நாடார்கள் வரலாறு – கறுப்பா? காவியா? என்ற இந்த புத்தகம் மிக முக்கியமான ஒரு வரலாற்றுச் சூழலில் வெளிவந்திருக்கிறது. காவி கார்ப்பரேட் பயங்கரவாதம் நாட்டை சூழ்ந்து வரும் நிலையில் முந்தைய வரலாற்றுக் காலங்களில் காவியை எதிர்த்து உழைக்கும் மக்கள் நடத்திய பார்ப்பனிய எதிர்ப்பு போராட்டத்தின் சுருக்கத்தை இந்த நூல் முன்வைக்கிறது.
இந்த நூலை படிப்பதன் மூலம், நடைமுறையில் நாடார் சமூக மக்கள் வரலாறு கறுப்பா காவியா என்று கேள்வி எழுப்பும் தேவை இப்போது இருக்கிறதா? தென்தமிழக இந்து நாடார் மக்கள் விளிம்பில் இருந்து மையத்தை நோக்கி முன்னேறியது என்பது தங்களை ஒடுக்கிய இந்துமதத்தை எதிர்த்து சண்டையிட்டு மையத்திற்கு வந்தார்களா? இல்லை தனக்கு மேலே உள்ள சாதிகளின் பொருளாதாரத்தோடு போட்டியிட்டு மையத்திற்கு வந்தார்களா? திராவிட இயக்கம் ஆலய நுழைவை அரசியல் இயக்கமாக எடுப்பதற்கு முன் 1897-ம் ஆண்டில் நடந்த கமுதி ஆலய நுழைவுப் போராட்டம், அதற்கும் முந்தைய திருச்சுழி கோவில் நுழைவுப் போராட்டம் ஆகியவைதான் தமிழ்நாட்டில் முதல் ஆலய நுழைவுப் போராட்டங்களா? ஆகிய கேள்விகளுக்கு பதில்களை அறியலாம்.
மேலும் நாடார்கள் சமூக ரீதியாக சாதிரீதியாக ஒடுக்கப்பட்டிருந்த அந்த காலகட்டத்தில் தென் தமிழகத்தின் இதர சாதி மக்களுக்கும் இது எப்படி பொருந்தும், தோள் சீலை போராட்டம், திருச்சுழி கோவில் நுழைவு போராட்டம், விவேகானந்தருக்கு புரவலராக இருந்த பாஸ்கர சேதுபதியின் பார்ப்பனிய ஒடுக்குமுறை ஆகியவற்றையும் அறியலாம். பார்ப்பனிய கொடுங்கோன்மையிலிருந்து விடுபடுவதற்கு நாடார்கள் இதர சாதி மக்கள் கிறித்த மதத்திற்கு மதம் மாறியது, அய்யா வைகுண்டநாதரின் சுயமரியாதை வழிபாட்டுப் போராட்டம் ஆகியவற்றையும் அறியலாம்.
நாடார் இன மக்களின் கடந்த காலம் கருப்பாகத்தான் இருந்தது என்று நிறுவுகிற இந்த புத்தகத்தை, உண்மையில் நாடார் மக்கள் விரும்புகிறார்களா? அந்த கடந்த காலம் நினைவு கூறப்படுவதை இப்போது ஏற்கிறார்களா? என்றால் அதை அம்மக்களுக்கு மட்டுமல்ல சூத்திர பஞ்சம சாதி மக்கள் அனைவருக்கும் இவ்வரலாற்றை கொண்டு செல்ல வேண்டும்.
ஏனெனில் இந்நூல் நாடார்களுடைய வரலாறை மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து சாதிகளின் வரலாறும் இதுதான் என்று மறைமுகமாக நிறுவுகிறது. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய அவசியமான நூல். உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.
நூல்: நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? நூலாசிரியர்: வழக்கறிஞர் தி. லஜபதிராய்
Paypal மூலம்- உள்நாடு: 2$ (தபால் கட்டணம் சேர்த்து)
Paypal மூலம்-வெளிநாடு: 5$ (தபால் கட்டணம் சேர்த்து)
தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பதிவு நூலஞ்சல் (Registered Book post) முறையில் அனுப்பப்படும். பணம் அனுப்பிய நாளிலிருந்து மூன்று முதல் ஐந்து வேலை நாட்களில் நூல் உங்களுக்கு கிடைக்கும்.
வெளிநாட்டிற்கு Airmail – வான் அஞ்சல் மூலம் நூல் அனுப்பப்படும். நீங்கள் பணம் அனுப்பிய நாளிலிருந்து ஐந்து நாள் முதல் பத்து நாட்களில் நூல் கிடைக்கும்.
சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்துராஜ்யம் | நாடகம் | பாகம் – 5
காட்சி – 8 இடம் : விருந்து மண்டபம் உறுப்பினர்கள் : சிட்னீஸ், சிவாஜி, சர்தார்கள், நடனமாது.
(நடனம் நடக்கிறது. ஆசனங்கள் வரிசையாகப் போடப்பட்டிருக்கின்றன. முகப்பில் பெரிய ஆசனம். சிட்னீஸ் உலவியப்படி இருக்க சர்தார்கள் வருகின்றனர்.)
சிட்னீஸ் : வாருங்கள் வாருங்கள் மராட்டிய சர்தார்களே வந்து அமருங்கள். உங்கள் வருகையை மாவீரன் சிவாஜி ” மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
சர்தார் – 1 : சந்தோஷம் விருந்தை இந்த மண்டபத்திலேயே நடத்திவிட உத்தேசமா?
சிட்னீஸ் : ஆமாம்! அந்தப் பெரிய மண்டபத்தை ஆயுதக் காட்சிச் சாலையாக்கிவிட்டார்.
சர்தார் – 2 : இருவரிசைகள் உள்ளன. சரி, அதோ ஒரு ஆசனம் இருக்கிறதே, முகப்பில் தனியாக. அது ஏன்? அது யாருக்கு?
சிட்னீஸ் : அந்த ஆசனத்தில்தான். அஞ்சா நெஞ்சன் சிவாஜி அமரப் போகிறார்.
சர்தார் – 1 : அமரட்டும். ஆனால், அந்த ஆசனம் இருவரிசைகளிலேயே ஏதேனும் ஒன்றோடு சேர்த்துப் போடப்படாமல் தனியாக, இரு வரிசைக்கும் மேலாக, உயரமாகப் போடப்படுவானேன்?
சிட்னீஸ் : விருந்துக்கு அவர் தலைமை தாங்குபவர் என்ற முறையிலே, இது போல் அமைத்தோம்.
சர்தார் – 1 : அதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம்.
சர்தார் – 2 : இப்படி இருக்கும் என்று தெரிந்திருந்தால் விருந்துக்கு வரச் சம்மதித்திருக்கமாட்டோம்.
சர்தார் – 1 : ஏன் இப்படி எங்களை வரவழைத்து அவமானம் செய்ய வேண்டும்?
சிட்னீஸ் : அவமானமா? இந்த ஆசன அமைப்பு முறையா உங்களை அவமானம் செய்கிறது?
சர்தார் – 1 : மானாபிமானம் விஷயமாய், மகானுபவரே! எங்களுக்குக் கொஞ்சம் அக்கறை உண்டு. அவ்வளவுதான்.
சிட்னீஸ் : மராட்டியத்தை வாழ்விக்க வந்த மாவீரனின் பேச்சுக்கு மறு பேச்சு பேசி அறியாத மராட்டிய சர்தார்களா, இப்படி ஆட்சேபனை கூறுவது?
சர்தார் – 2 : ‘போ, இந்தக் களத்துக்கு; தாக்கு, அந்தப் படையை! அதன் அளவைப் பற்றி அத்தவேண்டாம். தாண்டும் அந்த அகழியை’ என்று அவர் கட்டளையிட்டபோது ஏன் என்று கேட்டதில்லை. ஆகுமோ என்று யோசித்ததில்லை. சாம்ராஜ்யம் சிருஷ்டிக்க வேண்டும் என்ற ஒரே ஆர்வத்தால். ஆனால் சிட்னீஸ் சாம்ராஜ்யம் தர்ம சூன்ய ராஜ்யமாக இருக்கவுமா சம்மதிக்க முடியும்?
சர்தார் – 1 : மிக மிக சாமான்யர்களுக்கும் விளங்கக் கூடிய கலாச்சாரத்தையே மறந்து விட்டார்களே இப்போதே. அவர் எங்கள் நெஞ்சுக்கு உரம் ஊட்டியவர்தான். ஆனால் எமது குலத்துக்குமா நஞ்சு ஊட்ட இடம் தரவேண்டும்?
சர்தார் – 2 : சிவாஜி வீரர், தீரர், தியாகி, தேசோத்தாரகர். எல்லாம் சரி. ஆனால், அவர் உயர்ந்த ஜாதியினரல்ல. குடியானவர் குலம். பிரபு, கோர்பாதி, நிம்பால்கர், சவாந்து போன்ற உயர்குல மக்கள் கூடியுள்ள இந்த இடத்திலே அவர் தலைமை வகிப்பது முறையாகாது. குலதர்மத்துக்கு இது தகாது.
சர்தார் – 1 : விருந்துக்குத் தலைமை தாங்க, அந்த உயர்ந்த ஆசனத்தில் அவர் அமர்வதற்கு நாங்கள் சம்மதித்தால், எங்கள் குலங்களை விட அவர் பிறந்த குலம் மேலானது என்று நாங்கள் ஒத்துக் கொண்டதாக அல்லவா அர்த்தப்படும்?
சர்தார் – 2 : அது எங்ஙனம் சாத்தியப்படும்? எப்படி அதை ஒப்புக் கொள்ள முடியும்? நாங்கள் அனைவரும் சிவாஜியினுடைய வீரத்தை ஒத்துக் கொள்கிறோம். போரிலே அவர் புலி; ஆட்சேபிப்பார் இல்லை. அவருக்காக வாள் ஏந்தி வையகத்தின் கோடி வரை சென்று போரிடவும் தயாராகவே இருக்கிறோம். ஆனால் எங்கள் குலத்தைவிட அவர் பிறந்த குலம் மேலானது என்று ஏற்றுக் கொள்ள முடியாது நான்.
சர்தார் – 1 : நானும் தான்!
சர்தார் – 2 : நானும் தான்!
(சிட்னீஸ் கோபமும் சோகமும் கொண்டு)
சிட்னீஸ் : முடிவான பேச்சா இது?
சர்தார் – 1 : ஆமாம்! ஒரு நாளும் சம்மதிக்க மாட்டோம். குலதர்மத்தை இழக்க மாட்டோம். இது விருந்தல்ல ; விஷமூட்டுமிடம். எங்களுக்கு இங்கு வேலையில்லை.
சிட்னீஸ் : விருந்து மண்டபம் விவாத மண்டபமாகிவிட்டது. குதூகலிக்க வேண்டிய கூடத்திலே, கோபமும், கொந்தளிப்பும், மூண்டன. சிவாஜியின் வீர உருவம்.
(சிவாஜி அப்போது சிட்னீஸ் அறியாவண்ணம் பின்புறமாக வந்து சிட்னீஸ் பேசுவதைச் சோகமாகக் கேட்டல்)
அவருடைய வெற்றிகள் . அவர் உருவாக்கிய புதிய மராட்டியம் எதுவுமே அந்தச் சர்தார்களின் கண்களுக்குத் தெரியவில்லை. அவர்களுடைய குலம் மட்டுமே தெரிகிறது. குலபேதமெனும் தேள் கொட்டிய குரங்குகள். விருந்து மண்டபத்திலே இந்த விபரீதம் நேரிட்டது தெரிந்தால் வீரத்தலைவன் விசாரத்தில் ஆழ்ந்து போவாரே.
(சிவாஜி வர, அவர் முன் மண்டியிடுகிறான்)
சிவாஜி விசாரம் எழாமல் இருக்க முடியுமா சிட்னீஸ்? எவ்வளவு அரும்பாடு பட்டிருக்கிறோம், சோர்ந்து கிடந்த ” மராட்டியத்துக்குப் புத்துயிர் அளிக்க, விமோசனமில்லை. விடுதலை இல்லை என்று எண்ணி ஏங்கிக் கிடந்த நாட்டிலே, விட்டுக்கோர் வீரனைக் கூட்டினோம். விரோதிகளை முறியடித்தோம். வெற்றி மேல் வெற்றி பெற்றபோது எந்த சர்தார்கள் நம் கண் காட்டிய வழி செல்லக் காத்து கிடந்தனரோ அவர்களே அல்லவா இன்று விதண்டாவாதம் பேசுகின்றனர். நண்பா! விருந்து மண்டபத்திலே நடந்த விவாதத்தை நான் சற்று தொலைவிலிருந்து கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். விருந்து மண்டபத்திலே விஷப்புகையை மூட்டி விட்டனர். வீரன் தான், ஆனால் குலம் என்று கேட்கின்றனர். நிம்பார்க்கார் குலமாம்! கோர்பாத்குலமாம் – சவாந்து குலமாம்! இவைகளெல்லாம் நான் களத்திலே கடும் போரிடக் கிளம்பிய போது எங்கே போயின? குடியானவனுக்கு விடுதலைப் போரை நடத்த அனுமதியிருந்தது. ஒரு குடியானவனுக்கு விடுதலைப் போரை நடத்த அனுமதி இருந்தது. ஆனால் ஒரு விருந்துக்குத் தலைமை தாங்க குல தர்மம் தடைவிதிக்கிறது. இந்த நிலையில் நாடு இருக்கிறது.
சிவாஜி : வீரம் பேசுகிறாய் சிட்னீஸ்? விஷத்தைக் கக்கி விட்டுச் சென்றிருக்கிறார்கள். பார்த்தாயே? நீதானே பார்த்தாய்?
சிட்னீஸ் : பார்த்தேன்; சிந்தித்தேன்; ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.
சிவாஜி : என்ன?
சிட்னீஸ் : மராட்டிய மண்டலம் உருவாகி விட்டது. புதிய ஜீவன் ஏற்பட்டுவிட்டது. எனினும் தாங்கள் மட்டும் இன்னும் பழைய சிவாஜியாகவே இருக்கிறீர்கள். அதனால் தான் பழமையில் படிந்து போயுள்ள அந்த சர்தார்கள், குலதர்மம் பேசுகிறார்கள். அவர்களிடம் கோபித்துப் பயனில்லை. வாதாடியும் பயனில்லை. அவர்கள் புண்ணிய ஏடுகளை பொதி பொதியாகக் கொண்டு வந்து கொட்டுவர், தமது கட்சிக்கு ஆதரவு தேட. ஆகவே அஞ்சா நெஞ்சனே! தாங்கள் மகுடா பிஷேகம் செய்துக் கொண்டு மகாராஜாவாகிவிட வேண்டும்.
(சிவாஜியின் முகத்திலே லேசான மலர்ச்சி ஏற்படுகிறது)
மகாராஜா ஆன உடனே நிம்பால்கரும், கோர்பாது, சவாந்தும், பிரபுவும், காயஸ்தரும், பிறரும் சகல குலத்தவரும் தாமாகவே தங்களை மேலான குலம் என்று ஏற்றுக் கொள்வர். ஏனெனில் மகிடாபிஷேகமானால், தாங்கள் மாகராஜாவாகிறீர். க்ஷத்திரியர் ஆகிவிடுகிறீர். க்ஷத்திரிய குலமானதும், மற்ற குலத்தவர் ஒரு குறையும் கூறுவதற்கில்லை. இதுதான் சரியான வழி. இன்றைய சம்பவம் காட்டும் பாடம்.
சிவாஜி : பட்டம் சூட்டிக் கொள்ள வேண்டும்!
சிட்னீஸ் : ஆமாம்! குலப்பெருமை பேசுவோரின் கொட்டத்தை அடக்க அதுதான் வழி. தடை கூறாது எனக்கு அனுமதி தாருங்கள். பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாட்டைச் செய்கிறேன். பரத மண்டலமே பூரிப்படையும்; வம்பர்களின் வாய் தானாக அடையும்.
சிவாஜி : உன் யோசனைப்படியே செய்வோம். பலருக்கும் இந்த அபிலாஷை இருக்கிறது.
சிட்னீஸ் : செய்தி கேட்டதும் மராட்டியமே துள்ளி எழும் மகிழ்ச்சியால். நான் சென்று அந்தக் காரியத்தைக் கவனிக்கிறேன்.
பொள்ளாச்சி பெண்கள் பாலியல் கொடூரத்திற்கு காரணமான குற்றவாளிகளை பாதுகாத்து வரும் துணை சபாநாயர் பொள்ளாச்சி ஜெயராமனையும் மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் பாண்டியராஜனையும் பதவியிலிருந்து விடுவிக்க வேண்டும்; உயர்நீதிமன்ற நீதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் இவ்வழக்கு விசாரணை நடைபெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் விருத்தாச்சலம் பகுதி மக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்திய புரட்சிகர மார்க்சிஸ்டு கட்சி, சி.பி.எம். விடுதலை, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த முன்னணியாளர்கள், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
1 of 2
சார் ஆட்சியர் பிரசாந்த் அவர்களை சந்தித்து மனு கொடுத்ததோடு, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
தகவல்: மக்கள் அதிகாரம், விருத்தாசலம்.
மார்ச் 23 பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாளில் காவி பாசிசத்தை வீழ்த்த உறுதி ஏற்போம்! என்ற முழக்கத்தை முன்வைத்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் திருவள்ளூர் – டி ஐ மெட்டல் ஃபார்மிங் ஆலையில் வாயில் கூட்டம் நடைபெற்றது.
1 of 7
பு.ஜ.தொ.மு. திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் தோழர் ச.மகேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலை வாயில் கூட்டத்தில், சங்கத்தின் சிறப்புத் தலைவரும் பு.ஜ.தொ.மு.வின் மாநில பொருளாளருமான தோழர் பா. விஜய குமார் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், தேர்தல் பாதையில் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த முடியாது என்பதையும் நாம் ஏன் பகத்சிங் பாதையில் செல்ல வேண்டும் என்பதையும் விளக்கிப் பேசினார். 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு அரசியல் முழக்கங்களை எழுப்பினர். இறுதியாக சங்க பொருளாளர் தோழர் சரவணன் நன்றியுரையுடன் கூட்டம் முடிவுற்றது.
தமது நியாயமான உரிமைகளுக்காகவும் ஜனநாயக அடிப்படையிலான கோரிக்கைகளுக்காகவும் குரல் எழுப்பிப் போராடுகின்ற அனைத்துத் தரப்பினருக்கும் எதிராக, ஜனநாயக விரும்பிகளை அச்சுறுத்தும் வகையில் இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (CTA) கொண்டுவரப்படுகிறது.
ஜனநாயகத்தையும் சட்ட ஆட்சியையும் பாதுகாத்து வருவதாக உரத்துக் கூறிக் கொண்டே ரணில் தலைமையிலான இன்றைய அரசாங்கம் மிக மோசமான காட்டுச் சட்டமாகப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முன் நிற்கிறது.
போலீசாருக்கும் ஆயுதப் படையினருக்கும் அவர்களது விருப்பு வெறுப்பிற்கு ஏற்றவாறு இச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஏற்றவாறான பரந்த பொருள் கோடல்களை இச்சட்டத்தின் விதிகள் வழங்குகின்றன. தமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து வீதிக்கு இறங்கி, நீதி நியாயம் கேட்கும் எவரையும் இச்சட்டத்தின் மூலம் இருபது வருடச் சிறைத்தண்டனை வரை தண்டிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, இச்சட்ட மூலத்தைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களும் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி நிற்கும் தேசிய இனங்களும் ஒன்றிணைந்து எதிர்த்து, அதனை மீளப் பெறுவதற்கு வலியுறுத்த வேண்டும் என இந்த அறிக்கையானது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா செந்திவேல் அவர்கள் வெளியிடப்பட்டு அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1979-ம் ஆண்டில் தமிழ் இளைஞர்களுக்கு எதிராக ஜே.ஆரின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் (PTA) கொண்டுவந்தது. கடந்த நாற்பது வருடங்களில் அக்கொடூர சட்டத்தினால், மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெறப் போராடிய தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டனர். இன்றும் நூற்றுக்கு மேற்பட்ட அரசியல் கைதிகள் அச்சட்டத்தின் கீழ் நீண்ட பல வருடங்களாகச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே, இன்றைய ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற மும்முரம் காட்டி நிற்கிறது. இத்தகைய ஒடுக்குமுறைச் சட்டத்தினைப் பொறுத்தவரையில், அரசாங்கத்திற்கு தமது ஆதரவுக் கரங்களை உயர்த்தி வரும் தமிழ், முஸ்லீம், மலையகப் பாராளுமன்றக் கட்சிகள் எத்தகைய நிலைபாட்டினை எடுக்கப் போகின்றன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக்காட்டுமிராண்டிச் சட்டத்தை ஆதரிக்கப் போகிறதா? அதே போன்று மலையகத்தின் கட்சிகளும் முஸ்லீம் கட்சிகளும் தமது மக்களுக்குத் தமது புற முதுகுகளைக் காட்டித் துரோகமிழைக்கப் போகின்றனவா?
எனவே, தத்தமது கோரிக்கைகளுக்காகப் போராடிவரும் தொழிலாளர்களும் ஏனைய உழைக்கும் மக்களும் மாணவர்களும் இளைஞர்களும், தமது நியாயமான உரிமைகளுக்காகப் போராடி வரும் தமிழ், முஸ்லீம், மலையக மக்களும் ஒன்றிணைந்து “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை (CTA) கொண்டு வருவதை நிறுத்து” என உரத்துக் குரல் கொடுத்துப் போராடுவது அவசியமாகும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் : புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி,
இலங்கை
நாடார் வரலாறு கறுப்பா? காவியா? – நூல் வெளியீட்டு விழாவுக்காக கடந்த மார்ச் 22, 2019 அன்று சென்னை வந்திருந்த வழக்கறிஞர் லஜபதி ராய் அவர்களிடம் இந்நூல் உருவான வாரலாறு குறித்தும் இந்த நூல் பேசும் வரலாறு குறித்தும் எடுக்கப்பட்ட நேர்காணல் !
கேள்வி : நாடார்கள் வரலாறு – கருப்பா? காவியா? என்ற இந்த புத்தகத்தை நீங்கள் எழுத வேண்டிய அவசியம் என்ன? அதற்கான சமூகக் காரணம் என்ன?
கேள்வி : நடைமுறையில் நாடார் சமூக மக்கள் காவியா என்று கேள்வி எழுப்பும் தேவை இப்போது இருக்கிறதா?
கேள்வி : தென் தமிழக இந்து நாடார் மக்கள் மறக்க நினைக்கும் வரலாறு இது என்கிறீர்கள். அம்மக்கள் விளிம்பில் இருந்து மையத்தை நோக்கி முன்னேறியது என்பது தங்களை ஒடுக்கிய இந்துமதத்தை எதிர்த்து சண்டையிட்டு மையத்திற்கு வந்தார்களா? இல்லை தனக்கு மேலே உள்ள சாதிகளின் பொருளாதாரத்தோடு போட்டியிட்டு மையத்திற்கு வந்தார்களா?
கேள்வி : திராவிட இயக்கம் ஆலய நுழைவை அரசியல் இயக்கமாக எடுப்பதற்கு முன் 1897-ம் ஆண்டில் நடந்த கமுதி ஆலய நுழைவுப் போராட்டத்தை நூலில் குறிப்பிடுகிறீர்கள். தமிழ்நாட்டில் அதுதான் முதல் ஆலய நுழைவுப் போராட்டமா?
கேள்வி : இந்துமதத்தில் நாடார் மக்கள் விளிம்பிலிருந்து மையத்தை நோக்கி நகர்ந்த அதே 1900 கால கட்டத்திலேயே, தமக்கு கீழ் இருந்த சாதிகளை ஒடுக்குவதும் நடந்திருக்கிறது. உங்கள் புத்தகத்திலேயே அதற்கான ஆதாரம் இருக்கிறது. பள்ளிக்கூடத்தில் பள்ளர், பறையர் குழந்தைகளை விடமாட்டோம்னு சொல்லி நாடார்கள் பிரச்சினை செய்வதையும் அதை எதிர்த்து, அதே நாடார்களில் ஒருவர் பேசுவதையும் பதிவு செய்திருக்கிறீர்கள். தான் ஒடுக்கப்படுவதில் இருந்து விடுபடுகிற ஒரு சமூகம் அதே கால கட்டத்தில் ஒடுக்குவதையும் சேர்த்தே செய்கிறது. இந்த முரண்பாட்டை எப்படி புரிந்து கொள்வது?
கேள்வி : இந்த நூலிற்கு நீங்கள் பல்வேறு ஆய்வு நூல்களை பயன்படுத்தி இருக்கிறீர்கள். நாடார்கள் சமூக ரீதியாக சாதிரீதியாக ஒடுக்கப்பட்டிருந்த அந்த காலகட்டத்தில் தென் தமிழகத்தின் இதர சாதி மக்களின் சமூக வாழ்க்கை எப்படி இருந்தது? குறிப்பாக மறவர் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் இன மக்களும் ஒடுக்கப்பட்டிருந்தார்களா? அவர்களின் சமூக வாழ்க்கை எப்படி இருந்தது?
கேள்வி : தோள் சீலை அணிவதை ஒரு போராட்டமாக நடத்திய சூழ்நிலையில், நாடார் பெண்கள் இழிவாக நடத்தப்பட்ட அந்த சமயத்தில் இம்மக்கள் இப்படி இழிவாக நடத்தப்படுகிறார்களே என மற்ற சாதியினர் யாரும் பரிந்து பேசினார்களா? அந்த போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்களா? அப்படி ஒரு சூழல் இருந்ததா?
கேள்வி : சிவகாசி கலவரத்தின் போது அருந்ததியர் இளைஞர்கள் உதவிக்கு வந்ததாகச் சொல்கிறீர்கள். இன்னும் பல இடங்களில் இதர தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் நாடர்களுடன் தோள் கொடுத்து நின்ற சம்பவங்களும் இந்த நூலில் குறிப்பிடப்படுகிறது. அப்படி ஒரு இணக்கத்தை சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ் நடத்திய வழிமுறைகள் என்ன?
கேள்வி : நாடார் இன மக்களின் கடந்த காலம் கருப்பாகத்தான் இருந்தது என்று நிறுவுகிற இந்த புத்தகத்தை, உண்மையில் நாடார் மக்கள் விரும்புகிறார்களா? அந்த கடந்த காலம் நினைவு கூறப்படுவதை இப்போது ஏற்கிறார்களா?
கேள்வி : நாடார் மக்கள் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டிருந்த வரலாறு இந்த நூலில் இருக்கிறது. ஆனால் அது அவர்களுடைய வரலாறு மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து சாதிகளின் வரலாறும்தான் என்று நூலில் ஒரு பெரிய சாதி பட்டியலைக் கூறுகிறீர்கள். அது குறித்து விளக்க இயலுமா?
பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் மருதையனை நேர்காணல் செய்கிறார் பத்திரிகையாளர் மு.வி. நந்தினி ! நேர்காணலின் இரண்டாம் பகுதி இது.
இதில் கொங்கு பகுதியின் சமூக பொருளாதார அரசியல் பின்னணி குறித்து தோழர் மருதையன் விரிவாக விளக்குகிறார். ஈமு கோழி பெயரில் ஏமாற்றுவதும் சொந்த சாதிப் பெண்களை பாலியல் பண்டமாக பயன்படுத்துவதும் எப்படி ஒரே மனநிலையில் வெளிப்படுகிறது என்பதை விளக்குகிறார். மேலும் ஆதிக்க சாதி சங்கங்கள், இந்துமதவெறி அமைப்புகள் எவையும் பொள்ளாச்சி கொடூரம் குறித்து எந்த வினையும் ஆற்றவில்லை. அதன் மர்மம் குறித்தும் பேசுகிறார்.
இறுதியாக பெண்கள் இணையத்தையே பயன்படுத்தாமல் இருந்தால் பாதுகாப்பாக இருந்து விடலாம் எனும் கருத்தின் அபத்தத்தை விரிவாக விளக்குகிறார். எனில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பது எப்படி, குற்றவாளிகளை யார் தண்டிப்பது என்பதையும் விளக்குகிறார்.
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 1 | பாகம் – 2
அமனஷ்வீலி
பூர்வாங்க அறிமுகம்
என் குழந்தைகளின் பெயர்ப் பட்டியலை நான் கையோடு வீட்டிற்குக் கொண்டு வந்திருக்கிறேன். ஒவ்வொரு குழந்தையுடனும் அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன். அவர்களின் புகைப்படங்களை எடுக்கிறேன். அவற்றை மேசை மீது வரிசையாக வைக்கிறேன். இதோ என் வகுப்பு!
பறவைகளின் கீதமும் கணீரென்ற சிரிப்பும் என் காதுகளில் ஒலிக்கின்றன. என்ன இது? குழந்தைகளின் சத்தமா? இதை சத்தம் என்று சொல்ல முடியாது. குழந்தைகளின் இந்த சத்தத்தில், இன்னிசைக் குழுவின் வாத்தியங்கள் சுருதி கூட்டப்படுவதை ஒத்த ஒலிகளைக் கேட்க ஆசிரியனுக்கே உரிய காது வேண்டும், எதிர்கால வாழ்க்கை எனும் சிம்பனி இசையை ரசித்த உணர்வு அப்போது ஏற்படும்.
பறவைகள் சத்தம் போடுகின்றன, கூச்சலிடுகின்றன என்று நாம் கூறுவதில்லை அல்லவா. அவை பாடுவதாக ஏன் நமக்குத் தோன்ற வேண்டும்? பாடுவதைத் தவிர அவற்றிற்கு வேறு கவலைகள் கிடையாதா? அதேபோல்தான் குழந்தைகளாலும் சத்தம் போட முடியாது. பள்ளியில் நிறைந்திருக்கும் அந்த குழந்தைகளின் விசேஷ ஒலியைச் சித்தரிக்க நான் அறிந்த வார்த்தைகளிலேயே “ஷிரியாமூலி” என்ற ஜார்ஜிய சொல்தான் மிகப் பொருத்தமானதென எனக்குத் தோன்றுகிறது. இது பறவைகள், குழந்தைகளின் மகிழ்ச்சிகரமான ஒலிக் கலவையை குறிக்கிறது. மனிதர்களின் சாதாரணமான பேச்சொலியை குழந்தைகளின் மகிழ்ச்சிகரமான, உற்சாகமான சத்தத்திலிருந்து பிரிப்பதற்காக நம் முன்னோர்கள் இச்சொல்லைக் கண்டுபிடித்தனர்.
பறவைகள் சத்தம் போடுகின்றன, கூச்சலிடுகின்றன என்று நாம் கூறுவதில்லை அல்லவா. அவை பாடுவதாக ஏன் நமக்குத் தோன்ற வேண்டும்? பாடுவதைத் தவிர அவற்றிற்கு வேறு கவலைகள் கிடையாதா? அதேபோல்தான் குழந்தைகளாலும் சத்தம் போட முடியாது.
என்னுடைய முப்பத்தாறு குழந்தைகளின் புகைப்படங்களை நான் பார்க்கிறேன், என் காதுகளில் வாத்தியங்கள் சுருதி கூட்டுகின்றன, இந்த இசையை, இந்தக் குழந்தைகளின் “ஷிரியாமூலியை” எப்போது கேட்போம் மனது துடிக்கிறது.
”ஷிரியாமூலியை” என்னால் புரிந்து கொள்ள முடிகிறது; குழந்தைகளின் மீதான என் அன்பிற்கு இதுதான் நிரூபணம்; சிம்பனி இசைக்கு முன் இவ்வாறாக வாத்தியங்கள் சுருதி கூட்டப்படுவது, இந்த குழந்தைகளின் ”ஷிரியாமூலி” என் காதுகளுக்கு இனிமையாக உள்ளதால் நானே கல்வி கற்பவனாக, வளர்க்கப்படுபவனாக மாற முடியும். நம்பினால் நம்புங்கள், நம்பாவிட்டால் அது உங்கள் விஷயம், என்னால் இப்படிக் கூற முடியும்:
குழந்தைகளின் ”ஷிரியாமூலி” யாருக்குப் பிடித்துள்ளதோ அவருக்கு ஆசிரியர் தொழிலின் மீது நாட்டம் உண்டு, இதன் மீது யார் தீவிர ஆர்வம் காட்டுகிறாரோ அவர் தன் தொழில் ரீதியான மகிழ்ச்சியை அடைவார்.
எப்படிப்பட்ட அழகிய குழந்தைகள், எவ்வளவு புன்சிரிப்புகள்! பள்ளி துவங்கும் முன் தம் மகிழ்ச்சியை காட்டிக் கொள்வதற்காக மட்டுமா இவர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்?
குழந்தைகளே, நீங்கள் என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றீர்கள்? உங்களுடைய புன்முறுவல்கள் ஒரு மகிழ்ச்சி கலந்த பதட்டத்தை என்னுள் ஏற்படுத்துகின்றன. நீங்கள் உங்கள் ஆசிரியரின்பால் பெரிதும் தாராளமாய் இருக்கின்றீர்கள், ஆசிரியரை நம்புகின்றீர்கள். நீங்கள் இன்னமும் என்னைப் பார்த்ததுகூட இல்லை. அதற்குள் இவ்வளவு அழகாக புன்முறுவல் பூக்கின்றீர்கள், மிகவும் நம்பிக்கையுடன் என்னை உற்றுப் பார்க்கின்றீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?
பல்வேறு விஞ்ஞானங்களை நான் உங்களுக்குச் சொல்லித் தர வேண்டுமா? நான் கொடியவனாக, கண்டிப்பானவனாக இருந்து, ஒவ்வொரு செய்கைக்கும் தண்டித்து, உங்களைப் பார்த்துக் கத்தினால் என்ன செய்வீர்கள்? எப்படியிருந்தாலும் நீங்கள் விஞ்ஞானத்தின் மீது அக்கறை காட்டுவீர்களா? இல்லை, இது இப்படி நடக்காது என்று எனக்கு நிச்சயம் தெரியும். ஆசிரியரையும் ஆசிரியரின் விஞ்ஞானத்தையும் அவரது ஞானத்தையும் நல் விருப்பங்களையும் நீங்கள் விரும்ப மாட்டீர்கள். சரி, உங்களுடைய புன்முறுவல்களின் பொருள்தான் என்ன? இவற்றிலிருந்து நான் என்ன முடிவிற்கு வருவது?
என் கரத்தில் கிடைத்த முதல் புகைப்படத்தை எடுக்கிறேன். என்னைப் பார்த்து சிரிக்கும் அச்சிறுமியின் புகைப்படத்தின் பின் ”தேயா” என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. இம் முகத்தை நினைவில் வைத்து, நாளை இச்சிறுமியை பெயர் சொல்லிக் கூப்பிட வேண்டும். ஒருவேளை நீ இப்படிச் சொல்லியிருப்பாயோ?
இன்னொரு புகைப்படத்தை எடுக்கிறேன். ”கோச்சா” என்று அதன் பின் எழுதப்பட்டுள்ளது. என்ன சுருட்டையான தலைமுடி. முடியை வெட்டுமாறு நான் பெற்றோர்களிடம் சொல்லப் போவதில்லை. அப்படியே இருக்கட்டும். இதிலென்ன தப்பு? கோச்சா கணீரென சிரிக்கிறான். ”பார், நான் நாளை உன்னை முப்பத்தாறு குழந்தைகளின் மத்தியில் அடையாளம் கண்டு கொள்வேன். நீ வம்புக்கிழுக்கும் குணமுள்ளவனா? முரண்டு பண்ணமாட்டாயே?”
“நியா” என்று அடுத்த புகைப்படத்தின் பின் எழுதப்பட்டுள்ளது. அவள் புன்முறுவல் பூக்கிறாள், இல்லையில்லை, சிரிக்கிறாள், முன் பற்களில் ஒன்றுகூட இல்லாதது எனக்கு நன்கு தெரிகிறது. பல ஒலிகளை சரியானபடி உச்சரிப்பது அவளுக்கு அனேகமாக கடினமாக இருக்கும். ஆனால் வேறு எந்தக் குழந்தையும் இவளை கேலி செய்ய நான் விட மாட்டேன். அதற்குள் பற்கள் முளைத்து விடும். ”நியா, நீ கோள் சொல்ல மாட்டாயே? ஒருவர் மீது ஒருவர் கோள் சொல்வது நம் வகுப்பில் கூடவே கூடாது. இதை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.”
அச்சிறுவனுக்கு சற்றே நீண்ட தாடை. கண்கள் கூர்மையானவை, ஏதோ கள்ள சிந்தனை, ஒரு கண்டிப்பான புன்சிரிப்பு. ”சாஷா” என்று பின்புறம் எழுதப்பட்டிருந்தது. இரு இரு, நீ அந்த சாஷாவா? நீ பிறக்கும் முன்னரே உன் தாய் உன்னை எந்த பள்ளியில் சேர்ப்பது என்று முடிவு செய்தாள். ஆறு ஆண்டுகளுக்கு முன் உன் தாயை நான் வேலை விஷயமாகச் சந்தித்தேன். அப்போது என் ஆசிரியர் பயிற்சி நோக்கங்களைப் பற்றி, குழந்தைகளுடனான என் வேலையைப் பற்றிக் கூறினேன். “நான் என் குழந்தையை உங்கள் வகுப்பிற்கு அனுப்புவேன்” என்று அவள் அப்போது கூறினாள். நீ நன்கு அறிமுகமானவன். ஆனால் நாளை முதன் முதலாக நாம் கைகுலுக்கிக் கொள்வோம்.
”போன்தோ”. சற்றே தலையை சாய்த்தபடி, களங்கமற்ற புன்முறுவல். “எங்களை கொடியவர்களாக ஆக்காதீர்கள் என்று ஒருவேளை நீதான் என்னை கேட்டாயோ? சரி, நீ உண்மையில் அன்பானவனா? மிட்டாயை இன்னொருவனுடன் பகிர்ந்து கொள்வாயா? தோழிக்கு விட்டுக்கொடுப்பாயா? பலவீனமானவனைப் பாதுகாப்பாயா? மிக்க நன்று!”
இது யார்? ”ஏல்லா”. சற்றே குண்டான சிறுமி. ஆனால், அவள் சிரிக்கிறாளா, கவிதை படிக்கும் தருணத்தில் புகைப்படக்காரர் படமெடுத்துள்ளாரா என்று புரியவில்லை. ”ஏல்லா, உனக்கு நிறைய கவிதைகள் தெரியுமா? பத்து வரை எண்ணத் தெரியுமா? படிக்கத் தெரியுமா? இவையெல்லாம் உனக்குத் தெரிந்தால் நான் உன்னுடன் என்ன செய்வது? பள்ளியின் மீதான ஆர்வம் போகாமலிருக்க வேறு விஷயங்களைச் சொல்லித்தரவா? சரி, பார்ப்போம்.”
குழந்தைகளே, நீங்கள் என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கின்றீர்கள்? உங்களுடைய புன்முறுவல்கள் ஒரு மகிழ்ச்சி கலந்த பதட்டத்தை என்னுள் ஏற்படுத்துகின்றன. நீங்கள் உங்கள் ஆசிரியரின்பால் பெரிதும் தாராளமாய் இருக்கின்றீர்கள், ஆசிரியரை நம்புகின்றீர்கள். நீங்கள் இன்னமும் என்னைப் பார்த்ததுகூட இல்லை. அதற்குள் இவ்வளவு அழகாக புன்முறுவல் பூக்கின்றீர்கள், மிகவும் நம்பிக்கையுடன் என்னை உற்றுப் பார்க்கின்றீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?
குழந்தைகளை இருக்கைகளில் அமர்த்துவதைப் போன்றே புகைப்படங்களை வரிசையாக வைக்கிறேன். கீகா, அனேகமாக நீ உயரமானவன் என்று நினைக்கிறேன். லேலாவும் உயரமானவள். இவர்களைக் கடைசி மேசையில் உட்கார வைக்கலாம். மாரிக்கா முதல் வரிசையில் இடது புறமாக உட்காரட்டும். விக்டரை ஜன்னலருகே உட்கார வைப்பேன்… என் மேசையில் வகுப்பறையின் காட்சி நிழலாடுகிறது. நான் கரும்பலகையருகே நிற்கிறேன். இன்னமும் என்ன வேண்டும்?
”குழந்தைகளே, நீங்களனைவரும் நல்லவர்கள் என்று நீங்களா என்னிடம் சொன்னீர்கள்?” நான் என்னுள்ளேயே கேட்டுக் கொள்கிறேன்.
”ஆமாம்” என்று என் காதுகளில் ஒருமித்த பதில் ஒலித்ததைப் போலிருந்தது.
”குழந்தைகளே, உங்களைக் கொடியவர்களாக மாற்ற வேண்டாம் என்று நீங்களா என்னை கேட்டுக் கொண்டீர்கள்?”
”ஆமாம்… ஆமாம்!”
வகுப்பு எப்படி அமையும் என்பதைப் பார்த்துக் கொள்வோம். இப்போது எல்லா முகங்களையும் பெயர்களையும் இன்னொரு முறை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். இது, அனேகமாக மாக்தாவாக இருக்க வேண்டும். புகைப்படத்தைத் திருப்புகிறேன். சரிதான்…. இது தாத்தோ. இல்லை, தப்பு, இது தேன்கோ. தாத்தோ இதோ… சரி பார்க்கிறேன். சரி… இது தேக்கா… இது…
என் குழந்தைகள் அனேகமாக இந்நேரம் உறங்குவார்கள். நேரமாகி விட்டது. ஆனால் அவர்களுக்கு உறக்கம் வருமா? நாளை செப்டெம்பர் 1-ஆம் தேதியாக இருக்கையில் அவர்களால் அமைதியாக உறங்க முடியுமா! ஒருவேளை பெரியவர்கள் அனைவரும் -அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி – காலையில் விழிப்பு வராமல் உறங்கி விட்டால் என்ன செய்வது! குழந்தைகளை யார் எழுப்புவது? முதல் வகுப்பைத் தவறவிட்டு விடலாமே. தாமதமாக செல்லக்கூடாது. அதிகாலையில் விழிக்காமல் இருப்பதை விட தூங்காமலே இருப்பது நல்லது. இது விளையாட்டா என்ன! ஆறு வயதுக் குழந்தை பள்ளிக்குச் செல்லப் போகிறான்! அப்பாவும் அம்மாவும் அவனை உறங்கச் சொல்லுகின்றனர், கடிகாரங்களில் விழிப்பு மணியை சரி செய்கின்றனர்….
ஒவ்வொரு வருங்காலப் பள்ளி மாணவனுக்கும் நான் ஒரு வாரம் முன் அனுப்பிய வாழ்த்துக் கடிதங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்குமென எண்ணுகிறேன். அம்மாவையோ அப்பாவையோ, தாத்தாவையோ பாட்டியையோ இதைப் படித்துக் காட்டுமாறு பன்முறை அவர்கள் நச்சரித்திருப்பார்கள். நான் எழுதியது இதுதான்:
அன்புள்ள….. வணக்கம்.
நான் உன் ஆசிரியர். என் பெயர் ஷல்வா அலெக்சாந்தரவிச். நீ பள்ளிக்குச் செல்லப்போகிறாய், பெரியவனாகி விட்டாய். வாழ்த்துக்கள்.
நீயும் நானும் நல்ல நண்பர்களாவோம், வகுப்பில் உள்ள அனைவருடனும் நீ நட்புக் கொள்வாய் என்று நம்புகிறேன். உன் வகுப்பில் எவ்வளவு சக தோழர்கள் தெரியுமா? முப்பத்தைந்து பேர்கள். நம் பள்ளிக் கட்டிடம் பெரியது, நான்கு மாடிகள், இடைவழிகள் எல்லாம் உள்ளன. நீதான் பெரியவன் அல்லவா, எனவே நீயேதான் உன் வகுப்பைக் கண்டுபிடிக்க வேண்டும். எப்படிக் கண்டுபிடிப்பது என்று நினைவில் வைத்துக்கொள். சிவப்பு நிற அம்புக் குறிகள் இருக்கும். அவற்றைப் பின் தொடர்ந்து வந்தால் உன் வகுப்புக்கு வரலாம். வகுப்பறையின் கதவில் பறவையின் படம் வரையப்பட்டிருக்கும். வழிதெரியாவிடில் கவலைப்படாதே, இடைவெளிகளில் நிற்கும் பயனீர்கள் கண்டிப்பாக உனக்கு உதவி புரிவார்கள்.
உன்னுடன் அறிமுகம் செய்து கொள்ள வகுப்பறையில் உனக்காக மகிழ்ச்சியுடன் காத்திருப்பேன்.
– ஆசிரியர்.
பல குழந்தைகளின் தலையணை அடியில் இந்தக் கடிதங்கள் உள்ளன என்பதை நிரூபிக்க வேண்டுமா என்ன? வண்ணத்தாளில் அவனுக்கென்றே எழுதப்பட்டு பள்ளியிலிருந்து, முதல் ஆசிரியரிடமிருந்தல்லவா இக்கடிதம் வந்துள்ளது!
பொ. வேல்சாமி தமிழில் பெயர்பெற்ற ஆளுமைகளான மறைமலையடிகள், திரு.வி.க. போன்றவர்கள் முதல்முதலாக எழுதிய நூல்களான “வேதாந்த மதவிசாரம்”, ”கதிரைவேற்பிள்ளை சரித்திரம்” என்ற நூல்களை மறுபதிப்பு எதுவும் செய்யாமல் தமிழகம் மறக்கும்படி விட்டனர். அதற்கான முக்கியமான காரணம் பின்னர் வந்த காலத்தில் அவர்கள் கொண்டிருந்த கருத்துகளை பெருமளவில் மாற்றிக் கொண்டதுதான். இந்த மாற்றத்திற்கு இடையூறு வரும் என்று கருதி தங்கள் நூல்களை தாங்களே மறக்கும்படி விட்டனர்.
1 of 3
இன்றைய கணிணி யுகம் எல்லா வகையான நூல்களையும் நம்முடைய கைகளில் தவழ விடும் பண்பு கொண்டதாக மாறி விட்டது. எனவே, அந்த மறைக்கப்பட்ட நூல்களை நாம் இன்று தரவிறக்கம் செய்து படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நண்பர்கள் படிப்பதற்காக மேற்குறிப்பிட்ட இரண்டு நூல்களின் இணைப்பைக் கொடுத்துள்ளேன்.
குறிப்பு 1
சமஸ்கிருதமும் தமிழும் பிரிக்கமுடியாத உறவுகொண்ட மொழிகள் என்ற கருத்தினைக் கொண்டிருந்த பெரும்பான்மையான தமிழ்ப் புலவர்களைப் போலவே தானும் சிந்தித்த காலத்தில் மறைமலையடிகள் ”வேதாந்த மதவிசாரம்” என்ற நூலை எழுதுகின்றார். இந்நூலில் வடமொழி நூல்களின் கருத்துக்களை முற்றிலும் ஏற்றுக்கொண்டு சைவம் பற்றிய தனது கருத்தினை அடிகளார் கூறுகின்றார். பின்வந்த காலங்களில் தான் முன்னர் கொண்டிருந்த கருத்துக்களுக்கு மாறான கருத்துக்களைக் கொண்டவராக மாற்றம் அடைகின்றார். இதனால் வேதாசலம் என்ற தன்னுடைய பெற்றோர் வைத்த பெயரை மறைமலை என்று மாற்றிக் கொள்கின்றார். இந்த மாற்றத்திற்கு பிறகு தன்னுடைய முந்தைய நூல்களைப் பற்றி அடிகள் எதுவும் குறிப்பிடவில்லை.
திரு.வி.க. வின் ஆசிரியர் கதிரைவேற்பிள்ளை. இவர் இலங்கையைச் சேர்ந்தவர். இவர் வெளியி்ட்ட மிகப் பெரிய “தமிழ் அகராதி”யில் வேளாளர் என்ற சொல்லுக்கு “சூத்திரர்“ என்ற பொருளையும் எழுதி விட்டார். இது ஒரு பெரும் பிரச்சனையாக மாறியது “பிரபஞ்சமித்திரன்” “பூலோக நண்பன்” இரண்டு பத்திரிகைகளில் கடுமையான கொடுமையான விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதத்தின் முடிவில் கதிரைவேற்பிள்ளையை கொலை செய்துவிடும் அளவிற்கு எதிராளிகள் துணிந்து விட்டதாக மறைமலையடிகள் திரு.வி.க.விடம் கூறியிருக்கிறார். அடுத்தக்கட்டமாக கதிரைவேற்பிள்ளையை போன்று உருவத்தைச் செய்து அதனை சுடுகாட்டில் எரித்து அவர் இறந்துவிட்டதாகவும் துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தார்கள். இது அவதூறு வழக்காக மாறியது. அந்த வழக்கில் திரு.வி.க.வும் சாட்சி சொல்கிறார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விவாதிக்கப்படும் போது ஒரு பகுதியாக அருட்பா மருட்பா பிரச்சனையும் வருகின்றது. தனியாக அதுபோன்று எந்தவொரு பிரச்சனையும் நடைபெறவில்லை. இந்தக் காலக்கட்டத்தில் தன்னுடைய ஆசிரியரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிடுகின்றார்.
கதிரைவேற்பிள்ளையின் மறைவிற்கு பிறகு அவருடைய எதிராளிகளாக இருந்தவர்கள் திரு.வி.க.வின் நண்பர்களாக மாறிவிட்டனர். இதனால் பழைய நினைவுகளைத் தூண்டுகின்ற அந்த நூலை திரு.வி.க. தன் வாழ்நாளில் மறுபதிப்பு செய்யவில்லை. 1968 இல் இலங்கையில் இருந்து இந்நூல் மறுபதிப்பாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பகத்சிங்காய் பிறந்திடு – மார்ச் 23, பகத்சிங் ராஜகுரு சுகதேவ் நினைவுநாள்
பிறந்தால்
உன்னைப் போல
பிறக்க வேண்டும்.
இறந்தாலும்
உன்னைப் போல
இறக்க வேண்டும்.
பிறப்பின் நோக்கமும்
இறப்பின் நோக்கமும்
பிரிக்கவியலாத
மானுடப்
படி மலர்ச்சி நீ!
வாழ்வின் பின்னால்
ஒளிந்துக் கொண்டு
நியாயம் தேடவில்லை.
சாவின் பின்னால்
மறைந்து கொண்டு
அனுதாபம் தேடவில்லை,
அரசியல் தேடினாய்.
மனித இளமையின்
புதிய உணர்ச்சி நீ!
பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கிப் போட்டுவிட்டது. இச்ச்சம்பவத்தில் குற்றவாளிகளில் ஒருவன் வெளிப்படையாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகிறான். போலீசோ, தாமாக முன் வந்து விளக்கம் கொடுக்கிறது.
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்ற போலீசும், ஆளும் அதிமுக அரசும் செய்யும் முயற்சிகள் குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் மருதையனை நேர்காணல் காண்கிறார் பத்திரிகையாளர் மு.வி. நந்தினி !
1. அந்த மூன்று நாள்கள் தீட்டாக இருக்கும் பெண்கள் புனிதமற்றவர்கள். அவர்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.
2. கிறிஸ்தவர், முஸ்லீம் முதலான இந்தியாவில் இருக்கும் தகுதியற்ற சிறுபான்மையினர் எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.
3. கீழான சாதியான சூத்திரர்கள் வாக்களித்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்பதால் அவர்கள் எங்களுக்கு வாக்களிப்பதை தவிர்க்கவும்.
4.இடஒதுக்கீட்டுக்கு நாங்கள் எதிரானவர்கள் என்பதால் 69 சதவீத இடஒதுக்கீட்டில் பயனடையும் இந்துக்கள் எங்களுக்கு தீட்டானவர்கள், அவர்கள் எங்களுக்கு வாக்களிக்களிப்பது தடை செய்யப்படுகிறது.
5. மீத்தேன், எட்டுவழிச்சாலை, ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ திட்டம் ஆகியவற்றை எதிர்க்கும் விவசாய தீவிரவாதிகளின் வாக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
7. ஒக்கி புயலின்போது ஏன் ராணுவத்தை அனுப்பவில்லை, கஜா புயலுக்கு ஏன் நிதியுதவி செய்யவில்லை என்று கேட்கும் ஆன்டி இன்டியன்ஸின் வாக்குகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
8. ஐந்து ரூபாய் கறுப்புப்பணத்தை மீட்க ஐயாயிரம் கோடி செலவு செய்வதா என்று கணக்கு கேட்கும் கபடதாரிகள் வாக்களிக்க தேவையில்லை.
9. வெளிநாட்டில் பதுக்கிய கறுப்புப்பணம் எங்கே, வங்கியில் போடுவதாகச் சொன்ன 15 லட்சம் எங்கே என்று அம்புலிமாமா கதைகளை நம்பி, இப்போதும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் அற்ப பதர்களின் வாக்குகளை பிஜேபி நிராகரிக்கிறது.
10. பெட்ரோல், டீசல் விலை உயர்வை பாரதத்தின் வளர்ச்சியாகப் பார்க்காத எட்டப்பர்களின் வாக்கு செல்லா வாக்காகவே கணக்கிடப்படும்.
11. கியாஸ் கட்டண உயர்வை கேள்வி கேட்பதா? உங்கள் வாக்கு உளுத்துப் போகட்டும்.
12.மாட்டுக்கறி வைத்திருந்ததாகக்கூறி அப்பாவிகளை அடிக்காத, கொலை செய்யாத எந்தவொரு நீச சக்தியின் வாக்கும் பிஜேபிக்கு ஏற்புடையதல்ல.
13. வெடித்த குண்டின் புகை அடங்கும் முன், குண்டின் எடையை துல்லியமாகச் சொன்ன பிஜேபியை சந்தேகிக்கும் ராமன்களின் வாக்குகள் (‘தலைவரே, ராமன் நம்ம பிராப்பர்ட்டி, அது தெரியாம இழுத்து விடறீங்களே?’ ‘ராவணன்னு சொல்லட்டா?’ ‘ராவணன் எப்ப ஓய் சொந்த பொண்டாட்டியை சந்தேகிச்சான்?’ ‘அப்ப என்னதான் ஓய் சொல்றது?’ ‘சொந்த பொண்டாட்டியை சந்தேகிச்சவனை கடவுள்னு சொன்னா இந்த மாதிரி பிரச்சனை வரத்தான் செய்யும்.’ ‘நீரு முட்டுக் குடுக்கிறவன் சொந்த பொண்டாட்டியை பொண்டாட்டின்னே சொல்லாம விலக்கி வச்சவன்தானே.’ ‘உண்மையை சொல்லாதேயும், கங்கையைவிட நாறுதா இல்லியா?’) அதாகப்பட்டது ராம விரோதிகளின் வாக்குகள் செல்லா வாக்காக கணக்கிடப்படும்.
15. அதாகப்பட்டது எவன் எங்களுக்கு ஓட்டுப் போடலைன்னாலும், டிஜிட்டல் ஓட்டுப் பதிவு எங்களை பாதுகாக்கும் என்பதைக் கூறிக் கொண்டு… ஜெய்ஹிந்த், பாரத்மாதாகி ஜே.
பகத்சிங்கின் சிறைக் குறிப்புகள் என்னும் இந்நூல், பொதுவாக புரட்சிக்காரர் என அறியப்பட்டுள்ள பகத்சிங், சிறந்த சிந்தனையாளரும், ஆழ்ந்த படிப்பாளியும் ஆவார் என்பதை பிரகடனம் செய்கிறது.
… பகத்சிங்கின் சிறைக் குறிப்புகளையும், எழுத்துக்களையும் அளப்பரிய முயற்சிகள் செய்து சேகரித்த… சமன்லாலின் கடும் முயற்சியின் விளைவாக தொகுக்கப்பட்ட பகத்சிங் மற்றும் அவரது சக தோழர்களின் மனுக்கள், கோரிக்கைகள், சிறைப் போராட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்த சிறை ஆவணங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன …
இந்த சிறை ஆவணங்கள், சிறைக்குள்ளிருந்து கொண்டே அன்றைய சட்டரீதியான முறையில் பகத்சிங்கும் அவரது தோழர்களும் தங்களுடைய லட்சியங்களுக்காகப் போராடினார்கள் என்பதை எடுத்துரைப்பதுடன் அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் தனது சட்டங்களைத் தாமே மீறி அவர்களின் உரிமைகளை ஒடுக்கியது என்பதையும் அம்பலப்படுத்துகின்றன.
…சோசலிஸம்தான் மக்களுக்கான இறுதியான லட்சியமாக இருக்க முடியும். அதுதான் மக்களின் உரிமைகளுக்கும், வாழ்க்கைக்கும் பாதுகாப்பு அரணாகவும் வழிகாட்டியாகவும் இருக்க முடியும் என்ற உறுதியான முடிவுக்கு காலப் போக்கில் வந்தவர். அவரது இந்தச் சிந்தனைப் போக்குகள் அவரது சிறைக்குறிப்புகளிலும் இழையோடுவதை பார்க்க முடியும். மார்க்சியத்தின்பால் ஈர்க்கப்பட்டு ஈடுபாடு கொண்டிருந்த பகத்சிங், தாம் தூக்குக் கயிற்றை சந்திப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு கூட, தோழர் லெனின் எழுதிய அரசும் புரட்சியும் நூலைப் படித்ததன் மூலம் ஒரு புரட்சிக்காரனின் கடைசி சந்திப்போடு புரட்சிக்காரராகிய பகத்சிங் தூக்குக் கயிற்றை எதிர் கொள்கிறார்.
… இந்தப் பின்னணியில் பகத்சிங்கின் சிறைக் குறிப்புகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. பகத்சிங் தாம் சிறையில் இருந்தபோது ஏராளமான நூல்களைப் படித்தார். அந்நூல்கள் ஒவ்வொன்றின் மையக்கருத்தை அல்லது நோக்கத்தை ரத்தினச் சுருக்கமாக ஒரு 400 பக்க நோட்டில் எழுதி வைத்தார். மேலும், அந்நூல்கள் பலவற்றின் உள்ளடக்கங்களை அவற்றின் ஆசிரியர்களின் வார்த்தைகளிலும் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், அவர் படித்த நூல்கள் பலவற்றிலிருந்து எளிய தகவல்களையும் அரிய தகவல்களையும் தமது சிறைக் குறிப்புகளில் குறித்துள்ளார். மிக முக்கியமான நூல்களின் உள்ளடக்கத்தை ரத்தினச் சுருக்கமாக தெரிவித்துள்ளார். உதாரணமாக மார்க்சிய மூலவர்களில் ஒருவரான ஏங்கல்ஸின் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற பெரும் நூலின் உள்ளடக்கத்தை சில பக்கங்களில் சித்தரிக்கிறார். பகத்சிங்கின் ஆழ்ந்த அறிவுப் புலமையின் பின்னணியில் தாம் படித்த புத்தகங்களை அறிமுகப்படுத்தும் விதம் குறிப்பாக இளைஞர்கள் புத்தகங்களை வாசிப்பதற்கான ஆர்வத்தை அளிப்பதாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும். சமூக மாற்றங்களுக்கான அறிவு ஞானங்களை பெருக்கிக் கொள்ள வேண்டுமென்ற லட்சிய நோக்கத்திற்கு இளைய தலைமுறையினருக்கு பகத்சிங் வழிகாட்டியாகத் திகழ்கிறார். இந்திய வரலாற்றில் முக்கியமான காலக் கட்டத்தை புரிந்து கொள்வதிலும் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார். (நூலின் பதிப்புரையிலிருந்து)
அவரது அரசியல் மற்றும் அறிவு வளர்ச்சியில் ஒரு முக்கியமான காரணியாக இருந்தது லாகூரில் உள்ள துவாரகா தாஸ் நூலகமாகும்; 1920-களின் மத்தியப் பகுதியில் அது மார்க்சிய நூல்களைப் பெறத் தொடங்கியிருந்தது. அப்போது மனிதகுல விடுதலைக்கான ஒரு முழுமையான தத்துவத்தை அவர் தேடிக் கொண்டிருந்தார் என்பது தெளிவு. அது அவரை மார்க்சியத்திடம் இட்டுச் சென்றது. பஞ்சாபின் கத்தார் புரட்சியாளர்கள் இந்தத் தேடலுக்கு உதவினர். கீர்த்தி என்கிற அவர்களது பஞ்சாபி இதழில் அவர் தொடர்ந்து எழுதினார். வகுப்புவாதமும் தீர்வுகளும், தீண்டாமைப் பிரச்சனை; மதமும் நமது விடுதலைப் போராட்டமும்’ உள்பட பல்வேறு பொருள்கள் குறித்து அவர் எழுதினார்.
1928-ம் ஆண்டு வாக்கில் பஞ்சாபில் சுக்தேவ், பகவதிச்சரன் வோரா மற்றும் ஐக்கிய மாகாணத்தில் சிவ வர்மா, ஜெய்தேவ் கபூர் ஆகியோருடன் சேர்ந்து உண்மையிலேயே புரட்சிகரமான ஒரு கட்சிக்கு சோஷலிசத் திட்டம் இருக்க வேண்டும் என்கிற முடிவிற்கு பகத்சிங் வரத் தொடங்கியிருந்தார். அது எப்படி இருக்கும் என்பது குறித்து தெளிவுபடுத்துவதற்காக 1928-ம் ஆண்டு செப்டம்பர் 8, 9 தேதிகளில் டெல்லியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பெரோஷா கோட்லாவில் எச்ஆர்ஏ அமைப்பின் மத்தியக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. அங்கு நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் பகத்சிங் கூறிய ஆலோசனையின்படி எச்.ஆர்.ஏ. தன்னுடைய பெயருடன் ‘சோஷலிஸ்ட்’ என்கிற சொல்லை சேர்த்து ‘இந்துஸ்தான் சோஷலிசக் குடியரசு அமைப்பு ஆனது. சந்திரசேகர் ஆசாத் மிக அதிகமாகப் படித்தவர் இல்லை. ஆயினும் பகத்சிங்கை அவர் முழுமையாக நம்பியதால் இதற்கு அவரது ஒப்புதலும் இருந்தது.
1970-களின் தொடக்கத்தில் இந்திரா காந்தி சோஷலிஸ்டாக மாறினார் என்று கூறப்படுவதைப் போல, எச்ஆர்ஏ அமைப்பின் பெயருடன் சோஷலிஸ்ட் என்கிற சொல் சேர்த்துக் கொள்ளப்பட்டதானது மக்களைக் கவர்வதற்காகவோ அல்லது அலங்காரச் சொல்லாகவோ சேர்க்கப்படவில்லை. ஆனால், இந்திய இளைஞர்களின் மிகவும் முன்னேறிய பகுதியினரில் உண்மையாகவும், பண்பளவிலும் ஏற்பட்ட மாற்றத்தை இது குறித்தது. (நூலிலிருந்து பக்.11-12)
மாடர்ன் ரிவீவ்யூ பத்திரிகையின் ஆசிரியர் இன்குலாப் ஜிந்தாபாத் என்கிற முழக்கத்தைப் பரிகசித்தபோது பகத்சிங்கும், தத்தாவும் 1929-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி தி டிரிபியூன்’ பத்திரிகையில் வெளியான அவர்களது கடிதம் ஒன்றில் பதில் அளித்தனர்.
‘புரட்சி என்றால் கண்டிப்பாக ரத்தம் சிந்தப்பட வேண்டும் என்று பொருளல்ல. அது வெடிகுண்டு, துப்பாக்கிக் கலாச்சாரமல்ல. சில இயக்கங்களில் அவை முக்கிய பாத்திரம் வகிக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அந்தக் காரணத்தினாலேயே அவையே ஒரு இயக்கமாக ஆகிவிடுவதில்லை. கலகம் என்பது புரட்சியல்ல. இறுதியில் அது புரட்சிக்கு இட்டுச் செல்லலாம். ‘அந்த சொற்றொடரில் புரட்சி என்கிற சொல் ஓர் உணர்வு, நல்ல மாற்றத்திற்கான ஒரு பெருவிருப்பம் என்கிற பொருளிலேயே பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக மக்கள் ஏற்கனவே நிலை பெற்றுவிட்ட சமூக அமைப்பிற்குப் பழகிவிடுகிறார்கள். மாற்றம் என்கிற சொல்லைக் கேட்டாலேயே நடுங்க ஆரம்பித்து விடுகிறார்கள். இந்த சோம்பேறித்தனத்தை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாகப் புரட்சிகர உணர்வை ஊட்ட வேண்டியிருக்கிறது. இல்லை எனில் சீர்கேடு மேலோங்கி மொத்த மனிதகுலமும் பிற்போக்கு சக்திகளால் தவறாக வழிநடத்தப்படும். அத்தகைய ஒரு நிலைமை மனிதகுல முன்னேற்றத்தில் தேக்கத்தை ஏற்படுத்தி அதை முடக்கிப் போட்டுவிடும். மனித குலத்தின் முன்னோக்கிய பீடுநடையைத் தடுப்பதற்குத் தேவையான பலத்தை பிற்போக்கு சக்திகள் பெறாத வண்ணம் மனிதகுலத்தின் ஆன்மாவெங்கும் புரட்சிகர உணர்வு எப்போதும் பரவியிருக்க வேண்டும். பழைய அமைப்பு, மாற வேண்டும்; புதிய அமைப்பிற்கு இடமளிக்க வேண்டும். ஒரு ‘நல்ல’ அமைப்பு உலகைக் கெடுத்து விடாமல் இருக்கும் வண்ணம் எப்போதும் மாறிக் கொண்டே இருக்க வேண்டும்; இந்த அர்த்தத்தில்தான் ‘புரட்சி வாழ்க’ என்ற முழக்கத்தை நாங்கள் எழுப்புகிறோம். (நூலிலிருந்து பக்.20-21)
ராஜகுரு, சுக்தேவ் பகத்சிங் ஆகியோரை தூக்கிலிட்டது நீதிமன்றம் நிகழ்த்திய படுகொலையேயன்றி வேறில்லை. அதுவும் காலனிய அரசு அச்சத்தால் படபடத்த அவசர கதியில் செய்யப்பட்ட படுகொலைகள். மறுநாள் காலையில் அந்த மூன்று புரட்சியாளர்களும் தூக்கிலிடப்படுவார்கள் என்று அஞ்சிய நவ்ஜவான் பாரத் சபா மார்ச் 23-ம் தேதி லாகூரில் பெரும் பேரணி நடத்தியது. மக்கள் கூட்டம் சிறைக்கு வருவதற்கு முந்திக் கொள்வதற்காக பிரிட்டிஷ் அதிகாரிகள் 22-ம் தேதி மாலை 7 மணிக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்று தீர்மானித்தனர்.
மரண தண்டனைகள் அதிகாலையில்தான் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற சர்வதேச விதிக்கு மாறாக அரசு அப்படி தீர்மானித்தது. புரட்சியாளர்களின் உடல்கள் அவசர அவசரமாக துண்டு துண்டாக வெட்டப்பட்டன. சாக்குப் பைகளுக்குள் போட்டு கட்டப்பட்டன. சிறையின் பின்வாசல் வழியாக சட்லஜ் நதிக்கரைக்குக் கடத்திச் செல்லப்பட்டன. அங்கு அவை எரித்து, அழிக்கப்பட்டன. புரட்சியாளர்களின் குடும்பத்தினர், தோழர்கள், மற்றும் அவர்களைப் பின்பற்றுகிறவர்கள் கொடுக்கின்ற முறையான இறுதி மரியாதை அல்லது இறுதிச் சடங்குகளைப் பெறுகின்ற கெளரவமும் அனுமதிக்கப்படவில்லை . (நூலிலிருந்து பக்-26)
நூல்:பகத்சிங் சிறைக் குறிப்புகள் சிறைக்குறிப்புகள் தொகுப்பு: பூபேந்திர ஹூஜா தமிழில்: சா. தேவதாஸ் ஆவணத் தொகுப்பு மற்றும் அடிக்குறிப்புகள்: சமன்லால் தமிழில் : அசோகன் முத்துசாமி
வெளியீடு: பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018. தொலைபேசி: 044 – 24332424, 24332924. மின்னஞ்சல்:thamizhbooks@gmail.com இணையம்:thamizhbooks.com
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107. இடக்குறியீடு :
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி) அலைபேசி : 99623 90277
லியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் ! லெனின் | பாகம் – 3
டால்ஸ்டாயும் பாட்டாளி வர்க்கப் போராட்டமும்
வி.இ.லெனின்
டால்ஸ்டாய் ஆளும் வர்க்கங்கள் பற்றிய கண்டனத்தை பிரம்மாண்ட வலுவுடன் நேர்மையுடன் தொடுத்தார். முழுமையான தெளிவுடன் நவீன சமூக அமைப்பு நிலைபெற்று வருகிற சமயபீடம், நீதிமன்றங்கள், ராணுவம் “சட்டபூர்வ” திருமணம், பூர்ஷூவா விஞ்ஞானம் போன்ற அமைப்புகளின் உள்போலித் தனத்தை அம்பலப்படுத்தினார்.
ஆனால், அவரது சித்தாந்தம் நவீன சமுதாய அமைப்பிற்குப் புதைக்குழி தோண்டும் தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கை, பணி, போராட்டம் இவற்றுக்கு முற்றிலும் முரண்பாடாக இருந்தது.
நவீன வாழ்வின் எஜமானர்களை ஏற்கெனவே வெறுக்கிற ஆனால் அவர்களை எதிர்த்துப் புத்திபூர்வமான முரணற்ற முழுமையான தவிர்க்க முடியாத போராட்டத்திற்கு இன்னும் முன்னேறியிராத ரஷ்யாவின் லட்சோப லட்ச வெகுஜனங்கள் அவரது குரலில் பேசினார்கள்.
மகத்தான ரஷ்யப் புரட்சியின் வரலாறும் விளைவும் வர்க்க போதமுள்ள சோஷலிசத் தொழிலாளி வர்க்கத்திற்கும், பழைய ஆட்சியின் பூரணமான ஆதரவாளர்களுக்கும் இடையே வெகுஜனங்கள் இருத்தலைக் காட்டியது. பிரதானமாயும் விவசாயிகளைக் கொண்ட இந்த வெகுஜனப் பகுதி, பழமையின்பால் தமக்குள்ள மிகப் பெரிய பகைமை எத்துணை என்பதையும், நவீன ஆட்சியின் கொடுமைகளை எத்துணைக் கடுமையாக அனுபவித்தன என்பதையும், அவற்றை ஒழித்துக் கட்டி, மேலும் சிறப்பான வாழ்க்கையினை நாடவும் அவர்களிடை இயல்பாகவே உள்ள ஆர்வம் எத்துணைப் பெரிதாக இருக்கிறது என்பதையும் புரட்சியில் காட்டியது.
எனினும், அதே சமயம் புரட்சியில் இந்த வெகுஜனப் பகுதி தனது பகைமை விஷயத்தில் போதிய அளவு அரசியல் போதம் பெற்றிருக்கவில்லை, போராட்டத்தில் முரணற்றதாக விளங்கவில்லை. மேலும் சிறப்பான வாழ்வு பற்றிய அதன் தேட்டம் குறுகிய எல்லைகளுக்குள் கட்டுப்பட்டதாக இருந்தது என்பதையும் காட்டியது.
இந்த மாபெரும் மனிதக் கடல் தனது அடியாழம் வரையில் கிளர்ச்சியுற்றிருந்தது. அதன் பலவீனங்களும் திண்மையான அம்சங்களும் எதுவாக இருப்பினும் அவை டால்ஸ்டாயின் சித்தாந்தத்தில் பிரதிபலித்தன.
டால்ஸ்டாயின் இலக்கிய நூல்களைப் படிப்பதின் மூலம் ரஷ்யத் தொழிலாளி வர்க்கம் தனது விரோதிகளை மேலும் நன்றாக அறிந்து கொள்ளும். ஆனால், டால்ஸ்டாயின் சித்தாந்தத்தைப் பரிசீலிக்கும்போது ரஷ்ய மக்கள் அனைவரும் தமது சொந்த பலவீனம், தமது விடுதலை லட்சியத்தை முடிவுவரையில் நிறைவேற்ற அனுமதிக்காத பலவீனம், எங்கே கிடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளல் வேண்டும். முன்னேறிச் செல்வதற்கு இதைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.
டால்ஸ்டாயை ஓர் “உலக மனச்சாட்சி’’ என்றும் “வாழ்க்கையின் போதகர்” என்றும் பிரகடனம் செய்வோர்களால் இந்த முன்னேற்றம் தடைப்படுகிறது. டால்ஸ்டாய் சிந்தாந்தத்தின் புரட்சி எதிர்ப்பு அம்சங்களைப் பயன்படுத்தும் விருப்பத்தால் மிதவாதிகள் திட்டமிட்டுப் பரப்புகிற பொய் இதுவாகும். டால்ஸ்டாயினை “ஒரு வாழ்க்கையின் போதகர்” எனப்படும் பொய்யினை மிதவாதிகளைத் தொடர்ந்து ஒருசில முன்னாள் சமூக ஜனநாயகவாதிகளும் திரும்பக் கூறுகிறார்கள்.
ஒரு மேம்பட்ட வாழ்க்கையினை வென்று பெறுவது டால்ஸ்டாயிடமிருந்ததன்று – மாறாக, டால்ஸ்டாய் வெறுத்த பழைய உலகினை அழிக்கும் ஆற்றல் படைத்த வர்க்கத்திடமிருந்தே பெற முடியும். அதன் முக்கியத்துவத்தை டால்ஸ்டாய் புரிந்து கொள்ளவில்லை. அந்த வர்க்கம் தொழிலாளி வர்க்கமாகும்.
– லெனின் டிசம்பர் 1, 1910-ல் எழுதியது
தொகுப்பு நூல்கள் பாகம் 16, பக்கம் 353 – 54
நூல்: கலை, இலக்கியம் பற்றி – வி.இ.லெனின் தமிழாக்கம்: கே.ராமநாதன் ஆங்கில மூல நூல் – முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ 1974-ம் ஆண்டு – தமிழாக்க நூல் வெளியீடு: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை.
புலிட்சர் விருது பெற்ற புகைப்படக் கலைஞரான யானிஸ் பெராக்கீஸ் 02.03.2019 அன்று புற்றுநோயால் மறைந்தார்.
ஒரு புகைப்படக் கலைஞனுடைய பணி எத்தகையதாய் இருக்க வேண்டும் என்பதற்கு யானிஸ் பெராக்கீஸ் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் நம் முன் வாழ்ந்து சென்றுள்ளார்.
58 வயதான யானிஸ் பெராக்கீஸ் சுமார் 30 வருடங்களாக ராய்ட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். 1960-ம் ஆண்டு கிரீஸ் நாட்டில் பிறந்த இவர், ஒரு தனியார் பள்ளியில் புகைப்படக் கலையைக் கற்றுக்கொண்டு ஸ்டூடியோவில் வேலை பார்த்து வந்தார். அப்போதிருந்தே புகைப்படக் கலையில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்திருக்கிறார்.
யானிஸ் பெராக்கீஸ்
1987-ம் ஆண்டு ராய்ட்டர்ஸ் நிறுவனத்தில் சேர்ந்த பிறகு தன் உயிரையும் பொருட்படுத்தாமல், உலகின் பல்வேறு இடங்களில் நடந்த அடக்குமுறைகளையும், மனித உரிமை மீறல்களையும், இயற்கைச் சீற்றங்களையும் புகைப்படம் பிடித்துள்ளார்.
இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கிரீஸ் நாட்டின் வெளிநாட்டு பத்திரிகைகள் சங்கம், “இந்தத் தலைமுறையின் குறிப்பிடத்தக்க புகைப்படக் கலைஞர்களில் யானிசும் ஒருவர். இவருடைய புகைப்படங்களின் சிறப்பு என்னவென்றால், ஒரு புகைப்படத்தைப் பார்க்கும் போது அதில் புதைந்து கிடக்கும் அவலங்கள் நம் கண்முன்னே வந்துநிற்கும்” என்று கூறுகிறது.
ஆப்கானிஸ்தானில் நடந்த அமெரிக்க ஆக்கிரமிப்புப் போர், செசன்யா நாட்டில் நடந்த பயங்கரவாத நிகழ்வுகள், காஷ்மீரில் நடந்த பூகம்பம், எகிப்து நாட்டில் 2011-ம் ஆண்டு நடந்த அரச பயங்கரவாதத்திற்கெதிரான பேரெழுச்சி போன்ற இடங்களுக்குச் சென்று புகைப்படங்களை எடுத்துள்ளார். இவரின் அசட்டுத் துணிச்சலைக் கண்டு எதிரிகளும் கூட இவர் மீது மரியாதை வைத்திருந்தனர்.
2000-ம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனி-ல் போராளிக் குழுவினர் நடத்திய தாக்குதலில் இருந்து தன் சக ஃபோட்டோகிராபருடன் காயம்பட்டு மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். துரதிஷ்டவசமாக மற்ற இரு கலைஞர்கள் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
ஐரோப்பாவில் அகதிகளின் நிலை குறித்து இவர் எடுத்த புகைப்படங்கள் 2016-ம் ஆண்டு இவருக்கு புலிட்சர் விருதைப் பெற்றுத் தந்தன. கிரீஸ் நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் சிரிய நாட்டு அகதி ஒருவர் தன் மகளை முத்தமிட்டபடியே சூறாவளிக்காற்றுடன் கூடிய மழையில் தூக்கிச்செல்லும் காட்சி காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடும்.
இந்தப் படம் குறித்து யானிஸ் கூறுகையில் “உலகில் பல வெற்றிக் கதாநாயகர்கள் உள்ளனர். சினிமாவில் காண்பதைப்போல் இவர் ஸ்பைடர்மேன் ஹீரோவாக இல்லை; மாறாக கந்தலான பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து உருவாக்கப்பட்ட கருப்பு அங்கியையே அணிந்திருந்தார். என்னைப் பொருத்தவரை தந்தை என்பதற்கு இதைவிட வேறு ஒரு தகுதியான நபரைப் பார்க்கமுடியாது” என்றார்.
30 வருடங்கள் இவருடன் இணைந்து வேலை செய்த தயாரிப்பாளரான வாசிலிஸ் என்பவர் கூறுகையில் ‘ சூறாவளிக் காற்று போல சுழன்று சுழன்று இரவு பகல் பாராமல் உழைப்பார்; பல அரிய புகைப்படங்களை உயிரைப் பணயம் வைத்துப் பிடிக்கவும் தயங்க மாட்டார்’.
உலகத்தில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளார். இப்படியொரு விசயம் நடந்ததே எனக்குத் தெரியாதே என யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதே தன்னுடைய புகைப்படங்களின் குறிக்கோள் எனக்கூறிய யானிஸ், அதற்காகவே வாழ்ந்து மடிந்துள்ளார்.
சிரிய நாட்டு அகதி ஒருவர் தன் மகளை முத்தமிட்டபடியே சூறாவளிக்காற்றுடன் கூடிய மழையில் தூக்கிச்செல்லும் காட்சி
குர்தீஸ் இன அகதிகள் ரொட்டித்துண்டுகளுக்காகக் கையேந்தி நிற்கும் காட்சி – ஏப்ரல் 5, 1991
துப்பாக்கி ஏந்தி நிற்கும் அமெரிக்கக் கப்பற்படை வீரர்களை நோக்கி தன் குழந்தையைத் தூக்கிச் செல்லும் அல்பேனியர்.
சிரிய நாட்டு அகதி ஒருவர் துருக்கி வழியாகயிலிருந்து கிரீஸ் நாட்டில் ஒரு தீவில் தன்னுடைய பிஞ்சுக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு தோனியிலிருந்து இறங்குகிறார்.
லிபிய நாட்டில் போராளிகள் எதிர்த்தாக்குதலைச் சமாளிக்க ஓடுகின்றனர் – ஏப்ரல் 21, 2011.
சோமாலிய நாட்டில் மீட்புப் பணி ஊழியர் ஒருவர் இறந்த குழந்தை ஒன்றைப் புதைப்பதற்காக எடுத்துச்செல்கிறார் – டிசம்பர் 15, 1992.
ஏதென்ஸ் நகரத் தொழிலாளிகளின் 24 மணி நேர போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டுகள் வெடித்ததில் சிக்கிக்கொண்ட காவலர்கள் – செப்டம்பர் 26, 2012.
குரோஷிய நாட்டுச் சிறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முசுலீம் அகதிகள் எலும்பும் தோலுமாய் மதிய உணவிற்காக ஏங்கி நிற்கும் காட்சி – செப்டம்பர் 10, 1993
போலீசிடம் கெஞ்சி நிற்கும் அகதிகள், தங்களை கிரீஸ் நாட்டு எல்லை வழியாகக் கடந்து செல்ல அனுமதிக்கக் கோரும் காட்சி – செப்டம்பர் 10, 2015.
துருக்கி நாட்டில் அரச பயங்கரவாதத்திற்கெதிராகப் போராடும் இளைஞர் ஒருவர் கண்டெயினர் ஒன்றில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக உதவி கோரி கத்தும் காட்சி
செசன்ய நாட்டுப் போராளிகள் வான்வழித் தாக்குதலுக்கு அஞ்சி ஓடி ஒளியும் காட்சி – ஜனவரி 9, 1995.
நானும் காவலாளிதான் என மார்தட்டி வீராப்பாக நாடாளுமன்றத்தில் பேசினார் மோடி. அம்பானி, அதானி, கார்ப்பரேட் முதலாளிகளின் கல்லாப் பெட்டிக்கு அவர் என்றைக்குமே காவலாளிதான் என்பதில் யாருக்கேனும் ஐயமிருக்குமா, என்ன?
ஏற்கெனவே சமூக வலைத்தளங்களில் மோடியை ‘வைத்துச்’ செய்யும் ‘தேஷ விரோதிகள்’, தற்போது மோடியின் #mainbhichowkidar என்ற டிவிட்டர் அலப்பறைக்குப் பிறகு இன்னும் பல விதங்களில் மீம்களும் வீடியோக்களும் போட்டு கலாய்த்துவிட்டனர் நெட்டிசன்கள் ..
எங்க ஊரு சவுக்கிதார் மோடி என்ன செய்கிறார் என்று பார்ப்போமா ?