாக்கில் ஏற்பட்டுள்ள பேரழிவுகளும், இழப்புகளும் பெரும்பான்மை மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுவிட்டன.
பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டிவிடும் கதையாக, அணையின் கட்டுமானத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அணையை அதன் முழு உயரத்திற்குக் கட்டுவதற்கு அனுமதித்த உச்ச நீதிமன்றம், “பள்ளிகள், சாலை வசதி, குடிநீர் வசதிகள் உள்ள கிராமப்புறங்களில் வீட்டு மனைகள் தந்து பாதிக்கப்பட்ட மக்களை குடியமர்த்த வேண்டும். புதிய வீடு கட்டிக் கொள்ள 5.8 இலட்சம் ரூபாயும், விளைநிலமும் அல்லது இழந்த விளைநிலத்திற்கு மாற்றாக 60 இலட்சம் ரூபாய் இழப்பீடும், நிலமற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார இழப்பீடும், நாட்டுப்புற மீனவர்களுக்கு நீர்த்தேக்கப் பகுதிகளில் மீன் பிடிக்க உரிமமும் தரவேண்டும்” என உத்தரவிட்டது. ஆனால், இவையெல்லாம் நீதிபதிகளின் கையெழுத்துப் பதிவாகியிருந்த காகிதத்தில்தான் இருந்தன.
அந்த மக்களுக்கு இழப்பீடு தருவதற்குப் பதிலாக அணையை நிரப்பி அவர்களை நீரில் மூழ்கடித்துவிட்டது குஜராத் அரசு. இத்தனை ஆண்டுகளில் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் இடப் பெயர்வுக்கான இழப்பீடுகள் முறையே 19 மற்றும் 33 கிராம மக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஆனால், மிக அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்ட மத்தியப்பிரதேசமோ, நிவாரண உதவிகளை வழங்குவதில் மிகவும் பின்தங்கியுள்ளது.
மோடி தனது பிறந்த நாளைக் கொண்டாட சர்தார் சரோவர் அணைக்கட்டிற்கு வருவதைக் கண்டித்து, அந்நதியின் மீதான பாலத்தை மறித்து நர்மதை பாதுகாப்பு இயக்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டம்.
நர்மதா பாதுகாப்பு இயக்கம் 31,593 குடும்பங்கள் இழப்பீட்டு தொகைக்காக அப்பகுதியில் காத்திருப்பதாக வெள்ளம் வருவதற்கு முன்பாக ஜூலை 2019-இல் அறிக்கை அளித்திருந்தது. இது குறித்து கேட்டதற்கு மத்திய பிரதேச அதிகாரிகளும், அணையைக் கட்டிய சர்தார் சரோவர் நர்மதா நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் எம்.டி. ராஜீவ் குப்தாவும், “இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் கருத்துச் சொல்ல முடியாது” என மறுத்துவிட்டனர்.
அணை கட்டலாமா, வேண்டாமா? என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை வெள்ளத்தில் மூழ்கடித்ததை நியாயப்படுத்த முடியுமா?
ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் சாலைகள், பாலங்கள் அமைக்க சூறையாடப்பட்டுவிட்ட நிலையில், வெள்ளமும் தன் பங்குக்கு பெருமளவு அழித்துவிட்டது. நிலவுடமையாளர்களைக் காட்டிலும் விவசாயக் கூலிகளைத்தான் இந்த வெள்ளம் கடுமையாகப் பாதித்திருக்கிறது.
நந்த்ஹான் கிராமத்தைச் சேர்ந்த ருக்தி ரது, “அரசு மூன்று வேளை உணவு கொடுப்பது சரிதான். ஆனால், வேலையில்லாமல் மருத்துவச் செலவுகள், கால்நடைகளுக்கான உணவு, பள்ளிக்கட்டணம், போக்குவரத்து ஆகியவற்றுக்கு என்ன செய்வது?” எனக் கேட்கிறார்.
இழப்பீடு கிடைக்குமென்ற அதிகாரிகளின் வாக்குறுதிகளை நம்பி இடம்மாறிய, போர்ஹெடி கிராமத்தைச் சேர்ந்த 200 பழங்குடியினக் குடும்பங்கள், “இடம்பெயர்ந்தவர்கள் பட்டியலில் தங்களது பெயர்கள் இல்லையென்றால் என்ன செய்வது?” என்ற அச்சத்தில் தற்போது உறைந்து போயுள்ளனர்.
அவர்களுள் கல்வியறிவு பெற்றவரான 35 வயது புவான் சிங் ராவத், அக்கிராம மக்களின் மறு வாழ்வுக்கான கோரிக்கை மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றபோது, “முதலில் அப்பா நிலத்தைக் கேட்டு வந்தால், அடுத்து மகன் வருகிறான்” என அதிகாரிகளால் கேலி செய்யப்பட்டதாகக் கூறுகிறார்.
இன்றைக்கு வெள்ளம் அதிகாரிகளின் பல பொய்களைக் காட்டிக் கொடுத்துள்ளது. இன்று மூழ்கிப்போயிருக்கும் காட்னெரா போன்ற பல கிராமங்கள் பாதிக்கப்பட்ட கிராமக் கணக்கில் வரவில்லை. மறுகுடியேற்றம் செய்யப்பட்ட சில கிராமங்கள்கூட தண்ணீரில்தான் மிதந்து கொண்டிருக்கின்றன.
மிகப் பெரியதும் வளமிக்கதுமான நிசார்பூர் கிராமம் மூழ்கடிக்கப்பட்டு பேய் கிராமமாகியுள்ளது. 3 மாடிக் கட்டிடங்கள் கூடப் பனிப்பாளங்கள் போல வெள்ள நீரில் மிதந்து கொண்டிருக்கின்றன.
தமது கிராமத்தை, சொந்தங்களை, வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் 75 வயதான விவசாயி சங்கர் சிங், “உங்களைப் போன்ற நகரவாசிகளால் இதைப் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். திடீரென உங்களது முன்னோர்கள் வாழ்ந்த கிராமத்தை, நீங்கள் பிறந்த இடத்தை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றப்படுவது, இருப்பிடத்தை மாற்றுவது போல அவ்வளவு எளிதானதல்ல. நீங்கள் உங்களது தொடர்புகளை, கலாச்சாரத்தை, பாதுகாப்புணர்வை இழந்துவிடுவீர்கள்” என்கிறார்.
இப்படித் தனது வலிமையைக் காட்டுவதற்காக இலட்சக்கணக்கான மக்களின் உலகத்தையே அழித்திருக்கிறார், நரேந்திர மோடி. புதிய இந்தியா, புதிய இந்தியா என மூச்சுக்கு முன்னூறு தடவை கூவி வரும் மோடியின் புதிய இந்தியாவின் வெள்ளோட்டம் இதுதானோ!
மொழியாக்கம்: மேகலை
(தி இந்து ஆங்கில நாளிதழின் சண்டே மெகஸின் என்னும் இணைப்பில், (06.10.2019) ரோஹிணி மோகன் என்ற பெண் பத்திரிக்கையாளர் எழுதிய தமது உலகத்தை இழந்த மக்கள்” என்ற செய்திக் கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு.)
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 05a
இணைகள் ஒன்றன் பின் ஒன்றாக வானில் சுற்றிவந்தன. காற்றில் சிக்கலான வட்ட நடனம் தொடங்கியது.
இந்தக் குழப்பத்தில் பகை விமானம் எது தன் விமானம் எது என்று அனுபவம் உள்ள கண்கள் தாம் பகுத்தறிய முடியும். காதுக் குழாய்கள் வழியே விமானியின் செவிகளில் பாயும் தனித்தனி ஒலிகளை வேறுபிரித்து அறிவது அனுபவம் உள்ள செவிகளுக்கே இயலுவது போல. அந்த நேரத்தில் வானத்தில் எத்தனை எத்தனை வித சத்தங்கள் ஒலித்தன : தாக்குபவனின் கரகரத்த வசவுச் சொற்களும், காயமடைந்தவனின் முனகல்களும் ஆழ்ந்த பெரு மூச்சின் கரகரப்பும் என்று இப்படிப் பற்பல ஒலிகள். ஒருவன் சண்டைப் போதையில் வேற்று மொழியில் பாட்டு முழங்கினான். மற்றொருவன் குழந்தைப் போல அரற்றி “அம்மா” என்றான். மூன்றாமவன் சுடுவிசையை அழுத்தியவாறு போலும், “இந்தா, இந்தா, இன்னும் இந்தா!” என்று வன்மத்துடன் கூறினான்.
திட்டமிட்டிருந்த இரை அலெக்ஸேயின் இலக்குக்குத் தப்பி விட்டது. அதற்குப் பதிலாக தனக்கு உயரே ஒரு “யாக்” விமானம் பறப்பதையும் நேரான இறக்கைகளைக் கொண்ட, சுருட்டு வடிவான “போக்” விமானங்கள் அதன் வாலுடன் ஒட்டினாற் போல விடாது தொடர்வதையும் அவன் கண்டான்.
“போக்” விமான இறக்கைகளிலிருந்து ஒரு போகான இரண்டு குண்டு வரிசைகள் “யாக்’ விமானத்தை நோக்கிப் பாய்ந்தன. அவை அதன் வாலில் பட்டுவிட்டன. அலெக்ஸேய் உதவிக்காக நேரே அம்பு போல மேலே விரைந்தான். கணப் போதின் ஒரு பகுதி நேரத்தில் அவனுக்கு மேலே கரு நிழல் ஒன்று தோன்றியது. அந்த நிழல்மீது தன் எல்லா பீரங்கிகளிலிருந்தும் முழு மூச்சாகக் குண்டுகளைப் பாய்ச்சினான் அலெக்ஸேய். “போக்” விமானத்துக்கு என்ன நேர்ந்தது என்பதை அவன் காணவில்லை. “யாக்” விமானம் சேதமுற்ற வாலுடன் தனியாகத் தொடர்ந்து பறந்ததை மட்டுமே அவன் கண்டான். இந்தக் களேபரத்தில் பெத்ரோவ் பின் தங்கிவிட்டானோ என்றுத் திரும்பிப் பார்த்தான் அலெக்ஸேய். இல்லை, பெத்ரோவ் அனேகமாக அருகருகவே பறந்தான்.
“பின் தங்கிவிடாதே, தம்பி” என்று பற்களின் இறுக்கு வழியே கூறினான் அலெக்ஸேய்.
கணகணப்பும் சடசடப்பும் பாட்டும் காதுகளில் ஒலித்தன. வெற்றி முழக்கமும் அச்ச மிகுதியால் வீரிடலும், கரகரப்பும், பற்களை நெரிப்பதும், திட்டு வசவுகளும், ஆழ்ந்த பெருமூச்சும் கேட்டன. இந்த ஓசைகளை கேட்கையில் தரைக்கு வெகு உயரே சண்டை விமானங்கள் போரிடுவதாகத் தோன்றவில்லை. பகைவர்கள் ஒருவரையொருவர் கைகளால் இறுகப் பற்றியவாறு, கரகரப்பதும் பெருமூச்சு விடுவதுமாக, பலத்தை எல்லாம் ஒரு முனைப்படுத்தித் தரையில் புரள்கிறார்கள் என்று தோன்றியது.
அலெக்ஸேய் தாக்குவதற்குப் பகை விமானத்தைத் தேடும் பொருட்டு வானத்தை சுற்றிலும் கண்ணோட்டினான். திடீரென்று அவனுக்கு முதுகுத்தண்டு திடீரெனச் சில்லிட்டு விட்டது போலவும் பிடரியில் மயிர்க் கூச்செறிவது போலவும் உணர்வு உண்டாயிற்று. தனக்குச் சற்றுக் கீழே “லா-5” விமானத்தையும் அதை மேலிருந்து தாக்கிய “போக்” விமானத்தையும் அவன் கண்டான். சோவியத் விமானத்தின் எண்ணை அவன் கவனிக்கவில்லை. ஆனால் அது பெத்ரோவ் என்பதை புரிந்து கொண்டான், உணர்ந்தான். தனது எல்லா பீரங்கிகளிலிருந்தும் சடசடவென்று குண்டு மழை பெய்தவாறு அவன் மேல் நேராகப் பாய்ந்தது “போக்கே-வூல்ப்” விமானம். இன்னும் அரை நொடியில் பெத்ரோவின் பாடு தீர்ந்துவிடும் போல் இருந்தது.
சண்டை மிக மிக அருகே நடந்துகொண்டிருந்த படியால் விமானத் தாக்கு விதிகளை கடைபிடித்தவாறு நண்பனுக்கு உதவ செல்வது அலெக்ஸேக்கு இயலாதிருந்தது. திரும்புவதற்கு நேரமோ இடமோ இல்லை. ஆபத்தில் இருந்த நண்பனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அபாயத்தை மேற்கொள்ளத் துணிந்தான். தன் விமானத்தைக் கீழ் நோக்கித் திருப்பி விரைவை அதிகப்படுத்தினான். தனது சொந்த கனத்தின் ஈர்ப்பு வேகம் சட வேகத்தாலும் எஞ்சினின் முழு ஆற்றலாலும் பன்மடங்காகி விடவே, விமானம் அசாதாரண இறுக்கத்தால் அதிர்ந்து நடுங்கியவாறு கல் போல – அல்ல, கல்போல அல்ல, ராக்கெட் போல – ‘போக்’ விமானத்தின் குட்டை இறக்கைகள் கொண்ட உடல் மீது நூல்கள் போன்று குண்டுவரிசைகளைப் பாய்ச்சியபடி விழுந்தது. இந்த தலைதெறிக்கும் வேகம் காரணமாகவும் திடீரென கீழே பாய்ச்சுவதாலும் நினைவு தப்புவதை உணர்ந்தான் அலெக்ஸேய்.
அகாதத்தில் விரைந்து வீழ்கையில் அவனது கண்கள் குறுதி நிறைந்து மங்கின. எனவே தன் விமானத்தின் உந்து சக்கரத்துக்கு முன்னே எங்கேயோ “போக்” விமானம் வெடித்துப் புகை சூழ்ந்ததை அவன் அரைகுறையாகக் கண்டான். பெத்ரோவ் எங்கே? அவன் எங்கோ மறைந்து விட்டான். எங்கே அவன்? அடித்து வீழ்த்தப்பட்டுவிட்டானா? குதித்துவிட்டானா? போய்விட்டானா?
சுற்றிலும் வானம் தெளிவாயிருந்தது. எங்கோ பின்னால் கண்ணுக்குத்தெரியாத விமானத்திலிருந்து அமைதியான குரல் வானில் ஒலித்தது குரல்:
“நான் – கடற்பறவை இரண்டு, பெதோத்தவ். நான்-கடற் பறவை இரண்டு பெதோத்தவ். அணிவகுத்துக் கொள்ளுங்கள் என் அருகே திரும்புவோம் நான் – கடற்பறவை இரண்டு…..”
பெதோத்தவ் அணியை விட்டுச் சென்றுவிட்டார் போலும்.
“போக்கே-வூல்பைச்” சுட்டு வீழ்த்திய பிறகு தன் விமானத்தை வெறிகொண்ட செங்குத்துத் தலைகீழ்ப் பாய்ச்சலிலிருந்து சம நிலைக்குக் கொண்டு வந்ததும் மெரேஸ்யெவ் பேரார்வத்துடன் ஆழ்ந்த மூச்சிழுத்தான். அபாயம் விலகி விட்டதால் ஏற்பட்ட களிப்பை, வெற்றி மகிழ்ச்சியை உணர்ந்தவாறு, நிலவிய அமைதியில் திளைத்தான் அவன். திரும்பு வழியை நிச்சயிப்பதற்காகத் திசைகாட்டியைப் பார்த்தான், பெட்ரோல் குறைவாக, விமான நிலையம் சேர்வதற்கே போதும் போதாதுமாக இருப்பதைக் கவனித்து முகம் சுளித்தான். ஆனால் சூனியத்துக்கு அருகே இருந்த பெட்ரோல்மானி முள்ளைவிட அதிக பயங்கரமான ஒன்று அடுத்த கணமே அவனுக்குப் புலனாயிற்று. பறட்டைப் பிடரி போன்ற மேகத்திலிருந்து அவனை நோக்கிப் பாய்ந்தது, எங்கிருந்தோ வந்த “போக்கே-வூல்ப்-190” விமானம். சிந்திக்க நேரமில்லை, விலகித் தப்ப இடமில்லை.
பகைவர்கள் ஒருவர் மீது ஒருவர் விரைவாகப் பாய்ந்தார்கள்.
“அத ஏன் மேடம் கேக்குறீங்க, வாரவனெல்லாம் கவர்மென்ட்டு நர்ஸுன்னு நம்பி வாரானுங்க. அப்புறம் என் சம்பளம் என்னன்னு தெரிஞ்சதுமே, சொல்லாம கொள்ளாம ஓடிடுறானுங்க” என சிரித்தாள் .
“டாக்டர் !…. டாக்டர் !…”
கதவு தட்டும் சத்தம் கேட்டது. செல்போனில் மணி இரவு 1.00 காட்டியது. கதவை திறந்தவள்.
“என்னமா.. கேசு”
“மங்கா வந்திருக்கா மேடம். வலி ஆரம்பிச்சிடுச்சு போல”
“அப்டியா” என்றவள் உடைமாற்றி கொண்டு தயாரானாள்.
அந்த அடர்த்த மலைக்காட்டில், அப்படி ஒரு சிறிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதை அவ்வளவு எளிதாக நம்பிவிட முடியாது .
ஒரே ஒரு பெண் மருத்துவரும், நர்ஸும் மட்டுமே. இருவருக்குமே வயது 25-ல் இருந்து 30-க்குள் இருக்கலாம். ஏதோ இருப்பதை வைத்து வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த அந்த அதரப்பழசான quarters-உம் இன்றோ நாளையோ இடிந்து விழும் நிலையில் இருந்தது. பாம்புகள் வந்து செல்வதெல்லாம் இந்த 2 வருடங்களில் அவர்களுக்கு சர்வசாதாரணம்.
மங்கா, காட்டுவாசி. கணவன் யானை மிதித்து இறந்துவிட, தனியாளாக அருகில் இருந்த ரிசார்ட்டில் கூலி வேலை செய்து பிழைத்த வந்தாள். நிறைமாத கர்பிணி. பிரசவம் இன்றோ நாளையோ என்று இருந்தவள். இப்போது வலியோடு வந்திருக்கிறாள்.
வெளியே இடியும் மின்னலும் என, வானம் ஒரு பெருமழைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது.
மங்காவை பிரசவ அறை கட்டிலில் கிடத்தினோம். ஆயிஷா BP பார்த்து கொண்டிருக்க, நான் பிரவத்துக்கான tray தயார் செய்தேன்.
மங்கா வலியில் “அம்மா .. அம்மா” என முனகிக் கொண்டிருந்தாள்.
“ஏய் மங்கா. இதைப் பாருடி, அதான் நானும் அயீஷாவும் இருக்கோம்ல, என்னத்துக்கு கெடந்து பயப்படற” என அவள் கைகளை தொட.
“சரிங்ககா” என் கைகளை இறுக்கி பற்றிக்கொண்டாள்.
அதற்குள் மழை சற்று பலமாக பிடித்திருந்தது. புயல் காற்று வீசும் சப்தம் ஜன்னல் வழியாக வீசுவது கேட்கவே கொஞ்சம் பயமாக இருந்தது.
“மேடம் BP 170 இருக்கு” என்ற ஆயிஷாவின் குரலில் கொஞ்சம் பதட்டம்.
பிரசவத்தில் BP 120 என்பதே கொஞ்சம் அதிகம்தான். 170 என்பதெல்லாம் ஆபத்துக்கான அறிகுறி.
“என்னமா சொல்ற, நல்லா பாத்தியா” என்றவாறே நானே இன்னொரு தடவை பார்த்தேன். 170-க்கு கொஞ்சம் மேலே இருந்தது .
“ஆயீஷா, கடைசியா மங்காக்கு எப்பமா BP பார்த்தோம்”
“நேத்து சாயந்தரம் கூட வந்திருந்தா மேடம் . நார்மலா தான் இருந்துச்சு”
“ஹ்ம்ம்.. யூரின் செக் பண்ணுமா” என்றேன்.
சில நிமிடங்களில்.
“மேடம் , அதுவும் positive”
சிறுநீரில் உப்பு அதிகம் , BP -யும் அதிகம். உடனே மேல்சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும். இல்லை என்றால் தாய் சேய் இருவருக்கும் பாதுகாப்பில்லை.
மங்காவிடம் எதுவும் சொல்லவில்லை. எதுவும் பேசாமல் அமைதியாக வயிற்றில் இருந்த குழந்தையின் இதயத்துடிப்பை பார்த்தாள். நல்லவேளை குழந்தை இந்த நொடி வரை நலம்.
இடி இடிக்கும் சப்தம் காதுகளை பிளந்தது. மின்னல் வெட்டுக்கள் கண்களைக் கூசியது. இவளுக்கும் கொஞ்சம் அடிவயிறு மாதவிடாய் வலியில் கனத்தது. Pad மாற்றி கொண்டால் பரவாயில்லை என்று தோன்றியது.
“ஆயீஷா 108-க்கு கால் பண்ணுமா, நான் இதோ வந்துடறேன்” என்றவள் சில நிமிடங்களில் வந்து…
“என்னாச்சு ஆயிஷா, வண்டிக்கு சொல்லிட்டியா”
“இல்ல மேடம், லைன் போகவே மாட்டேங்குது”
“Landline”
“அதுவும் போகல மேடம்.”
“BSNL try பண்ணி பாரும்மா . அது சில நேரத்துல போகும்”
மங்கா வலியில் துடித்து கொண்டிருந்தாள் .
சில நொடிகளில் “மேடம் ! BSNL ரிங் போகுதுங்க”
இவள் கையில் இருந்து போனை பிடுங்கினாள்.
“ஹலோ. நான் சிவன்மலைக்காடு PHC டாக்டர் பேசுறேன்”
அந்தப்பக்கம் எந்த சப்தமும் கேட்கவில்லை .
“ஹலோ, நான் சிவன்மலைக்காடு PHC டாக்டர். இங்க ஒரு பிரசவ கேஸு, 170 BP , எகிலம்ப்சியா (ஆபத்தான பிரசவ நிலை) மாதிரி இருக்குங்க. உடனே வண்டி அனுப்புங்க ப்ளீஸ்”
அந்தப் பக்கம் மீண்டும் அமைதி.
“உடனே வாங்க ப்ளீஸ்” என்றவள் கட் செய்தாள் .
“என்னாச்சுங்க மேடம்”
“அவங்களுக்கு கேட்டுச்சா இல்லையான்னு தெரியலையேமா”
மீண்டும் 108-க்கு அழைத்தாள். லைன் போகவில்லை.
“வேற எதாவது ஆம்புலன்ஸ் கிடைக்குமா ஆயீஷா”
“அர்த்தராத்திரில இந்த காட்டுல ஆம்புலன்சுக்கு எங்க மேடம் போறது . வெளியே வேற மழை பிச்சிகிட்டு பேயுது”
முதலுதவி மருந்துகளை உடனடியாக செலுத்தினோம . இனி ஒரு மணி நேரத்திற்கு ஒரு டோஸ் போட வேண்டும்.
“இன்னும் எத்தனை டோஸ் மா பாக்கி இருக்கு”
“ரெண்டு டோஸ் மேடம்”
மனதுக்குள் கணக்கு போட்டேன் அதிகபட்சம் இரண்டரை மணிநேரம் சமாளிக்கலாம், அதற்குள் இவளை கோவை GH-க்கு எப்படியாவது கொண்டு சென்றுவிட வேண்டும்.
மீண்டும் BP பார்த்தார்கள் .அது சற்றும் குறைந்தபாடில்லை.
மங்காவோ “தலை வலிக்குதுகா” என்றாள். அனைத்தும் ஆபத்துக்கான அறிகுறிகள்.
கையுறை போட்டுக்கொண்டு, மங்காவின் பிறப்புறுப்பை ஆய்வு செய்தாள்.
கனநொடியில் பனிக்குடம் உடைந்து, இவள் முகத்தில் தெளித்தது உதட்டில் சில துளிகள் பட்டு இவளுக்கு குமட்டியது. துடைத்துக் கொண்டு, பிறப்புறுப்புக்குள் கைவிட்டு குழந்தையின் தலையின் இருப்பை பரிசோதித்தாள். குழந்தை பிறக்க இன்னும் சிறிது நேரம் அவகாசம் இருப்பது தெரிந்தது.
மங்காவின் பிறப்புறுப்பு வழியாக ரத்தமும், அதன் கீழே மலமும் கலந்து ஒருவித சொல்ல முடியாத வாசத்தோடு வந்துகொண்டிருந்தது. பிரசவம் எல்லாம் சினிமாவில் காட்டுவது போல ரொமான்டிக் கிடையாதே. அது மலமும், சிறுநீரும், ரத்தமும் கலந்த இயற்கை ஆயிற்றே.
ஒரு மணி நேரம் முடிந்திருக்கும். அடுத்த டோஸ் மருந்தை செலுத்தினார்கள். இன்னும் ஒரு மணி நேரத்திற்கான மருந்து மட்டுமே கையிருப்பு இருந்தது . 108 ஆம்புலன்ஸ் வருவதற்கான அறிகுறி எதுவுமே தெரியவில்லை.
பிரசவம் எல்லாம் சினிமாவில் காட்டுவது போல ரொமான்டிக் கிடையாதே. அது மலமும், சிறுநீரும், ரத்தமும் கலந்த இயற்கை ஆயிற்றே.
மீதமிருந்த அந்த ஒரு டோஸ் மருந்தையும், ஆயிஷா பத்திரபடுத்திகொள்ள
இவள் காரை reverse எடுத்து start செய்தாள். பின்னர் இருவரும் கைத்தாங்கலாக மங்காவை பின்சீட்டில் கிடத்தினர். ஆயீஷா மங்காவின் தலையை தன் மடியில் வைத்துக் கொண்டாள்.
முழு வேகத்தில் வைப்பர் வைத்தும், மழை வீசும் வேகத்தில் சாலை சுத்தமாகத் தெரியவில்லை. வழியெங்கும் சேறும் சகதியுமாக கார் கட்டுப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தது. நல்ல வேலையாக காட்டாற்று பாலத்தை தாண்டி வெள்ளம் இன்னும் வரவில்லை. வழியாக மண் ரோட்டைத் தாண்டி தார் ரோட்டை அடைந்தார்கள்.
“மேடம். மங்கா மயங்கிட்டா மேடம்”
“இன்னொரு டோஸ் போடும்மா. சீக்கரம் போயிடலாம்”
கடைசி கையிருப்பு மருந்தும் செலுத்தப்பட்டு விட்டது. மழையோடு புயல் காற்றும் சேர்ந்து கொண்டது.
நடுவில் ஒரு மரம் சாலை நடுவே விழுந்திருந்தது . நல்ல வேளையாக இவர்கள் அதில் மோதவில்லை. சற்றும் யோசிக்காமல் இவள் இறங்கி அந்த மரத்தை தள்ள முயற்சித்தாள். காட்டு மரம் கொஞ்சமும் அசையவில்லை .
ஆயிஷாவும் இறங்கி வந்து முயற்சித்தும், பயனில்லை. மின்னல் வெளிச்சத்தில் எதையோ பார்த்த ஆயீஷா இவள் கையை பிடித்து இழுத்து வந்து காருக்குள் தள்ளினாள் . இவளும் முன் சீட்டில் அமர்ந்து கண்ணாடியை அவசர அவசரமாக ஏற்றினாள். காரின் லைட் அனைத்தையும் அணைத்தாள்.
“என்னமா என்ன பண்ற என்னாச்சு”
“ஷ்ஷ்ஷ்..” என்று என் வாயை கையால் பொத்தி அது ஒரு திசையில் கை காட்டினாள் .
ஒரு யானைக்கூட்டம் குட்டிகளோடு மெதுவாக கடந்து சென்றது. காரின் கண்ணாடி அருகே வந்த ஒரு யானையின் கண்கள், கண்ணாடிக்கு மறுபுறமிருந்த இவள் கண்களுக்கு மிக அருகில் இருந்தது . இவளுக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது .
சிறிது நிமிடங்கள் கழித்து, அவைகள் கடந்து போனதை உறுதி செய்தபின் , பயம் கொப்பளிக்க மங்காவின் நாடியை பார்த்தாள். நல்ல வேலையாக இன்னும் துடித்துக் கொண்டிருந்தது .
பயத்திலும், இதற்குமேல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாதே என்கிற விரக்தியில் அவளுக்கு ஓவென்று அழுகத் தோன்றியது . காரை விட்டு வெளியேறி, கொட்டும் மழையில் சாலையை மறைத்திருந்த அந்த மரத்தில் அமர்ந்து கொண்டாள். அவளால்
திடீரென்று ஓடி வந்த ஆயிஷா “மேடம் .. அங்க பாருங்க”
எனக்கும் இன்ப அதிர்ச்சி. சற்று தொலைவில் நீலமும் சிகப்புமாக சைரன் விளக்குகள் மினுக்கியபடி 108 ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது .
இவர்கள் இருவரும் “ஸ்டாப் ஸ்டாப்” என கைய்யசைத்து வண்டியை நிறுத்தினர்.
உள்ளிருந்து வந்த 108 பணியாளர் “மேடம் . நீங்க சிவன்மலைக்காடு PHC டாக்டர்தானே”
“ஆமாங்க நான்தான்”
“சென்னை 108 control ரூம்ல இருந்து பேசுனாங்க மேடம். உங்க patient எங்கேங்க ?”
உடனடியாக ஸ்ட்ரெச்சர் வைத்து மங்காவை வண்டியில் ஏற்றினோம். கடைசியாக அந்த மரத்தைத் தாண்டும்போது தவறி விழுந்து அவள் தலை ஒரு ஆம்புலன்ஸ் கம்பியில் மோதியது .
(சில மணி நேரம் கழித்து)
அவள் கோவை அரசு மருத்துவமனை வார்டில் மயக்கத்தில் இருந்து விழித்தாள்.
பயிற்சி மருத்துவர்களும், செவிலியர்களும் தத்தம் வேளைகளில் பிசியாக இருந்தனர். கட்டில் அருகே ஆயீஷா சூடாக பால் ஆற்றிக் கொண்டிருந்தாள்.
மெதுவாக கண் திறந்தவள்
கீதாசாரம் எனத் தலைப்பிடப்பட்ட ஒரு சிறு பதாகை வீடுகளிலும் கடைகளிலும் மாட்டப்பட்டிருப்பதை நம்மில் பலர் பார்த்திருக்கக்கூடும். அதிலுள்ள வாசகங்களான, “எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது” என்பன போன்றவை தத்துவ சாயலில் அமைந்திருப்பதால், பொதுமக்களை ஈர்த்து, அவர்களுள் பெரும்பாலோர் அதனையே கீதையின் சாரம் எனப் புரிந்து வைத்திருக்கின்றனர்.
விடயம் என்னவென்றால், பகவத் கீதையில் இந்த வாசகங்கள் எங்கே சொல்லப்பட்டிருக்கிறது என்று தேடினால், எந்த அத்தியாயத்திலும் எந்த சுலோகத்திலும் அவை காணக் கிடைக்காது. அதாவது, கீதையில் சொல்லாத ஒன்றைத்தான், கீதையைப் படிக்காமலேயே கீதையின் சாரம் என்று மக்கள் புரிந்து வைத்துள்ளனர்.
இன்னொருபுறத்திலோ, பார்ப்பனக் கும்பல் திட்டமிட்டே கீதையை இந்து மதத் தத்துவ போதனையாகப் பாமர இந்துக்களின் மூளையில் திணித்திருக்கிறது. பகவத் கீதையின் இத்தகுதியை அம்பேத்கர் தொடங்கி கி.வீரமணி உள்ளிட்டுப் பலரும் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.
“கிறித்தவ சமயத்திற்குப் பைபிளைப் போல, இந்து சமயத்திற்குப் பகவத் கீதை வேதமாகுமா? அது வேதமாயின், அது எதனைப் போதிக்கிறது? எவ்வகைக் கோட்பாட்டைப் போதிக்கிறது?”
“நான்கு வருணக் கோட்பாட்டிற்கும் தத்துவரீதியில் பாதுகாப்பளிக்க முன்வருகிறது, கீதை. நான்கு வருணங்களை இறைவன் படைத்தான் என்று திட்டவட்டமாகக் கீதை கூறுகிறது. எனவே, வருண தருமம் அணுவளவும் ஐயத்திற்கிடமின்றிப் புனிதமானது, கடவுள் படைப்பு என்பதையும் தாண்டி நியாயப்படுத்துகிறது.”
“பக்தியால் மட்டும் மோட்சத்தை அடைய முடியாது. பக்தியுடன் வருண ஆசாரத்தையும் கடைபிடித்தல் வேண்டும். சுருங்கக் கூறின், பக்தியால் மட்டும் ஒரு சூத்திரன் எவ்வளவு பெரிய பக்தனாயினும் மோட்சம் அடைய முடியாது. மேல் வருணத்தாருக்காகவே வாழ்ந்து, உழைத்து மடிந்தால்தான் மோட்சத்தை அடையமுடியும்”
“பகவத் கீதையின் முதன்மை நோக்கம் சதுர்வருணத்தைக் காப்பதும் நடைமுறையில் அவ்வமைப்பைக் கட்டிக் காப்பதுமேயாகும்”
– எனக் கீதையிலிருந்தே எடுத்துக்காட்டி, அதனுடைய உயிர் நாடியை அம்பலப்படுத்தியிருக்கிறார், அம்பேத்கர்.
அண்ணா பல்கலைப் பாடத்திட்டத்தில் பகவத் கீதை திணிக்கப்படுவதற்கு எதிராக ம.க.இ.க மற்றும் பு.மா.இ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் மதுரையில் நடத்திய ஆர்ப்பாட்டம்.
இப்படி வருண-சாதி அமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு நூலை எப்படி அனைத்து இந்துக்களுக்குமான ஒரு புனித நூலாகக் கருத முடியும்? சாதிப் பாகுபாட்டை, ஏற்றத்தாழ்வை ஆதரிப்பதன் காரணமாகவே வரலாற்றின் குப்பைக் கூடையில் தூக்கியெறிய வேண்டிய பகவத் கீதையைப் பாடநூலாக, அதுவும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பாடமாகப் பரிந்துரைத்திருக்கிறது, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (AICTE). அப்பரிந்துரையை உடனடியாக அமலுக்குக் கொண்டுவரும் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது, அண்ணா பல்கலைக் கழகம்.
பித்தளைக்குத் தங்க முலாம் பூசுவது போல, நான்கு வருணப் பாகுபாட்டை ஆதரிக்கும் கீதையை வாழ்வியல் அறிவுரைகளைக் கூறும் நூலாகக் காட்டி, அதனைப் பொறியியல் மாணவர்களிடம் திணிப்பதை நியாயப்படுத்துகிறார்கள் இந்துமதவெறியர்கள். “பொறியியல் மாணவர்களுக்கு அன்பு, நன்றியுணர்ச்சி, தவறுகளைத் திருத்திக் கொள்ளும் விரிவான மனது, சுய ஒழுக்கம், நேர்மை, புதிய சவால்களை எதிர்கொள்ளும் துணிவு ஆகிய பண்புகளைப் புகட்ட வேண்டுமென்றும், இப்பண்புகள் அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் சொல்லும் உபதேசங்களில் உள்ளதாகக்” கூறுகிறார்கள்.
மேலும், “பிளாட்டோவையும் சாக்ரட்டீசையும் பாடத்தில் படிக்கும் போது கீதையைப் படிப்பதில் என்ன தவறு? கீதையைப் படித்தால் தனிமனித ஆளுமையை வளர்த்துக் கொள்ள முடியும்; நிர்வாக மேலாண்மையை கற்றுக் கொள்ள முடியும்” என கீதைக்கு ஆதரவாக வாதங்களை முன்வைக்கின்றனர். இந்த அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கீதையில் “சுய உணர்தல்”, “மனதை வெல்ல அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் சொல்லும் வழிகள்” என இரண்டு தலைப்புகள் பாடத் திட்டமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
ஒரு புதிய பாடத் திட்டத்தைக் கொண்டு வரவேண்டுமானால், போர்டு ஆஃப் சர்வீசஸ், அகடமிக் கவுன்சில், சிண்டிகேட் என மூன்று கட்டங்களில் முன்வைக்கப்பட்டு, மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்த பிறகே புதிய பாடத்திட்டம் குறித்துத் துணைவேந்தர் அறிவிக்க வேண்டும். ஆனால், மாநில உயர்கல்வித் துறை அமைச்சருக்கே தெரியாமல், பல்கலைக்கழக நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல், கொல்லைப்புற வழியாக பகவத் கீதையைக் கட்டாயப் பாடமாக கொண்டு வந்தது அண்ணா பல்கலைக் கழகம். இந்தச் சதித்தனமான திணிப்புக்கு எதிராகக் கடுமையான கண்டனங்கள் எழுந்தவுடனேயே, “இது கட்டாயம் அல்ல, விருப்பப் பாடம்தான்!” எனத் துணை வேந்தர் சூரப்பா முதல் பா.ஜ.க. நாராயணன் வரை அனைவரும் சமாளித்தார்கள்; சமாளித்தும் வருகிறார்கள்.
“புதிய கண்டுபிடிப்புகள், உலகச் சந்தையில் பொறியியலின் தாக்கம், காலத்திற்கு ஏற்ப வளரும் தொழில்கள் எனப் பல்வேறு விசயங்களைப் பொறியாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து, அதற்கேற்ப தமது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என 28.09.2019 அன்று மதுரை வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் 23 நிறுவனங்களைச் சேர்ந்த மனிதவள வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், இதற்கு நேர்மாறாகக் காலத்தால் பின்தங்கிய, பிற்போக்குத்தனமான, மனித சமத்துவத்துக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருக்கும் கீதையைப் பாடத்திட்டத்தில் புகுத்துகிறார்கள் எனில், இவர்களின் நோக்கம்தான் என்ன?
கல்வியை கார்ப்பரேட்மயமாக்குவது மட்டுமின்றிக் காவிமயமாக்குவதும் ஆர்.எஸ்.எஸ்.-ன் அடிப்படைத் திட்டங்களுள் ஒன்று. இந்த அடிப்படையில்தான் மாநில அரசிடமிருந்து கல்வியுரிமையைப் பறிக்கும் நோக்கில் புதிய கல்விக் கொள்கை-2019 அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஆரம்பக் கல்வி தொடங்கி உயர் கல்வி வரையிலும் இந்தி, சமஸ்கிருத மொழி பாடத்திட்டத்தைக் கட்டாயமாக்குவது, இந்திய வரலாற்றை ஆர்.எஸ்.எஸ்.-ன் நோக்கங்களை ஈடுசெய்யும் வண்ணம் மாற்றியமைத்துக் கற்பிப்பது, வேத கணிதம், வேத விஞ்ஞானம் ஆகிய பார்ப்பன சரக்குகளைப் பாடத் திட்டத்திற்குள் கொண்டுவருவது, வேத கல்வி வாரியம் அமைப்பது, மாணவர்களுக்கு அறநெறிகளைப் போதிப்பது என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்குகளைத் தன்னார்வலர்களாக நுழைப்பது என அடுத்தடுத்துப் பல மாற்றங்களைப் புகுத்தி வருகிறது, மோடி அரசு. இந்த அடிப்படையில்தான் நவீன அறிவியலோடு தொடர்புடைய பொறியியல் கல்லூரி பாடத் திட்டத்தில் அறிவியலுக்குத் தொடர்பேயில்லாத பகவத் கீதை திணிக்கப்படுகிறது.
இந்தியைத் திணிக்காதே என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தும் சர்வதேச ஒற்றுமைக்கான வடகிழக்கு மன்றத்தின் மாணவர்கள்.
இத்தகைய திணிப்புகளின் வழியாக ஆர்.எஸ்.எஸ். எதைச் சாதிக்க முனைகிறது? இன்றைய நிலையில் சூத்திர, பஞ்சமர்களுக்குக் கல்வியை நேரடியாக மறுக்க வழியில்லை. எனினும், அடித்தட்டு மக்களின் கல்வி வாய்ப்புகளைப் பறிக்கும் விதத்தில் கல்விப் புலத்தில் பல்வேறு மாற்றங்களைத் தரம் என்ற பெயரில் கொண்டு வருகிறார்கள்.
3, 5, 8, 10, 11, 12-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள், மருத்துவக் கல்வியில் நீட் தேர்வு மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகள், 8-ம் வகுப்பு வரை எந்தவொரு மாணவனையும் ஃபெயிலாக்கக்கூடாது என்ற விதி திருத்தப்பட்டிருப்பது, குறைவான எண்ணிக்கை கொண்ட அரசுப் பள்ளிகளை மூடுவது, கல்லூரிகளுக்குத் தன்னாட்சி வழங்குவது மற்றும் தொழிற்கல்வியைப் புகுத்துவது ஆகியவை அனைத்துமே மேற்சொன்ன நோக்கத்தை நிறைவேற்றக்கூடிய வழிகளே.
இத்தடைகளையெல்லாம் தாண்டி ஒடுக்கப்பட்ட சாதி – வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வியில் இடம்பெற்றுவிட்டாலும், அவர்களிடம் பார்ப்பன மேலாண்மையைப் பதிய வைக்கும் நோக்கிலேயே உயர்கல்விப் புலத்தில் பகவத் கீதை, சமஸ்கிருத வகுப்புகள் கொண்டு வரப்படுகின்றன. பார்ப்பன மேலாண்மை, சாதி ஏற்றத் தாழ்வுகள், தீண்டாமை உள்ளிட்ட பிற்போக்குக் கருத்துக்களை நயமான வார்த்தைகளிலும் பண்டைய பாரதப் பாரம்பரியம் என்ற பெயரிலும் இயல்பாக்கத் திட்டமிடுகிறார்கள்.
பீற்றிக் கொள்ளப்படும் பாரத பாரம்பரியத்தில் பார்ப்பன வைதீக மரபு மட்டும்தான் உள்ளதா? வேதங்களை மறுத்த மரபுகள் உள்ளன. மேலும், புத்த, ஜைன, இஸ்லாமிய மதப் பிரிவுகளும், சைவ சித்தாந்தப் போக்குகளும் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு வேத, சமஸ்கிருத மரபிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பதிலிருந்தே பார்ப்பன பாசிஸ்டுகளின் உள்நோக்கத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.
ஏற்கெனவே உயர் கல்வி நிலையங்களில் சாதிப் பாகுபாடு, குறிப்பாக தாழ்த்தப்பட்ட மாணவர்களை ஒதுக்கும் போக்கு மேலோங்கி வருவதை ரோஹித் வெமுலா உள்ளிட்ட மாணவர்களின் தற்கொலைச் சாவுகள் எடுத்துக்காட்டியுள்ளன. இந்நிலையில் சாதிப் பாகுபாடுகளைக் களையும் முற்போக்குக் கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் பரப்புவதற்குப் பதிலாக, வருணப் பாகுபாட்டை நியாயப்படுத்தும் கீதையைப் பாடத் திட்டத்தில் சேர்ப்பது, அத்தகைய சாதிப் பாகுபாடுகள், தீண்டாமைக் குற்றங்களைக் கருத்தியல்ரீதியாக நியாயப்படுத்துவதற்கே பயன்படும்.
பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் தற்போதைய தேவையென்ன? முதலாவதாக, புற்றீசல் போலப் பெருகியிருக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் அடிக்கட்டுமான வசதிகளும், கல்வி கற்பிக்கும் திறனும் தரமிக்கதாக அரசால் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும். பொறியியல் படிப்பை முடித்து வரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரக்கூடிய வகையில் பொருளியல் கொள்கை வகுக்கப்பட வேண்டும்.
ஆனால், இதற்கு நேர்மாறாக மாணவர்களின் தனிமனித ஆளுமை (personality Skill), மாணவர்களுக்கு மேலாண்மைத் திறமை (Managerial Skill), மானுடவியல் (Humanity) பற்றிப் பயிற்றுவிப்பதாகக் கூறி கீதையை படிக்கச் சொல்வது அம்மாணவர்களை ஏமாற்றும் சதிச் செயலாகும்.
இந்திரா காந்தி கொண்டுவந்த அவசர நிலை ஆட்சிக் காலத்தில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் தீய நோக்கில் “பேச்சைக் குறை, உழைப்பைப் பெருக்கு” என்ற முழக்கம் அரசால் முன்வைக்கப்பட்டது. மோடி அரசோ அதனிடத்தில், “கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே” என உபதேசிக்கும் கீதையை மாணவர்களிடத்தில் புகுத்துகிறது.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
Mobile – (91) 97100 82506, (91) 99411 75876 Email –vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024